பீ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பீடிகை (34)

உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணி பீடிகை
பழம் பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும் – மணி:0/49,50
பீடிகை தெருவும் பெரும் கலக்குறுத்து-ஆங்கு – மணி:4/38
மணி அறை பீடிகை வலம் கொண்டு ஓங்கி – மணி:5/97
பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி – மணி:6/12
பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில் – மணி:6/52
கடவுள் பீடிகை பூ பலி கடைகொள – மணி:7/121
கலம் பகர் பீடிகை பூ பலி கடை கொள – மணி:7/122
தேவர் கோன் இட்ட மா மணி பீடிகை
பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம் – மணி:8/52,53
தரும பீடிகை தோன்றியது ஆங்கு என் – மணி:8/63
மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி – மணி:10/86
மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன் – மணி:11/16
பழுது இல் காட்சி இ நல் மணி பீடிகை
தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன் – மணி:11/27,28
ஈங்கு இ பெரும் பெயர் பீடிகை முன்னது – மணி:11/37
மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி – மணி:11/54
கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு – மணி:11/126
அந்தில் முன்றில் அம்பல பீடிகை
தங்கினன் வதிந்து அ தக்கண பேர் ஊர் – மணி:13/107,108
ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பல பீடிகை
பூம் கொடி நல்லாய் புகுந்தது கேளாய் – மணி:14/1,2
ஆர் உயிர் ஓம்புநன் அம்பல பீடிகை
ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி – மணி:14/59,60
பிணிப்பு_அறு மாதவன் பீடிகை காட்டி – மணி:21/16
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும் – மணி:25/34
தொழுது வலம் கொள்ள அ தூ மணி பீடிகை
பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த – மணி:25/35,36
பெரியவன் தோன்றா முன்னர் இ பீடிகை
கரியவன் இட்ட காரணம்-தானும் – மணி:25/54,55
மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய – மணி:25/56
மற்று அ பீடிகை தன் மிசை பொறாஅது – மணி:25/59
பீடிகை பொறுத்த பின்னர் அல்லது – மணி:25/60
தரும பீடிகை சாற்றுக என்றே – மணி:25/63
தரும பீடிகை இது என காட்ட – மணி:25/133
உலந்த பிறவியை உயர் மணி பீடிகை
கை_அகத்து எடுத்து காண்போர் முகத்தை – மணி:25/135,136
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி – மணி:25/183
செல்வர் கொணர்ந்து அ தீவக பீடிகை
ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும் – மணி:28/77,78
அங்கு அ பீடிகை இது என அறவோன் – மணி:28/210
பங்கய பீடிகை பான்மையின் வகுத்து – மணி:28/211
பங்கய பீடிகை பசி_பிணி மருந்து எனும் – மணி:28/217
பொன் திகழ் புத்த பீடிகை போற்றும் – மணி:29/38

TOP


பீடிகை-தான் (1)

தாமரை பீடிகை-தான் உண்டு ஆங்கு இடின் – மணி:3/66

TOP


பீலிவளை (3)

பீலிவளை என்போள் பிறந்த அ நாள் – மணி:24/57
பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள் – மணி:25/179
தன் மகள் பீலிவளை தான் பயந்த – மணி:29/4

TOP