திருப்புகழ் நான்காம் தொகுதி (1001 – 1334)

தேவையான பாடல்
எண் மீது சொடுக்குக

1001 || 1101 || 1201 || 1301

1002 || 1102 || 1202 || 1302

1003 || 1103 || 1203 || 1303

1004 || 1104 || 1204 || 1304

1005 || 1105 || 1205 || 1305

1006 || 1106 || 1206 || 1306

1007 || 1107 || 1207 || 1307

1008 || 1108 || 1208 || 1308

1009 || 1109 || 1209 || 1309

1010 || 1110 || 1210 || 1310

1011 || 1111 || 1211 || 1311

1012 || 1112 || 1212 || 1312

1013 || 1113 || 1213 || 1313

1014 || 1114 || 1214 || 1314

1015 || 1115 || 1215 || 1315

1016 || 1116 || 1216 || 1316

1017 || 1117 || 1217 || 1317

1018 || 1118 || 1218 || 1318

1019 || 1119 || 1219 || 1319

1020 || 1120 || 1220 || 1320
1021 || 1121 || 1221 || 1321

1022 || 1122 || 1222 || 1322

1023 || 1123 || 1223 || 1323

1024 || 1124 || 1224 || 1324

1025 || 1125 || 1225 || 1325

1026 || 1126 || 1226 || 1326

1027 || 1127 || 1227 || 1327

1028 || 1128 || 1228 || 1328

1029 || 1129 || 1229 || 1329

1030 || 1130 || 1230 || 1330
1031 || 1131 || 1231 || 1331

1032 || 1132 || 1232 || 1332

1033 || 1133 || 1233 || 1333

1034 || 1134 || 1234 || 1334

1035 || 1135 || 1235 || ——

1036 || 1136 || 1236 || ——

1037 || 1137 || 1237 || ——

1038 || 1138 || 1238 || ——

1039 || 1139 || 1239 || ——

1040 || 1140 || 1240 || ——
1041 || 1141 || 1241 || ——

1042 || 1142 || 1242 || ——

1043 || 1143 || 1243 || ——

1044 || 1144 || 1244 || ——

1045 || 1145 || 1245 || ——

1046 || 1146 || 1246 || ——

1047 || 1147 || 1247 || ——

1048 || 1148 || 1248 || ——

1049 || 1149 || 1249 || ——

1050 || 1150 || 1250 || ——
1051 || 1151 || 1251 || ——

1052 || 1152 || 1252 || ——

1053 || 1153 || 1253 || ——

5104 || 1154 || 1254 || ——

1055 || 1155 || 1255 || ——

1056 || 1156 || 1256 || ——

1057 || 1157 || 1257 || ——

1058 || 1158 || 1258 || ——

1059 || 1159 || 1259 || ——

1060 || 1160 || 1260 || ——

1061 || 1161 || 1261 || ——

1062 || 1162 || 1262 || ——

1063 || 1163 || 1263 || ——

1064 || 1164 || 1264 || ——

1065 || 1165 || 1265 || ——

1066 || 1166 || 1266 || ——

1067 || 1167 || 1267 || ——

1068 || 1168 || 1268 || ——

1069 || 1169 || 1269 || ——

1070 || 1170 || 1270 || ——
1071 || 1171 || 1271 || ——

1072 || 1172 || 1272 || ——

1073 || 1173 || 1273 || ——

1074 || 1174 || 1274 || ——

1075 || 1175 || 1275 || ——

1076 || 1176 || 1276 || ——

1077 || 1177 || 1277 || ——

1078 || 1178 || 1278 || ——

1079 || 1179 || 1279 || ——

1080 || 1180 || 1280 || ——
1081 || 1181 || 1281 || ——

1082 || 1182 || 1282 || ——

1083 || 1183 || 1283 || ——

1084 || 1184 || 1284 || ——

1085 || 1185 || 1285 || ——

1086 || 1186 || 1286 || ——

1087 || 1187 || 1287 || ——

1088 || 1188 || 1288 || ——

1089 || 1189 || 1289 || ——

1090 || 1190 || 1290 || ——
1091 || 1191 || 1291 || ——

1092 || 1192 || 1292 || ——

1093 || 1193 || 1293 || ——

1094 || 1194 || 1294 || ——

1095 || 1195 || 1295 || ——

1096 || 1196 || 1296 || ——

1097 || 1197 || 1297 || ——

1098 || 1198 || 1298 || ——

1099 || 1199 || 1299 || ——

1100 || 1200 || 1300 || ——


#1001
இலகி இரு குழை கிழி கயல் விழியினும் இசையின் இசை தரு மொழியினும் மரு அமர்
இருள் செய் குழலினும் இடையினும் நடையினும் அநுராக
இனிமை தரும் ஒரு இதழினும் நகையினும் இளமை ம்ருகமத தன குவடு அழகினும்
இயலும் மயல் கொடு துணிவது பணிவது தணியாதே
குலவி விரகு எனு அளறிடை முழுகிய கொடிய நடலையன் நடமிட வரு பிணி
குறுகியிட எமன் இறுதியில் உயிரது கொடுபோ நாள்
குனகி அழுபவர் அயர்பவர் முயல்பவர் குதறு முது பிணம் எடும் என ஒரு பறை
குணலை இட அடு சுடலையில் நடவுதல் இனிதோ தான்
மலையில் நிகர் இலது ஒரு மலைதனை உடல் மறுகி அலமர அற உரம் முடுகிய
வலிய பெல மிக உடையவன் உடையவும் அதிகாய
மவுலி ஒரு பதும் இருபதும் கரமுடன் மடிய ஒரு சரம் விடுபவன் மத கரி
மடுவில் முறையிட உதவிய க்ருபை முகில் மதியாதே
அலகை உயிர் முலை அமுது செய்து அருளிய அதுலன் இரு பதம் அதுதனில் எழு புவி
அடைய அளவிட நெடுகிய அரி திரு மருகோனே
அவுணர் உடலம் அது அலமர அலை கடல் அறவும் மறுகிட வட குவடு அன கிரி
அடைய இடி பொடிபட அயில் விட வல பெருமாளே

மேல்

#1002
கடலை பயிறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை கனல் கதலி இன் அமுதொடு
கனியும் முது பல கனி வகை நலம் இவை இனிதாக
கடல் கொள் புவி முதல் துளிர்வொடு வளமுற அமுது துதி கையில் மனம் அது களி பெற
கருணையுடன் அளி திருவருள் மகிழ்வுற நெடிதான
குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும் ஒரு முருகு சண்முக என
குவிய இரு கரம் மலர் விழி புனலொடு பணியாமல்
கொடிய நெடியன அதி வினை துயர் கொடு வறுமை சிறுமையில் அலைவுடன் அரிவையர்
குழியில் முழுகியும் அழுகியும் உழல் வகை ஒழியாதோ
நெடிய கடலினில் முடுகியெ வரமுறு மறலி வெருவுற ரவி மதி பயமுற
நிலமும் நெறுநெறுநெறு என வரும் ஒரு கொடிதான
நிசிரர் கொடுமுடி சடசடசட என பகர கிரி முடி கிடுகிடுகிடு என
நிகரில் அயில் வெயில் எழு பசுமைய நிறம் உளதான
நடனம் இடும் பரி துரகதம் மயில் அது முடுகி கடுமையில் உலகதை வலம் வரும்
நளின பத வர நதி குமுகுமு என முநிவோரும்
நறிய மலர் கொடு ஹரஹரஹர என அமரர் சிறை கெட நறை கமழ் மலர் மிசை
நணியே சரவணம் அதில் வளர் அழகிய பெருமாளே

மேல்

#1003
கமல குமிளித முலை மிசை துகில் இடு விகட கெருவிகள் அசடிகள் கபடிகள்
கலகம் இடு விழி வலை கொடு தழுவிகள் இளைஞோர்கள்
கனலில் இடு மெழுகு என நகை அருளிகள் அநெக விதமொடு தனி என நடவிகள்
கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள்தமை நாடி
அமுத மொழி கொடு தவ நிலை அருளிய பெரிய குண தரர் உரை செய்த மொழி வகை
அடைவு நடை படி பயிலவும் முயலவும் அறியாத
அசடன் அறிவிலி இழிகுலன் இவன் என இனமும் மனிதருள் அனைவரும் உரைசெய
அடியன் இது பட அரிது இனி ஒரு பொருள் அருள்வாயே
திமித திமிதிமி டமடம டம என சிகர கரதல டமருகம் அடிபட
தெனன தெனதென தென என நடைபட முநிவோர்கள்
சிவமில் உருகியும் அரகர என அதி பரத பரிபுர மலர் அடி தொழ அநுதினமும்
நடம் இடுபவர் இடம் உறைபவள் தரு சேயே
குமர சரவணபவ திறல் உதவிய தரும நிகரொடு புலமையும் அழகிய
குழக குருபரன் என ஒரு மயில் மிசை வருவோனே
குறவர் இடு தினை வனம் மிசை இதணிடை மலையும் அரையொடு பசலை கொள் வளர் முலை
குலவு குறமகள் அழகொடு தழுவிய பெருமாளே

மேல்

#1004
தசையும் உதிரமும் நிணமொடு செருமிய கரும கிருமிகள் ஒழுகிய பழகிய
சடல உடல் கடை சுடலையில் இடு சிறு குடில் பேணும்
சகல கருமிகள் சருவிய சமயிகள் சரியை கிரியைகள் தவம் எனும் அவர் சிலர்
சவலை அறிவினர் நெறியினை விட இனி அடியேனுக்கு
இசைய இது பொருள் என அறிவு உற ஒரு வசனம் உற இருவினை அற மலம் அற
இரவு பகல் அற எனது அற நினது அற அநுபூதி
இனிமை தரும் ஒரு தனிமையை மறைகளின் இறுதி அறுதியில் இட அரிய பெறுதியை
இருமை ஒருமையில் பெருமையை வெளிபட மொழிவாயே
அசல குல பதி தரும் ஒரு திருமகள் அமலை விமலைகள் எழுவரும் வழிபட
அருளி அருணையில் உறைதரும் இறையவள் அபிராமி
அநகை அநுபவை அநுதயை அபிநவை அதல முதல் எழு தலம் இவை முறைமுறை
அடைய அருளிய பழையவள் அருளிய சிறியோனே
வசுவ பசுபதி மகிழ்தர ஒரு மொழி மவுனம் அருளிய மகிமையும் இமையவர்
மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் வடி வேலும்
மயிலும் இயல் அறி புலமையும் உபநிட மதுர கவிதையும் விதரண கருணையும்
வடிவும் இளமையும் வளமையும் அழகிய பெருமாளே

மேல்

#1005
நெடிய வட குவடு இடியவும் எழு கிரி நெறுநெறு என நெரியவும் முது பணி பதி
நிபிட முடி கிழியவும் நிலம் அதிரவும் விளையாடும்
நிகரில் கலபியும் ரவி உமிழ் துவசமும் நினது கருணையும் உறைதரு பெருமையும்
நிறமும் இளமையும் வளமையும் இரு சரணமும் நீப
முடியும் அபிநவ வனசரர் கொடி இடை தளர வளர்வன ம்ருகமத பரிமள
முகுள புளகித தன கிரி தழுவிய திரள் தோளும்
மொகுமொகு என மதுகரம் முரல் குரவு அணி முருகன் அறுமுகன் என வருவன பெயர்
முழுதும் இயல் கொடு பழுதற மொழிவதும் ஒரு நாளே
கொடிய படு கொலை நிசிசரர் உரமொடு குமுகும் என விசையுடன் இசை பெற மிகு
குருதி நதி வித சதியொடு குதி கொள விதி ஓட
குமுறு கடல் குடல் கிழிபட அடு மரம் மொளுமொளு என அடியொடு அலறி விழ உயர்
குருகு பெயரிய வரை தொளைபட விடு சுடர் வேலா
இடியும் முனை மலி குலிசமும் இலகிடு கவள தவள விகட தட கன கட
இபமும் இரணிய தரணியும் உடையது ஒர் தனி யானைக்கு
இறைவ குருபர சரவண வெகு முக ககன புனிதையும் வனிதையர் அறுவரும்
எனது மகவு என உமை தரும் இமையவர் பெருமாளே

மேல்

#1006
பகிர நினைவு ஒரு தினை அளவிலும் இலி கருணையிலி உனது அருணையொடு தணியல்
பழனிமலை குருமலை பணிமலை பல மலை பாடி
பரவும் மிடறிலி படிறு கொடு இடறு சொல் பழகி அழகிலி குலமிலி நலமிலி
பதிமையிலி பவுஷதுமிலி மகிமையிலி குலாலன்
திகிரி வரும் ஒரு செலவினில் எழுபது செலவு வரும் என பவுரி கொடு அலமரும்
திருகன் உருகுதல் அழுகுதல் தொழுகுதல் நினையாத
திமிரன் இயல்பிலி அருளிலி பொருளிலி திருடன் மதியிலி கதியிலி விதியிலி
செயலில் உணர்விலி சிவபதம் அடைவதும் ஒரு நாளே
மகர சலநிதி முறையிட நிசிசரன் மகுடம் ஒரு பதும் இருபது திரள் புய
வரையும் அற ஒரு கணை தெரி புயல் குருநிருப தூதன்
மடுவில் மத கரி முதல் என உதவிய வரதன் இரு திறல் மருதொடு பொருதவன்
மதலை குதலையின் மறை மொழி இகழ் இரணியன் ஆகம்
உகிரின் நுதி கொடு வகிரும் ஒர் அடல் அரி திகிரிதர மரகதகிரி எரி உமிழ்
உரக சுடிகையில் நட நவில் அரி திரு மருகோனே
உருகும் அடியவர் இருவினை இருள் பொரும் உதய தினகர இமகரன் வலம்வரும்
உலகம் முழுது ஒரு நொடியினில் வலம்வரு பெருமாளே

மேல்

#1007
முருகு செறு குழல் அவிழ் தர முகம் மதி முடிய வெயர்வுர முது திரை அமுது அன
மொழிகள் பதறிட வளை கலகல என அணை போக
முலையின் மிசை இடு வடம் முடி அற இடை முறியும் என இரு பரிபுரம் அலறிட
முகுள அலர் இள நிலவு எழ இலவு இதழ் பருகா நின்று
உருகி உளம் உடல் உடலொடு செருகிட உயிரும் எனது உயிர் என மிக உறவு செய்து
உதவும் மட மகளிர்களொடும் அமளியில் அநுராக
உததி அதனிடை விழுகினும் எழுகினும் உழலுகினும் உனது அடி இணை எனது உயிர்
உதவி என உனை நினைவதும் மொழிவதும் மறவேனே
எருவையொடு கொடி கெருடனும் வெளி சிறிது இடம் இலை என உலவிட அலகையின்
இனமும் நிணம் உண எழு குறள்களும் இயல் இசை பாட
இகலி முது களம் இனம் இசையொடு தனி இரண பயிரவி பதயுகம் மிகு நடமிடவும்
மிக எதிரெதிர் ஒரு தனு இரு காலும்
வரிசை அதனுடன் வளை தர ஒரு பது மகுடம் இருபது புயமுடன் மடி பட
வலியின் ஒரு கணை விடு கர முதல் அரி நெடு மாயன்
மருக குருபர சரவணம் அதில் வரு மகிப சுரபதி பதி பெற அவுணர்கள்
மடிய இயல் கொளும் மயில் மிசை வர வல பெருமாளே

மேல்

#1008
இலகு வேல் எனும் இருவினை விழிகளும் எழுதவொணாது எனும் இரு தன கிரிகளும்
இசையினால் வசை பொசி தரு மொழிகளும் எதிர்வே கொண்டு
எதிர் இலா அதி பலம் உடை இளைஞர் என் இனிய மா வினை இருள் எனும் வலை கொடு
இடைவிடா தெறு நடுவனும் என வளை மடவார்தம்
கலவி மால் கொடு கலைகளும் அறிவொடு கருதவொணாது என முனிவுற மருள் கொடு
கரையிலா விதி எனும் ஒரு கடல் இடை கவிழாதே
கருணை வானவர் தொழுது எழு மயில் உறை குமர கானவர் சிறுமியொடு உருகிய
கமல தாள் இணை கனவிலும் நினைவுற அருள்தாராய்
பல கையோடு ஒரு பது சிரம் அற எறி பகழியான் அரவு அணை மிசை துயில் தரு
பரமன் மால் படி அளவிடும் அரி திரு மருகோனே
பழுது இலா மனம் உடையவர் மலர் கொடு பரவ மால் விடை மிசை உறைபவரொடு
பரம ஞானமும் இது என உரை செய்த பெரியோனே
அலகை காளிகள் நடமிட அலை கடல்அதனில் நீள் குடல் நிண மலை பிண மலை
அசுரர் மார்பகம் அளறது பட விடும் அயில் வேலா
அரிய பாவலர் உரை செய அருள்புரி முருக ஆறிரு புய இயல் இசையுடன்
அழகும் ஆண்மையும் இலகிய சரவண பெருமாளே

மேல்

#1009
முருகு உலாவிய குழலினும் நிழலினும் அருவமாகிய இடையினு நடையினு
முளரி போலு நல் விழியினும் மொழியினும் மட மாதர்
முனிவிலா நகை வலையினு நிலையினு இறுக வார் இடு மலை எனும் முலையினு
முடிவிலாதது ஒர் கொடு விடம் அடு வித மயலாகி
நரகிலே விழும் அவலனை அசடனை வழிபடாத ஒர் திருடனை மருடனை
நலம் இலா அக கபடனை விகடனை வினையேனை
நடுவிலாதன படிறு கொள் இடறு சொல் அதனில் மூழ்கிய மறவனை இறவனை
நளினம் ஆர் பதம் அது பெற ஒரு வழி அருள்வாயே
வரி அராவினின் முடி மிசை நடம் இடு பரத மாயவன் எழு புவி அளவிடு
வரதன் மாதவன் இரணியன் உடல் இரு பிளவாக
வகிரும் மால் அரி திகிரியன் அலை எறி தமர வாரிதி முறை இட நிசிசரன்
மகுடம் ஆனவை ஒரு பதும் விழ ஒரு கணை ஏவும்
கரிய மேனியன் மருதொடு பொருதவன் இனிய பாவலன் உரையினில் ஒழுகிய
கடவுள் வேய் இசை கொடு நிரை பரவிடும் அபிராமன்
கருணை நாரணன் நர பதி சுர பதி மருக கானகம் அதனிடை உறைதரு
கரிய வேடுவர் சிறுமியொடு உருகிய பெருமாளே

மேல்

#1010
அரிசனம் பரிச அலங்க்ருத அம்ருத கலசமும் மதன் உயர் அம் பொன் மா முடியதும்
என இளைஞர்கள் நெஞ்சும் ஆவியும் ஒரு கோடி
அடைபடு குட யுகங்களாம் என ம்ருகமத களபம் அணிந்த சீதள
அபி நவ கன தன மங்கைமாருடன் விளையாடி
இரவொடு பகல் ஒழிவின்றி மால் தரு அலை கடல் அளறு படிந்து வாய் அமுது
இனிது என அருள அருந்தி ஆர்வமொடு இதமாகி
இருவரும் மருவி அணைந்து பாழ்படும் அருவினை அறவும் மறந்து உன் நீள் தரும்
இணை மலர் அடிகள் நினைந்து வாழ்வதும் ஒரு நாளே
சுரர் குல பதி விதி விண்டு தோல் உரி உடை புனை இருடிகள் அண்டர் ஆனவர்
துதி செய எதிர் பொர வந்த தானவர் அடி மாள
தொலைவு அறும் அலகை இனங்கள் ஆனவை நடமிட நிண மலை துன்றவே அதில்
துவர் இது புளி இது தொய்ந்தது ஈது இது இது வீணால்
பருகுதல் அரியது உகந்தது ஈது இது உளது என குறளிகள் தின்று மேதகு
பசி கெட ஒரு தனி வென்ற சேவக மயில் வீரா
பகிரதி சிறுவ விலங்கல் ஊடுறு குறமகள் கொழுந படர்ந்து மேல் எழு
பரு வரை உருவ எறிந்த வேல் வல பெருமாளே

மேல்

#1011
உரைதரு பர சமயங்கள் ஓதுவது உரு என அரு என ஒன்று இலாதது ஒர்
ஒளி என வெளி என உம்பராம் என இம்பரா நின்று
உலகுகள் நிலைபெறு தம்பமாம் என உரைசெய அது பொருள் கண்டு மோனமொடு
உணர்வு உற உணர்வொடு இருந்த நாளும் அழிந்திடாதே
பரகதி பெறுவது ஒழிந்திட ஆர்வன பரிசன தெரிசன கந்த ஓசைகள்
பல நல விதம் உள துன்பம் ஆகி மயங்கிடாதே
பரிபுர பதம் உள வஞ்ச மாதர்கள் பலபல விதம் உள துன்ப சாகர
படுகுழி இடைவிழு பஞ்சபாதகன் என்று தீர்வேன்
அரகர சிவ சுத கந்தனே நினது அபயம்அபயம் என நின்று வானவர்
அலறிட ஒழிக இனி அஞ்சிடாது என அஞ்சல் கூறி
அடல் தரு நிருதர் அநந்த வாகினி யமபுரம் அடைய அடர்ந்து போர்புரி
அசுரன் அகலம் இடந்து போக வகிர்ந்த வேகம்
விரி கடல் துகள் எழ வென்ற வேலவ மரகத கலப சிகண்டி வாகன
விரகுள சரவண முந்தை நான்மறை அந்தம் ஓதும்
விரை தரு மலரில் இருந்த வேதனும் விட அரவு அமளி துயின்ற மாயனும்
விமலை கொள் சடையனும் பராவிய தம்பிரானே

மேல்

#1012
இம கிரி மத்தில் புயங்க வெம் பணி கயிறு அது சுற்றி தரங்க ஒள் கடல்
இமையவர் பற்றி கடைந்த அன்று எழு நஞ்சு போலே
இரு குழை தத்தி புரண்டு வந்த ஒரு குமிழையும் எற்றி கரும்பு எனும் சிலை
ரதி பதி வெற்றி சரங்கள் அஞ்சையும் விஞ்சி நீடு
சமரம் மிகுத்து பரந்த செங்கயல் விழியினில் மெத்த ததும்பி விஞ்சிய
தமனியம் வெற்புக்கு இசைந்த வம்பு அணி கொங்கை மீதே
தனி மனம் வைத்து தளர்ந்து வண்டு அமர் குழலியர் பொய்க்குள் கலங்கல் இன்றியெ
சத தளம் வைத்து சிவந்த நின் கழல் தந்திடாயோ
அமரர் துதிக்க புரந்தரன் தொழ எழுபது வர்க்க குரங்கு கொண்டு எறி
அலையை அடைத்து கடந்து சென்று எதிர் முந்து போரில்
அசுரர் முதல் கொற்றவன் பெரும் திறல் இருபது கொற்ற புயங்கன் சிந்திட
அழகிய கொத்து சிரங்கள் ஒன்பதும் ஒன்றும் மாள
கமல மலர் கை சரம் துரந்தவர் மருமக மட்டு உக்க கொன்றை அம் தொடை
கறை அற ஒப்பற்ற தும்பை அம்புலி கங்கை சூடும்
கடவுளர் பக்கத்து அணங்கு தந்தருள் குமர குற தத்தை பின் திரிந்து அவள்
கடின தனத்தில் கலந்து இலங்கிய தம்பிரானே

மேல்

#1013
முகமும் மினுக்கி பெரும் கரும் குழல் முகிலை அவிழ்த்து செருந்தி சண்பகம்
முடிய நிறைத்து ததும்பி வந்து அடி முன் பினாக
முலையை அசைத்து திருந்த முன் தரி கலையை நெகிழ்த்து புனைந்து வஞ்சக
முறுவல் விளைத்து துணிந்து தம் தெரு முன்றிலூடே
மகளிர் வரப்பில் சிறந்த பந்தியில் மதனனும் நிற்க கொளுந்து வெண் பிறை
வடவை எறிக்க திரண்டு பண்தனை வண்டு பாட
மலய நிலத்து பிறந்த தென்றலும் நிலை குலைய தொட்டு உடம்பு புண் செய
மயலை அளிக்க குழைந்து சிந்தை மயங்கலாமோ
பகலவன் மட்க புகுந்து கந்தர ககன முகட்டை பிளந்து மந்தர
பரு வரை ஒக்க சுழன்று பின்பு பறந்து போக
பணம் அணி பட்ச துரங்கமும் தனி முடுகி நடத்தி கிழிந்து விந்து எழு
பரவை அரற்ற ப்ரபஞ்ச நின்று பயந்து வாட
குகன் என முக்கண் சயம்புவும் ப்ரிய மிக அசுரர்க்கு குரம்பை வந்து அருகுற
அமர் குத்தி பொரும் கொடும் படை வென்ற வேளே
குழை சயை ஒப்பற்று இருந்த சங்கரி கவுரி எடுத்து பரிந்து கொங்கையில்
குண அமுது உய்க்க தெளிந்து கொண்டு அருள் பெருமாளே

மேல்

#1014
படிதனில் உறவு எனும் அனைவர்கள் பரிவொடு பக்கத்தில் பல கத்திட்டு துயர் கொண்டு பாவ
பணை மர விறகு இடை அழல் இடை உடலது பற்ற கொட்டுகள் தட்டி சுட்டு அலை ஒன்றி ஏக
கடி சமன் உயிர்தனை இரு விழி அனல் அது கக்க சிக்கென முட்டி கட்டி உடன்றுபோ முன்
கதி தரு முருகனும் என நினை நினைபவர் கற்பில் புக்கு அறிவு ஒக்க கற்பது தந்திடாயோ
வட கிரி தொளை பட அலை கடல் சுவறிட மற்று திக்கு எனும் எட்டு திக்கிலும் வென்றி வாய
வலியுடன் எதிர் பொரும் அசுரர்கள் பொடிபட மட்டித்திட்டு உயர் கொக்கை குத்தி மலைந்த வீரா
அடர் சடை மிசை மதி அலை ஜலம் அது புனை அத்தர்க்கு பொருள் கற்பித்து புகழ் கொண்ட வாழ்வே
அடிய உக முடியினும் வடிவுடன் எழும் மவுனத்தில் பற்றுறு நித்த சுத்தர்கள் தம்பிரனே

மேல்

#1015
விடம் என அயில் என அடு என நடு என மிளிர்வன சுழல் விழி
வித்தைக்கு பகர் ஒப்பு சற்று இலை என்று பேசும்
விரகு உடை வனிதையர் அணை மிசை உருகிய வெகுமுக கலவியில்
இச்சைப்பட்டு உயிர் தட்டுப்பட்டு உழன்று வாடும்
நடலையில் வழி மிக அழி படு தமியனை நமன் விடு திரள் அது
கட்டி சிக்கென ஒத்தி கைக்கொடு கொண்டு போயே
நரகதில் விடும் எனும் அளவினில் இலகிய நறை கமழ் திருவடி
முத்திக்குள் படு நித்ய தத்துவம் வந்திடாதோ
இடி என அதிர் குரல் நிசிசரர் குல பதி இருபது திரள் புயம்
அற்று பொன் தலை தத்த கொத்தொடு நஞ்சு வாளி
எரி எழ முடுகிய சிலையினர் அழகு ஒழுகு இயல் சிறு வினைமகள்
பச்சை பட்சிதனை கைப்பற்றிடும் இந்திரலோகா
வடவரை இடிபட அலை கடல் சுவறிட மக வரை பொடிபட
மை கண் பெற்றிடும் உக்ர கண் செவி அஞ்ச சூரன்
மணி முடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட
முட்டி பொட்டு எழ வெட்டி குத்திய தம்பிரானே

மேல்

#1016
குகையில் நவ நாதரும் சிறந்த முகை வனச சாதனும் தயங்கு
குணமும் அசுரேசரும் தரங்கம் முரல் வேத
குரகத புராரியும் ப்ரசண்ட மரகத முராரியும் செயம் கொள்
குலிச கை வலாரியும் கொடுங்கண் அற நூலும்
அகலிய புராணமும் ப்ரபஞ்ச சகல கலை நூல்களும் பரந்த
அரு மறை அநேகமும் குவிந்தும் அறியாத
அறிவும் அறியாமையும் கடந்த அறிவு திருமேனி என்று உணர்ந்து உன்
அருண சரண் அரவிந்தம் என்று அடைவேனோ
பகை கொள் துரியோதனன் பிறந்து படை பொருத பாரதம் தெரிந்து
பரியது ஒரு கோடு கொண்டு சண்ட வரை மீதே
பழுது அற வியாசன் அன்று இயம்ப எழுதிய விநாயகன் சிவந்த
பவள மத யானை பின்பு வந்த முருகோனே
மிகு தமர சாகரம் கலங்க எழு சிகர பூதரம் குலுங்க
விபரித நிசாசரன் தியங்க அமராடி
விபுதர் குல வேழ மங்கை துங்க பரிமள படீர கும்ப விம்ப
ம்ருகமத பயோதரம் புணர்ந்த பெருமாளே

மேல்

#1017
மழை அளக பாரமும் குலைந்து வரி பரவு நீலமும் சிவந்து
மதி முகமும் வேர்வு வந்து அரும்ப அணை மீதே
மகுட தன பாரமும் குலுங்க மணி கலைகளே அறவும் திரைந்து
வசம் அழியவே புணர்ந்து அணைந்து மகிழ்வாகி
குழைய இதழூறல் உண்டு அழுந்தி குருகு மொழி வாய் மலர்ந்து கொஞ்ச
குமுத பதி போக பொங்கு கங்கை குதி பாய
குழியில் இழியா விதங்கள் ஓங்கு மதன கலை ஆகமங்கள் விஞ்சி
குமரியர்களோடு உழன்று நைந்து விடலாமோ
எழு படைகள் சூர வஞ்சர் அஞ்ச இரண களமாக அன்று சென்று
எழு சிகரம் மா நிலம் குலுங்க விசையூடே
எழு கடலும் மேருவும் கலங்க விழி படர்வு தோகை கொண்ட துங்க
இயல் மயிலின் மாறுகொண்டு அமர்ந்த வடி வேலா
பொழுது அளவு நீடு குன்று சென்று குறவர்மகள் காலினும் பணிந்து
புளிஞர் அறியாமலும் திரிந்து புனம் மீதே
புதிய மடல் ஏறவும் துணிந்த அரிய பரிதாபமும் தணிந்து
புளகித பயோதரம் புணர்ந்த பெருமாளே

மேல்

#1018
கற்பு ஆர் மெய்ப்பாட்டை தவறிய சொல் பாகை காட்டி புழுகொடு
கஸ்தூரி சேற்றை தடவிய இளநீரை
கண் சேலை காட்டி குழல் அழகை தோளை காட்டி தரகொடு
கைக்காசை கேட்டு தெருவினில் மயில் போலே
நிற்பாருக்கு ஆட்பட்டு உயரிய வித்தார பூ கட்டிலின் மிசை
நெட்டூர கூட்டத்து அநவரதமு மாயும்
நெட்டாசை பாட்டை துரிசு அற விட்டு ஏறி போய் பத்தியருடன்
நெக்கு ஓதி போற்றி கழல் இணை பணிவேனோ
வெற்பால் மத்தாக்கி கடல் கடை மைச்சு ஆவி காக்கை கடவுளை
விட்டார் முக்கோட்டைக்கு ஒரு கிரி இரு காலும்
வில் போல கோட்டி பிறகு ஒரு சற்றே பல் காட்டி தழல் எழு
வித்தார் தத்வார்த்த குருபர என ஓதும்
பொற்பா பற்றாக்கை புது மலர் பெட்டு ஏய பாற்பட்டு உயரிய
பொன் தோளில் சேர்த்து கருணை செய் என மாலாய்
புள் கானத்து ஓச்சி கிரி மிசை பச்சேனல் காத்து திரிதரு
பொன் பூவை பேச்சுக்கு உருகிய பெருமாளே

மேல்

#1019
சிற்று ஆய கூட்ட தெரிவையர் வித்தார சூழ்ச்சி கயல் விழி
சற்று ஏற பார்த்து சில பணிவிடை ஏவி
சில் தாபத்து ஆக்கை பொருள் கொடு பித்து ஏறி கூப்பிட்டவர் பரிசு
எட்டாமல் தூர்த்தத்து அலைபடு சிறு காலை
உற்றார் பெற்றார்க்கு பெரிது ஒரு பற்றாய் பூட்டு கயிறு கொடு
உச்சாயத்து ஆக்கை தொழிலொடு தடுமாறி
உக்காரித்து ஏக்கற்று உயிர் நழுவி காய் அ தீ பட்டு எரி உடல்
உக்கேன் மெய்க்கு ஆட்டை தவிர்வதும் ஒரு நாளே
வற்றா முற்றா பச்சிள முலையில் பால் கை பார்த்து தரும் ஒரு
மை காம கோட்ட குல மயில் தரு பாலா
மத்து ஓசை போக்கில் தயிர் உறி நெய் பாலுக்கு ஆய்ச்சிக்கு இரு பதம்
வைத்து ஆடி காட்டி பருகு அரி மருகோனே
கல் தா வில் காட்டி கரை துறை நற்றாயில் காட்டி புகழ் கலை
கற்றார் சொல் கேட்க தனி வழி வருவோனே
கை சூல கூற்றை கணை மதனை தூள் பட்டு ஆர்ப்ப கனல் பொழி
கர்த்தாவுக்கு ஏற்க பொருள் அருள் பெருமாளே

மேல்

#1020
இருள் குழலை குலைத்து முடித்து எழில் கலையை திருத்தி உடுத்து
இணை கயலை புரட்டி விழித்து அதி பார
இழை களப பொருப்பு அணி கச்சு எடுத்து மறைத்து அழைத்து வளை
திருத்தி அகப்படுத்தி நகைத்து உறவாடி
பொருட்கு மிக துதித்து இளகி புலப்படு சித்ர கரண
புணர்ச்சி விளைத்து உருக்கு பரத்தையர் மோக
புழு தொளையில் திளைத்தது அதனை பொறுத்து அருளி சடக்கென அப்புறத்தில்
அழைத்து இருத்தி அளித்திடுவாயே
உருத்திரரை பழித்து உலகுக்கு உக கடை அப்பு என ககனத்து
உடு தகர படுத்து கிரி தலம் ஏழும்
உடுத்த பொல பொருப்பு வெடித்து ஒலிப்ப மருத்து இளைப்ப நெருப்பு
ஒளிக்க இருப்பிடத்தை விட சுரர் ஓடி
திரை கடல் உட்பட சுழல செகத்ரையம் இப்படி கலைய
சிரித்து எதிர் கொக்கரித்து மலைத்திடு பாவி
செருக்கு அழிய தெழித்து உதிர திரை கடலில் சுழி தலையில்
திளைத்த அயில் கர குமர பெருமாளே

மேல்

#1021
வினை திரளுக்கு இருப்பு என வித்தக படவில் சல பிலம் இட்டு
இசைக்கும் மிடல் குடிற்கிடை புக்கு இடும் மாய
விளை பகுதி பயப்பு அளவுற்று அமைத்தது என கருத்த அமைவில்
சக பொருள் மெய்க்கு உற பருக கருதாதே
எனக்கு எதிர் ஒப்ப இசைப்பவர் எ தலத்து உளர் எ சமர்த்தர் என
புறத்து உரை இட்டு இகழ்ச்சியில் உற்று இளையாது உன்
எழில் கமலத்து இணை கழலை தமிழ் சுவையிட்டு இறப்பு அற எய்த்திட
கருணை திறத்து என வைத்து அருள்வாயே
சினத்தை மிகுத்து அனைத்து உலகத்து இசை கருதி கடல் பரவி
திடத்தொடு அதிர்த்து எதிர்த்திடல் உற்றிடு சூரன்
சிரத்துடன் மற்புயத்து அகலத்தினில் குருதி கடல் பெருக
சிறப்பு மிக திறத்தொடு உகைத்திடும் வேலா
கனத்த மருப்பு இன கரி நல் கலை திரள் கற்பு உடை கிளி உள்
கருத்து உருக தினைக்குள் இசைத்து இசை பாடி
கனி குதலை சிறு குயிலை கதித்த மற குல பதியில்
களிப்போடு கை பிடித்த மண பெருமாளே

மேல்

#1022
முத்து மணி பணிகள் ஆரத்தாலும் மொய்த்த மலை முலை கொடே வித்தாரம்
முற்றும் இளைஞர் உயிர் மோகித்து ஏக பொரும் மாதர்
முற்று மதி முகமும் வானில் காரும் ஒத்த குழல் விழியும் வேய் நல் தோளும்
முத்தி தகும் எனும் வினாவில் பாயற்கு இடை மூழ்கி
புத்தி கரவடம் உலாவி சால மெத்த மிக அறிவிலாரை தேறி
பொன் கை புகழ் பெரியராக பாடி புவியூடே
பொய்க்குள் ஒழுகி அயராமல் போது மொய்த்த கமல இரு தாளை பூண
பொற்பும் இயல் புதுமை ஆக பாட புகல்வாயே
பத்து முடியும் அதனோடு அ தோள் இர்பத்தும் மிறைய ஒரு வாளிக்கே செய்
பச்சை முகில் சதுரவேதத்தோடு உற்ற அயனாரும்
பற்ற அரிய நடமாடு அத்தாளில் பத்தி மிக இனிய ஞான பாடல்
பற்றும் மரபு நிலையாக பாடி திரிவோனே
மெத்த அலை கடலும் வாய் விட்டு ஓட வெற்றி மயில் மிசை கொடு ஏகி சூரர்
மெய்க்குள் உற இலகு வேலை போகைக்கு எறிவோனே
வெற்றி மிகு சிலையினால் மிக்கோர்தம் வித்து விளை புனமும் வேய் முத்து ஈனும்
வெற்பும் உறையும் மயில் வேளைக்கார பெருமாளே

மேல்

#1023
விட்ட புழுகு பனிநீர் கத்தூரி மொய்த்த பரிமள படீர சேறு
மிக்க முலையை விலை கூறி காசுக்கு அளவே தான்
மெத்த விரியும் மலர் சேர் கற்பூர மெத்தை மிசை கலவி ஆசைப்பாடு
விற்கு மகளிர் சுருள் ஓலை கோல குழையோடே
முட்டி இலகு குமிழ் தாவி காமன் விட்ட தனை ஓடி சாடி
மொய்க்கும் அளிஅதனை வேலை சேலை கயல் மீனை
முக்கி யமனை அட மீறி சீறும் மை கண் விழி வலையிலே பட்டு ஓடி
முட்ட வினையன் மருள் ஆகி போக கடவேனோ
செட்டி எனும் ஓர் திரு நாமக்கார வெற்றி அயில் தொடு தாபக்கார
திக்கை உலகை வலமாக போகி கண மீளும்
சித்ர குல கலப வாசிக்கார தத்து மகர சல கோபக்கார
செச்சை புனையும் மணவாள கோல திரு மார்பா
துட்ட நிருதர் பதி சூறைக்கார செப்பும் அமரர் பதி காவற்கார
துப்பு முகபட கபோல தான களிறு ஊரும்
சொர்க்க கன தளம் விநோதக்கார முத்தி விதரண உதாரக்கார
சுத்த மறவர் மகள் வேளைக்கார பெருமாளே

மேல்

#1024
ஏடு மலர் உற்ற ஆடல் மதன் உய்க்கும் ஏ அது பழிக்கும் விழியாலே
ஏதையும் அழிக்கும் மாதர் தம் மயக்கிலே மருவி மெத்த மருள் ஆகி
நாடு நகர் மிக்க வீடு தனம் மக்கள் நாரியர்கள் சுற்றம் இவை பேணா
ஞான உணர்வு அற்று நான் எழு பிறப்பும் நாடி நரகத்தில் விழலாமோ
ஆடும் அரவத்தை ஓடி உடல் கொத்தி ஆடும் ஒரு பச்சை மயில் வீரா
ஆரணம் உரைக்கும் மோன அக இடத்தில் ஆரும் உய நிற்கும் முருகோனே
வேடுவர் புனத்தில் நீடும் இதணத்தில் மேவுய குறத்தி மணவாளா
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே

மேல்

#1025
சீத மலம் வெப்பு வாத மிகு பித்தம் ஆன பிணி சுற்றி உடலூடே
சேரும் உயிர் தப்பி ஏகும் வணம் மிக்க தீது விளைவிக்க வருபோதில்
தாதையொடு மக்கள் நீதியொடு துக்க சாகரம் அதற்குள் அழியா முன்
தாரணிதனக்குள் ஆரணம் உரைத்த தாள் தர நினைத்து வரவேணும்
மாதர் மயலுற்று வாட வடிவுற்று மா மயிலில் நித்தம் வருவோனே
மாலும் அயன் ஒப்பிலாதபடி பற்றி மால் உழலும் மற்ற மறையோர் முன்
வேத மொழி வித்தை ஓதி அறிவித்த நாத விறல் மிக்க இகல் வேலா
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே

மேல்

#1026
தோடு பொரு மை கண் ஆட வடிவுற்றது ஓர் தனம் அசைத்து இளைஞோர்தம்
தோள் வலி மனத்து வாள் வலி உழக்கு தோகையர் மயக்கில் உழலாதே
பாடல் இசை மிக்க ஆடல் கொடு பத்தியோடு நினை பத்தர் பெருவாழ்வே
பாவ வினை அற்று நாம நினை புத்தி பாரில் அருள்கைக்கு வரவேணும்
ஆடல் அழகு ஒக்க ஆடும் மயில் எற்றி ஆண்மையுடன் நிற்கும் முருகோனே
ஆதி அரனுக்கு வேத மொழி முற்றி ஆர்வம் விளைவித்த அறிவோனே
வேடை மயலுற்று வேடர் மகளுக்கு வேளை என நிற்கும் விறல் வீரா
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே

மேல்

#1027
தோதகம் மிகுத்த பூதம் மருள் பக்க சூலை வலி வெப்பு மத நீர் தோய்
சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை தீரா
வாதமொடு பித்தம் மூலமுடன் மற்றும் ஆய பிணி சற்றும் அணுகாதே
வாடும் எனை முத்தி நீடிய பதத்தில் வாழ மிக வைத்து அருள்வாயே
காதல் மிக உற்று மா தினை விளைத்த கானக குறத்தி மணவாளா
காசினி அனைத்தும் ஓடி அளவிட்ட கால் நெடிய பச்சை மயில் வீரா
வேத மொழி மெத்த ஓதி வரு பத்தர் வேதனை தவிர்க்கும் முருகோனே
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே

மேல்

#1028
காதி மோதி வாதாடு நூல் கற்றிடுவாரும் காசு தேடி ஈயாமல் வாழப்பெறுவோரும்
மாது பாகர் வாழ்வே எனா நெக்கு உருகாரும் மாறு இலாத மா காலன் ஊர் புக்கு அலைவாரே
நாத ரூப மா நாதர் ஆகத்து உறைவோனே நாகலோகம் ஈரேழு பாருக்கு உரியோனே
தீது இலாத வேல் வீர சேவல் கொடியோனே தேவதேவ தேவாதிதேவ பெருமாளே

மேல்

#1029
கூறும் மார வேள் ஆரவார கடலாலே கோப மீது மாறாத கான குயிலாலே
மாறு போலும் மாதாவின் வார்மை பகையாலே மாது போத மால் ஆகி வாட தகுமோதான்
ஏறு தோகை மீது ஏறி ஆலித்திடும் வீரா ஏழு லோகம் வாழ்வான சேவல் கொடியோனே
சீறு சூரர் நீறு ஆக மோதி பொரும் வேலா தேவதேவ தேவாதிதேவ பெருமாளே

மேல்

#1030
பேர் அவா அறா வாய்மை பேசற்கு அறியாமே பேதை மாதராரோடு கூடி பிணி மேவா
ஆரவாரம் மாறாத நூல் கற்று அடி நாயேன் ஆவி சாவி ஆகாமல் நீ சற்று அருள்வாயே
சூரசூர சூராதிசூரர்க்கு எளிவு ஆயா தோகையா குமாரா கிராத கொடி கேள்வா
தீரதீர தீராதிதீர பெரியோனே தேவதேவ தேவாதிதேவ பெருமாளே

மேல்

#1031
காதில் ஓலை கிழிக்கும் காம பாண விழிக்கும் கான யாழின் மொழிக்கும் பொதுமாதர்
காணொணாத இடைக்கும் பூண் உலாவும் முலைக்கும் காதில் நீடு குழைக்கும் புதிது ஆய
கோது இலாத கருப்பஞ்சாறு போல ருசிக்கும் கோவை வாய் அமுதுக்கும் தணியாமல்
கூருவேன் ஒருவர்க்கும் தேடவொணாதது ஒர் அர்த்தம் கூடுமாறு ஒரு சற்றும் கருதாயோ
பூதி பூஷணர் கற்பின் பேதை பாகர் துதிக்கும் போத தேசிக சக்ரம் தவறாதே
போக பூமி புரக்கும் த்யாக மோக குற பெண் போத ஆதரம் வைக்கும் புய வீரா
சோதி வேலை எடுத்து அன்று ஓத வேலையில் நிற்கும் சூத தாருவும் வெற்பும் பொரு கோவே
சூரர் சேனை அனைத்தும் தூளியாக நடிக்கும் தோகை வாசி நடத்தும் பெருமாளே

மேல்

#1032
கார் உலாவு குழற்கும் கூரிதான விழிக்கும் காதல் பேணு நுதற்கும் கதிர் போலும்
காவி சேர் பவளத்தின் கோவை வாய் இதழுக்கும் காசு பூணு முலைக்கும் கதி சேரா
நேரிதான இடைக்கும் சீத வார நகைக்கும் நேர் இலாத தொடைக்கும் சதி பாடும்
நீதமான அடிக்கும் மாலுறாதபடிக்கு உன் நேயமோடு துதிக்கும்படி பாராய்
பார மேரு வளைக்கும் பாணியார் சடையில் செம்பாதி சோமன் எருக்கும் புனைவார்தம்
பாலகா என நித்தம் பாடு நாவலர் துக்கம் பாவ நாசம் அறுத்து இன் பதம் ஈவாய்
சோரி வாரியிட சென்று ஏறி ஓடி அழல் கண் சூல காளி நடிக்கும்படி வேலால்
சூரர் சேனைதனை கொன்று ஆரவாரம் மிகுத்து எண் தோகை வாசி நடத்தும் பெருமாளே

மேல்

#1033
தோடு உற்ற காது ஒக்க நீடுற்ற போருற்ற தோய் மை கணால் மிக்க நுதலாலே
தோள் வெற்பினால் வில் கை வேளுக்கு மேன் மக்கள் சேர்க்கைக்கு மால் விற்கும் மடவார்தம்
ஊடற்குள்ளே புக்கு வாடி கலாம் மிக்க ஓசைக்கு நேசித்து உழலாதே
ஊர் பெற்ற தாய் சுற்றமாய் உற்ற தாள் பற்றி ஓதற்கு நீ சற்றும் உணர்வாயே
வேடர்க்கு நீள் சொர்க்கம் வாழ்விக்க ஓர் வெற்பின் மீது உற்ற பேதைக்கு ஓர் மணவாளா
வேழத்தின் ஆபத்தை மீள்வித்த மால் ஒக்க வேதத்திலே நிற்கும் அயனாரும்
தேடற்கொணா நிற்கும் வேடத்தர் தாம் வைத்த சேமத்தின் நாமத்தை மொழிவோனே
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே

மேல்

#1034
தோல் அத்தியால் அப்பினால் ஒப்பிலாது உற்ற தோளு கை கால் உற்ற குடிலூடே
சோர்வு அற்று வாழ்வுற்ற கால் பற்றியே கைக்கு வேதித்த சூலத்தன் அணுகா முன்
கோலத்தை வேலைக்கு உள்ளே விட்ட சூர் கொத்தோடே பட்டு வீழ்வித்த கொலை வேலா
கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி கூர்கைக்கு நீ கொற்ற அருள்தாராய்
ஆலத்தை ஞாலத்து உளோர் திக்கு வானத்தர் ஆவிக்கள் மாள்வித்து மடியாதே
ஆலித்து மூலத்தோடே உட்கொள் ஆதிக்கும் ஆம் வித்தையாம் அத்தை அருள்வோனே
சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேலிட்ட தோத கண் மானுக்கு மணவாளா
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே

மேல்

#1035
ஊனும் தசை உடல் தான் ஒன்பது வழி ஊரும் கரு வழி ஒரு கோடி
ஓதும் பல கலை கீதம் சகலமும் ஓரும்படி உனது அருள் பாடி
நான் உன் திருவடி பேணும்படி இரு போதும் கருணையில் மறவாது உன்
நாமம் புகழ்பவர் பாதம் தொழ இனி நாடும்படி அருள்புரிவாயே
கானும் திகழ் கதிரோனும் சசியொடு காலங்களும் நடை உடையோனும்
காரும் கடல் வரை நீரும் தரு கயிலாயன் கழல் தொழும் இமையோரும்
வான் இந்திரன் நெடு மாலும் பிரமனும் வாழும்படி விடும் வடி வேலா
மாயம் பல புரி சூரன் பொடிபட வாள் கொண்டு அமர் செய்த பெருமாளே

மேல்

#1036
தீயும் பவனமும் நீரும் தரணியும் வானும் செறி தரு பசு பாச
தேகம்தனை நிலையே ஏய் ஒன்று இருவினை தீரும் திறல் வினை அறியாதே
ஓயும்படி சிறு உயிர் நூறும் பதின் உறழ் நூறும் பதின் இருபது நூறும்
ஓடும் சிறு உயிர் மீளும்படி நல யோகம் புரிவது கிடையாதோ
வேயும் கணியும் விளாவும் படு புனம் மேவும் சிறுமி தன் மணவாளா
மீனம் படு கடல் ஏழும் தழல் பட வேதம் கதறிய ஒரு நாலும்
வாயும் குல கிரி பாலும் தளை பட மா கந்தரம் அதில் மறை சூரன்
மார்பும் துணையுறு தோளும் துணிபட வாள் கொண்டு அமர்செய்த பெருமாளே

மேல்

#1037
வாதம் தலைவலி சூலம் பெரு வயிறு ஆகும் பிணி இவை அணுகாதே
மாயம் பொதி தரு காயம்தனின் மிசை வாழும் கரு வழி மருவாதே
ஓதம் பெறு கடல் மோதும் திரை அது போலும் பிறவியில் உழலாதே
ஓதும் பல அடியாரும் கதிபெற யான் உன் கழல் இணை பெறுவேனோ
கீதம் புகழ் இசை நாதம் கனிவொடு வேதம் கிளர் தர மொழிவார்தம்
கேடின் பெரு வலி மாளும்படி அவரோடும் கெழுமுதல் உடையோனே
வேதம் தொழு திருமாலும் பிரமனும் மேவும் பதம் உடை விறல் வீரா
மேல் வந்து எதிர் பொரு சூரன் பொடி பட வேல் கொண்டு அமர் செய்த பெருமாளே

மேல்

#1038
ஊனே தானாய் ஓயா நோயால் ஊசாடு ஊசல் குடில் பேணா
ஓதா மோதா வாது ஆகாதே லோகாசாரத்து உளம் வேறாய்
நானே நீயாய் நீயே நானாய் நானா வேத பொருளாலும்
நாடா வீடாய் ஈடேறாதே நாயேன் மாயக்கடவேனோ
வானே காலே தீயே நீரே பாரே பாருக்கு உரியோனே
மாயா மானே கோனே மான் ஆர் வாழ்வே கோழி கொடியோனே
தேனே தேன் நீள் கான் ஆறாய் வீழ் தேசு ஆர் சாரல் கிரியோனே
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே

மேல்

#1039
சாவா மூவா வேளே போல்வாய் தாள் ஆவேனுக்கு அருள்கூரும்
தாதாவே ஞாதாவே கோவே சார்பு ஆனார்கட்கு உயிர் போல்வாய்
ஏவால் மாலே போல்வாய் காரே போல்வாய் ஈதற்கு எனை ஆள்கொண்டு
ஏயா பாடா வாழ்வோர்பாலே யான் வீணே கத்திடலாமோ
பாவா நாவாய் வாணீ சார்வார் பாராவாரத்து உரகேச
பாய் மீதே சாய்வார் காணாதே பாதாள ஆழத்து உறு பாத
சே ஆம் மா ஊர் கோமான் வாழ்வே சீமானே செச்சைய மார்பா
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே

மேல்

#1040
நாராலே தோல் நீராலே ஆம் நானா வாசல் குடிலூடே
ஞாதாவாயே வாழ் கால் ஏகாய் நாய் பேய் சூழ்கைக்கு இடம் ஆம் முன்
தார் ஆர் ஆர் தோள் ஈராறானே சார் வானோர் நல் பெருவாழ்வே
தாழாதே நாயேன் நாவாலே தாள் பாடு ஆண்மை திறல் தாராய்
பார் ஏழு ஓர் தாளாலே ஆள்வோர் பாவார் வேதத்து அயனாரும்
பாழூடே வானூடே பாரூடே ஊர் பாதத்தினை நாடா
சீர் ஆர் மாதோடே வாழ்வார் நீள் சே ஊர்வார் பொன் சடை ஈசர்
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே

மேல்

#1041
மாதாவோடே மாமான் ஆனோர் மாதோடே மைத்துனமாரும்
மாறு ஆனார் போல் நீள் தீயூடே மாயா மோக குடில் போடா
போதா நீரூடே போய் மூழ்கா வீழ்கா வேதைக்கு உயிர் போ முன்
போதாகாரா பாராய் சீர் ஆர் போது ஆர் பாதத்து அருள்தாராய்
வேதாவோடே மால் ஆனார் மேல் வானோர் மேனி பயம் மீளவே
தானோர் மேலாகாதே ஓர் வேலால் வேதித்திடும் வீரா
தீது ஆர் தீயார் தீயூடே முள் சேரா சேதித்திடுவோர்தம்
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே

மேல்

#1042
வாராய் பேதாய் கேளாய் நீ தாய் மான் ஆர் மோகத்துடன் ஆசை
மாசு ஊடாடாது ஊடே பாராய் மாறா ஞான சுடர் தான் நின்று
ஆராயாதே ஆராய் பேறாம் ஆனா வேத பொருள் காண் என்று
ஆள்வாய் நீ தான் நாதா பார் மீது ஆர் வேறு ஆள்கைக்கு உரியார் தாம்
தோரா வானோர் சேனாதாரா சூரா சாரல் புன மாது
தோள் தோய் தோள் ஈராறா மா சூர் தூளாய் வீழ சிறு தாரை
சீராவாலே வாளாலே வேலாலே சேதித்திடும் வீரா
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே

மேல்

#1043
அகலம் நீளம் யாதாலும் ஒருவராலும் ஆராய அரிய மோனமே கோயில் என மேவி
அசையவே க்ரியா பீடம் மிசை புகா மகா ஞான அறிவின் ஆதர ஆமோத மலர் தூவி
சகல வேதனாதீத சகல வாசகாதீத சகல மா க்ரியாதீத சிவ ரூப
சகல சாதகாதீத சகல வாசனாதீத தனுவை நாடி மா பூசை புரிவேனோ
விகட தார சூதான நிகள பாத போதூள விரக ராக போதார் அசுரர் கால
விபுத மாலிகா நீல முகபடாகம் மாயூர விமல வ்யாபகா சீல அக விநோத
ககன கூட பாடீர தவள சோபித ஆளான கவன பூதர ஆரூட சத கோடி
களப காம வீர் வீசு கரம் முக ஆர வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#1044
அடைபடாது நாள்தோறும் இடைவிடாது போம் வாயு அடைய மீளில் வீடு ஆகும் என நாடி
அருள்பெறா அனாசார கரும யோகி ஆகாமல் அவனி மீதில் ஓயாது தடுமாறும்
உடலம் வேறு யான் வேறு கரணம் வேறு வேறாக உதறி வாசகாதீத அடியூடே
உருகி ஆரியாசார பரம யோகி ஆம் ஆறும் உன் உபய பாத ராசீகம் அருள்வாயே
வட பராரை மா மேரு கிரி எடா நடா மோது மகர வாரி ஓர் ஏழும் அமுதாக
மகுட வாள் அரா நோவ மதியம் நோவ வாரீச வனிதை மேவும் தோள் ஆயிரமும் நோவ
கடையும் ஆதி கோபாலன் மருக சூலி காபாலி புதல்வ கான வேல் வேடர் கொடி கோவே
கனக லோக பூபால சகல லோக ஆதார கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#1045
அமல வாயு ஓடாத கமல நாபி மேல் மூல அமுத பானமே மூல அனல் மூள
அசையுறாது பேராத விதமும் மேவி ஓவாது அரி சதான சோபானம் அதனாலே
எமனை மோதி ஆகாச கமனமாம் மனோபாவம் எளிது சால மேலாக உரையாடும்
எனது யானும் வேறாகி எவரும் யாதும் யான் ஆகும் இதய பாவனாதீதம் அருள்வாயே
விமலை தோடி மீதோடு யமுனை போல ஓர் ஏழு விபுத மேகமே போல உலகு ஏழும்
விரிவு காணும் மாமாயன் முடிய நீளுமா போல வெகு வித முகாகாய பதம் ஓடி
கமல யோனி வீடான ககன கோள மீது ஓடி கலப நீல மாயூர இளையோனே
கருணை மேகமே தூய கருணை வாரியே ஈறு இல் கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#1046
அயிலின் வாளி வேல் வாளி அளவு கூரிதாய் ஈசர் அமுத அளாவு ஆவேச மது போல
அறவு நீளிதாய் மீள அகலிதாய் வார்காதின் அளவும் ஓடி நீடு ஓதி நிழல் ஆறி
துயில் கொளாத வானோரும் மயல் கொளாத ஆவேத துறவரான பேர் யாரும் மடல் ஏற
துணியுமாறு உலா நீல நயன மாதராரோடு துவளுவேனை ஈடேறு நெறி பாராய்
பயிலும் மேக நீகாரம் சயல ராசன் வாழ்வான பவதி யாமளா வாமை அபிராமி
பரிபுரார பாதார சரணி சாமளாகார பரம யோகினீ மோகி மகமாயி
கயிலையாளர் ஓர் பாதி கடவுளாளி லோகாயி கன தனாசலாபார அமுதூறல்
கமழும் ஆரணா கீத கவிதை வாண வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#1047
இரதமான வாய் ஊறல் பருகிடா விடாய் போக இனிய போக வார் ஆழி அதில் மூழ்கி
இதயம் வேறு போகாமல் உருகி ஏகமாய் நாளும் இனிய மாதர் தோள் கூடி விளையாடும்
சரச மோகம் மா வேத சரியை யோக க்ரியா ஞான சமுகமோ தரா பூத முதலான
சகளமோ சடாதார முகுளமோ நிராதார தரணியோ நிராகார வடிவேயோ
பரத நீல மாயூர வரத நாக கேயூர பரம யோகி மா தேசி மிகு ஞான
பரமர் தேசிகா வேட பதி வ்ருதா சுசீ பாத பதும சேகரா வேலை மறவாத
கரதலா விசாகா சகல கலாதரா போதக முக மூஷிகாரூட மத தாரை
கடவுள் தாதை சூழ்போதில் உலகம் ஏழும் சூழ் போது கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#1048
குருதி தோலினால் மேவு குடிலில் ஏதம் ஆம் ஆவி குலைய ஏமனால் ஏவிவிடு காலன்
கொடிய பாசம் ஓர் சூல படையினோடு கூசாத கொடுமை நோய்கொடே கோலி எதிரா முன்
பருதி சோமன் வான் நாடர் படி உளோர்கள் பால் ஆழி பயம் உறாமல் வேல் ஏவும் இளையோனே
பழுதுறாத பா வாணர் எழுதொணாத தோள் வீர பரிவினோடு தாள் பாட அருள்தாராய்
மருது நீறு அதாய் வீழ வலி செய் மாயன் வேய் ஊதி மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி
வரு முராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின் வசனமோ மறா கேசன் மருகோனே
கருதொணாத ஞானாதி எருதில் ஏறு காபாலி கடிய பேயினோடு ஆடி கருதார் வெம்
கனலில் மூழ்கவே நாடி புதல்வ காரணாதீத கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#1049
சுருதியூடு கேளாது சரியையாளர் காணாது துரிய மீது சாராது எவராலும்
தொடரொணாது மா மாயை இடை புகாது ஆனாத சுக மகோததீ ஆகி ஒழியாது
பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது பவனம் வீசில் வீழாது சலியாது
பரவை சூழில் ஆழாது படைகள் மோதில் மாயாது பரம ஞான வீடு ஏது புகல்வாயே
நிருதர் பூமி பாழாக மகர பூமி தீ மூள நிபிட தாரு கா பூமி குடியேற
நிகர பார நீகாரம் சிகர மீது வேல் ஏவு நிருப வேத ஆசாரியனும் மாலும்
கருதும் ஆகமாசாரி கனக கார் முகாசாரி ககன சாரி பூசாரி வெகு சாரி
கயிலை நாடகாசாரி சகல சாரி வாழ்வான கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#1050
தொட அடாது நேராக வடிவு காண வாராது சுருதி கூறுவாராலும் எதிர் கூற
துறை இலாததோர் ஆசை இறைவனாகி ஓர் ஏக துரியமாகி வேறு ஆகி அறிவாகி
நெடிய கால் கையோடு ஆடும் உடலில் மேவி நீ நானும் எனவு நேர்மை நூல் கூறி நிறை மாயம்
நிகரில் காலனார் ஏவ முகரியான தூதாளி நினைவோடு ஏகும் ஓர் நீதி மொழியாதோ
அடல் கெடாத சூர் கோடி மடிய வாகை வேல் ஏவி அமர் செய் வீர ஈராறு புய வேளே
அழகினோடு மான் ஈனும் அரிவை காவலா வேதன் அரியும் வாழ வான் ஆளும் அதி ரேகா
கடு விடா களா ரூப நட விநோத தாடாளர் கருதிடார்கள் தீ மூள முதல் நாடும்
கடவுள் ஏறு மீது ஏறி புதல்வ காரணா வேத கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#1051
நிலவில் மாரன் ஏறு ஊதை அசைய வீசும் ஆராம நிழலில் மாட மா மாளிகையில் மேலாம்
நிலையில் வாச மாறாத அணையில் மாதராரோடு நியதியாக வாயார வயிறார
இலவில் ஊறு தேன் ஊறல் பருகி ஆர் அவா மீறி இளகி ஏறு பாடீர தன பாரம்
எனது மார்பிலே மூழ்க இறுக மேவி மால் கூருகினும் உன் நீப சீர் பாதம் மறவேனே
குல வியோக பாகீரதி மிலை நாதர் மா தேவர் குழைய மாலிகா நாகமொடு தாவி
குடில கோமளாகார சடிலம் மோலி மீது ஏறு குமர வேட மாதோடு பிரியாது
கலவி கூரும் ஈர் ஆறு கனக வாகுவே சூரர் கடக வாரி தூளாக அமர் ஆடும்
கட கபோல மால் யானை வனிதை பாக வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#1052
மன கபாட பாடீர தனம் தராதர ரூப மதன ராச ராசீப சர கோப
வருண பாதகாலோக தருண சோபிதாகார மகளிரோடு சீராடி இதம் ஆடி
குனகுவேனை நாணாது தனகுவேனை வீணான குறையனேனை நாயேனை வினையேனை
கொடியனேனை ஓதாத குதலையேனை நாடாத குருடனேனை நீ ஆள்வது ஒரு நாளே
அநக வாமனாகாரம் முநிவர் ஆகம் மால் தேட அரிய தாதை தான் ஏவ மதுரேசன்
அரிய சாரதா பீடம் அதனில் ஏறி ஈடேற அகில நாலும் ஆராயும் இளையோனே
கனக பாவனாகார பவள கோமளாகார கலப சாமளாகர மயில் ஏறும்
கடவுளே க்ருபாகார கமல வேதனாகார கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#1053
அதல சேடனார் ஆட அகில மேரு மீது ஆட அபின காளி தான் ஆட அவளோடு அன்று
அதிர வீசி வாதாடும் விடையில் ஏறுவார் ஆட அருகு பூத வேதாளம் அவை ஆட
மதுர வாணி தான் ஆட மலரில் வேதனார் ஆட மருவு வான் உளோர் ஆட மதி ஆட
வனச மாமியார் ஆட நெடிய மாமனார் ஆட மயலும் ஆடி நீ ஆடி வரவேணும்
கதை விடாத தோள் வீமன் எதிர் கொள் வாளியால் நீடு கருதலார்கள் மா சேனை பொடியாக
கதறு காலி போய் மீள விஜயன் ஏறு தேர் மீது கனக வேத கோடு ஊதி அலை மோதும்
உததி மீதிலே சாயும் உலக மூடு சீர் பாதம் உவணம் ஊர்தி மா மாயன் மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மா ராஜன் உளமும் ஆட வாழ் தேவர் பெருமாளே

மேல்

#1054
குருதி மூளை ஊன் நாறு மலம் அறாத தோல் மூடு குடிசை கோழை மாசு ஊறு குழி நீர் மேல்
குமிழி போல நேராகி அழியும் மாயை ஆதார குறடு பாறு நாய் கூளி பல காகம்
பருகு காயமே பேணி அறிவிலாமலே வீணில் படியின் மூழ்கியே போது தளிர் வீசி
பரவு நாடகாசார கிரியையாளர் காணாத பரம ஞான வீடு ஏது புகல்வாயே
எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான இமயமாது மா சூலி தரு பாலா
எழுமை ஈறு காண் நாதார் முநிவரோடு வான் நாடர் இசைகளோடு பாராட மகிழ்வோனே
அரவினோடு மா மேரு மகர வாரி பூலோகம் அதிர நாகம் ஓர் ஏழும் பொடியாக
அலகை பூத மாகாளி சமர பூமி மீது ஆட அசுரர் மாள வேல் ஏவு பெருமாளே

மேல்

#1055
சரியும் அவல யாக்கையுள் எரியும் உரிய தீ பசி தணிகை பொருடு இராப்பகல் தடுமாறும்
சகல சமய தார்க்கிகர் கலகம் ஒழிய நாக்கொடு சரண கமலம் ஏத்திய வழிபாடு உற்று
அரிய துரிய மேல் படு கருவி கரணம் நீத்தது ஒர் அறிவின் வடிவமாய் புளகிதமாகி
அவச கவசம் மூச்சு அற அமரும் அமலர் மேல் சில ரதி பதி விடு பூ கணை படுமோ தான்
விரியும் உதய பாஸ்கர கிரணம் மறைய ஆர்ப்பு எழ மிடையும் அலகில் தேர் படையொடு சூழும்
விகட மகுட பார்த்திபர் அனைவருடனு நூற்றுவர் விசையன் ஒருவனால் பட ஒரு தூது
திரியும் ஒரு பராக்ரம அரியின் மருக பார்ப்பதி சிறுவ தறுகண் வேட்டுவர் கொடி கோவே
திமிர உததி கூப்பிட அவுணர் மடிய வேல் கொடு சிகரி தகர வீக்கிய பெருமாளே

மேல்

#1056
மகளும் மனைவி தாய் குலம் அணையும் அனைவர் வாக்கினில் மறுகி புறமும் ஆர்த்திட உடலூடே
மருவும் உயிரை நோக்கமும் எரியை உமிழ ஆர்ப்பவர் உடனும் இயமன் மாட்டிட அணுகா முன்
உகமும் முடிவுமா செலும் உதயம் மதியின் ஓட்டமும் உளதும் இலதும் ஆச்சு என உறைவோரும்
உருகும் உரிமை காட்டிய முருகன் எனவு நா கொடு உனது கழல்கள் போற்றிட அருள்தாராய்
புகல அரிய போர் சிலை விரகு அ விசயனால் புகழ் உடைய திருதராட்டிர புதல்வோர்தம்
புரவி கரிகள் தேர் படை மடிய அரசை மாய்த்து உயர் புவியின் விதனம் மாற்றினர் மருகோனே
மிகவும் மலையும் மா கடல் முழுதும் மடிய வேற்று உரு எனவும் மருவி வேல் கொடு பொரு சூரன்
விரை செய் நெடிய தோள் கன அடல் உருவ வேல் படை விசையம் உறவும் வீக்கிய பெருமாளே

மேல்

#1057
குடரும் நீர் கொழு மலமும் ஈந்து ஒரு குறைவு இலா பல என்பினாலும்
கொடிய நோய்க்கு இடம் எனவும் நாட்டிய குடிலிலே ஏற்று உயிர் என்று கூறும்
வடிவு இலா புலம் அதனை நாட்டிடு மறலி ஆள் பொர வந்திடா முன்
மதியும் மூத்து உனது அடிகள் ஏத்திட மறுவு இலா பொருள் தந்திடாதோ
கடிய காட்டகம் உறையும் வேட்டுவர் கருதொணா கணி வேங்கை ஆகி
கழை செய் தோள் குற மயிலை வேட்டு உயர் களவினால் புணர் கந்த வேளே
முடுகி மேல் பொரும் அசுரார் ஆர்ப்பு எழ முடிய வேல் கொடு வென்ற வீரா
முடிவு இலா திருவடிவை நோக்கிய முதிய மூர்த்திகள் தம்பிரானே

மேல்

#1058
பொதுவதாய் தனி முதல் அதாய் பகல் இரவு போய் புகல்கின்ற வேத
பொருளதாய் பொருள் முடிவதாய் பெரு வெளியதாய் புதைவு இன்றி ஈறு இல்
கதியதாய் கருது அரியதாய் பருக அமுதமாய் புலன் ஐந்தும் மாய
கரணம் மாய்த்து எனை மரணம் மாற்றிய கருணை வார்த்தையில் இருந்த ஆறு என்
உததி கூப்பிட நிருதர் ஆர்ப்பு எழ உலகு போற்றிட வெம் கலாப
ஒரு பராக்ரம துரகம் ஓட்டிய உரவ கோ கிரி நண்ப வானோர்
முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை முலைகள் தேக்கிட உண்ட வாழ்வே
முளரி பாற்கடல் சயிலம் மேல் பயில் முதிய மூர்த்திகள் தம்பிரானே

மேல்

#1059
கவடு கோத்து எழும் உவரி மா திறல் காய் வேல் பாடேன் ஆடேன் வீடானது கூட
கருணை கூர்ப்பன கழல்கள் ஆர்ப்பன கால் மேல் வீழேன் வீழ்வார் கால் மீதினும் வீழேன்
தவிடின் ஆர் பதம் எனினும் ஏற்பவர் தாழாது ஈயேன் வாழாதே சாவது சால
தரமும் மோக்ஷமும் இனி என் யாக்கை சதா ஆமாறே நீ தான் நாதா புரிவாயே
சுவடு பார்த்து அட வரு கரா தலை தூள் ஆமாறே தான் ஆ நாராயணனே நல்
துணைவ பாற்கடல் வனிதை சேர்ப்ப துழாய் மார்பா கோபாலா காவாய் எனவே கை
குவடு கூப்பிட உவணம் மேல் கன கோடூ ஊதா வானே போது ஆள்வான் மருகோனே
குலிச பார்த்திபன் உலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே

மேல்

#1060
பருதியாய் பனி மதியமாய் படர் பாராய் வானாய் நீர் தீ காலாய் உடு சாலம்
பலவுமாய் பல கிழமையாய் பதி நாலு ஆறு ஏழாம் மேல் நாளாய் ஏழு உலகமாகி
சுருதியாய் சுருதிகளின் மேல் சுடராய் வேதாவாய் மாலாய் மேலே சிவம் ஆன
தொலைவு இலா பொருள் இருள் புகா கழல் சூடா நாடா ஈடேறாதே சுழல்வேனோ
திருதராட்டிரன் உதவு நூற்றுவர் சேணாடு ஆள்வான் நாள் ஓர் மூவாறினில் வீழ
திலக பார்த்தனும் உலகு காத்து அருள் சீரு ஆமாறே தேர் ஊர் கோமான் மருகோனே
குருதி வேல் கர நிருத ராக்ஷத கோபா நீபா கூதாளா மா மயில் வீரா
குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே

மேல்

#1061
முதலி யாக்கையும் இளமை நீத்து அற மூவா தாராகாவாதாரா என ஞாலம்
முறையிடா படு பறைகள் ஆர்த்து எழ மூடா வீடூடே கேள் கோகோ என நோவ
மதலை கூப்பிட மனைவி கூப்பிட மாதா மோதா வீழா வாழ்வே என மாய
மறலி ஊர் புகு மரண யாத்திரை வாரா வான் ஆள் போ நாம் நீ மீள் என வேணும்
புதல் அறா புன எயினர் கூக்குரல் போகா நாடா பாரா வாரார் அசுர் ஓட
பொருது தாக்கிய வய பராக்ரம பூபாலா நீபா பாலா தாதையும் ஓதும்
குதலை வாய் குரு பர சடாக்ஷர கோடு ஆர் ரூபா அரூபா பார் ஈ சத வேள்வி
குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே

மேல்

#1062
வருக வீட்டு எனும் விரகர் நேத்திரம் வாளோ வேலோ சேலோ மானோ எனும் மாதர்
மனது போல் கருகின குவால் குழல் வானோ கானோ மாயா மாயோன் வடி வேலா
பருகு பாற்கடல் முருகு தேக்கிய பாலோ தேனோ பாகோ வானோர் அமுதேயோ
பவள வாய் பனி மொழி எனா கவி பாடா நாயேன் ஈடேறாதே ஒழிவேனோ
அருகு பார்ப்பதி உருகி நோக்க ஒரு ஆல் கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ என ஏகி
அவுணர் கூப்பிட உததி தீ பட ஆகா சூரா போகாதே மீள் என ஓடி
குருகு பேர் கிரி உருவ ஓச்சிய கூர் வேலாலே ஓர் வாளாலே அமர் ஆடி
குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே

மேல்

#1063
மறலி போல் சில நயன வேல் கொடு மாயா தோயா வேய் ஆர் தோளார் மறை ஓதும்
வகையும் மார்க்கமும் மறமும் மாய்த்திடவாறு ஆராயாதே போம் ஆறா திடம் தீரம்
விறலும் மேல் பொலி அறிவும் ஆக்கமும் வேறாய் நீர் ஏறாதே ஓர் மேடாய் வினையூடே
விழுவினால் களை எழும் அதால் பெரு வீரா பாராய் வீணே மேவாது எனை ஆளாய்
மறலி சாய்த்தவர் இறை பராக்ரம மால் காணாதே மாதோடே வாழ்பவர் சேயே
மறு இலா திருவடிகள் நாள்தொறும் வாயார் நாவால் மாறாதே ஓதினர் வாழ்வே
குறவர் கால் புன அரிவை தோள் கன கோடு ஆர் மார்பா கூர் வேலாலே அசுரேசர்
குலைய மா கடல் அதனில் ஓட்டிய கோவே தேவே வேளே வானோர் பெருமாளே

மேல்

#1064
குருதி ஒழுகி அழுகு அவல குடிலை இனிது புகலாலே
குலவும் இனிய கலவி மகளிர் கொடிய கடிய விழியாலே
கருதும் எனது விரகம் முழுது கலக மறலி அழியா முன்
கனக மயிலின் அழகு பொலிய கருணை மருவி வரவேணும்
பரிதி சுழல மருவு கிரியை பகிர எறிசெய் பணி வேலா
பணில உததி அதனில் அசுரர் பதியை முடுக வரும் வீரா
இரதிபதியை எரிசெய்து அருளும் இறைவர் குமர முருகோனே
இலகு கமல முகமும் அழகு எழுத அரிய பெருமாளே

மேல்

#1065
துயரம் அறு நின் வறுமை தொலையும் மொழியும் அமிர்த சுர பானம்
சுரபி குளிகை எளிது பெறுக துவளும் எமது பசி தீர
தயிரும் அமுதும் அமையும் இடுக சவடி கடக நெளி காறை
தருக தகடொடு உறுக எனும் இ விரகு தவர்வதும் ஒரு நாளே
உயரு நிகரில் சிகரி மிடறும் உடலும் அவுணர் நெடு மார்பும்
உருவ மகர முகர திமிர உததி உதரம் அது பீற
அயரும் அமரர் சரண நிகளம் முறிய எறியும் அயில் வீரா
அறிவும் உரமும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே

மேல்

#1066
பணிகள் பணமும் அணி கொள் துகில்கள் பழைய அடிமையொடு மாதும்
பகரில் ஒருவர் வருக அரிய பயணம் அதனில் உயிர் போக
குணமும் மனமும் உடைய கிளைஞர் குறுகி விறகி உடல் போடா
கொடுமை இடும் முன் அடிமை அடிகள் குளிர மொழிவது அருள்வாயே
இணையில் அருணை பழநி கிழவ இளைய இறைவ முருகோனே
எயினர் வயினின் முயலும் மயிலை இரு கை தொழுது புணர் மார்பா
அணியொடு அமரர் பணிய அசுரர் அடைய மடிய விடும் வேலா
அறிவும் உரமும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே

மேல்

#1067
மைந்தர் இனிய தந்தை மனைவி மண்டி அலறி மதி மாய
வஞ்ச விழிகள் விஞ்சும் மறலி வன் கை அதனில் உறு பாசம்
தந்து வளைய புந்தி அறிவு தங்கை குலைய உயிர் போ முன்
தம்பம் உனது செம்பொன் அடிகள் தந்து கருணை புரிவாயே
மந்தி குதி கொள் அம் தண் வரையில் மங்கை மருவும் மணவாளா
மண்டும் அசுரர் தண்டம் உடைய அண்டர் பரவ மலைவோனே
இந்து நுதலும் அந்த முகமும் என்றும் இனிய மடவார்தம்
இன்பம் விளைய அன்பின் அணையும் என்றும் இளைய பெருமளே

மேல்

#1068
ஒழுகு ஊன் இரத்தமொடு தோல் உடுத்தி உயர் கால் கரத்தின் உருவாகி
ஒரு தாய் வயிற்றின் இடையே உதித்து உழல் மாயம் மிக்கு வரு காயம்
பழசாய் இரைப்பொடு இளையா விருத்த பரிதாபமுற்று மடியா முன்
பரிவால் உளத்தில் முருகா என சொல் பகர் வாழ்வு எனக்கும் அருள்வாயே
எழு வான் அகத்தில் இருநாலு திக்கில் இமையோர்தமக்கும் அரசாகி
எதிர் ஏறு மத்த மத வாரணத்தில் இனிது ஏறு கொற்றமுடன் வாழும்
செழு மா மணி பொன் நகர் பாழ்படுத்து செழு தீ விளைத்து மதில் கோலி
திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த சிறை மீளவிட்ட பெருமாளே

மேல்

#1069
கருவாய் வயிற்றில் உருவாய் உதித்து முருகாய் மன கவலையோடே
கலை நூல் பிதற்றி நடுவே கறுத்த தலை போய் வெளுத்து மரியாதே
இரு போதும் மற்றை ஒரு போதும் இட்ட கனல் மூழ்கி மிக்க புனல் மூழ்கி
இறவாத சுத்த மறையோர் துதிக்கும் இயல் போதகத்தை மொழிவாயே
அரும் ஆதபத்த அமராபதிக்கு வழி மூடி விட்டு அதனை மீள
அயிராவதத்து விழி ஆயிரத்தன் உடனே பிடித்து முடியாதே
திருவான கற்ப தரு நாடு அழித்து விபு தேசர் சுற்றம் அவை கோலி
திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த சிறை மீள விட்ட பெருமாளே

மேல்

#1070
புரக்க வந்த நம் குற கரும்பை மென் புனத்தில் அன்று சென்று உறவாடி
புடைத்து அலங்க்ருதம் படைத்து எழுந்த திண் புது குரும்பை மென் புயம் மீதே
செருக்க நெஞ்சகம் களிக்க அன்புடன் திளைக்கும் நின் திறம் புகலாது
இந்த்ரிய கடம் சுமந்து அலக்கண் மண்டிடும் தியக்கம் என்று ஒழிந்திடுவேனோ
குரக்கு இனம் கொணர்ந்து அரக்கர் தண்டமும் குவட்டு இலங்கையும் துகளாக
கொதித்த கொண்டலும் த்ரிஅக்ஷரும் கடம் கொதித்து மண்டு வெம் பகை ஓட
துரக்கும் விம்பகம் புரி ப்ரசண்ட சிந்துரத்தனும் பிறந்து இறவாத
சுகத்தில் அன்பரும் செக த்ரயங்களும் துதிக்கும் உம்பர்தம் பெருமாளே

மேல்

#1071
பெருக்க நெஞ்சு உவந்து உருக்கும் அன்பிலன் ப்ரபு தனங்கள் பண்பு எணும் நாணும்
பிழைக்க ஒன்றிலன் சிலை கை மிண்டர் குன்று அமைத்த பெண் தனம்தனை ஆர
திரு கை கொண்டு அணைந்திட செல்கின்ற நின் திறத்தை அன்புடன் தெளியாதே
சினத்தில் மண்டி மிண்டு உரைக்கும் வம்பன் என் திருக்கும் என்று ஒழிந்திடுவேனோ
தருக்கி அன்று சென்று அருள் கண் ஒன்று அரன் தரித்த குன்ற நின்று அடியோடும்
தட கை கொண்டு வந்து எடுத்தவன் சிரம் தறிக்க கண்டன் எண் திசையோடும்
சுருக்கம் இன்றி நின்று அருக்கன் இந்திரன் துணை செய்கின்ற நின் பதம் மேவும்
சுகத்தில் அன்பரும் செக த்ரயங்களும் துதிக்கும் உம்பர்தம் பெருமாளே

மேல்

#1072
இருந்த வீடும் கொஞ்சிய சிறுவரும் உரு கேளும்
இசைந்த ஊரும் பெண்டிரும் இளமையும் வளம் மேவும்
விரிந்த நாடும் குன்றமும் நிலை என மகிழாதே
விளங்கு தீபம் கொண்டு உனை வழிபட அருள்வாயே
குருந்தில் ஏறும் கொண்டலின் வடிவினன் மருகோனே
குரங்கு உலாவும் குன்று உரை குறமகள் மணவாளா
திருந்த வேதம் தண் தமிழ் தெரி தரு புலவோனே
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே

மேல்

#1073
கலந்த மாதும் கண் களியுற வரு புதல்வோரும்
கலங்கிடார் என்று இன்பமுறு உலகிடை கலி மேவி
உலந்த காயம் கொண்டு உளம் துயருடன் மேவா
உகந்த பாதம் தந்து உனை உரை செய அருள்வாயே
மலர்ந்த பூவின் மங்கையை மருவு அரி மருகோனே
மறம் செய்வார்தம் வஞ்சியை மருவிய மணவாளா
சிலம்பினோடும் கிண்கிணி திசைதொறும் ஒலி வீச
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே

மேல்

#1074
இசைந்த ஏறும் கரி உரி போர்வையும் எழில் நீறும்
இலங்கு நூலும் புலி அதள் ஆடையும் மழு மானும்
அசைந்த தோடும் சிர மணி மாலையும் முடி மீதே
அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய குருநாதா
உசந்த சூரன் கிளையுடன் வேரற முனிவோனே
உகந்த பாசங்கயிறொடு தூதுவர் நலியாதே
அசந்தபோது என் துயர் கெட மா மயில் வரவேணும்
அமைந்த வேலும் புயம் மிசை மேவிய பெருமாளே

மேல்

#1075
திரிபுர மதனை ஒரு நொடி அதனில் எரிசெய்து அருளிய சிவன் வாழ்வே
சினம் உடை அசுரர் மனம் அது வெருவ மயில் அது முடுகி விடுவோனே
பரு வரை அதனை உருவிட எறியும் அறு முகம் உடைய வடி வேலா
பசலையொடு அணையும் இள முலை மகளை மதன் விடு பகழி தொடலாமோ
கரி திரு முகமும் இடம் உடை வயிறும் உடையவர் பிறகு வருவோனே
கன தனம் உடைய குறவர்தம் மகளை கருணையொடு அணையும் மணி மார்பா
அரவணை துயிலும் அரி திரு மருக அவனியும் முழுதும் உடையோனே
அடியவர் வினையும் அமரர்கள் துயரும் அற அருள் உதவு பெருமாளே

மேல்

#1076
புழுகு அகில் களபம் ஒளி விடு தரளம் மணி பல செறிய வட மேரு
பொரும் இரு கலச முலையினை அரிவை புனை இடு பொதுவின் மட மாதர்
அழகிய குவளை விழியினும் அமுத மொழியினும் அவச அநுராக
அமளியின் மிசையில் அவர் வசம் உருகி அழியும் நின் அடிமைதனை ஆள்வாய்
குழல் இசை அது கொடு அற வெருள் சுரபி குறு நிரை அருளி அலை மோதும்
குரை செறி உததி வரைதனில் விசுறு குமுகுமுகுமு என உலகோடு
முழு மதி சுழல வரை நெறுநெறு என முடுகிய முகிலின் மருகோனே
மொகுமொகுமொகு என ஞிமிறு இசை பரவு முளரியின் முதல்வர் பெருமாளே

மேல்

#1077
முழு மதி அனைய முகம் இரு குழையில் முனி விழி முனைகள் கொண்டு மூவா
முதல் அறிவு அதனை வளைபவர் கலவி முழுகிய வினையை மொண்டு நாயேன்
வழிவழி அடிமை எனும் அறிவு அகல மனமுறு துயர்கள் வெந்து வாட
மதி தரும் அதிக கதி பெறும் அடிகள் மகிழ்வொடு புகழும் அன்பு தாராய்
எழுதிட அரிய எழில் மற மகளின் இரு தன கிரிகள் தங்கும் மார்பா
எதிர் பொரும் அசுரர் பொடிபட முடுகி இமையவர் சிறையை அன்று மீள்வாய்
அழகிய குமர எழு தலம் மகிழ அறுவர்கள் முலையை உண்ட வாழ்வே
அமர் உலகு இறைவ உமை தரு புதல்வ அரி அர பிரமர் தம்பிரானே

மேல்

#1078
கொடியன பிணி கொடு விக்கி கக்கி கூன் போந்து அசடு ஆகும்
குடில் உற வரும் ஒரு மிக்க சித்ர கோண் பூண்டு அமையாதே
பொடிவன பர சமயத்து தப்பி போந்தேன் தலை மேலே
பொருள் அது பெற அடி நட்பு சற்று பூண்டு ஆண்டு அருள்வாயே
துடி பட அலகைகள் கைக்கொட்டிட்டு சூழ்ந்து ஆங்கு உடன் ஆட
தொகுதொகு திகுதிகு தொக்கு திக்கு தோம்தாம் தரி தாளம்
படி தரு பதிவ்ரதை ஒத்த சுத்த பாழ் கான்தனில் ஆடும்
பழயவர் குமர குற தத்தைக்கு பாங்காம் பெருமாளே

மேல்

#1079
சுடர் ஒளி கதிரவன் உற்று பற்றி சூழ்ந்து ஓங்கிடு பாரில்
துயர் இருவினை பல சுற்றப்பட்டு சோர்ந்து ஓய்ந்திட நாறும்
கடுகென எடும் எனும் உடல் பற்று அற்று கான் போந்து உறவோரும்
கனலிடை விதி இடு தத்துக்கத்தை காய்ந்து ஆண்டு அருளாயோ
தடம் உடை வயிரவர் தற்கித்து ஒக்க தாம் தோய்ந்து இரு பாலும்
தமருக ஒலி சவுதத்தில் தத்த தாழ்ந்து ஊர்ந்திட நாகம்
படி நெடியவர் கரம் ஒத்த கெத்து பாய்ந்து ஆய்ந்து உயர் கானம்
பயில்பவர் புதல்வ குற தத்தைக்கு பாங்காம் பெருமாளே

மேல்

#1080
குடம் என ஒத்த கொங்கை குயில் மொழி ஒத்த இன் சொல் குறமகள் வைத்த நண்பை நினைவோனே
வடவரை உற்று உறைந்த மக தேவர் பெற்ற கந்த மத சலம் உற்ற தந்தி இளையோனே
இடமுடன் வைத்த சிந்தை இனைவு அற முத்தி தந்து இசை அறிவித்து வந்து எனை ஆள்வாய்
தட வரை வெற்பில் நின்று சரவணம் உற்று எழுந்து சமர் கள வெற்றி கொண்ட பெருமாளே

மேல்

#1081
மடவியர் எச்சில் உண்டு கையில் முதலை களைந்து மறுமைதனில் சுழன்று வடிவான
சடம் மிக வற்றி நொந்து கலவி செய துணிந்து தளருறுதற்கு முந்தி எனை ஆள்வாய்
பட அரவில் சிறந்த இடம் இது என துயின்று பசு முகிலுக்கு உகந்த மருகோனே
குட முனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர குறத்தி நம்பும் பெருமாளே

மேல்

#1082
கரு மயல் ஏறி பெருகிய காம கடலினில் மூழ்கி துயராலே
கயல் விழியாரை பொருள் என நாடி கழியும் நாளில் கடை நாளே
எருமையில் ஏறி தருமனும் வாவுற்று இறுகிய பாசக்கயிறாலே
எனை வளையாமல் துணை நினைவேனுக்கு இயல் இசை பாட தரவேணும்
திரு மயில் சேர் பொன் புயன் என வாழ் அ தெரியலன் ஓட பொரும் வீரா
செக தலம் மீதில் பகர் தமிழ் பாடல் செழு மறை சேர் பொன் புய நாதா
பொரு மயில் ஏறி கிரி பொடியாக புவி அது சூழ திரிவோனே
புன மகளாரை கன தன மார்பில் புணரும் விநோத பெருமாளே

மேல்

#1083
குடலிடை தீதுற்று இடை பீறி குலவிய தோல் அத்தியினூடே
குருதியிலே சுக்கிலம் அது கூடி குவலயம் வான் அப்பு ஒரு காலாய்
உடல் எழும் மாய பிறவியில் ஆவித்து உறு பிணி நோய் உற்று உழலாதே
உரை அடியேனுக்கு ஒளி மிகு நீபத்து உனது இரு தாளை தரவேணும்
கடலிடை சூர படை பொடியாக கருதலர் ஓட பொரும் வேலா
கதிர் விடு வேலை கதிரினில் மேவி கலை பல தேர் முத்தமிழ் நாடா
சடையினர் நாட படர் மலை ஓடி தனி விளையாடி திரிவோனே
தனி மட மானை பரிவுடன் ஆர தழுவும் விநோத பெருமாளே

மேல்

#1084
கருதியே மெத்த விடம் எலாம் வைத்த கலக வாள் ஒத்த விழி மானார்
கடின போகத்த புளக வாருற்ற களபம் ஆர் செப்பு முலை மீதே
உருகி யான் மெத்த அவசமேயுற்ற உரைகளே செப்பி அழியாது உன்
உபய பாதத்தின் அருளையே செப்பும் உதய ஞானத்தை அருள்வாயே
பருவரால் உற்று மடுவின் மீதுற்ற பகடு வாய் விட்ட மொழியாலே
பரிவினோடுற்ற திகிரி ஏவிட்ட பழைய மாயற்கு மருகோனே
முருகு உலாவுற்ற குழலி வேடிச்சி முலையின் மேவுற்ற க்ருபையோனே
முருகனே பத்தர் அருகனே வெற்பு முரிய வேல் தொட்ட பெருமாளே

மேல்

#1085
கொலையிலே மெத்த விரகிலே கற்ற குவளை ஏர் மை கண் விழி மானார்
குழையிலே எய்த்த நடையிலே நெய்த்த குழலிலே பற்கள்தனில் ஏமா
முலையிலே அற்ப இடையிலே பத்ம முக நிலா வட்டம் அதின் மீதே
முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை மொழியிலே சித்தம் விடலாமோ
கலையனே உக்ர முருகனே துட்டர் கலகனே மெத்த இளையோனே
கனகனே பித்தர் புதல்வனே மெச்சு கடவுளே பச்சை மயிலோனே
உலகனே முத்தி முதல்வனே சித்தி உடையனே விஷ்ணு மருகோனே
ஒருவனே செச்சை மருவு நேர் சித்ர உருவனே மிக்க பெருமாளே

மேல்

#1086
அகில நறும் சேறு ம்ருகமதமும் தோயும் அசலம் இரண்டாலும் இடை போம் என்று
அடியில் விழுந்து ஆடு பரிபுரம் செம் சீர் அது அபயம் இடம் கீதம் அமையாதே
நகம் மிசை சென்று ஆடி வனசரர் சந்தானம் நவை அற நின்று ஏனல் விளைவாள்தன்
லளித அவிர் சிங்கார தனம் உறு சிந்தூர நம சரண் என்று ஓத அருள்வாயே
பகல் இரவு உண்டான இருவரும் வண்டு ஆடும் பரிமளம் பங்கேருகனும் மாலும்
படிக நெடும் பார கடம் தடம் கெம்பீர பணை முகம் செம் பால மணி மாலை
முகபடம் சிந்தூர கரியில் வரும் தேவும் முடிய அரன் தேவி உடன் ஆட
முழுது உலகம் தாவி எழு கடல் மண்டு ஊழி முடிவினும் அஞ்சாத பெருமாளே

மேல்

#1087
கலக மதன் காதும் கன மலர் அம்பாலும் களி மது வண்டு ஊதும் பயிலாலும்
கடல் அலை அங்கு ஆலும் கன இரை ஒன்றாலும் கலை மதியம் காயும் வெயிலாலும்
இலகிய சங்கு ஆளும் இனியவள் அன்பு ஈனும் எனது அரு மின் தான் இன்று இளையாதே
இருள் கெட முன் தான் நின்று இன மணி செம் தார் தங்கு இரு தனமும் தோள் கொண்டு அணைவாயே
உலகை வளைந்து ஓடும் கதிரவன் விண்பால் நின்று உனது அபயம் கா என்று உனை நாட
உரவிய வெம் சூரன் சிரமுடன் வன் தோளும் உருவி உடன் போதும் ஒளி வேலா
அலகையுடன் பூதம் பல கவிதம் பாடும் அடைவுடன் நின்றாடும் பெரியோர் முன்
அறமும் அறம் தோயும் அறிவும் நிரம்ப ஓது என்று அழகுடன் அன்று ஓதும் பெருமாளே

மேல்

#1088
குருதி சலம் தோலும் குடலுடன் என்பு ஆலும் குலவி எழும் கோலம்தனில் மாய
கொடுமையுடன் கோபம் கடு விரகம் சேரும் குண உயிர் கொண்டு ஏகும்படி காலன்
கருதிடு நெடும் பாசம் கொடு வர நின்று ஆயும் கதற மறந்தேன் என்று அகலா முன்
கமலம் மலர்ந்து ஏறும் குகன் எனவும் போது உன் கருணை மகிழ்ந்து ஓதும் கலை தாராய்
நிருதர் தளம் சூழும் பெரிய நெடும் சூரன் நினைவும் அழிந்து ஓடும்படி வேலால்
நிகரில் அதம் பார் ஒன்று இமையவர் நெஞ்சால் நின் நிலை தொழ நின்றே முன் பொரு வீரா
பருதியுடன் சோமன் படியை இடந்தானும் பரவி விடம் தான் உண்டு எழு பாரும்
பயம் அற நின்று ஆடும் பரமர் உளம் கூரும் பழ மறை அன்று ஓதும் பெருமாளே

மேல்

#1089
இருவினைகள் ஈட்டும் இழிவு படு கூட்டை எடும்எடும் என வீட்டில் அனைவோரும்
இறுதி இடுகாட்டில் அழுது தலைமாட்டில் எரிய எரிமூட்டி இடுமாறு
கரிய இரு கோட்டு முரண் எருமை மோட்டர் கயிறு இறுக மாட்டி அழையா முன்
கனக மணி வாட்டு மருவு கழல் பூட்டு கழல் இணைகள் காட்டி அருள்வாயே
பருவ மலை நாட்டு மருவு கிளி ஓட்டு பழைய குறவாட்டி மணவாளா
பகைஞர் படை வீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல் நாட்ட குமரேசா
அரு மறைகள் கூட்டி உரைசெய் தமிழ் பாட்டை அடைவடைவு கேட்ட முருகோனே
அலை கடலில் ஈட்ட அவுணர்தமை ஓட்டி அமரர் சிறை மீட்ட பெருமாளே

மேல்

#1090
உறவின் முறையோர்க்கும் உறு துயரம் வாய்த்து உளம் உருகு தீர்த்து இ உடலூடே
உடலை முடிவாக்கு நெடியது ஒரு காட்டில் உயர் கனலை மூட்டி விட ஆவி
மறலி மறம் ஆர்த்த கயிறுதனை வீக்கி வடிவினொடு தாக்கி வளையா முன்
மனமும் உனி வேட்கை மிகவும் உன தாள்கள் மகிழ்வு இயல் கொடு ஏத்த மதி தாராய்
பிறை நுதலி சேல் கண் அமை அரிவை வேட்பு வரையில் மறவோர்க்கு மகவாக
பிறிது உருவில் வாய்த்து நிறை தினைகள் காத்த பிடியின் அடி போற்று மணவாளா
அறுகு பிறை ஆத்தி அலை சலமும் ஆர்த்த அடர் சடையினார்க்கு அறிவு ஈவாய்
அடர வரு போர்க்கை அசுரர் கிளை மாய்த்து அமரர் சிறை மீட்ட பெருமாளே

மேல்

#1091
அளக நிரை குலை அழிய விழி குவிய வளை கலகல என அமுத மொழி பதறி எழ அணி ஆரம்
அழகு ஒழுகு புளக முலை குழைய இடை துவள மிக அமுத நிலை அது பரவ அதி மோகம்
உளம் உருக வரு கலவி தரு மகளிர் கொடுமை எனும் உறு கபடம் அதனில் மதி அழியாதே
உலகு அடைய மயிலின் மிசை நொடி அளவில் வலம்வரும் உன் உபய நறு மலர் அடியை அருள்வாயே
வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் இரு மருதினொடு பொருது அருளும் அபிராமன்
வரி அரவின் மிசை துயிலும் வரத ஜயமகள் கொழுநன் மருக அமர் முடுகி வரு நிருதேசர்
தளம் முறிய வரை தகர அசுரர் பதி தலை சிதற தகனம் எழ முடுக விடு வடி வேலா
தரள மணி வடம் இலகு குறவர் திரு மகள் கணவ சகல கலை முழுதும் வல பெருமாளே

மேல்

#1092
அனகன் என அதிகன் என அமலன் என அசலன் என அபயன் என அதுலன் என அநுபாயன்
அடல் மதனன் என விசையன் என முருகன் என நெருடி அவர் பெயரும் இடை செருகி இசைபாடி
வனச மணி பணில மழை சுரபி சுரர் தரு நிகர் கை மகிப என தினை அளவு உளவும் ஈயா
மனிதர் கடைதொறும் உழலும் மிடி ஒழிய மொழி ஒழிய மனம் ஒழிய ஒரு பொருளை அருள்வாயே
இனன் நிலவு தலை மலைய அடியின் உகிர் இலைகள் என இரு சதுர திசையில் உரகமும் வீழ
இரணிய சயிலம் ரசித சயில மரகத சயிலம் என விமலை யமுனை என நிழல் வீசி
ககன மழை உகை கடவுள் உடலம் என முதிய விழி கதுவி எழல் பொதிய மிசை படர் கோல
கலப கக மயில் கடவு நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே

மேல்

#1093
குடரும் மலசலமும் இடையிடை தடியும் உடை அளவு கொழுவும் உதிரமும் வெளிறு அளறுமாக
கொளகொள என அளவில் புழு நெளுநெளு என விளை குருதி குமுகுமு என இடை வழியில் வர நாறும்
உடலின் மணம் மலி புழுகு தடவி அணிகலம் இலக உலகம் மருள் உற வரும் அரிவையார் அன்பு
ஒழிய வினை ஒழிய மனம் ஒழிய இருள் ஒழிய எனது ஒழிவில் அகல் அறிவை அருள்புரிவாயே
வட கனக சயிலம் முதலிய சயிலம் என நெடிய வடிவும் கொளு நெடிய விறல் மருவாரை
வகிரும் ஒரு திகிரி என மதி முதிய பணிலம் என மகர சல நிதி முழுகி விளையாடி
கடல் உலகை அளவு செய வளரும் முகில் என அகில ககன முகடு உற நிமிரும் முழு நீல
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே

மேல்

#1094
குதறும் முனை அறிவு கொடு பதறி எதிர் கதறி மிகு குமுதம் இடு பர சமயம் ஒரு கோடி
குருடர் தெரி அரியது ஒரு பொருள் தெரிய நிகழ் மனது கொடிய இருவினை எனும் அளறு போக
உதறி விதறிய கரண மரணம் அற விரணம் அற உருகி உரை பருகி அநுதின ஞான
உணர்வு விழி பெற உனது மிருகமத நளின பத உகளம் இனி உணர அருள்புரிவாயே
சிதற வெளி முழுதும் ஒளி திகழும் உடு படலம் அவை சிறு பொறிகள் என உரக பிலம் ஏழும்
செக தலமு நிகர் சிகரி பலவு நல கெச புயக திசையும் உடன் உருக வரு கடை நாளில்
கதறும் எழு கடல் பருகி வடவை விடு கரிய புகை என முடிவில் ககன முகடு அதில் ஓடும்
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே

மேல்

#1095
வதை பழகு அ மறலி விறல் மதனன் வழிபடுதும் என வயிரம் மரகத மகரம் அளவாக
வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலக விழி வளை இளைஞர் உயிர் கவர வரும் மாய
இதையம் அளவிட அரிய அரிவையர்கள் நெறி ஒழுகி எழு பிறவி நெறி ஒழிய வழி காணா
இடர்கள் படு குருடன் எனை அடிமை கொள மகிழ்வொடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே
பத உகளம் மலர் தொழுது பழுதில் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா முப்பழமும்
இனிது உதவி முனி பகர வட சிகரி மிசை பரிய தனி எயிறு கொண்டு குருநாடர்
கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட நெடிய கடல் உலகு நொடியில் வரும் அதி வேக
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே

மேல்

#1096
விடம் அளவி அரி பரவு விழி குவிய மொழி பதற விதறி வளை கலகல என அநுராகம்
விளைய ம்ருகமத முகுள முலை புளகம் எழ நுதலில் வியர்வு வர அணி சிதற மது மாலை
அடர் அளகம் அவிழ அணி துகில் அகல அமுது பொதி இதழ் பருகி உருகி அரிவையரோடே
அமளி மிசை அமளி பட விரக சலதியில் முழுகி அவசமுறுகினும் அடிகள் மறவேனே
உடலும் முயலகன் முதுகு நெறுநெறு என எழு திமிரம் உரகர் பிலம் முடிய ஒரு பதம் ஓடி
உருவ முது ககன முகடு இடிய மதி முடி பெயர உயர அகில புவனம் அதிர வீசி
கடக கர தலம் இலக நடனம் இடும் இறைவர் மகிழ் கருத அரிய விதமொடு அழகுடன் ஆடும்
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே

மேல்

#1097
எழு பிறவி நீர் நிலத்தில் இருவினைகள் வேர் பிடித்து இடர் முளைகளே முளைத்து வளர் மாயை
எனும் உலவையே பணைத்து விரக குழையே குழைத்து இருள் இலைகளே தழைத்து மிக நீளும்
இழவு நனையே பிடித்து மரண பழமே பழுத்து இடியும் உடல் மா மரத்தின் அரு நீழல்
இசையில் விழ ஆதிபத்தி அழியும் முனமே எனக்கு இனியது ஒரு போதகத்தை அருள்வாயே
வழுவு நெறி பேசு தக்கன் இசையும் மக சாலை உற்ற மதி இரவி தேவர் வக்ர படையாளி
மலர் கமல போனி சக்ர வளை மருவு பாணி விக்ரம் மறைய எதிர் வீர உக்ரர் புதல்வோனே
அழகிய கலாப கற்றை விகட மயில் ஏறி எட்டு அசலம் மிசை வாகை இட்டு வரும் வேலா
அடல் அசுரர் சேனை கெட்டு முறிய மிக மோதி வெட்டி அமரர் சிறை மீள விட்ட பெருமாளே

மேல்

#1098
நடை உடையிலே உருக்கி நெடிய தெரு வீதியிற்குள் நயனம் அதனால் மருட்டி வருவாரை
நணுகி மயலே விளைத்து முலையை விலை கூறி விற்று லளிதம் உடனே பசப்பி உறவாடி
வடிவு அதிக வீடு புக்கு மலர் அணையின் மீது இருத்தி மதனன் உடை ஆகமத்தின் அடைவாக
மருவி உளமே இருக்கி நிதியம் உளதே பறிக்கும் வனிதையர்கள் ஆசை பற்றி உழல்வேனோ
இடையர் மனைதோறு நித்தம் உறி தயிர் நெய் பால் குடிக்க இரு கை உறவே பிடித்து உரலோடே
இறுகிட அசோதை கட்ட அழுதிடு கோபால க்ருஷ்ணன் இயல் மருகனே குறத்தி மணவாளா
அடல் எழுதும் ஏடு மெத்த வரு புனலில் ஏற விட்டு அரிய தமிழ் வாது வெற்றி கொளும் வேலா
அவுணர் குலம் வேரறுத்து அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே

மேல்

#1099
மடல் அவிழ் சரோரகத்து முகிழ் நகையிலே வளைத்து மத சுக ப்ரதாப சித்ர முலையாலே
மலர் அமளி மீது அணைத்து விளையும் அமுதாதரத்தை மனம் மகிழவே அளித்து மறவாதே
உடல் உயிர் அதாய் இருக்க உனது எனது எனா மறிக்கை ஒரு பொழுது ஒணாது சற்றும் எனவே தான்
உரை செய் மடவார் அளித்த கலவி தரு தோதகத்தை ஒழிய ஒரு போதகத்தை அருள்வாயே
தட மகுட நாக ரத்ந பட நெளிய ஆடு பத்ம சரண யுக மாயனுக்கு மருகோனே
சரவணமிலே உதித்த குமர முருகேச சக்ர சயிலம் வலமாய் நடத்து மயில் வீரா
அடல் மருவு வேல் கரத்தில் அழகு பெறவே இருத்தும் அறுமுகவ ஞான தத்வ நெறி வாழ்வே
அசுரர் குல வேரை வெட்டி அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே

மேல்

#1100
அங்கதன் கண்டகன் பங்கு இலன் பொங்கு நெஞ்சு அன்பிலன் துன்பவன் புகழ் வாரா
அஞ்சு ஒடுங்கும் பொதும்பு ஒன்றை என்றும் சுமந்து அங்குமிங்கும் திரிந்து இரை தேடும்
சங்கடம் கொண்ட வெம் சண்டி பண்டன் பெரும் சஞ்சலன் கிஞ்சுகம் தரு வாயார்
தம் தொழும்பன் தழும்பன் பணிந்து என்று நின் தண்டை அம் பங்கயம் புகழ்வேனோ
கங்கையும் பொங்கு நஞ்சம் பொருந்தும் புயங்கங்களும் திங்களும் கழுநீரும்
கஞ்சமும் தும்பையும் கொன்றையும் சந்ததம் கந்தமும் துன்று செம் சடையாளர்
பங்கு தங்கும் பசும் கொம்பு தந்து இன்புறும் பந்த வெம் குண்டர்தம் குல காலா
பண்டிதன் கந்தன் என்று அண்டர் அண்டம் தொழும் பண்பு நண்பும் பெறும் பெருமாளே

மேல்

#1101
தந்தமும் துன்ப வெம் சிந்தை கொண்டு அந்தகன் தண்ட ஒன்ற அன்று ஒடுங்கிடும் ஆவி
தஞ்சம் என்றும் பரிந்து இன் சொல் வஞ்சம் தெரிந்து அன்றும் என்றும் தனம்தனை நாடி
நின்தன் அன்பு என்பது ஒன்று இன்றி நன்று என்று நெஞ்சின்கண் நண்பு ஒன்று இல் மங்கையர் நேசம்
நின்று அளந்தும் சளம் கொண்டிடும் புன்கண் நந்த இன்பம் ஒன்று இன்றி இங்கு உழல்வேனோ
சுந்தரன் பந்தமும் சிந்த வந்து அன்புடன் தொண்டன் என்று அன்று கொண்டிடும் ஆதி
தும்பை செம்பொன் சொரிந்து தரும் கொன்றை துன்பம் கடிந்து என்பொடும் தொலையா நீர்
அந்தம் உந்து இந்துவும் கெந்தம் மிஞ்சும் கொழுந்து அன்றும் இன்றும் புனைந்திடும் வேணி
அன்பர் நெஞ்சு இன்புறும் செம் சொலன் கந்தன் என்று அண்டர் அண்டமும் தொழும் பெருமாளே

மேல்

#1102
உம்பரார் அமுது எனும் தொண்டை வாய் அமுதம் உண்டுஉண்டு மேகலை கழன்று அயலாக
உந்தி வாவியில் விழுந்து இன்பமா முழுகி அன்பு ஒன்று இலாரொடு துவண்டு அணை மீதே
செம்பொன் ஆர் குடம் எனும் கொங்கை ஆபரணமும் சிந்த வாள் விழி சிவந்து அமராட
திங்கள் வேர்வுற அணைந்து இன்ப வாரியில் விழும் சிந்தையேன் எனவிதம் கரை சேர்வேன்
கொம்பு நாலு உடைய வெண் கம்பம் மால் கிரி வரும் கொண்டல் புலோமசையள் சங்க்ரம பார
கும்பம் மால் வரை பொருந்து இந்த்ரபூபதி தரும் கொண்டல் ஆனையை மணம் செயும் வீரா
அம்புராசியும் நெடும் குன்றும் மா மரமும் அன்று அஞ்ச வானவர் உறும் சிறை மீள
அங்க நான்மறை சொலும் பங்கயாசனம் இருந்து அம் கை வேலுற விடும் பெருமாளே

மேல்

#1103
வண்டு தான் மிக இடம் கொண்ட கார் அளகம் மென் பந்தி மா மலர் சொரிந்து உடை சோர
வம்பு சேர் கனி பொருந்தி இன்ப வாய் அமுது அருந்த அந்த மா மதன் நலம் விதமாக
விண்டு மேனிகள் துவண்டு அன்றில் போல் உள இரண்டு ஒன்றுமாய் உற அழிந்து அனுபோகம்
விஞ்சவே தரும் இளம் கொங்கையார் வினை கடந்து உன்றன் மேல் உருக என்று அருள்வாயே
பண்டு பாரினை அளந்து உண்ட மால் மருக செம் பைம்பொன் மா நகரில் இந்திரன் வாழ்வு
பண்பு எலாம் மிகுதி பொங்கு இன்ப யானையை மணந்து அன்பின் ஓர் அகம் அமர்ந்திடுவோனே
அண்டர் தாம் அதி பயம் கொண்டு வாடிட நெடும் தண்டு வாள் கொடு நடந்திடு சூரன்
அங்கம் ஆனது பிளந்து எங்கும் வீரிட வெகுண்டு அங்கை வேலுற விடும் பெருமாளே

மேல்

#1104
காதல் மோகம் தரும் கோதைமார் கொங்கை சிங்கார நாகம் செழும் கனி வாய் கண்
காள கூடம் கொடும் கால ரூபம் பொரும் காம பாணம் சுரும்பினம் வாழும்
ஓதி கார் செம் சொல் மென் பாகு தேன் என்று அயர்ந்து ஓம் நமோ கந்தா என்று உரையாதே
ஊசலாடும் புலன் தாரியே சென்று நின்று ஓயும் ஆறு ஒன்றையும் கருதாதோ
தாதகி சண்பகம் பூகம் ஆர் கந்த மந்தாரம் வாசந்தி சந்தன நீடு
சாம வேதண்டம் வெம் கோப கோதண்டம் சந்தானம் மாது எங்கள் பைம் புனம் மேவும்
தீதிலா வஞ்சி அம் சீத பாதம் படும் சேகரா தண்டை அம் கழல் பேணி
தேவி பாகம் பொருந்து ஆதி நாதன் தொழும் தேசிகா உம்பர்தம் பெருமாளே

மேல்

#1105
கோலகாலத்தை விட்டு ஆசு பாட கொடி கோவை பாட கொடி கொடி வாதில்
கோடி கூள கவி சேனை சாட கெடி கூறு காள கவி புலவோன் யான்
சீல கால புயல் பாரிசாதம் தரு த்யாக மேரு பொருப்பு என ஓதும்
சீதரா சித்ர வித்தாரமே செப்பிட கேள் எனா நிற்பதை தவிர்வேனோ
ஆலகால பணி பாயல் நீள படுத்து ஆரவார கடற்கு இடை சாயும்
ஆழி மாலுக்கு நல் சாம வேதற்கும் எட்டாத ரூபத்தினில் சுடர் ஆய
காலகால ப்ரபு சாலும் மாலுற்று உமைக்காக வேளை புக கழுநீரால்
காதும் வேழ சிலை பாரம் மீன கொடி காம வேள் மைத்துன பெருமாளே

மேல்

#1106
ஞாலமோடு ஒப்ப மக்காள் எனா நல் சொலை தீது எனா நல் தவத்து அணைவோர்தம்
நாதமோடு உள் கருத்து ஓடவே தர்க்கமிட்டு ஓயும் நாய் ஒப்பவர்க்கு இளையாதே
நீல மேனி குல தோகை மேல் உற்று நிட்டூர சூர் கெட்டு உக பொரும் வேலா
நேசமாய் நித்த நின் தாளை நீள் அச்சம் அற்று ஓத நீதி பொருள் தரவேணும்
கோல வாரிக்கு இடை கோப அராவில் படுத்தானும் வேத குலத்து அயனாரும்
கூறும் வான புவிக்கு ஊறு தீர குறிப்பு ஓதுறா நிற்ப அ கொடிதான
காலன் மார்பு உற்று உதைத்தானும் ஓர் கற்பு உடை கோதை காம கடற்கு இடை மூழ்க
காவி சேர் கொத்தலார் பாணம் ஏய் வித்தக காம வேள் மைத்துன பெருமாளே

மேல்

#1107
கரவு சேர் மகளிர் குங்கும பயோதர தனங்களின் அறா துயில்வதும் சரி பேசும்
கர சரோருகம் நகம் பட விடாய் தணிவதும் கமல நாபியின் முயங்கிய வாழ்வும்
அரவு போல் இடை படிந்து இரவெலாம் முழுகும் இன்ப நல் மகா உததி நலம் பெறுமாறும்
அதர பான அமுதமும் தவிரவே மவுன பஞ்சர மனோலய சுகம் தருவாயே
பரவும் ஆயிரம் முகம் கொடு திசா முக தலம் படர் பகீரதி விதம் பெற ஆடல்
பயில் பணா வனம் உகந்த குண மாகண கணம் பனி நிலா உமிழும் அம்புலி தாளி
குரவு கூவிளம் அரும்பு இதழி தாதகி நெடும் குடில வேணியில் அணிந்தவர் ஆகம்
குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே அமரர்தம் பெருமாளே

மேல்

#1108
வடிவ வேல்தனை வெகுண்டு இளைஞர் ஆவியை வளைந்து அமர்செய் வாள் விழியர் நெஞ்சினில் மாயம்
வளர மால்தனை மிகுந்தவர்கள் போல் அளவி வந்து அணுகும் மா நிதி கவர்ந்திடு மாதர்
துடியை நேர் இடை தனம் துவளவே துயில் பொருந்து அமளி தோய்பவர் வசம் சுழலாதே
தொலைவு இலா இயல் தெரிந்து அவலமானது கடந்து உனது தாள் தொழ மனம் தருவாயே
படி எலாம் முடிய நின்று அருளும் மால் உதவும் பங்கயனும் நான்மறையும் உம்பரும் வாழ
பரவை ஊடு எழு விடம் பருகி நீள் பவுரி கொண்டு அலகையோடு எரி பயின்று எருது ஏறி
கொடிய வாள் அரவு இளம் பிறையினோடு அலை சலம் குவளை சேர் சடையர்தம் திரு மேனி
குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே அமரர்தம் பெருமாளே

மேல்

#1109
கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் மா மாய கட்டுவிடும் ஓர் கால் அளவாவே
கத்த உறவோர் பாலர் தத்தை செறிவார் வாழ்வு கற்பு நெறி தான் மாய உயர் காலன்
இட்ட ஒரு தூதாளும் முட்ட வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன்
எத்தி உனை நாள்தோறும் முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே
துட்டர் என ஏழ் பாரும் முட்ட வினையாள் சூரர் தொக்கில் நெடு மா மார்பு தொளையாக
தொட்ட வடி வேல் வீர நட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே
மட்டு மரை நால்வேதன் இட்ட மலர் போல் மேவ மத்த மயில் மீது ஏறி வரு நாளை
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்தபடி மாறாத பெருமாளே

மேல்

#1110
பக்கம் உற நேரான மக்களுடனே மாதர் பத்தியுடன் மேல் மூடி இனிதான
பட்டின் உடனே மாலை இட்டு நெடிது ஓர் பாடை பற்றி அணைவோர் கூடி அலை நீரில்
புக்கு முழுகா நீடு துக்கம் அது போய் வேறு பொன் தி இடவே ஆவி பிரியா முன்
பொன் கழலை நாள்தோறும் உள் பரிவினால் ஓது புத்தி நெடிது ஆம் வாழ்வு புரிவாயே
இக்கன் உகவே நாடு முக்கணர் மகா தேவர் எப்பொருளும் ஆம் ஈசர் பெருவாழ்வே
எட்ட அரிது ஓர் வேலை வற்ற முது சூர் மாள எட்டி எதிரே ஏறும் இகல் வேலா
மக்களொடு வான் நாடர் திக்கில் முனிவோர் சூழ மத்த மயில் மீது ஏறி வருவோனே
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்தபடி மாறாத பெருமாளே

மேல்

#1111
நீரு நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி நீளம் அகலம் சோதி வடிவான
நேச மலரும் பூவை மாதின் மணமும் போல நேர் மருவி உண் காதலுடன் மேவி
சூரியனுடன் சோமன் நீழல் இவை அண்டாத சோதி மருவும் பூமி இவையூடே
தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்து ஆட சோதி அயிலும் தாரும் அருள்வாயே
வாரி அகிலம் கூச ஆயிர பணம் சேடன் வாய் விட ஒடு எண் பாலும் உடு போல
வார் மணி உதிர்ந்து ஓடவே கவின் நிறைந்து ஆட மா மயில் விடும் சேவல் கொடியோனே
ஆரியன் அவன் தாதை தேடி இனமும் பாடும் ஆடல் அருணம் சோதி அருள் பாலா
ஆனை முகவன் தேடி ஓடியெ அண அம் காதல் ஆசை மருவும் சோதி பெருமாளே

மேல்

#1112
சுட்டது போல் ஆசை விட்டு உலகாசார துக்கம் இலா ஞான சுகம் மேவி
சொல் கரணாதீத நிற்குணம் உடாடும் சுத்த நிராதார வெளி காண
மொட்டு அலர் வாரீச சக்ர சடாதார முட்டவும் மீது ஏறி மதி மீதாய்
முப்பதும் ஆறுஆறும் முப்பதும் வேறான முத்திரையாம் மோனம் அடைவேனோ
எட்டவொணா வேதனத்தொடு கோகோ என பிரமா ஓட வரை சாய
எற்றிய ஏழு ஆழி வற்றிட மாறு ஆய எத்தனையோ கோடி அசுரேசர்
பட்டு ஒரு சூர் மாள விக்ரம வேல் ஏவு பத்து இரு தோள் வீர தினை காவல்
பத்தினி தோள் தோயும் உத்தம மாறாது பத்தி செய் வான் நாடர் பெருமாளே

மேல்

#1113
மைச்சுனமார் மா மனைச்சியும் மாதாவும் மக்களும் மாறா துயர்கூர
மட்டு இலது ஓர் தீயில் இ குடில் தான் வேவ வைத்தவர் தாம் ஏக மதி மாய
நிச்சயமாய் நாளும் இட்டு ஒரு தூது ஏவு நெட்டு அளவாம் வாதை அணுகா முன்
நெக்கு உருகா ஞானமுற்று உன தாள் ஓதி நித்தலும் வாழுமாறு தருவாயே
நச்சணை மேல் வாழும் அச்சுதன் நால்வேதன் நல் தவர் நாட விடை ஏறி
நல் புதல்வா சூரர் பட்டிட வேல் ஏவு நல் துணைவா ஞாலம் மிக வாழ
பச்செனு நீள் தோகை மெய் பரி ஊர் பாக பத்தியது ஆறு முக நாளும்
பக்ஷமும் மேலாய ஷடாக்ஷர சூழ் பாத பத்தி செய் வான் நாடர் பெருமாளே

மேல்

#1114
தத்துவத்து செயலொடு ஒட்டில் பட்ட குருகு சத்து விட்டப்படி போல் அடியேனும்
சச்சிலுற்று படியில் விட்டுவிட்டு குளறி சத்துவத்தை பிரியவிடும் வேளை
சுத்த முத்த பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு சற்று கடையன் மிடி தீர
துப்பு முத்து சரண பச்சை வெற்றி புரவி சுற்றி விட்டு கடுகி வரவேணும்
வித்தக அத்தி பவள தொப்பை அப்பற்கு இளைய வெற்றி சத்தி கர அக முருகோனே
வெற்பும் எட்டு திசையும் வட்டமிட்டு சுழல விட்ட பச்சை சரண மயில் வீரா
கத்தர் நெட்டு சடையர் முக்கண் நக்க கடவுள் கச்சி அப்பர்க்கு அருள் குருநாதா
கற்ப தத்தைக்கு உருகி உன் பதத்து குறவர் கற்பினுக்கு உற்று புணர் பெருமாளே

மேல்

#1115
மக்கள் ஒக்கல் தெரிவை பக்க மிக்க துணைவர் மற்றும் உற்ற குரவர் அனைவோரும்
வைத்த செப்பில் பணமும் ரத்நம் முத்தில் பணியும் மட்டும் அற்று பெருகும் அடியாரும்
புக்கு துக்கித்து எரிகள் தத்த வைக்க புகுது பொய்க்கு மெய்க்கு செயலும் உருகாதே
புஷ்பம் இட்டு கருணை நல் பதத்தை பரவு புத்தி மெத்த தருவது ஒரு நாளே
செக்கர் கற்றை சடையில் மிக்க கொக்கின் சிறகு செக்கம் உற்ற சலமும் மதி சூடி
சித்தம் உற்று தெளிய மெத்தமெத்த திகழு சித்த முத்தி சிவமும் அருள்வோனே
கொக்கு உறுப்பு கொடு மை நிற்கும் வட்டத்து அசுரை கொத்தின் ஒக்க கொலை செய் வடி வேலா
கொற்றம் வெற்றி பரிசை ஒட்டி எட்டி சிறிது குத்தி வெட்டி பொருத பெருமாளே

மேல்

#1116
உற்பாதம் பூத காயத்தே ஒத்து ஓடி தத்து இயல் காலை
உள் பூரித்தே சற்றேசற்றே உக்காரித்து அற்புதன் நேரும்
அற்பாய் இல் தாய் நிற்பாரை போல பாவித்து திரிவேனுக்கு
அ பாசத்தால் எட்டா அப்பாலை போதத்தை புரிவாயே
பொற்பு ஆர் பொன் பார் புத்தேளிர்க்காக போய் முட்டி கிரி சாடி
புக்கு ஆழி சூழ் கிட்டாகி சூர் பொட்டாக குத்திய வேலா
முன் பாட பாடு அற்றாருக்கு ஓர் முள் காடு அற்க பொருள் ஈவாய்
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#1117
எற்றா வற்றா மட்டாக தீயில் காய் செம் கண் பிறை வாள் எயிற்றார்
கை பாசத்தே கட்டு ஆடி கோபித்து கொடு போ முன்
உற்றார் பெற்றார் சுற்றா நிற்பார் ஒட்டோம் விட்டு கழியீர் என்று
உற்று ஓதுற்றே பற்றா நிற்பார் அ காலத்துக்கு உறவு ஆர் தான்
பற்றார் மல் தாடைக்கே குத்தா பல் தான் அப்பில் களைவோனே
பச்சு ஏனல் கானத்தே நிற்பாள் பொன் பாதத்தில் பணிவோனே
முற்றா வற்றா மெய் போதத்தே உற்றார் சித்தத்து உறைவோனே
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#1118
செட்டாக தேனை போல சீரை தேடி திட்பம் அதாக
திக்காமல் பாடு உற்றாரில் சீர் உற்றாருக்கு சில பாடல்
பெட்டாக கூறி போதித்தாரை போல் வப்புற்று உழலாதே
பெற்றாரில் சார் உற்றாய் நல் தாள் சற்று ஓத பெற்றிடுவேனோ
எட்டா நெட்டாக தோகைக்கே புக்கு ஒலத்திட்டு இமையோர் வானில்
பாரில் சுழ சூரை தான் எட்டா வெட்டி பொரும் வேலா
முட்டாமல் தாளை சேவிப்பார் முன் பாவத்தை களைவோனே
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#1119
பட்டு ஆடைக்கே பச்சோலை காதுக்கே பத்தி தன மா
கும்பக்கே நிட்டூர பார்வைக்கே பட்டு ஆசைப்பட்டு உறவாடி
ஒட்டார் நட்டார் வட்டாரத்து ஏசுற்றே முற்ற தடுமாறும்
ஒட்டார பாவிக்கே மிக்காம் உன் தாள் கிட்ட தகுமோ தான்
கள் தாவி போதுள் உள் தாவி பூக காவில் புக்கு அளி பாடும்
கற்பு ஊர் நல்சார் அ காழி தோய் கத்தா சத்தி தகவோடே
முட்டாக கூரிட்டு ஏனல் தாள் முற்றாமல் கொள் குமரேசா
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#1120
பத்து ஏழெட்டு ஈரெட்டு ஏழ்ரட்டால் வைத்தே பத்தி பட வேயும்
பை பீறல் கூரை பாச தா சற்காரத்துக்கு இரை தேடி
எ தேசத்து ஓடி தேசத்தோடு ஒத்து ஏய் சப்தத்திலும் ஓடி
எய்த்தே நத்தா பற்றா மல் தாது இற்றே முக்க கடவேனோ
சத்தே முற்றாய் அ தானை சூர் கல் சாடி கற்பு அணி தேசா
சட்சோதி பூதி பாலத்தா அ கோடல் செச்சைய மார்பா
முத்தாபத்தர் எட்டா வைப்பா வித்தா முத்தர்க்கு இறையோனே
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#1121
பொன் கோவைக்கே பல் கோவைக்கே பொய் போகத்தை பகர்வார்தம்
பொய்க்கே மெய்க்கே பித்தாகி போகித்தேகைக்கு பொருள் தேடி
தெற்கு ஓடி காசிக்கு ஓடி கீழ் திக்கு ஓடி பச்சிமமான
திக்கி ஓடி பாணிக்கு ஓடி தீவுக்கு ஓடி கெட்டிடலாமோ
தற்கோலி பாவிப்பார் நல் சீரை சார தற்பரம் ஆனாய்
தப்பா முப்பாலை தேடி தேசத்தார் நிற்க தகையோடே
முன் கான பேதைக்காக போய் முன் பால் வெற்பில் கணி ஆனாய்
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#1122
பொன் பூவை சீரை போல போத பேசி பொன் கனி வாயின்
பொய் காமத்தே மெய்க்கு ஆம் அ பூணை பூண் வெற்பில் துகில் சாய
கற்பால் எக்கா உட்கோலி காசுக்கே கைக்குத்து இடும் மாதர்
கட்கே பட்டே நெட்டு ஆசை பாடு உற்றே கட்டப்படுவேனோ
சொல் கோலத்தே நல் காலை சேவிப்பார் சித்தத்து உறைவோனே
தொக்கே கொக்காகி சூழ அ சூர் விக்கா முக்க தொடும் வேலா
முற்காலத்தே வெற்பு ஏய்வுற்றார் முத்தாள் முத்த சிறியோனே
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#1123
மெய்க்கு ஊணை தேடி பூமிக்கே வித்தாரத்தில் பலகாலும்
வெட்காமல் சேரி சோரர்க்கே வித்து ஆசை சொல்களை ஓதி
கைக்காணி கோணல் போதத்தாரை போல கற்பு அழியாது உன்
கற்பு ஊடுற்றே நல் தாளை பாடற்கே நல் சொல் தருவாயே
பொய் கோள் நத்து ஆழ் மெய் கோணி போய் முற்பால் வெற்பில் புன மானை
பொன் தோளில் சேர்க்கைக்காக பாத தாள் பற்றி புகல்வோனே
முக்கோண தானத்தாளை பால் வைத்தார் முத்த சிறியோனே
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#1124
அகர முதல் என உரை செய் ஐம்பந்தொரு அக்ஷரமும் அகில கலைகளும் வெகு விதம் கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும் அடங்கும் தனி பொருளை எப்பொருளும் ஆய
அறிவை அறிபவர் அறியும் இன்பம்தனை துரிய முடிவை அடி நடு முடிவில் துங்கம்தனை சிறிய
அணுவை அணுவினின் மலமும் நெஞ்சும் குண த்ரியமும் அற்றது ஒரு காலம்
நிகழும் வடிவினை முடிவில் ஒன்று என்று இருப்பதனை நிறைவு குறைவு ஒழிவு அற நிறைந்து எங்கும் நிற்பதனை
நிகர் பகர அரியதை விசும்பின் புர த்ரயம் எரித்த பெருமானும்
நிருப குருபர குமர என்றென்று பத்தி கொடு பரவ அருளிய மவுன மந்த்ரந்தனை பழைய
நினது வழி அடிமையும் விளங்கும்படிக்கு இனிது உணர்த்தி அருள்வாயே
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ
தனதனன தனதனன தந்தந்த னத்ததன டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
ரரரரர ரிரிரிரிரி என்றென்று இடக்கையும் உடுக்கையும் யாவும்
மொகுமொகு என அதிர முதிர் அண்டம் பிளக்க நிமிர் அலகை கரணம் இட உலகு எங்கும் ப்ரமிக்க நடம்
முடுகு பயிரவர் பரிவு கொண்டு இன்புற படு களத்தில் ஒரு கோடி
முது கழுகு கொடி கருடன் அங்கம் பொர குருதி நதி பெருக வெகு முக கவந்தங்கள் நிர்த்தமிட
முரசு அதிர நிசிசரரை வென்று இந்திரற்கு அரசு அளித்த பெருமாளே

மேல்

#1125
அரிய வஞ்சகர் அறவே கொடியவர் அவலர் வன்கணர் இனியார்
அவகுணர் அசடர் அன்பிலர் அவமே திரிபவர் அதி மோக
அலையில் மண்டிய வழியே ஒழுகியர் வினை நிரம்பிடு பவமே செறிபவர்
அருள் துறந்தவர் இடம் வாழ் சவலைகள் நரகு ஏற
உரிய சஞ்சல மதியானது பெறு மன இடும்பர்கள் இடம் ஏது என அவர்
உபய அங்கமும் நிலையாகிட ஒரு கவியாலே
உலகம் உண்டவர் மதனார் இமையவர் தரு எனும்படி மொழியா அவர் தர
உளது கொண்டு உயிர் அவமே விடுவது தவிராதோ
கரிய கொந்தள மலையாள் இரு தன அமுது உணும் குரு பரனே திரை படு
கடல் அடும்படி கணை ஏவிய அரி மருகோனே
கருணை கொண்டு ஒரு குற மா மகள் இடை கலவி தங்கிய குமரா மயில் மிசை
கடுகி எண் திசை நொடியே வலம்வரும் இளையோனே
திரிபுரம் கனல் நகையால் எரி செய்து பொது நடம்புரி அரனார் இடம் உறை
சிவை சவுந்தரி உமையாள் அருளிய புதல்வோனே
சிகர வெண் கரி அயிராவத மிசை வரு புரந்தரன் அமராபதி அவர்
சிறை விடும்படி வடி வேல் விட வல பெருமாளே

மேல்

#1126
ஆராத காதலாகி மாதர் தம் ஆபாத சூடம் மீதிலே விழியால் ஆலோலனாய் விகாரமாகி இலஞ்சியாலே
ஆசா பசாசு மூடி மேலிட ஆசார ஈனனாகியே மிக ஆபாசன் ஆகியே ஓடி நாளும் அழிந்திடாதே
ஈராறு தோளும் ஆறு மா முகமோடு ஆரும் நீப வாச மாலையும் ஏறான தோகை நீல வாசியும் அன்பினாலே
ஏனோரும் ஓதுமாறு தீது அற நான் ஆசு பாடி ஆடி நாள்தொறும் ஈடேறுமாறு ஞான போதகம் அன்புறாதோ
வாராகி நீள் கபாலி மாலினி மா மாயி ஆயி தேவி யாமளை வாசா மகோசரா பராபரை இங்கு உள ஆயி
வாதாடி மோடி காடுகாள் உமை மா ஞால லீலி ஆல போசனி மா காளி சூலி வாலை யோகினி அம் பவானி
சூராரி மா புராரி கோமளை தூளாய பூதி பூசு நாரணி சோணாசலாதி லோக நாயகி தந்த வாழ்வே
தோளாலும் வாளினாலும் மாறிடு தோலாத வான நாடு சூறை கொள் சூராரியே விசாகனே சுரர் தம்பிரானே

மேல்

#1127
ஆராதனர் ஆடம்பரத்தும் மாறாது சவ ஆலம்பனத்தும் ஆவாகன மா மந்திரத்து மடலாலும்
ஆறார் தெச மா மண்டபத்தும் வேதாகமம் ஓதும் தலத்தும் ஆமாறு எரிதாம் இந்தனத்தும் மருளாதே
நீராளகம் நீர் மஞ்சனத்த நீள் தாரக வேதண்ட மத்த நீ நான் அற வேறு அன்றி நிற்க நியமாக
நீ வா என நீ இங்கு அழைத்து பாரா வரம் ஆனந்த சித்தி நேரே பரமாநந்த முத்தி தரவேணும்
வீராகர சாமுண்டி சக்ர பாரா கணம் பூதம் களிக்க வேதாள சமூகம் பிழைக்க அமராடி
வேதா முறையோ என்று அரற்ற ஆகாச கபாலம் பிளக்க மா மர மூல வேர் தறித்து வடவா ஆலும்
வாராகரம் ஏழும் குடித்து மா சூரொடு போர் அம்பு அறுத்து வாணாசனம் மேலும் துணித்த கதிர் வேலா
வான் நாடு அரசாளும்படிக்கு வாவா என வா என்று அழைத்து வானோர் பரிதாபம் தவிர்த்த பெருமாளே

மேல்

#1128
ஆலாலத்தை அழுத்திய வேல் போல் நல் குழையை பொருது ஆகாரை தொடர் கைக்கு எணும் விழியாலே
ஆளா மற்றவர் சுற்றிட மீளாமல் தலையிட்டு அறிவார் போக செயல் விச்சைகள் விலை கூறி
கோலாலம் கணம் இட்டு வராதார் நெக்குருக பொருள் கூறாக பெறில் நிற்கவும் இலது ஆனார்
கூடா நட்பும் உரைத்திடு கேடு ஆக விட்டு அகல் மட்டைகள் கோமாள துயர் உட்பயம் உறலாமோ
பாலாம் அ கடலில் துயில் மாலோர் எட்டு தலை கிரி பால் பார்வைக்கு அளவிட்டும் ஐயுறுபோதில்
பார் மேல் இக்கன் உடல் பொறியாய் வீழ சுடும் வித்தகர் பாலா பத்தர் இடத்து இயல் பயில்வோனே
மேல் ஆயத்தொடு திக்கு அடை மேவார் வெற்பொடு அரக்கரை வேர் மாள பொருதிட்ட ஒளிவிடும் வேலா
மேல் நாடர் சிறை விட்டு அருள் மீளா விக்கிரமத்தொடு வேதாவை சிறை இட்டு அருள் பெருமாளே

மேல்

#1129
ஆனாத ஞான புத்தியை கொடுத்ததும் ஆராயு நூல்களில் கருத்து அளித்ததும்
ஆதேச வாழ்வினில் ப்ரமித்து இளைத்து உயிர் அழியாதே
ஆசா பயோதியை கடக்கவிட்டதும் வாசா மகோசரத்து இருத்துவித்ததும்
ஆபாதனேன் மிக ப்ரசத்தி பெற்று இனிது உலகு ஏழும்
யான் ஆக நாம அற்புத திருப்புகழ் தேன் ஊற ஓதி எ திசை புறத்தினும்
ஏடு ஏவு ராஜதத்தினை பணித்ததும் இடர் ஆழி
ஏறாத மா மலத்ரய குணத்ரய நானா விகார புற்புதம் பிறப்பு அற
ஏது ஏமமாய் எனக்கு அநுக்ரகித்ததும் மறவேனே
மா நாகம் நாண் வலுப்புற துவக்கி ஒர் மா மேரு பூதர தனு பிடித்து ஒரு
மால் ஆய வாளியை தொடுத்து அரக்கரில் ஒரு மூவர்
மாளாது பாதகம் புரத்ரயத்தவர் தூளாகவே நுதல் சிரித்த வித்தகர்
வாழ்வே வலாரி பெற்றெடுத்த கற்பக வனம் மேவும்
தே நாயகா என துதித்த உத்தம வான் நாடர் வாழ விக்ரம திரு கழல்
சேராத சூரனை துணித்து அடக்கி அ வரை மோதி
சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ மாறா நிசாசர குலத்தை இப்படி
சீராவினால் அறுத்தறுத்து ஒதுக்கிய பெருமாளே

மேல்

#1130
இடம் மருவும் சீற்ற வேல் எடுத்து விடம் முழுதும் தேக்கியே நிறைத்து
இரு குழையும் தாக்கி மீள் கயல் கண் வலையாலே
இனிமையுடன் பார்த்து உளே அழைத்து முகபடமும் சேர்த்து வார் அழுத்தும்
இரு வரையும் காட்டி மால் எழுப்பி விலைபேசி
மடல் அவிழும் பூக்களால் நிறைத்த சுருள் அளகம் தூற்றியே முடித்து
மருகிடை நின்று ஆர்க்கவே நகைத்து நிலையாக
வரு பொருள் கண்டு ஏற்கவே பறிக்கும் அரிவையர்தம் பேச்சிலே முழுக்க
மனம் உருகும் தூர்த்தனாய் இளைத்து விடலாமோ
படி முழுதும் கூர்த்த மா குலத்தி முது மறையின் பேச்சி நூல் இடைச்சி
பகிர் மதியம் பூத்த தாழ் சடைச்சி இரு நாழி
படி கொடு அறம் காத்த மா பரைச்சி மணி வயிரம் கோத்த தோள் வளைச்சி
பல திசையும் போய் குலா விருப்பி நெடு நீலி
அடு புலியின் தோல் படாம் உடைச்சி சமர முகம் காட்டும் மால் விடைச்சி
அகிலம் உண்டார்க்கு நேர் இளைச்சி பெருவாழ்வே
அரி அயன் நின்று ஏத்தவே மிகுத்த விபுதர் குலம் பேர்க்க வாள் எடுத்த
அசுரர் குலம் பாழ்க்க வேல் எடுத்த பெருமாளே

மேல்

#1131
இடர் மொய்த்து தொடர் இல் பொய் குடில் அக்கிக்கு இடை இட்டு இனிமை சுற்றமும் மற்று புதல்வோரும்
இனம் ஒப்பித்து இசைய சொல் பல கத்திட்டு இழிய பிற்கு இடைய துக்கமும் விட்டுவிட்டு அவர் ஏக
விடம் மெத்த சொரி செ கண் சமன் வெட்ட தனம் உற்றிட்டு உயிர் வித்துத்தனை எற்றி கொடு போ முன்
வினை பற்று அற்று அற நித்தம் புதுமை சொல் கொடு வெட்சி புய வெற்றி புகழ் செப்ப பெறுவேனோ
அடர் செக்கர் சடையில் பொன் பிறை அப்பு புனை அப்பர்க்கு அறிவு ஒக்க பொருள் கற்பித்திடுவோனே
அலகைக்குள் பசி தித்த பலகை கொத்தது பட்டிட்டு அலற குத்துற முட்டி பொரும் வேலா
கடலுக்குள் படு சர்ப்பத்தினில் மெச்ச துயில் பச்சை கிரி கைக்குள் திகிரி கொற்றவன் மாயன்
கமலத்தில் பயில் நெட்டை குயவற்கு எண் திசையர்க்கு கடவுள் சக்கிரவர்த்தி பெருமாளே

மேல்

#1132
இரவினிடை வேள் தொடுத்து உடன்று முறுகு மலர் வாளியை பிணங்கி
இரு குழையும் மோதி அப்பு அடங்கு கடலோடே
எதிர் பொருது மானினை துரந்து சலதி கிழி வேல்தனை பொருந்தி
இனி அமுத ஆலம் உற்ற கண்கள் வலையாலே
முரண் இளைஞர் ஆவியை தொடர்ந்து விசிறி வளை மாதரை கலந்து
மொழி அதர கோவை இக்கு அருந்தி அமுதாகும்
முகிழ் முகுளி தாரம் வெற்பு அணைந்து சுழ மிதுன வாவியில் புகுந்து
முழுகி அழியாமல் நல் பதங்கள் தரவேணும்
திரை உலவு சாகரம் அத்து இலங்கை நகரில் உறை ராவணற்கு இயைந்த
தெச முடியும் ஈரு பத்து ஒழுங்கு திணி தோளும்
சிதைய ஒரு வாளியை துரந்த அரி மருக தீது அற கடந்து
தெளி மருவு காரணத்து அமர்ந்த முருகோனே
அரணம் மதிள் சூழ் புரத்து இருந்து கருதும் ஒரு மூவருக்கு இரங்கி
அருளும் ஒரு நாயகன் பணிந்த குருநாதா
அகல் முடிவை ஆதியை தெளிந்து இரவுபகலாக நெக்கவிழ்ந்த
அடியவர்கள் பாடலுக்கு இசைந்த பெருமாளே

மேல்

#1133
இரவொடும் பகலே மாறாதே அநுதினம் துயர் ஓயாதேயே
எரியும் உந்தியினாலே மாலே பெரிதாகி
இரை கொளும்படி ஊடே பாடே மிகுதி கொண்டு ஒழியாதே வாதே
இடைகளின் சில நாளே போயே வயதாகி
நரைகளும் பெரிதாயே போயே கிழவன் என்றொரு பேரே சார்வே
நடைகளும் பல தாறே மாறே விழலாகி
நயனமும் தெரியாதே போனால் விடிவது என்று அடியேனே தானே
நடன குஞ்சித வீடே கூடாது அழிவேனோ
திரு நடம்புரி தாளீ தூளீ மகர குண்டலி மாரீ சூரீ
திரிபுரம் தழல் ஏவீ சார்வீ அபிராமி
சிவன் இடம் தரி நீலீ சூலீ கவுரி பஞ்சவி ஆயீ மாயீ
சிவை பெண் அம்பிகை வாலா சீலா அருள் பாலா
அரவம் கிங்கிணி வீரா தீரா கிரி புரந்து ஒளிர் நாதா பாதா
அழகு இளம் குறமானார் தேன் ஆர் மணவாளா
அரி அரன் பிரமாவோடே மூ வகையர் இந்திர கோமான் நீள் வான்
அமரர் கந்தருவானோர் ஏனோர் பெருமாளே

மேல்

#1134
இரு குழை மீது ஓடி மீளவும் கயல்களும் மால் ஆலகாலமும்
ரதி பதி கோல் ஆடு பூசலும் எனவே நின்று
இலகிய கூர் வேல் விலோசன ம்ருகமத பாடீர பூஷித
இள முலை மா மாதரார் வசம் உருகாதே
முருகு அவிழ் கூதாள மாலிகை தழுவிய சீர் பாத தூளியின்
முழுகி விடாய் போம் மனோலயம் வர ஓது
முழு மதி மாயா விகாரமும் ஒழிவது வாசா மகோசர
முகுளித ஞானோபதேசமும் அருள்வேணும்
அரு மறை நூல் ஓதும் வேதியன் இரணிய ரூபா நமோ என
அரி கரி நாராயணா என ஒரு பாலன்
அவன் எவன் ஆதாரம் ஏது என இதன் உளனோ ஓது நீ என
அகிலமும் வாழ்வான நாயகன் என ஏகி
ஒரு கணை தூணோடு மோதிட விசை கொடு தோள் போறு வாள் அரி
உகிர் கொடு வாரா நிசாசரன் உடல் பீறும்
உலகு ஒரு தாள் ஆன மாமனும் உமை ஒரு கூறான தாதையும்
உரை தரு தேவாசுராதிபர் பெருமாளே

மேல்

#1135
இரு முலை மலை என ஒப்பிட்டே அவர் இரு விழி அதனில் அகப்பட்டே மனம்
இசை பட வசனம் உரைத்திட்டே பலம் இனிதோடே
இடை அது துவள குலுக்கி கால் அணி பரிபுர ஒலிகள் தொனிக்க பூதர
இள முலை குழைய அணைத்து கேயுர மணியோடே
மரகத பவளம் அழுத்தி பூஷணம் அணி பல சிதறி நெறித்து தான் உக
மரு மலர் புனுகு தரித்து பூ அணை மத ராஜன்
மருவிய கலவி தனக்கு ஒப்பாம் என மகிழ்வொடு ரசிது மிகுத்து கோதையை
மருவியும் உருகி களைத்து பூமியில் உழல்வேனோ
திரிபுரம் எரிய நகைத்து காலனை உதைபட மதனை அழித்து சாகர
திரை வரு கடுவை மிடற்றில் தான் அணி சிவனார்தம்
திரு அருள் முருக பெருத்து பாரினில் சியோதனன் மடிய மிகுத்து பாரத
செயமுறு அரிதன் மனத்துக்கு ஆகிய மருகோனே
நரி கழு அதுகள் களிக்க சோரிகள் ரண களம் முழுதும் மிகுத்து கூளிகள்
நடமிட அசுரர் குலத்து காலனை நிகர் ஆகி
நனி கடல் கதற பொருப்பு தூள் எழ நணுகிய இமையவருக்கு சீருற
நணு கலர் மடிய தொலைத்து பேர் பெறு பெருமாளே

மேல்

#1136
இலகிய வேலோ சேலோ ஒளி விடு வாளோ போதோ எமன் விடு தூதோ மானோ விடம் ஈதோ
என விழி கூறா வாரா அரிவையர் தோள் ஊடாடா இறுதியில் வேறாய் மாறா நினைவாலே
பலபல கோளாய் மாலாய் உழலும் அது ஆனால் வீணே படிறு சொல் ஆகா லோகாயதன் ஆகி
பரிவுடன் நாடாய் வீடாய் அடிமையும் ஈடேறாதே பணிதியில் மூழ்கா மாயா விடுவேனோ
அலை கடல் கோகோ கோகோ என உரை கூறா ஓடா அவுணரை வாடா போடா எனல் ஆகி
அழகிய வேலால் வாளால் நிலவிய சீராவாலே அவர் உடல் வாழ் நாள் ஈரா எதிராகி
மலை மிகு தோளா போதா அழகிய வாலா பாலா மகபதி வாழ்வே சேயே மயில் வீரா
மறை தொழு கோவே தேவே நறை செறி பூவே நீரே வளவிய வேளே மேலோர் பெருமாளே

மேல்

#1137
உமை எனும் மயில் பெற்ற மயில்வாகனனே வனிதையர் அறுவர்க்கும் ஒரு பாலகனே
உளம் உருகிய பத்தர் உறவே மறவேன் என ஓதி
உருகுதல் ஒரு சற்றும் அறியேன் வறியேன் இருவினை இடையிட்ட கொடியேன் அடியேன்
உணர்விலி பெற முத்தி தருவாய் துகிர் வாய் மட மாதர்
அமை என வளர் சித்ர இரு தோள் தழுவா அமுது என மதுரித்த கனி வாய் அணுகா
அமளியில் அணைவுற்ற அநுராக மகா உததி மூழ்கி
அநவரதமும் உற்ற மணி மா முலை தோய் கலவியின் நலம் அற்ப சுகம் ஆகினும் மா
அனுபவம் இது சற்றும் விடவோ இயலாது இயலாதே
தமனிய குல சக்ர கிரியோ கடலோ விடம் என முடி வைத்த முது பேர் இருளோ
தனு என முனை இட்ட கொலை மூ இலை வேல் கொடு பார்வை
தழல் எழ வரும் உக்ர எம பாதகனோ யுக இறுதியில் மிக்க வடவா அனலமோ
தனி இவன் என மிக்க பிசிதாசன பூபதியாகி
இமையவர் அனைவர்க்கும் அறையோஅறையோ அரி அயன் முழுதுக்கும் அறையோஅறையோ
எழு புவி உலகுக்கும் அறையோஅறையோ பொர வாரும்
என வரும் ஒரு துட்டன் முறையோமுறையோ வட குல கிரி எட்டும் அபிதாஅபிதா
என ஒரு அயில் தொட்ட அரசே இமையோர் பெருமாளே

மேல்

#1138
உரைத்த பற்றுடன் அடிகள் பணித்திட்டு இருத்தி மெத்தென இள நகையும் சற்று
உமிழ்த்த அடைக்கலம் என எதிர் கும்பிட்டு அணை மேல் வீழ்ந்து
உடுத்த பொன் துகில் அகல் அல்குலும் தொட்டு எடுத்து அணைத்து இதழ் பெருகு அமுதம் துய்த்து
உனக்கு எனக்கு என உருகி முயங்கிட்டு உளம் வேறாய்
அருக்கியத்து அனை எனும் அவசம்பட்டு அறுத்து ஒதுக்கிய நக நுதியும் தைத்து
அற பிதற்றிட அமளி கலங்க தடுமாறி
அளைத்து உழைத்து இரு விழிகள் சிவந்திட்டு அயர்த்து இதத்தொடு மொழிபவர் உந்திக்கு
அடுத்து அகப்படு கலவியில் நொந்து எய்த்திடலாமோ
தரை கடல் புகு நிருதர் தயங்க சளப்பட தட முடிகள் பிடுங்கி
தகர்த்து ஒலித்து எழு மலையொடு துண்ட பிறை சூடி
தனுக்கிரி திரிதர எதிரும் கொக்கினை பதைத்து உடல் அலறிட வஞ்ச தருக்கு
அடக்கிய சமர் பொரு துங்க தனி வேலா
பருப்பத ப்ரிய குறுமுனி வந்தித்து இருக்கும் உத்தம நிருதர் கலங்க
படை பெலத்தொடு பழய க்ரவுஞ்ச கிரி சாடி
படர் பறை குருகு உடல் உதிரம் குக்குட கொடிக்கு இடு குமர கொடுங்கல்
பதத்து உறுத்து உகு பசிய சிகண்டி பெருமாளே

மேல்

#1139
உலகத்தினில் மாதரும் மைந்தரும் உறு சுற்றமும் வாழ்வொடு உறும் கிளை
உயர் துக்கமுமோடு உறவு என்று வரு காலன்
உதிரத்துடனே சலம் என்பொடு உறுதிப்படவே வளரும் குடில்
உதிர கனல் மீது உற என்று எனை ஒழியா முன்
கலக கலை நூல் பல கொண்டு எதிர் கதறி பதறா உரை வென்று உயர்
கயவர்க்கு உளனாய் வினை நெஞ்சொடு களிகூரும்
கவலை புலமோடு உற என் துயர் கழிவித்து உன தாள் இணை அன்பொடு
கருதி தொழும் வாழ்வது தந்திட நினைவாயே
இலக பதினாலு உலகங்களும் இருளை கடி வான் எழும் அம்புலி
எழில் மிக்கிட வேணியில் வந்து உற எருது ஏறி
இரு கைத்தலம் மான் மழுவும் புனை இறை அ பதியாகிய இன் சொலன்
இசைய பரிவோடு இனிது அன்று அருள் இளையோனே
மலை பட்டு இரு கூறு எழ வன் கடல் நிலைகெட்டு அபிதா என அம் சகர்
வலி அற்ற அசுரேசரும் மங்கிட வடி வேலால்
மலை வித்தக வானவர் இந்திரர் மலர் கைக்கொடு மாதவரும் தொழ
வடிவுற்ற ஒரு தோகையில் வந்து அருள் பெருமாளே

மேல்

#1140
உறவின் முறை கதறி அழ ஊராரும் ஆசை அற பறை திமிலை முழவின் இசை ஆகாசம் மீது உற
உலகில் உள பலர் அரிசி வாய் மீதிலே சொரியும் அந்த நாளில்
உனது முக கருணை மலர் ஓராறும் ஆறிரு கை திரள் புயமும் எழில் பணி கொள் வார் காது நீள் விழியும்
உபய பதம் மிசை குலவு சீர் ஏறு நூபுரமும் அந்த மார்பும்
மறை அறைய அமரர் தரு பூமாரியே சொரிய மது ஒழுகு தரவில் மணி மீதே முன்னூல் ஒளிர
மயிலின் மிசை அழகு பொலி ஆளாய் முன் ஆர் அடியர் வந்து கூட
மறலி படை யமபுரமும் மீது ஆடவே பொருது விருது பல முறைமுறையிலே ஊதி வாது செய்து
மதலை ஒரு குதலை அடி நாயேனை ஆள இஙன் வந்திடாயோ
பிறை எயிறு முரண் அசுரர் பேராது பாரில் விழ அதிர எழு புவி உலகம் ஈரேழும் ஓலமிட
பிடி களிறின் அடல் நிரைகள் பாழாகவே திசையில் நின்ற நாகம்
பிரிய நெடு மலை இடிய மா வாரி தூளி எழ பெரியது ஒரு வயிறு உடைய மா காளி கூளியொடு
பிண நிணமும் உணவு செய்து பேயோடும் ஆடல் செய வென்ற தீரா
குற மறவர் கொடி அடிகள் கூசாது போய் வருட கரடி புலி திரி கடிய வாரான கானில் மிகு
குளிர் கணியின் இள மரமதே ஆகி நீடி உயர் குன்று உலாவி
கொடியது ஒரு முயலகனின் மீது ஆடுவாருடைய ஒரு புறம் அது உற வளரும் மாதா பெறா அருள்செய்
குமர குருபர அமரர் வான் நாடர் பேண அருள் தம்பிரானே

மேல்

#1141
உறவு சிங்கிகள் காமாகாரிகள் முறை மசங்கிகள் ஆசா வேசிகள்
உதடு கன்றிகள் நாணா வீணிகள் நகரேகை
உடைய கொங்கையின் மீதே தூசிகள் பிணம் எனும்படி பேய் நீராகிய
உணவை உண்டு உடை சோர் கோமாளிகள் கடல் ஞாலத்து
அறவு நெஞ்சு பொலா மா பாவிகள் வறுமை தந்திடு பாழ் மூதேவிகள்
அணி நெருங்கிகள் ஆசா பாஷண மட மாதர்
அழகு உயர்ந்த பொய் மாயா ரூபிகள் கலவி இன்பம் எனாவே சோருதல்
அலம்அலம் தடுமாறாது ஓர் கதி அருள்வாயே
பறவை என்கிற கூடார் மூ அரண் முறை இடும் தமர் வானோர் தேர் அரி
பகழி குன்ற விலாலே நீறு எழ ஒரு மூவர்
பத நினைந்து விடாதே தாள் பெற அருள்புரிந்த பிரானார் மா பதி
பரவு கந்த சுவாமீ கானகம் அதில் மேவும்
குறவர் தங்கள் பிரானே மா மரம் நெறுநெறு என்று அடி வேரோடே நிலை
குலைய வென்றி கொள் வேலே ஏவிய புய வீரா
குயில்கள் அன்றில்கள் கூகூகூ என மலர்கள் பொங்கிய தேன் வீழ் கா மிசை
குறவர் சுந்தரியோடே கூடிய பெருமாளே

மேல்

#1142
ஊனோடு வாத உயிர் தரித்து மட்டு அற ஊசாடு பாழ் குடில் எடுத்து அதில் படி
ஓயாத மா மால் உழற்றினில் படு வம்பனேனை
ஊதாரியாய் விடு சமத்தில் நிற்பதும் ஆராத காதலை மனத்தில் வைப்பதும்
ஊரோடு போய் எதிர் பிணக்கில் நிற்பதும் உந்திடாதே
தேன் ஊறும் வாய் மொழி பரத்தையர்க்கு ஒரு நாய் போலவே அவர் வசத்தில் நிற்பதும்
சீர் கேடதாய் விடும் சிறுப்பிளைத்தனம் என்று நீப
சீதாள மா மலர் தொடுத்த பத்தர்கள் சீராடி நாள்மலர் என ப்ரியப்படும்
சீர் பாத போதகம் அநுக்ரகிப்பதும் எந்த நாளோ
மால் நாக பாயலில் படுக்கை இட்டவர் மா மேரு வாரியில் திரித்து விட்டவர்
மாடோடு போய் வரும் இடை குலத்தவர் அன்று வாவிவாய்
நாகம் ஓலிட பிடித்த சக்கிர வாள் ஏவியே கரவினை தறித்தவர்
மா மாயனாய் உலகு அளித்த வித்தகர் தங்கை வாழ்வே
கான் ஆரு மா மலை தினை புலத்தினில் கால் மேல் விழா ஒரு குற சிறுக்கியை
காணாது போய் இயல் புணர்ச்சி இட்ட கந்தவேளே
கார் ஏழு மா மலை இடித்து உரு கெட கார் ஆழி ஏழு அவை கலக்கி விட்டு உயர்
காவான நாடர்கள் பகை சவட்டிய பெருமாளே

மேல்

#1143
எட்டுடன் ஒரு தொளை வாயாயது பசு மண் கலம் இருவினை தோய் மிகு பிணி
இட்டிடை செய ஒரு போதாகிலும் உயிர் நிலையாக
எப்படி உயர் கதி நாம் ஏறுவது என எள் பகிரினும் இது ஓரார் தம தமது
இச்சையின் இடருறு பேராசை கொள் கடல் அதிலே வீழ்
முட்டர்கள் நெறியினில் வீழாது அடலொடு முப்பதின் அறுபதின் மேலாம் அறுவரும்
முற்றுதல் அறி வரு ஞானோதய ஒளி வெளியாக
முக்குணம் அது கெட நானா என வரும் முத்திரை அழிதர ஆராவமுது அன
முத்தமிழ் தெரி கனி வாயால் அருளுவது ஒரு நாளே
திட்டென எதிர் வரு மாகாளியினொடு திக்கிட தரிகிட தீதோம் என ஒரு
சித்திர வெகுவித வாதாடிய பத மலராளன்
செப்புக என முனம் ஓதாது உணர்வது சிற்சுக பர ஒளி ஈதே என அவர்
தெக்ஷண செவிதனிலே போதனை அருள் குருநாதா
மட்டு அற அமர் பொரும் சூராதிபன் உடல் பொட்டு எழ முடுகி வை வேலால் எறிதரு
மல் புய மரகத மா தோகையில் நடம் இடுவோனே
வச்சிர கர தர வானோர் அதிபதி பொற்புறு கரி பரி தேரோடு அழகுற
வைத்திடும் மருமகனே வாழ் அமரர்கள் பெருமாளே

மேல்

#1144
எத்தி இரு குழையை மோதி மீனம் அதில் முட்டி இடறி யமதூதர் போல முகில்
எட்டி வயவர் கர வாளை வேல் முனையை எதிர் சீறி
எ திசையினும் ஒரு காம ராஜன் மிக வெற்றி அரசுதனை ஆள வீசி அடல்
எற்றி இளைஞர் உயிர் கோலும் நீல விழி மட மாதர்
வித்தைதனில் உருகி ஆசை ஆகி அவர் கைக்குள் மருவு பொருள் ஆன ஆகும் வரை
மெத்தைதனில் உருகி மோகமாகி விட அதன் மேலே
வெட்கம் இலை நடவும் ஏகும்ஏகும் இனி மற்றவரை அழையும் மாதரே என முன்
விட்ட படிறிகள் தம் நேச ஆசை கெட அருள்வாயே
ஒத்த வரி கமுகு வாளை தாவு புனல் அத்தி நகரம் அரசான வாள் நிருபன்
ஒக்கு நினைவு முன் இலாமல் வாகு பெலம் நிலை கூற
உற்ற தருமன் அடல் வீமன் வேல் விசையன் வெற்றி நகுல சகதேவர் தேர்தனிலும்
ஒத்து முடுகிவிடு பாகன் வாள் அமரில் அசுரேசன்
பத்து முடிகள் துகளாக வாகு இருபத்தும் ஒரு கணையில் வீழ நேர் அவுணர்
பட்டு மடிய அமர் மோதும் காள முகில் மருகோனே
பச்சை மயிலில் வரும் வீர வேல் முருக துட்ட நிருதர் குல கால வானவர்கள்
பத்தி உடன் அடியில் வீழ வாழ்வு உதவு பெருமாளே

மேல்

#1145
ஒக்க வண்டு எழு கொண்டை குலைந்திட வெற்பு எனும் கன கொங்கை குழைந்திட
உற்பலங்கள் சிவந்து குவிந்திட இந்த்ரகோபம்
ஒத்த தொண்டை துவண்டு அமுதம் தர மெச்சு தும்பி கரும் குயில் மென் புறவு
ஒக்க மென் தொனி வந்து பிறந்திட அன்புகூர
மிக்க சந்திரன் ஒன்று நிலங்களில் விக்ரமம் செய்து இலங்கு நகம் பட
மெத்த மென் பொருள் அன்பு அளவும் துவள் இன்ப மாதர்
வித்தகம் தரு விந்து தபும் குழி பட்டு அழந்து நலங்கு குரம்பையை
விட்டு அகன்று நின் அம்புயம் மென் பதம் என்று சேர்வேன்
மை கரும் கடல் அன்று எரி மண்டிட மெய் க்ரவுஞ்ச சிலம்பு உடல் வெம்பிட
மற்று நல் பதி குன்றி அழிந்திட உம்பர் நாடன்
வச்சிரம் கை அணிந்து பதம் பெற மெச்சு குஞ்சரி கொங்கை புயம் பெற
மத்த வெம் சின வஞ்சகர்தங்களை நுங்கும் வேலா
குக்குடம் கொடி கொண்ட பரம்பர சக்ர மண்டலம் எண் திசையும் புகழ்
கொட்க கொன்றை அணிந்த சிரம் சரண் அங்கிகாரா
கொத்து அவிழ்ந்த கடம்பு அலர் தங்கிய மிக்க வங்கண கங்கண திண் புய
கொற்றம் அம் குற மங்கை விரும்பிய தம்பிரானே

மேல்

#1146
ஓதுவித்தவர் கூலி கொடாதவர் மாதவர்க்கு அதி பாதகம் ஆனவர்
ஊசலில் கனலாய் எரி காளையர் மறையோர்கள்
ஊர்தனக்கு இடரே செயும் ஏழைகள் ஆர்தனக்கும் உதாசினதாரிகள்
ஓடி உத்தமர் ஊதியம் நாடினர் இரவோருக்கு
ஏதும் இத்தனை தானம் இடாதவர் பூதலத்தினில் ஓரமனதானவர்
ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்தமை இகழ்வோர்கள்
ஏக சித்த தியானம் இலாதவர் மோகம் முற்றிடு போகிதம் ஊறினர்
ஈனர் இத்தனை பேர்களும் ஏழ் நரகு உழல்வாரே
தாத தத்தத தாதத தாதத தூது துத்துது தூதுது தூதுது
சாச சச்சச சாசச சாசச சசசாச
தாட டட்டட டாடட டாடட டூடு டுட்டுடு டூடுடு டூடுடு
தாடி டிட்டிடி டீடிடி டீடிடி டிடிடீடீ
தீதி தித்திதி தீதிதி தீதிதி தோதி குத்திகு தோதிகு தோதிகு
சேகு செக்குகு சேகுகு சேகுகு செகுசேகு
சே என பலர் ஆடிட மா கலை ஆயும் உத்தமர் கூறிடும் வாசக
சேகு சித்திரமாக நின்று ஆடிய பெருமாளே

மேல்

#1147
ஓலை தரித்த குழைக்கும் அப்புறம் ஓடி நிறத்து மதர்த்து நெய்த்த அறல்
ஓதி நிழற்குள் அளி குலத்துடன் ஒன்றி ஞானம்
ஓதி மிகுத்த தவத்தவர்க்கு இடர் ஓகை செலுத்தி வடுப்படுத்து அகியூடு
விடத்தை இருத்தி வைத்த கண் அம்பினாலே
மாலை மயக்கை விளைத்து நல் பொருள் வாச முலைக்குள் அகப்படுத்தி இல்
வா என முற்றி நடத்தி உள் புகும் அந்த மாதர்
மாய மயக்கை ஒழித்து மெத்தென வானவருக்கு அருளுற்ற அக்ஷர
வாய்மை எனக்கும் இனித்து அருள்தந்திடாதோ
வேலை அடைக்க அரி குலத்தொடு வேணும் என சொலும் அ கணத்தினில்
வேகமொடு அப்பு மலை குலத்தை நளன் கை மேலே
வீச அவற்றினை ஒப்பம் இட்டு அணை மேவி அரக்கர் பதிக்குள் முற்பட
வீடணனுக்கு அருள் வைத்து அவன் தமையன்கள் மாள
கால் அயில் அ கணை தொட்ட அருள் கன மால் அமைதி கரையில் தரித்து உலகு
ஆள அளித்த ப்ரபுத்வ அருள் கடல் தந்த காமன்
காயம் ஒழித்தவர் பெற்ற கொற்றவ நானில வித்த தினை புனத்து ஒரு
காதல் மிகுத்து மிக ப்ரமித்து அருள் தம்பிரானே

மேல்

#1148
கடை சிவந்து அகன்று உரை புகன்று இரு குழையையும் துரந்து அரி பரந்து ஒளிர்
கரிய கண் துறந்தவர் நிறம் தொளை பட ஓட
கலை நெகிழ்ந்து இரும் குழல் சரிந்திட முலை சுமந்து அசைந்து இடை ஒசித்து உயிர்
கவர இங்கிதம் கெறுவிதம்பெற விளையாடும்
படை மதன் பெரும் கிளை திருந்திய அதர கிஞ்சுகம்தனை உணர்ந்து அணி
பணி நிதம்பம் இன்ப சுகமும் தர முதிர் காம
பரவசம் தணிந்து உனை உணர்ந்து ஒரு மவுன பஞ்சரம் பயில் தரும் சுக
பதம் அடைந்து இருந்து அருள் பொருந்துமது ஒரு நாளே
வட நெடும் சிலம்புகள் புலம்பிட மகிதலம் ப்ரியம் கொடு மகிழ்ந்திட
வரு புரந்தரன் தன புரம் பெற முது கோப
மகர வெம் கரும் கடல் ஒடுங்கிட நிசிசரன் பெரும் குலம் ஒருங்கு இற
வனசன் நின்று அழும்படி நெருங்கிய ஒரு சூதம்
அடியொடும் பிடுங்கிய தடம் கர வடிவ அம் சுரும்பு உற விரும்பிய
அடவியும் தொழும்பொடு தொழும்படி அனுராக
அவசமும் புனைந்து அற முனைந்து எழு பருவதம் சிறந்த கன தந்தியின்
அமுத மென் குயங்களில் முயங்கிய பெருமாளே

மேல்

#1149
கதறிய கலை கொடு சுட்டா தீர் பொருள் பதறிய சமயிகள் எட்டா பேரொளி
கரு அற இருவினை கெட்டாற்கு காண்வரும் என்ற ஏகம்
கருகிய வினை மனதுள் தாக்காதது சுருதிகள் உருகி ஒர் வட்டாய் தோய்வது
கசடு அற முழுதையும் விட்டால் சேர்வது உணர்ந்திடாதே
வித மதுகரம் மொட்டால் சாடிய ரதி பதி என வரு துட்டாத்மாவுடன்
வினைபுரிபவர் இடும் முற்றா சால் இரு புண்டரீக
ம்ருகமத முகுளித மொட்டால் கார் முகம் நுதல் எழுதிய சிறு பொட்டால் சாயகம்
விரகு உடை விழி வலை பட்டால் தாது நலங்கலாமோ
பத மலர் மிசை கழல் கட்டா பாலக சுருதிகள் அடி தொழ எட்டா தேசிக
பருகு என வன முலை கிட்டா தாரகை தந்து நாளும்
பரிவுற வெகு முக நெட்டு ஆற்றூடு ஒரு படுகையினிடை புழு எட்டா பாசடை
படர்வன பரிமள முள் தாள் தாமரை தங்கி வாழும்
சத தள அமளியை விட்டு ஆற்று ஏறிய சல நிதி குறுகிட பட்டா சூரொடு
தமனிய குலகிரி பொட்டாய் தூள் எழ வென்ற கோவே
தழை தரு குழை தரு பட்டாள் சாலவும் அழகிய கலவி தெவிட்டா காதலி
தலை மக நிலம் அடி தட்டா தேவர்கள் தம்பிரானே

மேல்

#1150
கலவியின் நலம் உரையா மடவார் சந்தன தனங்களில் வசமது ஆகி அவரவர்
பாதாதிகேசம் அளவும் பாடும் கவிஞனாய் திரிவேனை காம க்ரோத தூர்த்தனை அபராத
கபடனை வெகு பரிதாபனை நாளும் ப்ரமிக்கு நெஞ்சனை உருவ மாறி முறைமுறை
ஆசார ஈன சமயம்தோறும் களவு சாத்திரம் ஓதி சாதித்தேனை சாத்திர நெறி போய் ஐம்புலன்
வழி ஒழுகிய மோகனை மூகம்தனில் பிறந்து ஒரு நொடியில் மீள அழிதரும்
ஆதேச வாழ்வை நிலை என்றே அம் புவியின் மேல் பசு பாசத்தே பட்டேனை பூ கழல் இணை சேர
பொறியிலிதனை அதி பாவியை நீடும் குண த்ரயங்களும் வரும் அநேக வினைகளும்
மாயா விகாரம் முழுதும் சாடும் பொருளின் மேல் சிறிது ஆசைப்பாடு அற்றேனை காப்பதும் ஒரு நாளே
குலகிரி தரும் அபிராம மயூரம் ப்ரியப்படும்படி குவளை வாச மலர் கொடு
வாரா உலாவி உணரும் யோகம் குலைய வீக்கிய வேளை கோபித்து ஏற பார்த்து அருளிய பார்வை
குரிசிலும் ஒரு சுரர் பூசுரன் ஓம் என்றதற்கு அனந்தரம் இரணியாய நம என
நாராயணாய நம என்று ஓதும் குதலை வாய் சிறியோனுற்காக தூணில் தோற்றிய வச பாணி
பல நக நுதியில் நிசாசரன் ஆகம் கிழித்து அளைத்து அணி துளசியோடு சிறு குடல்
தோள் மாலையாக அணியும் கோவும் பரவி வாழ்த்திடவே கற்று ஆர சோதிப்பான் பணி இறை வாகை
பட முக அடல் அபிராபதம் ஏறும் ப்ரபு பயம் கெட வட பராரை வரை கெட
வேல் ஏவி வாவி மகரம் சீறும் பரவை கூப்பிட மோதி சூர் கெட்டு ஓட தாக்கிய பெருமாளே

மேல்

#1151
கறுத்து நீ விடு கூர் வேலினும் கடை சிவத்து நீடிய வாய் மீன் ஒண் குழை
கடக்க ஓடிய ஆலால் நஞ்சு அன வஞ்ச நீடு
கயல் கணார் கனி வாய் ஊறல் உண்டு அணி கழுத்தும் ஆகமும் ஏகி பவம் கொடு
கலக்க மார்பகம் பாடீர குங்கும கொங்கை மீதே
உறுத்தும் ஆரமும் மோகா வடங்களும் அறுத்து நேரிய கூர் வாள் நகம் பட
உடுத்த ஆடையும் வேறாய் உழன்று கழன்று வீழ
உருக்கு நாபியின் மூழ்கா மருங்கு இடை செருக்கும் மோகன வார் ஆதரங்களை
ஒழிக்க ஓர் வகை காணேன் உறும் துணை ஒன்று காணேன்
நிறத்த நூபுர பாதாரவிந்தமும் உடுத்த பீலியும் வார் ஆர் தனங்களும்
நிறத்திலே படு வேலான கண்களும் வண்டு பாட
நெறித்த ஓதியுமாய் யான் மனம் பரதவிக்க மால் தரலாமோ கலந்திட
நினைக்கலாம் என வேல் வேடர் கொம்புடன் நண்பு கூர்வாய்
மறித்த வாரிதி கோகோ எனும்படி வெறுத்த ராவணன் வாழ்நாளை அம்பினில்
வதைத்த மாமனும் மேவார் புரம் கனல் மண்ட மேரு
வளைத்த தாதையும் மாறான குன்றமும் அனைத்து லோகமும் வேதாகமங்களும்
மதித்த சேவக வான் ஆளும் உம்பர்கள் தம்பிரானே

மேல்

#1152
குறிப்பு அரிய குழற்கும் மதி நுதல் புருவ விலுக்கும் இரு குழைக்கும் வடு விழிக்கும் எழு குமிழாலும்
கொடி பவள இதழ்க்கும் மிகு சுடர் தரள நகைக்கும் அமுதினுக்கும் மிக உற தழுவு குறியாலும்
அற பெரிய தனக்கும் அன நடைக்கும் மினின் இடைக்கும் மலர் அடிக்கும் இள நகைக்கும் உளம் அயராதே
அகத்தியனொடு உரைத்த பொருள் அளித்து அருளி அரி பிரமர் அளப்பரிய பத கமலம் அருள்வாயே
கறுத்து அடரும் அரக்கர் அணி கரு குலைய நெருக்கி ஒரு கணத்தில் அவர் நிணத்த குடல் கதிர் வேலால்
கறுத்து அருளி அலக்கணுறு சுரர்க்கு அவர்கள் பதிக்கு உரிமை அளித்து இடரை அறுத்து அருளும் மயில் வீரா
செறுத்து வரு கரி திரள்கள் திடுக்கிட வல் மருப்பை அரி சினத்தினொடு பறித்து அமர் செய் பெரு கானில்
செல கருதி அற கொடிய சிலை குறவர் கொடிதனது சிமிழ் தனமும் உற தழுவு பெருமாளே

மேல்

#1153
குனகி ஒரு மயில் போல வாரா மனோ லீலை விளைய வினை நினையாமலே ஏகி மீளாத
கொடிய மனத அநியாய மா பாத காபோதி என ஆசை
கொளுவ அதில் மயலாகி வீறோடு போய நீள மலர் அமளிதனில் ஏறி ஆமாறு போமாறு
குலவி நல மொழி கூறி வார் ஏறு பூணார முலை மூழ்கி
மனம் உருக மத ராஜ கோல் ஆடு மா பூசல் விளைய விழி சுழலாடி மேல் ஓதி போய் மீள
மதி வதனம் ஒளி வீச நீராளமாய் மேவி அநுராக
வகைவகையில் அதி மோக வாராழி ஊடான பொருள் அளவு அது அளவாக யாரோடு மால் ஆன
வனிதையர்கள் வசமாய நாயேனும் ஈடேற அருள்வாயே
எனது மொழி வழுவாமல் நீ ஏகு கான் மீதில் என விரகு குலையாத மாதாவு நேர் ஓத
இசையும் மொழி தவறாமலே ஏகி மா மாதும் இளையோனும்
இனிமையொடு வரு மாய மாரீச மான் ஆவி குலைய வரு கர தூஷணா வீரர் போர் மாள
இறுகி நெடு மரம் ஏழு தூளாகவே வாலி உயிர் சீறி
அநுமனொடு கவி கூட வாராக நீர் ஆழி அடை செய்து அணைதனில் ஏறி மா பாவி ஊர் மேவி
அவுணர் கிளை கெட நூறி ஆலாலம் மா கோப நிருதேசன்
அருண மணி திகழ் பார வீராகரா மோலி ஒரு பதும் ஒர் கணை வீழவே மோது போராளி
அடல் மருக குமரேச மேலாய வானோர்கள் பெருமாளே

மேல்

#1154
கொலை விழி சுழலச்சுழல சிலை நுதல் குவியக்குவிய
கொடி இடை துவளத்துவள தன பார
குறி அணி சிதறச்சிதற கரம் வளை கதறக்கதற
குயில் மொழி பதறப்பதற ப்ரிய மோக
கலவியில் ஒருமித்தொருமித்து இலவு இதழ் பருகிப்பருகி
கரமொடு தழுவித்தழுவி சில நாளில்
கையில் உள பொருள் கெட்டு அருள் கெட்டு அனைவரும் விடு சிச்சி என
கடி ஒரு செயல் உற்று உலகில் திரிவேனோ
சல நிதி சுவறச்சுவற திசை நிலை பெயரப்பெயர
தட வரை பிதிரப்பிதிர திட மேரு
தமனிய நெடு வெற்பு அதிரஅதிர பணி மணி சிரம் விட்டு அகல
சமன் உடல் கிழியக்கிழிய பொரு சூரன்
பெலம் அது குறையக்குறைய கருவிகள் பறையப்பறைய
பிற நரி தொடரத்தொடர திரள் கூகை
பெடையொடு குழறக்குழற சுர பதி பரவப்பரவ
ப்ரபை அயில் தொடு நல் குமர பெருமாளே

மேல்

#1155
கோழையாய் ஆணவம் மிகுத்த வீரமே புகல்வர் அற்பர் கோது சேர் இழிகுலத்தர் குல மேன்மை
கூறியே நடு இருப்பர் சோறு இடார் தரும புத்ர கோவு நான் என இசைப்பர் மிடியூடே
ஆழுவார் நிதி உடை குபேரனாம் என இசைப்பர் ஆசு சேர் கலியுகத்தின் நெறி ஈதே
ஆயு நூல் அறிவு கெட்ட நானும் வேறு அல அதற்குள் ஆகையால் அவை அடக்க உரை ஈதே
ஏழை வானவர் அழைக்க ஆனை வாசவன் உருத்ர ஈசன் மேல் வெயில் எறிக்க மதி வேணி
ஈசனார் தமது இடுக்கம் மாறியே கயிலை வெற்பில் ஏறியே இனிது இருக்க வருவோனே
வேழம் மீது உறையும் வஜ்ர தேவர் கோ சிறை விடுத்து வேதனாரையும் விடுத்து முடி சூடி
வீர சூர் அவன் முடிக்குள் ஏறியே கழுகு கொத்த வீறு சேர் சிலை எடுத்த பெருமாளே

மேல்

#1156
சந்தனம் கலந்த குங்குமம் புனைந்து அணிந்த கொங்கை சந்திரம் ததும்ப அசைந்து தெருவூடே
சங்கு இனம் குலுங்க செம் கை எங்கிலும் பணிந்து உடம்பு சந்து அனம் துவண்டு அசைந்து வருமா போல்
கொந்தளம் குலுங்க வண் சிலம்பு பொங்க இன் சுகங்கள் கொஞ்சி பொன் தொடர்ந்திடும் பொன் மடவார் தோள்
கொங்கை பைங்கரம் புணர்ந்து அழிந்து உணங்கலும் தவிர்ந்து கொஞ்சு நின் சரண்கள் அண்ட அருள்தாராய்
தந்தனந்த செம் சிலம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்ச தண்டை அம் பதம் புலம்ப வருவோனே
சந்தனம் புனைந்த கொங்கை கண்களும் சிவந்து பொங்க சண்பகம் புனம் குறம் பொன் அணை மார்பா
வந்த நஞ்சு உகந்து அமைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி மந்தரம் பொதிந்த கொங்கை உமை ஈனும்
மைந்தன் என்று உகந்து விஞ்சு மன் பணிந்த சிந்தை அன்பர் மங்கலின்று உளம் புகுந்த பெருமாளே

மேல்

#1157
சுருதி வெகுமுக புராண கோடிகள் சரியை கிரியை மக யோக மோகிகள்
துரித பர சமய பேத வாதிகள் என்றும் ஓடி
தொடர உணர அரிதாய தூரிய பொருளை அணுகி அநுபோகமானவை
தொலைய இனி ஒரு ஸ்வாமியாகிய நின் ப்ரகாசம்
கருதி உருகி அவிரோதியாய் அருள் பெருகு பரம சுக மா மகா உததி
கருணை அடியரொடு கூடி ஆடி மகிழ்ந்து நீப
கனக மணி வயிர நூபுராரிய கிரண சரண அபிராம கோமள
கமல உகளம் மறவாது பாட நினைந்திடாதோ
மருது நெறுநெறு என மோதி வேரோடு கருதும் அலகை முலை கோதி வீதியில்
மதுகையொடு தறுகண் ஆனை வீரிட வென்று தாளால்
வலிய சகடு இடறி மாயமாய் மடி படிய நடை பழகி ஆயர்பாடியில்
வளரும் முகில் மருக வேல் விநோத சிகண்டி வீரா
விருதர் நிருதர் குல சேனை சாடிய விஜய கட தடக போல வாரண
விபுதை புளக தன பார பூஷண அம் கிராத
விமலை நகில் அருண வாகு பூதர விபுத கடக கிரி மேரு பூதர
விகட சமர சத கோடி வானவர் தம்பிரானே

மேல்

#1158
சுற்றத்தவர்களும் மக்களும் இதம் உள சொற்கு உற்ற அரிவையும் விட்டது சலம் இது
சுத்த சலம் இனி சற்று இது கிடைபடும் என மாழ்கி
துக்கத்தொடு கொடிது ஒட்டியே அழுது அழல் சுட்ட குடமொடு சுட்டு எரி கனலொடு
தொக்கு தொகுதொகு தொக்கென இடு பறை பிணம் மூட
சற்று ஒப்புளது ஒரு சச்சையும் எழும் உடல் சட்டப்பட உயிர் சற்று உடன் விசியது
தப்பில் தவறு உறும் மத்திப நடை என உரையாடி
சத்திப்பொடு கரம் வைத்து இடர் தலை மிசை தப்பிற்று இது பிழை எப்படி எனும் மொழி
தத்த சடம் விடும் அப்பொழுது இரு சரண் அருள்வாயே
சிற்று இல் கிரி மகள் கொத்து அலர் புரி குழல் சித்ர ப்ரபை புனை பொற்பினள் இள மயில்
செல் கண் சிவ கதி உத்தமி களி தர முது பேய்கள்
திக்கு செககெண தித்தரி திகுதிகு செச்செ செணக்ருத டொட்டரி செணக்ருத
டெட்டெட் டுடுடுடு தத்தரிதரி என நடமாடும்
கொற்ற புலி அதள் சுற்றிய அரன் அருள் குட்டி கரி முகன் இக்கு அவல் அமுது செய்
கொச்சை கணபதி முக்கணன் இளையவ களம் மீதே
குப்புற்றுடன் எழு சச்சரி முழவு இயல் கொட்ட சுரர் பதி மெய்த்திட நிசிசரர்
கொத்து கிளை உடல் பட்டு உக அமர் செய்த பெருமாளே

மேல்

#1159
செம் கனல் புகை ஓமாதிகள் குண்டம் இட்டு எழு சோமாசிகள் தெண்டு என துணை தாள் மேல் விழ அமராடி
சிந்தனை படி மோகாதியில் இந்த்ரியத்தினில் ஓடா சில திண் திறல் தவ வாள் வீரரொடு இகலா நின்று
அங்கம் வெட்டிய கூர் வாள் விழி மங்கையர்க்கு அற மாலாய் மனம் அந்தி பட்டு இருள் மூடா வகை அவிரோத
அந்த நிற்குண ஞானோதய சுந்தர சுடர் ஆராய நல் அன்பு வைத்து அருள் ஆம் ஓர் கழல் அருளாதோ
கொங்கு அடுத்த குரா மாலிகை தண் கடுக்கை துழாய் தாதகி கும்பிட தகு பாகீரதி மதி மீது
கொண்ட சித்ர கலா சூடிகை இண்டு எருக்கு அணி காகோதர குண்டல அத்தர் பினாகாயுதருடன் ஏய
சங்கு சக்ர கதா பாணியும் எங்களுக்கு ஒரு வாழ்வே சுரர் தங்களை சிறை மீளா என அசுரேசன்
தஞ்சம் அற்றிட வேதாகரன் அஞ்ச வெற்பு உக வீராகர சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே

மேல்

#1160
சேலை அடர்த்து ஆலம் மிகுத்தே உழையை சீறு விதித்து ஊறு சிவப்பு ஏறு விழி கணையாலே
தேன் இரதத்தே முழுகி பாகு நிகர்த்து ஆர் அமுத தேறல் என கூறும் மொழி செயலாலே
ஆல் இலையை போலும் வயிற்றால் அளகத்தால் அதரத்தாலும் மிதத்தாலும் வளைப்பிடுவோர் மேல்
ஆசையினை தூர விடுத்தே புகழ்வுற்றே ப்ரிய நல் தாள் இணையை சேர எனக்கு அருள்வாயே
காலனை மெய் பாதம் எடுத்தே உதையிட்டே மதனை காய எரித்தே விதியின் தலையூடே
காசினியில் காண இரப்பு ஓர் மதியை சூடி எருத்து ஏறி வகித்து ஊரு திரை கடல் மீதில்
ஆலம் மிடற்று ஆனை உரித்து தோலை உடுத்து ஈமம் அது உற்று ஆடி இடத்தே உமை பெற்று அருள் வாழ்வே
ஆழியினை சூரனை வெற்பு ஏழினை உற்றே அயில் விட்ட ஆதுலருக்கு ஆறுமுக பெருமாளே

மேல்

#1161
சொக்கு பொட்டு எத்தி கைப்பொருளை கெத்தில் பற்றி சிக்கொடு சுற்றுப்பட்டு எற்றி தெட்டிகள் முலை மீதே
சுற்று பொன் பட்டு கச்சினர் முற்று இக்கு தத்தைக்கு ஒப்பு என சொல் பித்து கற்பில் செப்பிய துயராலே
சிக்குப்பட்டு உட்கி பல் கொடு எற்றி கைக்குத்துப்பட்டு இதழ் தித்திப்பிற்கு ஒத்து பித்து உயர் கொடு நாயேன்
திக்கு கெட்டு ஒட்டு சிட்டு என பட்ட அ துற்புத்தி கட்டு அற செப்பத்து உன் பற்றற்கு அற்புதம் அருள்வாயே
தக்குத்த குக்கு குக்குட தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென தக்குத்திக்கு எட்டு பொட்டு எழ விருது ஓதை
தத்தித்தி தித்தி தித்தென தெற்று துட்ட கட்டர் படை சத்தி கொற்றத்தில் குத்திய முருகோனே
துக்கித்திட்ட அத்தி துக்க அக நெக்குப்பட்டு எக்கி துட்டு அறு சுத்த பொன் பத்தர்க்கு பொருள் அருள் வேலா
துற்ற பொன் பச்சை கண் கலப சித்ர பக்ஷி கொற்றவ சொக்கர்க்கு அர்த்தத்தை சுட்டிய பெருமாளே

மேல்

#1162
ஞானாவிபூஷணி கார் அணி காரணி காமாவிமோகினி வாகினி யாமளை
மா மாயி பார்வதி தேவி குணாதரி உமையாள்தன்
நாதா க்ருபாகர தேசிகர் தேசிக வேதாகமே அருள் தேவர்கள் தேவ நல்
ஈசா சடா பரமேசர் சர்வேசுரி முருகோனே
தேன் ஆர் மொழீ வளி நாயகி நாயக வான் நாடு உளோர் தொழு மா மயில்வாகன
சேண் ஆளும் மானின் மனோகரம் ஆகிய மணவாளா
சீர் பாதசேகரன் ஆகவும் நாயினன் மோகா விகார விடாய் கெட ஓடவே
சீராகவே கலையால் உனை ஓதவும் அருள்வாயே
பேணார்கள் நீறு அது இடா அமணோர்களை சூர் ஆடியே கழு மீதினில் ஏறிட
கூன் ஆன மீனன் ஈடேறிட கூடலில் வருவோனே
பேர் ஆண்மையாளன் நிசாசரர் கோன் இரு கூறாக வாளி தொடு ரகுநாயகன்
பூ வாயன் நாரணன் மாயன் இராகவன் மருகோனே
வாழ்நாள் படா வரு சூரர்கள் மாளவே சேண் நாடு உளோர் அவர் வீடு ஈடேறிட
கோன் ஆக வரு நாத குரு பர குமரேசா
வாசா மகோசரமாகிய வாசக தேசாதியோர் அவர் பாதம் அதே தொழ
பாசாவிநாசகனாகவும் மேவிய பெருமோளே

மேல்

#1163
தரணி மிசை அனையினிட உந்தியின் வந்து உகு துளி பயறு கழல் இனிய அண்டமும் கொண்டு அதில்
தசை உதிர நிண நிறைய அங்கமும் தங்க ஒன்பது வாயும்
தரு கரமொடு இனிய பதமும் கொடு அங்கு ஒன்பதும் பெருகி ஒரு பதின் அவனி வந்து கண்டு அன்புடன்
தநயன் என நடை பழகி மங்கைதன் சிங்கியின் வசமாகி
திரிகி உடல் வளைய நடை தண்டு உடன் சென்று பின் கிடை எனவும் மருவி மனை முந்தி வந்து அந்தகன்
சிதற உயிர் பிணம் எனவே மைந்தரும் பந்துவும் அயர்வாகி
செடம் இதனை எடும் எடுமின் என்று கொண்டு அன்புடன் சுடலை மிசை எரியிலிட வெந்து பின் சிந்திடும்
செனனம் இது தவிர இரு தண்டையும் கொண்ட பைம் கழல் தாராய்
செரு எதிரும் அசுரர் கிளை மங்க எங்கெங்கணும் கழுகு கருடன் நயனம் இது கண்டு கொண்டு அம்பரம்
திரிய மிகு அலகையுடன் வெம் கணம் தங்களின் மகிழ்வாகி
சின அசுரர் உடல் அது தின்றுதின்று இன்புடன் டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண்
திமிலை பறை முழவு துடி பம்பையும் சங்கமும் தவ மோத
சர வரிசை விடு குமர அண்டர்தம் பண்டு உறும் சிறையை விட வரு முருக என்று வந்து இந்திரன்
சதுமுகன் அடி பரவ மண்டு வெம் சம் பொரும் கதிர் வேலா
சகம் முழுதும் அடைய அமுது உண்டிடும் கொண்டலும் தெரிவரிய முடியில் அரவங்களும் திங்களும்
சலம் இதழி அணியும் ஒரு சங்கரன் தந்திடும் பெருமாளே

மேல்

#1164
தனம் சற்று குலுங்க பொன் கலன் பட்டு இலங்க பொன் சதங்கை கல் சிலம்பு ஒத்தி கையில் வீணை
ததும்ப கைக்குழந்தை சொல் பரிந்து அற்புக்கு இதங்க பொன் சரம் சுற்றிட்டு இணங்க கண் சர வேலால்
தினம் பித்திட்டு இணங்கி சொல் கரம் கட்டி புணர்ந்திட்டு தினம் தெட்டி கடன் பற்றி கொளு மாதர்
சிலம்பத்தில் திரிந்து உற்றிட்டு அவம் புக்க குணம் செற்று சிவம் பெற்று தவம் பற்ற கழல் தாராய்
தனந்தத்த தனந்தத்த தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட் டடண்டட்டட் டிமிண்டுட்டுட் இயல் தாளம்
தகுந்தொத்தி திமிந்தித்தி தவண்டை உட்கு அயர்ந்து உக்க தகு அண்டர்த்தர்க்கு உடன் பட்டு உற்ற அசுராரை
சினம் தத்தி கொளுந்த கை சரம் தொட்டு சதம் பொர்ப்பை சிரம் தத்த பிளந்து உட்க கிரி தூளா
செகம் திக்கு சுபம் பெற்று துலங்க போர் களம் புக்கு செயம் பற்றி கொளும் சொக்க பெருமாளே

மேல்

#1165
நகரம் இரு பாதமாகி மகர வயிறாகி மார்பு நடு சிகரம் ஆகி வாய் வகரமாகி
நதி முடி ய சாரம் ஆகி உதய திரு மேனி ஆகி நமசிவய மாமை ஆகி எழுதான
அகர உகர ஏதர் ஓம சகர உணர்வான சூரன் அறிவில் அறிவான பூரணமும் ஆகும்
அதனை அடியேனும் ஓதி இதய கமலாலையாகி மருவும் அவதான போதம் அருள்வாயே
குகனும் அருள் ஆண்மை கூர மகரம் என்னும் சாபதாரி குறை அகல வேலை மீது தனி ஊரும்
குழவி வடிவாகவே நம் பரதர் தவம் ஆக மீறு குலவு திரை சேரும் மாதுதனை நாடி
அகில உலகோர்கள் காண அதிசயம் அதாக மேவி அரிய மணமே செய்து ஏகு அ வலை தேடி
அறு முக வன்மீகரான பிறவி யம ராசை வீசும் அசபை செகர் சோதி நாத பெருமாளே

மேல்

#1166
நரையொடு பல் கழன்று தோல் வற்றி நடை அற மெத்த நொந்து கால் எய்த்து
நயனம் இருட்டி நின்று கோலுற்று நடை தோயா
நழுவும் விடக்கை ஒன்று போல் வைத்து நமது என மெத்த வந்த வாழ்வுற்று
நடலை படுத்து இந்த மாயத்தை நகையாதே
விரையொடு பற்றி வண்டு பாடுற்ற ம்ருகமதம் அப்பி வந்த ஓதிக்கு
மிளிரும் மையை செறிந்த வேல் கட்கும் வினையோடு
மிகு கவின் இட்டு நின்ற மாதர்க்கும் இடை படு சித்தம் ஒன்றுவேன் உன்
விழுமிய பொன் பதங்கள் பாடற்கு வினவாதோ
உரையொடு சொல் தெரிந்த மூவர்க்கும் ஒளி பெற நல் பதங்கள் போதித்தும்
ஒரு புடை பச்சை நங்கையோடு உற்றும் உலகூடே
உறு பலி பிச்சை கொண்டு போயுற்றும் உவரி விடத்தை உண்டு சாதித்தும்
உலவிய முப்புரங்கள் வேவித்தும் உற நாகம்
அரையொடு கட்டி அந்தமாய் வைத்தும் அவிர் சடை வைத்த கங்கையோடு ஒக்க
அழகு திருத்தி இந்து மேல் வைத்தும் அரவோடே
அறுகொடு நொச்சி தும்பை மேல் வைத்த அரி அயன் நித்தம் வந்து பூசிக்கும்
அர நிமலர்க்கு நன்று போதித்த பெருமாளே

மேல்

#1167
நிமிர்ந்த முதுகும் குனிந்து சிறந்த முகமும் திரங்கி நிறைந்த வயிறும் சரிந்து தடி ஊணி
நெகிழ்ந்து சடலம் தளர்ந்து விளங்கு விழி அங்கு இருண்டு நினைந்த மதியும் கலங்கி மனையாள் கண்டு
உமிழ்ந்து பலரும் கடிந்து சிறந்த இயலும் பெயர்ந்து உறைந்த உயிரும் கழன்றுவிடு நாள் முன்
உகந்து மனமும் குளிர்ந்து பயன் கொள் தருமம்புரிந்து ஒடுங்கி நினையும் பணிந்து மகிழ்வேனோ
திமிந்தி என வெம் கணங்கள் குணங்கர் பலவும் குழும்பி திரண்ட சதியும் புரிந்து முது சூரன்
சிரம் கை முழுதும் குடைந்து நிணம் கொள் குடலும் தொளைந்து சினம் கழுகொடும் பெரும் குருதி மூழ்கி
அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ் கொண்டு மண்ட அடர்ந்த அயில் முன் துரந்து பொரு வேளே
அலங்கல் என வெண் கடம்பு புனைந்து புணரும் குறிஞ்சி அணங்கை மணம் முன் புணர்ந்த பெருமாளே

மேல்

#1168
நிருதரார்க்கு ஒரு காலா ஜேஜெய சுரர்கள் ஏத்திடு வேலா ஜேஜெய
நிமலனார்க்கு ஒரு பாலா ஜேஜெய விறலான
நெடிய வேல் படையானே ஜேஜெய என இராப்பகல் தானே நான் மிக
நினது தாள் தொழுமாறே தான் இனி உடனே தான்
தரையில் ஆழ் திரை ஏழே போல் எழு பிறவி மா கடல் ஊடே நான் உறு
சவலை தீர்த்து உன தாளே சூடி உன் அடியார் வாழ்
சபையின் ஏற்றி இன் ஞானாபோதமும் அருளி ஆட்கொளுமாறே தான் அது
தமியனேற்கு முனே நீ மேவுவது ஒரு நாளே
தருவின் நாட்டு அரசு ஆள்வான் வேணுவின் உருவமாய் பல நாளே தான் உறு
தவசினால் சிவன் நீ போய் வானவர் சிறை தீர
சகல லோக்கியமே தான் ஆள் உறும் அசுர பார்த்திபனோடே சேய் அவர்
தமரை வேல் கொடு நீறாயே பட விழ மோது என்று
அருள ஏற்று அமரோடே போய் அவர் உறையு மா கிரியோடே தானையும்
அழிய வீழ்த்து எதிர் சூரோடே அமர் அடலாகி
அமரில் வீட்டியும் வானோர் தான் உறு சிறையை மீட்டு அரனார் பால் மேவிய
அதி பராக்ரம வீரா வானவர் பெருமாளே

மேல்

#1169
ஆரவாரமாய் இருந்து ஏம தூதர் ஓடி வந்து ஆழி வேலை போல் முழங்கி அடர்வார்கள்
ஆகம் மீதிலே சிவந்து ஊசி தானுமே நுழைந்து ஆலை மீதிலே கரும்பு எனவே தான்
வீரமான சூரி கொண்டு நேரை நேரையே பிளந்து வீசுவார்கள் கூகு என்று அழுபோது
வீடுவாசலான பெண்டிர் ஆசையான மாதர் வந்து மேலை வீழ்வர் ஈது கண்டு வருவாயே
நாரி வீரி சூரி அம்பை வேத வேதமே புகழ்ந்த நாதர் பாலிலே இருந்த மகமாயி
நாடி ஓடிவாற அன்பர் காண வேணதே புகழ்ந்து நாளு நாளுமே புகன்ற வரை மாது
நீரின் மீதிலே இருந்த நீலி சூலி வாழ்வு மைந்த நீப மாலையே புனைந்த குமரேசா
நீலனாக ஓடி வந்த சூரை வேறுவேறு கண்ட நீதன் ஆனது ஓர் குழந்தை பெருமாளே

மேல்

#1170
நீரும் என்பு தோலினாலும் ஆவது என் கை கால்களோடு நீளும் அங்கமாகி மாய உயிர் ஊறி
நேசம் ஒன்று தாதை தாயர் ஆசை கொண்டபோதில் மேவி நீதி ஒன்று பாலனாகி அழிவாய் வந்து
ஊரும் இன்ப வாழ்வும் ஆகி ஊனம் ஒன்று இலாது மாதரோடு சிந்தை வேடை கூர உறவாகி
ஊழி இயைந்த காலம் மேதியோனும் வந்து பாசம் வீச ஊன் உடம்பு மாயும் மாயம் ஒழியாதோ
சூரன் அண்ட லோகம் மேன்மை சூறை கொண்டு போய்விடாது தோகையின்கண் மேவி வேலை விடும் வீரா
தோளில் என்பு மாலை வேணி மீது கங்கை சீடி ஆடு தோகைபங்கரோடு சூது மொழிவோனே
பாரை உண்ட மாயன் வேயை ஊதி பண்டு பாவலோர்கள் பாடல் கண்டு ஏகும் மாலின் மருகோனே
பாதகங்கள் வேறி நூறி நீதியின் சொல் வேத வாய்மை பாடும் அன்பர் வாழ்வதான பெருமாளே

மேல்

#1171
பகல் மட்க செக்கர் ப்ரபைவிடு நவ ரத்ன பத்தி தொடை நக
நுதி பட்டுட்டு உற்று சிதறிட இதழூறல்
பருகி தித்தக்க படு மொழி பதற கை பத்மத்து ஒளி வளை
வதறி சத்திக்க புளகித தன பாரம்
அகலத்தில் தைக்க பரிமள அமளிக்குள் சிக்கி சிறுகு என
இறுக கைப்பற்றி தழுவிய அநுராக
அவசத்தில் சித்தத்து அறிவையும் மிக வைத்து போற்றி தெரிவையர்
வசம் விட்டு அர்ச்சிக்கைக்கு ஒரு பொழுது உணர்வேனோ
இகல் வெற்றி சத்தி கிரணமும் முரண் நிர்த்த பச்சை புரவியும்
இரவி கை குக்ட துவசமும் மற மாதும்
இடை வைத்து சித்ர தமிழ் கொடு கவி மெத்த செப்பி பழுது அற
எழுதி கற்பித்து திரிபவர் பெருவாழ்வே
புகலில் தர்க்கிட்டு ப்ரமையுறு கலக செற்ற சட்சமயிகள்
புகலற்கு பற்றற்கு அரியது ஒர் உபதேச
பொருளை புட்பித்து குருபரன் என முக்கண் செக்கர் சடை மதி
புனை அப்பர்க்கு ஒப்பித்து அருளிய பெருமாளே

மேல்

#1172
பத்தி தரள கொத்து ஒளிர் வரி பட்ட புளக செப்பு இள முலை
பட்டு இட்டு எதிர் கட்டு பரதவர் உயர் தாள
பத்மத்தியர் அற்பு கடுகடு கண் சத்தியர் மெத்த திரவிய
பட்சத்தியர் இக்கு சிலை உருவிலி சேரும்
சித்த தருணர்க்கு கனி அதரம் புத்தமுதை தரும் அவர்
சித்ர கிரண பொட்டு இடு பிறை நுதலார்தம்
தெட்டில் படு கட்ட கனவிய பட்சத்து அருள் அற்று உற்று உனது அடி
சிக்கிட்டு இடை புக்கிட்டு அலைவது தவிராதோ
மத்த பிரமத்த கய முகனை குத்தி மிதித்து கழுகுகள்
மட்டிட்ட இரத்த குருதியில் விளையாட
மற்றை பதினெட்டு கண வகை சத்திக்க நடிக்க பலபல
வர்க்க தலை தத்த பொரு படை உடையோனே
முத்தி பரமத்தை கருதிய சித்தத்தினில் முற்ற தவ முனி
முற்பட்டு உழை பெற்று தரு குறமகள் மேல் மால்
முற்ற திரி வெற்றி குருபர முற்பட்ட முரட்டு புலவனை
முட்டை பெயர் செப்பி கவி பெறு பெருமாளே

மேல்

#1173
பரத வித புண்டரிக பாதத்து ஆட்டிகள் அமுது பொழியும் குமுத கீத பாட்டிகள்
பலர் பொருள் கவர்ந்து இடை கலாம் இட்டு ஓட்டிகள் கொடிது ஆய
பழுது ஒழிய அன்பும் உடையாரை போல் சிறிது அழுதழுது கண் பிசையும் ஆசை கூற்றிகள்
பகழி என வந்து படு பார்வை கூற்றினர் ஒரு காம
விரகம் விளைகின்ற கழு நீரை சேர்த்து அகில் ம்ருகமத மிகுந்த பனி நீரை தேக்கியே
விபுதர் பதி அங்க தலம் மேவி சாற்றிய தமிழ் நூலின்
விததி கமழ் தென்றல் வர வீசி கோட்டிகள் முலைகளில் விழுந்து பரிதாபத்து ஆற்றினில்
விடியளவு நைந்து உருகுவேனை காப்பதும் ஒரு நாளே
உரக பணை பந்தி அபிஷேக தாற்றிய சகல உலகும் தரும் அமோக பார்ப்பதி
உடன் உருவு பங்கு உடைய நாக காப்பனும் உறி தாவும்
ஒரு களவு கண்டு தனி கோபத்து ஆய் குல மகளிர் சிறு தும்பு கொடு மோதி சேர்த்திடும்
உரலொடு தவழ்ந்த நவ நீத கூற்றனும் அதி கோப
கர விகட வெம் கட கபோல போர் கிரி கடவிய புரந்தரனும் வேளை போற்றுகை
கருமம் என வந்து தொழ வேத பால் பதி பிறியாத
கடவுளை முனிந்து அமரர் ஊரை காத்து உயர் கரவட க்ரவுஞ்ச கிரி சாய தோற்று எழு
கடல் என உடைந்த அவுணர் ஓட தாக்கிய பெருமாளே

மேல்

#1174
பழுது அற ஓதி கடந்து பகை வினை தீர துறந்து பலபல யோகத்து இருந்து மத ராசன்
பரிமள பாணத்து அயர்ந்து பனை மடல் ஊர்தற்கு இசைந்து பரிதவியா மெத்த நொந்து மயல்கூர
அழுதழுது ஆசைப்படுங்கண் அபிநய மாதர்க்கு இரங்கி அவர் விழி பாணத்து நெஞ்சம் அறை போய் நின்று
அழிவது யான் முன் பயந்த விதி வசமோ மற்றை உன்தன் அருள் வசமோ இ ப்ரமம் தெரிகிலேனே
எழுத அரு வேதத்தும் அன்றி முழுதினுமாய் நிற்கும் எந்தை என ஒரு ஞான குருந்தர் உளம் மேவும்
இரு உருவாகி துலங்கி ஒரு கன தூணில் பிறந்து இரணியன் மார்பை பிளந்த தனி ஆண்மை
பொழுது இசையா விக்ரமன்தன் மருக புரரிக்கு மைந்த புளக படீர குரும்பையுடன் மேவும்
புயல் கரி வாழ சிலம்பின் வனசர மானுக்கு உகந்து புனம் மிசை ஓடி புகுந்த பெருமாளே

மேல்

#1175
பாணிக்கு உட்படாது சாதகர் காண சற்றொணாது வாதிகள் பாஷிக்க தகாது பாதக பஞ்சபூத
பாசத்தில் படாது வேறு ஒரு உபாயத்தில் புகாது பாவனை பாவிக்க பெறாது வாதனை நெஞ்சமான
ஏணிக்கு எட்டொணாது மீது உயர் சேணுக்கு சமான நூல் வழி ஏறி பற்றொணாது நாடினர் தங்களாலும்
ஏது செப்பொணாதது ஓர் பொருள் சேர துக்கமாம் மகோததி ஏற செச்சை நாறு தாளை வணங்குவேனோ
ஆணிப்பொன் ப்ரதாப மேருவை வேல் இட்டு கடாவி வாசவன் ஆபத்தை கெடா நிசாசரர்தம் ப்ரகாசம்
ஆழி சத்ர சாயை நீழலில் ஆதித்த ப்ரகாச நேர் தர ஆழி சக்ரவாளம் ஆள்தரும் எம்பிரானே
மாணிக்க ப்ரவாள நீலம் மதாணி பொன் கிராதை நூபுர வாச பத்ம பாத சேகர சம்பு வேதா
வாசிக்கப்படாத வாசகம் ஈசர்க்கு சுவாமியாய் முதல் வாசிப்பித்த தேசிகா சுரர் தம்பிரானே

மேல்

#1176
பால் மொழி படித்து காட்டி ஆடையை நெகிழ்த்து காட்டி பாயலில் இருத்தி காட்டி அநுராகம்
பாகு இதழ் கொடுத்து காட்டி நூல்களை விரித்து காட்டி பார்வைகள் புரட்டி காட்டி உறவாகி
மேல் நகம் அழுத்தி காட்டி தோதக விதத்தை காட்டி மேல் விழு நலத்தை காட்டும் மடவார்பால்
மேவிடும் மயக்கை தீர்த்து சீர் பத நினைப்பை கூட்டும் மேன்மையை எனக்கு காட்டி அருள்வாயே
காலனை உதைத்து காட்டி ஆவியை வதைத்து காட்டி காரணம் விளைத்து காட்டி ஒரு காலம்
கானினில் நடித்து காட்டி ஆலமும் மிடற்றில் காட்டி காமனை எரித்து காட்டி தரு பாலா
மாலுற நிறத்தை காட்டி வேடுவர் புனத்தில் காட்டில் வாலிபம் இளைத்து காட்டி அயர்வு ஆகி
மான் மகள் தனத்தை சூட்டி ஏன் என அழைத்து கேட்டு வாழ்வுறு சமத்தை காட்டு பெருமாளே

மேல்

#1177
புகர் இல் சேவல தந்துரம் சங்க்ரம நிருதர் கோப க்ரவுஞ்ச நெடும் கிரி
பொருத சேவக குன்றவர் பெண் கொடி மணவாளா
புனித பூசுரரும் சுரரும் பணி புயச பூதர என்று இரு கண் புனல்
பொழிய மீமிசை அன்பு துளும்பிய மனன் ஆகி
அகில பூத உடம்பும் உடம்பினில் மருவும் ஆருயிரும் கரணங்களும்
அவிழ யானும் இழந்த இடம்தனில் உணர்வாலே
அகில வாதிகளும் சமயங்களும் அடைய ஆம் என அன்று என நின்ற அதை
அறிவிலேன் அறியும்படி இன்று அருள்புரிவாயே
மகர கேதனமும் திகழ் செந்தமிழ் மலய மாருதமும் வெம் பரிமள
சிலீ முகமும் பல மஞ்சரி வெறியாம்
மதுகராரம் வி குஞ்சு அணியும் கர மதுரம் கார் முகமும் பொர வந்து எழு
மதன ராஜனை வெந்து விழும்படி முனி பாலம்
முகிழ் விலோசனர் அம் சிறு திங்களும் முது பகீரதியும் புனையும் சடைமுடியர்
வேடமும் நின்று மணம் கமழ் அபிராமி
முகர நூபுரம் பங்கய சங்கரி கிரி குமாரி த்ரிஅம்பகி தந்தருள்
முருகனே சுர குஞ்சரி ரஞ்சித பெருமாளே

மேல்

#1178
புருவத்தை நெறித்து விழி கயல் பயிலிட்டு வெருட்டி மதித்த இரு
புது வட்டை மினுக்கி அளி குலம் இசை பாடும்
புயல் சற்று விரித்து நிரைத்து ஒளி வளையிட்ட கரத்தை அசைத்து அகில்
புனை மெத்தை படுத்த பளிங்கு அறைதனில் ஏறி
சரசத்தை விளைத்து முலை கிரி புளகிக்க அணைத்து நக குறிதனை
வைத்து முகத்தை முகத்துடன் உற மேவி
தணிவித்து இரதத்து அதரத்து உமிழ் அமுதத்தை அளித்து உருக்கிகள்
தரு பித்தை அகற்றி உனை தொழ முயல்வேனோ
பரதத்தை அடக்கி நடிப்பவர் த்ரிபுரத்தை எரிக்க நகைப்பவர்
பரவைக்குள் விடத்தை மிடற்று இடுபவர் தேர் கப்பரை
உற்ற கரத்தர் மிக பகிரதி உற்ற சிரத்தர் நிறத்து உயிர்
பரவு அத்தர் பொருப்பில் இருப்பவர் உமை ஆளர்
சுரர் சுத்தர் மனத்து உறை வித்தகர் பணி பத்தர் பவத்தை அறுப்பவர்
சுடலை பொடியை பரிசிப்பவர் விடை ஏறும்
துணை ஒத்த பதத்தர் எதிர்த்திடும் மதனை கடி முத்தர் கருத்து அமர்
தொலைவு அற்ற கிருபைக்குள் உதித்து அருள் பெருமாளே

மேல்

#1179
புவிக்குள் பாதம்அதை நினைபவர்க்கும் கால தரிசனை புலக்கண் கூடும் அதுதனை அறியாதே
புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை புழு கண் பாவம் அது கொளல் பிழையாதே
கவி கொண்டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி களைக்கும் பாவ சுழல் படும் அடி நாயேன்
கலக்கு உண்டாகு புவிதனில் எனக்கு உண்டாகு பணிவிடை கணக்கு உண்டாதல் திருவுளம் அறியாதோ
சிவத்தின் சாமி மயில் மிசை நடிக்கும் சாமி எமது உளே சிறக்கும் சாமி சொருபம் இது ஒளி காண
செழிக்கும் சாமி பிறவியை ஒழிக்கும் சாமி பவம் அதை தெறிக்கும் சாமி முநிவர்கள் இடம் மேவும்
தவத்தின் சாமி புரி பிழை பொறுக்கும் சாமி குடி நிலை தரிக்கும் சாமி அசுரர்கள் பொடியாக
சதைக்கும் சாமி எமை பணி விதிக்கும் சாமி சரவண தகப்பன் சாமி என வரு பெருமாளே

மேல்

#1180
பூசல் தரும் கயலும் பொருந்திய வாச நறும் குழலும் துலங்கிய
பூரண கும்பம் எனும் தனங்களும் மட மாதர்
போகம் அடங்கலையும் புணர்ந்து அநுராகம் விளைந்து வரும் பிழை
போய் அகலும்படி ஒன்றை அன்புற நினையாதே
ஆசை எனும்படியும் தனங்களும் ஓகை நடந்திடவும் தினங்களும்
ஆருடனும் பகை கொண்டு நின்றுற நடமாடி
ஆடிய பம்பரம் முன் சுழன்று எதிர் ஓடி விழும்படி கண்டது ஒன்று உற
ஆவி அகன்று விடும் பயம் கெட அருள்வாயே
வாசவன் அன்பு விளங்க நின்ற அசுரேசர் குலங்கள் அடங்கலும் கெட
வானவர் நின்று தியங்குகின்றது ஓர் குறை தீர
வாரி அதிர்ந்து பயந்து நின்றிட மேரு அடங்க இடிந்து சென்றிட
வாகை புனைந்து ஒரு வென்றி கொண்டு அருள் இளையோனே
வீசிய தென்றலொடு அந்தியும் பகையாக முயங்க அநங்கனும் பொர
வேடை எனும்படி சிந்தை நொந்திட அடைவாக
வேடர் செழும் புன வஞ்சி அஞ்சன வேலின் உளங்கள் கலங்கி இன்புற
வேளை எனும்படி சென்று இறைஞ்சிய பெருமாளே

மேல்

#1181
பூசல் வந்து இரு தோடு ஆர் காதொடு மோதிடும் கயல் மானார் மானம் இல்
போது மங்கையர் கோடா கோடிய மனது ஆனார்
பூர குங்கும தூள் ஆமோத படீர சண்பக மாலால் லாளித
பூதரங்களின் மீதே மூழ்கிய அநுராக
ஆசை என்கிற பாராவாரமும் ஏறுகின்றிலன் நானா பேத அநேக
தந்த்ர க்ரியா வேதாகம கலை ஆய
ஆழியும் கரை காணேன் நூபுர பாத பங்கயம் ஓதேன் நேசிலன்
ஆயினும் குருநாதா நீ அருள்புரிவாயே
வாசவன் பதி பாழாகாமல் நிசாசரன் குலம் வாழாதே அடி
மாள வன் கிரி கூறாய் நீறு எழு நெடு நேமி
மாதவன் தரு வேதாவோடு அலை மோதும் தெண் கடல் கோகோகோ என
மா முறிந்திட நீள் வேல் ஏவிய இளையோனே
வீசு தென்றலும் வேள் பூ வாளியும் மீறுகின்றமை ஆமோ காம விடாய்
கெடும்படி காவாய் ஆவாய் என ஏனல்
மீது சென்று உறவாடா வேடுவர் பேதை கொங்கையின் மீதே மால் கொடு
வேடை கொண்ட பிரானே வானவர் பெருமாளே

மேல்

#1182
பொங்கும் கொடிய கூற்றனும் நஞ்சும் பொதுவில் நோக்கிய பொங்கும் புதிய நேத்திர வலை வீசி
பொன் கண்டு இளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டு உயிர் புண் கொண்டு உருகி ஆட்படும் மயல் தீர
கொங்கின் புசக கோத்திரி பங்கம் களையும் ஆய்க்குடி கொங்கின் குவளை பூக்கிற கிரி சோண
குன்றம் கதிரை பூ பரம் முன் துன்றும் அமரர் போற்றிய குன்றம் பிறவும் வாழ்த்துவது ஒரு நாளே
எங்கும் பகரமாய் கெடி விஞ்சும் பகழி வீக்கிய வெம் சண்ட தனு வேட்டுவர் சரண் ஆர
விந்தம் பணிய வாய்த்து அருள் அம் தண் புவன நோற்பவை மென் குங்கும குயாத்திரி பிரியாதே
எங்கும் கலுழி ஆர்த்து எழ எங்கும் சுருதி கூப்பிட எங்கும் குருவி ஓச்சிய திரு மானை
என்றென்று அவசமாய் தொழுது என்றும் புதிய கூட்டமொடு என்றும் பொழுது போக்கிய பெருமாளே

மேல்

#1183
பொருத கயல் விழி புரட்டி காட்டுவர் புளக தன வடம் அசைத்து காட்டுவர்
புயலின் அளகமும் விரித்து காட்டுவர் பொதுமாதர்
புனித இதழ் மது நகைத்து காட்டுவர் பொலிவின் இடை துகில் குலைத்து காட்டுவர்
புதிய பரிபுரம் நடித்து காட்டுவர் இளைஞோரை
உருக அணைதனில் அணைத்து காட்டுவர் உடைமை அடையவே பறித்து தாழ்க்கவே
உததி அமுது என நிகழ்த்தி கேட்பவர் பொடி மாயம்
உதரம் எரிதர மருந்திட்டு ஆட்டிகள் உயிரின் நிலைகளை விரித்து சேர்ப்பவர்
உறவு கலவியை விடுத்திட்டு ஆட்கொள நினையாதோ
மருது பொடிபட உதைத்திட்டு ஆய் செரி மகளிர் உறிகளை உடைத்து போட்டவர்
மறுக ஒரு கயிறு அடித்திட்டு ஆர்ப்புற அழுது ஊறும்
வளரு நெடு முகில் எதிர்த்து காட்டு என அசடன் இரணியன் உரத்தை பேர்த்தவன்
மழையில் நிரை மலை எடுத்து காத்தவன் மருகோனே
விருது பலபல பிடித்து சூர் கிளை விகட தட முடி பறித்து தோள்களை
விழவும் முறியவும் அடித்து தாக்கிய அயில் வீரா
வெகு தி சலதியை எரித்து தூள்பட வினை செய் அசுரர்கள் பதிக்கு உள் பாய்ச்சிய
விபுத மலர் அடி விரித்து போற்றினர் பெருமாளே

மேல்

#1184
மங்காது இங்கு ஆக்கும் சிறுவரும் உண்டே இங்கு ஆற்றும் துணைவியும்
வம்பாரும் தேக்கு உண்டிட வறிது எணும் வாதை
வந்தே பொன் தேட்டம் கொடு மனம் நொந்தே இங்கு ஆட்டம் பெரிது எழ
வண் போதன் தீட்டும் தொடர் அது படி ஏமன்
சங்காரம் போர் சங்கையில் உடல் வெம் கானம் போய் தங்கு உயிர் கொள
சந்தேகம் தீர்க்கும் தனுவுடன் அணுகா முன்
சந்து ஆரம் சாத்தும் புய இயல் கந்தா என்று ஏத்தும்படி என
சந்தாபம் தீர்த்து என்று அடியிணை தருவாயே
கங்காளன் பார்த்தன் கையில் அடி உண்டே திண்டாட்டம் கொள்ளும் நெடு
கல் சாபம் சார்த்தும் கரதலன் எருது ஏறி
கந்தாவம் சேர் தண் புது மலர் அம்பால் வெந்து ஆர்ப்ப பொன்றிட விழி
கண்டான் வெம் காட்டு அங்கு அனலுற நடமாடி
அங்கு ஆலம் கோத்து எண் திசை புவி மங்காது உண்டாற்கு ஒன்று அதிபதி
அம் தாபம் தீர்த்து அம் பொருளினை அருள்வோனே
அன்பால் அம் தாள் கும்பிடும் அவர்தம் பாவம் தீர்த்து அம் புவியிடை
அஞ்சா நெஞ்சு ஆக்கம் தர வல பெருமாளே

மேல்

#1185
மதன தனு நிகர் இடைக்கே மனம் உருக வரு பிடி நடைக்கே இரு
வனச பரிபுர மலர்க்கே மதுகரம் வாழும்
வகுள ம்ருகமத மழைக்கே மணி மகரம் அணி அன குழைக்கே மட
மகளிர் முகுளித முலைக்கே கடல் அமுது ஊறும்
அதரம் மதுர இத மொழிக்கே குழை அளவு அளவிய விழிக்கே தளவு
அனையது ஒரு சிறு நகைக்கே பனி மதி போலும்
அழகு திகழ் தரு நுதற்கே அநவரதம் அவயவம் அனைத்தூடினும்
அவசமுறும் மயல் தவிர்த்து ஆள்வதும் ஒரு நாளே
உததி புதைபட அடைத்து ஆதவன் நிகர் இல் இரதமும் விடுக்கா நகர்
ஒரு நொடியில் வெயில் எழ சாநகி துயர் தீர
உபய ஒரு பது வரை தோள்களு நிசிசரர்கள் பதி தச க்ரீவமும்
உருள ஒரு கணை தெரித்தானும் மவுன ஞான
திதம் இல் அவுணர்தம் இருப்பாகிய புரமும் எரி எழ முதல் பூதர
திலதம் குலகிரி வளைத்தானும் மகிழ வானோர்
திருவ நகர் குடி புக சீகர மகர சலம் முறை இட சூரொடு
சிகர கிரி பொடிபட சாடிய பெருமாளே

மேல்

#1186
மதன் ஏவிய கணையால் இருவினையால் புவி கடல் சாரமும் வடிவாய் உடல் நடமாடுக முடியாதேன்
மன மாயையொடு இரு காழ் வினை அற மூதுடை மலம் வேர் அற மகிழ் ஞானக அநிபூதியின் அருள் மேவி
பதம் மேவும் உன் அடியாருடன் விளையாடுக அடியேன் முனெ பரிபூரண கிருபாகரம் உடன் ஞான
பரி மேல் அழகுடன் ஏறி விணவர் பூ மழை அடி மேல் விட பல கோடி வெண் மதி போலவெ வருவாயே
சத கோடி வெண் மடவார் கடல் என சாமரை அசையா முழு சசி சூரியர் சுடராம் என ஒரு கோடி
சடை மா முடி முநிவோர் சரண் என வேதியர் மறை ஓதுக சதி நாடகம் அருள் வேணியன் அருள் பாலா
விதி ஆனவன் இளையாள் எனது உளம் மேவிய வளிநாயகி வெகு மாலுற தனம் மேல் அணை முருகோனே
வெளி ஆசையொடு அடை பூவணர் மருகா மணி முதிர் ஆடகம் வெயில் வீசிய அழகா தமிழ் பெருமாளே

மேல்

#1187
மாடம் மதிள் சுற்றும் ஒக்க வைத்திட வீடு கனக்க தனத்தில் அச்சுறும்
மால் இபம் ஒத்து ப்ரபுத்தனத்தில் அடைவாக
மாதர் பெருக்க தருக்கம் அற்றவர் சூழ இருக்க தரிக்க இப்படி
வாழ்கையில் மத்த பரமத்த சித்தி கொள் கடை நாளில்
பாடையினில் கட்டி விட்டு நட்டவர் கூட அரற்றி புடைத்து உறுப்பு உள
பாவை எடுத்து தழற்கு இரைப்பட விடல் ஆய
பாடு தொலைத்து கழிக்க அக்ருபை தேடும் எனை தன் புரக்கவுற்று இரு
பாதுகையை பற்றி நிற்க வைத்து எனை அருளாதோ
ஆடக வெற்பை பெருத்த மத்து என நாக வடத்தை பிணித்து உரத்து
அமரார்கள் பிடித்து திரித்திட புகை அனலாக
ஆழி கொதித்து கதற்றி விட்டு இமையோர்கள் ஒளிக்க களித்த உக்கிர
ஆல விடத்தை தரித்த அற்புதர் குமரேசா
வேடர் சிறுக்கிக்கு லச்சை அற்று எழு பாரும் வெறுத்து சிரிப்ப நட்பொடு
வேளை என புக்கு நிற்கும் வித்தக இளையோனே
வேகம் மிகுத்து கதிக்கும் விக்ரம சூரர் வெறுத்து துணித்து அடக்குதல்
வீரம் என தத்துவத்து மெச்சிய பெருமாளே

மேல்

#1188
மாண்டார் எலும்பு அணியும் சடை ஆண்டார் இறைஞ்ச மொழிந்ததை
வான் பூதலம் பவனம் கனல் புனல் ஆன
வான் பூதமும் கரணங்களும் நான் போய் ஒடுங்க அடங்கலும்
மாய்ந்தால் விளங்கும் அது ஒன்றினை அருளாயேல்
வேண்டாமை ஒன்றை அடைந்து உளம் மீண்டு ஆறி நின் சரணங்களில்
வீழ்ந்து ஆவல் கொண்டு உருக அன்பினை உடையேனாய்
வேந்தா கடம்பு புனைந்து அருள் சேந்தா சரண்சரண் என்பது
வீண் போம் அது ஒன்று அல என்பதை உணராதோ
ஆண்டார் தலங்கள் அளந்திட நீண்டார் முகுந்தர் தடம்தனில்
ஆண்டு ஆவி துஞ்சியது என்று முதலை வாயுற்று
ஆங்கு ஓர் சிலம்பு புலம்பிட ஞான்று ஊது துங்க சலஞ்சலம்
ஆம் பூ முழங்கி அடங்கும் அளவில் நேசம்
பூண்டு ஆழி கொண்டு வனங்களில் ஏய்ந்து ஆள வென்று வெறும் தனி
போந்து ஓலம் என்று உதவும் புயல் மருகோனே
பூம் பாளை எங்கும் மணம் கமழ் தேம் காவில் நின்றது ஓர் குன்றவர்
பூம் தோகை கொங்கை விரும்பிய பெருமாளே

மேல்

#1189
மாறு பொரு காலன் ஒக்கும் வானில் எழு மா மதிக்கும் வாரி துயிலா அதற்கும் வசையே சொல்
மாய மடவார்தமக்கும் ஆயர் குழல் ஊது இசைக்கும் வாயும் இள வாடையிற்கும் மதனாலே
வேறுபடி பாயலுக்குமே எனது பேதை எய்த்து வேறு படு மேனி சற்றும் அழியாதே
வேடர் குல மாதினிக்கு வேடை கெடவே நடித்து மேவும் இரு பாதம் உற்று வரவேணும்
ஆறும் மிடை வாள் அரக்கர் நீறு பட வேல் எடுத்த ஆறுமுகனே குறத்தி மணவாளா
ஆழி உலகு ஏழு அடக்கி வாசுகியை வாய் அடக்கி ஆலும் மயில் ஏறி நிற்கும் இளையோனே
சீறு பட மேரு வெற்பை நீறு படவே சினத்த சேவலவ நீபம் மொய்த்த திரள் தோளா
சேரும் அடலால் மிகுத்த சூரர் கொடு போய் அடைத்த தேவர் சிறை மீளவிட்ட பெருமாளே

மேல்

#1190
மின்னினில் நடுக்கமுற்ற நுண்ணிய நுசுப்பில் முத்த வெண் நகையில் வட்டம் ஒத்து அழகு ஆர
விம்மி இளகி கதித்த கொம்மை முலையில் குனித்த வில் நுதலில் இட்ட பொட்டில் விலைமாதர்
கன்னல் மொழியில் சிறக்கும் அன்ன நடையில் கறுத்த கண்ணின் இணையில் சிவந்த கனி வாயில்
கண் அழிவு வைத்த புத்தி ஷண்முக நினைக்க வைத்த கன்ம வசம் எப்படிக்கு மறவேனே
அன்ன நடையை பழித்த மஞ்ஞை மலையில் குறத்தி அம்மை அடவி புனத்தில் விளையாடும்
அன்னை இறுக பிணித்த பன்னிரு திரு புயத்தில் அன்னிய அரக்கர் அத்தனையும் மாள
பொன்னுலகினை புரக்கும் மன்ன நல் வ்ரதத்தை விட்ட புன்மையர் புர த்ரய அத்தர் பொடியாக
பொன் மலை வளைத்து எரித்த கண் நுதல் இடத்தில் உற்ற புண்ணிய ஒருத்தி பெற்ற பெருமாளே

மேல்

#1191
முத்தம் உலாவு தனத்தியர் சித்தசன் ஆணை செலுத்திகள் முத்தம் இடா மன உருக்கிகள் இளைஞோர்பால்
முட்ட உலாவி மருட்டிகள் நெட்டு இலை வேலின் விழிச்சியர் முப்பது கோடி மனத்தியர் அநுராக
தத்தைகள் ஆசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள் தப்புறும் ஆறு அகம் எத்திகள் அளவே நான்
தட்டு அழியாது திருப்புகழ் கற்கவும் ஓதவும் முத்தமிழ் தத்துவ ஞானம் எனக்கு அருள்புரிவாயே
மத்தக யானை உரித்தவர் பெற்ற குமார இலட்சுமி மைத்துனனாகிய விக்ரமன் மருகோனே
வற்றிட வாரிதி முற்றிய வெற்றி கொள் சூரர் பதைப்புற வற்புறு வேலை விடுத்து அருள் இளையோனே
சித்திரமான குறத்தியை உற்று ஒரு போது புனத்திடை சிக்கெனவே தழுவி புணர் மணவாளா
செச்சை உலாவு பதத்தினை மெய் தவர் வாழ்வு பெற தரு சித்த விசாக இயல் சுரர் பெருமாளே

மேல்

#1192
முருகு உலாவிய மை பாவு வார் குழல் முளரி வாய் நெகிழ் வித்தார வேல் விழி
முடுகுவோர் குலை வித்தான கோடு எனும் முலையாலே
முறைமை சேர் கெட மைத்து ஆர்வு வார் கடல் முடுகுவோர் என் எய்த்து ஓடி ஆகமும்
மொழியும் வேறிடு பித்து ஏறினார் எனும் முயல்வே கொண்டு
உருகுவார் சில சிற்றா மனோலயம் உயிரும் ஆகமும் ஒத்து ஆசையோடு உளம்
உருகி தீ மெழுகு இட்டானதோ என உரையா நண்பு
உலக அவா ஒழிவித்தார் மனோலய உணர்வு நீடிய பொன் பாத சேவடி
உலவு நீ என்னை வைத்து ஆளவே அருள்தருவாயே
குருகு உலாவிய நல் தாழி சூழ் நகர் குமரனே முனை வெற்பு ஆர் பராபரை
குழக பூசுரர் மெய் காணும் வீரர்தம் வடி வேலா
குறவர் சீர் மகளை தேடி வாடிய குழையும் நீள் கர வைத்து ஓடியே அவர்
குடியிலே மயிலை கோடு சோதிய உரவோனே
மருகு மா மதுரை கூடல் மால் வரை வளைவுள் ஆகிய நக்கீரர் ஓதிய
வளகை சேர் தமிழுக்காக நீடிய கரவோனே
மதியம் மேவிய சுற்றாத வேணியர் மகிழ நீ நொடியற்றான போதினில்
மயிலை நீடு உலகை சூழ ஏவிய பெருமாளே

மேல்

#1193
முலை மேலில் கலிங்கம் ஒன்றிட முதல் வானில் பிறந்த மின் பிறை
நுதல் மேல் முத்து அரும்ப புந்தியில் இதம் ஆர
முக நேசித்து இலங்கவும் பல வினை மூசி புரண்ட வண் கடல்
முரண் ஓசைக்கு அமைந்தவன் சரம் என மூவா
மலர் போல சிவந்த செம் கணில் மருள் கூர்கைக்கு இருண்ட அஞ்சனம்
வழுவாமல் புனைந்து திண் கயம் என நாடி
வரும் மாதர்க்கு இரங்கி நெஞ்சமும் மயலாகி பரந்து நின் செயல்
மருவாமல் கலங்கும் வஞ்சகம் ஒழியாதோ
தொலையா நல் தவங்கள் நின்று உனை நிலையாக புகழ்ந்து கொண்டு உள
அடியார் உள் துலங்கி நின்று அருள் துணை வேளே
துடி நேர் ஒத்து இலங்கும் என் கொடி இடை தோகைக்கு இசைந்த ஒண் தொடி
சுரர் வாழ பிறந்த சுந்தரி மணவாளா
மலை மாள பிளந்த செம் கையில் வடி வேலை கொடு அந்த வஞ்சக
வடிவாக கரந்து வந்து அமர் பொரு சூரன்
வலி மாள துரந்த வன் திறல் முருகா மல் பொருந்து திண் புய
வடிவா மற்று அநந்தம் இந்திரர் பெருமாளே

மேல்

#1194
முனை அழிந்தது மேட்டி குலைந்தது வயது சென்றது வாய் பல் உதிர்ந்தது
முதுகு வெம் சிலை காட்டி வளைந்தது ப்ரபையான
முகம் அழிந்தது நோக்கும் இருண்டது இருமல் வந்தது தூக்கம் ஒழிந்தது
மொழி தளர்ந்தது நாக்கு விழுந்தது அறிவே போய்
நினைவு அயர்ந்தது நீட்டல் முடங்கலும் அவசமும் பல ஏக்கமும் முந்தின
நெறி மறந்தது மூப்பும் முதிர்ந்தது பல நோயும்
நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது சல மலங்களின் நாற்றம் எழுந்தது
நிமிஷம் இங்கு இனி ஆச்சுது என் முன்பு இனிது அருள்வாயே
இனைய இந்திரன் ஏற்றமும் அண்டர்கள் தலமும் மங்கிட ஓட்டி இரும் சிறை
இடும் இடும்பு உள ராக்கதர்தங்களில் வெகு கோடி
எதிர் பொரும்படி போர்க்குள் எதிர்ந்தவர் தசை சிரங்களும் நால் திசை சிந்திட
இடி முழங்கிய வேல் படை ஒன்றனை எறிவோனே
தினை வனம் கிளி காத்த சவுந்தரி அருகு சென்று அடி போற்றி மணம் செய்து
செகம் அறிந்திட வாழ்க்கை புரிந்திடும் இளையோனே
திரிபுரம் பொடி ஆக்கிய சங்கரர் குமர கந்த பராக்ரம செந்தமிழ்
தெளிவு கொண்டு அடியார்க்கு விளம்பிய பெருமாளே

மேல்

#1195
மைக்கு கை புக்க கயல் விழி எற்றி கொட்டிட்டு சிலை மதன் வர்க்கத்தை கற்பித்திடு திற மொழியாலே
மட்டிட்டு துட்ட கெருவிதம் இட்டிட்டு சுற்றி பரிமள மச்ச பொன் கட்டில் செறி மலர் அணை மீதே
புக்கு கைக்கு ஒக்க புகும் ஒரு அற்ப சிற்றிற்ப தெரிவையர் பொய்க்கு உற்று சுற்றித்திரிகிற புலையேனை
பொற்பித்து கற்பித்து உனது அடி அர்ச்சிக்க சற்று க்ருபைசெய புத்திக்கு சித்தித்து அருளுவது ஒரு நாளே
திக்குக்கு திக்கு திகுதிகு டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு தித்தித்தி தித்தி திதி என நடமாடும்
சித்தர்க்கு சுத்த பரம நல் முத்தர்க்கு சித்த க்ருபை உள சித்தர்க்கு பத்தர்க்கு அருளிய குருநாதா
ஒக்க தக்கிட்டு திரி அசுர் முட்ட கொட்டற்று திரிபுரம் ஒக்க கெட்டிட்டு திகுதிகு என வேக
உற்பித்து கற்பித்து அமரரை முற்பட்ட கட்ட சிறைவிடும் ஒள் குக்ட கொற்ற கொடி உள பெருமாளே

மேல்

#1196
மோது மறலி ஒரு கோடி வேல் படை கூடி முடுகி எமது ஆவி பாழ்த்திட
மோகம் உடைய வெகு மாதர் கூட்டமும் அயலாரும்
மூளும் அளவில் விசை மேல் விழா பரிதாபமுடனும் விழி நீர் கொளா கொடு
மோக வினையில் நெடுநாளின் மூத்தவர் இளையோர்கள்
ஏது கருமம் இவர் சாவு எனா சிலர் கூடி நடவும் இடுகாடு எனா கடிது
ஏழு நரகின் இடை வீழும் என பொறியறு பாவி
ஏழு புவனம் மிகு வான நாட்டவர் சூழும் முநிவர் கிளை தாமும் ஏத்திட
ஈசன் அருள் குமர வேதம் ஆர்த்து எழ வருவாயே
சூது பொரு தருமன் நாடு தோற்று இரு ஆறு வருஷம் வனவாசம் ஏற்று இயல்
தோகை உடனும் விராட ராச்சியம் உறை நாளில்
சூறை நிரை கொடு அவர் ஏக மீட்டு எதிர் ஆளும் உரிமை தருமாறு கேட்டு ஒரு
தூது செல அடு வல் ஆண்மை தாக்குவன் என் மீள
வாது சமர் திருதரானராட்டிர ராஜகுமரர் துரியோதனால் பிறர்
மாள நிருபரொடு சேனை தூள்பட வரி சாப
வாகை விஜயன் அடல் வாசி பூட்டிய தேரை முடுகி நெடு மால் பராக்ரம
மாயன் மருக அமர் நாடர் பார்த்திப பெருமாளே

மேல்

#1197
வடி கட்டிய தேன் என வாயினில் உறு துப்பு அன ஊறலை ஆர்தர
வரைவில் திகழ் ஊடலிலே தரு மடவார்பால்
அடிபட்டு அலை பாவ நிர்மூடனை முகடி தொழில் ஆம் முன் நீ உனது
அடிமை தொழிலாக எ நாளினில் அருள்வாயோ
பொடிபட்டிட ராவணன் மா முடி சிதறி சிலை வாளிகளே கொடு
பொருகைக்கு களம் மேவிய மாயவன் மருகோனே
கொடுமை தொழில் ஆகிய கானவர் மகிமை கொளவே அவர் வாழ் சிறு
குடிலில் குற மானொடு மேவிய பெருமாளே

மேல்

#1198
வட்ட முலை கச்சு அவிழ்த்து வைத்துள முத்து வடத்தை கழுத்தில் இட்டு இரு
மை குவளை கண் குறிப்பு அழுத்திய பொதுமாதர்
மட்டு அமளிக்குள் திருத்தி முத்து அணி மெத்தை தனக்குள் செருக்கி வெற்றிலை
வைத்த பழு பச்சிலை சுருள் கடி இதழ் கோதி
கட்டி அணைத்திட்டு எடுத்து உடுத்திடு பட்டை அவிழ்த்து கருத்து இதத்தோடு
கற்ற கலை சொற்களில் பயிற்று உளம் முயல்போதும்
கைக்குள் இசைத்து பிடித்த கட்கமும் வெட்சி மலர் பொன் பதத்து இரட்சணை
கட்டு மணி சித்திர திறத்தையும் மறவேனே
கொட்டம் மிகுத்திட்ட அரக்கர் பட்டணம் இட்டு நெருப்பு கொளுத்தி அ தலை
கொட்டை பரப்ப செருக்களத்திடை அசுரோரை
குத்தி முறித்து குடிப்ப ரத்தமும் வெட்டி அழித்து கன களிப்பொடு
கொக்கரி இட்டு தெரித்து அடுப்பன ஒரு கோடி
பட்ட பிணத்தை பிடித்து இழுப்பன கச்சரி கொட்டிட்டு அடுக்கு எடுப்பன
பற்கள் விரித்து சிரித்து இருப்பன வெகு பூதம்
பட்சி பறக்க திசைக்குள் மத்தளம் வெற்றி முழக்கி கொடி பிடித்து அயில்
பட்டு அற விட்டு துரத்தி வெட்டிய பெருமாளே

மேல்

#1199
வளை கரம் மாட்டி வேட்டினிடை துயில் வாட்டி ஈட்டி வரி விழி தீட்டி ஏட்டின் மணம் வீசும்
மழை குழல் காட்டி வேட்கை வளர் முலை காட்டி நோக்கின் மயில் நடை காட்டி மூட்டி மயல் ஆக
புளகித வார்த்தை ஏற்றி வரி கலை வாழ்த்தி ஈழ்த்து புணர் முலை சேர்த்து வீக்கி விளையாடும்
பொது மடவார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை புலை குணம் ஓட்டி மாற்றி அருள்வாயே
தொளை ஒழுகு ஏற்றம் நோக்கி பல வகை வாச்சி தூர்த்து சுடர் அடி நீத்தல் ஏத்தும் அடியார்கள்
துணை வன்மை நோக்கி நோக்கின் இடை முறை ஆய்ச்சிமார் சொல் சொலி அமுது ஊட்டி ஆட்டு முருகோனே
இள நகை ஓட்டி மூட்டர் குலம் விழ வாட்டி ஏட்டை இமையவர் பாட்டை மீட்ட குருநாதா
இயல் புவி வாழ்த்தி ஏத்த எனது இடர் நோக்கி நோக்கம் இருவினை காட்டி மீட்ட பெருமாளே

மேல்

#1200
வாடையில் மதனை அழைத்துற்று வாள் வளை கலகல என கற்றை வார் குழல் சரிய முடித்திட்டு துகில் ஆரும்
மால் கொள நெகிழ உடுத்திட்டு நூபுரம் இணை அடியை பற்றி வாய் விட நுதல் மிசை பொட்டிட்டு வரும் மாய
நாடக மகளிர் நடிப்புற்ற தோதக வலையில் அகப்பட்டு ஞாலமும் முழுது மிக பித்தன் எனுமாறு
நாணமும் மரபும் ஒழிக்கு அற்று நீதியும் அறிவும் அற கெட்டு நாய் அடிமையும் அடிமைப்பட்டுவிடலாமோ
ஆடிய மயிலினை ஒப்புற்று பீலியும் இலையும் உடுத்திட்டு ஆரினும் அழகு மிக பெற்று யவனாளும்
ஆகிய இதண் மிசை உற்றிட்டு மான் இனம் மருள விழித்திட்டு ஆயுத கவண் ஒரு கை சுற்றி விளையாடும்
வேடுவர் சிறுமி ஒருத்திக்கு யான் வழி அடிமை என செப்பி வீறு உள்ள அடி இணையை பற்றி பலகாலும்
வேதமும் அமரரும் மெய் சக்ரவாளமும் அறிய விலைப்பட்டு மேருவில் மிகவும் எழுத்திட்ட பெருமாளே

மேல்

#1201
விரை சொரியும் ம்ருகமதமும் மலரும் வாய்த்து இலகு விரி குழலும் அவிழ நறு மெழுகு கோட்டு
முலை மிசையில் வரு பகல் ஒளியை வெருவ ஓட்டும் மணி வகை ஆரம்
விடு தொடைகள் நக நுதியில் அறவும் வாய்த்து ஒளிர விழி செருக மொழி பதற அமுது தேக்கிய கை
விதறி வளை கலகல என அழகு மேல் பொழிய அலர் மேவும்
இரு சரண பரிபுர சுருதிகள் ஆர்க்க அவசம் இலகு கடல் கரை புரள இனிமை கூட்டி உள
இதம் விளைய இருவர் எனும் அளவு காட்ட அரிய அநுராகத்து
இடை முழுகி எனது மனது அழையு நாட்களினும் இரு சரண இயலும் வினை எறியும் வேல் கரமும்
எழுத அரிய திரு முகமும் அருளும் ஏத்தும் வகை தரவேணும்
அரி பிரமர் அடிவருட உததி கோத்து அலற அடல் வடவை அனல் உமிழ அலகை கூட்டம் இட
அணி நிணமும் மலை பெருக அறையும் வாச்சியமும் அகலாது
அடல் கழுகு கொடி கெருடன் இடை விடா கணமும் மறு குறளும் எறி குருதி நதியின் மேல் பரவ
அருண ரண முக வயிரவர்களும் ஆர்ப்பு அரவம் இட நாளும்
பரவு நிசிசரர் முடிகள் படியின் மேல் குவிய பவுரி கொடு திரிய வரை பலவும் வேர் பறிய
பகர்வு அரிய ககனம் முகடு இடிய வேட்டை வரு மயில் வீரா
படரு நெறி சடை உடைய இறைவர் கேட்க உரிய பழய மறை தரும் மவுன வழியை யார்க்கும் ஒரு
பரம குருபரன் எனவும் அறிவு காட்ட வல பெருமாளே

மேல்

#1202
வேல் ஒத்து வென்றி அங்கை வேளுக்கு வெம் சரங்களாம் மிக்க கண்கள் என்றும் இரு தோளை
வேய் ஒக்கும் என்று கொங்கை மேல் வெற்பு அது என்று கொண்டை மேகத்தை வென்றது என்றும் எழில் மாதர்
கோலத்தை வெஞ்ச வெம் சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர் கூடத்தில் நின்றுநின்று குறியாதே
கோது அற்ற நின் பதங்கள் நேர் பற்றி இன்பம் அன்புகூர்கைக்கு வந்து சிந்தை குறுகாதோ
ஞாலத்தை அன்று அளந்து வேலைக்குள்ளும் துயின்று நாடு அத்தி முன்பு வந்த திருமாலும்
நாட தடம் சிலம்பை மாவை பிளந்து அடர்ந்து நாக தலம் குலுங்க விடும் வேலா
ஆலித்து எழுந்து அடர்ந்த ஆலத்தை உண்ட கண்டர் ஆகத்தில் மங்கைபங்கர் நடமாடும்
ஆதிக்கு மைந்தன் என்று நீதிக்குள் நின்ற அன்பர் ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே

மேல்

#1203
அடியார் மனம் சலிக்க எவராகிலும் பழிக்க அபராதம் வந்து கெட்ட பிணி மூடி
அனைவோரும் வந்து சிச்சி என நால்வரும் சிரிக்க அனலோடு அழன்று செத்து விடுமா போல்
கடையேன் மலங்கள் முற்றும் இருநோயுடன் பிடித்த கலியோடு இறந்து சுத்த வெளியாகி
களிகூர என்றனக்கு மயில் ஏறி வந்து முத்தி கதி ஏற அன்பு வைத்து உன் அருள்தாராய்
சடை மீது கங்கை வைத்து விடை ஏறும் எந்தை சுத்த தழல் மேனியன் சிரித்து ஒர் புரம் மூணும்
தவிடாக வந்து எதிர்த்த மதன் ஆகமும் சிதைத்த தழல் பார்வை அன்று அளித்த குருநாதா
மிடி தீர அண்டருக்கு மயில் ஏறி வஞ்சர் கொட்டம் வெளியாக வந்து நிர்த்தம் அருள்வோனே
மின நூல் மருங்கும் பொற்பு முலை மாது இளம் குறத்தி மிகு மாலொடு அன்பு வைத்த பெருமாளே

மேல்

#1204
அடி இல் விடா பிணம் அடைய விடா சிறிது அழியு முன் வீட்டு முன் உயர் பாடை
அழகொடு கூட்டுமின் அழையுமின் வார் பறை அழுகையை மாற்றுமின் நொதியா முன்
எடுமின் யாக்கையை என இடுகாட்டு எரியிடை கொடு போய் தமர் சுடு நாளில்
எயினர் குலோத்தமை உடன் மயில் மேல் கடிதே எனது உயிர் காத்திட வரவேணும்
மடுவிடை போய் பரு முதலையின் வாய்ப்படு மத கரி கூப்பிட வளை ஊதி
மழை முகில் போல் கக பதி மிசை தோற்றிய மகிபதி போற்றிடு மருகோனே
படர் சடை ஆத்திகர் பரிவுற ராட்சதர் பரவையில் ஆர்ப்பு எழ விடும் வேலால்
பட முனியா பணி தமனிய நாட்டவர் பதி குடி ஏற்றிய பெருமாளே

மேல்

#1205
அப்படி ஏழும்ஏழும் வகுத்து வழாது போதினின் அக்ரம் வியோம கோளகை மிசை வாழும்
அக்ஷர தேவி கோவின் விதிப்படி மாறிமாறி அனைத்து உரு ஆய காயம் அது அடைவே கொண்டு
இப்படி யோனி வாய்தொறும் உற்பவியா விழா உலகில் தடுமாறியே திரிதரு காலம்
எத்தனை ஊழி காலம் என தெரியாது வாழி இனி பிறவாது நீ அருள்புரிவாயே
கற்பக வேழம் ஏய்வன பச்சிள ஏனல் மீது உறை கற்புடை மாது தோய் தரும் அபிராம
கற்புர தூளி லேபன மல் புய பாக சாதன கற்பக லோல தாரண கிரி சால
விப்ர சமூக வேதன பச்சிம பூமி காவல வெட்சியு நீப மாலையும் அணிவோனே
மெத்திய ஆழி சேறு எழ வெற்பொடு சூரன் நீறு எழ விக்ரம வேலை ஏவிய பெருமாளே

மேல்

#1206
அயில் விலோசனம் குவிய வாசகம் பதற ஆனனம் குறு வேர்வுற
அளக பாரமும் குலைய மேல் விழுந்து அதர பானம் உண்டு இயல் மாதர்
சயில பார குங்கும பயோதரம் தழுவு மாதர் ஆதரம் தமியேனால்
தவிரொணாது நின் கருணை கூர்தரும் தருண பாதமும் தரவேணும்
கயிலையாளியும் குலிசபாணியும் கமலயோனியும் புயகேசன்
கண பணா முகம் கிழிய மோத வெம் கருட வாகனம்தனில் ஏறும்
புயல் இலேகரும் பரவ வானிலும் புணரி மீதினும் கிரி மீதும்
பொரு நிசாசரன் தனது மார்பினும் புதைய வேல் விடும் பெருமாளே

மேல்

#1207
அருக்கி மெத்த தோள் திருத்தியுற்று மார்பு அசைத்து உவக்கும் மால் இளைஞோரை
அழைத்து மிக்க காசு இழைத்து மெத்தை மீது அணைத்து மெத்த மால் அது கூர
உருக்கி உட்கொள் மாதருக்கு உள் எய்த்து நா உலற்றி உட்கு நாணுடன் மேவி
உழைக்கும் அத்தை நீ ஒழித்து முத்திபால் உற அ குணத்த தாள் அருள்வாயே
சுருக்கமுற்ற மால் தனக்கும் எட்டிடாது ஒருத்தர் மிக்க மா நடமாடும்
சுகத்தில் அத்தர் தாம் மிகுந்த பத்தி கூர் சுரக்க வித்தை தான் அருள்வோனே
பெருக்க வெற்றி கூர் திரு கை கொற்ற வேல் பிடித்து குற்றம் ஆர் ஒரு சூரன்
பெலத்தை முட்டு மார் தொளைத்து நட்டு உளோர் பிழைக்க விட்ட ஓர் பெருமாளே

மேல்

#1208
அரும்பினால் தனி கரும்பினால் தொடுத்து அடர்ந்து மேல் தெறித்து அமராடும்
அநங்கனார்க்கு இளைத்து அயர்ந்து அணாப்பி எத்து அரம்பைமார்க்கு அடைக்கலமாகி
குரும்பை போல் பணைத்து அரும்புறா கொதித்து எழுந்து கூற்று என கொலை சூழும்
குயங்கள் வேட்டு அற தியங்கு தூர்த்தனை குணங்கள் ஆக்கி நல் கழல் சேராய்
பொருந்திடார் புரத்து இலங்கை தீ பட குரங்கினால் படைத்து ஒரு தேரில்
புகுந்து நூற்றுவர்க்கு ஒழிந்து பார்த்தனுக்கு இரங்கி ஆல் புறத்து அலைமேவி
பெரும் குறோட்டை விட்டு உறங்கு காற்று என பிறங்கவே தியக்குறும் மா சூர்
பிறங்கல் ஆர்ப்பு எழ சலங்கள் கூப்பிட பிளந்த வேல் கர பெருமாளே

மேல்

#1209
அலம்அலம் இ புலால் புலை உடல் கட்டனேற்கு அறுமுக நித்தர் போற்றிய நாதா
அறிவிலி இட்டு உணா பொறியிலி சித்தம் மாய்த்து அணி தரு முத்தி வீட்டு அணுகாதே
பலபல புத்தியாய் கலவியில் எய்த்திடா பரிவொடு தத்தைமார்க்கு இதமாடும்
பகடி துடுக்கன் வாய் கறையன் என தரா படியில் மனித்தர் தூற்றிடலாமோ
குல கிரி பொற்றலாய் குரை கடல் வற்றலாய் கொடிய அரக்கர் ஆர்ப்பு எழ வேத
குயவனை நெற்றி ஏற்று அவன் எதிர் குட்டினால் குடுமியை நெட்டை போக்கிய வீரா
கலை தலை கெட்ட பாய் சமணரை நட்ட கூர் கழு நிரை முட்ட ஏற்றிய தாள
கவிதையும் வெற்றி வேல் கரமுடன் வற்றிடா கருணையும் ஒப்பிலா பெருமாளே

மேல்

#1210
அளக பாரமும் குலைந்து அரிய பார்வையும் சிவந்து அணுகி ஆகமும் முயங்கி அமுதூறல்
அதர பானமும் நுகர்ந்து அறிவு சோரவும் மொழிந்து அவசமாகவும் புணர்ந்து மடவாரை
பளகன் ஆவியும் தளர்ந்து பதறும் ஆகமும் பயந்து பகல் இராவையும் மறந்து திரியாமல்
பரம ஞானமும் தெளிந்து பரிவு நேசமும் கிளர்ந்து பகருமாறு செம் பதங்கள் தரவேணும்
துளப மாயனும் சிறந்த கமல வேதனும் புகழ்ந்து தொழுது தேட அரும் ப்ரசண்டன் அருள் பாலா
சுரர்கள் நாயகன் பயந்த திருவை மா மணம் புணர்ந்து சுடரும் மோகனம் மிகுந்த மயில்பாகா
களப மார்புடன் தயங்கு குறவர் மாதுடன் செறிந்து கலவி நாடகம் பொருந்தி மகிழ்வோனே
கடிய பாதகம் தவிர்ந்து கழலை நாள்தொறும் கிளர்ந்து கருதுவார் மனம் புகுந்த பெருமாளே

மேல்

#1211
ஆசார ஈனன் அறிவிலி கோபாபராதி அவகுணன் ஆகாத நீசன் அநுசிதன் விபரீதன்
ஆசாவிசாரம் வெகு வித மோகா சரீத பரவசன் ஆகாச நீர் மண் அனல் வளி உரு மாறி
மாசு ஆன நால் எண் வகைதனை நீ நான் எனாத அறிவு உளம் வாயாத பாவி இவன் என நினையாமல்
மாதா பிதாவின் அருள் நலம் மாறா மகாரில் எனை இனி மா ஞான போதம் அருள்செய நினைவாயே
வீசால வேலை சுவறிட மா சூரர் மார்பு தொளைபட வேதாள ராசி பசி கெட அறை கூறி
மேகாரவாரம் என அதிர் போர் யாது தானர் எம புரம் மீது ஏற வேல் கொடு அமர்செயும் இளையோனே
கூசாது வேடன் உமிழ் தரு நீராடி ஊன் உண் எனும் உரை கூறா மன் ஈய அவன் நுகர் தரு சேடம்
கோது ஆம் எனாமல் அமுது செய் வேதாகம ஆதி முதல் தரு கோலோக நாத குறமகள் பெருமாளே

மேல்

#1212
ஆசை கூர் பத்தனேன் மனோ பத்மமான பூ வைத்து நடுவே
அன்பான நூல் இட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி ஒரு ஞான
வாசம் வீசி ப்ரகாசியா நிற்ப மாசு இல் ஓர் புத்தி அளி பாட
மாத்ருகா புஷ்ப மாலை கோலம் ப்ரவாள பாதத்தில் அணிவேனோ
மூசு கானகத்து மீது வாழ் முத்த மூரல் வேடிச்சி தன பார
மூழ்கு நீப ப்ரதாப மார்ப அத்த மூரி வேழத்தின் மயில் வாழ்வே
வீசு மீனம் பயோதி வாய்விட்டு வேக வேதித்து வரு மா சூர்
வீழ மோதி பராரை நாகத்து வீர வேல் தொட்ட பெருமாளே

மேல்

#1213
ஆசை கொளுத்தி வெகுவாக பசப்பி வரும் மாடை பணத்தை எடு என் உறவாடி
ஆர கழுத்து முலை மார்பை குலுக்கி விழி ஆட குலத்து மயில் கிளி போல
பேசி சிரித்து மயிர் கோதி குலைத்து முடி பேதைப்படுத்தி மயல் இடு மாதர்
பீறல் சலத்து வழி நாறப்படுத்தி எனை பீடைப்படுத்தும் மயல் ஒழியாதோ
தேசம் தடைத்து பிரகாசித்து ஒலித்து வரி சேடன் பிடித்து உதறு மயில் வீரா
தேடி துதித்த அடியார் சித்தம் உற்று அருள் சீர் பொன் பதத்த அரி மருகோனே
நேச படத்தி இமையோரை கெடுத்த முழு நீசற்கு அனத்தமுற விடும் வேலா
நேச குறத்தி மயலோடு உற்பவித்த பொனி நீர் பொன் புவிக்குள் மகிழ் பெருமாளே

மேல்

#1214
ஆசை நேச மயக்கிகள் காசு தேடு மனத்திகள் ஆவி சோர உருக்கிகள் தெரு மீதே
யாவரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர் ஆலகால விழிச்சிகள் மலை போலும்
மாசு இலாத தனத்தியர் ஆடை சோர நடப்பவர் வாரி ஓதி முடிப்பவர் ஒழியாமல்
வாயில் ஊறல் அளிப்பவர் நாளுநாளு மினுக்கிகள் வாசல் தேடி நடப்பது தவிர்வேனோ
ஓசையான திரை கடல் ஏழு ஞாலமும் உற்று அருள் ஈசரோடு உறவு உற்றவள் உமை ஆயி
யோகி ஞானி பரப்ரமி நீலி நாரணி உத்தமி ஓலமான மறைச்சி சொல் அபிராமி
ஏசு இலாத அமலை கொடி தாய் மனோமணி சற்குணி ஈறு இலாத மலைக்கொடி அருள் பாலா
ஏறு மேனி ஒருத்தனும் வேதனான சமர்த்தனும் ஈசனோடு ப்ரயப்படு பெருமாளே

மேல்

#1215
ஆலம் ஏற்ற விழியினர் சால நீட்டி அழுதழுது ஆகம் மாய்க்க முறைமுறை பறை மோதி
ஆடல் பார்க்க நிலை எழு பாடை கூட்டி விரைய மயானம் ஏற்றி உறவினர் அயலாக
காலமாச்சு வருக என ஓலை காட்டி யமபடர் காவலாக்கி உயிரது கொடுபோ முன்
காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழல் இணை காதலால் கருதும் உணர் தருவாயே
வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண வியாழ கோத்ரம் மருவிய முருகோனே
வேடர் நாட்டில் விளை புன ஏனல் காத்த சிறுமியை வேட மாற்றி வழிபடும் இளையோனே
ஞாலம் ஏத்தி வழிபடும் ஆறு பேர்க்கும் மகவு என நாணல் பூத்த படுகையில் வருவோனே
நாத போற்றி என முது தாதை கேட்க அநுபவ ஞான வார்த்தை அருளிய பெருமாளே

மேல்

#1216
ஆலும் மயில் போல் உற்ற தோகையர்களே மெத்த ஆர வடம் மேலிட்ட முலை மீதே
ஆன துகிலே இட்டு வீதிதனிலே நிற்க ஆம் அவரையே சற்றும் உரையாதே
வேலும் அழகு ஆர் கொற்ற நீல மயில் மேல் உற்று வீறும் உனது ஆர் பத்மம் முகம் ஆறு
மேவி இரு பாகத்தும் வாழும் அனைமார் தக்க மேதகவும் நான் நித்தம் உரையேனோ
நாலு முக வேதற்கும் ஆலிலையில் மாலுக்கு நாட அரியார் பெற்ற ஒரு பாலா
நாணம் உடையாள் வெற்றி வேடர் குல மீது ஒக்க நாடு குயில் பார் மிக்க எழில் மாது
வேலை விழி வேடச்சியார் கணவனே மத்த வேழ முகவோனுக்கும் இளையோனே
வீரமுடனே உற்ற சூரன் அணி மார்பத்து வேலை மிகவே விட்ட பெருமாளே

மேல்

#1217
இடை இத்தனை உள தத்தையர் இதழ் துய்த்து அவர் அநுபோகம்
இளகி கரை புரள புளகித கற்புர தன பாரம்
உடன் மன் கடைபடும் துற்குணம் அற நிற்குண உணர்வாலே
ஒரு நிஷ்கள வடிவில் புக ஒரு சற்று அருள்புரிவாயே
திடம் அற்று ஒளிர் நளின ப்ரம சிறை புக்கனன் என ஏகும்
தெதி பட்சண க்ருத பட்சண செக பட்சண என ஓதும்
விட பட்சணர் திரு மைத்துனன் வெருவ சுரர் பகை மேல் வேல்
விடு விக்ரம கிரி எட்டையும் விழ வெட்டிய பெருமாளே

மேல்

#1218
இரு குழை மீது தாவடி இடுவன ஓதி நீழலின் இடமது உலாவி மீள்வன நுதல் தாவி
இழிவன காம வேதமும் மொழிவன தாரை வேல் என எறிவன காள கூடமும் அமுதாக
கருகிய நீல லோசன அபிநய மாதரார் தரு கலவியில் மூழ்கி வாடிய தமியேனும்
கதி பெற ஈடு அறாதன பதி பசு பாசம் ஆனவை கசடு அற வேறுவேறு செய்து அருள்வாயே
ஒரு பது பாரம் மோலியும் இருபது வாகு மேருவும் உததியில் வீழ வானரம் உடனே சென்று
ஒரு கணை ஏவு ராகவன் மருக விபூதி பூஷணர் உணர் உபதேச தேசிக வரை ஏனல்
பரவிய கான வேடுவர் தரும் அபிராம நாயகி பரிபுர பாத சேகர சுரராஜன்
பதி குடி ஏற வேல் தொடு முருக மயூர வாகன பரவச ஞான யோகிகள் பெருமாளே

மேல்

#1219
இரு நோய் மலத்தை சிவ ஒளியால் மிரட்டி எனை இனிதா அழைத்து எனது முடி மேலே
இணை தாள் அளித்து உனது மயில் மேல் இருத்தி ஒளிர் இயல் வேல் அளித்து மகிழ் இருவோரும்
ஒருவாக என கயிலை இறையோன் அளித்து அருளும் ஒளிர் வேத கற்பக நல் இளையோனே
ஒளிர் மா மறை தொகுதி சுரர் பார் துதித்து அருள உபதேசிக பதமும் அருள்வாயே
கரு நோய் அறுத்து எனது மிடி தூள் படுத்திவிடு கரி மா முக கடவுள் அடியார்கள்
கருதா வகைக்கு வரம் அருள் ஞான தொப்பை மகிழ் கருணா கடப்ப மலர் அணிவோனே
திருமால் அளித்து அருளும் ஒரு ஞான பத்தினியை திகழ் மார்புற தழுவும் அயில் வேலா
சிலை தூள் எழுப்பி கவடு அவுணோரை வெட்டி சுரர் சிறை மீளவிட்ட புகழ் பெருமாளே

மேல்

#1220
இன மறை விதங்கள் கொஞ்சிய சிறு சதங்கை கிண்கிணி இலகு தண்டை அம் புண்டரீகம்
எனது மன பங்கயம் குவளை குரவம் புனைந்து இரவுபகல் சந்ததம் சிந்தியாதோ
உனது அருளை அன்றி இங்கு ஒரு துணையும் இன்றி நின்று உளையும் ஒரு வஞ்சகன் பஞ்சபூத
உடல் அது சுமந்து அலைந்து உலகுதொறும் வந்துவந்து உழலும் அது துன்பு கண்டு அன்புறாதோ
கன நிவத தந்த சங்க்ரம கவள துங்கம் வெம் கடம் விகட குஞ்சரம் தங்கும் யானை
கடக சயிலம் பெறும்படி அவுணர் துஞ்ச முன் கனக கிரி சம்பெழுந்து அம்பு ராசி
அனல் எழ முனிந்த சங்க்ரம மதலை கந்தன் என்று அரனும் உமையும் புகழ்ந்து அன்புகூர
அகில புவனங்களும் சுரரொடு திரண்டு நின்று அரி பிரமர் கும்பிடும் தம்பிரானே

மேல்

#1221
ஊன் ஏறு எலும்பு சீசீ மலங்களோடே நரம்பு கசுமாலம்
ஊழ் நோய் அடைந்து மாசு ஆன மண்டும் ஊனோடு உழன்ற கடை நாயேன்
நான் ஆர் ஒடுங்க நான் ஆர் வணங்க நான் ஆர் மகிழ்ந்து உனை ஓத
நான் ஆர் இரங்க நான் ஆர் உணங்க நான் ஆர் நடந்து விழ நான் ஆர்
தானே புணர்ந்து தானே அறிந்து தானே மகிழ்ந்து அருள் ஊறி
தாய் போல் பரிந்த தேனோடு உகந்து தானே தழைந்து சிவமாகி
தானே வளர்ந்து தானே இருந்த தார் வேணி எந்தை அருள் பாலா
சாலோக தொண்டர் சாமீப தொண்டர் சாரூப தொண்டர் பெருமாளே

மேல்

#1222
எதிர் ஒருவர் இலை உலகில் என அலகு சிலுகு விருதிட்டு க்ரியைக்கே எழுந்து பாரின்
இடை உழல்வ சுழலுவ அன சமய வித சகல கலை எட்டெட்டும் எட்டாத மந்த்ர வாளால்
விதி வழியின் உயிர் கவர வரு கொடிய யம படரை வெட்டி துணித்து ஆண்மை கொண்டு நீபம்
விளவின் இள இலை தளவு குவளை கமழ் பவள நிற வெட்சி திரு தாள் வணங்குவேனோ
திதி புதல்வரொடு பொருது குருதி நதி முழுகி ஒளிர் செக்கச்செவத்து ஏறு செம் கை வேலா
சிகரி கிரி தகர விடும் உருவ மரகத கலப சித்ர ககத்து ஏறும் எம்பிரானே
முதிய பதினொரு விடையர் முடுகுவன பரி ககனம் முட்ட செலுத்தி ஆறிரண்டு தேரர்
மொழியும் இரு அசுவினிகள் இரு சது வித வசு எனும் முப்பத்துமுத்தேவர் தம்பிரானே

மேல்

#1223
எழுந்திடும் கப்பு செழும் குரும்பைக்கு ஒத்து இரண்டு கண் பட்டு இட்டு இளையோர் நெஞ்சு
இசைந்திசைந்து எட்டி கசிந்து அசைந்து இட்டு இணங்கு பொன் செப்பு தன மாதர்
அழுங்கல் அங்கத்து குழைந்து மன் பற்றுற்று அணைந்து பின் பற்று அற்று அகல் மாயத்து
அழுங்கு நெஞ்சு உற்று புழங்கு புண்பட்டிட்டு அலைந்தலைந்து எய்த்திட்டு உழல்வேனோ
பழம் பெரும் தித்திப்பு உறும் கரும்பு அப்பத்துடன் பெரும் கைக்குள் பட வாரி
பரந்து எழும் தொப்பைக்கு அருந்தி முன் பத்தர்க்கு இதம் செய்து ஒன்று அத்திக்கு இளையோனே
தழைந்து எழும் தொத்து தடம் கை கொண்டு அப்பி சலம் பிளந்து எற்றி பொரு சூர் அ
தடம் பெரும் கொக்கை தொடர்ந்து இடம் புக்கு தடிந்திடும் சொக்க பெருமாளே

மேல்

#1224
ஏட்டிலே வரை பாட்டிலே சில நீட்டிலே இனிது என்று தேடி
ஈட்டு மா பொருள் பாத்து உணாது இகல் ஏற்றமான குலங்கள் பேசி
காட்டிலே இயல் நாட்டிலே பயில் வீட்டிலே உலகங்கள் ஏச
காக்கை நாய் நரி பேய் குழாம் உண யாக்கை மாய்வது ஒழிந்திடாதோ
கோட்டும் ஆயிர நாட்டன் நாடு உறை கோட்டு வால் இப மங்கை கோவே
கோத்த வேலையில் ஆர்த்த சூர் பொரு வேல் சிகாவள கொங்கில் வேளே
பூட்டுவார் சிலை கோட்டு வேடுவர் பூட்கை சேர் குற மங்கைபாகா
பூத்த மா மலர் சாத்தியே கழல் போற்று தேவர்கள் பெருமாளே

மேல்

#1225
கச்சு பூட்டுகை சக்கு ஓடு அகத்தில் கோட்டு கிரி ஆலம்
கக்கி தேக்கு செக்கர் போர் கயல் கண் கூற்றில் மயலாகி
அச்ச கூச்சம் அற்று கேட்டவர்க்கு தூர்த்தன் என நாளும்
அத்த பேற்றில் இச்சிப்பார்க்கு அற பித்தாய் திரியலாமோ
பச்சை கூத்தர் மெச்சி சேத்த பத்ம கூட்டில் உறைவோர் இபத்தில்
சேர் பல் சக்கில் கூட்டர் பத்த கூட்டர் இயல் வானம்
மெச்சி போற்ற வெற்பு தோற்று வெட்க கோத்த கடல் மீதே
மெத்த காய்த்த கொக்கு கோட்டை வெட்டி சாய்த்த பெருமாளே

மேல்

#1226
கடலினும் பெரிய விழி மலையினும் பெரிய முலை கவர் இனும் துவர் அதரம் இரு தோள் பை
கழையினும் குழையும் என மொழி பழங்கிளவி பல களவு கொண்டு ஒருவர் மிசை கவி பாடி
அடல் அசஞ்சலன் அதுலன் அநுபமன் குணதரன் மெய் அருள் பர அங்குரன் அபயன் என ஆசித்து
அலமரும் பிறவி இனி அலம்அலம் பிறவி அற அருண பங்கய சரணம் அருள்வாயே
வட நெடும் குல ரசத கிரியினின்று இரு கலுழி மகிதலம் புக வழியும் அது போல
மத சலம் சலசல என முது சலம் சலதி நதி வழிவிடும்படி பெருகு முது பாகை
உடைய சங்க்ரம கவள தவள சித்துரம் திலகன் உலகும் இந்திரனும் நிலைபெற வேல் கொண்டு
உததி வெந்து அபயமிட மலையொடும் கொலை அவுணருடன் உடன்று அமர் பொருத பெருமாளே

மேல்

#1227
கட்ட கண பறைகள் கொட்ட குலத்து இளைஞர் கட்டி புறத்தில் அணை மீதே
கச்சு கிழித்த துணி சுற்றி கிடத்தி எரி கத்தி கொளுத்தி அனைவோரும்
சுட்டு குளித்து மனை புக்கிட்டு இருப்பர் இது சுத்த பொய் ஒப்பது உயிர் வாழ்வு
துக்க பிறப்பு அகல மிக்க சிவத்தது ஒரு சொர்க்க பதத்தை அருள்வாயே
எட்டு குல சயிலம் முட்ட தொளைத்து அமரர் எய்ப்பு தணித்த கதிர் வேலா
எத்தி குறத்தி இரு முத்த தன கிரியை எல் பொன் புயத்தில் அணிவோனே
வட்ட கடப்ப மலர் மட்டு உற்ற செச்சை மலர் வைத்து பணைத்த மணி மார்பா
வட்ட திரை கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டி துணித்த பெருமாளே

மேல்

#1228
கண்டு போல் மொழி வண்டு சேர் குழல் கண்கள் சேல் மதி முகம் வேய் தோள்
கண்டு பாவனை கொண்டு தோள்களில் ஒண்டு காதலில் இரு கோடு
மண்டி மார்பினில் விண்டதாம் என வந்த கூர் முலை மடவார்தம்
வஞ்ச மால் அதில் நெஞ்சு போய் மடிகின்ற மாயம் அது ஒழியாதோ
கொண்டல் ஆர் குழல் கெண்டை போல் விழி கொண்டு கோகில மொழி கூறும்
கொங்கையாள் குற மங்கை வாழ் தரு குன்றில் மால் கொடு செலும் வேலா
வெண்டி மா மனம் மண்டு சூர் கடல் வெம்ப மேதினிதனில் மீளா
வென்று யாவையும் அன்றி வேளையும் வென்று மேவிய பெருமாளே

மேல்

#1229
கப்பரை கை கொள வைப்பவர் மை பயில் கண் பயிலிட்டு இள வளவோரை
கைக்குள் வசப்பட பல் கறை இட்டு முகத்தை மினுக்கி வரும் உபாய
பப்பர மட்டைகள் பொட்டு இடு நெற்றியர் பற்று என உற்ற ஒர் தமியேனை
பத்ம பதத்தினில் வைத்து அருள் துய்த்து இரை பட்டது எனக்கு இனி அமையாதோ
கு பரவப்படு பட்ச மிகுத்துள முத்தரையர்க்கு ஒரு மகவு ஆகி
குத்திரம் அற்று உரை பற்று உணர்வு அற்ற ஒர் குற்றம் அறுத்திடு முதல்வோனே
விப்ர முனிக்கு உழை பெற்ற கொடிச்சி விசித்ர தன கிரி மிசை தோயும்
விக்ரம மல் புய வெற்பினை இட்டு எழு வெற்பை நெருக்கிய பெருமாளே

மேல்

#1230
கலை கோட்டு வல்லி விலை காட்டு வில் அரிவைமார்க்கு மெய்யில் அவ நூலின்
கலை காட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல கடு காட்டி வெய்ய அதி பார
கொலை கோட்டு கள் இடு அறிவோர்க்கும் உள்ள முகை யாக்கை நையும் உயிர் வாழ
கொடி கோட்டு மல்லி குரவ ஆர் கொள் தொல்லை மறை வாழ்த்து செய்ய கழல் தாராய்
சிலை கோட்டு மள்ளர் தினை காத்த கிள்ளை முலை வேட்ட பிள்ளை முருகோனே
திணி கோட்டு வெள் இபவன் நாட்டிலுள்ள சிறை மீட்ட தில்லம் மயில் வீரா
அலை கோட்டு வெள்ளம் மலைமாக்கள் விள்ள மலை வீழ்த்த வல்ல அயில் மோகா
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே

மேல்

#1231
களவு கொண்டு கைக்காசின் அளவு அறிந்து கர்ப்பூர களப துங்க வித்தார முலை மீதே
கலவி இன்பம் விற்பார்கள் அவயவங்களை பாடு கவி தெரிந்து கற்பார்கள் சிலர் தாமே
உள நெகிழ்ந்து அசத்தான உரை மறந்து சத்தான உனை உணர்ந்து கத்தூரி மண நாறும்
உபய பங்கய தாளில் அபயம் என்று உனை பாடி உருகி நெஞ்சு சற்று ஓதில் இழிவாமோ
அளவில் வன் கவி சேனை பரவ வந்த சுக்ரீவ அரசுடன் கடல் தூளி எழவே போய்
அடல் இலங்கை சுட்டு ஆடி நிசிசரன் தச க்ரீவம் அற ஓர் அம்பு தொட்டார்தம் மருகோனே
வளரும் மந்தர சோலை மிசை செறிந்த முன் பாலை வனசர் கொம்பினை தேடி ஒரு வேட
வடிவு கொண்டு பித்தாகி உருகி வெந்து அற கானில் மறவர் குன்றினில் போன பெருமாளே

மேல்

#1232
கள்ள மீன சுறவு கொள்ளும் மீனம் பெரிய கல்வி வீற கரிய மனமாகும்
கல் விடாது உற்ற திசை சொல் விசாரத்து இசைய மெய்கள் தோணி பிறவி அலை வேலை
மெள்ள ஏறி குரவு வெள்ளில் ஆர் வெட்சி தண் அ முல்லை வேர் உற்பலம் முளரி நீபம்
வில்ல நீள் பொன் கனகம் அல்லி மேல் இட்டு உனது சொல்லை ஓதி பணிவது ஒரு நாளே
துள்ளும் மால் நித்த முனி புள்ளி மான் வெற்பு உதவு வள்ளி மானுக்கு மயல் மொழிவோனே
தொல் வியாளத்து வளர் செல்வர் யாகத்து அரையன் எல்லை காணற்கு அரியர் குருநாதா
தெள்ளு நாத சுருதி வள்ளல் மோலி புடை கொள் செல்வனே முத்தமிணர் பெருவாழ்வே
தெய்வ யானைக்கு இளைய வெள்ளை யானை தலைவ தெய்வயானைக்கு இனிய பெருமாளே

மேல்

#1233
கன்னியர் கடு விடம் மன்னிய கயல் அன கண்ணிலும் இரு கன தனம் மீதும்
கன்மைகள் மருவிய மன்மதன் உருவிலி மென்மை கொள் உருவிலும் மயலாகி
இன்னல் செய் குடிலுடன் இன்னமும் உலகினில் இ நிலை பெற இஙன் உதியாதே
எண்ணும் உன் அடியவர் நண்ணிய பதம் மிசை என்னையும் வழிபட விடவேணும்
பொன் நவ மணி பயில் மன்னவ புன மற மின் முலை தழுவிய புய வீரா
புண்ணியம் உள பல விண்ணவர் தொழும் முதல் எண் மலையொடு பொரு கதிர் வேலா
தன் இறை சடை இறை என் முனி பரவ அரு இன் இசை உறு தமிழ் தெரிவோனே
தண் அளி தரும் ஒரு பன்னிரு விழி பயில் சண்முகம் அழகிய பெருமாளே

மேல்

#1234
கிஞ்சுகம் என சிவத்த தொண்டையள் மிக கறுத்த கெண்டையள் புன கொடிச்சி அதி பார
கிம்புரி மருப்பை ஒத்த குங்கும முலை குறத்தி கிங்கரன் என படைத்த பெயர் பேசா
நெஞ்சு உருகி நெக்குநெக்கு நின்று தொழு நிர் குணத்தர் நிந்தனை இல் பத்தர் வெட்சி மலர் தூவும்
நின் பதயுக ப்ரசித்தி என்பன வகுத்து உரைக்க நின் பணி தமிழ் த்ரயத்தை அருள்வாயே
கஞ்சன் வரவிட்ட துட்ட குஞ்சர மருப்பு ஒசித்த கங்கனும் மதி திகைக்க மதம் வீசும்
கந்து எறி களிறு உரித்து வென்று திரு நட்டம் இட்ட கம்பனும் மதிக்க உக்ர வடி வேல் கொண்டு
அஞ்சிய ஜக த்ரயத்தை அஞ்சல் என விக்ரமித்து அன்பர் புகழ பொருப்பொடு அமராடி
அன்று அவுணரை களத்தில் வென்று உததியை கலக்கி அண்டர் சிறை வெட்டி விட்ட பெருமாளே

மேல்

#1235
குடிமை மனையாட்டியும் அடிமையொடு கூட்டமும் குலமும் இறுமாப்பும் மிகுதியான
கொடிய பெரு வாழ்க்கையில் இனிய பொருள் ஈட்டியெ குருடுபடு மோடு என உடல் வீழில்
அடைவு உடை விடா சிறு பழைய துணி போர்த்தியெ அரிட சுடுகாட்டிடை இடு காயம்
அழியும் அளவாட்டில் உன் அமல மலர் மாப்பாத அருண சரண ஆஸ்பதம் அருள்வாயே
அடியினொடு மா தரு மொளமொளமொள ஆச்சு என அலறி விழ வேர் குலமொடு சாய
அவுணர் படை தோற்பு எழ அரு வரைகள் ஆர்ப்பு எழ அயில் அலகு சேப்பு எழ மறை நாலும்
உடைய முனி ஆள் பட முடுகு அவுணர் கீழ்ப்பட உயர் அமரர் மேற்பட வடியாத
உததி கமரா பிள முது குலிச பார்த்திபன் உலகு குடி ஏற்றிய பெருமாளே

மேல்

#1236
குறைவது இன்றி மிக்க சலம் எலும்பு அது உற்ற குடிலில் ஒன்றி நிற்கும் உயிர் மாயம்
குலைகுலைந்து தெர்ப்பையிடை நினைந்து நிற்ப கொடிய கொண்டல் ஒத்த உருவாகி
மறலி வந்து துட்ட வினைகள் கொண்டு அலைத்து மரணம் என்ற துக்கம் அணுகா முன்
மனம் இடைஞ்சல் அற்று உன் அடி நினைந்து நிற்க மயிலில் வந்து முத்தி தரவேணும்
அறுகும் இந்து மத்தம் அலை எறிந்த அப்பும் அளி சிறந்த புட்பம் அது சூடி
அரு நடம் செய் அப்பர் அருள் இரங்கைக்கு அரிய இன் சொல் செப்பு முருகோனே
சிறு குலம் தனக்குள் அறிவு வந்து உதித்த சிறுமிதன் தனத்தை அணை மார்பா
திசைமுகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த சிறை திறந்துவிட்ட பெருமாளே

மேல்

#1237
கோகனகம் முகிழ்த்த போக புளகிதத்த கோடு தலை குலைத்த முலையாலே
கூட வரவழைக்கும் மாடு குழை அடர்த்த நீடிய குவளை கண் மடமானார்
ஆகமுற அணைத்து காசை அபகரித்து மீள இதழ் கடிப்பது அறியாதே
ஆசை அது கொளுத்தும் ஆலம் அது குடித்த சேலில் பரிதவிப்பது இனி ஏனோ
மாக நதி மதி ப்ரதாப மவுலியர்க்கு உசாவியது ஓர் அர்த்தம் மொழிவோனே
வாகுவலையம் சித்ர ஆறிரு புய வெற்பில் வாழ்வு பெறு குறத்தி மணவாளா
வேக உரக ரத்ந நாக சயன சக்ரம் ஏவி மரகதத்தின் மருகோனே
வீசு திரை அலைத்த வேலை சுவற வெற்றி வேலை உருவ விட்ட பெருமாளே

மேல்

#1238
சந்தம் புனைந்து சந்தம் சிறந்த தண் கொங்கை வஞ்சி மனையாளும்
தஞ்சம் பயின்று கொஞ்சும் சதங்கை தங்கும் பதங்கள் இளைஞோரும்
எந்தன் தனங்கள் என்றென்று நெஞ்சில் என்றும் புகழ்ந்து மிக வாழும்
இன்பம் களைந்து துன்பங்கள் மங்க இன்று உன் பதங்கள் தரவேணும்
கொந்தின் கடம்பு செம் தண் புயங்கள் கொண்டு அம் குறிஞ்சி உறைவோனே
கொங்கின் புனம் செய் மின் கண்ட கந்த குன்றம் பிளந்த கதிர் வேலா
ஐந்து இந்த்ரியங்கள் வென்று ஒன்றும் அன்பர் அங்கம் பொருந்தும் அழகோனே
அண்டம் தலங்கள் எங்கும் கலங்க அன்று அஞ்சல் என்ற பெருமாளே

மேல்

#1239
சலம் மலம் அசுத்தம் மிக்க தசை குருதி அத்தி மொய்த்த தடி உடல் தனக்குள் உற்று மிகு மாயம்
சகலமும் இயற்றி மத்த மிகும் இரு தட கை அத்திதனில் உரு மிகுத்து மக்களொடு தாரம்
கலன் அணி துகில்கள் கற்பினொடு குலம் அனைத்தும் முற்றி கரு வழி அவத்தில் உற்று மகிழ்வாகி
கலை பல பிடித்து நித்தம் அலைபடும் அநர்த்தமுற்ற கடு வினை தனக்குள் நிற்பது ஒழியாதோ
மலைமகள் இடத்து வைத்து மதி புனல் சடைக்குள் வைத்து மழு அனல் கரத்துள் வைத்து மருவார்கள்
மடிவுற நினைத்து வெற்பை வரி சிலை இட கை வைத்து மறை தொழ நகைத்த அத்தர் பெருவாழ்வே
பல திசை நடுக்கமுற்று நிலை கெட அடல் கை உற்ற படை அது பொருப்பில் விட்ட முருகோனே
பழுது அறு தவத்தில் உற்று வழி மொழி உரைத்த பத்தர் பலர் உய அருள் கண் வைத்த பெருமாளே

மேல்

#1240
சாங்கரி பாடியிட ஓங்கிய ஞான சுக தாண்டவம் ஆடியவர் வடிவான
சாந்தம் அதீதம் உணர் கூந்த தம சாதி அவர் தாங்களும் ஞானமுற அடியேனும்
தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு தோன்றிய சோதியொடு சிவயோகம்
தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு சோம்பினில் வாழும் வகை அருளாதோ
வாங்கு கை யானை என ஈன் குலை வாழை வளர் வான் பொழில் சூழும் வயல் அயல் ஏறி
மாங்கனி தேன் ஒழுக வேங்கையில் மேல் அரிகள் மாந்திய ஆரணிய மலை மீதில்
பூம் கொடி போலும் இடை ஏங்கிட வார் அம் அணி பூண்பன பாரியன தன பார
பூம் குற மாதினுடன் ஆங்கு உறவாடி இருள் பூம் பொழில் மேவி வளர் பெருமாளே

மேல்

#1241
சிவஞான புண்டரிக மலர் மாதுடன் கலவி சிவ போகம் மன் பருக அறியாமல்
செகம் மீது உழன்று மல வடிவாயிருந்து பொது திகழ் மாதர் பின் செருமி அழிவேனோ
தவம் மாதவங்கள் பயில் அடியார் கணங்களொடு தயவாய் மகிழ்ந்து தினம் விளையாட
தமியேன் மலங்கள் இருவினை நோய் இடிந்து அலற ததி நாளும் வந்தது என் முன் வரவேணும்
உவகாரி அன்பர் பணி கலியாணி எந்தை இட முறை நாயகம் கவுரி சிவகாமி
ஒளிர் ஆனையின் கரமில் மகிழ் மாதுளங்கனியை ஒரு நாள் பகிர்ந்த உமை அருள் பாலா
அவமே பிறந்த எனை இறவாமல் அன்பர் புகும் அமுதாலயம் பதவி அருள்வோனே
அழகா நகம் பொலியும் மயிலா குறிஞ்சி மகிழ் அயிலா புகழ்ந்தவர்கள் பெருமாளே

மேல்

#1242
சீறிட்டு உலாவு கண்கள் மாதர்க்கு நாள் மருண்டு சேவித்தும் ஆசைகொண்டும் உழல்வேனை
சீர் இட்டமாக நின்ற காசை கொடாத பின்பு சீர் அற்று வாழும் இன்பம் நலியாதே
ஆறெட்டுமாய் விரிந்தும் ஆறெட்டுமாகி நின்று ஆருக்குமே விளம்ப அறியாதே
ஆகத்து உளே மகிழ்ந்த ஜோதி ப்ரகாச இன்பம் ஆவிக்கு உளே துலங்கி அருளாதோ
மாறிட்டு வான் நடுங்க மேலிட்டு மேல கண்டம் வாய்விட்டு மாதிரங்கள் பிளவாக
வாள் தொட்டு நேர் நடந்த சூர் வஜ்ர மார்பு நெஞ்சும் வான் முட்ட வீறு செம்பொன் வரையோடு
கூறிட்ட வேல் அபங்க வீரர்க்கு வீர கந்த கோது அற்ற வேடர் தங்கள் புனம் வாழும்
கோல பெண் வாகு கண்டு மாலுற்ற வேளை கூடிக்குலாவும் அண்டர் பெருமாளே

மேல்

#1243
சூதின் உணவு ஆசைதனிலே சுழலும் மீன் அது என தூசு அழகான வடிவு அதனாலே
சூதம் உடல் நேரும் என மாதர் நசை தேடு பொருள் ஆசை தமிலே சுழல வரு காலன்
ஆதி விதியோடு பிறழாத வகை தேடி எனது ஆவிதனையே குறுகி வருபோது
ஆதி முருகா ஆதி முருகா ஆதி முருகா எனவும் ஆதி முருகா நினைவு தருவாயே
ஓது முகில் ஆடு கிரி ஏறுபட வாழ் அசுரர் ஓலமிடவே அயில் கொடு அமராடீ
ஓ நமசிவாய குரு பாதம் அதிலே பணியும் யோக மயிலா அமலை மகிழ் பாலா
நாத ரகுராம அரி மாயன் மருகா புவன நாடும் அடியார்கள் மனது உறைவோனே
ஞான சுர ஆனை கணவா முருகனே அமரர் நாடு பெற வாழ அருள் பெருமாளே

மேல்

#1244
செழும் தாது பார் மாது அரும்பு ஆதி ரூபோடு சிறந்து யாதிலும் ஆசை ஒழியாத
திறம் பூத வேதாளன் அரும் பாவமே கோடி செயும் காய நோயாளன் நரகு ஏழில்
விழுந்து ஆழவே மூழ்க இடும் காலன் மேவி ஆவி விடும் காலமே நாயேன் வினை பாவம்
விரைந்து ஏகவே வாசி துரந்து ஓடியே ஞான விளம்பு ஓசையே பேசி வரவேணும்
அழும் கோடி தேவார்கள் அமர்ந்து ஆர வான் நீடி அழன்று ஏகி மா சீத நெடு வேலை
அதிர்ந்து ஓடவே காலன் விழுந்து ஓடவே கூர அலங்கார வேல் ஏவும் முருகோனே
கொழும் கானிலே மாதர் செழும் சேலையே கோடு குருந்து ஏறு மால் மாயன் மருகோனே
குறம் பாடுவார் சேரி புகுந்து ஆசை மாதோடு குணம் கூடியே வாழு பெருமாளே

மேல்

#1245
தத்தனமும் அடிமை சுற்றமொடு புதல்வர் தக்க மனை இனமும் மனை வாழ்வும்
தப்பு நிலைமை அணுகைக்கு வர விரகு உதைக்கும் மயல் நினைவு குறுகா முன்
பத்தி உடன் உருகி நித்தம் உனது அடிகள் பற்றும் அருள் நினைவு தருவாயே
பத்து முடி உருளுவித்த பகழியினர் பச்சை நிற முகிலின் மருகோனே
அத்தி முகவன் அழகுற்ற பெழை வயிறன் அப்பம் அவரை பொரி அவல் தேனும்
அப்பி அமுது செயும் மொய்ப்பன் உதவ அடவிக்குள் குறமகளை அணைவோனே
முத்தி தரு முதல்வர் முக்கண் இறைவரோடு முற்றும் மறைமொழியை மொழிவேனோ
முட்ட அசுரர் கிளை கெட்டு முறிய முதல் வெட்டி அமர் பொருத பெருமாளே

மேல்

#1246
தலை அலய போகமும் சலனம் மிகு மோகமும் தவறு தரு காமமும் கனல் போலும்
தணி அரிய கோபமும் துணிவு அரிய லோபமும் சமய வெகு ரூபமும் பிறிது ஏதும்
அலம்அலம் எனா எழுந்து அவர்கள் அநுபூதி கொண்டு அறியும் ஒரு காரணம்தனை நாடாது
அதி மத புராணமும் சுருதிகளும் ஆகி நின்று அபரிமிதமாய் விளம்புவதோ தான்
கலக இரு பாணமும் திலக ஒரு சாபமும் களபம் ஒழியாத கொங்கையுமாகி
கவரும் அவதாரமும் கொடிய பரிதாபமும் கருதி இது வேளை என்று கிராத
குல திலக மானுடன் கலவி புரிவாய் பொரும் குலிசகர வாசவன் திரு நாடு
குடி புக நிசாசுரன் பொடி பட மகீதரன் குலைய நெடு வேல் விடும் பெருமாளே

மேல்

#1247
தவ நெறி தவறிய குருடுகள் தலை பறி கதறிய பரபாத
தருமிகள் கருமிகள் வெகுவித சமயிகள் அவரொடு சருவா நின்று
அவன் இவன் உவன் உடன் அவள் இவள் உவள் அது இது உது எனும் ஆறு அற்று
அரு உரு ஒழிதரு உரு உடையது பதி தமியனும் உணர்வேனோ
குவலயம் முழுவதும் அதிர்பட வட குவடு இடிபட உரகேசன்
கொடு முடி பல நெரிதர நெடு முது குரை கடல் புனல் வறிதாக
துவல் கொடு முறையிடு சுரர் பதி துயரது கெட நிசிசரர் சேனை
துகள் எழ நட நவில் மரகத துரகதம் வர வல பெருமாளே

மேல்

#1248
திதலை உலாத்து பொன் களபம் விடா புது த்ரிவித கடா களிற்று உர கோடு
சிகர மகா ப்ரபை குவடு என வாய்த்து நல் சுரர் குடி ஏற்றிவிட்டு இளநீரை
மதன விடாய் தனத்து இளைஞரை வாட்டு செப்பு இணை முலை மாதவ கொடி போல்வார்
வலையில் இராப்பகல் பொழுதுகள் போக்கும் அற்று எனை உனை வாழ்த்த வைத்து அருள்வாயே
சத தள பார்த்திபற்கு அரி புருஷோத்தமற்கு எரி கனல் ஏற்றவற்கு உணராத ஓர்
சகல சமார்த்த சத்திய வன சூக்ஷம் முக்கிய பர மார்த்தம் முன் புகல்வோனே
கதிர் மணி நீர் கடல் சுழி புகு ராக்ஷத கலக பராக்ரம கதிர் வேலா
கருதிய பாட்டில் நிற்றலை தெரி மா க்ஷண கவிஞர் உசாத்துணை பெருமாளே

மேல்

#1249
திரை வஞ்ச இருவினைகள் நரை அங்கம் மலம் அழிய சிவகங்கைதனில் முழுகி விளையாடி
சிவம் வந்து குதி கொள அகம் வடிவு உன்றன் வடிவம் என திகழ் அண்டர் முநிவர் கணம் அயன் மாலும்
அரன் மைந்தன் என களிறு முகன் நம்பி என மகிழ அடியென் கண் அளி பரவ மயில் ஏறி
அயில் கொண்டு திரு நடனம் என தந்தை உடன் மருவி அருமந்த பொருளை இனி அருள்வாயே
பரி என்ப நரிகள்தமை நடனம் கொண்டு ஒரு வழுதி பரி துஞ்ச வரும் மதுரை நடராஜன்
பழி அஞ்சி எனது அருகில் உறை புண்டரிக வடிவ பவளம் சொல் உமை கொழுநன் அருள் பாலா
இருள் வஞ்ச கிரி அவுணர் உடன் எங்கள் இருவினையும் எரியுண்டு பொடிய அயில் விடுவோனே
எனது அன்பில் உறை சயில மகிழ் வஞ்சி குறமகளொடு எணு பஞ்சணையில் மருவு பெருமாளே

மேல்

#1250
தீ ஊதை தாத்ரி பானீயம் ஏற்ற வான் ஈதியால் திகழும் ஆசை
சேறு ஊறு தோல் பை யானாக நோக்கும் மா மாயை தீர்க்க அறியாத
பேய் பூதம் மூத்த பாறு ஓரி காக்கை பீறா இழா தின் உடல் பேணி
பேயோன் நடாத்து கோமாளி வாழ்க்கை போம் ஆறு பேர்த்து உன் அடி தாராய்
வேய் ஊரு சீர் கை வேல் வேடர் காட்டில் ஏய்வாளை வேட்க உரு மாறி
மீளாது வேட்கை மீது ஊர வாய்த்த வேலோடு வேய்த்த இளையோனே
மாயூர ஏற்றின் மீதே புகா பொன் மா மேரு வேர் பறிய மோதி
மாறு ஆன மாக்கள் நீறாக ஓட்டி வான் நாடு காத்த பெருமாளே

மேல்

#1251
துடித்து எதிர் வடித்து எழு குதர்க்க சமயத்தவர் சுழற்கு ஒரு கோடிகோடி எதிர் கூறி
துகைப்பன அகித தலை அறுப்பன அயில் விட்டு உடல் துணிப்பன கணி தலை மிசை பார
முடித்தலை விழுப்பன முழுக்க அடிமைப்பட முறைப்படு மறை திரள் அறியாத
முதல் பொருள் புலப்பட உணர்த்துவன் எனக்கு ஒரு மொழி பொருள் பழிப்பு அற அருள்வாயே
குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன கொழுத்த குருதி கடலிடையூடே
குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன குவட்டினை இடிப்பன சில பாடல்
படிப்பன திருப்புகழ் எடுப்பன முடிப்பன பயிற்றி அலகை குலம் விளையாட
பகைத்து எழும் அரக்கரை இமைப்பொழுதினில் பொடிபட பொருது உழக்கிய பெருமாளே

மேல்

#1252
துத்தி நச்சு அரா விளம் பிச்சி நொச்சி கூவிளம் சுக்கிலக்கலா அமிர்த பிறை சூதம்
சுத்த ரத்த பாடலம் பொன் கடுக்கை ஏடு அலம் சுத்த சொல் பகீரதி திரை நீலம்
புத்தெருக்கு பாழி கம் கொத்து எடுத்த தாளி தண் பொற்பு மத்தை வேணியர்க்கு அருள்கூரும்
புத்தி சித்தி வாய் கனம் சுத்த சத்ய வாசகம் புற்புதம் பிராணனுக்கு அருள்வாயே
பத்தி உற்ற தோகை அம் பச்சை வெற்றி வாகனம் பக்கம் இட்டு உலாவிய அச்சுரர் மாள
பக்கவிட்டு வாய் நிணம் கக்க வெட்டி வாய் தரும் பத்ம சிட்டன் ஓட முத்து எறி மீனம்
கைத்தலை ப்ரவாகையும் தத்தளிக்க மா முறிந்து உட்க முத்து வாரணம் சத கோடி
கை களிற்று வாரணம் புக்கு ஒளிக்க வாரணம் கை பிடித்த சேவக பெருமாளே

மேல்

#1253
தெரிவை மக்கள் செல்வம் உரிமை மிக்க உண்மை தெரிவதற்கு உள்ளம் உணரா முன்
சினம் மிகுத்த திண்ணர் தனி வளைத்து வெய்ய சிலுகு தைத்து வன்மை சிதையா முன்
பரவை புக்கு தொய்யும் அரவணைக்குள் வைகு பரமனுக்கு நல்ல மருகோனே
பழுதில் நின் சொல் சொல்லி எழுதி நித்தம் உண்மை பகர்வதற்கு நன்மை தருவாயே
இரு கிரிக்கள் உள்ளவரை தடிக்கும் மின்னும் இடியும் மொய்த்தது என்ன எழு சூரை
எழு கடற்குள் உள்ளும் முழுகுவித்து விண்ணுள் இமையவர்க்கு வன்மை தருவோனே
அரிவை பக்கம் உய்ய உருகி வைக்கும் ஐயர் அறிய மிக்க உண்மை அருள்வோனே
அறிவினுக்குள் என்னை நெறியில் வைக்க வல்ல அடியவர்க்கு நல்ல பெருமாளே

மேல்

#1254
தென்றலும் அன்று இன்று அலை பொங்கு திண் கடல் ஒன்றும் மிக மோத
செம் தழல் ஒன்று வெம் தழல் சிந்து திங்களும் வந்து துணை ஏய
அன்றிலும் அன்றி துன்று சரங்கம் ஐந்தும் என் நெஞ்சம் அழியாதே
அந்தியில் என்றன் வெம் துயர் அஞ்ச அன்பொடு அலங்கல் தரவேணும்
வென்றி விளங்கு குன்றவர் வஞ்சி விஞ்சிய கொங்கை புணர் மார்பா
வெண் தரளங்கள் தண்டை சதங்கை மின் கொடு இலங்கு கழலோனே
கொன்றை அணிந்த சங்கரர் அன்று கும்பிட வந்த குமரேசா
குன்றிட அண்டர் அன்று உய என்று குன்றம் எறிந்த பெருமாளே

மேல்

#1255
தோரண கனக வாசலில் முழவு தோல் முரசு அதிர முதிராத
தோகையர் கவரி வீச வயிரியர் தோள் வலி புகழ மத கோப
வாரணம் ரத பதாகினி துரக மாதிர நிறைய அரசாகி
வாழினும் வறுமைகூரினும் நினது வார் கழல் ஒழிய மொழியேனே
பூரண புவன காரண சவரி பூதர புளக தன பார
பூஷண நிருதர் தூஷண விபுதர் பூபதி நகரி குடியேற
ஆரண வனச ஈரிறு குடுமி ஆரியன் வெருவ மயில் ஏறும்
ஆரிய பரம ஞானமும் அழகும் ஆண்மையும் உடைய பெருமாளே

மேல்

#1256
நச்சு வாள் விழி கொடு எற்றியே தனத்தை நத்துவார் சுகத்தில் நலமாக
நட்ட மா மனத்தை இட்டமே கொடுத்து நத்து வாழ் கடற்குள் அணை போலே
கச்சமே செலுத்தி அச்சமே படுத்து கட்ட ஏழ் பிறப்பு விடவே தான்
கற்ற நூல் உகக்க வெட்கமே செறித்த கட்டனேன் நினைப்பது ஒரு நாளே
இச்சையே செலுத்தி உச்சி தாள் பலிக்கும் இட்டம் மால் அவற்கு மருகோனே
எற்று வாரிதிக்குள் முற்றி நீள் பொருப்பை எக்கி நேர் மடித்த இளையோனே
மெச்சவே புடைத்த முத்தம் ஆர் தனத்தி மிக்க வாள் படைத்த விழியாலே
வெட்டும் மா மறத்தி ஒக்கவே இருக்க வெற்றி வேல் எடுத்த பெருமாளே

மேல்

#1257
நல் குணம் உளார் தமை பொல் மை குழலிலே சிறக்க நல் பரிமளாதி துற்ற மலர் சூடி
நச்சு விழியால் மயக்கி இச்சை பல பேசியுற்று நல் பொருள் அவாம் மனத்தர் வசமாகி
வெற்பு அனைய மா தனத்தை பொற்புற உறா அணைத்து மெத்த மயலாகி நித்தம் மெலியாதே
வெட்சி கமழ் நீப புஷ்ப வெற்றி சிறு பாத பத்மம் மெய் கிருபை நீ அளிப்பது ஒரு நாளே
ரத்தின பணா நிருத்தன் மெய் சுதனு நாடு மிக்க லக்ஷண குமார சுப்ரமணியோனே
நல் திசையும் ஏறி இட்ட பொய் சமணை வேரறுத்து நல் திருநிறே பரப்பி விளையாடும்
சத்சன குமார வ்ருத்தி அற்புத சிவாயனுக்கு ஒர் சத்குரு விநோத சித்ர மயில் வீரா
சக்ரதரன் மார்பு அகத்தில் உக்ரமுடனே தரித்த சத்தி அடையாளம் இட்ட பெருமாளே

மேல்

#1258
நாகாங்க ரோமம் காட்டி வார் ஏந்து நாகம் காட்டி நாம் ஏந்து பாலம் காட்டி அபிராம
நானாங்க ராகம் காட்டி நாகேந்த்ர நீலம் காட்டி நாயேன் ப்ரகாசம் காட்டி மடலூர
மேகாங்க கேசம் காட்டி வாய் ஆம்பல் வாசம் காட்டி மீது ஊர்ந்த போகம் காட்டி உயிர் ஈர்வார்
மேல் வீழ்ந்து தோயும் தூர்த்தன் மோகாந்தகாரம் தீர்க்க வேதாந்த தீபம் காட்டி அருள்வாயே
ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றி ஏடு ஆர்ந்த நீபம் போற்றி முகில் தாவி
ஏறு ஓங்கல் ஏழும் சாய்த்த நான்மூன்று தோளும் போற்றி யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும்
த்யாகாங்க சீலம் போற்றி வாய் ஓய்ந்திடாது அன்று ஆர்த்து தேசாங்க சூரன் தோற்க மயில் ஏறி
சேவு ஏந்தி தேசம் பார்க்க வேல் ஏந்தி மீனம் பூத்த தேவேந்த்ர லோகம் காத்த பெருமாளே

மேல்

#1259
பரிமள மலர் அடுத்து அகில் மணம் முழுகி மை பரவிய ம்ருகமத குழல் மானார்
பரு மணி வயிரம் முத்து இலகிய குழையினில் படை பொருவன விழி கயலாலே
எரியுறு மெழுகு என தனி மனம் அடைய நெக்கு இனிமையொடு உருக விட்டு அவமே யான்
இருவினை நலிய மெய் திறலுடன் அறிவு கெட்டு இடர் படுவது கெடுத்து அருள்வாயே
சொரி மத அருவி விட்டு ஒழுகிய புகர் முக தொளைபடு கர மலைக்கு இளையோனே
துடி இடை ஒரு குற குல மயில் புளகித துணை முலை தழுவு பொன் புய வீரா
அரியன பல விதத்தொடு திமிலையும் உடுக்கையும் மொகுமொகு என சத கோடி
அலகையும் உடன் நடித்திட அயில் எடுத்து அமர்செயும் அறுமுக பெருமாளே

மேல்

#1260
பற்ற நெட்டை படைத்து உள் து இருள் தைத்து அயிர்ப்பு அத்தை முட்டி படுத்து அயில் மாதர்
பக்கம் இட்டு பொருள் கொள் குமிட்ட பரம் பற்று கெட்டு பயிர் களை போலும்
கற்ற கட்டு கவி கொட்டம் ஒட்டி களைத்திட்டு கத்தத்தினுற்று அகம் மாயும்
கட்டம் அற்று கழல் பற்றி முத்தி கருத்து ஒக்க நொக்கு கணித்து அருள்வாயே
வற்ற வட்ட கடல் கிட்டி வட்டி துரத்திட்டு மட்டுப்பட பொரு மாயன்
மற்றும் ஒப்பு தரித்து எட்டஎட்ட புறத்துற்ற அத்தர்க்கு அருள் பெருவாழ்வே
செற்றம் முற்ற சினத்திட்டு நெட்டை பொருப்பு எட்டை முட்டி செருசெயும் வேலா
சித்தர் சித்தத்துற பற்றி மெத்த புகழ் செப்பு முத்தி தமிழ் பெருமாளே

மேல்

#1261
பாதகமான யாக்கை வாது செய் பாவி கோத்த பாணமும் வாளும் ஏற்ற இரு பார்வை
பார படீரம் மா பயோதர மாதர் வாய்த்த பாயலின் மீது அணாப்பி இதம் ஆடும்
தோதகம் ஆய வார்த்தை போதகமாக நோக்கு தூய்மையில் நாயினேற்கும் வினை தீர
சூழும் அனாதி நீத்த யானொடு தான் இலா சுகோதய ஞான வார்த்தை அருள்வாயே
சாதன வேத நூல் புராதன பூண நூல் ப்ரஜாபதி ஆண்மை தோற்க வரை சாடி
சாகர சூர வேட்டை ஆடிய வீர வேல் ப்ரதாப மகீப போற்றி என நேமி
மாதவன் மாது பூத்த பாகர் அநேக நாட்ட வாசவன் ஓதி மீட்க மறை நீப
மா மலர் தூவி வாழ்த்த யானையை மாலை சூட்டி வானவர் சேனை காத்த பெருமாளே

மேல்

#1262
பார நறும் குழல் சோர நெகிழ்ந்து படீர தனம் புளகிதமாக
பாவையர் உந்தியில் மூழ்கி நெடும் பரிதாபம் உடன் பரிமள வாயில்
ஆர் அமுது உண்டு அணை மீதில் இருந்து அநுராகம் விளைந்திட விளையாடி
ஆக நகம் பட ஆரம் முயங்கிய ஆசை மறந்து உனை உணர்வேனோ
நாரதன் அன்று சகாயம் மொழிந்திட நாயகி பைம் புனம் அது தேடி
நாணம் அழிந்து உரு மாறிய வஞ்சகன் நாடியே பங்கய பதம் நோவ
மார சரம் பட மோகமுடன் குற வாணர் குறிஞ்சியின் மிசையே போய்
மா முநிவன் புணர் மான் உதவும் தனி மானை மணம்செய்த பெருமாளே

மேல்

#1263
பிரமனும் விரகொடு பிணிவினை இடர் கொடு பேணி கரம் கொண்டு இரு காலும்
பெற நிமிர் குடில் என உற உயிர் புக மதி பேதித்து அளந்து புவியூடே
வர விட வரும் உடல் எரியிடை புகுதரு வாதை தரங்கம் பிறவா முன்
மரகத மயில் மிசை வரு முருகனும் என வாழ்க்கைக்கு ஓர் அன்பும் தருவாயே
அரு வரை தொளைபட அலை கடல் சுவறிட ஆலிப்புடன் சென்ற அசுரேசர்
அனைவரும் மடிவுற அமர் பொருத அழகுடன் ஆண்மைத்தனம் கொண்டு எழும் வேலா
இருவினை அகலிட எழில் உமை இடம் உடை ஈசர்க்கு இடும் செந்தமிழ் வாயா
இயல் பல கலை கொடு இசை மொழிபவரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே

மேல்

#1264
பூத கலாதிகள் கொண்டு யோகமும் ஆக மகிழ்ந்து பூசைகள் யாது நிகழ்ந்து பிழை கோடி
போம் வழி ஏது தெரிந்து ஆதி அநாதி இரண்டு பூரணி காரணி விந்து வெளியான
நாத பராபரம் என்ற யோகி உலாசம் அறிந்து ஞான சுவாசம் உணர்ந்து ஒளி காண
நாடி ஒர் ஆயிரம் வந்த தாமரை மீதில் அமர்ந்த நாயகர் பாதம் இரண்டும் அடைவேனோ
மாது சர்வேஸ்வரி வஞ்சி காளி பிடாரி விபஞ்சி வாணி வராகி மடந்தை அபிராமி
வாழ் சிவகாம சவுந்த்ரி ஆலம் மெலாம் முக பஞ்ச வாலை புராரி இடம் தகு உமை ஆயி
வேத புராணம் விளம்பி நீல முராரியர் தங்கை மேலொடு கீழ் உலகங்கள் தரு பேதை
வேடம் எலாம் உக சங்க பாடலொடு ஆடல் பயின்ற வேணியர் நாயகி தந்த பெருமாளே

மேல்

#1265
பெரும் காரியம் போல் வரும் கேடு உடம்பால் ப்ரியம்கூர வந்து கரு ஊறி
பிறந்தார் கிடந்தார் இருந்தார் தவழ்ந்தார் நடந்தார் தளர்ந்து பிணம் ஆனார்
அரும் கான் மருங்கே எடுங்கோள் சுடுங்கோள் அலங்கார் நன்று இது என மூழ்கி
அகன்று ஆசையும் போய் விழும் பாழ் உடம்பால் அலந்தேனை அஞ்சல் என வேணும்
இரும் கானகம் போய் இளம் காளை பின் போக எங்கே மடந்தை என ஏகி
எழுந்தே குரங்கால் இலங்காபுரி தீயிடும் காவலன்தன் மருகோனே
பொரும் கார் முகம் பாணி கொண்டே இறைஞ்சார் புறம் சாய அம்பு தொடும் வேலா
புனம் காவல் அம் கோதை பங்கா அபங்கா புகழ்ந்து ஓதும் அண்டர் பெருமாளே

மேல்

#1266
மக்கள் பிறப்புக்குள் ஒக்க பிறப்புற்ற மட்டுற்ற சுற்றத்தர் மனையாளும்
மத்திய தலத்துற்று நித்த பிணக்கிட்டு வைத்து பொருள் பற்றும் மிக நாட
நிக்ரித்து இடு துட்டன் மட்டித்து உயிர் பற்ற நெட்டை கயிற்றிட்டு வளையா முன்
நெக்கு குரு பத்தி மிக்கு கழல் செப்ப நில் தத்துவ சொற்கள் அருள்வாயே
திக்கு அப்புறத்துக்குள் நிற்க புகழ் பித்த சித்ர தமிழ் கொற்றம் உடையோனே
சிப்ப குடில் கட்டும் அற்பம் குறத்தி சொல் தித்திப்பை இச்சிக்கும் மணவாளா
முக்கண் சடை சித்தர் உள் புக்கு இருக்கைக்கு முத்தி துவக்குற்று மொழிவோனே
முட்ட சினத்திட்டு முற்பட்டு இணர் கொக்கை முட்டி தொளைத்திட்ட பெருமாளே

மேல்

#1267
மக்கள் தாயர்க்கும் மருகர்க்கும் மாமர்க்கும் மனைவிக்கும் வாழ்நர்க்கும் மிக மனதூடே
மைத்த வேலைக்கு நெடிதுற்ற மாய துயரம் வைத்து வாட சமனும் உற மேவி
திக்கு நாடி கரிய மெய் கடாவில் திருகி திக்க ஆவி களவு தெரியா முன்
சித்தம் ஓவி துயிலும் அற்று வாழ சிறிது சித்ர பாத கமலம் அருள்வாயே
இக்கு வேளை கருக முக்கண் நாடி கனலை இட்டு யோகத்து அமர் இறையோர் முன்
எச்சராதிக்கும் உற நிற்கும் மாயற்கு முதல் எட்டொணா வித்தைதனை இனிது ஈவாய்
பக்க ஆர்வத்துடன் நெக்கு நாடி பரவும் பத்தர் பாடற்கு உருகும் முருகோனே
பக்கம் யானை திருவொடு ஒக்க வாழ குறவர் பச்சை மானுக்கு இனிய பெருமாளே

மேல்

#1268
மதன் இக்கு அது கொடு பதும புது மலர் மலையப்பட விடு வலியாலே
வனம் முற்றின வளை இனம் நித்தில மலை வலையத்து உகள் வளை கடலாலே
விதனப்படும் மதி வதன கொடி அற வெருவி பரிமள அணை மீதே
மெலிய கலை தலை குலைய தகும் இனி விரைய குர அலர் தரவேணும்
புதன் ஐ சதுமுக விதி அச்சுதன் எதிர் புனைவித்தவர் தொழு கழல் வீரா
பொரு கை சரி வரி பெருக செறிவுறு புனம் மெய் குறமகள் மணவாளா
முது நல் சரவணம் அதனில் சத தள முளரி பதிதனில் உறைவோனே
முதுமை கடல் அடல் அசுர படை கெட முடுகி பொர வல பெருமாளே

மேல்

#1269
மதிதனை இலாத பாவி குரு நெறி இலாத கோபி மனநிலை நிலாத பேயன் அவம் மாயை
வகை அது விடாத பேடி தவ நினை இலாத மோடி வரும் வகை இது ஏது காயம் என நாடும்
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை வினை இகல் விடாத கூளன் எனை நீயும்
மிகு பரமதான ஞான நெறிதனை விசாரமாக மிகும் உனது ரூப தானம் அருள்வாயே
எதிர் வரும் உதார சூரன் இரு பிளவதாக வேலை இயலோடு கடாவு தீர குமரேசா
இனிய சொல் மறாத சீலர் கரு விழி வராமல் நாளும் இளமை அது தானும் ஆக நினைவோனே
நதியுடன் அராவு பூணு பரமர் குருநாதனான நடைபெறு கடூரமான மயில் வீரா
நகை முக விநோத ஞான குற மினுடனே குலாவு நவ மணி உலாவு மார்ப பெருமாளே

மேல்

#1270
மலம் தோல் சலம் தேற்று எலும்பால் கலந்து ஈட்டிடும் கூட்டினில் தங்கிடு மாயம்
மயங்கா தியங்கா பயம் கோட்டிடும் காற்றுடன் போக்குற தந்தையும் மாதும்
குலம் தாய்க்கு உடம்பால் பிறந்து ஏற்றிடும் கோத்து அடம் கூப்பிட தம் புவி யாவும்
குலைந்து ஆர்ப்பு எழும் காட்டில் அம் தாள்கள் அன்பால் குணம் காத்து உனை கும்பிட ஆளாய்
தலம் தாள் தொடு அண்டா தளைந்தார்க்கு இளம் கா தடம் தாள் புடைத்த அன்பினர் வாழத்தரும்
கூத்தரும் பார்த்து உகந்து ஏத்திட சாத்திரம் சாற்றி நிற்கும் பெருவாழ்வே
அலைந்த ஆற்று எழும் கோ சலம் தீ கலந்து ஆள் தரம் போச்சு என கன்றிடும் வேலா
அறம் காத்து உறங்கா திறம் பார்த்து இருந்தோர்க்கு அயந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே

மேல்

#1271
மன நூறு கோடி துன்ப நொடி மீதிலே நினைந்து மதன் ஊடலே முயங்கி அதி ரூப
மட மாதர் ஆசை கொண்டு புவி மீதிலே மயங்கி மதி சீர் எலாம் அழிந்து கொடிதான
வினை மூடியே திரிந்து புவி மீதிலே உழன்று விரகால் மெயே தளர்ந்துவிடு நாளில்
விசையான தோகை துங்க மயில் ஏறி ஓடி வந்து வெளி ஞான வீடு தந்து அருள்வாயே
தினை வேடர் காவல் தங்கு மலை காடு எலாம் உழன்று சிறு பேதை கால் பணிந்த குமரேசா
திரை ஆழி சேது கண்டு பொரு ராவணேசை வென்ற திருமால் முராரி தங்கை அருள் பாலா
முனிவோர்கள் தேவர் உம்பர் சிறையாகவே வளைந்த முது சூரர் தானை தங்கள் கிளையோடு
முடி கோடி தூள் எழுந்து கழுகோடு பாறு அருந்த முனை வேலினால் எறிந்த பெருமாளே

மேல்

#1272
மாதர் மயல்தனில் கலந்து காம பனி என புகுந்து மாட இயல் என சுழன்று கரு ஊறி
மாறி பல என சுமந்து தேனு குடம் என திரண்டு மாதம் இது என தளர்ந்து வெளி ஆகி
வேத புவிதனில் கழன்று ஏனம் எனஎன தவழ்ந்து வீறு மணிகளை புனைந்து நடை மேலாய்
வேண விதம் என திரிந்து நாறு புழுகு உடல் திமிர்ந்து வேசி வலைதனில் கலந்து மடிவேனோ
ஆதி சரண் என கயம் குலாவ முதலையை கிடங்கில் ஆர உடல்தனை பிளந்த அரி நேமி
ஆமை கயல் என செயம் கொள் கோல குறள் தடம் கை அரியான அரவணை சயந்தன் மருகோனே
சோதி உரு என திரண்டு கோல அருணையில் கலந்த சோமன் அணி குடில் சிலம்பன் அருள் பாலா
தோகை மயில் என் சிறந்த ரூபி குறமகட்கு இரங்கி தோள்கள் இறுகிட புணர்ந்த பெருமாளே

மேல்

#1273
முத்து மணி ஆரம் மொய்த்திட்ட இரு கோடும் முற்பட்ட கரி போலும் அ தன மாதர்
முற்று மதி ஆர் முகத்துற்ற வேல் உறப்பட்டு முகில் போல் மனத்து இருள் மூடி
சுத்த மதி போய் வினை துட்டவனாய் மன துக்கம் உறவே மிக சுழலாதே
சொற்கள் பல நாவினில் தொட்டு உன் இரு தாள் தொழ சொல் கமல வாழ்வு சற்று அருள்வாயே
கொத்து முடியான பத்து அற்று விழவே குறிப்புற்ற அதி கோபன் அச்சுதன் மாயன்
கொற்றம் மருகா குற கொச்சை மற மாதினுக்கு இச்சை மொழி கூறு நல் குமரேசா
பத்தியுடனே நினைத்து எத்தும் அடியார் வினை பற்று விடும் மா மறை பொருள் ஆனாய்
பத்தி வர ஞான சொல் கற்றவர்கள் பாடு நல் பக்ஷபத தேவர் மெய் பெருமாளே

மேல்

#1274
முருக மயூர சேவக சரவண ஏனல் பூ தரி முகுள படீர கோமள முலை மீதே
முழுகிய காதல் காமுக பதி பசு பாச தீர் வினை முதிய புராரிக்கு ஓதிய குரு என்று
உருகியும் ஆடிப்பாடியும் இரு கழல் நாடி சூடியும் உணர்வினொடு ஊடி கூடியும் வழிபாடுற்று
உலகினோர் ஆசை பாடு அற நிலை பெறும் ஞானத்தால் இனி உனது அடியாரை சேர்வதும் ஒரு நாளே
மருகன் எனாமல் சூழ் கொலை கருதிய மாம பாதகன் வரவிடு மாய பேய் முலை பருகா மேல்
வரும் மத யானை கோடு அவை திருகி விளாவி காய் கனி மதுகையில் வீழ சாடி அ சதம் மா புள்
பொருது இரு கோர பாரிய மறுது இடை போய் அப்போது ஒரு சகடு உதையா மல் போர்செய்து விளையாடி
பொதுவியர் சேரிக்கே வளர் புயல் மருகா வஜ்ராயுதபுரம் அதில் மா புத்தேளிர்கள் பெருமாளே

மேல்

#1275
மூலா நிலம் அதின் மேலே மனதுறு மோகாடவி சுடர்தனை நாடி
மோனாநிலைதனை நானா வகையிலும் ஓதா நெறி முறை முதல் கூறும்
லீலாவிதம் உனதாலே கதி பெற நேமா ரகசிய உபதேசம்
நீடூழி தன் நிலை வாடா மணி ஒளி நீதா பலம் அது தருவாயே
நாலா ருசி அமுதாலே திரு மறை நாலாய் அது செபம் மணி மாலை
நாடு ஆய் தவர் இடர் கேடா அரிஅரி நாராயணர் திரு மருகோனே
சூலாதிபர் சிவஞானார் யமன் உதை காலார் தர வரு குருநாதா
தோதீ திகுதிகு தீதீ செகசெக சோதீ நடமிடும் பெருமாளே

மேல்

#1276
வரி பரந்து இரண்டு நயனமும் சிவந்து வதன மண்டலங்கள் குறு வேர்வாய்
மணி சிலம்பு அலம்ப அளகமும் குலைந்து வசம் அழிந்து இழிந்து மயல்கூர
இரு தனம் குலுங்க இடை துவண்டு அனுங்க இனிய தொண்டை உண்டு மடவார் தோள்
இதமுடன் புணர்ந்து மதிமயங்கினும் பொன் இலகு நின் பதங்கள் மறவேனே
விரி பரந்து இயங்கும் உததியும் கலங்க விடம் இனும் பிறந்தது என வானோர்
வெருவி நெஞ்சம் அஞ்சி உரனொடும் தயங்கி விரை பதம் பணிந்து முறையோ என்று
உரை மறந்து உணங்க அயில் தொடும் ப்ரசண்ட உயர் தலம் குலுங்க வரு தோகை
ஒரு பெரும் சிகண்டி மயில் அமர்ந்து இலங்கி உலகமும் புரந்த பெருமாளே

மேல்

#1277
வரி விழி பூசலாட இரு குழை ஊசலாட வளர் முலைதானும் ஆட வளை ஆட
மணி வட மாலை ஆட முருகு அவிழ் ஓதி ஆட மதுர அமுதம் ஊறி வீழ அனுராகம்
இருவரும் ஏக போகம் ஒருவர் தம் ஆகம் ஆக இதமொடு கூடி மாயை படுபோதும்
இரு கரம் ஆறும்ஆறும் அறு முகம் நீபம் மார்பும் இரு கழல் தானும் நானும் மறவேனே
திரு நடம் ஆடும் காளி பயிரவி மோடி சூலி திரிபுர நீறு அதாக அனல் மோதும்
சிவை கயிலாசவாசி மலைமகள் நாரி பாரி திரு முலை ஆயி தாயி அருள் பாலா
குரு பர நாதன் ஆகி அரன் ஒரு காதில் ஓது குணநிதி ஆசை நேச முருகோனே
குறமகள் ஆர பார முகிழ் முலை மீது தாது குலவிய மாலை மேவு பெருமாளே

மேல்

#1278
விழையும் மனிதரையும் முநிவரையும் அவர் உயிர் துணிய
வெட்டி பிளந்து உளம் பிட்டு பறிந்திடும் செம் கண் வேலும்
விரை அளகம் முகிலும் இள நகையும் ம்ருகமத கன விசித்ர
தனங்களும் தித்தித்த தொண்டையும் புண்டரீக
சுழி மடுவும் இடையும் அழகிய மகளிர் தரு கலவி
சுட்டி திரிந்து இஙன் தட்டுப்படும் கொடும் பங்க வாழ்வும்
தொலைவு இல் பிறவியும் அகல ஒரு மவுன பரம சுக
சுத்த பெரும் பதம் சித்திக்க அன்புடன் சிந்தியாதோ
எழுத அரிய அறு முகமும் அணி நுதலும் வயிரம் இடையிட்டு
சமைந்த செம் சுட்டி கலன்களும் துங்க நீள் பன்னிரு
கருணை விழி மலரும் இலகு பதினிரு குழையும்
ரத்ந குதம்பையும் கரங்களும் செம்பொன் நூலும்
மொழி புகழும் உடை மணியும் அரை வடமும் அடி இணையும்
முத்த சதங்கையும் சித்ர சிகண்டியும் செம் கை வேலும்
முழுதும் அழகிய குமர கிரி குமரியுடன் உருகும்
முக்கண் சிவன் பெறும் சற்புத்ர உம்பர்தம் தம்பிரானே

மேல்

#1279
வீணை இசை கோட்டி ஆலம் இடறு ஊட்டு வீரம் முனை ஈட்டி விழியார்தம்
வேதனையில் நாட்டம் ஆகி இடர்பாட்டில் வீழும் மயல் தீட்டி உழலாதே
ஆணி உள வீட்டை மேவி உளம் மாட்டை ஆவலுடன் ஈட்டி அழியாதே
ஆவி உறை கூட்டில் ஞான மறை ஊட்டி ஆன நிலை காட்டி அருள்வாயே
கேணி உற வேட்ட ஞான நெறி வேட்டர் கேள் சுருதி நாட்டில் உறைவோனே
கீத இசை கூட்டி வேத மொழி சூட்டு கீரர் இயல் கேட்ட க்ருபை வேளே
சேணின் உயர் காட்டில் வாழும் மறவாட்டி சீத இரு கோட்டில் அணைவோனே
சீறு அவுணர் நாட்டில் ஆர அழல் மூட்டி தேவர் சிறை மீட்ட பெருமாளே

மேல்

#1280
வேலை வாளை கொடிய ஆலகாலத்தை மதன் வீசு பாணத்தை நிகர் எனல் ஆகும்
வேதை சாதித்த விழி மாதர் ஆபத்தில் விளையாடி மோகித்து இரியும் வெகு ரூப
கோலகாலத்தை விடல் ஆகி மாற குண விகாரம் ஓட தெளிய அரிதான
கூறொணா தற்பரம ஞான ரூபத்தின் வழி கூடலாக பெருமை தருவாயே
வாலி மார்பை துணிய ஏழ் மரா இற்று விழ வாளி போட கருதும் மநு ராமன்
வான் உலோகத்தில் அமரேசன் ஓலிக்க வளை ஊதி மோகித்து விழ அருள்கூரும்
நீல மேனிக்கு மருகா உதாரத்து வரு நீசர் வாழ்வை களையும் இளையோனே
நேசமாக குறவர் தோகை மானை புணரும் நீப தோள் ஒப்பு அரிய பெருமாளே

மேல்

#1281
இ தரணி மீதில் பிறவாதே எத்தரொடு கூடி கலவாதே
முத்தமிழை ஒதி தளராதே முத்தி அடியேனுக்கு அருள்வாயே
தத்துவ மெய்ஞ்ஞான குருநாதா சத்த சொருபா புத்த அமுதோனே
நித்திய க்ருதா நல் பெருவாழ்வே நிர்த்த ஜெக ஜோதி பெருமாளே

மேல்

#1282
என் பந்த வினை தொடர் போக்கி விசையமாகி இன்பம்தனை உற்று மகா ப்ரியம் அதுவாகி
அன்பு உந்திய பொன் கிணி பாற்கடல் அமுதான அந்தம்தனில் இச்சைகொள் ஆற்பதம் அருள்வாயே
முன் புந்தி நினைத்து உருவால் சிறு வடிவாகி முன் திந்தி என பரதாத்துடன் நடமாடி
தம் பந்தம் அற தவ நோற்பவர் குறை தீர சம்பந்தன் என தமிழ் தேக்கிய பெருமாளே

மேல்

#1283
கருப்பத்து ஊறி பிறவாதே கனக்க பாடுற்று உழலாதே
திரு பொன் பாதத்து அனுபூதி சிறக்க பாலித்து அருள்வாயே
பரப்பு அற்றாருக்கு உரியோனே பரத்த அப்பாலுக்கு அணியோனே
திரு கை சேவல் கொடியோனே செகத்தில் சோதி பெருமாளே

மேல்

#1284
கருப்பையில் சுக்கிலத்து உலைத்து உற்பவித்து மறுகாதே
கபட்டு அசட்டர்க்கு இதத்த சித்ர தமிழ்க்கள் உரையாதே
விருப்பமுற்று துதித்து எனை பற்று என கருது நீயே
வெளிப்பட பற்றிட படுத்த தருக்கி மகிழ்வோனே
பருப்பதத்தை தொளைத்த சத்தி படை சமர வேளே
பணி குலத்தை கவர் பதத்துக்கு அளித்த மயிலோனே
செரு புறத்து சினத்தை முற்ற பரப்பும் இசையோனே
தினை புனத்து குறத்தியை கைப்பிடித்த பெருமாளே

மேல்

#1285
கொடிய மத வேள் கை கணையாலே குரை கண் நெடு நீல கடலாலே
நெடிய புகழ் சோலை குயிலாலே நிலைமை கெடு மானை தழுவாயே
கடி அரவு பூணர்க்கு இனியோனே கலைகள் தெரி மா மெய் புலவோனே
அடியவர்கள் நேசத்து உறை வேலா அறுமுக விநோத பெருமாளே

மேல்

#1286
கோடு ஆன மேரு மலை தனம் மானார் கோமாளம் ஆன வலைக்கு உழலாதே
நாள்தோறும் மேன்மை படைத்திடவே தான் நாயேனை ஆள நினைத்திடொணாதோ
ஈடேற ஞானம் உரைத்து அருள்வோனே ஈராறு தோள்கள் படைத்திடுவோனே
மாடு ஏறும் ஈசர் தமக்கு இனியோனே மா தானை ஆறுமுக பெருமாளே

மேல்

#1287
சமய பத்தி விருதாதனை நினையாதே சரண பத்ம சிவ அர்ச்சனைதனை நாடி
அமைய சற்குரு சாத்திர மொழி நூலால் அருள் எனக்கு இனிமேல் துணை தருவாயே
உமை முலை தரு பால் கொடு அருள் கூறி உரிய மெய் தவமாக்கி நல் உபதேச
தமிழ்தனை கரை காட்டிய திறலோனே சமணரை கழு ஏற்றிய பெருமாளே

மேல்

#1288
சருவிய சாத்திர திரளான சடு திகழ் ஆஸ்பதத்து அமையாத
அரு மறையால் பெறற்கு அரிதாய அனிதய வார்த்தையை பெறுவேனோ
நிருதரை மூக்கறுத்து எழு பார நெடு திரை ஆர்ப்பு எழ பொருதோனே
பொருள் அடியால் பெற கவி பாடும் புலவர் உரு சாத்துணை பெருமாளே

மேல்

#1289
சினத்து சீறிய வழி காண சிரித்து பேசியும் மயல் பூண
கனத்து போர் செயும் முலை தோண கலைக்குள் பாதியும் மறைவாக
மனத்துக்கு ஆறுதல் வருமாறு மலைப்ப பேணியும் மிகவாய
தனத்தை சூறை கொள் மடவார்தம் சதிக்கு போம் வழி தவிர்வேனோ
தெனத்த தாதென எனவே பண் திருத்தத்தோடு அளி இசை பாடும்
புனத்து காவல் கொள் குற மாதின் புணர்ச்சிக்கே ஒரு வழி தேடி
இனத்து காவலர் அறியாமல் இணக்கி தோகையை மகிழ்வோய் என்று
எனக்கு தாளினை அருள்வாய் சூர் இறக்க போர் செய்த பெருமாளே

மேல்

#1290
தீது உற்றே எழு திங்களாலே தீயை தூவிய தென்றலாலே
போது உற்று ஆடும் அனங்கனாலே போத பேதை நலங்கலாமோ
வேதத்தோனை முனிந்த கோவே வேட பாவை விரும்பும் மார்பா
ஓத சூதம் எறிந்த வேலா ஊமை தேவர்கள் தம்பிரானே

மேல்

#1291
துள்ளும் மத வேள் கை கணையாலே தொல்லை நெடு நீல கடலாலே
மெள்ள வரு சோலை குயிலாலே மெய் உருகும் மானை தழுவாயே
தெள்ளு தமிழ் பாட தெளிவோனே செய்ய குமரேச திறலோனே
வள்ளல் தொழு ஞான கழலோனே வள்ளி மணவாள பெருமாளே

மேல்

#1292
தேன் இயல் சொற்கு அணி மாதர் சேவைதனை கருதாதே
யான் எனது அற்றிடு போதம் யான் அறிதற்கு அருள்வாயே
வானவருக்கு அரசான வாசவனுக்கு இனியோனே
ஆனை முகற்கு இளையோனே ஆறுமுக பெருமாளே

மேல்

#1293
நாரியர்கள் ஆசையை கருதாதே நான் உன் இரு பாத பத்மமு நாட
ஆர் அமுதமான சர்க்கரை தேனே ஆன அநுபூதியை தருவாயே
காரணம் அதான உத்தம சீலா கான குற மாதினை புணர்வோனே
சூரர் கிளை தூள் எழ பொரும் வேலா தோகை மயில் வாகன பெருமாளே

மேல்

#1294
நாளும் மிகுத்த கசிவாகி ஞான நிருத்தம் அதை நாடும்
ஏழைதனக்கும் அனுபூதி ராசி தழைக்க அருள்வாயே
பூளை எருக்கு மதி நாக பூணர் அளித்த சிறியோனே
வேளை தனக்கு உசிதமாக வேழம் அழைத்த பெருமாளே

மேல்

#1295
நித்தம் உற்று உனை நினைத்து மிக நாடி நிட்டை பெற்று இயல் கருத்தர் துணையாக
நத்தி உதம தவத்தின் நெறியாலே லக்ய லக்கண நிருத்தம் அருள்வாயே
வெற்றி விக்ரம அரக்கர் கிளை மாளவிட்ட நத்து கரனுக்கு மருகோனே
குற்றம் அற்றவர் உளத்தில் உறைவோனே குக்குட கொடி தரித்த பெருமாளே

மேல்

#1296
நீலம் கொள் மேகத்தின் மயில் மீதே நீ வந்த வாழ்வை கண்டு அதனாலே
மால் கொண்ட பேதைக்கு உன் மண நாறும் மார் தங்கு தாரை தந்து அருள்வாயே
வேல் கொண்டு வேலை பண்டு எறிவோனே வீரம் கொள் சூரர்க்கும் குல காலா
நால் அந்த வேதத்தின் பொருளோனே நான் என்று மார் தட்டும் பெருமாளே

மேல்

#1297
பட்டுப்படாத மதனாலும் பக்கத்து மாதர் வசையாலும்
சுட்டு சுடாத நிலவாலும் துக்கத்தில் ஆழ்வது இயல்போ தான்
தட்டுப்படாத திறல் வீரா தர்க்கித்த சூரர் குல காலா
மட்டுப்படாத மயிலோனே மற்று ஒப்பிலாத பெருமாளே

மேல்

#1298
பரவைக்கு எத்தனைவிசை தூது பகரற்கு உற்றவர் என மாண் உன்
மரபுக்கு உச்சித ப்ரபுவாக வரம் மெத்த தர வருவாயே
கரட கற்பகன் இளையோனே கலை வில் கண் குறமகள் கேள்வா
அரனுக்கு உற்றது புகல்வோனே அயனை குட்டிய பெருமாளே

மேல்

#1299
பிறவி அலை ஆற்றினில் புகுதாதே பிரகிருதி மார்க்கம் உற்று அலையாதே
உறுதி குரு வாக்கிய பொருளாலே உனது பத காட்சியை தருவாயே
அறு சமய சாத்திர பொருளோனே அறிவுள் அறிவார் குண கடலோனே
குறுமுனிவன் ஏத்தும் முத்தமிழோனே குமரகுரு கார்த்திகை பெருமாளே

மேல்

#1300
புத்தகத்து ஏட்டில் தீட்டி முடியாது பொற்புற கூட்டி காட்டி அருள் ஞான
வித்தக பேற்றை தேற்றி அருளாலே மெத்தென கூட்டி காக்க நினைவாயே
தத்தை புக்கு ஓட்டி காட்டில் உறைவாளை சற்கரித்து ஏத்தி கீர்த்தி பெறுவோனே
கைத்தலத்து ஈ குப்பு ஆர்த்து நுழையாத கற்பக தோப்பு காத்த பெருமாளே

மேல்

#1301
பொன்னை விரும்பிய பொதுமாதர் புன்மை விரும்பியே தடுமாறும்
என்னை விரும்பி நீ ஒருகால் நின் எண்ணி விரும்பவும் அருள்வாயே
மின்னை விரும்பிய சடையாளர் மெய்யின் விரும்பிய குருநாதா
அன்னை விரும்பிய குற மானை அண்மி விரும்பிய பெருமாளே

மேல்

#1302
மனை மக்கள் சுற்றம் என்னும் மாயா வலையை கடக்க அறியாதே
வினையில் செருக்கி அடி நாயேன் விழலுக்கு இறைத்து விடலாமோ
சுனையை கலக்கி விளையாடும் சொருப குறத்தி மணவாளா
தினம் நல் சரித்திரம் உள தேவர் சிறை வெட்டிவிட்ட பெருமாளே

மேல்

#1303
வாரி மீதே எழு திங்களாலே மார வேள் ஏவிய அம்பினாலே
பார் எலாம் ஏசிய பண்பினாலே பாவியேன் ஆவி மயங்கலாமோ
சூரன் நீள் மார்பு தொளைந்த வேலா சோதியே தோகை அமர்ந்த கோவே
மூரி மால் யானை மணந்த மார்பா மூவர் தேவாதிகள் தம்பிரானே

மேல்

#1304
வான் அப்பு கு பற்று மருத்து கனல் மேவு மாய தெற்றி பொய் குடில் ஒக்க பிறவாதே
ஞான சித்தி சித்திர நித்தம் தமிழால் உன் நாமத்தை கற்று புகழ்கைக்கு புரிவாயே
கான கொச்சை சொல் குறவிக்கு கடவோனே காதி கொற்ற பொன் குல வெற்பை பொரும் வேலா
தேனை தத்த சுற்றிய செச்சை தொடையோனே தேவ சொர்க்க சக்கிரவர்த்தி பெருமாளே

மேல்

#1305
குருபர சரவணபவ சண்முக குக ஒரு பர வயமியல் எயினர் மகள் சுக
மண்ட தனங்கள் புணர் சண்ட திரண்ட புஜ
உழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள் இளைகளை நெறுநெறுநெறென உலவு
விலங்கல் குறிஞ்சி உறை தொங்கல் கடம்ப அருள்தருவாயே
அடிபடு முரசு தவில்பட
கம் தக்கை துந்துமி தடம் தப்புடன் சலிகை
கரடிகை அறை பறை திமிலை அபிநவ
சங்கு ஒற்றை கொம்பு குழல் வங்க கரும் கடல் கொள்
பிரளயம் இது என அதிர உலகர்கள் அரகர சிவசிவ அபயம்அபயம் எனும்
சத்தம் எங்கும் எழ வெம் சத்தி கொண்டு படை புக வானோர்
வனச மலர் நிகர் செம்பொன் சதங்கையடி அன்பர்க்கு வந்து உதவு பெருமாளே

மேல்

#1306
கும்பகோணமொடு ஆரூர் சிதம்பரம் உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
கொன்றை வேணியர் மாயூரம் அம் பெறு சிவகாசி
கொந்து உலாவிய ராமேசுரம் தனி வந்து பூஜை செய் நால் வேத தந்திரர்
கும்பு கூடிய வேளூர் பரங்கிரிதனில் வாழ்வே
செம்புகேசுரம் ஆடானை இன்புறு செந்தில் ஏடகம் வாழ் சோலையங்கிரி
தென்றல் மா கிரி நாடாள வந்தவ செகநாதம்
செம் சொல் ஏரகம் மா ஆவினன்குடி குன்றுதோறுடன் மூதூர் விரிஞ்சை நல்
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் வரு தேவே
கம்பை மா அடி மீது ஏய சுந்தர கம்பு உலாவிய காவேரி சங்கமுகம்
சிராமலை வாழ் தேவ தந்திர வயலூரா
கந்தம் மேவிய போரூர் நடம்புரி தென் சிவாயமும் மேயாய் அகம்படு
கண்டியூர் வரு சாமீ கடம்பு அணி மணி மார்பா
எம்பிரானொடு வாதாடு மங்கையர் உம்பர் வாணி பொன் நீள் மால் சவுந்தரி
எந்த நாள்தொறும் ஏர்பு ஆக நின்று உறு துதி ஓதும்
இந்திராணிதன் மாதோடு நன் குற மங்கை மானையும் மாலாய் மணந்து உலகு
எங்கும் மேவிய தேவாலயம்தொறு பெருமாளே

மேல்

#1307
அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகம் ஆகி
அயன் என ஆகி அரி என ஆகி அரன் என ஆகி அவர் மேலாய்
இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே
இரு நிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வரவேணும்
மக பதி ஆகி மருவும் வலாரி மகிழ் களிகூரும் வடிவோனே
வனம் உறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமி என ஆடு மயிலோனே
திரு மலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவும் பெருமாளே

மேல்

#1308
இலவ இதழ் கோதி நேதி மத கலை ஆரவாரம் இள நகையாட ஆடி மிக வாதுற்று
எதிர் பொரு கோர பார ம்ருகமத கோலகால இணை முலை மார்பில் ஏற மத ராஜன்
கலவியில் ஓடி நீடு வெகு வித தாக போகம் கரண ப்ரதாப லீலை மட மாதர்
கலவியில் மூழ்கி ஆழும் இழிதொழிலேனும் மீது கருதிய ஞான போதம் அடைவேனோ
கொலைபுரி காளி சூலி வயிரவி நீலி மோடி குலிச குடாரி ஆயி மகமாயி
குமரி வராகி மோக பகவதி ஆதி சோதி குணவதி ஆல ஊணி அபிராமி
பலிகொள் கபாலி யோகி பரம கல்யாணி லோக பதிவ்ரதை வேத ஞானி புதல்வோனே
படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர பழமுதிர்சோலை மேவு பெருமாளே

மேல்

#1309
காரணம் அதாக வந்து புவி மீதே காலன் அணுகாது இசைந்து கதி காண
நாரணனும் வேதன் முன்பு தெரியாத ஞான நடமேபுரிந்து வருவாயே
ஆர் அமுதமான தந்தி மணவாளா ஆறு முகம் ஆறிரண்டு விழியோனே
சூரர் கிளை மாள வென்ற கதிர் வேலா சோலைமலை மேவி நின்ற பெருமாளே

மேல்

#1310
சீலம் உள தாயர் தந்தை மாது மனை ஆன மைந்தர் சேரு பொருள் ஆசை நெஞ்சு தடுமாறி
தீமையுறு மாயை கொண்டு வாழ்வு சதம் ஆம் இது என்று தேடினது போக என்று தெருவூடே
வால வயதான கொங்கை மேரு நுதலான திங்கள் மாதர் மயலோடு சிந்தை மெலியாமல்
வாழு மயில் மீது வந்து தாள் இணைகள் தாழும் என்தன் மாய வினை தீர அன்புபுரிவாயே
சேல வள நாடு அனங்கள் ஆர வயல் சூழும் இஞ்சி சேண் நிலவு தாவ செம்பொன் மணி மேடை
சேரும் அமரேசர் தங்கள் ஊர் இது என வாழ்வு உகந்த தீரம் மிகு சூரை வென்ற திறல் வீரா
ஆல விடம் மேவு கண்டர் கோலமுடன் நீடு மன்றுள் ஆடல்புரி ஈசர் தந்தை களிகூர
ஆன மொழியே பகர்ந்து சோலைமலை மேவு கந்த ஆதி முதலாக வந்த பெருமாளே

மேல்

#1311
வீர மதன் நூல் விளம்பும் போக மட மாதர் தங்கள் வேல் விழியினால் மயங்கி புவி மீதே
வீசுகையினால் இதங்கள் பேசும் அவர் வாய் இதம் சொல் வேலை செய்து மால் மிகுந்து விரகாகி
பார வசமான அங்கண் நீடு பொருள் போன பின்பு பாதகனுமாகி நின்று பதையாமல்
பாகம் வர சேர அன்பு நீப மலர் சூடு தண்டை பாத மலர் நாடி என்று பணிவேனோ
பூரணம் அதான திங்கள் சூடும் அரனார் இடம் கொள் பூவை அருளால் வளர்ந்த முருகோனே
பூ உலகு எலாம் அடங்க ஓர் அடியினால் அளந்த பூவை வடிவான் உகந்த மருகோனே
சூரர் கிளையே தடிந்து பார முடியே அரிந்து தூள்கள் பட நீறு கண்ட வடி வேலா
சோலைதனிலே பறந்து உலாவு மயில் ஏறி வந்து சோலைமலை மேல் அமர்ந்த பெருமாளே

மேல்

#1312
வாரண முகம் கிழிந்து வீழவும் அரும்பு அலர்ந்து மால் வரை அசைந்து அநங்கன் முடி சாய
வாள கிரி அண்டர் அண்ட கோளம் உற நின்று எழுந்து மாதவம் அறம் துறந்து நிலை பேர
பூரண குடம் கடிந்து சீத களபம் புனைந்து பூசலை விரும்பு கொங்கை மடவார்தம்
போக சயனம் தவிந்து உன் நாடக பதம் பணிந்து பூசனை செய் தொண்டர் என்பது ஒரு நாளே
ஆரணம் முழங்குகின்ற ஆயிரம் மடம் தவங்கள் ஆகுதி இடங்கள் பொங்கு நிறை வீதி
ஆயிரம் முகங்கள் கொண்ட நூபுரம் இரங்கும் கங்கை ஆரமர வந்து அலம்பு துறை சேர
தோரணம் அலங்கு துங்க கோபுரம் நெருங்குகின்ற சூழ் மணி மண்டபங்கள் ரவி போல
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற சோலைமலை வந்து உகந்த பெருமாளே

மேல்

#1313
ஆசை நாலு சதுர கமல முற்றின் ஒளி வீசி ஓடி இரு பக்கமொடு உற செல் வளி
ஆவல் கூர மண் முதல் சலசம் பொன் சபையும் இந்து வாகை
ஆர மூணு பதியில் கொள நிறுத்தி வெளி ஆரு சோதி நூறு பத்தினுடன் எட்டு இதழாகி
ஏழும் அளவிட்டு அருண விற்பதியில் விந்து நாத
ஓசை சாலும் ஒரு சத்தம் அதிக படிகமோடு கூடி ஒருமித்து அமுத சித்தியொடும்
ஓது வேத சர சத்தி அடியுற்ற திரு நந்தியூடே
ஊமையேனை ஒளிர்வித்து உனது முத்தி பெற மூல வாசல் வெளி விட்டு உனது உரத்தில் ஒளிர்
யோக பேத வகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று தாராய்
வாசி வாணிகன் என குதிரை விற்று மகிழ் வாதவூரன் அடிமை கொளு க்ருபை கடவுள்
மாழை ரூபன் முக மத்திகை இதத்து அருண செம் கையாளி
வாகு பாதி உறை சத்தி கவுரி குதலை வாயின் மாது உதிர் பச்சை வடிவி சிவை என்
மாசு சேர் எழு பிறப்பையும் அறுத்த உமை தந்த வாழ்வே
காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி ஆரூர் வேலுர் தெவுர் கச்சி மதுரை பறியல்
காவை மூதூர் அருணைகிரி திருத்தணியல் செந்தில் நாகை
காழி வேளுர் பழநிக்கிரி குறுக்கை திருநாவலூர் திருவெணெய் பதியில் மிக்க திகழ்
காதல் சோலை வளர் வெற்பில் உறை முத்தர் புகழ் தம்பிரானே

மேல்

#1314
கருவாகியே தாய் உதரத்தினில் உருவாகவே கால் கை உறுப்பொடு
கனி வாய் விழி நாசி உடன் செவி நரை மாதர்
கையிலே விழ ஏகி அணை துயல் எனவே மிக மீது துயிற்றிய
கரு தாய் முலை ஆர் அமுதத்தினில் இனிதாகி
தரு தாரமும் ஆகிய சுற்றமும் நல வாழ்வு நிலாத பொருள் பதி
சதமாம் இது தான் என உற்று உனை நினையாத
சதுராய் உன தாளிணையை தொழ அறியாத நிர் மூடனை நின் புகழ்தனை
ஓதி மெய் ஞானமுற செய்வது ஒரு நாளே
செருவாய் எதிராம் அசுர திரள் தலை முளைகளோடு நிண தசை
திமிர் தாது உள பூத கணத்தொடு வரு பேய்கள்
திகுதா உணவாய் உதிரத்தினை பலவாய் நரியோடு குடித்திட
சில கூகைகள் தாமும் நடித்திட அடு தீரா
அரு மா மறையோர்கள் துதித்திடு புகர் வாரண மாதுதனை திகழ்
அளி சேர் குழல் மேவு குறத்தியை அணைவோனே
அழகான பொன் மேடை உயர்த்திடு முகில் தாவிய சோலை வியப்புறு
அலையா மலை மேவிய பத்தர்கள் பெருமாளே

மேல்

#1315
சீர் சிறக்கும் மேனி பசேல்பசேல் என நூபுரத்தின் ஓசை கலீர்கலீர் என
சேர விட்ட தாள்கள் சிவேல்சிவேல் என வரு மானார்
சேகரத்தின் வாலை சிலோர்சிலோர்களு நூறு லக்ஷ கோடி மயால்மயால் கொடு
தேடி ஒக்க வாடி ஐயோஐயோ என மட மாதர்
மார்பு அடைத்த கோடு பளீர்பளீர் என ஏமலித்து என் ஆவி பகீர்பகீர் என
மா மசக்கில் ஆசை உளோம்உளோம் என நினைவு ஓடி
வாடை பற்று வேளை அடாஅடா என நீ மயக்கம் ஏது சொலாய்சொலாய் என
வாரம் வைத்த பாதம் இதோஇதோ என அருள்வாயே
பாரதத்தை மேரு வெளீவெளீ திகழ் கோடு ஒடித்த நாளில் வரை வரைபவர்
பானு நிற கணேசர் கு ஆகுவாகனர் இளையோனே
பாடல் முக்ய மாது தமிழ்தமிழ் இறை மா முநிக்கு காதில் உணார்உணார் விடு
பாசம் அற்ற வேத குரு குருபர குமரேசா
போர் மிகுத்த சூரன் விடோம்விடோம் என நேர் எதிர்க்க வேலை படீர்படீர் என
போய் அறுத்த போது குபீர்குபீர் என வெகு சோரி
பூமி உக்க வீசு குகாகுகா திகழ் சோலை வெற்பின் மேவு தெய்வா தெய்வானை தோள்
பூணி இச்சை ஆறு புயாபுயா ஆறு உள பெருமாளே

மேல்

#1316
துடி கொள் நோய்களோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இருமல் ஈளை வாத பித்தம் அணுகாமல்
துறைகளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை அற்று சுகமுளாநுபூதி பெற்று மகிழாமே
உடல் செய் கோர பாழ் வயிற்றை நிதமும் ஊணினால் உயர்த்தி உயிரின் நீடு யோக சித்தி பெறலாமே
உரு இலாத பாழில் வெட்டவெளியில் ஆடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்மம் உறுவேனோ
கடிது உலாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயும் மிக்க மலைகள் போட ஆழி கட்டி இகலூர் போய்
களம் உறு ஆனை தேர் நுறுக்கி தலைகள் ஆறு நாலு பெற்ற அவனை வாளியால் அடு அத்தன் மருகோனே
முடுகு வீர சூரபத்மர் தலையின் மூளை நீறுபட்டு முடிவதாக ஆடு நிர்த்த மயில் வீரா
முநிவர் தேவர் ஞானமுற்ற புநித சோலை மா மலைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே

மேல்

#1317
பாசத்தால் விலை கட்டிய பொட்டிகள் நேசித்தார் அவர் சித்தம் மருட்டிகள்
பார பூதரம் ஒத்த தனத்திகள் மிகவே தான்
பாவத்தால் மெய் எடுத்திடு பட்டிகள் சீவி கோதி முடித்த அளகத்திகள்
பார்வைக்கே மயலை தரு துட்டிகள் ஒழியாத
மாசுற்று ஏறிய பித்தளையில் பணி நீறு இட்டே ஒளி பற்ற விளக்கிகள்
மார்பில் காதினில் இட்ட பிலுக்கிகள் அதி மோக
வாய் வித்தாரம் உரைக்கும் அபத்திகள் நேசித்து யாரையும் எத்தி வடிப்பவர்
மாயைக்கே மனம் வைத்து அதனுள் தினம் அலைவேனோ
தேசி கானகம் உற்ற தினை புனம் மேவி காவல் கவண் கல் சுழற்றுவள்
சீத பாத குற பெண் மகிழ்ச்சி கொள் மணவாளா
தேடி பாடிய சொல் புலவர்க்கு இதமாக தூது செல் அத்தர் இல் கற்பக
தேவர்க்கு ஆதி திரு புகலி பதி வருவோனே
ஆசித்தார் மனதில் புகும் உத்தம கூடற்கே வைகையில் கரை கட்டிட
ஆள் ஒப்பாய் உதிர் பிட்டு அமுதுக்கு அடிபடுவோனோடு
ஆரத்தோடு அகில் உற்ற தரு குல மேகத்தோடு ஒருமித்து நெருக்கிய
ஆதி சோலைமலை பதியில் திகழ் பெருமாளே

மேல்

#1318
வாதினை அடர்ந்த வேல் விழியர் தங்கள் மாயம் அது ஒழிந்து தெளியேனே
மா மலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மா பாதம் அணிந்து பணியேனே
ஆதியோடந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகம் என்று தெரியேனே
ஆன தனி மந்த்ர ரூப நிலை கொண்டது ஆடும் மயில் என்பது அறியேனே
நாதமோடு விந்துவான உடல் கொண்டு நானிலம் அலைந்து திரிவேனே
நாகம் அணிகின்ற நாத நிலை கண்டு நாடி அதில் நின்று தொழுகேனே
சோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற சோகம் அது தந்து எனை ஆள்வாய்
சூரர் குலம் வென்று வாகையோடு சென்று சோலை மலை நின்ற பெருமாளே

மேல்

#1319
வார் குழையை எட்டி வேளினை மருட்டி மாய நமனுக்கும் உறவாகி
மாதவம் அழித்து லீலைகள் மிகுத்து மா வடுவை ஒத்த விழி மாதர்
சீருடன் அழைத்து வாய் கனிவு வைத்து தேன் இதழ் அளித்து அநுபோக
சேர்வைதனை உற்று மோசம் விளைவித்து சீர்மை கெட வைப்பர் உறவாமோ
வாரினை அறுத்து மேருவை மறித்து மா கனகம் ஒத்த குடமாகி
வார அணை வைத்து மா லளிதமுற்று மாலைகளும் மொய்த்த தனம் மாது
தோரணி புயத்தி யோகினி சமர்த்தி தோகை உமை பெற்ற புதல்வோனே
சூர் கிளை மடித்து வேல் கரம் எடுத்து சோலைமலை உற்ற பெருமாளே

மேல்

#1320
அழகு தவழ் குழல் விரித்து காட்டி விழிகள் கடையினை புரட்டி காட்டி
அணி பொன் அணி குழை புரித்து காட்டி அநுராக
அவச இத மொழி படித்து காட்டி அதரம் அழி துவர் வெளுப்பை காட்டி
அமர் செய் நகர் நுதி அழுத்தை காட்டி அணி ஆரம்
ஒழுகும் இரு தனம் அசைத்து காட்டி எழுத அரி இடை வளைத்து காட்டி
உலவும் உடைதனை நெகிழ்த்தி காட்டி உறவாடி
உருகு கடி தடம் ஒளித்து காட்டி உபய பரிபுர பதத்தை காட்டி
உயிரை விலை கொளும் அவர்க்கு தேட்டம் ஒழிவேனோ
முழுகும் அரு மறை முகத்து பாட்டி கொழுநர் குடுமியை அறுத்து போட்ட
முதல்வ குகை படு திரு பொன் கோட்டு முனி நாடா
முடுகு முதலையை வரித்து கோட்டி அடியர் தொழ மகவு அழைத்து கூட்டி
முறை செய் தமிழினை விரித்து கேட்ட முது நீதர்
பழைய கட தட முகத்து கோட்டு வழுவை உரி அணி மறை சொல் கூட்டு
பரமர் பகிரதி சடைக்குள் சூட்டு பரமேசர்
பணிய அருள் சிவமயத்தை காட்டு குமர குல மலை உயர்த்தி காட்டு
பரிவொடு அணி மயில் நடத்தி காட்டு பெருமாளே

மேல்

#1321
தலை மயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து கலகல என பல் கட்டு அது விட்டு
தளர் நடை பட்டு தத்து அடியிட்டு தடுமாறி
தடி கொடு தத்தி கக்கல் பெருத்திட்டு அசனமும் விக்கி சத்தி எடுத்து
சளியும் மிகுத்து பித்தமும் முற்றி பலகாலும்
தில தயிலத்து இட்டு ஒக்க எரிக்க திரி பலை சுக்கு திப்பிலி இட்டு
தெளிய வடித்து உற்று உய்த்து உடல் செத்திட்டு உயிர் போ முன்
திகழ் புகழ் கற்று சொற்கள் பயிற்றி திருவடியை பற்றி தொழுது உற்று
செனன மறுக்கைக்கு பர முத்திக்கு அருள்தாராய்
கலணை விசித்து பக்கரை இட்டு புரவி செலுத்தி கைக்கொடு வெற்பை
கடுக நடத்தி திட்டென எட்டி பொரு சூரன்
கன படை கெட்டு தட்டற விட்டு திரை கடலுக்குள் புக்கிட எற்றி
களி மயிலை சித்ரத்தில் நடத்தி பொரு கோவே
குலிசன் மகட்கு தப்பியும் மற்ற குறவர் மகட்கு சித்தமும் வைத்து
குளிர் தினை மெத்த தத்து புனத்தில் திரிவேனே
கொடிய பொருப்பை குத்தி முறித்து சமரம் விளைத்து தற்பரம் உற்று
குலகிரியில் புக்குற்று உறை உக்ர பெருமாளே

மேல்

#1322
மலர் அணை ததும்ப மேக குழல் முடி சரிந்து வீழ மண பரிமளங்கள் வேர்வை அதனோடே
வழி பட இடம் கண் ஆட பிறை நுதல் புரண்டு மாழ்க வனை கலை நெகிழ்ந்து போக இளநீரின்
முலை இணை ததும்ப நூலின் வகிர் இடை சுழன்று வாட முகம் முகமொடு ஒன்ற பாயல் அதனூடே
முது மயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்கல் ஆடு முடி வடிவொடு அம் கை வேலும் மறவேனே
சிலை நுதல் இளம் பெண் மோகி சடை அழகி எந்தை பாதி திகழ் மரகதம் பொன் மேனி உமை பாலா
சிறு நகைபுரிந்து சூரர் கிரி கடல் எரிந்து போக திகழ் அயில் எறிந்த ஞான முருகோனே
கொலை மிக பயின்ற வேடர் மகள் வளி மணந்த தோள குண அலர் கடம்ப மாலை அணி மார்பா
கொடி மினல் அடைந்த சோதி மழ கதிர் தவழ்ந்த ஞான குல கிரி மகிழ்ந்து மேவு பெருமாளே

மேல்

#1323
கரு எனும் மாயை உருவினில் மூழ்கி வயதளவாக நிலம் மீதில்
கலை தெரி வாணர் கலை பல நூல்கள் வெகுவிதமாக கவி பாடி
தெருவழி போகி பொருள் எனும் ஆசை திரவியம் நாடி நெடிது ஓடி
சிலை நுதல் மாதர் மயலினில் மூழ்கி சிறுவிதமாக திரிவேனோ
அருள் அநுபோக குருபரனே உன் அடியவர் வாழ அருள்வோனே
அரன் இரு காதில் அருள் பர ஞாந அடைவினை ஓதி அருள் பாலா
வெருவிடு சூரர் குல அடி வேரை விழவிடு சரசுவதி பாலா
மிடல் உடலாளர் அடர் அசுர் மாள விடு மயில் வேல பெருமாளே

மேல்

#1324
தங்கம் மிகுந்த முலை கடாமலை பொங்க விரும்பிய முத்து மாலைகள்
தங்க அணிந்து முறுக்கும் வேசியர் மொழியாலே
சஞ்சலம் மிஞ்சி மயக்கியே ஒரு மஞ்சம் இருந்து சுகிக்கவே வளர்
சந்து சுகந்த முடித்து நூல் இடை கிடையாட
கொங்கை குலுங்க வளைத்து வாய் அதரங்கள் அருந்தி ருசிக்கவே மத
குங்குமம் மிஞ்சு கழுத்திலே குயில் என ஓசை
கொண்டவர் இந்த விதத்தின் ஆடர சங்கிலி கொண்டு பிணித்து மா மயில்
கொஞ்சி மகிழ்ந்த வறட்டு வீணியர் உறவாமோ
திங்கள் அரும்பு சலத்திலே விடம் வந்தது கண்டு பயப்படாதவர்
சிந்தை நடுங்கி இருக்கவே மயில் மிசை ஏறி
சிங்கமுகன் தலை வெட்டி மாமுகன் அங்கம் அறுந்து கிடக்கவே வரு
சிம்புள் எனும்படி விட்ட வேல் உள குருநாதா
மங்கை மடந்தை கதிக்கு நாயகி சங்கரி சுந்தரி அத்தியானனை
மைந்தன் எனும்படி பெற்ற ஈசுரி தரு பாலா
மந்திர தந்திர முத்த யோகியர் அஞ்சலி செங்கை முடிக்கவே அருள்
வந்து தரும்படி நித்தம் ஆடிய பெருமாளே

மேல்

#1325
உரையும் சென்றது நாவும் உலர்ந்தது விழியும் பஞ்சு பொல் ஆனது கண்டு அயல்
உழலும் சிந்துறு பால் கடைநின்றது கடைவாயால்
ஒழுகும் சஞ்சல மேனி குளிர்ந்தது முறி முன் கண்டு கை கால்கள் நிமிர்ந்தது
உடலும் தொந்தியும் ஓடி வடிந்தது பரிகாரி
வர ஒன்றும் பலியாது இனி என்ற பின் உறவும் பெண்டிரும் மோதி விழுந்து அழ
மறல் வந்து இங்கு எனது ஆவிகொளும் தினம் இயல் தோகை
மயிலும் செம் கைகள் ஆறிரு திண் புய வரை துன்றும் கடி மாலையும் இங்கித
வன மின் குஞ்சரிமாருடன் என்றன் முன் வருவாயே
அரி மைந்தன் புகழ் மாருதி என்று உள கவியின் சங்கம் இராகவ புங்கவன்
அறிவும் கண்டு அருள்வாய் என அன்பொடு தர வேறு உன்
அருளும் கண்ட தராபதி வன்புறு விஜயம் கொண்டு எழுபோது புலம்பிய
அகமும் பைம் தொடி சீதை மறைந்திட வழிதோறும்
மருவும் குண்டலம் ஆழி சிலம்புகள் கடகம் தண்டை பொன் நூபுர மஞ்சரி
மணியின் பந்து எறி வாய் இது பந்து என முதலான
மலையும் சங்கிலி போல மருங்கு விண் முழுதும் கண்ட நராயணன் அன்புறு
மருகன் தென் புன வாயில் அமர்ந்து அருள் பெருமாளே

மேல்

#1326
ஓர் உருவாகிய தாரக பிரமத்து ஒருவகை தோற்றத்து இரு மரபு எய்தி
ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி மூவாது ஆயினை
இருபிறப்பாளரின் ஒருவன் ஆயினை ஓரா செய்கையின் இருமையின் முன்னாள்
நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து மூவரும் போந்து இரு தாள் வேண்ட ஒரு சிறை விடுத்தனை
ஒரு நொடி அதனில் இரு சிறை மயிலின் முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீ வலம்செய்தனை
நால்வகை மருப்பின் மும்மதத்து இரு செவி ஒரு கை பொருப்பன் மகளை வேட்டனை
ஒரு வகை வடிவினில் இரு வகைத்து ஆகிய மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி
நால் வாய் முகத்தோன் ஐந்து கை கடவுள் அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை
ஐந்தெழுத்து அதனில் நான்மறை உணர்த்து முக்கண் சுடரினை இருவினை மருந்துக்கு ஒரு குரு ஆயினை
ஒருநாள் உமை இரு முலை பால் அருந்தி முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
ஐம்புல கிழவன் அறுமுகன் இவன் என எழில் தரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை
அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன் நான்மறை தோற்றத்து முத்தலை செம் சூட்டு
அன்றில் அம் கிரி இரு பிளவாக ஒரு வேல் விடுத்தனை
காவிரி வட கரை மேவிய குருகிரி இருந்த ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற
ஏரகத்து இறைவன் என இருந்தனையே

மேல்

#1327
சைவ முதல் குருவாயே சமணர்களை தெறுவோனே
பொய்யர் உளத்து அணுகானே புனித அருள்புரிவாயே
கையின் மிசை கதிர் வேலா கடி கமழ் அற்புத நீபா
தெய்வ சற்குருநாதா திரு மதுரை பெருமாளே

மேல்

#1328
ஏறு மயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறு முகம் ஆன பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே

மேல்

#1329
அறப்பாவை அத்தற்கு அருள் பாலா அளித்தாது வெட்சி திரு மார்பா
குற பாவை அற்பில் புணர்வோனே குல தேவ வர்க்க பரிபாலா
மறப்பாத கத்துற்று உழல்வேனோ மலர் தாள் வழுத்த க்ருபை ஈவாய்
சிறப்பான முத்திக்கு ஒரு வாழ்வே திருப்பூவணத்தில் பெருமாளே

மேல்

#1330
வானவர் ஆதியோர் சிறை மேவ மா வலியே செய்திடு சூரன்
மார்பு இரு கூறதாய் விட வாரி வாய்விட வேலை விடு தீரா
கானவர் பாவை காதலனான காசணிபார தன மார்பா
காலனை மோது கால கபால காளகளேசர் தரு பாலா
தேன் அமர் நீப மாலை விடாத சேவக ஞான முதல்வோனே
தீய குணாதி பாவி நினாது சேவடி காண அருள்வாயே
போனகசாலை யாதுலர் வாழ வீதிகள்தோறும் நனி மேவு
பூவணமான மா நகர் வாழு நாதகுகேச பெருமாளே

மேல்

#1331
பந்தல் பொன் பார பயோதரம் உந்த சிற்றாடை செய் மேகலை
பண்புற்று தாளொடு வீசிய துகிலோடே
பண்டை சிற்சேறியில் வீதியில் கண்டு இச்சித்தாரொடு மேவிடு
பங்கு கைக்காசு கொள் வேசையர் பனிநீர் தோய்
கொந்து உச்சி பூ அணி தோகையர் கந்த கை தாமரையால் அடி
கும்பிட்டு பாடு இசை வீணையர் அநுராகம்
கொண்டுற்று பாயலின் மூழ்கிய சண்டி சிச்சீ என வாழ் துயர்
குன்ற பொன் பாத க்ருபாநிதி அருள்வாயே
அந்தத்துக்கு ஆதியும் ஆகியும் அந்திக்குள் தானவன் ஆனவன்
அண்டத்த பாலுற மா மணி ஒளி வீசும்
அங்கத்தை பாவை செய்தே உயர் சங்கத்தில் தேர் தமிழ் ஓதிட
அண்டி கிட்டார் கழுவேறினர் ஒரு கோடி
சந்த திக்கு ஆளு நிசாசரர் வெந்து உட்க தூளி படாம் எழ
சண்டை சொல் தார்படவே அயில் விடுவோனே
தங்க சக்ராயுதர் வானவர் வந்திக்க பேரருளே திகழ்
தம்ப பொன் பூவணம் மேவிய பெருமாளே

மேல்

#1332
அனத்தோடு ஒப்பாம் என்னும் நடை மடவியர் அநுராகம்
அதற்கே சிச்சீ இனம் எனது உயிர் கெடல் அழகாமோ
உனை பாடி பேறுறும் ஒரு வரம் இனி உதவாயோ
உவப்பாக தேவர்கள் சிறை விட விடும் அயிலோனே
முனைப்பாடிக்கே திரிதரும் அரி திரு மருகோனே
முகில்கே நத்தா விரி தரு கலப நன் மயிலோனே
தினை காவற்கே உரியவள் மனம் மகிழ் மணவாளா
திரு கானப்பேர் நகர்தனில் இனிது உறை பெருமாளே

மேல்

#1333
கோல காதில் குழையாலே கோதி சேர்மை குழலாலே
ஞாலத்தாரை துயரேசெய் நாரிக்கு ஆசைப்படலாமோ
மேலை தேவர்க்கு அரியோனே வீர சேவல் கொடியோனே
கால பாச துயர் தீராய் கானப்பேரில் பெருமாளே

மேல்

#1334
கன்றிவரு நீல குங்கும படீர கஞ்ச மலர் மேவும் முலை காட்டி
கங்குல் செறி கேச நின்று குலையாமை கண்கள் கடை காட்டி விலை காட்டி
நன்று பொருள் தீது என்று விலைபேசி நம்பிவிடு மாதருடன் ஆட்ட
நஞ்சு புரி தேரை அங்கம் அதுவாக நைந்துவிடும் எற்கு ஒன்று அருள்வாயே
குன்றிமணி போல செம் கண் வரி நாகம் கொண்ட படம் வீசு மணி கூர் வாய்
கொண்ட மயில் ஏறி குன்று இடிய மோதி சென்ற வடி வேலை கொடு போர்செய்
மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ
மந்தி நடமாடும் செந்தில்நகர் மேவும் அந்த அசுர கால பெருமாளே