நொ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

நொடி (14)

நொடி நொடிப்பது போலும் ஒத்து இருந்தது என் நூலே – சீறா:20/4
வந்ததும் ஆமினா திரு மனையில் வைத்ததும் ஒரு நொடி பொழுதே – சீறா:265/4
பேதம் அற்று அணுகி ஒட்டக கயிற்றை பிடித்தனர் அரை நொடி பொழுதில் – சீறா:694/3
வரிசை நம் நபி முகம்மதை ஒரு நொடி பொழுதும் – சீறா:834/2
சற்று ஒரு நொடி வரை தவிர்ந்திரான் மன – சீறா:1484/3
பெரும் கிரி அனைத்தையும் பிதிர்த்திட்டு ஓர் நொடி
அரும் கதிர் பொழுதினில் அடைகுவோம் என்றார் – சீறா:1803/3,4
பொய்மை ஓர் நொடி வரை பொழுதில் தீர்ந்திடும் – சீறா:1818/1
நொடி வரை இமை மூடாமல் நோக்கியே கிடந்தது அன்றே – சீறா:2060/4
ஒரு நொடி பொழுது எம் முன்னர் உவந்து இனிது இருந்து ஓர் மாற்றம் – சீறா:2392/3
இமை நொடி பொழுது அடுத்து இருந்து அறிகிலம் யாங்கள் – சீறா:2478/2
மட்டற புகழ்ந்து பிறரவர் அறியா வண்ணத்தின் ஒரு நொடி பொழுதின் – சீறா:2528/3
எற்கு உரைக்க நா இலை ஓர் நொடி போதில் இரு தாளும் இறும் அல்லாது – சீறா:2673/2
உரைதரும் திரு நபியிடத்தின் ஓர் நொடி
வரையினில் ஜிபுறயீல் வந்து உற்றார் அரோ – சீறா:2957/3,4
போவதற்கு இடம் இலை இறந்தனை நொடி போதில் – சீறா:3518/4

மேல்


நொடிக்குள் (6)

உண்டது இல்லை-கொல் என்ன வந்து உதித்த அ நொடிக்குள்
அண்டர் போற்றிய முதல் இறையவன் திருவருளால் – சீறா:774/2,3
அதிர்தரும் வாய்விட்டு அந்தரம் முழுதும் அரற்றுவது அகுமது நொடிக்குள்
மதி அழைத்திடுவர் ஐயுறல் எனும் சொல் மானிடர்க்கு உரைப்பன போலும் – சீறா:1910/3,4
உரு பொதிந்த நல் வடிவவர் உரைத்து ஒரு நொடிக்குள்
பருப்பதங்களுக்கு இறை செழும் தடம் சிறை பரப்பி – சீறா:2230/1,2
ஒரு நொடிக்குள் அந்தரம் அடங்கலும் திரிந்து உலவி – சீறா:2233/1
ஒரு நொடிக்குள் இ வானகம் கவிந்தமட்டு உலவி – சீறா:2233/2
ஒரு நொடிக்குள் வந்து அடுத்தனர் உத்பத் என்பவனை – சீறா:3544/3

மேல்


நொடிப்பது (1)

நொடி நொடிப்பது போலும் ஒத்து இருந்தது என் நூலே – சீறா:20/4

மேல்


நொடிப்பொழுது (1)

சிறு நொடிப்பொழுது இவண் சேர்வர் கண்களால் – சீறா:1826/2

மேல்


நொடியினில் (5)

நோக்கியும் நோக்காதும் போல் நொடியினில் எழுந்து அ மாதின் – சீறா:640/2
வானம்மட்டு இருண்ட கொடிய வல் இருளை மறைபட நொடியினில் மாற்றி – சீறா:1912/2
புதிய நல் நீருள் ஆழ்ந்து நொடியினில் வீழ்ந்து போய – சீறா:2109/3
நொறுக்குவன் காண்டி என்ன நொடியினில் பல கால் மீசை – சீறா:2811/2
வெந்து தாழ்ந்து ஒரு நொடியினில் துகள்-அதாய் வீழும் – சீறா:4278/4

மேல்


நொதுமலனே (1)

நோ வர இறுக கட்டிவைத்து எழுந்து போயினன் ஒரு நொதுமலனே – சீறா:2309/4

மேல்


நொந்த (1)

மிடித்து நொந்த சிற்றெறும்பு ஒரு மூச்சுவிட்டது போல் – சீறா:19/3

மேல்


நொந்தனம் (1)

உள்ளம் நொந்தனம் முகம்மது இங்கு உறு பொருட்டதனால் – சீறா:849/2

மேல்


நொந்திருந்து (1)

நொந்திருந்து அழுதேன் பூட்டும் தளை எல்லாம் நுறுங்கி நூறாய் – சீறா:2845/3

மேல்


நொந்து (24)

சிந்தை நொந்து இபுலீசுவும் திகைத்திருந்து இடைந்தான் – சீறா:189/4
வருந்தி நொந்து அழுது ஆமினா இடைதலும் வளைந்து – சீறா:210/1
வருந்தி நொந்து இருந்த ஆமினா திரு முன் வந்து நின்று அழகு உறும் வெண் புள் – சீறா:243/1
இதயம் நொந்து இரு கை ஏந்தி இரப்ப கண்டு தாய் – சீறா:305/2
இதயம் நொந்து ஆவி சோர இடைந்து வாடுவர்கள் அன்றே – சீறா:410/4
ஓடிய சிறுவர் கால் நொந்து உலைந்து இளைத்து உடலம் வேர்த்து – சீறா:425/1
நொந்து இருந்தவாறு ஏது என பூம்_கொடி நுவன்றாள் – சீறா:459/2
சிந்தை நொந்து வன் மறம் அற ஒடுங்கினர் திகைத்தே – சீறா:590/4
நொந்து ஆவி பதைத்திட நோக்கினரால் – சீறா:717/2
நொந்து மெய் அகம் பதறிட கணவரை நோக்கி – சீறா:1275/1
திருந்திலா காபிர்கள் சிந்தை நொந்து அவண் – சீறா:1834/1
அறவு நொந்து அகத்து அடங்கினர் என அறம் முதிர்ந்து – சீறா:2049/2
இரைக்கு நொந்து அவண் இருப்ப கண்டு இ உரு மடியில் – சீறா:2684/2
அடைந்தவர் எவரும் சுரத்தினால் அற நொந்து அவதியுற்றனர் என நபி உள் – சீறா:2873/1
இருள் குழல் மாலை சோர இதயம் நொந்து ஒருத்தி போனாள் – சீறா:3201/4
நொந்து சென்னி வைத்து அடிக்கடி யாரையும் நோக்கி – சீறா:3985/2
காயம் நொந்து அரு விடாய் மிகுந்து வரு கால் தளர்ந்து உளம் வருந்தியே – சீறா:4217/2
நொந்து நோக்கிடின் அவை எலாம் ஒருங்குடன் நூறி – சீறா:4278/3
உள்ளம் நொந்து அந்த பனீகுறைலா ஒருங்கு ஈண்டி – சீறா:4644/2
புடை வர பயந்து நொந்து பொருமலுற்று அயர்ந்து வாடி – சீறா:4720/1
கருத்து உற அயர்ந்து நொந்து கவலையுற்று உடம்பு வாடி – சீறா:4731/1
நொந்து அயர்வுற்று யாதனை நோயினால் – சீறா:4772/2
பேதுற அடைந்து நொந்து பிதா என அடுத்தால் உள்ள – சீறா:4788/3
மகவுகள்-தம்மை பார்த்து வாய் திறந்து அழுது நொந்து
சகதலம் முழுதும் நின்ற தனி பெரும் பொருளை உன்னி – சீறா:4790/2,3

மேல்


நொந்துநொந்து (1)

புந்தி நொந்துநொந்து அவரவர் திசைதிசை புகுந்தார் – சீறா:189/3

மேல்


நொய்தா (1)

ஈட்டிய சுமையும் நொய்தா பொருத்துவது இயற்கை என்றே – சீறா:4737/4

மேல்


நொய்தாய் (1)

வடுப்பட ஊன்றி நொய்தாய் வகிர்ந்திடும் போதில் நெஞ்சம் – சீறா:417/3

மேல்


நொய்துற (1)

நோக்கிய விழியும் வேய் எனும் தோளும் நொய்துற வலத்தினில் துடித்த – சீறா:4113/1

மேல்


நொய்துறும் (1)

பெருகிய கீர்த்தி நொய்துறும் சமயம் பிழைவுறும் அழகு உறு நீதி – சீறா:4474/3

மேல்


நொய்ய (1)

புனை மலர் மகரம் தேனும் பொருவரா மென்மை நொய்ய
கனி உறு கலத்தை என் முன் கடிதினில் கொணர்தி என்றார் – சீறா:4710/3,4

மேல்


நொவ்விதில் (1)

நொவ்விதில் திறந்து உள் ஆய கரப்பை யார் நுவல வல்லார் – சீறா:3702/4

மேல்


நொவ்விய (1)

நொவ்விய மனத்து இபுனுகலபு என்பவன் – சீறா:1480/2

மேல்


நொறுக்குவன் (1)

நொறுக்குவன் காண்டி என்ன நொடியினில் பல கால் மீசை – சீறா:2811/2

மேல்


நொறுங்கின (1)

ஐயமற்று அற நொறுங்கின கேடகம் அன்றே – சீறா:3521/4

மேல்


நொன் (1)

நோக்கி வீசும் கடுத்தலை நொன் கரத்து – சீறா:4504/2

மேல்