நெ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெஞ்சகம் 1
நெஞ்சத்து 3
நெஞ்சம் 6
நெஞ்சமொடு 4
நெஞ்சமோடு 1
நெஞ்சில் 4
நெஞ்சின் 5
நெஞ்சினள் 1
நெஞ்சினன் 1
நெஞ்சினை 1
நெஞ்சு 10
நெஞ்சோடு 1
நெட்டிடை 2
நெடியவும் 1
நெடியோன் 4
நெடு 35
நெடுங்கண் 1
நெடுங்குலத்து 1
நெடும் 19
நெடுமுடிக்கிள்ளி 1
நெய் 1
நெய்தல் 1
நெய்தலும் 1
நெரித்ததூஉம் 1
நெரிய 1
நெருஞ்சியும் 1
நெருப்பா 1
நெருப்பின் 1
நெருப்பு 7
நெருப்பை 2
நெல் 3
நெல்லி 1
நெல்லும் 2
நெற்றி 1
நெறி 18

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நெஞ்சகம் (1)

அம் செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து – மணி:5/64

TOP


நெஞ்சத்து (3)

சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர்க்கு ஆக்கும் அது வாழியர் என – மணி:19/157,158
அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும் – மணி:20/6
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும் – மணி:20/11,12

TOP


நெஞ்சம் (6)

காதல் நெஞ்சம் கலங்கி காரிகை – மணி:3/7
புதுவோன் பின்றை போனது என் நெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத்து இயற்கை – மணி:5/89,90
நெஞ்சம் நடுக்கு உறூஉம் நேர் இழை நல்லாள் – மணி:7/110
கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்கு – மணி:18/107
நெஞ்சம் கவர்ந்த வஞ்ச கள்வி – மணி:18/121
அறைபோய் நெஞ்சம் அவன்-பால் அணுகினும் – மணி:18/130

TOP


நெஞ்சமொடு (4)

மையல் நெஞ்சமொடு வயந்தமாலையும் – மணி:2/74
அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை – மணி:5/22
மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி – மணி:6/206
அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின் – மணி:19/140

TOP


நெஞ்சமோடு (1)

ஒரு_தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு
ஆராமத்திடை அலர் கொய்வேன்-தனை – மணி:3/31,32

TOP


நெஞ்சில் (4)

துளக்கு உறு நெஞ்சில் துயரொடும் போய பின் – மணி:0/42
பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி – மணி:19/27
கன்றிய நெஞ்சில் கடு வினை உருத்து எழ – மணி:20/128
கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன் – மணி:22/52

TOP


நெஞ்சின் (5)

சிதைந்த நெஞ்சின் சித்திராபதி-தான் – மணி:0/35
வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும் – மணி:7/77
மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும் – மணி:15/60
பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும் – மணி:20/5
வாங்கா நெஞ்சின் மயரியை வாளால் – மணி:22/75

TOP


நெஞ்சினள் (1)

விதுப்புறு நெஞ்சினள் வெய்து_உயிர்த்து கலங்கி – மணி:18/4

TOP


நெஞ்சினன் (1)

கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொள – மணி:22/148

TOP


நெஞ்சினை (1)

தீ நெறி படரா நெஞ்சினை ஆகு-மதி – மணி:5/29

TOP


நெஞ்சு (10)

நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி – மணி:4/69
நெஞ்சு நடுக்கு உறூஉம் நெய்தல் ஓசையும் – மணி:6/71
செம் கண் சிவந்து நெஞ்சு புகை_உயிர்த்து – மணி:8/58
நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சை பாத்திரத்து – மணி:11/116
நெஞ்சு நடுக்கு உற்று நெடு கணீர் உகுத்து – மணி:13/34
வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகை_உயிர்த்து – மணி:18/37
நெஞ்சு நடுங்கி நெடும் துயர் கூர யான் – மணி:21/41
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர் – மணி:22/46
பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை – மணி:22/67
நெஞ்சு நடுக்கு உற கேட்டு மெய் வருந்தி – மணி:24/4

TOP


நெஞ்சோடு (1)

அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும் – மணி:13/54

TOP


நெட்டிடை (2)

நீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும் – மணி:3/41
நீல மா கடல் நெட்டிடை அன்றியும் – மணி:8/17

TOP


நெடியவும் (1)

குறியவும் நெடியவும் குன்று கண்ட அன்ன – மணி:6/58

TOP


நெடியோன் (4)

நெடியோன் மயங்கி நிலம் மிசை தோன்றி – மணி:17/9
நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன் – மணி:19/51
நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என – மணி:19/77
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்
தன்முன் தோன்றல் தகாது ஒழி நீ என – மணி:22/25,26

TOP


நெடு (35)

பொன் திகழ் நெடு வரை உச்சி தோன்றி – மணி:0/3
சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடு சினை – மணி:3/106
ஒள் அரி நெடு கண் வெள்ளி வெண் தோட்டு – மணி:3/118
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை மனை-தொறும் – மணி:3/127
வெம் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்-கொல் – மணி:4/102
நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் – மணி:6/29
நெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும் – மணி:6/47
தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி – மணி:6/51
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை கோட்டமும் – மணி:6/59
நிலத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும் – மணி:6/113
நின்று எறி பலியின் நெடு குரல் ஓதையும் – மணி:7/85
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி:7/94
துறையும் துறை சூழ் நெடு மணல் குன்றமும் – மணி:8/34
களி கயல் நெடு கண் கடவுளின் பெற்றதும் – மணி:12/14
நெஞ்சு நடுக்கு உற்று நெடு கணீர் உகுத்து – மணி:13/34
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம் – மணி:13/52
கந்து உடை நெடு நிலை கடவுள் எழுதிய – மணி:15/33
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம் – மணி:17/11
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி:17/89
நல் நெடு கூந்தல் நறு விரை குடைவோர் – மணி:19/89
மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த – மணி:19/122
நெடு நிலை கந்தின் இட-வயின் விளங்க – மணி:20/110
கடவுள் எழுதிய நெடு நிலை கந்தின் – மணி:21/1
குட-வயின் அமைத்த நெடு நிலை வாயில் – மணி:21/2
கந்து உடை நெடு நிலை கடவுள் பாவை – மணி:21/7
ஐ அரி நெடு கண் ஆய்_இழை கேள் என – மணி:21/45
நெடு நிலை கந்தில் நின்ற பாவையொடு – மணி:22/2
வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப – மணி:22/166
அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என் – மணி:22/215
நல் நெடு கூந்தல் நரை மூதாட்டி – மணி:23/2
இலங்கு அரி நெடு கண் இராசமாதேவி – மணி:23/7
நிலத்தில் குளித்து நெடு விசும்பு ஏறி – மணி:24/46
ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும் – மணி:27/192
நெடு நிலை-தோறும் நிலா சுதை மலரும் – மணி:28/27
நின்னது தன்மை அ நெடு நிலை கந்தில் துன்னிய – மணி:28/148

TOP


நெடுங்கண் (1)

செல்லல் செல்லல் சே அரி நெடுங்கண்
அல்லி அம் தாரோன் தன்-பால் செல்லல் – மணி:21/27,28

TOP


நெடுங்குலத்து (1)

நின் உயிர் தந்தை நெடுங்குலத்து உதித்த – மணி:29/14

TOP


நெடும் (19)

தத்து அரி நெடும் கண் தன் மகள் தோழி – மணி:2/7
செம் கயல் நெடும் கண் செவி மருங்கு ஓடி – மணி:4/101
நிறை அழி யானை நெடும் கூ விளியும் – மணி:7/67
கடும் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர் – மணி:7/82
புகர் முக வாரணம் நெடும் கூ விளிப்ப – மணி:7/115
நீங்கியது ஆங்கு நெடும் தெய்வம்-தான் என் – மணி:10/93
நின் நெடும் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த – மணி:12/35
நீங்கல் ஆற்றான் நெடும் துயர் எய்தி – மணி:17/60
நகு_தக்கன்றே நல் நெடும் பேர் ஊர் – மணி:18/9
காய் வேல் வென்ற கரும் கயல் நெடும் கண் – மணி:18/75
செரு கயல் நெடும் கண் சுருக்கு வலை படுத்து – மணி:18/106
விரை பரி நெடும் தேர் மேல் சென்று ஏறி – மணி:18/113
அஞ்சனம் சேரா செம் கயல் நெடும் கணும் – மணி:18/161
குறும் கால் நகுலமும் நெடும் செவி முயலும் – மணி:19/96
சிலை கயல் நெடும் கொடி செரு வேல் தட கை – மணி:19/124
நெஞ்சு நடுங்கி நெடும் துயர் கூர யான் – மணி:21/41
சே அரி நெடும் கண் சித்திராபதி மகள் – மணி:22/177
நீர் நசை வேட்கையின் நெடும் கடம் உழலும் – மணி:23/112
உம்பளம் தழீஇய உயர் மணல் நெடும் கோட்டு – மணி:24/27

TOP


நெடுமுடிக்கிள்ளி (1)

கிளர் மணி நெடுமுடிக்கிள்ளி முன்னா – மணி:24/29

TOP


நெய் (1)

ஐயவி அப்பிய நெய் அணி முச்சி – மணி:3/134

TOP


நெய்தல் (1)

நெஞ்சு நடுக்கு உறூஉம் நெய்தல் ஓசையும் – மணி:6/71

TOP


நெய்தலும் (1)

மா மலர் குவளையும் நெய்தலும் மயங்கிய – மணி:11/38

TOP


நெரித்ததூஉம் (1)

ஏந்து இள வன முலை இறை நெரித்ததூஉம்
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த – மணி:18/69,70

TOP


நெரிய (1)

முரிந்து கடை நெரிய வரிந்த சிலை புருவமும் – மணி:18/162

TOP


நெருஞ்சியும் (1)

அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்து-ஆங்கு – மணி:12/60

TOP


நெருப்பா (1)

மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக – மணி:23/140

TOP


நெருப்பின் (1)

வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின் – மணி:29/93

TOP


நெருப்பு (7)

பக்கம் இ மலை நெருப்பு உடைத்து என்றல் – மணி:29/59
நிகமனம் புகை உடைத்தே நெருப்பு உடைத்து எனல் – மணி:29/63
நெருப்பு உடைத்து அல்லாது யாது ஒன்று அது புகை – மணி:29/64
புகை உள இடத்து நெருப்பு உண்டு என்னும் – மணி:29/87
அன்னுவயத்தாலும் நெருப்பு இலா இடத்து – மணி:29/88
அனுமிக்க வேண்டும் அது கூடா நெருப்பு
இலா இடத்து புகை இலை எனல் நேர் அ – மணி:29/101,102
தூய புகை நெருப்பு உண்டு என துணிதல் – மணி:29/206

TOP


நெருப்பை (2)

புகை இ நெருப்பை சாதித்தது என்னின் – மணி:29/90
தாமே நெருப்பை சாதிக்க வேண்டும் – மணி:29/95

TOP


நெல் (3)

நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல் – மணி:30/201
நெல் வித்து அகத்துள் நெல் முளை தோற்றும் எனல் – மணி:30/227
நெல் வித்து அகத்துள் நெல் முளை தோற்றும் எனல் – மணி:30/227

TOP


நெல்லி (1)

தோற்றரவு அடுக்கும் கை நெல்லி போல் எனல் – மணி:29/83

TOP


நெல்லும் (2)

நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் – மணி:6/41
நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும் – மணி:6/95

TOP


நெற்றி (1)

மாலை நெற்றி வான் பிறை கோட்டு – மணி:19/19

TOP


நெறி (18)

தீ நெறி படரா நெஞ்சினை ஆகு-மதி – மணி:5/29
தீ நெறி கடும் பகை கடிந்தோய் என்கோ – மணி:5/103
ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும் – மணி:7/31
தீ நெறி கடும் பகை கடிந்தோய் நின் அடி – மணி:11/62
உயிர் வழங்கு பெரு நெறி ஒரு_திறம் பட்டது – மணி:12/62
பழுது இல் நல் நெறி படர்குவர் காணாய் – மணி:12/113
நன்று சொன்னாய் நல் நெறி படர்குவை – மணி:16/112
உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன் – மணி:16/113
பின்னர் பெரியோன் பிடக நெறி கடவாய் – மணி:26/66
நல் நெறி காணிய தொல் நூல் புலவரும் – மணி:26/75
எய்தி உண்டாம் நெறி என்று இவை-தம்மால் – மணி:27/12
உள்ள நெறி என்பது நாராச திரிவில் – மணி:27/55
ஆதி அந்தம் இலை அது நெறி எனும் – மணி:27/104
இன்னும் கேளாய் நல் நெறி மாதே – மணி:28/137
அ நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன் – மணி:28/147
தவ நெறி அறவணன் சாற்ற கேட்டனன் – மணி:28/150
அ நெறி சபக்கம் யாது ஒன்று உண்டு அது – மணி:29/82
ஈர்_அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய் – மணி:30/16

TOP