மூ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூ 1
மூக்கிடை 1
மூக்கின் 1
மூக்கினில் 3
மூக்கும் 2
மூச்சு 1
மூச்சும் 2
மூச்சுமுட்டின 1
மூச்சுவிட்டது 1
மூச்செறிந்த 1
மூச்செறிந்து 1
மூச்செறியும் 1
மூச்சொடு 1
மூச்சொடும் 1
மூசா 2
மூசி 3
மூட்ட 1
மூட்டல்-தானோ 1
மூட்டலும் 1
மூட்டி 2
மூட்டிய 1
மூட்டியது 1
மூட்டியும் 1
மூட்டினர் 1
மூட்டினன் 2
மூட்டு 1
மூட்டுதல் 1
மூட்டும் 6
மூட்டுமோ 1
மூட்டையும் 1
மூட 1
மூடப்பட 1
மூடன் 1
மூடாமல் 1
மூடி 10
மூடிய 2
மூடின 2
மூடினார் 2
மூடு 2
மூடும் 1
மூடுவ 1
மூடுவார் 1
மூண்டு 1
மூத்திருந்தவள்-தனை 1
மூதறிஞரில் 1
மூதறிவு 2
மூதறிவுடையரான 1
மூதிருள் 2
மூது 1
மூதுரை 6
மூதுரைக்கு 1
மூதூர் 7
மூதூர்க்கு 1
மூதெயில் 2
மூப்பினில் 1
மூப்பு 2
மூரல் 7
மூரல்செய்து 1
மூரலினுக்கு 1
மூரலும் 3
மூரி 14
மூலை 1
மூலையும் 1
மூவர்கள் 1
மூவரும் 12
மூவரையும் 1
மூவா 1
மூவாயிரம் 2
மூவாயிரர் 1
மூவிலை 1
மூவைந்தின் 1
மூவொரு 1
மூழ்க 1
மூழ்கலால் 1
மூழ்கவே 1
மூழ்கி 7
மூழ்கிய 1
மூழ்கிலாது 1
மூழ்கினரால் 1
மூழ்கினன் 1
மூழ்கினார் 1
மூழ்குவது 1
மூழ்குவர் 1
மூழ்குவன் 1
மூழ்குற 1
மூள் 1
மூளும் 1
மூளைகள் 3
மூளையாம் 1
மூளையில் 1
மூளையின் 2
மூன்றாம் 3
மூன்றினில் 1
மூன்றினின் 1
மூன்றினும் 3
மூன்று 28
மூன்றையும் 2

மூ (1)

தீதுற்று உலைக்கும் கொடும் காபிர் தெரியாவண்ணம் மூ ஆண்டு – சீறா:1339/3

மேல்


மூக்கிடை (1)

மூக்கிடை விரலினை சேர்த்தி மா முடி – சீறா:4561/2

மேல்


மூக்கின் (1)

உடல் துமிந்த சில நிமிர்ந்த செவி துமிந்த சில மூக்கின் உதிரம் கால – சீறா:4314/3

மேல்


மூக்கினில் (3)

மூக்கினில் விரலை சேர்த்தி முரணொடும் எழுந்து நின்றான் – சீறா:2387/4
மூக்கினில் சேர்ப்பன் வெள்ளை முறுவலின் இதழை துண்டம் – சீறா:2810/2
மூக்கினில் ஏதோ தோற்றியது இன்னே முற்றிய வினை பயன் யாது என்று – சீறா:4113/3

மேல்


மூக்கும் (2)

மூரி வெம் பரியுடன் அவன் வாயினும் மூக்கும்
சோரி கொட்டிட புடைத்தனன் அதில் ஒரு சூரன் – சீறா:3501/3,4
தகு நெடு மூக்கும் ஆருயிரும் தந்தனன் – சீறா:4570/2

மேல்


மூச்சு (1)

நகை-தொறும் மூச்சு உயிர்த்து இனிய நாவொடு – சீறா:4570/1

மேல்


மூச்சும் (2)

இரையும் மூச்சும் அடக்கினர் என்பவே – சீறா:1174/4
நீண்ட வெம் மூச்சும் அடிக்கடி உயிர்த்து நினைவினை அடக்கி முன் சமயம் – சீறா:4093/3

மேல்


மூச்சுமுட்டின (1)

போர்த்தன கயங்கள் மூச்சுமுட்டின புழுங்கி எட்டும் – சீறா:3869/2

மேல்


மூச்சுவிட்டது (1)

மிடித்து நொந்த சிற்றெறும்பு ஒரு மூச்சுவிட்டது போல் – சீறா:19/3

மேல்


மூச்செறிந்த (1)

இரும் படி கிடங்கில் கிடந்து மூச்செறிந்த எருமையின் கவை அடி பரூஉ தாள் – சீறா:45/2

மேல்


மூச்செறிந்து (1)

சுடு கதிர் நிலத்திடை சோர்ந்து மூச்செறிந்து
உடல் உலைந்து உள் உயிர் ஒடுங்கும் காலையில் – சீறா:1483/2,3

மேல்


மூச்செறியும் (1)

வரி வரால் பகடு வளை நிலவு எறிக்கும் மடைத்தலை கிடந்து மூச்செறியும் – சீறா:55/4

மேல்


மூச்சொடு (1)

சேற்றிடை கிடந்து மூச்சொடு முனங்கி திகைப்பன ஓரிகள் பலவும் – சீறா:3578/2

மேல்


மூச்சொடும் (1)

இரைந்து மூச்சொடும் கிடந்த கட்செவி தலை எடுத்து – சீறா:776/1

மேல்


மூசா (2)

ஆறு திங்களில் வந்த மூசா நபி அழகாய் – சீறா:200/1
முரணிடும் பிருவூன் முனம் மறை நபி மூசா
கரதலத்து உறை கோல்-தனை பெரு மலை கடுப்ப – சீறா:1850/1,2

மேல்


மூசி (3)

மூசி வந்து ஈமான் கொண்டு போயதும் முறை வழாமல் – சீறா:2295/3
மூசி வெள் எயிறு சிந்த முரண் அரா கடித்த வாயின் – சீறா:2593/3
மூசி வண்டு உடை தும்பை அம் தொடையலை முடித்து – சீறா:3495/1

மேல்


மூட்ட (1)

மூட்ட வந்தவரும் சிலர் மூள் பகை – சீறா:1402/2

மேல்


மூட்டல்-தானோ (1)

வினையமோ மேல் பகையினை மூட்டல்-தானோ
தூய விஞ்சையின் இயற்றும் சூழ்ச்சியோ மாட்சியோ வெம் – சீறா:4204/2,3

மேல்


மூட்டலும் (1)

திருந்த வேம் எரி மூட்டலும் பதலையில் சிறப்ப – சீறா:4420/3

மேல்


மூட்டி (2)

போரினை மூட்டி நின்றாய் நீ இங்கு புகுந்த போதே – சீறா:4388/3
வேட்டலுற்று எரி மூட்டி மேல் காய்த்திடும் வீரர் – சீறா:4598/3

மேல்


மூட்டிய (1)

பங்கிகள் பூழ்தியில் பதிய மூட்டிய
வங்கியில் கிரிமி ஒத்து அறிவு போக்கினார் – சீறா:1465/3,4

மேல்


மூட்டியது (1)

கூடும் வல் வினை மூட்டியது இவண் என குறிக்கொண்டு – சீறா:4268/3

மேல்


மூட்டியும் (1)

பர நகர் வேந்தரால் பகைகள் மூட்டியும்
கருவறுத்து அவர் பகை களைய வேண்டுமால் – சீறா:2987/3,4

மேல்


மூட்டினர் (1)

பற்றினர் அடிக்கடி பகையை மூட்டினர் – சீறா:4060/4

மேல்


மூட்டினன் (2)

பொலிய வைத்து எரி மூட்டினன் புகை இருள் படலம் – சீறா:970/3
மூட்டினன் முற்றினும் மூழ்கி நின்றனன் – சீறா:4553/3

மேல்


மூட்டு (1)

மூட்டு எரி கனல கண்கள் முகம் குறுவெயர்வு சிந்த – சீறா:3948/3

மேல்


மூட்டுதல் (1)

கூடி கொண்டு அங்ஙன் மூட்டுதல் துணிந்தது கோறல் – சீறா:4019/2

மேல்


மூட்டும் (6)

மூட்டும் வல் வினை பிரித்திட முடித்தவன் முறையாய் – சீறா:456/3
இகல் பொர மூட்டும் செவ்வி இளையவர் குழாத்தின் ஓசை – சீறா:929/2
துயர் நெருப்பு எழுக மூட்டும் துருத்தியின் வியத்தது அன்றே – சீறா:1050/4
முறுக்கினாரல்லது மூட்டும் தண்டனை – சீறா:1467/3
கவர் மன குயை என்று ஓதும் பெயரினன் கபடம் மூட்டும்
சுவை அறு மொழியான் நாளும் பகையினை தொடங்கி நின்றோன் – சீறா:4358/2,3
எங்கினும் வஞ்சம் மூட்டும் எகூதிகள் இவரை நோக்கி – சீறா:4361/3

மேல்


மூட்டுமோ (1)

மிண்டு வல் வினை மூட்டுமோ அறிகிலம் மெய்யா – சீறா:4608/4

மேல்


மூட்டையும் (1)

மூடிய கடங்களும் துருத்தி மூட்டையும்
தேடினர் இல் என திசையும் பாடியும் – சீறா:3285/2,3

மேல்


மூட (1)

பருவரல் படர்ந்து புந்தி பயிர் எனும் கருத்தை மூட
திரு மயில் இன்புறாது சில பகல் கழிந்த பிற்றை – சீறா:1052/3,4

மேல்


மூடப்பட (1)

பனியொடு திமிரம் மூடப்பட வரும் இரவின்-கண்ணே – சீறா:2266/1

மேல்


மூடன் (1)

உக்குபாவும் உத்பாவும் மூடன் உமையாவும் ஈனன் உமாறாவுமாய் – சீறா:1433/2

மேல்


மூடாமல் (1)

நொடி வரை இமை மூடாமல் நோக்கியே கிடந்தது அன்றே – சீறா:2060/4

மேல்


மூடி (10)

பொங்கு அறிவு அதனால் மூடி புந்தியின் மறைப்பது ஆனார் – சீறா:619/4
இருந்தனன் இருந்த போதில் எழு கதிர் துகளால் மூடி
பரந்திடும் வரவு நோக்கி பார்த்து அதிசயித்து நின்றான் – சீறா:793/3,4
நயனுறு நகரை மூடி நல் கனி உகுத்து வாச – சீறா:1054/3
நெருங்கு வெண் கொடி கஃபாவிடத்து ஏகி நிரை மயிர் போர்வையால் மூடி
அரும் கதிர் கலசத்து ஆபுசம்சத்தின் அரிய நீர் கரம் கொடு தெளித்தே – சீறா:1945/3,4
அடுத்த நாள் ஓர் பாழ்வீட்டில் அடைத்து கம்பளத்தால் மூடி
எடுத்து உவர்நீரும் கைப்பின் இயைந்த போசனமுமாக – சீறா:2832/1,2
படியும் தோன்றாத வண்ணம் விடம் பரந்து என்ன மூடி
இடியொடும் மழையும் மின்னும் தோன்றிட இருண்ட மேகம் – சீறா:2844/3,4
கரும் தடம் கண்ணும் நெஞ்சும் களிப்புற நாணின் மூடி
தெரிந்து ஒரு வடத்தை ஏந்தி சேவகர் மார்பில் பூட்டி – சீறா:3192/2,3
பதும மென் கர விரல் பரப்பு மூடி நின்று – சீறா:3289/2
பத துகள் எழுந்து மேக படலங்கள் அனைத்தும் மூடி
மதித்த எண் திசையும் திக்கும் வானினும் செறிந்து நாளும் – சீறா:3411/2,3
செறித்த பொன் கதவம் எல்லாம் இமைப்பினில் திறந்து மூடி
குறித்தவன் வாயில் புக்கி கூண்டவர் துயிறல் நோக்கி – சீறா:3703/1,2

மேல்


மூடிய (2)

மூடிய கடங்களும் துருத்தி மூட்டையும் – சீறா:3285/2
மூடிய முத்திரை முறித்து பாசுரம் – சீறா:3318/3

மேல்


மூடின (2)

பரந்து போர்வையின் மூடின நீள் பெரும் பதியை – சீறா:3134/4
மேலும் எங்கும் மூடின மிகவும் தெரியாமல் – சீறா:3921/4

மேல்


மூடினார் (2)

செம் தழல் குழிகள் ஏழுமான முறை தேடி நல் நெறியை மூடினார் – சீறா:1426/4
மூடினார் குளிர் கலக்கமும் நடுக்கமும் முழுதும் – சீறா:4615/3

மேல்


மூடு (2)

மூடு பெட்டகம் திறந்தனர் கொணர்ந்தனர் குவித்தனர் முறையாக – சீறா:659/2
கம்ப மூடு எறிந்து இரு கவுள் மத சலம் கரைக்கும் – சீறா:3499/3

மேல்


மூடும் (1)

மூடும் என் உடல் சோட்டினில் கரம் முழுகிடவும் – சீறா:3812/3

மேல்


மூடுவ (1)

பருதி வெம் கதிர் மூடுவ போன்றன பரிவில் – சீறா:3828/3

மேல்


மூடுவார் (1)

மூடுவார் சிலர் விரிதரும் கமல மென் முகத்தார் – சீறா:3147/4

மேல்


மூண்டு (1)

மூண்டு வந்து எழும் காபிர்கள் யாவரும் முறிய – சீறா:4022/1

மேல்


மூத்திருந்தவள்-தனை (1)

மூத்திருந்தவள்-தனை விளித்து உனது கை முறையாய் – சீறா:2689/1

மேல்


மூதறிஞரில் (1)

மூதறிஞரில் இருவரை அழைத்து முன் இருத்தி – சீறா:2028/2

மேல்


மூதறிவு (2)

பாதையில் புகுத மூதறிவு உணர்ந்த பண்டிதன் என வரும் ஊசா – சீறா:996/1
மூதறிவு உடைய வள்ளல் முசுஇபை தழுவினாரால் – சீறா:2397/4

மேல்


மூதறிவுடையரான (1)

மூதறிவுடையரான முறுசலீன்களை எந்நாளும் – சீறா:7/3

மேல்


மூதிருள் (2)

முக மதிக்கு இடைந்து சுற்றி மூதிருள் படலம் யாவும் – சீறா:3211/1
மூதிருள் கடியும் காந்தி சிதுறத்துல் முன்தகா என்று – சீறா:3228/1

மேல்


மூது (1)

மூது இருள் படலம் சீக்கும் முச்சுடர் கதிரும் ஒவ்வா – சீறா:3069/1

மேல்


மூதுரை (6)

மூதுரை வழி வழாதோன் முன்றில் வந்தவர்களோடும் – சீறா:810/1
சென்று அடுத்து அருகு இருந்து மூதுரை தெளித்த மா மறை வழிக்கொடே – சீறா:1432/3
மூதுரை என்னும் தீன்தீன் முகம்மது என்று – சீறா:1808/1
மூதுரை தெளிவினும் மறையினும் முதிர் மொழியாய் – சீறா:1844/3
மூதுரை மறையின் தீம் சொல் முசுஇபு ஆண்டு உரைப்ப கேட்டு – சீறா:2376/1
மூதுரை தெரிந்த புரவலருடனும் இருந்தனர் மூன்று நாள் அவணின் – சீறா:3589/4

மேல்


மூதுரைக்கு (1)

மூதுரைக்கு உரிய சைதும் நல் நிலையின் முதியரில் ஒறக்கத் என்பவரும் – சீறா:2901/1

மேல்


மூதூர் (7)

புடை வளம் பலவும் நோக்கி போயினர் மதீனம் மூதூர் – சீறா:2355/4
வியன் உறு மக்க மூதூர் வேறுபட்டு ஒழிய செய்தோர்-வயின் – சீறா:2371/1
நெறியுடன் நன்கு உரைத்து மணி மூதூர் கொண்டு அணைகுவன் நிர்ணயம் ஈது என்னை – சீறா:2672/3
கா அணி மதீன மூதூர் காவலர் வரவு கேட்டு – சீறா:3670/2
முற்றும் நம் படை கொண்டு இவணிருந்து நம் மூதூர்
சுற்றி எங்கணும் காத்து உடன் உறைவது துணிவால் – சீறா:3817/3,4
அதிர்தரு மதீன மூதூர் அண்ணல் தாத்துற் றகாகு – சீறா:4178/2
வரை செறி மதீன மூதூர் வள நகர் அடுக்கும் போதில் – சீறா:4904/2

மேல்


மூதூர்க்கு (1)

அடிகள் நா மதீனா மூதூர்க்கு எழுந்தருளுவதா மாற்றம் – சீறா:2839/3

மேல்


மூதெயில் (2)

வெற்றி மேல் கொண்டு விண் எழுந்த மூதெயில்
சுற்றிய நகரினில் தொகையில் சேனை கொண்டு – சீறா:4060/1,2
கொடி நெடு மூதெயில் கொம்மை ஏற்றிய – சீறா:4064/1

மேல்


மூப்பினில் (1)

தேங்கின் நாள்-தொறும் மெலிந்து வன் மூப்பினில் தேய்ந்த – சீறா:4259/3

மேல்


மூப்பு (2)

தீய வங்கு நோய் வரடு மூப்பு உறு துனி சிதைந்து – சீறா:4261/1
அடி பெயர்த்திடா மூப்பு உறு சோகம் என்பதனை – சீறா:4262/1

மேல்


மூரல் (7)

சின படை செழும் கண் கொவ்வை செ இதழ் சிறு வெண் மூரல்
அன பெடை கதீஜா பால் விட்டு அடல் அரி மைசறா மன் – சீறா:1063/1,2
செய்ய வாய் ஒளி வெண் மூரல் சிறு நுதல் பெரிய கண்ணால் – சீறா:1750/1
முன்னிய மூவரும் உவப்ப மூரல் இட்டு – சீறா:2400/3
கனி இதழ் சிறு வெண் மூரல் காரிகை நலத்தை நாடி – சீறா:3060/2
ஆலம் மொய்த்த துளை மூரல் கண் செவி அணி பொறி சுடிகை நெட்டு அரா – சீறா:4213/1
கோடுகின்ற துளை மூரல் நெட்டு உடல் குழைத்து இ வெம்மையில் நுணங்கி வெம் – சீறா:4215/3
துலக்கு வெண் தரள மூரல் துடி இடை கரிய கூந்தல் – சீறா:4697/3

மேல்


மூரல்செய்து (1)

இறை ஒளி இருள் அற இலங்க மூரல்செய்து
உறு பரி வீரர் மேல் சேறியோ என – சீறா:4995/2,3

மேல்


மூரலினுக்கு (1)

நிறைத்த மூரலினுக்கு இனம் பதி புகுந்து நீள் மறுகிடம்-தொறும் குறுகி – சீறா:2862/2

மேல்


மூரலும் (3)

மூரலும் அவை மூழ்கிய பாலையும் – சீறா:2341/2
சோதி மூரலும் சிதைத்திட தைத்தது தொகுத்த – சீறா:4003/2
சிறந்த வாயொடு மூரலும் கிட்டியே தேகம் – சீறா:4606/2

மேல்


மூரி (14)

மூரி வெற்பு அனைய புய முகம்மதுவை முன்னிலை தலைவராய் நிறுத்தி – சீறா:693/1
முத்திரை-தனை விடுத்து எடுத்து மூரி வெண் – சீறா:1026/1
மூரி திறல் ஒண் சிலை கை அபூபக்கர் முதல் மற்றுள்ளோரும் – சீறா:1335/3
மூரி அடல் ஏறு அபுதுல் முத்தலிபு மைந்தர் – சீறா:1767/1
முள் அரை கானிடை கிடந்து மூரி வெம் – சீறா:2966/3
முரசு சங்கு ஒலிப்ப பொங்கி எழுந்தது மூரி தானை – சீறா:3419/4
முடி தகர்ந்தன சோடுகள் உதிர்ந்தன மூரி
தடமுறும் கரத்து ஏந்திய வீரர் கை தடியின் – சீறா:3494/3,4
மூரி வெம் பரியுடன் அவன் வாயினும் மூக்கும் – சீறா:3501/3
முரசமும் அவிந்த காகளம் அவிந்த மூரி வெம் பேரியும் அவிந்த – சீறா:3559/1
மூரி அம் கணைக்கால் கீழ்-பால் முகிழ்தரும் பரட்டின் மேல்-பால் – சீறா:3723/1
கணை மழை பெய்யும் மூரி கார்முகம் கருதலார்-தம் – சீறா:3847/1
மூரி அம் கரம் பிசைந்து முனை எயிறு இதழின் ஊன்றி – சீறா:4373/2
அசத்து எனும் குழுவும் மிக்க அவுசு எனும் கணமும் மூரி
திசை புகழ்தரும் கனானா சங்கமும் திரட்டி என்றும் – சீறா:4394/2,3
நீடிய மூரி திறத்தொடும் பிறந்து குபிர் நிலை நின்ற மன்னவர்க்கே – சீறா:4451/4

மேல்


மூலை (1)

திருந்திட நடப்ப ககுபத்துல்லாவில் சிறந்திடும் தென்கிழ மூலை
இருந்திடும் ஹஜறுல் அசுவது எனும் கல் எதிர்கொடு நடந்தது அன்றே – சீறா:351/3,4

மேல்


மூலையும் (1)

நானிலம் புகலும் ககுபத்துல்லாவின் நாலு மூலையும் ஒரு நெறியாய் – சீறா:270/3

மேல்


மூவர்கள் (1)

மூன்று பேரும் அ மூவர்கள் எதிரின் முன்னினரால் – சீறா:3480/4

மேல்


மூவரும் (12)

விரிந்த பூம் குழல் மடந்தையர் மூவரும் வியப்ப – சீறா:2022/2
புதிதின் மூவொரு பதின்மரும் மூவரும் புறத்தில் – சீறா:2043/1
முன்னிய மூவரும் உவப்ப மூரல் இட்டு – சீறா:2400/3
அன்னது கேட்டு அகம் குளிர்ந்து மூவரும்
மன்னிய இடத்தினில் புக்க மன்னவர் – சீறா:2402/1,2
சாதி மன்னவர் மூவரும் இருவரும் தனித்தும் – சீறா:2497/3
தரு எனும் நபியும் மூவரும் பெருகு சதுமறை தலைவரும் திரண்டு – சீறா:3152/3
மாதுலன் முதல் மூவரும் வழங்கிய வசனம் – சீறா:3430/1
வேந்தர் மூவரும் இறந்திட அபூஜகில் வெகுண்டு – சீறா:3545/1
முன் அணி என்ன நின்ற மூவரும் ஊழி ஊதை – சீறா:3883/1
இலகு திண் கழல் வேந்தர்கள் மூவரும் இரங்காது – சீறா:3997/3
திருவுளம்பற்றினார் இ மூவரும் சென்னி தாழ்த்தார் – சீறா:4919/4
கணமுடன் தொறுக்கள் மேய்த்து அவண் உறைந்தார் காளையர் மூவரும் அன்றே – சீறா:4925/4

மேல்


மூவரையும் (1)

மா புகழ் மைந்தர் மூவரையும் மங்கையர் – சீறா:4174/2

மேல்


மூவா (1)

முத்திரை என்னும் அ இலாஞ்சனை தரித்து மூவா
உத்தமர் தெரிந்து நோக்கி ஒருவருக்கொருவர் சொல்வார் – சீறா:420/1,2

மேல்


மூவாயிரம் (2)

முரண் உறும் வானர்_கோனொடு மூவாயிரம்
வரம் உறும் மலக்குகள் வந்து தோன்றினர் – சீறா:1796/1,2
துனிவிலாது மூவாயிரம் பெயரவர் சூழ – சீறா:3790/2

மேல்


மூவாயிரர் (1)

விடம் புகு படைகள் தாங்கிய தரும வேந்தர் மூவாயிரர் குழுவும் – சீறா:4456/2

மேல்


மூவிலை (1)

மூவிலை நெடு வேல் காளி வீற்றிருப்ப முறைமுறை நெட்டு உடல் கரும் பேய் – சீறா:687/1

மேல்


மூவைந்தின் (1)

மிக்க நல் தேதி மூவைந்தின் மேவிய – சீறா:2956/1

மேல்


மூவொரு (1)

புதிதின் மூவொரு பதின்மரும் மூவரும் புறத்தில் – சீறா:2043/1

மேல்


மூழ்க (1)

முலை திகழ் புயங்களின் மூழ்க வெட்சியார் – சீறா:4942/3

மேல்


மூழ்கலால் (1)

எம்பெருமான் நமது இடத்தில் மூழ்கலால்
செம்பொன் நாடவர்க்கு உறா சீர் பெற்றோம் என – சீறா:495/2,3

மேல்


மூழ்கவே (1)

அடையலர் கெடிகள் கோடி இடிபடு படல தூளி அலரியின் உடலில் மூழ்கவே
நடமிடு கடின வாசி மிசை வரு சமர சூர நரர் புலி அலியை ஓதுவாம் – சீறா:12/3,4

மேல்


மூழ்கி (7)

வான் நதி மூழ்கி துகில் எடுத்து உடுத்து வளை பணி தொகை எலாம் அணிந்து – சீறா:237/2
அகம் நினை அறிவு நீங்கி யாகுல கடலில் மூழ்கி
வகையுற தேறி செவ்வி முகம்மதின் வதன நோக்கி – சீறா:603/2,3
அனைவரும் களிப்பு வெள்ளத்து ஆநந்த கடலின் மூழ்கி
இனையன நினைத்தோம் யாங்கண் நினைத்தவை இறையோன் செய்தான் – சீறா:3075/2,3
மறை நபி களிப்பு ஆநந்த வாருதி-தன்னை மூழ்கி
இறையவன்-தன்னை போற்றி யாவர்க்கும் இயம்பினாரால் – சீறா:3231/3,4
வரைந்து நம் நபி இன்புறும் வாரியின் மூழ்கி
பிரிந்திடா நலம் பொருந்தி உண்டு இருந்ததன் பின்னர் – சீறா:3733/3,4
மூட்டினன் முற்றினும் மூழ்கி நின்றனன் – சீறா:4553/3
புனை மலர் தடத்தின் மூழ்கி சிரசிடம் புலர்த்தும் காலை – சீறா:4622/2

மேல்


மூழ்கிய (1)

மூரலும் அவை மூழ்கிய பாலையும் – சீறா:2341/2

மேல்


மூழ்கிலாது (1)

முன்னர் நாள் இரு விசை போரில் மூழ்கிலாது
உன்னி அ முகம்மதுக்கு உடைந்து அங்கு ஓடினாய் – சீறா:4557/1,2

மேல்


மூழ்கினரால் (1)

கவலுதற்கு அரிய ஆநந்த பெருக்கின் களி கடல் குளித்து மூழ்கினரால் – சீறா:3592/4

மேல்


மூழ்கினன் (1)

நீரிடை மறைய மூழ்கினன் சேந்த நெடும் கதிர் பருதி வெய்யவனே – சீறா:4108/4

மேல்


மூழ்கினார் (1)

முறை இது என்று ஆநந்த கடலின் மூழ்கினார் – சீறா:2958/4

மேல்


மூழ்குவது (1)

வருந்தி மெய் நடுக்கொடும் மரைகள் மூழ்குவது
அரும் தவ பேறு எனும் அகுமதின் திரு – சீறா:498/1,2

மேல்


மூழ்குவர் (1)

இன் நலம் தர மூழ்குவர் ஆடுவர் எங்கும் – சீறா:3138/4

மேல்


மூழ்குவன் (1)

தடம்-தொறும் போய்ப்போய் மூழ்குவன் தொழுகை தகுமவர் காணினும் நயனம் – சீறா:4083/2

மேல்


மூழ்குற (1)

இறையவன் தூதர் தம்மிடத்தில் மூழ்குற
குறைபடா அரிய மெய் குளிருமோ என – சீறா:494/2,3

மேல்


மூள் (1)

மூட்ட வந்தவரும் சிலர் மூள் பகை – சீறா:1402/2

மேல்


மூளும் (1)

மொழிந்தினிர் அவையே முடிந்தன இனிமேல் மூளும் வெம் சினத்தினை முற்றி – சீறா:3595/2

மேல்


மூளைகள் (3)

வெடித்து மண்டையின் மூளைகள் சொரிய மெல் இதழை – சீறா:3488/1
முரிதரும் சிரசின் மூளைகள் மலிந்த மொய்த்த வெண் நிணங்களும் மலிந்த – சீறா:3558/4
முடி தகர்ந்தன கொட்டின மூளைகள் – சீறா:3900/4

மேல்


மூளையாம் (1)

உயிர் துறந்து கிடந்த உள் மூளையாம்
தயிர் சொரிந்து கிடந்த அதின் தலை – சீறா:4490/3,4

மேல்


மூளையில் (1)

மிடல் உடை கவசம் உடலிடத்து அணிந்து வெண்டலை மூளையில் தோய்ந்த – சீறா:4444/3

மேல்


மூளையின் (2)

ஐயம் அற்று எழுந்து சென்னி மூளையின் அவதரித்து – சீறா:105/2
மாற்ற அரும் வீரர் கதைபட தெறித்த மண்டைகள் மூளையின் வழுக்கி – சீறா:3578/3

மேல்


மூன்றாம் (3)

அகத்தினில் பெரும் துன்பொடும் இருக்கும் மூன்றாம் நாள் – சீறா:2203/1
நபி-தமை விடுத்து மூன்றாம் நாளினில் இறங்கும் காவில் – சீறா:3338/1
மாசு அற பின்னர் மூன்றாம் நாளில் விண்_மணி வில் வீழ்த்தி – சீறா:3697/1

மேல்


மூன்றினில் (1)

திருந்த ஆண்டு ஒரு மூன்றினில் தீன் பயிர் விளைத்து – சீறா:3729/3

மேல்


மூன்றினின் (1)

புக்கு மூன்றினின் நூகு நல் நபி மன பொலிவாய் – சீறா:192/2

மேல்


மூன்றினும் (3)

முன்னவர் ஓதும் வேத மூன்றினும் தெரிந்த நூல்கள் – சீறா:2783/1
பெறுவர் என்று ஆதி வேதம் மூன்றினும் பேசித்து என்றால் – சீறா:2824/2
தெரிதரு மறைகள் மூன்றினும் பெரியோர் செய்யுளில் கணித நூலிடத்தும் – சீறா:2897/1

மேல்


மூன்று (28)

கூறிய மொழி கேட்டு ஆமினா எனது குமரனை மூன்று நாள் வரைக்கும் – சீறா:276/1
வருடம் மூன்று என்ன தேகம் வளர்ந்ததும் இரட்டி தானே – சீறா:391/4
ஆண்டு மூன்று உறைந்து நாலாம் ஆண்டு சென்றதன் பின் செல்வம் – சீறா:392/1
ஈனம் இல் மூன்று நாள் இருந்து நோக்கினார் – சீறா:737/4
மலை மிசை மூன்று நாள் இருந்து மால் நதி – சீறா:738/1
விரியும் அமுதம் எனும் கலிமா மேலோர் ஒரு முப்பஃதுடன் மூன்று
அரிய மகடூ அறுவர் உமறு அரசர் ஒருவர் அவனியினில் – சீறா:1597/2,3
ஓலிடும் கடல் மா சேனை உரவ என்று உரைப்ப மூன்று
காலமும் தெரிந்து நோக்கும் காவலன் செவியில் கொண்டான் – சீறா:1756/3,4
பிடிபடும் இதற்கு முன்னே மூன்று நாள் பிறந்து புல்லின் – சீறா:2086/1
நிறையும் திங்களும் மூன்று என தினம் நிகழ்ந்தனவே – சீறா:2210/4
காலம் மூன்று உணரும் வேத கடலினுக்கு எல்லை காணும் – சீறா:2349/3
மூன்று பேரையும் முதன்மையர் எனும்படி முடித்தார் – சீறா:2452/4
தமரொடும் இருந்து மூன்று நாள் கடந்து என்-தன்-வயின் சாரும் என்று உரைத்து – சீறா:2542/2
முருகு துளிக்கும் தௌறு மலை பொதும்பில் தினம் மூன்று அகன்றதன் பின் – சீறா:2552/3
ஓங்கல் அடுத்து ஓர் பொதும்பரில் மூன்று உழுவை உறைந்தது என நபியும் – சீறா:2556/1
முறைமுறை மூன்று நாளும் இ வண்ணம் மொழியா நின்றார் – சீறா:2568/4
இற்றையின் முதல் மூன்று நாள் தொடுத்து இறும்பிடத்தில் – சீறா:2612/1
அடுக்கல் இன்புற மூன்று நாள் இருந்து நாலாம் நாள் – சீறா:2626/1
ஒரு பிடி மூன்று நாளைக்கு ஒரு தரம் அளித்தல் வேண்டும் – சீறா:2830/4
கொடுத்தனர் மூன்று நாளைக்கு ஒரு தரம் கொள்க என்ன – சீறா:2832/3
உய்த்திட மூன்று நாளைக்கு ஒரு தரம் இருளின் என்-பால் – சீறா:2833/1
இவ்வண்ணம் மூன்று நாள் இருக்கும் எல்வையின் – சீறா:3294/1
முதல்வ நம் படை வர மூன்று நாட்கு முன் – சீறா:3307/1
வலிமை மிக்கு உபைதத்தையும் மூன்று அணி வகுத்து – சீறா:3475/2
மூன்று பேரும் அ மூவர்கள் எதிரின் முன்னினரால் – சீறா:3480/4
மூதுரை தெரிந்த புரவலருடனும் இருந்தனர் மூன்று நாள் அவணின் – சீறா:3589/4
மதுரம் ஒழுகிய கோதும்பு உறட்டி மூன்று உள என மான் வழங்க வாங்கி – சீறா:3750/3
அரைவயிற்றுக்கு ஆற்றாத மூன்று உறட்டி எண்பதுபேர்க்கு அளித்தும் மீறி – சீறா:3758/1
வீறு ஆர் நிதியம் பகுந்து அளித்து வேட்டு நாள் மூன்று இருந்து என்றும் – சீறா:4046/2

மேல்


மூன்றையும் (2)

உள்ளகம் குளிர்ந்து அரு மறை மூன்றையும் உணர்ந்தோர் – சீறா:222/1
காலம் மூன்றையும் தெரிந்த நும் கருத்தினுக்கு இசைவ – சீறா:3432/3

மேல்