ந – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக்க 3
நக்கி 1
நக்கிடுதலும் 1
நக்கு 2
நகர் 60
நகர்-தன்னை 2
நகர்க்கு 1
நகர 1
நகரத்து 2
நகருள்ளீர் 1
நகு 1
நகு_தக்கன்றே 1
நகுதல் 1
நகுதி 1
நகுலமும் 1
நகுவனன் 1
நகூஉம் 1
நகை 7
நகை-செய்து 2
நகையாய் 1
நகையும் 3
நகையொடு 1
நங்காய் 2
நங்கை 5
நங்கையை 3
நசை 2
நஞ்சு 2
நடக்கும் 1
நடக்குவன் 1
நடத்தும் 1
நடப்போய் 1
நடவை 2
நடு 1
நடு-மின் 1
நடுக்கு 12
நடுங்க 1
நடுங்கா 1
நடுங்காது 1
நடுங்கி 3
நடுங்கினள் 1
நடுங்கும் 1
நடுநாள் 3
நடுவு 2
நடை 5
நடையின் 1
நண்ணார் 1
நண்ணிய 2
நண்ணினர் 1
நண்ணினள் 1
நண்ணுதற்கு 1
நந்தா 1
நந்தா_விளக்கே 1
நம் 1
நம்பி 1
நம்பிக்கு 1
நம்பியர் 1
நம்முள் 1
நம்மை 1
நயங்கள் 1
நயந்தோன் 1
நயம் 7
நயம்பாடு 1
நயன் 1
நர 1
நரகம் 1
நரகர் 1
நரகரும் 7
நரகு 3
நரந்தமும் 1
நரம்பில் 1
நரம்பின் 1
நரம்பு 2
நரம்பொடு 1
நரம்போடு 1
நரி 4
நரியின் 1
நரை 4
நரைமையின் 1
நல் 111
நல்_நுதல் 1
நல்_நூல் 5
நல்_வினை 8
நல்_வினையின் 1
நல்_வினையும் 1
நல்க 1
நல்கினை 1
நல்கூர் 2
நல்கூர்ந்த 1
நல்கூர்ந்தனை 2
நல்ல 2
நல்லவும் 1
நல்லன 1
நல்லாய் 18
நல்லார் 2
நல்லாள் 13
நல்லாள்-தன்னுழை 1
நல்லீர் 2
நல்லுரை 1
நல்வழி 1
நலத்தகு 1
நலத்தகை 2
நலம் 13
நவில் 1
நவிற்றி 1
நவை 8
நள் 2
நளி 7
நற்றாய் 1
நறு 11
நறும் 2
நறை 1
நன் 3
நன்கனம் 7
நன்கு 4
நன்பொருள் 3
நன்றி 1
நன்று 7
நனவு 1
நனவே 1
நனவோ 1
நனி 4
நனைப்ப 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நக்க (3)

நக்க சாரணர் நாகர் வாழ் மலை – மணி:16/15
நக்க சாரணர் நாகர் வாழ் மலை – மணி:16/39
நக்க சாரணர் நயம் இலர் தோன்றி – மணி:16/56

TOP


நக்கி (1)

நாவான் நக்கி நன் பால் ஊட்டி – மணி:13/13

TOP


நக்கிடுதலும் (1)

அறிந்தோர் உண்டோ என்று நக்கிடுதலும்
தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும் – மணி:27/280,281

TOP


நக்கு (2)

வெள்ளை மகன் போல் விலா இற நக்கு ஈங்கு – மணி:14/36
திருந்து எயிறு இலங்க செவ்வியின் நக்கு அவன் – மணி:18/52

TOP


நகர் (60)

பூம்_கொடி கச்சி மா நகர் புக்கதும் – மணி:0/90
இ நகர் போல்வதோர் இயல்பினது ஆகி – மணி:1/40
பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை என – மணி:2/9
இரந்து ஊண் தலைக்கொண்டு இ நகர் மருங்கில் – மணி:5/45
வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என் – மணி:5/141
நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் – மணி:6/29
ஆங்கு அது-தன்னை ஓர் அரும் கடி நகர் என – மணி:6/105
இந்திர கோடணை இ நகர் காண – மணி:7/17
இன்று ஏழ் நாளில் இ நகர் மருங்கே – மணி:7/24
ஆங்கு அவள் இ நகர் புகுந்த அ நாள் – மணி:7/28
மாருதவேகனோடு இ நகர் புகுந்து – மணி:7/103
மா நகர் வீதி மருங்கில் போகி – மணி:7/128
பூமி நடுக்கு உறூஉம் போழ்தத்து இ நகர்
நாக நல் நாட்டு நானூறு யோசனை – மணி:9/20,21
வட-வயின் அவந்தி மா நகர் செல்வோன் – மணி:9/28
தங்காது அ நகர் வீழ்ந்து கேடு எய்தலும் – மணி:9/32
வட திசை விஞ்ஞை மா நகர் தோன்றி – மணி:15/81
இ நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து – மணி:16/126
காசு இல் காஞ்சனபுர கடி நகர் உள்ளேன் – மணி:17/22
நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால் – மணி:17/65
வந்து தோன்றி இ மா நகர் மருங்கே – மணி:17/70
மா நகர் திரியும் ஓர் வம்ப மாதர் – மணி:19/132
பூம்_கொடி வஞ்சி மா நகர் புகுவை – மணி:21/91
காப்பு உடை மா நகர் காவலும் கண்ணி – மணி:21/123
பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய – மணி:21/148
செறி தொடி காஞ்சி மா நகர் சேர்குவை – மணி:21/154
இ நகர் காப்போர் யார் என நினைஇ – மணி:22/28
நீட்டித்து இராது நின் நகர் அடைக என – மணி:22/120
அமரர் அருளால் அகல் நகர் இடூஉம் – மணி:22/144
அறிவு திரித்து இ அகல் நகர் எல்லாம் – மணி:23/39
தோன்று படு மா நகர் தோன்றிய நாள் முதல் – மணி:24/16
இ நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால் – மணி:24/26
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம் – மணி:24/63
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல் – மணி:24/68
காவல் மா நகர் கலக்கு ஒழியாதால் – மணி:24/71
இ நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின் – மணி:24/151
இ நகர் பேர் யாது இ நகர் ஆளும் – மணி:24/167
இ நகர் பேர் யாது இ நகர் ஆளும் – மணி:24/167
நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன் – மணி:24/169
காவிரி படப்பை நல் நகர் புக்கேன் – மணி:25/16
ஆங்கு அவள் இவள் அ அகல் நகர் நீங்கி – மணி:25/19
மடவரல் நல்லாய் நின்றன் மா நகர்
கடல் வயிறு புக்கது காரணம் கேளாய் – மணி:25/176,177
வானவன் விழா கோள் மா நகர் ஒளிந்தது – மணி:25/197
கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த – மணி:25/201
விரிதிரை வந்து வியல் நகர் விழுங்க – மணி:25/203
சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன் – மணி:26/34
பொன் கொடி பெயர் படூஉம் பொன் நகர் பொலிந்தனள் – மணி:26/92
மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள – மணி:28/80
தீவகம் விட்டு இ திரு நகர் புகுந்ததும் – மணி:28/84
செய்த தீ_வினையின் செழு நகர் கேடு உற – மணி:28/94
திருந்திய நல் நகர் சேர்ந்தது கேளாய் – மணி:28/102
பூம்_கொடி கச்சி மா நகர் ஆதலின் – மணி:28/152
மற்று அ மா நகர் மாதவன் பெயர் நாள் – மணி:28/153
அ நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர் – மணி:28/158
இன்மையின் இ நகர் எய்தினர் காணாய் – மணி:28/159
தேவர் கோமான் காவல் மா நகர்
மண் மிசை கிடந்து என வளம் தலைமயங்கிய – மணி:28/166,167
பொன் நகர் வறிதா புல்லென்று ஆயது – மணி:28/168
நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து – மணி:28/171
அன்னாள் இந்த அகல் நகர் புகுந்த – மணி:28/198
நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும் – மணி:29/35
ஆதலின் அன்ன அணி நகர் மருங்கே – மணி:29/40

TOP


நகர்-தன்னை (2)

பெரு நகர்-தன்னை பிறகிட்டு ஏகி – மணி:22/102
அணி நகர்-தன்னை அலை கடல் கொள்க என – மணி:25/199

TOP


நகர்க்கு (1)

ஆவதை இ நகர்க்கு ஆர் உரைத்தனரோ – மணி:21/136

TOP


நகர (1)

நகர நம்பியர் வளையோர்-தம்முடன் – மணி:19/24

TOP


நகரத்து (2)

ஈங்கு இ நகரத்து யான் வரும் காரணம் – மணி:3/27
ஆங்கு அ நகரத்து அறி பொருள் வினாவும் – மணி:21/92

TOP


நகருள்ளீர் (1)

மா நகருள்ளீர் மழை தரும் இவள் என – மணி:22/93

TOP


நகு (1)

நகு_தக்கன்றே நல் நெடும் பேர் ஊர் – மணி:18/9

TOP


நகு_தக்கன்றே (1)

நகு_தக்கன்றே நல் நெடும் பேர் ஊர் – மணி:18/9

TOP


நகுதல் (1)

நகுதல் அல்லது நாடக கணிகையர் – மணி:24/23

TOP


நகுதி (1)

நறு மலர் கோதை எள்ளினை நகுதி
எள்ளினை போலும் இ உரை கேட்டு இங்கு – மணி:21/106,107

TOP


நகுலமும் (1)

குறும் கால் நகுலமும் நெடும் செவி முயலும் – மணி:19/96

TOP


நகுவனன் (1)

நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப – மணி:13/99

TOP


நகூஉம் (1)

யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே – மணி:18/24

TOP


நகை (7)

பவள செ வாய் தவள வாள் நகை
ஒள் அரி நெடு கண் வெள்ளி வெண் தோட்டு – மணி:3/117,118
ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை – மணி:5/112
முருந்து ஏர் இள_நகை நீங்கி பூம் பொழில் – மணி:7/88
கண்டனை ஆக என கடு நகை எய்தி – மணி:16/91
சித்திராபதி தான் சிறு நகை எய்தி – மணி:18/86
கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும் – மணி:19/74
நறு முகை அமிழ்து உறூஉம் திரு நகை அருந்தி – மணி:25/88

TOP


நகை-செய்து (2)

ஆபுத்திரன் பின்பு அமர் நகை-செய்து
மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ – மணி:13/92,93
பொருந்துபு நின்று திருந்து நகை-செய்து
குறும் கால் நகுலமும் நெடும் செவி முயலும் – மணி:19/95,96

TOP


நகையாய் (1)

முத்து ஏர் நகையாய் முன்னுற கூறுவல் – மணி:24/146

TOP


நகையும் (3)

பவள செ வாய் தவள வாள் நகையும்
அஞ்சனம் சேரா செம் கயல் நெடும் கணும் – மணி:18/160,161
நிரை முத்து அனைய நகையும் காணாய் – மணி:20/49
பவள கடிகையில் தவள வாள் நகையும்
குவளை செம் கணும் குறிப்பொடு வழாஅள் – மணி:20/75,76

TOP


நகையொடு (1)

நடவை மாக்களும் நகையொடு வைகி – மணி:14/62

TOP


நங்காய் (2)

நல் தொடி நங்காய் நாணு துறந்தேன் – மணி:2/41
நொடிகுவன் நங்காய் நுண்ணிதின் கேள் நீ – மணி:29/46

TOP


நங்கை (5)

கற்று துறைபோகிய பொன் தொடி நங்கை
நல் தவம் புரிந்தது நாண் உடைத்து என்றே – மணி:2/32,33
பருகாள் ஆயின் பைம்_தொடி நங்கை
ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி – மணி:5/15,16
பதி_அகம் திரிதரும் பைம் தொடி நங்கை
அதிர் கழல் வேந்தன் அடி பிழைத்தாரை – மணி:19/41,42
நறை கமழ் கூந்தல் நங்கை நீயும் – மணி:26/62
கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை
பொன் கொடி மூதூர் புரிசை வலம் கொண்டு – மணி:28/169,170

TOP


நங்கையை (3)

நம்பிக்கு இளையள் ஓர் நங்கையை கொடுத்து – மணி:16/76
நா உடை பாவை நங்கையை எடுத்தலும் – மணி:22/94
நாவல் அம் தீவில் இ நங்கையை ஒப்பார் – மணி:25/12

TOP


நசை (2)

எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப – மணி:19/119
நீர் நசை வேட்கையின் நெடும் கடம் உழலும் – மணி:23/112

TOP


நஞ்சு (2)

வெம் சின அரவம் நஞ்சு எயிறு அரும்ப – மணி:20/104
நஞ்சு விழி அரவின் நல் உயிர் வாங்கி – மணி:23/84

TOP


நடக்கும் (1)

தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும்
வானம் பொய்யாது மா நிலம் வளம்படும் – மணி:12/88,89

TOP


நடக்குவன் (1)

நள் இருள் கொண்டு நடக்குவன் என்னும் – மணி:13/36

TOP


நடத்தும் (1)

பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா – மணி:27/188

TOP


நடப்போய் (1)

நரகர் துயர் கெட நடப்போய் நின் அடி – மணி:11/69

TOP


நடவை (2)

நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் – மணி:13/72
நடவை மாக்களும் நகையொடு வைகி – மணி:14/62

TOP


நடு (1)

நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து – மணி:28/171

TOP


நடு-மின் (1)

பூ கொடி வல்லியும் கரும்பும் நடு-மின்
பத்தி வேதிகை பசும் பொன் தூணத்து – மணி:1/47,48

TOP


நடுக்கு (12)

நெஞ்சு நடுக்கு உறூஉம் நெய்தல் ஓசையும் – மணி:6/71
நெஞ்சம் நடுக்கு உறூஉம் நேர் இழை நல்லாள் – மணி:7/110
மனம் நடுக்கு உறூஉம் மாற்றம் தாராய் – மணி:8/22
நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே – மணி:9/19
பூமி நடுக்கு உறூஉம் போழ்தத்து இ நகர் – மணி:9/20
மெல்_இயல் கண்டனை மெய் நடுக்கு உற்றனை – மணி:10/29
நெஞ்சு நடுக்கு உற்று நெடு கணீர் உகுத்து – மணி:13/34
பேணுநர் இல்லோர் பிணி நடுக்கு உற்றோர் – மணி:13/112
நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்கு உற – மணி:22/29
நெஞ்சு நடுக்கு உற கேட்டு மெய் வருந்தி – மணி:24/4
நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன் – மணி:24/54
தான் நடுக்கு உற்ற தன்மை நோக்கி – மணி:29/22

TOP


நடுங்க (1)

மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய – மணி:4/29

TOP


நடுங்கா (1)

நரை முதிர் யாக்கை நடுங்கா நாவின் – மணி:12/3

TOP


நடுங்காது (1)

நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி – மணி:23/52

TOP


நடுங்கி (3)

நெஞ்சு நடுங்கி நெடும் துயர் கூர யான் – மணி:21/41
ஐயென விம்மி ஆய்_இழை நடுங்கி
செய் தவத்து_ஆட்டியை சிறுமை செய்தேன் – மணி:23/63,64
வளி எறி கொம்பின் வருந்தி மெய் நடுங்கி
அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர்-தம்முடன் – மணி:24/86,87

TOP


நடுங்கினள் (1)

நன்றி அன்று என நடுங்கினள் மயங்கி – மணி:18/133

TOP


நடுங்கும் (1)

படை இட்டு நடுங்கும் காமன் பாவையை – மணி:3/23

TOP


நடுநாள் (3)

பழ விறல் மூதூர் பாயல் கொள் நடுநாள்
கோமகன் கோயில் குறு நீர் கன்னலின் – மணி:7/63,64
மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து – மணி:14/3
மாரி நடுநாள் வயிறு காய் பசியால் – மணி:25/140

TOP


நடுவு (2)

மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய – மணி:4/29
நடுவு நின்ற மேரு குன்றமும் – மணி:6/193

TOP


நடை (5)

தளர் நடை தாங்கா கிளர் பூண் புதல்வரை – மணி:3/141
வல்லுந-கொல்லோ மடந்தை-தன் நடை
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன – மணி:3/153,154
தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி – மணி:7/54
குதலை செம் வாய் குறு நடை புதல்வர்க்கு – மணி:7/57
நடை திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து – மணி:21/55

TOP


நடையின் (1)

தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி – மணி:14/30

TOP


நண்ணார் (1)

நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்கு உற – மணி:22/29

TOP


நண்ணிய (2)

நண்ணிய மூக்கால் நாற்றனும் நாவால் – மணி:27/16
நண்ணிய பக்கம் சபக்கத்திலும் ஆய் – மணி:29/133

TOP


நண்ணினர் (1)

நல் அறச்சாலை நண்ணினர் சேறலும் – மணி:28/238

TOP


நண்ணினள் (1)

நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து – மணி:28/171

TOP


நண்ணுதற்கு (1)

நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும் – மணி:28/65

TOP


நந்தா (1)

நந்தா_விளக்கே நா_மிசை_பாவாய் – மணி:14/18

TOP


நந்தா_விளக்கே (1)

நந்தா_விளக்கே நா_மிசை_பாவாய் – மணி:14/18

TOP


நம் (1)

நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை என – மணி:13/21

TOP


நம்பி (1)

நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை என – மணி:13/21

TOP


நம்பிக்கு (1)

நம்பிக்கு இளையள் ஓர் நங்கையை கொடுத்து – மணி:16/76

TOP


நம்பியர் (1)

நகர நம்பியர் வளையோர்-தம்முடன் – மணி:19/24

TOP


நம்முள் (1)

நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள் – மணி:22/127

TOP


நம்மை (1)

நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள் – மணி:22/127

TOP


நயங்கள் (1)

நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி – மணி:30/35

TOP


நயந்தோன் (1)

இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது – மணி:5/88

TOP


நயம் (7)

நக்க சாரணர் நயம் இலர் தோன்றி – மணி:16/56
தன் கண் சார்த்திய நயம் தருதல் உடையது – மணி:29/116
நான்கு நயம் என தோன்றப்படுவன – மணி:30/217
ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம் – மணி:30/220
வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும் – மணி:30/222
புரிவு_இன்மை நயம் என புகறல் வேண்டும் – மணி:30/226
நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள் பயன் – மணி:30/228

TOP


நயம்பாடு (1)

நயம்பாடு இல்லை நாண் உடைத்து என்ற – மணி:2/36

TOP


நயன் (1)

நறும் தாது உண்டு நயன் இல் காலை – மணி:18/19

TOP


நர (1)

தொடுத்த பாசத்து தொல் பதி நர
புடைத்து உணும் பூதமும் பொருந்தாது ஆயிடும் – மணி:1/23,24

TOP


நரகம் (1)

தாங்கா நரகம் தன்னிடை உழப்போர் – மணி:22/176

TOP


நரகர் (1)

நரகர் துயர் கெட நடப்போய் நின் அடி – மணி:11/69

TOP


நரகரும் (7)

எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும் – மணி:6/181
கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும் – மணி:12/96
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே – மணி:24/117,118
விலங்கும் பேயும் நரகரும் ஆகி – மணி:24/133
விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும் – மணி:25/41
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே – மணி:30/57,58
விலங்கும் பேயும் நரகரும் ஆகி – மணி:30/74

TOP


நரகு (3)

அல் அறம் செய்வோர் அரு நரகு அடைதலும் – மணி:16/89
அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் – மணி:24/110
அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் – மணி:30/50

TOP


நரந்தமும் (1)

நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும் – மணி:3/162

TOP


நரம்பில் (1)

பண் யாழ் நரம்பில் பண்ணு முறை நிறுப்போர் – மணி:19/81

TOP


நரம்பின் (1)

வெம் பகை நரம்பின் என் கை செலுத்தியது – மணி:4/70

TOP


நரம்பு (2)

யாழோர் மருதத்து இன் நரம்பு உளர – மணி:5/135
மகர வீணையின் கிளை நரம்பு வடித்த – மணி:19/25

TOP


நரம்பொடு (1)

நரம்பொடு விடு தோல் உகிர் தொடர் கழன்று – மணி:20/59

TOP


நரம்போடு (1)

மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ – மணி:20/64

TOP


நரி (4)

அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய் கொண்டு – மணி:6/110
நரி மகன் அல்லனோ கேசகம்பளன் – மணி:13/65
நரி வாலும் இலையா காணப்பட்ட – மணி:29/105
நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல் – மணி:29/107

TOP


நரியின் (1)

நீள் முக நரியின் தீ விளி கூவும் – மணி:6/74

TOP


நரை (4)

நரை முதிர் யாக்கை நடுங்கா நாவின் – மணி:12/3
நரை மூதாட்டி ஒருத்தியை காட்டி – மணி:20/40
நாறு ஐ கூந்தலும் நரை விராவு உற்றன – மணி:22/130
நல் நெடு கூந்தல் நரை மூதாட்டி – மணி:23/2

TOP


நரைமையின் (1)

நரைமையின் திரை தோல் தகை இன்று ஆயது – மணி:20/44

TOP


நல் (111)

நறு மலர் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு – மணி:0/81
தீவக சாந்தி செய்தரு நல் நாள் – மணி:1/35
தீவக சாந்தி செய்தரு நல் நாள் – மணி:2/3
நல் தவம் புரிந்தது நாண் உடைத்து என்றே – மணி:2/33
நல் தொடி நங்காய் நாணு துறந்தேன் – மணி:2/41
நல் நீர் பொய்கையின் நளி எரி புகுவர் – மணி:2/45
பல் மலர் அடுக்கிய நல் மர பந்தர் – மணி:3/44
விண்ணவர் கோமான் விழா கொள் நல் நாள் – மணி:3/47
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள – மணி:3/152
மழலை வண்டு இனம் நல் யாழ்-செய்ய – மணி:4/4
கற்பு தான் இலள் நல் தவ உணர்வு இலள் – மணி:5/86
பல் மலர் சிறந்த நல் நீர் அகழி – மணி:5/110
ஊரா_நல்_தேர் ஓவிய படுத்து – மணி:6/39
நல் பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய – மணி:6/48
நல் நீர் புணரி நளி கடல் ஓதையின் – மணி:6/78
மிக்க நல் அறம் விரும்பாது வாழும் – மணி:6/103
நான்மறை அந்தணர் நல்_நூல் உரைக்கும் – மணி:6/169
நாமம் செய்த நல் நாள் நள் இருள் – மணி:7/35
நல் மணி இழந்த நாகம் போன்று அவள் – மணி:7/131
நாக நல் நாட்டு நானூறு யோசனை – மணி:9/21
பழுது இல் காட்சி இ நல் மணி பீடிகை – மணி:11/27
பெருமை-சால் நல் அறம் பிறழா நோன்பினர் – மணி:11/31
கயக்கு அறு நல் அறம் கண்டனை என்றலும் – மணி:11/98
வித்தி நல் அறம் விளைந்த அதன் பயன் – மணி:11/108
பொன் தொடி மாதர் நல் திறம் சிறக்க – மணி:12/33
பெருமை-சால் நல் அறம் பெருகாது ஆகி – மணி:12/58
இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி – மணி:12/59
ஈங்கு நல் அறம் எய்தலும் உண்டு என – மணி:12/69
அளவா சிறு செவி அளப்பு_அரு நல் அறம் – மணி:12/81
பழுது இல் நல் நெறி படர்குவர் காணாய் – மணி:12/113
தவ பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின் – மணி:12/119
நாவிடை நல்_நூல் நன்கனம் நவிற்றி – மணி:13/24
காட்டிடை நல் ஆ கதழ்ந்து கிளர்ந்து ஓட – மணி:13/48
அரு மறை நல்_நூல் அறியாது இகழ்ந்தனை – மணி:13/59
நான்மறை மாக்காள் நல்_நூல் அகத்து என – மணி:13/69
நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர் – மணி:14/41
யாவரும் இல்லா தேவர் நல் நாட்டுக்கு – மணி:14/42
பன்னீராண்டு பாண்டி நல் நாடு – மணி:14/55
சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின் – மணி:14/74
அ நாள் அவனை ஓம்பிய நல் ஆ – மணி:15/2
புண்ணிய நல் நீர் போதொடு சொரிந்தது – மணி:15/28
நலத்தகை இன்றி நல் உயிர்க்கு எல்லாம் – மணி:15/49
நாவாய் கேடுற நல் மரம் பற்றி – மணி:16/17
நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும் – மணி:16/88
நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும் – மணி:16/88
நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து – மணி:16/107
எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை என்றலும் – மணி:16/111
நன்று சொன்னாய் நல் நெறி படர்குவை – மணி:16/112
நகு_தக்கன்றே நல் நெடும் பேர் ஊர் – மணி:18/9
நாடகம் விரும்ப நல் நலம் கவினி – மணி:18/58
நாடவர் காண நல் அரங்கு ஏறி – மணி:18/103
நல்லாய் என்-கொல் நல் தவம் புரிந்தது – மணி:18/126
மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன் – மணி:18/139
பொங்கர் வண்டு இனம் நல் யாழ்-செய்ய – மணி:19/58
நாடக காப்பிய நல்_நூல் நுனிப்போர் – மணி:19/80
நல் நெடு கூந்தல் நறு விரை குடைவோர் – மணி:19/89
யாப்பு உடை நல் பிறப்பு எய்தினர் போல – மணி:20/4
நடை திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து – மணி:21/55
பாங்கு இயல் நல் அறம் பலவும் செய்த பின் – மணி:21/173
இன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை – மணி:21/180
நல் தவ பெண்டிர் பின் உளம் போகியும் – மணி:22/22
நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி – மணி:22/99
ஆங்கு அவன் அவளுடன் செய்த நல் அறம் – மணி:22/141
நல் நெடு கூந்தல் நரை மூதாட்டி – மணி:23/2
நஞ்சு விழி அரவின் நல் உயிர் வாங்கி – மணி:23/84
ஆள்பவர் கலக்கு உற மயங்கிய நல் நாட்டு – மணி:23/104
ஞான நல் நீர் நன்கனம் தெளித்து – மணி:23/138
நல் மனம் பிறந்த நாடக கணிகையை – மணி:24/75
காண்_தகு நல்_வினை நும்மை ஈங்கு அழைத்தது – மணி:24/98
நல்_வினை தீ_வினை என்று இரு வகையான் – மணி:24/119
நல்_வினை என்பது யாது என வினவின் – மணி:24/135
புரை தீர் நல் அறம் போற்றி கேண்-மின் – மணி:24/142
நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி – மணி:24/148
மாதவர் நல் மொழி மறவாது உய்ம்-மின் – மணி:24/150
எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல் – மணி:24/156
நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன் – மணி:24/169
காவிரி படப்பை நல் நகர் புக்கேன் – மணி:25/16
ஆகலின் நல்_வினை அயராது ஓம்பு-மின் – மணி:25/44
பன்னீர் ஆண்டு இ பதி கெழு நல் நாடு – மணி:25/101
நாக நல் நாடு ஆள்வோன்-தன் மகள் – மணி:25/178
நல் மணி இழந்த நாகம் போன்று – மணி:25/195
நல்_நுதல் உரைத்த நல் அறம் செய்கேன் – மணி:25/233
நல்_நுதல் உரைத்த நல் அறம் செய்கேன் – மணி:25/233
மன் பெரு நல் நாடு வாயெடுத்து அழைக்கும் – மணி:25/237
அற்பு கடன் நில்லாது நல் தவம் படராது – மணி:26/7
காசு இல் பூம் பொழில் கலிங்க நல் நாட்டு – மணி:26/15
மே செய் நல்_வினையின் விண்ணவர் சென்றேம் – மணி:26/35
மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு – மணி:26/42
நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும் – மணி:26/74
நல் நெறி காணிய தொல் நூல் புலவரும் – மணி:26/75
திருந்து நல் ஏது முதிர்ந்து உளது ஆதலின் – மணி:26/93
நல்_வினையும் தீ_வினையும் அ வினையால் – மணி:27/175
சீர்-சால் நல்_வினை தீ_வினை அவை செயும் – மணி:27/198
புவி காவலன்-தன் புண்ணிய நல் நாள் – மணி:28/9
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும் – மணி:28/54
நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும் – மணி:28/65
நவை அறு நாதன் நல் அறம் பகர்வோர் – மணி:28/71
நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி – மணி:28/89
நல்_வினை பயன்-கொல் நான் கண்டது என – மணி:28/92
திருந்திய நல் நகர் சேர்ந்தது கேளாய் – மணி:28/102
தாங்கா நல் அறம் தானும் கேட்டு – மணி:28/126
இன்னும் கேளாய் நல் நெறி மாதே – மணி:28/137
பூம்_கொடி முன்னவன் போதியில் நல் அறம் – மணி:28/141
நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும் என்று – மணி:28/144
நலத்தகை நல்லாய் நல் நாடு எல்லாம் – மணி:28/190
நல் அறச்சாலை நண்ணினர் சேறலும் – மணி:28/238
நன்று என விரும்பி நல் அடி கழுவி – மணி:28/240
நித்த அநித்தம் நிகழும் நல் ஏது – மணி:29/121
நல்_வினை தீ_வினை என்று இரு வகையால் – மணி:30/59
நல்_வினை என்பது யாது என வினவின் – மணி:30/76
திருந்து நல் உணர்வான் செற்றம் அற்றிடுக – மணி:30/257

TOP


நல்_நுதல் (1)

நல்_நுதல் உரைத்த நல் அறம் செய்கேன் – மணி:25/233

TOP


நல்_நூல் (5)

நான்மறை அந்தணர் நல்_நூல் உரைக்கும் – மணி:6/169
நாவிடை நல்_நூல் நன்கனம் நவிற்றி – மணி:13/24
அரு மறை நல்_நூல் அறியாது இகழ்ந்தனை – மணி:13/59
நான்மறை மாக்காள் நல்_நூல் அகத்து என – மணி:13/69
நாடக காப்பிய நல்_நூல் நுனிப்போர் – மணி:19/80

TOP


நல்_வினை (8)

காண்_தகு நல்_வினை நும்மை ஈங்கு அழைத்தது – மணி:24/98
நல்_வினை தீ_வினை என்று இரு வகையான் – மணி:24/119
நல்_வினை என்பது யாது என வினவின் – மணி:24/135
ஆகலின் நல்_வினை அயராது ஓம்பு-மின் – மணி:25/44
சீர்-சால் நல்_வினை தீ_வினை அவை செயும் – மணி:27/198
நல்_வினை பயன்-கொல் நான் கண்டது என – மணி:28/92
நல்_வினை தீ_வினை என்று இரு வகையால் – மணி:30/59
நல்_வினை என்பது யாது என வினவின் – மணி:30/76

TOP


நல்_வினையின் (1)

மே செய் நல்_வினையின் விண்ணவர் சென்றேம் – மணி:26/35

TOP


நல்_வினையும் (1)

நல்_வினையும் தீ_வினையும் அ வினையால் – மணி:27/175

TOP


நல்க (1)

கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க
வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி – மணி:16/6,7

TOP


நல்கினை (1)

நறு மலர் கோதாய் நல்கினை கேளாய் – மணி:12/56

TOP


நல்கூர் (2)

நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச – மணி:10/30
நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் – மணி:13/72

TOP


நல்கூர்ந்த (1)

மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும் – மணி:28/225

TOP


நல்கூர்ந்தனை (2)

நா நல்கூர்ந்தனை என்று அவன்-தன்னொடு – மணி:10/34
நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை என – மணி:19/4

TOP


நல்ல (2)

இ திறம் நல்ல சாதனத்து ஒத்தன – மணி:29/142
நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள் பயன் – மணி:30/228

TOP


நல்லவும் (1)

ஒக்க நல்லவும் தீயவும் உள அதில் – மணி:29/112

TOP


நல்லன (1)

தீம் கனி கிழங்கு செழும் காய் நல்லன
ஆங்கு அவன் கொணரவும் ஆற்றேன்ஆக – மணி:17/58,59

TOP


நல்லாய் (18)

அணி இழை நல்லாய் யானும் போவல் என்று – மணி:3/83
இலங்கு தொடி நல்லாய் யார் நீ என்றலும் – மணி:11/8
பூ கொடி நல்லாய் கேள் என்று உரைத்ததும் – மணி:12/20
பூம் கொடி நல்லாய் புகுந்தது கேளாய் – மணி:14/2
பூ கொடி நல்லாய் பிச்சை பெறுக என – மணி:16/129
நல்லாய் என்-கொல் நல் தவம் புரிந்தது – மணி:18/126
இன்னும் கேளாய் இளம் கொடி நல்லாய்
மன்னவன் மகற்கு வருந்து துயர் எய்தி – மணி:21/72,73
என்று அவன் உரைக்கும் இளம் கொடி நல்லாய்
அன்று என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை – மணி:21/111,112
என் திறம் கேட்டியோ இள கொடி நல்லாய்
மன் பெரும் தெய்வ கணங்களின் உள்ளேன் – மணி:21/129,130
வருவது கேளாய் மட கொடி நல்லாய்
மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து – மணி:21/146,147
பூம் கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை – மணி:23/72
பூ கொடி நல்லாய் புகுந்தது இது என – மணி:23/87
நல்லாய் ஆண் உரு நான் கொண்டிருந்தேன் – மணி:23/95
கண்டும் அறிதியோ காரிகை நல்லாய்
பொய்யாற்று ஒழுக்கம் பொருள் என கொண்டோர் – மணி:23/123,124
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய் – மணி:24/124
மடவரல் நல்லாய் நின்றன் மா நகர் – மணி:25/176
நலத்தகை நல்லாய் நல் நாடு எல்லாம் – மணி:28/190
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய் – மணி:30/65

TOP


நல்லார் (2)

இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி – மணி:3/143
செறி வளை நல்லார் சிலர் புறம் சூழ – மணி:18/39

TOP


நல்லாள் (13)

ஆங்கு அ தீவகத்து ஆய் இழை நல்லாள்
தான் துயில் உணர்ந்து தனி துயர் உழந்ததும் – மணி:0/47,48
காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று – மணி:0/65
சுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி – மணி:6/14
வந்து தோன்றும் மட கொடி நல்லாள்
களிப்பு மாண் செல்வ காவல் பேர் ஊர் – மணி:7/25,26
நெஞ்சம் நடுக்கு உறூஉம் நேர் இழை நல்லாள்
காவலாளர் கண் துயில்-கொள்ள – மணி:7/110,111
ஆதிரை நல்லாள் அவள் மனை இ மனை – மணி:15/79
ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு – மணி:16/22
அவதி அறிந்த அணி இழை நல்லாள்
வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும் – மணி:21/188,189
நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண் – மணி:22/125
குமரி_மூத்த அ கொடும் குழை நல்லாள்
அமரர் அருளால் அகல் நகர் இடூஉம் – மணி:22/143,144
இணை வளை நல்லாள் இராசமாதேவி – மணி:24/94
உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள்
கோவலன் தாதை மா தவம் புரிந்தோன் – மணி:28/72,73
கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள்
பண்டை எம் பிறப்பினை பான்மையின் காட்டிய – மணி:28/208,209

TOP


நல்லாள்-தன்னுழை (1)

ஆய் வளை நல்லாள்-தன்னுழை சென்று – மணி:28/187

TOP


நல்லீர் (2)

செறி தொடி நல்லீர் உம் பிறப்பு ஈங்கு இஃது – மணி:11/141
அரைசன் தேவியொடு ஆய் இழை நல்லீர்
புரை தீர் நல் அறம் போற்றி கேண்-மின் – மணி:24/141,142

TOP


நல்லுரை (1)

புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்து-மின் – மணி:1/59

TOP


நல்வழி (1)

நல்வழி எழுதிய நலம் கிளர் வாயிலும் – மணி:6/42

TOP


நலத்தகு (1)

நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில் – மணி:1/37

TOP


நலத்தகை (2)

நலத்தகை இன்றி நல் உயிர்க்கு எல்லாம் – மணி:15/49
நலத்தகை நல்லாய் நல் நாடு எல்லாம் – மணி:28/190

TOP


நலம் (13)

பொலம் பிறை சென்னி நலம் பெற தாழ – மணி:3/136
நாடக_மடந்தையர் நலம் கெழு வீதி – மணி:4/51
தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம் – மணி:4/66
நல்வழி எழுதிய நலம் கிளர் வாயிலும் – மணி:6/42
நளி இரு முந்நீர் நலம் பல தரூஉம் – மணி:12/92
தன் நலம் பிறர் தொழ தான் சென்று எய்தி – மணி:15/6
பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி – மணி:16/9
நாடகம் விரும்ப நல் நலம் கவினி – மணி:18/58
நா நனி வருந்த என் நலம் பாராட்டலின் – மணி:21/140
நா உடை பாவையை நலம் பல ஏத்தி – மணி:22/104
நன்று அறி மாதவிர் நலம் பல காட்டினிர் – மணி:22/164
நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி – மணி:25/151
நலம் தரு பண்ணும் திறனும் வாய்ப்ப – மணி:28/41

TOP


நவில் (1)

கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி – மணி:13/31

TOP


நவிற்றி (1)

நாவிடை நல்_நூல் நன்கனம் நவிற்றி
ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் – மணி:13/24,25

TOP


நவை (8)

நவை அறு நன்பொருள் உரைமினோ என – மணி:0/87
கங்குல் கழியினும் கடு நவை எய்தாது – மணி:6/25
கண்டனன் வெரீஇ கடு நவை எய்தி – மணி:6/127
காமன் கையற கடு நவை அறுக்கும் – மணி:7/36
நாதன் பாதம் நவை கெட ஏத்தி – மணி:11/74
நாதன் பாதம் நவை கெட ஏத்துதல் – மணி:12/102
நவை அறு நன்பொருள் உரை-மினோ என – மணி:27/1
நவை அறு நாதன் நல் அறம் பகர்வோர் – மணி:28/71

TOP


நள் (2)

நாமம் செய்த நல் நாள் நள் இருள் – மணி:7/35
நள் இருள் கொண்டு நடக்குவன் என்னும் – மணி:13/36

TOP


நளி (7)

நல் நீர் பொய்கையின் நளி எரி புகுவர் – மணி:2/45
நளி எரி புகாஅர் ஆயின் அன்பரோடு – மணி:2/46
நல் நீர் புணரி நளி கடல் ஓதையின் – மணி:6/78
நளி இரு முந்நீர் நலம் பல தரூஉம் – மணி:12/92
நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ – மணி:16/13
நளி இரும் பொய்கை ஆடுநர் போல – மணி:18/13
நாடன் ஆவோன் நளி நீர் பரப்பின் – மணி:29/24

TOP


நற்றாய் (1)

நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி – மணி:22/99

TOP


நறு (11)

நறு மலர் கோதைக்கு நன்கனம் உரைத்ததும் – மணி:0/58
நறு மலர் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு – மணி:0/81
புலம்பு நீர் உருட்டி பொதி அவிழ் நறு மலர் – மணி:3/9
அறல் விளங்கு நிலா மணல் நறு மலர் பள்ளி – மணி:8/11
நறு மலர் அல்லது பிற மரம் சொரியாது – மணி:8/50
நறு மலர் கோதை நின் ஊர்-ஆங்கண் – மணி:11/51
நறு மலர் கோதாய் நல்கினை கேளாய் – மணி:12/56
நல் நெடு கூந்தல் நறு விரை குடைவோர் – மணி:19/89
நறு மலர் கோதை எள்ளினை நகுதி – மணி:21/106
நறு முகை அமிழ்து உறூஉம் திரு நகை அருந்தி – மணி:25/88
சீல உபாகர் செம் கை நறு நீரும் – மணி:28/12

TOP


நறும் (2)

கொங்கு அலர் நறும் தார் கோமகன் சென்றதும் – மணி:0/68
நறும் தாது உண்டு நயன் இல் காலை – மணி:18/19

TOP


நறை (1)

நறை கமழ் கூந்தல் நங்கை நீயும் – மணி:26/62

TOP


நன் (3)

பொன் நாண் கோத்த நன் மணி கோவை – மணி:3/133
நாவான் நக்கி நன் பால் ஊட்டி – மணி:13/13
தன் மனை நன் பல தானமும் செய்தனன் – மணி:16/127

TOP


நன்கனம் (7)

நறு மலர் கோதைக்கு நன்கனம் உரைத்ததும் – மணி:0/58
நாடக_மகளிர்க்கு நன்கனம் வகுத்த – மணி:2/30
நாணமும் உடையும் நன்கனம் நீத்து – மணி:3/88
நாவிடை நல்_நூல் நன்கனம் நவிற்றி – மணி:13/24
நா தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின் – மணி:13/26
ஞான நல் நீர் நன்கனம் தெளித்து – மணி:23/138
ஞான தீபம் நன்கனம் காட்ட – மணி:30/262

TOP


நன்கு (4)

நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என – மணி:1/8
நால்_ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என – மணி:1/67
மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த – மணி:15/9
நன்கு என் பக்கம் என நாட்டுக அது தான் – மணி:29/117

TOP


நன்பொருள் (3)

நவை அறு நன்பொருள் உரைமினோ என – மணி:0/87
மெய் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும் – மணி:1/11
நவை அறு நன்பொருள் உரை-மினோ என – மணி:27/1

TOP


நன்றி (1)

நன்றி அன்று என நடுங்கினள் மயங்கி – மணி:18/133

TOP


நன்று (7)

நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து – மணி:16/107
நன்று சொன்னாய் நல் நெறி படர்குவை – மணி:16/112
நன்று அறி மாதவிர் நலம் பல காட்டினிர் – மணி:22/164
நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி – மணி:24/148
தூ அற துறத்தல் நன்று என சாற்றி – மணி:25/92
நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன் – மணி:27/278
நன்று என விரும்பி நல் அடி கழுவி – மணி:28/240

TOP


நனவு (1)

அன்றே கனவில் நனவு என அறைந்த – மணி:29/32

TOP


நனவே (1)

நனவே போல கனவு அகத்து உரைத்தேன் – மணி:7/38

TOP


நனவோ (1)

நனவோ கனவோ என்பதை அறியேன் – மணி:8/21

TOP


நனி (4)

தந்தையும் தாயும் தாம் நனி உழந்த – மணி:3/5
நா நனி வருந்த என் நலம் பாராட்டலின் – மணி:21/140
நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள் – மணி:28/180
தாங்கா மாரியும் தான் நனி பொழியும் – மணி:28/197

TOP


நனைப்ப (1)

சிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்ப
அற்றம் காவா சுற்று உடை பூம் துகில் – மணி:3/138,139

TOP