மி – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மிக்க 71
மிக்கது 1
மிக்கபேர் 2
மிக்கவர் 14
மிக்கவன் 1
மிக்கன் 1
மிக்கன 1
மிக்கனவன் 1
மிக்கனான 1
மிக்கா 1
மிக்காம் 2
மிக்காய் 5
மிக்கார் 5
மிக்கான் 3
மிக்கு 29
மிக்குவம் 1
மிக்குவம்-தம்மிடத்து 1
மிக்கொடு 1
மிக்கோய் 6
மிக்கோர் 5
மிக்கோன் 3
மிக்றசு 1
மிக்றசோடு 1
மிக 32
மிகல் 1
மிகலும் 1
மிகவும் 4
மிகவே 1
மிகு 18
மிகுத்த 9
மிகுத்தலால் 1
மிகுத்தவர் 1
மிகுத்தனம் 1
மிகுத்தார் 1
மிகுத்திடும் 3
மிகுத்து 6
மிகுதாதும் 1
மிகுதி 3
மிகுந்த 8
மிகுந்தன 1
மிகுந்து 8
மிகும் 6
மிகுவித 1
மிகை 3
மிகைத்த 3
மிச்சில் 3
மிசஃபு 1
மிசுஅபுவும் 1
மிசை 71
மிசையே 1
மிஞ்சவே 1
மிஞ்சி 1
மிஞ்சிய 3
மிஞ்சு 7
மிஞ்சும் 1
மிடல் 12
மிடலவர் 1
மிடலொடும் 1
மிடற்றில் 2
மிடற்றினில் 1
மிடற்று 1
மிடறு 2
மிடித்தவர் 1
மிடித்து 1
மிடிமை 1
மிடிமையின் 1
மிடிமையும் 1
மிடியார்க்கு 1
மிடியினன் 1
மிடியும் 1
மிடுக்கு 2
மிடை 1
மிடைதர 1
மிடைதலில் 4
மிடைந்த 5
மிடைந்தனரே 1
மிடைந்து 8
மிடைந்தே 1
மிடைபடும் 1
மிடைமிடைந்திட்டு 1
மிடைமிடைந்தும் 1
மிடைய 4
மிடையும் 2
மிடைவார் 1
மிண்டு 3
மித்திரன் 2
மித்துருக்கு 1
மிதந்த 1
மிதந்தன 1
மிதந்து 1
மிதி 1
மிதிக்கும் 1
மிதித்தலில் 1
மிதித்தில 1
மிதித்து 3
மிதித்தும் 1
மிதிப்படும் 1
மிர்கமதம் 1
மிருகங்கட்கு 1
மிருது 1
மிழற்றி 1
மிழற்றிட 1
மிழற்றும் 3
மிளிர் 1
மிளிர்ந்து 3
மிளிர 2
மிளிரும் 1
மின் 79
மின்கள் 2
மின்செய் 1
மின்பர்-அதனிடை 1
மின்ன 6
மின்னவே 1
மின்னார் 1
மின்னாரினை 1
மின்னி 2
மின்னிட 3
மின்னிய 4
மின்னின் 1
மின்னினும் 1
மின்னினை 3
மின்னு 6
மின்னுக்கு 1
மின்னுடன் 1
மின்னும் 5
மின்னே 2
மின்னை 4
மினுமினுத்து 1
மினுமினென்ற 1

மிக்க (71)

அரசுக்கு வைத்த நெறி வரிசைக்கு மிக்க துரை அபுபக்கரை புகலுவாம் – சீறா:9/4
மிக்க செந்தமிழ் புலவர் முன் யான் விளம்புவதே – சீறா:18/4
மிக்க வாரி பாழ் நரகங்கள் அடைத்தனர் வானோர் – சீறா:184/3
மிக்க உண்மையும் விளங்கிய வெற்றியும் உடையோர் – சீறா:192/3
மிக்க பேர் அனைவரும் விளம்பி காலமே – சீறா:309/3
மிக்க பேரொளி வெய்யவன் மேல் திசை சார்ந்தான் – சீறா:552/2
சாரமும் பொறையும் மிக்க தரும நல் குணமும் யார்க்கும் – சீறா:598/3
மரு மிக்க புயத்து எழில் வள்ளலுடன் – சீறா:706/1
அறிவு நல் ஒழுக்கம் வாய்மை அன்புறும் இரக்கம் மிக்க
பொறை தவம் குணம் வணக்கம் பொருவு இலா சார மேன்மை – சீறா:792/1,2
மிக்க செம் மணி பணி விற்று மாற்றிய – சீறா:897/1
மிக்க பொன் புரிசையின்-வயின் மேயினார் – சீறா:917/4
மிக்க வார்த்தையில் விளம்புவது என்-கொல் நும் வினையால் – சீறா:954/3
மிக்க செம்பொன் ஈந்தவர்க்கு நல் மொழி பல விளம்பி – சீறா:967/1
நம் தமர்-தனிலும் மிக்க நண்பினன் இவன் என்று ஓதி – சீறா:1068/2
சோர்வு இலாது உரைத்தான் மிக்க சூழ்ச்சியில் தெளிந்த நீரான் – சீறா:1070/4
போற்றி உரைத்தனர் எனது முன்னோரின் உரைப்படியே புகன்றேன் மிக்க
தேற்றமுறு மனத்து ஆய்ந்து நிகழ்காலம் வருங்கால செய்கை நோக்கி – சீறா:1083/2,3
மிக்க செம் மணி தொடையலில் விளங்கிய கதிர்கள் – சீறா:1113/1
தெரிசிக்க நம் போல் மிக்க செனனம் ஆர் பெறுவர் என்பார் – சீறா:1157/4
மிக்க நல் நெறி நேர் முகம்மதும் சிறந்த விரை கமழ் மதுரம் ஊற்றிருந்த – சீறா:1215/3
மிக்க மெய் புதுமை-தனை உணர்ந்துணர்ந்து மிக களித்து அதிசயித்திருப்பார் – சீறா:1248/4
பதியின் மிக்க நல் மறையவன் முகம்மதை நோக்கி – சீறா:1284/1
சால மிக்க கவிதை திறத்தொடு தணப்பு இலாது உற அனுப்பினான் – சீறா:1425/4
மிக்க வீரத்தில் நம் இனத்தவர் அதின் மேலோர் – சீறா:1508/3
மதியின் மிக்க அபித்தாலிபை அடுத்து வந்திருந்தார் – சீறா:2043/4
மனத்தின் மிக்க அபித்தாலிபு மதி முகம் நோக்கி – சீறா:2044/2
மிக்க வன் குபிர் கொலை தொழில் மனத்தினை விடுத்திட்டு – சீறா:2240/1
மிக்க ஜின் சிலதை கூவி விறல் முகம்மதுவை நீவி – சீறா:2261/2
மிக்க தீன் பெருகி செல்வம் விளங்கிட ஈமான் கொண்டு – சீறா:2351/3
மதியின் மிக்க நல் முகம்மது அங்கு உரைத்தலும் மதீனா – சீறா:2462/1
உரத்தின் மிக்க அபூபக்கரும் உமறு உதுமானும் – சீறா:2498/1
அறிவின் மிக்க அபூபக்கரும் ஆமிறு என்பவனும் – சீறா:2630/1
மிக்க நம் நயினார் சேர்த்தனர் யாரும் விள்ளுதற்கு இடம் அற உடலும் – சீறா:2874/3
காட்டின் மிக்க நல் துடவை கைக்கு அளித்தனை கடிதின் – சீறா:2943/3
மிக்க நல் தேதி மூவைந்தின் மேவிய – சீறா:2956/1
பகர அரும் கற்பின் மிக்க பாத்திமா செவியில் சாற்ற – சீறா:3083/3
புகல அரும் கற்பின் மிக்க பூவையர் எவரும் வாழ்த்த – சீறா:3233/2
மிக்க அத்திரியும் மாவும் மீண்டு அவண் வரும் நாள்மட்டும் – சீறா:3339/2
மிக்க சைபத்து என்று ஓதிய விறல் அரி வீரன் – சீறா:3514/3
மிக்க வெம் சமர் விளைத்தனர் இருவரும் விரைவின் – சீறா:3543/4
மனன் உயிரின் மிக்க செழும் கணவரிடத்து இனிது அளிப்ப வாங்கி அன்னோர் – சீறா:3755/3
வீரம் மிக்க கனானத்து கூட்ட வெம் படையும் – சீறா:3784/1
ஊற்றம் மிக்க வெவ் அரியினும் வலிமையர் உணர்வின் – சீறா:3789/3
மிக்க பேர் அறபி குல காபிரும் உடைய – சீறா:3792/3
மிக்க சூமன்-தன் கலைப்பினில் அகப்பட்டு வெகுண்டும் – சீறா:3864/2
மிக்க நம் நயினார் வந்ததும் தன் மேல் வெகுண்டதும் போயதும் வெருவி – சீறா:4079/3
மிக்க முனாபிக்குகளுமே இவர்-தமக்கு – சீறா:4134/2
ஆடல் மிக்க அறபி எனும் குலத்தூடு – சீறா:4220/1
மிக்க தூதர் விரைவின் விழித்தனர் – சீறா:4225/2
அறத்தின் மிக்க அருள் கடல் ஐயனே – சீறா:4231/1
உறவின் மிக்க மைந்தரை உறு துணைவரை உரிய – சீறா:4266/1
மிக்க நும் கடமை யாவும் விருப்புற எவரும் காண – சீறா:4292/2
குன்று உறழ் வலிய மொய்ம்பின் கொற்றவர் வேந்தன் மிக்க
வென்றி சேர் மடங்கல் அன்னான் ககுபு எனும் வீரர்_வீரன் – சீறா:4369/1,2
குறைசி அம் காபிர் வாய்ந்த குணன் உடை மாந்தர் மிக்க
அறபிகள் உலக நீதி யாவையும் அறிந்த மேலோர் – சீறா:4377/1,2
அசத்து எனும் குழுவும் மிக்க அவுசு எனும் கணமும் மூரி – சீறா:4394/2
வண்மை மிக்க அபாலுபானா பனீகுறைலா – சீறா:4637/1
ஈரம் மிக்க நபியை தொழுது எம்-பால் – சீறா:4649/1
மிக்க வாய்மை விளங்கும் யார்களும் – சீறா:4659/2
விளம்பி நெறி முறை தவறா வேத நபி அவண் இருப்ப மிக்க நீதி – சீறா:4680/1
திண்மை பெறும் பனீசகுது கூட்டத்தாரிடத்தினில் யான் சென்று மிக்க
வண்மை பெற அவரை எல்லாம் ஈமானில் வழிப்படுத்தி வருவிப்பேனே – சீறா:4685/3,4
கந்தர குடையும் செய்ய கமல வாள் முகமும் மிக்க
சுந்தர விழியும் நீண்டு துலங்கிய கரமும் வாச – சீறா:4700/1,2
மாரி நீர் வறந்து சோலை மரம் இலை உதிர்ந்து மிக்க
பாரினில் எழுந்த பைங்கூழ் பசை அற கருகி கானல்தேர் – சீறா:4743/1,2
செம்மையும் அறிவும் மிக்க ஆயிசா என்னும் செல்வி – சீறா:4784/2
இளமையும் எழிலும் செல்வத்து இயற்கையும் கிளையும் மிக்க
வளமையும் உற்று மேனாள் மகிழ்ந்து இனிது இருந்தோம் அன்பாய் – சீறா:4786/1,2
ஆசு இலா கற்பின் மிக்க அரிவை இ பழத்தை வாங்கி – சீறா:4798/1
ஏற்றம் மிக்க நபி இறசூலினை – சீறா:4804/3
தழை செறி மரவ மாலை தயங்கு திண் புயத்தார் மிக்க
மழை செறி கவிகை வண்மை முகம்மது நபி சொல் வாய்மை – சீறா:4849/1,2
சொல் பயின் மதியான் மிக்க சுகயில் என்று ஒருவன் வந்தான் – சீறா:4873/4
வடிவு உறு கதிர் வாள் செம் கை முகம்மது நபியும் மிக்க
படி புகழ் சகுபிமாரும் பாலரும் மடந்தைமாரும் – சீறா:4889/1,2
கந்தரமும் மிக்க புனல் கங்கையும் அடுத்த – சீறா:4894/4
சினை தரு தருவின் நீழல் செறிந்து இனிது இருந்து மிக்க
மனை செறி மக்கத்து உற்ற வன் குபிர் தலைவரான – சீறா:4905/2,3
கோர வாம் பரி மேல் செல்லும் கொற்றவர்-தம்மில் மிக்க
வீரராம் அபூகு தாதா விறல் உடை வயவர்-தம்மில் – சீறா:4997/1,2

மேல்


மிக்கது (1)

உருவின் மிக்கது என்று உணர நின்றது கொறி உழையின் – சீறா:4430/4

மேல்


மிக்கபேர் (2)

ஆராய்வில் மிக்கபேர் நூறாயிரத்து நாலாறாயிரத்து நபிமார் – சீறா:8/3
மாராயம் மிக்கபேர் வாய் ஆர வைத்தபேர் வாழ்வார் சுவர்க்கபதியே – சீறா:8/4

மேல்


மிக்கவர் (14)

மறையின் மிக்கவர் ஓதிய ஓசையும் வரிசை – சீறா:98/1
துறவின் மிக்கவர் திக்கிறின் ஓசையும் சூழ்ந்தே – சீறா:98/2
மிக்கவர் ஆகும் மற்ற நபிகளின் மேன்மையாமால் – சீறா:825/4
தக்க புகழுக்கு மதி மிக்கவர் சரக்கோடு – சீறா:891/3
மதியின் மிக்கவர் ஒருவரால் வரும் கிளை அனைத்தும் – சீறா:1127/1
உரையின் மிக்கவர் ஒருவர் வந்து என் பெயர் உரைத்து – சீறா:1285/2
அடிமையில் ஓங்கிய அறிவின் மிக்கவர்
வடிவுறும் ஆரிதாம் மதலை ஆகிய – சீறா:1312/1,2
விரும்பியபேர்களில் தலைமை மிக்கவர்
அரும் புவிக்கு அரசு அபுதுர் றகுமானுடன் – சீறா:1318/2,3
வெற்றி வீரத்தின் மிக்கவர் எவர் என விரித்து – சீறா:1512/1
மிக்கவர் முகம்மதே அன்றி வேறு இன்றே – சீறா:2418/4
ஓதினர் எனது உடல் உயிரின் மிக்கவர்
பேதுற தீன் நிலை பிழைத்து நின்றவர் – சீறா:2445/2,3
மிக்கவர் எவரும் அவ்வணம் உறைந்து மேலவன்-தனை தொழுது இருந்தார் – சீறா:2868/4
பெண்மை மிக்கவர் இளையர்கள் யாவரும் பெருத்த – சீறா:4637/3
ஆற்றல் மிக்கவர் ஆயிரம் மேலும் நானூற்று – சீறா:4804/1

மேல்


மிக்கவன் (1)

அறிவின் மிக்கவன் போலவும் அறபி வங்கிடத்தின் – சீறா:2502/2

மேல்


மிக்கன் (1)

மிக்கன் என் பெயர் முகம்மது என விளம்பினரே – சீறா:974/4

மேல்


மிக்கன (1)

சிறப்பு மிக்கன செய்த அ தெருத்தலை-தோறும் – சீறா:1114/2

மேல்


மிக்கனவன் (1)

மா மறையின் மிக்கனவன் வந்து மைசறாவை – சீறா:892/2

மேல்


மிக்கனான (1)

விதியின் நுட்ப மறை கற்றவன் புகழின் மிக்கனான அபுகைசவன் – சீறா:1424/3

மேல்


மிக்கா (1)

என் அடியவரின் மிக்கா முகம்மதின் இனிதின் ஈன்ற – சீறா:3098/1

மேல்


மிக்காம் (2)

கன்னல் அம் சுவையின் மிக்காம் திருகையின் கனியை ஏந்தி – சீறா:2244/2
கவ்வை அம் கடலின் மிக்காம் களிப்புற கருதி சொல்வார் – சீறா:3088/4

மேல்


மிக்காய் (5)

ஒக்கலில் உயிரின் மிக்காய் உறு நபிக்கு உணர்த்தினாரால் – சீறா:1267/4
உள்ளமும் உடலும் பூரித்து உருசிக்கும் அமுதின் மிக்காய்
தெள்ளிய கலிமா ஓதி தீன் நிலைக்கு உரியர் ஆனார் – சீறா:1501/3,4
மன்னவன் அபுல் காசீம்-தன் மன தெளிவு-அதனின் மிக்காய்
பன்ன அரும் சிறப்பு வாய்ந்த பங்கய வாவி நண்ணி – சீறா:1574/2,3
இனத்தினும் உயிரின் மிக்காய் என எடுத்து இனிய கூறி – சீறா:2378/2
கிழமை சேர் சுடர்கட்கு உற்ற கிராண காலத்தும் மிக்காய்
பழுதிலாதவனை நோக்கி பண்புடன் தொழு-மின் என்றார் – சீறா:4783/3,4

மேல்


மிக்கார் (5)

நிருபர்_கோன் எழுக என்ன நிகழ்த்த மந்திரத்தின் மிக்கார்
புரவியும் தறுகண் நால் வாய் புகர் முக களிறும் தேரும் – சீறா:1715/1,2
கிரி பொதும்பு இருந்து மாறா கிளர் ஒளி வனப்பின் மிக்கார்
மரு புயன் அப்துல்லாவை கூவி மா நகரம் புக்கி – சீறா:2567/1,2
உடல் அணு நடுக்கம் இன்றி இருந்தனர் உணர்வின் மிக்கார் – சீறா:2591/4
பொன் அடி அடைந்தேன் என்றார் சூழ்ச்சியும் பொறையும் மிக்கார் – சீறா:2777/4
வற்றாது அருள் மிக்கார் நபி புக்கார் மதினத்தில் – சீறா:4337/4

மேல்


மிக்கான் (3)

அந்தரங்கத்தில் சொன்னான் ஆண்மையும் அறிவும் மிக்கான் – சீறா:1064/4
பூதலத்து உயர்ந்த மேன்மை பொறையினில் அறிவில் மிக்கான்
மா தவர் உரைக்கும் வேத வழி முறை ஒழுகி நின்றான் – சீறா:2380/1,2
மெத்தவும் விழுமிது ஆகும் என்றனன் அறிவின் மிக்கான் – சீறா:4867/4

மேல்


மிக்கு (29)

மிக்கு எழில் ஆதம் மேலவன் விதித்த விலகலை பொருந்தினபடியால் – சீறா:131/1
வடிவின் மிக்கு உயர் முகம்மதை கொடுத்தனர் மகிழ்ந்தே – சீறா:478/4
வாதை மிக்கு உள வரும் மொழி மறும் என மறுத்தார் – சீறா:546/4
அந்த மிக்கு உறு பண்டிதன் கேட்ட பின் அடைந்தோர் – சீறா:570/3
எந்நிலத்தினும் மிக்கு உயர் ஏந்து எழில் – சீறா:1188/1
விசயம் மிக்கு உயர் சுறுகுமாம் கூட்டத்தின் வீரர் – சீறா:1227/1
அரசர் மிக்கு உவகை கூர்ந்து அ அணி துகில் இருத்தும் போதில் – சீறா:1260/2
மிக்கு உயர் மறையின் வள்ளல் விளம்ப விண்ணவர்கள் கோமான் – சீறா:1267/1
சித்திரத்தினும் மிக்கு உயர் செவ்வியன் – சீறா:1391/3
மிக்கு உயர் வடிவதாக ஜிபுறயீல் விசும்பில் வந்தார் – சீறா:1725/4
புவியின் மிக்கு உயர் செல்வமும் பெரும் புதுமைகளும் – சீறா:1883/2
விரிதரும் தலை மத்து எறிதரும் தயிரின் மிக்கு உடைந்து அற மிடைந்தனரே – சீறா:1909/4
எறுழின் மிக்கு உயர் ஒட்டகம் மீதினில் ஏற்றி – சீறா:2030/2
உத்தம கிளைக்கு எலாம் உயிரின் மிக்கு என – சீறா:2405/2
வீரம் மிக்கு உயர் பனீகுறைலா எனும் வேந்தர் – சீறா:2911/1
தானம் மிக்கு உயர் தலைவரின் வாழ்ந்திருந்தனரால் – சீறா:2952/4
இடியின் மிக்கு அதிர் முரசுகள் எடுத்தெடுத்து ஏற்றி – சீறா:3108/3
மிக்கு தாதை மற்று உள முதியரை எதிர் விளித்து – சீறா:3424/2
வலிமை மிக்கு உபைதத்தையும் மூன்று அணி வகுத்து – சீறா:3475/2
உறையும் ஆவியின் மிக்கு உயிர் புதல்வியை உதவி – சீறா:3735/2
பொறையின் மிக்கு உயர் மருத்துவ பூம் கொடி-தனக்கு – சீறா:3745/2
வடிவின் மிக்கு எழ இளமையின் இயற்றிய மகிமை – சீறா:4262/2
பிலனும் வையமும் விசும்பும் மிக்கு அதிசயம் பிறப்ப – சீறா:4425/4
அழுதல் கண்டு அவர்க்கு அன்னவர் அன்பு மிக்கு ஆனார் – சீறா:4638/1
தீதுற அகன்றேன் பெற்ற சிறுவரும் பசியால் மிக்கு
பேதுற அடைந்து நொந்து பிதா என அடுத்தால் உள்ள – சீறா:4788/2,3
புந்தி மிக்கு உளீர் புகல் எனில் யான் அவை புகல்வேன் – சீறா:4844/4
அன்றியும் சிலபெயர் மனத்து அறிவின் மிக்கு அவர்கள் – சீறா:4845/3
கனை கழல் வீரர் மிக்கு கணிப்பிலர் அதனினாலே – சீறா:4964/2
ஊற்றம் மிக்கு உளது ஓர் ஒட்டகை-அதனை உவப்பொடு பிலால் இனிது அறுத்து – சீறா:4990/2

மேல்


மிக்குவம் (1)

மிக்குவம் எனும் பேர் அரசு-தம் மதலை வெயில் விடு மணி முடி உதது – சீறா:154/1

மேல்


மிக்குவம்-தம்மிடத்து (1)

மைந்தர் மிக்குவம்-தம்மிடத்து உறைந்திருந்து மாட்சிபெற்று இலங்கியது அன்றே – சீறா:153/4

மேல்


மிக்கொடு (1)

மிக்கொடு வரும் படை பகையினில் உடைந்தோர் – சீறா:3791/2

மேல்


மிக்கோய் (6)

இ நகரியில் தலைவர் யாவரினும் மிக்கோய்
மன்னு கிளையில் பகை வர தவிர்தல் செய்யாது – சீறா:1769/1,2
வேறுபடல் வேத விதி அன்று புகழ் மிக்கோய் – சீறா:1772/4
துவக்கம் முடிவிற்கு ஒரு சுடர் கதிரின் மிக்கோய் – சீறா:1780/4
பொன்_நிலம் புகுதச்செய்யும் புண்ணிய புகழின் மிக்கோய்
கொல் நிலை சிலை கை வேடன் கொடும் பசி தணிப்பேன் என் தாள் – சீறா:2089/2,3
பொருத்தம்-அது அன்று விண்ணும் மண்ணிலும் புகழின் மிக்கோய் – சீறா:2094/4
அறுதியின் மொழிந்து நின்றேன் ஆதி-தன் தூதின் மிக்கோய் – சீறா:2826/4

மேல்


மிக்கோர் (5)

பிருதிவி-தனையே மிக்கோர் பெறும் பதி சுவனம் தன்னில் – சீறா:102/2
புதியவன் உண்மை தூதர் நபிகளில் புகழின் மிக்கோர்
பதி இரண்டினுக்கும் மேலோர் படைப்பு உள எவைக்கும் முன்னோர் – சீறா:1560/2,3
பெறற்கு அரும் வடிவின் மிக்கோர் இளவல் கை பிடித்து விண்ணோர் – சீறா:2769/3
என்னும் நல் மொழிகள் மிக்கோர் இனியன மகிழ்வில் கூற – சீறா:3076/1
பெயரும் அன்சாரிமாரில் பேர்பெறும் தலைமை மிக்கோர்
உயர் இருநூற்றுமுப்பத்தொரு பெயரவரும் கை வாள் – சீறா:3364/2,3

மேல்


மிக்கோன் (3)

தெரிதர விளங்கும் திங்கள் இரவினில் சிறப்பு மிக்கோன்
அருளினில் ஜிபுறயீல் வந்து அரு வரை இடத்தில் வைகும் – சீறா:1256/2,3
அவர்களில் தலைமை மிக்கோன் அகுத்தபு தனையன் நீண்ட – சீறா:4358/1
உளம் பெறு மதியின் மிக்கோன் எழுந்து யான் உவந்து சென்று – சீறா:4872/2

மேல்


மிக்றசு (1)

விளம்பிய மாற்றம் கேட்ட மிக்றசு என்னும் வீரன் – சீறா:4872/1

மேல்


மிக்றசோடு (1)

எழுக என மிக்றசோடு இ இருவரும் மக்கம் புக்கார் – சீறா:4885/4

மேல்


மிக (32)

பெருகிய நபி பட்டமும் மிக பெறலாய் பிரளய பெருக்கெடுத்து எறியும் – சீறா:142/3
குறைபடா உவகை பெருக்கெடுத்து எறிய குளித்து அகம் மிக மகிழ்ந்து எழுந்தார் – சீறா:287/4
நீல் நிற பசந்த இலை மிக நெருங்கி நிரை மலர் சொரிதர காய்த்து – சீறா:358/3
வெம்பியே ஆமினா மிக விசாரமிட்டு – சீறா:513/2
குறைவு இல் ஆதுரத்துடன் அணைக்கவும் அகம் குளிரவும் மிக தானே – சீறா:648/4
உத்தரப்படி பணிகுவன் அவரை என் உயிரினும் மிக காத்து – சீறா:667/3
மிக முனிந்தனன் இவர்-தமை முன்னிலை விலக்குவது உனக்கு ஆகாது – சீறா:673/2
மிக செறி சாந்த மாடம் மேருவை போன்றும் வீதி – சீறா:920/3
பொருத்து நல் மொழி இது-கொல் என்றே மிக புகழ்ந்து – சீறா:956/1
அடியாரினில் எளியேன் மிக உரியேன் என அறைந்தான் – சீறா:986/4
குலம் மிக பெருகும் செல்வமும் வளரும் குறைவு இலா பதவியும் பேறும் – சீறா:993/3
மறை தெரி அறிவன் உரைத்த சொல் கேட்டு மைசறா மனம் மிக மகிழ்ந்து – சீறா:994/1
மிக்க மெய் புதுமை-தனை உணர்ந்துணர்ந்து மிக களித்து அதிசயித்திருப்பார் – சீறா:1248/4
ஓத மற்றும் என்றனை மிக இறுக்கினர் உரத்தின் – சீறா:1287/4
முகம்மதின் செவி புகுதலும் மனம் மிக மகிழ்ந்து – சீறா:2008/2
விருப்பொடும் இரப்ப கேட்டு மிக மகிழ்ந்து இதயம் நோக்கி – சீறா:2264/2
வில்லை வளைத்தார் அம்பினை இட்டார் மிக மேன்மேல் – சீறா:3915/3
வீரர் ஒருத்தர் வந்தனர் எல்லாம் மிக வீழ்த்த – சீறா:3920/1
தனியே கிடந்து பெருமூச்சில் தளர்ந்து பலகால் எண்ணி மிக
துனியே பெருக உறைந்திடுதல் சூழ சமன்று சேனையொடும் – சீறா:4033/1,2
வேண்டும் தீனோர்-தமக்கு நன்மை வேண்டா காபிர்-தமக்கு மிக
பூண்ட நண்பன் யாவருக்கும் பொதுவாய் நின்றோன் மகுபத் என – சீறா:4039/2,3
கல்லாம் என்னும் நெஞ்சம் மிக கரைந்து உள் இருந்த மதி ஓட்டி – சீறா:4044/2
பொல்லா மனத்தன் வாய்மை இல்லா புலையன் எவர்க்கும் மிக பொய்யன் – சீறா:4049/1
அகத்தொடு முகமும் மிக களிப்பு ஏற அகுமது மகிழ்ந்து அணி விசயம் – சீறா:4089/1
பூண்ட வெம் துயரின் வாடிய பெயரை போலவும் மிக முகம் ஒடுங்க – சீறா:4093/2
விரைவுடன் மனையில் சேறி என்று உரைப்ப மிக மகிழ்ந்து எழுந்து போயினரால் – சீறா:4107/4
காரணத்தொடும் தீன் மிக வாழ்க என கழறி – சீறா:4165/1
மிக எய்தியது உன்னால் என வேண்டும் நலன் யாவும் – சீறா:4355/2
வெறி தரு மதத்தால் பேழ் வாய் மிக திறந்து உருத்து பொங்கி – சீறா:4719/3
இவ்வணம் வருத்தம் மிக எய்தி அறல் இன்றி – சீறா:4897/1
மெய் வணம் வருத்தி மிக வெய்துற உலைந்தே – சீறா:4897/2
அணித்து இறபாகு வந்தனர் அடி கீழ் பணிந்தனர் அகம் மிக மகிழ்ந்தே – சீறா:4957/4
ஆற்றல்சால் வரிசை நபி நயினாரும் அருந்தினர் அகம் மிக மகிழ்ந்தார் – சீறா:4990/4

மேல்


மிகல் (1)

மிகல் பெறும் வெற்றியின் பீசபீலுக்காய் – சீறா:3040/1

மேல்


மிகலும் (1)

எண் திசை கிரியொடு மிகலும் கொங்கையர் – சீறா:168/2

மேல்


மிகவும் (4)

உறு மெய் துணைவர் வருவன் எனும் உரையால் மிகவும் மனம் மகிழ்ந்து – சீறா:2550/1
மேலும் எங்கும் மூடின மிகவும் தெரியாமல் – சீறா:3921/4
விடிவது என் என ஓடினர் முறிந்தனர் மிகவும் – சீறா:3987/4
மேவும் நீர் விழி வழிதர கலுழ்ந்தனர் மிகவும் – சீறா:4166/4

மேல்


மிகவே (1)

சூடு சுட்டு மிகவே குதித்து மறி சோபமுற்று அடிகள் பாவ மா – சீறா:4211/1

மேல்


மிகு (18)

மிகு மழை குலம் அடிக்கடி விழிப்ப போல் மின்னி – சீறா:22/2
சங்கையாய் மிகு வரிசையும் பெரும் கொலுத்தனையும் – சீறா:193/3
எ வரம்பினுக்கும் மிகு வரம்பு என வாழ் இலங்கு இழை ஆமினா-தமையும் – சீறா:389/2
மிடித்தவர் பெரியர் ஆதல் மிகு புகழ் கிடைத்தல் கையில் – சீறா:601/3
மிகு புகழ் குவைலிது ஈன்ற மெல்_இயல் களிப்பு பொங்க – சீறா:1036/2
மிடற்றில் உற்ற துகில்-தனை நெகிழ்த்து மிகு வினை கொலை கபடர்-தங்களை – சீறா:1431/1
எள்ளுதற்கு அரிதாய் மிகு வலி படைத்து இங்கு இருந்தனன் இதற்கு முன் ஒரு நாள் – சீறா:2510/1
மிகு படைத்தலைவரும் வேறு உறாது ஒரு – சீறா:3021/2
தரளமும் மிகு விலை சரக்கும் தாங்கிய – சீறா:3297/3
விண்ணிடம் தடவி நின்ற மிகு சலவாத்தின் ஓதை – சீறா:3849/4
விண்ணும் கண்டார் எண்ணார் எண்ண மிகு போர் செய்து – சீறா:3925/1
செய்ய மாண்பு அமைந்த திறன் மிகு துணைவர் சேறலுக்கு ஒருவரும் இலையால் – சீறா:4112/3
ஆடை என்று மிகு தண்மை எய்த உவர் ஆழி வேட்டு உற அணிந்தனள் – சீறா:4215/2
தூசினை தரையின் மேல் விரித்து மிகு சோபமுற்று விழி துஞ்சினார் – சீறா:4218/4
மெய்மை புகழ் நபி நாதரும் மிகு சேனையும் அப்பால் – சீறா:4329/3
திரு மிகு புயத்தீர் யாங்கள் கொடுத்தது சிறியதேனும் – சீறா:4705/2
மிடைபடும் கருத்தினோடும் மிகு மர காவை எல்லாம் – சீறா:4720/2
காவலாளரும் கதம் மிகு சேனை அம் கடலும் – சீறா:4835/2

மேல்


மிகுத்த (9)

கவியால் உரைத்த புகழ் பெறுவார் மிகுத்த கவி அடைவார் கலக்கம் அறவே – சீறா:6/1
மிகுத்த வீரத்தின் உயிர் இழந்திடுதலும் வேண்டும் – சீறா:3813/4
சூரம் மிகுத்த காபிர்கள் எல்லாம் தொலையாத – சீறா:3920/2
வீரம் மிகுத்த வெம் நரகத்தினிடை வீழ்வார் – சீறா:3920/4
வடம் மிகுத்த மனவர் எலாம் – சீறா:4149/3
வாடுபட்டு உலரவே மிகுத்த தரு மாறுபட்டது அ வனத்து அரோ – சீறா:4211/4
விடம் மிகுத்த பணியை மின்னாரினை – சீறா:4237/2
வயம் மிகுத்த அபாலுபானாவை மன் அருளால் – சீறா:4635/3
பயம் மிகுத்த எம் நகருக்கு என்னுடன் வர பணிப்பீர் – சீறா:4635/4

மேல்


மிகுத்தலால் (1)

மனு மிகுத்தலால் சில பரி கயிற்றினை வலிதின் – சீறா:4584/2

மேல்


மிகுத்தவர் (1)

மறம் மிகுத்தவர் வாய் மொழி கேட்டு உளம் – சீறா:4242/3

மேல்


மிகுத்தனம் (1)

மேய தாகம் மிகுத்தனம் இ துயர் – சீறா:4831/3

மேல்


மிகுத்தார் (1)

போரின் மிகுத்தார் சூழ வளைத்தார் பொருவு இல்லா – சீறா:3920/3

மேல்


மிகுத்திடும் (3)

மிகுத்திடும் வரிசை நபி சலவாத்தை விளக்கி வாய் மறாது எடுத்து ஓதி – சீறா:130/3
சதுர் மிகுத்திடும் சந்தையில் – சீறா:4142/2
மறம் மிகுத்திடும் கேளிர்கள்-தமை வரவழைத்து – சீறா:4266/2

மேல்


மிகுத்து (6)

ஆய மெய் மயிர் சிலிர்த்து உடல் தடித்து அடல் மிகுத்து
தூய கொண்டலின் வேகம் உற்று எழுந்தது சோகம் – சீறா:4261/3,4
பருக நல் நீரும் இன்றி பசி மிகுத்து அழகு குன்றி – சீறா:4747/3
அகம் மிசை இருந்து புசித்திட கிடையாது ஆகுலம் மிகுத்து உளம் கலங்கி – சீறா:4751/1
குலவி மெய் பதறி பயம் மிகுத்து அதிர்ந்த குரலொடு மின்னி வாய் வெருவி – சீறா:4753/3
மேக நோவும் மிகுத்து வெளுவெளுத்து – சீறா:4774/1
அழுது மெய் பதறி வாடி அலமரல் மிகுத்து கண்ணீர் – சீறா:4792/1

மேல்


மிகுதாதும் (1)

மதிவத்தி எனும் மிகுதாதும் வாம் பரி – சீறா:3035/3

மேல்


மிகுதி (3)

இந்த ஊருளர் மிகுதி பேர் மணத்தினுக்கு இசைந்தார் – சீறா:224/4
முன் நிலைப்படி மிகுதி காரணங்களை முடிப்பார் – சீறா:1848/4
கட்டினால் மிகுதி வருத்தமுற்று ஒடுங்கி கலங்கினன் மலங்கினன் நெடு நாள் – சீறா:2311/1

மேல்


மிகுந்த (8)

மிகுந்த பேரொளிவு சொரிந்து கால் வீச விளங்கிய முகம்மதை எடுத்து – சீறா:286/3
நானமும் புழுகும் பாளித குலமும் நறை கெட மிகுந்த வாசம்-அதாய் – சீறா:699/1
வரிசைக்கு மிகுந்த செவ்வி முகம்மதின் வடிவை நோக்கி – சீறா:1157/1
விறல் பெரும் படை கொண்டு அபூஜகில் விளைக்கும் வினைகளும் மிகுந்த தந்திரமும் – சீறா:1936/1
வீரம் போட்டு படைக்கலனும் போட்டு மிகுந்த பெரும் சமய – சீறா:4036/1
வயம் மிகுந்த வாள் அசன்-தனக்கு அளித்த நல் வரிசை – சீறா:4161/3
நயம் மிகுந்த தானாபதி-தமை அவர் விடுத்தார் – சீறா:4635/1
இன்னலுற்று உளம் மிகுந்த பசியினால் இடைந்ததாலே – சீறா:4954/1

மேல்


மிகுந்தன (1)

கானினில் அலைந்து திரிந்தனர் சாம காலமும் மிகுந்தன என்றே – சீறா:4748/4

மேல்


மிகுந்து (8)

துக்கமும் மிகுந்து சுவர்க்கமும் இழந்து தொல் உலகு அடைந்து வெவ்வேறு – சீறா:131/3
நெறி நிலை திரியா மருள் மதம் மிகுந்து நெடு நிலம் எங்கணும் பரந்து – சீறா:256/1
பார் பிளந்து விடரே நிறைந்து பணியே மிகுந்து வெளி மீதில் வெண்தேர் – சீறா:4209/2
குலைகுலைந்து நிறை பயம் மிகுந்து அழுது குயின் கணீரொடு திரிந்ததால் – சீறா:4214/4
காயம் நொந்து அரு விடாய் மிகுந்து வரு கால் தளர்ந்து உளம் வருந்தியே – சீறா:4217/2
மேவி நின்ற வல் இருள் அலால் பின்னரும் மிகுந்து
தாவி கீழ் திசை ஊதையும் மேல் நின்ற தனியோன் – சீறா:4578/1,2
இன்னல் மிகுந்து யார்கள் அசுகாபிகள் மற்று யாவர்களும் இரங்கி நிற்ப – சீறா:4676/3
தொழுத பின் அவரை நோக்கி துனி மிகுந்து உலகம் எல்லாம் – சீறா:4783/1

மேல்


மிகும் (6)

மிகும் எனில் இ நில மாக்கள் மதியாலும் வலியாலும் வெல்வது ஆகா – சீறா:1667/3
மிகும் மதி உதுமான் என்பவர் உறூமி பதியினில் மேவி நல் அறிவின் – சீறா:2904/1
சிந்தை நன்கு அருள் கூர்ந்து திறன் மிகும்
அந்த வீரர் அனைவரையும் கடந்து – சீறா:4223/1,2
இன்பம் மிகும் கலிமாவை ஓதி இசுலாமில் உற இணக்கி நாளும் – சீறா:4686/3
மீறிய அறுசிலே தான் மிகும் ஒலியாக நின்று – சீறா:4695/2
வருதி சென்று வலி மிகும் யார்களை – சீறா:4801/2

மேல்


மிகுவித (1)

மிகுவித புதுமைகள் தர ஒட்டையை விளித்து – சீறா:2008/3

மேல்


மிகை (3)

மிகை மனத்தொடு காபிர்கள் தினம்-தொறும் விளைக்கும் – சீறா:2016/3
வெற்றி உணர்ந்தீர் கற்றும் அறிந்தீர் மிகை பாவ – சீறா:3926/1
மிகை மசுவூது அருள் வீரனே என – சீறா:4570/3

மேல்


மிகைத்த (3)

மிகைத்த வேல் விழிக்கு அஞ்சனம் விரித்து எழுதுவரால் – சீறா:1119/4
மிகைத்த கச்சில் முகம்மதின் வீரத்தை – சீறா:1413/3
மிகைத்த வீறு அரி முழை புகுந்து என விறல் நயினார் – சீறா:2209/1

மேல்


மிச்சில் (3)

மற சிலை கரத்தீர் தீனின் மானுடர் வாயின் மிச்சில்
இறைச்சி என்ப அனைத்தும் ஜின்கட்கு உணவு என ஈந்தேன் மேலும் – சீறா:2296/1,2
கறித்த என்பு இறைச்சி மிச்சில் என்பதை களங்கம் இல்லா – சீறா:2296/3
நாவினில் ஊறும் மிச்சில் உமிழ்ந்திடில் நான வாசம் – சீறா:4865/1

மேல்


மிசஃபு (1)

மிடல் உறும் வெற்றி உக்காபு எனும் கொடி மிசஃபு கை கொண்டு – சீறா:3377/1

மேல்


மிசுஅபுவும் (1)

வெற்றி சேரும் அப்பாசு அமுசா மிசுஅபுவும்
மற்று நாலைந்து மைந்தரும் நின்றனர் மாதோ – சீறா:3988/3,4

மேல்


மிசை (71)

திரு ஒளிவு எனும் ஹபீபு நபி முகம்மது அன்று வானர் சிரம் மிசை நடந்து சோர்வுறா – சீறா:5/3
நடமிடு கடின வாசி மிசை வரு சமர சூர நரர் புலி அலியை ஓதுவாம் – சீறா:12/4
சிரம் மிசை இருத்தி வாழ்த்தி செந்தமிழ் பனுவல் செய்வேன் – சீறா:16/4
சந்திர காந்தி செய் பலகையை மடி மிசை தரித்தே – சீறா:97/1
நீடிய ஒளியும் சிறந்து ஒரு சூலில் நிலம் மிசை சீது உதித்தனரே – சீறா:134/4
நிலம் மிசை வீழ்ந்த இனும் சில புதுமை நிகழ்த்துதற்கு அரியது அன்று இரவே – சீறா:261/4
தெள் அமுது அனைய முகம்மது நபியை சபா திரு மடி மிசை கொண்டார் – சீறா:266/4
வேரிய மடி மிசை விருக்கம் ஒன்று அதில் – சீறா:310/2
கதிர் விரித்திட மடி மிசை வைத்து கால் வருடி – சீறா:339/2
நேர்பெற நிரையாய் இருந்த புத்து அனைத்தும் நிலம் மிசை சாய்ந்து உருண்டனவே – சீறா:352/4
மான்மதம் செறிந்து கமழ்தர அலிமா மடி மிசை முகம்மது விளங்க – சீறா:358/1
நேரும் என் மடியில் விருக்கம் ஒன்று எழுந்து நிலம் மிசை கனிகளை சிந்த – சீறா:365/2
நிலம் மிசை எவர்க்கும் கண்ணினில் தோன்றா நீடு உறு நீழலும் தோன்றா – சீறா:371/2
நிலம் மிசை ஹாஷீம் குலம் பெயர் விளங்க நிகர் இலா நேர் வழி விளங்க – சீறா:377/1
பத்திரமாய் என்-தன்னை படி மிசை கிடத்தி கூன் வாள் – சீறா:432/3
படி மிசை ஆயிரம் கலை கொள் பால் மதி – சீறா:497/3
கறை இலா கலை முழுமதி மடி மிசை கவினொடு விளையாட – சீறா:648/2
செல் அலைந்திட பொழிதரு கரம் மிசை செழும் கதிர் வடி வேலும் – சீறா:662/2
நிலம் மிசை கலங்கி உத்துபா வீழ நெடுங்கழுத்தலை வரி வேங்கை – சீறா:677/1
ஓங்கிய உதய கிரி மிசை எழுந்த மதி என ஒட்டகை-அதன் மேல் – சீறா:691/1
நிலம் மிசை கரிய மேகம் ஒன்று எழுந்து நிழல் இவர்க்கு இடுவதும் கண்டோம் – சீறா:695/2
மலை மிசை மூன்று நாள் இருந்து மால் நதி – சீறா:738/1
நிலம் மிசை வழிக்கு காதம் மான்மத நிறைந்து வீச – சீறா:817/3
தரையினில் புகழ் பெறும்படி அணை மிசை சாய்ந்தான் – சீறா:836/4
சீல நபி பாதம் மிசை செம் கண் இணை வைத்து – சீறா:895/2
கலை நிறை மதியாய் மடி மிசை இருப்ப கனவு கண்டு அகம் மகிழ் கதீஜா – சீறா:993/1
நிலை மிசை இவர்க்கே மனைவியாய் இருந்து இ நீள் நிலம் புரப்பது தவறு இல் – சீறா:993/2
நிலம் மிசை கிடையா பெரு வளம் சுரந்து நீள் திரை வாவிகள் திகழ – சீறா:1007/3
மடி மிசை மதி வரும் வரவும் மா மறை – சீறா:1019/1
நிலம் மிசை நபி பெயர் நிறுத்தும் பேர்களுக்கு – சீறா:1021/1
செய மலர் இடைவிடாது சிரம் மிசை சொரிய மாதோ – சீறா:1054/4
சுண்ணமும் மலரும் திகழ் தோள் மிசை
கண்ணின் பேரொளி கான்றது காண் என்பார் – சீறா:1191/3,4
கொள்ளை வெண் கதிர் விட்டு உமிழ் மணி பணியை கொழு மடல் குழை மிசை சுமத்தி – சீறா:1203/2
பாரினில் செறித்த மலர் மிசை நடத்தி பல்லியம் முரசொடு கறங்க – சீறா:1207/3
வண்டு உறை மலர் பஞ்சணை மிசை பொருந்தி மறு இலாது ஒளிர் மதி முகத்து – சீறா:1250/3
பல மலர் தொடை செறிந்த பஞ்சணை மிசை படுத்தி – சீறா:1274/3
எழுக என்றனர் என்ற சொல் சிரம் மிசை ஏற்றி – சீறா:1282/2
மலையல் வள்ளல் நும்மிடத்தினில் வரை மிசை அடைந்த – சீறா:1291/1
பாத பங்கயத்து இணை மிசை சிரம் கொடு பணிந்து – சீறா:1295/2
உடு புறம் பொதிந்த மதி தவழ் மலையின் உச்சியின் நடு மிசை உறைந்து – சீறா:1451/1
நிலம் மிசை விடையாய் தோன்றி நின்ற அ மாயம்-தானே – சீறா:1549/4
ஆனதால் மடி மிசை ஆக்கினேன் நறும் – சீறா:1619/3
எடுத்த முத்திரை பத்திரம் சிரம் மிசை ஏற்றி – சீறா:1699/1
தொன்று தோன்று கஃபா மிசை தோன்றவும் வேண்டும் – சீறா:1856/4
காதலால் இணை அடி மிசை சிரம் முகம் கவிழ்த்தி – சீறா:1863/2
மதியினை பகிர்தர நபி மலை மிசை வானோர் – சீறா:1895/1
சொரி மது விதிர்க்கும் பொரி அரை தருக்கள் சுற்றிய வரை மிசை ஏறி – சீறா:1899/3
நிலம் மிசை உதித்த முகம்மதே எவர்க்கும் நெடியவன் தூதர் என்று இசைத்து – சீறா:1925/2
படி மிசை கிடந்து என் பாடுபடுவதோ அறிகிலேனே – சீறா:2086/4
அமரருக்கு அரசர் மொழிப்படி திருந்த அலி-தமை அணை மிசை படுத்தி – சீறா:2542/1
புகல் அபூபக்கர் செவ்வி மடி மிசை பொருந்த வாசம் – சீறா:2580/3
மடி மிசை துயின்றார் இந்த வளையிடத்து அரவும் கண்டேம் – சீறா:2584/2
மடி மிசை இருந்த காந்தி மதி முகம் அசைந்திடாமல் – சீறா:2589/1
மடி மிசை துயில ஆதி வல்லவன் உரையால் இந்த – சீறா:2596/2
வய வரி குழுவும் கொடுவரி திரளும் மலிந்து என தெரு மிசை மலிந்து – சீறா:3169/3
அடி மிசை பனிநீர் சிந்தி அம் பொன் மென் துகிலால் நீவ – சீறா:3207/1
வடி மிசை ஊட்டும் பஞ்சின் நலத்தக மலர்த்தி நாளும் – சீறா:3216/2
அரசு இளம் குயிலை பூவின் அணை மிசை நடத்தினாரால் – சீறா:3218/4
கலின வாம் பரி மிசை கர கடுத்தலையுடனும் – சீறா:3539/1
செயிர் அறும் புகழ் பேரனை மடி மிசை சேர்த்தி – சீறா:4161/2
தாங்கிய எழில் ஆயத்து தலை மிசை கொண்டு இழிந்தார் – சீறா:4198/3
அடி கமல மிசை வணங்கி எழுந்து ஒருபால் நின்று அகங்கை ஏந்தி வானத்து – சீறா:4533/3
விந்தையாய் அசைத்து பாதம் மிசை சுசூதிட்டது அன்றே – சீறா:4730/4
அகம் மிசை இருந்து புசித்திட கிடையாது ஆகுலம் மிகுத்து உளம் கலங்கி – சீறா:4751/1
இகல் அற எடுத்து மனை மிசை புதைத்தோர் இதய பங்கையம் களிப்பு என்ன – சீறா:4751/3
தலைமகவு அளிக்க தாய்மனைக்கு உற்ற தனையள் போல் தரை மிசை அடுத்து – சீறா:4753/2
மின்னுடன் இடியும் முழக்கிட திகிரி மிசை திரி கதிரவன் மறைந்து – சீறா:4754/1
கூறும் இரு காலின் மிசை கொப்புளம் நிரம்ப – சீறா:4896/3
சீல நபி பாதம் மிசை சென்னி கொடு சேர்த்தி – சீறா:4901/3
குயின் உறைந்து அலறும் வரை மிசை ஏறி குன்று உறழ் மாடங்கள் தோன்றும் – சீறா:4929/1
உழை அதள் பள்ளி அணை மிசை பயில உவலையின் படல் கதவு அடைக்கும் – சீறா:5005/1

மேல்


மிசையே (1)

பொன் குடத்தில் எடுத்து அமுத கதிர் கிரண மலை மிசையே பொழிவ போல – சீறா:1129/2

மேல்


மிஞ்சவே (1)

விற்றதே தொகை மிஞ்சவே – சீறா:4156/4

மேல்


மிஞ்சி (1)

தரும் கொடை நயினார் கீர்த்தி சகம் எலாம் பரந்து மிஞ்சி
நெருங்கியே விசும்பில் அண்ட முகடு உற நிறைந்தவே போல் – சீறா:21/1,2

மேல்


மிஞ்சிய (3)

நந்தி மிஞ்சிய விலங்கு இனம் கொடுகி மெய் நடுங்கும் – சீறா:25/4
மிஞ்சிய நறை சேர் கலவை அற்புதமாய் வீசுவது ஏது என வினவ – சீறா:4115/2
அந்தம் மிஞ்சிய நபியிடத்து அணுகவும் நாணி – சீறா:4641/2

மேல்


மிஞ்சு (7)

மிஞ்சு இருள் படலம் துண்ட விதுவினுக்கு உடைந்து பின்னர் – சீறா:3931/3
மிஞ்சு பயகாம்பர் மற வேந்தர் படை சூழ – சீறா:4138/3
சூர் மலிந்து விளையாடல் மிஞ்சு கழல் தோய்வு அரும் கொடிய கானமே – சீறா:4209/4
மிஞ்சு தின்மை செய் மேலவர் கையுறின் – சீறா:4245/1
மிஞ்சு ஆரண மொழி ஆரமுது இஃது என்ன விரைந்து – சீறா:4333/3
மிஞ்சு கதி வினை பயனோ உலகம் எங்கும் பெரும் காட்சி விரித்த கோவே – சீறா:4528/3
மிஞ்சு தூஷணங்களாக வெகுண்டு அபூபக்கர் சொன்னார் – சீறா:4855/4

மேல்


மிஞ்சும் (1)

மிஞ்சும் வல் வினை என திசை-தொறும் விழி பரப்பி – சீறா:2638/3

மேல்


மிடல் (12)

மிடல் என சினந்து சீறி வீர வேல் தட கை வில்லால் – சீறா:1495/3
மிடல் உடை குபிரர் அகம் முகம் கருக்கி விண்ணகத்து இனிது எழுந்ததுவே – சீறா:1916/4
மிடல் உறும் கதிர் வாள் முகம்மது பொருட்டால் விளைக்கும் காரணத்தினுக்கு இருந்த – சீறா:1950/3
மிடல் அரி உழையில் சிக்கி மிடைந்து என மிடைந்து செவ்வி – சீறா:2075/3
மிடல் உடை வீரர்கள் சிலரும் வெண்ணிலா – சீறா:3264/3
உவமை இல் மிடல் ஹமுசா வந்து உற்றவை – சீறா:3268/1
மிடல் உறும் வெற்றி உக்காபு எனும் கொடி மிசஃபு கை கொண்டு – சீறா:3377/1
மிடல் உடை கதிர் வெள் வேலும் வில்லொடும் மிடைய தாங்கி – சீறா:3420/2
மிடல் உடை திறல் அபசி வெம் படையொடும் விளைந்த – சீறா:3783/2
மிடல் தாங்கிய நபி முன் செல எழில் தாங்கிய வீரர் – சீறா:4326/4
மிடல் உடை கவசம் உடலிடத்து அணிந்து வெண்டலை மூளையில் தோய்ந்த – சீறா:4444/3
தூண்டிய சீற்ற தீ ஒன்று தாங்கி ஏகினர் மிடல் உடை சூரர் – சீறா:4447/4

மேல்


மிடலவர் (1)

மிடலவர் சைது எனும் வீர கேசரி – சீறா:1312/3

மேல்


மிடலொடும் (1)

மிடலொடும் கிரி ஒன்று விரும்பி வாங்கி நீ – சீறா:4551/3

மேல்


மிடற்றில் (2)

மிடற்றில் உற்ற துகில்-தனை நெகிழ்த்து மிகு வினை கொலை கபடர்-தங்களை – சீறா:1431/1
கருவி மென் மிடற்றில் தீண்டா காரணர் இசுமாயீல்-தம் – சீறா:1761/1

மேல்


மிடற்றினில் (1)

எஞ்சல் இல் புகழோய் மிடற்றினில் அணிந்து இங்கு எய்தினன் வேறு இலை என்றான் – சீறா:4115/4

மேல்


மிடற்று (1)

மிடற்று எழில் கவர வந்த மின் என மிளிர்ந்து தோன்றும் – சீறா:3213/2

மேல்


மிடறு (2)

வெள்ளி வெண் கவரி விரிந்த போல் பாளை மிடறு ஒசிவன கமுகு ஒரு-பால் – சீறா:1004/3
நீட்டு இலை மிடறு சாய்த்த நெடும் கதிர் தினையின் சார்பில் – சீறா:3382/1

மேல்


மிடித்தவர் (1)

மிடித்தவர் பெரியர் ஆதல் மிகு புகழ் கிடைத்தல் கையில் – சீறா:601/3

மேல்


மிடித்து (1)

மிடித்து நொந்த சிற்றெறும்பு ஒரு மூச்சுவிட்டது போல் – சீறா:19/3

மேல்


மிடிமை (1)

மிடிமை ஆகுதல் சரதம் மின் அவிர் கதிர் வேலீர் – சீறா:1668/4

மேல்


மிடிமையின் (1)

மிடிமையின் தமியேன் மொழி செவி கேட்ப வேண்டும் என்று உரை விளம்புவரால் – சீறா:4094/4

மேல்


மிடிமையும் (1)

மிடிமையும் தவிர்ந்தோம் பாக்கியம் பெற்றோம் வேண்டுவ பிறிது இலை என்றார் – சீறா:387/4

மேல்


மிடியார்க்கு (1)

நெஞ்சின் மகிழ்வுற்று மிடியார்க்கு உதவி நேசம் – சீறா:4138/2

மேல்


மிடியினன் (1)

மிடியினன் பசி அடைத்திருக்கும் மெய்யினன் – சீறா:3236/2

மேல்


மிடியும் (1)

பிணியொடும் மிடியும் உடைந்தன தேகம் பெருத்து இனிது இருக்கும் அ நாளில் – சீறா:5017/4

மேல்


மிடுக்கு (2)

மிடுக்கு அகன்றிட பயத்தொடும் அரிவையை விளித்து – சீறா:1273/2
மிடுக்கு அற தோற்று நின்றார் வெற்றியும் பெறுவர் அன்றோ – சீறா:4368/2

மேல்


மிடை (1)

வெருவி ஓடின கைசு எனும் படை மிடை மிடைந்தே – சீறா:594/4

மேல்


மிடைதர (1)

பரியும் சேனையும் மிடைதர அபூஜகல் படையும் – சீறா:3440/3

மேல்


மிடைதலில் (4)

பரியொடும் பரி மிடைதலில் பார் இடம் இலையால் – சீறா:3801/1
தெரியும் வீரர்கள் மிடைதலில் செலும் வழி இலையால் – சீறா:3801/2
விரியும் வெண் குடை மிடைதலில் வெயில் பகல் இலையால் – சீறா:3801/3
எரியும் செம் கதிர் வேல் மிடைதலில் இருள் இலையால் – சீறா:3801/4

மேல்


மிடைந்த (5)

மிடைந்த இ கொறி நின்னதோ பிறரதோ விளம்பு என்று – சீறா:2640/2
தண்டம் வேலொடு குந்தம் வாள் தனு படை மிடைந்த பாயும் – சீறா:3852/1
திண் திறல் பரியினோடும் சேவகர் மிடைந்த வண் கை – சீறா:3852/2
கொண்ட வெண் குடைகளோடும் கொடி திரள் மிடைந்த எங்கும் – சீறா:3852/3
மண்டு பேரியங்கள் யாவும் மஞ்சொடு மிடைந்த அன்றே – சீறா:3852/4

மேல்


மிடைந்தனரே (1)

விரிதரும் தலை மத்து எறிதரும் தயிரின் மிக்கு உடைந்து அற மிடைந்தனரே – சீறா:1909/4

மேல்


மிடைந்து (8)

விரியும் மெல் இழை பூணொடு பூண் பல மிடைந்து
பொருது உரிஞ்சதில் பொன் பொடி உதிர்வன போலும் – சீறா:70/3,4
கொடி மிடைந்து அசை புரிசை சூழ் நகரினை குறுகி – சீறா:478/2
கந்துகமொடு உந்தும் இரதங்களும் மிடைந்து
தந்தி இனமும் பிடிகளும் தலைமயங்கி – சீறா:882/1,2
வாரியின் மதங்கள் சிந்தி வாரணம் மிடைந்து செல்ல – சீறா:928/1
அவிர் ஒளி கொடி மிடைந்து அடர அண்ணலார் – சீறா:1140/1
மிடல் அரி உழையில் சிக்கி மிடைந்து என மிடைந்து செவ்வி – சீறா:2075/3
மிடல் அரி உழையில் சிக்கி மிடைந்து என மிடைந்து செவ்வி – சீறா:2075/3
தெரிப்ப அரும் தொகுதி தலைவரும் பரியும் திரளுறும் சேனையும் மிடைந்து
மருப்பு உடை கரட மத கரி அனைய மன்னர்கள் முறிந்தனர் மயங்கி – சீறா:3557/3,4

மேல்


மிடைந்தே (1)

வெருவி ஓடின கைசு எனும் படை மிடை மிடைந்தே – சீறா:594/4

மேல்


மிடைபடும் (1)

மிடைபடும் கருத்தினோடும் மிகு மர காவை எல்லாம் – சீறா:4720/2

மேல்


மிடைமிடைந்திட்டு (1)

வெற்றி வாள் அபித்தாலிபு மனம் மிடைமிடைந்திட்டு
உற்ற தம் கருத்தொடும் அயற்கு உரைத்திடாது உறைந்தார் – சீறா:1379/3,4

மேல்


மிடைமிடைந்தும் (1)

வெம் சுரத்திடை மிடைமிடைந்தும் வேதநூல் – சீறா:1485/2

மேல்


மிடைய (4)

வல்லியின் கொடி போல் அமரர்-தம் மகளிர் மருங்கு இரு-பாலினும் மிடைய – சீறா:1010/4
தான வாரணமும் பரிகளும் மிடைய சுற்றமும் தழீஇ வர போந்தார் – சீறா:1197/4
பல கதி பரியும் அரசரும் மிடைய பாவலர் இனிது வாழ்த்து எடுப்ப – சீறா:1198/3
மிடல் உடை கதிர் வெள் வேலும் வில்லொடும் மிடைய தாங்கி – சீறா:3420/2

மேல்


மிடையும் (2)

திண் திறல் பரியும் சேனையும் மிடையும் திமஸ்கு இறை அவன் இடம் சேர்ந்தான் – சீறா:1933/3
மிடையும் சேனை இ வீதி பொறாது என – சீறா:4810/2

மேல்


மிடைவார் (1)

ஒளிவிடு நகைகள் கிடுகிடென்று அடிப்ப உடல் படபடவென மிடைவார் – சீறா:4757/4

மேல்


மிண்டு (3)

மிண்டு தந்தையர் சொல் மாற்றல் என்பதோர் வெறுப்பினானும் – சீறா:2790/3
மிண்டு பேசிய அபூஜகல் காபிர் வெம் படையும் – சீறா:3553/2
மிண்டு வல் வினை மூட்டுமோ அறிகிலம் மெய்யா – சீறா:4608/4

மேல்


மித்திரன் (2)

மித்திரன் எழுந்த குண திசை தொடுத்து வீழ்தரு குட திசை தொடுத்து – சீறா:268/3
மித்திரன் குட திசை எழ கறுபு அருள் வீரன் – சீறா:4617/1

மேல்


மித்துருக்கு (1)

மித்துருக்கு உயிர் தரு வேந்தர்_வேந்த வாழ் – சீறா:4552/3

மேல்


மிதந்த (1)

அல்லி சேதாம்பல் தடத்திடை மிதந்த ஆமையின் புறம் என ஒளிர – சீறா:3574/3

மேல்


மிதந்தன (1)

குருதி மண்டின குடர் மிதந்தன – சீறா:3962/4

மேல்


மிதந்து (1)

இரு கரையும் வழிந்த கடல் குளித்து நடுவு எழுந்து மிதந்து எதிரே புக்கு – சீறா:1091/2

மேல்


மிதி (1)

மேல் அறுந்தன வளை முகம் அறுந்தன மிதி கால் – சீறா:3491/2

மேல்


மிதிக்கும் (1)

மிதிக்கும் நெஞ்சினில் வெட்டும் குளம்பு உற – சீறா:4498/2

மேல்


மிதித்தலில் (1)

கோறல் செய்திடு-மின் என்றனர் அறு_கால் குளித்திடும் மிதித்தலில் பிதிர்ந்து – சீறா:5024/3

மேல்


மிதித்தில (1)

புடவி மேல் குரம் பட மிதித்தில சில புரவி – சீறா:3886/4

மேல்


மிதித்து (3)

மிதித்து அலைந்திடும் கொம்பு ஒப்ப விரைவினில் நடந்து சென்றார் – சீறா:428/4
மிதித்து என இல் என வேகம் மீக்கொள – சீறா:1141/3
தூறுகள் மிதித்து அடி துடித்து உழலுவாரும் – சீறா:4896/4

மேல்


மிதித்தும் (1)

மிதித்தும் சோடு அணி முகத்தினில் தாக்கியும் விரவில் – சீறா:3486/1

மேல்


மிதிப்படும் (1)

மிதிப்படும் வளையில் காலை விடுத்திலர் கடித்தும் என்ன – சீறா:2592/1

மேல்


மிர்கமதம் (1)

மலி புகழ் அரசர் சீயம் மிர்கமதம் நறை குலாவு மறை நபி மருகராகி வாழ் – சீறா:13/3

மேல்


மிருகங்கட்கு (1)

முன்னிய பசிகள் தீர்த்து ஓர் மிருகங்கட்கு உயிர் கொடாமல் – சீறா:2069/3

மேல்


மிருது (1)

மத மலை கரத்தின் வனப்பினை அழித்து மாறு அரு மிருது மென்மையினில் – சீறா:1970/2

மேல்


மிழற்றி (1)

மாரி அருந்தி பண் மிழற்றி வரி வண்டு உறங்கும் மலர் கூந்தல் – சீறா:1335/1

மேல்


மிழற்றிட (1)

வரும் குயில் குடைந்து தளிரினை கறித்து மழலை வாய் மிழற்றிட விசையில் – சீறா:5008/3

மேல்


மிழற்றும் (3)

பாட்டு அளி மிழற்றும் தேறல் படலை வீற்றிருந்த வீர – சீறா:1073/1
பண் இசை மிழற்றும் ஞிமிறு இனம் இருந்த பான்மை ஒத்திருந்தன மாதோ – சீறா:3158/4
பாட்டு இசை மிழற்றும் செ வாய் பசும் கிளி கடியும் ஓதை – சீறா:3382/3

மேல்


மிளிர் (1)

தீ என மிளிர் கண் கொடிப்புலி பேழ் வாய் சிக்கிய துருவையின் பல கால் – சீறா:2881/1

மேல்


மிளிர்ந்து (3)

மிடற்று எழில் கவர வந்த மின் என மிளிர்ந்து தோன்றும் – சீறா:3213/2
தடித்து என மிளிர்ந்து வெய்ய தழல் என கதிர்கள் மேன்மேல் – சீறா:3950/3
மாகத்து உடு ஒத்தே மிளிர்ந்து இமைக்கும் மணி வடமும் – சீறா:4336/2

மேல்


மிளிர (2)

மணி கணம் நிரைத்து வைத்திடும் குடுமி வானகத்து இரவியின் மிளிர
பிணித்த பொன் காந்தி உமிழ்தரும் கொடிகள் பெரும் துகள் படலங்கள் துடைப்ப – சீறா:3166/1,2
புயல் செறிந்து ஏகா வியோமம் மீது எழுந்தான் புடை உடு கணம் பல மிளிர
கயவு உடை கமலம் திளைத்திடும் படு கா கடையினில் கலித்து எழும் வனசம் – சீறா:4989/2,3

மேல்


மிளிரும் (1)

மேகமூடு உறை மின் என பிறழ்ந்து ஒளி மிளிரும் – சீறா:1116/4

மேல்


மின் (79)

விரிந்த காவியில் வீழ்வது மின் அனார் விழிக்கு – சீறா:68/3
சொரியும் மென் மலர் தாதுக்கள் உதிர்ந்தன சுடர் மின்
விரியும் மெல் இழை பூணொடு பூண் பல மிடைந்து – சீறா:70/2,3
மின் இடை நுடங்க சிலம்பு ஒலி சிலம்ப மேகலை திரள் மணி கதிர் செம்பொன்னொடும் – சீறா:82/1
மணி வளை தட கை துவர் இதழ் கனத்த வன முலை மின்கள் மின் எனவும் – சீறா:88/3
வான் கிடந்து அனைய மின் ஒளிர் வடி வாள் மன்னன் றாகுவாவிடத்திருந்து – சீறா:146/2
மின் அவிர் மௌலி விளங்கு தாபித்து வேந்தர் பெற்றெடுத்த மா மதலை – சீறா:151/3
மின் அவிர் கண மணி விளங்கு மா முடி – சீறா:169/3
கரைத்த மின் தெளித்து எழுத்து என சிறக்கும் மக்காவின் – சீறா:180/1
கஞ்ச மின் அனார் கணத்துடன் வாயிலை கடந்தே – சீறா:198/3
துணித்து மின் குலங்கள் மறைபடாது எழுந்த தொகுதியோ என அறிகிலமால் – சீறா:239/4
மின் ஒளி கரப்ப கதிர் விடும் கலையை விரைந்து ஒரு தட்டினில் ஏந்தி – சீறா:245/2
மின் அவிர் சுவன வானவர் கூண்டு விளங்கு ஒளி இன மணி தசும்பில் – சீறா:282/1
மின் நுணங்கு வேல் ஆரிதை வெற்றியால் வியத்தி – சீறா:350/3
வேரி அம் குழல் மா மேக மின் என மேனி தேம்பி – சீறா:427/3
விட்டு ஒளிர் விளங்கும் மின் ஆமினா நறும் – சீறா:515/1
மின் என ஒளி மறாத விளங்கு_இழை கதிஜா என்ன – சீறா:615/1
மின் தவழ் அலங்கல் வேலிர் சோலை-வாய் விடுதியாகி – சீறா:798/3
செதுக்கி மின் உமிழ் தமனிய தசும்புகள் செறித்து – சீறா:874/2
மின் தவழ் மணி கலை விலை என்று ஓதியது – சீறா:899/3
மின் அனார் பாடி ஆடும் வீதி-வாய் மலிந்த தோற்றம் – சீறா:930/2
மின் ஒளி மழுக்கும் சோதி மெய் முகம்மதும் அன்பாக – சீறா:936/2
மின் ஒளி கரக்கு மாட மேனிலை செறித்த கல்-பால் – சீறா:940/3
இருள் துணித்து எழுந்த மின் என பிறழும் இழை பல திருத்தலர் இருண்ட – சீறா:1013/1
மேகமூடு உறை மின் என பிறழ்ந்து ஒளி மிளிரும் – சீறா:1116/4
மின் கால வெண் கிரண குப்பாயம் எடுத்து அணிந்த வியப்புதானே – சீறா:1131/4
வெண் முகில் கவிகையில் பிறந்த மின் என – சீறா:1150/1
மின் ஒளி கரக்கும் சோதி மெய் எழில் முகம்மது என்னும் – சீறா:1155/2
மேக மண்டல மின் என தோன்றினார் – சீறா:1178/4
மின் தவழ்வது என ஒளிரும் கதீஜா நாயகி உதரம் விளங்க சோதி – சீறா:1218/2
மின் இலங்கிய மக்க மா நகரினில் வியப்பா – சீறா:1240/2
விரி கதிர் உமிழும் பைம் பூண் மின் அகத்திடத்தில் சார்ந்தார் – சீறா:1272/4
வீதி-வாயிடை புகுந்து மின் என நடந்து மா மறை விளக்கிடும் – சீறா:1436/2
மின் அமர்_உலகிடை மேய பின் நெடு – சீறா:1472/2
வான் குதித்த மின் என கர வாள் ஒளி வயங்க – சீறா:1530/3
மின் ஒளிர் மாளிகை சுவனம் மேவுவர் – சீறா:1613/2
மிடிமை ஆகுதல் சரதம் மின் அவிர் கதிர் வேலீர் – சீறா:1668/4
மின் என கதிர் தரு மணி குயிற்றி வெண் கதையால் – சீறா:1702/1
விரைவின் ஏகி அ தூதனை விளித்து மின் அணி பூண் – சீறா:1708/3
மின் அகத்திருந்து எழும் மேக நீழலில் – சீறா:1794/3
மின் என பிறழும் மடந்தையருடனும் விரி திரை பசும் கடல் அனைய – சீறா:1949/3
விரி கடல் பெரு நீர் உண்டு சூல் உளைந்த விசும்பிடை உதித்த மின் குலம் போல் – சீறா:1954/2
புனை மணி பிறழ மின் என நுடங்கி புதுமையில் தோன்ற நின்றனளால் – சீறா:1973/4
மின் அவிர் செம் மலர் பத தாள் முகம்மது-தம் பெரும் மறை தீன் வேர்விட்டு ஓடி – சீறா:2168/3
மின் கடந்து இலங்கும் சோதி விரிந்த மெய் முகம்மது என்னும் – சீறா:2268/3
மின் தவழ்ந்து அணி ஆரங்கள் வீசிட – சீறா:2331/2
மின் அவிர் வடி வாட்கு ஆவி விருந்துசெய்திடுவன் வேறு – சீறா:2372/2
மின் அவிர் பேழை நூற்றின் மேலும் உண்டு அரும் காப்பு இன்றி – சீறா:2783/3
மின் அவிர் கிரண செப்பு ஒன்று இருந்த மென் விரலால் தீண்டி – சீறா:2785/2
மின் உரு கொண்ட கன்னி விளங்கு_இழை நலத்தை நாடி – சீறா:3059/1
மின் இனம் திரு வில்லொடும் முகிலொடும் விரைவில் – சீறா:3138/1
வரு படை நாப்பண் எறிந்த பாவாடை வானம் மின் என திசை மலிய – சீறா:3163/4
பரிசையும் மேக மின் என ஒளிரும் பட்டையத்தவர் ஒரு மருங்கும் – சீறா:3170/2
மிடற்று எழில் கவர வந்த மின் என மிளிர்ந்து தோன்றும் – சீறா:3213/2
அந்தரத்து இழிந்த மின் போல் அலியிடத்து இருத்தினாரால் – சீறா:3220/4
மின் இலங்கிய வேல் செம் கை முகம்மது விடுத்த வேந்தர் – சீறா:3342/3
பாரின் மின் குலம் பரந்து என வேல் ஒளி பரப்பி – சீறா:3458/3
தொடு கை வாள் ஒலி மின் என பல துடிதுடிப்ப – சீறா:3484/3
காரின் மின் எனும் அயிலொடும் பரியினை கடவி – சீறா:3525/3
மின் பிறந்து என பிறந்தன வாள் ஒளி விளக்கம் – சீறா:3548/4
மின் திகழ் அயிலொடு வேறு வீதியில் – சீறா:3638/3
மின் அயில் வேலொடும் வீர வாளொடும் – சீறா:3647/3
சூலின் வான மின் எனும் கதிர் வேல் அபாசுபியான் – சீறா:3785/2
மின் அணிந்து இலங்கும் மேக குடை நிழல் விளங்கி நின்றார் – சீறா:3877/4
சூல் உறு மஞ்சின் மின் என வீசும் சுடர் வாளால் – சீறா:3917/4
மின் அவிர்ந்து ஒளிரும் வாள் கை விறல் குதாதாவில் தோன்றும் – சீறா:3935/1
அரி ஒன்று மின் ஏறு ஏந்தி புகுந்து என அநீக வேலை – சீறா:3951/3
மின் இலங்கு வேல் அடல் அமுசா எனும் வீரர் – சீறா:3993/3
மின் ஆர் வேலீர் இ நாளும் வேவுபார்க்க இங்கு வந்தான் – சீறா:4050/1
மின் அனாள் இரங்க எடுத்து அடக்கினர் மேல் வெய்யவன் குண திசை எழுந்தான் – சீறா:4121/4
மின் பிறந்த வெண் துகிலினை பெறுகவும் வேண்டி – சீறா:4172/3
மின் திறந்த வை வாள் கொடு இ வீரனை – சீறா:4224/1
மின் அணி கஞ்சுகி இலங்க பிடரிடை முத்திரை இலங்க விரும்பி நாளும் – சீறா:4303/2
நெய் தலை வேல் மறித்தறிகை தண்டு தனு சக்கரம் மின் நெடிய வாளும் – சீறா:4311/2
மின் தட வாள் கையிடத்தினில் தாங்கி அரி என விரைவினில் ஏகி – சீறா:4467/2
மலி வண்டு ஏந்தி மின் வாழ்தரும் வாள் உரீஇ – சீறா:4480/2
மின் இல் வந்த வல் இருளுமோ வெளி தரவிலையால் – சீறா:4599/3
மின் இலகும் அயில் வடி வாள் மஆது மகன் சகுது-தம்பால் விரைவில் சென்று – சீறா:4675/3
மேயது ஓர் வடிவம் காணேன் மின் இடை மடவார் முன்னம் – சீறா:4763/2
மின் திகழ் வடி வாள் ஏந்தும் முகைறத்து விறல் செய் வாளால் – சீறா:4858/3

மேல்


மின்கள் (2)

மணி வளை தட கை துவர் இதழ் கனத்த வன முலை மின்கள் மின் எனவும் – சீறா:88/3
வில் புருவக்கடை மின்கள் நாயகம் – சீறா:175/2

மேல்


மின்செய் (1)

வென்றி வாசியும் மின்செய் ஆரமும் – சீறா:3965/3

மேல்


மின்பர்-அதனிடை (1)

ஆர்த்து எழுந்து ஓதி மின்பர்-அதனிடை இருக்கும் போதில் – சீறா:4742/2

மேல்


மின்ன (6)

கலை மதி பொருவா மெய்யில் கதிர் புடை விலகி மின்ன
நிலம் மிசை வழிக்கு காதம் மான்மத நிறைந்து வீச – சீறா:817/2,3
மங்குல் அகல் ஒண் கதிர் மணி கடகம் மின்ன
அங்கை இணை தொட்டு இனிது அழைத்து அருகு இருத்தி – சீறா:1766/2,3
கத களி கரியின் கோட்டு கதிர் முலை பணிகள் மின்ன
புது கடி நறவம் சிந்தும் பூம் குழல் மாலை சோர – சீறா:3172/2,3
வெண் நகை தரளம் நக்க விரி இதழ் பவளம் மின்ன
ஒள் நிற பசலை கால ஒளிர் நுரை மாலை சிந்த – சீறா:3174/2,3
பரி குழாம் நெருங்க சேந்த படைக்கலன் செறிந்து மின்ன
மரு கமழ் படலை திண் தோள் மலை என வளர வள்ளல் – சீறா:3366/2,3
தம் பொறி என கதிர் தயங்கு மணி மின்ன – சீறா:4890/4

மேல்


மின்னவே (1)

பழுத்த பொன் நிலை பல் மணி மின்னவே
அழுத்து வாயிலின் மேல் இரண்டாம் வரி – சீறா:1186/2,3

மேல்


மின்னார் (1)

மான் கிடந்த மை விழி மின்னார் மால் கொளும் அமுறும் – சீறா:4915/2

மேல்


மின்னாரினை (1)

விடம் மிகுத்த பணியை மின்னாரினை
படிறு இழைத்த பகைஞரை கொற்றவ – சீறா:4237/2,3

மேல்


மின்னி (2)

மிகு மழை குலம் அடிக்கடி விழிப்ப போல் மின்னி
ககனம் எண் திசை அடங்கலும் பரந்து காலூன்றி – சீறா:22/2,3
குலவி மெய் பதறி பயம் மிகுத்து அதிர்ந்த குரலொடு மின்னி வாய் வெருவி – சீறா:4753/3

மேல்


மின்னிட (3)

மின்னிட வெண் மணி தொடையும் செம் மணியும் போல் காந்தி விரிந்த தோற்றம் – சீறா:1134/2
வடி நெடும் கதிர் அயில் மலிந்து மின்னிட
கொடியவர் திசையினை குறுகினார் அரோ – சீறா:3015/3,4
மின்னிட விரைவின் வந்தான் வீரத்தின் இறுதியில்லான் – சீறா:3941/4

மேல்


மின்னிய (4)

மின்னிய கதிர் வாள் தாங்கி விரைக என சகுது வீறா – சீறா:2366/2
மின்னிய கதிர் வாள் தாங்கி போயதும் மீண்டவாறும் – சீறா:2385/3
மின்னிய தவிசினில் ஏற்றி வீரத்தின் – சீறா:2400/2
மின்னிய சிறை எனும் ஆடை மீதினில் – சீறா:3256/3

மேல்


மின்னின் (1)

விட்டு ஒளிர் மின்னின் ஒப்ப விரைவினில் இருவர் வந்தார் – சீறா:406/4

மேல்


மின்னினும் (1)

சூல் அடுத்த மை மின்னினும் சுடர் இலங்கியதே – சீறா:3509/4

மேல்


மின்னினை (3)

மின்னினை பொதிந்து என அரையில் வீக்கினார் – சீறா:502/4
மின்னினை மறைத்து சற்றே வெளியிடை கிடந்தது எல்லாம் – சீறா:3217/2
வெள் நிலா கதிரின் கற்றை மின்னினை பொதிந்தது என்ன – சீறா:3367/2

மேல்


மின்னு (6)

மின்னு செம் கதிர் வேல் அபூபக்கரும் விறலார் – சீறா:2625/2
மருங்குல் மின்னுக்கு மின்னு பொன் இழை துகில் வனைவார் – சீறா:3144/1
மின்னு குற்று உடைவாள் எடுத்து அரையினில் விசித்து – சீறா:3460/3
மின்னு பூண் அணி பாத்திமா வயிற்றினில் விளங்கி – சீறா:4160/3
மின்னு கோணம் விரல்கள் சிவப்பு உற – சீறா:4228/2
மின்னு கதிர் வாள் வீழ கொடி வீழ திறம் வீழ வீரம் வீழ – சீறா:4318/2

மேல்


மின்னுக்கு (1)

மருங்குல் மின்னுக்கு மின்னு பொன் இழை துகில் வனைவார் – சீறா:3144/1

மேல்


மின்னுடன் (1)

மின்னுடன் இடியும் முழக்கிட திகிரி மிசை திரி கதிரவன் மறைந்து – சீறா:4754/1

மேல்


மின்னும் (5)

மின்னும் வெம் கதிர் வேலவர் நூற்றினும் மேலார் – சீறா:2704/2
இடியொடும் மழையும் மின்னும் தோன்றிட இருண்ட மேகம் – சீறா:2844/4
மின்னும் ஆடக கட்டியை தெரிதர விரைவில் – சீறா:2944/2
மின்னும் வாள் வலி எனக்கு அருள் என விளம்பினரால் – சீறா:3466/4
மின்னும் கவிகை நிழல் கவிப்ப எழுந்தார் விரி சாமரை ஓங்க – சீறா:4037/4

மேல்


மின்னே (2)

முல்லை அம் குழல் கதீஜா மின்னே முதல் – சீறா:1300/3
திரு எழில் கமல போதில் திகழ் சிறை அனமே மின்னே
பொருவு அரு மணியே பொன்னே பூவையே கிளியே மானே – சீறா:4689/2,3

மேல்


மின்னை (4)

மின்னை பார்த்த விளங்கு_இழையார்கள் என்-தன்னை – சீறா:1194/3
மறைபடா விளக்கை சேணின் வானிடத்து உறையா மின்னை
கறைபடா மதியை நாளும் கவின் குடியிருந்த கொம்பை – சீறா:3209/2,3
மின்னை வெண் சோதி சுற்றி கிடந்து அன துகிலை வீக்கி – சீறா:3210/1
பிரிவு உறா பொன்னை மின்னை பெண் நலம் கனியை எய்தா – சீறா:3218/2

மேல்


மினுமினுத்து (1)

மங்குலில் பெருகி விடத்தினும் கருகி வரி அறலினும் மினுமினுத்து
தங்கிய இதழி திரளினும் திரண்டு சைவல தொடரினும் தழைத்து – சீறா:1956/1,2

மேல்


மினுமினென்ற (1)

மினுமினென்ற முப்பழத்தினை தேனொடும் விரவி – சீறா:3142/3

மேல்