நொ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

நொக்கு (1)

கட்டம் அற்று கழல் பற்றி முத்தி கருத்து ஒக்க நொக்கு கணித்து அருள்வாயே – திருப்:1260/4
மேல்


நொச்சி (2)

அறுகொடு நொச்சி தும்பை மேல் வைத்த அரி அயன் நித்தம் வந்து பூசிக்கும் – திருப்:1166/15
துத்தி நச்சு அரா விளம் பிச்சி நொச்சி கூவிளம் சுக்கிலக்கலா அமிர்த பிறை சூதம் – திருப்:1252/1
மேல்


நொடி (10)

பங்கன் மோதி அம் பாழ் நரகில் வீணின் விழ பெண்டிர் வீடு பொன் தேடி நொடி மீதில் மறை – திருப்:174/3
அவனி ஓர் நொடி வருகின்ற காரண முருகோனே – திருப்:178/12
எழு திகழ் புவனம் நொடி அளவுதனில் இயல் பெற மயிலில் வருவோனே – திருப்:304/1
படிறு ஒழுக்கமும் மட மனத்து உள்ளபடி பரித்து உடன் நொடி பேசும் – திருப்:345/1
வசனம் ஒரு நொடி நிலைமையில் கபடியர் வழியே நான் – திருப்:373/6
விருமம் சித்திரமாம் இது நொடி மறையும் பொய் பவுஷோடு உழல்வது – திருப்:499/7
திரிபுர மதனை ஒரு நொடி அதனில் எரிசெய்து அருளிய சிவன் வாழ்வே – திருப்:1075/1
உலகு அடைய மயிலின் மிசை நொடி அளவில் வலம்வரும் உன் உபய நறு மலர் அடியை அருள்வாயே – திருப்:1091/4
மன நூறு கோடி துன்ப நொடி மீதிலே நினைந்து மதன் ஊடலே முயங்கி அதி ரூப – திருப்:1271/1
ஒரு நொடி அதனில் இரு சிறை மயிலின் முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீ வலம்செய்தனை – திருப்:1326/5
மேல்


நொடிதனில் (1)

உலகினில் அனைவர்கள் புகழுற அருணையில் ஒரு நொடிதனில் வரு மயில் வீரா – திருப்:751/4
மேல்


நொடிப்போதில் (1)

மயில் ஏறி அன்று நொடிப்போதில் அண்டம் வலமாக வந்த குமரேசா – திருப்:348/5
மேல்


நொடியற்றான (1)

மதியம் மேவிய சுற்றாத வேணியர் மகிழ நீ நொடியற்றான போதினில் – திருப்:1192/15
மேல்


நொடியாலே (1)

தாளமாகிய நொடியாலே மடி பிடியாலே – திருப்:484/2
மேல்


நொடியில் (9)

வடவரையின் முகடு அதிர ஒரு நொடியில் வலம் வரு மரகத மயில் வீரா – திருப்:127/3
நொடியில் பரிவாக வந்தவன் மருகோனே – திருப்:173/12
பதம் மிசைந்து எழு லோகமுமே வலம் நொடியில் வந்திடு மா மயில் மீது ஒரு – திருப்:198/13
பிறை மவுலி மைந்த கோ என பிரமனை முனிந்து காவல் இட்டு ஒரு நொடியில் மண்டு சூரனை பொருது ஏறி – திருப்:211/7
சமரமொடும் அசுரர் படை களம் மீது எதிர்த்த பொழுது ஒரு நொடியில் அவர்கள் படை கெட வேல் எடுத்து – திருப்:213/9
பொரு இலாமல் அருள்புரிந்து மயிலில் ஏறி நொடியில் வந்து புளகம் மேவ தமிழ் புனைந்த முருகோனே – திருப்:726/6
கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட நெடிய கடல் உலகு நொடியில் வரும் அதி வேக – திருப்:1095/7
வழி ஒழுகிய மோகனை மூகம்தனில் பிறந்து ஒரு நொடியில் மீள அழிதரும் – திருப்:1150/5
ஒரு நொடியில் வெயில் எழ சாநகி துயர் தீர – திருப்:1185/10
மேல்


நொடியினில் (8)

அமரர் சிறைபட அடல் அயில் நொடியினில் விடுவோனே – திருப்:191/12
அடையலர்கள் மாள ஒரு நிமிடம்தனில் உலகை வலமாக நொடியினில் வந்து உயர் – திருப்:236/15
திருத்தி விட்டு ஒரு நொடியினில் வலம்வரு மயில் வீரா – திருப்:276/14
அதிகை வரு புர நொடியினில் எரி செய்த அபிராமி – திருப்:292/10
அமரர் சங்கமும் குடி புக நொடியினில் நிருதர் சங்கமும் பொடிபட அமர் செய்து – திருப்:410/15
அகிலாண்டம் முற்றும் நொடியினில் சுற்றும் திறல் ப்ரசண்ட முழு நீல – திருப்:719/6
எலுப்பு கோவை அணியும் அவர் மிக அதிர்த்து காளி வெருவ நொடியினில்
எதிர்த்திட்டு ஆடும் வயிர பயிரவர் நவநீத – திருப்:979/11,12
உலகம் முழுது ஒரு நொடியினில் வலம்வரு பெருமாளே – திருப்:1006/16
மேல்


நொடியே (3)

படியை முழுதும் ஒரு நொடியே மதித்து வலமாக வந்து சிவனிடத்து அமர் சேயே – திருப்:398/15
பூலோகமொடு அறு லோகமும் நேர் ஓர் நொடியே வருவோய் சுர – திருப்:775/11
கடுகி எண் திசை நொடியே வலம்வரும் இளையோனே – திருப்:1125/12
மேல்


நொண்டு (1)

அழகிய பொன் தட்டில் நொண்டு வேடையில் வரு பசியார்க்கு உற்ற அன்பினால் உணவு – திருப்:788/3
மேல்


நொதியா (1)

அழகொடு கூட்டுமின் அழையுமின் வார் பறை அழுகையை மாற்றுமின் நொதியா முன் – திருப்:1204/2
மேல்


நொந்த (1)

உருகியே உடல் அற வெம்பி வாடியெ வினையிலே மறுகியே நொந்த பாதகன் – திருப்:178/7
மேல்


நொந்தார் (1)

பந்து ஆடி அம் கை நொந்தார் பரிந்து பைம் தார் புனைந்த குழல் மீதே – திருப்:586/1
மேல்


நொந்திட்டு (1)

அரிவையர்கள் தொடரும் இன்பத்து உலகு நெறி மிக மருண்டிட்டு அசடன் என மனது நொந்திட்டு அயராமல் – திருப்:618/1
மேல்


நொந்திட (1)

வேடை எனும்படி சிந்தை நொந்திட அடைவாக – திருப்:1180/14
மேல்


நொந்திடாதே (1)

வேயில் ஆய தோள மா மடவார்கள் பங்கயத்து கொங்கை உற்று இணங்கி நொந்திடாதே
வேத கீத போத மோன ஞான நந்த முற்றிடு இன்ப முத்தி ஒன்று தந்திடாயோ – திருப்:469/3,4
மேல்


நொந்து (29)

கண்டு உளம் வருந்தி நொந்து மங்கையர் வசம் புரிந்து கங்குல் பகல் என்று நின்று விதியாலே – திருப்:39/2
அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண் திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா – திருப்:44/5
துன்பம் கொண்டு அங்கம் மெலிந்து அற நொந்து அன்பும் பண்பும் மறந்து ஒளி – திருப்:65/1
அதி பெல கடோர மா சலந்த்ரன் நொந்து வீழ – திருப்:76/12
விரிவான சிந்தை உருவாகி நொந்து விறல் வேறு சிந்தை வினையாலே – திருப்:99/2
நிலவில் உடல் வெந்து கரிய அலமந்து நெகிழும் உயிர் நொந்து மத வேளால் – திருப்:120/3
கரிய குழல் மாதர் தங்கள் அடி சுவடு மார் புதைந்து கவலை பெரிதாகி நொந்து மிக வாடி – திருப்:134/2
போய் அலைந்து உழலாகி நொந்து பின் வாடி நைந்து எனது ஆவி வெம்பியே – திருப்:200/5
மருவுகையும் ஓதி நொந்து அடிகள் முடியே தெரிந்து வரினும் இவர் வீதம் எங்களிடம் ஆக – திருப்:220/3
நாசர் தம் கடை அதனில் விரவி நான் மெத்த நொந்து தடுமாறி – திருப்:222/1
ஆடகம் ஒப்ப அமைந்த ஓலை முத்தமும் கொடு ஆவி மெத்த நொந்து திரிவேனோ – திருப்:233/4
இச்சை உணர்வின்றி இச்சை என வந்த இ சிறுமி நொந்து மெலியாதே – திருப்:344/3
குழற்கு இப்படி நொந்து கெட்டு குடில் மங்குறாமல் – திருப்:453/6
வந்துவந்து வித்து ஊறி என் தன் உடல் வெந்துவெந்து விட்டு ஓட நொந்து உயிரும் – திருப்:457/1
கெடாத தவமே மறைந்து கிலேசம் அதுவே மிகுந்து கிலாத உடல் ஆவி நொந்து மடியா முன் – திருப்:579/4
பெருகு தீய வினையில் நொந்து கதிகள்தோறும் அலை பொருந்தி பிடிபடாத ஜனன நம்பி அழியாதே – திருப்:726/2
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து அடி வருடி மணந்து புணர்ந்ததுவும் பல – திருப்:771/7
ஆடல் மா மத ராஜன் பூசல் வாளியிலே நொந்து ஆகம் வேர்வுற மால் கொண்டு அயராதே – திருப்:789/1
மாலை மயக்கில் விழுந்து காம கலைக்குள் உளைந்து மாலில் அகப்பட நொந்து திரிவேனோ – திருப்:840/3
தாக மயல் கொண்டு மால் இருள் அழுந்தி சால மிக நொந்து தவியாமல் – திருப்:867/4
வந்து நாயில் கடையன் நொந்து ஞான பதவி வந்து தா இக்கணமே என்று கூற – திருப்:897/3
ஊங்கி இருமல் வந்து வீங்கு குடல் நொந்து ஓய்ந்து உணர்வு அழிந்து உயிர் போ முன் – திருப்:899/3
ஆதி குருவின் பதங்களை நீதியுடன் அன்புடன் பணியாமல் மனம் நைந்து நொந்து உடல் அழியாதே – திருப்:968/2
பேர் அறிவு குந்து நொந்து காதலில் அலைந்த சிந்தை பீடை அற வந்து நின்றன் அருள்தாராய் – திருப்:969/4
வேனின் மதன் ஐந்து பாணம் விட நொந்து வீதிதொறு நின்ற மடவார்பால் – திருப்:970/1
சடம் மிக வற்றி நொந்து கலவி செய துணிந்து தளருறுதற்கு முந்தி எனை ஆள்வாய் – திருப்:1081/2
அடுத்து அகப்படு கலவியில் நொந்து எய்த்திடலாமோ – திருப்:1138/8
நரையொடு பல் கழன்று தோல் வற்றி நடை அற மெத்த நொந்து கால் எய்த்து – திருப்:1166/1
பரிமள பாணத்து அயர்ந்து பனை மடல் ஊர்தற்கு இசைந்து பரிதவியா மெத்த நொந்து மயல்கூர – திருப்:1174/2
மேல்


நொந்துநொந்து (2)

ஒருவரையும் ஒருவர் அறியாமலும் திரிந்து இருவினையின் இடர் கலியொடு ஆடி நொந்துநொந்து
உலையில் இடு மெழுகு அது என வாடி முன் செய் வஞ்சனையாலே – திருப்:207/1,2
மலர்கள் நொந்துநொந்து அடி இட வடிவமும் மிக வேறாய் – திருப்:410/10
மேல்


நொந்தே (1)

வந்தே பொன் தேட்டம் கொடு மனம் நொந்தே இங்கு ஆட்டம் பெரிது எழ – திருப்:1184/3
மேல்


நொய்ய (2)

கையன் மிசை ஏறு உம்பன் நொய்ய சடையோன் எந்தை கை தொழு மெய்ஞ்ஞானம் சொல் கதிர் வேலா – திருப்:607/6
பை அரவு போலும் நொய்ய இடை மாதர் பைய வரு கோலம்தனை நாடி – திருப்:663/1
மேல்


நொய்யர் (1)

தொய்யில் செய்யில் நொய்யர் கையர் தொய்யும் ஐய இடையாலும் – திருப்:661/1
மேல்


நொறுக்கி (2)

தட கை தண்டு எடுத்து சூரரை வீரரை நொறுக்கி பொன்றவிட்டு தூள் எழ நீறு எழ – திருப்:479/9
கதித்து மேல் வரு மா சூரர் சூழ் படை நொறுக்கி மா உயர் தேரோடுமே கரி – திருப்:746/9

மேல்