ச – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சக்கர 1
சக்கரம் 1
சக்கரவாள 6
சக்கரவாளத்து 3
சக்கரவாளம் 1
சக்கரன் 1
சங்கதருமன் 1
சங்கம் 3
சங்கமன் 1
சங்கயம் 2
சங்கயமாய் 1
சங்கு 1
சடை 2
சடை_ஆட்டி 1
சண்டிகை 1
சண்பகமும் 1
சண்பையில் 2
சத்த 3
சத்தத்துவம் 1
சத்தம் 27
சதுக்கத்து 3
சதுக்கம் 1
சதுக்கமும் 2
சதுரம் 1
சந்தம் 1
சந்தி 5
சந்தியும் 2
சந்திரதத்தன் 2
சந்திரன் 1
சபக்க 8
சபக்கத்திலும் 1
சபக்கத்தினும் 1
சபக்கத்து 3
சபக்கம் 3
சபக்கமாய் 1
சபக்கைகதேச 2
சபாபதி 1
சம்பந்தம் 2
சம்பாதி 2
சம்பாபதி 1
சம்பாபதி-தன் 1
சம்பாபதி-தான் 1
சம்பாபதியினள் 1
சம்பு 2
சம்பு-தன் 1
சமணீர்காள் 1
சமந்தத்து 1
சமம் 1
சமய 7
சமயத்து 3
சமயமும் 2
சமயிகள் 1
சமனொளி 1
சயன 3
சயித்தம் 1
சரண் 2
சரணாகதியாய் 1
சரத்தி 1
சரவணத்து 1
சலத்தில் 1
சலாகை 1
சன்னா 1
சன்னும் 1
சனமித்திரன் 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சக்கர (1)

பொன் அணி நேமி வலம் கொள் சக்கர கை – மணி:13/57

TOP


சக்கரம் (1)

தரும சக்கரம் உருட்டினன் வருவோன் – மணி:10/26

TOP


சக்கரவாள (6)

சக்கரவாள கோட்டம் புக்கால் – மணி:6/24
சக்கரவாள கோட்டம் அஃது என – மணி:6/31
சக்கரவாள கோட்டம் ஈங்கு இது காண் – மணி:6/202
சக்கரவாள கோட்டத்து-ஆங்கண் – மணி:7/91
சக்கரவாள கோட்டம் வாழும் – மணி:15/31
சக்கரவாள கோட்டம் உண்டு ஆங்கு அதில் – மணி:17/76

TOP


சக்கரவாளத்து (3)

தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து
வரம் தரற்கு உரியோர்-தமை முன் நிறுத்தி – மணி:6/183,184
சக்கரவாளத்து தேவர் எல்லாம் – மணி:12/72
சா துயர் கேட்டு சக்கரவாளத்து
மாதவர் எல்லாம் மணிமேகலை-தனை – மணி:22/5,6

TOP


சக்கரவாளம் (1)

எண் அரு சக்கரவாளம் எங்கணும் – மணி:26/52

TOP


சக்கரன் (1)

சாது சக்கரன் மீ விசும்பு திரிவோன் – மணி:10/24

TOP


சங்கதருமன் (1)

சங்கதருமன் தான் எமக்கு அருளிய – மணி:5/70

TOP


சங்கம் (3)

வலம்புரி சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப – மணி:7/113
புலம் புரி சங்கம் பொருளொடு முழங்க – மணி:7/114
புத்த தன்ம சங்கம் என்னும் – மணி:30/3

TOP


சங்கமன் (1)

பண்ட கலம் பகர் சங்கமன் தன்னை – மணி:26/23

TOP


சங்கயம் (2)

சங்கயம் எய்தி அநேகாந்திகம் ஆம் – மணி:29/230
இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல – மணி:29/274

TOP


சங்கயமாய் (1)

ஏது சங்கயமாய் சாதித்தல் – மணி:29/204

TOP


சங்கு (1)

தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின் – மணி:8/3

TOP


சடை (2)

விளங்கு ஒளி மேனி விரி சடை_ஆட்டி – மணி:0/2
புரி_நூல் மார்பின் திரி புரி வார் சடை
மரவுரி உடையன் விருச்சிகன் என்போன் – மணி:17/27,28

TOP


சடை_ஆட்டி (1)

விளங்கு ஒளி மேனி விரி சடை_ஆட்டி
பொன் திகழ் நெடு வரை உச்சி தோன்றி – மணி:0/2,3

TOP


சண்டிகை (1)

காய சண்டிகை எனும் காரிகை-தான் என் – மணி:15/86

TOP


சண்பகமும் (1)

செருந்தியும் வேங்கையும் பெரும் சண்பகமும்
எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி – மணி:3/165,166

TOP


சண்பையில் (2)

காராளர் சண்பையில் கௌசிகன் என்போன் – மணி:3/29
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே – மணி:7/102

TOP


சத்த (3)

சத்த அநித்தம் சாத்தியம் ஆயின் – மணி:29/127
மாறு ஆம் பௌத்தற்கு சத்த அநித்தம் – மணி:29/188
ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம் என்னின் – மணி:29/209

TOP


சத்தத்துவம் (1)

சத்தத்துவம் போல் என சாற்றிடுதல் – மணி:29/273

TOP


சத்தம் (27)

ஆயின் சத்தம் அநித்தம் என்றல் – மணி:29/69
சத்தம் அநித்தம் நித்தம் என்று ஒன்றை – மணி:29/118
சத்தம் சாத்திய தன்மம் ஆவது – மணி:29/120
சத்தம் செவிக்கு புலன் அன்று என்றல் – மணி:29/156
குறித்து சத்தம் விநாசி என்றால் – மணி:29/170
சத்தம் அநித்தம் கட்புலத்து என்றல் – மணி:29/197
சத்தம் செயலுறல் அநித்தம் என்னின் – மணி:29/200
ஏது பொதுவாய் இருத்தல் சத்தம்
அநித்தம் அறியப்படுதலின் என்றால் – மணி:29/218,219
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் – மணி:29/226
உண்டாதல் ஆகும் சத்தம் செயலிடை – மணி:29/234
சத்தம் செயலிடை தோன்றும் அநித்தம் ஆதலின் எனின் – மணி:29/246
ஓர் தேசத்து வர்த்தித்தல் சத்தம்
நித்தம் அமூர்த்தம் ஆதலின் என்னின் – மணி:29/256,257
சத்தம் அநித்தம் செயலிடை தோன்றலின் – மணி:29/269
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் – மணி:29/272
உருவம் கெடுதல் சத்தம் நித்தம் – மணி:29/283
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் – மணி:29/342
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால் – மணி:29/352
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் – மணி:29/367
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான் – மணி:29/376
சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின் – மணி:29/388
சத்தம் அநித்தம் கிருத்தத்தால் எனின் – மணி:29/395
சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால் – மணி:29/406
சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால் – மணி:29/416
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின் – மணி:29/433
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான் – மணி:29/442
சொல்லாதே விடுதல் ஆகும் சத்தம்
நித்தம் பண்ணப்படாமையால் என்றால் – மணி:29/452,453
சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின் – மணி:29/462

TOP


சதுக்கத்து (3)

பதி வாழ் சதுக்கத்து தெய்வம் ஈறு ஆக – மணி:1/55
புலி கணத்து அன்னோர் பூத சதுக்கத்து
கொடி தேர் வேந்தன் கொற்றம் கொள்க என – மணி:7/78,79
பொய்யினை-கொல்லோ பூத சதுக்கத்து
தெய்வம் நீ என சே_இழை அரற்றலும் – மணி:22/55,56

TOP


சதுக்கம் (1)

பூத சதுக்கம் புக்கனள் மயங்கி – மணி:22/50

TOP


சதுக்கமும் (2)

பூத சதுக்கமும் பூ மர சோலையும் – மணி:20/29
மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும்
புது கோல் யானையும் பொன் தார் புரவியும் – மணி:28/59,60

TOP


சதுரம் (1)

பதும சதுரம் மீமிசை விளங்கி – மணி:8/48

TOP


சந்தம் (1)

கற்பம் கை சந்தம் கால் எண் கண் – மணி:27/100

TOP


சந்தி (5)

கோண சந்தி மாண் வினை விதானத்து – மணி:19/113
மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய் – மணி:30/26
பிறப்பின் முதல் உணர்வு ஆதி சந்தி
நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம் – மணி:30/148,149
புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி
கன்ம கூட்டத்தொடு வரு பிறப்பிடை – மணி:30/150,151
முன்னி செல்வது மூன்றாம் சந்தி
மூன்று வகை பிறப்பும் மொழியும்-காலை – மணி:30/152,153

TOP


சந்தியும் (2)

நிறை கல் தெற்றியும் மிறை கள சந்தியும்
தண்டும் மண்டையும் பிடித்து காவலர் – மணி:6/61,62
மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும் – மணி:28/59

TOP


சந்திரதத்தன் (2)

சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன் – மணி:16/41
சந்திரதத்தன் என்னும் வாணிகன் – மணி:16/124

TOP


சந்திரன் (1)

இலகு மதி சந்திரன் அல்ல என்றல் – மணி:29/163

TOP


சபக்க (8)

அநித்தம் கடம் போல் என்றல் சபக்க
தொடர்ச்சி யாது ஒன்று அநித்தம் இல்லாதது – மணி:29/73,74
விபக்கைகதேச விருத்தி சபக்க
வியாபி உபயைகதேச விருத்தி – மணி:29/214,215
சாதாரணம் சபக்க விபக்கத்துக்கும் – மணி:29/217
சபக்க விபக்கம் தம்மில் இன்று ஆதல் – மணி:29/225
சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின் – மணி:29/229
விபக்கைகதேச விருத்தி சபக்க
வியாபி ஆவது ஏது விபக்கத்து – மணி:29/243,244
சபக்க கட ஆதிகள் தம்மில் – மணி:29/250
சபக்க ஆகாச பரமாணுக்களின் – மணி:29/259

TOP


சபக்கத்திலும் (1)

நண்ணிய பக்கம் சபக்கத்திலும் ஆய் – மணி:29/133

TOP


சபக்கத்தினும் (1)

சபக்கத்தினும் விபக்கத்தினும் ஆகி – மணி:29/255

TOP


சபக்கத்து (3)

ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும் – மணி:29/123
வியாபி ஆவது ஏது சபக்கத்து
ஓர் இடத்து எய்தி விபக்கத்து எங்கும் – மணி:29/232,233
ஓரிடத்து உற்று சபக்கத்து ஒத்து இயறல் – மணி:29/245

TOP


சபக்கம் (3)

அ நெறி சபக்கம் யாது ஒன்று உண்டு அது – மணி:29/82
விபக்கத்து இன்றியே விடுதலும் சபக்கம்
சாதிக்கின் பொருள்-தன்னால் பக்கத்து – மணி:29/124,125
செயலிடை தோன்றாமைக்கு சபக்கம்
மின்னினும் ஆகாசத்தினும் மின்னின் – மணி:29/237,238

TOP


சபக்கமாய் (1)

சபக்கமாய் உள்ள கட ஆதி நிற்க – மணி:29/271

TOP


சபக்கைகதேச (2)

சாதாரணம் அசாதாரணம் சபக்கைகதேச
விருத்தி விபக்க வியாபி – மணி:29/212,213
சபக்கைகதேச விருத்தி விபக்க – மணி:29/231

TOP


சபாபதி (1)

தகவு இலை-கொல்லோ சபாபதி என – மணி:6/138

TOP


சம்பந்தம் (2)

அப்பிரசித்த சம்பந்தம் என – மணி:29/153
அப்பிரசித்த சம்பந்தம் ஆவது – மணி:29/186

TOP


சம்பாதி (2)

சம்பாதி இருந்த சம்பாதி வனமும் – மணி:3/54
சம்பாதி இருந்த சம்பாதி வனமும் – மணி:3/54

TOP


சம்பாபதி (1)

செம் குணக்கு ஒழுகி அ சம்பாபதி அயல் – மணி:0/13

TOP


சம்பாபதி-தன் (1)

சம்பாபதி-தன் ஆற்றல் தோன்ற – மணி:6/190

TOP


சம்பாபதி-தான் (1)

சம்பாபதி-தான் உரைத்த அ முறையே – மணி:6/186

TOP


சம்பாபதியினள் (1)

சம்பு என்பாள் சம்பாபதியினள்
செம்_கதிர்_செல்வன் திரு குலம் விளக்கும் – மணி:0/8,9

TOP


சம்பு (2)

சம்பு என்பாள் சம்பாபதியினள் – மணி:0/8
சம்பு தீவினுள் தமிழக மருங்கில் – மணி:17/62

TOP


சம்பு-தன் (1)

சாகை சம்பு-தன் கீழ் நின்று – மணி:0/5

TOP


சமணீர்காள் (1)

சமணீர்காள் நும் சரண் என்றோனை – மணி:5/52

TOP


சமந்தத்து (1)

ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை – மணி:11/22

TOP


சமம் (1)

தம் பெரு சேனையொடு வெம் சமம் புரி நாள் – மணி:8/59

TOP


சமய (7)

சமய கணக்கர் தம் திறம் கேட்டதும் – மணி:0/88
சமய கணக்கரும் தம் துறை போகிய – மணி:1/13
பல் வேறு சமய படிற்று உரை எல்லாம் – மணி:10/77
பல் வேறு சமய படிற்று உரை எல்லாம் – மணி:21/101
சமய கணக்கர் தம் திறம் சார்ந்து – மணி:27/2
மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர் – மணி:27/80
நூல் துரை சமய நுண்பொருள் கேட்டே – மணி:29/42

TOP


சமயத்து (3)

ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள் – மணி:1/60
அவ்வவர் சமயத்து அறி பொருள் கேட்டு – மணி:26/64
அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம் – மணி:28/87

TOP


சமயமும் (2)

ஐ வகை சமயமும் அறிந்தனள் ஆங்கு என் – மணி:27/289
அ உரு என்ன ஐ வகை சமயமும்
செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன் – மணி:29/43,44

TOP


சமயிகள் (1)

தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும் – மணி:28/86

TOP


சமனொளி (1)

இலங்கா தீவத்து சமனொளி என்னும் – மணி:28/107

TOP


சயன (3)

சயன ஆசனங்கள் போல என்றால் – மணி:29/293
சயன ஆசனத்தின் பரார்த்தம் போல் கண் முதல் – மணி:29/295
சயன ஆசனவானை போல் ஆகி – மணி:29/297

TOP


சயித்தம் (1)

வான் ஓங்கு சிமையத்து வால் ஒளி சயித்தம்
ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது – மணி:28/131,132

TOP


சரண் (2)

சமணீர்காள் நும் சரண் என்றோனை – மணி:5/52
சரணாகதியாய் சரண் சென்று அடைந்த பின் – மணி:30/5

TOP


சரணாகதியாய் (1)

சரணாகதியாய் சரண் சென்று அடைந்த பின் – மணி:30/5

TOP


சரத்தி (1)

ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி
காம கடந்த வாய்மையள் என்றே – மணி:5/16,17

TOP


சரவணத்து (1)

மேரு குன்றத்து ஊரும் நீர் சரவணத்து
அரும் திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய – மணி:18/92,93

TOP


சலத்தில் (1)

சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற – மணி:24/47

TOP


சலாகை (1)

சலாகை நுழைந்த மணி துளை அகவையின் – மணி:12/66

TOP


சன்னா (1)

என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள – மணி:29/363

TOP


சன்னும் (1)

அன்றியும் அது-தான் சன்னும் அசன்னும் – மணி:29/362

TOP


சனமித்திரன் (1)

சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி – மணி:25/98

TOP