திருப்புகழ் மூன்றாம் தொகுதி (701 – 1000)

தேவையான பாடல்
எண் மீது சொடுக்குக

701 || 801 || 901

702 || 802 || 902

703 || 803 || 903

704 || 804 || 904

705 || 805 || 905

706 || 806 || 906

707 || 807 || 907

708 || 808 || 908

709 || 809 || 909

710 || 810 || 910

711 || 811 || 911

712 || 812 || 912

713 || 813 || 913

714 || 814 || 914

715 || 815 || 915

716 || 816 || 916

717 || 817 || 917

718 || 818 || 918

719 || 819 || 919

720 || 820 || 920
721 || 821 || 921

722 || 822 || 922

723 || 823 || 923

724 || 824 || 924

725 || 825 || 925

726 || 826 || 926

727 || 827 || 927

728 || 828 || 928

729 || 829 || 929

730 || 830 || 930
731 || 831 || 931

732 || 832 || 932

733 || 833 || 933

734 || 834 || 934

735 || 835 || 935

736 || 836 || 936

737 || 837 || 937

738 || 838 || 938

739 || 839 || 939

740 || 840 || 940
741 || 841 || 941

742 || 842 || 942

743 || 843 || 943

744 || 844 || 944

745 || 845 || 945

746 || 846 || 946

747 || 847 || 947

748 || 848 || 948

749 || 849 || 949

750 || 850 || 950
751 || 851 || 951

752 || 852 || 952

753 || 853 || 953

754 || 854 || 954

755 || 855 || 955

756 || 856 || 956

757 || 857 || 957

758 || 858 || 958

759 || 859 || 959

760 || 860 || 960

761 || 861 || 961

762 || 862 || 962

763 || 863 || 963

764 || 864 || 964

765 || 865 || 965

766 || 866 || 966

767 || 867 || 967

768 || 868 || 968

769 || 869 || 969

770 || 870 || 970
771 || 871 || 971

772 || 872 || 972

773 || 873 || 973

774 || 874 || 974

775 || 875 || 975

776 || 876 || 976

777 || 877 || 977

778 || 878 || 978

779 || 879 || 979

780 || 880 || 980
781 || 881 || 981

782 || 882 || 982

783 || 883 || 983

784 || 884 || 984

785 || 885 || 985

786 || 886 || 986

787 || 887 || 987

788 || 888 || 988

789 || 889 || 989

790 || 890 || 990
791 || 891 || 991

792 || 892 || 992

793 || 893 || 993

794 || 894 || 994

795 || 895 || 995

796 || 896 || 996

797 || 897 || 997

798 || 898 || 998

799 || 899 || 999

800 || 900 || 1000


#701
தோடுறும் குழையாலே கோல் வளை சூடு செம் கைகளாலே யாழ் தரு கீதம் மென் குரலாலே தூ மணி நகையாலே
தூமம் மென் குழலாலே ஊறிய தேன் இலங்கு இதழாலே ஆல விலோசனங்களினாலே சோபித அழகாலே
பாடகம் புனை தாளாலே மிக வீசு தண் பனி நீராலே வளர் பார கொங்கைகளாலே கோலிய விலைமாதர்
பாவகங்களினாலே யான் மயல் மூழ்கி நின்று அயராதே நூபுர பாத பங்கயம் மீதே ஆள்வது கருதாயோ
நாட அரும் சுடர் தானா ஓது சிவாகமங்களின் நானா பேத அநாத தந்த்ர கலா மா போதக வடிவாகி
நால் விதம் தரு வேதா வேதமும் நாடி நின்றது ஒர் மாயா அதீத மனோலயம் தரு நாதா ஆறிரு புய வேளே
வாள் தங்கிய வேலாலே பொரு சூர் தடிந்து அருள் வீரா மா மயில் ஏறு கந்த விநோதா கூறு என அரனார் முன்
வாசகம் பிறவாதோர் ஞான சுகோதயம் புகல் வாசா தேசிக மாடையம் பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே

மேல்

#702
விலை அறுக்கவும் முலை மறைக்கவும் மணம் துன்றும் செழும் தார்
புனை முகில் குழல்தனை அவிழ்க்கவும் விடம் கஞ்சம் சரம் சேர்
விழி வெருட்டவும் மொழி புரட்டவும் நிணம் துன்றும் சலம் பாய் உதிர நீருடனே
வெளியில் நிற்கவும் வலிய முட்டரை எதிர்த்தும் பின் தொடர்ந்தே
இலை சுண பொடி பிளவு எடுத்து இடை திரும்பும் பண்பர் அன்றே
என உரைத்து அவர்தமை வரப்பணி உடன் கொண்டு அன்புடன் போய் சயன பாயிலின் மேல்
கலை நெகிழ்க்கவும் மயல் விளைக்கவும் நயம் கொண்டு அங்கு இருந்தே
குணுகியிட்டு உள பொருள் பறித்து அற முனிந்து அங்கு ஒன்று கண்டே
கலகம் இட்டு அவர் அகல அடித்த பின் வரும் பங்கு அங்கு உணங்க ஓர் புதிய பேருடனே
கதைகள் செப்பவும் வல சமர்த்திகள் குணம் கண்டு துளங்கா
மனிதனில் சிறு பொழுதும் உற்று உற நினைந்தும் கண்டு உகந்தே
கடி மலர் பதம் அணுகுதற்கு அறிவிலன் பொங்கும் பெரும் பாதகனை ஆளுவையோ
சிலைதனை கொடு மிக அடித்திட மனம் தந்து அந்தணன் தாமரை
மலர் பிரமனை நடு தலை அரிந்தும் கொண்டு இரந்தே
திரிபுரத்து எரி புக நகைத்து அருள் சிவன் பங்கு அங்கு இருந்தாள் அருளும் மா முருகா
செரு இடத்து அலகைகள் தெனத்தென தெனந்தெம் தெந்தெ னந்தா
என இடக்கைகள் மணி கண பறை டிகுண்டிம் குண்டி குண்டா
டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு டிகுண்டிம் குண்டி குண்டீ என இராவணன் நீள்
மலை என திகழ் முடிகள் பத்தையும் இரண்டு அஞ்சு ஒன்பது ஒன்று ஏய்
பணை புயத்தையும் ஒரு வகைப்பட வெகுண்டு அம்பு ஒன்றே எறிந்தோன்
மதலை மைத்துனன் அசுரரை குடல் திறந்து அங்கம் பிளந்தே மயிலின் மேல் வருவாய்
வயல்களில் கயல் இனம் மிகுத்து எழு வரம்பின்கண் புரண்டே
பெருகு அயல் கொடு சொரியும் நித்திலம் நிறைந்து எங்கும் சிறந்தே
வரிசை பெற்று உயர் தமனிய பதி இடம் கொண்டு இன்புறும் சேர் இளைய நாயகனே

மேல்

#703
ஆதி முதல் நாளில் என்றன் தாய் உடலிலே இருந்து ஆக மலமாகி நின்று புவி மீதில்
ஆசையுடனே பிறந்து நேசமுடனே வளர்ந்து ஆள் அழகனாகி நின்று விளையாடி
பூதலம் எலாம் அலைந்து மாதருடனே கலந்து பூமிதனில் வேணும் என்று பொருள் தேடி
போகம் அதிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் உன்றன் பூ அடிகள் சேர அன்பு தருவாயே
சீதை கொடுபோகும் அந்த ராவணனை மாள வென்ற தீரன் அரி நாரணன்தன் மருகோனே
தேவர் முநிவோர்கள் கொண்டல் மால் அரி பிரமாவும் நின்று தேட அரிதானவன்தன் முருகோனே
கோதை மலை வாழுகின்ற நாதர் இட பாக நின்ற கோமளி அநாதி தந்த குமரேசா
கூடி வரு சூரர் தங்கள் மார்பை இரு கூறு கண்ட கோடை நகர் வாழ வந்த பெருமாளே

மேல்

#704
சால நெடுநாள் மடந்தை காயம் அதிலே அலைந்து சாம் அளவாக வந்து புவி மீதே
சாதகமும் ஆன பின்பு சீறி அழுதே கிடந்து தாரணியிலே தவழ்ந்து விளையாடி
பாலன் எனவே மொழிந்து பாகு மொழி மாதர் தங்கள் பார தனம் மீது அணைந்து பொருள் தேடி
பார் மிசையிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் ஒன்று பாத மலர் சேர அன்பு தருவாயே
ஆலம் அமுதாக உண்ட ஆறு சடை நாதர் திங்கள் ஆடு அரவு பூணர் தந்த முருகோனே
ஆனை மடுவாயில் அன்று மூலம் என ஓலம் என்ற ஆதி முதல் நாரணன் தன் மருகோனே
கோல மலர் வாவி எங்கும் மேவி புனம் வாழ் மடந்தை கோவை அமுதூறல் உண்ட குமரேசா
கூடி வரு சூர் அடங்க மாள வடி வேல் எறிந்த கோடை நகர் வாழ வந்த பெருமாளே

மேல்

#705
ஏறு ஆனாலே நீறாய் மாயா வேளே வாச கணையாலே
ஏயாய் ஏயாய் மாயா வேயால் ஆம் ஏழு ஓசை தொளையாலே
மாறாய் ஊறாய் ஈறாய் மாலாய் வாடா மானை கழியாதே
வாராய் பாராய் சேராய் ஆனால் வாடா நீப தொடை தாராய்
சீறா வீறா ஈரேழ் பார் சூழ் சீரார் தோகை குமரேசா
தேவா சாவா மூவா நாதா தீரா கோடை பதியோனே
வேறாய் மாறாய் ஆறாம் மா சூர் வேர் போய் வீழ பொருதோனே
வேதா போதா வேலா பாலா வீரா வீர பெருமாளே

மேல்

#706
ஞாலம் எங்கும் வளைத்து அரற்று கடலாலே நாளும் வஞ்சியர் உற்று உரைக்கும் வசையாலே
ஆலம் உந்து மதி தழற்கும் அழியாதே ஆறிரண்டு புயத்து அணைக்க வருவாயே
கோலம் ஒன்று குறத்தியை தழுவு மார்பா கோடை அம் பதி உற்று நிற்கும் மயில் வீரா
காலன் அஞ்ச வரை தொளைத்த முதல் வானோர் கால் விலங்குகளை தறித்த பெருமாளே

மேல்

#707
தோழமை கொண்டு சலம் செய் குண்டர்கள் ஓதிய நன்றி மறந்த குண்டர்கள்
சூழ் விரதங்கள் கடிந்த குண்டர்கள் பெரியோரை
தூஷண நிந்தை பகர்ந்த குண்டர்கள் ஈவது கண்டு தகைந்த குண்டர்கள்
சூளுற என்பது ஒழிந்த குண்டர்கள் தொலையாமல்
வாழ நினைந்து வருந்து குண்டர்கள் நீதி அறங்கள் சிதைந்த குண்டர்கள்
மான அகந்தை மிகுந்த குண்டர்கள் வலையாலே
மாயையில் நின்று வருந்து குண்டர்கள் தேவர்கள் சொம்கள் கவர்ந்த குண்டர்கள்
வாதை நமன் தன் வருந்திடும் குழி விழுவாரே
ஏழு மரங்களும் வன் குரங்கு எனும் வாலியும் அம்பரமும் பரம்பரை
ராவணனும் சதுரங்க லங்கையும் அடைவே முன்
ஈடு அழியும்படி சந்த்ரனும் சிவ சூரியனும் சுரரும் பதம் பெற
ராம சரம் தொடு புங்கவன் திரு மருகோனே
கோழி சிலம்ப நலம் பயின்ற கலாப நடம் செய மஞ்சு தங்கிய
கோபுரம் எங்கும் விளங்கும் மங்கல வயலூரா
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர் வேலன் எனும் பெயர் அன்புடன் புகழ்
கோடை எனும் பதி வந்த இந்திரர் பெருமாளே

மேல்

#708
தோள் தப்பாமல் தோய்த பாணி சூழ்து உற்றார் துற்று அழுவாரும்
தூர போக கோர பார சூல பாச சமன் ஆரும்
பாடை கூட தீயில் தேறி பாழ்பட்டே பட்டு அழியாதே
பாசத்தேனை தேசுற்றார் பொன் பாதத்தே வைத்து அருள்வாயே
ஆடல் சூர் கெட்டு ஓட தோயத்து ஆர சீறி பொரும் வேலா
ஆனை சேனை கானில் தேனுக்கு ஆரம் தாரை தரும் வீரா
கூடற்பாடி கோவை பாவை கூட பாடி திரிவோனே
கோல சாலி சோலை சீல கோடை தேவ பெருமாளே

மேல்

#709
வாசித்த நூல் மதங்கள் பேசி கொடாத விந்து வாய்மை ப்ரகாசம் என்று நிலையாக
மாசி கபால மன்றில் நாசிக்குள் ஓடுகின்ற வாயு பிராணன் ஒன்று மடை மாறி
யோசித்து அயர் உடம்பை நேசித்து உறாது அலைந்து ரோம துவாரம் எங்கும் உயிர் போக
யோக சமாதி கொண்டு மோக பசாசு மண்டும் லோகத்தில் மாய்வது என்றும் ஒழியாதோ
வீசு அ பயோதி துஞ்ச வேத குலாலன் அஞ்ச மேலிட்ட சூர் தடிந்த கதிர் வேலா
வீர ப்ரதாப பஞ்ச பாணத்தினால் மயங்கி வேடிச்சி காலில் அன்று விழுவோனே
கூசி புகா ஒதுங்க மாமன் திகாது அரிந்த கூளம் புராரி தந்த சிறியோனே
கோழி பதாகை கொண்ட கோல குமார கண்ட கோடைக்குள் வாழ வந்த பெருமாளே

மேல்

#710
அனு தேன் நேர் மொழியாலே மா மயல் உடைத்தார் போலவும் ஓர் நாள் ஆனதில்
அடுத்தே தூதுகள் நூறு ஆறு ஆனதும் விடுவார்கள்
அழைத்தே வீடினிலே தான் ஏகுவர் நகைத்தே மோடிகளாவர் காதலொடு
அடுத்தே மா முலை மீதே மார்புற அணைவார் பின்
குனித்தே பாகு இலை ஈவார் பாதியில் கடிப்பார் வாய் இதழ் வாய் நீரானது
குடிப்பார் தேன் என நானா லீலைகள் புரிவார்கள்
குறித்தே மா மயலாலே நீள் பொருள் பறிப்பார் ஆசுகள் சூழ் மா பாதக
குணத்தர் மாதர்கள் மேல் ஆசா விட அருள்வாயே
வனத்தே வேடுவர் மாதாம் ஓர் மினை எடுத்தே தான் வரவே தான் யாவரும்
வளைத்தே சூழவும் ஓர் வாளால் வெலும் விறல் வீரா
மலர் தேன் ஓடையில் ஓர் மா வானதை பிடித்தே நீள் கர வாதாட ஆழியை
மனத்தால் ஏவிய மா மால் ஆனவர் மருகோனே
சினத்தே சூரர்கள் போர் ஆய் மாளவும் எடுத்து ஓர் வேல் விடு தீரா தார் அணி
திரு தோளா இரு பாதா தாமரை முருகோனே
திரு தேர் சூழ் மதிள் ஏர் ஆர் தூபிகள் அடுக்கார் மாளிகையே நீள் ஏர் உள
திருப்போரூர் உறை தேவா தேவர்கள் பெருமாளே

மேல்

#711
உருக்கு ஆர் வாளி கண்கள் பொருப்பு ஆர் வார் தனங்கள் உகப்பு ஆர் வால சந்த்ர நுதல் நூலாம்
உரு சேர் நீள் மருங்குல் பணை தோள் ஓதி கொண்ட உவப்பா மேல் விழுந்து திரிவோர்கள்
அருக்கா மாதர்தங்கள் வரைக்கே ஓடி இன்ப வலைக்கே பூணு நெஞ்சன் அதி பாவி
அசட்டால் மூடுகின்ற மசக்கால் மாயும் இந்த அவத்தால் ஈனம் இன்றி அருள்வாயே
எருக்கு ஆர் தாளி தும்பை மரு சேர் போது கங்கையினை சூடு ஆதி நம்பர் புதல்வோனே
இருக்காலே நினைந்து துதிப்பார் நாவில் நெஞ்சில் இருப்பார் யானை தங்கும் மணி மார்பா
செருக்காலே மிகுந்த கடல் சூர் மாள வென்ற திறல் சேர் வேல் கை கொண்ட முருகோனே
தினைக்கு ஓர் காவல் கொண்ட குற தேன் மாது பங்க திருப்போரூர் அமர்ந்த பெருமாளே

மேல்

#712
சீர் உலாவிய ஓதிமம் ஆன மா நடை மா மயில் சேய சாயல் கலா மதி முகம் ஆனார்
தேன் உலாவிய மா மொழி மேரு நேர் இள மா முலை சேல் உலாவிய கூர் விழி குமிழ் நாசி
தார் உலாவிய நீள் குழல் வேய் அளாவிய தோளியர் சார்பிலே திரிவேனை நின் அருளாலே
சாம வேதியர் வானவர் ஓதி நாள்மலர் தூவிய தாளில் வீழ வினா மிக அருள்வாயே
கார் உலாவிய நீள் புன வேடர் மால் வரை மீது உறை காவல் மாதினொடு ஆவல் செய்து அணைவோனே
காண ஆகம வேத புராண நூல் பல ஓதிய காரணா கருணாகர முருகோனே
போர் உலாவிய சூரனை வாரி சேறு எழ வேல் விடு பூப சேவக மா மயில் மிசையோனே
போதன் மாதவன் மாது உமை பாதி ஆதியுமே தொழு போரி மா நகர் மேவிய பெருமாளே

மேல்

#713
திமிரமாம் மனமா மட மடமையேன் இடர் ஆணவம் திமிரமே அரி சூரிய திரி லோக
தினகரா சிவ காரண பனக பூஷண ஆரண சிவ சுதா அரி நாரணன் மருகோனே
குமரி சாமளை மாது உமை அமலி யாமளை பூரணி குண கலா நிதி நாரணி தரு கோவே
குரு குகா குமரேசுர சரவணா சகளேசுர குறவர் மா மகள் ஆசை கொள் மணியே சம்
பமர பார ப்ரபாருண படல தாரக மா சுக பசுர பாடன பாளித பகளேச
பசித பாரண வாரண துவச ஏடக மா அயில் பரவு பாணித பாவல பர யோக
சம பரா மத சாதல சமயம் ஆறிரு தேவத சமய நாயக மா மயில் முது வீர
சகல லோகமும் மாசு அறு சகல வேதமுமே தொழு சமர மா புரி மேவிய பெருமாளே

மேல்

#714
சுருதி மறைகள் இரு நாலும் திசையில் அதிபர் முநிவோர்கள் துகள் இல் இருடி எழு பேர்கள் சுடர் மூவர்
சொல இல் முடிவில் முகியாத பகுதி புருடர் நவ நாதர் தொலைவில் உடுவின் உலகோர்கள் மறையோர்கள்
அரிய சமயம் ஒரு கோடி அமரர் சரணர் சத கோடி அரியும் அயனும் ஒரு கோடி இவர் கூடி
அறியஅறிய அறியாத அடிகள் அறிய அடியேனும் அறிவுள் அறியும் அறிவு ஊற அருள்வாயே
வரைகள் தவிடுபொடியாக நிருதர் பதியும் அழிவாக மகர சலதி அளறு ஆக முது சூரும்
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக மவுலி சிதறி இரை தேடி வரு நாய்கள்
நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிகள் அலைமோத நமனும் வெருவி அடி பேண மயில் ஏறி
நளின உபய கர வேலை முடுகு முருக வட மேரு நகரி உறையும் இமையோர்கள் பெருமாளே

மேல்

#715
தோல் எலும்பு சீ நரம்பு பீளை துன்று கோழை பொங்கு சோரி பிண்டமாய் உருண்டு வடிவான
தூல பங்க காயம் வம்பிலே சுமந்து நான் மெலிந்து சோரும் இந்த நோய் அகன்று துயர் ஆற
ஆலம் உண்ட கோன் அகண்ட லோகம் உண்ட மால் விரிஞ்சன் ஆரணங்கள் ஆகமங்கள் புகழ் தாளும்
ஆனனங்கள் மூ இரண்டும் ஆறு இரண்டு தோளும் அம் கை ஆடல் வென்றி வேலும் என்று நினைவேனோ
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி அம்பை வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே
மாயை ஐந்து வேகம் ஐந்து பூதம் ஐந்து நாதம் ஐந்து வாழ் பெரும் சராசரங்கள் உறைவோனே
வேலை அன்புகூர வந்த ஏக தந்த யானை கண்டு வேடர் மங்கை ஓடி அஞ்ச அணைவோனே
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற மேரு மங்கை ஆள வந்த பெருமாளே

மேல்

#716
நீள் புயல் குழல் மாதர் பேரினில் க்ருபையாகி நேசம் உற்று அடியேனு நெறி கேடாய்
நேமியில் பொருள் தேடி ஓடி எய்த்து உள்ளம் வாடி நீதியில் சிவ வாழ்வை நினையாதே
பாழினுக்கு இரையாய நாமம் வைத்து ஒரு கோடி பாடல் உற்றிடவே செய்திடு மோச
பாவி எப்படி வாழ்வேன் நேயர்கட்கு உளதான பார்வை சற்று அருளோடு பணியாயோ
ஆழியில் துயில்வோனும் மா மலர் பிரமாவும் ஆகம பொருளோரும் அனைவோரும்
ஆனை மத்தகவோனும் ஞானம் உற்று இயல்வோரும் ஆயிரத்து இருநூறு மறையோரும்
வாழும் உத்தரமேரூர் மேவி அற்புதமாக வாகு சித்திர தோகை மயில் ஏறி
மாறு என பொரு சூரன் நீறு எழ பொரும் வேல மான் மகட்கு உளனான பெருமாளே

மேல்

#717
மாதர் கொங்கையில் வித்தார திரு மார்பில் இலங்கு இயல் முத்து ஆரத்தினில்
வாச மென் குழலில் சேலை பொரும் விழி வேலில்
மாமை ஒன்றும் மலர் தாள் வைப்பினில் வாகு வஞ்சியில் மெய் தாமத்தினில்
வான் இளம் பிறையை போல் நெற்றியில் மயலாகி
ஆதரம் கொடு கெட்டே இப்படி ஆசையின் கடலுக்கே மெத்தவும்
ஆகி நின்று தவித்தே நித்தலும் அலைவேனோ
ஆறு இரண்டு பணை தோள் அற்புத ஆயிரம் கலை கத்தா மத்திபனாய்
உழன்று அலைகிற்பேனுக்கு அருள்புரிவாயே
சாதனம் கொடு தத்தா மெத்தெனவே நடந்து பொய் பித்தா உத்தரம்
ஏது எனும்படி தன் காய் நிற்பவர் சபையூடே
தாழ்வு இல் சுந்தரனை தான் ஒற்றி கொள் நீதி தந்திர நல் சார்பு உற்று அருள்
சால நின்று சமர்த்தா வெற்றி கொள் அரன் வாழ்வே
வேதமும் கிரியை சூழ் நித்தமும் வேள்வியும் புவியில் தாபித்து அருள்
வேர் விழும்படி செய்த ஏர் மெய் தமிழ் மறையோர் வாழ்
மேரு மங்கையில் அத்தா வித்தக வேலொடும் படை குத்தா ஒற்றிய
வேடர் மங்கை கொள் சித்தா பத்தர்கள் பெருமாளே

மேல்

#718
குதி பாய்ந்து இரத்தம் வடி தொளை தொக்கு இந்த்ரிய குரம்பை வினை கூர் தூர்
குண பாண்டம் உற்று அகிலம் என கை கொண்டு இளைத்து அயர்ந்து சுழலாதே
உதிதாம் பரத்தை உயிர் கெட பொன் கிண்கிணி சதங்கை வித கீத
உபயாம்புய புணையை இனி பற்றும் கருத்தை என்று தருவாயே
கதை சார்ங்கம் கட்கம் வளை அடல் சக்ரம் தரித்த கொண்டல் மருகோனே
கருணாஞ்சன கமல விழி பொன் பைம் புன கரும்பின் மணவாளா
மதனாந்தகர்க்கு மகவு என பத்மம்தனில் பிறந்த குமரேசா
மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#719
சயிலாங்கனைக்கு உருகி இட பக்கம் கொடுத்த கம்பர் வெகு சாரி
சதி தாண்டவ அத்தர் சடை இடத்து கங்கை வைத்த நம்பர் உரை மாள
செயல் மாண்டு சித்தம் அவிழ நித்த த்வம் பெற பகர்ந்த உபதேசம்
சிறியேன் தனக்கும் உரை செயில் சற்றும் குருத்துவம் குறையுமோ தான்
அயில் வாங்கி எற்றி உததியில் கொக்கன்தனை பிளந்து சுரர் வாழ
அகிலாண்டம் முற்றும் நொடியினில் சுற்றும் திறல் ப்ரசண்ட முழு நீல
மயில் தாண்ட விட்டு குது குல பொன் குன்று இடித்த சங்க்ரம விநோத
மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#720
மனை மாண் சுதர் ஆன சுணங்கரும் மனம் வேம் திணையான தனங்களும்
மடிவேன்தனை ஈண அணங்கு உறு வம்பர் ஆதி
மயமாம் பலவான கணம் குலம் என ப்ராந்தியும் யான் எனது என்று உறுவனவாம்
பிரமாத குணம் குறி இன்ப சார
இன வாம் பரி தான்ய தனம் பதி விட ஏன்று எனை மோன தடம் பர
மிகுதாம் பதி காண கணம் கன உம்பர் ஏசா
இட ஆர்ந்தன சானு நயம் பெறு கடகாம் கர சோண வியம் பர
இடமாம் கன தாள் அருளும் படி என்று தானோ
தனதாந்தன தான தனந்தன தெனதோங்கிட தோன துனங்கிட
தனவாம் பரமான நடம் பயில் எம்பிரானார்
தமதாம் சுத தாபரம் சங்கமம் என ஓம்புறு தாவன வம்பு அடர்
தகு தாம்பிர சேவித ரஞ்சித உம்பர் வாழ்வே
முன வாம் பத மூடிக வந்தனம் முயல்வான் பிடி மாடு இமை ஐங்கரர்
முகதா ஆம் பின மேவுறு சம்பரம சம் கண ஆறு
முக காம்பிரமோடு அமர் சம்பன மதுராந்தக மா நகரம் திகழ்
முருகா அம் திரமோடு அமர் உம்பர்கள் தம்பிரானே

மேல்

#721
முகிலாம் எனும் வார் குழலார் சிலை புருவார் கயல் வேல் விழியார் சசி
முகவார் தரளம் எனவே நகைபுரி மாதர்
முலை மால் இணை கோபுரமாம் என வடம் ஆடிடவே கொடி நூல் இடை
முது பாளித சேலை குலாவிய மயில் போல்வார்
அகி சேர் அல்குலார் தொடை வாழையின் அழகு ஆர் கழல் ஆர்தர ஏய்தரு
அழகார் கன நூபுரம் ஆடிட நடை மேவி
அனமாம் என யாரையும் மால் கொள விழியால் சுழலா விடு பாவையர்
அவர் பாயலிலே அடியேன் உடல் அழிவேனோ
ககனார் பதியோர் முறை கோ என இருள்கார் அசுரார் படை தூள்பட
கடல் ஏழ் கிரி நாகமும் நூறிட விடும் வேலா
கமலாலய நாயகி வானவர் தொழும் ஈசுரனார் இடம் மேவிய
கருணாகர ஞான பராபரை அருள் பாலா
மகிழ் மாலதி நாவல் பலா கமுகு உடன் ஆட நிலா மயில் கோகில
மகிழ் நாடு உறை மால் வளி நாயகி மணவாளா
மதி மா முகவா அடியேன் இருவினை தூள்படவே அயில் ஏவிய
வளவாபுரி வாழ் மயில்வாகன பெருமாளே

மேல்

#722
கலகல என சில கலைகள் பிதற்றுவது ஒழிவது உனை சிறிது உரையாதே
கரு வழி தத்திய மடு அதனில் புகு கடு நரகுக்கிடை இடை வீழா
உலகுதனில் பல பிறவி தரித்து அற உழல்வது விட்டு இனி அடி நாயேன்
உனது அடிமை திரள் அதனினும் உட்பட உபய மலர் பதம் அருள்வாயே
குலகிரி பொட்டு எழ அலை கடல் வற்றிட நிசிசரனை பொரு மயில் வீரா
குண தர வித்தக குமர புனத்திடை குறமகளை புணர் மணி மார்பா
அலை புனலில் தவழ் வளை நிலவை தரு மணி திருவக்கரை உறைவோனே
அடியவர் இச்சையில் எவையெவை உற்றன அவை தருவித்து அருள் பெருமாளே

மேல்

#723
பச்சிலை இட்டு முகத்தை மினுக்கிகள் குத்திர வித்தை மிகுத்த சமர்த்திகள்
பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிட நினைவோர்கள்
பத்தி நிரை தவள தரளத்தினை ஒத்த நகைப்பில் விழிப்பில் மயக்கிகள்
பக்ஷம் மிகுத்திட முக்கனி சர்க்கரை இதழூறல்
எச்சில் அளிப்பவர் கச்சு அணி மெத்தையில் இச்சகம் மெத்த உரைத்து நயத்தொடும்
எத்தி அழைத்து அணைத்து மயக்கிடும் மட மாதர்
இச்சையில் இப்படி நித்தம் மன துயர் பெற்று உலகத்தவர் சிச்சி என திரி
இ தொழில் இ குணம் விட்டிட நல் பதம் அருள்வாயே
நச்சு அரவில் துயில் பச்சை முகில் கருணை கடல் பத்ம மலர் திருவை புணர்
நத்து தரித்த கரத்தர் திருத்துளவ அணி மார்பர்
நட்டநடு கடலில் பெரு வெற்பினை நட்டு அரவ பணி சுற்றி மதித்து உள
நத்தும் அமுதத்தை எழுப்பி அளித்தவர் மருகோனே
கொச்சை மொழிச்சி கறுத்த விழிச்சி சிறுத்த இடைச்சி பெருத்த தனத்தி
குறத்தி தனக்கு மனம் ப்ரியம் உற்றிடு குமரேசா
கொத்து அவிழ் பத்ம மலர் பழனத்தொடு குற்ற மற கடிகை புனல் சுற்றிய
கொட்பு உள நல் திருவக்கரை உற்று உறை பெருமாளே

மேல்

#724
அண்டர் பதி குடியேற மண்டு அசுரர் உரு மாற அண்டர் மன மகிழ் மீற அருளாலே
அந்தரியொடு உடன் ஆடு சங்கரனும் மகிழ்கூர ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக
மண்டலமும் முநிவோரும் எண் திசையில் உள பேரும் மஞ்சினனும் அயனாரும் எதிர் காண
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ் கூற மைந்து மயிலுடன் ஆடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர் மகள் மணவாள புந்தி நிறை அறிவாள உயர் தோளா
பொங்கு கடலுடன் நாகம் விண்டு வரை இகல் சாடு பொன் பரவு கதிர் வீசு வடி வேலா
தண் தரளம் அணி மார்ப செம்பொன் எழில் செறி ரூப தண் தமிழின் மிகு நேய முருகேசா
சந்ததமும் அடியார்கள் சிந்தை அது குடியான தண் சிறுவைதனில் மேவு பெருமாளே

மேல்

#725
சீதள வாரிஜ பாதா நமோ நம நாரத கீத விநோதா நமோ நம
சேவல் மா மயில் ப்ரீதா நமோ நம மறை தேடும்
சேகரமான ப்ரதாபா நமோ நம ஆகம சார சொரூபா நமோ நம
தேவர்கள் சேனை மகீபா நமோ நம கதி தோய
பாதக நீவு குடாரா நமோ நம மா அசுரேச கடோரா நமோ நம
பாரினிலே ஜய வீரா நமோ நம மலை மாது
பார்வதியாள் தரு பாலா நமோ நம நாவல ஞான மனோலா நமோ நம
பால குமார சுவாமீ நமோ நம அருள்தாராய்
போதக மா முகன் நேரான சோதர நீறு அணி வேணியர் நேயா ப்ரபாகர
பூ மகளார் மருகேசா மகா உததி இகல் சூரா
போதக மா மறை ஞானா தயாகர தேன் அவிழ் நீப நறா ஆரும் மார்பக
பூரண மா மதி போல் ஆறு மா முக முருகேசா
மாதவர் தேவர்களோடே முராரியும் மா மலர் மீது உறை வேதாவுமே புகழ்
மா நிலம் ஏழினும் மேலான நாயக வடி வேலா
வானவர் ஊரினும் வீறாகி வீறு அளகாபுரி வாழ்வினும் மேலாகவே திரு
வாழ் சிறுவா புரி வாழ்வே சுராதிபர் பெருமாளே

மேல்

#726
பிறவியான சடம் இறங்கி வழியிலாத துறை செறிந்து பிணிகள் ஆன துயர் உழன்று தடுமாறி
பெருகு தீய வினையில் நொந்து கதிகள்தோறும் அலை பொருந்தி பிடிபடாத ஜனன நம்பி அழியாதே
நறை விழாத மலர் முகந்த அரிய மோன வழி திறந்த நளின பாதம் எனது சிந்தை அகலாதே
நரர் சுராதிபரும் வணங்கும் இனிய சேவைதனை விரும்பி நலன் அதாக அடியன் என்று பெறுவேனோ
பொறி வழாத முநிவர் தங்கள் நெறி வழாத பிலன் உழன்று பொரு நிசாசரனை நினைந்து வினை நாடி
பொரு இலாமல் அருள்புரிந்து மயிலில் ஏறி நொடியில் வந்து புளகம் மேவ தமிழ் புனைந்த முருகோனே
சிறுவராகி இருவர் அந்த கரி பதாதி கொடு பொரும் சொல் சிலை இராமனுடன் எதிர்த்து சமர் ஆடி
செயம் அதான நகர் அமர்ந்த அளகை போல வளம் மிகுந்த சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாளே

மேல்

#727
வேல் இரண்டு எனு நீள் விழி மாதர்கள் காதலின் பொருள் மேவின பாதகர்
வீணில் விண்டு உள நாடியர் ஊமைகள் விலை கூறி
வேளை என்பது இல்லா வசை பேசியர் வேசி என்பவராம் இசை மோகிகள்
மீது நெஞ்சு அழி ஆசையிலே உழல் சிறியேனும்
மால் அயன் பரனார் இமையோர் முனிவோர் புரந்திரன் ஆதியரே தொழ
மாதவம் பெறு தாள் இணையே தினம் மறவாதே
வாழ் தரும் சிவ போக நல் நூல் நெறியே விரும்பி வினாவுடனே தொழ
வாழ் வரம் தருவாய் அடியேன் இடர் களைவாயே
நீல சுந்தரி கோமளி யாமளி நாடகம் பயில் நாரணி பூரணி
நீடு பஞ்சவி சூலினி மாலினி உமை காளி
நேயர் பங்கு எழு மாதவியாள் சிவகாம சுந்தரியே தரு பாலக
நீர் பொரும் சடையார் அருள் தேசிக முருகேச
ஆலில் நின்று உலகோர் நிலையே பெற மா நிலங்கள் எலா நிலையே தரு
ஆயன் நம் திருவூரகம் மால் திரு மருகோனே
ஆடகம் பயில் கோபுர மா மதில் ஆலயம் பல வீதியுமே நிறைவான
தென் சிறுவாபுரி மேவிய பெருமாளே

மேல்

#728
அடல் வடி வேல்கள் வாளிகள் அவைவிட ஓடல் நேர் படும் அயில் விழியாலும் மால் எனும் மத வேழத்து
அளவிய கோடு போல் வினை அளவளவான கூர் முலை அதின் முகம் மூடும் ஆடையின் அழகாலும்
துடி இடையாலும் வாலர்கள் துயருற மாயமாய் ஒரு துணிவுடன் ஊடு மாதர்கள் துணையாக
தொழுது அவர் பாதம் ஓதி உன் வழிவழி யான் எனா உயர் துலை அலை மாறு போல் உயிர் சுழல்வேனோ
அடவியினூடு வேடர்கள் அரிவையொடு ஆசை பேசியும் அடி தொழுது ஆடும் ஆண்மையும் உடையோனே
அழகிய தோள் இராறு உடை அறுமுக வேளே நா உனை அறிவுடன் ஓது மாதவர் பெருவாழ்வே
விடை எறும் ஈசர் நேசமும் மிக நினைவார்கள் தீ வினை உக நெடிது ஓட மேல் அணைபவர் மூதூர்
விரை செறி தோகை மாதர்கள் விரகுடன் ஆடும் மாதையில் விறல் மயில் மீது மேவிய பெருமாளே

மேல்

#729
கண் கயல் பிணை மானோடு உறவு உண்டு என கழை தோளானது
நன்கு அமைக்கு இனம் ஆம்ஆம் என முகையான
கஞ்சம் ஒத்து எழு கூர் மா முலை குஞ்சரத்து இரு கோடோடு உற
விஞ்சு மை பொரு கார் கோதை கொடு உயர் காலன்
பெண் தனக்கு உள கோலாகலம் இன்று எடுத்து இளையோர் ஆவிகள்
மன் பிடிப்பது போல் நீள் வடிவுடை மாதர்
பின்பு ஒழித்திடு மா மாயையில் அன்பு வைத்து அழியாதே உறு
கிஞ்சில் அத்தனை தாள் பேணிட அருள்தாராய்
விண் தனக்கு உறவானோன் உடல் கண் படைத்தவன் வேதாவொடு
விண்டு வித்தகன் வீழ் தாளினர் விடை ஏறி
வெம் தனத்து உமையாள் மேவிய சந்தன புய மாதீசுரர்
வெம் கயத்து உரி ஆர் போர்வையர் மிகு வாழ்வே
தண் புடை பொழில் சூழ் மாதையில் நண்பு வைத்து அருள் தாராதலமும்
கிளைத்திட வான் நீள் திசையொடு தாவி
தண்டு அரக்கர்கள் கோகோ என விண்டிட தட மா மீமிசை
சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே

மேல்

#730
கரு முகில் போல் மட்டாகிய அளகிகள் தேனில் பாகொடு கனி அமுது ஊறி தேறிய மொழி மாதர்
கலவிகள் நேர் ஒப்பாகிகள் மதனிகள் காம க்ரோதிகள் கன தன பாரக்காரிகள் செயலோடே
பொரு கயல் வாளை தாவிய விழியினர் சூறைக்காரிகள் பொருள் அளவு ஆசை பாடிகள் புவி மீதே
பொதுவிகள் போக பாவிகள் வசம் அழிவேனுக்கு ஓர் அருள்புரிவது தான் எப்போது அது புகல்வாயே
தரு அடு தீர சூரர்கள் அவர் கிளை மாள தூள் எழ சமன் நிலை ஏற பாறொடு கொடி வீழ
தனதன தான தானன என இசை பாடி பேய் பல தசை உண வேல் விட்டு ஏவிய தனி வீரா
அரி திரு மால் சக்ராயுதன் அவன் இளையாள் முத்தார் நகை அழகு உடையாள் மெய் பால் உமை அருள் பாலா
அரவொடு பூளை தார் மதி அறுகொடு வேணி சூடிய அழகர் தென் மாதைக்கே உறை பெருமாளே

மேல்

#731
கால முகில் என நினைவு கொடு உருவிலி காதி அமர் பொரு கணை என வடு வகிர்
காணும் இது என இளைஞர்கள் விதவிடு கயலாலும்
கானம் அமர் குழல் அரிவையர் சிலு கொடு காசின் அளவு ஒருதலை அணும் மனதினர்
காமம் இவர் சில கபடிகள் படிறு சொல் கலையாலும்
சால மயல் கொடு புளகித கன தன பாரம் உற அண முருகு அவிழ் மலர் அணை
சாயல்தனில் மிகு கலவியில் அழிவுறும் அடியேனை
சாதி குலம் உறு படியினில் முழுகிய தாழ்வு அது அற இடை தருவன வெளி உயர்
தாள் அது அடைவது தவம் மிக நினைவது தருவாயே
வேலைதனில் விழி துயில்பவன் அரவணை வேயின் இசை அது நிரைதனில் அருள்பவன்
வீர துரகதம் நர பதி வனிதையர் கரம் மீதே
வேறு வடிவு கொடு உறி வெணெய் தயிர் அது வேடை கெட அமுது அருளிய பொழுதினில்
வீசு கயிறுடன் படு சிறியவன் அதி கோப
வாலியுடன் எழு மரம் அற நிசிசரன் வாகு முடி ஒரு பது கரம் இருபது
மாள ஒரு சரம் விடும் ஒரு கரியவன் மருகோனே
வாசமுறு மலர் விசிறிய பரிமள மாதை நகர்தனில் உறையும் ஒர் அறுமுக
வானில் அடியவர் இடர் கெட அருளிய பெருமாளே

மேல்

#732
அச்சாய் இறுக்கு ஆணி காட்டி கடைந்த செப்பு ஆர் முலை கோடு நீட்டி சரங்களை
போல் விழி கூர்மை நோக்கி குழைந்து உறவாடி
அத்தான் எனக்கு ஆசை கூட்டி தயங்க வைத்தாய் என பேசி மூக்கை சொறிந்து
அக்கால் ஒரு காலம் ஏக்கற்று இருந்தீர் இல்லை ஆசை
வைச்சாய் எடுப்பான பேச்சுக்கு இடங்கள் ஒப்பு ஆர் உனக்கு ஈடு பார்க்கில் கடம்பன்
மட்டோ என பாரில் மூர்க்கத்தனங்கள் அதனாலே
மை பாகு என கூறி வீட்டில் கொணர்ந்து புல்பாயிலில் காலம் வீற்று கலந்து
வைப்பார் தமக்கு ஆசையால் பித்து அளைந்து திரிவேனோ
எச்சாய் மருள் பாடு மேற்பட்டு இருந்த பிச்சாசருக்கு ஓதி கோட்டைக்கு இலங்க
மிக்கா நினைப்போர்கள் வீக்கில் பொருந்தி நிலையாயே
எட்டாம் எழுத்தை ஏழையேற்கு பகர்ந்த முத்தா வலுப்பான போர்க்குள் தொடங்கி
எக்காலும் மக்காத சூர் கொத்து அரிந்த சின வேலா
தச்சா மயில் சேவல் ஆக்கி பிளந்த சித்தா குற பாவை தாட்குள் படிந்து
சக்காகி அ பேடையாட்கு புகுந்து மணமாகி
தப்பாமல் இ பூர்வ மேற்கு தரங்கள் தெற்காகும் இ பாரில் கீர்த்திக்கு இசைந்த
தச்சூர் வடக்காகும் மார்க்கத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#733
பாவ நாரிகள் மா மட மாதர் வீணிகள் ஆணவ பாவையார் இளநீர் அன முலையாலும்
பார்வையாம் மிகு கூர் அயிலாலும் மா மணியார் குழை பார கார் அனவார் குழல் அதனாலும்
சாவது ஆர விதாரம் அமுது ஆர்தரா இதழால் இத சாத மூரல் இதா மதி முகமாலும்
சார்வதா அடியேன் இடர் வீற மால் அறிவே மிகு சாரமாய் அதிலே உறல் ஒழிவேனோ
ஆவ ஆர்வன நான்மறை ஆதி மூல பரா அரி ஆதி காண் அரிதாகிய பரமேச
ஆதியார் அருள் மா முருகேச மால் மருகேசுர ஆதி தேவர்கள் இயாவர்கள் பணி பாத
கோ அதா மறையோர் மறை ஓதும் ஓதம் விழா ஒலி கோடி ஆகம மா ஒலி மிக வீறும்
கோவை மா நகர் மேவிய வீர வேல் அயில் ஆயுத கோதை யானையினோடு அமர் பெருமாளே

மேல்

#734
ஆறும்ஆறும் அஞ்சும்அஞ்சும் ஆறும்ஆறும் அஞ்சும்அஞ்சும் ஆறும்ஆறும் அஞ்சும்அஞ்சும் அறுநாலும்
ஆறும் ஆய சஞ்சலங்கள் வேறு அதா விளங்குகின்ற ஆரணம் ஆகமம் கடந்த கலையான
ஈறு கூற அரும் பெரும் சுவாமியாய் இருந்த நன்றி ஏது வேறு இயம்பல் இன்றி ஒரு தானாய்
யாவுமாய் மனம் கடந்த மோன வீடு அடைந்து ஒருங்கி யான் அவா அடங்க என்று பெறுவேனோ
மாறு கூறி வந்து எதிர்ந்த சூரன் சேனை மங்க வந்த வாரி மேல் வெகுண்ட சண்ட வித தாரை
வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவிளம் கொழுந்து வால சோமன் அஞ்சு பொங்கு பகு வாய
சீறு மாசுணம் கரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர் தேசிகா கடம்பு அலங்கல் புனைவோனே
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு தேவனூர் விளங்க வந்த பெருமாளே

மேல்

#735
தாரகாசுரன் சரிந்து வீழ வேருடன் பறிந்து சாதி பூதரம் குலுங்க முது மீன அம்
சாகர ஓதை குழம்பி நீடு தீ கொளுந்த அன்று தாரை வேல் தொடும் கடம்ப மத தாரை
ஆரவார உம்பர் கும்ப வாரண அசலம் பொருந்து மானை ஆளு நின்ற குன்ற மற மானும்
ஆசை கூரு நண்ப என்று மா மயூர கந்த என்றும் ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ
பாரம் ஆர் தழும்பர் செம்பொன் மேனியாளர் கங்கை வெண் கபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி
பார மாசுணங்கள் சிந்துவார ஆரம் என்பு அடம்பு பானல் கூவிளம் கரந்தை அறுகோடே
சேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த சீதள அரவிந்த வஞ்சி பெருவாழ்வே
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு தேவனூர் விளங்க வந்த பெருமாளே

மேல்

#736
காணொணாதது உருவோடு அரு அது பேசொணாதது உரையே தருவது
காணும் நான்மறை முடிவாய் நிறைவது பஞ்ச பூத
காய பாசம்தனிலே உறைவது மாயமாய் உடல் அறியா வகையது
காயமானவர் எதிரே அவர் என வந்து பேசி
பேணொணாதது வெளியே ஒளி அது மாயனார் அயன் அறியா வகை அது
பேத பேதமொடு உலகாய் வளர்வது விந்து நாத
பேருமாய் கலை அறிவாய் துரிய அதீதமானது வினையேன் முடி தவ
பேறுமாய் அருள் நிறைவாய் விளைவது ஒன்று நீயே
வீணொணாதது என அமையாத அசுரரை நூறியே உயிர் நமன் நீ கொளு என
வேல் கடாவிய கரனே உமை முலை உண்ட கோவே
வேத நான்முக மறையோனொடும் விளையாடியே குடுமியிலே கரமொடு
வீற மோதின மறவா குறவர் குறிஞ்சியூடே
சேண் ஒணாய் இடும் இதண் மேல் அரிவையை மேவியே மயல் கொள லீலைகள் செய்து
சேர நாடிய திருடா அருள்தரு கந்த வேளே
சேரொணா வகை வெளியே திரியும் மெய்ஞ்ஞான யோகிகள் உளமே உறை தரு
தேவனூர் வரு குமரா அமரர்கள் தம்பிரானே

மேல்

#737
பரவு வரி கயல் குவிய குயில் கிளி ஒத்து உரை பதற பவள நிறத்து அதரம் விளைத்த அமுதூறல்
பருகி நிற தரளம் அணி களப முலை குவடு அசைய படை மதன கலை அடைவி பொது மாதர்
சொருகு மலர் குழல் சரிய தளர்வுறு சிற்றிடை துவள துகில் அகல க்ருபை விளைவித்து உருகா முன்
சொரி மலர் மட்டு அலர் அணை புக்கு இதம் மதுர கலவிதனில் சுழலும் மன கவலை ஒழித்து அருள்வாயே
கருகு நிறத்த அசுரன் முடி தலை ஒரு பத்து அற முடுகி கணை தொடும் அச்சுதன் மருக குமரேசா
கயிலை மலை கிழவன் இட குமரி விருப்பொடு கருத கவி நிறைய பெறும் வரிசை புலவோனே
திரள் கமுகின் தலை இடறி பல கதலி குலை சிதறி செறியும் வயல் கதிர் அலைய திரை மோதி
திமிதிமி என பறைய பெருகு புனல் கெடில நதி திருவதிகை பதி முருக பெருமாளே

மேல்

#738
விடமும் வேல் அன மலர் அன விழிகளும் இரதமே தரும் அமுது எனும் மொழிகளும்
விரகினால் எழும் இரு தன வகைகளும் இதம் ஆடி
மிகவும் ஆண்மையும் எழில் நலம் உடையவர் வினையும் ஆவியும் உடன் இரு வலையிடை
வெளியிலே பட விசிறிய விஷமிகளுடன் மேவா
இடருறாது உனை நினைபவர் துணை கொள இனிமை போல் எழு பிறவி எனும் உவரியில்
இடை கெடாது இனி இருவினை அழிவினில் அழியாதே
இசையில் நாள்தொறும் இமையவர் முநிவர்கள் ககன பூபதி இடர் கெட அருளிய
இறை நின் ஆறிரு புயம் என உரை செய அருள்வாயே
படரும் மார்பினில் இருபது புயம் அதோடு அரிய மா மணி முடி ஒளிர் ஒரு பது
படியிலே விழ ஒரு கணை தொடுபவர் இடம் ஆராய்
பரவையூடு எரி பகழியை விடுபவர் பரவுவார் வினை கெட அருள் உதவியெ
பரவு பால் கடல் அரவணை துயில்பவர் மருகோனே
அடரவே வரும் அசுரர்கள் குருதியை அரகரா என அலகைகள் பலி உண்ண
அலையும் வேலையும் அலறிட எதிர் பொரு மயில் வீரா
அமரர் ஆதியர் இடர் பட அடர் தரு கொடிய தானவர் திரிபுரம் எரி செய்த
அதிகை மா நகர் மருவிய சசி மகள் பெருமாளே

மேல்

#739
சீத மதியம் எறிக்கும் தழலாலே சீறி மதனன் வளைக்கும் சிலையாலே
ஓதம் மருவி அலைக்கும் கடலாலே ஊழி இரவு தொலைக்கும்படியோதான்
மாது புகழை வளர்க்கும் திருவாமூர் வாழும் மயிலில் இருக்கும் குமரேசா
காதல் அடியர் கருத்தின் பெருவாழ்வே காலன் முதுகை விரிக்கும் பெருமாளே

மேல்

#740
அரி அயன் அறியாதவர் எரி புர மூணு அது புக நகை ஏவிய நாதர்
அவிர் சடை மிசை ஓர் வனிதையர் பதி சீறு அழலையும் மழு நேர் பிடி நாதர்
வரைமகள் ஒரு கூறு உடையவர் மதனாகமும் விழ விழி ஏவிய நாதர்
மனம் மகிழ் குமரா என உனது இரு தாள் மலர் அடி தொழுமாறு அருள்வாயே
அரு வரை இரு கூறிட ஒரு மயில் மேல் அவனியை வலமாய் வருவோனே
அமரர்கள் இகல் நீடு அசுரர்கள் சிர மேல் அயில்தனை விசையாய் விடுவோனே
வரிசையொடு ஒரு மா தினை தரு வனமே மருவி ஒர் குற மாது அணை வேடா
மலைகளில் மகிழ்வாய் மருவி நல் வடுகூர் வரு தவ முநிவோர் பெருமாளே

மேல்

#741
ஆர் அ தன பார துகில் மூடி பலர் காண கையில் யாழ் வைத்து இசை கூர குழல் உடை சோர
ஆகம் பனி நீர் புழுகு ஓட குழை ஆட பிரையாசைப்படுவார் பொட்டு அணி சசி நேர் வாள்
கூர கணை வேல் கண் கயல் போல சுழல்வார் சர்க்கரை கோவை கனி வாய் பல் கதிர் ஒளி சேரும்
கோல குயிலார் பட்டு உடை நூல் ஒத்த இடையார் சித்திர கோப செயலார் பித்தர்கள் உறவு ஆமோ
பூரி தன பார சடை வேத குழலாள் பத்தர்கள் பூசைக்கு இயல்வாள் பத்தினி சிவகாமி
பூமி கடல் மூவர்க்கும் முனாள் பத்திரகாளி புணர் போகர்க்கு உபதேசித்து அருள் குருநாதா
சூர குவடு ஆழி தவிடாய் முட்ட சுரார் உக்கிட சோர்வு இல் கதிர் வேல் விட்டு அருள் விறல் வீரா
தோகை செயலாள் பொன் பிரகாச குறமான் முத்தொடு சோதி துறையூர் நத்திய பெருமாளே

மேல்

#742
வெகு மாய விதத்து உருவாகிய திறமே பழகப்படு சாதக
விதம் ஏழ் கடலில் பெரிதாம் அதில் சுழலாகி
வினையான கரு குழியாம் எனும் அடையாளம் உளத்தினில் மேவினும்
விதி யாரும் விலக்கவொணாது எனும் முதியோர் சொல்
தகவாம் அது எனை பிடியா மிடை கயிறால் இறுக்கி மகா கட
சலதாரை வெளிக்கு இடையே செல உருவாகி
சதிகாரர் விடக்கு அதிலே திரள் புழுவாக நெளித்து எரியே பெறு
மெழுகாக உருக்கும் உபாதிகள் தவிர்வேனோ
உக காலம் நெருப்பு அதிலே புகை எழ வேகு முறைப்படு பாவனை
உறவே குகையில் புடமாய் விட வெளியாகி
உலவா நரகுக்கு இரையாம் அவர் பலவோர்கள் தலை கடை போய் எதிர்
உளம் மாழ்கி மிக குழைவாகவும் உறவாடி
தொகலாவது எனக்கு இனிதான் அற வளமாக அருள் பாதம் மா மலர்
துணையே பணிய தருவாய் பரி மயில் வேலா
துதி மாதவர் சித்தர் மகேசுரர் அரி மால் பிரமர்க்கு அருள்கூர் தரு
துறையூர் நகரில் குடியாய் வரு பெருமாளே

மேல்

#743
கோல மறை ஒத்த மாலைதனில் உற்ற கோர மதன் விட்ட கணையாலே
கோது இல தருக்கள் மேவு பொழில் உற்ற கோகில மிகுத்த குரலாலே
ஆலம் என விட்டு வீசு கலை பற்றி ஆர் அழல் இறைக்கும் நினைவாலே
ஆவி தளர்வுற்று வாடும் எனை நித்தம் ஆசை கொடு அணைக்க வரவேணும்
நாலுமறை கற்ற நான்முகன் உதித்த நாரணனும் மெச்சு மருகோனே
நாவலர் மதிக்க வேல்தனை எடுத்து நாகம் அற விட்ட மயில் வீரா
சேல் எனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி சீர் அணி தனத்தில் அணைவோனே
சீத வயல் சுற்று நாவல்தனில் உற்ற தேவர் சிறை விட்ட பெருமாளே

மேல்

#744
பலபல தத்துவம் அதனை எரித்து இருள் பரை அரணம் படர் வட அனலுக்கு இரை
பட நடந சுடர் பெரு வெளியில் கொள்ள இடம் மேவி
பவனம் ஒழித்து இரு வழியை அடைத்து ஒரு பருதி வழிப்பட விடல் ககனத்தொடு
பவுரி கொள சிவமயம் என முற்றிய பரமூடே
கலகல என கழல் பரிபுரம் பொன் பத ஒலி மலிய திரு நடனம் இயற்றிய
கனக சபைக்குளில் உருகி நிறை கடல் அதில் மூழ்கி
கவுரி மினல் சடைய அரனொடு நித்தமொடு அனக சகத்துவம் வருதலும் இப்படி
கழிய நலக்கு இனி நிறம் என் நவிற்று உடல் அருள்வாயே
புலையர் பொடித்தளும் அமணர் உடல்களை நிரையில் கழுக்களில் உற விடு சித்திர
புலவன் என சில விருது படைத்திடும் இளையோனே
புன மலையில் குறமகள் அயலுற்று ஒரு கிழவன் என சுனைதனில் அவள் ஐ புய
புளகிதம் உற்று இபம் வர அணைய புணர் மணி மார்பா
மலை சிலை பற்றிய கடவுளிடத்து உறை கிழவி அற சுக குமரி தகப்பனை
மழு கொடு வெட்டிய நிமலிகை பெற்று அருள் முருகோனே
மகிழ் பெணையில் கரை பொழில் முகில் சுற்றிய திருவெணெய் நல் பதி புகழ் பெற அற்புத
மயிலின் மிசை கொடு திரு நடம் இட்டு உறை பெருமாளே

மேல்

#745
நிணமொடு குருதி நரம்பு மாறிய தசை குடல் மிடையும் எலும்பு தோல் இவை
நிரைநிரை செறியும் உடம்பு நோய்படு முது காயம்
நிலைநிலை உருவ மலங்கள் ஆவது நவ தொளை உடைய குரம்பையாம் இதில்
நிகழ் தரு பொழுதில் முயன்று மாதவம் உய ஓரும்
உணர்விலி செப முதல் ஒன்றுதானிலி நிறையிலி முறையிலி அன்புதானிலி
உயர்விலி எனினும் என் நெஞ்சு தான் நினைவு அழியா முன்
ஒரு திரு மரகத துங்க மா மிசை அறுமுகம் ஒளி விட வந்து நான்மறை
உபநிடம் அதனை விளங்க நீ அருள்புரிவாயே
புணரியில் விரவி எழுந்த ஞாயிறு விலகிய புரிசை இலங்கை வாழ் பதி
பொலம் மணி மகுட சிரங்கள் தாம் ஒரு பதும் மாறி
புவி இடை உருள முனிந்து கூர் கணை உறு சிலை வளைய வலிந்து நாடிய
புயல் அதி விறல் அரி விண்டு மால் திரு மருகோனே
அணி தரு கயிலை நடுங்க ஓர் எழு குல கிரி அடைய இடிந்து தூள் எழ
அலை எறி உததி குழம்ப வேல் விடு முருகோனே
அமலை முன் அரிய தவம் செய் பாடல வள நகர் மருவி அமர்ந்த தேசிக
அறுமுக குறமகள் அன்ப மாதவர் பெருமாளே

மேல்

#746
மதிக்கு நேர் என்னும் வாள் மூகம் வான் மக நதிக்கு மேல் வரு சேல் ஏனும் நேர் விழி
மணத்த வார் குழல் மா மாதரார் இரு கொங்கை மூழ்கி
மதித்த பூதரமாம் ஆம் மனோலயர் செருக்கி மேல் விழ நாள்தோறுமே மிக
வடித்த தேன் மொழி வாய் ஊறலே நுகர் பண்ட நாயேன்
பதித்த நூபுர சீர் பாத மா மலர் படைக்குள் மேவிய சீராவொடே கலை
பணைத்த தோள்களொடு ஈராறு தோடுகள் தங்கு காதும்
பணி கலாபமும் வேலோடு சேவலும் வடி கொள் சூலமும் வாள் வீசு நீள் சிலை
படைத்த வாகையும் நாடாது பாழில் மயங்கலாமோ
கதித்து மேல் வரு மா சூரர் சூழ் படை நொறுக்கி மா உயர் தேரோடுமே கரி
கலக்கி ஊர் பதி தீ மூளவே விடும் வஞ்ச வேலா
களித்த பேய் கணம் மா காளி கூளிகள் திரள் பிரேதம் மெலே மேவி மூளைகள்
கடித்த பூதமொடே பாடி ஆடுதல் கண்ட வீரா
குதித்து வானரம் மேல் ஏறு தாறுகள் குலைத்து நீள் கமுகு ஊடாடி வாழை கொள்
குலைக்கு மேல் விழவே ஏர் ஏறு போகமும் வஞ்சி தோயும்
குளத்தில் ஊறிய தேன் ஊறல் மாதுகள் குடித்து உலாவியே சேலோடு மாணி கொள்
குழிக்குள் மேவிய வானோர்களே தொழு தம்பிரானே

மேல்

#747
சதுர தரை நோக்கிய பூவொடு கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை
தழைய சிவ பாக்கிய நாடக அநுபூதி
சரண கழல் காட்டியெ என் ஆணவ மலம் அற்றிட வாட்டிய ஆறிரு
சயில குலம் ஈட்டிய தோளொடு முகம் ஆறும்
கதிர் சுற்று உக நோக்கிய பாதமும் மயிலின் புறம் நோக்கியனாம் என
கருணை கடல் காட்டிய கோலமும் அடியேனை
கனகத்தினும் நோக்கி இனிதாய் அடியவர் முத்தமிழால் புகவே பரகதி
பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே
சிதற தரை நால் திசை பூதர நெரிய பறை மூர்க்கர்கள் மா முடி
சிதற கடல் ஆர்ப்புறவே அயில் விடுவோனே
சிவ பத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி மூத்த விநாயகி
செகம் இப்படி தோற்றிய பார்வதி அருள் பாலா
விதுரற்கும் அரா கொடி யானையும் விகட துறவு ஆக்கிய மாதவன்
விசையற்கு உயர் தேர் பரி ஊர்பவன் மருகோனே
வெளி எண் திசை சூர் பொருது ஆடிய கொடி கைக்கொடு கீர்த்தி உலாவிய
விறல் மெய் திருவேட்களம் மேவிய பெருமாளே

மேல்

#748
மாத்திரையாகிலும் நா தவறாளுடன் வாழ்க்கையை நீடு என மதியாமல்
மாக்களை யாரையும் ஏற்றிடு சீலிகள் மா பரிவே எய்தி அனுபோக
பாத்திரம் ஈது என மூட்டிடும் ஆசைகள்பால் படு ஆடகம் அது தேட
பார் களம் மீதினில் மூர்க்கரையே கவி பாற்கடலான் என உழல்வேனோ
சாத்திரம் ஆறையும் நீத்த மனோலய சாத்தியர் மேவிய பத வேளே
தாத்தரி தாகிட சே எனும் மா நட தாள் பரனார் தரு குமரேசா
வேத்திர சாலம் அது ஏற்றிடும் வேடுவர் மீக்க அமுது ஆம் மயில் மணவாளா
வேத்தமதாம் மறை ஆர்த்திடு சீர் திரு வேட்களம் மேவிய பெருமாளே

மேல்

#749
அறிவிலாதவர் ஈனர் பேச்சு இரண்டு பகரும் நாவினர் லோபர் தீ குணங்கள்
அதிக பாதகர் மாதர் மேல் கலன்கள் புனை ஆதர்
அசடர் பூ மிசை வீணராய் பிறந்து திரியும் மானுடர் பேதைமார்க்கு இரங்கி
அழியும் மாலினர் நீதி நூல் பயன்கள் தெரியாத
நெறியிலாதவர் சூதினால் கவர்ந்து பொருள் செய் பூரியர் மோகமாய் ப்ரபஞ்ச
நிலையில் வீழ் தரு மூடர் பால் சிறந்த தமிழ் கூறி
நினைவு பாழ் பட வாடி நோக்கு இழந்து வறுமையாகிய தீயின் மேல் கிடந்து
நெளியு நீள் புழு ஆயினேற்கு இரங்கி அருள்வாயே
நறிய வார் குழல் வான நாட்டு அரம்பை மகளிர் காதலர் தோள்கள் வேட்டு இணங்கி
நகை கொடு ஏழிசை பாடி மேல் பொலிந்து களிகூர
நடு இலாத குரோதமாய் தடிந்த தகுவர் மாதர் மணாளர் தோள் பிரிந்து
நசை பொறாது அழுது ஆகம் மாய்த்து அழுங்கி இடர் கூர
மறியும் ஆழ் கடல் ஊடு போய் கரந்து கவடு கோடியின் மேலுமாய் பரந்து
வளரும் மா இரு கூறதாய் தடிந்த வடி வேலா
மருவு காள முகீல்கள் கூட்டெழுந்து மதி உலாவிய மாடம் மேல் படிந்த
வயல்கள் மேவு நெல்வாயில் வீற்றிருந்த பெருமாளே

மேல்

#750
குட தாமரையாம் எனவே இரு தனத்தார் மதி வாள் நுதலார் இருள்
குழல் காடின மா முகில் போல் முதுகு அலைமோத
குல கார் மயிலாம் எனவே கயல் விழி தார் கரம் மேல் கொடு மா முலை
குடத்து யாழ் கிளியாம் எனவே குயில் குரல் ஓசை
படித்தார் மயிலாம் எனவே நடை நெளித்தார் பல காமுகர் வார் கலை
பழிப்பாரவர் ஆசையை மேல்கொடு விலைமாதர்
படி கார் மினலாம் எனவே நகை புரித்தார் பலர் வாய் இதழ் சேர் பொருள்
பறிப்பார் பழிகாரிகள் நாரிகள் உறவாமோ
அடைத்தார் கடல் ஓர் வலி ராவண குலத்தோடு அரி ஓர் சரனார் சினம்
அழித்தார் முகில் ஏய் நிற ராகவர் மருகோனே
அறுத்தார் அயனார் தலையே புரம் எரித்தார் அதிலே புலனார் உயிர்
அளித்தார் உடல் பாதியிலே உமை அருள் பாலா
விடத்தார் அசுரார் பதி வேர் அற அடித்தாய் கதிர் வேல் கொடு சேவகம்
விளைத்தாய் குடி வாழ் அமரோர் சிறை மிடி தீர
விழி தாமரை போல் அழகா குறமகட்கு ஆன வணா என தாய் உறை
விருத்தாசலம் வாழ் மயில்வாகன பெருமாளே

மேல்

#751
திருமொழி உரை பெற அரன் உனதுழி பணி செய முனம் அருளிய குளவோனே
திறல் உயர் மதுரையில் அமணரை உயிர் கழு தெறிபட மறுகிட விடுவோனே
ஒருவு அரும் உனது அருள் பரிவிலர் அவர்களின் உறு படர் உறும் எனை அருள்வாயோ
உலகினில் அனைவர்கள் புகழுற அருணையில் ஒரு நொடிதனில் வரு மயில் வீரா
கரு வரி உறு பொரு கணை விழி குறமகள் கணின் எதிர் தரு என முனம் ஆனாய்
கரு முகில் பொரு நிற அரி திரு மருமக கருணையில் மொழி தரு முதல்வோனே
முருகு அலர் தரு உறை அமரர்கள் சிறைவிட முரணுறும் அசுரனை முனிவோனே
முடிபவர் வடிவு அறு சுசி கரம் உறை தமிழ் முது கிரி வலம் வரு பெருமாளே

மேல்

#752
பசை அற்ற உடல் வற்ற வினை முற்றி நடை நெட்டி பறிய கை சொறிய பல் வெளியாகி
படலைக்கு விழி கெட்ட குருடுற்று மிக நெக்க பழமுற்று நரை கொக்கின் நிறமாகி
விசை பெற்று வரு பித்தம் வளியை கண் நிலை கெட்டு மெலிவுற்று விரல் பற்று தடியோடே
வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை விடுவித்து உன் அருள் வைப்பது ஒரு நாளே
அசைவு அற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தில் அடல் வஜ்ரகரன் மற்றும் உள வானோர்
அளவற்ற மலர் விட்டு நிலம் முற்று மறையச்செய் அதுல சமர வெற்றி உடையோனே
வசை அற்று முடிவற்று வளர் பற்றின் அளவற்ற வடிவுற்ற முகில் கிட்ணன் மருகோனே
மதுர செம் மொழி செப்பி அருள்பெற்ற சிவ பத்தர் வளர் விர்த்த கிரி உற்ற பெருமாளே

மேல்

#753
குரை கடல் உலகினில் உயிர் கொடு போந்து கூத்தாடுகின்ற குடில் பேணி
குகை இட மருவிய கரு இழி மாந்தர் கோட்டாலை இன்றி அவிரோதம்
வர இருவினை அற உணர்வொடு தூங்குவார்க்கே விளங்கும் அநுபூதி
வடிவினை உனது அழகிய திரு வார்ந்த வாக்கால் மொழிந்து அருளவேணும்
திரள் வரை பக மிகு குருகுல வேந்து தேர்ப்பாகன் மைந்தன் மறையோடு
தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து தீ பாய இந்த்ரபுரி வாழ
விரி திரை எரி எழ முதல் உற வாங்கு வேல்கார கந்த புவி ஏழும்
மிடி கெட விளைவன வள வயல் சூழ்ந்த வேப்பூர் அமர்ந்த பெருமாளே

மேல்

#754
அஞ்சுவித பூதமும் கரணம் நாலும் அந்தி பகல் யாதும் அறியாத
அந்த நடு ஆதி ஒன்றும் இலதான அந்த ஒரு வீடு பெறுமாறு
மஞ்சு தவிழ் சாரல் அம் சயில வேடர் மங்கைதனை நாடி வனம் மீது
வந்து சரணார விந்தம் அது பாட வண் தமிழ் விநோதம் அருள்வாயே
குஞ்சர கலாபம் வஞ்சி அபிராம குங்கும படீர அதி ரேக
கும்ப தன மீது சென்று அணையும் மார்ப குன்று தடுமாற இகல் கோப
வெம் சமர சூரன் நெஞ்சு பக வீர வென்றி வடி வேலை விடுவோனே
விம்ப மதில் சூழ நிம்பபுர வாண விண்டல மகீபர் பெருமாளே

மேல்

#755
நாட்டம் தங்கி கொங்கை குவடில் படியாதே நாட்டும் தொண்டர்க்கு அண்ட கமல பதம் ஈவாய்
வாட்டம் கண்டுற்று அண்டத்து அமர படை மீதே மாற்றம் தந்து பந்தி சமருக்கு எதிரானோர்
கூட்டம் கந்தி சிந்தி சிதற பொருவோனே கூற்றன் பந்தி சிந்தை குணம் ஒத்து ஒளிர் வேலா
வேட்ட தொந்தி தந்தி பரனுக்கு இளையோனே வேப்பம் சந்தி கந்த குமர பெருமாளே

மேல்

#756
வாட்டி எனை சூழ்ந்த வினை ஆசைய மு ஆசை அனல் மூட்டி உலை காய்ந்த மழுவாம் என விகாசமொடு
மாட்டி எனை பாய்ந்து கடவோடு அட்டமோடு ஆடிவிடு விஞ்சையாலே
வாய்த்த மலர் சாந்து புழுகான பனிநீர்களோடு காற்று வர தாங்குவன மார்பில் அணி ஆரமொடு
வாய்க்கும் என பூண்டு அழகு அதாக பவிசோடு மகிழ் அன்புகூர
தீட்டு விழி காந்தி மடவார்களுடன் ஆடி வலை பூட்டி விட போந்து பிணியோடு வலி வாதம் என
சேர்ந்துவிட பேர்ந்து வினை மூடி அடியேனும் உனது அன்பு இலாமல்
தேட்டமுற தேர்ந்தும் அமிர்தாம் எனவே ஏகி நமன் ஓட்டி விட காய்ந்து வரி வேதன் அடையாளம் அருள்
சீட்டு வர காண்டு நலி காலன் அணுகா நின் அருள் அன்பு தாராய்
வேட்டுவரை காய்ந்து குற மாதை உறவாடி இருள் நாட்டவரை சேந்த கதிர் வேல் கொடு அமராடி சிறை
மீட்டு அமரர்க்கு ஆண்டவனை வாழ்க நிலையாக வைகும் விஞ்சையோனே
வேற்று உருவில் போந்து மதுராபுரியில் ஆடி வைகை ஆற்றில் மணல் தாங்கும் மழுவாளி என தாதை புரம்
மேட்டை எரித்து ஆண்ட சிவலோகன் விடை ஏறி இடமும் கொள் ஆயி
கோட்டு முலை தாங்கும் இழையான இடை கோடி மதி தோற்றம் என போந்த அழகான சிவகாமி விறல்
கூற்றுவனை காய்ந்த அபிராமி மனது ஆரருள் கந்த வேளே
கூட்டு நதி தேங்கிய வெள்ளாறு தரளாறு திகழ் நாட்டில் உறை சேந்த மயிலா வளி தெய்வானையொடெ
கூற்று விழ தாண்டி எனது ஆகம் அதில் வாழ் குமர தம்பிரானே

மேல்

#757
வாரும் இங்கே வீடு இதோ பணம் பாஷாணம் மால் கடந்தே போம் என் இயலூடே
வாடி பெண்காள் பாயை போடும் என்று ஆசார வாசகம் போல் கூறி அணை மீதே
சேரும் முன் காசு ஆடை வவ்வியும் போதாமை தீமை கொண்டே போம் என அடம் மாதர்
சேர் இடம் போகாமல் ஆசு வந்து ஏறாமல் சீதளம் பாதாரம் அருள்வாயே
நாரணன் சீ ராம கேசவன் கூர் ஆழி நாயகன் பூ ஆயன் மருகோனே
நார தும்பூர் கீதம் ஓத நின்றே ஆடு நாடகம் சேய் தாளர் அருள் பாலா
சூரர் அணங்கோடு ஆழி போய் கிடந்தே வாட சூரியன் தேர் ஓட அயில் ஏவீ
தூ நறும் காவேரி சேரும் ஒள் சீறாறு சூழ் கடம்பூர் தேவர் பெருமாளே

மேல்

#758
கறுவி மை கண் இட்டு இனிது அழைத்து இயல் கவி சொலி சிரித்து உறவாடி
களவு வித்தை இட்டு உளம் உருக்கி முன் கருதி வைத்த வைப்பு அவை சேர
தறு கணில் பறித்து இரு கழுத்து உற தழுவி நெக்குநெக்கு உயிர் சோர
சயன மெத்தையில் செயல் இழக்கும் இ தருணிகட்கு அகப்படலாமோ
பிறவியை தணித்து அருளும் நிட்கள பிரம சித்சுக கடல் மூழ்கும்
பெரு முனி திரள் பரவு செய்ப்பதி ப்ரபல கொச்சையில் சதுர்வேத
சிறுவ நிற்கு அருள் கவிகை நித்தில சிவிகையை கொடுத்து அருள் ஈசன்
செகதலத்தினில் புகழ் படைத்த மெய் திருவரத்துறை பெருமாளே

மேல்

#759
பூ தார் சூடும் கொத்து அலர் குழலியர் பார்த்தால் வேலும் கட்கமும் மதன் விடு
போர்க்கு ஆர் நீடும் கண் சரமொடு நமன் விடு தூதும்
போல் தாய் நாளும் கை பொருள் உடையவர் மேல் தாள் ஆர் தம் பற்றிடு ப்ரமையது
பூட்டா மாயம் கற்ற மை விழியினர் அமுதூறல்
வாய்த்தார் பேதம் செப்பு பொய் விரகியர் நூல் தேய் நூலின் சிற்றிடை இடர்பட
வாள் தாய் வீசும் கர்ப்புர ம்ருகமதம் அகில் ஆரம்
மா பூண் ஆரம் கச்சு அணி முலையினர் வேட்பூணு ஆகம் கெட்டு எனை உனது மெய்
வாக்கால் ஞானம் பெற்று இனி வழிபட அருளாயோ
ஆத்தாள் மால் தங்கைச்சி கனிகை உமை கூத்தாடு ஆநந்த சிவை திரிபுரை
ஆள் பேய பூதம் சுற்றிய பயிரவி புவ நேசை
ஆக்கா யாவும் பற்றியே திரிபுற நோக்கா ஏதும் செற்றவள் திருவிளையாட்டால்
ஈசன் பக்கம் அது உறைபவள் பெறு சேயே
ஏத்தா நாளும் தர்ப்பண செபமொடு நீத்தார் ஞானம் பற்றிய குருபர
யாப்பு ஆராயும் சொல் தமிழ் தரு முருகோனே
ஏற்போர் தாம் வந்து இச்சையின் மகிழ்வோடு வாய்ப்பாய் வீசும் பொன் ப்ரபை நெடு மதிள்
யாழ்ப்பாணாயன் பட்டினம் மருவிய பெருமாளே

மேல்

#760
கழை முத்து மாலை புயல் முத்து மாலை கரி முத்து மாலை மலை மேவும்
கடி முத்து மாலை வளை முத்து மாலை கடல் முத்து மாலை அரவு ஈனும்
அழல் முத்து மாலை இவை முற்று மார்பில் அடைவு ஒத்து உலாவ அடியேன் முன்
அடர் பச்சை மாவில் அருளில் பெணோடும் அடிமை குழாமொடு அருள்வாயே
மழை ஒத்த சோதி குயில் தத்தை போலும் மழலை சொல் ஆயி எமை ஈனும்
மத மத்தம் நீல கள நித்த நாதர் மகிழ் சத்தி ஈனும் முருகோனே
செழு முத்து மார்பின் அமுத தெய்வானை திரு முத்தி மாதின் மணவாளா
சிறை விட்ட சூரர் தளை வெட்டி ஞான திருமுட்டம் மேவும் பெருமாளே

மேல்

#761
சரம் வெற்றி கயலாம் எனும் வேல் விழி சிலை வட்ட புருவார் குழல் கார் முகில்
தனம் முத்து கிரியாம் எனும் நூல் இடை மடவார்கள்
சனு மெத்த பரிவாகிய மா மயல் இடும் முத்தி திகழ் மால் கொடு பாவையர்
தகுத தக்கிட தோதகு தீதென விளையாடும்
விரக துர்க்குண வேசியர் ஆசையர் பணம் மெத்த பறிகாரிகள் மாறிகள்
வித மெத்த கொடு மேவிகள் பாவிகள் அதி போக
மெலிவுற்று குறி நாறிகள் பீறிகள் கலகத்தை செய் மோடிகள் பீடிகள்
விருதிட்டு குடிகேடிகள் சேடிகள் உறவாமோ
பொரு வெற்றி கழை வார் சிலையான் உடல் எரி பட்டு சருகாய் விழவே நகை
புகுவித்த பிறை வாழ் சடையான் இடம் ஒரு மாது
புகழ் சத்தி சிலுகா வணம் மீது உறை சிவ பத்தி பரமேஸ்வரியாள் திரிபுவனத்தை
பரிவாய் முதல் ஈனும் உமை அருள் பாலா
திரையில் பொன் கிரி ஆடவும் வாசுகி புனைவித்து தலைநாள் அமுது ஆர் சுவை
சிவ பத்தர்க்கு இது ஆம் எனவே பகிர் அரி ராமர்
திரு உற்று பணி ஆதிவராகர் தம் மகளை பொன் தன ஆசையொடு ஆடிய
திருமுட்ட பதி வாழ் முருகா சுரர் பெருமாளே

மேல்

#762
மூல முண்டகம் அனுபூதி மந்திர பராபரம் சுடர்கள் மூணு மண்டல அதார
சந்தி முகம் ஆறும் இந்திர தருவும் தளாமேல்
மூதுர அம்பலவர் பீடம் அந்தமும் இலாத பந்த ஒளி ஆயிரம் கிரண
மூணும் இந்து ஒளிர் சோதி விண் படிக விந்து நாதம்
ஓலம் என்று பல தாள சந்தம் இடு சேவை கண்டு அமுதை வாரி உண்டு உலகு இரேழு
கண்டு விளையாடி இந்து கதிர் அங்கி சூலம்
ஓடும் அந்த கலிகால் ஒடுங்க நடு தூணில் தங்க வரி ஞான வண் கயிறு
மீது அணைந்து சத கோடி சந்திர ஒளி சந்தியாதோ
சூலி அந்தரி கபாலி சங்கரி புராரி அம்பரி குமாரி எண் குண சுவாமி
பங்கி சிவகாமி சுந்தரி உகந்த சேயே
சூர சங்கர குமார இந்திர சகாய அன்பர் உபகாரி சுந்தர குகா
எனும் சுருதி ஓலம் ஒன்ற நடனம் கொள் வேலா
சீல வெண் பொடி இடாத வெம் சமணர் மாள வெம் கழுவில் ஏறும் என்று பொடி
நீறு இடும் கமல பாணி சந்திர முக கந்த வேளே
தேவ ரம்பை அமுது ஈண மங்கை தரு மான் அணைந்த புய தீர சங்கர தியாகர்
வந்து உறை நலூர் அமர்ந்து வளர் தம்பிரானே

மேல்

#763
வண்டு அணியும் கமழ் கூந்தலார் விழி அம்பு இயலும் சிலை போந்த வாள் நுதல்
வண் தரளம் திகழ் ஆய்ந்த வார் நகை குயில் போல
வண் பயிலும் குவடு ஆண்ட மார் முலையின் பொறி அம் குமிழ் ஆம்பல் தோள் கர
வஞ்சி எனும் கொடி சேர்ந்த நூல் இடை மடவார் பொன்
கண்டவுடன் களிகூர்ந்து பேசிகள் குண்டுணியும் குரல் சாங்கம் ஓதிகள்
கண் சுழலும்படி தாண்டி ஆடிகள் சதிகாரர்
கஞ்சுளியும் தடி ஈந்து போ என நஞ்சை இடும் கவடு ஆர்ந்த பாவிகள்
கம்பையிலும் சடம் மாய்ந்து நாயனும் உழல்வேனோ
அண்டர் உடன் தவசு ஏந்து மாதவர் புண்டரிகன் திரு பாங்கர் கோ என
அஞ்சல் எனும்படி போந்து வீரமொடு அசுராரை
அங்கம் ஒடுங்கிட மாண்டு ஒட ஆழிகள் எண் கிரியும் பொடி சாம்பர் நூறிட
அந்தகனும் கயிறை ஆங்கு ஐ வீசிட விடும் வேலா
செண்டு அணியும் சடை பாந்தள் நீர் மதி என்பு அணியன் கன சாம்பல் பூசிய
செம் சடலன் சுத சேந்த வேலவ முருகோனே
திங்கள் முகம் தனம் சாந்து மார்பினள் என்றன் உள்ளம் புகு பாங்கி மானோடு
சிந்தை மகிழ்ந்து மயேந்திரம் மேவிய பெருமாளே

மேல்

#764
அலை கடல் சிலை மதன் அந்தி ஊதையும் அரிவையர் வசையுடன் அங்கி போல் வர
அசைவன விடை மணி அன்றில் கோகிலம் அஞ்சி நானும்
அழல் இடு மெழுகு என வெம்பி வேர்வு எழ அகிலொடு ம்ருகமத நஞ்சு போல் உற
அணி பணி மணி பல வெந்து நீறு எழ அங்கம் வேறாய்
முலை கனல் சொரி வர முன்பு போல் நினைவு அழி வசம் அறஅற நின்று சோர்வுற
முழுது கொள் விரகு அனல் மொண்டு வீசிட மங்கிடாதே
முருகு அவிழ் திரள் புயம் உந்து வேல் அணி முளரியொடு அழகிய தொங்கல் தாரினை
முனிவு அற நினது அருள்தந்து என் மாலை முனிந்திடாதோ
சிலை நுதல் கயல் விழி செம் சொல் வானவி திரிபுரை பயிரவி திங்கள் சூடிய
திகழ் சடை நெடியவள் செம்பொன் மேனியள் சிங்கம் ஏறி
திரள் படை அலகைகள் பொங்கு கோடுகள் திமிலையொடு அறை பறை நின்று மோதிட
சிவனுடன் நடம் வரு மங்கை மாது உமை தந்த வேளே
மலைதனில் ஒரு முநி தந்த மாதுதன் மலர் அடி வருடியெ நின்று நாள்தொறும்
மயில் பயில் குயில் கிளி வம்பிலே கடி தொண்டினோனே
மழை முகில் தவழ் தரும் அண்டு கோபுர மதிள் வயல் புடையுற விஞ்சு காழியில்
வரும் ஒரு கவுணியர் மைந்த தேவர்கள் தம்பிரானே

மேல்

#765
இரதமான தேன் ஊறல் அதரமான மா மாதர் எதிர் இலாத பூண் ஆரம் முலை மீதே
இனிது போடும் ஏகாசம் உடையினாலும் ஆலால விழியினாலும் மால் ஆகி அநுராக
விரகம் ஆகியே பாயல் இடைவிடாமல் நாள்தோறும் ம்ருகமதாதி சேர் ஓதி நிழல் மூழ்கி
விளையும் மோக மா மாயை கழலுமாறு நாயேனும் விழலனாய் விடாதே நின் அருள்தாராய்
அரகரா எனா மூடர் திரு வெண் நீறு இடா மூடர் அடிகள் பூசியா மூடர் கரையேற
அறிவு நூல் கலா மூடர் நெறியிலே நிலா மூடர் அறம் விசாரியா மூடர் நரகு ஏழில்
புரள வீழ்வர் ஈராறு கர விநோத சேய் சோதி புரணம் பூரணாகார முருகோனே
புயல் உலாவு சேணாடு பரவி நாளும் ஈடேறு புகலி மேவி வாழ் தேவர் பெருமாளே

மேல்

#766
ஊன தசை தோல்கள் சுமந்த காய பொதி மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை மறை நாலும்
ஓதப்படும் நாலுமுகன்தனால் உற்றிடும் கோலம் எழுந்து ஓடி தடுமாறி உழன்று தளர்வாகி
கூனி தடியோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த கூள சடம் ஈதை உகந்து புவி மீதே
கூச பிரமாண ப்ரபஞ்ச மாய கொடு நோய்கள் அகன்று கோல கழலே பெற இன்று அருள்வாயே
சேன குரு கூடலில் அன்று ஞான தமிழ் நூல்கள் பகர்ந்து சேனை சமணோர் கழுவின்கண் மிசை ஏற
தீர திருநீறு புரிந்து மீன கொடியோன் உடல் துன்று தீமை பிணி தீர உவந்த குருநாதா
கான சிறு மானை நினைந்து ஏனல் புனம் மீது நடந்து காதல் கிளியோடு மொழிந்து சிலை வேடர்
காண கணியாக வளர்ந்து ஞான குற மானை மணந்து காழி பதி மேவி உகந்த பெருமாளே

மேல்

#767
ஒய்யார சிலையாம் என வாசனை மெய் ஆர பணி பூஷண மாலைகள்
உய்யா நல் கலையே கொடு மா மத இதமாகி
ஒவ்வார் இப்படியோர் எனவே இரு கை ஆர் கணை மோதிரம் ஏய் பல
உள்ளார் செப்பிட ஏமுற நாளிலும் உடல் பேணி
செய்வார் இப்படியே பல வாணிபம் இய்யார் இல் பணமே ஒரு காசிடை
செய்யார் சற்பனைகாரர் பிசாசர் உன் அடி பேணா
செய்வாரில் படு நான் ஒரு பாதகன் மெய்யா எப்படி ஓர் கரை சேர்வது
செய்யா அற்புதமே பெற ஓர் பொருள் அருள்வாயே
மை ஆர் அ கிரியே பொடியாய் விட பொய் சூர் பதியே கெட வானவர்
வையாய் பொன் சரணா எனவே தொழ விடும் வேலா
வையாளி பரி வாகன மா கொளு துவ்வு ஆழி கடல் ஏழ் மலை தூளி செய்
மை போல கதிர் ஏய் நிறமாகிய மயில் வாழ்வே
தெய்வானைக்கு அரசே குற மான் மகிழ் செய்யா முத்தமிழ் ஆகரனே புகழ்
தெய்வீக பரமா குருவே என விருது ஊத
திய்யார் அ கழு ஏறிட நீறு இடு கையா அற்புதனே மா புர
செய் காழி பதி வாழ் முருகா சுரர் பெருமாளே

மேல்

#768
கள் காம க்ரோதத்தே கண் சீமிழ்த்தோர்கட்கு கவி பாடி
கச்சா பிச்சாக தாவித்து ஆரத்தே அ கொட்களை நீள
கொள்கால் அ கோல கோணத்தே இட்டு ஆசை பட்டிடவே வை
கொள் தானக்கு ஊனுக்கா எய்த்தேன் இ தீது அத்தை களைவாய்
வெட்காமல் பாய் சுற்று ஊமர் சேர் விக்கானத்தை தரி மாறன்
வெப்பு ஆற பாடி காழிக்கே புக்காய் வெற்பில் குற மானை
முள் கானில் கால் வைத்து ஓடிப்போய் முன் சார் செச்சை புய வீரா
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#769
கொங்கு உலாவிய குழலினு நிழலினு நஞ்சு அளாவிய விழியினும் இரணிய
குன்று போல் வளர் முலையினு நிலையினும் மட மாதர்
கொம்பு சேர்வன இடையினு நடையினும் அன்புகூர்வன மொழியினும் எழில் குடிகொண்ட
சேய் இதழினு நகையினும் மனது ஆய
சங்கையாளியை அணு இடை பிள அளவு இன் சொல் வாசக மொழிவன இவை இல
சம்ப்ர தாயனை அவலனை ஒளி திகழ் இசை கூரும்
தண்டை நூபுரம் அணுகிய இரு கழல் கண்டு நாள் அவம் மிகை அற விழி அருள்
தந்த பேர் அருள் கனவிலும் நனவிலும் மறவேனே
வங்க வாரிதி முறையிட நிசிசரர் துங்க மா முடி பொடிபட வட அனல்
மங்கி நீறு எழ அலகைகள் நடம் இட மயில் ஏறி
வஞ்ச வேல் கொடு முனிபவ அழகிய சண்பை மா நகர் உறையும் ஒர் அறுமுக
வந்த வானவர் மனதினில் இடர் கெட நினைவோனே
பங்க வீரியர் பறி தலை விரகினர் மிஞ்சு பாதகர் அற நெறி பயன் இலர்
பந்தம் மேவிய பகடிகள் கபடிகள் நிலை கேடர்
பண்பு இலாதவர் கொலை செயும் மனதினர் இங்கு எணாயிரர் உயரிய கழு மிசை
பஞ்சபாதகர் முனை கெட அருளிய பெருமாளே

மேல்

#770
சந்தனம் பரிமள புழுகொடு புனை கொங்கை வஞ்சியர் சரியொடு கொடு வளை
தங்கு செம் கையர் அனம் என வரு நடை மட மாதர்
சந்ததம் பொலி அழகு உள வடிவினர் வஞ்சகம் பொதி மனதினர் அணுகினர்
தங்கள் நெஞ்சகம் மகிழ்வுற நிதி தர அவர் மீதே
சிந்தை வஞ்சக நயமொடு பொருள் கவர் தந்த்ர மந்த்ரிகள் தரணியில் அணைபவர்
செம்பொன் இங்கு இலை எனில் மிகுதியும் முனிவாகி
திங்கள் ஒன்றினில் நெனல் பொருள் உதவிலன் என்று சண்டைகள் புரி தரு மயலியர்
சிங்கியும் கொடு மிடிமையும் அகல நின் அருள்கூர்வாய்
மந்தர குடை என நிரை உறு துயர் சிந்த அன்று அடர் மழைதனில் உதவிய
மஞ்சு எனும்படி வடிவுறும் அரி புகழ் மருகோனே
மங்கை அம்பிகை மகிழ் சரவணபவ துங்க வெம் கயமுகன் மகிழ் துணைவ நல்
வஞ்சி தண் குறமகள் பத மலர் பணி மணவாளா
தந்த னந்தன தனதன தன என வண்டு விண்டு இசை முரல் தரு மணம் மலர்
தங்கு சண்பக முகில் அளவு உயர் தரு பொழில் மீதே
சங்கு நல் குமிழ் தரளமும் எழில் பெறு துங்க ஒண் பணி மணிகளும் வெயில் விடு
சண்பை அம் பதி மருவிய அமரர்கள் பெருமாளே

மேல்

#771
சருவி இகழ்ந்து மருண்டு வெகுண்டு உறு சமயமும் ஒன்றிலை என்றவரும் பறி
தலையரு நின்று கலங்க விரும்பிய தமிழ் கூறும்
சலிகையு நன்றியும் வென்றியும் மங்கள பெருமைகளும் கனமும் குணமும் பயில்
சரவணமும் பொறையும் புகழும் திகழ் தனி வேலும்
விருது துலங்க சிகண்டியில் அண்டரும் உருகி வணங்க வரும் பதமும் பல
விதரணமும் திறமும் தரமும் தினை புன மானின்
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து அடி வருடி மணந்து புணர்ந்ததுவும் பல
விஜயமும் அன்பின் மொழிந்துமொழிந்து இயல் மறவேனே
கருதி இலங்கை அழித்து விடும்படி அவுணர் அடங்க மடிந்து விழும்படி
கதிரவன் இந்து விளங்கி வரும்படி விடு மாயன்
கட கரி அஞ்சி நடுங்கி வருந்திடு மடுவினில் வந்து உதவும் புயல் இந்திரை
கணவன் அரங்க முகுந்தன் வரும் சகடு அற மோதி
மருது குலுங்கி நலங்க முனிந்திடு வரதன் அலங்கல் புனைந்து அருளும் குறள்
வடிவன் நெடும் கடல் மங்க ஓர் அம்பு கை தொடும் மீளி
மருக புரந்தரனும் தவம் ஒன்றிய பிரமபுரம்தனிலும் குகன் என்பவர்
மனதினிலும் பரிவு ஒன்றி அமர்ந்து அருள் பெருமாளே

மேல்

#772
சிந்துற்று எழு மா மதி அங்கி திரளாலே தென்றல் தரு வாசம் மிகுந்துற்று எழலாலே
அந்தி பொழுதாகிய கங்குல் திரளாலே அன்புற்று எழு பேதை மயங்கி தனி ஆனாள்
நந்து உற்றிடு வாரியை மங்க திகழாயே நஞ்சு ஒத்து ஒளிர் வேலினை உந்தி பொரு வேளே
சந்த கவி நூலினர் தம் சொற்கு இனியோனே சண்பை பதி மேவிய கந்த பெருமாளே

மேல்

#773
செக்கர் வான பிறைக்கு இக்கு மாரற்கு அல தெற்கில் ஊதைக்கு அனல் தணியாத
சித்ர வீணைக்கு அலர் பெற்ற தாயர்க்கு அவ சித்தம் வாடி கன கவி பாடி
கை கபோல கிரி பொன் கொள் ராசி கொடை கற்ப தாரு செக த்ரிய பானு
கற்ற பேர் வைப்பு என செத்தை யோகத்தினர் கைக்குள் நான் வெட்கி நிற்பது பாராய்
சக்ரபாணிக்கும் அ பத்மயோனிக்கும் நித்த ப்ரதாபர்க்கும் எட்ட அரிது ஆய
தத்வ வேதத்தின் உற்பத்தி போதித்த அ தத்வ ரூப கிரி புரை சாடி
கொக்கிலே புக்கு ஒளித்திட்ட சூர் பொட்டு எழ குத்து ராவுத்த பொன் குமரோனே
கொற்றவா உற்பல செச்சை மாலை புய கொச்சை வாழ் முத்தமிழ் பெருமாளே

மேல்

#774
தினமணி சார்ங்கபாணி என மதிள் நீண்டு சால தினகரன் ஏய்ந்த மாளிகையில் ஆரம்
செழு மணி சேர்ந்த பீடிகையில் இசை வாய்ந்த பாடல் வயிரியர் சேர்ந்து பாட இருபாலும்
இன வளை பூண் கையார் கவரி இட வேய்ந்து மாலை புழுகு அகில் சாந்து பூசி அரசாகி
இனிது இறுமாந்து வாழும் இருவினை நீண்ட காயம் ஒருபிடி சாம்பலாகி விடலாமோ
வனசரர் ஏங்க வான முகடு அற ஓங்கி ஆசை மயிலொடு பாங்கிமார்கள் அருகாக
மயிலொடு மான்கள் சூழ வள வரி வேங்கையாகி மலை மிசை தோன்று மாய வடிவோனே
கன சமண் மூங்கர் கோடி கழு மிசை தூங்க நீறு கருணை கொள் பாண்டி நாடு பெற வேத
கவி தரு காந்த பால கழுமல பூந்தராய் கவுணியர் வேந்த தேவர் பெருமாளே

மேல்

#775
பூமாது உரமே அணி மால் மறை வாய் நாலு உடையோன் மலி வானவர்
கோமான் முநிவோர் முதல் யாரும் இயம்பு வேதம்
பூராயமதாய் மொழி நூல்களும் ஆராய்வது இலாத அடல் ஆசுரர்
போரால் மறைவாய் உறு பீதியின் வந்து கூடி
நீ மாறு அருளாய் என ஈசனை பா மாலைகளால் தொழுதே திருநீறு
ஆர் தரு மேனிய தேன் இயல் கொன்றையோடு
நீரேர் தரு சானவி மா மதி காகோதர மாதுளை கூவிளை
நேரோடம் விளா முதலார் சடை எம்பெருமானே
போமாறு இனி வேறு எது ஓது எனவே ஆர் அருளால் அவர் ஈதரு
போர் வேலவ நீல கலாவி இவர்ந்து நீடு
பூலோகமொடு அறு லோகமும் நேர் ஓர் நொடியே வருவோய் சுர
சேனாபதியாயவனே உனை அன்பினோடும்
காமா அறு சோம ம ஆனன தாமா மணமார் தரு நீப சுதாமா
எனவே துதியாது உழல் வஞ்சனேனை
காவாய் அடி நாள் அசுரேசரையே சாடிய கூர் வடி வேலவ
கார் ஆர் தரு காழியில் மேவிய தம்பிரானே

மேல்

#776
மதன சொல் காரக்காரிகள் பவள கொப்பு ஆட சீறிகள்
மருள பட்டு ஆடைக்காரிகள் அழகாக
மவுன சுட்டு ஆடி சோலிகள் இசலிப்பித்து ஆசைக்காரிகள்
வகை முத்து சார சூடிகள் விலைமாதர்
குதலை சொல் சார பேசிகள் நரக அச்சில் சாடி பீடிகள்
குசலை கொள் சூலை காலிகள் மயல் மேலாய்
கொளுவி கட்டு ஆசை பாசனை பவம் துக்கக்கார சூதனை
குமுத பொன் பாத சேவையில் அருள்வாயே
கதற கல் சூரை கார் கடல் எரிய திக்கு ஊறில் பாழ்பட
ககனம் கட்டாரிக்கா இரை இடும் வேலா
கதிர் சுற்றிட்ட ஆசை பால் கிரி உறை பச்சை பாச கோகில
கவுரி பொன் சேர்வை சேகர முருகோனே
திதலை பொன் பாணி கார் குயில் அழகில் பொன் தோகை பாவையை
தினம் உற்று சார தோள் மிசை அணைவோனே
திலத பொட்டு ஆசை சேர் முக மயில் உற்றிட்டு ஏறி காழியில்
சிவன் மெச்ச காதுக்கு ஓதிய பெருமாளே

மேல்

#777
விடம் என மிகுத்த வடவு அனல் என உயர்த்து ரவி விரி கதிர் என பரவு நிலவாலே
விதனம் மிக உற்று வரு ரதிபதி கடுத்து விடு விரை தரு இதழ் கமல கணையாலே
அடல் அமர் இயற்று திசையினில் மருவி மிக்க அனல் அழலொடு கொதித்து வரு கடை நாளில்
அணுகி நமன் எற்ற மயல் கொளும் அ நிலை சித்தம் உற அவசமோடு அணைத்து அருள வரவேணும்
அடவிதனில் மிக்க பரு வரையர் அளித்த திரு அணைய மயில் முத்த மணி சுர யானை
அழகிய மணி கலச முலைகளில் மயக்கமுறும் அதி விரக சித்ர மணி மயில் வீரா
கட தட களிற்று முகர் இளையவ கிரி குமரி கருணையோடு அளித்த திற முருகோனே
கமல மலர் ஒத்த விழி அரி மருக பத்தர் பணி கழுமல நகர் குமர பெருமாளே

மேல்

#778
அளி சுழல் அளக காடு காட்டவும் விழி கொடு கலவி தீயை மூட்டவும்
அமளியில் முடிய போது போக்கவும் இளைஞோர்கள்
அவர் வசம் ஒழுகி காசு கேட்கவும் அழகிய மயிலில் சாயல் காட்டவும்
அளவிய தெருவில் போய் உலாத்தவும் அதி பார
இள முலை மிசையில் தூசு நீக்கவும் முகமொடு முகம் வைத்து ஆசை ஆக்கவும்
இரு நிதி இலரை தூர நீக்கவும் இனிதாக
எவரையும் அளவி போய் அணாப்பவும் நினைபவர் அளவில் காதல் நீக்கி என்
இடரது தொலைய தாள்கள் காட்டி நின் அருள்தாராய்
நெளி படு களம் உற்று ஆறு போல் சுழல் குருதியில் முழுகி பேய்கள் கூப்பிட
நிணமது பருகி பாறு காக்கைகள் கழுகு ஆட
நிரைநிரை அணியிட்டு ஓரி ஆர்த்திட அதிர் தரு சமரில் சேனை கூட்டிய
நிசிசரர் மடிய சாடு வேல் கொடு பொரும் வீரா
களி மயில்தனில் புக்கு ஏறு தாட்டிக அழகிய கனக தாமம் ஆர்த்து ஒளிர்
கனகிரி புய முத்தாரம் ஏற்று அருள் திரு மார்ப
கரியவனகரின் தேவ பார்ப்பதி சுத குற நல் பாவை தாள் பணி
கருணைய தமிழில் பாடல் கேட்டு அருள் பெருமாளே

மேல்

#779
உரத்து உறை போத தனியான உனை சிறிது ஓத தெரியாது
மரத்து உறை போல் உற்று அடியேனும் மலத்து இருள் மூடி கெடலாமோ
பரத்து உறை சீலத்தவர் வாழ்வே பணித்து அடி வாழ்வுற்று அருள்வோனே
வரத்து உறை நீதர்க்கு ஒரு சேயே வயித்தியநாத பெருமாளே

மேல்

#780
எத்தனை கோடிகோடி விட்டு உடல் ஓடி ஆடி எத்தனை கோடி போனது அளவு ஏதோ
இப்படி மோக போகம் இப்படி ஆகிஆகி இப்படி ஆவது ஏது இனிமேலோ
சித்திடில் சீசிசீசி குத்திரம் மாய மாயை சிக்கினில் ஆயும் மாயும் அடியேனை
சித்தினில் ஆடலோடு முத்தமிழ் வாணர் ஓது சித்திர ஞான பாதம் அருள்வாயே
நித்தமும் ஓதுவார்கள் சித்தமே வீடு அதாக நிர்த்தம் அது ஆடுமாறு முகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சு உருவான மூணு நெட்டிலை சூலபாணி அருள் பாலா
பை தலை நீடும் ஆயிர தலை மீது பீறும் பத்திர பாத நீல மயில் வீரா
பச்சு இள பூக பாளை செய் கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் பெருமாளே

மேல்

#781
பாடகம் சிலம்போடு செச்சை மணி கோ என கலந்து ஆடு பொன் சரணர்
பாவை சித்திரம் போல்வர் பட்டு உடையின் இடை நூலார்
பார பொன் தனம் கோபுர சிகரமாம் என படர்ந்த ஏமலிப்பர் இதம்
பாகு நல் கரும்போடு சர்க்கரையின் மொழி மாதர்
ஏடக குலம் சேரு மை குழலொடு ஆடு அளி குலம் பாட நல் தெருவில்
ஏகி புள் குலம் போல பற்பல சொல் இசை பாடி
ஏறி இச்சகம் பேசி எத்தி இதம் வாரும் முன் பணம் தாரும் இட்டம் என
ஏணி வைத்து வந்து ஏற விட்டிடுவர் செயலாமோ
சேடன் உக்க சண்டாள அரக்கர் குலம் மாள அட்ட குன்று ஏழு அலை கடல்கள்
சேர வற்ற நின்று ஆட இல் கரம் ஈரறு தோள் மேல்
சேண் நிலத்தர் பொன் பூவை விட்டு இருடியோர்கள் கட்டியம் பாட எட்டு அரசர்
சேசெ ஒத்த செந்தாமரை கிழவி புகழ் வேலா
நாடு அகம் புனம் காவலுற்ற சுக மோகனத்தி மென் தோளி சித்ர வளி
நாயகி கிதம் பாடி நித்தம் அணி புனைவோனே
ஞான வெற்பு உகந்து ஆடும் அத்தர் தையல் நாயகிக்கு நன் பாகர் அக்கு அணியும்
நாதர் மெச்ச வந்து ஆடு முத்தம் அருள் பெருமாளே

மேல்

#782
மாலினால் எடுத்த கந்தல் சோறினால் வளர்ந்த பொந்தி மாறி ஆடு எடுத்த சிந்தை அநியாய
மாயையால் எடுத்து மங்கினேனை ஐயா எனக்கு இரங்கி வாரும் ஐயா இனி பிறந்து இறவாமல்
வேலினால் வினை கணங்கள் தூள் அதா எரித்து உன்தன் வீடு தா பரித்த அன்பர் கணமூடே
மேவி யான் உனை போல் சிந்தையாகவே களித்து கந்த வேளே ஆம் என பரிந்து அருள்வாயே
காலினால் என பரந்த சூரர் மாள வெற்றி கொண்ட கால பாநு சத்தி அம் கை முருகோனே
காம பாணம் அட்டு அநந்த கோடி மாதரை புணர்ந்த காளை ஏறு கர்த்தன் எந்தை அருள் பாலா
சேலை நேர் விழி குறம் பெண் ஆசை தோளும் புணர்ந்து சீரை ஓது பத்தர் அன்பில் உறைவோனே
தேவர் மாதவர் சித்தர் தொண்டர் ஏக வேளூருக்கு உகந்த சேவல் கேது சுற்று கந்த பெருமாளே

மேல்

#783
மூலாதாரமோடு ஏற்றி அங்கியை ஆறு ஆதாரமோடு ஓட்டி யந்திர
மூலா வாயுவை ஏற்று நல் சுழி முனையூடே
மூதாதார மருப்பில் அந்தர நாதா கீதம் அது ஆர்த்திடும் பரம்
ஊடே பால் ஒளி ஆத்துமன்தனை விலகாமல்
மால் ஆடு ஊனொடு சேர்த்தி இதம் பெற நானா வேத ம சாத்திரம் சொல்லும்
வாழ் ஞானா புரி ஏற்றி மந்திர தவிசூடே
மாதா நாதனும் வீற்றிருந்திடும் வீடே மூள் ஒளி காட்டி சந்திர
வாகார் தேன் அமுது ஊட்டி என்றனை உடன் ஆள்வாய்
சூலாள் மாது உமை தூர்த்த சம்பவி மாதா ராப்பகல் காத்து அமைந்த அனை
சூடோடி ஈர் வினை வாட்டி மைந்தர் என எமை ஆளும்
தூயாள் மூவரை நாட்டும் எந்தையர் வேளூர் வாழ் வினை தீர்த்த சங்கரர்
தோய் சாரூபர் ஓடு ஏற்றி இருந்தவள் அருள் பாலா
வேலா ஏழ் கடல் வீட்டி வஞ்சக மூடார் சூரரை வாட்டி அந்தகன்
வீடு ஊடு ஏவிய காத்திரம் பரி மயில் வாழ்வே
வேதா நால் தலை சீ கொளும்படி கோலாகாலம் அது ஆட்டு மந்திர
வேலா மால் மகளார்க்கு இரங்கிய பெருமாளே

மேல்

#784
மேக வார் குழல் அது ஆட தன பாரம் மிசை ஆரம் ஆட குழை ஆட விழி ஆட பொறி
மேனி வாசனைகள் வீச அல்குல் மோதி பரிமளம் ஏற
மீன் நுல் ஆடை இடை ஆட மயில் போல நடை ஓலம்ஓலம் என பாத மணி நூபுரமும்
மேல் வில் வீச பணி கீர குயில் போல குரல் முழவு ஓசை
ஆகவே அவைகள் கூடிடுவர் வீதி வருவோரை வாரும் எனவே சரசமோடு உருகி
ஆசை போல மனையே கொடு அணைவார்கள் குவடு அதி பார
ஆணி மா முலையின் மூழ்கி சுக வாரி கொடு வேர்வை பாய அணையூடு அமளி ஆடி இடரான
சூலை பல நோய்கள் கடல் ஆடி உடல் உழல்வேனோ
நாகலோகர் மதிலோகர் பகலோகர் விதி நாடுளோர்கள் அமரோர்கள் கணநாதர் விடைநாதர்
வேதியர்கள் ஆதி சரசோதி திகழ் முநிவோர்கள்
நாதரே நரர் மன் நாரணர் புராண வகை வேத கீத ஒலி பூரை இது பூரை என
நாசமாய் அசுரர் மேவி கிரி தூளி பட விடும் வேலா
தோகை மாது குற மாது அமுத மாதுவின் நல் தோழி மாது வளி நாயகி மினாளை சுக
சோகமோடு இறுகி மார் முலை விடாமல் அணை புணர்வோனே
தோள் இராறு முகம் ஆறு மயில் வேல் அழகு மீது எய்வான வடிவா தொழுது எணா வயனர்
சூழு காவிரியும் வேளூர் முருகா அமரர் பெருமாளே

மேல்

#785
ஏட்டின் விதிப்படியே கொடு மா புர வீட்டில் அடைத்து இசைவே கசை மூணு அதில்
ஏற்றி அடித்திடவே கடல் ஓடம் அது என ஆகி
ஏற்கும் என பொருள் ஆசை பெணாசை கொளா து என திரியா பரியா தவம்
ஏற்றி இருப்பிடமே அறியாமலும் உடல் பேணி
பூட்டு சரப்பளியே மதனாம் என ஆட்டி அசைத்தி இயலே திரி நாளையில்
பூத்த மல குகையோ பொதி சோறோ என கழு காகம்
போற்றி நமக்கு இரையாம் எனவே கொள நாட்டில் ஒடுக்கு எனவே விழு போதினில்
பூட்டு பணி பத மா மயிலா அருள்புரிவாயே
வீட்டில் அடைத்து எரியே இடு பாதகன் நாட்டை விடுத்திடவே பல சூதினில்
வீழ்த்த விதிப்படியே குரு காவலர் வனமே போய்
வேற்றுமை உற்று உருவோடு இயல் நாளது பார்த்து முடித்திடவே ஒரு பாரத
மேல் புனைவித்த மகா வீர மாயவன் மருகோனே
கோட்டை அழித்த அசுரர் பதி கோ என மூட்டி எரித்த பராபர சேகர
கோத்த மணி கதிரே நிகராகிய வடி வேலா
கூற்று மரித்திடவே உதை பார்வதி யார்க்கும் இனித்த பெணாகிய மான் மகள்
கோட்டு முலைக்கு அதிபா கடவூர் உறை பெருமாளே

மேல்

#786
சூலம் என ஓடு சர்ப்ப வாயுவை விடாது அடக்கி தூய ஒளி காண முத்தி விதமாக
சூழும் இருள் பாவகத்தை வீழ அழல் ஊடு எரித்து சோதி மணி பீடம் இட்ட மடம் மேவி
மேலை வெளி ஆயிரத்து நாலிரு பராபரத்தின் மேவி அருணாசலத்தினுடன் மூழ்கி
வேலு மயில்வாகன ப்ரகாசம் அதிலே தரித்து வீடும் அதுவே சிறக்க அருள்தாராய்
ஓல அசுரர் ஆழி எட்டு வாளகிரி மாய வெற்பும் ஊடுருவ வேல் தொடுத்த மயில் வீரா
ஓது குற மான் வனத்தில் மேவி அவள் கால் பிடித்து உள் ஓம் எனும் உபதேச வித்தொடு அணைவோனே
காலனொடு மேதி மட்க ஊழி புவி மேல் கிடத்து காலன் இடம் மேவு சத்தி அருள் பாலா
காலம் முதல் வாழ் புவிக்கு அதார நகர் கோபுரத்துள் கான மயில் மேல் தரித்த பெருமாளே

மேல்

#787
அருக்கி மெத்தென சிரித்து மை கணிட்டு அழைத்து இதப்பட சில கூறி
அரை பணத்தை விற்று உடுத்த பட்டு அவிழ்த்து அணைத்து இதழ் கொடுத்து அநுராகத்து
உருக்கி மட்டு அற பொருள் பறிப்பவர்க்கு உள கருத்தினில் ப்ரமை கூராது
உரைத்து செய்ப்பதி தலத்தினை துதித்து உனை திருப்புகழ் பகர்வேனோ
தருக்க மற்கட படை பலத்தினில் தட பொருப்பு எடுத்து அணையாக
சமுத்திரத்தினை குறுக்க அடைத்து அதில் தரித்த அரக்கர் பொட்டு எழவே போர்
செருக்கு விக்ரம சரத்தை விட்டு உற செயித்த உத்தம திரு மாமன்
திரு தகப்பன் மெச்சு ஒருத்த முத்தமிழ் திரு படிக்கரை பெருமாளே

மேல்

#788
அமுதினை மெத்த சொரிந்து மாவினது இனிய பழத்தை பிழிந்து பால் நறவு
அதனொடு தித்தித்த கண்டு அளாவிய இதழாராய்
அழகிய பொன் தட்டில் நொண்டு வேடையில் வரு பசியார்க்கு உற்ற அன்பினால் உணவு
அருள்பவர் ஒத்து தளர்ந்த காமுகர் மயல் தீர
குமுதம் விளர்க்க தடம் குலாவிய நிலவு எழு முத்தை புனைந்த பாரிய
குலவிய சித்ர ப்ரசண்ட பூரண தன பார
குவடு இளக கட்டி உந்தி மேல் விழும் அவர் மயலில் புக்கு அழிந்த பாவியை
குரை கழல் பற்றி புகழ்ந்து வாழ்வுற அருள்வாயே
வமிசம் மிகுத்து ப்ரபஞ்சம் யாவையும் மறுகிட உக்ர கொடும்பையான புன்
மதி கொடு அழிந்திட்டு இடும்பை ராவணன் மதியாமே
மறு அறு கற்பில் சிறந்த சீதையை விதனம் விளைக்க குரங்கினால் அவன்
வமிசம் அறுத்திட்டு இலங்கு மாயவன் மருகோனே
எமது மலத்தை களைந்து பாடு என அருள அதற்கு புகழ்ந்து பாடிய
இயல் கவி மெச்சிட்டு உயர்ந்த பேறு அருள் முருகோனே
எழில் வளை மிக்க தவழ்ந்து உலாவிய பொனி நதி தெற்கில் திகழ்ந்து மேவிய
இணை இலி ரத்ன சிகண்டி ஊர் உறை பெருமாளே

மேல்

#789
ஆடல் மா மத ராஜன் பூசல் வாளியிலே நொந்து ஆகம் வேர்வுற மால் கொண்டு அயராதே
ஆரம் வாள் நகையார் செம் சேலின் ஏவலிலே சென்று ஆயு வேதனையே என்று உலையாதே
சேடன் மா முடி மேவும் பார் உளோர்களுள் நீடும் த்யாகம் ஈபவர் யார் என்று அலையாதே
தேடி நான்மறை நாடும் காடும் ஓடிய தாளும் தேவ நாயக நான் இன்று அடைவேனோ
பாடு நான்மறையோனும் தாதை ஆகிய மாலும் பாவைபாகனும் நாளும் தவறாதே
பாக நாள்மலர் சூடும் சேகரா மதில் சூழ் தென் பாகை மா நகர் ஆளும் குமரேசா
கூடலான் முது கூன் அன்று ஓட வாது உயர் வேதம் கூறு நாவல மேவும் தமிழ் வீரா
கோடி தானவர் தோளும் தாளும் வீழ உலாவும் கோல மா மயில் ஏறும் பெருமாளே

மேல்

#790
ஈளை சுரம் குளிர் வாதம் எனும் பல நோய்கள் வளைந்து அற இளையாதே
ஈடுபடும் சிறு கூடு புகுந்து இடுகாடு பயின்று உயிர் இழவாதே
மூளை எலும்புகள் நாடி நரம்புகள் வேறு படும் தழல் முழுகாதே
மூலம் எனும் சிவயோக பதம்தனில் வாழ்வு பெறும்படி மொழிவாயே
வாளை நெருங்கிய வாவியிலும் கயல் சேல்கள் மறிந்திட வலை பீறா
வாகை துதைந்து அணி கேதகை மங்கிட மோதி வெகுண்டு இள மதி தோயும்
பாளை நறும் கமழ் பூக வனம் தலை சாடி நெடும் கடல் கழி பாயும்
பாகை வளம் பதி மேவி வளம் செறி தோகை விரும்பிய பெருமாளே

மேல்

#791
குவளை பொருது இரு குழையை முடுகிய கோல வேல் விழி மடவார்தம்
கொடிய ம்ருகமத புளக தன கிரி கூடி நாள்தொறு மயல் ஆகி
துவள உருகிய சரச விதம் அது சோர வாரிதி அலையூடே
சுழலும் எனது உயிர் மவுன பரம சுகம் மகா உததி படியாதோ
கவள கர தல கரட விகடக போல பூதர முகமான
கடவுள் கணபதி பிறகு வரும் ஒரு காரணா கதிர் வடி வேலா
பவள மரகத கநக வயிரக பாட கோபுர அரி தேரின்
பரியும் இடறிய புரிசை தழுவிய பாகை மேவிய பெருமாளே

மேல்

#792
அனல் அப்பு அரி புக்க குண த்ரயம் வைத்து அடர் பொய் குருதி குடில் பேணா
அவல கவலை சவலை கலை கற்று அதனில் பொருள் சற்று அறியாதே
குனகி தனகி கனல் ஒத்து உருகி குலவி கலவி கொடியார்தம்
கொடுமை கடுமை குவளை கடையில் குலைபட்டு அலையக்கடவேனோ
தினை வித்தின நல் புனம் உற்ற குற திருவை புணர் பொன் புய வீரா
தெளியத்தெளிய பவள சடில சிவனுக்கு ஒரு சொல் பகர்வோனே
கனக சிகர குல வெற்பு உருவ கறுவி பொரு கை கதிர் வேலா
கழியை கிழிய கயல் தத்தும் இடை கழியில் குமர பெருமாளே

மேல்

#793
இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன சொப்பனத்திலும் அற்ற
எனக்கு இயலுக்கு இசைக்கு எதிர் எ புலவோர் என்று
எடுத்து முடி தட கை முடித்து இரட்டை உடுத்து இலச்சினை இட்டு
அடைப்பை இட ப்ரபுத்துவம் உற்று இயல் மாதர்
குரக்கு முகத்தினை குழலை பனி பிறை ஒப்பு என புயல் ஒப்பு என
குறுகி கலைக்குள் மறைத்திடு மானின்
குளப்பு அடியில் சளப்பம் இடும் இ பவ கடலை கடக்க இனி
குறித்து இரு பொன் கழல் புணையை தருவாயே
அரக்கர் அடல் கடக்க அமர் களத்து அடைய புடைத்து உலகுக்கு
அலக்கண் அற குல கிரி பொட்டு எழ வாரி
அனைத்தும் வறப்புற சுரர் கற்பக புரியில் புக கமலத்தனை
சிறையிட்டு இடைக்கழியில் பயில்வோனே
கர கரடம் கழிற்று மருப்பு உலக்கையினில் கொழித்த மணி
கழை தரளத்தினை தினையில் குறுவாளை
கணி குறவ குறிச்சியினில் சிலை குறவர்க்கு இலச்சை வர
கயத்தொடு கை பிடித்த மண பெருமாளே

மேல்

#794
பகரு முத்தமிழ் பொருளு மெய் தவ பயனும் எப்படி பல வாழ்வும்
பழைய முத்தியில் பதமு நட்புற பரவு கற்பக தரு வாழ்வும்
புகர் இல் புத்தியுற்று அரசு பெற்று உற பொலியும் அற்புத பெருவாழ்வும்
புலன் அகற்றிட பல விதத்தினை புகழ் பலத்தினை தரவேணும்
தகரில் அற்ற கைத்தலம் விட பிணை சரவணத்தினில் பயில்வோனே
தனி வனத்தினில் புன மறத்தியை தழுவு பொன் புய திரு மார்பா
சிகர வெற்பினை பகிரும் வித்தக திறல் அயில் சுடர் குமரேசா
செழு மலர் பொழில் குரவம் உற்ற பொன் திருவிடைக்கழி பெருமாளே

மேல்

#795
படி புனல் நெருப்பு அடல் பவனம் வெளி பொய் கரு பவம் உறை அவத்த முக்குண நீடு
பயில் பிணிகள் மச்சை சுக்கிலம் உதிரம் அத்தி மெய் பசி படு நிண சட குடில் பேணும்
உடல் அது பொறுத்து அற கடை பெறு பிறப்பினுக்கு உணர்வுடைய சித்தம் அற்று அடி நாயேன்
உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து உனது தமர் ஒக்க வைத்து அருள்வாயே
கொடிய ஒரு குக்குட கொடிய வடிவில் புன கொடி படர் புய கிரி கதிர் வேலா
குமர சமர சினக்கும் அரவு அணி அத்தன் மெய் குமர மகிழ் முத்தமிழ் புலவோனே
தட விகட மத்தக தட வரையர் அத்தர் அத்த அடல் அனுச வித்தக துறையோனே
தரு மருவும் எ தலத்தரும் மருவ முத்தியை தரு திருவிடைக்கழி பெருமாளே

மேல்

#796
பழி உறு சட்டகமான குடிலை எடுத்து இழிவான பகரும் வினை செயல் மாதர் தரும் மாய
படு குழி புக்கு இனிது ஏறும் வழி தடவி தெரியாது பழமை பிதற்றிடு லோக முழு மூடர்
உழலும் விருப்புடன் ஓது பல சவலை கலை தேடி ஒரு பயனை தெளியாது விளியா முன்
உன கமல பத நாடி உருகி உளத்து அமுது ஊற உனது திருப்புகழ் ஓத அருள்வாயே
தெழி உவரி சலராசி மொகுமொகு என பெரு மேரு திடுதிடு என பல பூதர் விதமாக
திமிதிமிம் என பொரு சூரன் நெறுநெறு என பல தேவர் ஜெயஜெய என கொதி வேலை விடுவோனே
அழகு தரித்திடு நீப சரவண உற்பவ வேல அடல் தரு கெற்சித நீல மயில் வீரா
அருணை திருத்தணி நாக மலை பழநி பதி கோடை அதிப இடைக்கழி மேவும் பெருமாளே

மேல்

#797
பெருக்கமாகிய நிதியினர் வரின் மிக நகைத்து வாம் என அமளி அருகு விரல்
பிடித்து போய் அவர் தொடையோடு தொடை பட உறவாடி
பிதற்றியே அளவிடு பணம் அது தமது இடத்திலே வரும் அளவு நல் உரை கொடு
பிலுக்கியே வெகு சரசமொடு அணைகுவர் கன மாலாய்
முருக்கி நேர் இதழ் அமுது பருகும் என உரைத்து லீலைகள் அதி விதமொடு மலை
முலைக்குளே துயில் கொள மயல் புரிகுவர் பொருள் தீரின்
முறுக்கியே உதை கொடு வசை உரை தரு மன துரோகிகள் இடு தொழில் வினை அற
முடுக்கியே உனது இரு கழல் மலர் தொழ அருள்தாராய்
நெருக்கியே வரு அவுணர்கள் குலம் அற உறுக்கியே மயில் முதுகினில் விசை கொடு
நிலத்திலே சமர் பொருது அவர் உயிர் பலி கொளும் வேலா
நெகத்திலே அயன் முடி பறி இறை திரிபுரத்திலே நகைபுரி பரன் அடியவர்
நினைப்பிலே அருள்தரு சிவன் உதவிய புதல்வோனே
செருக்கு வேடுவர் தரும் ஒரு சிறுமியை மரு குலாவிய மலர் அணை மிசை புணர்
திரு கை வேல் வடிவு அழகிய குருபர முருகோனே
சிறக்கு மாதவ முனிவரர் மக பதி இருக்குவேதனும் இமையவர் பரவிய
திரு குரா அடி நிழல்தனில் உலவிய பெருமாளே

மேல்

#798
மரு குலாவிய மலர் அணை கொதியாதே வளர்த்த தாய் தமர் வசை அது மொழியாதே
கரு குலாவிய அயலவர் பழியாதே கடப்ப மாலையை இனி வர விடவேணும்
தரு குலாவிய கொடி இடை மணவாளா சமர்த்தனே மணி மரகத மயில் வீரா
திரு குரா அடி நிழல் தனில் உறைவோனே திரு கை வேல் வடிவு அழகிய பெருமாளே

மேல்

#799
முலை குலுக்கிகள் கபடிகள் வடி புழுக்கைகள் அசடிகள் முறை மசக்கிகள் திருடிகள் மதவேள் நூல்
மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள் தகு நகை முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ்
கலை நெகித்திகள் இளைஞர்கள் பொருள் பறித்து அமளியின் மிசை கனி இதழ் சுருள் பிளவு இலை ஒரு பாதி
கலவியில் தரும் வசவிகள் விழி மயக்கினில் வசம் அழி கவலை அற்றிட நினது அருள்புரிவாயே
அலை நெருப்பு எழ வடவரை பொடிபட சமணர்கள் குலம் அணி கழு பெற நடவிய மயில் வீரா
அரன் அரி பிரமர்கள் முதல் வழிபட பிரியமும் வர அவரவர்க்கு ஒரு பொருள் புகல் பெரியோனே
சிலை மொளுக்கு என முறி பட மிதிலையில் சநக மன் அருள் திருவினை புணர் அரி திரு மருகோனே
திரள் வருக்கைகள் கமுகுகள் சொரி மது கதலிகள் வளர் திருவிடைக்கழி மருவிய பெருமாளே

மேல்

#800
சூழ்ந்து ஏன்ற துக்க வினை சேர்ந்து ஊன்றும் அப்பில் வளர் தூண் போன்ற இக்குடிலும் உலகூடே
சோர்ந்து ஊய்ந்தும் அக்கினியில் நூண் சாம்பல் பட்டுவிடு தோம் பாங்கை உள் பெரிதும் உணராமே
வீழ்ந்து ஈண்டி நல் கலைகள் தான் தோண்டி மிக்க பொருள் வேண்டி ஈங்கை இட்டு வரகு உழுவார் போல்
வேம் பாங்கும் அற்று வினையாம் பாங்கும் அற்று விளைவாம் பாங்கில் நல் கழல்கள் தொழ ஆளாய்
வாழ்ந்து ஆன்ற கற்புடைமை வாய்ந்து ஆய்ந்த நல் தவர்கள் வான் தோன்று மற்றவரும் அடி பேண
மான் போன்ற பொன் தொடிகள் தாம் தோய்ந்த நல் புயமும் வான் தீண்ட உற்ற மயில் மிசை ஏறி
தாழ்ந்து ஆழ்ந்த மிக்க கடல் வீழ்ந்து ஈண்டு வெற்பு அசுரர் சாய்ந்து ஏங்க உற்று அமர் செய் வடி வேலா
தான்தோன்றியப்பர் குடி வாழ்ந்து ஈன்ற நல் புதல்வ தான் தோன்றி நிற்க வல பெருமாளே

மேல்

#801
எந்தன் சடல அங்கம் பல பங்கம்படு தொந்தங்களை என்றும் துயர் பொன்றும்படி ஒருநாளே
இன்பம் தரும் செம்பொன் கழல் உந்தும் கழல் தந்தும் பினை என்றும்படி பந்தம் கெட மயில் ஏறி
வந்தும் பிரசண்டம் பகிரண்டம் புவி எங்கும் திசை மண்டும்படி நின்றும் சுடர் ஒளி போலும்
வஞ்சம் குடி கொண்டும் திரி நெஞ்சன் துகள் என்றும் கொளும் வண்டன் தமியன் தன் பவம் ஒழியாதோ
தந்தந்தன திந்திந்திமி என்றும் பல சஞ்சம் கொடு தஞ்சம்புரி கொஞ்சும் சிறு மணி ஆரம்
சந்த தொனி கண்டும் புயல் அங்கன் சிவனம்பன் பதி சம்பும் தொழ நின்றும் தினம் விளையாடும்
கந்தன் குகன் என்றன் குரு என்றும் தொழும் அன்பன் கவி கண்டு உய்ந்திட அன்று அன்பொடு வருவோனே
கண்டின் கனி சிந்தும் சுவை பொங்கும் புனல் தங்கும் சுனை கந்தன் குடியில் தங்கிய பெருமாளே

மேல்

#802
இறை அத்தனையோ அதுதானும் இலை இட்டு உணல் ஏய் தரு காலம்
அறையில் பெரிதாம் மல மாயை அலையப்படும் ஆறு இனி ஆமோ
மறை அத்தனை மா சிறை சாலை வழி உய்த்து உயர் வான் உறு தேவர்
சிறையை தவிரா விடும் வேலா திலதை பதி வாழ் பெருமாளே

மேல்

#803
பனகம் படம் இசைந்த முழையில் தரளம் நின்று படர் பொன் பணி புனைந்த முலை மீதே
பரிவு அற்று எரியும் நெஞ்சில் முகிலின் கரிய கொண்டை படு புள் பவனம் முன்றில் இயல் ஆரும்
அனம் ஒத்திடு சிறந்த நடையில் கிளியின் இன் சொலால் அழகில் தனி தளர்ந்தும் அதி மோகம்
அளவி புளக கொங்கை குழைய தழுவி இன்ப அலையில் திரிவன் என்றும் அறிவேனோ
தனன தனன தந்த தனன தனன தந்த தனன தனன தந்த தனதானா
தகிட தகிட தந்த திமித திமித என்று தனி மத்தளம் முழங்க வருவோனே
செநெல் நல் கழனி பொங்கி திமில கமலம் அண்டி செறி நல் கழை திரண்டு வளம் மேவி
திரு நல் சிகரி துங்க வரையை பொருவுகின்ற திலதைப்பதி அமர்ந்த பெருமாளே

மேல்

#804
மகர குழைக்குள் உந்து நயன கடைக்கு இலங்கு வசி அ சரத்து இயைந்த குறியாலே
வட வெற்பு அதை துரந்து களப குடத்தை வென்று மதர்வில் பணைத்து எழுந்த முலை மீதே
உக மெய் பதைத்து நெஞ்சும் விரக கடல் பொதிந்த உலை பட்டு அலர் சரங்கள் நலியாமல்
உலக புகழ் புலம்பு கலி அற்று உணர்ச்சி கொண்டு உன் உரிமை புகழ் பகர்ந்து திரிவேனோ
புகர் கை கரி பொதிந்த முளரி குளத்தில் இழிந்த பொழுதில் கர தொடர்ந்து பிடி நாளில்
பொருமி திகைத்து நின்று வரதற்கு அடைக்கலங்கள் புகுத கணத்து வந்து கையில் ஆரும்
திகிரி படை துரந்த வரதற்கு உடன் பிறந்த சிவை தற்பரைக்கு இசைந்த புதல்வோனே
சிவ பத்தர் முத்தர் உம்பர் தவ சித்தர் சித்தம் ஒன்றும் திலதைப்பதிக்கு கந்த பெருமாளே

மேல்

#805
சோதி மந்திரம் போதகம் பரவு ஞான அகம் பரந்தே இருந்த வெளி
தோடு அலர்ந்த பொன் பூ இருந்த இடமும் கொளாமல்
சூது பந்தயம் பேசி அஞ்சு வகை சாதி விண் பறிந்து ஓடு கண்டர் மிகு
தோதகம் பரிந்து ஆடு சிந்து பரி கந்து பாயும்
வீதி மண்டலம் பூண மகிழ்ந்து கழி கோலம் மண்டி நின்று ஆடி இன்ப வகை
வேணும் என்று கண் சோர ஐம்புலன் ஒடுங்குபோதில்
வேதியன் புரிந்து ஏடு கண்ட அளவில் ஓடி வெம் சுடும் காடு அணைந்து சுட
வீழ்கி வெந்து உகுந்திடும் இந்த இடர் என்று போமோ
ஆதி மண்டலம் சேரவும் பரம சோம மண்டலம் கூடவும் பதுமவாளன்
மண்டலம் சாரவும் சுழி படர்ந்த தோகை
ஆழி மண்டலம் தாவி அண்ட முதலான மண்டலம் தேடி ஒன்ற அதொ முகான
மண்டலம் சேடன் அங்கு அண அயில் கொண்டு உலாவி
சூதர் மண்டலம் தூள் எழுந்து பொடியாகி விண் பறந்து ஓட மண்டி ஒரு
சூரியன் திரண்டு ஓட கண்டு நகை கொண்ட வேலா
சோடை கொண்டு உளம் கான மங்கை மயல் ஆடி இந்திரன் தேவர் வந்து தொழ
சோழ மண்டலம் சாரும் அம்பர் வளர் தம்பிரானே

மேல்

#806
காதோடு தோடு இகலி ஆட விழி வாள் சுழல கோலாகலம் ஆர முலை மார் புதைய பூண் அகல
காரோடு கூட அளக பாரம் மலரோடு அலைய அணை மீதே
காலோடு கால் இகலி ஆட பரி நூபுரமொடு ஏகாசமான உடை வீசி இடை நூல் துவள
காவீரமான இதழூறல் தர நேசம் என மிடறு ஓதை
நாதான கீத குயில் போல அல்குல் மால் புரள மார்போடு தோள் கரமொடு ஆடி மிக நாண் அழிய
நானா விநோதம் உற மாதரொடு கூடி மயல் படுவேனை
நான் ஆரு நீ எவன் எனாமல் எனது ஆவி கவர் சீர் பாதமே கவலையாயும் உனவே நிதமும்
நாதா குமார முருகா எனவும் ஓத அருள்புரிவாயே
பாதாள சேடன் உடல் ஆயிரம் பணா மகுடம் மா மேரொடே ஏழு கடல் ஓதம் மலை சூரர் உடல்
பாழாக தூளி விணில் ஏற புவி வாழவிடு சுடர் வேலா
பால் ஆழி மீது அரவின் மேல் திருவொடே அமளி சேர் நீல ரூபன் வலி ராவணன் குழாம் இரிய
பார் ஏவை ஏவிய முராரி ஐவர் தோழன் அரி மருகோனே
மாதா புராரி சுகவாரி பரை நாரி உமை ஆகாச ரூபி அபிராமி வலம் மேவும் சிவன்
மாடு ஏறி ஆடும் ஒரு நாதன் மகிழ் போதம் அருள் குருநாதா
வானோர்கள் ஈசன் மயிலோடு குற மாது மணவாளா குகா குமர மா மயிலின் மீது திரு
மாகாள மா நகரில் மாலொடு அடியார் பரவு பெருமாளே

மேல்

#807
குங்கும கற்பூர நாவி இம சலம் சந்தன கத்தூரி லேப பரிமள
கொங்கைதனை கோலி நீடு முக படம் நகரேகை
கொண்டைதனை கோதி வாரி வகைவகை துங்க முடித்து ஆலகாலம் என அடல்
கொண்ட விட பார்வை காதின் எதிர் பொரு அமுதேயாம்
அங்கு உள நிட்டூர மாய விழி கொடு வஞ்ச மனத்து ஆசை கூறி எவரையும்
அன்புடை மெய் கோல ராக விரகினில் உறவாடி
அன்று அளவுக்கான காசு பொருள் கவர் மங்கையர் பொய் காதல் மோக வலை விழல்
அன்றி உனை பாடி வீடு புகுவதும் ஒருநாளே
சங்கம் தசக்ரீவனோடு சொல வளம் மிண்டு செயப்போன வாயு சுதனொடு
சம்பவ சுக்ரீவன் ஓதி எழுபது வெள்ளமாக
சண்ட கவி சேனையால் முனை கடல் குன்றில் அடைத்து ஏறி மோச நிசாசரர்
தம் கிளை கெட்டு ஓட ஏவு சரபதி மருகோனே
எங்க நினைப்போர்கள் நேச சரவண சிந்துர கர்ப்பூர ஆறுமுக குக
எந்தனுடை சாமிநாத வயலியில் உறை வேலா
இன்புறு பொன் கூட மாட நவ மணி மண்டப வித்தார வீதி புடை வளர்
இஞ்சி குடி பார்வதி ஈசர் அருளிய பெருமாளே

மேல்

#808
பச்சை ஒண் கிரி போல் இரு மா தனம் உற்று இதம் பொறி சேர் குழல் வாள் அயில்
பற்று புண்டரிகாம் என ஏய் கயல் விழி ஞான
பத்தி வெண் தரளம் எனும் வாள் நகை வித்ருமம் சிலை போல் நுதல் ஆர் இதழ்
பத்ம செண்பகமாம் அநுபூதியின் அழகாள் என்று
இச்சை அந்தரி பார்வதி மோகினி தத்தை பொன் கவின் ஆல் இலை போல் வயிறு
இல் பசுங்கிளியான மின் நூல் இடை அபிராமி
எ குலம் குடிலோடு உலகு யாவையும் இல் பதிந்து இரு நாழி நெலால் அறம்
எப்பொதும் பகிர்வாள் குமரா என உருகேனோ
கச்சையும் திரு வாளும் இராறு உடை பொன் புயங்களும் வேலும் இராறு உள
கண் சிவம் கமலா முகம் ஆறு உள முருகோனே
கற்பகம் திரு நாடு உயர் வாழ்வுற சித்தர் விஞ்சையர் மாகர் சபாசு என
கட்ட வெம் கொடு சூர் கிளை வேர் அற விடும் வேலா
நச்சு வெண் பட மீது அணைவார் முகில் பச்சை வண் புயனார் கருடாசனர்
நல் கரம் தநு கோல் வளை நேமியர் மருகோனே
நல் புனம்தனில் வாழ் வளி நாயகி இச்சை கொண்டு ஒரு வாரண மாதோடு
நத்தி வந்து நள்ளாறு உறை தேவர்கள் பெருமாளே

மேல்

#809
தரு ஊர் இசையார் அமுது ஆர் நிகர் குயிலார் மொழி தோதக மாதர்கள்
தணியா மயல் ஆழியில் ஆழவும் அமிழாதே
தழலே பொழி கோர விலோசனம் எறி பாச மகா முனை சூலம் உள்
சமனார் முகில் மேனி கடாவினில் அணுகாதே
கரு ஊறிய நாளு முநூறு எழு மல தேகமும் ஆவலும் ஆசை கபடம்
ஆகிய பாதக தீது அற மிடி தீர
கனி வீறிய போதம் மெய்ஞானமும் இயலார் சிவ நேசமுமே வர
கழல் சேர் அணி நூபுர தாள் இணை நிழல் தாராய்
புருகூதன் மினாள் ஒருபால் உற சிலை வேடுவர்மான் ஒருபால் உற
புது மா மயில் மீது அணையா வரும் அழகோனே
புழுகு ஆர் பனிர் மூசிய வாசனை உர கால் அணி கோல மென் மாலைய
புரி நூலும் உலாவ துவாசதச புய வீரா
மருவூர் குளிர் வாவிகள் சோலைகள் செழி சாலி குலாவிய கார் வயல்
மக தாபத சீலமுமே புனை வள மூதூர்
மக தேவர் புராரி சதாசிவர் சுதர் ஆகிய தேவ சிகாமணி
வழுவூரில் நிலாவிய வாழ்வு அருள் பெருமாளே

மேல்

#810
தலைநாளில் பதம் ஏத்தி அன்புற உபதேச பொருள் ஊட்டி மந்திர
தவ ஞான கடல் ஆட்டி என்தனை அருளால் உன்
சதுர் ஆகத்தோடு கூட்டி அண்டர்கள் அறியா முத்தமிழ் ஊட்டி முண்டக
தளிர் வேத துறை காட்டி மண்டலம் வலம் மேவும்
கலை சோதி கதிர் காட்டி நன் சுடர் ஒளி நாத பரம் ஏற்றி முன் சுழி
கமழ் வாசல் படி நாட்டமும் கொள விதி தாவி
கமலாலைப்பதி சேர்த்து முன் பதி வெளியாக புக ஏற்றி அன்பொடு
கதிர் தோகை பரி மேற்கொளும் செயல் மறவேனே
சிலை வீழ கடல் கூட்டமும் கெட அவுணோரை தலை வாட்டி அம்பர
சிர மாலை புக ஏற்றவும் தொடு கதிர் வேலா
சிவகாமிக்கு ஒரு தூர்த்தர் எந்தையர் வரி நாக தொடையார்க்கு உகந்து ஒரு
சிவஞான பொருள் ஊட்டும் முண்டக அழகோனே
மலை மேவி தினை காக்கும் ஒண் கிளி அமுது ஆக தன வாட்டி இந்துளம்
மலர் மாலை குழல் ஆட்டு அணங்கி தன் மணவாளா
வரி கோழி கொடி மீ கொளும்படி நடமாடி சுரர் போற்று தண் பொழில்
வழுவூர் நல் பதி வீற்றிருந்து அருள் பெருமாளே

மேல்

#811
அன்ன மிசை செம் நளிநம் சென்மி கணக்கு அ நியமத்து
அன்ன மயம் புலால் யாக்கை துஞ்சிடாது என்ற
அ நினைவுற்று அல் நினைவுற்று அன்னியரில் தன் நெறி புக்கு
அன்னிய சற்று உலா மூச்சு அடங்க யோகம்
என்னு மருள் கின்னம் உடை பல் நவை கற்று இன்னவை விட்டு
இன்னணம் எய்த்து அடா மார்க்கம் இன்புறாது என்று
இன்னது எனக்கு என்னும் மத புன்மை கெடுத்து இன்னல் விடுத்து
இன்னது எனப்படா வாழ்க்கை தந்திடாதோ
கன்னல் மொழி பின் அளகத்து அன்ன நடை பன்ன உடை
கண் அவிர் அ சுறா வீட்டு கெண்டையாளை
கன்னமிட பின்னிரவில் துன்னு புரை கல் முழையில்
கல் நிலையில் புகா வேர்த்து நின்ற வாழ்வே
பொன் அசல பின் அசல சென்னியில் நல் கன்ன புர
பொன்னி நதி கரா நீர் புயங்க நாதா
பொன் மலையில் பொன்னின் நகர் புண்ணியர் பொற்பொன் மவுலி
பொன்னுலகத்து இராசாக்கள் தம்பிரானே

மேல்

#812
இப மாந்தர் சக்ரபதி செறி படை ஆண்டு சக்ர வரிசைகள்
இட வாழ்ந்து திக்குவிசய மண் அரசாகி
இறுமாந்து வட்ட அணை மிசை விரி சார்ந்து வெற்றி மலர் தொடை
எழில் ஆர்ந்த பட்டி வகை பரிமள லேபம்
தபனாங்க ரத்ந அணிகலன் இவை சேர்ந்த விச்சு வடிவு அது
தமர் சூழ்ந்து மிக்க உயிர் நழுவியபோது
தழல் தாம் கொளுத்தி இட ஒரு பிடி சாம்பல் பட்டது அறிகிலர்
தன வாஞ்சை மிக்கு உன் அடி தொழ நினையாரே
உபசாந்த சித்த குரு குல பவ பாண்டவர்க்கு வரதன் மை
உருவோன் ப்ரசித்த நெடியவன் ரிஷிகேசன்
உலகு ஈன்ற பச்சை உமை அணன் வட வேங்கடத்தில் உறைபவன்
உயர் சாரங்கம் சக்ர கரதலன் மருகோனே
த்ரிபுராந்தகற்கு வர சுத ரதி காந்தன் மைத்துன முருக
திறல் பூண்ட சுப்ரமணிய ஷண்முக வேலா
திரை பாய்ந்த பத்ம தட வயலியில் வேந்த முத்தி அருள்தரு
திருவாஞ்சியத்தில் அமரர்கள் பெருமாளே

மேல்

#813
வங்கார மார்பில் அணி தாரோடு உயர் கோடு அசைய கொந்து ஆர மாலை குழல் ஆரமோடு தோள் புரள
வண் காதில் ஓலை கதிர் போல ஒளி வீச இதழ் மலர் போல
மஞ்சு ஆடு சாபம் நுதல் வாள் அனைய வேல் விழிகள் கொஞ்சு ஆர மோக கிளியாக நகை பேசி உற
வந்தாரை வாரும் இரும் நீர் உறவு என ஆசை மயல் இடு மாதர்
சங்காளர் சூது கொலைகாரர் குடி கேடர் சுழல் சிங்கார தோளர் பண ஆசை உள்ளர் சாதி இலர்
சண்டாளர் சீசி அவர் மாய வலையோடு அடியேன் உழலாமல்
சங்கோதை நாதமொடு கூடி வெகு மாயை இருள் வெந்து ஓட மூல அழல் வீச உபதேசம் அது
தண் காதில் ஓதி இரு பாத மலர் சேர அருள்புரிவாயே
சிங்கார ரூப மயில்வாகன நமோ நம என கந்தா குமார சிவ தேசிக நமோ நம என
சிந்தூர பார்வதி சுதாகர நமோ நம என விருது ஓதை
சிந்து ஆன சோதி கதிர் வேலவ நமோ நம என கங்காள வேணி குருவான நமோ நம என
திண் சூரர் ஆழி மலை தூள் பட வை வேலை விடு முருகோனே
இங்கீத வேத பிரமாவை விழ மோதி ஒரு பெண் காதலோடு வனம் மேவி வள்ளி நாயகியை
இன்பான தேன் இரச மார் முலை விடாத மணி மார்பா
எண் தோளர் காதல் கொண்டு காதல் கறியே பருகு செங்காடு மேவி பிரகாச மயில் மேல் அழகொடு
என் காதல் மாலை முடி ஆறுமுகவா அமரர் பெருமாளே

மேல்

#814
சித்திரத்திலும் மிகுத்த பொன் பவளம் ஒத்த மெத்த அழகுற்ற குத்து முலை
சிற்ப சிற்பம் மயிர் ஒத்த சிற்றிடைய வஞ்சி மாதர்
சித்தம் அத்தனையும் முற்று அளப்ப கடல் மொய்த்த சிற்று மணலுக்கும் எட்டியது
சிக்கு மை குழல்கள் கஸ்தூரி பரிமளங்கள் வீச
பத்திரத்திலும் மிகுத்த கண் கயல்கள் வித்துரு தநு வளைத்த நெற்றி வனை
பற்களை பளிரென சிரித்து மயல் விஞ்சை பேசி
பச்சை ரத்ந மயிலை பொல தெருவில் அத்தி ஒத்த மதம் ஒத்து நிற்பர் வலைப்பட்டு
உழைத்து குழி உற்ற அத்தி என மங்குவேனோ
தத்த னத்தனத னத்த னத்தனன தித்தி மித்திமிதி மித்தி மித்திமித
தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடு என சங்கு பேரி
சத்தமுற்று கடல் திக்குல கிரிகள் நெக்குவிட்டு முகிலுக்கு சர்ப்ப முடி
சக்கு முக்கி விட கட்கம் துட்ட அசுரர் அங்கம் மாள
வெற்றியுற்ற கதிர் பத்திரத்தை அருளி சுரர்க்கு அதிபதி பதத்தை உறுவித்து
அளித்து மதி பெற்ற தத்தை மணம் உண்ட வேலா
வெட்கிட பிரமனை பிடித்து முடியை குலைத்து சிறை வைத்து முத்தர் புகழ்
விற்குடிப்பதியில் இச்சையுற்று மகிழ் தம்பிரானே

மேல்

#815
குடல் நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பு இவை தோலிடை குளுகுளு எனும்படி மூடிய மலம் மாசு
குதிகொளும் ஒன்பது வாசலை உடைய குரம்பை நீர் எழு குமிழியினும் கடிதாகியே அழி மாய
அடலை உடம்பை அவாவியே அநவரதம் சில சாரம் இலாத அவுடதமும் பல யோகமும் முயலா நின்று
அலமரும் சிந்தையில் ஆகுலம் அலம்அலம் என்று இனி யானும் நின் அழகிய தண்டை விடா மலர் அடைவேனோ
இடம் அற மண்டும் நிசாசரர் அடைய மடிந்து எழு பூதரம் இடிபட இன்ப மகோததி வறிதாக
இமையவரும் சிறை போய் அவர் பதி உள் இலங்க விடு ஆதர எழில் படம் ஒன்றும் ஒராயிரம் முகமான
விட தர கஞ்சுகி மேரு வில் வளைவதன் முன் புரம் நீறு எழ வெயில் நகை தந்த புராரி மதனகோபர்
விழியினில் வந்து பகீரதி மிசை வளரும் சிறுவா வட விஜயபுரம்தனில் மேவிய பெருமாளே

மேல்

#816
கூசாதே பார் ஏசாதே மால் கூறா நூல் கற்று உளம் வேறு
கோடாதே வேல் பாடாதே மால் கூர் கூதாள தொடை தோளில்
வீசாதே பேர் பேசாதே சீர் வேதாதீத கழல் மீதே
வீழாதே போய் நாயேன் வாழ்நாள் வீணே போக தகுமோ தான்
நேசா வானோர் ஈசா வாமா நீபா கான புனை மானை
நேர்வாய் ஆர்வாய் சூர் வாய் சார்வாய் நீள் கார் சூழ் கற்பக சால
தேசாதீனா தீனார் ஈசா சீர் ஆரூரில் பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே தேவே தேவர் பெருமாளே

மேல்

#817
கூர் வாய் நாராய் வாராய் போனார் கூடாரே சற்று அல ஆவி
கோது ஆனேன் மாதா மாறு ஆனாள் கோளே கேள் மற்று இள வாடை
ஈர் வாள் போலே மேலே வீசா ஏறா வேறிட்டு அது தீயின்
ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடு ஏறாரில் கெடலாமோ
சூர் வாழாதே மாறாதே வாழ் சூழ் வானோர்கட்கு அருள்கூரும்
தோலா வேலா வீறு ஆரூர் வாழ் சோதீ பாகத்து உமை ஊடே
சேர்வாய் நீதி வானோர் வீரா சேரார் ஊரை சுடுவார்தம்
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே

மேல்

#818
பாலோ தேனோ பாகோ வானோர் பாராவாரத்து அமுதேயோ
பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ பானோ வான் முத்து என நீள
தாலோ தாலேலோ பாடாதே தாய்மார் நேசத்து உனு சாரம்
தாராதே பேர் ஈயாதே பேசாதே ஏச தகுமோ தான்
ஆலோல் கேளா மேலோர் நாள் மால் ஆனாது ஏனல் புனமே போய்
ஆயாள் தாள் மேல் வீழா வாழா ஆளா வேளை புகுவேனோ
சேலோடே சேர் ஆரால் சாலார் சீர் ஆரூரில் பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே

மேல்

#819
நீ தான் எத்தனையாலும் நீடூழி க்ருபையாகி
மா தான தனமாக மா ஞான கழல் தாராய்
வேதா மைத்துன வேளே வீரா சற்குண சீலா
ஆதாரத்து ஒளியானே ஆரூரில் பெருமாளே

மேல்

#820
மகரம் அது கெட இரு குமிழ் அடைசி வார் ஆர் சரங்கள் என நீளும்
மதர் விழி வலை கொடு உலகினில் மனிதர் வாழ்நாள் அடங்க வருவார்தம்
பகர் தரு மொழியில் ம்ருகமத களப பாடீர கும்பம் மிசை வாவி
படி மனது உனது பரிபுர சரண பாதார விந்த நினையாதோ
நகமுக சமுக நிருதரும் மடிய நானா விலங்கல் பொடியாக
நதி பதி கதற ஒரு கணை தெரியு நாராயணன்தன் மருகோனே
அகல் நக கனக சிவ தலம் முழுதும் ஆராம பந்தி அவைதோறும்
அரி அளி விததி முறைமுறை கருதும் ஆரூர் அமர்ந்த பெருமாளே

மேல்

#821
கரமு முளரியின் மலர் முக மதி குழல் கனமது எணும் மொழி கனி கதிர் முலை நகை
கலகம் இடு விழி கடல் என விடம் என மனதூடே
கருதி அன நடை கொடி இடை இயல் மயில் கமழும் அகில் உடன் அளகிய ம்ருகமத
களப புளகித கிரியினும் மயல் கொடு திரிவேனும்
இரவு பகல் அற இகல் அற மலம் அற இயலும் மயல் அற விழியில் இழிவர
இதயம் உருகியெ ஒரு குள பதம் உற மடலூடே
எழுத அரியவள் குறமகள் இரு தன கிரியில் முழுகின இளையவன் எனும் உரை
இனிமை பெறுவதும் இரு பதம் அடைவதும் ஒரு நாளே
சுரபி மகவினை எழு பொருள் வினவிட மனுவின் நெறி மணி அசைவுற இசை மிகு
துயரில் செவியினில் அடிபட வினவுமின் அதி தீது
துணிவில் இது பிழை பெரிது என வரும் மநு உருகி அரகர சிவசிவ பெறுமது ஒர்
சுரபி அலமர விழி புனல் பெருகிட நடுவாக
பரவி அதனது துயர் கொடு நடவிய பழுதின் மதலையை உடல் இரு பிளவொடு
படிய ரதம் அதை நடவிய மொழிபவன் அருள் ஆரூர்
படியில் அறுமுக சிவசுத கணபதி இளைய குமர நிருப பதி சரவண
பரவை முறையிட அயில் கொடு நடவிய பெருமாளே

மேல்

#822
பாலோ தேனோ பல உறு சுளை அது தானோ வானோர் அமுதுகொல் கழை ரச
பாகோ ஊனோடு உருகிய மகன் உண அருள் ஞான
பாலோ வேறோ மொழி என அடு கொடு வேலோ கோலோ விழி என முகம் அது
பானோ வான் ஊர் நிலவுகொல் என மகள் மகிழ்வேனை
நாலாம் ரூபா கமல ஷண்முக ஒளி ஏதோ மா தோம் எனது அகம் வளர் ஒளி
நானோ நீயோ படிகமொடு ஒளிர் இடம் அது சோதி
நாடோ வீடோ நடு மொழி என நடு தூண் நேர் தோளோ சுர முக கன சபை
நாதா தாதா என உருகிட அருள்புரிவாயே
மாலாய் வானோர் மலர் மழை பொழி அவதாரா சூரா என முநிவர்கள் புகழ்
மாயா ரூபா அரகர சிவசிவ என ஓதா
வாதாடு ஊரோடு அவுணரொடு அலை கடல் கோகோ கோகோ என மலை வெடிபட
வாளால் வேலால் மடிவு செய்து அருளிய முருகோனே
சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள் ஓது ஆர் சீராள் கதிர் மதி குலவிய
தோடு ஆள் கோடு ஆர் இணை முலை குமரி முன் அருள் பாலா
தூயார் ஆயார் இது சிவபத வாழ்வாம் ஈனே வதிவம் எனு உணர்வொடு
சூழ் சீர் ஆரூர் மருவிய இமையவர் பெருமாளே

மேல்

#823
கலக விழி மா மகளிர் கைக்குளே ஆய் பொய் களவு மதன் நூல் பல படித்து அவா வேட்கை
கன தனமும் மார்பும் உறல் இச்சையால் அயர்த்து கழு நீர் ஆர்
கமழ் நறை சவாது புழு கைத்து உழாய் வார்த்து நில அரசு நாடு அறிய கட்டில் போட்டார் செய்
கருமம் அறியாது சிறு புத்தியால் வாழ்க்கை கருதாதே
தலம் அடைசு சாளர முகப்பிலே காத்து நிறை பவுசு வாழ்வு அரசு சத்யமே வாய்த்தது
என உருகி ஓடி ஒரு சற்றுளே வார்த்தை தடுமாறி
தழுவி அநுராகமும் விளைத்து மா யாக்கைதனையும் அரு நாளையும் அவத்திலே போக்குதலை
அறிவிலேனை நெறி நிற்க நீ தீக்ஷை தரவேணும்
அலகு இல் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி அருணை நகர் கோபுரம் இருப்பனே போற்றி
அடல் மயில் நடாவிய ப்ரயத்தனே போற்றி அவதான
அறுமுக சுவாமி எனும் அத்தனே போற்றி அகில தலம் ஓடி வரு நிர்த்தனே போற்றி
அருணகிரிநாத எனும் அப்பனே போற்றி அசுரேசர்
பெலம் மடிய வேல் விடு கரத்தனே போற்றி கரதல கபாலி குரு வித்தனே போற்றி
பெரிய குற மாது அணை புயத்தனே போற்றி பெருவாழ்வாம்
பிரமன் அறியா விரத தக்ஷிணாமூர்த்தி பர சமய கோள் அரி தவத்தினால் வாய்த்த
பெரிய மடம் மேவிய சுகத்தனே யோக்யர் பெருமாளே

மேல்

#824
ஒரு வழி படாது மாயை இருவினை விடாது நாளும் உழலும் அநுராக மோக அநுபோகம்
உடலும் உயிர் தானுமாய் உணர்வில் ஒருகால் இராத உளமும் நெகிழ்வு ஆகுமாறு அடியேனுக்கு
இரவு பகல் போன ஞான பரமசிவ யோக தீரம் என மொழியும் வீசு பாச கன கோப
எம படரை மோது மோன உரையில் உபதேச வாளை எனது பகை தீர நீயும் அருள்வாயே
அரிவை ஒரு பாகமான அருணகிரிநாதர் பூசை அடைவு தவறாது பேணும் அறிவாளன்
அமணர் குல காலன் ஆகும் அரிய தவ ராஜராஜன் அவனி புகழ் சோமநாதன் மடம் மேவும்
முருக பொரு சூரர் சேனை முறிய வட மேரு வீழ முகர சல ராசி வேக முனிவோனே
மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே

மேல்

#825
உரை ஒழிந்து நின்றவர் பொருள் எளிது என உணர்வு கண்டு பின் திரவிய இகலருள்
ஒருவர் நண்பு அடைந்து உள திரள் கவர்கொடு பொருள் தேடி
உளம் மகிழ்ந்து உவந்து உரிமையில் நினைவுறு சகல இந்த்ரதந்த்ரமும் வல விலைமகள்
உபய கொங்கையும் புளகிதம் எழ மிக உறவாயே
விரக அன்புடன் பரிமள மிக உள முழுகி நன்றி ஒன்றிட மலர் அமளியில்
வெகு விதம் புரிந்து அமர் பொரு சமயம் அது உறு நாளே
விளை தனம் கவர்ந்திடு பல மனதியர் அயல் தனங்களும் தமது என நினைபவர்
வெகுளியின்கண் நின்று இழி தொழில் அது அற அருள்வாயே
செரு நினைந்திடும் சின வலி அசுரர்களும் உகம் மடிந்திடும்படி எழு பொழுதிடை
செகம் அடங்கலும் பயம் அற மயில் மிசைதனில் ஏறி
திகுதி குந்திகும் திகுதிகு திகுதிகு தெனதெ னந்தெனம் தெனதென தெனதென
திமிதி மிந்திமிம் திமிதிமி திமி என வரும் பூதம்
கரை இறந்திடும் கடல் என மருவிய உதிரம் மொண்டும் உண்டிட அமர் புரிபவ
கலவி அன்புடன் குறமகள் தழுவிய முருகோனே
கனம் உறும் த்ரியம்பக புரம் மருவிய கவுரி தந்த கந்த அறுமுக என இரு
கழல் பணிந்து நின்று அமரர்கள் தொழு வல பெருமாளே

மேல்

#826
கன்னல் ஒத்த மொழி சொல் வேசியர் வன் மனத்தை உருக்கு லீலையர்
கண் வெருட்டி விழித்த பார்வையர் இதமாக
கையில் உற்ற பொருட்கள் யாவையும் வை என கை விரிக்கும் வீணியர்
கைகள் பற்றி இழுத்து மார் முலைதனில் வீழ
பின்னி விட்ட சடைக்குளே மலர்தன்னை வைத்து முடிப்பை நீ அவிழ்
என்னும் அற்ப குணத்தர் ஆசையில் உழலாமல்
பெய்யும் முத்தமிழில் தயாபர என்ன முத்தர் துதிக்கவே மகிழ்
பிஞ்ஞகர்க்கு உரை செப்பு நாயக அருள்தாராய்
வன்னி ஒத்த படை கலாதிய துன்னும் கை கொள் அரக்கர் மா முடி
மண்ணில் அற்று விழ செய் மாதவன் மருகோனே
மன்னு பை பணி உற்ற நீள் விடம் என்ன விட்ட முடுக்கு சூரனை
மல் உடல் உடற்று முருட்டு மார்பு அற அடைவாக
சென்னி பற்றி அறுத்த கூரிய மின் இழைத்த திறத்த வேலவ
செய்ய பொன் புன வெற்பு மான் அணை மணி மார்பா
செம் மனத்தர் மிகுந்த மாதவர் நன்மை பெற்ற உளத்திலே மலர்
செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய பெருமாளே

மேல்

#827
புலவரை ரக்ஷிக்கும் தாருவே மதுரித குண வெற்பு ஒக்கும் பூவை மார் முலை
பொரு புய திக்கு எட்டும் போய் உலாவிய புகழாளா
பொருவரு நட்பு பண்பான வாய்மையில் உனக்கு ஒப்பு உண்டோ எனா நல
பொருள்கள் நிரைத்து செம்பாகமாகிய கவி பாடி
விலையில் தமிழ் சொற்கு உன் போல் உதாரிகள் எவர் என மெத்த கொண்டாடி வாழ்வு எனும்
வெறி கொள் உலுத்தர்க்கு என் பாடு கூறிடும் மிடி தீர
மிக வருமைப்பட்டு உன் பாத தாமரை சரணம் என பற்றும் பேதையேன் மிசை
விழி அருள் வைத்து குன்றாத வாழ்வையும் அருள்வாயே
இலகிய வெட்சி செந்தாமரை மார் புய சிலை நுதல் மை கண் சிந்தூர வாள் நுதல்
இமயமகட்கு சந்தானமாகிய முருகோனே
இளைய கொடிச்சிக்கும் பாக சாதனன் உதவும் ஒருத்திக்கும் சீல நாயக
எழிலி எழில் பற்றும் காய மாயவன் மருகோனே
அலர் தரு புட்பத்து உண்டாகும் வாசனை திசைதொறும் முப்பத்து எண் காதம் வீசிய
அணி பொழிலுக்கும் சஞ்சாரமாம் அளி இசையாலே
அழகிய சிக்கல் சிங்கார வேலவ சமரிடை மெத்த பொங்கு ஆரமாய் வரும்
அசுரரை வெட்டி சங்காரம் ஆடிய பெருமாளே

மேல்

#828
ஓலமிட்டு இரைத்து எழுந்த வேலை வட்டமிட்ட இந்த ஊர் முகில் தருக்கள் ஒன்றும் அவர் ஆர் என்று
ஊமரை ப்ரசித்தர் என்றும் மூடரை சமர்த்தர் என்றும் ஊனரை ப்ரபுக்கள் என்றும் அறியாமல்
கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்கு உரைத்து அநந்த கோடி இச்சை செப்பி வம்பில் உழல் நாயேன்
கோபம் அற்று மற்றும் அந்த மோகம் அற்று உனை பணிந்து கூடுதற்கு முத்தி என்று தருவாயே
வாலை துர்க்கை சத்தி அம்பி லோக கத்தர் பித்தர் பங்கில் மாது பெற்று எடுத்து உகந்த சிறியோனே
வாரி பொட்டு எழ க்ரவுஞ்சம் வீழ நெட்ட அயில் துரந்த வாகை மல் புய ப்ரசண்ட மயில் வீரா
ஞால வட்டம் முற்ற உண்டு நாக மெத்தையில் துயின்ற நாரணற்கு அருள் சுரந்த மருகோனே
நாலு திக்கும் வெற்றி கொண்ட சூரபத்மனை களைந்த நாகப்பட்டினம் அமர்ந்த பெருமாளே

மேல்

#829
மார்பு உரம் பின் நளினம் கிரி எனும் தனமொடு ஆரமும் படி தரம் பொறியுடன் பணிகள்
மாலை ஒண் பவளமும் பரிமள கலவை தொங்கல் ஆட
வாள் சரம் கண் இயலும் குழை தள அம்பு அளக பாரம் தொங்கல் அணி பெண்கள் வதனங்கள் மதி
வாகை என்ப இதழும் சலசம் என்ப கள சங்கு மோக
சார மஞ்சள் புயமும் கிளி முகங்கள் உகிர் பாளிதம் புனை துவண்டு இடையொடு இன்ப ரச
தாழி என்ப அல்குலும் துளிர் அரம்பை தொடை ரம்பை மாதர்
தாள் சதங்கை கொலுசும் குல சிலம்பும் அணி ஆடல் கொண்ட மட மங்கையருடன் கலவி
தாகம் உண்டு உழல்கினும் கழலும் கழல் மறந்திடேனே
வீர வெண்டையம் முழங்க வரி சங்கும் முரசோடு பொன் பறை ததும்ப விதியும் சுரமும்
வேத விஞ்சையர் உடன் குமுற வெந்து உக அடர்ந்த சூரன்
வீறு அடங்க முகிலும் கமற நஞ்சு உடைய ஆயிரம் பகடு கொண்ட உரகன் குவடுமே
கொளுந்த பல சிரம்தனை எறிந்து நடனம் கொள் வேலா
நார சிங்க வடிவம் கொடு ப்ரசண்ட இரணியோன் நடுங்க நடனம் செய்து இலங்கை வலி
ராவணன் குலம் அடங்க சிலை கொண்ட கரர் தந்த மூல
ஞான மங்கை அமுதம் சொருபி என்றன் ஒரு தாய் அணங்கு குற மங்கையை மணந்த புய
நாகை அம் பதி அமர்ந்து வளர் நம்பர் புகழ் தம்பிரானே

மேல்

#830
விழு தாது எனவே கருதாது உடலை வினை சேர்வதுவே புரிதாக
விருதாவினிலே உலகாயதம் மேல் இடவே மடவார் மயலாலே
அழுது ஆ கெடவே அவமாகிட நாள் அடைவே கழியாது உனை ஓதி
அலர் தாள் அடியேன் உறவாய் மரு ஓர் அழியா வரமே தருவாயே
தொழுதார் வினை வேர் அடியோடு அறவே துகள் தீர் பரமே தரு தேவா
சுரர் பூபதியே கருணாலயனே சுகிர்தா அடியார் பெருவாழ்வே
எழுதா மறை மா முடிவே வடி வேல் இறைவா எனை ஆளுடையோனே
இறைவா எது தா அது தா தனையே இணை நாகையில் வாழ் பெருமாளே

மேல்

#831
உரம் உற்று இரு செப்பு என வட்டமும் ஒத்து இளகி புளகி திடமாயே
உடை சுற்றும் இடை சுமை ஒக்க அடுத்து அமித கெறுவத்துடன் வீறு
தரம் ஒத்து உபய களப தளம் மிக்க வனம் தருண தனம் மீதே
சருவிச்சருவி தழுவித்தழுவி தவம் அற்க விடுத்து உழல்வேனோ
அரி புத்திர சித்தசன் அ கடவுட்கு அருமை திரு மைத்துன வேளே
அடல் குக்குட நல் கொடி கட்டி அனர்த்த அசுர படையை பொருவோனே
பரிவற்று அவருக்கு அருள் வைத்து அருள் வித்தக முத்தமிழை பகர்வோனே
பழனத்து ஒளிர் முத்து அணி எட்டிகுடி பதியில் குமர பெருமாளே

மேல்

#832
ஓங்கும் ஐம்புலன் ஓட நினைத்து இன்பு அயர்வேனை
ஓம் பெறும் ப்ரணவ ஆதி உரைத்து எந்தனை ஆள்வாய்
வாங்கி வெம் கணை சூரர் குல கொம்புகள் தாவி
வாங்கி நின்றன ஏவில் உகைக்கும் குமரேசா
மூங்கில் அம்புய வாச மண குஞ்சரி மானும்
மூண்ட பைம் குற மாது மணக்கும் திரு மார்பா
காங்கை அங்கு அறு பாசு இல் மனத்து அன்பர்கள் வாழ்வே
காஞ்சிரம் குடி ஆறு முகத்து எம் பெருமாளே

மேல்

#833
கடல் ஒத்த விடம் ஒத்த கணை ஒத்த பிணை ஒத்த கயல் ஒத்த மலர் ஒத்த விழி மானார்
கன செப்பு நளினத்து முகை வெற்பை நிகர் செப்பு கதிர் முத்து முலை தைக்க அகலாதே
மிடலுற்ற கலவிக்குள் உள நச்சி வளம் அற்று மிடிபட்டு மடிபட்டு மனம் ஆழ்கி
மெலிவுற்ற தமியற்கு உன் இரு பத்ம சரணத்தை மிக நட்பொடு அருள்தற்கு வருவாயே
தடை அற்ற கணை விட்டு மணி வஜ்ர முடி பெற்ற தலை பத்து உடைய துட்டன் உயிர் போக
சலசத்து மயில் உற்ற சிறை விட்டு வரு வெற்றி தரு சக்ரதரனுக்கு மருகோனே
திடம் உற்ற கனக பொதுவில் நட்புடன் நடித்த சிவனுக்கு விழி ஒத்த புதல்வோனே
செழு நத்து உமிழு முத்து வயலுக்குள் நிறை பெற்ற திகழ் எட்டிகுடி உற்ற பெருமாளே

மேல்

#834
மை குழல் ஒத்தவை நீலோ மாலோ அ கண் இணைக்கு இணை சேலோ வேலோ
மற்று அவர் சொல் தெளி பாலோ பாகோ வடி தேனோ
வத்திரம் மெய் சசி தானோ நாணா குத்து முலைக்கு இள நீரோ மேரோ
இடைக்கு இணை வைப்பது நூலோ மேலோ என மாதர்
தக்க உறுப்பினுள் மாலே மேலாய் லச்சை அற புணர் வாது ஏகாதே
சைசை என திரி நாயேன் ஓயாது அலையாதே
தற்பொறி வைத்து அருள் பாராய் தாராய் தற்சமையத்த கலா வேல் நாதா
தத்து மயில் பரி மீதே நீ தான் வருவாயே
முக்கணர் மெச்சிய பாலா சீலா சித்தசன் மைத்துன வேளே தோள் ஆர்
மொய்த்த மண துழாயோன் மாயோன் மருகோனே
முத்தமிழ் வித்வ விநோதா கீதா மற்றவர் ஒப்பு இல ரூபா தீபா
முத்தி கொடுத்து அடியார் மேல் மா மால் முருகோனே
இக்கு நிரைத்த விராலூர் சேல் ஊர் செய் பழநி பதி ஊரா வாரூர்
மிக்க விடைக்கழி வேளூர் தார் ஊர் வயலூரா
எ சுருதிக்குள்ளும் நீயே தாயே சுத்த விறல் திறல் வீரா தீரா
எட்டிகுடி பதி வேலா மேலோர் பெருமாளே

மேல்

#835
சந்தனம் திமிர்ந்து அணைந்து குங்குமம் கடம்பு இலங்கு சண்பகம் செறிந்து இலங்கு திரள் தோளும்
தண்டை அம் சிலம்பு அலம்ப வெண்டையம் சலன்சல் என்று சஞ்சிதம் சதங்கை கொஞ்ச மயில் ஏறி
திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்தன் என்று சென்று அசைந்து உகந்து வந்து க்ருபையோடே
சிந்தை அம் குலம் புகுந்து சந்ததம் புகழ்ந்து உணர்ந்து செம் பதம் பணிந்து இரு என்று மொழிவாயே
அந்த மந்தி கொண்டு இலங்கை வெந்து அழிந்து இடும்ப கண்டன் அங்கமும் குலைந்த அரம் கொள் பொடியாக
அம்பு கும்பனும் கலங்க வெம் சினம் புரிந்து நின்று அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே
இந்துவும் கரந்தை தும்பை கொன்றையும் சலம் புனைந்திடும் பரன் தன் அன்பில் வந்த குமரேசா
இந்திரன் பதம் பெற அண்டர் தம் பயம் கடிந்த பின்பு எண்கண் அங்கு அமர்ந்திருந்த பெருமாளே

மேல்

#836
அயில் ஆர் மை கடு விழியார் மட்டைகள் அயலார் நத்திடு விலைமாதர்
அணை மீதில் துயில் பொழுதே தெட்டிகள் அவர் ஏவல் செய்து தமியேனும்
மயலாகி திரிவது தான் அற்றிட மல மாயை குணம் அது மாற
மறையால் மிக்க அருள்பெறவே அற்புத மது மாலை பதம் அருள்வாயே
கயிலாய பதி உடையாருக்கு ஒரு பொருளே கட்டளை இடுவோனே
கடல் ஓடி புகு முது சூர் பொட்டு எழ கதிர் வேல் விட்டிடு திறலோனே
குயில் ஆலித்திடு பொழிலே சுற்றிய குடவாயில் பதி உறைவோனே
குற மாதை புணர் சதுரா வித்தக குறையா மெய்த்தவர் பெருமாளே

மேல்

#837
சுருதியாய் இயலாய் இயல் நீடிய தொகுதியாய் வெகுவாய் வெகு பாஷை கொள்
தொடர்புமாய் அடியாய் நடுவாய் மிகு துணையாய் மேல்
துறவுமாய் அறமாய் நெறியாய் மிகு விரிவுமாய் விளைவாய் அருள் ஞானிகள்
சுகமுமாய் முகிலாய் மழையாய் எழு சுடர் வீசும்
பருதியாய் மதியாய் நிறை தாரகை பலவுமாய் வெளியாய் ஒளியாய் எழு
பகல் இராவு இலையாய் நிலையாய் மிகு பரமாகும்
பரம மாயையின் நேர்மையாய் யாவரும் அறியவொணாததை நீ குருவாய் இது
பகருமாறு செய்தாய் முதல் நாள் உறு பயனோ தான்
கருதும் ஆறிரு தோள் மயில் வேல் இவை கருதவொணா வகை ஓர் அரசாய் வரு
கவுணியோர் குல வேதியனாய் உமை கன பார
களப பூண் முலை ஊறிய பால் உணு மதலையாய் மிகு பாடலின் மீறிய
கவிஞனாய் விளையாடு இடம் வாதிகள் கழுவேற
குருதி ஆறு எழ வீதி எலாம் மலர் நிறைவதாய் விட நீறு இடவே செய்து
கொடிய மாறன் மெய் கூன் நிமிரா முனை குலையா வான்
குடி புகீர் என மா மதுராபுரி இயலை ஆரண ஊர் என நேர் செய்து
குடசை மா நகர் வாழ்வுற மேவிய பெருமாளே

மேல்

#838
தொடுத்த நாள் முதல் மருவிய இளைஞனும் இருக்க வேறொரு பெயர் தமது இடம் அது
துவட்சியே பெறில் அவருடன் மருவிடு பொதுமாதர்
துவக்கிலே அடிபட நறு மலர் அயன் விதித்த தோதக வினை உறு தகவு அது
துறக்க நீறு இட அரகர என உளம் அமையாதே
அடுத்த பேர் மனை துணைவியர் தமர் பொருள் பெருத்த வாழ்வு இது சதம் என மகிழுறும்
அசட்டன் ஆதுலன் அவம் அது தவிர நின் அடியாரோடு
அமர்த்தி மா மலர் கொடு வழிபட எனை இருத்தியே பரகதி பெற மயில் மிசை
அரத்த மா மணி அணி கழல் இணை தொழ அருள்தாராய்
எடுத்த வேல் பிழை புகல் அரிது என எதிர் விடுத்து ராவணன் மணி முடி துணி பட
எதிர்த்தும் ஓர் கணை விடல் தெரி கரதலன் மருகோனே
எருக்கு மாலிகை குவளையின் நறு மலர் கடுக்கை மாலிகை பகிரதி சிறு பிறை
எலுப்பு மாலிகை புனை சடிலவன் அருள் புதல்வோனே
வடுத்த மா என நிலைபெறு நிருதனை அடக்க ஏழ் கடல் எழு வரை துகள் எழ
வடித்த வேல் விடு கரதல ம்ருகமத புய வேளே
வனத்தில் வாழ் குறமகள் முலை முழுகிய கடப்ப மாலிகை அணி புய அமரர்கள்
மதித்த சேவக வலிவல நகர் உறை பெருமாளே

மேல்

#839
சூழும் வினை கண் துன்பம் நெடும் பிணி கழி காமம்
சோரம் இதற்கு சிந்தை நினைந்து உறு துணை யாதே
ஏழை என் இ துக்கங்களுடன் தினம் உழல்வேனோ
ஏதம் அகற்றி செம் பத சிந்தனை தருவாயே
ஆழி அடைத்து தம் கை இலங்கையை எழு நாளே
ஆண்மை செலுத்தி கொண்ட கரும் புயல் மருகோனே
வேழ முகற்கு தம்பி எனும் திரு முருகோனே
வேதவனத்தில் சங்கரர் தந்தருள் பெருமாளே

மேல்

#840
சேலை உடுத்து நடந்து மாலை அவிழ்த்து முடிந்து சீத வரி குழல் கிண்டி அளி மூச
தேனின் இனிக்க மொழிந்து காமுகரை சிறை கொண்டு தேசம் அனைத்தையும் வென்ற விழி மானார்
மாலை மயக்கில் விழுந்து காம கலைக்குள் உளைந்து மாலில் அகப்பட நொந்து திரிவேனோ
வால ரவி கிரணங்களாம் என உற்ற பதங்கள் மாயை தொலைந்திட உன்றன் அருள்தாராய்
பாலைவனத்தில் நடந்து நீல அரக்கியை வென்று பார மலைக்குள் அகன்று கணையாலே ஏழ்
பார மர திரள் மங்க வாலி உரத்தை இடந்து பால் வருண தலைவன் சொல் வழியாலே
வேலை அடைத்து வரங்கள் சாடி அரக்கர் இலங்கை வீடணருக்கு அருள் கொண்டல் மருகோனே
மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து வேதவனத்தில் அமர்ந்த பெருமாளே

மேல்

#841
நூலினை ஒத்த மருங்குல் தேரினை ஒத்த நிதம்பம் நூபுரம் மொய்த்த பதங்கள் இவையாலும்
நூறு இசை பெற்ற பதம் கொள் மேருவை ஒத்த தனங்கள் நூல் வல் மலர் பொரு துண்டம் அவையாலும்
சேலினை ஒத்திடு கண்களாலும் அழைத்திடு பெண்கள் தேன் இதழ் பற்றும் ஓர் இன்ப வலை மூழ்கி
சீலம் அனைத்தும் ஒழிந்து காம விதத்தில் அழுந்தி தேறு தவத்தை இழந்து திரிவேனோ
வால இள பிறை தும்பை ஆறு கடுக்கை கரந்தை வாசுகியை புனை நம்பர் தரு சேயே
மாவலியை சிறை மண்ட ஓர் அடி ஒட்டி அளந்து வாளி பரப்பி இலங்கை அரசானோன்
மேல் முடி பத்தும் அரிந்து தோள் இரு பத்தும் அரிந்து வீரம் மிகுத்த முகுந்தன் மருகோனே
மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து வேத வனத்தில் அமர்ந்த பெருமாளே

மேல்

#842
நீல முகில் ஆன குழல் ஆன மடவார்கள் தன நேயம் அதிலே தினமும் உழலாமல்
நீடு புவி ஆசை பொருள் ஆசை மருள் ஆகி அலை நீரில் உழல் மீன் அது என முயலாமல்
காலனது நா அரவ வாயில் இடு தேரை என காயம் மருவு ஆவி விழ அணுகா முன்
காதலுடன் ஓதும் அடியார்களுடன் நாடி ஒரு கால் முருக வேள் எனவும் அருள்தாராய்
சோலை பரண் மீது நிழலாக தினை காவல்புரி தோகை குற மாதினுடன் உறவாடி
சோரன் என நாடி வருவார்கள் வன வேடர் விழ சோதி கதிர் வேல் உருவு மயில் வீரா
கோல அழல் நீறு புனை ஆதி சருவேசரொடு கூடி விளையாடும் உமை தரு சேயே
கோடு முக ஆனை பிறகான துணைவா குழகர் கோடி நகர் மேவி வளர் பெருமாளே

மேல்

#843
இரத்தமும் சியும் மூளை எலும்பு உள் தசை பசும் குடல் நாடி புனைந்திட்டு
இறுக்கு மண் சல வீடு புகுந்திட்டு அதில் மேவி
இதத்துடன் புகல் சூது மிகுந்திட்டு அகைத்திடும் பொருள் ஆசை எனும் புள்
தெருட்டவும் தெளியாது பறந்திட்டிட மாயா
பிரத்தம் வந்து அடு வாத சுரம் பித்து உளைப்புடன் பல வாயுவும் மிஞ்சி
பெலத்தையும் சில நாளுள் ஒடுங்கி தடி மேலாய்
பிடித்திடும் பல நாள் கொடு மந்தி குலுத்து எனும்படி கூனி அடங்கி
பிசக்கு வந்திடும்போது பின் அஞ்சி சடம் ஆமோ
தரித்த னந்தன தானன தந்த திமித்தி மிந்திமி தீதக திந்த
தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட்டு இயல் தாளம்
தனத்த குந்தகு தானன தந்த கொதித்து வந்திடு சூர் உடல் சிந்த
சலத்துடன் கிரி தூள் பட எறிந்திட்டிடும் வேலா
சிரத்துடன் கரம் ஏடு பொழிந்திட்டு இரைத்து வந்து அமரோர்கள் படிந்து
சிரத்தினும் கமழ் மாலை மணம் பொன் சரணோனே
செகத்தினில் குருவாகிய தந்தைக்கு அளித்திடும் குரு ஞான ப்ரசங்க
திருப்பெருந்துறை மேவிய கந்த பெருமாளே

மேல்

#844
வரித்த குங்குமம் அணி முலை குரும்பையர் மகிழ்ச்சி கொண்டிட அதி விதமான
வளை கரங்களினொடு வளைத்து இதம் பட உடன் மயக்க வந்ததில் அறிவு அழியாத
கருத்து அழிந்திட இரு கயல் கணும் புரள் தர களிப்புடன் களி தரு மட மாதர்
கரு பெரும் கடல் அது கடக்க உன் திருவடிகளை தரும் திரு உள்ளம் இனி ஆமோ
பொருப்பு அகம் பொடி பட அரக்கர்தம் பதியோடு புகை பரந்த எரி எழ விடும் வேலா
புகழ் பெரும் கடவுளர் களித்திடும்படி புவி பொறுத்த மந்தர கிரி கடலூடே
திரித்த கொண்டலும் ஒரு மறு பெறும் சதுமுக திருட்டி எண் கணன் முதல் அடி பேண
திரு குருந்து அடி அமர் குருத்வ சங்கரரொடு திருப்பெருந்துறை உறை பெருமாளே

மேல்

#845
முகர வண்டு எழும் கரு முகில் அலையவும் முதிய நஞ்சு உமிழ்ந்த அயில் விழி குவியவும்
முகிள சந்திரன் பொரு நுதல் வெயரவும் அமுது ஊறும்
முருகு தங்கு செம் துகிர் இதழ் தெரியவும் மருவு சங்க நின்று ஒலி கொடு பதறவும்
முழுது அன்பு தந்து அமளியில் உதவிய அநுராக
சிகர கும்ப குங்கும புளகித தனம் இரு புயம் புதைந்திட நடு இடைவெளி
தெரியல் இன்றி ஒன்றிட உயிர் உயிருடன் உற மேவி
திமிர கங்குல் இன்பு உதவிடும் அவசர நினைவு நெஞ்சினின்று அற அறவ அவர் முகம் அது
தெரிசனம் செயும் பரிவு அற இனி அருள்புரிவாயே
மகர நின்ற தெள் திரை பொரு கனை கடல் மறுகி அஞ்சி வந்து அடி தொழுதிட ஒரு
வடி கொள் செம் சரம் தொடுபவன் இருபது புய வீரன்
மடிய அங்கு சென்று அவன் ஒரு பது முடி முடிய முன்பு மண்டு அமர் பொருது அமர் நிழல்
மதில் இலங்கையும் பொடிபட அருள் அரி மருகோனே
நிகர் இல் அண்டம் எண் திசைகளும் மகிழுற விரகு கொண்டு நின்று அழகுறு மயில் மிசை
நினைவின் உந்தி அம் புவிதனை வலம் வரும் இளையோனே
நிலவு அரும்பு தண் தரளமும் மிளிர் ஒளிர் பவளமும் பொரும் பழனமும் அழகுற
நிழல் குருந்தமும் செறி துறை வளர்வுறு பெருமாளே

மேல்

#846
மலை கனத்து என மார்பினிலே இரு முலை கனத்து உறவே இடை நூல் என
வளைத்து உகுப்ப மை ஆர் குழல் தோளொடும் அலை மோத
மயில் குலத்தவர் ஆம் என நீள் கலை நெகிழ்த்துவித்து இரு வார் விழி வேல் கொடு
மயக்கி நத்தினர் மேல் மறு பாடும் அ விழி ஏவி
விலைக்கு என தனம் ஆயிரம் ஆயிரம் முலைக்கு அளப்பினும் ஆசை போதாது என
வெறுப்பர் குத்திர காரியர் வேசையர் மயல் மேலாய்
வெடுக்கு எடுத்து மகா பிணி மேலிட முடக்கி வெட்கும் மகா மத வீணனை
மினல் போல் இ பதமோடு உறவே அருள்புரிவாயே
அலைக்கு அடுத்த சுரார் பதி கோ என விட பண சிரம் ஆயிரம் சேடனும்
அதிர்த்திட கதிர் வேல் விடு சேவக மயில் வீரா
அடைக்கலப்பொருள் ஆம் என நாயெனை அழைத்து முத்தி ஆம் அநுபூதியெ
அருள் திருப்புகழ் ஓதுக வேல் மயில் அருள்வோனே
சிலை கை முப்புரம் நீறு எழவே திரு உளத்தில் அற்பம் எனா நினை தேசிகர்
சிறக்க முத்தமிழால் ஒரு பாவகம் அருள் பாலா
திரு கடப்பு அலர் சூடிய வார் குழல் குறத்தி கற்புடனே விளையாடி ஒர்
திருத்துருத்தியில் வாழ் முருகா சுரர் பெருமாளே

மேல்

#847
எருவாய் கருவாய் தனிலே உருவாய் இதுவே பயிராய் விளைவாகி
இவர் போய் அவராய் அவர் போய் இவராய் இதுவே தொடர்பாய் வெறி போல
ஒரு தாய் இரு தாய் பல கோடிய தாயுடனே அவமாய் அழியாதே
ஒருகால் முருகா பரமா குமரா உயிர் கா என ஓத அருள்வாய்
முருகா என ஓர் தரம் ஓதும் அடியார் முடி மேல் இணை தாள் அருள்வோனே
முநிவோர் அமரோர் முறையோ எனவே முது சூர் உரம் மேல் விடும் வேலா
திருமால் பிரமா அறியாதவர் சீர் சிறுவா திருமால் மருகோனே
செழு மா மதில் சேர் அழகார் பொழில் சூழ் திருவீழியில் வாழ் பெருமாளே

மேல்

#848
சொல் பிழை வராமல் உனை கனக்க துதித்து நிற்பது வராத பவ கடத்தில் சுழற்றி
சுக்கில அவதார வழிக்கு இணக்கி களித்து விலைமாதர்
துப்பு இறையதான இதழ் கனிக்கு கருத்தை வைத்து மயலாகி மனத்தை விட்டு கடுத்த
துற்சன ம காதகரை புவிக்குள் தழைத்த நிதி மேவு
கற்பக இராசன் என படைக்கு பெருத்த அர்ச்சுன நராதி என கவிக்குள் பதித்து
கற்று அறி வினாவை எடுத்து அடுத்து படித்து மிகையாக
கத்திடும் மெய் ஆக வலி கலிப்பை தொலைத்து கைப்பொருள் இலாமை என கலக்க படுத்து
கற்பனை விடாமல் அலைத்து இருக்க சலிக்க விடலாமோ
எல் பணி அராவை மிதித்து வெட்டி துவைத்து பற்றிய கராவை இழுத்து உரக்க கிழித்து
எள் கரி படாமல் இதத்த புத்தி கதிக்கு நிலை ஓதி
எத்திய பசாசின் முலை குடத்தை குடித்து முற்று உயிர் இலாமல் அடக்கி விட்டு சிரித்த
அயில் கணை இராமர் சுகித்து இருக்க சினத்த திறல் வீரா
வெற்பு என மதாணி நிறுத்து உருக்கி சமைத்து வர்க்க மணியாக வடித்து இருத்தி தகட்டின்
மெய் குலம் அதாக மலைக்க முத்தை பதித்து வெகு கோடி
விண் கதிர் அதாக நிகர்த்து ஒளிக்க சிவத்த ரத்தின படாகம் மயில் பரிக்கு தரித்து
மிக்க திருவாவடு நல் துறைக்குள் செழித்த பெருமாளே

மேல்

#849
கருத்து இதப்படு காமா லீலைகள் விதத்தை நத்திய வீணா வீணிகள்
கவட்டு விற்பன மாயாவாதிகள் பலகாலும்
கரைத்து உரைத்திடு மோகா மோகிகள் அளி குல பதி கார் போல் ஓதிகள்
கடைக்கணின் சுழலாயே பாழ்படு வினையேனை
உரைத்த புத்திகள் கேளா நீசனை அவத்தம் மெத்திய ஆசா பாசனை
உளத்தில் மெய்ப்பொருள் ஓரா மூடனை அருளாகி
உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை அளிக்கு நல் பொருள் ஆயே மாதவ
உணர்ச்சி பெற்றிடவே நீ தாள் இணை அருள்வாயே
செருக்கி வெட்டிய தீயோர் ஆம் எனும் மதத்த துட்டர்கள் மா சூரன் ஆதிய
சினத்தர் பட்டிடவே வேலை ஏவிய முருகோனே
சிவத்தை உற்றிடு தூயா தூயவர் கதித்த முத்தமிழ் மாலாய் ஓதிய
செழிப்பை நத்திய சீலா வீறிய மயில் வீரா
வரை தவர்க்கு அரர் சூலா பாணியர் அதி குணத்து அரர் தீரா தீரர்தம்
மனத்து இயல் படு ஞானாதேசிக வடி வேலா
வருக்கையின் கனி சாறாய் மேலிடு தழைத்த செய் தலை ஊடே பாய் தரு
மருத்துவக்குடி வாழ்வே தேவர்கள் பெருமாளே

மேல்

#850
இத சந்தன புழுகும் சில மணமும் தக வீசி அணையும் தன கிரி கொண்டு இணை அழகும் பொறி சோர
இருளும் குழல் மழை என்ப நவரசம் கொளு மோக குயில் போலே
இடையும் கொடி மதனன் தளை இடும் குந்தள பார இலையும் சுழி தொடை ரம்பையும் அமுதம் தடமான
இயல் அம் கடி தடமும் பொழி மத விஞ்சைகள் பேசி தெரு மீதே
பத பங்கயம் அணியும் பரிபுரம் அங்கு ஒலி வீச நடை கொண்டிடு மயில் என்பன கலையும் சுழலாட
பரிசும் பல மொழியும் சில கிளி கொஞ்சுகை போல பரிவாகி
பணம் உண்டு எனது அவலம்படு நினைவு உண்டு இடை சோர இது கண்டு அவர் மயல் கொண்டிட மனமும் செயல் மாற
பகலும் சில இரவும் துயில் சில வஞ்சகர் மாயை துயர் தீராய்
திதிதிந்திமி தனதந்தன டுடுடுண்டுடு பேரி டகுடங்குகு டிகுடிங்குகு படகந்துடி வீணை
செகணஞ்செக எனவும் பறை திசை எங்கினும் மோத கொடு சூரர்
சிரமும் கர உடலம் பரி இரதம் கரி யாளி நிணமும் குடல் தசையும் கடல் என செம் புனல் ஓட
சில செம்புள்கள் கழுகும் சிறு நரியும் கொடி ஆட பொரும் வேலா
மத வெம் கயம் உரி கொண்டவர் மழுவும் கலை பாணி இடம் அன்பொடு வளரும் சிவை புகழ் சுந்தரி ஆதி
வளரும் தழல் ஒளிர் சம்பவி பரை விண்டு இள தோகை தரு சேயே
வதனம் சசி அமுதம் பொழி முலை நல் குற மாதொடு இசையும் சுரர் தரு மங்கையொடு இதயம் களிகூர
வரு பந்தணை நகர் வந்து உறை விமலன் குருநாத பெருமாளே

மேல்

#851
இருவினை அஞ்ச வருவினை கெஞ்ச இருள் பிணி துஞ்ச மலம் மாய
எனது இடர் மங்க உனது அருள் பொங்க இசை கொடு துங்க புகழ் கூறி
திரு முக சந்த்ர முருக கடம்ப சிவசுத கந்த குக வேல
சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு திகழ நடம் செய் கழல் தாராய்
மருதொடு கஞ்சன் உயிர் பலி கொண்டு மகிழ் அரி விண்டு மருகோனே
வதைபுரிகின்ற நிசிசரர் குன்ற வலம்வரு செம்பொன் மயில் வீரா
அருகுறு மங்கையொடு விடை உந்தும் அமலன் உகந்த முருகோனே
அருள் செறி பந்தணையில் இரு மங்கை அமளி நலம் கொள் பெருமாளே

மேல்

#852
எகின் இனம் பழி நாடகமாடிகள் மயில் எனும் செயலார் அகி நேர் அல்குல்
இசை இடும் குரலார் கடனாளிகள் வெகு மோகம்
என விழுந்திடும் வார் முலை மேல் துகில் அலையவும் திரிவார் எவராயினும்
இளகு கண் சுழல் வார் விலை வேசியர் வலைவீசும்
அகித வஞ்சக பாவனையால் மயல் கொடு விழுந்திட ராகமும் நோய் பிணி
அதிகமும் கொடு நாய் அடியேன் இனி உழலாமல்
அமுத மந்திர ஞானொபதேசமும் அருளி அன்புறவே முருகா என
அருள் புகுந்திடவே கழல் ஆர் கழல் அருள்வாயே
ககன விஞ்சையர் கோ எனவே குவடு அவுணர் சிந்திடவே கடல் தீவுகள்
கமற வெம் தழல் வேல் விடு சேவக முருகோனே
கரி நெடும் புலி தோல் உடையார் எனை அடிமை கொண்ட சுவாமி சதாசிவ
கடவுள் எந்தையர் பாகம் விடா உமை பாலா
செகமும் அண்டமும் ஓர் உருவாய் நிறை நெடிய அம் புயல் மேனியனார் அரி
திரு உறைந்து உள மார்பகனார் திரு மருகோனே
தினை வனம்தனில் வாழ் வளி நாயகி வளர் தனம் புதை மார்பு அழகா மிகு
தலக பந்தணை மா நகர் மேவிய பெருமாளே

மேல்

#853
கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த கொஞ்சு கிளி ஒத்த மொழி மானார்
குங்கும பணிக்குள் வண் புழுகு விட்ட கொந்து அளகம் வைத்த மடவார்பால்
வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து மங்கி நரகத்தில் மெலியாமல்
வண் கயிலை சுற்றி வந்திடு பதத்தை வந்தனைசெய் புத்தி தருவாயே
பம்பு நதி உற்ற பங்கு ஒரு சமர்த்தி பண்டு உள தவத்தில் அருள் சேயே
பைம் புயல் உடுத்த தண்டலை மிகுத்த பந்தணை நகர்க்குள் உறைவோனே
சம்பு நிழலுக்குள் வந்து அவதரித்த சங்கரர் தமக்கும் இறையோனே
சங்கு அணி கரத்தர் உம்பர் பயம் உற்ற சஞ்சலம் அறுத்த பெருமாளே

மேல்

#854
கெண்டைகள் பொரும் கண் மங்கையர் மலர் கொண்டைகள் குலுங்க நின்று அருகினில்
கெஞ்சு பலுடன் குழைந்து அமளியில் கொடுபோய் வண்
கெந்த பொடியும் புனைந்து உற அணைத்து இன்ப வசனம் தரும் தொழில் அடுக்கின்ற
மயலின் படும் துயர் அற ப்ரபை வீசும்
தண்டைகள் கலின்கலின் கலின் என கிண்கிணி கிணின்கிணின் கிணின் என
தண் கொலுசுடன் சிலம்பு அசைய உள் பரிவாகி
சந்ததமும் வந்து இரும் பரிமள பங்கய பதங்கள் என் கொடு வினை
சஞ்சலம் மலம் கெடும்படி அருள்புரிவாயே
தொண்டர்கள் சரண்சரண் சரண் என கொம்புகள் குகும்குகும் குகும் என
துந்துமி திமிந்திமிம் திமிம் என குறும் ஓசை
சுந்தரி மணம் செயும் சவுரிய கந்த குற வஞ்சி தங்கு அரு வன
துங்க மலையும் புரந்து அமரருக்கு இடர் கூரும்
பண்டர்கள் புயங்களும் பொடிபட கண்டவ ப்ரசண்ட குஞ்சரி எழில்
பைம் தரு வனம் புரந்து அகழ் எயில் புடை சூழும்
பந்தி வரு மந்தி செண்பகம் அகில் சந்து செறி கொன்றை துன்றிய வன
பந்தணையில் வந்திடும் சரவண பெருமாளே

மேல்

#855
தேன் இருந்த இதழார் பளிங்கு நகையார் குளிர்ந்த மொழியார் சரங்கள் விழி
சீர் சிறந்த முகவார் இளம் பிறையது என் புரூவர்
தேன் அமர்ந்த குழலார் களம் கமுகினார் புயம் கழையினார் தனம் குவடு
சேர் சிவந்த வடிவார் துவண்ட இடை புண்டரீகம்
சூனியம் கொள் செயலார் அரம்பை தொடையார் சரண் கமல நேர் இளம் பருவ
தோகை சந்தம் அணிவாருடன் கலவி இன்பமூடே
சோகம் உண்டு விளையாடினும் கமல பாதமும் புயம் ஈராறும் இந்துளம் பல்
தோடு அலங்கல் அணி மார்பமும் பரிவு உளம் கொள்வேனே
ஓ நம அந்த சிவ ரூபி அஞ்சுமுக நீலி கண்டி கலியாணி விந்து ஒளி
ஓசை தங்கும் அபிராமி அம்பிகை பயந்த வேளே
ஓலம் ஒன்ற அவுணர் சேனை மங்கையர்கள் சேறுடன் குருதி ஓட எண் திசையும்
ஓது கெந்துருவர் பாட நின்று நடம் கொள் வேலா
ஏனல் மங்கை சுசி ஞான ரம்பை என தாயி சந்த்ர முக பாவை வஞ்சி குற
மானொடு உம்பர் தரு மான் அணைந்த அழகு இலங்கும் பார்பா
ஏர் கரந்தை அறுகோடு கொன்றை மதி ஆறு அணிந்த சடையார் விளங்கும் எழில்
ஈறு இல் பந்தணை நலூர் அமர்ந்து வளர் தம்பிரானே

மேல்

#856
மதி அஞ்ச திரு நிறைந்த மா முகம் மயில் அஞ்ச கிளி இனங்கள் ஆம் என
மதுரம் செப்பிய மடந்தை மேனகை ரதி போல
மருவும் பொன் குடம் எழுந்த மா முலை வளர் வஞ்சி கொடி நடந்தவாறு என
வரு துங்க கடல் அணங்கு போல்பவர் தெருவூடே
நிதம் இந்தப்படி இருந்து வாறவர் பொருள் தங்க பணி கலந்து போய் வர
நெறி தந்திட்டவர் வசங்களாம் என உழலாதே
நிதி பொங்க பல தவங்களால் உனை மொழியும் புத்திகள் தெரிந்து நான் உனை
நிகர் சந்த தமிழ் சொரிந்து பாடவும் அருள்தாராய்
நதி மிஞ்ச சடை விரிந்த நாயகன் உமை அன்பில் செயும் மிகுந்த பூசனை
நலம் என்று உள் குளிர் சிவன் பராபரன் அருள் பாலா
நவ கங்கைக்கு இணை பகர்ந்த மா மணி நதி பங்கில் குலவு கந்துகாபுரி
நகர் பொங்கி தழைய வந்து வாழ்வுறு முருகோனே
கெதி தங்க தகு கணங்கள் வானவர் அரி கஞ்சத்தவர் முகுந்தர் நாவலர்
கிளை பொங்க க்ருபைபுரிந்து வாழ்க என அருள் நாதா
கெருவம் பற்றி இகல் விளைந்த சூரோடு தளம் அஞ்ச பொருது எழுந்து தீ உகள்
கிரவுஞ்ச கிரி வகிர்ந்த வேல் உள பெருமாளே

மேல்

#857
கொந்து ஆர் மை குழல் இந்து ஆர் சர்க்கரை என்றே செப்பிய மொழி மாதர்
கொங்கு ஆர் முத்து வடம் தான் இட்ட தனம் தான் இ தரை மலை போலே
வந்தே சுற்றி வளைந்தால் அற்ப மனம் தான் இப்படி உழலாமல்
மங்கா நற்பொருள் இந்தா அற்புதம் என்றே இப்படி அருள்வாயே
இந்து ஓட கதிர் கண்டு ஓட கடம் மண்டா நல் தவர் குடி ஓட
எங்கே அ கிரி எங்கே இ கிரி என்றே திக்கென வரு சூரை
பந்தாடி தலை விண்டு ஓட களம் வந்தோரை சில ரண காளி
பங்காக தரு கந்தா மிக்க பனந்தாள் உற்று அருள் பெருமாளே

மேல்

#858
அறுகு நுனி பனி அனைய சிறிய துளி பெரியது ஒரு ஆகம் ஆகி ஓர் பால ரூபமாய்
அரு மதலை குதலை மொழிதனில் உருகி அவருடைய ஆயி தாதையார் மாய மோகமாய்
அருமையினில் அருமை இட மொளுமொளு என உடல் வளர ஆளு மேளமாய் வால ரூபமாய்
அவர் ஒரு பெரியோராய்
அழகு பெறு நடை அடைய கிறிது படு மொழி பழகி ஆவியாய ஓர் தேவிமாருமாய்
விழு சுவரை அரிவையர்கள் படு குழியை நிலைமை என வீடு வாசலாய் மாட கூடமாய்
அணு அளவு தவிடும் இக பிதிரவிட மனம் இறுகி ஆசை ஆளராய் ஊசிவாசியாய்
அவியுறு சுடர் போலே
வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில் மேலை வீடு கேள் கீழை வீடு கேள்
திடுதிடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி ஞாளிகள் போல் ஏறி வீழ்வதாய்
விரகினொடு வரு பொருள்கள் சுவறி இட மொழியும் ஒரு வீணியர் சொலே மேலது ஆயிடா
விதிதனை நினையாதே
மினுகுமினுகு எனும் உடலம் அற முறுகி நெகிழ்வு உறவும் வீணர் சேவையே பூணு பாவியாய்
மறுமை உளது எனும் அவரை விடும் விழலை அதனில் வருவார்கள் போகுவார் காணுமோ எனா
விடு துறவு பெரியவரை மறையவரை வெடுவெடு என மேளமே சொலாய் ஆளி வாயராய்
மிடையுற வரு நாளில்
வறுமைகளும் முடுகி வர உறு பொருளு நழுவ சில வாதம் ஊதுகாமாலை சோகை நோய்
பெரு வயிறு வயிறுவலி படுவன் வர இரு விழிகள் பீளை சாறு இடா ஈளை மேலிடா
வழவழ என உமிழ் அமுது கொழகொழ என ஒழுகி விழ வாடி ஊன் எலாம் நாடி பேதமாய்
மனையவள் மனம் வேறாய்
மறுக மனை உறும் அவர்கள் நணுகுநணுகு எனும் அளவில் மாதர் சீ எனா வாலர் சீ எனா
கனவுதனில் இரதமொடு குதிரை வர நெடிய சுடுகாடு வா எனா வீடு போ எனா
வலது அழிய விரகு அழிய உரை குழறி விழி சொருகி வாயு மேலிடா ஆவி போகு நாள்
மனிதர்கள் பல பேச
இறுதி அதொடு அறுதி என உறவின் முறை கதறி அழ ஏழை மாதராள் மோதி மேல் விழா
எனது உடைமை எனது அடிமை எனு அறிவு சிறிதும் அற ஈ மொலேல் எனா வாயை ஆ எனா
இடுகு பறை சிறுபறைகள் திமிலையொடு தவில் அறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய்
எரிதனில் இடும் வாழ்வே
இணை அடிகள் பரவும் உனது அடியவர்கள் பெறுவதுவும் ஏசிடார்களோ பாச நாசனே
இருவினை முமலமும் அற இறவியொடு பிறவி அற ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும் வகை பரம சுகம் அதனை அருள் இடைமருதில் ஏகநாயகா லோகநாயகா
இமையவர் பெருமாளே

மேல்

#859
இலகு குழை கிழிய ஊடு போய் உலவி அடர வரு மதன நூல் அளாவி எதிர்
இளைஞர் உயிர் கவர ஆசை நேர் வலை பொதிந்த நீலம்
இனிமை கரைபுரள வாகு உலாவு சரி நெறிவு கலகல என வாசம் வீசும் குழல்
இருளின் முக நிலவு கூர மாண் உடை அகன்று போக
மலையும் இதழ் பருகி வேடை தீர உடல் இறுகஇறுகி அநுராக போக மிக
வளரும் இள தன பாரம் மீதினில் முயங்குவேனை
மதுர கவி அடைவு பாடி வீடு அறிவு முதிர அரிய தமிழ் ஓசை ஆக ஒளி
வசனம் உடைய வழிபாடு சேரும் அருள்தந்திடாதோ
கலக அசுரர் கிளை மாள மேரு கிரி தவிடுபட உதிர ஓல வாரி அலை
கதற வரி அரவம் வாய் விடா பசி தணிந்த போக
கலப மயிலின் மிசை ஏறி வேத நெறி பரவும் அமரர் குடியேற நாளும் விளை
கடிய கொடிய வினை வீழ வேலை விட வந்த வாழ்வே
அலகையுடன் நடனம் அது ஆடும் தாதை செவி நிறைய மவுன உரையாடும் நீப எழில்
அடவிதனில் உறையும் வேடர் பேதையை மணந்த கோவே
அமணர் கழுவில் விளையாட வாது படை கருது குமர குருநாத நீதி உளது
அருளும் இடைமருதில் மேவும் மா முனிவர் தம்பிரானே

மேல்

#860
படியை அளவிடு நெடிய கொண்டலும் சண்டனும் தமர சதுமறை அமரர் சங்கமும் சம்புவும்
பரவ அரிய நிருபன் விரகன் சுடும் சம்பனன் செம்பொன் மேனி
பரமன் எழில் புனையும் அரவங்களும் கங்கையும் திரு வளரும் முளரியொடு திங்களும் கொன்றையும்
பரிய குமிழ் அறுகு கன தும்பையும் செம்பையும் துன்று மூல
சடை முடியில் அணியும் நல சங்கரன் கும்பிடும் குமரன் அறுமுகன் மதுரம் தரும் செம் சொலன்
சரவணையில் வரு முதலி கொந்தகன் கந்தன் என்று உய்ந்து பாடி
தணிய ஒலி புகலும் விதம் ஒன்றிலும் சென்றிலன் பகிர ஒரு தினை அளவு பண்பு கொண்டு அண்டிலன்
தவ நெறியில் ஒழுகி வழி பண்படும் கங்கணம் சிந்தியாதோ
கடுகு பொடி தவிடுபடி மந்திரம் தந்திரம் பயில வரு நிருதர் உடலம் பிளந்து அம்பரம்
கதறி வெகு குருதி நதி பொங்கிடும் சம்ப்ரமம் கண்டு சேர
கழுகு நரி கொடி கருடன் அங்கு எழுந்து எங்கு நின்று அலகை பல திமிலை கொடு தந்தனம்தந்தனம்
கருதி இசை பொசியும் நசை கண்டுகண்டு இன்புறும் துங்க வேலா
அடல் புனையும் இடைமருதில் வந்து இணங்கும் குணம் பெரிய குருபர குமர சிந்துரம் சென்று அடங்கும்
அடவிதனில் உறை குமரி சந்து இலங்கும் தனம் தங்கு மார்பா
அருண மணி வெயில் இலகு தண்டை அம் பங்கயம் கருணை பொழிவன கழலில் அந்தமும் தம்பம் என்று
அழகுபெற நெறி வருடி அண்டரும் தொண்டு உறும் தம்பிரானே

மேல்

#861
புழுகொடு பனிநீர் சவாது உடன் இரு கரம் மிகு மார்பு லேபனம்
புளகித அபிராம பூஷித கொங்கை யானை
பொதுவினில் விலைகூறும் மாதர்கள் மணி அணி குழை மீது தாவடி
பொருவன கணை போல் விலோசன வந்தியாலே
மெழுகு என உருகா அனார் தமது இதய கலகமொடு மோகன
வெகு வித பரிதாப வாதனை கொண்டு நாயேன்
மிடைபடும் மல மாயையால் மிக கலவிய அறிவு ஏக சாமி நின்
விதரண சிவஞானபோதகம் வந்து தாராய்
எழு கிரி நிலை ஓட வாரிதி மொகுமொகு என வீச மேதினி
இடர் கெட அசுரேசர் சேனை முறிந்து போக
இமையவர் சிறை மீள நாய் நரி கழுகுகள் ககராசன் மேலிட
ரண முக கண பூத சேனைகள் நின்று உலாவ
செழு மத கரி நீல கோமள அபி நவ மயில் ஏறு சேவக
செயசெய முருகா குகா வளர் கந்த வேளே
திரை பொரு கரை மோது காவிரி வரு புனல் வயல் வாவி சூழ்த
திருவிடைமருதூரில் மேவிய தம்பிரானே

மேல்

#862
தநு நுதல் வெயர்வு எழ விழி குழி தர வளை சத்திக்க சில தித்திக்கப்படும் அன்பு பேசி
தழுவிய மகளிர்தம் முகிழ் முலை உரம் மிசை தைக்க சர்க்கரை கைக்கப்பட்டு அன தொண்டை ஊறல்
கனவிலு நுகர் தரு கலவியின் வலையிடை கட்டுப்பட்டு உயிர் தட்டுப்பட்டு அழிகின்றதோ தான்
கதி பெற விதியிலி மதியிலி உனது இரு கச்சு உற்ற சிறு செச்சை பத்மபதம் பெறேனோ
முனை மலி குலிசைதன் ம்ருகமத புளகித முத்த சித்ர தனத்துக்கு இச்சித அம்புராசி
முறையிட முது நிசிசரர் திரள் முதுகிட முட்ட பொட்டு எழ வெட்டி குத்தும் அடங்கல் வீரா
அனுபவம் அளி தரு நிகழ் தரும் ஒரு பொருள் அப்பர்க்கு அப்படி ஒப்பித்து அர்ச்சனை கொண்ட நாதா
அகிலமும் அழியினும் நிலைபெறு திரிபுவனத்து பொற்புறு சித்தி சித்தர்கள் தம்பிரானே

மேல்

#863
இந்து கதிர் சேர் அருண பந்தி நடு தூண் ஒளி பட்டு இன்ப ரச பால் அமுத சுவை மேவு
எண் குணம் உற்றோன் நடனம் சந்த்ர ஒளி பீடு அகம் உற்று எந்தை நடித்து ஆடும் அணி சபையூடே
கந்தம் எழுத்தோடு உறு சித்கெந்த மண பூ இதழை கண்டு களித்தே அமுத கடல் மூழ்கி
கந்த மதித்து ஆயிர எட்டு அண்டம் அதை கோல் புவன கண்டம் அதை காண எனக்கு அருள்வாயே
திந்த திமி தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட் டிந்தம் என காள மணி தவில் ஓசை
சிந்தை திகைத்து ஏழு கடல் பொங்க அரி சூர் மகுடம் செண்டு குலைத்து ஆடு மணி கதிர் வேலா
குந்தி அரி தாழ் துளபம் செம் திருவை சேர் களபம் கொண்டல் நிறத்தோன் மகளை தரை மீதே
கும்பிட கை தாளம் எடுத்து அம் பொன் உரு பாவை புகழ் கும்பகோணத்து ஆறுமுக பெருமாளே

மேல்

#864
தும்பி முகத்து ஆனை பணை கொம்பு அது என தாவி மயல் தொந்தம் என பாயும் முலை கன மாதர்
தும்பி மலர் சோலை முகில் கங்குல் இருள் காரின் நிற தொங்கல் மயில் சாயல் என குழல் மேவி
செம்பொன் உருக்கான மொழி சங்கின் ஒளி காம நகை செங்கயலை போலும் விழி கணையாலே
சிந்தை தகர்த்து ஆளும் இத சந்த்ர முக பாவையர் தித்திந்திம் என உற்று ஆடும் அவர்க்கு உழல்வேனோ
தம்பி வர சாதி திரு கொம்பு வர கூட வன சந்த மயில் சாய் விலகி சிறை போக
சண்டர் முடி தூள்கள் பட சிந்தி அரக்கோர்கள் விழ தங்க நிறத்தாள் சிறையை தவிர் மாயோன்
கொம்பு குறி காளம் மடு திந்தம் என உற்று ஆடி நிரை கொண்டு வளைத்தே மகிழ் அச்சுதன் ஈண
கொஞ்சு சுக பாவை இணை கொங்கைதனில் தாவி மகிழ் கும்பகோணத்து ஆறுமுக பெருமாளே

மேல்

#865
கெண்டை நேர் ஒத்த விழி மங்கை மோக கலவை கெந்த வாச புழுகு மண நாறும்
கிம்புரி ஈச களப கொங்கை யானை சிறிது கிஞ்சு காண பெருகி அடியேனும்
மண்டி மோச கலவி கொண்டு காமித்து உருகி வண்டன் ஆக புவியில் உழலாமல்
வந்து ஞான பொருளில் ஒன்று போதித்து உனது மஞ்சு தாளை தினமும் அருள்வாயே
அண்டர் வாழ ப்ரபை சண்ட மேரு கிரி இளைந்து வீழ பொருத கதிர் வேலா
அஞ்சு வாயில் பரனை நெஞ்சில் ஊறி தவசில் அன்புளாரை சிறையிட அசுரோரை
கொண்டுபோய் வைத்த கழு நெஞ்சில் ஏற கழுகு கொந்தி ஆட தலையை அரிவோனே
கொண்டல் சூழ் கழனி சங்கு உலாவி பரவு கும்பகோணத்தில் உறை பெருமாளே

மேல்

#866
பஞ்சு சேர் நிர்த்த பத மாதர் பங்கம் ஆர் தொக்கில் படியாமல்
செம் சொல் சேர் சித்ர தமிழால் உன் செம்பொன் ஆர்வத்தை பெறுவேனோ
பஞ்ச பாணத்தன் பொரு தேவர் பங்கில் வாழ் சத்தி குமரேசா
குஞ்சரீ வெற்பு தன நேயா கும்பகோணத்தில் பெருமாளே

மேல்

#867
மாலைதனில் வந்து வீதிதனில் நின்று வாச மலர் சிந்து குழல் கோதி
வார் இரு தனங்கள் பூணொடு குலுங்க மால் பெருகி நின்ற மடவாரை
சாலை வழி வந்து போம் அவர்கள் நின்று தாழ் குழல்கள் கண்டு தடுமாறி
தாக மயல் கொண்டு மால் இருள் அழுந்தி சால மிக நொந்து தவியாமல்
காலையில் எழுந்து உன் நாமம் மொழிந்து காதல் உமை மைந்த என ஓதி
காலமும் உணர்ந்து ஞான வெளி கண்கள் காண அருள் என்று பெறுவேனோ
கோலமுடன் அன்று சூர் படையின் முன்பு கோபமுடன் நின்ற குமரேசா
கோதை இரு பங்கன் மேவ வளர் கும்பகோண நகர் வந்த பெருமாளே

மேல்

#868
கறுத்த குஞ்சியும் வெளிறி எழும் கொத்து உருத்த வெண் பலும் அடைய விழுந்து உள்
கருத்துடன் திகழ் மதியும் மருண்டு சுருள் நோயால்
கலக்கமுண்டு அலம்அலம் உற வெண்டி பழுத்து எழும்பிய முதுகு முடங்க
கழுத்தில் வந்து இளை இருமல் ஒதுங்க கொழு மேனி
அற திரங்கி ஒர் தடி கை நடுங்க பிடித்து இடும்பு உறு மனைவியும் நிந்தித்து
அடுத்த மைந்தரும் வசைகள் விளம்ப சடமாகி
அழுக்கு அடைந்து இடர்படும் உடல் பங்க பிறப்பு எனும் கடல் அழியல் ஒழிந்திட்டு
அடுத்து இரும் திருவடிதனை என்று உற்றிடுவேனோ
புற தலம் பொடிபட மிகவும் கட்டு அற பெரும் கடல் வயிறு குழம்ப
புகட்டு அரங்கிய விரக துரங்க திறல் வீரா
பொருப்பு உரம் படர் கிழி பட வென்று அட்டு அரக்கர் வன் தலை நெரிய நெருங்கி
புதை குறும் தசை குருதிகள் பொங்க பொரும் வேலா
சிறுத்த தண்டைய மதலையோர் அஞ்ச சினத்து மிஞ்சு அரி திரி தரு குன்ற
தினை புனம் திகழ் குறமகள் கொங்கை கிரி மேவி
செருக்கு நெஞ்சு உடை முருக சிகண்டி பரி சுமந்திடு குமர கடம்ப
திரு குடந்தையில் உறை தரு கந்த பெருமாளே

மேல்

#869
செனித்திடும் சலம் சாழலும் ஊழலும் விளைத்திடும் குடல் பீறியும் மீறிய
செருக்கொடும் சதை பீளையும் ஈளையும் உடலூடே
தெளித்திடும் பல சாதியும் வாதியும் இரைத்திடும் குலமே சில கால் படர்
சினத்திடும் பவ நோயெனவே இதை அனைவோரும்
கனைத்திடும் கலி காலம் இதோ என எடுத்திடும் சுடுகாடு புகா என
கவிழ்த்திடும் சடமோ பொடியாய் விடும் உடல் பேணி
கடுக்கனும் சில பூடணம் ஆடைகள் இருக்கிடும் கலையே பல ஆசைகள்
கழித்திடும் சிவயோகமும் ஞானமும் அருள்வாயே
தனத்த னந்தன தானன தானன திமித்தி திந்திமி தீதக தோதக
தகுத்து துந்துமி தாரை விராணமொடு அடல் பேரி
சமர்த்தம் ஒன்றிய தானவர் சேனையை வளைத்து வெம் சினம் வேல் விடு சேவக
சமத்து உணர்ந்திடு மாதவர்பால் அருள்புரிவோனே
தினை புனம்தனிலே மயலால் ஒரு மயில் பதம்தனிலே சரண் நான் என
திரு புயம் தரு மோகன மானினை அணைவோனே
சிவ கொழும் சுடரே பரனாகிய தவத்தில் வந்தருள் பால க்ருபாகர
திரு குடந்தையில் வாழ் முருகா சுரர் பெருமாளே

மேல்

#870
கரிய குழல் சரிய முகம் வேர்வு ஆட வாசமுறு களப முலை புளகம் எழ நேரான வேல் விழிகள்
கயல் பொருது செயல் அது என நீள் பூசல் ஆட நல கனி வாயின்
கமழ் குமுத அதர இதழ் தேன் ஊறல் பாய மிகு கடல் அமுதம் உதவ இரு தோள் மாலை தாழ வளை
கலகல என மொழி பதற மா மோக காதல் அது கரை காணாது
எரி அணுகு மெழுகு பதமாய் மேவிமேவி இணை இருவர் உடல் ஒருவர் என நாணாது பாயல் மிசை
இள மகளிர் கலவிதனில் மூழ்கி ஆழ்கினும் இமையாதே
இரவின் இடை துயில் உகினும் யாரோடு பேசுகினும் இளமையும் உன் அழகு புனை ஈராறு தோள் நிரையும்
இரு பதமும் அறு முகமும் யான் ஓத ஞானம் அதை அருள்வாயே
உரிய தவ நெறியில் நம நாராயணாய என ஒரு மதலை மொழிய அளவில் ஓராத கோபமுடன்
உனது இறைவன் எதனில் உளன் ஓதாயடா எனு முன் உறு தூணில்
உரமுடைய அரி வடிவதாய் மோதி வீழ விரல் உகிர் புதைய இரணியனை மார் பீறி வாகை புனை
உவண பதி நெடியவனும் வேதாவும் நான்மறையும் உயர்வாக
வரி அளிகள் இசை முரல வாகான தோகை இள மயில் இடையில் நடனம் இட ஆகாசம் ஊடுருவ
வளர் கமுகின் விரி குலைகள் பூண் ஆரமாகி இட மதில் சூழும்
மருத அரசர் படை விடுதி வீடாக நாடி மிக மழம் விடையின் மிசையி வரு சோமீசர் கோயில்தனில்
மகிழ்வு பெற உறை முருகனே பேணு வானவர்கள் பெருமாளே

மேல்

#871
பட்டு மணி கச்சு இறுக கட்டி அவிழ்த்து உத்தரிய பத்தியின் முத்து செறி வெற்பு இணையாம் என்
பற்பம் முகை குத்து முலை தத்தையர் கை புக்கு வசப்பட்டு உருகி கெட்ட வினை தொழிலாலே
துட்டன் என கட்டன் என பித்தன் என பிரட்டன் என சுற்றம் அற மற சித்தன் என திரிவேனை
துக்கம் அறுத்து கமல பொன் பதம் வைத்து பதவி சுத்தி அணை பத்தரில் வைத்து அருள்வாயே
சுட்ட பொருள் கட்டியின் மெய் செ கமல பொன் கொடியை துக்கமுற சொர்க்கமுற கொடி யாழார்
சுத்த ரதத்தில் கொடு புக்கு கடுகி தெற்கு அடைசி சுற்று வனத்தில் சிறை வைத்திடு தீரன்
கொட்டம் அற புற்று அரவ செற்றம் அற சத்தம் அற குற்றம் அற சுற்றம் அற பல தோளின்
கொற்றம் அற பத்து முடி கொத்தும் அறுத்திட்ட திறல் கொற்றர் பணி கொட்டை நகர் பெருமாளே

மேல்

#872
மனம் என்னும் பொருள் வான் அறை கால் கனல் புனல் உடன் புவி கூடியது ஓர் உடல்
வடிவு கொண்டு அதிலே பதிமூணு ஏழு வகையாலே
வரு சுகம் துயர் ஆசையிலே உழல் மதியை வென்று பராபர ஞான நல்
வழி பெறும்படி நாய் அடியேனை நின் அருள் சேராய்
செனனி சங்கரி ஆரணி நாரணி விமலி எண் குண பூரணி காரணி
சிவை பரம்பரை ஆகிய பார்வதி அருள் பாலா
சிறை புகும் சுரர் மாதவர் மேல் பெற அசுரர் தம் கிளை ஆனது வேர் அற
சிவன் உகந்து அருள்கூர் தரு வேல் விடு முருகோனே
கனகன் அங்கையினால் அறை தூண் இடை மனித சிங்கம் அதாய் வரை பார் திசை
கடல் கலங்கிடவே பொருதே உகிர் முனையாலே
கதற வென்று உடல் கீண அவன் ஆருயிர் உதிரமும் சிதறாது அமுதாய் உணும்
கமல உந்தியன் ஆகிய மால் திரு மருகோனே
தினகரன் சிலை வேள் அருள் மாதவர் சுரர்கள் இந்திரனார் உரகாதிபர்
திசைமுகன் செழு மா மறையோர் புகழ் அழகோனே
திரு மடந்தையர் நாலிருவோர் நிறை அகமொடு அம் பொனின் ஆலய நீடிய
சிவபுரந்தனில் வாழ் குக நாயக பெருமாளே

மேல்

#873
ஆசார ஈன குதர்க்க துட்டர்கள் மாதா பிதாவை பழித்த துட்டர்கள்
ஆமாவின் ஊனை செறுத்த துட்டர்கள் பர தாரம்
ஆகாது எனாமல் பொசித்த துட்டர்கள் நானா உபாய சரித்ர துட்டர்கள்
ஆவேச நீரை குடித்த துட்டர்கள் தமியோர் சொம்
கூசாது சேர பறித்த துட்டர்கள் ஊரார்கள் ஆசை பிதற்று துட்டர்கள்
கோலால வாள் வில் செறுக்கு துட்டர்கள் குரு சேவை
கூடாத பாவத்து அவத்த துட்டர்கள் ஈயாது தேடி புதைத்த துட்டர்கள்
கோமாள நாயில் கடை பிறப்பினில் உழல்வாரே
வீசா விசால பொருப்பு எடுத்து எறி பேர் ஆரவார சமுத்திரத்தினில்
மீளாமல் ஓடி துரத்தி உட்கும் ஒரு மாவை
வேரோடு வீழ தறித்து அடுக்கிய போராடு சாமர்த்திய திரு கையில்
வேலாயுதா மெய் திருப்புகழ் பெறு வயலூரா
நாசாதி ப்ராரத்த துக்கம் மிக்கவர் மாயா விகார தியக்கம் அறுத்து அருள்
ஞானோபதேச ப்ரசித்த சற்குரு வடிவான
நாதா எனா முன் துதித்திட புவி ஆதாரம் ஆய்கைக்கு முட்ட முற்றருள்
நாகேச நாம தகப்பன் மெச்சிய பெருமாளே

மேல்

#874
தரையினில் வெகு வழி சார்ந்த மூடனை வெறியனை நிறை பொறை வேண்டிடா மத
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணனை மிகு கேள்வி
தவ நெறிதனை விடு தாண்டுகாலியை அவமதி அதனில் பொலாங்கு தீமை செய்
சமடனை வலிய அசாங்கம் ஆகிய தமியேனை
விரை செறி குழலியர் வீம்பு நாரியர் மதி முக வனிதையர் வாஞ்சை மோகியர்
விழி வலை மகளிரொடு ஆங்கு கூடிய வினையேனை
வெகு மலர் அது கொடு வேண்டியாகிலும் ஒரு மலர் இலை கொடும் ஓர்ந்து யான் உனை
விதம் உறு பரிவொடு வீழ்ந்து தாள் தொழ அருள்வாயே
ஒரு பது சிரம் மிசை போந்த ராவணன் இருபது புயமுடன் ஏந்தும் ஏதியும்
ஒரு கணைதனில் அற ஓங்கு மாயவன் மருகோனே
உனது அடியவர் புகழ் ஆய்ந்த நூலின் அமரர்கள் முனிவர்கள் ஈந்த பாலகர்
உயர் கதி பெற அருள் ஓங்கு மா மயில் உறைவோனே
குரை கழல் பணிவொடு கூம்பிடார் பொரு களம் மிசை அறம் அது தீர்ந்த சூரர்கள்
குல முழுது அனைவரும் மாய்ந்து தூள் எழ முனிவோனே
கொடு விடம் அதுதனை வாங்கியே திரு மிடறினில் இரு என ஏந்தும் ஈசுரர்
குரு பர என வரு கூந்தலூர் உறை பெருமாளே

மேல்

#875
கட கரி மருப்பில் கதிர்த்து ப்ரமிக்க மிக உரம் இட நெருக்கி பிடித்து புடைத்து வளர்
கனக குடம் ஒத்து கனத்து பெருத்த மணி அணியாலே
கதிர் திகழு செப்பை கதிக்க பதித்து மகிழ் கமல முகை பட்சத்து இருத்தி பொருத்து முலை
கமழ் விரை கொள் செச்சை கலப்பை பொதித்த அதனை விலகாது
கடுவை அடுவை பற்றி வில் சிக்க வைத்த செயல் என நிறம் இயற்றி குயிற்றி புரட்டி வரு
கயல் விழி வெருட்டி துரத்தி செவி குழையின் மிசை தாவும்
கள மதனனுக்கு சயத்தை படைத்து உலவு கடு மொழி பயிற்று களைத்து கொடிச்சியர்கள்
கணியினில் அகப்பட்டு அழுத்து அ துயர்ப்படுவது ஒழியேனோ
அடலை புனை முக்கண் பரற்கு பொருள் சொல் அரு மறைதனை உணர்த்தி செகத்தை பெருத்த மயில்
அதனை முன் நடத்தி கணத்தில் திரித்து வரும் அழகோனே
அபகடம் உரைத்து அத்தம் மெத்த படைத்து உலகில் எளியரை மருட்டி செகத்தில் பிழைக்க எணும்
அசடர் தம் மனதை கலக்கி துணித்து அடரும் அதி சூரா
விட அரவணைக்குள் துயில் கொள் க்ருபை கடவுள் உலவு மலை செப்பை செவிக்கண் செறித்து மிக
விரைவில் உவணத்தில் சிறக்க ப்ரியத்தில் வரும் ஒரு மாயோன்
விழை மருக கொக்கில் சமுத்ரத்தில் உற்றவனை நெறுநெறென வெட்டி உக்ர சத்தி தனிப்படைய
விடையவர் திரு சத்தி முத்தத்தினில் குலவு பெருமாளே

மேல்

#876
மகர குண்டலம் மீதே மோதுவ அருண பங்கயமோ பூ ஓடையில்
மருவு செங்கழு நீரோ நீ விடு வடி வேலோ
மதன் விடும் கணையோ வாளோ சில கயல்கள் கெண்டைகளோ சேலோ கொலை
மறலி என்பவனோ மானோ மது நுகர் கீதம்
முகர வண்டு இனமோ வான் மேல் எழு நில அருந்து புளோ மா தேவர் உண்
முதிய வெம் கடுவோ தேமா வடு வகிரோ பார்
முடிவு எனும் கடலோ யாதோ என உலவு கண் கொடு நேரே சூறை கொள்
முறை அறிந்த பசாசே போல்பவர் உறவு ஆமோ
நிகர் இல் வஞ்சக மாரீசாதிகள் தசமுகன் படை கோடா கோடிய
நிருதரும் பட ஓர் ஏ ஏவியே அடு போர் செய்
நெடியன் அங்கு அனுமானோடே எழுபது வெள்ளம் கவி சேனா சேவித
நிருபன் அம்பரர் கோமான் ராகவன் மருகோனே
சிகர உம்பர்கள் பாகீராதிகள் பிரபை ஒன்று பிராசாதாதிகள்
சிவ சடங்கமொடு ஈசானாதிகள் சிவ மோனார்
தெளியும் மந்த்ர கலா பாய் யோகிகள் அயல் விளங்கு சுவாமீ காமரு
திரு வலஞ்சுழி வாழ்வே தேவர்கள் பெருமாளே

மேல்

#877
தோடுற்று காதளவு ஓடிய வேலுக்கு தான் நிகராய் எழு சூதத்தில் காமனி ராசத விழியாலே
சோடுற்று தாமரை மா முகை போல கற்பூரம் அளாவிய தோல் முத்து கோடு என வீறிய முலை மானார்
கூட சிக்காயவர் ஊழியமே பற்றி காதலின் ஓடிய கூள சித்தாளனை மூளனை வினையேனை
கோபித்து தாய் என நீ ஒரு போதத்தை பேச அதால் அருள் கோடித்து தான அடியேன் அடி பெறவேணும்
வேடிக்கைக்கார உதாரகுணா பத்ம தாரணி காரண வீர சுத்தா மகுடா சமர் அடு தீரா
வேலை கட்டாணி மகாரத சூரர்க்கு சூரனை வேல் விடு வேழத்தில் சீர் அருள் ஊறிய இளையோனே
ஆடத்தக்கார் உமை பாதியர் வேத பொன் கோவண ஆடையர் ஆலித்து தான் அருள் ஊறிய முருகோனே
ஆட பொன் கோபுரம் மேவிய ஆடிக்கு ஒப்பா மதிள் சூழ் பழையாறை பொன் கோயிலின் மேவிய பெருமாளே

மேல்

#878
திட்டு என பல செப்பை அடிப்பன பொன் குடத்தை உடைப்பன உத்தர
திக்கினில் பெரு வெற்பை விடுப்பன அதின் மேலே
செப்ப அத்தி மருப்பை ஒடிப்பன புற்பதத்தை இமைப்பில் அழிப்பன
செய் தலை கமலத்தை அலைப்பன திறம் ஏய
புள்தனை ககனத்தில் விடுப்பன சித்த முன் பொரவிட்டு முறிப்பன
புட்ப இக்கன் முடி குறி உய்ப்பன இளநீரை
புக்கு உடைப்பன முத்திரை இட்ட தனத்தை விற்பவர் பொய் கலவிக்கு உழல்
புத்தி உற்றமை அற்றிட எப்பொழுது அருள்வாயே
துட்ட நிக்ரக சத்திதர ப்ரபல ப்ரசித்த சமர்த்த தமிழ் த்ரய
துட்கர கவிதை புகலிக்கு அரச எனு நாம
சொற்க நிற்க சொல் லட்சண தட்சண கு தரத்தில் அகத்தியனுக்கு அருள்
சொல் குருத்வம் மகத்துவ சத்வ ஷண்முக நாத
தட்டு அற சமையத்தை வளர்ப்பவள் அத்தன் முன் புகழ் செப்ப அனுக்ரக
சத்துவத்தை அளித்திடு செய்ப்பதி மயில் ஏறி
சட்பத திரள் மொய்த்த மண பொழில் மிக்க ரத்ந மதில் புடை சுற்றிய
சக்கிரப்பளி முக்கணர் பெற்று அருள் பெருமாளே

மேல்

#879
அலங்கார முடி கிரண திரண்டு ஆறுமுகத்து அழகிற்கு அசைந்து ஆடு குழை கவச திரள் தோளும்
அலம் தாமம் மணி திரளை புரண்டு ஆட நிரைத்த கரத்து அணிந்த ஆழி வனை கடக சுடர் வேலும்
சிலம்போடு மணி சுருதி சலங்கு ஓசை மிகுத்து அதிர சிவந்து ஏறி மணத்த மலர் புனை பாதம்
திமிந்தோதி திமித்திமிதி தனந்தான தனத்தனன தினந்தோறு நடிப்பது மன் புகல்வேனோ
இலங்கேசர் வனத்துள் வன குரங்கு ஏவி அழல் புகையிட்டு இளம் தாது மலர் திருவை சிறை மீளும்
இளம் காள முகில் கடுமை சரம் கோடு கரத்தில் எடுத்து இரும் கானம் நடக்கும் அவற்கு இனியோனே
குலம் கோடு படைத்த அசுர பெரும் சேனை அழிக்க முனை கொடும் தாரை வெயிற்கு அயிலை தொடும் வீரா
கொழும் காவின் மலர் பொழிலில் கரும்பு ஆலை புணர்க்கும் இசை குரங்காடுதுறை குமர பெருமாளே

மேல்

#880
குறித்த நெஞ்சு ஆசை விரகிகள் நவிற்று சங்கீத மிடறிகள்
குதித்து அரங்கு ஏறு நடனிகள் எவரோடும்
குறைப்படும் காதல் குனகிகள் அரை பணம் கூறு விலையினர்
கொலை கொடும் பார்வை நயனிகள் நகரேகை
பொறித்த சிங்கார முலையினர் வடுப்படும் கோவை இதழிகள்
பொருள் தினம் தேடு கபடிகள் தவர் சோர
புரித்திடும் பாவ சொருபிகள் உருக்கு சம்போக சரசிகள்
புணர்ச்சி கொண்டாடு மருள் அது தவிர்வேனோ
நெறித்து இருண்டு ஆறு மலர் பத மலர் மணத்த பைம் கோதை வகைவகை
நெகிழ்க்கும் மஞ்சு ஓதி வனசரி மணவாளா
நெருக்கும் இந்த்ராதி அமரர்கள் வள பெரும் சேனை உடையவர்
நினைக்கும் என் போலும் அடியவர் பெருவாழ்வே
செறித்த மந்தாரை மகிழ் புனை மிகுத்த தண் சோலை வகைவகை
தியக்கி அம்பேறு நதி அது பலவாறும்
திரை கரம் கோலி நவ மணி கொழித்திடும் சாரல் வயல் அணி
திரு குரங்காடுதுறை உறை பெருமாளே

மேல்

#881
குடங்கள் நிரைத்து ஏறு தடங்கள் குறித்து ஆர வடங்கள் அசைத்து ஆர செய நீலம்
குதம்பை இடத்து ஏறு வடிந்த குழை காது குளிர்ந்த முக பார்வை வலையாலே
உடம்பும் அற கூனி நடந்து மிக சாறி உலந்து மிக கோலும் அகலாதே
உறங்கி விழிப்பு ஆய பிறந்த பிறப்பேனும் உரம் கொள பொன் பாதம் அருள்வாயே
விடங்கள் கதுப்பு ஏற படங்கண் நடித்து ஆட அவிதம் கொள் முதல் பாயல் உறை மாயன்
வில் அங்கை முறிந்து ஓடி இடங்கள் வளைத்து ஏறு விளங்கும் முகிற்கு ஆன மருகோனே
தடம் கொள் வரை சாரல் நளங்கும் மயில் பேடை தழங்கும் இயல் பாடி அளி சூழ
தயங்கும் வயல் சாரல் குரங்கு குதித்து ஆடும் தலங்கள் இசைப்பான பெருமாளே

மேல்

#882
மானை நேர் விழி ஒத்த மடந்தையர் பாலை நேர் மொழி ஒத்து விளம்பியர்
வாச மா மலர் கட்டும் அரம்பையர் இரு தோளும்
மார்பு மீதினும் முத்து வடம் புரள் காம பூரண பொன் கடகம் பொர
வாரி நீல வளை கை புலம்பிட அநுராகம்
ஆன நேரில் வித திரயங்களும் நாணம் மாற மயக்கி இயம்பவும்
ஆடை சோர நெகிழ்த்து இரங்கவும் உறவாடி
ஆரவார நயத்த குணங்களில் வேளின் நூல்களை கற்ற விளம்பவும்
ஆகும் மோக விபத்தும் ஒழிந்து உனை அடைவேனோ
சானகி துயரத்தில் அரும் சிறை போனபோது தொகுத்த சினங்களில்
தாப சோபம் ஒழிப்ப இலங்கையும் அழிவாக
தாரை மான் ஒரு சுக்கிரபன் பெற வாலி வாகு தலத்தில் விழுந்திட
சாத வாளி தொடுத்த முகுந்தனன் மருகோனே
கான வேடர் சிறு குடில் அம் புனம் மீதில் வாழ் இதணத்தில் உறைந்திடு
காவல் கூரும் குறத்தி புணர்த்திடும் மணி மார்பா
கா உலாவிய பொன் கமுகின் திரள் பாளை வீச மலர் தடமும் செறி
காவளூர்தனில் முத்தமிழும் தெரி பெருமாளே

மேல்

#883
அஞ்சன வேல் விழி மட மாதர் அங்கு அவர் மாயையில் அலைவேனோ
விஞ்சுறுமா உனது அடி சேர விம்பம் அதாய் அருள் அருளாதோ
நஞ்சு அமுதாய் உணும் அரனார்தம் நல் குமரா உமை அருள் பாலா
தஞ்ச எனவாம் அடியவர் வாழ தஞ்சையில் மேவிய பெருமாளே

மேல்

#884
அம்புராசியில் கெண்டை சேல் ஒளித்து அஞ்சவே மணி குழை வீசும்
அம் கணார் இடத்து இன்ப சாகரம் தங்கி மூழ்கும் இச்சையினாலே
எம்பிரான் உனை சிந்தியாது ஒழித்த இந்த்ரசால இ ப்ரமை தீர
இங்கு வா என பண்பினால் அழைத்து எங்குமான மெய்ப்பொருள் தாராய்
கொம்பு போல் இடை தொண்டை போல் இதழ் கொண்டல் போல் குழல் கன மேரு
குன்று போல் முலை பைங்கி ராதையை கொண்ட கோல சற்குண வேலா
சம்பராரியை கொன்ற தீ விழி சம்பு போதக குருநாதா
சண்ட கோபுர செம்பொன் மாளிகை தஞ்சை மா நகர் பெருமாளே

மேல்

#885
கந்த வார் குழல் கோதி மாலையை புனைந்து மஞ்சளால் அழகாக மேனியில் திமிர்ந்து
கண்ட மாலைகள் ஆன ஆணி முத்து அணிந்து தெருவூடே
கண்டபேரை எலாம் அவாவினில் கொணர்ந்து வண் பயோதர பார மேருவை திறந்து
கண்களாகிய கூர வேலை விட்டு எறிந்து விலைகூறி
வந்த பேர்களையே கையால் எடுத்து அணைந்து கொண்டு தேன் இதழ் ஊறு வாயை வைத்து அருந்தி
மந்த மாருதம் வீச பாயலில் புணர்ந்து மயல் பூணும்
மங்கைமார் அநுபோக தீவினை பவங்கள் மங்கி ஏகிடுமாறு ஞான வித்தை தந்து
வண்டு உலாவிய நீப மாலை சற்று இலங்க வருவாயே
இந்த்ரதாருவை ஞாலம் மீதினில் கொணர்ந்த சங்க பாணியன் ஆதி கேசவ ப்ரசங்கன்
என்று வாழ் மணி மார்பன் வீர விக்ரமன் தன் மருகோனே
எண் திசை முக வேலை ஞாலம் உற்று மண்டு கந்த தாருக சேனை நீறு பட்டு ஒதுங்க
வென்று பேரொளி சேர் ப்ரகாசம் விட்டு இலங்கு கதிர் வேலா
சந்த்ரசேகரி நாகபூஷணத்தி அண்டம் உண்ட நாரணி ஆலபோஜனத்தி
அம்பை தந்த பூரண ஞான வேள் குறத்தி துஞ்சு மணி மார்பா
சண்ட நீல கலாப வாசியில் திகழ்ந்து கஞ்சன் வாசவன் மேவி வாழ் பதிக்கு உயர்ந்த
தஞ்சை மா நகர் ராஜ கோபுரத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#886
மரு உலாவிடும் ஓதி குலைப்பவர் சமர வேல் எனு நீடு விழிச்சியர்
மனதிலே கபடு ஊரு பரத்தையர் ரதி கேள்வர்
மதனனோடு உறழ் பூசல் இடைச்சியர் இளைஞர் ஆருயிர் வாழும் முலைச்சியர்
மதுர மா மொழி பேசு குணத்தியர் தெரு மீதே
சருவி யாரையும் வா என அழைப்பவர் பொருளிலே வெகு ஆசை பரப்பிகள்
சகல தோதக மாயை படிப்பரை அணுகாதே
சலசம் மேவிய பாத நினைத்து முன் அருணை நாடு அதில் ஓது திருப்புகழ்
தணிய ஓகையில் ஓத எனக்கு அருள்புரிவாயே
அரிய கானகம் மேவும் குறத்திதன் இதணிலே சில நாளு மனத்துடன்
அடவிதோறுமே வாழ் இயல் பத்தினி மணவாளா
அசுரர் வீடுகள் நூறு பொடிபட உழவர் சாகரம் ஓடி ஒளித்திட
அமரர் நாடு பொன் மாரி மிகுந்திட நினைவோனே
திருவின் மா மரம் ஆர் பழன பதி அயிலும் சோறவை ஆளும் துறை பதி
திசையில் நான்மறை தேடிய முன் குடி விதி ஆதி
சிரமும் மா நிலம் வீழ் தரு மெய்ப்பதி பதும நாயகன் வாழ் பதி நெய்ப்பதி
திருவையாறுடனே ஏழு திருப்பதி பெருமாளே

மேல்

#887
சொரியும் மா முகிலோ இருளோ குழல் சுடர் கொள் வாள் இணையோ பிணையோ விழி
சுரர்தம் ஆர் அமுதோ குயிலோ மொழி இதழ் கோவை
துவர் அதோ இலவோ தெரியா இடை துகள் இலா அனமோ பிடியோ நடை
துணை கொள் மா மலையோ முலை தான் என உரையாடி
பரிவினால் எனை ஆளுக நான் ஒரு பழுது இலான் என வாள் நுதலாரொடு
பகடியே படியா ஒழியா இடர் படு மாய
பரவை மீது அழியா வகை ஞானிகள் பரவு நீள் புகழே அதுவாம் மிகு
பரம வீடு அது சேர்வதும் ஆவதும் ஒரு நாளே
கரிய மேனியன் ஆ நிரை ஆள்பவன் அரி அரா அணை மேல் வளர் மா முகில்
கனகன் மார்பு அது பீறிய ஆளரி கன மாய
கபடன் மா முடி ஆறுடன் நாலும் ஒர் கணையினால் நிலம் மீதுற நூறிய
கருணை மால் கவி கோப க்ருபாகரன் மருகோனே
திரிபுராதிகள் தூள் எழ வானவர் திகழவே முனியா அருள்கூர்பவர்
தெரிவை பாதியார் சாதி இலாதவர் தரு சேயே
சிகர பூதர நீறு செய் வேலவ திமிர மோகரம் வீர திவாகர
திருவையாறு உறை தேவ க்ருபாகர பெருமாளே

மேல்

#888
வீங்கு பச்சை இளநீர் போல் மா முலை சேர்ந்து அணைத்து எதிர் மார்பூடே பொர
வேண்டு சர்க்கரை பால் தேன் நேர் இதழ் உண்டு தோயா
வேண்டு உரை துகில் வேறாய் மோகன வாஞ்சையில் களை கூரா வாள் விழி
மேம்பட குழை மீதே மோதிட வண்டு இராசி
ஓங்கு மை குழல் சாதா ஈறு என வீந்து புட்குரல் கூவா வேள் கலை
ஓர்ந்திட பல க்ரீடா பேத முயங்கும் ஆகா
ஊண் புணர்ச்சியும் மாயா வாதனை தீர்ந்து உனக்கு எளிதாயே மாதவம்
ஊன்றுதற்கு மெய் ஞானாசாரம் வழங்குவாயே
தாங்கு நிற்சரர் சேனா நீதர் உன் ஆங்கு ருத்ர குமாரா கோஷண
தாண்டவற்கு அருள் கேகீ வாகன துங்க வீரா
சாங்கிபர் சுகர் சீ நாதீசுரரேந்திரன் மெச்சிய வேலா போதக
சாந்த வித்தக ஸ்வாமி நீப அலங்கன் மார்பா
பூங்குளத்திடை தாராவோடு அனம் மேய்ந்த செய்ப்பதி நாதா மா மலை
போன்ற விக்ர சூரா அரீ பகிரண்ட ரூபா
போந்த பத்தர் பொலா நோய் போயிட வேண்ட அநுக்ரக போதா மேவிய
பூந்துருத்தியில் வாழ்வே தேவர்கள் பெருமாளே

மேல்

#889
முகிலை காரை சருவிய குழல் அது சரிய தாம தொடை வகை நெகிழ் தர
முளரி பூவை பனி மதிதனை நிகர் முகம் வேர்வ
முனையில் காதி பொரு கணையினை இள வடுவை பானல் பரிமள நறை இதழ்
முகையை போல சமர் செய்யும் இரு விழி குழை மோத
துகிரை கோவை கனிதனை நிகர் இதழ் பருகி காதல் துயர் அற வள நிறை
துணை பொன் தோளில் குழைவுற மனம் அது களிகூர
சுடர் முத்து ஆர பணி அணி ம்ருகமத நிறை பொன் பாரத்து இளகிய முகிழ் முலை
துவள கூடி துயில்கினும் உனது அடி மறவேனே
குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதி என் முரசோடு
குழுமி சீறி சமர் செய்யும் அசுரர்கள் களம் மீதே
குழறி கூளி திரள் எழ வயிரவர் குவிய கூடி கொடு வர அலகைகள்
குணல் இட்டு ஆடி பசி கெட அயில் விடு குமரேசா
செகசெச் சேசெச் செக என முரசு ஒலி திகழ சூழ திரு நடம் இடுபவர்
செறி கண் காள பணி அணி இறையவர் தரு சேயே
சிகர பார கிரி உறை குறமகள் கலச தாம தன கிரி தழுவிய
திரு நெய்த்தானத்து உறைபவ சுரபதி பெருமாளே

மேல்

#890
விகட சங்கட வார்த்தை பேசிகள் அவல மங்கையர் ஊத்தை நாறிகள்
விரிவு அடங்கிட மாற்றும் வாறு என வருவார்தம்
விதம் விதங்களை நோக்கி ஆசையில் உபரிதங்களை மூட்டியே தம
இடு மருந்தோடு சோற்றையே இடு விலைமாதர்
சகல மஞ்சனம் ஆட்டியே முலை பட வளைந்து இசை மூட்டியே வரு
சரச இங்கித நேத்தியாகிய சுழலாலே
சதி முழங்கிட வாய் பண் ஆனது மலர உந்தியை வாட்டியே இடை
தளரவும் கணை ஆட்டும் வேசியர் உறவாமே
திகிரி கொண்டு இருளாக்கியே இரு தமையர் தம்பியர் மூத்த தாதையர்
திலக மைந்தரை ஏற்ற சூரரை வெகுவான
செனம் அடங்கலும் மாற்றியே உடல் தகர அங்கு அவர் கூட்டையே நரி
திருகி உண்டிட ஆர்த்த கூளிகள் அடர் பூமி
அகடு துஞ்சிட மூட்டு பாரத முடிய அன்பர்கள் ஏத்தவே அரி
அருளும் மைந்தர்கள் வாழ்த்து மாயவன் மருகோனே
அமரர் அந்தணர் போற்றவே கிரி கடல் அதிர்ந்திட நோக்கு மா மயில்
அழகோடும் பழுவூர்க்குள் மேவிய பெருமாளே

மேல்

#891
சதங்கை மணி வீர சிலம்பின் இசை பாட சரங்கள் ஒளி வீச புயம் மீதே
தனங்கள் குவடு ஆட படர்ந்த பொறி மால் பொன் சரம் கண் மறி காதில் குழை ஆட
இதம் கொள் மயில் ஏர் ஒத்து உகந்த நகை பேசுற்று இரம்பை அழகு ஆர் மை குழலாரோடு
இழைந்து அமளியோடு உற்று அழுந்தும் எனை நீ சற்று இரங்கி இரு தாளை தருவாயே
சிதம்பர குமார கடம்பு தொடை ஆட சிறந்த மயில் மேல் உற்றிடுவோனே
சிவந்த கழுகு ஆட பிணங்கள் மலை சாய சினந்த அசுரர் வேரை களைவோனே
பெதும்பை எழு கோல செயம் கொள் சிவகாமி ப்ரசண்ட அபிராமிக்கு ஒரு பாலா
பெரும் புனம் அது ஏகி குற பெணொடு கூடி பெரும்புலியுர் வாழ் பொன் பெருமாளே

மேல்

#892
பஞ்ச புலனும் பழைய ரண்டு வினையும் பிணிகள் பஞ்சு என எரிந்து பொடி அங்கமாகி
பண்டு அற உடன் பழைய தொண்டர்களுடன் பழகி பஞ்சவர் வியன் பதி உடன் குலாவ
குஞ்சர முகன் குணமொடு அந்த வனம் வந்து உலாவ கொஞ்சிய சிலம்பு கழல் விந்து நாதம்
கொஞ்ச மயில் இன்புற மெல் வந்து அருளி என் கவலை கொன்று அருள் நிறைந்த கழல் இன்று தாராய்
எஞ்சி இடையும் சுழல அம்பு விழியும் சுழல இன்ப ரச கொங்கை கரமும் கொளாமல்
எந்த உடை சிந்த பெலம் மிஞ்சிய அமுதம் புரள இந்து நுதலும் புரள கங்குல் மேகம்
அஞ்சும் அளகம் புரள மென் குழைகளும் புரள அம் பொன் உரு நங்கை மணம் உண்ட பாலா
அன்பர் குலவும் திரு நெடுங்கள வளம் பதியில் அண்டர் அயனும் பரவு தம்பிரானே

மேல்

#893
கூரிய கடைக்கணாலும் மேரு நிகர் ஒப்பதான கோடு அதனில் மெத்த வீறு முலையாலும்
கோப அதரத்தினாலும் மேவிடு விதத்துள் ஆல கோல உதரத்தினாலும் மொழியாலும்
சீரிய வளை கையாலும் மேகலை நெகிழ்ச்சியே செய் சீர் உறு நுசுப்பினாலும் விலைமாதர்
சேறுதனில் நித்தம் மூழ்கி நாள் அவம் இறைத்து மாயை சேர் தரும் உளத்தனாகி உழல்வேனோ
தாரணி தனக்குள் வீறியே சமர துட்டனான ராவணன் மிகுத்த தானை பொடியாக
சாடும் உவண பதாகை நீடு முகில் ஒத்த மேனி தாது உறை புயத்து மாயன் மருகோனே
வாரணம் உரித்து மாதர் மேகலை வளை கை நாணம் மா பலி முதல் கொள் நாதன் முருகோனே
வாருறு தனத்தினார்கள் சேரும் மதிள் உப்பரீகை வாகு உள குறட்டி மேவு பெருமாளே

மேல்

#894
நீரிழிவு குட்டம் ஈளை வாதமொடு பித்த மூலம் நீள் குளிர் வெதுப்பு வேறும் உள நோய்கள்
வேர் உறு புழுக்கள் கூடு நான்முகன் எடுத்த வீடு நீடிய இரத்த மூளை தசை தோல் சீ
பாரிய நவ துவார நாறும் முமலத்தில் ஆறு பாய் பிணி இயற்று பாவை நரி நாய் பேய்
பாறொடு கழுக்கள் கூகை தாம் இவை புசிப்பதான பாழ் உடல் எடுத்து வீணில் உழல்வேனோ
நாரணி அறத்தின் நாரி ஆறு சமயத்தி பூதநாயகரிடத்து காமி மகமாயி
நாடகநடத்தி கோல நீல வருணத்தி வேதநாயகி உமைச்சி நீலி திரிசூலி
வார் அணி முலைச்சி ஞானபூரணி கலைச்சி நாக வாள் நுதல் அளித்த வீர மயிலோனே
மாட மதில் முத்து மேடை கோபுரம் மணத்த சோலை வாகு உள குறட்டி மேவு பெருமாளே

மேல்

#895
கருகி அறிவு அகல உயிர் விட்டு உக்கி கிளைஞர் கதறி அழ விரவு பறை முட்ட கொட்டி இட
கனக மணி சிவிகையில் அமர்த்தி கட்டையினில் இடை போடா
கர மலர் கொடு அரிசியினை இட்டு சித்ர மிகு கலையை உரி செய்து மறைகள் பற்ற பற்று கனல்
கணகண என எரிய உடல் சுட்டு கக்ஷியவர் வழியே போய்
மருவு புனல் முழுகி மனை புக்கு துக்கம் அறு மனிதர் தமை உறவு நிலை சுட்டு சுட்டி உற
மகிழ்வு செய்து அழுது பட வைத்த துட்டன் மதன் மலராலே
மயல் விளைய அரிவையர்கள் கைப்பட்டு எய்த்து மிக மனம் அழியும் அடிமையை நினைத்து சொர்க்க பதி
வழியை இது வழி என உரைத்து பொன் கழல்கள் தருவாயே
பொருவில் மலை அரையன் அருள் பச்சை சித்ர மயில் புரம் எரிய இரணிய தனு கை பற்றிய இயல்
புதிய முடுகு அரிய தவம் உற்று கச்சியினில் உற மேவும்
புகழ் வனிதை தரு புதல்வ பத்து கொத்து முடி புயம் இருபது அறவும் எய்த சக்ர கை கடவுள்
பொறி அரவின் மிசை துயிலு சுத்த பச்சை முகில் மருகோனே
அரிய மரகத மயிலில் உற்று கத்து கடல் அது சுவற அசுரர் கிளை கெட்டு கட்டை அற
அமரர் பதி இனிய குடி வைத்தற்கு உற்ற மிகு இளையோனே
அருண மணி வெயில் பரவு பத்து திக்கும் மிக அழகு பொதி மதர் மகுட தத்தித்தத்தி வளர்
அணிய கயல் உகளும் வயல் அத்திப்பட்டில் உறை பெருமாளே

மேல்

#896
தொக்கை கழுவி பொன் தகும் உடை சுற்றி கலன் இட்டு கடி தரு சொக்கு புலி அப்பி புகழுறு களியாலே
சுத்தத்தை அகற்றி பெரியவர் சொல் தப்பிய அகத்தை புரி புல சுற்றத்துடன் உற்று புவி இடை அலையாமல்
முக்குற்றம் அகற்றி பல கலை கற்று பிழை அற்று தனை உணர் முத்தர்க்கு அடிமைப்பட்டு இலகிய அறிவாலே
முத்தி தவ சுற்று கதி உறு சத்தை தெரிசித்து கரை அகல் முத்தி புணரிக்குள் புக வரம் அருள்வாயே
திக்கு எட்டும் அடக்கி கடவுளருக்கு பணி கற்பித்து அருள் அறு சித்தத்தோடு அடுத்து படை கொடு பொரு சூரர்
செச்சை புயம் அற்று புக ஒரு சத்தி படை விட்டு சுரர் பதி சித்த துயர் கெட்டு பதி பெற அருள்வோனே
அக்கை புனை கொச்சை குறமகள் அச்சத்தை ஒழித்து கரி வரும் அத்தத்தில் அழைத்து பரிவுடன் அணைவோனே
அப்பை பிறையை கட்டிய சடை அத்தர்க்கு அருமை புத்திர விரி அத்திக்கரை இச்சித்து உறைதரு பெருமாளே

மேல்

#897
விந்து பேதித்த வடிவங்களாய் எ திசையும் மின் சர அசர குலமும் வந்து உலாவி
விண்டு போய் விட்ட உடல் சிந்தை தான் உற்று அறியும் மிஞ்ச நீ விட்ட வடிவங்களாலே
வந்து நாயில் கடையன் நொந்து ஞான பதவி வந்து தா இக்கணமே என்று கூற
மைந்தர் தாவி புகழ தந்தை தாய் உற்று உருகி வந்து சேயை தழுவல் சிந்தியாதோ
அந்தகாரத்தில் இடி என்ப வாய்விட்டு வரும் அங்கி பார்வை பறையர் மங்கி மாள
அம் கை வேல் விட்டு அருளி இந்திரலோகத்தில் மகிழ் அண்டர் ஏற கிருபை கொண்ட பாலா
எந்தன் ஆவிக்கு உதவு சந்த்ர சேர்வை சடையர் எந்தை பாகத்து உறையும் அந்த மாது
எங்குமாய் நிற்கும் ஒரு கந்தனூர் சத்தி புகழ் எந்தை பூசித்து மகிழ் தம்பிரானே

மேல்

#898
ஈ எறும்பு நரி நாய் கணம் கழுகு காகம் உண்ப உடலே சுமந்து இது
ஏல்வது என்று மதமே மொழிந்து மத உம்பல் போலே
ஏதும் என்றனிட கோல் எனும் பரிவு மேவி நம்பி இது போதும் என்க சிலர்
ஏய் தனங்கள் தனி வாகு சிந்தை வசனங்கள் பேசி
சீத தொங்கல் அழகா அணிந்து மணம் வீச மங்கையர்கள் ஆட வெண் கவரி
சீற கொம்பு குழல் ஊத தண்டிகையில் அந்தமாக
சேர் கனம் பெரிய வாழ்வு கொண்டு உழலும் ஆசை வெந்திட உன் ஆசை மிஞ்சி சிவ
சேவை கண்டு உனது பாத தொண்டன் என அன்பு தாராய்
சூது இருந்த விடர் மேய் இருண்ட கிரி சூரர் வெந்து பொடியாகி மங்கி விழ
சூரியன் புரவி தேர் நடந்து நடு பங்கின் ஓட
சோதி அந்த பிரமா புரந்தரனும் ஆதிஅந்த முதல் தேவரும் தொழுது
சூழ மன்றில் நடமாடும் எந்தை முதல் அன்புகூர
வாது கொண்டு அவுணர் மாள செங்கை அயில் ஏவி அண்டர் குடி ஏற விஞ்சையர்கள்
மாதர் சிந்தை களிகூர நின்று நடனம் கொள்வோனே
வாச கும்ப தன மானை வந்து தினை காவல் கொண்ட முருகா எணும் பெரிய
வாலி கொண்ட புரம் மேய அமர்ந்து வளர் தம்பிரானே

மேல்

#899
ஆங்க உடல் வளைந்து நீங்கு பல் நெகிழ்ந்து ஆய்ஞ்சு தளர் சிந்தை தடுமாறி
ஆர்ந்து உள கடன்கள் வாங்கவும் அறிந்து ஆண்டு பல சென்று கிடையோடே
ஊங்கி இருமல் வந்து வீங்கு குடல் நொந்து ஓய்ந்து உணர்வு அழிந்து உயிர் போ முன்
ஓங்கு மயில் வந்து சேண் பெற இசைந்து ஊன்றிய பதங்கள் தருவாயே
வேங்கையும் உயர்ந்த தீம் புனம் இருந்த வேந்து இழையின் இன்ப மணவாளா
வேண்டும் அவர் தங்கள் பூண்ட பத மிஞ்ச வேண்டிய பதங்கள் புரிவோனே
மாங்கனி உடைந்து தேங்க வயல் வந்து மாண்பு நெல் விளைந்த வள நாடா
மாந்தர் தவர் உம்பர் கோன் பரவி நின்ற மாந்துறை அமர்ந்த பெருமாளே

மேல்

#900
அரி மருகோனே நமோ என்று அறுதி இலானே நமோ என்று அறுமுக வேளே நமோ என்று உன பாதம்
அரகர சேயே நமோ என்று இமையவர் வாழ்வே நமோ என்று அருண சொரூபா நமோ என்று உளது ஆசை
பரிபுர பாதா சுரேசன் தரு மகள் நாதா அராவின் பகை மயில் வேலாயுதா ஆடம்பர நாளும்
பகர்தல் இலா தாளை ஏதும் சிலது அறியா ஏழை நான் உன் பதி பசு பாச உபதேசம் பெறவேணும்
கர தல சூலாயுதா முன் சலபதி போல் ஆரவாரம் கடின சுரா பான சாமுண்டியும் ஆட
கரி பரி மேல் ஏறுவானும் செயசெய சேனாபதீ என் களம் மிசை தான் ஏறியே அஞ்சிய சூரன்
குரல் விட நாய் பேய்கள் பூதம் கழுகுகள் கோமாயு காகம் குடல் கொளவே பூசலாடும் பல தோளா
குட திசை வார் ஆழி போலும் படர் நதி காவேரி சூழும் குளிர் வயலூர் ஆர மேவும் பெருமாளே

மேல்

#901
ஆர முலை காட்டி மார நிலை காட்டி ஆடை அணி காட்டி அநுராக
ஆல விழி காட்டி ஓசை மொழி காட்டி ஆதரவு காட்டி எவரோடும்
ஈர நகை காட்டி நேர மிகை காட்டியே வினைகள் காட்டி உறவாடி
ஏதம் மயல் காட்டு மாதர் வலை காட்டி ஈடு அழிதல் காட்டல் அமையாதோ
வீர அபராட்டு சூரர் படை காட்டில் வீழ அனலை ஊட்டி மயில் ஊர்தி
வேலை உறை நீட்டி வேலைதனில் ஓட்டு வேலை விளையாட்டு வயலூரா
சேர மலை நாட்டில் வாரமுடன் வேட்ட சீலி குறவாட்டி மணவாளா
தேசு புகழ் தீட்டி ஆசை வரு கோட்டி தேவர் சிறை மீட்ட பெருமாளே

மேல்

#902
இகல் கடின முகபட விசித்ர துதிக்கை மத மத்த களிற்றை எதிர்
புளக தனம் இளக இனிது எட்டி கழுத்தொடு கைகட்டி பிணித்து இறுகி
இதழ் பொதியின் அமுது முறை மெத்த புசித்து உருகி முத்தத்தை இட்டு நக தந்தமான
இடு குறியும் வரையை உற நெற்றி தலத்து இடையில் எற்றி கலக்கமுற
இடை துவள உடை கழல இட்டத்து அரை பை அது தொட்டு திரித்து மிக
இரணம் இடும் முரணர் விழி ஒக்க கறுத்த விழி செக்கச்சிவக்க வளை செம் கை சோர
அகரு விடு ம்ருகமத மணத்து கனத்த பல கொத்து குழல் குலைய
மயில் புறவு குயில் ஞிமிறு குக்கில் குரல் பகர நெக்கு கருத்து அழிய
அமளி பெரிது அமளிபட வக்கிட்டு மெய் கரண வர்க்கத்தினில் புணரும் இன்ப வேலை
அலையின் விழி மணியின் வலை இட்டு பொருள் கவர கட்டு பொறிச்சியர்கள்
மதன கலை விதனம் அறுவித்து திருப்புகழை உற்று துதிக்கும் வகை
அபரிமித சிவ அறிவு சிக்குற்று உணர்ச்சியினில் ரக்ஷித்து அளித்து அருள்வது எந்த நாளோ
திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட தத்தித்த ரித்தகுட
செகணசெக சகணசக செக்க செகச்செகண சத்தச்ச கச்சகண
திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்த திங்குதீதோ
திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி தத்தித்த ரித்தரிரி
டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி டட்டட்ட குட்டகுடது
என திமிர்த தவில் மிருக இடக்கை திரள் சலிகை பக்க கண பறை தவண்டை பேரி
வகைவகையின் மிக அதிர உக்ரத்து அரக்கர் படை பக்கத்தினில் சரிய
எழுது துகில் முழுது உலவி பட்டப்பகல் பருதி விட்டு அத்தமித்தது என
வரு குறளி பெருகு குருதிக்குள் குளித்து உழுது தொக்கு குனிப்பு விட வென்ற வேலா
வயலி நகர் பயில் குமர பத்தர்க்கு அநுக்ரக விசித்ர ப்ரசித்தம் உறு
அரி மருக அறுமுகவ முக்கண் கணத்தர் துதி தத்வத்திற சிகர
வட குவடில் நடனம் இடும் அப்பர்க்கு முத்தி நெறி தப்பு அற்று உரைக்க வல தம்பிரானே

மேல்

#903
இலகு முலை விலை அசடிகள் கசடிகள் கலைகள் பல அறி தெருளிகள் மருளிகள்
எயிறு கடிபடும் உதடிகள் பதடிகள் எவரோடும்
இனிய நய மொழி பழகிகள் அழகிகள் மடையர் பொருள் பெற மருவிகள் சருவிகள்
யமனும் மிகை என அழிதரும் முழிதரும் விழி வாளால்
உலகம் இடர் செயு நடலிகள் மடலிகள் சிலுகு சிலரொடு புகலிகள் இகலிகள்
உறவு சொல வல துரகிகள் விரகிகள் பிறை போலே
உகிர் கை குறியிடு கமுகிகள் சமுகிகள் பகடி இட வல கபடிகள் முகடிகள்
உணர்வு கெடும் வகை பருவிகள் உருவிகள் உறவாமோ
அலகை புடைபட வருவன பொருவன கலக கணம் நிரை நகுவன தகுவன
அசுரர் தசை வழி நிமிர்வன திமிர்வன பொடியாடி
அலரி குட திசை அடைவன குடைவன தரும வநிதையும் மகிழ்வன புகழ்வன
அகில புவனமும் அரகரகர என அமர் வேள்வி
திலக நுதல் உமை பணி அது செயமகள் கலையின் நடமிட எரி விரி முடியினர்
திரள் பல் உயிர் உடல் குவடுகள் என நட மயில் ஏறி
சிறிது பொழுதினில் அயில் விடு குருபர அறிவு நெறி உள அறுமுக இறையவ
த்ரிசிர கிரி அயல் வயலியில் இனிது உறை பெருமாளே

மேல்

#904
என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் என்னால் துதிக்கவும் கண்களாலே
என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும் என்னால் இருக்கவும் பெண்டிர் வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும் தொந்த நோயை
என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் இங்கு நான் ஆர்
கல் நார் உரித்த என் மன்னா எனக்கு நல் கர்ணாமிர்த பதம் தந்த கோவே
கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ கண்ணாடியில் தடம் கண்ட வேலா
மன்னான தக்கனை முன்னாள் முடி தலை வல் வாளியில் கொளும் தங்க ரூபன்
மன்னா குறத்தியின் மன்னா வயல் பதி மன்னா மூவர்க்கு ஒரு தம்பிரானே

மேல்

#905
கடல் போல் கணை விழி சிலை போல் பிறை நுதல் கனி போல் துகிர் இதழ் எழிலாகும்
கரி போல் கிரி முலை கொடி போல் துடி இடை கடி போல் பணி அரை எனவாகும்
உடல் காட்டு இனிமையில் எழில் பாத்திரம் இவள் உடையால் கெறுவித நடையாலும்
ஒரு நாள் பிரிவதும் அரிதாய் சுழல்படும் ஒழியா துயர் அது தவிரேனோ
குடல் ஈர்த்து அசுரர்கள் உடல் காக்கைகள் நரி கொளிவாய் பல அலகைகள் பேய்கள்
கொலை போர் களம் மிசை தினம் ஏற்று அசுரர்கள் குடி ஏற்றிய குக உயர் வாழை
மடல் கீற்றினில் எழு விரை பூ பொழில் செறி வயலூர் பதிதனில் உறைவோனே
மலை மேல் குடி உறை கொடு வேட்டுவருடை மகள் மேல் ப்ரியம் உள பெருமாளே

மேல்

#906
கமலத்தே குலாவும் அரிவையை நிகர் பொன் கோல மாதர் மருள் தரு
கலக காம நூலை முழுது உணர் இளைஞோர்கள்
கலவிக்கு ஆசை கூர வளர் பரிமள கற்பூர தூமம் கனதன
கலகத்தாலும் வானில் அசையும் மின் இடையாலும்
விமல சோதி ரூப இமகர வதனத்தாலும் நாத முதலிய
விரவுற்று ஆறு கால்கள் சுழல் இருள் குழலாலும்
வெயில் எப்போதும் வீசு மணி வளை அணி பொன் தோள்களாலும் வடு வகிர்
விழியில் பார்வையாலும் இனி இடர் படுவேனோ
சமரில் பூதம் யாளி பரி பிணி கனக தேர்கள் யானை அவுணர்கள்
தகர கூர் கொள் வேலை விடு திறல் உருவோனே
சமுக பேய்கள் வாழி என எதிர் புகழ கானில் ஆடு பரிபுர
சரணத்து ஏக வீர அமை மன மகிழ் வீரா
அமர்க்கு ஈசனான சசி பதி மகள் மெய் தோயு நாத குறமகள்
அணைய சூழ நீத கரம் மிசை உறு வேலா
அருளில் சீர் பொயாத கணபதி திரு அக்கீசன் வாழும் வயலியின்
அழகு கோயில் மீதில் மருவிய பெருமாளே

மேல்

#907
கமை அற்ற சீர் கேடர் வெகு தர்க்க கோலாலர் களையுற்று மாயாது மந்த்ர வாத
கடை கெட்ட ஆபாதம் உறு சித்ர கோமாளர் கருமத்தின் மாயாது கொண்டு பூணும்
சமயத்தர் ஆசார நியமத்தின் மாயாது சகளத்து உளே நாளு நண்பு உளோர் செய்
சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது சலன படா ஞானம் வந்து தாராய்
அமரில் சுரா பான திதி புத்ரர் ஆலோகம் அது துக்கமே ஆக மிஞ்சிடாமல்
அடம் இட்ட வேல் வீர திருவொற்றியூர் நாதர் அருண சிகா நீல கண்ட பாரம்
மம பட்ச மா தேவர் அருமை சுவாமீ நிமல நிட்களா மாயை விந்து நாதம்
வர சத்தி மேலான பர வத்துவே மேலை வயலிக்குள் வாழ் தேவர் தம்பிரானே

மேல்

#908
குருதி கிருமிகள் சல மல மயிர் தசை மருவும் உருவமும் அலம்அலம் அழகொடு
குலவு பல பணி பரிமளம் அறுசுவை மடை பாயல்
குளிர் இல் அறை அகம் இவைகளும் அலம்அலம் மனைவி மகவு அனை அநுசர்கள் முறைமுறை
குனகு கிளைஞர்கள் இவர்களும் அலம்அலம் ஒரு நாலு
சுருதி வழி மொழி சிவ கலை அலது இனி உலக கலைகளும் அலம்அலம் இலகிய
தொலைவு இல் உனை நினைபவர் உறவு அலது இனி அயலார்பால்
சுழல்வது இனிது என வசமுடன் வழிபடும் உறவு அலம்அலம் அருள் அலை கடல் கழி
துறை செல் அறிவினை எனது உளம் மகிழ்வுற அருள்வாயே
விருது முரசுகள் மொகுமொகுமொகு என முகுற கக பதி முகில் திகழ் முகடு அதில்
விகட இறகுகள் பறை இட அலகைகள் நடமாட
விபுதர் அரகர சிவசிவ சரண் என விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர
வினை கொள் நிசிசரர் பொடிபட அடல் செயும் வடி வேலா
மருது நெறுநெறுநெறு என முறிபட உருளும் உரலொடு தவழ் அரி மருக செவ்வனசம்
மலர் சுனை புலி நுழை முழை உடைய விராலி
மலையில் உறைகிற அறுமுக குருபர கயலும் மயிலையும் மகரமும் உகள் செநெல்
வயலி நகரியில் இறையவ அருள்தரு பெருமாளே

மேல்

#909
குயிலோ மொழி அயிலோ விழி கொடியோ இடை பிடியோ நடை குறியீர் தனி செறியீர் இனி என்று பாடி
குனகா அடி பிடியா இதழ் கடியா நகம் வகிரா உடை குலையா அல்குல் அளையா இரு கொங்கை மீதில்
பயிலா மனம் மகிழ் மோகித சுக சாகர மட மாதர்கள் பகையே என நினையாது உற நண்பு கூரும்
பசு பாசமும் அகிலாதிக பரிபூரண புரணாகர பதி நேரு நின் அருளால் மெய் உணர்ந்திடேனோ
வெயில் வீசிய கதர் ஆயிர அருணோதய இருள் நாசன விசை ஏழ் பரி ரவி சேய் எனும் அங்க ராசன்
விசிகாகவம் அயல் பேடி கை படு போது சன்னிதியானவன் விதி தேடிய திருவாளி அரன் குமாரா
அயலூர் உறை மயிலா பல கலை மான் உழை புலி தோல்களை அகில் ஆரம் அது எறி காவிரி வண்டல் மேவும்
அதி மோகர வயலூர் மிசை திரி சேவக முருகேசுர அமராபதி அதில் வாழ்பவர் தம்பிரானே

மேல்

#910
கோவை வாய் இதழுக்கும் தாக போகம் அளிக்கும் கோதை மாதர் முலைக்கும் குறியாலும்
கோல மாலை வளைக்கும் தோளினாலும் மணத்த கோதி வாரி முடிக்கும் குழலாலும்
ஆவி கோடி அவிக்கும் சேலினாலும் மயக்குண்டு ஆசையாய் இனும் நித்தம் தளராதே
ஆசு இலாத மறைக்கும் தேடொணாத ஒருவர்க்கு ஒன்று ஆடல் தாள்கள் எனக்கு இன்று அருள்வாயே
சேவில் ஏறு நிருத்தன் தோகை பாகன் அளிக்கும் த்யாக சீல குணத்தன் திருமாலும்
தேடொணாத பதத்தன் தீது இலாத மனத்தன் தேயுவான நிறத்தன் புதல்வோனே
கா விடாத திருச்செங்கோடு நாடு தனக்கும் காவி சூழ் வயலிக்கும் ப்ரியமானாய்
காதி மோதி எதிர்க்கும் சூர தீரர் ப்ரமிக்கும் காலன் ஆடல் தவிர்க்கும் பெருமாளே

மேல்

#911
தாமரையின் மட்டு வாச மலர் ஒத்த தாள் இணை நினைப்பில் அடியேனை
தாது அவிழ் கடுக்கை நாக மகிழ் கற்ப தாரு என மெத்திய விராலி
மா மலையினில் நிற்ப நீ கருதி உற்று வா என அழைத்து என் மனது ஆசை
மாசினை அறுத்து ஞான அமுது அளித்த வாரம் இனி நித்தம் மறவேனே
காமனை எரித்த தீ நயன நெற்றி காதிய சுவர்க்க நதி வேணி
கானில் உறை புற்றில் ஆடு பணி இட்ட காது உடைய அப்பர் குருநாதா
சோமனொடு அருக்கன் மீன் உலவும் மிக்க சோலை புடை சுற்று வயலூரா
சூடிய தட கை வேல் கொடுவித்து சூர் தலை துணித்த பெருமாளே

மேல்

#912
திரு உரூப நேராக அழகதான மா மாய திமிர மோகமானவர்கள் கலை மூடும்
சிகரியூடு தே மாலை அடவியூடு போய் ஆவி செருகும் மால் அனாசார வினையேனை
கரு விழாது சீர் ஓதி அடிமை பூணலாமாறு கனவில் ஆள் சுவாமி நின் மயில் வாழ்வும்
கருணை வாரி கூர் ஏக முகமும் வீர மாறாத கழலு நீப வேல் வாகு மறவேனே
சருவ தேவ தேவாதி நமசிவாய நாமாதி சயில நாரி பாகாதி புதல்வோனே
சத மகீ வல் போர் மேவு குலிசபாணி மால் யானை சகசமான சாரீ செய் இளையோனே
மருவு லோகம் ஈரேழும் அளவிடவொணாவான வரையில் வீசு தாள் மாயன் மருகோனே
மநு நியாய சோணாடு தலைமையாகவே மேலை வயலி மீது வாழ் தேவர் பெருமாளே

மேல்

#913
நெய்த்த சுரி குழல் அறலோ முகிலோ பத்ம நறு நுதல் சிலையோ பிறையோ
நெட்டை இணை விழி கணையோ பிணையோ இனிது ஊறும்
நெக்க அமுது இதழ் கனியோ துவரோ சுத்த மிடறு அது வளையோ கமுகோ
நிற்கும் இள முலை குடமோ மலையோ அறிவே தேய்ந்து
எய்த்த இடை அது கொடியோ துடியோ மிக்க திரு அரை அரவோ ரதமோ
இ பொன் அடி இணை மலரோ தளிரோ என மாலாய்
இச்சை விரகுடன் மடவாருடனே செப்ப மருள் உடன் அவமே திரிவேன்
ரத்ந பரிபுர இரு கால் ஒருகால் மறவேனே
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே தெற்கு நரபதி திருநீறு இடவே
புக்க அனல் வயம் மிக ஏடு உயவே உமையாள்தன்
புத்ரன் என இசை பகர் நூல் மறை நூல் கற்ற தவ முனி பிரமாபுரம் வாழ்
பொற்ப கவுணியர் பெருமான் உருவாய் வருவோனே
சத்தம் உடைய ஷண்முகனே குகனே வெற்பில் எறி சுடர் அயிலா மயிலா
சத்தி கணபதி இளையாய் உளையாய் ஒளி கூரும்
சக்ரதர அரி மருகா முருகா உக்ர இறையவர் புதல்வா முதல்வா
தட்பம் உள தட வயலூர் இயலூர் பெருமாளே

மேல்

#914
முலை மறைக்கவும் வாசலில் தலை மறைய நிற்கவும் ஆசை உள்ளோர் என
முகிழ் நகை சிறு தூதினை ஏவும் முகமோடே
முகம் அழுத்தவும் ஆசைகள் கூறவும் நகம் அழுத்தவும் லீலையிலே உற
முறை மசக்கவும் வாசம் உலா மலர் அணை மீதே
கலை நெகிழ்க்கவும் வாலிபர் ஆனவர் உடல் சளப்பட நாள்வழிநாள்வழி
கறை அழிக்கவும் நான் எனவே அணி விலை ஈதே
கடிய சத்தியமாம் எனவே சொலி அவர் கொடு அ பணம் மாறிட வீறொடு
கடுகடுத்திடுவாரொடு கூடியது அமையாதோ
மலையை மத்து என வாசுகியே கடை கயிறு என திருமாலொடு ஒரு பாதியும்
மருவும் மற்றது வாலியும் மேல் இட அலை ஆழி
வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம் எனா எழவே அலை
மறுகிட கடையா எழ மேல் எழும் அமுதோடே
துலை வரு திரு மா மயில் வாழ்வுள வயலை அற்புதனே வினையானவை
தொடர் அறுத்திடும் ஆரிய கேவலி மணவாளா
துவள் கடி சிலை வேள் பகைவா திரு மறு ஓர் எட்டுடன் ஆயிரம் மேல் ஒரு
துகள் அறுத்து அணி ஆர் அழகா சுரர் பெருமாளே

மேல்

#915
மேகலை நெகிழ்த்து காட்டி வார் குழல் விரித்து காட்டி வேல் விழி புரட்டி காட்டி அழகாக
மேனியை மினுக்கி காட்டி நாடகம் நடித்து காட்டி வீடுகள் அழைத்து காட்டி மத ராசன்
ஆகமம் உரைத்து காட்டி வார் அணி தனத்தை காட்டி யாரொடு நகைத்து காட்டி விரகாலே
ஆதர மனத்தை காட்டி வேசைகள் மயக்கை காட்ட ஆசையை அவர்க்கு காட்டி அழிவேனோ
மோகன விருப்பை காட்டி ஞானமும் எடுத்து காட்டி மூ தமிழ் முனிக்கு கூட்டு குருநாதா
மூ உலகு அளித்து காட்டி சேவலை உயர்த்தி காட்டு மூரி வில் மதற்கு காட்டு வயலூரா
வாகையை முடித்து காட்டி கானவர் சமர்த்தை காட்டி வாழ் மயில் நடத்தி காட்டும் இளையோனே
மா மலை வெதுப்பி காட்டி தானவர் திறத்தை காட்டி வானவர் சிரத்தை காத்த பெருமாளே

மேல்

#916
வாளின் முனையினும் நஞ்சினும் வெம் சம ராஜ நடையினும் அம்பு அதினும் பெரு
வாதை வகை செய் கரும் கணும் எங்கணும் அரிதான
வாரி அமுது பொசிந்து கசிந்த செ வாயு நகை முக வெண் பலு நண்புடன்
வாரும் இரும் எனும் இன் சொலும் மிஞ்சிய பனிநீரும்
தூளி படு நவ குங்குமமும் குளிர் ஆரம் அகில் புழுகும் புனை சம்ப்ரம
சோதி வளர்வன கொங்கையும் அம் கையும் எவரேனும்
தோயும் அளறு என நிதம்பமும் உந்தியும் மாயை குடி கொள் குடம்பையுள் மன் பயில்
சூளையரை எதிர் கண்டு மருண்டிடல் ஒழிவேனோ
காளி திரிபுரை அந்தரி சுந்தரி நீலி கவுரி பயங்கரி சங்கரி
காருணிய சிவை குண்டலி சண்டிகை த்ரிபுராரி
காதல் மனைவி பரம்பரை அம்பிகை ஆதி மலைமகள் மங்கலி பிங்கலை
கான நடனம் உகந்தவள் செம் திரு அயன் மாது
வேளின் இரதி அருந்ததி இந்திர தேவி முதல்வர் வணங்கும் திரி அம்பகி
மேக வடிவர் பின் வந்தவள் தந்து அருள் இளையோனே
வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர் தீர அருள்தரு கந்த நிரந்தர
மேலை வயலை உகந்து உள நின்று அருள் பெருமாளே

மேல்

#917
விகட பரிமள ம்ருகமத இமசல வகிர படிரமும் அளவிய களபமும்
மட்டித்து இதழ் தொடை முடித்து தெரு தலையில்
உலவி இளைஞர்கள் பொருள் உடன் உயிர் கவர் கலவி விதம் வியன் அரிவையர் மருள் வலை
இட்டு துவக்கி இடர் பட்டு தியக்கி அவர்
விரவு நவ மணி முக படம் எதிர் பொரு புரண புளகித இள முலை உரம் மிசை
தைக்க கழுத்தோடு கை ஒக்க பிணித்து இறுகி அன்புகூர
விபுதர் அமுது என மது என அறுசுவை அபரிமிதம் என இலவ இதழ் முறைமுறை
துய்க்க களித்து நகம் வைத்து பலில் குறியில்
வரையும் முறை செய்து முனிவரும் மன வலி கரையும் அரிசனம் பரிசனம் ப்ரிய உடை
தொட்டு குலைத்து நுதல் பொட்டு படுத்தி மதர்
விழிகள் குழை பொர மதி முகம் வெயர்வு எழ மொழிகள் பதறிட ரதி பதி கலை வழி
கற்றிட்ட புட்குரல் மிடற்றில் பயிற்றி மடு உந்தி மூழ்கி
புகடு வெகு வித கரணமும் மருவிய வகையில் முகில் என இருள் என வனம் என
ஒப்பித்த நெய்த்த பல புட்ப குழல் சரிய
அமுத நிலை மலர் அடி முதல் முடி கடை குமுத பதி கலை குறை கலை நிறை கலை
சித்தத்து அழுத்தி அநுவர்க்கத்து உருக்கி ஒரு
பொழுதும் விடல் அரிது எனும் அநுபவம் அவை முழுதும் ஒழிவு அற மருவிய கலவி
இதத்து ப்ரியப்பட நடித்து துவட்சியினில் நைந்து சோர
புணரும் இது சிறு சுகம் என இகபரம் உணரும் அறிவிலி ப்ரமை தரு திரி மலம்
அற்று கருத்து ஒருமை உற்று புல தலையில்
மறுகு பொறி கழல் நிறுவியெ சிறிது மெய் உணர்வும் உணர்வுற வழு அற ஒரு ஜக
வித்தை குண த்ரயமும் நிர்த்தத்து வைத்து மறை
புகலும் அநுபவ வடிவினை அளவு அறு அகில வெளியையும் ஒளியையும் அறி சிவ
தத்வ ப்ரசித்திதனை முத்தி சிவ கடலை என்று சேர்வேன்
திகுட திகுகுட திகுகுட திகுகுட தகுட தகுகுட தகுகுட தகுகுட
திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட
டுமிட டுமிமிட டுமிமிட டுமிமிட டமட டமமட டமமட டமமட
டுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட
திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி
திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி என்று பேரி
திமிலை கரடிகை பதலை சலரி தவில் தமர முரசுகள் குடமுழவோடு துடி
சத்த கண பறைகள் மெத்த தொனித்து அதிர
அசுரர் குல அரி அமரர்கள் ஜய பதி குசல பசுபதி குரு என விருதுகள்
ஒத்த திரள் பலவும் முற்றி கலிக்க எழு
சிகர கொடு முடி கிடுகிடுகிடு என மகர சல நிதி மொகுமொகுமொகு என
எட்டு திசை களிறு மட்டற்று அற பிளிற நின்ற சேடன்
மகுட சிரதலம் நெறுநெறுநெறு என அகில புவனமும் ஹரஹரஹர என
நக்ஷத்ர முக்கி விழ வக்கிட்ட துட்ட குண
நிருதர் தலை அற வடிவு எனும் மலை சொரி குருதி அருவியின் முழுகிய கழுகுகள்
பக்க பழுத்த உடல் செக்கச்சிவத்துவிட
வயிறு சரி குடல் நரி தின நிணம் அவை எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள்
பக்ஷித்து நிர்த்தமிட ரக்ஷித்தலை பரவி உம்பர் வாழ
மடிய அவணர்கள் குரகத கஜ ரத கடகம் உடைபட வெடிபட எழு கிரி
அற்று பறக்க வெகு திக்கு படிது நவ
நதிகள் குழை தர இப பதி மகிழ்வுற அமர் செய்து அயில் கையில் வெயில் எழ மயில் மிசை
அ குக்குட கொடி செருக்க பெருக்கமுடன்
வயலி நகர் உறை சரவணபவ குக இயலும் இசைகளும் நடனமும் வகைவகை
சத்ய படிக்கு இனிது அகஸ்தியர்க்கு உணர்த்தி அருள் தம்பிரானே

மேல்

#918
கார் அணியும் குழலை குவித்திடு கோகனகம் கொடு மெத்தென பிறர்
காண வருந்தி முடித்திட கடு விரகாலே
காது அளவும் கயலை புரட்டி மன ஆதிகள் வஞ்சம் மிகுத்து இடப்படி
காமுகர் அன்பு குவித்த கைப்பொருள் உறவாகி
பூரண கும்பம் என புடைத்து எழு சீதள குங்குமம் ஒத்த சித்திர
பூஷித கொங்கையில் உற்று முத்து அணி பிறையான
போருவை ஒன்று நெகித்து உருக்கி மெய் யாரையும் நெஞ்சை விலை படுத்திடு
பூவையர் தங்கள் மயக்கை விட்டிட அருள்வாயே
வீர புயம் கிரி உக்ர விக்ரம பூத கணம் பல நிர்த்தம் இட்டிட
வேகமுடன் பறை கொட்டிட கழுகு இனம் ஆட
வீசிய பம்பரம் ஒப்பு என களி வீச நடம் செய் விடை தனி துசர்
வேத பரம்பரை உள் களித்திட வரும் வீரா
சீர் அணியும் திரை தத்தும் முத்து எறி காவிரியின் கரை மொத்து மெத்திய
சீர் புனைகின்ற திருத்தவத்துறை வரும் வாழ்வே
சீறி எதிர்த்த அரக்கரை கெட மோதி அடர்ந்து அருள் பட்சம் முற்றிய
தேவர்கள் தம் சிறை வெட்டி விட்டு அருள் பெருமாளே

மேல்

#919
நிரைத்த நித்தில நீள் மணி மாலைகள் பொறுத்த வெற்பு இனை மார் முலை மேல் அணி
நெறித்த நெய் குழல் வாள் விழி மா மதி முக மானார்
நெளித்த சில் இடை மேல் கலை ஆடையை உடுத்தி அத்தம் உளோர்தமையே மயல்
நிரப்பி நித்தமும் வீதியில் நேருறு நெறியாலே
கரைத்து இத குயில் போல் மொழி மாதர்கள் வலைக்கு உளில் சுழலா வகையே உன
கழல் துதித்திடு வாழ்வு அது தான் மனதுற மேவி
கதித்த பத்தி அமை சால் அடியார் சபை மிகுத்து இழி குண பாதகனேன் உயர்
கதிக்கு அடுத்து உயர்வாகவுமே அருள் உரையாதோ
வரை தநு கரர் மாதவம் மேவினர் அகத்து இடத்தினில் வாழ் சிவனார் திரு
மணி செவிக்குள் மெய்ஞ்ஞானம் அது ஓதிய வடி வேலா
மதித்த முத்தமிழ் ஆய்வினர் மேலவர் உரைத்து உள திருவாசகம் ஆனது
மனத்துள் எத்து அழகார் புகழ் வீசிய மணி மாட
திரை கடல் பொரு காவிரி மா நதி பெருக்கு எடுத்துமே பாய் வள நீர் பொலி
செழித்த நெல் செநெல் வாரிகளே குவைகுவையாக
செருக்கு செய்ப்பதி வாழ் முருகா அறம் வளர்த்த நித்ய கல்யாணி க்ருபாகரி
திருத்தவத்துறை மா நகர் தான் உறை பெருமாளே

மேல்

#920
காலன் வேல் கணை ஈர் வாள் ஆலமும் நேர் கணால் கொலை சூழ் மா பாவிகள்
காம சாத்திர வாய் பாடா ஏணிகள் எவரேனும்
காதல் ஆர்க்கும் வினா வாய் கூறிகள் போக பாத்திரம் மா மூதேவிகள்
காசு கேட்டிடும் மாயா ரூபிகள் அதி மோக
மாலை மூட்டிகள் வானூடே நிமிர் ஆனை போல் பொர நேரே போர் முலை
மார்பு காட்டிகள் நானா பேதகம் என மாயா
மா பராக்கிகளோடே சீரிய போது போக்குதல் ஆமோ நீ இனி
வா எனா பரிவாலே ஆள்வதும் ஒரு நாளே
பால் அறா திரு வாயால் ஓதிய ஏடு நீர்க்கு எதிர் போயே வாது செய்
பாடல் தோற்ற இரு நாலாயிரம் சமண் மூடர்
பாரின் மேல் கழு மீதே ஏறிட நீறு இடா தமிழ்நாடு ஈடேறிட
பாதுகாத்து அருளாலே கூன் நிமிர் இறையோனும்
ஞாலம் ஏத்தியதோர் மா தேவியும் ஆலவாய் பதி வாழ்வுமாறு எணும்
ஞான பாக்கிய பாலா வேல மயில் வீரா
ஞான தீக்ஷித சேயே காவிரி ஆறு தேக்கிய கால்வாய் மா மழ
நாடு போற்றிய பூவாளூர் உறை பெருமாளே

மேல்

#921
வாசனை மங்கையர் போற்று சிற்றடி பூஷண கிண்கிணி ஆர்ப்பரித்திட
மா மலை ரண்டு என நாட்டு மத்தக முலை யானை
வாடை மயங்கிட நூற்ற சிற்றிழை நூல் இடை நல் கலை தேக்க இக்கு வில்
மாரன் விடும் கணை போல் சிவத்திடு விழியார்கள்
நேசிகள் வம்பிகள் ஆட்டம் இட்டவர் தீயர் விரும்புவர் போல் சுழற்றியே
நீசன் எனும்படி ஆக்கி விட்டு ஒரு பிணியான
நீரில் மிகுந்து உழல் ஆக்கையில் திட யோகம் மிகுந்திட நீக்கி இப்படி
நீ அகலந்தனில் வீற்றிருப்பதும் ஒரு நாளே
தேசம் அடங்கலும் ஏத்து மை புயல் ஆய நெடுந்தகை வாழ்த்த வச்சிர
தேகம் இலங்கிய தீர்க்க புத்திர முதல்வோனே
தீரன் எனும்படி சாற்று விக்ரம சூரன் நடுங்கிட வாய்ந்த வெற்பு உடல்
தேய நடந்திடு கீர்த்தி பெற்றிடு கதிர் வேலா
மூசு அளி பம்பிய நூற்று இதழ் கமலாசனன் வந்து உலகு ஆக்கி வைத்திடு
வேதன் அகந்தையை மாற்றி முக்கணர் அறிவாக
மூதறிவு உந்திய தீக்ஷை செப்பிய ஞானம் விளங்கிய மூர்த்தி அற்புத
மூவர் இலங்கு பராய்த்துறை பதி பெருமாளே

மேல்

#922
புணரியும் அனங்கன் அம்பும் சுரும்பும் கரும் கயலினொடு கெண்டையும் சண்டனும் கஞ்சமும்
புது நிலவு அருந்தியும் துஞ்சு நஞ்சும் பொருப்பு எறி வேலும்
பொரு என இகன்று அகன்று அங்குமிங்கும் சுழன்று இடை கடை சிவந்து வஞ்சம் பொதிந்து இங்கிதம்
புவி இளைஞர் முன் பயின்று அம் பொனின் கம்பித குழை மோதி
குணலையொடும் இந்த்ரியம் சஞ்சலம் கண்டிடும்படி அமர்புரிந்து அரும் சங்கடம் சந்ததம்
கொடுமைசெய் துசம் கொடும் சிங்கி தங்கும் கடைக்கண்ணினர்பால்
குலவு பல செம் தனம் தந்துதந்து இன்புறும் த்ரிவித கரணங்களும் கந்த நின் செம் பதம்
குறுகும் வகை அந்தியும் சந்தியும் தொந்தம் அற்று அமைவேனோ
துணர் விரி கடம்ப மென் தொங்கலும் பம்புறும் புழுகும் அசலம் பசும் சந்தனம் குங்குமம்
தொகு களபமும் துதைந்து என்று நன்கு ஒன்றும் பத்திரு தோளும்
தொலைவில் சண்முகங்களும் தந்திர மந்த்ரங்களும் பழநி மலையும் பரங்குன்றமும் செந்திலும்
துதி செயும் மெயன்பர்தம் சிந்தையும் சென்று செய்ப்பதி வாழ்வாய்
கண பண புயங்கமும் கங்கையும் திங்களும் குரவும் அறுகும் குறு தும்பையும் கொன்றையும்
கமழ் சடில சம்புவும் கும்பிடும் பண்புடை குருநாதா
கன குடகில் நின்று குன்றம் தரும் சங்கரன் குறு முனி கமண்டலம் கொண்டு முன் கண்டிடும்
கதி செய் நதி வந்து உறும் தென் கடம்பந்துறை பெருமாளே

மேல்

#923
மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி
பதிவாகி சிவஞான பர யோகத்து அருள்வாயே
நிதியே நித்தியமே என் நினைவே நல் பொருள் ஆயோய்
கதியே சொல் பர வேளே கரிவூரில் பெருமாளே

மேல்

#924
இளநிர் குவட்டு முலை அமுத தடத்தை கனி இரத குடத்தை எணும் மரபோடே
இரு கைக்கு அடைத்து இடை துவள குழல் சரிய இதழ் சர்க்கரை பழமொடு உறழ உறல்
முளரிப்பு ஒத்த முகம்முகம் வைத்து அருத்தி நலம் முதிர து அற்ப அல்குல் மிசை மூழ்கி
மொழி தத்தை ஒப்ப கடை விழிகள் சிவப்ப அமளி முழுகி சுகிக்கும் வினை அற ஆளாய்
நளின பத கழலும் ஒளிர் செச்சை பொன் புயம் என் நயனத்தில் உற்று நடமிடும் வேலா
நரனுக்கு அமைத்த கொடி இரத சுத களவன் நறை புட்ப நல் துளவன் மருகோனே
களப தனத்தி சுக சரச குறத்தி முகம் கமலம் புயத்து வளி மணவாளா
கடலை குவட்டு அவுணை இரண படுத்தி உயர் கருவை பதிக்குள் உறை பெருமாளே

மேல்

#925
தசையாகிய கற்றையினால் முடிய தலை கால் அளவு ஒப்பனையாயே
தடுமாறுதல் சற்று ஒரு நாள் உலகில் தவிரா உடலத்தினை நாயேன்
பசு பாசமும் விட்டு அறிவால் அறியப்படு பூரண நிட்களமான
பதி பாவனை உற்று அநுபூதியில் அப்படியே அடைவித்து அருள்வாயே
அசலேசுரர் புத்திரனே குண திக்கு அருணோதய முத்தமிழோனே
அகிலாகம வித்தகனே துகள் அற்றவர் வாழ் வயலி திருநாடா
கசிவார் இதயத்து அமிர்தே மதுப கமலாலயன் மைத்துன வேளே
கருணாகர சற்குருவே குடகில் கருவூர் அழக பெருமாளே

மேல்

#926
நித்த பிணி கொடு மேவிய காயம் இது அப்பு பிருதிவி வாயுவு தேயுவு
நில் பொன் ககனமொடு ஆம் இவை பூத கலவை மேவி
நிற்கப்படும் உலகு ஆளவும் மாகர் இடத்தை கொளவுமே நாடிடும் ஓடிடு
நெட்டு பணி கலை பூண் இடு நான் எனும் மட ஆண்மை
எத்தி திரியும் இது ஏது பொயாது என உற்று தெளிவு உணராது மெய் ஞானமொடு
இச்சைப்பட அறியாது பொய் மாயையில் உழல்வேனை
எத்தில் கொடு நினது ஆர் அடியாரொடும் உய்த்திட்டு உனது அருளால் உயர் ஞான அமுது
இட்டு திருவடியாம் உயர் வாழ்வுற இனிது ஆள்வாய்
தத்த தனதன தானன தானன தித்தி திமிதிமி தீதக தோதக
டத்த குடகுகு தாகுட தீகுட என பேரி
சத்தத்து ஒலி திகை தாவிட வானவர் திக்கு கெட வரு சூரர்கள் தூள்பட
சர்ப்ப சத முடி நாணிட வேல் அதை எறிவோனே
வெற்றி பொடி அணி மேனியர் கோகுல சத்திக்கு இடம் அருள் தாதகி வேணியர்
வெற்பு புரம் அது நீறு எழ காணியர் அருள் பாலா
வெற்பு தட முலையாள் வளி நாயகி சித்தத்து அமர் குமரா எமை ஆள்கொள
வெற்றி புகழ் கருவூர்தனில் மேவிய பெருமாளே

மேல்

#927
முட்ட மருட்டி இரு குழை தொட்ட கடைக்கண் இயல் என மொட்பை விளைத்து முறை அளித்திடு மாதர்
முத்து இரத்ந மரகதம் வைத்த விசித்ர சித்ர முகபடம் மொச்சிய பச்சை அகில் மண தன பாரம்
கட்டி அணைத்து நக நுதி பட்ட கழுத்தில் இறுகிய கை தலம் எய்த்து வசனம் அற்று உயிர் சோரும்
கட்டம் முயக்கின் அநுபவம் விட்ட விடற்கு நியமித கற்பனை பக்ஷமுடன் அளித்து அருளாதோ
வெட்டிய கட்கம் முனை கொடு அட்ட குணத்து ரணமுக விக்ரம உக்ர வெகு வித படை வீரா
வெற்றியை உற்ற குறவர்கள் பெற்ற கொடிக்கு மிக மகிழ் வித்தக சித்த வயலியில் குமரேசா
கிட்டிய பல் கொடு அசுரர்கள் மட்டு அற உட்க அடலோடு கித்தி நடக்கும் அலகை சுற்றிய வேலா
கெட்டவர் உற்ற துணை என நட்டு அருள் சிட்ட பசுபதி கெர்ப்பபுரத்தில் அறுமுக பெருமாளே

மேல்

#928
சஞ்சல சரித பர நாட்டர்கள் மந்திரி குமரர் படை ஆட்சிகள்
சங்கட மகிபர் தொழு ஆக்கினை முடி சூடி
தண்டிகை களிறு பரி மேல் தனி வெண்குடை நிழலில் உலவா கன
சம்ப்ரம விபவ சவுபாக்கியம் உடையோராய்
குஞ்சமும் விசிற இறுமாப்பொடு பஞ்சணை மிசையில் இசையா திரள்
கொம்புகள் குழல்கள் வெகு வாத்தியம் இயல் கீதம்
கொங்கு அணி மகளிர் பெரு நாட்டிய நன்று என மனது மகிழ பார்த்திபர்
கொண்டு அயன் எழுதும் யம கோட்டியை உணராரே
பஞ்சவர் கொடிய வினை நூற்றுவர் வென்றிட சகுனி கவறால் பொருள்
பங்கு உடை அவனி பதி தோற்றிட அயலே போய்
பண்டையில் விதியை நினையா பனிரண்டுடை வருஷ முறையா பல
பண்புடன் மறைவின் முறையால் திருவருளாலே
வஞ்சனை நழுவி நிரை மீட்சியில் முந்து தமுடைய மனை வாழ்க்கையில்
வந்த பின் உரிமை அது கேட்டிட இசையா நாள்
மண் கொள விசையன் விடு தேர் பரி உந்தினன் மருக வயலூர் குக
வஞ்சியில் அமரர் சிறை மீட்டு அருள் பெருமாளே

மேல்

#929
முகில் அளகம் சரியா குழை இகல்வன கண் சிவவா சிவ முறுவல் முகம் குறு வேர்ப்பு எழ அநுபோக
முலை புளகம் செய வார்த்தையும் நிலை அழியும்படி கூப்பிட முகுளித பங்கயமா கர நுதல் சேர
துயர் ஒழுகும் செல பாத்திரம் மெலிய மிகுத்து உதராக்கினி துவள முயங்கி விடாய்த்து அரிவையர் தோளில்
துவயலி நின் தன வியாத்தமும் வயல் இயல் வஞ்சியில் மேல் பயில் சொருபமு நெஞ்சில் இராப்பகல் மறவேனே
சகல மயம் பரமேச்சுரன் மகபதி உய்ந்திட வாய்த்து அருள் சரவண சம்பவ தீர்க்க ஷண்முகமாகி
சருவு க்ரவுஞ்ச சிலோச்சயம் உருவ எறிந்த கை வேல் கொடு சமர முகம்தனில் நாட்டிய மயில் ஏறி
அகிலமும் அஞ்சிய ஆக்ரம விகட பயங்கர ராக்கத அசுரர் அகம் கெட ஆர்த்திடு கொடி கூவ
அமரர் அடங்கலும் ஆட்கொள அமரர் தலம் குடி ஏற்றிட அமரரையும் சிறை மீட்டு அருள் பெருமாளே

மேல்

#930
குருவும் அடியவர் அடியவர் அடிமையும் அருண மணி அணி கண பண விதகர
குடில செடிலினு நிகர் என வழிபடு குணசீலர்
குழுவில் ஒழுகுதல் தொழுகுதல் விழுகுதல் அழுகுதலும் இலி நலமிலி பொறையிலி
குசல கலையிலி தலையிலி நிலையிலி விலைமாதர்
மருவு முலை எனும் மலையினில் இடறியும் அளகம் என வளர் அடவியில் மறுகியும்
மகரம் எறி இரு கடலினில் முழுகியும் உழலாமே
வயலி நகரியில் அருள்பெற மயில் மிசை உதவு பரிமள மது கர வெகு வித
வனச மலர் அடி கனவிலு நனவிலு மறவேனே
உருவு பெருகு அயல் கரியது ஒர் முகில் எனு மருது நெறி பட முறைபட வரைதனில்
உரலினொடு தவழ் விரகு உள இளமையும் மிக மாரி
உமிழ நிரைகளின் இடர் கெட அடர் கிரி கவிகை இட வல மதுகையும் நிலை கெட
உலவில் நிலவறை உருவிய அருமையும் ஒரு நூறு
நிருப ரண முக அரசர்கள் வலி தப விசயன் ரத முதல் நடவிய எளிமையும்
நிகில செகதலம் உரை செயும் அரி திரு மருகோனே
நிலவு சொரி வளை வயல்களும் நெடுகிய குடக தமனியு நளினமு மருவிய
நெருவை நகர் உறை திரு உரு அழகிய பெருமாளே

மேல்

#931
வண்டு போல் சாரத்து அருள் தேடி மந்தி போல் கால பிணி சாடி
செண்டு போல் பாசத்துடன் ஆடி சிந்தை மாய்த்தே சித்து அருள்வாயே
தொண்டரால் காணப்பெறுவோனே துங்க வேற்கானத்து உறைவோனே
மிண்டரால் காணக்கிடையானே வெஞ்ச மா கூடல் பெருமாளே

மேல்

#932
இருவினை பிறவிக்கடல் மூழ்கி இடர்கள் பட்டு அலைய புகுதாதே
திரு அருள் கருணை ப்ரபையாலே திரம் என கதியை பெறுவேனோ
அரி அயற்கு அறிதற்கு அரியானே அடியவர்க்கு எளியற்கு அற்புத நேயா
குரு என சிவனுக்கு அருள் போதா கொடுமுடி குமர பெருமாளே

மேல்

#933
காந்தள் கர வளை சேந்துற்றிட மத காண்டத்து அரிவையருடன் ஊசி
காந்தத்து உறவு என வீழ்ந்து அப்படி குறி காண்டற்கு அநுபவ விதம் மேவி
சாந்தை தடவிய கூந்தல் கரு முகில் சாய்ந்திட்டு அயில் விழி குழை மீதே
தாண்டி பொர உடை தீண்டி தன கிரி தாங்கி தழுவுதல் ஒழியேனோ
மாந்தர்க்கு அமரர்கள் வேந்தற்கு அவரவர் வாஞ்சைப்படி அருள் வயலூரா
வான் கிட்டிய பெரு மூங்கில் புனம் மிசை மான் சிற்றடி தொழும் அதி காமி
பாந்தள் சடை முடி ஏந்தி குலவிய பாண்டிக்கொடுமுடி உடையாரும்
பாங்கில் பர குருவாம் கற்பனையொடு பாண் சொல் பரவிய பெருமாளே

மேல்

#934
பரிவுறு நார் அற்று அழல் மதி வீச சிலை பொரு காலுற்று அதனாலே
பனி படு சோலை குயில் அது கூவ குழல் தனி ஓசை தரலாலே
மருவு இயல் மாதுக்கு இரு கயல் சோர தனி மிக வாடி தளராதே
மனமுற வாழ திரு மணி மார்பத்து அருள் முருகா உற்று அணைவாயே
கிரிதனில் வேல் விட்டு இரு தொளை ஆக தொடு குமரா முத்தமிழோனே
கிளர் ஒளி நாதர்க்கு ஒரு மகனாகி திரு வளர் சேலத்து அமர்வோனே
பொரு கிரி சூர கிளை அது மாள தனி மயில் ஏறி திரிவோனே
புகர் முக வேழ கணபதியாருக்கு இளைய விநோத பெருமாளே

மேல்

#935
சங்குவார் முடி பொன் கழல் பொங்கு சாமரை கத்திகை தண்டு மா கரி பெற்றவன் வெகு கோடி
சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ரவாதி சதுர் கவி சண்டமாருதம் மற்றுள கவி ராஜ
பங்கி பால சரச்வதி சங்க நூல்கள் விதித்த ப்ரபந்த போதம் உரைத்திடு புலவோன் யான்
பண்டை மூ எழுவர்க்கு எதிர் கண்ட நீயும் என சில பஞ்சபாதகரை புகழ் செயலாமோ
வெம் கை யானை வனத்திடை துங்க மா முதலைக்கு வெருண்டு மூலமே என கருடனில் ஏறி
விண் பராவ அடுக்கிய மண் பராவ அதற்கு இதம் பராவ அடுப்பவன் மருகோனே
கொங்கணாதி தரப்பெறு கொங்கினூடு சுகித்திடு கொங்கின் வீர கண ப்ரய குமரா பொன்
கொங்கு உலாவு குறக்கொடி கொங்கையே தழுவி செறி கொங்கு ராஜபுரத்து உறை பெருமாளே

மேல்

#936
கலக சம்ப்ரமத்தாலே விலோசன மலர் சிவந்திட பூண் ஆரம் ஆனவை
கழல வண்டு என சாரீரம் வாய்விட அபிராம
கன தனங்களில் கோமாளம் ஆகியே பல நகம் பட சீரோடு பேதக
கரணமும் செய்து உள் பால் ஊறு தேன் இதழ் அமுதூறல்
செலுவி மென் பணை தோளோடு தோள் பொர நிலை குலைந்து இளைத்து ஏர் ஆகும் ஆருயிர்
செருகும் உந்தியில் போய் வீழும் மாலுடன் அநுராகம்
தெரி குமண்டை இட்டு ஆராத சேர்வையில் உருகி மங்கையர்க்கு ஆளாகி ஏவல் செய்திடினு
நின் கழல் சீர் பாத நான் இனி மறவேனே
உலக கண்டம் இட்டு ஆகாச மேல் விரி சலதி கண்டிட சேர் ஆயம் ஆம் அவருடன்
மடிந்திட கோபாலர் சேரியில் மகவாயும்
உணர் சிறந்த சக்ராதார நாரணன் மருக மந்திர காபாலியாகிய
உரக கங்கண பூதேசர் பாலக வயலூரா
விலை தரும் கொலை போர் வேடர் கோ என இனையும் அம் குற பாவாய் வியாகுலம்
விடுவிடு என்று கை கூர் வேலை ஏவிய இளையோனே
விறல் சுரும்பு நல் க்ரீ தேசி பாடிய விரை செய் பங்கய பூ ஓடை மேவிய
விஜயமங்கல தேவாதி தேவர்கள் பெருமாளே

மேல்

#937
சஞ்சரி உகந்து நின்று முரல்கின்ற தண் குவளை உந்து குழலாலும்
தண் தரள தங்கம் அங்கம் அணிகின்ற சண்ட வித கும்ப கிரியாலும்
நஞ்ச வினை ஒன்றி தஞ்சம் என வந்து நம்பி விட நங்கையுடன் ஆசை
நண்புறு எனை இன்று நன்று இல் வினை கொன்று நன்று மயில் துன்றி வரவேணும்
கஞ்ச மலர் கொன்றை தும்பை மகிழ் விஞ்சி கந்தி கமழ்கின்ற கழலோனே
கன்றிடு பிணங்கள் தின்றிடு கணங்கள் கண்டு பொருகின்ற கதிர் வேலா
செம் சொல் புனைகின்ற எங்கள் குற மங்கை திண் குயம் அணைந்த திரு மார்பா
செண்பகம் இலங்கு மின் பொழில் சிறந்த சிங்கையில் அமர்ந்த பெருமாளே

மேல்

#938
சந்திதொறும் நாணம் இன்றி அகம் வாடி உந்தி பொருளாக அலைவேனோ
சங்கை பெற நாளும் அங்கம் உள மாதர்தங்கள் வசமாகி அலையாமல்
சுந்தரமதாக எந்தன் வினை ஏக சிந்தை களிகூர அருள்வாயே
தொங்கு சடை மீது திங்கள் அணி நாதர் மங்கை ரண காளி தலை சாய
தொந்தி திமிதோதி தந்த திமிதாதி என்று நடம் ஆடும் அவர் பாலா
துங்கம் உள வேடர் தங்கள் குல மாதை மங்களம் அதாக அணைவோனே
கந்த முருகேச மிண்டு அசுரர் மாள அந்த முனை வேல் கொடு எறிவோனே
கம்பர் கயிலாசர் மைந்த வடி வேல சிங்கை நகர் மேவு பெருமாளே

மேல்

#939
இரு குழை இடறி காது மோதுவ பரிமள நளினத்தோடு சீறுவ
இணை அறு வினையை தாவி மீளுவ அதி சூர
எம படர் படை கெட்டு ஓட நாடுவ அமுதுடன் விடம் ஒத்து ஆளை ஈருவ
ரதி பதி கலை தப்பாது சூழுவ முநிவோரும்
உருகிட விரகில் பார்வை மேவுவ பொருள் அது திருடற்கு ஆசை கூறுவ
யுக முடிவு இது என பூசல் ஆடுவ வடி வேல் போல்
உயிர் வதை நயன காதல் மாதர்கள் மயல் தரு கமரில் போய் விழா வகை
உனது அடி நிழலில் சேர வாழ்வதும் ஒரு நாளே
முருகு அவிழ் தொடையை சூடி நாடிய மரகத கிரண பீலி மா மயில்
முது ரவி கிரண சோதி போல் வயலியில் வாழ்வே
முரண் முடி இரண சூலி மாலினி சரண் எனும் அவர் பற்றான சாதகி
முடுகிய கடின தாளி வாகினி மது பானம்
பருகினர் பரம போக மோகினி அரகர எனும் வித்தாரி யாமளி
பரி புர சரண காளி கூளிகள் நடமாடும்
பறை அறை சுடலை கோயில் நாயகி இறையொடும் இடம் இட்டு ஆடு காரணி
பயிரவி அருள் பட்டாலியூர் வரு பெருமாளே

மேல்

#940
கத்தூரி அகரு ம்ருகமத வித்தார படிர இமசல கற்பூர களபம் அணிவன மணி சேர
கட்டு ஆர வடமும் அடர்வன நிட்டூர கலகம் இடுவன கச்சோடு பொருது நிமிர்வன தன மாதர்
கொத்து ஊரு நறவம் என அதரத்து ஊறல் பருகி அவரொடு கொல் சேரி உலையில் மெழுகு என உருகாமே
கொக்கு ஆக நரைகள் வரு முனம் இ காய இளமை உடன் முயல் குற்றேவல் அடிமை செயும் வகை அருளாதோ
அ தூர புவன தரிசன வித்தார கனக நெடு மதி அச்சான வயலி நகரியில் உறை வேலா
அச்சோ என வச உவகையில் உள் சோர்தல் உடைய பரவையொடு அக்காகி விரக பரிபவம் அறவே பார்
பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய் தூதர் விரவ அருள்தரு பற்று ஆய பரம பவுருஷ குருநாதா
பச்சோலை குலவு பனை வளர் மை சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே

மேல்

#941
சங்கை கத்தோடு சிலுகிடு சங்கி சட்கோல சமயிகள்
சங்கற்பித்து ஓதும் வெகு வித கலை ஞான
சண்டைக்குள் கேள்வி அலம்அலம் அண்டற்கு பூசை இடுமவர்
சம்பத்து கேள்வி அலம்அலம் இமவானின்
மங்கைக்கு பாகன் இருடிகள் எங்கட்கு சாமி என அடி
வந்திக்க பேசி அருளிய சிவ நூலின்
மந்த்ர ப்ரஸ்த்தார தரிசன அந்த்ரத்து கேள்வி அலம்அலம்
வம்பில் சுற்றாது பரகதி அருள்வாயே
வெங்கை சுக்ரீபர் படையை இலங்கைக்கு போக விட வல
வென்றி சக்ரேசன் மிக மகிழ் மருகோனே
வெண்பட்டு பூண் நல் வனம் கமுகு எண்பட்டு பாளை விரி பொழில்
விஞ்சிட்டு சூழ வெயில் மறை வயலூரா
கொங்கைக்கு ஒப்பாகும் வட கிரி செம் கைக்கு ஒப்பாகும் நறு மலர்
கொண்டைக்கு ஒப்பாகும் முகில் என வன மாதை
கும்பிட்டு காதல் குனகிய இன்ப சொல் பாடும் இளையவ
கொங்கில் பட்டாலி நகர் உறை பெருமாளே

மேல்

#942
அவசியம் உன் வேண்டி பல காலும் அறிவு உணர்ந்து ஆண்டுக்கு ஒரு நாளில்
தவ செபமும் தீண்டி கனிவாகி சரணம் அது பூண்டற்கு அருள்வாயே
சவதமொடும் தாண்டி தகர் ஊர்வாய் சடு சமயம் காண்டற்கு அரியோனே
சிவ குமர அன்பு ஈண்டில் பெயரோனே திரு முருகன் பூண்டி பெருமாளே

மேல்

#943
இறவாமல் பிறவாமல் எனை ஆள் சற்குருவாகி
பிறவாகி திரமான பெருவாழ்வை தருவாயே
குற மாதை புணர்வோனே குகனே சொல் குமரேசா
அற நாலை புகல்வோனே அவிநாசி பெருமாளே

மேல்

#944
பந்த பொன் பார பயோதரம் உந்தி சிற்று ஆடு அகை மேகலை
பண்புற்று தாளொடு மேவிய துகிலோடே
பண்டு எச்சில் சேரியில் வீதியில் கண்டு இச்சிச்சாரொடு மேவியே
பங்குக்கு காசு கொள் வேசியர் பனிநீர் தோய்
கொந்துச்சி பூ அணி கோதையர் சந்த செந்தாமரை வாயினர்
கும்பிட்டு பாணியர் வீணியர் அநுராகம்
கொண்டுற்று பாயலில் மூழ்கினும் மண்டி செச்சே என வானவர்
கொஞ்சுற்று தாழ் பத தாமரை மறவேனே
அந்த தொக்காதியும் ஆதியும் வந்திக்க தானவர் வாழ்வுறும்
அண்டத்துப்பால் உற மா மணி ஒளி வீசி
அங்கத்தை பாவை செய்தாம் என சங்கத்து உற்றார் தமிழ் ஓத உவந்து
கிட்டார் கழு ஏறிட ஒரு கோடி
சந்த செ காள நிசாசரர் வெந்து உக்க தூளி படாம் எழ
சண்டைக்கு எய்த்தார் அமராபதி குடியேற
தங்க செங்கோலை அசை சேவக கொங்கில் தொக்கு ஆர் அவிநாசியில்
தண்டை சிங்கார அயில் வேல் விடு பெருமாளே

மேல்

#945
மன திரைந்து எழும் ஈளையும் மேலிட கறுத்த குஞ்சியுமே நரையாய் இட
மலர் கண் அண்டு இருளாகியுமே நடை தடுமாறி
வருத்தமும் தர தாய் மனையாள் மக வெறுத்திட அம் கிளையோருடன் யாவரும்
வசைக்கு உறும் சொலினால் மிகவே தினம் நகையாட
எனை கடந்திடு பாசமுமே கொடு சினத்து வந்து எதிர் சூலமுமே கையில்
எடுத்து எறிந்து அழல் வாய்விடவே பயம் உறவே தான்
இழுக்க வந்திடு தூதர்கள் ஆனவர் பிடிக்கு முன்பு உனது தாள் மலராகிய
இணை பதம் தரவே மயில் மீதினில் வரவேணும்
கனத்த செந்தமிழால் நினையே தின நினைக்கவும் தருவாய் உனது ஆர் அருள்
கருத்து இருந்து உறைவாய் எனது ஆருயிர் துணையாக
கடல் சலம்தனிலே ஒளி சூரனை உடல் பகுந்து இரு கூறெனவே அது
கதித்து எழுந்து ஒரு சேவலும் மா மயில் விடும் வேலா
அனத்தனும் கமலாலயம் மீது உறை திரு கலந்திடும் மால் அடி நேடிய
அரற்கு அரும் பொருள் தான் உரை கூறிய குமரேசா
அறத்தையும் தருவோர் கன பூசுரர் நினை தினம் தொழுவார் அமராய் புரி
அருள் செறிந்து அவிநாசியுள் மேவிய பெருமாளே

மேல்

#946
பக்குவ ஆசார லட்சண சாகாதி பட்சணமாம் மோன சிவயோகர்
பத்தியில் ஆறாறு தத்துவ மேல் வீடு பற்று நிராதார நிலையாக
அக்கணமே மாய துர்க்குணம் வேறு ஆக அ படையே ஞான உபதேசம்
அக்கு அற வாய் பேசு சற்குருநாதா உன் அற்புத சீர் பாதம் மறவேனே
உக்கிர ஈறாறு மெய் புயனே நீல உற்பல வீரா ராசி மண நாற
ஒத்த நிலா வீசு நித்தல நீர் வாவி உற்பலம் ராசீவ வயலூரா
பொக்கம் இலா வீர விக்ரம மா மேனி பொன் ப்ரபை ஆகார அவிநாசி
பொய் கலி போம் ஆறு மெய்க்கு அருள் சீரான புக்கொளியூர் மேவு பெருமாளே

மேல்

#947
மதப்பட்ட விசால கபோலமும் முகப்பில் சன ஆடையும் ஓடையும்
மரு கற்புர லேப லலாடமும் மஞ்சை ஆரி
வயிற்றுக்கு இடு சீகர பாணியும் மிதல் செக்கர் விலோசன வேகமும்
மணி சத்த கடோர புரோசமும் ஒன்று கோல
விதப்பட்ட வெள் ஆனையில் ஏறியு நிறை கற்பக நீழலில் ஆறியும்
விஷ துர்க்கம் அன சூளிகை மாலிகை இந்த்ரலோகம்
விளக்க சுரர் தர வாழ் தரு பிரப்புத்வ குமார சொரூபக
வெளிப்பட்டு எனை ஆள் வயலூர் இருந்த வாழ்வே
இதப்பட்டிடவே கமலாலய ஒருத்திக்கு இசைவான பொன் ஆயிரம்
இயற்ற பதிதோறும் உலாவிய தொண்டர் தாள
இசைக்கு ஒக்க இராசத பாவனை உள பெற்றொடு பாடிட வேடையில்
இளைப்பு உக்கிட வார் மறையோன் என வந்து கானில்
திதப்பட்டு எதிரே பொதி சோறினை அவிழ்த்து இட்ட அவிநாசியிலே வரு
திசைக்கு உற்ற சகாயனும் ஆகி மறைந்து போம் முன்
செறிப்பு இத்த கரா அதின் வாய் மகவை அழைப்பித்த புராண க்ருபாகர
திருப்புக்கொளியூர் உடையார் புகழ் தம்பிரானே

மேல்

#948
வனப்புற்று எழு கேதம் மேவும் கோகிலம் அழைக்க பொரு மாரன் ஏவ தாம் மலர்
மருத்து பயில் தேரில் ஏறி மா மாதி தொங்கலாக
மறுத்து கடல் பேரி மோதவே இசை பெருக்க படை கூட்டி மேல் எழா அணி
வகுத்து கொண்டு சேமமாக மாலையில் வந்து காதி
கனக்க பறை தாய அளாவ நீள் கன கருப்பு சிலை காமர் ஓவு இல் வாளிகள்
களித்து பொர வாசம் வீசு வார் குழல் மங்கைமார்கள்
கலைக்குள் படும் பேதம் ஆகி மாயும் அது உனக்கு பிரியமோ கிருபாகரா இது
கடக்கப்படு நாமம் ஆன ஞானம் அது என்று சேர்வேன்
புனத்தில் தினை காவலான காரிகை தன பொன் குவடு ஏயும் மோக சாதக
குனித்த பிறை சூடும் வேணி நாயகர் நல் குமாரா
பொறைக்கு புவி போலும் நீதி மாதவர் சிறக்க தொகு பாசி சோலை மாலைகள்
புயத்துற்று அணி பாவ சூரன் ஆருயிர் கொண்ட வேலா
சினத்து கடி வீசி மோதும் மா கடல் அடைத்து பிசிதாசனாதி மா முடி
தெறிக்க கணை ஏவும் வீர மாமனும் உந்தி மீதே
செனித்து சதுர்வேதம் ஓது நாமனும் மதித்து புகழ் சேவகா விழா மலி
திருப்புக்கொளியூரில் மேவும் தேவர்கள் தம்பிரானே

மேல்

#949
தீரா பிணி தீர சீவாத்தும ஞான
ஊர் ஆட்சியதான ஓர் வாக்கு அருள்வாயே
பாரோர்க்கு இறை சேயே பாலா கிரி ராசே
பேரால் பெரியோனே பேரூர் பெருமாளே

மேல்

#950
மை சரோருகம் நச்சு வாள் விழி மானாரோடே நான் யார் நீ யார் எனுமாறு
வைத்த போதக சித்த யோகியர் வாழ்நாள் கோள் நாள் வீண் நாள் காணார் அது போலே
நிச்சமாகவும் இச்சையானவை நேரே தீரா ஊரே பேரே பிறவே என்
நிட்கராதிகள் கண் முன் புகாது இனி நீயே தாயாய் நாயேன் மாயாது அருள்வாயே
மி சரோருக வச்ரபாணியன் வேதா வாழ்வே நாதாதீதா வயலூரா
வெற்பை ஊடுருவப்படாவரு வேலா சீலா பாலா கால் ஆயுதம் ஆளி
பச்சை மா மயில் மெச்ச ஏறிய பாகா சூரா ஆகா போகாது எனும் வீரா
பட்டி ஆள்பவர் கொட்டி ஆடினர் பாரூர் ஆ சூழ் பேரூர் ஆள்வார் பெருமாளே

மேல்

#951
கலைஞர் எணும் கற்பு கலி யுக பந்தத்து கடன் அபயம் பட்டு கசடு ஆகும்
கரும சடங்கம் சட்சமயிகள் பங்கிட்டு கலகல எனும் கொட்புற்று உடன் மோதும்
அலகில் பெரும் தர்க்கம் பல கலையின் பற்று அற்று அரவியிடம் தப்பி குறியாத
அறிவை அறிந்து அ பற்று அதனினொடும் சற்று உற்று அருள் வசனம் கிட்டப்பெறுவேனோ
கொலைஞர் எனும் கொச்சை குறவர் இளம் பச்சை கொடி மருவும் செச்சை புய மார்பா
கொடிய நெடும் கொக்கு குறுகு அவுணன் பட்டு குரை கடல் செம்ப சக்கரவாள
சிலை பக எண் திக்கு திகிரிகளும் பத்து திசைகளினும் தத்த செகம் ஏழும்
திருகு சிகண்டி பொன் குதிரை விடும் செட்டி திறல கொடும்பைக்குள் பெருமாளே

மேல்

#952
ஈரமோடு சிரித்து வருத்தவும் நாத கீத நடிப்பில் உருக்கவும்
ஏவராயினும் எத்தி அழைக்கவும் மத ராஜன்
ஏ வின் மோது கண் இட்டு மருட்டவும் வீதி மீது தலை கடை நிற்கவும்
ஏறுமாறு மனத்தினில் நினைக்கவும் விலை கூறி
ஆர பார தனத்தை அசைக்கவும் மாலை ஓதி குலைத்து முடிக்கவும்
ஆடை சோர அவிழ்த்து அரை சுற்றவும் அதி மோக
ஆசை போல் மன இஷ்டம் உரைக்கவும் மேல் விழா வெகு துக்கம் விளைவிக்கவும்
ஆன தோதக வித்தைகள் கற்பவர் உறவாமோ
பார மேரு பருப்பதம் மத்து என நேரிதாக எடுத்து உடன் நட்டு உமைபாகர்
ஆர படம் பணி சுற்றிடு கயிறாக
பாதி வாலி பிடித்திட மற்றொரு பாதி தேவர் பிடித்திட லக்ஷிமி
பாரிசாத முதல் பல சித்திகள் வருமாறு
கீர வாரிதியை கடைவித்து அதிகாரியாய் அமுதத்தை அளித்த
க்ருபாளு ஆகிய பச்சு உரு அச்சுதன் மருகோனே
கேடு இலா அளகை பதியில் பல மாட கூட மலர் பொழில் சுற்றிய
கீரனூர் உறை சத்தி தரித்து அருள்பெருமாளே

மேல்

#953
தரங்க வார் குழல் தநு நுதல் விழி ஆலம் தகைந்த மா முலை துடி இடை மட மாதர்
பரந்த மால் இருள் படு குழி வசமாகி பயந்து காலனுக்கு உயிர் கொடு தவியாமல்
வரம் தராவிடில் பிறர் எவர் தருவாரே மகிழ்ந்து தோகையில் புவி வலம் வருவோனே
குரும்பை மா முலை குறமகள் மணவாளா குளந்தை மா நகர் தளி உறை பெருமாளே

மேல்

#954
இலை சுருள் கொடுத்து அணைத்தலத்து இருத்தி மட்டைகட்கு
இதத்த புட்குரல்கள் விட்டு அநுராகம்
எழுப்பி மை கயல் கணை கழுத்தை முத்தம் இட்டு அணைத்து
எடுத்து இதழ் கடித்து உரத்து இடை தாவி
அலைச்சல் உற்று இலச்சை அற்று அரை பை தொட்டு உழைத்துஉழைத்து
அலக்கண் உற்று உயிர் களைத்திடவே தான்
அற தவித்து இளைத்து உற தனத்தினில் புணர்ச்சிபட்டு
அயர்க்கும் இ பிறப்பு இனி தவிராதோ
கொலை செருக்கு அரக்கரை கலக்கும் மிக்க குக்குட
கொடி திரு கரத்த பொன் பதி பாடும்
குறித்த நல் திருப்புகழ் ப்ரபுத்துவ கவித்துவ
குருத்துவத்து எனை பணித்து அருள்வோனே
தலை சுமை சடை சிவற்கு இலக்கண இலக்கிய
தமிழ் த்ரயத்து அகத்தியற்கு அறிவு ஓதும்
சமர்த்தரில் சமர்த்த பச்சிம திசைக்கு உள உத்தம
தனிச்சயத்தினில் பிளை பெருமாளே

மேல்

#955
உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கி கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சு ஒத்து
ஒலித்திடும் செவி செவிடுற ஒள் கண் குருடாகி
உரத்த வெண் பலும் நழுவி மதம் கெட்டு இரைத்து கிண்கிண் என இருமல் எழுந்திட்டு
உளைப்புடன் தலை கிறுகிறு எனும் பித்தமும் மேல் கொண்டு
இரத்தம் இன்றிய புழுவினும் விஞ்சி பழுத்து உளம் செயல் வசனம் வரம்பு அற்று
அடுத்த பெண்டிரும் எதிர் வர நிந்தித்து அனைவோரும்
அசுத்தன் என்றிட உணர்வு அது குன்றி துடிப்பதும் சிறிது உளது இலது என்கைக்கு
அவத்தை வந்து உயிர் அலமரும் அன்றைக்கு அருள்வாயே
திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட் டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட்
டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் டிகுதீதோ
திமித்தி மிந்திமி திமிதிமி என்றிட்டு இடக்கை துந்துமி முரசு முழங்க
செரு களந்தனில் நிருதர் தயங்க சில பேய்கள்
தரித்து மண்டையில் உதிரம் அருந்த திரள் பருந்துகள் குடர்கள் பிடுங்க
தருக்கு சம்புகள் நிணம் அது சிந்த பொரும் வேலா
தடம் சிகண்டியில் வயலியில் அன்பை படைத்த நெஞ்சினில் இயல் செறி கொங்கில்
தனிச்சயம்தனில் இனிது உறை கந்த பெருமாளே

மேல்

#956
அலகு இல் அவுணரை கொன்ற தோள் என மலை தொளை உருவ சென்ற வேல் என
அழகிய கனக தண்டை சூழ்வன புண்டரீக
அடி என முடியில் கொண்ட கூதளம் என வனசரியை கொண்ட மார்பு என
அறுமுகம் என நெக்கு என்பெலாம் உருக அன்பு உறாதோ
கலகலகல என கண்டபேரொடு சிலுகிடு சமய பங்க வாதிகள்
கதறிய வெகு சொல் பங்கம் ஆகிய பொங்கு அளாவும்
கலைகளும் ஒழிய பஞ்ச பூதமும் ஒழியுற மொழியின் துஞ்சு உறாதன
கரணம் ஒழிய தந்த ஞானம் இருந்தவாறு என்
இலகு கடலை கற்கண்டு தேனொடும் இரதமுறு தினை பிண்டி பாகுடன்
இனிமையில் நுகருற்ற எம்பிரான் ஒரு கொம்பினாலே
எழுது என மொழிய பண்டு பாரதம் வட கன சிகர செம்பொன் மேருவில்
எழுதிய பவள குன்று தாதையை அன்று சூழ
வலம் வரும் அளவில் சண்டமாருத விசையினும் விசையுற்று எண் திசை முக
மகிதலம் அடைய கண்டு மாசுணம் உண்டு உலாவு
மரகத கலப செம்புள் வாகன மிசை வரு முருக சிம்புளே என
மதுரையில் வழிபட்டு உம்பரார் தொழு தம்பிரானே

மேல்

#957
ஆனை முகவற்கு நேர் இளைய பத்த ஆறுமுக வித்தக அமரேசா
ஆதி அரனுக்கும் வேத முதல்வற்கும் ஆரணம் உரைத்த குருநாதா
தானவர் குலத்தை வாள் கொடு துணித்த சால் சதுர் மிகுத்த திறல் வீரா
தாள் இணைகள் உற்று மேவிய பதத்தில் வாழ்வொடு சிறக்க அருள்வாயே
வான் எழு புவிக்கும் மால் அயனுக்கும் யாவர் ஒருவர்க்கும் அறியாத
மா மதுரை சொக்கர் மாது உமை களிக்க மா மயில் நடத்தும் முருகோனே
தேன் எழு புனத்தில் மான் விழி குறத்தி சேர மருவுற்ற திரள் தோளா
தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை வேல் கொடு தணித்த பெருமாளே

மேல்

#958
பரவு நெடும் கதிர் உலகில் விரும்பிய பவனிவரும்படி அதனாலே
பகர வளங்களு நிகர விளங்கிய இருளை விடிந்தது நிலவாலே
வரையினில் எங்கணும் உலவி நிறைந்தது வரிசை தரும் பதம் அது பாடி
வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரு மகிழ வரங்களும் அருள்வாயே
அரஹர சுந்தர அறுமுக என்று உனி அடியர் பணிந்திட மகிழ்வோனே
அசல நெடும் கொடி அமை உமைதன் சுத குறமகள் இங்கித மணவாளா
கருத அரு திண் புய சரவண குங்கும களபம் அணிந்திடு மணி மார்பா
கனக மிகும் பதி மதுரை வளம் பதியதனில் வளர்ந்து அருள் பெருமாளே

மேல்

#959
பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை ஒருத்தர் வாய் சுருள் ஒருவர் கை உதவுவர்
பணத்தை நோக்குவர் பிணம் அது தழுவுவர் அளவளப்பதனாலே
படுக்கை வீட்டினுள் அவுஷதம் உதவுவர் அணைப்பர் கார்த்திகை வருது என உறுபொருள்
பறிப்பர் மாத்தையில் ஒருவிசை வருக என அவரவர்க்கு உறவாயே
அழைப்பர் ஆத்திகள் கருதவர் ஒருவரை முடுக்கி ஓட்டுவர் அழிகுடி அரிவையர்
அலட்டினால் பிணை எருது என மயல் எனும் நரகினில் சுழல்வேனோ
அவத்தமாய் சில படுகுழிதனில் விழும் விபத்தை நீக்கி உன் அடியவருடன் எனை
அமர்த்தி ஆட்கொள மனதினில் அருள்செய்து கதிதனை தருவாயே
தழைத்த சாத்திர மறைபொருள் அறிவு உள குருக்கள் போல் சிவ நெறிதனை அடைவொடு
தகப்பனார்க்கு ஒரு செவிதனில் உரைசெய்த முருக வித்தக வேளே
சமத்தினால் புகழ் சனகியை நலிவுசெய் திருட்டு ராக்கதன் உடல் அது துணிசெய்து
சயத்த அயோத்தியில் வருபவன் அரி திரு மருமக பரிவோனே
செழித்த வேல்தனை அசுரர்கள் உடல் அது பிளக்க ஓச்சிய பிறகு அமரர்கள் பதி
செலுத்தி ஈட்டிய சுர பதி மகள்தனை மணம் அது உற்றிடுவோனே
திறத்தினால் பல சமணரை எதிரெதிர் கழுக்கள் ஏற்றிய புதுமையை இனிதொடு
திருத்தமாய் புகழ் மதுரையில் உறைதரும் அறுமுக பெருமாளே

மேல்

#960
சீத வாசனை மலர் குழல் பிலுக்கி முகம் மாய வேல் விழி புரட்டி நகை முத்தம் எழ
தேமல் மார்பில் இள பொன் கிரி பளபள என தொங்கல் ஆரம்
சேரும் ஓவியம் என சடம் மினுக்கி வெகு ஆசை நேசமும் விளைத்து இளைத்து இடை உற்ற வரி
சேலை காலில் விழவிட்டு நடையிட்டு மயிலின் கலாப
சாதியாம் என வெருட்டி நடம் இட்டு வலையான பேர் தமை இரக்க வகை இட்டு கொடி
சாக நோய் பிணி கொடுத்து இடர் படுத்துவர்கள் பங்கினூடே
தாவி மூழ்கி மதி கெட்டு அலம் உற்றவனை பாவமான பிறவிக்கடல் உழப்பவனை
தார் உலாவு பத பத்தியில் இருத்துவதும் எந்த நாளோ
வாதவூரனை மதித்து ஒரு குருக்கள் என ஞான பாதம் வெளி இட்டு நரியின் குழுவை
வாசியாம் என நடத்து உவகையுற்று அரசன் அன்பு காண
மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ்
மாது வாணி தரு பிட்டு நுகர் பித்தன் அருள் கந்த வேளே
வேத லோகர் பொன் நிலத்தர் தவ சித்தர் அதி பார சீல முனி வர்க்கம் முறையிட்டு அலற
வேலை ஏவி அவுண குலம் இறக்க நகை கொண்ட சீலா
வேதம் மீண கமலக்கணர் மெய் பச்சை ரகுராமர் ஈண மயில் ஒக்க மதுரை பதியில்
மேவி வாழ் அமரர் முத்தர் சிவ பத்தர் பணி தம்பிரானே

மேல்

#961
புருவ செம் சிலை கொண்டு இரு கணை விழி எறிய கொங்கை இரண்டு எனும் மத கரி
பொர முத்தம் தரும் இங்கித நய விதம் அதனாலே
புகல சங்கு இசை கண்டம் அதனில் எழ உருவ செம் துவர் தந்த அதரமும் அருள்
புதுமை தம்பலமும் சில தர வரும் மனதாலே
பருகி தின்றிடல் அம் சுகம் என மனது உருகி குங்கும சந்தன அதி வியர்
படிய சம்ப்ரம ரஞ்சிதம் அருள் கலவியினாலே
பலருக்கும் கடையன் என்று எனை இகழவும் மயலை தந்து அரு மங்கையர்தமை வெகு
பலமில் கொண்டிடு வண்டனும் உனது அடி பணிவேனோ
திருவை கொண்டு ஒரு தண்டக வனம் மிசை வர அச்சம் கொடு வந்திடும் உழை உடல்
சிதற கண்டக வெம் கரனொடு திரிசிரனொடு
திரமில் தங்கிய கும்பகன் ஒரு பது தலை பெற்று உம்பரை வென்றிடும் அவனொடு
சிலையில் கொன்று முகுந்தன் நலம் மகிழ் மருகோனே
மருவை துன்றிய பைம் குழல் உமையவள் சிவனுக்கு அன்பு அருள் அம்பிகை கவுரிகை
மலை அத்தன் தரு சங்கரி கருணை செய் முருகோனே
வட வெற்பு அங்கு அயல் அன்று அணி குசம் சரவணையில் தங்கிய பங்கய முக
தமிழ் மதுரை சங்கலி மண்டப இமையவர் பெருமாளே

மேல்

#962
முகம் எலாம் நெய் பூசி தயங்கு நுதலின் மீதிலே பொட்டு அணிந்து முருகு மாலை ஓதிக்கு அணிந்த மட மாதர்
முதிரும் ஆர பார தனங்கள் மிசையில் ஆவியாய் நெக்கு அழிந்து முடிய மாலிலே பட்டு அலைந்து பொருள் தேடி
செகம் எலாம் உலாவி கரந்து திருடனாகியே சற்று உழன்று திமிரனாகி ஓடி பறந்து திரியாமல்
தெளிவு ஞானம் ஓதி கரைந்து சிவ புராண நூலில் பயின்று செறியுமாறு தாளை பரிந்து தர வேணும்
அகரம் ஆதியாம் அக்ஷரங்கள் அவனி கால் விண் ஆர் அப்பொடு அங்கி அடைய ஏக ரூபத்தில் ஒன்றி முதலாகி
அமரர் காணவே அத்த மன்றில் அரிவை பாட ஆடி கலந்த அமல நாதனார் முன் பயந்த முருகோனே
சகல வேத சாமுத்ரியங்கள் சமயம் ஆறு லோக த்ரயங்கள் தரும நீதி சேர் தத்துவங்கள் தவ யோகம்
தவறு இலாமல் ஆள பிறந்து தமிழ் செய் மாறர் கூன் வெப்போடு அன்று தவிர ஆலவாயில் சிறந்த பெருமாளே

மேல்

#963
ஏல பனிநீர் அணி மாதர்கள் கானத்தினுமே உறவாடிடும் ஈரத்தினுமே வளை சேர் கரம் அதனாலும்
ஏம கிரி மீதினிலே கரு நீல கயம் ஏறிய நேர் என ஏதுற்றிடு மா தன மீதினும் மயலாகி
சோலை குயில் போல் மொழியாலுமெ தூசுற்றிடு நூல் இடையாலுமெ தோமில் கதலீ நிகர் ஆகிய தொடையாலும்
சோம ப்ரபை வீசிய மா முக சாலத்திலும் மா கடு வேல் விழி சூது அதினும் நான் அவமே தினம் உழல்வேனோ
ஆல பணி மீதினில் மாசறு ஆழிக்கிடையே துயில் மாதவன் ஆனைக்கு இனிதாய் உதவீ அருள் நெடு மாயன்
ஆதி திரு நேமியன் வாமனன் நீல புயல் நேர் தரு மேனியன் ஆர துளவார் திரு மார்பினன் மருகோனே
கோல கய மா உரி போர்வையர் ஆல கடு ஆர் கள நாயகர் கோவில் பொறியால் வரு மா சுத குமரேசா
கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீர் அற்புத மா நகர் ஆகிய கூடல் பதி மீதினில் மேவிய பெருமாளே

மேல்

#964
கலை மேவு ஞான பிரகாச கடல் ஆடி ஆசை கடல் ஏறி
பலம் ஆய வாதில் பிறழாதே பதி ஞான வாழ்வை தருவாயே
மலை மேவு மாய குற மாதின் மனம் மேவு வால குமரேசா
சிலை வேட சேவல் கொடியோனே திருவாணி கூடல் பெருமாளே

மேல்

#965
நீதம் துவம் ஆகி நேம துணையாகி
பூத தயவான போதை தருவாயே
நாதத்து ஒளியோனே ஞான கடலோனே
கோது அற்ற அமுதானே கூடல் பெருமாளே

மேல்

#966
மன நினை சுத்தம் சூதுகாரிகள் அமளி விளைக்கும் கூளி மூலிகள்
மத பல நித்தம் பாரி நாரிகள் அழகாக
வளை குழை முத்தம் பூணும் வீணிகள் விழலிகள் மெச்சுண்டு ஆடிப்பாடிகள்
வர மிகு வெட்கம் போல ஓடிகள் தெருவூடே
குனகிகள் பக்ஷம் போல பேசிகள் தனகிகள் இச்சம் பேசி கூசிகள்
குசலிகள் வர்க்கம் சூறைகாரிகள் பொருள் ஆசை
கொளுவிகள் இஷ்டம் பாறி வீழ்பட அருள் அமுதத்தின் சேரும் ஓர் வழி
குறிதனில் உய்த்து உன் பாதம் ஏறிட அருள்தாராய்
தனதன தத்தம் தான தானன டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு
தகுதிகு தத்தம் தீத தோதக என பேரி
தவில் முர சத்தம் தாரை பூரிகை வளை துடி பொன் கொம்பு ஆர சூரரை
சமர்தனில் முற்றும் பாறி நூறிட விடும் வேலா
தினை வன நித்தம் காவலாளியள் நகை முறை முத்தின் பாவை மான்மகள்
திகழ் பெற நித்தம் கூடி ஆடிய முருகோனே
திரிபுர நக்கன் பாதி மாது உறை அழகிய சொக்கன் காதில் ஓர் பொருள்
செல அருளிய தென் கூடல் மேவிய பெருமாளே

மேல்

#967
முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும்
முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருக கடவுள் முப்பதுமூ வர்க்க சுரர் அடி பேணி
பத்து முடி தத்தும் வகையுற்ற கணி விட்ட அரி பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும்
பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள் பத்தர் மனதுற்ற சிவம் அருள்வாயே
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான
திக்கு என மத்தளம் இடக்கை துடி தத்தகுகு செச்சரிகை செச்சரிகை என ஆடும்
அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவ சித்தி அருள் சத்தி அருள் பாலா
அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல் கனக பத்மபுரி பெருமாளே

மேல்

#968
ஆடல் மதன் அம்பின் மங்கையர் ஆல விழியின் அன்பில் பிறங்கு ஒளி ஆரம் அது அலம்பு கொங்கையில் மயலாகி
ஆதி குருவின் பதங்களை நீதியுடன் அன்புடன் பணியாமல் மனம் நைந்து நொந்து உடல் அழியாதே
வேடர் என நின்ற ஐம்புலன் நாலு கரணங்களின் தொழில் வேறுபட நின்று உணர்ந்து அருள்பெறுமாறு என்
வேடை கெட வந்து சிந்தனை மாயை அற வென்று துன்றிய வேத முடிவின் பரம்பொருள் அருள்வாயே
தாடகை உரம் கடிந்து ஒளிர் மா முனி மகம் சிறந்து ஒரு தாழ்வு அற நடந்து திண் சிலை முறியா ஒண்
ஜாநகி தனம் கலந்த பின் ஊரில் மகுடம் கடந்து ஒரு தாயர் வசனம் சிறந்தவன் மருகோனே
சேடன் முடியும் கலங்கிட வாடை முழுதும் பரந்து எழ தேவர்கள் மகிழ்ந்து பொங்கிட நடமாடும்
சீர் மயில மஞ்சு துஞ்சிய சோலை வளர் செம்பொன் உந்திய ஸ்ரீபுருடமங்கை தங்கிய பெருமாளே

மேல்

#969
கார் குழல் குலைந்து அலைந்து வார் குழை இசைந்து அசைந்து காதல் உறு சிந்தை உந்து மட மானார்
காமுகர் அகம் கலங்க போர் மருவ முந்தி வந்த காழ் கடிய கும்ப தம்ப இரு கோடார்
பேர் மருவு மந்தி தந்தி வாரணம் அனங்கன் அங்கம் பேதையர்கள் தங்கள் கண்கள் வலையாலே
பேர் அறிவு குந்து நொந்து காதலில் அலைந்த சிந்தை பீடை அற வந்து நின்றன் அருள்தாராய்
ஏர் மருவு தண்டை கொண்ட தாள் அசைய வந்த கந்த ஏக மயில் அங்க துங்க வடி வேலா
ஏ மன் உமை மைந்த சந்தி சேவல் அணி கொண்டு அண்டர் ஈடேற இருந்த செந்தில் நகர் வாழ்வே
தேருகள் மிகுந்த சந்தி வீதிகள் அணிந்த கெந்த சீர் அலர் குளுந்து உயர்ந்த பொழிலூடே
சேரவே இலங்கு துங்க வாவிகள் இசைந்து இருந்த ஸ்ரீபுருடமங்கை தங்கு பெருமாளே

மேல்

#970
வேனின் மதன் ஐந்து பாணம் விட நொந்து வீதிதொறு நின்ற மடவார்பால்
வேளை என வந்து தாளினில் விழுந்து வேடை கெட நண்பு பல பேசி
தேனினும் மணந்த வாய் அமுதம் உண்டு சீதள தனங்களினில் மூழ்கி
தேடிய தனங்கள் பாழ்பட முயன்று சேர் கதி அது இன்றி உழல்வேனோ
ஆன் நிரை துரந்து மா நிலம் அளந்து ஓர் ஆல் இலையில் அன்று துயில் மாயன்
ஆயர் மனை சென்று பால் தயிர் அளைந்த ஆரண முகுந்தன் மருகோனே
வானவர் புகழ்ந்த கானவர் பயந்த மானொடு விளங்கு மணி மார்பா
மா மறை முழங்கு ஸ்ரீபுருடமங்கை மா நகர் அமர்ந்த பெருமாளே

மேல்

#971
கரம் கமலம் மின் அதரம் பவளம் வளை களம் பகழி விழி மொழி பாகு
கரும்பு அமுது முலை குரும்பை குருகு பகரும் பிடியின் நடை எயின் மாதோடு
அரங்க நக கன தனம் குதலை இசை அலங்க நியமுற மயில் மீதே
அமர்ந்து பவ வினை களைந்து வரு கொடிய அந்தகன் அகல வருவாயே
தரங்கம் முதிய மகரம் பொருத திரை சலந்தி நதி குமரன் என வான
தலம் பரவ மறை புலம்ப வரு சிறு சதங்கை அடி தொழுபவர் ஆழி
இரங்கு தொலை திரு அரங்கர் மருக பனிரண்டு புய மலை கிழவோனே
இலங்கு தர தமிழ் விளங்க வரு திரு இலஞ்சி மருவிய பெருமாளே

மேல்

#972
கொந்தள ஓலை குலுங்கிட வாளி சங்குடன் ஆழி கழன்றிட மேக
கொண்டைகள் மாலை சரிந்திட வாச பனிநீர் சேர்
கொங்கைகள் மார்பு குழைந்திட வாளி கண் கயல் மேனி சிவந்திட கோவை
கொஞ்சிய வாய் இரசம் கொடு மோக கடலூடே
சந்திர ஆரம் அழிந்திட நூலில் பங்கு இடை ஆடை துவண்டிட நேசம்
தந்திட மாலு ததும்பியும் மூழ்குற்றிடு போது உன்
சந்திர மேனி முகங்களும் நீல சந்த்ரகி மேல் கொடு அமர்ந்திடு பாத
சந்திர வாகு சதங்கையும் ஓ சற்று அருள்வாயே
சுந்தரர் பாடல் உகந்து இரு தாளை கொண்டு நல் தூது நடந்தவர் ஆக
தொந்தமொடு ஆடி இருந்தவள் ஞான சிவகாமி
தொண்டர்கள் ஆகம் அமர்ந்தவள் நீல சங்கரி மோக சவுந்தரி கோல
சுந்தரி காளி பயந்து அருள் ஆனைக்கு இளையோனே
இந்திர வேதர் பயம் கெட சூரை சிந்திட வேல் கொடு எறிந்து நல் தோகைக்கு
இன்புற மேவி இருந்திடு வேத பொருளோனே
எண் புனம் மேவி இருந்தவள் மோக பெண் திருவாளை மணந்து இயல் ஆர் சொற்கு
இஞ்சி அளாவும் இலஞ்சி விசாக பெருமாளே

மேல்

#973
சுரும்பு அணி கொண்டல் நெடும் குழல் கண்டு துரந்து எறிகின்ற விழி வேலால்
சுழன்றுசுழன்று துவண்டுதுவண்டு சுருண்டு மயங்கி மடவார் தோள்
விரும்பி வரம்பு கடந்து நடந்து மெலிந்து தளர்ந்து மடியாதே
விளங்கு கடம்பு விழைந்து அணி தண்டை விதம் கொள் சதங்கை அடி தாராய்
பொருந்தல் அமைந்து உசிதம் பெற நின்ற பொன் அம் கிரி ஒன்றை எறிவோனே
புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம் கொள் புரந்தரன் வஞ்சி மணவாளா
இரும் புன மங்கை பெரும் புளகம் செய் குரும்பை மணந்த மணி மார்பா
இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சி அமர்ந்த பெருமாளே

மேல்

#974
மாலையில் வந்து மாலை வழங்கு மாலை அனங்கன் மலராலும்
வாடை எழுந்து வாடை செறிந்து வாடை எறிந்த அனலாலும்
கோலம் அழிந்து சால மெலிந்து கோமள வஞ்சி தளரா முன்
கூடிய கொங்கை நீடிய அன்புகூரவும் இன்று வரவேணும்
காலன் நடுங்க வேல் அது கொண்டு கானில் நடந்த முருகோனே
கான மடந்தை நாணம் ஒழிந்து காதல் இரங்கு குமரேசா
சோலை வளைந்து சாலி வளைந்து சூழும் இலஞ்சி மகிழ்வோனே
சூரியன் அஞ்ச வாரியில் வந்த சூரனை வென்ற பெருமாளே

மேல்

#975
ஏடு கொத்து ஆர் அலர் வார் குழல் ஆட பட்டு ஆடை நிலாவிய ஏதம் பொன் தோள் மிசை மூடிய கர மாதர்
ஏதத்தை பேசு பணாளிகள் வீசத்துக்கு ஆசை கொடாடிகள் ஏறிட்டு இட்டு ஏணியை வீழ் விடு முழு மாயர்
மாடு ஒக்க கூடிய காமுகர் மூழ்குற்று காயமொடே வரு வாயு புல் சூலை வியாதிகள் இவை மேலாய்
மாசுற்று பாசம் விடா சமனூர் புக்கு பாழ் நரகே விழ மாயத்தை சீவி உன் ஆதரவு அருள்வாயே
தாடுட்டுட் டூடுடு டீடிமி டூடுட்டுட் டூடுடு டாடமி தானத்த தானதனா என வெகு பேரி
தானொத்த பூத பசாசுகள் வாய்விட்டு சூரர்கள் சேனைகள் சாக பொன் தோகையில் ஏறிய சதிரோனே
கூடல் கச்சாலை சிராமலை காவை பொன் காழி வெளூர் திகழ் கோடை கச்சூர் கருவூரிலும் உயர்வான
கோதில் பத்தாரொடு மாதவ சீல சித்தாதியர் சூழ் தரு கோல குற்றாலம் உலாவிய பெருமாளே

மேல்

#976
வேதத்தில் கேள்வி இலாதது போதத்தில் காணவொணாதது வீசத்தில் தூரம் இலாதது கதியாளர்
வீதித்து தேட அரிதானது ஆதித்தர் காயவொணாதது வேகத்து தீயில் வெகாதது சுடர் கானம்
வாதத்துக்கே அவியாதது காதத்தில் பூ இயலானது வாசத்தில் பேரொளி ஆனது மதம் ஊறும்
மாயத்தில் காய மதாசல தீதர்க்கு தூரம் அது ஆகிய வாழ்வை சற்காரம் அதா இனி அருள்வாயே
காதத்தில் காயம் அதாகும் மதீ தித்தி தீது இது தீது என காதல் பட்டு ஓதியும் மேவிடு கதி காணார்
காணப்பட்டே கொடு நோய் கொடு வாதைப்பட்டே மதி தீது அகலாமல் கெட்டே தடுமாறிட அடுவோனே
கோதை பித்தாய் ஒரு வேடுவர் ரூபை பெற்றே வன வேடுவர் கூடத்துக்கே குடியாய் வரும் முருகோனே
கோது இல் பத்தாரொடு மாதவ சீல சித்து ஆதியர் சூழ் தரு கோல குற்றாலம் உலாவிய பெருமாளே

மேல்

#977
முத்து ஓலைதனை கிழித்து அயிலை போர் இகலி சிவத்து முக தாமரையில் செருக்கிடும் விழி மானார்
முற்றாது இளகி பணைத்து அணி கச்சு ஆரம் அறுத்த நித்தில முத்தாரம் அழுத்து உகிர் குறி அதனாலே
வித்தார கவி திறத்தினர் பட்டு ஓலை நிகர்த்து இணைத்து எழு வெற்பான தனத்தினில் நித்தலும் உழல்வேனோ
மெய் தேவர் துதித்திட தரு பொற்பு ஆர் கமல பதத்தினை மெய்ப்பாக வழுத்திட க்ருபைபுரிவாயே
பத்தான முடி தலை குவடுற்று ஆட அரக்கருக்கு இறை பட்டாவி விட செயித்தவன் மருகோனே
பற்பாசன் மிகை சிரத்தை அறுத்து ஆதவனை சினத்து உறு பல் போகவும் உடைத்த தற்பரன் மகிழ்வோனே
கொத்து ஆர் கதலி பழ குலை வித்தார வருக்கையின் சுளை கொத்தோடு உதிர கதித்து எழு கயல் ஆரம்
கொட்டா சுழியில் கொழித்து எறி சிற்றூர்தனில் களித்திடு குற்றாலர் இடத்தில் உற்று அருள் பெருமாளே

மேல்

#978
வாள் பட சேனை பட ஓட்டி ஒட்டாரை இறுமாப்பு உடை தாள் அரசர் பெருவாழ்வும்
மாத்திரை போதில் இடு காட்டினில் போம் என இல்வாழ்க்கை விட்டு ஏறும் அடியவர் போல
கோள் பட பாத மலர் பார்த்து இளைப்பாற வினை கோத்த மெய் கோலமுடன் வெகு ரூப
கோப்பு உடைத்தாகி அலமாப்பினில் பாரி வரும் கூத்தினை பூரை இட அமையாதோ
தாள் பட கோப விஷ பாப்பினில் பாலன் மிசை சாய் தொடுப்பு அரவு நீள் கழல் தாவி
சாற்றும் அ கோர உரு கூற்று உதைத்தார் மவுலி தாழ்க வஜ்ராயுதனும் இமையோரும்
ஆள் பட சாம பரமேட்டியை காவலிடும் ஆய்க்குடி காவல உததி மீதே
ஆர்க்கும் அ தானவரை வேல் கரத்தால் வரையை ஆர்ப்பு எழ சாட வல பெருமாளே

மேல்

#979
கருப்பு சாபன் அனைய இளைஞர்கள் ப்ரமிக்க காதல் உலவு நெடுகிய
கடைக்கண் பார்வை இனிய வனிதையர் தன பாரம்
களிற்று கோடு கலசம் மலி நவ மணி செப்பு ஓடை வனச நறு மலர்
கனத்து பாளை முறிய வரு நிகர் இளநீர் போல்
பொருப்பை சாடும் வலியை உடையன அற சற்றான இடையை நலிவன
புது கச்சு ஆர வடமொடு அடர்வன என நாளும்
புகழ்ச்சி பாடல் அடிமை அவரவர் ப்ரயப்பட்டு ஆள உரை செய் இழி தொழில்
பொகட்டு எப்போது சரியை கிரியை செய்து உயிர் வாழ்வேன்
இருட்டு பாரில் மறலி தனது உடல் பதைக்க கால் கொடு உதை செய்து அவன் விழ
எயில் துப்பு ஓவி அமரர் உடல் அவர் தலை மாலை
எலுப்பு கோவை அணியும் அவர் மிக அதிர்த்து காளி வெருவ நொடியினில்
எதிர்த்திட்டு ஆடும் வயிர பயிரவர் நவநீத
திருட்டு பாணி இடப முதுகு இடை சமுக்கு இட்டு ஏறி அதிர வருபவர்
செலுத்து பூதம் அலகை இலகிய படையாளி
செடைக்குள் பூளை மதியம் இதழி வெள் எருக்கு சூடி குமர வயலியல்
திருப்புத்தூரில் மருவி உறைதரு பெருமாளே

மேல்

#980
வேலை தோற்க விழித்து காதினில் ஓலை காட்டி நகைத்து போத ஒரு
வீடு காட்டி உடுத்த போர்வையை நெகிழ்வாகி
மேனி காட்டி வளைத்து போர் முலை யானை காட்டி மறைத்து தோதக
வீறு காட்டி எதிர்த்து போர் எதிர்வருவார் மேல்
காலம் ஏற்க உழப்பி கூறிய காசு கேட்டு அது கை பற்றா இடை
காதி ஓட்டி வருத்தப்பாடுடன் வருவார் போல்
காதல் போற்று மலர் பொன் பாயலின் மீது அணாப்பும் அசட்டு சூளைகள்
காம நோய் படு சித்த தீ வினை ஒழியேனோ
ஆல கோடு மிடற்று சோதி கபாலி பார்ப்பதி பக்ஷத்தால் நடமாடி
தாத்திரி பட்சித்து ஆவென உமிழ் வாளி
ஆடல் கோத்த சிலை கை சேவகன் ஓடை பூத்தள கள் சானவி
ஆறு தேக்கிய கற்றை சேகர சடதாரி
சீலம் மா பதி மத்தம் பாரிட சேனை போற்றிடும் அப்பர்க்கு ஓதிய
சேதனார்த்த பிரசித்திக்கே வரு முருகோனே
சேல் அறா கயல் தத்த சூழ் வயலூர வேல் கர விப்ரர்க்கு ஆதர
தீர தீர்த்த திருபுத்தூர் உறை பெருமாளே

மேல்

#981
ஊன் ஆரும் உள் பிணியும் ஆனா கவித்த உடல் ஊதாரி பட்டு ஒழிய உயிர் போனால்
ஊரார் குவித்து வர ஆவா என குறுகி ஓயா முழக்கம் எழ அழுது ஓய
நானாவித சிவிகை மேலே கிடத்தி அது நாறாது எடுத்து அடவி எரி ஊடே
நாணாமல் வைத்துவிட நீறு ஆம் என் இ பிறவி நாடாது எனக்கு உன் அருள்புரிவாயே
மால் நாகம் தத்தி முடி மீதே நிருத்தம் இடு மாயோனும் மட்டு ஒழுகு மலர் மீதே
வாழ்வாய் இருக்கும் ஒரு வேதாவும் எட்டிசையும் வானோரும் அட்ட குல கிரி யாவும்
ஆனா அரக்கருடன் வானார் பிழைக்க வரும் ஆலாலம் முற்ற அமுது அயில்வோன் முன்
ஆசார பத்தியுடன் ஞானாகமத்தை அருள் ஆடானை நித்தம் உறை பெருமாளே

மேல்

#982
கற்பக ஞான கடவுள் முன் அண்டத்தில் புத சேனைக்கு அதிபதி இன்ப
கள் கழை பாகு அப்பம் அமுது வெண் சர்க்கரை பால் தேன்
கட்டு இளநீர் முக்கனி பயறு அம் பொன் தொப்பையில் ஏறிட்டு அருளிய தந்தி
கட்டு இளையாய் பொன் பதம் அது இறைஞ்சி பரியாய
பொன் சிகியாய் கொத்து உருள் மணி தண்டை பொன் சரி நாத பரி புரம் என்று
பொற்புற ஓதி கசிவொடு சிந்தித்து இனிதே யான்
பொன் புகழ் பாடி சிவபதமும் பெற்று பொருள் ஞான பெரு வெளியும் பெற்று
புகல் ஆகத்து அமுதை உண்டிட்டு இடுவேனோ
தெற்பம் உள ஆக திரள் பரி உம்பல் குப்பைகள் ஆகத்து அசுரர் பிணம் திக்கு
எட்டையும் மூடி குருதிகள் மங்குல் செவை ஆகி
திக்கு கயம் ஆட சிலசில பம்பை தத்தன தான தடுடுடு என்க
செப்பு அறை தாளம் தகுதொகு என்க சில பேரி
உற்பனமாக தடி படு சம்பத்து அற்புத மாகத்து அமரர் புரம் பெற்று
உள் செல்வம் மேவி கன மலர் சிந்த தொடு வேலா
உள் பொருள் ஞான குறமகள் உம்பல் சித்திரை நீட பரி மயில் முன் பெற்று
உத்தரகோச தலம் உறை கந்த பெருமாளே

மேல்

#983
வால வயதாகி அழகாகி மதனாகி பணி வாணிபமோடு ஆடி மருளாடி விளையாடி விழல்
வாழ்வு சதமாகி வலுவாகி மட கூடமொடு பொருள் தேடி
வாசனை புழுகு ஏடு மலரோடு மனமாகி மகிழ் வாசனைகள் ஆதி இடல் ஆகி மயலாகி விலைமாதர்களை
மேவி அவர் ஆசைதனில் சுழல சில நாள் போய்
தோல் திரைகள் ஆகி நரையாகி குருடாகி இரு கால்கள் தடுமாறி செவி மாறி பசு பாச பதி
சூழ் கதிகள் மாறி சுகம் மாறி தடியோடு திரியுறு நாளில்
சூலை சொறி ஈளை வலி வாதமொடு நீரிழிவு சோகை களமாலை சுரமோடு பிணி தூறிருமல்
சூழலுற மூல கசுமாலம் என நாறி உடல் எழுவேனோ
நாலுமுகன் ஆதி அரி ஓம் என ஆதாரம் உரையாத பிரமாவை விழ மோதி பொருள் ஓதுக என
நாலு சிரமோடு சிகை தூளிபட தாளம் இடு இளையோனே
நாறு இதழி வேணி சிவ ரூபக கலியாணி முதல் ஈண மகவானை மகிழ் தோழ வனம் மீது செறி
ஞான குற மாதை தினை காவில் புகழ் மயில் வீரா
ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம் வாலியொடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும்
ஓத கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக
ஓகை தழல் வாளிவிடு மூரி தநு நேமி வளை பாணி திரு மார்பன் அரி கேசன் மருகா எனவெ
ஓத மறை ராமெசுர மேவும் குமரா அமரர் பெருமாளே

மேல்

#984
வானோர் வழுத்து உனது பாதார பத்ம மலர் மீதே பணிக்கும் வகை அறியாதே
மானார் வலை கண் அதிலே தூளி மெத்தையினில் ஊடே அணைத்து உதவும் அதனாலே
தேனோ கருப்பில் எழு பாகோ இதற்கு இணைகள் ஏதோ என கலவி பல கோடி
தீரா மயக்கினோடு நாகா படத்தில் எழு சேறு ஆடல் பெற்ற துயர் ஒழியேனோ
மேல் நாடு பெற்று வளர் சூராதிபற்கு எதிர் ஊடே ஏகி நிற்கும் இரு கழலோனே
மேகார உக்ர பரி தான் ஏறி வெற்றி புனை வீரா குற சிறுமி மணவாளா
ஞானாபரற்கு இனிய வேதாகம பொருளை நாணாது உரைக்கும் ஒரு பெரியோனே
நாராயணற்கு மருகா வீறுபெற்று இலகு ராமேசுரத்தில் உறை பெருமாளே

மேல்

#985
அமல கமல உரு சங்கம் தொனித்த மறை அரிய பரம வெளி எங்கும் பொலித்த செயல்
அளவும் அசலம் அது கண்டு அங்கு ஒருத்தரு உளவு அறியாதது
அகர முதல் உரு கொள் ஐம்பந்தொரு அக்ஷரமொடு அகில புவன நதி அண்டங்களுக்கு முதல்
அருண கிரண ஒளி எங்கெங்கும் உற்று முதல் நடுவான
கமல துரியம் அதில் இந்தும் கதிர் பரவு கனக நிறமுடைய பண்பு அம் படி கதவம்
ககன சுழி முனையில் அஞ்சும் களித்த அமுத சிவயோகம்
கருணையுடன் அறிவு விதம் கொண்டிட கவுரி குமர குமரகுரு என்றுஎன்று உரைப்ப முது
கனிவு வர இளமை தந்து உன் பதத்தில் எனை அருள்வாயே
திமிலை பலமுருடு திந்திம் திமித்திமித டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட
திகுட திகுடதிகு திந்திம் திகுர்த்திகுர்த திகுதீதோ
செகண செகணசெக செஞ்செம் செகக்கண என அகில முரகன் முடி அண்டம் பிளக்க வெகு
திமிர்த குல விருது சங்கம் தொனித்து அசுரர் களம் மீதே
அமரர் குழுமி மலர் கொண்டு அங்கு இறைத்து அருள அரிய குருகு கொடி எங்கும் தழைத்து அருள
அரியொடு அயன் முனிவர் அண்டம் பிழைத்து அருள விடும் வேலா
அரியன் மகள் தனமொடு எங்கும் புதைக்க முக அழகு புயமொடு அணை இன்பம் களித்து மகிழ்
அரிய மயில் அயில் கொடு இந்தம்பலத்தில் மகிழ் பெருமாளே

மேல்

#986
விரகு அற நோக்கியும் உருகியும் வாழ்த்தியும் விழி புனல் தேக்கிட அன்பு மேன்மேல்
மிகவும் இராப்பகல் பிறிது பராக்கு அற விழைவு குரா புனையும் குமார
முருக ஷடாக்ஷர சரவண கார்த்திகை முலை நுகர் பார்த்திப என்று பாடி
மொழி குழறா தொழுது அழுதழுது ஆட்பட முழுதும் அலா பொருள் தந்திடாயோ
பர கதி காட்டிய விரக சிலோச்சய பரம பராக்ரம சம்பராரி
பட விழியால் பொரு பசு பதி போற்றிய பகவதி பார்ப்பதி தந்த வாழ்வே
இரை கடல் தீ பட நிசிசரர் கூப்பிட எழு கிரி ஆர்ப்பு எழ வென்ற வேலா
இமையவர் நாட்டினில் நிறை குடி ஏற்றிய எழுகரை நாட்டவர் தம்பிரானே

மேல்

#987
வழக்கு சொல் பயில்வால் சளப்படு மருத்து பச்சிலை தீற்றும் மட்டைகள்
வளைத்து சித்தச சாத்திர களவு அதனாலே
மனத்து கற்களை நீற்று உருக்கிகள் சுகித்து தெட்டிகள் ஊர் துதிப்பரை
மருட்டி குத்திர வார்த்தை செப்பிகள் மதியாதே
கழுத்தை கட்டி அணாப்பி நட்பொடு சிரித்து பல் கறை காட்டி கைப்பொருள்
கழற்றி கல் புகர் மாற்று உரைப்பு அது கரிசு ஆணி
கணக்கிட்டு பொழுது ஏற்றி வைத்து ஒரு பிணக்கு இட்டு சிலுகு ஆக்கு பட்டிகள்
கலைக்குள் புக்கிடு பாழ்த்த புத்தியை ஒழியேனோ
அழல் கண் தப்பறை மோட்டு அரக்கரை நெருக்கி பொட்டு எழ நூக்கி அக்கணம்
அழித்திட்டு குறவாட்டி பொன் தன கிரி தோய்வாய்
அகப்பட்டு தமிழ் தேர்த்த வித்தகர் சமத்து கட்டியில் ஆத்தம் உற்றவன்
அலைக்குள் கண் செவி மேல் படுக்கையில் உறை மாயன்
உழை கண் பொன் கொடி மா குல குயில் விருப்புற்று புணர் தோள் க்ருபை கடல்
உறிக்குள் கைத்தல நீட்டும் அச்சுதன் மருகோனே
உரைக்க செட்டியனாய் பன் முத்தமிழ் மதித்திட்டு செறி நால் கவிப்பணர்
ஒடுக்கத்துச்செறிவாய் தலத்து உறை பெருமாளே

மேல்

#988
ஆகத்தே தப்பாமல் சேர் இக்கு ஆர்கை தேறல் கணையாலே
ஆலம் பாலை போல கோலத்து ஆய காயம் பிறையாலே
போகத்து ஏசற்றே தன் பாயல் பூவில் தீயில் கருகாதே
போத காதல் போக தாளை பூரித்து ஆர புணராயே
தோகைக்கே உற்று ஏறி தோயம் சூர் கெட்டு ஓட பொரும் வேலா
சோதி காலை போத கூவ தூவல் சேவல் கொடியோனே
பாகு ஒத்த சொல் பாகத்தாளை பாரித்து ஆர் நல் குமரேசா
பாரில் காமத்தூரில் சீல பால தேவ பெருமாளே

மேல்

#989
மின்னார் பயந்த மைந்தர் தன் நாடு இனம் குவிந்து வெவ்வேறு உழன்றுஉழன்று மொழி கூறி
விண் மேல் நமன் கரந்து மண் மேல் உடம்பு ஒருங்கு அ மெல் நாள் அறிந்து உயிர் போ முன்
பொன் ஆர் சதங்கை தண்டை முந்நூல் கடம்பு அணிந்து பொய்யார் மனங்கள் தங்கும் அது போல
பொல்லேன் இறைஞ்சி இரந்த சொல் நீ தெரிந்து அழங்கு புல் நாய் உளும் கவின்று புகுவாயே
பன்னாள் இறைஞ்சும் அன்பர் பொன் நாடு உற அங்கை அந்து பன்னாக அணைந்து சங்கம் உற வாயில்
பன்னூல் முழங்கல் என்று விண்ணோர் மயங்க நின்று பண் ஊதுகின்ற கொண்டல் மருகோனே
முன்னாய் மதன் கரும்பு வில் நேர் தடம் தெரிந்து முன் ஓர் பொருகை என்று முனை ஆட
மொய் வார் நிமிர்ந்த கொங்கை மெய் மாதர் வந்து இறைஞ்சு முள்வாய் விளங்க நின்ற பெருமாளே

மேல்

#990
ஆலையான மொழிக்கும் ஆளை ஊடு கிழிக்கும் ஆலகால விழிக்கும் உறு காதல்
ஆசை மாதர் அழைக்கும் ஓசையான தொனிக்கும் ஆர பார முலைக்கும் அழகான
ஓலை மேவு குழைக்கும் ஓடை யானை நடைக்கும் ஓரை சாயும் இடைக்கும் மயல் மேவி
ஊறு பாவு அ உறுப்பில் ஊறல் தேறும் கரிப்பில் ஊர ஓடு விருப்பில் உழல்வேனோ
வேலையாக வளை கை வேடர் பாவைதனக்கு மீறு காதல் அளிக்கும் முகமாய
மேவு வேடை அளித்து நீடு கோலம் அளித்து மீள வாய்மை தெளித்தும் இதண் மீது
மாலை ஓதி முடித்து மாது தாள்கள் பிடித்து வாயில் ஊறல் குடித்து மயல் தீர
வாகு தோளில் அணைத்தும் மாகம் ஆர் பொழில் உற்ற வாகை மா நகர் பற்று பெருமாளே

மேல்

#991
திருகு செறிந்த குழலை வகிர்ந்து முடி மலர் கொண்டு ஒர் அழகாக
செய வரு துங்க முகமும் விளங்க முலைகள் குலுங்க வரு மோக
அரிவையர் தங்கள் வலையில் விழுந்து அறிவு மெலிந்து தளராதே
அமரர் மகிழ்ந்து தொழுது வணங்கு உன் அடி இணை அன்பொடு அருள்வாயே
வரையை முனிந்து விழவெ கடிந்து வடி வேல் எறிந்த திறலோனே
மதுரித செம் சொல் குற மட மங்கை நகில் அது பொங்க வரும் வேலா
விரை செறி கொன்றை அறுகு புனைந்த விடையரர் தந்த முருகோனே
விரை மிகு சந்து பொழில்கள் துலங்கு விசுவை விளங்கு பெருமாளே

மேல்

#992
போத நிர் குண போதா நமோ நம நாத நிஷ்கள நாதா நமோ நம பூரண கலை சாரா நமோ நம பஞ்ச பாண
பூபன் மைத்துன பூபா நமோ நம நீப புஷ்பக தாளா நமோ நம போக சொர்க்க பூபா நமோ நம சங்கம் ஏறும்
மா தமிழ் த்ரய சேயே நமோ நம வேதன த்ரய வேளே நமோ நம வாழ் ஜக த்ரய வாழ்வே நமோ நம என்று பாத
வாரிஜத்தில் விழாதே மகோததி ஏழ் பிறப்பினில் மூழ்கா மனோபவ மாயையில் சுழியூடே விடாது கலங்கலாமோ
கீத நிர்த்த வெதாளாடவீ நடநாத புத்திர பாகீரதீ கிருபா சமுத்திர ஜீமூத வாகனர் தந்தி பாகா
கேகய பிரதாபா முலாதிப மாலிகை குமரேசா விசாக க்ருபாலு வித்ரும ஆகாரா ஷடானன புண்டரீகா
வேத வித்தக வேதா விநோத கிராத லக்ஷ்மி கிரீடா மகாசல வீர விக்ரம பாரா அவதான அகண்ட சூர
வீர நிட்டுர வீராதி காரண தீர நிர்ப்பய தீரா அபிராம விநாயக ப்ரிய வேலாயுதா சுரர் தம்பிரானே

மேல்

#993
ஓது முத்தமிழ் தேரா வ்ராதவனை வேதனைப்படு காமா விகாரனை
ஊனமுற்று உழல் ஆபாச ஈனனை அந்தர்யாமி
யோகம் அற்று உழல் ஆசா பசாசனை மோகம் முற்றிய மோடாதி மோடனை
ஊதிய தவம் நாடாத கேடனை அன்றில் ஆதி
பாதக கொலையே சூழ் கபாடனை நீதி சற்றும் இலா கீத நாடனை
பாவியார்க்குள் எலாம் மா துரோகனை மண்ணின் மீதில்
பாடுபட்டு அலை மா கோப லோபனை வீடுபட்டு அழி கோமாள வீணனை
பாச சிக்கினில் வாழ்வேனை ஆளுவது எந்த நாளோ
ஆதி சற்குண சீலா நமோ நம ஆடகம் திரிசூலா நமோ நம
ஆதரித்து அருள் பாலா நமோ நம உந்தி ஆமை
ஆனவர்க்கு இனியானே நமோ நம ஞான முத்தமிழ் தேனே நமோ நம
ஆரணற்கு அரியோனே நமோ நம மன்றுள் ஆடும்
தோதி தித்தமி தீதா நமோ நம வேத சித்திர ரூபா நமோ நம
சோபம் அற்றவர் சாமீ நமோ நம தன்ம ராச
தூதனை துகை பாதா நமோ நம நாத சற்குருநாதா நமோ நம
ஜோதியில் ஜக ஜோதீ மஹா தெவர் தம்பிரானே

மேல்

#994
வேத வித்தகா சாமீ நமோ நம வேல் மிகுத்த மா சூரா நமோ நம
வீம சக்ர யூகாளா நமோ நம விந்து நாத
வீர பத்ம சீர் பாதா நமோ நம நீல மிக்க கூதாளா நமோ நம
மேகம் ஒத்த மாயூரா நமோ நம விண்டிடாத
போத மொத்த பேர் போதா நமோ நம பூதம் மற்றுமே ஆனாய் நமோ நம
பூரணத்துள்ளே வாழ்வாய் நமோ நம துங்க மேவும்
பூதரத்து எலாம் வாழ்வாய் நமோ நம ஆறு இரட்டி நீள் தோளா நமோ நம
பூஷணத்து மா மார்பா நமோ நம புண்டரீக
மீது இருக்கு நா மாதோடு சேய் இதழ் மீது இருக்கும் ஏர் ஆர் மா புலோமசை
வீர மிக்க ஏழ் பேர் மாதர் நீடு இனம் நின்று நாளும்
வேத வித்தகீ வீமா விராகிணி வீறு மிக்க மா வீணா கரே மக
மேரு உற்று வாழ் சீரே சிவாதரெ அங்கராகீ
ஆதி சத்தி சாமா தேவி பார்வதி நீலி துத்தி ஆர் நீள் நாக பூஷணி
ஆயி நித்தியே கோடீர மாதவி என்று தாழும்
ஆர்யை பெற்ற சீராளா நமோ நம சூரை அட்டு நீள் பேரா நமோ நம
ஆரணத்தினார் வாழ்வே நமோ நம தம்பிரானே

மேல்

#995
ஆவி காப்பது மேல் பதம் ஆதலால் புருடார்த்தம் இதாம் எனா பரமார்த்தம் அது உணராதே
ஆனை மேல் பரி மேல் சேனை போற்றிட வீட்டொடு அநேக நாட்டொடு காட்டொடு தடுமாறி
பூவைமார்க்கு உருகா புதிதான கூத்தொடு பாட்டொடு பூவின் நாற்றம் அறா தன கிரி தோயும்
போக போக்ய கலாத்தொடு வாழ் பராக்கொடு இராப்பகல் போது போக்கி என் ஆக்கையை விடலாமோ
தேவி பார்ப்பதி சேர் பர பாவனார்க்கு ஒரு சாக்ர அதீத தீக்ஷை பரீக்ஷைகள் அற ஓதும்
தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷணம் மோக்ஷ தியாக ரா திகழ் கார்த்திகை பெறு வாழ்வே
மேவினார்க்கு அருள் தேக்க துவாதச அக்ஷ ஷடாக்ஷர மேரு வீழ்த்த பராக்ரம வடி வேலா
வீர ராக்கதர் ஆர்ப்பு எழ வேத தாக்ஷிகள் நா கெட வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே

மேல்

#996
ஏகமாய் பலவாய் சிவபோகமாய் தெளிவாய் சிவம் ஈதே எனா குரு வார்த்தையை உணராதே
ஏழு பார்க்கும் வியாக்கிரன் யானே எனா பரி தேர் கரி ஏறும் மாப்பு இறுமாப்புடன் அரசாகி
தோகைமார்க்கு ஒருகால் தொலையாத வேட்கையினால் கெடு சோர்வினால் கொடிது ஆக்கையை இழவா முன்
சோதி காட்ட வர அச்சுதநார்க்கு அருள் போற்றிய தூரிதா பரமார்த்திகம் அது அருள்வாயே
நாக மேல் துயில்வார்க்கு அயனான பேர்க்கு அரியார்க்கு ஒரு ஞான வார்த்தையினால் குரு பரன் ஆய
நாத நாட்டமுறா பலகாலும் வேட்கையினால் புகல் நாவலோர்க்கு அருளால் பதம் அருள் வாழ்வே
வேக மேல் கொள் அரா புடை தோகை மேல் கொடு வேல் கொடு வீர மா குலையா குல வரை சாய
மேலை நாட்டவர் பூ கொடு வேல போற்றி எனா தொழ வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே

மேல்

#997
தோடும் மென் குழையூடே போரிடு வாள் நெடும் கயல் போலே ஆருயிர்
சூறை கொண்டிடு வேல் போலே தொடர் விழி மானார்
சூதகம்தனிலே மாலாய் அவர் ஓதும் அன்று அறியாதே ஊழ்வினை
சூழும் வெம் துயராலே தான் உயிர் சுழலாதே
ஆடு வெம் பண காகோதாசனம் ஊறு கண்டிட மேல் வீழ் தோகையில்
ஆரும் வண் குமரேசா ஆறு இரு புய வேளே
ஆரு நின்று அருளாலே தாள் தொழு ஆண்மை தந்து அருள் வாழ்வே தாழ்வு அற
ஆதி தந்தவ நாயேன் வாழ்வுற அருள்வாயே
ஓடு வெம் கதிரோடே சோமனும் ஊறி அண்டமும் லோகா லோகமும்
ஊரும் அந்தரம் நானா தேவரும் அடி பேண
ஊழிடு அம்புயன் வேலாவாலயம் ஊடு தங்கிய மாலார் ஆதரவு
ஓத வெண் திரை சூர் மார்பு ஊடுற விடும் வேலா
வேடு கொண்டுள வேடா வேடைய வேழ வெம் புலி போலே வேடர்கள்
மேவு திண் புனம் மீதே மாதோடு மிக மாலாய்
மேகம் மென் குழலாய் நீ கேள் இனி வேறு தஞ்சமும் நீயேயாம் என
வேளை கொண்ட பிரானே வானவர் பெருமாளே

மேல்

#998
நாலிரண்டு இதழாலே கோலிய ஞால் அம் முண்டகம் மேலே தான் இள
ஞாயிறு என்று உறு கோலா கலனும் அதின் மேலே
ஞாலம் உண்ட பிராணாதாரனும் யோக மந்திர மூலாதாரனு
நாடி நின்ற ப்ரபாவாகாரனு நடுவாக
மேல் இருந்த கிரீடா பீடமு நூல் அறிந்த மணி மா மாடமும்
மே தகு ப்ரபை கோடா கோடியும் இடமாக
வீசி நின்று உள தூபா தீப விசால மண்டபம் மீதே ஏறிய
வீர பண்டித வீராசாரிய வினை தீராய்
ஆல கந்தரி மோடா மோடி குமாரி பிங்கலை நானா தேசி அமோகி
மங்கலை லோகாலோகி எவ்வுயிர் பாலும்
ஆன சம்ப்ரமி மாதா மாதவி ஆதி அம்பிகை ஞாதா ஆனவர்
ஆட மன்றினில் ஆடா நாடிய அபிராமி
கால சங்கரி சீலா சீலி த்ரிசூலி மந்த்ர சபாஷா பாஷிணி
காள கண்டி கபாலி மாலினி கலியாணி
காம தந்திர லீலா லோகினி வாம தந்திர நூல் ஆய்வாள் சிவகாம
சுந்தரி வாழ்வே தேவர்கள் பெருமாளே

மேல்

#999
போதில் இருந்து விடா சதுர் வேதம் மொழிந்தவனால் புள்ளின் ஆகம் உகந்தவனால் தெரி அரிதான
போது உயர் செம் தழலா பெரு வானம் நிறைந்த விடா புகழாளன் அரும் சிவ கீர்த்தியன் நெறி காண
ஆதரவு இன்ப அருள் மா குருநாதன் எனும்படி போற்றிட ஆன பதங்களை நா கருதிடவே என்
ஆசை எண்ணுபடி மேல் கவி பாடும் இதம் பல பார்த்து அடியேனும் அறிந்து உனை ஏத்துவது ஒரு நாளே
காது அடரும்படி போய் பல பூசலிடும் கயலால் கனி வாய் இதழின் சுவையால் பயில் குற மாதின்
கார் அடரும் குழலால் கிரியான தனங்களினால் கலை மேவும் மருங்கு அதனால் செறி குழை ஓலை
சாதனம் என்று உரையா பரிதாபம் எனும்படி வாய் தடுமாறி மனம் தளரா தனி திரிவோனே
சாகரம் அன்று எரியா கொடு சூரர் உகும்படியா திணி வேலை உரம் பெற ஓட்டிய பெருமாளே

மேல்

#1000
வேடர் செழும் தினை காத்து இதண் மீதில் இருந்த பிராட்டி லோசன அம்புகளால் செயல் தடுமாறி
மேனி தளர்ந்து உருகா பரிதாபமுடன் புனம் மேல் திரு வேளை புகுந்த பராக்ரமம் அது பாடி
நாடு அறியும்படி கூப்பிடு நாவலர்தம் களை ஆர் பதினாலு உலகங்களும் ஏத்திய இரு தாளில்
நாறு கடம்பு அணியா பரிவோடு புரந்த பராக்ரம நாட அரும் தவம் வாய்ப்பதும் ஒரு நாளே
ஆடகம் மந்தர நீர்க்கு அசையாமல் உரம் பெற நாட்டி ஒரு ஆயிரம் வெம் பகுவாய் பணி கயிறாக
ஆழி கடைந்து அமுது ஆக்கி அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் ஆயனும் அன்று எயில் தீப்பட அதி பார
வாடை நெடும் கிரி கோட்டிய வீரனும் எம் பரம் மாற்றிய வாழ்வு என வஞ்சக ராக்ஷதர் குலம் மாள
வாசவன் சிறை மீட்டி அவன் ஊரும் அடங்கலும் மீட்டவன் வான் உலகு குடி ஏற்றிய பெருமாளே

மேல்