ஓ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஓங்கி 6
ஓங்கிய 25
ஓங்கு 20
ஓங்கும் 2
ஓசி 1
ஓசை 2
ஓசையின் 1
ஓசையும் 2
ஓட்டி 4
ஓட 2
ஓடலும் 1
ஓடாது 1
ஓடி 3
ஓடு 9
ஓடும் 2
ஓடுவையும் 1
ஓத்து 1
ஓதல் 2
ஓதி 7
ஓதிய 4
ஓதியின் 1
ஓதில் 1
ஓதின் 1
ஓதினன் 2
ஓதினை 1
ஓதையின் 1
ஓதையும் 8
ஓப்ப 1
ஓம்ப 1
ஓம்பலின் 1
ஓம்பவும் 1
ஓம்பன்-மின் 1
ஓம்பாளன் 3
ஓம்பி 1
ஓம்பிடும் 1
ஓம்பிய 1
ஓம்பு-மின் 1
ஓம்புதல் 2
ஓம்புநர் 2
ஓம்புநன் 1
ஓம்பும் 4
ஓம்புவை 1
ஓர் 67
ஓர்க்கும் 1
ஓர்ந்தனை 1
ஓரா 1
ஓராது 1
ஓரிடத்து 1
ஓரிடத்தே 1
ஓரின் 1
ஓவிய 5
ஓவியச்சேனன் 1
ஓவியம் 3
ஓவியன் 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஓங்கி (6)

மணி அறை பீடிகை வலம் கொண்டு ஓங்கி
புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் – மணி:5/97,98
தான்றியும் ஓடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி
கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து – மணி:6/80,81
உரை பெறு மும் முழம் நிலம் மிசை ஓங்கி
திசை-தொறும் ஒன்பான் முழ நிலம் அகன்று – மணி:8/45,46
நின் பதி புகுவாய் என்று எழுந்து ஓங்கி
மறந்ததும் உண்டு என மறித்து ஆங்கு இழிந்து – மணி:10/87,88
மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி
பிழையா விளையுளும் பெருகியது அன்றோ – மணி:11/90,91
கொடி மதில் மூதூர் குட-கண் நின்று ஓங்கி
வட திசை மருங்கின் வானத்து இயங்கி – மணி:28/164,165

TOP


ஓங்கிய (25)

பாடல்-சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
கோடா செங்கோல் சோழர்-தம் குலக்கொடி – மணி:0/22,23
ஓங்கிய மணிபல்லவத்திடை உற்றதும் – மணி:0/84
நாவல் ஓங்கிய மா பெரும் தீவினுள் – மணி:2/1
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை மனை-தொறும் – மணி:3/127
ஒரு_தனி ஓங்கிய விரை மலர் தாமரை – மணி:4/9
விரை மலர் தாமரை கரை நின்று ஓங்கிய
கோடு உடை தாழை கொழு மடல் அவிழ்ந்த – மணி:4/16,17
மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய
கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து – மணி:4/29,30
எதிர்எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை – மணி:5/115
ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய
ஒரு_பெரு கோயில் திருமுக_ஆட்டி – மணி:5/117,118
நல் பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய
காப்பு உடை இஞ்சி கடி வழங்கு ஆர் இடை – மணி:6/48,49
பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில் – மணி:6/52
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை கோட்டமும் – மணி:6/59
ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின் – மணி:8/6
ஒரு_தனி ஓங்கிய திரு மலர் போன்று – மணி:15/76
தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ – மணி:15/78
ஓங்கிய வீதியின் ஒரு_புடை ஒதுங்கி – மணி:17/84
ஒரு_தனி ஓங்கிய திரு மணி காஞ்சி – மணி:18/56
பாடல்-சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
நாடகம் விரும்ப நல் நலம் கவினி – மணி:18/57,58
ஓங்கிய பௌவத்து உடை கல பட்டோன் – மணி:18/64
ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து – மணி:20/28
ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால் – மணி:21/93
ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை – மணி:21/181
ஓங்கிய சிறப்பின் ஒரு_நூற்றுநால்வரும் – மணி:24/12
சிமையம் ஓங்கிய இமைய மால் வரை – மணி:26/88
கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில் – மணி:28/24

TOP


ஓங்கு (20)

ஓங்கு நீர் பாவையை உவந்து எதிர்கொண்டு-ஆங்கு – மணி:0/16
உலகம் திரியா ஓங்கு உயர் விழு சீர் – மணி:1/1
ஓங்கு உயர் மலயத்து அரும் தவன் உரைப்ப – மணி:1/3
ஓங்கு திரை பெரும் கடல் வீழ்த்தோர் போன்று – மணி:2/73
சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடு சினை – மணி:3/106
ஓங்கு இரும் தெங்கின் உயர் மடல் ஏற – மணி:5/126
யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை – மணி:6/96
ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை – மணி:11/22
ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி – மணி:12/111
ஓங்கு உயர் பெரு சிறப்பு உரைத்தலும் உண்டால் – மணி:13/67
ஓங்கு உயர் பெரும் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும் – மணி:14/54
ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல் – மணி:16/53
உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதி போல – மணி:22/13
நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய – மணி:22/14
ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது – மணி:22/69
ஓங்கு இரு வானத்து மீனினும் பலவால் – மணி:22/142
ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து – மணி:22/197
ஓங்கு உயர் வானத்து பெயல் பிழைப்பு அறியாது – மணி:24/172
சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும் – மணி:28/62
வான் ஓங்கு சிமையத்து வால் ஒளி சயித்தம் – மணி:28/131

TOP


ஓங்கும் (2)

தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவிடை – மணி:9/17
தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவினுக்கு – மணி:15/20

TOP


ஓசி (1)

தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி – மணி:20/57

TOP


ஓசை (2)

உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே – மணி:27/236
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை – மணி:27/252

TOP


ஓசையின் (1)

வெவ்வேறு பிரியும் பறை ஓசையின் கெடும் – மணி:27/268

TOP


ஓசையும் (2)

நெஞ்சு நடுக்கு உறூஉம் நெய்தல் ஓசையும்
துறவோர் இறந்த தொழு விளி பூசலும் – மணி:6/71,72
கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும்
நண்ணிய மூக்கால் நாற்றனும் நாவால் – மணி:27/15,16

TOP


ஓட்டி (4)

மா இதழ் குவளை மலர் புறத்து ஓட்டி
காய் வேல் வென்ற கரும் கயல் நெடும் கண் – மணி:18/74,75
கல்வி பாகரின் காப்பு வலை ஓட்டி
வல் வாய் யாழின் மெல்லிதின் விளங்க – மணி:18/165,166
பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப – மணி:19/18
ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும் – மணி:23/118

TOP


ஓட (2)

காட்டிடை நல் ஆ கதழ்ந்து கிளர்ந்து ஓட
ஆபுத்திரன்-தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன் – மணி:13/48,49
சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓட
கான வேட்டுவன் கடு கணை துரப்ப – மணி:23/113,114

TOP


ஓடலும் (1)

ஓடலும் ஓடும் ஒரு_சிறை ஒதுங்கி – மணி:3/112

TOP


ஓடாது (1)

உலா நீர் பெரு கடல் ஓடாது ஆயினும் – மணி:12/67

TOP


ஓடி (3)

இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓடி
மயங்கு கால் எடுத்த வங்கம் போல – மணி:4/33,34
செம் கயல் நெடும் கண் செவி மருங்கு ஓடி
வெம் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்-கொல் – மணி:4/101,102
தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி
விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி – மணி:7/54,55

TOP


ஓடு (9)

ஓடு மழை கிழியும் மதியம் போல – மணி:4/75
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து – மணி:13/114
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி:14/13
அறன் ஓடு ஒழித்தல் ஆய்_இழை தகாது என – மணி:15/54
ஓடு கைக்கொண்டு நின்று ஊட்டுநள் போல – மணி:18/116
வறன் ஓடு உலகில் மழை_வளம் தரூஉம் – மணி:21/157
அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை – மணி:21/158
தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல் என்று – மணி:23/36
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி:25/144

TOP


ஓடும் (2)

ஓடலும் ஓடும் ஒரு_சிறை ஒதுங்கி – மணி:3/112
உடம்பு விட்டு ஓடும் உயிர் உரு கொண்டு ஓர் – மணி:16/92

TOP


ஓடுவையும் (1)

தான்றியும் ஓடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி – மணி:6/80

TOP


ஓத்து (1)

ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் – மணி:13/25

TOP


ஓதல் (2)

ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும் – மணி:5/43
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே – மணி:13/100

TOP


ஓதி (7)

துஞ்சு துயில் எழூஉம் அம்_சில்_ஓதி – மணி:8/12
மந்திரம் கொள்க என வாய்மையின் ஓதி
மதி நாள் முற்றிய மங்கல திரு நாள் – மணி:10/82,83
மாய விஞ்சை மந்திரம் ஓதி
காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய் – மணி:18/148,149
அம்_சில்_ஓதி அரசனுக்கு ஒரு நாள் – மணி:23/24
நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி
ஆண்மை கோலத்து ஆய்_இழை இருப்ப – மணி:23/52,53
தேன் ஆர் ஓதி செவி-முதல் வார்த்து – மணி:23/139
மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய் – மணி:26/71

TOP


ஓதிய (4)

ஓதிய இவற்றை உணராது மயங்கி – மணி:24/112
ஓதிய வெளிப்பட்டு உலகாய் நிகழ்ந்து – மணி:27/223
ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல் – மணி:29/126
ஓதிய இவற்றை உணராது மயங்கி – மணி:30/52

TOP


ஓதியின் (1)

ஒரு_தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி – மணி:5/107

TOP


ஓதில் (1)

ஓதில் ஐந்து வகை உளதாகும் – மணி:29/330

TOP


ஓதின் (1)

ஏது போலி ஓதின் மூன்று ஆகும் – மணி:29/191

TOP


ஓதினன் (2)

ஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன் – மணி:25/18
ஓதினன் நாரணன் காப்பு என்று உரைத்தனன் – மணி:27/99

TOP


ஓதினை (1)

ஈங்கு இவன் என்னும் என்று எடுத்து ஓதினை
ஆங்கு அ தெய்வதம் வாராதோ என – மணி:9/69,70

TOP


ஓதையின் (1)

நல் நீர் புணரி நளி கடல் ஓதையின்
இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது – மணி:6/78,79

TOP


ஓதையும் (8)

உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும்
கலை புற அல்குல் கழுகு குடைந்து உண்டு – மணி:6/111,112
நிலத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும்
கடகம் செறித்த கையை தீ நாய் – மணி:6/113,114
உடைய கவ்வி ஒடுங்கா ஓதையும்
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை – மணி:6/115,116
காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும்
பண்பு கொள் யாக்கையின் வெண் பலி அரங்கத்து – மணி:6/117,118
ஊர் காப்பாளர் எறி துடி ஓதையும்
முழங்கு நீர் முன் துறை கலம் புணர் கம்மியர் – மணி:7/69,70
இடி குரல் முழக்கத்து இடும் பலி ஓதையும்
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர் – மணி:7/80,81
நின்று எறி பலியின் நெடு குரல் ஓதையும்
பல் வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்ப – மணி:7/85,86
பல் வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்ப – மணி:7/86

TOP


ஓப்ப (1)

எதிர் முறை ஓப்ப மீட்சியும் ஆகி – மணி:30/20

TOP


ஓம்ப (1)

போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப
வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன் – மணி:13/14,15

TOP


ஓம்பலின் (1)

வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின்
மக்களும் மாவும் மரம் சேர் பறவையும் – மணி:14/23,24

TOP


ஓம்பவும் (1)

மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும்
உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும் – மணி:15/11,12

TOP


ஓம்பன்-மின் (1)

புல்லல் ஓம்பன்-மின் புலை மகன் இவன் என – மணி:13/91

TOP


ஓம்பாளன் (3)

மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன்
பழ_வினை பயத்தான் பிழை மணம் எய்திய – மணி:5/34,35
வாரணாசி ஓர் மறை ஓம்பாளன்
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன் – மணி:13/3,4
வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன்
இயவிடை வருவோன் இளம்பூதி என்போன் – மணி:13/15,16

TOP


ஓம்பி (1)

அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி
மூத்து விளி மா ஒழித்து எ உயிர்-மாட்டும் – மணி:16/115,116

TOP


ஓம்பிடும் (1)

கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும்
இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும் – மணி:6/155,156

TOP


ஓம்பிய (1)

அ நாள் அவனை ஓம்பிய நல் ஆ – மணி:15/2

TOP


ஓம்பு-மின் (1)

ஆகலின் நல்_வினை அயராது ஓம்பு-மின்
புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன் – மணி:25/44,45

TOP


ஓம்புதல் (2)

என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன் – மணி:14/88
உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன் – மணி:16/109

TOP


ஓம்புநர் (2)

அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர்
நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர் – மணி:14/40,41
அருள்_அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர்
உளர்எனில் அவர் கை புகுவாய் என்று ஆங்கு – மணி:14/93,94

TOP


ஓம்புநன் (1)

ஆர் உயிர் ஓம்புநன் அம்பல பீடிகை – மணி:14/59

TOP


ஓம்பும் (4)

அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும்
ஒரு_பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் – மணி:3/59,60
மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும்
ஆர் உயிர் முதல்வன்-தன் முன் தோன்றி – மணி:14/32,33
மன் உயிர் ஓம்பும் இ மா பெரும் பாத்திரம் – மணி:14/87
தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும்
மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால் – மணி:25/116,117

TOP


ஓம்புவை (1)

அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை
ஆய் தொடிக்கு அ ஊர் அறனொடு தோன்றும் – மணி:21/158,159

TOP


ஓர் (67)

உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணி பீடிகை – மணி:0/49
உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய் – மணி:0/85
மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன் – மணி:3/33
கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர் – மணி:3/70
உண்ம் என இரக்கும் ஓர் களி_மகன் பின்னரும் – மணி:3/103
ஆங்கு-அது-தனக்கு ஓர் ஐ-விலின் கிடக்கை – மணி:4/89
அம் செம் சாயல் அராந்தாணத்துள் ஓர்
விஞ்சையன் இட்ட விளங்கு_இழை என்றே – மணி:5/23,24
பதி_அகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி – மணி:5/96
நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும் – மணி:5/108
பதி_அகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி – மணி:6/13
ஆங்கு அது-தன்னை ஓர் அரும் கடி நகர் என – மணி:6/105
மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர்
கரும் தலை வாங்கி கையகத்து ஏந்தி – மணி:6/119,120
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய்_மகள் – மணி:6/121
விண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து ஈங்கு – மணி:6/128
ஓர் ஈர்_ஆயிரம் சிற்றிடை தீவும் – மணி:6/196
விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு_இழை-தன்னை ஓர்
வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன் – மணி:7/21,22
உவவன மருங்கினில் ஓர் இடம்-கொல் இது – மணி:8/19
அணி_இழை நினக்கு ஓர் அரும் துயர் வரு நாள் – மணி:9/54
தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும் – மணி:9/57
சுடர் வழக்கு அற்று தடுமாறு-காலை ஓர்
இள வள ஞாயிறு தோன்றியது என்ன – மணி:10/10,11
கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர்
வெந்து உகு வெம் களர் வீழ்வது போன்ம் என – மணி:10/46,47
அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர்
திறப்படற்கு ஏதுவாய் சே_இழை செய்தேன் – மணி:10/48,49
அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும் – மணி:11/132
துச்சயன்-தன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன் – மணி:12/40
ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி – மணி:12/47
வேற்று ஓர் அணியொடு வந்தீரோ என – மணி:12/52
ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன் – மணி:12/117
வாரணாசி ஓர் மறை ஓம்பாளன் – மணி:13/3
தாய் இல் தூவா குழவி துயர் கேட்டு ஓர்
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர – மணி:13/11,12
வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன் – மணி:13/15
அ பதி-தன்னுள் ஓர் அந்தணன் மனை-வயின் – மணி:13/27
ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும் – மணி:13/70
வாரணாசி ஓர் மா மறை முதல்வன் – மணி:13/78
வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி – மணி:14/31
ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என விடுவோன் – மணி:14/92
தென் திசை பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை – மணி:15/82
சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன் – மணி:16/41
நம்பிக்கு இளையள் ஓர் நங்கையை கொடுத்து – மணி:16/76
உடம்பு விட்டு ஓடும் உயிர் உரு கொண்டு ஓர்
இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய் – மணி:16/92,93
போனார்-தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது – மணி:16/100
பெரும் குலை பெண்ணை கரு கனி அனையது ஓர்
இரு கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி – மணி:17/29,30
நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால் – மணி:17/65
பைம் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும் – மணி:19/70
மா நகர் திரியும் ஓர் வம்ப மாதர் – மணி:19/132
ஐய கடிஞை அம்பல மருங்கு ஓர்
தெய்வம் தந்தது திப்பியம் ஆயது – மணி:19/151,152
மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும் – மணி:22/161
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும் – மணி:22/168
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும் – மணி:22/204
மகனை முறை-செய்த மன்னவன் வழி ஓர்
துயர் வினையாளன் தோன்றினன் என்பது – மணி:22/210,211
மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி – மணி:23/107
புதல்வன்-தன்னை ஓர் புரி_நூல் மார்பன் – மணி:23/108
ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும் – மணி:23/118
சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற – மணி:24/47
இந்திரன் மருமான் இரும் பதி புறத்து ஓர்
பூம் பொழில் அக-வயின் இழிந்து பொறை_உயிர்த்து – மணி:24/164,165
குடர் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர்
அடர் பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும் – மணி:25/72,73
கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர்
தூ மலர் புன்னை துறை நிழல் இருப்ப – மணி:25/156,157
மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய் – மணி:26/71
எய்தியது ஓர் பேய் உண்டு என தெளிதல் – மணி:27/50
அபாவம் என்பது இன்மை ஓர் பொருளை – மணி:27/51
பேர் உலகு எல்லாம் பிரமவாதி ஓர்
தேவன் இட்ட முட்டை என்றனன் – மணி:27/96,97
ஓர் அணு தெய்வ கண்ணோர் உணர்குவர் – மணி:27/146
நுனித்த குணத்து ஓர் கணத்தின்-கண்ணே – மணி:27/180
ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும் – மணி:27/197
மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி – மணி:28/192
உயங்காது ஒழி நின் உயர் தவத்தால் ஓர்
காரிகை தோன்றும் அவள் பெரும் கடிஞையின் – மணி:28/193,194
ஓர் இடத்து எய்தி விபக்கத்து எங்கும் – மணி:29/233
ஓர் தேசத்து வர்த்தித்தல் சத்தம் – மணி:29/256

TOP


ஓர்க்கும் (1)

கண் முதல் ஓர்க்கும் இந்திரியங்கள் – மணி:29/291

TOP


ஓர்ந்தனை (1)

மதி மாறு ஓர்ந்தனை மன்னவ என்றே – மணி:25/118

TOP


ஓரா (1)

மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி – மணி:23/143

TOP


ஓராது (1)

ஓராது தறியை மகன் என உணர்தல் – மணி:27/68

TOP


ஓரிடத்து (1)

ஓரிடத்து உற்று சபக்கத்து ஒத்து இயறல் – மணி:29/245

TOP


ஓரிடத்தே (1)

தம்மில் ஒரு_காலத்து ஓரிடத்தே
அன்னுவயம் கண்டான் பிற்காலத்து – மணி:29/98,99

TOP


ஓரின் (1)

ஓரின் பிழைக்கையும் உண்டு பிழையாதது – மணி:29/53

TOP


ஓவிய (5)

ஓவிய செம் நூல் உரை நூல் கிடக்கையும் – மணி:2/31
ஊரா_நல்_தேர் ஓவிய படுத்து – மணி:6/39
ஓவிய செய்தி என்று ஒழிவேன் முன்னர் – மணி:18/67
தெய்வம் காட்டும் திப்பிய ஓவிய
கைவினை கடந்த கண் கவர் வனப்பினர் – மணி:22/84,85
வரம் தர எழுதிய ஓவிய மாக்களும் – மணி:28/38

TOP


ஓவியச்சேனன் (1)

ஓவியச்சேனன் என் உறு துணை தோழன் – மணி:21/135

TOP


ஓவியம் (3)

கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும் – மணி:3/131
புனையா ஓவியம் போல நிற்றலும் – மணி:16/131
புனையா ஓவியம் புறம் போந்து அன்ன – மணி:22/88

TOP


ஓவியன் (1)

ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன் – மணி:5/7

TOP