மெ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மெத்த 3
மெத்தவும் 2
மெய் 214
மெய்க்கு 3
மெய்சிலிர்த்த 1
மெய்சிலிர்த்து 1
மெய்த்த 2
மெய்த்தலத்தில் 1
மெய்ப்பட 1
மெய்ப்பொடும் 1
மெய்ப்பொருள் 3
மெய்ப்பொருளாய் 2
மெய்ப்பொருளினை 1
மெய்ப்பொருளே 1
மெய்ப்பொருளை 3
மெய்ம்மறை 3
மெய்ம்மறையின் 1
மெய்மறந்தார் 1
மெய்மறந்து 1
மெய்மை 7
மெய்மையும் 1
மெய்மையே 1
மெய்மையோர் 1
மெய்யவர் 1
மெய்யா 2
மெய்யாமோ 1
மெய்யாய் 1
மெய்யார் 1
மெய்யான் 1
மெய்யிடத்தினில் 1
மெய்யிடம் 1
மெய்யில் 9
மெய்யின் 11
மெய்யின 1
மெய்யினர் 2
மெய்யினள் 1
மெய்யினன் 1
மெய்யினிடத்து 1
மெய்யினில் 7
மெய்யினும் 3
மெய்யினை 1
மெய்யும் 7
மெய்யுற 2
மெய்யுறு 1
மெய்யே 1
மெய்யை 1
மெல் 40
மெல்_இடை 1
மெல்_இயல் 2
மெல்_இழை 2
மெல்ல 7
மெல்லமெல்ல 1
மெல்லவன் 1
மெல்லவே 1
மெல்லிய 1
மெல்லியன் 1
மெல்லிழையார் 1
மெல்லென 3
மெல 3
மெலமெல 4
மெலிகுவர் 1
மெலிதர 2
மெலிந்த 5
மெலிந்தது 1
மெலிந்தவர் 1
மெலிந்தவர்கள் 1
மெலிந்தன 1
மெலிந்திருந்த 1
மெலிந்து 10
மெலிபவரும் 1
மெலிவது 1
மெலிவார் 1
மெலிவாள் 1
மெலிவு 2
மெலிவும் 1
மெலிவுளேன் 1
மெலிவை 1
மெலிவொடு 1
மெலிவோரும் 1
மெழுக்கிட்டு 1
மெழுக்கிடும் 1
மெழுக்கெறிந்து 1
மெழுகாய் 1
மெழுகிடுவார் 2
மெழுகு 3
மென் 179
மென்_கொடியின் 1
மென்_மொழியான் 2
மென்_விரல் 1
மென்மெல 2
மென்மேல் 1
மென்மேலும் 1
மென்மை 4
மென்மையவா 1
மென்மையவாய் 2
மென்மையின் 1
மென்மையினில் 1
மென்றனன் 1
மென்றிடில் 1
மென்றுமே 1

மெத்த (3)

மெத்த நன்று என்று அவர்கள் வியப்ப கோல் – சீறா:4652/1
கனி புசித்து உள்ளம் மெத்த களித்து அசுகாபிமார்கள் – சீறா:4712/1
வருக்கமாய் ஈமான் கொண்டு முகம்மது நபிக்கு மெத்த
உருக்கமானவர் போல் நின்றாய் உன்னை போல் உலகில் உண்டோ – சீறா:4860/3,4

மேல்


மெத்தவும் (2)

விடுத்து அவர் நடப்ப நபி மெத்தவும் இரங்கி – சீறா:4135/3
மெத்தவும் விழுமிது ஆகும் என்றனன் அறிவின் மிக்கான் – சீறா:4867/4

மேல்


மெய் (214)

நந்தி மிஞ்சிய விலங்கு இனம் கொடுகி மெய் நடுங்கும் – சீறா:25/4
வாய்ந்த மெல் இழை மடந்தையர் தடத்தின் மெய் வருந்த – சீறா:67/1
பறிந்து போதலில் துணிக்கின் கை உதறி மெய் பதறி – சீறா:69/3
படி தலத்தினில் வீழ்ந்திட பதறி மெய் பதைத்து – சீறா:71/3
வானவர்க்கு இறைவன் ஜபுறயீல் பலகால் வந்து அவர் மெய் ஒளி பாய்ந்தே – சீறா:80/3
கதிர் வடிவு ஒழுகி நின்ற ஹபீபு மெய் வகுக்க வேண்டி – சீறா:101/1
அரிய மெய் பூரித்து ஓங்கி அகத்தினின் மகிழ்ச்சி பொங்கி – சீறா:103/3
மெய் எழில் வாய்ப்ப சீவன் விடுத்தனன் விடுத்த போதில் – சீறா:105/1
நிதம் அழகு ஒழுகி வாசம் நிறைந்த மெய் முகம்மது என்னும் – சீறா:124/1
மெய் பெரும் கலிமா_விரல் நடு_விரல் மென்_விரல் சிறு_விரல் பெருவிரல்கள் – சீறா:129/3
மெய் தவ குரிசில் நபி இதுரீசு விருப்புற உதித்த நல் மதலை – சீறா:141/1
தக்க மெய் புகழ் சேர் இருநிதி அதுனான்-தம்மிடத்து இருந்து எழில் தழைத்த – சீறா:154/4
மஞ்சு வார் குழல் ஆமினா பயந்து மெய் வருந்தி – சீறா:198/2
சலித்து விம்மிய மயிலினை கண்டு மெய் தளர – சீறா:211/1
உள் நிரந்தில மெய் பல வருந்தில உதர-கண் – சீறா:227/2
உரு திரண்டு எழுந்து பொய் உடம்பை மெய் என – சீறா:301/1
பாங்கினில் புகுந்து முகம்மது மலர் தாள் பணிந்து மெய் மகிழ்ச்சி பெற்று இருப்பார் – சீறா:369/4
மெய் நிற கதிர் முச்சுடரையும் மழுக்கும் விறல் முகம் மது-தமை எடுத்து – சீறா:386/3
மனம் மகிழ்ந்து இருவரும் மெய் மகிழ்ச்சியால் எனது சென்னிதனை – சீறா:433/2
விரிதர கிடந்து ஒளிரும் மெய் பதைத்து வாய் வெளிறி – சீறா:454/2
மெய் எலாம் நரம்பு எழுந்து உலரிய விரி திரையாய் – சீறா:458/2
காதினுள் புக கருத்துற கலங்கி மெய் நடுங்கி – சீறா:464/2
சிலை தட புய முகம்மது மெய் சீர்பெற – சீறா:482/2
குறைபடா அரிய மெய் குளிருமோ என – சீறா:494/3
வருந்தி மெய் நடுக்கொடும் மரைகள் மூழ்குவது – சீறா:498/1
விண்டது தவறுறா மெய் என்று ஓதுவார் – சீறா:509/4
அரிய மெய் நடுக்கமுற்று அவலித்து ஏங்கவே – சீறா:517/2
தழை அற கருகி நீர் தடங்கள் வற்றி மெய்
குழைவொடு கானலை குறித்து நீர் என – சீறா:529/1,2
நான மெய் கமழ் வேத நாயகர் நமது இடத்தில் – சீறா:542/1
ஏத்து மெய் புகழ் முகம்மதை சூழ்தர இயைந்து – சீறா:549/2
கண்டு நம் நபி மெய் எழில் இரு மலர் கண்ணால் – சீறா:555/1
படி அதிர்ந்திட நடந்து அலைந்து உலைந்து மெய் பதற – சீறா:573/3
அரிய மெய் வருந்த நாளும் அரும் தவம் புரிந்ததாலும் – சீறா:606/2
மெய் மொழி மறைகள் தேர்ந்த பண்டிதன் விரைவின் வந்து – சீறா:638/1
பெற்ற பேறு இது-கொல் என முழு மணியாய் பிறந்த மெய் துரை அபுல் காசீம் – சீறா:698/2
மெய் ஓடிய வேர்வைகள் சிந்தி விழ – சீறா:710/2
ஒள்ளிய மெய் அழகு ஒழுக ஒல்லையில் – சீறா:746/3
பொதிந்த மெய் மயிர் எண்கு இனங்களும் மரை போத்தும் – சீறா:758/3
நிலம் கொள பரந்து அரிய மெய் ஒளி புடை நிலவ – சீறா:761/2
கண்ட போதினில் வால் குழைத்து அரிய மெய் கலங்கி – சீறா:763/1
பாகம் உற்று மெய் வணங்கி நல் மொழி சில பகர்ந்து – சீறா:785/2
சொரிதரு மேகம் போல சொல்லும் மெய் மறைகள் என்னும் – சீறா:789/2
மெய் தவம் பொருந்து மக்காபுரத்து உறு வேந்தர்-கொல்லோ – சீறா:794/1
விருந்து எனும் மாற்றம் கேட்டு மெய் மகிழ்ந்து அகம் பூரித்து – சீறா:799/1
கட்டை ஒன்று உளது அதன்-பால் ஹபீபு மெய் கவின் கனிந்து – சீறா:818/3
தெரியும் மெய் மறைக்கு உரியவ இ செகதலத்தில் – சீறா:834/1
விரியும் நூல் கடல் செவிமடுத்து உண்ட மெய் தவத்தோன் – சீறா:835/4
பொருத்து மெய் மொழி மா தவன் இறந்த அ போதில் – சீறா:838/1
சுந்தர நபி குரிசில் மெய் புகழ் துலங்கி – சீறா:877/1
பக்கலில் வர கதிர் பரப்பி மெய் ஒளி – சீறா:917/2
மின் ஒளி மழுக்கும் சோதி மெய் முகம்மதும் அன்பாக – சீறா:936/2
பல்லினால் இதழ் அதுக்கி மெய் உரத்தொடும் பறிப்ப – சீறா:948/2
மறுவி மெய் கமழ்ந்த முகம்மதும் கூண்ட மக்கிகள் அனைவரும் செறிந்து – சீறா:1008/2
விம்முறும் ஏங்கும் மெய் வருந்தும் வெய்து உயிர்த்து – சீறா:1023/1
தன் உளத்து அடக்கி மெய் தளரும் காலையில் – சீறா:1024/4
தினகரன் மெய் மறுகும் மணி மறுகூடு மறுகாது சென்று நீங்கா – சீறா:1078/3
வாச மெய் முகம்மது பெறும் புது மணக்கோலம் – சீறா:1099/2
மின் ஒளி கரக்கும் சோதி மெய் எழில் முகம்மது என்னும் – சீறா:1155/2
மேவிய வள்ளலார்-தம் மெய் எழில் நோக்கிநோக்கி – சீறா:1169/2
குற்றம் அற்ற கொழும் கதிர் மெய் எழில் – சீறா:1184/1
வெளி எலாம் அந்த மெய் உரு காண் என்பார் – சீறா:1192/4
வண்ண வார் புய மன்னவர் மெய் எழில் – சீறா:1195/1
தக்க மெய் புகழும் கிளைஞரும் வாழ தரணி நால் திசையினும் வாழ – சீறா:1215/2
மிக்க மெய் புதுமை-தனை உணர்ந்துணர்ந்து மிக களித்து அதிசயித்திருப்பார் – சீறா:1248/4
நானம் முங்கிய மெய் சோதி நாயகா வரையின் கண்ணே – சீறா:1253/3
செழித்த மெய் ஜிபுறயீல்-தம் செவி அகம் குளிர கல்வி – சீறா:1268/3
செயிர் அறு ஜிபுறயீல் தம் மெய் மயிர் சிலிர்ப்ப ஓங்கி – சீறா:1271/2
நடுக்கமுற்று மெய் சுரத்தொடும் குளிர்தர நலிந்து – சீறா:1273/1
நொந்து மெய் அகம் பதறிட கணவரை நோக்கி – சீறா:1275/1
சிந்தை சிந்தி மெய் திடுக்கொடு மதி முகம் தேம்ப – சீறா:1275/3
தழுவு மெய் கதிர் முகம்மது மனை-வயின் சார்ந்தான் – சீறா:1282/4
நாணுவர் உயிர்ப்பர் மெய் நலிதல் கொண்டனர் – சீறா:1323/4
கதிர் விரிந்து ஒழுகும் மெய் எழில் நபியை காண்-தொறும் காண்-தொறும் வலித்திட்டு – சீறா:1440/1
தங்கிய கதிரவன் தழலின் மெய் ஒளி – சீறா:1465/1
விரி கதிர் இலங்கி சேரார் மெய் நிணம் பருகும் வெள் வேல் – சீறா:1489/3
உருகு மெய் மன வாக்கொடும் புகழ் எடுத்துரைத்தார் – சீறா:1504/4
விண்டு உதிர்த்த மெய் வியர்ப்பொடு மெலமெல நடந்து – சீறா:1542/3
விலகும் கதிர் மெய் குரிசில் நபி உறைவது இவணே என விரைவில் – சீறா:1586/3
தணித்தாரிலை மெய் நடுக்கம் உரை தவிர்ந்தார் முகங்கள் குவிந்தாரே – சீறா:1587/4
விரியும் கதிர் மெய் சிறை தடம் கண் விண்ணோர்க்கு அரசர் பொருப்பின் இருந்து – சீறா:1595/1
மதி மெய் மயங்கி வஞ்சனையின் மாயத்து உறைந்தார் என ஊரும் – சீறா:1596/2
சுற்றிட மெய் எழில் துலங்க மால் நபி – சீறா:1605/3
அறபி-தன் முக மலர்-அதனை நோக்கி மெய்
மறை நபி பங்கய வதனம் நோக்கி பின் – சீறா:1636/2,3
மெய் அணி குப்பாயத்தை வியன் பெற மெய்யில் சேர்த்தார் – சீறா:1760/4
காதலொடு மெய் அணி கலன்களை ஒதுக்கி – சீறா:1779/3
பார்தர விரிப்ப மெய் பதைத்து வாடினார் – சீறா:1786/4
மனம் அலைத்திட மொழி வளர்ப்பன் மெய் என – சீறா:1815/3
மெய் ஒளி பரப்பிட விரிந்த வாயிலின் – சீறா:1829/1
மான்மதம் கமழ்ந்து இரு மருங்கும் மெய் எழில் – சீறா:1830/1
கலந்து மெய் ஒளியொடு நறை கமழ்ந்தன – சீறா:1835/2
இருள் இலாத மெய் அவயவத்து ஆசு இல் இலக்கணமும் – சீறா:1836/2
விண்டு மெய் புளகு எழ களிப்பொடும் விரித்துரைப்பார் – சீறா:1841/4
மன்றல் மெய் முகம்மதின் உரை மறுத்திடாது ஏவல் – சீறா:1873/1
அவிரும் மெய் ஒளி முகம்மதே உம்மிடத்து அவனால் – சீறா:1883/1
மான்மதம் கமழ்ந்த மெய் நபிக்கு மாசு இலா – சீறா:1989/2
விரிந்த மெய் நெறி சிந்தையின் நடுவுற விளங்கி – சீறா:2051/3
சென்றனர் எறிக்கும் காந்தி செவ்வி மெய் முகம்மது அன்றே – சீறா:2054/4
வருத்தம் நாட்குநாள் முற்றி மெய் மெலிவொடு மயங்கி – சீறா:2193/1
வடிவு அமைந்த மெய் துணைவியாய் மகிதலத்து இருந்து – சீறா:2204/2
மாறுபட்டவர் தொடர்ந்ததின் நடந்த மெய் மலைவும் – சீறா:2226/2
இருந்து மெய் வருத்தம் தவிர்த்து அந்தரத்திடத்தில் – சீறா:2227/1
வந்து அடுத்து இறையவன் சலாம் உரைத்து மெய் வருந்தல் – சீறா:2228/1
பொருந்திடா திசை எ திசை பொருவரா கதிர் மெய்
வருந்தல் செய்தவர் எவர் தெரிதர வழங்கிடுமே – சீறா:2236/3,4
விரிந்த முன் மறைகள் தேர்ந்து மெய் நெறி முறைமை நாளும் – சீறா:2249/1
நிலவு கொப்பிளித்தது என்ன நீண்ட மெய் சோதி கால – சீறா:2257/2
தனி இருந்து எழில் மெய் சோதி தயங்கிய நபி முன்பாக – சீறா:2266/2
மின் கடந்து இலங்கும் சோதி விரிந்த மெய் முகம்மது என்னும் – சீறா:2268/3
வேத நல் நிலைமை நீங்கா மெய் நெறி மேவி நின்ற – சீறா:2287/4
விதி மறை கதிர் மெய் தீனும் வெம் குபிர் களையும் ஒன்றாய் – சீறா:2347/3
விடுத்து உளம் மகிழ்ச்சி கூர மெய் மயிர் சிலிர்ப்ப நம்-பால் – சீறா:2384/3
விரி மறையவர்கள் கூறும் மெய் மொழி-அதனால் வேண்டி – சீறா:2392/2
கனக்கும் மெய் காரண கடல் இ காசினி-தனக்கு – சீறா:2421/3
இந்தவாறு மெய் எனில் கசுறசு எனும் இனமும் – சீறா:2476/1
மறைபட தனி இருந்த மெய் தீனின் மன்னவரும் – சீறா:2481/2
எற்றுவார் சிலர் இணை விரல் மடக்கி மெய் சேப்ப – சீறா:2486/2
உற்ற மெய் துணையாய் உடற்கு உயிர்-அதாய் உறும் தீன் – சீறா:2494/2
சாரும் மெய் நரை பிறங்கிய முதியவன்-தனை கண்டு – சீறா:2503/1
உறு மெய் துணைவர் வருவன் எனும் உரையால் மிகவும் மனம் மகிழ்ந்து – சீறா:2550/1
வாங்கு சிலை கை வள்ளல் அபூபக்கர் எனும் மெய் மதியோரும் – சீறா:2556/2
விரைவில் துடைத்தான் வாய் பூழ்தி உமிழ்ந்தான் தனை மெய் மறந்தானே – சீறா:2557/4
பலன் பெற மெய் நூல் ஆர வேய்ந்தது பரிவின் அன்றே – சீறா:2570/4
திருத்து மெய் இறசூலுல்லா செம் முகம் பார்த்து சொல்வார் – சீறா:2574/4
விடும் கதிர் கனல் கண் வேங்கை மெய் அணை சிரத்தை சேர்த்த – சீறா:2581/1
வேறுபட்டு இமைப்பின் நேரம் மெய் மயக்குற்றேன் என்றும் – சீறா:2600/3
ஏது என செவிகொடுத்திட வேண்டும் மெய் எழிலோய் – சீறா:2607/4
கோது அற கலிமா எடுத்து ஓதி மெய் குழைத்து – சீறா:2622/3
சொரியும் காந்தி கொண்டு அரிய மெய் மாசு அற துடைத்த – சீறா:2624/4
இடுக்கண் இன்றி மெய் திடத்தொடும் அவ்விடத்து எதிர்ந்தான் – சீறா:2626/4
கடம் கடந்து மெய் வருந்தி அங்கு இருந்த காவலர்க்கு ஓர் – சீறா:2637/1
வில் உமிழ்ந்த மெய் முகம்மதும் துயிலினை விடுத்திட்டு – சீறா:2642/1
சீத மெய் நறை முகம்மது திரு முகம் நோக்கி – சீறா:2647/2
தொலை தொடர்ந்து எய்த்திடும் குணமோ கடு விசையால் குளம்பு துண்டப்பட்டதோ மெய்
மலைதர வஞ்சனை விளக்கு முகம்மது செய் வினை திறனோ மாயம் யாது என்று – சீறா:2656/1,2
விம்மித புயத்து ஆயர்கள் திரண்டு மெய் மகிழ்ந்து – சீறா:2701/1
சோதி மெய் துகள் படா தூதரும் மரை – சீறா:2750/3
வென்றி கொள் மெய் அசையாது மெல்லென – சீறா:2753/2
அழுந்தி மெய் உற முதல் படுத்த அவ்வயின் – சீறா:2757/3
மேல் உற முகந்து முத்தி மெய் மயிர் சிலிர்ப்ப பூரித்து – சீறா:2776/3
திருத்திய பெயரும் வீறும் சிறப்பும் மெய் புதுமை பேறும் – சீறா:2794/2
விண் முகில் கவிகை நீங்கா மெய் ஒளி இருளின் மாயா – சீறா:2822/2
பிரிவில் இ வண்ணம் சின்னாள் உண்டு மெய் பெரிது பூரித்து – சீறா:2837/3
விண்ணவர்க்கு அரசர் கூறும் மெய் மொழி எவர்க்கும் கூறி – சீறா:2851/1
வருந்த மெய் நடந்த அவதியினாலும் மதீனத்தின் நசல் பெரிதாலும் – சீறா:2872/2
விலங்கி இனம் காத்து விலங்கினும் விலங்காய் திரிந்தனன் மெய் மறை முதியோர் – சீறா:2890/1
கலந்து நின்ற மெய் தோழரில் ஒருவர் கை ஆர – சீறா:2935/1
புள்ளி மெய் பிணையினை நோக்கி போனதால் – சீறா:2966/4
அரியவன் திரு மெய் தூதே அண்ணலே இறையோன் சோதி – சீறா:3071/1
பனி மலர் செழும் பாயலின் இருத்தி மெய் பணிந்து – சீறா:3142/2
வீசுவார் சிலர் வீசலின் மெய் வழி வழிய – சீறா:3148/2
துன்னிய களப சேற்றால் தடவி மெய் துலங்க செய்து – சீறா:3217/3
மெய் ஒளி பரப்பும் சோதி விரி சிறை ஒடுக்கி யார்க்கும் – சீறா:3222/1
வெற்றி சேர் அடல் உதுமானும் மெய் மன – சீறா:3252/3
மெய் ஒளி முகம்மது பிசுமில் ஓதினர் – சீறா:3291/2
வியர்வும் மெய் தொய்வும் பூண விசித்த கசையும் ஆகத்தின் – சீறா:3355/1
சூது அர மொழியார் சிந்தை தொட்ட மெய் எழில் சேர் வள்ளல் – சீறா:3359/3
பழுது இலாத மெய் முதலவன் பறுல் என பணியும் – சீறா:3362/1
விரை செய் மெய் நபி பாசறை அடுப்ப தென்மேல்-பால் – சீறா:3440/1
வெறி கமழ்ந்த மெய் முகம்மதின் திருமுனம் விடுத்தார் – சீறா:3443/4
முருகு அறாத மெய் முகம்மது திரு முகம் நோக்கி – சீறா:3445/2
மெய் உழன்று இறந்து கிடந்தவர் ஒரு பால் விலா புடைத்து இறந்தவர் ஒரு பால் – சீறா:3567/1
வெம் கதிர் நெடு வேல் ஊறுகள்பட மெய் வருந்திடா வீரரை போன்றும் – சீறா:3577/3
நடந்து நால் அடி வைத்திடில் பசந்த மெய் நலிய – சீறா:3738/2
முருகு உலாவும் மெய் புளகு எழ முக மதி இலங்க – சீறா:3740/3
கலன் கொள் மெய் ஒளி பிறழ்தர காலிது என்பவனும் – சீறா:3793/2
ஓடினார் சிலர் உள் மயங்கி மெய்
வாடினார் சிலர் வலிய கானினை – சீறா:3964/1,2
கலை உணர்ந்த மெய் கபீபு உரைத்திடும் – சீறா:3971/2
மெய் மறப்ப நம் முதுகு வெட்டிய – சீறா:3974/3
தூண்டும் பெயரோன் இவன் திரு மெய் தூதர் திருமுன் வந்தனனால் – சீறா:4039/4
வில் உமிழ்ந்து இருட்டினை வெருட்டும் மெய் நபி – சீறா:4073/3
ஆதரம் பெருக களபம் மெய் வீச அறிவொடு தருமமும் அகற்றும் – சீறா:4091/3
கண்ணில் நீர் ததும்ப மெய் என பேசும் கட்டுரை காதினில் கேட்டான் – சீறா:4099/1
அறிவினில் பொருவு இலாத மெய் பெரியோய் அவ மொழி யாவரும் அறிய – சீறா:4105/2
பிரியமுற்று அவனும் கேட்டு உளம் இயைந்து பிறழ்ந்து ஒளி வீசும் மெய் அணியோய் – சீறா:4107/3
பொன் திகழ் முலையார் ஆசை அம் கடலுள் புக்கி மெய் சோர்ந்து உழன்றனரோ – சீறா:4118/3
பரவி மெய் பதம் பற்றிட – சீறா:4147/2
விரைவின் மெய் கதிர் வீசிட – சீறா:4147/3
நாவினால் பல இரங்கி மெய் சோர்ந்து உளம் நலிய – சீறா:4166/3
கொண்டு மெய் உற போர்த்த பின் குலத்தவர் குழுமி – சீறா:4167/3
உருகி வாடி மெய் சோர்ந்து நெட்டுயிர்ப்பு எறிந்து இரங்கி – சீறா:4169/2
நலத்தின் மெய் கதி தரும் இசுலாமினை நணுகி – சீறா:4173/3
மரு மணம் கமழ் மெய் தூதர் மனம் என குளிர்ந்த காவும் – சீறா:4183/2
கால மொய்த்து எரிகளே இறைத்த சுடு கானல் வெப்பு மெய் பொறுக்கலாது – சீறா:4213/3
திங்கள் மெய் புகழ் விளங்கு வள்ளல் நபி சேனை அம் கடல் நடந்ததால் – சீறா:4216/4
இன்பம் முற்று உற ஈண்டிய மெய் தவம் – சீறா:4246/3
வன் திறத்து மனத்தவர் மெய் உளம் – சீறா:4248/2
தீனராகிய வீரரில் சிறந்த மெய் புகழார் – சீறா:4256/2
தாங்கிலாத அரு நோயினில் இடைந்து மெய் தளர்ந்து – சீறா:4259/1
ஆய மெய் மயிர் சிலிர்த்து உடல் தடித்து அடல் மிகுத்து – சீறா:4261/3
ஓடினர் மெய் முழுகு உதிரம் கால விழி பின் நோக்கி உழுக்க பாதம் – சீறா:4319/1
வானில் கதிர் போல் மெய் ஒளி மாயாது எழில் வீசும் – சீறா:4327/2
செற்றே குருதி சாறு குடித்தே மெய் சிவக்கும் – சீறா:4337/1
உயர் மெய் தவம் உடையீர் அருள் இரங்கீர் என உரைத்தாள் – சீறா:4346/4
பாகு ஒத்த மெய் மொழியார் முகம் நோக்கி பயம் இல்லா – சீறா:4349/3
திருகி நீண்டு அற வளைந்து எழு மருப்பின் மெய் செறிந்து – சீறா:4430/1
பவமொடு படிறும் வெகுளியும் துடைத்து பதவியின் அடைந்த மெய் புகழோய் – சீறா:4465/3
கூடும் மெய் புலி ஏறும் குதிரையே – சீறா:4499/4
வடி கதிர் மெய் சிறந்து ஒளிர மான்மதம் எங்கும் கமழ மறைகள் நாவின் – சீறா:4533/1
முப்புவியும் விளங்க வரும் மெய் பதவியும் அடைந்தேன் முழுதும் சூழ்ந்து – சீறா:4537/3
கேட்டனன் மெய் என கிலேசம் உற்றனன் – சீறா:4553/1
வேத நம் நபியே மெய் புகழ் நபியே வாய்ந்த – சீறா:4623/1
மெய் புகழின் சகுது-தமை தொழுவித்தார் அடக்குவித்தார் மேன்மையோரே – சீறா:4677/4
தள்ள அரிய மனத்து அறிவு-தனை அகற்றி மெய் மயக்கம் தந்து நட்பாய் – சீறா:4679/1
தேசு உறு மெய் நபி அவனை வேண்டுவன கேள் எனவே செப்பினாரால் – சீறா:4681/4
மெய் முகம்மதுவும் கண்டு விருப்பு உற வனசை கூவி – சீறா:4707/2
இடர் உறு மனத்ததாக எழுந்த ஒட்டகை மெய் பாச – சீறா:4732/1
மெய் எலாம் மெலிந்து காலின் விரைவு அற்று நெஞ்சு போக – சீறா:4733/3
உறை துளி இன்றி நாவும் உலர்ந்து மெய் புலர்ந்த மாதோ – சீறா:4746/4
குலவி மெய் பதறி பயம் மிகுத்து அதிர்ந்த குரலொடு மின்னி வாய் வெருவி – சீறா:4753/3
மெய் படும் இறசூலுல்லா விரும்பி நீராடும் முன்னர் – சீறா:4791/2
அழுது மெய் பதறி வாடி அலமரல் மிகுத்து கண்ணீர் – சீறா:4792/1
நறை கொள் வாய் மொழி கேட்டு நயந்து மெய்
பொறை கொள் ஒட்டை பொருக்கென்று எழுந்ததே – சீறா:4826/3,4
வாய் புலர்ந்து மெய் வாடி விழி ஒளி – சீறா:4831/1
கந்த நாறும் மெய் முகம்மதை கண்டு அவண் இருந்து – சீறா:4844/2
இவனும் அவ்வாறே கூற இடைந்து மெய் நடுங்கி தங்கள் – சீறா:4871/1
மெய் வணம் வருத்தி மிக வெய்துற உலைந்தே – சீறா:4897/2

மேல்


மெய்க்கு (3)

கட்டழகினராய் வீசும் கதிர் மதி வதனராய் மெய்க்கு
இட்ட கஞ்சுகராய் ஆண்மை இலங்கும் வாலிபராய் சோதி – சீறா:406/2,3
மெய்க்கு உற மாலம் யகுலம் எனுமட்டும் விளம்புவீர் என்று – சீறா:1267/3
விரை செய் சந்தனம் குங்கும கலவை மெய்க்கு இடு-மின் – சீறா:3113/4

மேல்


மெய்சிலிர்த்த (1)

திருப்புதற்கு அரிதாய் நின்று ஜின்கள் மெய்சிலிர்த்த அன்றே – சீறா:2264/4

மேல்


மெய்சிலிர்த்து (1)

விண்ணவர் உரைத்தவை கேட்டு மெய்சிலிர்த்து
உள் நிறை மகிழ்வொடும் உணர்ந்து தேர்ந்து இயல் – சீறா:1804/1,2

மேல்


மெய்த்த (2)

மெய்த்த உரை மறை பேரும் விண்ணினும் மண்ணினும் அறிய விளம்புவாய் என்று – சீறா:2188/3
வாசம் மொய்த்த மகுமூதும் மெய்த்த திறலியார்கள் மற்றவர்கள் மன்னவர் – சீறா:4218/2

மேல்


மெய்த்தலத்தில் (1)

மெய்த்தலத்தில் கஞ்சுகியும் மேல் கவசமும் விசித்து விரி தீ சூலம் – சீறா:4311/1

மேல்


மெய்ப்பட (1)

பாய்ந்து அயல் போய வனத்திடை ஒளித்து பங்கம் மெய்ப்பட பயப்படுமே – சீறா:54/4

மேல்


மெய்ப்பொடும் (1)

மெய்ப்பொடும் வெயர்வை சிந்த விலங்கல் விட்டு அகன்று போனார் – சீறா:2578/4

மேல்


மெய்ப்பொருள் (3)

தாங்கும் மெய்ப்பொருள் அறிவு அருள் குணம் தயவு இரக்கம் – சீறா:1278/1
மெய்ப்பொருள் மறைக்கு நாயக பொருளே விண்ணவர் உயிரினுக்கு உயிரே – சீறா:2324/1
தக்க மெய்ப்பொருள் எமர்-தமக்குள் ஆவியின் – சீறா:2418/3

மேல்


மெய்ப்பொருளாய் (2)

அரிய மெய்ப்பொருளாய் அளவிடற்கு அரியோன் அருளினன் அமரர்கள் சுவர்க்க – சீறா:235/1
காயிம் என்பவன்-தன் கண் இணை மணியாய் கருத்தின் உள் உறைந்த மெய்ப்பொருளாய்
சேய் என பிறந்தேன் இசைபெற காம்மா என்னும் அ பெயரினன் சிறியேன் – சீறா:2305/1,2

மேல்


மெய்ப்பொருளினை (1)

உடலினுக்கு உயிராய் உயிரினுக்கு உடலாய் உறைந்த மெய்ப்பொருளினை புகல்வாம் – சீறா:4/4

மேல்


மெய்ப்பொருளே (1)

பூதரத்து உறைந்த முழு மணி சுடரே புண்ணியம் திரண்ட மெய்ப்பொருளே – சீறா:1930/4

மேல்


மெய்ப்பொருளை (3)

சிறந்த மெய்ப்பொருளை அழிவிலா மணியை தெரிந்து மு காலமும் உணர்ந்து – சீறா:2/1
செவி ஆர மெய்ப்பொருளை அறிவார் மனத்தின் உறு செயல் கேடு அகற்றிவிடுவார் – சீறா:6/2
அரிய மெய்ப்பொருளை முறைமுறை வணங்கி அற்றையில் கடன்கழித்து அமரர் – சீறா:1939/3

மேல்


மெய்ம்மறை (3)

மீட்டும் மெய்ம்மறை நூல் மாற்றம் விரித்து எடுத்து இயம்பும் என்றார் – சீறா:1265/4
வடித்த மெய்ம்மறை நம் நபி வாக்கினில் – சீறா:1403/1
விண்ணினில் பெரியோர் ஆய்ந்த மெய்ம்மறை தனக்குள் தேர்ந்த – சீறா:1545/2

மேல்


மெய்ம்மறையின் (1)

உறைந்த மெய்ம்மறையின் தீம் சொல் முகம்மது ஆண்டு உரைப்ப செவ்வி – சீறா:1269/1

மேல்


மெய்மறந்தார் (1)

விண்டு உரைத்திடாது இருவரும் மயங்கி மெய்மறந்தார் – சீறா:333/4

மேல்


மெய்மறந்து (1)

அகம் தயங்கி மெய்மறந்து எழில் அப்துல் முத்தலிபு – சீறா:474/1

மேல்


மெய்மை (7)

விண்டிலார் எதிர் விழித்திலார் அதனை மெய்மை ஓரும் அபுபக்கர் தாம் – சீறா:1430/3
மெய்மை சூழ் கடலினும் விளங்கி தோன்றுமால் – சீறா:1818/2
விண்ணுலகு இழந்து மெய்மை விதி மறை-தனக்கு நாணி – சீறா:2260/2
வேதமும் இறங்கின மெய்மை வேதத்தின் – சீறா:2980/3
ஆதரம் பெருக ஆதி அருளின் வான் இழிந்து மெய்மை
தூதரினிடத்தில் வந்தார் துணை எனும் ஜிபுறயீலே – சீறா:3069/3,4
விதி தவறு இலம் என மெய்மை பேசிலா – சீறா:4072/3
மெய்மை புகழ் நபி நாதரும் மிகு சேனையும் அப்பால் – சீறா:4329/3

மேல்


மெய்மையும் (1)

வீரமும் தவமும் வாய்த்த மெய்மையும் அறிவும் நீதி – சீறா:4630/1

மேல்


மெய்மையே (1)

விண்டு உரைத்தனை மெய்மையே என்றான் – சீறா:3977/4

மேல்


மெய்மையோர் (1)

விறல் அபித்தாலிபு என்னும் மெய்மையோர் மனையின் முன்னும் – சீறா:1128/2

மேல்


மெய்யவர் (1)

சவி கொள் மெய்யவர் வருவர் இங்கு என இருந்தனனால் – சீறா:2913/4

மேல்


மெய்யா (2)

நஞ்சினை அமைத்து மெய்யா நாட்டம் என்று உரைத்த கண்ணாள் – சீறா:3931/1
மிண்டு வல் வினை மூட்டுமோ அறிகிலம் மெய்யா – சீறா:4608/4

மேல்


மெய்யாமோ (1)

மெய்யாமோ சரதம் எனில் இறையவன்-தன் மேல் ஆணை விளம்பும் என்ன – சீறா:4683/1

மேல்


மெய்யாய் (1)

வாள் ஒளி பரந்த மெய்யாய் வகை பிறிது இல்லை என்றாள் – சீறா:4796/4

மேல்


மெய்யார் (1)

கார் எழில் குடையார் நானம் கமழ் திரு மெய்யார் உம்மை – சீறா:4691/3

மேல்


மெய்யான் (1)

உட்பட வளர்த்த மெய்யான் உறு மொழி அறுதி இல்லான் – சீறா:1040/2

மேல்


மெய்யிடத்தினில் (1)

வில் உமிழ்ந்த மெய்யிடத்தினில் அழகுற விசித்து – சீறா:3824/2

மேல்


மெய்யிடம் (1)

மன்னும் மெய்யிடம் விடுத்த நல் உயிர் என வந்தார் – சீறா:2704/3

மேல்


மெய்யில் (9)

ஈறு_இலான் நபியாய் தோன்றும் எழில் முகம்மது-தம் மெய்யில்
மாறு இலா கதிர் உண்டாகி மான்மதம் கமழும் என்றும் – சீறா:627/1,2
கலை மதி பொருவா மெய்யில் கதிர் புடை விலகி மின்ன – சீறா:817/2
படி புகழ் கதீஜா மெய்யில் பசலை பூத்து எழுந்த காம – சீறா:1048/3
மெய் அணி குப்பாயத்தை வியன் பெற மெய்யில் சேர்த்தார் – சீறா:1760/4
மரு மலர் புயத்தில் தாங்கி வளர் நபி சீது மெய்யில்
தரு கதிர் உத்தரீயம்-தனை எடுத்து அணிந்தார் அன்றே – சீறா:1761/3,4
பாரினில் எவர்க்கும் தோன்றிட மதியம் பழம் மறை முகம்மதின் மெய்யில்
போர்வையில் புகுந்து அங்கு உரன் நடு இருந்து பொருவு அற இரு பகுப்பு ஆகி – சீறா:1923/1,2
தொயில் வரை மெய்யில் பூழ்தி பூத்ததும் துடையா காம – சீறா:3188/3
மெய்யில் சோட்டினில் தாங்கின கடுப்பினில் வெகுண்டு – சீறா:3521/2
குற்றம் இல் அழகு மெய்யில் கொழும் படைக்கலன்கள் தாக்கி – சீறா:3843/3

மேல்


மெய்யின் (11)

வேய்ந்த மெய்யின் மாசு அணுகாததும் விறலோன் – சீறா:556/3
பூத்த கொம்பு அனைய மெய்யின் நாண் எனும் போர்வை போர்த்து – சீறா:637/2
இந்து எழில் மழுங்கும் சோதி இறையவன் தூதர் மெய்யின்
கந்தம் ஊடு உலவி எங்கும் மறுவியே கமழ்ந்தது அன்றே – சீறா:925/3,4
மாசு அற உதித்த வள்ளல் அகுமதின் அழகு மெய்யின்
வீசுவ போன்று தோன்றி விளங்குதல் பலவும் கண்டார் – சீறா:933/3,4
பெருக்கொடு திரண்டு நல் நீர் குடைதலின் பிறங்கு மெய்யின்
திரு கிளர் கலவை சேறு நானமும் புழுகும் சேர்ந்து – சீறா:934/2,3
விரிந்து நன் கதிர் குலவிய முகம்மது மெய்யின்
எரிந்த சந்தன சேறு பன்னீரொடும் குழைத்து – சீறா:972/2,3
மெய்யின் வெண் துகில் கஞ்சுகி அணிந்து அடல் விளைந்த – சீறா:1705/1
மை வண்ண கவிகையார் மெய்யின் மான்மதம் – சீறா:1827/2
சேய் அலி மெய்யின் வாய்ந்த திரு வடிவு அழகை நோக்கி – சீறா:3182/2
கலன் பல அணிந்த மெய்யின் அழிந்திடும் கலவை சேறும் – சீறா:3380/2
மெய்யின் ஆயுதம் சேர்த்து வந்தால் அமர் மேவி – சீறா:3833/1

மேல்


மெய்யின (1)

தேய்ந்த மெய்யின ஒட்டைகள் விரைந்தன எழுந்தே – சீறா:4253/4

மேல்


மெய்யினர் (2)

எதிர் அமர்-தொறும் தழும்பு இருந்த மெய்யினர்
கதிர் அயில் வாள் மறவாத கையினர் – சீறா:3031/1,2
கரிந்த மெய்யினர் திரள் துணை தாளினர் கபடம் – சீறா:3788/3

மேல்


மெய்யினள் (1)

திரைக்கு மெய்யினள் மனை புறம் செறி மயிர் கொறி ஒன்று – சீறா:2684/1

மேல்


மெய்யினன் (1)

மிடியினன் பசி அடைத்திருக்கும் மெய்யினன்
பிடி விரல் உருவு இலா பீறல் ஆடையன் – சீறா:3236/2,3

மேல்


மெய்யினிடத்து (1)

இருந்துளது ஆதம் மெய்யினிடத்து அவதரித்து தொல்லை – சீறா:824/2

மேல்


மெய்யினில் (7)

கஞ்ச மென் மலர் தாள் நிலம் புடைபெயர்வும் கமழ்தரு மெய்யினில் குறியும் – சீறா:275/2
மறைதரா சோதி முகம்மது நயினார் வடிவுறு மெய்யினில் துகளும் – சீறா:370/1
முத்திரை ஒன்று உள முழுதும் மெய்யினில்
பத்தி விட்டு ஒளிர்வன பாதம் பார் உறா – சீறா:507/1,2
பூட்டும் வில் கர முகம்மது மெய்யினில் பொங்கி – சீறா:866/3
மேனியில் கதிர் விரி வியப்பும் மெய்யினில்
மான்மதம் கமழ்தலும் வடிந்த கைகளும் – சீறா:902/1,2
வேற்றிடம் புகா புக்கினும் மெய்யினில் வெதுப்ப – சீறா:969/3
பொறி நிகர் பொருவா செழும் குழை அமிர்த பொலன் தொடி மெய்யினில் பூசி – சீறா:1205/2

மேல்


மெய்யினும் (3)

விருத்த பூம் துகிலும் மணி மெய்யினும்
பருத்த கொங்கையினும் புவி பாவையர் – சீறா:1182/2,3
வெள்ளை மென் துகிலால் சிரசிடம் புலர்த்தி வில் உமிழ் மெய்யினும் விளக்கி – சீறா:3154/1
உக்கிரத்தினில் இருவர் மெய்யினும் ஒழுகு உதிரம் – சீறா:3543/2

மேல்


மெய்யினை (1)

மெய்யினை பொய் என்று ஓதல் யாவர்க்கும் விதியது அன்றே – சீறா:1554/2

மேல்


மெய்யும் (7)

விரி கதிர் பரந்த மெய்யும் விறல் குடியிருந்த கையும் – சீறா:635/3
மேக குடை நிழலும் கதிர் விரிவாகிய மெய்யும்
பாகத்திடை கமழும் பரிமளமும் மதி முகமும் – சீறா:983/1,2
குறு வெயர் புதித்த மெய்யும் கொழும் தசை மணத்த வாயும் – சீறா:2057/1
சொரி நறை கமழ்ந்த மெய்யும் சூல் முகில் கவிகையோடும் – சீறா:2059/2
காலும் தோளும் முகமும் மெய்யும் களமும் கை – சீறா:3921/3
மெய்யும் தாளும் பொன் நெற்றியும் துண்டமும் வெரிநும் – சீறா:3999/2
மெய்யும் வேர்வு எழ சலித்தனர் வெதும்பினர் மேன்மேல் – சீறா:4407/2

மேல்


மெய்யுற (2)

கான் கிடந்த மெய்யுற முத்தமிட்டு உடல் களிப்ப – சீறா:347/3
படு கொலை புலி மெய்யுற பணிந்து இவர் பாதத்து – சீறா:767/1

மேல்


மெய்யுறு (1)

நெடுகி கட்டு உரத்து இறுகிய கண்டமும் நிமிர்ந்த மெய்யுறு கூனும் – சீறா:661/2

மேல்


மெய்யே (1)

வேந்தர்-தம் கருத்தும் முன்னோர் விளம்பியது எல்லாம் மெய்யே
ஆய்ந்து நான் பார்த்து வந்தேன் களங்கம் ஒன்று இல்லையாமால் – சீறா:4870/2,3

மேல்


மெய்யை (1)

வேட்டவர்-தம்மை கூவி மெலிந்த ஒட்டகை-தன் மெய்யை
போட்டு உயிர் போகும் மட்டும் புனலுடன் இரையும் நல்கி – சீறா:4737/2,3

மேல்


மெல் (40)

சிறுநகை தரள பவள மெல் இதழில் செழு மலர் கைவிரல் குவித்து – சீறா:53/3
கூந்தல் அம் பிடி மா மெல் நடை பயிலும் குட முலை கடைசியர் செழும் கை – சீறா:54/1
காந்தள் மெல் விரற்கும் கடு வரி விழிக்கும் கடைந்து இணைக்கிய கணை காற்கும் – சீறா:54/2
விலங்கி வள்ளையில் விழி என கிடப்ப மெல் அரும்பு – சீறா:64/2
வாய்ந்த மெல் இழை மடந்தையர் தடத்தின் மெய் வருந்த – சீறா:67/1
திருந்து மெல் இழை மடந்தையர் புனலிடை திளைப்ப – சீறா:68/1
விரியும் மெல் இழை பூணொடு பூண் பல மிடைந்து – சீறா:70/3
சிறுத்த மெல் இடை பருத்து இருந்தில திரு உதரம் – சீறா:228/1
காந்தள் மெல் இதழ் பசும் தொடி கரத்தினால் விரைவின் – சீறா:335/2
மெலிந்த மெல்_இழை சடம் பருத்து ஓங்கின வீங்கி – சீறா:336/2
வாடு மெல் இழை பாதி நுண் இடை மயில் அலிமா – சீறா:436/1
வஞ்சி மெல்_இடை வாட்டமும் நடுக்கமும் வாச – சீறா:453/1
விரை தகா குழல் கதீஜா மெல்_இழை நினைவு நெஞ்சும் – சீறா:646/2
துன்னும் மெல் இதழ் வனசமும் பானலும் சுரும்பு உண்டு – சீறா:868/1
மிகு புகழ் குவைலிது ஈன்ற மெல்_இயல் களிப்பு பொங்க – சீறா:1036/2
மெல்_இயல் கனவு கண்டு விழித்து எழுந்திருந்து நெஞ்சை – சீறா:1056/1
பிடி ஆரும் மெல் நடை கொம்பினை கதீஜா என தமியேன் பெற்ற பேறை – சீறா:1085/3
உவரி மெல் நுரை போலும் வெண் துகில் விரித்து உடுப்பார் – சீறா:1121/1
கந்த மெல் நறும் பொடியொடு விரை எழ கலக்கி – சீறா:1122/2
சந்த மெல் நறை மெழுக்கிடும் தலத்திடை தயங்க – சீறா:1124/2
கான் நறு மல்லிகை கமல மெல் இதழ் – சீறா:1137/1
வெண் திரை கடலில் அமுதமும் பொருவா வியனுறு மெல் இதழ் கதீஜா – சீறா:1250/1
திறக்க மெல் இதழ் வெய்யவன் எழுந்த பின் திருவும் – சீறா:1280/2
மெல் இலை கானத்து ஏகி விலங்கு இனம் வேலில் தாக்கி – சீறா:1490/1
பண் எலாம் சுவற்றி ஆடவர் இரு கண் பார்வையில் செவந்த மெல் இதழாள் – சீறா:1960/4
விரி கதிர் மணி பூண் தாங்கும் மென் கழுத்தாள் வேயினை கரும்பை மெல் அணையை – சீறா:1964/2
மலி சினை கெளிற்றின் வனப்பினும் வனப்பாய் மணி அணி சுமந்த மெல் விரலாள் – சீறா:1965/2
விரி கதிர் மணிமேகலை நடு கோத்து விளங்கிட நுடங்கு மெல் இழையோ – சீறா:1969/2
குருசில் நம் நபி கொழும் கமல மெல் அடி – சீறா:1977/2
அன்னம் அன்ன மெல் நடையினர் சிறுவர்கள் அல்லால் – சீறா:2024/1
மெல் அணை படுத்து அங்கு இருந்தவர் போல வருகுவன் விரைவினில் பசி ஏது – சீறா:2519/3
பஞ்சின் மெல் அணை விடுத்து அரும் பரலினில் படுத்த – சீறா:2638/1
வாய்ந்த மெல் இடை இடையர்-தம் குலத்து உறு மடவாள் – சீறா:2692/1
வட்ட ஒண் தவிசின் மேல் வதிந்த மெல் அணை – சீறா:2759/2
விண்-கணின் அமரர் யாரும் மெல் அடி பரவி போற்றும் – சீறா:3417/1
வெடித்து மண்டையின் மூளைகள் சொரிய மெல் இதழை – சீறா:3488/1
வருந்து மெல் இழை கொடியை மென் பிடி நடை மயிலை – சீறா:3731/3
முரியும் மெல் இடை தெரிதர கருப்பமும் முதிர்ந்த – சீறா:3737/4
விரைவின் ஏகிலாது அலக்கணுற்று அலைந்து மெல் அடியாய் – சீறா:4257/2
சிறு மெல் அடி மயில் ஆயிசா களம் மீதினில் சிறந்த – சீறா:4328/2

மேல்


மெல்_இடை (1)

வஞ்சி மெல்_இடை வாட்டமும் நடுக்கமும் வாச – சீறா:453/1

மேல்


மெல்_இயல் (2)

மிகு புகழ் குவைலிது ஈன்ற மெல்_இயல் களிப்பு பொங்க – சீறா:1036/2
மெல்_இயல் கனவு கண்டு விழித்து எழுந்திருந்து நெஞ்சை – சீறா:1056/1

மேல்


மெல்_இழை (2)

மெலிந்த மெல்_இழை சடம் பருத்து ஓங்கின வீங்கி – சீறா:336/2
விரை தகா குழல் கதீஜா மெல்_இழை நினைவு நெஞ்சும் – சீறா:646/2

மேல்


மெல்ல (7)

தீங்கு உறு மனத்தன் ஏகி செறித்த மேல் பலகை மெல்ல
வாங்கி அங்கு இருந்த கல்லை வரை புயம் பிதுங்க உன்னி – சீறா:941/1,2
தாங்கலில் உருட்டி மெல்ல தள்ளினன் தள்ளலோடு – சீறா:941/3
மரை தட பதத்தை மெல்ல வாங்கினர் வாங்க சோதி – சீறா:2602/2
அவ்விடம் அகன்று மெல்ல அடி பெயர்த்து ஒதுங்கி நீங்கி – சீறா:3702/1
மெல்ல அமைத்து போரினை நீத்து வெளியுற்று – சீறா:3924/2
மெல்ல நின்று நின்று அசைந்து அசைந்து உணர்வு மேலாட – சீறா:4000/1
வேய் உரை கேட்டலும் வேந்தர் மெல்ல வெம் – சீறா:4058/1

மேல்


மெல்லமெல்ல (1)

வீழ்த்தனள் அறிவை நாண விருப்பினால் மெல்லமெல்ல
ஈழ்த்தனள் வாராதாலோ என்னையோ பாலில் சூழ்ந்து – சீறா:3197/2,3

மேல்


மெல்லவன் (1)

மெல்லவன் கதிர் மறைதரு குற்றுடைவாளொடும் இனிது ஈந்தார் – சீறா:662/3

மேல்


மெல்லவே (1)

மெல்லவே பொருந்திடாமல் விரைந்து ஒரு வசனம் சொல்வான் – சீறா:4879/4

மேல்


மெல்லிய (1)

மெல்லிய சிறை புளும் விலங்கு இனங்களும் – சீறா:1602/3

மேல்


மெல்லியன் (1)

விடைக்குள் மெல்லியன் இளமையன் தனியவன் வினையேன் – சீறா:1527/2

மேல்


மெல்லிழையார் (1)

வாய்த்த மெல்லிழையார் தீற்று மணி ஒளி மறுகு-தோறும் – சீறா:3131/3

மேல்


மெல்லென (3)

காமரு மலர் தாள் மெல்லென வருடி கதிர் மணி தொட்டிலை ஆட்டி – சீறா:372/3
மெல்லென செவந்த மணியினில் பிரித்து விளக்கி ஒப்பித்து வைத்தன போல் – சீறா:1961/2
வென்றி கொள் மெய் அசையாது மெல்லென
ஒன்றிய தாளினை ஒடுக்கி நீள்தரும் – சீறா:2753/2,3

மேல்


மெல (3)

கொண்டு மென் மெல நடந்து தன் பெரும் சிரம் குனிந்து – சீறா:763/2
நிறைந்து நோக்கலும் மெல நடந்து நீடு ஒளி – சீறா:2754/2
பல திசையினும் மெல பார்த்து இ இல்லினும் – சீறா:3639/1

மேல்


மெலமெல (4)

நையும் மென் தலை நடுக்கொடு மெலமெல நடந்தே – சீறா:458/4
விண்டு உதிர்த்த மெய் வியர்ப்பொடு மெலமெல நடந்து – சீறா:1542/3
மண்ணகம் நோக்கி மெலமெல தாழ்ந்து மக்க மா நகரியில் ககுபா – சீறா:1917/2
விடுத்தனன் பரலால் மெலமெல நடந்து ஓர் விரி மலர் சினை தரு நிழலில் – சீறா:2883/3

மேல்


மெலிகுவர் (1)

வெருவுவர் உள்ளம் தேறா மெலிகுவர் இவர் யார் என்ன – சீறா:409/3

மேல்


மெலிதர (2)

விடம் தயங்கிய கண் இணை மடவாரும் மெலிதர செல்லும் அ காலை – சீறா:357/2
அடை உடைத்து எறியும் கோல் உடை தொறுவர் அனைவரும் மெலிதர வீழ்த்தி – சீறா:5018/3

மேல்


மெலிந்த (5)

மெலிந்த மெல்_இழை சடம் பருத்து ஓங்கின வீங்கி – சீறா:336/2
வெயில் படு மலரின் வாடி மென்மையின் மெலிந்த அன்றே – சீறா:3061/4
வித்தகர் தளர உள்ளம் மெலிந்த யாசகரை போலும் – சீறா:4725/4
வேட்டவர்-தம்மை கூவி மெலிந்த ஒட்டகை-தன் மெய்யை – சீறா:4737/2
அளவிடற்கு அரிய வாழ்வும் அழிந்திட மெலிந்த பின்னர் – சீறா:4786/4

மேல்


மெலிந்தது (1)

அரிவையர் கற்பும் இன்றி அகலிடம் மெலிந்தது அன்றே – சீறா:4747/4

மேல்


மெலிந்தவர் (1)

வெளி வர அரிதாய் இருந்தவரலது மெலிந்தவர் இளைஞர்கள் எவரும் – சீறா:4757/3

மேல்


மெலிந்தவர்கள் (1)

மீறு பரலால் அடி மெலிந்தவர்கள் ஆவி – சீறா:4891/3

மேல்


மெலிந்தன (1)

வேற்று ஒரு நகர்க்கும் செலவு அரிதாகி மெலிந்தன உலகினில் எவையும் – சீறா:4758/4

மேல்


மெலிந்திருந்த (1)

வீங்கினர் போர் கிடைத்தது என அடிக்கடி போய் மெலிந்திருந்த விலங்கல் தோள்கள் – சீறா:4310/2

மேல்


மெலிந்து (10)

உலைதர உடல் மெலிந்து உருகி வாடுமால் – சீறா:1021/4
ஓயா காற்றின் சருகு என்ன ஒதுங்கி மெலிந்து புறங்காட்டி – சீறா:4029/1
கறுபு தரு சேய் மெலிந்து புறங்காட்டும் அறபி தளத்தோடும் – சீறா:4035/1
தேங்கின் நாள்-தொறும் மெலிந்து வன் மூப்பினில் தேய்ந்த – சீறா:4259/3
வெம் பசி தீண்டி நாளும் மெலிந்து கண் துயிலும் வாள் வேல் – சீறா:4371/1
விசையினோடும் வந்து அடித்தலும் குளிரினால் மெலிந்து
குசை கொள் வாம் பரி ஒட்டகம் எருதொடு கொடுகி – சீறா:4583/2,3
மெய் எலாம் மெலிந்து காலின் விரைவு அற்று நெஞ்சு போக – சீறா:4733/3
ஊன் அற மெலிந்து புலால் பொதிந்திருந்த உடலமும் என்பு உரு ஆகி – சீறா:4748/1
மேல் நிமிர் ஒளி போய் கரங்கள் தாள் அதைத்து மெலிந்து இறந்தனர் சிலர் சிலபேர் – சீறா:4748/2
விட்ட அ கணைகளால் மெலிந்து மன்னவர் – சீறா:4947/1

மேல்


மெலிபவரும் (1)

விடுதியன்றி மற்றிடம் வராது உளம் மெலிபவரும்
குடிகள் விட்டு வீதியினிடம் வந்தவர் குளிரின் – சீறா:4586/2,3

மேல்


மெலிவது (1)

வெருவரல் பெரிதாய் மெலிவது தவிர மேன்மையும் வளமையும் கொடுக்க – சீறா:4760/3

மேல்


மெலிவார் (1)

விரிந்த வாய் புலர்ந்து ஏங்கிய மனத்தொடு மெலிவார் – சீறா:958/4

மேல்


மெலிவாள் (1)

வெயில் பட்டிடும் மலர் ஒத்து அற மெலிவாள் உளம் அதனால் – சீறா:4346/2

மேல்


மெலிவு (2)

மெலிவு இலாத சொல் கேட்டலும் கம்மியன் வெகுண்டு அ – சீறா:970/1
மெலிவு இலாது வளர்த்திடல் வேண்டுமால் – சீறா:1396/4

மேல்


மெலிவும் (1)

மெலிவும் எண்ணமும் கவலையும் விரைந்து எடுத்து எறி-மின் – சீறா:1879/1

மேல்


மெலிவுளேன் (1)

மெலிவுளேன் நலிதல் மாற்றவேண்டும் என்று இதனை சொன்னார் – சீறா:4288/4

மேல்


மெலிவை (1)

அலக்கணுற்று அழுது நின்ற அரிவை தன் மெலிவை எல்லாம் – சீறா:4795/3

மேல்


மெலிவொடு (1)

வருத்தம் நாட்குநாள் முற்றி மெய் மெலிவொடு மயங்கி – சீறா:2193/1

மேல்


மெலிவோரும் (1)

மரத்தினை அடுத்து உளம் வருந்தி மெலிவோரும் – சீறா:4895/4

மேல்


மெழுக்கிட்டு (1)

வடி சுதை மெழுக்கிட்டு ஓங்கி வளர்ந்த மண்டபத்தின் சார்பில் – சீறா:1171/1

மேல்


மெழுக்கிடும் (1)

சந்த மெல் நறை மெழுக்கிடும் தலத்திடை தயங்க – சீறா:1124/2

மேல்


மெழுக்கெறிந்து (1)

சந்தனம் பனிநீர் சிந்தி தரை மெழுக்கெறிந்து சோதி – சீறா:1743/2

மேல்


மெழுகாய் (1)

ஒழுகு மென் மெழுகாய் உறு கருத்து அழிந்து உடைந்து – சீறா:470/2

மேல்


மெழுகிடுவார் (2)

சுந்தர கதிர் மடந்தையர் சுதை மெழுகிடுவார் – சீறா:1103/4
இருந்த வாய்-தொறும் உரு தெரிதர மெழுகிடுவார் – சீறா:3119/4

மேல்


மெழுகு (3)

காய் கனல் மெழுகு என கருத்து சிந்திட – சீறா:1029/3
உருகும் மென் மெழுகு ஆக்கினர் செறுநர் நெஞ்சு உருக – சீறா:1850/4
உலையில் இடு மெழுகு ஆகி என் செய்வோம் இதற்கு என நின்று உருகினானால் – சீறா:2668/4

மேல்


மென் (179)

அன்ன மென் சிறை பெடையொடும் குடம்பை விட்டு அகல – சீறா:35/3
வெட்டுவார் சிலர் மென் கரத்து ஏந்தியே வரம்பு – சீறா:41/3
வெள்ள நீர் பரப்பு கழனிகள்-தோறும் மென் கரும் சேறு செய்தனரே – சீறா:43/4
வனச மென் முகையில் பொறி வரி அறு கால் வண்டு மொய்த்திருப்பது போலும் – சீறா:51/4
பற்றும் மென் கரத்தில் கரும்பொனின் கடகம் பசிய நெற்பயிர் ஒளி பாய – சீறா:52/3
வெறி மது அருந்தி மரகத கோவை மென் பிடர் கிடந்து உருண்டு அசைய – சீறா:53/1
விரி மலர் கமல பாயல் விட்டு அகல மென் சிறை பேட்டு அனம் துடிப்ப – சீறா:55/2
அசைந்த சிற்றிடை மென் கொடி வருந்திட நீள் அணி வடம் மார்பிடை புரள – சீறா:59/1
ஆலவட்டம் ஒத்திருந்த மென் சிறை விரித்து ஆடும் – சீறா:62/4
துலங்கு மென் முலை தோன்றிட பச்சிலை துகில் போர்த்து – சீறா:64/3
சொரியும் மென் மலர் தாதுக்கள் உதிர்ந்தன சுடர் மின் – சீறா:70/2
பண் இருந்து ஒழுகும் மென் மொழி குதலை பாவையர் செழும் குழல் விரித்து – சீறா:89/2
மெய் பெரும் கலிமா_விரல் நடு_விரல் மென்_விரல் சிறு_விரல் பெருவிரல்கள் – சீறா:129/3
பம்பு மேகலை தரித்து மென் கர வளை பரித்து – சீறா:194/3
நெறித்த வார் குழல் இறுக்கி மென் மலர் பல நிறைத்து – சீறா:195/1
கண்டு மென் கொடி ஆமினா தாமரை காலின் – சீறா:197/2
உரிய மென் மயிலே நினது உதரத்தில் உறைந்தோர் – சீறா:199/2
கூறு மென் கரும்பே நின்றன் வயிற்று உறு குழந்தை – சீறா:200/2
சோதி மென் முகம் இலங்கிட துயில்வ போன்று இறந்தார் – சீறா:207/4
கந்த மென் குழல் கருப்புமும் முதிர்ந்தன காலம் – சீறா:226/3
இருந்த பூப்பு ஒன்றுமே கண்டில கனி மென்
பண் இருந்த வாய் வெளுத்தில பலன் பெறும்படியே – சீறா:227/3,4
சந்த மென் முக தாமரை மலர் குளிர தடம் சிறை வானவர் திரண்டு – சீறா:265/3
வஞ்சி மென்_கொடியின் முக மலர் கவினும் மருங்கினில் விசித்த பட்டு உடையும் – சீறா:275/1
கஞ்ச மென் மலர் தாள் நிலம் புடைபெயர்வும் கமழ்தரு மெய்யினில் குறியும் – சீறா:275/2
கொஞ்சும் மென் மொழியீர் மதலையை கொணர்க என்று உரைத்தனர் குளிர் மழை கொடையார் – சீறா:275/4
குறை அற மென் முலை கொடுத்து கூலிக்கா – சீறா:316/2
உலந்த சூகை மென் முலை திரண்டு அழகு ஒழுகினவே – சீறா:336/4
அடர்ந்த மென் முலை கண் திறந்து ஒழுகின அமுதம் – சீறா:337/4
பாகு இருந்த மென் மொழி அலிமா வல பாக – சீறா:338/1
சூகை மென் முலை திரண்டதும் பால் துளும்பியதும் – சீறா:338/2
தேற்று மென் மொழி பல எடுத்து ஆமினா செப்பி – சீறா:349/3
தேன் அவிழ் பதும மென் மலர் செழும் தாள் திருந்து_இழை களிப்பொடும் கொடுத்தாள் – சீறா:383/4
பிள்ளை மென் கனியே செல்வம் பெறும் தவ பலனே எந்தம் – சீறா:394/1
துள்ளும் மென் மறிகள் மேய்ப்ப தொடர்ந்தனர் காட்டில் என்றார் – சீறா:394/4
விரை மலர் செருகும் கூந்தல் மென் கொடி அலிமா கேட்டு – சீறா:396/2
படியகம் கெண்டி செம்பொன் பதும மென் கரத்தில் ஏந்தி – சீறா:407/1
வன்ன மென் மலர் கரம் நெரித்து உதரத்தில் வைத்து – சீறா:449/2
கஞ்ச மென் முக கோட்டமும் கண்ணின் நீர் கவிழ்ப்பும் – சீறா:453/2
கொஞ்சு மென் மொழி குழறிட புலம்பிய குறிப்பும் – சீறா:453/3
நையும் மென் தலை நடுக்கொடு மெலமெல நடந்தே – சீறா:458/4
திருந்து மென் மலர் கொடி_இடை கேட்டி நின் சிந்தை – சீறா:460/1
ஒழுகு மென் மெழுகாய் உறு கருத்து அழிந்து உடைந்து – சீறா:470/2
கொழு மடல் செழும் கமல மென் மலர் முகம் கூம்பி – சீறா:470/3
அன்ன மென் தூவியின் அரிய வெண் துகில் – சீறா:502/3
பால் உற செழும் கதிர் பரப்பி மென் கணைக்கால் – சீறா:505/1
அரும்பு மென் மலர் தொடை திரள் புய அபித்தாலிபு – சீறா:560/1
வெடித்த மென் மலர் தேனை உண்டு இன வெறி சுரும்பு – சீறா:561/1
சீத மென் தடம் புனை புசுறாவினை சேர்ந்து – சீறா:569/2
சூத மென் பொழில் வளைதரு ஷாமினை சூழ்ந்த – சீறா:572/2
பச்சை மென் மலர் இதழ் கொடு துடைத்திடும் படி போல் – சீறா:578/2
சொரியும் மென் கதிர் ஆதனத்து இருத்தி நம் தூய் மலர் பதம் நோவ – சீறா:651/2
இனிய வாசகம் இரு துளை செவி புக இதய மென் மலர் போத்த – சீறா:656/1
வனச மென் மலர் முகம் மலர்ந்து இருந்தனர் மருவலர் அரி ஏறே – சீறா:656/4
வடி நறா உடைந்து ஒழுகும் முக்கனியுடன் மதுர மென் மொழி கூறி – சீறா:657/3
புனையும் மென் துகில் கஞ்சுகி சிரத்தணி போல்வன பல ஈந்து – சீறா:658/3
பரிசனங்களும் வணிகரும் சூழ்தர பாத மென் மலர் பாரில் – சீறா:668/3
மதுர மென்_மொழியான் உத்துபா அலது மறுத்து எவர் உளர் என தேர்ந்தார் – சீறா:675/4
கூறும் மென்_மொழியான் உத்துபா என்னும் குரிசில் பின் யாவரும் நடந்து – சீறா:676/1
வேறுபட்டு உலர்ந்த மரம் எலாம் தழைத்து மென் தழை குளிர்தர பூத்து – சீறா:697/3
கொண்டு மென் மெல நடந்து தன் பெரும் சிரம் குனிந்து – சீறா:763/2
சந்த மென் மணி கரத்தினால் சிரம் முகம் தடவி – சீறா:765/4
துன்று மென் மதி முகம் துலங்கிட வெகு தூரம் – சீறா:769/1
இரலை மென் பிணை கன்றுடன் திரிந்த கான் ஏகி – சீறா:787/2
கரிய மென் கனி சொரிதரும் பொழிலையும் கடந்தார் – சீறா:787/4
பூத்த மென் மலர் செறிதரு பொழில் புடை சூழ – சீறா:788/2
நிறை மலர் தலைகள் சாய்த்து நீண்ட மென் தளிர் கை-தன்னால் – சீறா:801/3
விரி பசும் தோடு விண்டு மென் முகை அவிழ்க்கும் பூவின் – சீறா:802/1
விரிந்து பூ சிந்தி காய்த்து மென் கனி சிதறிற்று அன்றே – சீறா:820/4
சுரி கரும் குழல் வெண் நகை பசிய மென் தோகை – சீறா:835/1
கந்த மென் மலர் கமழ்ந்திட அடக்கினர் ஹபீபும் – சீறா:839/3
உதிரும் மென் மலர் சோலை புக்கு உறங்கினர் அன்றே – சீறா:840/4
கந்த மென் மலர் செறிதரும் காவகம் கடந்து – சீறா:853/3
கடி கொள் மென் மலர் துடவையும் கரும் சுரும்பு உதைப்ப – சீறா:858/1
சாய்ந்த மென் தளிர் கரத்தினால் அழைப்பது ஒத்தனவால் – சீறா:860/4
விரிந்த மென் மலர் கொம்பினில் அளி இனம் வீழ – சீறா:863/1
சரிந்து மென் துகள் உதிர்வது வானவர் தலத்தில் – சீறா:863/2
வீடின் மென் சிறை பட்ட கண் அனைத்தையும் விழித்து – சீறா:865/3
கோட்டு மென் மலர் வாசமும் கொடி மலர் விரையும் – சீறா:866/1
வன்ன மென் படம் போர்த்த போன்று இருந்தன வாவி – சீறா:868/4
துய்ய சைவல சுரி குழல் துயல்வர சுனை மென்
தையல் உள்ளகம் குளித்து உடல் களிப்பொடும் தனது – சீறா:869/1,2
விது கொள் மேனிலை மென் துகள் மாசு அற துடைத்து – சீறா:874/3
கஞ்ச மென் மலர் பத காரணீகரை – சீறா:910/3
மறையும் மென் கரம் வாங்கினது என மறு தழும்பு – சீறா:964/3
கொள்ளை மென் கனிகள் சிதறு முள் ஈந்து குறும் கழுத்து அசைவன ஒரு-பால் – சீறா:1004/2
கொஞ்சும் மென் குதலை கிளியொடும் மொழியார் கொழு மடல் செவிக்கு இசை கொள்ளார் – சீறா:1015/2
கஞ்ச மென் மலர் தாள் பெயர்ந்திட உலவார் கடி மலர் வாச நீர் ஆடார் – சீறா:1015/3
வீரமும் திறலும் வாய்த்த மென் கரத்து அணைத்து மோந்தார் – சீறா:1037/4
கந்த மென் மலர் துகள் துடைத்து இரு நிலம் கவின – சீறா:1103/3
பூக மென் கழுத்து இடன் அற கதிர் மணி புனைவார் – சீறா:1120/1
நாக மென் முலை குவட்டில் நல் மணி வடம் தரிப்பார் – சீறா:1120/3
கோல மென் துகில் நாடகர் கரத்தினில் கொடுப்பார் – சீறா:1125/2
பஞ்சினின் மென் துகில் அரையின் எடுத்து அணிந்து செழும் சுவன பதிக்கு மேலார் – சீறா:1130/2
வண்ண மென் பசும் கதிர் தோகை மஞ்ஞைகள் – சீறா:1150/2
குரும்பை மென் முலைகள் தாங்கி கொடி நிலை மாட மீதில் – சீறா:1168/1
இக்கு மென் மொழியார் எனும் கதீஜாவும் இனிதுற பெரிது வாழ்ந்திருந்தார் – சீறா:1215/4
தரள மென் புருடராகம் பல மணி தயங்க தாக்கி – சீறா:1258/3
துன்று மென் மலர் புய நபி மனத்தினில் துணுக்குற்று – சீறா:1293/2
அன்ன மென் நடை சுமையா என்று ஓதிய – சீறா:1472/1
கமல மென் பத முகம்மதின் அரும் பகை களைய – சீறா:1515/3
மென் நபிக்கு ஈமான் கொண்டோர் இவர் எனும் வெறுப்பினாலும் – சீறா:1568/1
புனைந்த மென் துகிலை நீத்து வேறு ஒரு புதிய தூசும் – சீறா:1575/1
மடுத்த மென் மடி புகும் உடும்பை வாங்கி அங்கு – சீறா:1620/3
கன்று மென் மயிர் கவரியும் திரி வனம் கடந்து – சீறா:1701/2
விரை கமழ்ந்த மென் குவளையும் வனசமும் மேவி – சீறா:1703/2
பொதிந்த மென் துகிலொடும் திறல் புரவலற்கு ஈய்ந்தான் – சீறா:1709/4
கருவி மென் மிடற்றில் தீண்டா காரணர் இசுமாயீல்-தம் – சீறா:1761/1
சிறந்த மென் மலர் வாவியின் குளிர்தர செய்தார் – சீறா:1849/4
உருகும் மென் மெழுகு ஆக்கினர் செறுநர் நெஞ்சு உருக – சீறா:1850/4
கடி கொள் மென் மலர் பல்லவ செழும் கரம் ஏந்தி – சீறா:1870/2
கந்த மென் மலர் புய அபித்தாலிபும் களித்தார் – சீறா:1882/4
வனச மென் மலர் தடம் திகழ் திமஸ்கு மன்னவனே – சீறா:1889/4
உய்யு மென் மறை முகம்மதின் மொழியில் ஒன்று-அதனை – சீறா:1898/2
மதுர மென் மொழியால் அளவளாய் உளங்கள் மகிழ்ந்து இனிது இருக்கும் அ காலை – சீறா:1944/2
பணி பணிந்து இரந்தார் தீன் நிலை நிறுத்தும் பதும மென் பத முகம்மதுவே – சீறா:1952/4
கீற்று இளம் பிறையும் கணிச்சியின் வளைவும் கிளர்ந்த செவ்வகத்தி மென் மலரும் – சீறா:1957/1
மேல் திகழ் கரிய பவள மென் கொழுந்தாய் விளங்கிய செழும் புருவத்தாள் – சீறா:1957/4
சொல்ல அரும் மனத்து ஆடவர் மயல் இருளை துணித்திட நகைக்கும் மென் நகையாள் – சீறா:1961/4
சாலவும் இறந்த தரு இனம் தழைப்ப தர வரும் இனிய மென் மொழியாள் – சீறா:1962/4
வெய்யவன் அலர்த்த விகசிதம் பொருந்தி விரி நறை கமல மென் மலரில் – சீறா:1963/1
விரி கதிர் மணி பூண் தாங்கும் மென் கழுத்தாள் வேயினை கரும்பை மெல் அணையை – சீறா:1964/2
முருகு கொப்பிளிக்கும் வனச மென் முகையோ முழு மணி பதித்த மென் முடியோ – சீறா:1967/3
முருகு கொப்பிளிக்கும் வனச மென் முகையோ முழு மணி பதித்த மென் முடியோ – சீறா:1967/3
கறை தரா மணியின் குலம் என விரல்கள் கவின் கொள சிவந்த மென் பதத்தாள் – சீறா:1972/4
சால மென் மலர் தொடையொடும் பல பணி தரித்து – சீறா:1999/2
இருந்த மென் மலர் பத முகம்மதும் இனிது இருந்தார் – சீறா:2051/4
விதிர் சினை கரங்கள் சாய்த்து மென் தழை கூந்தல் சோர – சீறா:2064/3
வெண்ணிலா கதிர் கான்று என்ன மென் முலை சுரந்த தீம்பால் – சீறா:2101/1
கானகம் செல் நீ என்றார் கமல மென் பதத்தில் தாழ்ந்து – சீறா:2121/2
கானை குவ்விடத்தில் காட்டும் கமல மென் பதத்தை போற்றி – சீறா:2122/2
விரி தலை தரு அடி நின்ற மென் குலை – சீறா:2135/1
வனையும் மென் மணம் போல் இனிது அடக்கினர் மகிழ்ந்தே – சீறா:2205/4
வனச மென் மலர் செழும் பதத்து இணை வருந்திடவே – சீறா:2213/3
நனை கொள் மென் மலர் கானக தரு தர நடந்தார் – சீறா:2220/4
கஞ்ச மென் பத முகம்மதை கடிதினில் வளைந்திட்டு – சீறா:2223/3
கந்த மென் மலர் தாள் வீழ்ந்து கை குவித்து எழுந்து போற்றி – சீறா:2274/2
சீத மென் கவிகை நீழல் திரு நபி இறசூலுல்லா – சீறா:2287/1
கணத்தொடும் ஜின்கள் வள்ளல் கமல மென் முகத்தை நோக்கி – சீறா:2289/1
வீரத்தின் விழைவு கூர மென் மனம் புழுங்கி விம்ம – சீறா:2370/2
படத்தினில் ஒரு பால் கீறி பதும மென் கரத்தை நீட்டி – சீறா:2585/3
கடி நறை பொதுளும் செவ்வி கமல மென் வல தாள் நீட்டி – சீறா:2589/2
பாந்தள் கூறிட கேட்டலும் பதும மென் மலரின் – சீறா:2620/1
பாத மென் மலரிடத்தினில் சிரம் கொடு பணிந்து – சீறா:2622/2
விதிரும் மென் மலர் கான் செறி வரையிடம் விடுத்து – சீறா:2627/3
கஞ்ச மென் முக மலர்தர போயினர் கணியா – சீறா:2631/3
கந்த மென் மலர் பதம் இரு சுரம்கொடு தடவி – சீறா:2643/2
வெள்ளை மென் துகில் கஞ்சுகி நனைதரும் வெயர்வும் – சீறா:2646/2
சோதி மென் கொடி என தோன்றும் ஆமினா – சீறா:2752/1
கந்த மென் பதத்தில் சேர்த்தி கண்ணில் நீர் கலுழ நின்றான் – சீறா:2770/4
மின் அவிர் கிரண செப்பு ஒன்று இருந்த மென் விரலால் தீண்டி – சீறா:2785/2
பந்தியில் படுத்தி அமலையை எடுத்து பதும மென் கரத்தினால் திருந்த – சீறா:2863/3
அன்ன மென் நடையின் ஆயிசா எனும் மான் அபூபக்கர் அகத்தினில் இருந்தார் – சீறா:2871/4
பாத்தி-தோறினும் பதும மென் கரத்தினில் பதித்தார் – சீறா:2932/4
விரிந்த பூம் கமலம் அன்ன மென் முகம் சேர்த்தி முத்தி – சீறா:3096/3
மதுர மென் கனிக்கும் சீர்த்தி வாள் அலி தமக்கும் மேன்மை – சீறா:3105/1
நெருங்கி சேந்த மென் விரல் என தளிர்களும் நீண்ட – சீறா:3121/1
விதிரும் மென் தளிர் மா செழும் பழ கொழுவிஞ்சி – சீறா:3124/3
அரத்த ஆடையின் பசிய மென் துகில் தொடுத்து அணியா – சீறா:3127/1
எடுத்து மென் சிறை எகினங்கள் படர்ந்து என இருந்த – சீறா:3128/4
மூடுவார் சிலர் விரிதரும் கமல மென் முகத்தார் – சீறா:3147/4
வெள்ளை மென் துகிலால் சிரசிடம் புலர்த்தி வில் உமிழ் மெய்யினும் விளக்கி – சீறா:3154/1
பருந்து எழும் கதிர் வாள் வள்ளல் பதும மென் முகத்தை நோக்கி – சீறா:3192/1
அடி மிசை பனிநீர் சிந்தி அம் பொன் மென் துகிலால் நீவ – சீறா:3207/1
புரி இழை மென் துகில் புது குப்பாயத்தை – சீறா:3245/2
பதும மென் மலர் முக பாத்திமா பதம் – சீறா:3253/3
பதும மென் கர விரல் பரப்பு மூடி நின்று – சீறா:3289/2
செய்ய மென் விரலிடை நான்கில் சேண் அதி – சீறா:3291/3
அரும்பு மென் மலர் வாவி சூழ் ஷாமிருந்து அடுப்ப – சீறா:3426/1
கந்த மென் புய நபி திருமுனம் கழறுவரால் – சீறா:3431/4
சோதி மென் கரம் எடுத்து இரு நிலத்தினை தூண்டி – சீறா:3468/2
பல இதழ் விரித்து செம் நறா துளித்த பதும மென் காட்டிடை புகுந்து – சீறா:3575/3
நனி பல பொருளுடன் நகரம் நண்ணி மென்
பனி மலர் பஞ்சணை படுத்து நாள்-தொறும் – சீறா:3617/2,3
மதுர மென் மறையோர் வாழ்த்த மதீன மா நகரின் வந்தார் – சீறா:3724/4
வருந்து மெல் இழை கொடியை மென் பிடி நடை மயிலை – சீறா:3731/3
தாங்கும் மென் சிரத்தினில் அழகுற தடவினரால் – சீறா:3742/4
கரிய மென் சிர மயிரினை களைவித்து அ இடையின் – சீறா:3744/3
போது எனும் மென் பத குரிசிலிடத்து ஏக முகம்மது நல் புளகத்தோடும் – சீறா:3751/2
இறு மென் கொடி இடையார் நபி எதிர் நின்று இவை இசைத்தார் – சீறா:4352/4
தொகு மென் கொடி கவின் உந்திய திருவாம் சுவைறாவை – சீறா:4355/3
கள் அறா செழும் கமல மென் கரத்தினில் சலிலம் – சீறா:4428/1

மேல்


மென்_கொடியின் (1)

வஞ்சி மென்_கொடியின் முக மலர் கவினும் மருங்கினில் விசித்த பட்டு உடையும் – சீறா:275/1

மேல்


மென்_மொழியான் (2)

மதுர மென்_மொழியான் உத்துபா அலது மறுத்து எவர் உளர் என தேர்ந்தார் – சீறா:675/4
கூறும் மென்_மொழியான் உத்துபா என்னும் குரிசில் பின் யாவரும் நடந்து – சீறா:676/1

மேல்


மென்_விரல் (1)

மெய் பெரும் கலிமா_விரல் நடு_விரல் மென்_விரல் சிறு_விரல் பெருவிரல்கள் – சீறா:129/3

மேல்


மென்மெல (2)

திருத்தி மென்மெல முகம்மது திரு முனம் விடுத்தாள் – சீறா:2686/4
பூம் கழல் இறைஞ்சி வாய் புதைத்து மென்மெல
பாங்குறும் செவி கொள பகருவார் அரோ – சீறா:3650/3,4

மேல்


மென்மேல் (1)

உற பெரும் விருப்பம் மென்மேல் இருத்தலை ஒழித்தல் வேண்டும் – சீறா:2108/4

மேல்


மென்மேலும் (1)

விடுத்த போதினும் ஒழுகிய சுரப்பு மென்மேலும்
கொடுத்து நின்றது முகம்மது காரண கொறியே – சீறா:2691/3,4

மேல்


மென்மை (4)

பகிர் விரல் சிறு கால் மென்மை படர் சிறை புறவின் கூட்டம் – சீறா:921/2
கோல் வெறி துணியும் தோளில் கூன் பிறை வாளும் மென்மை
வால் உடை பறவை சேர்த்தும் கண்ணியும் மருங்கில் கொண்டோன் – சீறா:2056/3,4
முலையினை ஊட்டி மென்மை முதுகு வால் அடி நா நீட்டி – சீறா:2102/3
புனை மலர் மகரம் தேனும் பொருவரா மென்மை நொய்ய – சீறா:4710/3

மேல்


மென்மையவா (1)

மணி என சிறந்து மலரின் மென்மையவா மழை செழும் கரங்களை ஏந்தி – சீறா:1952/1

மேல்


மென்மையவாய் (2)

சருவிட பசந்து திரண்டு மென்மையவாய் தழைத்து எழில் பிறங்கிய தோளாள் – சீறா:1964/3
தணிவு இலாது இசைக்கும் காளமும் பொருவா தன்மைய ஆகி மென்மையவாய்
பணி பல சுமந்து சிறு மயிர் நெருங்கா பண்புறும் இணை கணை காலாள் – சீறா:1971/3,4

மேல்


மென்மையின் (1)

வெயில் படு மலரின் வாடி மென்மையின் மெலிந்த அன்றே – சீறா:3061/4

மேல்


மென்மையினில் (1)

மத மலை கரத்தின் வனப்பினை அழித்து மாறு அரு மிருது மென்மையினில்
இதம் உற சிவந்த இலவினை கடந்திட்டு இணை அடி அணை என படுத்தி – சீறா:1970/2,3

மேல்


மென்றனன் (1)

பெயர்த்தனன் இதழை வாயான் மென்றனன் பிழைகள் யாவும் – சீறா:4387/3

மேல்


மென்றிடில் (1)

மென்றிடில் இனியவை வேம்புக்கு இல்லையால் – சீறா:1817/4

மேல்


மென்றுமே (1)

மேய் விலங்கு இனம் பல கொன்று மென்றுமே
தீய அ பசி பிணி தீண்டலால் சனம் – சீறா:303/2,3

மேல்