மொ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மொண்டு 2
மொந்தை 1
மொய் 4
மொய்க்கின்ற 1
மொய்த்த 11
மொய்த்தார் 4
மொய்த்திட 4
மொய்த்திருந்தார்களால் 1
மொய்த்திருந்து 2
மொய்த்திருப்பது 1
மொய்த்து 5
மொய்ப்ப 2
மொய்ம்பின் 1
மொய்ம்பினர் 1
மொய்ம்பினார் 1
மொய்ம்பீர் 1
மொழி 357
மொழி-தன்னையும் 1
மொழி-தனை 2
மொழி-மின் 1
மொழி-அதனால் 1
மொழிக்கு 12
மொழிக்குள் 1
மொழிகள் 13
மொழிகளாக 1
மொழிகளால் 2
மொழிகிலாமல் 1
மொழிகின்றது 1
மொழிகுவன் 1
மொழிதலும் 1
மொழிந்த 8
மொழிந்ததாயினும் 1
மொழிந்ததுவும் 1
மொழிந்தனர் 5
மொழிந்தார் 3
மொழிந்திட்டார் 1
மொழிந்திடல் 1
மொழிந்திடும் 3
மொழிந்திலர் 1
மொழிந்திலராகி 1
மொழிந்தினிர் 1
மொழிந்து 20
மொழிப்பட 2
மொழிப்படி 1
மொழிப்படியே 1
மொழிப்படியேயன்றி 1
மொழிய 6
மொழியதாய் 1
மொழியா 1
மொழியாது 2
மொழியாய் 4
மொழியார் 7
மொழியால் 4
மொழியாள் 2
மொழியான் 4
மொழியில் 3
மொழியின் 2
மொழியின்படி 1
மொழியினில் 1
மொழியினும் 1
மொழியினை 5
மொழியினோடும் 1
மொழியீர் 1
மொழியும் 6
மொழியே 2
மொழியை 10
மொழியொடும் 4
மொழிவ 1
மொழிவதாயினார் 1
மொழிவது 2
மொழிவாயே 1
மொழிவான் 1
மொறுமொறுத்தார் 1

மொண்டு (2)

திசைகள்-தோறும் மொண்டு எறிந்த கார் குறும் துளி திவலை – சீறா:4583/1
மடுவினில் கமலம் மொண்டு அருந்தும் எல்வையில் – சீறா:4978/1

மேல்


மொந்தை (1)

பாரிச பதலை இட கை தட்டிய நீள் பணவம் வார் அணி தட மொந்தை
பூரிகை நவுரி காகளம் சின்னம் போர் வயிர் கொம்பு கைத்தாளம் – சீறா:3162/2,3

மேல்


மொய் (4)

மொய் மலர் கதிஜா செவ்வி முழுமதி வதனம் நோக்கி – சீறா:638/2
முரசு அதிர் ஓதை கேட்டு மொய் நகருள்ளோர் எல்லாம் – சீறா:3401/1
மொய் அமர் செலல் பழுது என யாவையும் முனிந்து – சீறா:3798/3
மொழி கொடுத்து அடல் வலி நுகைமு மொய் இருள் – சீறா:4562/1

மேல்


மொய்க்கின்ற (1)

முடம் தரு முக பாய் பரி பல மலிய மொய்க்கின்ற வானவர் வாழ்த்த – சீறா:4456/3

மேல்


மொய்த்த (11)

புவி ஆர மொய்த்த நெறி மறை நாலினுக்கும் ஒரு பொறியாய் உதித்த வடிவார் – சீறா:6/3
மொய்த்த ஒட்டையும் இடபமும் முழக்கொடு நடத்தி – சீறா:559/2
மரு மொய்த்த குழலாள் ஆசை மதிப்பு இலா வயிரம் தான் கொண்டு – சீறா:1166/2
முன்றில் எங்கணும் மொய்த்த செ வேல் கர – சீறா:1407/1
மொய்த்த கச்சில் முகம்மதை வஞ்சனை – சீறா:1417/2
மொய்த்த பூம் குலை சாய்த்தன காய்த்தன முழுதும் – சீறா:2934/4
மொய்த்த பேரவையில் நண்ணி வைத்தனன் முடங்கல் அன்றே – சீறா:3387/4
முரிதரும் சிரசின் மூளைகள் மலிந்த மொய்த்த வெண் நிணங்களும் மலிந்த – சீறா:3558/4
ஆலம் மொய்த்த துளை மூரல் கண் செவி அணி பொறி சுடிகை நெட்டு அரா – சீறா:4213/1
வாசம் மொய்த்த மகுமூதும் மெய்த்த திறலியார்கள் மற்றவர்கள் மன்னவர் – சீறா:4218/2
மொய்த்த மாந்தர்கள் யாவரும் தொகைதொகை முறையின் – சீறா:4422/1

மேல்


மொய்த்தார் (4)

மதி குலம் கடல் பூத்து என்ன மங்கையர் திரண்டு மொய்த்தார் – சீறா:3172/4
ஏடு அவிழ் மலர் பூம் கூந்தல் இலங்கு இழையவர்கள் மொய்த்தார் – சீறா:3173/4
விரி கடல் தானை சூழ வேந்தர்கள் திரண்டு மொய்த்தார் – சீறா:3365/4
சினம் உறும் படையினோடும் இடம்-தொறும் திரண்டு மொய்த்தார் – சீறா:3844/4

மேல்


மொய்த்திட (4)

முகில் தவழ் கொடி செல தானை மொய்த்திட
நகர் புகுந்து அகுமது பதத்தை நண்ணினார் – சீறா:3040/3,4
முயலகன் மதியின் குடையொடு கொடியும் மொய்த்திட செறிந்தனர் அன்றே – சீறா:3169/4
கொடி படை குழுவொடும் குடைகள் மொய்த்திட
கடல் படு பல்லியம் கறங்க போயினான் – சீறா:3629/3,4
முலை திகழ் அயில் வேல் மன்னர்கள் சூழ்ந்து மொய்த்திட பரியின் மீது ஏறி – சீறா:4959/3

மேல்


மொய்த்திருந்தார்களால் (1)

முன்றில் எங்கணும் மொய்த்திருந்தார்களால் – சீறா:2331/4

மேல்


மொய்த்திருந்து (2)

முறைமுறை பதின்மராக மொய்த்திருந்து அருந்தும் போதும் – சீறா:4709/1
மொய்த்திருந்து எழுந்த தும்பி முரன்று எழுந்து அயலில் போதல் – சீறா:4725/2

மேல்


மொய்த்திருப்பது (1)

வனச மென் முகையில் பொறி வரி அறு கால் வண்டு மொய்த்திருப்பது போலும் – சீறா:51/4

மேல்


மொய்த்து (5)

மொய்த்து அடர்ந்தனர் அபூஜகிலொடு முரண் மதத்தார் – சீறா:2045/4
மொய்த்து எழும் பெரும் துகள் முகிலின் விம்மிட – சீறா:3630/2
முனைப்பதி அமைத்து காபிர் மொய்த்து இவண் இருக்கும் எல்வை – சீறா:4187/1
கால மொய்த்து எரிகளே இறைத்த சுடு கானல் வெப்பு மெய் பொறுக்கலாது – சீறா:4213/3
மொய்த்து அடர்ந்து முன் சென்றவர் ஆர்தர – சீறா:4829/3

மேல்


மொய்ப்ப (2)

இன்னன வேந்தரோடும் எண்பஃது அரசர் மொய்ப்ப
அ நகர் அறபி காபிர் ஆயிரம் பெயர்கள் சூழ – சீறா:3406/1,2
வெயிலவன் கதிர்கள் தோன்றா வெள்ளை வெண் கவிகை மொய்ப்ப
துயல்வரும் கொடிகள் துன்ன துரகதம் நடத்தினாரால் – சீறா:3410/3,4

மேல்


மொய்ம்பின் (1)

குன்று உறழ் வலிய மொய்ம்பின் கொற்றவர் வேந்தன் மிக்க – சீறா:4369/1

மேல்


மொய்ம்பினர் (1)

பாழி மொய்ம்பினர் வெட்டிய பட்டையம் – சீறா:3903/4

மேல்


மொய்ம்பினார் (1)

முற்றிய மாட்சியார் அலங்கல் மொய்ம்பினார் – சீறா:740/4

மேல்


மொய்ம்பீர் (1)

முற்றும் கோறலை துணிந்து இருக்கின்றது மொய்ம்பீர் – சீறா:4607/4

மேல்


மொழி (357)

வரும் அவர் எதிர்நின்று ஒரு மொழி கேட்ப மறுமொழி கொடுத்திட அறியேன் – சீறா:3/2
பண் இருந்து ஒழுகும் மென் மொழி குதலை பாவையர் செழும் குழல் விரித்து – சீறா:89/2
மந்திர மா மொழி மறை பயில் இளையவர் நெருங்கி – சீறா:97/3
பாங்கிருந்து அமுதம் சிந்தும் பனி மொழி மாதை நோக்கி – சீறா:116/2
இக்கு எனும் மொழி ஆமினாக்கு இனிதுற திங்கள் – சீறா:192/1
சொரிந்த தேன் மொழி ஆமினா வயிற்றினில் சூலாய் – சீறா:221/3
வடித்த தெள் அமிர்தம் எனும் மொழி குதலை மறியமும் இடது பாரிசத்தில் – சீறா:248/2
சுமைதர வாசம் திகழ்த்தி எண் திசையும் சுற்றியே சில மொழி பகர்வார் – சீறா:263/4
நிறைதர புனித மாக்கினான் என்ன நிகழ்த்தியது ஒரு மொழி அன்றே – சீறா:271/4
கூறிய மொழி கேட்டு ஆமினா எனது குமரனை மூன்று நாள் வரைக்கும் – சீறா:276/1
கலங்கியே தெளிந்து மதலை மேல் விருப்பாய் கடு விழி கனி மொழி துவர் வாய் – சீறா:283/3
புகன்ற நல் மொழி கேட்டு அற பெரும் புதுமை புதுமை ஈது என சிரம் அசைத்து உன் – சீறா:286/1
என்று கூறிய பல மொழி கேட்ட பின் இறையோன் – சீறா:295/1
இறைவன் இ மொழி கூறலும் அமரர்கள் யாரும் – சீறா:296/1
அ மொழி கேட்டு அலிமாவும் ஆரிதும் – சீறா:313/1
கரும்பு எனும் மொழி அனார் காளைமாருடன் – சீறா:315/3
பாகு இருந்த மென் மொழி அலிமா வல பாக – சீறா:338/1
வேட்டலாய் இருவருக்கும் நல் மொழி பல விளம்பி – சீறா:344/2
தேற்று மென் மொழி பல எடுத்து ஆமினா செப்பி – சீறா:349/3
கான் அமர் குழலார் ஆமினா என்னும் கனி மொழி பொன்_தொடி கரத்தில் – சீறா:383/2
நிலைத்த பொன் பாவை என அருகு இருத்தி நெறியுடன் பல மொழி புகழ்ந்து – சீறா:385/3
நலம் கிளர் மனம் பூரித்து நல் மொழி ஈது என்று எண்ணி – சீறா:400/2
கூடி வந்தவர் அனைவர்க்கும் நல் மொழி கொடுத்து – சீறா:436/2
வினையமாய் நசுறானிகள் சில மொழி விரித்தார் – சீறா:441/4
கொஞ்சு மென் மொழி குழறிட புலம்பிய குறிப்பும் – சீறா:453/3
கேட்குவம் வம் என நல் மொழி இசைத்தான் – சீறா:460/4
விருத்தன் அ மொழி இயம்பிட விளங்கு இழை அலிமா – சீறா:461/1
அந்தரத்தினின் முழங்கிய மொழி வழி அறிந்து – சீறா:476/1
நினைத்த நல் மொழி பல நிகழ்த்தி பங்கய – சீறா:514/3
அ மொழி கேட்டு அபீத்தாலிபு ஆகிய – சீறா:538/1
வன்ன வார் கழல் குரிசிலுக்கு உறு மொழி வகுத்தார் – சீறா:545/4
வாதை மிக்கு உள வரும் மொழி மறும் என மறுத்தார் – சீறா:546/4
வந்து கண்டவர்க்கு இன்புறு மொழி பல வழங்கி – சீறா:570/1
வேதவேதியன் உரைத்த நல் மொழி எலாம் விரைவில் – சீறா:579/1
தரும் தவ பயனும் மொழி என எதிர் சாற்றி – சீறா:580/3
அலக்கழிந்து ஒரு மொழி உரைத்தனர் அனைவருமே – சீறா:591/4
தேன் மொழி கதிஜா என்னும் திரு பெயர் தரித்த பாவை – சீறா:612/4
குயில் மொழி பவள செ வாய் கொடி இடை கரும் கண் பேடை – சீறா:628/2
மெய் மொழி மறைகள் தேர்ந்த பண்டிதன் விரைவின் வந்து – சீறா:638/1
தெரிதர தெளிந்த சிந்தை தே_மொழி கதிஜா-பாலில் – சீறா:645/1
தெரிய கூறும் என்று அஞ்சி நின்று உரைத்தனர் தே_மொழி கதிஜாவே – சீறா:651/4
ஆதரத்து உறு மொழி வழி நடப்பதற்கு ஐயுறேல் என போற்றி – சீறா:655/3
காதலித்து உரைத்தார் விரை தார் குழல் கனி மொழி கதிஜாவே – சீறா:655/4
வடி நறா உடைந்து ஒழுகும் முக்கனியுடன் மதுர மென் மொழி கூறி – சீறா:657/3
மோகமுற்று யான் கண்டிடும் கனவினை மொழி என மொழிவாயே – சீறா:664/4
அலைவுற்றவன் அ மொழி கூறிடலும் – சீறா:716/1
ஒரு மொழி உரைத்தவர் உளத்தின் பெற்றியை – சீறா:741/3
இ மொழி நன்கு என இசைந்து யாவரும் – சீறா:750/1
பாந்தள் ஒன்று உளது எனும் மொழி செவிபுக பசும் தேன் – சீறா:770/1
பாகம் உற்று மெய் வணங்கி நல் மொழி சில பகர்ந்து – சீறா:785/2
அ மொழி கேட்டு காண்பது அரிது என எளியேன் சிந்தை – சீறா:828/1
ஓகை கூர்தர நல் மொழி எடுத்தெடுத்து உரைத்தான் – சீறா:833/4
பிரியல் வாய் மொழி மறுத்திடல் இ பெரும் பேறுக்கு – சீறா:834/3
அருகு இருத்தி நல் மொழி பல எடுத்தெடுத்து அறைந்தான் – சீறா:835/3
மரு மலர் குழல் மனையவர்க்கு உறு மொழி வகுத்து – சீறா:836/3
பொருத்து மெய் மொழி மா தவன் இறந்த அ போதில் – சீறா:838/1
இருந்த அவ்வையில் கள்ளர் உண்டு எனும் மொழி இசைப்ப – சீறா:844/1
படிறு உள கசட்டு அபுஜகில் பகர்ந்திடும் மொழி கேட்டு – சீறா:851/1
கோலமொடு கூறு மொழி கொண்டு உடல் களித்து – சீறா:895/1
நல் நிலை மொழி பல நவிற்றும் செய்கையும் – சீறா:903/3
ஈது அலால் உறு மொழி ஒன்றும் இல் என்றான் – சீறா:908/4
வேத வல்லவர் உறு மொழி நமக்கு முன் விரித்தார் – சீறா:955/2
பொருத்து நல் மொழி இது-கொல் என்றே மிக புகழ்ந்து – சீறா:956/1
மறுத்து நல் மொழி புகன்றனர் வளரும் நல் அறத்தை – சீறா:959/3
வருந்தி நல் மொழி தரகன் அங்கு உரைத்தது மருவார் – சீறா:960/1
மிக்க செம்பொன் ஈந்தவர்க்கு நல் மொழி பல விளம்பி – சீறா:967/1
திரு மொழி உரைத்தது இவன் என கருதி செவ்வியோன் முகம்-அதை நோக்கி – சீறா:989/3
வழு அற நல் மொழி எடுத்து மைசறா – சீறா:1025/1
செழு மலர் குழலியர் உரைப்ப தே_மொழி – சீறா:1025/3
உட்பட வளர்த்த மெய்யான் உறு மொழி அறுதி இல்லான் – சீறா:1040/2
மரை பதம் வழுத்தி அன்னோர் வாய் மொழி மறாது நின்றோர் – சீறா:1045/1
நல் நெறி மொழி கதீஜா மனையினில் நடந்த செய்தி – சீறா:1075/2
திறல் அறிவர் அபித்தாலிபு உரைத்த மொழி அனைவரும் தம் சிந்தைகூர்ந்து – சீறா:1077/1
பெரும் தவிசினின் இனிது இருத்தி அருகு இருந்து பிரிய மொழி பேசிப்பேசி – சீறா:1080/2
பொருந்த மண முடிப்பதற்கு வந்தேன் என்று இனைய மொழி புகல்வதானார் – சீறா:1081/4
நின்னை அலது இலை எனவே அவர் உரைத்த மொழி அனைத்தும் நிகழ்த்தி அன்றே – சீறா:1082/4
தீட்டு திறல் புகழ் ஹமுசா உரைத்த மொழி அமுத மழை செவியில் பாய்ந்து – சீறா:1084/1
தன் இதய மலர் மொழி தேன் நா வழியே ஒழுகி அவர் செவியில் சார – சீறா:1088/2
திரு துணைவர் உரைத்த மொழி அபித்தாலிப் கருத்தூடு திளைப்ப ஹாஷிம் – சீறா:1089/1
இந்த மா மொழி பகர்ந்து எழு தினம் முரசு இயம்ப – சீறா:1103/1
பேரழகு ஒழுகும் பெண் நலம் கனியை பிரசம் ஊறிய மொழி கரும்பை – சீறா:1207/1
குயில் மொழி றுகையாவை ஈன்று உம்முக்குல்தூமை ஈன்று பின்னர் – சீறா:1217/2
கொண்டலே குதா இன்று ஈந்தான் எனும் மொழி கூறி பின்னும் – சீறா:1261/3
தலைவர் கூறிய மொழி செவி புக உடல் தயங்கி – சீறா:1274/1
பிணையை நேர் விழி கனி மொழி சிறு பிறை நுதலார் – சீறா:1277/3
சிந்து தேன் மொழி செழும் குயில் தூது எனும் திருப்பேர் – சீறா:1279/1
கற்ற வேதியன் வருதலும் கிளி_மொழி கதீஜா – சீறா:1283/1
என்ற இ மொழி மறையவன் உரைத்தலும் இசை தேன் – சீறா:1293/1
அரு மொழி விளக்கலால் ஆய்ந்து நம் நபி – சீறா:1299/3
அ மொழி கேட்டு அடல் அரி அபூபக்கர் – சீறா:1305/1
சொல்லிய நல் மொழி கேட்டு துன்புறும் – சீறா:1310/1
செவ்வியர் இவர் மொழி சிதைவு இலாது என – சீறா:1315/1
புகழொடும் ஜிபுறயீல் போற்றி இ மொழி
இகல் அற பலதரம் இயம்பி போயினார் – சீறா:1329/3,4
முகம்மது என்போர் அவர் மொழி மறாது நின்றோர் – சீறா:1354/2
வேத நல் மொழி பொருளொடும் தீன் நிலை விரித்தார் – சீறா:1359/4
அமையும் என்பவர் சிலர்சிலர் அ மொழி பகையால் – சீறா:1363/2
சிந்தை உற்றதே துணிந்தனன் பிறர் மொழி தேறான் – சீறா:1368/3
முறைமுறைப்படி காபிர்கள் கூறிய மொழி கேட்டு – சீறா:1370/1
உறு மன குறை தவிர்ந்திட நல் மொழி உரைப்ப – சீறா:1370/3
நல் நய மொழி சில வகுத்து எடுத்துரைத்தார் – சீறா:1380/4
உறைக பின்னும் ஒரு மொழி கேட்டியால் – சீறா:1392/4
என உரைத்த இனத்தவர்-தம் மொழி
மனதினுள் புகுந்து அங்கி வளர்த்து உறு – சீறா:1395/1,2
நினைவினுள் பொதிந்து ஓர் மொழி நீட்டுவார் – சீறா:1395/4
நலி தரும் கொடிய நரகு அடைந்திடுவன் என்ன ஆதி திரு நல் மொழி
அலைவு இலாது அமரர்_கோன் இழிந்து அவனியின் புகன்று அவணில் ஏகினார் – சீறா:1422/3,4
புதிய வேத மொழி கொடு புகழ்ந்து நிலை பொருந்தி அங்ஙனம் இருந்தனர் – சீறா:1429/4
ஏதமுற்ற மொழி காபிரை சிறிது எடுத்துரைத்து மனை மேவினார் – சீறா:1436/4
திரு மறை மொழி ஒன்று உரைத்து விண்ணவர்_கோன் சேணிடை உறைந்த பின் மாறா – சீறா:1450/1
கூறிய மொழி கேட்டு அபூலகுபு எனும் அ கொடியன் இரு விழி சிவந்து – சீறா:1455/1
வீசுவர் சிலர்-தமை விடுத்து நல் மொழி
பேசுவர் சிலர்-தமை பிடித்து புன்மொழி – சீறா:1461/1,2
மொழி என உரைத்தனர் முதல்வன் தூதரே – சீறா:1477/4
வாக்கினில் ஒரு மொழி வழங்கி உண்மையை – சீறா:1479/2
ஞான மா மறை முன்னவர் மொழி நடவாமல் – சீறா:1523/1
அகம் மகிழ்ந்து அவையோர் கேட்ப நல் மொழி ஆய்ந்து சொல்லும் – சீறா:1559/4
தேவ நல் மொழி என்று என் சொல் சிந்தையில் சிந்தித்தோர்கள் – சீறா:1562/1
இத்தகைக்கு உரியர் யாவர் எவர் மொழி இது-கொல் என்ன – சீறா:1577/3
மறைமொழி பொருளை தேர்ந்து மானுடர் மொழி ஈது அன்று என்று – சீறா:1578/1
மறை மா மொழி நா ஒழியாது வளர்க்கும் முதியோர் இனிது உரைப்ப – சீறா:1585/1
தேறும் மொழி கேட்டு அகுமது தம் செவ்வி கமல முகம் மலர்ந்து – சீறா:1593/2
சுருதி மொழி தீன் பயிர் தழைப்ப சுற்றும் குபிர் வெம் களை தீய்க்கும் – சீறா:1595/3
இ மொழி அறபி வேட்டுவன் இசைத்தனன் – சீறா:1611/4
பன்னி இ மொழி பழுது என்னும் பாவியோர் – சீறா:1613/3
தெரிதர நல் மொழி தெளித்த நம் நபி – சீறா:1615/1
ஓர் மொழி நம் நபி உடும்பை கூவலும் – சீறா:1622/2
தேறிய மொழி இவை செவியில் சார்தலும் – சீறா:1625/1
விண்டு உரைக்கும் மறைமொழியை எளிய மொழி என ஆக்கி வினவி ஈமான் – சீறா:1640/2
அறபியாகிய குபிரர் பலர் கூறும் மொழி வழி கேட்டு அவரை நோக்கி – சீறா:1641/2
பகரும் மொழி சிறிது உளது என்னிடத்தில் அ மொழி அனைத்தும் பரிவில் கேட்டு – சீறா:1645/3
பகரும் மொழி சிறிது உளது என்னிடத்தில் அ மொழி அனைத்தும் பரிவில் கேட்டு – சீறா:1645/3
இருந்த மறை அனைத்தையும் விட்டு எனது மொழி மறைமொழி என்று இசைக்கும் வாக்கும் – சீறா:1646/2
முதல்வன்-தன் திரு தூதர் என பேரிட்டு அரிய மறை மொழி என்று ஏத்தி – சீறா:1648/1
புதிய மொழி உரைத்து ஈமான் கொள்வித்தீர் இசுலாத்தில் புக்க பேரில் – சீறா:1648/2
அச்சம் அணு இலது அகத்தின் உத்துபா உரைத்த மொழி அனைத்தும் கேட்டு – சீறா:1652/1
எனக்கு இறையோன் உரைத்த மறை மொழி வசனம் திறத்தது அல என்ன கூறல் – சீறா:1653/1
கனக்க மொழி ஒன்று எடுத்து காட்டுக நீ எனது மொழி கவினை பின்னர் – சீறா:1653/3
கனக்க மொழி ஒன்று எடுத்து காட்டுக நீ எனது மொழி கவினை பின்னர் – சீறா:1653/3
உனக்கு உரைப்ப கேட்டு மொழி திறன் அறி என்று எடுத்துரைத்தார் ஒளிரும் பூணார் – சீறா:1653/4
இலங்கு அமரர் இறை மொழி கேட்டு இவர்க்கு உரைத்தது அறுதி என இதயத்து ஓர்ந்து – சீறா:1657/2
சிந்திடாது உறு மொழி பலர் உளத்தினும் தேர்ந்து – சீறா:1670/2
வேறு கொண்டு அபூஜகில் விளம்பிய மொழி அனைத்தும் – சீறா:1671/2
கோது அற தெளிந்து இ மொழி நன்கு என குறித்து – சீறா:1679/3
காண் தகா இறை ஒருவன் உண்டு எனும் மொழி கணித்து – சீறா:1688/3
தூதன் யான் எனக்கு ஆதி-தன் தூய் மொழி புறுக்கான் – சீறா:1689/1
விரைவினில் சலாம் என்று ஓதும் மொழி வழி விசும்பை நோக்கி – சீறா:1727/1
ஆர் அமுதமான சில நல் மொழி அறைந்தார் – சீறா:1767/4
பேத மொழி வஞ்சமொடு பேசுவதும் அன்றே – சீறா:1771/4
இந்த மொழி நன்கு என எடுத்து உற வியத்தி – சீறா:1775/3
வருக என நல் மொழி வகுத்தனர்கள் என்ன – சீறா:1782/1
இன்னன பல மொழி இயம்பி கற்பு எனும் – சீறா:1794/1
மனம் அலைத்திட மொழி வளர்ப்பன் மெய் என – சீறா:1815/3
குற்றம் என்று ஒரு மொழி குறித்தது இல்லையால் – சீறா:1825/4
இவ்வண்ணம் பல மொழி நிகழும் எல்வையின் – சீறா:1827/1
தணிவு இலா மகிழ் மொழி சார நோக்கினான் – சீறா:1831/4
இதயம் நேர்ந்து இவண் வந்தனம் இவன் மொழி கேட்கில் – சீறா:1838/2
பொருளதாகிய நல் மொழி திமஸ்கு இறை புகல்வான் – சீறா:1854/4
பிணங்கிலாத நல் மொழி பல பேசவும் வேண்டும் – சீறா:1858/4
வரப்படும் திறன் முகம்மது என்று அரு மொழி வகுத்து – சீறா:1862/3
அடிகள் கூறிய மொழி வழி கேட்டு அகம் துணுக்கி – சீறா:1870/1
திருந்தும் பொன்_நகர் வானவர் மொழி என தெளிய – சீறா:1878/3
குயில் புரை அமுத கிளி மொழி மடவார் குழு பிரிந்து அழுங்குவர் சிலரே – சீறா:1908/3
ஆண்டகை உரைத்த புது மொழி நறும் தேன் அகத்தினில் புகுந்து உடல் களித்து – சீறா:1943/1
அந்த நல் மொழி கேட்டு அடல் படை மாலிக் அருளிய ஹபீபு எனும் அரசன் – சீறா:1948/1
ஏல வார் குழலார் செழும் கரத்து ஏந்தும் இளம் கிளி மொழி என குழறா – சீறா:1962/2
குரு முகம்மது நல் மொழி வழி அடங்கா குபிர் குலம் தேய்ந்து என தேய்ந்து – சீறா:1969/3
கவின் உறும் பல மொழி எடுத்து காட்டினார் – சீறா:1982/4
பண் அரும் தீன் மொழி பயிற்றி நல் நெறி – சீறா:1988/3
குறைந்திடாது எடுத்து அருளி நல் மொழி பல கொடுத்து – சீறா:2025/3
கொடுத்து நல் மொழி கொடுத்து நசாசிய்யாம் கோவுக்கு – சீறா:2029/1
புதியரை புறம் போக்கினன் எனும் மொழி புகழை – சீறா:2038/3
நடக்க முன் மொழி பழுது என நவில்தர நடுங்கி – சீறா:2042/3
அரு மறை மொழி வழி ஆவன் யான் என்றான் – சீறா:2132/4
பொங்கிய சில மொழி புகன்று பின்னரும் – சீறா:2154/2
விள்ளும் நும் கருத்து என வினவ நல் மொழி
தெள்ளிய மதுர வாய் திறந்து செப்பினார் – சீறா:2156/3,4
அகம் மகிழ்ந்து இ மொழி அனைத்தும் வேறு இது என்று – சீறா:2158/1
நறை கமழ் முகம்மது ஆண்டு உரைத்த நல் மொழி
திறன் அயாசு அறிந்து உளம் தேறி தன்-வயின் – சீறா:2159/1,2
பெருகு மொழி அவரவர் கேட்டு இபுனுகலபுடன் உரைப்ப பெரிதின் ஈந்தான் – சீறா:2173/3
அரசர் அடல் அரி அகுமது உரைத்த மொழி அபித்தாலிபு அகத்தின் ஓர்ந்து – சீறா:2176/1
சொன்னதிலை ஓர் மொழி மந்திரத்து அடங்கி தெய்வம் உரை சொல்லுமோ நீர் – சீறா:2184/3
புத்து உரைத்த மொழி கேட்டு குசைனு எனும் அ அறபி உடல் புளகத்தோடு – சீறா:2191/1
தந்தை தாய் தமர் ஒழுகிய மொழி வழி தவிர்ந்திட்டு – சீறா:2197/1
கொண்டு நின்று நல் மொழி பகர்ந்தனன் என குறித்து – சீறா:2214/2
விண்டு தேன் சொரிந்து என சில மொழி விளம்புவரால் – சீறா:2214/4
மதியின் வேறு வைத்து இசைந்திடும் சில மொழி வகுப்பான் – சீறா:2218/4
கோலும் வன் கதம் வர சில மொழி கொளுத்தினனால் – சீறா:2221/4
வஞ்சக கொடியவன் உரைத்திடும் மொழி வழியே – சீறா:2223/1
முத்த வெண் கதிரவர் இரும் எனும் மொழி கேட்டு – சீறா:2234/3
பத்தியாய் அருகு இருந்து ஒரு மொழி பகர்ந்திடுவார் – சீறா:2234/4
இக்கணத்து ஈமான் கொண்டான் எனும் மொழி இறபீஆ-தன் – சீறா:2253/2
பருவரல் அகற்றி தேற சில மொழி பகரும் அன்றே – சீறா:2277/4
வான் திகழ் புகழார் திரு மொழி கொடுத்து வரவழைத்து ஒரு மருங்கு இருத்தி – சீறா:2301/2
அன்னவர் உரைத்த மொழி மனத்து அடக்கி இருந்தனன் அறிவு எனும் துணையால் – சீறா:2316/1
ஆர் அமுது அனைய வேதத்து அரு மொழி அகத்துள் தேக்கி – சீறா:2396/1
பெறும் மொழி அறுதியில் பேசினார் இவை – சீறா:2406/2
விதமொடு நபி சில மொழி இயம்பலும் – சீறா:2416/3
பெறும் மொழி ஒன்று உள குறிப்பின் பெற்றியை – சீறா:2419/3
சிறு மொழி ஒன்று உண்டு என்று உரைத்து செப்புவார் – சீறா:2440/4
மறை மொழி குறித்து தீன் வழி மறாது இவண் – சீறா:2443/1
பிற மொழி எடுத்து எவர் பேச வல்லரே – சீறா:2443/4
இனையன பல மொழி கைதம் என்பவர் – சீறா:2444/1
ஆதி முன் மொழி கலிமாவை அன்பொடும் – சீறா:2445/1
மல் வளர் புய முகம்மது-தம் வாய் மொழி
கல்பினில் இருத்தி நன்கு என்ன காவலர் – சீறா:2450/1,2
புகலும் நல் மொழி அனைத்தையும் மனத்துற பொருத்தி – சீறா:2457/1
சிதைவு இலா திட மொழி கொடுத்து அணி கரம் சேர்த்தி – சீறா:2462/3
என்றும் இ மொழி தவறு இலாது உற நிறைவேற்றி – சீறா:2464/1
முற்றும் காத்து அளித்திடுமவர் மொழிந்திடும் மொழி போல் – சீறா:2467/3
முறைமுறைப்படி ஒன்றுபட்டு ஒரு மொழி முடித்தார் – சீறா:2468/4
புக்கினார் எனும் மொழி பலபல புறம் பொசிய – சீறா:2499/2
இனம் பெருத்து இருந்தும் இவை பரிகரித்தோமிலை எனும் அவ மொழி உலகம்-தனில் – சீறா:2506/1
பகுத்து அறிவுடையீர் உங்கள்-தம் மனத்தில் படும் மொழி அலது வேறு அலவே – சீறா:2508/4
இல்லகத்து அடைத்தும் எனும் மொழி இபுலீசு எனும் அவன் கேட்டு இளநகையாய் – சீறா:2519/1
அபுஜகுல் உரைத்த மொழி வழி துணிந்து அங்கு அகம் குளிர்ந்தனர் அனைவோரும் – சீறா:2525/1
ஒற்றரில் இபுலீசு உரைத்திடும் மொழி கேட்டு ஊரவர் அனைவரும் திரண்டு – சீறா:2531/2
பூதரத்தின் எம் முன்னவர் சில மொழி புகன்றார் – சீறா:2607/3
கூர்ந்த தம் மனத்து உவகையில் சில மொழி கொடுப்பார் – சீறா:2620/4
முத்திரை திரு வாய் மொழி முறைமையில் சிதகா – சீறா:2628/1
இடைந்திலா மொழி கொடுத்தலும் திரியும் என் உருக்களொடும் – சீறா:2640/3
இகல் எடுத்து வருமம் உரைத்தவர் மறுத்தும் வணக்க மொழி இசைத்தாரென்னில் – சீறா:2662/1
சொலும் மொழி ஈது என அறியாது அடிக்கடி வாய் குழறி விழி சுழல வாடி – சீறா:2668/3
பொன் போலும் மன பெரியோர் பொறுப்பர் எனும் மொழி தமியேன் புந்திக்கு ஏற்ப – சீறா:2671/2
கலங்கி வலி இழந்து உரைத்த மொழி அனைத்தும் திரண்டு திரு காதுள் ஓடி – சீறா:2674/1
வம்-மின் யாவர் என்று ஒரு மொழி வழங்கி அங்கு இருந்தாள் – சீறா:2682/3
விருத்தை என்னும் அ தொறுவி சஞ்சல மொழி விளம்ப – சீறா:2686/1
பதம்-தனில் பணிந்து இரும் கலிமா மொழி பகர்ந்து – சீறா:2693/2
விண்டு பல் பலபல மொழி விளம்பலால் – சீறா:2713/2
ஓதிய மொழி வழி உணர்ந்து நல் நெறி – சீறா:2763/2
பின் ஒரு மொழி கொடாமல் இவர் கரம் பிடித்து வல்லே – சீறா:2777/3
இசைத்த நல் மொழி கேட்டு அந்த இளவலை இனிது கூவி – சீறா:2778/1
பண்டை முன் பெரியோர் தேர்ந்த பழ மொழி வழக்கம் யாவும் – சீறா:2790/1
உறும் மொழி உரைத்தானல்லன் உரவர்கள் நகைக்க மாறா – சீறா:2808/3
பகையரும் செவியில் கொள்ளா வசை மொழி பலவும் சாற்றி – சீறா:2809/3
கண்டிதத்தொடும் அன்போடும் சில மொழி கழறலுற்றார் – சீறா:2817/4
உள் உணர்ந்து யானும் சில மொழி சாற்றுவேனால் – சீறா:2821/4
மறு மொழி ஓதுவேன் என்று யாவர் வாய் திறக்க வல்லார் – சீறா:2824/3
விண்ணவர்க்கு அரசர் கூறும் மெய் மொழி எவர்க்கும் கூறி – சீறா:2851/1
மழை என தரும் செம் கரத்தினில் வாங்கிவைத்து ஒரு மொழி பகர்ந்திடுவார் – சீறா:2855/4
ஒரு மொழி அன்புற்று இயல் நபி உரைப்ப ஒருவருக்கொருவர் உள் மகிழ்வுற்று – சீறா:2857/3
நிலை பெறும் மனையும் பள்ளியும் வனைந்தது எனும் மொழி தொழிலவர் நிகழ்த்த – சீறா:2867/2
விலை அற விற்றார் மக்க மா நகரார் எனும் மொழி அடைந்தவர் விளம்ப – சீறா:2870/2
மலிதரும் மொழி கேட்டு எண் திசையிடத்தும் மாசு அற நோக்கினன் பொருவாது – சீறா:2885/1
ஒரு புலி என் எதிரினில் அறிவாய் கூறிய மொழி செகதலத்தும் – சீறா:2886/3
உரை எனும் மொழி கேட்டு உம்பரின் முதியோய் உலகினுக்கு ஒரு தனி அரசே – சீறா:2894/1
வருமவர்-தமக்கு தெளிதரும் புறுக்கான் மறை மொழி இறங்கிடும் எனவும் – சீறா:2897/4
இருள் அறும்படி வந்தனர் எனும் மொழி கேட்டு – சீறா:2914/2
நன்னயத்தொடும் சில மொழி நவின்று அவண் நீங்கி – சீறா:2924/2
இகல் உற கொடும் மொழி எடுத்து காட்டி விண் – சீறா:2982/3
இணங்கிய நல் மொழி எவர்க்கும் கூறி அ – சீறா:2983/1
இனியன மொழி கொடுத்து இயம்புவார் அரோ – சீறா:2997/4
மந்திர மொழி சில வகுத்து பின்னரும் – சீறா:3026/4
வெட்டுக்குத்து எனும் மொழி விளம்பிலாது ஒரு – சீறா:3038/1
விதியவன் மொழி மறாது விண்ணவர்க்கு அரசர் கூறும் – சீறா:3042/1
உனும் மொழி பொருத்தமில்லேன் என் உளத்து உறைந்த வண்ணம் – சீறா:3086/3
சீலம் உற்று அறிவினோடும் ஒரு மொழி செப்பலுற்றார் – சீறா:3090/4
தொடுத்து ஒரு மொழி வழாது வாசகம் சொல்லலுற்றார் – சீறா:3097/4
நவன் இவை என்ன போற்றி சில மொழி நவிலலுற்றார் – சீறா:3101/4
காவகத்திடை மயில் என குயில் மொழி கனி வாய் – சீறா:3145/2
மறை மொழி கலிமா தீட்டும் வாயில் மாளிகையின் உள்ளுள் – சீறா:3227/1
இறும் மொழி சூதினன் மசுதிய் என்பவன் – சீறா:3271/4
வெற்றி கொள் வேலினர் வியப்ப இ மொழி
பெற்றனம் என தனி மறையின் பேசினார் – சீறா:3299/3,4
தலைவருக்கு இ மொழி சாற்றி வேத நூல் – சீறா:3300/1
ஒரு மொழி செல்க என உவந்து கூறினார் – சீறா:3329/4
விண்ணினும் திசையும் தீன்தீன் எனும் மொழி விளங்க கூறி – சீறா:3348/3
சினமொடும் கண்கள் சேப்ப ஒரு மொழி தெரிந்து சொல்வான் – சீறா:3395/4
அகப்படுத்தினன் எனும் மொழி இறங்கியது அன்றே – சீறா:3423/4
விரும்பு இரண்டில் ஒன்று உரை-மின்கள் எனும் மொழி விரித்தார் – சீறா:3426/4
போதம் இன்புற சொலு-மின்கள் எனும் மொழி புகன்றார் – சீறா:3430/4
மேலவன் திரு மொழி வழி உலகினை விளக்கி – சீறா:3432/1
கயிற்படும் பொருள் என ஒரு மொழி கழறுவரால் – சீறா:3434/4
நந்த தாக்குதல் இருப்ப பின் ஒரு மொழி நவில்கேன் – சீறா:3435/4
விதித்தது இ மொழி துணிவதும் இவை என இசைத்தார் – சீறா:3437/4
வலிய வீரர்கள் எழுந்து நம் நபி மொழி வழியே – சீறா:3450/1
சுருதி வல்லவன்-தனை இரந்து ஒரு மொழி சொலுவார் – சீறா:3465/4
இந்த நல் மொழி இறையவனிடத்து இரந்து ஏத்தி – சீறா:3467/1
வசை மொழி உரைப்ப கடிதினில் வெகுண்டு மருங்கு உடைவாளினை வாங்கி – சீறா:3586/1
கொடி_இடை உதுமான் மனைவியர் என்னும் குயில் மொழி திரு மயில் இறந்து – சீறா:3591/2
பாரினில் தீனுக்கு இடர் நடத்தினர்கள் எனும் மொழி பகர்தர கேட்டார் – சீறா:3608/4
பொலிவுற சில மொழி புகலுவாம் அரோ – சீறா:3612/4
பற்றலர் எனும் மொழி செவியில் பற்றலும் – சீறா:3652/1
ஒற்றரில் ஒருவர் தோன்றி சில மொழி உரைப்பது ஆனார் – சீறா:3665/4
உற்று அறி என்பான் போல சில மொழி உரைப்பது ஆனான் – சீறா:3708/4
பின் முகம் திரும்பி ஏறா மொழி பல பிதற்றி பேசி – சீறா:3709/3
திருந்த அங்கு அவளுக்கு ஓதும் மொழி வழி சென்று செந்நீர் – சீறா:3713/3
கரும் தடம் கயல் கண்ணியை நறு மொழி கனியை – சீறா:3731/2
தெரிந்த நல் மொழி தரும் ஹபுசா எனும் திருவை – சீறா:3733/2
அனசு உரைத்த மொழி கேட்டு நன்கு என தீனவர் சூழ அரசர்_கோமான் – சீறா:3752/1
நனி புதுமை குரிசில் உரைதர மகிழ்ந்து கனி_மொழி நல் நுதலார் நின்ற – சீறா:3755/1
வாதியாது இருந்தேமெனில் அவ மொழி வளரும் – சீறா:3822/2
மடிவு இல் சிந்தையர் கேண்-மின் என்று ஒரு மொழி வகுப்பார் – சீறா:3830/4
ஒக்கலோர் முகம் பார்த்து இழி தரும் மொழி உரைப்பான் – சீறா:3864/4
விடுத்திடும் வீரம் பூண ஒரு மொழி விரைவில் சொல்வார் – சீறா:3872/4
சொன்ன மொழி தீ அங்கு அவர் காதில் சுட மேன்மேல் – சீறா:3914/1
கல்லும் நல் மொழி வாக்கினில் அடிக்கடி கலிமா – சீறா:4000/3
பிறந்தது ஓர் மொழி என்று கண் சிவந்து கை பிசைந்து – சீறா:4009/3
சொன்ன மொழி கேட்டு எழுபது அடல் வேந்தர் தொகை இல் சேனையொடும் – சீறா:4037/1
பிந்தாது அனேக மொழி வினவி பேசி மகிழ்ந்து பல வாழ்த்தி – சீறா:4040/2
பொய்யிலர் ஓர் மொழி புகலுவார் அரோ – சீறா:4052/4
ஆரணம் ஓதும் திரு மொழி கேட்கின் அகல் துளை செவி புதைத்து அகல்வன் – சீறா:4084/1
நஞ்சினும் கொடிய மொழி செவி ஓட நாட்டங்கள் சிவந்து அழல் தெறிப்ப – சீறா:4087/1
மிடிமையின் தமியேன் மொழி செவி கேட்ப வேண்டும் என்று உரை விளம்புவரால் – சீறா:4094/4
அறிவினில் பொருவு இலாத மெய் பெரியோய் அவ மொழி யாவரும் அறிய – சீறா:4105/2
வேட்டலுற்று வந்தான் சொல் மொழி தவறா மேன்மையன் ஒழுக்கமும் உடையன் – சீறா:4111/2
நாட்டமுற்று இனிதின் எழுந்தனன் எழலும் நல் மொழி மனையவள் நவில்வாள் – சீறா:4111/4
மனையவள் மொழி கேட்டு அணி முடி துளக்கி வாள் எயிறு இலங்கிட நகைத்து – சீறா:4114/1
வதைசெயும் கபட மொழி முறை உரைப்ப வரும் பெரும் பகை முடிந்தன என்று – சீறா:4122/3
திரு நபி தரு மொழி செவியில் கேட்டலும் – சீறா:4176/1
உக்கிரத்தோடு ஒரு மொழி பேசுவான் – சீறா:4225/4
பெறுக நீ எதிர் இ மொழி பேசினை – சீறா:4227/3
குறித்திடாது குறை மொழி பேசி முன் – சீறா:4231/2
மறம் மிகுத்தவர் வாய் மொழி கேட்டு உளம் – சீறா:4242/3
குறைவிலாது நிறை மொழி கூறுவார் – சீறா:4242/4
என்னும் நல் மொழி இன்னன பன்னியே – சீறா:4250/1
தறுகி நின்றது என் உரை என எதிர் மொழி சாற்றும் – சீறா:4258/4
தண் என் வாய் மொழி கொடுத்து அளித்து அடைக்கலம் தந்தார் – சீறா:4272/2
கன்னல் போல் மொழி திரு கலிமா உரை கழறல் – சீறா:4280/3
தேர்ந்து கூறிய மொழி உணர்ந்து அறிவினில் தேறி – சீறா:4281/1
தீனவர்கள்-தமை காணில் கோறலன்றி வேறு மொழி செப்பிலாதார் – சீறா:4298/3
மிஞ்சு ஆரண மொழி ஆரமுது இஃது என்ன விரைந்து – சீறா:4333/3
கூட்டமும் துறந்து யாரும் அவ மொழி கூறும் புன்மை – சீறா:4364/3
தப்பு இலா மொழி தூதர்-தம் காட்சியின் தகைமை – சீறா:4423/4
அறைதரு பல் வாச்சிய தொனி எழுந்த அவ மொழி வாய்மையும் எழுந்த – சீறா:4440/3
குவ்வினில் உதித்த சகுதினை அழைத்து சில மொழி கூறுவர் அன்றே – சீறா:4459/4
நிலைத்த வெம் மொழி சில நிகழ்ந்தது உண்டு அவை – சீறா:4544/3
அ மொழி கேட்டவர் பொருந்தி ஆடக – சீறா:4547/1
சத்தியம் என் மொழி என்ன சாற்றினார் – சீறா:4552/4
தாக்கிய தீ மொழி செவியில் சார்தலும் – சீறா:4561/1
மொழி கொடுத்து அடல் வலி நுகைமு மொய் இருள் – சீறா:4562/1
விதி மொழி மறுத்து எழும் தீனர் மேல் இன்று – சீறா:4565/1
ஓதினன் இ மொழி உளைய கேட்டவன் – சீறா:4566/2
ஈது என ஒரு மொழி எடுத்து காட்டுவான் – சீறா:4566/4
கேட்டு உளம் பயம் எய்திட ஒரு மொழி கிளத்தும் – சீறா:4598/4
இல் ஆதி நம் நபியே கேண்-மின் என மொழி அருளி கூறும் – சீறா:4623/4
ஈண்டினர் யாரும் கேண்-மின் என மொழி கூறி கூறும் – சீறா:4627/4
பெருமையாகிய மொழி சில பேசுதல் பேசி – சீறா:4636/2
வழு இலா மொழி கேட்டு அவர்க்கு ஆள் என வாழ்வோம் – சீறா:4638/4
அன்ன வாசகம் நினைந்து நாம் நபி மொழி அன்றி – சீறா:4640/1
ஆதி_நாயகன் மறை மொழி வந்தது ஆய்ந்து அறிந்து – சீறா:4643/2
துனி அறு மொழி எம்-பால் சொல்ல வேண்டுமே – சீறா:4645/4
தாவ அரும் வாய் மொழி சாற்ற சாரணன் – சீறா:4647/3
சாற்றும் அ மொழி கேட்டு அந்த சகுதுவும் – சீறா:4654/1
ஓது நல் மொழி உள் கொண்டு அஸ்காபிகள் – சீறா:4658/1
அன்னவர் அ மொழி உரைக்க நபி இறசூல் மனத்து அறிவால் ஆய்ந்துபார்த்தே – சீறா:4675/1
கன்னல் மொழி பொன் அனையார் வயிறு அலைத்து கண் கலுழ்ந்து கதறி ஏங்க – சீறா:4676/2
என்பன நல் மொழி பலவும் இயம்பி நபி பத மலரை இறைஞ்சி வாழ்த்தி – சீறா:4686/1
நிறைந்திடும் மொழி சேர் குத்துபா ஓதும் நேரத்தில் சென்று அடி வணங்கி – சீறா:4759/4
அந்த நல் மொழி கேட்டு இசைந்து அந்தகன் – சீறா:4766/1
செய்ய வேண்டும் என மொழி செப்பினான் – சீறா:4777/4
அ மொழி கேட்டு எல்லோரும் அகம் மகிழ்ந்து இருக்கும் நாளில் – சீறா:4784/1
தமக்கு எ மொழி சொல வேண்டும் என்று – சீறா:4825/3
நறை கொள் வாய் மொழி கேட்டு நயந்து மெய் – சீறா:4826/3
இவ்விடத்து இயம்பினார் மற்று எதிர் மொழி அவனும் சொல்வான் – சீறா:4851/4
சினத்துடன் நகைத்து நிந்தாதுதி மொழி செப்பி நின்றே – சீறா:4861/4
முற்பட இருந்து நல்ல மொழி பகர்ந்து இருக்கும் வேளை – சீறா:4873/2
திறனுற கேட்டது இல்லை அ மொழி தீட்ட வேண்டா – சீறா:4878/2
அ மொழி பொருந்தாது இந்த ஆண்டினுக்கு அகன்று போய் இ – சீறா:4882/1
என்று அவர் அடங்கலும் இரைந்து மொழி கூற – சீறா:4899/1
நன்று என நினைந்து நபி நல் மொழி பகர்ந்தே – சீறா:4899/2
குரை கழல் கோவை கொன்றார் எனும் மொழி பிறந்தது அன்றே – சீறா:4904/4
விதியவன் மொழி மறாத விறல் உடை தலைவர் யாரும் – சீறா:4911/2
தரும் மறை வேத மொழி செவி அறியா தறுகணர் கொடியவர் நாளும் – சீறா:5019/1

மேல்


மொழி-தன்னையும் (1)

தந்திரத்தில் உயர் மன்னர் சொன்ன மொழி-தன்னையும் நினைவில் எண்ணிலார் – சீறா:1426/3

மேல்


மொழி-தனை (2)

சிதைவு இலா மொழி-தனை அபித்தாலிபு தெளிப்ப – சீறா:1386/1
தருமம் என்று உரை வழங்கினன் அ மொழி-தனை நீ – சீறா:3530/1

மேல்


மொழி-மின் (1)

முறைசெயும் காரணீகர் திருமுனம் மொழி-மின் என்று என்று – சீறா:3054/3

மேல்


மொழி-அதனால் (1)

விரி மறையவர்கள் கூறும் மெய் மொழி-அதனால் வேண்டி – சீறா:2392/2

மேல்


மொழிக்கு (12)

இருத்தும் ஆலயத்து ஏகினர் அவன் மொழிக்கு இசைந்தே – சீறா:461/4
அதி வித புதுமை மறை மொழிக்கு முதல் ஆதியை தலைவணங்கியே – சீறா:1429/3
உரைத்த வாசகம் நன்கு உனது உறு மொழிக்கு எதிராய் – சீறா:1672/1
அங்கு அவன் மொழிக்கு ஒழுகினர் அவனினும் கொடியோர் – சீறா:2034/1
இந்த நல் மொழிக்கு இயைந்து இறைவ நம் பதி – சீறா:2437/1
இறையவன் தூதுவர் இசைத்த நல் மொழிக்கு
உறுதிகொண்டு எழில் பறா உரைத்த மாற்றமே – சீறா:2440/1,2
பகரும் இ மொழிக்கு ஈறு இலை என நிலைப்படுத்தி – சீறா:2457/3
ஈண்டு வல்லவன் தூதர்-தம் திரு மொழிக்கு இயைய – சீறா:2653/1
எண்மரை அவர் மொழிக்கு இணங்க சேர்த்து இனிது – சீறா:3319/2
திரு மொழிக்கு இயைவன் யான் என பணிந்து செப்பிய புடவி மண்-அதனில் – சீறா:3555/1
இவர் மொழிக்கு இன்னணம் இயைந்திலோமெனில் – சீறா:3623/1
ஓதும் மொழிக்கு அவர் உவந்த உண்மை கண்டு நின்ற இயல் உலுமாம் சொல்வான் – சீறா:4682/1

மேல்


மொழிக்குள் (1)

அடுத்த வன் மொழிக்குள் அகப்பட்டு நீர் – சீறா:1421/2

மேல்


மொழிகள் (13)

நல் நய மொழிகள் யாவும் மறையினின் நவிற்றுக என்ன – சீறா:1069/3
மனத்துக்கு இசைந்தபடி நல் மொழிகள் சில தெரிந்து சாற்றி வீறு ஆர் – சீறா:1086/2
இனத்தையும் வேறதாக்கி இவர்க்கு உறு மொழிகள் சாற்றி – சீறா:1357/2
உரைக்கும் உறுதி மொழிகள் சிலது உளது மனையில் பிறரவர்கள் – சீறா:2547/1
எட்டிய கீர்த்தி கொண்டோர் இனியன மொழிகள் சொல்வார் – சீறா:2603/4
நம் இனத்தினும் உரியள் என்று இனிய நல் மொழிகள்
உம்மி மஃபதுக்கு இசைத்து எழுந்தனர் மறை உரவோர் – சீறா:2701/3,4
பன்னிய மொழிகள் கேட்டு யாவரும் நகைத்து பாவி – சீறா:2827/1
என்னும் நல் மொழிகள் மிக்கோர் இனியன மகிழ்வில் கூற – சீறா:3076/1
ஆரண மொழிகள் யாவும் அணங்கு வாய் காட்டிற்று அன்றே – சீறா:3853/4
வீரியர் தீன் தீன் என்ன விளம்பிய மொழிகள் ஆர்த்த – சீறா:4179/3
நாயகி-தன்னை கண்டு நலன் உறு மொழிகள் சொல்வார் – சீறா:4688/4
இகல் அறு மொழிகள் கூறி துஆ இரந்து இரங்கி நின்றாள் – சீறா:4790/4
தா அறு மொழிகள் சொல்ல தகுவன உரைத்து மீள்வேன் – சீறா:4850/2

மேல்


மொழிகளாக (1)

நல் நய மொழிகளாக நவிற்றி அங்கு இருந்த காலை – சீறா:940/1

மேல்


மொழிகளால் (2)

என எடுத்த நல் மொழிகளால் இவர் கருத்து இயைய – சீறா:457/1
பொருளும் சொல்லும் ஒத்து இருந்தன மொழிகளால் பொருந்த – சீறா:2504/3

மேல்


மொழிகிலாமல் (1)

மை படும் கவிகை வள்ளல் மறுத்து ஒன்று மொழிகிலாமல்
எய்ப்புறு மனத்தராகி இனம் இல்லா தமியர் போல – சீறா:1493/2,3

மேல்


மொழிகின்றது (1)

முன்னம் எதிர்த்து ஓர் சின்னவன் ஈது மொழிகின்றது
என் என ஊழித்தீயினை ஒத்து அங்கு எதிர் வந்தார் – சீறா:3914/3,4

மேல்


மொழிகுவன் (1)

முன்பு உறு சுகைல் என்போனும் மொழிகுவன் பிசுமில்லாவின் – சீறா:4877/3

மேல்


மொழிதலும் (1)

முதியரை அழைத்து இ நிலம் விலைப்படுத்தி தருக என மொழிதலும் எவர்க்கும் – சீறா:2852/2

மேல்


மொழிந்த (8)

விரைவினின் மொழிந்த வார்த்தையும் கேட்டு வெருவியே அப்துல் முதலிபு – சீறா:272/3
ஞானம் ஊற்று இருந்து ஒழுகிட மொழிந்த செம் நாவால் – சீறா:577/4
இனி எவை உரைப்பன் யானும் இயல் நபி மொழிந்த மார்க்கம்-தனில் – சீறா:1496/2
முன்னவள் கனி வாய் விண்டு மொழிந்த சொல் மனத்துள் கொண்டு – சீறா:1574/1
முத்திரைப்பட முறையொடும் தேர்ந்து யாம் மொழிந்த
உத்தரம்-தனை வரைக என யாவரும் உரைத்தார் – சீறா:1681/3,4
முன் மறை தெளிந்தவர் மொழிந்த வாய்மையே – சீறா:1793/4
முடித்தனர் ஈன்றார் கேளிர் குழுவுடன் மொழிந்த ஆற்றால் – சீறா:2832/4
முரசு அறைந்து வள்ளுவர் தெருத்தலை-தொறும் மொழிந்த
உரை செவி புக நகரவர் பலரும் உள் உவந்து – சீறா:3116/1,2

மேல்


மொழிந்ததாயினும் (1)

நன்று நீர் மொழிந்ததாயினும் அடியேன் நாவினால் தேவரீர் மேலும் – சீறா:4088/1

மேல்


மொழிந்ததுவும் (1)

முறுகி வெம் சினத்து அபூசகல் மகன் மொழிந்ததுவும்
உறும் அமர் புலி கலபு அருள் உபை உரைத்ததுவும் – சீறா:3775/2,3

மேல்


மொழிந்தனர் (5)

இறையுடன் மொழிந்தனர் அமரர் யாருமே – சீறா:291/4
விருப்பொடு மொழிந்தனர் வெள்ளம் வந்து நம் – சீறா:730/3
வினவும் ஏறுடன் மொழிந்தனர் உமறு எனும் வீரர் – சீறா:1524/4
முறை வழி விளக்க தூதர் மொழிந்தனர் பாவைக்கு அன்றே – சீறா:3089/4
முடை செறி நீரும் அருந்திட கிடையாது என மொழிந்தனர் அரும் பாவம் – சீறா:5015/3

மேல்


மொழிந்தார் (3)

முன்னுதல் பொருளே என்ன யாவரும் மொழிந்தார் அன்றே – சீறா:1075/4
முருக்கி நம் புகழ் நிறுத்துதல் கடன் என மொழிந்தார்
மரு கொழும் தொடை துயல் புய பூதர வள்ளல் – சீறா:3818/3,4
சேனையின் திரள் செல எழும் துகள் என மொழிந்தார்
கோன் உவந்தவர் அதிசயித்து உளம் களி கூர்ந்தே – சீறா:4633/2,3

மேல்


மொழிந்திட்டார் (1)

முற்றிய தவத்தினர் மொழிந்திட்டார் அரோ – சீறா:4996/4

மேல்


மொழிந்திடல் (1)

முகம்மது என்னும் சொல் நாவின் மொழிந்திடல் என்ன பேசி – சீறா:2809/1

மேல்


மொழிந்திடும் (3)

முற்றும் காத்து அளித்திடுமவர் மொழிந்திடும் மொழி போல் – சீறா:2467/3
குறைஷிகட்கு எதிர் மொழிந்திடும் காபிர்கள் குலமும் – சீறா:2481/1
மொழிந்திடும் உரை வழி முன்னி இற்றையின் – சீறா:3626/3

மேல்


மொழிந்திலர் (1)

பிற மொழிந்திலர் மனத்திடை பயம் பெரிதானார் – சீறா:296/2

மேல்


மொழிந்திலராகி (1)

முறுவல் செய்து உரையாது ஒன்று மொழிந்திலராகி செவ்வி – சீறா:416/3

மேல்


மொழிந்தினிர் (1)

மொழிந்தினிர் அவையே முடிந்தன இனிமேல் மூளும் வெம் சினத்தினை முற்றி – சீறா:3595/2

மேல்


மொழிந்து (20)

என்றும் பற்பல மொழிந்து சபா சலித்து இருப்ப – சீறா:229/1
முறையல விடு-மின் என்ன மொழிந்து நெஞ்சு அழிந்து நிற்பார் – சீறா:413/4
முத்திரைப்படி வருகுவன் காண் என மொழிந்து அடி பணிந்தானே – சீறா:667/4
முகில் கவிகை முகம்மதிடம் சென்று சிறிது உத்தரத்தை மொழிந்து யான் ஓர் – சீறா:1642/1
விகற்பம் இலை என படுத்தி வருவன் என மொழிந்து எழுந்தான் வீரர்க்கு அன்றே – சீறா:1642/4
மொழிந்து வல் வினை தொடுத்திடும் முகம்மதின் வாய்மை – சீறா:2000/3
முன் இருந்து இரு கண் ஆலி கலுழ்தர மொழிந்து முன்னோன் – சீறா:2398/2
முன் முக மலர்ச்சியின் மொழிந்து வேறு ஒரு – சீறா:2447/1
முறை இவர்க்கு பின் இவர் என மொழிந்து விண் போனார் – சீறா:2460/4
முன்னை நாள் அபித்தாலிபு-வயின் பலகால் மொழிந்து வற்புறுத்தியது அனைத்தும் – சீறா:2509/1
முத்திரை முகம்மது மொழிந்து காட்டிய – சீறா:2762/1
அறுதியின் மொழிந்து நின்றேன் ஆதி-தன் தூதின் மிக்கோய் – சீறா:2826/4
முன்னர் நம் முன் நலம் மொழிந்து அபூஜகல்-தன்னுடன் – சீறா:3277/1
முறைமையின் மறை வழி மொழிந்து காட்டினார் – சீறா:3333/4
முறைமுறை பணிந்து போந்து நிகழ்ந்தவை மொழிந்து சேர்த்த – சீறா:3349/2
அன்னதே கருத்து என மொழிந்து இனிதொடும் அரிதில் – சீறா:3823/3
குழுவொடும் இனையன மொழிந்து கோது இல் தன் – சீறா:4562/3
மை ஆரும் குபிர் நீக்கி கலிமாவும் மொழிந்து மறை வழி நின்றாரே – சீறா:4683/4
முந்த என் சலாம் சொல் என்று மொழிந்து அவன்-தன்னை ஏவ – சீறா:4704/2
முன் தருதிர் என்று அவர் மொழிந்து உளம் மகிழ்ந்தார் – சீறா:4899/4

மேல்


மொழிப்பட (2)

ஒரு மொழிப்பட இனத்தவர் ஒருங்குற நெருங்கி – சீறா:1383/3
வீறு கொண்டு ஒரு மொழிப்பட எதிர் விளம்புவரால் – சீறா:1671/4

மேல்


மொழிப்படி (1)

அமரருக்கு அரசர் மொழிப்படி திருந்த அலி-தமை அணை மிசை படுத்தி – சீறா:2542/1

மேல்


மொழிப்படியே (1)

பழுதிலாதவன் உரைத்த நல் மறை மொழிப்படியே
தழுவி வெம் குபிர் களைதர வேல் வலம் தரித்தோய் – சீறா:2927/1,2

மேல்


மொழிப்படியேயன்றி (1)

வல்லவர் தூதீர் அல்லா மறை மொழிப்படியேயன்றி
கல் அக ஞாலம்-தன்னில் கடி மணம் விரும்பேன் என்றார் – சீறா:4692/3,4

மேல்


மொழிய (6)

தெரித்து அருள்புரி என்று இறையுடன் மொழிய செவ்விய முகம்மது நபி-தம் – சீறா:128/3
மொழிய வேண்டுவதில் என சிலர் மொறுமொறுத்தார் – சீறா:1375/4
முன்னிய வேட்டுவன் மொழிய ஆதி-தன் – சீறா:1610/3
முறை வழி முகம்மது எனும் நபி அறபின் வருகுவர் என அவர் மொழிய
உறுதியின் திரும்பி வரும் நடுவழியின் இறந்தனர் முறைமையின் உரவோய் – சீறா:2902/3,4
அழுந்திட பொருதல் அறிவு அல என அபாசு எனும் தந்தையர் மொழிய
செழும் திறல் நபியும் இஃது நன்று என்ன நிதியின் மேல் சேறலை விடுத்தார் – சீறா:3595/3,4
முடிவு கண்டனன் தீனவர்-தமக்கு என மொழிய
திட வய பரி கலபு அருள் புதல்வன் செப்புவனால் – சீறா:3772/3,4

மேல்


மொழியதாய் (1)

இதத்த நல் மொழியதாய் பன்னிருவரும் உரைத்த மாற்றம் – சீறா:2354/1

மேல்


மொழியா (1)

முறைமுறை மூன்று நாளும் இ வண்ணம் மொழியா நின்றார் – சீறா:2568/4

மேல்


மொழியாது (2)

விலங்கு இனம் ஒத்து எவரோடும் மொழியாது தனி எழுந்து விரைவில் போனான் – சீறா:1657/4
வந்து நின்றிடும் பனீகுறைலாவொடும் மொழியாது
அந்தம் மிஞ்சிய நபியிடத்து அணுகவும் நாணி – சீறா:4641/1,2

மேல்


மொழியாய் (4)

கண்டு எனும் மொழியாய் இவ்வயின் நிகழ்ந்த காரண காட்சிகள் எல்லாம் – சீறா:284/3
மந்திர மொழியாய் ஏதோ வாசகம் உளது என்றான்-தன் – சீறா:1068/3
ஈனம் அற்று உரைப்ப இடருறும் மொழியாய் இட கரம் வழங்குவதலது – சீறா:1445/3
மூதுரை தெளிவினும் மறையினும் முதிர் மொழியாய்
போதரத்தொடும் புகழொடும் இதத்தொடும் புகல்வான் – சீறா:1844/3,4

மேல்


மொழியார் (7)

கண்டு எனும் மொழியார் கருப்ப நோய் அகன்று கலக்கமும் தெளிந்தனர் அன்றே – சீறா:244/4
சூது அர மொழியார் ஆமினாவிடத்தில் தோன்றலை கொடுத்து அகன்றனரே – சீறா:264/4
கொஞ்சும் மென் குதலை கிளியொடும் மொழியார் கொழு மடல் செவிக்கு இசை கொள்ளார் – சீறா:1015/2
திரையினில் பிறந்த அமுது எனும் மொழியார் செழும் மணி தீபங்கள் ஏந்த – சீறா:1199/2
இக்கு மென் மொழியார் எனும் கதீஜாவும் இனிதுற பெரிது வாழ்ந்திருந்தார் – சீறா:1215/4
சூது அர மொழியார் சிந்தை தொட்ட மெய் எழில் சேர் வள்ளல் – சீறா:3359/3
பாகு ஒத்த மெய் மொழியார் முகம் நோக்கி பயம் இல்லா – சீறா:4349/3

மேல்


மொழியால் (4)

மதுர மென் மொழியால் அளவளாய் உளங்கள் மகிழ்ந்து இனிது இருக்கும் அ காலை – சீறா:1944/2
தெள்ளும் நல் மொழியால் எவரையும் வினவும் பொழுதினில் அவை தெரிந்திலவே – சீறா:2510/4
ஒரு திரு மொழியால் வாழும் உலகு என்றால் அதனை தோன்றாது – சீறா:2804/3
திடம் தரு மொழியால் அழைத்து அருகு இருத்தி தீயவன் அபூஜகுல் என்போன் – சீறா:3565/2

மேல்


மொழியாள் (2)

சாலவும் இறந்த தரு இனம் தழைப்ப தர வரும் இனிய மென் மொழியாள் – சீறா:1962/4
கரும்பு எனும் மொழியாள் ஆசை கவின் முளைத்து என்ன தோட்டு உள் – சீறா:3191/1

மேல்


மொழியான் (4)

மதுர மென்_மொழியான் உத்துபா அலது மறுத்து எவர் உளர் என தேர்ந்தார் – சீறா:675/4
கூறும் மென்_மொழியான் உத்துபா என்னும் குரிசில் பின் யாவரும் நடந்து – சீறா:676/1
சுவை அறு மொழியான் என்னை சுமந்து இவண் இறக்கிவைத்தான் – சீறா:2078/4
சுவை அறு மொழியான் நாளும் பகையினை தொடங்கி நின்றோன் – சீறா:4358/3

மேல்


மொழியில் (3)

உய்யு மென் மறை முகம்மதின் மொழியில் ஒன்று-அதனை – சீறா:1898/2
பிடித்து ஒரு மொழியில் நெஞ்சம் பேதுற அவனை நுங்கள் – சீறா:2382/1
சாற்றிய மொழியில் ஒன்றும் தவறு இலாது உரை என்று அந்த – சீறா:4864/2

மேல்


மொழியின் (2)

அடுத்து அடாத சில மொழியின் வேகமோடு அடர்த்துவிட்டு எழில் முகம்மதின் – சீறா:1431/2
முன்னவர் மும்மறை மொழியின் ஈறினில் – சீறா:3323/1

மேல்


மொழியின்படி (1)

அ மொழியின்படி சிலபேர் அ சிறை கொண்டு அ தலத்தில் அணுக இப்பால் – சீறா:4673/1

மேல்


மொழியினில் (1)

பெருத்த வாய் திறந்து அறபு எனும் மொழியினில் பேசும் – சீறா:2009/4

மேல்


மொழியினும் (1)

பரிசனத்தவர் மொழியினும் அறிவினும் பார்த்தே – சீறா:2036/2

மேல்


மொழியினை (5)

தெரிய வைத்திடு என்று ஓதிய மொழியினை தேறி – சீறா:963/2
பிற பல மொழியினை பிதற்றல் என்-கொல் ஓர் – சீறா:1826/1
உரைத்திடும் மொழியினை உறுதியாக உள் – சீறா:2420/1
பொருத்தி என் மொழியினை பொருத்தல் வேண்டுமால் – சீறா:2420/4
அஞ்சல் இன்றி விண் அதிர்ந்திடும் மொழியினை ஆய்ந்த – சீறா:2700/1

மேல்


மொழியினோடும் (1)

செவ்விய மொழியினோடும் செகதலத்து இழிந்து கூறா – சீறா:3088/2

மேல்


மொழியீர் (1)

கொஞ்சும் மென் மொழியீர் மதலையை கொணர்க என்று உரைத்தனர் குளிர் மழை கொடையார் – சீறா:275/4

மேல்


மொழியும் (6)

முத்த வெண் நகை கனி மொழியும் மோகன – சீறா:178/2
செயிர் அறு கனவும் இங்கு செப்பிய மொழியும் ஓலை – சீறா:1050/1
நென்னல் ஏற்று உரையும் தெய்வம் நிகழ்த்திய மொழியும் பார்த்து – சீறா:1565/1
பகரும் நல் மொழியும் மற்றோர் தீட்டு பாசுரத்தின் கூறும் – சீறா:3058/2
இரு வகை மொழியும் கேட்டு அறபி ஈங்கு உறை – சீறா:3329/1
சொல்லும் திரு மொழியும் இணை துள்ளும் பிணை விழியும் – சீறா:4348/3

மேல்


மொழியே (2)

இறையவன் மொழியே என்ன இதயத்தில் இருத்தி வேத – சீறா:1578/2
இதத்தது இ மொழியே முகம்மது என்பவனை இரும் கொலைப்படுத்தலே வேண்டும் – சீறா:2517/1

மேல்


மொழியை (10)

கூறிய மொழியை வேய்க்கும் குயிலுக்கும் கொடுத்து செம் தேன் – சீறா:1062/1
புதிய மொழியை தொல் கிளைக்கு புகழ்ந்தான் நபியை இகழ்ந்தானே – சீறா:1596/4
இருமையினும் கதி தரும் நும் புது மொழியை எனது செவிக்கு இயைவதாக – சீறா:1654/3
விள்ள அரிது இ நிலத்தில் எவர் எதிர் உரைப்பர் எனும் மொழியை விளம்பினானே – சீறா:1659/4
கூறிய மொழியை கேட்டு குழுவுடன் இருந்த ஜின்கள் – சீறா:2272/1
பிறந்ததோர் மொழியை நீ ஓர் பொருள் என பிதற்றல் தேறா – சீறா:2820/3
இந்த நல் மொழியை நும்-பால் இயம்பு என இறைவன் ஏவ – சீறா:3073/1
கூறிய மொழியை கேட்டு கொவ்வை அம் கனி வாய் பேதை – சீறா:3710/1
சொல்லும் அ மொழியை கேட்டு தோகையர் திலதம் என்ன – சீறா:4692/1
சொல அரு மொழியை கூறும் சுகயிலை நோக்கி வள்ளல் – சீறா:4883/1

மேல்


மொழியொடும் (4)

ஓது நல் மொழியொடும் இரு கரம் குவித்து ஒதுங்கி – சீறா:1360/2
செவி குளிர்ந்த நல் மொழியொடும் அறுதி செய்க என்றார் – சீறா:2461/4
இருத்தி நல் மொழியொடும் இசைவதாகவே – சீறா:3272/3
சீத நல் மொழியொடும் பலருடன் இனம் தெரிந்து – சீறா:3430/3

மேல்


மொழிவ (1)

மொழிவ பின் ஒன்று கேட்டேன் முன்னவன் அசுஅது என்போன் – சீறா:2386/3

மேல்


மொழிவதாயினார் (1)

முறையொடும் தெளிதர மொழிவதாயினார் – சீறா:2431/4

மேல்


மொழிவது (2)

முனை தட கை அபூஜகில் தன் குலத்தோரை எதிர் நோக்கி மொழிவது ஆனான் – சீறா:1661/4
கைக்கொளாதிருத்தல் புதுமையேயன்றி கானிடை விலங்கு இனம் மொழிவது
இக்கணம் புதுமை என எடுத்து இசைத்தல் ஏழமை என உரைத்து அகன்ற – சீறா:2888/3,4

மேல்


மொழிவாயே (1)

மோகமுற்று யான் கண்டிடும் கனவினை மொழி என மொழிவாயே – சீறா:664/4

மேல்


மொழிவான் (1)

மோதி வந்து அபித்தாலிபுக்கு உரிமையின் மொழிவான் – சீறா:2196/4

மேல்


மொறுமொறுத்தார் (1)

மொழிய வேண்டுவதில் என சிலர் மொறுமொறுத்தார் – சீறா:1375/4

மேல்