தை – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

தை (4)

கொன் தை கணை ஒப்ப அந்த கயலில் கொஞ்சு கிளி உற்று உறவான – திருப்:51/2
பித்தத்தை பற்றி தை தற்று உற்று ஒத்து கித்தி பிணி மாதர் – திருப்:332/3
தை சரசமோடு உறவெ ஆடி அகமே கொடுபொய் எத்தி அணை மீதில் இது காலம் என் நிர் போவது என – திருப்:503/3
நீல குழலார் முத்து அணி வாய் சர்க்கரையார் தை பிறை நீள் சசியார் பொட்டு அணி நுதல் மாதர் – திருப்:507/1
மேல்


தைக்க (6)

அதி மதம் கக்க அப்பக்கம் உக குஞ்சரி தனம் தைக்க சிக்கென நெக்கு அங்கு – திருப்:309/1
அமுத நிலையில் விரல் உகி ரேகை தைக்க மணி போல் விளங்க – திருப்:398/2
கன செப்பு நளினத்து முகை வெற்பை நிகர் செப்பு கதிர் முத்து முலை தைக்க அகலாதே – திருப்:833/2
தழுவிய மகளிர்தம் முகிழ் முலை உரம் மிசை தைக்க சர்க்கரை கைக்கப்பட்டு அன தொண்டை ஊறல் – திருப்:862/2
தைக்க கழுத்தோடு கை ஒக்க பிணித்து இறுகி அன்புகூர – திருப்:917/6
அகலத்தில் தைக்க பரிமள அமளிக்குள் சிக்கி சிறுகு என – திருப்:1171/5
மேல்


தைக்கும் (2)

தைக்கும் மனத்த சமர்த்த அரக்கர் தலை குலை கொத்திய வேளே – திருப்:287/8
பாண மலர் அது தைக்கும் படியாலே பாவி இள மதி கக்கும் கனலாலே – திருப்:432/1
மேல்


தைச்சிட்டு (1)

கச்சிட்ட அணி முலை தைச்சிட்டு உருவிய மச்ச கொடி மதன் மலராலும் – திருப்:337/1
மேல்


தைத்த (1)

செத்திட அ சமனார் கடா பட அற்று தைத்த சுவாமியார் இட – திருப்:504/13
மேல்


தைத்தியருக்கு (1)

திகை எட்டு கடல் வற்றி தி தர உக்க கிரி எட்டு தைத்தியருக்கு
சிரம் இற்று உட்க சுரர் பொன் பூ சொரிய கை தொட்டிடும் வேலா – திருப்:154/17,18
மேல்


தைத்து (4)

முகிழ் நுதி தைத்து துயர்ந்த மங்கையர் அங்கம் மீதே – திருப்:184/2
அருக்கியத்து அனை எனும் அவசம்பட்டு அறுத்து ஒதுக்கிய நக நுதியும் தைத்து
அற பிதற்றிட அமளி கலங்க தடுமாறி – திருப்:1138/5,6
சினம் மிகுத்த திண்ணர் தனி வளைத்து வெய்ய சிலுகு தைத்து வன்மை சிதையா முன் – திருப்:1253/2
பற்ற நெட்டை படைத்து உள் து இருள் தைத்து அயிர்ப்பு அத்தை முட்டி படுத்து அயில் மாதர் – திருப்:1260/1
மேல்


தையல் (1)

ஞான வெற்பு உகந்து ஆடும் அத்தர் தையல் நாயகிக்கு நன் பாகர் அக்கு அணியும் – திருப்:781/15
மேல்


தையலை (1)

மெய்ய பொழில் நீடு தையலை மு நாலு செய்ய புய மீது உற்று அணைவோனே – திருப்:531/5

மேல்