ஊ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊக்குவது 1
ஊங்கண் 1
ஊசல் 1
ஊசி 1
ஊட்ட 1
ஊட்டலும் 2
ஊட்டி 2
ஊட்டிய 4
ஊட்டினை 1
ஊட்டு 1
ஊட்டுநள் 1
ஊட்டும் 3
ஊடல் 1
ஊடலோடு 1
ஊடு 2
ஊண் 17
ஊது 1
ஊமும் 1
ஊர் 27
ஊர்-ஆங்கண் 1
ஊர்த்த 1
ஊர்தி 1
ஊரா 1
ஊரா_நல்_தேர் 1
ஊரீரேயோ 1
ஊரும் 1
ஊர்ஊர்-தோறும் 1
ஊர்ஊர்-ஆங்கண் 1
ஊரோ 1
ஊழ் 2
ஊழ்பாடு 1
ஊழ்வினை 2
ஊழி 5
ஊழி-தோறு 3
ஊழின் 1
ஊழே 1
ஊறு 10
ஊறும் 1
ஊறே 6
ஊன் 11
ஊன்றி 2
ஊன்று 1
ஊனம் 1
ஊனும் 2

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஊக்குவது (1)

கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும் – மணி:19/74

TOP


ஊங்கண் (1)

ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை – மணி:21/181

TOP


ஊசல் (1)

மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல்
கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும் – மணி:19/73,74

TOP


ஊசி (1)

பொன்னின் ஊசி பசும் கம்பளத்து – மணி:29/17

TOP


ஊட்ட (1)

மயல் பகை ஊட்ட மறு_பிறப்பு உணர்ந்தாள் – மணி:23/41

TOP


ஊட்டலும் (2)

தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும்
மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த – மணி:15/8,9
வாங்கு கை_அகம் வருந்த நின்று ஊட்டலும்
ஊட்டிய பாத்திரம் ஒன்று என வியந்து – மணி:19/46,47

TOP


ஊட்டி (2)

நாவான் நக்கி நன் பால் ஊட்டி
போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப – மணி:13/13,14
யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து – மணி:13/113,114

TOP


ஊட்டிய (4)

காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய
மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை – மணி:2/54,55
அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய் கொண்டு – மணி:6/110
சாதுசக்கரன்-தனை யான் ஊட்டிய
காலம் போல்வதோர் கனா மயக்கு உற்றேன் – மணி:11/103,104
ஊட்டிய பாத்திரம் ஒன்று என வியந்து – மணி:19/47

TOP


ஊட்டினை (1)

மயல் பகை ஊட்டினை மறு_பிறப்பு உணர்ந்தேன் – மணி:23/92

TOP


ஊட்டு (1)

கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து – மணி:7/87

TOP


ஊட்டுநள் (1)

ஓடு கைக்கொண்டு நின்று ஊட்டுநள் போல – மணி:18/116

TOP


ஊட்டும் (3)

அறம் கரி ஆக அருள் சுரந்து ஊட்டும்
சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது – மணி:11/120,121
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை – மணி:13/54,55
பைம் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும் – மணி:19/70

TOP


ஊடல் (1)

ஊடல் செவ்வி பார்த்து நீடாது – மணி:25/84

TOP


ஊடலோடு (1)

தெருட்டவும் தெருளாது ஊடலோடு துயில்வோர் – மணி:7/52

TOP


ஊடு (2)

உலக அறவியின் ஊடு சென்று ஏறலும் – மணி:20/21
உலக அறிவியின் ஊடு சென்று ஏறி – மணி:22/90

TOP


ஊண் (17)

இரந்து ஊண் தலைக்கொண்டு இ நகர் மருங்கில் – மணி:5/45
புலவு_ஊண் பொருந்திய குராலின் குரலும் – மணி:6/76
ஊண் தலை துற்றிய ஆண்டலை குரலும் – மணி:6/77
காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும் – மணி:6/117
ஏற்று_ஊண் அல்லது வேற்று_ஊண் இல்லோன் – மணி:14/7
ஏற்று_ஊண் அல்லது வேற்று_ஊண் இல்லோன் – மணி:14/7
புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு – மணி:14/49
ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி – மணி:14/60
ஊண் ஒலி அரவத்து ஒலி எழுந்தன்றே – மணி:17/97
நோற்று_ஊண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி – மணி:18/122
ஏற்று_ஊண் விரும்பிய காரணம் என் என – மணி:18/123
மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள் – மணி:19/136
உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என – மணி:23/59
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த – மணி:23/61
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ – மணி:23/96
இரந்து ஊண் வாழ்க்கை என்-பால் வந்தோர்க்கு – மணி:25/142
அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில் – மணி:25/143

TOP


ஊது (1)

ஊது உலை குருகின் உயிர்த்து அகத்து அடங்காது – மணி:2/43

TOP


ஊமும் (1)

கூனும் குறளும் ஊமும் செவிடும் – மணி:12/97

TOP


ஊர் (27)

பிச்சைக்கு அ ஊர் பெரும் தெரு அடைந்ததும் – மணி:0/62
உன்னோடு இ ஊர் உற்றது ஒன்று உண்டு-கொல் – மணி:2/17
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய – மணி:2/54
வாணன் பேர் ஊர் மறுகிடை தோன்றி – மணி:3/123
விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியை – மணி:3/146
உதயகுமரன் உரு கெழு மீது ஊர்
மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய – மணி:4/28,29
கல்லென் பேர் ஊர் பல்லோர் உரையினை – மணி:5/25
களிப்பு மாண் செல்வ காவல் பேர் ஊர்
ஒளித்து உரு எய்தினும் உன்-திறம் ஒளியாள் – மணி:7/26,27
ஊர் காப்பாளர் எறி துடி ஓதையும் – மணி:7/69
ஊர் துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்து – மணி:7/125
மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம் – மணி:9/24
மாதர் நின்னால் வருவன இ ஊர்
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள – மணி:12/104,105
யாது நின் ஊர் ஈங்கு என் வரவு என – மணி:13/76
பொன் தேர் செழியன் கொற்கை அம் பேர் ஊர்
காவதம் கடந்து கோவலர் இருக்கையின் – மணி:13/84,85
தங்கினன் வதிந்து அ தக்கண பேர் ஊர்
ஐய கடிஞை கையின் ஏந்தி – மணி:13/108,109
ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர் குறு_மாக்களும் – மணி:15/59
ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப – மணி:16/14
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்ப போகி – மணி:16/38
யாணர் பேர் ஊர் அம்பல மருங்கு என் – மணி:17/98
நகு_தக்கன்றே நல் நெடும் பேர் ஊர்
இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது – மணி:18/9,10
ஊர் முழுது அறியும் உருவம் கொண்டே – மணி:19/34
ஊர் துஞ்சு யாமத்து ஒரு_தனி எழுந்து – மணி:20/94
அறவணன் அருளால் ஆய்_தொடி அ ஊர்
பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி – மணி:21/155,156
ஆய் தொடிக்கு அ ஊர் அறனொடு தோன்றும் – மணி:21/159
ஒத்தனள் என்றே ஊர் முழுது அலர் எழ – மணி:22/87
மற்று அவன் இ ஊர் வந்தமை கேட்டு – மணி:22/123
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப – மணி:25/168

TOP


ஊர்-ஆங்கண் (1)

நறு மலர் கோதை நின் ஊர்-ஆங்கண்
அறவணன்-தன்-பால் கேட்குவை இதன் திறம் – மணி:11/51,52

TOP


ஊர்த்த (1)

ஊர்த்த சாமம் கௌடில சாமம் – மணி:29/92

TOP


ஊர்தி (1)

துளங்கும் மான் ஊர்தி தூ மலர் பள்ளி – மணி:18/48

TOP


ஊரா (1)

ஊரா_நல்_தேர் ஓவிய படுத்து – மணி:6/39

TOP


ஊரா_நல்_தேர் (1)

ஊரா_நல்_தேர் ஓவிய படுத்து – மணி:6/39

TOP


ஊரீரேயோ (1)

ஊரீரேயோ ஒள் அழல் ஈமம் – மணி:16/23

TOP


ஊரும் (1)

மேரு குன்றத்து ஊரும் நீர் சரவணத்து – மணி:18/92

TOP


ஊர்ஊர்-தோறும் (1)

ஊர்ஊர்-தோறும் உண்போர் வினாஅய் – மணி:14/66

TOP


ஊர்ஊர்-ஆங்கண் (1)

ஊர்ஊர்-ஆங்கண் உறு பசி உழந்தோர் – மணி:17/79

TOP


ஊரோ (1)

மையல் ஊரோ மன மாசு ஒழியாது – மணி:22/96

TOP


ஊழ் (2)

ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி – மணி:5/16
ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும் – மணி:20/101

TOP


ஊழ்பாடு (1)

நின்மிதி இன்றி ஊழ்பாடு இன்றி – மணி:30/37

TOP


ஊழ்வினை (2)

ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது – மணி:6/152
ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை – மணி:20/123

TOP


ஊழி (5)

ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய – மணி:5/117
ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லது – மணி:6/172
ஒளியொடு வாழி ஊழி-தோறு ஊழி
வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை – மணி:19/128,129
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – மணி:19/137
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – மணி:22/159

TOP


ஊழி-தோறு (3)

ஒளியொடு வாழி ஊழி-தோறு ஊழி – மணி:19/128
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – மணி:19/137
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – மணி:22/159

TOP


ஊழின் (1)

ஊழின் மண்டிலமா சூழும் இ நுகர்ச்சி – மணி:30/118

TOP


ஊழே (1)

முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது – மணி:27/164

TOP


ஊறு (10)

உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி – மணி:27/20
வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும் – மணி:27/215
உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே – மணி:27/236
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் – மணி:27/249
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை – மணி:27/252
ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும் – மணி:30/88
வாயில் சார்வா ஊறு ஆகும்மே – மணி:30/108
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும் – மணி:30/109
வாயில் மீள ஊறு மீளும் – மணி:30/123
ஊறு மீள நுகர்ச்சி மீளும் – மணி:30/124

TOP


ஊறும் (1)

சுவையும் மெய்யால் ஊறும் என சொன்ன – மணி:27/17

TOP


ஊறே (6)

வாயில் ஊறே நுகர்வே வேட்கை – மணி:24/106
வாயில் ஊறே நுகர்வே வேட்கை – மணி:30/46
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே
நுகர்ச்சி என்று நோக்கப்படுவன – மணி:30/138,139
உணர்வே அருஉரு வாயில் ஊறே
நுகர்வே வேட்கை பற்றே பவமே – மணி:30/163,164
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே
நுகர்ச்சி பிறப்பு மூப்பு பிணி சாவு இவை – மணி:30/172,173
உணர்வே அருஉரு வாயில் ஊறே
நுகர்வே பிறப்பே பிணி மூப்பு சாவே – மணி:30/179,180

TOP


ஊன் (11)

வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து – மணி:6/109
திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன் – மணி:11/87
ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா – மணி:12/90
ஊன் உயிர் மடிந்தது உரவோய் என்றலும் – மணி:14/75
ஊன் உடை இ உடம்பு உணவு என்று எழுப்பலும் – மணி:16/59
ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி – மணி:17/56
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என – மணி:19/154
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன – மணி:20/54
ஊன் கண்ணினார்கட்கு உற்றதை உரைக்கும் – மணி:21/128
ஊன் உடை உயிர்கள் உறு பசி அறியா – மணி:25/109
ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கி – மணி:25/216

TOP


ஊன்றி (2)

தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி
வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி – மணி:14/30,31
ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும் – மணி:29/123

TOP


ஊன்று (1)

கதலிகை கொடியும் காழ் ஊன்று விலோதமும் – மணி:1/52

TOP


ஊனம் (1)

ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும் – மணி:28/76

TOP


ஊனும் (2)

வெம் களும் ஊனும் வேண்டுவ கொடும் என – மணி:16/77
கள்ளும் ஊனும் கைவிடின் இ உடம்பு – மணி:16/108

TOP