கோ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 5
கோங்கு 1
கோசம்பி 1
கோட்டத்து 4
கோட்டத்து-ஆங்கண் 1
கோட்டது 1
கோட்டம் 20
கோட்டமும் 4
கோட்டிடை 1
கோட்டியும் 2
கோட்டினில் 1
கோட்டு 3
கோட்பாடு 1
கோடணை 3
கோடல் 2
கோடலும் 2
கோடற்கு 1
கோடா 1
கோடி 1
கோடியும் 1
கோடியோ 1
கோடு 9
கோடை 1
கோடையில் 1
கோண 1
கோணமும் 1
கோத்த 2
கோத்து 1
கோதமை 2
கோதாய் 1
கோதை 7
கோதைக்கு 2
கோதையர் 1
கோதையை 1
கோப்பும் 1
கோப்போர் 1
கோமகள் 1
கோமகற்கு 1
கோமகன் 5
கோமான் 2
கோமுகி 5
கோயில் 5
கோயிலும் 1
கோயிலுள் 2
கோல் 5
கோல்-அதனால் 1
கோல 1
கோலத்து 5
கோலம் 5
கோலமோடு 1
கோலும் 1
கோலோன் 1
கோவலர் 2
கோவலன் 6
கோவலன்-தன்னையும் 1
கோவியன் 1
கோவை 2
கோவையின் 1
கோள் 10
கோளும் 1
கோறலும் 1
கோன் 11
கோன்முறை 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கோ (5)

வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை – மணி:19/129
வாழி எம் கோ மன்னவ என்றலும் – மணி:19/138
வாழிய எம் கோ மன்னவ என்று – மணி:22/160
எம் கோ வாழி என் சொல் கேள்-மதி – மணி:25/99
குட கோ சேரலன் குட்டுவர் பெருந்தகை – மணி:28/103

TOP


கோங்கு (1)

கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னை – மணி:19/67

TOP


கோசம்பி (1)

கொடி கோசம்பி கோமகன் ஆகிய – மணி:15/61

TOP


கோட்டத்து (4)

வச்சிர கோட்டத்து மணம் கெழு முரசம் – மணி:1/27
இடு பிண கோட்டத்து எயில் புறம் ஆகலின் – மணி:6/203
முதியாள் கோட்டத்து அக-வயின் இருந்த – மணி:19/39
முதியாள் கோட்டத்து அக-வயின் கிடந்த – மணி:21/3

TOP


கோட்டத்து-ஆங்கண் (1)

சக்கரவாள கோட்டத்து-ஆங்கண்
பலர் புக திறந்த பகு வாய் வாயில் – மணி:7/91,92

TOP


கோட்டது (1)

பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது – மணி:15/5

TOP


கோட்டம் (20)

அறம் செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும் – மணி:0/72
தருநிலை வச்சிரம் என இரு கோட்டம்
எதிர்எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை – மணி:5/114,115
சக்கரவாள கோட்டம் புக்கால் – மணி:6/24
சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார் – மணி:6/30
சக்கரவாள கோட்டம் அஃது என – மணி:6/31
அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்
நிரய கொடு மொழி நீ ஒழி என்றலும் – மணி:6/166,167
சக்கரவாள கோட்டம் ஈங்கு இது காண் – மணி:6/202
சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார் – மணி:6/204
சக்கரவாள கோட்டம் வாழும் – மணி:15/31
சக்கரவாள கோட்டம் உண்டு ஆங்கு அதில் – மணி:17/76
முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கி – மணி:17/88
முதியாள் உன்-தன் கோட்டம் புகுந்த – மணி:18/169
கோட்டம் காவலர் கோமகன் தனக்கு இ – மணி:19/48
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து – மணி:19/157
கறையோர் இல்லா சிறையோர் கோட்டம்
அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என் – மணி:19/161,162
நிரய கொடு சிறை நீக்கிய கோட்டம்
தீ பிறப்பு உழந்தோர் செய் வினை பயத்தான் – மணி:20/2,3
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து – மணி:20/11
அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும் – மணி:20/12
முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர் – மணி:22/3
வேட்கை துரப்ப கோட்டம் புகுந்து – மணி:26/5

TOP


கோட்டமும் (4)

காடு அமர் செல்வி கழி பெரும் கோட்டமும்
அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும் – மணி:6/53,54
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை கோட்டமும்
அரும் திறல் கடவுள் திருந்து பலி கந்தமும் – மணி:6/59,60
உறையுளும் கோட்டமும் காப்பாய் காவாய் – மணி:6/137
கொடி தேர் வீதியும் தேவர் கோட்டமும்
முது மர இடங்களும் முது நீர் துறைகளும் – மணி:21/120,121

TOP


கோட்டிடை (1)

குரூஉ தொடை மாலை கோட்டிடை சுற்றி – மணி:13/29

TOP


கோட்டியும் (2)

தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும் – மணி:1/43,44
வட்டும் சூதும் வம்ப கோட்டியும்
முட்டா வாழ்க்கை முறைமையது ஆக – மணி:14/63,64

TOP


கோட்டினில் (1)

கோட்டினில் குத்தி குடர் புய்த்துறுத்து – மணி:13/47

TOP


கோட்டு (3)

மாலை நெற்றி வான் பிறை கோட்டு
நீல யானை மேலோர் இன்றி – மணி:19/19,20
விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது – மணி:23/121
உம்பளம் தழீஇய உயர் மணல் நெடும் கோட்டு
பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல் – மணி:24/27,28

TOP


கோட்பாடு (1)

செய்வானொடு கோட்பாடு இலை என்றும் – மணி:30/231

TOP


கோடணை (3)

இந்திர கோடணை விழா அணி விரும்பி – மணி:5/94
இந்திர கோடணை இ நகர் காண – மணி:7/17
இந்திர கோடணை விழவு அணி வரு நாள் – மணி:17/69

TOP


கோடல் (2)

சுட்டுணர்வோடு விரிய கோடல் ஐயம் – மணி:27/58
திரிய கோடல் ஒன்றை ஒன்று என்றல் – மணி:27/63

TOP


கோடலும் (2)

கோலம் கோடலும் கோவையின் கோப்பும் – மணி:2/28
அந்தரம் சேறலும் அயல் உரு கோடலும்
சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில் – மணி:23/98,99

TOP


கோடற்கு (1)

உலகு உய கோடற்கு ஒருவன் தோன்றும் – மணி:25/46

TOP


கோடா (1)

கோடா செங்கோல் சோழர்-தம் குலக்கொடி – மணி:0/23

TOP


கோடி (1)

தன்னான் இயன்ற தனம் பல கோடி
எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈந்து – மணி:28/128,129

TOP


கோடியும் (1)

வேத வியாதனும் கிருத கோடியும்
ஏதம்_இல் சைமினி எனும் இ ஆசிரியர் – மணி:27/5,6

TOP


கோடியோ (1)

செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ – மணி:28/188

TOP


கோடு (9)

கோடு உடை தாழை கொழு மடல் அவிழ்ந்த – மணி:4/17
மகர யாழின் வான் கோடு தழீஇ – மணி:4/56
கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன் – மணி:16/71
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல் – மணி:24/114
இல் வழக்கு என்பது முயல்_கோடு ஒப்பன – மணி:27/71
இன்மையின் கண்டிலம் முயல்_கோடு என்றல் – மணி:29/81
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல் – மணி:30/54
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயல்_கோடு – மணி:30/208
முயல்_கோடு இன்மையின் தோற்றமும் இல் எனல் – மணி:30/216

TOP


கோடை (1)

கோள் நிலை திரிந்து கோடை நீடினும் – மணி:0/24

TOP


கோடையில் (1)

காய் வெம் கோடையில் கார் தோன்றியது என – மணி:25/105

TOP


கோண (1)

கோண சந்தி மாண் வினை விதானத்து – மணி:19/113

TOP


கோணமும் (1)

குவி முள் கருவியும் கோணமும் கூர் நுனை – மணி:18/163

TOP


கோத்த (2)

குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன் – மணி:3/105
பொன் நாண் கோத்த நன் மணி கோவை – மணி:3/133

TOP


கோத்து (1)

ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ – மணி:4/88

TOP


கோதமை (2)

கோதமை என்பாள் கொடும் துயர் சாற்ற – மணி:6/141
கோதமை உற்ற கொடும் துயர் நீங்கி – மணி:6/188

TOP


கோதாய் (1)

நறு மலர் கோதாய் நல்கினை கேளாய் – மணி:12/56

TOP


கோதை (7)

தயங்கு இணர் கோதை தாரை சாவுற – மணி:7/100
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் – மணி:10/74
அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள் – மணி:10/78
நறு மலர் கோதை நின் ஊர்-ஆங்கண் – மணி:11/51
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் – மணி:12/18
அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள் – மணி:21/102
நறு மலர் கோதை எள்ளினை நகுதி – மணி:21/106

TOP


கோதைக்கு (2)

நறு மலர் கோதைக்கு நன்கனம் உரைத்ததும் – மணி:0/58
நறு மலர் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு – மணி:0/81

TOP


கோதையர் (1)

கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச – மணி:18/50

TOP


கோதையை (1)

தோடு அலர் கோதையை தொழுதனன் ஏத்தி – மணி:18/147

TOP


கோப்பும் (1)

கோலம் கோடலும் கோவையின் கோப்பும்
கால கணிதமும் கலைகளின் துணிவும் – மணி:2/28,29

TOP


கோப்போர் (1)

ஆரம் பரிந்த முத்தம் கோப்போர்
ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர் – மணி:19/85,86

TOP


கோமகள் (1)

ஏடு அவிழ் தாரோய் எம் கோமகள் முன் – மணி:19/3

TOP


கோமகற்கு (1)

தீது இன்று ஆக கோமகற்கு ஈங்கு ஈது – மணி:19/150

TOP


கோமகன் (5)

கொங்கு அலர் நறும் தார் கோமகன் சென்றதும் – மணி:0/68
கோமகன் கோயில் குறு நீர் கன்னலின் – மணி:7/64
கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு – மணி:11/126
கொடி கோசம்பி கோமகன் ஆகிய – மணி:15/61
கோட்டம் காவலர் கோமகன் தனக்கு இ – மணி:19/48

TOP


கோமான் (2)

விண்ணவர் கோமான் விழா கொள் நல் நாள் – மணி:3/47
தேவர் கோமான் காவல் மா நகர் – மணி:28/166

TOP


கோமுகி (5)

கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சி – மணி:11/39
கோமுகி வலம்-செய்து கொள்கையின் நிற்றலும் – மணி:11/56
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின் – மணி:14/91
கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர் – மணி:25/156
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு – மணி:28/202

TOP


கோயில் (5)

ஒரு_பெரு கோயில் திருமுக_ஆட்டி – மணி:5/118
கோமகன் கோயில் குறு நீர் கன்னலின் – மணி:7/64
கோயில் கழிந்து வாயில் நீங்கி – மணி:20/96
மா பெரும் கோயில் வாயிலுக்கு இசைத்து – மணி:22/11
கோயில் மன்னனை குறுகினர் சென்று ஈங்கு – மணி:22/12

TOP


கோயிலும் (1)

பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும்
அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும் – மணி:20/5,6

TOP


கோயிலுள் (2)

கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு – மணி:23/38
ஒத்த கோயிலுள் அ_தக புனைந்து – மணி:28/214

TOP


கோல் (5)

சிமிலி கரண்டையன் நுழை கோல் பிரம்பினன் – மணி:3/86
கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும் – மணி:7/8
கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து – மணி:8/41
தீ துறு செம் கோல் சென்று சுட்டு-ஆங்கு – மணி:18/2
புது கோல் யானையும் பொன் தார் புரவியும் – மணி:28/60

TOP


கோல்-அதனால் (1)

அலை கோல்-அதனால் அறைந்தனர் கேட்ப – மணி:13/45

TOP


கோல (1)

குறு வியர் பொடித்த கோல வாள் முகத்தள் – மணி:18/40

TOP


கோலத்து (5)

பேடி கோலத்து பேடு காண்குநரும் – மணி:3/125
காவதம் திரிய கடவுள் கோலத்து
தீவதிலகை செவ்வனம் தோன்றி – மணி:11/5,6
பிக்குணி கோலத்து பெரும் தெரு அடைதலும் – மணி:15/58
பிறர் பின் செல்லா பிக்குணி கோலத்து
அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன் – மணி:23/25,26
ஆண்மை கோலத்து ஆய்_இழை இருப்ப – மணி:23/53

TOP


கோலம் (5)

கோலம் கோடலும் கோவையின் கோப்பும் – மணி:2/28
தாபத கோலம் தாங்கினம் என்பது – மணி:18/23
தாபத கோலம் தவறு இன்றோ என – மணி:18/54
எறிதரு கோலம் யான் செய்குவல் என்றே – மணி:23/40
கோலம் குயின்ற கொள்கை இடங்களும் – மணி:28/67

TOP


கோலமோடு (1)

உள்வரி கோலமோடு உன்னிய பொருள் உரைத்து – மணி:27/288

TOP


கோலும் (1)

வேலும் கோலும் அருட்கண் விழிக்க – மணி:22/15

TOP


கோலோன் (1)

கோள் நிலை திரியா கோலோன் ஆகுக – மணி:1/34

TOP


கோவலர் (2)

கோவலர் முல்லை குழல் மேற்கொள்ள – மணி:5/136
காவதம் கடந்து கோவலர் இருக்கையின் – மணி:13/85

TOP


கோவலன் (6)

கோவலன் உற்ற கொடும் துயர் தோன்ற – மணி:4/68
கோவலன் கூறி இ கொடி_இடை-தன்னை என் – மணி:7/34
கோவலன் இறந்த பின் கொடும் துயர் எய்தி – மணி:18/7
கோவலன் தாதை மா தவம் புரிந்தோன் – மணி:28/73
முன்னோன் கோவலன் மன்னவன்-தனக்கு – மணி:28/124
கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் – மணி:28/179

TOP


கோவலன்-தன்னையும் (1)

கொடை கெழு தாதை கோவலன்-தன்னையும்
கடவுள் எழுதிய படிமம் காணிய – மணி:26/3,4

TOP


கோவியன் (1)

கோவியன் வீதியும் கொடி தேர் வீதியும் – மணி:4/37

TOP


கோவை (2)

பொன் நாண் கோத்த நன் மணி கோவை
ஐயவி அப்பிய நெய் அணி முச்சி – மணி:3/133,134
தொடுத்த மணி கோவை உடுப்பொடு துயல்வர – மணி:3/140

TOP


கோவையின் (1)

கோலம் கோடலும் கோவையின் கோப்பும் – மணி:2/28

TOP


கோள் (10)

கோள் நிலை திரிந்து கோடை நீடினும் – மணி:0/24
மேலோர் விழைய விழா கோள் எடுத்த – மணி:1/7
கோள் நிலை திரியா கோலோன் ஆகுக – மணி:1/34
கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும் – மணி:7/8
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும் – மணி:7/9
புது கோள் யானை முன் போற்றாது சென்று – மணி:12/45
புது கோள் யானை வேட்டம் வாய்ந்து என – மணி:18/168
விசி பிணி முழவின் விழா கோள் விரும்பி – மணி:22/63
வாசவன் விழா கோள் மறவேல் என்று – மணி:24/69
வானவன் விழா கோள் மா நகர் ஒளிந்தது – மணி:25/197

TOP


கோளும் (1)

பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும்
தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து – மணி:6/182,183

TOP


கோறலும் (1)

மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும்
கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய் – மணி:16/84,85

TOP


கோன் (11)

எம் கோன் இயல் குணன் ஏதம்_இல் குண பொருள் – மணி:5/71
தேவர் கோன் இட்ட மா மணி பீடிகை – மணி:8/52
எம் கோன் நீ ஆங்கு உரைத்த அ நாளிடை – மணி:9/31
தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன் – மணி:11/28
அமரர் கோன் ஆணையின் அருந்துவோர் பெறாது – மணி:14/76
ஆயிரம் செம் கண் அமரர் கோன் பெற்றதும் – மணி:18/91
இறைவன் எம் கோன் எ உயிர் அனைத்தும் – மணி:21/94
திரு கிளர் மணி முடி தேவர் கோன் தன் முன் – மணி:24/13
நும் கோன் உன்னை பெறுவதன் முன் நால் – மணி:25/100
தீவகம் வலம்-செய்து தேவர் கோன் இட்ட – மணி:25/182
ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின் – மணி:28/196

TOP


கோன்முறை (1)

கோன்முறை அன்றோ குமரற்கு என்றலும் – மணி:18/111

TOP