ஜ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

ஜக (7)

கர தலம் பற்று பெற்ற ஒருத்தன் ஜக தாதை – திருப்:312/4
புயல் எனும் பொற்பு பெற்ற நிறத்தன் ஜக தாதை – திருப்:316/14
உறு ஜக ரக்ஷணி நீர் ஆவாரணி தரு சேயே – திருப்:697/14
மறுகு பொறி கழல் நிறுவியெ சிறிது மெய் உணர்வும் உணர்வுற வழு அற ஒரு ஜக
வித்தை குண த்ரயமும் நிர்த்தத்து வைத்து மறை – திருப்:917/21,22
மா தமிழ் த்ரய சேயே நமோ நம வேதன த்ரய வேளே நமோ நம வாழ் ஜக த்ரய வாழ்வே நமோ நம என்று பாத – திருப்:992/3
ஜோதியில் ஜக ஜோதீ மஹா தெவர் தம்பிரானே – திருப்:993/16
அஞ்சிய ஜக த்ரயத்தை அஞ்சல் என விக்ரமித்து அன்பர் புகழ பொருப்பொடு அமராடி – திருப்:1234/7
மேல்


ஜகதலம் (1)

ஜகதலம் அதில் அருள் ஞான வாள் கொடு தலை பறி அமணர் சமூகம் மாற்றிய – திருப்:509/9
மேல்


ஜகதீச (1)

தருண கதீரா நமோ நம நிருப அமர் வீரா நமோ நம சம தள ஊரா நமோ நம ஜகதீச – திருப்:584/2
மேல்


ஜடா (1)

பரம யோகி மா யோகி பரி அரா ஜடா சூடி பகர் ஒணாத மா ஞானி பசு ஏறி – திருப்:577/3
மேல்


ஜய (3)

ஆதி ரகுராம ஜய மாலின் மருகா பெரிய ஆதி அருணாபுரியில் பெருமாளே – திருப்:445/8
பாரினிலே ஜய வீரா நமோ நம மலை மாது – திருப்:725/6
அசுரர் குல அரி அமரர்கள் ஜய பதி குசல பசுபதி குரு என விருதுகள் – திருப்:917/33
மேல்


ஜயமகள் (1)

வரி அரவின் மிசை துயிலும் வரத ஜயமகள் கொழுநன் மருக அமர் முடுகி வரு நிருதேசர் – திருப்:1091/6
மேல்


ஜலம் (1)

அடர் சடை மிசை மதி அலை ஜலம் அது புனை அத்தர்க்கு பொருள் கற்பித்து புகழ் கொண்ட வாழ்வே – திருப்:1014/7
மேல்


ஜன்ம (1)

உத்ர ஜன்ம பெயர் செப்பிட இட பரிவாலே – திருப்:126/10
மேல்


ஜனங்கள் (1)

மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயாஐயா என இசைகள் கூற – திருப்:543/14
மேல்


ஜனன (2)

இருவினை பொதிந்த இந்த ஜனன மரணம் துறந்து இணை அடி வணங்க என்று பெறுவேனோ – திருப்:181/4
பெருகு தீய வினையில் நொந்து கதிகள்தோறும் அலை பொருந்தி பிடிபடாத ஜனன நம்பி அழியாதே – திருப்:726/2
மேல்


ஜனனத்தை (1)

வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை விடுவித்து உன் அருள் வைப்பது ஒரு நாளே – திருப்:752/4

மேல்