தி – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திகழ் 12
திகழ்தரு 1
திகழும் 1
திகிரி 1
திங்கள் 1
திங்களும் 1
திசை 16
திசை-தொறும் 2
திசைமுக 1
திசையின் 1
திட்டாந்த 5
திட்டாந்தங்கள் 1
திட்டாந்தத்தில் 3
திட்டாந்தத்திலே 2
திட்டாந்தத்தினின்று 1
திட்டாந்தத்து 2
திட்டாந்தம் 8
திட்டாந்தமாக 5
திட்டிவிடம் 4
திண்ணிதின் 1
திணி 2
திதட்சியுள் 1
திப்பிய 1
திப்பியம் 7
திப்பியம்-கொல்லோ 1
திமிர்வோர் 1
திரங்கி 1
திரங்கிய 1
திரவியம் 2
திரள் 4
திரள்வதும் 1
திரி 1
திரித்து 1
திரிதரின் 1
திரிதரும் 3
திரிதல் 1
திரிந்திடின் 2
திரிந்து 4
திரிந்தேன் 1
திரிந்தோன் 1
திரிய 2
திரியவும் 2
திரியா 4
திரியும் 3
திரிவது 1
திரிவில் 1
திரிவோர் 1
திரிவோள் 1
திரிவோன் 4
திரு 17
திருகி 2
திருத்தக 1
திருத்தகு 1
திருந்தா 3
திருந்திய 2
திருந்து 19
திருந்து_ஏர்_எல்_வளை 1
திருமகள் 1
திருமணி 1
திருமுக 1
திருமுக_ஆட்டி 1
திருமுகம் 1
திருவடி 1
திருவருளால் 1
திருவறம் 1
திருவன் 1
திருவாய் 1
திருவில் 1
திருவின் 4
திருவே 1
திரை 19
திரையலும் 1
திலகம் 1
திலகமும் 1
திற 2
திறத்த 1
திறத்தாள் 1
திறத்தாளும் 1
திறத்தினும் 2
திறத்து 6
திறந்த 2
திறந்து 3
திறப்பட 1
திறப்படற்கு 1
திறம் 48
திறமும் 1
திறல் 9
திறன் 2
திறனும் 2
தின் 1
தின்ன 1
தின்னுதல் 1
தின்னும் 1
தின 1
தினைத்தனை 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


திகழ் (12)

பொன் திகழ் நெடு வரை உச்சி தோன்றி – மணி:0/3
அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய – மணி:3/21
சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது – மணி:17/37
திகழ் ஒளி நித்தில சித்திர விதானத்து – மணி:18/46
பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றி – மணி:18/81
வான் தேர் பாகனை மீன் திகழ் கொடியனை – மணி:20/91
பொன் திகழ் மேனி பூம்_கொடி பொருந்தி – மணி:21/36
அணி திகழ் அவிர் ஒளி மடந்தை நின் அடி – மணி:25/149
கதம் திகழ் யானை கான ஒலி கேட்டோன் – மணி:27/31
வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும் – மணி:28/53
அறம் திகழ் நாவின் அறவணன் உரைப்போன் – மணி:29/2
பொன் திகழ் புத்த பீடிகை போற்றும் – மணி:29/38

TOP


திகழ்தரு (1)

திருவில் இட்டு திகழ்தரு மேனியள் – மணி:6/10

TOP


திகழும் (1)

பொன்னின் திகழும் பொலம் பூ ஆடையன் – மணி:5/61

TOP


திகிரி (1)

தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி
நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம் – மணி:22/16,17

TOP


திங்கள் (1)

எல்லையை திங்கள் என்று வழங்குதல் – மணி:30/207

TOP


திங்களும் (1)

திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க – மணி:12/87

TOP


திசை (16)

தென் திசை பெயர்ந்த இ தீவ தெய்வதம் – மணி:0/4
இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓடி – மணி:4/33
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும் – மணி:5/119
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும் – மணி:5/120
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த – மணி:6/212
தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும் – மணி:9/57
தென் திசை குமரி ஆடி வருவோள் – மணி:13/7
குண திசை தோன்றி கார் இருள் சீத்து – மணி:14/99
குட திசை சென்ற ஞாயிறு போல – மணி:14/100
வட திசை விஞ்ஞை மா நகர் தோன்றி – மணி:15/81
தென் திசை பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை – மணி:15/82
மாசு_இல் வால் ஒளி வட திசை சேடி – மணி:17/21
தென் திசை பொதியில் காணிய வந்தேன் – மணி:17/24
மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி – மணி:23/107
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை
காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம் – மணி:27/247,248
வட திசை மருங்கின் வானத்து இயங்கி – மணி:28/165

TOP


திசை-தொறும் (2)

சித்திர கைவினை திசை-தொறும் செறிந்தன – மணி:5/11
திசை-தொறும் ஒன்பான் முழ நிலம் அகன்று – மணி:8/46

TOP


திசைமுக (1)

தெய்வ கருவும் திசைமுக கருவும் – மணி:0/28

TOP


திசையின் (1)

விண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து ஈங்கு – மணி:6/128

TOP


திட்டாந்த (5)

திட்டாந்த போலியும் ஆம் இவற்றுள் – மணி:29/146
தாமே திட்டாந்த ஆபாசங்கள் – மணி:29/326
சாதன்மிய திட்டாந்த ஆபாசம் – மணி:29/329
என்ன வைதன்மிய திட்டாந்த
ஆபாசமும் ஐ வகைய – மணி:29/334,335
திட்டாந்த பரமாணு – மணி:29/345

TOP


திட்டாந்தங்கள் (1)

பக்கம் ஏது திட்டாந்தங்கள்
ஒக்க நல்லவும் தீயவும் உள அதில் – மணி:29/111,112

TOP


திட்டாந்தத்தில் (3)

திட்டாந்தத்தில் சாமானிய விசேடம் – மணி:29/315
திட்டாந்தத்தில் சாதனம் குறைவது – மணி:29/341
காட்டப்பட்ட திட்டாந்தத்தில்
சாத்திய தன்மம் குறைவுபடுதல் – மணி:29/350,351

TOP


திட்டாந்தத்திலே (2)

திட்டாந்தத்திலே சென்று அடங்கும் – மணி:29/110
காட்டப்பட்ட திட்டாந்தத்திலே
சாத்திய சாதனம் இரண்டும் குறைதல் – மணி:29/360,361

TOP


திட்டாந்தத்தினின்று (1)

வைதன்மிய திட்டாந்தத்தினின்று
சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும் – மணி:29/425,426

TOP


திட்டாந்தத்து (2)

ஆகாசம் போல் எனும் திட்டாந்தத்து
சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும் – மணி:29/378,379
வைதன்மிய திட்டாந்தத்து
சாத்தியா வியாவிருத்தி ஆவது – மணி:29/402,403

TOP


திட்டாந்தம் (8)

பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம் – மணி:29/57
வகை அமை அடுக்களை போல் திட்டாந்தம்
உபநயம் மலையும் புகை உடைத்து என்றல் – மணி:29/61,62
வைதன்மிய திட்டாந்தம் ஆகும் – மணி:29/67
ஏதம்_இல் திட்டாந்தம் இரு வகைய – மணி:29/136
வைதன்மிய திட்டாந்தம் சாத்தியம் – மணி:29/140
திட்டாந்தம் இரு வகைப்படும் என்று முன் – மணி:29/327
வைதன்மிய திட்டாந்தம் காட்டல் – மணி:29/432
வைதன்மிய திட்டாந்தம் காட்டில் – மணி:29/445

TOP


திட்டாந்தமாக (5)

திட்டாந்தமாக காட்டப்பட்ட – மணி:29/355
கடம் போல் எனின் திட்டாந்தமாக
காட்டப்பட்ட கடம் தான் உண்டாகி – மணி:29/369,370
அப்படி திட்டாந்தமாக காட்டப்பட்ட – மணி:29/409
வைதன்மிய திட்டாந்தமாக
காட்டப்பட்ட கன்மம் – மணி:29/419,420
வைதன்மிய திட்டாந்தமாக காட்டப்பட்ட – மணி:29/436

TOP


திட்டிவிடம் (4)

திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால் – மணி:9/49
திட்டிவிடம் உண செல் உயிர் போவுழி – மணி:11/100
திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள் – மணி:21/11
திட்டிவிடம் உண செல் உயிர் போயதும் – மணி:21/40

TOP


திண்ணிதின் (1)

திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி – மணி:2/53

TOP


திணி (2)

மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் – மணி:11/95
மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம் – மணி:22/45

TOP


திதட்சியுள் (1)

தேரார் பூத திதட்சியுள் ஏனோர் – மணி:27/147

TOP


திப்பிய (1)

தெய்வம் காட்டும் திப்பிய ஓவிய – மணி:22/84

TOP


திப்பியம் (7)

திப்பியம் உரைக்கும் தெய்வ கிளவியின் – மணி:7/97
திப்பியம் என்றே சிந்தை நோய் கூர – மணி:15/70
சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது – மணி:17/37
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம்
பை_அரவு அல்குல் பலர் பசி களைய – மணி:19/10,11
கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம்
முத்தை முதல்வி அடி பிழைத்தாய் என – மணி:19/12,13
சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம்
இ நிலை எல்லாம் இளம்_கொடி செய்தியின் – மணி:19/14,15
தெய்வம் தந்தது திப்பியம் ஆயது – மணி:19/152

TOP


திப்பியம்-கொல்லோ (1)

தெய்வம்-கொல்லோ திப்பியம்-கொல்லோ
எய்யா மையலேன் யான் என்று அவன் சொல – மணி:18/84,85

TOP


திமிர்வோர் (1)

ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர்
குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர் – மணி:19/86,87

TOP


திரங்கி (1)

தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி
வீழ்ந்தன இள வேய் தோளும் காணாய் – மணி:20/57,58

TOP


திரங்கிய (1)

திரங்கிய விரல்கள் இவையும் காணாய் – மணி:20/60

TOP


திரவியம் (2)

பாவம் திரவியம் கன்மம் அன்று – மணி:29/306
குணமும் அன்று எ திரவியம் ஆம் எ – மணி:29/307

TOP


திரள் (4)

கணவிர மாலையின் கட்டிய திரள் புயன் – மணி:3/104
முலை மேல் கலுழ்ந்து முத்த திரள் உகுத்து அதின் – மணி:9/4
பவள திரள் கால் பல் மணி போதிகை – மணி:19/111
சால திரள் மயிர் தோற்றுதல் சாலும் – மணி:27/149

TOP


திரள்வதும் (1)

மலை மரம் உடம்பு என திரள்வதும் செய்யும் – மணி:27/117

TOP


திரி (1)

புரி_நூல் மார்பின் திரி புரி வார் சடை – மணி:17/27

TOP


திரித்து (1)

அறிவு திரித்து இ அகல் நகர் எல்லாம் – மணி:23/39

TOP


திரிதரின் (1)

மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின்
காவலன் மகனோ கைவிடலீயான் – மணி:19/31,32

TOP


திரிதரும் (3)

தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும்
நால்_ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என – மணி:1/66,67
வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும்
காய சண்டிகை எனும் காரிகை-தான் என் – மணி:15/85,86
பதி_அகம் திரிதரும் பைம் தொடி நங்கை – மணி:19/41

TOP


திரிதல் (1)

சூட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது – மணி:27/22

TOP


திரிந்திடின் (2)

கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும் – மணி:7/8
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும் – மணி:7/9

TOP


திரிந்து (4)

கோள் நிலை திரிந்து கோடை நீடினும் – மணி:0/24
யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி – மணி:19/106
தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி – மணி:20/41
இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல் – மணி:30/99

TOP


திரிந்தேன் (1)

வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை – மணி:19/148

TOP


திரிந்தோன் (1)

அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன் – மணி:23/26

TOP


திரிய (2)

காவதம் திரிய கடவுள் கோலத்து – மணி:11/5
திரிய கோடல் ஒன்றை ஒன்று என்றல் – மணி:27/63

TOP


திரியவும் (2)

வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும்
பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது – மணி:7/49,50
அந்தரம் திரியவும் ஆக்கும் இ அரும் திறன் – மணி:10/81

TOP


திரியா (4)

தான் நிலை திரியா தண் தமிழ் பாவை – மணி:0/25
உலகம் திரியா ஓங்கு உயர் விழு சீர் – மணி:1/1
கோள் நிலை திரியா கோலோன் ஆகுக – மணி:1/34
முது நீர் அணு நில அணுவாய் திரியா
ஒன்று இரண்டு ஆகி பிளப்பதும் செய்யா – மணி:27/129,130

TOP


திரியும் (3)

கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும் – மணி:7/8,9
மா நகர் திரியும் ஓர் வம்ப மாதர் – மணி:19/132
சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற – மணி:24/47

TOP


திரிவது (1)

ஒரு_தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி – மணி:5/107

TOP


திரிவில் (1)

உள்ள நெறி என்பது நாராச திரிவில்
கொள்ள தகுவது காந்தம் என கூறல் – மணி:27/55,56

TOP


திரிவோர் (1)

ஆழி தாழி அகவரை திரிவோர்
தாம் தரின் யானும் தருகுவன் மடவாய் – மணி:6/173,174

TOP


திரிவோள் (1)

யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள் – மணி:8/35

TOP


திரிவோன் (4)

பரந்து படு மனை-தொறும் திரிவோன் ஒரு நாள் – மணி:5/46
சாது சக்கரன் மீ விசும்பு திரிவோன்
தெருமரல் ஒழித்து ஆங்கு இரத்தின தீவத்து – மணி:10/24,25
இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன்
அரும் பசி களைய ஆற்றுவது காணான் – மணி:11/85,86
தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை – மணி:20/31

TOP


திரு (17)

செம்_கதிர்_செல்வன் திரு குலம் விளக்கும் – மணி:0/9
திரு விழை மூதூர் வாழ்க என்று ஏத்தி – மணி:1/32
திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த – மணி:3/34
மதி நாள் முற்றிய மங்கல திரு நாள் – மணி:10/83
ஒரு_தனி ஓங்கிய திரு மலர் போன்று – மணி:15/76
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு_சிறை – மணி:18/44
ஒரு_தனி ஓங்கிய திரு மணி காஞ்சி – மணி:18/56
மாவலி மருமான் சீர் கெழு திரு மகள் – மணி:19/54
சீர்த்தி என்னும் திரு தகு தேவியொடு – மணி:19/55
திரு நில கிழமை தேவியர்க்கு ஆயினும் – மணி:23/4
திரு கிளர் மணி முடி தேவர் கோன் தன் முன் – மணி:24/13
நறு முகை அமிழ்து உறூஉம் திரு நகை அருந்தி – மணி:25/88
தெய்வ கல்லும் தன் திரு முடி மிசை – மணி:26/89
தீவகம் விட்டு இ திரு நகர் புகுந்ததும் – மணி:28/84
தீவதிலகையும் திரு மணிமேகலா – மணி:28/212
சென்று அவர் தம்மை திரு அடி வணங்கி – மணி:28/239
முரணா திரு அற மூர்த்தியை மொழிவோன் – மணி:30/6

TOP


திருகி (2)

திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி – மணி:2/53
கடும் சினம் திருகி மகன் துயர் நோக்கான் – மணி:22/157

TOP


திருத்தக (1)

விருத்தம் தன்னை திருத்தக விளம்பின் – மணி:29/275

TOP


திருத்தகு (1)

திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னின் – மணி:29/103

TOP


திருந்தா (3)

திருந்தா செய்கை தீ தொழில் படாஅள் – மணி:2/57
திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன் – மணி:11/87
விருத்த வியபிசாரி திருந்தா ஏது ஆய் – மணி:29/267

TOP


திருந்திய (2)

திருந்திய நல் நகர் சேர்ந்தது கேளாய் – மணி:28/102
திருந்திய பாத்திரம் செம் கையின் ஏந்தி – மணி:28/163

TOP


திருந்து (19)

ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி – மணி:5/104
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி – மணி:6/22
அரும் திறல் கடவுள் திருந்து பலி கந்தமும் – மணி:6/60
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி – மணி:7/89
திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி – மணி:9/62
மைம் மலர் குழலி மாதவன் திருந்து அடி – மணி:12/5
ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி – மணி:12/111
திருந்து முகம் காட்டும் என் தெய்வ கடிஞை – மணி:14/45
புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி – மணி:15/41
இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தி – மணி:18/51
திருந்து எயிறு இலங்க செவ்வியின் நக்கு அவன் – மணி:18/52
முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி – மணி:19/1
குருந்தும் தளவும் திருந்து மலர் செருந்தியும் – மணி:19/93
பொருந்துபு நின்று திருந்து நகை-செய்து – மணி:19/95
திருந்து_ஏர்_எல்_வளை செல் உலகு அறிந்தோர் – மணி:23/134
திருந்து அடி விளக்கி சிறப்பு செய்த பின் – மணி:24/96
நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி – மணி:25/151
திருந்து நல் ஏது முதிர்ந்து உளது ஆதலின் – மணி:26/93
திருந்து நல் உணர்வான் செற்றம் அற்றிடுக – மணி:30/257

TOP


திருந்து_ஏர்_எல்_வளை (1)

திருந்து_ஏர்_எல்_வளை செல் உலகு அறிந்தோர் – மணி:23/134

TOP


திருமகள் (1)

சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள்
நீலபதி எனும் நேர்_இழை வயிற்றில் – மணி:9/43,44

TOP


திருமணி (1)

செம் பொன் மா சினை திருமணி பாசடை – மணி:28/173

TOP


திருமுக (1)

ஒரு_பெரு கோயில் திருமுக_ஆட்டி – மணி:5/118

TOP


திருமுக_ஆட்டி (1)

ஒரு_பெரு கோயில் திருமுக_ஆட்டி
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும் – மணி:5/118,119

TOP


திருமுகம் (1)

எள் அறு திருமுகம் பொலிய பெய்தலும் – மணி:5/122

TOP


திருவடி (1)

தெய்வம் நீயோ திருவடி தொழுதேன் – மணி:21/38

TOP


திருவருளால் (1)

உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன் – மணி:10/18

TOP


திருவறம் (1)

திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ – மணி:10/85

TOP


திருவன் (1)

இந்திர திருவன் சென்று இனிது ஏறலும் – மணி:19/116

TOP


திருவாய் (1)

சிறந்து அருள்கூர்ந்து திருவாய் மொழிந்தது – மணி:30/15

TOP


திருவில் (1)

திருவில் இட்டு திகழ்தரு மேனியள் – மணி:6/10

TOP


திருவின் (4)

திருவின் செய்யோள் ஆடிய பாவையின் – மணி:5/4
திருவின் செல்வம் பெரும் கடல் கொள்ள – மணி:14/70
திருவின் செய்யோள் போன்று இனிது இருப்ப – மணி:16/34
வினை ஒழி-காலை திருவின் செல்வி – மணி:18/21

TOP


திருவே (1)

ஒரு_தனி அஞ்சுவென் திருவே வா என – மணி:8/27

TOP


திரை (19)

ஓங்கு திரை பெரும் கடல் வீழ்த்தோர் போன்று – மணி:2/73
இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர் – மணி:4/32
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த – மணி:6/212
திரை இரும் பௌவத்து தெய்வம் ஒன்று உண்டு என – மணி:7/33
வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்திடை – மணி:8/2
விரை மரம் உருட்டும் திரை உலா பரப்பின் – மணி:8/5
திரை தவழ் பறவையும் விரி சிறை பறவையும் – மணி:8/28
வெண்_திரை தந்த அமுதை வானோர் – மணி:15/51
ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப – மணி:16/14
இடை இருள் யாமத்து எறி திரை பெரு கடல் – மணி:16/19
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்ப போகி – மணி:16/38
வெண் திரை விரிந்த வெண் நிற சாமரை – மணி:18/49
நரைமையின் திரை தோல் தகை இன்று ஆயது – மணி:20/44
வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம் – மணி:21/182
பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல் – மணி:24/28
வான் நின்று இழிந்து மறி திரை உலாவும் – மணி:25/31
காவலன்-தன்னொடும் கடல் திரை உலாவும் – மணி:25/130
தென்மேற்காக சென்று திரை உலாம் – மணி:25/155
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப – மணி:25/168

TOP


திரையலும் (1)

பாசிலை திரையலும் பளிதமும் படைத்து – மணி:28/243

TOP


திலகம் (1)

ஒரு_பெரும் திலகம் என்று உரவோர் உரைக்கும் – மணி:26/43

TOP


திலகமும் (1)

திலகமும் வகுளமும் செம் கால் வெட்சியும் – மணி:3/161

TOP


திற (2)

மெய்யும் பொய்யும் இ திற விதியால் – மணி:29/471
மு திற மணியை மும்மையின் வணங்கி – மணி:30/4

TOP


திறத்த (1)

செய்வு உறு பந்தமும் வீடும் இ திறத்த
ஆன்ற பொருளுள் தன் தன்மையது ஆயும் – மணி:27/176,177

TOP


திறத்தாள் (1)

எ திறத்தாள் நின் இளம்_கொடி உரை என – மணி:5/12

TOP


திறத்தாளும் (1)

அ திறத்தாளும் அல்லள் எம் ஆய்_இழை – மணி:2/49

TOP


திறத்தினும் (2)

எ திறத்தினும் இசையாது இவர் உரை என – மணி:27/107
தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும்
மையல் உறுவோர் மனம் வேறு ஆம் வகை – மணி:27/281,282

TOP


திறத்து (6)

வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்து
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும் – மணி:2/18,19
கையற்று பெயர்ந்தனள் காரிகை திறத்து என் – மணி:2/75
திறத்து வழிப்படூஉம் செய்கை போல – மணி:17/4
நடை திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து – மணி:21/55
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி – மணி:24/138,139
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி – மணி:30/79,80

TOP


திறந்த (2)

பலர் புக திறந்த பகு வாய் வாயில் – மணி:7/92
பலர் புக திறந்த பகு வாய் வாயில் – மணி:17/77

TOP


திறந்து (3)

பளிக்கறை திறந்து பனி மதி முகத்து – மணி:5/84
அற செவி திறந்து மற செவி அடைத்து – மணி:9/60
செயிர் வழங்கு தீ கதி திறந்து கல்லென்று – மணி:12/61

TOP


திறப்பட (1)

அற கதிர் ஆழி திறப்பட உருட்டி – மணி:5/76

TOP


திறப்படற்கு (1)

திறப்படற்கு ஏதுவாய் சே_இழை செய்தேன் – மணி:10/49

TOP


திறம் (48)

அறவண அடிகள் ஆபுத்திரன் திறம்
நறு மலர் கோதைக்கு நன்கனம் உரைத்ததும் – மணி:0/57,58
சமய கணக்கர் தம் திறம் கேட்டதும் – மணி:0/88
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு – மணி:0/93
பவ திறம் அறுக என பாவை நோற்றதும் – மணி:0/94
மா வண் தமிழ் திறம் மணிமேகலை துறவு – மணி:0/97
மெய் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும் – மணி:1/11
இ திறம் தம்தம் இயல்பினின் காட்டும் – மணி:1/12
மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய் – மணி:3/69
கடுங்கண் யானையின் கடா திறம் அடக்கி – மணி:4/46
ஒரு_தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன் – மணி:4/96
அம் சொல் ஆய்_இழை நின் திறம் அறிந்தேன் – மணி:5/80
இதுவே ஆயின் கெடுக தன் திறம் என – மணி:5/91
தவ திறம் பூண்டோள்-தன் மேல் வைத்த – மணி:7/13
அவ திறம் ஒழிக என்று அவன்-வயின் உரைத்த பின் – மணி:7/14
உரையாய் நீ அவள் என் திறம் உணரும் – மணி:7/32
அறவணன்-தன்-பால் கேட்குவை இதன் திறம்
என்று அவள் உரைத்தலும் இளம்_கொடி விரும்பி – மணி:11/52,53
மறந்தேன் அதன் திறம் நீ எடுத்து உரைத்தனை – மணி:11/119
ஆங்கு அவர்-தம் திறம் அறவணன்-தன்-பால் – மணி:12/19
ஆபுத்திரன் திறம் அறவணன்-தன்-பால் – மணி:12/27
பொன் தொடி மாதர் நல் திறம் சிறக்க – மணி:12/33
உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன் – மணி:12/34
மணிமேகலை முன் மட_கொடியார் திறம்
துணி பொருள் மாதவன் சொல்லியும் அமையான் – மணி:12/53,54
உயிர் வழங்கு பெரு நெறி ஒரு_திறம் பட்டது – மணி:12/62
ஆபுத்திரன் திறம் அணி_இழை கேளாய் – மணி:13/2
மா மறை_ஆட்டி வரு திறம் உரைக்கும் – மணி:13/77
அங்கு அவள்-தன் திறம் அயர்ப்பாய் என்றனள் – மணி:18/83
அ திறம் விடுவாய் அரசிளங்குருசில் – மணி:18/87
அங்கு அவள்-தன் திறம் அயர்ப்பாய் என்றே – மணி:19/9
தீவதிலகையின் தன் திறம் கேட்டு – மணி:21/88
என் திறம் கேட்டியோ இள கொடி நல்லாய் – மணி:21/129
நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி – மணி:22/99
ஆங்கு அ புதல்வன் அவள் திறம் அறியான் – மணி:23/110
மணிமேகலை திறம் மாதவி கேட்டு – மணி:24/83
இ திறம் படரார் படர்குவர் ஆயின் – மணி:24/132
இ திறம் பலவும் இவற்றின் பகுதியும் – மணி:24/145
தகை மலர் தாரோன் தன் திறம் கூறினன் – மணி:24/175
யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம் – மணி:25/13
அங்கு அவன்-பால் சென்று அவன் திறம் அறிந்து – மணி:25/185
நின் திறம் நீங்கல் ஆற்றேன் யான் என – மணி:25/235
அ திறம் ஆயினும் அநேக காலம் – மணி:26/60
சமய கணக்கர் தம் திறம் சார்ந்து – மணி:27/2
தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும் – மணி:28/86
தீவதிலகையும் இ_திறம் செப்பினள் – மணி:29/39
வெளிப்பட்டுள சாத்திய தன்ம திறம்
பிறிதின் வேறு ஆம் வேறுபாட்டினையும் – மணி:29/114,115
இ திறம் நல்ல சாதனத்து ஒத்தன – மணி:29/142
இ திறம் படரார் படர்குவர் ஆயின் – மணி:30/73
சொல்லிய தொகை திறம் உடம்பு நீர் நாடு – மணி:30/199
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு – மணி:30/263
பவ திறம் அறுக என பாவை நோற்றனள் என் – மணி:30/264

TOP


திறமும் (1)

செயிர் அற செப்பிய திறமும் கேட்டு – மணி:27/240

TOP


திறல் (9)

வெம் திறல் அரக்கர்க்கு வெம் பகை நோற்ற – மணி:0/7
வெம் திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும் – மணி:3/75
அரும் திறல் கடவுள் திருந்து பலி கந்தமும் – மணி:6/60
வேக வெம் திறல் நாக நாட்டு அரசர் – மணி:9/58
ஆங்கு அவர் உரைப்போர் அரும் திறல் கேளாய் – மணி:16/63
அரும் திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய – மணி:18/93
கேட்டும் அறிதியோ வாள் திறல் குருசில் – மணி:18/97
வாள் திறல் குருசிலை மட_கொடி நீங்கி – மணி:18/143
வில் திறல் வெய்யோன்-தன் புகழ் விளங்க – மணி:26/91

TOP


திறன் (2)

அந்தரம் திரியவும் ஆக்கும் இ அரும் திறன்
மந்திரம் கொள்க என வாய்மையின் ஓதி – மணி:10/81,82
ஆங்கு அவன்-தன் திறன் அறவணன் அறியும் என்று – மணி:15/38

TOP


திறனும் (2)

திறனும் துக்கமும் செல் உயிர் புக்கிலும் – மணி:25/4
நலம் தரு பண்ணும் திறனும் வாய்ப்ப – மணி:28/41

TOP


தின் (1)

பிணம் தின் மாக்கள் நிணம் படு குழுசியில் – மணி:6/90

TOP


தின்ன (1)

அழல் வாய் சுடலை தின்ன கண்டும் – மணி:6/101

TOP


தின்னுதல் (1)

திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன் – மணி:11/87

TOP


தின்னும் (1)

தான் தனி தின்னும் தகைமையது ஆயது – மணி:25/104

TOP


தின (1)

பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு – மணி:17/93

TOP


தினைத்தனை (1)

தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும் – மணி:28/98

TOP