சு – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுக 1
சுகத்து 1
சுகதற்கு 1
சுகதன் 1
சுகந்தன் 3
சுகம் 3
சுகமும் 2
சுட்டு-ஆங்கு 1
சுட்டுணர்வு 1
சுட்டுணர்வை 1
சுட்டுணர்வோடு 1
சுட்டேன் 1
சுட 1
சுடர் 3
சுடரும் 1
சுடரோடு 1
சுடலை 3
சுடலையின் 2
சுடு 4
சுடு_மண் 2
சுடுகாட்டு 2
சுடும் 1
சுடுமண் 1
சுடுவதும் 1
சுடுவோர் 1
சுடூஉம் 1
சுண்ணம் 1
சுண்ணமும் 1
சுதமதி 15
சுதமதி-தன் 1
சுதமதி-தன்னை 1
சுதமதி-தன்னொடு 1
சுதமதி-தன்னொடும் 1
சுதமதிக்கு 1
சுதை 4
சுந்தர 1
சுபாவம் 1
சும்மை 1
சும்மையும் 1
சுமந்தன 1
சுமந்து 1
சுரக்க 2
சுரத்தல் 1
சுரந்தனள் 1
சுரந்து 5
சுரப்ப 1
சுரப்பவும் 1
சுரப்போள்-தன் 1
சுரவாது 1
சுரி 2
சுரியல் 1
சுருக்கு 1
சுருங்கை 1
சுருதி 1
சுருப்பு 1
சுரும் 1
சுரும்பு 2
சுரை 3
சுவசன 2
சுவர் 1
சுவரினும் 1
சுவை 9
சுவையும் 1
சுழலலும் 1
சுழலும் 1
சுற்றம் 1
சுற்றமும் 1
சுற்றமொடு 1
சுற்றி 3
சுற்றிய 2
சுற்று 1
சுற்றும் 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சுக (1)

விபக்கமான கட சுக ஆதிகளில் – மணி:29/262

TOP


சுகத்து (1)

சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும் – மணி:29/263

TOP


சுகதற்கு (1)

தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய – மணி:28/130

TOP


சுகதன் (1)

துன்புற விளிந்தமை கேட்டு சுகதன்
அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின் – மணி:28/95,96

TOP


சுகந்தன் (3)

சுகந்தன் ஆம் என காதலின் கூஉய் – மணி:22/32
சுகந்தன் காத்தல் காகந்தி என்றே – மணி:22/37
காவிரி வாயிலில் சுகந்தன் சிறுவன் – மணி:22/43

TOP


சுகம் (3)

உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும் – மணி:27/160
சுகம் முதலிய தொகை பொருட்கு காரணம் – மணி:29/183
அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ எனல் – மணி:29/266

TOP


சுகமும் (2)

துக்கமும் சுகமும் என துய்க்கு அற அறிந்து – மணி:27/19
ஆன்மா என்றால் சுகமும் ஆன்மாவும் – மணி:29/184

TOP


சுட்டு-ஆங்கு (1)

தீ துறு செம் கோல் சென்று சுட்டு-ஆங்கு
கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி – மணி:18/2,3

TOP


சுட்டுணர்வு (1)

நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது – மணி:27/61

TOP


சுட்டுணர்வை (1)

சுட்டுணர்வை பிரத்தியக்கம் என சொலிவிட்டனர் – மணி:29/49

TOP


சுட்டுணர்வோடு (1)

சுட்டுணர்வோடு விரிய கோடல் ஐயம் – மணி:27/58

TOP


சுட்டேன் (1)

கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன்
உவவன மருங்கில் நின்-பால் உள்ளம் – மணி:21/12,13

TOP


சுட (1)

வெயில் சுட வெம்பிய வேய் கரி கானத்து – மணி:17/91

TOP


சுடர் (3)

தூ நிற மா மணி சுடர் ஒளி விரிந்த – மணி:3/65
தூம கொடியும் சுடர் தோரணங்களும் – மணி:6/64
சுடர் வழக்கு அற்று தடுமாறு-காலை ஓர் – மணி:10/10

TOP


சுடரும் (1)

இரு வகை சுடரும் இரு_மூ வகையின் – மணி:6/178

TOP


சுடரோடு (1)

இரு சுடரோடு இயமானன் ஐ பூதம் என்று – மணி:27/89

TOP


சுடலை (3)

சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு – மணி:6/86
அழல் வாய் சுடலை தின்ன கண்டும் – மணி:6/101
சுடலை கானில் தொடு குழிப்படுத்து – மணி:16/25

TOP


சுடலையின் (2)

எம் அனை காணாய் ஈம சுடலையின்
வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என – மணி:6/129,130
ஈம சுடலையின் மகனை இட்டு இறந்த பின் – மணி:6/189

TOP


சுடு (4)

சுடு_மண் ஓங்கிய நெடு நிலை மனை-தொறும் – மணி:3/127
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை கோட்டமும் – மணி:6/59
விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள் – மணி:23/70
அகம் சுடு வெம் தீ ஆய்_இழை அவிப்ப – மணி:23/141

TOP


சுடு_மண் (2)

சுடு_மண் ஓங்கிய நெடு நிலை மனை-தொறும் – மணி:3/127
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை கோட்டமும் – மணி:6/59

TOP


சுடுகாட்டு (2)

சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார் – மணி:6/30
சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார் – மணி:6/204

TOP


சுடும் (1)

கதிர் சுடும் அமயத்து பனி மதி முகத்தோன் – மணி:5/60

TOP


சுடுமண் (1)

சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி – மணி:18/33

TOP


சுடுவதும் (1)

தீயாய் சுடுவதும் காற்றாய் வீசலும் – மணி:27/144

TOP


சுடுவோர் (1)

சுடுவோர் இடுவோர் தொடு குழி படுப்போர் – மணி:6/66

TOP


சுடூஉம் (1)

பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை – மணி:22/67

TOP


சுண்ணம் (1)

வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண் – மணி:4/18

TOP


சுண்ணமும் (1)

சுந்தர சுண்ணமும் தூ நீர் ஆடலும் – மணி:2/23

TOP


சுதமதி (15)

சுதமதி தன்னை துயில் எடுப்பியதூஉம் – மணி:0/46
சுதமதி கேட்டு துயரொடும் கூறும் – மணி:3/17
மணி தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ – மணி:3/85
பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட – மணி:4/25
சுதமதி கேட்டு துளக்கு உறு மயில் போல் – மணி:4/86
மது மலர் கூந்தல் சுதமதி உரைக்கும் – மணி:4/106
தூ மலர் கூந்தல் சுதமதி உரைப்ப – மணி:5/18
சுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி – மணி:6/14
தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழிய – மணி:6/209
வெம் துயர் எய்தி சுதமதி எழுந்து ஆங்கு – மணி:7/41
வீரை ஆகிய சுதமதி கேளாய் – மணி:7/105
துன்னியது உரைத்த சுதமதி தான்-என் – மணி:7/134
சுதமதி ஒளித்தாய் துயரம் செய்தனை – மணி:8/20
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் – மணி:10/73
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் – மணி:12/17

TOP


சுதமதி-தன் (1)

சூழ்வோன் சுதமதி-தன் முகம் நோக்கி – மணி:5/10

TOP


சுதமதி-தன்னை (1)

சுதமதி-தன்னை துயிலிடை நீக்கி – மணி:7/16

TOP


சுதமதி-தன்னொடு (1)

தொழுதனள் காட்டிய சுதமதி-தன்னொடு
மலர் கொய்ய புகுந்தனள் மணிமேகலை என் – மணி:3/170,171

TOP


சுதமதி-தன்னொடும் (1)

சுதமதி-தன்னொடும் நின்ற எல்லையுள் – மணி:5/93

TOP


சுதமதிக்கு (1)

தெளியா சிந்தையள் சுதமதிக்கு உரைத்து – மணி:24/85

TOP


சுதை (4)

வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய – மணி:3/130
வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்து – மணி:6/43
வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த – மணி:25/218
நெடு நிலை-தோறும் நிலா சுதை மலரும் – மணி:28/27

TOP


சுந்தர (1)

சுந்தர சுண்ணமும் தூ நீர் ஆடலும் – மணி:2/23

TOP


சுபாவம் (1)

தூய காரிய ஏது சுபாவம்
ஆயின் சத்தம் அநித்தம் என்றல் – மணி:29/68,69

TOP


சும்மை (1)

இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப – மணி:14/27

TOP


சும்மையும் (1)

வருவோர் பெயர்வோர் மாறா சும்மையும்
எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி – மணி:6/69,70

TOP


சுமந்தன (1)

கழுநீர் கண் காண் வழுநீர் சுமந்தன
குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ – மணி:20/47,48

TOP


சுமந்து (1)

சுமந்து என் பாத்திரம் என்றனன் தொழுது – மணி:14/90

TOP


சுரக்க (2)

வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி – மணி:1/71
பரப்பு நீரால் பல் வளம் சுரக்க என – மணி:14/52

TOP


சுரத்தல் (1)

முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என – மணி:11/118

TOP


சுரந்தனள் (1)

மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள்
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – மணி:19/136,137

TOP


சுரந்து (5)

அறம் கரி ஆக அருள் சுரந்து ஊட்டும் – மணி:11/120
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும் – மணி:13/54
புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு – மணி:14/49
தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும் – மணி:15/8
சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் – மணி:15/48

TOP


சுரப்ப (1)

பெருகியது என்ன பெரு வளம் சுரப்ப
வசி தொழில் உதவி வளம் தந்தது என – மணி:28/232,233

TOP


சுரப்பவும் (1)

மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும் – மணி:15/11

TOP


சுரப்போள்-தன் (1)

தீம் பால் சுரப்போள்-தன் முலை போன்றே – மணி:11/115

TOP


சுரவாது (1)

சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது
ஆங்கனம் ஆயினை அதன் பயன் அறிந்தனை – மணி:11/121,122

TOP


சுரி (2)

சுரி இரும் பித்தை சூழ்ந்து புறம் தாழ்ந்த – மணி:22/149
அம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டி – மணி:25/87

TOP


சுரியல் (1)

சுரியல் தாடி மருள் படு பூ குழல் – மணி:3/116

TOP


சுருக்கு (1)

செரு கயல் நெடும் கண் சுருக்கு வலை படுத்து – மணி:18/106

TOP


சுருங்கை (1)

பெரும் குள மருங்கில் சுருங்கை சிறு வழி – மணி:12/79

TOP


சுருதி (1)

சுருதி சிந்தனா பாவனா தரிசனை – மணி:30/258

TOP


சுருப்பு (1)

சுருப்பு நாண் கருப்பு வில் அருப்பு கணை தூவ – மணி:18/105

TOP


சுரும் (1)

சுரும் குழல் கழீஇய கலவை நீரும் – மணி:28/6

TOP


சுரும்பு (2)

சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும் – மணி:3/68
சுரும்பு அறை மணி தோள் துணிய வீசி – மணி:20/107

TOP


சுரை (3)

அகன் சுரை பெய்த ஆர்_உயிர்_மருந்து அவர் – மணி:11/117
அமுதசுரபியின் அகன் சுரை நிறைதர – மணி:16/133
சுரை வித்து ஏய்ப்ப பிறழ்ந்து போயின – மணி:20/50

TOP


சுவசன (2)

விருத்தம் சுவசன விருத்தம் உலோக – மணி:29/149
சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல் – மணி:29/160

TOP


சுவர் (1)

பவழ தூணத்து பசும் பொன் செம் சுவர்
திகழ் ஒளி நித்தில சித்திர விதானத்து – மணி:18/45,46

TOP


சுவரினும் (1)

மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க – மணி:21/125,126

TOP


சுவை (9)

சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய் – மணி:27/121
தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும் – மணி:27/196
தங்கிய அப்பில் வாய் சுவை எனும் விகாரமும் – மணி:27/217
உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே – மணி:27/236
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் – மணி:27/249
சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய – மணி:27/251
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை
மாசு_இல் பெருமை சிறுமை வன்மை – மணி:27/252,253
அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம் – மணி:28/116
ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகை – மணி:28/241

TOP


சுவையும் (1)

சுவையும் மெய்யால் ஊறும் என சொன்ன – மணி:27/17

TOP


சுழலலும் (1)

தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும் – மணி:3/111

TOP


சுழலும் (1)

தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும்
ஓடலும் ஓடும் ஒரு_சிறை ஒதுங்கி – மணி:3/111,112

TOP


சுற்றம் (1)

காதல் சுற்றம் மறந்து கடைகொள – மணி:8/13

TOP


சுற்றமும் (1)

அரசும் உரிமையும் அகநகர் சுற்றமும்
ஒரு_மதி எல்லை காத்தல் நின் கடன் என – மணி:25/122,123

TOP


சுற்றமொடு (1)

மந்திர சுற்றமொடு மன்னனும் விரும்பி – மணி:28/184

TOP


சுற்றி (3)

மணிமேகலை-தனை வந்து புறம் சுற்றி
அணி அமை தோற்றத்து அரும் தவ படுத்திய – மணி:3/148,149
தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி
பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில் – மணி:6/51,52
குரூஉ தொடை மாலை கோட்டிடை சுற்றி
வெரூஉ பகை அஞ்சி வெய்து_உயிர்த்து புலம்பி – மணி:13/29,30

TOP


சுற்றிய (2)

மயிர் புறம் சுற்றிய கயிற்கடை மு காழ் – மணி:3/135
போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்து – மணி:28/4

TOP


சுற்று (1)

அற்றம் காவா சுற்று உடை பூம் துகில் – மணி:3/139

TOP


சுற்றும் (1)

சுற்றும் நீங்கி தொழுது உரையாடி – மணி:16/62

TOP