திருப்புகழ் இரண்டாம் தொகுதி (351 – 700)

தேவையான பாடல்
எண் மீது சொடுக்குக
351 || 401 || 501 || 601

352 || 402 || 502 || 602

353 || 403 || 503 || 603

354 || 404 || 504 || 604

355 || 405 || 505 || 605

356 || 406 || 506 || 606

357 || 407 || 507 || 607

358 || 408 || 508 || 608

359 || 409 || 509 || 609

360 || 410 || 510 || 610

361 || 411 || 511 || 611

362 || 412 || 512 || 612

363 || 413 || 513 || 613

364 || 414 || 514 || 614

365 || 415 || 515 || 615

366 || 416 || 516 || 616

367 || 417 || 517 || 617

368 || 418 || 518 || 618

369 || 419 || 519 || 619

370 || 420 || 520 || 620
371 || 421 || 521 || 621

372 || 422 || 522 || 622

373 || 423 || 523 || 623

374 || 424 || 524 || 624

375 || 425 || 525 || 625

376 || 426 || 526 || 626

377 || 427 || 527 || 627

378 || 428 || 528 || 628

379 || 429 || 529 || 629

380 || 430 || 530 || 630
381 || 431 || 531 || 631

382 || 432 || 532 || 632

383 || 433 || 533 || 633

384 || 434 || 534 || 634

385 || 435 || 535 || 635

386 || 436 || 536 || 636

387 || 437 || 537 || 637

388 || 438 || 538 || 638

389 || 439 || 539 || 639

390 || 440 || 540 || 640
391 || 441 || 541 || 641

392 || 442 || 542 || 642

393 || 443 || 543 || 643

394 || 444 || 544 || 644

395 || 445 || 545 || 645

396 || 446 || 546 || 646

397 || 447 || 547 || 647

398 || 448 || 548 || 648

399 || 449 || 549 || 649

400 || 450 || 550 || 650
—- || 451 || 551 || 651

—- || 452 || 552 || 652

—- || 453 || 553 || 653

—- || 454 || 554 || 654

—- || 455 || 555 || 655

—- || 456 || 556 || 656

—- || 457 || 557 || 657

—- || 458 || 558 || 658

—- || 459 || 559 || 659

—- || 460 || 560 || 660

—- || 461 || 561 || 661

—- || 462 || 562 || 662

—- || 463 || 563 || 663

—- || 464 || 564 || 664

—- || 465 || 565 || 665

—- || 466 || 566 || 666

—- || 467 || 567 || 667

—- || 468 || 568 || 668

—- || 469 || 569 || 669

—- || 470 || 570 || 670
—- || 471 || 571 || 671

—- || 472 || 572 || 672

—- || 473 || 573 || 673

—- || 474 || 574 || 674

—- || 475 || 575 || 675

—- || 476 || 576 || 676

—- || 477 || 577 || 677

—- || 478 || 578 || 678

—- || 479 || 579 || 679

—- || 480 || 580 || 680
—- || 481 || 581 || 681

—- || 482 || 582 || 682

—- || 483 || 583 || 683

—- || 484 || 584 || 684

—- || 485 || 585 || 685

—- || 486 || 586 || 686

—- || 487 || 587 || 687

—- || 488 || 588 || 688

—- || 489 || 589 || 689

—- || 490 || 590 || 690
—- || 491 || 591 || 691

—- || 492 || 592 || 692

—- || 493 || 593 || 693

—- || 494 || 594 || 694

—- || 495 || 595 || 695

—- || 496 || 596 || 696

—- || 497 || 597 || 697

—- || 498 || 598 || 698

—- || 499 || 599 || 699

—- || 500 || 600 || 700


#351
வாய்ந்து அப்பிடை நீடு குலாவிய நீந்தி பதுமாதியை மீதினில்
ஊர்ந்து உற்பல ஓடையில் நீடிய உகள் சேலை
வார்ந்து பகழீ எதிர் ஆகி மை கூர்ந்து பரியா வரி சேர் அவை
சேர்ந்து குழையோடு ஊசல் ஆடிய விழியாலே
சாய்ந்து பனை ஊண் அவர் ஆன பொல் ஆய்த்து பணினார் இரு தாளினில்
வீழ்ந்து இ படி மீதினிலே சிறிது அறிவாலே
சாந்து அப்பிய மா மலை நேர் முலை சேர்ந்து படி வீணிலே உயிர்
மாய்ந்து இப்படி போகினும் ஓர் மொழி மறவேனே
சார்ந்த பெரு நீர் வெள்ளமாகவெ பாய்ந்த அப்பொழுது ஆரும் இல்லாமலெ
காந்த பெரு நாதனும் ஆகிய மதராலே
தாந்தக்கிட தாகிட தாகிட தோந்திக்கிட தோதிமி தோதிமி
சேஞ்செக்கண சேகெண சேகெண என தாளம்
காந்த பதம் மாறி உலாவு உயர் ஆந்தன் குருநாதனும் ஆகியெ
போந்த பெருமான முருகா ஒரு பெரியோனே
காந்தக்கலும் ஊசியுமே என ஆய்ந்து தமிழ் ஓதிய சீர் பெறும்
காஞ்சி பதி மா நகர் மேவிய பெருமாளே

மேல்

#352
அறிவு இலா பித்தர் உன்றன் அடி தொழா கெட்ட வஞ்சர் அசடர் பேய் கத்தர் நன்றி அறியாத
அவலர் மேல் சொற்கள் கொண்டு கவிகளாக்கி புகழ்ந்து அவரை வாழ்த்தி திரிந்து பொருள் தேடி
சிறிது கூட்டி கொணர்ந்து தெரு உலாத்தி திரிந்து தெரிவைமார்க்கு சொரிந்து அவமே யான்
திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி பரிந்து தெளிய மோக்ஷத்தை என்று அருள்வாயே
இறைவர் மாற்று அற்ற செம்பொன் வடிவம் ஏற்று பிரிந்து இடபம் மேல் கச்சி வந்த உமையாள்தன்
இருளை நீக்க தவம் செய்து அருள நோக்கி குழைந்த இறைவர் கேட்க தகும் சொல் உடையோனே
குறவர் கூட்டத்தில் வந்து கிழவனாய் புக்கு நின்று குருவி ஓட்டி திரிந்த தவ மானை
குணமதாக்கி சிறந்த வடிவு காட்டி புணர்ந்த குமர கோட்டத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#353
அஞ்சன வேல் விழி இட்டு அழைக்கவும் இங்கிதமாக நகைத்து உருக்கவும்
அம் புயல் நேர் குழலை குலைக்கவும் நகரேகை
அங்கையின் மூலம் வெளிப்படுத்தவும் மந்தர மா முலை சற்று அசைக்கவும்
அம்பரம் வீணில் அவிழ்த்து உடுக்கவும் இளைஞோர்கள்
நெஞ்சினில் ஆசை நெருப்பு எழுப்பவும் வம்பு உரை கூறி வளைத்து இணைக்கவும்
மன்றிடை ஆடி மருள் கொடுக்கவும் எவரேனும்
நிந்தை செயாது பொருள் பறிக்கவும் இங்கு வலார்கள் கையில் பிணிப்பு அற
நின் பத சேவை அநுக்ரகிப்பதும் ஒரு நாளே
குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர்
கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன்
கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன் நக்கர் பெற்று அருள்
குன்றைய ரூபக கற்பக பிளை இளையோனே
துஞ்சல் இலாத சட அக்ஷர பிரபந்த சடானன துஷ்ட நிக்ரக
தும்பிகள் சூழ் அவையில் தமிழ் த்ரய பரிபாலா
துங்க கஜாரணியத்தில் உத்தம சம்பு தாடகம் அடுத்த தக்ஷிண
சுந்தரமாறன் மதில் புறத்து உறை பெருமாளே

மேல்

#354
அம்புலி நீரை சூடிய செம் சடை மீதில் தாவிய ஐந்தலை நாக பூஷணர் அருள் பாலா
அன்புடன் நாவில் பாவது சந்ததம் ஓதி பாதமும் அங்கையினால் நின் பூசையும் அணியாமல்
வம்பு அணி பார பூண் முலை வஞ்சியர் மாய சாயலில் வண்டு உழல் ஓதி தாழலில் இரு காதில்
மண்டிய நீல பார்வையில் வெண் துகில் ஆடை சேர்வையில் மங்கி எய் ஏழை பாவியென் அழிவேனோ
கொம்பு அனை நீல கோமளை அம்புய மாலை பூஷணி குண்டலி ஆல போசனி அபிராமி
கொஞ்சிய வான சானவி சங்கரி வேத பார்வதி குன்று அது வார் பொன் காரிகை அருள் பாலா
செம் பவளம் ஆய கூர் இதழ் மின் குற மானை பூண் முலை திண் புயம் ஆர பூரணம் அருள்வோனே
செந்தமிழ் பாண பாவலர் சங்கீத யாழை பாடிய தென் திருவானைக்கா உறை பெருமாளே

மேல்

#355
அனித்தமான ஊன் நாளும் இருப்பதாகவே நாசி அடைத்து வாயு ஓடாத வகை சாதித்து
அவத்திலே குவால் மூலி புசித்து வாடும் ஆயாச அசட்டு யோகி ஆகாமல் மலம் மாயை
செனித்த காரியோபாதி ஒழித்து ஞான ஆசார சிரத்தை ஆகி யான் வேறு என் உடல் வேறு
செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சியா மநோதீத சிவ சொரூப மா யோகி என ஆள்வாய்
தொனித்த நாத வேய் ஊது சகஸ்ர நாம கோபால சுதற்கு நேச மாறாத மருகோனே
சுவர்க்க லோக மீகாமன் சமஸ்த லோக பூ பால தொடுத்த நீப வேல் வீர வயலூரா
மனித்தர் ஆதி சோணாடு தழைக்க மேவு காவேரி மக ப்ரவாக பானீயம் அலை மோதும்
மணத்த சோலை சூழ் காவை அனைத்து லோகம் ஆள்வாரும் மதித்த சாமியே தேவர் பெருமாளே

மேல்

#356
ஆரம் அணி வாரை பீறி அற மேலிட்டு ஆடவர்கள் வாட துறவோரை
ஆசை மடலூர் வித்து ஆளும் அதி பார பாளித படீர தன மானார்
கார் அளகம் நீழல் காது அளவும் ஓடி காதும் அபிராம கயல் போல
காலன் உடல் போட தேடி வரு நாளில் காலை மறவாமல் புகல்வேனோ
பார் அடைய வாழ்வித்த ஆரபதி பாச சாமள கலாப பரி ஏறிட்டு
பாய் மதக போல தான் ஒடி கலா முன் பாடி வரும் ஏழை சிறியோனே
சூரர் புர சூறைக்கார அசுரர் காவல்கார இள ஏனல் புனம் மேவும்
தோகை திரு வேளைக்கார தமிழ் வேத சோதி வளர் காவை பெருமாளே

மேல்

#357
ஆலம் வைத்த விழிச்சிகள் சித்தசன் ஆகம கலை கற்ற சமர்த்திகள்
ஆர் மனத்தையும் எத்தி வளைப்பவர் தெருவூடே
ஆர வட்ட முலைக்கு விலை பணம் ஆயிர கலம் ஒட்டி அளப்பினும்
ஆசை அ பொருள் ஒக்க நடிப்பவர் உடன் மாலாய்
மேல் இளைப்பும் முசிப்பும் அவத்தையும் ஆய் எடுத்த குலைப்பொடு பித்தமும்
மேல் கொள தலை இட்ட விதிப்படி அதனாலே
மேதினிக்குள் அபத்தன் என பல பாடு பட்டு புழு கொள் மல குகை
வீடு கட்டி இருக்கும் எனக்கு நின் அருள்தாராய்
பீலி மிக்க மயில் துரகத்தினில் ஏறி முட்ட வளைத்து வகுத்து உடல்
பீறலுற்ற அ யுத்த களத்திடை மடியாத
பேர் அரக்கர் எதிர்த்தவர் அத்தனை பேரை உக்ர கள பலி இட்டு உயர்
பேய் கை கொட்டி நடிப்ப மணி கழுகுடன் ஆட
ஏலம் வைத்த புயத்தில் அணைத்து அருள் வேலெடுத்த சமர்த்தை உரைப்பவர்
ஏவருக்கும் மனத்தில் நினைப்பவை அருள்வோனே
ஏழிசை தமிழில் பயனுற்ற வெண் நாவல் உற்று அடியில் பயில் உத்தம
ஈசன் முக்கண் நிருத்தன் அளித்து அருள் பெருமாளே

மேல்

#358
உரை காரிகைப்பால் எனக்கே முதல் பேர் உனக்கோ மடல் கோவை ஒன்று பாட
உழப்பாது இப கோடு எழுத்தாணியை தேடி எடு உனை பாரில் ஒப்பார்கள் கண்டிலன் யான்
குரைக்கு ஆன வித்யா கவி பூபருக்கே குடி காண் முடிப்போடு கொண்டு வா பொன்
குல பூண் இரத்நாதி பொன் தூசு எடுப்பாய் என கூறி இடர்ப்பாடின் மங்குவேனோ
அரைக்கு ஆடை சுற்றார் தமிழ் கூடலில் போய் அனற்கே புனற்கே வரைந்த ஏடிட்டு
அறத்தாய் என பேர் படைத்தாய் புனல் சேல் அற பாய் வயல் கீழ் அமர்ந்த வேளே
திரை காவிரிக்கே கரை கானகத்தே சிவ த்யானம் உற்றோர் சிலந்தி நூல் செய்
திரு காவணத்தே இருப்பார் அருள்கூர் திரு சாலக சோதி தம்பிரானே

மேல்

#359
ஓல மறைகள் அறைகின்ற ஒன்று அது மேலை வெளியில் ஒளிரும் பரம் சுடர்
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவர் எவராலும்
ஓத அரிய துரியம் கடந்தது போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனும் உயிரும் முழுதும் கலந்தது சிவஞானம்
சால உடைய தவர் கண்டு கொண்டது மூல நிறைவு குறைவு இன்றி நின்றது
சாதி குலமும் இலது அன்றி அன்பர் சொன வியோமம்
சாரும் அநுபவர் அமைந்து அமைந்த மெய் வீடு பரம சுக சிந்து இந்த்ரிய
தாப சபலம் அற வந்து நின் கழல் பெறுவேனோ
வால குமர குக கந்த குன்று எறி வேல மயில என வந்து கும்பிடு
வான விபுதர் பதி இந்த்ரன் வெம் துயர் களைவோனே
வாச களப வர துங்க மங்கல வீர கடக புய சிங்க சுந்தர
வாகை புனையும் ரண ரங்க புங்கவ வயலூரா
ஞாலம் முதல்வி இமயம் பயந்த மின் நீலி கவுரி பரை மங்கை குண்டலி
நாளும் இனிய கனி எங்கள் அம்பிகை த்ரி புராயி
நாத வடிவி அகிலம் பரந்தவள் ஆலின் உதரம் உள பைம் கரும்பு வெண்
நாவல் அரசு மனை வஞ்சி தந்து அருள் பெருமாளே

மேல்

#360
கரு முகில் திரளாக கூடிய இருள் என மருள் ஏறி தேறிய
கடி கமழ் அளக ஆயக்காரிகள் புவி மீதே
கனவிய விலை ஓலை காதிகள் முழு மதி வதனம் நேர் அ பாவைகள்
களவிய முழு மோசக்காரிகள் மயலாலே
பர நெறி உணரா அ காமுகர் உயிர் பலி கொளும் மோகக்காரிகள்
பகழியை விழியாக தேடிகள் முகம் மாய
பகடிகள் பொருள் ஆசைப்பாடிகள் உருவிய தன பார கோடுகள்
பட உளம் அழிவேனுக்கு ஓர் அருள்புரிவாயே
மரகத வித நேர் முத்து ஆர் நகை குறமகள் அதி பார பூண் முலை
மருவிய மணவாள கோலமும் உடையோனே
வளை தரு பெரு ஞாலத்து ஆழ் கடல் முறை இட நடுவாக போய் இரு
வரை தொளைபட வேல் விட்டு ஏவிய அதி தீரா
அரவணைதனில் ஏறி சீருடன் விழி துயல் திருமால் சக்ராயுதன்
அடி இணை முடி தேடி காணவும் அரிதாய
அலை புனல் சடையார் மெச்சு ஆண்மையும் உடையது ஒர் மயில் வாசி சேவக
அழகிய திருவானைக்கா உறை பெருமாளே

மேல்

#361
காவி பூவை ஏவை இகல்வன நீலத்து ஆலகால நிகர்வன காதி போக மோகம் அருள்வன இரு தோடார்
காதில் காதி மோதி உழல் கண மாயத்தார்கள் தேக பரிசன காம க்ரோத லோப மதம் இவை சிதையாத
பாவிக்கு ஆயு வாயு வலம் வர லாலிப்பார்கள் போத கரும உபாயத்தான ஞான நெறிதனை இனிமேல் அன்பா
லக்கு ஆக யோக ஜெப தப நேசித்து ஆரவார பரிபுரம் பாதத்து ஆளுமாறு திரு உள நினையாதோ
கூவி கோழி வாழி என மயில் ஆலித்து ஆலகாலம் என உயர் கூளி சேனை வான மிசைதனில் விளையாட
கோர தீர சூரனுடை வினை பாற சீறல் ஏனபதிதனை கோல காலமாக அமர் செய்த வடி வேலா
ஆவி சேல்கள் பூகம் மடல் இள பாளை தாறு கூறுபட உயர் ஆலை சோலை மேலை வயலியில் உறைவோனே
ஆசை தோகைமார்கள் இசை உடன் ஆடி பாடி நாடி வரு திருவானைக்காவில் மேவி அருளிய பெருமாளே

மேல்

#362
குருதி புலால் என்பு தோல் நரம்புகள் கிருமிகள் மால் அம் பிசீதம் மண்டிய
குடர் நிணம் ரோமங்கள் மூளை என்பன பொதி காய
குடிலிடை ஓர் ஐந்து வேடர் ஐம்புல அடவியில் ஓடும் துர் ஆசை வஞ்சகர்
கொடியவர் மா பஞ்ச பாதகம் செய அதனாலே
சுருதி புராணங்கள் ஆகமம் பகர் சரியை க்ரியை அண்டர் பூசை வந்தனை
துதியொடு நாடும் தியானம் ஒன்றையும் முயலாதே
சுமடம் அதாய் வம்பு மால் கொளும் தீய திமிரரொடே பந்தமாய் வருந்திய
துரிசு அற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே
ஒரு தனி வேல் கொண்டு நீள் க்ரவுஞ்சமும் நிருதரும் மாவும் கலோல சிந்துவும்
உடைபட மோதும் குமார பங்கய கர வீரா
உயர் தவர் மா உம்பரான அண்டர்கள் அடி தொழுதே மன் பராவு தொண்டர்கள்
உளம் அதில் நாளும் குலாவி இன்புற உறைவோனே
கருதிய ஆறு அங்க வேள்வி அந்தணர் அரிகரி கோவிந்த கேசவன் என்று இரு
கழல் தொழு சீரங்க ராசன் அன்புறு மருகோனே
கமலனும் ஆகண்டல ஆதி அண்டரும் எமது பிரான் என்று தாள் வணங்கிய
கரிவனம் வாழ் சம்பு நாதர் தந்து அருள் பெருமாளே

மேல்

#363
நாடி தேடி தொழுவார்பால் நான் நத்து ஆக திரிவேனோ
மாட கூடல் பதி ஞான வாழ்வை சேர தருவாயே
பாடல் காதல் புரிவோனே பாலை தேன் ஒத்த அருள்வோனே
ஆடல் தோகைக்கு இனியோனே ஆனைக்காவல் பெருமாளே

மேல்

#364
நிறைந்த துப்பு இதழ் தேன் ஊறல் நேர் என மறம் தரித்த கண் ஆலால நேர் என
நெடும் சுருட்டு குழல் ஜீமூத நேர் என நெஞ்சின் மேலே
நெருங்கு பொன் தனம் மா மேரு நேர் என மருங்கு நிட்கள ஆகாசம் நேர் என
நிதம்பம் முக்கணர் பூண் ஆரம் நேர் என நைந்து சீவன்
குறைந்து இதம்பட வாய் பாடி ஆதரம் அழிந்து அணைத்து அணை மேல் வீழும் மால் கொடு
குமண்டை இட்டு உடை சோரா விடாயில் அமைந்து நாபி
குடை திளைப்புறும் மா மாயா வாழ்வு அருள் மடந்தையர்க்கு ஒரு கோமாளம் ஆகிய
குரங்கை ஒத்து உழல்வேனோ மனோலயம் என்று சேர்வேன்
மறந்த சுக்ரிப மா நீசன் வாசலில் இருந்து உலுத்த நீ ஓராதது ஏது சொல்
மனம் களித்திடல் ஆமோ துரோகிதம் முன்பு வாலி
வதம் செய் விக்ரம சீராமன் நான் நிலம் அறிந்த அதி சரம் ஓகோ கெடாது இனி
வரும்படிக்கு உரையாய் பார் பல ஆகவம் என்று பேசி
அறம் தழைத்த அநுமானோடு மா கடல் வரம்பு அடைத்து அதின் மேல் ஏறி ராவணன்
அரண் குலைத்து எதிர் போராடு நாரணன் மைந்தனான
அநங்கன் மைத்துன வேளே கலாபியின் விளங்கு செய்ப்பதி வேலாயுதா வியன்
நலம் கயப்பதி வாழ்வான தேவர்கள் பெருமாளே

மேல்

#365
பரிமளம் மிக உள சாந்து மா மத முருகு அவிழ் வகை மலர் சேர்ந்து கூடிய
பல வரி அளி துயில் கூர்ந்து வானுறு முகில் போல
பரவிய இருள் செறி கூந்தல் மாதர்கள் பரிபுர மலர் அடி வேண்டி ஏவிய
பணிவிடைகளில் இறுமாந்த கூளனை நெறி பேணா
விரகனை அசடனை வீம்பு பேசிய விழலனை உறு கலை ஆய்ந்திடா முழு
வெகுளியை அறிவது போம் கபாடனை மலம் மறா
வினையனை உரை மொழி சோர்ந்த பாவியை விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை
வினவி முன் அருள்செய்து பாங்கின் ஆள்வதும் ஒரு நாளே
கருதலர் திரிபுரம் மாண்டு நீறு எழ மலை சிலை ஒரு கையில் வாங்கு நாரணி
கழல் அணி மலை மகள் காஞ்சி மா நகர் உறை பேதை
களி மயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி கடல் உடை உலகினை ஈன்ற தாய் உமை
கரி வனம் உறை அகிலாண்ட நாயகி அருள் பாலா
முரணிய சமரினில் மூண்ட ராவணன் இடி என அலறி முன் ஏங்கி வாய்விட
முடி பல திருகிய நீண்ட மாயவன் மருகோனே
முதல் ஒரு குறமகள் நேர்ந்த நூல் இடை இரு தன கிரி மிசை தோய்ந்த காமுக
முது பழ மறைமொழி ஆய்ந்த தேவர்கள் பெருமாளே

மேல்

#366
வேலை போல் விழி இட்டு மருட்டிகள் காம க்ரோதம் விளைத்திடு துட்டிகள்
வீதிக்கே திரி பப்பர மட்டைகள் முலை யானை
மேல் இட்டே பொரவிட்ட பொறிச்சிகள் மார்பை தோளை அசைத்து நடப்பிகள்
வேளுக்கு ஆண்மை செலுத்து சமர்த்திகள் களிகூரும்
சோலை கோகிலம் ஒத்த மொழிச்சிகள் காசற்றாரை இதத்தில் ஒழிச்சிகள்
தோலை பூசி மினுக்கி உருக்கிகள் எவரேனும்
தோய பாயல் அழைக்கும் அவத்திகள் மேக போகம் முயக்கி மயக்கிகள்
சூறைக்காரிகள் துக்க வலைப்படல் ஒழிவேனோ
காலைக்கே முழுகி குண திக்கினில் ஆதித்யாய என பகர் தர்ப்பணம்
காயத்ரீ செபம் அர்ச்சனையை செய்யும் முநிவோர்கள்
கானத்து ஆசிரமத்தினில் உத்தம வேள்வி சாலை அளித்தல் பொருட்டு எதிர்
காத தாடகையை கொல் கிருபை கடல் மருகோனே
ஆலை சாறு கொதித்து வயல் தலை பாயச சாலி தழைத்து இரதித்த அமுதாக
தேவர்கள் மெச்சிய செய்ப்பதி உறை வேலா
ஆழி தேர் மறுகில் பயில் மெய் திருநீறு இட்டான் மதிள் சுற்றிய பொன்
திருவானைக்காவினில் அப்பர் பிரியப்படு பெருமாளே

மேல்

#367
குமர குருபர குணதர நிசிசர திமிர தினகர சரவணபவ கிரி
குமரி சுத பகிரதி சுத சுர பதி குல மானும்
குறவர் சிறுமியும் மருவிய திரள் புய முருக சரண் என உருகுதல் சிறிதும் இல்
கொடிய வினையனை அவலனை அசடனை அதி மோக
கமரில் விழவிடு அழகு உடை அரிவையர்கள் அளவினொடு பொருள் அளவளவு அருளிய
கலவி அளறிடை துவளுறும் வெளிறனை இனிதாள
கருணை அடியரொடு அருணையில் ஒரு விசை சுருதி புடை தர வரும் இரு பரிபுர
கமல மலர் அடி கனவிலும் நனவிலும் மறவேனே
தமர மிகு திரை எறி வளை கடல் குடல் மறுகி அலைபட விட நதி உமிழ்வன
சமுக முக கண பண பணி பதி நெடு வடமாக
சகல உலகமு நிலைபெற நிறுவிய கனக கிரி திரி தர வெகு கர மலர்
தளர இனியதொர் அமுதினை ஒரு தனி கடையா நின்று
அமரர் பசி கெட உதவிய க்ருபை முகில் அகில புவனமும் அளவிடு குறியவன்
அளவு நெடியவன் அளவிட அரியவன் மருகோனே
அரவு புனைதரு புநிதரும் வழிபட மழலை மொழிகொடு தெளி தர ஒளி திகழ்
அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமளே

மேல்

#368
அருவம் இடை என வருபவர் துவர் இதழ் அமுது பருகியும் உருகியும் ம்ருகமத
அளகம் அலையவும் அணி துகில் அகலவும் அதி பார
அசகம் முலை புளகிதம் எழ அமளியில் அமளி பட அநவரதமும் அவசமொடு
அணையும் அழகிய கலவியும் அலம்அலம் உலகோரை
தருவை நிகரிடு புலமையும் அலம்அலம் உருவும் இளமையும் அலம்அலம் விபரித
சமைய கலைகளும் அலம்அலம் அலமரும் வினை வாழ்வும்
சலிய லிபி என சனனம் அலம்அலம் இனி உன் அடியாரொடு ஒரு வழிபட இரு
தமர பரிபுர சரணமும் மவுனமும் அருள்வாயே
உருவு கரியது ஒர் கணை கொடு பணி பதி இருகு உதையும் முடி தமனிய தநு உடன்
உருளை இரு சுடர் வலவனும் அயன் என மறை பூணும்
உறுதிபடு சுர ரத மிசை அடி இட நெறுநெறு என முறிதலும் நிலை பெறு தவம்
உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற ஒரு கோடி
தெருவு நகரியும் நிசிசரர் முடியொடு சடசட என வெடிபடுவன புகைவன
திகுதிகு என எரிவன அனல் நகையொடு முனிவார்தம்
சிறுவ வனசரர் சிறுமியொடு உருகிய பெரும அருணயில் எழு நிலை திகழ்வன
சிகரி மிசை ஒரு கலபியில் உலவிய பெருமாளே

மேல்

#369
கருணை சிறிதும் இல் பறி தலை நிசிசரர் பிசித அசன மறவர் இவர் முதலிய
கலக விபரித வெகு பர சமயிகள் பலர் கூடி
கலகல என நெறி கெட முறை முறை முறை கதறி வதறிய குதறிய கலை கொடு
கருத அரியதை விழி புனல் வர மொழி குழறா அன்பு
உருகி உனது அருள் பரவுகை வரில் விரகு ஒழியில் உலகியல் பிணை விடில் உரை செயல்
உணர்வு கெடில் உயிர் புணர் இருவினை அளறு அது போக
உதறில் எனது எனும் மலம் அறில் அறிவினில் எளிது பெறல் என மறை பறை அறைவது ஒரு
உதயம் மரணம் இல் பொருளினை அருளுவது ஒரு நாளே
தருண சத தள பரிமள பரிபுர சரணி தமனிய தநு தரி திரிபுர
தகனி கவுரி பவதி பகவதி பயிரவி சூலி
சடில தரி அநுபவை உமை திரிபுரை சகல புவனமும் உதவிய பதிவ்ருதை
சமய முதல்வி தனய பகிரத சுத சத கோடி
அருண ரவியினும் அழகிய ப்ரபைவிடு கருணை வருணித தனுபர குருபர
அருணை நகர் உறை சரவண குரவு அணி புய வேளே
அடவி சரர் குல மரகத வனிதையும் அமரர் குமரியும் அனவரதமும் மருகு
அழகு பெற நிலை பெற வரம் அருளிய பெருமாளே

மேல்

#370
துகிலு ம்ருகமத பரிமள அளகமு நெகிழ இரு தன கிரி அசை தர இடை
துவள மனிதரும் அமரரும் முநிவரும் உடன் ஓடி
தொடர வன மணி மகரம் இலகு குழை அடருவன விட மிளிர்வன ரதி பதி
சுருதி மொழிவன கயல் விழி புரள் தர நடுவாக
வகிரு மதி புரை தநு நுதல் பனிவர வனச பத யுக பரிபுரம் ஒலி பட
மறுகுதோறும் உலவி இனிய கலவியை விலை கூறும்
வரைவில் அரிவையர் தரு சுக சலதியில் அலையும் எனது உயிர் அநுதினம் நெறி தரு
மவுன சிவசுக சலதியில் முழுகுவது ஒரு நாளே
முகிலும் மதியமும் ரவி எழு புரவியு நெடிய குலை மிடறு இடற முது ககன
முகடு கிழிபட வளர்வன கமுகு இன மிசை வாளை
முடுகு கயலுகள் வயல்களும் முருகு அவிழ் தடமும் முளரியும் அகழியும் மதில்களும்
முழுதும் உடையது ஓர் அருணையில் உறைதரும் இளையோனே
அகிலும் மருதமும் முகளித வகுளமும் அமுத கதலியும் அருணமும் வருடையும்
அபரிமித மத கரிகளும் அரிகளும் உடனே கொண்ட
அருவி இழிதரும் அரு வரைதனில் ஒரு சவர வனிதையை முநி தரு புனிதையை
அவசமுடன் மலர் அடி தொழுது உருகிய பெருமாளே

மேல்

#371
மகரம் எறி கடல் விழியினும் மொழியினும் மதுப முரல் குழல் வகையினும் நகையினும்
வளமையினும் முக நிலவினும் இலவினும் நிறம் மூசும்
மதுர இதழினும் இடையினும் நடையினும் மகளிர் முகுளித முலையினும் நிலையினும்
வனச பரிபுர மலரினும் உலரினும் அவர் நாமம்
பகருகினும் அவர் பணிவிடை திரிகினும் முருகி நெறி முறை தவறினும் அவரோடு
பகடி இடுகினும் அமளியில் அவர் தரும் அநுராக
பரவை படியினும் வசம் அழியினும் முதல் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய
பரம ஒரு வசனமும் இரு சரணமும் மறவேனே
ககன சுரபதி வழிபட எழு கிரி கடக கிரியோடு மிதி பட வட குல
கனக கன குவடு அடியோடு முறிபட முது சூதம்
கதறு சுழி கடல் இடை கிழி பட மிகு கலக நிசிசரர் பொடிபட நடவிய
கலப மரகத துரகத ந்ருப கிரி மயில் வாழ்வே
தகன கரதல சிவ சுத கணபதி சகச சரவண பரிமள சத தள
சயன வனசரர் கதி பெற முனி பெறு புன மானின்
தரள முகபட நெறி பட நிமிர்வன தருண புளகித ம்ருகமத தன கிரி
தழுவ மயல் கொடு தனி மடல் எழுதிய பெருமாளே

மேல்

#372
முகிலை இகல் பொரு முழு இருள் குழல் என முதிய மதி அது முகம் என நுதல் இணை
முரணர் வரி சிலை முடுகிடு கணை விழி என மூவா
முளரிதனின் முகளித மலர் முலை என முறுவல்தனை இரு குழைதனை மொழிதனை
மொழிய அரியது ஒர் தெரிவையர் வினை என மொழி கூறி
பகலும் இரவினும் மிக மனம் மருள் கொடு பதியிலவர் வடிவுளது அழகு என ஒரு
பழுதும் அற அவர் பரிவுற இதம் அது பகராதே
பகை கொடு எதிர் பொரும் அசுரர்கள் உகை பட விகடம் உடன் அடை பயில் மயில் மிசை வரு
பவனிதனை அநுதின நினை என அருள் பகர்வாயே
புகல அரியது பொருள் இது என ஒரு புதுமை இட அரியது முதல் எனும் ஒரு
பொதுவை இது என தவம் உடை முநிவர்கள் புடைசூழ
புரமும் எரி எழு நகை அது புரிபவர் புனலும் வளர் மதி புனை சடையினர் அவர்
புடவி வழிபட புதைபொருள் விரகொடு புகல்வோனே
அகில கலைகளும் அற நெறி முறைமையும் அகில மொழி தரு புலவரும் உலகு இனி
அறிஞர் தவம் முயல்பவர்களும் இயல் இசை அதனாலே
அறுவர் முலை உணும் அறுமுகன் இவன் என அரிய நடம் இடும் அடியவர் அடி தொழ
அருணை நகர்தனில் அழகுடன் மருவிய பெருமாளே

மேல்

#373
முருகு செறி குழல் சொருகிய விரகிகள் முலைகள் அளவிடு முகபட பகடிகள்
முதலும் உயிர்களும் அளவிடு களவியர் முழு நீல
முழுகு புழுகு அகில் குழை வடி அழகியர் முதிர வளர் கனி அது கவர் இதழியர்
முனை கொள் அயில் என விழி எறி கடைசியர் அநுராகம்
மருவி அமளியில் நலம் இடு கலவியர் மனது திரவியம் அளவு அளவு அளவியர்
வசனம் ஒரு நொடி நிலைமையில் கபடியர் வழியே நான்
மருளும் அறிவினன் அடிமுடி அறிகிலன் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய
மவுன வசனமும் இரு பெரு சரணமும் மறவேனே
கருதி இருபது கர முடி ஒரு பது கனக மவுலி கொள் புரிசை செய் பழையது
கடிய விய நகர் புக வரு கன பதி கனல் மூழ்க
கவசம் அநுமனொடு எழுபது கவி விழ அணையில் அலை எறி எதிர் அமர் பொருதிடு
களரிதனில் ஒரு கணை விடும் அடல் அரி மருகோனே
சருவும் அவுணர்கள் தளமோடு பெரு வலி அகல நிலைபெறு சயிலமும் இடி செய்து
தருமன் அவர் பதி குடி விடு பதன் இசை மயில் வீரா
தருண மணி அவை பலப்பல செருகிய தலையள் துகில் இடை அழகிய குறமகள்
தனது தனம் அது பரிவொடு தழுவிய பெருமாளே

மேல்

#374
விடமும் அமுதமும் மிளிர்வன இணை விழி வனசம் அல தழல் முழுகிய சரம் என
விரை செய் ம்ருகமத அளகமும் முகில் அல ஒரு ஞான
விழியின் வழி கெட இருள்வது ஒர் இருள் என மொழியும் அமுது அல உயிர் கவர் வலை என
விழையும் இள நகை தளவு அல களவு என வியன் நாபி
தடமும் மடு அல படு குழி என இடை துடியும் அல மதன் உரு என வன முலை
சயிலம் அல கொலை யமன் என முலை மிசை புரள் கோவை
தரளம் மணி அல யமன் விடு கயிறு என மகளிர் மகளிரும் அல பல வினை கொடு
சமையும் உரு என உணர்வொடு புணர்வது ஒரு நாளே
அடவி வனிதையர் தனது இரு பரிபுர சரண மலர் அடி மலர் கொடு வழி பட
அசலம் மிசை விளை புனம் அதில் இனிது உறை தனி மானும்
அமரர் அரிவையும் இரு புடையினும் வர முகரம் முக படம் கவள தவள கர
அசலம் மிசை வரும் அபிநவ கலவியும் விளையாடும்
கடக புளகித புய கிரி சமுக விகட கடக கச ரத துரகத நிசிசரர்
கடக பயிரவ கயிரவ மலர்களும் எரி தீயும்
கருக ஒளி விடு தனுபர கவுதம புநித முநி தொழ அருணையில் அறம் வளர்
கருணை உமை தரு சரவண சுரபதி பெருமாளே

மேல்

#375
கம அரி மலர் குழல் சரிய புளகித கனக தன கிரி அசைய பொரு விழி
கணைகள் என நுதல் புரள துகில் அதை நெகிழ் மாதர்
கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர்
கனக வளை கல நடைகள் பழகிகள் மயில் போல
திமிரு மத புழுகு ஒழுக தெரிவினில் அலைய விலை முலை தெரிய மயல் கொடு
திலத மணி முக அழகு சுழலிகள் இதழூறல்
திரையில் அமுது என கழைகள் பல சுளை எனவும் அவர் தழுவும் அசடனை
திருகு புலை கொலை கலிகள் சிதறிட அருள்தாராய்
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம்
குரைசெய் முரசமொடு அரிய விருது ஒலி டமட டமடம டமட டம என
குமுற திமிலை சலரி கினரி முதல் இவை பாட
அமரர் முநிவரும் அயனும் அனைவரும் மதுகை மலர் கொடு தொழுது பதமுற
அசுரர் பரி கரி இரதமும் உடைபட விடும் வேலா
அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில் புறம் அது அருளி ஒர்
அருணகிரி குறமகளை மருவிய பெருமாளே

மேல்

#376
கயல் விழித்தேன் எனை செயல் அழித்தாய் என கணவ கெட்டேன் என பெறு மாது
கருது புத்ரா என புதல்வர் அப்பா என கதறிட பாடையில் தலை மீதே
பயில் குலத்தார் அழ பழைய நட்பார் அழ பறைகள் கொட்டா வர சமனாரும்
பரிய கை பாசம் விட்டு எறியும் அப்போது எனை பரிகரித்து ஆவியை தரவேணும்
அயில் அற சேவல் கைக்கு இனிது உர தோகையுள் அருணையில் கோபுரத்து உறைவோனே
அமரர் அத்தா சிறு குமரி முத்தா சிவத்து அரிய சொல் பாவலர்க்கு எளியோனே
புயல் இளைப்பாறு பொன் சயிலம் மொய் சாரலில் புன மற பாவையை புணர்வோனே
பொடிபட பூதரத்தொடு கடல் சூரனை பொரு முழு சேவக பெருமாளே

மேல்

#377
கறுவி மிக்கு ஆவியை கலகும் அ காலன் ஒத்து இலகு கண் சேல் களிப்புடன் நாட
கருதி முற்பாடு கட்டளை உடல் பேசி உள் களவினில் காசினுக்கு உறவால் உற்று
உறு மலர் பாயலில் துயர் விளைத்து ஊடலுற்று உயர் பொருட்கு ஓதி உட்படு மாதர்
ஒறு வினைக்கே உளத்து அறிவு கெட்டேன் உயிர் புணை இணை தாள்தனை தொழுவேனோ
மறை எடுத்து ஓதி வச்சிரம் எடுத்தானும் மை செறி திரு கோலம் உற்று அணைவானும்
மறைகள் புக்கார் என குவடு நெட்டாழி வற்றிட அடல் சூரனை பொரும் வேலா
அறிவுடைத்தாரும் மற்றுடன் உனை பாடல் உற்று அருணையில் கோபுரத்து உறைவோனே
அடவியில் தோகை பொன் தட முலைக்கு ஆசையுற்று அயரும் அ சேவக பெருமாளே

மேல்

#378
பரிய கை பாசம் விட்டு எறியும் அ காலனுள் பயன் உயிர் போய் அகப்பட மோகம்
படியில் உற்றார் என பலர்கள் பற்றா அடல் படர் எரி கூடு விட்டு அலை நீரில்
பிரியும் இ பாதக பிறவி உற்றே மிக பிணிகளுக்கே இளைத்து உழல் நாயேன்
பிழை பொறுத்தாய் என பழுது அறுத்து தாள் என பிரியம் உற்று ஓதிட பெறுவேனோ
கரிய மெய் கோலம் உற்ற அரியின் நல் தாமரைக்கு அமைவ பற்று ஆசை அ கழலோர் முன்
கலை வகுத்து ஓதி வெற்பு அது தொளைத்தோன் இயல் கடவுள் செ சேவல் கை கொடியோன் என்று
அரிய நல் பாடலை தெரியும் உற்றோர் கிளைக்கு அருணையில் கோபுரத்து உறைவோனே
அடவியில் தோகை பொன் தட முலைக்கு ஆசையுற்று அயரும் அ சேவக பெருமாளே

மேல்

#379
தருண மணி வான் நிலத்தில் அருண மணி ஆல விட்ட தழல் அமளி மீது எறிக்கு நிலவாலே
தலைமை தவிரா மனத்தின் நிலை அறியாது எதிர்த்த தறுகண் மத வேள் தொடுத்த கணையாலே
வருண மட மாதர் கற்ற வசையின் மிகை பேச முற்றும் மருவும் எனது ஆவி சற்றும் அழியாதே
மகுட மணி வார் இசைக்கும் விகடம் அது உலாவு சித்ர மயிலின் மிசை ஏறி நித்தம் வரவேணும்
கருணை அகலா விழிச்சி களபம் அழியா முலைச்சி கலவி தொலையா மறத்தி மணவாளா
கடு உடை அரா நிரைத்த சடில முடி மீது வைத்த கடிய மலர் ஆதரித்த கழல் வீரா
அருண மணியால் அமைத்த கிரண மணி சூழும் வெற்றி அருணைநகர் கோபுரத்தில் உறைவோனே
அசுரர் குலம் வேரறுத்து வட அனலை மீது எழுப்பி அமரர் சிறை மீளவிட்ட பெருமாளே

மேல்

#380
முழுகி வடவா முகத்தில் எழு கனலிலே பிறக்கும் முழு மதி நிலாவினுக்கும் வசையாலும்
மொழியும் மட மாதருக்கும் இனிய தனி வேய் இசைக்கும் முதிய மத ராஜனுக்கும் அழியாதே
புழுகு திகழ் நீபம் அதில் அழகிய குரா நிரைத்த புதுமையினில் ஆறிரட்டி புயம் மீதே
புணரும் வகை தான் நினைத்து உணரும் வகை நீல சித்ர பொரும் மயிலில் ஏறி நித்தம் வரவேணும்
எழும் மகர வாவி சுற்றும் பொழில் அருணை மா நகர்க்குள் எழுத அரிய கோபுரத்தில் உறைவோனே
இடை துவள வேடுவச்சி படம் அசையவே கனத்த இள முலை விடாத சித்ர மணி மார்பா
செழு மகுட நாகம் மொய்த்த ஒழுகு புனல் வேணி வைத்த சிவனை முதல் ஓதுவித்த குருநாதா
திசைமுகன் முராரி மற்றும் அரிய பல தேவர் உற்ற சிறை அடைய மீள விட்ட பெருமாளே

மேல்

#381
வடவை அனல் ஊடு புக்கு முழுகி எழு மா மதிக்கும் மதுர மொழி யாழ் இசைக்கும் இருநாலு
வரை திசை விடாது சுற்றி அலறு திரை வாரிதிக்கும் மடி அருவ வேள் கணைக்கும் அற வாடி
நெடு கனக மேரு ஒத்த புளக முலை மாது அருக்கு நிறையும் மிகு காதலுற்ற மயல் தீர
நினைவினொடு பீலி வெற்றி மரகத கலாப சித்ர நிலவு மயில் ஏறியுற்று வரவேணும்
மடல் அவிழ மாலை சுற்று புயம் இருபதோடு பத்து மவுலி அற வாளி தொட்ட அரி ராமன்
மருக பல வானவர்க்கும் அரிய சிவனார் படிக்க மவுன மறை ஓதுவித்த குருநாதா
இடை அரி உலாவும் உக்ர அருணகிரி மா நகர்க்குள் இனிய குண கோபுரத்தில் உறைவோனே
எழு புவி அளாவு வெற்பும் முடலி நெடு நாகம் எட்டும் இடை உருவ வேலை விட்ட பெருமாளே

மேல்

#382
ஆல விழி நீலத்தால் அதர பானத்தால் அளக பார கொண்டலாலே
ஆர நகையால் வில் போர் நுதலினால் வித்தார நடையால் நல் கொங்கையாலே
சால மயலாகி கால திரிசூலத்தால் இறுகு பாச துன்ப மூழ்கி
தாழ்வில் உயிர் வீழ்பட்டு ஊழ் வினை விடாமல் சாவதன் முன் ஏவல் கொண்டிடாயோ
சேலை தரு கானில் கோல மற மானை தோளில் உறவாக கொண்ட வாழ்வே
சோதி முருகா நித்தா பழய ஞான சோணகிரி வீதி கந்த வேளே
பாலக கலாப கோமள மயூர பாக உமைபாகத்தன் குமாரா
பாத மலர் மீதில் போத மலர் தூவி பாடுமவர் தோழ தம்பிரானே

மேல்

#383
பேதக விரோத தோதக விநோத பேதையர் குலாவை கண்டு மாலின்
பேதைமையுறா மற்று ஏதம் அகலாமல் பேத உடல் பேணி தென்படாதே
சாதக விகார சாதல் அவை போக தாழ்வில் உயிராக சிந்தையால் உன்
தாரை வடி வேலை சேவல்தனை ஏனல் சாரல் மற மானை சிந்தியேனோ
போதக மயூர போதக போது அக அகடு ஆ மன் போது அருணை வீதி கந்த வேளே
போதக கலாப கோதை முது வானில் போன சிறை மீள சென்ற வேலா
பாதக பதாதி சூரன் முதல் வீழ பார் உலகு வாழ கண்ட கோவே
பாத மலர் மீதில் போது மலர் தூவி பாடும் அவர் தம்பிரானே

மேல்

#384
அமுதமே ஊறு சொல் ஆகிய தோகையர் பொருள் உளார் உரை என் ஆணை உன் ஆணை என்
அருகு வீடு இது தான் அதில் வாரும் என உரை கூறும்
அசடு மாதர் குவாது சொல் கேடிகள் தெருவின் மீது குலாவி உலாவிகள்
அவர்கள் மாயை படாமல் கெடாமல் நினது அருள்தாராய்
குமரி காளி வராகி மகேசுரி கவுரி மோடி சுராரி நிராபரி
கொடிய சூலி சுடாரணி யாமளி மகமாயி
குறளு ரூப முராரி சகோதரி உலக தாரி உதாரி பராபரி
குருபராரி விகாரி நமோகரி அபிராமி
சமர நீலி புராரி தன் நாயகி மலை குமாரி கபாலி நல் நாரணி
சலில மாரி சிவாய மனோகரி பரை யோகி
சவுரி வீரி முநீர் விட போஜனி திகிரி மேவு கையாளி செயாள் ஒரு
சகல வேதமும் ஆயின தாய் உமை அருள் பாலா
திமிதம் ஆடு சுராரி நிசாசரர் முடிகள்தோறும் கடாவி இடு ஏய் ஒரு
சில பசாசு குணாலி நிணம் உண விடும் வேலா
திரு உலாவு சொணேசர அணாமலை முகில் உலாவு விமான நவோ நிலை
சிகர மீது குலாவி உலாவிய பெருமாளே

மேல்

#385
உருகும் மா மெழுகாகவுமே மயல் பெருகும் ஆசை உளாகிய பேர் வரில்
உரிய மேடையில் வார் குழல் நீவிய ஒளி மானார்
உடை கொள் மேகலையால் முலை மூடியும் நெகிழ நாடிய தோதகம் ஆடியும்
உவமை மா மயில் போல் நிற மேனியர் உரையாடும்
கரவு அது ஆம் மன மாதர்கள் நீள் வலை கலக வாரியில் வீழ் அடியேன் நெறி
கருதொணா அதி பாதகன் நேசமது அறியாத
கசட மூடனை ஆளவுமே அருள் கருணை வாரிதியே இரு நாயகி
கணவனே உன தாளிணை மா மலர் தருவாயே
சுருதி மா மொழி வேதியன் வானவர் பரவு கேசன் ஐ ஆயுதபாணி நல்
துளப மாலையை மார்பு அணி மாயவன் மருகோனே
தொலைவு இலா அசுரேசர்கள் ஆனவர் துகளதாகவுமே எதிர் ஆடிடு
சுடரின் வேலவனே உலகு ஏழ் வலம்வருவோனே
அருணர் கோடியினார் ஒளி வீசிய தருண வாள் முக மேனியனே அரன்
அணையு நாயகி பாலகனே நிறை கலையோனே
அணி பொன் மேரு உயர் கோபுரம் மா மதில் அதிரும் ஆரணம் வாரண வீதியுள்
அருணை மா நகர் மேவி உலாவிய பெருமாளே

மேல்

#386
கரி உரி அரவம் அணிந்த மேனியர் கலை மதி சலமு நிறைந்த வேணியர்
கனல் மழு உழையும் அமர்ந்த பாணியர் கஞ்ச மாதின்
கன முலை பருகி வளர்ந்த காமனை முனிபவர் கயிலை அமர்ந்த காரணர்
கதிர் விரி மணி பொன் நிறைந்த தோளினர் கண்ட காள
விரிவு என உனது உள் உகந்த வேல் என மிக இரு குழையும் அடர்ந்து வேளினை
அனையவர் உயிரை விழுங்கி மேலும் வெகுண்டு நாடும்
வினை விழி மகளிர் தனங்கள் மார்புற வித மிகு கலவி பொருந்தி மேனியும்
எழில் கெட நினைவும் அழிந்து மாய்வது ஒழிந்திடாதோ
எரி சொரி விழியும் இரண்டு வாள் எயிறு இரு பிறை சயிலம் இரண்டு தோள் முகில்
என வரும் அசுரர் சிரங்கள் மேரு இடிந்து வீழ்வது
என விழ முதுகு பிளந்து காளிகள் இடு பலி எனவு நடந்து தாள் தொழ
எதிர் பொருது உதிரம் உகந்த வேகம் உகைந்த வேலா
அரி கரி உழுவை அடர்ந்த வாள் மலை அருணையில் அறவும் உயர்ந்த கோபுரம்
அதில் உறை குமர அநந்த வேத மொழிந்து வாழும்
அறு முக வடிவை ஒழிந்து வேடர்கள் அடவியில் அரிவை குயங்கள் தோய் புய
அரி அர பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே

மேல்

#387
கனை கடல் வயிறு குழம்பி வாய்விட வட தமனிய கிரி கம்பமாய் நட
கண பண விபரித கந்தகாள புயங்க ராஜன்
கயிறு என அமரர் அநந்த கோடியும் முறைமுறை அமுது கடைந்த நாள் ஒரு
கதி அற உலகை விழுங்கும் மேக ஒழுங்கு போல
வினை மத கரிகளும் எண் திசாமுக கிரிகளும் உறுகிட அண்ட கோளகை
வெடிபட எவரையும் விஞ்சி வேல் இடு நஞ்சு போல
விடு குழை அளவும் அளந்து காமுகர் உயிர் பலி கவருறு பஞ்ச பாதக
விழி வலை மகளிரொடு அன்புகூர்வது ஒழிந்திடாதோ
முனை பெற வளைய அணைந்த மோகர நிசிசரர் கடகம் முறிந்து தூள் எழ
முகில் என உருவம் இருண்ட தாருகன் அஞ்ச மீன
முழுகிய திமிர தரங்க சாகர முறையிட இமையவர் தங்கள் ஊர் புக
முது கிரி உருவம் முனிந்த சேவக செம்பொன் மேரு
அனையன கனவித சண்ட கோபுர அருணையில் உறையும் அருந்து உணா முலை
அபிநவ வனிதை தரும் குமார நெருங்கு மால் கொண்டு
அடவியில் வடிவு கரந்து போய் ஒரு குறமகள் பிறகு திரிந்த காமுக
அரி அர பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே

மேல்

#388
இரவியும் மதியும் தெரிவுற எழும் அம் புவிதனில் இனம் ஒன்றிடு மாதும்
எழில் புதல்வரும் நின்று அழுது உளம் உருகும் இடர் கொடு நடலம் பல கூற
கருகிய உருவம் கொடு கனல் விழி கொண்டு உயிரினை நமனும் கருதா முன்
கலை கொடு பல துன்பமும் அகலிட நின் கழல் இணை கருதும்படி பாராய்
திரு மருவிய திண் புயன் அயன் விரி எண் திசை கிடுகிட வந்திடு சூரன்
திணை புயம் அது சிந்திட அலை கடல் அஞ்சிட வலியொடு கன்றிடும் வேலா
அரு மறையவர் அந்தரம் உறைபவர் அன்பு உடையவர் உய அன்று அறம் மேவும்
அரிவையும் ஒரு பங்கு இடமுடையவர் தங்கு அருணையில் உறையும் பெருமாளே

மேல்

#389
விரகொடு வளை சங்கடம் அது தரு வெம் பிணி கொடு விழி வெம் கனல் போல
வெறி கொடு சமன் நின்று உயிர் கொள்ளும் நெறி இன்று என விதி வழி வந்திடுபோதில்
கரவடம் அது பொங்கிடு மனமொடு மங்கையர் உறவினர் கண் புனல் பாயும்
கலகமும் வரு முன் குல வினை களையும் கழல் தொழும் இயல் தந்து அருள்வாயே
பரவிடும் அவர் சிந்தையர் விடம் உமிழும் பட அரவணை கண் துயில் மால் அம்
பழ மறை மொழி பங்கயன் இமையவர் தம் பயம் அற விடம் உண்டு எருது ஏறி
அரவொடு மதியம் பொதி சடை மிசை கங்கையும் உற அனல் அம் கையில் மேவ
அரிவையும் ஒரு பங்கு இடை உடையார் தங்கு அருணையில் மருவும் பெருமாளே

மேல்

#390
இடம் அடு சுறவை முடுகிய மகரம் எறி கடல் இடை எழு திங்களாலே
இருவினை மகளிர் மருவிய தெருவில் எரி என வரு சிறு தென்றலாலே
தட நடு உடைய கடி படு கொடிய சரம் விடு தறுகண் அநங்கனாலே
சரி வளை கழல மயல் கொளும் அரிவை தனி மலர் அணையில் நலங்கலாமோ
வட குல சயில நெடு உடல் அசுரர் மணி முடி சிதற எறிந்த வேலா
மறமகள் அமுத புளகித களப வளர் இள முலையை மணந்த மார்பா
அடல் அணி விகடம் மரகத மயிலில் அழகுடன் அருணையில் நின்ற கோவே
அரு மறை விததி முறைமுறை பகரும் அரி அர பிரமர்கள் தம்பிரானே

மேல்

#391
கெஜ நடை மடவார் வசம் அதில் உருகா கிலெசம் அது உறு பாழ் வினையாலே
கெதி பெற நினையா துதிதனை அறியா கெடு சுகம் அதில் ஆழ் மதியாலே
தசை அது மருவி வசை உடல் உடனே தரணியில் மிகவே உலைவேனோ
சத தள மலர் வார் புணை நின கழலார் தரு நிழல் புகவே தருவாயே
திசை முகவனை நீள் சிறையுற விடுவாய் திரு நெடு கரு மால் மருகோனே
திரிபுர தகனார் இடம் அதில் மகிழ்வார் திரிபுரை அருள் சீர் முருகோனே
நிசிசரர் உறை மா கிரி இரு பிளவா நிறை அயில் முடுகா விடுவோனே
நிலம் மிசை புகழ் ஆர் தலம் எனும் அருணா நெடு மதில் வட சார் பெருமாளே

மேல்

#392
அருக்கார் நலத்தை திரிப்பார் மனத்துக்கு அடுத்த ஆசை பற்றி தளராதே
அடல் காலனுக்கு கடை கால் மிதித்திட்டு அற பேதகப்பட்டு அழியாதே
கருக்காரர் நட்பை பெருக்கா சரித்து கலி சாகரத்தில் பிறவாதே
கருத்தால் எனக்கு திரு தாள் அளித்து கலை போதகத்தை புகல்வாயே
ஒருக்கால் நினைந்திட்டு இருக்கால் மிகுத்திட்டு உரைப்பார்கள் சித்தத்து உறைவோனே
உர தோள் இடத்தில் குற தேனை வைத்திட்டு ஒளித்து ஓடும் வெற்றி குமரேசா
செருக்கால் தருக்கி சுர சூர் நெருக்கு அ செரு சூர் மரிக்க பொரும் வேலா
திற பூதலத்தில் திரள் சோண வெற்பில் திரு கோபுரத்தில் பெருமாளே

மேல்

#393
அரு மா மதனை பிரியாத சரம் கயல் ஆர் நயன கொடியார்தம்
அழகு ஆர் புளக புழுகு ஆர் சயிலத்து அணையா வலி கெட்டு உடல் தாழ
இருமா நடை புக்கு உரை போய் உணர்வு அற்று இளையா உளம் உக்கு உயிர் சோர
எரி வாய் நரகில் புகுதாதபடிக்கு இரு பாதம் எனக்கு அருள்வாயே
ஒரு மால் வரையை சிறு தூள் படவிட்டு உரமோடு எறி பொன் கதிர் வேலா
உறை மான் அடவி குற மா மகளுக்கு உருகா ஆறிரு பொன் புய வீரா
திருமால் கமல பிரமா விழியில் தெரியா அரனுக்கு அரியோனே
செழு நீர் வயல் சூழ் அருணாபுரியில் திரு வீதியினில் பெருமாளே

மேல்

#394
அழுதும் ஆவா என தொழுதும் ஊடூடு நெக்கு அவசமாய் ஆதார கடல் ஊடுற்று
அமைவில் கோலாகல சமய மா பாதகர்க்கு அறியொணா மோன முத்திரை நாடி
பிழைபடா ஞான மெய்ப்பொருள் பெறாதே வினை பெரிய ஆதேச புற்பதம் மாய
பிறவி வாராகரம் சுழியிலே போய் விழ பெறுவதோ நான் இனி புகல்வாயே
பழைய பாகீரதி படுகை மேல் வாழ்வு என படியும் ஆறு ஆயின தன சாரம்
பருகுமாறு ஆனன சிறுவ சோணாசல பரம மாயூர வித்தக வேளே
பொழுது சூழ் போது வெற்பு இடிபடா பார் முதல் பொடி படா ஓட முத்து எறி மீன
புணரி கோகோ என சுருதி கோகோ என பொருத வேலாயுத பெருமாளே

மேல்

#395
ஆனை வரி கோடு இளநிர் பார முலை சார் அசை பட்டு ஆடை மறைத்து ஆடும் மலர் குழலார்கள்
ஆர வட தோடு அலைய பேசி நகைத்து ஆசை பொருட்டு ஆரையும் மெத்தாக மயக்கிடும் மோகர்
சோனை மழை பாரம் விழி தோகை மயில் சாதியர் கை தூது விடுத்தே பொருளை பறி மாதர்
தோதகம் உற்று ஏழ் நரகில் சேரும் அழற்கு ஆயனை உள் சோதி ஒளி பாதம் அளித்து அருள்வாயே
தானதன தீதிமிலை பேரிகை கொட்டா சம் மலை சாய கடல் சூரை வதைத்திடுவோனே
தாள இயல் சோதி நிற காலின் எழ கோலி எடு தாபரம் வைத்து ஆடுபவர்க்கு ஒரு சேயே
தேன் இரச கோவை இதழ் பூவை குற பாவை தனத்தே உருகி சேரும் அணி கதிர் வேலா
சீர் அருணை கோபுரம் உற்று ஆன புன தோகையும் மெய் தேவமகட்கு ஓர் கருணை பெருமாளே

மேல்

#396
இடருக்கு இடர் ஆகிய கொடுமை கணை மேல் வரும் இறுதி சிறு கால் வரும் அதனாலே
இயலை தரு கானகம் முயலை தரு மேனியில் எரியை தரு மா மதி நிலவாலே
தொடர கொடு வாதையில் அடைய கரை மேல் அலை தொலைய தனி வீசிய கடலாலே
துணை அற்ற பூ மலர் அணையில் தனியேன் உயிர் துவள தகுமோ துயர் தொலையாதோ
வட பொன் குல மேருவின் முடுகி பொரு சூரனை மடிய சுட ஏவிய வடி வேலா
மறவ குலமாம் ஒரு குற மெய் திரு மா மகள் மகிழ் புன மேவிய மயில் வீரா
அடர படர் கேதகம் மடலின் தழை சேர் வயல் அருணை திரு வீதியில் உறைவோனே
அவனி திரு மாதொடு சிவனுக்கு இமையா விழி அமரர்க்கு அரசாகிய பெருமாளே

மேல்

#397
இம ராஜன் நிலா அது எறிக்கும் கனலாலே இள வாடையும் ஊரும் ஒறுக்கும்படியாலே
சமர் ஆகிய மாரன் எடுக்கும் கணையாலே தனி மான் உயிர் சோரும் அதற்கு ஒன்று அருள்வாயே
குமரா முருகா சடிலத்தன் குருநாதா குற மா மகள் ஆசை தணிக்கும் திரு மார்பா
அமராவதி வாழ் அமரர்க்கு அன்று அருள்வோனே அருணாபுரி வீதியில் நிற்கும் பெருமாளே

மேல்

#398
இரத சுரத முலைகளும் மார்பு குத்த நுதல் வேர்வு அரும்ப
அமுத நிலையில் விரல் உகி ரேகை தைக்க மணி போல் விளங்க
இசலிஇசலி உபரித லீலை உற்று இடை நூல் நுடங்க உள மகிழ்சியினோடே
இருவர் உடலும் ஒருவராய் நயக்க முகம் மேல் அழுந்த
அளகம் அவிழ வளைகளுமே கலிக்க நயன அரவிந்த
லகரி பெருக அதரமுமே அருத்தி முறையே அருந்த உரை எழ பரிவாலே
புருவ நிமிர இரு கண் வாள் நிமைக்க உபசாரம் மிஞ்ச
அவசம் கவசம் அளவு இயலே தரிக்க அதிலே அநந்த
புதுமை விளைய அது பரமாபரிக்க இணை தோளும் ஒன்றி அதி சுக கலையாலே
புளகம் முதிர இத கம் என் வாரி தத்த வரை நாண் மழுங்க
மனமும் மனமும் உருகியே ஆதரிக்க உயிர் போல் உகந்து
பொருளது அளவு மருவு உறு மாய வித்தை விலைமாதர் சிங்கி விட அருள்புரிவாயே
பரவு மகர முகரமும் மேவலுற்ற சகரால் விளைந்த
தமரம் திமிரம் பிரபல மோக ரத்ந சல ராசி கொண்ட
படியை முழுதும் ஒரு நொடியே மதித்து வலமாக வந்து சிவனிடத்து அமர் சேயே
பழநி மிசையில் இசை இசை ஏரகத்தில் திருவாவினன்குடியினில்
பிரமபுரம் அதில் வாழ் திருத்தணிகை ஊடும் அண்டர்
புதிய முதிய கதியது நாயேனுக்கும் உறவாகி நின்று கவிதையை புனைவோனே
அரியும் அயனும் அமரரும் ஆய சிட்ட பரிபாலன் அன்பர்
அடையும் இடரை முடுகியே நூற துட்ட கொலைகாரர் என்ற
அசுரர் படையை அடையவும் வேரறுத்த அபிராம செந்தில் உரக வெற்பு உடையோனே
அருண கிரண கருணைய பூரண சரணம் மேல் எழுந்த
இருண கரணம் முரணுறு சூரன் உட்க மயில் ஏறு கந்த
அருணை இறையவர் பெரிய கோபுரத்தில் வடபால் அமர்ந்த அறுமுக பெருமாளே

மேல்

#399
இரவு பகல் பல காலும் இயல் இசை தமிழ் கூறி
திரம் அதனை தெளிவு ஆக திரு அருளை தருவாயே
பரம கருணை பெருவாழ்வே பர சிவ தத்துவ ஞானா
அரன் அருள் சற்புதல்வோனே அருணகிரி பெருமாளே

மேல்

#400
இருவர் மயலோ அமளி விதமோ என் என செயலோ அணுகாத
இருடி அயன் மால் அமரர் அடியார் இடையும் ஒலி தான் இவை கேளாது
ஒருவன் அடியேன் அலறும் மொழி தான் ஒருவர் பரிவாய் மொழிவாரோ
உனது பத தூள் புவன கிரி தான் உனது கிருபாகரம் ஏதோ
பரம குருவாய் அணுவில் அசைவாய் பவன முதல் ஆகிய பூத
படையும் உடையாய் சகல வடிவாய் பழைய வடிவாகிய வேலா
அரியும் அயனோடு அபயம் எனவே அயிலை இருள் மேல் விடுவோனே
அடிமை கொடு நோய் பொடிகள் படவே அருணகிரி வாழ் பெருமாளே

மேல்

#401
இருவினை அஞ்ச மல வகை மங்க இருள் பிணி மங்க மயில் ஏறி
இன அருள் அன்பு மொழிய கடம்புவின் அதகமும் கொடு அளி பாட
கரி முகன் எம்பி முருகன் என அண்டர் களி மலர் சிந்த அடியேன் முன்
கருணை பொழிந்து முகமும் மலர்ந்து கடுகி நடம் கொடு அருள்வாயே
திரிபுரம் மங்க மதன் உடல் மங்க திகழ் நகை கொண்ட விடை ஏறி
சிவம் வெளி அங்கண் அருள் குடி கொண்டு திகழ நடம் செய்து எமை ஈண
அரசி இடம் கொள் மழுவுடை எந்தை அமலன் மகிழ்ந்த குருநாதா
அருணை விலங்கல் மகிழ் குற மங்கை அமளி நலம் கொள் பெருமாளே

மேல்

#402
இருவினை ஊண் பசும் பை கரு விளை கூன் குடம்பை இடர் அடை பாழ் பொதும்பு அகித வாரி
இடை திரி சோங்கு கந்தம் மது அது தேங்கு கும்பம் இரவிடை தூங்குகின்ற பிண நோவுக்கு
உருவு இயல் பாண்டம் அஞ்சும் மருவிய கூண்டு நெஞ்சொடு உயிர் குடிபோம் குரம்பை அழியாது என்று
உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தி ஒழிந்து உன் உபய பதாம் புயங்கள் அடைவேனோ
அருணையில் ஓங்கு துங்க சிகரம் கராம் புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும்
அடியவர் பாங்க பண்டு புகல் அகிலாண்டம் உண்ட அபிநவ சார்ங்க கண்டன் மருகோனே
கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த வரை சாடும்
கலபக கேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர கந்த கர குலிசேந்த்ரர் தங்கள் பெருமாளே

மேல்

#403
இருள் அளகம் அவிழ மதி போத முத்து அரும்ப இலகு கயல் புரள இரு பார பொன் தனங்கள்
இளக இடை துவள வளை பூசல் இட்டு இரங்க எவராலும்
எழுத அரிய கலை நெகிழ ஆசை மெத்த உந்தி இனிய சுழி மடுவினிடை மூழ்கி நட்பொடு அந்த
இதழ் அமுது பருகி உயிர் தேகம் ஒத்திருந்து முனிவு ஆறி
முருகு கமழ் மலர் அமளி மீதினில் புகுந்து முக வனச மலர் குவிய மோகமுற்று அழிந்து
மொழி பதற வசம் அழிய ஆசையில் கவிழ்ந்து விடுபோதும்
முழுதும் உணர உடைய முது மாதவத்து உயர்ந்த பழுது இல் மறை பயிலுவ எனா தரித்து நின்று
முநிவர் சுரர் தொழுது உருகு பாத பத்மம் என்றும் மறவேனே
ஒரு சிறுவன் மணம் அது செய் போதில் எய்த்து வந்து கிழ வடிவு கொடு முடுகி வாசலில் புகுந்து
உலகு அறிய இவன் அடிமை யாம் என கொணர்ந்து சபையூடே
ஒரு பழைய சருகு மடி ஆவணத்தை அன்று உரமொடு அவன் அது வலியவே கிழிக்க நின்று
உதறி முறை இடு பழைய வேத வித்தர் தந்த சிறியோனே
அரிய உடு பதி கடவி ஆடக சிலம்பொடு அழகு வடம் மணி முடி வியாளம் இட்டு அழுந்த
அமரர் ஒடு பலர் முடுகி ஆழியை கடைந்து அமுதாக
அருளும் அரி திரு மருக வாரணத்தை அன்று அறிவினுடன் ஒரு கொடியிலே தரித்து உகந்த
அருணகிரி நகரில் எழு கோபுரத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#404
இறுகு மணி முலை மருவு தரளமும் எரியும் உமிழ் மதி நிலவாலே
இரவி எனது உயிர் கவர வரு குழல் இசையில் உறு கடல் அலையாலே
தறுகண் ரதி பதி மதனன் விடு கொடு சரமில் எளியெனும் அழியாதே
தருணம் மணி பொழில் அருணை நகர் உறை சயிலம் மிசையினில் வரவேணும்
முறுகு திரிபுரம் முறுகு கனல் எழ முருவல் உடையவர் குருநாதா
முடிய கொடு முடி அசுரர் பொடிபட முடுகு மரகத மயில் வீரா
குறவர் மடமகள் அமுத கனதன குவடு படும் ஒரு திரு மார்பா
கொடிய சுடர் இலைதனையும் எழு கடல் குறுக விட வல பெருமாளே

மேல்

#405
உலையில் அனல் ஒத்த உடலின் அனல் பற்றி உடு பதியை முட்டி அமுதூறல்
உருகி வரவிட்ட பரம சுகம் உற்று உனது அடியை நத்தி நினையாமல்
சிலை நுதலில் இட்ட திலதம் அவிர் பொட்டு திகழ் முகவர் முத்து நகையாலே
சிலுகு வலை இட்ட மயல் கவலைப்பட்டு திருடன் என வெட்கி அலைவேனோ
கலை கனக வட்ட திமிலை பறை கொட்ட கனக மயில் விட்ட கதிர் வேலா
கருதலரின் முட்டி கருகி வரு துட்ட கதம் அமணர் உற்ற குல காலா
அலை கடல் உடுத்த தலம்அதனில் வெற்றி அருணை வளர் வெற்பில் உறைவோனே
அசுரர்களை வெட்டி அமரர் சிறை விட்டு அரசு நிலை இட்ட பெருமாளே

மேல்

#406
கடல் பரவும் தரங்கம் மீது எழு திங்களாலே கருதி மிக மடந்தைமார் சொல் வதந்தியாலே
வட அனலை முனிந்து வீசிய தென்றலாலே வயல் அருணையில் வஞ்சி போத நலங்கலாமோ
இடம் உமையை மணந்த நாதர் இறைஞ்சும் வீரா எழு கிரிகள் பிளந்து வீழ எறிந்த வேலா
அடல் அசுரர் கலங்கி ஓட முனிந்த கோவே அரி பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே

மேல்

#407
கமல முக பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல் கயல் என பொன் சுழலும் விழி குழல் கார் போல்
கதிர் தரள ஒப்பிய தசனம் கமுகு களம் புய கழை பொன் கர கமலத்து உகிர் விரலின் கிளி சேரும்
குமரி திதலை தனம் மலைக்கு இசலி இணை கலசம் என குவி முலை சற்று அசைய மணி கலன் ஆட
கொடி இடை பட்டு உடை நடை பொன் சரண மயில் கமனம் என குனகி பொருள் பறிபவருக்கு உறவாமோ
திமிலை உடுக்கு உடன் முரசு பறை திமிதி திமிதிம் என டிமிடிமிடிட் டிகுர்திமிதி ஒலி தாளம்
செககண செக்கண கதற திடுதிடு என கொடு முடி எண் திகை சிலை பட்டு உவரி பட சிலை கோடி
துமிலம் உடற்று அசுரர் முடி பொடிபட ரத்தம் உள் பெருக தொகு தசை தொட்டு அலகை உண தொடும் வேலா
துவனி தினை புனம் மருவி குறமகளை களவு மயல் சுகமொடு அணைத்த அருணகிரி பெருமாளே

மேல்

#408
கமல மொட்டை கட்டு அழித்து குமிழியை நிலை குலைத்து பொன் கடத்தை தமனிய
கலச வர்க்கத்தை தகர்த்து குலை அற இளநீரை
கறுவி வட்டை பின் துரத்தி பொருது அபசயம் விளைத்து செப்பு அடித்து குலவிய
கரி மருப்பை புக்கு ஒடித்து திறல் மதன் அபிஷேகம்
அமலர் நெற்றிக்கண் தழற்குள் பொடி செய்து அதிக சக்ர புள் பறக்க கொடுமையில்
அடல் படைத்து அச்சப்படுத்தி சபதமொடு இரு தாளம்
அறைதல் கற்பித்து பொருப்பை பரவிய சிறகு அறுப்பித்து அதிர்த்து புடைபடும்
அபிநவ சித்ர தனத்து திருடிகள் உறவு ஆமோ
தமரம் மிக்கு திக்கு அதிர்க்க பல பறை தொகுதொ குக்கு தொத்தொ குக்கு தொகுதொகு
தரிகி டத்த தத்த ரிக்க தரிகிட என ஓதி
சவடு உற பக்க பழு ஒத்தி புகை எழ விழிகள் உள் செக்கச்சிவத்து குறளிகள்
தசைகள் பட்சித்து களித்து கழுதொடு கழுகு ஆட
அமலையுற்று கொக்கரித்து படுகள அசுர ரத்தத்தில் குளித்து திமி என
அடி நடித்திட்டு இட்டு இடித்து பொருதிடு மயிலோனே
அழகு மிக்க சித்ர பச்சை புரவியில் உலவு மெய் ப்ரத்யக்ஷ நல் சற்குருபர
அருணையில் சித்தித்து எனக்கு தெளிவு அருள் பெருமாளே

மேல்

#409
கரி முக கட களிறு அதிக கற்பக மத கஜ முகத்து அவுணனை கடி யானை
கடலை எள் பயறு நல் கதலியின் கனி பல கனி வயிற்றினில் அடக்கிய வேழம்
அரி முகத்தினன் எதிர்த்திடு களத்தினின் மிகுத்த அமர்புரி கணபதிக்கு இளையோனே
அயில் எடுத்து அசுரர் வெற்பு அலைவுற பொருது வெற்றியை மிகுத்த அறுமுக குமரேசா
நரி மிகு கிளைகளை பரி என கடிவளம் கையில் பிடித்து எதிர் நடத்திடும் ஈசன்
நடனம் இ படியிடத்து இனும் இசை தரையினில் கரி உரித்து அணிபவர்க்கு ஒரு சேயே
துரி பெற சரி பொழில் கன வயல் அழகு உள துரிய மெய் தரளம் மொய்த்திட வீறி
சுரர் துதித்திட மிகுத்து இயல் தழைத்து அருணையில் சுடர் அயில் சரவண பெருமாளே

மேல்

#410
கரு நிறம் சிறந்து அகல்வன புகல்வன மதன தந்திரம் கடியன கொடியன
கனக குண்டலம் பொருவன வருவன பரி தாவும்
கடலுடன் படர்ந்து அடர்வன தொடர்வன விளையும் நஞ்சு அளைந்து ஒளிர்வன பிளிர்வன
கணையை நின்று நின்று எதிர்வன முதிர்வன இளையோர் முன்
செருவை மூண்டு அகம் சிறுவன உறுவன களவு வஞ்சகம் சுழல்வன உழல்வன
தெனன தெந்தனம் தெனதென தெனதென என நாதம்
தெரி சுரும்பை வென்றிடுவன அடுவன மருள் செய் கண்கள் கொண்டு அணைவர் தம் உயிர் அது
திருகுகின்ற மங்கையர் வசம் அழிதலை ஒழிவேனோ
மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை கலகலன் கலின்கலின் என இரு சரண்
மலர்கள் நொந்துநொந்து அடி இட வடிவமும் மிக வேறாய்
வலிய சிங்கமும் கரடியும் உழுவையும் உறை செழும் புனம் தினை விளை இதண் மிசை
மறவர் தங்கள் பெண் கொடிதனை ஒரு திரு உளம் நாடி
அருகு சென்று அடைந்து அவள் சிறு பதயுக சத தளம் பணிந்து அதி வித கலவியுள்
அற மருண்டு நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் அணைவோனே
அமரர் சங்கமும் குடி புக நொடியினில் நிருதர் சங்கமும் பொடிபட அமர் செய்து
அருணை வந்து தென் திசைதனில் உறை தரு பெருமாளே

மேல்

#411
காணாத தூர நீள் நாதம் வாரி காது ஆரவாரம் அதன் பினாலே
கால் ஆளும் வேளும் ஆலால நாதர் காலால் நிலாவும் முனிந்து பூ மேல்
நாண் ஆன தோகை நூலாடை சோர நாடோர்களே ஏச அழிந்து தானே
நானா அபவாதம் மேலாக ஆக நாள்தோறும் வாடி மயங்கலாமோ
சோணாசலேச பூண் ஆரம் நீடு தோள் ஆறும்ஆறும் விளங்கு நாதா
தோலாத வீர வேலால் அடாத சூராளன் மாள வெகுண்ட கோவே
சேண் நாடர் லோகம் வாழ் மாது யானை தீராத காதல் சிறந்த மார்பா
தேவாதி கூடு மூவாதி மூவர் தேவாதி தேவர்கள் தம்பிரானே

மேல்

#412
கார் ஆடு அ குழல் ஆல் ஆலக்கணை கண்கள் சுழன்றிடவே முகங்களில்
நாலா பச்சிலையாலே மெல் புசி மஞ்சள் கலந்து அணி வாளி கொந்தள
காது ஆட கலன் மேல் ஆட குடி இன்ப ரசம் குடம் ஆர் பளிங்கு ஒளி கொங்கை மாதர்
காசு ஆசை செயலாலே சொக்கிடு விஞ்சையர் கொஞ்சிடுவார் இளம் குயில்
போலே நல் தெரு ஊடாடி துயல் தொங்கல் நெகிழ்ந்து இடையே துவண்டிட
கால் தாவி சதியோடே சித்திரம் என்ப நடம்புரிவாருடன் செயல் மிஞ்சலாகி
சீராடி சில நாள் போய் மெய் திரை வந்து கலந்து உயிர் ஓட அங்கமோடு
ஊடாடி பல நோயோடு தடி கொண்டு குரங்கு எனவே நடந்து சொல்
சீ ஓடி கிடை பாயோடு உக்கி அடங்கி அழிந்து உயிரோடு உளைஞ்சு ஒளியும் கண் மாறி
சேராமல் பொறி கேளாமல் செவி துன்பமொடு இன்பமுமே மறந்து பின்
ஊரார் சுற்றமும் மாது ஓர் மக்களும் மண்டியும் அண்டையுடே குவிந்து இது
சீசீ சிச்சிசி போகா நல் சனியன் கட என்றிடவே கிடந்து உடல் மங்குவேனோ
மாரோன் முப்புரம் நீறாய் உற்றிட அங்கி உமிழ்ந்திடுவோர் இபம் புலி தோல்
சீயத்தொடெ ஏகாசர் சடை கங்கை இளம் பிறை ஆர் அணிந்தவர்
மாடு ஏறி கடல் ஆலாலத்தையும் உண்டவர் எந்தை சிவாநுபங்கு உறை என்றன் மாதா
மாலோனுக்கு இளையாள் மா பத்தினி அம்பிகை சங்கரி மோக சுந்தரி
வேதாம கலை ரூபாள் முக்கணி நிரம்பிய கொங்கையினாள் பயந்தருள்
மா ஞான குமரா தோகை பரியின் பத வண் குருவே என அம் சுரர் தொண்டு பாட
சூரார் மக்கிட மா மேரு உக்கிட அம் கடல் எண் கிரியோடு இபம் கொடு
தீபு ஏழ் அற்றிட பாதாளத்து உறை நஞ்சு அரவின் பணம் ஆயிரம் கெட
சூழ் வாள கிரி தூளாகி பொடி விண் கண் நிறைந்திடவே நடம்புரிகின்ற வேலா
சோர்வு வேத தலை மேல் ஆடி சுக பங்கய செம் கரமோடு அகம் பெற
வாகான குற மாதோடு அற்புத மங்குல் அணங்குடனே மகிழ்ந்து நல்
தூண் ஓடி சுடர் ஆகாசத்தை அணைந்து விளங்கு அருணாசலம் திகழ் தம்பிரானே

மேல்

#413
காரும் மருவும் பெருகும் சோலை மருவும் கொடிய காகளம் அடங்கவும் முழங்கும் அதனாலே
கால் அடர வம்பு அமளி மேல் அடர வந்து பொரு காமன் விடு விஞ்சு கணை அஞ்சு மலராலே
ஊரும் உலகும் பழைய பேர் உகம் விளைந்தது என ஓர் இரவு வந்து எனது சிந்தை அழியாதே
ஊடி இரு கொங்கை மிசை கூடி வரி வண்டு இனம் உலாவிய கடம்ப மலர் தந்து அருளுவாயே
ஆரும் அரவும் பிறையும் நீரும் அணியும் சடையர் ஆதி பரவும்படி நினைந்த குருநாதா
ஆறு முகமும் குரவும் ஏறு மயிலும் குறவி ஆளும் உரமும் திருவும் அன்பும் உடையோனே
மேரு மலையும் பெரிய சூரும் மலையும் கரிய வேலை அலையும் பகையும் அஞ்ச விடும் வேலா
மேதினி இறைஞ்சும் அருணாபுரி விளங்கும் திரு வீதியில் எழுந்தருளி நின்ற பெருமாளே

மேல்

#414
கீத விநோதம் மெச்சு குரலாலே கீறும் மை ஆர் முடித்த குழலாலே
நீதி இலாது அழித்தும் உழலாதே நீ மயில் ஏறி உற்று வரவேணும்
சூது அமர் சூர் உட்க பொரு சூரா சோண கிரியில் உற்ற குமரேசா
ஆதியர் காது ஒரு சொல் அருள்வோனே ஆனை முகார் கனிட்ட பெருமாளே

மேல்

#415
குரவ நறும் அளக குழல் கோதி காட்டியெ குலவும் இரு கயல்கள் விழி மோதி தாக்கியெ
குமுத மலர் ஒளி பவள வாயை காட்டியெ குழையாத
குணம் உறுக இனிது பயில் கூறி காட்டியெ குலைய இரு கலை நெகிழ வீசி காட்டியெ
குடவியிடும் அரிவைர்கள் ஆசை பாட்டிலெ கொடியேன் யான்
பொருள் இளமை கலை மனமும் ஏக போக்கிய புலையன் இவன் என உலகம் ஏச போக்கு என
பொறி வழியில் அறிவு அழிய பூத சேட்டைகள் பெருகாதே
புது மலர்கள் மருவும் இரு பாதத்து ஆற்றியெ பொது வகையில் அருணை நிலை நீள் கர்த்தா என
புகழ் அடிமைதனை உனது பார்வை காத்திட நினையாதோ
அரவம் உடன் அறுகு மதி ஆர் மத்தாக்கமும் மணியும் ஒரு சடை மவுலி நாதர்க்கு ஏற்கவெ
அறிவரிய ஒரு பொருளை போதத்து ஏற்றிய அறிவோனே
அழகு செறி குழலியர்கள் வான தாட்டியர் தரும் அமுது சரவணையில் வாவி தேக்கியெ
அறு சிறுவர் ஒரு உடலமாகி தோற்றிய இளையோனே
சுரர் உலவ அசுரர்கள் மாள தூள்பட துயவும் உடல் அயிலை விடும் மா உக்ராக்ரம
சுவறி எழு கடலும் முறையாக கூப்பிட முனிவோனே
துடி முழவு மறவர் இட சேவல் காட்டினில் துணை மலரின் அணுகி தினை காவல் காத்தனை
சுரிய குழல் குறமகளை வேளை காத்து அணை பெருமாளே

மேல்

#416
குழவியுமாய் மோகம் மோகித குமரனுமாய் வீடு காதலி குலவனுமாய் நாடு காடொடு தடுமாறி
குனி கொடு கூன் நீடு மா கிடு கிழவனுமாய் ஆவி போய்விட விறகுடனே தூளியாவதும் அறியா தாய்
பழய சடாதார மேல் நிகழ் கழி உடல் காணா நிராதர பரிவிலி வான் நாலை நாள்தொறு மடை மாறி
பல பலவாம் யோக சாதக உடல் கொடு மாயாத போதக பதி அழியா வீடு போய் இனி அடைவேனோ
எழு கடல் தீமூள மேருவும் இடிபட வேதாவும் வேதமும் இரவியும் வாய் பாறி ஓடிட முது சேடன்
இருள் அறு பாதாளலோகமும் இமையமும் நீறாக வாள் கிரி இரு பிளவாய் வீழ மாதிர மலை சாய
அழகிய மா பாகசாதனன் அமரரும் ஊர் பூத மாறு செய் அவுணர் தம் மா சேனை தூள் எழ விளையாடி
அமரினை மேவாத சூரரை அமர்செயும் வேலாயுதா உயர் அருணையில் வாழ்வாக மேவிய பெருமாளே

மேல்

#417
கேதகைய பூ முடித்த மாதர் தம் மயாலில் உற்று கேவலம் அதான அற்ப நினைவாலே
கேள்வி அது இலாதிருக்கும் ஊழ் வினையினால் மிகுத்த கேடு உறுகவே நினைக்கும் வினையாலே
வேதனையிலே மிகுத்த பாதகனுமாய் அவத்தில் மேதினி எலாம் உழற்றும் அடியேனை
வீடு உதவி ஆள வெற்றி வேல் கரம் அதே எடுத்து வீறு மயில் மீதில் உற்று வருவாயே
நீதி நெறியே அழித்த தாருகனை வேரறுத்து நீடு புகழ் தேவர் இல்கள் குடியேற
நீடு அருளினால் விடுத்த பால குமரா செழித்த நீல நிற மால் தனக்கு மருகோனே
சோதி அனலா உதித்த சோணகிரி மா மலைக்குள் சோபை வட கோபுரத்தில் உறைவோனே
சோனை மழை போல் எதிர்த்த தானவர்கள் மாள வெற்றி தோளின் மிசை வாள் எடுத்த பெருமாளே

மேல்

#418
கோடு ஆன மடவார்கள் முலை மீதே கூர் வேலை இணையான விழியூடே
ஊடாடி அவரோடும் உழலாதே ஊராக திகழ் பாதம் அருள்வாயே
நீடு ஆழி சுழல் தேசம் வலமாக நீடு ஓடி மயில் மீது வருவோனே
சூடானது ஒரு சோதி மலை மேவு சோணாடு புகழ் தேவர் பெருமாளே

மேல்

#419
கோடு செறி மத்தகத்தை வீசு பலை தத்த ஒத்தி கூறு செய்து அழித்து உரித்து நடை மாணார்
கோள் உலவும் முப்புரத்தை வாள் எரி கொளுத்திவிட்ட கோப நுதல் அ தரத்தர் குருநாதா
நீடு கனக தலத்தை ஊடுருவி மற்ற வெற்பு நீறு எழ மிதித்த நித்த மனதாலே
நீப மலர் பத்தி மெத்த ஓதும் அவர் சித்தம் மெத்த நீல மயில் தத்த விட்டு வரவேணும்
ஆடல் அணி பொன் சிலை கை வேடுவர் புன குறத்தி ஆரம் அது மெத்து சித்ர முலை மீதே
ஆதரவு பற்றி மெத்த மா மணி நிறைத்த வெற்றி ஆறிரு திரு புயத்தில் அணை வீரா
தேடி இமையொர் புத்தி மெத்தி நீடுற நினைத்த பத்தி சீருற உள தெரித்த சிவ வேளே
தேறு அருணையில் தரித்த சேண் முகடு இடத்து அடர்த்த தேவர் சிறை வெட்டிவிட்ட பெருமாளே

மேல்

#420
சிலை நுதல் வைத்து சிறந்த குங்கும திலதமும் இட்டு குளிர்ந்த பங்கய
திரு முக வட்டத்து அமர்ந்த மென் குமிழ்தனில் ஏறி
செழு மணி ரத்நத்து இலங்கு பைம் குழைதனை முனிவுற்று சிவந்து நஞ்சு அணி
செயலினை ஒத்து தயங்கு வஞ்சக விழி சீறி
புலவி மிகுத்திட்டு இருந்த வஞ்சியர் பத மலருக்குள் பணிந்து அணிந்த அணி
புரி வளை கைக்குள் கலின்கல் என்றிட அநுராகம்
புகழ் நல் மெத்த புரிந்து கொங்கையில் உருகி அணைத்து பெரும் ப்ரியம் கொடு
புணரினும் நின் பொன் பதங்கள் நெஞ்சினுள் மறவேனே
கலை மதி வைத்து புனைந்து செம் சடை மலைமகள் பக்கத்து அமர்ந்து இருந்திட
கணகண கட்கட் கணின்கண் என்றிட நடம் ஆடும்
கருணையன் உற்ற த்ரியம்பகன் தரு முருக புனத்தில் திரிந்த மென் கொடி
கன தன வெற்பில் கலந்து அணைந்து அருள் புய வீரா
அலை கடல் புக்கு பொரும் பெரும் படை அவுணரை வெட்டி களைந்து வென்று உயர்
அமரர் தொழ பொன் சதங்கை கொஞ்சிட வருவோனே
அடியவர் அச்சத்து அழுங்கிடும் துயர்தனை ஒழிவித்து ப்ரியங்கள் தந்திடும்
அருணகிரிக்குள் சிறந்து அமர்ந்து அருள் பெருமாளே

மேல்

#421
சிவ மாதுடனே அநுபோகமதாய் சிவஞான அமுதே பசி ஆறி
திகழ்வோடு இருவோரும் ஒரு ரூபமதாய் திசை லோகம் எலாம் அனுபோகி
இவனே என மால் அயனோடு அமரோர் இளையோன் எனவே மறை ஓத
இறையோன் இடமாய் விளையாடுகவே இயல் வேலுடன் மா அருள்வாயே
தவ லோகம் எலாம் முறையோ எனவே தழல் வேல் கொடுபோய் அசுராரை
தலை தூள்பட ஏழ் கடல் தூள்பட மாதவம் வாழ்வுறவே விடுவோனே
கவர் பூ வடிவாள் குற மாதுடன் மால் கடனாம் எனவே அணை மார்பா
கடையேன் மிடி தூள் பட நோய் விடவே கனல் மால் வரை சேர் பெருமாளே

மேல்

#422
சின முடுவல் நரி கழுகுடன் பருந்தின் கணம் கொடி கெருடன் அலகை புழு உண்டு கண்டு இன்புறும்
செடம் அளறு மல சலமொடு என்பு துன்றும் கலம் துன்பம் மேவும்
செனன வலை மரண வலை ரண்டும் முன் பின் தொடர்ந்து அணுகும் உடல் அநெக வடிவு இங்கு அடைந்து அம்பரம்
சிறு மணலை அளவிடினும் அங்கு உயர்ந்து இங்கு உலந்து ஒன்றும் நாயேன்
கனக புவி நிழல் மருவி அன்புறும் தொண்டர் பங்கு குறுக இனி அருள் கிருபை வந்து தந்து என்றும் உன்
கடன் எனது உடலும் உயிரும் உன் பரம் தொண்டு கொண்டு அன்பரோடே
கலவி நலம் மருவி வடிவம் சிறந்து உன் பதம் புணர் கரணம் மயில் புறமொடு இன்பு கொண்டு அண்டரும்
கனக மலர் பொழிய உனது அன்பு உகந்து இன்று முன் சிந்தியாதோ
தனனதன தனனதன தந்தனம் தந்தனம் தகுகுகுகு குகுகுகுகு டங்குடம் குந்தடம்
தவில் முரசு பறை திமிலை டிங்கு டிங்குந்து அடர்ந்த அண்டர் பேரி
தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண் டிமிடிமிட டகுர்திகுகு சங்கு வெண் கொம்பு திண்
கடையுகமொடு ஒலிய கடல் அஞ்ச வஞ்சன் குலம் சிந்தி மாள
சினம் முடுகி அயில் அருளி உம்பர் அந்த அம்பரம் திசை உரகர் புவி உளது மந்தரம் பங்கயன்
செகம் முழுது மகிழ அரி அம்புயன் தொண்டு கொண்டு அஞ்சல் பாட
திரு முறுவல் அருளி எனது எந்தையின் பங்குறும் கவுரி மனம் உருக ஒரு கங்கை கண்டு அன்புறும்
திரு அருணகிரி மருவு சங்கரன் கும்பிடும் தம்பிரானே

மேல்

#423
சுக்கில சுரோணிதத்தில் உற்ற நளினத்தில் அப்பு என ரத்தம் முற்றி சுக
சுக்கில குளிகை ஒத்து கெர்ப்ப குகை வந்து கோல
தொப்பை இட்ட வயிறில் பெருத்து மிக வட்டமிட்டு உடல் வெப்பமுற்று மதி
சொல் பத்தின் மறி அக்ஷரத்தினுடை விஞ்சையாலே
கக்க நல் புவியில் உற்று அரற்றி முலையை கொடுக்க அமுர்தை புசித்து வளர்கைக்கு
அசத்தியொடு உழைத்து தத்து நடை அந்தம் மேவி
கற்று வெற்று அறிவு பெற்று தொக்கை மயில் ஒத்த மக்கள் மயலில் குளித்து நெறி
கட்டி இப்படி பிறப்பில் உற்று உடலம் மங்குவேனோ
தெற்கு அரக்கர் பவிஷை குலைத்து விடணற்கு நத்து அரசு அளித்து முத்தி கொடு
சித்திர திரு உரத்த சக்கிரி தன் மருகோனே
செ கரத்தின் மலை முப்புரத்தில் எரி இட்ட சத்தி சிவன் உற்று நத்த மிகு
சித்து அனைத்தையும் விழித்த சத்தி உமை தந்த பாலா
தர்க்கம் இட்ட அசுரரை கெலித்து மலை உக்க எழு கடல் கொளுத்தி அட்ட திசை
தட்ட முட்டை அடைய கொடி புகையில் மண்டும் வேலா
தத்தை வித்ரும நிறத்தி முத்து அணி குறத்தி கற்பக வனத்தி சித்தம் அவை
தக்கு நத்த அருணைக்கிரிக்குள் மகிழ் தம்பிரானே

மேல்

#424
செம் சொல் பண் பெற்றிடு குட மா முலை கும்ப தந்தி குவடு என வாலிய
தெந்த பந்தி தரளம் அதாம் என இடர் ஆவி
சிந்தி கந்தித்து இடு களையாம் உனது அங்கத்து அம் பொற்பு எது என ஓதுவது
திண் துப்பும் தித்திடு கனி தான் உன் இதழாமோ
மஞ்சு ஒக்கும் கொத்த அளகம் எனா மிடை கஞ்சத்து இன்புற்று இரு திருவே இள
வஞ்சி கொம்பு ஒப்பு எனும் மயிலே என முறை ஏய
வந்தித்து இந்த படி மடவாரொடு கொஞ்சி கெஞ்சி தினம் அவர் தாள் தொழு
மந்த புந்தி கசடன் எந்நாள் உனது அடி சேர்வேன்
நஞ்சை கண்டத்து இடுபவர் ஆரொடு திங்கள் பிஞ்சு அக்கு அரவு அணி வேணியர்
நம்பர் செம்பொன் பெயர் அசுரேசனை உகிராலே
நந்த கொந்தி சொரி குடல் சோர் வர நந்தி கம்பத்து எழு நர கேசரி
நஞ்ச குண்டைக்கு ஒரு வழி ஏது என மிக நாடி
வெஞ்ச சிம்புள் சொருபம் அது ஆனவர் பங்கில் பெண் கற்புடைய பெண் நாயகி
விந்தை செம் கை பொலி சுத வேடுவர் புனம் மீதே
வெண்டி தங்கி திரி கிழவா அதி துங்க துங்க கிரி அருணாபுரி
வெம் கண் சிங்கத்து அடி மயில் ஏறிய பெருமாளே

மேல்

#425
செயசெய அருணாத்திரி சிவய நம செயசெய அருணாத்திரி மசிவயந
செயசெய அருணாத்திரி நமசிவய திருமூலா
செயசெய அருணாத்திரி யநமசிவ செயசெய அருணாத்திரி வயநமசி
செயசெய அருணாத்திரி சிவய நமஸ்த்து என மாறி
செயசெய அருணாத்திரிதனின் விழி வைத்து அரகர சரணாத்திரி என உருகி
செயசெய குரு பாக்கியம் என மருவி சுடர் தாளை
சிவசிவ சரணாத்திரி செயசெய என சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக
திருவடி சிவ வாக்கிய கடல் அமுதை குடியேனோ
செயசெய சரணாத்திரி என முநிவர் கணம் இது வினை காத்திடும் என மருவ
செட முடி மலை போற்று அவுணர்கள் அவிய சுடும் வேலா
திரு முடி அடி பார்த்திடும் என இருவர்க்கு அடி தலை தெரியாப்படி நிண அருண
சிவ சுடர் சிகி நாட்டவன் இரு செவியில் புகல்வோனே
செயசெய சரணாத்திரி எனும் அடியெற்கு இருவினை பொடியாக்கிய சுடர் வெளியில்
திரு நடம் இது பார்த்திடும் என மகிழ் பொன் குருநாதா
திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத குறமகள் முலை மேல் புது மணம் மருவி
சிவகிரி அருணாத்திரி தலம் மகிழ் பொன் பெருமாளே

மேல்

#426
தமரம் குரங்களும் கார் இருள் பிழம்பு மெழுகிய அங்கமும் பார்வையில் கொளுந்து
தழல் உமிழ் கண்களும் காளம் ஒத்த கொம்பும் உள கதம் கடமா மேல்
தனி வரும் அந்தகன் பாசம் விட்டு எறிந்து அட வரும் என்று சிந்தாகுலத்து இருந்து
தமர் அழ மைந்தரும் சோகமுற்று இரங்க மரண பக்குவம் ஆ நாள்
கமல முகங்களும் கோமளத்து இலங்கு நகையு நெடும் கணும் காதினில் உற்று உலங்கு
கனக குதம்பையும் தோடும் வஜ்ர அங்கதமும் அடர் சுடர் வேலும்
கடிது உலகு எங்கணும் தாடி இட்டு வந்த மயிலும் இலங்கு அலங்கார பொன் சதங்கை
கழல் ஒலி தண்டையம் காலும் ஒக்க வந்து வரம் எனக்கு அருள்கூர்வாய்
இமகிரி வந்த பொன் பாவை பச்சை வஞ்சி அகில தலம் பெறும் பூவை சத்தி அம்பை
இள முலையின் செழும் பால் குடித்து இலங்கும் இயல் நிமிர்ந்திடுவோனே
இறைவர் இறைஞ்ச நின்று ஆகம ப்ரசங்கம் உரை செய்திடும் ப்ரசண்டா விசித்து நின்ற
ரண முக துங்க வெம் சூர் உடல் பிளந்த அயில் உடை கதிர் வேலா
அமணர் அடங்கலும் கூடலில் திரண்டு கழுவில் உதைந்துதைந்து ஏறவிட்டு நின்ற
அபிநவ துங்க கங்கா நதிக்கு மைந்த அடியவர்க்கு எளியோனே
அமரர் வணங்கு கந்தா குறத்தி கொங்கைதனில் முழுகும் கடம்பா மிகுத்த செம் சொல்
அருணை நெடும் தடம் கோபுரத்து அமர்ந்த அறுமுக பெருமாளே

மேல்

#427
தமிழ் ஓதிய குயிலோ மயில் ஆண்டலையாம் புறவம்
கிளி காடை இன் அணில் ஏர் அளியாம் குரல் வாய்ந்த அதி செம்
தகு மா மிடறு ஒலியார் இதழாம் சுளை தேன் கனியின் சுவை சேரும்
தன பாரமும் மலையாம் என ஓங்கிட மா பொறி சிந்திட
வேல் விழி நுதலோ சிலை வாள் பிறை மாந்துளிரின்
சரிர ஆர் குழல் இருளோ நகை ஓங்கிய வான் கதிரின் சுடர் பாய
குமிழ் நாசியின் முகமோ மதியாம் குளிர் சேம் கமலம்
சரி தோடு இணை செவி ஆடு ஊசலாம் களம் பூம் கமுகம்
கொடி நூல் இடை உடையார் அனமாம் ப்ரியர் மாண் புரி மின் கொடி மாதர்
குணமோடு அமளியில் ஆடினும் ஓங்கிய பூம் கமலம்
சரணூபுர குரல் ஓசையும் ஏந்திடு மா அண்டலையின்
கொடியோடு எழுத அரிதாம் வடிவு ஓங்கிய பாங்கையும் மன் தகையேனே
திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொம்
தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொம்
திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகம் என்று இயல் பேரி
திசை மூடுக கடல் ஏழ் பொடியாம்படி ஓங்கிய வெம்
கரி தேர் பரி அசுரார்கள் மாண்டிட நீண்ட அரவின்
சிர மீள் பட குவடு ஓதுகள் வான் பெற வாங்கிய வண் கதிர் வேலா
கமழ் மா இதழ் சடையார் அடியேன் துயர் தீர்ந்திட வெண்
தழல் மா பொடி அருள்வோர் அடல் மான் துடி தாங்கிய வண்
கரர் மாடு அருள் உமையாள் எமை ஈன்றவள் ஈன்ற மென் குரவோனே
கடையேன் இருவினை நோய் மல மாண்டிட தீண்டிய ஒண்
சுக மோகினி வளி நாயகி பாங்கன் எனாம் பகர் மின்
கலை நூல் உடை முருகா அழல் ஓங்கிய ஓங்கலின் வண் பெருமாளே

மேல்

#428
தலையை மழித்து சிவந்த துணியை அரைக்கு புனைந்து சடையை வளர்த்து புரிந்து புலி ஆடை
சதிரொடு உவப்ப புனைந்து விரகொடு கற்க புகுந்து தவம் ஒரு சத்தத்து அறிந்து திருநீறு
கலையை மிகுத்திட்டு அணிந்து கரண வலைக்குள் புகுந்து கதறு நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே
கனகம் இயற்றி திரிந்து துவளும் எனை சற்று அறிந்து கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே
அலை கடலில் கொக்கு அரிந்தும் அரு வரையை பொட்டு எறிந்தும் அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனை
அருளொடு கைப்பற்றி வந்தும் அருணகிரி புக்கிருந்தும் அறிவு உள பத்தர்க்கு இரங்கும் இளையோனே
மலையை வளைத்து பறந்து மருவு புரத்தை சிவந்து வறிது நகைத்திட்டு இருந்த சிவனார்தம்
மதலை புனத்தில் புகுந்து நர வடிவுற்று திரிந்து மற மயிலை சுற்றி வந்த பெருமாளே

மேல்

#429
திருட்டு வாணிப விக்ரம துட்டிகள் மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள்
செகத்து நீலிகள் கெட்ட பரத்தைகள் மிக நாணார்
சிலைக்கு நேர் புருவ பெரு நெற்றிகள் எடுப்பு மார்பிகள் எச்சில் உதட்டிகள்
சிரித்து மாநுடர் சித்தம் உருக்கிகள் விழியாலே
வெருட்டி மேல் விழு பப்பர மட்டைகள் மிகுத்த பாவிகள் வட்ட முகத்தினை
மினுக்கி ஓலைகள் பித்தளையில் பணி மிக நீறால்
விளக்கியே குழை இட்ட புரட்டிகள் தமக்கு மால் கொடு நிற்கும் மருள்தனை
விடுத்து தான் ஒருமித்து இரு பொன் கழல் பணிவேனோ
தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு
தகுத்த தீதிகு தக்குகு திக்குகு என தாளம்
தட கை தாளமும் இட்டு இயல் மத்தளம் இடக்கை தாளமும் ஒக்க நடித்து ஒளி
தரித்த கூளிகள் தத்திமி தித்தென கண பூதம்
அருக்கனார் ஒளியில் ப்ரபை உற்றிடும் இரத்த மா முடியைக்கொடு உக கழல்
அட கையாடி நிணத்தை எடுத்து உண அறிவே தான்
அரக்கர் சேனைகள் பட்டு விழ செறி திரு கை வேல்தனை விட்டு அருளி பொரும்
அருள் குகா அருணை பதியுற்று அருள் பெருமாளே

மேல்

#430
தேது என வாசமுற்ற கீத விநோதம் மெச்சு தேன் அளி சூழ மொய்த்த மலராலே
சீறும் அரா எயிற்றில் ஊறிய காளம் விட்ட சீத நிலா எறிக்கும் அனலாலே
போதனை நீதி அற்ற வேதனை வாளி தொட்ட போர் மத ராஜனுக்கும் அழியாதே
போகம் எலா நிறைத்து மோக விடாய் மிகுத்த பூவையை நீ அணைக்க வரவேணும்
மாதினை வேணி வைத்த நாதனும் ஓது பச்சை மாயனும் ஆதரிக்கும் மயில் வீரா
வானவர் சேனை முற்றும் வாழ் அமராபதிக்குள் வாரணமான தத்தை மணவாளா
மேதினியோர் தழைக்கவே அருணாசலத்து வீதியின் மேவி நிற்கும் முருகோனே
மேருவை நீறு எழுப்பி நான்முகனார் பதத்தில் வேல் அடையாளம் இட்ட பெருமாளே

மேல்

#431
தோதக பெரும் பயோதரத்து இயங்கும் தோகையர்க்கு நெஞ்சம் அழியாதே
சூலை வெப்பு அடர்ந்த வாதம் பித்தம் என்று சூழ் பிணி கணங்கள் அணுகாதே
பாதக சமன் தன் மேதியில் புகுந்து பாசம் விட்டு எறிந்து பிடியாதே
பாவலற்கு இரங்கி நாவலர்க்கு இசைந்த பாடல் மிக்க செம் சொல் தரவேணும்
வேதம் மிக்க விந்து நாதம் மெய் கடம்ப வீரபத்ர கந்த முருகோனே
மேருவை பிளந்து சூரனை கடிந்து வேலையில் தொளைந்த கதிர் வேலா
கோதை பொன் குறிஞ்சி மாது கச்சு அணிந்த கோமள குரும்பை புணர்வோனே
கோலமுற்று இலங்கு சோண வெற்பு உயர்ந்த கோபுரத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#432
பாண மலர் அது தைக்கும் படியாலே பாவி இள மதி கக்கும் கனலாலே
நாணம் அழிய உரைக்கும் குயிலாலே நானும் மயலில் இளைக்கும் தரமோ தான்
சேணில் அரிவை அணைக்கும் திரு மார்பா தேவர் மகுடம் அணைக்கும் கழல் வீரா
காண அருணையில் நிற்கும் கதிர் வேலா காலன் முதுகை விரிக்கும் பெருமாளே

மேல்

#433
பாலாய் நூலாய் தேனாய் நீளாய் பாகாய் வாய் சொல் கொடியார் தாம்
பாடா வாடா வேள் தாவாலே பாடாய் ஈடு அற்று இடை பீறும்
தோலாலே காலாலே ஊனாலே சூழ் பாச குடில் மாசு
தோயா மாயா ஓயா நோயால் சோர்வாய் மாளக்கடவேனோ
ஞாலா மேலா வேதா போதா நாதா சோதி கிரியோனே
ஞானாசார வான் ஆள் கோனே நானா வேத பொருளோனே
வேலா பாலா சீல ஆகாரா வேளே வேட கொடி கோவே
வீர ஆதாரா ஆறு ஆதாரா வீரா வீர பெருமாளே

மேல்

#434
புணர் முலை மடந்தை மாதர் வலையினில் உழன்று அநேக பொறி உடல் இறந்து போனது அளவேது உன்
புகழ் மறை அறிந்து கூறும் இனி எனது அகம் பொன் ஆவி பொருள் என நினைந்து நாயென் இடர் தீர
மனம் உணர் மடந்தைமாரொடு திரு முகங்கள் ஆறு மணி கிரியிடம் கொள் பாநு வெயில் ஆசை
வரி பரவ அனந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத மயில் மிசை மகிழ்ந்து நாடி வரவேணும்
பண முலை அரம்பைமார்கள் குயில் கிளி இனங்கள் போல பரிவு கொண்டு உகந்து வேதம் அது கூற
பறை முரசு அநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர் படை கடல் இறந்து போக விடும் வேலா
அணி சுக நரம்பு வீணை குயில் புற இனங்கள் போல அமளியில் களங்கள் ஓசை வளர் மாது
அரி மகள் மணம் கொண்டு ஏகி எனது இடர் எரிந்து போக அருணையில் விலங்கல் மேவு பெருமாளே

மேல்

#435
புலையனான மா வீணன் வினையில் ஏகு மா பாதன் பொறை இலாத கோபீகன் முழு மூடன்
புகழ் இலாத தாம்பீகன் அறிவு இலாத காபோதி பொதிகள் ஓடிப்போய் வீழும் அதி சூதன்
நிலை இலாத கோமாளி கொடை இலாத ஊதாரி நெறி இலாத ஏமாளி குல பாதன்
நினது தாளை நாள்தோறும் மனதில் ஆசை வீடாமல் நினையுமாறு நீ மேவி அருள்வாயே
சிலையில் வாளி தான் ஏவி எதிரி ராவணார் தோள்கள் சிதையுமாறு போராடி ஒரு சீதை
சிறை இலாமலே கூடி புவனி மீதிலே வீறு திறமியான மா மாயன் மருகோனே
அலைய மேரு மா சூரர் பொடியதாக வேல் ஏவி அமர் அது ஆடியே தோகை மயில் ஏறி
அதிக தேவரே சூழ உலக மீதிலே கூறும் அருணை மீதிலே மேவு பெருமாளே

மேல்

#436
போக கற்ப கடவுள் பூருகத்தை புயலை பாரியை பொன் குவை உச்சி பொழுதில் ஈயும்
போது உடை புத்திரரை போல ஒப்பிட்டு உலகத்தோரை மெச்சி பிரிய பட்டு மிடி போக
தியாக மெத்த தருதற்கு ஆசு நல் சித்திர வித்தாரம் உள்பட்ட திருட்டு கவிகள் பாடி
தேடி இட்டப்படு பொன் பாவையர்க்கு இட்டு அவர்கள் சேல் வலைப்பட்டு அடிமைப்பட்டு விடலாமோ
ஆகம பத்தரும் மற்று ஆரண சுத்தரும் உற்று ஆதரிக்கைக்கு அருணை துப்பு மதில் சூழும்
ஆடக சித்ர மணி கோபுரத்து உத்தர திக்காக வெற்றி கலப கற்கி அமர்வோனே
தோகையை பெற்ற இட பாகர் ஒற்றை பகழி தூணி முட்ட சுவற திக்கில் எழு பார
சோதி வெற்பு எட்டும் உதிர்த்து தூளிதப்பட்டு அமிழ சூரனை பட்டு உருவ தொட்ட பெருமாளே

மேல்

#437
மானை விடத்தை தடத்தினில் கயல் மீனை நிரப்பி குனித்து விட்டு அணை
வாளியை வட்ட சமுத்திரத்தினை வடி வேலை
வாளை வனத்து உற்பலத்தினை செல மீனை விழிக்கு ஒப்பென பிடித்தவர்
மாய வலைப்பட்டு இலை துடக்கு உழல் மணம் நாறும்
ஊன இடத்தை சடக்கு என கொழு ஊறும் உபத்தம் கரு தடத்தினை
ஊது பிணத்தை குண த்ரயத்தோடு தடுமாறும்
ஊசலை நித்தத்வம் அற்ற செத்தை உபாதையை ஒப்பித்து உனி பவத்து அற
ஓகை செலுத்தி ப்ரமிக்கும் இ ப்ரமை தெளியாதோ
சானகி கற்பு தனை சுட தன் அசோக வனத்தில் சிறை படுத்திய
தானை அரக்கர் குலத்தர் அத்தனைவரும் மாள
சாலை மரத்து புறத்து ஒளித்து அடல் வாலி உரத்தில் சரத்தை விட்டு ஒரு
தாரைதனை சுக்ரிவற்கு அளித்தவன் மருகோனே
சோனை மிகுத்து திரள் புனத்தினில் ஆனை மதத்து கிடக்கும் அற்புத
சோணகிரி சுத்தர் பெற்ற கொற்றவ மணி நீப
தோள் கொண்டு சக்ர பொருப்பினை பொடியாக நெருக்கி செரு களத்து எதிர்
சூரனை வெட்டி துணித்து அடக்கிய பெருமாளே

மேல்

#438
முக துலக்கிகள் ஆசார ஈனிகள் விலை சிறுக்கிகள் நேரா அசடிகள்
முழு சமர்த்திகள் காமா விரகிகள் முந்து சூது
மொழி பரத்தைகள் காசு ஆசையில் முலை பலர்க்கும் விற்பவர் நானா அநுபவம்
முயற்று பொட்டிகள் மோகாவலம் உறுகின்ற மூடர்
செகத்தில் எத்திகள் சார்வாய் மயக்கிகள் திருட்டு மட்டைகள் மாயா சொரூபிகள்
சிரித்து உருக்கிகள் ஆகா என நகை சிந்தை மாய
திரள் பொறிச்சிகள் மா பாவிகள் அபகடத்து சட்டைகள் மூதேவிகளொடு
திளைத்தல் அற்று இரு சீர் பாதமும் இனி என்று சேர்வேன்
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு செகுச்செ குச்செகு சேசே செககண
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு தொந்ததீதோ
துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு திகுத்தி குத்திகு தீதோ என ஒரு
துவக்க நிர்த்தனம் ஆடா உறைபவர் தொண்டர் பேணும்
அகத்தியப்பனும் மால் வேதனும் அறம் வளர்த்த கற்பக மா ஞாலியும் மகிழவுற்ற
நித்த பிரானே அருணையில் நின்ற கோவே
அமர் களத்து ஒரு சூரேசனை விழ முறித்து உழக்கிய அ வானேர் குடி புக
அமர்த்தி விட்ட சுவாமீ அடியவர் தம்பிரானே

மேல்

#439
மேகம் ஒத்த குழலார் சிலை புருவ வாளி ஒத்த விழியார் முக கமல
மீது பொட்டு இடு அழகார் களத்தினில் வடம் ஆட
மேரு ஒத்த முலையார் பளப்பளென மார்பு துத்தி புயவார் வளை கடகம்
வீறிட துவளு நூலோடு ஒத்த இடை உடை மாதர்
தோகை பக்ஷி நடையார் பதத்தில் இடு நூபுர குரல்கள் பாட அக துகில்கள்
சோர நல் தெருவூடே நடித்து முலை விலை கூறி
சூதக சரசமோடெ எத்தி வருவோரை நத்தி விழியால் மருட்டி மயல்
தூள் மருத்து இடு உயிரே பறிப்பவர்கள் உறவாமோ
சேகண செகண தோதிமி திகுட டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி
தீத கத்திமிததோ உடுக்கை மணி முரசு ஓதை
தேசம் உட்க அர ஆயிர சிரமும் மூளி பட்டு மக மேரு உக்க அவுணர்
தீவு கெட்டு முறையோ என கதற விடும் வேலா
ஆகமத்தி பல காரணத்தி எனை ஈண சத்தி அரி ஆசனத்தி சிவன்
ஆகம் உற்ற சிவகாமி பத்தினியின் முருகோனே
ஆரணற்கு மறை தேடி இட்ட திரு மால் மகள் சிறுமி மோக சித்ர வளி
ஆசை பற்றி அருணாசலத்தின் மகிழ் பெருமாளே

மேல்

#440
மொழிய நிறம் கறுத்து மகர இனம் கலக்கி முடிய வளைந்து அரற்று கடலாலும்
முதிர இடம் பரப்பி வடவை முகம் தழற்குள் முழுகி எழுந்து இருக்கும் நிலவாலும்
மழை அளகம் தரித்த கொடி இடை வஞ்சி உற்ற மயல் தணியும் படிக்கு நினைவாயே
மரகத துங்க வெற்றி விகட நடம் கொள் சித்ர மயிலினில் வந்து முத்தி தரவேணும்
அழகிய மென் குறத்தி புளகித சந்தனத்தின் அமுத தனம் படைத்த திரு மார்பா
அமரர் புரம் தனக்கும் அழகிய செந்திலுக்கும் அருணை வளம் பதிக்கும் இறையோனே
எழு புவனம் பிழைக்க அசுரர் சிரம் தெறிக்க எழு சயிலம் தொளைத்த சுடர் வேலா
இரவிகள் அந்தரத்தர் அரி அர பங்கயத்தர் இவர்கள் பயம் தவிர்த்த பெருமாளே

மேல்

#441
வலி வாத பித்தமொடு களம் மாலை விப்புருதி வறள் சூலை குட்டமொடு குளிர் தாகம்
மலி நீர் இழிச்சல் பெரு வயிறு ஈளை கக்கு களை வரு நீர் அடைப்பினுடன் வெகு கோடி
சிலை நோய் அடைத்த உடல் புவி மீது எடுத்து உழல்கை தெளியா எனக்கும் இனி முடியாதே
சிவம் ஆர் திரு புகழை எனு நாவினில் புகழ சிவஞான சித்திதனை அருள்வாயே
தொலையாத பத்தி உள திருமால் களிக்க ஒரு சுடர் வீசு சக்ரம் அதை அருள் ஞான
துவர் வேணியப்பன் மிகு சிவகாமி கர்த்தன் மிகு சுக வாரி சித்தன் அருள் முருகோனே
அலை சூரன் வெற்பும் அரி முகன் ஆனை வத்திரனொடு அசுரார் இறக்க விடும் அழல் வேலா
அமுத ஆசனத்தி குற மடவாள் கரி பெணொடும் அருணாசலத்தில் உறை பெருமாளே

மேல்

#442
விடு மதவேள் வாளியின் விசை பெறும் ஆலாகல விழி கொடு வா போ என உரையாடும்
விரகுடன் நூறாயிரம் மனம் உடை மா பாவிகள் ம்ருகமத கோலாகல முலை தோய
அடையவும் ஆசா பரவசமுறு கோமாளியை அவனியும் ஆகாசமும் வசை பேசும்
அசட அநாசாரனை அவலனை ஆபாசனை அடியவரோடு ஆள்வதும் ஒரு நாளே
வட குல கோபாலர்தம் ஒரு பதி நூறாயிரம் வனிதையர் தோள் தோய் தரும் அபிராம
மரகத நாராயணன் மருமக சோணாசல மகிப சதா காலமும் இளையோனே
உடுபதி சாயாபதி சுரபதி மாயாது உற உலகு உய வார் ஆர்கலி வறிது ஆக
உயரிய மா நாகமு நிருதரும் நீறாய் விழ ஒரு தனி வேல் ஏவிய பெருமாளே

மேல்

#443
விதி அதாகவே பருவ மாதரார் விரகிலே மனம் தடுமாறி
விவரமானது ஓர் அறிவு மாறியே வினையிலே அலைந்திடு மூடன்
முதிய மா தமிழ் இசை அதாகவே மொழி செய்தே நினைந்திடுமாறு
முறைமையாக நின் அடிகள் மேவவே முனிவு தீர வந்து அருள்வாயே
சதி அதாகிய அசுரர் மா முடி தரணி மீது உகும் சமர் ஆடி
சகல லோகமும் வலம் அதாகியே தழையவே வரும் குமரேசா
அதிக வானவர் கவரி வீசவே அரிய கோபுரம்தனில் மேவி
அருணை மீதிலே மயிலில் ஏறிய அழகதாய் வரும் பெருமாளே

மேல்

#444
விந்து புளகித இன்புற்று உருகிட சிந்தி கருவினில் உண்ப அ சிறு துளி
விரித்த கமல மேல் தரித்து உள் ஒரு சுழி இரத்த குளிகையோடு உதித்து வளர் மதி
விள் துற்று அருள் பதி கண்டுற்று அருள் கொடு மிண்டி செயல் இனி ரம்பி துருவோடு
மெழுக்கில் உரு என வலித்து எழு மதி கழித்து வயிர் குடம் உகுப்ப ஒரு பதில்
விஞ்சை செயல் கொடு கஞ்ச சல வழி வந்து புவி மிசை பண்டை செயல் கொடு
விழுப்பொடு உடல் தலை அழுக்கு மலமொடு கவிழ்த்து விழுது அழுது உகுப்ப அனைவரும் அருள்கூர
மென் பற்று உருகி முகந்திட்டு அனை முலை உண்டி தர கொடு உண்கி சொலி வளர்
வளத்தொடு அளை மல சலத்தொடு உழைகிடை துடித்து தவழ் நடை வளர்த்தி என தகு
வெண்டை பரிபுர தண்டை சர வடமும் கட்டி இயல் முடி படி பண்பித்து இயல் கொடு
விதித்த முறைப்படி படித்து மயல் கொள தெருக்களினில் வரு வியப்ப இள முலை
விந்தை கயல் விழி கொண்டல் குழல் மதி துண்டம் கர வளை கொஞ்ச குயில் மொழி
விடுப்ப துதை கலை நெகிழ்த்தி மயில் என நடித்தவர்கள் மயல் பிடித்து அவர் வரு வழியே போய்
சந்தித்து உறவோடு பஞ்சிட்டு அணை மிசை கொஞ்சி பலப்பல விஞ்சை சரசமொடு
அணைத்து மலர் இதழ் கடித்து இரு கரம் அடர்த்த குவி முலை அழுத்தி உரம் மிடர்
சங்கு தொனியோடு பொங்க குழல் மலர் சிந்தி கொடி இடை தங்கி சுழலிட
சர தொடிகள் வெயில் எறிப்ப மதி நுதல் வியர்ப்ப பரிபுரம் ஒலிப்ப எழு மத
சம்பத்து இது செயல் இன்பத்து இருள் கொடு வம்பில் பொருள்கள் வழங்கிற்று இது பினை
சலித்து வெகு துயர் இளைப்பொடு உடல் பிணி பிடித்திடு அனைவரும் நகைப்ப கரு மயிர் நரை மேவி
தன் கை தடி கொடு குந்தி கவி என உந்திக்கு அசனம் மறந்திட்டு உளம் மிக
சலித்து உடல் சலம் மிகுத்து மதி செவி விழிப்பும் மறைபட கிடத்தி மனையவள்
சம்பத்து உறை முறை அண்டை கொளுகையில் சண்ட கரு நமன் அண்டி கொளு கயிறு
எடுத்து விசை கொடு பிடித்து உயிர்தனை பதைப்ப தனி வழி அடித்து கொடு செல
சந்தித்து அவரவர் பங்குக்கு அழுது இரங்க பிணம் எடும் என்று இட்ட அறை பறை
தடிப்ப சுடலையில் இறக்க விறகொடு கொளுத்தி ஒரு பிடி பொடிக்கும் இலை எனும் உடல் ஆமோ
திந்தி திமிதிமி திந்தி திமிதிமி திந்தி திமிதிமி திந்தி திமிதிமி
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
என்ப துடிகள் தவுண்டை கிடுபிடி பம்பை சலிகைகள் சங்க பறை வளை
திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு டிடிக்கு நிகர் என உடுக்கை முரசொடு
செம்பொன் குட முழவும் தப்புடன் மணி பொங்க சுரர் மலர் சிந்த பதம் மிசை
செழித்த மறை சிலர் துதிப்ப முநிவர்கள் களித்து வகை மனி முழக்க அசுரர்கள் களம் மீதே
சிந்த குருதிகள் அண்ட சுவர் அகம் ரம்ப கிரியோடு பொங்கி பெருகியெ
சிவப்ப அதில் கரி மதர்த்த புரவிகள் சிரத்தொடு இரதமும் மிதப்ப நிணமொடு
செம்புள் கழுகுகள் உண்ப தலைகள் ததும்ப கருடன் நடம் கொட்டிட கொடி
மறைப்ப நரிகள் மிகுப்ப குறளிகள் நடிக்க இருள் மலை கொளுத்தி அலை கடல்
செம்பொன் பவளமும் அடங்கி கமர் விட வெந்திட்டு இக மலை விண்டு துகள் பட
சிமக்கும் உரகனும் முழக்கி விட படம் அடைத்த சத முடி நடுக்கி அலை பட விடும் வேலா
தொந்த தொகுகுட என்ப கழல் ஒலி பொங்க பரிபுரம் செம்பொன் பதம் அணி
சுழற்றி நடமிடு நிருத்தர் அயன் முடி கரத்தர் அரி கரி உரித்த கடவுள் மெய்
தொண்டர்க்கு அருள்பவர் வெந்த துகள் அணி கங்கை பணி மதி கொன்றை சடையினர்
தொடுத்த மதன் உரு பொடித்த விழியினர் மிகுத்த புரம் அதை எரித்த நகையினர்
தும்பை தொடையினர் கண்ட கறையினர் தொந்தி கடவுளை தந்திட்டவர் இட
சுகத்தி மழு உழை கரத்தி மரகத நிறத்தி முயலக பதத்தி அருளிய முருகோனே
துண்ட சசி நுதல் சம்பை கொடி இடை ரம்பைக்கு அரசி எனும் உம்பல் தரு மகள்
சுகிப்ப மண அறை களிக்க அணை அறு முகத்தோடு அற மயல் செழித்த திரு புய
செம்பொன் கர கமலம் பத்திரு தலம் அம் பொன் சசி எழ சந்த பல படை
செறித்த கதிர் முடி கடப்ப மலர் தொடை சிறப்போடு ஒரு குடில் மருத்து வன மகள்
தொந்த புணர் செயல் கண்டுற்று அடியென் இடைஞ்சல் பொடிபட முன் புற்று அருள் அயில்
தொடுத்தும் இள நகை பரப்பி மயில் மிசை நடித்து அழல் கிரி பதிக்குள் மருவிய பெருமாளே

மேல்

#445
வீறு புழுகான பனிநீர்கள் மலம் தோயல் விடு மேரு கிரியான கொடு தன பார
மீது புரள் ஆபரண சோதி விதமான நகை மேகம் அனு காடு கடல் இருள் மேவி
நாறு மலர் வாச மயிர் நூல் இடையதே துவள நாணம் அழிவார்கள் உடன் உறவாடி
நாடி அதுவே கதி எனா சுழலும் மோடனை நின் ஞான சிவமான பதம் அருள்வாயே
கூறும் அடியார்கள் வினை நீறுபடவே அரிய கோல மயிலான பதம் அருள்வாயே
கூட அரனோடே நடமாடு அரிய காளி அருள்கூரும் சிவகாமி உமை அருள் பாலா
ஆறு முகமான நதி பாலா குற மாது தனம் ஆர விளையாடி மணம் அருள்வோனே
ஆதி ரகுராம ஜய மாலின் மருகா பெரிய ஆதி அருணாபுரியில் பெருமாளே

மேல்

#446
சரக்கு ஏறி இத்த பதி வாழ் தொந்த பரி காயத்தில் பரிவோடு ஐந்து
திக்காரர் புக்கு உலை மேவு இந்த செயல் மேவி
சலித்தே மெத்த சமுசாரம் பொன் சுகித்தே சுற்றத்தவரோடு இன்ப
தழைத்தே மெச்ச தயவோடு இந்த குடி பேணி
குரக்கோணத்தில் கழு நாய் உண்ப குழிக்கே வைத்து சவமாய் நந்து இ
குடிற்கே நத்தி பழுதாய் மங்கப்படுவேனை
குறித்தே முத்திக்கு மறா இன்ப தடத்தே பற்றி சக மாயம் பொய்
குல கால் வற்ற சிவஞானம் பொன் கழல் தாராய்
புர காடு அற்று பொடியாய் மங்க கழை சாபத்து ஐ சடலான் உங்க
புகை தீ பற்ற அ புகலோர் அன்புற்று அருள்வோனே
புடைத்தே எட்டு திசையோர் அஞ்ச தனி கோலத்து புகு சூர் மங்க
புகழ் போர் சத்திக்கு இரையா ஆநந்தத்து அருள்வோனே
திரு கானத்தில் பரிவோடு அந்த குற கோலத்து செயலாள் அஞ்ச
திகழ் சீர் அத்திக்கு அழல் வா என்ப புணர்வோனே
சிவ பேறுக்கு கடையேன் வந்து உள்புக சீர் வைத்து கொளு ஞானம் பொன்
திருக்காளத்தி பதி வாழ் கந்த பெருமாளே

மேல்

#447
சிரத்தானத்தில் பணியாதே செகத்தோர் பற்றை குறியாதே
வருத்தா மற்று ஒப்பிலதான மலர் தாள் வைத்து எத்தனை ஆள்வாய்
நிருத்தா கர்த்தத்துவ நேசா நினைத்தார் சித்தத்து உறைவோனே
திரு தாள் முத்தர்க்கு அருள்வோனே திருக்காளத்தி பெருமாளே

மேல்

#448
பங்கயனார் பெற்றிடும் சராசர அண்டமதாய் உற்றிருந்த பார் மிசை
பஞ்சவர் கூடி திரண்டது ஓர் நர உருவாயே
பந்தமது ஆகி பிணிந்த ஆசையில் இங்கிதமாக திரிந்து மாதர்கள்
பண்பு ஒழி சூதை கடந்திடாது உழல் படிறு ஆயே
சங்கடன் ஆகி தளர்ந்து நோய் வினை வந்து உடல் மூடி கலங்கிடா மதி
தந்து அடியேனை புரந்திடாய் உனது அருளாலே
சங்கரர் வாமத்து இருந்த நூபுர சுந்தரி ஆதி தரும் சுதா பத
தண்டையனே குக்குட பதாகையின் முருகோனே
திங்கள் உலாவ பணிந்த வேணியர் பொங்கு அரவு ஆட புனைந்த மார்பினர்
திண் சிலை சூலத்து அழுந்து பாணியர் நெடிது ஆழ்வார்
சிந்துவிலே உற்று எழுந்த காள விடம் கள மீதில் சிறந்த சோதியர்
திண் புய மீதில் தவழ்ந்து வீறிய குருநாதா
சிங்கமதாக திரிந்து மால் கெருவம் பொடியாக பறந்து சீறிய
சிம்புளதாக சிறந்து அகா என வரு கோ முன்
செம் கதிரோனை கடிந்த தீ வினை துஞ்சிடவே நல் தவம் செய்து ஏறிய
தென் கயிலாயத்து அமர்ந்து வாழ்வருள் பெருமாளே

மேல்

#449
கனக சபை மேவும் எனது குருநாத கருணை முருகேச பெருமாள் காண்
கனக நிற வேதன் அபயம் இட மோது கர கமலம் சோதி பெருமாள் காண்
வினவும் அடியாரை மருவி விளையாடும் விரகு ரச மோக பெருமாள் காண்
விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் விமல சர சோதி பெருமாள் காண்
சனகி மணவாளன் மருகன் என வேத சதம் மகிழ் குமார பெருமாள் காண்
சரண சிவகாமி இரண குல காரி தரு முருக நாம பெருமாள் காண்
இனிது வனம் மேவும் அமிர்த குற மாதொடு இயல் பரவு காதல் பெருமாள் காண்
இணையில் இப தோகை மதியின் மகளோடும் இயல் புலியுர் வாழ் பொன் பெருமாளே

மேல்

#450
கை தருண சோதி அத்தி முக வேத கற்பக சகோத்ர பெருமாள் காண்
கற்பு சிவகாமி நித்ய கலியாணி கத்தர் குருநாத பெருமாள் காண்
வித்து ருப ராமருக்கு மருகான வெற்றி அயில் பாணி பெருமாள் காண்
வெற்பு உள கடாகம் உட்கு திர வீசு வெற்றி மயில்வாக பெருமாள் காண்
சித்ர முகம் ஆறும் முத்து மணி மார்பு திக்கினின் இலாத பெருமாள் காண்
தித்திமிதி தீதென் ஒத்தி விளையாடு சித்ர குமார பெருமாள் காண்
சுத்த விர சூரர் பட்டு விழ வேலை தொட்ட கவி ராஜ பெருமாள் காண்
துப்பு வளியோடும் அ புலியுர் மேவு சுத்த சிவஞான பெருமாளே

மேல்

#451
இருவினையின் மதி மயங்கி திரியாதே எழு நரகிலும் உழலு நெஞ்சு உற்று அலையாதே
பரம குரு அருள் நினைந்திட்டு உணர்வாலே பரவு தரிசனையை என்று எற்கு அருள்வாயே
தெரி தமிழை உதவு சங்க புலவோனே சிவன் அருள் முருக செம்பொன் கழலோனே
கருணை நெறி புரியும் அன்பர்க்கு எளியோனே கனக சபை மருவு கந்த பெருமாளே

மேல்

#452
குகனெ குருபரனே என நெஞ்சில் புகழ அருள் கொடு நாவினில் இன்ப
குமுளி சிவ அமுது ஊறுக உந்தி பசியாறி
கொடிய இருவினை மூலமும் வஞ்ச கலிகள் பிணி இவை வேரொடு சிந்தி
குலைய நம சிவ ஓம் என கொஞ்சி களிகூர
பகலும் இரவும் இலா வெளி இன்பு குறுகி இணை இலி நாடக செம்பொன்
பரம கதி இதுவாம் என சிந்தித்து அழகாக
பவளம் அன திரு மேனியுடன் பொன் சரண அடியவரார் மன அம் பொன்
தருண சரண் மயில் ஏறி உன் அம் பொன் கழல் தாராய்
தகுட தகுதகு தாதக தந்த திகுட திகுதிகு தீதக தொந்த
தடுடு டுடுடுடு டாடக டிங்குட் இயல் தாளம்
தபலை திமிலைகள் பூரிகை பம்பை கரடி தமருகம் வீணைகள் பொங்க தடி
அழனம் உக மாருதம் சண்ட சமர் ஏறி
ககனம் மறை பட ஆடிய செம் புள் பசிகள் தணிவுற சூரர்கள் மங்க
கடல்கள் எறிபட நாகமும் அஞ்ச தொடும் வேலா
கயிலை மலைதனில் ஆடிய தந்தைக்கு உருக மனம் முனம் நாடியே கொஞ்சி
கனக சபைதனில் மேவிய கந்த பெருமாளே

மேல்

#453
வண்டை ஒத்து கயல் கண் சுழற்று புருவம் சிலைக்கு தொடு அம்பை ஒத்து தொடை
வண்டு சுற்று குழல் கொண்டல் ஒத்து கமுகு என்ப க்ரீவம்
மந்தரத்தை கட பொங்கு இபத்து பணை கொம்பை ஒத்து தனம் முந்து குப்ப தெரு
வந்து எத்தி பொரு மங்கையர் கைப்பொருள் அன்பினாலே
கொண்டு அழைத்து தழுவும் கை தட்டில் பொருள் கொண்டு தெட்டி சரசம் புகழ்க்கு குனகும்
குழற்கு இப்படி நொந்து கெட்டு குடில் மங்குறாமல்
கொண்டு சத்தி கடல் உண்டு உகுப்ப துன் நின் அன்பருக்கு செயல் தொண்டுபட்டு கமழ்
குங்குமத்தில் சரணம் பிடித்து கரை என்று சேர்வேன்
அண்டம் மிட்டி குட டிண்டிமிட் டிக்கு குடந்த கொட்ட தகு டிங்கு தொக்க தமடம்
சகட்டை குண கொம்பு இடக்கைக்கு இடல் என்ப தாளம்
அண்டம் எட்டு திசை உம்பல் சர்ப்ப திரள் கொண்டல் பட்டு கிரியும் பொடித்து புலன்
அஞ்சு அவித்து திரள் அண்டம் முட்ட துகள் வந்த சூரர்
கண்டம் அற்று குடல் என்பு நெக்கு தசனம் கடித்து குடிலம் சிவப்ப செநிர்
கண் தெறிக்க தலை பந்து அடித்து கையில் இலங்கு வேலால்
கண் களிக்க ககனம் துளுக்க புகழ் இந்திரற்கு பதம் வந்து அளித்து கனக
அம்பலத்தில் குற மங்கை பக்கத்து உறை தம்பிரானே

மேல்

#454
கங்குலின் குழல் கார் முகம் சசி மஞ்சளின் புயத்தார் சரம் பெறு
கண்கள் கொந்தள காது கொஞ்சுக செம்பொன் ஆரம்
கந்தரம் தரித்து ஆடு கொங்கைகள் உம்பலின் குவட்டு ஆம் எனும் கிரி
கந்தமும் சிறு தேமலும் பட சம்பை போல
அங்கு அமைந்து இடை பாளிதம் கொடு குந்தியின் குறை கால் மறைந்திட
அண் சிலம்பு ஒலி பாடகம் சரி கொஞ்ச மேவும்
அஞ்சுகம் குயில் பூவையின் குரல் அம் கை பொன் பறிக்கார பெண்களொடு
அண்டி மண்டையர்க்கு ஊழியம் செய்வது என்று போமோ
சங்கு பொன் தவில் காளமும் துரியங்கள் துந்துமி காடு அதிர்ந்திட
சந்த செந்தமிழ் பாணர் கொஞ்சிட அண்ட கோசம்
சந்திரன் பதத்தோர் வணங்கிட இந்திரன் குலத்தார் பொழிந்திட
தந்திரம் புயத்தார் புகழ்ந்திட வந்த சூரை
செம் கையும் சிரத்தோடு பங்கு எழ அந்தகன் புரத்து ஏற வஞ்சகர்
செம் சரம் தொடுத்தே நடம்புரி கந்த வேளே
திங்கள் ஒண் முக காமர் கொண்ட வன் கொங்கை மென் குற பாவையும் கொடு
செம்பொன் அம்பலத்தே சிறந்து அருள் தம்பிரானே

மேல்

#455
கொந்தளம் புழுகு கெந்த வண் பனிர் ரம்ப சம்ப்ரம் அணிந்த மந்தர
கொங்கை வெண் கரி கொம்பு இணங்கிய மட மாதர்
கொந்து அண் அம் குழல் இன்ப மஞ்சள் அணிந்து சண்பக வஞ்சி இளம் கொடி
கொஞ்சு பைம் கிளி அன்பு எனும் குயில் மயில் போலே
வந்து பஞ்சணை இன்பமும் கொடு கொங்கையும் புயமும் தழும்புற
மஞ்சு ஒண் கலையும் குலைந்து அவ மயல் மேலாய்
வஞ்சினங்கள் திரண்டு கண் செவியும் சுகங்கள் திரும்பி முன் செய்த
வஞ்சினங்களுடன் கிடந்து உடல் அழிவேனோ
தந்த னந்தன தந்த னந்தன திந்தி மிந்திமி திந்தி மிந்திமி
சங்கு வெண்கல கெம்பு துந்துமி பல பேரி
சஞ்சலஞ்சல கொஞ்சு கிண்கிணி தங்கு டுண்டுடு டுண்டுடன் பல
சந்திர அம்பறை பொங்கு வஞ்சகர் களம் மீதே
சிந்த வெண் கழுகு ஒங்கு பொங்கு எழு செம்புள் அம் கருடன் பருந்துகள்
செம் களம் திகை எங்கும் அண்டிட விடும் வேலா
திங்கள் இந்திரன் உம்பர் அந்தரரும் புகழ்ந்து உருகும் அம்பரன் சபை
செம்பொன் அம்பலம் கொள் அன்பர்கள் பெருமாளே

மேல்

#456
மந்தரம் என் குவடு ஆர் தனங்களில் ஆரம் அழுந்திடவே மணம் பெறு
சந்தன குங்கும சேறுடன் பனி நீர்கள் கலந்திடுவார் முகம் சசி
மஞ்சு உறையும் குழலார் சரம் கயல் வாள் விழி செங்கழுநீர் ததும்பிய கொந்தள ஓலை
வண் சுழலும் செவியார் நுடங்கு இடை வாட நடம்புரிவார் மருந்திடு
விஞ்சையர் கொஞ்சிடுவார் இளம் குயில் மோகன வஞ்சியர் போல் அகம் பெற
வந்தவர் எந்த உர் நீர் அறிந்தவர் போல இருந்ததே எனா மயங்கிட இன் சொல் கூறி
சுந்தர வங்கணமாய் நெருங்கி நிர் வாரும் எனும்படி ஆல அகம் கொடு
பண் சரசம் கொளவேணும் என்று அவர் சேம வளம் துறு தேன் அருந்திட
துன்று பொன் அங்கையின் மீது கண்டு அவரோடு விழைந்துமே கூடி இன்புறு மங்கையோரால்
துன்பம் முடங்கு அழி நோய் சிரங்கொடு சீ புழுவும் சலம் ஓடு இறங்கிய
புண் குடவன் கடியோடு இளம் சனி சூலை மிகுந்திடவே பறந்து உடல்
துஞ்சிய மன் பதியே புகும் துயர் ஆழி விடும்படி சீர் பதம் பெறு விஞ்சை தாராய்
அந்தர துந்துமியோடு உடன் கண நாதர் புகழ்ந்திட வேத விஞ்சையர்
இந்திர சந்திரர் சூரியன் கவிவாணர் தவம் புலியோர் பதஞ்சலி
அம்புயன் அம் திருமாலொடு இந்திரை வாணி அணங்கு அவளோடு அரும் தவர் தங்கள் மாதர்
அம்பர ரம்பையரோடு உடன் திகழ் மா உரகன் புவியோர்கள் மங்கையர்
அம் புவி மங்கையரோடு அருந்ததி மாதர் புகழ்ந்திடவே நடம்புரி
அம் புய செம் பதர் மாடு அகம் சிவகாம சவுந்தரியாள் பயந்து அருள் கந்த வேளே
திந்திமி திந்திமி தோதி மிந்திமி தீத திதிந்தித தீதி திந்திமி
தந்தன தந்தன னாத னந்தன தான தனந்தனனா எனும் பறை
செம் தவில் சங்குடனே முழங்க அசுரார்கள் சிரம் பொடியாய் விடும் செயல் கண்ட வேலா
செந்தினையின் புனம் ஏர் குறிஞ்சியில் வாழும் இளம் கொடியாள் பதங்களில்
வந்து வணங்கி நிணே முகம் பெறு தாள் அழக அம் கையில் வேலுடன் புவி
செம்பொன் அம்பலம் மேல் பிரகார ச மந்திர மீது அமர்ந்த பெருமாளே

மேல்

#457
வந்துவந்து வித்து ஊறி என் தன் உடல் வெந்துவெந்து விட்டு ஓட நொந்து உயிரும்
வஞ்சினங்களில் காடு கொண்ட வடிவங்களாலே
மங்கிமங்கிவிட்டேனை உன்றனது சிந்தை சந்தோஷித்து ஆளுகொண்டு அருள
வந்து சிந்துரத்து ஏறி அண்டரோடு தொண்டர் சூழ
எந்தன் வஞ்சனை காடு சிந்தி விழ சந்தர் அண்டு இசை தேவ ரம்பையர்
கனிந்து பந்தடித்து ஆடல் கொண்டுவர மந்தி மேவும்
எண் கடம்பு அணி தோளும் அம் பொன் முடி சுந்தரம் திரு பாத பங்கயமும்
என்றன் முந்துற தோணி உன்றனது சிந்தை தாராய்
அந்தரம் திகைத்து ஓட விஞ்சையர்கள் சிந்தை மந்திரத்து ஓட கெந்தருவர்
அம்புயன் சலித்து ஓட எண் திசையை உண்ட மாயோன்
அஞ்சி உன் பத சேவை தந்திடு என வந்த வெம் சினர் காடு எரிந்து விழ
அங்கியின் குண கோலை உந்தி விடு செம் கை வேலா
சிந்துரம் பணை கோடு கொங்கை குற மங்கை இன்புற தோள் அணைந்து உருக
சிந்துரம்தனை சீர் மணம் புணர் நல் கந்த வேளே
சிந்தி முன் புரக்காடு மங்க நகை கொண்ட செம் தழல் கோலர் அண்டர் புகழ்
செம்பொன் அம்பலத்து ஆடும் அம்பலவர் தம்பிரானே

மேல்

#458
கதித்து பொங்கு அலுக்கு ஒத்து பணைத்து கொம்பு என தெற்றி கவித்து செம்பொனை துற்று குழலார் பின்
கழுத்தை பண்புற கட்டி சிரித்து தொங்கலை பற்றி கலைத்து செம் குணத்தில் பித்து இடு மாதர்
பதித்து தம் தனத்து ஒக்க பிணித்து பண்புற கட்டி பசப்பி பொன் தர பற்றி பொருள் மாள
பறித்து பின் துரத்து சொல் கபட்டு பெண்களுக்கு இச்சை பலித்து பின் கசுத்திப்பட்டு உழல்வேனோ
கதித்து கொண்டு எதிர்த்து பின் கொதித்து சங்கரித்து பல் கடித்து சென்று உழக்கி துக்க அசுரோரை
கழித்து பண்டு அமர்க்கு செம் பதத்தை தந்து அருளி கைக்கு அணி குச்சம் தரத்து ஐ சுத்த ஒளிர் வேலா
சிதைத்திட்டு அம்புரத்தை சொல் கயத்தை சென்று உரித்து தன் சின தக்கன் சிரத்தை தள் சிவனார்தம்
செவிக்கு செம் பொருள் கற்க புகட்டி செம் பரத்தில் செய் திருச்சிற்றம்பல சொக்க பெருமாளே

மேல்

#459
சிரித்து சங்கு ஒளியாம் மினலாம் என உருக்கி கொங்கையினால் உற மேல் விழு
செணத்தில் சம்பளமே பறிகாரிகள் சில பேரை
சிமிட்டி கண்களினால் உறவே மயல் புகட்டி செம் துகிலால் வெளியாய் இடை
திருத்தி பண் குழல் ஏய் முகில் ஓவிய மயில் போலே
அருக்கி பண்புறவே கலையால் முலை மறைத்து செம் துவர் வாய் அமுதூறல்கள்
அளித்து பொன் குயிலாம் எனவே குரல் மிடறு ஓதை
அசைத்து கொந்தள ஓலைகள் ஆர் பணி மினுக்கி சந்தன வாசனை சேறுடன்
அமைத்து பஞ்சணை மீது அணை மாதர்கள் உறவாமோ
இரைத்து பண்டு அமராவதி வானவர் ஒளித்து கந்த சுவாமி பராபரம்
எனப்பட்டு எண்கிரி ஏழ் கடல் தூள்பட அசுரார்கள்
இறக்க சிங்கம தேர் பரி யானையொடு உறுப்பில் செம் கழுகு ஒரிகள் கூளியொடு
இரத்த சங்கமது ஆடிட வேல் விடு மயில் வீரா
சிரித்திட்டு அம் புரமே மதனார் உடல் எரித்து கண்ட கபாலியர்பால் உறை
திகழ் பொன் சுந்தரியாள் சிவகாமி நல்கிய சேயே
திரு சித்தம் தனிலே குற மான் அதை இருத்தி கண் களிகூர் திகழ் ஆடக
திருச்சிற்றம்பலம் மேவி உலாவிய பெருமாளே

மேல்

#460
தத்தை என்று ஒப்பிடும் தோகை நட்டம் கொளுவர் பத்திரம் கண் கயல் காரி ஒப்பும் குழல்கள்
சச்சை அம் கெச்சையும் தாள ஒத்தும் பதுமை என்ப நீல
சக்கரம் பொன் குடம் பால் இருக்கும் தனமொடு ஒற்றி நல் சித்திரம் போல எத்தும் பறியர்
ச களம் சக்கடம் சாதி துக்க கொலையர் சங்க மாதர்
சுத்திடும் பித்திடும் சூது கற்கும் சதியர் முன் பணம் கை கொடு உந்து ஆரும் இட்டம் கொளுவர்
சொக்கி இடும்பு கடன் சேருமட்டும் தனகும் விஞ்சையோர் பால்
தொக்கிடும் கக்கலும் சூலை பக்கம் பிளவை விக்கலும் துக்கமும் சீத பித்தங்கள் கொடு
துப்பு அடங்கி படும் சோரனுக்கும் பதவி எந்த நாளோ
குத்திரம் கற்ற சண்டாளர் சத்த அம் குவடு பொட்டு எழுந்திட்டு நின்று ஆட எட்டு அம் திகையர்
கொற்றமும் கட்டியம் பாட நிர்த்தம் பவுரி கொண்ட வேலா
கொற்றர் பங்குற்ற சிந்தாமணி செம் குமரி பத்தர் அன்புற்ற எம் தாய் எழில் கொஞ்சு கிளி
கொட் புரம் தொக்க வெந்து ஆடவிட்டு அங்கி விழி மங்கை பாலா
சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர செட்டி என்று எத்தி வந்து ஆடி நிர்த்தங்கள் புரி
சில் சிதம் பொன் புயம் சேர முற்றும் புணரும் எங்கள் கோவே
சிற்பரன் தற்பரன் சீர் திகழ் தென் புலியுர் ருத்திரன் பத்திர அம் சூல கர்த்தன் சபையில்
தித்தி என்று ஒத்தி நின்று ஆடு சிற்றம்பலவர் தம்பிரானே

மேல்

#461
தனத்தில் குங்குமத்தை சந்தனத்தை கொண்டு அணைத்தும் சங்கிலி கொத்தும் பிலுக்கு பொன்தனில்
கொத்தும் தரித்து சுந்தரத்தில் பண்பு அழித்து கண் சுழற்றி சண்பக புட்பம் குழல் மேவி
தரத்தை கொண்டு அசைத்து பொன் தகை பட்டு தரித்து பின் சிரித்து கொண்டு அழைத்து கொந்தளத்தை
தண் குலுக்கி சங்கு அலம்பு தன் கரத்து கொண்டு அணைத்து சம்ப்ரமித்து கொண்டு உறவாடி
புனித்த பஞ்சு அணை கண் திண் படுத்து சந்தன பொட்டும் குலைத்து பின் புயத்தை கொண்டு
அணைத்து பின் சுகித்திட்டு இன்பு கட்டி பொன் சர கொத்தும் சிதைப்ப பொன் தர பற்றும் பொதுமாதர்
புணர் பித்தும் பிடித்து பொன் கொடுத்து பின் பிதிர் சித்தன் திணி கட்டும் சிதைத்து கண்
சிறுப்ப புண்பிடித்து அ புண் புடைத்து கண் பழுத்து கண்டவர்க்கு கண் புதைப்ப சென்று உழல்வேனோ
சினத்து கண் சிவப்ப சங்கு ஒலிப்ப திண் கவட்டு செம் குவட்டை சென்று இடித்து செண்
தரை துக்கம் பிடிக்க பண் சிரத்தை பந்தடித்து கொண்டு இறைத்து தெண் கடல் திட்டும் கொளை போக
செழித்து பொன் சுரர் சுற்றம் களித்து கொண்டு அளி புட்பம் சிறக்க பண் சிரத்தில் கொண்டு
இறைத்து செம் பதத்தில் கண் திளைப்ப தந்து தலை தழ்த்து அம் புகழ் செப்பும் சயத்து திண் புய வேளே
பனித்து உட்க அங்கசற்கு கண் பரப்பி தன் சினத்தில் திண் புரத்தை கண்டு எரித்து பண்
கயத்தை பண்டு உரி துப்பன் பகை தக்கன் தவத்தை சென்று அழித்து கொன்ற அடல் பித்தன் தரு வாழ்வே
படை துப்பு ஒன்றுடை திட்பன்தனை குட்டும் படுத்தி பண் கடி புட்பம் கலை சுற்றும்
பதத்த பண்புற சிற்றம்பலத்தின்கண் களித்த பைம் புனத்தில் செம் குறத்தி பெண் பெருமாளே

மேல்

#462
திருடிகள் இணக்கி சம்பளம் பறி நடுவிகள் மயக்கி சங்கம் உண்கிகள்
சிதடிகள் முலை கச்சு உம்பல் கண்டிகள் சதிகாரர்
செவிடிகள் மதப்பட்டு உங்கு குண்டிகள் அசடிகள் பிணக்கிட்டும் புறம்பிகள்
செழுமிகள் அழைத்து இச்சம் கொளும் செயர் வெகு மோக
குருடிகள் நகைத்து இட்டம் புலம்பு கள் உதடிகள் கணக்கிட்டும் பிணங்கிகள்
குசலிகள் மருத்து இட்டும் கொடும் குணர் விழியாலே
கொளுவிகள் மினுக்கு சங்கு இரங்கிகள் நடனமும் நடித்திட்டு ஒங்கு சண்டிகள்
குணம் அதில் முழு சுத்த அசங்க்ய சங்கிகள் உறவு ஆமோ
இருடியர் இனத்து உற்று உம் பதம் கொளும் மறையவன் நில தொக்கும் சுகம் பெறும்
இமையவர் இன கட்டும் குலைந்திட வரு சூரர்
இபமொடு வெதித்த சிங்கமும் பல இரதமொடு எத திக்கும் பிளந்திட
இவுளி இரதத்துற்று அங்கம் மங்கிட விடும் வேலா
அரி கரி உரித்திட்டு அங்கசன் புரம் எரிதர நகைத்து பங்கயன் சிர
அளவோடு அறுத்து பண்டு அணிந்தவர் அருள் கோவே
அமரர் தம் மகட்கு இட்டம் புரிந்து நல் குறவர் தம் மகள் பக்கம் சிறந்து உற
அழகிய திருச்சிற்றம்பலம் புகு பெருமாளே

மேல்

#463
கொந்தர் அம் குழல் இந்து வண் புருவங்கள் கண் கயலும் சரம் கணை
கொண்டு அரம்பையர் அந்தமும் சசி துண்டம் மாதர்
கொந்தளம் கதிரின் குலங்களில் உஞ்சு உழன்று இரசம் பலம் கனி
கொண்ட நண்பு இதழின் சுகம் குயிலின் சொல் மேவும்
தந்த அம் தரளம் சிறந்து எழு கந்தரம் கமுகு என்ப பைம் கழை
தண் புயம் தளிரின் குடங்கையர் அம் பொன் ஆரம்
தந்தியின் குவடின் தனங்கள் இரண்டையும் குலை கொண்டு விண்டவர்
தம் கடம் படியும் கவண் தீய சிந்தையாமோ
மந்தரம் கடலும் சுழன்று அமிர்தம் கடைந்தவன் அஞ்சு மங்குலி
மந்திரம் செல்வமும் சுகம் பெற எந்த வாழ்வும்
வந்த ரம்பையர் எணும் பகிர்ந்து நடம் கொளும் திரு மங்கைபங்கினன்
வண்டர் லங்கை உளன் சரம் பொடி கண்ட மாயோன்
உந்தியில் புவனங்கள் எங்கும் அடங்க உண்ட குடங்கையன் புகழ்
ஒண் புரம் பொடி கண்ட எந்தையர் பங்கின் மேவும்
உம்பலின் கலை மங்கை சங்கரி மைந்தன் என்று அயனும் புகழ்ந்திட
ஒண் பரம் திரு அம்பலம் திகழ் தம்பிரானே

மேல்

#464
தியங்கும் சஞ்சலம் துன்பம் கடம் தொந்தம் செறிந்து ஐந்து இந்த்ரியம்
பந்தம் தரும் துன்பம் படும் ஏழை
திதம் பண்பு ஒன்று இலன் பண்டன் தலன் குண்டன் சலன் கண்டன்
தெளிந்து உன்றன் பழம் தொண்டு என்று உயர்வாக
புயங்கம் திங்களின் துண்டம் குருந்தின் கொந்து அயன்தன் கம்
பொருந்தும் கம் கலந்த செம் சடை சூடி
புகழ்ந்தும் கண்டு உகந்தும் கும்பிடும் செம்பொன் சிலம்பு என்றும்
புலம்பும் பங்கயம் தந்து என் குறை தீராய்
இயம்பும் சம்புகம் துன்றும் சுணங்கன் செம் பருந்து அங்கங்கு
இணங்கும் செம் தடம் கண்டும் களிகூர
இடும்பை கண் சிரம் கண்டம் பதம் தம்தம் கரம் சந்து ஒன்று
எலும்பு சிந்திடும் பங்கம் செயும் வேலா
தயங்கும் பைம் சுரும்பு எங்கும் தனந்தந்தம் தனந்தந்தம்
தடம் தண் பங்கயம் கொஞ்சும் சிறு கூரா
தவம் கொண்டும் செபம் கொண்டும் சிவம் கொண்டும் ப்ரயம் கொண்டும்
தலம் துன்று அம்பலம் தங்கும் பெருமாளே

மேல்

#465
பருவம் பணைத்து இரண்டு கரி கொம்பு என திரண்டு பவளம் பதித்த செம்பொன் நிற மார்பில்
படரும் கனத்த கொங்கை மினல் கொந்தளித்து சிந்த பல விஞ்சையை புலம்பி அழகான
புருவம் சுழற்றி இந்த்ரதநு வந்து உதித்தது என்று புளகம் செலுத்து இரண்டு கயல் மேவும்
பொறிகள் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர பொடி கொண்டு அழிக்கும் வஞ்சர் உறவாமோ
உருவம் தரித்து உகந்து கரமும் பிடித்து உவந்து உறவும் பிடித்த அணங்கை வனம் மீதே
ஒளிர் கொம்பினை சவுந்தரிய உம்பலை கொணர்ந்து ஒளிர் வஞ்சியை புணர்ந்த மணி மார்பா
செரு வெம் களத்தில் வந்த அவுணன் தெறிந்து மங்க சிவம் அஞ்செழுத்தை முந்த விடுவோனே
தினமும் களித்து செம்பொன் உலகம் துதித்து இறைஞ்சு திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#466
மத வெம் கரிக்கு இரண்டு வலு கொம்பு என திரண்டு வளரும் தனத்து அணிந்த மணி ஆரம்
வளை செம் கையில் சிறந்த ஒளி கண்டு நீத்து இலங்குவரரும் திகைத்து இரங்க வரும் மான் ஆனார்
வித இங்கித ப்ரியங்கள் நகை கொஞ்சுதல் குணங்கள் மிகை கண்டு உற கலங்கி மருளாதே
விடு சங்கை அற்று உணர்ந்து வலம் வந்து உன்னை புகழ்ந்து மிக விஞ்சு பொன் பதங்கள் தருவாயே
நதியும் திரு கரந்தை மதியும் சடைக்கு அணிந்த நடநம்பர் உற்று இருந்த கயிலாய
நகம் அங்கையில் பிடுங்கும் அசுரன் சிரத்தொடு அங்கம் நவ துங்க ரத்நம் உந்து திரள் தோளும்
சிதையும்படிக்கு ஒர் அம்புதனை முன் தொடுத்த கொண்டல் திறல் செம் கண் அச்சுதன்தன் மருகோனே
தினமும் கருத்து உணர்ந்து சுரர் வந்து உற பணிந்த திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#467
முக சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல முகில் அம் குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட
மொழியும் கிளி இதழ் பங்கயம் நகை சங்கு ஒளி காதில் குழை ஆட
முழவ அம் கர சமுகம் பரிமள குங்கும வாச முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில்
முரணும் சிறு பவள தரள வடம் தொடை ஆட கொடி போல
துகிரின் கொடி ஒடியும்படி நடனம் தொடை வாழை மறையும்படி துயல் சுந்தர சுக மங்கையரோடு
துதை பஞ்சணை மிசை அங்கசன் ரதியின் இன்பம் அதாகி செயல் மேவி
தொடை சிந்திட மொழி கொஞ்சிட அளகம் சுழல் ஆட விழி துஞ்சிட இடை தொய்ஞ்சிட மயல் கொண்டு அணைகீனும்
சுக சந்திர முகமும் பத அழகும் தமியேனுக்கு அருள்வாயே
அகர அம் திரு உயிர் பண்புற அரி என்பதும் ஆகி உறையும் சுடர் ஒளி என் கணில் வளரும் சிவகாமி
அமுதம் பொழி பரை அந்தரி உமை பங்க அரனாருக்கு ஒரு சேயே
அசுரன் சிரம் இரதம் பரி சிலையும் கெட கோடு சரமும் பல படையும் பொடி கடலும் கிரி சாய
அமர் கொண்டு அயில் விடு செம் கர ஒளி செம் கதிர் போல திகழ்வோனே
மகரம் கொடி நிலவின் குடை மதனன் திரு தாதை மருகன் என்று அணி விருதும் பல முரசம் கலை ஓத
மறையன் தலை உடையும்படி நடனம் கொளு மாழை கதிர் வேலா
வடிவு இந்திரன் மகள் சுந்தர மணமும் கொடு மோக சரசம் குறமகள் பங்கொடு வளர் தென் புலியூரில்
மகிழும் புகழ் திரு அம்பலம் மருவும் குமரேச பெருமாளே

மேல்

#468
சந்திர ஓலை குலாவ கொங்கைகள் மந்தரம் ஆல நல் நீர் ததும்ப நல்
சண்பக மாலை குலாவு இளம் குழல் மஞ்சு போல
தண் கயல் வாளி கணார் இளம் பிறை விண் புருவார் இதழ் கோவையின் கனி
தன் செயலார் நகை சோதியின் கதிர் சங்கு மேவும்
கந்தரர் தேமலும் மார் பரம்ப நல் சந்தன சேறு உடன் ஆர் கவின்பெறு
கஞ்சுகமாம் மிடறு ஓதை கொஞ்சிய ரம்பையாரை
கண் களிகூர வெகு ஆசை கொண்டு அவர் பஞ்சணை மீது குலாவினும் திரு
கண்கள் இராறும் இராறு திண் புயமும் கொள்வேனே
இந்திரலோகமும் உளார் இதம் பெற சந்திர சூரியர் தேர் நடந்திட
எண் கிரி சூரர் குழாம் இறந்திட கண்ட வேலா
இந்திரை கேள்வர் பிதா மகன் கதிர் இந்து சடாதரன் வாசவன் தொழுது
இன்புறவே மனுநூல் விளம்பிய கந்த வேளே
சிந்துரம் மால் குவடு ஆர் தனம் சிறு பெண்கள் சிகாமணி மோக வஞ்சியர்
செந்தினை வாழ் வளி நாயக ஒண் குக அன்பர் ஓது
செந்தமிழ் ஞான தடாகம் என் சிவ கங்கை அளாவும் மகா சிதம்பர
திண் சபை மேவும் மனா சவுந்தர தம்பிரானே

மேல்

#469
காய மாய வீடு மீறிய கூடு நந்து புற்புதம்தனில் குரம்பை கொண்டு நாளும்
காசில் ஆசை தேடி வாழ்வினை நாடி இந்த்ரிய ப்ரமம் தடித்து அலைந்து சிந்தை வேறாய்
வேயில் ஆய தோள மா மடவார்கள் பங்கயத்து கொங்கை உற்று இணங்கி நொந்திடாதே
வேத கீத போத மோன ஞான நந்த முற்றிடு இன்ப முத்தி ஒன்று தந்திடாயோ
மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற விக்ரமம் கொள் வெற்பு இடந்த செம் கை வேலா
வாகை வேடர் பேதை காதல வேழ மங்கையை புணர்ந்த வெற்ப கந்த செந்தில் வேளே
ஆயும் வேத கீதம் ஏழிசை பாட அஞ்செழுத்து தழங்க முட்ட நின்று துன்று சோதீ
ஆதி நாதர் ஆடு நாடகசாலை அம்பல சிதம்பரத்து அமர்ந்த தம்பிரானே

மேல்

#470
அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை
அகதியை மறவனை ஆதாளி வாயனை அஞ்சு பூதம்
அடைசிய சவடனை மோடாதி மோடனை அழிகரு வழி வரு வீணாதி வீணனை
அழுகலை அவிசலை ஆறு ஆன ஊணனை அன்பு இலாத
கவடனை விகடனை நானா விகாரனை வெகுளியை வெகு வித மூதேவி மூடிய
கலியனை அலியனை ஆதேச வாழ்வனை வெம்பி வீழும்
களியனை அறிவுரை பேணாத மாநுட கசனியை அசனியை மா பாதனாகிய
கதியிலிதனை நாயேனை ஆளுவது எந்த நாளோ
மவுலியில் அழகிய பாதாள லோகனும் மரகத முழுகிய காகோத ராஜனும்
மநு நெறி உடன் வளர் சோணாடர் கோனுடன் உம்பர் சேரும்
மகபதி புகழ் புலியூர் வாழு நாயகர் மட மயில் மகிழ்வுற வான் நாடர் கோ என
மலைமகள் உமை தரு வாழ்வே மனோகர மன்றுள் ஆடும்
சிவசிவ ஹரஹர தேவா நமோ நம தெரிசன பரகதி ஆனாய் நமோ நம
திசையினும் இசையினும் வாழ்வே நமோ நம செம் சொல் சேரும்
திரு தரு கலவி மணாளா நமோ நம திரிபுரம் எரி செய்த கோவே நமோ நம
ஜெயஜெய ஹரஹர தேவா சுர அதிபர் தம்பிரானே

மேல்

#471
கட்டி முண்டக அரபாலி அங்கிதனை முட்டி அண்டமொடு தாவி விந்து ஒலி
கத்த மந்திர அவதான வெண் புரவி மிசை ஏறி
கற்பக அம் தெருவில் வீதி கொண்டு சுடர் பட்டிமண்டபம் உடாடி இந்துவொடு
கட்டி விந்து பிசகாமல் வெண் பொடி கொடு அசையாமல்
சுட்டு வெம் புரம் நிறு ஆக விஞ்சை கொடு தத்துவங்கள் விழ சாடி எண் குணவர்
சொர்க்கம் வந்து கையுள் ஆக எந்தை பதமுற மேவி
துக்கம் வெந்து விழ ஞானம் உண்டு குடில் வச்சிரங்கள் என மேனி தங்கமுற
சுத்த அகம் புகுத வேத விந்தையொடு புகழ்வேனோ
எட்டு இரண்டும் அறியாத என் செவியில் எட்டு இரண்டும் இது ஆம் இலிங்கம் என
எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே
எட்டு இரண்டு திசை ஓட செம் குருதி எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மெல்
எட்டு இரண்டு திசையோர்கள் பொன்ற அயில் விடுவோனே
செட்டி என்று சிவகாமிதன் பதியில் கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட
சித்தமும் குளிர அநாதி வண் பொருளை நவில்வோனே
செட்டி என்று வனம் ஏவி இன்பரச சத்தியின் செயல் இனாளை அன்புருக
தெட்டி வந்து புலியூரில் மன்று வளர் பெருமாளே

மேல்

#472
நஞ்சினை போலும் மன வஞ்சக கோளர்களை நம்புதல் தீது என நினைந்து நாயேன்
நண்பு உக பாதம் அதில் அன்புற தேடி உனை நங்கள் அப்பா சரணம் என்று கூறல்
உன் செவிக்கு ஏறலைகொல் பெண்கள் மெல் பார்வையைகொல் உன் சொலை தாழ்வு செய்து மிஞ்சுவார் ஆர்
உன்றனக்கே பரமும் என்றனக்கு ஆர் துணைவர் உம்பருக்கு ஆவதினின் வந்து தோணாய்
கஞ்சனை தாவி முடி முன்பு குட்டு ஏய மிகு கண் களிப்பாக விடு செம் கையோனே
கண் கயல் பாவை குற மங்கை பொன் தோள் தழுவு கஞ்சுக பான்மை புனை பொன் செய் தோளாய்
அஞ்ச வெற்பு ஏழு கடல் மங்க நிட்டூரர் குலம் அந்தரத்து ஏற விடு கந்த வேளே
அண்டம் முன் பார் புகழும் எந்தை பொற்பு ஊர் புலிசை அம்பலத்து ஆடும் அவர் தம்பிரானே

மேல்

#473
செம் கலச முலையார்பால் சிந்தை பல தடுமாறி
அங்கம் மிக மெலியாதே அன்புருக அருள்வாயே
செம் கை பிடி கொடியோனே செம் சொல் தெரி புலவோனே
மங்கை உமை தரு சேயே மன்றுள் வளர் பெருமாளே

மேல்

#474
கரிய மேகம் எனும் குழலார் பிறை சிலை கொள் வாகு எனும் புருவார் விழி
கயல்கள் வாளி எனும் செயலார் மதி துண்ட மாதர்
கமுக க்ரீவர் புயம் கழையார் தன மலைகளா இணையும் குவடார் கர
கமல வாழை மனும் தொடையார் சர சுங்க மாடை
வரிய பாளிதம் உந்து உடையார் இடை துடிகள் நூலியலும் கவின் ஆர் அல்குல்
மணம் உலாவிய ரம்பையினார் பொருள் சங்க மாதர்
மயில்கள் போல நடம்புரிவார் இயல் குணம் இலாத வியன் செயலார் வலை
மசகி நாயென் அழிந்திடவோ உனது அன்பு தாராய்
சரி இலாத சயம்பவியார் முகில் அளக பார பொனின் சடையாள் சிவை
சருவ லோக சவுந்தரியாள் அருள் கந்த வேளே
சத பணா மகுடம் பொடியாய்விட அவுணர் சேனை மடிந்திடவே ஒரு
தழல் கொள் வேலை எறிந்திடு சேவக செம்பொன் வாகா
அரிய மேனி இலங்கை இராவணன் முடிகள் வீழ சரம் தொடு மாயவன்
அகிலம் ஈரேழும் உண்டவன் மா மருக அண்டர் ஓதும்
அழகு சோபித அம் கொளும் ஆனன விபுதை மோகி குறிஞ்சியின் வாழ் வளி
அருள் கொடு ஆடி சிதம்பர மேவிய தம்பிரானே

மேல்

#475
கூந்தல் ஆழ விரிந்து சரிந்திட காந்து மாலை குலைந்து பளிங்கிட
கூர்ந்த வாள் விழி கெண்டை கலங்கிட கொங்கைதானும்
கூண்கள் ஆம் என பொங்க நலம் பெறு காந்தள் மேனி மருங்கு துவண்டிட
கூர்ந்த ஆடை குலைந்து புரண்டு இரசங்கள் பாய
சாந்து வேர்வின் அழிந்து மணம் தப ஓங்கு அவாவில் கலந்து முகம் கொடு
தான் பலா சுளையின் சுவை கண்டு இதழ் உண்டு மோகம்
தாம் புறா மயிலின் குரல் கொஞ்சிட வாஞ்சை மாதருடன் புளகம் கொடு
சார்ந்து நாய் என அழிந்து விழுந்து உடல் மங்குவேனோ
தீந்த தோதக தந்தன திந்திமி ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு
சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் பொங்கு சூரை
சேண் சுலா மகுடம் பொடிதம் பட ஓங்கு அ ஏழ் கடலும் சுவற அம் கையில்
சேந்த வேலது கொண்டு நடம் பயில் கந்த வேளே
மா தண் ஆரு வனம் குயில் கொஞ்சிட தேங்கு வாழை கரும்புகள் விஞ்சிடு
வான் குலாவி சிதம்பரம் வந்து அமர் செங்கை வேலா
மாண் ப்ரகாச தனம் கிரி சுந்தரம் ஏய்ந்த நாயகி சம்பை மருங்கு பொன்
வார்ந்த ரூபி குற பெண் வணங்கிய பெருமாளே

மேல்

#476
அத்தன் அன்னை இல்லம் வைத்த சொன்னம் வெள்ளி அத்தை நண்ணு செல்வர் உடனாகி
அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல் அற்று நின்னை வல்லபடி பாடி
முத்தன் என்ன வல்லை அத்தன் என்ன வள்ளி முத்தன் என்ன உள்ளம் உணராதே
முட்ட வெண்மை உள்ள பட்டன் எண்மை கொள்ளும் முட்டன் இங்ஙன் நைவது ஒழியாதோ
தித்தி மன்னும் தில்லை நிர்த்தர் கண்ணில் உள் உதித்து மன்னு பிள்ளை முருகோனே
சித்தி மன்னு செய்ய சத்தி துன்னும் கைய சித்ர வண்ணவல்லி அலர் சூடும்
பத்தர் உண்மை சொல் உள் உற்ற செம்மல் வெள் இபத்தர் கன்னி புல்லும் மணி மார்பா
பச்சைவன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே

மேல்

#477
இருள் காட்டு செவ்வி ததி காட்டி வில்லி நுதல் காட்டி வெல்லும் இரு பாண
இயல் காட்டு கொல் குவளை காட்டி முல்லை நகை காட்டு அல்லி இடை மாதர்
மருள் காட்டி நல்குரவு காட்டும் இல்ல இடுகாட்டின் எல்லை நடவாத
வழி காட்டி நல்ல அறிவு காட்டி மெல்ல வினை வாட்டி அல்லல் செயல் ஆமோ
தெருள் காட்டு தொல்லை மறை காட்டு மல்லல் மொழி காட்டு தில்லை இளையோனே
தினை காட்டு கொல்லை வழி காட்ட வல்ல குறவாட்டி புல்லும் மணி மார்பா
அருள் காட்டு கல்வி நெறி காட்டு செல்வ அடல் காட்டு வல்ல அசுரர் கோபா
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே

மேல்

#478
முல்லை மலர் போலும் முத்தாய் உதிர்ந்தான நகை வள்ளை கொடி போலும் நல் காது இலங்கு ஆடு குழை
முல்லை மலர் மாலை சுற்று ஆடும் கொந்து ஆரும் குழல் அலை போது அம்
மொள்கு சிலை வாள் நுதல் பார்வை அம்பான கயல் கிள்ளை குரலார் இதழ் பூ எனும் போது முகம்
முன்னல் கமுகார் களம் தோய் சுணங்காய முலை மலை யானை
வல்ல குவடு ஆலிலை போலும் சந்தான வயிறு உள்ள துகில் நூல் இடை காம பண்டார அல்குல்
வழ்ழை தொடையார் மலர் கால் அணிந்து ஆடும் பரிபுர ஓசை
மல்லி சலியாட பட்டு ஆடை கொண்டாட மயல் தள்ளு நடையோடு சற்றே மொழிந்து ஆசை கொடு
வல்லவர்கள் போல பொன் சூறை கொண்டார்கள் மயல் உறலாமோ
அல்லல் வினை போக அசத்து ஆதி விண்டு ஓட நய உள்ளம் உறவாக வைத்து ஆளும் எம் தாதை மகிழ்
அள் அமைய ஞான வித்து ஓதும் கந்தா குமர முருகோனே
அன்ன நடையாள் குற பாவை பந்து ஆடு விரல் என்னுடைய தாய் வெண் முத்தார் கடம்பு ஆடு குழல்
அன்னை வலி சேர் தன கோடு இரண்டு ஆன வள்ளி மணவாளா
செல்லும் உக ஏழ் கடல் பாழி விண்டோடி அதிர வல்ல அசுரர் சேனை பட்டு மடிந்து குருதி
செல்ல திசையோடு விட்டு ஆடு சிங்கார முக வடி வேலா
தெள்ளு தமிழ் பாடியிட்டு ஆசை கொண்டாட சசி வல்லியோடு கூடி திக்கோர் கொண்டாட இயல்
தில்லை நகர் கோபுரத்தே மகிழ்ந்தே குலவு பெருமாளே

மேல்

#479
அட பக்கம் பிடித்து தோளொடு தோள் பொர வளைத்து செம் கரத்தில் சீரொடு பாவொடு
அணுக்கி செம் துணுக்கில் கோ இதழூறல்கள் அது கோதி
அணி பொன் பங்கயத்து பூண் முலை மேகலை நெகிழ்த்து பஞ்சரித்து தா பணமே என
அருட்டி கண்சிமிட்டி பேசிய மாதர்கள் உறவோடே
படி சித்தம் களித்து தான் மிக மாயைகள் படித்து பண் பயிற்று இ காதல்கள் மேல் கொள
பசப்பி பின் பிணக்கை கூறிய வீணிகள் அவ மாய
பரத்தை குண்டு உணர்த்து தோதக பேதைகள் பழிக்குள் சஞ்சரித்து போடு இடு மூடனை
பரத்துற்று அண் பதத்து போதகம் ஈது என அருள்தாராய்
தட கை தண்டு எடுத்து சூரரை வீரரை நொறுக்கி பொன்றவிட்டு தூள் எழ நீறு எழ
தகர்த்து பந்து அடித்து சூடிய தோரண கலை வீரா
தகட்டு பொன் சுவட்டு பூ அணை மேடையில் சமைப்பித்து அங்கு ஒருத்தி கோது இல மா மயில்
தனி பொற்பை புனத்தில் கோகில மா வளி மணவாளா
திடத்தில் திண் பொருப்பை தோள் கொடு சாடிய அரக்க திண் குலத்தை சூறை கொள் வீரிய
திரு பொன் பங்கயத்து கேசவர் மாயவர் அறியாமல்
திமித்த திந்திமித்தத்தோ என ஆடிய சமர்த்தர் பொன் புவிக்குள் தேவர்கள் நாயக
திருச்சிற்றம்பலத்துள் கோபுரம் மேவிய பெருமாளே

மேல்

#480
அக்கு பீளை மூளா இளை மூளையொடு புக்கு காய் பனி நீர் மயிர் தோல் குடில
பூச்சி புழுவோடு அடை ஆர் தசையுற மேவி
அத்தி பால் பல நாடி குழாய் அள் வழுப்பு சார் வலமே விளை ஊளை கொள்
அச்சு தோல் குடிலாம் அதிலே பொறி விரகாளர்
சுக்கத்து ஆழ் கடலே சுகமாம் என புக்கிட்டு ஆசை பெணாசை மணாசைகள்
தொக்கு தீவினை ஊழ்வினை காலமொடு அதனாலே
துக்கத்தே பரவாமல் சதாசிவ முத்திக்கே சுகமாக பராபர
சொர்க்க பூமியில் ஏறிடவே பதம் அருள்வாயே
தக்க தோகிட தாகிட தீகிட செக்க சேகண தாகண தோகண
தத்த தானன டீகுட டாடுடு என தாளம்
தத்தி சூரர் குழாமொடு தேர் பரி கெட்டு கேவலமாய் கடல் மூழ்கிட
சத்திக்கே இரையாம் எனவே விடு கதிர் வேலா
திக்க தோகண தாவெனவே பொரு சொச்ச தாதையர் தாம் எனவே திரு
செக்கர் பாதம் அதே பதியா சுதி அவை பாட
செம்பொன் பீலி உலா மயில் மா மிசை பக்கத்தே குற மாதொடு சீர் பெறு
தெற்கு கோபுர வாசலில் மேவிய பெருமாளே

மேல்

#481
ஆரத்தோடு அணி மார்பு இணை யானைகள் போருக்கு ஆம் என மா முலையே கொடு
ஆய தூசினை மேவிய நூல் இடை மட மாதர்
ஆலை கோதினில் ஈரம் இலா மன நேசத்தோடு உறவானவர் போலுவர்
ஆருக்கே பொருளாம் எனவே நினைவு அதனாலே
காருக்கே நிகராகிய ஓதிய மாழை தோடு அணி காதொடு மோதிய
கால தூதர் கை வேல் எனு நீள் விழி வலையாலே
காதல் சாகர மூழ்கிய காமுகர் மேலிட்டே எறி கீலிகள் நீலிகள்
காமத்தோடு உறவாகை இலா அருள்புரிவாயே
சூரர்க்கே ஒரு கோள் அரியாம் என நீல தோகை மயூரம் அதே ஏறிய
தூளிக்கே கடல் தூர நிசாசுரர் களம் மீதே
சோரிக்கே வெகு ரூபமதா அடு தான தானன தானன தானன
சூழிட்டே பல சோகுகள் ஆடவெ பொரும் வேலா
வீரத்தால் வல ராவணனார் முடி போக தான் ஒரு வாளியை ஏவிய
மேகத்தே நிகராகிய மேனியன் மருகோனே
வேதத்தோன் முதலாகிய தேவர்கள் பூசித்தே தொழ வாழ் புலியூரினில்
மேலை கோபுர வாசலில் மேவிய பெருமாளே

மேல்

#482
காதை காதி மோதி கேள்வி அற்ற காம பூசல் இட்டு மதியாதே
கார் ஒத்து ஏய் நிறத்த ஓதி காவனத்தின் நீழற்கே தருக்கி விளையாடி
சேதித்தே கருத்தை நேருற்றே பெருத்த சேல் ஒத்தே வருத்தும் விழி மானார்
தேமல் பார வெற்பில் மூழ்கி தாபம் மிக்க தீமைக்கு ஆவி தப்ப நெறி தாராய்
மாதை காதலித்து வேட கானகத்து வாச தாள் சிவப்ப வருவோனே
வாரிக்கே ஒளித்த மாய சூரை வெட்டி மாள போர் தொலைத்த வடி வேலா
வீதி தேர் நடத்து தூள் அத்தால் அருக்கன் வீர தேர் மறைத்த புலியூர் வாழ்
மேலை கோபுரத்து மேவி கேள்வி மிக்க வேதத்தோர் துதித்த பெருமாளே

மேல்

#483
கொள்ளை ஆசைக்காரிகள் பாதக வல்ல மாயக்காரிகள் சூறைகள்
கொள்ளும் ஆயக்காரிகள் வீணிகள் விழியாலே
கொல்லும் லீலைக்காரிகள் யாரையும் வெல்லும் மோகக்காரிகள் சூது சொல்
கொவ்வை வாய் நிட்டூரிகள் மேல் விழும் அவர் போலே
உள்ள நோ வைத்தே உறவாடியர் அல்லை நேர் ஒப்பாம் மன தோஷிகள்
உள் விரோதக்காரிகள் மாயையில் உழல் நாயேன்
உய்யவே பொன் தோள்களும் ஆறு இரு கையும் நீப தார் முகம் ஆறும் முன்
உள்ள ஞான போதமும் நீ தா வருவாயே
கள்ள மாய தாருகன் மா முடி துள்ள நீல தோகையின் மீது ஒரு
கையில் வேல் தொட்டு ஏவிய சேவக முருகோனே
கல்லிலே பொன் தாள் படவே அது நல்ல ரூப தேவ கானிடை
கௌவை தீர போகும் இராகவன் மருகோனே
தெள்ளி ஏமுற்று ஈரம் முன் ஓதிய சொல் வழாமல் தான் ஒரு வானுறு
செல்வி மார்பில் பூஷணமாய் அணை மணவாளா
தெள்ளும் ஏனல் சூழ் புனம் மேவிய வள்ளி வேளைக்கார மனோகர
தில்லை மேலை கோபுரம் மேவிய பெருமாளே

மேல்

#484
தாது மா மலர் முடியாலே பதறாத நூபுர அடியாலே கர
தாளமாகிய நொடியாலே மடி பிடியாலே
சாடை பேசிய வகையாலே மிகு வாடை பூசிய நகையாலே பல
தாறுமாறு சொல் மிகையாலே அன நடையாலே
மோதி மீறிய முலையாலே முலை மீதில் ஏறிய கலையாலே வெகு
மோடி நாணய விலையாலே மயல் தரு மானார்
மோக வாரிதிதனிலே நாள்தொறு மூழ்குவேன் உனது அடியார் ஆகிய
மோன ஞானிகளுடனே சேரவும் அருள்வாயே
காதலாய் அருள்புரிவாய் நான்மறை மூலமே என உடனே மா கரி
காண நேர் வரு திருமால் நாரணன் மருகோனே
காதல் மாதவர் வலமே சூழ் சபை நாதனார் தமது இடமே வாழ் சிவ
காம நாயகி தரு பாலா புலிசையில் வாழ்வே
வேத நூல் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை மூவாயிரம்
மேன்மை வேதியர் மிகவே பூசனைபுரி கோவே
வீறு சேர் வரை அரசாய் மேவிய மேரு மால் வரை என நீள் கோபுர
மேலை வாயிலின் மயில் மீது ஏறிய பெருமாளே

மேல்

#485
எலுப்பு தோல் மயிர் நாடி குழாம் மிடை இறுக்கு சீ புழுவோடு அடை மூளைகள்
இரத்த சாகர நீர் மலம் மேவிய கும்பி ஓடை
இளைப்பு சோகைகள் வாதம் விலாவலி உளைப்பு சூலையொடே வலுவாகிய
இரைப்பு கேவல மூலவியாதியொடு அண்டவாதம்
குலைப்பு காய் கனல் நீரிழிவு ஈளையொடு அளைப்பு காது அடை கூனல் விசூசிகை
குருட்டு கால் முடம் ஊமை உள் ஊடு அறு கண்டமாலை
குடி புக்கு ஊனம் இதே சதமாம் என எடுத்து பாழ் வினையால் உழல் நாயேன் உன்
இடத்து தாள் பெற ஞான சதாசிவ அன்பு தாராய்
கெலிக்க போர் பொரு சூரர் குழாம் உமிழ் இரத்த சேறு எழ தேர் பரி யாளிகள்
கெடுத்திட்டே கடல் சூர் கிரி தூள்பட கண்ட வேலா
கிளர் பொன் தோளி சராசரம் மேவி எய் அசைத்து பூசைகொள் ஆயி பராபரி
கிழ பொன் காளை மேல் ஏறு எம் நாயகி பங்கின் மேவும்
வலித்து தோள் மலை ராவணன் ஆனவன் எடுத்து போது உடல் கீழ் விழவே செய்து
மகிழ் பொன் பாத சிவாய நமோ அர சம்பு பாலா
மலைக்கு ஒப்பா முலையாள் குற மாதினை அணைத்து சீர் புலியூர் பரமாகிய
வடக்கு கோபுர வாசலில் மேவிய தம்பிரானே

மேல்

#486
நீல மா முகில் போலும் வார் குழலார்கள் மாலை குலாவ வேல் கணை
நீள வாள் விழி பார்வை காது இரு குழை ஆட
நீடு மார்பு இணை ஆட ஓடிய கோடு போல் இணை ஆட நூல் இடை
நேச பாளித சோலை மா மயில் என ஏகி
காலில் நூபுர ஓசை கோ என ஆடி மால் கொடு நாணியே வியர்
காயமோடு அணு பாகு பால் மொழி விலைமாதர்
காதலாய் அவரோடு பாழ் வினை மூழ்கி ஏழ் நரகு ஆழும் மூடனை
காரீர் பாரும் ஐயா சிவா பதம் அருள்வாயே
கோல மா மயில் ஏறி வார் குழை ஆட வேல் கொடு வீர வார் கழல்
கோடிகோடி இடி ஓசை போல் மிக மேரு தூளாய்
கோடு கோ என ஆழி பாடுகள் தீவு தாடு அசுரார் குழாமொடு
கூளமாக விணோர்கள் வாழ்வுற விடும் வேலா
நாலு வேதம் ஊடாடு வேதனை ஈண கேசவனார் சகோதரி
நாதர் பாகம் விடாள் சிகா மணி உமை பாலா
ஞான பூமியதான பேர் புலியூரில் வாழ் தெய்வ யானை மானொடு
நாலு கோபுர வாசல் மேவிய பெருமாளே

மேல்

#487
வாதம் பித்தமோடு சூலை விப்புருதி ஏறு கல் படுவன் ஈளை பொக்கு இருமல்
மாலை புற்று எழுதல் ஊசல் பற்சனியொடு அந்தி மாலை
மாசு அடை குருடு காது அடைப்பு செவிடு ஊமை கெட்ட வலி மூலம் முற்று தரு
மாலையுற்ற தொணூறு ஆறு தத்துவர்கள் உண்ட காயம்
வேத வித்து பரிகோலமுற்று விளையாடுவித்த கடல் ஓடம் மொய்த்த பல
வேடமிட்டு பொருள் ஆசை பற்றி உழல் சிங்கியாலே
வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ ஓசை கெட்டு மடியாமல் முத்தி பெற
வீடு அளித்து மயில் ஆடு சுத்த வெளி சிந்தியாதோ
ஓத அத்தி முகிலோடு சர்ப்ப முடி நீறு பட்டு அலற சூர வெற்பு அவுணரோடு
பட்டு விழ வேலை விட்ட புகழ் அங்கி வேலா
ஓம் நமச்சிவய சாமி சுத்த அடியார்களுக்கும் உபகாரி பச்சை உமை
ஓர் புறத்து அருள் சிகாமணி கடவுள் தந்த சேயே
ஆதி கற்பக விநாயகற்கு பிறகான பொன் சரவணா பர பிரமன்
ஆதி உற்ற பொருள் ஓதுவித்தமை அறிந்த கோவே
ஆசை பெற்ற குற மாதை நித்த வனம் மேவி சுத்த மணம் ஆடி நல் புலியுர்
ஆடக படிக கோபுரத்தின் மகிழ் தம்பிரானே

மேல்

#488
சுரும்பு உற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில் கூவ துரந்துற்ற குளிர் வாடை அதனாலும்
துலங்குற்ற மரு வாளி விரைந்து உற்ற படி ஆல தொடர்ந்து உற்று வரு மாதர் வசையாலும்
அரும்புற்ற மலர் மேவு செழும் கொற்ற அணையாலும் அடைந்திட்ட விடை மேவு மணியாலும்
அழிந்துற்ற மட மானை அறிந்து அற்றம் அது பேணி அசைந்துற்ற மது மாலை தர வேணும்
கரும் கொற்ற மத வேழம் முனிந்துற்ற கலை மேவி கரந்து உள்ள மட மானின் உடனே சார்
கரும்பு உற்ற வயல் சூழ பெரும்பற்ற புலியூரில் களம் பற்றி நடமாடும் அரன் வாழ்வே
இருந்து உற்று மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர இதம் பெற்ற மயில் ஏறி வரு கோவே
இனம் துற்ற வரு சூரன் உருண்டிட்டு விழ வேல் கொடு எறிந்திட்டு விளையாடு பெருமாளே

மேல்

#489
இணங்கி தண்பொடு பால் மொழி பேசிகள் மணந்திட்டு சுகமாய் விளையாடிகள்
இளம் சொல் செப்பிகள் சாதனை வீணிகள் கடிது ஆகும்
இடும்பை பற்றிய தாம் என மேயினர் பெரும் சொல் பித்தளை தானும் வையாதவர்
இரும்பில் பற்றிய கூர் விழி மாதர்கள் எவரேனும்
பணம் சுற்றி கொளு உபாய உதாரிகள் மணம் கட்டு குழல் வாசனை வீசிகள்
பலம் செப்பி தர மீள அழையாதவர் அவரோடே
பதம் துய்த்து கொடு தீமைய மா நரகு அடைந்திட்டு சவமாகி விடாது உன
பதம் பற்றி புகழானது கூறிட அருள்வாயே
வணங்க சித்தம் இலாத இராவணன் சிரம் பத்து கெட வாளி கடாவியெ
மலங்க பொக்கரை ஈடு அழி மாதவன் மருகோனே
மதம் பட்டு பெரு சூரபன்மாதியர் குலம் கொட்டத்து இகல் கூறிய மோடரை
வளைந்திட்டு களம் மீதினிலே கொல விடும் வேலா
பிணம் பற்றி கழுகோடு பல் கூளிகள் பிடுங்கி கொத்திடவே அமர் ஆடியே
பிளந்திட்டு பல மா மயில் ஏறிய முருகோனே
பிரிந்திட்டு பரிவாகிய ஞானிகள் சிலம்பு அத்த கழல் சேரவே நாடிடு
பெரும்பற்ற புலியூர்தனில் மேவிய பெருமாளே

மேல்

#490
விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம் அடங்கி கை சிறையான அநேகமும்
விழுங்கப்பட்டு அறவே அறல் ஓதியர் விழியாலே
விரும்பத்தக்கன போகமும் மோகமும் விளம்பத்தக்கன ஞானமும் மானமும்
வெறும் சுத்த சலமாய் வெளியாய் உயிர்விடும் நாளில்
இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல் கிடந்திட்டு தமர் ஆனவர் கோ என
இடம் கட்டி சுடுகாடு புகா முனம் மனதாலே
இறந்திட்டு பெறவே கதியாயினும் இருந்திட்டு பெறவே மதியாயினும்
இரண்டில் தக்கது ஒர் ஊதியம் நீ தர இசைவாயே
கொடுங்கை பட்ட மராமரம் ஏழுடன் நடுங்க சுக்ரிவன் அவனோடு அமர் ஆடிய
குரங்கை செற்று மகா உததி தூள் எழ நிருதேசன்
குலம் கண்பட்ட நிசாசரர் கோ என இலங்கைக்குள் தழலோன் எழ நீடிய
குமண்டை குத்திர ராவணனார் முடி அடியோடே
பிடுங்க தொட்ட சராதிபனார் அதி ப்ரியம் கொள் தக்க நல் மா மருகா இயல்
ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என விருது ஊதும்
ப்ரசண்ட சொல் சிவ வேத சிகாமணி ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ
பெரும்பற்ற புலியூர்தனில் மேவிய பெருமாளே

மேல்

#491
கொந்தள ஓலைகள் ஆட பண் சங்கு ஒளி போல் நகை வீசி தண்
கொங்கைகள் மார்பினில் ஆட கொண்டை என் மேகம்
கொங்கு எழு தோள் வளை ஆட கண் செங்கயல் வாளிகள் போல பண்
கொஞ்சிய கோகிலமாக பொன் பறிகாரர்
தந்திரமாம் என ஏகி பொன் தொங்கலொடு ஆரமும் ஆட செம்
தம்பல வாயொடு பேசிக்கொண்டு உறவாடி
சம்பளம் ஈது என ஓதி பின் பஞ்சணை மேல் மயல் ஆடு அச்சம்
சங்கை இல் மூளியர்பால் வைக்கும் செயல் தீராய்
அந்தகன் ஆருயிர் போக பொன் திண் புரமோடு எரி பாய பண்டு
அங்கசனார் உடல் வேக கண்டு அழல் மேவி
அண்டர்களோடு அடல் ஆர் தக்கன் சந்திர சூரியர் வீழ சென்று
அம்பல மீதினில் ஆடு அத்தன் குருநாதா
சிந்துரமோடு அரி தேர் வர்க்கம் பொங்கமொடு ஏழ் கடல் சூர் பத்மன்
சிந்திட வேல் விடு வாகை திண் புய வேளே
செம் குற மாது மினாளை கண்டு இங்கிதமாய் உறவாடி பண்
செந்தமிழ் மால் புலியூர் நத்தும் பெருமாளே

மேல்

#492
நகையால் எத்திகள் வாயில் தம்பலமோடு எத்திகள் நாண் அற்று இன்
நயனால் எத்திகள் நாறல் புண் தொடை மாதர்
நடையால் எத்திகள் ஆர கொங்கையினால் எத்திகள் மோகத்தின்
நவிலால் எத்திகள் தோகை பைம் குழல் மேக
சிகையால் எத்திகள் ஆசை சங்கடியால் எத்திகள் பாடி பண்
திறனால் எத்திகள் பார திண் தெருவூடே
சிலர் கூடி கொடு ஆடி கொண்டு உழல்வாருக்கு உழல் நாயெற்கு உன்
செயலால் அற்புத ஞானத்தின் கழல் தாராய்
பகையார் உட்கிட வேலை கொண்டு உவர் ஆழி கிரி நாகத்தின்
படமோடு இற்றிட சூரை சங்கரி சூரா
பண நாகத்திடை சேர் முத்தின் சிவகாமிக்கு ஒரு பாகத்தன்
பரிவால் சத்து உபதேசிக்கும் குரவோனே
சுக ஞான கடல் மூழ்க தந்து அடியேனுக்கு அருள் பாலிக்கும்
சுடர் பாத குகனே முத்தின் கழல் வீரா
சுக ரேசம் தன பார செம் குற மாதை களவால் நித்தம்
சுகம் மூழ்கி புலியூர் நத்தும் பெருமாளே

மேல்

#493
எழு கடல் மணலை அளவிடில் அதிகம் எனது இடர் பிறவி அவதாரம்
இனி உனது அபயம் எனது உயிர் உடலும் இனி உடல் விடுக முடியாது
கழுகொடு நரியும் எரி புவி மறலி கமலனும் மிகவும் அயர்வானார்
கடன் உனது அபயம் அடிமை உன் அடிமை கடுகி உன் அடிகள் தருவாயே
விழு திகழ் அழகி மரகத வடிவி விமலி முன் அருளும் முருகோனே
விரி தலம் எரிய குலகிரி நெரிய விசை பெறு மயிலில் வருவோனே
எழு கடல் குமுற அவுணர்கள் உயிரை இரை கொளும் அயிலை உடையோனே
இமையவர் முநிவர் பரவிய புலியுரினில் நடம் மருவு பெருமாளே

மேல்

#494
தறுகணன் மறலி முறுகிய கயிறு தலை கொடு விசிறி கொடு போகும்
சளம் அது தவிர அளவிடு சுருதி தலை கொடு பல சாத்திரம் ஓதி
அறு வகை சமயம் முறைமுறை சருவி அலைபடு தலை முச்சி இனை ஆகும்
அருவரு ஒழிய வடிவுள பொருளை அலம்வர அடியேற்கு அருள்வாயே
நறு மலர் இறைவி அரி திரு மருக நகம் உதவிய பார்ப்பதி வாழ்வே
நதி மதி இதழி பணி அணி கடவுள் நடமிடு புலியூர் குமரேசா
கறுவிய நிருதர் எறி திரை பரவு கடலிடை பொடியா பொருதோனே
கழல் இணை பணியும் அவருடன் முனிவு கனவிலும் அறியா பெருமாளே

மேல்

#495
இரச பாகு ஒத்த மொழி அமுர்த மாணிக்க நகை இணையிலா சத்தி விழியார் பசும்பொன் நீரர்
எழிலி நேர் ஒத்த இருள் அளக பார செயல்கள் எழுதொணாத பிறையினார் அரும் புருவர்
எழுது தோடிட்ட செவி பவள நீல கொடிகள் இகலி ஆட படிகமோடு அடும் பொன் உரு திங்கள் மேவும்
இலவு தாவித்த இதழ் குமிழை நேர் ஒத்த எழில் இலகு நாசி கமுகு மால சங்கின் ஒளி
இணை சொல் க்ரீவ தரள இன ஒள் தால பனையின் இயல் கலா புத்தகமொடு ஏர் சிறந்த அடி
இணையில் ஆனை குவடு என் ஒளி நிலா துத்தி படர் இகலி ஆர தொடையும் ஆரும் இன்ப ரச தங்க மார்பில்
வரிகள் தாபித்த முலை இசைய ஆலின் தளிரின் வயிறு நாபி கமலம் ஆம் எனும் சுழிய
மடு உரோம கொடி என் அளிகள் சூழ்வுற்ற நிரை மருவு நூல் ஒத்த இடை ஆர சம்பை அல்குல்
மணம் எலாம் உற்ற நறை கமல போதும் தொடை என் வளமை ஆர்பு கதலி சேரு செம்பொன் உடை ரம்பை மாதர்
மயல் அதால் இற்று அடியென் அவர்கள்பால் உற்று வெகு மதன பாணத்தினுடன் மேவி மஞ்ச மிசை
வதனம் வேர்வுற்று அவிர முலைகள் பூரிக்க மிடர் மயில் புறா தத்தை குயில் போல் இலங்கு அமளி
வசனமாய் பொத்தி இடை துவள மோகத்து உள் அமிழ் வசம் எலாம் விட்டும் அற வேறு சிந்தனையை தந்து ஆள்வாய்
முரசு பேரி திமிலை துடிகள் பூரி தவில்கள் முருடு காள பறைகள் தாரை கொம்பு வளை
முகடு பேர்வு உற்ற ஒலி இடிகள் போல் ஒத்த மறை முதுவர் பாடி குமுறவே இறந்த அசுரர்
முடிகளோடு எற்றி அரி இரதம் யானை பிணமொடு இவுளி வேலை குருதி நீர் மிதந்து திசை எங்கும் ஓட
முடுகி வேல் விட்டு வட குவடு வாய் விட்டு அமரர் முநிவர் ஆடி புகழ வேத விஞ்சையர்கள்
முழுவு வீணை கினரி அமுர்த கீத தொனிகள் முறையதாக பறைய ஓதி ரம்பையர்கள்
முலைகள் பாரிக்க உடன் நடனம் ஆடிற்று வர முடி பதாகை பொலியவே நடம் குலவு கந்த வேளே
அரசு மா கற்பகமொடு அகில் பலா இர்ப்பை மகிழ் அழகு வேய் அத்தி கமுகோடு அரம்பையுடன்
அளவி மேகத்தில் ஒளிர் வனமொடு ஆட குயில்கள் அளிகள் தோகை கிளிகள் கோ என பெரிய
அமுர்த வாவி கழனி வயலில் வாளை கயல்கள் அடையும் ஏர் அ கனக நாடெனும் புலியுர் சந்த வேலா
அழகு மோக குமரி விபுதை ஏனல் புனவி அளி குலாவுற்ற குழல் சேர் படம்பு தொடை
அரசி வேத சொருபி கமல பாத கரவி அரிய வேட சிறுமியாள் அணைந்த புகழ்
அருண ரூப பதமொடு இவுளி தோகை செயல் கொடு அணை தெய்வானை தனமுமே மகிழ்ந்து புணர் தம்பிரானே

மேல்

#496
இருளும் ஓர் கதிர் அணுகவொணாத பொன் இடமது ஏறியே என் இரு நோயும்
எரியவே மலம் ஒழியவே சுடர் இலகு மூலக ஒளி மேவி
அருவி பாய இன் அமுதம் ஊற உன் அருள் எலாம் எனது அளவாக
அருளியே சிவ மகிழவே பெற அருளியே இணை அடி தாராய்
பரம தேசிகர் குரு இலாதவர் பரமவை வான் மதி தவழ் வேணி
பவள மேனியர் எனது தாதையர் பரம ராசியர் அருள் பாலா
மருவி நாயெனை அடிமையாம் என மகிழ் மெய் ஞானமும் அருள்வோனே
மறை குலாவிய புலியுர் வாழ் குறமகள் மேல் ஆசை கொள் பெருமாளே

மேல்

#497
காவி உடுத்தும் தாழ் சடை வைத்தும் காடுகள் புக்கும் தடுமாறி
காய்கனி துய்த்தும் காயம் ஒறுத்தும் காசினி முற்றும் திரியாதே
சீவன் ஒடுக்கம் பூத ஒடுக்கம் தேற உதிக்கும் பர ஞான
தீப விளக்கம் காண எனக்கு உன் சீதள பத்மம் தருவாயே
பாவ நிறத்தின் தாருக வர்க்கம் பாழ்பட உக்ரம் தரு வீரா
பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும் பாடலை மெச்சும் கதிர் வேலா
தூவிகள் நிற்கும் சாலி வளைக்கும் சோலை சிறக்கும் புலியூரா
சூரர் மிக கொண்டாட நடிக்கும் தோகை நடத்தும் பெருமாளே

மேல்

#498
கோதிக்கோதி கூந்தலிலே மலர் பாவித்து ஆகம் சாந்து அணிவார் முலை
கோடு தானை தேன் துவர் வாய் மொழி குயில் போல
கூவிக்கூவி காண்டு இசை போலவே நாணிக்கூனி பாய்ந்திடுவார் சிலர்
கூடி தேறி சூழ்ந்திடுவார் பொருள் வருமோ என்று
ஓதி தோளில் பூம் துகிலால் முலை மூடி சூதில் தூங்கம் இலார் தெரு
ஓடி தேடி சோம்பிடுவார் சில விலைமாதர்
ஓரு சேர சேர்ந்திடுவார் கலி சூளைக்கார சாங்கமிலார் சிலவோரை
சாக தீம்பிடுவார் செயல் உறவாமோ
வேதத்தோனை காந்தள் கையால் தலை மேல் குட்டு ஆடி பாந்தள் சதா முடி
வீரிட்டு ஆட காய்ந்து அசுரர்கள் மெல் விடும் வேலா
வேளை சீறி தூங்கலொடே வயமாவை தோலை சேர்ந்து அணிவார் இட
மீது உற்றாள் பொன் சாம்பவி மாது உமை தரு சேயே
நாதத்து ஓசை காண் துணையே சுடர் மூலத்தோனை தூண்டிடவே உயிர்
நாடி காலில் சேர்ந்திடவே அருள் சுர மானை
ஞான பால் முத்தேன் சுருபாள் வளி மாதை கானில் சேர்ந்து அணைவாய் சிவ
ஞான பூமி தேன் புலியூர் மகிழ் பெருமாளே

மேல்

#499
சக சம்ப குடை சூழ் சிவிகை மெல் மத இன்பத்துடனே பல பணி
தனிதம் பட்டு உடையோடு இகல் முரசு ஒலி வீணை
தவளம் தப்பு உடனே கிடுகிடு நடை தம்பட்டம் இடோல் பல ஒலி
சதளம் பொன் தடிகாரரும் இவை புடை சூழ
வெகு கும்பத்துடனே பல படை கரகம் சுற்றிடவே வர இசை
வெகு சம்பத்துடனே அழகுடன் நிதம் மேவும்
விருமம் சித்திரமாம் இது நொடி மறையும் பொய் பவுஷோடு உழல்வது
விட உம்பர்க்கு அரிதாம் இணை அடி தருவாயே
திகுதந்தி திகுதோ திகுதிகு திகுதந்தி திகுதோ திகுதிகு
திகுர்தஞ்செ செகசே செககண என பேரி
திமிர்தம் கல் குவடோடு எழு கடல் ஒலி கொண்டு அற்று உருவோடு அலறிட
திரள் சண்டத்து அவுணோர் பொடிபட விடும் வேலா
அகரம் பச்சுருவோடு ஒளி உறை படிகம் பொன் செயலாள் அரன் அரி
அயன் அண்டர்க்கும் அரியாள் உமை அருள் முருகோனே
அமுர்தம் பொன் குவடோடு இணை முலை மதி துண்டம் புகழ் மான் மகளோடும்
அருள் செம்பொன் புலியூர் மருவிய பெருமாளே

மேல்

#500
சகுடம் உந்தும் கடல் அடைந்து உங்கு உள மகிழ்ந்து தோய் சங்கம்
கமுகு அடைந்து அண்ட அமுது கண்டம் தரள கந்தம் தேர் கஞ்சம்
சரம் எனும் கண் குமிழ துண்டம் புரு எனும் செம் சாபம் பொன் திகழ் மாதர்
சலச கெந்தம் புழுகு உடன் சண்பக மணம் கொண்டு ஏய் இரண்டு அம்
தன கனம் பொன் கிரி வணங்கும் பொறி படும் செம் பேர் வந்து அண்
சலன சம்பை ஒன்று இடை பணங்கின் கடி தடம் கொண்டார் அம் பொன் தொடர் பார்வை
புகலல் கண்டு அம் சரி கரம் பொன் சரண பந்தம் தோதிந்தம்
புரமுடன் கிண்கிணி சிலம்பும் பொலி அலம்பும் தாள் ரங்கம்
புணர்வு அணைந்து அண்டுவரொடும் தொண்டு இடர் கிடந்துண்டு ஏர் கொஞ்சும் கடை நாயேன்
புகழ் அடைந்து உன் கழல் பணிந்து ஒண் பொடி அணிந்து அங்கு ஆநந்தம்
புனல் படிந்துண்டு அவசம் மிஞ்சும் தவசர் சந்தம் போலும் திண்
புவனி கண்டு இன்று அடி வணங்கும் செயல் கொள அம் செம் சீர் செம்பொன் கழல் தாராய்
திகுடதிந்திம் தகுடதந்தம் திகுடதிந்திம் தோதிந்தம்
டகுடடண்டண் டிகுடடிண்டிண் டகுடடண்டண் டோடிண்டிண்
டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண் டிமுடடிண்டு என்றே சங்கம் பல பேரி
செக கணம் சம் சலிகை பஞ்சம் பறை முழங்கும் போர் அண்டம்
சிலை இடிந்தும் கடல் வடிந்தும் பொடி பறந்து உண்டோர் சங்கம்
சிரம் உடைந்து அண்டு அவுணர் அங்கம் பிணம் அலைந்து அன்று ஆடும் செம் கதிர் வேலா
அகில அண்டம் சுழல எங்கும் பவுரி கொண்டு அங்கு ஆடும் கொன்
புகழ் விளங்கும் கவுரி பங்கன் குரு எனும் சிங்காரம் கொண்டு
அறு முகம் பொன் சதி துலங்கும் திரு பதம் கந்தா என்று என்று அமரோர்பால்
அலர் பொழிந்து அம் கரம் முகிழ்ந்து ஒண் சரணம் உளம் கொண்டு ஓத அந்தம்
புனை குற பெண் சிறுமி அங்கம் புணர் செயம் கொண்டே அம் பொன்
அமை விளங்கும் புலிசரம் பொன் திரு நடம் கொண்டார் கந்த அம் பெருமாளே

மேல்

#501
சாந்துடனே புழுகு தோய்ந்து அழகு ஆர் குழலை மோந்து பயோதரம் அது அணையாக
சாய்ந்து ப்ரதாபமுடன் வாழ்ந்து அநுராக சுக காந்தமொடு ஊசி என மடவார்பால்
கூர்ந்த க்ருபா மனது போந்து உன தாள் குறுகி ஓர்ந்து உணரா உணர்வில் அடி நாயேன்
கூம்பி அவிழ் கோகநக பூம் பத கோது இல் இணை பூண்டு உறவாடு தினம் உளதோ தான்
பாந்தளின் மீது இனிதின் ஓங்கு கணே துயில்கொள் நீண்டிடும் மாலொடு அயன் அறியாது
பாம்பு உருவான முநி வாம் புலியான பதன் ஏய்ந்து எதிர் காண நடமிடும் பாதா
பூந்து உணர் பாதி மதி வேய்ந்த சடா மகுடமாம் கனகாபுரியில் அமர் வாழ்வே
பூ கமுகு ஆர்வு செறியும் கநகா புரிசை சூழ் புலியூரில் உறை பெருமாளே

மேல்

#502
சுடர் அனைய திரு மேனியுடை அழகு முது ஞான சொருப கிரீடம் மேவும் முகம் ஆறும்
சுரர் தெரியல் அளி பாட மழலை கதி நறை பாய துகிர் இதழின் மொழி வேத மணம் வீச
அடர் பவள ஒளி பாய அரிய பரிபுரம் ஆட அயில் கரமொடு எழில் தோகை மயில் ஏறி
அடியன் இருவினை நீறுபட அமரர் இது புரை அதிசயம் என அருள் பாட வரவேணும்
விடை பரவி அயன் மாலொடு அமரர் முநி கணம் ஓட மிடறு அடைய விடம் வாரி அருள் நாதன்
மினல் அனைய இடை மாது இடம் மருவு குருநாதன் மிக மகிழ அநுபூதி அருள்வோனே
இடர் கலிகள் பிணி ஓட எனையும் அருள் குற மாதின் இணை இளநீர் முலை மார்பில் அணை மார்பா
இனிய முது புலி பாதன் உடன் அரவு சதகோடி இருடியர்கள் புகழ் ஞான பெருமாளே

மேல்

#503
தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டு உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர்
சற்று அவிடம் வீடும் இனி வாரும் என ஓடி மடி பிடி போல
தை சரசமோடு உறவெ ஆடி அகமே கொடுபொய் எத்தி அணை மீதில் இது காலம் என் நிர் போவது என
தட்டு புழுகோடு பனி நீர் பல சவாதை அவர் உடல் பூசி
வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற
வட்ட முலை மார் புதைய வேர்வை தர தோள் இறுகி உடை சோர
மச்ச விழி பூசலிட வாய் புலி உலாசமுடன் ஒப்பி இருவோரும் மயல் மூழ்கிய பின் ஆபரணம்
வைத்து அடகு தேடு பொருள் சூறை கொளுவார் கலவி செயலாமோ
சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி எனை ஈண மலை மாது சிவை
தற்பரனொடு ஆடும் அபிராமி சிவகாமி உமை அருள் பாலா
சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட ரத்ந மயில் ஏறி விளையாடி அசுராரை விழ
சத்தியினை ஏவி அமரோர்கள் சிறை மீள நடமிடுவோனே
துத்தி தன பார வெகு மோக சுக வாரி மிகு சித்ர முக ரூபி எனது ஆயி வளி நாயகியை
சுத்த அணையூடு வட மா முலை விடாத கர மணி மார்பா
சுத்த அம் மகா தவ சிகாமணி என ஓதும் அவர் சித்தம் அதிலே குடியதா உறையும் ஆறுமுக
சுப்ரமணியா புலியுர் மேவி உறை தேவர் புகழ் பெருமாளே

மேல்

#504
துத்தி பொன் தனம் மேருவாம் என ஒத்து இப திரள் வாகுவாய் அவிர்
துப்பு முத்தோடு மார்பின் ஆடிட மயில் போலே
சுக்கை மை குழல் ஆட நூல் இடை பட்டுவிட்டு அவிர் காமனார் அல்குல்
சுற்றுவித்து உறு வாழை சேர் தொடை விலைமாதர்
தத்தை புட்குரல் ஓசை நூபுரம் ஒத்த நட்டமொடு ஆடி மார் முலை
சற்று அசைத்து குலாவும் வேசியர் அவரோடே
தர்க்கம் இட்டு உறவாடி ஈளை நோய் கக்கல் விக்கல் கொள் ஊளை நாய் என
சிச்சி சிச்சி என நால்வர் கூறிட உழல்வேனோ
தித்தி மித்திமி தீத தோதக தத்த னத்தன தான தீதிமி
திக்கு முக்கிட மூரி பேரிகை தவில் போட
சித்ர வித்தையர் ஆட வானவர் பொன் பு இட்டு இடு சேசேசே என
செக்குவிட்டு அசுரோர்கள் தூள்பட விடும் வேலா
செத்திட அ சமனார் கடா பட அற்று தைத்த சுவாமியார் இட
சித்திர சிவகாமியார் அருள் முருகோனே
தெற்கு அரக்கர்கள் தீவு நீறு இட விட்ட அச்சுதர் ஈன மானோடு
சித்திர புலியூரில் மேவிய பெருமாளே

மேல்

#505
நாடா பிறப்பு முடியாதோ என கருதி நாயேன் அரற்று மொழி வினையாயின்
நாதா திருச்சபையின் ஏறாது சித்தம் என நாலாவகைக்கும் உனது அருள்பேசி
வாடா மலர் பதவி தாதா என குழறி வாய்பாறி நிற்கும் எனை அருள்கூர
வாராய் மனக்கவலை தீராய் நினை தொழுது வாரேன் எனக்கு எதிர் வரவேணும்
சூடாமணி பிரபை ரூபா கனத்த அரி தோல் ஆசனத்தி உமை அருள் பாலா
தூயா துதிப்பவர்கள் நேயா எமக்கு அமிர்த தோழா கடப்ப மலர் அணிவோனே
ஏடு ஆர் குழல் சுருபி ஞானாதனத்தி மிகு மேராள் குறத்தி திரு மணவாளா
ஈசா தனி புலிசை வாழ்வே சுரர் திரளை ஈடேற வைத்த புகழ் பெருமாளே

மேல்

#506
நாலு சதுரத்த பஞ்சறை மூல கமலத்தில் அங்கியை நாடியில் நடத்தி மந்திர பந்தியாலே
நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற இசை நடத்தி மண்டல சந்தி ஆறில்
கோலமும் உதிப்ப கண்டு உள நாலினை மறித்தி இதம் பெறு கோ என முழுக்கு சங்கு ஒலி விந்து நாதம்
கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு ஒரு கோடி நடன பத அம் சபை என்று சேர்வேன்
ஆலம் மலருற்ற சம்பவி வேரிலி குல கொழுந்திலி ஆரணர் தலை கலம் கொளி செம்பொன் வாசி
ஆணவ மயக்கமும் கலி காமியம் அகற்றி என்று எனை ஆள் உமை பரத்தி சுந்தரி தந்த சேயே
வேல் அதை எடுத்தும் இந்திரர் மால் விதி பிழைக்க வஞ்சகர் வீடு எரி கொளுத்தி எண் கடல் உண்ட வேலா
வேத சதுரத்தர் தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர் வீறு நடனர்க்கு இசைந்து அருள் தம்பிரானே

மேல்

#507
நீல குழலார் முத்து அணி வாய் சர்க்கரையார் தை பிறை நீள் சசியார் பொட்டு அணி நுதல் மாதர்
நீல கயலார் பத்திர வேல் ஒப்பிடுவார் நல் கணி நேமித்து எழுதா சித்திர வடிவார் தோள்
ஆலை கழையார் துத்திகொள் ஆர குவடார் கட்டளையாக தமியேன் நித்தமும் உழல்வேனோ
ஆசை பதம் மேல் புத்தி மெய் ஞானத்துடனே பத்திரமாக கொளவே முத்தியை அருள்வாயே
மாலை குழலாள் அற்புத வேத சொருபாள் அக்கினி மார்பில் பிரகாச கிரி தன பார
வாச குயிலாள் நல் சிவ காம செயலாள் பத்தினி மாணிக்க மினாள் நிஷ்கள உமை பாதர்
சூல கையினார் அக்கினி மேனி பரனாருக்கு ஒரு சோதி பொருள் கேள்விக்கு இடு முருகோனே
சோதி பிரகாச செயலாள் முத்தமிழ் மானை புணர் சோதி புலியூர் நத்திய பெருமாளே

மேல்

#508
பனி போல துளி சல வாயுள் கரு பதின் மாதத்து இடை தலைகீழாய்
படி மேவிட்டு உடல் தவழ்வார் தத்து அடி பயில்வார் உத்தியில் சில நாள் போய்
தன மாதர் குழி வீழ்வார் தத்துவர் சதிகார சமன் வரு நாளில்
தறியார் இல் சடம் விடுவார் இப்படி தளர் மாய துயர் ஒழியாதோ
வினை மாய கிரி பொடியாக கடல் விகடார் உக்கிட விடும் வேலா
விதியோனை சது முடி நால் பொட்டு எழ மிகவே குட்டிய குருநாதா
நினைவோர் சித்தமொடு அகலாமல் புகு நிழலாள் பத்தினி மணவாளா
நிதியாம் இ புவி புலியூருக்கு ஒரு நிறைவே பத்தர்கள் பெருமாளே

மேல்

#509
மகரமொடு உறு குழை ஓலை காட்டியும் மழை தவழ் வனை குழல் மாலை காட்டியும்
வரவர வர இதழூறல் ஊட்டியும் வலை வீசும்
மகர விழி மகளிர் பாடல் வார்த்தையில் வழிவழி ஒழுகும் உபாய வாழ்க்கையில்
வளமையில் இளமையில் மாடை வேட்கையில் மறுகாதே
இகலிய பிரம கபால பாத்திரம் எழில் பட இடு திருநீறு சேர் திறம்
இதழியை அழகிய வேணி ஆர்த்ததும் விருதாக
எழில்பட மழுவுடன் மானும் ஏற்றது மிசைபட இசை தரு ஆதி தோற்றமும்
இவையிவை என உபதேசம் ஏற்றுவது ஒரு நாளே
ஜகதலம் அதில் அருள் ஞான வாள் கொடு தலை பறி அமணர் சமூகம் மாற்றிய
தவ முனி சகம் உளர் பாடு பாட்டு என மறை பாடி
தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா எனா சில சப்தமொடு எழுவன தாள் வாச்சியமுடனே நீள்
அகுகுகு குகு என ஆளி வாய் பல அலகைகள் அடைவுடன் ஆடும் ஆட்டமும்
அரன் அவனுடன் எழு காளி கூட்டமும் அகலாதே
அரி துயில் சயன வியாள மூர்த்தனும் மணி திகழ் மிகு புலியூர் வியாக்ரனும்
அரிது என முறைமுறை ஆடல் காட்டிய பெருமாளே

மேல்

#510
மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம் வைச்சு இறைச்ச பாத்திரம் அநுபோகம்
மட்க விட்ட சேக்கை உள் புழுத்த வாழ்க்கை மண் குல பதார்த்தம் இடி பாறை
எய்ச்சு இளைச்ச பேய்க்கும் மெய்ச்சு இளைச்ச நாய்க்கும் மெய்ச்சு இளைச்ச ஈக்கும் இரையாகும்
இ கடத்தை நீக்கி அ கடத்துள் ஆக்கி இப்படிக்கு மோக்ஷம் அருள்வாயே
பொய் சினத்தை மாற்றி மெய் சினத்தை ஏற்றி பொன் பதத்துள் ஆக்கு புலியூரா
பொக்கணத்து நீற்றை இட்டு ஒருத்தனார்க்கு புத்தி மெத்த காட்டு புன வேடன்
பச்சிலைக்கும் வாய்க்குள் எச்சிலுக்கும் வீக்கு பை சிலைக்கும் ஆட்கொள் அரன் வாழ்வே
பத்தி சித்தி காட்டி அத்தர் சித்தம் மீட்ட பத்தருக்கு வாய்த்த பெருமாளே

மேல்

#511
மதிய மண் குணம் அஞ்சு நால் முகம் நகர முன் கலை கங்கை நால் குண
மகர முன் சிகர அங்கி மூணிடை தங்கு கோண
மதனம் முன் தரி சண்டமாருதம் இரு குணம் பொறில் அஞ்சு எல் ஓர் தெரு
வகரம் மிஞ்சி அகன் படா கம் ஒர் ஒன்று சேரும்
கதிர் அடங்கிய அண்ட கோளகை யகர நின்றிடும் இரண்டு கால் மிசை
ககனம் மின் சுழி இரண்டு கால் பரி கந்து பாயும்
கருணை இந்திரியங்கள் சோதிய அருண சந்திர மண்டலீகரர்
கதி கொள் யந்திர விந்து நாதமொடு என்று சேர்வேன்
அதிர பம்பைகள் டங்கு டாடிக முதிர அண்டமொடு ஐந்து பேரிகை
டகுட டண்டட தொந்த தோதக என்று தாளம்
அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோடு இத விதம் பெறு சிந்து பாடிட
அமரர் துந்துமி சங்கு தாரைகள் பொங்க ஊடு
உதிர மண்டலம் எங்குமாய் ஒளி எழ குமண்டி எழுந்து சூரரை
உயர் நரம்பொடு எலும்பு மா முடி சிந்தி வீழ
உறு சினம் கொடு எதிர்த்த சேவக மழை புகுந்தவர் அண்டம் வாழ்வுற
உரகனும் புலி கண்ட ஊர் மகிழ் தம்பிரானே

மேல்

#512
மருவு கடல் முகில் அனைய குழல் மதி வதன நுதல் சிலை பிறை அது எணும் விழி
மச்ச பொன் கணை முக்கு பொன் குமிழ் ஒப்ப கத்தரி ஒத்திட்ட செவி
குமுத மலர் இதழ் அமுத மொழி நிரை தரளம் எனும் நகை மிடறு கமுகு என
வைத்து பொன் புய பச்சை தட்டையொடு ஒப்பிட்டு கமல கை பொன் உகிர்
வகைய விரலொடு கிளிகள் முக நகம் எனவும் இகலிய குவடும் இணை என
வட்ட துத்தி முகிழ்ப்ப சக்கிரம் வைத்து பொன் குடம் ஒத்திட்டு திகழ் முலை மேவும்
வடமும் நிரைநிரை தரளம் பவளமொடு அசைய பழு மர இலை வயிறு மயிர்
அற்பத்துக்கு இணை பொன் தொப்புளும் அப்புக்குள் சுழி ஒத்து பொன் கொடி
மதனன் உரு துடி இடையும் மினல் என அரிய கட தடம் அமிர்த கழை ரசம்
மட்டு பொன் கமலத்தில் சக்கிரி துத்தி பைக்கு ஒருமித்து பட்டு உடை
மருவு தொடை இணை கதலி பரடு கொள் கணையும் முழவு என கமடம் எழுதிய
வட்ட புத்தகம் ஒத்து பொன் சரணத்தில் பின் புறம் மெத்து தத்தைகள் மயில் போலே
தெருவில் முலை விலை உரை செய்து அவரவர் மயல் கொண்டு அணைவர மருள் செய் தொழில் கொடு
தெட்டி பற்பல சொக்கு இட்டு பொருள் பற்றி கட்டில் அணைக்க ஒப்பி புணர்
திலதம் அழிபட விழிகள் சுழலிட மலர்கள் அணை குழல் இடை கொள் துகில் பட
தித்தி துப்பு இதழ் வைத்து கை கொடு கட்டி குத்து முலைக்குள் கை பட
திரையில் அமுது என கழையில் ரசம் என பலவில் சுளை என உருக உயர் மயல்
சிக்கு பட்டு உடல் கெட்டு சித்தமும் வெட்கி துக்கமுற்று கொக்கு என நரை மேவி
செவியோடு ஒளிர் விழி மறைய மல சலம் ஒழுக பல உரை குழற தடி கொடு
தெத்தி பித்தமும் முற்றி தன் செயல் அற்று சிச்சி என துக்கப்பட
சிலர்கள் முது உடல் வினவு பொழுதினில் உவரி நிறம் உடை நமனும் உயிர் கொள
செப்பு அற்று பிணம் ஒப்பித்து பெயரிட்டு பொன் பறை கொட்ட செப்பிடு
செனனம் இது என அழுது முகம் மிசை அறைய அணைபவர் எடு என சுடலையில்
சில் திக்கு இரையிட்டிட்டு இப்படி நித்த துக்கம் எடுத்திட்டு சடம் உழல்வேனோ
குருவின் உரு என அருள்செய் துறையினில் குதிரை கொள வரு நிறை தவசி தலை
கொற்ற பொன் பதம் வைத்திட்டு அற்புதம் எற்றி பொன் பொருள் இட்டு கை கொள்ளும்
முதல்வர் இள கலை மதியம் அடை சடை அருண உழை மழு மருவு திரு புயர்
கொட்டத்து புரர் கெட்டு பொட்டு எழ விட்ட திக்கு அணை நக்கர்க்கு அற்புத
குமரன் என விருது ஒலியும் முரசொடு வளையும் எழு கடல் அதிர முழவொடு
கொட்ட துட்டரை வெட்டி தண் கடல் ஒப்ப திக்கும் மடுத்து தத்திட அமர் மேவி
குருகு கொடி சிலை குடைகள் மிடைபட மலைகள் பொடிபட உடுகள் உதிரிட
கொத்தி சக்கிரி பற்ற பொன் பரி எட்டு திக்கும் எடுத்திட்டு குரல்
குமர குருபர குமர குருபர குமர குருபர என ஒது அமரர்கள்
கொட்ப புட்பம் இறைத்து பொன் சரணத்தில் கை சிரம் வைத்து குப்பிட
குலவு நரி சிறை கழுகு கொடி பல கருடன் நடமிட குருதி பருகிட
கொற்ற பத்திரம் இட்டு பொன் ககனத்தை சித்தம் ரக்ஷித்து கொளும் மயில் வீரா
சிரமொடு இரணியன் உடல் கிழிய ஒரு பொழுதில் உகிர் கொடு அரி என் நடமிடு
சிற்பர் திண் பதம் வைத்து சக்கிரவர்த்திக்கு சிறை இட்டு சுக்கிரன்
அரிய விழி கெட இரு பதமும் உலகு அடைய நெடியவர் திருவும் அழகியர்
தெற்கு திக்கில் அரக்கர்க்கு சினமுற்று பொன் தசர்தற்கு புத்திர
செயமும் மன வலி சிலை கை கொடு கரம் இருபது உடை கிரி சிரம் ஒர் பதும் விழ
திக்கு எட்டை ககனத்தர்க்கு கொடு பச்சை பொன் புயலுக்கு சித்திர மருகோனே
திலத மதி முக அழகி மரகத வடிவி பரிபுர நடனி மலர் பத
சித்தர்க்கு குறி வைத்திட்ட தனம் முத்து பொன் கிரி ஒத்த சித்திர
சிவை கொள் திரு சரசுவதி வெகு வித சொருபி முதுவிய கிழவி இயல் கொடு
செட்டிக்கு சுகமுற்ற தத்துவ சித்தில் சில் பதம் வைத்த கற்புறு
திரையில் அமுது என மொழி செய் கவுரியின் அரிய மகன் என புகழ் புலி நகரில்
செப்பு பொன் தனம் உற்று பொன் குற தத்தைக்கு புளகித்திட்டு ஒப்பிய பெருமாளே

மேல்

#513
மனமே உனக்கு உறுதி புகல்வேன் எனக்கு அருகில் வருவாய் உரைத்த மொழி தவறாதே
மயில்வாகன கடவுள் அடியார்தமக்கு அரசு மனமாயை அற்ற சுக மதி பாலன்
நினைவேது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு மல நிலை வேரறுக்க வல பிரகாசன்
நிதி கா நமக்கு உறுதி அவரே பரப்பிரம நிழலாளியை தொழுது வருவாயே
இனம் ஓது ஒருத்தி ருபி நலம் ஏர் மறைக்கு அரிய இளையோள் ஒர் ஒப்புமிலி நிருவாணி
எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை இதழ் வேணி அப்பனுடை குருநாதா
முனவோர் துதித்து மலர் மழை போல் இறைத்துவர முது சூரரை தலை கொள் முருகோனே
மொழி பாகு முத்து நகை மயிலாள்தனக்கு உருகு முருகா தமிழ் புலியுர் பெருமாளே

மேல்

#514
முத்த மோகன தத்தையினார் குரல் ஒத்த வாய் இத சர்க்கரையார் நகை
முத்து வார் அணி பொன் குவடு ஆர் முலை விலைமாதர்
மொக்கை போக செகுத்திடுவார் பொருள் பற்றி வேறும் அழைத்திடுவார் சிலர்
மு சலீலிகை சொக்கிடுவார் இடர் கலி சூழ
சித்தில் ஆட அழைத்திடுவார் கவடுற்ற மாதர் வலை புகு நாயெனை
சித்தி ஞானம் வெளிப்படவே சுடர் மடம் மீதே
சித்து எலாம் ஒருமித்து உனது ஆறு இனம் வைத்து நாயென் அருள்பெறவே பொருள்
செப்பி ஆறுமுக பரிவோடு உணர்வு அருள்வாயே
தத்த னானத னத்தன தான் எனு உடுக்கை பேரி முழக்கிடவே கடல்
சத்த தீவு தயித்தியர் மாளிட விடும் வேலா
சத்தி லோக பர பரமேசுர நிர்த்தம் ஆடு கழல் கருணாகர
தற்பரா பர நித்தன ஒர்பால் உறை உமை பாலா
துத்தி மார் முலை முத்து அணி மோகன பொன் ப்ரகாசம் உள குற மான் மகள்
துப்பு வாய் இதழ் வைத்து அணை சோதி பொன் மணி மார்பா
சுட்டி நீல இரத்தின மா மயில் உற்று மேவிய அருள் புலியூர் வளர்
சுத்தனே சசி பெற்ற பெண் நாயகி பெருமாளே

மேல்

#515
பரம குரு நாத கருணை உபதேச பரவி தரு ஞான பெருமாள் காண்
பகலிரவு இலாத ஒளி வெளியில் மேன்மை பகரும் அதிகார பெருமாள் காண்
திரு வளரும் நீதி தின மனொகராதி செக பதியை ஆள் அ பெருமாள் காண்
செக தலமும் வானும் மருவு ஐ அவை பூத தெரிசனை சிவாய பெருமாள் காண்
ஒரு பொருள் அதாகி அரு விடையை ஊரும் உமைதன் மணவாள பெருமாள் காண்
உக முடிவு காலம் இறுதிகள் இலாத உறுதி அநுபூதி பெருமாள் காண்
கருவுதனில் ஊறும் அரு வினைகள் மாய கலவி புகுதா மெய் பெருமாள் காண்
கனகசபை மேவி அனவரதம் ஆடு கடவுள் செக சோதி பெருமாளே

மேல்

#516
வஞ்சமே கோடிகோடிகள் நெஞ்சமே சேர மேவிய வன்கணர் ஆரவாரமும் அருள்வோராய்
வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள் வந்தியா ஆசையே தரு விலைமாதர்
பஞ்சமாபாவமே தரு கொங்கை மேல் நேசமாய் வெகு பஞ்சியே பேசி நாள்தொறும் மெலியாதே
பந்தியாய் வானுளோர் தொழ நின்ற சீரே குலாவிய பண்பு சேர் பாத தாமரை அருள்வாயே
அஞ்சவே சூரன் ஆனவன் உய்ஞ்சு போகாமலே அயில் அன்று தான் ஏவி வானவர் சிறை மீள
அன்பினோடே மனோரதம் மிஞ்ச மேலான வாழ்வு அருள் அண்டர் கோவே பராபர முதல்வோனே
கொஞ்சவே காலின் மேவு சதங்கைதான் ஆட ஆடிய கொன்றையான் நாளுமே மகிழ் புதல்வோனே
கொந்து சேர் சோலை மேவிய குன்று சூழ்வாகவே வரு குன்றுதோறாடல் மேவிய பெருமாளே

மேல்

#517
திரு நிலம் மருவி காலின் இரு வழி அடை பட்டு ஓடி சிவ வழி உடனுற்று ஏக பர மீதே
சிவ சுடர் அதனை பாவை மணம் என மருவி கோல திரிபுரம் எரிய தீயில் நகை மேவி
இருவினை பொரிய கோல திருவருள் உருவத்து ஏகி இருள் கதிர் இலி பொன் பூமி தவசூடே
இருவரும் உருகி காய நிலை என மருவி தேவர் இளையவன் என வித்தாரம் அருள்வாயே
பரிபுர கழல் எட்டு ஆசை செவிடுகள்பட முத்தேவர் பழ மறை பணிய சூலம் மழு மானும்
பரிவொடு சுழல சேடன் முடி நெறுநெறு என கோவு பரியினை மலர் விட்டு ஆடி அடியோர்கள்
அரஹர உருகி சேசெ என திரு நடன கோலம் அருள்செயும் உமையின் பாகர் அருள் பாலா
அலர் அணி குழல் பொன் பாவை திரு மகள் அமளி போரொடு அடியவர் கயிலைக்கு ஆன பெருமாளே

மேல்

#518
தேன் உந்து முக்கனிகள் பால் செம் கருப்பு இளநீர் சீரும் பழித்த சிவம் அருள் ஊற
தீதும் பிடித்த வினை ஏதும் பொடித்து விழ சீவன் சிவ சொருபம் என தேறி
நான் என்பது அற்று உயிரோடு ஊன் என்பது அற்று வெளி நாதம் பர பிரம ஒளி மீதே
ஞானம் சுரப்ப மகிழ் ஆனந்த சித்தியோடே நாளும் களிக்க பதம் அருள்வாயே
வானம் தழைக்க அடியேனும் செழிக்க அயன் மாலும் பிழைக்க அலை விடம் ஆள
வாரும் கரத்தனை எமை ஆளும் தகப்பன் மழு மானின் கரத்தன் அருள் முருகோனே
தானம் தனத்ததனனா வண்டு சுற்றி மதுதான் உண் கடப்ப மலர் அணி மார்பா
தானம் குறித்து எமை ஆளும் திரு கயிலை சாலும் குறத்தி மகிழ் பெருமாளே

மேல்

#519
நகைத்து உருக்கி விழித்து மிரட்டி நடித்து விதத்தில் அதி மோகம்
நடத்து சமத்தி முகத்தை மினுக்கி நலத்தில் அணைத்து மொழியாலும்
திகைத்த வரத்தில் அடுத்த பொருள் கை திரட்டி எடுத்து வரவே செய்
திருட்டு முலை பெண் மருட்டு வலைக்குள் தெவிட்டு கலைக்குள் விழுவேனோ
பகைத்த அரக்கர் சிரத்தை அறுத்து படர்ச்சி கறுத்த மயில் ஏறி
பணைத்த கரத்த குணத்த மணத்த பதத்த கனத்த தன மாதை
மிகைத்த புனத்தில் இருத்தி அணைத்து வெளுத்த பொருப்பில் உறை நாதா
விரித்த சடைக்குள் ஒருத்தி இருக்க ம்ருகத்தை எடுத்தொர் பெருமாளே

மேல்

#520
பனியின் விந்து துளி போலவே கருவின் உறு அளவில் அங்கு ஒரு சூசமாய் மிளகு துவர்
பனை தெனம் கனி போலவே பல கனியின் வயிறு ஆகி
பருவமும் தலைகீழதாய் நழுவி நிலம் மருவி ஒன்பது வாசல் சேர் உருவம் உள
பதுமையின் போலவே வளி கயிறின் உடன் ஆடி
மன விதம் தெரியாமலே மலசலமொடு உடல் நகர்ந்து அழுது ஆறியே அனை முலையின்
மயமயின்று ஒரு பாலனாய் இகம் உடைய செயல் மேவி
வடிவம் முன் செய்த தீமையால் ஏயும் உனையும் அற மறந்து அகம் மீது போய் தினதினமும்
மனம் அழிந்து உடல் நாறினேன் இனி உனது கழல் தாராய்
தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு
தகுத குந்ததி தாகுதோ என முழவு வளை பேரி
தவில் கணம் பறை காளமோடு இமிலை தொனி இனம் முழங்க எழு வேலை போல் அதிர பொரு
சமர் முகங்களின் மேவியே விருது சொலும் அவுணோர்கள்
சினம் அழிந்திட தேர்கள் தோல் அரி பரிகள் குருதி எண் திசை மூடவே அலகை நரி
சிறை இனம் களிகூரவே நகை அருளி விடும் வேலா
சிவன் மகிழ்ந்து அருள் ஆனைமுகன் மருவி மனம் மகிழ்ந்து அருள்கூர ஓர் கயிலை மகிழ்
திகழ் குறிஞ்சியின் மாது மால் மருவு புகழ் பெருமாளே

மேல்

#521
புமிஅதனில் ப்ரபுவான புகலியில் வித்தகர் போல
அமிர்த கவி தொடை பாட அடிமை தனக்கு அருள்வாயே
சமரில் எதிர்த்த சுர் மாள தனி அயில் விட்டு அருள்வோனே
நமசிவய பொருளானே ரசதகிரி பெருமாளே

மேல்

#522
முகத்தை பிலுக்கி மெத்த மினுக்கி தொடைத்து ரத்ந முலை கச்சு அவிழ்த்து அசைத்து முசியாதே
முழுக்க கழப்பி எத்தி மழுப்பி பொருள் பறித்து மொழிக்குள் படுத்தி அழைத்து அமளி மீதே
நகைத்திட்டு அழுத்தி முத்தம் அளித்து களித்து மெத்த நயத்தில் கழுத்து இறுக்கி அணைவார்பால்
நடுக்குற்று அவர்க்கு மெத்த மனத்தை பெருக்க வைத்து நயத்து தியக்கி நித்தம் அழிவேனோ
செகக்க செகக்க செக்க தரிக்க தரிக்க தக்க திமித்தி திமித்தி தித்தி என ஆடும்
செகத்துக்கு ஒருத்தர் புத்ர நினைத்து துதித்த பத்த ஜெனத்துக்கு இனித்த சித்தி அருள்வோனே
மிகைத்து திடத்தொடு உற்று அசைத்து பொறுத்த அரக்கன் மிகுத்து பெயர்த்து எடுத்த கயிலாய
மிசைக்கு உற்று அடுத்து மற்ற பொருப்பை பொடித்து இடித்து மதித்து துகைத்து விட்ட பெருமாளே

மேல்

#523
ஒரு பதும் இருபதும் அறுபதும் உடன் ஆறும் உணர்வுற இரு பதம் உளம் நாடி
உருகிட முழு மதி தழல் என ஒளி திகழ் வெளியொடு ஒளி பெற விரவாதே
தெருவினில் மரம் என எவரொடும் உரை செய்து திரி தொழில் அவம் அது புரியாதே
திருமகள் மருவிய திரள் புய அறுமுக தெரிசனை பெற அருள்புரிவாயே
பரிவுடன் அழகிய பழமொடு கடலைகள் பயறொடு சில வகை பணியாரம்
பருகிடு பெரு வயிறு உடையவர் பழ மொழி எழுதிய கணபதி இளையோனே
பெரு மலை உருவிட அடியவர் உருகிட பிணி கெட அருள்தரு குமரேசா
பிடியொடு களிறுகள் நடை இட கலை திரள் பிணை அமர் திருமலை பெருமாளே

மேல்

#524
கறுத்த தலை வெளிறு மிகுந்து மதர்த்த இணை விழிகள் குழிந்து
கதுப்பில் உறு தசைகள் வறண்டு செவி தோலாய்
கழுத்து அடியும் அடைய வளைந்து கனத்த நெடு முதுகு குனிந்து
கதுப்புறு பல் அடைய விழுந்து உதடு நீர் சோர
உறக்கம் வரும் அளவில் எலும்பு குலுக்கி விடு இருமல் தொடங்கி
உரத்த கன குரலும் நெரிந்து தடி காலாய்
உரைத்த நடை தளரும் உடம்பு பழுத்திடு முன் மிகவும் விரும்பி
உனக்கு அடிமைப்படும் அவர் தொண்டுபுரிவேனோ
சிறுத்த செலு அதனுள் இருந்து பெருத்த திரை உததி கரந்து
செறித்த மறை கொணர நிவந்த ஜெயமால் ஏ
செறித்து அ வளைகடலில் வரம்பு புதுக்கி இளையவனொடு அறிந்து
செயிர்த்த அநுமனையும் உகந்து படையோடி
மற புரிசை வளையும் இலங்கை அரக்கன் ஒரு பது முடி சிந்த
வளைத்த சிலை விஜய முகுந்தன் மருகோனே
மலர் கமல வடிவு உள செம் கை அயில் குமர குகை வழி வந்த
மலை சிகர வடமலை நின்ற பெருமாளே

மேல்

#525
சரவண பவ நிதி அறுமுக குருபர சரவண பவ நிதி அறுமுக குருபர
சரவண பவ நிதி அறுமுக குருபர என ஓதி
தமிழினில் உருகிய அடியவரிடம் உறு சனன மரணம் அதை ஒழிவுற சிவம் உற
தரு பிணி துள வரம் எமது உயிர் சுகமுற அருள்வாயே
கருணைய விழி பொழி ஒரு தனி முதல் என வரு கரி திரு முகர் துணை கொளும் இளையவ
கவிதை அமுத மொழி தருபவர் உயிர் பெற அருள் நேயா
கடல் உலகினில் வரும் உயிர் படும் அவதிகள் கலகம் இனையது உள கழியவும் நிலைபெற
கதியும் உனது திருவடி நிழல் தருவதும் ஒரு நாளே
திரிபுரம் எரி செயும் இறையவர் அருளிய குமர சமர புரி தணிகையும் மிகும் உயர்
சிவகிரியிலும் வடமலையிலும் உலவிய வடி வேலா
தினமும் உனது துதி பரவிய அடியவர் மனது குடியும் இரு பொருளிலும் இலகுவ
திமிர மலம் ஒழிய தினகரன் என வரு பெருவாழ்வே
அரவணை மிசை துயில் நரகரி நெடியவர் மருகன் எனவெ வரும் அதிசயம் உடையவ
அமலி விமலி பரை உமையவள் அருளிய முருகோனே
அதல விதலம் முதல் கிடுகிடுகிடு என வரும் மயில் இனிது ஒளிர் ஷடுமையில் நடுவுற
அழகினுடன் அமரும் அரகர சிவசிவ பெருமாளே

மேல்

#526
நெச்சு பிச்சி புட்ப தட்ப கச்சிக்க சுற்று அறல் மேவி நெறித்து எறித்து இருட்டை வெருட்டிய
நிரை தரு மரு மலர் செருகிடு பரிமள நிறை உறை மதுகர நெடிது ஆடி
நிச்சிக்கு அச்சப்பட்டு சிக்கற்று ஒப்புக்கொப்புக்கு உயர்வாகி நெளித்த சுளித்த விழைக்குள் அழைத்து மை
நிகர் என அகருவும் உகு புகை தொகு மிகு நிகழ் புழுகு ஒழுகிய குழல் மேலும்
வச்ர பச்சை பொட்டு இட்ட பொட்டுக்குள் செக்கர் ப்ரபை போல வளைத்த தழைத்த பிறைக்கும் உறைக்கு மன்மத
சிலை அது என மக பதி தனு என மதி திலதமும் வதி நுதன் மேலும்
மச்ச செச்சை சித்ர சத்ர பொன் பக்கத்து இச்சையனாகி மனத்தில் நினைத்தும் அணைத்த துணை பத
மலர் அலது இலை நிலை என மொழி தழிய மெய் வழி படல் ஒழிவனை அருள்வாயே
நச்சு து சொப்பிச்சு குட்டத்து தக்கு அட்டத்து அசி காண நடத்தி விடத்தை உடைத்த படத்தினில்
நட நவில் கடலிடை அடு படை தொடு முகில் நகை முக திரு உறை மணி மார்பன்
நத்தத்தை சக்ரத்தை பத்மத்தை கை பற்றி பொரும் மாயன் நரிக்கும் அரிக்கும் எரிக்கும் விருப்புற
நசி தரு நிசிசரர் குடல் இடல் செய்த நர கரி ஒரு திரு மருகோனே
கச்சு தச்சு பொன் கட்டிட்டு பட்டுக்குள் பட்ட அமுதாலும் கருப்பி ரசத்தும் உரு செய்து வைச்சிடு
கன தன பரிமளம் முழுகு பனிரு புய கனக திவிய மணி அணி மார்பா
கை சத்திக்கு கெற்சித்து ஒக்க பட்சிக்க கொட்டு அசுராதி கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு
கறுவிய சிறியவ கடவைகள் புடை படு கட வடமலை உறை பெருமாளே

மேல்

#527
கோங்கு இளநீர் இளக வீங்கு பயோதரமும் வாங்கிய வேல் விழியும் இருள் கூரும்
கூந்தலும் நீள் வளை கொள் காந்தளும் நூல் இடையும் மாந்தளிர் போல் வடிவும் மிக நாடி
பூங்கொடியார் கலவி நீங்க அரிதாகி மிகு தீங்குடனே உழலும் உயிர் வாழ்வு
பூண்டு அடியேன் எறியில் மாண்டு இஙனே நரகில் வீழ்ந்து அலையாமல் அருள்புரிவாயே
பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மா முநியும் வேங்கையுமாய் மற மினுடன் வாழ்வாய்
பாண்டவர் தேர் கடவும் நீண்ட பிரான் மருக பாண்டியன் நீறு அணிய மொழிவோனே
வேங்கையும் வாரணமும் வேங்கையும் மானும் வளர் வேங்கட மா மலையில் உறைவோனே
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவும் பெருமாளே

மேல்

#528
சாந்தம் இல் மோக எரி காந்தி அவா அனிலம் மூண்டு அவியாத சமய விரோத
சாம் கலை வாரிதியை நீந்தவொணாது உலகர் தாம் துணையாவர் என மடவார் மேல்
ஏந்து இள வார் முளரி சாந்து அணி மார்பினொடு தோய்ந்து உருகா அறிவு தடுமாறி
ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன் வசம் யான் தனி போய் விடுவது இயல்போ தான்
காந்தளில் ஆன கர மான் தரு கான மயில் காந்த விசாக சரவண வேளே
காண்தகு தேவர் பதி ஆண்டவனே சுருதி ஆள் தகையே இபம் மின் மணவாளா
வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மா மலையில் உறைவோனே
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவு பெருமாளே

மேல்

#529
வரி சேர்ந்திடு சேல் கயலோ எனும் உழை வார்ந்திடு வேலையும் நீலமும்
வடு வாங்கிடு வாள் விழி மாதர்கள் வலையாலே
வளர் கோங்கு இள மா முகை ஆகிய தன வாஞ்சையிலே முகம் மாயையில் வள
மாந்தளிர் போல் நிறமாகிய வடிவாலே
இருள் போன்றிடு வார் குழல் நீழலில் மயல் சேர்ந்திடு பாயலின் மீதுற
இனிதாம் கனி வாயமுது ஊறல்கள் பருகாமே
எனது ஆம் தனது ஆனவை போய் அற மலமாம் கடு மோக விகாரமும்
இவை நீங்கிடவே இரு தாள் இணை அருள்வாயே
கரி வாம் பரி தேர் திரள் சேனையும் உடன் ஆம் துரியோதனனாதிகள்
களம் மாண்டிடவே ஒரு பாரதம் அதில் ஏகி
கன பாண்டவர் தேர்தனிலே எழு பரி தூண்டிய சாரதி ஆகிய
கதிர் ஓங்கிய நேமியனாம் அரி ரகுராமன்
திரை நீண்டு இரை வாரியும் வாலியும் நெடிது ஓங்கு மரா மரம் ஏழொடு
தெசமாம் சிர ராவணனார் முடி பொடியாக
சிலை வாங்கிய நாரணனார் மருமகனாம் குகனே பொழில் சூழ் தரு
திருவேங்கட மா மலை மேவிய பெருமாளே

மேல்

#530
அல்லி விழியாலும் முல்லை நகையாலும் அல்லல்பட ஆசை கடல் ஈயும்
அள்ள இனிதாகி நள்ளிரவு போலும் உள்ள வினையார் அ தனமாரும்
இல்லும் இளையோரும் மெல்ல அயலாக வல் எருமை மாய சமனாரும்
எள்ளி எனது ஆவி கொள்ளை கொளு நாளில் உய்ய ஒரு நீ பொன் கழல் தாராய்
தொல்லை மறை தேடி இல்லை எனு நாதர் சொல்லும் உபதேச குருநாதா
துள்ளி விளையாடும் புள்ளி உழை நாண எள்ளி வனம் மீது உற்று உறைவோனே
வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ வல்லை வடி வேலை தொடுவோனே
வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே

மேல்

#531
ஐயும் உறு நோயும் மையலும் அவாவின் ஐவரும் உபாய பல நூலின்
அள்ளல் கடவாது துள்ளி அதில் மாயும் உள்ளமும் இல் வாழ்வை கருது ஆசை
பொய்யும் அகலாத மெய்யை வளர் ஆவி உய்யும் வகை யோகத்து அணுகாதே
புல் அறிவு பேசி அல்லல்படுவேனை நல் இரு தாளில் புணர்வாயே
மெய்ய பொழில் நீடு தையலை மு நாலு செய்ய புய மீது உற்று அணைவோனே
வெள்ளை இபம் ஏறு வள்ளல் கிளை வாழ வெள்ளம் முது மாவை பொருதோனே
வையம் முழுது ஆளும் ஐய மயில் வீர வல்ல முருகா முத்தமிழ் வேளே
வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே

மேல்

#532
கை ஒத்து வாழும் இந்த மெய் ஒத்த வாழ்வு இகந்து பொய் ஒத்த வாழ்வு கண்டு மயலாகி
கல்லுக்கு நேரும் வஞ்ச உள்ளத்தர் மேல் விழுந்து கள்ள பயோதரங்கள் உடன் மேவி
உய்யப்படாமல் நின்று கையர்க்கு உபாயம் ஒன்று பொய்யர்க்கு மேய அயர்ந்து உள் உடை நாயேன்
உள்ளம் பேறாக நின்று தொய்யப்படாமல் என்றும் உள்ளத்தின் மாய்வது ஒன்றை மொழியாயோ
ஐயப்படாத ஐந்து பொய் அற்ற சோலை தங்கு தெய்வ தெய்வானை கொங்கை புணர்வோனே
அல்லை பொறா முழங்கு சொல் உக்ர வேல் ஒன்று வெல்ல பதாகை கொண்ட திறல் வேலா
வையத்தை ஓடி ஐந்து கையற்கு வீசு தந்தை மெய் ஒத்த நீதி கண்ட பெரியோனே
வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே

மேல்

#533
முல்லைக்கு மாரன் அம் கை வில்லுக்கும் மாதர்தங்கள் பல்லுக்கும் வாடி இன்பம் முயலா நீள்
முள்ளுற்ற கால் மடிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து பள்ளத்தில் வீழ்வது அன்றி ஒரு ஞான
எல்லைக்கும் ஆரணங்கள் சொல்லி தொழா வணங்கும் எல்லைக்கும் வாவி நின்றன் அருள் நாமம்
எள்ளற்கு மால் அயர்ந்து உள்ளத்தில் ஆவ என்று முள்ள பெறார் இணங்கை ஒழிவேனோ
அல்லைக்கு அ ஆனை தந்த வல்லிக்கு மார்பு இலங்க அல்லி கொள் மார்பு அலங்கல் புனைவோனே
அள்ளல் படாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி மெள்ள சரோருகங்கள் பயில் நாதா
வல்லை குமார கந்த தில்லை புராரி மைந்த மல்லு போரு ஆறிரண்டு புய வீரா
வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே

மேல்

#534
கள்ள குவால் பை தொள்ளை புலால் பை துள் இக்கனார்க்கு அயவு கோப
கள் வைத்த தோல் பை பொள்ளுற்ற கால் பை கொள்ளை துரால் பை பசு பாச
அள்ளல் பை மால் பை ஞெள்ளல் பை சீ பை வெள்ளிட்ட அசா பிசிதம் ஈரல்
அள்ள சுவாக்கள் சள்ளிட்டு இழா பல் கொள்ளப்படு யாக்கை தவிர்வேனோ
தெள் அத்தி சேர்ப்ப வெள் அத்தி மாற்கும் வெள் உத்தி மாற்கும் மருகோனே
சிள் இட்ட காட்டில் உள்ள கிரார் கொல் புள் அத்த மார்க்கம் வருவோனே
வள்ளி சன்மார்க்கம் விள் ஐக்கு நோக்க வல்லைக்குள் ஏற்றும் இளையோனே
வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே

மேல்

#535
வெல்லி குவீக்கும் முல்லை கை வீக்கு வில் இக்கு அதா கருதும் வேளால்
வில் அற்ற அவா கொள் சொல் அற்று உகா பொய் இல்லத்து உறா கவலை மேவு
பல் அத்தி வாய்க்க அல்லல்படு ஆக்கை நல்லில் பொறா சமயம் ஆறின்
பல் அத்த மார்க்க வல் அர்க்கர் மூர்க்கர் கல்வி கலாத்து அலையலாமோ
அல்லை கொல் வார்த்தை சொல்லிக்கு இதம் ஒத்து சொல் குக்குடம் ஆர்த்த இளையோனே
அல்லுக்கும் ஆற்றின் எல்லுக்கும் மேல் புல்கு எல்லை படா கருணை வேளே
வல் ஐக்கும் ஏற்றர் தில்லைக்கும் ஏற்றர் வல்லிக்கும் ஏற்றர் அருள்வோனே
வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே

மேல்

#536
ககனமும் அநிலமும் அனல் புனல் நிலம் அமை கள்ள புலால் கிருமி வீடு
கனல் எழ மொழி தரு சினம் என மதம் மிகு கள் வைத்த தோல் பை சுமவாதே
யுக இறுதிகளிலும் இறுதி இல் ஒரு பொருள் உள்ள கண் நோக்கும் அறிவு ஊறி
ஒளி திகழ் அரு உரு எனும் மறை இறுதியில் உள்ள அத்தை நோக்க அருள்வாயே
ம்ருகமத பரிமள விகசித நளின நள் வெள்ளை பிராட்டி இறை காணா
விட தர குடில சடில மிசை வெகு முக வெள்ளத்தை ஏற்ற பதி வாழ்வே
வகுளமும் முகுளித வழைகளும் மலி புன வள்ளி குலா திகிரி வாழும்
வனசரர் மரபினில் வரும் ஒரு மரகத வள்ளிக்கு வாய்த்த பெருமாளே

மேல்

#537
அல் அசல அடைந்த வில் அடல் அநங்கன் அல்லி மலர் அம்புதனை ஏவ
அள்ளி எரி சிந்த பிள்ளை மதி தென்றல் ஐயம் உது கிண்ட அணையூடே
சொல்லும் அரவிந்த வல்லி தனி நின்று தொல்லை வினை என்று முனியாதே
துய்ய வரி வண்டு செய்ய அமுது உண்டு துள்ளிய கடம்பு தரவேணும்
கல் அசல மங்கை எல்லையில் விரிந்த கல்வி கரை கண்ட புலவோனே
கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று கல்லல் அற ஒன்றை அருள்வோனே
வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச வல்லமை தெரிந்த மயில் வீரா
வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே

மேல்

#538
குடி வாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள்
குலம் வாய்த்த நல்ல தனம் வாய்த்தது என்ன குரு வார்த்தை தன்னை உணராதே
இட நாட்கள் வெய்ய நமன் நீட்டி தொய்ய இடர் கூட்ட இன்னல் கொடு போகி
இடு காட்டில் என்னை எரி ஊட்டும் முன் உன் இரு தாட்கள் தம்மை உணர்வேனோ
வட நாட்டில் வெள்ளி மலை காத்து புள்ளி மயில் மேல் திகழ்ந்த குமரேசா
வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி மலை காத்த நல்ல மணவாளா
அடி நாட்கள் செய்த பிழை நீக்கி என்னை அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே

மேல்

#539
சிரம் அங்கம் அம் கை கண் செவி வஞ்ச நெஞ்சு செம் சலம் என்பு திண் பொருந்திடு மாயம்
சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு செம் தழலின் கண் வெந்து சிந்திட ஆவி
விரைவில் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம் துயர் கொண்டு அலைந்து அழியா முன்
வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே
அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல் அண்டர் கண்டு அமர் அஞ்ச மண்டி வந்திடு சூரன்
அகலம் பிளந்து அணைந்து அகிலம் பரந்து இரங்கிட அன்று உடன்று கொன்றிடும் வேலா
மரை வெம் கயம் பொருந்திட வண்டு இனம் குவிந்து இசை ஒன்ற மந்தி சந்துடன் ஆடும்
வரையின்கண் வந்து வண் குற மங்கை பங்கயம் வர நின்று கும்பிடும் பெருமாளே

மேல்

#540
வரைவில் பொய் மங்கையர் தங்கள் அஞ்சன விழியை உகந்து முகந்து கொண்டு அடி
வருடி நிதம்பம் அளைந்து தெந்தென அளி காடை
மயில் குயில் அன்றில் எனும் புளின் பல குரல் செய்து இருந்து பின் உந்தி என்கிற
மடுவில் விழுந்து கிடந்து செம் தழல் மெழுகாகி
உருகி உகந்து இதழ் தின்று மென்று கையடியில் நகங்கள் வரைந்து குங்கும
உபய தனங்கள் ததும்ப அன்புடன் அணையா மஞ்சு
உலவிய கொண்டை குலைந்து அலைந்து எழ அமளியில் மின் சொல் மருங்குல் இலங்கிட
உணர்வு அழி இன்பம் மறந்து நின்தனை நினைவேனோ
விரவி நெருங்கு குரங்கி இனம் கொடு மொகுமொகு எனும் கடலும் கடந்து உறு
விசை கொடு இலங்கை புகுந்து அரும் தவர் களிகூர
வெயில் நிலவு உம்பரும் இம்பரும் படி ஜெயஜெய என்று விடும் கொடும் கணை
விறல் நிருதன் தலை சிந்தினன் திரு மருகோனே
அருகர் கணங்கள் பிணங்கிடும்படி மதுரையில் வெண் பொடியும் பரந்திட
அரகர சங்கர என்று வென்று அருள் புகழ் வேலா
அறம் வளர் சுந்தரி மைந்த தண்டலை வயல்கள் பொருந்திய சந்த வண் கரை
அரிவை விலங்கலில் வந்து உகந்து அருள் பெருமாளே

மேல்

#541
அகத்தினை கொண்டு இ புவி மேல் சில தினத்து மற்று ஒன்று அறியாது பின்
அவத்துள் வைக்கும் சித்தசனார் அடு கணையாலே
அசுத்த மை கண் கொட்புறு பாவையர் நகைத்து உரைக்கும் பொய் கடல் மூழ்கியெ
அலக்கணில் சென்று தடுமாறியே சில நாள் போய்
இகத்தை மெய் கொண்டு இ புவி பாலர் பொன் மயக்கில் உற்று அம் பற்றை விடாது உடலில்
இளைப்பு இரைப்பும் பித்தமுமாய் நரை முதிர்வாயே
எம கயிற்றில் சிக்கி நிலா முன் உன் மலர் பதத்தின் பத்தி விடா மனது
இருக்கு நல் தொண்டர்க்கு இணையாக உன் அருள்தாராய்
புகழ் சிலை கந்தர்ப்பனுமே பொடிபட சிரித்து அண் முப்புரம் நீறு செய்
புகை கனல் கண் பெற்றவர் காதலி அருள் பாலா
புவிக்குள் யுத்தம் புத்திரர் சேய் அரசு அனைத்தும் முற்றும் செற்றிடவே பகை
புகட்டி வைக்கும் சக்கிரபாணிதன் மருகோனே
திகழ் கடப்பம் புட்பமது ஆர் புயம் மறைத்து உரு கொண்ட அற்புதமாகிய
தினை புனத்து இன்புற்று உறை பாவையை அணை சீலா
செகத்தில உச்சம் பெற்ற அமராவதி அதற்கும் ஒப்ப என்றுற்ற அழகே செறி
திருக்கழுக்குன்றத்தினில் மேவிய பெருமாளே

மேல்

#542
எழு கு நிறை நாபி அரி பிரமர் சோதி இலகும் அரன் மூவர் முதலானோர்
இறைவி எனும் ஆதி பரை முலையின் ஊறி எழும் அமிர்தம் நாறு கனி வாயா
புழுகு ஒழுகு காழி கவுணியரில் ஞான புநிதன் என ஏடு தமிழாலே
புனலில் எதிர் ஏற சமணர் கழுவேற பொருத கவி வீர குருநாதா
மழு உழை கபால தமரகம் த்ரிசூல மணி கர விநோதர் அருள் பாலா
மலர் அயனை நீடு சிறை செய்தவன் வேலை வளமை பெறவே செய் முருகோனே
கழுகு தொழு வேதகிரி சிகரி வீறு கதிர் உலவு வாசல் நிறை வானோர்
கடல் ஒலியதான மறை தமிழ்கள் ஓது கதலி வனம் மேவும் பெருமாளே

மேல்

#543
ஓலமிட்ட சுரும்பு தனாதனா எனவே சிரத்தில் விழும் கை பளீர்பளீர் என
ஓசை பெற்ற சிலம்பு கலீர்கலீர் என விரக லீலை
ஓர் மிடற்றில் எழும் புள் குகூகுகூ என வேர்வை மெத்த எழுந்து சலாசலா என
ரோம குச்சு நிறைந்து சிலீர்சிலீர் என அமுத மாரன்
ஆலயத்துள் இருந்து குபீர்குபீர் எனவே குதிக்க உடம்பு விரீர்விரீர் என
ஆர முத்தம் அணிந்து அளாவளா என மருவு மாதர்
ஆசையில் கை கலந்து சுமாசுமா பவ சாகரத்தில் அழுந்தி எழா எழாது உளம்
ஆறெழுத்தை நினைந்து குகாகுகா என வகை வராதோ
மாலை இட்ட சிரங்கள் செவேல்செவேல் என வேல் எழுச்சி தரும் பல் வெளேல்வெளேல் என
வாகை பெற்ற புயங்கள் கறேல்கறேல் என எதிர் கொள் சூரன்
மார்பும் ஒக்க நெரிந்து கரீல்கரீல் என பேய் குதிக்க நிணங்கள் குழூகுழூ என
வாய் புதைத்து விழுந்து ஐயோஐயோ என உதிரம் ஆறாய்
வேலை வற்றி வறண்டு சுறீல்சுறீல் என மாலை வெற்பும் இடிந்து திடீல்திடீல் என
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயாஐயா என இசைகள் கூற
வேல் எடுத்து நடந்த திவாகராசல வேடுவ பெண் மணந்த புயாசலா தமிழ்
வேத வெற்பில் அமர்ந்த க்ருபாகரா சிவ குமர வேளே

மேல்

#544
வேத வெற்பிலே புனத்தில் மேவி நிற்கும் அபிராம
வேடுவச்சி பாத பத்மம் மீது செச்சை முடி தோய
ஆதரித்து வேளை புக்க ஆறு இரட்டி புய நேய
ஆதரத்தோடு ஆதரிக்க ஆன புத்தி புகல்வாயே
காதும் உக்ர வீர பத்ரகாளி வெட்க மகுடம்
ஆகாசம் முட்ட வீசி விட்ட காலர் பத்தி இமையோரை
ஓதுவித்த நாதர் கற்க ஓதுவித்த முநி நாண
ஓர் எழுத்தில் ஆறு எழுத்தை ஓதுவித்த பெருமாளே

மேல்

#545
நீல மயில் சேரும் அந்தி மாலை நிகராகி அந்தகார மிகவே நிறைந்த குழலாலும்
நீடும் அதி ரேக இன்பமாகிய சலாப சந்த்ரன் நேர் தரு முக அரவிந்தம் அதனாலும்
ஆலின் நிகரான உந்தியாலும் மடவார்கள் தங்கள் ஆசை வலை வீசு கெண்டை விழியாலும்
ஆடிய கடாம் இசைந்த வார் முலைகளாலும் அந்தனாகி மயல் நானும் உழன்று திரிவேனோ
கோல உருவாய் எழுந்து பார் அதனையே இடந்து கூவிடும் முராரி விண்டு திரு மார்பன்
கூடம் உறை நீடு செம்பொன் மா மதலை ஊடு எழுந்த கோப அரி நாரசிங்கன் மருகோனே
பீலி மயில் மீது உறைந்து சூரர்தமையே செயம் கொள் பேர் பெரிய வேல் கொள் செம் கை முருகோனே
பேடை மட ஓதிமங்கள் கூடி விளையாடுகின்ற பேறை நகர் வாழ வந்த பெருமாளே

மேல்

#546
கொலை கொண்ட போர் விழி கோலோ வாளோ விடம் மிஞ்சு பாதக வேலோ சேலோ
குறை கொண்டு உலாவிய மீனோ மானோ எனும் மானார்
குயில் தங்கு மா மொழியாலே நேரே இழை தங்கு நூல் இடையாலே மீது ஊர்
குளிர் கொங்கை மேருவினாலே நானாவிதமாகி
உலை கொண்ட மா மெழுகாயே மோகாய் அலை அம்புராசியின் ஊடே மூழ்கா
உடல் பஞ்ச பாதகமாய் ஆய் நோயால் அழிவேனோ
உறு தண்டம் பாசமொடு ஆரா வாரா எனை அண்டியே நமனார் தூது ஆனோர்
உயிர் கொண்டு போய்விடு நாள் நீ மீ தாள் அருள்வாயே
அலை கொண்ட வாரிதி கோகோகோகோ என நின்று வாய் விடவே நீள் மா சூர்
அணி அம் சராசனம் வேறாய் நீறாயிடவே தான்
அவிர்கின்ற சோதிய வார் ஆர் நீள் சீர் அனல் அம் கை வேல் விடும் வீரா தீரா
அருமந்த ரூபக ஏகா வேறு ஓர் வடிவாகி
மலை கொண்ட வேடுவர் கான் ஊடே போய் குற மங்கையாளுடனே மால் ஆயே
மயல் கொண்டு உலா அவள் தாள் மீதே வீழ் குமரேசா
மதி மிஞ்சு போதக வேலா ஆளா மகிழ் சம்புவே தொழு பாதா நாதா
மயிலம் தண் மா மலை வாழ்வே வானோர் பெருமாளே

மேல்

#547
அம் கை நீட்டி அழைத்து பாரிய கொங்கை காட்டி மறைத்து சீரிய
அன்பு போல் பொய் நடித்து காசு அளவு உறவாடி
அம்பு தோற்ற கண் இட்டு தோதக இன்ப சாஸ்த்திரம் உரைத்து கோகிலம்
அன்றில் போல் குரலிட்டு கூரிய நகரேகை
பங்கம் ஆக்கி அலைத்து தாடனை கொண்டு வேட்கை எழுப்பி காமுகர்
பண்பில் வாய்க்க மயக்கி கூடுதல் இயல்பாக
பண்டு இராப்பகல் சுற்று சூளைகள் தங்கள் மேல் ப்ரமை விட்டு பார்வதி
பங்கர் போற்றிய பத்ம தாள் தொழ அருள்வாயே
எங்குமாய் குறைவு அற்று சேதன அங்கமாய் பரிசுத்தத்தோர் பெறும்
இன்பமாய் புகழ் முப்பத்து ஆறினின் முடி வேறாய்
இந்த்ரகோட்டி மயக்கத்தால் மிக மந்த்ர மூர்த்தம் எடுத்து தாமதம்
இன்றி வாழ்த்திய சொர்க்க காவல வயலூரா
செங்கை வேல் கொடு துட்ட சூரனை வென்று தோல் பறை கொட்ட கூளிகள்
தின்று கூத்து நடிக்க தோகையில் வரும் வீரா
செம்பொன் ஆர் திகழ் சித்ர கோபுரம் மஞ்சு இராப்பகல் மெத்த சூழ்தரு
தென் சிராப்பளி வெற்பின் தேவர்கள் பெருமாளே

மேல்

#548
அந்தோ மனமே நமது யாக்கையை நம்பாதே இதம் அகிதம் சூத்திரம்
அம்போருகன் ஆடிய பூட்டு இது இனிமேல் நாம்
அஞ்சாது அமையா கிரி யாக்கையை பஞ்சாடிய வேலவனார்க்கு இயல்
அங்கு ஆகுவம் வா இனிது யாக்கையை ஒழியாமல்
வந்தோம் இதுவே கதி ஆட்சியும் இந்தா மயில்வாகனர் சீட்டு இது
வந்து ஆளுவம் நாம் என வீக்கிய சிவ நீறும்
வந்தே வெகுவா நமை ஆட்கொளு வந்தார் மதம் ஏது இனி மேற்கொள
மைந்தா குமரா எனும் ஆர்ப்பு உய மறவாதே
திந்தோதிமி தீதத மா துடி தந்தாதன னாதன தாத்தன
செம் பூரிகை பேரிகை ஆர்த்து எழ மறை ஓத
செம் காடு எனவே வரும் மூர்க்கரை சங்கார சிகாமணி வேல் கொடு
செண்டாடி மகா மயில் மேல் கொளு முருகோனே
இந்தோடு இதழ் நாகம் மகா கடல் கங்காளம் மின் ஆர் சடை சூட்டிய
என் தாதை சதா சிவ கோத்திரன் அருள் பாலா
எண் கூடு அருளால் நௌவி நோக்கியை நல் பூ மணம் மேவி சிராப்பளி
என்பார் மனம் மேதினில் நோக்கிய பெருமாளே

மேல்

#549
அரிவையர் நெஞ்சு உருகா புணர் தரு விரகங்களினால் பெரிது
அவசம் விளைந்து விடாய்த்து அடர் முலை மேல் வீழ்ந்து
அகிலொடு சந்தன சேற்றினில் முழுகி எழுந்து எதிர் கூப்பு கை
அடியில் நகம் பிறை போல் பட விளையாடி
பரிமளம் விஞ்சிய பூ குழல் சரிய மருங்கு உடை போய் சில
பறவைகளின் குரலாய் கயல் விழி சோர
பனி முகமும் குறு வேர்ப்பு எழ இதழ் அமுது உண்டு இரவாய்
பகல் பகடியிடும்படி தூர்த்தனை விடலாமோ
சரியை உடன் க்ரியை போற்றிய பரமபதம் பெறுவார்க்கு அருள்
தரு கணன் ரங்கபுரம் உச்சிதன் மருகோனே
சயிலம் எறிந்த கை வேல் கொடு மயிலினில் வந்து எனை ஆட்கொளல்
சகம் அறியும்படி காட்டிய குருநாதா
திரிபுவனம் தொழு பார்த்திபன் மருவிய மண்டப கோட்டிகள்
தெருவில் விளங்கும் சிராப்பளி மலை மீதே
தெரிய இருந்த பராக்ரம உரு வளர் குன்று உடையார்க்கு ஒரு
திலதம் எனும்படி தோற்றிய பெருமாளே

மேல்

#550
அழுதழுது ஆசார நேசமும் உடையவர் போலே பொய் சூழ்வுறும்
அசடிகள் மால் ஆன காமுகர் பொன் கொடா நாள்
அவருடன் வாய் பேசிடாமையும் முனிதலும் மாறாத தோஷிகள்
அறுதி இல் காசு ஆசை வேசைகள் நஞ்சு தோயும்
விழிகளினால் மாட வீதியில் முலைகளை ஓராமல் ஆரோடும்
விலை இடு மா மாய ரூபிகள் பண்பு இலாத
விரகிகள் வேதாளமோ என முறையிடு கோமாள மூளிகள்
வினை செயலாலே என் ஆவியும் உயங்கலாமோ
வழியினில் வாழ் ஞான போதக பரம சுவாமீ வரோதய
வயலியில் வேலாயுத வரை எங்கும் ஆனாய்
மதுரையில் மீது ஆலவாயினில் எதிர் அமணர் ஓரோர் எணாயிரர்
மறி கழு மீது ஏற நீறு பரந்து உலாவ
செழியனும் ஆளாக வாது செய் கவி மத சீகாழி மா முனி
சிவசிவ மா தேவ கா என வந்து பாடும்
திரு உடையாய் தீது இலாதவர் உமை ஒரு பாலான மேனியர்
சிரகிரி வாழ்வான தேவர்கள் தம்பிரானே

மேல்

#551
இளையவர் நெஞ்ச தளையம் எனும் சிற்றிடை கொடு வஞ்சி கொடி போல்வார்
இணை அடி கும்பிட்டு அணி அல்குல் பம்பித்து இதழ் அமுது உந்து உய்த்து அணி ஆரம்
களப சுகந்த புளகித இன்ப கன தன கும்பத்திடை மூழ்கும்
கலவியை நிந்தித்து இலகிய நின் பொன் கழல் தொழும் அன்பை தருவாயே
தளர் அறும் அன்பர்க்கு உளம் எனும் மன்றில் சதுமறை சந்தத்தொடு பாட
தரிகிட தந்த திரிகிட திந்தி தகுர்தி எனும் கொட்டுடன் ஆடி
தெளிவுற வந்துற்று ஒளிர் சிவன் அன்பில் சிறுவ அலங்கல் திரு மார்பா
செழு மறை அம் சொல் பரிபுர சண்ட திரிசிர குன்ற பெருமாளே

மேல்

#552
பகலவன் ஒக்கும் கனவிய ரத்னம் பவள வெண் முத்தம் திரமாக
பயில முலை குன்று உடையவர் சுற்றம் பரிவு என வைக்கும் பண ஆசை
அகம் மகிழ் துட்டன் பகிடி மருள் கொண்டு அழியும் அவத்தன் குணவீனன்
அறிவிலி சற்றும் பொறையிலி பெற்று உண்டு அலைதல் ஒழித்து என்று அருள்வாயே
சகலரும் மெச்சும் பரிமள பத்மம் தருண பத திண் சுரலோக
தலைவர் மகட்கும் குறவர் மகட்கும் தழுவ அணைக்கும் திரு மார்பா
செக தலம் மெச்சும் புகழ் வயலிக்கும் திகுதிகு என பொங்கிய ஓசை
திமிலை தவில் துந்துமிகள் முழக்கும் சிரகிரியிற்கும் பெருமாளே

மேல்

#553
ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை ஒருவரொடு செம் கை உறவாடி
ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை ஒருவரொடு இரண்டும் உரையாரை
மருவ மிக அன்பு பெருக உளது என்று மன நினையும் இந்த மருள் தீர
வனசம் என வண்டு தனதனன என்று மருவு சரணங்கள் அருளாயோ
அரவம் எதிர் கண்டு நடுநடு நடுங்க அடல் இடு ப்ரசண்ட மயில் வீரா
அமரர் முதல் அன்பர் முநிவர்கள் வணங்கி அடி தொழ விளங்கு வயலூரா
திருவை ஒரு பங்கர் கமல மலர் வந்த திசைமுகன் மகிழ்ந்த பெருமானார்
திகுதகுதி என்று நடமிட முழங்கு த்ரிசிர கிரி வந்த பெருமாளே

மேல்

#554
குமுத வாய் கனி அமுத வாக்கினர் கோலே வேலே சேலே போலே அழகான
குழைகள் தாக்கிய விழிகளால் களிகூரா வீறாது ஈரா மாலா அவரோடே
உமது தோள்களில் எமது வேட்கையை ஓரீர் பாரீர் வாரீர் சேரீர் எனவே நின்று
உடை தொடா பணம் இடை பொறா தனமூடே வீழ்வேன் ஈடேறாதே உழல்வேனோ
தமர வாக்கிய அமரர் வாழ்த்திய தாதாவே மா ஞாதாவே தோகையில் ஏறி
சயில நாட்டு இறை வயலி நாட்டு இறை சாவா மூவா மேவா நீ வா இளையோனே
திமிர ராக்கதர் சமர வேல் கர தீரா வீரா நேரா தோரா உமை பாலா
திரிசிராப்பள்ளி மலையின் மேல் திகழ் தேவே கோவே வேளே வானோர் பெருமாளே

மேல்

#555
குவளை பூசல் விளைத்திடும் அம் கயல் கடுவது ஆம் எனும் மை கண் மடந்தையர்
குமுத வாய் அமுதத்தை நுகர்த்து இசை பொரு காடை
குயில் புறா மயில் குக்கில் சுரும்பு அனம் வன பதாயுதம் ஒக்கும் எனும்படி
குரல் விடா இரு பொன் குடமும் புளகிதமாக
பவள ரேகை படைத்த அதரம் குறியுற வியாள படத்தை அணைந்து கை
பரிசம் தாடனம் மெய் கரணங்களின் மதன் நூலின்
படியிலே செய்து உருக்கி முயங்கியெ அவசமாய் வட பத்ர நெடும் சுழி
படியும் மோக சமுத்ரம் அழுந்துதல் ஒழிவேனோ
தவள ரூப சரச்சுதி இந்திரை ரதி புலோமசை க்ருத்திகை ரம்பையர்
சமுக சேவித துர்க்கை பயங்கரி புவநேசை
சகல காரணி சத்தி பரம்பரி இமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி
சமய நாயகி நிஷ்களி குண்டலி எமது ஆயி
சிலை மநோமணி சிற்சுக சுந்தரி கவுரி வேத விதக்ஷணி அம்பிகை
த்ரிபுரை யாமளை அற்பொடு தந்து அருள் முருகோனே
சிகர கோபுர சித்திர மண்டப மகர தோரண ரத்ந அலங்க்ருத
திரிசிராமலை அப்பர் வணங்கிய பெருமாளே

மேல்

#556
சத்தி பாணீ நமோ நம முத்தி ஞானீ நமோ நம தத்வ ஆதி நமோ நம விந்து நாத
சத்து ரூபா நமோ நம ரத்ந தீபா நமோ நம தற்ப்ரதாபா நமோ நம என்று பாடும்
பத்தி பூணாமலே உலகத்தின் மானார் சவாது அகில் பச்சை பாடீர பூஷித கொங்கை மேல் வீழ்
பட்டிமாடான நான் உனை விட்டிராமே உலோகித பத்ம சீர் பாத நீ இனி வந்து தாராய்
அத்ர தேவாயுதா சுரர் உக்ர சேனாபதீ சுசி அர்க்ய சோமாசியா குரு சம்ப்ரதாயா
அர்ச்சனா வாகனா வயலிக்குள் வாழ் நாயகா புய அக்ஷ மாலாதரா குற மங்கை கோவே
சித்ர கோலாகலா வீர லக்ஷ்மி சாதா ரதா பல திக்கு பாலா சிவாகம தந்த்ர போதா
சிட்ட நாதா சிராமலை அப்பர் ஸ்வாமீ மகா வ்ருத தெர்ப்பை ஆசார வேதியர் தம்பிரானே

மேல்

#557
பகல் இரவினில் தடுமாறா பதி குரு என தெளி போத
ரகசியம் உரைத்த அநுபூதி ரத நிலைதனை தருவாயே
இகபரம் அதற்கு இறையோனே இயல் இசையின் முத்தமிழோனே
சக சிர கிரி பதி வேளே சரவண பவ பெருமாளே

மேல்

#558
புவனத்து ஒரு பொன் துடி சிற்று உதர கருவில் பவம் உற்று விதி படியில்
புணர் துக்க சுக பயில் உற்று மரித்திடில் ஆவி
புரி அட்டகம் இட்டு அது கட்டி இறுக்கி அடி குத்து என அச்சம் விளைத்து அலற
புரள்வித்து வருத்தி மணல் சொரிவித்து அனலூடே
தவனப்பட விட்டு உயிர் செக்கில் அரைத்து அணி பற்கள் உதிர்த்து எரி செப்பு உருவை
தழுவ பணி முட்களில் கட்டி இசித்திட வாய் கண்
சலனப்பட எற்றி இறைச்சி அறுத்து அயில்வித்து முரித்து நெரித்து உளைய
தளை இட்டு வருத்தும் யம ப்ரகர துயர் தீராய்
பவனத்தை ஒடுக்கும் மன கவலை ப்ரமை அற்று வகை ஐ வகை புலனில் கடிதில்
படர் இச்சை ஒழித்த தவ சரியை க்ரியை யோகர்
பரி பக்குவர் நிட்டை நிவர்த்தியினில் பரிசுத்தவர் விரத்தர் கருத்துதனில்
பரவப்படு செய்ப்பதியில் பரம குருநாதா
சிவன் உத்தமன் நித்த உருத்திரன் முக்கணன் நக்கன் மழு கரன் உக்ர ரண
த்ரிபுரத்தை எரித்து அருள் சிற்குணன் நிற்குணன் ஆதி
செக வித்தன் நிச பொருள் சிற்பரன் அற்புதன் ஒப்பிலி உற்பவ பத்ம தட
த்ரிசிர புர வெற்பு உறை சற்குமர பெருமாளே

மேல்

#559
பொருளின் மேல் பிரிய காமாகாரிகள் பரிவு போல் புணர் கிரீடா பீடிகள்
புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் கொங்கை மேலே
புடைவை போட்டிடு மாயா ரூபிகள் மிடியர் ஆக்கு பொலா மூதேவிகள்
புலையர் மாட்டும் அறாதே கூடிகள் நெஞ்ச மாயம்
கருதவொணா பல கோடா கோடிகள் விரகினால் பலர் மேல் வீழ் வீணிகள்
கலவி சாத்திர நூலே ஓதிகள் தங்கள் ஆசை
கவிகள் கூப்பிடும் ஓயா மாரிகள் அவசம் ஆக்கிடு பேய் நீர் ஊணிகள்
கருணை நோக்கம் இலா மா பாவிகள் இன்பம் ஆமோ
குரு கடாக்ஷ கலா வேதாகம பரம வாக்கிய ஞானாசாரிய குறைவு தீர்த்து அருள் ஸ்வாமி கார்முக வன்பரான
கொடிய வேட்டுவர் கோகோகோ என மடிய நீட்டிய கூர் வேலாயுத குருகு க்ஷேத்ர புர ஈசா வாசுகி அஞ்ச மாறும்
செரு பராக்ரம கேகே வாகன சரவணோற்பவ மாலா லாளித திரள் புயாத்திரி ஈராறு ஆகிய கந்த வேளே
சிகர தீர்க்க மகா சீ கோபுர முக சடா அக்கர சேண் நாடு ஆக்ருத திரிசிராப்பளி வாழ்வே தேவர்கள் தம்பிரானே

மேல்

#560
பொருள் கவர் சிந்தை அரிவையர் தங்கள் புழுகு அகில் சந்து பனி நீர் தோய்
புளகித கொங்கை இளக வடங்கள் புரள மருங்கில் உடை சோர
இருள் வளர் கொண்டை சரிய இசைந்து இணைதரு பங்க அநுராக
திரிதல் ஒழிந்து மனது கசிந்து உன் இணை அடி என்று புகழ்வேனோ
மருள் கொடு சென்று பரிவுடன் அன்று மலையில் விளைந்த தினை காவல்
மயிலை மணந்த அயிலவ எங்கள் வயலியில் வந்த முருகோனே
தெருளுறும் அன்பர் பரவ விளங்கு திரிசிர குன்றில் முதல் நாளில்
தெரிய இருந்த பெரியவர் தந்த சிறியவ அண்டர் பெருமாளே

மேல்

#561
வாசித்து காணொணாதது பூசித்து கூடொணாதது வாய் விட்டு பேசொணாதது நெஞ்சினாலே
மாசர்க்கு தோணொணாதது நேசர்க்கு பேரொணாதது மாயைக்கு சூழொணாதது விந்து நாத
ஓசைக்கு தூரமானது மாகத்துக்கு ஈறு அதானது லோகத்துக்கு ஆதியானது கண்டு நாயேன்
யோகத்தை சேருமாறு மெய்ஞ்ஞானத்தை போதியாய் இனி ஊன் அத்தை போடிடாது மயங்கலாமோ
ஆசைப்பட்டு ஏனல் காவல்செய் வேடிச்சிக்காக மா மயல் ஆகி பொன் பாதமே பணி கந்த வேளே
ஆலித்து சேல்கள் பாய் வயலூர் அத்தில் காளமோடு அடர் ஆரத்தை பூண் மயூர துரங்க வீரா
நாசிக்குள் ப்ராண வாயுவை ரேசித்து எட்டாத யோகிகள் நாடிற்று காணவொணாது என நின்ற நாதா
நாகத்து சாகை போய் உயர் மேகத்தை சேர் சிரா மலை நாதர்க்கு சாமியே சுரர் தம்பிரானே

மேல்

#562
வெருட்டி ஆட்கொளும் விடமிகள் புடைவையை நெகிழ்த்து அணாப்பிகள் படிறிகள் சடுதியில்
விருப்பம் ஆக்கிகள் திரவியம் இலர் ஆனால்
வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடு பதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமள
விசித்ர மேற்படு முலையினும் நிலையினும் எவரோடும்
மருட்டி வேட்கை சொல் மொழியினும் விழியினும் அவிழ்த்த பூ கமழ் குழலினும் நிழலினும்
மதிக்கொணா தளர் இடையினும் நடையினும் அவமே யான்
மயக்கமாய் பொருள் வரும் வகை க்ருஷிபணும் தடத்து மோக்ஷமது அருளிய பல மலர்
மணத்த வார் கழல் கனவிலும் நனவிலும் மறவேனே
இருட்டு இலா சுர உலகினில் இலகிய சகஸ்ர நேத்திரம் உடையவன் மிடி அற
இரக்ஷை வாய்த்து அருள் முருக பனிரு கர குக வீரா
இலக்ஷுமீ சுர பசுபதி குருபர சமஸ்த ராச்சிய ந்ருப புகழ் வயம் இயல்
இலக்கர் ஏய் படை முகடு எழு கக பதி களிகூர
திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபட எடுத்த வேல் கொடு கடுகிய முடுகிய
செருக்கு வேட்டுவர் திறையிட முறையிட மயில் ஏறும்
செரு பராக்ரம நிதி சரவணபவ சிவத்த பாற்கரன் இமகரன் வலம் வரு
திருச்சிராப்பளி மலை மிசை நிலை பெறு பெருமாளே

மேல்

#563
குடத்தை தகர்த்து களிற்றை துரத்தி குவட்டை செறுத்து கக சால
குலத்தை குமைத்து பகட்டி செருக்கி குரு தத்துவ தவர் சோர
புடைத்து பணைத்து பெருக்க கதித்து புறப்பட்ட கச்சு தன மாதர்
புணர்ச்சி சமுத்ர திளைப்பு அற்று இருக்க புரித்து பதத்தை தருவாயே
கடத்து புனத்து குறத்திக்கு மெத்த கருத்து இச்சையுற்று பரிவாக
கனக்க ப்ரியப்பட்டு அகப்பட்டு மை கண் கடைப்பட்டு நிற்கைக்கு உரியோனே
தடத்து உற்பவித்து சுவர்க்க தலத்தை தழைப்பித்த கொற்ற தனி வேலா
தமிழ்க்கு கவிக்கு புகழ் செய் பதிக்கு தரு கற்குடிக்கு பெருமாளே

மேல்

#564
நெறித்து பொருப்புக்கு ஒத்த முலைக்கு தனத்தை கொட்டி நிறைத்து சுகித்து சிக்கி வெகு நாளாய்
நினைத்து கொடு அ துக்கத்தை அவத்தைக்கு அடுக்கைப்பெற்று நிசத்தில் சுழுத்தி பட்ட அடியேனை
இறுக்கி பிடித்து கட்டி உதைத்து துடிக்க பற்றி இழுத்து துவைத்து சுற்றி யம தூதர்
எனக்கு கணக்கு கட்டு விரித்து தொகைக்கு உட்பட்ட இலக்க படிக்கு தக்கபடியே தான்
முறுக்கி திருப்பி சுட்டு மலத்தில் புகட்டி திட்டி முழுக்க கலக்கப்பட்டு அலையாமல்
மொழிக்கு தரத்துக்கு உற்ற தமிழ்க்கு சரித்து சித்தி முகத்தில் களிப்பு பெற்று மயில் ஏறி
உறுக்கி சினத்து சத்தி அயிற்கு தரத்தை கைக்குள் உதிக்க பணித்து பக்கல் வருவாயே
உனை சொல் துதிக்க தக்க கருத்தை கொடுப்பை சித்தி உடை கற்குடிக்குள் பத்தர் பெருமாளே

மேல்

#565
கயலை சருவி பிணை ஒத்த அலர் பொன் கமலத்து இயல் மை கணினாலே
கடி மொய் புயலை கருதி கறுவி கதிர் விட்டு எழு மை குழலாலே
நய பொன் கலசத்தினை வெற்பினை மிக்கு உள பெரு செப்பு இணையாலே
நலம் அற்று அறிவு அற்று உணர்வு அற்றனன் நல் கதியை எப்படி பெற்றிடுவேனோ
புயல் உற்ற இயல் மை கடலில் புகு கொக்கு அற முன் சரம் உய்த்த அமிழ்வோடும்
பொருதிட்டு அமரர்க்குறு துக்கமும் விட்டு ஒழிய புகழ் பெற்றிடுவோனே
செய சித்திர முத்தமிழ் உற்பவ நல் செபம் முன் பொருள் உற்று அருள் வாழ்வே
சிவதை பதி ரத்தின வெற்பு அதனில் திகழ் மெய் குமர பெருமாளே

மேல்

#566
சுற்ற கபடோடு பல சூது வினையான பல கற்ற களவோடு பழிகாரர் கொலைகாரர் சலி
சுற்ற விழலான பவிஷோடு கடல் மூழ்கி வரு துயர் மேவி
துக்க சமுசார வலை மீன் அது என கூழில் விழு செத்தை என மூளும் ஒரு தீயில் மெழுகான உடல்
சுத்தம் அறியாத பறி காயம் அதில் மேவி வரு பொறியாலே
சற்று மதியாத கலி காலன் வரு நேரம் அதில் தத்து அறியாமல் ஓடி ஆடி வரு சூதர் ஐவர்
சத்த பரிசான மண ரூப ரசமான பொய்மை விளையாடி
தக்க மடவார் மனையை நாடி அவரோடு பல சித்து விளையாடு வினை சீசி இது நாற உடல்
தத்தி முடிவாகி விடுவேனோ முடியாத பதம் அருள்வாயே
தித்திமித தீதிமித தீதிமித தீமிதத தத்ததன தானதன தானனன தானனன
திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு தித்திமித என தாளம்
திக்கு முகிலாட அரி ஆட அயன் ஆட சிவன் ஒத்து விளையாட பரை ஆட வரர் ஆட பல
திக்கு அசுரர் வாட சுரர் பாட மறை பாட எதிர் களம் மீதே
எத்திசையும் நாடி யமனார் நிணமொடு ஆட பெல மிக்க நரி ஆட கழுது ஆட கொடி ஆட சமர்
எற்றி வரு பூத கணம் ஆட ஒளி ஆட விடு வடி வேலா
எத்தி ஒரு மானை தினை காவல் வல பூவைதனை சித்தம் அலை காமுக குகா நமசிவாயனொடு
ரத்நகிரி வாழ் முருகனே இளையவா அமரர் பெருமாளே

மேல்

#567
பத்தியால் யான் உனை பலகாலும் பற்றியே மா திரு புகழ் பாடி
முத்தன் ஆமாறு எனை பெருவாழ்வின் முத்தியே சேர்வதற்கு அருள்வாயே
உத்தமா தான சற்குணர் நேயா ஒப்பிலா மா மணி கிரி வாசா
வித்தகா ஞான சத்திநி பாதா வெற்றி வேலாயுத பெருமாளே

மேல்

#568
சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார வெகு வித
தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும்
சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் நீளும் வரி அளி
சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும்
ஆராத காதல் வேடர் மடமகள் ஜீமூதம் ஊர் வலாரி மடமகள்
ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும்
ஆராயும் நீதி வேலும் மயிலும் மெய்ஞ்ஞானாபிராம தாப வடிவமும்
ஆபாதனேனும் நாளும் நினைவது பெறவேணும்
ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும் இறையவர்
ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம்
ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ஆலவாயில் விதி செய்த
லீலா விசார தீர வரதர குருநாதா
கூர் ஆழியால் முன் வீய நினைபவன் ஈடேறுமாறு பாநு மறைவு செய்
கோபாலராய நேயம் உள திரு மருகோனே
கோடாமல் ஆரவார அலை எறி காவேரி ஆறு பாயும் வயலியில்
கோனாடு சூழ் விராலிமலை உறை பெருமாளே

மேல்

#569
பாதாளம் ஆதி லோக நிகிலமும் ஆதாரமான மேரு என வளர்
பாடீர பாரமான முலையினை விலை கூறி
பாலோடு பாகு தேன் என இனிய சொலாலே அநேக மோகம் இடுபவர்
பாதாதிகேசமாக வகைவகை கவி பாடும்
வேதாளன் ஞான கீனன் விதரண நா தான் இலாத பாவியன் அநிஜவன்
வீண் நாள் படாத போத தவமிலி பசு பாச
வியாபார மூடன் யானும் உனது இரு சீர் பாத தூளியாகி நரகு இடை
வீழாமலே சுவாமி திருவருள்புரிவாயே
தூதாளரோடு காலன் வெருவிட வேதா முராரி ஓட அடு படை
சோரா வலாரி சேனை பொடி பட மறை வேள்வி
சோமாசிமார் சிவாயநம என மா மாய வீர கோரமுடன் இகல்
சூர் மாள வேலை ஏவும் வயலியில் இளையோனே
கூதாள நீப நாக மலர் மிசை சாதாரி தேசி நாமக்ரியை முதல்
கோலால நாத கீத மதுகரம் அடர் சோலை
கூர் ஆரல் தேரு நாரை மருவிய கான் ஆறு பாயும் ஏரி வயல் பயில்
கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே

மேல்

#570
இலாபம் இல் பொலா உரை சொலா மன தபோதனர் யாவரும் இராவுபகல் அடியேனை
இராகமும் விநோதமும் உலோபமும் உடன் மோகமும் இலான் இவனும் மா புருஷன் என ஏய
சலாபம் அமல ஆகர சசீதர விதாரண சதாசிவ மயேசுர சகல லோக
சராசர வியாபக பராபர மநோலய சமாதி அநுபூதி பெற நினைவாயே
நிலா விரி நிலா மதி நிலாத அநில அசன நியாய பரிபால அர நதி சூடி
நிசாசர குல அதிபதி ராவண புய அரிட நிர ஆமய சரோருக அரன் அருள் பாலா
வில் ஆசுகம் வலார் எனும் உலாச இதம் ஆகவம் வியாதர்கள் விநோத மகள் மணவாளா
விராவு வயல் ஆர் புரி சிராமலை பிரான்மலை விராலிமலை மீதில் உறை பெருமாளே

மேல்

#571
நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிக ப்ரபை ஆகி
நிராச சிவ ராஜத வராஜர்கள் பராவிய நிராயுத புராரி அச்சுதன் வேதா
சுராலய தராதல சராசர பிராணிகள் சொரூப இவர் ஆதியை குறியாமே
துரால் புகழ் பராதின கரா உள பராமுக துரோகரை தரை ஆசையுற்று அடைவேனோ
இராகவ இராமன் முன் இராவண இரா வண இராவண இராஜன் உட்குடன் மாய் வென்ற
இராகன் மலர் ஆள் நிஜ புராணர் குமரா கலை இராஜ சொல வாரணர்க்கு இளையோனே
விராகவ சுராதிப பொராது தவிராது அடு விராயண பராயண செரு ஊரா
விராவிய குரா அகில் பராரை முதிரா வளர் விராலிமலை ராஜத பெருமாளே

மேல்

#572
இதம் உறு விரை புனல் முழுகிய அகில் மணம் உதவிய புகையினில் அளவி வகைவகை
கொத்து அலர்களின் தொடையல் வைத்து வளர் கொண்டல் என
அறல் என இசை அளி என நள்ளிருள் என நிறம் அது கருகி நெடுகி நெறிவு பட
நெய்த்து முசுவின் திரிகை ஒத்த சுருள் குந்தளமும்
இலகிய பிறை என எயினர் சிலை என விலகிய திலத நுதலும் மதி முகமும்
உற்பலமும் வண்டு வடு வில் கணை யமன் படரு முனை வாளும்
இடர் படுகவு நடுவனும் வல் அடல் பொரு கடுவதும் என நெடிது அடுவ கொடியன
இக்கு சிலை கொண்ட மதன் மெய் தவ நிறைந்த விழி
தளவன முறுவலும் அமுத குமுதமும் விளை நறவு இனிய மொழியும் இனையது என
ஒப்பறு நகங்கள் விரல் துப்பு என உறைந்து கமுகு
இடி ஒடி பட வினை செயும் வில் மத கலை நெடிய கவுடி இசை முரலும் சுரி முக
நத்து அனைய கண்டமும் வெண்முத்து விளை விண்டு அனைய எழில் தோளும்
விதரண மன விதனம் அதை அருள்வன சத தள மறை முகிழ் அதனை நிகர்வன
புத்த அமிர்து கந்த குடம் வெற்பு என நிரம்புவன
இம சலம் ம்ருகமத களப பரிமள தமனிய ப்ரபை மிகு தருண புளகித
சித்ர வர மங்கல விசித்ர இரு துங்க கன
விகலித மிருதுள ம்ருதுள நவ மணி முகபட விகடின தனமும் உயர் வட
பத்திரம் இருந்த அகடில் ஒத்த சுழி உந்தி உள மதியாத
விபரிதம் உடை இடை இளைஞர் களை பட அபகடம் அது புரி அரவ சுடிகைய
ரத்ன பணம் என்ப அழகுற்ற அரையும் புதிய
நுணிய தளிர் என உலவிய பரிபுர அணி நடன பதமும் உடைய வடிவினர்
பொன் கலவி இன்பம் அதி துக்கம் எனல் அன்றி அவர்
விரகினில் எனது உறு மனம் அது உருகிய பிரமையும் அற உனது அருள் கை வர உயர்
பத்தி வழியும் பரம முத்தி நெறியும் தெரிவது ஒரு நாளே
தததத தததத ததத தததத திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி
தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி
டகுடகு டிகுடிகு டகுகு டிகுடிகு டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு
தத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு
தமிதமி தமிதக தமித திமிதக திமிதிமி செககண திமித திகதிக
தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி எனவேதான்
தபலை குட முழுவு திமிலை படகம் அது அபுத சலிகை தவில் முரசு கரடிகை
மத்தளி தவண்டை அறவை தகுணி துந்துமிகள்
மொகுமொகு மொகு என அலற விருதுகள் திகுதிகு திகு என அலகை குறளிகள்
விக்கிட நிணம் பருக பக்கி உவணம் கழுகு
சதிர் பெற அதிர் தர உததி சுவறிட எதிர் பொரு நிருதர்கள் குருதி பெருகிட
அப்புவில் மிதந்து எழுபது அற்புத கவந்தம் எழ வெகு கோடி
மத கஜ துரக ரதம் உடைய புவி அதல முதல் முடிய இடிய நெடியது ஒர்
மிக்கு ஒலி முழங்க இருள் அக்கணம் விடிந்து விட
இரவியும் மதியும் நிலைமை பெற அடி பரவிய அமரர்கள் தலைமை பெற இயல்
அ திறல் அணங்கு செய சத்தி விடு கந்த திரு
வயலியில் அடிமைய குடிமையின் இனல் அற மயலொடு மலம் அற அரிய பெரிய
திருப்புகழ் விளம்பு என் முன் அற்புதம் எழுந்தருள் குக விராலி
மலை உறை குரவ நல் இறைவ வரு கலை பல தெரி விதரண முருக சரவண
உற்பவ க்ரவுஞ்ச கிரி நிக்ரக அகண்ட மய
நிருப விமல சுக சொருப பரசிவ குருபர வெளி முகடு உருவ உயர் தரு
சக்ர கிரியும் குலைய விக்ரம நடம்புரியும்
மரகத கலபம் எரி விடு மயில் மிசை மருவியெ அருமைய இளமை உருவொடு
சொர்க்க தலமும் புலவர் வர்க்கமும் விளங்க வரு பெருமாளே

மேல்

#573
உரு ஏறவே ஜெபித்து ஒரு கோடி ஓமம் சித்தி உடனாக ஆகமத்து உகந்து பேணி
உணர்வு ஆசை யாரிடத்தும் மருவாது ஓர் எழுத்தை ஒழியாது ஊதை விட்டு இருந்து நாளும்
தரியாத போதகத்தர் குருவாவர் ஓரொருத்தர் தருவார்கள் ஞான வித்தை தஞ்சம் ஆமோ
தழலாடி வீதி வட்டம் ஒளி போத ஞான சித்தி தருமாகில் ஆகும் அத்தை கண்டு இலேனே
குரு நாடி இராசரிக்கர் துரியோதனாதி வர்க்க குடி மாய விட்டு குந்தி பாலர்
குலையாமல் நீதி கட்டி எழு பாரை ஆள விட்ட குறளாக ஊறு இல் நெட்டை கொண்ட ஆதி
மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர மலை மேல் உலாவு சித்த அம் கை வேலா
மதுரா புரேசர் மெய்க்க அரசாளும் மாறன் வெப்பு வளை கூனை ஓதி நிமிர்த்த தம்பிரானே

மேல்

#574
எதிரெதிர் கண்டு ஓடி ஆட்கள் களவு அது அறிந்து ஆசை பூட்டி இடறி விழும் பாழி காட்டும் மட மாதர்
இறைவை கொளும் கூவல் மூத்த கறை ஒழுகும் தாரை பார்க்கில் இளமை கொடும் காதல் ஆற்றில் நிலையாத
அதி விகடம் பீழல் ஆற்ற அழுகிவிடும் பீறல் ஊத்தை அடையும் இடம் சீலை தீற்று கரு வாயில்
அருவி சலம் பாயும் ஓட்டை அடைவு கெடும் தூரை பாழ்த்த அளறில் அழுந்தாமல் ஆட்கொண்டு அருள்வாயே
விதுரன் நெடும் துரோணம் ஏற்று எதிர் பொரும் அம்பாதி ஏற்றி விரகின் எழுந்து ஓய நூற்றுவரும் மாள
விரவு ஜெயன் காளி காட்டில் வரு தருமன் தூதன் நீற்ற விஜயன் நெடும் பாக தீர்த்தன் மருகோனே
மதி அணையும் சோலை ஆர்த்தும் அதி வள சந்தான கோட்டின் வழி அருளி இன் பேறு காட்டிய விராலி
மலை மருவும் பாதி ஏற்றி கடி கமழ் சந்தான கோட்டில் வழி அருளின் பேறு காட்டும் பெருமாளே

மேல்

#575
ஐந்து பூதமும் ஆறு சமயமும் மந்த்ர வேத புராண கலைகளும் ஐம்பதோர் விதமான லிபிகளும் வெகு ரூப
அண்டராதி சராசரமும் உயர் புண்டரீகனும் மேக நிறவனும் அந்தி போல் உரு வானு நிலவொடு வெயில் காலும்
சந்த்ர சூரியர் தாமும் அசபையும் விந்து நாதமும் ஏக வடிவம் அதன் சொரூபம் அதாக உறைவது சிவ யோகம்
தங்கள் ஆணவ மாயை கரும மலங்கள் போய் உபதேச குருபர சம்ப்ரதாயமொடு ஏயு நெற அது பெறுவேனோ
வந்த தானவர் சேனை கெடி புக இந்த்ரலோகம் விபூதர் குடி புக மண்டு பூத பசாசு பசி கெட மயிடாரி
வன்கண் வீரி பிடாரி ஹரஹர சங்கரா என மேரு கிரி தலை மண்டு தூள் எழ வேலை உருவிய வயலூரா
வெந்த நீறு அணி வேணி இருடிகள் பந்த பாச விகார பரவச வென்றியான சமாதி முறுகு கல் முழை கூடும்
விண்டு மேல் மயிலாட இனிய கள் உண்டு கார் அளி பாட இதழி பொன் விஞ்ச வீசு விராலி மலை உறை பெருமாளே

மேல்

#576
கரதலமும் குறி கொண்ட கண்டமும் விரவி எழுந்து சுருண்டு வண்டு அடர்
கனவிய கொண்டை குலைந்து அலைந்திட அதி பார
களப சுகந்த மிகுந்த கொங்கைகள் இளக முயங்கி மயங்கி அன்புசெய்
கனி இதழ் உண்டு துவண்டு பஞ்சணை மிசை வீழா
இரதம் அருந்தி உறும் கரும் கயல் பொருது சிவந்து குவிந்திடும்படி
இதவிய உந்தி எனும் தடம்தனில் உற மூழ்கி
இனியது ஒரு இன்பம் விளைந்து அளைந்து பொய் வனிதையர் தங்கள் மருங்கி
இணங்கிய இளமை கிழம் படும் முன் பதம் பெற உணர்வேனோ
பரத சிலம்பு புலம்பும் அம் பத வரி முக எண்கினுடன் குரங்கு அணி
பணிவிடை சென்று முயன்ற குன்று அணி இடையே போய்
பகடி இலங்கை கலங்க அம் பொனின் மகுட சிரம் தசமும் துணிந்து எழு
படியும் நடுங்க விழும் பனம் பழம் எனவாகும்
மருதம் உதைந்த முகுந்தன் அன்புறு மருக குவிந்து மலர்ந்த பங்கய
வயலியில் அம்பு அவிழ் சண்பகம் பெரிய விராலி
மலையில் விளங்கிய கந்த என்று உனை மகிழ்வொடு வந்தி செய் மைந்தன் என்று எனை
வழிவழி அன்புசெய் தொண்டு கொண்டு அருள் பெருமாளே

மேல்

#577
கரி புராரி காமாரி திரிபுராரி தீ ஆடி கயிலையாளி காபாலி கழை யோனி
கர உதாசனாசாரி பரசு பாணி பானாளி கணமொடு ஆடி கா யோகி சிவயோகி
பரம யோகி மா யோகி பரி அரா ஜடா சூடி பகர் ஒணாத மா ஞானி பசு ஏறி
பரதம் ஆடி கான் ஆடி பர வயோதிகாதீத பரம ஞான ஊர் பூத அருளாயோ
சுருதி ஆடி தாதாவி வெருவி ஓட மூதேவி துரக கோப மீது ஓடி வட மேரு
சுழல வேலை தீ மூள அழுது அளாவி வாய் பாறி சுரதினோடு சூர் மாள உலகு ஏழும்
திகிரி மாதிர ஆவார திகிரி சாய வேதாள திரளினோடு பாறோடு கழுகு ஆட
செருவில் நாடு வான் நீப கருணை மேருவே பார திரு விராலியூர் மேவு பெருமாளே

மேல்

#578
காமாத்திரமாகி இளைஞர்கள் வாழி நாள் கொடு போகி அழகிய
காது ஆட்டிய பார இரு குழை அளவோடி
கார் போல் தவழ் ஓதி நிழல்தனில் ஆர் வாள் கடை ஈடு கனம் கொடு
கால் ஆற்றும் வை வேலின் முனை கடை யம தூதர்
ஏமாப்பு அற மோக இயல் செய்து நீலோற்பல ஆசு இல் மலருடன்
நேர் ஆட்டம் விநோதமிடும் விழி மடவார்பால்
ஏகா பழி பூணும் மருள் அற நீ தோற்றி முனாளும் அடிமையை
ஈடேற்றுதலால் உன் வலிமையை மறவேனே
சீமாட்டியும் ஆய திரிபுரை காலாக்கினி கோப பயிரவி
சீலோத்தமி நீலி சுர திரிபுவன ஈசை
சீ கார்த்திகையாய அறு வகை மாதாக்கள் குமாரன் என வெகு
சீராட்டொடு பேண வட திசை கயிலாச
கோமாற்கு உபதேச உபநிட வேதார்த்த மெய்ஞ்ஞான நெறி அருள்
கோது ஆட்டிய ஸ்வாமி என வரும் இளையோனே
கோடா சிவ பூஜை பவுருஷ மாறா கொடை நாளும் மருவிய
கோனாட்டு விராலி மலை உறை பெருமாளே

மேல்

#579
கொடாதவனையே புகழ்ந்து குபேரன் எனவே மொழிந்து குலாவி அவமே திரிந்து புவி மீதே
எடாத சுமையே சுமந்து எணாத கலியால் மெலிந்து எலா வறுமை தீர அன்று உன் அருள் பேணேன்
சுடாத தனமான கொங்கைகளால் இதயமே மயங்கி சுகாதரமதாய் ஒழுங்கில் ஒழுகாமல்
கெடாத தவமே மறைந்து கிலேசம் அதுவே மிகுந்து கிலாத உடல் ஆவி நொந்து மடியா முன்
தொடாய் மறலியே நீ என்ற சொலாகி அது நா வரும்கொல் சொல் ஏழு உலகம் ஈனும் அம்பை அருள் பாலா
நடாத சுழி மூல விந்து நள் ஆவி விளை ஞான நம்ப நபோ மணி சமான துங்க வடி வேலா
படாத குளிர் சோலை அண்டம் அளாவி உயர்வாய் வளர்ந்து பசேல் எனவுமே தழைந்து தினமே தான்
விடாது மழை மாரி சிந்த அநேக மலர் வாவி பொங்கு விராலி மலை மீது கந்த பெருமாளே

மேல்

#580
மாயா சொரூப முழு சமத்திகள் ஓயா உபாய மன பசப்பிகள்
வாழ்நாளை ஈரும் விழி கடைச்சிகள் முநிவோரும்
மால் ஆகி வாட நகைத்து உருக்கிகள் ஏகாசம் மீது தனம் திறப்பிகள்
வாரீர் இரீர் என் முழு புரட்டிகள் வெகு மோகம்
ஆயாத ஆசை எழுப்பு மெத்திகள் ஈயாதபோதில் அற பிணக்கிகள்
ஆவேச நீர் உண் மத பொறிச்சிகள் பழி பாவம்
ஆமாறு எணாத திருட்டு மட்டைகள் கோமாளமான குறி கழுத்திகள்
ஆசார ஈன விலை தனத்தியர் உறவாமோ
காயாத பால் நெய் தயிர் குடத்தினை ஏயா எண்ணாமல் எடுத்து இடைச்சிகள்
காணாதவாறு குடிக்கும் அப்பொழுது உரலோடே
கார் போலு மேனிதனை பிணித்து ஒரு போர் போல் அசோதை பிடித்து அடித்திட
காதோடு தாது கையில் பிடித்து அழுது இனிது ஊது
வேயால் அநேக வித பசு திரள் சாயாமல் மீள அழைக்கும் அச்சுதன்
வீறான மாமன் என படைத்து அருள் வயலூரா
வீணாள் கொடாத படை செருக்கினில் சூர் மாள வேலை விடுக்கும் அற்புத
வேலா விராலி மலை தலத்து உறை பெருமாளே

மேல்

#581
மால் ஆசை கோபம் ஓயாது எந்நாளும் மாயா விகார வழியே செல்
மா பாவி காளி தான் ஏனு நாத மாதா பிதாவும் இனி நீயே
நாலு ஆன வேத நூல் ஆகமாதி நான் ஓதினேனும் இல்லை வீணே
நாள் போய் விடாமல் ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே
பாலா கலாரம் ஆமோத லேப பாடீர வாக அணி மீதே
பாதாள பூமி ஆதாரம் மீன பானீயம் மேலை வயலூரா
வேலா விராலி வாழ்வே சமூக வேதாள பூத பதி சேயே
வீரா கடோர சூராரியே செவ்வேளே சுரேசர் பெருமாளே

மேல்

#582
மேகம் எனும் குழல் சாய்த்து இரு கோகனம் கொடு கோத்து அணை
மேல் விழுகின்ற பராக்கினில் உடை சோர
மேகலையும் தனி போய் தனியே கரணங்களும் ஆய் கயல்
வேல் விழியும் குவியா குரல் மயில் காடை
கோகிலம் என்று எழ போய் கனி வாய் அமுது உண்டு உருகா களிகூர
உடன் பிரியா கலவியில் மூழ்கி
கூடி முயங்கி விடாய்த்து இரு தனங்களின் மேல் துயில்கூரினும்
அம்புய தாள் இணை மறவேனே
மோகர துந்துமி ஆர்ப்ப விராலி விலங்கலின் வீட்டதில்
மூ உலகும் தொழுது ஏத்திட உறைவோனே
மூ திசை முன்பு ஒரு கால் அட மேருவை அம்பினில் வீழ்த்திய
மோகன சங்கரி வாழ்த்திட மதியாமல்
ஆகம் மடிந்திட வேல் கொடு சூரனை வென்று அடல் போய் தணியாமையின்
வென்ற அவனால் பிறகிடு தேவர்
ஆதி இளந்தலை காத்து அரசாள அவன் சிறை மீட்டு அவன்
ஆள் உலகம் குடி ஏற்றிய பெருமாளே

மேல்

#583
மோதி இறுகி வட மேரு என வளரும் மோக முலை அசைய வந்து காயம்
மோசம் இடும் அவர்கள் மாயைதனில் முழுகி மூடம் என் அறிவு கொண்டதாலே
காதி வரும் இயம தூதர் கயிறு கொடு காலில் இறுக எனை வந்து இழாதே
காவல் என விரைய ஓடி உனது அடிமை காண வருவது இனி எந்த நாளோ
ஆதி மறையவனும் மாலும் உயர் சுடலை ஆடும் அரனும் இவர் ஒன்று அதான
ஆயி அமலை திரிசூலி குமரி மகமாயி கவுரி உமை தந்த வாழ்வே
சோதி நிலவு கதிர் வீசும் மதியின் மிசை தோய வளர் கிரியின் உந்தி நீடு
சோலை செறி உள்ள விராலி நகரில் வளர் தோகை மயில் உலவு தம்பிரானே

மேல்

#584
சரவண ஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம சத தள பாதா நமோ நம அபிராம
தருண கதீரா நமோ நம நிருப அமர் வீரா நமோ நம சம தள ஊரா நமோ நம ஜகதீச
பரம சொரூபா நமோ நம சுரர் பதி பூபா நமோ நம பரிமள நீபா நமோ நம உமை காளி
பகவதி பாலா நமோ நம இகபர மூலா நமோ நம பவுருஷ சீலா நமோ நம அருள்தாராய்
இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூள் ஏற வானவர் எவர்களும் ஈடேற ஏழ் கடல் முறையோ என்று
இடர் பட மா மேரு பூதரம் இடிபடவே தான் நிசாசரர் இகல் கெட மா வேக நீடு அயில் விடுவோனே
மரகத ஆகார ஆயனும் இரணிய ஆகார வேதனும் வசு எனும் ஆகார ஈசனும் அடி பேண
மயில் உறை வாழ்வே விநாயக மலை உறை வேலா மகீதர வனசரர் ஆதாரமாகிய பெருமாளே

மேல்

#585
அன்பாக வந்து உன் தாள் பணிந்து ஐம்பூதம் ஒன்ற நினையாமல்
அன்பால் மிகுந்து நஞ்சு ஆரு கண்கள் அம்போருகங்கள் முலைதானும்
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று கொண்டாடுகின்ற குழலாரை
கொண்டே நினைந்து மன் பேது மண்டி குன்றா மலைந்து அலைவேனோ
மன்று ஆடி தந்த மைந்தா மிகுந்த வம்பு ஆர் கடம்பை அணிவோனே
வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த வடி வேலா
சென்றே இடங்கள் கந்தா எனும் போ செம் சேவல் கொண்டு வரவேணும்
செம் சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த செங்கோடு அமர்ந்த பெருமாளே

மேல்

#586
பந்து ஆடி அம் கை நொந்தார் பரிந்து பைம் தார் புனைந்த குழல் மீதே
பண்பு ஆர் சுரும்பு பண் பாடுகின்ற பங்கேருகம் கொள் முகம் மீதே
மந்தார மன்றல் சந்து ஆரம் ஒன்றி வன் பாதகம் செய் தனம் மீதே
மண்டு ஆசை கொண்டு விண்டு ஆவி நைந்து மங்காமல் உன்தன் அருள்தாராய்
கந்தா அரன்தன் மைந்தா விளங்கு கன்று ஆ முகுந்தன் மருகோனே
கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட கண்டா அரம்பை மணவாளா
செம் தாது அடர்ந்த கொந்து ஆர் கடம்பு திண் தோள் நிரம்ப அணிவோனே
திண் கோடரங்கள் எண்கோடு உறங்கு செங்கோடு அமர்ந்த பெருமாளே

மேல்

#587
வண்டார் மதங்கள் உண்டே மயங்கி வந்து ஊரு கொண்டல் அதனோடும்
வண் காமன் அம்பு தன் கால் மடங்க வன் போர் மலைத்த விழி வேலும்
கொண்டே வளைந்து கண்டார் தியங்க நின்றார் குரும்பை முலை மேவி
கொந்து ஆர் அரும்பு நின் தாள் மறந்து குன்றாமல் உன்தன் அருள்தாராய்
பண்டு ஆழி சங்கு கொண்டு ஆழி தங்கு பண்போன் உகந்த மருகோனே
பண் சார நைந்து நண்பு ஓதும் அன்பர் பங்காகி நின்ற குமரேசா
செண்டு ஆடி அண்டர் கொண்டாட மன்றில் நின்று ஆடி சிந்தை மகிழ் வாழ்வே
செம் சாலி மிஞ்சி மஞ்சு ஆடுகின்ற செங்கோடு அமர்ந்த பெருமாளே

மேல்

#588
கரை அற உருகுதல் தரு கயல் விழியினர் கண்டு ஆன செம் சொல் மட மாதர்
கலவியில் முழுகிய நெறியினில் அறிவு கலங்கா மயங்கும் வினையேனும்
உரையையும் அறிவையும் உயிரையும் உணர்வையும் உன் பாத கஞ்ச மலர் மீதே
உரவொடு புனைதர நினைதரும் அடியரொடு ஒன்றாக என்று பெறுவேனோ
வரை இரு துணிபட வளைபடு சுரர் குடி வந்து ஏற இந்த்ரபுரி வாழ
மத வித கஜ ரத துரக பததியின் வன் சேனை மங்க முது மீன
திரை மலி சல நிதி முறை இட நிசிசரர் திண்டாட வென்ற கதிர் வேலா
ஜெகதல மிடி கெட விளைவன வயல் அணி செங்கோடு அமர்ந்த பெருமாளே

மேல்

#589
இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று இணங்கா பசி பொங்கி அனல் மூழ்கி
இறும் காற்கு இறுங்கார்க்கு இரும்பு ஆர்க்கு நெஞ்சார்க்கு இரங்கார்க்கு இயல் தண் தமிழ் நூலின்
உடம் பாட்டுடன் பாட்டு இயம்பா தயங்கா துளங்கா திட புன் கவி பாடி
ஒதுங்கா பொதுங்கா பதுங்கா புகன்று ஏத்துறும் பால் குணக்கு அன்புறலாமோ
கடம் தோல் கடம் தோற்ற அறிந்தாட்கு அரும் தாள்கள் அணைந்தாட்கு அணி திண் புயம் ஈவாய்
கரும்போர்க்கு அரும் போர் குளம் காட்டி கண்டு ஏத்து செங்கோட்டில் நிற்கும் கதிர் வேலா
அடைந்தோர்க்கு உணந்தோர்க்கு அளிந்தோர்க்கு அமைந்தோர்க்கு அவிழ்ந்தோர்க்கு உணற்கு ஒன்று இலதாகி
அலைந்தோர்க்கு குலைந்தோர்க்கு இனைந்தோர்க்கு அலந்தோர்க்கு அறிந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே

மேல்

#590
கலக்கும் கோது அற வடிக்கும் சீரிய கருப்பஞ்சாறு எனு மொழியாலே
கருத்தும் பார்வையும் உருக்கும் பாவிகள் கடைக்கண் பார்வையில் அழியாதே
விலக்கும் போதகம் எனக்கு என்றே பெற விருப்பம் சாலவும் உடையேன் நான்
வினை கொண்டே மன நினைக்கும் தீமையை விடற்கு அஞ்சேல் என அருள்வாயே
அலைக்கும் தானவர் குலத்தின் சேனையை அறுக்கும் கூரிய வடி வேலா
அழைத்து உன் சீரிய கழல் செந்தாமரை அடுக்கும் போதகம் உடையோராம்
சிலர்க்கு அன்றே கதி பலிக்கும் தேசிக திரு செம் கோபுர வயலூரா
திதிக்கும் பார்வயின் மதிப்பு உண்டாகிய திரு செங்கோடு உறை பெருமாளே

மேல்

#591
துஞ்சு கோட்டி சுழல் கண் காட்டி கொங்கை நோக்க பலர்க்கும் காட்டி
கொண்டு அணாப்பி துலக்கம் சீர்த்து திரிமானார்
தொண்டை வாய் பொன் கருப்பஞ்சாற்றை தந்து சேர்த்து கலக்கும் தூர்த்த
துன்ப வாழ்க்கை தொழில் பண்டு ஆட்டத்து உழலாதே
கஞ்சம் வாய்த்திட்ட அவர்க்கும் கூட்டி கன்று மேய்த்திட்ட அவர்க்கும் கூற்றை
கன்ற மாய்த்திட்ட அவர்க்கும் தோற்ற கிடையா நீ
கண்டு வேட்டு பொருள் கொண்டாட்டத்து இன்ப வாக்யத்து எனக்கும் கேட்க
தந்து காத்து திரு கண் சாத்த பெறுவேனோ
வஞ்சமாய் புக்கு ஒளிக்கும் சூல் கை துன்று சூர் பொட்டு எழ சென்று ஓட்டி
பண்டு வாள்குள் களிக்கும் தோள் கொத்து உடையோனே
வண்டு பாட்டுற்று இசைக்கும் தோட்ட தண் குரா பொன்பு உர கும்பு ஏற்றி
தொண்டர் கூட்டத்து இருக்கும் தோற்றத்து இளையோனே
கொஞ்சு வார்த்தை கிளி தண் சேல் கண் குன்ற வேட்டிச்சியை கண் காட்டி
கொண்டு வேட்டு புனம் பைம் காட்டில் புணர்வோனே
கொங்கு உலாத்தி தழைக்கும் கா பொன் கொண்டல் ஆர்த்து சிறக்கும் காட்சி
கொங்கு நாட்டு திரு செங்கோட்டு பெருமாளே

மேல்

#592
நீல மஞ்சான குழல் மாலை வண்டோடு கதி நீடு பந்தாடு விழியார் பளிங்கான நகை
நீல பொன் சாப நுதல் ஆசையின் தோடு அசையு நீள் முகம் தாமரையினார் மொழிந்து ஆர மொழி
நேர் சுகம் போல கமுகான கந்தாரர் புய நேர் சுணங்கு ஆவி கிளை ஏர் சிறந்தார் மலை இரண்டு போல
நீள் இபம் கோடு இளநீர் தேன் இருந்த ஆர முலை நீடு அலங்கார சரம் ஓடு அடைந்தார் மருவி
நீள் மணம் சாறு பொழி அ வளம் போது இவையில் நீல வண்டு ஏவிய நல் காமன் அங்காரம் நிறை
நேச சந்தான அல்குல் காம பண்டார அமுதை நேரு சம்போகர் இடை நூல் ஒளிர்ந்து ஆசை உயிர் சம்பையார் அம்சாலு
பொன் தோகை அமை பாளிதம் சூழ் சரண தாள் சிலம்பு ஓலம் இடவே நடந்து ஆன நடை
சாதி சந்தான எகின மார்பர் அம் தோகை என தான் எழும் கோல விலைமாதர் இன்பு ஆர் கலவி
தாவு கொண்டே கலிய நோய்கள் கொண்டே பிறவி தான் அடைந்து ஆழும் அடியேன் இடம் சாலும் வினை அஞ்சி ஓட
தார் கடம்பு ஆடு கழல் பாத செந்தாமரைகள் தாழ் பெரும் பாதை வழியே படிந்தே வருகு
தாபம் விண்டே அமுத வாரி உண்டே பசிகள் தாபமும் தீர துகிர் போல் நிறம் காழ் கொள் உரு
சாரவும் சோதி முருகா எனும் காதல் கொடு தான் இருந்து ஓத இரு ஓர் அகம் பேறு உறுக விஞ்சை தாராய்
சூலி எம் தாய் கவுரி மோக சங்காரி குழை தோடு கொண்டு ஆடு சிவகாம சுந்தாரி நல
தூள் அணைந்து ஆளி நிருவாணி அம் காளி கலை தோகை செந்தாமரையின் மாது நின்றே துதி செய்
தூய அம்பா கழை கொள் தோளி பங்காள க்ருபை தோய் பரன் சேய் எனவுமே பெரும் பார் புகழும் விந்தையோனே
சூர சம்கார சுரர் லோக பங்கா அறுவர் தோகை மைந்தா குமர வேள் கடம்பு ஆர தொடை
தோள கண்டா பரம தேசி கந்தா அமரர் தோகை பங்கா எனவே வேதாகமம் சூழ் சுருதி
தோதகம் பாட மலை ஏழு துண்டாய் எழுவர் சோரி கொண்டு ஆறு வர வேல் எறிந்தே நடனமும் கொள் வேலா
மாலியன் பாற ஒரு ஆடகன் சாக மிகு வாலியும் பாழி மரமோடு கும்பாகனனும்
ஆழியும் கோர வலி இராவணன் பாற விடும் ஆசுகன் கோல முகிலோனும் உகந்து ஓதி இடையர்
மாதுடன் கூடி விளையாடு சம்போக திரு மார்பகன் காண முடியோன் அணங்கான மதி ஒன்றும் ஆனை
மார்புடன் கோடு தன பாரமும் சேர இடை வார் துவண்டு ஆட முகமோடு உகந்து ஈர ரச
வாய் இதம் கோதி மணி நூபுரம் பாட மண ஆசை கொண்டாடும் மயிலாளி துங்கா குறவி
மாது பங்கா மறை குலாவு செம் கோடை நகர் வாழ வந்தாய் கரிய மால் அயன் தேவர் புகழ் தம்பிரானே

மேல்

#593
பொன்றலை பொய்க்கும் பிறப்பை தும்பு அறுத்திட்டு இன்று நிற்க புந்தியில் சற்றும் குறிக்கைக்கு அறியாமே
பொங்கி முக்கி சங்கை பற்றி சிங்கி ஒத்த சங்கடத்து புண் படைத்து கஞ்ச மை கண் கொடியார் மேல்
துன்றும் இச்சை பண்டனுக்கு பண்பு அளித்து சம்ப்ரமித்து தும்பி பட்சிக்கும் பிரச செய்ப்பதி மீதே
தொண்டு பட்டு தெண்டனிட்டு கண்டு பற்ற தண்டை வர்க்க துங்க ரத்த பங்கயத்தை தருவாயே
குன்று எடுத்து பந்தடித்து கண் சிவத்து சங்கரித்து கொண்டல் ஒத்திட்டு இந்திரனுக்கு இ சுரலோகா
கொம்பு குத்தி சம்பு அழுத்தி திண் தலத்தில் தண்டு வெற்பை கொண்டு அமுக்கி சண்டை இட்டு பொரும் வேழம்
சென்று உரித்து சுந்தரிக்கு அச்சம் தவிர்த்து கண் சுகித்து சிந்தையுள் பற்று இன்றி நித்த களிகூரும்
செண்பகத்து சம்புவுக்கு தொம் பதத்து பண்பு உரைத்து செங்குவட்டில் தங்கு சொக்க பெருமாளே

மேல்

#594
மந்த கடைக்கண் காட்டுவர் கந்த குழல் பின் காட்டுவர் மஞ்சள் பிணி பொன் காட்டுவர் அநுராக
வஞ்சத்து இரக்கம் காட்டுவர் நெஞ்சில் பொருத்தம் காட்டுவர் வண் பல் திருப்பும் காட்டுவர் தன பார
சந்த பொருப்பும் காட்டுவர் உந்தி சுழிப்பும் காட்டுவர் சங்க கழுத்தும் காட்டுவர் விரகாலே
சண்டை பிணக்கும் காட்டுவர் பண்டு இட்ட ஒடுக்கம் காட்டுவர் தங்கட்கு இரக்கம் காட்டுவது ஒழிவேனோ
பந்தித்து எருக்கம் தோட்டினை இந்து சடை கண் சூட்டு உமை பங்கில் தகப்பன் தாள் தொழு குருநாதா
பைம்பொன் பதக்கம் பூட்டிய அன்பற்கு எதிர்க்கும் கூட்டலர் பங்கப்பட சென்று ஓட்டிய வயலூரா
கொந்தில் புனத்தின் பாட்டு இயல் அந்த குற பெண்டு ஆட்டொடு கும்பிட்டிட கொண்டாட்டமொடு அணைவோனே
குன்றில் கடப்பம் தோட்டு அலர் மன்றல் ப்ரசித்தம் கோட்டிய கொங்கில் திரு செங்கோட்டு உறை பெருமாளே

மேல்

#595
மெய் சார்வு அற்றே பொய் சார்வு உற்றே நிச்சார் துற்ப பவ வேலை
விட்டு ஏறி போக ஒட்டாமல் தேம் மட்டே அ தத்தையர் மேலே
பிச்சாய் உச்சாகி போர் எய்த்தார் பத்தார் வில் பொன் கழல் பேணி
பிற்பால் பட்டே நல் பால் பெற்றார் முன் பாலை கற்பகமே தான்
செ சாலி சாலத்து ஏறி சேல் உற்று ஆணித்து பொழில் ஏறும்
செ கோடை கோடுக்கே நிற்பாய் நித்தா செக்கர் கதிர் ஏனல்
மு சாலி சாலி தாள் வெற்பாள் முத்து ஆர் வெட்சி புய வேளே
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#596
வருத்தம் காண நாடிய குணத்து அன்பான மாதரும் மயக்கம் பூண மோதிய துரம் ஈதே
மலக்கம் கூடியேயின உயிர்க்கும் சேதமாகிய மரிக்கும் பேர்களோடு உறவு அணியாதே
பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய பிறப்பும் தீரவே உனது இரு தாளே
பெற தந்து ஆளவே உயர் சுவர்க்கம் சேரவே அருள் பெலத்தின் கூர்மையானது மொழிவாயே
இரத்தம் பாய மேனிகள் உரத்தும் சாடி வேல் கொடு எதிர்த்தும் சூரர் மாளவே பொரும் வேலா
இசைக்கும் தாள மேளமே தனத்தம் தான தானன என திண் கூளி கோடிகள் புடை சூழ
திருத்த அன்பாகவே ஒரு மயில் கொண்டாடியே புகழ் செழித்து அன்பாக வீறிய பெருவாழ்வே
திரள் சங்கு ஓடை வாவிகள் மிகுத்தும் காவி சூழ் தரு திரு செங்கோடு மேவிய பெருமாளே

மேல்

#597
ஆலகால பட பை மடப்பியர் ஈர வாள் அற எற்றும் விழிச்சியர் யாவராயினும் நத்தி அழைப்பவர் தெருவூடே
ஆடிஆடி நடப்பது ஓர் பிச்சியர் பேசி ஆசை கொடுத்து மருட்டிகள் ஆசை வீசி அணைக்கும் முலைச்சியர் பலரூடே
மாலை ஓதி விரித்து முடிப்பவர் சேலை தாழ நெகிழ்த்து அரை சுற்றிகள் வாசம் வீசு மணத்தில் மினுக்கிகள் உறவாலே
மாயையூடு விழுத்தி அழுத்திகள் காம போக வினைக்குள் உனை பணி வாழ்வு இலாமல் மல சனனத்தினில் உழல்வேனோ
மேலை வானொர் உரை தசரற்கு ஒரு பாலனாகி உதித்து ஒர் முநிக்கு ஒரு வேள்வி காவல் நடத்தி அ கற்கு உரு அடியாலே
மேவியே மிதிலை சிலை செற்று மின் மாது தோள் தழுவி பதி புக்கிட வேறு தாய் அடவிக்குள் விடுத்த பின்னவனோடே
ஞால மாதொடு புக்கு அ வனத்தினில் வாழும் வாலி பட கணை தொட்டவன் நாடி ராவணனை செகுவித்தவன் மருகோனே
ஞானதேசிக சற்குரு உத்தம வேலவா நெருவை பதி வித்தக நாக மா மலை சொல்பெற நிற்பது ஒர் பெருமாளே

மேல்

#598
காலன் இடத்து அணுகாதே காசினியில் பிறவாதே
சீல அகத்திய ஞான தேன் அமுதை தருவாயே
மால் அயனுக்கு அரியோனே மாதவரை பிரியானே
நாலுமறை பொருளானே நாக கிரி பெருமாளே

மேல்

#599
தாமா தாமாலாபா லோகாதாரா தார தரணி ஈசா
தானாசாரோ பாவா பாவோ நாசா பாசத்து அபராத
யாமா யாமா தேசாரூடு ஆராயா ஆபத்து எனது ஆவி
ஆமா காவாய் தீயேன் நீர் வாயாதே ஈமத்து உகலாமோ
காமா காமாதீனா நீள நாக வாய் காள கிரியாய்
கங்காளா லீலா பாலா நீபா காமாமோத கன மானின்
தேம் ஆர் தே மா காமீ பாகீ தேசா தேசத்தவர் ஓதும்
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே

மேல்

#600
அ துகிரின் நல் அதரத்து அல் அன அளகத்து வளர் செய் புளகித பூதரத்து
இரு கமல கரத்து இதயம் உருகி அத்தி இடன் உறையும் நெடு மாமரத்து
மலர் கனி அலைத்து வரும் இடை தலத்து உரக சிகரி பகராதே
அத்தி மல உடல் நடத்தி எரி கொள் நிரையத்தின் இடை அடிமை விழலாமோ
தத்து கவன அரிணத்து உபநிட விதத்து முநி உதவு மொழியால்
துத்தத்தை நறவை அமுதத்தை நிகர் குறவர் தத்தை தழுவிய பனிரு தோளா
தத்து உததி துரகதத்து மிகு திதிசர் தத்து மலை அவுணர் குல நாகம்
தத்த மிசை மரகத தமனிய மயில் தத்தவிடும் அமரர் பெருமாளே

மேல்

#601
அத்த வேட்கை பற்றி நோக்க அ தத்தைமார்க்கு தமராய் அன்பு
அற்ற கூட்டத்தில் பராக்கு உற்று அச்சு தோள் பற்ற இயவோடும்
சித்தம் மீட்டு பொய்த்த வாழ்க்கை சிக்கை நீக்கி திணிது ஆய
சித்ர வாக்கு பெற்று வாழ்த்தி செச்சை சாத்த பெறுவேனோ
கொத்து நூற்றுப்பத்து நாட்ட கொற்ற வேத்துக்கு அரசாய
குக்குட அத்த சர்ப்ப கோத்ர பொற்ப வேல் கை குமரேசா
தத்வம் நாற்பத்தெட்டு நாற்பத்தெட்டும் ஏற்று திடம் மேவும்
தர்க்க சாத்ர தக்க மார்க்க சத்ய வாக்ய பெருமாளே

மேல்

#602
பத்தர் கண ப்ரிய நிர்த்த நடித்திடு பட்சி நடத்திய குக பூர்வ
பச்சிம தட்சிண உத்தர திக்கு உள பத்தர்கள் அற்புதம் என ஓதும்
சித்ர கவித்துவ சத்தம் மிகுத்த திருப்புகழை சிறிது அடியேனும்
செப்பு என வைத்து உலகில் பரவ தெரிசித்த அநுக்ரகம் மறவேனே
கத்திய தத்தை களைத்து விழ திரி கல் கவண் இட்டு எறி தினை காவல்
கற்ற குறத்தி நிறத்த கழுத்து அடி கட்டி அணைத்த பன்னிரு தோளா
சத்தியை ஒக்க இடத்தினில் வைத்த தகப்பன் மெச்சிட மறைநூலின்
தத்துவ தற்பரம் முற்றும் உணர்த்திய சர்ப்பகிரி சுரர் பெருமாளே

மேல்

#603
புற்பதம் என நாம அற்ப நிலையாத பொய் குடில் குலாவும் மனையாளும்
புத்திரரும் வீடு மித்திரருமான புத்தி சலியாத பெருவாழ்வு
நிற்பது ஒரு கோடி கற்பம் என மாய நிட்டையுடன் வாழும் அடியான் யான்
நித்த நின தாளில் வைத்தது ஒரு காதல் நிற்கும் வகை ஓத நினைவாயே
சற்பகிரி நாத முத்தமிழ் விநோத சக்ர கதை பாணி மருகோனே
தர்க்க சமண் மூகர் மிக்க கழுவேற வைத்த ஒரு காழி மறையோனே
கற்பு வழுவாது வெற்பு அடியில் மேவு கற்றை மற வாழ்நர் கொடி கோவே
கைத்த அசுரேசர் மொய்த்த குல கால கற்ப தரு நாடர் பெருமாளே

மேல்

#604
பொன் சித்ர பச்சை பட்டு கச்சு இட்டு கட்டி பத்ம புட்பத்துக்கு ஒப்ப கற்பித்து இளைஞோர்கள்
புள் பட்டு செப்பத்து பல் கொத்த பொன் தித்த திட்ப பொற்பில் பெற்று உக்ர சக்ர தனம் மானார்
கல் சித்த சுத்த பொய் பித்து அத்தில் புக்கு இட்டப்பட்டு கை குத்திட்டு இட்டு சுற்றித்திரியாமல்
கற்று உற்று சித்திக்கைக்கு சித்திப்ப பக்ஷத்தில் சொல் கற்பித்து ஒப்பித்து கொற்ற கழல் தாராய்
குற்சித்து கொட்டு கொட்டு துக்க அச்சத்துக்கு குக்குக்கு குக்குக்கு குக்கு குக்கு என மாறா
குட்சிக்கு பக்ஷிக்கைக்கு கக்ஷத்தில் பட்சத்து அத்த கொட்டி சுட்டி கொக்ரி குக்குட தாரி
சத்சித்து தொல் புத்தி பட்ச அத்தர்க்கு ஒப்பித்து அட்சத்து சத்தத்தை சத்தி கொச்சை பதி வாழ்வே
தக்ஷச பற்று கெர்ப்பத்தில் செல் பற்றை செற்றிட்ட உச்ச சற்ப பொற்றைக்குள் சொக்க பெருமாளே

மேல்

#605
கொடிய மறலியும் அவனது கடகமும் மடிய ஒரு தினம் இரு பதம் வழிபடு
குதலை அடியவன் நினது அருள் கொடு பொரும் அமர் காண
குறவர் மகள் புணர் புய கிரி சமுகமும் அறு முகமும் வெகு நயனமும் ரவி உமிழ்
கொடியும் அகிலமும் வெளிப்பட இரு திசை இருநாலும்
படியு நெடியன எழு புணரியும் முது திகிரி திகிரியும் வருக என வரு தகு
பவுரி வரும் ஒரு மரகத துரகத மிசை ஏறி
பழய அடியவர் உடன் இமையவர் கணம் இரு புடையும் மிகு தமிழ் கொடு மறை கொடு
பரவ வரும் அதில் அருணையில் ஒரு விசை வரவேணும்
சடிலதர விடதர பணிதர தர பரசுதர சசிதர சுசிதர வித
தமருக மிருகதர வனிதர சிரதர பார
தரணிதர தநுதர வெகு முக குல தடினிதர சிவ சுத குணதர பணி
சயில விதரண தரு புர சசி தரு மயில் வாழ்வே
நெடிய உடல் உரு இருள் எழ நிலவு எழ எயிறு சுழல் விழி தழல் எழ எழுகிரி
நெரிய அதிர் குரல் புகை எழ இடி எழ நெடு வானும்
நிலனும் வெருவர வரு நிசிசரர் தளம் நிகில சகலமும் மடிய ஒர் படை தொடு
நிருப குரு பர சுரபதி பரவிய பெருமாளே

மேல்

#606
கட்ட மன்னும் அள்ளல் கொட்டி பண்ணும் ஐவர்கட்கு மன்னும் இல்லம் இது பேணி
கற்ற விஞ்ஞை சொல்லி உற்ற எண்மை உள் உகக்க எண்ணி முல்லை நகை மாதர்
இட்டம் எங்ஙன் நல்ல கொட்டி அங்ஙன் நல்கி இட்டு பொன்னை இல்லை என ஏகி
எத்து பொய்ம்மை உள்ளல் உற்றும் இன்மை உள்ளி எற்று இங்ஙன் நைவது இயல்போ தான்
முட்ட உண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள முட்ட நன்மை விள்ள வருவோனே
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண வல்லி மணவாளா
பட்டம் மன்னு அ வல்லி மட்ட மன்ன வல்லி பட்ட துன்னு கொல்லி மலைநாடா
பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே

மேல்

#607
தொல்லை முதல் தான் என்று மெல்லி இரு பேதங்கள் சொல்லு குணம் மூ அந்தம் என ஆகி
துய்ய சதுர்வேதங்கள் வெய்ய புலன் ஓர் ஐந்து தொய்யும் பொருள் ஆறு அங்கம் என மேவும்
பல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள் பல்கு தமிழ் தான் ஒன்றி இசையாகி
பல் உயிருமாய் அந்தம் இல்ல சொருபாநந்த பௌவம் உறவே நின்றது அருள்வாயே
கல் உருக வேயின் கண் அல்லல் படு கோ அம் புகல் வருகவே நின்று குழல் ஊதும்
கையன் மிசை ஏறு உம்பன் நொய்ய சடையோன் எந்தை கை தொழு மெய்ஞ்ஞானம் சொல் கதிர் வேலா
கொல்லை மிசை வாழ்கின்ற வள்ளி புனமே சென்று கொள்ளை கொளும் மாரன் கை அலராலே
கொய்து தழையே கொண்டு செல்லும் மழவா கந்த கொல்லி மலை மேல் நின்ற பெருமாளே

மேல்

#608
மாக சஞ்சார முகில் தோற்ற குழல் கொடு போக இந்திராதி சிலை தோற்ற நுதல் கொடு
மான வண்டு ஏறு கணை தோற்ற விழி கொடு கண்டு போல
மாலர் கொண்டாடு கனி தோற்ற இதழ் கொடு சோலை சென்று ஊது குயில் தோற்ற இசை கொடு
வார் பொரும் பாரமலை தோற்ற முலை கொடு மன்றுள் ஆடி
சீகரம் பேணு துடி தோற்ற இடை கொடு போக பண்டார பணி தோற்ற அரை கொடு
தேன் உகும் சீர் கதலி தோற்ற தொடை கொடு வந்து காசு
தேடுகின்றாரொடு மெய் தூர்த்தன் என உறவாடுகின்றேன் எனை மல நீக்கி ஒளி தரு
சீவன் ஒன்றான பரமார்த்த தெரிசனை வந்து தாராய்
வேகம் உண்டாகி உமை சாற்றும் அளவினில் மா மகம் கூரும் அது தீர்க்க வடிவுடை
வீரன் என்பான் ஒரு பராக்ரன் என வர அன்று சோமன்
மேனியும் தேய கதிர் தோற்ற எயிறு உக ஆன் உகும் தீ கை அற சேட்ட விதி தலை
வீழ நல் பாரதியும் மூக்கு நழுவிட வந்த மாயன்
ஏக நின்றாகி அமர் தோற்று வதறிட வேக உங்காரமோடு ஆர்க்க அலகைகள்
ஏறி வென்று ஆடுகள நீக்கி முநிவர் வந்து சேய் என்று
ஈச நண்பான புருஷார்த்த தெரிசனை தா எனும் கேள்வி நெறி கீர்த்தி மருவிய
ராச கெம்பீர வள நாட்டு மலை வளர் தம்பிரானே

மேல்

#609
சூது கொலைகாரர் ஆசை பண மாதர் தூவையர்கள் சோகை முகம் நீலர்
சூலை வலி வாதமோடு அளைவர் பாவர் தூமையர்கள் கோளர் தெருவூடே
சாதனைகள் பேசி வாரும் என நாழி தாழி விலை கூறு இது என ஓதி
சாய வெகு மாய தூளி உற ஆக தாடி இடுவோர்கள் உறவாமோ
வேத முநிவோர்கள் பாலகர்கள் மாதர் வேதியர்கள் பூசல் என ஏகி
வீறு அசுரர் பாறி வீழ அலை ஏழு வேலை அளறு ஆக விடும் வேலா
நாதரிடம் மேவு மாது சிவகாமி நாரி அபிராமி அருள் பாலா
நாரண சுவாமி ஈனும் மகளோடு ஞானமலை மேவும் பெருமாளே

மேல்

#610
மனையவள் நகைக்க ஊரில் அனைவரு நகைக்க லோக மகளிரு நகைக்க தாதை தமரோடும்
மனம் அது சலிப்ப நாயன் உளம் அது சலிப்ப யாரும் வசை மொழி பிதற்றி நாளும் அடியேனை
அனைவரும் இழிப்ப நாடும் மன இருள் மிகுத்து நாடின் அகம் அதை எடுத்த சேமம் இதுவோ என்று
அடியனும் நினைத்து நாளும் உடல் உயிர் விடுத்தபோதும் அணுகி முன் அளித்த பாதம் அருள்வாயே
தனதன தனத்த தான என முரசு ஒலிப்ப வீணை தமருகம் மறை குழாமும் அலைமோத
தடி நிகர் அயில் கடாவி அசுரர்கள் இறக்குமாறு சமரிடை விடுத்த சோதி முருகோனே
எனை மனம் உருக்கி யோக அநுபூதி அளித்த பாத எழுத அரிய பச்சை மேனி உமை பாலா
இமையவர் துதிப்ப ஞான மலை உறை குறத்தி பாகம் இலகிய சசி பெண் மேவு பெருமாளே

மேல்

#611
ஆதி மகமாயி அம்பை தேவி சிவனார் மகிழ்ந்த ஆ உடைய மாது தந்த குமரேசா
ஆதரவு அதாய் வருந்தி ஆதி அருணேசர் என்று ஆளும் உனையே வணங்க அருள்வாயே
பூதம் அதுவான ஐந்து பேதம் இடவே அலைந்து பூரண சிவாகமங்கள் அறியாதே
பூணு முலை மாதர் தங்கள் ஆசை வகையே நினைந்து போகம் உறவே விரும்பும் அடியேனை
நீ தயவதாய் இரங்கி நேச அருளே புரிந்து நீதி நெறியே விளங்க உபதேச
நேர்மை சிவனார் திகழ்ந்த காதில் உரை வேத மந்த்ர நீல மயில் ஏறி வந்த வடி வேலா
ஓது மறை ஆகமம் சொல் யோகம் அதுவே புரிந்து ஊழி உணர்வார்கள்தங்கள் வினை தீர
ஊனும் உயிராய் வளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த ஊதி மலை மீது உகந்த பெருமாளே

மேல்

#612
கோதி முடித்து கனத்த கொண்டையர் சூது விதத்துக்கு இதத்து மங்கையர்
கூடிய அற்ப சுகத்தை நெஞ்சினில் நினையாதே
கோழை மனத்தை கெடுத்து வன் புல ஞான குணத்தை கொடுத்து நின் செயல்
கூறும் இடத்து இதத்து நின்று அருள்புரிவாயே
நாத நிலைக்குள் கருத்து உகந்து அருள் போதக மற்று எ சகத்தையும் தரு
நான்முகனுக்கு கிளத்து தந்தையின் மருகோனே
நாடும் அகத்து எற்கு இடுக்கண் வந்தது தீர் இடுதற்கு பதத்தையும் தரு
நாயகர் புத்ர குருக்கள் என்று அருள் வடி வேலா
தோதிமி தித்தி திமித்த டிங்குகு டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி
தோதிமி தித்தி தனத்த தந்த தோதிமி தித்தி என் இசையோடே
சூழ நடித்து சடத்தில் நின்று உயிரானது துறத்தற்கு இரக்கமும் சுப
சோபனம் உய்க்க கருத்தும் வந்து அருள்புரிவோனே
ஓதி எழுத்துக்கு அடக்கமும் சிவ காரண பத்தர்க்கு இரக்கமும் தகு
ஓம் என எழுத்துக்கு உயிர்ப்பும் என் சுடர் ஒளியோனே
ஓதி இணர்த்தி குகைக்கு இடும் கனகாபரணத்தின் பொருள் பயன் தரு ஊதி கிரிக்குள் கருத்து உகந்து அருள் பெருமாளே

மேல்

#613
கருடன் மிசை வரு கரிய புயல் என கமல மணி என உலகோரை
கதறி அவர் பெயர் செருகி மனம் அது கருதி முதுமொழிகளை நாடி
திருடி ஒரு படி நெருடி அறிவிலர் செவியில் நுழைவன கவி பாடி
திரியும் அவர் சில புலவர் மொழிவது சிறிதும் உணர் வகை அறியேனே
வருடை இனம் அது முருடு படும் அகில் மரமும் மருதமும் அடி சாய
மதுரம் எனு நதி பெருகி இரு கரை வழிய வகைவகை குதி பாயும்
குருடி மலை உறை முருக குல வட குவடு தவிடு எழ மயில் ஏறும்
குமர குருபர திமிர தினகர குறைவில் இமையவர் பெருமாளே

மேல்

#614
எங்கேனும் ஒருவர் வர அங்கே கண் இனிது கொடு இங்கு ஏவர் உனது மயல் தரியார் என்று
இந்தா என் இனிய இதழ் தந்தேன் எனை உற மருவ என்று ஆசை குழைய விழி இணை ஆடி
தங்காமல் அவருடைய உண்டான பொருள் உயிர்கள் சந்தேகம் அறவே பறிகொளும் மானார்
சங்கீத கலவி நலம் என்று ஓதும் உததி விட தண்பு ஆரும் உனது அருளை அருள்வாயே
சங்கோடு திகிரி அது கொண்டு ஏயு நிரை பிறகு சந்து ஆரும் வெதிர் உரு குழல் அது ஊதி
தன் காதல்தனை உகள என்று ஏழு மடவியர்கள் தம் கூறை கொடு மரமில் அது ஏறும்
சிங்கார அரி மருக பங்கேருகனும் மருள சென்றே உயும் அமரருடை சிறை மீள
செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர் தொழும் தென்சேரிகிரியில் வரும் பெருமாளே

மேல்

#615
கொண்டாடி கொஞ்சு மொழி கொடு கண்டாரை சிந்து விழி கொடு கொந்து ஆர சென்ற குழல் கொடு வட மேரு
குன்றோட ஒப்பு என்ற முலை கொடு நின்று ஓலக்கம் செய் நிலை கொடு கொம்பாய் எய்ப்புண்ட இடை கொடு பலரோடும்
பண்டு ஆட சிங்கி இடும் அவர் விண்டு ஆலிக்கின்ற மயில் அன பண்பால் இட்டம் செல் மருள் அது விடுமாறு
பண்டே சொல் தந்த பழ மறை கொண்டே தர்க்கங்கள் அற உமை பங்காளர்க்கு அன்று பகர் பொருள் அருள்வாயே
வண்டு ஆட தென்றல் தடம் மிசை தண்டாது அ புண்டரிக மலர் மங்காமல் சென்று மதுவை செய் வயலூரா
வன் காள கொண்டல் வடிவு ஒரு சங்க்ராம கஞ்சன் விழ உதை மன்றாடிக்கு அன்பு தரு திரு மருகோனே
திண்டாடி சிந்து நிசிசரர் தொண்டு ஆட கண்ட அமர் பொரு செம் சேவல் செம் கை உடைய சண்முக தேவே
சிங்கார செம்பொன் மதிள் அது அலங்கார சந்த்ர கலை தவழ் தென்சேரிகுன்றில் இனிது உறை பெருமாளே

மேல்

#616
ஐங்கரனை ஒத்த மனம் ஐம்புலம் அகற்றி வளர் அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே
அம் புவி தனக்கு உள் வளர் செந்தமிழ் வழுத்தி உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே
தங்கிய தவத்து உணர்வு தந்து அடிமை முத்தி பெற சந்திர வெளிக்கு வழி அருள்வாயே
தண்டிகை கன பவுசு எண் திசை மதிக்க வளர் சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே
மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் என் உற்ற மனம் உன்றனை நினைத்து அமைய அருள்வாயே
மண்டலிகர் ரப்பகலும் வந்து சுபரட்சை புரி வந்து அணைய புத்தியினை அருள்வாயே
கொங்கில் உயிர் பெற்று வார் தென்கரையில் அப்பர் அருள் கொண்டு உடல் உற்ற பொருள் அருள்வாயே
குஞ்சர முகற்கு இளைய கந்தன் என வெற்றி பெறு கொங்கணகிரிக்குள் வளர் பெருமாளே

மேல்

#617
பாட்டில் உருகிலை கேட்டும் உருகிலை கூற்று வரு வழி பார்த்தும் உருகிலை
பாட்டை அநுதினம் ஏற்றும் அறிகிலை தினமானம்
பாப்பணியன் அருள் வீட்டை விழைகிலை நாக்கின் நுனி கொடு ஏத்த அறிகிலை
பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது நல் வழி போக
மாட்டம் எனுகிறை கூட்டை விடுகிலை ஏட்டின் விதி வழி ஓட்டம் அறிகிலை
பார்த்தும் இனி ஒரு வார்த்தை அறைகுவன் இது கேளாய்
வாக்கும் உனது உள நோக்கும் அருளுவன் ஏத்த புகழ் அடியார்க்கும் எளியனை
வாழ்த்த இருவினை நீக்கு முருகனை மருவாயோ
ஆட்டி வடவரை வாட்டி அரவொடு பூட்டி திரிபுரம் மூட்டி மறலியின்
ஆட்டம் அற சரண் நீட்டி மதன் உடல் திருநீறாய்
ஆக்கி மகம் அதை வீட்டில் ஒருவனை ஆட்டின் முகம் அதை நாட்டி மறை மகளார்க்கும்
வடு உற வாட்டும் உமையவன் அருள் பாலா
சீட்டை எழுதி வையாற்றில் எதிருற ஓட்டி அழல் பசை காட்டி சமணரை
சீற்றமொடு கழுவேற்ற அருளிய குருநாதா
தீர்த்த எனது அகம் மேட்டை உடன் நினை ஏத்த அருளுடன் நோக்கி அருளுதி
தீர்த்த மலை நகர் காத்த சசி மகள் பெருமாளே

மேல்

#618
அரிவையர்கள் தொடரும் இன்பத்து உலகு நெறி மிக மருண்டிட்டு அசடன் என மனது நொந்திட்டு அயராமல்
அநுதினமும் உவகை மிஞ்ச சுக நெறியை விழைவு கொண்டிட்டு அவ நெறியின் விழையும் ஒன்றை தவிர்வேனோ
பரிதி மதி நிறைய நின்ற அஃது என ஒளிரும் உனது துங்க படிவ முகம் அவைகள் கண்டுற்று அக மேவும்
படர்கள் முழுவதும் அகன்று உள் பரிவினொடு துதி புகன்று எல் பத உகளம் மிசை வணங்கற்கு அருள்வாயோ
செரு விலகும் அசுரர் மங்க குல கிரிகள் நடுநடுங்க சிலுசிலு என வலை குலுங்க திடமான
செயம் உதவும் மலர் பொரும் கைத்தலம் இலகும் அயில் கொளும் சத்தியை விடுதல் புரியும் முன்பில் குழகோனே
கருணை பொழி கிருபை முந்த பரிவினொடு கவுரி கொஞ்ச கலகல என வரு கடம்ப திரு மார்பா
கரி முகவர் தமையன் என்று உற்றிடும் இளைய குமர பண்பில் கநக கரி இலகு கந்த பெருமாளே

மேல்

#619
மருவும் மலர் வாசம் உறு குழலினாலும் வரி விழியினாலும் மதியாலும்
மலையின் நிகரான இள முலைகளாலும் மயல்கள் தரு மாதர் வகையாலும்
கறுது பொருளாலும் மனைவி மகவான கடல் அலையில் மூழ்கி அலைவேனோ
கமல பத வாழ்வு தர மயிலின் மீது கருணையுடனே முன் வரவேணும்
அரு மறைகள் ஓது பிரமன் முதல் மாலும் அமரர் முநி ராசர் தொழுவோனே
அகில தலம் ஓது நதி மருவு சோலை அழகு பெறு போக வளநாடா
பொருத வரு சூரர் கிரி உருவ வாரி புனல் சுவற வேலை எறிவோனே
புகல் அரியதான தமிழ் முநிவர் ஓது புகழி மலை மேவு பெருமாளே

மேல்

#620
மாந்தளிர்கள் போல வேய்ந்த உடல் மாதர் வாந்தவியமாக முறை பேசி
வாஞ்சை பெரு மோக சாந்தி தர நாடி வாழ்ந்த மனை தேடி உறவாடி
ஏந்து முலை மீது சாந்து பல பூசி ஏங்கும் இடை வாட விளையாடி
ஈங்கிசைகள் மேவ லாஞ்சனை இல்லாமல் ஏய்ந்த விலைமாதர் உறவாமோ
பாந்தள் முடி மீது தாந்ததிமி தோதி தாஞ்செகண சேசெ என ஓசை
பாங்குபெறு தாளம் ஏங்க நடமாடும் பாண்டவர் சகாயன் மருகோனே
பூம் தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு பூம் கதலி கோடி திகழ் சோலை
பூம் தடம் உலாவு கோம்பைகள் குலாவு பூம்பறையில் மேவும் பெருமாளே

மேல்

#621
அனங்கன் அம்பு ஒன்று அஞ்சும் தங்கும் கண்களாலே
அடர்ந்து எழும் பொன் குன்றம் கும்பம் கொங்கையாலே
முனிந்து மன்றம் கண்டும் தண்டும் பெண்களாலே
முடங்கும் என்றன் தொண்டும் கண்டு இன்று இன்புறாதோ
தெனந்தெ னந்தெம் தெந்தெம் தெந்தெம் தெந்தெனானா
செறிந்து அடர்ந்து சென்றும் பண்பின் தும்பி பாட
குனித்து இலங்கும் கொம்பும் கொந்தும் துன்று சோலை
கொழும் கொடும் திண் குன்றம் தங்கும் தம்பிரானே

மேல்

#622
எதிர் பொருது கவி கடின கச்சு உகளும் பொருது குத்தி திறந்து மலை
இவைகள் என வதி ம்ருகமத பட்டு நின்று ஒழுகி முத்து செறிந்த வடம்
எனும் நிகளம் அவை அற உதைத்திட்டு அணைந்து உகிரினில் கொத்தும் அங்குசம் நெருங்கு பாகர்
எதிர் பரவ உரம் மிசை துகைத்து கிடந்து உடல் பதைக்க அடிந்து மிக
இரதிபதி மணி மவுலி எற்றி த்ரி அம்பகனும் உட்க திரண்டு இளகி
இளைஞர் உயிர் கவளம் என அட்டித்து அசைந்து எதிர் புடைத்து சினந்து பொரு கொங்கை யானை
பொதுவில் விலையிடு மகளிர் பத்ம கரம் தழுவி ஒக்க துவண்டு அமளி
புக இணைய வரி பரவும் நச்சு கரும் கயல்கள் செக்கச்சிவந்து அமுது
பொதியும் மொழி பதற அளக கற்றையும் குலைய முத்தத்துடன் கருணை தந்து மேல் வீழ்
புதுமை தரு கலவி வலையில் பட்டு அழுந்தி உயிர் தட்டுப்படும் திமிர
புணரி உததியில் மறுகி மட்டற்ற இந்திரிய சட்டை குரம்பை அழி
பொழுதினிலும் அருள் முருக சுத்த கொடுங்கிரியில் நிர்த்த சரண்களை மறந்திடேனே
திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி தத்தத்த தந்ததத
தெதததெத தெதததெத தெத்தெத்த தெந்ததெத திக்கட்டி கண்டிகட
ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித தக்கத்த குந்தகுர்த திந்திதீதோ
திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட டக்கட்ட கண்டகட
டிடிடுடுடு டிடிடுடுடு டிக்கட்டி கண்டிகட டுட்டுட்டு டுண்டுடுடு
திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு குக்குக்கு குங்குகுகு என்று தாளம்
முதிர் திமிலை கரடிகை இடக்கை கொடும் துடி உடுக்கை பெரும் பதலை
முழவு பல மொகுமொகு என ஒத்தி கொடும் பிரமகத்திகளும் பரவ
முகடு புகு வெகு கொடிகள் பக்கத்து எழுந்து அலைய மிக்க கவந்த நிரை தங்கி ஆட
முது கழுகு கொடி கருடன் ஒக்க திரண்டு வர உக்ர பெரும் குருதி
முழுகி எழு பயிரவர் நடித்திட்டு அகண்டமும் வெடிக்க துணிந்து அதிர
முடுகி வரு நிசிசரரை முட்டி சிரம் திருகி வெட்டி களம் பொருத தம்பிரானே

மேல்

#623
அழகு எறிந்த சந்த்ர முக வடம் கலந்த அமுத புஞ்ச இன் சொல் மொழியாலே
அடி துவண்ட தண்டை கலில் எனும் சிலம்பொடு அணி சதங்கை கொஞ்சு நடையாலே
சுழி எறிந்து நெஞ்சு சுழல நஞ்சு அணைந்து தொடும் இரண்டு கண்கள் அதனாலே
துணை நெருங்கு கொங்கை மருவுகின்ற பெண்கள் துயரை என்று ஒழிந்து விடுவேனோ
எழுது கும்பகன் பின் இளைய தம்பி நம்பி எதிர் அடைந்து இறைஞ்சல்புரி போதே
இதம் மகிழ்ந்து இலங்கை அசுரர் அந்தரங்கம் மொழிய வென்ற கொண்டல் மருகோனே
மழு உகந்த செம் கை அரன் உகந்து இறைஞ்ச மநு இயம்பி நின்ற குருநாதா
வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து துங்க மலை விளங்க வந்த பெருமாளே

மேல்

#624
ககுப நிலை குலைய இகல் மிகு பகடின் வலி உடைய தந்தத்தினை தடிவ தொந்த திரத்தை உள
அகில மறை புகழ் பரமர் ஞெகிழி கலகலகல எனும் அம் பொன் பதத்தர் தநு அம் பொன் பொருப்பு அடர்வ
களப பரிமள மெழுகும் எழிலில் முழுகுவ முளரி அஞ்ச புடைத்து எழு வஞ்ச கருத்து மதன் அபிஷேகம்
கடிவ படு கொலை இடுவ கொடிய முக படம் அணிவ இன்ப சுடர் கனக கும்ப தர செருவ
பிருதில் புளகித சுகமும் மிருதுளமும் வளர் இளைஞர் புந்திக்கு இடர் தருவ பந்தித்த கச்சு அடர்வ
கயல் மகர நிகர மிக வியன் மருவு நதியில் முதிர் சங்கு இப்பி முத்து அணிவ பொங்கி கனத்து ஒளிர்வ முலை மாதர்
வகுள மலர் குவளை இதழ் தரு மணமும் மிருகமதம் ஒன்றி கறுத்து முகில் வென்றிட்டு நெய்த்த குழல்
அசைய ருசி அமுர்த க்ருத வசிய மொழி மயில் குயில் எனும் புட்குரல் பகர வம்புற்ற மல்புரிய
வரு மறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள் கன்றி சிவக்க மகிழ் நன்றி சமத்து நக நுதி ரேகை
வகைவகை மெயுற வளைகள் கழல இடை துவள இதழ் உண்டு உள் ப்ரமிக்க நசை கொண்டு உற்று அணைத்து அவதி
செறி கலவி வலையில் எனது அறிவுடைய கலை படுதல் உந்தி பிறப்பு அற நினைந்திட்டு இட்டம் உற்று உன் அடி
வயலி நகர் முருக செரு உயல் பனிரு கர குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப அருளாதோ
தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு
சகணசக சகசகண செகணசெக செகசெகெண சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண
தனனதன தனதனன தெனனதென தெனதெனன தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன தனனானா
தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு
டணணடண டணடணண டிணிணிடிணி டிணிடிணிணி டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி
தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி என தாளம்
தொகுதி வெகு முரசு கரடிகை டமரு முழவு தவில் தம்பட்ட மத்தளம் இனம் பட்ட டக்கை பறை
பதலை பல திமிலை முதல அதிர உதிர் பெரிய தலை மண்டை திரள் பருகு சண்டை திரள் கழுகு
துடர் நிபிட கருடன் அடர்தர கரடம் மொகுமொகு என வந்துற்றிட குடர் நிணம் துற்று இசைத்து அதிர முது பேய்கள்
சுனகன் நரி நெறுநெறு என இனிது இனிது தின வினை செய் வெம் குக்குடத்த கொடி துங்கு குகுக்குகு என
வடு அன இடு திசை பரவி நடனமிட அடல் இரவி திங்கள் ப்ரபை கதிர்கள் மங்க ப்ரசித்த குல
துரக கஜ ரத கடக முரண் அரண நிருதர் விறல் மிண்டை குலைத்து அமர் செய்து அண்டர்க்கு உரத்தை அருள் பெருமாளே

மேல்

#625
கடின தட கும்ப நேர் என வளரும் இரு கொங்கை மேல் விழு கலவி தருகின்ற மாதரொடு உறவாடி
கன அளக பந்தியாகிய நிழல்தனில் இருந்து தேன் உமிழ் கனி இதழை மென்று தாடனை செயலாலே
துடி இடை நுடங்க வாள் விழி குழை பொர நிரம்ப மூடிய துகில் நெகிழ வண்டு கோகிலம் மயில் காடை
தொனி எழ விழைந்து கொடு நகம் இசைந்து தோள் மிசை துயில அவச இன்ப மேவுதல் ஒழிவேனோ
இடி முரசு அறைந்து பூசல் செய் அசுரர்கள் முறிந்து தூள் எழஎழ கடல் பயந்து கோ என அதி கோப
எம படரும் என் செய்வோம் என நடுநடு நடுங்க வேல் விடு இரண முக சண்டமாருத மயிலோனே
வடிவுடைய அம்பிகாபதி கணபதி சிறந்து வாழ் தட வயலி நகர் குன்ற மா நகர் உறைவோனே
வகைவகை புகழ்ந்து வாசவன் அரி பிரமர் சந்த்ர சூரியர் வழிபடுதல் கண்டு வாழ்வு அருள் பெருமாளே

மேல்

#626
நேசாசார ஆடம்பர மட்டைகள் பேசாதே ஏசும் கள மட்டைகள்
நீசாளோடேயும் பழகி கவர் பொருளாலே
நீயே நானே என்று ஒரு சத்தியம் வாய் கூசாது ஓதும் கபடத்திகள்
நேராலே தான் நின்று பிலுக்கிகள் எவர் மேலும்
ஆசாபாசா தொந்தரை இட்டவர் மேல் வீழ்வார் பால் சண்டிகள் கட்டழகு
ஆயே மீ தோல் எங்கும் மினுக்கிகள் வெகு மோகம்
ஆகாது ஆவேசம் தருது இப்பொழுது ஓகோ வாவா என்று பகட்டிகள்
ஆகா மோகா வம்பிகள் கிட்டிலும் உறவு ஆமோ
பேசாதே போய் நின்று உறியில் தயிர் ஆஆ ஆஆ என்று குடித்து அருள்
பேராலே நீள் கஞ்சன் விடுத்த எதிர் வரு தூது
பேழ் வாய் வேதாளம் பகடு ஐ பகு வாய் நீள் மானாளும் சரளத்தோடு
பேய் ஆனாள் போர் வென்று எதிரிட்டவன் மருகோனே
மாசு ஊடாடும் பகையை பகை சூராளோடே வன் செருவை செறு
மா சூரா பார் எங்கும் அருள் பொலி முருகோனே
வான் நாடு ஏழ் நாடும் புகழ் பெற்றிடு தேன் ஆறு சூழ் துங்க மலை பதி
மாயூரா வாழ் குன்றை தழைத்து அருள் பெருமாளே

மேல்

#627
பிறர் புகழ் இன் சொல் பயிலும் இளந்தை பருவ மதன் கை சிலையாலே
பிறவி தரும் சிக்கு அது பெருகும் பொய் பெரு வழி சென்று அ குணம் மேவி
சிறுமை பொருந்தி பெருமை முடங்கி செயலும் அழிந்து அற்பம் அது ஆன
தெரிவையர்தங்கள் கயலை விரும்பி சிலசில பங்கப்படலாமோ
கெறு வித வஞ்ச கபடமொடு எண் திக்கிலும் எதிர் சண்டைக்கு எழு சூரன்
கிளையுடன் மங்க தலை முடி சிந்த கிழி பட துன்றி பொருதோனே
குறுமுநி இன்ப பொருள் பெற அன்று உற்பன மநுவும் சொல் குருநாதா
குலகிரி துங்க கிரி உயர் குன்றக்குடி வளர் கந்த பெருமாளே

மேல்

#628
தவள மதியம் எறிக்கும் தணலாலே சரச மதனன் விடுக்கும் கணையாலே
கவன மிகவும் உரைக்கும் குயிலாலே கருதி மிகவு மயக்கம் படவோ நான்
பவள நிகரும் இதழ் பை குற மானின் பரிய வரையை நிகர்க்கும் தனம் மேவும்
திவளு மணிகள் கிடக்கும் திரு மார்பா திகழு மயிலின் மலைக்கண் பெருமாளே

மேல்

#629
நாம் மேவு குயிலாலும் மா மாரன் அயிலாலு நாள்தோறும் மதி காயும் வெயிலாலும்
நார் மாதர் வசையாலும் வேய் ஊதும் இசையாலும் நாடு ஆசை தரு மோக வலையூடே
ஏமாறி முழு நாளும் மாலாகி விருதாவிலே வாரும் விழி மாதர் துயரூடே
ஏகாமல் அழியாத மேலான பதம் மீதில் ஏகீ உனுடன் மேவ அருள்தாராய்
தாம் மோகமுடன் ஊறு பால் தேடி உரலோடு தான் ஏறி விளையாடும் ஒரு போதில்
தாயாக வரு சோதை காணாது களவாடு தாமோதரன் முராரி மருகோனே
மா மாது வன மாது கார் மேவும் சிலை மாது மாலாகி விளையாடும் புயல் வீரா
வான் நாடு புகழ் நாடு தேன் ஆறு புடை சூழும் மாயூரகிரி மேவும் பெருமாளே

மேல்

#630
மை கண் இக்கன் வாளி போல உள் களத்தை மாறி நாடி மட்டி முற்ற கோதை போத முடி சூடி
மத்தகத்தில் நீடு கோடு வைத்தது ஒத்து இன் மார்பினூடு வட்டம் இட்ட வார் உலாவு முலை மீதே
இக்கு வைக்கும் ஆடை வீழ வெட்கி இயக்கமான பேரை எத்தி முத்தம் ஆடும் வாயில் இசை பேசி
எட்டு துட்ட மாதர் பாயல் இச்சையுற்று என் ஆகம் ஆவி எய்த்து நித்தம் மான ஈனம் உறலாமோ
துர்க்கை பக்க சூலி காளி செக்கை புக்க தாள ஓசை தொக்க திக்க தோத தீத என ஓத
சுற்றி வெற்றியோடு தாள்கள் சுத்த நிர்த்தம் ஆடும் ஆதி சொற்கு நிற்கும் மாறுதாரம் மொழிவோனே
திக்கு மிக்க வானின் ஊடு புக்க விக்கம் மூடு சூரர் திக்க முட்டி ஆடு தீர வடி வேலா
செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதினோடு செப்பு வெற்பில் சேய் அதான பெருமாளே

மேல்

#631
வெடித்த வார் குழல் விரித்து வேல் விழி விழித்து மேகலை பதித்து வார் தொடு
மிகுத்த மா முலை அசைத்து நூலின் மருங்கில் ஆடை
மினுக்கி ஓலைகள் பிலுக்கியே வளை துலக்கியே விள நகைத்து கீழ் விழி
மிரட்டி யாரையும் அழைத்து மால் கொடு தந்த வாய் நீர்
குடித்து நாய் என முடக்கும் ஏல் பிணி அடுத்த உபாதிகள் படுத்த தாய் தமர்
குலத்தர் யாவரும் நகைக்கவே உடல் மங்குவேனை
குறித்து நீ அருகு அழைத்து மாதவர் கணத்தின் மேவு என அளித்து வேல் மயில்
கொடுத்து வேதமும் ஒருத்தனாம் என சிந்தை கூராய்
உடுட்டு டூடுடு டுடுட்டொடோ என திகுத்த தீதிகு திகுர்த்ததா என
உடுக்கை பேரிகை தவில் குழாமும் இரங்கு போரில்
உலுத்த நீசர்கள் பதைப்ப மா கரி துடிப்ப நீள் கடல் எரித்து சூர் மலை
உடைத்து நீதிகள் பரப்பியே அவர் உம்பராரை
அடைத்த மா சிறை விடுத்த வான் உலகு அளிக்கும் ஆயிரம் திரு கணான் அரசு
அளித்து நாளும் என் உளத்திலே மகிழும் குமாரா
அளித்த தாதையும் மிகுத்த மாமனும் அனைத்து உளோர்களும் மதிக்கவே மகிழ்
அகத்ய மா முநி பொருப்பின் மேவிய தம்பிரானே

மேல்

#632
குதலை மொழியினார் நிதி கொள்வார் அணி முலையை விலை செய்வார் தமக்கு மா மயல்
கொடிது கொடிது அதால் வருத்தமாய் உறு துயராலே
மதலை மறுகி வாலிபத்திலே வெகு பதகர் கொடியவாள் இடத்திலே மிக
வறுமை புகல்வதே எனக்குமோ இனி முடியாதே
முதல வரி விலோடு எதிர்த்த சூர் உடல் மடிய அயிலையே விடுத்தவா கரு
முகிலை அனையதா நிறத்த மால் திரு மருகோனே
கதலி கமுகு சூழ் வயற்குளே அளி இசையை முரல மா அறத்தில் மீறிய
கழுகுமலை மகா நகர்க்குள் மேவிய பெருமாளே

மேல்

#633
முலையை மறைத்து திறப்பர் ஆடையை நெகிழ உடுத்து படுப்பர் வாயிதழ்
முறைமுறை முத்தி கொடுப்பர் பூ மலர் அணை மீதே
அலை குலைய கொட்டு அணைப்பர் ஆடவர் மன வலியை தட்டு அழிப்பர் மால் பெரிது
அவர் பொருளை பறிப்பர் வேசிகள் உறவாமோ
தலை முடி பத்து தெறித்து ராவணன் உடல் தொளை பட்டு துடிக்கவே ஒரு
தநுவை வளைத்து தொடுத்த வாளியன் மருகோனே
கலை மதி அப்பு தரித்த வேணியர் உதவிய வெற்றி திரு கை வேலவ
கழுகுமலைக்குள் சிறக்க மேவிய பெருமாளே

மேல்

#634
கோங்க முகையும் மெலிய வீங்கு புளக களபம் ஏந்து குவடு குழையும்படி காதல்
கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவும் இனிய தேங்கு கலவி அமுது உண்டு இயல் மாதர்
வாங்கு பகழி விழியை மோந்து பகலும் இரவும் வாய்ந்த துயிலை மிகவும் தணியாத
வாஞ்சை உடைய அடிமை நீண்ட பிறவி அலையை நீந்தி அமல அடி வந்து அடைவேனோ
ஓங்கல் அனைய பெரிய சோங்கு தகர் அ மகரம் ஓங்கு உததியின் முழுகும் பொரு சூரும்
ஓய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில் ஊர்ந்து மயில் அது உலவும் தனி வேலா
வேங்கை அடவி மறவர் ஏங்க வனிதை உருக வேங்கை வடிவு மருவும் குமரேசா
வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே

மேல்

#635
அல்லில் நேரு மின் அது தானும் அல்லதாகிய உடல் மாயை
கல்லில் நேர் அ வழிதோறும் கையும் நானும் உலையலாமோ
சொல்லி நேர் படு முது சூரர் தொய்ய ஊர் கெட விடும் வேலா
வல்லிமார் இரு புறமாக வள்ளியூர் உறை பெருமாளே

மேல்

#636
திருமகள் உலாவும் இரு புய முராரி திரு மருக நாம பெருமாள் காண்
செக தலமும் வானும் மிகுதி பெறு பாடல் தெரிதரு குமார பெருமாள் காண்
மருவும் அடியார்கள் மனதில் விளையாடும் மரகத மயூர பெருமாள் காண்
மணி தரளம் வீசி அணி அருவி சூழ மருவு கதிர்காம பெருமாள் காண்
அரு வரைகள் நீறுபட அசுரர் மாள அமர் பொருத வீர பெருமாள் காண்
அரவு பிறை வாரி விரவு சடை வேணி அமலர் குருநாத பெருமாள் காண்
இருவினை இலாத தருவினை விடாத இமையவர் குல ஈச பெருமாள் காண்
இலகு சிலை வேடர் கொடியின் அதி பார இரு தன விநோத பெருமாளே

மேல்

#637
அலகின்மாறு மாறாத கலதி பூத வேதாளி அடைவு இல் ஞாளி கோமாளி அறம் ஈயா
அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ் மாதர் அருள் இலாத தோள் தோய மருள் ஆகி
பல கலாகரா மேரு மலை கராசலா வீசு பருவ மேகமே தாரு என யாதும்
பரிவுறாத மா பாதர் வரிசை பாடி ஓயாத பரிசில் தேடி மாயாதபடி பாராய்
இலகு வேலை நீள் வாடை எரி கொள் வேலை மா சூரில் எறியும் வேலை மாறாத திறல் வீரா
இமய மாது பாகீரதி நதி பாலகா சாரல் இறைவி கானம் மால் வேடர் சுதை பாகா
கலக வாரி போல் மோதி வட ஐ ஆறு சூழ் சீத கதிர்காமம் மூதூரில் இளையோனே
கனக நாடு வீடு ஆய கடவுள் யானை வாழ்வான கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#638
உடுக்க துகில் வேணும் நீள் பசி அவிக்க கன பானம் வேணும் நல் ஒளிக்கு புனல் ஆடை வேணும் மெய்யுறு நோயை
ஒழிக்க பரிகாரம் வேணும் உள் இருக்க சிறு நாரி வேணும் ஓர் படுக்க தனி வீடு வேணும் இ வகை யாவும்
கிடைத்து க்ருஹவாசியாகி அ மயக்க கடல் ஆடி நீடிய கிளைக்கு பரிபாலனாய் உயிர் அவமே போம்
க்ருபை சித்தமும் ஞான போதமும் அழைத்து தரவேணும் ஊழ் பவ கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ஒரு நாளே
குடக்கு சில தூதர் தேடுக வடக்கு சில தூதர் நாடுக குணுக்கு சில தூதர் தேடுக என மேவி
குறிப்பில் குறி காணும் மாருதி இனி தெற்கு ஒரு தூது போவது குறிப்பில் குறி போனபோதிலும் வரலாமோ
அடி குத்திரகாரர் ஆகிய அரக்கர்க்கு இளையாத தீரனும் மலைக்கு அப்புறம் மேவி மாது உறு வனமே சென்று
அருள் பொன் திரு ஆழி மோதிரம் அளித்து உற்றவர் மேல் மனோகரம் அளித்து கதிர்காமம் மேவிய பெருமாளே

மேல்

#639
எதிர் இலாத பத்திதனை மேவி இனிய தாள் நினைப்பை இருபோதும்
இதய வாரிதிக்குள் உறவாகி எனது உளே சிறக்க அருள்வாயே
கதிரகாம வெற்பில் உறைவோனே கனக மேரு ஒத்த புய வீரா
மதுர வாணி உற்ற கழலோனே வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே

மேல்

#640
கடகட கருவிகள் தப வகிர் அதிர் கதிர் காம தரங்கம் அலை வீரா
கன கத நக குலி புணர் இத குண குக காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட
வட சிகரி தவிடுபட நடமிடும் மாவில் புகும் கந்த வழாது
வழிவழி தமர் என வழிபடுகிலன் என் அவா விக்கினம் பொன்றிடுமோ தான்
அடவி இருடி அபிநவ குமரி அடிமையாய் அப்புனம் சென்று அயர்வோனே
அவசமுடன் அ ததி திரிதரு கவி ஆள புயம் கொண்டு அருள்வோனே
இடம் ஒரு மரகத மயில் மிசை வடிவு உள ஏழைக்கு இடம் கண்டவர் வாழ்வே
இதம் மொழி பகரினும் மத மொழி பகரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே

மேல்

#641
சமர முக வேல் ஒத்த விழி புரள வார் இட்ட தனம் அசைய வீதிக்குள் மயில் போல் உலாவியே
சரியை க்ரியை யோகத்தின் வழி வரு க்ருபா சுத்தர் தமை உணர ராகத்தின் வசமாக மேவியே
உமது அடி உனாருக்கும் அனுமரண மாயைக்கும் உரியவர் மகா தத்தை எனும் மாய மாதரார்
ஒளிர் அமளி பீடத்தில் அமடு படுவேனுக்கும் உனது அருள் க்ருபா சித்தம் அருள்கூரவேணுமே
இம கிரி குமாரத்தி அநுபவை பராசத்தி எழுத அரிய காயத்ரி உமையாள் குமாரனே
எயினர் மட மானுக்கு மடல் எழுதி மோகித்து இதண் அருகு சேவிக்கும் முருகா விசாகனே
அமரர் சிறை மீள்விக்க அமர் செய்து ப்ரதாபிக்கும் அதி கவித சாமர்த்ய கவி ராஜராஜனே
அழுது உலகை வாழ்வித்த கவுணிய குலாதித்த அரிய கதிர்காமத்தில் உரிய அபிராமனே

மேல்

#642
சரத்தே உதித்தார் உரத்தே குதித்தே சமர்த்தாய் எதிர்த்தே வரு சூரை
சரி போனமட்டே விடுத்தாய் அடுத்தாய் தகர்த்தாய் உடல் தான் இரு கூறா
சிரத்தோடு உரத்தோடு அறுத்தே குவித்தாய் செகுத்தாய் பல தார் விருதாக
சிறை சேவல் பெற்றாய் வலக்காரம் உற்றாய் திரு தாமரை தாள் அருள்வாயே
புரத்தார் வரத்தார் சரம் சேகரத்தார் பொரத்தான் எதிர்த்தே வருபோது
பொறுத்தார் பரித்தார் சிரித்தார் எரித்தார் பொரித்தார் நுதல் பார்வையிலே பின்
கரி தோல் உரித்தார் விரித்தார் தரித்தார் கருத்தார் மருத்து ஊர் மதனாரை
கரி கோலம் இட்டார் கணுக்கு ஆன முத்தே கதிர்காமம் உற்றார் முருகோனே

மேல்

#643
சரியையார்க்கும் அ கிரியையார்க்கும் நல் சகல யோகர்க்கும் எட்ட அரிதாய
சமய பேதத்தினுக்கு அணுகொணா மெய்ப்பொருள் தரு பராசத்தியின் பரமான
துரிய மேல் அற்புத பரம ஞான தனி சுடர் வியாபித்த நல் பதி நீடு
துகள் இல் சாயுச்சிய கதியை ஈறு அற்ற சொல் சுக சொரூபத்தை உற்று அடைவேனோ
புரிசை சூழ் செய்ப்பதிக்கு உரிய சாமர்த்ய சத்புருஷ வீரத்து விக்ரம சூரன்
புரள வேல் தொட்ட கை குமர மேன்மை திரு புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே
கரிய ஊக திரள் பலவின் மீதில் சுளை கனிகள் பீறி புசித்து அமராடி
கதலி சூதத்தினில் பயிலும் ஈழத்தினில் கதிரகாம கிரி பெருமாளே

மேல்

#644
பாரவித முத்த படீர புளக பொன் பயோதர நெருக்குற்ற இடையாலே
பாகு அளவு தித்திக்க கீத மொழியில் புட்ப பாண விழியில் பொத்திவிடும் மாதர்
கார் அணி குழல் கற்றை மேல் மகரம் ஒப்பித்த காதில் முக வட்டத்தில் அதி மோக
காமுகன் அகப்பட்ட ஆசையை மறப்பித்த கால்களை மறக்கைக்கும் வருமோ தான்
தேரில் ரவி உட்கி புகா முது புரத்தில் தெசாசிரனை மர்த்தித்த அரி மாயன்
சீர் மருக அத்யுக்ர யானை படும் ரத்ந த்ரிகோண சயிலத்து உக்ர கதிர்காம
வீர புன வெற்பில் கலாபி என சிக்கு மேகலை இடை கொத்தில் இரு தாளில்
வேரி மழையில் பச்சை வேயில் அருண கற்றை வேல்களில் அகப்பட்ட பெருமாளே

மேல்

#645
மரு அறா வெற்றி மலர் தொடா வில் கை வலி செயா நிற்கும் மதனாலும்
மதில்கள் தாவுற்ற கலை படா வட்ட மதி சுடா நிற்கும் அதனாலும்
இரு கணால் முத்தம் உதிர யாமத்தின் இரவினால் நித்தம் மெலியாதே
இடருறா மெத்த மயல் கொளா நிற்கும் இவளை வாழ்விக்க வரவேணும்
கரிகள் சேர் வெற்பில் அரிய வேடிச்சி கலவி கூர் சித்ர மணி மார்பா
கனக மாணிக்க வடிவனே மிக்க கதிர்காமத்தில் உறைவோனே
முருகனே பத்தர் அருகனே முத்தி முதல்வனே பச்சை மயில் வீரா
முடுகி மேலிட்ட கொடிய சூர் கெட்டு முறிய வேல் தொட்ட பெருமாளே

மேல்

#646
மாதர் வசமுற்று உழல்வோரும் மாதவம் எணாமல் திரிவோரும்
தீது அகல ஓதி பணியாரும் தீ நரகம் மீதில் திகழ்வாரே
நாத ஒளியே நல் குண சீலா நாரியர் இருவரை புணர் வேலா
சோதி சிவஞான குமரேசா தோம் இல் கதிர்காம பெருமாளே

மேல்

#647
முதிரும் மாரவார நட்பொடு இலகு ஆர் அ ஆரம் எற்றி முனியும் ஆரவாரம் உற்ற கடலாலே
முடிவிலாதது ஓர் வடக்கில் எரியும் ஆலம் ஆர்பு இடத்து முழுகி ஏறி மேல் எறிக்கும் நிலவாலே
வெதிரில் ஆயர் வாயில் வைத்து மதுர ராகம் நீடு இசைக்கும் வினை விடாத தாயருக்கும் அழியாதே
விளையும் மோக போகம் முற்றி அளவிலாத காதல் பெற்ற விகட மாதை நீ அணைக்க வரவேணும்
கதிரகாம மா நகர்க்குள் எதிர் இலாத வேல் தரித்த கடவுளே கலாப சித்ர மயில் வீரா
கயல் உலாம் விசோனத்தி களபம் ஆர் பயோதரத்தி ககனம் மேவுவாள் ஒருத்தி மணவாளா
அதிர வீசி ஆடும் வெற்றி விடையில் ஏறும் ஈசர் கற்க அரிய ஞான வாசகத்தை அருள்வோனே
அகில லோகம் மீது சுற்றி அசுரர் லோகம் நீறு எழுப்பி அமரர் லோகம் வாழ வைத்த பெருமாளே

மேல்

#648
வருபவர்கள் ஓலை கொண்டு நமனுடைய தூதர் என்று மடி பிடியது ஆக நின்று தொடர்போது
மயல் அது பொலாத வம்பன் விரகுடையன் ஆகும் என்று வசைகளுடனே தொடர்ந்து அடைவார்கள்
கருவி அதனால் எறிந்து சதைகள்தனையே அரிந்து கரிய புனலே சொரிந்து விடவே தான்
கழு முனையிலே இரு என்று விடும் எனும் அ வேளை கண்டு கடுகி வரவேணும் எந்தன் முனமே தான்
பர கிரி உலாவு செந்தி மலையின் உடனே இடும்பன் பழனிதனிலே இருந்த குமரேசா
பதிகள் பல ஆயிரங்கள் மலைகள் வெகு கோடி நின்ற பதம் அடியர் காண வந்த கதிர்காமா
அரவு பிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை அணிவர் சடையாளர் தந்த முருகோனே
அரகர சிவாய சம்பு குமர குமார நம்பும் அடியர்தம்மை ஆள வந்த பெருமாளே

மேல்

#649
தொடுத்த வாள் என விழித்து மார் முலை அசைத்து மேகலை மறைத்து மூடிகள்
துடித்து நேர் கலை நெகிழ்த்து மா இயல் கொளு மாதர்
சுகித்த ஹா என நகைத்து மேல் விழ முடித்த வார் குழல் விரித்துமே இதழ்
துவர்த்த வாய் சுருள் அடக்கி மால் கொடு வழியே போய்
படுத்த பாயல் அனைத்து மா முலை பிடித்து மார்பொடு அழுத்தி வாய் இதழ்
கடித்து நாணம் அது அழித்த பாவிகள் வலையாலே
பலித்து நோய் பிணி கிடத்து பாய் மிசை வெளுத்து வாய்களும் மலம் தின் நாய் என
பசித்து தாகமும் எடுத்திடா உயிர் உழல்வேனோ
வெடுத்த தாடகை சினத்தை ஓர் கணை விடுத்து யாகமும் நடத்தியே ஒரு
மிகுத்த வார் சிலை முறித்த மாயவன் மருகோனே
விதித்து ஞாலம் அது அளித்த வேதனை அதிர்த்து ஓர் முடி கரத்து உலா அனல்
விழித்து காமனை எரித்த தாதையர் குருநாதா
அடுத்த ஆயிர விட பணா முடி நடுக்க மா மலை பிளக்கவே கவடு
அரக்கர் மா முடி பதைக்கவே பொரு மயில் வீரா
அறத்தில் வாழ் உமை சிறக்கவே அறு முகத்தினோடு அணி குறத்தி யானையொடு
அருக்கொணா மலை தருக்கு உலாவிய பெருமாளே

மேல்

#650
விலைக்கு மேனியில் அணி கோவை மேகலை தரித்த ஆடையும் மணி பூணும் ஆகவே
மினுக்கு மாதர்களிட காமம் மூழ்கியே மயல் ஊறி
மிகுத்த காமியன் என பார் உளோர் எதிர் நகைக்கவே உடல் எடுத்தே வியாகுல
வெறுப்பு அதாகியே உழைத்தே விடாய் படு கொடியேனை
கலக்கமாகவெ மல கூடிலே மிகு பிணிக்குள் ஆகியே தவிக்காமலே உனை
கவிக்குளாய் சொலி கடைத்தேறவே செயும் ஒரு வாழ்வே
கதிக்கு நாதன் நி உனை தேடியே புகழ் உரைக்கு நாயேனை அருள் பார்வையாகவே
கழற்குள் ஆகவே சிறப்பான தாய் அருள்தரவேணும்
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர் திரு குமாரன் என முகத்து ஆறு தேசிக
வடிப்ப மாது ஒரு குற பாவையாள் மகிழ் தரு வேளே
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர் அகத்ய மா முநி இடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருள் கோலமாய் வரு முருகோனே
நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருக்கோணா மலை தலத்து ஆரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே
நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவெ எடுத்த வேல் கொடு பொடி தூளதா எறி
நினைத்த காரியம் அநுக்கூலமே புரி பெருமாளே

மேல்

#651
தாரணிக்கு அதி பாவியாய் வெகு சூது மெத்திய மூடனாய் மன சாதனை களவாணியாய் உறும் அதி மோக
தாப மிக்கு உள வீணனாய் பொரு வேல் விழிச்சியர் ஆகு மாதர்கள் தாம் உய செயும் ஏது தேடிய நினைவாகி
பூரண சிவஞான காவியம் ஓது தற்ப உணர்வான நேயர்கள் பூசும் மெய் திருநீறு இடா இருவினையேனை
பூசி மெய் பதமான சேவடி காண வைத்து அருள் ஞானம் ஆகிய போதகத்தினையே ஏயும் மாறு அருள்புரிவாயே
வாரணத்தினையே கராவும் முனே வளைத்திடுபோது மேவிய மாயவற்கு இதமாக வீறிய மருகோனே
வாழும் முப்புர வீறதானது நீறு எழ புகையாகவே செய்த மா மதி பிறை வேணியார் அருள் புதல்வோனே
காரண குறியான நீதியர் ஆனவர்க்கு முனாகவே நெறி காவிய சிவ நூலை ஓதிய கதிர் வேலா
கானக குற மாதை மேவிய ஞான சொல் குமரா பராபர காசியில் பிரதாபமாய் உறை பெருமாளே

மேல்

#652
மங்கை கணவனும் வாழ் சிவணா மயல் பங்கப்பட மிசையே பனி போல் மதம்
வந்து உள் பெருகிட விதியானவன் அருள் மேவி
வண்டு தடிகை போல் ஆகியே நாள் பல பந்து பனை பழமோடு இளநீர் குடம்
மண்டி பலபலவாய் வினை கோலும் வழியாக
திங்கள் பது செலவே தலைகீழுற வந்து புவிதனிலே மதலாய் என
சிந்தை குழவி எனா அனை தாதையும் மருள் கூர
செம்பொன் தட முலை பால் குடி நாள் பல பண்பு தவழ் நடை போய் விதமாய் பல
சிங்கி பெரு விழியார் அவமாய் அதில் அழிவேனோ
அம் கைத்து அரி எனவே ஒரு பாலகன் இன்ப கிருபையதாய் ஒரு தூண் மிசை
அம் பல் கொடு அரியாய் இரண்யாசுரன் உடல் பீறி
அண்டர்க்கு அருள் பெருமான் முதிரா அணி சங்கு திகிரிகரோன் அரி நார
அரங்கத்து இரு அணை மேல் துயில் நாரணன் மருகோனே
கங்கை சடை முடியோன் இடம் மேவிய தங்க பவள ஒளி பால் மதி போல் முக
கங்குல் தரி குழலாள் பரமேசுரி அருள் பாலா
கந்து பரி மயில் வாகன மீது இரு கொங்கை குறமகள் ஆசையோடே மகிழ்
கங்கை பதி நதி காசியில் மேவிய பெருமாளே

மேல்

#653
வேழம் உண்ட விளா கனி அது போல மேனி கொண்டு வியாபக மயல் ஊறி
நாளும் மிண்டர்கள் போல் மிக அயர்வாகி நானும் நைந்து விடாது அருள்புரிவாயே
மாள அன்று அமண் நீசர்கள் கழுவேற வாதில் வென்ற சிகாமணி மயில் வீரா
காளகண்டன் உமாபதி தரு பாலா காசி கங்கையில் மேவிய பெருமாளே

மேல்

#654
சிகரம் அருந்த வாழ்வது சிவஞானம் சிதறி அலைந்து போவது செயல் ஆசை
மகர நெருங்க வீழ்வது மக மாய மருவி நினைந்திடா அருள்புரிவாயே
அகர நெருங்கின் ஆமயம் உறவாகி அவசமொடும் கையாறொடும் முனம் ஏகி
ககனம் இசைந்த சூரியர் புக மாயை கருணை பொழிந்து மேவிய பெருமாளே

மேல்

#655
அரு வரை எடுத்த வீரன் நெரிபட விரல்கள் ஊணும் அரனிடம் இருக்கும் ஆயி அருள்வோனே
அலை கடல் அடைத்த ராமன் மிக மன மகிழ்ச்சிகூரும் அணி மயில் நடத்தும் ஆசை மருகோனே
பருதியின் ஒளி கண் வீறும் அறுமுக நிரைத்த தோள் பனிரு கர மிகுத்த பார முருகா நின்
பத மலர் உளத்தில் நாளு நினைவுறு கருத்தர் தாள்கள் பணியவும் எனக்கு ஞானம் அருள்வாயே
சுருதிகள் உரைத்த வேதன் உரை மொழி தனக்குள் ஆதி சொலு என உரைத்த ஞான குருநாதா
சுரர் பதி தழைத்து வாழ அமர் சிறை அனைத்து மீள துணிபட அரக்கர் மாள விடும் வேலா
மரு மலர் மணக்கும் வாச நிறை தரு தருக்கள் சூழும் வயல் புடை கிடக்கு நீல மலர் வாவி
வளமுறு தடத்தினோடு சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவி வனத்தில் மேவு பெருமாளே

மேல்

#656
அடல் அரி மகவு விதி வழி ஒழுகும் ஐவரும் மொய் குரம்பையுடன் நாளும்
அலை கடல் உலகில் அலம் வரு கலக ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி
இடர்படும் அடிமை உளம் உரை உடலொடு எல்லை விட ப்ரபஞ்ச மயல் தீர
எனது அற நினது கழல் பெற மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே
வட மணி முலையும் அழகிய முகமும் வள்ளை என தயங்கும் இரு காதும்
மரகத வடிவும் மடலிடை எழுதி வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா
விடதர் அதி குணர் சசிதரர் நிமலர் வெள்ளி மலை சயம்பு குருநாதா
விகசிதம் கமல பரிபுர முளரி வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#657
சிகரிகள் இடிய நட நவில் கலவி செவ்வி மலர் கடம்பு சிறு வாள் வேல்
திரு முக சமுக சத தள முளரி திவ்ய கரத்தில் இணங்கு பொரு சேவல்
அகில் அடி பறிய எறி திரை அருவி ஐவன வெற்பில் வஞ்சி கணவா என்று
அகிலமும் உணர மொழி தரு மொழியின் அல்லது பொன் பதங்கள் பெறலாமோ
நிகர் இட அரிய சிவசுத பரம நிர்வசன ப்ரசங்க குருநாதா
நிரை திகழ் பொதுவர் நெறிபடு பழைய நெல்லி மரத்து அமர்ந்த அபிராம
வெகு முக ககன நதி மதி இதழி வில்வம் முடித்த நம்பர் பெருவாழ்வே
விகசித கமல பரிமள கமல வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#658
குவலயம் மல்கு தவலிகள் முல்லை குளிர் நகை சொல்லு முது பாகு
குழை இள வள்ளை இடை சிறு வல்லி குய முலை கொள்ளை விழை மேவி
கவலை செய் வல்ல தவலரும் உள்ள கலவியில் தெள்ளு கவி மாலை
கடிய மலர் ஐய அணிவன செய்ய கழல் இணை பைய அருள்வாயே
தவ நெறி உள்ளு சிவ முனி துள்ளு தனி உழை புள்ளி உடன் ஆடி
தரு புன வள்ளி மலை மற வள்ளி தரு தினை மெள்ள நுகர்வோனே
அவ நெறி சொல்லும் அவர் அவை கொல்லும் அழகிய வெள்ளி நகர் வாழ்வே
அடையலர் செல்வம் அளறிடை செல்ல அமர் செய வல்ல பெருமாளே

மேல்

#659
பொருவன கள்ள இரு கயல் வள்ளை புரி குழை தள்ளி விளையாடும்
புளகித வல்லி இளகித வல்லி புரி இள முல்லை நகை மீதே
உருகிட உள்ள விரகு உடை உள்ளம் உலகு உயிர் உள்ளபொழுதே நின்று
உமை தரு செல்வன் என மிகு கல்வி உணர்வொடு சொல்ல உணராதோ
மரு அலர் வள்ளிபுரம் உள்ள வள்ளி மலை மற வள்ளி மணவாளா
வளர் புவி எல்லை அளவிடும் தொல்லை மரகத நல்ல மயில் வீரா
அரு வரை விள்ள அயில் விடு மள்ள அணி வயல் வெள்ளி நகர் வாழ்வே
அடையலர் செல்வம் அளறிடை செல்ல அமர் செய வல்ல பெருமாளே

மேல்

#660
கள்ளம் உள்ள வல்ல வல்லி கையில் அள்ளி பொருள் ஈய
கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு கல்வி செல்வர் கிளை மாய
அள்ளல் துள்ளி ஐவர் செல்லும் அல்லல் சொல்ல முடியாதே
ஐயர் ஐய மெய்யர் மெய்ய ஐய செய்ய கழல் தாராய்
வள்ளல் புள்ளி நவ்வி நல்கு வள்ளி கிள்ளை மொழியாலே
மையல் எய்தும் ஐய செய்யில் வையில் வெள் வளைகள் ஏற
மெள்ள மள்ளர் கொய்யு நெல்லின் வெள்ள வெள்ளிநகர் வாழ்வே
வெய்ய சைய வில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே

மேல்

#661
தொய்யில் செய்யில் நொய்யர் கையர் தொய்யும் ஐய இடையாலும்
துள்ளி வள்ளை தள்ளி உள்ளல் சொல்லு கள்ள விழியாலும்
மைய செவ்வி மவ்வல் முல்லை மல்கு நல்ல குழலாலும்
மையல் கொள்ள எள்ளல் செய்யும் வல்லி சொல்லை மகிழ்வேனோ
செய்ய துய்ய புள்ளி நவ்வி செல்வி கல் வரையில் ஏனல்
தெய்வ வள்ளி மையல் கொள்ளு செல்வ பிள்ளை முருகோனே
மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய வெள்ளை வெள்ளி நகர் வாழ்வே
வெய்ய சையவில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே

மேல்

#662
இல்லை என நாணி உள்ளதில் மறாமல் எள்ளின் அளவேனும் பகிராரை
எவ்வம் என நாடி உய் வகை இலேனை எவ்வகையும் நாமம் கவியாக
சொல்ல அறியேனை எல்லை தெரியாத தொல்லை முதல் ஏது என்று உணரேனை
தொய்யும் உடல் பேணு பொய்யனை விடாது துய்ய கழல் ஆளும் திறம் ஏதோ
வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ மைய வரை பாகம்பட மோது
மை உலவு சோலை செய்ய குளிர் சாரல் வள்ளி மலை வாழும் கொடி கோவே
வெல்லு மயில் ஏறு வல்ல குமரேச வெள்ளில் உடன் நீபம் புனைவோனே
வெள்ளி மணி மாடம் மல்கு திரு வீதி வெள்ளிநகர் மேவும் பெருமாளே

மேல்

#663
பை அரவு போலும் நொய்ய இடை மாதர் பைய வரு கோலம்தனை நாடி
பையல் என ஓடி மையல் மிகு மோக பவ்வம் மிசை வீழும் தனி நாயேன்
உய்ய ஒரு காலம் ஐய உபதேசம் உள் உருக நாடும்படி பேசி
உள்ளதும் இலாதும் அல்லாத அவிரோத உல்லச விநோதம் தருவாயே
வையம் முழுது ஆளும் ஐய குமரேச வள்ளி படர் கானம் புடை சூழும்
வள்ளி மலை வாழும் வள்ளி மணவாளா மை உததி ஏழும் கனல் மூள
வெய்ய நிருதேசர் சையமுடன் வீழ வெல்ல அயில் விநோதம் புரிவோனே
வெள்ளி மணி மாடம் மல்கு திரு வீதி வெள்ளிநகர் மேவும் பெருமாளே

மேல்

#664
வதன சரோருக நயன சிலீ முக வள்ளி புனத்தில் நின்று வாராய் பதி காதம் காதரை ஒன்றும் ஊரும்
வயலும் ஒரே இடை என ஒரு காவிடை வல்லபம் அற்று அழிந்து மாலாய் மடல் ஏறும் காமுக எம்பிரானே
இதவிய காணிவை ததை என வேடுவன் எய்திடும் எச்சில் தின்று லீலா சலம் ஆடும் தூயவன் மைந்த நாளும்
இளையவ மூதுரை மலை கிழவோன் என வெள்ளம் என கலந்து நூறாயிரம் பேதம் சாதம் ஒழிந்தவா தான்
கதை கன சாப திகிரி வளை வாளொடு கை வசிவித்த நந்த கோபால மகீபன் தேவி மகிழ்ந்து வாழ
கயிறொடு உலூகலம் உருள உலாவிய கள்வன் அற பயந்து ஆகாய கபாலம் பீற நிமிர்ந்து நீள
விதரண மாவலி வெருவ மகா விருத வெள்ள வெளுக்க நின்ற நாராயண மாமன் சேயை முனிந்த கோவே
விளை வயலூடு இடை வளை விளையாடிய வெள்ளி நகர்க்கு அமர்ந்த வேலாயுத மேவும் தேவர்கள் தம்பிரானே

மேல்

#665
நசையொடு தோலும் தசை துறு நீரும் நடுநடுவே என்பு உறு கீலும்
நலமுறு வேய் ஒன்றிட இரு கால் நன்றுற நடை ஆரும் குடிலோடே
விசையுறு காலம் புலன் நெறியே வெம் கனல் உயிர் வேழம் திரியாதே
விழும் அடியார் முன் பழுது அற வேள் கந்தனும் என ஓதும் விறல் தாராய்
இசையுறவே அன்று அசைவு அற ஊதும் எழில் அரி வேழம் எனை ஆள் என்று
இடர் கொடு மூலம் தொடர்பு உடன் ஓதும் இடம் இமையா முன் வரும் மாயன்
திசைமுகனாரும் திசை புவி வானும் திரிதர வாழும் சிவன் மூதூர்
தெரிவையர் தாம் வந்து அரு நடமாடும் திருவலம் மேவும் பெருமாளே

மேல்

#666
அதிகராய் பொருள் ஈவார் நேர்படில் ரசனை காட்டிகள் ஈயார் கூடினும்
அகல ஓட்டிகள் மாயா ரூபிகள் நண்பு போலே
அசடர் ஆக்கிகள் மார் மேலே படு முலைகள் காட்டிகள் கூசாதே விழும்
அழகு காட்டிகள் ஆரோடாகிலும் அன்பு போலே
சதிர் அதாய் திரி ஓயா வேசிகள் கருணை நோக்கம் இலா மா பாவிகள்
தரும் உபேட்சை செய் தோஷா தோஷிகள் நம்பொணாத
சரச வார்த்தையினாலே வாது செய் விரகம் ஆக்கி விடா மூதேவிகள்
தகைமை நீத்து உன தாளே சேர்வதும் எந்த நாளோ
மதுரை நாட்டினிலே வாழ்வாகிய அருகர் வாக்கினிலே சார்வாகிய
வழுதி மேல் திருநீறே பூசி நிமிர்ந்து கூனும்
மருவும் ஆற்று எதிர் வீறு ஏடு ஏறிட அழகி போற்றிய மாறால் ஆகிய
மகிமையால் சமண் வேரோடே கெட வென்ற கோவே
புதிய மா கனி வீழ் தேன் ஊறல்கள் பகல் இராத்திரி ஓயா ஆலைகள்
புரள மேல் செல ஊரூர் பாய அணைந்து போதும்
புகழினால் கடல் சூழ் பார் மீதினில் அளகை போல் பல வாழ்வால் வீறிய
புலவர் போற்றிய வேலூர் மேவிய தம்பிரானே

மேல்

#667
சேல் ஆலம் ஒன்று செம் கண் வேலாலும் வென்று மைந்தர் சீர் வாழ்வு சிந்தை பொன்ற முதல் நாடி
தேன் மேவும் செம் சொல் இன் சொல் தான் ஓதி வந்து அணைந்து தீராத துன்ப இன்பம் உறு மாதர்
கோலாகலங்கள் கண்டு மாலாகி நின்றன் அன்புகூராமல் மங்கி அங்கம் அழியாதே
கோள் கோடி பொன்ற வென்று நாள்தோறும் நின்று இயங்கும் கூர் வாய்மை கொண்டு இறைஞ்ச அருள்தாராய்
மாலால் உழன்று அணங்கை ஆர் மா மதன் கரும்பின் வாகோடு அழிந்து ஒடுங்க முதல் நாடி
வாழ்வான கந்த முந்த மாறாகி வந்து அடர்ந்த மா சூரர் குன்ற வென்றி மயில் ஏறி
மேலாகும் ஒன்று அமைந்த மேல் நாடர் நின்று இரங்க வேலால் எறிந்து குன்றை மலைவோனே
வேய் போலவும் திரண்ட தோள் மாதர் வந்து இறைஞ்சு வேலூர் விளங்க வந்த பெருமாளே

மேல்

#668
ஒருவரை சிறு மனை சயன மெத்தையினில் வைத்து ஒருவரை தமது அலை கடையினில் சுழல விட்டு
ஒருவரை பரபரப்பொடு தெரு திரியவிட்டு அதனாலே
ஒருவருக்கொருவர் சக்களமையில் சருவவிட்டு உருவு பத்திரம் எடுத்து அறையில் மல்புரியவிட்டு
உயிர் பிழைப்பது கருத்து அளவில் உச்சிதம் என செயும் மானார்
தரும் மயல் ப்ரமைதனில் தவ நெறிக்கு அயல் என சரியையில் கிரியையில் தவமும் அற்று எனது கை
தனம் அவத்தினில் இறைத்து எவரும் உற்று இகழ்வுற திரிவேனை
சகல துக்கமும் அற சகல சற்குணம் வர தரணியில் புகழ் பெற தகைமை பெற்று உனது பொன்
சரணம் எப்பொழுது நட்பொடு நினைந்திட அருள்தருவாயே
குரு மொழி தவம் உடை புலவரை சிறையில் வைத்து அறவும் உக்கிரம் விளைத்திடும் அரக்கரை முழு
கொடிய துர்க்குண அவத்தரை முதல் துரிசு அறுத்திடும் வேலா
குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல் சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி
கொடி இடை பிடி நடை குறமகள் திருவினை புணர்வோனே
கருது சட்சமயிகட்கு அமைவுற கிறியுடை பறி தலை சமணரை குல முதல் பொடிபட
கலகமிட்டு உடல் உயிர் கழுவின் உச்சியினில் வைத்திடுவோனே
கமுகினின் குலை அற கதலியின் கனி உக கழையின் முத்தம் உதிர கயல் குதித்து உலவு நல்
கன வயல் திகழ் திரு கரபுரத்து அறுமுக பெருமாளே

மேல்

#669
குலைய மயிர் ஓதி குவிய விழி வீறு குருகின் இசை பாடி முகம் மீதே
குறு வியர்வு உலாவ அமுதினின் இனிதான குதலையும் ஒரு ஆறு படவே தான்
பலவித விநோதமுடன் உபய பாத பரிபுரமும் ஆட அணை மீதே
பரிவுதரும் ஆசை விட மனம் ஒவாத பதகனையும் ஆள நினைவாயே
சிலை மலை அதான பரமர் தரு பால சிகி பரியதான குமரேசா
திரு மதுரை மேவும் அமணர் குலமான திருடர் கழுவேற வருவோனே
கலின் வடிவமான அகலிகை பெணான கமல பத மாயன் மருகோனே
கழனி நெடு வாளை கமுகு ஒடிய மோது கர புரியில் வீறு பெருமாளே

மேல்

#670
நிகரில் பஞ்சபூதமு நினையு நெஞ்சும் ஆவியு நெகிழ வந்து நேர்படும் அவிரோதம்
நிகழ் தரும் ப்ரபாகர நிரவயம் பராபர நிருப அம் குமார வேள் என வேதம்
சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள் சமய பஞ்ச பாதகர் அறியாத
தனிமை கண்டதான கிண்கிணிய தண்டை சூழ்வன சரண புண்டரீகம் அது அருள்வாயே
மகர விம்ப சீகரம் முகர வங்க வாரிதி மறுகி வெந்து வாய் விட நெடு வான
வழி திறந்து சேனையும் எதிர் மலைந்த சூரனும் மடிய இந்திராதியர் குடி ஏற
சிகர துங்க மால் வரை தகர வென்றி வேல் விடு சிறுவ சந்த்ரசேகரர் பெருவாழ்வே
திசைதொறும் ப்ரபூபதி திசை முகன் பராவிய திரு விரிஞ்சை மேவிய பெருமாளே

மேல்

#671
பரவி உனது பொன் கரமும் முகமும் முத்து அணியும் உரமும் மெய் ப்ரபையும் மரு மலர்
பதமும் விரவி குக்குடமும் மயிலும் உள் பரிவாலே
படிய மனதில் வைத்து உறுதி சிவம் மிகுத்து எவரும் மகிழுற தரும நெறியில் மெய்
பசியில் வரும் அவர்க்கு அசனம் ஒரு பிடி படையாதோ
சருவி இனிய நட்பு உறவு சொல்லி முதல் பழகும் அவர் என பதறி அருகினில்
சரச விதம் அளித்து உரிய பொருள் பறித்திடும் மானார்
தமது ம்ருகமத களப புளகித சயிலம் நிகர் தனத்து இணையில் மகிழுற
தழுவி அவசமுற்று உருகி மருள் என திரிவேனோ
கரிய நிறம் உடை கொடிய அசுரரை கெருவ மதம் ஒழித்து உடல்கள் துணிபட
கழுகு பசி கெட கடுகி அயில் விடுத்திடு தீரா
கமல அயனும் அச்சுதனும் வருணன் அக்கினியும் நமனும் அ கரியில் உறையும் மெய்
கணனும் அமரர் அத்தனையும் நிலைபெற புரிவோனே
இரையும் உததியில் கடுவை மிடறு அமைத்து உழுவை அதள் உடுத்து அரவு பணி தரித்து
இலகு பெற நடிப்பவர் முன் அருளும் உத்தம வேளே
இசையும் அரு மறை பொருள்கள் தினம் உரைத்து அவனிதனில் எழில் கரும முனிவருக்கு
இனிய கர புரத்தில் அறுமுக பெருமாளே

மேல்

#672
மருவும் அஞ்சு பூதம் உரிமை வந்திடாது மலம் இது என்று போட அறியாது
மயல் கொள் இந்த வாழ்வு அமையும் எந்த நாளும் வகையில் வந்திராத அடியேனும்
உருகி அன்பினோடு உனை நினைந்து நாளும் உலகம் என்று பேச அறியாத
உருவம் ஒன்று இலாத பருவம் வந்து சேர உபய துங்க பாதம் அருள்வாயே
அரி விரிஞ்சர் தேட அரிய தம்பிரானும் அடி பணிந்து பேசி கடையூடே
அருளுக என்றபோது பொருள் இது என்று காண அருளும் மைந்த ஆதி குருநாதா
திரியும் உம்பர் நீடு கிரி பிளந்து சூரர் செரு அடங்க வேலை விடுவோனே
செயல் அமைந்த வேத தொனி முழங்கு வீதி திரு விரிஞ்சை மேவு பெருமாளே

மேல்

#673
கன ஆலம் கூர் விழி மாதர்கள் மன சாலம் சால் பழிகாரிகள்
கன போக அம்போருகம் ஆம் இணை முலை மீதே
கசிவு ஆரும் கீறுகிளால் உறு வசை காணும் காளிம வீணிகள்
களிகூரும் பேய் அமுது ஊண் இடு கசுமாலர்
மனம் ஏல் அம் கீல கலாவிகள் மயமாயம் கீத விநோதிகள்
மருள் ஆரும் காதலர் மேல் விழு மகளீர் வில்
மதி மாடம் வான் நிகழ்வார் மிசை மகிழ்கூரும் பாழ் மனமாம் உன
மலர் பேணும் தாள் உனவே அருள் அருளாயோ
தனதானம் தானன தானன என வேதம் கூறு சொல் மீறு அளி
ததை சேர் தண் பூ மண மாலிகை அணி மார்பா
தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய குக வீர அம்பா குமரா மிகு
தகை சால் அன்பார் அடியார் மகிழ் பெருவாழ்வே
தினம் ஆம் அன்பா புன மேவிய தனி மானின் தோள் உடன் ஆடிய
தினை மா இன்பா உயர் தேவர்கள் தலை வாமா
திகழ் வேடம் காளியொடு ஆடிய ஜெகதீச சங்கச நடேசுரர்
திருவாலங்காடினில் வீறிய பெருமாளே

மேல்

#674
பொன்றா மன்று ஆக்கும் புதல்வரும் நன்றாம் அன்று ஆர்க்கு இன்று உறுதுணை
பொன் தான் என்று ஆட்டம் பெருகிய புவியூடே
பொங்கா வெம் கூற்றம் பொதி தரு சிங்காரம் சேர்த்து இங்கு உயரிய
புன் கூடு ஒன்றாய் கொண்டு உறை தரும் உயிர் கோல
நின்றான் இன்று ஏத்தும்படி நினைவும் தானும் போச்சு என்ற உயர்வு அற
நிந்தாகும் பேச்சு என்பது பட நிகழா முன்
நெஞ்சால் அஞ்சால் பொங்கிய வினை விஞ்சாது என்பால் சென்று அகலிட
நின் தாள் தந்து ஆட்கொண்டு அருள்தர நினைவாயே
குன்றால் விண் தாழ்க்கும் குடை கொடு கன்று ஆ முன் காத்தும் குவலயம்
உண்டார் கொண்டாட்டம் பெருகிய மருகோனே
கொந்து ஆர் பைம் தார் திண் குய குற மின் தாள் சிந்தா சிந்தையில் மயல்
கொண்டே சென்று ஆட்கொண்டு அருள் என மொழிவோனே
அன்று ஆலங்காட்டு அண்டரும் உய நின்று ஆடும் கூத்தன் திரு அருள்
அங்கு ஆகும் பாட்டின் பயனினை அருள் வாழ்வே
அன்பால் நின் தாள் கும்பிடுபவர் தம் பாவம் தீர்த்து அம் புவி இடை
அஞ்சா நெஞ்சு ஆக்கம் தர வல பெருமாளே

மேல்

#675
புவி புனல் காலும் காட்டி சிகியொடு வானும் சேர்த்தி புது மனம் மானும் பூட்டி இடையூடே
பொறி புலன் ஈரைந்து ஆக்கி கருவிகள் நாலும் காட்டி புகல் வழி நாலைந்து ஆக்கி வரு காயம்
பவ வினை நூறும் காட்டி சுவ மதிதானும் சூட்டி பசு பதி பாசம் காட்டி புலம் மாய
படி மிசை போ என்று ஓட்டி அடிமையை நீ வந்து ஏத்தி பரகதிதானும் காட்டி அருள்வாயே
சிவமய ஞானம் கேட்க தவம் முநிவோரும் பார்க்க திரு நடம் ஆடும் கூத்தர் முருகோனே
திரு வளர் மார்பன் போற்ற திசைமுகன் நாளும் போற்ற ஜெகமொடு வானம் காக்க மயில் ஏறி
குவடொடு சூரன் தோற்க எழு கடல் சூதம் தாக்கி குதர் வடி வேல் அங்கு ஓட்டு குமரேசா
குவலயம் யாவும் போற்ற பழனையில் ஆலங்காட்டில் குறமகள் பாதம் போற்றும் பெருமாளே

மேல்

#676
வடிவது நீலம் காட்டி முடிவுள காலன் கூட்டிவர விடு தூதன் கோட்டி விடு பாசம்
மகளொடு மாமன் பாட்டி முதல் உறவோரும் கேட்டு மதி கெட மாயம் தீட்டி உயிர் போம் முன்
படி மிசை தாளும் காட்டி உடல் உறு நோய் பண்டு ஏற்ற பழ வினை பாவம் தீர்த்து அடியேனை
பரிவோடு நாளும் காத்து விரி தமிழால் அம் கூர்த்த பர புகழ் பாடு என்று ஆட்கொண்டு அருள்வாயே
முடி மிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில் முதிர் நடமாடும் கூத்தர் புதல்வோனே
முருகு அவிழ் தாரும் சூட்டி ஒரு தனி வேழம் கூட்டி முதல் மற மானின் சேர்க்கை மயல்கூர்வாய்
இடி என வேகம் காட்டி நெடி தரு சூலம் தீட்டி எதிர் பொரு சூரன் தாக்க வர ஏகி
இலகிய வேல் கொண்டு ஆர்த்து உடல் இரு கூறு அன்று ஆக்கி இமையவர் ஏதம் தீர்த்த பெருமாளே

மேல்

#677
தவர் வாள் தோமர சூலம் தரியா காதிய சூரும் தணியா சாகரம் ஏழும் கரி ஏழும்
சருகா காய் கதிர் வேலும் பொரு கால் சேவலு நீலம் தரி கூத்தாடிய மாவும் தினை காவல்
துவர் வாய் கானவர் மானும் சுர நாட்டாள் ஒரு தேனும் துணையா தாழ்வு அற வாழும் பெரியோனே
துணையாய் காவல் செய்வாய் என்று உணரா பாவிகள்பாலும் தொலையா பாடலை யானும் புகல்வேனோ
பவ மாய்த்து ஆண் அதுவாகும் பனை காய்த்தே மண நாறும் பழமாய் பார் மிசை வீழும்படி வேதம்
படியா பாதகர் பாய் அன்றி உடா பேதைகள் கேசம் பறி கோப்பாளிகள் யாரும் கழுவேற
சிவமாய் தேன் அமுது ஊறும் திருவாக்கால் ஒளி சேர் வெண் திருநீற்றால் அமராடும் சிறியோனே
செழு நீர் சேய் நதி ஆரம் கொழியா கோமளம் வீசும் திருவோத்தூர்தனில் மேவும் பெருமாளே

மேல்

#678
கார்க்கு ஒத்த மேனி கடல் போல் சுற்றமான வழி காய்த்து ஒட்டொணாத உரு ஒரு கோடி
காக்கைக்கு நாய் கழுகு பேய்க்கு அக்கமான உடல் காட்டத்தில் நீள் எரியில் உற வானில்
கூர்ப்பித்த சூலன் அதனால் குத்தி ஆவி கொடு போ துக்கமான குறை உடையேனை
கூப்பிட்டு உசா அருளி வாக்கிட்டு நாமம் மொழி கோக்கைக்கு நூல் அறிவு தருவாயே
போர்க்கு எய்த்திடா மறலி போல் குத்தி மேவு அசுரர் போய் திக்கெலாம் மடிய வடி வேலால்
பூ சித்தர் தேவர் மழை போல் தூர்க்கவே பொருது போற்றி செய்வார் சிறையை விடுவோனே
பார் கொற்ற நீறு புனைவார்க்கு ஒக்க ஞான பரனாய் பத்தி கூர் மொழிகள் பகர் வாழ்வே
பா கொத்தினால் இயலர் நோக்கைக்கு வேல் கொடு உயர் பாக்கத்தில் மேவ வல பெருமாளே

மேல்

#679
பாற்று கணங்கள் தின்று தேக்கிட்டிடும் குரம்பை நோக்கி சுமந்துகொண்டு பதிதோறும்
பார்த்து திரிந்து உழன்று ஆக்கத்தையும் தெரிந்து ஏக்கற்று நின்றுநின்று தளராதே
வேற்று புலன்கள் ஐந்தும் ஓட்டி புகழ்ந்து கொண்டு கீர்த்தித்து நின் பதங்கள் அடியேனும்
வேட்டு கலந்து இருந்து ஈட்டை கடந்து நின்ற வீட்டில் புகுந்து இருந்து மகிழ்வேனோ
மாற்று அற்ற பொன் துலங்கு வாள் சக்கிரம் தெரிந்து வாய்ப்புற்று அமைந்த சங்கு தடி சாப
மால் பொன் கலம் துலங்க நாட்டு அச்சுதன் பணிந்து வார் கைத்தலங்கள் என்று திரை மோதும்
பால் சொல் தடம் புகுந்து வேல் கண் சினம் பொருந்து பாய்க்குள் துயின்றவன்தன் மருகோனே
பாக்கு கரும்பை கெண்டை தாக்கி தடம் படிந்த பாக்கத்து அமர்ந்திருந்த பெருமாளே

மேல்

#680
ஆலம் போல் எழு நீலமே அங்கு ஆய் வரி கோல மாளம் போர் செயு மாய விழியாலே
ஆரம் பால் தொடை சால ஆலும் கோபுர ஆர ஆடம்பார் குவி நேய முலையாலே
சாலம் தாழ்வுறும் மால ஏல் அங்கு ஓர் பிடியாய வேள் அங்கு ஆர் துடி நீப இடையாலே
சாரம் சார்விலனாய் அநேகம் காய் யமன் மீறு காலம் தான் ஒழிவு ஏது உரையாயோ
பால் அம்பால் மண நாறுகால் அங்கே இறிலாத மாது அம்பா தரு சேயே வயலூரா
பாடு அம்பு ஆர் திரிசூல நீடு அந்தக அர வீர பாசம் தா திருமாலின் மருகோனே
வேல் அம்பு ஆர் குற மாது மேல் உம்பார் தரு மாதும் வீறு அங்கே இருபாலும் உற வீறு
வேத அந்தா அபிராம நாதன் தா அருள் பாவு வேலங்காடு உறை சீல பெருமாளே

மேல்

#681
கார் சார் குழலார் விழி ஆர் அயிலார் பால் மொழியார் இடை நூல் எழுவார்
சார் இளநீர் முலை மாதர்கள் மயலாலே
காழ் காதலது ஆம் மனமே மிக வார் காமுகனாய் உறு சாதக
மா பாதகனாம் அடியேனை நின் அருளாலே
பார்ப்பாய் அலையோ அடியாரொடு சேர்ப்பாய் அலையோ உனது ஆர் அருள்
கூர்ப்பாய் அலையோ உமையாள் தரு குமரேசா
பார் பாவலர் ஓது சொலால் முது நீர் பாரினில் மீறிய கீரரை
ஆர்ப்பாய் உனது ஆம் அருளால் ஒர் சொல் அருள்வாயே
வார் பேர் அருளே பொழி காரண நேர் பாவ ச காரணமா மத
ஏற்பாடிகள் அழிவே உற அறை கோப
வாக்கா சிவ மா மதமே மிக ஊக்கு அதிப யோகமதே உறும்
மாத்தா சிவ பால குகா அடியர்கள் வாழ்வே
வேல் காட வல் வேடர்கள் மா மகளார்க்கு ஆர்வ நன் மா மகிணா திருவேற்காடு
உறை வேத புரீசுரர் தரு சேயே
வேட்டார் மகவான் மகளானவள் ஏட்டு ஆர் திரு மா மணவா பொனின்
நாட்டார் பெருவாழ்வு எனவே வரு பெருமாளே

மேல்

#682
அணி செவ்வியார் திரை சூழ் புவி தன நிவ்வியே கரை ஏறிட
அறிவில்லியாம் அடியேன் இடர் அது தீர
அருள் வல்லையோ நெடுநாள் இனம் மருள் இல்லிலே இடுமோ உனது
அருள் இல்லையோ இனமானவை அறியேனே
குண வில் அதா மக மேரினை அணி செல்வி ஆய் அருணாசல
குரு வல்ல மாதவமே பெறு குண சாத
குடில் இல்லமே தரு நாள் எது மொழி நல்ல யோகவரே பணி
குண வல்லவா சிவனே சிவ குருநாதா
பணி கொள்ளி மா கண பூதமொடு அமர் கள்ளி கானக நாடக
பர மெல்லியார் பரமேசுரி தரு கோவே
படர் அல்லி மா மலர் பாணமது உடை வில்லி மா மதனார் அனை
பரி செல்வியார் மருகா சுர முருகேசா
மணம் ஒல்லையாகி நகா கன தன வல்லி மோகனமோடு அமர்
மகிழ் தில்லை மா நடம் ஆடினர் அருள் பாலா
மரு மல்லி மா வனம் நீடிய பொழில் மெல்லி கா வனம் மாடு அமை
வட முல்லைவாயிலின் மேவிய பெருமாளே

மேல்

#683
சோதி மா மதி போல் முகமும் கிளர் மேரு உலாவிய மா முலையும் கொடு
தூரவே வரும் ஆடவர் தங்கள் முன் எதிராயே
சோலி பேசி முன் நாளில் இணங்கிய மாதர் போல் இரு தோளில் விழுந்து ஒரு
சூதினால் வரவே மனை கொண்டு அவருடன் மேவி
மோதியே கனி வாய் அதரம் தரு நாளிலே பொருள் சூறைகள் கொண்டு பின்
மோனமாய் அவமே சில சண்டைகளுடனே ஏசி
மோசமே தரு தோதக வம்பியர் மீதிலே மயலாகி மனம் தளர்
மோடனாகிய பாதகனும் கதி பெறுவேனோ
ஆதியே எனும் வானவர் தம் பகை ஆன சூரனை மோதி அரும் பொடி
ஆகவே மயில் ஏறி முனிந்திடு நெடு வேலா
ஆயர் வாழ் பதிதோறும் உகந்து உரல் ஏறியே உறி மீது அளையும் களவாகவே
கொடு போத நுகர்ந்தவன் மருகோனே
வாதினால் வரு காளியை வென்றிடும் ஆதி நாயகர் வீறு தயங்கு கை
வாரி ராசனுமே பணியும் திரு நட பாதர்
வாச மா மலரோனொடு செம் திரு மார்பில் வீறிய மாயவனும் பணி
மாசிலா மணி ஈசர் மகிழ்ந்து அருள் பெருமாளே

மேல்

#684
மின் இடை கலாப தொங்கலொடு அன்ன மயில் நாண விஞ்சிய மெல்லியர் குழாம் இசைந்து ஒரு தெரு மீதே
மெள்ளவும் உலாவி இங்கித சொல் குயில் குலாவி நண்பொடு வில் இயல் புரூர கண் கணை தொடு மோக
கன்னியர்கள் போல் இதம் பெறு மின் அணி கலாரம் கொங்கையர் கண்ணியில் விழாமல் அன்பொடு பத ஞான
கண்ணியில் உள்ளாக சுந்தர பொன் இயல் பதாரமும் கொடு கண்ணுறு வராமல் இன்பமொடு எனை ஆள்வாய்
சென்னியில் உடாடி இளம் பிறை வன்னியும் அராவும் கொன்றையர் செம் மணி குலாவும் எந்தையர் குருநாதா
செம் முக இராவணன் தலை விண்ணுற வில் வாளியும் தொடு தெய்விக பொன் ஆழி வண் கையன் மருகோனே
துன்னி எதிர் சூரர் மங்கிட சண்முகம் அதாகி வன் கிரி துள்ளிட வேலாயுதம்தனை விடுவோனே
சொல்லும் முநிவோர் தவம்புரி முல்லைவடவாயில் வந்து அருள் துல்ய பர ஞான உம்பர்கள் பெருமாளே

மேல்

#685
மரு மல்லி ஆர் குழலின் மட மாதர் மருள் உள்ளி நாய் அடியன் அலையாமல்
இரு நல்லவாகும் உனது அடி பேண இன வல்லமான மனது அருளாயோ
கரு நெல்லி மேனியர் அரி மருகோனே கன வள்ளியார் கணவ முருகேசா
திருவல்லிதாயம் அதில் உறைவோனே திகழ் வல்ல மாதவர்கள் பெருமாளே

மேல்

#686
கரிய முகில் போலும் இருள் அளக பார கயல் பொருத வேலின் விழி மாதர்
கலவிகளில் மூழ்கி ம்ருகமத படீர களப முலை தோய அணையூடே
விரகம் அதுவான மதன கலை ஓது வெறியன் என நாளும் உலகோர்கள்
விதரணம் அதான வகை நகைகள் கூறி விடுவதன் முன் ஞான அருள்தாராய்
அரி பிரமர் தேவர் முனிவர் சிவயோகர் அவர்கள் புகழ் ஓத புவி மீதே
அதிக நடராஜர் பரவு குரு ராஜ அமரர் குல நேச குமரேசா
சிர கர கபாலர் அரிவை ஒரு பாகர் திகழ் கநக மேனி உடையாளர்
திரு அருளும் ஆதிபுரிதனில் மேவு ஜெய முருக தேவர் பெருமாளே

மேல்

#687
சொருப பிரகாச விசுவ ரூப பிரமாக நிச சுக விப்பிரதேச ரச சுப மாயா
துலிய பிரகாச மத சோலி அற்ற ரசா சவித தொகை விக்ரம மாதர் வயிறிடை ஊறு
கருவில் பிறவாதபடி உருவில் பிரமோத அடிகளை ஏத்திடு இராக வகை அதின் மீறி
கருணை பிரகாச உனது அருள் உற்றிட ஆசு இல் சிவ கதி பெற்றிடு இடர் ஆனவையை ஒழிவேனோ
குரு குக்குட வார கொடி செரு உக்கிர ஆதப அயில் பிடி கைத்தல ஆதி அரி மருகோனே
குமர பிரதாப குக சிவசுப்பிரமாமணிய குணம் முட்டர் அவா அசுரர் குல காலா
திரு ஒற்றி உறா மருவு நகர் ஒற்றியூர் வாரி திரை அருகு உற்றிடும் ஆதி சிவன் அருள் பாலா
திகழ் உற்றிடு யோக தவ மிகு முக்கிய மாதவர்கள் இதயத்திடமே மருவிய பெருமாளே

மேல்

#688
அமரும் அமரரினில் அதிகன் அயனும் அரி அவரும் வெருவ வரும் அதிகாளம்
அதனை அதகரண விதன அத பரிபுரணம் அமை அனவர் கரண அகிலேச
நிமிர அருள் சரணம் நிபிடம் அது என உன நிமிர சமீரன் மய நியமாய
நிமிடம் அதனில் உண வல சிவ சுத வர நினது பதவி தர வருவாயே
சமரச அமர சுர இதர பர அசுர சரத விரத அயில் விடுவோனே
தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி தகுர்தாத
எமர நடன வித மயிலின் முதுகில் வரும் இமையமகள் குமர எமது ஈச
இயலின் இயல் மயிலை நகரில் இனிது உறையும் எமது பர குரவ பெருமாளே

மேல்

#689
அயில் ஒத்து எழும் இரு விழியாலே அமுது ஒத்திடும் அரு மொழியாலே
சயிலத்து எழு துணை முலையாலே தடையுற்று அடியனும் மடிவேனோ
கயிலை பதி அரன் முருகோனே கடல கரை திரை அருகே சூழ்
மயிலை பதிதனில் உறைவோனே மகிமைக்கு அடியவர் பெருமாளே

மேல்

#690
அறம் இலா அதி பாதக வஞ்ச தொழிலாலே அடியனேன் மெலிவாகி மனம் சற்று இளையாதே
திறல் குலாவிய சேவடி வந்தித்து அருள் கூட தினமுமே மிக வாழ்வுறும் இன்பை தருவாயே
விறல் நிசாசரர் சேனைகள் அஞ்ச பொரும் வேலா விமல மாது அபிராமி தரும் செய் புதல்வோனே
மறவர் வாள்நுதல் வேடை கொளும் பொன் புய வீரா மயிலை மா நகர் மேவிய கந்த பெருமாளே

மேல்

#691
இகல வரு திரை பெருகிய சல நிதி நிலவும் உலகினில் இகம் உறு பிறவியில்
இனிமை பெற வரும் இடர் உறும் இருவினை அது தீர
இசையும் உனது இரு திரு பத மலர்தனை மனம் இசைய நினைகிலி இதம் உற உனது அருள்
இவர உருகிலி அயர்கிலி தொழுகிலி உமைபாகர்
மகிழும் மகவு என அறைகிலி நிறைகிலி மடமை குறைகிலி மதி உணர்வு அறிகிலி
வசனம் அற உறு மவுனமொடு உறைகிலி மட மாதர்
மயம் அது அடரிட இடருறும் அடியனும் இனிமை தரும் உனது அடியவருடன் உற
மருவ அருள்தரு கிருபையின் மலிகுவது ஒரு நாளே
சிகர தன கிரி குறமகள் இனிது உற சிலதன் நலமுறு சில பல வசன அமுது
இறைய அறை பயில் அறுமுக நிறை தரும் அருள் நீத
சிரண புரணம் விதரண விசிரவண சரண் உ சரவணபவ குக சயன் ஒளி
திரவ பர அதி சிரம் மறை முடிவுறு பொருள் நீத
அகர உகரதி மகரதி சிகரதி யகர அருள் அதி தெருள் அதி வலவல
அரணம் முரணுறு அசுரர்கள் கெட அயில் விடுவோனே
அழகும் இலகிய புலமையும் மகிமையும் வளமும் உறை திரு மயிலையில் அநுதினம்
அமரும் அரகர சிவ சுத அடியவர் பெருமாளே

மேல்

#692
இணையது இலதாம் இரண்டு கயல்கள் எனவே புரண்டு இரு குழையின் மீது அடர்ந்து அமர் ஆடி
இலகு சிலை வேள் துரந்த கணை அதிலுமே சிறந்த இரு நயனர் வார் இணங்கும் அதி பாரம்
பணை முலையின் மீது அணிந்த தரள மணி ஆர் துலங்கு பருவ ரதி போல வந்த விலைமானார்
பயிலு நடையால் உழன்று அவர்களிடம் மோகம் என்ற படுகுழியிலே மயங்கி விழலாமோ
கணகண என வீர தண்டை சரணம் அதிலே விளங்க கலப மயில் மேல் உகந்த குமரேசா
கறுகி வரு சூரன் அங்கம் இரு பிளவதாக விண்டு கதறி விழ வேல் எறிந்த முருகோனே
மணி மகுட வேணி கொன்றை அறுகு மதி ஆறு அணிந்த மலைய விலின் நாயகன் தன் ஒரு பாக
மலை அரையன் மாது உகந்த சிறுவன் எனவே வளர்ந்து மயிலை நகர் வாழ வந்த பெருமாளே

மேல்

#693
களப மணி ஆரம் உற்ற வசன முலை மீது கொற்ற கலக மத வேள் தொடுத்த கணையாலும்
கனி மொழி மினார்கள் முற்றும் இசை வசைகள் பேச உற்ற கனல் என உலாவு வட்ட மதியாலும்
வளமை அணி நீடு புஷ்ப சயன அணை மீது உருக்கி வனிதை மடல் நாடி நித்த நலியாதே
வரி அளி உலாவு துற்ற இரு புயம் அளாவி வெற்றி மலர் அணையில் நீ அணைக்க வரவேணும்
துளப மணி மாலை மார்ப சக்ரதரன் அரி முராரி சர்ப்ப துயில்தரன் ஆதரித்த மருகோனே
சுருதி மறை வேள்வி மிக்க மயிலை நகர் மேவு உக்ர துரகத கலாப பச்சை மயில் வீரா
அளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீள அழைப்ப அருள் பரவு பாடல் சொற்ற குமரேசா
அரு வரையை நீறு எழுப்பி நிருதர்தமை வேர் அறுத்து அமரர் பதி வாழ வைத்த பெருமாளே

மேல்

#694
கடிய வேகம் மாறாத விரதர் சூதர் ஆபாதர் கலகமே செய் பாழ் மூடர் வினை வேடர்
கபட ஈனர் ஆகாத இயல்பு நாடியே நீடு கன விகாரமே பேசி நெறி பேணா
கொடியன் ஏதும் ஓராது விரக சாலமே மூடு குடிலின் மேவியே நாளும் மடியாதே
குலவு தோகை மீது ஆறு முகமும் வேலும் ஈராறு குவளை வாகும் நேர் காண வருவாயே
படியினோடு மா மேரு அதிர வீசியே சேட பணமும் ஆடவே நீடு வரை சாடி
பரவை ஆழி நீர் மோத நிருதர் மாள வான் நாடு பதி அது ஆக வேல் ஏவும் மயில் வீரா
வடிவு உலாவி ஆகாசம் மிளிர் பலாவின் நீள் சோலை வனச வாவி பூ ஓடை வயலோடே
மணி செய் மாட மா மேடை சிகரமோடு வாகு ஆன மயிலை மேவி வாழ் தேவர் பெருமாளே

மேல்

#695
திரை வார் கடல் சூழ் புவிதனிலே உலகோரோடு திரிவேன் உனை ஓதுதல் திகழாமே
தின நாளும் முனே துதி மனது ஆர பினே சிவ சுதனே திரி தேவர்கள் தலைவா மால்
வரை மாது உமையாள் தரு மணியே குகனே என அறையா அடியேனும் உன் அடியாராய்
வழிபாடு உறுவாரோடு அருள் ஆதாரமாய் இடு மகா நாள் உளதோ சொல அருள்வாயே
இறை வாரண தேவனும் இமையோரவர் ஏவரும் இழிவாகி முனே ஏய் இயல் இலராகி
இருளோ மனதே உற அசுரேசர்களே மிக இடரே செயவே அவர் இடர் தீர
மற மா அயிலே கொடு உடலே இரு கூறு எழ மத மா மிகு சூரனை மடிவாக
வதையே செயு மா வலி உடையாய் அழகாகிய மயிலாபுரி மேவிய பெருமாளே

மேல்

#696
நிரை தரு மணி அணி ஆர்ந்த பூரித ம்ருகமத களப அகில் சாந்து சேரிய
இள முலை உரம் மிசை தோய்ந்து மா மலர் அணை மீதே
நெகிழ் தர அரை துகில் வீழ்ந்து மா மதி முகம் வெயர்வு எழ விழி பாய்ந்து வார் குழையொடு
பொர இரு கரம் ஏந்து நீள் வளை ஒலி கூர
விரை மலர் செறி குழல் சாய்ந்து நூபுரம் இசை தர இலவ இதழ் மோந்து வாய் அமுது
இயல்பொடு பருகிய வாஞ்சையே தக இயல் நாடும்
வினையனை இருவினை ஈண்டும் ஆழ் கடல் இடர் படு சுழி இடை தாழ்ந்து போம் மதி
இரு கதி பெற அருள் சேர்ந்து வாழ்வதும் ஒரு நாளே
பரை அபிநவை சிவை சாம்பவீ உமை அகிலமும் அருள அருள் ஏய்ந்த கோமளி
பயிரவி திரிபுரை ஆய்ந்த நூல் மறை சத கோடி
பகவதி இரு சுடர் ஏந்து காரணி மலைமகள் கவுரி விதார்ந்த மோகினி
படர் சடையவன் இட நீங்கு உறாதவள் தரு கோவே
குரை கடல் மறுகிட மூண்ட சூரர்கள் அணி கெட நெடு வரை சாய்ந்து தூள் எழ
முடுகிய மயில் மிசை ஊர்ந்து வேல் விடு முருகோனே
குல நறை மலர் அளி சூழ்ந்து உலாவிய மயிலையில் உறை தரு சேந்த சேவக
குக சரவணபவ வாய்ந்த தேவர்கள் பெருமாளே

மேல்

#697
வரும் மயில் ஒத்தவர் ஈவார் மா முகம் மதி என வைத்தவர் தாவா காமிகள்
வரிசையில் முற்றிய வாகு ஆர் ஆம் இயல் மட மாதர்
மயலினில் உற்று அவர் மோகா வாரிதி அதன் இடை புக்கு அவர் ஆளாய் நீள் நிதி
தரு இயல் உலுத்தர்கள் மாடா மா மதி மிக மூழ்கி
தரு பர உத்தம வேளே சீர் உறை அறுமுக நல் தவ லீலா கூர் உடை
அயில் உறை கை தல சீலா பூரண பர யோக
சரவண வெற்றி விநோதா மா மணி தரும் அரவை கடி நீதா ஆம் அணி
மயில் உறை வித்த உன் ஆதாரம் அணி பெறுவேனோ
திரிரிரி தித்திதி தீதீ தீதிதி தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு
திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி தொதிதீதோ
என அரி மத்தளம் மீது ஆர் தேம் முழ திடு என மிக்கு இயல் வேதாவே தொழு
திரு நடம் இட்டவர் காதே மூடிய குரு போதம்
உரை செயும் உத்தம வீரா நாரணி உமையவள் உத்தர பூர்வாகாரணி
உறு ஜக ரக்ஷணி நீர் ஆவாரணி தரு சேயே
உயர் வரம் உற்றிய கோவே ஆரண மறை முடி வித்தக தேவே காரண
ஒரு மயிலை பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே

மேல்

#698
குசமாகி ஆரு மலை மரை மா நுண் நூலின் இடை குடிலான ஆல் வயிறு குழையூடே
குறி போகு மீன விழி மதி மா முகாரு மலர் குழல் கார் அதான குணம் இலி மாதர்
புச ஆசையால் மனது உனை நாடிடாத படி புலையேன் உலாவி மிகு புணர்வாகி
புகழான பூமி மிசை மடிவாய் இறாத வகை பொலிவான பாத மலர் அருள்வாயே
நிச நாரணாதி திரு மருகா உலாச மிகு நிகழ் போதமான பர முருகோனே
நிதி ஞான போதம் அரன் இரு காதிலே உதவு நிபுணா நிசாசரர்கள் குல காலா
திசை மா முகாழி அரி மகவான் முனோர்கள் பணி சிவ நாதர் ஆலம் அயில் அமுதேசர்
திகழ் பால மாகம் உற மணி மாளி மாடம் உயர் திருவான்மியூர் மருவு பெருமாளே

மேல்

#699
ஆத இத பார முலை மாதர் இடை நூல் வயிறு அது ஆல் இலை எனா மதன கலை லீலை
யாவும் விளைவான குழியான திரிகோணம் அதில் ஆசை மிகவாய் அடியன் அலையாமல்
நாத சத கோடி மறை ஓலம் இடு நூபுரம் முனான பத மா மலரை நலமாக
நான் அநுதினமுமே நினையவே கிருபை நாடி அருளே அருள வருவாயே
சீத மதி ஆடு அரவு ஏர் அறுகு மா இறகு சீத சலம் மா சடில பரமேசர்
சீர்மை பெறவே உதவு கூர்மை தரு வேல சிவ சீறி வரு மா அசுரர் குல காலா
கோதை குற மாது குண தேவ மட மாது இருபாலும் உற வீறி வரு குமரேசா
கோசை நகர் வாழ வரும் ஈச அடியர் நேச சருவேச முருகா அமரர் பெருமாளே

மேல்

#700
தலங்களில் வரும் கன இலம் கொடு மடந்தையர் தழைந்த உதரம் திகழ் தச மாதம்
சமைந்தனர் பிறந்தனர் முயங்கினர் மயங்கினர் தவழ்ந்தனர் நடந்தனர் சில காலம்
துலங்கு நல பெண்களை முயங்கினர் மயங்கினர் தொடும் தொழிலுடன் தம க்ரகபாரம்
சுமந்தனர் அமைந்தனர் குறைந்தனர் இறந்தனர் சுடும் பினை எனும் பவம் ஒழியேனோ
இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கு அருள் இல் எங்கணும் இலங்கு என முறை ஓதி
இடும் கனல் குரங்கொடு நெடும் கடல் நடுங்கிட எழுந்தருள் முகுந்தனன் மருகோனே
பெலம் கொடு விலங்கலும் நலங்க அயில் கொண்டு எறி ப்ரசண்டகர தண் தமிழ் வயலூரா
பெரும் பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய பெருங்குடி மருங்கு உறை பெருமாளே

மேல்