கே – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேகய 1
கேகீ 1
கேகே 1
கேச 3
கேசம் 3
கேசரி 1
கேசவ 1
கேசவர் 2
கேசவன் 3
கேசவனார் 1
கேசன் 4
கேட்க 6
கேட்கவும் 2
கேட்ட 4
கேட்டவர்க்கு 1
கேட்டிட 1
கேட்டிடும் 1
கேட்டு 7
கேட்டும் 1
கேட்பவர் 1
கேட்பு 1
கேடதாய் 1
கேடர் 3
கேடனை 1
கேடா 2
கேடாய் 2
கேடிகள் 1
கேடின் 1
கேடு 4
கேணி 1
கேதகம் 1
கேதகை 1
கேதகைய 1
கேதம் 1
கேதன 1
கேதனத்தன் 1
கேதனம் 1
கேதனமும் 1
கேதனன் 1
கேது 1
கேந்த்ர 1
கேயுர 1
கேயூர 1
கேவல 1
கேவலம் 1
கேவலமாய் 1
கேவலி 1
கேவி 1
கேள் 8
கேள்வர் 3
கேள்வன் 1
கேள்வா 4
கேள்வி 9
கேள்விக்கு 1
கேளா 2
கேளாது 3
கேளாமல் 1
கேளாய் 2
கேளும் 1

கேகய (1)

கேகய பிரதாபா முலாதிப மாலிகை குமரேசா விசாக க்ருபாலு வித்ரும ஆகாரா ஷடானன புண்டரீகா – திருப்:992/6
மேல்


கேகீ (1)

தாண்டவற்கு அருள் கேகீ வாகன துங்க வீரா – திருப்:888/10
மேல்


கேகே (1)

செரு பராக்ரம கேகே வாகன சரவணோற்பவ மாலா லாளித திரள் புயாத்திரி ஈராறு ஆகிய கந்த வேளே – திருப்:559/11
மேல்


கேச (3)

கங்குல் செறி கேச மங்குல் குலையாமை கந்த மலர் சூடும் அதனாலே – திருப்:45/2
நடன பத நூபுரமும் முகில் கெஞ்சிட மலர் சொருகு கேச பரமும் இலங்கிய – திருப்:236/5
கங்குல் செறி கேச நின்று குலையாமை கண்கள் கடை காட்டி விலை காட்டி – திருப்:1334/2
மேல்


கேசம் (3)

மென் கேசம் தான் என்றே கொண்டார் மென் தோள் ஒன்ற பொருள் தேடி – திருப்:102/2
படியா பாதகர் பாய் அன்றி உடா பேதைகள் கேசம் பறி கோப்பாளிகள் யாரும் கழுவேற – திருப்:677/6
மேகாங்க கேசம் காட்டி வாய் ஆம்பல் வாசம் காட்டி மீது ஊர்ந்த போகம் காட்டி உயிர் ஈர்வார் – திருப்:1258/3
மேல்


கேசரி (1)

நந்த கொந்தி சொரி குடல் சோர் வர நந்தி கம்பத்து எழு நர கேசரி
நஞ்ச குண்டைக்கு ஒரு வழி ஏது என மிக நாடி – திருப்:424/11,12
மேல்


கேசவ (1)

இந்த்ரதாருவை ஞாலம் மீதினில் கொணர்ந்த சங்க பாணியன் ஆதி கேசவ ப்ரசங்கன் – திருப்:885/9
மேல்


கேசவர் (2)

பங்கயாசனர் கேசவர் அஞ்சலே என மால் வரை பங்க நீறு எழ வேல் விடும் இளையோனே – திருப்:103/6
திரு பொன் பங்கயத்து கேசவர் மாயவர் அறியாமல் – திருப்:479/14
மேல்


கேசவன் (3)

கேசவன் பரவு குருமலையில் யோகத்து அமர்ந்த பெருமாளே – திருப்:222/8
கருதிய ஆறு அங்க வேள்வி அந்தணர் அரிகரி கோவிந்த கேசவன் என்று இரு – திருப்:362/13
நாரணன் சீ ராம கேசவன் கூர் ஆழி நாயகன் பூ ஆயன் மருகோனே – திருப்:757/5
மேல்


கேசவனார் (1)

நாலு வேதம் ஊடாடு வேதனை ஈண கேசவனார் சகோதரி – திருப்:486/13
மேல்


கேசன் (4)

குற்கிரவினியொடு நல் திற வகை அறி கொற்றவ உவண மிசை வரு கேசன் – திருப்:253/6
சுருதி மா மொழி வேதியன் வானவர் பரவு கேசன் ஐ ஆயுதபாணி நல் – திருப்:385/9
ஓகை தழல் வாளிவிடு மூரி தநு நேமி வளை பாணி திரு மார்பன் அரி கேசன் மருகா எனவெ – திருப்:983/15
வரு முராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின் வசனமோ மறா கேசன் மருகோனே – திருப்:1048/6
மேல்


கேட்க (6)

இருளை நீக்க தவம் செய்து அருள நோக்கி குழைந்த இறைவர் கேட்க தகும் சொல் உடையோனே – திருப்:352/6
கண்டு வேட்டு பொருள் கொண்டாட்டத்து இன்ப வாக்யத்து எனக்கும் கேட்க
தந்து காத்து திரு கண் சாத்த பெறுவேனோ – திருப்:591/7,8
சிவமய ஞானம் கேட்க தவம் முநிவோரும் பார்க்க திரு நடம் ஆடும் கூத்தர் முருகோனே – திருப்:675/5
கற்றார் சொல் கேட்க தனி வழி வருவோனே – திருப்:1019/14
படரு நெறி சடை உடைய இறைவர் கேட்க உரிய பழய மறை தரும் மவுன வழியை யார்க்கும் ஒரு – திருப்:1201/15
நாத போற்றி என முது தாதை கேட்க அநுபவ ஞான வார்த்தை அருளிய பெருமாளே – திருப்:1215/8
மேல்


கேட்கவும் (2)

இலை பிளவு அதனை நடித்து கேட்கவும் மறுமொழி பலவும் இசைத்து சாற்றவும் – திருப்:33/3
அவர் வசம் ஒழுகி காசு கேட்கவும் அழகிய மயிலில் சாயல் காட்டவும் – திருப்:778/3
மேல்


கேட்ட (4)

அரு மறைகள் கூட்டி உரைசெய் தமிழ் பாட்டை அடைவடைவு கேட்ட முருகோனே – திருப்:1089/7
ஏறு ஓங்கல் ஏழும் சாய்த்த நான்மூன்று தோளும் போற்றி யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும் – திருப்:1258/6
கீத இசை கூட்டி வேத மொழி சூட்டு கீரர் இயல் கேட்ட க்ருபை வேளே – திருப்:1279/6
முறை செய் தமிழினை விரித்து கேட்ட முது நீதர் – திருப்:1320/12
மேல்


கேட்டவர்க்கு (1)

அச்ச கூச்சம் அற்று கேட்டவர்க்கு தூர்த்தன் என நாளும் – திருப்:1225/3
மேல்


கேட்டிட (1)

வந்த பின் உரிமை அது கேட்டிட இசையா நாள் – திருப்:928/14
மேல்


கேட்டிடும் (1)

காசு கேட்டிடும் மாயா ரூபிகள் அதி மோக – திருப்:920/4
மேல்


கேட்டு (7)

இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று இணங்கா பசி பொங்கி அனல் மூழ்கி – திருப்:589/1
மகளொடு மாமன் பாட்டி முதல் உறவோரும் கேட்டு மதி கெட மாயம் தீட்டி உயிர் போம் முன் – திருப்:676/2
கருணைய தமிழில் பாடல் கேட்டு அருள் பெருமாளே – திருப்:778/16
காலம் ஏற்க உழப்பி கூறிய காசு கேட்டு அது கை பற்றா இடை – திருப்:980/5
கைக்காசை கேட்டு தெருவினில் மயில் போலே – திருப்:1018/4
மான் மகள் தனத்தை சூட்டி ஏன் என அழைத்து கேட்டு வாழ்வுறு சமத்தை காட்டு பெருமாளே – திருப்:1176/8
சூறை நிரை கொடு அவர் ஏக மீட்டு எதிர் ஆளும் உரிமை தருமாறு கேட்டு ஒரு – திருப்:1196/11
மேல்


கேட்டும் (1)

பாட்டில் உருகிலை கேட்டும் உருகிலை கூற்று வரு வழி பார்த்தும் உருகிலை – திருப்:617/1
மேல்


கேட்பவர் (1)

உததி அமுது என நிகழ்த்தி கேட்பவர் பொடி மாயம் – திருப்:1183/6
மேல்


கேட்பு (1)

மூப்புற்று செவி கேட்பு அற்று பெருமூச்சு உற்று செயல் தடுமாறி – திருப்:93/1
மேல்


கேடதாய் (1)

சீர் கேடதாய் விடும் சிறுப்பிளைத்தனம் என்று நீப – திருப்:1142/6
மேல்


கேடர் (3)

பந்தம் மேவிய பகடிகள் கபடிகள் நிலை கேடர் – திருப்:769/14
சங்காளர் சூது கொலைகாரர் குடி கேடர் சுழல் சிங்கார தோளர் பண ஆசை உள்ளர் சாதி இலர் – திருப்:813/5
கமை அற்ற சீர் கேடர் வெகு தர்க்க கோலாலர் களையுற்று மாயாது மந்த்ர வாத – திருப்:907/1
மேல்


கேடனை (1)

ஊதிய தவம் நாடாத கேடனை அன்றில் ஆதி – திருப்:993/4
மேல்


கேடா (2)

மைந்தர் மனைவியர் கடும்பு கடன் உதவும் அந்த வரிசை மொழி பகர் கேடா
வந்து தலை நவிர் அவிழ்ந்து தரை புக மயங்க ஒரு மகிடம் மிசை ஏறி – திருப்:63/3,4
நாடு ஆய் தவர் இடர் கேடா அரிஅரி நாராயணர் திரு மருகோனே – திருப்:1275/6
மேல்


கேடாய் (2)

நிமிஷம் இணங்கி கணத்திலே வெகு மதி கேடாய் – திருப்:183/8
நீள் புயல் குழல் மாதர் பேரினில் க்ருபையாகி நேசம் உற்று அடியேனு நெறி கேடாய்
நேமியில் பொருள் தேடி ஓடி எய்த்து உள்ளம் வாடி நீதியில் சிவ வாழ்வை நினையாதே – திருப்:716/1,2
மேல்


கேடிகள் (1)

அசடு மாதர் குவாது சொல் கேடிகள் தெருவின் மீது குலாவி உலாவிகள் – திருப்:384/3
மேல்


கேடின் (1)

கேடின் பெரு வலி மாளும்படி அவரோடும் கெழுமுதல் உடையோனே – திருப்:1037/6
மேல்


கேடு (4)

கேள்வி அது இலாதிருக்கும் ஊழ் வினையினால் மிகுத்த கேடு உறுகவே நினைக்கும் வினையாலே – திருப்:417/2
கேடு இலா அளகை பதியில் பல மாட கூட மலர் பொழில் சுற்றிய – திருப்:952/15
கூடா நட்பும் உரைத்திடு கேடு ஆக விட்டு அகல் மட்டைகள் கோமாள துயர் உட்பயம் உறலாமோ – திருப்:1128/4
பெரும் காரியம் போல் வரும் கேடு உடம்பால் ப்ரியம்கூர வந்து கரு ஊறி – திருப்:1265/1
மேல்


கேணி (1)

கேணி உற வேட்ட ஞான நெறி வேட்டர் கேள் சுருதி நாட்டில் உறைவோனே – திருப்:1279/5
மேல்


கேதகம் (1)

அடர படர் கேதகம் மடலின் தழை சேர் வயல் அருணை திரு வீதியில் உறைவோனே – திருப்:396/7
மேல்


கேதகை (1)

வாகை துதைந்து அணி கேதகை மங்கிட மோதி வெகுண்டு இள மதி தோயும் – திருப்:790/6
மேல்


கேதகைய (1)

கேதகைய பூ முடித்த மாதர் தம் மயாலில் உற்று கேவலம் அதான அற்ப நினைவாலே – திருப்:417/1
மேல்


கேதம் (1)

வனப்புற்று எழு கேதம் மேவும் கோகிலம் அழைக்க பொரு மாரன் ஏவ தாம் மலர் – திருப்:948/1
மேல்


கேதன (1)

பரிமள நீப தாரொடு வெட்சி தொடை புனை சேவல் கேதன துத்தி – திருப்:108/13
மேல்


கேதனத்தன் (1)

மகர கேதனத்தன் உருவு இலான் எடுத்து மதுர நாண் இட்டு நெறி சேர்வார் – திருப்:229/1
மேல்


கேதனம் (1)

கருடனுடன் வீறு ஆன கேதனம் விளங்கு மதிலினொடு மா மாட மேடைகள் துலங்கு – திருப்:117/11
மேல்


கேதனமும் (1)

மகர கேதனமும் திகழ் செந்தமிழ் மலய மாருதமும் வெம் பரிமள – திருப்:1177/9
மேல்


கேதனன் (1)

ஆரணன் கருட கேதனன் தொழ முற்று ஆலம் உண்டவருக்கு உரியோனே – திருப்:144/7
மேல்


கேது (1)

தேவர் மாதவர் சித்தர் தொண்டர் ஏக வேளூருக்கு உகந்த சேவல் கேது சுற்று கந்த பெருமாளே – திருப்:782/8
மேல்


கேந்த்ர (1)

கலபக கேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர கந்த கர குலிசேந்த்ரர் தங்கள் பெருமாளே – திருப்:402/8
மேல்


கேயுர (1)

இள முலை குழைய அணைத்து கேயுர மணியோடே – திருப்:1135/4
மேல்


கேயூர (1)

பரத நீல மாயூர வரத நாக கேயூர பரம யோகி மா தேசி மிகு ஞான – திருப்:1047/5
மேல்


கேவல (1)

இரைப்பு கேவல மூலவியாதியொடு அண்டவாதம் – திருப்:485/4
மேல்


கேவலம் (1)

கேதகைய பூ முடித்த மாதர் தம் மயாலில் உற்று கேவலம் அதான அற்ப நினைவாலே – திருப்:417/1
மேல்


கேவலமாய் (1)

தத்தி சூரர் குழாமொடு தேர் பரி கெட்டு கேவலமாய் கடல் மூழ்கிட – திருப்:480/11
மேல்


கேவலி (1)

தொடர் அறுத்திடும் ஆரிய கேவலி மணவாளா – திருப்:914/14
மேல்


கேவி (1)

இ தாரணிக்குள் மனு வித்தாய் முளைத்து அழுது கேவி கிடந்து மடி மீதில் தவழ்ந்து அடிகள் – திருப்:115/1
மேல்


கேள் (8)

தித்தா நின்றார் செத்தார் கெட்டேன் அஆ உஉ எனவே கேள்
செற்றே சுட்டே விட்டு ஏறி போம் அ பேது துக்கம் அறாதோ – திருப்:341/3,4
கோது ஆனேன் மாதா மாறு ஆனாள் கோளே கேள் மற்று இள வாடை – திருப்:817/2
வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில் மேலை வீடு கேள் கீழை வீடு கேள் – திருப்:858/9
வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில் மேலை வீடு கேள் கீழை வீடு கேள்
திடுதிடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி ஞாளிகள் போல் ஏறி வீழ்வதாய் – திருப்:858/9,10
மேகம் மென் குழலாய் நீ கேள் இனி வேறு தஞ்சமும் நீயேயாம் என – திருப்:997/15
முறையிடா படு பறைகள் ஆர்த்து எழ மூடா வீடூடே கேள் கோகோ என நோவ – திருப்:1061/2
சீதரா சித்ர வித்தாரமே செப்பிட கேள் எனா நிற்பதை தவிர்வேனோ – திருப்:1105/4
கேணி உற வேட்ட ஞான நெறி வேட்டர் கேள் சுருதி நாட்டில் உறைவோனே – திருப்:1279/5
மேல்


கேள்வர் (3)

வலபை கேள்வர் பின் ஆனாய் கான் ஆர் குறவர் மாது மணாளா நாள் ஆர் – திருப்:135/13
இந்திரை கேள்வர் பிதா மகன் கதிர் இந்து சடாதரன் வாசவன் தொழுது – திருப்:468/11
மனதிலே கபடு ஊரு பரத்தையர் ரதி கேள்வர் – திருப்:886/2
மேல்


கேள்வன் (1)

வரு முராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின் வசனமோ மறா கேசன் மருகோனே – திருப்:1048/6
மேல்


கேள்வா (4)

அழகு உலாவு விசாகா வாகு ஆர் இப மினாள் மகிழ் கேள்வா தாழ்வார் – திருப்:135/11
தினை புனத்தினை பண்டு காத்த மடந்தை கேள்வா
திருத்தணி பதி குன்றின் மேல் திகழ் கந்த வேளே – திருப்:259/5,6
சூரசூர சூராதிசூரர்க்கு எளிவு ஆயா தோகையா குமாரா கிராத கொடி கேள்வா
தீரதீர தீராதிதீர பெரியோனே தேவதேவ தேவாதிதேவ பெருமாளே – திருப்:1030/3,4
கரட கற்பகன் இளையோனே கலை வில் கண் குறமகள் கேள்வா
அரனுக்கு உற்றது புகல்வோனே அயனை குட்டிய பெருமாளே – திருப்:1298/3,4
மேல்


கேள்வி (9)

கேள்வி அது இலாதிருக்கும் ஊழ் வினையினால் மிகுத்த கேடு உறுகவே நினைக்கும் வினையாலே – திருப்:417/2
காதை காதி மோதி கேள்வி அற்ற காம பூசல் இட்டு மதியாதே – திருப்:482/1
மேலை கோபுரத்து மேவி கேள்வி மிக்க வேதத்தோர் துதித்த பெருமாளே – திருப்:482/8
ஈச நண்பான புருஷார்த்த தெரிசனை தா எனும் கேள்வி நெறி கீர்த்தி மருவிய – திருப்:608/15
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணனை மிகு கேள்வி – திருப்:874/2
சண்டைக்குள் கேள்வி அலம்அலம் அண்டற்கு பூசை இடுமவர் – திருப்:941/3
சம்பத்து கேள்வி அலம்அலம் இமவானின் – திருப்:941/4
மந்த்ர ப்ரஸ்த்தார தரிசன அந்த்ரத்து கேள்வி அலம்அலம் – திருப்:941/7
வேதத்தில் கேள்வி இலாதது போதத்தில் காணவொணாதது வீசத்தில் தூரம் இலாதது கதியாளர் – திருப்:976/1
மேல்


கேள்விக்கு (1)

சூல கையினார் அக்கினி மேனி பரனாருக்கு ஒரு சோதி பொருள் கேள்விக்கு இடு முருகோனே – திருப்:507/7
மேல்


கேளா (2)

ஆலோல் கேளா மேலோர் நாள் மால் ஆனாது ஏனல் புனமே போய் – திருப்:818/5
உரைத்த புத்திகள் கேளா நீசனை அவத்தம் மெத்திய ஆசா பாசனை – திருப்:849/5
மேல்


கேளாது (3)

தலம் மிசை அதற்கான பேரோடு கூறி இது பரிகரி என காது கேளாது போலும் அவர் – திருப்:166/3
இருடி அயன் மால் அமரர் அடியார் இடையும் ஒலி தான் இவை கேளாது – திருப்:400/2
சுருதியூடு கேளாது சரியையாளர் காணாது துரிய மீது சாராது எவராலும் – திருப்:1049/1
மேல்


கேளாமல் (1)

சேராமல் பொறி கேளாமல் செவி துன்பமொடு இன்பமுமே மறந்து பின் – திருப்:412/10
மேல்


கேளாய் (2)

பார்த்தும் இனி ஒரு வார்த்தை அறைகுவன் இது கேளாய் – திருப்:617/6
வாராய் பேதாய் கேளாய் நீ தாய் மான் ஆர் மோகத்துடன் ஆசை – திருப்:1042/1
மேல்


கேளும் (1)

இருந்த வீடும் கொஞ்சிய சிறுவரும் உரு கேளும்
இசைந்த ஊரும் பெண்டிரும் இளமையும் வளம் மேவும் – திருப்:1072/1,2

மேல்