மீ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மீ 1
மீக்காயிலும் 1
மீக்காயீலும் 2
மீக்கு 2
மீக்கூறும் 1
மீக்கொண்டது 1
மீக்கொண்டு 5
மீக்கொண்டும் 1
மீக்கொள் 1
மீக்கொள 3
மீக்கொளும் 1
மீச்சென்று 1
மீசை 3
மீசையில் 1
மீசையின் 1
மீட்குவன் 1
மீட்டதோ 1
மீட்டனர் 2
மீட்டி 1
மீட்டு 7
மீட்டும் 4
மீட்ப 1
மீண்ட 2
மீண்டவாறும் 1
மீண்டனர் 6
மீண்டார் 1
மீண்டு 9
மீண்டும் 3
மீதி 1
மீதிருந்து 2
மீதில் 27
மீதின் 1
மீதினில் 18
மீதினும் 10
மீது 35
மீதும் 6
மீதுற 1
மீதுறு 1
மீதே 1
மீள்குவம் 1
மீள்குவர் 1
மீள்குவன் 2
மீள்வதற்கு 1
மீள்வர் 1
மீள்விர் 2
மீள்வேன் 1
மீள 1
மீளவும் 1
மீளவேண்டுமால் 1
மீளியர் 1
மீளுதி 1
மீளும் 2
மீற 4
மீறவே 3
மீறி 11
மீறிய 9
மீறிலான் 1
மீறு 4
மீறும் 5
மீறுமே 1
மீன் 10
மீனையும் 1
மீனொடு 2
மீனொடும் 1

மீ (1)

வெற்றி வாளினில் வீசிட வீரர் மீ
உற்ற சந்திரன் வீழ்ந்தனன் ஒத்து என – சீறா:3906/1,2

மேல்


மீக்காயிலும் (1)

என்னுடன் இசுறாபீல் மீக்காயிலும் சாட்சி ஏய – சீறா:3072/2

மேல்


மீக்காயீலும் (2)

அற நெறி மீக்காயீலும் அதிசயித்து அகத்தினுள்ளே – சீறா:416/2
அற நெறி மீக்காயீலும் சாட்சியதாக நானே – சீறா:3099/3

மேல்


மீக்கு (2)

வழி கதிர் முகம்மதின் வனப்பு வெள்ளம் மீக்கு
எழு திரைக்கு உவந்து அனம் எழுந்த கூட்டம் போல் – சீறா:1151/1,2
விரி பெரும் கடல் அம் தானை வெள்ளம் மீக்கு எழுந்து பாலை – சீறா:3415/1

மேல்


மீக்கூறும் (1)

உலகம் மீக்கூறும் பெரும் புகழ் குரிசில் உள்ளகம் புழுங்கிட நக்கி – சீறா:4959/1

மேல்


மீக்கொண்டது (1)

மீறி வெண் திரை புரட்டி மீக்கொண்டது வெள்ளம் – சீறா:848/4

மேல்


மீக்கொண்டு (5)

அதிர்ப்பொடும் வேக மீக்கொண்டு அடிக்கடி கடித்தது அன்றே – சீறா:2592/4
ஈடுபட கவ்வியது நபியின் உரை மறுத்தோரை எரி மீக்கொண்டு
சூடுபடும் அழல் குழி வெவ்விட பாந்தள் பகு வாயின் துளை பல் பூண – சீறா:2667/2,3
வெவ்விய சீற்றம் மீக்கொண்டு இருந்தனன் வெறியின் மன்னோ – சீறா:2791/4
சிறு பொறி தெறிப்ப சேந்து கனல் எழ சீற்றம் மீக்கொண்டு
உறும் மொழி உரைத்தானல்லன் உரவர்கள் நகைக்க மாறா – சீறா:2808/2,3
கொண்டல் வேகம் மீக்கொண்டு என முனைப்பதி குறுகி – சீறா:4579/1

மேல்


மீக்கொண்டும் (1)

ஆசு இல் நல் பசி மீக்கொண்டும் அருந்திட பொருந்திடாமல் – சீறா:2834/3

மேல்


மீக்கொள் (1)

திரை முகில் வரையும் விண்ணும் திகாந்தமும் நடுவும் மீக்கொள்
இரை கடல் ஏழும் பாரும் இலங்கு ஒளி விரிந்தது அன்றே – சீறா:1260/3,4

மேல்


மீக்கொள (3)

அரவம் மீக்கொள குணில் எடுத்து அணி முரசு அறைந்தான் – சீறா:1102/4
பக்கம் மீக்கொள பந்தரின் வயிர பந்திகளின் – சீறா:1113/2
மிதித்து என இல் என வேகம் மீக்கொள
குதித்தன நெருங்கின குதிரை ஈட்டமே – சீறா:1141/3,4

மேல்


மீக்கொளும் (1)

வேகம் மீக்கொளும் படை எழ கடிதினில் வேண்டல் – சீறா:3834/2

மேல்


மீச்சென்று (1)

காலினில் செறிந்து மீச்சென்று இலங்கிய கவிகை சோலை – சீறா:3870/1

மேல்


மீசை (3)

மடித்து இதழ் அதுக்கி காந்தி வாள் வலன் ஏந்தி மீசை
துடித்திட வேகத்தோடும் சென்றனன் துணர் பைம் காவை – சீறா:2384/1,2
நொறுக்குவன் காண்டி என்ன நொடியினில் பல கால் மீசை
முறுக்குவன் அங்கை வாளான் மோதுவன் என்றே ஆடை – சீறா:2811/2,3
வியர்த்தனன் கரிய மீசை துடித்தனன் விழியின் அங்கி – சீறா:4387/2

மேல்


மீசையில் (1)

மறம் முதிர் சின கண் இமைப்பு இல விழித்து மணி விரல் மீசையில் சேர்த்தி – சீறா:3572/2

மேல்


மீசையின் (1)

கண்களில் சேப்பும் நுதலினில் வியர்ப்பும் கரிய மை மீசையின் முறுக்கும் – சீறா:3581/1

மேல்


மீட்குவன் (1)

விலையாம் நிதி உளது ஈந்து உனது உடல் மீட்குவன் விளங்கும் – சீறா:4350/2

மேல்


மீட்டதோ (1)

மீட்டதோ இனத்தை சேர்ந்து விம்மி நின்று ஏங்கிற்றோ கான் – சீறா:2087/2

மேல்


மீட்டனர் (2)

மீட்டனர் வேடன் ஈமான் விரும்பினன் பயங்கள் தீர்த்தார் – சீறா:2066/3
விரைத்து அவண் ஏகி வளைந்தனர் நிரையை மீட்டனர் எண்மரும் வெருவ – சீறா:5021/4

மேல்


மீட்டி (1)

வெறுக்கை கொண்டு அடிமை பிலாலை மீட்டி நம் – சீறா:1487/3

மேல்


மீட்டு (7)

தன் அகத்து இருத்தி செவ்வி முகம்மதின் சார்பை மீட்டு
மன்னு சோதரி என்று ஓதும் பாத்திமா மனையில் சென்றார் – சீறா:1565/3,4
வென்றி கொள் பிணையின் மீட்டு விட்டதும் ஓதிற்று அன்றே – சீறா:2103/4
உறை பசிக்கு உணவு என்று அன்பாய் ஓதினர் கேட்டு மீட்டு
மறு அற எங்கட்கு உற்ற வாகனத்து உணவு ஏது என்ற – சீறா:2290/3,4
வாசியுடன் முகம்மது தாள் பணிந்து வரு நெறி மீட்டு மக்கம் நோக்கி – சீறா:2675/1
கேட்டாள் சிறை மீட்டு ஏகுதிர் என்னும் கிளவியினை – சீறா:4342/1
மீட்டு எழுந்து அயிலான் என்னும் ஊரிடை விரைவில் போனான் – சீறா:4389/4
நேடிய நிரைகள் அனைத்தையும் மீட்டு வம் என நிகழ்த்தினர் அன்றே – சீறா:4960/4

மேல்


மீட்டும் (4)

மீட்டும் மெய்ம்மறை நூல் மாற்றம் விரித்து எடுத்து இயம்பும் என்றார் – சீறா:1265/4
மீட்டும் கேட்டலும் நவின்றில வீரமும் வலியும் – சீறா:2006/3
மானிடர்-பாலின் மீட்டும் வருவது முன்னர் உண்டோ – சீறா:2095/2
மன்னிய பிணையை மீட்டும் எனும் உரை வழங்கிற்று அன்றே – சீறா:2115/4

மேல்


மீட்ப (1)

நல் நபி பிணையை மீட்ப நல் மனம் பொருந்திலேனால் – சீறா:2107/2

மேல்


மீண்ட (2)

கரும் கடல் எழுந்தது என்ன ககனிடை செறிந்து மீண்ட – சீறா:21/4
இலக்கு என நடந்து மீண்ட இணை விழி பவள செ வாய் – சீறா:4697/2

மேல்


மீண்டவாறும் (1)

மின்னிய கதிர் வாள் தாங்கி போயதும் மீண்டவாறும்
பன்னுக என்றான் கேட்டு அங்கு அவர் எதிர் பகர்வதானார் – சீறா:2385/3,4

மேல்


மீண்டனர் (6)

மீண்டனர் பதறி கால் தடுமாறி விளைந்திடும் பயனை ஓராமல் – சீறா:279/1
மீண்டனர் சடுதியின் வேத_நாயக – சீறா:3286/1
தார் கெழும் புய நபி தருக்கின் மீண்டனர் – சீறா:3309/4
முறைமையின் தமக்கும் தலை விலையாக மீண்டனர் முது பொருள் அளித்தே – சீறா:3603/4
யாரும் மீண்டனர் கபீபை வந்து அணுகினர் எங்கும் – சீறா:4007/4
வேட்டலுற்று அவிடம் விட்டு இவரும் மீண்டனர் – சீறா:4553/4

மேல்


மீண்டார் (1)

உருவின கருவி கரத்தினில் ஏந்தி உறுக்கிட வெருக்கொடு மீண்டார் – சீறா:278/4

மேல்


மீண்டு (9)

திறனொடு நகரம் சேர்ந்து மீண்டு சென்று அடைவன் மாதோ – சீறா:2569/4
பின்னரும் வைத்து மீண்டு ஏதோ என பேதுற்றேனால் – சீறா:2785/4
மிக்க அத்திரியும் மாவும் மீண்டு அவண் வரும் நாள்மட்டும் – சீறா:3339/2
மறு அற மீண்டு மக்க மா நகரார் போயினர் மன்னர் அபாசும் – சீறா:3603/2
தாலம் கீழுற காபிர்கள் மீண்டு வந்தனரால் – சீறா:3989/4
ஒருங்கு போ என விடுத்திட மீண்டு இவண் உறைந்தேன் – சீறா:4271/4
ஓங்கினர்கள் யாம் எழு முன் அ படை மீண்டு எய்திடுமோ என்ன எண்ணி – சீறா:4310/3
உன்னி மீண்டு ஓர் இடத்தினில் உற்றனர் – சீறா:4484/4
செம்மையாய் எதிர்ந்த ஆண்டின் மீண்டு இவண் செறிந்த காலை – சீறா:4882/2

மேல்


மீண்டும் (3)

மீண்டும் அன்னவன் தூதன் யான் எனும் உரை விரித்தான் – சீறா:1688/4
வாரம் போட்டு புறங்காட்டும் மன்னன் மீண்டும் வந்தனன் என்று – சீறா:4036/2
விள்ள அரும் துயர் கூறிட மீண்டும் ஆள் விடுத்தார் – சீறா:4644/4

மேல்


மீதி (1)

சேறில் ஆங்கு அகிலம் மீதி திருவடி தோயாது என்றும் – சீறா:627/3

மேல்


மீதிருந்து (2)

தவிசின் மீதிருந்து அவரவர் வரன் முறை தவறாது – சீறா:2461/2
மண்ணின் மீதிருந்து அந்தரத்து அப்புறம் வடிவில் – சீறா:4612/1

மேல்


மீதில் (27)

தாலம் மீதில் ஆதி தூதர் சார மேவு வாழ்வினோர் – சீறா:14/3
குரும்பை மென் முலைகள் தாங்கி கொடி நிலை மாட மீதில்
கரும்பு எனும் அமுத தீம் சொல் கன்னியர் செறிந்த தோற்றம் – சீறா:1168/1,2
அவனி மீதில் அகுமது மா மண – சீறா:1175/1
ஆக மீதில் அணி அணிந்து அ நலார் – சீறா:1178/2
மடல் அவிழ் பைம் குவளை செறி மடு சூழும் நீள் புரிசை மக்க மீதில்
உடு இனமும் நடு உறையும் நிறைமதியும் நிகர்த்திட வந்து உறைந்தார் அன்றே – சீறா:1638/3,4
பகையினை நல் உடல் வருத்தும் நோய்-அதனை கொடு நெருப்பை பாரின் மீதில்
தொகு விடத்தை தோற்றரவில் பரிகரித்தல் யாவருக்கும் சூழ்ச்சித்து ஆகும் – சீறா:1667/1,2
இரவினை பகலை செய்யும் எழில் மணி தவிசின் மீதில்
குரவர் கண் விழிப்ப ஓசை குண கடல் வெளுத்தது அன்றே – சீறா:1758/3,4
மறம் முதிர்ந்து பாரிசவர் வெற்றிகொண்டார் எனும் வசனம் மக்க மீதில்
உறையும் பெரும் குபிரவர் கேட்டு உடல் பூரித்து இசுலாத்தில் உற்ற பேரை – சீறா:2170/2,3
உள்ளம் மீதில் அன்பொடும் நபிக்கு உயர் சலாம் உரைத்து – சீறா:2242/1
மணி திரண்டு அனைய திண் தோள் முகம்மது மக்கம் மீதில்
அணிபெற இருந்து வல்லோன் அருளொடும் மதீனத்து ஏகி – சீறா:2346/1,2
வர கருணை குரிசில் நும்மை தொடர்வதிலை இகல் மறுத்து மக்க மீதில்
பரிவுடன் செல்குவன் புடவி விளைக்கும் இடர் தவிர்த்திர் என பணிந்து சொன்னான் – சீறா:2657/3,4
இடு சுடர் தவிசின் மீதில் அலி இனிது இருந்தார் அன்றே – சீறா:3207/4
செறுத்து அடர் தானை மீதில் சென்றுசென்று எதிர்த்தோர் மார்பை – சீறா:4181/1
பார் பிளந்து விடரே நிறைந்து பணியே மிகுந்து வெளி மீதில் வெண்தேர் – சீறா:4209/2
வையம் மீதில் வழக்கு ஒன்றும் இல் என – சீறா:4656/2
அலக்கணுறா சுடர் ஒளியாம் அல்லாவின் பணிவிடையால் அவனி மீதில்
துலக்கமுற வந்த கச்சு பறுலானது இன்று முதல் தொழுவீர் என்றே – சீறா:4678/3,4
உரை வழுவாமல் வள்ளல் உரைத்தனர் அவனி மீதில்
புரை தரு கோபம்-தன்னால் புருடர்கள் மனைவிமாரை – சீறா:4793/2,3
மேய அத்திரி மீதில் விருப்புற – சீறா:4811/3
தன் பெயர் நடக்கும் வண்ணம் அறிகுவம் தரணி மீதில் – சீறா:4877/4
இந்த நிலம் மீதில் அரிது எங்கள்-தமக்கு உம்-பால் – சீறா:4898/3
அரும்பு அடைகிடக்கும் ஓடை அணி மதில் மக்க மீதில்
இரும் படை கடக்கும் வேலீர் எழுக என்று இயையும் காலை – சீறா:4907/3,4
விந்தை சேர் உவணை மீதில் மேவுவர் நிறையம் இல் என்று – சீறா:4909/3
ஈனம் இல் ஆயத்து ஒன்று அங்கு இறங்கின கயவர் மீதில்
தீனவர் எவர்க்கும் அன்பாய் கொடுத்தனம் செயம்-அது என்றே – சீறா:4910/3,4
பணி தலை மீதில் கிடந்த பார் அனைத்தும் பணிந்திட எழு மதீனாவின் – சீறா:4957/1
பரியினை பிடித்துக்கொண்டு பற்றலர் மீதில் சென்றே – சீறா:4963/3
புனை மயிர் புரவி மீதில் போந்திடும் மள்ளர்-தம்மில் – சீறா:4964/1
மா நிலம் மீதில் உதித்த பல் உயிரும் துயின்றிட எழு பரி வாவி – சீறா:4998/2

மேல்


மீதின் (1)

தெருட்டு சிங்கம் அன்ன குதாதா செரு மீதின்
அருள் தங்கில கண் அபசி திறன் மன்னவர் எல்லாம் – சீறா:3919/1,2

மேல்


மீதினில் (18)

சொரிந்த பல் மலர் மீதினில் வரி அளி தோற்றம் – சீறா:65/2
படியின் மீதினில் ஓடுவர் தேடுவர் பதறி – சீறா:450/1
ஒட்டை மீதினில் வரும்பொழுது அ வழி ஓரிடத்து இடையூறாய் – சீறா:674/1
அணையின் மீதினில் சாய்தலும் விண்ணுலகு அடைந்தான் – சீறா:837/4
ஒட்டை மீதினில் மணமுரசினை எடுத்து உயர்த்தி – சீறா:1098/1
உள்ளம் மீதினில் இது-கொலோ இன்னும் மற்று உளவோ – சீறா:1864/1
தாலம் மீதினில் சிரம் பட இரு கரம் தாழ்த்தான் – சீறா:1999/4
எறுழின் மிக்கு உயர் ஒட்டகம் மீதினில் ஏற்றி – சீறா:2030/2
மீதினில் விரி தலை விளங்கி நின்றதே – சீறா:2134/4
வரவிடுத்தவர் சிலர் மக்க மீதினில்
அரிதின் வந்தனர் என அறிந்து நம் நபி – சீறா:2153/2,3
தானம் மீதினில் செல்க என்று இசைத்தனர் தளராதான – சீறா:2241/3
மின்னிய சிறை எனும் ஆடை மீதினில்
நல் நலம் கனிதர நடந்து போயினார் – சீறா:3256/3,4
மதினம் மீதினில் வந்தனர் – சீறா:4157/4
சிறு மெல் அடி மயில் ஆயிசா களம் மீதினில் சிறந்த – சீறா:4328/2
தறை மீதினில் தெரியா தினன் குட-பாலினில் சார்ந்தான் – சீறா:4328/4
மேலவனை உன்னி உளம் மீதினில் இருத்தி – சீறா:4901/2
புடையினில் செறிந்திடும் புரவி மீதினில்
தொடை தொடுத்து ஆர்த்தனர் தொடர்ந்து பற்றியே – சீறா:4973/3,4
பரர் உரம் மீதினில் படிய விட்டனர் – சீறா:4975/3

மேல்


மீதினும் (10)

மலைகள் மீதினும் பவளங்கள் படர்ந்து என வயங்கும் – சீறா:1118/4
கட கரி மீதினும் கதிர் கொள் மா மணி – சீறா:1145/2
மணி பளிக்கறை நிலை மாடம் மீதினும்
குணிப்ப அரும் கூட கோபுரத்து மீதினும் – சீறா:1148/1,2
குணிப்ப அரும் கூட கோபுரத்து மீதினும்
பணிப்ப அரு மேனிலை பரப்பு மீதினும் – சீறா:1148/2,3
பணிப்ப அரு மேனிலை பரப்பு மீதினும்
தணிப்பு இலாது உயர்ந்த மண்டபத்தின் சார்பினும் – சீறா:1148/3,4
வச்சிரம் அழுத்திய வாயின் மீதினும்
கச்சு அணி முலைச்சியர் கதிர் கொள் மால் வரை – சீறா:1149/2,3
வானம் மீதினும் கமழ்த்தின பொரி கறி வாசம் – சீறா:3141/4
குடைகள் மீதினும் நெஞ்சினும் முதுகினும் கொழும் தீ – சீறா:3886/2
வானம் மீதினும் பாயும் மா எலாம் – சீறா:3963/1
குடை நிழல் அகலா மன்னவர் புயத்தும் கொய் உளை மீதினும் குணில் ஆர்ந்து – சீறா:4932/1

மேல்


மீது (35)

ஆதி-தன் கிருபை தாங்கி அகிலம் மீது அரசு வைகி – சீறா:7/1
பதிவாக ஒரு சேகரம்-அதாக நிலம் மீது பயிராக உரை தூவினோர் – சீறா:11/2
உதுமானை ஒருகாலும் மறவாமல் இரு காலும் உளம் மீது நினைவாம் அரோ – சீறா:11/4
ஒலி கடல் உலகம் மீது தெரிதர அரிய தீனும் உறு கதிர் உதையமாகவே – சீறா:13/2
கனல் உண்ட கடும் சுரம் மீது நறும் – சீறா:700/1
கடல் அம் தரை மீது எழு காரணம் உற்று – சீறா:705/2
செய்ய தாமரை மீது அனம் சிறந்து எழுந்ததுவே – சீறா:869/4
மேலும் நல் வழி திருத்தினோர்கள் பதம் மீது சார்தல் நலன் என்னவும் – சீறா:1425/3
பிடரியின் மீது சுமையும் சுசூது இயல் பிரிந்திடாது அவண் உறைந்ததும் – சீறா:1435/1
தெண்டனிட்டு இரு விழி சிரசின் மீது உற – சீறா:1624/2
நிறம் தவழும் கதிர் வேலீர் இல்லெனில் தீன் நிலை பெருகி நிலத்தின் மீது
புறம் தயங்க படர்ந்து நமர் குலம் சமயம் தேய்த்து அமிழ்த்திப்போடும் தானே – சீறா:1666/3,4
அகிலம் மீது உறை அரசர்கள் எவரையும் அடி கீழ் – சீறா:1693/1
முண்டக மலர் பதம் இருத்தி முடி மீது
கொண்டு உற வணங்கி நயனங்கள் களிகூர – சீறா:1778/2,3
கிரியின் மீது நின்று அரும் பெயர் நபி என கிளத்தும் – சீறா:2050/2
வேசு அற சுட்ட சாம்பர் மீது உறும் புனலை போன்றும் – சீறா:2593/2
பொறையின் மீது இடும் சுடர் என தீன் எனும் பொருட்டால் – சீறா:2950/3
தானம் மீது அமர்ந்து நின்றவர்கள் சாற்றுவார் – சீறா:2972/4
தரையின் மீது உற வாழ்ந்து சலாமத்தும் பெறு-மின் – சீறா:3112/4
புனை மணி பரியின் மீது புரவலரிடத்தில் கூட – சீறா:3189/3
நல் இயல் மறையோர் போற்ற நடன வாம் பரியின் மீது
வல்லியம் அலியுல்லாவும் வானவர் வாழ்த்த போந்தார் – சீறா:3203/3,4
மாகம் மீது எழும் மதி தரை நடந்து என மனை விட்டு – சீறா:3829/2
கன்னம் மீது கை வைத்தனன் கலங்கினன் முகம்மது – சீறா:4008/3
புவியின் மீது அடி தோய்தரா முகம்மதை போற்றி – சீறா:4284/3
பன்னும் மறை வாய் இலங்க கருணை விழி மீது இலங்க படையின் ஓசை – சீறா:4303/3
மாகம் மீது இழிந்து எண்ணில் வானவர் வந்து வளைந்து – சீறா:4589/1
கண்டித உலகம் மீது கலகம் உண்டாகின் ஞாயம் – சீறா:4736/3
மீது உற நடந்து காலால் விரைந்து சென்று ஓடி கூடி – சீறா:4752/3
வையம் மீது மழை குடையாய் வர – சீறா:4777/1
அவனி மீது அரி ஏறு எனும் வீரராம் – சீறா:4813/3
விரியும் அழல் தாவு தரை மீது வர அஞ்சும் – சீறா:4892/2
உரிய நிலம் மீது கரு என்று உடல் வெதும்பி – சீறா:4892/3
முலை திகழ் அயில் வேல் மன்னர்கள் சூழ்ந்து மொய்த்திட பரியின் மீது ஏறி – சீறா:4959/3
இறந்திட புயத்தின் மீது தாக்கினன் எருவை கால – சீறா:4971/4
புயல் செறிந்து ஏகா வியோமம் மீது எழுந்தான் புடை உடு கணம் பல மிளிர – சீறா:4989/2
ஆள் திறல் வீரர்க்கு எல்லாம் அருளி அச்சுவம் மீது ஏறி – சீறா:5000/1

மேல்


மீதும் (6)

பிடிபடு குசை பரி மீதும் பெய் மழை – சீறா:1145/1
படம் இடு சிவிகையின் மீதும் பாங்கு எலாம் – சீறா:1145/3
கருத்தினும் சிரத்தின் மீதும் கபீபு செங்கமல பாதம் – சீறா:3939/1
பவ கடல் புகுது மள்ளர் பரு வரை புயத்தின் மீதும்
நவ கடைவாயின் மீதும் நகை முடி சென்னி மீதும் – சீறா:4940/2,3
நவ கடைவாயின் மீதும் நகை முடி சென்னி மீதும் – சீறா:4940/3
நவ கடைவாயின் மீதும் நகை முடி சென்னி மீதும்
கவை கடை கணைகள் பாய விட்டனர் குருதி கால – சீறா:4940/3,4

மேல்


மீதுற (1)

இதயம் மீதுற களித்து தம் இரு கரத்து எடுத்தார் – சீறா:477/4

மேல்


மீதுறு (1)

படி மீதுறு பாதையின் முன் செலவே – சீறா:702/2

மேல்


மீதே (1)

சிற்பர் இயற்றிய பலகை நடு இருத்தி முகம்மது-தம் சிரசின் மீதே
சொல் பழுத்த மறை முதியோர் மங்கல வாக்கியம் கறங்க சொரிந்தார் அன்றே – சீறா:1129/3,4

மேல்


மீள்குவம் (1)

கருமம் முற்றி யாம் மீள்குவம் என உவன் கழற – சீறா:4636/3

மேல்


மீள்குவர் (1)

ஓடுவர் திரும்பி மீள்குவர் அடி சுட்டு உச்சியும் வெதுப்புற உலர்ந்து – சீறா:690/2

மேல்


மீள்குவன் (2)

வீடல் செய்து இவண் மீள்குவன் யான் என்றே – சீறா:4220/4
வினவி இவ்விடத்தில் ஒல்லை மீள்குவன் என்ன காபிர் – சீறா:4868/3

மேல்


மீள்வதற்கு (1)

இருந்திடம் பெயர்ந்து ஏகினர் மீள்வதற்கு ஏலார் – சீறா:4576/1

மேல்


மீள்வர் (1)

விருப்பொடு நோக்குவர் மீள்வர் எண்ணுவார் – சீறா:1322/4

மேல்


மீள்விர் (2)

மேய நசுது எனும் தலத்தில் விற்று உறைவாள் குதிரை கொண்டு மீள்விர் என்றார் – சீறா:4672/4
ஆகையால் இந்த ஆண்டிற்கு அகன்று பின் மீள்விர் என்ன – சீறா:4884/1

மேல்


மீள்வேன் (1)

தா அறு மொழிகள் சொல்ல தகுவன உரைத்து மீள்வேன்
ஓவல் இல் குணத்தீர் உங்கட்கு உறுதி ஏது என்ன வல்லை – சீறா:4850/2,3

மேல்


மீள (1)

குறைந்து உயிர் மீள தாக்கி கூர் இருள் காலை கூண்டு – சீறா:3715/3

மேல்


மீளவும் (1)

தோன்றிய நாமம் ஏது இவை விடுத்து சொல் என மீளவும் உரைத்தார் – சீறா:2301/4

மேல்


மீளவேண்டுமால் (1)

வேலையை கொடு மீளவேண்டுமால் – சீறா:3976/4

மேல்


மீளியர் (1)

தொடங்கி மீளியர் சூழ்தர தோன்றினார் – சீறா:4485/4

மேல்


மீளுதி (1)

உருவே வடிவு ஒளிவே உமது உடல் மீளுதி என்றார் – சீறா:4341/4

மேல்


மீளும் (2)

விள்ள அரும் பசியால் மீளும் வேளை இ பிணையை நோக்கி – சீறா:2093/3
விள்ள அரும் மனத்தொடும் மீளும் எல்வையின் – சீறா:4981/3

மேல்


மீற (4)

துனி பறந்தன உவகையும் பிறந்தன துணை வரை புயம் மீற
தனியன் நம்-வயின் இனும் சில பெறு பொருள் தருகுவன் என போற்றி – சீறா:656/2,3
மீற தந்திரருக்கு அளித்து இடர்-அதனை விரைவினில் போக்குவன் என்ன – சீறா:1457/3
நிதி யாவும் அங்கு உறு தீனர்கள் நெஞ்சம் மகிழ் மீற
விதமோடு அவரவர்க்கே அவை பகுந்தே இனிது ஈந்தார் – சீறா:4338/3,4
ஆகத்தினின் மீற புகழ் ஆண்மை திறல் நயினார் – சீறா:4349/2

மேல்


மீறவே (3)

அரு மறை தெரிந்து நீதி நெறிமுறை நடந்து தீன் இ அகில தலம் எங்கும் மீறவே
ஒரு கவிகை கொண்டு மாறுபடும் அவரை வென்று நாளும் உறு புகழ் சிறந்த வாழ்வுளோர் – சீறா:5/1,2
மாற்ற மீறவே வாழும் நாள் – சீறா:4140/2
என்ன வஞ்சினம் மீறவே
சொன்ன வஞ்சக துட்டனும் – சீறா:4143/1,2

மேல்


மீறி (11)

மீறி வெண் திரை புரட்டி மீக்கொண்டது வெள்ளம் – சீறா:848/4
வழு அறு ஹம்சா கேட்டு மனத்தினுள் வேகம் மீறி
குழுவொடும் திரண்டு வைகும் கொடியவனிடத்தில் சார்ந்தார் – சீறா:1494/3,4
கந்து அடு களிற்றின் மீறி முகம்மது களிப்புற்றாரால் – சீறா:3073/4
வரு துயர் வெறியின் மீறி வாய் இதழ் வெளிற கண் சேந்து – சீறா:3201/3
அரைவயிற்றுக்கு ஆற்றாத மூன்று உறட்டி எண்பதுபேர்க்கு அளித்தும் மீறி
கரை ததும்பி கிடந்த செழும் பாத்திரத்தை நோக்கி மனம் களிப்புற்று ஓங்கி – சீறா:3758/1,2
மீறி முன் இருந்த கண்ணின் வீறுகொண்டு அவனியுள்ளோர் – சீறா:3934/2
கருத்தினில் களிப்பு மீறி மகிழ்ந்து கைக்கொண்டு போற்றி – சீறா:4294/2
சினம் உள் மீறி அபூசகல் தேடிய – சீறா:4482/2
வாட்டம் இல் நகரம் என்னும் வாரி ஆங்கு உடைத்து மீறி
வேட்டலுற்று எழுந்தது என்ன எழுந்தது சேனை வெள்ளம் – சீறா:4629/3,4
வருத்தங்கள் நீக்கவேண்டி மனத்தினில் கிருபை மீறி
பொருத்த அரும் புறுக்கான் வேத பொருளினை எவரும் உள்ள – சீறா:4749/2,3
தாகம் மீறி தவிப்பும் இளைப்புமாய் – சீறா:4774/3

மேல்


மீறிய (9)

மீறிய மதுர சொல்லாய் விரும்பிய பயன்கள் யாவும் – சீறா:1062/2
மீறிய மதப்பினால் ஓர் வேதம் ஒன்று இறங்கிற்று என்று – சீறா:1345/1
மீறிய செல்வம்-தன்னால் வெறி மதம் பெருத்து மேன்மேல் – சீறா:2829/1
பத்தி மீறிய தீனவர் படவும் அ கவணால் – சீறா:4004/1
அறிவு மீறிய வாய்மையீர் கேண்-மின் என்று அறைவான் – சீறா:4266/4
மகிமை மீறிய வரத்தினாலும் வலியாலும் – சீறா:4275/2
மீறிய அறுசிலே தான் மிகும் ஒலியாக நின்று – சீறா:4695/2
திண்மை மீறிய தீனர்கள் யாவரும் – சீறா:4828/1
போதம் மீறிய புதையில் கேட்டு உளம் களி பூண்டு – சீறா:4843/2

மேல்


மீறிலான் (1)

மீறிலான் இறுதி தூதன் எனும் பெயர் எனக்கு உண்டு என்றும் – சீறா:1345/2

மேல்


மீறு (4)

மீறு பண் இனைய எல்லாம் எங்கணும் விளங்கும் ஓதை – சீறா:923/2
துன்பினுக்கு அரும் தூய மருந்து மீறு
இன்பம் முற்று உற ஈண்டிய மெய் தவம் – சீறா:4246/2,3
செல்வம் மீறு சிறப்புடையோரிடம் – சீறா:4247/2
மீறு பரலால் அடி மெலிந்தவர்கள் ஆவி – சீறா:4891/3

மேல்


மீறும் (5)

நயனுறு கதீஜா உள்ள நடுக்க நெட்டுயிர்ப்பு மீறும்
துயர் நெருப்பு எழுக மூட்டும் துருத்தியின் வியத்தது அன்றே – சீறா:1050/3,4
மீறும் களிப்பு ஆநந்த மன விழைவால் தக்குபீறு உரைத்தார் – சீறா:1593/4
வயிர ஒண் வரையின் மீறும் மாண் எழில் புயங்கள் சேந்த – சீறா:3061/2
மீறும் ஆரண விதிப்படி தீனவர் வியப்ப – சீறா:4159/3
மீறும் ஆவண வீதி கொண்டு ஏகினார் – சீறா:4667/4

மேல்


மீறுமே (1)

உமறு திரு தாளை நாளும் மனதில் நினைத்து ஓதுவோர்-தம் உரிய தவ பேறு மீறுமே – சீறா:10/4

மேல்


மீன் (10)

மீன் கிடந்து அலர் வான் மதி எனும் கவிகை வேந்தர்_வேந்து என விளைத்ததுவே – சீறா:146/4
மீன் கடல் நடுவில் தோன்றும் வெண் மதி அமிர்தும் துய்ய – சீறா:607/2
மீன் அகடு உரிஞ்சும் குவட்டிடை வடிவாய் விளங்கிய முகம்மதை விளித்து – சீறா:1912/1
விண்ணகத்து அமுதம் கான்ற வெண் மதியம் மீன் நடு மதியினில் திகழ்ந்து – சீறா:1917/1
விடத்தினை அரவ படத்திடை படுத்தி மீன் இனம் பயப்பட தாழ்த்தி – சீறா:1958/3
நஞ்சு உண் மீன் என ஒடுங்கினர் மக்க மா நகரார் – சீறா:2700/4
மீன் நடு மதி என விளங்கி தோன்றிய – சீறா:2716/2
மீன் என திகழும் சோதி முடியொடும் வீழ்ந்த எங்கும் – சீறா:3937/3
மீன் பொழிந்து என வெண் முத்து உகுத்தன – சீறா:4489/2
மீன் உலாவு கழனியும் மேவும் மதீனம் – சீறா:4660/3

மேல்


மீனையும் (1)

மானையும் கயல் மீனையும் மருட்டு கண் மடவார் – சீறா:3861/4

மேல்


மீனொடு (2)

செக்கர் வானக மீனொடு திகழ்வன சிவணும் – சீறா:1113/4
மலையை ஒத்த பல் பிணங்கள் குவிந்தன பல் மீனொடு வான் உலவு வேந்தன் – சீறா:4317/1

மேல்


மீனொடும் (1)

மீனொடும் செறிந்து தன் அரசு இயற்றி விரைவொடும் மேல் திசை படர்ந்து – சீறா:1926/2

மேல்