லீ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

லீலா (9)

இங்கு நின்றது என் வீடே வாரீர் என்று இணங்கிகள் மாயா லீலா
இன்ப சிங்கியில் வீணே வீழாது அருள்வாயே – திருப்:21/7,8
பளித ம்ருகமத களப சேறு ஆர வளரு முலை வநிதை குறமகள் மகிழும் லீலா விதுர மதுர – திருப்:116/15
தீப மங்கள ஜோதி நமோ நம தூய அம்பல லீலா நமோ நம – திருப்:170/7
தூமம் மெய்க்கு அணிந்த சுக லீலா சூரனை கடிந்த கதிர் வேலா – திருப்:212/3
லீலா விசார தீர வரதர குருநாதா – திருப்:568/12
கங்காளா லீலா பாலா நீபா காமாமோத கன மானின் – திருப்:599/6
இதவிய காணிவை ததை என வேடுவன் எய்திடும் எச்சில் தின்று லீலா சலம் ஆடும் தூயவன் மைந்த நாளும் – திருப்:664/3
தரு பர உத்தம வேளே சீர் உறை அறுமுக நல் தவ லீலா கூர் உடை – திருப்:697/5
காம தந்திர லீலா லோகினி வாம தந்திர நூல் ஆய்வாள் சிவகாம – திருப்:998/15
மேல்


லீலாவிதம் (1)

லீலாவிதம் உனதாலே கதி பெற நேமா ரகசிய உபதேசம் – திருப்:1275/3
மேல்


லீலாவிநோதம் (1)

தோயும் அநுபோக சுக லீலாவிநோதம் முழுது உணர் தேனே – திருப்:169/2
மேல்


லீலி (1)

வாதாடி மோடி காடுகாள் உமை மா ஞால லீலி ஆல போசனி மா காளி சூலி வாலை யோகினி அம் பவானி – திருப்:1126/6
மேல்


லீலை (8)

தோலோடு மூடிய கூரையை நம்பி பாவையர் தோதக லீலை நிரம்பி – திருப்:69/1
சித்தா பரத்து அமரர் கத்தா குறத்தி முலை மீதில் புணர்ந்து சுக லீலை கதம்பம் அணி – திருப்:115/17
காலை வெகு சரச லீலை அளவு செயும் மடமானார் – திருப்:153/6
இசலிஇசலி உபரித லீலை உற்று இடை நூல் நுடங்க உள மகிழ்சியினோடே – திருப்:398/3
ஓசை பெற்ற சிலம்பு கலீர்கலீர் என விரக லீலை – திருப்:543/2
ஆத இத பார முலை மாதர் இடை நூல் வயிறு அது ஆல் இலை எனா மதன கலை லீலை
யாவும் விளைவான குழியான திரிகோணம் அதில் ஆசை மிகவாய் அடியன் அலையாமல் – திருப்:699/1,2
குனகி ஒரு மயில் போல வாரா மனோ லீலை விளைய வினை நினையாமலே ஏகி மீளாத – திருப்:1153/1
கலவியில் ஓடி நீடு வெகு வித தாக போகம் கரண ப்ரதாப லீலை மட மாதர் – திருப்:1308/3
மேல்


லீலைக்காரிகள் (1)

கொல்லும் லீலைக்காரிகள் யாரையும் வெல்லும் மோகக்காரிகள் சூது சொல் – திருப்:483/3
மேல்


லீலைகள் (6)

வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள் வந்தியா ஆசையே தரு விலைமாதர் – திருப்:516/2
குடிப்பார் தேன் என நானா லீலைகள் புரிவார்கள் – திருப்:710/6
சேண் ஒணாய் இடும் இதண் மேல் அரிவையை மேவியே மயல் கொள லீலைகள் செய்து – திருப்:736/13
முருக்கி நேர் இதழ் அமுது பருகும் என உரைத்து லீலைகள் அதி விதமொடு மலை – திருப்:797/5
கருத்து இதப்படு காமா லீலைகள் விதத்தை நத்திய வீணா வீணிகள் – திருப்:849/1
மாதவம் அழித்து லீலைகள் மிகுத்து மா வடுவை ஒத்த விழி மாதர் – திருப்:1319/2
மேல்


லீலையர் (1)

கன்னல் ஒத்த மொழி சொல் வேசியர் வன் மனத்தை உருக்கு லீலையர்
கண் வெருட்டி விழித்த பார்வையர் இதமாக – திருப்:826/1,2
மேல்


லீலையில் (1)

அளி குலவு மாதர் லீலையில் முழுகி அபிஷேகம் ஈது என – திருப்:25/3
மேல்


லீலையிலே (2)

பூரண வார கும்ப சீத படீர கொங்கை மாதர் விகார வஞ்ச லீலையிலே உழன்று – திருப்:82/1
முகம் அழுத்தவும் ஆசைகள் கூறவும் நகம் அழுத்தவும் லீலையிலே உற – திருப்:914/3

மேல்