மொ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மொசிக்க (1)

மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள் – மணி:19/136

TOP


மொய் (1)

மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள் – மணி:19/136

TOP


மொய்த்த (1)

மொய்த்த மூ அறு பாடை மாக்களில் – மணி:28/221

TOP


மொய்ம் (1)

மொய்ம் மலர் பூம் பொழில் புக்கது முதலா – மணி:23/88

TOP


மொழி (6)

நிரய கொடு மொழி நீ ஒழி என்றலும் – மணி:6/167
ஆங்கு அவன் உரைத்தலும் அவன் மொழி பிழையாய் – மணி:21/172
மாதவர் நல் மொழி மறவாது உய்ம்-மின் – மணி:24/150
அன்றே போன்றது அரும் தவர் வாய் மொழி
இன்று எனக்கு என்றே ஏத்தி வலம் கொண்டு – மணி:25/66,67
மேவிய பக்கத்து மீட்சி மொழி ஆய் – மணி:29/66
விபக்க தொடர்ச்சி மீட்சி மொழி என்க – மணி:29/76

TOP


மொழிக்கு (1)

தீ மொழிக்கு அடைத்த செவியோய் நின் அடி – மணி:11/67

TOP


மொழிதல் (2)

துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல்
வினாவின் விடுத்தல் வாய் வாளாமை என – மணி:30/236,237
மிக கூறிட்டு மொழிதல் என விளம்புவர் – மணி:30/243

TOP


மொழிந்த (1)

மூன்றாய் தோன்றும் மொழிந்த பக்கத்து – மணி:29/122

TOP


மொழிந்தது (1)

சிறந்து அருள்கூர்ந்து திருவாய் மொழிந்தது
ஈர்_அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய் – மணி:30/15,16

TOP


மொழிந்திடும் (1)

மூப்பே சாவு என மொழிந்திடும் துன்பம் – மணி:30/146

TOP


மொழியது (1)

ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது
பெட்டாங்கு ஆங்கு ஒழுகும் பெண்டிரை போல – மணி:22/69,70

TOP


மொழியின் (2)

பண் தேர் மொழியின் பயன் பல வாங்கி – மணி:18/108
முன் பின் மலையா மங்கல மொழியின்
ஞான தீபம் நன்கனம் காட்ட – மணி:30/261,262

TOP


மொழியினள் (1)

பட்டவை துடைக்கும் பயம் கெழு மொழியினள்
இலங்கு அரி நெடு கண் இராசமாதேவி – மணி:23/6,7

TOP


மொழியும்-காலை (1)

மூன்று வகை பிறப்பும் மொழியும்-காலை
ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே – மணி:30/153,154

TOP


மொழியேன் (1)

கேட்டது மொழியேன் கேள்வியாளரின் – மணி:18/134

TOP


மொழிவது (2)

முதல் என மொழிவது கரு கொள் முகில் கண்டு – மணி:27/35
மூப்பு என மொழிவது அந்தத்து அளவும் – மணி:30/100

TOP


மொழிவோள் (1)

முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள்
ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால் – மணி:6/157,158

TOP


மொழிவோன் (1)

முரணா திரு அற மூர்த்தியை மொழிவோன்
அறிவு வறிதாய் உயிர் நிரை காலத்து – மணி:30/6,7

TOP