திருப்புகழ் – முதல் தொகுதி (1-350)

தேவையான பாடல்
எண் மீது சொடுக்குக

1 || 101 || 201 || 301

2 || 102 || 202 || 302

3 || 103 || 203 || 303

4 || 104 || 204 || 304

5 || 105 || 205 || 305

6 || 106 || 206 || 306

7 || 107 || 207 || 307

8 || 108 || 208 || 308

9 || 109 || 209 || 309

10 || 110 || 210 || 310

11 || 111 || 211 || 311

12 || 112 || 212 || 312

13 || 113 || 213 || 313

14 || 114 || 214 || 314

15 || 115 || 215 || 315

16 || 116 || 216 || 316

17 || 117 || 217 || 317

18 || 118 || 218 || 318

19 || 119 || 219 || 319

20 || 120 || 220 || 320
21 || 121 || 221 || 321

22 || 122 || 222 || 322

23 || 123 || 223 || 323

24 || 124 || 224 || 324

25 || 125 || 225 || 325

26 || 126 || 226 || 326

27 || 127 || 227 || 327

28 || 128 || 228 || 328

29 || 129 || 229 || 329

30 || 130 || 230 || 330
31 || 131 || 231 || 331

32 || 132 || 232 || 332

33 || 133 || 233 || 333

34 || 134 || 234 || 334

35 || 135 || 235 || 335

36 || 136 || 236 || 336

37 || 137 || 237 || 337

38 || 138 || 238 || 338

39 || 139 || 239 || 339

40 || 140 || 240 || 340
41 || 141 || 241 || 341

42 || 142 || 242 || 342

43 || 143 || 243 || 343

44 || 144 || 244 || 344

45 || 145 || 245 || 345

46 || 146 || 246 || 346

47 || 147 || 247 || 347

48 || 148 || 248 || 348

49 || 149 || 249 || 349

50 || 150 || 250 || 350
51 || 151 || 251 || —-

52 || 152 || 252 || —-

53 || 153 || 253 || —-

54 || 154 || 254 || —-

55 || 155 || 255 || —-

56 || 156 || 256 || —-

57 || 157 || 257 || —-

58 || 158 || 258 || —-

59 || 159 || 259 || —-

60 || 160 || 260 || —-

61 || 161 || 261 || —-

62 || 162 || 262 || —-

63 || 163 || 263 || —-

64 || 164 || 264 || —-

65 || 165 || 265 || —-

66 || 166 || 266 || —-

67 || 167 || 267 || —-

68 || 168 || 268 || —-

69 || 169 || 269 || —-

70 || 170 || 270 || —-
71 || 171 || 271 || —-

72 || 172 || 272 || —-

73 || 173 || 273 || —-

74 || 174 || 274 || —-

75 || 175 || 275 || —-

76 || 176 || 276 || —-

77 || 177 || 277 || —-

78 || 178 || 278 || —-

79 || 179 || 279 || —-

80 || 180 || 280 || —-
81 || 181 || 281 || —-

82 || 182 || 282 || —-

83 || 183 || 283 || —-

84 || 184 || 284 || —-

85 || 185 || 285 || —-

86 || 186 || 286 || —-

87 || 187 || 287 || —-

88 || 188 || 288 || —-

89 || 189 || 289 || —-

90 || 190 || 290 || —-
91 || 191 || 291 || —-

92 || 192 || 292 || —-

93 || 193 || 293 || —-

94 || 194 || 294 || —-

95 || 195 || 295 || —-

96 || 196 || 296 || —-

97 || 197 || 297 || —-

98 || 198 || 298 || —-

99 || 199 || 299 || —-

100 || 200 || 300 || —-

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் (1 – 350)


#1
கைத்தல நிறை கனி அப்பமொடு அவல் பொரி கப்பிய கரி முகன் அடி பேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் என வினை கடிது ஏகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் மல் பொரு திரள் புய மத யானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரி செய்த அ சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரா
அ துயர் அது கொடு சுப்பிரமணி படும் அ புனம் அதனிடை இபம் ஆகி
அ குறமகளுடன் அ சிறு முருகனை அ கணம் மணம் அருள் பெருமாளே

மேல்

#2
பக்கரை விசித்திர மணி பொன் கலணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் நீப
பக்குவ மலர் தொடையும் அ குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும்
திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள் கை மறவேனே
இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு
எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெள்ளரி பழம் இடி பல் வகை தனி மூலம்
மிக்க அடிசில் கடலை பட்சணம் என கொள் ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி
வெற்ப குடில சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக மருப்பு உடைய பெருமாளே

மேல்

#3
உம்பர் தரு தேநு மணி கசிவாகி ஒண் கடலில் தேனமுதத்து உணர்வூறி
இன்ப ரசத்தே பருகி பலகாலும் என்றன் உயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே
தம்பிதனக்காக வனத்து அணைவோனே தந்தை வலத்தால் அருள் கை கனியோனே
அன்பர்தமக்கான நிலை பொருளோனே ஐந்து கரத்து ஆனைமுக பெருமாளே

மேல்

#4
நினது திருவடி சத்தி மயில் கொடி நினைவு கருதிடு புத்தி கொடுத்திட
நிறைய அமுது செய் முப்பழம் அப்பமும் நிகழ் பால் தேன்
நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி
நிகரில் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும்
மனது மகிழ்வொடு தொடு அட்ட கரத்து ஒரு மகர சலநிதி வைத்த துதி கர
வளரும் கரி முக ஒற்றை மருப்பனை வலமாக
மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு வளர் கை குழை பிடி தொப்பணம் குட்டொடு
வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே
தெனன தெனதென தெத்தென அன பல சிறிய அறு பதம் மொய்த்து உதிர புனல்
திரளும் உறு சதை பித்த நிண குடல் செறி மூளை
செரும உதர நிரப்பு செரு குடல் நிரைய அரவ நிறைத்த களத்து இடை
திமித திமிதிமி மத்தள இடக்கைகள் செகசேசே
எனவே துகுதுகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட
டிமுட டிமுடிமு டிட்டிம் என தவில் எழும் ஓசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்று நடித்திட
எதிரு நிசிசரரை பெலியிட்டு அருள் பெருமாளே

மேல்

#5
விடம் அடைசு வேலை அமரர் படை சூலம் விசையன் விடு பாணம் எனவே தான்
விழியும் அதி பார விதமும் உடை மாதர் வினையின் விளைவு ஏதும் அறியாதே
கடி உலவு பாயல் பகல் இரவு எனாது கலவிதனில் மூழ்கி வறிதாய
கயவன் அறிவு ஈனன் இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே
இடையர் சிறு பாலை திருடிக்கொடு போக இறைவன் மகள் வாய்மை அறியாதே
இதயம் மிக வாடி உடைய பிளை நாத கணபதி எனு நாமம் முறை கூற
அடையலவர் ஆவி வெருவ அடி கூர அசலும் அறியாமல் அவர் ஓட
அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட அறிவு அருளும் முகவோனே

மேல்

#6
முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும்
முக்கண் பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண
பத்து தலை தத்த கணை தொடு ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு பட்டப்பகல் வட்ட திகிரியில் இரவாக
பத்தற்கு இரதத்தை கடவிய பச்சை புயல் மெச்ச தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே
தித்தித்தெய ஒத்த பரிபுர நிர்த்த பதம் வைத்து பயிரவி திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட
திக்கு பரி அட்ட பயிரவர் தொக்குத்தொகு தொக்கு தொகுதொகு சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத
கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை
கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டி பலி இட்டு குலகிரி குத்துப்பட ஒத்து பொர வல பெருமாளே

மேல்

#7
அருக்கு மங்கையர் மலர் அடி வருடியெ கருத்து அறிந்து பின் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும் அங்கு உள அரசிலை தடவியும் இரு தோளுற்று
அணைத்தும் அங்கையின் அடிதொறும் நகம் எழ உதட்டை மென்று பல் இடு குறிகளும் இட
அடி களம்தனில் மயில் குயில் புறவு என மிக வாய் விட்டு
உருக்கும் அங்கியில் மெழுகு என உருகிய சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறு பலம்
உற கையில் கனி நிகர் என இலகிய முலை மேல் வீழ்ந்து
உரு கலங்கி மெய் உருகிட அமுது உகு பெருத்த உந்தியில் முழுகி மெய் உணர்வு அற
உழைத்திடும் கன கலவியை மகிழ்வது தவிர்வேனோ
இருக்கு மந்திரம் எழு வகை முநி பெற உரைத்த சம்ப்ரம சரவணபவ குக
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில் வேள் என்று
இலக்கணங்களும் இயல் இசைகளும் மிக விரிக்கும் அம் பல மதுரித கவிதனை
இயற்று செந்தமிழ் விதமொடு புய மிசை புனைவோனே
செருக்கும் அம்பல மிசை தனில் அசைவுற நடித்த சங்கரர் வழிவழி அடியவர்
திரு குருந்தடி அருள்பெற அருளிய குரு நாதர்
திரு குழந்தையும் என அவர் வழிபடு குருக்களின் திறம் என வரு பெரியவ
திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே

மேல்

#8
உனை தினம் தொழுதிலன் உனது இயல்பினை உரைத்திலன் பல மலர் கொடு உன் அடி இணை
உற பணிந்திலன் ஒரு தவம் இலன் உனது அருள் மாறா
உளத்து உள் அன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன்
உவப்பொடு உன் புகழ் துதி செய விழைகிலன் மலை போலே
கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும் கறுத்த வெம் சின மறலி தன் உழையினர்
கதித்து அடர்ந்து எறி கயிறு அடு கதை கொடு பொரு போதே
கலக்குறும் செயல் ஒழிவு அற அழிவுறு கருத்து நைந்து அலமுறும் பொழுது அளவை கொள்
கணத்தில் என் பயம் அற மயில் முதுகினில் வருவாயே
வினை தலம்தனில் அலகைகள் குதி கொள விழுக்கு உடைந்து மெய் உகு தசை கழுகு உண
விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர்புரி வேலா
மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய கொடிச்சி குங்கும முலை முகடு உழு நறை
விரைத்த சந்தன ம்ருகமத புய வரை உடையோனே
தினம் தினம் சதுர்மறை முநி முறை கொடு புனல் சொரிந்து அலர் பொதிய விணவரொடு
சினத்தை நிந்தனை செயு முநிவரர் தொழ மகிழ்வோனே
தென தெனந்தன என வரி அளி நறை தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ்
திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே

மேல்

#9
கரு அடைந்து பத்துற்ற திங்கள் வயிறு இருந்து முற்றி பயின்று
கடையில் வந்து உதித்து குழந்தை வடிவாகி
கழுவி அங்கு எடுத்து சுரந்த முலை அருந்துவிக்க கிடந்து
கதறி அங்கை கொட்டி தவழ்ந்து நடமாடி
அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை
அவை அணிந்து முற்றி கிளர்ந்து வயது ஏறி
அரிய பெண்கள் நட்பை புணர்ந்து பிணி உழன்று சுற்றித்திரிந்தது
அமையும் உன் க்ருபை சித்தம் என்று பெறுவேனோ
இரவி இந்தரன் வெற்றி குரங்கின் அரசர் என்றும் ஒப்பற்ற உந்தி
இறைவன் எண்கு இன கர்த்தன் என்றும் நெடு நீலன்
எரியது என்றும் ருத்ரன் சிறந்த அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனம் மேவ
அரிய தன் படை கர்த்தர் என்று அசுரர் தம் கிளை கட்டை வென்ற
அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே
அயனையும் புடைத்து சினந்து உலகமும் படைத்து பரிந்து
அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே

மேல்

#10
கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு
கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு நகையாலே
கள கொழும் கலி வலை கொடு விசிறியெ மனைக்கு எழுந்திரும் என மனம் உருக ஒர்
கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு கொடு போகி
நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்த அகம் தனில் இணை முலை எதிர் பொர
நகத்து அழுந்திட அமுது இதழ் பருகியும் மிடறூடே
நடித்து எழும் குரல் குமுகுமுகுமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட
நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயர் அற அருள்வாயே
நிறைத்த தெண் திரை மொகுமொகுமொகு என உரத்த கஞ்சுகி முடி நெறுநெறுநெறு என
நிறைத்த அண்ட முகடு கிடுகிடு என வரை போலும்
நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிர கொடும் குவை மலை புர தர இரு
நிண குழம்பொடு குருதிகள் சொரிதர அடு தீரா
திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண் கட கய முக மிக உள
சிவ கொழுந்து அன கணபதியுடன் வரும் இளையோனே
சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு
திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே

மேல்

#11
கனகம் திரள்கின்ற பெரும் கிரிதனில் வந்து தகன்தகன் என்றிடு
கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே
கடம் மிஞ்சி அநந்த விதம் புணர் கவளம்தனை உண்டு வளர்ந்திடு
கரியின் துணை என்று பிறந்திடு முருகோனே
பனகம் துயில்கின்ற திறம் புனை கடல் முன்பு கடைந்த பரம்பரர்
படரும் புயல் என்றவர் அன்பு கொள் மருகோனே
பல துன்பம் உழன்று கலங்கிய சிறியன் புலையன் கொலையன் புரி
பவம் இன்று கழிந்திட வந்து அருள்புரிவாயே
அனகன் பெயர் நின்று உருளும் திரிபுரமும் திரி வென்றிட இன்புடன்
அழல் உந்த நகும் திறல் கொண்டவர் புதல்வோனே
அடல் வந்து முழங்கி இடும் பறை டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டு என
அதிர்கின்றிட அண்டம் நெரிந்திட வரு சூரர்
மனமும் தழல் சென்றிட அன்று அவர் உடலும் குடலும் கிழி கொண்டிட
மயில் வென்தனில் வந்து அருளும் கன பெரியோனே
மதியும் கதிரும் தடவும்படி உயர்கின்ற வனங்கள் பொருந்திய
வளம் ஒன்றும் பரங்கிரி வந்து அருள் பெருமாளே

மேல்

#12
காது அடரும் கயல் கொண்டு இசைந்து ஐம்பொறி வாளி மயங்க மனம் பயம் தந்து இருள்
கால் தரவும் இந்து விசும்பில் இலங்கும் பொழுது ஒரு கோடி
காய் கதிர் என்று ஒளிர் செம் சிலம்பும் கணையாழியுடன் கடகம் துலங்கும்படி
காமன் நெடும் சிலை கொண்டு அடர்ந்தும் பொரு மயலாலே
வாதுபுரிந்து அவர் செம் கை தந்து இங்கிதமாக நடந்தவர் பின் திரிந்தும் தன
மார்பில் அழுந்த அணைந்திடும் துன்பம் அது உழலாதே
வாசம் மிகுந்த கடம்பம் மென் கிண்கிணி மாலை கரம் கொளும் அன்பர் வந்து அன்பொடு
வாழ நிதம் புனையும் பதம் தந்து உனது அருள்தாராய்
போதில் உறைந்து அருள்கின்றவன் செம் சிரம் மீது தடிந்து விலங்கிடும் புங்கவ
போத வளம் சிவ சங்கரன் கொண்டிட மொழிவோனே
பூகம் உடன் திகழ் சங்கு இனம் கொண்ட கிரீவம் மடந்தை புரந்திரன் தந்து அருள்
பூவை கரும் குற மின் கலம் தங்கு பனிரு தோளா
தீது அகம் ஒன்றினர் வஞ்சகம் துஞ்சியிடாதவர் சங்கரர் தந்த தென்பும் பல
சேர் நிருதன் குலம் அஞ்ச முன் சென்றிடு திறலோனே
சீதளம் முந்து மணம் தயங்கும் பொழில் சூழ் தர விஞ்சைகள் வந்து இறைஞ்சும் பதி
தேவர் பணிந்து எழு தென்பரங்குன்று உறை பெருமாளே

மேல்

#13
சந்ததம் பந்த தொடராலே சஞ்சலம் துஞ்சி திரியாதே
கந்தன் என்று என்று உற்று உனை நாளும் கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ
தந்தியின் கொம்பை புணர்வோனே சங்கரன் பங்கில் சிவை பாலா
செந்தில் அம் கண்டி கதிர் வேலா தென்பரங்குன்றில் பெருமாளே

மேல்

#14
சருவும்படி வந்தனன் இங்கித மதன் நின்றிட அம்புலியும் சுடு
தழல் கொண்டிட மங்கையர் கண்களின் வசமாகி
சயிலம் கொளு மன்றல் பொருந்திய பொழிலின் பயில் தென்றலும் ஒன்றிய
தட அம் சுனை துன்றி எழுந்திட திறமாவே
இரவும் பகல் அந்தியும் நின்றிடு குயில் வந்து இசை தெந்தன என்றிட
இரு கண்கள் துயின்றிடல் இன்றியும் அயர்வாகி
இவண் நெஞ்சு பதன்பதன் என்றிட மயல் கொண்டு வருந்திய வஞ்சகன்
இனி உன்தன் மலர்ந்து இலகும் பதம் அடைவேனோ
திரு ஒன்றி விளங்கிய அண்டர்கள் மனையின் தயிர் உண்டவன் எண் திசை
திகழும் புகழ் கொண்டவன் வண் தமிழ் பயில்வோர் பின்
திரிகின்றவன் மஞ்சு நிறம் புனைபவன் மிஞ்சு திறம் கொள வென்று அடல்
செய துங்க முகுந்தன் மகிழ்ந்து அருள் மருகோனே
மருவும் கடல் துந்துமியும் குட முழவங்கள் குமின்குமின் என்றிட
வளம் ஒன்றிய செந்திலில் வந்து அருள் முருகோனே
மதியும் கதிரும் புயலும் தினம் மறுகும்படி அண்டம் இலங்கிட
வளர்கின்ற பரங்கிரி வந்து அருள் பெருமாளே

மேல்

#15
தட கை பங்கயம் கொடைக்கு கொண்டல் தண் தமிழ்க்கு தஞ்சம் என்று உலகோரை
தவித்து சென்று இரந்து உளத்தில் புண்படும் தளர்ச்சி பம்பரம்தனை ஊசல்
கடத்தை துன்ப மண் சடத்தை துஞ்சிடும் கலத்தை பஞ்ச இந்த்ரிய வாழ்வை
கணத்தில் சென்று இடம் திருத்தி தண்டை அம் கழற்கு தொண்டு கொண்டு அருள்வாயே
படைக்க பங்கயன் துடைக்க சங்கரன் புரக்க கஞ்சை மன் பணியாக
பணித்து தம் பயம் தணித்து சந்ததம் பரத்தை கொண்டிடும் தனி வேலா
குடக்கு தென்பரம்பொருப்பில் தங்கும் அம் குலத்தில் கங்கை தன் சிறியோனே
குற பொன் கொம்பை முன் புனத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே

மேல்

#16
பதித்த செம் சந்த பொன் குட நித்தம் பருத்து உயர்ந்து அண்டத்தில் தலை முட்டும்
பருப்பதம் தந்த செப்பு அவை ஒக்கும் தன பாரம்
பட புயங்கம் பல் கக்கு கடு பண் செருக்கு வண்டு அம்பு அப்பில் கயல் ஒக்கும்
பருத்த கண் கொண்டைக்கு ஒக்கும் இருட்டு என்று இளைஞோர்கள்
துதித்து முன் கும்பிட்டு உற்றது உரைத்து அன்பு உவக்க நெஞ்சு அஞ்ச சிற்றிடைசுற்றும்
துகில் களைந்து இன்பம் துர்க்கம் அளிக்கும் கொடியார் பால்
துவக்குணும் பங்க பித்தன் அவத்தன் புவிக்குள் என் சிந்தை புத்தி மயக்கம்
துறக்க நின் தண்டை பத்மம் எனக்கு என்று அருள்வாயே
குதித்து வெண் சங்கத்தை சுறவு எற்றும் கடல் கரந்து அஞ்சி புக்க அரக்கன்
குடல் சரிந்து எஞ்ச குத்தி விதிர்க்கும் கதிர் வேலா
குல கரும்பின் சொல் தத்தை இப பெண்தனக்கு வஞ்சம் சொல் பொச்சை இடை
குங்குகுக்குகும் குங்கு குக்குகு குக்கும் குகுகூகூ
திதித்திதி திந்தி தித்தி என கொம்பு அதிர்த்து வெண் சண்ட கட்கம் விதிர்த்தும்
திரள் குவித்து அங்கண் பொட்டு எழ வெட்டும் கொலை வேடர்
தினை புனம் சென்று இச்சித்த பெணை கண்டு உரு கரந்து அங்கு கிட்டி அணைந்து ஒண்
திருப்பரங்குன்றில் புக்கு உள் இருக்கும் பெருமாளே

மேல்

#17
பொருப்பு உறும் கொங்கையர் பொருள் கவர்ந்து ஒன்றிய பிணக்கிடும் சண்டிகள் வஞ்ச மாதர்
புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர் முருக்கு வண் செம் துவர் தந்து போகம்
அருத்திடும் சிங்கியர் தருக்கிடும் செம் கயல் அற சிவந்த அம் கையில் அன்பு மேவும்
அவர்க்கு உழன்று அங்கமும் அற தளர்ந்து என் பயன் அருள் பதம் பங்கயம் அன்புறாதோ
மிருத்து அணும் பங்கயன் அலர் கணன் சங்கரர் விதித்து என்றும் கும்பிடு கந்த வேளே
மிகுத்திடும் வன் சமணரை பெரும் திண் கழு மிசைக்கு இடும் செந்தமிழ் அங்க வாயா
பெருக்கு தண் சண்பக வனம் திடம் கொங்கொடு திறல் செழும் சந்து அகில் துன்றி நீடும்
தினை புனம் பைம் கொடி தனத்துடன் சென்று அணை திருப்பரங்குன்று உறை தம்பிரானே

மேல்

#18
மன்றல் அம் கொந்து மிசை தெந்தன தெந்தனென வண்டு இனம் கண்டு தொடர் குழல் மாதர்
மண்டிடும் தொண்டை அமுது உண்டு கொண்டு அன்பு மிக வம்பிடும் கும்ப கன தன மார்பில்
ஒன்று அம்பு ஒன்று விழி கன்ற அங்கம் குழைய உந்தி என்கின்ற மடு விழுவேனை
உன் சிலம்பும் கனக தண்டையும் கிண்கிணியும் ஒண் கடம்பும் புனையும் அடி சேராய்
பன்றி அம் கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள் பண்டை என்பு அங்கம் அணிபவர் சேயே
பஞ்சரம் கொஞ்சு கிளி வந்துவந்து ஐந்து கர பண்டிதன் தம்பி எனும் வயலூரா
சென்று முன் குன்றவர்கள் தந்த பெண் கொண்டு வளர் செண்பகம் பைம்பொன் மலர் செறி சோலை
திங்களும் செம் கதிரும் மங்குலும் தங்கும் உயர் தென்பரங்குன்றில் உறை பெருமாளே

மேல்

#19
வடத்தை மிஞ்சிய புளகித வன முலைதனை திறந்து எதிர் வரும் இளைஞர்கள் உயிர்
மயக்கி ஐங்கணை மதனனை ஒரு அருமையினாலே
வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல நகைத்து நண்பொடு வரும் இரும் என உரை
வழுத்தி அங்கு அவரோடு சருவியும் உடல் தொடுபோதே
விடத்தை வென்றிடு படை விழி கொடும் உளம் மருட்டி வண் பொருள் கவர் பொழுதினில் மயல்
விருப்பு எனும்படி மடி மிசையினில் விழு தொழில் தானே
விளைத்திடும் பல கணிகையர் தமது பொய் மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
விரை பதம்தனில் அருள்பெற நினைகுவது உளதோ தான்
குடத்தை வென்றிடு கிரி என எழில் தளதளத்த கொங்கைகள் மணி வடம் அணி சிறு
குற கரும்பின் மெய் துவள் புயன் என வரு வடி வேலா
குரை கரும் கடல் திரு அணை என முனம் அடைத்து இலங்கையின் அதிபதி நிசிசரர்
குலத்தொடும் பட ஒரு கணை விடும் அரி மருகோனே
திடத்து எதிர்ந்திடும் அசுரர்கள் பொடிபட அயில் கொடும் படை விடு சரவணபவ
திற குகன் குருபரன் என் வரும் ஒரு முருகோனே
செழித்த தண்டலைதொறும் இலகிய குட வளை குலம் தரு தரளமும் மிகும் உயர்
திருப்பரங்கிரி வள நகர் மருவிய பெருமாளே

மேல்

#20
வரை தடம் கொங்கையாலும் வளை படும் செம் கையாலும் மதர்த்திடும் கெண்டையாலும் அனைவோரும்
வடுப்படும் தொண்டையாலும் விரைத்திடும் கொண்டையாலும் மருட்டிடும் சிந்தை மாதர் வசமாகி
எரி படும் பஞ்சு போல மிக கெடும் தொண்டனேனும் இனல்படும் தொந்த வாரி கரி ஏற
இசைத்திடும் சந்த பேடம் ஒலித்திடும் தண்டை சூழும் இணை பதம் புண்டரீகம் அருள்வாயே
சுரர்க்கு வஞ்சம் செய் சூரன் இள க்ரவுஞ்சன் தன்னோடு துளக்க எழுந்து அண்ட கோளம் அளவாக
துரத்தி அன்று இந்த்ரலோகம் அழித்தவன் பொன்று மாறு சுடப்ப அரும் சண்ட வேலை விடுவோனே
செருக்கு எழுந்து உம்பர் சேனை துளக்க வென்று அண்டம் ஊடு தெழித்திடும் சங்கபாணி மருகோனே
தினை புனம் சென்று உலாவு குறத்தியின் இன்பம் பராவு திருப்பரங்குன்றம் மேவு பெருமாளே

மேல்

#21
அம் கை மென் குழல் ஆய்வார் போலே சந்தி நின்று அயலோடே போவார்
அன்பு கொண்டிட நீரோ போறீர் அறியீரோ
அன்று வந்து ஒரு நாள் நீர் போனீர் பின்பு கண்டு அறியோம் நாம் ஈதே
அன்றும் இன்றும் ஓர் போதோ போகா துயில் வாரா
எங்கள் அந்தரம் வேறு ஆர் ஓர்வார் பண்டு தந்தது போதாதோ மேல்
இன்று தந்து உறவோ தான் ஈது ஏன் இது போதாது
இங்கு நின்றது என் வீடே வாரீர் என்று இணங்கிகள் மாயா லீலா
இன்ப சிங்கியில் வீணே வீழாது அருள்வாயே
மங்குல் இன்புறு வானாய் வானூடு அன்று அரும்பிய காலாய் நீள் கால்
மண்டுறும் புகை நீறா வீறா எரி தீயாய்
வந்து இரைந்து எழு நீராய் நீர் சூழ் அம்பரம் புனை பாராய் பார் ஏழ்
மண்டலம் புகழ் நீயாய் நானாய் மலரோனாய்
உங்கள் சங்கரர்தாமாய் நாம் ஆர் அண்ட பந்திகள்தாமாய் வானாய்
ஒன்றினும் கடை தோயா மாயோன் மருகோனே
ஒண் தடம் பொழில் நீடு ஊர் கோடு ஊர் செந்தில் அம் பதி வாழ்வே வாழ்வோர்
உண்ட நெஞ்சு அறி தேனே வானோர் பெருமாளே

மேல்

#22
அந்தகன் வரும் தினம் பிறகிட சந்ததமும் வந்து கண்டு அரிவையர்க்கு
அன்பு உருகும் சங்கதம் தவிர முக்குணம் மாள
அந்தி பகல் என்ற இரண்டையும் ஒழித்து இந்திரிய சஞ்சலம் களையறுத்து
அம்புய பதங்களின் பெருமையை கவி பாடி
செந்திலை உணர்ந்துணர்ந்து உணர்வுற கந்தனை அறிந்தறிந்து அறிவினில்
சென்று செருகும் தடம் தெளிதர தணியாத
சிந்தையும் அவிழ்ந்தவிழ்ந்து உரை ஒழித்து என் செயல் அழிந்தழிந்து அழிய மெய்
சிந்தை வர என்று நின் தெரிசனை படுவேனோ
கொந்து அவிழ் சரண்சரண்சரண் என கும்பிடு புரந்தரன் பதி பெற
குஞ்சரி குயம் புயம் பெற அரக்கர் உரு மாள
குன்று இடிய அம் பொனின் திரு வரை கிண்கிணி கிணின்கிணின் கிணின் என
குண்டலம் அசைந்து இளம் குழைகள் ப்ரபை வீச
தந்தன தனந்தனம் தனஎன செம் சிறு சதங்கை கொஞ்சிட மணி
தண்டைகள் கலின்கலின் கலின் என திருவான
சங்கரி மனம் குழைந்து உருக முத்தம் தர வரும் செழும் தளர் நடை
சந்ததி சகம் தொழும் சரவண பெருமாளே

மேல்

#23
அமுத உததி விடம் உமிழும் செம் கண் திங்கள் பகவின் ஒளிர் வெளிறு எயிறு துஞ்சல் குஞ்சி
தலையும் உடையவன் அரவ தண்ட சண்ட சமன் ஓலை
அது வருகும் அளவில் உயிர் அங்கிட்டு இங்கு பறை திமிலை திமிர்தம் மிகு தம்பட்டம் பல்
கரைய உறவினர் அலற உந்தி சந்தி தெருவூடே
எமது பொருள் எனும் மருளை இன்றி குன்றி பிள அளவு தினை அளவு பங்கிட்டு உண்கைக்கு
இளைய முது வசை தவிர இன்றைக்கு அன்றைக்கு என நாடாது
இடுக கடிது எனும் உணர்வு பொன்றி கொண்டிட்டு டுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்டு
என அகலும் நெறி கருதி வெஞ்சத்து அஞ்சி பகிராதோ
குமுத பதி வகிர் அமுது சிந்தச்சிந்த சரண பரிபுர சுருதி கொஞ்சக்கொஞ்ச
குடில சடை பவுரி கொடு தொங்க பங்கில் கொடியாட
குல தடினி அசைய இசை பொங்கப்பொங்க கழல் அதிர டெகுடெகுட டெங்கட் டெங்க
தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத்தொங்க தொகுதீதோ
திமிதம் என முழவு ஒலி முழங்க செம் கை தமருகம் அது சதியொடு அன்பர்க்கு இன்ப
திறம் உதவும் பரத குரு வந்திக்கும் சற்குருநாதா
திரளும் மணி தரளம் உயர் தெங்கில் தங்கி புரள எறி திரை மகர சங்க துங்க
திமிர சல நிதி தழுவு செந்தில் கந்த பெருமாளே

மேல்

#24
அம்பு ஒத்த விழி தந்த கலகத்து அஞ்சி கமல கணையாலே
அன்றிற்கும் அனல் தென்றற்கும் இளைத்து அந்தி பொழுதில் பிறையாலே
எம் பொன் கொடி மன் துன்ப கனல் அற்று இன்ப கலவி துயர் ஆனாள்
என் பெற்று உலகில் பெண் பெற்றவருக்கு இன்ப புலி உற்றிடலாமோ
கொம்பு கரி பட்டு அஞ்ச பதும கொங்கை குறவிக்கு இனியோனே
கொன்றை சடையற்கு ஒன்றை தெரிய கொஞ்சி தமிழை பகர்வோனே
செம்பொன் சிகர பைம்பொன் கிரியை சிந்த கறுவி பொரும் வேலா
செம் சொல் புலவர்க்கு அன்புற்ற திரு செந்தில் குமர பெருமாளே

மேல்

#25
அருண மணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபன
அபி நவ விசால பூரண அம் பொன் கும்ப தனம் மோதி
அளி குலவு மாதர் லீலையில் முழுகி அபிஷேகம் ஈது என
அறவும் உறவு ஆடி நீடிய அங்கை கொங்கைக்கு இதமாகி
இருள் நிறை அம் ஓதி மாலிகை சருவி உறவான வேளையில்
இழை கலைய மாதரார் வழி இன்புற்று அன்புற்று அழியா நீள்
இரவு பகல் மோகனாகியே படியில் மடியாமல் யானும் உன்
இணை அடிகள் பாடி வாழா என் நெஞ்சில் செம் சொல் தருவாயே
தருண மணி ஆடு அரா அணி குடில சடில ஆதி ஓதிய
சதுர் மறையின் ஆதி ஆகிய சங்க துங்க குழையாளர்
தரு முருக மேக சாயலார் தமர மகர ஆழி சூழ் புவிதனை
முழுதும் வாரியே அமுது உண்டிட்டு அண்டர்க்கு அருள்கூரும்
செரு முதலி மேவும் மா வலி அதி மத போல மா மலை
தெளிவினுடன் மூலமே என முந்த சிந்தித்து அருள் மாயன்
திரு மருக சூரன் மார்பொடு சிலை உருவ வேலை ஏவிய
ஜெய சரவணா மனோகர செந்தில் கந்த பெருமாளே

மேல்

#26
அவனி பெறும் தோட்டு அம் பொன் குழை அடர் அம்பால் புண்பட்டு
அரிவையர்தம்பால் கொங்கைக்கு இடையே சென்று
அணைதரு பண்டு ஆட்டம் கற்று உருகிய கொண்டாட்டம் பெற்று
அழி தரு திண்டாட்டம் சற்று ஒழியாதே
பவம் அற நெஞ்சால் சிந்தித்து இலகு கடம்பு ஆர் தண்டை
பத உகளம் போற்றும் கொற்றமும் நாளும்
பதறிய அங்காப்பும் பத்தியும் அறிவும் போய் சங்கை
படு துயர் கண் பார்த்து அன்புற்று அருளாயோ
தவ நெறி குன்றா பண்பில் துறவினரும் தோற்று அஞ்ச
தனி மலர் அஞ்சு ஆர் புங்கத்து அமர் ஆடி
தமிழ் இனி தென் கால் கன்றில் திரிதரு கஞ்சா கன்றை
தழல் எழ வென்றார்க்கு அன்று அற்புதமாக
சிவ வடிவும் காட்டும் சற்குருபர தென்பால் சங்க
திரள் மணி சிந்தா சிந்து கரை மோதும்
தினகர திண் தேர் சண்ட பரி இடறும் கோட்டு இஞ்சி
திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே

மேல்

#27
அளக பாரம் அலைந்து குலைந்திட வதனம் வேர்வு துலங்கி நலங்கிட
அவச மோகம் விளைந்து தளைந்திட அணை மீதே
அருண வாய் நகை சிந்திய சம்ப்ரம அடர் நகா நுதி பங்க விதம் செய்து
அதர பானம் அருந்தி மருங்கு இற முலை மேல் வீழ்ந்து
உளமும் வேறுபடும்படி ஒன்றிடு மகளிர் தோதக இன்பின் முயங்குதல்
ஒழியுமாறு தெளிந்து உளம் அன்பொடு சிவயோகத்து
உருகு ஞான பரம்பர தந்திர அறிவினோர் கருது அம் கொள் சிலம்பு அணி
உபய சீதள பங்கய மென் கழல் தருவாயே
இளகிடா வளர் சந்தன குங்கும களப பூரண கொங்கை நலம் புனை
இரதி வேள் பணி தந்தையும் அந்தண மறையோனும்
இனிது உறாது எதிர் இந்திரன் அண்டரும் ஹரஹரா சிவசங்கர சங்கர
என மிகா வரு நஞ்சினை உண்டவர் அருள் பாலா
வளர் நிசாசுரர் தங்கள் சிரம் பொடிபட விரோதம் இடும் குல சம்ப்ரமன்
மகர வாரி கடைந்த நெடும் புயல் மருகோனே
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல
மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை பெருமாளே

மேல்

#28
அறிவு அழிய மயல் பெருக உரையும் அற விழி சுழல அனல் அவிய மலம் ஒழுக அகலாதே
அனையும் மனை அருகில் உற வெருவி அழ உறவும் அழ அழலின் நிகர் மறலி எனை அழையாதே
செறியும் இருவினை கரணம் மருவு புலன் ஒழிய உயர் திருவடியில் அணுக வரம் அருள்வாயே
சிவனை நிகர் பொதிய வரை முநிவன் அகம் மகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே
நெறி தவறி அலரி மதி நடுவன் மக பதி முளரி நிருதி நிதி பதி கரிய வன மாலி
நிலவு மறையவன் இவர்கள் அலைய அரசுரிமை புரி நிருதன் உரம் அற அயிலை விடுவோனே
மறி பரசு கரம் இலகு பரமன் உமை இரு விழியும் மகிழ மடி மிசை வளரும் இளையோனே
மதலை தவழ் உததி இடை வரு தரள மணி புளினம் மறைய உயர் கரையில் உறை பெருமாளே

மேல்

#29
அனிச்சம் கார் முகம் வீசிட மாசறு துவள் பஞ்சான தடாகம் விடா மட
அனத்தின் தூவி குலாவிய சீறடி மட மானார்
அருக்கன் போல ஒளி வீசிய மா மரகத பைம் பூண் அணி வார் முலை மேல் முகம்
அழுத்தும் பாவியை ஆவி இடேறிட நெறி பாரா
வினை சண்டாளனை வீணனை நீள் நிதிதனை கண்டு ஆணவமான நிர்மூடனை
விடக்கு அன்பாய் நுகர் பாழனை ஓர் மொழி பகராதே
விகற்பம் கூறிடு மோக விகாரனை அறத்தின்பால் ஒழுகாத மூதேவியை
விளித்து உன் பாதுகை நீ தர நான் அருள்பெறுவேனோ
முனை சங்கு ஓலிடு நீல மகா உததி அடைத்து அஞ்சாத இராவணன் நீள் பல
முடிக்கு அன்று ஓர் கணை ஏவும் இராகவன் மருகோனே
முளைக்கும் சீத நிலாவொடு அரா விரி திரை கங்கா நதி தாதகி கூவிள
முடிக்கும் சேகரர் பேர் அருளால் வரு முருகோனே
தினை செம் கானக வேடுவர் ஆனவர் திகைத்து அந்தோ எனவே கணி ஆகிய
திறல் கந்தா வளி நாயகி காமுறும் எழில் வேலா
சிறக்கும் தாமரை ஓடையில் மேடையில் நிறக்கும் சூல் வளை பால் மணி வீசிய
திருச்செந்தூர் வரு சேவகனே சுரர் பெருமாளே

மேல்

#30
அனைவரும் மருண்டு அருண்டு கடிது என வெகுண்டு இயம்ப அமர அடி பின்தொடர்ந்து பிண நாறும்
அழுகு பிணி கொண்டு விண்டு புழு உடல் எலும்பு அலம்பும் அவல உடலம் சுமந்து தடுமாறி
மனைதொறும் இதம் பகர்ந்து வரவர விருந்து அருந்தி மன வழி திரிந்து மங்கும் வசை தீர
மறை சதுர் விதம் தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சு மலர் அடி வணங்க என்று பெறுவேனோ
தினை மிசை சுகம் கடிந்த புன மயில் இளம் குரும்பை திகழ் இரு தனம் புணர்ந்த திரு மார்பா
ஜெக முழுதும் முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு திகிரி வலம் வந்த செம்பொன் மயில் வீரா
இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ செந்தில் வந்த இறைவ குக கந்த என்றும் இளையோனே
எழு கடலும் எண் சிலம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சும் இமயவரை அஞ்சல் என்ற பெருமாளே

மேல்

#31
இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித்து உழலாதே
உயர் கருணைபுரியும் இன்ப கடல் மூழ்கி
உனை எனது உளம் அறியும் அன்பை தருவாயே
மயில் தகர் கல் இடையர் அந்த தினை காவல்
வனச குறமகளை வந்தித்து அணைவோனே
கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே
கரி முகவன் இளைய கந்த பெருமாளே

மேல்

#32
இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து வந்திட இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே
இருள் அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட இதழ் அமுது அருந்து சிங்கியின் மனம் மாய
முருகொடு கலந்த சந்தன அளறுபடு குங்குமம் கமழ் முலை முகடு கொண்டு எழும்தொறும் முருகு ஆர
முழு மதி புரந்த சிந்துர அரிவையருடன் கலந்திடு முகடியும் நலம் பிறந்திட அருள்வாயே
எரி விடம் நிமிர்ந்த குஞ்சியினில் நிலவொடும் எழுந்த கங்கையும் இதழியொடு அணிந்த சங்கரர் களி கூறும்
இம வரை தரும் கரும் குயில் மரகத நிறம் தரும் கிளி எனது உயிர் எனும் த்ரியம்பகி பெருவாழ்வே
அரை வடம் அலம்பு கிண்கிணி பரிபுரம் நெருங்கு தண்டைகள் அணி மணி சதங்கை கொஞ்சிட மயில் மேலே
அகம் மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர முன்றிலின் புறம் அலை பொருத செந்தில் தங்கிய பெருமாளே

மேல்

#33
இருள் விரி குழலை விரித்து தூற்றவும் இறுகிய துகிலை நெகிழ்த்து காட்டவும்
இரு கடை விழியும் முறுக்கி பார்க்கவும் மைந்தரோடே
இலை பிளவு அதனை நடித்து கேட்கவும் மறுமொழி பலவும் இசைத்து சாற்றவும்
இடையிடை சிறிது நகைத்து காட்டவும் எங்கள் வீடே
வருக என ஒரு சொல் உரைத்து பூட்டவும் விரி மலர் அமளி அணைத்து சேர்க்கவும்
வரு பொருள் அளவில் உருக்கி தேற்றவும் நிந்தையாலே
வனை மனை புகுதில் அடித்து போக்கவும் ஒரு தலை மருவு புணர்ச்சி தூர்த்தர்கள்
வசை விட நினது பதத்தை போற்றுவது எந்த நாளோ
குரு மணி வயிரம் இழித்து கோட்டிய கழை மட உருவு வெளுத்து தோற்றிய
குளிறு இசை அருவி கொழித்து தூற்றிய மண்டு நீர் ஊர்
குழி படு கலுழி வயிற்றை தூர்த்து எழு திடர் மணல் இறுகு துருத்தி கா பொதி
குளிர் நிழல் அருவி கலக்கி பூ புனை வண்டல் ஆடா
முருகு அவிழ் துணர்கள் உகுத்து காய் தினை விளை நடு இதணில் இருப்பை காட்டிய
முகிழ் முலை இளைய குறத்திக்கு ஆட்படு செந்தில் வாழ்வே
முளை இள மதியை எடுத்து சாத்திய சடை முடி இறைவர் தமக்கு சாத்திர
முறை அருள் முருக தவத்தை காப்பவர் தம்பிரானே

மேல்

#34
உததி அறல் மொண்டு சூல் கொள் கரு முகில் என இருண்ட நீல மிக
ஒளி திகழ மன்றல் ஓதி நரை பஞ்சு போலாய்
உதிரம் எழு துங்க வேல விழி மிடை கடை ஒதுங்கு பீளைகளும்
முடை தயிர் பிதிர்ந்ததோ இது என வெம் புலாலாய்
மத கரட தந்தி வாயின் இடை சொருகு பிறை தந்த சூதுகளின்
வடிவு தரு கும்ப மோதி வளர் கொங்கை தோலாய்
வனம் அழியும் மங்கை மாதர்களின் நிலைதனை உணர்ந்து தாளில் உறு
வழி அடிமை அன்புகூரும் அது சிந்தியேனோ
இதழ் பொதி அவிழ்ந்த தாமரையின் மண அறை புகுந்த நான்முகனும்
எறி திரை அலம்பும் பால் உததி நஞ்சு அரா மேல்
இரு விழி துயின்ற நாரணனும் உமை மருவு சந்த்ரசேகரனும்
இமையவர் வணங்கு வாசவனும் நின்று தாழும்
முதல்வ சுக மைந்த பீடிகையில் அகில சக அண்டநாயகிதன்
முகிழ் முலை சுரந்த பால் அமுதம் உண்ட வேளே
முளை முருகு சங்கு வீசி அலை முடுகி மை தவழ்ந்த வாய் பெருகி
முதல் இவரு செந்தில் வாழ்வு தரு தம்பிரானே

மேல்

#35
உருக்கம் பேசிய நீலியர் காசுகள் பறிக்கும் தோஷிகள் மோக விகாரிகள்
உருட்டும் பார்வையர் மா பழிகாரிகள் மதியாதே
உரைக்கும் வீரிகள் கோள் அரவாம் என உடற்றும் தாதியர் காசளவே மனம்
உறைக்கும் தூரிகள் மீதினில் ஆசைகள் புரிவேனோ
அருக்கன் போல் ஒளி வீசிய மா முடி அணைத்தும் தான் அழகாய் நலமே தர
அருள் கண் பார்வையினால் அடியார்தமை மகிழ்வோடே
அழைத்தும் சேதிகள் பேசிய காரண வடிப்பம் தான் எனவே எனை நாள்தொறும்
அதிக்கம் சேர் தரவே அருளால் உடன் இனிது ஆள்வாய்
இருக்கும் காரணம் மீறிய வேதமும் இசைக்கும் சாரமுமே தொழு தேவர்கள்
இடுக்கண் தீர் கனனே அடியார் தவமுடன் மேவி
இலக்கம் தான் எனவே தொழவே மகிழ் விருப்பம் கூர் தரும் ஆதியுமாய் உலகு
இறுக்கும் தாதகி சூடிய வேணியன் அருள் பாலா
திருக்கும் தாபதர் வேதியர் ஆதியர் துதிக்கும் தாள் உடை நாயகன் ஆகிய
செக செம் சோதியும் ஆகிய மாதவன் மருகோனே
செழிக்கும் சாலியும் மேகம் அளாவிய கருப்பம் சோலையும் வாழையுமே திகழ்
திருச்செந்தூர்தனில் மேவிய தேவர்கள் பெருமாளே

மேல்

#36
ஏவினை நேர் விழி மாதரை மேவிய ஏதனை மூடனை நெறி பேணா
ஈனனை வீணனை ஏடு எழுதா முழு ஏழையை மோழையை அகலா நீள்
மா வினை மூடிய நோய் பிணியாளனை வாய்மை இலாதனை இகழாதே
மா மணி நூபுர சீதள தாள் தனி வாழ்வுற ஈவதும் ஒரு நாளே
நாவலர் பாடிய நூல் இசையால் வரு நாரதனார் புகல் குற மாதை
நாடியே கானிடை கூடிய சேவக நாயக மா மயில் உடையோனே
தேவி மநோமணி ஆயி பராபரை தேன் மொழியாள் தரு சிறியோனே
சேண் உயர் சோலையின் நீழலிலே திகழ் சீரலை வாய் வரு பெருமாளே

மேல்

#37
ஓராது ஒன்றை பாராது அந்தத்தோடே வந்திட்டு உயிர் சோர
ஊடா நன்று அற்றார் போல் நின்று எட்டா மால் தந்திட்டு உழல் மாதர்
கூரா அன்பில் சோரா நின்று அக்கு ஓயா நின்று உள் குலையாதே
கோடு ஆர் செம்பொன் தோளா நின் சொல் கோடாது என் கைக்கு அருள்தாராய்
தோரா வென்றி போரா மன்றல் தோளா குன்றை தொளை ஆடீ
சூதாய் எண் திக்கு ஏயா வஞ்ச சூர் மா அஞ்ச பொரும் வேலா
சீர் ஆர் கொன்றை தார் மார்பு ஒன்ற சே ஏறு எந்தைக்கு இனியோனே
தேனே அன்பர்க்கே ஆம் இன் சொல் சேயே செந்தில் பெருமாளே

மேல்

#38
கட்டழகு விட்டு தளர்ந்து அங்கிருந்து முனம் இட்ட பொறி தப்பி பிணம் கொண்டதின் சிலர்கள்
கட்டணம் எடுத்து சுமந்தும் பெரும் பறைகள் முறையோடே
வெட்டவிட வெட்ட கிடஞ்சம் கிடஞ்சம் என மக்கள் ஒருமிக்க தொடர்ந்தும் புரண்டும் வழி
விட்டு வரும் இத்தை தவிர்ந்து உன் பதங்கள் உற உணர்வேனோ
பட்டு உருவி நெட்டை க்ரவுஞ்சம் பிளந்து கடல் முற்றும் அலை வற்றி குழம்பும் குழம்ப முனை
பட்ட அயில் தொட்டு திடம் கொண்டு எதிர்ந்த அவுணர் முடி சாய
தட்டு அழிய வெட்டி கவந்தம் பெரும் கழுகு நிர்த்தம் இட ரத்த குளம் கண்டு உமிழ்ந்து மணி
சற்சமய வித்தை பலன் கண்டு செந்தில் உறை பெருமாளே

மேல்

#39
கண்டு மொழி கொம்பு கொங்கை வஞ்சி இடை அம்பு நஞ்சு கண்கள் குழல் கொண்டல் என்று பலகாலும்
கண்டு உளம் வருந்தி நொந்து மங்கையர் வசம் புரிந்து கங்குல் பகல் என்று நின்று விதியாலே
பண்டை வினை கொண்டு உழன்று வெந்து விழுகின்றல் கண்டு பங்கய பதங்கள் தந்து புகழ் ஓதும்
பண்புடைய சிந்தை அன்பர்தங்களில் உடன் கலந்து பண்பு பெற அஞ்சல்அஞ்சல் என வாராய்
வண்டு படுகின்ற தொங்கல் கொண்டு உற நெருங்கி இண்டு வம்பினை அடைந்து சந்தின் மிக மூழ்கி
வஞ்சியை முனிந்த கொங்கை மென் குற மடந்தை செம் கை வந்து அழகுடன் கலந்த மணி மார்பா
திண் திறல் புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு செம் சமர் புனைந்து துங்க மயில் மீதே
சென்று அசுரர் அஞ்ச வென்று குன்றிடை மணம் புணர்ந்து செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே

மேல்

#40
கமல மாதுடன் இந்திரையும் சரி சொலவொணாத மடந்தையர் சந்தன
களப சீதள கொங்கையில் அங்கையில் இரு போது ஏய்
களவு நூல் தெரி வஞ்சனை அஞ்சன விழியின் மோகித கந்த சுகம் தரு
கரிய ஓதியில் இந்து முகம்தனில் மருளாதே
அமலம் ஆகிய சிந்தை அடைந்து அகல் தொலைவு இலாத அறம் பொருள் இன்பமும்
அடைய ஓதி உணர்ந்து தணந்த பின் அருள் தானே
அறியும் ஆறு பெறும்படி அன்பினின் இனிய நாத சிலம்பு புலம்பிடும்
அருண ஆடக கிண்கிணி தங்கிய அடி தாராய்
குமரி காளி பயங்கரி சங்கரி கவுரி நீலி பரம்பரை அம்பிகை
குடிலை யோகினி சண்டினி குண்டலி எமது ஆயி
குறைவிலாள் உமை மந்தரி அந்தரி வெகு வித ஆகம சுந்தரி தந்து அருள்
குமர மூஷிகம் உந்திய ஐங்கர கண ராயன்
மம விநாயகன் நஞ்சு உமிழ் கஞ்சுகி அணி கஜானன விம்பன் ஒர் அம்புலி
மவுலியான் உறு சிந்தை உகந்து அருள் இளையோனே
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல
மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை பெருமாளே

மேல்

#41
கரி கொம்பம் தனி தங்கம் குடத்து இன்பம் தனத்தின்கண்
கறுப்பும் தன் சிவப்பும் செம் பொறி தோள் சேர்
கணைக்கும் பண்டு உழைக்கும் பங்கு அளிக்கும் பண்பு ஒழிக்கும்
கண் கழுத்தும் சங்கு ஒளிக்கும் பொன் குழை ஆட
சர குஞ்சம் புடைக்கும் பொன் துகில் தந்தம் தரிக்கும் தன்
சடத்தும் பண் பிலுக்கும் சம்பள மாதர்
சலித்தும் பின் சிரித்தும் கொண்டு அழைத்தும் சண் பசப்பும் பெண்
தன துன்பம் தவிப்புண்டு இங்கு உழல்வேனோ
சுரர் சங்கம் துதித்து அந்த அஞ்சு எழுத்து இன்பம் களித்து உண் பண்
சுகம் துய்ந்து இன்பு அலர் சிந்த அங்கு அசுராரை
துவைத்தும் பந்து அடித்தும் சங்கு ஒலித்தும் குன்று இடித்தும் பண்
சுகித்தும் கண் களிப்பு கொண்டிடும் வேலா
சிர பண்பும் கர பண்பும் கடப்பம் தொங்கலில் பண்பும்
சிவ பண்பும் தவ பண்பும் தருவோனே
தினை தொந்தம் குற பெண் பண் சசி பெண் கொங்கையில் துஞ்சும்
செழிக்கும் செந்திலில் தங்கும் பெருமாளே

மேல்

#42
கருப்பம் தங்கு இரத்தம் பொங்கு அரைப்புண் கொண்டு உருக்கும் பெண்களை
கண்டு அங்கு அவர் பின் சென்று அவரோடே
கலப்பு உண்டும் சிலுப்பு உண்டும் துவக்கு உண்டும் பிணக்கு உண்டும்
கலப்பு உண்டும் சலிப்பு உண்டும் தடுமாறி
செரு தண்டம் தரித்து அண்டம் புக தண்டு அந்தகற்கு என்றும்
திகைத்து அம் செகத்து அஞ்சும் கொடு மாயும்
தியக்கம் கண்டு உய கொண்டு என் பிறப்பு பங்கம் சிறை பங்கம்
சிதைத்து உன்றன் பதத்து இன்பம் தருவாயே
அருக்கன் சஞ்சரிக்கும் தெண் திரைக்கண் சென்று அரக்கன் பண்பு
அனைத்தும் பொன்றிட கன்றும் கதிர் வேலா
அணி சங்கம் கொழிக்கும் தண்டு அலை பண்பு எண் திசைக்கும் கொந்தளிக்கும்
செந்திலில் தங்கும் குமரேசா
புரக்கும் சங்கரிக்கும் சங்கரர்க்கும் சங்கரர்க்கு இன்பம்
புதுக்கும் கங்கையட்கும் சுதன் ஆனாய்
புன குன்றம் திளைக்கும் செந்தினை பைம்பொன் குற கொம்பின்
புற தண் கொங்கையில் துஞ்சும் பெருமாளே

மேல்

#43
களபம் ஒழுகிய புளகித முலையினர் கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்
கழுவு சரி புழுகு ஒழுகிய குழலினர் எவரோடும்
கலகம் இடு கயல் எறி குழை விரகியர் பொருள் இல் இளைஞரை வழி கொடு மொழி கொடு
தளர விடுபவர் தெருவினில் எவரையும் நகை ஆடி
பிளவுபெறில் அதில் அளவுஅளவு ஒழுகியர் நடையில் உடையினில் அழகொடு திரிபவர்
பெருகு பொருள் பெறில் அமளியில் இதமொடு குழைவோடே
பிணமும் அணைபவர் வெறி தரு புனல் உணும் அவச வனிதையர் முடுகொடும் அணைபவர்
பெருமை உடையவர் உறவினை விட அருள்புரிவாயே
அளையில் உறை புலி பெறும் மகவு அயில்தரு பசுவின் நிரை முலை அமுது உண நிரை மகள்
வசவனொடு புலி முலை உண மலையுடன் உருகா நீள்
அடவிதனில் உள உலவைகள் தளிர்விட மருள மதமொடு களிறுகள் பிடியுடன்
அகல வெளி உயிர் பறவைகள் நிலம் வர விரல் சேர் ஏழ்
தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய இசைகள் பலபல தொனி தரு கரு முகில்
சுருதி உடையவன் நெடியவன் மனம் மகிழ் மருகோனே
துணைவ குண தர சரவணபவ நம முருக குருபர வளர் அறுமுக குக
துறையில் அலை எறி திரு நகர் உறை தரு பெருமாளே

மேல்

#44
கனங்கள் கொண்ட குந்தளங்களும் குலைந்து அலைந்து விஞ்சும் கண்கள் சிவந்து அயர்ந்து களிகூர
கரங்களும் குவிந்து நெஞ்சகங்களும் கசிந்திடும் கறங்கும் பெண்களும் பிறந்து விலை கூறி
பொனின் குடங்கள் அஞ்சு மென் தனங்களும் புயங்களும் பொருந்தி அன்பு நண்பு பண்பும் உடனாக
புணர்ந்து உடன் புலர்ந்து பின்பு கலந்து அகம் குழைந்து அவம் புரிந்து சந்ததம் திரிந்து படுவேனோ
அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண் திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா
அடர்ந்துஅடர்ந்து எதிர்ந்து வந்த வஞ்சர் அஞ்ச வெம் சமம்புரிந்த அன்பர் இன்ப நண்ப உரவோனே
சினங்கள் கொண்டு இலங்கை மன் சிரங்கள் சிந்த வெம் சரம் தெரிந்தவன் பரிந்த இன்ப மருகோனே
சிவந்த செம் சதங்கையும் சிலம்பு தண்டையும் புனைந்து செந்தில் வந்த கந்த எங்கள் பெருமாளே

மேல்

#45
கன்றில் உறு மானை வென்ற விழியாலே கஞ்ச முகை மேவும் முலையாலே
கங்குல் செறி கேச மங்குல் குலையாமை கந்த மலர் சூடும் அதனாலே
நன்று பொருள் தீர வென்று விலை பேசி நம்பவிடு மாதருடன் ஆடி
நஞ்சு புசி தேரை அங்கம் அதுவாக நைந்து விடுவேனை அருள் பாராய்
குன்றிமணி போல்வ செம் கண் வரி போகி கொண்ட படம் வீசு மணி கூர் வாய்
கொண்ட மயில் ஏறி அன்று அசுரர் சேனை கொன்ற குமரேச குருநாதா
மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ
மந்தி நடமாடும் செந்தி நகர் மேவு மைந்த அமரேசர் பெருமாளே

மேல்

#46
காலனார் வெம் கொடும் தூதர் பாசம்கொடு என் காலில் ஆர்தந்து உடன் கொடு போக
காதல் ஆர் மைந்தரும் தாயராரும் சுடும் கானமே பின் தொடர்ந்து அலறா முன்
சூலம் வாள் தண்டு செம் சேவல் கோதண்டமும் சூடு தோளும் தடம் திரு மார்பும்
தூய தாள் தண்டையும் காண ஆர்வம் செயும் தோகை மேல் கொண்டு முன் வரவேணும்
ஆலகாலம் பரன் பாலதாக அஞ்சிடும் தேவர் வாழ அன்று உகந்து அமுது ஈயும்
ஆரவாரம் செயும் வேலை மேல் கண் வளர்ந்த ஆதி மாயன் தன் நல் மருகோனே
சாலி சேர் சங்கினம் வாவி சூழ் பங்கயம் சாரல் ஆர் செந்தில் அம் பதி வாழ்வே
தாவு சூர் அஞ்சி முன் சாய வேகம்பெறும் தாரை வேல் உந்திடும் பெருமாளே

மேல்

#47
குகரம் மேவு மெய் துறவினின் மறவா கும்பிட்டு உந்தி தடம் மூழ்கி
குமுத வாயில் முற்று அமுதினை நுகரா கொண்ட கொண்டை குழலாரோடு
அகரு தூளி கர்ப்புர தன இரு கோட்டு அன்புற்று இன்ப கடலூடே
அமிழுவேனை மெத்தென ஒரு கரை சேர்த்து அம் பொன் தண்டை கழல் தாராய்
ககன கோளகைக்கு அண இரும் அளவா கங்கை துங்க புனலாடும்
கமலவதனற்கு அளவிட முடியா கம்பர்க்கு ஒன்றை புகல்வோனே
சிகர கோபுரத்தினும் மதிளினும் மேல் செம்பொன் கம்ப தளம் மீதும்
தெருவிலேயும் நித்தலம் எறி அலை வாய் செந்தில் கந்த பெருமாளே

மேல்

#48
குடர் நிணம் என்பு சலம் மலம் அண்டு குருதி நரம்பு சீ ஊன் பொதி தோல்
குலவு குரம்பை முருடு சுமந்து குனகி மகிழ்ந்து நாயேன் தளரா
அடர் மதன் அம்பை அனைய கரும் கண் அரிவையர் தங்கள் தோள் தோய்ந்து அயரா
அறிவு அழிகின்ற குணம் அற உன்றன் அடி இணை தந்து நீ ஆண்டு அருள்வாய்
தடவு இயல் செந்தில் இறையவ நண்பு தரு குற மங்கை வாழ்வு ஆம் புயனே
சரவண கந்த முருக கடம்ப தனி மயில் கொண்டு பார் சூழ்ந்தவனே
சுடர் படர் குன்று தொளை பட அண்டர் தொழ ஒரு செம் கை வேல் வாங்கியவா
துரித பதங்க இரத ப்ரசண்ட சொரி கடல் நின்ற சூர அந்தகனே

மேல்

#49
குழைக்கும் சந்தன செம் குங்குமத்தின் சந்த நல் குன்றம்
குலுக்கும் பைங்கொடிக்கு என்று இங்கு இயலாலே
குழைக்கும் குண் குமிழ்க்கும் சென்று உரைக்கும் செம் கயல் கண் கொண்டு
அழைக்கும் பண் தழைக்கும் சிங்கியராலே
உழைக்கும் சங்கட துன்பன் சுக பண்டம் சுகித்து உண்டுஉண்டு
உடல் பிண்டம் பருத்து இன்று இங்கு உழலாதே
உதிக்கும் செம் கதிர் சிந்தும் ப்ரபைக்கு ஒன்றும் சிவக்கும் தண்டை
உயர்க்கும் கிண்கிணி செம் பஞ்சு அடி சேராய்
தழைக்கும் கொன்றையை செம்பொன் சடைக்கு அண்ட அங்கியை தங்கும்
தரத்த செம் புயத்து ஒன்றும் பெருமானார்
தனி பங்கின் புறத்தில் செம் பரத்தின் பங்கயத்தில் சஞ்சரிக்கும்
சங்கரிக்கு என்றும் பெருவாழ்வே
கழைக்கும் குஞ்சர கொம்பும் கலை கொம்பும் கதித்து என்றும்
கயல் கண் பண்பு அளிக்கும் புய வேளே
கறுக்கும் கொண்டலில் பொங்கும் கடல் சங்கம் கொழிக்கும் செந்திலில்
கொண்டு அன்பினில் தங்கும் பெருமாளே

மேல்

#50
கொங்கைகள் குலுங்க வளை செம் கையில் விளங்க இருள் கொண்டலை அடைந்த குழல் வண்டு பாட
கொஞ்சிய வன அம் குயில்கள் பஞ்ச நல் வனம் கிளிகள் கொஞ்சியது எனும் குரல்கள் கெந்து பாயும்
வெம் கயல் மிரண்ட விழி அம்புலி அடைந்த நுதல் விஞ்சையர்கள் தங்கள் மயல் கொண்டு மேலாய்
வெம் பிணி உழன்ற பவ சிந்தனை நினைந்து உனது மின் சரண பைங்கழலொடு அண்ட ஆளாய்
சங்க முரசம் திமிலை துந்துமி ததும்பு வளை தந்தன தனந்த என வந்த சூரர்
சங்கை கெட மண்டி திகை எங்கிலும் மடிந்து விழ தண் கடல் கொளுந்த நகை கொண்ட வேலா
சங்கரன் உகந்த பரிவின் குரு எனும் சுருதி தங்களின் மகிழ்ந்து உருகும் எங்கள் கோவே
சந்திர முகம் செயல் கொள் சுந்தர குறம் பெணொடு சம்பு புகழ் செந்தில் மகிழ் தம்பிரானே

மேல்

#51
கொங்கை பணையில் செம்பொன் செறிவில் கொண்டல் குழலில் கொடிதான
கொன் தை கணை ஒப்ப அந்த கயலில் கொஞ்சு கிளி உற்று உறவான
சங்க தொனியில் சென்று இல் கடையில் சந்திப்பவரை சருவாதே
சந்த படி உற்று என்றன் தலையில் சந்தம் பதம் வைத்து அருள்வாயே
அங்கு அ படை விட்டு அன்றை படுகைக்கு அந்தி கடலில் கடிது ஓடா
அந்த பொழிலில் சந்து தலையுற்று அஞ்ச பொருதுற்று ஒழியாதே
செம் கை கதிருற்று ஒன்றி அ கடலில் சென்று உற்றவர் தற்பொருள் ஆனாய்
சிந்தை கனிவை தந்து அ பொழிலில் செந்தில் குமர பெருமாளே

மேல்

#52
கொடி அனைய இடை துவள அங்கமும் பொங்க அம் குமுத அமுது இதழ் பருகி இன்புறும் சங்கையன்
குலவி இணை முகில் அளகமும் சரிந்து அன்பினின் பண்பு உலாவ
கொடிய விரல் நக நுதியில் புண்படும் சஞ்சலன் குனகி அவருடன் இனிது சம்ப்ரமம் கொண்டு உளம்
குரல் அழிய அவசமுறு குங்குணன் கொங்கு அவிழ்ந்து ஒன்று பாய் மேல்
விடம் அனைய விழி மகளிர் கொங்கை இன்புறும் வினையன் இயல் பரவும் உயிர் வெந்து அழிந்து அங்கமும்
இதம் ஒழிய அறிவில் நெறி பண்பில் அண்டும் சகன் செஞ்சி நீடும்
வெகு கனக ஒளி குலவும் அந்த மன் செந்தில் என்று அவிழ உளம் உருகி வரும் அன்பிலன் தந்து இலன்
விரவும் இரு சிறு கமல பங்கயம் தந்து உகந்து அன்புறாதோ
படம் இலகும் அரவின் உடல் அங்கமும் பங்கிடந்து உதறும் ஒரு கலபி மிசை வந்து எழுந்து அண்டர்தம்
படை அசுரர் அனைவர் உடல் சந்துசந்து உங்கு அதம் சிந்தும் வேலா
படியவரும் இமையவரும் நின்று இறைஞ்சும் எண் குணன் பழைய இறை உருவம் இலி அன்பர் பங்கன் பெரும்
பருவரல் செய் புரம் எரிய விண்டிடும் செம் கணன் கங்கை மான் வாழ்
சடிலம் மிசை அழகு புனை கொன்றையும் பண்பு உறும் தருண மதியின் குறை செய் துண்டமும் செம் கை ஒண்
சகல புவனமும் ஒழி கதம் அங்கு உற அங்கியும் பொங்கி நீடும்
சடம் மருவு விடை அரவர் துங்க அம் பங்கில் நின்று உலகு தரு கவுரி உமை கொங்கை தந்து அன்புறும்
தமிழ் விரக உயர் பரம சங்கரன் கும்பிடும் தம்பிரானே

மேல்

#53
கொம்பு அனையார் காது மோது இரு கண்களில் ஆமோத சீதள குங்கும பாடீர பூஷண நகம் மேவு
கொங்கையில் நீராவி மேல் வளர் செங்கழுநீர் மாலை சூடிய கொண்டையில் ஆதாரம் சோபையில் மருளாதே
உம்பர்கள் ஸ்வாமி நமோ நம எம்பெருமானே நமோ நம ஒண் தொடி மோகா நமோ நம என நாளும்
உன் புகழே பாடி நான் இனி அன்புடன் ஆசார பூசை செய்து உய்ந்திட வீழ் நாள் படாது அருள்புரிவாயே
பம்பரமே போல ஆடிய சங்கரி வேதாள நாயகி பங்கய சீ பாத நூபுரி கர சூலி
பங்கம் இலா நீலி மோடி பயங்கரி மா காளி யோகினி பண்டு சுரா பான சூரனொடு எதிர் போர் கண்டு
எம் புதல்வா வாழி வாழியே எனும்படி வீறு ஆன வேல் தர என்றும் உளானே மநோகர வயலூரா
இன் சொல் விசாகா க்ருபாகர செந்திலில் வாழ்வாகியே அடியேன்தனை ஈடேற வாழ்வு அருள் பெருமாளே

மேல்

#54
கொலை மத கரி அன ம்ருமகத தன கிரி கும்ப தன மானார்
குமுத அமுத இதழ் பருகி உருகி மயல் கொண்டு உற்றிடு நாயேன்
நிலை அழி கவலைகள் கெட உனது அருள் விழி நின்று உற்றிடவே தான்
நின திருவடி மலர் இணை மனதினில் உற நின் பற்று அடைவேனோ
சிலை என வடமலை உடையவர் அருளிய செம் சொல் சிறு பாலா
திரை கடலிடை வரும் அசுரனை வதை செய்த செந்தில் பதி வேலா
விலை நிகர் நுதல் இப மயில் குறமகளும் விரும்பி புணர்வோனே
விருது அணி மரகத மயில் வரு குமர விடங்க பெருமாளே

மேல்

#55
சங்கு போல் மென் கழுத்து அந்த வாய் தந்த பல் சந்த மோக இன்ப முத்து என வானில்
தங்கு கார் பைம் குழல் கொங்கை நீள் தண் பொருப்பு என்று தாழ்வு ஒன்று அறுத்து உலகோரை
துங்க வேள் செம் கை பொன் கொண்டல் நீ என்று சொல் கொண்டு தாய் நின்று உரைத்து உழலாதே
துன்ப நோய் சிந்த நல் கந்த வேள் என்று உனை தொண்டினால் ஒன்று உரைக்க அருள்வாயே
வெம் கண் வ்யாளம் கொதித்து எங்கும் வேம் என்று எடுத்து உண்டு மேல் அண்டருக்கு அமுதாக
விண்ட நாதன் திரு கொண்டல் பாகன் செருக்கு உண்டு பேர் அம்பலத்தினில் ஆடி
செம் கண் மால் பங்கய கயல் கண் பெறாது அந்தரத்தின்கண் ஆடும் திறல் கதிர் ஆழி
திங்கள் வாழும் சடை தம்பிரான் அன்புற செந்தில் வாழ் செந்தமிழ் பெருமாளே

மேல்

#56
சங்கை தான் ஒன்று தான் இன்றியே நெஞ்சிலே சஞ்சலாரம்ப மாயன்
சந்தொடே குங்கும அலங்க்ருத ஆடம்பர சம்ப்ரமாநந்த மாயன்
மங்கைமார் கொங்கை சேர் அங்க மோகங்களால் வம்பிலே துன்புறாமே
வண் குகா நின் சொரூபம் ப்ரகாசம் கொடே வந்து நீ அன்பில் ஆள்வாய்
கங்கை சூடும் பிரான் மைந்தனே அந்தனே கந்தனே விஞ்சை ஊரா
கம்பியாது இந்த்ரலோகங்கள் கா என்ற வா ஆகண்டலேசன் சொல் வீரா
செம் கை வேல் வென்றி வேல் கொண்டு சூர் பொன்றவே சென்று மோதும் ப்ரதாபா
செம் கண் மால் பங்கஜானன் தொழு ஆநந்த வேள் செந்தில் வாழ் தம்பிரானே

மேல்

#57
சத்தம் மிகு ஏழு கடலை தேனை உற்று மது தோடு கணையை போர் கொள்
சத்திதனை மாவின் வடுவை காவிதனை மீறு
தக்க மணம் வீசு கமல பூவை மிக்க விளைவான கடுவை சீறு
உதத்து உகளும் வாளை அடும் மை பாவு விழி மாதர்
மத்த கிரி போலும் ஒளிர் வித்தார முத்து வடம் மேவும் எழில் மிக்கான
வச்சிர கிரீட நிகர் செப்பான தனம் மீதே
வைத்த கொடிதான மயல் விட்டு ஆன பத்தி செய ஏழை அடிமைக்காக
வஜ்ர மயில் மீதினில் எப்போது வருவாயே
சித்ர வடி வேல் பனிரு கைக்கார பத்தி புரிவோர்கள் பனுவல்கார
திக்கினும் நடாவு புரவிக்கார குற மாது
சித்த அநுராக கலவிக்கார துட்ட அசுரேசர் கலகக்கார
சிட்டர் பரிபால லளிதக்கார அடியார்கள்
முத்தி பெறவே சொல் வசனக்கார தத்தை நிகர் தூய வநிதைக்கார
முச்சகர் பராவு சரணக்கார இனிதான
முத்தமிழை ஆயும் வரிசைக்கார பச்சை முகில் தாவும் புரிசைக்கார
முத்து உலவு வேலை நகர் முத்தேவர் பெருமாளே

மேல்

#58
சந்தன சவாது நிறை கற்பூர குங்கும படீர விரை கத்தூரி
தண் புழுகு அளாவு களப சீத வெகு வாச
சண்பக கலாரம் வகுள தாம வம்பு துகில் ஆர வயிர கோவை
தங்கிய கடோர தர வித்தார பரிதான
மந்தரம் அது ஆன தன மிக்கு ஆசை கொண்டு பொருள் தேடும் அதி நிட்டூர
வஞ்சக விசார இதய பூவை அனையார்கள்
வந்தியிடும் மாய விரக பார்வை அம்பில் உளம் வாடும் அறிவற்றேனை
வந்து அடிமை ஆள இனி எப்போது நினைவாயே
இந்த்ரபுரி காவல் முதன்மைக்கார சம்ப்ரம மயூர துரகக்கார
என்றும் அகலாத இளமைக்கார குற மாதின்
இன்ப அநுபோக சரசக்கார வந்த அசுரேசர் கலகக்கார
எங்கள் உமை சேய் என அருமைக்கார மிகு பாவின்
செந்தமிழ் சொல் நாலு கவிதைக்கார குன்று எறியும் வேலின் வலிமைக்கார
செம் சொல் அடியார்கள் எளிமைக்கார எழில் மேவும்
திங்கள் முடி நாதர் சமயக்கார மந்த்ர உபதேச மகிமைக்கார
செந்தில் நகர் வாழும் அருமை தேவர் பெருமாளே

மேல்

#59
சேம கோமள பாத தாமரை சேர்தற்கு ஓதும் அனந்த வேத
அதீதத்தே அவிரோதத்தே குண சீலத்தே மிக அன்பு உறாதே
காம க்ரோத உலோப பூத விகாரத்தே அழிகின்ற மாயா
காயத்தே பசு பாசத்தே சிலர் காமுற்று ஏயும் அது என்கொலோ தான்
நேமி சூரொடு மேரு தூள் எழ நீள காள புயங்க கால
நீல க்ரீப கலாப தேர் விடு நீப சேவக செந்தில் வாழ்வே
ஓம தீ வழுவார்கட்கு ஊர் சிவலோகத்தே தரு மங்கை பாலா
யோகத்து ஆறு உபதேச தேசிக ஊமை தேவர்கள் தம்பிரானே

மேல்

#60
தகர நறை பூண்ட விந்தை குழலியர்கள் தேய்ந்த இன்ப தளரும் இடை ஏந்து தங்க தன மானார்
தமை மனதில் வாஞ்சை பொங்க கலவியொடு சேர்ந்து மந்த்ர சமய ஜெப நீங்கி இந்தப்படி நாளும்
புகல் அரியதாம் த்ரி சங்க தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சி புவி அதனில் வாழ்ந்து வஞ்சித்து உழல் மூடர்
புநிதமிலி மாந்தர் தங்கள் புகழ் பகர்தல் நீங்கி நின் பொன் புளக மலர் பூண்டு வந்தித்திடுவேனோ
தகுடதகு தாந்த தந்த திகுடதிகு தீந்த மிந்தி தகுகணக தாங்க ணங்க தனதான
தனனதன தாந்த னந்தத்தென நடனம் ஆர்ந்த துங்க தனி மயிலை ஊர்ந்த சந்த திரு மார்பா
திசை அசுரர் மாண்டு அழுந்த திறல் அயிலை வாங்கு செம் கை சிமைய வரை ஈன்ற மங்கைக்கு ஒரு பாலா
திகழ் வயிரம் ஏந்து கொங்கை குற வனிதை காத்த சந்த்ர சிகர முகில் ஓங்கு செந்தில் பெருமாளே

மேல்

#61
தண் தேன் உண்டே வண்டு ஆர்வம் சேர் தண் தார் மஞ்சு குழல் மானார்
தம்பால் அன்பால் நெஞ்சே கொண்டே சம்பாவம் சொல் அடி நாயேன்
மண் தோயம் தீ மென் கால் விண் தோய் வண் காயம் பொய் குடில் வேறாய்
வன் கானம் போய் அண்டா முன்பே வந்தே நின் பொன் கழல் தாராய்
கொண்டாடும் பேர் கொண்டாடும் சூர் கொன்றாய் வென்றி குமரேசா
கொங்கு ஆர் வண்டார் பண்பாடும் சீர் குன்றா மன்றல் கிரியோனே
கண்டு ஆகும் பால் உண்டாய் அண்டர் கண்டா கந்த புய வேளே
கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா கந்தா செந்தில் பெருமாளே

மேல்

#62
தண்டை அணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும் தண் சிலம்புடன் கொஞ்சவே நின்
தந்தையினை முன்பரிந்து இன் பவுரிகொண்டு நல் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போல
கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும் கஞ்ச மலர் செம் கையும் சிந்து வேலும்
கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் கண் குளிர என்தன் முன் சந்தியாவோ
புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும் பொங்கி எழ வெம் களம் கொண்டபோது
பொன் கிரி என சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூர
கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்தன் முன் கொஞ்சி நடனம் கொளும் கந்த வேளே
கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும் கும்ப முநி கும்பிடும் தம்பிரானே

மேல்

#63
தந்த பசிதனை அறிந்து முலை அமுது தந்து முதுகு தடவிய தாயார்
தம்பி பணிவிடை செய் தொண்டர் பிரியம் உள தங்கை மருகர் உயிரே எனவே சார்
மைந்தர் மனைவியர் கடும்பு கடன் உதவும் அந்த வரிசை மொழி பகர் கேடா
வந்து தலை நவிர் அவிழ்ந்து தரை புக மயங்க ஒரு மகிடம் மிசை ஏறி
அந்தகனும் எனை அடர்ந்து வருகையினில் அஞ்சல் என வலிய மயில் மேல் நீ
அந்த மறலியொடு உகந்த மனிதன் நமது அன்பன் என மொழிய வருவாயே
சிந்தை மகிழ மலை மங்கை நகில் இணைகள் சிந்து பயம் அயிலும் மயில் வீரா
திங்கள் அரவு நதி துன்று சடிலர் அருள் செந்தி நகரில் உறை பெருமாளே

மேல்

#64
தரிக்கும் கலை நெகிழ்க்கும் பரதவிக்கும் கொடி மதன் ஏ வில்
தகைக்கும் தனி திகைக்கும் சிறு தமிழ் தென்றலினுடனே நின்று
எரிக்கும் பிறை என புண்படும் என புன் கவி சில பாடி
இருக்கும் சிலர் திரு செந்திலை உரைத்து உய்ந்திட அறியாரே
அரிக்கும் சதுர்மறைக்கும் பிரமனுக்கும் தெரி அரிதான
அடி செம் சடை முடி கொண்டிடும் அரற்கும் புரி தவ பார
கிரி கும்ப நல் முநிக்கும் க்ருபை வரிக்கும் குருபர வாழ்வே
கிளைக்கும் திறல் அரக்கன் கிளை கெட கன்றிய பெருமாளே

மேல்

#65
துன்பம் கொண்டு அங்கம் மெலிந்து அற நொந்து அன்பும் பண்பும் மறந்து ஒளி
துஞ்சும் பெண் சஞ்சலம் என்பதில் அணுகாதே
இன்பம் தந்து உம்பர் தொழும் பத கஞ்சம் தம் தஞ்சம் எனும்படி
என்றென்றும் தொண்டு செயும்படி அருள்வாயே
நின் பங்கு ஒன்றும் குற மின் சரணம் கண்டு தஞ்சம் எனும்படி
நின்று அன்பின் தன்படி கும்பிடும் இளையோனே
பைம்பொன் சிந்தின் துறை தங்கிய குன்று எங்கும் சங்கு வலம்புரி
பம்பும் தென் செந்திலில் வந்து அருள் பெருமாளே

மேல்

#66
தெருப்புறத்து துவக்கியாய் முலைக்கு வட்டை குலுக்கியாய் சிரித்து உருக்கி தருக்கியே பண்டை கூளம் என வாழ்
சிறுக்கி இரட்சைக்கு இதக்கியாய் மனத்தை வைத்து கனத்த பேர் தியக்கமுற்று தவிக்கவே கண்டு பேசி உடனே
இருப்பு அகத்து தளத்து மேல் விளக்கு எடுத்து படுத்து மேல் இருத்தி வைத்து பசப்பியே கொண்டு காசு தணியாது
இதுக்கு அதுக்கு கடப்படாம் என கை கக்க கழற்றியே இளைக்க விட்டு துரத்துவார்தங்கள் சேர்வை தவிராய்
பொருப்பை ஒக்க பணைத்தது ஓர் இரட்டி பத்து புயத்தினால் பொறுத்த பத்து சிரத்தினால் மண்டு கோபமுடனே
பொர பொருப்பில் கதித்த போர் அரக்கர் பட்டு பதைக்கவே புடைத்து முட்ட துணித்த மால் அன்புகூரு மருகா
வரப்பை எட்டி குதித்து மேல் இடத்தில் வட்ட தளத்திலே மதர்த்த முத்தை குவட்டியே நின்று சேல் இனம் வாழ்
வயல்புறத்து புவிக்குள் நீள் திருத்தணிக்குள் சிறப்பில் வாழ் வயத்த நித்த துவத்தனே செந்தில் மேவு குகனே

மேல்

#67
தொடர் இயமன் போல் துங்க படையை வளைந்து ஓட்டும்
துட்டரை இளகும் தோள் கொங்கைக்கு இடு மாய
துகில் விழவும் சேர்த்து அங்கத்து உளை விரகும் சூழ்த்து அண்டி
துயர் விளையும் சூட்டு இன்பத்தொடு பாயற்கு
இடை கொடு சென்று ஈட்டும் பொன் பணியரை மென்று ஏற்றம் கற்றனை
இன்று ஓட்டென்று அற்கிடு மாதர்க்கு
இனிமையில் ஒன்றாய் சென்று உட்படும் மனம் உன் தாட்கு அன்புற்று
இயல் இசை கொண்டு ஏத்து என்று உள் தருவாயே
நெடிது தவம் கூர்க்கும் சத்புருடரும் நைந்து ஏக்கம் பெற்று அயருற
நின்று ஆர்த்து தங்கள் கணை ஏவும்
நிகரில் மதன் தேர் குன்று அற்று எரியில் விழுந்து ஏர் பொன்ற சிறிது
நினைந்து ஆட்டம் கற்றிடுவார் முன்
திடமுறு அன்பால் சிந்தைக்கு அறிவிடமும் சேர்த்து உம்பர்க்கு
இடர் களையும் போர் செம் கை திறல் வேலா
தின வரி வண்டு ஆர்த்து இன்புற்று இசை கொடு வந்து ஏத்தி இஞ்சி
திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே

மேல்

#68
தொந்தி சரிய மயிரே வெளிற நிரை தந்தம் அசைய முதுகே வளைய இதழ்
தொங்க ஒரு கை தடி மேல் வர மகளிர் நகையாடி
தொண்டு கிழவன் இவன் ஆர் என இருமல் கிண்கிண் என முன் உரையே குழற விழி
துஞ்சு குருடு படவே செவிடு படு செவியாகி
வந்த பிணியும் அதிலே மிடையும் ஒரு பண்டிதனுமே உறு வேதனையும் இள
மைந்தர் உடைமை கடன் ஏது என முடுகி துயர் மேவி
மங்கை அழுது விழவே யம படர்கள் நின்று சருவ மலமே ஒழுக உயிர்
மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வர வேணும்
எந்தை வருக ரகுநாயக வருக மைந்த வருக மகனே இனி வருக
என் கண் வருக எனது ஆருயிர் வருக அபிராம
இங்கு வருக அரசே வருக முலை உண்க வருக மலர் சூடிட வருக
என்று பரிவினொடு கோசலை புகல வரு மாயன்
சிந்தை மகிழும் மருகா குறவர் இள வஞ்சி மருவும் அழகா அமரர் சிறை
சிந்த அசுரர் கிளை வேரொடு அழிய அடு தீர
திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர அலையே கரை பொருத
செந்தில் நகரில் இனிதே மருவி வளர் பெருமாளே

மேல்

#69
தோலோடு மூடிய கூரையை நம்பி பாவையர் தோதக லீலை நிரம்பி
சூழ் பொருள் தேடிட ஓடி வருந்தி புதிதான
தூதொடு நான்மணிமாலை ப்ரபந்த கோவை உலா மடல் கூறி அழுந்தி
தோம் உறு காளையர் வாசல் புக்கு அலமாரும்
காலனை வீணனை நீதி கொடும் பொய் கோளனை மானம் இலா வழி நெஞ்ச
காதக லோப வ்ருதாவனை நிந்தை புலையேனை
காரண காரிய லோக ப்ரபஞ்ச சோகம் எலாம் அற வாழ்வுற நம்பி
காசு அற வாரி மெய் ஞான தவம் சற்று அருளாதோ
பால் அனம் மீது மன் நான்முக செம்பொன் பாலனை மோது அபராதன பண்டு அ
பாரிய மாருதி தோள் மிசை கொண்டு உற்று அமராடி
பாவி இராவணனார் தலை சிந்தி சீரிய வீடணர் வாழ்வுற மன்றல்
பாவையர் தோள் புணர் மாதுலர் சிந்தைக்கு இனியோனே
சீலம் உலாவிய நாரதர் வந்துற்று ஈது அவள் வாழ் புனமாம் என முந்தி
தே மொழி பாளித கோமள இன்ப கிரி தோய்வாய்
சேலொடு வாளை வரால்கள் கிளம்பி தாறு கொள் பூகம் அளாவிய இன்ப
சீரலைவாய்நகர் மேவிய கந்த பெருமாளே

மேல்

#70
நாலும் ஐந்து வாசல் கீறு தூறு உடம்பு கால் கை ஆகி நாரி என்பில் ஆகும் ஆகம் அதனூடே
நாதம் ஒன்ற ஆதி வாயில் நாடகங்கள் ஆன ஆடி நாடு அறிந்திடாமல் ஏக வளரா முன்
நூல் அநந்த கோடி தேடி மால் மிகுந்து பார் உளோரை நூறு செம் சொல் கூறி மாறி விளை தீமை
நோய் கலந்த வாழ்வுறாமல் நீ கலந்து உளாகு ஞான நூல் அடங்க ஓத வாழ்வு தருவாயே
காலன் வந்து பாலன் ஆவி காய வென்று பாசம் வீசு காலம் வந்து ஓலம்ஓலம் என்னும் ஆதி
காமன் ஐந்து பாணமோடும் வேமின் என்று காணும் மோனர் காளகண்டரோடு வேதம் மொழிவோனே
ஆலம் ஒன்று வேலையாகி யானை அஞ்சல் தீரும் மூல ஆழி அம் கை ஆயன் மாயன் மருகோனே
ஆரணங்கள் தாளை நாட வாரணம் கை மேவும் ஆதியான செந்தில் வாழ்வதான பெருமாளே

மேல்

#71
நிதிக்கு பிங்கலன் பதத்துக்கு இந்திரன் நிறத்தில் கந்தன் என்று இனைவோரை
நிலத்தில் தன் பெரும் பசிக்கு தஞ்சம் என்று அரற்றி துன்ப நெஞ்சினில் நாளும்
புது சொல் சங்கம் ஒன்று இசைத்து சங்கடம் புகட்டி கொண்டு உடம்பு அழி மாயும்
புலத்தில் சஞ்சலம் குலைந்திட்டு உன் பதம் புணர்க்கைக்கு அன்பு தந்து அருள்வாயே
மதித்து திண் புரம் சிரித்து கொன்றிடும் மறத்தில் தந்தை மன்றினில் ஆடி
மழு கை கொண்ட சங்கரர்க்கு சென்று வண் தமிழ் சொல் சந்தம் ஒன்று அருள்வோனே
குதித்து குன்று இடம் தலைத்து செம்பொனும் கொழித்து கொண்ட செந்திலின் வாழ்வே
குற பொன் கொம்பை முன் புலத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே

மேல்

#72
நிலையா பொருளை உடலா கருதி நெடுநாள் பொழுதும் அவமே போய்
நிறை போய் செவிடு குருடாய் பிணிகள் நிறைவாய் பொறிகள் தடுமாறி
மல நீர் சயனம் மிசையா பெருகி மடிவேற்கு உரிய நெறியாக
மறை போற்ற அரிய ஒழியாய் பரவு மலர் தாள் கமலம் அருள்வாயே
கொலை காட்டு அவுணர் கெட மா சலதி குளமாய் சுவற முது சூதம்
குறி போய் பிளவுபட மேல் கதுவு கொதி வேல் படையை விடுவோனே
அலையாய் கரையின் மகிழ் சீர் குமர அழியா புநித வடிவாகும்
அரனார்க்கு அதித பொருள் காட்டு அதிப அடியார்க்கு எளிய பெருமாளே

மேல்

#73
நிறுக்கும் சூது அன மெய் தன முண்டைகள் கருப்பன் சாறொடு அரைத்து உள உண்டைகள்
நிழல்கண் காண உணக்கி மணம் பல தடவா மேல்
நெருக்கும் பாயலில் வெற்றிலையின் புறம் ஒளித்து அன்பாக அளித்த பின் இங்கு எனை
நினைக்கின்றீர் இலை மெச்சல் இதம் சொலி என ஓதி
உற கண்டு ஆசை வலைக்குள் அழுந்திட விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை
உருக்கும் தூவைகள் செட்டை குணம்தனில் உழலாமே
உலப்பில் ஆறு எனும் அக்கரமும் கமழ் கடப்பம் தாரும் முக ப்ரபையும் தினம்
உளத்தின் பார்வை இடத்தில் நினைந்திட அருள்வாயே
கறுக்கும் தூய மிடற்றனரும் சிலை எடுக்கும் தோளன் நிறத்து அமர் எண் கரி
கடக்கும் தானவனை கொல் அரும் புயன் மருகோனே
கன தஞ்சாபுரி சிக்கல் வலஞ்சுழி திருச்செங்கோடு இடைக்கழி தண்டலை
களர் செங்காடு குறுக்கை புறம்பயம் அமர்வோனே
சிறு கண் கூர் மத அத்தி சயிந்தவம் நடக்கும் தேர் அனிக படை கொண்டு அமர்
செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை உருவானோன்
செருக்கும் சூர் அகலத்தை இடந்து உயிர் குடிக்கும் கூரிய சத்தி அமர்ந்து அருள்
திருச்செந்தூர் நகரிக்குள் விளங்கிய பெருமாளே

மேல்

#74
பங்கம் மேவும் பிறப்பு அந்தகாரம்தனில் பந்தபாசம்தனில் தடுமாறி
பஞ்சபாணம் பட புண்படா வஞ்சக பண்பு இலா ஆடம்பர பொதுமாதர்
தங்கள் ஆலிங்கன கொங்கை ஆகம் பட சங்கை மால் கொண்டு இளைத்து அயராதே
தண்டை சூழ் கிண்கிணி புண்டரீகம்தனை தந்து நீ அன்பு வைத்து அருள்வாயே
அம் கை வேல் கொண்டு அரக்கன் ப்ரதாபம் கெடுத்து அண்ட வேதண்டம் உட்படவே தான்
அஞ்சவே திண் திறல் கொண்டல் ஆகண்டலற்கு அண்டலோகம் கொடுத்து அருள்வோனே
திங்கள் ஆர் கொன்றை மத்தம் துழாய் துன்று பொன் செம் சடா பஞ்சத்து உறு தோகை
சிந்தையே தென் திசை தென்றல் வீசும் பொழில் செந்தில் வாழ் செந்தமிழ் பெருமாளே

மேல்

#75
பஞ்சபாதகம் உறு பிறை எயிறு எரி குஞ்சி கூர் விட மதர் விழி பிலவக
பங்க வாள் முகம் முடுகிய நெடுகிய திரிசூலம்
பந்தபாசமும் மருவிய கர தலம் மிஞ்சி நீடிய கரு முகில் உருவொடு
பண்பிலாத ஒரு பகடு அது முதுகினில் யம ராஜன்
அஞ்சவே வரும் அவதரம் அதில் ஒரு தஞ்சம் ஆகிய வழிவழி அருள்பெறும்
அன்பினால் உனது அடி புகழ அடிமை என் எதிரே நீ
அண்ட கோளகை வெடிபட இடிபட எண் திசா முகம் மடமட நடம் இடும்
அந்த மோகர மயிலினில் இயலுடன் வரவேணும்
மஞ்சு போல் வளர் அளகமும் இளகிய ரஞ்சித அம்ருத வசனமும் நிலவு என
வந்த தூய வெண் முறுவலும் இரு குழை அளவோடும்
மன்றல் வாரிச நயனமும் அழகிய குன்ற வாழ்நர்தம் மடமகள் தட முலை
மந்தர அசல மிசை துயில் அழகிய மணவாளா
செம் சொல் மா திசை வட திசை குட திசை விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து
திங்கள் வேணியர் பல தளி தொழுது உயர் மக மேரு
செண்டு மோதினர் அரசருள் அதிபதி தொண்டர் ஆதியும் வழிவழி நெறி பெறு
செந்தில் மா நகரில் இனிது உறை அமரர்கள் பெருமாளே

மேல்

#76
படர் புவியின் மீது மீறி வஞ்சகர்கள் வியனில் உரை பானுவாய் வியந்து உரை
பழுது இல் பெரு சீல நூல்களும் தெரி சங்க பாடல்
பனுவல் கதை காவ்யமாம் எண்எண் கலை திருவளுவ தேவர் வாய்மை என்கிற
பழமொழியை ஓதியே உணர்ந்து பல் சந்த மாலை
மடல் பரணி கோவை ஆர் கலம்பகம் முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும்
வகைவகையில் ஆசு சேர் பெரும் கவி சண்ட வாயு
மதுரகவி ராஜன் நான் என் வெண் குடை விருது கொடி தாள மேள தண்டிகை
வரிசையொடு உலாவு மால் அகந்தை தவிர்ந்திடாதோ
அடல் பொருத பூசலே விளைந்திட எதிர் பொரவொணாமல் ஏக சங்கர
அரஹர சிவா மஹா தேவ என்று உனி அன்று சேவித்து
அவனி வெகு காலமாய் வணங்கி உள் உருகி வெகு பாச கோச சம்ப்ரம
அதி பெல கடோர மா சலந்த்ரன் நொந்து வீழ
உடல் தடியும் ஆழி தா என அம் புய மலர்கள் தச நூறு தாள் இடும் பகல்
ஒரு மலர் இல்லாது கோ அணிந்திடு செம் கண் மாலுக்கு
உதவிய மகேசர் பால இந்திரன் மகளை மணம் மேவி வீறு செந்திலில்
உரிய அடியேனை ஆள வந்து அருள் தம்பிரானே

மேல்

#77
பதும இரு சரண் கும்பிட்டு இன்ப கலவி நலம் மிகுந்து துங்க கொங்கை
பகடு புளகிதம் துன்ற கன்றி கயல் போலும்
பரிய கரிய கண் செம்பொன் கம்பி குழைகள் பொர மருண்டின் சொல் கொஞ்சி
பதற விதமுறும் கந்தும் கொந்து குழல் சாய
புதுமை நுதி பங்கத்து அங்கத்து இனிது வரைய வெண் சந்தத்து இந்து
புருவ வெயர்வுடன் பொங்க கங்கை சடைதாரி
பொடி செய்து அருள் மதன் தந்த்ர பந்திக்கு அறிவை இழவிடும் பண்பு துன்ப
பொருளின் மகளிர் தம் அன்பு பண்பை தவிரோனே
திதிதி ததததம் திந்திம் தந்தட் டிடிடி டடடடண் டிண்டிட் டண்ட
தெனன தனதனம் தெந்த தந்த தெனனானா
திகுர்தி தகிர்ததிம் திந்தி திந்தி திரிரிரதர என என்று என்று ஒப்பு இன்றி
திமிலை பறை அறைந்து எண் திக்கு அண்ட சுவர் சோர
சதியில் வரு பெரு சங்க தொங்கல் புய அசுரர் வெகுண்டு அஞ்சி குஞ்சி
தலை கொடு அடி பணிந்து எங்கட்கு உன் கண் க்ருபை தா என்
சமர குமர கஞ்சம் சுற்றும் செய்ப்பதியில் முருக முன் பொங்கி தங்கி
சலதி அலை பொரும் செந்தில் கந்த பெருமாளே

மேல்

#78
பரிமள களப சுகந்த சந்த தனம் மானார் படை யம படை என அந்திக்கும் கண் கடையாலே
வரி அளி நிரை முரல் கொங்கு கங்குல் குழலாலே மறுகிடும் மருளனை இன்புற்று அன்புற்று அருள்வாயே
அரி திரு மருக கடம்ப தொங்கல் திரு மார்பா அலை குமுகுமு என வெம்ப கண்டித்து எறி வேலா
திரிபுரம் தகனரும் வந்திக்கும் சற்குருநாதா ஜெயஜெய ஹரஹர செந்தில் கந்த பெருமாளே

மேல்

#79
பரு தந்தத்தினை தந்து இட்டு இருக்கும் கச்சு அடர்த்து உந்தி
பருக்கும் பொன் ப்ரபை குன்ற தனம் மானார்
பரிக்கும் துற்சரக்கு ஒன்ற திளைத்து அங்கு உற்பல பண்பை
பரக்கும் சக்கரத்தின் சத்தியை நேரும்
துரை செம் கண் கடைக்கு ஒன்றி பெருத்த அன்புற்று இளைத்து அங்கு
துணிக்கும் புத்தியை சங்கித்து அறியேனை
துணை செம்பொன் பதத்து இன்புற்று எனக்கு என்று அ பொருள் தங்க
தொடுக்கும் சொல் தமிழ் தந்து இப்படி ஆள்வாய்
தரு தங்கு அ பொலத்து அண்டத்தினை கொண்டு அ சுரர்க்கு அஞ்ச
தட துன்பத்தினை தந்திட்டு எதிர் சூரன்
சமர்க்கு எஞ்சி படி துஞ்ச கதிர் துங்கத்து அயில் கொண்டு அ
தலத்து உம்பர் பதிக்கு அன்புற்று அருள்வோனே
திரு கஞ்சத்தனை கண்டித்து உற கம் குட்டி விட்டும் சத்சிவற்கு
அன்று அ பொருள் கொஞ்சி பகர்வோனே
செய துங்க கொடை துங்க திரு தங்கி தரிக்கும் பொன்
திருச்செந்தில் பதி கந்த பெருமாளே

மேல்

#80
பாத நூபுரம் பாடகம் சீர் கொள் நடை ஓதி மோகுலம் போல் சம்போகமொடு
பாடி பாளிதம் காருகம் பாவை இடை வஞ்சி போல
பாகு பால் குடம் போல் இரண்டான குவடு ஆட நீள் வடம் சேர அலங்கார குழல்
பாவ மேக பொன் சாபம் இந்தே பொருவர் அந்த மீதே
மாதர் கோகிலம் போல் கரும்பான மொழி தோகை வாகர் கண்டாரை கொண்டாடி தகை
வாரும் வீடு என்று ஓதி இதம் பாயல் மிசை அன்பு உளார் போல்
வாச பாசகம் சூது பந்தாட இழி வேர்வை பாய சிந்து ஆகு கொஞ்சு ஆர விழி
வாகு தோள் கரம் சேர்வை தந்து ஆடும் அவர் சந்தம் ஆமோ
தீத தோதகம் தீததிம் தோதிதிமி டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு
டீகு டீகுகம் போல ஒண் பேரி முரசங்கள் வீற
சேடன் மேருவும் சூரனும் தாருகனும் வீழ ஏழ் தடம் தூளி கொண்டு ஆடு அமரர்
சேசெ சேசெ என்று ஆட நின்று ஆடி விடும் அங்கி வேலா
தாதை காதில் அங்கே ஓதும் சிங்கார முகம் ஆறும் வாகுவும் கூர சந்தான சுக
தாரி மார்பு அலங்காரி என் பாவை எங்கள் மாதை
தாரு பாளிதம் சோர சிந்தாமணிகள் ஆடவே புணர்ந்து ஆடி வங்காரமொடு
தாழை வான் உயர்ந்து ஆடு செந்தூரில் உறை தம்பிரானே

மேல்

#81
புகர புங்க பகர குன்றில் புயலில் தங்கி பொலிவோனும்
பொருவில் தஞ்ச சுருதி சங்க பொருளை பண்பில் புகர்வோனும்
திகிரி செம் கண் செவியில் துஞ்ச அ திகிரி செம் கை திருமாலும்
திரிய பொங்கி திரை அற்று உண்டிட்டு தெளிதற்கு ஒன்றை தரவேணும்
தகர தந்த சிகரத்து ஒன்றி தட நல் கஞ்சத்து உறைவோனே
தருண கொங்கை குறவிக்கு இன்பத்தை அளித்து அன்புற்று அருள்வோனே
பகர பைம்பொன் சிகர குன்றை படியில் சிந்த தொடும் வேலா
பவள துங்க புரிசை செந்தில் பதியில் கந்த பெருமாளே

மேல்

#82
பூரண வார கும்ப சீத படீர கொங்கை மாதர் விகார வஞ்ச லீலையிலே உழன்று
போது அவமே இழந்துபோனது மானம் என்பது அறியாத
பூரியனாகி நெஞ்சு காவல் படாத பஞ்சபாதகனாய் அறம் செய்யாதபடி ஓடி இறந்து
போனவர் வாழ்வு கண்டும் ஆசையிலே அழுந்து மயல் தீர
காரண காரியங்கள் ஆனது எல்லாம் ஒழிந்து யான் எனும் மேதை விண்டு பாவகமாய் இருந்து
கால் உடல் ஆடி அங்கி நாசியின் மீது இரண்டு விழி பாய
காயமும் நாவும் நெஞ்சும் ஓர் வழியாக அன்பு காயம் விடாமல் உன்றன் நீடிய தாள் நினைந்து
காணுதல் கூர் தவம் செய் யோகிகளாய் விளங்க அருள்வாயே
ஆரணசார மந்திர வேதம் எல்லாம் விளங்க ஆதிரையானை நின்று தாழ்வன் எனா வணங்கும்
ஆதரவால் விளங்கு பூரண ஞானம் மிஞ்சு முரவோனே
ஆர்கலி ஊடு எழுந்து மா வடிவாகி நின்ற சூரனை மாள வென்று வான் உலகு ஆளும்
அண்டரானவர் கூர் அரந்தை தீர முனாள் மகிழ்ந்த முருகேசா
வாரணம் மூலம் என்ற போதினில் ஆழி கொண்டு வாவியின் மாடு இடங்கர் பாழ் படவே எறிந்த
மா முகில் போல் இருண்ட மேனியனாம் முகுந்தன் மருகோனே
வாலுகம் மீது வண்டல் ஓடிய காலில் வந்து சூல் நிறைவான சங்கு மா மணி ஈன உந்து
வாரிதி நீர் பரந்த சீரலைவாய் உகந்த பெருமாளே

மேல்

#83
பெருக்க சஞ்சலித்து கந்தல் உற்று புந்தி அற்று பின் பிழைப்பு அற்று குறையுற்று பொதுமாதர்
ப்ரியப்பட்டு அங்கு அழைத்து தம் கலைக்குள் தங்கிட பட்சம் பிணைத்து தம் தனத்தை தந்து அணையாதே
புரக்கைக்கு உன் பதத்தை தந்து எனக்கு தொண்டுற பற்றும் புலத்து கண் செழிக்க செந்தமிழ் பாடும்
புல பட்டம் கொடுத்தற்கும் கருத்தில் கண் பட கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபை சித்தம் புரிவாயே
தருக்கி கண் களிக்க தெண்டனிட்டு தண் புலத்தில் செம் குறத்திக்கு அன்புற சித்தம் தளர்வோனே
சலிப்புற்று அங்கு உரத்தில் சம்ப்ரமித்து கொண்டு அலைத்து தன் சமர்த்தில் சங்கரிக்க தண்டிய சூரன்
சிரத்தை சென்று அறுத்து பந்தடித்து திண் குவட்டை கண்டு இடித்து செந்திலில் புக்கு அங்கு உறைவோனே
சிறக்க அற்க அஞ்சு எழுத்து அத்தம் திரு சிற்றம்பலத்து அத்தன் செவிக்கு பண்பு உற செப்பும் பெருமாளே

மேல்

#84
மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் வந்து கதற உடல் தீயில்
மண்டி எரிய விண்டு புனலில் வஞ்சம் ஒழிய விழ ஆவி
வெம் கண் மறலி தன் கை மருவ வெம்பி இடறும் ஒரு பாச
விஞ்சை விளையும் அன்று உன் அடிமை வென்றி அடிகள் தொழ வாராய்
சிங்கம் உழுவை தங்கும் அடவி சென்று மற மின்னுடன் வாழ்வாய்
சிந்தை மகிழ அன்பர் புகழும் செந்தில் உறையும் முருகோனே
எங்கும் இலகும் திங்கள் கமலம் என்று புகலும் முக மாதர்
இன்பம் விளைய அன்பில் அணையும் என்றும் இளைய பெருமாளே

மேல்

#85
மஞ்சு எனும் குழலும் பிறை அம் புருவங்கள் என் சிலையும் கணை அம் கயல்
வண்டு புண்டரிகங்களையும் பழி சிந்து பார்வை
மண்டலம் சுழலும் செவி அம் குழை தங்க வெண் தரளம் பதியும் பல்லும்
மண் தலம் திகழும் கமுகு அம் சிறு கண்ட மாதர்
கம் சுகம் குரலும் கழை அம்புய கொங்கை செம் கிரியும் பவளம் பொறி
கந்த சந்தனமும் பொலியும் துகில் வஞ்சி சேரும்
கஞ்சம் மண்டும் உள் நின்று ரசம் புகு கண் படர்ந்த இட ரம்பை எனும் தொடை
கண் கை அம் சரணம் செயல் வஞ்சரை நம்புவேனோ
சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு
தந்த னந்தன திந்திமி சங்குகள் பொங்கு தாரை
சம்புவின் குமரன் புலவன் பொரு கந்தன் என்றிடு துந்துமியும்
துவசங்கள் அங்கு ஒளிரும் குடையும் திசை விஞ்சவே கண்டு
அஞ்ச வஞ்ச சுரன் திரளும் குவடு அன்று அடங்கலும் வெந்து பொரிந்திட
அண்டர் இந்திரனும் சரணம் புக வென்ற வேளே
அம்புயம் அம் தண் அரம்பை குறிஞ்சியின் மங்கை அம் குடில் மங்கையோடு
அன்புடன் அண்டரும் தொழும் செந்திலில் இன்புறு தம்பிரானே

மேல்

#86
மனத்தின் பங்கு என தங்கு ஐம்புலத்து என்றன் குணத்து அஞ்சு இந்த்ரிய
தம்பத்தனை சிந்தும்படி காலன்
மலர் செம் கண் கனல் பொங்கும் திறத்தின் தண்டு எடுத்து அண்டம்
கிழித்தின்று இங்கு உற தங்கும் பலவோரும்
எனக்கு என்று இங்கு உனக்கு என்று அங்கு இனத்தின் கண் கணக்கு என்றுஎன்று
இளைத்து அன்பும் கெடுத்து அங்கு அழிவா முன்
இசைக்கும் செந்தமிழ் கொண்டு அங்கு இரக்கும் புன் தொழில் பங்கம்
கெட துன்பம் கழித்து இன்பம் தருவாயே
கனைக்கும் தண் கடல் சங்கம் கரத்தின் கண் தரித்து எங்கும்
கலக்கம் சிந்திட கண் துஞ்சிடும் மாலும்
கதித்த ஒண் பங்கயத்தன் பண்பு அனைத்தும் குன்றிட சந்தம்
களிக்கும் சம்புவுக்கும் செம் பொருள் ஈவாய்
தினை குன்றம்தனில் தங்கும் சிறு பெண் குங்கும கும்பம்
திரு செம்பொன் புயத்து என்றும் புனைவோனே
செழிக்கும் குண்டு அகழ் சங்கம் கொழிக்கும் சந்தனத்தின் பைம்
பொழில் தண் செந்திலில் தங்கும் பெருமாளே

மேல்

#87
மனை கனகம் மைந்தர் தமது அழகு பெண்டிர் வலிமை குல நின்ற நிலை ஊர் பேர்
வளர் இளமை தஞ்சம் முனை புனை வளங்கள் வரிசை தமர் என்று வரும் மாய
கனவு நிலை இன்பம் அதனை எனது என்று கருதி விழி இன்ப மடவார்தம்
கலவி மயல் கொண்டு பல உடல் புணர்ந்து கருவில் விழுகின்றது இயல்போ தான்
நினையும் நினது அன்பர் பழ வினைகள் களைந்து நெடு வரை பிளந்த கதிர் வேலா
நிலம் முதல் விளங்கு நலம் மருவு செந்தில் நிலை பெற இருந்த முருகோனே
புனை மலர் புனைந்த புன மற மடந்தை புளக இரு கொங்கை புணர் மார்பா
பொருது உடன் எதிர்ந்த நிருதர் மகுடங்கள் பொடிபட நடந்த பெருமாளே

மேல்

#88
மாய வாடை திமிர்ந்திடு கொங்கையில் மூடு சீலை திறந்த மழுங்கிகள்
வாசல்தோறும் நடந்து சிணுங்கிகள் பழையோர் மேல்
வால நேச நினைந்து அழும் வம்பிகள் ஆசை நோய் கொள் மருந்து இடும் சண்டிகள்
வாற பேர் பொருள் கண்டு விரும்பிகள் எவரேனும்
நேயமே கவி கொண்டு சொல் மிண்டிகள் காசு இலாதவர் தங்களை அன்பு அற
நீதி போல நெகிழ்ந்த பறம்பிகள் அவர் தாய்மார்
நீலி நாடகமும் பயில் மண்டைகள் பாளை ஊறு கள் உண்டிடு தொண்டிகள்
நீசரோடும் இணங்கு கடம்பிகள் உறவாமோ
பாயு மா மத தந்தி முகம் பெறும் ஆதி பாரதம் என்ற பெரும் கதை
பார மேரு வில் அன்று வரைந்தவன் இளையோனே
பாவையாள் குற மங்கை செழும் தன பாரம் மீதில் அணைந்து முயங்கிய
பாகமாகிய சந்தன குங்கும மணி மார்பா
சீயமாய் உருவம் கொடு வந்த சுரேசன் மார்பை இடந்து பசும் குடர்
சேர வாரி அணிந்த நெடும் புயன் மருகோனே
தேன் உலாவு கடம்பம் அணிந்த கிரீட சேகர சங்கரர் தந்து அருள்
தேவ நாயக செந்தில் உகந்து அருள் பெருமாளே

மேல்

#89
மான் போல் கண் பார்வை பெற்றிடு மூஞ்சால் பண்பாடு மக்களை
வாய்ந்தால் பொன் கோடு செப்பு எனும் முலை மாதர்
வாங்கா திண்டாடு சித்திர நீங்கா சங்கேத முக்கிய
வாஞ்சால் செம் சாறு மெய்த்திடு மொழியாலே
ஏன் கால் பங்கு ஆக நற்புறு பூ கால் கொங்கு ஆரும் மெத்தையில்
ஏய்ந்தால் பொன் சாரு பொன் பணம் முதல் நீ தா
ஈந்தாற்கு அன்றோ ரமிப்பு என ஆன் பால் தேன் போல செப்பிடும்
ஈண்டா சம்போக மட்டிகள் உறவாமோ
கான் பால் சந்து ஆடு பொன் கிரி தூம்பால் பைம் தோளி கண் கடை
காண்பால் துஞ்சாமல் நத்திடும் அசுரேசன்
காம் பேய் பந்தாட விக்ரம வான் தோய் கெம்பீர வில் கணை
காண் தேர் கொண்டு ஏவும் அச்சுதன் மருகோனே
தீம் பாற்கும் பாகு சர்க்கரை காம்பால் செம் தேறல் ஒத்து உரை
தீந்தார் கங்காளி பெற்று அருள் புதல்வோனே
தீண் பார்க்கு உன் போதம் முற்றுற மாண்டார் கொண்டு ஓதும் முக்கிய
தேன் போல் செந்தூரில் மொய்த்து அருள் பெருமாளே

மேல்

#90
முகில் ஆம் எனும் அளகம் காட்டி மதி போல் உயர் நுதலும் காட்டி
முகிழாகிய நகையும் காட்டி அமுது ஊறு
மொழி ஆகிய மதுரம் காட்டி விழி ஆகிய கணையும் காட்டி
முகம் ஆகிய கமலம் காட்டி மலை போலே
வகையாம் இள முலையும் காட்டி இடை ஆகிய கொடியும் காட்டி
வளமான கை வளையும் காட்டி இதமான
மணி சேர் கடிதடமும் காட்டி மிகவே தொழில் அதிகம் காட்டும்
மட மாதர்கள் மயலின் சேற்றில் உழல்வேனோ
நகையால் மதன் உருவ தீத்த சிவனார் அருள் சுதனே என்று ஆர்க்கு
நலனே அருள் அமர் செந்தூர்க்குள் உறைவோனே
நவ மா மணி வடமும் பூத்த தன மாது எனும் இபம் மின் சேர்க்கை
நழுவா வகை பிரியம் காட்டும் முருகோனே
அகம் மேவிய நிருதன் போர்க்கு வரவே சமர்புரியும் தோற்றம்
அறியாமலும் அபயம் காட்டி முறை கூறி
அயிராவதம் முதுகின் தோற்றி அடையாம் என இனிது அன்பு ஏத்தும்
அமரேசனை முழுதும் காத்த பெருமாளே

மேல்

#91
முந்து தமிழ் மாலை கோடிக்கோடி சந்தமொடு நீடு பாடிப்பாடி
முஞ்சர் மனை வாசல் தேடித்தேடி உழலாதே
முந்தை வினையே வராமல் போக மங்கையர்கள் காதல் தூரத்து ஏக
முந்து அடிமையேனை ஆளத்தானும் முனை மீதே
திந்திதிமி தோதி தீதி தீதி தந்ததன தான தான தான
செஞ்செணகு சேகு தாளத்தோடு நடம் ஆடும்
செம் சிறிய கால் விசால தோகை துங்க அநுகூல பார்வை தீர
செம்பொன் மயில் மீதிலே எப்போது வருவாயே
அம் தண் மறை வேள்வி காவல்கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக்கார
அண்டர் உபகார சேவல்கார முடி மேலே
அஞ்சலி செய்வோர்கள் நேயக்கார குன்று உருவ ஏவும் வேலைக்கார
அந்தம் வெகுவான ரூபக்கார எழிலான
சிந்துர மின் மேவு போகக்கார விந்தை குற மாது வேளைக்கார
செம் சொல் அடியார்கள் வாரக்கார எதிரான
செம் சமரை மாயும் மாயக்கார துங்க ரண சூர சூறைக்கார
செந்தில் நகர் வாழும் ஆண்மைக்கார பெருமாளே

மேல்

#92
முலை முகம் திமிர்ந்த கலவையும் துலங்கு முறுவலும் சிவந்த கனி வாயும்
முருகு அவிழ்ந்து உதிர்ந்த மலர்களும் சரிந்த முகிலும் இன்ப சிங்கி விழி வேலும்
சிலை முகம் கலந்த திலதமும் குளிர்ந்த திரு முகம் ததும்பு குறு வேர்வும்
தெரிய வந்து நின்ற மகளிர் பின் சுழன்று செயல் அழிந்து உழன்று திரிவேனோ
மலை முகம் சுமந்த புலவர் செம் சொல் கொண்டு வழி திறந்த செம் கை வடி வேலா
வளர் புனம் பயின்ற குற மடந்தை கொங்கை மணி வடம் புதைந்த புய வேளே
அலை முகம் தவழ்ந்து சினை முதிர்ந்த சங்கம் அலறி வந்து கஞ்ச மலர் மீதே
அளி கலந்து இரங்க இசையுடன் துயின்ற அரிய செந்தில் வந்த பெருமாளே

மேல்

#93
மூப்புற்று செவி கேட்பு அற்று பெருமூச்சு உற்று செயல் தடுமாறி
மூர்க்க சொல் குரல் காட்டி கக்கிட மூக்குக்கு உள் சளி இளையோடும்
கோப்பு கட்டி இனா பிச்சு எற்றிடு கூட்டில் புக்கு உயிர் அலையா முன்
கூற்ற தத்துவம் நீக்கி பொன் கழல் கூட்டி சற்று அருள்புரிவாயே
காப்பு பொன் கிரி கோட்டி பற்று அலர் காப்பை கட்டவர் குருநாதா
காட்டுக்குள் குறவாட்டிக்கு பல காப்பு குத்திரம் மொழிவோனே
வாய்ப்புற்ற தமிழ் மார்க்க திண் பொருள் வாய்க்கு சித்திர முருகோனே
வார்த்தை சிற்பர தீர்த்த சுற்று அலை வாய்க்குள் பொற்பு அமர் பெருமாளே

மேல்

#94
மூளும் வினை சேர மேல் கொண்டிடா ஐந்து பூத வெகுவாய மாயங்கள் தான் நெஞ்சில்
மூடி நெறி ஏதும் செய்யா வஞ்சி அதி பார
மோக நினைவான போகம் செய்வேன் அண்டர் தேட அரிதாய ஞேயங்களாய் நின்ற
மூல பர யோகம் மேல் கொண்டிடா நின்றது உளதாகி
நாளும் அதி வேக கால் கொண்டு தீ மண்ட வாசி அனலூடு போய் ஒன்றி வானின்கண்
நாமம் மதி மீதில் ஊறும் கலா இன்ப அமுதூறல்
நாடி அதன் மீது போய் நின்ற ஆனந்த மேலை வெளி ஏறி நீ அன்றி நான் அன்றி
நாடியினும் வேறு தான் இன்றி வாழ்கின்றது ஒரு நாளே
காள் விடம் ஊணி மாதங்கி வேதம் சொல் பேதை நெடு நீலி பாதங்களால் வந்த
காலன் விழ மோதும் சாமுண்டி பார் அம்பொடு அனல் வாயு
காதி முதிர் வானமே தங்கி வாழ் வஞ்சி ஆடல் விடை ஏறி பாகம் குலா மங்கை
காளி நடமாடி நாள் அன்பர் தாம் வந்து தொழு மாது
வாளம் முழுது ஆளும் ஓர் தண் துழாய் தங்கு சோதி மணி மார்ப மாலின் பினாள் இன் சொல்
வாழும் உமை மாதராள் மைந்தனே எந்தை இளையோனே
மாசில் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே அங்ஙனே நின்று
வாழும் மயில் வீரனே செந்தில் வாழ்கின்ற பெருமாளே

மேல்

#95
வஞ்சம் கொண்டும் திட ராவணனும் பந்து என் திண் பரி தேர் கரி
மஞ்சின் பண்பும் சரியாம் என வெகு சேனை
வந்து அம்பும் பொங்கியதாக எதிர்ந்து தன் சம்பிரதாயமும்
வம்பும் தும்பும் பல பேசியும் எதிரே கை
மிஞ்சி என்றும் சண்டை செய் போது குரங்கும் துஞ்சும் கனல் போல வெகுண்டு
குன்றும் கரடு ஆர் மரம் அதும் வீசி
மிண்டும் துங்கங்களினாலே தகர்ந்து அங்கம் கம் கரம் மார்போடு
மின் சந்தும் சிந்த நிசாசரர் வகை சேரவும்
சண்டன் தென் திசை நாடி விழுந்து அங்கும் சென்று எம தூதர்கள்
உந்துஉந்துஉந்து என்றிடவே தசை நிணம் மூளை
உண்டு கண்டு சில கூளிகள் டிண் டிண் டெண் என்று குதி போடவும்
உயர்ந்த அம்பும் கொண்டு வெல் மாதவன் மருகோனே
தஞ்சம் தஞ்சம் சிறியேன் மதி கொஞ்சம் கொஞ்சம் துரையே அருள்
தந்து என்றும் இன்பம் தரு வீடு அது தருவாயே
சங்கம் கஞ்சம் கயல் சூழ் தடம் எங்கெங்கும் பொங்க மகா புநிதம்
தங்கும் செந்திலில் வாழ் உயர் பெருமாளே

மேல்

#96
வஞ்சத்துடன் ஒரு நெஞ்சில் பல நினை வஞ்சி கொடி இடை மடவாரும்
வந்தி புதல்வரும் அந்தி கிளைஞரும் மண்டி கதறிடு வகை கூர
அஞ்ச கலைபடு பஞ்சு இ புழு உடல் அங்கிக்கு இரை என உடன் மேவி
அண்டி பயமுற வென்றி சமன் வரும் அன்றைக்கு அடி இணை தரவேணும்
கஞ்ச பிரமனை அஞ்ச துயர் செய்து கன்ற சிறை இடும் அயில் வீரா
கண்டு ஒத்தன மொழி அண்ட திரு மயில் கண் தந்து அழகிய திரு மார்பா
செம் சொல் புலவர்கள் சங்க தமிழ் தெரி செந்தில் பதி நகர் உறைவோனே
செம்பொன் குல வடகுன்றை கடலிடை சிந்த பொர வல பெருமாளே

மேல்

#97
வந்துவந்து முன் தவழ்ந்து வெம் சுகம் தயங்க நின்று மொஞ்சிமொஞ்சி என்று அழும் குழந்தையோடு
மண்டலம் குலுங்க அண்டர் விண் தலம் பிளந்து எழுந்த செம்பொன் மண்டபங்களும் பயின்ற வீடு
கொந்து அளைந்த குந்தளம் தழைந்து குங்குமம் தயங்கு கொங்கை வஞ்சி தஞ்சம் என்று மங்கு காலம்
கொங்கு அடம்பு கொங்கு பொங்கு பைம் கடம்பு தண்டை கொஞ்ச செம் சதங்கை தங்கு பங்கயங்கள் தாராய்
சந்து அடர்ந்து எழுந்து அரும்பு மந்தரம் செழும் கரும்பு கந்த ரம்பை செண் பதம் கொள் செந்தில் வாழ்வே
தண் கடம் கடந்து சென்று பண்கள் தங்க அடர்ந்த இன் சொல் திண் புனம் புகுந்து கண்டு இறைஞ்சு கோவே
அந்தகன் கலங்க வந்து கந்தரம் கலந்த சிந்துரம் சிறந்து வந்து அலம் புரிந்த மார்பா
அம் புனம் புகுந்த நண்பர் சம்பு நல் புரந்தரன் தரம் பல் உம்பர் கும்பர் நம்பு தம்பிரானே

மேல்

#98
வரி ஆர் கரும் கண் மட மாதர் மகவு ஆசை தொந்தம் அதுவாகி
இரு போது நைந்து மெலியாதே இரு தாளின் அன்பு தருவாயே
பரிபாலனம் செய்து அருள்வோனே பரமேசுரன்தன் அருள் பாலா
அரிகேசவன்தன் மருகோனே அலைவாய் அமர்ந்த பெருமாளே

மேல்

#99
விதி போலும் உந்து அ விழியாலும் இந்து நுதலாலும் ஒன்றி இளைஞோர்தம்
விரிவான சிந்தை உருவாகி நொந்து விறல் வேறு சிந்தை வினையாலே
இதமாகி இன்ப மது போத உண்டு இனிது ஆளும் என்று மொழி மாதர்
இருள் ஆய துன்ப மருள் மாயை வந்து எனை ஈர்வது என்றும் ஒழியாதோ
மதி சூடி அண்டர் பதி வாழ மண்டி வரும் ஆலம் உண்டு விடை ஏறி
மறவாத சிந்தை அடியார்கள் பங்கில் வரு தேவ சம்பு தரு பாலா
அதி மாயம் ஒன்றி வரு சூரர் பொன்ற அயில் வேல் கொடு அன்று பொரும் வீரா
அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து அலைவாய் உகந்த பெருமாளே

மேல்

#100
விந்து அதின் ஊறி வந்தது காயம் வெந்தது கோடி இனிமேலோ
விண்டு விடாமல் உன் பதம் மேவு விஞ்சையர் போல அடியேனும்
வந்து விநாச முன் கலி தீர வண் சிவஞான வடிவாகி
வன் பதம் ஏறி என் களை ஆற வந்து அருள் பாத மலர் தாராய்
எந்தன் உள்ளே ஏக செம் சுடராகி என் கணில் ஆடு தழல் வேணி
எந்தையர் தேடும் அன்பர் சகாயர் எங்கள் சுவாமி அருள் பாலா
சுந்தர ஞான மென் குற மாது தன் திரு மார்பில் அணைவோனே
சுந்தரமான செந்திலில் மேவு கந்த சுரேசர் பெருமாளே

மேல்

#101
விறல் மாரன் ஐந்து மலர் வாளி சிந்த மிக வானில் இந்து வெயில் காய
மித வாடை வந்து தழல் போல ஒன்ற விலைமாதர் தம்தம் வசை கூற
குற வாணர் குன்றில் உறை பேதை கொண்ட கொடிதான துன்பம் மயல் தீர
குளிர் மாலையின்கண் அணி மாலை தந்து குறை தீர வந்து குறுகாயோ
மறி மான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா
மலை மாவும் சிந்த அலை வேலை அஞ்ச வடி வேல் எறிந்த அதி தீரா
அறிவால் அறிந்து உன் இரு தாளில் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து அலைவாய் உகந்த பெருமாளே

மேல்

#102
வெம் காளம் பாணம் சேல் கண் பால் மென் பாகு அம் சொல் குயில் மாலை
மென் கேசம் தான் என்றே கொண்டார் மென் தோள் ஒன்ற பொருள் தேடி
வங்காளம் சோனம் சீனம் போய் வன்பே துன்பப்படலாமோ
மைந்து ஆரும் தோள் மைந்தா அந்தா வந்தே இந்த பொழுது ஆள்வாய்
கொங்கு ஆர் பைம் தேன் உண்டே வண்டு ஆர் குன்றாள் கொங்கைக்கு இனியோனே
குன்றோடும் சூழ் அம்பு ஏழும் சூரும் போய் மங்க பொரு கோபா
கங்காளம் சேர் மொய்ம்பு ஆர் அன்பார் கன்றே உம்பர்க்கு ஒரு குருநாதா
கம்பு ஊர் சிந்தார் தென்பால் வந்தாய் கந்தா செந்தில் பெருமாளே

மேல்

#103
வெம் சரோருகமோ கடு நஞ்சமோ கயலோ நெடு இன்ப சாகரமோ வடு வகிரோ முன்
வெந்து போன புராதன சம்பராரி புராரியை வென்ற சாயகமோ கருவிளையோ கண்
தஞ்சமோ யம தூதுவர் நெஞ்சமோ எனும் மா மத சங்க மாதர் பயோதரம் அதில் மூழ்கு
சங்கை ஓவ இரு கூதள கந்த மாலிகை தோய் தரு தண்டை சேர் கழல் ஈவதும் ஒரு நாளே
பஞ்சபாதக தாருக தண்டன் நீறு எழ வானவர் பண்டு போல அமராவதி குடியேற
பங்கயாசனர் கேசவர் அஞ்சலே என மால் வரை பங்க நீறு எழ வேல் விடும் இளையோனே
செம் சடை அடவி மீமிசை கங்கை மாதவி தாதகி திங்கள் சூடிய நாயகர் பெருவாழ்வே
செண்பக அடவி நீடிய துங்க மா மதிள் சூழ் தரு செந்தில் மா நகர் மேவிய பெருமாளே

மேல்

#104
அகல்வினை உள்சார் சட்சமயிகளொடு வெட்கா தட்கிடும்
அறிவிலி வித்தார தனம் அவிகார
அகில் கமழ் கத்தூரி தனி அணை மிசை கை காசுக்கு
அளவு அருள்பவர் நட்பே கொட்பு உறும் ஒரு போதன்
பகல் இரவில் போதில் பணி பணி அற விட்டார் எட்டிய
பரம மய சோதி சிவமயமா நின்
பழநிதனில் போய் உற்பவ வினை விள கள் சேர் வெட்சி குரவு
பயில் நல் தாள் பற்றுவது ஒரு நாளே
புகலி வனப்பு ஏற புகல் மதுரை மன் வெப்பு ஆற திகழ்
பொடி கொடு புல் பாய் சுற்றிகள் கழுவேற
பொருத சமர்த்தா குத்திர துரக முக கோதைக்கு இடை
புலவரில் நக்கீரர்க்கு உதவிய வேளே
இகல் படு நெட்டு ஊர் பொட்டு எழ இள நகை இட்டே சுட்டு அருள்
எழு புவி துய்த்தார் மைத்துனர் மதலாய் வென்று
இடர் அற முப்பால் செப்பிய கவிதையின் மிக்க ஆரத்தினை
எழுதி வனத்தே எற்றிய பெருமாளே

மேல்

#105
அணிபட்டு அணுகி திணிபட்ட மனத்தவர் விட்ட விழி கணையாலும்
அரி சுற்று கழை தவர் பெற்ற வளத்தவன் விட்ட மலர் கணையாலும்
பிணிபட்டு உணர்வு அற்று அவமுற்று இயமன் பெறும் அ குணமுற்று உயிர் மாளும்
பிறவி கடல் விட்டு உயர் நற்கதியை பெறுதற்கு அருளை தரவேணும்
கணி நல் சொருபத்தை எடுத்து மலை கனியை கணியுற்றிடுவோனே
கமலத்து அயனை ப்ரணவத்து உரையை கருதி சிறை வைத்திடுவோனே
பணி அப்பு அணி அ பரமர் பரவ பரிவுற்று ஒரு சொல் பகர்வோனே
பவள தவள கனக புரிசை பழநி குமர பெருமாளே

மேல்

#106
அதலம் விதலம் முதல் அந்த தலங்கள் என அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என
அகில சலதி என எண் திக்கு உள் விண்டு என அங்கி பாநு
அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என அறையும் மறை என அரும் தத்துவங்கள் என
அணுவில் அணு என நிறைந்திட்டு நின்றது ஒரு சம்ப்ரதாயம்
உதயம் எழ இருள் விடிந்து அக்கணம்தனில் இருதய கமலம் முகிழம் கட்டு அவிழ்ந்து
உணர்வில் உணரும் அநுபவம் மனம் பெற்றிடும்படியை வந்து நீ முன்
உதவ இயலின் இயல் செம் சொல் ப்ரபந்தம் என மதுர கவிகளில் மனம் பற்றிருந்து புகழ்
உரிய அடிமை உனை அன்றி ப்ரபஞ்சம் அதை நம்புவேனோ
ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி
சகக சககெணக தந்தத்த குங்கெணக டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
தகக தகதகக தந்தத்த தந்தகக என்று தாளம்
பதலை திமிலை துடி தம்பட்டமும் பெருக அகில நிசிசரர் நடுங்க கொடும் கழுகு
பரிய குடர் பழு எலும்பை பிடுங்க ரண துங்க காளி
பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி இட இகலை வென்று சிகண்டிதனில்
பழநி மலையின் மிசை வந்து உற்ற இந்திரர்கள் தம்பிரானே

மேல்

#107
அபகார நிந்தைபட்டு உழலாதே அறியாத வஞ்சரை குறியாதே
உபதேச மந்திர பொருளாலே உனை நான் நினைந்து அருள்பெறுவேனோ
இபமா முகன்தனக்கு இளையோனே இமவான் மடந்தை உத்தமி பாலா
ஜெபமாலை தந்த சற்குருநாதா திருவாவினன்குடி பெருமாளே

மேல்

#108
அரிசன வாடை சேர்வை குளித்து பலவித கோல சேலை உடுத்திட்டு
அலர் குழல் ஓதி கோதி முடித்து சுருளோட
அமர் பொரு காதுக்கு ஓலை திருத்தி திரு நுதல் நீவி பாளித பொட்டு இட்டு
அகல் புழுகு ஆர சேறு தனத்து இட்டு அலர் வேளின்
சுரத விநோத பார்வை மை இட்டு தருண கலார தோடை தரித்து
தொழிலிடு தோளுக்கு ஏற வரித்திட்டு இளைஞோர்மார்
துறவினர் சோரச்சோர நகைத்து பொருள் கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்
துயர் அறவே பொன் பாதம் எனக்கு தருவாயே
கிரி அலை வாரி சூரர் இரத்த புணரியில் மூழ்கி கூளி களிக்க
கிரண வை வேல் புத்தேளிர் பிழைக்க தொடுவோனே
கெருவித கோல பார தனத்த குறமகள் பாத சேகர சொர்க்க
கிளி தெய்வயானைக்கே புய வெற்பை தருவோனே
பரிமள நீப தாரொடு வெட்சி தொடை புனை சேவல் கேதன துத்தி
பணி அகல் பீட தோகை மயில் பொன் பரியானே
பனி மலர் ஓடை சேல் உகளித்து ககனம் அளாவி போய் வரும் வெற்றி
பழநியில் வாழ் பொன் கோமள சத்தி பெருமாளே

மேல்

#109
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியும் உறவோரும்
அடுத்த பேர்களும் இதமுறு மகவொடு வளநாடும்
தரித்த ஊரும் மெய் என மனம் நினையாது உன்தனை
பராவியும் வழிபடு தொழிலது தருவாயே
எருத்தில் ஏறிய இறையவர் செவி புக உபதேசம்
இசைத்த நாவின இதணுறு குறமகள் இரு பாதம்
பரித்த சேகர மகபதி தர வரு தெய்வயானை
பதி கொள் ஆறிரு புய பழநியில் உறை பெருமாளே

மேல்

#110
அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து அழகு பெறவே நடந்து இளைஞோனாய்
அரு மழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று அதிவிதமதாய் வளர்ந்து பதினாறாய்
சிவ கலைகள் ஆகமங்கள் மிகவு மறை ஓதும் அன்பர் திருவடிகளே நினைந்து துதியாமல்
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் அடி சேராய்
மவுன உபதேச சம்பு மதி அறுகு வேணி தும்பை மணி முடியின் மீது அணிந்த மக தேவர்
மனம் மகிழவே அணைந்து ஒரு புறமதாக வந்த மலைமகள் குமார துங்க வடி வேலா
பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து படி அதிரவே நடந்த கழல் வீரா
பரம பதமே செறிந்த முருகன் எனவே உகந்து பழநி மலை மேல் அமர்ந்த பெருமாளே

மேல்

#111
அறம் இலா நிலை கற்று கொடிய வேல் விழி விட்டு உள அறிவு தான் அற வைத்து விலை பேசி
அமளி மீதினில் வைத்து பவள வாய் அமுதத்தை அதிகமா உதவி கை வளையாலே
உறவினால் உடலத்தை இறுகவே தழுவிக்கொள் உலையிலே மெழுகு ஒத்த மடவாரோடு
உருகியே வரு பெற்றி மதன நாடக பித்து ஒழியுமாறு ஒரு முத்தி தரவேணும்
மறவர் மாது ஒரு ரத்ந விமல கோகநகத்தி மயில் ஆனாள் புணர் செச்சை மணி மார்பா
மருள் நிசாசரன் வெற்பில் உருகி வீழ்வுற மிக்க மயிலில் ஏறிய உக்ர வடி வேலா
பறைகள் பேணிய ருத்ரி கரிய கார் அளகத்தி பரமர் பால் உறை சத்தி எமதாயி
பழைய பார்வதி கொற்றி பெரிய நாயகி பெற்ற பழநி மா மலை உற்ற பெருமாளே

மேல்

#112
ஆதாளிகள் புரி கோலாகல விழியாலே அமுது எனு மொழியாலே
ஆழ் சீர் இள நகையாலே துடி இடையாலே மண மலி குழலாலே
சூது ஆர் இள முலையாலே அழகிய தோடு ஆர் இரு குழை அதனாலே
சோரா மயல் தரு மானார் உறவு இடர் சூழா வகை அருள்புரிவாயே
போது ஆர் இரு கழல் சூழாது அது தொழில் பூணாது எதிர் உற மதியாதே
போர் ஆடிய அதி சூரா பொறுபொறு போகாதே என அடு திறலோனே
வேதா உடனொடு மால் ஆனவன் அறியாதார் அருளிய குமரேசா
வீராபுரி கோவே பழநியுள் வேலா இமையவர் பெருமாளே

மேல்

#113
ஆலகாலம் என கொலை முற்றிய வேல் அதாம் என மிக்க விழி கடையாலும்
மோகம் விளைத்து விதத்துடன் இளைஞோரை
ஆர ஆணை மெயிட்டு மறித்து விகார மோகம் எழுப்பி அதற்கு உறவான
பேரை அகப்படுவித்து அதிவிதமாக
சால மாலை அளித்து அவர் கைப்பொருள் மாளவே சிலுகிட்டு மருட்டியெ
சாதிபேதம் அற தழுவி திரி மட மாதர்
தாக போகம் ஒழித்து உனக்கு அடியான் என் வேள்வி முக தவம் உற்று இரு
தாளை நாளும் வழுத்தி நினைத்திட அருள்வாயே
வால மா மதி மத்தம் எருக்கு அறுகு ஆறு பூளை தரித்த சடை திரு
ஆலவாயன் அளித்தருள் அற்புத முருகோனே
மாய மானொடு அரக்கரை வெற்றிகொள் வாலி மார்பு தொளைத்திட வில் கொடு
வாளி ஏவிய மல் புயன் அச்சுதன் மருகோனே
நாலு வேத நவிற்று முறை பயில் வீணை நாதன் உரைத்த வனத்திடை
நாடி ஓடி குறத்திதனை கொடு வருவோனே
நாளிகேரம் வருக்கை பழுத்து உதிர் சோலை சூழ் பழநி பதியில் திரு
ஞான பூரண சத்தி தரித்து அருள் பெருமாளே

மேல்

#114
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று பூதி
ஆகம் அணி மாதவர்கள் பாத மலர் சூடும் அடியார்கள் பதமே துணை அது என்று நாளும்
ஏறு மயில்வாகன குகா சரவணா எனது ஈச என் மானம் உனது என்றும் ஓதும்
ஏழைகள் வியாகுலம் இதே என வினாவில் உனை ஏவர் புகழ்வார் மறையும் என் சொலாதோ
நீறு படு மாழை பொரு மேனியவ வேல அணி நீல மயில்வாக உமை தந்த வேளே
நீசர்கள்தமோடு எனது தீ வினை எலாம் மடிய நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா
சீறி வரும் மாறு அவுணன் ஆவி உணும் ஆனை முக தேவர் துணைவா சிகிரி அண்டர் கூடம்
சேரும் அழகு ஆர் பழநி வாழ் குமரனே பிரம தேவர் வரதா முருக தம்பிரானே

மேல்

#115
இ தாரணிக்குள் மனு வித்தாய் முளைத்து அழுது கேவி கிடந்து மடி மீதில் தவழ்ந்து அடிகள்
தத்தா தனத்ததன இட்டே தெரு தலையில் ஓடி திரிந்து நவ கோடி ப்ரபந்த கலை
இ சீர் பயிற்ற வயது எட்டோடு எட்டு வர வால குணங்கள் பயில் கோல பெதும்பையர்கள் உடன் உறவாகி
இக்கு ஆர் சரத்து மதனுக்கு இளைத்து வெகுவாக கலம்ப வகை பாடி புகழ்ந்து பல
திக்கோடு திக்கு வரை மட்டு ஓடி மிக்க பொருள் தேடி சுகந்த அணை மீதில் துயின்று சுகம்
இட்டு ஆதரத்து உருகி வட்டார் முலைக்குள் இடை மூழ்கி கிடந்து மயலாகி துளைந்து சில பிணி அது மூடி
சத்தான புத்தி அது கெட்டே கிடக்க நமன் ஓடி தொடர்ந்து கயிறு ஆடி கொளும் பொழுது
பெற்றோர்கள் சுற்றி அழ உற்றார்கள் மெத்த அழ ஊருக்கு அடங்கல் இலர் காலற்கு அடங்க உயிர்
தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியில் ஓலை பழம் படியினால் இறந்தது என எடும் என ஓடி
சட்டா நவ பறைகள் கொட்டா வரி சுடலை ஏகி சடம் பெரிது வேக புடம் சமைய
இட்டே அனற்குள் எரி பட்டான் என தழுவி நீரில் படிந்து விடு பாசத்து அகன்று உனது
சத்போதக பதுமம் உற்றே தமிழ் கவிதை பேசி பணிந்து உருகு நேசத்தை இன்று தர இனி வரவேணும்
தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத தாத தனந்ததன தான தனந்ததன
செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு தாத தசெந்திகுத தீத தசெந்தரிக
தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு தோத கணங்கணக கூகு கிணங்கிணென ஒரு மயில் ஏறி
திண் தேர் ரதத்து அசுரர் பட்டே விழ பொருது வேலை தொளைந்து வரை ஏழை பிளந்து வரு
சித்தா பரத்து அமரர் கத்தா குறத்தி முலை மீதில் புணர்ந்து சுக லீலை கதம்பம் அணி
சுத்தா உமைக்கு ஒரு முத்தாய் முளைத்த குருநாத குழுந்தை என ஓடி கடம்ப மலர் அணி திரு மார்பா
மத்தா மத களிறு பின் தான் உதித்த குகனே ஏதத்து இலங்கையினில் ஆதிக்கம் உண்டது ஒரு
முட்டாள் அரக்கன் தலை இற்றே விழ கணைகளே தொட்ட கொண்டல் உருவு ஆகி சுமந்து அதிகம்
மட்டு ஆர் மலர் கமலம் உற்ற சன திருவை மார்பில் புணர்ந்த ரகுராமற்கும் அன்புடைய மருமகன் ஆகி
வற்றா மது கருணை உற்றே மறை கலைகள் ஓதி தெரிந்து தமிழ் சோதித்து அலங்கல் அணி
அத்தா பரத்தை அறிவித்து ஆவி சுற்றும் ஒளி ஆகி ப்ரபந்தம் அணி வேல் தொட்டு அமைந்த புயவர்க்கா
மரு புழுகு முட்டா திரு பழநி வாழ்வுக்கு உகந்து அடியவர் ஆவிக்குள் நின்று உலவி வரு பெருமாளே

மேல்

#116
இரவி என வடவை என ஆலால விடம் அது என உருவு கொடு ககனம் மிசை மீது ஏகி மதியும் வர
இரதிபதி கணைகள் ஒரு நாலு ஏவ விருது குயில் அது கூவ
எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி இசை குருகி இரு செவியில் நாராசம் உறுவது என
இகல் புரிய மதன குரு ஓராத அனையர் கொடு வசை பேச
அரஹர என வநிதை படு பாடு ஓத அரிதரிது அமுதம் மயில் அது கருதி ஆரோடும் இகல் புரிவள்
அவசமுறஅவசமுற ஆர் ஓமல் தரவும் மிக மெலிவு ஆனாள்
அகுதி இவள் தலையில் விதி ஆனாலும் விலக அரிது அடிமைகொள உனது பரம் ஆறாத ஒரு தனிமை
அவளை அணை தர இனிதின் ஓகார பரியின் மிசை வருவாயே
நிரை பரவி வர வரையுள் ஓர் சீத மருதினொடு பொரு சகடு உதை அது செய்து ஆ மாய மழை சொரிதல்
நிலை குலைய மலை குடையதாவே கொள் கரகமலன் மருகோனே
நிருமலிய திரி நயனி வாள் வீச வரு குமரி கவுரி பயிரவி அரவ பூணாரி திரிபுவனி
நிபுட மலை அரசன் அருள் வாழ்வான புரண உமை அருள் பாலா
பரவை கிரி அசுரர் திரள் மா சேனை தவிடுபொடிபட அமரர் துயர் அகல வேல் ஏவி அமர் பொருத
பதும கரதல முருக நால் வேதகரர் அணிக மயில் வீரா
பளித ம்ருகமத களப சேறு ஆர வளரு முலை வநிதை குறமகள் மகிழும் லீலா விதுர மதுர
பநுவல் தரு பழனி வரு கோலாகல அமரர் பெருமாளே

மேல்

#117
இரு கனக மா மேருவோ களப துங்க கடி கடின பாடீர வார் அமுத கும்பம்
இணை சொல் இளநீரோ கராசல இரண்டு குவடேயோ
இலகு மலரே வாளியாகிய அநங்கன் அணி மகுடமோ தான் எனா மிக வளர்ந்த
இள முலை மினார் மோக மாயையில் விழுந்து தணியாமல்
பெருகி ஒரு காசே கொடாதவரை ஐந்து தருவை நிகரே ஆகவே எதிர் புகழ்ந்து
பெரிய தமிழே பாடி நாள்தொறும் இரந்து நிலை காணா
பிணியின் அகமே ஆன பாழ் உடலை நம்பி உயிரை அவமாய் நாடியே பவம் நிரம்பு
பிறவிதனிலே போக மீளவும் உழன்று திரிவேனோ
கருணை உமை மா தேவி காரணி அநந்த சயன களிகூர் அரி சோதரி புர அந்த
கடவுளுடன் வாதாடு காளி மலை மங்கை அருள் பாலா
கருடனுடன் வீறு ஆன கேதனம் விளங்கு மதிலினொடு மா மாட மேடைகள் துலங்கு
கலிசை வரு காவேரி சேவகனொடு அன்புபுரிவேனே
பரவை இடையே பாதகாசூரர் விழுந்து கதறி இடவே பாதசாதனன் உள் நெஞ்சு
பலிதம் எனவே ஏக மயிலில் வந்த குமரேசா
பல மலர்களே தூவி ஆரணம் நவின்று பரவி இமையோர் சூழ நாள்தொறும் இசைந்து
பழநி மலை மீது ஓர் பராபரன் இறைஞ்சு பெருமாளே

மேல்

#118
இரு செப்பு என வெற்பு என வட்டமும் ஒத்து இளகி புளகித்திடும் மாதர்
இடையை சுமையை பெறுதற்கு உறவுற்று இறுக குறுகி குழல் சோர
தரு மெய் சுவையுற்று இதழை பருகி தழுவி கடி சுற்று அணை மீதே
சருவிச்சருவி குனகி தனகி தவம் அற்று உழல கடவேனோ
அரி புத்திர சித்தஜனுக்கு அருமைக்கு உரிய திரு மைத்துன வேளே
அடல் குக்குட நல் கொடி பெற்று எதிருற்ற அசுர கிளையை பொருவோனே
பரிவுற்று அரனுக்கு அருள் நல் பொருளை பயனுற்று அறிய பகர்வோனே
பவன புவன செறிவுற்று உயர் மெய் பழநி குமர பெருமாளே

மேல்

#119
இலகிய களப சுகந்த வாடையின் ம்ருகமதம் அதனை மகிழ்ந்து பூசியே
இலை சுருள் பிளவை அருந்தியே அதை இதமாக
கலவியில் அவரவர் தங்கள் வாய்தனில் இடுபவர் பலபல சிந்தை மாதர்கள்
கசனையை விடுவதும் எந்த நாள் அது பகர்வாயே
சிலை தரு குறவர் மடந்தை நாயகி தினை வனம் அதனில் உகந்த நாயகி
திரள் தனம் அதனில் அணைந்த நாயக சிவலோகா
கொலைபுரி அசுரர் குலங்கள் மாளவெ அயில் அயில் அதனை உகந்த நாயக
குருபர பழநியில் என்றும் மேவிய பெருமாளே

மேல்

#120
இலகு கனி மிஞ்சு மொழி இரவு துஞ்சும் இரு விழி என் நெஞ்சு முகம் மீதே
இசை முரல் சுரும்பும் இள முலை அரும்பும் இலகிய கரும்பும் மயலாலே
நிலவில் உடல் வெந்து கரிய அலமந்து நெகிழும் உயிர் நொந்து மத வேளால்
நிலை அழியு நெஞ்சில் அவர் குடிபுகுந்த நினைவொடும் இறந்துபடலாமோ
புலவினை அளைந்து படு மணி கலந்து புது மலர் அணிந்த கதிர் வேலா
புழுகு எழ மணந்த குறமகள் குரும்பை பொர முகை உடைந்த தொடை மார்பா
பல நிறம் இடைந்த விழு சிறை அலர்ந்த பரு மயில் அடைந்த குக வீரா
பணை பணி சிறந்த தரள மணி சிந்து பழநி மலை வந்த பெருமாளே

மேல்

#121
உயிர்க்கூடு விடுமளவும் உமை கூடி மருவு தொழில் ஒருக்காலும் நெகிழ்வது இல்லை எனவே சூள்
உரைத்தே முன் மருவினவரை வெறுத்து ஏம திரவியம் அது உடைத்தாய் பின் வருகும் அவர் எதிரே போய்
பயில் பேசி இரவுபகல் அவர்க்கான பதமை பல பட பேசி உறு பொருள் கொள் விலைமாதர்
பட பார வலைபடுதல் தவிர்த்து ஆள மணி பொருவு பதத்து ஆன மயிலின் மிசை வரவேணும்
தயிர் சோரன் எனும் அ உரை வசை கோவ வனிதையர்கள் தரத்து ஆடல்புரியும் அரி மருகோனே
தமிழ் காழி மருத வன மறைக்காடு திரு மருகல் தனுக்கோடி வரு குழகர் தரு வாழ்வே
செயில் சேல் விண் உடுவினொடு பொர போய் விம்மு அமர் பொருது செயித்து ஓடி வரு பழநி அமர்வோனே
தினை காவல் புரியவல குற பாவை முலை தழுவ திரு தோள அமரர் பணி பெருமாளே

மேல்

#122
உலக பசு பாச தொந்தம் அது ஆன உறவு கிளை தாயர் தந்தை மனை பாலர்
மல சல சுவாச சஞ்சலம் அதால் என் மதி நிலை கெடாமல் உன்றன் அருள்தாராய்
சலம் அறுகு பூளை தும்பை அணி சேயே சரவணபவா முகுந்தன் மருகோனே
பல கலை சிவாகமங்கள் பயில்வோனே பழநி மலை வாழ வந்த பெருமாளே

மேல்

#123
ஒரு பொழுதும் இரு சரண நேசத்தே வைத்து உணரேனே
உனது பழநி மலை எனும் ஊரை சேவித்து அறியேனே
பெரு புவியில் உயர்வு அரிய வாழ்வை தீர குறியேனே
பிறவி அற நினைகுவன் என் ஆசை பாடை தவிரேனோ
துரிதம் இடு நிருதர் புர சூறைக்கார பெருமாளே
தொழுது வழிபடும் அடியர் காவல்கார பெருமாளே
விருது கவி விதரண விநோதக்கார பெருமாளே
விறல் மறவர் சிறுமி திரு வேளைக்கார பெருமாளே

மேல்

#124
ஒருவரை ஒருவர் தேறி அறிகிலர் மத விசாரர் ஒரு குண வழி உறாத பொறியாளர்
உடலது சதம் என நாடி களவு பொய் கொலைகள் ஆடி உற நமன் நரகில் வீழ்வர் அது போய் பின்
வரும் ஒரு வடிவம் மேவி இருவினை கடலுள் ஆடி மறைவர் இன அனைய கோலம் அது ஆக
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு வடிவுற அருளி பாதம் அருள்வாயே
திரிபுரம் எரிய வேழ சிலை மதன் எரிய மூரல் திரு விழி அருள் மெய் ஞான குருநாதா
திரு சரஸ்வதி மயேசுவரி இவர் தலைவர் ஓத திரு நடனம் அருளு நாதன் அருள் பாலா
சுரர் பதி அயனும் மாலும் முறையிட அசுரர் கோடி துகள் எழ மெய்ஞ்ஞான அயிலோனே
சுக குறமகள் மணாளன் என மறை பலவும் ஓதி தொழ முது பழநி மேவு பெருமாளே

மேல்

#125
ஓடியோடி அழைத்துவர சில சேடிமார்கள் பசப்ப அதற்கு முன்
ஓதி கோதி முடித்து அ இலை சுருள் அது கோதி
நீடு வாச நிறைந்த அகில் புழுகு ஓட மீது திமிர்ந்த தனத்தினில்
நேசமாகி அணைத்த சிறுக்கிகள் உறவு ஆமோ
நாடி வாயும் வயல் தலையில் புனல் ஓடை மீதில் நிலத்த திவட்கையில்
நாத கீத மலர் துளி பெற்று அளி இசை பாடும்
கோடு உலாவிய முத்து நிரைத்த வைகாவூர் நாடு அதனில் பழநி பதி
கோதிலாத குறத்தி அணைத்து அருள் பெருமாளே

மேல்

#126
கடலை சிறை வைத்து மலர் பொழிலில் ப்ரமரத்தை உடல் பொறி இட்டு மடு
கமலத்தை மலர்த்தி விடத்தை இரப்பவன் ஊணா
கருதி சருவி கயலை கயம் உள்படுவித்து உழையை கவனத்து அடைசி
கணையை கடைவித்து வடுத்தனை உப்பினில் மேவி
அடலை செயல் சத்தியை அக்கினியில் புகுவித்து யம ப்ரபுவை துகைவித்து
அரி கட்கம் விதிர்த்து முறித்து மதித்த சகோரம்
அலற பணி ரத்ந மணி குழையை சிலுகிட்டு மை இட்டு ஒளி விட்டு மருட்டுதலுற்ற
பொறிச்சியர்கள் கடையில் படுவேனோ
சடிலத்தவன் இட்ட சிட்ட குலத்து ஒரு செட்டியிடத்தில் உதித்து அருள் வித்தகர்
உத்ர ஜன்ம பெயர் செப்பிட இட பரிவாலே
சநகர்க்கும் அகஸ்த்ய புலஸ்த்ய சநற்குமரர்க்கும் அநுக்ரக மெய் பலகை
சது பத்து நவ புலவர்க்கும் விபத்து இல் ஞான
படலத்து உறு லக்கண லக்ய தமிழ் த்ரயம் அத்தில் அக பொருள் வ்ருத்தியினை
பழுதற்று உணர்வித்து அருள்வித்த சற்குருநாதா
பவள கொடி சுற்றிய பொன் கமுகின் தலையில் குலையில் பல முத்து உதிர் செய்
பழநி பதி வெற்பினில் நில் குமர பெருமாளே

மேல்

#127
கடலை பொரி அவரை பல கனி கழை நுகர் கடின குட உதர விபரீத
கரட தடம் முமத நளின சிறு நயன கரிணி முகவரது துணைவோனே
வடவரையின் முகடு அதிர ஒரு நொடியில் வலம் வரு மரகத மயில் வீரா
மக பதி தரு சுதை குற மினொடு இருவரும் மருவு சரச வித மணவாளா
அடல் அசுரர் குலம் முழுதும் மடிய உயர் அமரர் சிறைய விட எழில் மீறும்
அருண கிரண ஒளி ஒளிரும் அயிலை விடு அரகர சரவணபவ லோலா
படல உடு பதியை இதழி அணி சடில பசு பதி வர நதி அழகான
பழ நிமலை அருள்செய் மழலை மொழி மதலை பழநி மலையில் வரு பெருமாளே

மேல்

#128
கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண கன தன வெற்பு மேல் மிகு மயலான
கவலை மனத்தன் ஆகிலும் உனது ப்ரசித்தமாகிய கன தனம் ஒத்த மேனியும் முகம் ஆறும்
அதி பல வஜ்ர வாகுவும் அயில் நுனை வெற்றி வேல் அதும் அரவு பிடித்த தோகையும் உலகு ஏழும்
அதிர அரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும் அபி நவ பத்ம பாதமும் மறவேனே
இரவி குலத்து இராஜத மருவி எதிர்த்து வீழ் கடு ரணமுக சுத்த வீரிய குணமான
இளையவனுக்கு நீள் முடி அரசு அது பெற்று வாழ்வுற இதமொடு அளித்த ராகவன் மருகோனே
பதினொரு ருத்திராதிகள் தபனம் விளக்கு மாளிகை பரிவொடு நிற்கும் ஈசுர சுரலோக
பரிமள கற்பக அடவி அரி அளி சுற்று பூ உதிர் பழநி மலைக்குள் மேவிய பெருமாளே

மேல்

#129
கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய திரிசூலன்
கறுவி இறுகு கயிறொடு உயிர்கள் கழிய முடுகி எழு காலம்
திரியும் நரியும் எரியும் உரிமை தெரிய விரவி அணுகாதே
செறிவும் அறிவும் உறவும் அனைய திகழும் அடிகள் தரவேணும்
பரிய வரையின் அரிவை மருவு பரமர் அருளும் முருகோனே
பழனம் உழவர் கொழுவில் எழுது பழைய பழநி அமர்வோனே
அரியும் அயனும் வெருவ உருவ அரிய கிரியை எறிவோனே
அயிலும் மயிலும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே

மேல்

#130
கரிய மேகமதோ இரு குழல் அரிய பூரண மா மதியோ முகம்
கணைகொலோ அயில் வேல் அதுவோ விழி இதழ் பாகோ
கமுகு தான் நிகரோ வளையோ களம் அரிய மா மலரோ துளிரோ கரம்
கனக மேரு அதுவோ குடமோ முலை மொழி தேனோ
கருணை மால் துயில் ஆல் இலையோ வயிறு இடை அது ஈர் ஒரு நூல் அதுவோ என
கனக மா மயில் போல் மடவாருடன் மிக நாடி
கசடனாய் வயதாய் ஒரு நூறு செல்வதனின் மேல் எனது ஆவியை நீ இரு
கமல மீதினிலே வரவே அருள்புரிவாயே
திரிபுராதிகள் நீறு எழவே மிக மதனையே விழியால் விழவே செயும்
சிவ சொரூப மகேசுரன் நீடிய தனயோனே
சினமதாய் வரு சூரர்கள் வேர் அற அமரர் வானவர் வாடிடு தேவர்கள்
சிறைகள் மீளவுமே வடி வேல் விடும் முருகோனே
பரிவு சேர் கமலாலய சீ தனம் மருவுவார் திரு மால் அரி நாரணர்
பழைய மாயவர் மாதவனார் திரு மருகோனே
பனகமாம் அணி தேவி க்ருபாகரி குமரனே பதி நாலு உலகோர் புகழ்
பழநி மா மலை மீதினிலே உறை பெருமாளே

மேல்

#131
கரி இணை கோடு என தனம் அசைத்து ஆடி நல் கயல் விழி பார்வையில் பொருள் பேசி
கலை இழுத்தே குலுக்கென நகைத்தே மயல் கலதி இட்டே அழைத்து அணையூடே
செருமி வித்தார சிற்றிடை துடித்து ஆட மல் திறம் அளித்தே பொருள் பறி மாதர்
செயல் இழுக்காமல் இ கலியுகத்தே புகழ் சிவபதத்தே பதித்து அருள்வாயே
திரிபுர கோல வெற்பு அழல் கொள சீர் நகை சிறிது அருள் தே அருள் புதல்வோனே
திரை கடல் கோ என குவடுகள் தூள்பட திருடர் கெட்டு ஓட விட்டிடும் வேலா
பரிமள பாகலின் கனிகளை பீறி நல் படியினில் இட்டே குரக்கினம் ஆடும்
பழநியில் சீருற புகழ் குற பாவையை பரிவுற சேர் மணம் பெருமாளே

மேல்

#132
கருகி அகன்று வரி செறி கண்கள் கயல் நிகர் என்று துதி பேசி
கலை சுருள் ஒன்றும் மிடைபடுகின்ற கடி விடம் உண்டு பல நாளும்
விரகுறு சண்ட வினை உடல் கொண்டு விதி வழி நின்று தளராதே
விரை கமழ் தொங்கல் மருவிய துங்க வித பதம் என்று பெறுவேனோ
முருக கடம்ப குறமகள் பங்க முறை என அண்டர் முறை பேச
முது திரை ஒன்ற வரு திறல் வஞ்ச முரண் அசுர் வென்ற வடி வேலா
பரிமள இன்ப மரகத துங்க பகடு இதம் வெற்றி மயில் வீரா
பறி தலை குண்டர் கழு நிரை கண்டு பழநி அமர்ந்த பெருமாளே

மேல்

#133
கருப்பு விலில் மரு பகழி தொடுத்து மதன் விடுத்து அனைய கடைக்கணொடு சிரித்து அணுகு
கருத்தினால் விரகு செய் மட மாதர்
கத களிறு திடுக்கமுற மதர்த்து மிக எதிர்த்து மலை கனத்த இரு தனத்தின் மிசை
கலக்கும் மோகனம் அதில் மருளாதே
ஒருப்படுதல் விருப்பு உடைமை மனத்தில் வர நினைத்து அருளி உனை புகழும் எனை புவியில்
ஒருத்தனாம் வகை திரு அருளாலே
உருத்திரனும் விருத்தி பெற அனுக்கிரகி என குறுகி உரைக்கும் அ மறை அடுத்து பொருள்
உணர்த்தும் நாள் அடிமையும் உடையேனோ
பருப்பதமும் உரு பெரிய அரக்கர்களும் இரைக்கும் எழு படி கடலும் அலைக்க வல
பருத்த தோகையில் வரு முருகோனே
பதித்த மரகதத்தினுடன் இரத்ன மணி நிரைத்த பல பணி பனிரு புய சயில
பரக்கவே இயல் தெரி வயலூரா
திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிக பகைமை செயித்து அருளும் இசை பிரிய
திருத்த மாதவர் புகழ் குருநாதா
சிலை குறவர் இலை குடிலில் புகை கள முகில் புடை செல் திரு பழநி மலைக்குள் உறை
திருக்கை வேல் அழகிய பெருமாளே

மேல்

#134
கருவின் உருவாகி வந்து வயது அளவிலே வளர்ந்து கலைகள் பலவே தெரிந்து மதனாலே
கரிய குழல் மாதர் தங்கள் அடி சுவடு மார் புதைந்து கவலை பெரிதாகி நொந்து மிக வாடி
அரகர சிவாய என்று தினமும் நினையாமல் நின்று அறு சமய நீதி ஒன்றும் அறியாமல்
அசனம் இடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல் நின்று அநுதினமும் நாணம் இன்றி அழிவேனோ
உரக படம் மேல் வளர்ந்த பெரிய பெருமாள் அரங்கர் உலகு அளவு மால் மகிழ்ந்த மருகோனே
உபய குல தீப துங்க விருது கவி ராஜ சிங்க உறை புகலியூரில் அன்று வருவோனே
பரவை மனை மீதில் அன்று ஒரு பொழுது தூது சென்ற பரமன் அருளால் வளர்ந்த குமரேசா
பகை அசுரர் சேனை கொன்று அமரர் சிறை மீள வென்று பழநி மலை மீதில் நின்ற பெருமாளே

மேல்

#135
கலக வாள் விழி வேலோ சேலோ மதுர வாய் மொழி தேனோ பாலோ
கரிய வார் குழல் காரோ கானோ வாய் துவரோ
களமும் நீள் கமுகோ தோள் வேயோ உதரமானது மால் ஏர் பாயோ
களப வார் முலை மேரோ கோடோ இடைதானும்
இழையதோ மலர் வேதாவானோன் எழுதினான் இலையோ வாய் பேசீர்
இது என மோனம் மினாரே பாரீர் என மாதர்
இரு கண் மாயையிலே மூழ்காதே உனது காவிய நூல் ஆராய்வேன்
இடர் படாது அருள் வாழ்வே நீயே தரவேணும்
அலைவு இலாது உயர் வானோர் ஆனோர் நிலைமையே குறி வேலா சீலா
அடியவர்பால் அருள் ஈவாய் நீப ஆர் மணி மார்பா
அழகு உலாவு விசாகா வாகு ஆர் இப மினாள் மகிழ் கேள்வா தாழ்வார்
அயல் உலாவிய சீலா கோலாகல வீரா
வலபை கேள்வர் பின் ஆனாய் கான் ஆர் குறவர் மாது மணாளா நாள் ஆர்
வனச மேல் வரு தேவா மூவா மயில் வாழ்வே
மதுர ஞான வினோதா நாதா பழநி மேவு குமாரா தீரா
மயுர வாகன தேவா வானோர் பெருமாளே

மேல்

#136
கலக கயல் விழி போர் செய வேள் படை நடுவில் புடை வரு பாபிகள் கோபிகள்
கனிய கனியவும் மொழி பேசிய விலைமாதர்
கலவி தொழில் நலமே இனிது ஆம் என மனம் இப்படியே தினம் உழலா வகை
கருணைப்படி எனை ஆளவுமே அருள்தரவேணும்
இலவு கிளை எனும் வாய் வளி நாயகி குழைய தழுவிய மேன்மையினால் உயர்
இசை பெற்று அருளிய காமுகனாகிய வடிவோனே
இதம் மிக்க அரு மறை வேதியர் ஆனவர் புகல தயவுடனே அருள் மேன்மைகள்
இசைய தரும் அநுகூல வசீகர முதல்வோனே
நிலவை சடை மிசையே புனை காரணர் செவியில் பிரணவம் ஓதிய தேசிக
நிருதர்க்கு ஒரு பகையாளியும் ஆகிய சுடர் வேலா
நிமல குருபர ஆறிரு பார்வையும் அருளை தர அடியார்தமை நாள்தொறும்
நிகர் அற்றவர் எனவே மகிழ்கூர்தரும் உரியோனே
பலவின் கனி பணை மீறிய மா மர முருகின் கனியுடனே நெடு வாளைகள்
பரவி தனி உதிர் சோலைகள் மேவிய வகையாலே
பழனத்து உழவர்கள் ஏரிடவே விளை கழனி புரவிகள் போதவும் மீறிய
பழநி சிவகிரி மீதினிலே வளர் பெருமாளே

மேல்

#137
கலவியில் இச்சித்து இரங்கி நின்று இரு கன தனம் விற்க சமைந்த மங்கையர்
கயல்கள் சிவப்ப பரிந்து நண்பொடும் இன்பம் ஊறி
கனி இதழ் உற்றுஉற்று அருந்தி அங்கு உறும் அவசம் மிகுத்து பொருந்தி இன்புறும்
கலகம் விளைத்து கலந்து மண்டு அணை அங்கம் மீதே
குலவிய நல் கைத்தலம் கொண்டு அங்கு அணை கொடி இடை மெத்த துவண்டு தண் புயல்
குழல் அளகம் கட்டு அவிழ்ந்து பண்டையில் அங்கம் வேறாய்
குறி தரு வட்டத்து அடர்ந்த சிந்துர முக தல முத்து பொலிந்து இலங்கிட
கொடிய மயல் செய் பெரும் தடம்தனில் மங்கலாமோ
இலகிய சித்ர புனம் தனிந்து உறை குறமகள் கச்சு கிடந்த கொங்கை மின்
இனிது உறு பத்ம பதம் பணிந்து அருள் கந்த வேளே
எழு கடல் வற்ற பெரும் கொடும் கிரி இடி பட மிக்க ப்ரசண்டம் விண்டுறும்
இகலர் பதைக்க தடிந்து இலங்கிய செம் கை வேலா
பலவித நல் கற்பு அடர்ந்த சுந்தரி பயில் தரு வெற்பு தரும் செழும் கொடி
பணை முலை மெத்த பொதிந்து பண்புறுகின்ற பாலை
பல திசை மெச்ச தெரிந்த செந்தமிழ் பகர் என இச்சித்து உகந்து கொண்டு அருள்
பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்று அருள் பெருமாளே

மேல்

#138
கலை கொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய கபிலர் பகர் அகணாதர் உலகாயர்
கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு கலகல என மிக்க நூல்கள் அதனாலே
சிலுகி எதிர் குத்தி வாது செயவும் ஒருவர்க்கு நீதி தெரிவரிய சித்தியான உபதேசம்
தெரிதர விளக்கி ஞான தரிசநம் அளித்து வீறு திருவடி எனக்கு நேர்வது ஒரு நாளே
கொலையுற எதிர்த்த கோர இப முக அரக்கனோடு குரகத முகத்தர் சீய முக வீரர்
குறை உடல் எடுத்து வீசி அலகையொடு பத்ரகாளி குலவியிட வெற்றி வேலை விடுவோனே
பலம் மிகு புனத்து உலாவு குற வநிதை சித்ர பார பரிமள தனத்தில் மேவு மணி மார்பா
படை பொருது மிக்க யூகம் மழை முகிலை ஒட்டி ஏறு பழநி மலை உற்ற தேவர் பெருமாளே

மேல்

#139
களப முலையை திறந்து தளவ நகையை கொணர்ந்து கயலொடு பகைத்த கண்கள் குழை தாவ
கரிய குழலை பகிர்ந்து மலர் சொருகு கொப்பு அவிழ்ந்து கடி இருள் உடு குலங்கள் என வீழ
முழு மதி என சிறந்த நகை முகம் மினுக்கி இன்ப முறுகு இதழ் சிவப்ப நின்று விலைகூறி
முதல் உளது கை புகுந்து அழகு துகிலை திறந்து முடுகும் அவருக்கு இரங்கி மெலிவேனோ
இள மதி கடுக்கை தும்பை அரவு அணிபவர்க்கு இசைந்து இனிய பொருளை பகர்ந்த குருநாதா
இப முகவனுக்கு உகந்த இளையவ மரு கடம்ப எனது தலையில் பதங்கள் அருள்வோனே
குழகு என எடுத்து உகந்த உமை முலை பிடித்து அருந்து குமர சிவ வெற்பில் அமர்ந்த குக வேலா
குடிலொடு மிக செறிந்த இதண் உள புனத்து இருந்த குறவர் மகளை புணர்ந்த பெருமாளே

மேல்

#140
கறுத்த குழல் அணி மலர் அணி பொங்க பதித்த சிலை நுதல் அணி திலதம் பொன்
கணைக்கு நிகர் கழல் எழு கஞ்ச விழி சிரம் ஆன
கழுத்தில் உறு மணி வளை குழை மின்ன குவட்டு முலை அசை பட இடை அண்மைக்கு அமைந்த
கலை இறுகுறு துவள் வஞ்சி கொடி போல
சிறுத்த களம் மிகு மதம் ஒழுகு இன் சொல் குயில்கள் என மட மயில் எகினங்கள்
திருக்கு நடை பழகிகள் களபம் கச்சு உடை மாதர்
திகைத்த தனமொடு பொருள் பறி ஒண் கண் குவட்டி அவர் வலை அழல் உறு பங்கத்து
இடக்குதலை புலை அவர் வழி இன்பை தவிர்வேனோ
பறித்த விழி தலை மழு உழை செம் கை செழித்த சிவ பரன் இதழி நல் தும்பை
படித்த மதி அறல் அரவு அணி சம்பு குருநாதா
பருத்த அசுரர்கள் உடன் மலை துஞ்ச கொதித்த அலை கடல் எரிபட செம்பொன்
படை கை மணி அயில் விடு நடனம் கொள் கதிர் வேலா
தெறித்து விழி அர உடல் நிமிர அம் பொன் குவட்டு ஒள் திகை கிரி பொடி பட சண்ட
சிறப்பு மயில் மிசை பவுரிகொளும் பொன் திரு பாதா
சிறக்கும் அழகிய திரு மகள் வஞ்சி குறத்தி மகள் உமை மருமகள் கொங்கை
சிலைக்குள் அணை குக சிவ மலை கந்த பெருமாளே

மேல்

#141
கனக கும்பம் இரண்டும் நேர் மலை என நெருங்கு குரும்பை மா மணி
கதிர் சிறந்த வடம் குலாவிய முந்து சூதம்
கடையில் நின்று பரந்து நாள்தொறும் இளகி விஞ்சி எழுந்த கோமள
களப குங்கும கொங்கை யானையை இன்பமாக
அனைவரும் கொளும் என்றுமே விலை இடும் மடந்தையர்தங்கள் தோதகம்
அதில் மருண்டு துவண்டு அ ஆசையில் நைந்து பாயல்
அவசம் மன் கொளும் இன்ப சாகரம் முழுகும் வஞ்சக நெஞ்சையே ஒழிதரும்
பதம் கதி எம்பிரான் அருள்தந்திடாயோ
தனத னந்தன தந்த னாவென டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை
தகுதி திந்திகு திந்த தோவென உந்து தாளம்
தமர சஞ்சலி சஞ்சலா என முழவு டுண்டுடு டுண்டு டூவென
தருண கிண்கிணி கிண்கிண் ஆரமும் முந்த ஓதும்
பணி பதம் கயம் எண் திசாமுக கரி அடங்கலும் அண்ட கோளகை
பதறி நின்றிட நின்று தோதக என்று தோகை
பவுரி கொண்டிட மண்டியே வரும் நிசிசரன் கிளை கொன்ற வேலவ
பழநி அம் கிரியின்கண் மேவிய தம்பிரானே

மேல்

#142
கனத்து இறுகி பெருத்து இளகி பணைத்து மணத்து இதத்து முக
கறுப்பு மிகுத்து அடர்த்து நிகர் தலம் மேராய்
கவட்டையும் மெத்து அடக்கி மதர்த்து அற கெருவித்து இதத்திடு நல்
கலை சவுளி தலை குலவி களிகூரும்
தனத்தியர் கட்கு இதத்து மிகுத்து அனற்கு உள் மெழுக்கு என புவியில்
தவித்து இழிசொல் பவ கடல் உற்ற அயர்வாலே
சலித்த வெறி துடக்கு மனத்து இடக்கன் என சிரிக்க மயல்
சலத்தின் வசைக்கு இணக்கமுற கடவேனோ
புனத்தின் மலை குறத்தி உயர் திருக்கு தன குடத்தின் நறை
புயத்தவ நல் கருத்தை உடை குக வீரா
பொருப்பு அரசற்கு இரக்கமொடு உற்ற அறல் சடிலத்த அ சிவனில்
புலச்சிதனக்கு இதத்தை மிகுத்திடு நாதா
சினத்து எதிர் துட்ட அரக்கர்தமை திகைத்து விழ கண பொழுதில்
சிதைத்திடு நல் கதிர் கை படைத்து உடையோனே
செருக்கொடு நல் தவ கமலத்து அயற்கும் அரிக்கும் அருள் புரிசை
திரு பழநி கிரி குமர பெருமாளே

மேல்

#143
கனமாய் எழுந்து வெற்பு எனவே உயர்ந்து கற்புர மாரணம் துளுத்திடு மானார்
கனி வாய் உகந்து சிக்கெனவே அணைந்து பொருளே இழந்து விட்டு அயர்வாயே
மனமே தளர்ந்து விக்கலுமே எழுந்து மட்டு அறவே உலந்து சுக்கு அது போலே
வசமே அழிந்து உக்கிடு நோய் துறந்து வைப்பு எனவே நினைந்து உனை புகழ்வேனோ
புன வேடர் தந்த பொன் குற மாது இன்புற புணர் காதல் கொண்ட அ கிழவோனே
புனல் ஏழும் மங்க வெற்பொடு சூர் சிரங்கள் பொட்டு எழ வேல் எறிந்த உக்கிர வீரா
தின மேவு குங்குமம் புய வாச கிண்கிணி சிறு கீத செம் பதத்து அருளாளா
சிவலோக சங்கரிக்கு இறை பால பைம் கயம் திருவாவினன்குடி பெருமாளே

மேல்

#144
கார் அணிந்த வரை பார் அடர்ந்து வினை காதல் நெஞ்சு அயர தடுமாறி
கால் நரம்பு உதிர தோல் வழும்புறு பொய் காயம் ஒன்று பொறுத்து அடியேனும்
தார் இணங்கு குழல் கூர் அணிந்த விழி சாபம் ஒன்று நுதல் கொடியார்தம்
தாள் பணிந்து அவர் பொன் தோள் விரும்பி மிக தாழ்வு அடைந்து உலைய தகுமோதான்
சூரன் அங்கம் விழ தேவர் நின்று தொழ தோயமும் சுவற பொரும் வேலா
தூய்மை கொண்ட குற தோகை நின்ற புனம் சூழ் பெரும் கிரியில் திரிவோனே
ஆரணன் கருட கேதனன் தொழ முற்று ஆலம் உண்டவருக்கு உரியோனே
ஆலையும் பழன சோலையும் புடை சுற்று ஆவினன்குடி பெருமாளே

மேல்

#145
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு எலும்பு அணி சரி தசை ஈரல் குடல் நெதி
குலைந்த செயிர் மயிர் குருதியொடு இவை பல கசுமாலம்
குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர் இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள்
குரங்கர் அறிவிலர் நெறி இலர் மிருகணை விறல் ஆன
சரம்பர் உறவனை நரகனை துரகனை இரங்கு கலியனை பரிவுறு சடலனை
சவுந்தரிக முக சரவண பதமொடு மயில் ஏறி
தழைந்த சிவ சுடர்தனை என் மனதினில் அழுந்த உரை செய வரு முக நகை ஒளி
தழைந்த நயனமும் இரு மலர் சரணமும் மறவேனே
இரும்பை வகுளமொடு இயை பல முகில் பொழில் உறைந்த குயில் அளி ஒலி பரவிட மயில்
இசைந்து நடமிடும் இணையிலி புலிநகர் வள நாடா
இருண்ட குவடு இடி பொடிபட வெகு முகடு எரிந்து மகரம் ஒள் திசை கரி குமுறுக
இரைந்த அசுரரொடு இப பரி யமபுரம் விடும் வேளே
சிரம் பொன் அயனொடு முனிவர்கள் அமரர்கள் அரம்பை மகளிரொடு அரகர சிவசிவ
செயம்பு என நடமிடு பதம் அழகியர் குருநாதா
செழும் பவள ஒளி நகை முக மதி நகு சிறந்த குறமகள் இணை முலை புதை பட
செயம் கொடு அணை குக சிவ மலை மருவிய பெருமாளே

மேல்

#146
குருதி மலசலம் ஒழுகு நர குடல் அரிய புழு அது நெளியும் உடல் மத
குருபி நிண சதை விளையும் உளை சளி உடலூடே
குடிகள் என பல குடிகை கொடு வலி கொடு குமர வலி தலை வயிறு வலி என
கொடுமை என பிணி கலகம் இடும் இதை அடல் பேணி
மருவி மதனன் உள் கரிய புளகிதம் மணி அசல பல கவடி மலர் புனை
மதன கலை கொடு குவடு மலைதனில் மயல் ஆகா
மனது துயர் அற வினைகள் சிதறிட மதன பிணியொடு கலைகள் சிதறிட
மனது பதமுற எனது தலை பதம் அருள்வாயே
நிருதர் பொடிபட அமரர் பதி பெற நிசித அரவளை முடிகள் சிதறிட
நெறிய கிரி கடல் எரிய உருவிய கதிர் வேலா
நிறைய மலர் மொழி அமரர் முநிவரும் நிருப குருபர குமர சரண் என
நெடிய முகில் உடல் கிழிய வரு பரி மயிலோனே
பருதி மதி கனல் விழிய சிவனிடம் மருவு ஒரு மலை அரையர் திருமகள்
படிவம் முகில் என அரியின் இளையவள் அருள் பாலா
பரம கணபதி அயலின் மத கரி வடிவு கொடு வர விரவு குறமகள்
அபயம் என அணை பழநி மருவிய பெருமாளே

மேல்

#147
குழல் அடவி முகில் பொழில் வீர வில் நுதல் குமுத அதரம் முறுவல் ஆரம்
குழை மகரம் வளை மொழி குயில் அமுது குய முளரி முகை கிரி சூது
விழி கயல் அயில் பகழி வருணி கருவிளை குவளை விடம் என நாயேன்
மிக அரிவையரை அவ நெறிகள் சொலி வெறிது உளம் விதனம் உறலாமோ
கழல் பணிய வினை கழல் பணியை அணி கழல் பணிய அருள் மயில் வீரா
கமலை திரு மருக மலை நிருதர் உக மலை தொளை செய்த கதிர் வேலா
பழநி மலை வரு பழ நிமலை தரு பழநி மலை முருக விசாகா
பரவு பரவை கொல் பரவை வண அரி பரவும் இமையவர் பெருமாளே

மேல்

#148
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிகள் உலவ கொலைகள் செயவே களவோடே
குலவு கிகிகி கிகிகி எனவும் மிடறில் ஒலிகள் குமுற வளையின் ஒலி மீற
இளநீர் எனவும் முலைகள் அசைய உபய தொடையும் இடையும் அசைய மயில் போலே
இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர் இடரில் மயலில் உளர்வேனோ
மிளிரும் மதுர கவிதை ஒளிரும் அருணகிரி சொல் விஜயகிரி சொல் அணிவோனே
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி அருள் பாலா
பழைய மறையின் முடிவில் அகர மகர உகர படிவ வடிவும் உடையோனே
பழன வயல்கள் கமுகு கதலி பனசை உலவ பழநி மருவு பெருமாளே

மேல்

#149
குறித்த மணி பணி துகிலை திருத்தி உடுத்து இருள் குழலை குலைத்து முடித்து இலை சுருளை பிளவோடே
குதட்டிய துப்பு உதட்டை மடித்து அயில் பயிலிட்டு அழைத்து மருள் கொடுத்து உணர்வை கெடுத்து நக குறியாலே
பொறித்த தனத்து அணைத்து மன செருக்கினர் கைப்பொருள் கவர புணர்ச்சிதனில் பிணிப்படுவித்திடு மாதர்
புலம் தலையில் செலுத்து மன ப்ரமத்தை அற ப்ரசித்தமுற புரித்து அருளி திரு கழலை தருவாயே
பறித்த தலை திருட்டு அமண குருக்கள் அசட்டு உருக்கள் இடை பழுக்கள் உக கழுக்கள் புக திருநீறு
பரப்பிய த திருப்பதி புக்கு அனல் புனலில் கனத்த சொலை பதித்து எழுதி புகட்ட திறல் கவி ராசா
செறித்த சடை சசி தரி அ தகப்பன் மதித்து உகப்பன் என சிறக்க எழுத்து அருள் கருணை பெருவாழ்வே
திகழ் படு செய்ப்பதிக்குள் எனை தடுத்து அடிமைப்படுத்த அருள் திரு பழநி கிரி குமர பெருமாளே

மேல்

#150
குன்றும் குன்றும் செண்டும் கன்றும்படி வளர் முலையினில் ம்ருகமதம் மெழுகியர்
இந்தும் சந்த தங்கும் தண் செம் கமலமும் என ஒளிர் தரு முக வநிதையர்
கொஞ்சும் கெஞ்சும் செஞ்சும் வஞ்சம் சமரசம் உற ஒரு தொழில் வினைபுரிபவர் விரகாலும்
கும்பும் பம்பும் சொம்பும் தெம்பும் குடி என வளர் தரு கொடியவர் கடியவர்
எங்கெங்கு எம் பங்கு என்றுஎன்று என்றும் தனது உரிமை அது என நலமுடன் அணைபவர்
கொஞ்சம் தங்கு இன்பம் தந்து எந்தன் பொருள் உளது எவைகளும் நயமொடு கவர்பவர் மயலாலும்
என்றென்றும் கன்றும் துன்பம் கொண்டு உனது இரு மலர் அடி பரவிட மனதினில்
நன்று என்றும் கொண்டு என்றும் சென்றும் தொழும் மகிமையின் நிலை உணர்வில் நின் அருள்பெற
இன்பும் பண்பும் தெம்பும் சம்பந்தமும் மிக அருள்பெற விடை தரு விதம் முனம் அருள்வாயே
எங்கும் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன் விடும் அதிசய வினை உறும் அலகையை
வென்றும் கொன்றும் துண்டம் துண்டம் செயும் அரி ஒரு முறை இரணிய வலன் உயிர்
நுங்கும் சிங்கம் வங்கம்தன்கண் துயில்பவன் எகினனை உதவிய கரு முகில் மருகோனே
ஒன்று என்ற என்றும் துன்றும் குன்றும் தொளை பட மத கரி முகன் உடல் நெரி பட
டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண் டிடி என விழும் எழு படிகளும் அதிர்பட
ஒண் சங்கம் சம்சம் சம்சம் என்று ஒலி செய மகபதி துதி செய அசுரரை அடுவோனே
உந்தன் தஞ்சம் தஞ்சம் தஞ்சம் சிவன் அருள் குருபர என முநிவரர் பணியும்
தொம்தம் தொம்தம் தொம்தம் என்று ஒலிபட நடமிடு பரன் அருள் அறுமுக
உண்கண் வண்டும் கொண்டும் தங்கும் விரை படு குரவு அலர் அலர்தரும் எழில் புனை புய வீரா
அன்று என்று ஒன்றும் கொண்டு அன்பு இன்று அங்கு அடியவர்தமை இகழ் சமணர்கள் கழுவினில்
அங்கம் சிந்தும் பங்கம் துஞ்சும்படி ஒரு தொகுதியின் நுரை நதி எதிர்பட
அன்பின் பண்பு எங்கும் கண்டு என்பின் அரிவையை எதிர்வர விடு கவி புகல் தரு திறலோனே
அண்டம் கண்டும் பண்டு உண்டும் பொங்கு அமர்தனில் விஜயவன் இரதமை நடவிய
துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன் தரு மகன் முனி தழல் வரு தகர் இவர் வல
அங்கம் கஞ்சம் சங்கம் பொங்கும் கய நிறை வளமுறு சிவகிரி மருவிய பெருமாளே

மேல்

#151
கொந்து தரு குழல் இருளோ புயலோ விந்தை தரு நுதல் சிலையோ பிறையோ
கொஞ்சி பயில் மொழி அமுதோ கனியோ விழி வேலோ
கொங்கை குடம் இரு கரியோ கிரியோ வஞ்சி கொடி இடை துடியோ பிடியோ
கொங்குற்று உயர் அல்குல் அரவோ ரதமோ எனும் மாதர்
திந்தி திமிதிமி திமிதா திமிதோ தந்தி திரிகிட கிடதா எனவே
சிந்து இப்படி பயில் நடமாடிய பாவிகள்பால்
சிந்தை தயவுகள் புரிவேன் உனையே வந்தித்து அருள்தரும் இரு சேவடியே
சிந்தித்திட மிகு மறையாகிய சீர் அருள்வாயே
வெந்திப்புடன் வரும் அவுணேசனையே துண்டித்திடும் ஒரு கதிர் வேல் உடையாய்
வென்றிக்கு ஒரு மலை என வாழ் மலையே தவ வாழ்வே
விஞ்சைக்கு உடையவர் தொழவே வருவாய் கஞ்சத்து அயனுடன் அமரேசனுமே
விந்தை பணிவிடை புரி போது அவர் மேல் அருள்கூர்வாய்
தொந்தி கணபதி மகிழ் சோதரனே செம் கண் கரு முகில் மருகா குகனே
சொந்த குறமகள் கணவா திறல் சேர் கதிர்காமா
சொம்பில் பல வனம் முதிர் சோலைகள் சூழ் இஞ்சி திரு மதில் புடை சூழ் அருள் சேர்
துங்க பழநியில் முருகா இமையோர் பெருமாளே

மேல்

#152
கோல குங்கும கற்பூரம் எட்டு ஒன்று ஆன சந்தனம் வித்துருமத்தின்
கோவை செண்பக தட்ப மகிழ் செங்கழுநீரின்
கோதை சங்கிலி உற்ற கழுத்தும் பூஷணம் பல ஒப்பனை மெச்சும்
கூறு கொண்ட பணை தனம் விற்கும் பொதுமாதர்
பாலுடன் கனி சர்க்கரை சுத்த தேன் எனும்படி மெத்த ருசிக்கும்
பாதகம் பகர் சொற்களில் இட்டம் பயிலாமே
பாத பங்கயம் உற்றிட உள் கொண்டு ஓதுகின்ற திருப்புகழ் நித்தம்
பாடும் அன்பு அது செய்ப்பதியில் தந்தவன் நீயே
தாலம் முன்பு படைத்த ப்ரபு சந்தேகம் இன்றி மதிக்க அதிர்க்கும்
சாகரம் சுவற கிரி எட்டும் தலை சாய
சாடு குன்று அது பொட்டு எழ மற்றும் சூரனும் பொடி பட்டிட யுத்தம்
சாதகம் செய் திரு கை விதிர்க்கும் தனி வேலா
ஆலம் உண்ட கழுத்தினில் அக்கும் தேவர் என்பு நிரைத்து எரியில் சென்று
ஆடுகின்ற தகப்பன் உகக்கும் குருநாதா
ஆடகம் புனை பொன் குடம் வைக்கும் கோபுரங்களின் உச்சி உடு தங்கும்
ஆவினன்குடி வெற்பினில் நிற்கும் பெருமாளே

மேல்

#153
கோல மதி வதனம் வேர்வு தர அளக பாரம் நெகிழ விழி வேல்கள் சுழல நுவல்
கோவை இதழ் வெளிற வாய்மை பதறி இள முகையான
கோகனக உபய மேரு முலை அசைய நூலின் இடை துவள வீறு பறவை வகை
கூற இனிய களம் ஓலம் இட வளைகள் கரம் மீதே
காலின் அணி கனக நூபுரம் ஒலிகள் ஓலமிட அதிக போகம் அது மருவு
காலை வெகு சரச லீலை அளவு செயும் மடமானார்
காதல் புரியும் அநுபோக நதியின் இடை வீழுகினும் அடிமை மோசம் அற உனது
காமர் கழல் இணைகள் ஆனது ஒரு சிறிதும் மறவேனே
ஞால முழுதும் அமரோர்கள் புரியும் இகலாக வரும் அவுணர் சேர உததி இடை
நாசமுற அமர் செய் வீரதர குமர முருகோனே
நாடி ஒரு குற மின் மேவு தினை செய் புன மீதில் இயல் அகல் கல் நீழல் இடை நிலவி
நாணம் வர விரகம் ஓதும் ஒரு சதுர புரி வேலா
மேலை அமரர் தொழும் ஆனை முகர் அரனை ஓடி வலம் வரு முன் மோது திரை மகர
வேலை உலகை வலமாக வரு துரக மயில் வீரா
வீறு கலிசை வரு சேவகனது இதயம் மேவும் முதல்வ வயல் வாவி புடை மருவு
வீரை வரு பழநி ஞான மலையில் வளர் பெருமாளே

மேல்

#154
சகடத்தில் குழை இட்டு எற்றி குழலுக்கு சரம் வைத்து எற்றி
புளகித்து குவளை கண் பொன் கணை ஒத்திட்டு உழல சுத்தி
தரள பல் பவளத்து ஒட்ட களப அப்பி ஒட்டுதல் இட்ட அத்தி குவடான
தன துத்தி படிகம் பொற்பு இட்டு அசைய பெள் பசளை துப்பு
கொடி ஒத்திட்டு இடையில் பட்டை தகையில் தொட்டு உகள பச்சை
சரணத்துக்கு இயல சுற்றி சுழல் இட்டு கடனை பற்றி கொளு மாதர்
சுகமுற்று கவலைப்பட்டு பொருள் கெட்டு கடை கெட்டு சொல்
குளறிட்டு தடி தொட்டு எற்றி பிணி உற்று கசதிப்பட்டு
சுக துக்கத்து இடர் கெட்டு உற்று தளர்பட்டு கிடைபட்டு உப்பி கிடை நாளில்
சுழலர் சக்கிரியை சுற்றிட்டு இறுக கட்டி உயிரை பற்றி
கொள் உக பற்பலரை கட்டி கரம் வைத்து தலையில் குத்தி
சுடு கட்டை சுடலை கட்டைக்கு இரை இட்டு பொடி பட்டு உட்கு இ சடம் ஆமோ
திகுடத்தி குகுடட் டுட்டுட் டமடட்டட் டமடட் டிக்குட்
டிமிடிட்டிட் டிமிடிட் டிக்கு தொகுதொக்கு தொகுத தொக்கு
செகணக்க செகண செக்கு தகுடத்த தகுட தட்டுட்டு இடி பேரி
திமிலை கைத்துடி தட்டு எக்கை பகடு இட்டு பறை ஒத்த கண்
திகை எட்டு கடல் வற்றி தி தர உக்க கிரி எட்டு தைத்தியருக்கு
சிரம் இற்று உட்க சுரர் பொன் பூ சொரிய கை தொட்டிடும் வேலா
பகலை பல் சொரிய தக்கன் பதி புக்கு அட்டு அழல் இட்டு திண்
புரம் மட்கி கழை வில் புட்ப சரனை சுட்டு அயனை கொத்தி
பவுரிக்கொள் பரமர்க்கு சற்குரு ஒத்து பொருளை கற்பித்து அருள்வோனே
பவள பொன் கிரி துத்தி பொன் தன கொச்சை கிளி சொல் பற்றி
பரிவுற்று கமல புட்பத்து இதழ் பற்றி புணர் சித்ர பொன்
படிகத்து பவள பச்சை பத முத்து பழநி சொக்க பெருமாளே

மேல்

#155
சிந்துர கூர மருப்பு செம் சரி செம் கை குலாவ நடித்து தென்புற
செண்பக மாலை முடித்து பண்புள தெருவூடே
சிந்துகள் பாடி முழக்கி செங்கயல் அம்புகள் போல விழித்து
சிங்கியில் செம் பவள ஆடை துலக்கி பொன் பறி விலை மாதர்
வந்தவர் ஆர் என அழைத்து கொங்கையை அன்புற மூடி நெகிழ்த்தி கண் பட
மஞ்சள் நீர் ஆடி மினுக்கி பஞ்சணைதனில் ஏறி
மந்திர மோகம் எழுப்பி கெஞ்சிட முன் தலை வாயில் அடைத்து சிங்கி கொள்
மங்கையர் ஆசை விலக்கி பொன் பதம் அருள்வாயே
இந்திர நீல வனத்தில் செம் புவி அண்ட கடாகம் அளித்திட்டு அண்டர்கள்
எண்படு சூரை அழித்து கொண்டு அருள் ஒரு பேடி
இன்கன தேரை நடத்தி செம் குரு மண்டல நாடும் அளித்து பஞ்சவர்
இன்புறு தோழமை உடை கத்தன் திரு மருகோனே
சந்திர சூரியர் திக்கு எட்டும் புகழ் அந்தமில் வாழ்வு அது பெற்று தங்கிய
சங்கரனார் செவி புக்க பண்பு அருள் குருநாதா
சம்ப்ரம் ஆன குறத்திக்கு இன்புறு கொங்கையில் மேவு சமர்த்த சுந்தர
தண் தமிழ் சேர் பழநிக்குள் தங்கிய பெருமாளே

மேல்

#156
சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாத
சிவகாமசுந்தரி தன் வர பால கந்த நின செயலே விரும்பி உளம் நினையாமல்
அவ மாயை கொண்டு உலகில் விருதா அலைந்து உழலும் அடியேனை அஞ்சல் என வரவேணும்
அறிவு ஆகமும் பெருக இடரானதும் தொலைய அருள் ஞான இன்பம் அது புரிவாயே
நவநீதமும் திருடி உரலோடு ஒன்றும் அரி ரகுராமர் சிந்தை மகிழ் மருகோனே
நவலோகமும் கை தொழ நிச தேவ அலங்கிருத நலமான விஞ்சை கரு விளை கோவே
தெவயானை அம் குற மின் மணவாள சம்ப்ரமுறு திறல் வீர மிஞ்சு கதிர் வடி வேலா
திருவாவினன்குடியில் வரு வேள் சவுந்தரிக செக மேல் மெய் கண்ட விறல் பெருமாளே

மேல்

#157
சிறுபறையும் முரசு துடி சத்த கண பறையும் மொகுமொகு என அதிர உடன் எட்டி பிடித்து முடி
சிறு கயிறு நெடிது கொடு கட்டிட்டு இழுக்க இனி அணுகாதே
சில தமர்கள் உறவு கிளை கத்தி பிதற்றி எடு சுடலைதனில் இடு கனலை இட்டு கொளுத்து புனல்
திரை கடலில் முழுகு என உரைக்கப்படி குடிலை ஒழியாதே
மறை முறையின் இறுதி நிலை முத்திக்கு இசைத்தபடி உடல் உயிர்கள் கரண வெளி பட்டு குண த்ரயம்
வழிபடவும் நினது அடிமை இச்சப்படுத்துவது ஒரு நாளே
வரு துரக மயில் மணிகள் சத்திக்க நிர்த்தமிட ஒரு பதுடன் இரு புயமும் மட்டு தொடைக்கு இசைய
மனம் மகிழ இனிய மொழி செப்பி சிவத்த பதம் அருள்வாயே
நறை இதழி அறுகு பல புட்ப திரட்களொடு சிறுபிறையும் அரவும் எழில் அப்பு திரு தலையில்
நளினமுற அணி சடையர் மெச்சி ப்ரியப்படவும் மயில் ஏறி
நவ நதிகள் குமுகுமு என வெற்பு திரள் சுழல அகில முதல் எழு புவனம் மெத்த திடுக்கிடவும்
நவ மணிகள் உரகன் உடல் கக்க துரத்தி வரும் முருகோனே
குறவர் முனை கெட மனது வெட்கப்பட குடிலில் மலையில் எழு தினை இதணில் வைத்து சிறுக்கி இரு
குவி முலையும் அணி இடையும் மெச்சி புணர்ச்சி செயு மணவாளா
குறு முனிவன் இரு பொழுதும் அர்ச்சித்து முத்தி பெற அறிவு நெறி தவ நிலைகள் செப்பு தமிழ்க்கு இனிய
குரு குமர பழநி வளர் வெற்புத்தனில் திகழும் பெருமாளே

மேல்

#158
சீ உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும் மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை
தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே
தீது உள குணங்களே பெருகு தொந்த மாயையில் வளர்ந்த தோல் தசை எலும்பு
சேரிடு நரம்பு தான் இவை பொதித்து நிலை காணா
ஆயது நமன் கை போக உயிர் அந்த நாழிகையில் விஞ்ச ஊசிடும் இடும்பை
ஆகிய உடம்பு பேணி நிலை என்று மடவார்பால்
ஆசையை விரும்பியே விரக சிங்கி தானும் மிக வந்து மேவிட மயங்கும்
ஆழ் துயர் விழுந்து மாளும் எனை அன்புபுரிவாயே
மாயை வல கஞ்சனால் விட வெகுண்டு பார் முழுதும் அண்ட கோளமும் நடுங்க
வாய் பிளறி நின்று மேக நிகர் தன் கை அதனாலே
வாரியுற அண்டி வீறொடு முழங்கு நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்ந்த
வாரண இரண்டு கோடு ஒடிய வென்ற நெடியோனாம்
வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து மேயல் புரி செம் கண் மால் மருக துங்க
வேல கிரவுஞ்ச மால் வரை இடிந்து பொடியாக
வேலை விடு கந்த காவிரி விளங்கு கார் கலிசை வந்த சேவகன் வணங்க
வீரை நகர் வந்து வாழ் பழநி அண்டர் பெருமாளே

மேல்

#159
சீறல் அசடன் வினைகாரன் முறைமையிலி தீமைபுரி கபடி பவ நோயே
தேடு பரிசி கன நீதி நெறி முறைமை சீர்மை சிறிதுமிலி எவரோடும்
கூறு மொழியது பொய்யான கொடுமை உள கோளன் அறிவிலி உன் அடி பேணா
கூளன் எனினும் எனை நீ உன் அடியாரொடு கூடும் வகைமை அருள்புரிவாயே
மாறுபடும் அவுணர் மாள அமர் பொருது வாகை உள மவுலி புனைவோனே
மாக முகுடு அதிர வீசு சிறை மயிலை வாசி என உடைய முருகோனே
வீறு கலிசை வரு சேவகனது இதய மேவும் ஒரு பெருமை உடையோனே
வீரை உறை குமர தீரதர பழநி வேல இமையவர்கள் பெருமாளே

மேல்

#160
சுருதி முடி மோனம் சொல் சித்பரம ஞான சிவ சமய வடிவாய் வந்த அத்துவிதமான பர
சுடர் ஒளியதாய் நின்ற நிட்கள சொரூப முதல் ஒரு வாழ்வே
துரிய நிலையே கண்ட முத்தர் இதய கமலம்அதனில் விளையா நின்ற அற்புத சுபோத சுக
சுய படிகமாய் இன்ப பத்ம பதமே அடைய உணராதே
கருவில் உருவே தங்கு சுக்கில நிதான வளி பொரும அதிலே கொண்ட முக்குண விபாக நிலை
கருத அரியா வஞ்சக கபடம் மூடி உடல் வினை தானே
கலகம் இடவே பொங்கு குப்பை மல வாழ்வு நிஜம் என உழலும் மாயம் செனித்த குகையே உறுதி
கருது அசுழம் ஆம் இந்த மட்டைதனை ஆள உனது அருள்தாராய்
ஒரு நியமமே விண்ட சட்சமய வேத அடி முடி நடுவுமாய் அண்ட முட்டை வெளி ஆகி உயிர்
உடல் உணர்வு அதுவாய் எங்கும் உற்பனமது ஆக அமர் உளவோனே
உத தரிசமாம் இன்ப புது அமிர்த போக சுகம் உதவும் அமல ஆனந்த சத்தி கர மேவு உணர் அ
உரு பிரணவா மந்த்ர கர்த்தவியம் ஆக வரு குருநாதா
பருதி கதிரே கொஞ்சு நல் சரண நூபுரம் அது அசைய நிறை பேர் அண்டம் ஒக்க நடமாடும் கன
பத கெருவிதா துங்க வெற்றி மயில் ஏறும் ஒரு திறலோனே
பணியும் அடியார் சிந்தை மெய்ப்பொருள் அது ஆக நவில் சரவணபவா ஒன்றும் வல் கரமும் ஆகி வளர்
பழநி மலை மேல் நின்ற சுப்ரமணியா அமரர் பெருமாளே

மேல்

#161
சுருள் அளக பார கொங்கை மகளிர் வசமாய் இசைந்து சுரத க்ரியையால் விளங்கும் மதன் நூலே
சுருதி எனவே நினைந்து அறிவிலிகளோடு இணங்கு தொழிலுடைய யானும் இங்கு உன் அடியார் போல்
அரு மறைகள் ஓதி நினைந்து மநு நெறியிலே நடந்து அறிவை அறிவால் அறிந்து நிறைவாகி
அகில புவனாதி எங்கும் வெளியுற மெய்ஞ்ஞான இன்ப அமுதை ஒழியாது அருந்த அருள்வாயே
பருதி மகன் வாசல் மந்த்ரி அனுமனொடு நேர் பணிந்து பரி தக அழையா முன் வந்து பரிவாலே
பரவிய விபீஷணன் பொன் மகுட முடி சூட நின்று படைஞரொடு இராவணன் தன் உறவோடே
எரி புகுத மாறு இல் அண்டர் குடி புகுத மாறுகொண்ட ரகுபதி இராமசந்த்ரன் மருகோனே
இளைய குற மாது பங்க பழநி மலை நாத கந்த இமையவள் தனால் மகிழ்ந்த பெருமாளே

மேல்

#162
ஞானம் கொள் பொறிகள் கூடி வான் இந்து கதிர் இலாத நாடு அண்டி நமசிவாய வரை ஏறி
நா இன்ப ரசம் அது ஆன ஆநந்த அருவி பாய நாதங்களோடு குலாவி விளையாடி
ஊனங்கள் உயிர்கள் மோக நான் என்பது அறிவு இலாமல் ஓம் அங்கி உருவமாகி இருவோரும்
ஓர் அந்தம் மருவி ஞான மா விஞ்சை முதுகின் ஏறி லோகங்கள் வலம் அது ஆட அருள்தாராய்
தேனம் கொள் இதழி தாகி தார் இந்து சலில வேணி சீர் அங்கன் எனது தாதை ஒரு மாது
சேர் பஞ்ச வடிவி மோகி யோகம் கொள் மவுன ஜோதி சேர் பங்கின் அமல நாதன் அருள் பாலா
கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல காடு அந்த மயிலில் ஏறு முருகோனே
காமன் கை மலர்கள் நாண வேடம் பெண் அமளி சேர்வை காண் எங்கள் பழநி மேவு பெருமாளே

மேல்

#163
தகர நறு மலர் பொதுளிய குழலியர் கலக கெருவித விழி வலை பட விதி
தலையில் எழுதியும் மனைவி இல் உறவிடு அதனாலே
தனயர் அனை தமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகை என நினைவுறு
தவனம் சலதியில் முழுகியெ இடர்படு துயர் தீர
அகர முதல் உள பொருளினை அருளிட இரு கை குவி செய்து உள் உருகிட உருகியே
அரகர என வலன் இடமுற எழில் உனது இரு பாதம்
அருள அருளுடன் மருள் அற இருள் அற கிரண அயிர் கொடு குருகு அணி கொடி ஒடு
அழகு பெற மரகத மயில் மிசை வர இசைவாயே
சிகர குடையில் நிரை வர இசை தெரி சதுரன் விதுரன் இல் வருபவன் அளை அது
திருடி அடிபடு சிறியவன் நெடியவன் மதுசூதன்
திகிரி வளை கதை வசி தநு உடையவன் எழிலி வடிவினன் அரவு பொன் முடி மிசை
திமித திமிதிமி என நடமிடும் அரி மருகோனே
பகர புகர் முக மத கரி உழை தரு வனிதை வெருவ முன் வர அருள்புரி குக
பரம குரு பர இமகிரி தரு மயில் புதல்வோனே
பலவின் முது பழம் விழைவு செய்து ஒழுகிய நறவு நிறை வயல் கமுகு அடர் பொழில் திகழ்
பழநி மலை வரும் புரவல அமரர்கள் பெருமாளே

மேல்

#164
தகைமை தனியில் பகை கற்று உறு கை தநு முட்ட வளைப்பவனாலே
தரள திரளில் புரள கரளம் தமர திமிர கடலாலே
உகை முத்தம் மிகுத்தது என பகல் புக்கு ஒளி மட்கு மிகை பொழுதாலே
உரை அற்று உணர்வு அற்று உயிர் எய்த்த கொடிக்கு உன நல் பிணையல் தரவேணும்
திகை பத்தும் உக கமலத்தனை முன் சிறை இட்ட பகை திறல் வீரா
திகழ் கற்பகம் மிட்ட வன கனக திருவுக்கு உருகி குழை மார்பா
பகல கிரண பரண சடில பரமற்கு ஒரு சொல் பகர்வோனே
பவன புவன செறிவற்று உயர் மெய் பழநி குமர பெருமாளே

மேல்

#165
தமரும் அமரும் மனையும் இனிய தனமும் அரசும் அயலாக
தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய எறியாதே
கமல விமல மரகத மணி கனக மருவும் இரு பாதம்
கருத அருளி எனது தனிமை கழிய அறிவு தரவேணும்
குமர சமர முருக பரம குலவு பழநி மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு குறவர் சிறுமி மணவாளா
அமரர் இடரும் அவுணர் உடலும் அழிய அமர் செய்து அருள்வோனே
அறமும் நிறமும் அயிலும் மயிலும் அழகும் உடைய பெருமாளே

மேல்

#166
தலைவலி மருத்தீடு காமாலை சோகை சுரம் விழிவலி வறட்சூலை காயாசுவாசம் வெகுசலம்
மிகு விஷ பாகம் மாயா விகார பிணி அணுகாதே
தலம் மிசை அதற்கான பேரோடு கூறி இது பரிகரி என காது கேளாது போலும் அவர்
சரியும் வயதுக்கு ஏது தாரீர் சொலீர் எனவும் விதியாதே
உலைவு அற விருப்பாக நீள் காவின் வாச மலர் வகைவகை எடுத்தே தோடா மாலிக ஆபரணம்
உனது அடியினில் சூடவே நாடும் மாதவர்கள் இரு பாதம்
உளம் அது தரித்தே வினாவோடு பாடி அருள் வழிபட எனக்கே தயாவோடு தாள் உதவ
உரகம் அது எடுத்து ஆடு மேகார மீதின் மிசை வரவேணும்
அலை கடல் அடைத்தே மகா கோர ராவணனை மணி முடி துணித்து ஆவியேயான ஜானகியை
அடலுடன் அழைத்தே கொள் மாயோனை மாமன் என்னும் மருகோனே
அறுகினை முடித்தோனை ஆதாரம் ஆனவனை மழு உழை பிடித்தோனை மாகாளி நாணம் முனம்
அவைதனில் நடித்தோனை மா தாதையே எனவும் வருவோனே
பல கலை படித்து ஓது பாவாணர் நாவில் உறை இரு சரண வித்தார வேலாயுதா உயர் செய்
பரண் மிசை குற பாவை தோள் மேவும் மோகமுறு மணவாளா
பதும வயலில் பூகம் மீதே வரால்கள் துயில் வரு புனல் பெருக்கு ஆறு காவேரி சூழ வளர்
பழனி வரு கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே

மேல்

#167
திடமிலி சற்குணமிலி நல் திறமிலி அற்புதமான
செயமிலி மெய் தவமிலி நல் செபமிலி சொர்க்கமும் மீதே
இடமிலி கை கொடையிலி சொற்கு இயல்பிலி நல் தமிழ் பாட
இரு பதம் உற்று இருவினை அற்று இயல் கதியை பெறவேணும்
கெடு மதி உற்றிடும் அசுர கிளை மடிய பொரும் வேலா
கிரண குறை பிறை அறுகு அக்கு இதழ் மலர் கொக்கு இறகோடே
படர் சடையில் புனை நடன பரமர்தமக்கு ஒரு பாலா
பல வயலில் தரள நிறை பழனி மலை பெருமாளே

மேல்

#168
திமிர உததி அனைய நரக செனனம் அதனில் விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியும் அணுகாதே
அமரர் வடிவும் அதிக குலமும் அறிவு நிறையும் வரவே நின்
அருள் அது அருளி எனையும் மனதோடு அடிமை கொளவும் வர வேணும்
சமர முக வெல் அசுரர்தமது தலைகள் உருள மிகவே நீள்
சலதி அலற நெடிய பதலை தகர அயிலை விடுவோனே
வெம் அரவணையில் இனிது துயிலும் விழிகள் நளினன் மருகோனே
மிடறு கரியர் குமர பழநி விரவு அமரர் பெருமாளே

மேல்

#169
தோகை மயிலே கமல மானே உலாசம் மிகு காம துரையான மத வேள் பூவையே இனிமை
தோயும் அநுபோக சுக லீலாவிநோதம் முழுது உணர் தேனே
சூது அனைய சீதள இளநீர் ஆன பார முலை மீது அணைய வாரும் இதழ் தாரீர் என் ஆணை மொழி
சோர்வது இலை யான் அடிமை ஆவேன் உம் ஆணை மிக மயலானேன்
ஆகம் உறவே நகம்அதாலே விடாத அடையாளம் இட வாரும் எனவே மாதர்களுடன்
ஆசை சொலியே உழலும் மா பாதன் நீதியிலி உனை ஓதேன்
ஆம் உனது நேய அடியாரோடு கூடுகிலன் நீறு நுதல் மீது இடல் இலா மூடன் ஏதுமிலி
ஆயினும் யான் அடிமை ஈடேறவே கழல்கள் தருவாயே
மாகம் முகடோடு அகில பாதாள மேருவுடனே சுழல வாரி அதுவே தாழியா அமரர்
வாலி முதலானவர்கள் ஏனோர்களால் அமுது கடை நாளில்
வாரும் எனவே ஒருவர் நோகாமல் ஆல விடம் ஈசர் பெறுமாறு உதவியே தேவர் யாவர்களும்
வாழ அமுதே பகிரும் மா மாயனார் அரி இனிய மருகோனே
மேக நிகரான கொடைமான் நாயகாதிபதி வாரி கலி மாருத கரோ பாரி மா மதன
வேள் கலிசை வாழ வரு காவேரி சேவகனது உளம் மேவும்
வீர அதி சூரர் கிளை வேர் மாளவே பொருத தீர குமரா குவளை சேர் ஓடை சூழ் கழனி
வீரைநகர் வாழ் பழநி வேலாயுதா அமரர் பெருமாளே

மேல்

#170
நாத விந்து கலை ஆதி நமோ நம வேத மந்த்ர சொரூபா நமோ நம
ஞான பண்டித ஸாமி நமோ நம வெகு கோடி
நாம சம்பு குமாரா நமோ நம போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூரா நமோ நம பர சூரர்
சேத தண்ட விநோதா நமோ நம கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்ப்ரம வீரா நமோ நம கிரி ராஜ
தீப மங்கள ஜோதி நமோ நம தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய்
ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர் பாத சேவையும் மறவாத
ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை சோழ மண்டலம் மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடாளு நாயக வயலூரா
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டு அவரோடே முன் நாளினில்
ஆடல் வெம் பரி மீது ஏறி மா கயிலையில் ஏகி
ஆதி அந்த உலா ஆசு பாடிய சேரர் கொங்குவை காவூர் நல் நாடு அதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே

மேல்

#171
நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு நெருடு கவி கொண்டு வித்தை பேசிய
நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா
நெளிய முது தண்டு சத்ர சாமர நிபிடம் இட வந்து கைக்கு மோதிர
நெடுகி அதி குண்டல ப்ரதாபம் உடையோராய்
முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து இருக்குமோ எனில்
முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி
முறியும் அவர் தங்கள் வித்தை தான் இது முடியவு உனை நின்று பத்தியால் மிக
மொழியும் வளர் செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே
திகுதிகு என மண்ட விட்ட தீ ஒரு செழியன் உடல் சென்று பற்றி ஆருகர்
திசையின் மண் வந்துவிட்டபோதினும் அமையாது
சிறிய கர பங்கயத்து நீறு ஒரு தினை அளவு சென்று பட்டபோதினில்
தெளிய இனி வென்றி விட்ட மோழைகள் கழுவேற
மகிதலம் அணைந்த அத்த யோனியை வரைவு அற மணந்து நித்த நீடு அருள்
வகைதனை அகன்றி இருக்கும் மூடனை மல ரூபம்
வரவர மனம் திகைத்த பாவியை வழி அடிமை கொண்டு மிக்க மாதவர்
வளர் பழநி வந்த கொற்ற வேலவ பெருமாளே

மேல்

#172
நெற்றி வெயர் துளி துளிக்கவே இரு குத்து முலை குடம் அசைத்து வீதியில்
நிற்பவர் மை படர் விழி கலாபியர் மொழியாலே
நித்த மயக்கிகள் மணத்த பூ மலர் மெத்தையில் வைத்து அதி விதத்திலே உடல்
நெட்டு வர தொழில் கொடுத்து மேவியும் உறவாடி
உற்ற வகைப்படி பொருட்கள் யாவையும் மெத்தவு நட்பொடு பறித்து நாள்தொறும்
உற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்கள் உறவாமோ
உச்சித மெய்ப்புற அனை தயாவுடன் மெய்ப்படு பத்தியின் இணக்கமே பெற
உள் குளிர் புத்தியை எனக்கு நீ தர வருவாயே
கற்ற தமிழ் புலவனுக்குமே மகிழ்வுற்று ஒரு பொற்கொடி களிக்கவே பொரு
கற்பனை நெல் பல அளித்த காரணண் அருள் பாலா
கற்பக நகர் களிறு அளித்த மாது அணை பொன் புய மை புயல் நிறத்த வானவர்கட்கு
இறை உட்கிட அருள் க்ருபாகர மருகோனே
நல் தவர் அர்ச்சனை இட தயாபர வஸ்து என புவியிடத்திலே வளர்
நத்து அணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு மருகோனே
நட்டுவர் மத்தள முழக்கமாம் என மை குலம் மெத்தவும் முழக்கமே தரு
நல் பழநி பதி செழிக்க மேவிய பெருமாளே

மேல்

#173
பகர்தற்கு அரிதான செந்தமிழ் இசையில் சில பாடல் அன்பொடு
பயில பல காவியங்களை உணராதே
பவளத்தினை வீழியின் கனிஅதனை பொரு வாய் மடந்தையர்
பசலை தனமே பெறும்படி விரகாலே
சகர கடல் சூழும் அம் புவி மிசை இப்படியே திரிந்து உழல்
சருகு ஒத்து உளமே அயர்ந்து உடல் மெலியா முன்
தகதித்திமி தாகி ணங்கிண என உற்று எழு தோகை அம் பரிதனில்
அற்புதமாக வந்து அருள்புரிவாயே
நுகர் வித்தகமாகும் என்று உமை மொழியில் பொழி பாலை உண்டிடு
நுவல் மெய்ப்பு உள பாலன் என்றிடும் இளையோனே
நுதி வைத்த கரா மலைந்திடு களிறுக்கு அருளே புரிந்திடு
நொடியில் பரிவாக வந்தவன் மருகோனே
அகர பொருள் ஆதி ஒன்றிடு முதல் அக்கரமானது இன் பொருள்
அரனுக்கு இனிதா மொழிந்திடு குருநாதா
அமரர்க்கு இறையே வணங்கிய பழநி திருவாவினன்குடிஅதனில்
குடியாய் இருந்து அருள் பெருமாளே

மேல்

#174
பஞ்சபாதகன் பாவி முழு மூடன் வெகு வஞ்ச லோபியன் சூது கொலைகாரன் மதி
பண் கொளாதவன் பாவ கடல் ஊடு நுழை பவுஷாசை
பங்கன் மோதி அம் பாழ் நரகில் வீணின் விழ பெண்டிர் வீடு பொன் தேடி நொடி மீதில் மறை
பஞ்ச மா மலம் பாசமொடு கூடி வெகு சதிகாரர்
அஞ்சு பூதம் உண்ட அ கடியகாரர் இவர் தங்கள் வாணிபம் காரியம் அலாமல் அருள்
அன்பர் பாலுடன் கூடி அறியாத புகழ் அடியேனை
அண்டர் மால் அயன் தேடி அறியாத ஒளி சந்த்ரசேகரன் பாவை விளையாடு படிக
அந்த நாடுடன் கூடி விளையாட அருள்புரிவாயே
வஞ்ச மா சுரன் சேனை கடலோடு குவடும் கவே இனன் போல ஒளிர் வேலை விடு
வண் கையா கடம்பு ஏடு தொடை ஆடு முடி முருகோனே
மங்கை மோக சிங்கார ரகுராமரிட தங்கை சூலி அம் காளி எமை ஈண புகழ்
மங்கள ஆயி சந்தான சிவகாமி உமை அருள் பாலா
கொஞ்சு மா சுகம் போல மொழி நீல கடை பெண்கள் நாயகம் தோகை மயில் போல் இரச
கொங்கை மால் குறம் பாவை ஆவல் தீர வர அணைவோனே
கொண்டல் சூழு அம் சோலை மலர் வாவி கயல் கந்து பாய நின்று ஆடு துவர் பாகை உதிர்
கந்தியோடு அகம் சேர் பழநி வாழ் குமர பெருமாளே

மேல்

#175
பாரியான கொடை கொண்டலே திரு வாழ் விசால தொடை திண் புயா எழு
பாரும் ஏறு புகழ் கொண்ட நாயக அபிராம
பாவலோர்கள் கிளைக்கு என்றும் வாழ்வு அருள் சீல ஞால விளக்கு இன்ப சீவக
பாதசாதன உத்துங்க மானத என ஓதி
சீரதாக எடுத்து ஒன்று மா கவி பாடினாலும் இரக்கம் செயாது உரை
சீறுவார் கடையில் சென்று தாம் அயர்வுற வீணே
சேய பா வகையை கொண்டு போய் அறியாமலே கமரில் சிந்துவார் சிலர்
சேயனார் மனதில் சிந்தியார் அருகுறலாமோ
ஆரு நீர்மை மடுக்கண் கரா நெடு வாயில் நேர் பட உற்று அன்று மூலமே என
ஆரவார மத தந்தி தான் உய்ய அருள் மாயன்
ஆதி நாராணன் நல் சங்க பாணியன் ஓதுவார்கள் உள்ளத்து அன்பன் மாதவன்
ஆன நான்முகன் நல் தந்தை சீதரன் மருகோனே
வீர சேவக உத்தண்டம் தேவ குமார ஆறிரு பொன் செம் கை நாயக
வீசு தோகை மயில் துங்க வாகனம் உடையோனே
வீறு காவிரி உட்கொண்ட சேகரனான சேவகன் நல் சிந்தை மேவிய
வீரை வாழ் பழநி துங்க வானவர் பெருமாளே

மேல்

#176
புடவிக்கு அணி துகில் என வளர் அந்த கடல் எட்டையும் அற குடி முநி எண் கண்
புநித சத தள நிலை கொள் சயம்பு சதுர்வேதன்
புரம் எட்டு எரி எழ விழி கனல் சிந்தி கடினத்தொடு சில சிறு நகை கொண்ட அற்புத
கர்த்தர் அரகர பர சிவன் இந்த தனி மூவர்
இட சித்தமும் நிறை தெளிவுறவும் பொன் செவியுள் பிரணவ ரகசியம் அன்புற்றிட
உற்பன மொழி உரை செய் குழந்தை குருநாதா
எதிருற்ற அசுரர்கள் படை கொடு சண்டைக்கு இடம் வைத்திட அவர் குலம் முழுதும் பட்டிட
உக்கிரமொடு வெகுளிகள் பொங்க கிரி யாவும்
பொடிபட்டு உதிரவும் விரிவுறும் அண்ட சுவர் விட்டு அதிரவும் முகடு கிழிந்து அப்புறம்
அ பர வெளி கிடு கிடு எனும் சத்தமும் ஆக
பொருது கையில் உள அயில் நிணம் உண்க குருதி புனல் எழு கடலினும் மிஞ்ச
புரவி கன மயில் நட விடும் விந்தை குமரேசா
படியில் பெருமித தக உயர் செம்பொன் கிரியை தனி வலம் வர அரன் அந்த
பலனை கரி முகன் வசம் அருளும் பொற்புஅதனாலே
பரன் வெட்கிட உளம் மிகவும் வெகுண்டு அ கனியை தர விலை என அருள் செந்தில்
பழநி சிவகிரிதனில் உறை கந்த பெருமாளே

மேல்

#177
புடை செப்பு என முத்து அணி கச்சு அற உள் பொருமி கலசத்து இணையாய
புளக களப கெருவ தன மெய் புணர தலையிட்டு அமரே செய்
அடைவில் தினம் உற்று அவசப்படும் எற்கு அறிவில் பதடிக்கு அவமான
அசடற்கு உயர் ஒப்பது இல் நல் க்ருபை உற்று அடிமைக்கு ஒரு சொல் புகல்வாயே
குடம் ஒத்த கட கரட கலுழி குணம் மெய் களிறுக்கு இளையோனே
குடி புக்கிட மீட்டு அசுர படையை குறுகி தகர பொரும் வேலா
படலை செறி நல் கதலி குலையில் பழம் முற்றி ஒழுக புனல் சேர் நீள்
பழன கரையில் கழை முத்து உகு நல் பழநி குமர பெருமாளே

மேல்

#178
பெரியதோர் கரி இரு கொம்பு போலவெ வடிவம் ஆர் புளகித கும்ப மா முலை
பெருகியே ஒளி செறி தங்க ஆரமும் அணியான
பிறையதோ எனு நுதல் துங்க மீறு வை அயில் அதோ என்னும் இரு கண்கள் ஆரவெ
பிறகு எலாம் விழு குழல் கங்குல் ஆரவெ வரும் மானார்
உரியது ஓர் பொருள் கொடு வந்த பேர்களை மனையிலே வினவியே கொண்டு போகிய
உளவிலே மருவிய வஞ்ச மாதர்கள் மயலாலே
உருகியே உடல் அற வெம்பி வாடியெ வினையிலே மறுகியே நொந்த பாதகன்
உனது தாள் தொழுதிட இன்ப ஞானம் அது அருள்வாயே
அரியதோர் அமரர்கள் அண்டம் ஏறவெ கொடியதோர் அசுரர்கள் அங்கம் மாளவெ
அடல் அதோடு அமர்புரிகின்ற கூரிய வடி வேலா
அரகரா என மிக அன்பர் சூழவெ கடியது ஓர் மயில் மிசை அன்றை ஏறியெ
அவனி ஓர் நொடி வருகின்ற காரண முருகோனே
பரியது ஓர் கயிறு அனை கொண்டு வீசவெ உறி அது தோய் தயிர்தனை உண்டு நாடியெ
பசியதோ கெட அருள் கொண்ட மாயவன் மருகோனே
பரம மா நதி புடை கொண்டு அணாவவெ வனச மா மலரினில் வண்டு உலாவவெ
பழநி மா மலைதனில் என்றும் மேவிய பெருமாளே

மேல்

#179
போதகம் தரு கோவே நமோ நம நீதி தங்கிய தேவா நமோ நம
பூதலம்தனை ஆள்வாய் நமோ நம பணி யாவும்
பூணுகின்ற பிரானே நமோ நம வேடர்தம் கொடி மாலா நமோ நம
போதவன் புகழ் ஸாமி நமோ நம அரிதான
வேத மந்திர ரூபா நமோ நம ஞான பண்டித நாதா நமோ நம
வீர கண்டை கொள் தாளா நமோ நம அழகான
மேனி தங்கிய வேளே நமோ நம வான பைம் தொடி வாழ்வே நமோ நம
வீறு கொண்ட விசாகா நமோ நம அருள்தாராய்
பாதகம் செறி சூராதி மாளவெ கூர்மை கொண்ட அயிலாலே பொராடியெ
பார அண்டர்கள் வான் நாடு சேர்தர அருள்வோனே
பாதி சந்திரனே சூடும் வேணியர் சூல சங்கரனார் கீத நாயகர்
பார திண் புயமே சேரு சோதியர் கயிலாயர்
ஆதி சங்கரனார் பாக மாது உமை கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயான நாரணி அபிராமி
ஆவல் கொண்டு வீறாலே சீராடவெ கோமளம் பல சூழ் கோயில் மீறிய
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே

மேல்

#180
மந்தரம் அது எனவே சிறந்த கும்ப முலைதனிலே புனைந்த
மஞ்சள் மணம் அதுவே துலங்க வகை பேசி
மன்று கமழ் தெரு வீதி வந்து நின்றவரை விழியால் வளைந்து
வந்தவரை அருகே அணைந்து தொழில் கூறி
எந்த அளவும் இனிதாக நம்பு தந்து பொருள்தனையே பிடுங்கி
இன்பம் அருள் விலைமாதர்தங்கள் மனை தேடி
எஞ்சி மனம் உழலாமல் உன்றன் அன்பு உடைமை மிகவே வழங்கி
என்தனையும் இனிது ஆள இன்று வரவேணும்
விந்தை எனும் உமை மாது தந்த கந்த குரு பர தேவ வங்கம் என்ற
வரைதனில் மேவும் எந்தை புதல்வோனே
மிஞ்சும் அழகினிலே சிறந்த மங்கை குற மட மாது கொங்கை
மென் கிரியில் இதமாய் அணைந்த முருகோனே
சிந்தை மகிழ் புலவோர்கள் வந்து வந்தனை செய் சரண அரவிந்த
செந்தமிழில் உனையே வணங்கு குருநாதர்
தென்றல் வரை முநி நாதர் அன்று கும்பிட நல் அருளே பொழிந்த
தென் பழநி மலை மேல் உகந்த பெருமாளே

மேல்

#181
மரு மலரினன் துரந்து விட வினை அருந்த அந்தி மதியோடு பிறந்து முன்பு எய் வதையாலே
வகைதனை மறந்து எழுந்து முலைதனை அருந்தி அந்த மதலை என வந்து குன்றின் வடிவாகி
இரு மயல் கொடு துவண்டு பொதுவையர் அகம் புகுந்து இரவு பகல் கொண்டு ஒடுங்கி அசடாகும்
இருவினை பொதிந்த இந்த ஜனன மரணம் துறந்து இணை அடி வணங்க என்று பெறுவேனோ
திருவொடு பெயர்ந்து இருண்ட வன மிசை நடந்து இலங்கை திகழ் எரி இடும் குரங்கை நெகிழாத
திடம் உள முகுந்தர் கஞ்சன் வர விடும் எல் வஞ்சகங்கள் செறிவுடன் அறிந்து வென்ற பொறியாளர்
பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற பரம பத நண்பர் அன்பின் மருகோனே
பதுமம் மிசை வண்டு அலம்பு சுனை பல விளங்கும் துங்க பழநி மலை வந்து அமர்ந்த பெருமாளே

மேல்

#182
மனக்கவலை ஏதும் இன்றி உனக்கு அடிமையே புரிந்து வகைக்கும் மநு நூல் விதங்கள் தவறாதே
வகை படி மனோரதங்கள் தொகை படியினால் இலங்கி மயக்கம் அற வேதமும் கொள் பொருள் நாடி
வினைக்கு உரிய பாதகங்கள் துகைத்து வகையால் நினைந்து மிகுத்த பொருள் ஆகமங்கள் முறையாலே
வெகுட்சிதனையே துரந்து களிப்பினுடனே நடந்து மிகுக்கும் உனையே வணங்க வரவேணும்
மனத்தில் வருவோனே என்று உன் அடைக்கலம் அதாக வந்து மலர் பதம் அதே பணிந்த முநிவோர்கள்
வரர்க்கும் இமையோர்கள் என்பர் தமக்கும் மனமே இரங்கி மருட்டி வரு சூரை வென்ற முனை வேலா
தினை புனம் முனே நடந்து குறக்கொடியையே மணந்து செகத்தை முழுது ஆள வந்த பெரியோனே
செழித்த வளமே சிறந்த மலர் பொழில்களே நிறைந்த திரு பழநி வாழ வந்த பெருமாளே

மேல்

#183
மலர் அணி கொண்டை சொருக்கிலே அவள் சொலும் மொழி இன்ப செருக்கிலே கொடுமையும்
இடர் நெஞ்ச திருக்கிலே முக மதியாலே
மருவு நிதம்ப தடத்திலே நிறை பரிமள கொங்கை குடத்திலே மிக
வலியவும் வந்து ஒத்து இடத்திலே விழி வலையாலே
நிலவு எறி அங்க குலுக்கிலே எழில் வளை புனை செம் கை கிலுக்கிலே கன
நிதி பறி அந்த பிலுக்கிலே செயும் ஒயிலாலே
நிதம் இயலும் துர் குணத்திலே பரவசமுடன் அன்புற்று இணக்கிலே ஒரு
நிமிஷம் இணங்கி கணத்திலே வெகு மதி கேடாய்
அலைய நினைந்து உற்பநத்திலே அநுதினம் மிகு என் சொப்பனத்திலே வர
அறிவும் அழிந்து அற்பனத்திலே நிதம் உலைவேனோ
அசடனை வஞ்ச சமர்த்தனாகிய கசடனை உன் சில் கடைக்கண் நாடிய
மலர் கொடு நின் பொன் பதத்தையே தொழ அருள்தாராய்
பலபல பைம்பொன் பதக்கம் ஆரமும் அடிமை சொலும் சொல் தமிழ் பனீரொடு
பரிமள மிஞ்ச கடப்ப மாலையும் அணிவோனே
பதியினில் மங்கை கதித்த மா மலையொடு சில குன்றில் தரித்து வாழ் உயர்
பழநியில் அன்புற்று இருக்கும் வானவர் பெருமாளே

மேல்

#184
முகில் அளகத்தில் கமழ்ந்த வண் பரிமள அலர் துற்ற கலந்து இடம் தரு
முகிழ் நுதி தைத்து துயர்ந்த மங்கையர் அங்கம் மீதே
முகம் வியர்வுற்று பரந்து செங்கயல் விழி இணை செக்கச்சிவந்து குங்கும
ம்ருக்மத மத்த தனங்களின் மிசை எங்கும் மேவி
உக உயிர் ஒத்து புயங்கள் இன்புற உறவினையுற்று திரண்டு கொங்கு அளவுறும்
அணையுற்று திரங்கும் மஞ்சமில் ஒன்றி மேவி
ஒளி திகழ் பத்ம கரங்களின் புறம் உறு வளை ஒக்க கலின் கலென் என்கவும்
உயர் மயலுற்று இரங்கும் அன்பு அது ஒழிந்திடாதோ
செக முழுது ஒக்க பயந்த சங்கரி அடியவர் சித்தத்து உறைந்த சம்ப்ரம
சிவன் ஒரு பக்கத்து உறைந்த மங்கை சுமங்கை நீடு
திகழ்வன பச்சை பசங்கி அம்பண கரதலி கச்சுற்று இலங்கு கொங்கையள்
திரு அருள் நல் பொன் பரந்திடும் பரை அண்டம் மீதே
பகல் இரவு அற்றிட்டு உயர்ந்த அம்பிகை திரிபுரை முற்றிட்டு இரண்டொடு ஒன்று அலர்
பரிவுற ஒக்க செய்யும் பரம்ப்ரமி அன்புகூரும்
பதிவ்ரதை மிக்க சிரம் தெரிந்து அருள் பகிரதி வெற்பில் பிறந்த பெண் தரு
பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்று அருள் தம்பிரானே

மேல்

#185
முகை முளரி ப்ரபை வீசும் எழில் கனக மலை போலும் முதிர்வு இல் இள தன பார மடவார் தோள்
முழுகி அமிழ் அநுபோக விழலன் என உலகோர்கள் மொழியும் அது மதியாமல் தலைகீழ் வீழ்ந்து
அகம் மகிழ விதமான நகை அமுதம் என ஊறல் அசடர் அகம் எழ ஆகி மிகவே உண்டு
அழியும் ஒரு தமியேனும் மொழியும் உனது இரு தாளின் அமுது பருகிட ஞானம் அருளாயோ
மகரம் எறி திரை மோது பகர கடல் தட வாரி மறுகு புனல் கெட வேலை விடுவோனே
வரிசை அவுண் மக சேனை உக முடிய மயில் ஏறி வரு பனிரு கர தீர முருகோனே
பகர் அரியர் எனலாகும் உமை கொழுநர் உளம் மேவும் பரம குரு என நாடும் இளையோனே
பணிலம் மணி வெயில் வீசும் அணி சிகர மதி சூடு பழநி மலைதனில் மேவும் பெருமாளே

மேல்

#186
முதிர உழையை வனத்தில் முடுகி வடுவை அழித்து முதிய கயல்கள் கயத்தினிடை ஓடி
முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி முறைமை கெடவும் மயக்கி வரும் மாதர்
மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு வலிய அடிமை புகுத்தி விடு மாயம்
மனதை உடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன் மகிழ உனது பதத்தை அருள்வாயே
சதுரன் வரையை எடுத்த நிருதன் உடலை வளைத்து சகடு மருதம் உதைத்த தகவோடே
தழையும் மரமும் நிலத்தில் மடிய அமரை விளைத்த தநுவை உடைய சமர்த்தன் மருகோனே
அதிர முடுகி எதிர்த்த அசுரர் உடலை வதைத்து அமரர் சிறையை விடுத்து வருவோனே
அரிய புகழை அமைத்த பெரிய பழநி மலைக்குள் அழகு மயிலை நடத்தும் பெருமாளே

மேல்

#187
முத்து குச்சு இட்டு குப்பி முடித்து சுக்கை பின் சுற்றி முன் பக்கத்தில் பொற்புற்றிட நுதல் மீதே
முக்ய பச்சை பொட்டு இட்டு அணி ரத்ந சுட்டி பொன் பட்டு இவை முச்சட்டை சித்ர கட்டழகு எழில் ஆட
தித்திக்க சொல் சொல் துப்பு இதழ் நச்சு கண் கற்பு சொக்கியர் செப்புக்கு ஒக்க கச்சு பெறு தன மேரு
திட்டத்தை பற்றிய பற்பல லச்சைக்கு உட்பட்டு தொட்டு உயிர் சிக்கி சொக்கி கெட்டு இப்படி உழல்வேனோ
மெத்த துக்கத்தை தித்தி இனி சித்தத்தில் பத்தத்தோடு மெச்சி சொர்க்கத்தில் சிற்பரம் அருள்வாயே
வித்தைக்கு கர்த்ரு தற்பர முக்கண் சித்தர்க்கு புத்திர விச்சித்ர செச்சை கத்திகை புனைவோனே
நித்ய கற்பத்தில் சித்தர்கள் எட்டு திக்குக்குள் பட்டவர் நிஷ்டைக்கு அற்புற்ற பத்தர்கள் அமரோரும்
நெட்டுக்குள் புட்பத்தை கொடு முற்றத்துற்று அர்ச்சிக்க பழநிக்குள் பட்டத்துக்குற்று உறை பெருமாளே

மேல்

#188
மூலம் கிளர் ஓர் உருவாய் நடு நாலு அங்குலம் மேல் நடு வேர் இடை
மூள் பிங்கலை நாடியொடு ஆடிய முதல் வேர்கள்
மூணும் பிரகாசம்அதாய் ஒரு சூலம் பெற ஓடிய வாயுவை
மூலம் திகழ் தூண் வழியே அளவிட ஓடி
பாலம் கிளர் ஆறு சிகாரமொடு ஆரும் சுடர் ஆடு பராபர
பாதம் பெற ஞான சதாசிவம் அதின் மேவி
பாடும் தொனி நாதமும் நூபுரம் ஆடும் கழல் ஓசையிலே
பரிவாகும்படியே அடியனையும் அருள்வாயே
சூலம் கலை மான் மழு ஓர் துடி தேவன் தலையோடும் அரா விரி
தோடு குழை சேர் பரனார் தரும் முருகோனே
சூரன் கரம் மார் சிலை வாள் அணி தோளும் தலை தூள்படவே அவர்
சூளும் கெட வேல் விடு சேவக மயில் வீரா
காலின் கழல் ஓசையும் நூபுரம் வார் வெண்டைய ஓசையும் உக
காலங்களின் ஓசை அதாக நடம் இடுவோனே
கானம் கலை மான் மகளார்தமை நாணம் கெடவே அணை வேள் பிரகாசம்
பழனா புரி மேவிய பெருமாளே

மேல்

#189
மூல மந்திரம் ஓதல் இங்கு இலை ஈவது இங்கு இலை நேயம் இங்கு இலை
மோனம் இங்கு இலை ஞானம் இங்கு இலை மடவார்கள்
மோகம் உண்டு அதி தாகம் உண்டு அபசாரம் உண்டு அபராதம் உண்டு இடு
மூகன் என்ற ஒரு பேரும் உண்டு அருள் பயிலாத
கோலமும் குண ஈன துன்பர்கள் வார்மையும் பலவாகி வெந்து எழு
கோர கும்பியிலே விழுந்திட நினைவாகி
கூடி கொண்டு உழல்வேனை அன்போடு ஞான நெஞ்சினர்பால் இணங்கிடு
கூர்மை தந்து இனி ஆள வந்து அருள்புரிவாயே
பீலி வெந்து உயர் ஆலி வெந்து அசோகு வெந்து சமண் மூகர் நெஞ்சிடை
பீதி கொண்டிட வாது கொண்டு அருள் எழுது ஏடு
பேணி அங்கு எதிர் ஆறு சென்றிட மாறனும் பிணி தீர வஞ்சகர்
பீறு வெம் கழுவேற வென்றிடு முருகோனே
ஆலம் உண்டவர் சோதி அம் கணர் பாகம் ஒன்றிய வாலை அந்தரி
ஆதி அந்தமும் ஆன சங்கரி குமரேசா
ஆரணம் பயில் ஞான புங்கவ சேவல் அம் கொடி ஆன பைங்கர
ஆவினன்குடி வாழ்வு கொண்டு அருள் பெருமாளே

மேல்

#190
முருகு செறி குழல் அவிழ முலை புளகம் எழ நிலவு முறுவல் தர விரகம் எழ அநுராகம்
முதிர வசம் அற இதரி எழு கை வளை கலகல என முக நிலவு குறு வெயர்வு துளி வீச
அரு மதுர மொழி பதற இதழ் அமுது பருகி மிக அகம் மகிழ இரு கயல்கள் குழை ஏற
அமளி படும் அமளி மலர் அணையின் மிசை துயிலுகினும் அலர் கமல மலர் அடியை மறவேனே
நிருதனோடு வரு பரியும் அடு கரியும் ரத நிரையும் நெறுநெறு என முறிய விடும் வடி வேலா
நிகழ் அகள சகள குரு நிருப குரு பர குமர நெடிய நெடு ககன முகடு உறைவோனே
வரும் அருவி நவ மணிகள் மலர் கமுகின் மிசை சிதற மதுவின் நிரை பெருகு வளி மலை மீதே
வளர் குறவர் சிறுமி இரு வளர் தனமும் இரு புயமும் மருவி மகிழ் பழநி வரு பெருமாளே

மேல்

#191
முருகு செறி குழல் முகில் என நகில் நறு முளரி முகை என இயல் என மயில் என
முறுவல் தளவு என நடை மட வனம் என இரு பார்வை
முளரி மடல் என இடை துடி என அதரம் இலவு என அடி இணை மலர் என
மொழியும் அமுது என முகம் எழில் மதி என மட மாதர்
உருவம் இனையன என வரும் உருவக உரை செய்து அவர் தரு கலவியினில் அவிய
உலையின் மெழுகு என உருகிய கசடனை ஒழியாமல்
உவகை தரு கலை பல உணர் பிறவியில் உவரிதனில் உறும் அவலனை அசடனை
உனது பரிபுர கழல் இணை பெற அருள்புரிவாயே
அரவம் மலி கடல் விடம் அமுதுடன் எழ அரி அயனும் நரை இபன் முதல் அனைவரும்
அபயம் மிக என அதை அயில் இமையவன் அருள் பாலா
அமர் செய் நிசிசரர் உடல் அவை துணிபட அவனி இடிபட அலை கடல் பொடிபட
அமரர் சிறைபட அடல் அயில் நொடியினில் விடுவோனே
பரவும் புனம் மிசை உறை தரு குறமகள் பணை கொள் அணி முலை முழுகு பனிரு புய
பணில சரவணைதனில் முளரியில் வரு முருகோனே
பரம குருபர எனும் உரை பரசொடு பரவி அடியவர் துதி செய மதி தவழ்
பழநி மலைதனில் இனிது உறை அமரர்கள் பெருமாளே

மேல்

#192
வசனம் மிக ஏற்றி மறவாதே மனது துயர் ஆற்றில் உழலாதே
இசை பயில் ஷடாக்ஷரம் அதாலே இகபர செளக்யம் அருள்வாயே
பசு பதி சிவாக்யம் உணர்வோனே பழநி மலை வீற்று அருளும் வேலா
அசுரர் கிளை வாட்டி மிக வாழ அமரர் சிறை மீட்ட பெருமாளே

மேல்

#193
வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள் வந்தவர்தங்களை வாதை கண்டவர்
வங்கணமும் தெரியாமல் அன்புகள் பல பேசி
மஞ்சம் இருந்து அநுராக விந்தைகள் தந்த கடம்பிகள் ஊறல் உண்டிடு
மண்டைகள் கண்டிதமாய் மொழிந்திடும் உரையாலே
சஞ்சலமும் தரு மோக லண்டிகள் இன் சொல் புரிந்து உருகாத தொண்டிகள்
சங்கமம் என்பதையே புரிந்தவன் அயராதே
தங்களில் நெஞ்சகமே மகிழ்ந்தவர் கொஞ்சி நடம் பயில் வேசை முண்டைகள்
தந்த சுகம்தனையே உகந்து உடல் மெலிவேனோ
கஞ்சன் விடும் சகடாசுரன் பட வென்று குருந்தினில் ஏறி மங்கையர்
கண் சிவந்திடவே கலந்த அரு முறையாலே
கண்டு மகிழ்ந்து அழகாய் இருந்து இசை கொண்டு விளங்கிய நாளில் அன்போடு
கண் குளிரும் திருமால் மகிழ்ந்து அருள் மருகோனே
குஞ்சர வஞ்சியும் மான் மடந்தையும் இன்பம் மிகுந்திடவே அணைந்து அருள்
குன்று என வந்து அருள் நீபம் முந்திய மணி மார்பா
கொந்து அவிழும் தடமே நிரம்பிய பண்பு தரும் திருவாவினன்குடி
குன்றுகள் எங்கினுமே வளர்ந்து அருள் பெருமாளே

மேல்

#194
வரதா மணி நீ என ஓரில் வருகாது எது தான் அதில் வாராது
இரதாதிகளால் நவ லோகம் இடவே கரியாம் இதில் ஏது
சரதா மறை ஓது அயன் மாலும் சகலாகம நூல் அறியாத
பர தேவதையாள் தரு சேயே பழனாபுரி வாழ் பெருமாளே

மேல்

#195
வனிதை உடல் காய நின்று உதிரம் அதிலே உருண்டு வயிறில் நெடுநாள் அலைந்து புவி மீதே
மனிதர் உருவாகி வந்து அநுதினமுமே வளர்ந்து வயது பதினாறு சென்று வடிவாகி
கனக முலை மாதர்தங்கள் வழியில் மிகவே உழன்று கனிவு அதுடனே அணைந்து பொருள் தேடி
கன பொருள் எலாம் இழந்து மயலில் மிகவே அலைந்த கசடன் எனை ஆள உன்றன் அருள்தாராய்
புனம் அதனில் வாழுகின்ற வநிதை ரகுநாதர் தந்த புதல்வி இதழூறல் உண்ட புலவோனே
பொரும் மதனை நீறு கண்ட அரிய சிவனார் உகந்த புதிய மயில் ஏறு கந்த வடி வேலா
பனகம் அணி மா மதங்கி குமரி வெகு நீலி சண்டி பரம கலியாணி தந்த பெருவாழ்வே
பகை அசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று பழநி மலை மீதில் நின்ற பெருமாளே

மேல்

#196
வாதம் பித்தம் மிடா வயிறு ஈளைகள் சீதம் பல் சனி சூலை மகோதரம்
மாசு அங்கண் பெரு மூல வியாதிகள் குளிர் காசம்
மாறும் கக்கலொடே சில நோய் பிணியோடு தத்துவகாரர் தொண்ணூறு அறுவாரும்
சுற்றினில் வாழ் சதிகாரர்கள் வெகு மோகர்
சூழ்து உன் சித்ர கபாயை மு ஆசை கொடு ஏதும் சற்று உணராமலே மாயை செய்
சோரம் பொய் குடிலே சுகமாம் என இதில் மேவி
தூசின் பொன் சரமோடு குலாவு உலகு ஏழும் பிற்பட ஓடிடும் மூடனை
தூ அம் சுத்த அடியார் அடி சேர நின் அருள்தாராய்
தீதம் தித்திமி தீதக தோதிமி டுடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
சேசெம் செக்கெண தோதக தீகுட என பேரி
சேடன் சொக்கிட வேலை கடாகம் எலாம் அஞ்சுற்றிடவே அசுரார் கிரி
தீவும் பொட்டு எழவே அனல் வேல் விடு மயில் வீரா
வேதன் பொன் சிரம் மீது கடாவி நல் ஈசன் சற்குருவாய் அவர் காதினில்
மேவும் பற்று அலர் பேறு அருள் ஓதிய முருகோனே
வேஷம் கட்டி பின் ஏகி மகா வளி மாலின் பித்து உறவாகி விணோர் பணி
வீரம் கொட்ட பழனாபுரி மேவிய பெருமாளே

மேல்

#197
வாரணம்தனை நேரான மா முலை மீது அணிந்திடு பூண் ஆரம் ஆர் ஒளி
வால சந்திரன் நேர் ஆக மா முகம் எழில் கூர
வார் அணங்கிடு சேல் ஆன நீள் விழி ஓலை தங்கிய வார் காது வாவிட
வான இன் சுதை மேலான வாய் இதழ் அமுது ஊற
தோரணம் செறி தார் வாழை ஏய் தொடை மீதில் நின்று இடை நூல் போல் உலாவியெ
தோகை என்றிட வாகாக ஊர் அன நடை மானார்
தோதகம்தனை மா மாயையே வடிவாக நின்றது எனா ஆய ஓர்வது
தோணிடும்படி நாயேன் உள் நீ அருள்தருவாயே
காரணம்தனை ஓரா நிசாசரர் தாம் அடங்கலும் ஈறாக வானவர்
காவல் இந்திர நாடு ஆளவே அயில் விடும் வீரா
கார் விடம்தனை ஊணாக வானவர் வாழ் தரும்படி மேல் நாளிலே மிசை
காள கண்ட மகா தேவனார் தரு முருகோனே
ஆரணன்தனை வாதாடி ஓர் உரை ஓதுக என்று என வாராது எனா அவன்
ஆணவம் கெடவே காவலாம் அதில் இடும் வேலா
ஆதவன் கதிர் ஓவாது உலாவிய கோபுரம் கிளர் மா மாது மேவிய
ஆவினன்குடியோனே சுராதிபர் பெருமாளே

மேல்

#198
விதம் இசைந்து இனிதா மலர் மாலைகள் குழல் அணிந்து அநுராகமுமே சொலி
விதரணம் சொலி வீறுகளே சொலி அழகாக
விரி குரும்பைகள் ஆம் என வீறிய கனக சம்ப்ரம மேரு அது ஆம் அதி
விரகம் ஓங்கிய மா முலையால் எதிர் அமர் நாடி
இதம் இசைந்து அனமாம் எனவே இன நடை நடந்தனர் வீதியிலே வர
எவர்களும் சிதம் மால் கொள்ளும் மாதர்கள் வலையாலே
எனது சிந்தையும் வாடி விடா வகை அருள்புரிந்து அழகாகிய தாமரை
இரு பதங்களினால் எனை ஆள்வதும் ஒரு நாளோ
மதம் இசைந்து எதிரே பொரு சூரனை உடல் இரண்டு குறாய் விழவே சின
வடிவு தங்கிய வேலினை ஏவிய அதி தீரா
மதுர இன் சொலி மாது உமை நாரணி கவுரி அம்பிகை யாமளை பார்வதி
மவுந சுந்தரி காரணி யோகினி சிறுவோனே
பதம் மிசைந்து எழு லோகமுமே வலம் நொடியில் வந்திடு மா மயில் மீது ஒரு
பவனி வந்த க்ருபாகர சேவக விறல் வீரா
பருதியின் ப்ரபை கோடியதாம் எனும் வடிவு கொண்டு அருள் காசியின் மீறிய
பழநி அம் கிரி மீதினில் மேவிய பெருமாளே

மேல்

#199
விரை மருவு மலர் அணிந்த கரிய புரி குழல் சரிந்து விழ வதன மதி விளங்க அதி மோக
விழி புரள முலை குலுங்க மொழி குழற அணை புகுந்து விரக மயல்புரியும் இன்ப மடவார்பால்
இரவுபகல் அணுகி நெஞ்சம் அறிவு அழிய உருகும் அந்த இருள் அகல உனது தண்டை அணி பாதம்
எனது தலை மிசை அணிந்து அழுதழுது அருள் விரும்பி இனிய புகழ்தனை விளம்ப அருள்தாராய்
அரவில் விழி துயில் முகுந்தன் அலர் கமல மலர் மடந்தை அழகினொடு தழுவு கொண்டல் மருகோனே
அடல் அசுரர் உடல் பிளந்து நிணம்அதனில் முழுகி அண்ட அமரர் சிறை விடு ப்ரசண்ட வடி வேலா
பரவை வரு விடம் அருந்து மிடறுடைய கடவுள் கங்கை படர் சடையர் விடையர் அன்பர் உள மேவும்
பரமர் அருளிய கடம்ப முருக அறுமுகவ கந்த பழநி மலைதனில் அமர்ந்த பெருமாளே

மேல்

#200
வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய மாதர் கொங்கையிலே முயங்கிட
வீணிலும் சில பாதகம் செய அவமே தான்
வீறு கொண்டு உடனே வருந்தியுமே உலைந்து அவமே திரிந்து உளமே
கவன்று அறிவு கலங்கிட வெகு தூரம்
போய் அலைந்து உழலாகி நொந்து பின் வாடி நைந்து எனது ஆவி வெம்பியே
பூதலம்தனிலே மயங்கிய மதி போக
போது கங்கையின் நீர் சொரிந்து இரு பாத பங்கயமே வணங்கியெ
பூசையும் சிலவே புரிந்திட அருள்வாயே
தீ இசைந்து எழவே இலங்கையில் ராவணன் சிரமே அரிந்து அவர்
சேனையும் செல மாள வென்றவன் மருகோனே
தேசம் எங்கணுமே புரந்திடு சூர் மடிந்திட வேலின் வென்றவ
தேவர் தம் பதி ஆள அன்பு செய்திடுவோனே
ஆயி சுந்தரி நீலி பிங்கலை போக அந்தரி சூலி குண்டலி
ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும்
ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச ஓர் போதகம்தனையே உகந்து அருள்
ஆவினன்குடி மீது இலங்கிய பெருமாளே

மேல்

#201
அவா மருவு இனா வசுதை காணும் மடவார் எனும் அவார் கனலில் வாழ்வு என்று உணராதே
அரா நுகர வாதையுறு தேரை கதி நாடும் அறிவு ஆகி உளம் மால் கொண்டு அதனாலே
சிவாய எனு நாமம் ஒருகாலு நினையாத திமிராகரனை வா என்று அருள்வாயே
திரோத மலம் மாறும் அடியார்கள் அரு மாதவர் தியானம் உறு பாதம் தருவாயே
உவாவு இனிய கானுவில் நிலாவு மயில் வாகனம் உலாசமுடன் ஏறும் கழலோனே
உலா உதயபாநு சத கோடி உருவான ஒளி வாகும் அயில் வேல் அம் கையிலோனே
துவாதச புயாசல ஷடாநந வரா சிவ சுதா எயினர் மான் அன்பு உடையோனே
சுராதிபதி மால் அயனும் மாலொடு சலாம் இடு சுவாமிமலை வாழும் பெருமாளே

மேல்

#202
ஆனனம் உகந்து தோளொடு தோள் இணை கலந்து பால் அன ஆரமுது கண்டு தேன் என இதழூறல்
ஆதரவில் உண்டு வேல் விழி பூசல் இட நன்று காண் என ஆனை உரம் எங்கும் மோதிட அபிராம
மான் அனைய மங்கைமார் மடு நாபியில் விழுந்து கீடம் இல் மாயும் மநு இன்ப ஆசை அது அறவே உன்
வாரிஜ பதங்கள் நாய் அடியேன் முடி புனைந்து போதக வாசகம் வழங்கி ஆள்வதும் ஒரு நாளே
ஈன அதி பஞ்சபாதக தானவர் ப்ரசண்ட சேனைகள் ஈடு அழிய வென்று வானவர் குல சேனை
ஏவல் கொளும் இந்த்ரலோக வசீகர அலங்க்ருத ஆகர ராசதம் அறிந்த கோமள வடிவோனே
சோனை சொரி குன்ற வேடுவர் பேதை பயில்கின்ற ஆறு இரு தோளுடைய கந்தனே வயலியில் வாழ்வே
சூளிகை உயர்ந்த கோபுர மாளிகை பொன் இஞ்சி சூழ்தரு ஸ்வாமிமலை நின்று உலாவிய பெருமாளே

மேல்

#203
ஆனாத பிருதிவி பாச நிகளமும் மா மாய இருளும் அற்று ஏகி பவம் என
ஆகாச பரம சிற்சோதி பரையை அடைந்து உளாமே
ஆறாறின் அதிகம் அக்க்ராயம் அநுதினம் யோகீசர் எவரும் எட்டாத பர துரியாதீதம்
அகளம் எப்போதும் உதயம் அநந்த மோகம்
வான் ஆதி சகல விஸ்தார விபவரம் லோகாதி முடிவும் மெய் போத மலர் அயன்
மால் ஈசன் எனும் அவற்கு ஏது விபுலம் அசங்கையால் நீள்
மாளாத தன் நிசம் உற்றாயது அரிய நிராதாரம் உலைவு இல் சற்சோதி நிருபமும்
மாறாத சுக வெள்ள தாணு உடன் இனிது என்று சேர்வேன்
நானாவித கருவி சேனை வகைவகை சூழ் போது பிரபல சூரர் கொடு நெடு
நாவாய் செல் கடல் அடைத்து ஏறி நிலைமை இலங்கை சாய
நாலாறு மணி முடி பாவிதனை அடு சீராமன் மருக மை காவில் பரிமள
நா வீசு வயலி அக்கீசர் குமர கடம்ப வேலா
கான் ஆளும் எயினர் தன் சாதி குற மானோடு மகிழ் கருத்தாகி மருள் தரு
காதாடும் உனது கண் பாணம் எனதுடை நெஞ்சு பாய்தல்
காணாது மமதை விட்டு ஆவி உய அருள் பாராய் என உரை வெகு ப்ரீதி இளையவ
காவேரி வட கரை சாமிமலை உறை தம்பிரானே

மேல்

#204
இராவின் இருள் போலும் பராவு குழலாலும் இராம சரமாகும் விழியாலும்
இராக மொழியாலும் பொறாத முலையாலும் இராத இடையாலும் இளைஞோர் நெஞ்சு
அராவி இரு போதும் பராவி விழவே வந்து அடாத விலை கூறும் மடவார் அன்பு
அடாமல் அடியேனும் சுவாமி அடி தேடும் அநாதி மொழி ஞானம் தருவாயே
குராவின் நிழல் மேவும் குமாரன் என நாளும் குலாவி இனி ஓது அன்பினர் வாழ்வே
குணாலம் இடு சூரன் பணா முடிகள்தோறும் குடாவி இட வேல் அங்கு எறிவோனே
துராலும் மிகு தீ முன்பு இராத வகை போலும் தொடாமல் வினை ஓடும்படி நூறும்
சுபானம் உறு ஞான தபோதனர்கள் சேரும் சுவாமிமலை வாழும் பெருமாளே

மேல்

#205
இருவினை புனைந்து ஞான விழி முனை திறந்து நோயின் இருவினை இடைந்து போக மலம் மூட
இருள் அற விளங்கி ஆறு முகமொடு கலந்து பேதம் இலை என இரண்டு பேரும் அழகான
பரிமள சுகந்த வீத மயம் என மகிழ்ந்து தேவர் பணிய விண் மடந்தை பாத மலர் தூவ
பரிவு கொடு அநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட பரு மயிலுடன் குலாவி வரவேணும்
அரி அயன் அறிந்திடாத அடி இணை சிவந்த பாதம் அடி என விளங்கி ஆடு நடராஜன்
அழல் உறும் இரும்பின் மேனி மகிழ் மரகதம் பெண் ஆகம் அயில் அணி சிவன் புராரி அருள் சேயே
மருவலர்கள் திண் பணார முடி உடல் நடுங்க ஆவி மறலி உண வென்ற வேலை உடையோனே
வளை குலம் அலங்கு காவிரியின் வடபுறம் சுவாமிமலை மிசை விளங்கு தேவர் பெருமாளே

மேல்

#206
எந்த திகையினும் மலையினும் உவரியின் எந்த படியினும் முகடினும் உள பல
எந்த சடலமும் உயிர் இயை பிறவியில் உழலாதே
இந்த சடம் உடன் உயிர் நிலை பெற நளினம் பொன் கழல் இணைகளில் மரு மலர் கொடு
என் சித்தமும் மனமும் உருகி நல் சுருதியின் முறையோடே
சந்தித்து அரஹர சிவசிவ சரண் என கும்பிட்டு இணை அடியவை என தலை மிசை
தங்க புளகிதம் எழ இரு விழி புனல் குதி பாய
சம்பை கொடி இடை விபுதையின் அழகு முன் நந்த திரு நடமிடும் சரண் அழகுற
சந்த சபைதனில் எனது உளம் உருகவும் வருவாயே
தொந்த திகுகுட தகுகுட டிமிடிமி தந்த தனதன டுடுடுடு டமடம
துங்க திசை மலையும் வரியும் மறுக சலரி பேரி
துன்ற சிலை மணி கலகல கலின் என சிந்த சுரர் மலர அயன் மறை புகழ் தர
துன்பற்ற அவுணர்கள் நமன் உலகு உற விடும் அயில் வேலா
கந்த சடை முடி கனல் வடிவு அடல் அணி எந்தைக்கு உயிர் எனும் மலை மகள் மரகத
கந்த பரிமள தன கிரி உமை அருள் இளையோனே
கஞ்ச பதம் இவர் திருமகள் குலமகள் அம் பொன் கொடி இடை புணர் அரி மருக நல்
கந்த பொழில் திகழ் குருமலை மருவிய பெருமாளே

மேல்

#207
ஒருவரையும் ஒருவர் அறியாமலும் திரிந்து இருவினையின் இடர் கலியொடு ஆடி நொந்துநொந்து
உலையில் இடு மெழுகு அது என வாடி முன் செய் வஞ்சனையாலே
ஒளி பெறவே எழுபு மர பாவை துன்றிடும் கயிறு விதம் என மருவி ஆடி விண் பறிந்து
ஒளிரும் மினல் உரு அது என ஓடி அங்கம் வெந்திடுவேனை
கருதி ஒரு பரம பொருள் ஈது என்று என் செவி இணையில் அருளி உருவாகி வந்த என்
கருவினையொடு அரு மலமும் நீறு கண்டு தண் தரு மா மென்
கருணை பொழி கமல முகம் ஆறும் இந்துளம் தொடை மகுட முடியும் ஒளிர் நூபுரம் சரண்
கலகலென மயிலின் மிசை ஏறி வந்து உகந்து எனை ஆள்வாய்
திரிபுரமும் மதன் உடலு நீறு கண்டவன் தருணம் மழ விடையன் நடராஜன் எங்கணும்
திகழ் அருணகிரி சொருபன் ஆதி அந்தம் அங்கு அறியாத
சிவயநம நமசிவய காரணன் சுரந்த அமுதம் அதை அருளி எமை ஆளும் எந்தை தன்
திரு உருவின் மகிழ் எனது தாய் பயந்திடும் புதல்வோனே
குருகு கொடி உடன் மயிலில் ஏறி மந்தரம் புவன கிரி சுழல மறை ஆயிரங்களும்
குமர குரு என வலிய சேடன் அஞ்ச வந்திடுவோனே
குறமகள் இடை துவள பாத செம் சிலம்பு ஒலிய ஒரு சசி மகளொடே கலந்து திண்
குருமலையின் மருவு குருநாத உம்பர்தம் பெருமாளே

மேல்

#208
கடாவினிடை வீரம் கெடாமல் இனிது ஏறும் கடாவின் நிகர் ஆகும் சமனாரும்
கடாவி விடு தூதன் கெடாத வழி போலும் கனாவில் விளையாடும் கதை போலும்
இடாது பல தேடும் கிராதர் பொருள் போல் இங்கு இராமல் உயிர் கோலி இங்கு இதமாகும்
இது ஆம் என இரு போதும் சதா இன் மொழியால் இன்று யானும் உனை ஓதும்படி பாராய்
விடாது நட நாளும் பிடாரியுடன் ஆடும் வியாகரண ஈசன் பெருவாழ்வே
விகாரம் உறு சூரன் பகார உயிர் வாழ்வும் விநாசமுற வேல் அங்கு எறிவோனே
தொடாது நெடு தூரம் தடாது மிக ஓடும் சுவாசம் அது தானை ஐம்புலனோடும்
சுபானமுறு ஞானம் தபோதனர்கள் சேரும் சுவாமிமலை வாழும் பெருமாளே

மேல்

#209
கடி மா மலர்க்குள் இன்பம் உள வேரி கக்கு நண்பு தரு மா கடப்பு அமைந்த தொடை மாலை
கன மேரு ஒத்திடும் பனிரு மா புயத்து அணிந்த கருணாகர ப்ரசண்ட கதிர் வேலா
வடிவு ஆர் குறத்தி தன் பொன் அடி மீது நித்தமும் தண் முடியானது உற்று உகந்து பணிவோனே
வள வாய்மை சொல் ப்ரபந்தம் உள கீரனுக்கு உகந்து மலர் வாயில் இலக்கணங்கள் இயல்பு ஓதி
அடி மோனை சொற்கு இணங்க உலகாம் உவப்ப என்று உன் அருளால் அளிக்க உகந்த பெரியோனே
அடியேனும் உரைத்த புன்சொல் அது மீது நித்தமும் உன் தண் அருளே தழைத்து உகந்து வரவேணும்
செடி நேர் உடல் குடம்பைதனின் மேவி உற்றிடு இந்தப்படி தான் அலக்கண் இங்கண் உறலாமோ
திற மாதவர் கனிந்து உன் இரு பாத பத்மம் உய்ந்த திருவேரகத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#210
கதிரவன் எழுந்து உலாவு திசை அளவு கண்டு மோது கடல் அளவு கண்டு மாய அருளாலே
கண பண புயங்க ராஜன் முடி அளவு கண்டு தாள்கள் கவின் அற நடந்து தேயும் வகையே போய்
இதம்இதம் என்று நாளு மருக அருகிருந்து கூடும் இடம் இடம் இது என்று சோர்வு படையாதே
இசையொடு புகழ்ந்தபோது நழுவிய ப்ரசண்டர் வாசலில் இரவுபகல் சென்று வாடி உழல்வேனோ
மதுகர மிடைந்து வேரி தரு நறவம் உண்டு பூக மலர் வள நிறைந்த பாளை மலரூடே
வகைவகை எழுந்த சாம அதி மறை வியந்து பாட மதி நிழல் இடும் சுவாமி மலை வாழ்வே
அதிர வரு சண்ட வாயு என வரு கரும் கலாப அணி மயில் விரும்பி ஏறும் இளையோனே
அடைவொடு உலகங்கள் யாவும் உதவி நிலை கண்ட பாவை அருள் புதல்வ அண்ட ராஜர் பெருமாளே

மேல்

#211
கறை படும் உடம்பு இராது என கருதுதல் ஒழிந்து வாயுவை கரும வசனங்களால் மறித்து அனல் ஊதி
கவலைப்படுகின்ற யோக கற்பனை மருவு சிந்தை போய்விட கலகமிடும் அஞ்சும் வேர் அற செயல் மாள
குறைவற நிறைந்த மோன நிர்க்குணம் அது பொருந்தி வீடு உற குருமலை விளங்கும் ஞான சற்குருநாதா
குமர சரண் என்று கூதள புது மலர் சொரிந்து கோமள பத யுகளம் புண்டரீகம் உற்று உணர்வேனோ
சிறை தளை விளங்கும் பேர் முடி புயல் உடன் அடங்கவே பிழைத்து இமையவர்கள் தங்கள் ஊர் புக சமர் ஆடி
திமிர மிகு சிந்து வாய்விட சிகரிகளும் வெந்து நீர் எழ திகிரி கொள் அநந்தம் சூடிகை திருமாலும்
பிறை மவுலி மைந்த கோ என பிரமனை முனிந்து காவல் இட்டு ஒரு நொடியில் மண்டு சூரனை பொருது ஏறி
பெருகு மத கும்ப லாளிதம் கரி என ப்ரண்ட வாரண பிடிதனை மணந்த சேவக பெருமாளே

மேல்

#212
காமியத்து அழுந்தி இளையாதே காலர் கை படிந்து மடியாதே
ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி ஓவியத்தில் அந்தம் அருள்வாயே
தூமம் மெய்க்கு அணிந்த சுக லீலா சூரனை கடிந்த கதிர் வேலா
ஏம வெற்பு உயர்ந்த மயில் வீரா ஏரகத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#213
குமர குருபர முருக குகனே குற சிறுமி கணவ சரவண நிருதர் கலகா பிறை சடையர்
குரு என நல் உரை உதவு மயிலா என தினமும் உருகாதே
குயில் மொழி நல் மடவியர்கள் விழியால் உருக்குபவர் தெருவில் அநவரதம் அனம் எனவே நடப்பர்
நகைகொளும் அவர்கள் உடைமை மனம் உடனே பறிப்பவர்கள் அனைவோரும்
தமது வசமுற வசிய முகமே மினுக்கியர்கள் முலையில் உறு துகில் சரிய நடு வீதி நிற்பவர்கள்
தனமிலியர் மனம் முறிய நழுவா உழப்பியர் கண் வலையாலே
சதி செய்து அவரவர் மகிழ அணை மீது உருக்கியர்கள் வசம் ஒழுகி அவர் அடிமை என மாதர் இட்ட
தொழில்தனில் உழலும் அசடனை உன் அடியே வழுத்த அருள்தருவாயே
சமரமொடும் அசுரர் படை களம் மீது எதிர்த்த பொழுது ஒரு நொடியில் அவர்கள் படை கெட வேல் எடுத்து
அவனிதனில் நிருதர் சிரம் உருள ரண தூள்படுத்திவிடு செரு மீதே
தவனமொடும் அலகை நடமிட வீர பத்திரர்கள் அதிர நிணமொடு குருதி குடி காளி கொக்கரிசெய்
தசை உணவுதனில் மகிழவிடு பேய் நிரை திரள்கள் பல கோடி
திமிதமிட நரி கொடிகள் கழுகு ஆட ரத்த வெறி வயிரவர்கள் சுழல ஒரு தனி ஆயுதத்தை விடு
திமிர திநகர அமரரர் பதி வாழ்வு பெற்று உலவு முருகோனே
திரு மருவு புயன் அயனொடு அயிராவத குரிசில் அடி பரவு பழநி மலை கதிர்காமம் உற்று வளர்
சிவ சமய அறுமுகவ திருவேரகத்தில் உறை பெருமாளே

மேல்

#214
குமர குருபர முருக சரவண குக சண்முக கரி பிறகான
குழக சிவ சுத சிவய நம என குரவன் அருள் குரு மணியே என்று
அமுத இமையவர் திமிர்தம் இடு கடல் அது என அநுதினம் உனை ஓதும்
அமலை அடியவர் கொடிய வினை கொடும் அபயம் இடு குரல் அறியாயோ
திமிர எழு கடல் உலகம் முறிபட திசைகள் பொடிபட வரு சூரர்
சிகர முடி உடல் புவியில் விழ உயிர் திறை கொடு அமர் பொரும் மயில் வீரா
நமனை உயிர் கொளும் அழலின் இணை கழல் நதி கொள் சடையினர் குருநாதா
நளின குருமலை மருவி அமர் தரு நவிலு மறை புகழ் பெருமாளே

மேல்

#215
கோமள வெற்பினை ஒத்த தனத்தியர் காமனை ஒப்பவர் சித்தம் உருக்கிகள்
கோவை இதழ் கனி நித்தமும் விற்பவர் மயில் காடை
கோகில நல் புறவத்தொடு குக்குட ஆரணிய புள் வகை குரல் கற்று இகல்
கோல விழி கடை இட்டு மருட்டிகள் விரகாலே
தூம மலர் பளி மெத்தை படுப்பவர் யாரையும் ஏத்தி மனைக்குள் அழைப்பவர்
சோலை வன கிளி ஒத்த மொழிச்சியர் நெறி கூடா
தூசு நெகிழ்த்து அரை சுற்றி உடுப்பவர் காசு பறிக்க மறித்த முயக்கிகள்
தோதக வித்தை படித்து நடிப்பவர் உறவாமோ
மா மரம் ஒத்து வரிக்குள் நெருக்கிய சூரனை வெட்டி நிண குடலை கொடி
வாரண மெச்ச அளித்த அயில் குக கதிர்காம
மா மலையில் பழநி பதியில் தனி மா கிரியில் தணிகை கிரியில் பர
மா கிரியில் திரை சுற்றி வளைத்திடும் அலைவாயில்
ஏம வெயில் பல வெற்பினில் பதினாலு உலகத்தினில் உற்று உறு பத்தர்கள்
ஏது நினைத்தது மெத்த அளித்து அருள் இளையோனே
ஏரக வெற்பு எனும் அற்புத மிக்க சுவாமி மால பதி மெச்சிய சித்த
இராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் பெருமாளே

மேல்

#216
சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரம் மட்டில் தவம் முறை தியானம் வைக்க அறியாத
சட கசட மூட மட்டி பவ வினையிலே சனித்த தமியன் மிடியால் மயக்கமுறுவேனோ
கருணை புரியாது இருப்பது என குறை இ வேளை செப்பு கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே
கடக புய மீது இரத்ந மணி அணி பொன் மாலை செச்சை கமழு மணம் ஆர் கடப்பம் அணிவோனே
தருணம் இது ஐயா மிகுத்த கனம் அது உறு நீள் சவுக்ய சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வு
தகைமை சிவஞான முத்தி பர கதியு நீ கொடுத்து உதவிபுரிய வேணும் நெய்த்த வடி வேலா
அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ் தான் அளித்த மயில் வீரா
அதிசயம் அநேகம் உற்ற பழநி மலை மீது உதித்த அழக திருவேரகத்தின் முருகோனே

மேல்

#217
சுத்திய நரப்புடன் எலுப்பு உறு தசை குடலொடு அப்பு நிணம் சளி வலிப்புடன் இரத்தகுகை
சுக்கிலம் விளை புழுவொடு அக்கையும் அழுக்கும் மயிர் சங்கு மூளை
துக்கம் விளைவித்த பிணை அல் கறை முனை பெருகு குட்டமொடு விப்புருதி புற்று எழுதல் முட்டுவலி
துச்சி பிளவை பொருமல் பித்தமொடு உறக்கம் மிக அங்கமூடே
எத்தனை நினைப்பையும் விளைப்பையும் மயக்கமுறல் எத்தனை சலிப்பொடு கலிப்பையும் மிடல் பெருமை
எத்தனை கசத்தையும் மலத்தையும் அடைத்த குடில் பஞ்சபூதம்
எத்தனை குலுக்கையும் மினுக்கையும் மனக்கவலை எத்தனை கவட்டையும் நடக்கையும் உயிர் குழுமல்
எத்தனை பிறப்பையும் இறப்பையும் எடுத்து உலகில் மங்குவேனோ
தத்தனத னத்தனத னத்தன என திமிலை ஒத்த முரச துடி இடக்கை முழவு பறைகள்
சத்தம் அறைய தொகுதி ஒத்த செனித்த ரத்த வெள்ள மண்டி ஓட
சக்கிரி நெளிப்ப அவுண பிணம் மிதப்ப அமரர் கைத்தலம் விரித்து அரஹர சிவ பிழைத்தோம் என
சக்கிரி கிரி சுவர்கள் அக்கணமே பக்கு விட வென்ற வேலா
சித்தம் அதில் எத்தனை செகத்தலம் விதத்து உடன் அழித்து கமலத்தனை மணி குடுமி பற்றி மலர்
சித்திர கர தலம் வலிப்ப பல குட்டி நடனம் கொள் வேளே
செட்டி வடிவை கொடு தினை புனம் அதில் சிறு குற பெண் அமளிக்குள் மகிழ் செட்டி குரு வெற்பில் உறை
சிற்பரமருக்கு ஒரு குருக்கள் என முத்தர் புகழ் தம்பிரானே

மேல்

#218
செக மாயை உற்று என் அக வாழ்வில் வைத்த திரு மாது கெர்ப்பம் உடல் ஊறி
தெச மாதம் முற்றி வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த பொருளாகி
மக அவாவின் உச்சி விழி ஆநநத்தில் மலை நேர் புயத்தில் உறவாடி
மடி மீது அடுத்து விளையாடி நித்தம் மணி வாயில் முத்தி தரவேணும்
முக மாயம் இட்ட குற மாதினுக்கு முலை மேல் அணைக்க வரும் நீதா
முது மா மறைக்குள் ஒரு மா பொருட்கு உள் மொழியே உரைத்த குருநாதா
தகையாது எனக்கு உன் அடி காண வைத்த தனி ஏரகத்தின் முருகோனே
தரு காவிரிக்கு வட பாரிசத்தில் சமர் வேல் எடுத்த பெருமாளே

மேல்

#219
சேலும் அயிலும் தரித்த வாளை அடரும் கடைக்கண் மாதரை வசம் படைத்த வசமாகி
சீலம் மறையும் பணத்தில் ஆசை இலை என்று அவத்தை காலமும் உடன் கிடக்கும் அவர் போலே
காலும் மயிரும் பிடித்து மேவும் சிலுகும் பிணக்கு நாளும் மிக நின்று அலைத்த விதம் ஆய
காம கலகம் பிணித்த தோதகம் எனும் துவக்கிலே அடிமையும் கலக்கம் உறலாமோ
ஏலம் இலவங்க வர்க்க நாகம் வகுளம் படப்பை பூகம் மருதம் தழைத்த கர வீரம்
யாவும் அலை கொண்டு கைத்த காவிரி புறம்பு சுற்றும் ஏரகம் அமர்ந்த பச்சை மயில் வீரா
சோலை மடல் கொண்டு சக்ர மால் வரை அரிந்த வஜ்ர பாணியர் தொழும் திரு கை வடி வேலா
சூர் முதிர் க்ரவுஞ்ச வெற்பும் வேலை நிலமும் பகைத்த சூரன் உடலும் துணித்த பெருமாளே

மேல்

#220
தருவர் இவர் ஆகும் என்று பொருள் ஆசையினால் நாடி வண்டுதனை விடு சொல் தூது தண்ட முதலான
சரச கவி மாலை சிந்து கலி துறைகள் ஏசல் இன்ப தரு முதல் அதான செம் சொல் வகை பாடி
மருவுகையும் ஓதி நொந்து அடிகள் முடியே தெரிந்து வரினும் இவர் வீதம் எங்களிடம் ஆக
வரும் அதுவோ போதும் என்று ஒரு பணம் உதாசினம் சொல் மடையரிடமே நடந்து மனம் வேறாய்
உருகி மிகவாக வெந்து கவிதை சொலியே திரிந்து உழல்வதுமே தவிர்ந்து விடவே நல்
உபய பத மால் விளங்கி இகபரமுமே ஏவ இன்பம் உதவி எனை ஆள அன்பு தருவாயே
குருகினொடு நாரை அன்றில் இரைகள் அது நாடி தங்கள் குதி கொள் இள வாளை கண்டு பயமாக
குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு குருமலையின் மேல் அமர்ந்த பெருமாளே

மேல்

#221
தெருவினில் நடவா மடவார் திரண்டு ஒறுக்கும் வசையாலே
தினகரன் என வேலையிலே சிவந்து உதிக்கும் மதியாலே
பொரு சிலை வளையா இளையா மதன் தொடுக்கும் கணையாலே
புளகித முலையாள் அலையா மனம் சலித்தும் விடலாமோ
ஒரு மலை இரு கூறு எழவே உரம் புகுத்தும் வடி வேலா
ஒளி வளர் திருவேரகமே உகந்து நிற்கும் முருகோனே
அரு மறை தமிழ் நூல் அடைவே தெரிந்து உரைக்கும் புலவோனே
அரி அரி பிரமாதியர் கால் விலங்கு அவிழ்க்கும் பெருமாளே

மேல்

#222
நாசர் தம் கடை அதனில் விரவி நான் மெத்த நொந்து தடுமாறி
ஞானமும் கெட அடைய விழுவி ஆழத்து அழுந்தி மெலியாதே
மா சகம் தொழும் உனது புகழின் ஓர் சொல் பகர்ந்து சுகம் மேவி
மா மணம் கமழும் இரு கமல பாதத்தை நின்று பணிவேனோ
வாசகம் புகல ஒரு பரமர் தாம் மெச்சுகின்ற குருநாதா
வாசவன் தரு திருவை ஒரு தெய்வானைக்கு இரங்கும் மணவாளா
கீசகம் சுரர் தருவும் மகிழும் மா அத்தி சந்து புடை சூழும்
கேசவன் பரவு குருமலையில் யோகத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#223
நா ஏறு பா மணத்த பாதாரமே நினைத்து நாலாறுநாலு பற்று வகையான
நாலு ஆரும் ஆகமத்தின் நூல் ஆய ஞான முத்தி நாள்தோறும் நான் உரைத்த நெறியாக
நீ வேறு எனாது இருக்க நான் வேறு எனாது இருக்க நேராக வாழ்வதற்கு உன் அருள்கூர
நீடு ஆர் ஷட் ஆதாரத்தின் மீதே பராபரத்தை நீ காண் எனா அனை சொல் அருள்வாயே
சே ஏறும் ஈசர் சுற்ற மா ஞான போத புத்தி சீராகவே உரைத்த குருநாதா
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு தீரா குகா குறத்தி மணவாளா
காவேரி நேர் வடக்கிலே வாவி பூ மணத்த கா ஆர் சுவாமி வெற்பின் முருகோனே
கார் போலும் மேனி பெற்ற மா காளி வாலை சத்தி காமாரி வாமி பெற்ற பெருமாளே

மேல்

#224
நிலவினிலே இருந்து வகை மலரே தெரிந்து நிறை குழல் மீது அணிந்து குழை தாவும்
நிகர் அறு வேல் இனங்கள் வரிதர வாசகங்கள் நினைவு அறவே மொழிந்து மதன் நூலின்
கலப மனோகரங்கள் அளவு அறவே புரிந்து கனி இதழே அருந்தி அநுராக
கலவியிலே முயங்கி வனிதையர் பால் மயங்கு கபடனை ஆள உன்றன் அருள்கூராய்
உலகம் ஒர் ஏழும் அண்டர் உலகமும் ஈசர் தங்கும் உயர் கயிலாயமும் பொன் வரை தானும்
உயிரொடு பூதம் ஐந்தும் ஒரு முதலாகி நின்ற உமை அருளால் வளர்ந்த குமரேசா
குலை படு சூரன் அங்கம் அழிபட வேல் எறிந்த குமர கடோர வெம் கண் மயில் வாழ்வே
கொடு முடியாய் வளர்ந்து புயல் நிலை போல் உயர்ந்த குருமலை மீது அமர்ந்த பெருமாளே

மேல்

#225
நிறைமதி முகம் எனும் ஒளியாலே நெறி விழி கணை எனு நிகராலே
உறவு கொள் மடவர்கள் உறவு ஆமோ உன திருவடி இனி அருள்வாயே
மறை பயில் அரி திரு மருகோனே மருவலர் அசுரர்கள் குல காலா
குறமகள்தனை மணம் அருள்வோனே குருமலை மருவிய பெருமாளே

மேல்

#226
பரவ அரிதாகிய வரை என நீடிய பணை முலை மீதினில் உருவான
பணிகள் உலாவிட இழை இடை சாய் தரு பயிலிகள் வாள் விழி அயிலாலே
நிர வரியோடு இயல் குழல்களின் நாள்மலர் நிரை தரும் மூரலின் நகை மீது
நிலவு இயல் சேர் முகம் அதில் உயர் மா மயல் நிலை எழவே அலைவது ஆமோ
அரவு அணையார் குழை பர சிவ ஆரண அரன் இடம் பாகமது உறை சோதி
அமை உமை டாகினி திரிபுரை நாரணி அழகிய மாதர் அருள் புதல்வோனே
குரவு அணி பூஷ சரவண தேசிக குக கருணாநிதி அமரேசா
குறமகள் ஆனை மின் மருவிய பூரண குருகிரி மேவிய பெருமாளே

மேல்

#227
பல காதல் பெற்றிடவும் ஒரு நாழிகைக்குள் ஒரு பலனே பெற பரவு கயவாலே
பல பேரை மெச்சி வரு தொழிலே செலுத்தி உடல் பதறாமல் வெட்கம் அறு வகை கூறி
விலகாத லச்சை தணி மலையாம் முலைச்சியர்கள் வினையே மிகுத்தவர்கள் தொழிலாலே
விடமே கொடுத்து வெகு பொருளே பறித்து அருளும் விலை மாதர் பொய் கலவி இனிதாமோ
மலையே எடுத்து அருளும் ஒரு வாள் அரக்கன் உடல் வட மேரு என தரையில் விழவேதான்
வகையா விடுத்த கணை உடையான் மகிழ்ச்சி பெறு மருக கடப்ப மலர் அணி மார்பா
சில காவிய துறைகள் உணர்வே படித்த தமிழ் செவியார வைத்து அருளும் முருகோனே
சிவனார் தமக்கு உரிய உபதேச வித்தை அருள் திருவேரகத்தில் வரும் பெருமாளே

மேல்

#228
பாதி மதி நதி போதும் அணி சடை நாதர் அருளிய குமரேசா
பாகு கனி மொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா
காதும் ஒரு விழி காகம் உற அருள் மாயன் அரி திரு மருகோனே
காலன் எனை அணுகாமல் உனது இரு காலில் வழி பட அருள்வாயே
ஆதி அயனொடு தேவர் சுரர் உலகு ஆளும் வகையுறு சிறை மீளா
ஆடும் மயிலினில் ஏறி அமரர்கள் சூழ வர வரும் இளையோனே
சூதம் மிக வளர் சோலை மருவு சுவாமிமலைதனில் உறைவோனே
சூரன் உடல் அற வாரி சுவறிட வேலை விட வல பெருமாளே

மேல்

#229
மகர கேதனத்தன் உருவு இலான் எடுத்து மதுர நாண் இட்டு நெறி சேர்வார்
மலையவே வளைத்த சிலையினூடு ஒளித்த வலிய சாயக கண் மட மாதர்
இகழ வாசமுற்ற தலை எலாம் வெளுத்து இளமை போய் ஒளித்து விடுமாறு
இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து உன் இனிய தாள் அளிப்பது ஒரு நாளே
அகிலம் ஏழும் எட்டு வரையின் மீது முட்ட அதிரவே நடத்தும் மயில் வீரா
அசுரர் சேனை கெட்டு முறிய வானவர்க்கு அடைய வாழ்வு அளிக்கும் இளையோனே
மிக நிலா எறித்த அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் உறைவோனே
விரைய ஞான வித்தை அருள்செய் தாதை கற்க வினவ ஓதுவித்த பெருமாளே

மேல்

#230
மருவே செறித்த குழலார் மயக்கி மதனாகமத்தின் விரகாலே
மயலே எழுப்பி இதழே அருத்த மலை போல் முலைக்குள் உறவாகி
பெரு காதலுற்ற தமியேனை நித்தல் பிரியாது பட்சம் மறவாதே
பிழையே பொறுத்து உன் இரு தாளில் உற்ற பெருவாழ்வு பற்ற அருள்வாயே
குருவாய் அரற்கும் உபதேசம் வைத்த குகனே குறத்தி மணவாளா
குளிர் கா மிகுத்த வளர் பூகம் மெத்து குட காவிரிக்கு வடபாலார்
திருமால்தனக்கு மருகா உமைக்கு ஓர் சிறுவா கரிக்கும் இளையோனே
திருவேரகத்தில் உறைவாய் அரக்கர் சிரமே துணித்த பெருமாளே

மேல்

#231
முறுகு காள விடம் அயின்ற இரு கண் வேலின் உளம் மயங்கி முளரி வேரி முகை அடர்ந்த முலை மீதே
முழுகு காதல்தனை மறந்து பரம ஞான ஒளி சிறந்து முகம் ஒரு ஆறு மிக விரும்பி அயராதே
அறுகு தாளி நறை அவிழ்ந்த குவளை வாச மலர் கரந்தை அடைய வாரி மிசை பொழிந்து உன் அடி பேணி
அவசமாகி உருகு தொண்டருடன் அதாகி விளையும் அன்பின் அடிமையாகும் முறைமை ஒன்றை அருள்வாயே
தறுகண் வீரர் தலை அரிந்து பொருத சூரன் உடல் பிளந்து தமர வேலை சுவற வென்ற வடி வேலா
தரளம் ஊரல் உமை மடந்தை முலையில் ஆர அமுதம் உண்டு தரணி ஏழும் வலம்வரும் திண் மயில் வீரா
மறு இலாத தினை விளைந்த புனம் விடாமல் இதண் இருந்து வலிய காவல் புனை அணங்கின் மணவாளா
மருவு ஞாழல் அணி செருந்தி அடவி சூத வன நெருங்கி வளர் சுவாமிமலை அமர்ந்த பெருமாளே

மேல்

#232
வாதமொடு சூலை கண்டமாலை குலை நோவு சந்து மா வலி வியாதி குன்மமொடு காசம்
வாயுவுடனே பரந்த தாமரைகள் பீனசம் பின் மாதர் தரு பூஷணங்கள் என ஆகும்
பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து பாயலை விடாது மங்க இவையால் நின்
பாத மலரானதின் கண் நேயம் அறவே மறந்து பாவ மதுபானம் உண்டு வெறி மூடி
ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று ஈனம் மிகு சாதியின் கண் அதிலே நான்
ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு உன் ஈர அருள்கூர வந்து எனை ஆள்வாய்
சூதம் மகிழ் பாலை கொன்றை தாது வளர் சோலை துன்றி சூழும் மதில் தாவி மஞ்சின் அளவாக
தோரண நல் மாடம் எங்கும் நீடு கொடியே தழைந்த சுவாமிமலை வாழ வந்த பெருமாளே

மேல்

#233
வாரம் உற்ற பண்பின் மாதம் உற்ற நண்பின் நீடு மெய் துயர்ந்து வயதாகி
வாலையில் திரிந்து கோல மை கண் மங்கைமார்களுக்கு இசைந்து பொருள் தேடி
ஆரம் மிக்க பொன்களால் அமைந்து அமர்ந்த மா பணிக்கள் விந்தை அதுவான
ஆடகம் ஒப்ப அமைந்த ஓலை முத்தமும் கொடு ஆவி மெத்த நொந்து திரிவேனோ
சூரனை துரந்து வேரற பிளந்து சூழ் சுரர்க்கண் அன்புசெயும் வீரா
சூகரத்தொடு அம்பு தான் எடுத்து வந்த சூதனுக்கு இசைந்த மருகோனே
ஏர் எதிர்த்து வந்து நீர்கள் கட்டி அன்று தான் இறைக்க வந்தது ஒரு சாலியே
மிகுத்து உயர்ந்த மா வயற்கள் மிஞ்சும் ஏரகத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#234
வார் குழலை சொருகி கரு வில் குழை காதோடு இணைத்து அசைய கதிர் பல் கொடு
வாய் இதழ் பொற்க மலர் குமிழ் ஒத்து உளதுண்ட க்ரீவ
வார் கமுகில் நல் கழை பொன் குவடு ஆடு இளநீர் சுரர் பொன் குடம் ஒத்த இணை
மார்பு அழகில் பொறி முத்து ஒளிர் சித்திர ரம்பை மாதர்
கார் உறும் வித்து இடையில் கதலி தொடை சேர் அல்குல் நல் பிரசம் தடம் உள் கொடு
கால் மறைய துவள செறி பொன் கலை ஒண் குலாவ
கார் குயிலை குரலை கொடு நல் தெரு மீதில் நெளித்து நகைத்து நடிப்பவர்
காமன் உகப்ப அமளி சுழல் குத்திரர் சந்தம் ஆமோ
சூரர் பதைக்க அர உட்கி நெளித்து உயர் ஆழி இரைப்ப நிண குடலை கழு
சூழ நரி கெருட கொடி பற்பல சங்கமாக
சூழ் கிரியை கை தடித்து மலை திகை யானை உழற்றி நடுக்கி மத பொறி
சோர நகைத்து அயிலை கொடு விட்டு அருள் செம் கை வேலா
ஏர் அணி நல் குழலை ககன சசி மோகினியை புணர்ச்சி சித்த ஒரு அற்புத
வேட அமுத சொருபத்த குறத்தி மணம் கொள்வோனே
ஏரக வெற்பு என்னும் அற்புத மிக்க சுவாமிமலை பதி நிற்கும் இலக்ஷண
ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் தம்பிரானே

மேல்

#235
வார் குழல் விரித்து தூக்கி வேல் விழி சுழற்றி பார்த்து வா என நகைத்து தோட்டு குழை ஆட
வாசகம் உரைத்து சூத்ர பாவை என உறுப்பை காட்டி வாசனை முலை கச்சு ஆட்டி அழகாக
சீர் கலை நெகிழ்த்து போர்த்து நூல் இடை நெளித்து காட்டி தீது எய நடித்து பாட்டு குயில் போல
சேருற அழைத்து பார்த்து சார்வுற மருத்து இட்டு ஆட்டி சீர் பொருள் பறி பொய் கூத்தர் உறவு ஆமோ
சூரர்கள் பதைக்க தேர்க்கள் ஆனைகள் அழித்து தாக்கி சூர் கிரி கொளுத்தி கூற்று உர் இடும் வேலா
தூ மொழி நகைத்து கூற்றை மாளிட உதைத்து கோத்த தோல் உடை என் அப்பர்க்கு ஏற்றி திரிவோனே
ஏர் அணி சடைச்சி பால் சொல் ஆரணி சிறக்க போற்று மேர் எழில் நிறத்து கூர்த்த மகவோனே
ஏடு அணி குழைச்சி தூர்த்த ஆடகி குறத்திக்கு ஏற்ற ஏரக பொருப்பில் பூத்த பெருமாளே

மேல்

#236
விடமும் வடி வேலும் மதன சரங்களும் வடுவு நிகரான மகர நெடும் குழை
விரவி உடன் மீளும் விழிகளும் மென் புழுகு அது தோயும்
ம்ருகமத படீர பரிமள குங்குமம் அணியும் இளநீரும் வட குல குன்றமும்
வெருவுவன பார புளகித தனங்களும் வெகு காம
நடன பத நூபுரமும் முகில் கெஞ்சிட மலர் சொருகு கேச பரமும் இலங்கிய
நளின மலர் சோதி மதி முக விம்பமும் அன நேராம்
நடை நளிர் மாதர் நிலவு தொழும் தனு முழுதும் அபிராம அரி வய கிண்கிண் என
நகையும் உள மாதர் கலவியில் நைந்து உருகிடலாமோ
வடிவுடைய மானும் இகல் கரனும் திகழ் எழு வகை மரா மரமும் நிகர் ஒன்றும் இல்
வலிய திறல் வாலி உரமும் நெடும் கடல் அவை ஏழும்
மற நிருதர் சேனை முழுதும் இலங்கை மன் வகை இரவு போலும் அணியும் அலங்க்ருத
மணி மவுலியான ஒரு பதும் விஞ்சு இருபது தோளும்
அடை வலமும் மாள விடு சர அம்பு உடை தசரத குமார ரகு குல புங்கவன்
அருள் புனை முராரி மருக விளங்கிய மயில் ஏறி
அடையலர்கள் மாள ஒரு நிமிடம்தனில் உலகை வலமாக நொடியினில் வந்து உயர்
அழகிய சுவாமிமலையில் அமர்ந்து அருள் பெருமாளே

மேல்

#237
விரித்த பைம் குழல் ஒளிர் மலர் அளி தன தனத்த னந்தன தனதன என ஒலி
விரிப்ப வண் கயல் விழி உறை குழையொடும் அலை பாய
மிகுத்த வண் சிலை நுதல் மிசை திலதமொடு அசைத்த பொன் குழை அழகு எழ முக ஒளி
வெயில் பரந்திட நகை இதழ் முருகு அலர் வரி போத
தரித்த தந்திரி மறி புயம் மிசை பல பணிக்கு இலங்கிய பரிமள குவடு இணை
தன கொழும் துகள் ததைபட கொடி இடை படு சேலை
தரித்து சுந்தரம் என அடர் பரிபுர பத சிலம்போடு நடமிடு கணிகையர்
சழக்கர் விஞ்சையர் மயல்களில் முழுகுவது ஒழியாதோ
உரித்த வெம் கயம் மறியோடு புலி கலை தரித்த சங்கரர் மதி நதி சடையினர்
ஒருத்தி பங்கினர் அவர் பணி குருபர முருகோனே
உவட்டி வந்திடும் அவுணரொடு எழு கடல் குவட்டையும் பொடி பட சதம் முடிவுற
உழைத்த இந்திரர் பிரமனும் மகிழ்வுற விடும் வேலா
வரி தரம் துளவு அணி திரு மருவிய உரத்த பங்கயர் மரகதம் அழகிய
வணத்தர் அம்பரம் உற விடு கணையினர் மருகோனே
வனத்தில் வந்து ஒரு பழையவன் என ஒரு குறத்தி மென் புயம் மருவிய கிளிதனை
மயக்கி மந்திர குருமலைதனில் அமர் பெருமாளே

மேல்

#238
விழியால் மருட்டி நின்று முலை தூசு அகற்றி மண்டு விரகானலத்து அழுந்த நகை ஆடி
விலையாக மிக்க செம்பொன் வரவே பரப்பி வஞ்ச விளையாடலுக்கு இசைந்து சில நாள் மேல்
மொழியாத சொற்கள் வந்து சிலுகாகிவிட்ட தொந்த முழு மாயையில் பிணங்கள் வசமாகி
முடியாது பொன் சதங்கை தரு கீத வெட்சி துன்று முதிராத நல் பதங்கள் தருவாயே
பொழி கார் முகிற்கு இணைந்த யம ராஜன் உட்க அன்று பொரு தாள் எடுத்த தந்தை மகிழ்வோனே
புருகூதன் உள் குளிர்ந்த கனகாபுரி ப்ரசண்ட புனிதா ம்ருக கரும்பு புணர் மார்பா
செழு வாரிசத்தில் ஒன்றும் முது வேதன் வெட்க அன்று திரு வாய்மை செப்பி நின்ற முருகோனே
திரளா மணி குலங்கள் அருணோதயத்தை வென்ற திருவேரகத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#239
அமைவுற்று அடைய பசியுற்றவருக்கு அமுதை பகிர்தற்கு இசையாதே
அடைய பொருள் கை இளமைக்கு என வைத்து அருள் தப்பி மதத்து அயராதே
தமர் சுற்றி அழ பறை கொட்டி இட சமன் நெட்டு உயிரை கொடுபோகும்
சரிரத்தினை நிற்கும் என கருதி தளர்வுற்று ஒழிய கடவேனோ
இமயத்து மயிற்கு ஒரு பக்கம் அளித்து அவருக்கு இசைய புகல்வோனே
இரணத்தினில் எற்றுவரை கழுகுக்கு இரையிட்டிடும் விக்ரம வேலா
சமய சிலுகிட்டவரை தவறி தவம் உற்ற அவருள் புக நாடும்
சடு பத்ம முக குக புக்கு கன தணியில் குமர பெருமாளே

மேல்

#240
அரகர சிவன் அரி அயன் இவர் பரவி முன் அறுமுக சரவணபவ என்று
அநுதின மொழி தர அசுரர்கள் கெட அயில் அனல் என எழ விடும் அதி வீரா
பரிபுர கமலம் அது அடி இணை அடியவர் உளம் அதில் உற அருள் முருகேசா
பகவதி வரைமகள் உமை தர வரு குக பரமனது இரு செவி களிகூர
உரை செயும் ஒரு மொழி பிரணவ முடிவதை உரை தரு குருபர உயர்வாய
உலக மன் அலகில உயிர்களும் இமையவர் அவர்களும் உறுவர முநிவோரும்
பரவி முன் அநுதினம் மனம் மகிழ்வுற அணி பணி திகழ் தணிகையில் உறைவோனே
பகர் தரு குறமகள் தரு அமை வநிதையும் இருபுடை உற வரு பெருமாளே

மேல்

#241
அருக்கி மெத்தென சிரித்து உருக்கி இட்டு உள கருத்து அழித்து அற கறுத்த கண் பயிலாலே
அழைத்து அகப்படுத்தி ஒட்டற பொருள் பறிப்பவர்க்கு அடுத்த அபத்தமுற்று வித்தகர் போல
தரிக்கும் வித்தரிக்கும் மிக்க தத்துவ ப்ரசித்தி எத்தலத்து மற்று இலை பிறர்க்கு என ஞானம்
சமைத்து உரைத்து இமைப்பினில் சடக்கென படுத்து எழ சறுக்கும் இ பிறப்பு பெற்றிடலாமோ
பொருக்கு எழ கடல் பரப்பு அரக்கர் கொத்து இறப்புற பொருப்பினில் பெருக்க உற்றிடு மாயம்
புடைத்து இடித்து அடல் கரத்து உற பிடித்த கற்பக புரிக்கு இரக்கம் வைத்த பொன் கதிர் வேலா
திருத்த முத்தமிழ் கவிக்கு ஒருத்த மை குறத்தியை தினை புன கிரி தலத்திடை தோயும்
சிவத்த குக்குட கொடி செருக்க உற்பல சுனை சிறப்புடை திருத்தணி பெருமாளே

மேல்

#242
இருப்பு அவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும் என ஓதும்
இசை தமிழ் நட தமிழ் என துறை விருப்புடன் இலக்கண இலக்கிய கவி நாலும்
தரிப்பவர் உரைப்பவர் நினைப்பவர் மிக சகதலத்தினில் நவிற்றுதல் அறியாதே
தனத்தினில் முகத்தினில் மனத்தினில் உறுக்கிடு சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ
கருப்பு வில் வளைத்து அணி மலர் கணை தொடுத்து இயல் களிப்புடன் ஒளித்து எய்த மத வேளை
கருத்தினில் நினைத்து அவன் நெருப்பு எழ நுதல் படு கனல் கணில் எரித்தவர் கயிலாய
பொருப்பினில் இருப்பவர் பருப்பத உமைக்கு ஒரு புறத்தினை அளித்தவர் தரு சேயே
புயல் பொழில் வயல் பதி நயப்படு திருத்தணி பொருப்பினில் விருப்புறு பெருமாளே

மேல்

#243
இருமல் உரோகம் முயலகன் வாதம் எரி குண நாசி விடமே நீரிழிவு
விடாத தலைவலி சோகை எழு களம் மாலை இவையோடே
பெரு வயிறு ஈளை எரி குலை சூலை பெரு வலி வேறும் உள நோய்கள்
பிறவிகள்தோறும் எனை நலியாதபடி உன தாள்கள் அருள்வாயே
வரும் ஓரு கோடி அசுரர் பதாதி மடிய அநேக இசை பாடி
வரும் ஒரு கால வயிரவர் ஆட வடி சுடர் வேலை விடுவோனே
தரு நிழல் மீதில் உறை முகில் ஊர்தி தரு திரு மாதின் மணவாளா
சலம் இடை பூவின் நடுவினில் வீறு தணிமலை மேவும் பெருமாளே

மேல்

#244
உடலினூடு போய் மீளும் உயிரினூடு மாயாத உணர்வினூடு வானூடு முது தீயூடு
உலவையூடு நீரூடு புவியினூடு வாதாடும் ஒருவரோடு மேவாத தனி ஞான
சுடரினூடு நால் வேத முடியினூடும் ஊடாடு துரிய ஆகுலாதீத சிவ ரூபம்
தொலைவு இலாத பேராசை துரிசு அறாத ஓர் பேதை தொடும் உபாயம் ஏதோ சொல் அருள்வாயே
மடல் அறாத வாரீச அடவி சாடி மாறான வரி வரால் குவால் சாய அமராடி
மதகு தாவி மீதோடி உழவர் ஆல அடாது ஓடி மடையை மோதி ஆறூடு தடமாக
கடல் புகா மகா மீனை முடுகி வாளை தான் மேவு கமல வாவி மேல் வீழு மலர் வாவி
கடவுள் நீல மாறாத தணிகை காவலா வீர கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#245
உடையவர்கள் ஏவர் எவர்கள் என நாடி உள மகிழ ஆசுகவி பாடி
உமது புகழ் மேரு கிரி அளவும் ஆனது என உரமுமான மொழி பேசி
நடை பழகி மீள வறியவர்கள் நாளை நடவும் என வாடி முகம் வேறாய்
நலியும் முனமே உன் அருண ஒளி வீசு நளின இரு பாதம் அருள்வாயே
விடை கொளுவு பாகர் விமலர் திரிசூலர் விகிர்தர் பர யோகர் நிலவோடே
விளவு சிறு பூளை நகுதலையொடு ஆறு விட அரவு சூடு அதி பார
சடை இறைவர் காண உமை மகிழ ஞான தளர் நடை இடா முன் வருவோனே
தவ மலரும் நீல மலர் சுனை அநாதி தணி மலை உலாவு பெருமாளே

மேல்

#246
உய்ய ஞானத்து நெறி கை விடாது எப்பொழுதும் உள்ள வேத துறை கொடு உணர்வு ஓதி
உள்ள மோகத்து இருளை விள்ள மோக பொருளை உள்ள மோகத்து அருளி உறவாகி
வையம் ஏழுக்கு நிலை செய்யும் நீதி பழைய வல்லம் மீது உற்பல சயில மேவும்
வள்ளியா நின் புதிய வெள்ளில் தோய் முத்த முறி கிள்ளி வீசி உற்று மலர் பணிவேனோ
பை அராவை புனையும் ஐயர் பாக தலைவி துய்ய வேணி பகிரதி குமாரா
பைய மால் பற்றி வளர் சையம் மேல் வைக்கும் முது நெய்யனே சுற்றிய குறவர் கோவே
செய்யுமால் வெற்பு உருவ வெய்ய வேல் சுற்றி விடு கைய மால் வைத்த திரு மருகோனே
தெய்வ யானைக்கு இளைய வெள்ளை யானை தலைவ தெய்வயானைக்கு இனிய பெருமாளே

மேல்

#247
எத்தனை கலாதி சித்து அங்கு எத்தனை வியாதி பித்த அங்கு எத்தனை சராசரத்தில் செடமான
எத்தனை விடா வெருட்டு அங்கு எத்தனை வல் ஆண்மை பற்று அங்கு எத்தனைகொல் ஊனை நித்தம் பசியாறல்
பித்து அனையன் நான் அகட்டு உண்டு இப்படி கெடாமல் முத்தம் பெற்றிட நின சனத்தின் செயலான
பெற்றியும் ஒராது நிற்கும் தத்த குரு தாரம் நிற்கும் பெத்தமும் ஒராது நிற்கும் கழல் தாராய்
தத்தனத னாத னத்தம் தத்தனத னாத னத்தம் தத்தனத னாத னத்தம் தகுதீதோ
தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தம் தத்தனத னானன் உர்த்தும் சத பேரி
சித்தர்கள் நிடாதர் வெற்பின் கொற்றவர் சுவாமி பத்தர் திக்குகள் ஓர் நாலிரட்டில் கிரி சூழ
செ கண் அரிமா கனைக்கும் சி தணிகை வாழ் சிவப்பின் செக்கர் நிறமாய் இருக்கும் பெருமாளே

மேல்

#248
எலுப்பு நாடிகள் அப்பொடு இரத்தமொடு அழுக்கு மூளைகள் மச்சொடு கொள் புழு
இருக்கும் வீடு அதில் எத்தனை தத்துவ சதிகாரர்
இறப்பர் சூதக அர்ச்சுதர் அ பதி உழப்பர் பூமி தரிப்பர் பிறப்புடன்
இருப்பர் வீடுகள் கட்டி அலட்டுறு சமுசாரம்
கெலிப்பர் மால் வலை பட்டுறு துட்டர்கள் அழிப்பர் மாதவம் உற்று நினைக்கிலர்
கெடுப்பர் யாரையும் மித்திர குத்திரர் கொலைகாரர்
கிருத்தர் கோளகர் பெற்று திரி களவு அரிப்பர் சூடகர் எத்தனை வெம் பிணி
கெலிக்கும் வீடு அதை நத்தி எடுத்து இவண் உழல்வேனோ
ஒலி பல் பேரிகை உக்ர அமர்க்களம் எதிர்த்த சூரரை வெட்டி இருள் கிரி
உடைத்து வானவர் சித்தர் துதித்திட விடும் வேலா
உலுத்த ராவணனை சிரம் இற்றிட வதைத்து மாபலியை சிறை வைத்தவன்
உலக்கை ராவி நடு கடல் விட்டவன் மருகோனே
வலிக்க வேதனை குட்டி நடித்து ஒரு செகத்தை ஈனவள் பச்சை நிறத்தியை
மணத்த தாதை பரப்ரமருக்கு அருள் குருநாதா
வனத்தில் வாழும் மயில் குலம் ஒத்திடு குறத்தியாரை மயக்கி அணைத்து உள
மகிழ்ச்சியோடு திருத்தணி பற்றிய பெருமாளே

மேல்

#249
எனக்கு என யாவும் படைத்திட நாளும் இளைப்பொடு காலம்தனில் ஓயா
எடுத்திடு காயம்தனை கொடு மாயும் இலச்சை இலாது என் பவம் ஆற
உனை பல நாளும் திருப்புகழாலும் உரைத்திடுவார் தங்கு உளி மேவி
உணர்த்திய போதம்தனை பிரியாது ஒண் பொல சரண் நானும் தொழுவேனோ
வினை திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன் விழ கொடு வேள் கொன்றவன் நீயே
விளப்பு என மேல் என்று இடக்கு அயனாரும் விருப்புற வேதம் புகல்வோனே
சினத்தொடு சூரன்தனை கொடு வேலின் சிரத்தினை மாறும் முருகோனே
தினை புன மேவும் குறக்கொடியோடும் திருத்தணி மேவும் பெருமாளே

மேல்

#250
எனை அடைந்த குட்ட வினை மிகுந்த பித்தம் எரி வழங்கும் வெப்பு வலி பேசா
இகலி நின்று அலைக்கும் முயலகன் குலைப்பொடு இருமல் என்று உரைக்கும் இவையோடே
மனைகள் பெண்டிர் மக்கள்தமை நினைந்து சுத்த மதி மயங்கி விட்டு மடியாதே
மருவி இன்று எனக்கு மரகதம் சிறக்கும் மயிலில் வந்து முத்தி தரவேணும்
நினை வணங்கு பத்தர் அனைவரும் தழைக்க நெறியில் நின்ற வெற்றி முனை வேலா
நிலைபெறும் திருத்தணியில் விளங்கு சித்ர நெடிய குன்றில் நிற்கும் முருகோனே
தினை விளங்கலுற்ற புன இளம் குறத்தி செயல் அறிந்து அணைக்கும் மணி மார்பா
திசைமுகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த சிறை திறந்து விட்ட பெருமாளே

மேல்

#251
ஏது புத்தி ஐயா எனக்கு இனி யாரை நத்திடுவேன் அவத்தினிலே
இறத்தல்கொலோ எனக்கு நீ தந்தை தாய் என்றே
இருக்கவும் நான் இப்படியே தவித்திடவோ சகத்தவர்
ஏசலில் படவோ நகைத்து அவர் கண்கள் காண
பாதம் வைத்திடு ஐயா தேரித்து எனை தாளில் வைக்க நீயே மறுத்திடில்
பார் நகைக்கும் ஐயா தகப்பன் முன் மைந்தன் ஓடி
பால் மொழி குரல் ஓலமிட்டிடில் யார் எடுப்பது எனா வெறுத்து அழ
பார் விடுப்பார்களோ எனக்கு இது சிந்தியாதோ
ஓதமுற்று எழு பால் கொதித்தது போல எட்டு திகை நீச முட்டரை
ஓட வெட்டிய பாநு சத்தி கை எங்கள் கோவே
ஓதம் மொய் சடை ஆட உற்று அமர் மான் மழு கரம் ஆட பொன் கழல்
ஓசை பெற்றிடவே நடித்தவர் தந்த வாழ்வே
மா தினை புன மீது இருக்கு மை வாள் விழி குற மாதினை திரு
மார்பு அணைத்த மயூர அற்புத கந்த வேளே
மாரன் வெற்றி கொள் பூ முடி குழலார் வியப்புற நீடு மெய் தவர்
வாழ் திருத்தணி மா மலை பதி தம்பிரா¡னே

மேல்

#252
ஓலை இட்ட குழைச்சிகள் சித்திர ரூபம் ஒத்த நிறத்திகள் வில் கணையோடு
இணைத்த விழிச்சிகள் சர்க்கரை அமுதோடே
ஊறி ஒத்த மொழிச்சிகள் புட்குரலோடு வைத்து மிழற்றும் இடற்றிகள்
ஓசை பெற்ற துடிக்கொள் இடைச்சிகள் மணம் வீசும்
மாலை இட்ட கழுத்திகள் முத்து அணி வார் அழுத்து தனத்திகள் குத்திர
மால் விளைத்து மனத்தை அழித்திடு மட மாதர்
மார்பு அசைத்து மருட்டி இருட்டு அறை வா என பொருள் பற்றி முயக்கிடு
மாதருக்கு வருத்தம் இருப்பது தணியாதோ
வேலை வற்றிட நல் கணை தொட்டு அலை மீது அடைத்து தனி படை விட்டு உற
வீறு அரக்கன் முடித்தலை பத்தையும் மலை போலே
மீது அறுத்து நிலத்தில் அடித்து மெய் வேத லக்ஷுமியை சிறை விட்டு அருள்
வீர அச்சுதனுக்கு நல் அற்புத மருகோனே
நீலி நிட்களி நிர்க்குணி நித்தில வாரி முத்து நகை கொடி சித்திர
நீல ரத்தின மிக்க அற கிளி புதல்வோனே
நீறு அது இட்டு நினைப்பவர் புத்தியில் நேச மெத்த அளித்து அருள் சற்குரு
நீலம் உற்ற திருத்தணி வெற்பு உறை பெருமாளே

மேல்

#253
கச்சு அணி இள முலை முத்து அணி பல வகை கை சரி சொலி வர மயல் கூறி
கைப்பொருள் கவர்தரு மை பயில் விழியினர் கண் செவி நிகர் அல்குல் மட மாதர்
இச்சையில் உருகிய கச்சையன் அறிவிலி எச்சம் இல் ஒரு பொருள் அறியேனுக்கு
இ புவி மிசை கமழ் பொன் பத மலர் இணை இப்பொழுது அணுக உன் அருள்தாராய்
கொச்சையர் மனையில் இடைச்சியர் தயிர்தனை நச்சியே திருடிய குறையால் வீழ்
குற்கிரவினியொடு நல் திற வகை அறி கொற்றவ உவண மிசை வரு கேசன்
அ சுதை நிறை கடல் நச்சு அரவணை துயில் அச்சுதன் மகிழ் திரு மருகோனே
அப்பு அணி சடை அரன் மெச்சிய தணிமலை அப்பனே அழகிய பெருமாளே

மேல்

#254
கடல் செகத்து அடக்கி மற்று அடுத்தவர்க்கு இடுக்கணை கடைக்கணில் கொடுத்து அழைத்து இயல் காம
கலை கதற்று உரைத்து புட்குரல்கள் விட்டு உளத்தினை கரைத்து உடுத்த பட்டு அவிழ்த்து அணை மீதே
சடக்கென புக தனத்து அணைத்து இதழ் கொடுத்து முத்தமிட்டு இருள் குழல் பிணித்து உகிர் ஏகை
சளப்பட புதைத்து அடித்து இலை குண கடித்தட தலத்தில் வைப்பவர்க்கு இதப்படுவேனோ
இடக்கு அடக்கு மெய்ப்பொருள் திருப்புகழ்க்கு உயிர்ப்பு அளித்து எழில் தினை கிரி புறத்து உறை வேலா
இகல் செருக்கு அரக்கரை தகர்த்து ஒலித்து உரத்த பச்சிறைச்சியை பசித்து இரைக்கு இசை கூவும்
பெடை திரட்கு அளித்த குக்குட கொடி கரத்த பொய் பிதற்றல் அற படுத்து சற்குருவாய் முன்
பிறப்பிலிக்கு உணர்த்து சித்த உற்ற நெல் பெரு குவை பெருக்கு மெய் திருத்தணி பெருமாளே

மேல்

#255
கரி குழல் விரித்தும் புற கயல் விழித்தும் கரி குவடு இணைக்கும் தன பார
கரத்து இடு வளை சங்கிலி சரம் ஒலித்தும் கலை துகில் மினுக்யும் பணிவோரை
தரித்து உளம் அழிக்கும் கவட்டர்கள் இணக்கம் தவிர்த்து உனது சித்தம் களிகூர
தவ கடல் குளித்து இங்கு உனக்கு அடிமையுற்று உன் தலத்தினில் இருக்கும்படி பாராய்
புரத்தையும் எரித்து அம் கயத்தையும் உரித்து ஒண் பொடி பணி என் அப்பன் குருநாதா
புய பணி கடப்பம் தொடை சிகரம் உற்று இன் புகழ்ச்சி அமுத திண் புலவோனே
திரள் பரி கரிக்கும் பொடிப்பட அவுணர்க்கும் தெறிப்புற விடுக்கும் கதிர் வேலா
சிறப்பொடு குற பெண் களிக்கும் விசய தென் திருத்தணி இருக்கும் பெருமாளே

மேல்

#256
கலை மடவார்தம் சிலை அதனாலும் கன வளையாலும் கரை மேலே
கருகிய காளம் பெருகிய தோயம் கருது அலையாலும் சிலை ஆலும்
கொலை தரு காமன் பல கணையாலும் கொடி இடையாள் நின்று அழியாதே
குரவு அணி நீடும் புயம் அணி நீபம் குளிர் தொடை நீ தந்து அருள்வாயே
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் தொழும் வேலா
தினை வன மானும் கந வன மானும் செறிவுடன் மேவும் திரு மார்பா
தலமகள் மீது எண் புலவர் உலாவும் தணிகையில் வாழ் செம் கதிர் வேலா
தனியவர் கூரும் தனி கெட நாளும் தனி மயில் ஏறும் பெருமாளே

மேல்

#257
கவடுற்ற சித்தர் சட்சமய ப்ரமத்தர் நல் கடவுள் ப்ரதிஷ்டை பற்பலவாக
கருதி பெயர் குறித்து உரு வர்க்கம் இட்டு இடர் கருவில் புக பகுத்து உழல்வானேன்
சவடிக்கு இலச்சினைக்கு இரு கை சரிக்கும் மிக்க சரப்பளிக்கு என பொருள் தேடி
சகலத்தும் ஒற்றைப்பட்டு அயல்பட்டு நிற்கு நின் சரண ப்ரசித்தி சற்று உணராரோ
குவடு எட்டும் அட்டு நெட்டு வரி கணத்தினை குமுற கலக்கி விக்ரம சூரன்
குடலை புயத்தில் இட்டு உடலை தறித்து உருத்தி உதிரத்தினில் குளித்து எழும் வேலா
சுவடு உற்ற அற்புத கவலை புனத்தினில் துவலை சிமிழ்த்து நிற்பவள் நாண
தொழுது எத்து முத்த பொன் புரிசை செரும் தணி சுருதி தமிழ் கவி பெருமாளே

மேல்

#258
கனத்த அற பணைத்த பொன் கழை புய தன கிரி கனத்தை ஒத்து மொய்த்த மை குழலார்தம்
கறுத்த மை கணில் கருத்து வைத்து ஒருத்த நின் கழல் பதத்து அடுத்திடற்கு அறியாதே
இன பிணி கணத்தினுக்கு இருப்பு என துருத்தி ஒத்து இசைத்து அசைத்து சுக்கிலம் தசை தோலால்
எடுத்த பொய் கடத்தினை பொறுக்கு இ பிறப்பு அறுத்து எனக்கு நித்த முத்தியை தரவேணும்
பனை கர சினத்து இபத்தனை துரத்து அரக்கனை பயத்தினில் பயப்பட பொரும் வேலா
பருப்பத செருக்கு அற துகைக்கும் முள் பதத்தினை படைத்த குக்குட கொடி குமரேசா
தினை புன பருப்பதத்தினில் குடி குறத்தியை செருக்குற திரு புயத்து அணைவோனே
திரு புர புறத்து இயல் திரு தகு து நித்தில திரு திசை திருத்தணி பெருமாளே

மேல்

#259
கனைத்து அதிர்க்கும் இ பொங்கு கார் கடல் ஒன்றினாலே
கறுத்து அற சிவத்து அங்கி வாய்த்து எழு திங்களாலே
தனி கருப்பு வில் கொண்டு வீழ்த்த சரங்களாலே
தகைத்து ஒருத்தி எய்த்து இங்கு யாக்கை சழங்கலாமோ
தினை புனத்தினை பண்டு காத்த மடந்தை கேள்வா
திருத்தணி பதி குன்றின் மேல் திகழ் கந்த வேளே
பனை கர கயத்து அண்டர் போற்றிய மங்கை பாலா
படைத்து அளித்து அழிக்கும் த்ரிமூர்த்திகள் தம்பிரானே

மேல்

#260
கிரி உலாவிய முலை மிசை துகில் இடு கபட நாடக விரகிகள் அசடிகள்
கெடு வியாதிகள் அடைவுடை உடலினர் விரகாலே
க்ருபையினாரொடு மணம் மிசை நழுவிகள் முழுது நாறிகள் இத மொழி வசனிகள்
கிடையின் மேல் மனம் உருகிட தழுவிகள் பொருளாலே
பரிவு இலா மயல் கொடு சமர்புரிபவர் அதிகமா ஒரு பொருள் தருபவரொடு
பழைய பேர் என இதமுற அணைபவர் விழியாலே
பகழி போல் விடு வினை கவர் திருடிகள்தமை எணா வகை அறு கதி பெறும் வகை
பகர மா மயில் மிசை வர நினைவதும் ஒரு நாளே
அரி அராதிபர் மலர் அயன் இமையவர் நிலை பெறாது இடர் பட உடன் முடுகியே
அசுரர் தூள்பட அயில் தொடும் அறுமுக இளையோனே
அரிய கானகம் உறை குறமகளிட கணவனாகிய அறிவு உள விதரண
அமரர் நாயக சரவணபவ திறல் உடையோனே
தரும நீதியர் மறை உளர் பொறை உளர் சரிவு உறா நிலை பெறு தவம் உடையவர்
தளர்வு இலா மனம் உடையவர் அறிவினர் பர ராஜர்
சகல லோகமும் உடையவர் நினைபவர் பரவு தாமரை மலர் அடி இனிதுற
தணிகை மா மலை மணி முடி அழகியல் பெருமாளே

மேல்

#261
கிறி மொழி கிருதரை பொறி வழி செறிஞரை கெடு பிறப்பு அற விழிக்கிற பார்வை
கெடு மட குருடரை திருடரை சமய தர்க்கிகள்தமை செறிதலுற்று அறிவு ஏதும்
அறிதல் அற்று அயர்தலுற்று அவிழ்தல் அற்று அருகலுற்று அறவு நெக்கு அழி கரு கடலூடே
அமிழ்தல் அற்று எழுதலுற்று உணர் நலத்து உயர்தலுற்று அடி இணைக்கு அணுகிட பெறுவேனோ
பொறி உடை செழியன் வெப்பு ஒழிதர பறி தலை பொறி இல சமணர் அத்தனைபேரும்
பொடிபட சிவ மண பொடி பரப்பிய திரு புகலியில் கவுணிய புலவோனே
தறி வளைத்துற நகை பொறி எழ புரம் எரித்தவர் திரு புதல்வ நல் சுனை மேவும்
தனி மண குவளை நித்தமும் மலர் தரு திரு தணியினில் சரவண பெருமாளே

மேல்

#262
குயில் ஒன்று மொழி குயில் நின்று அலைய கொலை இன்ப மலர் கணையாலே
குளிரும் தவள குல சந்த்ர ஒளி கொடி கொங்கையின் முத்து அனலாலே
புயல் வந்து எறி அ கடல் நின்று அலற பொரும் மங்கையர் உக்க அலராலே
புயம் ஒன்ற மிக தளர்கின்ற தனி புயம் வந்து அணைய கிடையாதோ
சயிலம் குலைய தடமும் தகர சமன் நின்று அலைய பொரும் வீரா
தரு மங்கை வன குற மங்கையர் மெய் தனம் ஒன்றும் அணி திரு மார்பா
பயிலும் ககன பிறை தண் பொழிலில் பணியும் தணிகை பதி வாழ்வே
பரமன் பணிய பொருள் அன்று அருளி பகர் செங்கழநி பெருமாளே

மேல்

#263
குருவி என பல கழுகு நரி திரள் அரிய வனத்து இடை மிருகம் என புழு
குறவை என கரி மரமும் என திரி உறவு ஆகா
குமரி கலி துறை முழுகி மன துயர் கொடுமை என பிணி கலகமிட திரி
குலையன் என புலை கலியன் என பலர் நகையாமல்
மருவு புயத்திடை பணிகள் அண பல கரி பரி சுற்றிட கலைகள் தரித்து ஒரு
மதனசரக்கு என கனக பலக்குடன் அது தேடேன்
வரிய பதத்தினின் அருவி இருப்பிடம் அமையும் எனக்கு இடம் உனது பத சரண்
மருவு திருப்புகழ் அருள எனக்கு இனி அருள்வாயே
விருது தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி
விகிர்த டடுட்டுடு ரிரிரி என குகு என வெகு தாளம்
வெருவ முகிழ்த்து இசை உரகன் முடி தலை நெறுநெறு என திசை அதிர அடைத்திட
மிகுதி கெட பொரு அசுரர் தெறித்திட விடும் வேலா
அரிய திரிப்புரம் எரிய விழித்தவன் அயனை முடி தலை உரியும் மழு கையன்
அகிலம் அனைத்தையும் உயிரும் அளித்தவன் அருள் சேயே
அமணர் உடல் கெட வசியில் அழுத்தி விண் அமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடு
அழகு திருத்தணி மலையில் நடித்து அருள் பெருமாளே

மேல்

#264
குலைத்து மயிர் கலைத்து வளை கழுத்து மணி தன புரள குவித்த விழி கயல் சுழல பிறை போல
குனித்த நுதல் புரட்டி நகைத்து உருக்கி மயல் கொளுத்தி இணை குழை செவியில் தழைப்ப பொறி தன பாரம்
பொலித்து மத தரித்த கரி குவட்டு முலை பளப்பள என புனைத்த துகில் பிடித்த இடை பொதுமாதர்
புயத்தில் வளை பிலுக்கில் நடை குலுக்கில் அற பசப்பி மயல் புகட்டி தவத்து அழிப்பவருக்கு உறவாமோ
தல தநுவை குனித்து ஒரு முப்புரத்தை விழ கொளுத்தி மழு தரித்து புலி கரி துகிலை பரமாக
தரித்து தவ சுரர்கள் முதல் பிழைக்க மிடற்று அடக்கு விட சடை கடவுள் சிறக்க பொருள் பகர்வோனே
சிலுத்த அசுரர் கெலித்து மிக கொளுத்தி மறை துதிக்க அதில் செழிக்க அருள் கொடுத்த மணி கதிர் வேலா
தினை புனமில் குறத்தி மகள் தனத்தின் மயல் குளித்து மகிழ் திருத்தணியில் தரித்த புகழ் பெருமாளே

மேல்

#265
குவளை கணை தொட்ட அவனுக்கு முடி குடை இட்ட குறை பிறையாலே
குறுகுற்ற அலர் தெரிவைக்கு மொழி குயிலுக்கும் இனி தளராதே
இவளை துவள கலவிக்கு நயத்து இறுக தழுவி புயம் மீதே
இணையற்ற அழகில் புனைய கருணைக்கு இனிமை தொடையை தரவேணும்
கவள கரட கரி எட்டு அலற கனக கிரியை பொரும் வேலா
கருதி செயலை புயனுக்கு உருகி கலவிக்கு அணய அத்து எழு மார்பா
பவள தரள திரள குவை வெற்பு அவை ஒப்பு வயல் புறம் மீதே
பணில திரள் மொய்த்த திருத்தணிகை பதியில் குமர பெருமாளே

மேல்

#266
கூந்தல் அவிழ்த்து முடித்து மினுக்கிகள் பாய்ந்த விழிக்கு மையிட்டு மிரட்டிகள்
கோம்பு படைத்த மொழி சொல் பரத்தையர் புயம் மீதே
கோங்கு படைத்த தனத்தை அழுத்திகள் வாஞ்சையுற தழுவி சிலுகு இட்டவர்
கூன் பிறை ஒத்த நக குறி வைப்பவர் பல நாளும்
ஈந்த பொருள் பெற இச்சை உரைப்பவர் ஆம் துணை அற்ற அழுகை குரல் இட்டவர்
ஈங்கிசை உற்ற அவல குண மட்டைகள் பொருள் தீரில்
ஏங்கி இடக்கடையில் தளி வைப்பவர் பாங்கு அகல கருணை கழல் பெற்றிட
ஈந்திலை எப்படி நற்கதி புக்கிடல் அருள்வாயே
காந்தள் மலர் தொடை இட்டு எதிர் விட்டு ஒரு வேந்து குரக்கு அரணத்தொடு மட்டிடு
காண்டிப அச்சுதன் உத்தம சற்குணன் மருகோனே
காங்கிசை மிக்க மற கொடி வெற்றியில் வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய
கான் கனி முற்கு இயல் கற்பக மை கரி இளையோனே
தேம் தினை வித்தினர் உற்றிட வெற்று இலை வேங்கை மரத்து எழிலை கொடு நிற்பவ
தேன் சொலியை புணர புனம் உற்று உறைகுவை வானம்
தீண்டு கழை திரள் உற்றது துற்றிடு வேங்கைதனில் குவளை சுனை சுற்று அலர்
சேர்ந்த திருத்தணிகை பதி வெற்பு உறை பெருமாளே

மேல்

#267
கூர் வேல் பழித்த விழியாலே மருட்டி முலை கோடால் அழைத்து மலர் அணை மீதே
கோபா இதழ் பருக மார்போடு அணைத்து கணை கோல் போல் சுழற்றி இடை உடை நாண
கார் போல் குழல் சரியவே வாய் அதட்டி இரு காதோலை இற்று விழ விளையாடும்
காமா மயக்கியர்களூடே களித்து நம கான் ஊர் உறை கலக கடல் போல
வீராணம் வெற்றி முரசோடே தவில் திமிலை வேதாகமத்து ஒலிகள் கடல் போல
வீறாய் முழக்க வரு சூரார் இறக்க விடும் வேலா திருத்தணியில் உறைவோனே
மாரோன் இறக்க நகை தாதா திரு செவியில் மா போதகத்தை அருள் குருநாதா
மாலோன் அளித்த வளியார் மால் களிப்ப வெகு மாலோடு அணைத்து மகிழ் பெருமாளே

மேல்

#268
கொந்து ஆர் குரா அடியினும் அடியவர் சிந்தை வாரிஜ நடுவினு நெறி பல
கொண்ட வேத நல் முடியினும் மருவிய குருநாதா
கொங்கில் ஏர் தரு பழநியில் அறுமுக செந்தில் காவல தணிகையில் இணையிலி
கொந்து கா என மொழி தர வரு சமய விரோத
தந்திரவாதிகள் பெற அரியது பிறர் சந்தியாதது தனது என வரும் ஒரு
சம்ப்ரதாயமும் இது என உரை செய்து விரை நீப
சஞ்சரீ கரகரம் முரல் தமனிய கிண்கிணீ முக இத பத உக மலர்
தந்த பேர் அருள் கனவிலும் நனவிலும் மறவேனே
சிந்துவாரமும் இதழியும் இள நவ சந்த்ரரேகையும் அரவமும் மணி தரு
செம் சடாதரர் திரு மகவு என வரு முருகோனே
செண்பக அடவியினும் இதணினும் உயர் சந்தன அடவியினும் உறை குறமகள்
செம்பொன் நூபுர கமலமும் வளை அணி புது வேயும்
இந்து வாள் முக வனசமும் ம்ருகமத குங்குமாசல உகளமும் மதுரித
இந்தளம் அம்ருத வசனமும் முறுவலும் அபிராம
இந்த்ரகோபமும் மரகத வடிவமும் இந்த்ரசாபமும் இரு குழையொடு பொரும்
இந்த்ரநீலமும் மடல் இடை எழுதிய பெருமாளே

மேல்

#269
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும் செகுத்தவர் உயிர்க்கும் சினமாக
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்
நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும் நிசி கரு அறுக்கும் பிறவாமல்
நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும் நிறை புகழ் உரைக்கும் செயல் தாராய்
தனத்தன தனத்தம் திமித்திமி திமித்திம் தகுத்தகு தகுத்தம் தன பேரி
தடுட்டுடு டுடுட்டுண்டு என துடி முழக்கும் தளத்துடன் நடக்கும் கொடு சூரர்
சினத்தையும் உடல் சங்கரித்து அ மலை முற்றும் சிரித்து எரி கொளுத்தும் கதிர் வேலா
தினை கிரி குற பெண் தனத்தினில் சுகித்து எண் திருத்தணி இருக்கும் பெருமாளே

மேல்

#270
சின திலம் தினை சிறு மணல் அளவு உடர் செறித்தது எத்தனை சிலை கடலினில் உயிர்
செனித்தது எத்தனை திரள் கயல் என பல அது போதா
செமித்தது எத்தனை மலை சுனை உலகு இடை செழித்தது எத்தனை சிறு தனம் மயல் கொடு
செடத்தில் எத்தனை நமன் உயிர் பறி கொள்வது அளவு ஏதோ
மனத்தில் எத்தனை நினை கவடுகள் குடி கெடுத்தது எத்தனை மிருகமது என உயிர்
வதைத்தது எத்தனை அளவு இலை விதி கரம் ஒழியாமல்
வகுத்தது எத்தனை மசகனை முருடனை மடை குலத்தனை மதி அழி விரகனை
மலர் பதத்தினில் உருகவும் இனி அருள்புரிவாயே
தனத்த னத்தன தனதன தனதன திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி
தகுத்த குத்தகு தகுதகு தகுதகு தகுதீதோ
தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு
தமித்த மத்தள தமருக விருது ஒலி கடல் போல
சினத்து அமர் களம் செரு திகழ் குருதி அதி இமிழ்த்திட கரி அசுரர்கள் பரி சிலை
தெறித்திட கழு நரி தின நிணம் மிசை பொரும் வேலா
செழிக்கும் உத்தம சிவ சரணர்கள் தவ முநி கணத்தவர் மது மலர் கொடு பணி
திருத்தணி பதி மருவிய குறமகள் பெருமாளே

மேல்

#271
சொரியு முகிலை பதும நிதியை சுரபி தருவை சமமாக
சொலியும் மனம் எள்தனையும் நெகிழ்வு இல் சுமடர் அருகுற்று இயல் வாணர்
தெரியும் அருமை பழைய மொழியை திருடி நெருடி கவி பாடி
திரியு மருள் விட்டு உனது குவளை சிகரி பகர பெறுவேனோ
கரிய புருவ சிலையும் வளைய கடையில் விடம் மெத்திய நீல
கடிய கணை பட்டு உருவ வெருவி கலைகள் பல பட்டன கானிற்கு
உரிய குமரிக்கு அபயம் என நெக்கு உபய சரணத்தினில் வீழா
உழையின் மகளை தழுவ மயலுற்று உருகும் முருக பெருமாளே

மேல்

#272
தாக்கு அமருக்கு ஒரு சாரையை வேறு ஒரு சாக்ஷி அற பசி ஆறியை நீறு இடு
சாஸ்த்ர வழிக்கு அதி தூரனை வேர் விழு தவ மூழ்கும்
தாற்பர்யம் அற்று உழல் பாவியை நா வலர் போல் பரிவுற்று உனையே கருதாது இகல்
சாற்று தமிழ் குரை ஞாளியை நாள் வரை தடுமாறி
போக்கிடம் அற்ற வ்ருதாவனை ஞானிகள் போற்றுதல் அற்ற துரோகியை மா மருள்
பூத்த மல த்ரய பூரியை நேரிய புலையேனை
போக்கி விட கடனோ அடியாரோடு போய் பெறு கைக்கு இலையோ கதி ஆனது
போர் சுடர் வஜ்ர வை வேல் மயிலா அருள்புரிவாயே
மூக்கு அறை மட்டை மகா பல காரணி சூர்ப்பநகை படு மூளி உதாசனி
மூர்க்க குலத்தி விபீஷணர் சோதரி முழு மோடி
மூத்த அரக்கன் இராவணனோடு இயல்பு ஏற்றி விட கமலாலய சீதையை
மோட்டன் வளைத்து ஒரு தேர் மிசையே கொடு முகிலே போய்
மா கன சித்திர கோபுர நீள் படை வீட்டில் இருத்திய நாள் அவன் வேர் அற
மார்க்கம் முடித்த வில்லாளிகள் நாயகன் மருகோனே
வாச்சிய மத்தள பேரிகை போல் மறை வாழ்த்த மலர் கழுநீர் தரு நீள் சுனை
வாய்த்த திருத்தணி மா மலை மேவிய பெருமாளே

மேல்

#273
திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள் வறட்டு மோடியில் நித்த நடிப்பவர்
சிறக்க மேனி உலுக்கி மடக்கு கண் வலையாலே
திகைத்து உள் ஆவி கரைத்து மனத்தினில் இதத்தை ஓட விடுத்து மயக்கிடு
சிமிட்டு காம விதத்திலும் உட்பட அலைவேனோ
தரித்து நீறு பிதற்றிடு பித்தனும் இதத்து மா குடிலை பொருள் சொற்றிடு
சமர்த்த பால என புகழ் பெற்றிடு முருகோனே
சமப்ரவீண மதித்திடு புத்தியில் இரக்கமாய் வரு தற்பர சிற்பர
சகத்ர யோக வித தக்ஷண தெக்ஷிண குருநாதா
வெருட்டு சூரனை வெட்டி ரண பெலி களத்திலே கழுதுக்கு இரை இட்டு இடர்
விடுத்த கூளிகள் தித்திகு தித்தென விளையாட
விதித்த வீர சமர்க்கள ரத்தமும் இரற்றி ஓட வெகு ப்ரளயத்தினில்
விலக்கி வேல் செருகிட்டு உயிர் மொக்கிய மறவோனே
பெருக்கமோடு சரித்திடு மச்சமும் உளத்தின் மா மகிழ் பெற்றிட வற்றிடு
பிளப்பு வாயிடை முப்பொழுதத்தும் ஒர் கழுநீரின்
பிணித்த போது வெடித்து ரச துளி கொடுக்கும் ஓடை மிகு திருத்தணி
பிறக்க மேவுற அ தலம் உற்று உறை பெருமாளே

மேல்

#274
துப்பு பார் அப்பு ஆடல் தீ மொய் கால் சொல் பா வெளி முக்குண மோகம்
துற்று ஆய பீறல் தோல் இட்டே சுற்றா மதன பிணி தோயும்
இ பாவ காயத்து ஆசைப்பாடு எற்றே உலகில் பிறவாதே
எத்தார் வித்தாரத்தே கிட்டா எட்டா அருளை தரவேணும்
தப்பாமல் பாடி சேவிப்பார் தத்தாம் வினையை களைவோனே
தற்கு ஆழி சூர் செற்றாய் மெய் போதத்தாய் தணிகை தனி வேலா
அ பாகை பாலை போல் சொல் காவல் பாவை தனத்து அணைவோனே
அத்தா நித்தா முத்தா சித்தா அப்பா குமர பெருமாளே

மேல்

#275
தொக்கு அறா குடில் அசுத்தம் ஏற்ற சுக துக்கம் மால் கடம் மும்மல மாயை
துற்ற கால் பதலை சொல்படா குதலை துப்பு இலா பல சமய நூலை
கைக்கொளா கதறுகை கொளா ஆக்கை அவல புலால் தசை குருதியாலே
கட்டு கூட்டு அருவருப்பு வேட்டு உழல சட்ட வாக்கு அழிவது ஒரு நாளே
அக்கு அரா பொடியின் மெய்க்கு இடா குரவர் அர்ச்சியா தொழும் முநிவனாய்
அப்ப போர் பன்னிரு வெற்ப பூ தணியல் வெற்ப பார்ப்பதி நதி குமாரா
இக்கண் நோக்குறில் நிருத்த நோக்குறு தவத்தினோர்க்கு உதவும் இளையோனே
எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொடு எத்தினார்க்கு எளிய பெருமாளே

மேல்

#276
தொட துளக்கிகள் அபகட நினைவிகள் குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள்
சுதை சிறுக்கிகள் குசலிகள் இசலிகள் முழு மோச
துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள் முழு புரட்டிகள் நழுவிகள் மழுவிகள்
துமித்த மித்திரர் விலை முலை இன வலை புகுதாமல்
அடைத்தவர்க்கு இயல் சரசிகள் விரசிகள் தரித்த வித்ரும நிறம் என வர உடன்
அழைத்து சக்கிர கிரி வளை படி கொடு விளையாடி
அவத்தை தத்துவம் அழிபட இருளறை விலக்குவித்து ஒரு சுடர் ஒளி பரவ நல
அருள் புகட்டி உன் அடி இணை அருளுவது ஒரு நாளே
படைத்து அனைத்தையும் வினையுற நடனொடு துடைத்த பத்தினி மரகத சொருபி ஒர்
பரத்தின் உச்சியில் நட நவில் உமை அருள் இளையோனே
பகைத்த அரக்கர்கள் யமன் உலகு உற அமர் தொடுத்த சக்கிர வளை கரம் அழகியர்
படி கடத்தையும் வயிறு அடை நெடியவர் மருகோனே
திடுக்கிட கடல் அசுரர்கள் முறிபட கொளு திசை கிரி பொடிபட சுடர் அயில்
திருத்தி விட்டு ஒரு நொடியினில் வலம்வரு மயில் வீரா
தினை புனத்து இரு தன கிரி குமரி நல் குறத்தி முத்தோடு சசி மகளோடு புகழ்
திருத்தணி பதி மலை மிசை நிலைபெறு பெருமாளே

மேல்

#277
நிலையாத சமுத்திரமான சமுசார துறைக்கணின் மூழ்கி நிசமானது என பல பேசி அதனூடே
நெடுநாளும் உழைப்பு உளதாகி பெரியோர்களிடை கரவாகி நினைவால் நின் அடி தொழில் பேணி துதியாமல்
தலையான உடல் பிணி ஊறி பவ நோயின் அலை பல வேகி சலமான பயித்தியமாகி தடுமாறி
தவியாமல் பிறப்பையும் நாடி அது வேரை அறுத்து உனை ஓதி தலம் மீதில் பிழைத்திடவே நின் அருள்தாராய்
கலியாண சுபுத்திரன் ஆக குற மாதுதனக்கு விநோத கவின் ஆரு புயத்தில் உலாவி விளையாடி
களிகூரும் உனை துணை தேடும் அடியேனை சுகப்படவே கடன் ஆகும் இது கனம் ஆகும் முருகோனே
பலகாலும் உனை தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி படி மீது துதித்துடன் வாழ அருள் வேளே
பதியான திருத்தணி மேவு சிவலோகம் என பரிவு ஏறு பவ ரோக வயித்திய நாத பெருமாளே

மேல்

#278
நினைத்தது எத்தனையில் தவறாமல் நிலைத்த புத்திதனை பிரியாமல்
கனத்த தத்துவம் உற்று அழியாமல் கதித்த நித்திய சித்த அருள்வாயே
மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே மதித்த முத்தமிழில் பெரியோனே
செனித்த புத்திரரில் சிறியோனே திருத்தணி பதியில் பெருமாளே

மேல்

#279
பகல் இராவினும் கருவியால் அனம் பருகி ஆவி கொண்டு உடல் பேணி
பழைய வேதமும் புதிய நூல்களும் பல புராணமும் சில ஓதி
அகல நீளம் என்று அளவு கூற அரும் பொருளிலே அமைந்து அடைவோரை
அசடர் மூகர் என்று அவலமே மொழிந்து அறிவிலேன் அழிந்திடலாமோ
சகல லோகமும் புகல நாள்தொறும் சறுகு இலாத செங்கழுநீரும்
தளவு நீபமும் புனையும் மார்ப தென் தணிகை மேவு செம் கதிர் வேலா
சிகர பூதரம் தகர நான்முகன் சிறுகு வாசவன் சிறை மீள
திமிர சாகரம் கதற மா மரம் சிதற வேல் விடும் பெருமாளே

மேல்

#280
பருத்த பல் சிரத்தினை குரு திறல் கரத்தினை பரித்த அ பதத்தினை பரிவோடே
படைத்த பொய் குடத்தினை பழிப்பு அவத்து இடத்தினை பசி குடல் கடத்தினை பயம் மேவும்
பெருத்த பித்த உருத்தனை கிருத்திம துருத்தியை பிணித்த முக்குறத்தொடு ஐம்புலனாலும்
பிணித்த இ பிணி பையை பொறுத்து அமிழ் பிறப்பு அற குறி கருத்து எனக்கு அளித்து அருள்வாயே
கருத்தில் உற்று உரைத்த பத்தரை தொறுத்து இருக்கரை கழித்த மெய் பதத்தில் வைத்திடு வீரா
கதித்த நல் தினை புன கதித்த நல் குறத்தியை கதித்த நல் திரு புயத்து அணைவோனே
செரு தெறுத்து எதிர்த்த முப்புரத்து அரக்கரை சிரித்து எரித்த நித்தர் பொன் குமரேசா
சிறப்புற பிரித்து அறம் திற தமிழ்க்கு உயர் திசை சிறப்பு உடை திருத்தணி பெருமாளே

மேல்

#281
பழமை செப்பி அழைத்து இதமித்துடன் முறை மசக்கி அணைத்து நக குறி
பட அழுத்தி முகத்தை முகத்துற உறவாடி
பதறி எச்சிலை இட்டு மருத்து இடு விரவு குத்திர வித்தை விளைப்பவர்
பல விதத்திலும் அற்பர் என சொல்லும் மட மாதர்
அழி தொழிற்கு விருப்பொடு நத்திய அசடனை பழியுற்ற அவத்தனை
அடைவு கெட்ட புரட்டனை முட்டனை அடியேனை
அகில சத்தியும் எட்டுறு சித்தியும் எளிது என பெரு வெட்ட வெளிப்படும்
அருண பொன் பதம் உற்றிட வைப்பதும் ஒரு நாளே
குழி விழி பெரு நெட்டு அலகை திரள் கரணம் இட்டு நடித்து அமிதப்படு
குலிலி இட்ட களத்தில் எதிர்த்திடும் ஒரு சூரன்
குருதி கக்கி அதிர்த்து விழ பொரு நிசிசர படை பொட்டு எழ விக்ரம
குலிச சத்தியை விட்டு அருள் கெர்ச்சித மயில் வீரா
தழை உடுத்த குறத்தி பத துணை வருடி வட்ட முக திலத குறி
தடவி வெற்றி கதித்த முலை குவடு அதன் மீதே
தரள பொன் பணி கச்சு விசித்து இரு குழை திருத்தி அருத்தி மிகுத்திடு
தணி மலை சிகரத்திடை உற்று அருள் பெருமாளே

மேல்

#282
புருவ நெறித்து குறு வெயர்வுற்று புளகித வட்ட தன மானார்
பொரு விழியில் பட்டவரோடு கட்டி புரளும் அசட்டு புலையேனை
கரு விழி உற்று குரு மொழி அற்று கதிதனை விட்டிடு தீய
கயவனை வெற்றி புகழ் திகழ் பத்ம கழல்கள் துதிக்க கருதாதோ
செரு அசுர பொய் குலம் அது கெட்டு திரை கடல் உட்க பொரும் வேலா
தினை வனம் உற்று குறவர் மட பைம் கொடி தன வெற்பை புணர் மார்பா
பெருகிய நித்த சிறுபறை கொட்டி பெரிகை முழக்க புவி மீதே
பிரபலம் உள் சுத்த தணி மலை உற்று பிரியம் மிகு சொக்க பெருமாளே

மேல்

#283
பூசல் இட்டு சரத்தை நேர் கழித்து பெருத்த போர் விடத்தை கெடுத்து வடி கூர் வாள்
போல முட்டி குழைக்குள் ஓடி வெட்டி தொளைத்து போக மிக்க பரிக்கும் விழியார் மேல்
ஆசை வைத்து கலக்க மோகமுற்று துயர்க்குள் ஆகி மெத்த களைத்து உள் அழியாமே
ஆரணத்து கண் நத்து நாள்மலர் பொன் பதத்தை யான் வழுத்தி சுகிக்க அருள்வாயே
வாசமுற்று தழைத்த தாள் இணை பத்தர் அத்த மாதர்கள் கண் சிறைக்குள் அழியாமே
வாழ்வுற புக்கி ரத்ன ரேகை ஒக்க சிறக்கும் மா மயில் பொன் கழுத்தில் வரும் வீரா
வீசும் முத்து தெறிக்க ஓலை புக்குற்று இருக்கும் வீறு உடை பொன் குறத்தி கணவோனே
வேல் எடுத்து கரத்தில் நீல வெற்பில் தழைத்த வேள் என சொல் கருத்தர் பெருமாளே

மேல்

#284
பெருக்க உபாயம் கருத்து உடையோர் தம் ப்ரபு தன பாரங்களிலே
சம்ப்ரமத்துடன் நாளும் ப்ரமித்து இருள் கூரும் ப்ரிய கடல் ஊடும் தணியாத
கரு கடலூடும் கதற்றும் அநேகம் கலை கடலூடும் சுழலாதே
கடப்பு அலர் சேர் கிண்கிணி ப்ரபை வீசும் கழல் புணை நீ தந்து அருள்வாயே
தருக்கிய வேதன் சிறைப்பட நாளும் சதுர்த்தச லோகங்களும் வாழ
சமுத்திரம் ஏழும் குல கிரி ஏழும் சளப்பட மாவும் தனி வீழ
திரு கையில் வேல் ஒன்று எடுத்து அமர் ஆடும் செருக்கு மயூரம்தனில் வாழ்வே
சிறப்பொடு ஞான தமிழ் த்ரயம் நீடும் திருத்தணி மேவும் பெருமாளே

மேல்

#285
பொரியப்பொரிய பொலி முத்து வட துகளில் புதை அ தனம் மீதே
புரளப்புரள கறுவி தறுகண் பொரு வில் சுறவை கொடி வேள் தோள்
தெரி வைக்கு அரிவை பரவைக்கு உருகி செயல் அற்றனள் கற்பு அழியாதே
செறிவுற்று அணையில் துயிலுற்று அருமை தெரிவைக்கு உணர்வை தரவேணும்
சொரி கற்பக நல் பதியை தொழு கை சுரருக்கு உரிமை புரிவோனே
சுடர் பொன் கயிலை கடவுட்கு இசைய சுருதி பொருளை பகர்வோனே
தரி கெட்டு அசுர படை கெட்டு ஒழிய தனி நெட்டு அயிலை தொடும் வீரா
தவள பணில தரள பழன தணிகை குமர பெருமாளே

மேல்

#286
பொரு வி கந்தொடு அடர் செரு இக்கன் தொடும் இ புதுமை புண்டரிக கணையாலே
புளக கொங்கை இடத்து இளக கொங்கை அனல் பொழிய தென்றல் துரக்குதலாலே
தெரிவில் பெண்கள் மிக கறுவி சண்டையிட திரிய திங்கள் உதிப்பதனாலே
செயல் அற்று இங்கு அணையில் துயில் அற்று அஞ்சி அயர்த்து தெரிவைக்கு உன் குரவை தரவேணும்
அருவி குன்று அடைய பரவி செந்தினை வித்த அருமை குன்றவருக்கு எளியோனே
அசுரர்க்கு அங்கு அயல் பட்டு அமரர்க்கு அண்டம் அளித்து அயில் கை கொண்ட திறல் குமரேசா
தரு வைக்கும் பதியில் திருவை சென்று அணுகி தழுவி கொண்ட புய திரு மார்பா
தரள சங்கு வயல் திரளில் தங்கு திரு தணிகை செங்கழுநி பெருமாளே

மேல்

#287
பொன் குடம் ஒத்த குயத்தை அசைப்பவர் கை பொருள் புக்கிடவே தான்
புட்குரல் விச்சை பிதற்றும் மொழிச்சியர் பொட்டு அணி நெற்றியர் ஆனோர்
அற்ப இடை கலை சுற்றி நெகிழ்ப்பவர் அற்பர் அ மட்டைகள் பால் சென்று
அ கண் வலைக்குள் அகப்படு புத்தியை அற்றிட வைத்து அருள்வாயே
கொக்கரை சச்சரி மத்தளி ஒத்து இடக்கை முழக்கு ஒலி ஆல
கொக்கு இறகு அக்கு அர மத்தம் அணிக்கு அருள் குத்தம் தணி குமரேசா
சர்க்கரை முப்பழம் ஒத்த மொழிச்சி குறத்தி தன கிரி மேலே
தைக்கும் மனத்த சமர்த்த அரக்கர் தலை குலை கொத்திய வேளே

மேல்

#288
பொன் பதத்தினை துதித்து நல் பதத்தில் உற்ற பத்தர் பொற்பு உரைத்து நெக்குருக்க அறியாதே
புத்தக பிதற்றை விட்டு வித்து அகத்து உனை துதிக்க புத்தியில் கலக்கம் அற்று நினையாதே
முற்பட தலத்து உதித்து பின் படைத்த அகிர்த்தியம் முற்றி முன் கடை தவித்து நித்தம் உழல்வேனை
முட்ட இ கடை பிறப்பினுள் கிடப்பதை தவிர்த்து முத்தி சற்று எனக்கு அளிப்பது ஒரு நாளே
வெற்பு அளித்த தற்பரைக்கு இடப்புறத்தை உற்று அளித்த வித்தக அத்தர் பெற்ற கொற்ற மயில் வீரா
வித்தை தத்வ முத்தமிழ் சொல் அத்தம் சத்தம் வித்தரிக்கும் மெய் திருத்தணி பொருப்பில் உறைவோனே
கற்பக புன குறத்தி கச்சு அடர்த்த சித்ரம் முற்ற கற்புர திரு தனத்தில் அணைவோனே
கைத்து அரக்கர் கொத்து உக சினத்து வஜ்ரனுக்கு அமைத்த கைத்து ஒழித்து அறித்து விட்ட பெருமாளே

மேல்

#289
மரு குலம் மேவும் குழல் கனி வாய் வெண் மதி பிளவு ஆகும் நுதலார்தம்
மயக்கினிலே நண்புறப்படுவேன் உன் மலர் கழல் பாடும் திற நாடா
தருக்கன் உதார துணுக்கிலி லோபன் சமத்து அறியா அன்பிலி மூகன்
தலத்தினிலே வந்து உற பணியாதன் தனக்கு இனியார்தம் சபை தாராய்
குருக்குல ராஜன்தனக்கு ஒரு தூதன் குறள் பெல மாயன் நவ நீதம்
குறித்து அயில் நேயன் திரு பயில் மார்பன் குண த்ரய நாதன் மருகோனே
திரு குள நாளும் பல திசை மூசும் சிறப்பு அது உறா எண் திசையோடும்
திரை கடல் சூழும் புவிக்கு உயிராகும் திருத்தணி மேவும் பெருமாளே

மேல்

#290
மலை முலைச்சியர் கயல் விழிச்சியர் மதி முகத்தியர் அழகான
மயில் நடைச்சியர் குயில் மொழிச்சியர் மனது உருக்கிகள் அணை மீதே
கலை நெகிழ்த்தியே உறவு அணைத்திடு கலவியில் துவள் பிணி தீரா
கசடனை குண அசடனை புகல் கதியில் வைப்பதும் ஒரு நாளே
குல கிரி குலம் உருவ விட்டவர் குலவு சித்திர முனை வேலா
குறவர் பெற்றிடு சிறுமியை புணர் குமர சற்குண மயில் வீரா
தலம்அதில் புகல் அமரர் உற்ற இடர்தனை அகற்றிய அருளாளா
தரு நிரைத்து எழு பொழில் மிகுத்திடு தணி மலைக்கு உயர் பெருமாளே

மேல்

#291
முகத்தை மினுக்கிகள் அசடிகள் கபடிகள் விழித்து மருட்டிகள் கெருவிகள் திருடிகள்
மொழிக்குள் மயக்கிகள் வகைதனில் நகைதனில் விதமாக
முழித்து மயல் கொளும் அறிவிலி நெறியிலி புழு குடலை பொருள் என மிக எணியவர்
முயக்கம் அடுத்து உழிதரும் அடியவன் இடர் ஒழிவாக
மிகுத்த அழகை பெறும் அறுமுக சரவண புயத்து இளகி கமழ் நறை மலர் தொடை மிக
விசை கொடுமை பெறு மரகத கலபியும் வடி வேலும்
வெளிப்பட எனக்கு இனி இரவோடு பகல் அற திரு பதிய புகழ் அமுது இயல் கவி சொலி
விதி தன் எழுத்து இனைதர வரும் ஒரு பொருள் அருளாயோ
புகைத்த அழலை கொடு திரிபுரம் எரிபட நகைத்தவருக்கு இடம் உறைபவள் வலைமகள்
பொருப்பில் இம கிரி பதி பெறும் இமையவள் அபிராமி
பொதுவுற்று திமித்திமி நடமிடு பகிரதி எழுத்து அறி ருத்திரி பகவதி கவுரி கை
பொருள் பயனுக்கு உரை அடுகிய சமைபவள் அமுதாக
செகத்தை அகடு இட்டிடு நெடியவர் கடையவள் அறத்தை வளர்த்திடு பர சிவை குலவதி
திற தமிழை தரு பழையவள் அருளிய சிறியோனே
செருக்கும் அரக்கர்கள் பொடிபட வடிவுள கரத்தில் அயில் கொடு பொருது இமையவர் பணி
திருத்தணி பொன் பதிதனில் மயில் நடவிய பெருமாளே

மேல்

#292
முகிலும் இரவியும் முழு கதிர் தரளமும் முடுகு சிலை கொடு கணை விடு மதனனும்
முடிய ஒரு பொருள் உதவிய புதல்வனும் என நாடி
முதிய கனன் என தெய்வ தரு நிகர் என முதலை மடுவினில் அதவிய புயல் என
முகமும் அறு முகமும் உடையவன் இவன் என வறியோரை
சகல பதவியும் உடையவர் இவர் என தனிய தநு வல விஜயவன் இவன் என
தபனன் வலம் வரு கிரிதனை நிகர் என இசை பாடி
சயில பகலவர் இடைதொறு நடை செய்யும் இரவு தவிரவே இரு பதம் அடையவே
சவித அடியவர் தவம் அதில் வர அருள்புரிவாயே
அகில புவனமும் அடைவினில் உதவிய இமய கிரி மயில் குல வரை தநு என
அதிகை வரு புர நொடியினில் எரி செய்த அபிராமி
அமரும் இடன் அனல் எனும் ஒரு வடிவுடை அவன் இல் உரையவன் முது தமிழ் உடையவன்
அரியோடு அயன் உலகு அரியவன் நவில் சிவன் வாழ்வே
திகிரி நிசிசரர் தடம் முடி பொடி பட திரைகள் எறி கடல் சுவறிட களம் மிசை
திரடு குறடுகள் புரள் வெகு குருதிகள் பெருகி ஆறா
சிகர கிரி நெரிபட படை பொருது அருள் திமிர தினகர குருபர இள மயில்
சிவணி வரும் ஒரு தணிகையில் நிலை திகழ் பெருமாளே

மேல்

#293
முடித்த குழலினர் வடித்த மொழியினர் முகத்தில் இலகிய விழியாலும்
முலை கிரிகள் மிசை அசைத்த துகிலினும் இளைத்த இடையினும் மயலாகி
படுத்த அணைதனில் அணைத்த அவரோடு படிக்குள் அநுதினம் உழலாதே
பருத்த மயில் மிசை நினைத்த பொழுது உன பதத்து மலர் இணை அருள்வாயே
துடித்து தசமுகன் முடி தலைகள் விழ தொடுத்த சரம் விடு ரகுராமன்
துகைத்து உலகை ஒரு அடிக்கு அளவிடு துலக்க அரி திரு மருகோனே
தடத்துள் உறை கயல் வயற்குள் எதிர்ப்படு தழைத்த கதலிகள் அவை சாய
தருக்கும் எழிலுறு திரு தணிகையினில் தழைத்த சரவண பெருமாளே

மேல்

#294
முத்து தெறிக்க வளர் இக்கு சிலை கை மதன் முட்ட தொடுத்த மலராலே
முத்த திரு சலதி முற்ற உதி தீ என முற்பட்டு எறிக்கு நிலவாலே
எ தத்தையர்க்கும் மிதம் மிக்கு பெருக்க மணி இ பொன் கொடிச்சி தளராதே
எ திக்கும் உற்ற புகழ் வெற்றி திருத்தணியில் இற்றை தினத்தில் வரவேணும்
மெத்த சினத்து வட திக்கு குல சிகர வெற்பை தொளைத்த கதிர் வேலா
மெச்சி குறத்தி தனம் இச்சித்து அணைத்து உருகி மிக்கு பணைத்த மணி மார்பா
மத்த ப்ரமத்தர் அணி மத்த சடை பரமர் சித்தத்தில் வைத்த கழலோனே
வட்ட திரை கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டி துணிந்த பெருமாளே

மேல்

#295
முலை புளகம் எழ அம் கை மருவு வளை கொஞ்ச முகில் அளகம் அகில் பொங்க அமுதான
மொழி பதறவு அருமந்த விழி குவிய மதி கொண்ட முகம் வெயர்வு பெற மன்றல் அணையூடே
கலை நெகிழ வளர் வஞ்சி இடை துவள உடல் ஒன்றுபட உருகி இதயங்கள் ப்ரியமே கூர்
கலவி கரை அழி இன்ப அலையில் அலை படுகின்ற கவலை கெட நினது அன்பு பெறுவேனோ
அலை எறியும் எழில் சண்ட உததி வயிறு அழல் மண்ட அதிர வெடிபட அண்டம் இமையோர்கள்
அபயம் என நடு நின்ற அசுரர் அடி உண்டு அவர்கள் முனை கெட நின்று பொரும் வேலா
தலை மதிய நதி தும்பை இள அறுகு கமழ் கொன்றை சடை முடியில் அணிகின்ற பெருமானார்
தரு குமர விட ஐந்து தலை அரவு தொழுகின்ற தணி மலையில் உறைகின்ற பெருமாளே

மேல்

#296
மொகுமொகு என நறை கொள் மலர் வற்கத்தில் அற்புடைய முளரி மயில் அனையவர்கள் நெய்த்து கறுத்து மழை
முகில் அனைய குழல் சரிய ஒக்க கனத்து வளர் அதி பார
முலை புளகம் எழ வளைகள் சத்திக்க முத்த மணி முறுவல் இள நிலவு தர மெத்த தவித்த சில
மொழி பதற இடை துவள வட்ட சிலை புருவ இணை கோட
அகில் மிருக மத சலிலம் விட்டு பணித்த மலர் அமளிபட ஒளி விரவு ரத்ந ப்ரபை குழையொடு
அமர் பொருத நெடி விழி செக்கச்சிவக்க அமர மத நீதி
அடல் வடிவு நலம் இதனில் மட்க செருக்கி உளம் உருக நரை பெருக உடல் ஒக்க பழுத்து விழும்
அளவில் ஒரு பரம வெளியில் புக்கு இருக்க எனை நினையாதோ
செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத
டிமிடடிமி டிமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட டிடிதீதோ
திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி
செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட ததிதீதோ
தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத
தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி எனவே நீள்
சதி முழவு பலவும் இரு பக்கத்து இசைப்ப முது சமைய பயிரவி இதயம் உட்கி ப்ரமிக்க உயர்
தணிகை மலைதனில் மயிலில் நிர்த்தத்தனில் நிற்க வல பெருமாளே

மேல்

#297
வங்கம் பெறுகிட கடல் எங்கும் பொரு திரை வந்து உந்தி அதிரும் அதனாலே
வஞ்சம் பெறு திட நெஞ்சன் தழலுற அஞ்சு அம்பு அதும் விடு மதனாலே
பங்கம்படும் எனது அங்கம்தனில் உதி பண்பு ஒன்றிய ஒரு கொடியான
பஞ்சு ஒன்றிய மயில் நெஞ்சு ஒன்றியெ அழல் பொன்றும் தனிமையை நினையாயோ
தெங்கம் திரளுடன் எங்கும் கதலிகள் சென்று ஒன்றிய பொழில் அதனூடே
தெந்தெம் தெனதென என்று அண்டுற அளி நின்றும் திகழ்வோடு மயில் ஆட
பொங்கும் சுனைகளில் எங்கும் குவளைகள் என்றும் புகழ் பெற மலர் ஈனும்
பொன் தென் தணிகையில் நின்று அங்கு எழு புவி என்றும் செய வல பெருமாளே

மேல்

#298
வட்ட வாள் தன மனைச்சி பால் குதலை மக்கள் தாய் கிழவி பதி நாடு
வைத்த தோட்டம் மனை அத்தம் ஈட்டு பொருள் மற்ற கூட்டம் அறிவு அயலாக
முட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை முட்டர் பூட்டி எனை அழையா முன்
முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க சுருதி குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய்
பட்ட நால் பெரும் மருப்பினால் கர இபத்தின் வாள் பிடியின் மணவாளா
பச்சை வேய் பணவை கொச்சை வேட்டுவர் பதிச்சி தோள் புணர் தணியில் வேளே
எட்டு நால் கர ஒருத்தல் மா திகிரி எட்டும் மாக்குலைய எறி வேலா
எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொண்டு எத்தினார்க்கு எளிய பெருமாளே

மேல்

#299
வரி கலையின் நிகரான விழி கடையில் இளைஞோரை மயக்கிவிடும் மடவார்கள் மயலாலே
மதி குளறி உள காசும் அவர்க்கு உதவி மிடியாகி வயிற்றில் எரி மிக மூள அதனாலே
ஒருத்தருடன் உறவாகி ஒருத்தரொடு பகையாகி ஒருத்தர்தமை மிக நாடி அவரோடே
உணக்கை இடு படுபாவி எனக்கு உனது கழல் பாட உயர்ச்சி பெறு குண சீலம் அருள்வாயே
விரித்து அருணகிரி நாதன் உரைத்த தமிழ் எனும் மாலை மிகுத்த பலமுடன் ஓத மகிழ்வோனே
வெடித்து அமணர் கழுவேற ஒருத்தி கணவனும் மீள விளைத்தது ஒரு தமிழ் பாடு புலவோனே
செருக்கி இடு பொரு சூரர் குலத்தை அடி அற மோது திரு கையினில் வடி வேலை உடையோனே
திரு உலவும் ஒரு நீல மலர் சுனையில் அழகான திரு தணிகை மலை மேவு பெருமாளே

மேல்

#300
வாருற்று எழும் பூண் முலை வஞ்சியர் காருற்று எழும் நீள் குழல் மஞ்சியர்
வால குயில் போல் மொழி கொஞ்சியர் தெரு மீதே
மாணுற்று எதிர் மோகன விஞ்சையர் சேலுற்று எழு நேர் விழி விஞ்சியர்
வாக குழையாம் அபரஞ்சியர் மயலாலே
சீருற்று எழும் ஞானமுடன் கல்வி நேர் அற்றவர் மால் கொண்டு மயங்கியே
சேருற்று அறிவானது அழிந்து உயிர் இழவா முன்
சேவல் கொடியோடு சிகண்டியின் மீதுற்று அறிஞோர் புகழ் பொங்கிய
தேசு கதிர் கோடி எனும் பதம் அருள்வாயே
போருற்றிடு சூரர் சிரங்களை வீரத்தொடு பாரில் அரிந்து எழு
பூத கொடி சோரி அருந்திட விடும் வேலா
பூக குலையே விழ மென் கயல் தாவ குலை வாழைகளும் செறி
போக செநெலே உதிரும் செய்கள் அவை கோடி
சாரல் கிரிதோறும் எழும் பொழில் தூர தொழுவார் வினை சிந்திடு
தாதுற்று எழு கோபுர மண்டபம் அவை சூழ
தார் மெத்திய தோரண மென் தெரு தேர் சுற்றிய வார் பதி அண்டர்கள்
தாம் மெச்சிய நீள் தணி அம் பதி பெருமாளே

மேல்

#301
வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள் அம்பினுக்கு எதிர் ஆகும் விழி மாதர்
மிக பல மானம்தனில் புகுதா வெம் சமத்திடை போய் வெம் துயர் மூழ்கி
கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும் கரு குழிதோறும் கவிழாதே
கலை புலவோர் பண் படைத்திட ஓதும் கழல் புகழ் ஓதும் கலை தாராய்
புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியை புணர் வாகம் புய வேளே
பொருப்பு இரு கூறும்பட கடல்தானும் பொருக்க எழ வானும் புகை மூள
சினத்தொடு சூரன் கன திணி மார்பம் திறக்க அமர் ஆடும் திறல் வேலா
திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமாளே

மேல்

#302
வெற்றி செய உற்ற கழை வில் குதை வளைத்து மதன் விட்ட கணை பட்ட விசையாலே
வெட்ட வெளியில் தெருவில் வட்ட பணையில் கனல் விரித்து ஒளி பரப்பும் மதியாலே
பற்றி வசை கற்ற பல தத்தையர் தமக்கும் இசை பட்ட திகிரிக்கும் அழியாதே
பத்தியை எனக்கு அருளி முத்தியை அளித்து வளர் பச்சை மயில் உற்று வரவேணும்
நெற்றி விழி பட்டு எரிய நட்டமிடும் உத்தமர் நினைக்கும் மனம் ஒத்த கழல் வீரா
நெய் கமல மொக்கு முலை மெய் குறவி இச்சையுற நித்தம் இறுக தழுவும் மார்பா
எற்றிய திரு சலதி சுற்றிய திருத்தணியில் எப்பொழுது நிற்கும் முருகோனே
எட்டு அசலம் எட்ட நிலம் முட்ட முடி நெட்ட சுரர் இட்ட சிறை விட்ட பெருமாளே

மேல்

#303
அதிரும் கழல் பணிந்து உன் அடியேன் உன் அபயம் புகுவது என்று நிலை காண
இதயம்தனில் இருந்து க்ருபை ஆகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே
எதிர் அங்கு ஒருவர் இன்றி நடமாடும் இறைவன் தனது பங்கில் உமை பாலா
பதி எங்கிலும் இருந்து விளையாடி பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே

மேல்

#304
எழு திகழ் புவனம் நொடி அளவுதனில் இயல் பெற மயிலில் வருவோனே
இமையவர் பரவி அடி தொழ அவுணர் மடிவுற விடுவது ஒரு வேலா
வழுதியர் தமிழில் ஒரு பொருள் அதனை வழிபட மொழியும் முருகேசா
மலர் அடி பணியும் மடமகள் பசலை மயல் கொடு தளர்வது அழகோ தான்
முழுகிய புனலில் இன மணி தரளம் முறுகிடு பவனம் மிக வாரி
முறையொடு குறவர் மடமகள் சொரியும் முது மலை அழக குருநாதா
பழகிய வினைகள் பொடிபட அருளில் படிபவர் இதயம் உறு கோவே
பரு வரை துணிய ஒரு கணை தெரிவ பல மலை உடைய பெருமாளே

மேல்

#305
தறையில் மானுடர் ஆசையினால் மடல் எழுது மால் அருள் மாதர்கள் தோதக
சரசர் மா மலர் ஓதியினால் இரு கொங்கையாலும்
தளர் மின் நேர் இடையால் உடையால் நடை அழகினால் மொழியால் விழியால் மருள்
சவலை நாய் அடியேன் மிக வாடி மயங்கலாமோ
பறவையான மெய் ஞானிகள் மோனிகள் அணுக ஒணா வகை நீடும் இராசிய
பவன பூரக ஏகிகமாகிய விந்து நாதம்
பகரொணாதது சேரவொணாதது நினையொணாதது ஆன தயாபர
பதியது ஆன சமாதி மனோலயம் வந்து தாராய்
சிறை விடாத நிசாசரர் சேனைகள் மடிய நீல கலாபம் அது ஏறிய
திறல் விநோத சமேள தயாபர அம்புராசி
திரைகள் போல் அலை மோதிய சீதள குடக காவிரி நீள் அலை சூடிய
திரிசிரா மலை மேல் உறை வீர குறிஞ்சி வாழும்
மறவர் நாயக ஆதி விநாயகர் இளைய நாயக காவிரி நாயக
வடிவின் நாயக ஆனைதன் நாயக எங்கள் மானின்
மகிழு நாயக தேவர்கள் நாயக கவுரி நாயகனார் குரு நாயக
வடிவதாம் மலை யாவு மேவிய தம்பிரானே

மேல்

#306
வஞ்சக லோப மூடர்தம் பொருள் ஊர்கள் தேடி மஞ்சரி கோவை தூது பல பாவின்
வண் புகழ் பாரி காரி என்று இசை வாது கூறி வந்தியர் போல வீணில் அழியாதே
செம் சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை திண் திறல் வேல் மயூர முகம் ஆறும்
செந்தமிழ் நாளும் ஓதி உய்ந்திட ஞானம் ஊறு செம் கனி வாயில் ஓர் சொல் அருள்வாயே
பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு பஞ்சு அற வாது கூறு சமண் மூகர்
பண்பறு பீலியோடு வெம் கழு ஏற ஓது பண்டித ஞான நீறு தருவோனே
குஞ்சரம் யாளி மேவும் பைம் புனம் மீது உலாவு குன்றவர் சாதி கூடி வெறி ஆடி
கும்பிட நாடி வாழ்வு தந்தவரோடு வீறு குன்றுதோறாடல் மேவு பெருமாளே

மேல்

#307
அலை கடல் நிகர் ஆகிய விழி கொடு வலை வீசிகள் அபகடம் மக பாவிகள் விரகாலே
அதி வித மதரா அதம் அநித மொழி பல கூறிகள் அசடர் ஒடு உறவாடிகள் அநியாய
கலை பகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள் கருதிடு கொடியாருடன் இனிதாக
கன தன முலை மேல் விழு கபடனை நிரு மூடனை கழல் இணை பெற அருள்வாயே
அலை புனல் தலை சூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவே அருள் குருநாதா
அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற அதிரிடும் வடி வேல் விடும் அதி சூரா
தலைய அயன் அறியா ஒரு சிவ குரு பரனே என தரணியில் அடியார் கண நினைவாகா
சகலமும் முதலாகிய அறுபதி நிலை மேவிய தட மயில்தனில் ஏறிய பெருமாளே

மேல்

#308
ஈனம் மிகுத்துள பிறவி அணுகாதே
யானும் உனக்கு அடிமை என வகையாக
ஞான அருள்தனை அருளி வினை தீர
நாணம் அகற்றிய கருணைபுரிவாயே
தான தவத்தினின் மிகுதி பெறுவோனே
சாரதி உத்தமி துணைவ முருகோனே
ஆன திருப்பதிகம் அருள் இளையோனே
ஆறுதிருப்பதியில் வளர் பெருமாளே

மேல்

#309
அதி மதம் கக்க அப்பக்கம் உக குஞ்சரி தனம் தைக்க சிக்கென நெக்கு அங்கு
அணை தரும் செச்சை புயன் அத்தன் குற வாணர்
அடவி அம் தத்தைக்கு எய்த்து உருகி சென்று அடி படிந்திட்ட பட்டு மயல் கொண்டு
அயர்பவன் சத்தி கைத்தலம் நித்தன் குமரேசன்
துதி செயும் சுத்த பத்தியர் துக்கம் களைபவன் பச்சைப்பக்ஷி நடத்தும்
துணைவன் என்று அர்ச்சித்து இச்சை தணித்து உன் புகழ்பாடி
சுருதியின் கொத்து பத்தியும் முற்றும் துரியமும் தப்பி தத்வம் அனைத்தும்
தொலையும் அந்தத்துக்கு அப்புறம் நிற்கும்படி பாராய்
கதி பொருந்த கற்பித்து நடத்தும் கனல் தலம் புக்கு சக்ரம் எடுக்கும்
கடவுளும் பத்ம தச்சனும் உட்கும்படி மோதி
கதிரவன் பல் குற்றி குயிலை திண் சிறகு அரிந்து எட்டு திக்கர் வகுக்கும்
கடகமும் தட்டுப்பட்டு ஒழிய கொன்ற அபிராமி
பதிவ்ரதம் பற்ற பெற்ற மகம் பெண் பரிவு ஒழிந்து அக்கிக்கு உட்படு தக்கன்
பரிபவம்பட்டு கெட்டு ஒழிய தன் செவி போய் அ
பனவி பங்கப்பட்டு அப்படி வெட்கும்படி முனிந்து அற்றை கொற்றம் விளைக்கும்
பரமர் வந்திக்க கக்சியில் நிற்கும் பெருமாளே

மேல்

#310
கனக தம்பத்தை செச்சையை மெச்சும் கடக சங்கத்து பொன் புய வெற்பன்
கடலுள் வஞ்சித்து புக்கது ஒர் கொக்கும் பொடியாக
கறுவு செம் சத்தி பத்ம கரத்தன் குமரன் என்று அர்ச்சித்து அப்படி செப்பும்
கவி மொழிந்து அத்தை கற்று அற உற்றும் புவியோர் போய்
குனகியும் கைக்கு கற்பகம் ஒப்பென்று அனகன் என்று இச்சைப்பட்டது அளிக்கும்
குமணன் என்று ஒப்பிட்டு இத்தனை பட்டு இங்கு இரவு ஆன
குருடு கொண்டு அத்த சத்தம் அனைத்தும் திருடியும் சொற்கு தக்க தொடுத்தும்
குலவியும் கத்தப்பட்ட கலக்கம் தெளியாதோ
சனகன் அன்புற்று பெற்ற மட பெண் தனி பெரும் கற்பு சக்ரம் நடத்தும்
தகை இலங்கை சுற்றத்தை முழுதும் சுடவே வெம்
சமர சண்ட கொற்றத்தவ அரக்கன் கதிர் விடும் பத்து கொத்து முடிக்கும்
தனி ஒர் அம்பை தொட்டு சுரர் விக்னம் களைவோனும்
தினகரன் சொர்க்கத்துக்கு இறை சுக்ரன் சசிதரன் திக்கு கத்தர் அகத்யன்
திசை முகன் செப்பப்பட்ட வசிட்டன் திரள் வேதம்
செகதலம் சுத்த பத்தியர் சித்தம் செயல் ஒழிந்து அற்று பெற்றவர் மற்றும்
சிவனும் வந்திக்க கச்சியில் நிற்கும் பெருமாளே

மேல்

#311
செடி உடம்பு அத்தி தெற்றி இரத்தம் செறி நரம்பு இட்டு கட்டிய சட்டம்
சிறை திரண்டு ஒக்க தொக்க வினை பந்த விகாரம்
திமிர துங்க தத்து திரை எற்றும் செனன பங்கத்து துக்க கடல் கண்
திரு குரும்பை பட்டு சுழல் தெப்பம் கரண ஆதி
குடி புகும் பொக்க புக்கில் இறப்பின் குடிலம் வெந்து ஒக்க கொட்டில் மலத்தின்
குகை சுமந்து எட்டு திக்கிலும் முற்றும் தடுமாறும்
குவலயம் கற்று கத்தி இளைக்கும் சமய சங்கத்தை தப்பி இருக்கும்
குணம் அடைந்து உட்பட்டு ஒக்க இருக்கும்படி பாராய்
படி தரும் கற்பு கற்பக முக்கண் கொடி பசும் சித்ரக்கு தரம் முத்தம்
பணி நிதம்பத்து சத்தி உகக்கும் குமரேசா
பரவசம் கெட்டு எட்டு அக்கரம் நித்தம் பரவும் அன்பர்க்கு சித்தி அளிக்கும்
பரமர் வந்திக்க தக்க பதத்தன் குருநாதா
தொடி இடும் பத்ம கைக்கும் இடைக்கும் சுருள்படும் பத்திப்பட்ட குழற்கும்
துகிர் கடைந்து ஒப்பித்திட்ட இதழ்க்கும் குற மானின்
சுடர் படும் கச்சு கட்டு முலைக்கும் துவளும் நெஞ்சத்த சுத்த இருக்கும்
சுரரும் வந்திக்க கச்சியில் நிற்கும் பெருமாளே

மேல்

#312
கன க்ரவுஞ்சத்தில் சத்தியை விட்டு அன்று அசுரர் தண்டத்தை செற்று அ இதழ் பங்கயனை
முன் குட்டி கைத்தளை இட்டும் உம்பரை ஆளும்
கடவுள் அன்புற்று கற்றவர் சுற்றும் பெரிய தும்பிக்கை கற்பக முன் தம்
கர தலம் பற்று பெற்ற ஒருத்தன் ஜக தாதை
புன இளம் தத்தைக்கு இச்சை உரைக்கும் புரவலன் பத்தர்க்கு துணைநிற்கும்
புதியவன் செச்சை புட்பம் மணக்கும் பல பார
புயன் எனும் சொல் கற்று பிற கற்கும் பசை ஒழிந்து அத்தத்து இக்கு என நிற்கும்
பொருள்தொறும் பொத்தப்பட்டது ஒர் அத்தம் பெறுவேனோ
அனல் விடும் செ கண் திக்கு கயம் எட்டும் பொர அரிந்திட்ட எட்டில் பகுதி கொம்பு
அணி தரும் சித்ரத்து ஒற்றை உரத்தன் திடமாக
அடியொடும் பற்றி பொன் கயிலை குன்றது பிடுங்க புக்க பொழுது அ குன்று
அணி புயம் பத்துப்பத்து நெருப்பு உண்டவன் நீடும்
தனது ஒர் அங்குட்டத்து எள் பல் அடுக்கும் சரி அலன் கொற்றத்து அரக்கன்
தசமுகன் கைக்கு கட்கம் அளிக்கும் பெரியோனும்
தலைவியும் பக்கத்து ஒக்க இருக்கும் சயிலமும் தெற்கு சற்குரு வெற்பும்
தணியலும் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே

மேல்

#313
தெரியல் அம் செச்சை கொத்து முடிக்கும் பரி திக்அந்தத்தை சுற்ற நடத்தும்
சிறை விடும் சொர்க்கத்து சுரரை கங்கையில் வாழும்
சிறுவன் என்று இச்சை பட்டு பஜிக்கும்படி பெரும் பத்தி சித்ர கவித்வம்
சிறிதும் இன்றி சித்த பரிசுத்தம் பிறவாதே
பரிகரம் சுத்தத்தக்க ப்ரபுத்வம் பதறி அங்கு அட்டப்பட்டனர் தத்வம்
பலவையும் கற்று தர்க்க மதத்து வம்பு அழியாதே
பர பதம் பற்றப்பெற்ற எவர்க்கும் பரவசம் பற்றி பற்று அற நிற்கும்
பர வ்ரதம் பற்ற பெற்றிலன் துயர் போமோ
சரியுடன் துத்தி பத்தி முடி செம் பண தரம் கைக்கு கட்டிய நெட்டன்
தனி சிவன் பக்கத்து அற்புதை பற்பம் திரிசூலம்
தரி கரும்பு ஒக்க தக்க மொழி சுந்தரி அரும்பி கப்பித்த தனத்து அந்தரி
சுரும்பு இக்கு பத்ரை எவர்க்கும் தெரியாத
பெரிய பண் தத்தை சத்திய பித்தன் பிரீதி உடன் கற்பு பச்சை எறிக்கும்
ப்ரபையள் தண்டில் கை பத்ம மட பெண் கொடி வாழ்வே
பிரமர் அண்டத்தை தொட்டது ஓர் வெற்பும் பிளவிடும் சத்தி கைத்தல நித்தம்
பெருமிதம் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே

மேல்

#314
புன மடந்தைக்கு தக்க புயத்தன் குமரன் என்று எத்தி பத்தர் துதிக்கும்
பொருளை நெஞ்சத்து கற்பனை முற்றும் பிறிதேதும்
புகலும் எண்பத்தெட்டு எட்டு இயல் தத்வம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும்
பொதுவை என்று ஒக்க தக்கது ஓர் அத்தம்தனை நாளும்
சினமுடன் தர்க்கித்து சிலுக்கிக்கொண்டு அறுவரும் கைக்குத்து இட்டு ஒருவர்க்கும்
தெரி அரும் சத்யத்தை தெரிசித்து உன் செயல் பாடி
திசைதொறும் கற்பிக்கைக்கு இனி அற்பம் திரு உள்ளம் பற்றி செச்சை மணக்கும்
சிறு சதங்கை பொன் பத்மம் எனக்கு என்று அருள்வாயே
கன பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம் கனி கிழங்கு இக்கு சர்க்கரை முக்கண்
கடலை கண்டு அப்பி பிட்டொடு மொக்கும் திரு வாயன்
கவள துங்க கை கற்பக முக்கண் திகழு நம் கொற்றத்து ஒற்றை மருப்பன்
கரி முகன் சித்ர பொன் புகர் வெற்பன்தனை ஈனும்
பனவி ஒன்று எட்டு சக்ர தல பெண் கவுரி செம்பொன் பட்டு தரி அ பெண்
பழய அண்டத்தை பெற்ற மட பெண் பணிவாரை
பவ தரங்கத்தை தப்ப நிறுத்தும் பவதி கம்பர்க்கு புக்கவள் பக்கம்
பயில் வரம் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே

மேல்

#315
கறை இலங்கும் உக்ர சத்தி தரிக்கும் சரவணன் சித்தத்துக்குள் ஒளிக்கும்
கரவடன் கொற்ற குக்கடவத்தன் தனி வீர
கழல் இடும் பத்ம கண் செவி வெற்பன் பழநி மன் கச்சி கொற்றவன் மற்றும்
கடக வஞ்சிக்கு கர்த்தன் என செந்தமிழ் பாடி
குறை இல் அன்புற்று குற்றம் அறுக்கும் பொறைகள் நந்த அற்ப புத்தியை விட்டு என்
குணம் அடங்க கெட்டு குணம் மற்று ஒன்று இலதான
குணம் அடைந்து எப்பற்றுக்களும் அற்றும் குறியொடும் சுத்த பத்தர் இருக்கும்
குரு பதம் சித்திக்கைக்கு அருள் சற்றும் கிடையாதோ
பிறை கரந்தை கொத்து பணி மத்தம் தலை எலும்பு அப்பு கொக்கு இறகு அக்கம்
பிரமன் அன்று எட்டற்கு அற்ற திரு கொன்றையும் வேணி
பிறவு நின்று ஒக்க தொக்கு மணக்கும் சரணி அம் பத்ம கை கொடி முக்கண்
பெறு கரும்பு அ தக்கது அருள் நல் பங்கய வாவி
திறை கொளும் சித்ர குத்து முலை கொம்பு அறியும் அம் தத்தை கைக்கு அகம் மொய்க்கும்
த்ரிபுரை செம்பட்டு கட்டு நுசுப்பின் திரு ஆன
தெரிவை அம் துர்க்கி சத்தி எவர்க்கும் தெரி அரும் சுத்த பச்சை நிற பெண்
சிறுவ தொண்டர்க்கு சித்தி அளிக்கும் பெருமாளே

மேல்

#316
செறி தரும் செப்பத்து உற்பல வெற்பும் பிறிதும் அங்கு அத்தைக்கு உற்ற இருப்பும்
சிகரி துண்டிக்க கற்ற தனி சுடர் வேலும்
திரள் புயம் கொத்துப்பட்ட அனைத்தும் தெளிய நெஞ்சம் துப்புற்று மயக்கம்
திகழ் ப்ரபஞ்சத்தை புற்பதம் ஒக்கும்படி நாடும்
அறிவு அறிந்து அத்தற்கு அற்றது செப்பும் கடவுளன் பத்தர்க்கு அச்சம் அறுத்து அன்பு
அருள்பவன் பொற்பு கச்சியுள் நிற்கும் பெருமான் என்று
அவிழும் அன்புற்று கற்று மனத்தின் செயல் ஒழிந்து எட்டப்பட்டதனை சென்று
அடைதரும் பக்வத்தை தமியெற்கு என்று அருள்வாயே
குறியவன் செப்பப்பட்ட எவர்க்கும் பெரியவன் கற்பிக்கப்படு சுக்ரன்
குலைகுலைந்து உட்க சத்யம் மிழற்றும் சிறு பாலன்
குதலையின் சொற்கு தர்க்கம் உரைக்கும் கனகன் அங்கத்தில் குத்தி நிணம் செம்
குடர் பிடுங்கி திக்குற்ற முகம் சிங்க முராரி
பொறி விடும் துத்தி கண் செவியின் கண் துயில் கொளும் சக்ர கை கிரி சுத்தம்
புயல் எனும் பொற்பு பெற்ற நிறத்தன் ஜக தாதை
புனித சங்கத்து கைத்தலம் நிர்த்தன் பழைய சந்தத்தை பெற்ற மட பெண்
புகலும் கொண்டற்கு சித்தி அளிக்கும் பெருமாளே

மேல்

#317
அரி அயன் புட்பிக்க குழுமிக்கொண்டு அமரர் வந்திக்க தட்டு உருவ சென்று
அவுணர் அங்கத்தை குத்தி முறித்து அங்கு ஒரு கோடி
அலகை நின்று ஒத்தி தித்தி அறுத்தும் பல இயம் கொட்ட சக்கடி கற்று
அந்தரியுடன் பற்றி குச்சரி மெச்சும்படி பாடி
பரி முகம் கக்க செ கண் விழித்தும் பவுரி கொண்டு எட்டு திக்கை உடைத்தும்
படு களம் புக்கு தொக்கு நடிக்கும்படி மோதி
படை பொரும் சத்தி பத்ம நினைத்தும் சரவணன் கச்சி பொற்பன் என பின்
பரவியும் சித்தத்துக்கு வர தொண்டு அடைவேனோ
பெரிய தண் செச்சை கச்சு அணி வெற்பும் சிறிய வஞ்சி கொத்து எய்த்த நுசுப்பும்
ப்ரிதி ஒக்க ஒழிந்து கைக்கிளை துத்தம் குரல் ஆதி
பிரிவில் கண்டு இக்கப்பட்ட உருட்டும் கமுகமும் சிற்ப சித்ரம் உருக்கும்
பிரதி அண்டத்தை பெற்று அருள் சிற்று உந்தியும் நீல
கரிய கொண்டற்கு ஒப்பித்த கதுப்பும் திலகமும் செம்பொன் பட்டமும் முத்தின்
கன வடம் கட்டப்பட்ட கழுத்தும் திரு ஆன
கருணையும் சுத்த பச்சை வனப்பும் கருதும் அன்பர்க்கு சித்தி அளிக்கும்
கவுரி அம்பைக்கு புத்ர எவர்க்கும் பெருமாளே

மேல்

#318
கனி தரும் கொக்கு கட்செவி வெற்பும் பழனியும் தெற்கு சற்குரு வெற்பும்
கதிரையும் சொற்கு உட்பட்ட திருச்செந்திலும் வேலும்
கனவிலும் செப்ப தப்பும் எனை சங்கட உடம்புக்கு தக்க அனைத்தும்
களவு கொண்டிட்டு கற்பனையில் கண் சுழல்வேனை
புனிதன் அம்பைக்கு கைத்தல ரத்நம் பழைய கங்கைக்கு உற்ற புது முத்தம்
புவியில் அன்றைக்கு அற்று எய்ப்பவர் வைப்பு என்று உருகா எப்பொழுதும்
வந்திக்கைக்கு அற்ற எனை பின் பிழையுடன் பட்டு பத்தருள் வைக்கும்
பொறையை என் செப்பி செப்புவது ஒப்பு ஒன்று உளதோதான்
அனனியம் பெற்று அற்றுஅற்று ஒரு பற்றும் தெளி தரும் சித்தர்க்கு தெளிசில் கொந்த
அமலை தென் கச்சி பிச்சி மலர் கொந்தள பாரை
அறவி நுண் பச்சை பொன் கொடி கற்கண்டு அமுதினும் தித்திக்கப்படு சொல் கொம்பு
அகில அண்டத்து உற்பத்தி செய் முத்தின் பொல மேரு
தனி வடம் பொற்பு பெற்ற முலை குன்று இணை சுமந்து எய்க்கப்பட்ட நுசிப்பின்
தருணி சங்குற்று தத்து திரை கம்பையினூடே
தவம் முயன்று அ பொற்ற படி கைக்கொண்டு அறம் இரண்டு எட்டு எட்டும் வளர்க்கும்
தலைவி பங்கர்க்கு சத்யம் உரைக்கும் பெருமாளே

மேல்

#319
தசை துறுந்து ஒக்கு கட்டு அளை சட்டம் சரிய வெண் கொக்கு ஒக்க நரைத்து அம்
தலை உடம்பு எய்த்து எற்பு தளை நெக்கி இந்த்ரியம் மாறி
தடி கொடும் திக்கு தப்ப நடக்கும் தளர்வுறும் சுத்த பித்த விருத்தன்
தகைபெறும் பல் கொத்துக்கள் அனைத்தும் கழலா நின்று
அசலரும் செச்செ செச்செ என சந்ததிகளும் சிச்சி சிச்சி என தங்கு
அரிவையும் துத்துத்துத்து என கண்டு உமியா மற்றவரும்
நிந்திக்கத்தக்க பிறப்பு இங்கு அலம்அலம் செச்சை சித்ர மணி தண்டை
அரவிந்தத்தில் புக்கு அடைதற்கு என்று அருள்வாயே
குசை முடிந்து ஒக்க பக்கரை இட்டு எண் திசையினும் தத்த புத்தியை நத்தும்
குரகதம் கட்டி கிட்டி நடத்தும் கதிர் நேமி
குல ரதம் புக்கு ஒற்றை கணை இட்டு எண் திரிபுரம் சுட்டு கொட்டை பரப்பும்
குரிசில் வந்திக்க கச்சியில் நிற்கும் கதிர் வேலா
திசைமுகன் தட்டுப்பட்டு எழ வற்கும் சிகரியும் குத்துப்பட்டு விழ தெண்
திரை அலங்கத்து புக்கு உலவி சென்று எதிர் ஏறி
சிரம் அதுங்க பொன் கண் திகை இட்டு அன்று அவுணர் நெஞ்சில் குத்தி கறை கட்கம்
சிதறி நின்று எட்டி பொட்டு எழ வெட்டும் பெருமாளே

மேல்

#320
புரை படும் செற்ற குற்ற மனத்தன் தவம் இலன் சுத்த சத்ய அசத்யன்
புகல் இலன் சுற்ற செத்தையுள் நிற்கும் துரிசாளன்
பொறை இலன் கொத்து தத்வ விகற்பம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும்
பொருளுடன் பற்று சற்றும் இல் வெற்றன் கொடியேன் நின்
கரை அறும் சித்ர சொல் புகழ் கற்கும் கலை இலன் கட்டை புத்தியன் மட்டன்
கதி இலன் செச்சை பொன் புய வெற்பும் கதிர் வேலும்
கதிரையும் சக்ர பொற்றையும் மற்றும் பதிகளும் பொற்பு கச்சியும் முற்றும்
கனவிலும் சித்தத்தில் கருதி கொண்டு அடைவேனோ
குரை தரும் சுற்றும் சத்த சமுத்ரம் கதறி வெந்து உட்க கண் புர துட்டன்
குலம் அடங்க கெட்டு ஒழிய சென்று ஒரு நேமி
குவடு ஒதுங்க சொர்க்கத்தர் இடுக்கம் கெட நடுங்க திக்கில் கிரி வர்க்கம்
குலிச அதுங்க கை கொற்றவன் நத்தம் குடி ஏற
தரை விசும்பை சிட்டித்த இருக்கன் சதுர் முகன் சிட்சை பட்டு ஒழிய சந்ததமும்
வந்திக்க பெற்றவர் தத்தம் பகை ஓட
தகைய தண்டை பொன் சித்ர விசித்ர தரு சதங்கை கொத்து ஒத்து முழக்கும்
சரண கஞ்சத்தில் பொன் கழல் கட்டும் பெருமாளே

மேல்

#321
சல மலம் விட்ட தடம் பெரும் குடில் சகல வினை கொத்து இருந்திடும்படி
சதிர உறுப்பு சமைந்து வந்த ஒரு தந்தை தாயும்
தர வரு பொய்க்குள் கிடந்த கந்தலில் உறையும் உயிர்ப்பை சமன் துரந்து ஒரு
தனியில் இழுக்கப்படும் தரங்கமும் வந்திடா முன்
பல உருவத்தை பொருந்தி அன்று உயர் படியு நெளிக்க படர்ந்த வன் கண
பட மயில் புக்கு துரந்து கொண்டு இகல் வென்றி வேலா
பரிமள மிக்க சிவந்த நின் கழல் பழுது அற நல் சொல் தெரிந்து அன்பொடு
பகர்வது இனி சற்று உகந்து தந்திட வந்திடாயோ
சிலையும் என பொன் சிலம்பை முன் கொடு சிவமயம் அற்று திடம் குலைந்தவர்
திரிபுரம் அத்தை சுடும் தினம் தரி திண் கையாளி
திருமகள் கச்சு பொருந்திடும் தன தெரிவை இரக்கத்துடன் பிறந்தவள்
திசைகளில் ஒக்க படர்ந்து இடம் பொருகின்ற ஞான
கலைகள் அணை கொத்து அடர்ந்து வம்பு அலர் நதி கொள் அகத்தில் பயந்து கம்பர் மெய்
கருக இடத்தில் கலந்து இருந்தவள் கஞ்ச பாதம்
கருணை மிகுத்து கசிந்த உளம் கொடு கருதும் அவர்க்கு பதங்கள் தந்து அருள்
கவுரி திரு கொட்டு அமர்ந்த இந்திரர் தம்பிரானே

மேல்

#322
தலை வலையத்து தரம் பெறும் பல புலவர் மதிக்க சிகண்டி குன்று எறிதரும்
அயில் செச்சை புயம் கயம் குற வஞ்சியோடு
தமனிய முத்து சதங்கை கிண்கிணி தழுவிய செக்கச்சிவந்த பங்கய
சரணமும் வைத்து பெரும் ப்ரபந்தம் விளம்பு காள
புலவன் என தத்துவம் தரம் தெரி தலைவன் என தக்க அறம் செய்யும் குண
புருஷன் என பொன் பதம் தரும் சனனம் பெறாதோ
பொறையன் என பொய் ப்ரபஞ்சம் அஞ்சிய துறவன் என திக்கு இயம்புகின்ற அது
புதுமை அல சிற்பரம் பொருந்துகை தந்திடாதோ
குல சயிலத்து பிறந்த பெண் கொடி உலகு அடையப்பெற்ற உந்தி அந்தணி
குறைவற முப்பத்திரண்டு அறம்புரிகின்ற பேதை
குண தரி சக்ர ப்ரசண்ட சங்கரி கண பண ரத்ந புயங்க கங்கணி
குவடு குனித்து புரம் சுடும் சின வஞ்சி நீலி
கலப விசித்ர சிகண்டி சுந்தரி கடிய விடத்தை பொதிந்த கந்தரி
கருணை விழி கற்பகம் திகம்பரி எங்கள் ஆயி
கருதிய பத்தர்க்கு இரங்கும் அம்பிகை சுருதி துதிக்கப்படும் த்ரி அம்பகி
கவுரி திரு கோட்டு அமர்ந்த இந்திரர் தம்பிரானே

மேல்

#323
இதத்து பற்று இதழ் துப்பு அற்று இருள் பொக்க கருத்து இட்ட தியக்கத்தில் தியக்குற்று சுழலாதே
எலுப்பு சுக்கிலம் கத்தம் தடி தொக்கு கடத்தை பெற்று எடுத்து பற்று அடுத்த தற்பத்து உழலாதே
சுத தத்த சதத்து அத்தம் பதத்தர்க்கு உற்றவற்றை சொல் துவக்கில் பட்டு அவத்தைப்பட்டு அயராதே
துணை செப்பத்து அலர் கொத்து உற்பலம் செச்சை தொடை பத்தி கடப்பம் பொன் கழல் செப்பி தொழுவேனோ
கொதித்து குத்திர கொக்கை சதித்து பற்றி கைக்குள் பொன் குலத்தை குத்திரத்தை குத்திய வேலா
குற தத்தைக்கு அறத்து அத்திக்கு முத்த அத்தத்து அம் ஒக்கு இக்கு குலத்துக்கு குக்குட கொற்ற கொடியோனே
கதம் சுத்த சுதை சித்ரம் களிற்று கொற்றவற்கு கற்பக சொர்க்கப்புர பொற்பை புரிவோனே
கடுக்கை கண் செவி கற்றை சடை பக்க கொடி கற்பு கடல் கச்சி பதி சொக்க பெருமாளே

மேல்

#324
எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தவர்க்கு இச்சை பொருள் பொன் தட்டு இடு இக்கை கு குடில் மாயம்
என கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனல் சுட்டிட்டு அடக்கைக்கு பிறக்கைக்கு தலத்தில் புக்கு இடியா முன்
தினைக்குள் சித்திர கொச்சை குற தத்தை தனத்தை பொன் பெற செச்சை புயத்து ஒப்பித்து அணிவோனே
செருக்கி சற்று உறுக்கி சொல் பிரட்ட துட்டரை தப்பி திரள் தப்பி கழல் செப்ப திறல் தாராய்
பனை கை கொக்கனை தட்டுப்பட குத்தி பட சற்ப பணம் துட்க கடல் துட்க பொரும் வேலா
பரப்பு அற்று சுருக்கு அற்று பதைப்பு அற்று திகைப்பு அற்று பலிப்ப பத்தருக்கு ஒப்பித்து அருள் வாழ்வே
கனிக்கு திக்கு அனைத்து சுற்றிட பச்சை கன பக்ஷிக்கு இடை புக்கு களிப்புக்கு திரிவோனே
கலிக்கு ஒப்பு இல் சலிப்பு அற்று கதிக்கு ஒத்திட்ட எழில் சத்தி கடல் கச்சி பதி சொக்க பெருமாளே

மேல்

#325
இறைச்சி பற்று இரத்தத்து இட்டு இசைக்கு ஒக்க பரப்பப்பட்டு எலுப்பு கட்டளை சுற்றி சுவர் கோலி
எடுத்து செப்பு என கட்டி புதுக்கு புத்து அகத்தில் புக்கு எனக்கு சற்று உனக்கு சற்று எனும் ஆசை
சிறைக்கு ஒத்து இ பிறப்பில் பட்டு உறக்கம் சொப்பனத்துற்று திகைக்கப்பட்டு அவத்தைப்பட்டு உழலாது உன்
திரு பத்ம திறத்தை பற்றுகைக்கு சித்திரத்தை சொல் திதம் கொற்ற புகழ் செப்பி திரிவேனோ
பிறை செக்கர் புரைக்கு ஒத்து சடை பச்சை கொடிக்கு இச்சை பிறக்குற்ற திரு பக்க சிவநாதர்
பெருகு அப்பு தட கை கற்பக தொப்பை கணத்துக்கு பிரச்சித்த கொடி குக்ட கொடியோனே
பறை கொட்டி களைச்சுற்ற குறள் செ கண் கணத்திற்கு பலிக்கு பச்சுடல் குத்தி பகிர் வேலா
பணம் பத்தி கண துத்தி படக்கை கச்சபத்து இச்சைப்படு கச்சி பதி சொக்க பெருமாளே

மேல்

#326
கடத்தை பற்று என பற்றி கருத்துற்று களித்திட்டு கயல் கண் பொற்பு இணை சித்ர தன மாதர்
கலைக்குள் பட்டு அற கத்தி சலித்து கட்டளை சொல் பொய் திரைக்குள் பட்டு அற செத்திட்டு உயிர் போனால்
எடுத்து கொட்டு இட கட்டை பட தெட்ட தணல் தட்ட கொளுத்தி சுற்று அவர் பற்று அற்று அவர் போ முன்
இணக்கி பத்திமை செச்சை பதத்தை பற்றுகைக்கு சொல் தமிழ் கொற்ற புகழ் செப்பி திரிவேனோ
அடைத்திட்டு புடைத்து பொன் பத சொர்க்கத்தனை சுற்றிட்டு அலைப்பு பற்று என சொற்றிட்ட அறு சூரை
அடித்து செற்று இடித்து பொட்டு எழ பொர்ப்புப்பட குத்திட்டு அலைத்து சுற்று அலை தெற்று கடல் மாய
புடைத்திட்டு படிக்குள் செற்று அட புக்கு கத துக்க கயில் கொக்கை பட குத்தி பொருவோனே
புனத்தில் பொன் குறத்திக்கு புணர்க்கு ஒத்த பசப்பு எத்தி புணர் கச்சி பதி சொக்க பெருமாளே

மேல்

#327
கரு பற்றி பருத்து ஒக்க தரைக்கு உற்றிட்டு உரு பெற்று கருத்தின்கண் பொருள் பட்டு பயில் காலம்
கணக்கிட்டு பிணக்கிட்டு கதித்திட்டு கொதித்திட்டு கயிற்றிட்டு பிடித்திட்டு சமன் ஆவி
பெருக்க புத்தியில் பட்டு புடை துக்க கிளை பின் பொய் பிணத்தை சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும்
பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்து தொக்கு அற கத்து பிறப்பு பற்று அற செச்சை கழல் தாராய்
பொருப்பு கர்ப்புர கச்சு தன பொற்பு தினை பச்சை புன கொச்சை குற தத்தைக்கு இனியோனே
புரத்தை சுட்டு எரித்து பற்றலர்க்கு பொன் பத துய்ப்பை புணர்த்து பித்தனை கற்பித்து அருள்வோனே
செருக்கு அ குக்கரை குத்தி செரு புக்கு பிடித்து எற்றி சினத்திட்டு சிதைத்திட்டு பொரும் வீரா
திருத்தத்தில் புகழ் சுத்த தமிழ் செப்பு த்ரய சித்ர திரு கச்சி பதி சொக்க பெருமாளே

மேல்

#328
கறுக்க பல் துவர்ப்பிட்டு சிரித்து சற்று உறுக்கி கண் பிறக்கிட்டுப்பட கண் பித்தி இளைஞோர்தம்
கழுத்தை சிக்கென கட்டி செப்பு தனம் பட குத்திட்டு உருக்கி கற்பு அழிக்க பொற்பு எழு காதல்
புறப்பட்டு களிக்க கற்புரத்தை பிட்டு அரக்கி பொன் பணி கட்டில் புறத்துற்று புணர் மாதர்
பொருத்தத்தை தவிர்த்து சற்று இரக்ஷித்து புரப்ப பொன் பதத்தை பெற்று இருக்கைக்கு பெறுவேனோ
திறல் கொக்கை பட குத்தி செருக்கி கொக்கரித்து சக்கரிக்கு புத்திரற்கு உற்று தளை பூண
சினத்து பொன் பொருப்பை பொட்டு எழுத்தி திக்கரித்து புத்இரத்தத்தில் சிரித்து உற்று பல பேய்கள்
பறிக்க பச்சிறைச்சிக்கண் கறி குப்பை சிர சிக்கு பரப்பு ஒய் கட்டற புக்கு பொருதோனே
பணி செச்சை தொடை சித்ர புயத்து உக்ர படை சத்தி படை கச்சி பதி சொக்க பெருமாளே

மேல்

#329
அற்றைக்கு இரை தேடி அத்தத்திலும் ஆசை
பற்றி தவியாத பற்றை பெறுவேனோ
வெற்றி கதிர் வேலா வெற்பை தொளை சீலா
கற்று உற்று உணர் போதா கச்சி பெருமாளே

மேல்

#330
முட்டுப்பட்டு கதிதோறும் முற்ற சுற்றி பல நாளும்
தட்டுப்பட்டு சுழல்வேனை சற்று பற்ற கருதாதோ
வட்ட புட்ப தல மீதே வைக்கத்தக்க திரு பாதா
கட்டத்து அற்றத்து அருள்வோனே கச்சி சொக்க பெருமாளே

மேல்

#331
அற்றைக்கற்றைக்கு ஒப்பித்தொப்பித்து அத்தத்தத்தம் தருவோர் தாள்
அர்ச்சித்து இச்சித்து அக்கத்து அக்கம் திக்கு தொக்கு குடில் பேணி
செற்றை புன் சொல் கற்றுக்கற்று செத்துச்செத்து பிறவாதே
செப்பச்செப்ப பச்சைப்பச்சை செச்சை செச்சை கழல் தாராய்
துற்று பின் புக்கு உற்ற கொக்கை துட்க திட்க பொரும் வேலா
சுத்த பத்தி சித்ர சொர்க்க சொர்க்க தத்தைக்கு இனியோனே
கற்றை பொற்றை பற்றி குத்தி கத்தக்கத்த களைவோனே
கற்பு சத்தி பொற்பு சத்தி கச்சி சொக்க பெருமாளே

மேல்

#332
சுத்த சித்தத்து தொல் பத்தர்க்கு சுத்த பட்டு இட்டம் உறாதே
தொக்க பொக்கம் சில் கட்சிக்கு சொல் குற்றத்துக்கு உறை நாடி
பித்தத்தை பற்றி தை தற்று உற்று ஒத்து கித்தி பிணி மாதர்
பெட்டில் கட்டு தட்டுப்பட்டு பின்பட்டு இட்டு தளர்வேனோ
அ தத்து அத்திக்கு அத்தற்கு எய்த்த அத்திக்கு அத்து பலம் ஈவாய்
அர்ச்சித்து பொன் செக்க கொச்சை தத்திக்கு செச்சை தொடை சூழ்வாய்
கத்து அத்தி தத்து அத்தில் கொக்கை கைத்த சத்தி படை ஏவும்
கற்பு சத்தி பொன்பு சத்தி கச்சி சொக்க பெருமாளே

மேல்

#333
கொக்குக்கு ஒக்க தலையில் பற்று சிக்கத்து அளக கொத்துற்று உக்கு பிணி உற்றவனாகி
குக்கி கக்கி கடையில் பல் தத்துற்று கழல கொத்தை சொல் கற்று உலகில் பல பாஷை
திக்கித்திக்கி குளறி செப்பி தப்பி கெடு பொய் செற்றை சட்டை குடிலை சுமை பேணும்
சிக்கு அற்று உட்கு கருணை சுத்த சித்தி தமிழை திட்டத்துக்கு புகல பெறுவேனோ
அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டி கிட்டி இட்டு எதிரிட்ட அத்ரத்து எற்றி கடுக பொரு சூரன்
அச்சு கெட்டு படை விட்டு அச்சப்பட்டு கடலுள் புக்குப்பட்டு துருமத்து அடைவாக
தக்கு திக்கு தறுகண் தொக்கு தொக்கு உற்றது கண் கை கொட்டு இட்டு இட்டு உடல் சில் கணம் ஆடி
சத்தி குத்தி துடியில் சத்திக்க கை சமர் செய் சத்தி கச்சி குமர பெருமாளே

மேல்

#334
தத்தித்தத்தி சட்டப்பட்டு சத்தப்படு மை கடலாலே
சர்ப்ப தத்தில் பட்டு கெட்டு தட்டுப்படும் அ பிறையாலே
சித்தத்துக்கு பித்துற்று உச்ச சித்ர கொடி உற்று அழியாதே
செப்ப கொற்ற சிற்ப பத்தி செச்சை தொடையை தரவேணும்
கொத்து திக்கு பத்துள் புக்கு குத்தி கிரியை பொரும் வேலா
கொச்சை பொச்சை பொற்பில் பச்சை கொச்சை குறவிக்கு இனியோனே
சுத்தப்பத்த அத்தர்க்கு சித்த துக்கத்தை ஒழித்திடும் வீரா
சொர்க்கத்துக்கு ஒப்புற்ற கச்சி சொக்கப்பதியில் பெருமாளே

மேல்

#335
பொக்கு பை கத்தம் தொக்கு குத்து பொய்த்து எத்து தத்து குடில் பேணி
பொச்சை பிச்சு அற்ப கொச்சை சொல் கற்று பொன் சித்ர கச்சு கிரியார் தோய்
துக்க துக்கத்தில் சிக்குப்பட்டிட்டு துக்கித்து கெய்த்து சுழலாதே
சுத்தர் சித்தத்து பத்தி பத்தர்க்கு ஒத்து சற்று அர்ச்சிக்க பெறுவேனோ
திக்குத்திக்கு அற்று பை தத்து அத்திக்கு செல் பத்திர கொக்கை பொரும் வேலா
செப்ப அ சொர்க்கத்து செம்பொன் தத்தைக்கு செச்சை கொத்து ஒப்பித்து அணிவோனே
கக்கு அக்கை தக்க அக்கங்கட்கு அக்கு அக்கி கண் கத்த அத்தர் பெரியோனே
கற்றை பொற்று ஏத்த பெற்ற பொன் சிற்ப கச்சிக்குள் சொக்க பெருமாளே

மேல்

#336
அயில் அப்பு கயல் அப்புத்தலை மெச்சு உற்பல நச்சு கண் உரத்த ஐ கன வெற்பு தன மேகம்
அளக கொத்து என ஒப்பி புளுகி சொல் பல கற்பித்து இளகி கற்பு உள நெக்கு தடுமாறி
துயல் விட்டு செயல் விட்டு துயருற்று உக்கு அயர்வுற்று தொடியர்க்கு இப்படி எய்த்து சுழலாதே
சுருதி பொன் பொருள் செக்கர்க்கு குரவு இட்டு தமர் பற்றி தொழு செச்சை கழல் பற்றி பணிவேனோ
புயல் அத்தை குயில் தத்தை கிளை புக்கு தொளை பச்சை புன முத்தை புணர் சித்ர புய வீரா
புரவி கொட்பு இரத அற்றத்து இருள் திக்கி படி மட்க புகல் பொன் குக்குட வெற்றி கொடியோனே
கயில் அச்சு தர தத்து சயிலத்து உத்தரம் நிற்க கரணி சித்தர் உள் கச்சி பதியோனே
கடலில் கொக்கு அடல் கெட்டு கரம் உட்க தரம் உட்க பொரு சத்தி கர சொக்க பெருமாளே

மேல்

#337
கச்சிட்ட அணி முலை தைச்சிட்டு உருவிய மச்ச கொடி மதன் மலராலும்
கச்சை கலை மதி நச்சு கடலிடை அச்சப்பட எழும் அதனாலும்
பிச்சுற்று இவள் உளம் எய்ச்சு தளர்வது சொச்ச தரம் அல இனிதான
பிச்சி புது மலர் வைச்சு சொருகிய செச்சை தொடை அது தரவேணும்
பச்சை திரு உமை இச்சித்து அருளிய கச்சி பதிதனில் உறைவோனே
பற்றி பணிபவர் குற்ற பகை கெட உற்று பொர வல கதிர் வேலா
இச்சித்து அழகிய கொச்சை குறமகள் மெச்சி தழுவிய திரு மார்பா
எட்டு குல கிரி முட்ட பொடிபட வெட்டி துணி செய்த பெருமாளே

மேல்

#338
கமல அரு சோகாம்பரம் முடி நடு ஏய் பூம் கணை கலக அமர் வாய் தோய்ந்து அமளியின் மீதே
களை அற மீது ஊர்ந்து எழ மதன விடாய் போம்படி கன இய வார் ஏந்தின இளநீர் தோய்ந்து
எமது உயிர் நீலாஞ்சன மதர் விழியால் வாங்கிய இவளுடன் மால் கூர்ந்திடும் அநுபோகம்
இனி விட வேதாந்த பரம சுக வீடு ஆம் பொருள் இதம் இய பாதாம் புயம் அருள்வாயே
அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பரம் அ துல அன நீலாம்பரம் அறியாத
அ நகர நாளாங்கிதர் தமை உமையாள் சேர்ந்து அருள் அறம் உறு சீ காஞ்சியில் உறைவோனே
விமல கிராதாங்கனை தன கிரி தோய் காங்கெய வெடிபடு தேவேந்திர நகர் வாழ
விரி கடல் தீ மூண்டிட நிசிசரர் வேர் மாண்டிட வினை அற வேல் வாங்கிய பெருமாளே

மேல்

#339
கருமமான பிறப்பு அற ஒரு கதி காணாது எய்த்து தடுமாறும்
கலக காரண துற்குண சமயிகள் நானாவர்க்க கலை நூலின்
வரும் அநேக விகற்ப விபரித மனோபாவத்துக்கு அரிதாய
மவுன பூரித சத்திய வடிவினை மாயாமற்கு புகல்வாயே
தரும வீம அருச்சுன நகுல சகாதேவர்க்கு புகலாகி
சமர பூமியில் விக்ரம வளை கொடு நாளோர் பத்தெட்டினில் ஆளும்
குரு மகீதலம் உட்பட உளமது கோடாமல் க்ஷத்ரியர் மாள
குலவு தேர் கடவு அச்சுதன் மருக குமாரா கச்சி பெருமாளே

மேல்

#340
கலகல என பொன் சேந்த நூபுர பரிபுரம் ஒத்தி தாம் தனாம் என
கர மலர் அச்சில் தாம்தோம் ஆடிய பொறியார் பைம்
கடி தடம் உற்று காந்தள் ஆம் என இடை பிடி பட்டு சேர்ந்த ஆல் இலை
கன தன பொற்பிட்டு ஓங்கு மார்பொடு வடம் ஆட
சலசல சச்ச சேம் கை பூண் வளை பரிமள பச்சை சேர்ந்து உலாவிய
சலச முகத்து சார்ந்த வாள் விழி சுழல் ஆட
தரள நகைப்பித்து ஆம்பல் ஆரி இதழ் குல முகில் ஒத்திட்டு ஆய்ந்த ஓதியர்
சரசம் உரைத்து சேர்ந்த தூவையர் உறவு ஆமோ
திலத முக பொன் காந்தி மாது உமை எனை அருள் வைத்திட்டு ஆண்ட நாயகி
சிவன் உருவத்தில் சேர்ந்த பார்வதி சிவகாமி
திரிபுவனத்தை காண்ட நாடகி குமரி சுகத்தை பூண்ட காரணி
சிவை சுடர் சத்தி சாம்பவீ அமை அருள் பாலா
அலகை இரத்தத்து ஓங்கி மூழ்கிட நரி கழுகு உப்பி சீர்ந்து வாய் இட
அசுரர் குலத்தை காய்ந்த வேல் கரம் உடையோனே
அமரர் மகட்கு போந்த மால் கொளும் விபுத குறத்திக்கு ஆண்டவா தின
அழகு சிறக்க காஞ்சி மேவிய பெருமாளே

மேல்

#341
கொத்து ஆர் பல் கால் அற்று ஏக பாழ் குப்பாயத்தில் செயல் மாறி
கொக்காகி கூனி கோல் தொட்டே கொட்டாவி குப்புற வாசி
தித்தா நின்றார் செத்தார் கெட்டேன் அஆ உஉ எனவே கேள்
செற்றே சுட்டே விட்டு ஏறி போம் அ பேது துக்கம் அறாதோ
நித்தா வித்தார தோகைக்கே நிற்பாய் கச்சி குமரேசா
நிட்டூர சூர் கெட்டு ஓட போர் நெட்டு ஓதத்தில் பொருதோனே
முத்து ஆர தோளில் கோடல் பூ முட்டாது இட்டத்து அணிவோனே
முற்றா நித்தா அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#342
கோவை சுத்த துப்பு அதரத்து கொடியார்தம் கோல கச்சு கட்டிய முத்த தனம் மேவி
பாவத்துக்கு தக்கவை பற்றி திரியாதே பாட பத்தி சித்தம் எனக்கு தரவேணும்
மாவை குத்தி கைத்து அற எற்றி பொரும் வேலா மாணிக்க சொர்க்கத்து ஒரு தத்தைக்கு இனியோனே
சேவல் பொன் கை கொற்றவ கச்சி பதியோனே தேவ சொர்க்க சக்கிரவர்த்தி பெருமாளே

மேல்

#343
சீசி முப்புர காடு நீறு எழ சாடி நித்திரை கோசம் வேர் அற
சீவன் முத்தியில் கூடவே களித்து அநுபூதி
சேர அற்புத கோலமாம் என சூரிய புவிக்கு ஏறி ஆடுக
சீலம் வைத்து அருள் தேறியே இருக்க அறியாமல்
பாசம் விட்டு விட்டு ஓடி போனது போதும் இப்படிக்கு ஆகிலேன் இனி
பாழ் வழிக்கு அடைக்காமலே பிடித்து அடியேனை
பார் அடைக்கல கோலமாம் என தாபரித்து நித்தாரம் ஈது என
பாத பத்ம நல் போதையே தரித்து அருள்வாயே
தேசு இல் துட்ட நிட்டூர கோது உடை சூரை வெட்டி எட்டி ஆசை ஏழ் புவி
தேவர் முத்தர்கட்கு ஏதமே தவிர்த்து அருள்வோனே
சீர் படைத்த அழல் சூலம் மான் மழு பாணி வித்துரு பாதன் ஓர் புற
சீர் திகழ் புகழ் பாவை ஈன பொன் குருநாதா
காசி முத்தமிழ் கூடல் ஏழ் மலை கோவல் அத்தியின் கானம் நான்மறைக்காடு
பொன் கிரி காழி ஆரூர் பொன் புலி வேளூர்
காள அத்தி அப்பால் சிராமலை தேசம் முற்றும் முப்பூசை மேவி நல்
காம கச்சியில் சால மேவும் பொன் பெருமாளே

மேல்

#344
நச்சு அரவம் என்று நச்சு அரவம் என்று நச்சு உமிழ் களங்க மதியாலும்
நத்தோடு முழங்கு கனத்தோடு முழங்கு ந திரை வழங்கு கடலாலும்
இச்சை உணர்வின்றி இச்சை என வந்த இ சிறுமி நொந்து மெலியாதே
எத்தனையி நெஞ்சில் எத்தன முயங்கி இத்தனையில் அஞ்சல் என வேணும்
பச்சை மயில் கொண்டு பச்சை மற மங்கை பச்சை மலை எங்கும் உறைவோனே
பத்தியுடன் நின்று பத்தி செய்யும் அன்பர் பத்திரம் அணிந்த கழலோனே
கச்சு இவர் குரும்பை கச்சவர் விரும்பு கச்சியில் அமர்ந்த கதிர் வேலா
கற்பக வனம் கொள் கற்பு அகம் விசும்பர் கை தளை களைந்த பெருமாளே

மேல்

#345
படிறு ஒழுக்கமும் மட மனத்து உள்ளபடி பரித்து உடன் நொடி பேசும்
பகடிகட்கு உளம் மகிழ மெய்ப்பொருள் பல கொடுத்து அற உயிர் வாடா
மிடி என பெரு வடவை சுட்டிட விதனம் உற்றிட மிக வாழும்
விரகு கெட்டு அரு நரகு விட்டு இருவினை அற பதம் அருள்வாயே
கொடி இடை குற வடிவியை புணர் குமர கச்சியில் அமர்வோனே
குரவு செச்சை வெண் முளரி புத்து அலர் குவளை முற்று அணி திரு மார்பா
பொடி படப்பட நெடிய வில் கொடு புரம் எரித்தவர் குருநாதா
பொரு திரை கடல் நிருதரை படை பொருது உழக்கிய பெருமாளே

மேல்

#346
மகுட கொப்பு ஆட காதினில் நுதலில் பொட்டு ஊர கோதிய மயிரில் சுற்று ஓலை பூவோடு வண்டு பாட
வகை முத்து சோர சேர் நகை இதழில் சொல் சாதிப்பார் இயல் மதன சொல் பாடு கோகில ரம்பை மாதர்
பகடி சொல் கூறி போர் மயல் முக இச்சை பேசி சீர் இடை பவள பட்டாடை தோள் இரு கொங்கை மேலா
பண மெத்த பேசி தூது இடும் இதய சுத்த ஈன சோலிகள் பலர் எச்சிற்கு ஆசைக்காரிகள் சந்தம் ஆமோ
தகுடத்த தான தானன திகுடத்தி தீதி தோதிமி தடுடுட்டுட் டாட பேரிகை சங்கு வீணை
தடம் இட்டு பாவக்கார் கிரி பொடிபட்டுப்போக சூரர்கள் தலை இற்று இட்டு ஆட போர்புரிகின்ற வேலா
திகிரி பொன் பாணி பாலனை மறை கல் புத்தேள் அ பூமனை சினமுற்று சேடில் சாடிய கந்த வேளே
தினையுற்று காவல்காரியை மணமுற்று தேவ பூவோடு திகழ் கச்சி தேவ கோன் மகிழ் தம்பிரானே

மேல்

#347
மக்கட்கு கூற அரிதானது கற்று எட்டத்தான் முடியாதது மற்று ஒப்புக்கு இயாதும் ஒவ்வாதது மனதாலே
மட்டிட்டு தேட ஒணாதது தத்வத்தில் கோவை படாதது மத்த பொன் போது பகீரதி மதி சூடும்
முக்கண் பொற்பாளர் உசாவிய அர்த்தக்கு போதகம் ஆனது முத்திக்கு காரணம் ஆனது பெறலாகா
முட்டர்க்கு எட்டாதது நான்மறை எட்ட இல் தெட்டாது எனவே வரும் முற்பட்டு அப்பாலையில் ஆவது புரிவாயே
செ கண் சக்ராயுத மாதுலன் மெச்ச புல் போது படாவிய திக்கு பொன் பூதரமே முதல் வெகு ரூபம்
சிட்டித்து பூத பசாசுகள் கை கொட்டிட்டு ஆட மகோததி செற்று உக்ர சூரனை மார்பகம் முது சோரி
கக்க கை தாமரை வேல் விடு செக்கர் கர்ப்பூர புயாசல கச்சுற்ற பார பயோதர முலையாள் முன்
கற்பு தப்பாது உலகு ஏழையும் ஒக்க பெற்றாள் விளையாடிய கச்சி கச்சாலையில் மேவிய பெருமாளே

மேல்

#348
மயல் ஓதும் அந்த நிலையாலும் வஞ்ச வசை பேசுகின்ற மொழியாலும்
மறி போல் உகின்ற விழி சேரும் அந்தி மதி நேருகின்ற நுதலாலும்
அயிலே நிகர்ந்த விழியாலும் அஞ்ச நடையாலும் அங்கை வளையாலும்
அறிவே அழிந்து அயர்வாகி நைந்து அடியேன் மயங்கி விடலாமோ
மயில் ஏறி அன்று நொடிப்போதில் அண்டம் வலமாக வந்த குமரேசா
மறி தாவு செம் கை அரனார் இடங்கொள் மலைமாது தந்த முருகேசா
நய வான் உயர்ந்த மணி மாடம் உம்பர் நடுவே நிறைந்த மதி சூழ
நறை வீசு கும்ப குடம் மேவு கம்பை நகர் மீது அமர்ந்த பெருமாளே

மேல்

#349
முத்து ரத்ந சூத்ரம் ஒத்த சித்ர மார்க்கர் முன் செமத்து மூர்க்கர் வெகு பாவர்
முத்து உதிர்த்த வார்த்தை ஒத்த பத்ரம் வாள் கண் முச்சர் மெத்த சூட்சர் நகையாலே
எத்தர் குத்திர அர்த்தர் துட்ட முட்ட காக்கர் இட்டம் உற்ற கூட்டர் விலைமாதர்
எக்கர் துக்கர் வாழ்க்கை உற்ற சித்த நோய் புண் இப்படிக்கு மார்க்கம் உழல்வேனோ
தித்தி மித்தி மீத்தனத்த நத்தம் மூட்டு சிற்று உடுக்கை சேட்டை தவில் பேரி
திக்கு மக்கள் ஆக்கை துக்க வெற்பு மீக்கொள் செம் கடற்குள் ஆழ்த்து விடும் வேலா
கல் புரத்தை வீட்டி நட்டமிட்ட நீற்றர் கத்தர் பித்தர் கூத்தர் குருநாதா
கல் குறிச்சி வாழ் பெண் ஒக்க வெற்றி வேல் கொள் கச்சி நத்தி நாள் கொள் பெருமாளே

மேல்

#350
வம்பு அறா சில கன்னம் இடும் சமயத்து கத்து திரையாளர்
வன் கலா திரள்தன்னை அகன்று மனத்தில் பற்று அற்று அருளாலே
தம் பராக்கு அற நின்னை உணர்ந்து உருகி பொன் பத்ம கழல் சேர்வார்
தம் குழாத்தினில் என்னையும் அன்போடு வைக்க சற்று கருதாதோ
வெம் பராக்ரமம் மின் அயில் கொண்டு ஒரு வெற்பு பொட்டு பட மா சூரர்
வென்ற பார்த்திப பன்னிரு திண் புய வெட்சி சித்ர திரு மார்பா
கம்பராய் பணி மன்னும் புயம் பெறுகைக்கு கற்பு தவறாதே
கம்பை ஆற்றினில் அன்னை தவம்புரி கச்சி சொக்க பெருமாளே

மேல்