கீ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கீசகம் 1
கீண்ட 1
கீண்டல் 1
கீண்டவர் 1
கீண்டிட 1
கீண்டினார்க்கும் 1
கீண்டு 6
கீண்டுகீண்டு 1
கீத 2
கீர்த்தி 12
கீர்த்தி-தான் 1
கீர்த்தியீர் 2
கீர்த்தியும் 1
கீர்த்தியை 1
கீலாலம் 1
கீழ் 18
கீழ்-பால் 4
கீழ்தர 1
கீழ்ப்படுத்தலாகப்பட 1
கீழ்புறத்து 1
கீழ்மை-தனை 1
கீழ்மையர் 1
கீழ்மையோர் 1
கீழ்வாய் 1
கீழுற 2
கீள்பட 1
கீற்று 2
கீறி 4
கீன்ற 1

கீசகம் (1)

கட்டிய தோல் பரம் கவசம் கீசகம்
புட்டில் கை சோடு இணை தாக்கு போர்வை வெண் – சீறா:3005/2,3

மேல்


கீண்ட (1)

நிலம் பிட்டு உதிர மண் சிதற நிலவா மணி தாள் கொடு கீண்ட
பிலம் பட்டு உறைந்த நறும் சலிலம் பிறந்து குமிழி எழுந்தனவே – சீறா:1332/3,4

மேல்


கீண்டல் (1)

வைத்து உரம் கீண்டல் கண்டேன் மறுத்து ஒன்றும் தெரிகிலேனே – சீறா:432/4

மேல்


கீண்டவர் (1)

கவச வல் உரம் கீண்டவர் வஞ்சனை கருத்தோ – சீறா:452/1

மேல்


கீண்டிட (1)

செருகும் வானகம் கீண்டிட வரும் ஜிபுரீலே – சீறா:2961/4

மேல்


கீண்டினார்க்கும் (1)

கீண்டினார்க்கும் கிடைப்ப அரிதால் அவர் – சீறா:4830/2

மேல்


கீண்டு (6)

கார் தடம் கடல் கீண்டு எழு முழுமதி கதிரை – சீறா:334/3
நேயமுற்று உரத்தை கீண்டு நிறை ஒளி பொங்கும் கஞ்ச – சீறா:418/1
உற கீண்டு உயிர் குடிக்கும் சீயமே – சீறா:528/2
கைப்பட கீண்டு உள் ஓடி கரந்திட அடைத்தேன் அப்பால் – சீறா:2597/3
கீண்டு மைந்தனையும் கிழித்து ஏறி போய் – சீறா:3902/2
துய்ய போர் முன் நின்று அங்கம் துளைபட கீண்டு நீண்ட – சீறா:3928/1

மேல்


கீண்டுகீண்டு (1)

நனி பெற கீண்டுகீண்டு நலம் தர அடைத்து நின்றேன் – சீறா:2598/3

மேல்


கீத (2)

பரதம் ஆடிடமும் கீத பண் ஒலி அரங்கும் சீர்மை – சீறா:935/1
கண் விரித்து அனைய தூவி கலாப மா மயிலும் கீத
பண் விரித்து என்ன பேசும் தத்தையும் பறவை யாவும் – சீறா:1721/1,2

மேல்


கீர்த்தி (12)

தரும் கொடை நயினார் கீர்த்தி சகம் எலாம் பரந்து மிஞ்சி – சீறா:21/1
எட்டிய கீர்த்தி கொண்டோர் இனியன மொழிகள் சொல்வார் – சீறா:2603/4
அண்ணல் என்று இசைக்கும் கீர்த்தி அப்துல்லா என்னும் வேந்தும் – சீறா:3348/2
மகிதலம் புகழும் கீர்த்தி மன்னவர் அப்துல்லாவே – சீறா:3725/4
அலகில் கீர்த்தி சூழ் முகம்மது விடுத்தலும் அவனும் – சீறா:4264/3
பெருகிய கீர்த்தி நொய்துறும் சமயம் பிழைவுறும் அழகு உறு நீதி – சீறா:4474/3
எங்கும் கீர்த்தி கொண்டு இலங்கிட ஓர் புறத்து இருந்தார் – சீறா:4597/4
வெல்லு-மின் கிடையா கீர்த்தி வேண்டு-மின் என்ன சொன்னான் – சீறா:4628/4
தாங்கு கீர்த்தி நபியும் இ தன்மையை – சீறா:4650/2
ஏய தொகையாகியது ஓர் ஆயிரத்தைம்பதின்மரையும் இனிய கீர்த்தி
மேய நசுது எனும் தலத்தில் விற்று உறைவாள் குதிரை கொண்டு மீள்விர் என்றார் – சீறா:4672/3,4
உரைதர தீனர் வாழ்க்கை உயர்தர விளங்கு கீர்த்தி
தரை தர நபி நல் செல்வம் தழைதர இருக்கும் நாளில் – சீறா:4716/3,4
கீர்த்தி சேர் வள்ளல் வெள்ளிக்கிழமையில் குத்துபாவில் – சீறா:4742/1

மேல்


கீர்த்தி-தான் (1)

கிள்ளை இருப்ப மறம் இருப்ப கிடையா கீர்த்தி-தான் இருப்ப – சீறா:4045/1

மேல்


கீர்த்தியீர் (2)

பெருக்கிய கீர்த்தியீர் என்ன பேசினார் – சீறா:912/4
இப்படி விளங்கு கீர்த்தியீர் என்ன விதமுற போற்றி அங்கு இருத்தி – சீறா:4464/3

மேல்


கீர்த்தியும் (1)

பேரும் கீர்த்தியும் பெற்று உயர் நீதியால் – சீறா:4803/3

மேல்


கீர்த்தியை (1)

நம் களை கடிவோம் கீர்த்தியை உலகில் நடத்துவோம் நறை தரு புயத்தீர் – சீறா:2523/4

மேல்


கீலாலம் (1)

கிடங்கும் எங்கணும் நிறைதர பெருகு கீலாலம்
குடம்பையின் பல பேதம் ஆகிய சத_கோடி – சீறா:37/2,3

மேல்


கீழ் (18)

வெண் நிலா விரிக்கும் ஒருதனி குடை கீழ் வேந்து செய்து அருள்புரி அதுனான் – சீறா:155/1
ஒருகுடை நிழல் கீழ் இரு நிலம் புரந்திட்டு உரும் என மும்முரசு அதிர – சீறா:156/1
வீசு தெள் திரை கடல் மலை அடங்க வெண்குடை கீழ்
ஆசு இலாத சிங்காசனத்து இருந்த சிக்கந்தர் – சீறா:179/1,2
நிரை மலர் தடத்து ஓடையின் வாழையின் நிழல் கீழ்
அரிய மா மறை முகம்மது அங்கு இருப்பது என்று அதிர்ந்தே – சீறா:475/3,4
வாடுவர் துகில் கீழ் படுத்தி ஒட்டகத்தின் வயிற்றிடை தலை நுழைத்திடுவார் – சீறா:690/3
அகிலம் மீது உறை அரசர்கள் எவரையும் அடி கீழ்
புக விடுத்துவன் என்பது சரதமாய் புகல்வன் – சீறா:1693/1,2
உடற்குள் ஆவி ஒத்து இ பதிற்றிருவர்கள் உரை கீழ்
நடக்க வேண்டும் என்று உரைத்தனர் நபிகள் நாயகமே – சீறா:2456/3,4
இரவினில் படை வளைந்து இருப்ப கீழ் திசை – சீறா:3284/1
பூதலம் புகழ் மதீன மா புரத்தின் கீழ் புறத்தில் – சீறா:3810/1
ஞாலம் கீழ் விழ தாக்கினர் நோக்கினர் நடுங்க – சீறா:3889/4
ஆய் மதி பெரியோர் நன்றி ஆயிரந்தான் அருளினும் கீழ் மறந்து அவர்க்கும் – சீறா:4075/3
பைத்தலம் கீழ் உற நெளிய திரண்டு நடந்தன உததி பதாதி மன்னோ – சீறா:4311/4
பையப்பய அ எல்லியும் பட கீழ் திசை விளர்த்த – சீறா:4329/4
தாவி கீழ் திசை ஊதையும் மேல் நின்ற தனியோன் – சீறா:4578/2
தாறுபட்டு எழுந்த மத மலை கூச தாலம் கீழ் விழ பணி பணிய – சீறா:4931/3
அணித்து இறபாகு வந்தனர் அடி கீழ் பணிந்தனர் அகம் மிக மகிழ்ந்தே – சீறா:4957/4
சே உயர் கடவுள் நாவலின் நிழல் கீழ் சிறப்புடன் சக_மகள் உவந்து – சீறா:4988/1
கலை கறித்து அருந்தும் மௌவலும் குருந்தும் கடுக்கையும் செறிந்திடும் நிழல் கீழ்
நிலைபெறாது அலையும் நெற்றி வெண் சுட்டி குருளையும் நெருநல் ஈன்று உலவும் – சீறா:5004/1,2

மேல்


கீழ்-பால் (4)

கூறு இலா பிடரின் கீழ்-பால் குறித்து இலாஞ்சனை உண்டு என்றும் – சீறா:627/4
அலரி வெண் திரை மேல் எழுந்தனன் கீழ்-பால் அனைவரும் எழுக என்று எழுந்தார் – சீறா:679/1
குறை படும் கூவல் கீழ்-பால் குமிழிவிட்டு எழுந்து மேல்-பால் – சீறா:819/1
மூரி அம் கணைக்கால் கீழ்-பால் முகிழ்தரும் பரட்டின் மேல்-பால் – சீறா:3723/1

மேல்


கீழ்தர (1)

கொண்டல் கீழ்தர குலவிய குடைகளும் கொதித்து – சீறா:4020/2

மேல்


கீழ்ப்படுத்தலாகப்பட (1)

எடுத்த நல் வழி கெட்டு எளிமைக்கும் கீழ்ப்படுத்தலாகப்பட
நினையீர் என்பார் – சீறா:1421/3,4

மேல்


கீழ்புறத்து (1)

அடிக்கு கீழ்புறத்து எல்லையின் இறங்கினர் அன்றே – சீறா:3438/4

மேல்


கீழ்மை-தனை (1)

தலைமையன் சிறுமை கீழ்மை-தனை பெருமை-அதாய் கொண்டோன் – சீறா:2258/4

மேல்


கீழ்மையர் (1)

குறித்திடா கீழ்மையர் செய்யும் குற்றமே – சீறா:4069/3

மேல்


கீழ்மையோர் (1)

வஞ்சனை கீழ்மையோர் மாய காரணம் – சீறா:1819/1

மேல்


கீழ்வாய் (1)

ஈது அலாது ஒரு கவண் கல் கீழ்வாய் புறத்து இலங்கும் – சீறா:4003/1

மேல்


கீழுற (2)

தாலம் கீழுற காபிர்கள் மீண்டு வந்தனரால் – சீறா:3989/4
மண்டலம் கீழுற மகிழ்ந்து போயினார் – சீறா:4059/3

மேல்


கீள்பட (1)

சிலை எடுத்து உருவாய் வைத்த புத்து அனைத்தும் சிரசு கீள்பட முகம் கவிழ்த்த – சீறா:261/1

மேல்


கீற்று (2)

விண் கொளும் பிறை கீற்று என வெள் எயிறு இலங்க – சீறா:772/3
கீற்று இளம் பிறையும் கணிச்சியின் வளைவும் கிளர்ந்த செவ்வகத்தி மென் மலரும் – சீறா:1957/1

மேல்


கீறி (4)

வெற்றி வெண் விசும்பு கீறி மேலுலகிடத்தில் சார்ந்தார் – சீறா:1254/4
படத்தினில் ஒரு பால் கீறி பதும மென் கரத்தை நீட்டி – சீறா:2585/3
சுற்றிய வளைகள்-தோறும் தோன்றிய துகிலை கீறி
முற்றினும் அடைத்தார் ஓர் பால் முழையினுக்கு ஆடை காணாது – சீறா:2586/2,3
மாண் உறும் கிரியும் கீறி வகிர்ந்து எடுத்து எறியும் வல்லார் – சீறா:3407/3

மேல்


கீன்ற (1)

கீன்ற வேல் ஹமுசாவும் வெம் படை கொடு கெழுமி – சீறா:3480/3

மேல்