ரூ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

ரூப (20)

குறளு ரூப முராரி சகோதரி உலக தாரி உதாரி பராபரி – திருப்:384/7
கல்லிலே பொன் தாள் படவே அது நல்ல ரூப தேவ கானிடை – திருப்:483/11
அருண ரூப பதமொடு இவுளி தோகை செயல் கொடு அணை தெய்வானை தனமுமே மகிழ்ந்து புணர் தம்பிரானே – திருப்:495/24
தவள ரூப சரச்சுதி இந்திரை ரதி புலோமசை க்ருத்திகை ரம்பையர் – திருப்:555/9
சத்த பரிசான மண ரூப ரசமான பொய்மை விளையாடி – திருப்:566/6
ஐந்து பூதமும் ஆறு சமயமும் மந்த்ர வேத புராண கலைகளும் ஐம்பதோர் விதமான லிபிகளும் வெகு ரூப
அண்டராதி சராசரமும் உயர் புண்டரீகனும் மேக நிறவனும் அந்தி போல் உரு வானு நிலவொடு வெயில் காலும் – திருப்:575/1,2
சொருப பிரகாச விசுவ ரூப பிரமாக நிச சுக விப்பிரதேச ரச சுப மாயா – திருப்:687/1
தண் தரளம் அணி மார்ப செம்பொன் எழில் செறி ரூப தண் தமிழின் மிகு நேய முருகேசா – திருப்:724/7
தத்வ வேதத்தின் உற்பத்தி போதித்த அ தத்வ ரூப கிரி புரை சாடி – திருப்:773/6
சிங்கார ரூப மயில்வாகன நமோ நம என கந்தா குமார சிவ தேசிக நமோ நம என – திருப்:813/9
விமல சோதி ரூப இமகர வதனத்தாலும் நாத முதலிய – திருப்:906/5
கோள் பட பாத மலர் பார்த்து இளைப்பாற வினை கோத்த மெய் கோலமுடன் வெகு ரூப
கோப்பு உடைத்தாகி அலமாப்பினில் பாரி வரும் கூத்தினை பூரை இட அமையாதோ – திருப்:978/3,4
நாத ரூப மா நாதர் ஆகத்து உறைவோனே நாகலோகம் ஈரேழு பாருக்கு உரியோனே – திருப்:1028/3
சகல வேதனாதீத சகல வாசகாதீத சகல மா க்ரியாதீத சிவ ரூப
சகல சாதகாதீத சகல வாசனாதீத தனுவை நாடி மா பூசை புரிவேனோ – திருப்:1043/3,4
கடு விடா களா ரூப நட விநோத தாடாளர் கருதிடார்கள் தீ மூள முதல் நாடும் – திருப்:1050/7
மன கபாட பாடீர தனம் தராதர ரூப மதன ராச ராசீப சர கோப – திருப்:1052/1
மிகு பரமதான ஞான நெறிதனை விசாரமாக மிகும் உனது ரூப தானம் அருள்வாயே – திருப்:1269/4
மன நூறு கோடி துன்ப நொடி மீதிலே நினைந்து மதன் ஊடலே முயங்கி அதி ரூப
மட மாதர் ஆசை கொண்டு புவி மீதிலே மயங்கி மதி சீர் எலாம் அழிந்து கொடிதான – திருப்:1271/1,2
வேதை சாதித்த விழி மாதர் ஆபத்தில் விளையாடி மோகித்து இரியும் வெகு ரூப – திருப்:1280/2
ஆன தனி மந்த்ர ரூப நிலை கொண்டது ஆடும் மயில் என்பது அறியேனே – திருப்:1318/4
மேல்


ரூபக்கார (1)

அந்தம் வெகுவான ரூபக்கார எழிலான – திருப்:91/12
மேல்


ரூபக (3)

குன்றைய ரூபக கற்பக பிளை இளையோனே – திருப்:353/12
அருமந்த ரூபக ஏகா வேறு ஓர் வடிவாகி – திருப்:546/12
நாறு இதழி வேணி சிவ ரூபக கலியாணி முதல் ஈண மகவானை மகிழ் தோழ வனம் மீது செறி – திருப்:983/11
மேல்


ரூபத்தில் (1)

அகரம் ஆதியாம் அக்ஷரங்கள் அவனி கால் விண் ஆர் அப்பொடு அங்கி அடைய ஏக ரூபத்தில் ஒன்றி முதலாகி – திருப்:962/5
மேல்


ரூபத்தின் (1)

கூறொணா தற்பரம ஞான ரூபத்தின் வழி கூடலாக பெருமை தருவாயே – திருப்:1280/4
மேல்


ரூபத்தினில் (1)

ஆழி மாலுக்கு நல் சாம வேதற்கும் எட்டாத ரூபத்தினில் சுடர் ஆய – திருப்:1105/6
மேல்


ரூபம் (5)

வகைதனை அகன்றி இருக்கும் மூடனை மல ரூபம் – திருப்:171/14
சுடரினூடு நால் வேத முடியினூடும் ஊடாடு துரிய ஆகுலாதீத சிவ ரூபம்
தொலைவு இலாத பேராசை துரிசு அறாத ஓர் பேதை தொடும் உபாயம் ஏதோ சொல் அருள்வாயே – திருப்:244/3,4
ஓலை இட்ட குழைச்சிகள் சித்திர ரூபம் ஒத்த நிறத்திகள் வில் கணையோடு – திருப்:252/1
செ கண் சக்ராயுத மாதுலன் மெச்ச புல் போது படாவிய திக்கு பொன் பூதரமே முதல் வெகு ரூபம்
சிட்டித்து பூத பசாசுகள் கை கொட்டிட்டு ஆட மகோததி செற்று உக்ர சூரனை மார்பகம் முது சோரி – திருப்:347/5,6
காள கூடம் கொடும் கால ரூபம் பொரும் காம பாணம் சுரும்பினம் வாழும் – திருப்:1104/2
மேல்


ரூபமதா (1)

சோரிக்கே வெகு ரூபமதா அடு தான தானன தானன தானன – திருப்:481/11
மேல்


ரூபமதாய் (1)

திகழ்வோடு இருவோரும் ஒரு ரூபமதாய் திசை லோகம் எலாம் அனுபோகி – திருப்:421/2
மேல்


ரூபமாய் (2)

அறுகு நுனி பனி அனைய சிறிய துளி பெரியது ஒரு ஆகம் ஆகி ஓர் பால ரூபமாய்
அரு மதலை குதலை மொழிதனில் உருகி அவருடைய ஆயி தாதையார் மாய மோகமாய் – திருப்:858/1,2
அருமையினில் அருமை இட மொளுமொளு என உடல் வளர ஆளு மேளமாய் வால ரூபமாய்
அவர் ஒரு பெரியோராய் – திருப்:858/3,4
மேல்


ரூபமும் (1)

தணி அரிய கோபமும் துணிவு அரிய லோபமும் சமய வெகு ரூபமும் பிறிது ஏதும் – திருப்:1246/2
மேல்


ரூபர் (1)

நிட்கள ரூபர் பாதி பச்சு உருவான மூணு நெட்டிலை சூலபாணி அருள் பாலா – திருப்:780/6
மேல்


ரூபன் (3)

பால் ஆழி மீது அரவின் மேல் திருவொடே அமளி சேர் நீல ரூபன் வலி ராவணன் குழாம் இரிய – திருப்:806/11
மன்னான தக்கனை முன்னாள் முடி தலை வல் வாளியில் கொளும் தங்க ரூபன்
மன்னா குறத்தியின் மன்னா வயல் பதி மன்னா மூவர்க்கு ஒரு தம்பிரானே – திருப்:904/7,8
மாழை ரூபன் முக மத்திகை இதத்து அருண செம் கையாளி – திருப்:1313/10
மேல்


ரூபனை (1)

அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை – திருப்:470/1
மேல்


ரூபா (10)

வேத மந்திர ரூபா நமோ நம ஞான பண்டித நாதா நமோ நம – திருப்:179/5
சூடாமணி பிரபை ரூபா கனத்த அரி தோல் ஆசனத்தி உமை அருள் பாலா – திருப்:505/5
சத்து ரூபா நமோ நம ரத்ந தீபா நமோ நம தற்ப்ரதாபா நமோ நம என்று பாடும் – திருப்:556/2
நாலாம் ரூபா கமல ஷண்முக ஒளி ஏதோ மா தோம் எனது அகம் வளர் ஒளி – திருப்:822/5
மாயா ரூபா அரகர சிவசிவ என ஓதா – திருப்:822/10
முத்தமிழ் வித்வ விநோதா கீதா மற்றவர் ஒப்பு இல ரூபா தீபா – திருப்:834/11
போன்ற விக்ர சூரா அரீ பகிரண்ட ரூபா – திருப்:888/14
தோதி தித்தமி தீதா நமோ நம வேத சித்திர ரூபா நமோ நம – திருப்:993/13
குதலை வாய் குரு பர சடாக்ஷர கோடு ஆர் ரூபா அரூபா பார் ஈ சத வேள்வி – திருப்:1061/7
அரு மறை நூல் ஓதும் வேதியன் இரணிய ரூபா நமோ என – திருப்:1134/9
மேல்


ரூபாள் (1)

வேதாம கலை ரூபாள் முக்கணி நிரம்பிய கொங்கையினாள் பயந்தருள் – திருப்:412/17
மேல்


ரூபி (7)

வார்ந்த ரூபி குற பெண் வணங்கிய பெருமாளே – திருப்:475/16
சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி எனை ஈண மலை மாது சிவை – திருப்:503/9
துத்தி தன பார வெகு மோக சுக வாரி மிகு சித்ர முக ரூபி எனது ஆயி வளி நாயகியை – திருப்:503/13
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி அம்பை வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே – திருப்:715/5
மாதா புராரி சுகவாரி பரை நாரி உமை ஆகாச ரூபி அபிராமி வலம் மேவும் சிவன் – திருப்:806/13
ஓ நம அந்த சிவ ரூபி அஞ்சுமுக நீலி கண்டி கலியாணி விந்து ஒளி – திருப்:855/9
தோகை மயில் என் சிறந்த ரூபி குறமகட்கு இரங்கி தோள்கள் இறுகிட புணர்ந்த பெருமாளே – திருப்:1272/8
மேல்


ரூபிகள் (6)

திருட்டு வாணிப விக்ரம துட்டிகள் மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள் – திருப்:429/1
விலை இடு மா மாய ரூபிகள் பண்பு இலாத – திருப்:550/6
புடைவை போட்டிடு மாயா ரூபிகள் மிடியர் ஆக்கு பொலா மூதேவிகள் – திருப்:559/3
அகல ஓட்டிகள் மாயா ரூபிகள் நண்பு போலே – திருப்:666/2
காசு கேட்டிடும் மாயா ரூபிகள் அதி மோக – திருப்:920/4
அழகு உயர்ந்த பொய் மாயா ரூபிகள் கலவி இன்பம் எனாவே சோருதல் – திருப்:1141/7
மேல்


ரூபை (1)

கோதை பித்தாய் ஒரு வேடுவர் ரூபை பெற்றே வன வேடுவர் கூடத்துக்கே குடியாய் வரும் முருகோனே – திருப்:976/7
மேல்


ரூபோடு (1)

செழும் தாது பார் மாது அரும்பு ஆதி ரூபோடு சிறந்து யாதிலும் ஆசை ஒழியாத – திருப்:1244/1

மேல்