ஷா – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

ஷாம் (11)

படித்த பாட்டு அயர் பொழில் திகழ் ஷாம் எனும் பதிக்கு – சீறா:561/2
பொன்றிலா புகழ் ஷாம் எனும் பதியிடை புகுந்தே – சீறா:586/2
எழுந்து ஷாம் எனும் பதியை விட்டு இரும் சுரம் கடந்து – சீறா:587/1
கொடுத்த தங்கம் அலால் பெரும் ஷாம் என குறித்திடும் திசைக்கு ஏற்க – சீறா:660/1
பத்திவிட்டு ஒளிர் ஷாம் என்னும் பதி உடை தலைவர்-கொல்லொ – சீறா:794/2
பலன் பெறும் முகம்மது இங்ஙன் ஷாம் எனும் பதியை நாடி – சீறா:829/1
பாதை போந்தனர் ஷாம் எனும் திரு பெயர் பதிக்கு ஓர் – சீறா:854/3
கடந்து இலங்கிய ஷாம் எனும் திரு நகர் கண்டார் – சீறா:872/4
கனை வாருதி நிகர் ஷாம் உறை கதிர் மா முடி வீரர் – சீறா:977/1
நிதியொடும் போயின நிகரில் ஷாம் எனும் – சீறா:3307/3
ஷாம் எனும் பதியை நீந்தி தலைவர் நாற்பதின்மர் சூழ – சீறா:3389/1

மேல்


ஷாமிராச்சியத்தில் (1)

திறல் உடை சைதும் ஷாமிராச்சியத்தில் சென்று அரும் கணிதரை கேட்ப – சீறா:2902/1

மேல்


ஷாமிருந்து (1)

அரும்பு மென் மலர் வாவி சூழ் ஷாமிருந்து அடுப்ப – சீறா:3426/1

மேல்


ஷாமில் (3)

திரு நகர் ஷாமில் சென்று செய்தொழில் முடித்து வல்லே – சீறா:602/3
பாய் அரி போன்று சில் நாள் பாதை காத்து இருப்ப ஷாமில்
போயின சரக்கும் மாவும் ஒட்டகை குழுவும் பொங்கி – சீறா:3341/1,2
போன நாளளவும் ஷாமில் வஞ்சகம் புணர்த்தி நீதி – சீறா:4357/3

மேல்


ஷாமின் (3)

வருந்திலா மறையவர்களே ஷாமின் மன்னவரே – சீறா:976/1
தரள வெண் துளி திரை எறி தடம் திகழ் ஷாமின்
வரும் எகூதிகள் தலைவரில் இபுனு கை பான் என்று – சீறா:2907/2,3
சுற்றம் எனும் மள்ளர் சிலர் சோபமொடு ஷாமின்
உற்றனர்கள் மற்றவர் ஒருங்கொடு திரண்டு – சீறா:4136/2,3

மேல்


ஷாமினி (1)

அறா கதிர் புரிசை ஷாமினி யாத்திரை அகற்றி பின்னர் – சீறா:3680/2

மேல்


ஷாமினில் (3)

அலகு இல் கூட்டம் உண்டு அ பெரும் ஷாமினில் அடைந்தால் – சீறா:564/2
கறங்கிய ஷாமினில் காபிரில் சிலர் – சீறா:901/3
ஷாமினில் புக்கி மா நிதியம் தன்னொடு – சீறா:3613/1

மேல்


ஷாமினிலிருந்து (3)

என்னும் நீர்மையில் ஷாமினிலிருந்து இவண் அடைந்த – சீறா:3429/1
இந்து தீண்டிய மேனிலை ஷாமினிலிருந்து
வந்த பொன்னொடும் மாந்தரை செலும் வழி மறித்து – சீறா:3435/2,3
ஆதி நீள் மதிள் ஷாமினிலிருந்து வந்தவரும் – சீறா:3439/1

மேல்


ஷாமினின்று (1)

ஷாமினின்று எழுந்த பின்னர் தம் படையலது வெற்றி – சீறா:3421/1

மேல்


ஷாமினுக்கு (5)

என்னையும் கொடு ஷாமினுக்கு ஏகும் என்றி இசைப்ப – சீறா:545/2
வித்தகர் பொழில் ஷாமினுக்கு என விளம்பினரே – சீறா:559/4
உறுதி ஷாமினுக்கு ஏகி இங்கு அடைகுவன் உமது அருள் உளதாகில் – சீறா:653/2
ஷாமினுக்கு அனுப்பினர் சமயம் ஈது என்றார் – சீறா:3298/4
பற்றலர் ஷாமினுக்கு ஏகும் பாதையில் – சீறா:3305/2

மேல்


ஷாமினை (3)

சூத மென் பொழில் வளைதரு ஷாமினை சூழ்ந்த – சீறா:572/2
விலகு நீள் கதிர் சுதை நிலை ஷாமினை விடுத்து – சீறா:3446/1
துடவை சுற்றிய ஷாமினை துறந்து அவர் உறைந்த – சீறா:3447/1

மேல்


ஷாமு (1)

ஷாமு நகரத்து நசுறானிகள்-தமக்குள் – சீறா:892/1

மேல்


ஷாமுக்கு (3)

மக்க நல் நகரார் ஷாமுக்கு அனுப்பிய முதலும் மற்றும் – சீறா:3339/1
சரக்குகள் சில் நாள் முன்னர் ஷாமுக்கு போயது அன்றே – சீறா:3356/4
கவின் உறும் ஷாமுக்கு ஏகி வருமவர் கடிதில் தீட்டி – சீறா:3388/2

மேல்


ஷாமுநாட்டவர் (1)

ஷாமுநாட்டவர் உரை அனைத்தும் சம்மதித்து – சீறா:916/1

மேல்