கெ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கெச்சையும் 1
கெச 1
கெஜ 1
கெஞ்ச 1
கெஞ்சி 1
கெஞ்சிட 2
கெஞ்சு 1
கெஞ்சும் 1
கெட்ட 10
கெட்டவர் 1
கெட்டாற்கு 1
கெட்டிட்டு 1
கெட்டிடலாமோ 1
கெட்டு 47
கெட்டே 3
கெட்டேன் 3
கெட 80
கெடல் 1
கெடலாமோ 2
கெடவும் 1
கெடவே 5
கெடா 1
கெடாத 3
கெடாது 2
கெடாமல் 4
கெடி 3
கெடில் 1
கெடில 1
கெடு 8
கெடுத்த 1
கெடுத்தது 1
கெடுத்திட்டே 1
கெடுத்து 7
கெடுப்பர் 1
கெடும் 3
கெடும்படி 2
கெடுவிகள் 1
கெண்டை 6
கெண்டைகள் 2
கெண்டைகளோ 1
கெண்டையள் 1
கெண்டையாலும் 1
கெண்டையாளை 1
கெண்டையும் 1
கெணஜெகுத 1
கெணசெகுத 2
கெத்தில் 1
கெத்து 1
கெதி 2
கெந்த 4
கெந்தம் 2
கெந்தருவர் 1
கெந்து 1
கெந்துருவர் 1
கெம்பிர 1
கெம்பீர 3
கெம்பு 1
கெமனி 1
கெய்த்து 1
கெர்ச்சித 1
கெர்ப்ப 1
கெர்ப்பத்தில் 1
கெர்ப்பபுரத்தில் 1
கெர்ப்பம் 1
கெருட 1
கெருடன் 2
கெருடனும் 1
கெருவ 2
கெருவம் 2
கெருவிகள் 2
கெருவித்து 1
கெருவித 2
கெருவிதம் 1
கெருவிதா 1
கெலிக்க 1
கெலிக்கும் 1
கெலித்து 2
கெலிப்பர் 1
கெழுமுதல் 1
கெற்சித்து 1
கெற்சித 1
கெறு 1
கெறுவத்துடன் 1
கெறுவித 1
கெறுவிதம்பெற 1

கெச்சையும் (1)

சச்சை அம் கெச்சையும் தாள ஒத்தும் பதுமை என்ப நீல – திருப்:460/2
மேல்


கெச (1)

செக தலமு நிகர் சிகரி பலவு நல கெச புயக திசையும் உடன் உருக வரு கடை நாளில் – திருப்:1094/6
மேல்


கெஜ (1)

கெஜ நடை மடவார் வசம் அதில் உருகா கிலெசம் அது உறு பாழ் வினையாலே – திருப்:391/1
மேல்


கெஞ்ச (1)

இருவினை அஞ்ச வருவினை கெஞ்ச இருள் பிணி துஞ்ச மலம் மாய – திருப்:851/1
மேல்


கெஞ்சி (1)

வந்தித்து இந்த படி மடவாரொடு கொஞ்சி கெஞ்சி தினம் அவர் தாள் தொழு – திருப்:424/7
மேல்


கெஞ்சிட (2)

மந்திர மோகம் எழுப்பி கெஞ்சிட முன் தலை வாயில் அடைத்து சிங்கி கொள் – திருப்:155/7
நடன பத நூபுரமும் முகில் கெஞ்சிட மலர் சொருகு கேச பரமும் இலங்கிய – திருப்:236/5
மேல்


கெஞ்சு (1)

கெஞ்சு பலுடன் குழைந்து அமளியில் கொடுபோய் வண் – திருப்:854/2
மேல்


கெஞ்சும் (1)

கொஞ்சும் கெஞ்சும் செஞ்சும் வஞ்சம் சமரசம் உற ஒரு தொழில் வினைபுரிபவர் விரகாலும் – திருப்:150/3
மேல்


கெட்ட (10)

அடைவு கெட்ட புரட்டனை முட்டனை அடியேனை – திருப்:281/6
அறிவு இலா பித்தர் உன்றன் அடி தொழா கெட்ட வஞ்சர் அசடர் பேய் கத்தர் நன்றி அறியாத – திருப்:352/1
செகத்து நீலிகள் கெட்ட பரத்தைகள் மிக நாணார் – திருப்:429/2
மாசு அடை குருடு காது அடைப்பு செவிடு ஊமை கெட்ட வலி மூலம் முற்று தரு – திருப்:487/3
படலைக்கு விழி கெட்ட குருடுற்று மிக நெக்க பழமுற்று நரை கொக்கின் நிறமாகி – திருப்:752/2
பற்பம் முகை குத்து முலை தத்தையர் கை புக்கு வசப்பட்டு உருகி கெட்ட வினை தொழிலாலே – திருப்:871/2
கடை கெட்ட ஆபாதம் உறு சித்ர கோமாளர் கருமத்தின் மாயாது கொண்டு பூணும் – திருப்:907/2
ஆயு நூல் அறிவு கெட்ட நானும் வேறு அல அதற்குள் ஆகையால் அவை அடக்க உரை ஈதே – திருப்:1155/4
அடியார் மனம் சலிக்க எவராகிலும் பழிக்க அபராதம் வந்து கெட்ட பிணி மூடி – திருப்:1203/1
கலை தலை கெட்ட பாய் சமணரை நட்ட கூர் கழு நிரை முட்ட ஏற்றிய தாள – திருப்:1209/7
மேல்


கெட்டவர் (1)

கெட்டவர் உற்ற துணை என நட்டு அருள் சிட்ட பசுபதி கெர்ப்பபுரத்தில் அறுமுக பெருமாளே – திருப்:927/8
மேல்


கெட்டாற்கு (1)

கரு அற இருவினை கெட்டாற்கு காண்வரும் என்ற ஏகம் – திருப்:1149/2
மேல்


கெட்டிட்டு (1)

ஒக்க தக்கிட்டு திரி அசுர் முட்ட கொட்டற்று திரிபுரம் ஒக்க கெட்டிட்டு திகுதிகு என வேக – திருப்:1195/7
மேல்


கெட்டிடலாமோ (1)

திக்கி ஓடி பாணிக்கு ஓடி தீவுக்கு ஓடி கெட்டிடலாமோ – திருப்:1121/4
மேல்


கெட்டு (47)

திரை கடல் கோ என குவடுகள் தூள்பட திருடர் கெட்டு ஓட விட்டிடும் வேலா – திருப்:131/6
சுகமுற்று கவலைப்பட்டு பொருள் கெட்டு கடை கெட்டு சொல் – திருப்:154/7
சுகமுற்று கவலைப்பட்டு பொருள் கெட்டு கடை கெட்டு சொல் – திருப்:154/7
சுக துக்கத்து இடர் கெட்டு உற்று தளர்பட்டு கிடைபட்டு உப்பி கிடை நாளில் – திருப்:154/9
திட்டத்தை பற்றிய பற்பல லச்சைக்கு உட்பட்டு தொட்டு உயிர் சிக்கி சொக்கி கெட்டு இப்படி உழல்வேனோ – திருப்:187/4
அசுரர் சேனை கெட்டு முறிய வானவர்க்கு அடைய வாழ்வு அளிக்கும் இளையோனே – திருப்:229/6
செரு அசுர பொய் குலம் அது கெட்டு திரை கடல் உட்க பொரும் வேலா – திருப்:282/5
தரி கெட்டு அசுர படை கெட்டு ஒழிய தனி நெட்டு அயிலை தொடும் வீரா – திருப்:285/7
தரி கெட்டு அசுர படை கெட்டு ஒழிய தனி நெட்டு அயிலை தொடும் வீரா – திருப்:285/7
பரிபவம்பட்டு கெட்டு ஒழிய தன் செவி போய் அ – திருப்:309/14
பரவசம் கெட்டு எட்டு அக்கரம் நித்தம் பரவும் அன்பர்க்கு சித்தி அளிக்கும் – திருப்:311/11
குணம் அடங்க கெட்டு குணம் மற்று ஒன்று இலதான – திருப்:315/6
குலம் அடங்க கெட்டு ஒழிய சென்று ஒரு நேமி – திருப்:320/10
அச்சு கெட்டு படை விட்டு அச்சப்பட்டு கடலுள் புக்குப்பட்டு துருமத்து அடைவாக – திருப்:333/6
சர்ப்ப தத்தில் பட்டு கெட்டு தட்டுப்படும் அ பிறையாலே – திருப்:334/2
கடலில் கொக்கு அடல் கெட்டு கரம் உட்க தரம் உட்க பொரு சத்தி கர சொக்க பெருமாளே – திருப்:336/8
நிட்டூர சூர் கெட்டு ஓட போர் நெட்டு ஓதத்தில் பொருதோனே – திருப்:341/6
விரகு கெட்டு அரு நரகு விட்டு இருவினை அற பதம் அருள்வாயே – திருப்:345/4
அழகு ஆர் புளக புழுகு ஆர் சயிலத்து அணையா வலி கெட்டு உடல் தாழ – திருப்:393/2
தீவு கெட்டு முறையோ என கதற விடும் வேலா – திருப்:439/12
குழற்கு இப்படி நொந்து கெட்டு குடில் மங்குறாமல் – திருப்:453/6
தத்தி சூரர் குழாமொடு தேர் பரி கெட்டு கேவலமாய் கடல் மூழ்கிட – திருப்:480/11
வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ ஓசை கெட்டு மடியாமல் முத்தி பெற – திருப்:487/7
சிக்கு பட்டு உடல் கெட்டு சித்தமும் வெட்கி துக்கமுற்று கொக்கு என நரை மேவி – திருப்:512/18
கொட்டத்து புரர் கெட்டு பொட்டு எழ விட்ட திக்கு அணை நக்கர்க்கு அற்புத – திருப்:512/28
முடுகி மேலிட்ட கொடிய சூர் கெட்டு முறிய வேல் தொட்ட பெருமாளே – திருப்:645/8
ஆடல் சூர் கெட்டு ஓட தோயத்து ஆர சீறி பொரும் வேலா – திருப்:708/5
விசை பெற்று வரு பித்தம் வளியை கண் நிலை கெட்டு மெலிவுற்று விரல் பற்று தடியோடே – திருப்:752/3
மா பூண் ஆரம் கச்சு அணி முலையினர் வேட்பூணு ஆகம் கெட்டு எனை உனது மெய் – திருப்:759/7
தம் கிளை கெட்டு ஓட ஏவு சரபதி மருகோனே – திருப்:807/12
அரிய மரகத மயிலில் உற்று கத்து கடல் அது சுவற அசுரர் கிளை கெட்டு கட்டை அற – திருப்:895/13
செச்சை புயம் அற்று புக ஒரு சத்தி படை விட்டு சுரர் பதி சித்த துயர் கெட்டு பதி பெற அருள்வோனே – திருப்:896/6
எம படர் படை கெட்டு ஓட நாடுவ அமுதுடன் விடம் ஒத்து ஆளை ஈருவ – திருப்:939/3
உரத்த வெண் பலும் நழுவி மதம் கெட்டு இரைத்து கிண்கிண் என இருமல் எழுந்திட்டு – திருப்:955/3
தாவி மூழ்கி மதி கெட்டு அலம் உற்றவனை பாவமான பிறவிக்கடல் உழப்பவனை – திருப்:960/7
தோகைக்கே உற்று ஏறி தோயம் சூர் கெட்டு ஓட பொரும் வேலா – திருப்:988/5
அடல் அசுரர் சேனை கெட்டு முறிய மிக மோதி வெட்டி அமரர் சிறை மீள விட்ட பெருமாளே – திருப்:1097/8
நீல மேனி குல தோகை மேல் உற்று நிட்டூர சூர் கெட்டு உக பொரும் வேலா – திருப்:1106/3
வேல் ஏவி வாவி மகரம் சீறும் பரவை கூப்பிட மோதி சூர் கெட்டு ஓட தாக்கிய பெருமாளே – திருப்:1150/16
கையில் உள பொருள் கெட்டு அருள் கெட்டு அனைவரும் விடு சிச்சி என – திருப்:1154/7
கையில் உள பொருள் கெட்டு அருள் கெட்டு அனைவரும் விடு சிச்சி என – திருப்:1154/7
திக்கு கெட்டு ஒட்டு சிட்டு என பட்ட அ துற்புத்தி கட்டு அற செப்பத்து உன் பற்றற்கு அற்புதம் அருள்வாயே – திருப்:1161/4
நாணமும் மரபும் ஒழிக்கு அற்று நீதியும் அறிவும் அற கெட்டு நாய் அடிமையும் அடிமைப்பட்டுவிடலாமோ – திருப்:1200/4
முட்ட அசுரர் கிளை கெட்டு முறிய முதல் வெட்டி அமர் பொருத பெருமாளே – திருப்:1245/8
இருவினை நலிய மெய் திறலுடன் அறிவு கெட்டு இடர் படுவது கெடுத்து அருள்வாயே – திருப்:1259/4
பக்கம் இட்டு பொருள் கொள் குமிட்ட பரம் பற்று கெட்டு பயிர் களை போலும் – திருப்:1260/2
கன படை கெட்டு தட்டற விட்டு திரை கடலுக்குள் புக்கிட எற்றி – திருப்:1321/11
மேல்


கெட்டே (3)

சத்தான புத்தி அது கெட்டே கிடக்க நமன் ஓடி தொடர்ந்து கயிறு ஆடி கொளும் பொழுது – திருப்:115/7
ஆதரம் கொடு கெட்டே இப்படி ஆசையின் கடலுக்கே மெத்தவும் – திருப்:717/5
காணப்பட்டே கொடு நோய் கொடு வாதைப்பட்டே மதி தீது அகலாமல் கெட்டே தடுமாறிட அடுவோனே – திருப்:976/6
மேல்


கெட்டேன் (3)

தித்தா நின்றார் செத்தார் கெட்டேன் அஆ உஉ எனவே கேள் – திருப்:341/3
கயல் விழித்தேன் எனை செயல் அழித்தாய் என கணவ கெட்டேன் என பெறு மாது – திருப்:376/1
ஒறு வினைக்கே உளத்து அறிவு கெட்டேன் உயிர் புணை இணை தாள்தனை தொழுவேனோ – திருப்:377/4
மேல்


கெட (80)

சங்கை கெட மண்டி திகை எங்கிலும் மடிந்து விழ தண் கடல் கொளுந்த நகை கொண்ட வேலா – திருப்:50/6
நிலை அழி கவலைகள் கெட உனது அருள் விழி நின்று உற்றிடவே தான் – திருப்:54/3
கிளைக்கும் திறல் அரக்கன் கிளை கெட கன்றிய பெருமாளே – திருப்:64/8
கொலை காட்டு அவுணர் கெட மா சலதி குளமாய் சுவற முது சூதம் – திருப்:72/5
கெட துன்பம் கழித்து இன்பம் தருவாயே – திருப்:86/8
குறவர் முனை கெட மனது வெட்கப்பட குடிலில் மலையில் எழு தினை இதணில் வைத்து சிறுக்கி இரு – திருப்:157/13
பசியதோ கெட அருள் கொண்ட மாயவன் மருகோனே – திருப்:178/14
மகரம் எறி திரை மோது பகர கடல் தட வாரி மறுகு புனல் கெட வேலை விடுவோனே – திருப்:185/5
சூளும் கெட வேல் விடு சேவக மயில் வீரா – திருப்:188/12
சமரமொடும் அசுரர் படை களம் மீது எதிர்த்த பொழுது ஒரு நொடியில் அவர்கள் படை கெட வேல் எடுத்து – திருப்:213/9
ஞானமும் கெட அடைய விழுவி ஆழத்து அழுந்தி மெலியாதே – திருப்:222/2
அநுதின மொழி தர அசுரர்கள் கெட அயில் அனல் என எழ விடும் அதி வீரா – திருப்:240/2
தனியவர் கூரும் தனி கெட நாளும் தனி மயில் ஏறும் பெருமாளே – திருப்:256/8
மிகுதி கெட பொரு அசுரர் தெறித்திட விடும் வேலா – திருப்:263/12
அமணர் உடல் கெட வசியில் அழுத்தி விண் அமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடு – திருப்:263/15
கலவி கரை அழி இன்ப அலையில் அலை படுகின்ற கவலை கெட நினது அன்பு பெறுவேனோ – திருப்:295/4
அபயம் என நடு நின்ற அசுரர் அடி உண்டு அவர்கள் முனை கெட நின்று பொரும் வேலா – திருப்:295/6
அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற அதிரிடும் வடி வேல் விடும் அதி சூரா – திருப்:307/6
குவடு ஒதுங்க சொர்க்கத்தர் இடுக்கம் கெட நடுங்க திக்கில் கிரி வர்க்கம் – திருப்:320/11
பற்றி பணிபவர் குற்ற பகை கெட உற்று பொர வல கதிர் வேலா – திருப்:337/6
அமரர் பசி கெட உதவிய க்ருபை முகில் அகில புவனமும் அளவிடு குறியவன் – திருப்:367/13
கலகல என நெறி கெட முறை முறை முறை கதறி வதறிய குதறிய கலை கொடு – திருப்:369/3
விழியின் வழி கெட இருள்வது ஒர் இருள் என மொழியும் அமுது அல உயிர் கவர் வலை என – திருப்:374/3
எழில் கெட நினைவும் அழிந்து மாய்வது ஒழிந்திடாதோ – திருப்:386/8
தீபு ஏழ் அற்றிட பாதாளத்து உறை நஞ்சு அரவின் பணம் ஆயிரம் கெட – திருப்:412/20
அசுரன் சிரம் இரதம் பரி சிலையும் கெட கோடு சரமும் பல படையும் பொடி கடலும் கிரி சாய – திருப்:467/11
வணங்க சித்தம் இலாத இராவணன் சிரம் பத்து கெட வாளி கடாவியெ – திருப்:489/9
அரிய விழி கெட இரு பதமும் உலகு அடைய நெடியவர் திருவும் அழகியர் – திருப்:512/39
பெரு மலை உருவிட அடியவர் உருகிட பிணி கெட அருள்தரு குமரேசா – திருப்:523/7
வந்த தானவர் சேனை கெடி புக இந்த்ரலோகம் விபூதர் குடி புக மண்டு பூத பசாசு பசி கெட மயிடாரி – திருப்:575/5
இடர் பட மா மேரு பூதரம் இடிபடவே தான் நிசாசரர் இகல் கெட மா வேக நீடு அயில் விடுவோனே – திருப்:584/6
ஜெகதல மிடி கெட விளைவன வயல் அணி செங்கோடு அமர்ந்த பெருமாளே – திருப்:588/8
சொல்லி நேர் படு முது சூரர் தொய்ய ஊர் கெட விடும் வேலா – திருப்:635/3
மகிமையால் சமண் வேரோடே கெட வென்ற கோவே – திருப்:666/12
கழுகு பசி கெட கடுகி அயில் விடுத்திடு தீரா – திருப்:671/10
மகளொடு மாமன் பாட்டி முதல் உறவோரும் கேட்டு மதி கெட மாயம் தீட்டி உயிர் போம் முன் – திருப்:676/2
அரணம் முரணுறு அசுரர்கள் கெட அயில் விடுவோனே – திருப்:691/14
குரை கடல் மறுகிட மூண்ட சூரர்கள் அணி கெட நெடு வரை சாய்ந்து தூள் எழ – திருப்:696/13
உதிதாம் பரத்தை உயிர் கெட பொன் கிண்கிணி சதங்கை வித கீத – திருப்:718/3
வேறு வடிவு கொடு உறி வெணெய் தயிர் அது வேடை கெட அமுது அருளிய பொழுதினில் – திருப்:731/11
வானில் அடியவர் இடர் கெட அருளிய பெருமாளே – திருப்:731/16
இசையில் நாள்தொறும் இமையவர் முநிவர்கள் ககன பூபதி இடர் கெட அருளிய – திருப்:738/7
பரவையூடு எரி பகழியை விடுபவர் பரவுவார் வினை கெட அருள் உதவியெ – திருப்:738/11
மிடி கெட விளைவன வள வயல் சூழ்ந்த வேப்பூர் அமர்ந்த பெருமாளே – திருப்:753/8
மை ஆர் அ கிரியே பொடியாய் விட பொய் சூர் பதியே கெட வானவர் – திருப்:767/9
வந்த வானவர் மனதினில் இடர் கெட நினைவோனே – திருப்:769/12
பஞ்சபாதகர் முனை கெட அருளிய பெருமாளே – திருப்:769/16
இன்பம் தரும் செம்பொன் கழல் உந்தும் கழல் தந்தும் பினை என்றும்படி பந்தம் கெட மயில் ஏறி – திருப்:801/2
சிலை வீழ கடல் கூட்டமும் கெட அவுணோரை தலை வாட்டி அம்பர – திருப்:810/9
மகரம் அது கெட இரு குமிழ் அடைசி வார் ஆர் சரங்கள் என நீளும் – திருப்:820/1
இடர் கெட அசுரேசர் சேனை முறிந்து போக – திருப்:861/10
குணல் இட்டு ஆடி பசி கெட அயில் விடு குமரேசா – திருப்:889/12
சீறி எதிர்த்த அரக்கரை கெட மோதி அடர்ந்து அருள் பட்சம் முற்றிய – திருப்:918/15
சத்தத்து ஒலி திகை தாவிட வானவர் திக்கு கெட வரு சூரர்கள் தூள்பட – திருப்:926/11
அகிலமும் அஞ்சிய ஆக்ரம விகட பயங்கர ராக்கத அசுரர் அகம் கெட ஆர்த்திடு கொடி கூவ – திருப்:929/7
உமிழ நிரைகளின் இடர் கெட அடர் கிரி கவிகை இட வல மதுகையும் நிலை கெட – திருப்:930/11
உமிழ நிரைகளின் இடர் கெட அடர் கிரி கவிகை இட வல மதுகையும் நிலை கெட
உலவில் நிலவறை உருவிய அருமையும் ஒரு நூறு – திருப்:930/11,12
வேடை கெட வந்து சிந்தனை மாயை அற வென்று துன்றிய வேத முடிவின் பரம்பொருள் அருள்வாயே – திருப்:968/4
வேளை என வந்து தாளினில் விழுந்து வேடை கெட நண்பு பல பேசி – திருப்:970/2
இந்திர வேதர் பயம் கெட சூரை சிந்திட வேல் கொடு எறிந்து நல் தோகைக்கு – திருப்:972/13
வீர ராக்கதர் ஆர்ப்பு எழ வேத தாக்ஷிகள் நா கெட வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே – திருப்:995/8
நறிய மலர் கொடு ஹரஹரஹர என அமரர் சிறை கெட நறை கமழ் மலர் மிசை – திருப்:1002/15
பசி கெட ஒரு தனி வென்ற சேவக மயில் வீரா – திருப்:1010/14
அசந்தபோது என் துயர் கெட மா மயில் வரவேணும் – திருப்:1074/7
இருள் கெட முன் தான் நின்று இன மணி செம் தார் தங்கு இரு தனமும் தோள் கொண்டு அணைவாயே – திருப்:1087/4
கார் ஏழு மா மலை இடித்து உரு கெட கார் ஆழி ஏழு அவை கலக்கி விட்டு உயர் – திருப்:1142/15
முக்குணம் அது கெட நானா என வரும் முத்திரை அழிதர ஆராவமுது அன – திருப்:1143/7
விட்ட படிறிகள் தம் நேச ஆசை கெட அருள்வாயே – திருப்:1144/8
பட முக அடல் அபிராபதம் ஏறும் ப்ரபு பயம் கெட வட பராரை வரை கெட – திருப்:1150/15
பட முக அடல் அபிராபதம் ஏறும் ப்ரபு பயம் கெட வட பராரை வரை கெட
வேல் ஏவி வாவி மகரம் சீறும் பரவை கூப்பிட மோதி சூர் கெட்டு ஓட தாக்கிய பெருமாளே – திருப்:1150/15,16
அவுணர் கிளை கெட நூறி ஆலாலம் மா கோப நிருதேசன் – திருப்:1153/14
சீர் பாதசேகரன் ஆகவும் நாயினன் மோகா விகார விடாய் கெட ஓடவே – திருப்:1162/7
ஆவி அகன்று விடும் பயம் கெட அருள்வாயே – திருப்:1180/8
வாசவன் அன்பு விளங்க நின்ற அசுரேசர் குலங்கள் அடங்கலும் கெட
வானவர் நின்று தியங்குகின்றது ஓர் குறை தீர – திருப்:1180/9,10
முறைமை சேர் கெட மைத்து ஆர்வு வார் கடல் முடுகுவோர் என் எய்த்து ஓடி ஆகமும் – திருப்:1192/3
வீசால வேலை சுவறிட மா சூரர் மார்பு தொளைபட வேதாள ராசி பசி கெட அறை கூறி – திருப்:1211/5
பல திசை நடுக்கமுற்று நிலை கெட அடல் கை உற்ற படை அது பொருப்பில் விட்ட முருகோனே – திருப்:1239/7
துவல் கொடு முறையிடு சுரர் பதி துயரது கெட நிசிசரர் சேனை – திருப்:1247/7
முதுமை கடல் அடல் அசுர படை கெட முடுகி பொர வல பெருமாளே – திருப்:1268/8
சேர்வைதனை உற்று மோசம் விளைவித்து சீர்மை கெட வைப்பர் உறவாமோ – திருப்:1319/4
மேல்


கெடல் (1)

அதற்கே சிச்சீ இனம் எனது உயிர் கெடல் அழகாமோ – திருப்:1332/2
மேல்


கெடலாமோ (2)

மரத்து உறை போல் உற்று அடியேனும் மலத்து இருள் மூடி கெடலாமோ – திருப்:779/2
ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடு ஏறாரில் கெடலாமோ – திருப்:817/4
மேல்


கெடவும் (1)

முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி முறைமை கெடவும் மயக்கி வரும் மாதர் – திருப்:186/2
மேல்


கெடவே (5)

கானம் கலை மான் மகளார்தமை நாணம் கெடவே அணை வேள் பிரகாசம் – திருப்:188/15
ஆணவம் கெடவே காவலாம் அதில் இடும் வேலா – திருப்:197/14
அழுது ஆ கெடவே அவமாகிட நாள் அடைவே கழியாது உனை ஓதி – திருப்:830/3
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே தெற்கு நரபதி திருநீறு இடவே – திருப்:913/9
வேடர் குல மாதினிக்கு வேடை கெடவே நடித்து மேவும் இரு பாதம் உற்று வரவேணும் – திருப்:1189/4
மேல்


கெடா (1)

ஆணிப்பொன் ப்ரதாப மேருவை வேல் இட்டு கடாவி வாசவன் ஆபத்தை கெடா நிசாசரர்தம் ப்ரகாசம் – திருப்:1175/5
மேல்


கெடாத (3)

கடாவி விடு தூதன் கெடாத வழி போலும் கனாவில் விளையாடும் கதை போலும் – திருப்:208/2
கெடாத தவமே மறைந்து கிலேசம் அதுவே மிகுந்து கிலாத உடல் ஆவி நொந்து மடியா முன் – திருப்:579/4
அடல் கெடாத சூர் கோடி மடிய வாகை வேல் ஏவி அமர் செய் வீர ஈராறு புய வேளே – திருப்:1050/5
மேல்


கெடாது (2)

வதம் செய் விக்ரம சீராமன் நான் நிலம் அறிந்த அதி சரம் ஓகோ கெடாது இனி – திருப்:364/11
இடை கெடாது இனி இருவினை அழிவினில் அழியாதே – திருப்:738/6
மேல்


கெடாமல் (4)

மல சல சுவாச சஞ்சலம் அதால் என் மதி நிலை கெடாமல் உன்றன் அருள்தாராய் – திருப்:122/2
கடாவினிடை வீரம் கெடாமல் இனிது ஏறும் கடாவின் நிகர் ஆகும் சமனாரும் – திருப்:208/1
பித்து அனையன் நான் அகட்டு உண்டு இப்படி கெடாமல் முத்தம் பெற்றிட நின சனத்தின் செயலான – திருப்:247/3
அவர்கள் மாயை படாமல் கெடாமல் நினது அருள்தாராய் – திருப்:384/4
மேல்


கெடி (3)

வந்த தானவர் சேனை கெடி புக இந்த்ரலோகம் விபூதர் குடி புக மண்டு பூத பசாசு பசி கெட மயிடாரி – திருப்:575/5
கோடி கூள கவி சேனை சாட கெடி கூறு காள கவி புலவோன் யான் – திருப்:1105/2
எங்கும் பகரமாய் கெடி விஞ்சும் பகழி வீக்கிய வெம் சண்ட தனு வேட்டுவர் சரண் ஆர – திருப்:1182/5
மேல்


கெடில் (1)

உணர்வு கெடில் உயிர் புணர் இருவினை அளறு அது போக – திருப்:369/6
மேல்


கெடில (1)

திமிதிமி என பறைய பெருகு புனல் கெடில நதி திருவதிகை பதி முருக பெருமாளே – திருப்:737/8
மேல்


கெடு (8)

கெடு மதி உற்றிடும் அசுர கிளை மடிய பொரும் வேலா – திருப்:167/5
கெடு வியாதிகள் அடைவுடை உடலினர் விரகாலே – திருப்:260/2
கிறி மொழி கிருதரை பொறி வழி செறிஞரை கெடு பிறப்பு அற விழிக்கிற பார்வை – திருப்:261/1
கெடு மட குருடரை திருடரை சமய தர்க்கிகள்தமை செறிதலுற்று அறிவு ஏதும் – திருப்:261/2
திக்கித்திக்கி குளறி செப்பி தப்பி கெடு பொய் செற்றை சட்டை குடிலை சுமை பேணும் – திருப்:333/3
கெதி பெற நினையா துதிதனை அறியா கெடு சுகம் அதில் ஆழ் மதியாலே – திருப்:391/2
தோகைமார்க்கு ஒருகால் தொலையாத வேட்கையினால் கெடு சோர்வினால் கொடிது ஆக்கையை இழவா முன் – திருப்:996/3
நெடிய புகழ் சோலை குயிலாலே நிலைமை கெடு மானை தழுவாயே – திருப்:1285/2
மேல்


கெடுத்த (1)

நேச படத்தி இமையோரை கெடுத்த முழு நீசற்கு அனத்தமுற விடும் வேலா – திருப்:1213/7
மேல்


கெடுத்தது (1)

மனத்தில் எத்தனை நினை கவடுகள் குடி கெடுத்தது எத்தனை மிருகமது என உயிர் – திருப்:270/5
மேல்


கெடுத்திட்டே (1)

கெடுத்திட்டே கடல் சூர் கிரி தூள்பட கண்ட வேலா – திருப்:485/10
மேல்


கெடுத்து (7)

அம் கை வேல் கொண்டு அரக்கன் ப்ரதாபம் கெடுத்து அண்ட வேதண்டம் உட்படவே தான் – திருப்:74/5
இளைத்து அன்பும் கெடுத்து அங்கு அழிவா முன் – திருப்:86/6
குதட்டிய துப்பு உதட்டை மடித்து அயில் பயிலிட்டு அழைத்து மருள் கொடுத்து உணர்வை கெடுத்து நக குறியாலே – திருப்:149/2
பூசல் இட்டு சரத்தை நேர் கழித்து பெருத்த போர் விடத்தை கெடுத்து வடி கூர் வாள் – திருப்:283/1
கோழை மனத்தை கெடுத்து வன் புல ஞான குணத்தை கொடுத்து நின் செயல் – திருப்:612/3
இன்னது எனக்கு என்னும் மத புன்மை கெடுத்து இன்னல் விடுத்து – திருப்:811/7
இருவினை நலிய மெய் திறலுடன் அறிவு கெட்டு இடர் படுவது கெடுத்து அருள்வாயே – திருப்:1259/4
மேல்


கெடுப்பர் (1)

கெடுப்பர் யாரையும் மித்திர குத்திரர் கொலைகாரர் – திருப்:248/6
மேல்


கெடும் (3)

எரி படும் பஞ்சு போல மிக கெடும் தொண்டனேனும் இனல்படும் தொந்த வாரி கரி ஏற – திருப்:20/3
அருவி சலம் பாயும் ஓட்டை அடைவு கெடும் தூரை பாழ்த்த அளறில் அழுந்தாமல் ஆட்கொண்டு அருள்வாயே – திருப்:574/4
உணர்வு கெடும் வகை பருவிகள் உருவிகள் உறவாமோ – திருப்:903/8
மேல்


கெடும்படி (2)

சஞ்சலம் மலம் கெடும்படி அருள்புரிவாயே – திருப்:854/8
கெடும்படி காவாய் ஆவாய் என ஏனல் – திருப்:1181/14
மேல்


கெடுவிகள் (1)

கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள்தமை நாடி – திருப்:1003/4
மேல்


கெண்டை (6)

கூர்ந்த வாள் விழி கெண்டை கலங்கிட கொங்கைதானும் – திருப்:475/2
ஆலின் நிகரான உந்தியாலும் மடவார்கள் தங்கள் ஆசை வலை வீசு கெண்டை விழியாலும் – திருப்:545/3
பாக்கு கரும்பை கெண்டை தாக்கி தடம் படிந்த பாக்கத்து அமர்ந்திருந்த பெருமாளே – திருப்:679/8
கெண்டை நேர் ஒத்த விழி மங்கை மோக கலவை கெந்த வாச புழுகு மண நாறும் – திருப்:865/1
அம்புராசியில் கெண்டை சேல் ஒளித்து அஞ்சவே மணி குழை வீசும் – திருப்:884/1
கொண்டல் ஆர் குழல் கெண்டை போல் விழி கொண்டு கோகில மொழி கூறும் – திருப்:1228/5
மேல்


கெண்டைகள் (2)

இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து வந்திட இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே – திருப்:32/1
கெண்டைகள் பொரும் கண் மங்கையர் மலர் கொண்டைகள் குலுங்க நின்று அருகினில் – திருப்:854/1
மேல்


கெண்டைகளோ (1)

மதன் விடும் கணையோ வாளோ சில கயல்கள் கெண்டைகளோ சேலோ கொலை – திருப்:876/3
மேல்


கெண்டையள் (1)

கிஞ்சுகம் என சிவத்த தொண்டையள் மிக கறுத்த கெண்டையள் புன கொடிச்சி அதி பார – திருப்:1234/1
மேல்


கெண்டையாலும் (1)

வரை தடம் கொங்கையாலும் வளை படும் செம் கையாலும் மதர்த்திடும் கெண்டையாலும் அனைவோரும் – திருப்:20/1
மேல்


கெண்டையாளை (1)

கண் அவிர் அ சுறா வீட்டு கெண்டையாளை – திருப்:811/10
மேல்


கெண்டையும் (1)

புணரியும் அனங்கன் அம்பும் சுரும்பும் கரும் கயலினொடு கெண்டையும் சண்டனும் கஞ்சமும் – திருப்:922/1
மேல்


கெணஜெகுத (1)

ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித தக்கத்த குந்தகுர்த திந்திதீதோ – திருப்:622/15
மேல்


கெணசெகுத (2)

செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத – திருப்:296/9
தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ – திருப்:1124/10
மேல்


கெத்தில் (1)

சொக்கு பொட்டு எத்தி கைப்பொருளை கெத்தில் பற்றி சிக்கொடு சுற்றுப்பட்டு எற்றி தெட்டிகள் முலை மீதே – திருப்:1161/1
மேல்


கெத்து (1)

படி நெடியவர் கரம் ஒத்த கெத்து பாய்ந்து ஆய்ந்து உயர் கானம் – திருப்:1079/7
மேல்


கெதி (2)

கெதி பெற நினையா துதிதனை அறியா கெடு சுகம் அதில் ஆழ் மதியாலே – திருப்:391/2
கெதி தங்க தகு கணங்கள் வானவர் அரி கஞ்சத்தவர் முகுந்தர் நாவலர் – திருப்:856/13
மேல்


கெந்த (4)

கொந்தளம் புழுகு கெந்த வண் பனிர் ரம்ப சம்ப்ரம் அணிந்த மந்தர – திருப்:455/1
கெந்த பொடியும் புனைந்து உற அணைத்து இன்ப வசனம் தரும் தொழில் அடுக்கின்ற – திருப்:854/3
கெண்டை நேர் ஒத்த விழி மங்கை மோக கலவை கெந்த வாச புழுகு மண நாறும் – திருப்:865/1
தேருகள் மிகுந்த சந்தி வீதிகள் அணிந்த கெந்த சீர் அலர் குளுந்து உயர்ந்த பொழிலூடே – திருப்:969/7
மேல்


கெந்தம் (2)

சலச கெந்தம் புழுகு உடன் சண்பக மணம் கொண்டு ஏய் இரண்டு அம் – திருப்:500/4
அந்தம் உந்து இந்துவும் கெந்தம் மிஞ்சும் கொழுந்து அன்றும் இன்றும் புனைந்திடும் வேணி – திருப்:1101/7
மேல்


கெந்தருவர் (1)

அந்தரம் திகைத்து ஓட விஞ்சையர்கள் சிந்தை மந்திரத்து ஓட கெந்தருவர்
அம்புயன் சலித்து ஓட எண் திசையை உண்ட மாயோன் – திருப்:457/9,10
மேல்


கெந்து (1)

கொஞ்சிய வன அம் குயில்கள் பஞ்ச நல் வனம் கிளிகள் கொஞ்சியது எனும் குரல்கள் கெந்து பாயும் – திருப்:50/2
மேல்


கெந்துருவர் (1)

ஓது கெந்துருவர் பாட நின்று நடம் கொள் வேலா – திருப்:855/12
மேல்


கெம்பிர (1)

ராஜ கெம்பிர நாடாளு நாயக வயலூரா – திருப்:170/12
மேல்


கெம்பீர (3)

காம் பேய் பந்தாட விக்ரம வான் தோய் கெம்பீர வில் கணை – திருப்:89/11
ராச கெம்பீர வள நாட்டு மலை வளர் தம்பிரானே – திருப்:608/16
படிக நெடும் பார கடம் தடம் கெம்பீர பணை முகம் செம் பால மணி மாலை – திருப்:1086/6
மேல்


கெம்பு (1)

சங்கு வெண்கல கெம்பு துந்துமி பல பேரி – திருப்:455/10
மேல்


கெமனி (1)

விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி அருள் பாலா – திருப்:148/6
மேல்


கெய்த்து (1)

துக்க துக்கத்தில் சிக்குப்பட்டிட்டு துக்கித்து கெய்த்து சுழலாதே – திருப்:335/3
மேல்


கெர்ச்சித (1)

குலிச சத்தியை விட்டு அருள் கெர்ச்சித மயில் வீரா – திருப்:281/12
மேல்


கெர்ப்ப (1)

சுக்கில குளிகை ஒத்து கெர்ப்ப குகை வந்து கோல – திருப்:423/2
மேல்


கெர்ப்பத்தில் (1)

தக்ஷச பற்று கெர்ப்பத்தில் செல் பற்றை செற்றிட்ட உச்ச சற்ப பொற்றைக்குள் சொக்க பெருமாளே – திருப்:604/8
மேல்


கெர்ப்பபுரத்தில் (1)

கெட்டவர் உற்ற துணை என நட்டு அருள் சிட்ட பசுபதி கெர்ப்பபுரத்தில் அறுமுக பெருமாளே – திருப்:927/8
மேல்


கெர்ப்பம் (1)

செக மாயை உற்று என் அக வாழ்வில் வைத்த திரு மாது கெர்ப்பம் உடல் ஊறி – திருப்:218/1
மேல்


கெருட (1)

சூழ நரி கெருட கொடி பற்பல சங்கமாக – திருப்:234/10
மேல்


கெருடன் (2)

சின முடுவல் நரி கழுகுடன் பருந்தின் கணம் கொடி கெருடன் அலகை புழு உண்டு கண்டு இன்புறும் – திருப்:422/1
அடல் கழுகு கொடி கெருடன் இடை விடா கணமும் மறு குறளும் எறி குருதி நதியின் மேல் பரவ – திருப்:1201/11
மேல்


கெருடனும் (1)

எருவையொடு கொடி கெருடனும் வெளி சிறிது இடம் இலை என உலவிட அலகையின் – திருப்:1007/9
மேல்


கெருவ (2)

புளக களப கெருவ தன மெய் புணர தலையிட்டு அமரே செய் – திருப்:177/2
கரிய நிறம் உடை கொடிய அசுரரை கெருவ மதம் ஒழித்து உடல்கள் துணிபட – திருப்:671/9
மேல்


கெருவம் (2)

சிங்கமதாக திரிந்து மால் கெருவம் பொடியாக பறந்து சீறிய – திருப்:448/13
கெருவம் பற்றி இகல் விளைந்த சூரோடு தளம் அஞ்ச பொருது எழுந்து தீ உகள் – திருப்:856/15
மேல்


கெருவிகள் (2)

முகத்தை மினுக்கிகள் அசடிகள் கபடிகள் விழித்து மருட்டிகள் கெருவிகள் திருடிகள் – திருப்:291/1
கமல குமிளித முலை மிசை துகில் இடு விகட கெருவிகள் அசடிகள் கபடிகள் – திருப்:1003/1
மேல்


கெருவித்து (1)

கவட்டையும் மெத்து அடக்கி மதர்த்து அற கெருவித்து இதத்திடு நல் – திருப்:142/3
மேல்


கெருவித (2)

கெருவித கோல பார தனத்த குறமகள் பாத சேகர சொர்க்க – திருப்:108/11
தகர நறு மலர் பொதுளிய குழலியர் கலக கெருவித விழி வலை பட விதி – திருப்:163/1
மேல்


கெருவிதம் (1)

மட்டிட்டு துட்ட கெருவிதம் இட்டிட்டு சுற்றி பரிமள மச்ச பொன் கட்டில் செறி மலர் அணை மீதே – திருப்:1195/2
மேல்


கெருவிதா (1)

பத கெருவிதா துங்க வெற்றி மயில் ஏறும் ஒரு திறலோனே – திருப்:160/14
மேல்


கெலிக்க (1)

கெலிக்க போர் பொரு சூரர் குழாம் உமிழ் இரத்த சேறு எழ தேர் பரி யாளிகள் – திருப்:485/9
மேல்


கெலிக்கும் (1)

கெலிக்கும் வீடு அதை நத்தி எடுத்து இவண் உழல்வேனோ – திருப்:248/8
மேல்


கெலித்து (2)

சிலுத்த அசுரர் கெலித்து மிக கொளுத்தி மறை துதிக்க அதில் செழிக்க அருள் கொடுத்த மணி கதிர் வேலா – திருப்:264/7
தர்க்கம் இட்ட அசுரரை கெலித்து மலை உக்க எழு கடல் கொளுத்தி அட்ட திசை – திருப்:423/13
மேல்


கெலிப்பர் (1)

கெலிப்பர் மால் வலை பட்டுறு துட்டர்கள் அழிப்பர் மாதவம் உற்று நினைக்கிலர் – திருப்:248/5
மேல்


கெழுமுதல் (1)

கேடின் பெரு வலி மாளும்படி அவரோடும் கெழுமுதல் உடையோனே – திருப்:1037/6
மேல்


கெற்சித்து (1)

கை சத்திக்கு கெற்சித்து ஒக்க பட்சிக்க கொட்டு அசுராதி கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு – திருப்:526/15
மேல்


கெற்சித (1)

அழகு தரித்திடு நீப சரவண உற்பவ வேல அடல் தரு கெற்சித நீல மயில் வீரா – திருப்:796/7
மேல்


கெறு (1)

கெறு வித வஞ்ச கபடமொடு எண் திக்கிலும் எதிர் சண்டைக்கு எழு சூரன் – திருப்:627/5
மேல்


கெறுவத்துடன் (1)

உடை சுற்றும் இடை சுமை ஒக்க அடுத்து அமித கெறுவத்துடன் வீறு – திருப்:831/2
மேல்


கெறுவித (1)

உடல் காட்டு இனிமையில் எழில் பாத்திரம் இவள் உடையால் கெறுவித நடையாலும் – திருப்:905/3
மேல்


கெறுவிதம்பெற (1)

கவர இங்கிதம் கெறுவிதம்பெற விளையாடும் – திருப்:1148/4

மேல்