தோ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோகை 3
தோகைக்கு 1
தோகைமார் 2
தோகைமார்க்கும் 1
தோகையர் 1
தோகையர்க்கு 2
தோட்டம் 1
தோட்டியாம் 1
தோட்டு 3
தோடு 2
தோண்டலும் 1
தோத்திரம் 1
தோம் 7
தோமரம் 4
தோமறும் 1
தோய் 3
தோய்த்த 1
தோய்த்து 5
தோய்தர 1
தோய்தரா 2
தோய்ந்த 3
தோய்ந்தன 2
தோய்ந்திட 1
தோய்ந்திலா 1
தோய்ந்து 5
தோய்வு 1
தோய்வுற 1
தோய 1
தோயம் 1
தோயா 2
தோயாதாலும் 1
தோயாது 1
தோயாமல் 1
தோயும் 3
தோரண 4
தோரணங்களை 1
தோரணத்தொடும் 1
தோரணம் 3
தோல் 7
தோலாத 1
தோலில் 1
தோலும் 1
தோழமை 1
தோழமையவரும் 1
தோழர் 7
தோழர்-தங்களை 1
தோழர்-பால் 1
தோழர்க்கு 1
தோழர்கள் 2
தோழர்கள்-தமை 1
தோழர்களிடத்தினில் 1
தோழர்களுடன் 1
தோழர்களுடனும் 1
தோழர்களோடும் 1
தோழராகிய 1
தோழரான 1
தோழரில் 2
தோழருடன் 2
தோழரும் 5
தோழரொடும் 1
தோள் 93
தோள்கள் 2
தோள்களும் 1
தோள்வளை 1
தோளணி 1
தோளாய் 1
தோளார் 3
தோளால் 1
தோளாள் 1
தோளான் 1
தோளில் 3
தோளின் 1
தோளினர் 1
தோளினராய் 1
தோளினில் 2
தோளினும் 2
தோளினை 1
தோளும் 5
தோளையும் 1
தோளொடு 2
தோற்ற 2
தோற்றம் 21
தோற்றமாம் 1
தோற்றமும் 3
தோற்றரவில் 1
தோற்றவும் 1
தோற்றா 1
தோற்றாது 1
தோற்றி 3
தோற்றிட 1
தோற்றிடா 4
தோற்றிடாது 1
தோற்றிடும் 1
தோற்றிய 3
தோற்றியது 3
தோற்றிற்று 1
தோற்று 5
தோற்றுது 1
தோற்றுபு 1
தோற்றுவிக்கும் 1
தோன்ற 38
தோன்றல் 10
தோன்றல்-தானும் 1
தோன்றலால் 2
தோன்றலில் 1
தோன்றலும் 4
தோன்றலை 3
தோன்றவும் 1
தோன்றவே 1
தோன்றா 17
தோன்றாத 1
தோன்றாது 17
தோன்றாமல் 2
தோன்றி 39
தோன்றிட 7
தோன்றிடா 1
தோன்றிடாது 1
தோன்றிடும் 5
தோன்றிய 24
தோன்றியது 1
தோன்றியில் 1
தோன்றியே 2
தோன்றில 8
தோன்றிலர் 1
தோன்றிலா 1
தோன்றிலாது 1
தோன்றிற்று 1
தோன்றிற்றே 1
தோன்றின 2
தோன்றினபேர்க்கு 1
தோன்றினர் 6
தோன்றினன் 2
தோன்றினார் 7
தோன்றினான் 2
தோன்றினானே 1
தோன்றினும் 1
தோன்று 2
தோன்றுதற்கு 1
தோன்றும் 52
தோன்றுமால் 1
தோன்றுவ 2
தோன்றுவது 2
தோன்றுவர் 2

தோகை (3)

சுரி கரும் குழல் வெண் நகை பசிய மென் தோகை
வரி விழி கதிஜா மனை மைசறா-தன்னை – சீறா:835/1,2
வண்ண மென் பசும் கதிர் தோகை மஞ்ஞைகள் – சீறா:1150/2
தொழுதி கொண்டு உற்றனர் தோகை மாதரே – சீறா:1151/4

மேல்


தோகைக்கு (1)

துறக்கமும் புகழும் சுரி குழல் கதீஜா என்னும் அ தோகைக்கு நிதமும் – சீறா:2903/2

மேல்


தோகைமார் (2)

தோகைமார் இடு புகை திரள் இடையிடை தோன்றும் – சீறா:1116/2
தோகைமார் மதி சூழ்ச்சியின் மைந்தர்கள் – சீறா:4665/1

மேல்


தோகைமார்க்கும் (1)

துன்று மணி என பூவின் மடந்தையர்க்கும் சுவன பதி தோகைமார்க்கும்
என்றும் அரசு என இருப்ப பாத்திமா எனும் மயிலை ஈன்றார் அன்றே – சீறா:1218/3,4

மேல்


தோகையர் (1)

சொல்லும் அ மொழியை கேட்டு தோகையர் திலதம் என்ன – சீறா:4692/1

மேல்


தோகையர்க்கு (2)

தொடர்ந்த புன்முறுவல் தோன்ற தோகையர்க்கு உரைப்பதானான் – சீறா:1057/4
சுவன நாட்டு உறை தோகையர்க்கு ஓதினார் – சீறா:1175/4

மேல்


தோட்டம் (1)

தோட்டம் முற்றினும் சுற்றி நன்கு என சிரம் தூக்கி – சீறா:2943/2

மேல்


தோட்டியாம் (1)

முற்றும் வாரண தோட்டியாம் என சமர் முனைந்தான் – சீறா:3897/4

மேல்


தோட்டு (3)

தோட்டு அலர் நாற்றும் வாயில் சுவாகு எனும் புத்து-தன்னை – சீறா:1558/1
கரும்பு எனும் மொழியாள் ஆசை கவின் முளைத்து என்ன தோட்டு உள் – சீறா:3191/1
தோட்டு முண்டகத்தை மற்று ஓர் கமலத்தால் துடைத்தது ஒத்தே – சீறா:3933/4

மேல்


தோடு (2)

தோடு அவிழ்ந்து பூம் தாது உக குடைந்து இன சுரும்பு – சீறா:66/1
விரி பசும் தோடு விண்டு மென் முகை அவிழ்க்கும் பூவின் – சீறா:802/1

மேல்


தோண்டலும் (1)

ஊறும் நீர் புறம் காணுற தோண்டலும் ஒரு கல் – சீறா:4404/1

மேல்


தோத்திரம் (1)

தோத்திரம் செய்து வள்ளல் துணை அடிக்கு அருகில் வைத்தார் – சீறா:4711/4

மேல்


தோம் (7)

தோம் அகல் முகம்மது நபியும் சூழ் வர – சீறா:1601/1
தோம் இல் வண் குத்துபா தொழுவித்தார் அரோ – சீறா:2739/4
தோம் அறும் ஒற்றர் வள்ளல் முகம்மதுக்கு அறிய சொன்னார் – சீறா:3421/4
சொல்லிய வாசகம் இயைந்து தோம் அற – சீறா:4073/1
சொல்லினை யாவரும் உணர்ந்து தோம் அறு – சீறா:4571/1
தோம் அற செறிந்த சோலை துகள்பட திரிந்த அன்றே – சீறா:4718/4
சொற்ற சொல் அனைத்தையும் கேட்டு தோம் அற – சீறா:4949/1

மேல்


தோமரம் (4)

பட்டையம் தோமரம் பரசு கப்பணம் – சீறா:3006/1
வேல் அம் தோமரம் பட்டையம் கதை குந்தம் விசிகம் – சீறா:3889/2
உரம் பெறும் பாலம் நெட்டு இலை சூலம் ஓங்கு தோமரம் கதிர் எழு வாள் – சீறா:4938/3
நிறைத்த வில் கதிர் வாள் கணை கவண் சூலம் நேமி தோமரம் மழு தாங்கி – சீறா:5021/3

மேல்


தோமறும் (1)

துகிலையும் ஒல்லையில் புனைந்து தோமறும்
புகழொடும் வாழ்த்தி பக்கீறு போயினான் – சீறா:3240/3,4

மேல்


தோய் (3)

அரும்பு இள முறுவல் செ வாய் அணி மலர் இதழை விண் தோய்
இரும் புகழ் தரித்த வெற்றி முகம்மதை இனிதின் நோக்கி – சீறா:639/2,3
ஆலயம் புகுந்து செம் தேன் அலங்கல் தோய் சுவாகு பூம் பொன் – சீறா:1557/1
உருகி மதி மயங்கி எதிர் உரையாமல் ஊமன் என ஒடுங்கி வான் தோய்
பெரு வரையின் மடங்கல் எதிர் வரையாடு நிகர்வது என பேதுற்றானே – சீறா:1656/3,4

மேல்


தோய்த்த (1)

தோய்த்த பொன் குவடு என இரு வரை புயம் துலங்க – சீறா:859/2

மேல்


தோய்த்து (5)

இந்திரநீலம் ஒத்து இருந்தமை தோய்த்து அதில் எழுதி – சீறா:97/2
சிரசினில் நெய் தோய்த்து இரு விழி கருமை சிறந்திட கொப்புளும் கொயலாய் – சீறா:253/1
திரு வணக்கம் என தொடுத்தீர் முகம் கை கால்-தனை தோய்த்து ஓர் திசையை நோக்கி – சீறா:1647/2
சூசியும் கடுதாசியும் எடுத்து மை தோய்த்து
பாசுரம்-தனை உரை-மின்கள் எனும் உரை பகர்ந்தான் – சீறா:1682/3,4
பன்ன அரும் துண்டப்படுத்தி நெய் தோய்த்து பதின்மர்-தமை பண்பு கூர – சீறா:3756/2

மேல்


தோய்தர (1)

தெரிகிலாது உற நிமிர்ந்து மால் தோய்தர திரண்ட – சீறா:2960/3

மேல்


தோய்தரா (2)

கால் நிலம் தோய்தரா காரணீகமும் – சீறா:902/4
புவியின் மீது அடி தோய்தரா முகம்மதை போற்றி – சீறா:4284/3

மேல்


தோய்ந்த (3)

படர் கதிர் அரத்தம் தோய்ந்த பல்கணி வாயில்-தோறும் – சீறா:1171/2
மிடல் உடை கவசம் உடலிடத்து அணிந்து வெண்டலை மூளையில் தோய்ந்த
வடி சுடர் திகிரி தாங்கி இக்கிரிமா மன்னனும் ஏகினன் மாதோ – சீறா:4444/3,4
அடிபடும் பேரியிடத்தும் விண் தோய்ந்த அடல் செறி கதலிகையிடத்தும் – சீறா:4932/2

மேல்


தோய்ந்தன (2)

தோய்ந்தன குடைகள் பாலில் துலங்கின மறைகள் ஒன்றி – சீறா:4180/2
தோய்ந்தன பழியும் பாரும் சொல்லின வசையும் தோன்ற – சீறா:4379/3

மேல்


தோய்ந்திட (1)

தோய்ந்திட துயின்றோர் சிலர் உடல் நிமிர்த்து சுடர் இணை கரு விழி செருக – சீறா:2539/2

மேல்


தோய்ந்திலா (1)

தோய்ந்திலா பதத்தில் கரங்களில் பல கால் தொட்டு முத்தமிட்டு வந்தனரால் – சீறா:2864/4

மேல்


தோய்ந்து (5)

தோய்ந்து நீர் குடைந்து ஆடுவோர் மதி முக தோற்றம் – சீறா:67/2
தூமமும் புழுகும் தகரமும் சாந்தும் தோய்ந்து இருண்டு அடர்ந்த பூம் குழலார் – சீறா:144/2
தோய்ந்து சீறடி படி உறா புதுமையும் சுடரால் – சீறா:556/2
மங்குல் தோய்ந்து இலங்கும் பள்ளியும் மனையும் வகுத்து எடுத்து இயற்றிட அருளி – சீறா:2854/3
துண்டம் ஆகியது ஒன்று என பொருந்தி ஊன் தோய்ந்து
பண்டு போல் எழும் உயிரும் வந்து உடலினில் பரப்ப – சீறா:4429/1,2

மேல்


தோய்வு (1)

சூர் மலிந்து விளையாடல் மிஞ்சு கழல் தோய்வு அரும் கொடிய கானமே – சீறா:4209/4

மேல்


தோய்வுற (1)

சுந்தர சென்னி மண்ணில் தோய்வுற தொழுது நின்றார் – சீறா:4190/4

மேல்


தோய (1)

காசினியிடத்தில் தோய கவின் பெற படிந்தது அன்றே – சீறா:2283/4

மேல்


தோயம் (1)

துன்னும் ஏரியும் தடங்களும் நிறைந்தன தோயம் – சீறா:35/4

மேல்


தோயா (2)

கரையிலா காட்சி கண்டேன் காசினி தோயா பாதம் – சீறா:1046/2
மால் நிலம் பாதம் தோயா வள்ளல் மா முகம்மது அன்றே – சீறா:3677/4

மேல்


தோயாதாலும் (1)

அறை சிலம்பு அலம்ப செம் சீறடி நிலம் தோயாதாலும்
நறை மலர் புலராதாலும் நாட்டங்கள் இமையாதாலும் – சீறா:3176/2,3

மேல்


தோயாது (1)

சேறில் ஆங்கு அகிலம் மீதி திருவடி தோயாது என்றும் – சீறா:627/3

மேல்


தோயாமல் (1)

நடந்தனர் பதம் தோயாமல் நண்ணினர் குடையாய் மேகம் – சீறா:4723/1

மேல்


தோயும் (3)

தோயும் வெண் தயிர் நறு நறை நாசிகள் துளைப்ப – சீறா:2679/3
தோயும் வெண் திரை கடல் குழி ஏழையும் தூர்க்கும் – சீறா:3838/4
துன்று அடல் வாம் பரி நடந்த துன்னலர்கள் தசையோடும் தோயும் ஆவி – சீறா:4302/1

மேல்


தோரண (4)

துரகத குர தூள் மாய்க்கும் தோரண மறுகு சார்ந்தார் – சீறா:919/4
பறப்பது ஒத்தன பாசிலை தோரண பந்தி – சீறா:1114/4
விந்தை விந்தை செய் தோரண தொகுதியின் வியப்பின் – சீறா:3137/3
தோரண வண் மறுகு தரு மதீன நகர்க்கு ஆதி என தோன்ற நாட்டி – சீறா:4300/2

மேல்


தோரணங்களை (1)

நறை கொள் வாயிலின் மகர தோரணங்களை நடு-மின் – சீறா:1100/1

மேல்


தோரணத்தொடும் (1)

தோரணத்தொடும் கொடி காடு துன்னலால் – சீறா:2709/1

மேல்


தோரணம் (3)

நடலை உள் அற மகர தோரணம் பல நடுவார் – சீறா:1104/2
நலம் கொள் ஆடை விமானங்கள் தோரணம் நடு-மின் – சீறா:3114/2
பொழுது போம் வழி இல் என தோரணம் புனைவார் – சீறா:3123/4

மேல்


தோல் (7)

கூற்றுறாது உருள் கழுத்தடி தோல் நெளி குழைவும் – சீறா:1516/3
தோல் ஒரு தோளினும் தூக்கி வந்தவன் – சீறா:2125/3
வட்டணம் தட்டி நீள் வள்ளி தண்டை தோல்
கட்டிய தோல் பரம் கவசம் கீசகம் – சீறா:3005/1,2
கட்டிய தோல் பரம் கவசம் கீசகம் – சீறா:3005/2
பருகு நீர் அற்ற தோல் துருத்தி பையினை – சீறா:3287/2
தோல் உடை செவி அசைத்து அசைபோட்டு வாய் துவளும் – சீறா:4431/2
உந்து தோல் எருத்தினில் உகளும் வெள் அறுகு – சீறா:4944/2

மேல்


தோலாத (1)

தள்ளாத வருத்தம் உடல் தோலாத பயம் இதய தட தடாகம் – சீறா:2666/1

மேல்


தோலில் (1)

தோலில் தாக்கினர் சுரிகையில் தாக்கினர் துரத்தி – சீறா:3489/3

மேல்


தோலும் (1)

என்பு அற முறிந்து தோலும் இழந்து ஒரு நரம்பில் தூங்கி – சீறா:3727/1

மேல்


தோழமை (1)

உயிர் உறும் துணை தோழமை நால்வர்களுடனே – சீறா:1886/1

மேல்


தோழமையவரும் (1)

அரசர் நால்வரும் உயிர் எனும் தோழமையவரும்
தெரிய கேட்டு அரும் நினைவொடும் ஒளிர் சிரம் தூக்கி – சீறா:3819/2,3

மேல்


தோழர் (7)

உரி துணை தோழர் நால்வர் உண்டு அவர்-தம் ஒளி உள என உரைத்தனனே – சீறா:128/4
தன் உயிர் என்ன நீங்கார் தலைமையின் உரிய தோழர்
பன்னிருவருக்கு நேர்ந்த பண்புடன் நெறிகள் கூறி – சீறா:2350/1,2
துன்னிய திரை கடல் தோழர் நாப்பணின் – சீறா:2721/1
நனை செழும் தொடையல் வேய்ந்த தோழர் நால்வருக்கும் கூறி – சீறா:3360/2
அன்ன குதாதா என்று ஒரு தோழர் அவண் வந்தார் – சீறா:3910/4
என்றனர் சல்மா எனும் உயிர் தோழர் ஈன்று அருள் முகம்மது என்பவரால் – சீறா:4088/4
ஆகையால் எனது தோழர் அனைவரும் ஒருமித்து அன்பாய் – சீறா:4906/1

மேல்


தோழர்-தங்களை (1)

தப்பு இலா குணத்தின் தோழர்-தங்களை தயவாய் பார்த்தே – சீறா:4713/4

மேல்


தோழர்-பால் (1)

மனை களிப்புற உண்டு என தோழர்-பால் வகுத்தார் – சீறா:4590/4

மேல்


தோழர்க்கு (1)

தரம் பெறும் தோழர்க்கு எல்லாம் இனியவை சாற்றுவாரால் – சீறா:3104/4

மேல்


தோழர்கள் (2)

நல் நயம் பெறும் தோழர்கள் சூழ்வர நயினார் – சீறா:2013/3
துன்னு தோழர்கள் யாரையும் இனிதுற துதித்து – சீறா:2940/3

மேல்


தோழர்கள்-தமை (1)

மற்றை நாள் உயிர் தோழர்கள்-தமை வரவழைத்து – சீறா:1884/2

மேல்


தோழர்களிடத்தினில் (1)

வாகை அம் திரு தோழர்களிடத்தினில் வந்தார் – சீறா:3829/4

மேல்


தோழர்களுடன் (1)

தோழர்களுடன் ஒரு துடவையை சேர்ந்து – சீறா:2931/3

மேல்


தோழர்களுடனும் (1)

உரை விளக்கிட முகம்மதும் தோழர்களுடனும்
விரைவின் ஏகி பொன் தடுத்தவர் எவர் என வினவ – சீறா:1994/1,2

மேல்


தோழர்களோடும் (1)

சுற்றமோடு அடைந்தான் துணை தோழர்களோடும்
வெற்றி நல் நெறி முகம்மதும் விரைவினில் ஏகி – சீறா:2003/2,3

மேல்


தோழராகிய (1)

அவனியும் புகழ் நபி தோழராகிய
கவன வாம் பரி அபூபக்கர் கண்டனர் – சீறா:1486/3,4

மேல்


தோழரான (1)

துதிசெய்து முத்தமிட்டு தூயவன் தோழரான
புதியது ஓர் ஹபீபுல்லா என்று ஓதி அ பேரும் போர்த்து – சீறா:423/2,3

மேல்


தோழரில் (2)

கலந்து நின்ற மெய் தோழரில் ஒருவர் கை ஆர – சீறா:2935/1
தீயன் தோழரில் சிறியவன் வறியவன் தெளியா – சீறா:4415/1

மேல்


தோழருடன் (2)

புடை அகலா நிழல் போலும் தோழருடன் அகுமதையும் புகழ்ந்து போற்ற – சீறா:1638/2
உன்னு தோழருடன் எழுந்து ஒல்லையின் – சீறா:4250/3

மேல்


தோழரும் (5)

நன்று நன்று என தோழரும் முகம்மது நபியும் – சீறா:1998/1
ஆவி போல் உறு தோழரும் அரச_நாயகரும் – சீறா:2634/1
விதியவன் திரு தோழரும் துணைவரும் விரி பூ – சீறா:2702/2
சொல் பெரும் தோழரும் தூது என்று ஓதுவோர் – சீறா:2996/3
அரிய வேந்தரும் தோழரும் அருகினில் சூழ – சீறா:4436/2

மேல்


தோழரொடும் (1)

துன்னும் பல வாச்சியம் முழங்க எழுந்தார் இனிய தோழரொடும்
மன்னர் முகம்மது எனும் நபியும் வாசி-அதனின் மேல் ஏறி – சீறா:4037/2,3

மேல்


தோள் (93)

பனை_மது தேக்கி இரு விழி சேப்ப பைம் கழை நிகர்த்த தோள் அசைய – சீறா:51/1
மரு மலர் திணி தோள் நிறைமதி வதன முகம்மதின் பேரொளி இலங்கி – சீறா:135/1
மல் அலை திணி தோள் அரசர் நாயகர்-தம்-வயின் உறைந்து அவர் பெறு மதலை – சீறா:164/3
மல் உயர் திணி தோள் ஆடவர் பலரும் வன முலை மட கொடி அவரும் – சீறா:356/1
தோள் துணை தனையர் எங்கே சொல்லுக அனையே என்ன – சீறா:393/3
மல் விதம் பயிலும் திண் தோள் மன்னவர் இவர்கள் யாரோ – சீறா:411/1
வரை சிலை சுமந்த திண் தோள் மன்னர் ஆரிதுவும் ஓசை – சீறா:435/2
முருகு அவிழ் அலங்கல் திண் தோள் முகம்மது-தமக்கு சார்ந்த – சீறா:597/3
குங்கும தடம் தோள் வள்ளல் குறித்திடும் கருத்தினூடு – சீறா:619/1
விண்டு விண்ணப்பம் செய்தான் விரை கமழ் அலங்கல் திண் தோள்
கொண்டல்-தன் செவியும் நெஞ்சும் குறைவு அற குளிர அன்றே – சீறா:632/3,4
உலம் கொள் தோள் முகம்மது புலி உறை நெறி உழையில் – சீறா:761/4
கட்டிய மாலை திண் தோள் கதித்து எழ புளகம் பூத்தான் – சீறா:795/4
கோலம் ஆர் பொருப்பு திண் தோள் குரிசில்-தன் கதிர்கள் தாக்கி – சீறா:924/2
கள் அவிழ் மரவ திண் தோள் காரண கடலே அன்ன – சீறா:938/1
சுரி குழல் முடியார் தோள் அணி தரியார் சுண்ணமும் சாந்தமும் பூசார் – சீறா:1013/2
வட_வரை அனைய திண் தோள் வள்ளலும் மறு இலாத – சீறா:1034/2
தார் அணிந்து இலகு தோள் பூ தரத்து அபூத்தாலிப் வெற்றி – சீறா:1037/3
சுரும்பு இருந்து இசை கொள் திண் தோள் தோன்றல் காரணங்கள் யாவும் – சீறா:1043/2
மரவம் முங்கிய பொன் திண் தோள் முகம்மது வரவு கண்டேன் – சீறா:1046/1
கடி கமழ் மரவ திண் தோள் காளை-தம் புதுமை யாவும் – சீறா:1048/1
மணி வகுத்து அனைய திண் தோள் முகம்மது கூட்டி சென்றார் – சீறா:1067/4
தோள் துணை அபித்தாலீபு சுடர் நகை முறுவல் வாயால் – சீறா:1073/2
வனைந்த பூ மரவ திண் தோள் முகம்மதின் வடிவை நோக்கி – சீறா:1156/1
கோது அறு கருணை வள்ளல் குவவு தோள் வனப்பை கண்ணால் – சீறா:1160/1
சுண்ணமும் மலரும் திகழ் தோள் மிசை – சீறா:1191/3
விள்ள அரும் பசிய கழை குலம் பொருவா விளங்கு தோள் அணி பல தரித்தார் – சீறா:1203/4
கொற்றவர் உறைந்து வள்ளல் குவவு தோள் வனப்பு நோக்கி – சீறா:1254/2
தோள் துணை நெருங்க உள்ளம் துனிவர உடலம் சோர – சீறா:1265/2
வரை திரண்டு அனைய பொன் தோள் மன்னவர் சஃது கோபம் – சீறா:1356/1
பொழி கதிர் பொருப்பு திண் தோள் புரவலர் பொறுத்தார் என்ன – சீறா:1494/2
கடி மலர் மரவ திண் தோள் கன வரை கதித்து வீங்க – சீறா:1500/2
மரு மலி படலை திண் தோள் முகம்மதின் கலிமா ஓதி – சீறா:1566/2
தோள் படு மரவ மாலை துலங்கிய குரிசிற்கு அன்றே – சீறா:1733/4
இவணில் வந்தடைந்தான் என்ன அபூஜகில் இணை தோள் வீங்கி – சீறா:1738/2
வண்டு அமர் அலங்கல் திண் தோள் மன்னவர் மருங்கு நிற்ப – சீறா:1747/2
மரு புடை படலை திண் தோள் மன்னவருடனும் புக்கி – சீறா:2061/2
வட_வரை அனைய திண் தோள் வயவர்கள் இனிது சூழ – சீறா:2123/3
சிலை தழும்பு இருந்த தோள் அறபி செப்புவான் – சீறா:2131/4
நறை கொளும் செவ்வி திண் தோள் நபி நகுலாவை நீந்தி – சீறா:2273/1
பொன் கடந்து ஒளிரும் திண் தோள் புரவலர் இறசூலுல்லா – சீறா:2279/3
மணி திரண்டு அனைய திண் தோள் முகம்மது மக்கம் மீதில் – சீறா:2346/1
தோள் துணை அசுஅதோடு முசுஇபு தோன்றல்-தானும் – சீறா:2356/2
உதிர்தரும் படலை திண் தோள் உசைது நெஞ்சு உழுக்க சொன்னான் – சீறா:2363/4
பொன் அவிர் அலங்கல் திண் தோள் புரவலன் உசைது என்போனே – சீறா:2372/4
குறுமறி திரளொடு மயிர் போர்வை தோள் கொண்டு – சீறா:2639/2
வடி மலர் தொங்கல் திண் தோள் முகம்மது வழங்கினாரால் – சீறா:3074/4
கொதி நுனை பகு வாள் வள்ளல் எழுந்து இரு குவவு திண் தோள்
புது நறா துளிக்கும் தொங்கல் புரள்தர விரைவின் வந்தார் – சீறா:3078/3,4
மரு மலர் வாகை திண் தோள் முகம்மது மகிழ்ந்த வாறும் – சீறா:3084/3
வரி அளி முரலும் செழும் தொடை திரள் தோள் மன்னவர் அலி மனை புகுந்தார் – சீறா:3152/4
உமறு எனும் பேர் அடல் அரி ஏறும் உலம் பொரு தோள் உதுமானும் – சீறா:3168/2
கொடி கரும்பு எழுது தோள் மேல் கொழும் மணி கோவை சேர்த்தார் – சீறா:3213/4
மட்டு அவிழ் அலங்கல் திண் தோள் மன்னவர் புறப்பட்டாரால் – சீறா:3347/4
மரு கமழ் படலை திண் தோள் மலை என வளர வள்ளல் – சீறா:3366/3
சொரி கதிர் வயிர மாலை தோள் வரையிடத்தில் தோன்றி – சீறா:3369/3
தோள் துணை வரைகள் நோக்கி வீரத்தில் துணிந்து நின்றார் – சீறா:3397/4
உரத்தினும் செழும் தோள் வரை இடத்தினும் உயர் வேல் – சீறா:3490/1
அற்ற தோள் எடுத்து அவன்-தனை சிதைத்தனன் அவனே – சீறா:3497/4
தோள் அறுந்தன சோடு அறுந்தன துரகதத்தின் – சீறா:3511/2
மல் உயர் திணி தோள் விடலைகள் தாங்கும் வட்ட ஒண் கரிய கேடகங்கள் – சீறா:3574/1
ஏய்ந்த துற்குறி காட்டின வேந்தர்கள் இட தோள்
காய்ந்த வெம் சினம் காட்டின வீரர்கள் கடைக்கண் – சீறா:3802/2,3
பணி இமைத்தன வேந்தர்கள் தோள் பருப்பதத்தின் – சீறா:3804/2
புனை மணி திண் தோள் வேந்தர் பொரு படை குழுவில் நீண்ட – சீறா:3844/2
சுதிகள் ஒத்து இசைகள் பாடி சுரும்பு உணும் தொடையல் திண் தோள்
இதம் உறும் வேந்தர் சேனை இரை திரை பரவை ஒத்த – சீறா:3854/1,2
கல்லினால் ஊறுசெய் தோள் காளையும் உமறும் இன்னே – சீறா:3879/2
தோள் இரண்டு துரகம் இரண்டு பேர் – சீறா:3903/2
தலைகள் இழந்தார் குடர்கள் இழந்தார் தடம் ஆர் தோள்
மலைகள் இழந்தார் உயிர்கள் இழந்தார் மற மன்னர் – சீறா:3918/3,4
மலை அடுத்த தோள் வலிய வீரரே – சீறா:3968/4
மல்லின் ஊறு தோள் அசைதர நகைத்து உடல் வளைந்த – சீறா:3979/3
பார தோள் பருப்பதத்தினும் புகுந்தன பகழி – சீறா:3995/4
கொல் உலை வேல் கை மள்ளர்கள் சூழ நடந்தனன் குவவு தோள் வீரன் – சீறா:4080/4
வீங்கு இள முலையார் முலை குறி அணிந்த களபத்தின் வீற்று இரும் தடம் தோள்
தேம் கண்ணி சூடி அரி என இருந்தான் தீனரும் முன்னர் ஈண்டினரால் – சீறா:4092/3,4
சுரி குழல் பணை தோள் பிறை நுதல் கனி வாய் துணை முலை கொடி இடை கரிய – சீறா:4117/3
குடிபுகுந்து இருந்த திண் தோள் குரிசில்காள் மனத்தில் தூக்கி – சீறா:4189/3
குன்று என பணைத்து வீங்கும் குவவு தோள் குமரர் எல்லாம் – சீறா:4197/2
கொந்து எறி அலங்கல் திண் தோள் குயை அவண் இருந்தான் மன்னோ – சீறா:4375/4
ஓங்கலில் சிறந்த திண் தோள் முகம்மது ஆண்டு உணர கேட்டு – சீறா:4396/3
பொன் தொடை திரள் தோள் அன்ன மன்னவர் முன் புகன்றவை இவை என புகன்றார் – சீறா:4467/3
பொன் குவை மலிந்த தோள் பொருப்பின் மன்னவன் – சீறா:4569/2
மரு மலி வாகை திண் தோள் மன்னவர் சகுதும் போனார் – சீறா:4631/4
குல வரை அனைய திண் தோள் குரிசிலை புகழ்ந்து நின்றார் – சீறா:4887/4
நனை மலர் ததும்பும் திண் தோள் நபி உளம் வெதும்ப கேட்டு – சீறா:4905/1
தேன் உறை அலங்கல் திண் தோள் செல்வரோடு ஏகும் காலை – சீறா:4910/2
புனை மலர் அணியும் திண் தோள் பொதுவனும் நீருமாக – சீறா:4918/4
தொடை மழை பொழியும் வில் தோள் துணைவர்கள் இருவர் சூழ – சீறா:4920/1
கலம் படு தடம் தோள் தெவ்வரை வீழ்த்தி பிதிர்த்தது தொனியொடும் மாதோ – சீறா:4935/4
மலை எழு திரண்ட தோள் மன்னர் ஆர்த்து எழுந்து – சீறா:4942/1
சிலை பொருது அகன்ற தோள் சிங்க ஏறு அன்னார் – சீறா:4956/1
மணி குடம் துரந்த வாங்கு வில் தடம் தோள் வய அசுகாபிகள் சூழ – சீறா:4957/2
நனை மலர் செறிந்த திண் தோள் நரபதி உளம் மகிழ்ந்தே – சீறா:4964/4
சேனையும் பரியின் மன்னரும் திண் தோள் செம்மலும் துயின்றனர் செறிந்த – சீறா:4998/1
வரி அளி அலம்பும் மலர் தொடை வேய்ந்த மணி குடம் துரந்த தோள் செம்மல் – சீறா:5019/3
மலை என வளர்ந்த உலம் பொரு திண் தோள் மன்னவர் மதி முகம் நோக்கி – சீறா:5020/2
வரை தட திண் தோள் முகம்மது கமல மலர் அடி இணையினை இறைஞ்சி – சீறா:5021/1

மேல்


தோள்கள் (2)

பீடு உறும் வலியினோடும் கிடந்தன பிறங்கல் தோள்கள்
சேடு உறும் நகையால் பூட்டும் இதழொடும் கிடந்த சென்னி – சீறா:3956/1,2
வீங்கினர் போர் கிடைத்தது என அடிக்கடி போய் மெலிந்திருந்த விலங்கல் தோள்கள்
ஓங்கினர்கள் யாம் எழு முன் அ படை மீண்டு எய்திடுமோ என்ன எண்ணி – சீறா:4310/2,3

மேல்


தோள்களும் (1)

தூ நிறை மதி என முகமும் தோள்களும்
கால் நிலம் தோய்தரா காரணீகமும் – சீறா:902/3,4

மேல்


தோள்வளை (1)

பாகுற செழும் தோள்வளை பல பரித்திடுவார் – சீறா:1120/2

மேல்


தோளணி (1)

பாணியில் சரி தோளணி பல பரித்திடு-மின் – சீறா:1101/3

மேல்


தோளாய் (1)

தொகுத்து அடைகிடந்த பருப்பத தோளாய் நீ துணியாதது ஒன்று உளதோ – சீறா:4089/2

மேல்


தோளார் (3)

செம் திரு அன்னாள் தன் குடி என்றும் திரள் தோளார் – சீறா:3911/4
பனி வரை அனைய தோளார் பகை தடிந்து இலங்கு வேலார் – சீறா:4285/2
மடை செறி கடக தோளார் வரி சிலை ஒன்று தாங்கி – சீறா:4920/3

மேல்


தோளால் (1)

உலம் பொரு தோளால் தள்ளினர் கையால் எறிந்தனர் அவை உருண்டு ஓடி – சீறா:4935/2

மேல்


தோளாள் (1)

சருவிட பசந்து திரண்டு மென்மையவாய் தழைத்து எழில் பிறங்கிய தோளாள்
வரி வளை சுமந்து யாழினும் வியந்து மயிர் நிரைந்து ஒளிரும் முன்கையினாள் – சீறா:1964/3,4

மேல்


தோளான் (1)

மேலவன் அசுஅது என்னும் விறல் உடை படலை தோளான்
காலம் மூன்று உணரும் வேத கடலினுக்கு எல்லை காணும் – சீறா:2349/2,3

மேல்


தோளில் (3)

கோல் வெறி துணியும் தோளில் கூன் பிறை வாளும் மென்மை – சீறா:2056/3
தூசினில் பொதிந்து தோளில் சுமந்து அரு நெறியை முன்னி – சீறா:2245/2
உலம் பொரு தோளில் துன்னும் மாலைகள் உகுத்த தேனும் – சீறா:3380/1

மேல்


தோளின் (1)

விரை தரும் மரவ மாலை வெற்பு என திரண்ட தோளின்
நிரைதர பவள கொத்தின் நிறம் தரும் கனி வாய் வேதம் – சீறா:4716/1,2

மேல்


தோளினர் (1)

கரிகை பட்டயம் மழு சுமந்த தோளினர்
பொருவு இல் நூற்றைம்பது புரவி-தம்மொடும் – சீறா:3301/2,3

மேல்


தோளினராய் (1)

பட்டு உடையினராய் சாந்தம் பழகு தோளினராய் வாய்ந்த – சீறா:406/1

மேல்


தோளினில் (2)

சுருக்கிய வலையை நீக்கி தோளினில் எடுத்து கொண்டான் – சீறா:2077/4
சாலும் தண் கதிர் பரப்பி ஓர் தோளினில் தபனன் – சீறா:3896/1

மேல்


தோளினும் (2)

தோல் ஒரு தோளினும் தூக்கி வந்தவன் – சீறா:2125/3
பெருத்த தோளினும் வேகம் பிறங்கிய – சீறா:3904/3

மேல்


தோளினை (1)

இற்று வீழ்ந்திட தோளினை வாளினால் எறிந்தான் – சீறா:3497/3

மேல்


தோளும் (5)

மரு மலர் வேய்ந்த தோளும் மணி திரண்டு அனைய தாளும் – சீறா:635/4
திரு மதி முகமும் நீண்ட திரள் மணி வயிர தோளும்
தரு என சிவந்த கையும் தாமரை தாளும் வாய்ப்ப – சீறா:3186/2,3
காலும் தோளும் முகமும் மெய்யும் களமும் கை – சீறா:3921/3
கையும் குன்று எனும் தோளும் வல் உரத்தொடும் கழுத்து – சீறா:3999/1
நோக்கிய விழியும் வேய் எனும் தோளும் நொய்துற வலத்தினில் துடித்த – சீறா:4113/1

மேல்


தோளையும் (1)

காதும் வாளையும் தோளையும் நோக்கி கண்சிவந்தார் – சீறா:3519/4

மேல்


தோளொடு (2)

சுந்தர சிரமும் கையும் தோளொடு வலியும் அற்று – சீறா:3944/3
கையும் சேந்திட சலித்தனர் தோளொடு காலும் – சீறா:4407/1

மேல்


தோற்ற (2)

சுரந்த புற்புத தனத்துடன் சுழி உந்தி தோற்ற
பொருந்து மால் நதி விளங்கு இழை மகளிரை போலும் – சீறா:31/3,4
கண்ணினும் கருத்தும் மாறாது அடிக்கடி தோற்ற நாணி – சீறா:1053/2

மேல்


தோற்றம் (21)

தொலைவில் மள்ளர்கள் குளம்-தொறும் புகுத்திய தோற்றம்
கொலை மத கரி குழுவினை வயவராய் கொடுபோய் – சீறா:36/2,3
நிலம்-தனை வாழ்த்தி வலக்கரம் குலுக்கி நெல் முளை சிதறிய தோற்றம்
பொலன் பல சிறப்ப இடன் அற நெருங்கி பொன் மழை பொழிவது போலும் – சீறா:46/3,4
இசைந்திட நிறைத்து குவித்த நெற்போர்கள் எங்கணும் இலங்கிய தோற்றம்
விசும்பினை தடவ வரை சத_கோடி வீற்றிருந்தன என சிறக்கும் – சீறா:59/3,4
சொரிந்த பல் மலர் மீதினில் வரி அளி தோற்றம்
எரிந்து இலங்கு பொன் கரையினை இரும்பினால் இறுக – சீறா:65/2,3
தோய்ந்து நீர் குடைந்து ஆடுவோர் மதி முக தோற்றம்
சேந்த கஞ்சமும் குவளையும் என எழில் சிறந்த – சீறா:67/2,3
சோதி வெண் கதிர் அந்தரத்து உலவிய தோற்றம்
நீதி மான் நபி பிறந்தநாள் விண்ணவர் நெருங்கி – சீறா:93/2,3
தரு நபி இறசூலுல்லா தலைமுறை தோற்றம் சொல்வாம் – சீறா:99/4
வரிசையும் பேறும் வாய்த்த முகம்மது நயினார் தோற்றம்
தெரிதர வானோர்க்கு எல்லாம் சோபனம் சிறக்க சொல்லி – சீறா:103/1,2
மின் அனார் பாடி ஆடும் வீதி-வாய் மலிந்த தோற்றம்
துன் இதழ் கமல போது துயல்வர நாப்பண் வைகும் – சீறா:930/2,3
தோற்றம் நும்மிடத்து அலது வேறு இலை சுடும் கனலை – சீறா:969/1
மின்னிட வெண் மணி தொடையும் செம் மணியும் போல் காந்தி விரிந்த தோற்றம்
தன் நிலைமை தவறாத முதியோரை எவரேனும் சாரில் வாய்ந்த – சீறா:1134/2,3
சே அரி கரும் கண் நல்லார் செறிந்து கொண்டு எழுந்த தோற்றம்
தூய மேனிலைகள் எல்லாம் துடவை போன்று இருந்த மாதோ – சீறா:1167/3,4
கரும்பு எனும் அமுத தீம் சொல் கன்னியர் செறிந்த தோற்றம்
தரும் பெரும் புவியும் வானும் தழைக்க வந்து உதித்த வள்ளல் – சீறா:1168/2,3
பெண்களில் அமுதம் அன்னார் பேரெழில் முகத்தின் தோற்றம்
விண் கதிர் அடரும் சோதி மேனிலை வாயில்-தோறும் – சீறா:1170/2,3
ஏட்டு அலர் நறவம் மாந்தி இரும் சுரும்பு இசைக்கும் தோற்றம்
வாட்டம் இல் முகம்மது இங்ஙன் வந்தனர் வருந்தும் மானை – சீறா:2066/1,2
தொடுத்து பந்தரில் துயல்வர தூக்கிய தோற்றம்
வடித்த நல் நறை அல்லியை இதழொடும் வாயின் – சீறா:3128/2,3
வெண் நறை மலர் மாலிகை புனைந்து அரிய மான்மதம் விதிர்த்திடும் தோற்றம்
தண் நறும் பசும் கற்பக மலரிடையில் சாலிகள் துளித்திட ததைந்து – சீறா:3158/2,3
அள்ளு இலை நெடு வாளிகள் உறைந்திருந்த ஆடவர் தோற்றம் அங்கு அடைந்த – சீறா:3571/2
துடர்படும் குடர் வாய் கவ்வி விண்ணிடையில் சுழன்று எழும் பறவையின் தோற்றம்
அடிபடும் கொடிய மாருத விசையின் ஆயிடை புரி முறுக்கு அறுந்துவிடு – சீறா:3573/2,3
சுற்றும் வெண் படங்கு அந்தரத்து ஆடிய தோற்றம்
அற்ற பட்டங்கள் பறந்தன போலவும் அண்டத்து – சீறா:4581/2,3
வளி அலைத்திடவே எங்கும் வார்ந்து எழுந்து ஒழுகும் தோற்றம்
அளியினுக்கு இருப்பாம் ஐயா அத்திரி அலைத்தது என்று – சீறா:4726/2,3

மேல்


தோற்றமாம் (1)

தோற்றமாம் அவர்-தம் மேன்மை தொழில் இனம் விளம்ப கேளீர் – சீறா:4864/4

மேல்


தோற்றமும் (3)

சோதியாய் எவைக்கும் உள் உறை பொருளாய் தோற்றமும் மாற்றமும் தோன்றா – சீறா:1241/1
சொன்றியும் இவர் காரண தோற்றமும்
நன்று கண்டு அறிவோம் இனி நாம் என்பார் – சீறா:2339/3,4
தோற்றமும் ஒடுங்க நின்ற தொல் நெறி ஒடுங்க மாறா – சீறா:3850/3

மேல்


தோற்றரவில் (1)

தொகு விடத்தை தோற்றரவில் பரிகரித்தல் யாவருக்கும் சூழ்ச்சித்து ஆகும் – சீறா:1667/2

மேல்


தோற்றவும் (1)

துன்னும் மாந்தர்-தம் முகங்களும் தோற்றவும் இலையால் – சீறா:4599/4

மேல்


தோற்றா (1)

சலமலாதிகளில் நாற்றமும் தோற்றா தரை அருந்திடுவதே அல்லால் – சீறா:371/1

மேல்


தோற்றாது (1)

இருந்திட தோற்றாது இமைக்கும் முன் பறப்பன் எவர் கணும் தெரிகிலாது ஒளிப்பன் – சீறா:2534/1

மேல்


தோற்றி (3)

சுவன நாயக குரிசிலை வழியிடை தோற்றி
புவியில் தோன்றிய துன்பமும் முதியவன் புகல – சீறா:468/2,3
வரை என நிமிர்ந்து தோற்றி மறு இலாது ஒளிரும் வாயில் – சீறா:918/4
தோற்றிட தோற்றி விளங்கும் நல் நுதலாள் சுடரும் முள் வாரணத்து அலகும் – சீறா:1957/2

மேல்


தோற்றிட (1)

தோற்றிட தோற்றி விளங்கும் நல் நுதலாள் சுடரும் முள் வாரணத்து அலகும் – சீறா:1957/2

மேல்


தோற்றிடா (4)

தூ நெறி வழுவா வள்ளல் தோற்றிடா உவகை கொண்டார் – சீறா:1065/4
தோற்றிடா விசும்பில் தாவும் சுழலும் மண் திகிரி என்ன – சீறா:1548/3
தோற்றிடா துன்பமுற்ற புதுமையை தொகுத்து வல்லே – சீறா:1550/3
பேர் உணர் பொங்கி யாவும் தோற்றிடா பெருக்கு ஆநந்த – சீறா:2396/2

மேல்


தோற்றிடாது (1)

தோற்றிடாது ஒதுங்கி வாயல்-தொறும் கடந்து எளிதின் ஏகி – சீறா:3721/3

மேல்


தோற்றிடும் (1)

இருந்திடும் பின்னும் தோற்றிடும் இதனை எவரொடும் விடுத்து எடுத்துரையார் – சீறா:1243/2

மேல்


தோற்றிய (3)

பாட வாவியுள் இள நிலா தோற்றிய பான்மை – சீறா:66/2
தோற்றிய கதிரவன் சுடுதல் மாற்றியே – சீறா:4572/3
தோற்றிய ஈரல் திணி பிடர் தசைகள் சுட்டு இனிது அளித்தனர் புகழின் – சீறா:4990/3

மேல்


தோற்றியது (3)

வில்லின் மேல் பிறை தோற்றியது என நுதல் விளங்கிய மட_மானே – சீறா:662/4
தோற்றியது எவ்வையும் துலங்க கேட்பதாய் – சீறா:1603/1
மூக்கினில் ஏதோ தோற்றியது இன்னே முற்றிய வினை பயன் யாது என்று – சீறா:4113/3

மேல்


தோற்றிற்று (1)

துறை-தொறும் பெருகும் வெள்ள நதி என தோற்றிற்று அன்றே – சீறா:819/4

மேல்


தோற்று (5)

தோற்று மா மழை சொரிந்து என கண்ணில் நீர் சொரிய – சீறா:209/2
முற்றும் தோற்று ஓடினாலும் அல்லது முரண்டி யாங்கள் – சீறா:3878/2
மிடுக்கு அற தோற்று நின்றார் வெற்றியும் பெறுவர் அன்றோ – சீறா:4368/2
தோற்று புழை என்று எலி சுழன்று செல எண்ணும் – சீறா:4893/4
தோற்று நீர் என பாய்ந்து உலவியே திரியும் சுரங்களும் கடந்தனர் தோன்றல் – சீறா:5006/4

மேல்


தோற்றுது (1)

மன்ன தோற்றுது எற்கு என இனிது உரைத்தனர் மகிழ்வின் – சீறா:3429/3

மேல்


தோற்றுபு (1)

சகுதுவுக்கு அவர் தோற்றுபு சாற்றினார் – சீறா:4653/4

மேல்


தோற்றுவிக்கும் (1)

ஒரு உருவாய் இன்மையினில் உண்மையினை தோற்றுவிக்கும் ஒளியாய் யாவும் – சீறா:0/3

மேல்


தோன்ற (38)

துண்டத்தின் ஆவி தோன்ற தும்மலும் தோன்றி பின்பு – சீறா:107/1
வரத்தினில் உயர்ந்த வண்மை முகம்மது புவியில் தோன்ற
தரித்த பேர் ஒளிவுக்கு அந்த சசி கதிர் மழுங்கும் அன்றே – சீறா:111/3,4
வருத்தமும் சிறிது நேர மகிழ்ச்சியும் தொடர்ந்து தோன்ற
கருத்தினில் இருத்தி தாதை கழறல் சம்மதித்திருந்தார் – சீறா:618/3,4
இ நெறி வந்து முன் நாள் இறந்த ஈந்து அடியில் தோன்ற
பல் மலர் சொரிந்து காய்த்து பழம் முதிர்த்திடும் பாழ் ஊற்று – சீறா:830/1,2
தொகுத்த அ திசைகள்-தோறும் எண்ணில தோன்ற கண்டார் – சீறா:920/4
பாரிடை துகள் விண் தூர்க்கும் பரி திரள் மலிந்து தோன்ற
வார வார் முரசு அறாத அரசர் வீதிகளும் கண்டார் – சீறா:928/3,4
அரிவை புன்முறுவல் தோன்ற அணி நகை கதிரின் முத்தாய் – சீறா:932/3
தொடர்ந்த புன்முறுவல் தோன்ற தோகையர்க்கு உரைப்பதானான் – சீறா:1057/4
விரிந்த செழும் கர கமல விரல் இதழின் மணி ஆழி விளங்கி தோன்ற
பரிந்து அணிந்தார் அழகு வெள்ளம் வழியாது மருங்கு அணைக்கும் பான்மை போன்றே – சீறா:1132/3,4
தூதராகிய முகம்மதும் அவ்வுழி தோன்ற
சீத ஒண் கமலானனம் குளிர்தர சிறந்தார் – சீறா:1235/3,4
அழுத்திய பொருள் உள் தோன்ற அகுமதும் ஓதினாரால் – சீறா:1268/4
தெரு புகுந்து எவர்க்கும் தோன்ற தீன் நிலை வணக்கம் செய்தார் – சீறா:1341/4
என்று அவர் உரைப்ப கேட்ட இளவல் புன்முறுவல் தோன்ற
நின்று புன்மொழிகள் வேறு நிகழ்த்திய பெயரை நோக்கி – சீறா:1353/1,2
செல் உறழ் கர சுத்ஆன் என்று ஓதிய செவ்வி தோன்ற
இல் உறை தொழும்பில் உள்ளாள் இளம் கொடி ஒருத்தி வெற்றி – சீறா:1491/1,2
விழியும் தோன்ற ஆயிரம் முகமும் ஆகி – சீறா:1726/2
படைப்பு உளது எவைக்கும் தோன்ற பலித்திடும் கடிதின் மாதோ – சீறா:1731/4
அகலிடம் தோன்ற தோன்றும் ஆலயம் முழுதும் முன்னோர் – சீறா:1753/2
சொன்ன சொற்படி பெரியர்க்கும் சிறியர்க்கும் தோன்ற
முன் நிலைப்படி மிகுதி காரணங்களை முடிப்பார் – சீறா:1848/3,4
புனை மணி பிறழ மின் என நுடங்கி புதுமையில் தோன்ற நின்றனளால் – சீறா:1973/4
சோதி வெண் குருத்தொடும் தோன்ற மேல் எழுந்து – சீறா:2134/2
பெறும் குலத்து ஒருவன் தோன்ற பெரும் பகை விளைந்து அ ஊரும் – சீறா:2361/2
திரு மரு புயங்கள் ஓங்க செம் முகம் மலர்ந்து தோன்ற
வருவது நோக்கி சஃது மன்னவன் உளத்தில் சொல்வான் – சீறா:2383/3,4
வரி தரும் கமல செம் கண் வளரிடத்து அரவு தோன்ற
கரி மருப்பு உதிர்க்கும் வெள் வேல் கரத்து அபூபக்கர் கண்டார் – சீறா:2583/3,4
மற்றொரு வளையில் தோன்ற அடைத்தனர் பொதும்பர் வாயில் – சீறா:2586/1
விரி தரு கவை நா நீட்டி கட்செவி விரைவில் தோன்ற
பெரியவன் தூதர்-தம் பால் வரும் முனம் பெட்பினோடும் – சீறா:2588/2,3
சென்னியில் பரப்ப சற்றே சிந்தையின் மயக்கம் தோன்ற
தன் நிலை தளராது உள்ளம் தாளையும் பெயர்த்திடாமல் – சீறா:2594/2,3
கொள்ளாத நலிதல் ஐயம் துன்பமுடன் சூழ்ந்து குடிகொண்டு தோன்ற
விள்ளாத துணிவு மறம் மதம் ஊக்கம் இகல் நினைவு வெகுளி மானம் – சீறா:2666/2,3
நடைதர நடந்து ஈமான் நெறி தோன்ற நபிகள் நாயகமிடத்து அடைந்தான் – சீறா:2889/4
சுந்தர அருவி மாறா சுடர் வரையிடத்தில் தோன்ற
அந்தரத்து இழிந்த மின் போல் அலியிடத்து இருத்தினாரால் – சீறா:3220/3,4
பரிகள் இவ்வண்ணம் சான்ற நிலம் பரப்பு இன்றி தோன்ற
எரி விழி கலுழ வேந்தர் இளையரும் குழாம்கொண்டு ஈண்ட – சீறா:3409/1,2
வெருவரும் கனவு தோன்ற விழித்து எழுந்து அரசர் யாரும் – சீறா:3419/1
தொடுத்திடும் நலிதல் யாவும் முகத்தினால் தோன்ற கண்டு – சீறா:3872/2
ஆரண பொருளை ஓர்ந்த அளவினில் அசறு தோன்ற
பூரண தொழுகை கொண்ட புணர்ப்பொடு பாங்கு எல்லோர்க்கும் – சீறா:4199/1,2
தோரண வண் மறுகு தரு மதீன நகர்க்கு ஆதி என தோன்ற நாட்டி – சீறா:4300/2
தோய்ந்தன பழியும் பாரும் சொல்லின வசையும் தோன்ற
தீய்ந்தன பெருமை நாளும் வளர்ந்தன சிறுமை அன்றோ – சீறா:4379/3,4
சொரிந்த நீள் கரை புடவியும் வரை என தோன்ற
திருந்தவே அமைத்தனர் குபிர் திருந்தலர் திகைப்ப – சீறா:4437/3,4
தூக்கினன் விழி துணை தோன்ற வெம் சினம் – சீறா:4561/3
துன்னிய கதிர் அரி தோன்ற மாற்றலர் – சீறா:4564/1

மேல்


தோன்றல் (10)

சொரியும் பூம் துகள் துடவை சூழ் சாமினில் தோன்றல்
அரிவை தன்னகத்து அறிவினும் தேர்ந்து உணர்ந்து அறிந்து – சீறா:223/1,2
துணைவரோடு அரி என தோன்றல் வைகினார் – சீறா:503/4
தோன்றல் தோன்றினர் அணி மணி மறுகிடை சுடர்விடு மதியே போல் – சீறா:669/4
சுருப்பு இருந்து தேன் இடை தவழ் தொடை அணி தோன்றல் – சீறா:783/4
சுரும்பு இருந்து இசை கொள் திண் தோள் தோன்றல் காரணங்கள் யாவும் – சீறா:1043/2
இறுகுற தழுவி பின்னர் இயம்பும் என்று இயம்ப தோன்றல்
மறை முதல் வசனம் நாவின் வழக்கினனல்லன் என்றார் – சீறா:1263/3,4
துய்யவன் அருளின் மேன்மை ஜிபுறயீல் என்னும் தோன்றல்
உய்யும் மா நிலத்தின் மாந்தர்க்கு உற்றது ஓர் உவகை கொண்டு – சீறா:3222/2,3
மன்னவர் முதலாய் வந்த வழிவழி தோன்றல் யார்க்கும் – சீறா:3935/2
சூதர் எகூதியர்க்கு ஆதி தோன்றல் என்று – சீறா:4556/1
தோற்று நீர் என பாய்ந்து உலவியே திரியும் சுரங்களும் கடந்தனர் தோன்றல் – சீறா:5006/4

மேல்


தோன்றல்-தானும் (1)

தோள் துணை அசுஅதோடு முசுஇபு தோன்றல்-தானும்
பாட்டு அளி முரலும் தாம தலைவர் பன்னிருவர் சூழ – சீறா:2356/2,3

மேல்


தோன்றலால் (2)

சுதை ஒளி மேனிலை துலங்கி தோன்றலால்
புது மலர் தெரு-தொறும் சிந்தி பொங்கலால் – சீறா:2710/1,2
துவள்தரும் கொடி பலவும் தோன்றலால்
குவிதரும்படி கொள்ளை கொண்டனர் – சீறா:3969/3,4

மேல்


தோன்றலில் (1)

தூணினை துரும்பா நினைத்து என ஹாஷின் தோன்றலில் அக்கம் என்று ஒருவன் – சீறா:1438/3

மேல்


தோன்றலும் (4)

சுந்தர புலி அலி என்னும் தோன்றலும்
வந்தனை செய்து தீன் வழியில் ஆயினார் – சீறா:1311/3,4
தொகையினில் உமறு என்று ஓதும் தோன்றலும் இருப்ப கண்டு – சீறா:1559/2
சொன்ன அப்படியே அழைத்து முன் விடுத்தார் தோன்றலும் மகிழ்வுடன் இருத்தி – சீறா:2859/3
சேயன் இக்கிரிமா என்னும் தோன்றலும் துணைவர் சேர்ந்த – சீறா:4376/3

மேல்


தோன்றலை (3)

சூது அர மொழியார் ஆமினாவிடத்தில் தோன்றலை கொடுத்து அகன்றனரே – சீறா:264/4
துனி மனத்து உறைய முன்னோன் தோன்றலை உறைத்தாய் என்னில் – சீறா:1496/1
தொடு கடல் ஞாலம் முழுதும் ஓர் புயத்தில் பரித்திடும் தோன்றலை நோக்கி – சீறா:5015/1

மேல்


தோன்றவும் (1)

தொன்று தோன்று கஃபா மிசை தோன்றவும் வேண்டும் – சீறா:1856/4

மேல்


தோன்றவே (1)

படும் இடம் நீர் எனும் பான்மை தோன்றவே – சீறா:3290/4

மேல்


தோன்றா (17)

மாதர் சூல் அகட்டுள் தோன்றா மனு நெறி ஆதமே நின் – சீறா:109/1
நிலம் மிசை எவர்க்கும் கண்ணினில் தோன்றா நீடு உறு நீழலும் தோன்றா – சீறா:371/2
நிலம் மிசை எவர்க்கும் கண்ணினில் தோன்றா நீடு உறு நீழலும் தோன்றா
உலவிய எறும்பும் ஒண் சிறை ஈயும் ஒருபொழுதாகிலும் தீண்டா – சீறா:371/2,3
செம் மலர் சுவடு தோன்றா திருவடி நடத்தல் செய்தார் – சீறா:620/4
சுடரவன் கதிர்கள் தோன்றா சோலை வாய் விளங்கிற்று அன்றே – சீறா:803/4
சோதியாய் எவைக்கும் உள் உறை பொருளாய் தோற்றமும் மாற்றமும் தோன்றா
ஆதி-தன் பருமான் கொண்டு இனிது ஓங்கி அமர் இழிந்து அமரருக்கு அரசன் – சீறா:1241/1,2
எரி பகல் கதிர்க்கால் தோன்றா இரவினில் தனித்து வல்லே – சீறா:1272/3
விண் படர்ந்து இரிய செம் தேன் விளை தரு படிந்து தோன்றா
மண் பட நெரிய தாவும் விலங்கினம் மலைய வந்தார் – சீறா:1721/3,4
பாரினில் எவர்க்கும் தோன்றா புதுமை பார்த்து அறிவோம் அல்லால் – சீறா:2097/2
மண்ணகத்து அடியும் தோன்றா மான்மத நறையும் மாறா – சீறா:2822/1
பரந்து அகல் விசும்பு தோன்றா மறைத்தன படல தூளி – சீறா:3378/1
வெயிலவன் கதிர்கள் தோன்றா வெள்ளை வெண் கவிகை மொய்ப்ப – சீறா:3410/3
தனி அழைத்து இருத்தி தோன்றா மறையினில் சாற்றுவாரால் – சீறா:3692/4
அழிவுறு நெறி மேற்கொண்ட காபிர்கள் அறிதல் தோன்றா
வழி அபீறாபி-தன்னை கைபறில் புகுந்து வல்லே – சீறா:3693/1,2
கௌவைகள் தோன்றா நீண்ட கபாடத்தின் வாயில் நண்ணி – சீறா:3702/2
மல் வளர் புயத்தினானும் மங்கையும் தெரிதல் தோன்றா
இல் விடுத்து அகன்று சார்பின் எய்தி அங்கு உறைந்து நாளை – சீறா:3707/2,3
மழை செறிந்து இருண்டு கதிரவன் தோன்றா வனங்களும் புனங்களும் கடந்து – சீறா:4922/1

மேல்


தோன்றாத (1)

படியும் தோன்றாத வண்ணம் விடம் பரந்து என்ன மூடி – சீறா:2844/3

மேல்


தோன்றாது (17)

கருவினில் தோன்றாது ஒளிவினில் உருவாய் கண் இமைத்து உண்டு உறங்காத – சீறா:236/1
தொகுத்த அ சனங்கள் எல்லாம் இவர் எடை தோன்றாது என்ன – சீறா:422/2
கரிந்து இலை தோன்றாது ஒவ்வொரு விருக்கம் கணங்களின் குலம் என தோன்றும் – சீறா:684/2
தொட்ட பாழ்ங்கிணறு உண்டு ஆங்கு துவலை நீர் அசும்பும் தோன்றாது
இட்ட முள் இலை ஈந்து அங்ஙன் இருந்து இறந்து அனேக கால – சீறா:818/1,2
இரு விழி துயில மண்ணிடை தோன்றாது எழில்பெற கனவுகள் காண்பார் – சீறா:1249/4
தூற்றும் அருவி சாரலினும் தோன்றாது இருண்ட மனையிடத்தும் – சீறா:1338/3
சொரி மத கரியும் பரியொடு இரதமும் துவண்டு அணி மறுகு இலம் தோன்றாது
ஒருவருக்கொருவர் வதனமும் தெரியாது உலகம் எங்கணும் மயங்கியதே – சீறா:1903/3,4
சிறை நிறம் தோன்றாது அமர் உலகு-அதனில் ஜிபுறயீல் ஏகிய பின்னர் – சீறா:1946/2
இருப்பவர் எவர்க்கும் தோன்றாது ஏதிலார் நடத்தும் செய்கை – சீறா:2567/3
கொறிகள் மேய்த்து ஆமிறு என்னும் கோளரி எவர்க்கும் தோன்றாது
இறையவன் தூதர்-பால் வந்து இருந்து பால் கறந்து காய்ச்சி – சீறா:2569/1,2
விட அரவு உறையும் பாலில் வெளி அணுவெனினும் தோன்றாது
இடன் அற உள்ளங்கால் கொண்டு இன்புற அடைத்தார் அன்றே – சீறா:2589/3,4
பாடலத்தின் பதமும் அதன் அகடும் அவன் பரடும் பத படியும் தோன்றாது
ஈடுபட கவ்வியது நபியின் உரை மறுத்தோரை எரி மீக்கொண்டு – சீறா:2667/1,2
ஒரு திரு மொழியால் வாழும் உலகு என்றால் அதனை தோன்றாது
இருள்பட மறைத்தல் கல்லா புல்லர்க்கும் இழிவதாமால் – சீறா:2804/3,4
உள் உறைந்து எவர்க்கும் தோன்றாது உலகு எலாம் நிறைந்த மேலோன் – சீறா:3353/1
அறைந்த பேரொலியும் செவிகளில் தோன்றாது அற பயந்து அறிவு அழிந்தனரால் – சீறா:3556/4
ஊரினில் எவர்க்கும் தோன்றாது உறைந்தனர் உறைந்த பின்னர் – சீறா:3723/3
ஒருவருக்கும் தோன்றாது பசியுடன் இங்கு இருந்தனர் என்று உன்னி நீங்கா – சீறா:3749/3

மேல்


தோன்றாமல் (2)

சேந்து எரி பரந்த பாலையில் புகுந்து செல் நெறி சிறிதும் தோன்றாமல்
காந்து எரி கதிரோன் எழு திசை தெற்கு வடக்கு மேற்கு எல்லை காணாமல் – சீறா:688/1,2
குலவ நோக்கி மாந்தர் உறை குறிப்புற்று அறிய தோன்றாமல்
விலகும் கதிர் மெய் குரிசில் நபி உறைவது இவணே என விரைவில் – சீறா:1586/2,3

மேல்


தோன்றி (39)

துதி பெறு மதினா-தன்னில் தூய ஓர் இடத்தில் தோன்றி
இதமுற எடுத்து போந்தார் இமையவர் தலைவர் அன்றே – சீறா:101/3,4
துண்டத்தின் ஆவி தோன்ற தும்மலும் தோன்றி பின்பு – சீறா:107/1
புகழ் என தோன்றி வரு துறை கனானா பூபதியிடத்தின் வந்து இருந்த – சீறா:158/4
நபி எனும் ஒருவர் பின் நாளில் தோன்றி இ – சீறா:511/1
சுரம் என ஒரு பகை தோன்றி துக்கமுற்று – சீறா:517/3
குலம் எனும் விருக்கம் தோன்றி குழூஉ கிளை பணர் விட்டு ஓங்கி – சீறா:609/1
வன் மன நஸ்றா என்ன வரு பெரும் குலத்தில் தோன்றி
பன்முறை மறைகள் தேர்ந்த பண்டிதன் முகத்தை நோக்கி – சீறா:625/1,2
மட்டு அற பொலிந்து தோன்றி வரும் அவர்-தமக்கு மேலா – சீறா:795/2
விட்டு ஒளி பரப்ப தோன்றி விரைவில் வீற்றிருந்தார் அன்றே – சீறா:818/4
வீசுவ போன்று தோன்றி விளங்குதல் பலவும் கண்டார் – சீறா:933/4
கரும்பு என தோன்றி செம்பொன் கதிர் உமிழ்ந்திருந்த கொம்பே – சீறா:1043/1
மா இரும் புவியுள் தோன்றி மானுட வடிவு கொண்ட – சீறா:1044/2
சொல்ல அரிய காரணத்துக்கு உறு பொருளாய் நமர்க்கு உயிராய் தோன்றி தோன்றும் – சீறா:1092/1
இருக்கினில் அறிவும் தோன்றி இடன் அற பெருகி நல்லோர் – சீறா:1266/3
நிலம் மிசை விடையாய் தோன்றி நின்ற அ மாயம்-தானே – சீறா:1549/4
முச்சகமும் புகழ் முகம்மது றசூல் தம் இதழினில் புன்முறுவல் தோன்றி
விச்சை என தெளிந்து பலபல சூழ்ச்சி விரித்து அறத்தை விளங்கி என்னோடு – சீறா:1652/2,3
இமைநொடி பொழுதில் தோன்றி இயம்பியது இணங்காரான – சீறா:1734/2
முகம்மது என்று ஒருத்தன் தோன்றி வணக்கமும் நெறியும் இந்த – சீறா:1753/1
முன்னவள் மகன் என் முன்னோன் முசுஇபோடு இணங்கி தோன்றி
இ நகர்-தனையும் மார்க்கத்து ஈடுபட்டு ஒழிய நின்றான் – சீறா:2362/2,3
தூறு தோன்றி இன்பு அற பெரும் துன்பமே வரினும் – சீறா:2455/4
துருத்தி நீர் வெளி விட்டு என்ன விரைவொடும் தோன்றி நின்ற – சீறா:2602/4
சடுதியின் என் முன் தோன்றி விருப்பொடு சலாமும் சொன்னார் – சீறா:2772/4
சிந்தையின் ஐயம் தோன்றி தெளிவு இலாது எம்மான்-பாலின் – சீறா:2786/1
தீயவன் ஒருவன் தோன்றி தீன் எனும் மதம் உண்டாக – சீறா:2788/3
பூரண மதியம் தோன்றி முகம்மதை புகழ்ந்து நும்-தம் – சீறா:2823/2
தூது என உலகினில் தோன்றி நின்றனர் – சீறா:2980/2
தனி மலைவு தோன்றி இருந்தனர் பெரிதின் மன்னோ – சீறா:3087/4
சொரி கதிர் வயிர மாலை தோள் வரையிடத்தில் தோன்றி
ஒரு பிறை கிடந்தது என்ன தனு ஒரு புறத்தில் கொண்டார் – சீறா:3369/3,4
ஒற்றரில் ஒருவர் தோன்றி சில மொழி உரைப்பது ஆனார் – சீறா:3665/4
தொடங்கி பூசைசெய்திடு பலன் யாவுமே தோன்றி
இடம் கொண்டு இப்படியோ வந்து முடிந்தது என்று ஏங்கி – சீறா:4016/2,3
தூது என தோன்றி வந்தனன் மாய தொடர் வலை சுருக்கினுள் ஆகி – சீறா:4096/1
திறன் நிறை பொறையும் ஒன்றாய் திரண்டு உரு என்ன தோன்றி
அறன் வழுவாத செங்கோல் அகுமது கேள்வரோடு – சீறா:4185/1,2
துன்னு தவ வானவர்கள் தொழும் அரிய ஒளி உருவாய் தோன்றி நின்றோய் – சீறா:4295/3
ஊரிடை இருந்து வாழ்ந்தாம் முகம்மது என்று ஒருவன் தோன்றி
வீரமும் திறனும் வாய்ந்த ககுபையும் வதைத்து வீழ்த்தி – சீறா:4362/2,3
சூர் தட குழுவும் பயந்து ஒளித்திட தோன்றி
தீர்த்த வட்ட வான் மதியினது ஒளியையும் சிதைத்த – சீறா:4573/3,4
அன்பு எனும் வித்தில் தோன்றி அறம் எனும் சடைகள் விட்டு – சீறா:4690/1
தீது அறு திசையில் தோன்றி செழும் கிரி தவழ்ந்து விண்ணின் – சீறா:4752/2
உளம் மகிழ் தனையர் தோன்றி உரிய வாலிபமும் மாறி – சீறா:4786/3
குலத்தில் ஓர் மதலை தோன்றி குலத்தினை வளர்ப்பதல்லால் – சீறா:4853/1

மேல்


தோன்றிட (7)

துலங்கு மென் முலை தோன்றிட பச்சிலை துகில் போர்த்து – சீறா:64/3
பஞ்சம் என்று ஒரு கொடும் பாவி தோன்றிட
துஞ்சினர் சிலர் தனி துறந்த பேர் சிலர் – சீறா:306/1,2
தொடி பகுப்பு என்ன கூன் வாள் தோன்றிட எதிரதாக – சீறா:407/3
மட்டறு சரக்கொடு மலிந்து தோன்றிட
தொட்ட வெண் திரை கடல் அகடு தூர்த்திட – சீறா:745/2,3
பாரினில் எவர்க்கும் தோன்றிட மதியம் பழம் மறை முகம்மதின் மெய்யில் – சீறா:1923/1
சொரியும் கொன்றையும் தோன்றிட சென்றனர் தூயோர் – சீறா:2678/4
இடியொடும் மழையும் மின்னும் தோன்றிட இருண்ட மேகம் – சீறா:2844/4

மேல்


தோன்றிடா (1)

வதைத்தவர் இவர் பொன்றினர் இவர் எனும் சொல் வழக்கினில் தோன்றிடா வண்ணம் – சீறா:2517/2

மேல்


தோன்றிடாது (1)

மருங்கினில் எவர்க்கும் தோன்றிடாது உறைந்து வல்லவன் சலாம் எடுத்து இயம்பி – சீறா:1945/1

மேல்


தோன்றிடும் (5)

பிள்ளை ஒன்று தோன்றிடும் முகம்மது எனும் பெயரின் – சீறா:222/3
நவ்வி தோன்றிடும் வழி நடத்திர் என்னவே – சீறா:742/4
கண்ணினுக்கு எதிர் தோன்றிடும் காணொணாது அகலும் – சீறா:1533/1
எஞ்சல் இல் உளது இலது என்ன தோன்றிடும்
அஞ்சல் இல் இறைவன் தூதவர்கள் காரணம் – சீறா:1819/2,3
தொறு அமர்ந்து உறையும் அவண் இடம் மேவி தோன்றிடும் பிணி இன்னல் தவிர – சீறா:5016/3

மேல்


தோன்றிய (24)

சூல் முதிர் மழை கை ககுபு கண்மணியாய் தோன்றிய முறத்திடத்து உறைந்த – சீறா:162/3
சுந்தரர் முறத்து மதலையாய் நிலத்தில் தோன்றிய மதி முக கிலாபு – சீறா:163/2
வந்து தோன்றிய முதியவன் அரிவை நின் மனத்தின் – சீறா:459/1
புவியில் தோன்றிய துன்பமும் முதியவன் புகல – சீறா:468/3
பண் அரு மறை நபி பாரில் தோன்றிய
நண்ணிய புனல் விளையாட நாடு நாள் – சீறா:488/1,2
மன்னவன் குவைலிது வரத்தில் தோன்றிய
பொன் இளம்_கொடி விழி பொருந்திலாது இருந்து – சீறா:1024/1,2
துய்யவன் அருளால் ஆதம் மா மனுவாய் தோன்றிய அவனியின் வருடம் – சீறா:1251/1
சுரத்தினில் பெரு நதி அழைத்து தோன்றிய
சரத்தினில் கட்செவி தடிந்து பாதகன் – சீறா:1306/1,2
துய்யவன் தூதர் முன்னம் தோன்றிய ஆதம் என்போர் – சீறா:1760/3
தோன்றிய நாமம் ஏது இவை விடுத்து சொல் என மீளவும் உரைத்தார் – சீறா:2301/4
தொன்று தோன்றிய தூதுவர் மா மனை – சீறா:2331/3
சுற்றிய வளைகள்-தோறும் தோன்றிய துகிலை கீறி – சீறா:2586/2
இரவின் முள் செறி வனம் கடந்து இரவி தோன்றிய பின் – சீறா:2636/1
மீன் நடு மதி என விளங்கி தோன்றிய
தானவன் யாவன் என்று உளத்தில் தான் உணர்ந்து – சீறா:2716/2,3
பாவத்தின் திரள் கெட படுத்து தோன்றிய
காபத்துல்லாவை பின் காட்டல் இல்லையால் – சீறா:2954/3,4
சுடர் கதிரவனை ஒப்ப தோன்றிய அலி-தம் செவ்வி – சீறா:3180/2
சீற்றம் கூண்டு உரு கொண்டு என தோன்றிய திறலோர் – சீறா:3789/1
இருட்டொடும் பிறை தோன்றிய என கிடந்து இலங்க – சீறா:3825/4
பண்டு தோன்றிய முகம்மது பரியினில் ஏறி – சீறா:4011/1
எய்தும் அளவும் தோன்றிய இருள் போது அவண் இறுத்தார் – சீறா:4329/2
சுற்று உள வேந்தர் பல் பெரும் குலத்தில் தோன்றிய அரசரும் அவரோடு – சீறா:4439/1
தும்பையும் சூடி அகுத்தபு பவத்தில் தோன்றிய குயையும் ஏகினனால் – சீறா:4443/4
சூடும் நன்மையில் தோன்றிய தீனரை – சீறா:4499/3
பிடி உடை உபய சாமரையிடத்தும் தோன்றிய பீலிகையிடத்தும் – சீறா:4932/3

மேல்


தோன்றியது (1)

தொண்டை அம் கனிகள் தோன்றியில் சிறப்ப தோன்றியது அரிய மாணிக்கம் – சீறா:1000/1

மேல்


தோன்றியில் (1)

தொண்டை அம் கனிகள் தோன்றியில் சிறப்ப தோன்றியது அரிய மாணிக்கம் – சீறா:1000/1

மேல்


தோன்றியே (2)

மரகத நிற மரம் மடியில் தோன்றியே
சொரி கதிர் கனி எலாம் துய்ப்ப செங்கயல் – சீறா:311/1,2
அருளினில் உருவாய் தோன்றியே ஆதத்து ஐம்பதின் தலைமுறை பின்னர் – சீறா:2897/2

மேல்


தோன்றில (8)

நிலந்தனில் சுவடு இல நிழலும் தோன்றில
கலந்து மெய் ஒளியொடு நறை கமழ்ந்தன – சீறா:1835/1,2
தறையும் தோன்றில வானமும் தோன்றில தட பாசறையும் – சீறா:4575/1
தறையும் தோன்றில வானமும் தோன்றில தட பாசறையும் – சீறா:4575/1
தோன்றில ககுபமும் தோன்றில தகைத்த – சீறா:4575/2
தோன்றில ககுபமும் தோன்றில தகைத்த – சீறா:4575/2
மறுகும் தோன்றில உறையிடம் தோன்றில மதியாது – சீறா:4575/3
மறுகும் தோன்றில உறையிடம் தோன்றில மதியாது – சீறா:4575/3
அறியும் மேனியும் தோன்றில அவரவர்க்கு இருளால் – சீறா:4575/4

மேல்


தோன்றிலர் (1)

பட்டினார் என தோன்றிலர் பார்த்திடின் – சீறா:4501/2

மேல்


தோன்றிலா (1)

பெரும் குலம் விளக்கு முகம்மதை நோக்கி பிறழ்ந்து உரு தோன்றிலா தசையை – சீறா:1945/2

மேல்


தோன்றிலாது (1)

கருத்தினுக்கு ஏற்பவை கபடம் தோன்றிலாது
இருத்தி நல் மொழியொடும் இசைவதாகவே – சீறா:3272/2,3

மேல்


தோன்றிற்று (1)

துப்பொடும் வேறுவேறு புழை-தொறும் தோன்றிற்று அன்றே – சீறா:2597/4

மேல்


தோன்றிற்றே (1)

துள்ளிய உழை உழை இடத்தில் தோன்றிற்றே – சீறா:746/4

மேல்


தோன்றின (2)

பெறும் முறை அருவியும் பிறங்க தோன்றின – சீறா:724/4
பாறை மா மலை முளைத்து என தோன்றின படியின் – சீறா:4404/2

மேல்


தோன்றினபேர்க்கு (1)

துரம் உறும் அவுலியாவாய் தோன்றினபேர்க்கு மேலாம் – சீறா:16/2

மேல்


தோன்றினர் (6)

ஆதரம் பெருக நல் வழி பொருளாய் அகுமது தோன்றினர் அன்றே – சீறா:251/4
தோன்றல் தோன்றினர் அணி மணி மறுகிடை சுடர்விடு மதியே போல் – சீறா:669/4
வரம் உறும் மலக்குகள் வந்து தோன்றினர்
சிரம் ஒரு கிரி என திகழ செவ்விய – சீறா:1796/2,3
சுந்தரத்தொடும் பேரறத்தொடும் உருவாய் தோன்றினர் ஆதம் என்று ஒருவர் – சீறா:2313/4
சொரி கதிர் சுதை மா மனையிடம் கடந்து தோன்றினர் நீண்ட மா மறுகில் – சீறா:2543/4
வானவர்க்கு அரசு எமக்கு முன் தோன்றினர் வரிசை – சீறா:4633/1

மேல்


தோன்றினன் (2)

கொடியன் எகூதி அம் குலத்தில் தோன்றினன்
உடல் என பவத்தினால் உருவம் கொண்டனன் – சீறா:4056/3,4
துனித்தல் இல் இருந்தேன் முன்னர் அ நாளில் தோன்றினன் முகம்மது என்று ஒருவன் – சீறா:4095/4

மேல்


தோன்றினார் (7)

பச்சை அம் கிளி என பரந்து தோன்றினார் – சீறா:1149/4
மேக மண்டல மின் என தோன்றினார் – சீறா:1178/4
துய்யவன் திரு மறை தூதர் தோன்றினார் – சீறா:1829/4
தூயவர் இருப்பிடம்-அதனில் தோன்றினார் – சீறா:2732/4
சுற்றிய மதீன மா நகரில் தோன்றினார் – சீறா:2741/4
புடை எழ திரு நகர் புறத்தில் தோன்றினார் – சீறா:3014/4
தொடங்கி மீளியர் சூழ்தர தோன்றினார் – சீறா:4485/4

மேல்


தோன்றினான் (2)

சுடரவன் உதய மா கிரியில் தோன்றினான் – சீறா:732/4
பருதி வானவன் கதிர் பரப்ப தோன்றினான் – சீறா:3234/4

மேல்


தோன்றினானே (1)

கரும் கடன் முகட்டில் வெய்ய கதிரவன் தோன்றினானே – சீறா:2294/4

மேல்


தோன்றினும் (1)

துறையினுக்கு உருமேறு ஆர்த்து தோன்றினும் துவைக்கும் நீரார் – சீறா:3842/4

மேல்


தோன்று (2)

அனம் என விளங்கி தோன்று மணி அணி பாவை அன்னார் – சீறா:610/4
தொன்று தோன்று கஃபா மிசை தோன்றவும் வேண்டும் – சீறா:1856/4

மேல்


தோன்றுதற்கு (1)

சோதியை தெரிசித்து அமரர்கள் அணுவும் தோன்றுதற்கு இடம் அற நெருங்கி – சீறா:126/2

மேல்


தோன்றும் (52)

கொடி இடை அலிமா கூற கொடு வரை முழையில் தோன்றும்
அடலுறு சீயம் அன்ன அகுமது புகலலுற்றார் – சீறா:431/3,4
மீன் கடல் நடுவில் தோன்றும் வெண் மதி அமிர்தும் துய்ய – சீறா:607/2
ஈறு_இலான் நபியாய் தோன்றும் எழில் முகம்மது-தம் மெய்யில் – சீறா:627/1
கரிந்து இலை தோன்றாது ஒவ்வொரு விருக்கம் கணங்களின் குலம் என தோன்றும்
எரிந்து எரி மேய்ந்து கரிந்து விண்ணிடம் காந்திடும் தரை ஒரு துளி நீரும் – சீறா:684/2,3
முத்த வெண் மணியில் தோன்றும் முகம்மதின் வரவு-கொல்லோ – சீறா:794/3
சொரிந்து விட்டது போல் வயின்வயின்-தொறும் தோன்றும் – சீறா:863/4
அகிலமும் அதிர தோன்றும் அணி மறுகிடமும் கண்டார் – சீறா:929/4
சிந்து அகடு உளைந்து தத்தும் திரை முகட்டு எழுந்து தோன்றும்
இந்து முத்து உகுப்பது என்ன இடம்-தொறும் மலிய கண்டார் – சீறா:931/3,4
சொல்ல அரிய காரணத்துக்கு உறு பொருளாய் நமர்க்கு உயிராய் தோன்றி தோன்றும்
செல் உலவு கவிகை நிழல் வள்ளலுக்கு மணம் முடிக்கும் செய்தியாக – சீறா:1092/1,2
தோகைமார் இடு புகை திரள் இடையிடை தோன்றும்
ஆகமூடு எழு மண்டப கொடுமுடி வயிரம் – சீறா:1116/2,3
ஆர வாருதியில் தோன்றும் அமுதனார் பரியை நோக்கி – சீறா:1158/1
நினைவு எலாம் குரிசில் தோன்றும் நெறியிடை எதிரில் போக்கி – சீறா:1164/2
வெள்ளிடை-அதனில் சிறிது ஒளி திரண்டு விழித்திடும் விழிக்கு எதிர் தோன்றும் – சீறா:1242/4
விண்ணகத்து அரசர் தோன்றும் விதி முறை அறியா வள்ளல் – சீறா:1255/1
சிறை நிறம் சுருக்கி தோன்றும் ஜிபுறயீல் முதலோன் கூறும் – சீறா:1263/1
துடங்கு தப்பத்யதா என தோன்றும் சூறத்து ஒன்று இறங்கியது உலகில் – சீறா:1456/3
இடைவிடாது இருப்ப தோன்றும் எழில் முகம்மதுவை சார்ந்தார் – சீறா:1500/4
தொலைந்தது இவ்வணம் வெய்யவன் தோன்றும் முன் தொடுத்திட்டு – சீறா:1539/1
பொய்யினை புகலேன் கண்ட புதுமையை புகன்றேன் தோன்றும்
மெய்யினை பொய் என்று ஓதல் யாவர்க்கும் விதியது அன்றே – சீறா:1554/1,2
கழிபட இடைந்து எல் தோன்றும் காலை நல் நெறி பெற்றோர் போல் – சீறா:1579/2
புத்தியினும் வாள் வலியின் திடத்தானும் வஞ்சனையை பொதிந்து தோன்றும்
சத்துருவாம் முகம்மது-தன் உயிர் விசும்பு குடிபுகுத தக்கது ஆக்கும் – சீறா:1662/2,3
நிரைநிரை செறிந்து தோன்றும் நெடு முடி குறிஞ்சி சார்ந்தார் – சீறா:1720/4
அடவிகள் புடையில் தோன்றும் அறபு நாட்டகத்தில் புக்கார் – சீறா:1723/4
தக்கவன் அருளால் செம்பொன் தலத்தினும் பாரில் தோன்றும்
திக்கினும் கதிர் குலாவும் செழும் சிறை தடம் கண் செவ்வி – சீறா:1725/2,3
கரையிலா வடிவு தோன்றும் காரணம் கண்டு யாரோ – சீறா:1727/2
கடல் படு புவிக்குள் காணா காரணம் தோன்றும் மாதோ – சீறா:1732/4
திமிர வெம் பகைக்கு தோன்றும் தினகரனாக பூத்த – சீறா:1734/3
காலை வெம் கதிரில் தோன்றும் ஹபீபு எனும் அரசை கண்டார் – சீறா:1746/4
அகலிடம் தோன்ற தோன்றும் ஆலயம் முழுதும் முன்னோர் – சீறா:1753/2
இறைவனை நோக்கி துஆ இரந்தினிரேல் இலங்கு உரு தோன்றும் என்று இசைத்து – சீறா:1946/1
தீது அற தோன்றும் அவயவம் சிறப்ப தெரிவையின் திரு உரு எடுத்த – சீறா:1953/4
பரவையும் விசும்பும் பாரும் படர்ந்து இருள் செறிந்து தோன்றும்
இரவினில் திரண்ட ஜின்கள் இனத்தினை ஈமான் கொள்வித்து – சீறா:2293/1,2
வேத நல் நிலையில் தோன்றும் விதி முறை கலிமா ஓதி – சீறா:2397/2
சோதி மென் கொடி என தோன்றும் ஆமினா – சீறா:2752/1
பத்தியர் தவமே போன்றும் பகர அரும் விசும்பில் தோன்றும்
சித்திர மதியம் போன்றும் செவ்வியர் இருவர் ஆவி – சீறா:2781/2,3
கதிரவன் ஒளியும் சோதி கலை நிறைந்து உவாவில் தோன்றும்
மதியின் நல் ஒளிவும் தூண்டா வண் சுடர் ஒளிவும் தோன்றும் – சீறா:2795/2,3
மதியின் நல் ஒளிவும் தூண்டா வண் சுடர் ஒளிவும் தோன்றும்
புதிய பேரொளிவுக்கு ஏற்ப பொருத்தினும் பொருந்திடாதே – சீறா:2795/3,4
தொல்லை முன் விதியால் தோன்றும் துன்பங்கள் விடுத்து நீங்கும் – சீறா:2843/1
கண்களின் மறுத்து தோன்றும் உரு அன்றி காண்கிலாரே – சீறா:3062/4
குவிதரும் கடல் அம் தானை குபிர் கடல் உடைக்க தோன்றும்
அவிர் கதிர் வடி வாள் செம் கை அலி திருமணம் என்று ஓதும் – சீறா:3183/1,2
பயிர் என தோன்றும் பேதை பருவத்தின் ஒருத்தி வந்தாள் – சீறா:3188/4
சொரி நிலா கவிகை நீழல் சுடரவன் கடுப்ப தோன்றும்
அரச கேசரியை நோக்கி அழகு எலாம் விழியால் உண்டு – சீறா:3201/1,2
மிடற்று எழில் கவர வந்த மின் என மிளிர்ந்து தோன்றும்
சுடர் பிறை வடத்தை சூடி சொரி கதிர் வடங்கள் சேர்த்து – சீறா:3213/2,3
மின் அவிர்ந்து ஒளிரும் வாள் கை விறல் குதாதாவில் தோன்றும்
மன்னவர் முதலாய் வந்த வழிவழி தோன்றல் யார்க்கும் – சீறா:3935/1,2
சுற்றும் இரங்க தீ என்ன தோன்றும் மரை வாவிகள் கடந்து – சீறா:4038/2
துன்னு காபிரில் தோன்றும் ஒருத்தன் சூது – சீறா:4219/2
இலையை ஒத்த கொடி திரள் வீழ்ந்து இலங்கின செம் சோரி செக்கர் என்ன தோன்றும்
நிலையை ஒத்த பனை கனியை ஒத்த கரும் தலை நிலத்தின் நிறைந்து மன்னோ – சீறா:4317/3,4
வாயினன் பவத்தில் தோன்றும் அபூசகல் மகிழ்வின் ஈன்ற – சீறா:4376/2
நன்றி தோன்றும் ஈமானை உள் கொண்டனர் நலியாது – சீறா:4621/3
வாயிலின் எய்தி அன்னோன் வரத்தினால் வந்து தோன்றும்
நாயகி-தன்னை கண்டு நலன் உறு மொழிகள் சொல்வார் – சீறா:4688/3,4
குயின் உறைந்து அலறும் வரை மிசை ஏறி குன்று உறழ் மாடங்கள் தோன்றும்
எயில் உடை மதீன மா நகர் நோக்கி இடித்து என கூக்குரலிட்டு – சீறா:4929/1,2
புரை அற அருந்தினீரேல் யாக்கையில் பொறுத்து தோன்றும்
பருவரல் அணங்கு நீங்கி படிவம் ஆர்ந்து உறைவிர் என்ன – சீறா:5014/2,3

மேல்


தோன்றுமால் (1)

மெய்மை சூழ் கடலினும் விளங்கி தோன்றுமால்
கை மத கரியினை கருப்பை மாய்த்திடாது – சீறா:1818/2,3

மேல்


தோன்றுவ (2)

சொரி மலர் வாவி நீர் அசைந்து தோன்றுவ
தரி திரை கரங்களில் சங்கம் ஆர்த்திட – சீறா:491/2,3
எங்கணும் கரை தவழ்ந்து இழிந்து தோன்றுவ
கங்கை தன் உள்ளகம் களிப்புற்று ஆனந்தம் – சீறா:496/2,3

மேல்


தோன்றுவது (2)

இன்று தோன்றுவது என எடுத்து இயம்பினர் இலங்கும் – சீறா:229/3
குன்று தோன்றுவது அதன் கிழக்கு ஒரு குவடு அடுப்ப – சீறா:769/3

மேல்


தோன்றுவர் (2)

துருவை மேய்த்து அரு நீர் ஊட்டி தோன்றுவர் அலது நீங்கார் – சீறா:401/4
வந்து தோன்றுவர் நபி என முகம்மது இ வருடம் – சீறா:571/3

மேல்