1.விலாதத்துக் காண்டம்

தேவையான படலத்தின்
மீது சொடுக்குக

0. காப்பு
1.கடவுள் வாழ்த்துப் படலம்
2.நாட்டுப் படலம்
3.நகரப் படலம்
4.தலைமுறைப் படலம்
5.நபி அவதாரப் படலம்
6.அலிமா முலையூட்டுப் படலம்
7.இலாஞ்சனை தரித்த படலம்
8.புனல் விளையாட்டுப் படலம்
9.புகைறா கண்ட படலம்
10.பாதை போந்த படலம்
11.சுரத்தில் புனல் அழைத்த படலம்
12.பாநதள் வதைப் படலம்
13.நதி கடந்த படலம்
14.புலி வசனித்த படலம்
15.பாந்தள் வசனித்த படலம்
16.இசுறா காண் படலம்
17.கள்வரை நதி மறித்த படலம்
18.சாமு நகர் புக்க படலம்
19.கரம் பொருத்து படலம்
20.ஊசாவைக் கண்ட படலம்
21.கதீசா கனவு கண்ட படலம்
22.மணம் பொருத்து படலம்
23.மணம்புரி படலம்
24.கஃபத்துல்லா வரலாற்றுப் படலம்

0 காப்பு

$1.0.1

#0
திரு உருவாய் உணர் உருவாய் அறிவினொடு தெளிவிடத்தும் சிந்தியாத
அரு உருவாய் உரு உருவாய் அகம் புறமும் தன் இயலா அடங்கா இன்பத்து
ஒரு உருவாய் இன்மையினில் உண்மையினை தோற்றுவிக்கும் ஒளியாய் யாவும்
மருவு உருவாய் வளர் காவல் முதலவனை பணிந்து உள்ளி வாழ்த்துவாமே

1கடவுள் வாழ்த்துப் படலம்

$1.1.1

#1
திருவனும் திருவாய் பொருளினும் பொருளாய் தெளிவினும் தெளிவதாய் சிறந்த
மருவினும் மருவாய் அணுவினுக்கு அணுவாய் மதித்திடா பேர் ஒளி அனைத்தும்
பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய் பூதலத்து உறைந்த பல் உயிரின்
கருவினும் கருவாய் பெரு தலம் புரந்த கருத்தனை பொருத்துதல் கருத்தே

மேல்
$1.1.2

#2
சிறந்த மெய்ப்பொருளை அழிவிலா மணியை தெரிந்து மு காலமும் உணர்ந்து
துறந்தவர் இதயாசனத்து இருந்தவனை துடர் இன்பம் துன்பம் அற்றவனை
பிறந்த பல் உயிரின் மனத்தளவு உறைந்து பிறப்பு இறப்பு என்றி இலாதவனை
மறந்தவர் சுவர்க்கப்பதியையும் மறந்து மண்ணினில் மதி மறந்தவரே

மேல்
$1.1.3

#3
இரு விழி சிவந்து கனல் பொறி தெறிப்ப எடுத்த கை கதையினால் உறுக்கி
வரும் அவர் எதிர்நின்று ஒரு மொழி கேட்ப மறுமொழி கொடுத்திட அறியேன்
தருமமும் பொறையும் அறிவும் மற்று அறிந்து உன்-தன்னையும் என்னையும் அறிய
பெரு வரம் தருவாய் ஆதி_நாயகனே பேதியா சோதி மா முதலே

மேல்
$1.1.4

#4
கடலினை மலையை கதிர் மதி உடுவை ககனம் மற்று அறுஷொடு குறுசை
புடவியை சுவன பதியினை அமரர் பொருந்திடம் அடுக்கடுக்கு அவையை
வடிவுற தனது பேர் ஒளி-அதனால் வகுத்து வெவ்வேறு என அமைத்தே
உடலினுக்கு உயிராய் உயிரினுக்கு உடலாய் உறைந்த மெய்ப்பொருளினை புகல்வாம்

மேல்
$1.1.5

#5
அரு மறை தெரிந்து நீதி நெறிமுறை நடந்து தீன் இ அகில தலம் எங்கும் மீறவே
ஒரு கவிகை கொண்டு மாறுபடும் அவரை வென்று நாளும் உறு புகழ் சிறந்த வாழ்வுளோர்
திரு ஒளிவு எனும் ஹபீபு நபி முகம்மது அன்று வானர் சிரம் மிசை நடந்து சோர்வுறா
இரு சரணம் நம்பினோர்கள் வரிசைகள் நிறைந்தபேர்கள் எவரினும் உயர்ந்தபேர்களே

மேல்
$1.1.6

#6
கவியால் உரைத்த புகழ் பெறுவார் மிகுத்த கவி அடைவார் கலக்கம் அறவே
செவி ஆர மெய்ப்பொருளை அறிவார் மனத்தின் உறு செயல் கேடு அகற்றிவிடுவார்
புவி ஆர மொய்த்த நெறி மறை நாலினுக்கும் ஒரு பொறியாய் உதித்த வடிவார்
நவி ஆர் சுவர்க்கபதி நயினார் பத துணையை நடு நாவில் வைத்தவர்களே

மேல்
$1.1.7

#7
ஆதி-தன் கிருபை தாங்கி அகிலம் மீது அரசு வைகி
தீது இலா சோதி போல தீன் பயிர் விளக்கம்செய்தே
மூதறிவுடையரான முறுசலீன்களை எந்நாளும்
போதரவுடனே போற்றி புந்தியின் மகிழ்ச்சி செய்வாம்

மேல்
$1.1.8

#8
தாராதரத்தையே மேலே கவிக்கவே தாடாண்மை பெற்ற நயினார்
பேராய் உதிக்கவே வானோர் உரைக்கவே பேறாய் விளக்கும் உரவோர்
ஆராய்வில் மிக்கபேர் நூறாயிரத்து நாலாறாயிரத்து நபிமார்
மாராயம் மிக்கபேர் வாய் ஆர வைத்தபேர் வாழ்வார் சுவர்க்கபதியே

மேல்
$1.1.9

#9
புரசை கட கரிகள் நிரை தட்டு அற குபிரர் புவியை பட கடவியே
சரகுற்ற நல் பதவி வழியில் புகுத்தி உயர் தலைமைக்கு வைத்த பெரியோர்
பிரசம் துளி திவலை சிதறிக்கிடக்கு இரு பிணையல் புயத்து நயினார்
அரசுக்கு வைத்த நெறி வரிசைக்கு மிக்க துரை அபுபக்கரை புகலுவாம்

மேல்
$1.1.10

#10
அமரில் எதிர்த்தோர்கள் ஆவி எம திசையை தேடி ஓட அடரும் அடல் சூர வீர வேள்
மமதை கெட சாதி நீதி முறைமை தனக்கு ஆக ஓதும் மகனை வதைத்தோர் ஒறாமலே
திமிர பகை பானு மேனி கருகிவிட பார்வை ஏவு தெரி மறையின் காரணீகனார்
உமறு திரு தாளை நாளும் மனதில் நினைத்து ஓதுவோர்-தம் உரிய தவ பேறு மீறுமே

மேல்
$1.1.11

#11
விது மாற ஒளிவான வதன ஆதி நபி நாவில் விளைவான திரு வேதமே
பதிவாக ஒரு சேகரம்-அதாக நிலம் மீது பயிராக உரை தூவினோர்
சது மா மறையினோர்கள் பெரியோர்கள் சிறியோர்கள் தமது ஆவி என வாழ்வோர்
உதுமானை ஒருகாலும் மறவாமல் இரு காலும் உளம் மீது நினைவாம் அரோ

மேல்
$1.1.12

#12
படி கிடுகிடென நாக முடி நெறுநெறென வாரி படு திரை அளறு-அதாகவே
வட_வரை அசைய வானம் முகடு உடைபட அறாத மழை முகில் சிதறி ஓடவே
அடையலர் கெடிகள் கோடி இடிபடு படல தூளி அலரியின் உடலில் மூழ்கவே
நடமிடு கடின வாசி மிசை வரு சமர சூர நரர் புலி அலியை ஓதுவாம்

மேல்
$1.1.13

#13
நலிவு அற உலக நீதி நெறி முறை பெருக நாளும் நமர் உயிர் அரிய காவலாய்
ஒலி கடல் உலகம் மீது தெரிதர அரிய தீனும் உறு கதிர் உதையமாகவே
மலி புகழ் அரசர் சீயம் மிர்கமதம் நறை குலாவு மறை நபி மருகராகி வாழ்
அலி திரு மதலையான அசன் உசைன் உபய பாதம் அனுதினம் மனதில் ஓதுவாம்

மேல்
$1.1.14

#14
ஆலகால வாரி போலும் மா கொடூரமாகிய
கால கேள்வி தான் அடாத காரணீகர் ஆளவே
தாலம் மீதில் ஆதி தூதர் சார மேவு வாழ்வினோர்
நாலொடாறுபேர்கள் பாதம் நாவின் நாளும் ஓதுவாம்

மேல்
$1.1.15

#15
ஆதம் ஈன்ற மனு நீதி ஆண்ட முறையாலும் ஓங்கு புகழாகினோர்
தூதராம் கடவுள் நாவில் ஆய்ந்த மறை தூவி நான்கு மத்கபு ஆகினோர்
நீதவான்கள் உறு போதவான்கள் குரு நேர்மையாம் தகைமையாகினோர்
வேதவான்கள் எனும் நாலிமாம்கள் பதம் மேலும் யாம் புகலவேணுமே

மேல்
$1.1.16

#16
உரம் உறு தீன் பார் எல்லாம் ஒளிரவே விளக்கம் செய்யும்
துரம் உறும் அவுலியாவாய் தோன்றினபேர்க்கு மேலாம்
வரம் உறு முகியித்தீன் செம் மலர் அடி இரண்டும் என்தன்
சிரம் மிசை இருத்தி வாழ்த்தி செந்தமிழ் பனுவல் செய்வேன்

மேல்
$1.1.17

#17
நம்மை ஆளுடையான் வேத நபி திரு வசனம் தீனோர்
சம்மதித்திட பார் எல்லாம் தழைக்கவே விளக்கம் செய்தோர்
இம்மையும் மறுமையும் பேறு இலங்கிய சதக்கத்துல்லா
செம் மலர் அடி இரண்டும் சிந்தையில் இருத்தினேனே

மேல்
$1.1.18

#18
திக்கு அனைத்தினும் பாரினும் தீவினும் செங்கோல்
புக்க நல் நெறி திகிரி மன்னவர் கண் முன் பொருந்த
தக்க கூலியும் செய்து உண அறிகிலான் சரி போல்
மிக்க செந்தமிழ் புலவர் முன் யான் விளம்புவதே

மேல்
$1.1.19

#19
படி தலத்து எழு கடல் குல கிரி நிலை பதற
எடுத்து வீசிய சண்டமாருதத்தினுக்கு எதிரே
மிடித்து நொந்த சிற்றெறும்பு ஒரு மூச்சுவிட்டது போல்
வடித்த செந்தமிழ் புலவர் முன் யான் சொலும் ஆறே

மேல்
$1.1.20

#20
அடியடி-தொறும் வழுவு அலால் விதிவிலக்கு அறியேன்
படி படித்த செம் சொல் புலவோர் முனம் பகர்தல்
இடி இடித்திடும் ஆரவாரத்தினுக்கு எதிர் ஓர்
நொடி நொடிப்பது போலும் ஒத்து இருந்தது என் நூலே

2. நாட்டுப்படலம்

$1.2.1

#21
தரும் கொடை நயினார் கீர்த்தி சகம் எலாம் பரந்து மிஞ்சி
நெருங்கியே விசும்பில் அண்ட முகடு உற நிறைந்தவே போல்
இரும் கண வெள்ளை மேகம் இரை பசும் கடல் வீழ்ந்து உண்டு ஓர்
கரும் கடல் எழுந்தது என்ன ககனிடை செறிந்து மீண்ட

மேல்
$1.2.2

#22
அகிலம் எங்கணும் திடுக்கிட வாய் திறந்து அதிர்ந்து
மிகு மழை குலம் அடிக்கடி விழிப்ப போல் மின்னி
ககனம் எண் திசை அடங்கலும் பரந்து காலூன்றி
சிகர பூதர மறைதர சொரிந்தன செருமி

மேல்
$1.2.3

#23
அ திரு மா மழை துளி இடையிடை அணியணியாய்
முதிரும் இந்திரகோபமும் ஆலியும் உதிர்ந்த
கதிர் செய் முத்தமும் மாணிக்க ராசியும் கலந்தே
உதிரும் வண்ணம் ஒத்திருந்தன கிரி ஒருங்கொருங்கே

மேல்
$1.2.4

#24
பம்மி எங்கணும் பொழிதரு சாரல் வாய் பட்டு
கம் இனத்து அகடுற கொடுகிய குளிர் கலக்க
மும்மத கரிகளும் அரிகளும் முரண் அறவே
சம்மதித்து ஒருபுடை கிடப்பன என சாரும்

மேல்
$1.2.5

#25
தந்தி மான் மரை அணில் கொடுவரி தகர் உடும்பு
மந்தி சிங்களம் கவரிமா அழுங்கு தேவாங்கு
முந்து மான் மதம் எண்கு செந்நாய் பணி முள்மா
நந்தி மிஞ்சிய விலங்கு இனம் கொடுகி மெய் நடுங்கும்

மேல்
$1.2.6

#26
வேங்கை சந்தனம் சண்பகம் நெல்லி வெய் தான்றி
கோங்கு அசோகு தேக்கு ஆசினி பாடலம் குறிஞ்சி
நாங்கு கார் அகில் குங்குமம் இலவு நாரத்தை
தாங்கும் வேர் அற வரையொடு வரையிடை சாய்க்கும்

மேல்
$1.2.7

#27
விலங்கினங்கள் தம் குலத்தொடும் குழுவொடும் வெருட்டி
கலங்கும் அம் சிறை பறவைகள் அனைத்தையும் கலைத்தே
இலங்கு பைம் கனி சிதறிட தருக்களை இடறி
நலம் கொள் பைம் கதிர் கிரியிடை சரிந்தன நாரம்

மேல்
$1.2.8

#28
வரி விழி செ வாய் குறத்தியர் இதணும் மனையையும் தினையையும் வாரி
புரி நரம்பு இசை யாழ் தொண்டகப்பறையும் பொடிபட துறுகலின் மோதி
விரி தலை குறவர் குழாத்தொடும் வெருட்டி விளைந்த முக்கனி சத_கோடி
சரிதர வீழ்த்தி மரகத கிரண தட வரை அருவி கொண்டு இறங்கும்

மேல்
$1.2.9

#29
மலை எனும் அரசன் புயங்களை தழுவி மகிழ்ச்சி செய்து அவனுழை சிறந்த
நிலை கெழு பொன்னும் உரக செம் மணியும் நித்தில ராசியும் கவர்ந்து
தொலைவிலா பண்டம் அனைத்தையும் வாரி சுருட்டியே எல்லை விட்டு அகலும்
விலைமகள் போன்று பலபல முகமாய் வெள் அருவி திரள் சாயும்

மேல்
$1.2.10

#30
தாது உகுத்து வண்டு ஆர்த்து எழ தருத்தலை தடவி
வீதி-வாய் நுரைதர வரு பாகு எழ வீசி
காது மா களிறு என நதி கழைக்கு அடங்காது
மோதி காலினால் எற்றியே அணை இடம் முறிக்கும்

மேல்
$1.2.11

#31
பரந்த வெள் நுரை துகில் உடுத்து அறல் குழல் பரப்பி
விரைந்து பாய் கயல் விழி என திரை கரம் வீசி
சுரந்த புற்புத தனத்துடன் சுழி உந்தி தோற்ற
பொருந்து மால் நதி விளங்கு இழை மகளிரை போலும்

மேல்
$1.2.12

#32
கிடந்த சந்தனம் கார் அகில் கிளை மணி கரி கோடு
உடைந்த முத்தம் வெண் தந்தம் முச்சுடர் ஒளி ஒதுங்க
கடந்த செம் மணி பையுடன் கொடு கடல் ஏற
நடந்த வாணிகன் ஒத்தது செழும் கழை நதியே

மேல்
$1.2.13

#33
இத்தகை குறிஞ்சி நிலத்தினை கடந்தே எரி தழல் பாலையில் புகுந்து
மை தடம் கூந்தல் கரு விழி செ வாய் எயிற்றியர் வயிறு அலைத்து ஏங்க
கைத்தலத்து ஏந்து குழந்தையும் சிறாரும் வேடர்-தம் கணத்தொடும் வெருட்டி
முத்து அணி சிறப்ப இரு கரை கொழித்து முல்லையில் புகுந்தது சலிலம்

மேல்
$1.2.14

#34
பால் தயிர் நறு நெய் கலத்தொடும் கலக்கி பட்டியும் குட்டியும் சிதறி
சூறையிட்டு உதறி நெய் முடை கமழும் சுரி குழல் தொறுவியர் உடுத்த
கூறையும் குழலும் குடுக்கையும் தடுக்கும் கொண்டு எடுத்து அவர் நிரை சாய்த்து
வேறு அரையரை போல் பெரு வளம் கவர்ந்து மருதத்தில் பரந்தன வெள்ளம்

மேல்
$1.2.15

#35
கன்னல் மால் நதி வெண் திரை நுரை கரைபுரள
தென் நிலை பகுப்பு ஆகிய கால் எலாம் செருமி
அன்ன மென் சிறை பெடையொடும் குடம்பை விட்டு அகல
துன்னும் ஏரியும் தடங்களும் நிறைந்தன தோயம்

மேல்
$1.2.16

#36
அலை எறிந்து திரை கடல் என வரு நதி-அதனை
தொலைவில் மள்ளர்கள் குளம்-தொறும் புகுத்திய தோற்றம்
கொலை மத கரி குழுவினை வயவராய் கொடுபோய்
நிலை தரித்திடும் படுகுழி படுத்தவை நிகர்க்கும்

மேல்
$1.2.17

#37
தடமும் ஏரியும் வாவியும் கழனியும் சலச
கிடங்கும் எங்கணும் நிறைதர பெருகு கீலாலம்
குடம்பையின் பல பேதம் ஆகிய சத_கோடி
உடம்பு-தோறினும் உயிர் நின்ற நிலையினை ஒக்கும்

மேல்
$1.2.18

#38
ஏரியை உடைத்து குளம் கரை தகர்த்தே இடிபட அணையினை முறித்து
சேரியுள் பரந்து கொல்லையுள் புகுந்து செழும் கருப்பாலையை சாய்த்து
வேரி அம் சலச கழனியை உழக்கி விரி தலை அரம்பையை தள்ளி
வாரியில் செறித்து பணை எலாம் நிரப்பி மட்டிலா மலிந்தன வனமே

மேல்
$1.2.19

#39
அலை எறிந்து இரு கரை வழி ஒழுகு கம்பலையும்
கலையும் வெள் அனம் சிறை விரித்து அசைத்த கம்பலையும்
மலை திறந்தன மதகின் வாய் வழிந்த கம்பலையும்
சிலை தரித்த பேர் ஒலி பெரும் படை ஒலி சிறக்கும்

மேல்
$1.2.20

#40
முறைமுறை கிணைப்பறை ஒலி கடல் என முழங்க
நிறையும் சேரி விட்டு எழுந்தனர் உழவர்கள் நெருங்கி
செறி கட களிறு இனம் என வயின்வயின் திரண்டு
மறி புனல் கரையிடம்-தொறும் செறிந்தனர் மலிந்தே

மேல்
$1.2.21

#41
மட்டு வாய் வயிறு ஆர உண்டு எண்ணிலா மள்ளர்
கொட்டு வாங்கியே இரு புயம் குலுங்கிட கரண்கள்
வெட்டுவார் சிலர் மென் கரத்து ஏந்தியே வரம்பு
கட்டுவார் அடைப்பார் திசை-தொறும் கணக்கு இலையே

மேல்
$1.2.22

#42
தெரி பொறி முகட்டு கவட்டு அடி அலவன் சிதைந்திட கமடம் உள் அழுந்த
வரி வளை நெரிய வலம்புரி குலத்தின் வயிற்றிடை கொழு_முகம் தாக்கி
விரி கதிர் தரள மணி பல உகுப்ப வெருள் மத கவை அடி பேழ் வாய்
நிரை நெறி மருப்பு கரும் பகடு இணக்கி நீள் வயல் எங்கணும் உழுதார்

மேல்
$1.2.23

#43
முள் அரை பசும் தாள் வட்டு இலை கமல முகை உடைந்து ஒழுகு தேன் தெறிப்ப
கள் அவிழ் குவளை ஒருபுறம் சரிய கடி மலர் குமுதமும் மடிய
மள்ளர் கால் சேற்றில் இடறிய பதும மணி இனம் மலர் அளி எழுப்ப
வெள்ள நீர் பரப்பு கழனிகள்-தோறும் மென் கரும் சேறு செய்தனரே

மேல்
$1.2.24

#44
சுந்தர பொறி அம் சிறை அறு கால் ஏழிசை அளி தொகுதியில் கூடி
மந்தரம் அனைய தருவின் மேல் வீழ்ந்து வாய்விட முழங்கிய ஓதை
கொந்து எறி கமலம் குமுதம் செங்கழுநீர் குடியொடு மடிந்தன இனிமேல்
அந்தரம் அலது வேறிடம் இலை என்று அழு குரல் மயங்குவ போலும்

மேல்
$1.2.25

#45
சுரும்பு இனம் இருந்து தேன் உண்டு தெவுட்டி சுருதிசெய் பல் மலர் சிறந்த
இரும் படி கிடங்கில் கிடந்து மூச்செறிந்த எருமையின் கவை அடி பரூஉ தாள்
நிரம்பிட பதிந்த சலஞ்சல தரள நீள் நிலா எறிப்பது நிறைந்த
கரும் பொறி கவை நா துளை எயிற்று அரவு கவ்விய கதிர் மதி போலும்

மேல்
$1.2.26

#46
கலன் பல அணிந்து தொண்டி உண்டு எழுந்து கதிரவன்-தனை கையால் தொழுது
குலம் தரு தெய்வ வணக்கமும் செய்து குழுவுடன் உழுநர்கள் கூண்டு
நிலம்-தனை வாழ்த்தி வலக்கரம் குலுக்கி நெல் முளை சிதறிய தோற்றம்
பொலன் பல சிறப்ப இடன் அற நெருங்கி பொன் மழை பொழிவது போலும்

மேல்
$1.2.27

#47
படர் மருப்பு எருமை குடம் புரை செருத்தல் பரு முலை கண் திறந்து ஒழுகி
நடை வழி சொரியும் அமுதமும் வாழை நறும் கனி உகுத்த செம் தேனும்
உடைபடு பனச பசும் கனி சுளையில் ஊற்றிருந்து ஓடிய தேனும்
கடி மலர் போர்த்த வரம்பினை தகர்த்து கழனியில் பரந்து பாய்ந்து உடைக்கும்

மேல்
$1.2.28

#48
அரு மறை நெறியும் வணக்கமும் கொடையும் அன்பும் ஆதரவும் நல் அறிவும்
தருமமும் பொறையும் இரக்கமும் குணமும் தயவும் சீர் ஒழுக்கமும் உடையோர்
பெருகிய செல்வ குடியொடு கிளையும் பெருத்து இனிது இருந்து வாழ்வன போல்
மரு மலர் பழன காடு எலா நெருங்கி வளர்ந்தது நெல் இலை நாற்றே

மேல்
$1.2.29

#49
கோது அற எழுந்த நாற்றினை பறித்து குவித்திடு முடி இடம் அடுத்து
தீது உறும் கரும் கண் செய்ய வாய் வெண் பல் சிற்றிடை கடைசியர் வாரி
பூதரம் அனைய சுணங்கு அணி முலையில் புள்ளியின் சேதகம் போர்ப்ப
ஆதரம் பெருகி நிரைநிரை வடிவாய் அணியணி நாற்றினை நடுவார்

மேல்
$1.2.30

#50
கையினில் செறிந்த முடியினை சிதறி கடைசியர் கரங்கள் தொட்டு ஒழுங்காய்
செய்யினில் பதிப்ப துளி கரும் சேறு தெறித்திடும் செழு முக செவ்வி
துய்ய வெண் திரை பாய் சுருட்டி மேல் எறியும் தொடு கடன் முகட்டிடை எழுந்து
வையகம் சிறப்ப வரு முழுமதியும் மறுவும் ஒத்திருந்தன மாதோ

மேல்
$1.2.31

#51
பனை_மது தேக்கி இரு விழி சேப்ப பைம் கழை நிகர்த்த தோள் அசைய
அன நடை சிதைய சேவடி பெயர்த்திட்டு அள்ளல் அம் சேற்றிடை நடுவோர்
சின மத கரி கோடு எனும் முலை தடத்தில் சேதகம் தெறிப்பது திரண்ட
வனச மென் முகையில் பொறி வரி அறு கால் வண்டு மொய்த்திருப்பது போலும்

மேல்
$1.2.32

#52
முற்று இழை கிடந்த முலை குவடு அசைய முகில் தவழ் கரும் குழல் நெகிழ
சிற்றிடை ஒசிய மதி முகம் வெயர்ப்ப சேற்றிடை நாற்றினை நடுவோர்
பற்றும் மென் கரத்தில் கரும்பொனின் கடகம் பசிய நெற்பயிர் ஒளி பாய
மற்று எனை உரைப்ப விரி கதிர் பரப்பு மரகத கடகம் ஒத்திருந்த

மேல்
$1.2.33

#53
வெறி மது அருந்தி மரகத கோவை மென் பிடர் கிடந்து உருண்டு அசைய
கறுவிய மனத்தோடு இனத்தொடும் இகலி கடைசியர் களிப்பொடு தவள
சிறுநகை தரள பவள மெல் இதழில் செழு மலர் கைவிரல் குவித்து
குறி குரல் குரவை கூன் பிடர் பேழ் வாய் குட வளை குரவையோடு இகலும்

மேல்
$1.2.34

#54
கூந்தல் அம் பிடி மா மெல் நடை பயிலும் குட முலை கடைசியர் செழும் கை
காந்தள் மெல் விரற்கும் கடு வரி விழிக்கும் கடைந்து இணைக்கிய கணை காற்கும்
சேந்து இணைபொருவாதினம் என வெருவி செங்கயல் வரி வரால் கெளிறு
பாய்ந்து அயல் போய வனத்திடை ஒளித்து பங்கம் மெய்ப்பட பயப்படுமே

மேல்
$1.2.35

#55
குருகு இனம் இரிய புள் இனம் பதற கொக்கு இனம் வெருவிட எகினம்
விரி மலர் கமல பாயல் விட்டு அகல மென் சிறை பேட்டு அனம் துடிப்ப
சொரி மது துளித்து குவளை வாய் சிதற சுருட்டி வால் விசைத்திட துள்ளி
வரி வரால் பகடு வளை நிலவு எறிக்கும் மடைத்தலை கிடந்து மூச்செறியும்

மேல்
$1.2.36

#56
வரிசையில் செறிந்த நிரை பசும் சாலி வளர் கிளை கிளை என கிளைத்து
பெருகு சூல் முதிர்ந்து ஈன்று ஆர் அமுது உறைந்து பிடர் குனிதர குலை சேந்து
சொரி கதிர் பவள நிறம் பல படைத்து சுடர் மணி முத்து இனம் தெறிப்ப
தரையினில் படிந்தே அருள் கடை சுரந்த தரு இனம் வெருவிட கிடக்கும்

மேல்
$1.2.37

#57
கொத்து அலர் சூடி அரை துகில் இறுக்கி குட மது கை மடுத்து அருந்தி
மை தவழ் கனக கிரி புயம் திரண்ட மள்ளர்கள் வனப்பினுக்கு உடைந்த
சித்தசன் கர வாள் பறித்து அதை வளைத்த செயல் என பிள்ளை வெண் பிறை வாள்
கைத்தலத்து ஏந்தி கழனியில் புகுந்து கதிர் அரிந்து அரி நிரையிடுவார்

மேல்
$1.2.38

#58
திருந்திய வரியை கொடுங்கையில் கிடத்தி திரை செய்து சும்மையில் சேர்த்து
கரும் தடம் கூந்தல் செ வரி வேல் கண் கடைசியர் குழாத்தொடும் திரண்டு
விரிந்த செங்கமல கரம் பல வருந்த விசித்து இறுக்கிய சுமை ஏந்தி
பொருந்திய வரப்பின் நெறி-கடை கதலி புலி அடி குலை தலை சாய்க்கும்

மேல்
$1.2.39

#59
அசைந்த சிற்றிடை மென் கொடி வருந்திட நீள் அணி வடம் மார்பிடை புரள
பசும் கிளி பரி வேள் படை என திரண்ட கடைசியர் சுமை எலாம் பரப்பி
இசைந்திட நிறைத்து குவித்த நெற்போர்கள் எங்கணும் இலங்கிய தோற்றம்
விசும்பினை தடவ வரை சத_கோடி வீற்றிருந்தன என சிறக்கும்

மேல்
$1.2.40

#60
கார் தட களிற்றின் வனப்பினை அழித்த கரும் கடா இனம் பல இணைத்து
போர் தலை திறந்து திரித்து வை நீத்து பொன் நிற செந்நெல்லை குவித்து
சேர்த்திடும் சகடம் தொறுந்தொறும் இயற்றி திரள் மனை வயின்வயின் செறிப்பார்
ஆர்த்த பேர் ஓதை இன மணி கொழிக்கும் அறை திரை கடலினை பொருவும்

மேல்
$1.2.41

#61
செந்நெலில் பெருக்கின் கனை குரல் சகடம் திசை-தொறும் மலிந்தன செருக்கும்
கன்னல் அம் கழனி புகுந்து அறுத்து அடைந்த களமர்கள் ஒலி குரல் செருக்கும்
துன்னு பூம் கமுக சிதறு செம் பழுக்காய் சுமப்பவர் கம்பலை செருக்கும்
மன்னவன் வகுதை துரை அபுல் காசீம் வள மனை செருக்கும் ஒத்திருக்கும்

மேல்
$1.2.42

#62
கால வட்ட வாய் முளரியில் ஊறு கள் அருந்தி
கோல வட்ட அம் சிறை அளி குழுவுடன் பாடும்
சோலை வட்ட வாய் மயில் இனம் சூழ்ந்து கார் நீல
ஆலவட்டம் ஒத்திருந்த மென் சிறை விரித்து ஆடும்

மேல்
$1.2.43

#63
அரக்கு எறிந்த செவ்வாம்பல் வாய் அணி இழை மடவார்
நெருக்கியிட்ட கால் சிலம்பு ஒலி விசும்புற நிமிர
இருக்கும் வாவியுள் பெடை அனம் இடர்-கொல் என்று இரங்கி
தருக்கு இழந்து தன் சேவல் வாய் தொனி என தயங்கும்

மேல்
$1.2.44

#64
நலம் கொள் தாமரை முக மலர் தர நறும் குவளை
விலங்கி வள்ளையில் விழி என கிடப்ப மெல் அரும்பு
துலங்கு மென் முலை தோன்றிட பச்சிலை துகில் போர்த்து
இலங்கும் வாவிகள் அணி இழை மகளிர் ஒத்திருந்த

மேல்
$1.2.45

#65
நிரைந்த சண்பகம் பாடலம் தட கரை நிரம்ப
சொரிந்த பல் மலர் மீதினில் வரி அளி தோற்றம்
எரிந்து இலங்கு பொன் கரையினை இரும்பினால் இறுக
பரிந்து அறைந்த சுள்ளாணியின் புறம் என பரந்த

மேல்
$1.2.46

#66
தோடு அவிழ்ந்து பூம் தாது உக குடைந்து இன சுரும்பு
பாட வாவியுள் இள நிலா தோற்றிய பான்மை
சாடும் வார் புனல் அலைதர திரைகளில் தத்தி
ஓடம் ஓடுவது ஒத்திருந்தன என ஒளிரும்

மேல்
$1.2.47

#67
வாய்ந்த மெல் இழை மடந்தையர் தடத்தின் மெய் வருந்த
தோய்ந்து நீர் குடைந்து ஆடுவோர் மதி முக தோற்றம்
சேந்த கஞ்சமும் குவளையும் என எழில் சிறந்த
கூந்தல் வெண் திரை கடலிடை முகில் என குலவும்

மேல்
$1.2.48

#68
திருந்து மெல் இழை மடந்தையர் புனலிடை திளைப்ப
சரிந்த கூந்தலில் இருந்த வண்டு எழுந்து பூம் தடத்தில்
விரிந்த காவியில் வீழ்வது மின் அனார் விழிக்கு
பொருந்துமோ என சினத்துடன் உதைப்பது போலும்

மேல்
$1.2.49

#69
மறிந்து தூங்கிய நாவலின் கனியை ஓர் மங்கை
எறிந்து பார் மதுகரத்தினை கரத்தினால் எடுப்ப
பறிந்து போதலில் துணிக்கின் கை உதறி மெய் பதறி
செறிந்து சூழ்தர சொரிந்தமை கனியையும் தீண்டாள்

மேல்
$1.2.50

#70
கரிய மை விழி மங்கையர் பூம் குழல் காட்டில்
சொரியும் மென் மலர் தாதுக்கள் உதிர்ந்தன சுடர் மின்
விரியும் மெல் இழை பூணொடு பூண் பல மிடைந்து
பொருது உரிஞ்சதில் பொன் பொடி உதிர்வன போலும்

மேல்
$1.2.51

#71
பிடித்த கொம்பிருந்து ஓடி முள் குட கனி பிடித்து
கடித்த போதினில் காம்பு அற கனியுடன் கவியும்
படி தலத்தினில் வீழ்ந்திட பதறி மெய் பதைத்து
துடித்து தன் உயிர் கடுவனை அணைத்து உடல் துணுக்கும்

மேல்
$1.2.52

#72
தாறு கொண்ட பைம் கதலி தேமா பலா தரு தேன்
ஊறு கொண்ட செம் கனி சிறு கிடங்கிடை உகுப்ப
சேறு கொண்டதில் கிடந்து இருள் செறி கரு மேதி
வேறுகொண்டு பொன் மேதியின் குலம் என விளங்கும்

மேல்
$1.2.53

#73
கள் அவிழ்ந்த பூம் பொய்கையில் புள் இனம் கலைய
துள்ளும் மேல் வரி கயல் உண்டு நாரை கண் தூங்கும்
உள்ளம் அன்புற சேவலின் சிறை நிழல் ஒதுங்கி
வெள் அன பெடை தாமரை தவிசில் வீற்றிருக்கும்

மேல்
$1.2.54

#74
ஏல வார் குழற்கு இடு புகை மஞ்சினோடு இகலும்
சோலை வாய்-தொறும் முக்கனி தேன் மழை சொரியும்
ஆலை வாய்-தொறும் கரும்பு உடைத்து ஆறு எடுத்து ஓடும்
நீல வாய் மலர் வாவிகள் பெரும் கடல் நிகர்க்கும்

மேல்
$1.2.55

#75
தெருளுறும்படி தேன் துளி தெறித்திட சிதறி
பொருது அலைத்திடு மாங்கனி தேம் கனி பொழிலே
மரு மணம் பெறும் சந்து அகில் சண்பக வனத்தில்
தரு எனும் பெயர் பெற சிறந்து ஈந்து இருந்தனவே

மேல்
$1.2.56

#76
நினைக்கும் பொன் பொருளே நிந்தனை மற்று ஓர் நிந்தனை சிந்தனை இலையே
இன கரும் சுரும்பு மது துளி அருந்தும் இவை அலான் மது பிறிது இலையே
சின கரி முனை கோட்டு இள முலை புலவி திருத்தும் பொய் அலது பொய் இலையே
வன கனி கறுத்த குலை களவு அலது மறுத்து ஒரு கொலை களவு இலையே

3. நகரப்படலம்

$1.3.1

#77
நிலங்கள் ஏழுக்கு நாவலம்தீவு கண் நிகர்க்கும்
நலம் கொள் தீவுக்கு கண்மணி அறபு நல் நாடே
புலன் கொள் கண்மணிக்கு உள் உறை உயிர் என பொருந்தி
இலங்கு மக்க மா நகர் வளம் சிறிது எடுத்து இசைப்பாம்

மேல்
$1.3.2

#78
விரி கதிர் எறித்த மணி வளை உகுப்ப விரி திரை அகழ் எனும் தடத்தில்
எரி சிகை கிரண பதும மா மணியின் இனம் பல சூழ்ந்திருந்து இலங்க
புரி முறுக்கு அவிழ்ந்த பொன் இதழ் கமலம் பூத்திருந்தது என புரிசை
தெரிதர சிறந்து செல்வமும் செருக்கும் திகழ்தர வீற்றிருந்ததுவே

மேல்
$1.3.3

#79
வட_வரை புடை சூழ் நிலத்து எழு தீவும் வரவழைத்து ஒரு தலத்து இருத்தி
தட முடி கிரண திகிரி மால் வரையை சதுர்தர புரிசையாய் நிறுத்தி
இடன் அற நெருங்கும் பெரும் புற கடலை இதற்கு அகழ் என பெயரிட்டு
பட அரவு அரசன் திரு முடி மணியை பதித்தது மக்க மா நகரம்

மேல்
$1.3.4

#80
கானகத்து உறையும் வயிர ஒண் கதிரோ கடல் படு நித்தில கதிரோ
தேன் அவிழ் பதும மணி கதிரதுவோ சிறந்திடும் மக்க மா நகரில்
வானவர்க்கு இறைவன் ஜபுறயீல் பலகால் வந்து அவர் மெய் ஒளி பாய்ந்தே
ஈனம் இல் நகரம் செழும் கதிர் பரப்பி இருப்பது பிறிது வேறு இலையே

மேல்
$1.3.5

#81
சரி கதி வேக மாருதம் சிதைய தாவிய புரவியின் ஒலியும்
நிரை மணி உருட்டு பசும் கதிர் இரத நெருங்கிட நடத்து பேர் ஒலியும்
உரல் அடி சிறு கண் பெரு மத பிறை கோட்டு ஒருத்தலின் இடி முழக்கு ஒலியும்
விரி திரை கரம் கொண்டு அறை உவா பெருக்கும் வெரு கொள தெரு கிடந்து ஒலிக்கும்

மேல்
$1.3.6

#82
மின் இடை நுடங்க சிலம்பு ஒலி சிலம்ப மேகலை திரள் மணி கதிர் செம்
பொன்னொடும் இலங்க மறுகிடை புகுந்த புனை இழை பிடி நடை மடவார்
மன்னிய பதத்தின் அலத்தகம் நிலத்தில் வரிபட கிடப்பன சிறந்த
துன் இதழ் கமல பதத்தினை நிகர்ப்ப சுவட்டடி தொடர்வன போலும்

மேல்
$1.3.7

#83
கண் அகல் ஞாலம் விலைசொலற்கு அரிய கலை பல நிரைத்தலால் பணியால்
தண்ணென குளிர்ந்து பிற உரு அமைத்து தரும் படிமக்கல பெருக்கால்
மண்ணினில் சிறந்த நகர் திரவியத்தால் மரக்கலத்து இறக்கிய சரக்கால்
எண்ணிறந்து எழு நல் வளம் பல படைத்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே

மேல்
$1.3.8

#84
மான்மத குவையும் சந்தன தொகையும் மணி கரும் காழ் அகில் துணியும்
பால் மதி குழவி குருத்து என கதிர்கள் பரப்பிய மத கரி மருப்பும்
தேன் அமர்ந்து ஒழுகும் குங்கும தொகையும் செறிதலால் உயர்ச்சியால் வளத்தால்
ஈனமில் இமய பொருப்பு என பணைத்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே

மேல்
$1.3.9

#85
தந்தியின் குழுவும் குரகத திரளும் தட வரை பொருவு தேர் கணமும்
சிந்துர பிறை நல் நுதல் கரும் கூந்தல் செ வரி தடங்கண்ணார் நெருக்கும்
வந்தவர் நினைத்த பொருளும் ஆர் அமிர்தும் வகைவகை தருதலான் மணியும்
இந்திரதருவும் வறிது என மதர்த்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே

மேல்
$1.3.10

#86
நிரைத்த பைம் கதிர் ஆர் மரகத மணியால் நீள் நிலா கருப்புர தகட்டால்
பருத்த சங்கு இனத்தால் வலம்புரி குலத்தால் படர் கொடி திரள் பவளத்தால்
விரித்த வெண் நுரை போல் வெண் துகில் அடுக்கால் விரை செறி அம்பரின் திடரால்
இரைத்த பேர் ஒலியால் பெரும் கடல் நிகராய் இருந்தது கடைத்தெரு தலையே

மேல்
$1.3.11

#87
பைம் கடல் பிறந்து வணிகர் கை புகுந்த பரு மணி நித்தில குவையும்
தங்கிய கிரண வனச மா மணியும் தயங்கு ஒளி வயிர ராசிகளும்
செம் கதிர் எறிக்கும் இரவியும் அமுத செழும் கதிர் மதியமும் உடுவும்
இங்கு இவண் குடிபுக்கு இருந்தது போன்றும் இருந்தது கடைத்தெரு தலையே

மேல்
$1.3.12

#88
அணி பெற ஒழுங்காய் வயின்வயின் திரண்ட அகில் புகை முகில் இனம் எனவும்
குணில் பொரு முரச பெரும் குரல் கிடந்து குழுமி விண் ஏறு ஒலி எனவும்
மணி வளை தட கை துவர் இதழ் கனத்த வன முலை மின்கள் மின் எனவும்
தணிவு இல நிவந்த செழும் கதிர் மாடம் தமனிய கிரியினோடு இகலும்

மேல்
$1.3.13

#89
வெண் நிலவு எறிக்கும் இரச தகடு வேய்ந்த மேனிலை-வயின் செறிந்து
பண் இருந்து ஒழுகும் மென் மொழி குதலை பாவையர் செழும் குழல் விரித்து
நண்ணிய துகிலும் கமழ்தர ஊட்டு நறும் புகை சுருண்டு எழுந்து ஒழுங்காய்
விண்ணினில் படர்வது ஏணி ஒன்று அமைத்து விசும்பினுக்கு இடுவது போலும்

மேல்
$1.3.14

#90
அடு செழும் பாகும் தேனும் ஆர் அமிர்து மனத்தொடு மனத்தொடும் திருந்தி
இடம் அற விருந்து விருந்தொடு நுகர்வோர் மனை இடம் எண்ணினை மறைக்கும்
கடு வினை அடர்ந்த கொடு வினை விழியார் கறை தவிர் மதி முகம் கண்டோ
படர்தரு மாட குடுமியின் விசித்த பசும் கொடி மதி மறு துடைக்கும்

மேல்
$1.3.15

#91
தேம் கமழ் சுருதி வரி முறை படர்ந்து திகழ்தரு நித்தில கொடிகள்
ஓங்கிட மாட குடுமியின் நடு நின்று உலவியது இரவினும் பகலும்
வீங்கு செம் கதிரின் இரவியும் தவள வெண் கதிர் மதியமும் விலகி
பாங்கினில் புகு-மின் என கரம் அசைத்த பான்மை ஒத்திருந்தன மாதோ

மேல்
$1.3.16

#92
மானை அன்ன கண் மடந்தையர் வதுவையின் முழக்கும்
சேனை மன்னவர் படை முரசு அதிர் தெரு முழக்கும்
தானம் இ நகர் முதல் என சாற்றிய முழக்கும்
சோனை மா மழை முழக்கு என வைகலும் தொனிக்கும்

மேல்
$1.3.17

#93
வீதி வாய்-தொறும் இடன் அற நெருங்கிய மேடை
சோதி வெண் கதிர் அந்தரத்து உலவிய தோற்றம்
நீதி மான் நபி பிறந்தநாள் விண்ணவர் நெருங்கி
கோது இல் பொன் நகர் திறந்த வாய் கதிர் என குலவும்

மேல்
$1.3.18

#94
மன்றல் அம் கமழ் அகழ் புனை சுதை திகழ் மதிளான்
நின்று இலங்கிய கண மணி கொடுமுடி நிரையான்
முன்றில் எங்கணும் அசைதரு கொடி நிறை முறையால்
என்றும் இ நகர் பொன் நகர் என்பது ஒத்திடுமே

மேல்
$1.3.19

#95
பட்டம் உற்றிடும் நபிகளால் விண்ணவர் பரிவால்
கட்டு பேர் ஒளி ககுபத்துல்லா இருக்கையினான்
மட்டு வார் குளிர் சோலையான் மலிந்த பொன் உலகம்
எட்டும் ஒன்று என திரண்டு வந்திருந்தது ஒத்திருக்கும்

மேல்
$1.3.20

#96
தெரிந்த செவ்வியர் முறை வழி தெளிந்தவர் செம் நூல்
சொரிந்த நாவினர் முதியவர் திரண்ட சொல் ஓதை
எரிந்த செம் கதிர் இலங்கிய பள்ளிகள் எவையும்
விரிந்த வாய் திறந்து ஓதுவ போன்றன வேதம்

மேல்
$1.3.21

#97
சந்திர காந்தி செய் பலகையை மடி மிசை தரித்தே
இந்திரநீலம் ஒத்து இருந்தமை தோய்த்து அதில் எழுதி
மந்திர மா மொழி மறை பயில் இளையவர் நெருங்கி
எந்த வீதியும் முழங்குவது இவை அலால் இலையே

மேல்
$1.3.22

#98
மறையின் மிக்கவர் ஓதிய ஓசையும் வரிசை
துறவின் மிக்கவர் திக்கிறின் ஓசையும் சூழ்ந்தே
இறைவனை தொழுது இரு கையும் ஏந்திய ஆமீன்
முறைமுறைப்படி கூறிய ஓசையும் முழங்கும்

4. தலைமுறைப் படலம்

$1.4.1

#99
மரு விரி வாவி செந்தாமரை மலர் கைகள் ஏந்த
சொரி மது சிந்தும் சந்த துடவை சூழ் மதினா-தன்னில்
தெரிதர அரசுசெய்து தீன் நிலை நிறுத்தி செல்வம்
தரு நபி இறசூலுல்லா தலைமுறை தோற்றம் சொல்வாம்

மேல்
$1.4.2

#100
தெரி பொருள் அரிய வேதத்துள் பொருள் தெளிவதாக
வரு பொருள் ஆதி பாரில் முகம்மதை விளக்கம் செய்ய
பரிவுறு மனு ஆதத்தை படைக்க மண் எடுத்து வா என்று
உரைதர இசுறாயீலும் உவந்து மண் எடுத்து போந்தார்

மேல்
$1.4.3

#101
கதிர் வடிவு ஒழுகி நின்ற ஹபீபு மெய் வகுக்க வேண்டி
விதியவன் ஜிபுறயீலை விரைந்து மண் கொடுவா என்றான்
துதி பெறு மதினா-தன்னில் தூய ஓர் இடத்தில் தோன்றி
இதமுற எடுத்து போந்தார் இமையவர் தலைவர் அன்றே

மேல்
$1.4.4

#102
திறலுறு ஜிபுறயீல் தம் திரு கையில் ஏந்தி போந்த
பிருதிவி-தனையே மிக்கோர் பெறும் பதி சுவனம் தன்னில்
நறை விரி அமுதம் எந்த நாளினும் மதுரம் மாறா
துறை விரி நதிகள்-தோறும் கழுவினர் துலங்க அன்றே

மேல்
$1.4.5

#103
வரிசையும் பேறும் வாய்த்த முகம்மது நயினார் தோற்றம்
தெரிதர வானோர்க்கு எல்லாம் சோபனம் சிறக்க சொல்லி
அரிய மெய் பூரித்து ஓங்கி அகத்தினின் மகிழ்ச்சி பொங்கி
பெரியவன் திருமுன் வைத்தார் பேர் ஒளி இலங்கிற்று அன்றே

மேல்
$1.4.6

#104
மன்னிய கதிர்கள் வீசு மண்ணினை மனு ஆதத்தின்
வெந்நிடத்து இருத்தி அங்கம் வியனுறும் வடிவதாக
தென்னுறு ஜலால் ஜமால் என்று ஏத்திய திரு கை ஆர
தன்னிகரில்லா துய்யோன் வகுத்தனன் தழைக்க அன்றே

மேல்
$1.4.7

#105
மெய் எழில் வாய்ப்ப சீவன் விடுத்தனன் விடுத்த போதில்
ஐயம் அற்று எழுந்து சென்னி மூளையின் அவதரித்து
வையகம் சிறப்ப வானோர் மனம் களிப்பு ஏறி விம்ம
துய்ய நல் கலிமா-தன்னை சொல்லி அங்கு இருந்தது அன்றே

மேல்
$1.4.8

#106
உரை தெரி கலிமா ஓதியோதி அங்கிருந்து சீவன்
இரு விழி-தனில் இறங்கி இருந்த கண் விழித்து சொர்க்க
சொரி கதிர் வாயின் மேலாய் நோக்கின சுடர்கள் தூங்கும்
வரியுறு கலிமா-தன்னை வளம் பெற கண்டது அன்றே

மேல்
$1.4.9

#107
துண்டத்தின் ஆவி தோன்ற தும்மலும் தோன்றி பின்பு
விண்டு உரை பகரும் நாவின் மேவி அல்ஹம்தை ஓதி
கொண்ட பின் பிரத்தி சொன்ன குதா திரு வசனம் நோக்கி
அண்டர்_நாயகனை போற்றி ஆதம் ஒன்று உரைப்பதானார்

மேல்
$1.4.10

#108
கணித்து அளவறுக்கவொண்ணா கடவுளே குதாயே நீங்கா
மணி கதிர் எறிக்கும் சொர்க்கவாயிலின் நிலைக்கு மேல்-பால்
பணித்த நின் திருநாமத்தினுடன் ஒரு பெயரை பண்பாய்
அணித்து வைத்திருப்ப கண்டேன் அவர் எவர் அறியேன் என்றார்

மேல்
$1.4.11

#109
மாதர் சூல் அகட்டுள் தோன்றா மனு நெறி ஆதமே நின்
காதலில் உதவுகின்ற கான்முளை அதில் ஓர் பிள்ளை
வேத நாயகமாய் எங்கும் விளங்கு தீன் விளக்காய் பின் நாள்
பூதல நபியாய் காண படைத்தனன் புகல கேண்மோ

மேல்
$1.4.12

#110
கலைமறை முகம்மது என்னும் காரணம் இல்லையாகில்
உலகு விண் இரவி திங்கள் ஒளிர் உடு கணம் சுவர்க்கம்
மலை கடல் நதி பாதாளம் வானவர் முதலாய் உம்மை
நிலையுற படைப்பதில்லை என இறை நிகழ்த்தினானே

மேல்
$1.4.13

#111
பரத்தினை இறைஞ்சி வாழ்த்தி பரிவு பெற்றிருந்த ஆதம்
சிரத்தினில் இருந்த ஆவி தேகத்தில் நிறைந்த பின்னர்
வரத்தினில் உயர்ந்த வண்மை முகம்மது புவியில் தோன்ற
தரித்த பேர் ஒளிவுக்கு அந்த சசி கதிர் மழுங்கும் அன்றே

மேல்
$1.4.14

#112
உடல் உறைந்து உயிர் உண்டு என்னும் ஒரு_வடிவில்லான் செவ்வி
மடல் அவிழ் வனச பாத முகம்மதின் ஒளிவுக்காக
அடலுறு மக்கட்கு எல்லாம் அதிபதி ஆதத்துக்கே
இடமுறும் அமரர் யாரும் சுசூது செய்திடுக என்றான்

மேல்
$1.4.15

#113
தூயவன் உரைப்ப கேட்ட சொல் மறாது எழுந்து தங்கள்
காயமும் மனமும் வாக்கும் கலந்து ஒன்றாய் மகிழ்வு பொங்கி
நேயமுற்றிட பணிந்த நிரைநிரை கைகள் ஏந்தி
வாயினில் புகழ்ந்து போற்றி மலக்குகள் வணக்கம் செய்தார்

மேல்
$1.4.16

#114
வானவர் செய்யும் அந்த வணக்கத்தின் முறை செய்யாமல்
போனதனால் அஜாசீல் பொறை நிறை அறிவு போக்கி
ஈனவன் குணத்தனாய் இலகுனத்தும் முனிவும் பெற்றே
ஆன வம்பு இபுலீசு என்னும் பெயரும் பெற்று அலைந்து போனான்

மேல்
$1.4.17

#115
பொருப்பு உருக்கொண்டது அன்ன புயத்து எழில் ஆதம் தன்னுள்
விருப்பு எனும் போகம் முற்றி விழைவு பெற்றிடுதலாலே
கருப்பம் உற்பவிக்க வேண்டும் காரண காட்சியாக
மரு புகும் குழல் ஹவ்வாவை வல்லவன் பிறப்பித்தானே

மேல்
$1.4.18

#116
தேம் கமழ் குழலும் சோதி சிறுபிறை நுதலும் வாய்ப்ப
பாங்கிருந்து அமுதம் சிந்தும் பனி மொழி மாதை நோக்கி
ஓங்கு நின் பெயரை கூறு என்று உரைத்திட ஹவ்வா என்றார்
ஈங்கு இவண் உறைந்த வண்ணம் ஏது என ஆதம் கேட்டார்

மேல்
$1.4.19

#117
செவ்வி மன் நெறி ஆதத்தின் திரு மதி முகத்தை நோக்கி
மவ்வல் அம் குழலார் இந்த வானகம் புவி மற்று உள்ள
எவ்வையும் படைத்தோன் என்னை வகுத்து நும்-வயின் செல்க என்றான்
அ வழி அடைந்தேன் என்றார் அழகு ஒளிர் பவள வாயால்

மேல்
$1.4.20

#118
செப்பிய மாற்றம் கேட்டு ரோமங்கள் சிலிர்த்து பூரித்து
அப்பொழுது இறையை போற்றி ஆதம் ஹவ்வாவை நோக்கி
மை படும் கரிய கூந்தல் மட மயில் வடிவு உட்கொண்டு
துப்பு உறை அமுதம் துய்ப்ப தொடுவதற்கு ஒருமித்தாரே

மேல்
$1.4.21

#119
பகர அரும் குணமும் திவ்ய பரிமள மணமும் மாறா
சிகரமும் மயங்க வெற்றி திகழ்தரு புயமும் நோக்கி
நிகர் அரும் குரிசிலே நல் நிலை பெறு வாழ்வே என்-தன்
மகரினை தருக பின்னர் வருக என்று உரைத்திட்டாரே

மேல்
$1.4.22

#120
கேட்டனர் மகர் என்று ஆதம் கிலேசமுற்று இறை-பால் கெஞ்சி
வாட்டமில்லவனே எந்த வகை மகர் கொடுப்பது என்றார்
நாட்டிய புகழ் சேர் மக்க முகம்மது நபி-தம் பேரில்
சூட்டிய சலவாத்து ஈரைந்து உரை என இறைவன் சொன்னான்

மேல்
$1.4.23

#121
மதி கதிர் விலக்கும் சோதி முகம்மதின் சலவாத்து ஓத
விதித்தனன் இறை என்று ஆதம் விளங்கு ஒளி சலவாத்து ஓதி
துதித்தனர் ஹவ்வா கேட்டு சோபன மகர் பெற்றேன் என்று
இதத்து இதமித்து நெஞ்சம் இரும் களிப்பு ஏறினாரே

மேல்
$1.4.24

#122
கடி மலர் கொடியும் செவ்வி கற்பக தருவும் போல
பிடி நடை மயிலும் வெற்றி பெறும் திறல் அரசும் காமம்
இடையறாது அமிர்த போகம் இனிது உண்டு களித்து பொங்கி
வடிவுறும் இன்ப வெள்ள வாரிக்குள் அழுந்தினாரே

மேல்
$1.4.25

#123
துறக்க நல் நகரில் சேர்ந்து சுகம் அனுபவிக்கும் ஆதம்
மறக்க அரும் பொருளே வேதம் வரு முறைக்கு உரிய கோவே
பெறற்கு அரும் சுவன வானோர் அனைவரும் பெரிது கூண்டு என்
புற-கணின் இருப்பது என்னோ புகல் என புகலலுற்றான்

மேல்
$1.4.26

#124
நிதம் அழகு ஒழுகி வாசம் நிறைந்த மெய் முகம்மது என்னும்
முதிர் கதிர் விளங்கி நும்-தம் முதுகிடத்து இருக்கையாலே
பதவியின் அரிய விண்ணோர் எண்ணிலா பகுப்பு கூடி
இதமுற தெரிசிக்கின்றார் என்றனன் என்றுமுள்ளோன்

மேல்
$1.4.27

#125
மருள் கடிந்து அறிவு பொங்கும் முகம்மதின் ஒளியை என் முன்
அருள்க என்று இரு கை ஏந்தி ஆத நல் நபியும் கேட்க
பெரியவன் கருணைகூர்ந்து பெறும் முறை இது-கொல் என்ன
நெரி நடு புருவ கால் மேல் நெற்றியில் ஒளிரச்செய்தான்

மேல்
$1.4.28

#126
தாது அவிழ் மலர் தார் ஆத நல் நுதலில் தண்ணெனும் கதிர்கள் விட்டு ஒழுகும்
சோதியை தெரிசித்து அமரர்கள் அணுவும் தோன்றுதற்கு இடம் அற நெருங்கி
கோது அற பெருகி முன்னிலை திரண்ட குழுவினை கண்டு கண் குளிர்ந்து
மா தவம் பெற்றேன் என மன மகிழ்ச்சி வாரியில் குளித்தனர் அன்றே

மேல்
$1.4.29

#127
அற அரிதான காட்சியும் பேறும் அமரர்கள் யாவரும் பெற்றார்
இறைவனே யானும் பெறுவதற்கு என் கணிடத்தினில் தெரிகிலேன் என்றார்
நிறை நடுவாகி உலகு எலாம் நிறைந்த நெடியவன் இனிது அருள்புரிந்து
விறல் புரி ஆதம் வலது கை கலிமா விரல் நகத்திடத்தில் வைத்தனனே

மேல்
$1.4.30

#128
வரி சுரும்பு அலர்த்தி நறை விரி துருக்கம் மருவு பொன் புயத்து எழில் ஆதம்
விரித்தக மகிழ்ச்சி பெருக்கி என் முதுகில் விளங்கு ஒளி இன்னமும் உளவோ
தெரித்து அருள்புரி என்று இறையுடன் மொழிய செவ்விய முகம்மது நபி-தம்
உரி துணை தோழர் நால்வர் உண்டு அவர்-தம் ஒளி உள என உரைத்தனனே

மேல்
$1.4.31

#129
அ பெரும் பெயர்கள் நான்குபேர் ஒளியும் அகுமதின் ஒளி அடுத்து இருப்ப
வைப்பை என் விரல்கள் நான்கினும் என்ன வல்லவன் அவ்வழி அமைத்தான்
மெய் பெரும் கலிமா_விரல் நடு_விரல் மென்_விரல் சிறு_விரல் பெருவிரல்கள்
இப்படி விரல்கள் ஐந்தினும் ஐவர் விளங்கு ஒளி உகிர் இலங்கினவே

மேல்
$1.4.32

#130
பகுத்து ஒளி விரிக்கும் நகத்து ஒளி இருக்கும் பண்பு கண்டு அதிசயித்து ஆதம்
அகத்தினின் மகிழ்ந்து கண் இணை மலரின் அடிக்கடி வைத்து வாய் முத்தி
மிகுத்திடும் வரிசை நபி சலவாத்தை விளக்கி வாய் மறாது எடுத்து ஓதி
வகுத்த வல்லவனை பணிந்து வானகத்தில் வாழ்ந்து இனிது இருக்கும் அ நாளில்

மேல்
$1.4.33

#131
மிக்கு எழில் ஆதம் மேலவன் விதித்த விலகலை பொருந்தினபடியால்
அ கையின் விரல்கள் ஒளிவு முன் இருந்த அணி அணி முதுகிடத்து ஆகி
துக்கமும் மிகுந்து சுவர்க்கமும் இழந்து தொல் உலகு அடைந்து வெவ்வேறு
திக்கினின் மயங்கி இருவரும் மலைத்து தீவினைக்கு உரியவர் ஆனார்

மேல்
$1.4.34

#132
ஆதியே ஹக்கா றப்பனா இறையே அழிவு இலா பேரின்ப வாழ்வே
நீதியே எனவும் பலதரம் தவுபா நிகழ்த்தியும் துன்பம் விட்டு ஒழியா
போதிலே எனது முதுகிடத்து உறைந்த பொருள் ஒளி சிறப்பு எனும் பொருட்டால்
சோதியே தவுபா-தனை கபூல் ஆக்கு என்று உரைத்தனர் சுடர் முடி ஆதம்

மேல்
$1.4.35

#133
நறை தரும் மறுவி கமழ் முகம்மது நம் நபி திரு பெயர் சொலும் பொருட்டால்
இறைவனும் ஆதம் செயும் தவுபாவுக்கு இசைந்து இனிதுற கபூல் ஆக்க
உறைதரு துன்பம் அனைத்தையும் போக்கி ஊழ்வினை பின்பும் ஒன்றாக்க
மறு மதி அகடு தொடு முடி அறபா மலையினில் இருவரும் சேர்ந்தார்

மேல்
$1.4.36

#134
கூடிய இருவர் தாமும் சுத்தாவில் குடியிருந்து இருபது சூலில்
நாடிய பொருள் போல் நாற்பது பெயரை நன்குற பெற்றதின் பின்னர்
சூடிய கிரீட பதி நபி அமரர் துரைகள் நாயகம் எனும் இறசூல்
நீடிய ஒளியும் சிறந்து ஒரு சூலில் நிலம் மிசை சீது உதித்தனரே

மேல்
$1.4.37

#135
மரு மலர் திணி தோள் நிறைமதி வதன முகம்மதின் பேரொளி இலங்கி
தெரி மறை ஆதம் மக்களில் சிறந்த சீதுவினிடத்து இருந்ததனால்
பரிவுறு நபி பட்டமும் வரப்பெற்று பல்கலை குரிசில் என்று ஏத்த
அரியவன் கொடுத்த வரிசைகள் நிறைந்த ஐம்பது சுகுபு இறங்கியதே

மேல்
$1.4.38

#136
சீதுவினிடத்தின் இருந்தவர் மதலை சிறந்த மா மணி முடி குரிசின்
மா தவன் கமல வதன யானுசு தம்-வயின் உறைந்திருந்து அணி சிறந்து
தாது அவிழ் மலர் தார் குங்கும கலவை தட புயர் யானுசு தரு கார்
நீதி சேர் ஹயினானிடத்தினிலிருந்து நிலை பெற விளங்கியது அன்றே

மேல்
$1.4.39

#137
தண் மணி கதிர் விட்டு எறிக்கும் வெண் கவிகை தட வரை மணி புய ஹயினான்
கண்மணி மகுலீலிடத்தினிலிருந்து கவின் குடிகொண்டு எழுந்து ஓங்கி
வெண் மணி தரள தொடை புய மகுலீல் வேந்தருக்கு உற்ற சேய் என வாழ்
உண்மை நல் நெறி சேர் எறுதுவினிடத்தின் உறைந்து இனிது இலங்கியது அன்றே

மேல்
$1.4.40

#138
வட_வரை குலுங்க நடமிடு துரங்க மன்னவர் எறுது-தம் மதலை
கட கரி குவட்டின் இணை என பணைத்த கதிர் முலை துடி இடை மடவார்
விடம் என கரிய கொலை விழி கணங்கள் வீற்றிருந்திடும் மலர் புயத்தார்
இடி முரசு அதிரும் முன்றிலார் உகுநூகிடத்தினில் இருந்து இலங்கியதே

மேல்
$1.4.41

#139
கடல் என தானை அரசர் வந்து ஈண்டி கைகுவித்து இருபுறம் நெருங்க
சுடர் மணி தவிசின் உயர்ந்து அரசு இயற்றி சுருதி நேர் உறை உகுநூகு
புடை இருந்து அவர் செய் அறம் எலாம் திரண்டு ஓர் புத்திர வடிவெடுத்து என்ன
இடு கொடை கவிப்ப புரந்த சேய் இதுரீசிடத்தினின் நிறைந்து இருந்ததுவே

மேல்
$1.4.42

#140
நல் நெறி நயினார் ஒளி இருந்ததனால் நபி எனும் பட்டமும் பெறலாய்
உன்னுதற்கு அரிய முப்பது சுகுபும் உடையவன் அருளினால் இறங்கி
பன்னிய உலக தொழில் எவை அவைக்கும் பரிவுறு முதன்மையே இவர் என்று
எ நிலங்களுக்கும் பெயர்பெற அரசாய் இருந்திட இயற்றியது அன்றே

மேல்
$1.4.43

#141
மெய் தவ குரிசில் நபி இதுரீசு விருப்புற உதித்த நல் மதலை
உத்தமர் மத்தூசல்கு-தம்மிடத்து அ ஒளி உறைந்து உலகு எலாம் இறைஞ்ச
வைத்த பின் மத்தூசல்கு-தம் மைந்தர் மடந்தையர் மடல் எடுத்து ஏந்த
சித்திர கவின் பெற்றிருந்த லாமக்கு-வயின் சிறந்து இலங்கும் அ ஒளியே

மேல்
$1.4.44

#142
தரும நல் நெறியால் உலகு எலாம் புரக்க தகும் புகழ் ஆன லாமக்கு
திரு மக நூகு-வயின் உறைந்திருந்து சிறந்த பேரொளியினால் அவர்க்கும்
பெருகிய நபி பட்டமும் மிக பெறலாய் பிரளய பெருக்கெடுத்து எறியும்
கரு நிற கடல் வங்கமும் கவிழாது காட்சியாய் கலாசு பெற்றதுவே

மேல்
$1.4.45

#143
வரிசையும் இமையோர் துதிசெயும் பரிசும் வரப்பெறு நூகு-தம் மதலை
தரை புகழ்ந்து ஏத்த சாமிடத்திருந்து தனபதி கனபதி ஆக்கி
கருவிளை விழியார் கவரி கால் அசைப்ப கனக சிங்காதனத்து இருத்தி
விரி கடல் உலகம் பொதுவற புரக்கும் வேந்து இவர் என இயற்றியதே

மேல்
$1.4.46

#144
சாமு-தன் மதலை அறுபகுசதுமன்-தம்மிடத்து அவதரித்து இருந்து
தூமமும் புழுகும் தகரமும் சாந்தும் தோய்ந்து இருண்டு அடர்ந்த பூம் குழலார்
காமுகர் என செய்து அணி மணி புயங்கள் கண்கொளாது அழகு இருந்து ஒழுகு
மா மத களிற்றர் அறுபகுசதுமா மதலை சாலகு-வயின் அடைந்த

மேல்
$1.4.47

#145
சாலகு-தம்பால் அடைந்து வாய்மைக்கும் தவத்திற்கும் பவுத்துக்கும் இவரே
மேலவர் என செய்திருந்து அவர் மதலை வேந்தர் ஐபறு-வயின் புரந்து
காலடி மறைக்க கவிழ் மதம் இறைக்கும் கட கரி அரசர் ஐபறு சேய்
பாலகு-வயின் வீற்றிருந்து உலகு எல்லாம் பரித்திட பண்பு பெற்றதுவே

மேல்
$1.4.48

#146
தேன் கிடந்து ஒழுகும் குங்கும தொடையல் செழும் புயன் பாலகு மதலை
வான் கிடந்து அனைய மின் ஒளிர் வடி வாள் மன்னன் றாகுவாவிடத்திருந்து
கூன் கிடந்து அனைய பிறை கறை கோட்டு குஞ்சரத்து அரசர் கைகூப்ப
மீன் கிடந்து அலர் வான் மதி எனும் கவிகை வேந்தர்_வேந்து என விளைத்ததுவே

மேல்
$1.4.49

#147
வார் அணி முரசம் இடி என கறங்கும் வாயிலான் றாகுவா மதலை
தார் அணி தருவாய் உதித்த சாறூகு-தம்மிடத்திருந்து எழில் சிறந்து
காரண குரிசிலான சாறூகு கண் இணை மணி என விளங்கும்
ஏர் அணி புயன் நாகூறிடத்து உறைந்து அங்கு இலங்கியது அரு மறை ஒளியே

மேல்
$1.4.50

#148
வெண் திரை புரட்டும் கரும் கடல் உடுத்த மேதினிக்கு அரசு என விளங்கும்
திண் திறல் நாகூறு உதவிய மதலை செழும் புகழ் ஆசறு-வயின் வந்து
எண் திசை முழுதும் ஒருதனி செங்கோல் இயற்றுவது இவர் என இயற்றி
வண்டு அணி மலர் தார் ஆசறு தவத்தால் வரும் ஒரு வடிவுறு மதலை

மேல்
$1.4.51

#149
முருகு அவிழ் புயத்தார் நபி இபுறாகீம் முன் உறைந்திருந்த பேரொளியால்
கரிசமும் கபடும் இடையறா கொடிய கனை நுமுறூது செய் வினையின்
எரி எழு நாவால் எண் திசை தடவ எழுந்திட பெருகிய நெருப்பு
மரு விரி கழுநீர் கறை சொரி வனச வாவியின் குளிர்ந்தன அன்றே

மேல்
$1.4.52

#150
தீன் நிலைக்கு உரிய நபி இபுறாகீம் செய் தவ பலன் ஒரு வடிவாய்
ஈனம் இல் இசுமாயீல் நபியிடத்தின் இருந்து இலங்கிய ஒளி பொருட்டால்
வானகத்து அமரர் சுடர் விரி சுவன மடந்தையர் இனிது வாழ்த்து எடுப்ப
கான் நகு மலர் தார் செழு மணி கழுத்தில் கருவி வாய் தடவில அன்றே

மேல்
$1.4.53

#151
மன்னவர் இசுமாயீல் தரு மதலை மணி விளக்கு அனைய தாபித்து
தன்னிடத்து இருந்து தரணி ஏழ் புரக்கும் தலை பதி நிலைபெற இயற்றி
மின் அவிர் மௌலி விளங்கு தாபித்து வேந்தர் பெற்றெடுத்த மா மதலை
இ நிலம் புகழும் எசுஹபு எனும் பேர் எடுத்தவரிடத்தில் இலங்கியதே

மேல்
$1.4.54

#152
உடல் பிளந்து உயிர் உண்டு உதிரம் கொப்புளித்து ஊன் உணங்கு வேல் கரர் எசுஹபு-தம்
பிடி நடை மடவாள் பெற்றெடுத்து உவந்த பிள்ளை அஃறுபு-வயின் இருந்து
கடல் கிளர்ந்து அனைய தானை அஃறுபு-தம் கண்மணி தயிறகு என்போர்
இடமுற இருந்து நெடும் புகழ் விளக்கி எழில் கனிந்து இலங்கியது அன்றே

மேல்
$1.4.55

#153
சந்தனம் திமிர்ந்து திரண்ட மல் புயத்தார் தயிறகு தரு திரு மதலை
கந்து எறி தறுகண் கரட மால் யானை காவலர்க்கு அசனி நாகூறு
சுந்தர வதனத்து இலங்கிட இருந்து சொரி மழை செழும் கை நாகூறு
மைந்தர் மிக்குவம்-தம்மிடத்து உறைந்திருந்து மாட்சிபெற்று இலங்கியது அன்றே

மேல்
$1.4.56

#154
மிக்குவம் எனும் பேர் அரசு-தம் மதலை வெயில் விடு மணி முடி உதது
பக்கலில் இருந்து செல்வமும் செருக்கும் பண்புற பெருக்கிட நிறைத்து
திக்கு அனைத்தினும் பேர் விளங்கிட விளங்கி திறல் பெறும் உதது நன் மதலை
தக்க மெய் புகழ் சேர் இருநிதி அதுனான்-தம்மிடத்து இருந்து எழில் தழைத்த

மேல்
$1.4.57

#155
வெண் நிலா விரிக்கும் ஒருதனி குடை கீழ் வேந்து செய்து அருள்புரி அதுனான்
கண்ணின் மா மணியாய் உதித்திடு முஅத்து கவின் பெற இருந்து அவரிடத்தில்
எண்ணிலா அரசர் அடிபணிந்து இறைஞ்ச இயற்றிய பேரொளி முஅத்து
புண்ணிய பொருளாய் உருவெடுத்து உலகம் புரந்த நிசாறிடத்து உறைந்த

மேல்
$1.4.58

#156
ஒருகுடை நிழல் கீழ் இரு நிலம் புரந்திட்டு உரும் என மும்முரசு அதிர
திரு நிறை நான்கு திக்கினும் செங்கோல் செலுத்திய நிசாறு எனும் அரசர்
பெருகிய நிலைமை குல கடல் நாப்பண் பிறந்து எழும் கதிரவன் ஒப்ப
வரு முகில் முலறு நபியிடத்து உறைந்து மகிதலம் புகழ்ந்திட இருந்த

மேல்
$1.4.59

#157
அறிவு எனும் கடலாய் வரம்பு பெற்றிருந்த அரு மறை முலறு நல் நபிக்கு
பெறு பலன் என வந்து உதித்த இல்யாசு நபி என பேரொளி தங்கி
துறவலர்க்கு அரசாய் இருந்த இல்யாசு புத்திரர் பவுத்து எலாம் நிறைந்த
மறு மன்னர் குல கோளரி என பிறந்த மா மணி முதுறக்கத்து எனுமால்

மேல்
$1.4.60

#158
முகம்மது நயினார் ஒளி இருந்து இலங்கு மன்னவர் முதுறக்கா மதலை
செகம் மகிழ் குசைமா-வயின் உறைந்து அரசர் செழு முடி நடு மணி எனலாய்
நகு கதிர் விரி வெண் குடை நிழல் இருந்த நரபதி எனும் குசைமா மன்
புகழ் என தோன்றி வரு துறை கனானா பூபதியிடத்தின் வந்து இருந்த

மேல்
$1.4.61

#159
மடங்கல் ஏறு அனைய தனபதி கனானா மகிபதி தவத்து உறு மதலை
நுடங்கு இடை மடவார் கருத்தினை கவரும் நுலறு எனும் அழகுறும் அரசர்
தடம் புயங்களின் மா நிலம் குடியிருப்ப தயங்கி அங்கு அவர் பெறும் அரசர்
முடங்கு உளை பகு வாய் மடங்கல் அம் கொடியார் மோலி மாலிக்கு சார்பு இருந்த

மேல்
$1.4.62

#160
திண் திறல் அரசர் சிரம் பொடிபடுத்தி செவந்த வாள் கரத்தர் மாலிக்கு
மண்டலம் விளக்கு முழு மணி விளக்காய் வந்த மன் பிஃறிடத்து இலங்கி
எண் திசை இடத்தும் எழு கடல் புறத்தும் அறு வகை தானை கொண்டு எதிர்ந்து
கொண்டு அமர் கடந்த அரசு என பெயரும் கொடுத்தது திரு நபி ஒளியே

மேல்
$1.4.63

#161
குரிசில் என்று உயர்ந்த பிஃறு எனும் அரசர் குறைஷி அம் குலத்து உறு மதலை
விரி திரை உவரி நடுநிலம் புரந்த வேந்தர் காலிபு-வயின் இலங்கி
கரி பரி பதாதி ரதம் புடை நெருங்கும் கடைத்தலை காலிபு தரு சேய்
முருகு அவிழ் மரவ தொடை புயர் லுவையு முக மலர் தர இருந்து ஒளிரும்

மேல்
$1.4.64

#162
வான் மதி பகுந்த முகம்மது நயினார் வடிவுறும் பேரொளி லுவையு ஆம்
கோன்_மகன் ககுபு-தம்மிடத்து இலங்கி குன்றினிலிடும் விளக்கு ஆகி
சூல் முதிர் மழை கை ககுபு கண்மணியாய் தோன்றிய முறத்திடத்து உறைந்த
சேனமும் கொடியும் தொடர் கதிர் வடி வேல் செம்மல் என்று உயர்ச்சி பெற்றிருந்தார்

மேல்
$1.4.65

#163
கொந்து அலர்ந்து இருண்ட கரும் குழல் மடவார் கொங்கையில் தடம் புயம் அழுந்தும்
சுந்தரர் முறத்து மதலையாய் நிலத்தில் தோன்றிய மதி முக கிலாபு
மந்தரம் அனைய தடம் புயரிடத்தில் வந்து இருந்து அவர் தரு மதலை
கந்து அடர் தறுகண் கரட மால் யானை காவலர் குசையிடத்து உறைந்த

மேல்
$1.4.66

#164
வில் உமிழ் வயிர தொடை புரண்டு அசைந்த விறல் புயர் குசை தரு மதலை
செல் என இரங்கும் சினந்து வேல் தாங்கும் செழும் கரர் அப்துல் முனாபு
மல் அலை திணி தோள் அரசர் நாயகர்-தம்-வயின் உறைந்து அவர் பெறு மதலை
எல்லவன் எனவே கலி இருள் துரத்தி இருந்த ஹாஷீமிடத்து உறைந்த

மேல்
$1.4.67

#165
கிம்புரி கோட்டு கட மலை துளைத்து கிளைத்திடும் வேல் கரர் ஹாஷீம்
அம் புவிக்கு அரசாய் பெற்றெடுத்து உவந்த அரு மணி அப்துல் முத்தலிபு
நம்பிய தவ பேறு என இருந்து இலங்கி நறை கமழ் அப்துல் முத்தலிபு
தம் பெயர் விளக்க குவலயத்து உதித்த சந்ததி அப்துல்லா என்போர்

5. நபியவதாரப் படலம்

$1.5.1

#166
பெருகிய கோடி சந்திர பிரகாசமாய்
வரும் ஒரு பெரும் கதிர் மதியம் போலவே
கருணை வீற்றிருந்த செங்கமல கண் இணை
திரு நபி வரும் அவதாரம் செப்புவாம்

மேல்
$1.5.2

#167
கடி இருந்து எழு கற்பகமும் சுடர்
வடிவு இருந்த மணியும் வனசமும்
படியும் கார் முகில் ஏழும் பழித்து விண்
குடியிருத்தும் கொழும் தட கையினார்

மேல்
$1.5.3

#168
விண் தொடு கொடுமுடி மேரு வீறு அழித்து
எண் திசை கிரியொடு மிகலும் கொங்கையர்
கொண்ட மா மயலொடு மனமும் கூர் விழி
வண்டொடும் வண்டு உறை மாலை மார்பினார்

மேல்
$1.5.4

#169
கொல் நுனை வெள் நிற கோட்டு வாரண
செ நிற குருதியில் திமிர்ந்து வாய் கழீஇ
மின் அவிர் கண மணி விளங்கு மா முடி
ஒன்னலர் உயிரை மேய்ந்து உறங்கும் வேலினார்

மேல்
$1.5.5

#170
முடங்கல் அம் கைதை முள் எயிற்று வெண் பணி
படங்கள் ஆயிரத்தினும் பரித்த பார் எலாம்
இடங்கொள் பூதர புயத்து இருத்தி ஏதிலார்
மடங்கல் ஏறு எனும் மன வலியின் மாட்சியார்

மேல்
$1.5.6

#171
மா கடல் நெடும் புவி வளைந்த வன் கலி
நீக்கிய வெண்குடை நீழல் ஓம்புவோர்
வீக்கிய கழல் அடி வேந்தர் பொன் முடி
தாக்கிய மரு செழும் கமல தாளினார்

மேல்
$1.5.7

#172
வர பதி உலகு எலாம் வாழ்த்து மக்க மா
புரபதிக்கு அதிபதி என்னும் பூபதி
பரபதி அரசர்கள் பணிந்து இறைஞ்சிய
நரபதி அப்துல்லா என்னும் நாமத்தார்

மேல்
$1.5.8

#173
செழு மழை முகில் என அமுதம் சிந்திட
வழி கதிர் நபி என வகுத்த பேரொளி
பொழி கரத்து அப்துல்லாவிடத்தில் பொங்கியே
எழில் தரு திரு நுதலிடத்து இலங்குமே

மேல்
$1.5.9

#174
அயில் உறை செழும் கரத்து அப்துல்லா எனும்
பெயரிய களிறுக்கு ஓர் பிடியும் போல் அவர்
உயிர் என இருந்து அசைந்து ஒசிந்த பூம் கொடி
மயில் எனும் ஆமினா என்னும் மங்கையே

மேல்
$1.5.10

#175
இல் புகுந்து எழும் மதி இலங்கு மா மணி
வில் புருவக்கடை மின்கள் நாயகம்
பொற்பு எலாம் பொதிந்த பொன் கொடி நல் பூவையர்
கற்பு எலாம் திரண்டு உருக்கொண்ட கன்னியே

மேல்
$1.5.11

#176
அறத்தினுக்கு இல்லிடம் அருட்கு ஓர் தாயகம்
பொறுத்திடும் பொறுமையில் பூமிக்கு எண் மடங்கு
உறை பெரும் குலத்தினுக்கு ஒப்பு இலா மணி
சிறப்பினுக்கு உவமை இல்லாத செல்வியே

மேல்
$1.5.12

#177
குணிப்ப அரும் குறைஷி அம் குலம் என்று ஓங்கிய
மணி பெரும் கடலிடை வளரும் செல்வமே
தணிப்பு இலாது எடுத்து எறி தரங்கம் மேல் நடு
பணிப்படாது எழுந்த செம்பவள கொம்பு அனார்

மேல்
$1.5.13

#178
இத்தகை குல மயில் ஆமினா எனும்
முத்த வெண் நகை கனி மொழியும் மோகன
சித்திர அப்துல்லா என்னும் செம்மலும்
ஒத்து இனிது அமுதம் உண்டு உறையும் நாளினில்

மேல்
$1.5.14

#179
வீசு தெள் திரை கடல் மலை அடங்க வெண்குடை கீழ்
ஆசு இலாத சிங்காசனத்து இருந்த சிக்கந்தர்
காசினிக்கு அரசு இயற்று துல்கறுனையின் காலம்
மாசு இலா கணக்கு எட்டுநூற்று எண்பத்தோர் வருடம்

மேல்
$1.5.15

#180
கரைத்த மின் தெளித்து எழுத்து என சிறக்கும் மக்காவின்
நிரைத்த கார் குலம் திரண்டு என களிறுகள் நெருங்கி
இரைத்து அடர்ந்து மும்மதங்களை வாரி நின்று இறைத்து
வரை குலங்கள் போல் வந்ததற்கு ஒரு முதல் வருடம்

மேல்
$1.5.16

#181
திங்களாம் இறசபு முதல் தேதி வெள்ளி இரா
துங்க வார் கழல் முகம்மது பேரொளி துலங்கி
எங்கள் நாயகர் அப்துல்லா நுதலிடத்து இருந்து
மங்கை ஆமினா வயிற்றினில் தரித்தன அன்றே

மேல்
$1.5.17

#182
திருத்தும் பொன்_நகர் அமரரே திரண்ட வானவரே
கருத்தினுள் மகிழ்ந்து எவ்வையும் அலங்கரித்திடு-மின்
வருத்தம் என்று இலா முகம்மதை ஆமினா வயிற்றில்
இருத்தினேன் என உரைத்தனன் யாவர்க்கும் இறையோன்

மேல்
$1.5.18

#183
பரந்த வாய் கொடும் பாந்தளும் விடம் கொள் பஞ்சரமும்
கரிந்து பொங்கிய குழிகளும் கனல் பொறி கதுவ
எரிந்து செம் நெருப்பு ஒழுகிய நரகங்கள் ஏழும்
விரைந்து அவித்து அடைத்திடுக என்றனன் முதல் வேந்தன்

மேல்
$1.5.19

#184
வில் கெழும் அறுசொடு குறுசு அந்தரம் விளங்க
சொர்க்கவாயிலும் திறந்து அலங்கரித்தனர் துன்பம்
மிக்க வாரி பாழ் நரகங்கள் அடைத்தனர் வானோர்
கற்கும் மா மறை முதலவன் விதித்த கட்டளைக்கே

மேல்
$1.5.20

#185
அம் தண் பொன்_நகர் அடங்கலும் அலங்கரித்ததுவும்
வெந்த பாழ் நரகங்களை அடைத்த பல் விதமும்
சந்த திண் புய முகம்மது நபி தரித்ததுவும்
இந்தவாறுகள் அனைத்தையும் அறிந்து இபுலீசு

மேல்
$1.5.21

#186
நடுங்கி வாயில் நீர் வறந்திட நா உலர்ந்து உடலம்
ஒடுங்கி ஐம்பொறி மயக்குற நெஞ்சு எலாம் உடைந்து
புடம் கொள் வங்கம் அதாய் நினைவு உருகினன் புலம்ப
துடங்கினான் அடிக்கடி பெருமூச்சொடு சுழன்றே

மேல்
$1.5.22

#187
கரைவன் ஏங்குவன் மலங்குவன் கலங்குவன் கதறி
இரைவன் கன்னத்தில் கையை வைத்து இருந்து எழுந்திருப்பன்
தரையின் மேல் விழுந்து எனக்கு இலை இனி சிங்காசனம் என்று
உரை மறந்திட கிடந்தனன் இரு கணீர் ஒழுக

மேல்
$1.5.23

#188
அறிவு அழிந்த மன்னவன்-தனை மக்கள் வந்தடைந்து
குறியும் துன்பமும் வந்தவாறு ஏது என கூறி
நிறையும் மக்களோடு உறும் வரலாறு எலாம் நிகழ்த்தி
உறையும் இல்லிடம் இவண் இலை நமக்கு என உரைத்தான்

மேல்
$1.5.24

#189
இந்த வாசகம் கேட்டலும் மக்கள் எல்லோரும்
தந்தையே இதற்கு என் செய்வோம் என தடுமாறி
புந்தி நொந்துநொந்து அவரவர் திசைதிசை புகுந்தார்
சிந்தை நொந்து இபுலீசுவும் திகைத்திருந்து இடைந்தான்

மேல்
$1.5.25

#190
தரித்திடும் முதல் திங்களில் தரை புகழ் ஆதம்
உரைப்பர் ஆமினா கனவினில் உன் திரு உதரத்து
இருக்கும் சந்ததி வலிமையை உடையது இ உலகத்து
அருக்கன் ஒப்பு அல நாமம் முகம்மது என்று அகன்றார்

மேல்
$1.5.26

#191
கருப்பம் திங்கள் இரண்டினில் ஆமினா கனவின்
மரு புகும் குழல் வல்லி நின் வயிற்றினின் மதலை
அருப்பும் வீறு உடையவர் பெயர் முகம்மது என்று அதிக
விருப்பமாய் இதுறீசு நல் நபி விளம்பினரே

மேல்
$1.5.27

#192
இக்கு எனும் மொழி ஆமினாக்கு இனிதுற திங்கள்
புக்கு மூன்றினின் நூகு நல் நபி மன பொலிவாய்
மிக்க உண்மையும் விளங்கிய வெற்றியும் உடையோர்
தக்க பேர் முகம்மது என சாற்றிவிட்டு அகன்றார்

மேல்
$1.5.28

#193
திங்கள் நான்கினில் ஆமினா கனவினில் தெளிவாய்
இங்கிதத்து இபுறாகிம் நல் நபி இயம்பினரால்
சங்கையாய் மிகு வரிசையும் பெரும் கொலுத்தனையும்
பொங்கு வாழ்வினர் பெயர் முகம்மது என போந்தே

மேல்
$1.5.29

#194
அம் பொன் கும்பத்தின் அருவி நீர் மஞ்சனமாடி
செம்பொன் பட்டு உடுத்து எறி கதிர் அணி இழை திருத்தி
பம்பு மேகலை தரித்து மென் கர வளை பரித்து
கம்பலை சிலம்பு அணிந்தனர் பதம் கவின் பெறவே

மேல்
$1.5.30

#195
நெறித்த வார் குழல் இறுக்கி மென் மலர் பல நிறைத்து
குறித்த வேல் இணை கண்களில் அஞ்சனம் கோட்டி
செறித்த மான்மதம் சந்தன கலவையும் திமிர்ந்தே
எறித்த நல் கதிர் விளக்கு என ஆமினா எழுந்தார்

மேல்
$1.5.31

#196
இனத்துளார் எனும் செழு மலர் கொடி நடு இடையே
கனத்த மா மணி கொம்பு என நடந்து கஃபாவின்
மன திருக்கு அற வலஞ்செய்து வாயிலில் வந்து
நினைத்திடும் பொருள் தருக என போற்றினர் நிறைந்தே

மேல்
$1.5.32

#197
வண்டு வாழ் குழல் மடந்தையர் திரண்டு வாழ்த்து எடுப்ப
கண்டு மென் கொடி ஆமினா தாமரை காலின்
முண்டக செழு மலர் சொரி தலை முகம் கவிழ
தெண்டனிட்டது புத்தென உறைந்த தேவதையே

மேல்
$1.5.33

#198
அஞ்சலித்தது புத்தென மனத்து அதிசயித்து
மஞ்சு வார் குழல் ஆமினா பயந்து மெய் வருந்தி
கஞ்ச மின் அனார் கணத்துடன் வாயிலை கடந்தே
இன் சொல் நல் குல கிளி என மனையில் வந்து இருந்தார்

மேல்
$1.5.34

#199
தெரியும் திங்கள் ஐந்தினில் இசுமாயில் செப்பினரால்
உரிய மென் மயிலே நினது உதரத்தில் உறைந்தோர்
தரியலர்க்கு இடியாய் அடுத்தவர்க்கு ஒரு தருவாய்
வரிசை உற்றவர் பெயர் முகம்மது என வகுத்தே

மேல்
$1.5.35

#200
ஆறு திங்களில் வந்த மூசா நபி அழகாய்
கூறு மென் கரும்பே நின்றன் வயிற்று உறு குழந்தை
வீறு பெற்றிடும் தலைமையும் பெரும் பதவியையும்
மாறிலாதவர் பெயரிடு முகம்மது என்று உரைத்தார்

மேல்
$1.5.36

#201
சினவு வேல் கரத்து அப்துல்லா எனும் ஒரு சிங்க
மனைவி ஆகிய ஆமினா எனும் குல மட மான்
இனமும் ஆயமும் வாழ்த்திட கருப்பமும் இலங்க
கனவு கண்டு அகம் மகிழ்ந்து இனிது இருக்கும் அ காலம்

மேல்
$1.5.37

#202
மக்க நல் நகர் அப்துல் முத்தலிபு எனும் மன்னர்
அக்க மன்ன மன் அப்துல்லா-தமை அழைத்து இருத்தி
தக்க புத்தியும் முறைமையும் தொழிலையும் சாற்றி
ஒக்கல் கூட்டுற புறநகர்க்கு எழுக என்று உரைத்தார்

மேல்
$1.5.38

#203
தந்தை கூறிட அப்துல்லா மனம் தறுகாமல்
மந்திர வாள் எடுத்து இனிதுற விசித்தனர் மருங்கில்
இந்திரவில் என வில் எடுத்து ஒரு கையில் ஏந்தி
கந்துகம் கொணர்க என்று கட்டுரைத்தனர் கடிதின்

மேல்
$1.5.39

#204
பாடலத்தின் மேல் கொண்டு உறுதனில் பரிவாரம்
கூடு கோளரி திரள் என வர நெறி குறுகி
காடும் கானமும் கடந்து செம் தேம் பொழில் கனி சூழ்
நாடு அடைந்து போய் புகுந்தனர் மதீன மா நகரில்

மேல்
$1.5.40

#205
மதினத்தின் உறை ரசவருக்கங்களும் மதின
பதி அடுத்த ஊர் சரக்கையும் கொண்டு பந்தனமா
கதிர் கொள் மாடத்தில் கட்டிவைத்து அவரவர் கரத்தில்
புதிய வாணிப தலைவிலைக்கு ஈந்தனர் பொருளை

மேல்
$1.5.41

#206
வாணிப தொழில் அனைத்தையும் முடித்து மன்னவரும்
காணும் நாள் சில இருந்து தன் பதி வர கருதி
பூண் அணிந்து அழகுறும் இளையவர் புடை சூழ
சேண் அடைந்து அபுவா எனும் தலத்தினை சேர்ந்தார்

மேல்
$1.5.42

#207
ஆதி கற்பனை ஊழ் விதி பயனும் வந்து அடைந்து
போது நாட்களும் நாழிகை கணக்கையும் போக்கி
நீதி மன்னவன் அப்துல்லா தனை அறி நினைவாய்
சோதி மென் முகம் இலங்கிட துயில்வ போன்று இறந்தார்

மேல்
$1.5.43

#208
கூடி சூழ்ந்தவர் விதி பயன் என குலைகுலைந்து
வாடி மன்னனை எழில்பெற மணத்துடன் அடக்கி
பாடியூர் அபுவாவை விட்டு அகன்று போய் பதியை
நாடி வந்தவர் ஆமினாக்கு இவை எலாம் நவின்றார்

மேல்
$1.5.44

#209
மாற்றம் கேட்டலும் மட மயில் மனமுடைந்து அலறி
தோற்று மா மழை சொரிந்து என கண்ணில் நீர் சொரிய
போற்றும் காழ் அகில் புகை குழல் நிலம் புரண்டு அசைய
கோல் தொடி கர காந்தள் தாமரை முகம் குழைக்க

மேல்
$1.5.45

#210
வருந்தி நொந்து அழுது ஆமினா இடைதலும் வளைந்து
திருந்து இழை கொடி மடவியர் இரங்குதல் திரள் முத்து
இருந்த சூல் வலம்புரியினை சூழ்ந்த சங்கு இனங்கள்
இரைந்து இரங்குவ போன்றன எங்கணும் நிறைந்தே

மேல்
$1.5.46

#211
சலித்து விம்மிய மயிலினை கண்டு மெய் தளர
வலித்ததோ பகை விதி-கொலோ மக பெறும் பலனோ
பலித்தது ஏது என அறிகிலோம் என பதைபதைத்தே
ஒலித்து அய்யோ என இரங்கினர் ஊரினில் உளரே

மேல்
$1.5.47

#212
உடுத்த பூழியில் புதை மணி என உடல் ஒடுங்கி
வடித்த கண்ணின் நீர் ஒழுகிட இருந்த பொன் மயிலை
அடுத்து வந்து இருந்து அன்புடன் அப்துல் முத்தலிபு
தொடுத்த துன்பங்கள் ஆற்றி நல் வழி பல சொன்னார்

மேல்
$1.5.48

#213
இனத்துளார் சொலும் நல் வழிக்கு உருகி நெஞ்சு இடைந்து
நினைத்த பற்பல துன்பமும் அகற்றி நீள் நிலத்தில்
அனைத்தையும் விதித்தவன் செயலினையும் முற்று அறிந்து
மனத்தினில் தெளிவாகினர் குல கொடி மயிலே

மேல்
$1.5.49

#214
தவிசு இருந்து நல் நெறி முறை நடத்து தாவூது
நபியும் திங்கள் ஓர் ஏழினில் கனவினில் நவின்றார்
அவியும் கால மன்றாட்டத்துக்கு உரியவரானோர்
புவியினில் பெயர் முகம்மது என்றிடும் என போந்தே

மேல்
$1.5.50

#215
நலம் கொள் திங்கள் ஓர் எட்டினில் சுலையுமான் நபி வந்து
இலங்கு பூண் அணி மயில் அனீர் நின் வயிற்று இருந்தோர்
பெலன் கெழும் அதுனான் கிளை பேரொளி நபியாய்
துலங்க வந்தவர் பெயர் முகம்மது என சொன்னார்

மேல்
$1.5.51

#216
மாதம் ஒன்பதில் ஆமினா கனவினில் மதித்தே
வேத நான்மறை நேர் வழிக்கு உரியவர் விளங்க
கோதையே பெறின் முகம்மது என பெயர் கூறு என்று
ஆதி நாயகன் வரிசை ஈசா நபி அறைந்தார்

மேல்
$1.5.52

#217
ஈது அலால் இமையவர் தினம் இடைவிடுத்திலராய்
போது சேர் குழல் ஆமினா கனவினில் போந்தே
ஆதி தூதுவர் முகம்மது பெயர் என அதிக
நீதியான மாராயமே பெற நிகழ்த்தினரால்

மேல்
$1.5.53

#218
என்றும் வானவர் இசைத்திடும் கனவு எலாம் எடுத்தும்
வென்றி நல் நபிமார் சொலும் கனவு எலாம் விரித்து
மன்றல் அம் குழல் ஆமினா படிப்படி வகையா
நன்றி தேர்ந்த சொல் தாயர்க்கு தினம்-தொறும் நவின்றார்

மேல்
$1.5.54

#219
பெற்ற தாயரும் கனவினின் பெற்றியை பிரித்தே
உற்ற பேரொடு மனத்தொடும் தெளிந்து அறிந்து ஓர்ந்து
சொற்ற தன் மகள் குறிப்பு எலாம் காண்குற துணிந்து
குற்றம் இன்றி அ முகம்மதே பெயர் என குறித்தாள்

மேல்
$1.5.55

#220
செறிந்த வார் குழல் ஆமினா உரைத்த செய்தியை கேட்டு
அறிந்து தாய் அதற்கு எதிர்மொழி கொடுத்தலும் ஆராய்ந்து
உறைந்த வல் இருள் சீத்து எறி மதி என ஓங்கி
நிறைந்த பேரொளி முக மலர்தர சபா நிகழ்த்தும்

மேல்
$1.5.56

#221
திரிந்த பால் என செறுத்து பண் ஏழையும் சினந்து
விரிந்த தெண் திரை கடலிடை அமுது என விளங்கி
சொரிந்த தேன் மொழி ஆமினா வயிற்றினில் சூலாய்
இருந்த நாள் எலாம் கனவு அலால் ஒழிந்த நாள் இலையே

மேல்
$1.5.57

#222
உள்ளகம் குளிர்ந்து அரு மறை மூன்றையும் உணர்ந்தோர்
வள்ளல் ஆகிய அப்துல்லா வயிற்றினில் வடிவாய்
பிள்ளை ஒன்று தோன்றிடும் முகம்மது எனும் பெயரின்
எள்ளல் இன்றி அ உண்மை நல் நபி என இசைத்தார்

மேல்
$1.5.58

#223
சொரியும் பூம் துகள் துடவை சூழ் சாமினில் தோன்றல்
அரிவை தன்னகத்து அறிவினும் தேர்ந்து உணர்ந்து அறிந்து
தெரிய கூறிய பெரியவர் சொல்லினும் தெளிந்து
வரிசை நேரு மக்காவினில் விரைவினில் வந்தாள்

மேல்
$1.5.59

#224
வந்து நல் வழிக்கு உரியவர் இருக்கும் மக்காவில்
சந்தன புயன் அப்துல்லா-தனை மணம் புரிய
சிந்தை நேர்ந்தனள் அ உரை கேட்டு உளம் திடுக்கிட்டு
இந்த ஊருளர் மிகுதி பேர் மணத்தினுக்கு இசைந்தார்

மேல்
$1.5.60

#225
எனக்கு உனக்கு என மடந்தையர் மணத்தினுக்கு இகல
தனக்கு நேர் இலான் எழுதியபடி தனி முடிந்து
வன கரும் குழல் ஆலாமினா எனும் மட மானை
சினக்கும் வேல் கரத்து அப்துல்லா மணத்தொடும் சேர்ந்தார்

மேல்
$1.5.61

#226
அந்தவாறு அறிந்து அரிவையர் இ நகர் அனைத்தும்
இந்து வாள் நுதல் ஆமினா மனை வெறுத்து இருந்தார்
கந்த மென் குழல் கருப்புமும் முதிர்ந்தன காலம்
வெந்து வானவர் பிறர் இலை என்-கொலோ விளைவே

மேல்
$1.5.62

#227
மண் அருந்திலள் புளிப்பையும் விரும்பிலள் வயின் நோய்
உள் நிரந்தில மெய் பல வருந்தில உதர-
கண் இருந்த பூப்பு ஒன்றுமே கண்டில கனி மென்
பண் இருந்த வாய் வெளுத்தில பலன் பெறும்படியே

மேல்
$1.5.63

#228
சிறுத்த மெல் இடை பருத்து இருந்தில திரு உதரம்
பொறுத்து வீங்கில உந்தி மேல் புடைத்தில பொருப்பும்
கறுத்து இருந்தில பசு_நரம்பு எழுந்தில கவின்கள்
வெறுத்து இருந்தில கருப்பம் என்று அழகுறும் விதமே

மேல்
$1.5.64

#229
என்றும் பற்பல மொழிந்து சபா சலித்து இருப்ப
மன்றல் அம் குழல் ஆமினா கருப்பமும் வலியும்
இன்று தோன்றுவது என எடுத்து இயம்பினர் இலங்கும்
வென்றி வேல் விழி மடந்தையர்க்கு இவை சொலி விடுத்தார்

மேல்
$1.5.65

#230
உரைத்த வாசகம் கேட்டலும் அ நகர் உறைவோர்
இரைத்து அடங்கலும் ஒருமொழிபட எடுத்து இசையா
வரை தனி கொடி ஆமினா மனையினின் மறந்தும்
கரைத்தலாயினும் வருவது இல் என கழறினரே

மேல்
$1.5.66

#231
உற்ற வாய்மையை கேட்டலும் ஆமினா உலைந்து
குற்றம் ஏது நம்மிடத்து என மனத்தினில் குறித்து
பெற்ற சூல்வலி அடிக்கடி பெரிது என பதறி
வெற்றி வாள் கரத்து அப்துல் முத்தலிபுக்கு ஆள் விடுத்தார்

மேல்
$1.5.67

#232
சருவு வேல் விழி மடந்தையர் விடுத்தவர் சாற்ற
குரிசில் கேட்டு அவரவர்க்கு எல்லாம் வகைவகை கூறி
வருக என்றலும் கொடி இடை பிடி நடை மடவார்
ஒருவரும் அவண் புகுவது இல் என மறுத்துரைத்தார்

மேல்
$1.5.68

#233
மஞ்சு வாழ் குழல் ஆமினா உரைத்தது மறுத்தார்
இன் சொல் கூறி நாம் அழைக்கவும் மனம் இரங்கிலர் என்று
அஞ்சி உள்ளகம் புழுங்கி நின்று அப்துல் முத்தலிபு
தஞ்சம் ஈது என கஃபத்துல்லா-தனை சார்ந்தார்

மேல்
$1.5.69

#234
வடிவு இருந்து ஒளிர் கஃபத்துல்லா-தனை வலமாய்
கடிதில் துன்புற வரும் கரு மாரியின் களையால்
கொடி_இடை பரதாபமும் வருத்தமும் கூறி
நெடிது உயிர்த்து அயர்ந்து இரந்துகொண்டிருக்கும் அ நேரம்

மேல்
$1.5.70

#235
அரிய மெய்ப்பொருளாய் அளவிடற்கு அரியோன் அருளினன் அமரர்கள் சுவர்க்க
தெரிவையர் பறவை குலங்கள் மற்று எவையும் செழும் பொழில் செகதலத்து இறங்கி
வரி ஞிமிறு உதறி கரும் குழல் முடித்த மட கொடி ஆமினா மனையின்
நிரைநிரை செறிந்து அங்கு அவர் உரை மறாது நின்றிடும் பணிவிடைக்கு எனவே

மேல்
$1.5.71

#236
கருவினில் தோன்றாது ஒளிவினில் உருவாய் கண் இமைத்து உண்டு உறங்காத
பெரு வடிவு அழகாய் குழுவுடன் திரண்டு பெரியவன் உரை மறாது எழுந்து
விரி கதிர் ககனம் புடவிமட்டு ஒழுங்காய் விண்ணவர் எண்ணிறந்தனையோர்
அரு வரை அனையார் உருவமும் சிறிதாய் ஆமினா திரு மனை சூழ்ந்தார்

மேல்
$1.5.72

#237
தேன் பெருக்கு ஒழுகி வழிதரும் கனிகள் சிதறிடும் சோலை-வாய் தெளிந்த
வான் நதி மூழ்கி துகில் எடுத்து உடுத்து வளை பணி தொகை எலாம் அணிந்து
கான் மலர் முடித்து கடு வரி வடி வேல் கண்களில் அஞ்சனம் குலவ
சூல் முதிர் ஆமினா மனையிடத்தில் சூழ்ந்தனர் விண்ணவர் மகளிர்

மேல்
$1.5.73

#238
மறு அறுத்து இருந்த நிறைந்த பூரண மா மதி குலம் திரண்டு வந்ததுவோ
உறைதரும் அமுத திரளைகள் உருவாய் ஒழுங்குடன் எழுந்திடும் திரளோ
கறைபடா சுவன காட்சி வாழ்வு அனைத்தும் கலந்து உடன் இலங்கி வந்ததுவோ
குறைபடா சுவன தருவினில் உதித்த கொழும் கதிர் செழும் கனி குலமோ

மேல்
$1.5.74

#239
அணித்து உலை கனலில் உருக்கிடாது ஒளிரும் ஆயிரம்_கோடி மாற்று எனவும்
கணித்திடா பசும்பொன் எடுத்தெடுத்து அமைத்த கவின் குலம் கூண்டு எழும் கணமோ
மணி கதிர் இழைத்து திரட்டி வைத்து உருவ வடிவு அமைத்து எழுந்திடும் குழுவோ
துணித்து மின் குலங்கள் மறைபடாது எழுந்த தொகுதியோ என அறிகிலமால்

மேல்
$1.5.75

#240
இருட்டு அடைகிடக்கும் கரும் குழல் பின்னல் எழுபதினாயிரம் இலங்க
விரித்த பொன் இழை பூம் துகிலும் மேகலையும் விட்டு ஒளிர் வீசிட துலங்க
தரித்த முத்து ஆரம் உடு குலம் அனைத்தும் தான் குடியிருந்து என தயங்க
கரித்த கண் இமையா முலை குவடு அசையா கன்னியர் திரண்டு இருந்தனரால்

மேல்
$1.5.76

#241
பண் அமை தீம் சொல் அரம்பையர் மேனி பரிமளம் தெரு எலாம் கமழ
விண்ணகத்து இரவி கதிர் ஒளி மணிகள் விடு வெயில் விழுதுவிட்டு ஒழுக
தண் நகை தரள கதிர் இருள் துணிப்ப தரை எலாம் பொன்மை போர்த்து இருப்ப
மண்ணகத்து இருந்த ஆமினா மனையை வானவர் பதி எனலாமால்

மேல்
$1.5.77

#242
பறவைகள் அனைத்தும் ஏவலின்படியே படியினும் அந்தரம் அனைத்தும்
நிறைதர பெருக அதில் ஒரு வெண் புள் நித்தில கதிர்கள் கான்று ஒழுக
உறைதரும் ஆமினா திரு மனையின் உட்புகுந்து எதிர் வருவது கண்டு
அறைதர மனமும் பயந்திட ஒதுங்கி அஞ்சி நின்று அதிசயித்தனரே

மேல்
$1.5.78

#243
வருந்தி நொந்து இருந்த ஆமினா திரு முன் வந்து நின்று அழகு உறும் வெண் புள்
இருந்த வெண் சிறையை விரித்து ஒளி சிறந்தே இலங்கிட வீசிய காற்றால்
பொருந்திய சரீர வேர்வையும் தீர்ந்து புளகு எழ சிலிர்த்தன ரோமம்
திருந்து_இழை மனத்துள் பயங்கரம் அகன்று தேகமும் குளிர்ந்தன அன்றே

மேல்
$1.5.79

#244
அண்டரில் ஒருவர் மரகத கிண்ணத்து அமுதினை ஏந்தி வந்து அடுத்து
கொண்டவர் கொடுப்ப கூறுலீன் வாங்கி கொடி இடை மட_மயிற்கு ஈய
முண்டக கரத்தால் தாங்கியே பருக முதிர் பரதாபமும் நீங்கி
கண்டு எனும் மொழியார் கருப்ப நோய் அகன்று கலக்கமும் தெளிந்தனர் அன்றே

மேல்
$1.5.80

#245
பொன் ஒளிர் கவினும் உற குழைத்து எழுது பூம் துகில் வெள் நிறம் கவின
மின் ஒளி கரப்ப கதிர் விடும் கலையை விரைந்து ஒரு தட்டினில் ஏந்தி
பன்னிய அமரர் தொகையினில் ஒருவர் பரிவுடன் கொணர்ந்ததை வாங்கி
அன்னமோ மயிலோ எனும் ஒரு மட மான் ஆமினா திரு கையில் ஈய்ந்தார்

மேல்
$1.5.81

#246
செவ்வி வீற்றிருந்து முக மதி இலங்கும் திருந்து இழை ஆசியா-தமையும்
மவ்வல் அம் குழலார் மறியம் என்று உரைக்கும் மயிலையும் அரம்பையர்-தமையும்
கவ்வை அம் கடல் சூழ் புடவியில் சிறந்த காட்சி சேர் மக்க மா நகரின்
நவ்வி வேல் விழியார் ஆமினா இருக்கும் நறை மனை புக இறை உரைத்தான்

மேல்
$1.5.82

#247
இறையவன் உரைப்ப சுவன மா மடவார் எங்கணும் பரந்து எழும் ஒழுங்கு
மறியமும் அழகு பழுத்து ஒளி ததும்பும் மான் அனார் ஆசியா-தாமும்
நிறை மதி இரண்டு வானகத்து இழிந்து நிலத்திடை உடுவொடும் திரண்டே
அறை கழல் சிலம்ப வருவ போல் வந்து அங்கு ஆமினா திரு மனை புகுந்தார்

மேல்
$1.5.83

#248
படித்தலம் புகலும் ஆமினா வலது பாரிசத்து ஆசியா-தாமும்
வடித்த தெள் அமிர்தம் எனும் மொழி குதலை மறியமும் இடது பாரிசத்தில்
அடுத்த அ பொழுதில் அரம்பையர் சிலர் வந்து அணி முழந்தாள் துடை கணைக்கால்
பிடித்து அடி வருடி நின்றனர் மனையும் பேரொளி பிறங்கின அன்றே

மேல்
$1.5.84

#249
மடந்தையும் மகப்பேறு அடுத்திடும் சமயம் வானவர் குழுவினை நீந்தி
கடந்து வந்து ஒருவர் நின்றனர் அவர் செம் கரத்தினில் கிண்ணம் ஒன்று ஏந்தி
இடங்கொளாது உறைந்த கூறுலீன்களில் ஓர் ஏந்து_இழை கடிதினில் வாங்கி
அடர்ந்து இல்லம் புகுந்து கொடுப்பதை பருகி ஆமினா மகிழ்ந்தனர் அகமே

மேல்
$1.5.85

#250
பானகம் பருக ஒளிவும் வந்து இறங்கி பகலவன் கதிர் என பரப்ப
வானவர் மகளிர் மருத்துவம் புகுத மறியமும் ஆசியா-தாமும்
தேன் அவிழ் பதும செழும் கரம் கொடுத்து சேர்ந்து அணைந்து அருகு உற சிறந்த
கான் அமர் குழலாய் அஞ்சல் என்று உரைப்ப கனிந்து இளகின கருப்பமுமே

மேல்
$1.5.86

#251
கோது அற பழுத்து மதுரமே கனிந்த கொவ்வை வாய் அரம்பையர் வாழ்த்தி
தீது அற நெருங்கி ஏவல்செய்து இருப்ப செழும் கமலாசனத்து இருந்த
மாதருக்கு அரசி ஆமினா உதர மனையிடத்து இருந்து மா நிலத்தில்
ஆதரம் பெருக நல் வழி பொருளாய் அகுமது தோன்றினர் அன்றே

மேல்
$1.5.87

#252
கிடந்து ஒளி பரப்பி வாசம் கொப்பளித்து கிளர் கிபுலாவை முன் நோக்கி
இடம் கொள் அந்தர நேர் சிரசினை உயர்த்தி எழில்பெற சுசூது செய்து இணை தாள்
திடன்பெற மடித்து குறி இட கையால் சேர்த்து ஒளிர் வல கை கால் மேல் வைத்து
உடன் அணி கலிமா_விரலினை உயர்த்தி உதித்தனர் முகம்மது நபியே

மேல்
$1.5.88

#253
சிரசினில் நெய் தோய்த்து இரு விழி கருமை சிறந்திட கொப்புளும் கொயலாய்
மருவு சுன்னத்தும் செய்யலாய் துடக்கின் வரும் குறி ஒன்றும் இல்லாதாய்
பரவு கஸ்தூரி மனை எலாம் நிறைந்த பரிமளம் கமகமகமென
பெருகிய ஒளிவு வானமட்டு உலவ பிறந்தனர் முகம்மது நபியே

மேல்
$1.5.89

#254
செம்மை அம் கோட்டு கட கரி கலகம் தீர்ந்த பின் ஐம்பதாம் நாளில்
அம் மதி மாச தொகையினில் றபீயுல் அவ்வலில் பனிரண்டாம் தேதி
எ மனைக்கும் பேறு என வரும் பொருளாய் இசைத்திடும் திங்கள் இராவின்
மும்மை என்று உரைக்கும் புவனமும் புரக்க முகம்மது நபி பிறந்தனரே

மேல்
$1.5.90

#255
பூதலத்து அரசு பதி என உதித்த புகழ்பெறு மக்க மா நகரில்
சீத ஒண் கதிர் சேர் கஃபத்துல்லாவின் திசையினில் வடகிழக்காக
ஏதம் ஒன்று அணுகா செமுறத்தி லுஸ்தா எனும் ஒரு தலத்தினின் நடுவே
மா தவர் அபித்தாலிபு திரு மனையின் முகம்மது நபி பிறந்தனரே

மேல்
$1.5.91

#256
நெறி நிலை திரியா மருள் மதம் மிகுந்து நெடு நிலம் எங்கணும் பரந்து
துறவறம் தவறி இல்லறம் மடிந்து சுடர் இலா மனை-அது போல
குறைபடும் காலம் இருள் எனும் குபிரின் குலம் அறுத்து அற நெறி விளக்க
மறு இலாது எழுந்த முழுமதி போல முகம்மது நபி பிறந்தனரே

மேல்
$1.5.92

#257
பானுவின் கதிரால் இடருறும் காலம் படர்தரு தரு நிழல் எனலாய்
ஈனமும் கொலையும் விளைத்திடும் பவ நோய் இடர் தவிர்த்திடும் அரு மருந்தாய்
தீன் எனும் பயிர்க்கு ஓர் செழு மழை எனலாய் குறைஷியின் திலதமே எனலாய்
மால் நிலம்-தனக்கு ஓர் மணி விளக்கு எனலாய் முகம்மது நபி பிறந்தனரே

மேல்
$1.5.93

#258
செம் கதிர் பரப்பி உலகு எலாம் விளக்கி திரி தினகரனும் வெண் அமுதம்
தங்கிய கிரண சசியும் அந்தரத்தில் தவழ்தரும் உடு குலம் அனைத்தும்
பொங்கு ஒளி எவையும் சுவன நாடு அனைத்தும் பூதலம் விசும்பும் மற்றனவும்
இங்கு எழில் முகம்மது ஒளிவினில் என்றால் இவர்க்கு எவை உவமை சொல்லுவதே

மேல்
$1.5.94

#259
மகிதலம் புகழ் ஈசா நபி பாரில் வந்த நாள் தொடுத்து இடைவிடாது
பகு மதம் இலை என்று ஆறுநூறு ஆண்டு பாரிசுக்காரர்கள் வணங்கும்
புகையுடன் கெழுமி பொறி பல தெரிப்ப புரிந்து எழும் அக்கினி கொழுந்து
திகை-தொறும் தெரிய எரிந்த செம் நெருப்பு தேய்ந்து நூந்து அழிந்தன அன்றே

மேல்
$1.5.95

#260
படியிடை புடைப்ப பெருக்கெடுத்து அதிர பாயலை சுருட்டிவிட்டு எறிய
விடு கடல் சாவா எனும் பதியிடத்தில் வெறுந்தரை ஆயின வறந்து
குடிலம்மட்டு ஓங்கி மஞ்சு அடைகிடக்கும் கொத்தளம் ஒரு பதினான்கும்
இடிபட வீழ்ந்து சேருவான் நகரம் எங்கணும் கலங்கியது அன்றே

மேல்
$1.5.96

#261
சிலை எடுத்து உருவாய் வைத்த புத்து அனைத்தும் சிரசு கீள்பட முகம் கவிழ்த்த
சலமதில் இபுலீசு இயற்றிய சிங்காசனமும் அன்று இடிந்தன சயித்தான்
குலமும் அன்று ஒதுங்கி வானகம் புகாமல் கூண்டு நக்கேத்திரம் எரிந்து
நிலம் மிசை வீழ்ந்த இனும் சில புதுமை நிகழ்த்துதற்கு அரியது அன்று இரவே

மேல்
$1.5.97

#262
சிறந்த நல் மதலை-தனை விரைந்து எடுப்ப தெரிவையர் மனத்தினின் நினைப்ப
மறம் திகழ் விழியார் தொட தகாது என்றன் முகம்மதை விரைவினில் ஏந்தி
நிறம் திகழ் சுவன பதியினில் கொடுவம் என்றனன் நெடியவன் அதனால்
அறம் திகழ் ஆமினா திரு மனை புக்கு அடுத்தவர் பிள்ளையை எடுத்தார்

மேல்
$1.5.98

#263
அமரருக்கு இறைவன் ஜபுறயீல் வரிசை அகுமதை எடுத்து இனிது ஏந்தி
தமருடன் சுவன பதியினில் கொடுபோய் சல நதி-தொறும் முழுகாட்டி
இமை திறந்து இரு கண் மையினை எழுதி எண்ணெயிட்டு அமிர்தமும் ஊட்டி
சுமைதர வாசம் திகழ்த்தி எண் திசையும் சுற்றியே சில மொழி பகர்வார்

மேல்
$1.5.99

#264
ஆதி_நாயகன்-தன் திரு நபி இறசூலாம் இவர் தம் கலிமாவை
பூதலத்து உறைந்த படைப்பு எவையவையும் போற்றுதல் செய்யவும் வேண்டும்
ஈது அலால் அமரர் இவர் கலிமாவுக்கு இசைந்தனர் என்பதும் இசைத்து
சூது அர மொழியார் ஆமினாவிடத்தில் தோன்றலை கொடுத்து அகன்றனரே

மேல்
$1.5.100

#265
அந்தரம் அவனி கடல் மலை எழு தீவகத்தினும் எண் திசை முழுதும்
சுந்தர வதன முகம்மதை கொடுபோய் சுற்றி எங்கணும் பெயர் விளக்கி
சந்த மென் முக தாமரை மலர் குளிர தடம் சிறை வானவர் திரண்டு
வந்ததும் ஆமினா திரு மனையில் வைத்ததும் ஒரு நொடி பொழுதே

மேல்
$1.5.101

#266
வள்ளல் என்று உதவி பெயர் நிலைநிறுத்தி வளம் தரு புகழ் அபுல் காசீம்
உள்ளகம் நிறைந்த செம் மலர் பதம் தொட்டு ஒளிர் பெறும் இணை விழிக்கு ஏற்றி
விள்ள அரும் பவளம் விரிந்தன கனி வாய் விளங்கிட வாழ்த்தெடுத்து உவந்து
தெள் அமுது அனைய முகம்மது நபியை சபா திரு மடி மிசை கொண்டார்

மேல்
$1.5.102

#267
மலர்தரு கரத்தால் ஏந்தியே மடியில் வைத்து இனிது இருக்கும் அ நேரம்
அலர்தரு பவள வாய் இதழ் திறந்தே அழுதனர் முகம்மது நபியும்
உலகமும் விசும்பும் நிறைதர பொருந்தும் உடையவன் சத்தம் உண்டானது
இலகிய கமல முக மலர் சபாவுக்கு இரகுமத்து உண்டாக என்று இசைந்தே

மேல்
$1.5.103

#268
சத்தம் உண்டாகி கேட்ட அப்பொழுதே சபா எனும் மட மயில்-தனக்கு
பத்திவிட்டு ஒளிரு றூமிராச்சியத்து பதியின் மாளிகை எலாம் தெரிந்து
மித்திரன் எழுந்த குண திசை தொடுத்து வீழ்தரு குட திசை தொடுத்து
சித்திரம் பெறவே இரு விழிக்கு எதிரே தெரிதர சிறந்தன அன்றே

மேல்
$1.5.104

#269
வரி அளி குடைந்து தண் நறா அருந்து மலர் புயன் அப்துல் முத்தலிபு
கருதிய வரம் கேட்டிருந்து நெஞ்சுருகும் காலையில் ககுபத்துல்லாவின்
நிரைநிரை செறிந்த புத்துகள் அனைத்தும் நெட்டுயிர்ப்பொடு கலைந்து அலைந்து
விரைவினில் ஓடி காவத வழிக்கு வேறுவேறாய் கிடந்ததுவே

மேல்
$1.5.105

#270
பானல் அம் கடந்து சேல் என பிறழ்ந்து பரந்து செ வரி கொடி ஓடி
மான் மருள் விழியார் ஆமினா இருந்த வள மனை திசையினை நோக்கி
நானிலம் புகலும் ககுபத்துல்லாவின் நாலு மூலையும் ஒரு நெறியாய்
தூ நறை கமழ ஒளி திகழ்தரவே சுசூது செய்து எழுந்தன அன்றே

மேல்
$1.5.106

#271
இறையவன் ஏவ விண்ணவர் கரத்தால் இயற்றிய மணி மதில் ககுபா
மறைபடாது எவர்க்கும் கேட்பனவாக வாய் திறந்து ஓதுவ போன்று
குறைபடா வடிவும் பெருமையும் பெற்ற கொற்றவன் என்றனை இன்றே
நிறைதர புனித மாக்கினான் என்ன நிகழ்த்தியது ஒரு மொழி அன்றே

மேல்
$1.5.107

#272
இரவினில் தனித்து அங்கு இருந்த காலையினில் இயற்றிய புத்துகள் அனைத்தும்
பரவியே சிதற கண்டதும் ககுபா பண்புற சுசூது செய்து இயல்பா
விரைவினின் மொழிந்த வார்த்தையும் கேட்டு வெருவியே அப்துல் முதலிபு
முருகு கொப்பிளிக்கும் ஆமினா மனையின் முழு மணி வாயில் வந்து அடுத்தார்

மேல்
$1.5.108

#273
தரையினில் பரந்த குபிர் இருள் குலமும் சாற்றிய கலி இருள் குலமும்
வரைவிலாது ஒடுங்க முகம்மது நபி இ மால் நிலத்து உதித்தனர் என்றே
கரையிலா உவகை ஆநந்த வெள்ள கடலிடை குளித்துற களித்து
விரைவினில் திமிர கடல் பகை துறந்து வெய்யவன் கதிர்கள் விட்டு எழுந்தான்

மேல்
$1.5.109

#274
விடிந்த அ பொழுதில் அப்துல் முத்தலிபு விரைவினில் ஆமினா என்னும்
மடந்தையை கூவி வருக என்று உரைப்ப மட மயில் பெடை என எழுந்து
நடந்து எதிர் வர கண்டு அம்ம நின் நுதலின் நலம் கிளர் பேரொளி ஒன்று உண்டு
இடம் திகழ்ந்து இலங்க காண்கிலேன் என்ன ஈன்றனன் மகவு என இசைத்தார்

மேல்
$1.5.110

#275
வஞ்சி மென்_கொடியின் முக மலர் கவினும் மருங்கினில் விசித்த பட்டு உடையும்
கஞ்ச மென் மலர் தாள் நிலம் புடைபெயர்வும் கமழ்தரு மெய்யினில் குறியும்
பிஞ்சு நல் நுதலும் கண்டு உளத்து அடக்கி பெற்றவாறு என்-கொல் என்று எண்ணி
கொஞ்சும் மென் மொழியீர் மதலையை கொணர்க என்று உரைத்தனர் குளிர் மழை கொடையார்

மேல்
$1.5.111

#276
கூறிய மொழி கேட்டு ஆமினா எனது குமரனை மூன்று நாள் வரைக்கும்
வேறு ஒருவருக்கும் காணொணாது எனவே விண்ணவர் உரைத்தனர் என்றே
ஊறிய மதுர வாய் இதழ் திறந்தே ஓதினர் அப்துல் முத்தலிபு
சீறினர் புருவம் முரிதர இரு கண் தீப்பொறி தெறித்திட சிவந்தே

மேல்
$1.5.112

#277
சினந்த மாதுலனை கண்டு உளம் பதறி சே இழை ஆமினா திகைத்து
கனம் தரு கொடையாய் அரசர் நாயகமே கருதலர் கசனியே நும்-தம்
மனம்-தனில் சினம் என் மனையும் நும் மனையே மகவும் நும் மகவினின் மகவே
இனம் தரும் பலன் போல் எழுந்த சந்ததியே எடும் இலம் புகும் என இசைத்தார்

மேல்
$1.5.113

#278
மரு மலர் செறிந்து வண்டு கண்படுக்கும் மஞ்சு எனும் கரும் குழல் மடந்தை
தரும் உரை கேட்டு வெகுளியை போக்கி சசி முக மலர்ந்து அகம் குளிர்ந்து
பருதி ஒத்து இலங்கு மாளிகை புக போய் பார்த்தனர் வாயிலுள் ஒருவர்
உருவின கருவி கரத்தினில் ஏந்தி உறுக்கிட வெருக்கொடு மீண்டார்

மேல்
$1.5.114

#279
மீண்டனர் பதறி கால் தடுமாறி விளைந்திடும் பயனை ஓராமல்
ஆண்டகை இவன் ஆர் நம் மனை-தனை வந்து அடுப்பனோ தகாது என எண்ணி
பூண்ட நம் இனத்தார் அனைவர்க்கும் உரைத்து போக்குவம் இவனை யாம் என்ன
தூண்டியே நடந்து வாயிலை கடந்தார் துன்பமுற்று அப்துல் முத்தலிபு

மேல்
$1.5.115

#280
காரணம் அனைத்தும் வெளிப்படாது அமைக்கும் காலம் என்று அறிந்து உணராமல்
ஊரவர் எவர்க்கும் உரைத்து இவண் புக என்று உளத்தினில் எண்ணிய காலை
பாரிடத்து எறும்பு ஈறாய் இபம் முதலா பகுத்து அமைத்தவன் விதிப்படியால்
ஈரமுற்று உணங்கி நா வழங்காமல் எழு தினம் இல்லம் புக்கிருந்தார்

மேல்
$1.5.116

#281
சிலை நுதல் கயல் கண் ஆமினா என்னும் செவ்வி பூத்திருந்த பொன் மடந்தை
மலர் தலை உலகில் சுருதியை விளக்கும் முகம்மது நபி நயினாரை
இலகிய கமல கரத்தினில் ஏந்தி இரு விழி குளிர்தர நோக்கி
பல கலை அறிவும் கொடுப்ப போல் எழு நாள் பால் முலை கொடுத்தனர் அன்றே

மேல்
$1.5.117

#282
மின் அவிர் சுவன வானவர் கூண்டு விளங்கு ஒளி இன மணி தசும்பில்
நல் நிலை சலிலம் கொணர்ந்து கோது அறவே நறை கமழ் முகம்மது நபியை
இ நிலம் விளங்க விளக்குவது எனவே எழில் கரத்து ஏந்தி நீராட்டி
பன்னிய சலவாத்து ஓதியே வாழ்த்தி பரிவுடன் புகழ்ந்து போந்திடுவார்

மேல்
$1.5.118

#283
இலங்கு இலை வேல் கை அப்துல் முத்தலிபும் எழு தினம் மனையகத்து இருந்து
நலம் கிளர் நாவும் வழங்கிட மனத்தினால் வகை பயனையும் உணர்ந்து
கலங்கியே தெளிந்து மதலை மேல் விருப்பாய் கடு விழி கனி மொழி துவர் வாய்
பொலன் கொடி ஆமினா மணி மனையில் புக்கினர் புயங்கள் விம்முறவே

மேல்
$1.5.119

#284
திண் திறல் பொருப்பும் பொருவு அராது எழுந்து செம்மை வீற்றிருந்த பொன் புயத்தார்
வண்டு அணி குழலார் ஆமினா எனும் பேர் மடந்தை-தன் திரு முகம் நோக்கி
கண்டு எனும் மொழியாய் இவ்வயின் நிகழ்ந்த காரண காட்சிகள் எல்லாம்
விண்டு எமக்கு உரையும் என்றனர் முறுவல் விளங்கிய குமுத வாய் திறந்தே

மேல்
$1.5.120

#285
பறவைகள் அனைத்தும் வந்ததும் சுவன பதியை விட்டு அமரர் வந்ததுவும்
மறியமும் ஆசியாவும் வந்ததுவும் வானவர் மகளிர் வந்ததுவும்
வெறி கமழ் பறவை வீசி நின்றதுவும் விண்ணகத்து அமுதம் தந்ததுவும்
குறைவிலா புதுமை பலவும் கண்டதுவும் குறிப்புடன் படிப்படி உரைத்தார்

மேல்
$1.5.121

#286
புகன்ற நல் மொழி கேட்டு அற பெரும் புதுமை புதுமை ஈது என சிரம் அசைத்து உன்
மகன்-தனை தருக என்றலும் மட_மான் மகிழ்வொடும் திரு மனை புகுந்து
மிகுந்த பேரொளிவு சொரிந்து கால் வீச விளங்கிய முகம்மதை எடுத்து
செகம் தனி புரக்கும் அப்துல் முத்தலிபு செழும் மணி தட கையில் ஈய்ந்தார்

மேல்
$1.5.122

#287
கறை நிணம் சுமந்த செம் கதிர் வடி வேல் கரதலன் அப்துல் முத்தலிபு
முறைமுறை மோந்து முத்தமிட்டு உவந்த முழு மலர் செழும் முகம் நோக்கி
நிறைமதி நிகரா முகம்மது நயினார் நிலவு கொப்பிளித்திட சிரிப்ப
குறைபடா உவகை பெருக்கெடுத்து எறிய குளித்து அகம் மிக மகிழ்ந்து எழுந்தார்

மேல்
$1.5.123

#288
கதம்ப மான்மதம் பேரொளிவுடன் திகழ்ந்த காளையை கரத்து எடுத்து அணைத்து
மதம் சொரிந்து அசைந்த களிறு என நடந்து வந்து கஃபாவினை வலஞ்செய்து
இதம்பெற போற்றி உள் உற புகுந்து அங்கு இருந்து இறை-தனை புகழ்ந்து ஏத்தி
விதம் பெற முகம்மது என பெயர் தரித்து வீறுடன் திரும்பினர் அன்றே

மேல்
$1.5.124

#289
தே மலர் பொழில் சூழ் சுவன நாட்டு அரசை திசை-தொறும் விளக்கு நாயகத்தை
மா மறை கொழுந்தை முகம்மது நபியை மறுப்படாது எழுந்த செம் மணியை
பூ மலர் குழலி ஆமினா என்னும் பூம் கொடி கரத்தினில் அருளி
நாம வை வேல் கை அப்துல் முத்தலிபு நடந்து தன் திரு மனை சார்ந்தார்

மேல்
$1.5.125

#290
அன்புடன் எழு நாள் அணி இழை சுமந்த ஆமினா முலையருந்திய பின்
இன்புற அபூலகபு திரு மனையின் இருந்தது ஓர் மட கொடி துவைபா
மன் பெரும் புகழார் முகம்மது நபிக்கு மன மகிழ்வொடு முலைகொடுத்து
தன் பெரும் புகழும் வரிசையும் பெருக தழைத்து இனிது இருக்கும் அ நாளில்

6. அலிமா முலையூட்டுப் படலம்

$1.6.1

#291
அறிவு அதபு அறம் முறை பயிற்றி அன்புடன்
நெறி வளர்தர வளர்த்திடுவம் நீ எமக்கு
உறுதியாய் முகம்மதை அருள் என்று உன்னியே
இறையுடன் மொழிந்தனர் அமரர் யாருமே

மேல்
$1.6.2

#292
நம் பெறும் பேறு என நபியை பொன்_உலகு
அம் பொன் நீர் ஆட்டி நல் அமுதம் ஊட்டியே
எம் பதிக்கு அரசு என இயற்றுவோம் என
உம்பர்-தம் மகளிர்கள் உவந்து கேட்டனர்

மேல்
$1.6.3

#293
நான்மறை நபியை எம்மிடத்தில் நல்கினால்
பால் முலை கொடுத்து யாம் பரிப்பம் தம் என
மான் மரை விலங்கினம் அனைத்தும் வாய் திறந்து
ஈனமில்லவன்-தனை இரந்து கேட்டவே

மேல்
$1.6.4

#294
இரைத்து எழும் புள் எலாம் ஏகன்-தன்னிடத்து
உரைத்திடும் எங்கள்-பால் உதவின் நல் நபி
வருத்தம் ஒன்று இன்மையா மதுர தேன் கனி
அருத்தி யாம் வளர்ப்பதற்கு ஐயம் இல்லையே

மேல்
$1.6.5

#295
என்று கூறிய பல மொழி கேட்ட பின் இறையோன்
மன்றல் அம் குழலாள் அலிமா எனும் மடந்தை
வென்றியா முலைகொடுப்பதும் வளர்ப்பதும் விருப்பம்
அன்றியே தகுமோ பிறர் தமக்கு என அறைந்தான்

மேல்
$1.6.6

#296
இறைவன் இ மொழி கூறலும் அமரர்கள் யாரும்
பிற மொழிந்திலர் மனத்திடை பயம் பெரிதானார்
சிறை விரித்திடும் பறவையும் விலங்கு இன திரளும்
மறுமொழிக்கு இடமில் என போற்றின மகிழ்ந்தே

மேல்
$1.6.7

#297
கனை கடல் திரை ஆடை சூழ் பாரினில் கவின் கொண்டு
அனைய நாட்டினில் அறபு எனும் வளமை நாடு அதனுள்
குனையின் என்று ஒரு பதி அலிமா குடியிருந்தார்
இனைய ஊரினில் நடந்தவாறு எடுத்து இசைத்திடுவாம்

மேல்
$1.6.8

#298
கரும் கடல் நீரை உண்டு எழுந்து கார் குலம்
பெரும் தரை எங்கணும் பெய்தல் இல்லையால்
இருந்த பைம் கூழ் எலாம் கருகி எங்கணும்
பரந்தது சிறு விலை பஞ்சம் ஆனதே

மேல்
$1.6.9

#299
மலி பசி யானையா வறுமை சேனையா
பல பரி பவங்களா பழி ரதங்களா
கலி அமைச்சா துறை கணக்கர் கோபமா
கொலை அரசன் கொடுங்கோல் நடாத்தினான்

மேல்
$1.6.10

#300
குல முறை மன்னர் போய் கொடிய பாதகர்
தலை நிலம் புரந்திடும் தகைமை போலவே
நலன் உறு கொடை எனும் நாம வேந்து கெட்டு
இலன் எனும் அரசு வீற்றிருந்த காலமே

மேல்
$1.6.11

#301
உரு திரண்டு எழுந்து பொய் உடம்பை மெய் என
திருத்து புண்ணியம் புகழ் தேடி நாள்-தொறும்
வருத்தம் இன்றி பொருள் வழங்கு மேலவர்
தரித்திரம் படைத்திடும் சாம காலமே

மேல்
$1.6.12

#302
நெடு நிலம் பார் அற தொட்டு நீர் இறைத்து
இடு பயிர் செய்து காத்திருந்து கள்வரால்
படு முறை பாடு எலாம் பட பலித்திடா
கொடுமையால் அகவிலை குறைந்த காலமே

மேல்
$1.6.13

#303
காய் இலை கிழங்கு எலாம் கருவறுத்து கான்
மேய் விலங்கு இனம் பல கொன்று மென்றுமே
தீய அ பசி பிணி தீண்டலால் சனம்
மாய்வுறு சடம் பல மலிந்த காலமே

மேல்
$1.6.14

#304
நலம் தரும் கற்பு எனும் நாமம் கெட்டு உடல்
உலர்ந்து அற பசியினால் ஒடுங்கி ஈனர்-தம்
இலம்-தொறும் புகுந்து இரந்து இடைந்து வாடி நல்
குலம் தலை மயக்கிடும் கொடிய காலமே

மேல்
$1.6.15

#305
மதலைகள் பிறர் மனை வாயில் தூங்கி நின்று
இதயம் நொந்து இரு கை ஏந்தி இரப்ப கண்டு தாய்
விதி-கொல் என்று ஏங்கிட வேறு வேறதாய்
பதி குலைத்து எறிந்திடும் பஞ்ச காலமே

மேல்
$1.6.16

#306
பஞ்சம் என்று ஒரு கொடும் பாவி தோன்றிட
துஞ்சினர் சிலர் தனி துறந்த பேர் சிலர்
தஞ்சம் அற்று அடிமையாய் சார்ந்த பேர் சிலர்
அஞ்சியே புறநகர் அடைந்த பேர் சிலர்

மேல்
$1.6.17

#307
கருப்பினில் சனம் எலாம் கலைந்து போதலால்
உரைப்ப அரும் குனைன் எனும் ஊருள்ளோர் எலாம்
நிரைப்பெற கூடியே நினைத்து உசாவி நின்று
ஒருப்பட உய்யுமாறு ஒத்து பேசினார்

மேல்
$1.6.18

#308
மகிதலத்து உயர் பதி மக்கம் என்னும் ஊர்
புகுதலே கருமம் நம் பூவைமார் அணி
நகில் அமுது ஊட்டிட மதலை நல்குவார்
இகல்புரி தரித்திரம் இலை என்று ஓதினார்

மேல்
$1.6.19

#309
மக்க மா நகர் எனும் வரிசை ஊர்-அதில்
புக்கியே பிழைப்பது பொருட்டு என்று எண்ணியே
மிக்க பேர் அனைவரும் விளம்பி காலமே
தக்க நல் பயணம் என்று எடுத்து சாற்றினார்

மேல்
$1.6.20

#310
ஆரிது மனை அலிமா கண் துஞ்சிட
வேரிய மடி மிசை விருக்கம் ஒன்று அதில்
தூர் இலை பணர் எலாம் கனிகள் தூங்கிட
சீர் பெறு நறை கனி அமுதம் சிந்தவே

மேல்
$1.6.21

#311
மரகத நிற மரம் மடியில் தோன்றியே
சொரி கதிர் கனி எலாம் துய்ப்ப செங்கயல்
வரி விழி மயில் அலிமா கனாவினை
தெரிதர கண்டு எழுந்து எவர்க்கும் செப்பினார்

மேல்
$1.6.22

#312
அறிவு உறு துவைபு எனும் தந்தையாகிய
மறையவன் கேட்டு தன் மகவை நோக்கி நல்
நெறி திகழ் மக்க மா நகரில் நீர் செலின்
பெறு பலன் உறுதி உண்டு என்ன பேசினான்

மேல்
$1.6.23

#313
அ மொழி கேட்டு அலிமாவும் ஆரிதும்
நம்மை ஆள்பவன் அருள் நமக்கு உண்டு என்னவே
தம் இனத்தாருடன் கூண்டு தாழ்வு இலா
செம்மை சேர் மக்க மா நகரில் செல்கின்றார்

மேல்
$1.6.24

#314
இடுக்கிய குழந்தையும் ஏந்து பிள்ளையும்
வடு பிளவு அனைய கண் மான் அனார்களும்
கடுப்பினில் கணவன்மாருடனும் கல் குவைத்து
இடர்ப்படு சிறு நெறி செல்கின்றார் அரோ

மேல்
$1.6.25

#315
வரும் பரி வாகனத்துடனும் தம் மனம்
விரும்பிய மக்க மா நகரை மேவியே
கரும்பு எனும் மொழி அனார் காளைமாருடன்
பெரும் தெரு இடம்-தொறும் பிரியத்து எய்தினார்

மேல்
$1.6.26

#316
பிறை நுதல் கரும் குழல் பெண்கள் யாவரும்
குறை அற மென் முலை கொடுத்து கூலிக்கா
மறு அற போற்றியே வளர்ப்பம் யாம் என
சிறுவர்கள் உள மனை அனைத்தும் தேடினார்

மேல்
$1.6.27

#317
கூலியின் முலை அமுது ஊட்டும் கோதையர்
நால் ஒரு பதின்மர் வந்தவரும் நன்கு உற
பாலகர் பெற்று உறு பலனும் பெற்றனர்
சால வெம் பசி பிணி தவிர்ந்திட்டார் அரோ

மேல்
$1.6.28

#318
ஆய்_இழை எனும் அலிமாவும் ஆரிதும்
தூய நல் தெரு எலாம் திரிந்து சோர்ந்து ஒரு
சேய் கிடைத்திலை என திகைத்து வாடியே
வாயுரை மறந்து அற மதி மயங்கினார்

மேல்
$1.6.29

#319
உடல் பருத்து இலது ஒரு முலையும் சூகை இ
மட_கொடிக்கு என மறுத்தார் என்று எண்ணியே
தட புயத்து அப்துல் முத்தலிபு-தம் மனை
இடத்தினில் வந்து நின்று இசைத்திட்டார்களே

மேல்
$1.6.30

#320
தரை பெரும் புகழ் எலாம் தரித்து மா மணி
நிரைத்து அணி குங்கும மாலை நீங்கிலா
வரை புய அப்துல் முத்தலிபு வந்து நின்று
உரைத்தவர் இருவரை உற்றுநோக்கினார்

மேல்
$1.6.31

#321
உடல் உலர்ந்து ஒடுங்கி ஓர் முலையும் சூகைகொள்
மட_மயில் கூலி பால் வழங்குவோம் என
திடமுற இசைத்தனள் தெரியும் காரணம்
கடவுளின் பயன் என கருத்தில் எண்ணினார்

மேல்
$1.6.32

#322
கோதை நின் குலம் பெயர் ஏது கூறு என
மா தவர் உரைத்தலும் மடந்தை அன்புற
சாது எனும் குலத்தினென் தாயும் தந்தையும்
ஓதும் என் பெயர் அலிமா என்று ஓதினார்

மேல்
$1.6.33

#323
குலத்துடன் பெயரையும் கூற கொற்றவர்
நலத்துடன் செல்வமும் பொறையும் நன்கு என
பெலத்தது பொருள் என எண்ணி பேதியா
சிலை தடம் புயர் பல தெரிந்து கூறுவார்

மேல்
$1.6.34

#324
பெறும் ஒரு தந்தையும் இல்லை பின்னிய
வறுமை எத்தீம் தரு மதலை உண்டு-கொல்
அறிவுற முலைகொடுத்து ஆக்கம் செய்வதற்கு
உறுவதோ நும் மனம் என்ன ஓதினார்

மேல்
$1.6.35

#325
மன்றல் அம் குழலியும் மன்னர் ஆரிதும்
ஒன்றிய மனத்தொடும் உசாவி செல்குவம்
நன்று பார்த்து அறிகுவம் நாம் என்று உன்னியே
வென்றி வேல் செழும் கர வேந்துக்கு ஓதினார்

மேல்
$1.6.36

#326
அவ்வயின் அப்துல் முத்தலிபும் ஆங்கு ஒரு
செவ்விய அறிவனை கூட்டி செல்க என
நவ்வி நோக்கு உறும்விழி ஆமினா எனும்
மவ்வல் அம் குழல் அலிமா மனைக்கு அனுப்பினார்

மேல்
$1.6.37

#327
அரிவை ஆமினா அகத்தினில் அடைந்து அலிமா உன்
உரிய மைந்தனுக்கு என் முலை பால் அமுது ஊட்ட
தெரிய வந்தனன் அருளுக என்றலும் சிறந்த
மரு மலர்_குழல் இவர்க்கு எதிர்மொழி வழங்குவரால்

மேல்
$1.6.38

#328
உற்ற தந்தையும் இலை உறு பொருள் இலை எத்தீம்
பெற்ற பிள்ளை ஓர் உதவி செய்குவர் பிறர் இலை நீர்
பற்று நல் பொருள் குறித்து வந்தவர் பசியுடையீர்
இற்றைக்கு உண்பதற்கு இடம் இலை என்னிடத்து என்றார்

மேல்
$1.6.39

#329
அந்தவாறு அலிமா துணை ஆரிதை நோக்கி
இந்த நல் மனைக்கு உறு பொருள் ஏதும் ஒன்று இலையாம்
தந்தையும் இலையாம் வறுமை குடிதானாம்
எந்தவாறு யாம் உய்வது இ குழந்தையால் என்றார்

மேல்
$1.6.40

#330
பலன் படைப்பதும் வறுமையை படைப்பதும் பாரில்
நலம் படைப்பதும் உடையவன் விதிப்படி நடுக்குற்று
உலைந்து நின் மனம் உடைவது என் வெண் திரை உடுத்த
தலம் புரப்பது இன்னார் என சாற்றவும் அரிதே

மேல்
$1.6.41

#331
படியினில் பெறும் பலன் நமக்கு உள எனில் பாதி
கொடி_மருங்குல் இ குழந்தையால் ஆம் கொடியவரேல்
வடிவுறும் பொருள் அடுக்கினும் நம்-வயின் வாரா
கடிதினில் புகுந்து அறிவம் என்று ஆரிது கரைந்தார்

மேல்
$1.6.42

#332
இருவரும் எழுந்து ஆமினா மனையிடத்து எய்தி
தெரிவை நின் மக கொணர்க என கேட்டலும் சிறந்த
பரிமளம் திகழ் மதலையை கொணர்ந்தனர் பார்த்தார்
வரி பரந்த செ விழி திறந்தனர் முகம்மதுவே

மேல்
$1.6.43

#333
கண் திறந்த அ போதினில் கவின் ஒளி கதிர் விட்டு
எண் திசையினும் பரந்து இரு சுடரினும் இலங்க
பண்டு கண்டிலா புதுமை-கொல் என உளம் பயந்து
விண்டு உரைத்திடாது இருவரும் மயங்கி மெய்மறந்தார்

மேல்
$1.6.44

#334
பார்த்த கண் கதிர் பரத்தலின் பயந்தவர் தெளிந்து
கூர்த்த தம் மனத்து அதிசயித்து அகம் மகிழ்கொண்டு
கார் தடம் கடல் கீண்டு எழு முழுமதி கதிரை
சேர்த்த நேமி அம் புள் என உவகையில் திளைத்தார்

மேல்
$1.6.45

#335
வேந்தர் ஆரிது தம் மனையாள்-தமை விழித்து
காந்தள் மெல் இதழ் பசும் தொடி கரத்தினால் விரைவின்
ஏந்தும் என்றனர் இலங்கு இழை மட மயில் அலிமா
வாய்ந்த பேரொளி முகம்மதை இனிது எடுத்து அணைத்தார்

மேல்
$1.6.46

#336
மலிந்த பேரொளி முகம்மதை எடுத்தலும் வருந்தி
மெலிந்த மெல்_இழை சடம் பருத்து ஓங்கின வீங்கி
கலந்த மான்மத வாசமும் கமழ்ந்தன கருகி
உலந்த சூகை மென் முலை திரண்டு அழகு ஒழுகினவே

மேல்
$1.6.47

#337
வடம் தயங்கு பூண் செப்பு என பணைத்து இறுமாந்து
கடந்த மும்மத கரி இணை கோட்டினும் கதித்து
குடம் தயங்குற விம்மிதம்கொண்ட பொன் குவட்டை
அடர்ந்த மென் முலை கண் திறந்து ஒழுகின அமுதம்

மேல்
$1.6.48

#338
பாகு இருந்த மென் மொழி அலிமா வல பாக
சூகை மென் முலை திரண்டதும் பால் துளும்பியதும்
தேகம் எங்கணும் பருத்ததும் கண்டு எழில் சிறந்து
வாகுறும் வடிவாயினர் ஆரிது மகிழ்ந்தே

மேல்
$1.6.49

#339
புதிய நல் வடிவாகிய பூம் கொடி அலிமா
கதிர் விரித்திட மடி மிசை வைத்து கால் வருடி
குதி கொள் பால் முலை குடித்திட கொடுத்திட குறையா
மதுர வாய் திறந்து அமுதம் உண்டனர் முகம்மதுவே

மேல்
$1.6.50

#340
நறை கமழ்ந்து ஒளி ததும்பிய முகம்மது நபியும்
முறைமையாக உண்டனர் வல பாரிச முலை பால்
மறு இலாத தம் மதலையும் இடது-பால் மருங்கில்
குறைவு இலாது வந்து அடிக்கடி குடித்து கொப்பளிக்கும்

மேல்
$1.6.51

#341
வற்றி தூங்கிய லமுறத்து எனும் அந்த மதலை
நல் தவம்பெறு முகம்மது நபி பறக்கத்தால்
உற்ற பால் குடித்து உடல் தழைத்து உறுபிடியாகி
வெற்றி வெம் கய கன்று என கவின் விளங்கியதே

மேல்
$1.6.52

#342
மா தவம் பெறு முகம்மது நபிக்கும் தம் மகற்கும்
ஏதம் இன்றிய பால் கொடுத்து இருந்து சின்னாள் பின்
கோது இலா குனையினில் செல கருத்தினில் குறித்து
காதலித்து உரைத்தார் துணை தார் கணவருக்கே

மேல்
$1.6.53

#343
இருவரும் மன சம்மத களிப்புடன் ஏகி
அரசர் நாயகர் அப்துல் முத்தலிபை சென்று அடுத்து
வரிசை பெற்றனம் பொருள் பல பெற்றனம் மகிழ்ந்து எம்
புரிசை சூழ் பதி புகுவம் என்று உரைத்தனர் புகழ்ந்தே

மேல்
$1.6.54

#344
கேட்ட போதினில் அப்துல் முதலிபு எனும் கிழவோர்
வேட்டலாய் இருவருக்கும் நல் மொழி பல விளம்பி
கோட்டு மாம் குயில் ஆமினாக்கு இவை எலாம் கூறி
வாட்டம் இல்லது ஓர் நும் பதி செல்க என வகுத்தார்

மேல்
$1.6.55

#345
இந்தவாறு தேர்ந்து ஆரிதும் எழில் அலிமாவும்
கொந்து உலாம் குழல் ஆமினா மனையினை குறுகி
சுந்தரம் தவழ்ந்து இலங்கிய கொடியினை துதித்து
சிந்தையின் உறும் செய்திகள் அனைத்தும் செப்பினரே

மேல்
$1.6.56

#346
தம் பதி செல இருவரும் சாற்றிய மாற்றம்
செம்பொன் பூம் கொடி ஆமினா கேட்டு உளம் திடுக்கிட்டு
அம்பரத்து எழு முழுமதி நிகர் அகுமதுவை
கம்பு அணிந்த செம் கரத்து எடுத்து உவகையில் கலுழ்ந்தார்

மேல்
$1.6.57

#347
தேன் கிடந்த செம் கனி இதழ் பவள வாய் திறந்து
வான் கிடந்து ஒளிர் மதியினும் ஒளிர் முகம்மதுவை
கான் கிடந்த மெய்யுற முத்தமிட்டு உடல் களிப்ப
ஊன் கிடந்த வேல் விழி மலர் இணையில் ஒத்தினரே

மேல்
$1.6.58

#348
அமரர் நாயகமே புவி அரசருக்கரசே
தமரினுக்கு ஒரு திலதமே யார்க்கும் தாயகமே
நமது உயிர்க்குயிர் ஆகிய முகம்மது நபியே
கமை தரும் கடலே என போற்றினர் கனிந்தே

மேல்
$1.6.59

#349
போற்றி முத்தமிட்டு அணி அணிந்து அரும் துகில் புனைந்து
மாற்றலர்க்கு அரியே என முகம்மதை வாழ்த்தி
தேற்று மென் மொழி பல எடுத்து ஆமினா செப்பி
கூற்று அடர்ந்த வேல் விழி அலிமா கையில் கொடுத்தார்

மேல்
$1.6.60

#350
தன்னுடன் பிறந்தவள் என இரு கையால் தழுவி
என் மகன் அலன் நின் மகன் இவன் என இயம்பி
மின் நுணங்கு வேல் ஆரிதை வெற்றியால் வியத்தி
பொன் அனாருடன் ஊரினில் புகும் என புகன்றார்

மேல்
$1.6.61

#351
அரும் தவம்புரியும் பெரும் தலம் வணங்கி அடைகுவம் பதிக்கு என அலிமா
வருந்திடாது எழுந்து முகம்மதை கதிரின் மணி வளை கரத்தினில் ஏந்தி
திருந்திட நடப்ப ககுபத்துல்லாவில் சிறந்திடும் தென்கிழ மூலை
இருந்திடும் ஹஜறுல் அசுவது எனும் கல் எதிர்கொடு நடந்தது அன்றே

மேல்
$1.6.62

#352
நாரியும் கரும் கல் தொட்டு முத்தமிட்டு நடந்து கஃபா வலஞ்செய்து
சீரிதின் இயன்ற வாயிலின் எதிரே சென்று நின்று இறைஞ்சும் அ நேரம்
தார் அணி திகழ்ந்த குபல் எனும் புத்து தலை கவிழ்ந்தது அதன் அடுப்ப
நேர்பெற நிரையாய் இருந்த புத்து அனைத்தும் நிலம் மிசை சாய்ந்து உருண்டனவே

மேல்
$1.6.63

#353
புதுமைகள் அனைத்தும் கண்டு கண் குளிர்ந்து பொன்_கொடி ககுபத்துல்லா விட்டு
இதமுற நடந்து கணவரை குறுகி எடுத்து இவை அனைத்தையும் இயம்ப
மதியினில் தெளிவுற்று ஆரிதும் அலிமா மலர் முகம் நோக்கி இ மகவால்
கதி உறும் நமக்கு செல்வமும் பெருகும் கவலையும் தீர்ந்தனம் என்றார்

மேல்
$1.6.64

#354
நன்று என புகழ்ந்து மனம் களிகூர்ந்து நாரியும் ஆரிது-தாமும்
வென்றி கொண்டனம் என்று ஒட்டை மேல்கொண்டார் மேனியில் சொறியுடன் வரடும்
ஒன்றிய கிழடும் தூங்கிய குணமும் ஒழிந்தது திட பிடி ஆகி
குன்று என உயர்ந்து பருத்து உற கொழுத்து குதிப்பொடு நடந்தன அன்றே

மேல்
$1.6.65

#355
குனையின் விட்டு எழுந்த கொடி இடை மடவார் கூடினர் ஒருமுகமாக
அனைவரும் திரண்டு மக்க மா நகர் விட்டு அரு வரை சிறு நெறி அணுகி
தனையரும் புதிய தனையரும் உயிர் போல் தலைவரும் மடந்தையர்-தாமும்
கனை குரல் களிறும் பிடிகளும் கன்றும் கலந்து உடன் நடப்பது ஒத்தனரே

மேல்
$1.6.66

#356
மல் உயர் திணி தோள் ஆடவர் பலரும் வன முலை மட கொடி அவரும்
செல்லும் நல் நெறி-பால் வயின்வயின் செறிந்த செடிகளும் மரம் தலை எவையும்
கல்லும் கல் குவையும் யாவரும் கேட்ப கடிதினில் தெளிய வாய் விண்டு
செல் உயர் கவிகை முகம்மது நபிக்கு தெரிதர சலாம் உரைத்தனவே

மேல்
$1.6.67

#357
நடந்தவர் வெயிலால் உடல் தடுமாறி நலிதர தாகமும் பெரிதாய்
விடம் தயங்கிய கண் இணை மடவாரும் மெலிதர செல்லும் அ காலை
கிடந்தது ஓர் கானம் இலை இல ஆகி கிளைத்திடும் பணர் எலாம் கருகி
இடம்-தொறும் நிழல் அற்று இருந்த அவ்விடத்தில் இறங்கினர் அனைவரும் செறிந்தே

மேல்
$1.6.68

#358
மான்மதம் செறிந்து கமழ்தர அலிமா மடி மிசை முகம்மது விளங்க
கானகம் தழைத்து பணர்கள் விட்டு எழுந்து கதிரவன் கனல் கரம் மறைத்து
நீல் நிற பசந்த இலை மிக நெருங்கி நிரை மலர் சொரிதர காய்த்து
தேன் இருந்து ஒழுகும் கனி பல சிதறி திசை எலாம் நிறைந்தன அன்றே

மேல்
$1.6.69

#359
கண்டவர் மனமும் கண்களும் குளிர்ந்து கனி பல பறித்து எடுத்து அருந்தி
வண்டு அணி குழலார் வருத்தமும் தீர்ந்து வழியினில் பெரும் பலன் கிடைத்து
கொண்டதும் தாகம் தீர்ந்ததும் அலிமா குழந்தையால் ஆம் என சூழ்ந்து
முண்டக மலர் தாளினில் விழி சேர்த்தி முகம்மதை போற்றி வாழ்த்தினரே

மேல்
$1.6.70

#360
இலை பல தளிர்த்து குளிர் வன சோலை இருந்தவர் அனைவரும் எழுந்து
குலவு வாகனத்தில் கொண்டு குன்றுகளும் குழி தரும் கானியாறுகளும்
நிலைபெறும் சுரமும் கடந்து அவர் நடந்து நீள் வரை அனைய மா மதிள் சூழ்
பலபல மனையும் தெரிதர நோக்கி பதி எனும் குனையினை அடைந்தார்

மேல்
$1.6.71

#361
பதியினை அடுத்தார் அவர் மனை புகுந்தார் பாவையர் பலரும் வந்து அடைந்து
மதியினும் தெளிந்த வடிவெடுத்து அனைய முகம்மது அங்கு இருப்பதை கண்டார்
அதிசயம் இஃது என்று அணி மலர் தாளில் அயில் விழி வைத்து முத்தமிட்டு
நிதியமும் பேறும் படைத்தனர் அலிமா நிகர் இலை இவர்க்கு இனி என்பார்

மேல்
$1.6.72

#362
கூண்டு வந்து எடுப்பார் புகழ்ந்து போற்றிடுவார் கொழும் கனி முகம்மதை இவருக்கு
ஆண்டவன் கொடுத்தான் இந்த நல் பெரும் பேறு அணி_இழை படைத்தனள் என்பார்
தூண்டிடா விளக்கோ முழு மணி-தானோ சுவர்க்கத்திலிருந்து வந்ததுவோ
வேண்டிய பொருளும் உறும் ஒரு நாள் ஓர் வீட்டினில் புகில் என புகல்வார்

மேல்
$1.6.73

#363
வறுமையும் தீரும் நோயும் விட்டு அகலும் மனத்தினில் கவலையும் நீங்கும்
சிறுமையும் அகலும் புத்தியும் பெருகும் தீவினை வந்து அடராது
தெறு பகை சிதையும் செல்வமும் வளரும் தேகமும் சிறந்து பூரிக்கும்
உறு பவம் தொலையும் முகம்மதை எவர்க்கும் ஒரு பகல் காண்கில் என்று உரைப்பார்

மேல்
$1.6.74

#364
தன் கிளையவரை விளித்து அருகு இருத்தி சாற்றினர் செழும் புகழ் அலிமா
என் குல தவமோ யான் செய்த பலனோ இவர்-தமை கிடைக்கவும் பெற்றேன்
முன் பெரும் சூகை வடுவையும் தவிர்ந்தேன் முக மலர் தர வடிவு ஆனேன்
பின்புறு கலியும் காண்கிலேன் பலனும் பெற்றனன் என உரைத்தனரே

மேல்
$1.6.75

#365
பாரினில் சிறந்த மக்க மா நகர்க்கு பயணம் என்று இருக்கும் அன்று இரவில்
நேரும் என் மடியில் விருக்கம் ஒன்று எழுந்து நிலம் மிசை கனிகளை சிந்த
வாரியே அருந்தி வறுமையும் பசியும் மறந்து உடல் களிப்பொடு மகிழ
கூரும் ஓர் கனவு கண்டனன் எனவே கோதையர்க்கு எடுத்து உரைத்தனரே

மேல்
$1.6.76

#366
அரம் துடைத்து ஒளிரும் கதிர் இலை வேல் கண் ஆமினா திரு மகன் அலிமா
வரம் தரு குழந்தைக்கு ஒரு முலை பாலே வழங்கின படி அறிவதற்கே
சுரந்திடும் சூகை முலை அமுது அருந்தி துயில்தரும் காலையில் எடுத்தும்
கரந்து தம் இடது பால் முலை கொடுக்கில் கனி இதழ் வாய் திறந்து அருந்தார்

மேல்
$1.6.77

#367
ஆரிது மனையில் சில துரு சொம் உண்டு அற கிழடொடு சொறி மலடும்
சோரியில் வரடும் வங்குமாய் இருந்த துருவை-கண் முதுகினில் திறமாய்
வார் அணிந்து இலங்கு மணி முலை அலிமா முகம்மது திரு மலர் கரத்தால்
சீருற தடவ விக்கினம் சிதைந்து செவ்வி பெற்று இலங்கிய அன்றே

மேல்
$1.6.78

#368
வால் அசைத்திடாத கிழடு இள உருவாய் வரடு வங்கு அற மலடும் போய்
சாலவும் பருத்திட்டு உடல் திண்டு அழகாய் தளதளத்து அணி மயிர் ஒழுக்காய்
சூலுமாய் சிறிது பாலுமாய் முலைக்கண் சுரப்பெடுத்து அற சொரிந்திடலாய்
ஏல வார் குழலார் மனை இடங்கொள்ளாது இருந்தது பறழ்களும் நிறைந்தே

மேல்
$1.6.79

#369
ஓங்கிய குனையின் எனும் பதி-தன்னில் உறைபவர் எவர் மனைக்கேனும்
நீங்க அரும் பிணி வந்து அடுத்திடில் அவர்கள் நிறை தரும் முகம்மதை காண்கில்
தீங்கு அகன்றிடும் அ செய்தி கண்டு அறிந்து செறிதரு பிற நகர் உளரும்
பாங்கினில் புகுந்து முகம்மது மலர் தாள் பணிந்து மெய் மகிழ்ச்சி பெற்று இருப்பார்

மேல்
$1.6.80

#370
மறைதரா சோதி முகம்மது நயினார் வடிவுறு மெய்யினில் துகளும்
உறைதரா நீரில் கழுவிலாது இருந்தும் உலவுறு சிக்கும் ஒன்று அணுகா
குறைதரா வாசம் கமழ்வது மாறா குமிழின் நீர் சிறிதுமே அணுகா
கறைதரா வரி செம் கண் துயின்று எழினும் கலந்துறும் மாசும் ஒன்று அணுகா

மேல்
$1.6.81

#371
சலமலாதிகளில் நாற்றமும் தோற்றா தரை அருந்திடுவதே அல்லால்
நிலம் மிசை எவர்க்கும் கண்ணினில் தோன்றா நீடு உறு நீழலும் தோன்றா
உலவிய எறும்பும் ஒண் சிறை ஈயும் ஒருபொழுதாகிலும் தீண்டா
கலையினில் மயிலை படர்தரா பிள்ளைக்கனி எனும் முகம்மது நபிக்கே

மேல்
$1.6.82

#372
மா மயில் அலிமா கண் துயில் காலை முகம்மது துயிலிடம் நோக்கி
தாமதியாது சந்திரன் இறங்கி தன் உரு மாறி வேற்று உருவாய்
காமரு மலர் தாள் மெல்லென வருடி கதிர் மணி தொட்டிலை ஆட்டி
பூ மண மனைக்குள் இருந்து அடி பணிந்து போவது தினம்-தொறும் தொழிலே

மேல்
$1.6.83

#373
இந்து வந்து உறைந்து மலர் அடி வருடி இரவு எலாம் காத்து இனிது இருந்து
கொந்து அலர் குழலார் மனை எலாம் நிறைந்த கொழும் கதிர் பரப்பிட கூடி
வந்து வானவர்கள் இடம் அற நெருங்கி மனைப்புறம் காப்பு என இருப்ப
சுந்தர வதன முகம்மது நபியை துய்யவன் இனிதுற வளர்த்தான்

மேல்
$1.6.84

#374
வரை என திரண்ட புய நபி நயினார் முகம்மதை வளர்த்திடும் மனைக்குள்
கரையிலா செல்வம் தனித்தனி பெருகி காட்சிகள் பலவும் உண்டாகி
நிரைநிரை மாடு ஆடு ஒட்டகம் பலவும் நிறைந்து பால் தயிர் குறைவு இலதாய்
தரையினில் குடிக்குள் பெரும் குடியான தலைவர் ஆரீது என இருந்தார்

மேல்
$1.6.85

#375
குனையினில் அலிமா மக்களும் தாமும் குடிக்கு உயர் குடி என வாழும்
மனையினில் ஒரு நாள் தீபமிட்டதும் இல் முகம்மது பேரொளி அல்லால்
தனியவன் அருளால் துன்ப நோய் வறுமை தனை அடுத்தவர்க்கும் இல்லாமல்
சினவு வேல் கரத்தர் ஆரிது மகிழ்ந்து செல்வமும் செருக்கும் பெற்று இருந்தார்

மேல்
$1.6.86

#376
எ நிலம் அனைத்தும் தீன் நெறி நடப்ப இயல்பெறு மனு முறை நடப்ப
துன்னிய அறத்தின் துறை வழி நடப்ப துன்பம் மற்று இன்பமே நடப்ப
பன்ன அரும் செங்கோல் உலகு எலாம் நடப்ப பாரினில் குல முறை நடப்ப
மன்னியர் எவரும் சொற்படி நடப்ப முகம்மது நபி நடந்தனரே

மேல்
$1.6.87

#377
நிலம் மிசை ஹாஷீம் குலம் பெயர் விளங்க நிகர் இலா நேர் வழி விளங்க
குலவிய நிறையும் பொறுமையும் விளங்க கோது இலா பெரும் புகழ் விளங்க
உலகு உயர் புதுமை காரணம் விளங்க உயர் தரு வேதமும் விளங்க
மலர் திரு சோதி முக மதி விளங்க முகம்மது சொல் விளங்கினவே

மேல்
$1.6.88

#378
விண்ணகத்து அமரர் மனம் மகிழ் வளர வியன் உறும் வரிசைகள் வளர
கண்ணகத்து உறைந்து கருணையும் வளர கவின் நிறை பிறை என வளர
எண்ண அரும் புதுமை காரணம் வளர இறையவன் திரு அருள் வளர
மண்ணகத்து இருந்து கிளை எலாம் வளர முகம்மது நபி வளர்ந்தனரே

மேல்
$1.6.89

#379
பாரினில் பரந்த குபிர் குலம் அறுத்து படர்தரு தீன் பயிர் விளக்க
சீர் உறும் கனக மா மழை பொழிய திரண்டு எழும் செழும் முகில் குலம் போல்
பேர் தரும் குறைஷி குலத்தினில் உதித்து பிறங்கு ஒளி முகம்மது நபிக்கு
வார் பொரு முலையார் மனம் களித்து உவப்ப வருடமும் இரண்டு சென்றனவே

மேல்
$1.6.90

#380
கதிருடன் கதியும் ஒரு வடிவு எடுத்த காட்சி பெற்றிருந்து அணி சிறந்து
மதியினும் ஒளிரும் முகம்மது நபிக்கு வயது இரண்டு ஆனதன் பின்னர்
குதிகொளும் அமுதம் அடிக்கடி சுரந்து கொடுத்திடும் முலை மறப்பித்து
பதியினிலிருந்து பொன்_பதி புரக்கும் பலன் படைத்து உவந்தனள் அன்றே

மேல்
$1.6.91

#381
நெறித்து இருண்டு அடர்ந்த செழும் மழை கூந்தல் நேர் இழை வன முலை அலிமா
குறித்த செம்பவளம் விரிந்து என தேன் பாய் கொழு மடல் குமுத வாய் திறந்து
செறித்த திண் மாட மக்க மா நகரில் செல்குவம் தருணம் ஈது என்ன
பொறித்த பொன் குவட்டை பணைத்து எழும் புயத்து புரவலர் ஆரிதுக்கு உரைத்தாள்

மேல்
$1.6.92

#382
ஆரிதும் அதனை கேட்டு உற தெளிந்து அங்கு அழகுறும் கருமம் ஈது என்ன
சீர் பெறு மனையாள்-தம்மையும் பயந்த செல்வரில் ஒரு சிறுவனையும்
பாரினில் விளங்கு முகம்மது-தமையும் பண்புடன் வாகனத்து ஏற்றி
ஏர் பெறும் வரிசை மக்க மா நகருக்கு எழுந்தனர் செழும் புயம் இலங்க

மேல்
$1.6.93

#383
வானவர் சுவன பதி நிகர் அனைய மக்க மா நகரினில் புகுந்து
கான் அமர் குழலார் ஆமினா என்னும் கனி மொழி பொன்_தொடி கரத்தில்
நானமும் கவினும் வளர்ந்து மேல் நிவந்த நபி முகம்மது நயினாரை
தேன் அவிழ் பதும மென் மலர் செழும் தாள் திருந்து_இழை களிப்பொடும் கொடுத்தாள்

மேல்
$1.6.94

#384
மடந்தையில் சிறந்த ஆமினா என்னும் மலர் கொடி முகம்மதை வாங்கி
இடம்பெற பிறழ்ந்து சிவந்த வேல் என்னும் இணை விழி முகத்தொடும் சேர்த்தி
குடங்கையில் ஏந்தி மார்புற தழுவி குமுத வாய் முத்தமிட்டு உவந்து
கிடந்தன மனத்தில் துயர் எலாம் அகற்றி கிளர்தரும் உவகையில் குளிர்ந்தார்

மேல்
$1.6.95

#385
முலை சுமை கிடந்த சிற்றிடை திரண்ட முகில் எனும் குழல் அலிமாவை
இலை தளிர் விரல்கள் முதுகுற பொருந்த இன் உயிர் பொருந்தல் போல் தழுவி
நிலைத்த பொன் பாவை என அருகு இருத்தி நெறியுடன் பல மொழி புகழ்ந்து
மலை தடம் புயத்து ஆரீதையும் போற்றி மகிழ்ந்தனர் ஆமினா அன்றே

மேல்
$1.6.96

#386
நெய் நிணம் கமழ்ந்த செம் கதிர் வடி வேல் நிருபர் கோன் அப்துல் முத்தலிபு
மை நிற பாவை கயல் விழி அலிமா வந்தது கேட்டு வந்தடுத்து
மெய் நிற கதிர் முச்சுடரையும் மழுக்கும் விறல் முகம் மது-தமை எடுத்து
கை நிறை பொருள் போல் இரு விழி குளிர கண்டு அகம் மகிழ்ந்து உடல் களித்தார்

மேல்
$1.6.97

#387
வடிவுறும் சுடர் வேல் அப்துல் முத்தலிபு மரை மலர் மா முகம் நோக்கி
கொடி என வயங்கு நுண் இடை அலிமா கொவ்வை அம் கனி இதழ் திறந்து
படியினில் எவர்க்கும் காணொணா புதுமை பாலகர் முகம்மது-தம்மால்
மிடிமையும் தவிர்ந்தோம் பாக்கியம் பெற்றோம் வேண்டுவ பிறிது இலை என்றார்

மேல்
$1.6.98

#388
ஆடவர் திலகர் அப்துல் முத்தலிபும் ஆமினா எனும் குல_கொடியும்
பீடு உறும் அலிமா-தம்மையும் தலைமை பெருமை ஆரீதையும் போற்றி
நாடுறு மனத்தால் இனத்தவர் மனைக்குள் நன்குற விருந்துகள் அளித்து
தேடிய பொருளை கிடைத்தவர் போல செல்வம் உற்று இருந்தனர் சில நாள்

மேல்
$1.6.99

#389
செவ்விய வரிசை மக்க மா நகரில் திங்கள் நாலிரண்டு சென்றதன் பின்
எ வரம்பினுக்கும் மிகு வரம்பு என வாழ் இலங்கு இழை ஆமினா-தமையும்
மவ்வல் அம் தொடையார் அப்துல் முத்தலிபு மன்னையும் பொருந்துற போற்றி
கவ்வை அம் கழனி குனையினில் புகுதும் கருத்தினை கருதியே உரைத்தார்

மேல்
$1.6.100

#390
எண்ண அரும் பெருமை புகழ் உசைன் நயினார் எடுத்து இயற்றிய பல வரிசை
புண்ணிய பொருளாய் வரும் அபுல் காசிம் புந்தியில் நடுவுற பொருந்தி
கண்ணினும் இருக்கும் முகம்மது நபியை கடிதினில் வாகனத்து ஏற்றி
நண்ணிய குனையின் வழியினை கடந்து நடந்து தம் மனையினை சார்ந்தார்

7. இலாஞ்சனை தரித்த படலம்

$1.7.1

#391
புரிசை சூழ் மக்கம்-தன்னில் போந்து அவண் இருந்தும் பின்னர்
திரு உறை குனையின் என்னும் பதியினில் சேர்ந்தும் பாரில்
குரிசில் மா முகம்மது என்னும் குல மணி-தமக்கு நாளின்
வருடம் மூன்று என்ன தேகம் வளர்ந்ததும் இரட்டி தானே

மேல்
$1.7.2

#392
ஆண்டு மூன்று உறைந்து நாலாம் ஆண்டு சென்றதன் பின் செல்வம்
பூண்ட மா மயிலே அன்ன பொலன் கொடி அலிமா என்னும்
தூண்டிடா விளக்கின் செவ்வி சுடர் மதி முகத்தை நோக்கி
காண் தகா புதுமை வண்மை முகம்மது கவலலுற்றார்

மேல்
$1.7.3

#393
சேட்டு இளம் சிங்கம் என்னும் திறல் உறை அப்துல்லாவும்
பூட்டிய தனுவால் வெற்றி பொருந்து கை லமுறத்து என்னும்
தோள் துணை தனையர் எங்கே சொல்லுக அனையே என்ன
கேட்ட பின் அலிமா என்னும் கேகயம் மறுத்து கூறும்

மேல்
$1.7.4

#394
பிள்ளை மென் கனியே செல்வம் பெறும் தவ பலனே எந்தம்
உள்ளகத்து உயிரே மாமை ஓங்கிய முகம்மதே இ
நள்ளிருள் பொழுது நீங்கி விடிந்த பின் நம்பிமார்கள்
துள்ளும் மென் மறிகள் மேய்ப்ப தொடர்ந்தனர் காட்டில் என்றார்

மேல்
$1.7.5

#395
கானக தொருவின் பின்னே கலந்தனர் தனையர் தாம் என்று
ஆனவர் உரைப்ப நவ்வி அகுமதும் கருத்தில் உற்று
தூ நகை தளர செ வாய் துடி இடை கொடியை நோக்கி
யானும் அ வழி செல்வேன் என்று அடுத்தடுத்து உரைப்பதானார்

மேல்
$1.7.6

#396
வரம் உறு முகம்மது இந்த வாசகம் உரைப்ப தேன் பாய்
விரை மலர் செருகும் கூந்தல் மென் கொடி அலிமா கேட்டு
கரையிலா உவகை பொங்கி காளை-தம் வதனம் நோக்கி
நிரைதரு தகர் பின் நாளை செல்க என நிகழ்த்தினாரே

மேல்
$1.7.7

#397
விரி கதிர் பருதி வெய்யோன் உதித்த பின் விளங்கும் செவ்வி
துரை முகம்மதுக்கு வெள்ளை துகில் எடுத்து அரையில் சாத்தி
சிரசினில் நெய்யும் தேய்த்து செறி மணி கோல் கைக்கு ஈய்ந்து
குரிசிலை குறித்து சூழ்ந்த குமரரை விளித்து சொல்வார்

மேல்
$1.7.8

#398
கல் செறி பொதும்பில் கூர்ந்த கண்டக வனத்தில் சேர்ந்த
புல் செறிவு இல்லா பாரில் பொறி அரா உறையும் கானில்
வில் செறி வேனல் காட்டில் விரி நிழல் இல்லா சார்பில்
மல் செறி புயத்தீர் சேறல் மறும் என மறுத்தும் சொல்வார்

மேல்
$1.7.9

#399
பணர் விரி நிழலும் துய்ய பசும்புலின் இடமும் வாய்ந்த
மணம் விரி வனசம் பூத்த மடு உறை இடமும் ஆர்க்கும்
உணவு உறை கனியும் சேர்ந்த ஒருங்கினில் ஆடு மேய்ப்ப
குண வரை அனைய செவ்வி குரிசிலை கொடுபோம் என்றார்

மேல்
$1.7.10

#400
இலங்கு இழை அலிமா கூறும் வார்த்தை கேட்டு இளையோர் எல்லாம்
நலம் கிளர் மனம் பூரித்து நல் மொழி ஈது என்று எண்ணி
துலங்கு செம் மணியை சூழ்ந்த பல மணி போல சூழ்ந்து
குலம் கெழும் கொறியின் பின்னே முகம்மதை கூட்டி சென்றார்

மேல்
$1.7.11

#401
பருதியின் கரங்கள் காணா பாசடை செறிந்த நீழல்
தருவிடை முகம்மது என்னும் சலதர கவிகை வேந்தை
இரும் என இருத்தி சூழ்ந்த இளையரில் சிலர் புல் கானில்
துருவை மேய்த்து அரு நீர் ஊட்டி தோன்றுவர் அலது நீங்கார்

மேல்
$1.7.12

#402
சுற்றிய துணைவரோடும் சொரி கதிர் முகம்மது என்னும்
நல் தவம் உடைய நம்பி வருவதை நோக்கி நாடி
சிற்றிடை அலிமா என்னும் சே_இழை எதிரில் சென்று
பொன் தொடி கரத்தில் ஏந்தி கொறியுடன் மனையில் புக்கார்

மேல்
$1.7.13

#403
மற்றும் இ வண்ணம் சில் நாள் முகம்மதும் அப்துல்லாவும்
பற்று விட்டு அகலார் ஆடும் பலுகினது ஒன்றுபத்தாய்
குற்றம் இல் அலிமா என்னும் கொடி மனை தயிர் பால் நல் நெய்
வற்றுறா பெருகி செல்வம் வளர்ந்து இனிது ஓங்கிற்று அன்றே

மேல்
$1.7.14

#404
குறுமறி ஆயராரும் குரிசிலை சூழவரல்லால்
பிறது ஒரு நெறியும் செல்லார் பெய் பரல் கானில் ஆங்கு ஓர்
செறி புனல் தடத்தின் நீழல் சேர்ந்து ஒருமுகமாய் கூடி
இறையவன் தூதர் முன்சென்று ஏவல்செய்து இருப்பர் அன்றே

மேல்
$1.7.15

#405
நன்றி கொள் இளையோர் எல்லாம் நறை முகம்மதுவை யார்க்கும்
வென்றி கொள் அரசா வைத்து வேறுவேறு அதிகாரத்தார்
என்றவர் அவர்க்கே பேரிட்டு இருந்து அடி பணிந்து சார்ந்த
மன்றல் சேர் உவாயின் நீழல் மகிழ்ந்து இனிது இருக்கும் போதில்

மேல்
$1.7.16

#406
பட்டு உடையினராய் சாந்தம் பழகு தோளினராய் வாய்ந்த
கட்டழகினராய் வீசும் கதிர் மதி வதனராய் மெய்க்கு
இட்ட கஞ்சுகராய் ஆண்மை இலங்கும் வாலிபராய் சோதி
விட்டு ஒளிர் மின்னின் ஒப்ப விரைவினில் இருவர் வந்தார்

மேல்
$1.7.17

#407
படியகம் கெண்டி செம்பொன் பதும மென் கரத்தில் ஏந்தி
வடிவுடன் ஒருவர் நிற்ப மற்றொரு காளை கையில்
தொடி பகுப்பு என்ன கூன் வாள் தோன்றிட எதிரதாக
திடமுடன் நிற்ப கண்டு சிறுவர்கள் கலக்கமுற்றார்

மேல்
$1.7.18

#408
சிறுவர்கள் உள்ளம் தேம்பி திடுக்கிட நிற்கும் காலை
மறு அகல் மதியம் போன்ற முகம்மதை அடுத்து பாரில்
இறையவன் தூதே எங்கட்கு இன் உயிர்க்குயிரே என்ன
நறை மலர் கரத்தை பற்றி நடந்து வாய் நிழலில் ஆனார்

மேல்
$1.7.19

#409
தரு நிழலிடத்தில் வள்ளல்-தம் முனும் பின்னுமாக
இருவரும் இருப்ப கண்ட இளையவர் அனைத்தும் ஏங்கி
வெருவுவர் உள்ளம் தேறா மெலிகுவர் இவர் யார் என்ன
உருகுவர் கரைவர் கண்ணீர் ஒழுகிட ஒருங்கு நிற்பார்

மேல்
$1.7.20

#410
பதறுவர் கலங்கி ஏங்கி பதைபதைத்து அலறி விம்மி
கதறுவர் அந்தோ என்ன கலங்குவர் கலன்கள் யாவும்
சிதறிட ஓடியோடி திரும்பி நெட்டுயிர்ப்பு வீங்கி
இதயம் நொந்து ஆவி சோர இடைந்து வாடுவர்கள் அன்றே

மேல்
$1.7.21

#411
மல் விதம் பயிலும் திண் தோள் மன்னவர் இவர்கள் யாரோ
தொல் விதி பயனால் வந்து சூழ்ந்து கை கருவி-தன்னால்
கொல்வதுக்கு இசைந்த பேரோ குரிசிலை கொண்டு தம் ஊர்
செல்வதுக்கு இருக்கின்றாரோ தெரிகிலோம் என்ன நைவார்

மேல்
$1.7.22

#412
கடலிடை புவியில் எங்கள் முகம்மது பேரில் கையால்
தொட நினைத்தவரும் இல்லை தொடர்ந்து கை பற்றி நுங்கள்
இடம் உற இருத்தல் செய்தீர் ஏது காரணமோ எங்க
ளுடன் உரைத்திடுவீர் என்ன உரைத்து வாய் புலர்ந்து நிற்பார்

மேல்
$1.7.23

#413
மறைபடா செவ்வி வாய்ந்த முகம்மது பேரில் சற்றே
குறைபட நினைக்கின்றீரால் குடி குடி வடுவும் நுங்கட்கு
இறையவன் முனிவும் பாரில் எண்ணிலா பழியும் சூழும்
முறையல விடு-மின் என்ன மொழிந்து நெஞ்சு அழிந்து நிற்பார்

மேல்
$1.7.24

#414
முகம்மது பேரில் நும்மால் வடு வருமாகில் இந்த
செக மகிழ் அலிமா என்னும் திருந்து_இழை பழியும் ஈன்ற
நகை மணி முறுவல் ஆமினா உயிர் பழியும் அல்லால்
பகை பெரிது உடையர் ஆகி பழி எலாம் சுமப்பீர் என்றார்

மேல்
$1.7.25

#415
இ திறம் சிறுவர் கூற இயல் அபுதுல்லா என்னும்
சித்திர வடிவன் செ வாய் திறந்து இருவரையும் நோக்கி
வித்தகர் முகம்மதின்னை விடும் எனை நுங்கட்கு ஏற்ற
குத்திரம் கொலை யாதேனும் குறித்து அதை முடித்திர் என்றான்

மேல்
$1.7.26

#416
சிறுவர்கள் உரைக்கு மாற்றம் கேட்ட பின் ஜிபுறயீலும்
அற நெறி மீக்காயீலும் அதிசயித்து அகத்தினுள்ளே
முறுவல் செய்து உரையாது ஒன்று மொழிந்திலராகி செவ்வி
நிறை முகம்மதுவை சேர்ந்த நிழலிடை படுத்தல் செய்தார்

மேல்
$1.7.27

#417
படுத்து ஒளி பரப்பும் செவ்வி முகம்மதை பார்த்து கூன் வாள்
எடுத்து நால் திசையும் நோக்கி இயல்பெற உரத்தின் நேரே
வடுப்பட ஊன்றி நொய்தாய் வகிர்ந்திடும் போதில் நெஞ்சம்
திடுக்கொடு பதறி நின்ற சிறுவர்கள் சிதறினாரே

மேல்
$1.7.28

#418
நேயமுற்று உரத்தை கீண்டு நிறை ஒளி பொங்கும் கஞ்ச
காய் முகை கிழித்து உள் உற்ற கறுப்பொடு கசடும் ஆன
மாய வன் கூற்றை மாற்றி வழு அற கழுவி மாறாது
ஆயும் நல் நினைவு ஈமான் நல் அறிவுடன் நிரப்பல் செய்தார்

மேல்
$1.7.29

#419
உண்மையும் நினைவும் சேர்த்தி ஊறு இலாது உற பொருத்தி
வண்மை சேர் முகம்மதின் தண் மணி பிடர்த்து அணிவதாக
திண்மை கொள் புயம் இரண்டில் தெரிதர நடுவில் தூய
ஒள் நிற புறவின் அண்டத்து ஓதிய அளவதாக

மேல்
$1.7.30

#420
முத்திரை என்னும் அ இலாஞ்சனை தரித்து மூவா
உத்தமர் தெரிந்து நோக்கி ஒருவருக்கொருவர் சொல்வார்
இ தகை குரிசில் நின்ற நிறை இடை கண்டோர் எல்லாம்
பத்தி விட்டு ஒளிரும் சொர்க்க பலன் பதம் பெறுவர் என்றே

மேல்
$1.7.31

#421
தரம் பெறும் ஆயிரம் பேர் நிறை என சாற்றி பத்தா
யிரம் பெயர் நிறை உண்டு என்ன இயம்பி நூறாயிரம் பேர்க்கு
உரம் பெற கனம் உண்டு என்ன ஓதியோர் கோடிகோடி
நிரம்பும் மானிடருக்கு உற்ற நிறை என்று நிகழ்த்தினாரே

மேல்
$1.7.32

#422
வகுத்த நாள் தொடுத்து பின் நாள் வருவது ஓர் நாள் ஈறாக
தொகுத்த அ சனங்கள் எல்லாம் இவர் எடை தோன்றாது என்ன
பகுத்தவர் பார்த்து பாரில் படைப்பு உள சனங்கள் எல்லாம்
இகத்து இவர் சபாஅத்தால் ஈடேறுவர் என்றும் சொன்னார்

மேல்
$1.7.33

#423
அதிசயித்து உரைத்து நின்று அங்கு அகுமது சிரசை தொட்டு
துதிசெய்து முத்தமிட்டு தூயவன் தோழரான
புதியது ஓர் ஹபீபுல்லா என்று ஓதி அ பேரும் போர்த்து
மதி மகிழ்ந்து உவகை பொங்கி வானவர் வாழ்த்தி சொல்வார்

மேல்
$1.7.34

#424
அரு மறை முகம்மதே நும் அகத்தினில் அஞ்சல் வேண்டாம்
வரமுறு புதுமை நும்-பால் வருவது உண்டு அனேகம் அந்த
தரம் அறிந்து உவகை எய்தும் உமக்கு என சாற்றி போற்றி
பெரியவன் அருளால் வானோர் பேர்_உலகு அடைந்தார் அன்றே

மேல்
$1.7.35

#425
ஓடிய சிறுவர் கால் நொந்து உலைந்து இளைத்து உடலம் வேர்த்து
வாடிய முகத்தில் கண்ணீர் மார்பகம் நனைப்ப சோர்ந்து
பாடியில் புகுந்து தங்கள் மன பயங்கரத்தை வந்து
கூடிய பெயருக்கு எல்லாம் வகைவகை கூறுகின்றார்

மேல்
$1.7.36

#426
அப்பொழுது அப்துல்லாவும் லமுறத்தும் அழுது விம்மி
எய்ப்பொடும் ஏங்கியேங்கி ஈன்றவர் முகத்தை நோக்கி
மை படும் கவிகை வள்ளல் முகம்மதை கொன்றார் என்று
செப்பிய மாற்ற கூற்றம் செவி புக மயங்கி வீழ்ந்தார்

மேல்
$1.7.37

#427
ஆரிது தெருமந்து உள்ளத்து அறிவு அழிந்து ஆவி சோர
காரிகை அலிமா பூண்ட கலன் பல திசையும் சிந்த
வேரி அம் குழல் மா மேக மின் என மேனி தேம்பி
பாரினில் புரண்டு ஏறு உண்ட மயில் என பதைக்கலுற்றார்

மேல்
$1.7.38

#428
பதைத்து எழுந்து ஐயோ என்ன பாலகன் அப்துல்லாவை
மதித்து முன் நடத்தி காந்தள் மலர் கரம் சிரசில் ஏற்றி
உதித்து எழும் கமல பாதம் உதிரம் கொப்பளிப்ப கானில்
மிதித்து அலைந்திடும் கொம்பு ஒப்ப விரைவினில் நடந்து சென்றார்

மேல்
$1.7.39

#429
அயிர் ஒழித்து அரம் போல் தேய்க்கும் அற கொடும் பரல் கான் ஏகி
குயில் புரை சொல்லாள் செல்ல கோட்டு-வாய் நிழலின் கண்ணே
உயிரும் தம் மனமும் கண்ணும் ஓர் உரு கண்டது அன்ன
செயிர் அற மகன் வான் நோக்கி நின்றிடும் செய்தி கண்டார்

மேல்
$1.7.40

#430
கண்ணினின் மணியே எந்தம் கருத்து உறும் அறிவே காமர்
விண்ணினில் குறைபடாமல் விளங்கிய மதியமே இ
மண்ணினுக்கு அரசே நம்-தம் மனைக்கு உறு செல்வமே எம்
புண்ணிய பலனே என்ன பூம்_கொடி எடுத்து அணைத்தார்

மேல்
$1.7.41

#431
வடிவு உறு மேனி நோக்கி மா மதி வதனம் நோக்கி
உடல் உறும் வடு காணேன் இங்கு உற்றவை உரைப்பாய் என்று
கொடி இடை அலிமா கூற கொடு வரை முழையில் தோன்றும்
அடலுறு சீயம் அன்ன அகுமது புகலலுற்றார்

மேல்
$1.7.42

#432
இ தரு நிழலில் யாங்கள் இருக்கையில் இருவர் வந்து என்
கைத்தலம் பற்ற நின்ற காளையர் வெருவி ஏக
பத்திரமாய் என்-தன்னை படி மிசை கிடத்தி கூன் வாள்
வைத்து உரம் கீண்டல் கண்டேன் மறுத்து ஒன்றும் தெரிகிலேனே

மேல்
$1.7.43

#433
நினைவொடும் எழுந்தேன் பின் என் நெஞ்சினில் வடுவும் காணேன்
மனம் மகிழ்ந்து இருவரும் மெய் மகிழ்ச்சியால் எனது சென்னி
தனை உற தடவி முத்தி சஞ்சலம் வேண்டா நும்-பால்
கன புதுமைகள் உண்டு என்றோர் காரண பெயருமிட்டார்

மேல்
$1.7.44

#434
ஈடு அலால் அனேக மாற்றம் எடுத்தெடுத்து இயம்பி என்னை
மா தவ முகம்மதே நல் வரிசையின் மணியே என்ன
ஓதினர் ஓதி வானத்து உறைந்திடல் பார்த்து நின்றேன்
தாதையும் நீரும் என்னை தழுவவும் கண்டேன் என்றார்

மேல்
$1.7.45

#435
உரைத்த இ செய்தி எல்லாம் ஊரவருடனும் உற்ற
வரை சிலை சுமந்த திண் தோள் மன்னர் ஆரிதுவும் ஓசை
திரை கொடி பவளம் அன்ன சே_இழை அலிமாவும் கேட்டு
உரை தக மகிழ்ச்சி பொங்கி எழுந்து தம் பதியில் புக்கார்

மேல்
$1.7.46

#436
வாடு மெல் இழை பாதி நுண் இடை மயில் அலிமா
கூடி வந்தவர் அனைவர்க்கும் நல் மொழி கொடுத்து
நாடி நும் மனை புகும் என தமர்களை நடத்தி
தேடிடா பொருள் முகம்மதை மனை-வயின் செறித்தார்

மேல்
$1.7.47

#437
வனம்-தனில் செலும் சிறுவரோடு இணக்கிலார் மறியின்
இனம்-தனில் தொடர்ந்து ஏகவும் மனத்தினில் இயையார்
சினந்த சின்மொழி மறந்து ஒரு நாளினும் செப்பார்
அனந்தரத்தவர் மனையினில் புகுத்தியும் அறியார்

மேல்
$1.7.48

#438
சேமம் ஆகிய பொருளினை காத்திடும் திறம் போல்
வாம மா மணி முகம்மதை வளர்க்கும் அ நாளில்
தாம ஒண் புயத்தினர் நசுறானிகள் தடம் சூழ்
பூ மலர் பொழில் குனையின் வந்தடைந்தனர் புதிதாய்

மேல்
$1.7.49

#439
அபசி நாட்டினில் உறை நசுறானிகள் ஆனோர்
குவிதரும் தன கொடி அலிமாவையும் கூண்டு
கவின் பழுத்து ஒழுகிய முகம்மதுவையும் கண்டு
செவி இரகசியம் ஒருவருக்கொருவர் செப்பினரால்

மேல்
$1.7.50

#440
நபி எனும் பெரும் முத்திரை குறியும் பொன்_நகர்க்கும்
புவியினுக்கும் ஓர் அரசு என பொருந்து இலக்கணமும்
அவிர் ஒளி திரு மேனியும் அவயவத்து அழகும்
இவை எலாம் அறிந்து இவர் நபி என உளத்து இசைந்தார்

மேல்
$1.7.51

#441
புனை மணி புயர் ஆரிதுக்கு உயிர் என பொருந்தும்
மனைவியாகிய மயில் அலிமா முனம் வந்து
கனைதரும் கடல் அமுதம் என வாழ்த்தி உள் களித்து
வினையமாய் நசுறானிகள் சில மொழி விரித்தார்

மேல்
$1.7.52

#442
உங்கள்-தம் மனைக்கு உளது ஒரு குழந்தை நும் உயிர் போல்
எங்கள்-தம் மனத்து உவகையால் வளர்ப்பதற்கு இசைந்தோம்
திங்கள் வாள்_நுதல் அளித்தியேல் செல்வமும் செருக்கும்
பொங்கும் மா நிதி தருகுவம் யாம் என புகன்றார்

மேல்
$1.7.53

#443
நன்று நும் மனத்து எண்ணிய உவகையால் நடுக்கம்
இன்றி கேட்பது எ குழந்தை நீர் இயம்பும் என்று இசைத்தார்
வென்றி மல் புயன் முகம்மது என பெயர் விரித்தார்
குன்று போல் முலை செவி சுட மனம் கொதித்திடவே

மேல்
$1.7.54

#444
புகன்ற புன்மொழி போதும் நும் பதி புக போதும்
இகழ்ந்து இருந்திரால் பழி வரும் ஊரில் எம் இனத்தார்
திகழ்ந்து இருப்பவர் அறிகிலர் கேட்கிலோ செகுப்பர்
அகம்-தனை புறமிடும் செலும் போம் என அறைந்தார்

மேல்
$1.7.55

#445
காட்டினில் புக விளைந்த காரணத்தையும் அபசா
நாட்டில் உற்றவர் கேட்ட காரியங்களும் நறவு ஊர்
ஏட்டில் இலங்கு இதழ் பதத்து அலிமா மனத்து எண்ணி
கூட்டி தாயிடம் சேர்ப்பதே கருத்து என குறித்தார்

மேல்
$1.7.56

#446
வருடம் ஐந்தும் ஓர் திங்களும் சென்றது மக்கா
புரம் அடைந்து யாம் முகம்மதை புகழொடும் பொருவு இல்
அரிவை ஆமினா அகத்திடை புகுத்தலே அறிவு என்று
உரைதர திறல் ஆரிதும் மனம் களித்து உவந்தார்

மேல்
$1.7.57

#447
மா தவ முகம்மதும் வரி விழி அலிமாவும்
கோது அறும் துணைவரும் வழித்துணையுடன் கூடி
தீதுறும் கொடும் பாலையும் குறிஞ்சியும் சேர்ந்த
பாதையில் தரு நிழல் இளைப்பாறினர் பரிவாய்

மேல்
$1.7.58

#448
இறங்கி அங்கிருந்து எழுந்திட நினைக்கும் அ நேரம்
பிறங்கும் ஓர் கரம் நீள்தர கண்டனர் பெரிதாய்
அறம் கிடந்து ஒளிர் முகம்மதை காண்கிலர் அலிமா
மறம் கிடந்த வேல் கண் கடல் மடை திறந்தனவே

மேல்
$1.7.59

#449
என்ன மாயம் இங்கு என் என நெட்டுயிர்ப்பு எறிந்து
வன்ன மென் மலர் கரம் நெரித்து உதரத்தில் வைத்து
துன்னு பூம் குழல் விரிதர செ இதழ் துடிப்ப
கன்னி மா மயில் கலங்கினர் புலம்பி கதறி

மேல்
$1.7.60

#450
படியின் மீதினில் ஓடுவர் தேடுவர் பதறி
கடிதில் கல்முழை முள் செறி பொதும்பினும் கவிழ்ந்து
நெடிது நோக்குவர் செடி அற கிளறுவர் நிகர் இல்
வடிவுறும் மகவே என கூவுவர் வருந்தி

மேல்
$1.7.61

#451
வெய்ய கானிடை நீங்கவும் காண்கிலன் வேறு ஓர்
கை அலால் பினை பிறர் எடுத்து ஏகவும் காணேன்
உய்யும் ஆறு இனி ஏது என உலைந்து உடல் ஒடுங்கி
அய்யகோ மகனே விதியோ என அழுதார்

மேல்
$1.7.62

#452
கவச வல் உரம் கீண்டவர் வஞ்சனை கருத்தோ
அபசி மா நசுறானிகள் மாயமோ அலது
புவியில் பூதங்கள் அலகைகள் செய்தொழில் பொருளோ
எவர்கள் இ இடர் செய்தவர் என மனம் இடைந்தார்

மேல்
$1.7.63

#453
வஞ்சி மெல்_இடை வாட்டமும் நடுக்கமும் வாச
கஞ்ச மென் முக கோட்டமும் கண்ணின் நீர் கவிழ்ப்பும்
கொஞ்சு மென் மொழி குழறிட புலம்பிய குறிப்பும்
அஞ்சி நின்றதும் பயந்து ஒடுங்கிய வரலாறும்

மேல்
$1.7.64

#454
கரிய பூம் குழல் செ நிற பூழ்தியில் கரந்து
விரிதர கிடந்து ஒளிரும் மெய் பதைத்து வாய் வெளிறி
எரியும் நெய்யிடை இட்ட பைம் தளிர் என இருந்த
அரிவை-தன்-வயின் நெறி செலும் பேர்கள் கண்டு அடைந்தார்

மேல்
$1.7.65

#455
ஏது வந்தவை என்று அடைந்தவர் சிலர் இயம்ப
கோதையீர் எனது உறு குல களிறு ஒரு குழந்தை
தீது இலா பெயர் முகம்மது எனும் சிறுவரை இ
பாதையின் இழந்தேன் கொடியேன் என பகர்ந்தார்

மேல்
$1.7.66

#456
கேட்ட பேர்கள்-தம் மனம் பயந்து அற கெடிகலங்கி
காட்டின் இ பெரும் புதுமையை கருத்தினில் தெளிந்து
மூட்டும் வல் வினை பிரித்திட முடித்தவன் முறையாய்
கூட்டிவிப்பதும் வலியதோ கூட்டுவன் கோதாய்

மேல்
$1.7.67

#457
என எடுத்த நல் மொழிகளால் இவர் கருத்து இயைய
நனை தரும் குழல் மடந்தையர் தேற்றியும் நடுக்கம்
தினையின் அவ்வளவாயினும் தேறிலள் தியங்கும்
அனைய காலையில் விருத்தன் என்று ஒருத்தன் வந்து அடைந்தான்

மேல்
$1.7.68

#458
கையில் ஊன்றிய தடியும் ஓர் கயில் கவிகையுமாய்
மெய் எலாம் நரம்பு எழுந்து உலரிய விரி திரையாய்
துய்ய நூல் விரித்து அன நரை துலங்கிட கூனி
நையும் மென் தலை நடுக்கொடு மெலமெல நடந்தே

மேல்
$1.7.69

#459
வந்து தோன்றிய முதியவன் அரிவை நின் மனத்தின்
நொந்து இருந்தவாறு ஏது என பூம்_கொடி நுவன்றாள்
கந்து அடர் கய களிறு எனும் முகம்மதை கானில்
சிந்தினேன் உயிர் சிந்தவும் நினைத்தனன் எனவே

மேல்
$1.7.70

#460
திருந்து மென் மலர் கொடி_இடை கேட்டி நின் சிந்தை
வருந்தல் நின் திரு மகன் முகம்மதுவை இ வழியில்
பொருந்த கூட்டுறும் தெய்வம் ஒன்று உளது யாம் புகுந்து அங்
கிருந்து கேட்குவம் வம் என நல் மொழி இசைத்தான்

மேல்
$1.7.71

#461
விருத்தன் அ மொழி இயம்பிட விளங்கு இழை அலிமா
கருத்தில் உற்று இவை அறிகுவம் என நடு கானில்
குருத்த செம் கதிர் உதித்து என கொடுமுடி இயற்றி
இருத்தும் ஆலயத்து ஏகினர் அவன் மொழிக்கு இசைந்தே

மேல்
$1.7.72

#462
முருகு உலாம் குழல் மடந்தையர்க்காய் நரை முதியோன்
செருகு பொன் மலர் கோயிலின் காவணத்தினில் நின்று
உருகு தன் மன பயத்தொடும் வாய் புதைத்து ஒதுங்கி
பொருவு இலா மணியே முதலே என புகழ்ந்தான்

மேல்
$1.7.73

#463
போற்றி தெண்டனிட்டு எழுந்து ஒரு வரம் என புகன்று
கூற்று அடர்ந்த வேல் விழி எளியவள் இவள் குழந்தை
மாற்றலர்க்கு அரி வடிவுறும் பெயர் முகம்மதுவை
ஆற்றினில் இழந்தாள் அருள்வாய் என அறைந்தான்

மேல்
$1.7.74

#464
மாது-தன் மகன் முகம்மது எனும் பெயர் சிலையின்
காதினுள் புக கருத்துற கலங்கி மெய் நடுங்கி
பாதையில் புகு முதியவன் பத மலர் கெதியா
மோதி வீழ்ந்தது முகம் தரைபட முனங்கியதே

மேல்
$1.7.75

#465
சிலை மருண்டது கண்டு அலிமா மனம் திடுக்கிட்டு
அலைவினோடு அற நரை முதியவன் முகம் நோக்கி
கொலை-கொல் நீ செலும் நெறி குறுகு என கொழும் கமலத்து
இலையின் மேல் நடு துளி என வழியில் நின்று இடைந்தாள்

மேல்
$1.7.76

#466
இந்த நாளையில் தேவதம் அவன் பெயர் இயம்ப
வந்த போதினில் தலை முகம் கவிழ்ந்தது மடவாய்
உன்-தம் மைந்தனுக்கு உடையவன் வேறு உளன் ஒருவன்
அந்த நாயகனிடத்தினில் அறைக என அகன்றான்

மேல்
$1.7.77

#467
ஆற்றிருந்து எழுந்து இரு கையும் சிரசினில் ஆக்கி
தூற்றும் வேல் விழி நீர் இடும் சுவடுகள் மறைப்ப
நால் திசையினும் கண் மலர் பரப்பிட நடந்து
தேற்று நல் மறை மக்க மா நகரினை சேர்ந்தார்

மேல்
$1.7.78

#468
அபுதுல் முத்தலிபு எனும் அரசு அணி மனை அடுத்து
சுவன நாயக குரிசிலை வழியிடை தோற்றி
புவியில் தோன்றிய துன்பமும் முதியவன் புகல
சவி கெட பெரும் தேவதம் தரை படிந்ததுவும்

மேல்
$1.7.79

#469
மரு மலர் தொடை தடம் புயர் செவி மடல் துளையில்
திருக வெந்து தீ உமிழ்ந்த வேல் திணித்தன சிவண
கருகி ஈரலும் சிந்திட தெளி மனம் கலங்கி
உருக கூறினள் ஊற்றெடுத்து ஒழுகு நீர் விழியாள்

மேல்
$1.7.80

#470
பழுது இருந்த சொல் கேட்டலும் படர்ந்த செம் நெருப்பில்
ஒழுகு மென் மெழுகாய் உறு கருத்து அழிந்து உடைந்து
கொழு மடல் செழும் கமல மென் மலர் முகம் கூம்பி
அழுது சஞ்சலத்து உறைந்தனர் அப்துல் முத்தலிபு

மேல்
$1.7.81

#471
கலவை மான்மத மார்பகம் சிவந்த கண் தரளம்
குலவ வந்தவை எவை-கொல் என்று இனத்தவர் கூற
மலை எனும் திட கட கரி உதிரம் வாய் மடுத்து உண்டு
உலவு வேல் கரர் உற்றவை அனைத்தையும் உரைத்தார்

மேல்
$1.7.82

#472
மலை அடங்கலும் தடவியும் வனத்தினை வகிர்ந்தும்
தொலைவில் தீவினும் சுற்றியும் முகம்மதை தொடர்ந்து
நிலைதரும் கதிர் படு முனம் தருகுவம் நுமது
நலிதலை தவிர் என திசைதிசை-தொறும் நடந்தார்

மேல்
$1.7.83

#473
பரல் செறிந்த கானிடத்தினும் பருப்பத நெறியும்
விரல் புகுந்திடா வனத்தினும் வேறு சிற்றூரும்
இரைத்த பீடிகை மாட மா நகரிகள் எவையும்
நிரைத்து தேடியும் காண்கிலம் என நிகழ்த்தினரே

மேல்
$1.7.84

#474
அகம் தயங்கி மெய்மறந்து எழில் அப்துல் முத்தலிபு
வகிர்ந்து பேரொளி திருந்திட விரிந்த கஃபாவில்
புகுந்து சுற்றி வந்து அடி பணிந்து இறைஞ்சி வாய் புதைத்து
நெகிழ்ந்த நெஞ்சினோடு ஆகுலத்து அயரும் அ நேரம்

மேல்
$1.7.85

#475
தரையில் வானகத்திருந்து இறங்கியது ஒரு சத்தம்
விரை கமழ்ந்திடும் ககுபத்துல்லாவில் தென்மேல்-பால்
நிரை மலர் தடத்து ஓடையின் வாழையின் நிழல் கீழ்
அரிய மா மறை முகம்மது அங்கு இருப்பது என்று அதிர்ந்தே

மேல்
$1.7.86

#476
அந்தரத்தினின் முழங்கிய மொழி வழி அறிந்து
சிந்தை கூர அ திசையினில் சிலருடன் செலும் போழ்து
இந்து தண் கலை எண்ணிரண்டு உடன் நிறைந்து இறங்கி
வந்திருந்தது ஒத்திருந்தனர் எழில் முகம்மதுவே

மேல்
$1.7.87

#477
கதலி நீழல் இருந்து ஒளிர் குரிசிலை கண்டு என்
மதலை-தம் இரு கண் மணியே முகம்மதுவே
அதிரும் மை கடல் தரளமே என அடல் அரசர்
இதயம் மீதுற களித்து தம் இரு கரத்து எடுத்தார்

மேல்
$1.7.88

#478
அடையலர்க்கு அரி ஏறு எனும் அப்துல் முத்தலிபு
கொடி மிடைந்து அசை புரிசை சூழ் நகரினை குறுகி
கடி மலர் குழல் ஆமினா செழு மலர் கரத்தில்
வடிவின் மிக்கு உயர் முகம்மதை கொடுத்தனர் மகிழ்ந்தே

மேல்
$1.7.89

#479
கண்ணிருந்து ஒளிர் மணி என கண்டு கண் களித்து உள்
புண் இருந்து என இருந்திடும் துன்பமும் போக்கி
வண்ண வார் குழல் ஆமினா முகம்மதை வாழ்த்தி
எண்ணம் ஒன்றும் நம்மிடத்து இலை என சிறந்து இருந்தார்

மேல்
$1.7.90

#480
அடர்ந்த செ வரி கொடி படர் அரி விழி அலிமா
தொடர்ந்த தன் மனத்து இருள் களி வாளினால் துணித்து
மடந்தை ஆமினா மனையினில் வர மலர் கரத்தால்
இடம்பெற தழீஇ இருவரும் ஒருவராய் இருந்தார்

மேல்
$1.7.91

#481
போது உலாம் குழல் ஆமினா எனும் அணி பூவை
சாது எனும் குலத்தார் அலிமா உற தழுவி
ஆதரத்தொடு முகம்மதை எடுத்து முத்தாடி
சீத ஒண் பொழில் குனைன் எனும் பதியினை சேர்ந்தார்

8. புனல் விளையாட்டுப் படலம்

$1.8.1

#482
அலத்தக மலர் பதத்து ஆமினா எழில்
சிலை தட புய முகம்மது மெய் சீர்பெற
கலை தட மதி என வளர கண்டு உறு
நலத்தரு கண் களித்து இருக்கும் நாளினில்

மேல்
$1.8.2

#483
பொறி நிகர் ஆமினா என்னும் பூம்_கொடி
அறிவு அக முகம்மதை கூட்டி ஆதி நூல்
நெறி தரு மக்க மா நகரை நீங்கியே
செறி வள மதின மா நகரில் சென்றனர்

மேல்
$1.8.3

#484
தன் உயிர் அனைய முன்னவர் இல் சார்ந்து அவர்
பொன் அடி வணங்கிய பொருவு இல் தங்கையை
என் உயிர் என் உயிர் என தழீஇ குல
மன் உயிர் முகம்மதை எடுத்து வாழ்த்தினார்

மேல்
$1.8.4

#485
பிடி நடை அமினா பெரிய தந்தை-தம்
வடிவுறு மைந்தரும் மன்னு சின்னையர்
குடி வளர்த்திடும் குல கொற்ற வேந்தரும்
அடிகள் என்று அகுமதின் அடியை போற்றினார்

மேல்
$1.8.5

#486
அன நடை சின்மொழி ஆமினா திரு
தனையரும் தம்பியர் யாரும் தன் குல
மனை மயில் அனைவரும் மனம் மகிழ்ச்சியால்
கனை கடல் அமுது என நபியை காமுற்றார்

மேல்
$1.8.6

#487
இ பெரும் உவகையுற்று இருப்ப மன் நெறிக்கு
ஒப்பு அரு மதீனம் என்று ஓதும் ஊரிடை
துப்பு உறழ் மதுர வாய் சிறுவர் சூழ்தர
மை புயல் முகம்மது ஓர் வாவி நண்ணினார்

மேல்
$1.8.7

#488
பண் அரு மறை நபி பாரில் தோன்றிய
நண்ணிய புனல் விளையாட நாடு நாள்
எண்ணுற அடுத்தது என்று இறங்கி வான் நதி
மண்ணினில் குடியிருந்து அனைய வாவியே

மேல்
$1.8.8

#489
வடு விழி தட முலையார் கண் மா மதன்
அடல் தரும் உசைன் நயினா-தம் ஆருயிர்
கட கரி எனும் அபுல் காசிம் செல்வம் போல்
இடன் அற பெருகி அங்கு இருந்த வாவியே

மேல்
$1.8.9

#490
சேடு உறு முகம்மது செவ்வி வாய்ப்ப நீ
ராடுவது இஃது என வாவி அம்புயம்
பாடு உறு மாசு அணுகாது பைம் துணர்
ஏடு அலர் போர்வை போர்த்து இருந்தது ஒத்ததே

மேல்
$1.8.10

#491
கரை தவழ் தென்றல் அம் காலினால் விரை
சொரி மலர் வாவி நீர் அசைந்து தோன்றுவ
தரி திரை கரங்களில் சங்கம் ஆர்த்திட
இரு கரை முத்து எடுத்து எறிதல் போலுமே

மேல்
$1.8.11

#492
தேன் மலர் சண்பகம் செறிந்த நீழலும்
பால் நிற கதிர் மணல் பரப்பும் அன்னமும்
சூல் முதிர் குட வளை தொனியும் வைகிய
கான் மலர் வாவி கண் களிப்ப நோக்கினார்

மேல்
$1.8.12

#493
மணி முரசு அதிர் அறா மதீன மா நகர்
திணி புய அரசர்கள் செல்வர் யாவரும்
பணி மணி முகம்மது நிறைந்த பங்கயத்து
அணி திகழ் வாவி நீராடலுற்றனர்

மேல்
$1.8.13

#494
நிறை தடம் அசைதலால் நிகர் இலா முதல்
இறையவன் தூதர் தம்மிடத்தில் மூழ்குற
குறைபடா அரிய மெய் குளிருமோ என
நறை புனல் கலங்கி உள் நடுங்கல் போன்றதே

மேல்
$1.8.14

#495
பம்பு நீர் வாவி கண் குளிர்ந்து இ பாரிடை
எம்பெருமான் நமது இடத்தில் மூழ்கலால்
செம்பொன் நாடவர்க்கு உறா சீர் பெற்றோம் என
கம்பி தம் அம்புய கரங்கள் காட்டுமே

மேல்
$1.8.15

#496
தங்கிய புனலிடை குளிப்ப தத்து நீர்
எங்கணும் கரை தவழ்ந்து இழிந்து தோன்றுவ
கங்கை தன் உள்ளகம் களிப்புற்று ஆனந்தம்
பொங்கியே உடல் புறம் பொசிவ போன்றதே

மேல்
$1.8.16

#497
வடிவுறு முகம்மது வாவி தண் புன
லிடை குளித்து உயர்தர இலங்கும் வாள் முகம்
படி மிசை ஆயிரம் கலை கொள் பால் மதி
கடலிடை முளைத்து எழும் காட்சி போன்றதே

மேல்
$1.8.17

#498
வருந்தி மெய் நடுக்கொடும் மரைகள் மூழ்குவது
அரும் தவ பேறு எனும் அகுமதின் திரு
கரும் தடம் கண் முகம் தாள் கைக்கு ஒப்பு என
பொருந்துறோம் என வனம் புகுதல் போன்றதே

மேல்
$1.8.18

#499
அகுமது வாவி நீராடல் காண்டலும்
சகம் மகிழ் தட கரை தருக்கள் தே மலர்
வகைவகை சொரிந்தன வெற்றி வானவர்
புகழொடும் பொன் மலர் பொழிவ போன்றவே

மேல்
$1.8.19

#500
மது மலர் தேனை உண்டு இருந்த வண்டு இனம்
புது மண சுரும்பொடும் இசைத்த பொங்கு இசை
சதுமறை முகம்மது தழைத்து வாழ்க என்று
அதிவித புகழ் எடுத்து அறைதல் அன்னதே

மேல்
$1.8.20

#501
பின்னிய தட தரு சினையில் பேட்டொடு
மன்னிய குயில் இனம் வாய்விட்டு ஆர்ப்பது
கன்னல் அம் சுவை கலிமாவை நல் நபிக்கு
இன்னணம் இயம்பும் என்று இசைத்தல் போலுமே

மேல்
$1.8.21

#502
பொன் முடி வேந்தர்கள் புதல்வர்-தம்மொடு
மன்னவர் முகம்மதும் வாவி நீர் குளித்து
அன்ன மென் தூவியின் அரிய வெண் துகில்
மின்னினை பொதிந்து என அரையில் வீக்கினார்

மேல்
$1.8.22

#503
கண மணி கலன் பல அணிந்து கள் அறா
மண மலர் மாலிகை சூடி வான் தொடு
பணர் தரு பாசடை தருவின்-பால் உயிர்
துணைவரோடு அரி என தோன்றல் வைகினார்

மேல்
$1.8.23

#504
வரி வளை தடம் புனை மதீன மா நகர்க்கு
உரியவர் குபிரினில் உறை எகூதிகள்
அரிதினில் தட கரை அடுத்து பூ_மழை
சொரிதல் கண்டு அகுமதை சூழ்ந்து நோக்கினார்

மேல்
$1.8.24

#505
பால் உற செழும் கதிர் பரப்பி மென் கணைக்
கால் உற வளர்ந்த செம் கரமும் பொன்_மலை
போல் என வீங்கிய புயமும் மா முக
கோலமும் காட்சி என்று உணர்ந்து கூறினார்

மேல்
$1.8.25

#506
மண்ணகத்து உதித்த மானுடன்-கொலோ அலால்
விண்ணகத்து அமரர்கள் வேந்தனோ என
எண்ணிய எண் அகத்து அடங்கிலா எழில்
அண்ணலை பார்த்து அடுத்து ஐயமுற்றனர்

மேல்
$1.8.26

#507
முத்திரை ஒன்று உள முழுதும் மெய்யினில்
பத்தி விட்டு ஒளிர்வன பாதம் பார் உறா
சித்திர நீழலும் தெரிய காண்குறா
இ திற நபி என துணிந்து இயற்றினார்

மேல்
$1.8.27

#508
பூரண மதியமே போல பின்னை நாள்
தாரணி-தனில் நபி வருவர் சான்று என
ஆரணத்து உணர்ந்து அறிந்து அறிஞர் கூறிய
காரண குறிப்பு இவர் காணும் காண் என்றார்

மேல்
$1.8.28

#509
கண்டவர் கேட்டவர்க்கு உரைப்ப காதினில்
கொண்டவர் கருத்தினில் குறித்து உசாவுவர்
அண்டர் நாயக நபி உண்டு என்று ஆதி நூல்
விண்டது தவறுறா மெய் என்று ஓதுவார்

மேல்
$1.8.29

#510
தேம் தரு தட தரு விடுத்து செம்மலும்
மாந்தர் கண் களிப்புற மனையில் புக்க பின்
ஏந்து எழில் ஆமினா இனமும் ஆயமும்
தாம் தமது உளங்களின் எண்ணம் சாற்றுவார்

மேல்
$1.8.30

#511
நபி எனும் ஒருவர் பின் நாளில் தோன்றி இ
புவியிடை வருவர் என்று ஓதி போந்தவர்
இவர் என குறித்தனர் இனி இ ஊரிடை
கவர் மன காபிர்கள் கொடியர் காண் என்றார்

மேல்
$1.8.31

#512
குரு திறன் முகம்மதை குடி இ ஊரிடை
இருத்துதல் பழுது நம் இனத்தர் யாவர்க்கும்
பொருத்தம் இல் என மனம் புழுங்கி தம் குல
திருத்து_இழை ஆமினா அறிய செப்பினார்

மேல்
$1.8.32

#513
தம்பியர் தனையர் சொல் கேட்டு தம் உளம்
வெம்பியே ஆமினா மிக விசாரமிட்டு
அம்பினை அடர்ந்த கண் ஆலி சிந்திட
நம்பியை நோக்கி தம் நகரை நாடினார்

மேல்
$1.8.33

#514
இனத்து உளார் தங்கள்-தம் இதயத்து உள் உயிர்
புன கொடி துன்புற புந்தி கூர்தர
நினைத்த நல் மொழி பல நிகழ்த்தி பங்கய
நனை தட மக்க மா நகர்க்கு அனுப்பினார்

மேல்
$1.8.34

#515
விட்டு ஒளிர் விளங்கும் மின் ஆமினா நறும்
கட்டழகு அகுமதை நடத்தி கள் அறா
வட்டு இலை முள் அரை வனச வாவியும்
நெட்டு இலை முளி கழை காடு நீந்தினார்

மேல்
$1.8.35

#516
கொடி இடை ஆமினா என்னும் கோதை ஓர்
பிடி என வனம் எலாம் பெருக மான்மத
கடி கமழ் முகம்மது ஓர் கன்றும் போலவே
அடவி விட்டு அகன்று அபுவாவில் ஆயினார்

மேல்
$1.8.36

#517
கருவிளை வரி விழி கன்னி ஆமினா
அரிய மெய் நடுக்கமுற்று அவலித்து ஏங்கவே
சுரம் என ஒரு பகை தோன்றி துக்கமுற்று
இரவலர் போல் தனி இறந்திட்டார் அரோ

மேல்
$1.8.37

#518
அரசர் நாயக நபிக்கு ஆண்டு ஓர் ஆறுடன்
ஒரு திரு திங்களும் நிறைந்தது ஓதிய
அரிதினில் கணக்கு இலக்காக ஆண்டும் ஓர்
இருபஃது ஆமினா இறந்த காலமே

மேல்
$1.8.38

#519
தாய் இறத்தலும் மனம் சலித்து சஞ்சல
தீயினில் கிரிமியின் திடுக்கிட்டு ஏங்கியே
மா இரும் புவியிடை தனித்து மன் உயிர்
போயினது என நினைவு அற புலம்பினார்

மேல்
$1.8.39

#520
சிறுகுடி எனும் அபுவாவில் சேர்ந்தவர்
மறை நபி முகம்மதின் வாட்டம் தேற்றியே
குறைவு அறா கற்பு எனும் கோதை மாதினை
அறை மறை முழக்கொடும் எடுத்து அடக்கினார்

மேல்
$1.8.40

#521
ஒலி புனல் தடத்து அபுவாவில் உள்ளவர்
கலி இருள் துரந்த செம் கவிகை வள்ளல்-தம்
நலிதலை போக்கி மக்காவை நாடியே
வலிதினில் பாசுரம் வரைந்திட்டார் அரோ

மேல்
$1.8.41

#522
சிலை நுதல் ஆமினா இறந்த செய்தியின்
மலைவுறு வாசகம் கண்டு வாய் புலர்ந்து
அலைகுலைந்து அப்துல் முத்தலிபும் அன்று தம்
நிலை தடுமாறி உள்ளறிவு நீங்கினார்

மேல்
$1.8.42

#523
மனத்து உலை கவலையை மாற்றி தம் உயிர்
இனத்தவர் சிலர்-தமக்கு இசைந்த வாசகம்
அனைத்தையும் உரைத்து அபுவாவில் போய் நபி-
தனை சிறுபொழுதினில் தருதிர் என்றனர்

மேல்
$1.8.43

#524
வில் உற விசைத்து எறி சரத்தின் வேகமாய்
ஒல்லையில் சிலர் அபுவாவில் ஓடியே
மல் உறு புய முகம்மதுவை கண்டு நல்
சொல்லொடும் தேற்றி உள் துயரம் ஆற்றினார்

மேல்
$1.8.44

#525
மதி முக முகம்மதை மக்க மா நகர்
பதியினில் கொடுவர பார்த்து சிந்தை கூர்ந்து
அதிசயித்து அப்துல் முத்தலிபு மா மலர்
பொதிதரு தட புயம் பொருந்த புல்லினார்

மேல்
$1.8.45

#526
மண்ணினில் பதமுறா வள்ளல்-தம்மை தம்
கண் எதிர் விட்டு அகலாத காட்சியாய்
எண்ணி உள்ளகத்தினில் இருத்தி எம் குல
புண்ணியம் இது-கொல் என்று உவந்து பூரித்தார்

மேல்
$1.8.46

#527
இலை மலர் கிழிந்து தேன் இழிய வாய் மடுத்து
அலகு இல் வண்டு உண்டு பண் ஆர்க்கும் தார் புயர்
கலை தெரி ஹபீபுல்லா என்னும் காளை தம்
நிலை பெற ஆண்டு ஒரு ஏழா நிறைந்தவே

மேல்
$1.8.47

#528
கனை குரல் மும்மத களிற்றின் மத்தகத்
தினை உற கீண்டு உயிர் குடிக்கும் சீயமே
அனையவர் அப்துல் முத்தலிபு-தம் திரு
மனை அரசு என நபி வளரும் நாளினில்

மேல்
$1.8.48

#529
தழை அற கருகி நீர் தடங்கள் வற்றி மெய்
குழைவொடு கானலை குறித்து நீர் என
உழை இனம் ஓடி உள் ஒடுங்க பாரிடை
மழை அற சனம் எலாம் மறுக்கம் உற்றதே

மேல்
$1.8.49

#530
புவியிடை மழை பொழியாத நோவினால்
அபுதுல் முத்தலிபு எனும் அரசர் நாயகர்
நபி-தமை கூட்டி முன் நடத்தி ஆங்கு ஒரு
தவிசு எனும் முரம்பு உறு தலத்து இருத்தினார்

மேல்
$1.8.50

#531
இரு கையும் நபி-தமை ஏந்த சொல்லி தம்
இரு கரம் நபி திரு கரத்தை ஏந்தியே
இருவரும் இரங்கி நின்று இரந்து நோக்கவே
இரு விசும்பிடை மழை இறைத்தது எங்குமே

மேல்
$1.8.51

#532
பாரினில் பெரும் புனல் பரந்த செல்வம் இது
ஆருடை முகம்மதின் பறக்கத்தால் என
ஊரினில் தலைவருக்கு இயம்பி உள் மகிழ்ந்து
ஏர் பெறும் அப்துல் முத்தலிபு இருந்தனர்

மேல்
$1.8.52

#533
நறை பொழில் ஹபுசு நல் நாட்டின் சேனையை
அறபிகள் பொருது வென்றார் என்று ஓதிய
திறன் உறு செய்தி கேட்டு இதுவும் செவ்வி நூல்
இறை நபி பொருட்டு அலாது இலை என்று ஓதினார்

மேல்
$1.8.53

#534
நபி திரு வயது இருநான்கும் திங்களும்
கவினுற இரண்டு சென்றதன் பின் காணும் நாள்
புவியினில் பத்து உற பொருந்தும் போதினில்
அபுதுல் முத்தலிபு மேலுலகு அடைந்தனர்

மேல்
$1.8.54

#535
வில் கரத்து அப்துல் முத்தலிபு மேலுல
கில் புகுந்தார் என இனமும் மக்களும்
கற்பு உடை மகளிரும் கமல வாள் முகம்
பொற்பு அற புடைத்து அழுது ஏங்கி பொங்கினார்

மேல்
$1.8.55

#536
விதி மறை நூலவர் விருத்தர் மன்னவர்
இதமுற வந்து அடுத்து இரங்கும் பேர்க்கு எலாம்
அதி பல சொல்லி உள் புழுக்கம் ஆற்றியே
அதிவிதத்துடன் எடுத்து அடக்கினார் அரோ

மேல்
$1.8.56

#537
சடங்கு உளது எவ்வையும் துடைத்து தம் குல
மடங்கல் ஏறு அனையவர் கூண்டு மாசு இலா
தடம் புய முகம்மதை வளர்க்க தக்கது ஓர்
இடம் பெறு மனத்தவர் எவர் என்று ஓதினார்

மேல்
$1.8.57

#538
அ மொழி கேட்டு அபீத்தாலிபு ஆகிய
மும்மத கரி உயிர் முகம்மதுக்கு இனி
எம் மனை அலது வேறு இடம் உண்டோ என
செம் மலர் கரத்து எடுத்து அணைத்து சென்றனர்

.9 புகைறா கண்ட படலம்

$1.9.1

#539
மலை என திரள் புயர் அபித்தாலிபு மனையில்
அலை கடல் புடை வரும் முழு மணி அகுமதுவும்
நிலை தரித்த வெண் கதிர் மதி நிகர் என வளர
உலைவு இல் செல்வமும் வளர்ந்தன ஒன்றுபத்து எனவே

மேல்
$1.9.2

#540
சலதரத்தை நேர் கரத்து அபித்தாலிபு-தம் பால்
குலவு வீரமும் கல்வியும் வெற்றியும் குடியாய்
நலமுற புகுந்து இருந்தன நாள்-தொறும் வனசத்து
இலகு செல்வியும் இவர் மனை முன்றில் வீற்றிருந்தாள்

மேல்
$1.9.3

#541
சுரபியின் திரள் கூன் தொறு திரளொடும் சுரந்த
கரிய மேதியின் குலம் ஒரு பெரும் கடல் கடுப்ப
பெருகி ஓங்கின கொறிகளும் பல்கின பிறரும்
பருக பால் தயிர் குறைவு அற பெரும் பலன் படைத்தார்

மேல்
$1.9.4

#542
நான மெய் கமழ் வேத நாயகர் நமது இடத்தில்
ஆனதால் இவை பெற்றனம் என அகம் மகிழ்ந்து
வான் உலாவு வெண் புகழ் அபித்தாலிபு மன்னர்
தேன் உலாம் பொழில் சாமினில் செல கருதினரே

மேல்
$1.9.5

#543
வெள்ளி வெண் தகட்டு ஒளிர் நிலா எறித்த மேல் நிலைகள்
நள்ளிருள் களி சீத்து எறி மக்க மா நகரில்
கொள்ளும் பற்பல சரக்கு எவை அவை எலாம் கொண்டு
தெள்ளிதாகி தம் புற சரக்கறையையும் திறந்தார்

மேல்
$1.9.6

#544
ஏறு வாம் பரி ஒட்டையில் எடுத்தெடுத்து ஏற்றி
கூற வல்லவர் எவர் அவரவர்க்கு எலாம் கூறி
ஆறு அடுத்து ஒரு பொழில் புற விடுதியது ஆகி
ஊறு தேன் குழல் மனைவியர்க்கு இவை எலாம் உரைத்தார்

மேல்
$1.9.7

#545
சொன்ன வாசகம் கேட்டலும் முகம்மது துணுக்குற்று
என்னையும் கொடு ஷாமினுக்கு ஏகும் என்றி இசைப்ப
பொன்னும் நல் கதிர் மணியையும் போர்த்து எடுப்பவர் போல்
வன்ன வார் கழல் குரிசிலுக்கு உறு மொழி வகுத்தார்

மேல்
$1.9.8

#546
பாதை போவதும் வருவதும் எளிது அல பரல் காடு
ஏதம் உற்றது சுரத்திடை படும் இடர் கொடிது
காத நான்கினுக்கு ஒரு கரம் நீர் உறா கடும் கான்
வாதை மிக்கு உள வரும் மொழி மறும் என மறுத்தார்

மேல்
$1.9.9

#547
தந்தை சொல்லிய சொல்லினுக்கு அரிய கண் தரளம்
சிந்த நோக்கிய முகம்மது திரு முகம் நோக்கி
புந்தி நேர்ந்தனை தேற்றவும் தெளிந்திலை புகழோய்
எந்த ஆற்றினும் நின் பிரிந்து ஏகலன் என்றார்

மேல்
$1.9.10

#548
குல தட கிளை தாமரை குழுவினின் நாப்பண்
நலத்து உதித்து எழும் செழும் மணி நபிகள் நாயகத்தை
சிலை தட புயர் வருக என பணி பல திருத்தி
இலை தட கதிர் வேல் எடுத்து இனத்துடன் எழுந்தார்

மேல்
$1.9.11

#549
பார்த்திபன் அபூபக்கரும் பாதையர் பலரும்
ஏத்து மெய் புகழ் முகம்மதை சூழ்தர இயைந்து
மா தட கரி கூன் தொறு சுமை திசை மலிய
பூத்த தாமரை கழனி விட்டு அரு நெறி புகுந்தார்

மேல்
$1.9.12

#550
காறு நீங்கியே முகம்மது வருவது கண்டு
மாறு இலாத சந்தோடமும் ஒன்பதாம் வயதில்
தேறிலா மன சிறுவன் என்று எண்ணிய திடுக்கும்
ஊறு துன்பமும் இன்பமும் உடன்வர நடந்தார்

மேல்
$1.9.13

#551
மடங்கல் ஏறு அபீத்தாலிபு என்று ஓதிய மன்னர்
கடம் கொள் மும்மத கரி திரி வனத்தையும் கடந்து
சடங்கம் முங்கிய சடிலமும் இடபமும் சாய்த்தே
அடங்கலும் கொடு நடந்து ஒரு தலத்தினில் ஆனார்

மேல்
$1.9.14

#552
தக்கது ஓர் புசுறா எனும் தலத்தினில் சார
மிக்க பேரொளி வெய்யவன் மேல் திசை சார்ந்தான்
திக்கு எலாம் துதிசெயும் அபித்தாலிபும் செறிந்த
ஒக்கல் சூழ்தர இன் உயிர் புதல்வரோடு உறைந்தார்

மேல்
$1.9.15

#553
ஆங்கு இருந்தனர் விடிந்த பின் அ தலத்து ஒருவன்
ஓங்கு மும்மறை நுண் பொருள் அனைத்தையும் உணர்ந்து
தீங்கு இலாத முக்காலமும் தெளிந்து அறி திறலோன்
தாங்கும் இல்லறம் துறவறம் தெரிந்த மா தவத்தோன்

மேல்
$1.9.16

#554
நகையுறா உறூம் எனும் பகுத்து அறிவினை நாளும்
வகையுறா நசுறானிகள் குருக்களின் மதியோன்
புகையுறா எனும் பெயரினன் எ திசை புறத்தும்
பகையுறாத செம் மலர் முக முகம்மதை பார்த்தான்

மேல்
$1.9.17

#555
கண்டு நம் நபி மெய் எழில் இரு மலர் கண்ணால்
உண்டு தன் அகம் குளிர்தர உடல் எலாம் களிப்பு
கொண்டு வீங்கினன் மறையினில் கண்டதும் குலத்தோர்
பண்டு சொற்றதும் கேட்டதும் கனவினில் பயனும்

மேல்
$1.9.18

#556
வாய்ந்த முத்திரை குறியும் செம் கரங்களின் வனப்பும்
தோய்ந்து சீறடி படி உறா புதுமையும் சுடரால்
வேய்ந்த மெய்யின் மாசு அணுகாததும் விறலோன்
ஆய்ந்து நம் நபி இவர் என திடமுற அறிந்தான்

மேல்
$1.9.19

#557
அறிந்து உணர்ந்த பண்டிதன் அபித்தாலிபை அழைத்து
சிறந்த ஆதனத்து இருத்தி தன் செ இதழ் திறந்து
பிறந்த ஊர் குலம் நும் பெயர் இ பெரும் பெயரோடு
உறைந்த பிள்ளையின் பெயர் தெரிதர உரை என்றான்

மேல்
$1.9.20

#558
ஆதி மக்கம் ஊர் கிளை அதுனான் குலத்து ஆசீம்
ஓதும் யான் அபித்தாலிபு என் பின்னவன் உயிரின்
போத ரத்தினன் அப்துல்லா தரு திரு புதல்வன்
மா தவன் இவன் பெயர் முகம்மது என வகுத்தார்

மேல்
$1.9.21

#559
பை தட பணி நெளிதர விண் துகள் பரப்ப
மொய்த்த ஒட்டையும் இடபமும் முழக்கொடு நடத்தி
எ தலத்தினுக்கு ஏகுவிர் நீவிர் என்று இயம்ப
வித்தகர் பொழில் ஷாமினுக்கு என விளம்பினரே

மேல்
$1.9.22

#560
அரும்பு மென் மலர் தொடை திரள் புய அபித்தாலிபு
விரும்பி சாமினுக்கு எழுந்தனம் என உரை விளம்ப
தரும் பெரும் பயன் முகம்மதை சடுதியில் கூட்டி
திரும்பும் நும் மனை சென்ம் என உரைத்தனன் திறலோன்

மேல்
$1.9.23

#561
வெடித்த மென் மலர் தேனை உண்டு இன வெறி சுரும்பு
படித்த பாட்டு அயர் பொழில் திகழ் ஷாம் எனும் பதிக்கு
பிடித்து நோக்கிய சரக்குடன் எமை ஒரு பேச்சில்
அடித்தலம் புக உரைத்த சொல் என் என அறைந்தார்

மேல்
$1.9.24

#562
வாள் திறத்து அபித்தாலிபு நடுங்கி உள் வருந்தி
கேட்ட போதினில் புகையுறா எனும் மறை கிழவோன்
பூட்டும் வில் தட கர முகம்மது-தமை புகழ்ந்து இ
நாட்டின் மேல் வரும் காரணம் அனைத்தையும் நவில்வான்

மேல்
$1.9.25

#563
ஆதம் மக்கள்-தம் தலைமுறை ஐம்பதின் பின்னர்
சோதி மா நபி வருவர் இ நாள் என துணிந்து
பேதமற்று அவர் உரைத்ததும் கண்டதும் பெரியோன்
வேதம் சொற்றதும் இவர் அலால் பிறிது வேறு இலையே

மேல்
$1.9.26

#564
கொலை எகூதிகள் வல் நசுறானியின் குலத்தோர்
அலகு இல் கூட்டம் உண்டு அ பெரும் ஷாமினில் அடைந்தால்
தொலைவு இல் துன்பு உற அற கொடு வினையொடும் தொடர்வர்
கலைவது அன்றி நும் இடர் தவிர்த்திடுவதும் கடிதே

மேல்
$1.9.27

#565
நபியும் இங்கு இவர் அலது வேறு இலை இவண் நபிக்கு
தவறு எடுத்தவர் முடித்திட நினக்கினும் சாரா
நபியுமோ முதியவர் அல சிறுவர் ஆகையினால்
தவிரும் நும் பதி புகும் என உரைத்தனன் தவத்தோன்

மேல்
$1.9.28

#566
உரைத்த வாசகம் கேட்டு அபித்தாலிப் தம் உளத்தில்
பொருத்தம் ஈது என சம்மதித்திருக்கும் அ போதில்
திருத்து நம் நபிக்கு உறு பகை விளைத்திட சினந்து
நிரைத்து எகூதிகள் வந்து அடைந்தனர் சிலர் நெருங்கி

மேல்
$1.9.29

#567
அடர்ந்து வந்து நின்றவர் முக குறிப்பையும் அவரை
தொடர்ந்து மாயவன் சூழ்ச்சியும் கொடு மன துணிவும்
கடந்த வார்த்தையும் கண்டு பண்டிதன் அகம் கறுத்து உள்
இடைந்து நோக்கினன் தழல் கதிர் எழ இரு விழியால்

மேல்
$1.9.30

#568
கடுத்து நோக்கி அங்கு அவர் உளம் கலங்க கட்டுரைகள்
எடுத்துரைத்து நல் நபி-தமை வாழ்த்தும் என்று இசைத்து
விடுத்திர் நும் மன நினைவு என காபிர்கள் விரைவின்
அடுத்த வல் வினை துணிவை விட்டு அப்புறம் அகன்றார்

மேல்
$1.9.31

#569
ஈது அலால் நசுறானிகள் எண்ணில் ஒன்பதுபேர்
சீத மென் தடம் புனை புசுறாவினை சேர்ந்து
மா தவத்தினன் அற புற சாலையில் வந்து
கோது அற பணிந்து இரு கரம் சிரத்தினில் குவித்தார்

மேல்
$1.9.32

#570
வந்து கண்டவர்க்கு இன்புறு மொழி பல வழங்கி
எந்த ஊர் உளீர் எவ்விடத்து ஏகுவிர் நீர் என்று
அந்த மிக்கு உறு பண்டிதன் கேட்ட பின் அடைந்தோர்
சிந்தைகூர்ந்து தம் வரவினை எடுத்து உரைசெய்தார்

மேல்
$1.9.33

#571
அந்தமில்லவன் மும்மறை உணர்த்தியது அழகாய்
நம்-தம் மார்க்கமும் சமயமும் கெட நமர் நலிய
வந்து தோன்றுவர் நபி என முகம்மது இ வருடம்
இந்த மாதமில் சாமினுக்கு ஏகுவர் எனவே

மேல்
$1.9.34

#572
கோது இலா மறை உரைத்த சொல் உளத்தினில் குறித்து
சூத மென் பொழில் வளைதரு ஷாமினை சூழ்ந்த
பாதை நான்கினும் ஒற்றரை அனுப்பி இ பாதைக்கு
ஏதம் இன்றி நும்-பால் அடைந்தோம் என இசைத்தார்

மேல்
$1.9.35

#573
வடிவுறும் மறை உரைத்ததும் உளது மும்மறைக்கு
நெடியவன் நபி உதித்து இவண் வருவது நிசமே
படி அதிர்ந்திட நடந்து அலைந்து உலைந்து மெய் பதற
கடிதில் தேடியே திரிவது எ காரணம் என்றான்

மேல்
$1.9.36

#574
முதிய வேதியன் உரைத்தலும் பகை என முளைத்து
புதியதாய் நபி என வரில் அவரை விண் புகுத
சதிசெய்வோம் என வந்தனம் சரதம் என்று உரைத்தார்
மதி இலாது அறை இருளினும் இருண்ட புன் மனத்தார்

மேல்
$1.9.37

#575
நிறைமதி கதிர் என ஒரு நபியை இ நிலத்தில்
குறைவு_இலாதவன் விதித்தனேல் நீவிர் நும் குலத்துக்கு
இறைவர் கூடியும் இடர்செயும் கொடும் கொலை இருளால்
மறையுமோ மறையாது என உரைத்தனன் மறையோன்

மேல்
$1.9.38

#576
சுடிகை மன்னவர் குலத்து உறு தொல் மறை நபிக்கு
படியிடத்து இடர் நினைத்திடில் இம்மையில் பழியும்
குடிகுடி-தொறும் வழுவும் அலால் கொடு நரக
முடிவில் எய்துவர் என்றனன் நீதி நூல் முறையால்

மேல்
$1.9.39

#577
வானவர் முன்னினும் பின்னினும் சுற்றி எ வழிக்கும்
ஈனம் இன்றியே திரிகுவர் எண்ணிறந்தோர்கள்
ஆனதால் ஒரு தீங்கு இலை நபிக்கு என அறைந்தான்
ஞானம் ஊற்று இருந்து ஒழுகிட மொழிந்த செம் நாவால்

மேல்
$1.9.40

#578
வச்சிரத்தினில் எழுதிய எழுத்தினை மாற்ற
பச்சை மென் மலர் இதழ் கொடு துடைத்திடும் படி போல்
செச்சை முங்கிய புய நபிக்கு உறு கொலை செயவே
அச்சம் இன்றி நீர் துணிந்தது என்று அறைந்தனன் அறிவால்

மேல்
$1.9.41

#579
வேதவேதியன் உரைத்த நல் மொழி எலாம் விரைவில்
காதின் உள் புகுந்து எண்ணிய கருத்தினை கலக்க
பாதக பயன் யாம் நினைத்தவை என பயந்து
கோது அற தெளிந்தார் நசாறாக்கள்-தம் குலத்தோர்

மேல்
$1.9.42

#580
பொருந்து மா தவன் செம் மலர் பொருவு சேவடியில்
விரிந்த செம் கரம் கூப்பி உள் மன வினை வெறுத்து
தரும் தவ பயனும் மொழி என எதிர் சாற்றி
திருந்து நல் வழி கொண்டனர் அவரவர் திசைக்கே

மேல்
$1.9.43

#581
முன்னர் மா மறை முதியவன் சொற்ற பின் முறையாய்
இ நிலத்து எகூதிகள் சிலர் அடைந்ததும் இடராய்
வன்னிதா நசாறாக்கள் வந்ததுவும் உள்ளகத்தில்
உன்னினார் அபித்தாலிபு என்று ஒழுங்கு உறும் உரவோர்

மேல்
$1.9.44

#582
நல் நயம் பெறு முகம்மதை மக்க மா நகருக்கு
இன்னணம் விடுத்துதும் என எழில் அபித்தாலிப்
சொன்ன போழ்தினில் பண்டிதன் முக மதி துலங்கி
அன்னதே கருத்து ஆம் என களித்து அகம் மகிழ்ந்தான்

மேல்
$1.9.45

#583
வருதி என்று எழில் முகம்மதை தவிசில் வைத்து உயர்த்தி
திரிகையின் கனி மோதகத்தொடு சில எடுத்து
பரிவினில் கொடுத்து அணி மலர் அடியிடை பணிந்து
பொருவு இல் மக்க மா நகரினில் புகும் என புகன்றான்

மேல்
$1.9.46

#584
சிலை சுமந்து ஒளிர் புயத்து அபித்தாலிபு செழும் க
மலை குடிக்கு உறு மனை அபூபக்கரை வாழ்த்தி
நலன் உறும்படி முகம்மதை மக்க மா நகரிற்கு
அலைவு இல் நல் வழி கொடு சொலும் என அனுப்பினரே

மேல்
$1.9.47

#585
அண்ணலை செழும் மக்க மா நகரினுக்கு அனுப்பி
வண்ண வார் கழல் அடல் அபித்தாலிபு மறையின்
பண் அமைந்தவாய் முதியவற்கு இவை எலாம் பகர்ந்து
கண் அகல் பொழில் சாமினுக்கு எழுந்தனர் கடிதின்

மேல்
$1.9.48

#586
குன்றும் கானமும் அடவியும் சுரங்களும் குறுகி
பொன்றிலா புகழ் ஷாம் எனும் பதியிடை புகுந்தே
ஒன்றுநால் என வாணிப தொழில் முடித்து ஒடுக்கி
வென்றி கொண்டு எழுந்தனர் அதுனான் கிளை வேந்தர்

மேல்
$1.9.49

#587
எழுந்து ஷாம் எனும் பதியை விட்டு இரும் சுரம் கடந்து
பொழிந்த சாரலில் பொருப்பிடம் அனைத்தினும் பொங்கி
வழிந்து பாய்தரும் அருவியும் கண்டு உளம் மகிழ்ந்து
செழும் தடம் பொழில் மக்க மா நகரினை சேர்ந்தார்

மேல்
$1.9.50

#588
அற நெறிக்கு உயிராய் அபித்தாலிபும் அடுத்தோர்க்கு
உறு பொருள் கொடுத்து இரவலர்க்கு இன் அமுது ஊட்டி
இறைவன் நல் மறை முதியவர் வேட்டவை ஈய்ந்து
மறு இல் வண் புகழ் முகம்மதை இனிதொடும் வளர்த்தார்

மேல்
$1.9.51

#589
கான் அறை பொழில் சூழ்தர சிறந்த மக்காவில்
தானவன் அருள் தழைத்து எழு முகம்மது-தமக்கு
வானர் வந்து இரு செம் மலர் அடி இணை வருட
ஆன நல் வயது ஒரு பதினான்கு சென்றனவே

மேல்
$1.9.52

#590
அந்த நாளினில் மக்க மா நகரினை அடுத்து
வந்தது ஓர் படை கயிசு என வரும் பெரும் கூட்டம்
தம்தம் இல் விடுத்து அனைவரும் ஓரிடம் சார்ந்து
சிந்தை நொந்து வன் மறம் அற ஒடுங்கினர் திகைத்தே

மேல்
$1.9.53

#591
கலக்கமுற்றவர் எவரெவர் என சிலர் கடுத்து
நலக்கமுற்றிட பொருகுவம் யாம் என நவில்வார்
நிலைக்குமோ நிலையாது நம் படை என நிகழ்வார்
அலக்கழிந்து ஒரு மொழி உரைத்தனர் அனைவருமே

மேல்
$1.9.54

#592
சந்த மான்மதம் கமழ் புய அப்துல்லா தவத்தால்
வந்த பேரொளி வெற்றி வெம் புலி முகம்மதுவை
நம்-தம் ஊரவர் இன படையுடன் கொடு நடந்தால்
இந்த வல் வினை பகை இடர் தவிர்ந்திடும் எனவே

மேல்
$1.9.55

#593
நன்று நன்று என இபுனுசுத் ஆனு நம் நபியும்
துன்று வெம் படை தலைவரும் பரியுடன் சூழ
குன்று உலாவுகொள் அரி குல குறைஷிகள் நடந்து
சென்று தாக்கினர் கைசு எனும் படை தெறித்ததுவே

மேல்
$1.9.56

#594
தரு என தரும் உசைன் நயினார் தரு மதலை
திரு உலாவிய புயன் அபுல் காசிம் செம் கரத்தால்
பொருள் வரப்பெறுமவர் கலி உடைந்தது போல
வெருவி ஓடின கைசு எனும் படை மிடை மிடைந்தே

மேல்
$1.9.57

#595
மாறு கொண்ட கைசு எனும் படை தெறித்திட வயவர்
பேறு கொண்டனம் வெற்றியும் கொண்டனம் பெரியோன்
வீறு கொண்ட நன் முகம்மதின் பொருட்டு என வியத்தி
ஆறு கொண்டனர் ஊர் அடைந்தனர் அனைவருமே

மேல்
$1.9.58

#596
பண்டு நாள் தொடுத்து இற்றை நாள் வரைக்கும் அ படையை
கண்டு நாம் முறிந்தனம் அலால் வெற்றி கண்டு அறியோம்
வண்டு வாழ் மலர் தொடை புய முகம்மது வரலால்
கொண்ட வெற்றி போல் வெற்றி வேறு இலை என குறித்தார்

10 பாதை போந்த படலம்

$1.10.1

#597
குரை கடல் அனைய செல்வ குறைஷியின் குலத்து நாப்பண்
அரசிளங்குமரரான அப்துல்லா வரத்தில் வந்த
முருகு அவிழ் அலங்கல் திண் தோள் முகம்மது-தமக்கு சார்ந்த
திரு வயது இருபத்தைந்து நிறைந்தன சிறக்க அன்றே

மேல்
$1.10.2

#598
பேரறிவு எவையும் செம்மை பெருத்து ஒளிர் வனப்பும் வெற்றி
வீரமும் திறலும் உண்மை விளங்கும் வாசகமும் கல்வி
சாரமும் பொறையும் மிக்க தரும நல் குணமும் யார்க்கும்
வாரமும் முகம்மதின்-பால் வந்தடைந்து இருந்தது அன்றே

மேல்
$1.10.3

#599
பாரினில் அடங்கா விண்ணோர் பன்முறை பெரிதில் கூண்டு
சீர் உறை பாத காப்புற்று இருப்பது தெரிய காணார்
ஊரவர் போலும் தம் கைக்கு உறுபொருள் இன்மை எண்ணம்
காருறு கவிகை வள்ளல் கருத்தில் அங்கு உருத்தது அன்றே

மேல்
$1.10.4

#600
அகலிடத்து அடங்கா வெற்றி அப்துல் முத்தலிபு பெற்ற
புகழ் அபித்தாலிபு என்னும் புரவலர் தம்மை நோக்கி
துகள் அணு அணுகா மேனி சொரி கதிர் எறிப்ப திண்மை
முகம்மதின் அழகு பூத்த வாய் திறந்து உரைக்கலுற்றார்

மேல்
$1.10.5

#601
குடித்தன பெருமை சேர்ந்த குலத்தினுக்கு உயர்ந்த மேன்மை
படித்தலம் புகழும் செங்கோல் பார்த்திவர் ஆதல் தேய்ந்து
மிடித்தவர் பெரியர் ஆதல் மிகு புகழ் கிடைத்தல் கையில்
பிடித்திடும் பொருள் அது அன்றி பிறிது இலை உலகத்து அன்றே

மேல்
$1.10.6

#602
ஒருதனி பிறந்து கையின் உறுபொருள் இன்றி இந்த
பெரு நிலத்து இருந்து வாழ்தல் பேதமை அதனால் வண்மை
திரு நகர் ஷாமில் சென்று செய்தொழில் முடித்து வல்லே
வருகுவன் சிறியேன் உம்-தம் மனத்து அருள் அறியேன் என்றார்

மேல்
$1.10.7

#603
மகன் உரைத்தவையும் தங்கள் மனை வறுமையையும் எண்ணி
அகம் நினை அறிவு நீங்கி யாகுல கடலில் மூழ்கி
வகையுற தேறி செவ்வி முகம்மதின் வதன நோக்கி
நகு கதிர் முறுவல் செ வாய் திறந்து பின் நவிலலுற்றார்

மேல்
$1.10.8

#604
என் உயிர் துணைவன் ஈன்ற இளம் கதிர் பருதியே இ
நல் நிலத்து அரிய பேறே நம் குடி குலத்துக்கு எல்லாம்
பொன்னும் நல் மணியும் என்ன பொருந்து நாயகமே தேறா
ஒன்னலர்க்கு அரியே கேள் என் உளத்தினில் உற்றது அன்றே

மேல்
$1.10.9

#605
மன்றல் அம் துடவை சூழ்ந்த மக்க மா நகரில் வாழ்வோன்
தென் திசை வடக்கு மேற்கு கிழக்கு எனும் திக்கு நான்கும்
வென்றி கொள் விறலோன் செம்பொன் விழை தொழிலவருக்கு எல்லாம்
குன்றினில் இட்ட தீபம் குவைலிது என்னும் வேந்தன்

மேல்
$1.10.10

#606
இரு கரம் சேப்ப செம்பொன் இரவலர்க்கு ஈந்ததாலும்
அரிய மெய் வருந்த நாளும் அரும் தவம் புரிந்ததாலும்
கருதிய வரத்தினாலும் கதிர் உமிழ்ந்து ஒழுகும் பைம்பொன்
வரையினின் மணி கொம்பு என்ன வரும் ஒரு மகவை ஈன்றான்

மேல்
$1.10.11

#607
தேன் கடல் அமிர்தும் திக்கில் திகழ் வரை அமிர்தும் சூழ்ந்த
மீன் கடல் நடுவில் தோன்றும் வெண் மதி அமிர்தும் துய்ய
கூன் கட வளை ஆர் வெண் பால் குரை கடல் அமிர்தும் சோதி
வான் கடல் அமிர்தும் ஒன்றாய் வடிவெடுத்து அனைய பாவை

மேல்
$1.10.12

#608
பைம் கடல் உடுத்த பாரில் பல் மணி வரையில் தீவில்
செம் கதிர் கனக_நாட்டில் செழும் மணி மனைக்கு நாளும்
தங்கிய சுடரும் ஒவ்வா தனித்தனி அழகும் வாய்ந்த
மங்கையர்-தனை ஒப்பு என்ன வகுக்க நா வகுத்திடாதே

மேல்
$1.10.13

#609
குலம் எனும் விருக்கம் தோன்றி குழூஉ கிளை பணர் விட்டு ஓங்கி
நலன் உறு செல்வம் என்னும் நறும் தழை ஈன்று வண்ண
சிலை நுதல் பவள செ வாய் அனை எனும் செம் பொன் பூவில்
கலன் நனி நறவம் சிந்தும் கனியினும் கனிந்த பாவை

மேல்
$1.10.14

#610
இனம் எனும் சோலை சூழ்ந்த இகுளையர் எனும் வாவிக்குள்
புனை இழை அனையரான பொன் இதழ் கமல நாப்பண்
வனைதரு பதுமராக மணி மடி இருந்த செவ்வி
அனம் என விளங்கி தோன்று மணி அணி பாவை அன்னார்

மேல்
$1.10.15

#611
குரிசில் என்று உயர்ந்த வெற்றி குவைலிது அன்பு அரிதில் பெற்ற
அரிவை-தன் அழகு வெள்ளத்து அமுதினை இரு கண் ஆர
பருகுதற்கு இமையா நாட்டம் படைத்திலோம் என நாள்-தோறும்
தெரிவையர் உள்ளத்து எண்ணம் தேற்றினும் தேறாது அன்றே

மேல்
$1.10.16

#612
வானகத்து அமரராலும் மால் நில மக்களாலும்
தான் அவயவத்தின் செவ்வி-தனை எடுத்து இன்னது இன்ன
தான நன்கு உவமை என்ன அளவறுத்து உரைக்கவொண்ணா
தேன் மொழி கதிஜா என்னும் திரு பெயர் தரித்த பாவை

மேல்
$1.10.17

#613
வரு கலி வெயிலால் வாடும் மானுட பயிர்கட்கு எல்லாம்
பொருள் எனும் மாரி சிந்தி பூவிடத்து இனிது நோக்கி
அரு மறை மலருள் காய்த்த அறிவு எனும் கனியை உண்ட
திரு நமர் குல சஞ்சீவி செழும் கொழுந்து அனைய பூவை

மேல்
$1.10.18

#614
வணக்கமும் அறிவும் சேர்ந்த மனத்து உறும் பொறையும் நல்லோர்
இணக்கமும் வறியோர்க்கு ஈயும் இரக்கமும் நிறைந்த கற்பும்
குண கலை வல்லோராலும் குறித்து எடுத்து அவட்கு ஒப்பாக
பண கடு பாந்தள் பாரில் பகருதற்கு அரிய அன்றே

மேல்
$1.10.19

#615
மின் என ஒளி மறாத விளங்கு_இழை கதிஜா என்ன
மன்னிய பொருளின் செல்வி மனையகத்து இனி நாள்-தோறும்
இன் அணி நகர மாக்கள் யாவரும் இனிது கூற
பொன் நனி வாங்கி தேச வாணிபம் பொருந்த செய்வார்

மேல்
$1.10.20

#616
கலை தட கடலே எம்-தம் கண் இரு மணியே யாமும்
அலை தட கடல் கண் பாவை அணி மனை அடுத்து செம்பொன்
நிலைத்திட நினைத்து வாங்கி நெறி நெடும் தூரம் எல்லாம்
தொலைத்து இவண் புகுவம் வல்ல தொழில் முடித்திடுவம் என்றே

மேல்
$1.10.21

#617
தீனக குளம் தடாகம் திசை-தொறும் நிறைந்து தேக்க
வான் நதி பெருக்கை ஒப்ப வரு முகம்மதுவை நோக்கி
தூ நகை முறுவல் வாய் விண்டு உரைத்தனர் சொன்ன மாரி
யான் என உதவும் செம் கை அருள் எனும் கடலினாரே

மேல்
$1.10.22

#618
தரைத்தலம் புகழும் வெற்றி தட புயத்து அபித்தாலீபும்
உரைத்தவை அனைத்தும் தேர்ந்து முகம்மதும் உளத்தினூடு
வருத்தமும் சிறிது நேர மகிழ்ச்சியும் தொடர்ந்து தோன்ற
கருத்தினில் இருத்தி தாதை கழறல் சம்மதித்திருந்தார்

மேல்
$1.10.23

#619
குங்கும தடம் தோள் வள்ளல் குறித்திடும் கருத்தினூடு
செங்கயல் வரி கண் செ வாய் திருந்து_இழை கதிஜா என்னும்
மங்கை-தம் பெயரும் சித்திர வடிவும் நின்று உலவ மாறா
பொங்கு அறிவு அதனால் மூடி புந்தியின் மறைப்பது ஆனார்

மேல்
$1.10.24

#620
மம்மரை மனத்துள் ஆக்கி முகம்மது கதிஜா என்னும்
பெய் மலர் கொம்பே அன்ன பெண் மனைக்கடையில் சாரும்
அம் மறுகிடத்தில் போக்கும்வரத்துமதாகி வாச
செம் மலர் சுவடு தோன்றா திருவடி நடத்தல் செய்தார்

மேல்
$1.10.25

#621
இப்படி நிகழ் காலத்து ஓர் இளவல் மா மறைக்கு வல்லான்
மை படி கவிகை வள்ளல் வனப்பு இலக்கணமும் நீண்ட
கை படு குறியும் சேர்ந்த கதிர் மதி முகமும் நோக்கி
செப்பிடற்கு அரிய ஓகை திரு கடலாடினானே

மேல்
$1.10.26

#622
பெரியவன் தூதராக பிறந்து ஒரு நபி பிற்காலம்
வருகுவர் சரதம் என்ன மறை உணர் அறிவர் கூடி
தெரிதர உரைத்தது எல்லாம் இவர் என தேறும் வாளால்
இருள் அறுத்து உண்மையாய் உள் இருத்தினன் பெருத்த நீரான்

மேல்
$1.10.27

#623
கண்டவன் உளத்தினூடு கண்கொளா உவகை பொங்கி
கொண்டுகொண்டு எழுந்து சென்று குவைலிது மனையுள் ஆகி
வண்டு கண்படுக்கும் கூந்தல் மட மயில் கதிஜா என்னும்
ஒண்_தொடி திரு முன் முந்தி ஒதுக்கி வாய் புதைத்து சொல்வான்

மேல்
$1.10.28

#624
குவைலிது தவத்தின் பேறே குரை கடல் மணியே நீண்ட
புவியிடை அமுதே பொன்னே பூவையர்க்கு அரசே என்-தன்
செவியினில் பெரியோர் கூறும் செய்தியால் தேர்ந்து தேர்ந்த
கவினுறும் புதுமை இ நாள் கண்டு கண் களித்தேன் என்றான்

மேல்
$1.10.29

#625
வன் மன நஸ்றா என்ன வரு பெரும் குலத்தில் தோன்றி
பன்முறை மறைகள் தேர்ந்த பண்டிதன் முகத்தை நோக்கி
நின் மனம் தேற கண்ட புதுமையை நினைவு அறாமல்
சொன்ம் என மயிலே அன்னார் சொற்ற பின் அவனும் சொல்வான்

மேல்
$1.10.30

#626
முல்லை வெண் நகையாய் தொல் நாள் முறைமுறை மறைகள் எல்லாம்
வல்லவர் தெளிந்த மாற்றம் மக்க மா நகரில் பின் நாள்
எல்லையில் புதுமையாய் ஓர் இளவல் வந்துதித்து பாரில்
பல்லரும் தீனில் ஆக பலன் பெற நடக்கும் என்றும்

மேல்
$1.10.31

#627
ஈறு_இலான் நபியாய் தோன்றும் எழில் முகம்மது-தம் மெய்யில்
மாறு இலா கதிர் உண்டாகி மான்மதம் கமழும் என்றும்
சேறில் ஆங்கு அகிலம் மீதி திருவடி தோயாது என்றும்
கூறு இலா பிடரின் கீழ்-பால் குறித்து இலாஞ்சனை உண்டு என்றும்

மேல்
$1.10.32

#628
வியன் உறு புறுக்கான் என்னும் வேதம் ஒன்று இறங்கும் என்றும்
குயில் மொழி பவள செ வாய் கொடி இடை கரும் கண் பேடை
மயிலினை இந்த ஊரில் மணம் முடித்திடுவர் என்றும்
நயன் உற கேட்டேன் இன்று என் நயனங்கள் குளிர கண்டேன்

மேல்
$1.10.33

#629
முன்னுணர்ந்தவரை கேட்டும் முதலவன் மறைகள் தேர்ந்தும்
நின்னை ஒப்பவரும் இல்லையாகையால் நினது-பால் அ
மன்னை விண்ணப்பம் செய்தேன் முகம்மதை விளித்து நோக்கும்
பொன் அனீர் என்ன போற்றி புகழ்ந்தனன் நெகிழ்ந்த நெஞ்சான்

மேல்
$1.10.34

#630
கலை_வலான் உரைத்த மாற்றம் கேட்ட பின் கதிஜா என்னும்
சிலை_நுதல் தெளிய தேர்ந்து ஓர் செவ்வியோன்-தன்னை கூவி
அலகு இல் வண் புகழ் சேர் வள்ளல் அகுமதை இனிதில் கூட்டி
தலைவ நீ வருக என்ன தாழ்ச்சி செய்து எழுந்து போந்தான்

மேல்
$1.10.35

#631
ஏவல் என்று உரைத்த மாற்றம் இடையறாது ஒழுகி செய்யும்
காவலன் அபித்தாலீபு கடைத்தலை கடந்து சென்று
பா அலம்பிய செம் நாவார் பன்முறை வழுத்த போதா
மேவலர்க்கு அரி ஏறு என்னும் முகம்மதை விரைவில் கண்டான்

மேல்
$1.10.36

#632
கண்டு கண் களித்து உள் அஞ்சி கர கமலங்கள் கூப்பி
ஒண்_தொடி கதிஜா என்னும் ஓவியம் உரைத்த மாற்றம்
விண்டு விண்ணப்பம் செய்தான் விரை கமழ் அலங்கல் திண் தோள்
கொண்டல்-தன் செவியும் நெஞ்சும் குறைவு அற குளிர அன்றே

மேல்
$1.10.37

#633
கூறிய கூற்றை கேட்டு குறித்துள கருமம் இன்று
மாறு இலாது அடைந்தது என்ன முகம்மது மனத்தில் உன்னி
தேறி அங்கு எழுந்து போந்தார் தேனினும் மதுரம் மாறாது
ஊறிய தொண்டை செ வாய் ஒள்_நுதல் மனையில் அன்றே

மேல்
$1.10.38

#634
சித்திர வனப்பு வாய்ந்த செம்மல்-தன் வரவு நோக்கி
பத்திர கரும் கண் செ வாய் பைம் தொடி பதுமராக
முத்து அணி நிரைத்த பீடம் முன்றிலில் காந்தள் கையால்
வைத்து இவண் இரும் என்று ஓத முகம்மது மகிழ்ந்து இருந்தார்

மேல்
$1.10.39

#635
எரி மணி தவிசின் மேல் வந்திருந்த லக்கணமும் பொற்பும்
திரு உறை முகமும் அன்பு திகழ்தரும் அகமும் கண்ணும்
விரி கதிர் பரந்த மெய்யும் விறல் குடியிருந்த கையும்
மரு மலர் வேய்ந்த தோளும் மணி திரண்டு அனைய தாளும்

மேல்
$1.10.40

#636
பேரொளி பரப்பி பொங்கி பெருகிய அழகு வெள்ள
சார்பினில் கதிஜா என்னும் தையல்-தன் கரிய வாள் கண்
கூர் உடை கயல்கள் ஓடி குதித்தன குளித்து தேக்கி
வாரிச வதனம் சேர்ந்து மறுக்கமுற்று இருந்த அன்றே

மேல்
$1.10.41

#637
பார்த்த கண் பறித்து வாங்கப்படாமையால் நறவம் சிந்த
பூத்த கொம்பு அனைய மெய்யின் நாண் எனும் போர்வை போர்த்து
கூர் தவா வெளிப்படாமல் கற்பு எனும் வேலி கோலி
சேர்த்த தம் உளம் காணாது திருந்து_இழை வருந்தி நின்றார்

மேல்
$1.10.42

#638
மெய் மொழி மறைகள் தேர்ந்த பண்டிதன் விரைவின் வந்து
மொய் மலர் கதிஜா செவ்வி முழுமதி வதனம் நோக்கி
செய் தவ பலனே அன்ன வள்ளலை திரு மனைக்கே
எய்துதற்கு அருள்செய்வீர் என்று எடுத்து உரை விடுத்து சொன்னான்

மேல்
$1.10.43

#639
விரும்பிய காம நோயை வெளிவிடாது அகத்துள் ஆக்கி
அரும்பு இள முறுவல் செ வாய் அணி மலர் இதழை விண் தோய்
இரும் புகழ் தரித்த வெற்றி முகம்மதை இனிதின் நோக்கி
அரும் பெரும் தவமே நும்-தம் மனையிடத்து எழுக என்றார்

மேல்
$1.10.44

#640
காக்குதற்கு உதித்த வள்ளல் காரிகை வடிவை கண்ணால்
நோக்கியும் நோக்காதும் போல் நொடியினில் எழுந்து அ மாதின்
மா கடல் அனைய கண்ணும் மனமும் பின்தொடர்ந்து செல்ல
கோ குல வீதி நீந்தி கொழும் மனையிடத்தில் சார்ந்தார்

மேல்
$1.10.45

#641
மடங்கல் ஏறு அனைய செம்மல் மனையில் வந்து இருந்த போழ்தே
படம் கொள் பூதலத்து இராச பதவியும் பெரிய வாழ்வும்
இடம் கொள் வானகத்தின் பேறும் எளிதினில் நும்-பால் செல்வம்
அடங்கலும் அடைந்தது இன்று என்று அறைந்து பண்டிதன் அகன்றான்

மேல்
$1.10.46

#642
தெரிந்து உணர்ந்து அறிந்தோர் மாற்றம் சிறிதெனும் பழுது வாரா
விரிந்த நூல் உரையும் பொய்யா விளங்கு ஒளிர் வடிவது ஆக
இருந்தவர் நபியே யாமும் இவர் மனைவியரே என்ன
கரும் தடம் கண்ணார் உள்ள கருத்தினில் இருத்தல்செய்தார்

மேல்
$1.10.47

#643
படியினில் சசியும் செம் கேழ் பரிதியும் நிகர் ஒவ்வாத
வடிவெடுத்து அனைய வள்ளல் முகம்மதின் நெஞ்சம் என்னும்
கடி கமழ் வாவியூடு கருத்து எனும் கமல நாப்பண்
பிடி நடை கதிஜா என்னும் பெடை அனம் உறைந்தது அன்றே

மேல்
$1.10.48

#644
தம் மனத்து உறைந்த காதல்-தனை வெளிப்படுத்திடாமல்
செம்மலும் இருந்தார் மற்றை சில பகல் கழிந்த பின்னர்
மும்மதம் பொழியும் நால் வாய் முரண் கரி அபித்தாலீபு
விம்மித புயம் பூரிப்ப மைந்தனை விளித்து சொல்வார்

மேல்
$1.10.49

#645
தெரிதர தெளிந்த சிந்தை தே_மொழி கதிஜா-பாலில்
விரைவினில் சென்று செம்பொன் விளைவுற சிறிது கேட்போம்
அருளொடும் ஈந்தாரென்னில் அதற்கு உறு தொழிலை காண்போம்
வரையறவு இலை என்று ஓதில் வருகுவம் வருக என்றார்

மேல்
$1.10.50

#646
உரைத்திடும் தந்தை மாற்றம் செவி உற உவகை பொங்கி
விரை தகா குழல் கதீஜா மெல்_இழை நினைவு நெஞ்சும்
பொருந்திய அகத்தினூடு புக்கிட திரு வாய் விண்டு
கரைத்தனர் நாளை காண்போம் கருதிய கருமம் என்றே

மேல்
$1.10.51

#647
மரு கொள் பூதர புய நபி முகம்மது மனையிடை மகிழ் கூர
இருக்கும் எல்லையில் எல்லவன் புகுந்து இரவு இருள் பரந்திடு காலை
கருக்கு மை விழி துயில்தரு பொழுது ஒரு கனவு கண்டனர் நூலில்
சுருக்கு நுண் இடை பொலன் தொடி திருந்து இழை சுடர் மணி கதிஜாவே

மேல்
$1.10.52

#648
நிறையும் வானகம் அலர்தரும் உடு இன நிரை விடுத்து எளிதாக
கறை இலா கலை முழுமதி மடி மிசை கவினொடு விளையாட
மறைவு இலாது கண்டு அணி துகில் கொடு தனி மகிழ்வொடு பொதிவாக
குறைவு இல் ஆதுரத்துடன் அணைக்கவும் அகம் குளிரவும் மிக தானே

மேல்
$1.10.53

#649
கண்ட காரணம் ஆதுலன் என வரு கலை_வலனொடு கூற
விண்டு கூர்த்திட பார்த்தனன் தெளிந்து இவர் விரை மலர் முகம் நோக்கி
வண்டு உலாம் புய நபி உனை இதமுற மணம் முடித்திட நாடி
கொண்டதாம் இது என்று ஓதிட உடலம் குளிர்ந்திருந்திடும் நேரம்

மேல்
$1.10.54

#650
மதுமம் ஆர்த்து எழு புய அபித்தாலிபும் முகம்மது நயினாரும்
விதுவும் சேட்டு இளம் பருதியும் கலந்து உடன் விரைவொடு தெருவூடே
புதுமையாய் நடந்து அணி நிலவு எறித்திட புனை_இழை கதிஜா-தம்
சுதை கொள் மண்டப மணிக்கடை புகுந்தனர் துணை விழி களி கூர

மேல்
$1.10.55

#651
இருவரும் வர கண்டனர் எழுந்திருந்து இணை மலர் அடி போற்றி
சொரியும் மென் கதிர் ஆதனத்து இருத்தி நம் தூய் மலர் பதம் நோவ
அரிதில் வந்தது என் புன்மொழி சிறியவர் அறிவிலர் மனை தேடி
தெரிய கூறும் என்று அஞ்சி நின்று உரைத்தனர் தே_மொழி கதிஜாவே

மேல்
$1.10.56

#652
இந்த மா நிலத்து ஒரு நிதியே எனது இரு விழி மணியே கேள்
சுந்தர புயன் அப்துல்லா எனது உறுதுணை உயிர்க்குயிரான
மைந்தர் இங்கு இவர் மனத்து இருள் கெட ஒரு மணம் முடித்திட நாடி
சிந்தை நேர்ந்து இவண் அடைந்தனர் உமது உரை திருவுளம் அறியேனே

மேல்
$1.10.57

#653
சிறிது பொன் எனதிடத்தினில் அளித்திடில் தேசிகருடன் கூடி
உறுதி ஷாமினுக்கு ஏகி இங்கு அடைகுவன் உமது அருள் உளதாகில்
வறியவர்க்கு ஒரு மணம் நிறைவேறிடும் மட மயில் அனையாய் ஈது
அறுதி இல் எனில் அதுவும் நன்று என அபித்தாலிபும் உரைத்தாரே

மேல்
$1.10.58

#654
நிரைத்த செ வரி பரந்த கண்கடை மயில் நிசம் என அபித்தாலிபு
உரைத்த வார்த்தையும் தன் மன கருத்தையும் உடன்படுத்திட நோக்கி
திரை தடத்து அலர் மரை என முக மலர் செறிதர துயர் கூரும்
வருத்தம் இல் நினைவின்படி முடிந்து என மனத்திடை களித்தாரே

மேல்
$1.10.59

#655
பூதரம் பொரு புயத்து அபித்தாலிபு புளகு எழு முகம் நோக்கி
மா தவத்தின் என் பொருள் உளது எவையும் நின் மனை பொருள் எளியேனும்
ஆதரத்து உறு மொழி வழி நடப்பதற்கு ஐயுறேல் என போற்றி
காதலித்து உரைத்தார் விரை தார் குழல் கனி மொழி கதிஜாவே

மேல்
$1.10.60

#656
இனிய வாசகம் இரு துளை செவி புக இதய மென் மலர் போத்த
துனி பறந்தன உவகையும் பிறந்தன துணை வரை புயம் மீற
தனியன் நம்-வயின் இனும் சில பெறு பொருள் தருகுவன் என போற்றி
வனச மென் மலர் முகம் மலர்ந்து இருந்தனர் மருவலர் அரி ஏறே

மேல்
$1.10.61

#657
கொடுவரி பதத்து உகிர் முனை அரிந்து என கோதில் வெண் நறு வாசத்து
அடிசிலும் அறுசுவை பொரிக்கறிகளும் அமுதொடு செழும் தேனும்
வடி நறா உடைந்து ஒழுகும் முக்கனியுடன் மதுர மென் மொழி கூறி
இடு விருந்து அளித்தார் இருவருக்கும் ஓர் இளம் கொடி மட மானே

மேல்
$1.10.62

#658
அனம் அருந்திய அரசர்கள்-தமை மணி ஆசனத்து இனிது ஏற்றி
நனைதரும் துவர்க்காய் இலை பாளித நறும் புகை மலர் சாந்தம்
புனையும் மென் துகில் கஞ்சுகி சிரத்தணி போல்வன பல ஈந்து
சினவு வேல்_விழி பொருள் கொடு வருக என உரைத்தனர் திரு வாயால்

மேல்
$1.10.63

#659
ஆடகம் கொணர்க என்றலும் வான் தொடும் அறையினில் சிலர் ஓடி
மூடு பெட்டகம் திறந்தனர் கொணர்ந்தனர் குவித்தனர் முறையாக
நீடு இலக்க நூறாயிரத்து ஒன்பதினாயிரம் நிறை தேர்ந்த
மாடை தான் எடுத்து ஈய்ந்திட கொண்டனர் முகம்மது நயினாரே

மேல்
$1.10.64

#660
கொடுத்த தங்கம் அலால் பெரும் ஷாம் என குறித்திடும் திசைக்கு ஏற்க
எடுத்த நல் சரக்கு ஒட்டையின் பொதி இருநூறொடு திரளாக
விடுத்து அக பரிவாரத்தில் உரியவர் விறல் கெழு வயிர வீரம்
தொடுத்த நெஞ்சினர் இருபது பெயரையும் தொகுத்தனர் மட_மானே

மேல்
$1.10.65

#661
வடிவுறும் திரள் தாள்களும் இரு புறம் வகிர்தரு மயிர் வாலும்
நெடுகி கட்டு உரத்து இறுகிய கண்டமும் நிமிர்ந்த மெய்யுறு கூனும்
நடையில் ஓர் பகற்கு ஒரு பதின் காவதம் நடந்திடும் திடத்தாலும்
கடிய ஒட்டை ஒன்று எழில் நபிக்கு அளித்தனர் கரி அமை விழி மானார்

மேல்
$1.10.66

#662
மல் அலம்பிய புய முகம்மது நபி மனத்தினின் மகிழ் கூர
செல் அலைந்திட பொழிதரு கரம் மிசை செழும் கதிர் வடி வேலும்
மெல்லவன் கதிர் மறைதரு குற்றுடைவாளொடும் இனிது ஈந்தார்
வில்லின் மேல் பிறை தோற்றியது என நுதல் விளங்கிய மட_மானே

மேல்
$1.10.67

#663
இவை எலாம் நபிக்கு அளித்த பின் ஏவலின் இயலுறு மைசறாவை
நவை அற தமது அருகினில் இருத்தி வெண் நகை மலர் முகம் நோக்கி
புவியில் நின்னிலும் எனக்கு உரியவர் இலை பொருளும் நின் பொருளேயாம்
அவயவம்-தனை காப்பவர் போல் நபிக்கு அடுத்து இனிது உறைவாயே

மேல்
$1.10.68

#664
ஏகும் பாதையில் பண்டிதன் ஒருவன் உண்டு இயல் மறை வழி தேர்ந்த
வாகன் எம் இனத்தவரிலும் உரியவன் மகிழ்ந்து அவனிடத்து ஏகி
நீ கருத்துடன் எனது சலாமையும் நிகழ்த்தி நள்ளிருள் போது
மோகமுற்று யான் கண்டிடும் கனவினை மொழி என மொழிவாயே

மேல்
$1.10.69

#665
பாதை உற்றிடும் செய்தியும் இவர்க்கு இடர் பணித்தவர்-தமக்கு ஆன
வாதை உற்றிடு வருத்தமும் காரண தொகுதியும் வனம் சார்ந்த
போதினில் பெரும் புதுமையும் இங்கு இவர் பொறுமையும் நகர் சேர்ந்து
சூதர்-தம்மொடும் இருப்பதும் இனம் என சூழ்ந்தவர் வரலாறும்

மேல்
$1.10.70

#666
இற்றை நாள் தொடுத்து அ நகர்க்கு ஏகி இங்கு இவண் புக வரும் நாளை
அற்றை நாளைக்கும் கண்டிடும் காரணம் அனைத்தையும் தொடராக
ஒற்றர் தம்-வயின் எழுதி இங்கு அனுப்பி என் உறு விழி மணி போலும்
குற்றம் இல்லது ஓர் நபியுடன் வருக என உரைத்தனர் குல மாதே

மேல்
$1.10.71

#667
இ திறத்து உரை பகர்ந்தனர் அழகு ஒளிர் இள_மயில் முகம் நோக்கி
மத்தக கட கரி முகம்மதின் எழில் மலர் அடி இணை போற்றி
உத்தரப்படி பணிகுவன் அவரை என் உயிரினும் மிக காத்து
முத்திரைப்படி வருகுவன் காண் என மொழிந்து அடி பணிந்தானே

மேல்
$1.10.72

#668
முருகு உலாம் குழல் மயில் அபித்தாலிபு முழுமதி முகம் நோக்கி
அரசர் நாயக நின் மனைக்கு எழுக என உரைத்தலும் அவர் போந்தார்
பரிசனங்களும் வணிகரும் சூழ்தர பாத மென் மலர் பாரில்
தெரிதரா முகம்மது நபி யாத்திரை திரளொடும் எழுந்தாரே

மேல்
$1.10.73

#669
கூன் தொறு-தொறும் பொதி எடுத்து ஏற்றிய குழுவிடை நயினாரும்
ஏன்ற தம் இரு கரத்தினும் பொதி இரண்டு எடுத்தெடுத்து இனிது ஏற்றி
சான்ற பேர்கள் தம் மனத்து அதிசயமுற தையல்-தன் மனை நீங்கி
தோன்றல் தோன்றினர் அணி மணி மறுகிடை சுடர்விடு மதியே போல்

மேல்
$1.10.74

#670
அரும் தவத்து அபூபக்கரும் சுபைறுடன் ஆரிதும் அப்பாசும்
திருந்திலா மனத்து அபுஜகிலொடும் கலை தெரிதரும் மைசறாவும்
பொருந்த கூடிய மாக்களும் இடபமும் புரவியும் துகள் ஆர்ப்ப
வருந்திலா பெரு வாழ்வு கொண்டு உறைதரும் வள நகர் புறத்து ஆனார்

மேல்
$1.10.75

#671
ஊறு நீர் தட கரைகளும் குட்டமும் ஓடையும் மலர் காடும்
தேறல் தூற்றிய சோலையும் அரம்பையின் திரளிடை பழ காடும்
கூறுகூறு கொண்டிடு கிடங்கிடை சிறு கொடி இலை கொடிக்காலும்
சாறு கொண்டு எழும் ஆலையும் கன்னல் அம் சாலையும் கடந்தாரே

மேல்
$1.10.76

#672
கடந்து காவதம் நடந்து ஒரு பொழிலிடை காளைகள் அனைவோரும்
இடம்பெற திரண்டு இறங்கி அங்கு உறைந்தனர் இருள் பொழுதினை போக்கி
விடிந்த காலையின் முன்னிலை எவர் என விளம்பினர் அவரோடும்
அடைந்த பேர்களின் முகம்மது முதல் என அபூபக்கர் அறைந்தாரே

மேல்
$1.10.77

#673
முகம்மது என்று உரை கேட்டலும் அபுஜகில் மனத்திடை தடுமாறி
மிக முனிந்தனன் இவர்-தமை முன்னிலை விலக்குவது உனக்கு ஆகாது
இகழ் என பலர் கூறவும் கேட்டிலன் இதற்கு முன்னிலை யான் என்று
அகம் மகிழ்ந்திட நடந்தனன் கெடுமதி அடைவதும் அறியானே

மேல்
$1.10.78

#674
ஒட்டை மீதினில் வரும்பொழுது அ வழி ஓரிடத்து இடையூறாய்
கட்டை தட்டிட ஒட்டையும் சாய்ந்து ஒரு கவிழொடு தலைகீழாய்
முட்டி வீழ்ந்தனன் குமிழினும் வாயினும் முழு பெருக்கு என சோரி
கொட்டினான் எழுந்தான் அபுஜகில் எனும் கொலை மன கொடியோனே

மேல்
$1.10.79

#675
உதிரம் கொப்பிளித்து முகம் அழிந்து உடைந்தான் முகம்மதை உறுதிகேடாக
நிதம் உரைத்ததனால் அபுஜகில் இனமும் நிலைகுலைந்திடுவது நிசம் என்று
அதிர்தர உரைத்து பல்லரும் கூண்டு இ ஆற்றிடை முன்னிலையானோன்
மதுர மென்_மொழியான் உத்துபா அலது மறுத்து எவர் உளர் என தேர்ந்தார்

மேல்
$1.10.80

#676
கூறும் மென்_மொழியான் உத்துபா என்னும் குரிசில் பின் யாவரும் நடந்து
தூறு அடை நெறியும் சிறு பரல் திடரும் தொலைத்திடும் காலையில் ஆங்கு ஓர்
மாறுகொண்டு எழுந்து குயவரி சினந்து வருவது கண்டு உடல் கலங்கி
ஆறிடை வீழ்ந்தான் முன்னிலை இளவல் அனைவரும் பயந்திட அன்றே

மேல்
$1.10.81

#677
நிலம் மிசை கலங்கி உத்துபா வீழ நெடுங்கழுத்தலை வரி வேங்கை
அலைபட பிடித்து அங்கு அடவியின் அடைய அருக்கனும் குட புலத்து அடைந்தான்
செல நெறி தெரியும்தெரிகிலாது என்ன திசைதிசை நிறைந்தது திமிரம்
பலபல வருக்க சரக்கு எலாம் இறக்கி படு பரல் பாதையில் உறைந்தார்

மேல்
$1.10.82

#678
ஆய்ந்த பேர் அறிவர் பசிக்கு இடர் தவிர்த்து அங்கு அவரவர் சார்பினில் சார்ந்தார்
வாய்த்த பேர் எழிலார் முகம்மதும் துயின்றார் மாகம் மட்டு எண் திசை கவிய
வேய்ந்த வல் இருளில் அடிக்கடி வெருவி விடுதியின் நடுவு உறைந்து அவணில்
சாய்ந்திடாது இரு கண் தூங்கிடாது இருந்தான் தருக்கினால் வெரு கொளும் மனத்தான்

மேல்
$1.10.83

#679
அலரி வெண் திரை மேல் எழுந்தனன் கீழ்-பால் அனைவரும் எழுக என்று எழுந்தார்
நிலைதளர்ந்திருந்த உத்துபா என்போன் நெறியின் முன்னிலை நடப்பதற்கு ஓர்
தலைவரை வேறு நிறுத்தும் என்று உரைத்த தன்மை கேட்டு அனைவரும் பொருந்தி
இலை மலி வேலான் ஆசு எனும் குரிசின் முன்னிலை என எடுத்து இசைத்தார்

11 சுரத்திற் புனலழைத்த படலம்

$1.11.1

#680
முன்னிலையாக நடந்திட நடந்து முதிர் அடவிகள் கடந்ததன் பின்
தன்னிகரில்லான் திருவுளப்படியால் தரையினில் ஜிபுறயீல் இறங்கி
இ நிலத்து எவர்க்கும் தெரிகிலாவண்ணம் இளம் பிடி ஒட்டை ஒன்று எளிதாய்
பன்ன அரும் பாதை தலை தடுமாற பண்பொடு கொடு நடத்தினரே

மேல்
$1.11.2

#681
மட்டு அவிழ் புயத்தான் ஆசு முன் நடத்திவந்த ஒட்டகம் புதுமையதாம்
பெட்டை ஒட்டகத்தை கண்டு பின் தொடர பிசகினது அரு நெறி கானில்
செட்டு அரும் எருதும் புரவியும் இடைந்து சிறுநெறி-வயின் வெகு தூரம்
எட்டி முன் நடப்ப சிறுநெறி குறுகி இருந்ததும் தேய்ந்துபோயதுவே

மேல்
$1.11.3

#682
ஆசு எனும் அரசன் ஒட்டக கயிற்றை அசைத்திடும் திசை எலாம் நடப்ப
வாசியும் எருதும் கூன் தொறு தொகையும் வழி கெட தனித்தனி மறுக
தேசிகர் கலங்கி யாம் இதற்கு என்-கொல் செய்குவது என மனம் இடைந்து
வீசிய கானல் சுடச்சுட கருகி விடர் விடும் பாலையில் அடைந்தார்

மேல்
$1.11.4

#683
பின்னிய திரை வாருதியினை சுவற்றி பெரும் புற கடலினை தேக்கி
தன் அகம் களித்து வடவையின் கொழுந்து தனி விளையாடிய தலமோ
பன்ன அரும் தென்கீழ்_திசையினன் திரண்ட படையொடும் இருந்த பாசறையோ
உன்னத ககனம் முகடு அற உருக்கும் உலை-கொலொ என அறிகிலமால்

மேல்
$1.11.5

#684
பருந்து இருந்து எழுந்து பறந்த சில் நிழலும் பற்று அறா கானலில் தேய்ந்த
கரிந்து இலை தோன்றாது ஒவ்வொரு விருக்கம் கணங்களின் குலம் என தோன்றும்
எரிந்து எரி மேய்ந்து கரிந்து விண்ணிடம் காந்திடும் தரை ஒரு துளி நீரும்
அருந்திட கிடையாது அலகைகள் திரிந்து அங்கு ஆள்வழக்கு அற்ற வெம் கானம்

மேல்
$1.11.6

#685
பாலை என்று உலர்ந்த செம் நில கானல் பரப்பினை புனல் என ஓடி
சாலவும் இளைத்து தவித்து உழை இனங்கள் தனித்தனி மறுகிய மறுக்கம்
மால் உளர்ந்து இருண்ட புன்மன சிறியோர் மருங்கினில் இரந்து இரந்து இடைந்து
கால் அற தேய்ந்த பல கலை மேலோர் கருத்தினில் வருத்தம் ஒத்தனவே

மேல்
$1.11.7

#686
கள்ளியின் குலங்கள் வெந்து ஒடுங்கின வேர்க்கட்டையின் உள் துளை கிடந்து
புள்ளி பூத்திருந்த பை தலை பாந்தள் புறம் திரிந்து உறைந்திடாது இறந்து
முள் எயிறு ஒதுங்கி செம் மணி பிதுங்கி முளை-தொறும் கிடப்பதை செறிந்த
கொள்ளி இந்தனங்கள் என்று உழை குலங்கள் குறுகிட பயந்து கால் மறுகும்

மேல்
$1.11.8

#687
மூவிலை நெடு வேல் காளி வீற்றிருப்ப முறைமுறை நெட்டு உடல் கரும் பேய்
ஏவல்செய்து உறைவது அலது மானிடர் காலிடுவதற்கு அரிது செம் நெருப்பு
தாவி எ பொருப்பும் கரிந்தன சிவந்து தரை பிளந்தது அதில் பிறந்த
ஆவியோ எழுந்த புகை பரந்ததுவோ அற கொடும் கானல் என்பதுவே

மேல்
$1.11.9

#688
சேந்து எரி பரந்த பாலையில் புகுந்து செல் நெறி சிறிதும் தோன்றாமல்
காந்து எரி கதிரோன் எழு திசை தெற்கு வடக்கு மேற்கு எல்லை காணாமல்
மாந்தரும் மாவும் திசை தடுமாறி வாயில் நீர் அற உலர்ந்து ஒடுங்கி
ஏந்து எழில் கருகி மனமுடைந்து உருகி எரிபடு தளிரை ஒத்திடுவார்

மேல்
$1.11.10

#689
மன்னவன் ஆசு முன் நடந்து அதற்கு ஓர் வல் வினை பின்தொடர்ந்ததுவோ
இன்னை நாள் அகிலம் அடங்கலும் தழலால் எரிபடு காரணம் தானோ
முன்னை நாள் விதியோ நகரை விட்டு எழுந்த முகுர்த்தமோ பவங்கள் முற்றியதோ
பன்னுதற்கு எவை என்று அறிகுவோம் கொடியேம் பாலையில் படும் வரலாறே

மேல்
$1.11.11

#690
பாடுறு புனல் அற்று ஒவ்வொரு காதம் படு பரல் பரப்பு நால் திசைக்கும்
ஓடுவர் திரும்பி மீள்குவர் அடி சுட்டு உச்சியும் வெதுப்புற உலர்ந்து
வாடுவர் துகில் கீழ் படுத்தி ஒட்டகத்தின் வயிற்றிடை தலை நுழைத்திடுவார்
தேடிடும் பொருட்கோ உயிர் இழப்பதற்கோ செறிந்து இவண் அடைந்தனம் என்பார்

மேல்
$1.11.12

#691
ஓங்கிய உதய கிரி மிசை எழுந்த மதி என ஒட்டகை-அதன் மேல்
வீங்கிய புயமும் கரத்தினில் அயிலும் வெண் முறுவலும் அலர் முகமும்
பாங்கினில் குளிர்ந்த வெண் கதிர் பரப்ப பரிமள மான்மதம் கமழ
தூங்கு இசை மறை தேர் முகம்மதும் பாலை துன்புறாது இன்பமுற்றனரே

மேல்
$1.11.13

#692
பாலையில் அடைந்து பசியினால் இடைந்து பலபல வருத்தமுற்றதுவும்
வேலை வாருதி போல் வழி பிழைத்ததுவும் விழுந்து யான் முகம் உடைந்ததுவும்
கோலம் ஆர் புலி வந்ததும் முகம்மதை யாம் கூட்டி வந்துறு பவம் என்ன
சாலவும் உரைத்தான் நீதியை வெறுத்த தறுகணான் எனும் அபூஜகிலே

மேல்
$1.11.14

#693
மூரி வெற்பு அனைய புய முகம்மதுவை முன்னிலை தலைவராய் நிறுத்தி
தாரையில் செலும் நம் இடர்களும் தவிரும் தழல் எழும் பாலையும் குளிர்ந்து
வேரி அம் கமல வாவி அம் கரை ஆம் விரைவினில் சாம் அடைகுவம் என்று
ஆரிதுக்கு உரைத்தார் தாது அவிழ் மலர் தார் அணி திகழ் புயத்து அபூபக்கர்

மேல்
$1.11.15

#694
ஈது நன்று என ஒத்து அனைவரும் இசைத்தார் எழில் முகம்மதுவும் முன்னிலையாய்
பாதையில் நடப்ப பெரியவன் அருளின் பணி கொடு ஜிபுறயீல் இறங்கி
பேதம் அற்று அணுகி ஒட்டக கயிற்றை பிடித்தனர் அரை நொடி பொழுதில்
தீது அற நெறியும் தெரிந்தன நான்கு திசைகளும் தெளிதர தெரிந்த

மேல்
$1.11.16

#695
தலைமை முன்னிலையாய் முகம்மது நடப்ப சாரும் நல் நெறியினை சார்ந்தோம்
நிலம் மிசை கரிய மேகம் ஒன்று எழுந்து நிழல் இவர்க்கு இடுவதும் கண்டோம்
மலை கடல் திரை போல் கானலில் வெதும்பி அலைந்திடும் வருத்தமும் தவிர
புலன் உற புனலும் பருகுவம் சிறிது போழ்தில் என்று அனைவரும் புகன்றார்

மேல்
$1.11.17

#696
மந்தரம் பொருவாது எழுந்த பொன் புயத்து முகம்மதும் ஏறு வாகனத்தின்
கந்தர கயிற்றை அசைத்திட உளத்தின் கருத்து அறிந்து ஒட்டகம் களித்து
சுந்தர புவியில் வலது கால் ஓங்கி தொட்டிட தொட்ட அ போதில்
சிந்து நேர் கடுப்ப நுரை திரை பிறங்க செழித்து எழுந்தது நதி பெருக்கே

மேல்
$1.11.18

#697
ஆறு எழுந்து ஓடி பாலையை புரட்டி அழகுறு மருதம்-அது ஆக்க
தேறல் கொப்பிளித்து வனசமும் குவளை திரள்களும் குமுதமும் விரிய
வேறுபட்டு உலர்ந்த மரம் எலாம் தழைத்து மென் தழை குளிர்தர பூத்து
தூறு தேன் துளித்து கனிகளும் காயும் சொரிதர சோலை சூழ்ந்தனவே

மேல்
$1.11.19

#698
வற்றுறா செல்வ பெருக்கு இனிது ஓங்கும் வகுதை அம் பதி உசைன் நயினார்
பெற்ற பேறு இது-கொல் என முழு மணியாய் பிறந்த மெய் துரை அபுல் காசீம்
சுற்றமும் கிளையும் சிறப்பொடு தழைத்து சூழ்ந்து இருந்து அணி திகழ்வது போல்
குற்றம் இல் நதியின் இரு கரை மருங்கும் குறைவு அற தளிர்த்தன தருக்கள்

மேல்
$1.11.20

#699
நானமும் புழுகும் பாளித குலமும் நறை கெட மிகுந்த வாசம்-அதாய்
தேனினும் கருப்பம் சாற்றினும் திரண்ட தெங்கு இளநீரினும் இனிதாய்
ஊனம் இல் நதியில் ஒரு கை நீர் அருந்தி உடல் குளிர்ந்து அரும் பசி ஒடுங்கி
ஆனனம் மலர்ந்து முகம்மதை புகழ்ந்து அங்கு அனைவரும் மத களிறு ஆனார்

12. பாந்தள் வதைப் படலம்

$1.12.1

#700
கனல் உண்ட கடும் சுரம் மீது நறும்
புனல் உண்டு பொருந்தினர் அ உழையின்
சினம் உண்டு எழு செம் கதிர் பொங்கும் இருள்
இனம் உண்டு குணக்கில் எழுந்ததுவே

மேல்
$1.12.2

#701
மருதங்கள் கலந்த வனத்திலிருந்து
எருதும் பரியும் எழில் ஒட்டகமும்
பெருகும் திரளும்படி பின்செலவே
வரதுங்க முகம்மது எழுந்தனரே

மேல்
$1.12.3

#702
வடிவால் ஒளி வீசிய வானவர்_கோன்
படி மீதுறு பாதையின் முன் செலவே
நெடியோன் நபி பின்செல நீள் நெறியில்
கடி மார்பர் கலந்து நடந்தனரே

மேல்
$1.12.4

#703
கானம்-தனில் ஏகிய காலையினில்
தானம் தரு தாரை-தனை தெரியாது
ஈனம் தரு வல் இருள் எய்தி நெடு
வானும் தெரியாது மறைத்ததுவே

மேல்
$1.12.5

#704
இருள் கொண்டு பரந்திட யாவரும் ஓர்
மருள் கொண்டவர் போல மயங்கினரால்
அருள் கொண்ட முகம்மதுன் அன்புறவே
தெருள் கொண்டு நடந்தனர் செல் வழியே

மேல்
$1.12.6

#705
கொடு வல் இருள் உண்டு கொழும் கதிர் பைம்
கடல் அம் தரை மீது எழு காரணம் உற்று
இடரும் தவிரும் இவரால் எனவே
மடன் நெஞ்சம் இலாது மகிழ்ந்தனரே

மேல்
$1.12.7

#706
மரு மிக்க புயத்து எழில் வள்ளலுடன்
கரும தொழில்காரரும் மற்றவரும்
ஒருமித்து நடந்து உறுவா எனும் ஓர்
அருவி கரை மேவி அடுத்தனரே

மேல்
$1.12.8

#707
வண்டு ஆர் பொழில் ஆர் வரையூடு அருவி
உண்டார் சிலர் உண்கிலர் காண் எனவே
கண்டார் நபி வல்லவனை கருதி
கொண்டார் புனலும் குதி கொண்டதுவே

மேல்
$1.12.9

#708
அளி தான் உண நீர் கிடையாத கரை
யுளி தான் நிலையாதிட ஓடு புனல்
குளித்தார் குடித்தார் மகிழ்கொண்டு உடலம்
களித்து ஆடி நடந்தனர் காளையரே

மேல்
$1.12.10

#709
மகிழ்கொண்டு நடந்த வனம்-தனிலே
துகள் துன்றி விசும்பு துடைத்திடவே
நிகழ்கின்ற நெடும் தொலை சென்றதின் மேல்
உகள்கின்ற ஒருவன் வரவுற்றனனே

மேல்
$1.12.11

#710
கையோடு இரு காலும் நடுங்கிடவே
மெய் ஓடிய வேர்வைகள் சிந்தி விழ
ஐயோ விதியோ என வாய் அலறி
உய்வாறு இனி ஏது என ஓதினனே

மேல்
$1.12.12

#711
மயம் மாறிட வாய் குழறிக்குழறி
துயரோடு உற வந்து சுழன்றவனை
வய வீரர்கள் கண்டு உன் மனத்தில் உறும்
பயம் ஏது-கொல் என்று பகர்ந்தனரே

மேல்
$1.12.13

#712
சினம் உண்ட செழும் கதிர் வேல் உடையீர்
வனம் உண்டு அரை நாழிகையுள் வழியில்
கனம் உண்டு ஒரு காரணம் மா மலையின்
இனம் உண்டு பருத்து எழுகின்றது போல்

மேல்
$1.12.14

#713
அரவு ஒன்று உளது அத்திரியும் பரியும்
கரம் ஒன்று கரி திரளும் எதிரே
வர உண்டிடும் வால் தலை நீளம்-அதை
உரம் ஒன்றி உரைத்திட நா அரிதே

மேல்
$1.12.15

#714
கண்ணின் கனலும் கடைவாய் புரளப்
பண்ணும் கவை நாவொடு பற்கள் உறும்
வண்ணம்-தனை ஓதிட வானவரும்
துண்ணென்று உடலங்கள் துணுக்குறுவார்

மேல்
$1.12.16

#715
திருகும் சினமாய் அது சீறி வெகுண்டு
இரு குன்று கடந்து எனது இன் உயிரை
பருகும்படி வந்தது பாரும் அதோ
வருகின்றது காண் என மாழ்கினனால்

மேல்
$1.12.17

#716
அலைவுற்றவன் அ மொழி கூறிடலும்
நிலையற்றவர் நின்று நினைந்து நினைந்து
உலைவுற்று உடலங்கள் ஒடுங்கி மனம்
மலைவுற்று மயங்கி வருந்தினரே

மேல்
$1.12.18

#717
வந்தான் உரைசெய்தது மற்றவர்கள்
நொந்து ஆவி பதைத்திட நோக்கினரால்
உந்தாது உறு பாதையில் ஒட்டகம் விட்டு
இந்து ஆர் எழில் வள்ளல் இறங்கினரே

மேல்
$1.12.19

#718
அதிர் கொண்டு அது நாசியில் அங்கி எழ
கொதி கொண்டு உறு கோபமதாய் அரவம்
சதிகொண்டு நடந்தது தாரையில் என்று
எதிர்கொண்டனர் எங்கள் முகம்மதுவே

மேல்
$1.12.20

#719
அரி கண்டு வெகுண்டு அடல் வாயினை விண்டு
எரி கொண்ட விழி கனல் இற்று விழ
விரிகின்ற படத்தை விரித்து விடம்
சொரிகின்றது என திசை தூவியதே

மேல்
$1.12.21

#720
கழிகின்ற துரும்பு ஒரு கை முழம் உண்டு
எழில் கொண்ட முகம்மது எடுத்து எதிரே
வழி கொண்டதை வீசிட வல் உடலம்
இழிகொண்டு உதிரங்கள் எழுந்தனவே

மேல்
$1.12.22

#721
அடிபட்ட இ திரள் அத்தனையும்
பொடிபட்டது உருண்டு புரண்டு வயின்
மடிபட்டு ஒரு கற்குவை வாயினிடை
கடிபட்டது பட்டது கட்செவியே

மேல்
$1.12.23

#722
வரை போல் உரகத்தை வதைத்தது கண்டு
இரைவோடு புகழ்ந்து இவர் செம் கனி வாய்
உரையூடு ஒழுகி செலும் என்று வகை
திரையூடு குளித்தனர் தேசிகரே

13. நதி கடந்த படலம்

$1.13.1

#723
கட்செவி பகை அறுத்து அரிய கானகத்து
உட்படும் இடர் தவிர்த்து ஒளிரும் வள்ளலை
வட்படும் வேல் உடை மாக்கள் யாவரும்
நட்பொடு கலந்து உடன் நடந்து போந்தனர்

மேல்
$1.13.2

#724
குறு பொறை கடந்து போய் குவடு சுற்றிய
சிறு நதி ஆறுகள் கடந்து சென்ற பின்
மறுவுறு மதி தொடு மலையும் அ மலை
பெறும் முறை அருவியும் பிறங்க தோன்றின

மேல்
$1.13.3

#725
அ மலை நதி கரை அடுத்து சீரிய
செம்மலும் சூழ்ந்த தேசிகரும் நீங்கிலா
சும்மை கொண்டு இறங்கி நீராடி தூ நறை
பொம்மல் உண்டு அரும் பகற்பொழுது போக்கினார்

மேல்
$1.13.4

#726
மது பிலிற்றிய மரை மலரின் கொள்ளையும்
விது கதிர் பட தனி விரியும் காவியும்
எதிர்ப்பொடு களிப்பும் ஆகுலமும் எய்திட
கதிர் கதிரவன் குட கடற்குள் ஆயினான்

மேல்
$1.13.5

#727
நீர் உறை பறவையின் குலமும் நீள் தரு
பாரினில் விலங்கினம் யாவும் பண் அறா
கார் உறு சோலை-வாய் சுரும்பும் கண்படைத்து
ஊர்வன எவையும் நல் உறக்கம் உற்றதே

மேல்
$1.13.6

#728
போது அடைந்து இருள் எனும் படலம் போர்த்திட
மா தவர் எனும் முகம்மதுவும் மன்னரும்
தாது அவிழ் நதி கரை தருவின் நீழலில்
சோதி மா முக மலர் விழிகள் தூங்கினார்

மேல்
$1.13.7

#729
வன நதி பெருக்கெடுத்து எறிந்து மால் வரை-
தனை அமிழ்த்திட வருவது-கொல் சார்ந்த நும்
இனமுடன் எழுக என்று இலங்கும் வள்ளல்-தம்
கனவினில் ஜிபுறயீல் கழறி போயினார்

மேல்
$1.13.8

#730
மரு பொலி புய முகம்மது தம் கண்விழித்து
ஒருப்பட எழுந்து உழையுற்ற பேர்க்கு எலாம்
விருப்பொடு மொழிந்தனர் வெள்ளம் வந்து நம்
இருப்பிடம் புரட்டும் ஈங்கு எழுக என்னவே

மேல்
$1.13.9

#731
தெரிதர உரைத்த சொல் தேர்ந்து யாவரும்
விரைவினில் சோலை-வாய் விடுதி நீங்கியே
புரவி ஒட்டகம் பொதி பொருளும் கொண்டு அணி
வரையின் உச்சியினிடை மலிய வைகினார்

மேல்
$1.13.10

#732
படர்தரு திரை வயிறு அலைத்த பைம் புனல்
கடலிடை குளித்து செம் கதிர் கரங்களால்
அடைபடும் இருள் குலம் அறுத்து போக்கியே
சுடரவன் உதய மா கிரியில் தோன்றினான்

மேல்
$1.13.11

#733
அரி சின கொடுவரி அமிழ்ந்து போதர
பொரி அரை தருக்களை புரட்டி பொங்கிய
நுரை இரு கரைகளும் நுங்க மால் நதி
பிரளயம் இடன் அற பெருகி வந்ததே

மேல்
$1.13.12

#734
குறவரை குறிஞ்சி விட்டு ஈழ்த்து பாலையின்
மறவரை முல்லையில் ஆக்கி மாசு உடை
தொறுவரை நிரையொடும் சுருட்டி வாரியே
அறை புனல் பெருக்கெடுத்து அடர்ந்தது எங்குமே

மேல்
$1.13.13

#735
கரை சுழித்து எறிந்து நீள் கயங்கள் ஆக்கின
திரை எறி கயத்தினை திடர்-அது ஆக்கின
விரை கமழ் சோலை வேரறுத்து வீழ்த்தின
வரைகளை பிடுங்கின மலிந்த நீத்தமே

மேல்
$1.13.14

#736
கரை புரண்டு உள்ளகம் களித்து கானிடை
திரவியம் திரை கரத்து எடுத்து சிந்தியே
குரை கடல் எனும் நதி குரிசில் நம் நபி
மரை மலர் அடி தொழ வந்த போலுமே

மேல்
$1.13.15

#737
மால் நதி பெருகி எ வரையும் சுற்றிய
நானில திசை நெறி நடப்பது இன்மையால்
தானவன் தூதொடு சார்ந்த மன்னரும்
ஈனம் இல் மூன்று நாள் இருந்து நோக்கினார்

மேல்
$1.13.16

#738
மலை மிசை மூன்று நாள் இருந்து மால் நதி
அலை எடுத்து எறிந்து உயர்ந்து அடர்ந்தது அல்லது
நிலைதர காண்கிலோம் என்ன நீண்ட சஞ்
சலம் எனும் கடற்குளாய் தவித்து வாடினார்

மேல்
$1.13.17

#739
மனத்தினில் துன்புற வருந்தி மாழ்கிய
இனத்தவர் யாரையும் இனிதின் நோக்கியே
கனத்து அமை குடை நிழல் கவின்பெற்று ஓங்கிய
நனை துணர் புயத்தவர் நவிலலுற்றனர்

மேல்
$1.13.18

#740
இற்றை நாள் இரவு இவண் இருந்து கண்டு நாம்
மற்றை நாள் போகுவம் வருந்தல் என்றனர்
வெற்றியும் வீரமும் தவத்தின் மேன்மையும்
முற்றிய மாட்சியார் அலங்கல் மொய்ம்பினார்

மேல்
$1.13.19

#741
இரு கரைகளும் தெரிந்தில இ மால் நதி
பெருகுவது அடிக்கடி பேதுறாது பின்
ஒரு மொழி உரைத்தவர் உளத்தின் பெற்றியை
தெரிகிலோம் என மனம் தேம்பினார் அரோ

மேல்
$1.13.20

#742
அவ்வுழி ஜிபுறயீல் அடைந்து கண் துயில்
செவ்வி நேர் முகம்மது கனவில் செப்பினார்
இ இருள் விடிந்த பின் எழுந்து முன்னர் ஓர்
நவ்வி தோன்றிடும் வழி நடத்திர் என்னவே

மேல்
$1.13.21

#743
மனம் உறை ஜிபுறயீல் வந்து சொல்லிய
கனவினை கண்டு அகம் களித்து கண் இணை
யினை விழித்து எழுந்தனர் எழுந்த காலையில்
தினகரன் எழுந்தனன் பரந்த செம் கதிர்

மேல்
$1.13.22

#744
வரை புரை புய முகம்மது மன் மாவொடு
நிரைநிரை தொறுவையும் நடத்திர் நீவிர் என்று
உரை செய்து பெருக்கெடுத்து ஓங்கும் மால் நதி
கரையினில் மரை மலர் காலின் ஏகினார்

மேல்
$1.13.23

#745
ஒட்டகம் புரவி மற்று உள்ள பேர்களும்
மட்டறு சரக்கொடு மலிந்து தோன்றிட
தொட்ட வெண் திரை கடல் அகடு தூர்த்திட
முட்டிய புனல் நதி கரையின் முன்னினார்

மேல்
$1.13.24

#746
அள்ளிய பொன் எடுத்து அமைத்து வெள்ளியால்
புள்ளிகள் அணியணி பொறித்து வைத்தன
ஒள்ளிய மெய் அழகு ஒழுக ஒல்லையில்
துள்ளிய உழை உழை இடத்தில் தோன்றிற்றே

மேல்
$1.13.25

#747
நதியிடை வந்து மான் நடப்ப கண்டு மா
மதி நிகர் முகம்மது மனத்தில் இன்பமுற்று
இதமுற நடந்து பின் ஏக யாவரும்
புதுமை-கொல் இது என தொடர்ந்து போயினார்

மேல்
$1.13.26

#748
உடல் பொறி புள்ளிகள் ஒளிர முன் செலும்
மட பிணை பின் செலும் மக்கள் யாவர்க்கும்
கடல் பெருக்கு என கரை கடந்து வீங்கிய
தட பெரு நதி முழந்தாட்குள் ஆனதே

மேல்
$1.13.27

#749
பெருகிய பிரளய பெருக்கை போக்குதற்கு
ஒருவனே அலது வேறு இலை என்று உன்னியே
தெருளுற செல்குநர் செல்க என்றனர்
வரை இரண்டு எனும் மணி புய முகம்மதே

மேல்
$1.13.28

#750
இ மொழி நன்கு என இசைந்து யாவரும்
செம்மலோடு இனிதுற செல்லும் காலையில்
விம்மித புய நபி விரித்த வாசகம்
சம்மதித்திலன் ஒரு தறுகணாளனே

மேல்
$1.13.29

#751
புந்தியில் புத்தினை புகழ்ந்து போற்றி தன்
சிந்தை வைத்து அ உழை செல்லும் போழ்தினில்
உந்தியின் திரை சுழித்து உருட்டி ஈழ்த்திட
நந்தினான் நபி உரை மறுத்த நாவினான்

மேல்
$1.13.30

#752
விதியவன் தூதர் சொல் மேவிலாதவன்
நதியினில் இறந்தனன் நடுக்கம் இன்றியே
இதமுற உண்மை கொண்டு இசைந்த பேர் முழு
கதி பெறுபவர் என கரையில் ஏறினார்

மேல்
$1.13.31

#753
சிந்துவின் திரை பெருக்கு எறிய தீது இலா
நந்தி அத்திரி பரி யாவும் நன்கு உற
வந்தவை முகம்மதின் பறக்கத்தால் என
தம் தமரொடு புகழ்ந்து எடுத்து சாற்றினார்

14. புலி வசனித்த படலம்

$1.14.1

#754
படர்ந்த தெண் திரை பெருக்கெடுத்து எறி நதி பரப்பை
கடந்து கான் பல கடந்து அரு நெறி செலும் காலை
கொடும் தட கரி திரள் எனும் குழுவினுள் ஒருவன்
அடைந்து சீர் அகுமதின் அடி தொழுது அறைகுவனால்

மேல்
$1.14.2

#755
நிகழும் தாரையில் காவதத்து உள் உறை நெடு நீர்
அகழி போன்ற ஓர் ஓடை உண்டு அதனினுக்கு அணித்தாய்
புகலுதற்கு அரிது அடவி உண்டு அவ்வுழி பொருந்தி
உகளும் ஆங்கு ஒரு பாதக கொடு வரி உழுவை

மேல்
$1.14.3

#756
நீண்ட வால் நிலம் புடைத்திட கிடந்து உடல் நிமிர்ந்து
கூண்ட கால் மடித்து இரு விழி கனல்கள் கொப்பிளிப்ப
பூண்ட வெள் எயிறு இலங்கிட வாய் புலால் கமழ
ஈண்டு முள் செறி வனத்திடை சினத்தொடும் இருக்கும்

மேல்
$1.14.4

#757
நிரம்பும் வள் உகிர் மடங்கல் இல் இனங்களின் நிணம் உண்டு
இரும் பனை கை மும்மத கரி கோட்டினை ஈழ்த்திட்டு
உரம் பிளந்து உதிரங்களை மாந்தி நின்று உறங்காது
அரும் பெரும் கிரி பிதிர்ந்திட உருமினும் அலறும்

மேல்
$1.14.5

#758
அதிர்ந்திடும் தொனி செவியுற அடவியில் அடைந்த
முதிர்ந்த மேதியும் கவை அடி கேழலும் முழுதும்
பொதிந்த மெய் மயிர் எண்கு இனங்களும் மரை போத்தும்
பதிந்த கால் தடுமாறிட வீழ்ந்து உடல் பதைக்கும்

மேல்
$1.14.6

#759
புறம் தயங்கும் அம் சிறை அறு பத பொறி சுரும்பு
திறந்து தேனை உண்டு அணி திகழ் தொடை அணி திறலோய்
மறம் தயங்கு வேல் மாந்தர் அ வேங்கையின் வாய் பட்டு
இறந்தது அன்றி ஒட்டகம் பரி எண் இலக்கு இலையே

மேல்
$1.14.7

#760
என்ற வாசகம் செவி புக எழில் இரு புயமும்
குன்று போல் உற வீங்கின முறுவல் கொண்டு இடராய்
நின்ற வேங்கை எவ்வுழி என நிகழ்த்தினர் அவனும்
வென்றி வாள் அரசே அணித்து என விளம்பினனே

மேல்
$1.14.8

#761
இலங்கு செம் கதிர் வேல் ஒரு கரத்தினில் ஏந்தி
நிலம் கொள பரந்து அரிய மெய் ஒளி புடை நிலவ
நலம் கொள் குங்கும தொடை புரண்டு அசைந்திட நடந்தார்
உலம் கொள் தோள் முகம்மது புலி உறை நெறி உழையில்

மேல்
$1.14.9

#762
மாதிரத்து உறை கேசரி நிகர் முகம்மது தம்
பூதர புயம் அசைதர புளகிதத்தோடும்
காது செம் கதிர் வேல் வல கரத்திடை கவின
வீதி-வாய் வர கண்டது பெரு வரி வேங்கை

மேல்
$1.14.10

#763
கண்ட போதினில் வால் குழைத்து அரிய மெய் கலங்கி
கொண்டு மென் மெல நடந்து தன் பெரும் சிரம் குனிந்து
தண் தளிர் பத தெரிசனைக்கு என சலாம் உரைத்து
தெண்டனிட்டது வள் உகிர் திண் திறல் புலியே

மேல்
$1.14.11

#764
நலன் பெறும் குறைஷிகளின் இல் வந்த நாயகமே
நிலம் பரந்து தீன் பெருகிட எழுந்த நீள் நிலவே
புலன் கண் இன்புற கண்டனன் களித்தனன் பொருவு இல்
பலன் பெறும்படி ஆயினன் என பகர்ந்ததுவே

மேல்
$1.14.12

#765
வந்து தெண்டனிட்டு எழுந்து வாய்புதைத்து உற வணங்கி
புந்தி கூர்தர போற்றிய வள் உகிர் புலியை
மந்தர ஆசல முகம்மது நனி மனம் மகிழ்ந்து
சந்த மென் மணி கரத்தினால் சிரம் முகம் தடவி

மேல்
$1.14.13

#766
இன்று தொட்டு இவண் நெறியினில் உயிர் செகுத்திடுவது
அன்று வெறு ஒரு காட்டினில் புகுக என்று அறைந்த
மன்றல் துன்றிய முகம்மதின் மலர் அடி வணங்கி
நன்று நன்று என போற்றியே நடந்தது வேங்கை

மேல்
$1.14.14

#767
படு கொலை புலி மெய்யுற பணிந்து இவர் பாதத்து
அடி வணங்கிய காரண அதிசயம்-அதனால்
உடையவன் திரு தூதரே உண்மை என்று உன்னி
திடம் உடைத்த நெஞ்சு ஆயினர் அறிவினில் தெளிந்தோர்

15. பாந்தள் வசனித்த படலம்

$1.15.1

#768
வேங்கை போய பின் வள்ளலும் அனைவரும் விரைவில்
தாங்க அரும் சுமை ஒட்டகம் புரவியும் சாய்த்து
நீங்க அரும் பரல் கானையாறுகளையும் நீந்தி
ஓங்கலும் சிறு திடர்களும் கடந்து உடன் நடந்தார்

மேல்
$1.15.2

#769
துன்று மென் மதி முகம் துலங்கிட வெகு தூரம்
சென்ற பிற்றை இங்கு இவர்களில் ஒருவர் செப்பினரால்
குன்று தோன்றுவது அதன் கிழக்கு ஒரு குவடு அடுப்ப
வன் திறல் கொடும் பாந்தள் உண்டு அவண் வழிக்கு எனவே

மேல்
$1.15.3

#770
பாந்தள் ஒன்று உளது எனும் மொழி செவிபுக பசும் தேன்
மாந்தி வண்டு இசை பயிலும் ஒண் தார் புய வள்ளல்
கூந்தல்மாவுடன் பின்னிட வருக என குழுவை
நீந்தி முன்னிட நடந்தனர் கானிடை நெறியின்

மேல்
$1.15.4

#771
சீத ஒண் புனல் குட்டமும் துடவையும் செறிந்த
பாதை நீந்தி அங்கு ஒரு குவடு அடியினில் படர
கோது கோடை மாருதம் உயிர்த்து உணங்கு குன்று அனைய
தீது உறும் கொலை பாந்தளை கண்டனர் திறலோர்

மேல்
$1.15.5

#772
கண்கள் அக்கினி குவை என பொரு திசை கதுவ
மண்கள் எங்கணும் இருள் உற நச்சு மாசு உமிழ்ந்து
விண் கொளும் பிறை கீற்று என வெள் எயிறு இலங்க
புண் கொளும் கடைவாய் கவை நா இடை புரள

மேல்
$1.15.6

#773
புள்ளி வட்ட வெண் பரிசைகள் என உடல் போர்ப்ப
தள்ளி வால் அசைத்திடுதலில் தரையிடம் பிதிர்த்திட்டு
அள்ளி விட்டெறிந்து என திசைதிசை துகள் அடைய
விள்ள அரும் சிர சூட்டு ஒரு கதிரினும் விளங்க

மேல்
$1.15.7

#774
கண்டு தம் மனத்திடையினில் ஒரு பயங்கரம் சற்று
உண்டது இல்லை-கொல் என்ன வந்து உதித்த அ நொடிக்குள்
அண்டர் போற்றிய முதல் இறையவன் திருவருளால்
கொண்டு சத்தம் ஒன்று எழுந்தது குவலயம் குலுங்க

மேல்
$1.15.8

#775
முகம்மதே உமது அடி இணை காண இ வழியில்
நிகர் இல் வாள் அரவு அடைந்தது பயங்கரம் நினையாது
அகம் மகிழ்ந்திட செலும் என அரசர்_கோன் களித்து
புகர் அற தனி நடந்து அடுத்தனர் புயங்கனையே

மேல்
$1.15.9

#776
இரைந்து மூச்சொடும் கிடந்த கட்செவி தலை எடுத்து
விரிந்து எரிந்த கண்கடையினால் முகம்மதை விழித்து
தெரிந்து நோக்கி நம் இறையவன் தூது என தெளிந்து
வருந்து துன்பம் இன்று ஒழிந்தனம் என மகிழ்ந்ததுவே

மேல்
$1.15.10

#777
மலை கிடந்து உயர்ந்ததை என விரிந்த வாய் பிளந்து
தலை எடுத்து நா இரண்டினால் ஒரு சலாம் சாற்றி
நிலை அசைந்து ஒளி நெட்டு உடல் குழைந்திட நெளிந்து
பல பொறி படம் தரை பட பணிந்து பின் பகரும்

மேல்
$1.15.11

#778
கோல வார் கழல் குரிசில் நும் அடி கொழும் கமலத்
தால் அனேகம் என் போல் அஃறிணை கொடும் சாதி
சீலம் மேவிய பதம் உறும் என்பதை தெளிந்து எ
காலம் காண்குவன் என கிடந்தனன் நெடும் காலம்

மேல்
$1.15.12

#779
பிறந்த நாள் தொடுத்து இற்றை நாள் வரைக்கும் நும் பெயரை
மறந்து இருந்த நாள் அறிகிலன் நினைக்கில் என் மனத்தில்
இறந்திடா முனம் இன்று கண்டிடும் பலன் எனை போல்
அறம் தவம் புரிந்தவர்களும் பெறுவதற்கு அரிதால்

மேல்
$1.15.13

#780
ஆதி நாயகன் திரு ஒளிவினில் அவதரித்த
வேத நாயகமே உமை கண்டதால் விளைத்த
பாதகம் பல தவிர்த்து முன் பவங்களை அறுத்து
தீது இலாத நல் பதவியும் படைத்தனன் சிறியேன்

மேல்
$1.15.14

#781
என்று கூறி இ மலர் அடி இணையினை எளியேம்
என்று காண்குவமோ என அயர்ந்து உடைந்து எண்ணி
என்றும் இன்று போல் காண்குவம் என மனத்து இருத்தி
என்றும் தீன் பயிர் விளங்குற வாழி என்று இசைத்தே

மேல்
$1.15.15

#782
பணி பணிந்து எனக்கு எவை பணிவிடை என பகர
அணி அணிந்து என செவியுற கேட்டு அதிசயித்து
மணி கிடந்து ஒளிர் புய வரை விம்முற மகிழ்ந்தார்
திணி சுடர் கதிர் வேல் வலன் ஏந்திய திறலோர்

மேல்
$1.15.16

#783
பொருப்பிடத்தினும் அடவிகளிடத்தினும் புகுந்து
விருப்புறும்படி வாழ்வதல்லது நெறி மேவி
இருப்பின் நின்-வயின் இடர் வரும் என எடுத்து இசைத்தார்
சுருப்பு இருந்து தேன் இடை தவழ் தொடை அணி தோன்றல்

மேல்
$1.15.17

#784
ஒடுங்கி தெண்டனிட்டு உறைந்திடம் இகழ்ந்து ஒரு மருங்கில்
நெடும் கிரி புறம் தவழ்ந்து என உடல்-தனை நெளித்து
மடங்கல் வெம் கரி கொடுவரி அடவியில் மறைந்து
நடுங்கிட தனி போயது பெரும் தலை நாகம்

மேல்
$1.15.18

#785
நாகம் உற்றதும் கிடந்ததும் பாதையில் நயினார்
பாகம் உற்று மெய் வணங்கி நல் மொழி சில பகர்ந்து
போகை என்றதில் போயதும் புதுமை-கொல் எனவே
ஆகம் உற்று அதிசயித்தனர் அனைவரும் அன்றே

16. இசுறா காண் படலம்

$1.16.1

#786
எரிந்த கட்பொறி அரவு வந்து உறை இடம் இவணே
அரும் தவ பொருள் முகம்மதும் அடை இடம் இவணே
தெரிந்து காண்பதற்கு இவையிவை குறி என சேர்த்தி
விரிந்த தம் பெரும் குழுவுடன் நடந்தனர் விறலோர்

மேல்
$1.16.2

#787
பரல் பரந்து இடம் துகள் எழ படு முனை திரி கோட்டு
இரலை மென் பிணை கன்றுடன் திரிந்த கான் ஏகி
விரி தலை சிறு முள் இலை செம் குலை விளைந்த
கரிய மென் கனி சொரிதரும் பொழிலையும் கடந்தார்

மேல்
$1.16.3

#788
ஈத்தம் பேர் அடவிகள் பல கடந்து அயல் ஏக
பூத்த மென் மலர் செறிதரு பொழில் புடை சூழ
வாய்த்த நல் குடி பெயருடன் வழியிடை நெடு நாள்
காத்திருந்த பண்டிதன் மனை தெரிதர கண்டார்

மேல்
$1.16.4

#789
இரைதரு வாரி ஏழும் எடுத்து வாய் மடுத்து உண்டு ஓடி
சொரிதரு மேகம் போல சொல்லும் மெய் மறைகள் என்னும்
கரை இல் வாருதியை உண்டு கருத்தினில் இருத்தி யார்க்கும்
தெரிதர அறிவு மாரி பொழிந்திட திறக்கும் வாயான்

மேல்
$1.16.5

#790
ஆதமே முதல் ஈறாக வரு நபியவர்கட்கு எல்லாம்
பேதம் ஒன்று இன்றி வந்த பெரு வர மறையின் தீம் சொல்
ஓதிய முறைமை அ நாள் ஒழுகிய ஒழுக்கம் இ நாள்
மா தவர் குறிப்பும் தேர்ந்து வகுத்து எடுத்து உரைக்கும் வாயான்

மேல்
$1.16.6

#791
பல்வித நூலில் தேர்ந்து பல சமயங்களாக
செல் வழி அனைத்தும் நோக்கி சென்று மட்டறுத்து தேறி
கல்பினில் இருத்தி மாறா கதி பதி சேர்க்கும் தூய
நல் வழி தெரிந்து காண நடுவு எடுத்து உரைக்கும் நாவான்

மேல்
$1.16.7

#792
அறிவு நல் ஒழுக்கம் வாய்மை அன்புறும் இரக்கம் மிக்க
பொறை தவம் குணம் வணக்கம் பொருவு இலா சார மேன்மை
திறம் நிறை அருள் நல் மானம் தேர்ச்சியில் தெளிந்த கல்வி
குறைவு அற பெருகி நாளும் குடிபுகுந்திருந்த நெஞ்சான்

மேல்
$1.16.8

#793
தரும் தரு அனைய செம் கை தனபதி இசுறா என்னும்
பெரும் தவம் உடைய வள்ளல் பிறங்கு ஒளி தவழும் மாடத்து
இருந்தனன் இருந்த போதில் எழு கதிர் துகளால் மூடி
பரந்திடும் வரவு நோக்கி பார்த்து அதிசயித்து நின்றான்

மேல்
$1.16.9

#794
மெய் தவம் பொருந்து மக்காபுரத்து உறு வேந்தர்-கொல்லோ
பத்திவிட்டு ஒளிர் ஷாம் என்னும் பதி உடை தலைவர்-கொல்லொ
முத்த வெண் மணியில் தோன்றும் முகம்மதின் வரவு-கொல்லோ
எ தலத்தவரோ இங்ஙன் எதிர்ந்தவர் என்று நின்றான்

மேல்
$1.16.10

#795
ஒட்டகம் புரவி தூர்த்திட்டு உறு துகள் உதயன் மாய
மட்டு அற பொலிந்து தோன்றி வரும் அவர்-தமக்கு மேலா
இட்டது ஓர் கவிகை மேகம் எழிலுற துலங்க கண்டு
கட்டிய மாலை திண் தோள் கதித்து எழ புளகம் பூத்தான்

மேல்
$1.16.11

#796
வேத வாசகத்தில் ஈசா விளம்பிய வசனம் தேர்வான்
கோது அறு கரிய மேக குடை நிழல் தொடர்ந்து வந்த
பாதையோர்-தம்மை நீங்கா பரிவினை நோக்கி நோக்கி
தீது அறு முகம்மது என்ன தெளிந்தனன் செவ்வியோனே

மேல்
$1.16.12

#797
கரும் தடம் கவிகை வள்ளல் வரவு கண் களித்து நோக்கி
அரும் தவம் பெற்றேன் இன்று என்று அருகிருந்தவனை கூவி
விருந்து இவண் அருந்தி நம்-தம் துடவையில் விடுதியாக
இருந்து அவதரித்து போ-மின் என எடுத்து இயம்புக என்றான்

மேல்
$1.16.13

#798
என்று அவன் உரைப்ப கேட்டு அங்கு எழுந்தனன் பாதையோர் முன்
சென்றனன் விரைவில் வந்த தேசிகர்-தம்மை நோக்கி
மின் தவழ் அலங்கல் வேலிர் சோலை-வாய் விடுதியாகி
சொன்றி உண்டு எழுக என்ன சொல்லினன் முதியோன் என்றான்

மேல்
$1.16.14

#799
விருந்து எனும் மாற்றம் கேட்டு மெய் மகிழ்ந்து அகம் பூரித்து
இருந்தனர் விரிந்த காவில் இடபம் அத்திரி மா எல்லாம்
அருந்தின குளகு நீர் உண்டு அவ்வயின் உறைந்த பின்னர்
திருந்திய பண்டம் யாவும் செறித்து ஒருபுறத்தில் சேர்த்தார்

மேல்
$1.16.15

#800
மறம் தலைமயங்கும் செ வேல் கர முகம்மது தாம் வந்து அங்கு
உறைந்திட தருக்கள் யாவும் தளிர்த்தன ஒண் பூ கோட்டில்
நிறைந்தன ஈன்ற பைம் காய் நெருங்கின கனிகள் எங்கும்
சிறந்தன தேம் பெய் மாரி சிந்தின திசைகள் எல்லாம்

மேல்
$1.16.16

#801
மறை தெரி இசுறா என்போன் முகம்மது-தமக்கு அன்பாக
முறை விருந்து அளிக்கும் முன்னம் முகிழ் நனி தருக்கள் எல்லாம்
நிறை மலர் தலைகள் சாய்த்து நீண்ட மென் தளிர் கை-தன்னால்
வெறி நறா கனிகள் சிந்தி விருந்து அளித்திட்ட அன்றே

மேல்
$1.16.17

#802
விரி பசும் தோடு விண்டு மென் முகை அவிழ்க்கும் பூவின்
அரி அளி குடைந்து தேன் உண்டு அகுமதின் புகழை பாட
மரகத கதிர் விட்டு ஓங்கு மணி சிறை விரித்து நீண்ட
கரைகளில் தருவின் நீழல் களி மயில் ஆடும் அன்றே

மேல்
$1.16.18

#803
மடல் அவிழ் வனச வாவி வைகை அம் பதிக்கு வேந்தன்
அடல் உறை அபுல் காசீம்-தம் அரும் குடி செல்வம் போல
புடை பரந்து அலர்கள் சிந்தி பொங்கு தேன் கனிகள் தூவி
சுடரவன் கதிர்கள் தோன்றா சோலை வாய் விளங்கிற்று அன்றே

மேல்
$1.16.19

#804
மரு புகும் சோலை வேலி நீழலில் வரவும் ஒட்டார்
நெருப்பு நீர் உப்பு என்றாலும் நினைத்து எடுத்து அளிக்கிலாதார்
பொருப்பு என உயர்ந்த செம் தேம் பொழிலிடை புகுந்து நம்-தம்
விருப்பொடும் இருப்பச்செய்தார் முகம்மதின் வியப்பு ஈது என்பார்

மேல்
$1.16.20

#805
சீத நீர் குடைவார் ஆடி செழும் பொழில் மலர்கள் கொய்வார்
கோது அறு கனிகள் துய்ப்பார் கொழும் தழை விலங்குக்கு ஈய்வார்
போதினில் அமளி செய்வார் பூ தொடுத்து அணிந்துகொள்வார்
மா தவர் முகம்மது இங்ஙன் வரப்பெறும் பலன் ஈது என்பார்

மேல்
$1.16.21

#806
கனி பல அருந்தி துண்ட கரும்பு அடு சாறு தேக்கி
குனி தலை இளநீர் உண்டு கொழு மடல் தேனை மாந்தி
நனி வயிறு ஆர்ந்தோம் பொய்யா நாவினன் மனையில் புக்கி
இனி எவர் விருந்து உண்பார் என்று எழில் முகம் மலர்ந்து சொல்வார்

மேல்
$1.16.22

#807
இன்னணம் இயம்பி காவில் இனிது உறைந்திருக்கும் காலை
செல் நெறி வேத நல் நூல் தெளிந்து அறி இசுறா என்போன்
தன் மனை விருந்து உண்டு ஏக வருக என்று இருவர் சார்ந்து இ
மன்னவர்-தம்மை போற்றி மனம் களி குளிர்ப்ப சொன்னார்

மேல்
$1.16.23

#808
மடி உறு மனத்தன் ஆகி வரும் அபூஜகுல் என்று ஓதும்
கொடியவன் கவடமாய் ஓர் சூழ்ச்சியை குறித்து நீண்ட
கடி கமழ் சோலை வாயில் முகம்மதை சரக்கு காக்கும்
படி இருத்திடுக யாரும் பரிவுடன் எழுக என்றான்

மேல்
$1.16.24

#809
வஞ்சகன் உரைத்த மாற்றம் கேட்டு அபூபக்கர் மாழ்கி
நெஞ்சகம் புழுங்கி சென்றார் நிரை மலர் தேனை மாந்தி
சஞ்சரிகங்கள் பாடும் தண்டலை நீங்கி யாரும்
விஞ்சையும் மறையும் தேர்ந்த வேதியன் மனையில் புக்கார்

மேல்
$1.16.25

#810
மூதுரை வழி வழாதோன் முன்றில் வந்தவர்களோடும்
சீத ஒண் கவிகை நீழல் காண்கிலன் தெருமந்து ஏங்கி
பாதகர் இவர் யார் என்-தன் பவ கடல் தொலைய வந்த
மா தவர் இலை என்று எண்ணி வாடிய மனத்தன் ஆனான்

மேல்
$1.16.26

#811
மறம் திகழ் வேலீர் இங்கு வந்தவர் அன்றி காவில்
உறைந்தவர் உளரோ என்ன உறு வினை துடரை நீக்கி
துறந்தவன் உரைப்ப பாவம் பகை ஒரு தொகையாய் கூடி
பிறந்து அபூஜகுல் என்று ஓதும் பெயரினன் பெயர்ந்தும் சொல்வான்

மேல்
$1.16.27

#812
வடு கதிர் வேல் கண் நங்கை மனை பொருள் பண்டம் மற்றும்
அடுக்கிய துணர் பைம் காவில் அகுமது என்று ஒருவன் அல்லால்
எடுக்க அரும் தவத்தின் மேலோய் யாவரும் அடைந்தோம் என்ன
நடுக்கம் ஒன்று இன்றி சொன்னான் நஞ்சு உறும் வெம் சொலானே

மேல்
$1.16.28

#813
தீயினும் கொடிய மாற்றம் செவி மடல் துளையில் ஓடி
போயது சிந்தையூடு புகைந்திட புழுங்கி பொங்கி
வாயில் நீர் வறந்து கண்ணில் வளர் தழல் கொழுந்து காட்டி
காய் சின ஏறு போன்றான் கவலும் நூல் புலமையோனே

மேல்
$1.16.29

#814
சினத்தினை அடக்கி தேறா சிந்தையை தேற்றி நந்த
வனத்தினில் இருந்த செவ்வி முகம்மதை கொணர்க என்ன
நினைத்தவன் உரைப்ப கேட்டு அங்கு ஆரிது நெடிதில் புக்கி
கனைத்து வண்டு இருந்த தண் தார் ஹபீபு-தம் இடத்தில் சார்ந்தான்

மேல்
$1.16.30

#815
மங்குல் அம் கவிகையீர் நம் வரவினை காணான் சீற்ற
செம் கதிர் தெறிக்க கண்கள் சிவந்தனன் சினந்த வேகம்
பொங்கும் மா தவத்தோன் கோப புரை அற வேண்டும் அல்லால்
எங்களை காக்க வேண்டும்படி எழுந்தருள்க என்றான்

மேல்
$1.16.31

#816
சிலை வயவரி ஆரீது செப்பிய மாற்றம் கேட்டு
மலை எனும் புயங்கள் ஓங்க மகிழ்ந்து புன்முறுவல் கொண்டு
கலை_வலன் இசுறா என்னும் காவலன் களிப்ப சேந்த
இலை மலி கதிர் வேல் ஏந்தி முகம்மதும் எழுந்தார் அன்றே

மேல்
$1.16.32

#817
சலதரம் திரண்டு நீங்கா தனி குடை நிழற்ற சோதி
கலை மதி பொருவா மெய்யில் கதிர் புடை விலகி மின்ன
நிலம் மிசை வழிக்கு காதம் மான்மத நிறைந்து வீச
மலர் அடி படி தீண்டாது மா தவன் மனையில் புக்கார்

மேல்
$1.16.33

#818
தொட்ட பாழ்ங்கிணறு உண்டு ஆங்கு துவலை நீர் அசும்பும் தோன்றாது
இட்ட முள் இலை ஈந்து அங்ஙன் இருந்து இறந்து அனேக கால
கட்டை ஒன்று உளது அதன்-பால் ஹபீபு மெய் கவின் கனிந்து
விட்டு ஒளி பரப்ப தோன்றி விரைவில் வீற்றிருந்தார் அன்றே

மேல்
$1.16.34

#819
குறை படும் கூவல் கீழ்-பால் குமிழிவிட்டு எழுந்து மேல்-பால்
நிறைபட பொங்கி ஓங்கி நிலம் வலம் சுழித்திட்டு ஏறி
இறையவன் தூதர் செவ்வி இணை மலர் பதத்தில் தாழ்ந்து
துறை-தொறும் பெருகும் வெள்ள நதி என தோற்றிற்று அன்றே

மேல்
$1.16.35

#820
இருந்தது தொல்லை நாளில் இறந்த பேரீந்தின் குற்றி
கரிந்திடம் பசந்து செவ்வே கதித்து எழ குருத்து விட்டு
சொரிந்த நெட்டு இலை விட்டு ஓங்கி துடர் துணர்-தோறும் பாளை
விரிந்து பூ சிந்தி காய்த்து மென் கனி சிதறிற்று அன்றே

மேல்
$1.16.36

#821
கோது அற புனல் உண்டாகி குற்றியும் தளிர்ப்ப கண்ட
மா தவன் மனமும் கண்ணும் மகிழ்வொடு களிப்பு பொங்கி
சீதர கவிகை வள்ளல் முகம்மதின் சேந்த செவ்வி
பாத தாமரையில் தாழ்ந்து பைம் துணர் மௌலி சேர்த்தான்

மேல்
$1.16.37

#822
மறை தெரி அறிவன் நீதி முகம்மதின் அடியை போற்றி
இறையவன் தூதரே இ இரு நிலத்து அரசர் கோவே
குறைபடாது இருந்த வெற்றி கொழும் மணி குன்றமே யான்
அறைவ கேட்டருள்க என்ன அடுத்து விண்ணப்பம் செய்தான்

மேல்
$1.16.38

#823
இ நிலத்து இருந்தேன் பல் நாள் இறையவன் தூதரான
மன்னவர் ஈசா இங்ஙன் வந்தனர் அவரை போற்றி
பொன் அடி விளக்கி இன்னம் புவியிடை நபிமார் உண்டோ
என்னலும் என்னை நோக்கி எடுத்து இனிது உரைக்கலுற்றார்

மேல்
$1.16.39

#824
அரும் தவத்தவனே ஆதி அருள் ஒளி அவனின் நீங்காது
இருந்துளது ஆதம் மெய்யினிடத்து அவதரித்து தொல்லை
வரும் தலைமுறைகள் எல்லாம் வந்து இனிமேலும் பின் நாள்
பெரும் தலம் புரக்க வல்லே நபி என பிறக்கும் அன்றே

மேல்
$1.16.40

#825
மக்க மா நகரில் வாழும் அப்துல்லா மதலை ஆகி
திக்கு எலாம் விளக்கும் செங்கோல் தீன் நிலைநிறுத்தி வேறு
பக்க முன் மதங்கள் என்னும் பகை அறுத்து அரிய காட்சி
மிக்கவர் ஆகும் மற்ற நபிகளின் மேன்மையாமால்

மேல்
$1.16.41

#826
புவியின் முகம்மது என்ன பொருந்திய பெயர் உண்டாகும்
அவர் அலால் நபி பின் இல்லை அவர் உம்மத்து ஆனோர்க்கு எல்லாம்
பவம் அறும் கதி உண்டாகும் படைப்புணும் வானோர் எல்லாம்
சுவை பெறும் கலிமா சொல்வர் என்னவே சொல்லினாரால்

மேல்
$1.16.42

#827
ஆரண குரிசில் ஈசா உரைத்த பின் அவரை போற்றி
பூரண மதியம் போலும் புகழ் முகம்மது என்று ஓதும்
பேரறிவாளர் எந்நாள் பிறப்பர் என்று இசைப்ப கேட்டு
சீர் பெற அறுநூறாண்டு செல்லும் என்று இசைத்தார் அன்றே

மேல்
$1.16.43

#828
அ மொழி கேட்டு காண்பது அரிது என எளியேன் சிந்தை
செம் மலர் கருக துன்ப தீயினில் குளித்தோன்-தன்னை
வம் என திருத்தி செவ்வி முகம்மதை காணும் மட்டும்
இ மர சோலை-வாயின் இரும் இறை அருளால் மாதோ

மேல்
$1.16.44

#829
பலன் பெறும் முகம்மது இங்ஙன் ஷாம் எனும் பதியை நாடி
நலம் பெற வருவர் நீரும் நன்குற காண்பிர் என்ன
தலம் புகழ் ஈசா கூற தாழ்ச்சி செய்து அடியேன் எந்த
நிலந்தனில் காண்பேன் என்ன நிகழ்த்தினன் நிகழ்த்தும் போதில்

மேல்
$1.16.45

#830
இ நெறி வந்து முன் நாள் இறந்த ஈந்து அடியில் தோன்ற
பல் மலர் சொரிந்து காய்த்து பழம் முதிர்த்திடும் பாழ் ஊற்று
முன்னிட பெருகி ஓடும் முறைமை கண்டு அறிந்து நீர் அ
நல் நெறி குரிசிற்கு என்-தன் சலாமையும் நவிலும் என்றார்

மேல்
$1.16.46

#831
இன்னணம் இயம்பி ஆதி இடத்து இரந்து அரிதாய் என்-தன்
தன் உயிர் நிற்கச்செய்து சார்ந்தனர் அவணில் ஈசா
மன்னவா கேட்டேன் கண்டேன் மணத்து எனை எடுத்து அடக்கி
பின் எழுந்தருள்க என்ன உரைத்தனன் பிறங்கு தாரான்

மேல்
$1.16.47

#832
மாலை தாழ் புய முகம்மது கேட்டு உளம் மகிழ்ந்த
காலை அவ்வயின் உறைந்த வேல் காளையர்க்கு எல்லாம்
வேலை வாருதி அமுது என விருந்து எடுத்து அளித்தான்
சோலை முக்கனி தேனொடும் பாகையும் சொரிந்தே

மேல்
$1.16.48

#833
ஆகம் கூர்தர விருந்தளித்து அவரவர் கரத்தில்
பாகு பாளிதம் வெள்ளிலை சுருளொடும் பகிர்ந்து
தேகம் எங்கணும் சந்தன குழம்பினால் தீற்றி
ஓகை கூர்தர நல் மொழி எடுத்தெடுத்து உரைத்தான்

மேல்
$1.16.49

#834
தெரியும் மெய் மறைக்கு உரியவ இ செகதலத்தில்
வரிசை நம் நபி முகம்மதை ஒரு நொடி பொழுதும்
பிரியல் வாய் மொழி மறுத்திடல் இ பெரும் பேறுக்கு
உரியர் நீர் அலது எவர் என அபூபக்கர்க்கு உரைத்தான்

மேல்
$1.16.50

#835
சுரி கரும் குழல் வெண் நகை பசிய மென் தோகை
வரி விழி கதிஜா மனை மைசறா-தன்னை
அருகு இருத்தி நல் மொழி பல எடுத்தெடுத்து அறைந்தான்
விரியும் நூல் கடல் செவிமடுத்து உண்ட மெய் தவத்தோன்

மேல்
$1.16.51

#836
வரிசை வள்ளல்-தன் இணை அடி செழு மலர்-அதனை
சிரசு உற பணிந்து இரு விழி மணிகளால் தேய்த்து
மரு மலர் குழல் மனையவர்க்கு உறு மொழி வகுத்து
தரையினில் புகழ் பெறும்படி அணை மிசை சாய்ந்தான்

மேல்
$1.16.52

#837
துணைவரும் உயிர் துணைவியும் புதல்வரும் சூழ
பணர் விரிந்து அன கேளிரும் பாங்கினில் இருப்ப
மணம் எழும் புய வள்ளலை அடிக்கடி வாழ்த்தி
அணையின் மீதினில் சாய்தலும் விண்ணுலகு அடைந்தான்

மேல்
$1.16.53

#838
பொருத்து மெய் மொழி மா தவன் இறந்த அ போதில்
கருத்து அழிந்து இரு கண்கள் முத்து உகுத்திட கலங்கி
வருத்தமுற்றவர் சிலர் அணி வயிறு அலைத்து அலறி
சிரத்தினில் கதுப்பு அற பறித்து எறிந்தனர் சிலரே

மேல்
$1.16.54

#839
சிந்தை தேங்கிட அழுதவர் தங்களை தேற்றி
மைந்தர் யாவரும் திரண்டு எழு மணத்துடன் எடுத்து
கந்த மென் மலர் கமழ்ந்திட அடக்கினர் ஹபீபும்
அந்தமில்லவன்-தனை புகழ்ந்து ஏத்தினர் அன்றே

மேல்
$1.16.55

#840
முதிய கேள்வியன் சடங்கு உளது எவ்வையும் முடிப்ப
கதிரவன் கதிர் ஒடுக்கி மேல் கடலினில் சார்ந்தான்
மதி விண் எய்திட வசிகரும் முகம்மது மகிழ்வாய்
உதிரும் மென் மலர் சோலை புக்கு உறங்கினர் அன்றே

17. கள்வரை நதி மறித்த படலம்

$1.17.1

#841
பருதி வானவன் செம் கதிர் பரந்திட துயின்றோர்
எருது வாம் பரி ஒட்டகம் பரந்திட எழுந்து
முருகு உலாவிய பொழில் கடந்து அரு நெறி முன்னி
திருகு வெம் சின களிறு என நடந்தனர் செறிந்தே

மேல்
$1.17.2

#842
சிறு பொருப்பு அடர்ந்து அடவிகள் உறை நெறி சேர்ந்து
வறு பரல் படர் பாலைகள் நீந்தி முள் வகிர்ந்திட்டு
அறல் கொழித்திடும் கானையாறுகள் கடந்து அகன்று
குறைவு இல் சந்து அகில் செறி நெடு வரை குறுகினரே

மேல்
$1.17.3

#843
பள்ளமும் பசும் சோலையும் வெண் மணல் பரப்பும்
உள்ளது ஓர் இடம் அவ்வையின் உறைந்தனர் உரவோர்
வள்ளல்-தம்மிடத்து ஒருவன் வந்து இ வரை வனத்தில்
கள்ளர் உண்டு எனும் அசுகையும் கண்டனன் என்றான்

மேல்
$1.17.4

#844
இருந்த அவ்வையில் கள்ளர் உண்டு எனும் மொழி இசைப்ப
தெரிந்து கண்டனம் என்றனர் சிலர் சிலர் திகைத்தார்
விரிந்த செம் கதிரோனும் மேல் திசையினில் புகுந்தான்
வருந்தல் என்று அவர்க்கு உரைத்தனர் புகழ் முகம்மதுவே

மேல்
$1.17.5

#845
சோரர் உண்டு என மனம் துணுக்குறல் சுடர் வரையின்
நேரதாய் ஒரு நதி உள நிலம் சுழித்து எழுந்து
கோரமாய் வரும் கள்ளரும் குறுகிடார் எனவே
கார் எழும் குடை முகம்மது கனவு கண்டனரே

மேல்
$1.17.6

#846
கனவின் செய்தியை அவரவர்க்கு உரைத்திடும் காலை
தினகரன் குணக்கு எழுந்தனன் அதி சுழி கிளறி
வனம் அடங்கலும் வகிர்ந்து எடுத்து இரு கரை வழிந்திட்டு
இன மணி கரும் கடல் வயிற்றிடை மடுத்ததுவே

மேல்
$1.17.7

#847
இருந்த பேர் அனைவரும் எழுந்து இரு நதி கரையில்
பொருந்தி நல் நெறி ஈது என நடக்கும் அ போதில்
வருந்தி கள்வரும் மறு கரை இடத்தினில் மறுகி
திருந்த நோக்கினும் காண்கிலாது எழுந்தன திரைகள்

மேல்
$1.17.8

#848
ஆறு வந்தது புதுமை-கொல் என அதிசயித்து
மாறுகொண்டவர் திரண்டு ஒரு பெரு வரை முகட்டில்
ஏறி நின்று தேசிகர்-தமை நோக்கலும் எழுந்து
மீறி வெண் திரை புரட்டி மீக்கொண்டது வெள்ளம்

மேல்
$1.17.9

#849
கள்ளர் வந்து அவண் இருந்தனர் என கெடிகலங்கி
உள்ளம் நொந்தனம் முகம்மது இங்கு உறு பொருட்டதனால்
வெள்ளம் வந்தது மறித்தது காண் என வியந்து
வள்ளலை புகழ்ந்தார் வழி நடந்தனர் வசிகர்

மேல்
$1.17.10

#850
தஞ்சம் ஈங்கு இவர் என புகழ்ந்தவர்-தமை நோக்கி
அஞ்சலாது நின்று அபுஜகில் மனத்தினில் அழன்று
விஞ்சையான் முகம்மது படித்து இவணிடை விளைத்த
வஞ்சனை தொழில் அலது வேறு இலை என மறுத்தான்

மேல்
$1.17.11

#851
படிறு உள கசட்டு அபுஜகில் பகர்ந்திடும் மொழி கேட்டு
அடல் அபூபக்கர் மனத்து அடக்கினும் அடங்காதால்
கொடிய தீ வினைக்கு உரியவர் சொல்லினை குறித்தோர்
கெடுவர் என்பதற்கு ஐயம் இல் என கிளத்தினரே

மேல்
$1.17.12

#852
கரிந்த புன் மன சிறியவர் கழறிய கொடும் சொல்
தெரிந்த மேலவர் செவிக்கு இடார் என்னும் அ திறம் போல்
விரிந்த கார் குடை நிழலிடை வரை புயம் விளங்க
அரும் தவ பொருள் முகம்மது நடந்தனர் அன்றே

மேல்
$1.17.13

#853
சிந்து நல் மணி கதிர் எழ திரை கரத்து எறிந்து
வந்த மா நதிக்கு அணி எனும் ஒரு கரை மருங்கில்
கந்த மென் மலர் செறிதரும் காவகம் கடந்து
புந்தி கூர்தர மக்கிகள் அனைவரும் போனார்

மேல்
$1.17.14

#854
சீத ஒண் புனல் செழும் மலர் ஓடையில் செறிந்த
கோது இல் வெண் சிறை பெடையொடும் குருகு இனம் இரிய
பாதை போந்தனர் ஷாம் எனும் திரு பெயர் பதிக்கு ஓர்
காதம் ஆம் என இறங்கினர் கடி மலர் காவில்

மேல்
$1.17.15

#855
ஒட்டக திரள் அனைத்தையும் ஒழுங்குற நிரைத்து
கட்டி வாம் பரி திரளையும் சேர்த்தனர் கடிதின்
விட்ட பாசறை இடங்களின் இவை வியப்பு எனவே
செட்டர் சூழ்தர இருந்தனர் செழும் மலர் காவில்

மேல்
$1.17.16

#856
சோலை வாய் ஒரு வானகம் என சுடர் திகழ
கோல வார் கழல் குறைஷிகள் குழு கண நாப்பண்
வேலை வெண் திரை முகட்டு எழு மதியினும் வியப்ப
மாலை தாழ் புய முகம்மது வந்து வீற்றிருந்தார்

18. ஷாம் நகர் புக்க படலம்

$1.18.1

#857
காவகத்தில் அன்று இருந்து இருள் கடிந்து வெம் கதிரோன்
மேவும் வெண் திரை கடல் முகட்டு எழுதலும் மேலோர்
தாவு வெம் பரி ஒட்டகை திரளொடும் சாய்த்தே
ஏ வில் அங்கையில் ஏந்திய வேந்தரோடு எழுந்தார்

மேல்
$1.18.2

#858
கடி கொள் மென் மலர் துடவையும் கரும் சுரும்பு உதைப்ப
வடியும் தேன் மலர் வாவியும் வளர் கழை குலம் போல்
நெடிய பச்சிலை கரும்பு உடை கழனியும் நிறைந்த
கொடி_இலை சிறு கேணியும் குறுகிட நடந்தார்

மேல்
$1.18.3

#859
கூய் திரண்டு அளி இனம் குடைந்துழி நறா குளித்து
தோய்த்த பொன் குவடு என இரு வரை புயம் துலங்க
வாய்த்த பேரொளி முகம்மது வருவது நோக்கி
காய் திரள் குலை சாய்த்து நின்று இறைஞ்சின கதலி

மேல்
$1.18.4

#860
வேந்தர்வேந்து அவண் அருகு உற அடைதலும் விரிந்த
மாம் தரு சினையிடை பழத்தொடும் துயல்வருதல்
தேம் தரும் கனி உண்டு எழுந்தருள் என செறிந்து
சாய்ந்த மென் தளிர் கரத்தினால் அழைப்பது ஒத்தனவால்

மேல்
$1.18.5

#861
தேக்கும் வெண் திரை புவிக்கு ஒரு தனி செங்கோல் செலுத்தி
காக்கும் நாயகம் முகம்மது வரும் வழி கவின
வாக்கும் பொன் குடம் நனி நிரைநிரை அணியணியாய்
தூக்கி வைத்த போல் முள் புற நறை கனி தூங்கும்

மேல்
$1.18.6

#862
வெள்ளி வெண் மலர் சொரிந்தன பாளை வாய் விரித்து
தெள்ளு செம்பொனால் சமைத்த போல் செழும் குலை தாங்கி
வள்ளலார் வரும் நெறி அலங்கரிப்பு என வயங்கும்
புள்ளி வண்டொடு பசு மடல் விரி தலை பூகம்

மேல்
$1.18.7

#863
விரிந்த மென் மலர் கொம்பினில் அளி இனம் வீழ
சரிந்து மென் துகள் உதிர்வது வானவர் தலத்தில்
இருந்த பொன் எடுத்து அரு நபி இணை மலர் அடியில்
சொரிந்து விட்டது போல் வயின்வயின்-தொறும் தோன்றும்

மேல்
$1.18.8

#864
தெறித்த முத்து ஒளிர் கழனி வானகம் என சிறப்ப
தறித்த பூம் கரும்பு ஆட்டு சாறு அடு புகை தயங்கி
குறித்த சோலை மேல் தவழ்வது குரை கடல் ஏழும்
பறித்து அருந்திய கரு முகில் படலம் ஒத்து உளதால்

மேல்
$1.18.9

#865
பாடல தரு நிழல் மரகத கதிர் படர
ஆடி நிற்பன முகம்மதை கண்டு அகம் களித்து
வீடின் மென் சிறை பட்ட கண் அனைத்தையும் விழித்து
கூடி நோக்குவது ஒத்தன களி மயில் கூட்டம்

மேல்
$1.18.10

#866
கோட்டு மென் மலர் வாசமும் கொடி மலர் விரையும்
சூட்டு நீர் மலர் நில மலர் வாசமும் தூர்த்து
பூட்டும் வில் கர முகம்மது மெய்யினில் பொங்கி
காட்டு மான்மதம் காவதம் காவகம் கமழும்

மேல்
$1.18.11

#867
ஒரு மனை பிறந்து ஒரு மனையிடத்தினில் உறைந்து
கரு வர தரித்து ஈன்று தன் கணவனை இகழா
பெரு வரம்பு உறும் பெண் கொடி என தலை சாய்த்து
திருவும் செல்வமும் திகழ்தர காண்பன செந்நெல்

மேல்
$1.18.12

#868
துன்னும் மெல் இதழ் வனசமும் பானலும் சுரும்பு உண்டு
இன் இசை பட ஊட்டு தேம் குவளையும் இடையில்
செம் நெருப்பு நா விரித்த சேதாம்பலும் செறிந்து
வன்ன மென் படம் போர்த்த போன்று இருந்தன வாவி

மேல்
$1.18.13

#869
துய்ய சைவல சுரி குழல் துயல்வர சுனை மென்
தையல் உள்ளகம் குளித்து உடல் களிப்பொடும் தனது
கையின் வெண் மலர் பந்து எடுத்து எறிவது கடுப்ப
செய்ய தாமரை மீது அனம் சிறந்து எழுந்ததுவே

மேல்
$1.18.14

#870
பண்ணை-வாய் செழும் கமலங்கள் செ இதழ் பரப்பி
உள் நிறைந்த மா மணியொடும் ஒளிர்வன அவைகள்
வண்ண வார் கழல் முகம்மது வரு நெறிக்கு எதிராய்
எண்ணிறந்த கை விளக்கு எடுத்து ஏந்தினர் இயையும்

மேல்
$1.18.15

#871
வண்டு இன தொனி மறுத்தில மலர் சொரி வனங்கள்
முண்டக தடம் அமர்ந்தில புள் ஒலி முழக்கம்
தொண்டை வாய்ச்சியர் குரவையே கழனிகள்-தோறும்
பண்டியின் தொகை கம்பலை மறுத்தில பாதை

மேல்
$1.18.16

#872
வடம் தயங்கி விம்மிதத்து எழும் குவி முலை மடவார்
குடைந்து நீர் விளையாடிய வாவியும் குறுகி
படர்ந்த மல்லிகை மாதுளை பந்தரும் நோக்கி
கடந்து இலங்கிய ஷாம் எனும் திரு நகர் கண்டார்

மேல்
$1.18.17

#873
முதிர்ந்த பேரொளி முகம்மது வரு நெறி முன்னி
எதிர்ந்து இறைஞ்சுதற்கு இ நகர் உறைந்திடும் அரசீர்
பொதிந்த பூணொடும் ஏகு-மின் என களி பொங்கி
அதிர்ந்திட கரம் அசைத்தல் போல் அசைந்தன கொடிகள்

மேல்
$1.18.18

#874
மது கொள் மாலிகை நாற்றி நல் மணி பல குயிற்றி
செதுக்கி மின் உமிழ் தமனிய தசும்புகள் செறித்து
விது கொள் மேனிலை மென் துகள் மாசு அற துடைத்து
புதுக்குவான் தொழில்புரிந்த போல் அசைந்த பொன் கொடிகள்

மேல்
$1.18.19

#875
சிவந்த பாத பங்கய நபி திரு நகர் புறத்து
கவிந்த கார் குடை நிழலிட வருவது கண்டு
நிவந்த வெண் சுதை பளிக்கு மேனிலை-வயின் நின்று
குவிந்த கை விரித்து அழைத்த போல் அசைந்தன கொடிகள்

மேல்
$1.18.20

#876
இ செகமதில் தபதியன் தொழில் இயற்றி
விச்சையின் அமைத்து-கொலோ அமரர் விண்ணில்
அச்சொடு பிறந்து இவண் அடைந்தது-கொல் தானோ
வச்சிர மணி கதிர் பரப்பு மணி மாடம்

மேல்
$1.18.21

#877
சுந்தர நபி குரிசில் மெய் புகழ் துலங்கி
அந்தரமும் அண்டபகிரண்டமும் நிறைந்து
மந்தரம் இது என்று உற வளைந்து அற வழிந்து
சிந்துவது என சுதை தெளித்த மணி மாடம்

மேல்
$1.18.22

#878
எங்கள் நபி இங்ஙனம் எதிர்ந்தனர்-கொல் என்ன
திங்கள் தவழ் சாளர விழிக்கடை திறந்து
பொங்கு அழகு நோக்குவன போல் உற நிவந்த
பைம் கதிர் விரித்து ஒளி பரப்பு மணி மாடம்

மேல்
$1.18.23

#879
கந்த நறும் வெண் சுதை கலந்து அணி இலங்கி
வந்து நகரம்-தனை வளைந்த மதிள் ஆடை
இந்த நிலம் எங்கும் எதிர் இன்று என வியந்தே
அந்தரம் அடங்கலும் அளந்தது வளர்ந்தே

மேல்
$1.18.24

#880
சீத அகழ் ஆடையை உடுத்து அணி சிறந்தது
மோதி இடறும் கரு முகில் குழல் முடித்தே
ஆதி மணி வாயின் முகமாக அழியாத
மாதர்-தமை ஒத்தது வளைந்த மதிள் அம்ம

மேல்
$1.18.25

#881
பந்தி பெற நின்ற படலம் தனி எழுந்தே
அந்தரம் நடந்து திரள் ஆர மணி வாரி
சிந்து திரை வாரி அற உண்டு அது திரண்டு
வந்து நனி மஞ்சு அடைகிடக்கும் மதிள் அன்றே

மேல்
$1.18.26

#882
கந்துகமொடு உந்தும் இரதங்களும் மிடைந்து
தந்தி இனமும் பிடிகளும் தலைமயங்கி
சுந்தர மடந்தையரும் மைந்தரொடு துன்றி
வந்தவர் எதிர்ந்தவர் நெருங்கும் மணி வாயில்

மேல்
$1.18.27

#883
ஈறு தெரியாது என உயர்ந்து எழில் தவழ்ந்து
மாறு பகர்கின்ற அரிய மா மதிள் மதிக்கு ஓர்
வீறு பெற நின்ற பரிவேடம் எனல் ஆகி
ஊறு புனல் கொண்டு கடல் ஒத்த அகழ் அம்மா

மேல்
$1.18.28

#884
தும்பிகள் குடைந்து புனல் துய்ப்ப மகரங்கள்
உம்பரின் எழுந்து முதலை குலம் ஒதுங்க
எம்பி உகளும்-தொறும் இடை கயல் வெருண்ட
கம்பலை அறாது அலை கலிக்கும் அகழ் அன்றே

மேல்
$1.18.29

#885
இந்து தவழ்கின்ற மதிளும் அகழ் இருந்த
கொந்து அலர் உறைந்து வரி வண்டுகள் குடைந்து
சிந்து அமுது அருந்து கயல் அம் கரை தியங்க
வந்து நனி கண்டு அகம் மகிழ்ந்தனர்கள் அன்றே

மேல்
$1.18.30

#886
கண்டு நகரம்-தனை மனத்திடை களித்து
வண்டு துதைகின்ற புய மைந்தர்கள் யாரும்
கொண்டல் கவியும் திறல் உடை குரிசில்-தானும்
எண் தலம் மதிக்கும் மதிளின் புறம் இறுத்தார்

மேல்
$1.18.31

#887
பந்தியின் நிரைத்தனர் பரி திரள் அனைத்தும்
உந்தும் இடப திரள் ஒட்டகம் நிரைத்தார்
இந்து கதிர் கொண்டு என இலங்கு அறையிடத்தில்
வந்த பல பண்டமும் மணி தொகையும் வைத்தார்

மேல்
$1.18.32

#888
வித்தகர் அனைத்தும் விடுதி தலைகள் புக்கார்
மை தவழ் முகில் குடை மறை குரிசிலோடும்
அ தலம் இலங்க அபூபக்கரும் இருந்தார்
உத்தம குணத்தினொடு மக்கிகள் உறைந்தார்

மேல்
$1.18.33

#889
புவி வளர நல் கனி பொழிந்த தருவூடு ஓர்
சுவையும் அற நஞ்சுகள் சொரிந்த செடி என்ன
பவம் இடறு வஞ்சனை படும் கொலை படைத்த
அபுஜகில் எனும் கொடிய பாவியும் அடைந்தான்

மேல்
$1.18.34

#890
எவ்வுழியிருந்து இவண் அடைந்தவர்கள் நீவிர்
செவ்விய திறல் குரிசில் யார் தொழில் யாது என்று
அ உலகில் அ நகரடைந்தவர்கள் வந்தே
ஒவ்வொருவரை தனி உசாவினர்கள் அன்றே

மேல்
$1.18.35

#891
மக்க நகரத்து அபுதுல் முத்தலிபு மன்ன
ருக்கு உரிய பேரர் உயிர் போல் முகம்மது என்போர்
தக்க புகழுக்கு மதி மிக்கவர் சரக்கோடு
ஒக்கலொடு வந்தனம் என தனி உரைத்தார்

மேல்
$1.18.36

#892
ஷாமு நகரத்து நசுறானிகள்-தமக்குள்
மா மறையின் மிக்கனவன் வந்து மைசறாவை
தேம் மலர் புயத்தில் அணி செம்மலொடு இருப்ப
கா மருவு சார்பினிடை கண்டனன் மகிழ்ந்தான்

மேல்
$1.18.37

#893
அன்னியர் எனாது மைசறா-தனை அடுத்து
வன்ன மலர் மாலை திகழ் மார்புற அணைத்து
முன்னை நெடு நாள் உறவதான முதியோனும்
என் அகம் அடைந்து இனிது எழுந்தருளும் என்றான்

மேல்
$1.18.38

#894
கோதை கதிஜா உரை மனத்திடை குறித்து
மாதிரம் எதிர்ந்து பொருவாத புய வள்ளல்
பாத கமலத்து உறு பணி தொழில் இகழ்ந்து ஓர்
போதினும் அகன்றது இலை என்று உரை புகன்றான்

மேல்
$1.18.39

#895
கோலமொடு கூறு மொழி கொண்டு உடல் களித்து
சீல நபி பாதம் மிசை செம் கண் இணை வைத்து
பால் அரிசி காய்கறி பழத்தொடு சுமந்தே
சாலவும் அளித்து அவனுமே தரகன் ஆனான்

மேல்
$1.18.40

#896
வந்தவர் கொணர்ந்த பணி மா மணி சரக்கோடு
இந்து கலை என்ற கலை யாவையும் எடுத்து
சிந்தை களிகொண்டு அவர் செழும் கரம் அறைந்தே
அந்த நகரத்து வணிகர்க்கு இனிது அளித்தார்

மேல்
$1.18.41

#897
மிக்க செம் மணி பணி விற்று மாற்றிய
மக்கிகள் மறு சரக்கு எவையும் வாங்கி தம்
ஒக்கலோடு இன்புற உவக்கும் போதினில்
அ கணம் ஒருவன் தன் அமைதி கூறுவான்

மேல்
$1.18.42

#898
உற்றது என்-வயின் உறை சரக்கு ஒன்றாயினும்
விற்றில முகம்மது என் விடுதி புக்கிடில்
அற்றையின் மாறி ஊதியம் உண்டாக்குவேன்
மல் தட புயத்திர்கள் என்று வாழ்த்தினான்

மேல்
$1.18.43

#899
என்று அவன் உரைத்தலும் எழுந்து வள்ளலும்
சென்று அவன் உறைந்திடும் விடுதி சேர்ந்த பின்
மின் தவழ் மணி கலை விலை என்று ஓதியது
ஒன்றிரண்டு என தொழில் உறுதி ஆனதே

மேல்
$1.18.44

#900
தன்னிடத்து உறைந்த பொன் சரக்கும் கோவையும்
முன்னிய விலைக்கு விற்று ஒடுக்கி அ நகர்
மன்னிய பண்டமும் வாங்கி வள்ளல்-தன்
பொன் அடி தன் முடி பொலிய சூட்டினான்

19. கரம் பொருத்து படலம்

$1.19.1

#901
மறம் கிளர் வேல் கர வள்ளல் மக்கிகள்
இறங்கிய விடுதி புக்கு இருக்கும் காலையில்
கறங்கிய ஷாமினில் காபிரில் சிலர்
அறம் கிளர் நபியை வந்து அடுத்து நோக்கினார்

மேல்
$1.19.2

#902
மேனியில் கதிர் விரி வியப்பும் மெய்யினில்
மான்மதம் கமழ்தலும் வடிந்த கைகளும்
தூ நிறை மதி என முகமும் தோள்களும்
கால் நிலம் தோய்தரா காரணீகமும்

மேல்
$1.19.3

#903
பன்ன அரும் சிறப்பு உடை அருள் கண் பார்வையும்
மன்னிய அவயவத்து அழகும் மாசு இலா
நல் நிலை மொழி பல நவிற்றும் செய்கையும்
இன்னன பலவும் கண்டு ஏகினார் அரோ

மேல்
$1.19.4

#904
கண்டவர் காண்கிலா காரணீகம் ஒன்று
உண்டு என நகரவர்க்கு உரைப்ப கேட்டவர்
விண்டவர் விளங்கிட வேதம் பேசிய
கொண்டல் அம் கவிகையார் என்ன கூறினார்

மேல்
$1.19.5

#905
மறை தெரி சமயமும் நமரும் மாய்ந்திட
உறைகுவன் ஒருவன் உண்டு அணித்து என்று ஓதும் நூல்
துறைவலார் நாள்-தொறும் சொற்ற சொற்படி
பிறவியான் இவன் என பின்னும் பேசினார்

மேல்
$1.19.6

#906
தரு பெரும் பதவி சமயம் பாழ்பட
வருபவன்-தன் உயிர் வானில் ஏறிட
குருதி நீர் சிந்திட குவலயத்திடை
செரு விளைத்திடுதலே திறம் என்று ஓதினார்

மேல்
$1.19.7

#907
அறை திரை கடல் என அதிர்தல் மாறி இங்கு
உறையு-மின் வேறு ஒரு உபாய சூழ்ச்சியால்
மறைபட வரவழைத்து அவன்-தன் வல் உயிர்
குறைபட ரகசிய கொலைசெய்வோம் என்றார்

மேல்
$1.19.8

#908
சூதர்கள் கூண்டு இனிது உரைத்த சொல்லை ஓர்
பாதகன் கருத்தின் உட்படுத்தி மா மறை
வாதி என்றவன் உயிர் மாய்க்க வேண்டுதற்கு
ஈது அலால் உறு மொழி ஒன்றும் இல் என்றான்

மேல்
$1.19.9

#909
உரை வழி அவை செய்து உபாயமாகிய
கரை மதி காபிரின் நால்வர் கள்ளமாய்
நிரை மணி புரிசையின் வாயில் நீங்கியே
விரை செறி முகம்மதின் விடுதி நண்ணினார்

மேல்
$1.19.10

#910
வஞ்சனை கொலை கபடு அனைத்தும் மாட்டிய
நெஞ்சினர் மக்கிகள் நிறைந்த நாப்பணில்
கஞ்ச மென் மலர் பத காரணீகரை
அஞ்சலித்து அன்புடன் அடுத்து நின்றனர்

மேல்
$1.19.11

#911
ஆங்கு அவர்-தமை அழைத்து அருகு இருத்தி நீர்
ஈங்கு உறை கருமம் ஏது எடுத்து இயம்பும் என்று
ஓங்கிய முகம்மதும் உரைப்ப சாமிகள்
தீங்கு உறு மனத்தினை அடக்கி செப்புவார்

மேல்
$1.19.12

#912
மரு கமழ் சோலை சூழ் மக்க மா நகர்
சரக்கு உளது எனில் அது தருக சேரலார்
செருக்கு அறுத்து அவர் உடல் சிதைத்து திக்கு எலாம்
பெருக்கிய கீர்த்தியீர் என்ன பேசினார்

மேல்
$1.19.13

#913
உறுதி கொள் சரக்கு விற்று ஒடுக்கி இ பதி
மறுசரக்கு எவையையும் வாங்கினோம் இனி
சிறிது உள சரக்கு என செப்ப சாமிகள்
அறுதியின் விலைக்கு எடுத்தருள்க என்றனர்

மேல்
$1.19.14

#914
அனையவர் கூற கேட்டு அடுத்த மக்கிகள்
மனையினில் புகுந்து எடுத்து யாவும் வைத்தனர்
வினையம் அற்று உறு விலை விள்ள சம்மதித்து
இனையன சரக்கு எலாம் இசைந்து வாங்கினார்

மேல்
$1.19.15

#915
சொல்லிய விலை பொருள் தொகையை நும்-வயின்
ஒல்லையின் உதவுதற்கு உறுதியாகவே
மல் உடை புய திறன் முகம்மதே எமது
இல்லிடை வருக என்று இசைத்திட்டார் அரோ

மேல்
$1.19.16

#916
ஷாமுநாட்டவர் உரை அனைத்தும் சம்மதித்து
ஆமினா திரு மகன் அகம் மகிழ்ச்சியாய்
நேமி வானவர் திரை நிறைந்து சுற்றிய
பூமி நாயகர் தொழ புறப்பட்டார் அரோ

மேல்
$1.19.17

#917
மக்கிகள் சிலருடன் மைசறாவும் தன்
பக்கலில் வர கதிர் பரப்பி மெய் ஒளி
திக்கினில் விரித்திட செறிந்த செம் கதிர்
மிக்க பொன் புரிசையின்-வயின் மேயினார்

மேல்
$1.19.18

#918
விரை நறை கமல செல்வி மேவு உசைன் நயினார் பாலன்
தரை புகழ் அபுல் காசீம் சீர் தரும் கொடை புகழே போல
நிரை சுதை வெள்ளை தீற்றி நிலா மணி குயிற்றி வெள்ளி
வரை என நிமிர்ந்து தோற்றி மறு இலாது ஒளிரும் வாயில்

மேல்
$1.19.19

#919
இரசித நிலையில் செம்பொன் இணை மணி கபாடம் சேர்த்தி
விரி கதிர் மணிகள் தூக்கி விரிந்த வாயிலினில் புக்கி
கரி மத மாரி சிந்தி களி வழி வழுக்கல் பாயும்
துரகத குர தூள் மாய்க்கும் தோரண மறுகு சார்ந்தார்

மேல்
$1.19.20

#920
அகில் புகை வயங்கு மாடம் அணி அணி இமயம் போன்றும்
துகில் கொடி நுடங்கும் வெள்ளி வரை என கதை கொள் மாடம்
மிக செறி சாந்த மாடம் மேருவை போன்றும் வீதி
தொகுத்த அ திசைகள்-தோறும் எண்ணில தோன்ற கண்டார்

மேல்
$1.19.21

#921
துகிர் சிறு வேர்விட்டு ஓடி சுடரொடும் திகழ்வதே போல்
பகிர் விரல் சிறு கால் மென்மை படர் சிறை புறவின் கூட்டம்
திகழ்தர கூவும் ஓதை தெரிவையர் கூந்தற்கு ஊட்டும்
புகையினை பொறாது மாடம் புலம்புவ போன்றது அன்றே

மேல்
$1.19.22

#922
நித்திலம் நிரைத்த மாடம் நிரை திரை போன்ற நாவாய்
ஒத்தன கரட கைமா ஒண் கொடி பவளம் போன்ற
கை தொடி மகளிர் செல்வ கடி முரசு அறைதல் ஓதை
நித்தமும் அறாத வாரி நிகர்த்தது நகரம் அன்றே

மேல்
$1.19.23

#923
தாறு பாய் தந்தி மா தேர் தானை மும்முரசு வேதம்
மீறு பண் இனைய எல்லாம் எங்கணும் விளங்கும் ஓதை
மாறு இலாது எழில் கொண்டு ஓங்கும் வளமை மா நகரம் வாய் விண்டு
ஈறிலான் தூதர் வந்தார் என எடுத்து இயம்பல் போலும்

மேல்
$1.19.24

#924
மாலை-வாய் பல பூண் தாங்கி மான்மதம் கமழ்ந்து வீங்கும்
கோலம் ஆர் பொருப்பு திண் தோள் குரிசில்-தன் கதிர்கள் தாக்கி
நீல மா மணியில் செய்து நிரை கதிர் எறித்த வீதி
வேலை-வாய் தரள சோதி விளங்குவ போன்றது அன்றே

மேல்
$1.19.25

#925
பந்தரிட்டு அலர்கள் சிந்தி பரிமள மரவம் நாற்றி
சந்து அகில் கலவை சேறு தடவிய மகுட வீதி
இந்து எழில் மழுங்கும் சோதி இறையவன் தூதர் மெய்யின்
கந்தம் ஊடு உலவி எங்கும் மறுவியே கமழ்ந்தது அன்றே

மேல்
$1.19.26

#926
முத்து அணி பவள திண் கால் முறைமுறை நிறுவி தேர்ந்த
சித்திரம் எழுதி வாய்த்த செறி மயிர் கற்றை தூக்கி
பத்திவிட்டு எறிக்கும் காந்தி பல் மணி பரப்பி ஓதை
நித்தமும் அறாது செல்வம் நிகழ்ந்த ஆவணமும் கண்டார்

மேல்
$1.19.27

#927
அடையலர் ஒடுங்க மோதும் படை முரசு அதிரும் ஓதை
இடைபடு வறுமை ஓட விடு கொடை முரசின் ஓதை
கடைபடு வடி வேல் கண்ணார் கடி மண முரசின் ஓதை
முடியுடை அரசர் வீதி எங்கணும் முழங்க கண்டார்

மேல்
$1.19.28

#928
வாரியின் மதங்கள் சிந்தி வாரணம் மிடைந்து செல்ல
தேர் இனம் திரண்டு கூடி செழும் கொடி நுடங்கி நிற்ப
பாரிடை துகள் விண் தூர்க்கும் பரி திரள் மலிந்து தோன்ற
வார வார் முரசு அறாத அரசர் வீதிகளும் கண்டார்

மேல்
$1.19.29

#929
புகர் முக சிறு கண் வேழ பொருப்பொடு பொருப்பு தாக்கி
இகல் பொர மூட்டும் செவ்வி இளையவர் குழாத்தின் ஓசை
முகிலொடும் அசனி பொங்கி முழங்குவ போன்றும் விண்ணும்
அகிலமும் அதிர தோன்றும் அணி மறுகிடமும் கண்டார்

மேல்
$1.19.30

#930
வன்னியின் கொழுந்து போல் செம் மணி கதிர் ஊசல் ஏறி
மின் அனார் பாடி ஆடும் வீதி-வாய் மலிந்த தோற்றம்
துன் இதழ் கமல போது துயல்வர நாப்பண் வைகும்
அன்னம் ஒத்திருப்ப நோக்கும் அகம் மகிழ்ந்து இனிது கண்டார்

மேல்
$1.19.31

#931
கந்துகம் எடுத்து காந்தள் கரத்தினில் ஏந்தி ஆடும்
மந்தரம் அனைய கொங்கை மயில் அனார் முகத்தின் வேர்வை
சிந்து அகடு உளைந்து தத்தும் திரை முகட்டு எழுந்து தோன்றும்
இந்து முத்து உகுப்பது என்ன இடம்-தொறும் மலிய கண்டார்

மேல்
$1.19.32

#932
கரு மணி கழங்கு கஞ்ச கரத்தினில் எற்றி ஆட
சுரி குழல் மலர் வண்டு என்ன சுரும்பு இனம் தாவ நோக்கி
அரிவை புன்முறுவல் தோன்ற அணி நகை கதிரின் முத்தாய்
தெரிதர புதுமை காட்டும் தெரு-தலை சிறப்பும் கண்டார்

மேல்
$1.19.33

#933
மாசு அறு வாயில்-தோறும் வயங்கிய கதலி நெற்றி
பாசடை துயல்வது இந்த பாரினில் குபிர் என்று ஓங்கும்
மாசு அற உதித்த வள்ளல் அகுமதின் அழகு மெய்யின்
வீசுவ போன்று தோன்றி விளங்குதல் பலவும் கண்டார்

மேல்
$1.19.34

#934
முருக்கு இதழ் கரிய கூந்தல் முத்த வெண் நகையினார் தம்
பெருக்கொடு திரண்டு நல் நீர் குடைதலின் பிறங்கு மெய்யின்
திரு கிளர் கலவை சேறு நானமும் புழுகும் சேர்ந்து
மரு பொலி வாவி யாவு மணம் கமழ்ந்து இருப்ப கண்டார்

மேல்
$1.19.35

#935
பரதம் ஆடிடமும் கீத பண் ஒலி அரங்கும் சீர்மை
விரத மா மறையோர் ஓதும் வேத மண்டபமும் செவ்வி
கர தலம் சேப்ப வள் வார் கருவியார் இடமும் செல்வர்
நிரைதரு சிரம சாலை நிறைந்தன பலவும் கண்டார்

மேல்
$1.19.36

#936
இன்னன பலவும் நோக்கி எழில் கனிந்து ஒழுகி காந்தி
மின் ஒளி மழுக்கும் சோதி மெய் முகம்மதும் அன்பாக
தன் உயிர்த்தோழரோடும் தரகனும் மைசறாவும்
பின் உற வர அ காபிர் பெரும் தலைக்கடையில் சார்ந்தார்

மேல்
$1.19.37

#937
அருளினில் அறத்தில் தேர்ந்த வடிவினில் எவரும் ஒவ்வா
குரிசில் நான்மறைக்கும் வாய்த்த கொண்டல் அம் கவிகை வள்ளல்
விரி கதிர் கலைகளோடும் வெண் மதி காலின் ஏகி
இருளிடம் புகுவ போல இவர்கள் இல்லிடத்தில் புக்கார்

மேல்
$1.19.38

#938
கள் அவிழ் மரவ திண் தோள் காரண கடலே அன்ன
வள்ளலை அவர்கள் போற்றி மாளிகை-வயின் கொண்டு ஏகி
தெள்ளிய மணியில் செய்த செவ்வி ஆசனத்தில் ஏற்றி
வெள்ளிலை அடைக்காய் சந்தம் விரைவின் வைத்து இருந்தார் அன்றே

மேல்
$1.19.39

#939
மை தவழ் குடையீர் இந்த மனையிடை புகுத யாங்கள்
செய் தவ பலனோ முனோர் திளைத்த புண்ணியத்தின் பேறோ
எய்திய பெற்றி என்ன இசைந்த நல் முகமனாக
பொய் திகழ் நாவால் வஞ்சம் பொருந்திய மனத்தர் சொன்னார்

மேல்
$1.19.40

#940
நல் நய மொழிகளாக நவிற்றி அங்கு இருந்த காலை
வன் மன கொடிய காபிர் மனத்து உறு சூழ்ச்சியாக
மின் ஒளி கரக்கு மாட மேனிலை செறித்த கல்-பால்
சென்ம் என கடைக்கண் ஆர செப்பினன் ஒருவன் சென்றான்

மேல்
$1.19.41

#941
தீங்கு உறு மனத்தன் ஏகி செறித்த மேல் பலகை மெல்ல
வாங்கி அங்கு இருந்த கல்லை வரை புயம் பிதுங்க உன்னி
தாங்கலில் உருட்டி மெல்ல தள்ளினன் தள்ளலோடு
நீங்க அரும் கரத்தை கவ்வி நெரிபட இறுக்கிற்று அன்றே

மேல்
$1.19.42

#942
கரத்தினில் பதிந்த கல்லை கழற்றினன் கழற்றலாகாது
உரத்தொடும் காலை ஊன்றி உதைத்து இழுத்து அசைத்து வெள் வாய்
நிரைத்த பல் அதரம் கவ்வி நெற்றி மேல் புருவம் ஓட்டி
வரை தட புயங்கள் வேர்ப்ப வலித்து அற சலித்து உழன்றான்

மேல்
$1.19.43

#943
உரம்புவன் கையை கல்லோடு உதறுவன் உதறடாமல்
நிரம்ப நெட்டுயிர்ப்பு செய்வன் நிலைதளர்ந்திடுவன் வாசி
குரம்பு அடை துகள் போல் ஆவி குலைகுலைந்திடுவன் இந்த
தரம் பட விதியோ என்ன தயங்குவன் மயங்குவானே

மேல்
$1.19.44

#944
மாதிரம் கையை பற்றி வரவர நெருக்க மேன்மேல்
வேதனை பெருக வாடி வேர்த்து உடல் அயர்ந்து சோர்ந்து
பாதகம் பலித்தவாற்றால் பதைபதைத்து உருகி ஏங்கி
ஏது இனி செய்வோம் என்ன இடைந்து நெஞ்சு உடைந்து நின்றான்

மேல்
$1.19.45

#945
இனையன துன்பம் எய்தி இவன் இவண் இருப்ப அன்னோர்
மனையிடை பொருள் கொண்டு ஈங்கு வந்திலன் காணும் என்ன
சினமுடன் சொல்வார் போல செப்பி மேனிலையில் போந்தார்
புனை மணி கரம் கல்லோடும் புரண்டு அவன் கிடப்ப கண்டார்

மேல்
$1.19.46

#946
மாட்டு வந்து இருந்து நின்-பால் வந்தவை எவை-கொல் என்ன
பூட்டிய கல்லும் தானும் புரண்டு அவன் தெருண்டு சொல்வான்
வீட்டினில் புகு-மின் பாரம் வீழ்த்து-மின் என்னும் நும் சொல்
கேட்டனன் கேட்ட போதே கெட்டனன் கெட்டேன் என்றான்

மேல்
$1.19.47

#947
வருந்தி கல் இரு கையினும் பிடிபட மயங்கி
இருந்தவனிடத்து எய்திய பேர் அதிசயித்து
சரிந்து வீழ்ந்திட ஈழ்த்தனர் ஈழ்த்தவர் தவித்தார்
விரிந்திடாது மேன்மேல் அற இறுகிய விலங்கல்

மேல்
$1.19.48

#948
இல்லினுள் புகுந்தவர் ஒருமுகம்பட இருந்து
பல்லினால் இதழ் அதுக்கி மெய் உரத்தொடும் பறிப்ப
சொல்லொணாது உயிர் பதைத்திட உடல் துடிதுடிப்ப
கல்லினுள் புக அற்றன அவன் மணி கரங்கள்

மேல்
$1.19.49

#949
கரங்கள் போயின கல்லொடும் என நிலை கலங்கி
இரங்குவார் இடைவார் இது விதி-கொல் என்று ஏங்கி
மரம் கிடந்து என கிடந்தவர்-மாட்டில் நின்று ஒருவன்
அரங்கு-நின்று இழிந்து இயல்புறும் தரகனை அடைந்தான்

மேல்
$1.19.50

#950
தரகனுக்கு உரைத்து அழைத்து உயர் மேனிலை சார்ந்து
விரகர் செய் தொழில் அனைத்தையும் ஒன்றற விரித்தான்
கரை கணீர் உக கேட்டவன் மனம் கடுகடுத்து
நரகவாதிகள் ஆயினீர் என நவின்றனனே

மேல்
$1.19.51

#951
பாரிடை பெரியவர்களுக்கு இடர் படுத்திட என்று
ஓரும் வன் மனத்தவர்களுக்கு உறு பொருள் உலகில்
சாரும் மக்களும் மனைவியும் தாமும் தம் பொருளும்
வேரொடும் கெடும் என்பது நிசம் என விரித்தான்

மேல்
$1.19.52

#952
ஓங்கு மா நில மாக்களில் ஒருவருக்கொருவர்
தீங்கு இயற்றிட நினைத்திடும் கொடிய அ தீமை
நீங்கிடாது அவர் உயிரினை பருக நேரலர் கை
தாங்கும் வாள் என ஒல்லையில் உற சமைந்திடுமே

மேல்
$1.19.53

#953
ஈரம் அற்ற புன் மன சிறியவர் திரண்டு இகலி
கோரமாகிய பழியை எண்ணா கொடும் கொலையாய்
தேரும் நல்லறிவாளருக்கு இழைத்திடும் தீங்கு
நீரிடை கனல் நெருப்பு உகுத்திடுவது ஒத்திடுமே

மேல்
$1.19.54

#954
மக்க மா நகர் முகம்மது தமக்கு அல மறு இல்
தக்க பேர்க்கு இடர் நினைப்பதும் தகுவது அன்றே யான்
மிக்க வார்த்தையில் விளம்புவது என்-கொல் நும் வினையால்
கைக்குமேல்பலன் பலித்தது காண்டினிர் என்றான்

மேல்
$1.19.55

#955
ஆதி தூதுவர் ஒருவர் வந்து அடைகுவர் எனவே
வேத வல்லவர் உறு மொழி நமக்கு முன் விரித்தார்
ஏதமற்றவர் அவர் இவர் அலது வேறு இலையால்
போது இணை சரண் பணிந்து இவை புகலுவம் என்றான்

மேல்
$1.19.56

#956
பொருத்து நல் மொழி இது-கொல் என்றே மிக புகழ்ந்து
கருத்து அழிந்த அ கருத்தினில் நன்கு என கருதி
தரித்த பேர் அனைவரும் எழுந்தனர் அதில் தரகன்
ஒருத்தன் முன் எழுந்து அணி முகம்மதினிடத்து உற்றான்

மேல்
$1.19.57

#957
ஏதம் உற்ற வன் மன கொடியவர்கள் இல்லிடத்து ஓர்
பாதகத்தினை விளைத்தனர் பலித்தது அங்கு அவர்-பால்
வேதனை படர் விள்ளுதற்கு அரிது வெள் வேலோய்
ஈது வந்தவை என பணிந்து உரைத்து அவண் இருந்தான்

மேல்
$1.19.58

#958
இருந்த காலையில் அனைவரும் வந்து எழில் இலங்கி
சொரிந்த மா முக முகம்மதின் இணை அடி தொழுது
புரிந்த தீங்கினால் வந்தவை அனைத்தையும் புகன்றார்
விரிந்த வாய் புலர்ந்து ஏங்கிய மனத்தொடு மெலிவார்

மேல்
$1.19.59

#959
வெறுத்த புன் மன கொடியம் யாம் விளைத்திடும் வினையை
பொறுத்து நல் அருள் எம்-வயின் புரிக என போற்றி
மறுத்து நல் மொழி புகன்றனர் வளரும் நல் அறத்தை
அறுத்து தீ வினை பயிர் விளைத்திட நினைத்தவரே

மேல்
$1.19.60

#960
வருந்தி நல் மொழி தரகன் அங்கு உரைத்தது மருவார்
பொருந்தி நின்றவை புகன்றதும் மனத்தினில் பொருந்தி
திருந்து வெண் புகழ் முகம்மது செழும் கரம் போக்கி
இருந்தவன்-தனை கொணர்க என வாய் மலர்ந்து இசைத்தார்

மேல்
$1.19.61

#961
சொன்ன போதினில் ஓடினர் சோரிநீர் சொரிய
தன் இரும் கரம் இழந்தவன்-தனை சடுதியினில்
மன்னர்_மன்னவர் முன் கொணர்ந்தனர் மணி கரத்தை
பின்னமாக்கிய சிலையையும் சிறுமையில் பெரியோர்

மேல்
$1.19.62

#962
கல்லினுள் புதைந்து உறைந்திடும் கரங்களும் கரம் போய்
அல்லலுற்று இடைந்து அழுங்கிடும் அவனையும் நோக்கி
செல் அலம்பிய கரதல முகம்மது தெளியா
புல்லர் வஞ்சக நெஞ்சகம் தெரிதர புகல்வார்

மேல்
$1.19.63

#963
கரிய கல்லினில் பதிந்திடும் கரத்தில் நின் கரத்தை
தெரிய வைத்திடு என்று ஓதிய மொழியினை தேறி
சொரிதரும் குருதிகளொடும் துடுப்பு எனும் கரங்கள்
அரிதில் நீட்டியே தொட்டிட ஒட்டின அன்றே

மேல்
$1.19.64

#964
உறையும் கல்லினில் கரங்களை நெகிழ் என உரைப்ப
குறைவு இலாது உற வாங்கினன் நீரினில் குளித்து
மறையும் மென் கரம் வாங்கினது என மறு தழும்பு
கறையும் இல் என இலங்கினது அவன் இரு கரங்கள்

மேல்
$1.19.65

#965
முன்னை நாளினும் பெலன் உறு முழு மலர் கரத்தால்
வன்ன மா மலர் முகம்மதின் இணை அடி வருடி
இன்னல் நீக்கினை இரு கரம் பொருத்தினை இனி என்-
தன்னை ஆளுதி கடன் என அடிக்கடி தாழ்ந்தான்

மேல்
$1.19.66

#966
கொடிய சூதர்கள் வன் நசுறானியின் குலத்தோர்
நெடிய காரணம் என முகம்மது-தமை நெகிழாது
அடியினில் பணிந்து ஆசரித்து ஆசனத்து இருத்தி
கடிதினும் பொருள் இவை என கணக்குடன் கொடுத்தார்

20. ஊசாவைக் கண்ட படலம்

$1.20.1

#967
மிக்க செம்பொன் ஈந்தவர்க்கு நல் மொழி பல விளம்பி
புக்கிருந்தவருடன் எழுந்து அகன்று பொன் திகழ
தக்க மா மணி கதிர் விடும் மறுகினில் சார்ந்தோர்
அக்கசாலையினிடத்து வந்து இருந்தனர் அன்றே

மேல்
$1.20.2

#968
நெருப்பு குத்திடும் தெறித்திடும் சுடும்சுடும் நெறியீர்
இருப்பிடம் தவிர்ந்து எழும் என தபதியன் இசைப்ப
ஒருப்பட துணுக்கென புறத்து ஒதுங்கினர் உழையோர்
விருப்பமுற்றிருந்து எதிர் அகுமது விளக்கினரால்

மேல்
$1.20.3

#969
தோற்றம் நும்மிடத்து அலது வேறு இலை சுடும் கனலை
ஆற்றும் பேற்றியால் உமதிடத்து அடைகுவது அலது
வேற்றிடம் புகா புக்கினும் மெய்யினில் வெதுப்ப
ஊற்றம் இன்று அதற்கு உறு குணம்-தானும் இன்று எனவே

மேல்
$1.20.4

#970
மெலிவு இலாத சொல் கேட்டலும் கம்மியன் வெகுண்டு அ
உலையினில் கரும்பொன் புகுத்து உமியொடு கரியும்
பொலிய வைத்து எரி மூட்டினன் புகை இருள் படலம்
மலிதர கனல் கொழுந்துவிட்டு எழுந்தது வளர்ந்தே

மேல்
$1.20.5

#971
உருகி வெந்த வல் இரும்பினை உலைமுகத்து எடுத்து
கருகு மேனியன் கண்கடை கனல் பொறி கதுவ
அருகிருந்து எழும் தங்கைகள் சிவப்புற வடித்தான்
பெருகும் அக்கினி கொழுந்துகள் தெறித்தன பிதிர்ந்தே

மேல்
$1.20.6

#972
சரிந்து வீழ்ந்திட சிதறிய செம் கதிர் தழல்கள்
விரிந்து நன் கதிர் குலவிய முகம்மது மெய்யின்
எரிந்த சந்தன சேறு பன்னீரொடும் குழைத்து
சொரிந்ததாம் என குளிர்ந்தது சோர்வு அற அன்றே

மேல்
$1.20.7

#973
இ திறத்து எழில் கண்டு கம்மியன் எதிர் நோக்கி
உத்தம குல பெயர் தலைமுறை பெயர் ஊர் பேர்
பத்தியின் நுமக்கு இடு பெயர் இவை படிப்படியாய்
வித்தகா தெரிதர உரை என விளம்பினனே

மேல்
$1.20.8

#974
மக்கம் ஊர் கிலாபு அருள் குசை அப்துல் முனாபுக்கு
அக்கமான ஹாஷீம் முதல் அப்துல் முத்தலிபு
தக்க மன்னவர் மைந்தரில் அப்துல்லா தவத்தால்
மிக்கன் என் பெயர் முகம்மது என விளம்பினரே

மேல்
$1.20.9

#975
அறபின் மக்க மா நகரின் முகம்மது என்று அணித்தாய்
உற உதித்து நம் சமயங்கள் உலைப்பன் என்று உரவோர்
மறையில் ஓதிய வரன்முறைப்படி அஃது உணர்கில்
குறைவு இலாதவன் இவன் என குறித்து உளம் கொதித்தான்

மேல்
$1.20.10

#976
வருந்திலா மறையவர்களே ஷாமின் மன்னவரே
திருந்து நல் அறிவாளரே தேவதம் அனைத்தும்
பொருந்துறாது அற அழித்திட நகரிடை புகுந்து இங்கு
இருந்தவன் இவன் காண் என கூக்குரலிட்டான்

மேல்
$1.20.11

#977
கனை வாருதி நிகர் ஷாம் உறை கதிர் மா முடி வீரர்
தனு வாள் அயில் எறி வேல் கணை தண்டம் பல ஏந்தி
முனையார் எவர் எதிர்வார் முறையிடுவார் எவர் என்றே
சினமாய் எழு புலி போல்பவர் சிலர் வந்து வளைந்தார்

மேல்
$1.20.12

#978
கருதார் வரு திறலால் இடு கலகம் தரம் அன்று என்று
இரைவாகிய சினத்தால் நய குணத்தால் திரள் இனத்தால்
பொருவோம் எனும் மனத்தால் அதி புகழார் முகம்மதுவை
மருவார் மனம் மலைய கொடு மதிளின் புறம் வந்தார்

மேல்
$1.20.13

#979
நறை துன்றிய சுதை வெண் கதிர் எயிலின் புறம் நண்ணி
உறையும் விடுதியில் வந்தனர் ஒளி மா முகம்மதுவும்
துறையின் தொழில் வகையும் தொகை நிதியும் முறைமுறையாய்
நிறைகின்றன குறை இன்று என நெறி ஏகிட நினைவார்

மேல்
$1.20.14

#980
எருது ஒட்டகம் அடல் வெம் பரி இரு பக்கமும் நிறைய
மரவ தொடை புயம் முங்கிட வரும் மக்கிகள்-தாமும்
தருமத்துரை நயினாரொடு சதுரன் மைசறாவும்
புரிசை புற நகர் விட்டு அணி பொழில் புக்கி நடந்தார்

மேல்
$1.20.15

#981
குருகு ஆர் கழனிகள் வாவிகள் குளிர் சோலை கடந்தே
இரு காதமும் ஒரு காதமும் எழிலாக நடந்து
கரு மா முகில் நிழல் தாவிய கபிபா முகம்மதுவும்
வரு பாதையின் நடுவே ஒரு வள மா மனை கண்டார்

மேல்
$1.20.16

#982
கன மா மதியுடையோன் எதிர் களை காலம் உணர்ந்தோன்
மனமூடு உறை அறிவால் முகம்மது வார் வழி அறிவோன்
குனி வார் சிலை நசுறானிகள் குருவாகிய ஊசா
எனும் மா மறை முதியோன் உறை எழில் மா மனை ஏகார்

மேல்
$1.20.17

#983
மேக குடை நிழலும் கதிர் விரிவாகிய மெய்யும்
பாகத்திடை கமழும் பரிமளமும் மதி முகமும்
நாகத்தொடு தனி பேசிய நயினார் முகம்மது என்று
ஆகத்திடை கண்டான் அவண் அடைந்தான் அருகு இருந்தான்

மேல்
$1.20.18

#984
இருந்தான் முகம்மது தண் கதிர் எழில் மா முகம் நோக்கி
திருந்தார் அடல் அரியே தரு செழு மா மழை முகிலே
பெரும் தாரணி-தனில் நும் பதி குலம் பேர் அவை அனைத்தும்
வருந்தாது உரையீர் என்றனன் மறை ஓதிய மதியோன்

மேல்
$1.20.19

#985
அதுனான் கிளை ஹாஷிம் குலம் அமரும் பதி மக்கம்
பிதிரா நிலை அபுத்தாலிபு பின்னோர் அபுதுல்லா
சுதனா முகம்மது நான் என சொன்னார் மறை_வல்லோன்
இதமாகிய நபியாம் என இசைந்தான் மனம் மகிழ்ந்தான்

மேல்
$1.20.20

#986
வடிவாரிடை அகலாது உறை மைசறா-தனை நோக்கி
கொடியார் கழல் அடலோய் நுமர் குலம் ஏது என நவில
கடு வார் விழி கொடி ஆர் இடை கதிஜா எனும் மயிலார்
அடியாரினில் எளியேன் மிக உரியேன் என அறைந்தான்

மேல்
$1.20.21

#987
மட மா மயில் கதிஜா என வளர் கோதையை உதவும்
மடலார் அரி குவைலிது எனும் அறிவோன் மறைமொழியை
கடவாத நன் மதியோன் உயர் கன பேரருளான் என்
உடல் ஆருயிர் எனவே முதல் உறவானவன் என்றான்

மேல்
$1.20.22

#988
முன்நாள் உறவு என ஓதிய முதியோன் முகம் நோக்கி
என் ஆருயிர் அனையீர் உமது இடு பேர் சொலும் எனவே
மன் ஆகிய மைசறா சொல் மறையோனும் மகிழ்ந்தே
ஒன்னார் அரியே என் பெயர் ஊசா என உரைத்தான்

மேல்
$1.20.23

#989
உரையினில் உறவு குவைலிது என்று ஊசா உரைத்தவை உளத்தினில் குறித்து
கரை வழிந்து ஒழுகு மகிழ்ச்சியாய் மைசறா கரும் குழல் செ இதழ் கனி வாய்
திரு மொழி உரைத்தது இவன் என கருதி செவ்வியோன் முகம்-அதை நோக்கி
புரை அற நுமக்கு சொல்வது ஒன்று உளது கேண்-மின் என்று அன்பொடு புகல்வான்

மேல்
$1.20.24

#990
குறைஷி அம் குலத்துக்கு ஒரு மணி எனவும் குவைலிதுக்கு இரு விழி எனவும்
அறை திரை கடலில் அமுது என பிறந்த அரிவையர்க்கு அணி எனும் கதீஜா
நிறை மதி மடியில் தவழவும் துகிலில் பொதியவும் நெறிபடும் கனவின்
உறைபடும் பொருளை உணர்க என சலாமும் ஓதினர் உமக்கு என உரைத்தான்

மேல்
$1.20.25

#991
அம்புய வதனன் குவைலிது வருந்தும் அரும் தவம் திரண்டு ஒரு வடிவாய்
கொம்பு என ஒசிந்த நுண் இடை கதீஜா குறித்திடு கனவினை தேர்ந்து
கம்பிதம் செய்து கருத்தினுள் மகிழ்ந்து காரண புதுமைகள் அனைத்தும்
இம்பரின் விளங்க மைசறா மகிழ இனிதுற எடுத்து இசைத்திடுவான்

மேல்
$1.20.26

#992
அகிலமும் திசையும் சுவனமும் விளங்க அணி திகழ் மக்க மா நகரின்
முகம்மது என்று உதித்து தீன் பயிர் ஏற்றி மறை வழி தவறிடா நடத்தி
பகர் அரு நபியாய் வேதமும் உடைத்தாய் வருவர் என்று அறிவுளோர் பகர்ந்த
நிகர் அரும் குரிசில் இவர் அல்லால் இந்த நீள் நிலத்தினில் இலை எனவும்

மேல்
$1.20.27

#993
கலை நிறை மதியாய் மடி மிசை இருப்ப கனவு கண்டு அகம் மகிழ் கதீஜா
நிலை மிசை இவர்க்கே மனைவியாய் இருந்து இ நீள் நிலம் புரப்பது தவறு இல்
குலம் மிக பெருகும் செல்வமும் வளரும் குறைவு இலா பதவியும் பேறும்
அலகு இலாது அடைந்தது என்னவும் உரைத்தேன் என அரிவையர்க்கு உரை என்றான்

மேல்
$1.20.28

#994
மறை தெரி அறிவன் உரைத்த சொல் கேட்டு மைசறா மனம் மிக மகிழ்ந்து
நிறை பதி-தனை விட்டு இற்றை நாள் வரைக்கும் நிகழ்ந்த காரணம் உள அனைத்தும்
குறைவு இலாது எழுதி முத்திரை பொருத்தி குறித்தவரிடத்தினில் கொடுத்து
கறை இலா மதியம் எனும் மயில் கதீஜா கரத்தினில் அளித்திடும் என்றான்

மேல்
$1.20.29

#995
விண்ணபத்திரத்தை மக்க மா நகரில் விளங்கு_இழைக்கு அனுப்பிய பின்னர்
பண்ணினில் சிறந்த மறை முறை தேர்ந்த பண்டிதன் பத மலர் போற்றி
வண்ண வார் தட கை முகம்மதை புகழ்ந்து வாகனம் கொணர்ந்தனன் மைசறா
எண்ணிறந்து அனைய மக்கிகள் எவரும் எழுந்தனர் குரிசிலும் எழுந்தார்

மேல்
$1.20.30

#996
பாதையில் புகுத மூதறிவு உணர்ந்த பண்டிதன் என வரும் ஊசா
தீது அற எழுந்து முகம்மதின் வனச செம் மலர் அடி இணை பணிந்து
கோது அற பழுத்த செழும் கனி கொடுத்து கொண்டல் அம் கவிகையை நோக்கி
மா தவர்-தமையும் அடிக்கடி போற்றி மகிழ்ந்து தன் மனை-வயின் சார்ந்தான்

21. கதீஜா கனவு கண்ட படலம்

$1.21.1

#997
முகை முறுக்கு அவிழ்ந்து முருகு கொப்பிளிக்கும் முளரியும் முழு மணி நீலம்
நகை விரித்து அனைய குவளையும் துகிரின் நறு மலர் விரிந்து என விரிந்து
திகழ்தரும் சேதாம்பலும் குடியிருந்து திரு வளர் வாவியின் வாளை
உகள்-தொறும் வெருவி ஒதுங்கிய சிறை புள் ஒலித்திடும் இடங்களும் கடந்தார்

மேல்
$1.21.2

#998
புனல் முகில் அசனி அதிர்-தொறும் கிடந்து புடைத்து வால் விசைத்து அரி ஏறு
சினமுடன் சிலம்ப புகர் முக சிறு கண் சிந்துரம் பிடியொடும் இரிந்து
நனை மலர் உதறும் காவகத்து ஒதுங்கு நனி திரள் குயின் என மயில்கள்
இன மணி சிறை விட்டு அரு நடம்புரியும் இரு வரை இடங்களும் கடந்தார்

மேல்
$1.21.3

#999
படு கொலை பார்வை கார் உடல் கழல் கால் பறி தலை பங்கி வேட்டுவர் தம்
கொடு_மரம் குனித்து தூணியும் தாங்கி கொழும் சரம் வல கரம் தூண்டி
புடைபுடை பரந்த மான் இனம் வீழ்த்தி பொருந்த உண்டு இருந்த சீறூரும்
விடர் படர் கானல் பாலையும் கடந்தார் விறல் பெறு மரபினின் வேந்தர்

மேல்
$1.21.4

#1000
தொண்டை அம் கனிகள் தோன்றியில் சிறப்ப தோன்றியது அரிய மாணிக்கம்
விண்டு அலர் விரித்து காய்த்தன போலும் விளங்கிட குருந்தொடு காயா
வண்டு உறை பிடவும் கொன்றையும் செறிய வளைதரும் குடியிடை பொதுவர்
வெண் தயிர் உடைக்கும் ஒலி மறா முல்லை வேலியும் கடந்து அயல் போனார்

மேல்
$1.21.5

#1001
பரி திரள் அனைத்தும் ஒருபுறம் நெருங்க பாதையில் பல்லியம் எனவே
எருத்து இன மணிகள் ஒலித்திட ஒரு-பால் இலங்கு இள வெயில் பிறந்து உமிழ
கரத்தினில் நெடு வேல் ஏந்திய மாக்கள் கவுள் மத களிறு என நடந்து
விரித்த வெண் குடையும் துவசமும் மலிய விரைந்து ஒரு காவகம் புகுந்தார்

மேல்
$1.21.6

#1002
சந்து அகில் திலகம் குரவு தேக்கு ஆரம் தான்றி கோங்கு ஏழிலைம்பாலை
சிந்துரம் அசோகு மாதவி நெல்லி செண்பகம் பாடலம் தேமா
மந்தரை கமுகு புன்னை நாரத்தை மகிழ் விளா மருது எலுமிச்சை
குந்தம் ஆசினி மா கடம்பு இலவு இதழி குங்குமம் செறி திரள் சோலை

மேல்
$1.21.7

#1003
நித்தில திரளின் அரும்பு இளம் புன்னை நிரை மலர் சொரிவன ஒரு-பால்
கொத்து அரும்பு அலர்த்தி சண்பக தொகுதி குவைதர சொரிவன ஒரு-பால்
பத்தியில் செறிந்த பாடலம் விரித்த பாயலின் சொரிவன ஒரு-பால்
புத்து அரிசொளுக்கு நிரை மகிழ் செறிந்த புழை மலர் சொரிவன ஒரு-பால்

மேல்
$1.21.8

#1004
முள் இலை பொதிந்த வெண் மடல் விரிந்து முருகு உமிழ் கைதைகள் ஒரு-பால்
கொள்ளை மென் கனிகள் சிதறு முள் ஈந்து குறும் கழுத்து அசைவன ஒரு-பால்
வெள்ளி வெண் கவரி விரிந்த போல் பாளை மிடறு ஒசிவன கமுகு ஒரு-பால்
தெள்ளு நீர் குரும்பை குலம் பல சுமந்த செறி திரள் தாழைகள் ஒரு-பால்

மேல்
$1.21.9

#1005
தூய் திரள் பளிக்கு கனியை ஆமலகம் சொரிதர சிதறுவ ஒரு-பால்
காய் கதிர் நீல மணி என நாவல் கரும் கனி சிதறுவ ஒரு-பால்
சேய் உயர் தேமா செழும் தலை குழைத்து தீம் கனி உகுவன ஒரு-பால்
சாய் பணர் கொழுவிஞ்சியின் கனி சிவந்த தனம் என சொரிவன ஒரு-பால்

மேல்
$1.21.10

#1006
தேம் குடம் அனைய முள்_புற கனிகள் திகழ்தர செறிந்தன ஒரு-பால்
மாங்கனி அமுத திவலைகள் தெறிப்ப மலிதர சொரிவன ஒரு-பால்
பூம் குலை கூன் காய் பொன் பழுத்து ஒளிர்வ போன்றன கதலிகள் ஒரு-பால்
தீங்கு இல் பொன் கலசம் விண்டு செம் மணிகள் சிந்தும் மாதுளை திரள் ஒரு-பால்

மேல்
$1.21.11

#1007
உலகமும் திசையும் புகழ் உசைன் நயினார் உதவு சந்ததி அபுல் காசீம்
சலதரம் அனைய கரத்தினில் ஏற்றோர்-தம் மனம் குளிர்வ போல் குளிர்ந்து
நிலம் மிசை கிடையா பெரு வளம் சுரந்து நீள் திரை வாவிகள் திகழ
அலகு இலா செல்வம் குறைவு அறாது இருந்த அணி திகழ்வன தளிர் சோலை

மேல்
$1.21.12

#1008
அறிவினுக்கறிவாய் அரசினுக்கரசாய் அணியினுக்கணியதாய் சிறந்த
மறுவி மெய் கமழ்ந்த முகம்மதும் கூண்ட மக்கிகள் அனைவரும் செறிந்து
நிறை வளம் பல கண்டு அகம் களி கூர்ந்து நிரை மணி புரவி விட்டு இறங்கி
துறையில் முத்து இறைக்கும் திரை தடம் சூழ்ந்த சோலையில் இருந்தனர் இப்பால்

மேல்
$1.21.13

#1009
வான் இழிந்து அமரர் எண் இலக்கு இல பேர் முகம்மதினிடத்தில் வந்து உறைந்து
தேன் இமிர் மரவ தொடையலும் தரித்து திகழ் மணி கலன் பல அணிந்து
பானுவின் கதிர்கள் பொருவுறாது இயன்ற பல் மணி தவிசின் மேல் இருத்தி
கான் மலர் தூய் ஒட்டகத்தின் மேல் ஏற்றி கண்கொளாத அழகு இருந்து இலங்க

மேல்
$1.21.14

#1010
பல்லியம் கறங்க கொடி திரள் நுடங்க பால் நிற கவரிகள் சுழற்ற
வெல்லவன் கதிரின் படைக்கலம் செறிய இந்து வெண் குடை தனி நிழற்ற
செல் உறழ் கரட மத கரி நெருங்க சிவிகையின் கணம் திசை மலிய
வல்லியின் கொடி போல் அமரர்-தம் மகளிர் மருங்கு இரு-பாலினும் மிடைய

மேல்
$1.21.15

#1011
பரி திரள் தொடர வானவர் ஈண்டி பரிமள பொன் அலர் தூற்ற
தெரு-தலை புகுந்து பவனியின் உலவி செழும் புகழ் முகம்மது வரவும்
கருத்துடன் கண்ணும் களிப்புற நோக்கி கவின் மலர் பதம் பணிந்து இறைஞ்ச
திருத்து இழை மணியின் குருத்து எனும் கதீஜா தெரிதர கனவு கண்டு எழுந்தார்

மேல்
$1.21.16

#1012
கனவினை நனவு என்று அகம் மகிழ்ந்து எழுந்து கதிர் மணி வாயிலை நோக்க
இன மத கரியும் பரியொடு இரதமும் இரும் கடல் சேனையும் விருதும்
மன மலர் உறைந்த முகம்மது-தமையும் வானவர் மகளிர் கடமையும்
புனை மணி கொடியும் கவிகையும் காணார் பொருந்திய துயரமே கண்டார்

மேல்
$1.21.17

#1013
இருள் துணித்து எழுந்த மின் என பிறழும் இழை பல திருத்தலர் இருண்ட
சுரி குழல் முடியார் தோள் அணி தரியார் சுண்ணமும் சாந்தமும் பூசார்
சரி கரத்து அணியார் மேகலை இறுக்கார் தளிர் மலர் பதத்து அணி தாங்கார்
மரு மலர் சொருகார் வடு என சிறந்த வரி விழிக்கு அஞ்சனம் எழுதார்

மேல்
$1.21.18

#1014
கந்துகம் கழங்கு அம்மனை கரத்து ஏந்தார் கதிர் மணி ஊசல் தொட்டு ஆடார்
சிந்துர பிறை நல் நுதலியர் திளைத்த சிற்றிலும் பேரிலும் தேடார்
மந்தர மதிள் மண்டபத்திடை புகுந்து மலர் குழற்கு அகில் புகை மாட்டார்
சுந்தர கமல சீறடிக்கு இசைந்த சுடர் அலத்தகம் எடுத்து எழுதார்

மேல்
$1.21.19

#1015
பஞ்சணை பொருந்தார் இரு விழி துயிலார் பழத்தொடு பாலமுது அருந்தார்
கொஞ்சும் மென் குதலை கிளியொடும் மொழியார் கொழு மடல் செவிக்கு இசை கொள்ளார்
கஞ்ச மென் மலர் தாள் பெயர்ந்திட உலவார் கடி மலர் வாச நீர் ஆடார்
வஞ்சி நுண்ணிடையார்-தம்மிடத்து உறையார் முகம்மது மனத்திடத்து உறைந்தார்

மேல்
$1.21.20

#1016
மரு மலர் புய முகம்மது பொன் மா மதில்
திரு நகர் தெரு வரு பவனி சேர்தரு
முருகு அலர் குழலி தம் கனவின் முற்பட
கருதிய துயர் எனும் கடற்குள் ஆயினார்

மேல்
$1.21.21

#1017
மலை நிகர் புய முகம்மது நல் மா மணத்து
உலவிய பவனியின் கனவு ஒன்று உற்றிட
கலை மதி நிகர் கதீஜா தம் காதலால்
அலை துயர் பெருக்கினில் ஆழ்ந்திட்டார் அரோ

மேல்
$1.21.22

#1018
துதி பெறும் குவைலிது கருத்து துன்புற
பதியர் பேதகப்பட பகர்வரோ எனும்
மதி நிகர் முகம்மதின் மனைவி ஆக என்
விதிவசம் பொருத்துமோ விலக்குமோ எனும்

மேல்
$1.21.23

#1019
மடி மிசை மதி வரும் வரவும் மா மறை
நெடியவன் மணம் என நிகழ்த்தும் வார்த்தையும்
கடி மண பவனியின் கனவும் ஆதுலன்
திடமுறும் வசனமும் சிதையுமோ எனும்

மேல்
$1.21.24

#1020
கருத்தினுள் உறை முதல் கனவை மைசறா
விரித்து எடுத்து உரைத்தலும் விளங்க தேர்ந்து பொன்
வரை தட புயத்தன் ஊசா தன் வாக்கினால்
உரைத்தது என்னோ என உளத்தில் எண்ணுமால்

மேல்
$1.21.25

#1021
நிலம் மிசை நபி பெயர் நிறுத்தும் பேர்களுக்கு
அலைவு உற பெரும் பகை அவதி உண்டு என
கலை_வலர் உரைத்த சொல் கருத்தில் எண்ணமுற்று
உலைதர உடல் மெலிந்து உருகி வாடுமால்

மேல்
$1.21.26

#1022
உரிமையில் உடன் எழுந்து ஒழுகும் மைசறா
வரைதரு பத்திரம் வரவும் காண்கிலேம்
எரி சுர பாலையில் செய்தி யாவையும்
தெரிதரவிலை என திகைத்து தேம்புமால்

மேல்
$1.21.27

#1023
விம்முறும் ஏங்கும் மெய் வருந்தும் வெய்து உயிர்த்து
அம்மவோ எனும் உளத்து அடக்கி ஆழ் கடல்
மம்மரை கடப்பது எவ்வகை-கொலோ என
செம் மலர் முகம் கரிந்து இருந்து தேம்புமே

மேல்
$1.21.28

#1024
மன்னவன் குவைலிது வரத்தில் தோன்றிய
பொன் இளம்_கொடி விழி பொருந்திலாது இருந்து
இன்னன துயரமுற்று எண்ணி ஏங்கியே
தன் உளத்து அடக்கி மெய் தளரும் காலையில்

மேல்
$1.21.29

#1025
வழு அற நல் மொழி எடுத்து மைசறா
எழுதிய பத்திரம் அடைந்தது இன்று என
செழு மலர் குழலியர் உரைப்ப தே_மொழி
விழைவொடும் கரத்தினில் விரைந்து வாங்கினார்

மேல்
$1.21.30

#1026
முத்திரை-தனை விடுத்து எடுத்து மூரி வெண்
பத்திரம்-தனை விரித்து உவந்து பார்த்து அதின்
உத்தரம்-தனை உணர்ந்து அறிய உள்ளமும்
புத்தியும் களித்து உடல் புளகம் பூத்ததே

மேல்
$1.21.31

#1027
விரிதரும் காரணம் விளக்கி நல் புகழ்
தெரிதர முகம்மது என்று எழுதும் சித்திர
வரி-தொறும் இரு விழி வைத்து முத்தமிட்டு
உரிய தம் உயிர் பெறும் உவகை ஆயினார்

மேல்
$1.21.32

#1028
உரைப்ப அரும் காரணத்து உறுதி யாவையும்
வரை புயன் மைசறா வரைந்த பத்திரம்
திரைப்படும் கடலிடை தியங்குவார்க்கு ஒரு
கரைப்படுத்திடும் மரக்கலத்தை ஒத்ததே

மேல்
$1.21.33

#1029
தூயவர் காரணம் தொகுத்த பத்திரம்
பாய் திரை அமுது என பிறந்த பைம்_தொடி
காய் கனல் மெழுகு என கருத்து சிந்திட
மாய்வுறும் துயர்க்கு ஒரு மருந்து போன்றதே

மேல்
$1.21.34

#1030
விரை மலர் உடு திகழ் மேக வார் குழல்
கரிய மை விழி கதீஜா தம் கையினில்
பிரிவுறாது உறைந்த பத்திரத்தை பெட்புடன்
அரசு அபித்தாலிபுக்கு அனுப்பினார் அரோ

மேல்
$1.21.35

#1031
வந்த பத்திரம்-தனை வாங்கி தம் உயிர்
சந்ததி விளைத்த காரணத்தின் தன்மை நேர்ந்து
இந்த நல் பதவிகள் இயன்றதோ என
சுந்தர புய வரை துலங்க வீங்கினார்

மேல்
$1.21.36

#1032
வியனுறு பத்திரம் விளம்பும் செய்தி கண்டு
உயர் அபுத்தாலிபு என்று ஓதும் மன்னவர்
செயிர் அறு முகம்மது எனும் சஞ்சீவியால்
உயிர் பரந்திடுவது ஓர் உடலும் ஆயினார்

மேல்
$1.21.37

#1033
தரு நிகர் கரத்து அபீத்தாலிபு ஆகிய
குரிசிலும் கதீஜா என்னும் கோதையும்
வரு மதிக்கு இன்புறும் மலர்கள் ஒப்பு என
இருவரும் உவகையில் களித்து இருந்தனர்

22. மணம் பொருத்து படலம்

$1.22.1

#1034
உடல் குழைத்து எழுந்து செம் தேன் ஒழுக்கிய மலர் பைம் காவில்
வட_வரை அனைய திண் தோள் வள்ளலும் மறு இலாத
கட கரி அனைய வெற்றி காளையர் பலரும் சேர்ந்த
இடபமும் பரியும் துன்ன எழுந்தனர் விரைவில் நன்றே

மேல்
$1.22.2

#1035
சோலை-வாய் விடுத்து நீந்தி துவசமும் குடையும் மல்க
நீல மா மங்குல் அம் கேழ் நெடும் குடை நிழற்ற வெற்றி
கால வேல் கரத்தில் ஏந்தி காளையர் மருங்கு சூழ
மாலை ஒண் புயத்தில் ஓங்க முகம்மதும் இனிதின் வந்தார்

மேல்
$1.22.3

#1036
அகிலமும் சுவன நாடும் அமரரும் போற்றி வாழ்த்த
மிகு புகழ் குவைலிது ஈன்ற மெல்_இயல் களிப்பு பொங்க
நகில் அணி துகிர் கொம்பு என்ன நாரியர் புளகம் பூப்ப
முகம்மது என்னும் வள்ளல் மக்க மா நகரின் வந்தார்

மேல்
$1.22.4

#1037
காரண கடலை ஒண் கேழ் கதிர் உமிழ் மலையை ஆதி
ஆரண குரிசில் என்னும் அகுமதை எதிரில் புக்கி
தார் அணிந்து இலகு தோள் பூ தரத்து அபூத்தாலிப் வெற்றி
வீரமும் திறலும் வாய்த்த மென் கரத்து அணைத்து மோந்தார்

மேல்
$1.22.5

#1038
அணி_இழை சுமந்த செவ்வி அனை எனும் பாத்திமா வந்து
இணை விழி பெற்றேன் என்ன இரு கையால் தழுவி பைம்பொன்
மணம் மலி பீடத்து ஏற்றி முகம்மதை இனிது போற்றி
கண நிரை அயினிநீரால் கண் எச்சில் கழுவினாரால்

மேல்
$1.22.6

#1039
மறம் முதிர்ந்து இலங்கும் வெள் வாள் முகம்மதும் இனிது புக்கார்
திறல் அபூபக்கர் என்னும் செம்மலும் மனையில் சேர்ந்தார்
தொறு இனத்தொடும் அப்பாசும் ஆரிதும் சுபைறு-தாமும்
அறபிகள் எவரும் தத்தம் அணி மனை இடத்தில் சார்ந்தார்

மேல்
$1.22.7

#1040
கள் கொலை படிறு நிந்தை களவுடன் கொடிய பாவம்
உட்பட வளர்த்த மெய்யான் உறு மொழி அறுதி இல்லான்
நட்பினை பகைத்து செய்த நன்றியை கொன்று நஞ்சு ஆர்
மண் படு கலமே அன்ன மனத்து அபூஜகிலும் போனான்

மேல்
$1.22.8

#1041
பாங்கினில் கணக்கர் சூழ பரிசன குழு வந்து ஈண்ட
வாங்கு வில் தட கை வெற்றி மலி புகழ் மைசறாவும்
ஓங்கு மா நகரம் புக்கி ஒளிர் மணி தவிசினாய
தேம் குழல் கதீஜா பைம்பொன் சீறடி வணக்கம் செய்தான்

மேல்
$1.22.9

#1042
தெரி மலர் கரங்கள் கூப்பி சேவடி வணங்கி நின்ற
உரிமை-தன் முகத்தை நோக்கி ஒண்_தொடி கதீஜா என்னும்
அரிவை ஆங்கு உற்ற செய்தி அறைக என அறைய மாரி
மரு மலி புயங்கள் விம்ம வாய் புதைத்து இந்து சொல்வான்

மேல்
$1.22.10

#1043
கரும்பு என தோன்றி செம்பொன் கதிர் உமிழ்ந்திருந்த கொம்பே
சுரும்பு இருந்து இசை கொள் திண் தோள் தோன்றல் காரணங்கள் யாவும்
தரம் பெற இவை-கொல் என்ன தான் அளவறுத்து மட்டிட்டு
இரும் பெரும் புடவி-தன்னுள் யாவரே இயம்ப வல்லார்

மேல்
$1.22.11

#1044
சேய் உயர் அமரர் போற்றும் செவ்விய முகம்மது என்ன
மா இரும் புவியுள் தோன்றி மானுட வடிவு கொண்ட
நாயகர் புதுமை எல்லாம் நான் எடுத்து உரைக்க நானூறு
ஆயிர நாவு உண்டாகி அதில் சிறிது உரைப்பன் என்றான்

மேல்
$1.22.12

#1045
மரை பதம் வழுத்தி அன்னோர் வாய் மொழி மறாது நின்றோர்
திரை பெரும் புவியின் மேலோர் செல்வமே பெறுவர் கேளார்
நிரை பெரு நரகம் ஆழ கெடுவர் நீள் நிலத்தில் என்னால்
உரைப்பது என் சிறியேன் தீட்டும் ஓலையே உரைக்கும் என்றான்

மேல்
$1.22.13

#1046
மரவம் முங்கிய பொன் திண் தோள் முகம்மது வரவு கண்டேன்
கரையிலா காட்சி கண்டேன் காசினி தோயா பாதம்
பிரிவுறா பதவி கண்டேன் பெண்களுக்கு அரசே இன்று உம்
திருவடி கண்டேன் காணா செல்வம் ஒன்று இல்லை என்றான்

மேல்
$1.22.14

#1047
தெள் திரை புவனம் ஏழும் சேந்த பொன்_உலகம் எட்டும்
கொண்டு தன் நேமி ஒன்றால் கொற்ற வெண்குடையுள் ஆக்கி
வண்டு அணி துதையும் தண் தார் முகம்மதே புரப்பர் தேனும்
கண்டும் ஒத்து அனைய சொல்லாய் காண்பது திண்ணம் என்றான்

மேல்
$1.22.15

#1048
கடி கமழ் மரவ திண் தோள் காளை-தம் புதுமை யாவும்
வடிவுற தெளிந்து தேர்ந்த மைசறா உரைத்த மாற்றம்
படி புகழ் கதீஜா மெய்யில் பசலை பூத்து எழுந்த காம
கொடி படர்ந்து ஏற நாட்டும் கொழும் கொம்பு போன்றது அன்றே

மேல்
$1.22.16

#1049
மனையினுக்கு உயிராய் வந்த மைசறா உரைத்த மாற்றம்
சினவு வேல் கரும் கண் பாவை செவி நுழைந்து அகத்தில் புக்கி
நனி துயர் ஊறு தொட்டு நதி பெருக்கு ஆக்கி பின்னும்
கனை கடல் விரிவது ஆக்கி கதித்து எழ பெருக்கிற்று அன்றே

மேல்
$1.22.17

#1050
செயிர் அறு கனவும் இங்கு செப்பிய மொழியும் ஓலை
பயனும் முன் அணித்து கண்ட பார்வையும் கலந்து ஒன்றாகி
நயனுறு கதீஜா உள்ள நடுக்க நெட்டுயிர்ப்பு மீறும்
துயர் நெருப்பு எழுக மூட்டும் துருத்தியின் வியத்தது அன்றே

மேல்
$1.22.18

#1051
வையகம் விளங்க வந்த முகம்மதின் செவ்வி காண
ஐயம் இல் அமரர் மாதர் அரும் தவம் புரிவர் என்றால்
செய்ய கண் குளிர கண்ட செழும் முகில் கரிய கூந்தல்
தையல் தன் உளத்தின் காதல் பகுதி யார் சாற்றற்பாலார்

மேல்
$1.22.19

#1052
பெருகிய துயரம் என்னும் பெரும் கடல் நீந்திநீந்தி
கரை பெறற்கு அரிதாய் சோர்ந்து கண் படைபெறாது வாடி
பருவரல் படர்ந்து புந்தி பயிர் எனும் கருத்தை மூட
திரு மயில் இன்புறாது சில பகல் கழிந்த பிற்றை

மேல்
$1.22.20

#1053
மண்ணினுக்கு அரசாய் வந்த முகம்மதின் வடிவு கூர்ந்து
கண்ணினும் கருத்தும் மாறாது அடிக்கடி தோற்ற நாணி
பண் என சிவந்த வாயார் பஞ்சணை பாயல் புக்கி
எண்ணிலாது எண்ணமுற்று ஆங்கு இருந்தவர் துயிலும் காலை

மேல்
$1.22.21

#1054
வயிர வேர் ஊன்றி சேந்த மாணிக்க பணர் விட்டு ஓடி
இயல் மரகதத்தின் சோதி இளம் தளிர் குழைப்ப ஈன்று
நயனுறு நகரை மூடி நல் கனி உகுத்து வாச
செய மலர் இடைவிடாது சிரம் மிசை சொரிய மாதோ

மேல்
$1.22.22

#1055
வானமட்டு ஓங்கி நீண்ட மாணிக்க தருவின் பொன் பூ
நானிலம் முழுதும் விண்ணும் நறை கமழ்ந்திடுவ நோக்கி
தேன் அமர் குழலினாரும் செல்வரும் பெரிது போற்ற
பானல் அம் கடந்த கண்ணார் பயனுறும் கனவு கண்டார்

மேல்
$1.22.23

#1056
மெல்_இயல் கனவு கண்டு விழித்து எழுந்திருந்து நெஞ்சை
கல்லிய துயரினோடும் கருத்தொடும் தெளிந்து பார்த்து
வல்லவன் உறக்கத்து என்னும் மறை_வலான்-தன்னை கூவி
அல்லினில் தெரிய கண்ட காட்சியை அடுத்து உரைத்தார்

மேல்
$1.22.24

#1057
மடந்தை-தம் கனவை கேட்டு மனத்தின் உட்படுத்தி தேர்ந்து
கடந்த நூல் முறையினாலும் கல்வியோர் கேள்வியாலும்
படர்ந்த தன் அறிவினாலும் பகுத்து சீர்தூக்கி பார்த்து
தொடர்ந்த புன்முறுவல் தோன்ற தோகையர்க்கு உரைப்பதானான்

மேல்
$1.22.25

#1058
இரு நிலத்து உறைந்த வேர் ஈமானிலை எழுந்து நின்ற
தரு முகம்மது நல் வாசம் தழைத்தல் தீன் விளக்கம் இன்பம்
வரு கனி கலிமா வாழ்த்து வானவர் செயல் பூமாரி
தெரிதர சொரிதல் உம்மை திருமணம் முடித்தல் என்றான்

மேல்
$1.22.26

#1059
புதியது ஓர் கனவின் நுட்ப பொருளினை தேர்ந்து சோதி
மதி_நுதற்கு உரைத்து போற்றி மனம் மகிழ்ந்து எழுந்து வீரம்
குதிகொளும் வெள் வேல் செம் கை குவைலிது மருங்கில் புக்கு
துதிசெய்து அங்கு உற்ற செய்தி அனைத்தையும் தொகுத்து சொன்னான்

மேல்
$1.22.27

#1060
அவிர் ஒளி விரிக்கும் மேனி அகுமதின் மனைவியாக
புவியினும் வானும் போற்ற பொருந்தல் நும் பொன்னே என்ன
குவைலிது கேட்டு ஆநந்த கொழும் கடல் குளித்து கூர்ந்து
தவம் உயர் அறிவனோடும் சம்மதித்திருந்தான் அன்றே

மேல்
$1.22.28

#1061
சுரும்பு இமிர் கரிய கூந்தல் சுடர்_தொடி கதீஜா தம்-பால்
அரும் புகழ் மைசறாவை அழைத்து அருகு இருத்தி நெஞ்சின்
விரும்பிய உவகை கூர காரண வேந்தர்க்கு அன்பாய்
பெரும் புவி மணத்தின் கோலம் பெற்றிலாது என்-கொல் என்றார்

மேல்
$1.22.29

#1062
கூறிய மொழியை வேய்க்கும் குயிலுக்கும் கொடுத்து செம் தேன்
மீறிய மதுர சொல்லாய் விரும்பிய பயன்கள் யாவும்
தேறிய கரணம் போகம் செழும் புவி யாக்கை போல
ஊறிய ஊழின் அன்றி முடியுமோ உலகத்து என்றான்

மேல்
$1.22.30

#1063
சின படை செழும் கண் கொவ்வை செ இதழ் சிறு வெண் மூரல்
அன பெடை கதீஜா பால் விட்டு அடல் அரி மைசறா மன்
கன பெரும் கவிகை ஓங்க கடு விட பாந்தள் மாய்த்த
வனப்பு இருந்து ஒழுகும் சோதி முகம்மதினிடத்தில் சார்ந்தான்

மேல்
$1.22.31

#1064
வந்து தாள் வழுத்தி செவ்வி மலர்_கொடி கனவும் காதல்
சிந்தையுள் நினைவும் வேதம் தெளிந்தவன் உரையும் தேன் ஆர்
கொந்து அலர் மரவ மாலை குவைலிது மகிழ்வும் கூறிட்டு
அந்தரங்கத்தில் சொன்னான் ஆண்மையும் அறிவும் மிக்கான்

மேல்
$1.22.32

#1065
மான வேல் தட கை வீரன் மைசறா வசனம் கேட்டு
கான் அமர் உடலும் உள்ள கருத்தும் பூரித்து சிந்தித்து
ஆனவன் அருளை உன்னி அகத்தினில் அடக்கி உண்மை
தூ நெறி வழுவா வள்ளல் தோற்றிடா உவகை கொண்டார்

மேல்
$1.22.33

#1066
பொன்_தொடி கதீஜா பாதம் போற்றிய மைசறா சொல்
வெற்றியும் குவைலிது என்னும் வேந்தனுக்கு உறக்கத்து ஓதும்
பெற்றியின் மகிழ்ந்தவாறும் பெட்புறு கனவினால் அங்கு
உற்றவை அனைத்தும் தந்தைக்கு உரைப்பதற்கு உன்னினாரால்

மேல்
$1.22.34

#1067
அணி நிரைத்து எதிர்ந்த ஒன்னார் ஆருயிர் சிதைத்து சேந்து
திணி சுடர் விரிக்கும் வேல் கை திறல் அபித்தாலி-தம்பால்
பணி மறாது ஒழுகி செய்யும் பாலகன் மைசறாவை
மணி வகுத்து அனைய திண் தோள் முகம்மது கூட்டி சென்றார்

மேல்
$1.22.35

#1068
தந்தைமாட்டு ஏகி அங்ஙன் சார்பிடம் அறிந்து சார்ந்து
நம் தமர்-தனிலும் மிக்க நண்பினன் இவன் என்று ஓதி
மந்திர மொழியாய் ஏதோ வாசகம் உளது என்றான்-தன்
சிந்தையை விளக்கமாக கேளுதி தெரிய என்றார்

மேல்
$1.22.36

#1069
மன்னர்_மன் சொல் கேட்டு அந்த மைசறா-தன்னை கூவி
தன் அகம் அடைந்து அன்பாக தனித்து வைத்து உள்ளத்து உற்ற
நல் நய மொழிகள் யாவும் மறையினின் நவிற்றுக என்ன
பொன் எடுத்து உரைத்தது என்ன புகன்று எடுத்து உரைக்கலுற்றான்

மேல்
$1.22.37

#1070
நேர்_இழை கதீஜா-பாலின் நிகழ்ந்ததும் உறக்கத்து என்னும்
பேரறிவாளன் தேர்ந்து குவைலிதுக்கு உரைத்த பேச்சும்
ஊர் மன துயரால் தன்-பால் மணம் என உரைத்தவாறும்
சோர்வு இலாது உரைத்தான் மிக்க சூழ்ச்சியில் தெளிந்த நீரான்

மேல்
$1.22.38

#1071
நிரைத்து எடுத்து உரைத்த சொல்லை நெஞ்சில் வைத்து இலையும் காயும்
கரைத்த சந்தனமும் பூவும் கட்டுரையுடனும் ஈய்ந்த
துரைத்தனத்து அபித்தாலீபை சுடர் முகம்மதுவை போற்றி
மரை தட மலர் கை கூப்பி மைசறா மனையில் போனான்

மேல்
$1.22.39

#1072
அயர்வு இலாது உரைத்த சொல் கேட்டு அருள் உறை அபித்தாலீபு
புய வரை பூரித்து ஓங்கி பொருவு இல் அப்பாசு ஆரீது
வய வரி ஹமுசா ஈறாய் மன்னு சோதரரை எல்லாம்
நயனுற அழைத்து இருத்தி நடந்த சொல் அனைத்தும் சொன்னார்

மேல்
$1.22.40

#1073
பாட்டு அளி மிழற்றும் தேறல் படலை வீற்றிருந்த வீர
தோள் துணை அபித்தாலீபு சுடர் நகை முறுவல் வாயால்
கேட்ட சொல் அமிர்தம்-தன்னால் கேகயம் முகில் கண்டு என்ன
பூட்டிய சிலை கை வீரர் பொன்றிலா மகிழ்ச்சி பூத்தார்

மேல்
$1.22.41

#1074
உடைமையில் பணத்தில் சாதி உயர்ச்சியில் வணக்கம்-தன்னில்
மட மயில் அழகில் ஒவ்வா மாட்சியில் கதீஜா-தம்மை
கடி மணம் முடிக்க நாடி கருதின பேர்கள் எல்லாம்
அடிகள் என்று உரை நா நீட்ட அச்சமுற்று இருந்தார் அன்றே

மேல்
$1.22.42

#1075
அ நெறியதனால் யாமும் கேட்பதற்கு ஐயமானோம்
நல் நெறி மொழி கதீஜா மனையினில் நடந்த செய்தி
இன்னணம் கேட்டோம் செல்வ மணத்தினுக்கு இசைந்த தூது
முன்னுதல் பொருளே என்ன யாவரும் மொழிந்தார் அன்றே

மேல்
$1.22.43

#1076
வல்லமை அறிவில் தேர்ந்த வார்த்தை உத்தரத்தில் சூழ்ச்சி
சொல்லின் உட்பொருளின் நுட்ப துடர் அறிந்து உரைக்கவேண்டின்
நல் எழில் ஹமுசா அல்லால் நகரில் மற்று உண்டோ என்ன
பல்லரும் போற்றும் மாற்றம் பகர்ந்தனர் அபுத்தாலீபே

மேல்
$1.22.44

#1077
திறல் அறிவர் அபித்தாலிபு உரைத்த மொழி அனைவரும் தம் சிந்தைகூர்ந்து
துறு மலர் பொன் புயத்து அமுசா-தமை அழைத்து மணமொழியை தொகுத்து பேசி
நிறை நிலைமை தவறாத குவைலிது-பால் இனிது ஏகி நிகழ்த்துவீர் என்று
அறைதரும் முன்னவர் மாற்றம் பின்னவரும் தலைமேற்கொண்டு அன்புகூர்ந்தார்

மேல்
$1.22.45

#1078
மன மகிழ்வு மன களிப்பு மருங்குவர எழுந்து அமுசா வாயில் நீங்கி
இன மணி ஒண் கதிர் மாடத்து இடு மணி வில் எறிப்ப அடல் ஏறு போல
தினகரன் மெய் மறுகும் மணி மறுகூடு மறுகாது சென்று நீங்கா
கனக மழை பொழி மேக குவைலிது வாழ்ந்திருந்த தலைக்கடையில் சார்ந்தார்

மேல்
$1.22.46

#1079
அபுத்தாலிப் திரு துணைவர் அறத்து ஆறு வழுக்காத அண்ணல் நீங்கா
கவுள் தானம் ஒழுகும் உர கரி தானை நெருங்கு மணி கடையில் ஆகி
புவி தாரை நடத்தி மறுபுற தேச பொருள் அனைத்தும் பொருப்பு போல
குவித்தானை சொலற்கு அரிய குலத்தானை குவைலிதை கண் குளிர கண்டார்

மேல்
$1.22.47

#1080
இருந்தவனும் எதிராகி ஹமுசா-தம் எழில் கரம் தம் கரத்தில் ஏந்தி
பெரும் தவிசினின் இனிது இருத்தி அருகு இருந்து பிரிய மொழி பேசிப்பேசி
விரிந்த பிளவு அரிந்த இலை கருப்பூரமுடன் அளித்து வெற்றி வேந்தே
அரும் தவமே என போற்றி இவண் அடைந்த வரலாறு ஏது அறியேன் என்றான்

மேல்
$1.22.48

#1081
தெரிந்த மறை முறையாலும் தேர்ந்தவர் சொல் தெளிவாலும் தெருண்ட மேலோய்
அரும் தவமாய் எம் இனத்தோர் ஆருயிராய் அருமருந்தாய் அப்துல்லா-பால்
இருந்த மணியாய் உதித்த முகம்மது எனும் விடலை கருத்து இனிதுகூர
பொருந்த மண முடிப்பதற்கு வந்தேன் என்று இனைய மொழி புகல்வதானார்

மேல்
$1.22.49

#1082
இ நகரில் குறைஷிகள் நம் இனத்தவரின் மதித்தவர் தம்மிடத்தில் வாய்ந்த
பொன் அனைய மடவாரை தருதும் என அவரவரே புகல்கின்றாரால்
தன்னவரில் பெரியாரில் மதியாரில் தவத்தோரில் தலைமையோரில்
நின்னை அலது இலை எனவே அவர் உரைத்த மொழி அனைத்தும் நிகழ்த்தி அன்றே

மேல்
$1.22.50

#1083
மாற்றுரை நும் கருத்தில் உறும்படி கேட்டு வருதி என மறு இலாது
போற்றி உரைத்தனர் எனது முன்னோரின் உரைப்படியே புகன்றேன் மிக்க
தேற்றமுறு மனத்து ஆய்ந்து நிகழ்காலம் வருங்கால செய்கை நோக்கி
ஊற்றமுடன் உரைத்திடுக அ உரையின்படி நடப்பது உறுதி என்றார்

மேல்
$1.22.51

#1084
தீட்டு திறல் புகழ் ஹமுசா உரைத்த மொழி அமுத மழை செவியில் பாய்ந்து
நாட்டமுறு மன தடத்தை நிரப்பிட செம் முகம் மலர்ந்து நவில்கிலாது
கூட்டு முதலவன் விதிப்பும் மகள் கனவும் இவை நிகழ்ந்த குறிப்பும் நோக்கி
பூட்டு மணி கதிர் வலயம் நெகிழ அடிக்கடி புயங்கள் பூரித்தானே

மேல்
$1.22.52

#1085
வடிவாலும் குணத்தாலும் குலத்தாலும் முகம்மது நேர் மற்றோர் இல்லை
படி ஆளும் முதியாரில் யாவர் அவர் மணம் பொருந்த பகர்ந்திடாதார்
பிடி ஆரும் மெல் நடை கொம்பினை கதீஜா என தமியேன் பெற்ற பேறை
கடி ஆரும் மலர் சூட்டி நும் இடத்தில் தருக மனம் கருதியிற்று என்றே

மேல்
$1.22.53

#1086
எம் மனத்தின் உறும் களிப்பு நும் துணைவர்க்கு இயம்பி நுமது இனத்துளானோர்-
தம் மனத்துக்கு இசைந்தபடி நல் மொழிகள் சில தெரிந்து சாற்றி வீறு ஆர்
செம்மல் இளம் களிறு அனைய முகம்மதை என் மருகர் என செவ்விதாக்கி
வம் என மல் புயத்து அமுசா-தமை அனுப்பி இனிது இருந்தான் மதி வல்லோனே

மேல்
$1.22.54

#1087
நினைத்தபடி முடிந்தது என மனத்து அடக்கி எழுந்து அமுசா நெறியின் ஏகி
சின தட கை மலை என உள் களிப்பு மதம் ஒழுக மணி தெருவு நீந்தி
கனைத்த கடல் முகட்டு எழுந்த கதிர் கடுப்ப வருவது கண் கவர நோக்கி
இனத்தவர் முன்னவர் இதய முக கமலம் நகையினொடும் இலங்கிற்று அன்றே

மேல்
$1.22.55

#1088
முன்னவர்-தம் முன் ஏகி பின்னவரும் இரு கரங்கள் முகிழ்த்து தாழ்த்து
தன் இதய மலர் மொழி தேன் நா வழியே ஒழுகி அவர் செவியில் சார
மன்னவர்_மன் குவைலிது-தன் மருங்கு இருந்து மணமொழியின் வரலாறு எல்லாம்
சொன்னதுவும் அவன் மறுத்து சொன்னதுவும் விரித்து எடுத்து சொல்லினாரால்

மேல்
$1.22.56

#1089
திரு துணைவர் உரைத்த மொழி அபித்தாலிப் கருத்தூடு திளைப்ப ஹாஷிம்
பெருத்த குலத்தவர்க்கு ஓதி குறைஷிகளின் முதியாரை பெரிது கூட்டி
பொருத்தம் இது நல தினத்தின் முகுர்த்தம் இது வருக என பொருவு இலாத
குரு தவள மணி மாலை குவைலிது-பால் குறித்து எழுந்தார் கொற்ற வேந்தர்

மேல்
$1.22.57

#1090
ஆரிது குதம் சுபைறு அப்துல்ககுபா அபூலகபு கைதாக்கு
கார் ஏயும் லிறாறு அப்பாசுடன் ஹமுசாவுடனே முகைறா-தானும்
சீர் ஏறும் அபித்தாலிப் அப்துல்லா மதலை எனும் செவ்வியோர்க்கு
தார் ஏறும் வதுவைமொழி பகரவரும் வரலாறு-தன்னை கேட்டான்

மேல்
$1.22.58

#1091
அரு மறை தேர் குவைலிது கேட்டு அகத்தில் அடங்கா உவகை பெருக்கு ஆநந்தம்
இரு கரையும் வழிந்த கடல் குளித்து நடுவு எழுந்து மிதந்து எதிரே புக்கு
தரு அனைய அபுத்தாலிப்-தம்முடனே மன்னவர்கள்-தமையும் போற்றி
தெரி கதிர் ஆசனத்து இருத்தி அனைவருக்கும் முறைமுறையே சிறப்பு செய்தான்

மேல்
$1.22.59

#1092
சொல்ல அரிய காரணத்துக்கு உறு பொருளாய் நமர்க்கு உயிராய் தோன்றி தோன்றும்
செல் உலவு கவிகை நிழல் வள்ளலுக்கு மணம் முடிக்கும் செய்தியாக
வல்லமை ஹாஷீம் குலத்துக்கு அனைவோரும் குறைஷிகளும் மகிழ்ச்சியாய் என்
இல்லிடத்தில் வர முதல் நாள் கிடையாத பெரும் தவம் செய்திருந்தேன் என்றான்

மேல்
$1.22.60

#1093
அ உரை கேட்டு அபுத்தாலிபு அக களிப்பு தலைமீறி அரசே கேளீர்
மௌவல் கமழ் குழல் மயிலை என் மகற்கு மணம் முடிக்க வரப்பெற்றேனால்
பௌவ நதி சூழ் பாரை புரந்து அளிக்கும் பெரும் பதவி படைத்தேன் செல்வம்
எவ்வெவையும் படைத்தேன் இங்கு இனி கிடையா பொருளும் எனக்கு எய்தும் என்றார்

மேல்
$1.22.61

#1094
இருவரும் சம்மதித்து உரைத்தார் என குறைஷி குலத்து அரசர் இதயம் கூர்ந்து
மரு மரு பூம் குழலாட்கு முகம்மதுக்கு மணநாளை வகுத்து கூறி
தெரிதரு சீதன பொருளும் இன்னது என வகைவகையாய் தெளிய சாற்றி
பொருவு அரிய பொன் பிளவும் வெள்ளிலையும் தருக என புகழ்ந்திட்டாரால்

மேல்
$1.22.62

#1095
வெள்ளிலை பாகு ஏலம் இலவங்கமுடன் தக்கோலம் விரை கற்பூரம்
அள்ளிய சந்தன சேறும் பொன் கலத்தில் குவைலிது எடுத்து அருள வாங்கி
வள்ளியோர்க்கு இனிது ஈந்து மறையோர்க்கும் எடுத்து அருளி வல கை சேர்த்தி
தெள்ளிய நன் முகூர்த்தம் முதல் திங்கள் என வகுத்து உரைத்தார் செவ்வியோரே

மேல்
$1.22.63

#1096
இலங்கு இலை வேல் குவைலிது-பால் இருந்து உபசாரத்தினுடன் எழுந்து நீங்கா
அலங்கல் என புய துணைவர் அனைவரொடும் அபூத்தாலிபு அன்பு கூர
விலங்கல் அணி வளர் மாட நகர் வீதி-தனை கடந்து விரவின் ஏகி
குலம் கெழும மனை புகுந்து மனைவியர்க்கு மணமொழியை கூறினாரால்

23. மணம்புரி படலம்

$1.23.1

#1097
குறைஷி மன்னவருடன் அபுத்தாலிபும் குழுமி
நிறை செய் மா மதி முகம்மதின் மணவினை நிலவ
இறைவர் யாவரும் அறிய இ நகர்க்கு எழில் முரசம்
அறைக என்றலும் எழுந்தனன் கடி முரசறைவான்

மேல்
$1.23.2

#1098
ஒட்டை மீதினில் மணமுரசினை எடுத்து உயர்த்தி
விட்டு வெண் கதிர் உமிழ் மணி மறுகிடை மேவி
வட்ட வாருதி செல்வம் ஒத்து இ நகர் மாக்கள்
இட்டமாய் இனிது ஊழி வாழ்க என எடுத்து இசைத்தே

மேல்
$1.23.3

#1099
ஹாஷிம் மா குலத்து அப்துல்லா மகர் அணி மறுவி
வாச மெய் முகம்மது பெறும் புது மணக்கோலம்
காசு இலா விது கிழமையின் இரவு என காட்டி
பாசமுற்றவர்க்கு உரைப்பதுண்டு என பகர்ந்திடுவான்

மேல்
$1.23.4

#1100
நறை கொள் வாயிலின் மகர தோரணங்களை நடு-மின்
நிறையும் மாடங்கள் புதுக்கு-மின் கொடி நிரைத்திடு-மின்
உறையும் வெண் சுதை மதிள்-தொறும் கரைத்து ஒழுக்கிடு-மின்
குறைவு இலாத பொன் பூரண குடங்கள் வைத்திடு-மின்

மேல்
$1.23.5

#1101
பூணு நல் இழை பூணு-மின் குழற்கு அகில் புகை-மின்
காணொணா இடை கம் பொன் மேகலை கவின் புனை-மின்
பாணியில் சரி தோளணி பல பரித்திடு-மின்
வாள் நுதற்கு அணி கடு வரி விழிக்கு மை வரை-மின்

மேல்
$1.23.6

#1102
இரவலர்க்கு இனிது அருளொடும் இன் அமுது இடு-மின்
வரைவிலாது எடுத்து ஏற்பவர்க்கு அணி வழங்கிடு-மின்
இருமையும் பலன் பெறு-மின் என்று இனையன இயம்பி
அரவம் மீக்கொள குணில் எடுத்து அணி முரசு அறைந்தான்

மேல்
$1.23.7

#1103
இந்த மா மொழி பகர்ந்து எழு தினம் முரசு இயம்ப
மந்தராசல மாளிகை மறுகுகள்-தோறும்
கந்த மென் மலர் துகள் துடைத்து இரு நிலம் கவின
சுந்தர கதிர் மடந்தையர் சுதை மெழுகிடுவார்

மேல்
$1.23.8

#1104
இடனற திரு காவண நிரை நிரைத்திடுவார்
நடலை உள் அற மகர தோரணம் பல நடுவார்
விடு சுடர் படம் எடுத்து உயர் வெளி அடைத்திடுவார்
குடுமி மாடத்தின் அணியணி கொடி திரள் நடுவார்

மேல்
$1.23.9

#1105
இடை பழ குலையொடு கதலிகள் நிரைத்திடுவார்
மடல் விரிந்த பூம் கமுகினை நிறுவி வைத்திடுவார்
கடி நறா ஒழுகிட கொடி கரும்புகள் நடுவார்
துடர் அணி குலை தெங்கு இளநீர்கள் தூக்கிடுவார்

மேல்
$1.23.10

#1106
நறவு சிந்திட கனியொடு சூதங்கள் நடுவார்
நிறையும் பொன் சுளை முட்புறக்கனி நிரைத்திடுவார்
மறு இல் மாதுளை கனியொடும் பூவொடும் வனைவார்
செறி திரள் கொழுவிஞ்சியும் கனியொடு சேர்ப்பார்

மேல்
$1.23.11

#1107
வன்ன பேத பட்டாடை கொய்து அணி நிரை வனைவார்
பொன்னின் நல் மலர் மாலைகள் துயர் அற புனைவார்
நன்னயம் பெற நறுக்கிய நறுக்கு நாற்றிடுவார்
துன்னு வெண் கதிர் கற்றை போல் கவரி தூக்குவரால்

மேல்
$1.23.12

#1108
முல்லை சண்பகம் பாடலம் செ இதழ் முளரி
மல்லிகை மடல் கைதை மா மகிழ் மருக்கொழுந்து
பல்லவத்தொடு நிரைநிரை பல் மலர் தொடுத்து ஆங்கு
எல்லை இல் என தூக்குவர் எழில் விளங்கு இழையார்

மேல்
$1.23.13

#1109
சால வெண் முகை புன்னையின் தண் மலர் தொடுத்து
நாலவிட்டு அதில் தும்பிகள் நடுநடு வதிந்த
கோலம் மா கடல் ஈன்ற முத்து இலங்கிட கோத்து
நீல மா மணி இடையிடை தொடுத்தன நிகர்த்த

மேல்
$1.23.14

#1110
குவளை மை விழி சுரிகுழலியர் கொழும் கரத்தால்
துவளும் மாதுளை மலரினை நிரைநிரை தொடுத்து
தவள மா மணி பந்தரில் தூக்கிய தன்மை
பவள மாலிகை நான்றன போன்றன பாங்கர்

மேல்
$1.23.15

#1111
சலதி வெண் திரை தரள வெண் மணியொடு தயங்க
குலவு நீல மா மணியிடை கோத்து அவை தூக்கி
இலகு பூம் துகில் பந்தரின் வயின் இடு கதிர்கள்
நிலவு வெண் கதிரொடும் இருள் பரந்து என நிகர்த்த

மேல்
$1.23.16

#1112
மாசு அடர்த்து எறி மரகத மணி நிறை வடங்கள்
ஊசலாய் அணி நான்றிட உமிழ் பசும் கதிர்கள்
பூசு சந்தன சுவர்-தொறும் வாயிலின் புறத்தும்
பாசடை திரள் விரிந்தன பாரினும் பரப்பும்

மேல்
$1.23.17

#1113
மிக்க செம் மணி தொடையலில் விளங்கிய கதிர்கள்
பக்கம் மீக்கொள பந்தரின் வயிர பந்திகளின்
ஒக்க எங்கணும் பரந்தது நிறைந்திட உயர்ந்த
செக்கர் வானக மீனொடு திகழ்வன சிவணும்

மேல்
$1.23.18

#1114
அறைப்புறத்தினும் ஆலயத்திடத்தினும் மணியால்
சிறப்பு மிக்கன செய்த அ தெருத்தலை-தோறும்
உற பசந்த செம் குமிழ் கிளி இனத்தொடும் ஒழுங்காய்
பறப்பது ஒத்தன பாசிலை தோரண பந்தி

மேல்
$1.23.19

#1115
கனக மா மழை பொழிதர வரும் அபுல் காசீம்
மனதின் நல் நெறி ஒழுங்குறு மாட்சியின் மான
இன மணி கதிர் தவழ் நிலை மேனிலை எவையும்
புனை முகில் குலம் ஒத்து என அகில் புகைத்திடுவார்

மேல்
$1.23.20

#1116
காக துண்டமும் சந்தன கடிகையும் கலந்து
தோகைமார் இடு புகை திரள் இடையிடை தோன்றும்
ஆகமூடு எழு மண்டப கொடுமுடி வயிரம்
மேகமூடு உறை மின் என பிறழ்ந்து ஒளி மிளிரும்

மேல்
$1.23.21

#1117
குங்குமம் செறி தனத்தியர் செழும் குழல் விரித்து
பொங்கு பல் நறையூட்டிய காழ் அகில் புகைப்பது
எங்கணும் பரப்பிட ஒளி திகழ் எழில் முகங்கள்
மங்குலூடு வெண் மதியம் ஒத்திருந்தன மாதோ

மேல்
$1.23.22

#1118
நிலை கொள் மாடத்து மண்டப மருங்கினும் நிமிர்ந்த
சிலை நிகர்த்த மேனிலையினும் செ வரி விழியார்
குலிகம் ஆர்ப்பு அற அரைத்து எடுத்து எழுதிய கோலம்
மலைகள் மீதினும் பவளங்கள் படர்ந்து என வயங்கும்

மேல்
$1.23.23

#1119
புகைத்த காரிருள் குழல் முடித்து அரு மலர் புனைவார்
பகுத்த நல் நுதல் துலங்கிட சுடிகைகள் பதிப்பார்
தொகுத்த காதினில் பல அணி தொகை சுமந்திடுவார்
மிகைத்த வேல் விழிக்கு அஞ்சனம் விரித்து எழுதுவரால்

மேல்
$1.23.24

#1120
பூக மென் கழுத்து இடன் அற கதிர் மணி புனைவார்
பாகுற செழும் தோள்வளை பல பரித்திடுவார்
நாக மென் முலை குவட்டில் நல் மணி வடம் தரிப்பார்
மேகலை திரள் மணியொடு மருங்கில் வீக்கிடுவார்

மேல்
$1.23.25

#1121
உவரி மெல் நுரை போலும் வெண் துகில் விரித்து உடுப்பார்
குவி தனத்திடை சந்தன குழம்புகள் செறிப்பார்
திவளும் நல் ஒளி நுதலிடை திலதங்கள் அணிவார்
அவிரும் கேழ் அலத்தகம் இரு பதத்தினும் அணிவார்

மேல்
$1.23.26

#1122
சந்த மான்மதம் செழும் பனிநீரொடு சாந்தம்
கந்த மெல் நறும் பொடியொடு விரை எழ கலக்கி
இந்து வெண் கதிர் பரப்பிய மதிள் நடு விடுவார்
சிந்துவார் தெருத்தலை-தொறும் இடன் அற தெளிப்பார்

மேல்
$1.23.27

#1123
வட்ட வான் மதிமுகத்தியரிடத்தும் வாள் விரித்து
விட்ட வேல் கர வீரர்களிடத்தினும் எதிர்ந்து
தொட்டி-தோறும் பன்னீர் சொரிந்து அரு நறை மறுவி
இட்ட சந்தன குழம்புகள் கரைத்து இறைத்திடுவார்

மேல்
$1.23.28

#1124
கொந்து உறைந்த பூம் பாளை வாய் வெள்ளி வெண் குடங்கள்
சந்த மெல் நறை மெழுக்கிடும் தலத்திடை தயங்க
பந்தியாக வைத்திருப்பது பால் நிலா கதிரோடு
இந்து வாயில்கள்-தோறும் வந்திருந்தன இயையும்

மேல்
$1.23.29

#1125
பாலனத்தொடும் பழத்தொடும் பசித்தவர்க்கு இடுவார்
கோல மென் துகில் நாடகர் கரத்தினில் கொடுப்பார்
சோலை-வாய் குயில் எனும் இசையவர்க்கு அணி சொரிவார்
ஏலும் நல் மறையவர்க்கு இருநிதி எடுத்து இறைப்பார்

மேல்
$1.23.30

#1126
வான மா முகில் என சொரிதர வரும் மாந்தர்
தூ நறும் கதிர் மணியொடு நிதியினை சுமந்து
தீனர் யாசகர் யார் என தெரு-தொறும் திரிந்து
தானம் ஏற்பவர் இல் என மனத்திடை சலிப்பார்

மேல்
$1.23.31

#1127
மதியின் மிக்கவர் ஒருவரால் வரும் கிளை அனைத்தும்
கதியும் வெற்றியும் வீரமும் பெறுவர் அ கதை போல்
புதிய பேரொளி முகம்மதின் மணவினை பொருட்டால்
பதியும் வீதியும் மாடமும் மணம் படைத்தனவே

மேல்
$1.23.32

#1128
சிறுபிறை நுதல் கதீஜா திரு மனையிடத்தும் வெற்றி
விறல் அபித்தாலிபு என்னும் மெய்மையோர் மனையின் முன்னும்
அறபிகள் மனையும் செம்பொன் ஆவணத்திடத்தும் வேந்தர்
மறுகுகள்-தோறும் செல்வ மண சிறப்பு இயன்ற பின்னர்

மேல்
$1.23.33

#1129
அற்புதமாய் விண்ணவரும் புகல் அரிய ஆபுஸம்சத்து அரிய நீரை
பொன் குடத்தில் எடுத்து அமுத கதிர் கிரண மலை மிசையே பொழிவ போல
சிற்பர் இயற்றிய பலகை நடு இருத்தி முகம்மது-தம் சிரசின் மீதே
சொல் பழுத்த மறை முதியோர் மங்கல வாக்கியம் கறங்க சொரிந்தார் அன்றே

மேல்
$1.23.34

#1130
மஞ்சனத்து ஈரம் புலர்த்தி விரை வாச புகை கொழுந்து வயங்க சேர்த்தி
பஞ்சினின் மென் துகில் அரையின் எடுத்து அணிந்து செழும் சுவன பதிக்கு மேலார்
எஞ்சல் இல் வெண் கதிர் திரண்டு வந்திருந்தது என சருவந்து இலங்க சூட்டி
கஞ்ச மலர் என சேந்த கண் இணையில் சுறுமாவும் கவின செய்தார்

மேல்
$1.23.35

#1131
பொன் காலும் திரள் முலையார் கண்ணேறு படராது பொதிதல் போலும்
சின் காதவழிக்கு அகலும் வேதமொழி அனைத்தும் வந்து செறிந்த போலும்
வன் காபிர் விழி கணங்கள் திரு மேனி தீண்டாது மறைத்தல் போலும்
மின் கால வெண் கிரண குப்பாயம் எடுத்து அணிந்த வியப்புதானே

மேல்
$1.23.36

#1132
மருந்து அமுதம் எனும் கலிமா-தனை இணங்கார் உயிர் அனைத்தும் வானில் ஏற்ற
இருந்தது என வயிர மணி பிடி உடைவாள் எடுத்து மருங்கிடத்து சேர்த்து
விரிந்த செழும் கர கமல விரல் இதழின் மணி ஆழி விளங்கி தோன்ற
பரிந்து அணிந்தார் அழகு வெள்ளம் வழியாது மருங்கு அணைக்கும் பான்மை போன்றே

மேல்
$1.23.37

#1133
மண் முழுதும் மாறு அரிய சிவந்த கதிர் மணி கோவை மறு இலாத
வெண் மணி நித்தில வடமும் மேரு எனும் புய வரையில் விரித்த காந்தி
கண் முழுதும் அடங்காத எழில் நோக்கி அவரவர் கண்ணேறு அடாது
தண் மதியும் வெம் சுடரும் கரம் நீட்டி இருபுறத்தும் தடவல் போலும்

மேல்
$1.23.38

#1134
பொன் இதழ் குங்கும தொடையன் முகம்மது-தம் வயிர வரை புயத்தில் சாத்தி
மின்னிட வெண் மணி தொடையும் செம் மணியும் போல் காந்தி விரிந்த தோற்றம்
தன் நிலைமை தவறாத முதியோரை எவரேனும் சாரில் வாய்ந்த
நல் நிலை நல் குணம் அறிவு பெறுவர் எனும் பழமொழியை நவிற்றிற்று அன்றே

மேல்
$1.23.39

#1135
அவனி-தனில் தனி அரசை நயினாரை முகம்மதை ஆரணத்தின் வாழ்வை
கவின் ஒழுக அலங்கரித்து பவனிவர என எழுக கருதும் காலை
சுவன பதி-தனை திற-மின் நிரயம் அடைத்திடு-மின் என தூயோன் சத்தம்
பவனமும் மண்ணுலகு கடல் மலையும் திசைதிசை அனைத்தும் பரந்தது அன்றே

மேல்
$1.23.40

#1136
வானவர் பொன் பூமாரி சொரிந்திட மண்ணவர் வாழ்த்த மறையோர் ஏத்த
தானம் என ஏற்பவர்க்கு பொன் மணி தூசு எடுத்து அருளி சடங்கு தீர்த்து
கான் அமர் பூம் குழல் மடவார் அயினிநீர் கொணர்ந்து எடுத்து கழித்து போத
ஈனம் இல் பல்லியம் மகர கடல் என ஆர்த்து எடுப்ப இனிது எழுந்தார் அன்றே

மேல்
$1.23.41

#1137
கான் நறு மல்லிகை கமல மெல் இதழ்
பூ நறும் பாயலில் நடந்து பொங்கு ஒளி
தேன் நறும் தெரியலார் செம்பொன் நாட்டு உறை
வானவர் வாழ்த்திட வாசி மேல் கொண்டார்

மேல்
$1.23.42

#1138
முறைமுறை தண்ணுமை முருடு துந்துமி
சிறுபறை சல்லரி பதலை திண்டிமம்
மறு அறு பேரிகை முரசு மத்தளி
அறை திரை கடல் ஒலி அடங்க ஆர்த்தவே

மேல்
$1.23.43

#1139
பெருகிய கடல் முகட்டு எழுந்த பேரொளி
பரிதி ஒத்திருந்தன குரிசில் பான்மை மேல்
விரிதரு மதி என கவிகை வெள் நிலா
சொரிவன கற்றை அம் கவரி தூங்கின

மேல்
$1.23.44

#1140
அவிர் ஒளி கொடி மிடைந்து அடர அண்ணலார்
பவுரியின் நடு முறை பணிலம் ஆர்த்து எழ
குவி கைகொம்புகள் குமுகுமென பல்லியம்
செவி அடைத்தன தெரு தலைகள் எங்குமே

மேல்
$1.23.45

#1141
மதித்து என மறுகிடை விண்ணின் மண் எழ
பதித்தன குளம்பு விட்டு எறிந்து பாரிடை
மிதித்து என இல் என வேகம் மீக்கொள
குதித்தன நெருங்கின குதிரை ஈட்டமே

மேல்
$1.23.46

#1142
மதங்களை சிந்தின மறுகின் மாந்தர்-தம்
பதங்களை வழுக்கிட படர் செவி சுளகு
இதம் கொள் வண்டு இனம் புடைத்து எழுப்ப எங்கணும்
கதம் கொடு நெருங்கின கரியின் கூட்டமே

மேல்
$1.23.47

#1143
கடு விட பண தலை நெளிய கண் அகன்
படி குழித்து எழு துகள் பரப்பி பாங்கினில்
கொடி நிறைத்து அசைந்த கோலாரி வண்டில்கள்
இடைவெளி இன்று என எங்கும் ஈண்டின

மேல்
$1.23.48

#1144
இசையொடு பல்லியம் இயம்பி ஆர்த்து எழ
வசை அறு காளையர் மருங்கு சுற்றிட
சசி என கதிர் ஒளி தவழும் வீதியில்
திசைதிசை மலிந்தன சிவிகை வெள்ளமே

மேல்
$1.23.49

#1145
பிடிபடு குசை பரி மீதும் பெய் மழை
கட கரி மீதினும் கதிர் கொள் மா மணி
படம் இடு சிவிகையின் மீதும் பாங்கு எலாம்
சுடர் அணி திகழ்ந்து என கிளைஞர் சுற்றினார்

மேல்
$1.23.50

#1146
வெள் அணி உடையினர் விரிந்த கஞ்சுகர்
கள் அவிழ் மாலையர் கலன் கொள் மேனியர்
அள்ளிய அழகினர் அரசவீதியின்
எள் இடம் இலை என எங்கும் ஈண்டினார்

மேல்
$1.23.51

#1147
செழு முகில் கவிகை அம் செம்மல் வீதி-வாய்
வழு அறு பவனியின் வருகின்றார் என
எழு வகை பேதை பேரிளம் பெண் ஈறதாய்
குழுவுடன் திசைதிசை நிறைந்து கூடினார்

மேல்
$1.23.52

#1148
மணி பளிக்கறை நிலை மாடம் மீதினும்
குணிப்ப அரும் கூட கோபுரத்து மீதினும்
பணிப்ப அரு மேனிலை பரப்பு மீதினும்
தணிப்பு இலாது உயர்ந்த மண்டபத்தின் சார்பினும்

மேல்
$1.23.53

#1149
சச்சையின் முகப்பினும் சாளரத்தினும்
வச்சிரம் அழுத்திய வாயின் மீதினும்
கச்சு அணி முலைச்சியர் கதிர் கொள் மால் வரை
பச்சை அம் கிளி என பரந்து தோன்றினார்

மேல்
$1.23.54

#1150
வெண் முகில் கவிகையில் பிறந்த மின் என
வண்ண மென் பசும் கதிர் தோகை மஞ்ஞைகள்
கண்ணின கவிகையை கண்டு வந்து என
எண்ணிறந்த அனைய மா மாதர் ஈண்டினார்

மேல்
$1.23.55

#1151
வழி கதிர் முகம்மதின் வனப்பு வெள்ளம் மீக்கு
எழு திரைக்கு உவந்து அனம் எழுந்த கூட்டம் போல்
பொழி கதிர் கலன் பல புரள எங்கணும்
தொழுதி கொண்டு உற்றனர் தோகை மாதரே

மேல்
$1.23.56

#1152
தேன் என அமிர்து என திரண்ட பாகு என
தூ நறும் கனி என சுடரும் கொம்பு என
பூ நறும் கரும்பு என பொருவு இல் மாதரார்
வானவர் அமிர்து என வளைந்து சுற்றினார்

மேல்
$1.23.57

#1153
வண்ண வார் முலை கொம்பு அன்னார் மருங்கு ஒசிந்து அசைய நோக்கி
கண் அகன் ஞாலம் எல்லாம் களிப்புறும் அரிய காட்சி
அண்ணல்-தன் மணத்தின் கோலம் ஆமினா என்னும் அந்த
பெண் இருந்து இனிது காண பெற்றிலள் காணும் என்பார்

மேல்
$1.23.58

#1154
கடு நடை புரவி மேலாய் கவிகை மால் நிழற்ற வந்த
வடிவு உறை முகம்மதின்-தன் வனப்பு அலால் வனப்பும் இல்லை
கொடி இடை கதீஜா என்னும் கொம்பு செய் தவ பேறு ஆக
பிடிநடையவரில் பேறு பெற்றவர் இல்லை என்பார்

மேல்
$1.23.59

#1155
பொன் என பூம் கொம்பு என்ன மணி என பொருந்தும் மாதர்
மின் ஒளி கரக்கும் சோதி மெய் எழில் முகம்மது என்னும்
மன்னினை கதீஜா செல்வ மனை மணம்முடித்த போதே
எ நில பொருளும் வாழ்வும் இவர்க்கு இனி எய்தும் என்பார்

மேல்
$1.23.60

#1156
வனைந்த பூ மரவ திண் தோள் முகம்மதின் வடிவை நோக்கி
தனம்-தொறும் பசலை பூத்த தையலார் திரண்டு கூடி
கனம் துதைந்து ஒதுங்கும் மாட கதிர் நிலா வீதி வாயில்
தினம்-தொறும் பவனி காண செய் தவம் செய்வோம் என்பார்

மேல்
$1.23.61

#1157
வரிசைக்கு மிகுந்த செவ்வி முகம்மதின் வடிவை நோக்கி
உருசிக்க மலர் தேன் உண்ட ஒண் சிறை பறவை போல
பரிசிப்பது ஒத்து நீங்கா பவனியில் இரு கண் ஆர
தெரிசிக்க நம் போல் மிக்க செனனம் ஆர் பெறுவர் என்பார்

மேல்
$1.23.62

#1158
ஆர வாருதியில் தோன்றும் அமுதனார் பரியை நோக்கி
பாரிடை பையப்பைய செல் என பரிவில் சொல்வார்
வார மா மறுகில் போத மனம் அற மறுகி நின்னை
கோரம் என்று இதற்கோ பேரிட்டு உலகு எலாம் கூறிற்று என்பார்

மேல்
$1.23.63

#1159
பொருத்துதற்கு அரிய செவ்வி புரவலர் அழகை கண்ணால்
அருத்திய துயர காற்றால் அவதியுற்று அலைந்து காந்தள்
கரத்து அணி பணிகள் யாவும் கருத்துடன் இழந்து வாசம்
விரித்த பூ உதிர்த்த கொம்பாய் விளங்கு_இழை ஒருத்தி நின்றாள்

மேல்
$1.23.64

#1160
கோது அறு கருணை வள்ளல் குவவு தோள் வனப்பை கண்ணால்
தீது அற வாரி உண்ட செழும்_கொடி ஒருத்தி செம்பொன்
பூதர கொங்கை சாந்து முத்தமும் பொரிவது என்-கொல்
காதினில் உரை-மின் என்று ஓர் காரிகை-தன்னை கேட்டாள்

மேல்
$1.23.65

#1161
திரு தகு பவனி நோக்கும் சே_இழை ஒருத்தி காதல்
வருத்தமுற்றிருந்து பஞ்சவணக்கிளி கையில் ஏந்தி
கரத்தினை பொருத்த செய்த காளை-பால் ஏகி என்-தன்
உரத்தினை பொருத்த சொல் என்று ஓதும் வாய் ஒழிகிலாளே

மேல்
$1.23.66

#1162
கதியுறு பரியின் மேல் ஓர் காளையை நோக்கிநோக்கி
புதியது ஓர் செவ்வி வாய்ந்த பொலன்_கொடி ஒருத்தி இந்த
பதியினில் பிறந்து செய்த பலத்தினுக்கு உற்ற பேறாய்
மதியினை கொடுத்து கொள்ளா மாலையே வாங்கிக்கொண்டாள்

மேல்
$1.23.67

#1163
இன மணி செழும் கொம்பு அன்னார் உடன் எழுந்து எதிரில் புக்கு
சின மத கரியும் தேரும் சிவிகையும் பரியும் சூழ
புனல் முகில் கவிகை வள்ளல் வருவதும் பொருந்த நோக்கி
கனவு என தெளிவுறாமல் கலங்கி நின்று ஒருத்தி போனாள்

மேல்
$1.23.68

#1164
கன முகில் அனைய கூந்தல் காரிகை ஒருத்தி உள்ள
நினைவு எலாம் குரிசில் தோன்றும் நெறியிடை எதிரில் போக்கி
இனம் எங்கே ஆயம் எங்கே எவ்விடத்து ஏகின்றேன் என்
மனம் எங்கே யான்-தான் எங்கே என நின்று மறுகுகின்றாள்

மேல்
$1.23.69

#1165
மயல் கடல் படிந்து கூந்தல் மலர் மணி கலையும் போக்கி
செயற்கையின் பணிகள் யாவும் தெருத்தலை-தோறும் சிந்தி
புயல் குடை குரிசில் தந்த பொன் எலாம் உடலம் பூத்த
இயற்கையே போதும் என்ன விளங்கு_இழை ஒருத்தி போனாள்

மேல்
$1.23.70

#1166
பருமித்த முலையின் ஆர்ந்த பல் மணி கலன்கள் ஈய்ந்து
மரு மொய்த்த குழலாள் ஆசை மதிப்பு இலா வயிரம் தான் கொண்டு
ஒரு முத்தில் உதித்த வள்ளல் உறு கதிர் அழகுக்காக
பெரு முத்த வாரி கோடி இறைத்தனள் பெரிய கண்ணால்

மேல்
$1.23.71

#1167
காய் இளநீரும் வேயும் கதலியும் கமுகும் காந்தி
பாய் ஒளி ஆம்பலும் செம்பதுமமும் குவளை மானும்
சே அரி கரும் கண் நல்லார் செறிந்து கொண்டு எழுந்த தோற்றம்
தூய மேனிலைகள் எல்லாம் துடவை போன்று இருந்த மாதோ

மேல்
$1.23.72

#1168
குரும்பை மென் முலைகள் தாங்கி கொடி நிலை மாட மீதில்
கரும்பு எனும் அமுத தீம் சொல் கன்னியர் செறிந்த தோற்றம்
தரும் பெரும் புவியும் வானும் தழைக்க வந்து உதித்த வள்ளல்
வரும் பெரும் பவனிக்கு ஏற்ற மாணிக்க விளக்கம் போன்றார்

மேல்
$1.23.73

#1169
தாவிய பரி மேல் சேனை தளத்தொடும் வீதி-வாயின்
மேவிய வள்ளலார்-தம் மெய் எழில் நோக்கிநோக்கி
ஆவி உள் அடங்கி நெஞ்சத்து அறிவு உதிர்த்து இமைப்பு இல்லாது
பாவையர் நின்றார் செய்த பாவைகள் போலும் அன்றே

மேல்
$1.23.74

#1170
கண்களில் அடங்கா காட்சி காளை-தம் வனப்பு நோக்கும்
பெண்களில் அமுதம் அன்னார் பேரெழில் முகத்தின் தோற்றம்
விண் கதிர் அடரும் சோதி மேனிலை வாயில்-தோறும்
தண் கதிர் கிளைத்த செவ்வி சசி இனம் முளைத்தல் போலும்

மேல்
$1.23.75

#1171
வடி சுதை மெழுக்கிட்டு ஓங்கி வளர்ந்த மண்டபத்தின் சார்பில்
படர் கதிர் அரத்தம் தோய்ந்த பல்கணி வாயில்-தோறும்
கடி மண பவனி நோக்கும் கன்னியர் கதிர் வேல் கண்கள்
கொடி துடர் பவளத்தூடும் குவளைகள் பூத்த போன்ற

மேல்
$1.23.76

#1172
தண் நிலவு உமிழும் சோதி தவழ் நிலை வீதி-வாயின்
மண்ணகத்து எவரும் ஒவ்வா முகம்மதின் பவனி நோக்கி
எண்ணகத்து அடங்கா மாதர் இவ்வண்ணம் நிகழும் வேலை
விண்ணவரிடத்தில் வாய்ந்த வியப்பினை விரித்து சொல்வாம்

மேல்
$1.23.77

#1173
உம்பர் உள்ளம் களித்து எழுந்து ஓடி நீள்
செம்பொன் நாட்டு உயர் சென்னத்தின் மா மணி
கம்பை சேர்த்தும் கபாடம் திறந்தனர்
இம்பர் நாட்டும் எழுந்தன சோதியே

மேல்
$1.23.78

#1174
விரைவின் ஆதி உரைப்படி விண்ணவர்
நிரயம்-தன்னை அடைத்து நெருப்பையும்
பரவிலாது அவித்து உள் உறை பாழ்ங்குழி
இரையும் மூச்சும் அடக்கினர் என்பவே

மேல்
$1.23.79

#1175
அவனி மீதில் அகுமது மா மண
பவனி வந்தனர் பாரு-மின் பார் என
கவன வேகத்து அமரர் களிப்பொடும்
சுவன நாட்டு உறை தோகையர்க்கு ஓதினார்

மேல்
$1.23.80

#1176
மன்னர்_மன்னர் முகம்மது-தம் பெயர்
சொன்ன போதில் சுவன மடந்தையர்
முன் இருந்த வடிவினும் மும்மடங்கு
என்னல் ஆகி இரும் களிப்பு ஏறினார்

மேல்
$1.23.81

#1177
விதிக்கு_மேலவன் ஏவலின் விண்ணினில்
குதிக்கும் சோதி கொடி இடை கொம்பு அனார்
பதிக்கும் பூரணமாய் பல கோடி மா
மதி குலம் வந்து எழுந்தது மானுமே

மேல்
$1.23.82

#1178
மாக நல் நதி ஆடி மணம் கமழ்
ஆக மீதில் அணி அணிந்து அ நலார்
ஏகமாய் எழுந்து எங்கணும் எண்ணிலா
மேக மண்டல மின் என தோன்றினார்

மேல்
$1.23.83

#1179
தீன் எனும் முதல் செம்மல்-தன் வீதி-வாய்
வானநாடு உறை மங்கையர் அங்கையால்
நானம் அம்பர் நறும் கறுப்பூரம் பொன்
பூ நிறைத்து இறைத்து பொழிந்தார்களே

மேல்
$1.23.84

#1180
விண்ணின் உற்றவர் வீசி இறைத்தலால்
கண் அகன்ற கடல் மலை கானகம்
பண்ணை சூழ் நகரும் பல சோலையும்
மண்ணும் விண்ணும் மலிந்தன வாசமே

மேல்
$1.23.85

#1181
வள்ளலார் திரு மேனியின் வாசமும்
தெள்ளி மேலவர் சிந்திய வாசமும்
கள் உலாவிய காவினின் நால் வகை
உள்ள பூவினும் உள் உறைந்து ஓங்கிற்றே

மேல்
$1.23.86

#1182
திருத்து கூந்தலும் தேம் கமழ் மாலையும்
விருத்த பூம் துகிலும் மணி மெய்யினும்
பருத்த கொங்கையினும் புவி பாவையர்
கருத்தினூடும் கலந்தது அ வாசமே

மேல்
$1.23.87

#1183
விரை கொள் நானமும் வெண் கருப்பூரமும்
வரிசை வள்ளல் முகம்மதின் வீதியில்
அரிதினில் சொரிந்து அம்பர மங்கையர்
பெருகும் தம் மனத்து ஆசையில் பேசுவார்

மேல்
$1.23.88

#1184
குற்றம் அற்ற கொழும் கதிர் மெய் எழில்
வெற்றி வள்ளலை வீதியில் கண்டனம்
முற்றுறாத முகத்து இமையா விழி
பெற்ற பேறு இன்று பெற்றம் என்பார் சிலர்

மேல்
$1.23.89

#1185
தண் அம் தாமரை பாதம் தழீஇ தொழும்
மண்ணின் மாதர்களே வலியார் என்பார்
பெண்ணனார் கதிஜாவொடும் பெட்புற
விண்ணினூடும் விளங்குவர் காண் என்பார்

மேல்
$1.23.90

#1186
வழுத்துவீர் இவர் ஆர் என மற்றவர்
பழுத்த பொன் நிலை பல் மணி மின்னவே
அழுத்து வாயிலின் மேல் இரண்டாம் வரி
எழுத்து எலாம் இவர் பேர் என்று இயம்புவார்

மேல்
$1.23.91

#1187
தடம் தயங்கு பொன்_நாட்டினில் தான் என
நடந்து கொண்டவன் நல் நெறி நல் பதம்
இடைந்து கெட்டு இபுலீசு என்று எரி நரகு
அடைந்ததும் இவர்-தம் பொருட்டால் என்பார்

மேல்
$1.23.92

#1188
எந்நிலத்தினும் மிக்கு உயர் ஏந்து எழில்
மன்னர்_மன்னர் முகம்மது-தம் பதம்
நல் நிலத்தொடு நாம் புகழ்ந்து ஏத்திட
பொன்னின் நாட்டை புரந்திலர் என் என்பார்

மேல்
$1.23.93

#1189
பூவில் நன் கலிமாவை பொருந்துற
நாவில் ஓதிய நம் மணவாளர்கள்
தா இல் எண்ணிறந்தோரொடும் தாம் நமர்
சேவை செய்திட சேர்குவர் காண் என்பார்

மேல்
$1.23.94

#1190
கால மேக கவிகையின் நீழலோ
நீலமோ நறை நான நிறைத்ததோ
கோல வார் குவவு புய குங்கும
மாலையூடு உறை வண்டினமோ என்பார்

மேல்
$1.23.95

#1191
மண் இடம் தெரிவின்று என வந்து அடர்
பெண் இனங்கள் பெருத்திடும் ஆசையால்
சுண்ணமும் மலரும் திகழ் தோள் மிசை
கண்ணின் பேரொளி கான்றது காண் என்பார்

மேல்
$1.23.96

#1192
தெளிய வந்துறும் சிந்தையர் சிந்தையின்
அளி எலாம் இகழ்ந்து ஆசையின் ஆவலால்
ஒளி எலாம் இவர் உள்ளுறையால் இந்த
வெளி எலாம் அந்த மெய் உரு காண் என்பார்

மேல்
$1.23.97

#1193
வார் தட கரி வண் முலை விம்முற
வேர்த்து நின்று வெதும்பிவெதும்பியே
கூர்த்த தம் கருத்து உள் உறை கொண்டலை
பார்த்த கண்கள் பறிப்பு அரிது என்பரே

மேல்
$1.23.98

#1194
மன்னை பார்த்தும் மதி முகம் பார்த்தும் நின்று
என்னை பார்க்கிலர் காண் என ஏங்குவார்
மின்னை பார்த்த விளங்கு_இழையார்கள் என்-
தன்னை பார்த்தனர் காணவர் தாம் என்பார்

மேல்
$1.23.99

#1195
வண்ண வார் புய மன்னவர் மெய் எழில்
கண்ணினூடும் கரந்தது என்பார் சிலர்
எண்ணினூடும் இருந்தது என்பார் சிலர்
உள் நினைவொடும் உற்றது என்பார் சிலர்

மேல்
$1.23.100

#1196
ஏந்து கொங்கை அணி இழப்பார் சிலர்
கூந்தல் சோர குழைந்து நிற்பார் சிலர்
காந்தி மேனி கரிந்திடுவார் சிலர்
மாந்தி ஆசை மயக்குறுவார் சிலர்

மேல்
$1.23.101

#1197
வானவர் மகளிர் இன்னணம் இயம்பி மனத்து உறு துயர் உழன்று உலைப்ப
தேன் இமிர் அலங்கல் செழும் புய குரிசில் செம் முகம் பருதியது என்ன
கான் அமர் குழலார் செ அரி வேல் கண் கணம் எலாம் நெருஞ்சியை நிகர்ப்ப
தான வாரணமும் பரிகளும் மிடைய சுற்றமும் தழீஇ வர போந்தார்

மேல்
$1.23.102

#1198
சலதர கவிகை நெடு நிழல் பரப்ப சலதியின் பல்லியம் கறங்க
குலவிய கொடியும் கவரியும் விரிய கொலை மத களிறுகள் நெருங்க
பல கதி பரியும் அரசரும் மிடைய பாவலர் இனிது வாழ்த்து எடுப்ப
கலை_வலன் குவைலிது இனிது அலங்கரித்த கடைத்தலை காவணம் புகுந்தார்

மேல்
$1.23.103

#1199
வரை திரள் வயிர புய முகம்மது நல் மண மலர் காவணம் புகுத
திரையினில் பிறந்த அமுது எனும் மொழியார் செழும் மணி தீபங்கள் ஏந்த
இருபுறம் நெருங்கி அயினிநீர் சுழற்ற எண்ணிலர் ஆலத்தி எடுப்ப
பரவையின் மறையும் குரவையும் சிலம்ப பரியை விட்டு இறங்கினர் அன்றே

மேல்
$1.23.104

#1200
பணி தொகை சுமத்தி இளைத்த நுண்ணிடையார் பங்கய கர பனிநீரால்
மணி பதம் விளக்கி துகிலினால் துடைத்து வரிசையின் முறை பல பணித்தார்
துணர் பசும் கொழுந்து மலர்களும் சொரிந்த தூ நறை பாயலில் நடந்து
கணிப்ப அரும் கதிர்கள் பாய் மணி தவிசின் முகம்மது கவின்பெற இருந்தார்

மேல்
$1.23.105

#1201
அமரர் விண்ணுலகும் புவனமும் விளக்கு மணி விளக்கு எனும் கதீஜாவை
தமனிய தசும்பு நனி விரை கமழ்ந்த தண் நறும் புது புனல் ஆட்டி
உமிழ் கதிர் கொடியை வெள் நிலா கலை வந்து உடுத்த போல் கலை எடுத்து உடுத்தி
சுமை இருள் காவின் முகில் தவழ்ந்து என்ன சுரி குழற்கு அகில் புகை கமழ்த்தி

மேல்
$1.23.106

#1202
இருள் குலம் அனைத்தும் பிடித்து ஒரு தலத்தில் இருத்துவது என குழல் இறுக்கி
அருட்டம் உண்டு அறு கால் சுரும்பு இனம் அலம்பும் அலங்கலை இலங்குற அணிந்து
திருத்திய முகிலில் சசிக்கு இடை கதிரும் சேர்ந்து என திருப்பிறை தரித்து
பொருத்து இளம் பிறையில் விரிச்சிகன் கதிர்கள் புரண்டு என நுதற்கு அணி புனைந்தார்

மேல்
$1.23.107

#1203
வள்ளையை கிழித்து குமிழினை துரந்த மதர் விழிக்கு அஞ்சனம் எழுதி
கொள்ளை வெண் கதிர் விட்டு உமிழ் மணி பணியை கொழு மடல் குழை மிசை சுமத்தி
தெள்ளிய பணில செழு மணி கழுத்தில் திரள் பணி தொகை பல திருத்தி
விள்ள அரும் பசிய கழை குலம் பொருவா விளங்கு தோள் அணி பல தரித்தார்

மேல்
$1.23.108

#1204
கர வளை தரித்து விரல் அணி பொருத்தி கதிர் கொள் மேகலை பல புனைந்து
சரணினை சிலம்பும் சில்லரி சதங்கை தரு சிறு சிலம்பொடு தரித்து
விரி கதிர் பவள கொடி எனும் விரல்கள் விளைந்த போல் மணி பணி செறித்து
பருதியின் கரம் கண்டு உவக்குறும் வனச பதத்து அலத்தகம் எழுதினரே

மேல்
$1.23.109

#1205
மறுவியும் புழுகும் சுண்ணமும் சாந்தும் வடித்த பன்னீரொடும் குழைத்து
பொறி நிகர் பொருவா செழும் குழை அமிர்த பொலன் தொடி மெய்யினில் பூசி
சிறு நுதல் பெரும் கண் குவி முலை செ வாய் சேடியர் இரு மருங்கு ஈண்டி
கறை தவிர் மதியம் தொழு முழுமதிக்கு கலந்த கண்ணெச்சிலும் கழித்தார்

மேல்
$1.23.110

#1206
செறிந்த சந்தனமும் கலவையும் புழுகும் சிலதியர் தட்டினில் ஏந்த
எறிந்த சாமரையின் கதிர்கள் கொப்பிளிப்ப இலங்கு இழை இகுளையர் ஏந்த
உறைந்த பாளிதம் பாகு இலை எடுத்து ஏந்தி ஒருங்கினில் சிலதியர் உதவ
நிறைந்த பூண் சொரிந்த கோடிகம் சுமந்து நின்றனர் மடவியர் ஒருங்கே

மேல்
$1.23.111

#1207
பேரழகு ஒழுகும் பெண் நலம் கனியை பிரசம் ஊறிய மொழி கரும்பை
ஆரண கடலுக்கு அமுத நாயகியை அரிவையர் முறைமுறை வாழ்த்தி
பாரினில் செறித்த மலர் மிசை நடத்தி பல்லியம் முரசொடு கறங்க
வார் பொரு முலையார் முகம்மது மருங்கின் மணி தவிசிடத்து இருத்தினரே

மேல்
$1.23.112

#1208
பொருவு அரும் கதிர் விட்டு எழும் பொருப்பிடத்தில் பூத்த கொம்பு இருந்தது போன்றும்
தெரிதரும் அறிவின் தரு நிழல் உறைந்த செழும் பொறை பசுங்கிளி எனவும்
முருகு அவிழ் மலரில் தேன் துளித்து எனவும் முகம்மதினிடத்தினில் கதீஜா
பரிவுடன் இருப்ப அமரரும் களிப்ப செல்வமும் படர்ந்து எழுந்தனவே

மேல்
$1.23.113

#1209
இரு கிளையவரும் சம்மதித்து ஐந்நூறு இரசிதம் மகர் என பொருந்தி
கரு முகில் கவிகை முகம்மது-தமக்கும் காரிகை கனம் குழை-தமக்கும்
மரு மலர் தொடையல் புனையும் நிக்காகை மணத்துடன் முடித்திடும் என்ன
பெருகிய ஹாஷிம் குலத்தவர் அனைத்தும் பிரியமுற்று உரைத்தனர் அன்றே

மேல்
$1.23.114

#1210
முதியவர் உவந்து நீதி முன்மார்க்க முறைப்படி சடங்குகள் முடிப்ப
மதி_வலன் குவைலிது அகம் மகிழ்ந்து எழுந்து முகம்மதின் செழும் மணி கரத்தில்
புது மதி வதன செழும் கொடி கதீஜா பொன் மலர் கரத்தினை சேர்த்தி
கதிர் மதி உள நாள் வாழ்க என்று இசைத்து கண் களித்து இனிது வாழ்த்தினரே

மேல்
$1.23.115

#1211
செறிதரு மடவார் குரவைகள் இயம்ப திரளொடு பல்லியம் ஆர்ப்ப
அறிவினர் வாழ்த்த வாணர்கள் ஏத்த அந்தரத்து அமரர்கள் களிப்ப
குறைவு இலாது உயர்ந்து தழைத்து இனிது ஓங்கும் குல கதீஜா எனும் கொடியும்
மறைபடாது எழுந்த மதி முகம்மதுவும் மணவறை புகுந்தனர் அன்றே

மேல்
$1.23.116

#1212
மணி கொழித்து அதிரும் திரை கடல் அனைய மனமகிழ்வொடு முகம்மதுவும்
பணி படர் அவனி திலத நாயகியும் பல் மலர் பளிக்கறை புகுந்து
கணிபடா அழகு கண்களில் பருகி கருத்து என உயிரும் ஒன்றாகி
அணி கிளர் இன்ப பெருக்கு எடுத்து எறியும் ஆநந்த கடல் குளித்தனரே

மேல்
$1.23.117

#1213
திண் திறல் புவியின் முகம்மது-தமக்கு திரு வயது இருபத்தைந்தினின் மேல்
கண்ட திங்களும் ஓர் இரண்டு நாள் இரண்டில் கனகநாட்டவர்கள் கண் களிப்ப
எண் திசை முழுதும் திரு பெயர் விளங்க இரு நில மணி கதீஜாவை
வண்டு உறை மரவ செழும் தொடை புனைந்து வரிசை மா மணம் பொருந்தினரே

மேல்
$1.23.118

#1214
அரவினை வதைத்த கரதல நயினார் அரும் கரம் பொருத்திய நயினார்
பரல் செறி சுரத்தில் புனல் தரு நயினார் பணி பணிந்திட வரு நயினார்
வரி அளி அலம்பும் புயன் அபுல் காசீம் மனத்து உறை வரிசை நல் நயினார்
தெரி மலர் கதீஜா நாயகி நயினார் செல்வமுற்று இனிது வாழ்ந்திருந்தார்

மேல்
$1.23.119

#1215
மக்க மா நகரும் செல்வமும் வாழ மறை_வலோர் அற நெறி வாழ
தக்க மெய் புகழும் கிளைஞரும் வாழ தரணி நால் திசையினும் வாழ
மிக்க நல் நெறி நேர் முகம்மதும் சிறந்த விரை கமழ் மதுரம் ஊற்றிருந்த
இக்கு மென் மொழியார் எனும் கதீஜாவும் இனிதுற பெரிது வாழ்ந்திருந்தார்

24. ககுபத்துல்லா வரலாற்றுப் படலம்

$1.24.1

#1216
தருமம் மனு நெறி அறிவு பொறை ஒழுக்கம் இனையனவும் தழைத்து வாழ
கரு முகிலின் செழும் கவிகை இனிது ஓங்க குரிசில் அகம் களிக்கும் நாளில்
வரி விழி செம் கனி துவர் வாய் கொடியிடையார் புடை சூழ வளரும் செல்வம்
பெருகும் இள மயில் கதீஜா ஸயினபு எனும் பசுங்கிளியை பெற்றார் அன்றே

மேல்
$1.24.2

#1217
ஸயினபு எனும் மணி ஈன்ற வலம்புரி நேர் அனைய குல தரும மாது
குயில் மொழி றுகையாவை ஈன்று உம்முக்குல்தூமை ஈன்று பின்னர்
செயிர் அற நாலாவதில் ஆண்பிள்ளை காசீம் என ஓர் செம்மல் ஈன்று
நயமுற பின் தையிபு எனும் சேய் ஈன்று தாகிறையும் நல்கினாரே

மேல்
$1.24.3

#1218
மன்றல் கமழ் முகம்மதற்கு ஐயேழாண்டு நிறைந்ததன் பின் மறு இலாத
மின் தவழ்வது என ஒளிரும் கதீஜா நாயகி உதரம் விளங்க சோதி
துன்று மணி என பூவின் மடந்தையர்க்கும் சுவன பதி தோகைமார்க்கும்
என்றும் அரசு என இருப்ப பாத்திமா எனும் மயிலை ஈன்றார் அன்றே

மேல்
$1.24.4

#1219
ஆதி_நாயகன் திருவுளத்து அமரர்கள் இறங்கி
பூதலத்தினில் அறம் எனும் தலநடு புகுந்து
சோதி எங்கணும் பரந்திட ககுபத்துல்லாவை
தீது இலாது உற சுவன மா மணத்தொடும் செய்தார்

மேல்
$1.24.5

#1220
அந்த நாள் தொடுத்து அளவிடற்கு அரு நெடும் காலம்
சுந்தரத்தொடும் அமரர்கள் புகுந்து அவண் தொழுது
பந்தி கூர்ந்து உடல் புளகுற இறைவனை புகழ்ந்து
சந்ததம் இவை தொழில் என திரிந்து அவண் சார்வார்

மேல்
$1.24.6

#1221
ஆதம் நல் நபி அமருலகு இழிந்து அவண் அடைந்து
மாது அவ்வாவுடன் இன்புற வாழும் அ நாளில்
காதல் கூர்தர ககுபத்துல்லாவினை கடிதின்
ஏதமுற்றிடாது இடம்பெற பின் இயற்றினரால்

மேல்
$1.24.7

#1222
முதிரும் கேள்வியர் ஆதத்தின் மக்களின் முதியோர்
கதிர் உமிழ்ந்து காரணம் பல விளங்கு கஃபாவை
பிதிர்தரும்படி கண்டு அதை பெலத்தொடு நிறுவி
அதிகமாய் செய்து உயர்த்தினர் அழகொடும் இலங்க

மேல்
$1.24.8

#1223
உரம் தரும்படி நின்று எழில் பிறங்கிட ஒளிகள்
பிரிந்திடாத கஃபா எனும் பேரின்ப துறையை
விரிந்த காரண நூகு தம் காலத்தில் விண் மட்டு
இரைந்து எறிந்திடும் பிரளயது இடிந்ததை அன்றே

மேல்
$1.24.9

#1224
நிறைந்து இலங்கியது இடிந்தது கிடந்தது நெடுநாள்
பிறந்து நூகு-தம் பதினொரு தலைமுறை பின்னர்
துறந்த பேர் இபுறாகிம் நல் நபி எனும் தூயோர்
சிறந்து இலங்கிட ககுபத்துல்லாவினை செய்தார்

மேல்
$1.24.10

#1225
கன்னல் வேலி மக்காபுர ககுபத்துல்லாவை
நல் நயம் பெறு நெறி இபுறாகிம் நல் நபிக்கு
பின்னம் மாலிக்கத்து என்பதோர் கூட்டத்தில் பெரியோர்
உன்னதம் பெற இடம்பெற செய்து உயர்த்தினரே

மேல்
$1.24.11

#1226
அறப மாலிக்கத்து என்பதோர் கூட்டத்துக்கு அணித்தாய்
சுறுகும் என்னும் அ கூட்டத்தின் அரசர்கள் சூழ்ந்தே
இறைவன் நேர் வழி ககுபத்துல்லா-தனை இயல்பாய்
மறைபடாது ஒளி பெருக்கிட செய்துவைத்தனரே

மேல்
$1.24.12

#1227
விசயம் மிக்கு உயர் சுறுகுமாம் கூட்டத்தின் வீரர்
திசை விளங்கிட செய்தனர் இருந்தது சில நாள்
இசைய நல் எழில் ககுபத்துல்லா-தனை இறக்கி
குசையு என்பவர் அதிகமாய் இயற்றினர் குறித்தே

மேல்
$1.24.13

#1228
பெருகு நல் குல குசையு எனும் வேந்தர்க்கு பின்னர்
முருகு பூம் பொழில் மக்க மா நகரியின் முதிர்ந்து
செருகு மா மழை தாரையில் பிரளயம் சிதைப்ப
தரு கை மன்னவர் குறைஷிகள் செய்துவைத்தனரால்

மேல்
$1.24.14

#1229
கண மணி திரள் கதிர் உமிழ் ககுபத்துல்லாவை
பிணையல் தாங்கிய புய வரை குறைஷிகள் பெரிதாய்
இணை பிறப்பு அதற்கு இலை என எழிலொடும் இலங்க
மணமுறும்படி செய்துவைத்திருக்கும் அ நாளில்

மேல்
$1.24.15

#1230
அருள் இலா மன கொடும் கொலை கரவிடர் அடுத்து
பொருள் அங்கு உண்டு என ககுபத்துல்லா நடுப்புறத்தில்
திருடும் கன்னம்வைத்து அற பறித்து அடி மதிள் சிதைப்ப
இருள் அறும் கதிர் மேனிலையொடும் இடிந்ததுவே

மேல்
$1.24.16

#1231
புடை பறித்து அதில் உட்பட சோதனை போக்கி
உடை பெரும் பொருள் இல் என கரவிடர் ஒதுங்கி
இடைப்படாததற்கு இசைந்தனம் என மனம் இடைந்து
துடைப்ப அரும் பெரும் பழி சுமந்து அயலினில் போனார்

மேல்
$1.24.17

#1232
கறை இலா முழுமதி எனும் ககுபத்துல்லாவை
குறைஷி மன்னவர் அனைவரும் ஒருங்குற கூண்டு
நறையுறும் சுதை மதிள்-தனை நாலு பங்காக
துறைபெறும்படி பிரித்து செய் தொழில் துணிந்தனரே

மேல்
$1.24.18

#1233
வசை இலா குல குறைஷிகள் அனைவரும் மதித்து
திசையும் வானமும் போற்றிய செவ்விய கசுறில்
அசுவது என்னும் அ குவட்டினை அணைத்து எடுத்து அசையாது
இசையும் தானத்தில் வைத்திடுபவர் எவர் என்றார்

மேல்
$1.24.19

#1234
அன்ன காலையில் செவ்விய நெறி பனியாசீம்
என்னும் வங்கிடத்து ஒருவர் இ பள்ளியினிடத்து
முன்னதாக வந்து அவர் நிறுவுவர் என முதலோன்
பன்னு மா மறை தெளிந்தவர் சிலர் பகர்ந்தனரே

மேல்
$1.24.20

#1235
ஈது நன்று என குறைஷிகள் அனைவரும் இசைவுற்று
ஓதும் வேளையில் அக மலர் களிப்புடன் உலவி
தூதராகிய முகம்மதும் அவ்வுழி தோன்ற
சீத ஒண் கமலானனம் குளிர்தர சிறந்தார்

மேல்
$1.24.21

#1236
நீங்கிடா கனல் சுரத்திடை நிறை புனல் அளித்து
வேங்கையோடு உரை பகர்ந்த செம் கதிர் வடி வேலோய்
பாங்கினில் கரும் குவட்டை முன் பதித்திடும் தலத்தில்
தாங்கி வைத்திடும் என்றனர் நிலைபெறும் தலத்தோர்

மேல்
$1.24.22

#1237
உரைத்த தம் குல மன்னவர் உளம் களிப்பு ஏற
வரை தடம் புய மேலுறு போர்வையை வாங்கி
விரித்து நன்குறு துகிலிடை நாப்பணின் விளங்க
இருத்தினார் செழும் கரத்தினில் கரும் கலை எடுத்தே

மேல்
$1.24.23

#1238
வெற்றி மன்னவர் தலைவரில் நால்வரை விளித்து
பொன் தடம் துகில் முந்தியில் நான்கினும் பொருந்த
இற்றுறாவகை எடும் என இவரொடும் எடுப்ப
குற்றம் இன்றி முன் தலத்திடை இருத்தினர் குறித்தே

மேல்
$1.24.24

#1239
வலிய வீரர்கள் உரைத்திடும்படி முகம்மதுவும்
நலிவு இலாது எடுத்து இருத்திய நறும் கரும் குவட்டை
ஒலிகொளும்படி தொட்டு உற முத்தமிட்டு வந்து
நிலைதரும்படி சதுர்தர மதிள் நிறுவினரே

மேல்
$1.24.25

#1240
பொன்னகத்தினும் தீவினும் பூவினும் பொருவா
மின் இலங்கிய மக்க மா நகரினில் வியப்பா
மன்னர்_மன்னவர் மதித்திட சிறந்த ககுபாவை
முன் இருந்ததின் மும்மடங்கு எனும்படி முடித்தார்