நூ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நூல் (17)

ஓவிய செம் நூல் உரை நூல் கிடக்கையும் – மணி:2/31
ஓவிய செம் நூல் உரை நூல் கிடக்கையும் – மணி:2/31
பிணங்கு நூல் மார்பன் பேது கந்து ஆக – மணி:6/151
நான்மறை அந்தணர் நல்_நூல் உரைக்கும் – மணி:6/169
நாவிடை நல்_நூல் நன்கனம் நவிற்றி – மணி:13/24
அரு மறை நல்_நூல் அறியாது இகழ்ந்தனை – மணி:13/59
நான்மறை மாக்காள் நல்_நூல் அகத்து என – மணி:13/69
புரி_நூல் மார்பீர் பொய் உரை ஆமோ – மணி:13/97
புரி_நூல் மார்பின் திரி புரி வார் சடை – மணி:17/27
நாடக காப்பிய நல்_நூல் நுனிப்போர் – மணி:19/80
புக்கேன் பிறன் உளம் புரி_நூல் மார்பன் – மணி:22/47
புதல்வன்-தன்னை ஓர் புரி_நூல் மார்பன் – மணி:23/108
நல் நெறி காணிய தொல் நூல் புலவரும் – மணி:26/75
ஆசீவக நூல் அறிந புராணனை – மணி:27/108
கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை – மணி:28/52
நூல் துரை சமய நுண்பொருள் கேட்டே – மணி:29/42
ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல் – மணி:29/164

TOP


நூலால் (1)

ஆகம அளவை அறிவன் நூலால்
போக புவனம் உண்டு என புலங்கொளல் – மணி:27/43,44

TOP


நூலின் (1)

மற்கலி நூலின் வகை இது என்ன – மணி:27/165

TOP


நூற்பொருள் (4)

நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் ஆம் என – மணி:19/38
பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என – மணி:27/109
புகலும் தலைவன் யார் நூற்பொருள் யாவை – மணி:27/168
தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும் – மணி:27/172

TOP


நூற்பொருள்கள் (1)

வரம்பு_இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து – மணி:27/112

TOP


நூற்றுநால்வரும் (1)

ஓங்கிய சிறப்பின் ஒரு_நூற்றுநால்வரும் – மணி:24/12

TOP


நூறாயிரம் (1)

பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும் – மணி:28/226

TOP


நூறு (1)

ஒரு_நூறு வேள்வி உரவோன் தனக்கு – மணி:0/33

TOP