நு – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நுகர்ச்சி (12)

வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை – மணி:30/91
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும் – மணி:30/109
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும் – மணி:30/110
ஊழின் மண்டிலமா சூழும் இ நுகர்ச்சி
பேதைமை மீள செய்கை மீளும் – மணி:30/118,119
ஊறு மீள நுகர்ச்சி மீளும் – மணி:30/124
நுகர்ச்சி மீள வேட்கை மீளும் – மணி:30/125
நுகர்ச்சி என்று நோக்கப்படுவன – மணி:30/139
மற்று அ பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள் – மணி:30/143
நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம் – மணி:30/149
நுகர்ச்சி பிறப்பு மூப்பு பிணி சாவு இவை – மணி:30/173
உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை – மணி:30/189
சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சி
உள்ளது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி:30/210,211

TOP


நுகர்தல் (1)

நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல்
வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை – மணி:30/90,91

TOP


நுகர்ந்திருத்தல் (1)

ஈண்டு செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல்
காண்தரு சிறப்பின் நும் கடவுளர் அல்லது – மணி:14/38,39

TOP


நுகர்வே (5)

வாயில் ஊறே நுகர்வே வேட்கை – மணி:24/106
வாயில் ஊறே நுகர்வே வேட்கை – மணி:30/46
நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல் – மணி:30/90
நுகர்வே வேட்கை பற்றே பவமே – மணி:30/164
நுகர்வே பிறப்பே பிணி மூப்பு சாவே – மணி:30/180

TOP


நுகரும் (1)

தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும்
ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும் – மணி:27/196,197

TOP


நுசுப்பினை (1)

நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச – மணி:10/30

TOP


நுசுப்பு (1)

இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து-ஆங்கு – மணி:9/7

TOP


நுண் (3)

அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல் – மணி:3/121
வஞ்சி நுண் இடை மணிமேகலை-தனை – மணி:5/81
கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை – மணி:28/52

TOP


நுண்ணிதின் (1)

நொடிகுவன் நங்காய் நுண்ணிதின் கேள் நீ – மணி:29/46

TOP


நுண்பொருள் (1)

நூல் துரை சமய நுண்பொருள் கேட்டே – மணி:29/42

TOP


நுதல் (7)

நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா – மணி:1/54
கரு கொடி புருவத்து மருங்கு வளை பிறை நுதல்
காந்தள் அம் செம் கை ஏந்து இள வன முலை – மணி:3/119,120
பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ – மணி:20/43
இன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை – மணி:21/180
மனை_அகம் நீங்கி வாள் நுதல் விசாகை – மணி:22/89
வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப – மணி:23/62
நல்_நுதல் உரைத்த நல் அறம் செய்கேன் – மணி:25/233

TOP


நும் (10)

வந்தீர் அடிகள் நும் மலர் அடி தொழுதேன் – மணி:3/92
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர் – மணி:3/94
சமணீர்காள் நும் சரண் என்றோனை – மணி:5/52
அவ்வையர் ஆயினீர் நும் அடி தொழுதேன் – மணி:11/137
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று – மணி:13/66
காண்தரு சிறப்பின் நும் கடவுளர் அல்லது – மணி:14/39
யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என் – மணி:24/97
அ உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த – மணி:25/52
நும் கோன் உன்னை பெறுவதன் முன் நால் – மணி:25/100
கற்பு கடன் பூண்டு நும் கடன் முடித்தது – மணி:26/8

TOP


நும்மை (1)

காண்_தகு நல்_வினை நும்மை ஈங்கு அழைத்தது – மணி:24/98

TOP


நுமக்கு (1)

தீ_வினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு – மணி:11/139

TOP


நுவலப்படுவன (1)

நுவலப்படுவன நோய் ஆகும்மே – மணி:30/182

TOP


நுவறல் (1)

அநித்தியத்தை நித்தியம் என நுவறல்
அப்பிரசித்த விசேடணம் ஆவது – மணி:29/166,167

TOP


நுழை (2)

சிமிலி கரண்டையன் நுழை கோல் பிரம்பினன் – மணி:3/86
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர் – மணி:4/5

TOP


நுழைகல்லா (1)

கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை – மணி:28/52

TOP


நுழைந்த (1)

சலாகை நுழைந்த மணி துளை அகவையின் – மணி:12/66

TOP


நுழைபு (1)

வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர் – மணி:4/5

TOP


நுனித்த (1)

நுனித்த குணத்து ஓர் கணத்தின்-கண்ணே – மணி:27/180

TOP


நுனித்தனர் (1)

நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் ஆம் என – மணி:19/38

TOP


நுனிப்போர் (1)

நாடக காப்பிய நல்_நூல் நுனிப்போர்
பண் யாழ் நரம்பில் பண்ணு முறை நிறுப்போர் – மணி:19/80,81

TOP


நுனை (1)

குவி முள் கருவியும் கோணமும் கூர் நுனை
கவை முள் கருவியும் ஆகி கடிகொள – மணி:18/163,164

TOP