கட்டுருபன்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-அதனால் 2
-அதனை 2
-அது 3
-அவள் 1
-அவளொடும் 1
-ஆங்கண் 4
-ஆங்கு 10
-ஆட்டியர் 1
-இதை 2
-என் 1
-கண் 13
-கண்ணே 3
-காலை 15
-காறும் 2
-கொல் 8
-கொலோ 1
-கொல்லோ 15
-கொள்ள 2
-கொள்ளும் 1
-சால் 7
-செய்க 2
-செய்த 1
-செய்ததும் 2
-செய்து 9
-செய்தோர் 1
-செய்ய 3
-செய்யா 4
-தம் 11
-தமக்கு 1
-தமக்கும் 2
-தமை 1
-தம்மால் 2
-தம்முடன் 7
-தம்மே 1
-தம்மொடு 5
-தம்மோடு 1
-தலை 1
-தன் 45
-தனக்கு 7
-தனாது 1
-தனில் 1
-தனை 14
-தன்னால் 5
-தன்னுடன் 2
-தன்னுழை 1
-தன்னுள் 4
-தன்னை 28
-தன்னையும் 3
-தன்னொடு 11
-தன்னொடும் 7
-தன்னோடு 7
-தாம் 2
-தான் 34
-தானும் 5
-தில்ல 1
-திறம் 1
-தொட்டு 1
-தொட்டும் 3
-தொறும் 9
-தோறு 4
-தோறும் 3
-பால் 42
-புரிந்திட்டனன் 1
-மதி 2
-மாட்டும் 1
-மின் 23
-மினோ 2
-முதல் 5
-வயின் 21
-வழி 3
-விலின் 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


-அதனால் (2)

அன்புடன் அளைஇய அருள்மொழி-அதனால்
அம் செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து – மணி:5/63,64
அலை கோல்-அதனால் அறைந்தனர் கேட்ப – மணி:13/45

TOP


-அதனை (2)

மருள்_அறு புலவ நின் மலர் அடி-அதனை
அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டி – மணி:9/33,34
தற்காத்து அளித்த தகை ஆ-அதனை
ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின் – மணி:15/17,18

TOP


-அது (3)

அமரர் தலைவன் ஆங்கு-அது நேர்ந்தது – மணி:1/9
ஆங்கு-அது-தனக்கு ஓர் ஐ-விலின் கிடக்கை – மணி:4/89
துணி கயம் துகள் பட துளங்கிய-அது போல் – மணி:24/84

TOP


-அவள் (1)

மணிமேகலை-அவள் மறைந்து உரு எய்தினள் – மணி:20/113

TOP


-அவளொடும் (1)

அணி பூ கொம்பர்-அவளொடும் கூடி – மணி:3/84

TOP


-ஆங்கண் (4)

ஆடக செய்வினை மாடத்து-ஆங்கண்
சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி – மணி:4/52,53
சக்கரவாள கோட்டத்து-ஆங்கண்
பலர் புக திறந்த பகு வாய் வாயில் – மணி:7/91,92
நறு மலர் கோதை நின் ஊர்-ஆங்கண்
அறவணன்-தன்-பால் கேட்குவை இதன் திறம் – மணி:11/51,52
ஊர்ஊர்-ஆங்கண் உறு பசி உழந்தோர் – மணி:17/79

TOP


-ஆங்கு (10)

ஓங்கு நீர் பாவையை உவந்து எதிர்கொண்டு-ஆங்கு
ஆணு விசும்பின் ஆகாயகங்கை – மணி:0/16,17
பீடிகை தெருவும் பெரும் கலக்குறுத்து-ஆங்கு
இரு பால் பெயரிய ஒரு_கெழு மூதூர் – மணி:4/38,39
ஈங்கு யான் வருவேன் என்று அவற்கு உரைத்து-ஆங்கு
ஓடு மழை கிழியும் மதியம் போல – மணி:4/74,75
தாங்கா கண்ணீர் என்-தலை உதிர்த்து-ஆங்கு
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும் – மணி:5/42,43
விரத யாக்கையர் உடை தலை தொகுத்து-ஆங்கு
இரும் தொடர் படுக்கும் இரத்தி மன்றமும் – மணி:6/88,89
இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து-ஆங்கு
எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து – மணி:9/7,8
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்து-ஆங்கு
செயிர் வழங்கு தீ கதி திறந்து கல்லென்று – மணி:12/60,61
உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்து-ஆங்கு
வறனோடு உலகின் வான் துயர் கெடுக்கும் – மணி:15/52,53
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்கு-ஆங்கு
இட்டது ஆற்றா கட்டு அழல் கடும் பசி – மணி:17/12,13
தீ துறு செம் கோல் சென்று சுட்டு-ஆங்கு
கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி – மணி:18/2,3

TOP


-ஆட்டியர் (1)

கள் நொடை-ஆட்டியர் காழியர் கூவியர் – மணி:28/32

TOP


-இதை (2)

அளப்பு_அரும் பாரம்-இதை அளவு இன்று நிறைத்து – மணி:26/45
பவ்வத்து எடுத்து பாரம்-இதை முற்றவும் – மணி:29/26

TOP


-என் (1)

துன்னியது உரைத்த சுதமதி தான்-என் – மணி:7/134

TOP


-கண் (13)

கூற்று-கண் விளிக்கும் குருதி வேட்கை – மணி:1/30
சான்றோர்-தம்-கண் எய்திய குற்றம் – மணி:6/3
தென்-கண் குமரி ஆடிய வருவேன் – மணி:13/83
அதன்-கண் ஆகாயம் வெளிப்பட்டு அதன்-கண் – மணி:27/208
அதன்-கண் ஆகாயம் வெளிப்பட்டு அதன்-கண்
வாயு வெளிப்பட்டு அதன்-கண் அங்கி – மணி:27/208,209
வாயு வெளிப்பட்டு அதன்-கண் அங்கி – மணி:27/209
ஆனது வெளிப்பட்டு அதன்-கண் அப்பின் – மணி:27/210
கொடி மதில் மூதூர் குட-கண் நின்று ஓங்கி – மணி:28/164
இ வெள்ளிடை-கண் குடம் இலை என்றல் – மணி:29/78
உள்ள பொருள்-கண் சாத்திய சாதனம் – மணி:29/365
இல்லா பொருள்-கண் சாத்திய சாதனம் – மணி:29/374
அதன்-கண் இன்மையானே குறையும் – மணி:29/382
உபயா வியாவிருத்தி உள்ள பொருள்-கண்
சாத்திய சாதனம் மீளாதபடி – மணி:29/430,431

TOP


-கண்ணே (3)

நுனித்த குணத்து ஓர் கணத்தின்-கண்ணே
தோற்றமும் நிலையும் கேடும் என்னும் – மணி:27/180,181
அன்னுவயம் சொல்லாது குடத்தின்-கண்ணே
கிருத்தம் அநித்தம் காணப்பட்ட – மணி:29/390,391
சொல்லாது குடத்தின்-கண்ணே பண்ணப்படுதலும் – மணி:29/457

TOP


-காலை (15)

சுடர் வழக்கு அற்று தடுமாறு-காலை ஓர் – மணி:10/10
புத்த ஞாயிறு தோன்றும்-காலை
திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க – மணி:12/86,87
அலத்தல்-காலை ஆகியது ஆய்_இழை – மணி:15/50
வினை ஒழி-காலை திருவின் செல்வி – மணி:18/21
ஆங்கு அ வினை வந்து அணுகும்-காலை
தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின் – மணி:21/67,68
வினை பயன் விளையும்-காலை உயிர்கட்கு – மணி:24/121
அண்ணல் அற கதிர் விரிக்கும்-காலை
பைம்_தொடி தந்தையுடனே பகவன் – மணி:26/53,54
அலத்தல்-காலை ஆகியது அறியேன் – மணி:28/191
செல்லும்-காலை தாயர்-தம்முடன் – மணி:28/235
வினைப்பயன் விளையும்-காலை உயிர்கட்கு – மணி:30/62
வாயில் ஆறும் ஆயும்-காலை
உள்ளம் உருவிக்க உறும் இடன் ஆகும் – மணி:30/86,87
மூன்று வகை பிறப்பும் மொழியும்-காலை
ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே – மணி:30/153,154
காலம் மூன்றும் கருதும்-காலை
இறந்த காலம் என்னல் வேண்டும் – மணி:30/159,160
தோற்றம் என்று இவை சொல்லும்-காலை
எதிர் காலம் என இசைக்கப்படுமே – மணி:30/165,166
நிகழ்ச்சி பயன் ஆங்கே நேரும்-காலை
குற்றமும் வினையும் பயனும் துன்பம் – மணி:30/174,175

TOP


-காறும் (2)

தமக்கு ஒழி மரபின் சாவுறு-காறும்
எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை என்றலும் – மணி:16/110,111
புத்த ஞாயிறு தோன்றும்-காறும்
செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா – மணி:21/167,168

TOP


-கொல் (8)

உன்னோடு இ ஊர் உற்றது ஒன்று உண்டு-கொல்
வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்து – மணி:2/17,18
முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தன-கொல்
செம் கயல் நெடும் கண் செவி மருங்கு ஓடி – மணி:4/100,101
வெம் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்-கொல்
மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை – மணி:4/102,103
உவவன மருங்கினில் ஓர் இடம்-கொல் இது – மணி:8/19
நல்லாய் என்-கொல் நல் தவம் புரிந்தது – மணி:18/126
வான வாழ்க்கையர் அருளினர்-கொல் என – மணி:20/36
இன்னள் ஆர்-கொல் ஈங்கு இவள் என்று – மணி:24/33
நல்_வினை பயன்-கொல் நான் கண்டது என – மணி:28/92

TOP


-கொலோ (1)

சாயல் கற்பன-கொலோ தையல்-தன்னுடன் – மணி:3/155

TOP


-கொல்லோ (15)

வல்லுந-கொல்லோ மடந்தை-தன் நடை – மணி:3/153
எஞ்சல-கொல்லோ இசையுந அல்ல – மணி:3/157
தளர் இடை அறியும் தன்மையள்-கொல்லோ
விளையா மழலை விளைந்து மெல் இயல் – மணி:4/98,99
தகவு இலை-கொல்லோ சபாபதி என – மணி:6/138
வஞ்சம் செய்தனள்-கொல்லோ அறியேன் – மணி:8/26
உண்டி-கொல்லோ உடுப்பன-கொல்லோ – மணி:14/46
உண்டி-கொல்லோ உடுப்பன-கொல்லோ
பெண்டிர்-கொல்லோ பேணுநர்-கொல்லோ – மணி:14/46,47
பெண்டிர்-கொல்லோ பேணுநர்-கொல்லோ – மணி:14/47
பெண்டிர்-கொல்லோ பேணுநர்-கொல்லோ
யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன் என்றலும் – மணி:14/47,48
துறக்க வேந்தன் துய்ப்பு இலன்-கொல்லோ
அறக்கோல் வேந்தன் அருள் இலன்-கொல்லோ – மணி:15/46,47
அறக்கோல் வேந்தன் அருள் இலன்-கொல்லோ
சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் – மணி:15/47,48
தெய்வம்-கொல்லோ திப்பியம்-கொல்லோ – மணி:18/84
தெய்வம்-கொல்லோ திப்பியம்-கொல்லோ
எய்யா மையலேன் யான் என்று அவன் சொல – மணி:18/84,85
அறிதலும் அறிதியோ அறியாய்-கொல்லோ
அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய் – மணி:21/117,118
பொய்யினை-கொல்லோ பூத சதுக்கத்து – மணி:22/55

TOP


-கொள்ள (2)

காவலாளர் கண் துயில்-கொள்ள
தூ மென் சேக்கை துயில் கண் விழிப்ப – மணி:7/111,112
துஞ்சு துயில்-கொள்ள அ சூர் மலை வாழும் – மணி:16/55

TOP


-கொள்ளும் (1)

உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில்-கொள்ளும்
சுதமதி-தன்னை துயிலிடை நீக்கி – மணி:7/15,16

TOP


-சால் (7)

பாடல்-சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய – மணி:0/22
உவவன மருங்கின் அ உரை-சால் தெய்வதம் – மணி:0/45
ஆதி-சால் முனிவன் அறவழிப்படூஉம் – மணி:7/19
பெருமை-சால் நல் அறம் பிறழா நோன்பினர் – மணி:11/31
பெருமை-சால் நல் அறம் பெருகாது ஆகி – மணி:12/58
பாடல்-சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய – மணி:18/57
சீர்-சால் நல்_வினை தீ_வினை அவை செயும் – மணி:27/198

TOP


-செய்க (2)

சிறை-செய்க என்றதும் சிறை_வீடு-செய்ததும் – மணி:0/80
கணிகை_மகளையும் காவல்-செய்க என்றனன் – மணி:22/214

TOP


-செய்த (1)

மகனை முறை-செய்த மன்னவன் வழி ஓர் – மணி:22/210

TOP


-செய்ததும் (2)

சிறை-செய்க என்றதும் சிறை_வீடு-செய்ததும்
நறு மலர் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு – மணி:0/80,81
உதயகுமரன் ஆங்கு உற்று உரை-செய்ததும்
மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை – மணி:12/8,9

TOP


-செய்து (9)

கோமுகி வலம்-செய்து கொள்கையின் நிற்றலும் – மணி:11/56
தனக்கு உரை-செய்து தான் ஏகிய வண்ணமும் – மணி:12/22
ஆபுத்திரன் பின்பு அமர் நகை-செய்து
மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ – மணி:13/92,93
வல முறை மு முறை வந்தனை-செய்து அ – மணி:17/85
பொருந்துபு நின்று திருந்து நகை-செய்து
குறும் கால் நகுலமும் நெடும் செவி முயலும் – மணி:19/95,96
காவலன் நின்னையும் காவல்-செய்து ஆங்கு இடும் – மணி:21/75
உடல் துணி-செய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை – மணி:23/83
தே மலர் சோலை தீவகம் வலம்-செய்து
பெருமகன் காணாய் பிறப்பு உணர்விக்கும் – மணி:25/131,132
தீவகம் வலம்-செய்து தேவர் கோன் இட்ட – மணி:25/182

TOP


-செய்தோர் (1)

தீ_வினை உருப்ப உயிர் ஈறு-செய்தோர்
பார் ஆள் வேந்தே பண்டும் பலரால் – மணி:22/23,24

TOP


-செய்ய (3)

மழலை வண்டு இனம் நல் யாழ்-செய்ய
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர் – மணி:4/4,5
அ பதி புகுக என்று அவன் அருள்-செய்ய
இ பதி புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன் – மணி:17/67,68
பொங்கர் வண்டு இனம் நல் யாழ்-செய்ய
வரி குயில் பாட மா மயில் ஆடும் – மணி:19/58,59

TOP


-செய்யா (4)

போதல்-செய்யா உயிரொடு நின்றே – மணி:2/39
போதல்-செய்யா உயிரொடு புலந்து – மணி:18/12
அயர்ப்பது-செய்யா அறிவினள் ஆக – மணி:23/42
அயர்ப்பது-செய்யா அறிவினேன் ஆயினேன் – மணி:23/93

TOP


-தம் (11)

கோடா செங்கோல் சோழர்-தம் குலக்கொடி – மணி:0/23
எம்-தம் அடிகள் எம் உரை கேண்மோ – மணி:3/93
சான்றோர்-தம்-கண் எய்திய குற்றம் – மணி:6/3
துய்ப்போர்-தம் மனை துணி சிதர் உடுத்து – மணி:11/109
அறவண அடிகள்-தம்-பால் பெறு-மின் – மணி:11/140
ஆங்கு அவர்-தம் திறம் அறவணன்-தன்-பால் – மணி:12/19
உண்டேம் அவர்-தம் உறு பொருள் ஈங்கு இவை – மணி:16/121
பத்தினி பெண்டிர் அல்லேம் பலர்-தம்
கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே – மணி:18/15,16
பெண்டிர்-தம் குடியில் பிறந்தாள் அல்லள் – மணி:18/102
வேந்தர்-தம் செவி உறுவதன் முன்னம் – மணி:22/212
செறித்து அரைப்போர்-தம் செழு மனை நீரும் – மணி:28/16

TOP


-தமக்கு (1)

போனார்-தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது – மணி:16/100

TOP


-தமக்கும் (2)

மை தட கண்ணார்-தமக்கும் எ பயந்த – மணி:2/70
தேவியர்-தமக்கும் தீது இன்றோ என – மணி:12/42

TOP


-தமை (1)

வரம் தரற்கு உரியோர்-தமை முன் நிறுத்தி – மணி:6/184

TOP


-தம்மால் (2)

பெரும் தவர்-தம்மால் பெரும் பொருள் எய்த – மணி:19/160
எய்தி உண்டாம் நெறி என்று இவை-தம்மால்
பொருளின் உண்மை புலம் கொளல் வேண்டும் – மணி:27/12,13

TOP


-தம்முடன் (7)

பற்றாமாக்கள்-தம்முடன் ஆயினும் – மணி:1/62
ஆங்கு அவர்-தம்முடன் அறவண அடிகள் – மணி:12/1
வங்கம் போகும் வாணிகர்-தம்முடன்
தங்கா வேட்கையின் தானும் செல்வுழி – மணி:16/11,12
உடை கல பட்டு ஆங்கு ஒழிந்தோர்-தம்முடன்
சாதுவன்-தானும் சாவுற்றான் என – மணி:16/20,21
நகர நம்பியர் வளையோர்-தம்முடன்
மகர வீணையின் கிளை நரம்பு வடித்த – மணி:19/24,25
அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர்-தம்முடன்
மற வேல் மன்னவன் தேவி தன்-பால் வர – மணி:24/87,88
செல்லும்-காலை தாயர்-தம்முடன்
அல்லவை கடிந்த அறவண அடிகளும் – மணி:28/235,236

TOP


-தம்மே (1)

நிறை உடை பெண்டிர்-தம்மே போல – மணி:22/66

TOP


-தம்மொடு (5)

அகல் மனை அரங்கத்து ஆசிரியர்-தம்மொடு
வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி – மணி:7/42,43
தாயர்-தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி – மணி:15/56
பதியோர்-தம்மொடு பலர் தொழுது ஏத்தும் – மணி:17/87
தண் தமிழ் வினைஞர்-தம்மொடு கூடி – மணி:19/109
தையல் நின் பயந்தோர்-தம்மொடு போகி – மணி:21/152

TOP


-தம்மோடு (1)

ஆங்கு அவர்-தம்மோடு அகல் இரு வானத்து – மணி:19/91

TOP


-தலை (1)

தாங்கா கண்ணீர் என்-தலை உதிர்த்து-ஆங்கு – மணி:5/42

TOP


-தன் (45)

சாகை சம்பு-தன் கீழ் நின்று – மணி:0/5
மண்ணகத்து என்-தன் வான் பதி-தன்னுள் – மணி:1/6
மணிமேகலை-தன் மதி முகம்-தன்னுள் – மணி:3/20
தவா நீர் காவிரி பாவை-தன் தாதை – மணி:3/55
வல்லுந-கொல்லோ மடந்தை-தன் நடை – மணி:3/153
பை கிளி-தாம் உள பாவை-தன் கிளவிக்கு – மணி:3/156
தாழ் ஒளி மண்டபம்-தன் கையின் தடைஇ – மணி:5/9
சூழ்வோன் சுதமதி-தன் முகம் நோக்கி – மணி:5/10
அரசிளங்குமரன் ஆ_இழை-தன் மேல் – மணி:6/17
தம் அனை-தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும் – மணி:6/131
சம்பாபதி-தன் ஆற்றல் தோன்ற – மணி:6/190
தவ திறம் பூண்டோள்-தன் மேல் வைத்த – மணி:7/13
ஆங்கு அவன்-தன்-பால் அணைந்து அறன் உரைப்போய் – மணி:9/16
அறவணன்-தன்-பால் கேட்குவை இதன் திறம் – மணி:11/52
தீம் பால் சுரப்போள்-தன் முலை போன்றே – மணி:11/115
தீவதிலகை-தன் அடி வணங்கி – மணி:11/124
ஆங்கு அவர்-தம் திறம் அறவணன்-தன்-பால் – மணி:12/19
ஆபுத்திரன் திறம் அறவணன்-தன்-பால் – மணி:12/27
ஈங்கு இவன்-தன் பிறப்பு யான் அறிகுவன் என – மணி:13/71
ஆர் உயிர் முதல்வன்-தன் முன் தோன்றி – மணி:14/33
ஆங்கு அவன்-தன் திறன் அறவணன் அறியும் என்று – மணி:15/38
பட்டேன் என்-தன் பழ வினை பயத்தால் – மணி:17/14
அங்கு அவள்-தன் திறம் அயர்ப்பாய் என்றனள் – மணி:18/83
உடம்போடு என்-தன் உள்ளகம் புகுந்து என் – மணி:18/120
குச்சர குடிகை-தன் அகம் புக்கு ஆங்கு – மணி:18/145
காயசண்டிகை-தன் கையில் காட்டி – மணி:18/154
முதியாள் உன்-தன் கோட்டம் புகுந்த – மணி:18/169
அங்கு அவள்-தன் திறம் அயர்ப்பாய் என்றே – மணி:19/9
காஞ்சனன் என்னும் அவள்-தன் கணவன் – மணி:20/27
உதயகுமரன்-தன்-பால் சென்று – மணி:20/39
காயசண்டிகை-தன் கணவன் ஆகிய – மணி:22/190
காயசண்டிகை-தன் கணவன் ஆகிய – மணி:22/198
ஆங்கு அவன்-தன் கை வாளால் அம்பலத்து – மணி:22/202
சோழிக ஏனாதி-தன் முகம் நோக்கி – மணி:22/205
மன்பதை காக்கும் மன்னவன்-தன் முன் – மணி:23/19
வல்லாங்கு செய்து மணிமேகலை-தன்
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்து – மணி:23/44,45
நீலபதி-தன் வயிற்றில் தோன்றிய – மணி:23/67
தையால் உன்-தன் தடுமாற்று அவலத்து – மணி:23/102
தொல் முது கணிகை-தன் சூழ்ச்சியில் போயவன் – மணி:24/2
மணிமேகலை-தன் வாய்மொழியால் அது – மணி:24/64
தருமசாவகன்-தன் அடி வணங்கி – மணி:25/2
நாக நல் நாடு ஆள்வோன்-தன் மகள் – மணி:25/178
அற அரசு ஆண்டதும் அறவணன்-தன்-பால் – மணி:25/211
வில் திறல் வெய்யோன்-தன் புகழ் விளங்க – மணி:26/91
புவி காவலன்-தன் புண்ணிய நல் நாள் – மணி:28/9

TOP


-தனக்கு (7)

கரை நின்று ஆலும் ஒரு_மயில்-தனக்கு
கம்புள் சேவல் கனை குரல் முழவா – மணி:4/11,12
ஆங்கு-அது-தனக்கு ஓர் ஐ-விலின் கிடக்கை – மணி:4/89
மாதவி-தனக்கு யான் வந்த வண்ணமும் – மணி:7/30
அறிவு பிறிதாகியது ஆய்_இழை-தனக்கு என – மணி:18/76
ஆய்_இழை சென்றதூஉம் ஆங்கு அவள்-தனக்கு
வீயா விழு சீர் வேந்தன் பணித்ததூஉம் – மணி:20/9,10
வஞ்சியுள் புக்கு மா பத்தினி-தனக்கு
எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல் – மணி:24/155,156
முன்னோன் கோவலன் மன்னவன்-தனக்கு
நீங்கா காதல் பாங்கன் ஆதலின் – மணி:28/124,125

TOP


-தனாது (1)

அமர முனிவன் அகத்தியன்-தனாது
கரகம் கவிழ்த்த காவிரி பாவை – மணி:0/11,12

TOP


-தனில் (1)

எங்கு வாழ் தேவரும் கூடிய இடம்-தனில்
சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து – மணி:6/191,192

TOP


-தனை (14)

ஆராமத்திடை அலர் கொய்வேன்-தனை
மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன் – மணி:3/32,33
மணிமேகலை-தனை வந்து புறம் சுற்றி – மணி:3/148
வஞ்சி நுண் இடை மணிமேகலை-தனை
சித்திராபதியால் சேர்தலும் உண்டு என்று – மணி:5/81,82
மணிமேகலை-தனை மணிபல்லவத்திடை – மணி:7/1
மணிமேகலை-தனை மலர் பொழில் கண்ட – மணி:7/3
சாதுசக்கரன்-தனை யான் ஊட்டிய – மணி:11/103
தமரின் தீர்ந்த சாலி என்போள்-தனை
யாது நின் ஊர் ஈங்கு என் வரவு என – மணி:13/75,76
மற்று அவன்-தன்னால் மணிமேகலை-தனை
பொன் தேர் கொண்டு போதேன் ஆகின் – மணி:18/31,32
தங்கா வேட்கை-தனை அவண் தணித்ததூஉம் – மணி:18/96
மாயையின் ஒளித்த மணிமேகலை-தனை
ஈங்கு இ மண்ணீட்டு யார் என உணர்கேன் – மணி:18/155,156
மதி வாள் முகத்து மணிமேகலை-தனை
ஒழிய போகேன் உன் அடி தொட்டேன் – மணி:18/170,171
மாதவர் எல்லாம் மணிமேகலை-தனை
இளம்_கொடி அறிவதும் உண்டோ இது என – மணி:22/6,7
அங்கு அவள்-தனை கூஉய் அவள்-தன்னோடு – மணி:23/37
மாதவி மகள்-தனை வான் சிறை நீக்க – மணி:24/5

TOP


-தன்னால் (5)

மாதவன்-தன்னால் வல் வினை உருப்ப – மணி:15/83
ஆர் அணங்கு ஆகிய அரும் தவன்-தன்னால்
காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை – மணி:17/53,54
மற்று அவன்-தன்னால் மணிமேகலை-தனை – மணி:18/31
ஆர் புனை தெரியல் இளங்கோன்-தன்னால்
காரியாற்று கொண்ட காவல் வெண்குடை – மணி:19/125,126
சாதிக்கின் பொருள்-தன்னால் பக்கத்து – மணி:29/125

TOP


-தன்னுடன் (2)

சாயல் கற்பன-கொலோ தையல்-தன்னுடன்
பை கிளி-தாம் உள பாவை-தன் கிளவிக்கு – மணி:3/155,156
அரும் தவன்-தன்னுடன் ஆய்_இழை தாயரும் – மணி:25/205

TOP


-தன்னுழை (1)

ஆய் வளை நல்லாள்-தன்னுழை சென்று – மணி:28/187

TOP


-தன்னுள் (4)

மண்ணகத்து என்-தன் வான் பதி-தன்னுள்
மேலோர் விழைய விழா கோள் எடுத்த – மணி:1/6,7
வந்து ஒருங்கு குழீஇ வான்பதி-தன்னுள்
கொடி தேர் தானை கொற்றவன் துயரம் – மணி:1/18,19
மணிமேகலை-தன் மதி முகம்-தன்னுள்
அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய – மணி:3/20,21
அ பதி-தன்னுள் ஓர் அந்தணன் மனை-வயின் – மணி:13/27

TOP


-தன்னை (28)

ஆய்_இழை-தன்னை அகலாது அணுகலும் – மணி:0/74
மண்ணா மேனியன் வருவோன்-தன்னை
வந்தீர் அடிகள் நும் மலர் அடி தொழுதேன் – மணி:3/91,92
எட்டிகுமரன் இருந்தோன்-தன்னை
மாதர்-தன்னொடு மயங்கினை இருந்தோய் – மணி:4/58,59
நீங்காது நின்ற நேர்_இழை-தன்னை
கல்லென் தானையொடு கடும் தேர் நிறுத்தி – மணி:4/90,91
ஆங்கு அது-தன்னை ஓர் அரும் கடி நகர் என – மணி:6/105
தீ தொழில்_ஆட்டியேன் சிறுவன்-தன்னை
யாரும் இல் தமியேன் என்பது நோக்காது – மணி:6/133,134
ஈம புறங்காட்டு எய்தினோன்-தன்னை
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது – மணி:6/147,148
பூம்_கொடி-தன்னை பொருந்தி தழீஇ – மணி:6/210
அணி_இழை-தன்னை வைத்து அகன்றது-தான் என் – மணி:6/214
சுதமதி-தன்னை துயிலிடை நீக்கி – மணி:7/16
விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு_இழை-தன்னை ஓர் – மணி:7/21
கோவலன் கூறி இ கொடி_இடை-தன்னை என் – மணி:7/34
எட்டு_இரு நாளில் இ இராகுலன்-தன்னை
திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால் – மணி:9/48,49
அணி_இழை-தன்னை அகற்றிய வண்ணமும் – மணி:12/10
மாதவன்-தன்னை வணங்கினள் உரைத்தலும் – மணி:12/30
துச்சயன்-தன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன் – மணி:12/40
துயில்வோன்-தன்னை தொழுதனர் ஏத்தி – மணி:14/5
அணி_இழை-தன்னை அகன்றனன் போகி – மணி:16/5
ஆங்கு அவள்-தன்னை ஆர் உயிர் நீங்கிய – மணி:22/9
பெரு நகர்-தன்னை பிறகிட்டு ஏகி – மணி:22/102
ஆங்கு அவள்-தன்னை அம்பலத்து ஏற்றி – மணி:22/196
யான் செயற்பாலது இளங்கோன்-தன்னை
தான் செய்ததனால் தகவு இலன் விஞ்ஞையன் – மணி:22/206,207
அறிந்தனை ஆயின் இ ஆய்_இழை-தன்னை
செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல – மணி:23/33,34
ஏலம் கமழ் தார் இராகுலன்-தன்னை
அழல் கண் நாகம் ஆர் உயிர் உண்ண – மணி:23/68,69
உடற்கு அழுதனையேல் உன் மகன்-தன்னை
எடுத்து புறங்காட்டு இட்டனர் யாரே – மணி:23/74,75
புதல்வன்-தன்னை ஓர் புரி_நூல் மார்பன் – மணி:23/108
அணி நகர்-தன்னை அலை கடல் கொள்க என – மணி:25/199
இறைஞ்சிய இளம்_கொடி-தன்னை வாழ்த்தி – மணி:29/1

TOP


-தன்னையும் (3)

வாய் வாள் விஞ்ஞயன்-தன்னையும் கூஉய் – மணி:22/199
ஈங்கு இவன்-தன்னையும் ஈமத்து ஏற்றி – மணி:22/213
கொடை கெழு தாதை கோவலன்-தன்னையும்
கடவுள் எழுதிய படிமம் காணிய – மணி:26/3,4

TOP


-தன்னொடு (11)

தொழுதனள் காட்டிய சுதமதி-தன்னொடு
மலர் கொய்ய புகுந்தனள் மணிமேகலை என் – மணி:3/170,171
தகர குழலாள்-தன்னொடு மயங்கி – மணி:4/55
மாதர்-தன்னொடு மயங்கினை இருந்தோய் – மணி:4/59
பார்ப்பான்-தன்னொடு கண் இழந்து இருந்த இ – மணி:6/132
தாரை தவ்வை-தன்னொடு கூடிய – மணி:7/104
இலக்குமி கேளாய் இராகுலன்-தன்னொடு
புல தகை எய்தினை பூம் பொழில் அக-வயின் – மணி:10/20,21
நா நல்கூர்ந்தனை என்று அவன்-தன்னொடு
பகை அறு பாத்தியன் பாதம் பணிந்து ஆங்கு – மணி:10/34,35
காதலி-தன்னொடு கைதொழுது எடுத்து – மணி:13/20
விஞ்சையன்-தன்னொடு என் வெவ் வினை உருப்ப – மணி:17/23
வம்பலன்-தன்னொடு இ வைகு இருள் ஒழியாள் – மணி:20/88
காதலி-தன்னொடு கபிலை அம் பதியில் – மணி:28/143

TOP


-தன்னொடும் (7)

உண்ணா நோன்பி-தன்னொடும் சூளுற்று – மணி:3/102
சுதமதி-தன்னொடும் நின்ற எல்லையுள் – மணி:5/93
தீவதிலகை-தன்னொடும் கூடி – மணி:11/55
வங்கம்-தன்னொடும் வந்தனன் தோன்றும் – மணி:16/42
தீது கூற அவள்-தன்னொடும் சேர்ந்து – மணி:21/79
பெருமகன்-தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம் – மணி:25/40
காவலன்-தன்னொடும் கடல் திரை உலாவும் – மணி:25/130

TOP


-தன்னோடு (7)

ஆங்கு அவன்-தன்னோடு அணி_இழை போகி – மணி:0/83
ஆயிரம்_கண்ணோன்-தன்னோடு ஆங்கு உள – மணி:1/36
ஈங்கு இவள்-தன்னோடு எய்தியது உரை என – மணி:5/27
ஈங்கு இவள்-தன்னோடு எய்திய காரணம் – மணி:5/30
நாம பேரூர்-தன்னோடு தோன்றிய – மணி:6/37
போயினன்-தன்னோடு உயிர் உய போந்தோர் – மணி:16/18
அங்கு அவள்-தனை கூஉய் அவள்-தன்னோடு
கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு – மணி:23/37,38

TOP


-தாம் (2)

பை கிளி-தாம் உள பாவை-தன் கிளவிக்கு – மணி:3/156
யாவரும் வருக ஏற்போர்-தாம் என – மணி:17/96

TOP


-தான் (34)

சிதைந்த நெஞ்சின் சித்திராபதி-தான்
வயந்தமாலையான் மாதவிக்கு உரைத்ததும் – மணி:0/35,36
மணிமேகலை-தான் மா மலர் கொய்ய – மணி:0/37
சித்திராபதி-தான் செல்லல் உற்று இரங்கி – மணி:2/6
தாமரை பீடிகை-தான் உண்டு ஆங்கு இடின் – மணி:3/66
ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி-தான் உறும் – மணி:3/71
மயன் பண்டு இழைத்த மரபினது அது-தான்
அ வனம் அல்லது அணி_இழை நின் மகள் – மணி:3/79,80
செவ்வனம் செல்லும் செம்மை-தான் இலள் – மணி:3/81
மா மலர் கொய்ய மலர்வனம்-தான் புகின் – மணி:3/151
மது மலர் குழலாள் மணிமேகலை-தான்
சுதமதி-தன்னொடும் நின்ற எல்லையுள் – மணி:5/92,93
சம்பாபதி-தான் உரைத்த அ முறையே – மணி:6/186
அணி_இழை-தன்னை வைத்து அகன்றது-தான் என் – மணி:6/214
ஏங்கினள் அழூஉம் இளம்_கொடி-தான் என் – மணி:9/71
நீங்கியது ஆங்கு நெடும் தெய்வம்-தான் என் – மணி:10/93
மணிபல்லவத்திடை மணிமேகலை-தான்
வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும் – மணி:11/2,3
வானூடு எழுந்து மணிமேகலை-தான்
வழு_அறு தெய்வம் வாய்மையின் உரைத்த – மணி:11/127,128
எழுக என எழுந்தனள் இளம்_கொடி-தான் என் – மணி:11/146
எடுத்தனள் பாத்திரம் இளம்_கொடி-தான் என் – மணி:12/121
ஆபுத்திரன்-தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன் – மணி:13/49
கண்படைகொள்ளும் காவலன்-தான் என் – மணி:13/115
ஆபுத்திரன்-தான் அம்பலம் நீங்கி – மணி:14/65
ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்-தான் என் – மணி:14/104
நிரை தார் வேந்தன் ஆயினன் அவன்-தான்
துறக்க வேந்தன் துய்ப்பு இலன்-கொல்லோ – மணி:15/45,46
மாதவன் உரைத்தலும் மணிமேகலை-தான்
தாயர்-தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி – மணி:15/55,56
காய சண்டிகை எனும் காரிகை-தான் என் – மணி:15/86
இது குறை என்றனன் இறை_மகன்-தான் என் – மணி:18/172
வருக வருக மட_கொடி-தான் என்று – மணி:19/139
அமர முனிவன் அகத்தியன்-தான் அது – மணி:22/35
கொண்டோர் பிழைத்த குற்றம்-தான் இலேன் – மணி:22/51
மற்று அவள் பெற்ற மணிமேகலை-தான்
முற்றா முலையினள் முதிரா கிளவியள் – மணி:22/180,181
மற்றும் உரை செயும் மணிமேகலை-தான்
மயல் பகை ஊட்டினை மறு_பிறப்பு உணர்ந்தேன் – மணி:23/91,92
அகை மலர் பூம் பொழில் அரும் தவன்-தான் என் – மணி:24/176
மணிமேகலை-தான் காரணம் ஆக என்று – மணி:25/95
அந்தரத்து எழுந்தனள் அணி_இழை-தான் என் – மணி:25/239
அன்றியும் அது-தான் சன்னும் அசன்னும் – மணி:29/362

TOP


-தானும் (5)

சாதுவன்-தானும் சாவுற்றான் என – மணி:16/21
மன்னவன்-தானும் மலர் கணை மைந்தனும் – மணி:19/100
அறவணன்-தானும் ஆங்கு உளன் ஆதலின் – மணி:21/153
கரியவன் இட்ட காரணம்-தானும்
மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய – மணி:25/55,56
ஆங்கு அவன்-தானும் நின் அறத்திற்கு ஏது – மணி:28/151

TOP


-தில்ல (1)

பெறுவேன்-தில்ல நின் பேர் அருள் ஈங்கு என – மணி:21/44

TOP


-திறம் (1)

ஒளித்து உரு எய்தினும் உன்-திறம் ஒளியாள் – மணி:7/27

TOP


-தொட்டு (1)

ஆங்கு அவர் பசி தீர்த்து அ நாள்-தொட்டு
வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின் – மணி:14/22,23

TOP


-தொட்டும் (3)

பிறந்த நாள்-தொட்டும் சிறந்த தன் தீம் பால் – மணி:13/53
மாதவன் போயின அ நாள்-தொட்டும் இ – மணி:24/70
ஈங்கு இவன் பிறந்த அ நாள்-தொட்டும்
ஓங்கு உயர் வானத்து பெயல் பிழைப்பு அறியாது – மணி:24/171,172

TOP


-தொறும் (9)

சுடு_மண் ஓங்கிய நெடு நிலை மனை-தொறும்
மை_அறு படிவத்து வானவர் முதலா – மணி:3/127,128
சித்திர கைவினை திசை-தொறும் செறிந்தன – மணி:5/11
பரந்து படு மனை-தொறும் திரிவோன் ஒரு நாள் – மணி:5/46
மங்குல் தோய் மாட மனை-தொறும் புகூஉம் – மணி:5/58
குயிலுவர் கடை-தொறும் பண்_இயம் பரந்து எழ – மணி:7/123
கொடுப்போர் கடை-தொறும் பண்ணியம் பரந்து எழ – மணி:7/124
திசை-தொறும் ஒன்பான் முழ நிலம் அகன்று – மணி:8/46
மை_அறு சிறப்பின் மனை-தொறும் மறுகி – மணி:13/110
பரந்து படு மனை-தொறும் பாத்திரம் ஏந்தி – மணி:24/21

TOP


-தோறு (4)

ஒளியொடு வாழி ஊழி-தோறு ஊழி – மணி:19/128
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – மணி:19/137
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – மணி:22/159
பிறவி-தோறு உதவும் பெற்றியள் என்றே – மணி:29/28

TOP


-தோறும் (3)

பிறவி-தோறும் மறவேன் மட_கொடி – மணி:12/103
ஊர்ஊர்-தோறும் உண்போர் வினாஅய் – மணி:14/66
நெடு நிலை-தோறும் நிலா சுதை மலரும் – மணி:28/27

TOP


-பால் (42)

அங்கை பாத்திரம் ஆபுத்திரன்-பால்
சிந்தாதேவி கொடுத்த வண்ணமும் – மணி:0/59,60
ஒரு-பால் படாஅது ஒரு_வழி தங்காது – மணி:4/40
தவலா உள்ளம் தன்-பால் உடையது – மணி:4/119
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி – மணி:6/22
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி – மணி:7/89
ஆங்கு அவன்-தன்-பால் அணைந்து அறன் உரைப்போய் – மணி:9/16
இதன்-பால் ஒழிக என இரு நில வேந்தனும் – மணி:9/23
உவவனம் மருங்கில் உன்-பால் தோன்றிய – மணி:10/42
ஆங்கு அவன் அன்றியும் அவன்-பால் உள்ளம் – மணி:10/44
அறவணன் ஆங்கு அவன்-பால் சென்றோனை – மணி:10/58
அறவணன்-தன்-பால் கேட்குவை இதன் திறம் – மணி:11/52
அறவண அடிகள்-தம்-பால் பெறு-மின் – மணி:11/140
ஆங்கு அவர்-தம் திறம் அறவணன்-தன்-பால்
பூ கொடி நல்லாய் கேள் என்று உரைத்ததும் – மணி:12/19,20
ஆபுத்திரன் திறம் அறவணன்-தன்-பால்
கேள் என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம் – மணி:12/27,28
அ நாள் ஆங்கு அவன் தன்-பால் சென்றேன் – மணி:14/96
அரைசு ஆள் செல்வம் அவன்-பால் உண்மையின் – மணி:15/44
ஈங்கு எம் குரு_மகன் இருந்தோன் அவன்-பால்
போந்தருள் நீ என அவருடன் போகி – மணி:16/64,65
வடு வாழ் கூந்தல் அதன்-பால் போக என்று – மணி:17/82
அறைபோய் நெஞ்சம் அவன்-பால் அணுகினும் – மணி:18/130
அணி மலர் தாரோன் அவள்-பால் புக்கு – மணி:18/151
விழையா உள்ளமொடு அவன்-பால் நீங்கி – மணி:20/38
உதயகுமரன்-தன்-பால் சென்று – மணி:20/39
ஈங்கு இவன் வந்தனன் இவள்-பால் என்றே – மணி:20/103
போகுவல் என்றே அவள்-பால் புகுதலும் – மணி:20/109
உவவன மருங்கில் நின்-பால் உள்ளம் – மணி:21/13
அல்லி அம் தாரோன் தன்-பால் செல்லல் – மணி:21/28
அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்-பால்
புரையோர் பேணி போகலும் போகுவை – மணி:21/82,83
உவவன மருங்கில் நின்-பால் தோன்றி – மணி:21/185
பத்தினி பெண்டிர்-பால் சென்று அணுகியும் – மணி:22/21
அரசு ஆள் உரிமை நின்-பால் இன்மையின் – மணி:22/33
பரசுராமன் நின்-பால் வந்து அணுகான் – மணி:22/34
ஈங்கு எழு நாளில் இளம்_கொடி நின்-பால்
வாங்கா நெஞ்சின் மயரியை வாளால் – மணி:22/74,75
அல்லவை கடிந்த அவன்-பால் சென்று – மணி:22/126
மாமன்_மகள்-பால் வான் பொருள் காட்டி – மணி:22/140
தள்ளாது ஆகும் காமம் தம்-பால்
ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என – மணி:22/172,173
விஞ்ஞை மகள்-பால் இவன் வந்தனன் என – மணி:22/200
மற வேல் மன்னவன் தேவி தன்-பால் வர – மணி:24/88
வெய்யவன் குட-பால் வீழா முன்னர் – மணி:25/30
இரந்து ஊண் வாழ்க்கை என்-பால் வந்தோர்க்கு – மணி:25/142
அங்கு அவன்-பால் சென்று அவன் திறம் அறிந்து – மணி:25/185
அற அரசு ஆண்டதும் அறவணன்-தன்-பால்
மறு_பிறப்பு_ஆட்டி வஞ்சியுள் கேட்பை என்று – மணி:25/211,212
வையம் காவலன் தன்-பால் சென்று – மணி:28/177

TOP


-புரிந்திட்டனன் (1)

குற்றம் இலோனை கொலை-புரிந்திட்டனன்
ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி – மணி:26/28,29

TOP


-மதி (2)

தீ நெறி படரா நெஞ்சினை ஆகு-மதி
ஈங்கு இவள்-தன்னோடு எய்திய காரணம் – மணி:5/29,30
எம் கோ வாழி என் சொல் கேள்-மதி
நும் கோன் உன்னை பெறுவதன் முன் நால் – மணி:25/99,100

TOP


-மாட்டும் (1)

மூத்து விளி மா ஒழித்து எ உயிர்-மாட்டும்
தீத்திறம் ஒழிக என சிறு_மகன் உரைப்போன் – மணி:16/116,117

TOP


-மின் (23)

பாவை விளக்கும் பல உடன் பரப்பு-மின்
காய் குலை கமுகும் வாழையும் வஞ்சியும் – மணி:1/45,46
பூ கொடி வல்லியும் கரும்பும் நடு-மின்
பத்தி வேதிகை பசும் பொன் தூணத்து – மணி:1/47,48
முத்து தாமம் முறையொடு நாற்று-மின்
விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும் – மணி:1/49,50
பழ மணல் மாற்று-மின் புது மணல் பரப்பு-மின் – மணி:1/51
பழ மணல் மாற்று-மின் புது மணல் பரப்பு-மின்
கதலிகை கொடியும் காழ் ஊன்று விலோதமும் – மணி:1/51,52
மதலை மாடமும் வாயிலும் சேர்த்து-மின்
நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா – மணி:1/53,54
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யு-மின்
தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும் – மணி:1/57,58
புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்து-மின்
ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள் – மணி:1/59,60
பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறு-மின்
பற்றாமாக்கள்-தம்முடன் ஆயினும் – மணி:1/61,62
செற்றமும் கலாமும் செய்யாது அகலு-மின்
வெண் மணல் குன்றமும் விரி பூ சோலையும் – மணி:1/63,64
இரும் செரு ஒழி-மின் எமது ஈது என்றே – மணி:8/60
அறவண அடிகள்-தம்-பால் பெறு-மின்
செறி தொடி நல்லீர் உம் பிறப்பு ஈங்கு இஃது – மணி:11/140,141
நோவன செய்யன்-மின் நொடிவன கேண்-மின் – மணி:13/50
நோவன செய்யன்-மின் நொடிவன கேண்-மின்
விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து – மணி:13/50,51
புல்லல் ஓம்பன்-மின் புலை மகன் இவன் என – மணி:13/91
வருந்தினன் அளியன் வம்-மின் மாக்காள் – மணி:16/75
சொல்லு-மின் என்று தொழ அவன் உரைப்பான் – மணி:24/51
புரை தீர் நல் அறம் போற்றி கேண்-மின்
மறு_பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ – மணி:24/142,143
மாதவர் நல் மொழி மறவாது உய்ம்-மின்
இ நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின் – மணி:24/150,151
கலங்கு அஞர் தீ_வினை கடி-மின் கடிந்தால் – மணி:25/42
ஆகலின் நல்_வினை அயராது ஓம்பு-மின்
புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன் – மணி:25/44,45
போற்று-மின் அறம் என சாற்றி காட்டி – மணி:25/50
பொய்கையும் பொழிலும் புனை-மின் என்று அறைந்து அ – மணி:28/204

TOP


-மினோ (2)

காண்-மினோ என கண்டு நிற்குநரும் – மணி:3/145
நவை அறு நன்பொருள் உரை-மினோ என – மணி:27/1

TOP


-முதல் (5)

தேர் ஒலி மாதர் செவி-முதல் இசைத்தலும் – மணி:4/78
ஈங்கு என் செவி-முதல் இசைத்தது என் செய்கு என – மணி:4/84
தேன் ஆர் ஓதி செவி-முதல் வார்த்து – மணி:23/139
தெளிந்த நாதன் என் செவி-முதல் இட்ட வித்து – மணி:25/93
இன்ப ஆர் அமுது இறைவன் செவி-முதல்
துன்பம் நீங்க சொரியும் அ நாள் – மணி:28/121,122

TOP


-வயின் (21)

அணி மலர் பூம்பொழில் அக-வயின் சென்றதும் – மணி:0/38
அணி மலர் மண்டபத்து அக-வயின் செலீஇ – மணி:2/13
தன்-வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது – மணி:3/97
தாழ்-வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர் – மணி:6/67
அவ திறம் ஒழிக என்று அவன்-வயின் உரைத்த பின் – மணி:7/14
வட-வயின் அவந்தி மா நகர் செல்வோன் – மணி:9/28
புல தகை எய்தினை பூம் பொழில் அக-வயின்
இடம் கழி காமமொடு அடங்கானாய் அவன் – மணி:10/21,22
வெம் கதிர் அமயத்து வியன் பொழில் அக-வயின்
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி – மணி:10/27,28
ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அக-வயின்
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் – மணி:10/52,53
அ பதி-தன்னுள் ஓர் அந்தணன் மனை-வயின்
புக்கோன் ஆங்கு புலை சூழ் வேள்வியில் – மணி:13/27,28
மண்முகன் என்னும் மா முனி இட-வயின்
பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது – மணி:15/4,5
ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அக-வயின்
தீ துறு செம் கோல் சென்று சுட்டு-ஆங்கு – மணி:18/1,2
முதியாள் கோட்டத்து அக-வயின் இருந்த – மணி:19/39
அணி மலர் பூம் பொழில் அக-வயின் இருந்த – மணி:19/71
அரு சிறைக்கோட்டத்து அக-வயின் புகுந்து – மணி:19/133
நெடு நிலை கந்தின் இட-வயின் விளங்க – மணி:20/110
குட-வயின் அமைத்த நெடு நிலை வாயில் – மணி:21/2
முதியாள் கோட்டத்து அக-வயின் கிடந்த – மணி:21/3
ஈங்கு இ முதியாள் இட-வயின் வைத்த – மணி:21/150
பூம் பொழில் அக-வயின் இழிந்து பொறை_உயிர்த்து – மணி:24/165
ஆர் உயிர் மருந்தே அ நாட்டு அக-வயின்
கார் என தோன்றி காத்தல் நின் கடன் என – மணி:28/160,161

TOP


-வழி (3)

தோன்று-வழி விளங்கும் தோற்றம் போல – மணி:6/4
ஈங்கு இது இல்லா-வழி இல் ஆகி – மணி:30/21
ஈங்கு இது உள்ள-வழி உண்டு ஆகலின் – மணி:30/22

TOP


-விலின் (1)

ஆங்கு-அது-தனக்கு ஓர் ஐ-விலின் கிடக்கை – மணி:4/89

TOP