சை – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

சைது (1)

மிடலவர் சைது எனும் வீர கேசரி – சீறா:1312/3

மேல்


சைதுக்கு (1)

உன்னும் முன் சைதுக்கு ஆற்றாது உடைந்து மற்று எவையும் போக்கி – சீறா:3686/3

மேல்


சைதும் (2)

மூதுரைக்கு உரிய சைதும் நல் நிலையின் முதியரில் ஒறக்கத் என்பவரும் – சீறா:2901/1
திறல் உடை சைதும் ஷாமிராச்சியத்தில் சென்று அரும் கணிதரை கேட்ப – சீறா:2902/1

மேல்


சைதையும் (1)

விலையுறும் பெயரில் சைதையும் அபாறாபிகையும் நண்புடன் விரைந்து அழைத்தே – சீறா:2867/3

மேல்


சைபத்து (6)

உடன் எழுந்து உத்பத்து சைபத்து உமையாவும் – சீறா:3447/3
மிக்க சைபத்து என்று ஓதிய விறல் அரி வீரன் – சீறா:3514/3
அடர்ந்து சைபத்து வரவு கண்டு அடல் அரி ஹமுசா – சீறா:3515/1
ஈது முத்திரை அறிக என சைபத்து என்பவன் அங்கு – சீறா:3519/1
வீரன் சைபத்து மடிந்தனன் எனும் வெகுளியினால் – சீறா:3525/1
பலி என உத்பத் இறந்திடும் இடமும் சைபத்து படும் பறந்தலையும் – சீறா:3579/2

மேல்


சைபத்துடன் (1)

உறு சினத்து உத்பத்து சைபத்துடன் ஒலீதும் – சீறா:3479/1

மேல்


சைபத்தும் (2)

ஆடல் அம் பரியின் ஏறி சைபத்தும் அவணின் வந்தான் – சீறா:3402/4
பவுரி வாம் பரி சைபத்தும் பெரும் படை கடலும் – சீறா:3476/2

மேல்


சைபா (2)

தக்க நல் நெறி பிழைத்த பாவி அபுஜகில் சைபா ஒலிது-தன்னுடன் – சீறா:1433/1
ஒலீது உத்துபா உமாறா உக்குபா உமையா சைபா
மலிதரும் கொடுமை பூண்ட மனத்து அபூஜகிலும் ஒன்றாய் – சீறா:1752/1,2

மேல்


சைலம் (1)

சைலம் நேர் புயத்தாய் யார்க்கும் தறுகிடாது அளிப்பாய் என்றார் – சீறா:4707/4

மேல்


சைவல (2)

துய்ய சைவல சுரி குழல் துயல்வர சுனை மென் – சீறா:869/1
தங்கிய இதழி திரளினும் திரண்டு சைவல தொடரினும் தழைத்து – சீறா:1956/2

மேல்