மோ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

மோக்குரைத்த (1)

மோக்குரைத்த வெம் கோளரி முன்னமே – சீறா:4504/4

மேல்


மோக (1)

மோக துயருடனே நினைவு அறியா வகை முழுதும் – சீறா:4349/1

மேல்


மோகமுற்ற (1)

மோகமுற்ற தனி றப்பனா உனது முனிவினால் இவர்கள்-தங்களை – சீறா:1437/2

மேல்


மோகமுற்று (1)

மோகமுற்று யான் கண்டிடும் கனவினை மொழி என மொழிவாயே – சீறா:664/4

மேல்


மோகன (1)

முத்த வெண் நகை கனி மொழியும் மோகன
சித்திர அப்துல்லா என்னும் செம்மலும் – சீறா:178/2,3

மேல்


மோசன (1)

மோசன பதம் முற்றினார் – சீறா:4153/3

மேல்


மோட்டு (4)

இரும்பு என செறிந்த மோட்டு உடல் களிறு முழங்கிய இரு வரை கடந்து – சீறா:4452/2
மோட்டு மா முரசம் கொட்டி முறைமுறை இனைய சாற்ற – சீறா:4629/1
முலை மறா பறழும் புனிற்று இளம் கன்றும் மோட்டு இள மேதியும் கமம் சூல் – சீறா:5004/3
இரும்பினை வடித்த மோட்டு உடல் எருமை இரும் கருங்குவளை அம் கறித்து – சீறா:5007/1

மேல்


மோடு (1)

மோடு உயர் பேழை பூட்டின் முத்திரை விடுத்து வல்லே – சீறா:2784/3

மேல்


மோதகத்தை (2)

மோதகத்தை வாங்கி அனசு உவந்து துகிலிடை பொதிந்து முருகு வாய்ந்த – சீறா:3751/1
முன்னர் வைத்த பாத்திரத்தின் இருந்த மோதகத்தை நறை முளரி கையால் – சீறா:3756/1

மேல்


மோதகத்தொடு (1)

திரிகையின் கனி மோதகத்தொடு சில எடுத்து – சீறா:583/2

மேல்


மோதகமும் (1)

திரிகை கனியும் மோதகமும் திரட்டி துகிலில் பொதிந்து தமது – சீறா:2553/1

மேல்


மோதி (6)

புரி நரம்பு இசை யாழ் தொண்டகப்பறையும் பொடிபட துறுகலின் மோதி
விரி தலை குறவர் குழாத்தொடும் வெருட்டி விளைந்த முக்கனி சத_கோடி – சீறா:28/2,3
மோதி காலினால் எற்றியே அணை இடம் முறிக்கும் – சீறா:30/4
மோதி வீழ்ந்தது முகம் தரைபட முனங்கியதே – சீறா:464/4
மோதி இடறும் கரு முகில் குழல் முடித்தே – சீறா:880/2
மோதி வந்து அபித்தாலிபுக்கு உரிமையின் மொழிவான் – சீறா:2196/4
நெருங்கிய கங்குல் போதில் நிறைந்த வல் இருளை மோதி
இரும் கதிர் கரங்கள் ஆர எடுத்தெடுத்து எறிந்து சிந்தி – சீறா:2294/1,2

மேல்


மோதிட (1)

முன் இட நதிகள் நிறைந்து மேல் எழுந்து மோதிட செறு கரை தகர்த்து – சீறா:4754/3

மேல்


மோதிரங்கள் (1)

முகிழ் அலர் பூத்தது என்ன முத்து மோதிரங்கள் இட்டார் – சீறா:3214/4

மேல்


மோதினனால் (1)

முதிரும் வெம் கதிர் அயில் கொடு முனிந்து மோதினனால் – சீறா:3540/4

மேல்


மோது (1)

மோது பேரலை மடுக்களும் சுனைகளும் முருகு ஆர் – சீறா:3454/2

மேல்


மோதுதலும் (1)

மோதுதலும் கேளாது ககுபாவில் தூக்கி வைத்த முறியை வாங்கி – சீறா:2177/3

மேல்


மோதும் (2)

அடையலர் ஒடுங்க மோதும் படை முரசு அதிரும் ஓதை – சீறா:927/1
மோதும் வாய்மையின் அபூலகுபு எனும் அவன் முரணி – சீறா:2048/1

மேல்


மோதுவன் (1)

முறுக்குவன் அங்கை வாளான் மோதுவன் என்றே ஆடை – சீறா:2811/3

மேல்


மோந்தார் (1)

வீரமும் திறலும் வாய்த்த மென் கரத்து அணைத்து மோந்தார் – சீறா:1037/4

மேல்


மோந்து (4)

முறைமுறை மோந்து முத்தமிட்டு உவந்த முழு மலர் செழும் முகம் நோக்கி – சீறா:287/2
குனிந்து பாதலம் மோந்து உடல் குழைத்து அற தூங்கி – சீறா:1537/2
ஒல்லையின் ஓடி நீங்காது ஒருத்தல் இன்றளவும் மோந்து
புல்லினை கறியா நீரும் புசித்திடாது இருந்து தேடி – சீறா:2085/1,2
அலைதர வளைத்து மோந்து வேட்கையை அகற்றிற்று அன்றே – சீறா:2102/4

மேல்


மோந்துகொண்டார் (1)

பண் தரும் திரு வாய் முத்தி பற்பல்கான் மோந்துகொண்டார் – சீறா:2775/4

மேல்


மோந்துபார்ப்பவர் (1)

வவ்வுற நினைந்து மோந்துபார்ப்பவர் போல் வாள் கொடு வயிற்றிடை வழங்க – சீறா:4116/3

மேல்


மோலி (2)

முடங்கு உளை பகு வாய் மடங்கல் அம் கொடியார் மோலி மாலிக்கு சார்பு இருந்த – சீறா:159/4
உரம் அறுந்தும் பதம் அறுந்தும் புயம் அறுந்தும் மருங்கு அறுந்தும் ஒளிரும் மோலி
சிரம் அறுந்தும் முகம் அறுந்தும் பிடர் அறுந்தும் துடை அறுந்தும் சிதைந்து நீண்ட – சீறா:4315/2,3

மேல்


மோலியர் (1)

சூட்டும் மோலியர் சொல்லினார் – சீறா:4155/4

மேல்


மோலியும் (1)

சித்திரம் திகழ் செய்ய மோலியும்
பத்தி பாய் ஒளி பைம் பொன் ஆரமும் – சீறா:3967/1,2

மேல்


மோனம் (1)

பந்தனையாக யாரும் படைக்கலன் துறந்து மோனம்
சிந்தையின் அமைத்து வேறு தெரிந்து இடை நோக்கா வண்ணம் – சீறா:4190/2,3

மேல்