நோ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோக்க 1
நோக்கப்படுவன 1
நோக்கம் 1
நோக்காது 1
நோக்கான் 1
நோக்கி 12
நோக்கியும் 1
நோக்கின் 1
நோக்கும் 1
நோய் 19
நோய்க்கு 1
நோயின் 1
நோவன 1
நோற்ற 1
நோற்றதும் 1
நோற்று 2
நோற்று_ஊண் 1
நோற்றோர் 1
நோன் 1
நோன்பி-தன்னொடும் 1
நோன்பிகள் 2
நோன்பியர் 1
நோன்பின் 3
நோன்பினர் 1
நோன்பினேன் 1
நோன்பு 1
நோன்பும் 1
நோன்போடு 2
நோனாது 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நோக்க (1)

நிலை இல வறிய துன்பம் என நோக்க
உலையா வீட்டிற்கு உறுதி ஆகி – மணி:30/30,31

TOP


நோக்கப்படுவன (1)

நுகர்ச்சி என்று நோக்கப்படுவன
முன்னவற்று இயல்பால் துன்னிய ஆதலின் – மணி:30/139,140

TOP


நோக்கம் (1)

தணியா நோக்கம் தவிர்ந்திலன் ஆகி – மணி:6/18

TOP


நோக்காது (1)

யாரும் இல் தமியேன் என்பது நோக்காது
ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ – மணி:6/134,135

TOP


நோக்கான் (1)

கடும் சினம் திருகி மகன் துயர் நோக்கான்
மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன் – மணி:22/157,158

TOP


நோக்கி (12)

மாதவி மணிமேகலை முகம் நோக்கி
தாமரை தண் மதி சேர்ந்தது போல – மணி:3/11,12
சூழ்வோன் சுதமதி-தன் முகம் நோக்கி
சித்திர கைவினை திசை-தொறும் செறிந்தன – மணி:5/10,11
என் உற்றனிரோ என்று எமை நோக்கி
அன்புடன் அளைஇய அருள்மொழி-அதனால் – மணி:5/62,63
சுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி
ஈங்கு நின்றீர் என் உற்றீர் என – மணி:6/14,15
தண் மலர் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கி
காவதம் திரிய கடவுள் கோலத்து – மணி:11/4,5
பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி
பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகி – மணி:16/69,70
தான் தொலைவு இல்லா தகைமை நோக்கி
யானைத்தீ நோய் அகவயிற்று அடக்கிய – மணி:17/6,7
சோழிக ஏனாதி-தன் முகம் நோக்கி
யான் செயற்பாலது இளங்கோன்-தன்னை – மணி:22/205,206
பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி
நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர் – மணி:25/163,164
பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி
மன்னவன் மயங்க மணிமேகலை எழுந்து – மணி:25/219,220
தான் நடுக்கு உற்ற தன்மை நோக்கி
ஆதி முதல்வன் போதி மூலத்து – மணி:29/22,23
மேல் நோக்கி கறுத்திருப்ப பகைத்திருப்ப – மணி:29/94

TOP


நோக்கியும் (1)

ஆடிய குரவை இஃது ஆம் என நோக்கியும்
கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னை – மணி:19/66,67

TOP


நோக்கின் (1)

மடித்த செம் வாய் கடுத்த நோக்கின்
தொடுத்த பாசத்து பிடித்த சூலத்து – மணி:6/45,46

TOP


நோக்கும் (1)

பிறன் பின் செல்லும் பிறன் போல் நோக்கும்
மது கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு – மணி:20/72,73

TOP


நோய் (19)

உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி – மணி:3/2
பிணி நோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய – மணி:15/15
உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு – மணி:15/65
திப்பியம் என்றே சிந்தை நோய் கூர – மணி:15/70
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து – மணி:16/54
யானைத்தீ நோய் அகவயிற்று அடக்கிய – மணி:17/7
துன்னிய என் நோய் துடைப்பாய் என்றலும் – மணி:17/16
காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை – மணி:17/54
யானைத்தீ நோய் அரும் பசி கெடுத்தது – மணி:19/153
மாந்தர் பசி நோய் மாற்ற கண்டு ஆங்கு – மணி:20/32
ஆனைத்தீ நோய் அரும் பசி களைய – மணி:20/35
செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல – மணி:23/34
மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று – மணி:23/58
பொய் நோய் காட்டி புழுக்கறை அடைப்ப – மணி:23/60
பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார் – மணி:24/103
உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல் என – மணி:24/174
படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர் – மணி:28/224
நுவலப்படுவன நோய் ஆகும்மே – மணி:30/182
அ நோய் தனக்கு – மணி:30/183

TOP


நோய்க்கு (1)

யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இ – மணி:19/131

TOP


நோயின் (1)

உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என – மணி:23/59

TOP


நோவன (1)

நோவன செய்யன்-மின் நொடிவன கேண்-மின் – மணி:13/50

TOP


நோற்ற (1)

வெம் திறல் அரக்கர்க்கு வெம் பகை நோற்ற
சம்பு என்பாள் சம்பாபதியினள் – மணி:0/7,8

TOP


நோற்றதும் (1)

பவ திறம் அறுக என பாவை நோற்றதும்
இளங்கோ வேந்தன் அருளி கேட்ப – மணி:0/94,95

TOP


நோற்று (2)

உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர் – மணி:2/47
நோற்று_ஊண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி – மணி:18/122

TOP


நோற்று_ஊண் (1)

நோற்று_ஊண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி – மணி:18/122

TOP


நோற்றோர் (1)

நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால் – மணி:17/65

TOP


நோன் (1)

நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால் – மணி:17/65

TOP


நோன்பி-தன்னொடும் (1)

உண்ணா நோன்பி-தன்னொடும் சூளுற்று – மணி:3/102

TOP


நோன்பிகள் (2)

வெம் திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும் – மணி:3/75
சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு – மணி:6/86

TOP


நோன்பியர் (1)

படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர் – மணி:28/224

TOP


நோன்பின் (3)

ஒரு_பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்
பகவனது ஆணையின் பல் மரம் பூக்கும் – மணி:3/60,61
உலக நோன்பின் பல கதி உணர்ந்து – மணி:5/72
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ – மணி:5/99

TOP


நோன்பினர் (1)

பெருமை-சால் நல் அறம் பிறழா நோன்பினர்
கண்டு கைதொழுவோர் கண்டதன் பின்னர் – மணி:11/31,32

TOP


நோன்பினேன் (1)

உண்ணா நோன்பினேன் உண் கனி சிதைத்தாய் – மணி:17/42

TOP


நோன்பு (1)

துன்ப நோன்பு இ தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு – மணி:21/98

TOP


நோன்பும் (1)

மாதவர் நோன்பும் மடவார் கற்பும் – மணி:22/208

TOP


நோன்போடு (2)

உண்ணா நோன்போடு உயவல் யானையின் – மணி:3/90
உண்ணா நோன்போடு உயிர் பதி பெயர்ப்புழி – மணி:14/95

TOP


நோனாது (1)

பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது
உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று – மணி:7/50,51

TOP