2.நுபுவ்வத்துக் காண்டம்

தேவையான படலத்தின்
மீத சொடுக்குக

1.நபிப்பட்டம் பெற்ற படலம்
2.தொழுகை வந்த வரலாற்றுப் படலம்
3.தீனிலை கண்ட படலம்
4.உமறுகத்தாபு ஈமான் கொண்ட படலம்
5.உடும்பு பேசிய படலம்
6.உத்துபா வந்த படலம்
7.அபீபு மக்கத்துக்கு வந்த படலம்
8.மதியை அழைப்பித்த படலம்
9.தசைக்கட்டியைப்
பெண்ணுருவமைத்த படலம்

10.அபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம்
11.ஈமான் கொண்டவர்கள் அபாசா
ராச்சியத்துக்குப் போந்த படலம்

12.மானுக்குப் பிணைநின்ற படலம்
13.ஈத்தங்குலை வரவழைத்த படலம்
14.ஒப்பெழுதித் தீர்த்த படலம்
15.புத்து பேசிய படலம்
16.பிராட்டியார்பொன்னுலகு புக்க படலம்
17.பருப்பத ராசனைக் கண்ணுற்ற படலம்
18.அத்தாசு ஈமான் கொண்ட படலம்
19.ஜின்கள் ஈமான் கொண்ட படலம்
20.காம்மாப் படலம்
21.விருந்தூட்டு படலம்

1. நபிப்பட்டம் பெற்ற படலம்


$2.1.1

#1241
சோதியாய் எவைக்கும் உள் உறை பொருளாய் தோற்றமும் மாற்றமும் தோன்றா
ஆதி-தன் பருமான் கொண்டு இனிது ஓங்கி அமர் இழிந்து அமரருக்கு அரசன்
மேதினி புகுந்து முகம்மது-தமக்கு விளங்கிய நபி எனும் பட்டம்
கோது அற கொடுப்ப தீன் பயிர் விளைத்த கூறு எலாம் விரித்து எடுத்துரைப்பாம்

மேல்
$2.1.2

#1242
புள்ளி வண்டு அருட்டம் உண்டு இசை பயிலும் பொழில் திகழ் மக்க மா புரத்தில்
தெள்ளிய குறைஷி குலத்தினில் உதித்த செம்மலுக்கு உறைந்த பேராண்டு
விள்ள அரும் கணக்கு ஆறாறு இரண்டு அதின் மேல் மேலவன் திருவுளப்படியால்
வெள்ளிடை-அதனில் சிறிது ஒளி திரண்டு விழித்திடும் விழிக்கு எதிர் தோன்றும்

மேல்
$2.1.3

#1243
தெரிந்திடும் ஒளியை தம் இரு விழியால் தெரிதர நோக்குவர் காணாது
இருந்திடும் பின்னும் தோற்றிடும் இதனை எவரொடும் விடுத்து எடுத்துரையார்
பொருந்து உள களிப்பும் அச்சமும் பிறப்ப புந்தியில் தேர்குவர் பொருவா
கரும் தலை கவை நா அரவு உடல் தடிந்த கவின் கரதல முகம்மதுவே

மேல்
$2.1.4

#1244
திசை அனைத்தினும் அந்தரத்தினும் இருந்த திசையினும் இரவினும் பகலும்
இசையுற சிறிது தொனிகளே பிறக்கும் எதிர்ந்து நோக்கிடில் உரு தெரியாது
அசையினும் பிரியாது அடுத்து உறைந்தவர்-தம் செவியினும் அ தொனி சாரா
வசை அறும் குறைஷி குலத்துறும் குரிசில் மனத்தினில் அதிசயம் பெறுவார்

மேல்
$2.1.5

#1245
இவ்வண்ணம் சிறிது பகல் நிகழ்ந்ததன் பின் எழில்பெறும் வரி சிலை குரிசில்
மை வண்ண விழியாரிடத்தினில் உறையா மற்றொருவரை உடன் கூட்டா
செ வண்ண கருத்தில் தனி இருப்பதற்கே சிந்திக்கும் அதன்படி தேறி
எ வரையிடத்தும் காலினில் ஏகி எழில்பெற தனித்தனி இருப்பார்

மேல்
$2.1.6

#1246
உலகினில் பிறந்து வரும் எழு வகைக்கும் உயிர் எனும் சலதர கவிகை
நிலைபெறு நிழலார் முகம்மது தனித்து நிரை கதிர் தவழ் கிறா மலையில்
நலனுற உலவி மனன் உறும்படியே நாலு நாள் இரண்டு நாள் இருந்து
சிலை என வளைந்த சிறு நுதல் கதீஜா திருமனை இடத்தினில் வருவார்

மேல்
$2.1.7

#1247
வரிசைக்கும் கதிக்கும் முதல் திருத்தலமாய் மதித்திட வரும் கிறா மலையில்
உருசிக்கும் கனி வாய் மட மயில் கதீஜாவுடன் வர முகம்மதும் எழுந்து
தெரிசிக்க பொருந்தும் அமரர்-தம் உருவும் தெரிந்திடாது அவணிடை இருந்து
பரிசுத்தம் அனைய குயிலொடும் தாமும் பகல் பொழுது ஆற்றியே வருவார்

மேல்
$2.1.8

#1248
மக்க நல் நகரும் தெருத்தலை மதிளும் வழியிடை கிடந்த கல் அனைத்தும்
புக்கு நல் இடத்தில் தெரிந்தவை எவையும் புகழொடும் முகம்மது-தமக்கு
தக்க நல் பொருளாய் உறு சலாம் உரைக்கும் தனி தொனி இரு செவி தழைப்ப
மிக்க மெய் புதுமை-தனை உணர்ந்துணர்ந்து மிக களித்து அதிசயித்திருப்பார்

மேல்
$2.1.9

#1249
முருகு அவிழ் புய வள்ளலுக்கு உறும் வருடம் முப்பதிற்றொன்பதின் மேலாய்
தெரிதரும் திங்கள் ஆறும் சென்றதன் பின் தினம்-தொறும் புதுமையதாக
மரு மலர் செழும் தார் கனம் குழல் கதீஜா எனும் மயில் மண மனையிடத்தில்
இரு விழி துயில மண்ணிடை தோன்றாது எழில்பெற கனவுகள் காண்பார்

மேல்
$2.1.10

#1250
வெண் திரை கடலில் அமுதமும் பொருவா வியனுறு மெல் இதழ் கதீஜா
கொண்டுறு மயலுள் உயிரினுமுயிராய் குலவிய முகம்மது நயினார்
வண்டு உறை மலர் பஞ்சணை மிசை பொருந்தி மறு இலாது ஒளிர் மதி முகத்து
கண் துயில் பொழுதில் கனவுகள் அனைத்தும் கண்டது கண்டதாய் பலிக்கும்

மேல்
$2.1.11

#1251
துய்யவன் அருளால் ஆதம் மா மனுவாய் தோன்றிய அவனியின் வருடம்
ஐயம் இல் ஆறாயிரத்தினில் ஒரு நூற்றிருபத்துமூன்றினில் அழகா
வையகம் மதிக்கும் முகம்மதின் வயது நாற்பதில் றபீயுல் அவ்வலினில்
எய்திய எட்டாம் தேதியில் சனியின் இரவினில் கிறா மலையிடத்தில்

மேல்
$2.1.12

#1252
நித்திலம் நிரைத்த இரு சிறை ஒழுங்கு நீள் நிலா கதிர்கள் விட்டு ஒழுக
வித்துரும தாள் சிறந்து அணி திகழ வில் உமிழ் கரம் கிடந்து இலங்க
பத்தி விட்டு எறிக்கும் செம் மணி இரு கண் பார்வையில் கருணை வீற்றிருக்க
சித்திர வடிவை சுருக்கி மானுடர் போல் ஜிபுறயீல் அவ்விடத்து அடைந்தார்

மேல்
$2.1.13

#1253
மானுட வடிவாய் வந்த வானவர்க்கு அரசன் செவ்வி
ஆனன குரிசில் என்னும் அகுமதின் வதனம் நோக்கி
நானம் முங்கிய மெய் சோதி நாயகா வரையின் கண்ணே
தீன் உற இருக்கின்றீரோ என்று சேண் அடைந்தார் அன்றே

மேல்
$2.1.14

#1254
மற்றை நாள் பருதி ராவில் கிறா மலையிடத்தில் வானோர்
கொற்றவர் உறைந்து வள்ளல் குவவு தோள் வனப்பு நோக்கி
உற்ற என் உயிரே நீர் இங்கு உறைந்தினிரோ என்று ஓதி
வெற்றி வெண் விசும்பு கீறி மேலுலகிடத்தில் சார்ந்தார்

மேல்
$2.1.15

#1255
விண்ணகத்து அரசர் தோன்றும் விதி முறை அறியா வள்ளல்
மண்ணகத்து இவரை நேரும் வனப்பினில் விசையில் அந்த
கண் அகன் வான நாட்டும் காண்குற அரிதே என்ன
எண்ணமுற்று இதயத்து ஆராய்ந்து இருப்பிடம் பெயர்ந்திராரால்

மேல்
$2.1.16

#1256
வரிசை நேர் றபீவுல் அவ்வல் மாதம் ஈரைந்து நாளில்
தெரிதர விளங்கும் திங்கள் இரவினில் சிறப்பு மிக்கோன்
அருளினில் ஜிபுறயீல் வந்து அரு வரை இடத்தில் வைகும்
குரிசில்-தன் கமல செம் கண் குளிர்தர எதிர்ந்து நின்றார்

மேல்
$2.1.17

#1257
நானிலம் பரப்பும் சோதி நாயக கடவுள்-தம்மை
வானகத்து இருந்த சோதி வந்து சந்தித்ததே போல்
கான் அமர் துண்ட செம் கண் கலை நிலா தவழும் யாக்கை
ஈனம் இல் ஜிபுறயீல் வந்து இறையவன் சலாமும் சொன்னார்

மேல்
$2.1.18

#1258
மரகத பத்தி கோலி வச்சிர தாரை சாத்தி
உரக மா மணிகள் நாப்பண் ஒளிபெற குயிற்றி வெள்ளை
தரள மென் புருடராகம் பல மணி தயங்க தாக்கி
சொரி கதிர் பரப்பும் சோதி துகிலினை கரத்தில் கொண்டார்

மேல்
$2.1.19

#1259
செகமதில் விண்ணில் ஒவ்வா செழும் துகில்-அதனை ஏந்தி
அகம் மகிழ்ந்து இனிது போற்றி அமரருக்கு அரசர் வாய்த்த
முக மதி நோக்கி ஆதி முறை மறை கலிமா ஓதி
முகம்மதை விளித்து செவ்வி வல கரத்திடத்தில் வைத்தார்

மேல்
$2.1.20

#1260
மரை மலர் வதன சோதி முகம்மதின் கரத்தில் வானோர்
அரசர் மிக்கு உவகை கூர்ந்து அ அணி துகில் இருத்தும் போதில்
திரை முகில் வரையும் விண்ணும் திகாந்தமும் நடுவும் மீக்கொள்
இரை கடல் ஏழும் பாரும் இலங்கு ஒளி விரிந்தது அன்றே

மேல்
$2.1.21

#1261
மண்டலம் புரக்கும் செங்கோல் முகம்மதின் வதனம் நோக்கி
விண் தலம் பரவும் வேத நபி எனும் பட்டம் நும்-பால்
கொண்டலே குதா இன்று ஈந்தான் எனும் மொழி கூறி பின்னும்
அண்டர் வாழ்த்து எடுப்ப செவ்வி ஆரணம் புகறி என்றார்

மேல்
$2.1.22

#1262
செப்பிய வசனம் கேட்டு ஜிபுறயீல் முகத்தை நோக்கி
முப்படி விளங்கும் வண்ணம் முழு மணி குரிசிலே யான்
இ பெரும் புவியில் தீட்டும் எழுத்தில் ஒன்று அறியேன் ஆதி
ஒப்பு அரும் வேதம் என்பது ஓதினேனல்லன் என்றார்

மேல்
$2.1.23

#1263
சிறை நிறம் சுருக்கி தோன்றும் ஜிபுறயீல் முதலோன் கூறும்
முறை வழி முகம்மது அன்பால் முன் இருந்து இரு கை ஆர
இறுகுற தழுவி பின்னர் இயம்பும் என்று இயம்ப தோன்றல்
மறை முதல் வசனம் நாவின் வழக்கினனல்லன் என்றார்

மேல்
$2.1.24

#1264
எதிர் இருந்து அரசர் பின்னும் இடருற தழுவி நோக்கி
மதியினும் இலங்கும் சோதி முகம்மதே ஓதும் என்ன
புதுமையின் அரிய பேறே புவியிடத்து அரிய வேதம்
கதிபெற கண்டும் கேட்டும் கற்று அறிந்திலன் யான் என்றார்

மேல்
$2.1.25

#1265
கேட்டு வானவர் கோமானும் கிளர் ஒளி வனப்பு வாய்ந்த
தோள் துணை நெருங்க உள்ளம் துனிவர உடலம் சோர
பூட்டிய கரங்கள் சேப்ப புல்லி நம் நபியை நோக்கி
மீட்டும் மெய்ம்மறை நூல் மாற்றம் விரித்து எடுத்து இயம்பும் என்றார்

மேல்
$2.1.26

#1266
நெருக்கிவிட்டதன் பின் வேத நெறி நபி உள்ளத்துள்ளே
திரு கிளர் புவியில் விண்ணோர் தெளிதரும் அறிவும் முன் நூல்
இருக்கினில் அறிவும் தோன்றி இடன் அற பெருகி நல்லோர்
உரு கொளும் அரசை நோக்கி ஓத வேண்டுவது ஏது என்றார்

மேல்
$2.1.27

#1267
மிக்கு உயர் மறையின் வள்ளல் விளம்ப விண்ணவர்கள் கோமான்
இக்றவு எனும் சூறத்திலிருந்து நாலாயத்து இன்ப
மெய்க்கு உற மாலம் யகுலம் எனுமட்டும் விளம்புவீர் என்று
ஒக்கலில் உயிரின் மிக்காய் உறு நபிக்கு உணர்த்தினாரால்

மேல்
$2.1.28

#1268
எழுத்தினில் தவறா சொல்லி இயன் முறை சிதகா இன்பம்
பழுத்த பண் ஒலியால் தீய்ந்த பயிர் உயிர் பெருவதாக
செழித்த மெய் ஜிபுறயீல்-தம் செவி அகம் குளிர கல்வி
அழுத்திய பொருள் உள் தோன்ற அகுமதும் ஓதினாரால்

மேல்
$2.1.29

#1269
உறைந்த மெய்ம்மறையின் தீம் சொல் முகம்மது ஆண்டு உரைப்ப செவ்வி
அறம் தழைத்தன நன் மார்க்கத்து அரும் புவி தழைத்த வெற்றி
திறம் தழைத்தன விண்ணோர்கள் செயல் தழைத்தன திகாந்த
புறம் தழைத்தன நம் தீனின் புகழ் தழைத்து ஓங்க அன்றே

மேல்
$2.1.30

#1270
பறவைகள் இனங்கள் போற்ற விலங்கு இனம் பலவும் போற்ற
உறைதரும் தருக்கள் போற்ற ஊர்வன எவையும் போற்ற
நிறைதரும் அலகை போற்ற நிரை திரை பரவை போற்ற
மறைவு இலாது அமரர் போற்ற முகம்மதும் ஓதினாரால்

மேல்
$2.1.31

#1271
உயிரினுக்குயிராய் வந்த முகம்மதும் உரைப்ப கேட்டு
செயிர் அறு ஜிபுறயீல் தம் மெய் மயிர் சிலிர்ப்ப ஓங்கி
முயல் அகல் மதியம் போன்ற முகம்மதை போற்றி வேக
வெயிலவன் கதிரில் தூண்டி மேலுலகு இடத்தில் புக்கார்

மேல்
$2.1.32

#1272
அரியவன் தூதரான அகுமது கலக்கமுற்று
மரு மலர் சோலை சூழ்ந்த மால் வரை இடத்தை நீங்கி
எரி பகல் கதிர்க்கால் தோன்றா இரவினில் தனித்து வல்லே
விரி கதிர் உமிழும் பைம் பூண் மின் அகத்திடத்தில் சார்ந்தார்

மேல்
$2.1.33

#1273
நடுக்கமுற்று மெய் சுரத்தொடும் குளிர்தர நலிந்து
மிடுக்கு அகன்றிட பயத்தொடும் அரிவையை விளித்து
திடுக்கமுற்றது துகில் கொடு பொதி மனம் தெளியாது
இடுக்கண் யாது என அறிகிலன் என்றனர் இறசூல்

மேல்
$2.1.34

#1274
தலைவர் கூறிய மொழி செவி புக உடல் தயங்கி
நிலைகுலைந்து எழுந்து அயர்வொடு நெட்டுயிர்ப்பு எறிந்து
பல மலர் தொடை செறிந்த பஞ்சணை மிசை படுத்தி
சலவை கொண்டு உற போர்த்து அருகு இருந்தனர் தையல்

மேல்
$2.1.35

#1275
நொந்து மெய் அகம் பதறிட கணவரை நோக்கி
எந்தன் ஆருயிரே இகல் அடல் அரி ஏறே
சிந்தை சிந்தி மெய் திடுக்கொடு மதி முகம் தேம்ப
வந்தவாறு எவை உரைக்க என்று உரைத்தனர் மட மான்

மேல்
$2.1.36

#1276
மலையின் உச்சியின் இருந்ததும் ஒருவர் வந்து அடுத்து
நிலைபெறும் துகில் கரத்து அளித்து உரைத்ததும் நெருங்க
உலைவுற தனி அணைத்ததும் உரைத்து உள பயத்தால்
அலமலர்ந்தனன் என்றனர் அரசருக்கரசர்

மேல்
$2.1.37

#1277
துணைவர் கூறிய மாற்றமும் மறைகள் சொற்றதுவும்
இணைபடுத்தி நேர்ந்து இன்பம் என்று உளத்தினில் இருத்தி
பிணையை நேர் விழி கனி மொழி சிறு பிறை நுதலார்
அணையும் தம்-வயின் துனி பல அகற்றினர் அன்றே

மேல்
$2.1.38

#1278
தாங்கும் மெய்ப்பொருள் அறிவு அருள் குணம் தயவு இரக்கம்
நீங்கிடாது அறம் பெருகிட வளர்க்கும் நல் நெறியீர்
ஓங்கு மால் நிலத்திடத்து உறைபவர்களால் உமக்கு
தீங்கு உறாது என உரைத்தனர் மடந்தையர் திலதம்

மேல்
$2.1.39

#1279
சிந்து தேன் மொழி செழும் குயில் தூது எனும் திருப்பேர்
வந்ததாம் என தெருளுற முகம்மது நயினார்
உந்து வெம் குபிர் களைவது இ தரம் என உயர் வான்
இந்து நேர் இருள் ஒடுக்கி விண் எழுந்தனன் இரவி

மேல்
$2.1.40

#1280
நிற கரும் கழுநீர் குவிதர நிறை வனசம்
திறக்க மெல் இதழ் வெய்யவன் எழுந்த பின் திருவும்
உறக்கத்து என்னும் அ வேந்தனை கொணர்க என ஒருவன்
அற கடும் விசைகொண்டு எழுந்து ஏகினன் அன்றே

மேல்
$2.1.41

#1281
மடங்கல் ஏறு எனும் முகம்மதும் வரி பரந்து இருண்ட
விடம் கொள் வேலினை நிகர்த்தும் மை பொரு விழி மயிலும்
உடன் கலந்து இனிது அழைத்தனர் வருக என்று உணர்வு
துடங்கு மும்மறை தெளிந்தவற்கு உரைத்தனன் தூதன்

மேல்
$2.1.42

#1282
பழுது இலா குல பாவை தம்-பாலினில் பரிவாய்
எழுக என்றனர் என்ற சொல் சிரம் மிசை ஏற்றி
வழுவு இலா மறை உறக்கத்து என்று ஓதிய வள்ளல்
தழுவு மெய் கதிர் முகம்மது மனை-வயின் சார்ந்தான்

மேல்
$2.1.43

#1283
கற்ற வேதியன் வருதலும் கிளி_மொழி கதீஜா
பொன் தொடி கரம் சாய்த்து இவண் உறைக என புகன்று
மல் தட புய முகம்மது வரையிடை புதுமை
உற்ற செய்தி உண்டு என்றனர் அறிக என்று உரைத்தார்

மேல்
$2.1.44

#1284
பதியின் மிக்க நல் மறையவன் முகம்மதை நோக்கி
துதிசெய்து உம்முழை வந்தவாறு அனைத்தையும் தொகுத்து
முதிர்தரும் புகழோய் உரைக என்றலும் முறையா
விதியவன் திருத்தூதர் நன்று என விளம்புவரால்

மேல்
$2.1.45

#1285
வரையினில் தனி இரவினில் இருக்கையில் மதியின்
உரையின் மிக்கவர் ஒருவர் வந்து என் பெயர் உரைத்து
பரிவினால் இவண் உறைந்தினிரோ என பகர்ந்து
விரைவினில் மறுநாளும் அ உரை விளம்பினரால்

மேல்
$2.1.46

#1286
இரு தினத்தினும் உரைத்தவர் மறுதினத்து எய்தி
தெரி மணி துகில் எனது செம் கரத்தினில் சேர்த்தி
அரிய நாயகன் நபி எனும் பெயர் உமக்கு அளித்தான்
உரிமையீர் இனி ஓதும் என்று உரைத்தனர் உவந்தே

மேல்
$2.1.47

#1287
ஓதும் என்ற சொல் கேட்டலும் ஓதினனலன் என்று
ஓத முன் இருந்து இரு கையின் இறுக்கி முன் உரை போல்
ஓதும் என்றலும் பின்னரும் ஓதினனலன் என்று
ஓத மற்றும் என்றனை மிக இறுக்கினர் உரத்தின்

மேல்
$2.1.48

#1288
மறுத்தும் ஓதும் என்று உரைத்திட மறுத்தனன் மறுத்தும்
இறுக்கி ஓதும் என்று உரைத்தனர் எதிர் இருந்து எளியேன்
திறக்க ஓதுவது எவை என உரைத்தனன் தீட்டாது
அறத்தினுட்படும் சொல்லினை குறித்து எடுத்து அறைந்தார்

மேல்
$2.1.49

#1289
அந்த நல் உரை கேட்டனன் அவர் உரைப்படியே
பிந்திடாது எடுத்து ஓதினன் செழும் பொருள் பிறக்க
எந்தையீர் என போற்றி விண் அடைந்தனர் எழிலோய்
வந்தவாறு இவை என எடுத்துரைத்தனர் வள்ளல்

மேல்
$2.1.50

#1290
புவியினில் பெரும் புதுமையதாகிய பொருளாய்
நபி உரைத்த சொல் அனைத்தையும் மனத்தினில் நயந்து
குவிதரும் கதிர் செழும் மணி கொடி_இடை கதீஜா
செவி குளிர்ந்திட மனம் களித்திட பொருள் தெரிவான்

மேல்
$2.1.51

#1291
மலையல் வள்ளல் நும்மிடத்தினில் வரை மிசை அடைந்த
தலைவர் நாயகன் தூதரில் ஜிபுறயீல் சரதம்
பல கதிர் துகில் கரத்து அளித்தது நபி பட்டம்
விலக ஓதும் என்று ஓதியது உமக்கு உறும் வேதம்

மேல்
$2.1.52

#1292
உடல் உலைந்திட இறுக்கியது உமதிடத்து இனிமேல்
வடுவின் மும்முறை இடுக்கண் வந்து உற்றது மாறும்
படியிடத்தில் நும் இனத்தவர் பெரும் பகை விளைத்தும்
இடருறும்படி ஊரைவிட்டு எழ துரத்திடுவார்

மேல்
$2.1.53

#1293
என்ற இ மொழி மறையவன் உரைத்தலும் இசை தேன்
துன்று மென் மலர் புய நபி மனத்தினில் துணுக்குற்று
ஒன்றும் என் இனத்தவர் பகை எனக்கு வந்து உறுமோ
பொன்றுமோ என உரைத்தலும் முதியவன் புகல்வான்

மேல்
$2.1.54

#1294
முன்னர் மா மறை நபி எனும் பெயர் முதியவருக்கு
இன்னல் வந்து உறாதிலது நும்மிடத்து இடர் அணுகா
நல் நலம் பெறு நபிகள் நாயகமும் நீர் அலது
மன்னு மால் நில நபி இனி இலை என வகுத்தான்

மேல்
$2.1.55

#1295
மா தவத்து உறும் பொருள் எனும் முகம்மது நபி-தம்
பாத பங்கயத்து இணை மிசை சிரம் கொடு பணிந்து
கோது இலா கதீஜா-தமை இரு கரம் குவித்து
தீது இலாது எழுந்து ஏகினன் பல கலை தெளிந்தோன்

மேல்

2 தொழுகை வந்த வரலாற்றுப் படலம்

$2.2.1

#1296
உடையவன் ஒருவன் தன் உண்மை தன்மையை
நடைவர விளக்கி நல் வழியில் யாரையும்
அடைதர அழைத்திடற்கு அனுப்பும் தூதர் என்று
இடைவரும் அமரர்_கோன் ஈய்ந்த பட்டமே

மேல்
$2.2.2

#1297
ஒருத்தன் நாயகன் அவற்கு உரிய தூது எனும்
அருத்தமே உரை கலிமா அ நிண்ணய
பொருத்தம் ஈமான் நடை புனைதலாம் அமல்
திருத்தமே இவை இசுலாமில் சேர்தலே

மேல்
$2.2.3

#1298
இ பொருள் பொதிந்தது ஓர் இறைமை தாங்கிய
மை புயல் கவிகையின் வள்ளல் தம்மிடத்து
ஒப்புரவு ஒழுகுவார்க்கு உரிமையார்க்கு எலாம்
செப்பினர் வெளிப்படா சிறப்பிற்றாகவே

மேல்
$2.2.4

#1299
ஒருவனே நாயன் மற்று ஒழிந்த தேவதம்
இருமையும் பேறு இலாது இழிவு கொண்டது என்று
அரு மொழி விளக்கலால் ஆய்ந்து நம் நபி
திருமொழி உண்மையில் சிந்தை செய்குற்றார்

மேல்
$2.2.5

#1300
வல்லியம் எனும் முகம்மது-தம் மா மணம்
புல்லிய புய வரை படர்ந்த பொன் கொடி
முல்லை அம் குழல் கதீஜா மின்னே முதல்
இல்லறத்தொடும் இசுலாமில் ஆயினார்

மேல்
$2.2.6

#1301
மனு முறை நெறி வழுவா அபூபக்கர்
எனும் முகில் கண் துயில் காலை இன்புற
தினகரன் மதி மடி இருப்ப செவ்விய
கனவு கண்டு எழுந்து அகம் களிப்புற்றார் அரோ

மேல்
$2.2.7

#1302
இன்ன தன்மையின் கனவு யாது-கொல் என
மன்னிய மனத்தினன் மதியில் தேர்குவர்
பன்னுவர் புதுமையில் பலன் உண்டாம் என
உன்னுவர் தெளிந்து ஒருவருக்கும் விண்டிலார்

மேல்
$2.2.8

#1303
பொன்_நகரத்தினும் புவியும் காணுறா
நல் நலம் உண்டு நம்மிடத்தில் என்னவே
இன்னலை பிரித்து எறிந்து எழுந்து பொற்புற
மன்னவர் நபி உறை மனையில் ஆயினார்

மேல்
$2.2.9

#1304
ஆரண கடவுளும் அழகின் கன்னியும்
பூரண மனத்துடன் இருத்தி போற்றியே
தாரணியிடத்தினில் தனியனால் உறும்
காரணம் அனைத்தையும் கழறினார் அரோ

மேல்
$2.2.10

#1305
அ மொழி கேட்டு அடல் அரி அபூபக்கர்
தம் மன கனவையும் சார்ந்த செய்தியும்
செம்மையின் உணர்ந்து உளத்து இருத்தி சிந்தையின்
விம்மிதத்தொடும் புய களிப்பு வீங்கினார்

மேல்
$2.2.11

#1306
சுரத்தினில் பெரு நதி அழைத்து தோன்றிய
சரத்தினில் கட்செவி தடிந்து பாதகன்
கரத்தினை பொருத்திய காவலாள நும்
வரத்தினை எவரினும் வகுக்கற்பாலதோ

மேல்
$2.2.12

#1307
என்று உரைத்தருளிய எழில் அபூபக்கர்-
தன் திரு மதி முகம் நோக்கி தாழ்வு இலா
வென்றி கொண்டு உறும் கலிமாவை விள்ளுதல்
நன்று உமக்கு என நபி நவிற்றினார் அரோ

மேல்
$2.2.13

#1308
அரு மறை நாயக நபிகளானவர்
தெரிதரும் புதுமையின் வழியில் சேர்த்துவர்
பெரியவன் தூது என எனக்கும் பெட்பு உற
விரிதரும் புதுமை ஒன்று உதவ வேண்டுமே

மேல்
$2.2.14

#1309
என உரைத்தவர் மனம் களிப்புற்று இன்புற
புனை மலர் பஞ்சணை பொருத்தும் காலையில்
கனவு கண்டினிர் அது புதுமை காண் என
வன மலர் தொடை புய முகம்மது ஓதினார்

மேல்
$2.2.15

#1310
சொல்லிய நல் மொழி கேட்டு துன்புறும்
அல்லலும் போக்கறுத்து அடல் அபூபக்கர்
செல் உறழ் நபி திருநாமம் சீர்பெற
நல்லியலொடும் இசுலாமில் நண்ணினார்

மேல்
$2.2.16

#1311
அந்தம் இல் நாயகன் தூதர்க்கு அன்புறும்
சிந்தையர் புகழ் அபுத்தாலிபு சேய்களில்
சுந்தர புலி அலி என்னும் தோன்றலும்
வந்தனை செய்து தீன் வழியில் ஆயினார்

மேல்
$2.2.17

#1312
அடிமையில் ஓங்கிய அறிவின் மிக்கவர்
வடிவுறும் ஆரிதாம் மதலை ஆகிய
மிடலவர் சைது எனும் வீர கேசரி
இடர் அறும் கதி இசுலாமில் ஆயினார்

மேல்
$2.2.18

#1313
இயல் மறை முறையொடும் இவர்கள் இங்ஙனம்
அயலவர் அறிவுறாது அடங்கி நல் நெறி
செயல் என நாட்குநாள் தேர்ந்து தம் மனம்
மயல் அற தீன் எனும் வழியில் தேறினார்

மேல்
$2.2.19

#1314
அறிவினில் தெளிந்த அபூபக்கர் அன்பு எனும்
உறவினில் கிளைகளில் உற்றபேர்களுக்கு
இறையவன் நபி இவர் என்ன வேத நூல்
துறையொடும் ரகசிய சொல்லில் சொல்லினார்

மேல்
$2.2.20

#1315
செவ்வியர் இவர் மொழி சிதைவு இலாது என
அவ்வவர் கருத்தினுள் ஆய்ந்து அ ஆற்றிடை
கவ்வை அம் கடல் நதி கடப்ப அன்று ஒரு
நவ்வி பின் எழு நபி பதத்தை நண்ணினார்

மேல்
$2.2.21

#1316
அலகு இல் வண் புகழ் அபூபக்கர் சொல்லினை
பெலனுற குறித்து அவண் அடைந்தபேர்க்கு எலாம்
அலைவு அற அறத்தொடும் சுவன வாழ்வு எனும்
நிலைபெற நல் வழி நிகழ்த்தினார் அரோ

மேல்
$2.2.22

#1317
பண அரவு அடர்ந்தவர் பகர கேட்டலும்
மண மனத்தொடும் கதி வாழ்வுக்கு ஈது ஒரு
துணை என நல் கலிமாவை சொல்லி நின்று
இணையிலான் தூது அடி இறைஞ்சி வாழ்த்தினார்

மேல்
$2.2.23

#1318
கரும்பு எனும் நபி கலிமாவை காமுற
விரும்பியபேர்களில் தலைமை மிக்கவர்
அரும் புவிக்கு அரசு அபுதுர் றகுமானுடன்
தரும் புகழ் சுபைறு தல்காவும் சகுதுவும்

மேல்
$2.2.24

#1319
அரு மறை பொருட்கு உரையாணியாகிய
வரிசை நல் நெறி உதுமானும் மாசு இலா
திரு நபி பெயர் கலிமாவை செப்பிய
பரிசனத்தொடும் தனி பழகு நாளினில்

மேல்
$2.2.25

#1320
அண்டருக்கு அரசு இழிந்து அடுத்து என் முன் உரை
விண்டனர் போயினர் மறுத்து வெற்பிடை
கண்டிலன் என மனம் கலங்கி கார் கடல்
மண்டலம் புகழ் நபி வருத்தமுற்றனர்

மேல்
$2.2.26

#1321
குரு நபி பட்டமே கொண்ட மேலவர்
வருவதும் நிகழ்வதும் வழுத்துவார் எனும்
இரு நில மாந்தருக்கு என் சொல்வோம் என
பருவரல் அடிக்கடி படர்வதாயினார்

மேல்
$2.2.27

#1322
மரு புகும் கரும் குழல் மடந்தை-தம்மொடும்
இருப்பர் பின் தனித்து எழுந்து இரவின் ஏகிய
பொருப்பிடை வைகுவர் புகழ்ந்து விண்ணினை
விருப்பொடு நோக்குவர் மீள்வர் எண்ணுவார்

மேல்
$2.2.28

#1323
வாள்_நுதற்கு உரைதர மறுப்பர் தம் உளம்
பாணியில் சசி என பதைப்பர் நல் உரை
பேணினர்-தம் முகம் பெரிது நோக்குற
நாணுவர் உயிர்ப்பர் மெய் நலிதல் கொண்டனர்

மேல்
$2.2.29

#1324
என் இனி உரைப்பது என்று எண்ணி இன்புறும்
தன் உயிர் துணைவியை தணந்து நெஞ்சகம்
துன்னிய துயரொடும் எழுந்து சூல் முகில்
மன்னிய தட வரை முகட்டின் வைகினார்

மேல்
$2.2.30

#1325
தனியவன் தூது என சார்ந்து பூவிடை
நனி பெறும் புதுமைகள் நடத்தல் இல் எனில்
பனி வரை நின்று வீழ்ந்திடுதல் பண்பு அலால்
இனி இருப்பது பழுது என்னும் காலையில்

மேல்
$2.2.31

#1326
வாடிய பயிர்க்கு உறு மழையும் போல் தினம்
தேடிய பொருள் கரம் சேருமாறு என
வீடு இல் வானவர்க்கு இறை விரைவின் ஏகி அ
கோடு உறை நபி-வயின் குறுகினார் அரோ

மேல்
$2.2.32

#1327
திண்ணிய பெரும் சிறை ஜிபுறயீல் வரை
நண்ணிய முகம்மதை அடுத்து நன்கு உறாத
எண்ணம் என் நுமக்கு என இயம்பி யாவர்க்கும்
உண்மை நீர் நபி என்பது உரைத்து போயினார்

மேல்
$2.2.33

#1328
தன் உடற்கு உயிர் எனும் தகைமைத்தாகிய
பொன்_நகர்க்கு இறை சொலும் புனித வாசகம்
கன்னல் அம் சுவையினும் கனிந்த பாகு என
நல் நபி செவி புக நடுக்கம் நீங்கினார்

மேல்
$2.2.34

#1329
சகமதில் தீன் பயிர் தழைப்ப தூ நெறி
முகம்மதின் திருப்பெயர் வளர மாசு இலா
புகழொடும் ஜிபுறயீல் போற்றி இ மொழி
இகல் அற பலதரம் இயம்பி போயினார்

மேல்
$2.2.35

#1330
முருகு உண்டு அறு_கால் சஞ்சரிகம் முரலும் புய தார் உசைன் நயினார்
அருமை தவத்தால் வந்து உதித்த அபுல் காசீம்-தன் செழும் கரம் போல்
பெருக தரும் செல் இன குலங்கள் பிறங்கும் பிறங்கலிடத்து இருந்த
வரிசை நபியை நோக்கி பின்னும் வந்தார் வானோர் கோமானே

மேல்
$2.2.36

#1331
கலன் சூழ் கிரண மணி நாப்பண் இருந்த கதிர் மா மணி குறைஷி
குலம் சூழ் வரிசை நபிக்கு அமரர் கோமான் சலாம் முன் கூறிய பின்
நிலம் சூழ் பரவை புறப்புவியும் இறைஞ்ச நெடியோன் திருவருளால்
சொலும் சூறத்தில் முஸம்மில் எனும் சுருதி வசனம் இறங்கினவே

மேல்
$2.2.37

#1332
சிலம்பில் உறைந்த முகம்மதுவை திருந்தும் அமரர் கோமான் கொண்டு
உலம் பற்று உறும் சில் நெறியின் இழிந்து உடன் நின்று அரிது ஓர் மருங்கு அணைந்து
நிலம் பிட்டு உதிர மண் சிதற நிலவா மணி தாள் கொடு கீண்ட
பிலம் பட்டு உறைந்த நறும் சலிலம் பிறந்து குமிழி எழுந்தனவே

மேல்
$2.2.38

#1333
பெருகி பரந்த புனல் கரையில் பெரியோன் தூதை அருகு இருத்தி
மருவும் மலரும் என உலுவின் வகையும் தொகையும் வர வருத்தி
குரிசில் நபியை பின் நிறுத்தி குறித்த நிலை ரண்டு இறக்அத்து
பரிவில் தொழுவி திருந்து விண்ணில் படர்ந்து சுவன தலத்து உறைந்தார்

மேல்
$2.2.39

#1334
மறையார் நபிக்கு இரகசியத்தின் வணக்கம் படித்துக்கொடுத்து மணி
சிறையார் அமரர்க்கரசர் முகில் தீண்டா விசும்பின் அடைந்ததன் பின்
நறை ஆர் கூந்தல் கதீஜாவை நண்ணி உலுவும் வணக்கமும் முன்
முறையாய் உரைப்ப உரைத்தபடி முடித்தார் கனக_கொடி தாயே

மேல்
$2.2.40

#1335
மாரி அருந்தி பண் மிழற்றி வரி வண்டு உறங்கும் மலர் கூந்தல்
நாரி சுருதி முறை வணங்கி நளின மனம் கூர்ந்து இருந்ததன் பின்
மூரி திறல் ஒண் சிலை கை அபூபக்கர் முதல் மற்றுள்ளோரும்
மேரு புயத்தார் பெரு வரத்தார் விரை தாமரை தாள் புகழ்ந்து அடுத்தார்

மேல்
$2.2.41

#1336
வந்த குறைஷி குலத்தில் உறு மடங்கல் அனைய முதியோர்-தம்
சிந்தை குளிர வானவர்_கோன் திருத்தி உரைத்த வணக்க முறை
அந்தமிலி-தன் தூதர் எடுத்து அறைய நெறி நேர் வழுவாமல்
பந்தி பெற நின்று உறும் தொழுகை படித்தார் பாவம் துடைத்தாரே

மேல்
$2.2.42

#1337
வடுவை பகிர்ந்த கரிய விழி மயிலும் வரிசை நயினாரும்
அடல் வெம் புரவி குரிசில் அபூபக்கர் அலி சஃது உதுமானும்
தட வெண் கவிகை சுபைறொடு தல்காவும் அப்துர் றகுமானும்
புடை விட்டு அகலா செழும் தேனை பொருத்தும் சிறை வண்டு என தொழுதார்

மேல்
$2.2.43

#1338
சீற்றம் அடங்கா வரி வேங்கை திரியும் வனமும் கொடு மடங்கல்
ஏற்றை வெருவி விலங்கு இனங்கள் இருக்கும் இடமும் வரையிடத்தும்
தூற்றும் அருவி சாரலினும் தோன்றாது இருண்ட மனையிடத்தும்
வேற்று சமய பயத்து ஒதுங்கி விதித்த தொழுகை முடித்து வந்தார்

மேல்
$2.2.44

#1339
வேத பொருளாய் பொருள் ஒளியாய் விளங்கு முதலோன் திருக்காட்சி
தூது என்று உதித்த முகம்மதுவும் சுருதி நெறி தீன் பெரியோரும்
தீதுற்று உலைக்கும் கொடும் காபிர் தெரியாவண்ணம் மூ ஆண்டு
பேதப்படாது இரகசியத்தின் பெரியோன் வணக்கம் பெருக்கினரே

மேல்

3 தீனிலை கண்ட படலம்

$2.3.1

#1340
சீத ஒண் கவிகை நீழல் திருந்திய குரிசிலானோர்
தூது என நபியின் பட்டம் துலங்கிய நான்காம் ஆண்டில்
வேதம் நல் வணக்கம் யார்க்கும் விரித்துற விளக்கும் என்ன
ஆதி-தன் பருமான் மேற்கொண்டு அமரர்_கோன் உரைத்து போனார்

மேல்
$2.3.2

#1341
பொருப்பிடத்து ஒளித்தும் வாழா புறமனையிடத்தும் புக்கி
இருப்பது தகாது என்று ஆயத்து இறங்கியது என்ன கேட்டு
மருப்பு அரும் கரட கைமா மதர்த்து அன மதர்த்து வீரர்
தெரு புகுந்து எவர்க்கும் தோன்ற தீன் நிலை வணக்கம் செய்தார்

மேல்
$2.3.3

#1342
நீர் உறை இடத்தும் செவ்வி நிழல் திகழ் இடத்தும் வாய்ந்த
பேரொளி மாட-வாயும் பெருகு மண்டபத்தின் சார்பும்
கூரு நல் அறிவினோடும் அறபிகள் குலத்து வேந்தர்
ஈரமுற்று உருகி நெஞ்சம் இணங்குற வணங்கி நின்றார்

மேல்
$2.3.4

#1343
ஆரணத்து உலுவும் வாய்ந்த அறிவு மந்திரத்தின் வாயும்
பூரண நிலை நின்று அம் கை பொருந்துற வளைக்கும் ஆறும்
பாரினில் நெற்றி தீண்டப்படும்படி குழைவும் மற்றும்
காரணம் இது-கொல் என்ன காபிர் கண்டு ஐயமுற்றார்

மேல்
$2.3.5

#1344
மார்க்கமோ நெறியோ ஈது ஓர் வணக்கமோ மாறுபாடு ஈது
ஏற்குமோ நல்லோர் கேட்கில் இணங்குமோ இனத்தார் வேத
நூற்கு இது பொருந்துமோ இ நூதன செய்கை யாவும்
நாற்குலத்தவர்க்கும் ஒவ்வா நகை என நகைத்து சொல்வார்

மேல்
$2.3.6

#1345
மீறிய மதப்பினால் ஓர் வேதம் ஒன்று இறங்கிற்று என்று
மீறிலான் இறுதி தூதன் எனும் பெயர் எனக்கு உண்டு என்றும்
தேறிய அறிஞர் போல தெளிவுறா முகம்மது என்போன்
கூறிய கூற்றை தேற்றா விளைத்திடும் கோட்டி என்பார்

மேல்
$2.3.7

#1346
பொறுத்து உளத்து அடக்கி கண்டு போவது தகுவது அன்று
மறு துடைப்பன போல் மார்க்க வழி கெட நின்ற பேரை
கறுத்த கட்டுரைகள்-தம்மால் மத மனம் கலங்க கூறி
செறுத்து இவர்-தம்மை தண்டம் செய்விரால் ஒழியும் என்பார்

மேல்
$2.3.8

#1347
உரன் உறு மனத்தினூடும் உலைவு இலா சமயம் நீங்கார்
பரகதி அடைவர் வேறுபடுத்தி நல் அறத்தை தீய்த்தோர்
நரகமே அடைவர் என்ற நல் மறை வசனம்-தன்னால்
விரகர்கள் பகுத்து காட்டி விலக்கவும் கலக்க நீங்கார்

மேல்
$2.3.9

#1348
மனத்து உறு வரும காபிர் வலி பகை சிறிதும் எண்ணாது
இனத்துடன் கூடி சஃது என்று இலங்குறும் அலங்கல் மார்பர்
புனல் தட கரையில் உள்ள புகழொடும் பொருவிலானை
நினைத்து உலு செய்து நீங்கா நெறி முறை வணக்கம் செய்தார்

மேல்
$2.3.10

#1349
வணக்கமுற்றிருந்த சஃது மன்னவன்-தன்னை நோக்கி
இணக்கி இ இடரை தீர்ப்போம் இவர்க்கு என உரைப்பர் பின்னும்
பிணக்கு எனும் சமய பேத பேய்பிடித்தவர்க்கு நீதி
கணக்கு அறிவுறுமோ என்ன காபிர்கள் கடுத்து நின்றார்

மேல்
$2.3.11

#1350
சீற்றமும் கடுப்பும் மாறா சினத்தொடும் காபிர் கூடி
மாற்றலர் போல சூழ்ந்து மன்னவர் சஃதை நோக்கி
தேற்றுறு முதியோர் முன் செய் செயலினை செய்யலன்றி
வேற்று அழல் ஊழல் புக்க தொழிலினை விருப்பமுற்றீர்

மேல்
$2.3.12

#1351
வரு நெறி பிழைத்தீர் கஃபா வலஞ்செய்து குபலை போற்றும்
திரு நெறி விடுத்தீர் செய்யா தீவினை விளைத்தீர் வீணில்
ஒரு நெறி தொடுத்தீர் நும்மோடு உற்றவர்க்கு எல்லாம் நம்-தம்
குரு நெறி தவிர்த்தீர் கொள்ளா கொடும் பவம் விளைத்தும் கொண்டீர்

மேல்
$2.3.13

#1352
அமரருக்கு அவலம் செய்தீர் அரு மறை வசனம் தீய்த்தீர்
நுமர்களுக்கு இடுக்கண் செய்தீர் நோற்ற நோன்பு-அதனை மாய்த்தீர்
எமருடன் பகைத்தீர் இ ஊர் இருப்பிடம் பெயர்ந்தீர் பொல்லா
கமரிடை வீழ்வதல்லால் கதி ஒன்றும் காணமாட்டீர்

மேல்
$2.3.14

#1353
என்று அவர் உரைப்ப கேட்ட இளவல் புன்முறுவல் தோன்ற
நின்று புன்மொழிகள் வேறு நிகழ்த்திய பெயரை நோக்கி
தொன்றுதொட்டு வந்து நீவிர் துதிசெயும் புத்துகானை
இன்று ஒழித்திடு-மின் நான் ஒன்று இயம்புதல் கேண்-மின் என்றார்

மேல்
$2.3.15

#1354
வானமும் புவியும் மற்றும் வகுத்தவன் உண்மை தூத
ரானவர் முகம்மது என்போர் அவர் மொழி மறாது நின்றோர்
ஈனம் இல் சுவன நல் நாடு எய்துவர் எங்கட்கு உற்ற
தீன் நிலை பொய்மை என்ற தேவரும் நரகம் சேர்வார்

மேல்
$2.3.16

#1355
தீ நரகு அடைவர் என்ற சொல் செவி துளையில் மாறா
காய் எரி நெய் இட்டு என்ன கண் கனல் கதுவ காபிர்
பாய் மத களிறு போல படு கொலை மனத்தர் ஆகி
வாய் துடிதுடிப்ப பேசி வருமித்து நெருங்கி நின்றார்

மேல்
$2.3.17

#1356
வரை திரண்டு அனைய பொன் தோள் மன்னவர் சஃது கோபம்
கரைகடந்து என்ன சோகத்து என்பினை கரத்தில் ஏந்தி
விரைவொடும் செறுத்து நின்ற வீரரில் ஒருவன்-தன்னை
சிரசு உடைந்து உதிரம் சிந்த சினத்துடன் புடைத்து நின்றார்

மேல்
$2.3.18

#1357
சினத்துடன் எதிர்த்த காபிர் திரளையும் சஃது வேந்தர்
இனத்தையும் வேறதாக்கி இவர்க்கு உறு மொழிகள் சாற்றி
மனத்தினில் கோபம் மாற்றி மனை-வயின் புகுத செய்தார்
கனத்த நூல் முறையின் நுட்பம் கண்ட வல்லவர்கள் அன்றே

மேல்
$2.3.19

#1358
உதித்த முன் முதன்மையாக பீசபீல் உதிரம் காட்டி
மதித்த வீரியத்தின் செவ்வி மன்னவர் சகுதும் புக்கார்
கொதித்த புன் மனத்தினோடும் குறுகலர் மனையில் சார்ந்தார்
பதித்த வேர் ஊன்றி தீனும் படர் கொழுந்து ஓங்கிற்று அன்றே

மேல்
$2.3.20

#1359
தூதராகிய முகம்மதும் அவர்க்கு உறும் சுருதி
ஓதும் நல் நெறி உடையரும் இனத்துடன் உறைந்து
தீதுறும் கொடும் காபிர்கள் செயலினை சிதைப்ப
வேத நல் மொழி பொருளொடும் தீன் நிலை விரித்தார்

மேல்
$2.3.21

#1360
கோது அறும் துகில் பொதிந்து அரு மணி பல குயிற்றி
ஓது நல் மொழியொடும் இரு கரம் குவித்து ஒதுங்கி
பேதம் உள் அற வணங்கும் இ பேயினால் உமக்கு
பாதகம் பலித்திடும் நிசம் என பழித்தனரே

மேல்
$2.3.22

#1361
வம்பு இராத சொல் மறை தனது உரை என வகுத்து எம்
தம்பிரானையும் பழிப்பது தகுவது அன்று எனவே
வெம்பி மா சினத்தொடும் பல விக்கினம் விளைப்ப
அம்புராசி ஒத்து ஊரவர் முகம்மதை அடர்ந்தார்

மேல்
$2.3.23

#1362
அடர்ந்து வந்தவர்க்கு எதிர் அபுத்தாலிப் சென்று அடுத்து
தொடர்ந்து வந்தது இங்கு என் என சூழ்ச்சியால் தேற்றி
கடந்த சொல்லொடும் இதத்தொடும் பல உரை காட்டி
திடம்படைத்தவர் விக்கினம் அனைத்தையும் சிதைத்தார்

மேல்
$2.3.24

#1363
சமய பேத புத்து அனைத்தையும் தகர்த்திடும் தீனில்
அமையும் என்பவர் சிலர்சிலர் அ மொழி பகையால்
கமை அற கடுகடுப்பவர் சிலர்சிலர் இவர்கள்-
தமை விலக்குதல் தொழில் அபுத்தாலிபு-தமக்கே

மேல்
$2.3.25

#1364
இவ்வணம் சில பகல் இகலொடு நடந்ததன் பின்
பௌவம் ஆர்த்து என குறைஷிகள் தலைவர்கள் பலரும்
செவ்விதாய் ஒரு நெறிபட திரண்டு வந்தடைந்தார்
மை வணம் தரு கொடை அபித்தாலிபு மனைக்கே

மேல்
$2.3.26

#1365
இகல் மனத்தவர் திரண்டு அபித்தாலிபை எதிர்ந்து
சகதலத்து இருள் அற வரும் பருதி ஒத்தனையோய்
விகட விக்கினம் விளையும் முன் விலக நும்மிடத்தில்
புகலுதற்கு ஒரு கருமம் உண்டு என புகலுவரால்

மேல்
$2.3.27

#1366
ஹாஷிம் மா குல கடல் நடு எழுந்து அகலிடத்தின்
மாசு இலா மதி நின் துணையவர் தரும் மதலை
ஏசுவார்க்கு இடம் என பிறந்து இழிதர இனத்து
பாசம் நீக்கி நம் தேவதம் அனைத்தையும் பழித்தான்

மேல்
$2.3.28

#1367
நடந்த முன் நெறி பழுது என நவிற்றி ஆலயத்துள்
அடைந்த பேர் அனைவரும் வழிகேடர் என்று அறைந்து
கடந்த நூல் மறை பெரியவர் இரு செவி கசப்ப
தொடர்ந்து பேசுவது ஒறுத்திலன் அடிக்கடி தொடுத்தான்

மேல்
$2.3.29

#1368
தந்தை தாய் தமர்க்கு உறும் பொருள் சமய நிண்ணயத்தை
நிந்தை செய்தனன் தனக்கு உறும் வடு என நினையான்
சிந்தை உற்றதே துணிந்தனன் பிறர் மொழி தேறான்
இந்தவாறு அலால் வேறு ஒரு கருமமும் இசையான்

மேல்
$2.3.30

#1369
நின்னை நோக்கியும் நின் குல முறை பெரியவர் நேர்-
தன்னை நோக்கியும் பொறுத்தனம் தணிந்தனம் இவனை
உன்னி நோக்கியே வணக்கிடும் உமது சொல் கடந்தால்
பின்னை நோக்கும் எம் திறம் என பேசினர் அன்றே

மேல்
$2.3.31

#1370
முறைமுறைப்படி காபிர்கள் கூறிய மொழி கேட்டு
அறம் மதித்த நெஞ்சு உடைந்து அபித்தாலிபு அங்கு அவர்கட்கு
உறு மன குறை தவிர்ந்திட நல் மொழி உரைப்ப
பொறை மனத்தொடும் அனைவரும் மனை-வயின் போனார்

மேல்
$2.3.32

#1371
மாற்றலர்க்கு அரி முகம்மது காபிர்கள் வணங்கி
போற்று புத்தையும் இனத்தையும் பொருந்திலாது இகழ்ந்து
தூற்றும் நிந்தனையுரை மறுத்திலர் செழும் சுருதி
தேற்றும் வானவர்_கோன் உரை நிலைபடும் திறத்தால்

மேல்
$2.3.33

#1372
உரைத்த வாசகம் மனத்திடை தரித்திலன் உரவோர்
நிரைத்து அடைந்து அபித்தாலிபுக்கு உரைத்தது நெகிழ்ந்தான்
குரைத்தல் என் இனி முகம்மது பெலத்தொடும் குறும்பை
கரைத்தல் வேண்டும் என்று அவரவர் தனித்தனி கடுத்தார்

மேல்
$2.3.34

#1373
கோது இல் கற்பக செழும் கொடி கொழும் கனி கதீஜா
மாது-தன் மணம் புணர்ந்தவர் பொருள் தரு மதமோ
சாதி ஹாஷிம் என் குலத்தவர் பெலன் குறித்ததுவோ
வேதிவற்கு உறும் குறும்பு என சிலர் எடுத்து இசைத்தார்

மேல்
$2.3.35

#1374
தந்திரத்தினால் சிலவரை தனது உரைக்கு அடக்கி
மந்திரத்து உரு சித்தியால் மார்க்கம் ஒன்று எடுத்தான்
சிந்தையில் தெளிவுற்று நோக்கிடும் மறை செயலீர்
இந்தவாறு இவன் தொழில் என சிலர் எடுத்து இசைத்தார்

மேல்
$2.3.36

#1375
இழிவு செய்து ஒரு குலம் பிறந்து ஒரு குலம் எடுத்து
வழிகெட தனி நின்றவன்-தனது உயிர் மாய்க்க
பழியும் பாவமும் நினைத்து இவை பழுது என பலகால்
மொழிய வேண்டுவதில் என சிலர் மொறுமொறுத்தார்

மேல்
$2.3.37

#1376
நிறைத்த நல் நெறி தேவத நிலை தலைகுலைய
வெறுத்த பேர் உயிர் அகல் விசும்பினில் குடிபடுத்தல்
ஒறுத்தல் என்ன அபித்தாலிபுக்கு உரைத்து இனி ஒருகால்
பொறுத்து செய்வது கருமம் என்று அனைவரும் புகன்றார்

மேல்
$2.3.38

#1377
இசைத்து உரைத்தவை நன்கு என இனத்தொடு பலரும்
விசைத்து எழுந்து அபித்தாலிபு திரு-வயின் மேவி
திசை தடங்களும் திக்கினும் திரிதரு கவன
குசை தட பரி குரிசில் முன் கூறுதல் குறித்தார்

மேல்
$2.3.39

#1378
குரிசில் நம் குலமகன் முகம்மது செயும் குறும்பை
பரிவினில் பொறுத்திருந்தும் நும் இரு செவிப்படுத்தி
தெரிய வேண்டுவது இலை இனி சேர்தரும் இனத்துக்கு
உரியர் யாம் அல அறிக என்று உரைத்து அயல் போனார்

மேல்
$2.3.40

#1379
உற்ற தம் குல பெரியவர் அனைவரும் உரைத்த
பெற்றியும் மகன் குறிப்பையும் பிரித்தெடுத்து ஆய்ந்து
வெற்றி வாள் அபித்தாலிபு மனம் மிடைமிடைந்திட்டு
உற்ற தம் கருத்தொடும் அயற்கு உரைத்திடாது உறைந்தார்

மேல்
$2.3.41

#1380
பத்தி விட்டு இனம் வெறுப்பதும் பழுது உயிர் துணைவன்
புத்திரர்க்கு இடர் வருவதும் பழுது என புழுங்கி
எய்த்த சிந்தையோடு இயல் நபி-தமை அழைத்து இருத்தி
வைத்து நல் நய மொழி சில வகுத்து எடுத்துரைத்தார்

மேல்
$2.3.42

#1381
வருத்தமுற்று அபித்தாலிபு அங்கு உரைத்திடும் வசனம்
திருத்தும் தீன் நிலை முகம்மது செவியிடை புகுந்து
கருத்தினில் தெளிந்து எண்ணிய நல்வினை கருமம்
பொருத்துதற்கு இடர் இது-கொல் என்று அகத்திடை பொறுத்தார்

மேல்
$2.3.43

#1382
வந்து உரைத்த தம் இனத்தவர் மன வெறுப்பு அகல
நம்-தமை சிறிது இகழ்வர் என்று அகத்தினில் நாட்டி
தந்தை-தம் திருமுக மலர்-தனை எதிர் நோக்கி
சிந்து முத்த வெண் நகை இதழ் அமுத வாய் திறந்தார்

மேல்
$2.3.44

#1383
பருதியை கொணர்ந்து அணி வல கரத்திடை பதித்தும்
அரிதினில் சசி கொணர்ந்து இட கரத்தினில் அமைத்தும்
ஒரு மொழிப்பட இனத்தவர் ஒருங்குற நெருங்கி
பொருது அடக்கினும் நும் மனம் பொருந்திலாதிருந்தும்

மேல்
$2.3.45

#1384
ஈது அலால் சில இடர் எனை அடுக்கினும் இறையோன்
தூதன் யான் என சுருதியை விளக்குவதலது
பேதியாது எனது அகம் என முகம்மது பிரியா
தாதையோடு உரைத்தனர் இரு விழி மழை தயங்க

மேல்
$2.3.46

#1385
அழுது உரைத்த நல் நெறி முகம்மது-தமை அடுத்து
தழுவி என் உயிர் நீ அலது இலை என சாற்றி
முழுதும் நின் கருத்து உறும்படி முயல்வதேயன்றி
பழுது இல் என் மனத்து இது-கொல் நிண்ணயம் என பகர்ந்தார்

மேல்
$2.3.47

#1386
சிதைவு இலா மொழி-தனை அபித்தாலிபு தெளிப்ப
மதலையாகிய முகம்மது மனத்திடை களித்து
புதிய நாயகன் ஆரணம் புடை பரந்து ஓங்க
விதுவின் ஒண் கலை வளர்த்து என தீன் பயிர் விளைத்தார்

மேல்
$2.3.48

#1387
வருந்திலாது ஒரு சமயம் என்று அகுமது வடுவை
தரும் தவ பிழை கொடுமுடி-தனை மறுத்திலன் என்று
இருந்த பேரினில் தலைவர்கள் அவரவர்க்கு இசைத்து
திருந்திலா மன காபிர்கள் கிளையொடும் திரண்டார்

மேல்
$2.3.49

#1388
மா தவத்தினன் ஒலீது அருள் மதலையை கொடுபோய்
கோது இலாது அபித்தாலிபு திரு கரம் கொடுத்து
தீது இழைத்திடும் முகம்மதை நமதிடம் சேர்த்து
பேதகத்தினை துடைப்பம் என்று உரைத்தனர் பெரியோர்

மேல்
$2.3.50

#1389
குறித்த வாசகம் நன்கு என திரளொடும் கூடி
நறை தட புய ஒலீது அருள் மகனை முன் நடத்தி
நிறைத்த மா மலர் புயர் அபித்தாலிபு நிலவ
செறித்த நீள் நிலை மணி தலைகடையிடை சேர்ந்தார்

மேல்
$2.3.51

#1390
மாலை இட்ட வரை புய மன் அபித்
தாலிபை கண்டு அனைவரும் கை முகிழ்த்து
ஓலிடும் கடல் உட்படு நஞ்சினை
போலு மாற்றம் புகல பொருந்தினார்

மேல்
$2.3.52

#1391
உத்தமத்து ஒலீது என்பவன் செய் தவ
புத்திரன் கலையில் பொருவற்றவன்
சித்திரத்தினும் மிக்கு உயர் செவ்வியன்
மத்த மா கரி ஒத்த மனத்தினன்

மேல்
$2.3.53

#1392
மறு அறும் குல மைந்தன் இ மைந்தனை
அறுதி நல் மனத்தோடும் அளித்தனம்
இறைவ நின் மகன் ஆக்குக இல்லகத்து
உறைக பின்னும் ஒரு மொழி கேட்டியால்

மேல்
$2.3.54

#1393
பெறத்தகாத பெரும் பழியாய் நமது
அறத்தினுக்கு அழிவாய் அவதூறுமாய்
மறுத்து ஓர் மார்க்கம் வகுத்த முகம்மதை
வெறுத்து இனத்தவர்க்கு ஈந்திடல் வேண்டுமால்

மேல்
$2.3.55

#1394
இந்த மாற்றம் இசைந்தினிரேல் பகை
வந்திடாது மறுத்து ஒரு தீங்கு இலை
சிந்தை வேறு செய்தீரெனில் நீள் பகை
பிந்திடாத பெரும் பழி சூழுமே

மேல்
$2.3.56

#1395
என உரைத்த இனத்தவர்-தம் மொழி
மனதினுள் புகுந்து அங்கி வளர்த்து உறு
சினம் எழுப்பின சிந்தையுள் தீயை நல்
நினைவினுள் பொதிந்து ஓர் மொழி நீட்டுவார்

மேல்
$2.3.57

#1396
நலிவு இலாது நடு உரைத்தீர் உமது
ஒலிது மைந்தன் உமாறத்து என்போன்-தனை
மலியும் வெண் சுதை மாடத்துள் வைத்து யான்
மெலிவு இலாது வளர்த்திடல் வேண்டுமால்

மேல்
$2.3.58

#1397
எங்கள்-தம் குலத்து இன் உயிர் தம்பி-தன்
மங்கை ஈன்ற மணியை முகம்மதை
உங்கள்-பால் கொடுபோய் உமர்-தம் மன
பங்கம் தீர படுத்தலும் வேண்டுமால்

மேல்
$2.3.59

#1398
ஈது நம் நெறி ஈது மனு நெறி
ஈது நம் குலத்தாருக்கு இணங்குவது
ஈது வேதத்து உரைப்படி யாவர்க்கும்
ஈது அலாது நல் நீதியும் இல்லையே

மேல்
$2.3.60

#1399
அறபு எனும் பதியார் அரசு ஊழியோர்
அறவும் நல் அறத்தால் அறிவு ஓங்கியோர்
பிறவும் இ உரை யாவர்கள் பேசுவார்
பிறரும் இல்லை நும் போல் பெரியோர்களே

மேல்
$2.3.61

#1400
உரைத்தல் என் நுமர்க்கு உற்ற சொல் என் மனம்
பொருத்தம் இல் என புண்ணியர் கூறலும்
திருத்திலாது என்-கொல் செய்குவம் யாம் என
வருத்தமுற்ற மனத்தொடும் போயினார்

மேல்
$2.3.62

#1401
கனன்று சென்று அறபி குல காபிர்கள்
அனந்தர குறைஷி குலத்தாரொடு
வனைந்த பொன் கழல் மன்னவர்-தம்மொடு
சினந்து தங்கள் இனங்கள் திரட்டினார்

மேல்
$2.3.63

#1402
கேட்டு வந்தவரும் சிலர் கேட்டினை
மூட்ட வந்தவரும் சிலர் மூள் பகை
வீட்டும் என்று வெகுண்டவரும் சிலர்
கூட்டமிட்டு குலத்தொடும் கூடினார்

மேல்
$2.3.64

#1403
வடித்த மெய்ம்மறை நம் நபி வாக்கினில்
படித்த சொல்லை பகர்ந்திடும் பேர்களை
பிடித்து அடித்து பெலன் குறைத்து இல்லமும்
இடித்து உடைத்து இடையூறு படுத்தினார்

மேல்
$2.3.65

#1404
செறுநர் செய்திடும் தீய அ கோட்டி கண்டு
அறிவு உறும் அபித்தாலிபும் அங்கு அவர்க்கு
இறுதி செய்குவன் யான் என வீரமுற்று
உறை பெரும் குலம் சேர்ப்பதற்கு உன்னினார்

மேல்
$2.3.66

#1405
பெருகி நின்ற தலைமுறை பேரராய்
வரும் அ அப்துல் முனாபு-தம் மக்களின்
உரிய ஹாஷிம் எனும் கிளையோரையும்
பொருவு இல் முத்தலிபு கிளையாரையும்

மேல்
$2.3.67

#1406
தனத்த அப்து சமுசு கிளையையும்
சினத்த வேல் நவுபல் கிளை சேனையும்
கனத்த வெண் திரை மா கடற்கு ஒப்பு என
மனை தலத்தில் வரவழைத்தார் அரோ

மேல்
$2.3.68

#1407
முன்றில் எங்கணும் மொய்த்த செ வேல் கர
வென்றி வீரரை நோக்கி விளித்து அணி
மன்றல் மார்பின் முகம்மது வான் முனம்
சென்ற செய்தி அனைத்தையும் செப்பினார்

மேல்
$2.3.69

#1408
மாறு இலாது எழில் மான்மதம் காவதம்
நாறும் மேனி முகம்மதை நாள்-தொறும்
வேறுபாடு விளைத்திடும் பேர்களை
கோறல் என் குறிப்பு என்னவும் கூறினார்

மேல்
$2.3.70

#1409
ஆள் திறத்து அபித்தாலிபு உரைத்த சொல்
கேட்டு முத்தலிபு கிளையோர்களும்
கூட்டத்து ஆஷிங் குல பெரியோர்களும்
நாட்டமுற்று இது நன்று என கூடினார்

மேல்
$2.3.71

#1410
மற்று இரண்டு கிளை முதல் மன்னர் இங்கு
உற்ற வார்த்தை உசாவி உறாது என
வெற்றி வேந்து அகம் நீங்கி வெறுத்திடும்
பற்றலார் உறை-பால் அடைந்தார் அரோ

மேல்
$2.3.72

#1411
மறு உறுத்து மனத்தினன் ஆகி நல்
அறிவு நீங்கி அபூலகுபு என்பவன்
பெறும் முறை தலைமை பெயரானும் அ
குறுகலார் உறை கூட்டத்தில் ஆயினான்

மேல்
$2.3.73

#1412
பிரிவு செய் கிளை-தன்னொடும் பின்னவன்
உரியன் ஆயினன் என்றும் உளத்தினில்
வெருவு இலாது புன்மூரல் விளைத்து அடல்
அரியின் சீற்றமுற்றார் அபித்தாலிபே

மேல்
$2.3.74

#1413
பகைத்த காபிர்கள் கூடி பனை கைமா
உகைத்த வீரன் ஒலீதிடம் புக்கி நாம்
மிகைத்த கச்சில் முகம்மதின் வீரத்தை
தகைத்தல் வேண்டுவது உண்டு என சாற்றுவார்

மேல்
$2.3.75

#1414
கணிதன் துன்ப கவியன் கபடித
வணிதன் வஞ்சனையன் வரைவற்ற பித்து
அணிதன் என்று ஒரு பேரை உண்டாக்குதல்
துணிதல் நன்று என யாவரும் சொல்லினார்

மேல்
$2.3.76

#1415
நீட்டு கை கரியை நிகரில் புலி
காட்டும் ஆறு என மாறிடும் காபிர்கள்
மாட்டிருந்து வழங்கிய மாற்றத்தை
கேட்டிருந்த ஒலீது கிளத்துவான்

மேல்
$2.3.77

#1416
ஈது எலாம் பெயர் அன்று இவன் சொல்லினை
கோது அடர்த்து அ குறிப்பு அரிதால் குலம்
பேதகப்படுத்தும் பெரு வஞ்சனை
சூதன் என்றிடும் பேர் என சொல்லினான்

மேல்
$2.3.78

#1417
இ தலத்தினில் இ வருடத்தினில்
மொய்த்த கச்சில் முகம்மதை வஞ்சனை
பித்தன் என்று பெரும் பெயர் நாட்டுதல்
பத்தி என்று இதமித்தனர் பொய்மையோர்

மேல்
$2.3.79

#1418
மக்க மா நகர் வந்தவர்-தம்மிடம்
புக்கு இருந்து முகம்மதின் புத்தி கேட்டு
ஒக்கலோடும் இ ஊர் இழந்து ஒவ்வொரு
திக்கினில் அடைவார் சிலர் காண் என்பார்

மேல்
$2.3.80

#1419
தாயை தந்தையை தன் உயிராகிய
சேயை பெண்டிரை சிந்தையில் வேறதாய்
பாயத்தோடும் பகைப்பிக்க வல்லதோர்
மாயக்காரன் முகம்மது என்று ஓதுவார்

மேல்
$2.3.81

#1420
ஆதி வேறு உண்டு ஒருவன் என்பான் அவன்
தூதன் யான் என சொல்லுவன் தெய்வங்கள்
பேதகப்பட பேசுவன் பேதியா
வேதம் ஒன்று விளைந்தது காண் என்பான்

மேல்
$2.3.82

#1421
மடுத்த சிந்தை முகம்மது என்போன்-தனை
அடுத்த வன் மொழிக்குள் அகப்பட்டு நீர்
எடுத்த நல் வழி கெட்டு எளிமைக்கும் கீழ்ப்
படுத்தலாகப்பட நினையீர் என்பார்

மேல்
$2.3.83

#1422
மலி தரும் புகழ் முகம்மதை கொடிய வஞ்சன் என்று பெயர் பேசிய
ஒலிது மக்களும் இழந்து கைப்பொருள் ஒழிந்து பேறும் உதவாமலே
நலி தரும் கொடிய நரகு அடைந்திடுவன் என்ன ஆதி திரு நல் மொழி
அலைவு இலாது அமரர்_கோன் இழிந்து அவனியின் புகன்று அவணில் ஏகினார்

மேல்
$2.3.84

#1423
மாசு இலா வரிசை முகம்மதின் பெயரை மாற்றி வஞ்சகன் எனும் பெயர்
பேசி ஊரவர் இரண்டுபட்ட உரை பெருகி எங்கணும் அறிந்து பொன்
ஊசல் ஆடு தெரு வீதி மா மதினம் உற்ற மன்னரும் அறிந்து மா
பூசல் ஆகுவது இனத்தினுக்கு இது பொருந்துமோ என வருந்தினார்

மேல்
$2.3.85

#1424
மதின மா நகரவர்க்கும் மக்க நகர் உற்ற மன்னவர்-தமக்கும் ஓர்
உதர பேதம் அஃது அன்றி ஆவி உடல் ஒத்திருப்பவர்களாகையால்
விதியின் நுட்ப மறை கற்றவன் புகழின் மிக்கனான அபுகைசவன்
பதிவு பாசுரமொடு உறைய நீதி முறை பழுது இலாதபடி எழுதினான்

மேல்
$2.3.86

#1425
ஓலை உத்தரம் முகம்மதை கொடும் உரைத்த நிந்தை பழுது என்னவும்
சீலம் அற்ற பகை ஒருவருக்கொருவர் செய்துகோடல் பழுது என்னவும்
மேலும் நல் வழி திருத்தினோர்கள் பதம் மீது சார்தல் நலன் என்னவும்
சால மிக்க கவிதை திறத்தொடு தணப்பு இலாது உற அனுப்பினான்

மேல்
$2.3.87

#1426
வந்த வாசகம் உணர்ந்து காபிர்கள் முகம்மதை பழுது பேசிய
நிந்தனை சினம் ஒறுக்கிலார் தினம் நிகழ்த்து நல் வழி மனம்கொளார்
தந்திரத்தில் உயர் மன்னர் சொன்ன மொழி-தன்னையும் நினைவில் எண்ணிலார்
செம் தழல் குழிகள் ஏழுமான முறை தேடி நல் நெறியை மூடினார்

மேல்
$2.3.88

#1427
இன்னவாறு முரணான காபிர் இடராய் இருப்பவும் முகம்மது
முன்னு நல் நெறி நிறுத்துவேன் எனும் உளத்தினோடு தடுமாறிலாது
அன்னம் அன்ன மடவார்க்கும் ஆடவர்-தமக்கும் மற்றவர்-தமக்குமே
இன்னல் அற்ற இசுலாத்தின் நேர் வழி இளைக்கிலாது உற விளக்கினார்

மேல்
$2.3.89

#1428
சிந்துர திரள் அடர்த்து நின்றதொரு சிங்க ஏறு எனும் முகம்மது
தந்திரத்தையும் அவன்-தன் நேர் வழி-தனக்கு இசைந்தவர்கள்-தம்மையும்
அந்தரத்தின் வழியா விடற்கு இனி ஓர் ஐயம் இல்லை என அங்கு அவர்
புந்தியில் கருதி வேறுவேறு கொலை பூணு நாளில் வரவு ஓதுவாம்

மேல்
$2.3.90

#1429
மது வழிந்து ஒழுகும் மரவ மாலை புனை வரை நிகர்த்த புய அப்துல்லா
புதல்வராகிய முகம்மதும் தனி ஓர் போது நீடு ககுபா அடுத்து
அதி வித புதுமை மறை மொழிக்கு முதல் ஆதியை தலைவணங்கியே
புதிய வேத மொழி கொடு புகழ்ந்து நிலை பொருந்தி அங்ஙனம் இருந்தனர்

மேல்
$2.3.91

#1430
கண்ட காபிர்களில் ஒருவன் ஓர் துகில் கரத்தில் ஒப்பற முறுக்கியே
அண்டர் நாயகம் முகம்மதின் தமது அரும் கழுத்து உற இறுக்கினான்
விண்டிலார் எதிர் விழித்திலார் அதனை மெய்மை ஓரும் அபுபக்கர் தாம்
இண்டு வல் வினை இது என்று கண்டு அற விரைந்து பாலினில் அடைந்தனர்

மேல்
$2.3.92

#1431
மிடற்றில் உற்ற துகில்-தனை நெகிழ்த்து மிகு வினை கொலை கபடர்-தங்களை
அடுத்து அடாத சில மொழியின் வேகமோடு அடர்த்துவிட்டு எழில் முகம்மதின்
இடத்து இருந்து தொழுது எழுந்த பின்பு உடன் எழுந்திருந்து தமது ஆவி தம்
உடல் புகுந்தபடி மனை புகுந்த பின் உயர்ந்த தம் மனை அடைந்தனர்

மேல்
$2.3.93

#1432
அன்று ஒழிந்து சில நாள் அகன்ற பின் அனாதி தூது எனும் முகம்மது
மன்றல் துன்றும் மது மாலை நாற்றி ஒளிர் மணி திகழ்ந்த ககுபாவிடம்
சென்று அடுத்து அருகு இருந்து மூதுரை தெளித்த மா மறை வழிக்கொடே
ஒன்றுபட்ட மனம் அங்ஙனம் சிறிது உணங்கிலாது உற வணங்கினார்

மேல்
$2.3.94

#1433
தக்க நல் நெறி பிழைத்த பாவி அபுஜகில் சைபா ஒலிது-தன்னுடன்
உக்குபாவும் உத்பாவும் மூடன் உமையாவும் ஈனன் உமாறாவுமாய்
ஒக்கலோடு அவண் அடைந்து நம் நபி ஒழுங்கு உறும் தொழுகை நோக்கி ஓர்
விக்கினத்தினை நினைத்து ஒருத்தனை விளித்து உளூரிடை விடுத்தனர்

மேல்
$2.3.95

#1434
ஊரினில் புகுந்து ஓர் ஒட்டகத்து எலும்பு உடல் குடர் குருதி ஊன் உலம்
வாரி வந்தவன் முகம்மதின் தனி மணி புறத்திடை படுத்தலும்
வேரி அங்கம் முதல் ஐம்புலன்களும் வெறுத்து ஒடுக்கிய சுசூதினில்
பாரிடை படிதல் கண்டு தீன் நிலை பகைத்த பாவிகள் நகைத்தனர்

மேல்
$2.3.96

#1435
பிடரியின் மீது சுமையும் சுசூது இயல் பிரிந்திடாது அவண் உறைந்ததும்
அடையலார்கள் நகையோடு நின்றதும் அகம் வெதும்ப ஒரு காளை கண்டு
இடையறாத வசை கொண்ட பாவிகள் இழைத்த பாதகம் இது என்னவே
உடைய நாயன் நபி புதல்வி-தம்மிடம் ஒதுங்கி நின்று இவை உரைத்தனன்

மேல்
$2.3.97

#1436
மாதருக்கு அரசி பாத்திமா எனும் மடந்தை கேட்டு உளம் மயக்குற
வீதி-வாயிடை புகுந்து மின் என நடந்து மா மறை விளக்கிடும்
தாதை வெந்நிடம் இருந்ததை சிதறி சரி வளை கை கொடு தனி துடைத்து
ஏதமுற்ற மொழி காபிரை சிறிது எடுத்துரைத்து மனை மேவினார்

மேல்
$2.3.98

#1437
ஏகனை தொழுது எழுந்திருந்து பின் இடும்பு செய்தவரை நோக்கியே
மோகமுற்ற தனி றப்பனா உனது முனிவினால் இவர்கள்-தங்களை
வேகமுற்ற கொடு நரகிடை புகுத விடுதல் வேண்டும் என விரைவினான்
மாகம் நோக்கி இரு கரம் எடுத்து பதுவா உரைத்து நபி போயினார்

மேல்
$2.3.99

#1438
வீண் உரை பகர்ந்தும் இடும்புகள் தொடுத்தும் வெவ் வினை கொடும் கொலை நினைத்தும்
காணிலா புதுமை விளைத்த நாயகத்தை காபிர்கள் வெறுத்திடும் காலம்
தூணினை துரும்பா நினைத்து என ஹாஷின் தோன்றலில் அக்கம் என்று ஒருவன்
பூணிலா பவ நோய் பூண்பது தனக்கே பொருவு இலாது ஒரு தொழில் எடுத்தான்

மேல்
$2.3.100

#1439
இரு விழி கறுப்பும் ஒருபுறத்து ஒதுங்க இதழ் கடைவாயிடை பிதுங்க
திருகுற முகத்தை சுரிப்பொடு வளைத்து திகழ்தரு நாசியை சிலிர்த்து
பெருகிய கழுத்தின் நரம்புகள் விறைப்ப பிளந்து வாய் நா நுனி புரட்டி
வரிவர வலித்து முகம்மதை நோக்கி மனத்து உறாது இகழ்ச்சி செய்தனனால்

மேல்
$2.3.101

#1440
கதிர் விரிந்து ஒழுகும் மெய் எழில் நபியை காண்-தொறும் காண்-தொறும் வலித்திட்டு
எதிரெதிர் வருவன் விலக்குதற்கு அமையான் இங்ஙனம் சில பகல் திரிந்தான்
புதியவன் தூதர் இவன்-தனை நோக்கி பொருவு இலா செ இதழ் திறந்து
பதி பெற வலித்திட்டு இதனில் எண் மடங்காய் பழிப்பொடும் திரிகுவை என்றார்

மேல்
$2.3.102

#1441
பலித்தது நபி தம் திருமொழி அவன்-பால் பதின் மடங்கு ஆயின இதழ் வாய்
வலித்தலும் கண்கள் சிமிட்டலும் உலகில் வழங்கிலா வலிப்பு எலாம் வலித்து
சிலிர்த்தது முகம் கண்டு அடுத்தவர் மனங்கள் திகைத்ததும் பெரும் குலம் அனைத்தும்
சலித்ததும் தவிரா இடும்பினால் வரு நோய் படர்ந்தது வைகலும் தழைத்தே

மேல்
$2.3.103

#1442
பெறுமவரிடத்தும் மனைவி-தன்னிடத்தும் வலிப்பது தவிர்ந்திலன் பெரியோர்
மறுகு எதிர்ப்படினும் முகத்து எதிர் நோக்கி வலித்திடல் ஒழித்திடான் புதியோர்
சிறுவர்கள் காணில் எவ்விடம் அனைத்தும் சிதறியே வெருவிட திரிவன்
குறைவு இலா நபியை பழித்த நிந்தனையால் குவலயம் பழித்திட திரிந்தான்

மேல்
$2.3.104

#1443
குரு நெறியவரை காண்-தொறும் வலிப்பன் கோயிலில் தேவதமிடத்தில்
சிரசினை வளைத்து முகம் சுரித்து இரு கண் சிமிட்டுவது அடிக்கடி மறவான்
வரு நெறி பிழைத்த பாவிகள் குலமும் வணங்கிய புத்துகள் அனைத்தும்
தரு நபி பழித்து காட்டுதற்கு இவன் ஓர் சாட்சியில் தலைமையன் ஆனான்

மேல்
$2.3.105

#1444
மருந்தினால் மணியால் மந்திர தொழிலால் மாறு இலா மாய நோய்-அதனால்
திருந்திய மதி கெட்டு அங்கமும் வேறாய் திரிந்தவன் நாட்குநாள் தேய்ந்தான்
பருந்து எழும் கதிர் வேல் முகம்மதை இகழ்ந்தோன் படும் வரலாற்றையும் அறிந்தும்
இருந்த காபிர்களில் ஒருவன் உள் மதத்தால் இடது செம் கரம் கொடு பொசித்தான்

மேல்
$2.3.106

#1445
போனகம் அருந்தா கரத்தினால் அமுது பொசித்தவன்-தனை எதிர் விளித்து
வான_நாயக நல் நெறி முகம்மதுவும் வல கரம் கொடு புசித்திடும் என்று
ஈனம் அற்று உரைப்ப இடருறும் மொழியாய் இட கரம் வழங்குவதலது
தேன் அவிழ் தொடையாய் வல கரம் வழங்காது என அவர் திருமொழி மறுத்தான்

மேல்
$2.3.107

#1446
வலி பெற வழங்கும் வல கரம் வழங்காது என மறு படிறு உரைத்தவனை
கலி என நினைத்து கவர் இதழ் திறந்து எக்காலமும் உனது உரைப்படியே
நிலைபெற நிலத்தில் இருப்பது நிசம் என்று உரைத்தனர் நெடு முடி ஆதம்
தலைமுறை பெயரின் முதன் மணி விளக்காய் தரு கதிர் நபி முகம்மதுவே

மேல்
$2.3.108

#1447
அடங்கலர்க்கு அரியாய் உதித்த நம் நயினார் அறைந்த சொல் மறுத்தவன் வல கை
முடங்கில சிறிதும் நீண்டில உணர்வு முழுதினும் இலது கெட்டு ஒடுங்கி
வடம் கொள் வெம் முலையார் நகைத்து அருவருப்ப அருந்தினும் வாய்க்கு உதவாமல்
இடம் கொள் அம் புவியுள் நோக்குநர்க்கு இழிவாய் இணங்கிலாது ஒழிந்திருந்ததுவே

மேல்
$2.3.109

#1448
மண்ணினில் செழும் தீன் பயிர் நலம் தழைக்க வளர்த்த மா மறை நபி நயினார்
கண்ணு உடை கரும்பின் சுவையினும் இனிய கட்டுரை நெறி கலிமாவை
உள் நிறை அமிர்தம் என அறியாமல் ஒடுங்கிலாது எதிர் இடர் பகர்ந்திட்டு
எண்ணிறந்தனையர் சில பகல் இவர் போல் இடும்பை நோய் சுமந்திருந்தனரே

மேல்
$2.3.110

#1449
மறைபடா புகழை உலகினில் வளர்த்து வரும் ஒரு துரை அபுல் காசீம்
குறைபடா மனமும் வாக்கும் ஒன்றாக புகழ்ந்திடும் குரிசில் நம் நபிக்கு
நிறைபட அடுத்த கிளை அனைத்தையும் தீன் நிலை பெற நிறுத்திடும் என்ன
இறையவன் ஆயத்து இறங்கியது என அங்கிருந்து இறங்கினர் ஜிபுரீலே

மேல்
$2.3.111

#1450
திரு மறை மொழி ஒன்று உரைத்து விண்ணவர்_கோன் சேணிடை உறைந்த பின் மாறா
விரை கிடந்து அரும் தேன் துளித்த குங்கும தார் விளங்கிய புய வரை துலங்க
வரும் முதல் மத மா கரி என திருந்து மனத்திடை களிப்பொடு மகிழ்ந்து
தரும் முகில் கவிகை இலங்கிட சிறந்த சபாமலை இடத்தினில் சார்ந்தார்

மேல்
$2.3.112

#1451
உடு புறம் பொதிந்த மதி தவழ் மலையின் உச்சியின் நடு மிசை உறைந்து
கடுப்பு அற கொடும் சொல் பிறந்திடாது அமிர்தம் கனிந்த வாய் இதழ் திறந்து எவர்க்கும்
எடுப்ப அரும் புதுமை உண்டு என இனத்தோர் யாரையும் இனிதுற நோக்கி
கொடுப்பதற்கு எழு மா முகில் இனம் பொருவா குருநெறி முகம்மது விளித்தார்

மேல்
$2.3.113

#1452
கல்லகத்து உறைந்து முகம்மது விளித்த கட்டுரை கேட்டலும் இனத்தோர்
பல்லரும் செறிந்து திரளொடும் எழுந்து பார்த்து அறிகுவம் என நடந்து
செல்லிடம் பிரியா கரு முகில் கவிகை நீழலில் சேட்டு இளம் கதிர் விட்டு
எல்லவன் எழுந்தது என நபி இருந்த இடத்தினில் உறைந்தனர் அன்றே

மேல்
$2.3.114

#1453
காரணம் உளது என்று உரைத்து எமை விளித்த கருத்து அறிகிலம் என கடிதின்
ஊரவர் உரைப்ப வானவர் உரைத்த உரையினை உளத்தினில் இருத்தி
தாரணி புறத்தில் தெறும் படை திரண்டு வந்தது தமர்க்கு இடர் என யான்
ஈரமுற்று உரைப்ப எவர்க்கும் உண்மையதாய் இருப்பதோ என நபி இசைத்தார்

மேல்
$2.3.115

#1454
உரைத்த சொல் எவர்க்கும் உறுதி நிண்ணயம் என்று அனைவரும் உரைத்திட மகிழ்ந்து
நிரைத்த குங்கும தார் புய நபி இனி யான் நிகழ்த்திய மார்க்க நல் நெறியை
தரைத்தலத்து ஈமான் கொள்ளுதற்கு இசையா தரம் படைத்தவர் அனைவரையும்
கரைத்திட நனி அதாபு எனும் கொடிய கடும் பிணி பிடித்திடும் என்றார்

மேல்
$2.3.116

#1455
கூறிய மொழி கேட்டு அபூலகுபு எனும் அ கொடியன் இரு விழி சிவந்து
மாறுபட்டு இதற்கோ குலத்தொடும் கெடுவாய் வரவழைத்தனை என சீறி
தேறிலாது உறுக்கி இரு கரம் புதைப்ப செறிதரு பூழ்தியை வாரி
ஈறிலான் தூதை முகம்மதை சிறிதும் எண்ணிலாது எதிர்ந்து நின்று எறிந்தான்

மேல்
$2.3.117

#1456
அடர்ந்து எதிர்த்து உரைத்த கொடியவன் அபூலகபு புவியிடத்தும் ஆகிறத்தும்
இடைந்திடும் பெரும் கேடு உடையவன் இவனே என்னும் அ பொருள் உரை பிறப்ப
துடங்கு தப்பத்யதா என தோன்றும் சூறத்து ஒன்று இறங்கியது உலகில்
கிடந்த மும்மறையும் தெரிதர புகழ்ந்த கிளர் ஒளி முகம்மது நபிக்கே

மேல்
$2.3.118

#1457
சூறத்தின் பொருளை முகம்மதும் உரைப்ப துணுக்குறாது உனது உரை உலகில்
தேற துன்புறும் கேடு எனக்கு வந்தடைந்தால் தேடிய திரவியம் அனைத்தும்
மீற தந்திரருக்கு அளித்து இடர்-அதனை விரைவினில் போக்குவன் என்ன
பேறு அத்தம் இல சொல் உரைத்தனன் எவர்க்கும் பெரும் கொலை பிழை விளைத்திடுவான்

மேல்
$2.3.119

#1458
இறையவன் தூதர்க்கு இசைத்த சொற்கு எதிராய் இசைத்திடும் அபூலகுபு என்போன்
நிறைதரும் பொருளும் இழந்து உதவாமல் நெட்டு உடல் பெரும் தலை அரவம்
உறைதரு நரகம் புகுவன் என்று ஆயத்து இறங்கியது உலகு எலாம் விளங்க
மறைமொழி பயிற்றும் செ இதழ் மணி வாய் முகம்மது மனம் மகிழ் பெறவே

மேல்
$2.3.120

#1459
அவனியில் கேடும் முடிவினில் நரகும் அடைகுவன் அபூலகுபு எனவே
செவியுற ஆயத்து இறங்கிற்று என்று உரைத்த உரைக்கும் சேர்தரும் இனம் அனைத்தும்
கவின் அற அதாபு என்று ஒரு பிணி பிடிக்கும் என்ற கட்டுரைக்குமே கன்றி
தவிர்கிலா வயிர மனத்தராய் காபிர் தனித்தனி கொலை தொழில் நினைத்தார்

மேல்
$2.3.121

#1460
தேம் தரும் இனிய சொல் செவ்வி நம் நபி
ஆய்ந்த சொல் உணர்ந்து இசுலாத்தில் ஆகிய
மாந்தரை பிடித்து அகம் மறுக்கமுற்று அற
வீய்ந்திட இடர் பல விளைத்திட்டார்களே

மேல்
$2.3.122

#1461
வீசுவர் சிலர்-தமை விடுத்து நல் மொழி
பேசுவர் சிலர்-தமை பிடித்து புன்மொழி
ஏசுவர் சிலர்-தமை இரண்டுபட்டு உறும்
பூசலுக்கு அடிப்படை புணர்த்துவார் சிலர்

மேல்
$2.3.123

#1462
மாயவன் முகம்மது வகுத்த மார்க்கத்தில்
ஆயினன் இவன் என அடுத்த அம்மாறையும்
கூயவன் தந்தை ஆசிறையும் கோது இலா
தாய் சுமையாவையும் தமக்கை-தன்னையும்

மேல்
$2.3.124

#1463
பிடித்தனர் சினத்தொடு இ நான்குபேரையும்
அடித்தனர் இரு கரம் அழுந்த அங்கமும்
துடித்திட கயிற்றினில் சுருக்கி பாதலம்
வெடித்திட சுடும் பரல் வெயிலில் ஆக்கினார்

மேல்
$2.3.125

#1464
ஏங்குவர் இரங்குவர் இரு கண் நீர் விழ
தேங்குவர் அடிக்கடி தீனை மாறியும்
நீங்குவது இல் என நினைந்திட்டு உள்ளகம்
வீங்கிட நெட்டுயிர்ப்பு எறிந்து வீழ்குவார்

மேல்
$2.3.126

#1465
தங்கிய கதிரவன் தழலின் மெய் ஒளி
மங்கி உள் ஈரலும் வறந்து தீய்ந்திட
பங்கிகள் பூழ்தியில் பதிய மூட்டிய
வங்கியில் கிரிமி ஒத்து அறிவு போக்கினார்

மேல்
$2.3.127

#1466
வேனலில் கிடந்து உடல் வெதும்பி செ வரி
பானலத்து அருவி நீர் பரப்பி உள்ளுடைந்து
ஊன் என வியர்ப்பு எறிந்து உதிர நம் நபி
தீன் நிலை மறுத்திலர் செவ்வியோர்களே

மேல்
$2.3.128

#1467
உறுக்கினார் செழும் கரம் உரத்தோடு ஒன்றவே
இறுக்கினார் அடிக்கடி எடுத்த தீவினை
முறுக்கினாரல்லது மூட்டும் தண்டனை
குறுக்கினார் இலை கொலை கொடுமையாளரே

மேல்
$2.3.129

#1468
நல் நிலை கெடுமவர் நடத்தும் வல்வினை
இன்னல் கண்டு எழில் நபி இடருற்றாரொடு
மன்னிய துயரினை பொறுத்த மாட்சியால்
பொன்_உலகு உமக்கு என உரைத்து போயினார்

மேல்
$2.3.130

#1469
மண்ணிடை கணவனை நோக்கி மைந்தனை
எண்ணுற நோக்குவள் இதயம் வாடும் அ
பெண்ணினை நோக்குவள் பெய்யும் செம் தழல்
விண்ணினை நோக்குவள் வீடு நோக்குவாள்

மேல்
$2.3.131

#1470
யாசிறு மனைவி நல் அறிவுக்கு இல்லிடம்
மாசு அற தீன் பயிர் வளர்க்கும் வேலியார்
பாசம் அற்று அவர் இடர் பார்த்திலேன் என
காசு அறு பொன்_நகர் காண போயினார்

மேல்
$2.3.132

#1471
தெரி மறை முகம்மதின் தீனுக்காகவே
இரு நிலத்திடை முதல் இறந்து தேன் சொரி
மரு மலர் சுவர்க்க மாராயம் பெற்றவர்
தரு அம்மாறுடைய தாய் எவர்க்கும் தாயரே

மேல்
$2.3.133

#1472
அன்ன மென் நடை சுமையா என்று ஓதிய
மின் அமர்_உலகிடை மேய பின் நெடு
வன்னியின் குழிக்கு உடல் வளர்க்கும் பாதகர்
உன்னிய கொடும் சினம் ஒழிந்திலார் அரோ

மேல்
$2.3.134

#1473
துன்னலர் இழைத்திடும் துன்பத்தால் அடல்
மன்னவன் யாசிறும் மகளும் வாடி நின்று
இன்னலில் இடைந்திடைந்து இறந்து சோதி வாய்
பொன்_உலகினில் குடிபுகுத போயினார்

மேல்
$2.3.135

#1474
தந்தையும் உடன்பிறந்தவளும் தாயரும்
இந்த வல்வினையினால் இறந்திட்டார் என
மந்தர புயர் அம்மாறு என்னும் மன்னவர்
சிந்தையில் சூழ்ச்சி ஒன்று உன்னி தேறினார்

மேல்
$2.3.136

#1475
வாயினில் ஒன்றும் தம் மனத்தில் ஒன்றும்
தீயினும் கொடியவரிடத்தில் செப்பியே
மேய துன்பு அனைத்தையும் விலக்கி வில் இடும்
சாயகம் என நபியிடத்தில் சார்ந்தனர்

மேல்
$2.3.137

#1476
மா தவரிடம் புகுந்து அமரர் வாழ்த்திய
பாத பங்கய மலர் இறைஞ்சி பற்றொடும்
கோது அறு தீன் நிலை நிறுத்தும் கொற்றவர்
சீத ஒண் கண்கடை அருவி சிந்தினார்

மேல்
$2.3.138

#1477
அழுதவர் திருமுகம் நோக்கி அங்கையால்
செழும் மலர் கண்ணின் நீர் துடைத்து தீயவர்
குழுவினை கடந்து இவண் அடைந்த கொள்கையை
மொழி என உரைத்தனர் முதல்வன் தூதரே

மேல்
$2.3.139

#1478
பெற்றவர் இருவரும் பிறப்பும் துஞ்சினர்
உற்றவர் இலை என உன்னி உண்மையை
முற்றுற கருத்தினின் முடித்து காபிர்கள்
சொற்றவைக்கு ஏற்பவை சொல்லினேன் என்றார்

மேல்
$2.3.140

#1479
ஆக்கமற்றவர் இடர் அடுக்கில் இன்னமும்
வாக்கினில் ஒரு மொழி வழங்கி உண்மையை
போக்கு அற சிந்தையுள் பொருத்தி தீவினை
நீக்குதல் கடன் என நிகழ்த்தினார் அரோ

மேல்
$2.3.141

#1480
இவ்வண்ணம் நிகழ்ந்து இவண் இருக்கும் நாளையில்
நொவ்விய மனத்து இபுனுகலபு என்பவன்
வெவ்வியன் அடிமை பிலாலை நோக்கி மா
செவ்வியன் இவன் என நகைத்து சீறினான்

மேல்
$2.3.142

#1481
அடிமையன் அறிவிலன் அறியும் தன் உரைப்
படி நடவா முரண் படித்த வஞ்சன் பொய்
பிடிபடும் முகம்மதின் பேச்சுக்கு உட்படும்
கொடியவன் இவன் என கனன்று கூறினான்

மேல்
$2.3.143

#1482
மாய வஞ்சனை தொழில் முகம்மதின்-வயின்
போய் இசுலாத்தினில் புகுந்தது என் என
காய் எரி நிலத்திடை படுத்தி கல் எடுத்
தே அவன் உரத்தினில் இருத்தினான் அரோ

மேல்
$2.3.144

#1483
படர் உலம் உரத்தினில் பதிய பார்க்கரன்
சுடு கதிர் நிலத்திடை சோர்ந்து மூச்செறிந்து
உடல் உலைந்து உள் உயிர் ஒடுங்கும் காலையில்
இடர் தவிர்த்து இரு விழி எரிய நோக்குவான்

மேல்
$2.3.145

#1484
மற்றும் அ தரையிடை கிடத்தி மார்பகம்
இற்றிட பெரும் சிலை உரத்தில் ஏற்றுவன்
சற்று ஒரு நொடி வரை தவிர்ந்திரான் மன
பற்று அறும் இரக்கம் இலாத பாவியான்

மேல்
$2.3.146

#1485
நெஞ்சினில் பெரும் சிலை சுமந்து நீங்கிலா
வெம் சுரத்திடை மிடைமிடைந்தும் வேதநூல்
விஞ்சையின் முகம்மது விளக்கும் உண்மையை
அஞ்சலித்தவனலால் அறிவு நீங்கிலான்

மேல்
$2.3.147

#1486
இபுனுகல்பு-அவன் இடர் என்னும் தீயினில்
நவநிதம் என பிலால் நடுங்க விண்ணும் இ
அவனியும் புகழ் நபி தோழராகிய
கவன வாம் பரி அபூபக்கர் கண்டனர்

மேல்
$2.3.148

#1487
பொறுக்க அரும் வேதனை பொறுத்தும் நிண்ணயம்
மறுக்கிலன் இவன் என மதித்து கூறிய
வெறுக்கை கொண்டு அடிமை பிலாலை மீட்டி நம்
பெறற்கு அரும் உரிமையான் என்ன பேசினார்

மேல்
$2.3.149

#1488
மன்னிய புகழ் அபூபக்கர் மாசு இலா
நல் நிலையவன்-தனை உரிமை நாட்டிய
பின்னரும் பகை பிணி பிணிப்பு நீக்கியே
தன் அருளொடும் பெரும் தீனை தாங்கினார்

மேல்
$2.3.150

#1489
திருநெறி தீன் உள்ளோரை தீன் நெறி மாறினோர்கள்
மருள் உடை மனத்தராகி முரண் மறாது இருக்கும் நாளில்
விரி கதிர் இலங்கி சேரார் மெய் நிணம் பருகும் வெள் வேல்
கரதல ஹம்சா என்னும் காளை கானிடத்திற் புக்கார்

மேல்
$2.3.151

#1490
மெல் இலை கானத்து ஏகி விலங்கு இனம் வேலில் தாக்கி
பல்லரும் குழுமி ஆர்ப்ப பரிவொடும் வேட்டையாடி
ஒல்லையில் அடவி நீந்தி உள்ளகம் பூரித்து ஓங்க
செல் உறை புரிசை வேலி திருநகர் சாரும் காலை

மேல்
$2.3.152

#1491
செல் உறழ் கர சுத்ஆன் என்று ஓதிய செவ்வி தோன்ற
இல் உறை தொழும்பில் உள்ளாள் இளம் கொடி ஒருத்தி வெற்றி
வில் அணி தட கை ஏந்தி வரும் விறல் ஹம்சா என்னும்
வல்லியம் எதிரில் புக்கு வாய் திறந்து உரைக்கலுற்றாள்

மேல்
$2.3.153

#1492
ஒன்னலர் செகுக்கும் வேலோய் உமது உயிர் துணைவர் ஈன்ற
மன்னர்_மன்னவரை செல்வ முகம்மதை வதனம் நோக்கி
இன்னலுற்று அகமும் கொள்ளா இழுக்கொடும் வழு கொள் மாற்றம்
உன்னி உற்று உரைக்கவொண்ணாது அபூஜகில் உரைத்தது அன்றே

மேல்
$2.3.154

#1493
கைப்பு உரை சினக்க கூறும் கருதலன் முகத்தை நோக்கி
மை படும் கவிகை வள்ளல் மறுத்து ஒன்று மொழிகிலாமல்
எய்ப்புறு மனத்தராகி இனம் இல்லா தமியர் போல
செய் படும் வனசம் ஒவ்வா செம் முகம் வெளிறிற்று என்றாள்

மேல்
$2.3.155

#1494
பழுதுறும் கொடிய மாற்றம் அபுஜகில் பகர்ந்தது எல்லாம்
பொழி கதிர் பொருப்பு திண் தோள் புரவலர் பொறுத்தார் என்ன
வழு அறு ஹம்சா கேட்டு மனத்தினுள் வேகம் மீறி
குழுவொடும் திரண்டு வைகும் கொடியவனிடத்தில் சார்ந்தார்

மேல்
$2.3.156

#1495
படிறு அபூஜகில் என்று ஓதும் பாதகன் வதனம் நோக்கி
அடல் முகம்மதுவை சொல்லாத அவமொழி பகர்ந்தது எந்த
மிடல் என சினந்து சீறி வீர வேல் தட கை வில்லால்
உடைபட சிரத்தில் தாக்கி உறுக்கொடும் கறுத்து சொல்வார்

மேல்
$2.3.157

#1496
துனி மனத்து உறைய முன்னோன் தோன்றலை உறைத்தாய் என்னில்
இனி எவை உரைப்பன் யானும் இயல் நபி மொழிந்த மார்க்கம்-
தனில் நடு நிலைமை ஆனேன் சாதியில் தலைவர் கூடி
நனி பகை வரினும் காண்பேன் காணும் நீ நவிறல் என்றார்

மேல்
$2.3.158

#1497
அணி திகழ் ஹம்சா வஞ்சம் அடர் அபூஜகிலை நோக்கி
தணிவு இலா வெகுளி மாற்றம் சாற்றலும் அவனை சூழ்ந்து
பணி பனீமகுசூம் என்னும் திரளவர் பலரும் கோப
துணிவுடன் அமருக்கு ஏற்ற சுடர் படை கலன்கள் ஏற்றார்

மேல்
$2.3.159

#1498
இனத்தவர் நெருங்கி செ வாய் இதழ் மடித்து இரு கண் சேப்ப
சினத்ததும் ஹம்சா என்னும் சிங்க ஏறு இயல்பு நோக்கி
மனத்தினில் அடக்கி செவ்வி மதியொடும் தமருக்கு ஏற்ப
கனத்து உரை எடுத்து காட்டி அபூஜகில் கழறலுற்றான்

மேல்
$2.3.160

#1499
அங்கு அவன் தனையன் மைந்தன் அகுமதை வாய்க்கொள்ளாத
பங்கமுற்று உறும் சொற்கு ஏற்ப தண்டனை படுத்தல் செய்தான்
நம் குலத்தவர்க்கு கோபம் நடத்துதல் பழுது என்று ஓதி
வெம் கொலை மனத்துள் ஆக்கி விளை பகை தவிர்த்து நின்றான்

மேல்
$2.3.161

#1500
அடல் அரி ஹம்சா கோபித்து அபுஜகில் அவையை நீங்கி
கடி மலர் மரவ திண் தோள் கன வரை கதித்து வீங்க
உடை திரை அமுதம் ஒவ்வாது ஓதிய கலிமா வேந்தர்
இடைவிடாது இருப்ப தோன்றும் எழில் முகம்மதுவை சார்ந்தார்

மேல்
$2.3.162

#1501
வள்ளல் என்று உதவும் செவ்வி முகம்மதின் மதுர வாக்கின்
விள்ள அரும் மறையின் தீம் சொல் விடுத்து எடுத்துரைப்ப தேறி
உள்ளமும் உடலும் பூரித்து உருசிக்கும் அமுதின் மிக்காய்
தெள்ளிய கலிமா ஓதி தீன் நிலைக்கு உரியர் ஆனார்

மேல்
$2.3.163

#1502
அறிவுறும் ஹம்சா தீனில் ஆயினர் என்னும் மாற்றம்
மறு உறை குபிரர் கேட்டு மனத்தினில் துன்பமுற்றார்
இறையவன் தூதர் செவ்வி இயல் நபி கலிமா ஓதும்
திறல் கெழும் வேந்தர் யாரும் சிந்தையில் செல்வம் பெற்றார்

மேல்

4 உமறு கத்தாபு ஈமான் கொண்ட படலம்

$2.4.1

#1503
சமர கேசரி அப்துல்லா தரு திரு மதலைக்கு
அமரர்_கோன் இழிந்து அரு நபி எனும் பெயர் அளித்து
திமிர வெம் குபிர் கடிந்து தீன் நிலை நெறி நிறுத்தி
கமை தரும்படி ஆண்டு நான்கு என கடந்ததன் பின்

மேல்
$2.4.2

#1504
வருடம் நான்கு சென்று ஐந்தினில் முகம்மது ஒருநாள்
இரவினில் தனித்திருந்து இரு கரம் எடுத்து ஏந்தி
பொருவு இலா முதல் இறைவனை ஈறிலா பொருளை
உருகு மெய் மன வாக்கொடும் புகழ் எடுத்துரைத்தார்

மேல்
$2.4.3

#1505
உலகினில் கருதலர்க்கு அடல் அரி உமறினை கொண்டு
அலது அபூஜகிலினை கொடு தீன் நிலை-அதனை
பெலனுறும்படி எனக்கு அருள் பிறிது இலை எனவே
நலனொடும் துஆ செய்தனர் முகம்மது நபியே

மேல்
$2.4.4

#1506
இந்த மன்னர்கள் இருவரில் ஒருவர் என் வசமாய்
தந்து தீன் நிலை நிறுத்துவை என தனி முதலை
புந்தி கூர்தர உரைத்தனர் கேட்டனர் புகழ்ந்தார்
சிந்து வெம் கதிர் எழுந்தது விழுந்தது திமிரம்

மேல்
$2.4.5

#1507
அற்றையில் பகல் போதினில் அபூஜகில் அவையுள்
வெற்றி வேந்தர்கள் பலருடன் உமறையும் விளித்து
கற்ற வாள் வலியவர்க்கு உறு கருமம் என் மனத்தில்
உற்றது ஒன்று உளது யாவரும் கேண்-மின் என்று உரைத்தான்

மேல்
$2.4.6

#1508
திக்கு நான்கினும் திசையினும் தேயங்கள்-தனினும்
மக்கமே இகல் அறும் தலம் வலிமையும் அஃதே
மிக்க வீரத்தில் நம் இனத்தவர் அதின் மேலோர்
ஒக்கும் யாம் தொடுத்து அதில் முடியாதது ஒன்று இலையே

மேல்
$2.4.7

#1509
பதிக்கும் நம் இனத்தவர்க்கும் நல் வழிக்கும் உள் பகையாய்
உதிக்கும் பாதகர் போல் நபி முகம்மது என்று உதித்தான்
சதிக்கும் வஞ்சனை தறுகணன் இவன்-தனை பொருளாய்
மதிக்க வேண்டுவது இலை இனி வதைத்திடவேண்டும்

மேல்
$2.4.8

#1510
உதிரம் சிந்திட முகம்மதின் உயிர் செகுத்தவர்க்கு என்
பதியின் உற்றது எ பொருள் உளது அ பொருள் பலவும்
நிதியும் ஈய்குவன் எனக்கு அரசு என நிகழ்த்திடுவன்
எதிரும் வீரர்கள் உளர் எவர் என எடுத்து இசைத்தான்

மேல்
$2.4.9

#1511
மானம் போக்கிய கொடும் கொலை விளைத்திடும் மனத்தான்
ஈனன் இ உரை பகர்தலும் அவையகத்து இருந்தோர்
ஆனது இ உரை தீங்கு இவை என உரையாடாது
ஊன் அருந்திய வேல் நுழைபவரை ஒத்திருந்தார்

மேல்
$2.4.10

#1512
வெற்றி வீரத்தின் மிக்கவர் எவர் என விரித்து
சொற்றதில் கடு வெகுளியுற்று இரு விழி சுழல
உற்றுநோக்கி வெற்பு அதிர்த்திடும் உறு வலி புயங்கள்
இற்றதோ என அவை வெருவிட உமறு இசைத்தார்

மேல்
$2.4.11

#1513
புதிய வேதம் ஒன்று உளது எனும் படிறு உரை புகன்றி
பதியில் உள்ளவர்க்கு அரும் களை என பகை விளைத்த
மதுகை மன்னவன் முகம்மதின் உடல் வதைத்திடும் வாள்
இது-கொல் காணுதி நீவிர் என்று அடல் உமறு எழுந்தார்

மேல்
$2.4.12

#1514
குறுகலார் உயிர் உதிரம் கொப்பிளித்த குற்றுடைவாள்
இறுக வீக்கி மற்றொரு படைக்கலம் வலன் ஏந்தி
தறுகிலா மன வலியொடு புய வரை தடத்தில்
நறை கொள் குங்கும தொடை புரண்டு அசைந்திட நடந்தார்

மேல்
$2.4.13

#1515
உமறு எழுந்திடும் வெகுளியின் உடையவன் அருளால்
அமரர்-தங்களில் ஒருவர் ஆன் ஏறு உருவாகி
கமல மென் பத முகம்மதின் அரும் பகை களைய
இமைநொடிக்குள் அந்தரமிருந்து அவனியின் இழிந்தார்

மேல்
$2.4.14

#1516
கால் திரட்சியும் கவை அடி குளம்பின் கட்டு உரமும்
மேல் திருக்கு அற வளைந்து எழும் மருப்பினில் வியப்பும்
கூற்றுறாது உருள் கழுத்தடி தோல் நெளி குழைவும்
நாற்றி மேல் துளை நாசியில் தவழ்தரும் நாவும்

மேல்
$2.4.15

#1517
அசைத்த வால் எடுத்து இரு புடை புடைத்து மண் அதிர
விசைத்த கால்களில் உலவி தண் பசிய புல் மேய்ந்து
பசித்த வள்_உகிர் நிகர் உமறு ஏகிய பாதைக்கு
இசைத்து அடுத்தது வானகத்து உரும் எனும் இடபம்

மேல்
$2.4.16

#1518
உலம் கொள் திண் திறல் புயன் உமறு எனும் ஒரு சீயம்
கலன்கள் வில்லிட வெயர்ப்பொடும் விழி கனல் கதுவ
துலங்கு செ இதழ் வெள் எயிறு அதுங்கிட சுடர் வாள்
இலடங்கிட தனி வருவது நோக்கியது இடபம்

மேல்
$2.4.17

#1519
கவ்வை அம் கடல் புவியின் முகம்மதை கசப்ப
தெவ்வர் இல் என மனத்திடை களிப்பொடும் சிரித்து
குவ்வு அதிர்ந்திட உமறு கத்தாபு என கூவி
எவ்வுழி தனி செல்குற்றீர் நீவிர் என்று இசைத்த

மேல்
$2.4.18

#1520
உரைத்த சொல் செவி புக உழை எவர் என நோக்கி
தரைத்தலத்து இவண் ஒருவரும் இலர் என சார
இரைத்தலோடும் அ உரை பகர்ந்து உமறு என இசைப்ப
திருத்தி நால் திசை எங்கணும் நோக்கினர் செம்மல்

மேல்
$2.4.19

#1521
கூறும் மாந்தர்கள் இலை என பினும் வழி குறுக
வேறு கூவியது எவர் என மறுத்தும் உள் இடைந்து
வேறு மாக்களை காண்கிலர் விடையினை நோக்கி
தேறும் இ உரை பகர்ந்தது இங்கு எவர் என திகைத்தார்

மேல்
$2.4.20

#1522
பருந்து எழும் கதிர் வேல் உமறு எழில் முகம் பார்த்து
வருந்திலாது உமை கூவியது யான் என மதித்து
பொருந்தும் இல்லிடம் தவிர்ந்து எவண் புகுவது புகழோய்
விரிந்த வாய் திறந்து அறையும் என்று உரைத்தது விடையே

மேல்
$2.4.21

#1523
ஞான மா மறை முன்னவர் மொழி நடவாமல்
ஈனம் இன்றிய தேவதம் அனைத்தையும் இகழ்ந்து
மால் நிலத்தினில் புதிது ஒரு மார்க்கம் உண்டாக்கி
தீன் எனும் பெயர் நிறுத்தி தன் உரைப்படி திருத்தி

மேல்
$2.4.22

#1524
இனம் எலாம் வெறுத்திட பகை என தலையெடுத்து
துனி விளைத்திடும் முகம்மதின் உடல் துணிதுணித்து
சினம் அகற்றுதற்கு எழுந்தனன் என தெளிந்து எதிராய்
வினவும் ஏறுடன் மொழிந்தனர் உமறு எனும் வீரர்

மேல்
$2.4.23

#1525
ஆதி தூதரை வெறுத்து உலகு அடங்கலும் திரண்டு
வேதனை தொழில் விளைக்கினும் அவர்-வயின் விளையாது
ஏதமுற்றது உம் மன வலி இடரினை தவிர்ந்து
போதல் வேண்டுமால் நுமக்கு என மறுத்து உரை புகலும்

மேல்
$2.4.24

#1526
பரி கரி திரள் படையொடு நிலத்தினில் பரப்பி
அரசர் ஆயிரர் இகலினின் மன வலிக்கு அணுவே
திரம்-அதாயினும் முகம்மதினிடத்தினில் சேறல்
உரம்-அது அன்று நின் உரன்-அதும் உரன் அல உரவோய்

மேல்
$2.4.25

#1527
படைக்கலத்தில் ஒன்று எடுத்து அறியா பகுத்து அறியா
விடைக்குள் மெல்லியன் இளமையன் தனியவன் வினையேன்
புடைக்குள் வீரத்தை விளைத்தியேல் முகம்மதின் புகழை
உடைக்கும் நின் வலி என்பதை அறிவன் என்று உரைத்த

மேல்
$2.4.26

#1528
நந்தி இ உரை பகர்ந்திட நரபதி உமறு
கந்து அடர்த்து எறி களிறு என இரு விழி கனல்கள்
சிந்திட கரும் பிருகுடி நுதல் செல சினந்து
மந்திர கதிர் வாள் எடுத்து அசைத்து எதிர் வந்தார்

மேல்
$2.4.27

#1529
எதிர்த்து நின்று அற வீசினர் வீசலும் இடபம்
குதித்து தம் வல பாரிசம் ஆகின குறுகி
மதித்து வீசலும் இடப்புறம் ஆனது மறுத்தும்
பதித்து வீசலும் பிற்புறம் ஆனது பறந்தே

மேல்
$2.4.28

#1530
நான்கு திக்கினும் குதித்து முன் அணித்துற நடக்கும்
தேன் குதித்த செம் தொடை புயர் உரத்தொடும் சினந்து
வான் குதித்த மின் என கர வாள் ஒளி வயங்க
தான் குதித்தனர் துரத்தினர் திரிந்தனர் சாரி

மேல்
$2.4.29

#1531
எட்டி ஒட்டுவர் வெட்டுவர் வெட்டலும் இடபம்
கிட்டிடாது அகலாது உடல் கிழிபட எதிர்ந்து
முட்டி தாக்குற வருவ போல் அடிக்கடி முடுகும்
தொட்டிடாது ஒழியாது அரும் சூறையின் சுழலும்

மேல்
$2.4.30

#1532
அடுத்து முன் எதிர்த்து இரு வளை மருப்பினை அசைக்கும்
வெடித்த வால் இரு புறத்தினும் அடிக்கடி விசைக்கும்
படித்தல துகள் விசும்புற குளம்பினில் பறிக்கும்
இடித்த வான் உருமேறு என அதிர்ந்திடும் இடபம்

மேல்
$2.4.31

#1533
கண்ணினுக்கு எதிர் தோன்றிடும் காணொணாது அகலும்
விண்ணினில் பறந்திடும் திசை விசும்பு எலாம் திரியும்
எண்ணும் முன்னும் முன் வந்திடும் கால் மடித்து எதிரே
மண்ணினில் படுத்திடும் குனிந்து எழுந்து வால் நிமிர்க்கும்

மேல்
$2.4.32

#1534
இடபம் இவ்வணம் திரிதர இரு விழி சிவந்து
தொடருவார் சுடர் வாள் கொடு தாக்குவர் துரத்தி
அடருவார் மறிப்பார் திகைப்பார் அடுத்தடுத்து
கடு விசை கொளும் கால் தளர்ந்து இதழினை கறிப்பார்

மேல்
$2.4.33

#1535
கரத்தை நோக்குவர் வாளினை நோக்குவர் கடுப்பின்
எருத்தை நோக்குவர் வீரத்தை நோக்குவர் எதிரா
தரத்தை நோக்குவர் அவையினில் அபூஜகிலுடனே
உரைத்த வார்த்தையை நோக்குவர் நோக்குவர் உளத்தை

மேல்
$2.4.34

#1536
இன்று இருந்து எழுந்து இகல் அடல் அரி முகம்மதுவை
வென்றி கொண்டனம் இலை அலது இவண் நெறி மேவும்
கன்றினை கடிந்தோம் இலை என மனம் கசங்கி
நன்று நன்று நம் வீரம் என்று அகத்திடை நகுவார்

மேல்
$2.4.35

#1537
முனிந்து புன்னகை கொண்ட வாள் உமறை முன் அடுத்து
குனிந்து பாதலம் மோந்து உடல் குழைத்து அற தூங்கி
கனிந்த வாய் அசைபோட்டு இரு காதினை அசைத்து
வனைந்த போல் அகலாது நின்றது மழ விடையே

மேல்
$2.4.36

#1538
ஏறு முன் அணித்திட்டது என்று எழில் கர வாளால்
மாறி வீசினர் முடுக்கினர் அடிக்கடி வளைத்து
கோறல் செய்குவன் யான் என குவலயம் குலுங்க
சீறி முன்னினும் மும்மடங்கு எனும்படி திரிந்தார்

மேல்
$2.4.37

#1539
தொலைந்தது இவ்வணம் வெய்யவன் தோன்றும் முன் தொடுத்திட்டு
அலைந்து உலைந்து இடைந்து அற தவித்து அசறுமட்டாக
கலைந்தது அன்றி ஏறு அகப்படவிலை என கலங்கி
மலைந்திடா மனம் மறுகுற உமறு உளம் மலைந்தார்

மேல்
$2.4.38

#1540
மட்டு வார் பொழில் நெறியிடை மழ விடை எதிர்ந்து
வெட்டும் என்று உரை பகர்ந்ததும் வெகுளியின் நடந்து
பட்ட செய்தியும் புதுமையும் ஊரவர் பலர்க்கும்
விட்டு உரைத்திட வேண்டும் என்று எழுந்தனர் விரைவின்

மேல்
$2.4.39

#1541
குறித்து வந்தவை விடுத்து எழும் உமறினை கூவி
தெறித்த நுண் துளி முகில் குடை முகம்மதை செகுப்ப
வெறித்த வெம் சின வீரத்தின் விழைவுகள் அனைத்தும்
மறைத்திரோ என புகன்று போயது மழ விடையே

மேல்
$2.4.40

#1542
கொண்ட வேகமும் வீரமும் புறம் தலை குனிய
கண்ட காரணத்தொடும் இளைப்பு அரு நெறி காட்ட
விண்டு உதிர்த்த மெய் வியர்ப்பொடு மெலமெல நடந்து
மண்டு பேரவை அபூஜகிலிடத்தில் வந்தனரே

மேல்
$2.4.41

#1543
முகமலர்ச்சி கெட்டு அற தவித்து உடல் வெயர் முழுக
பகு மனத்து உமறு அடைந்தவை அனைவரும் பார்த்து
முகம்மதின்-வயின் அடைந்ததும் நடந்ததும் வகுத்து
புகர் அறும் புகழோய் உரை என புகன்றனரே

மேல்
$2.4.42

#1544
அறபிகள் குழுவின் நாப்பண் அமர் அபூஜகிலை நோக்கி
பொறை மத கரி கோடு ஏற்ற புரவலர் உயிரை மாந்தி
கறை கெழும் குருதி வை வேல் காவலர் உமறு கத்தாப்
மறைபடா நெறியில் கண்ட புதுமையை வகுக்கலுற்றார்

மேல்
$2.4.43

#1545
மண்ணினில் திசையில் சூழ்ந்த மறி திரை கடற்குள் வானோர்
விண்ணினில் பெரியோர் ஆய்ந்த மெய்ம்மறை தனக்குள் தேர்ந்த
திண்ணியர் உரைக்குள் கேட்டது இலை மனம் தெளிய என்-தன்
கண்ணினில் கண்டது யாரும் காணொணா புதுமை என்றார்

மேல்
$2.4.44

#1546
சரத்திடை விடை ஒன்று அங்ஙன் தனித்து நின்று அதிர்ந்து என் பேரை
உரைத்தது விளிப்ப கேட்டேன் உணர்ந்து யார் என்ன நேர்ந்தேன்
விரைத்தலின் எங்கு ஏகின்றீர் என விறல் முகம்மது உற்ற
துரைத்தன குறும்பு தீர்ப்ப துணிந்தனன் என்று உரைத்தன் மாதோ

மேல்
$2.4.45

#1547
இன்று எனை அடர்த்தோர் செவ்வி இயல் முகம்மதுவை வென்றோர்
என்றதற்கு எதிர்ந்து கைவாள் எறிந்தனன் உரத்தில் தாக்கி
நின்றனன் மறிந்தேன் எந்த நிலத்தினும் தொடர்ந்து காலில்
சென்றனன் தவித்தேன் என்னால் செய்தது ஒன்று இல்லை அன்றே

மேல்
$2.4.46

#1548
காற்று என பறக்கும் ஊழி கனல் என சீறும் கொல்லும்
கூற்று என எதிரும் செல்லில் குல வரை அனைத்தும் சுற்றும்
தோற்றிடா விசும்பில் தாவும் சுழலும் மண் திகிரி என்ன
சீற்றமுற்று அடுத்து பின்னும் முன்னுமே திரியும் அன்றே

மேல்
$2.4.47

#1549
அலகையின் குலமோ வானின் அமரரில் ஒருவன்-தானோ
உலகுறும் ஜின்னோ தெய்வம் உருவு எடுத்ததுவோ செவ்வி
சிலை நுதல் கதீஜா கேள்வன் செய் தொழில் வஞ்சம்-தானோ
நிலம் மிசை விடையாய் தோன்றி நின்ற அ மாயம்-தானே

மேல்
$2.4.48

#1550
மாற்று உரை வேதம் பேசும் முகம்மதை தேடி செல்லும்
ஆற்றில் இ விடையை கண்டேன் அசறுமட்டாக கண்ணில்
தோற்றிடா துன்பமுற்ற புதுமையை தொகுத்து வல்லே
சாற்றுதற்கு அமைந்தேன் வீரம்-தனை மறுத்திலன் யான் என்றார்

மேல்
$2.4.49

#1551
கொடுவரி அனைய கத்தாப் குமரர் ஈது உரைப்ப கேட்டு
விடம் என கறுத்து சிந்தை விறல் அபூஜகிலும் சுற்றி
உடனிருந்தவரும் தம்மில் ஒண் புயம் குலுங்க நக்கி
அடல் உறும் உமறு கத்தாபு அணி முகம் நோக்கி சொல்வார்

மேல்
$2.4.50

#1552
ஈது ஒரு புதுமையாக எண்ணி நீர் உரைத்தீர் வேத
மா தவன் முகம்மது என்போன் வளர்த்த வஞ்சனைக்குள் நூறு
பேதம் ஒன்றதற்கு காணாது இதனை நீர் பிதற்றி பேச
தீது உறும் இவை போல் யாங்கள் கண்டதும் தெரிக்கோணாதே

மேல்
$2.4.51

#1553
இன்னமும் இவை போல் நூறாயிரம் விதம் கண்ணுற்றாலும்
மன்னவன் விளைக்கும் வஞ்சம்-அதனை நீர் அமைத்தல் வேண்டும்
பன்னுதல் எவரும் கேட்பின் பழுது உறும் பருதி வேலோய்
முன்னும் உன் கருத்தில் உன்னும்படி முடித்திடு-மின் என்றார்

மேல்
$2.4.52

#1554
பொய்யினை புகலேன் கண்ட புதுமையை புகன்றேன் தோன்றும்
மெய்யினை பொய் என்று ஓதல் யாவர்க்கும் விதியது அன்றே
ஐயுறல் உரைக்கலாகாது அதிசயம் மறைக்கலாகா
வையகத்து இயற்கை ஈது என்று உமறு இவை வழங்கி போனார்

மேல்
$2.4.53

#1555
அற்றை நாள் கழிந்த பிற்றை அடல் உமறு எழுந்து செ வேல்
கொற்றவர் அப்துல்லா-தம் குமரரை கோறல் வேண்டி
முற்றிய மனத்தினோடு முரண் மத கரியை நேராய்
வெற்றி வெண் கதிர் வாள் தாங்கி நடந்தனர் விளைவது ஓரார்

மேல்
$2.4.54

#1556
நடு உறு மனத்தார் நீதி நான்மறை தெரிந்த நாவார்
படிறு உரை பகரா செவ்வி அறபிகள் பல்லர் கூடி
உடன் ஒரு வழக்கை தேற்றி தேறிலாது ஒளிரும் செம்பொன்
கொடுமுடி விசும்பு தூண்டும் கோயிலின் வாயில் புக்கார்

மேல்
$2.4.55

#1557
ஆலயம் புகுந்து செம் தேன் அலங்கல் தோய் சுவாகு பூம் பொன்
கால் இணை இறைஞ்சி ஏத்தி கை முகிழ்த்து இருந்து நோக்கி
மேலவ எங்கள் குற்ற வழக்கினை விளங்க கேட்டு
சாலவும் தீர்தலாக சாற்றுதல் வேண்டும் என்றார்

மேல்
$2.4.56

#1558
தோட்டு அலர் நாற்றும் வாயில் சுவாகு எனும் புத்து-தன்னை
வாள் திறத்து அறபி வீரர் மகிழ்ந்து எமர் வழக்கின் நுட்ப
பூட்டு அறுத்து உரைக்க வேண்டும் என புகழ்ந்து இருக்கும் காலை
தீட்டிய கதிர் வேல் செம் கை திறல் உமறு அவணின் வந்தார்

மேல்
$2.4.57

#1559
வகையறா வழக்கு தீர்த்து தருக என மன்னர் சூழ்ந்த
தொகையினில் உமறு என்று ஓதும் தோன்றலும் இருப்ப கண்டு
திகை தெரி விளக்கமாக சுவாகு எனும் தெய்வம் வாய் விண்டு
அகம் மகிழ்ந்து அவையோர் கேட்ப நல் மொழி ஆய்ந்து சொல்லும்

மேல்
$2.4.58

#1560
மதி கதிர் அவனி காயம் வானம் மற்று எவையும் போற்றும்
புதியவன் உண்மை தூதர் நபிகளில் புகழின் மிக்கோர்
பதி இரண்டினுக்கும் மேலோர் படைப்பு உள எவைக்கும் முன்னோர்
கதி தரும் காட்சி பெற்றோர் ஹபீபு எனும் முகம்மது என்போர்

மேல்
$2.4.59

#1561
அன்னவர் முன்னர் ஏகி அவர் நிலை கொண்ட தீனின்
சொல் நய கலிமா ஓதி துணை மலர் அடியை போற்றி
பன்னு மா மறையின் தீம் சொற்படி வழுவாது நேர்ந்து
பொன்னும் மா மணியும் போல பொருந்துதல் எவர்க்கும் வேண்டும்

மேல்
$2.4.60

#1562
தேவ நல் மொழி என்று என் சொல் சிந்தையில் சிந்தித்தோர்கள்
காவலர் எவர்க்கும் மேலாய் காசினிக்கு அரசர் ஆகி
பூ அலர் சுவன நாட்டை பொது அற புரப்போர் ஆகி
மேவு தீவினைகள் தீர்த்து வேத நல் அறிவர் ஆவார்

மேல்
$2.4.61

#1563
வருந்திடாது அகலும் நும்-தம் மனத்து உறை வழக்கின் சொல்லை
திருந்திட உரையும் நீதி செவ்வியன் முகம்மதின் சொல்
பொருந்திட நடவும் என் முன் புகல்வது புந்தி கேடு என்று
இருந்த அ பெயருக்கு எல்லாம் இனையன வியம்பிற்று அன்றே

மேல்
$2.4.62

#1564
புத்து நன்கு உரைத்த மாற்றம் புதுமை என்று எவரும் போந்தார்
மத்தக கரட கைமா மடுத்து எறிந்து உதிரம் சிந்தும்
சித்திர வடி வாள் செம் கை உமறு எனும் செம்மல் ஏற்றின்
உத்தரம்-தனையும் இந்த உறுதியும் நினைத்து தேர்ந்தார்

மேல்
$2.4.63

#1565
நென்னல் ஏற்று உரையும் தெய்வம் நிகழ்த்திய மொழியும் பார்த்து
முன் உறு காட்சி ஏதோ முடிவது ஒன்று உளது என்று எண்ணி
தன் அகத்து இருத்தி செவ்வி முகம்மதின் சார்பை மீட்டு
மன்னு சோதரி என்று ஓதும் பாத்திமா மனையில் சென்றார்

மேல்
$2.4.64

#1566
திரு மயில் பாத்திமாவும் செ இயல் ஸஹீதும் தேன் சோர்
மரு மலி படலை திண் தோள் முகம்மதின் கலிமா ஓதி
குரு நெறி கப்பாப் என்னும் குரிசில் முன் இருந்து செல்வம்
பெருகிய மறை நேர் கேட்டு பிரியமுற்று இருக்கும் காலை

மேல்
$2.4.65

#1567
எறுழ் வலி தட கை வெற்றி எழில் உமறு இவணின் நம்-பால்
குறுகினர் என்ன செல்வ குல கொடி பாத்திமாவும்
பெறு கதி ஸஹீதும் தம்மில் பேதுற்று நெறி கப்பாபை
மறைபட இருத்தி செவ்வி மனை திரு முன்றில் நின்றார்

மேல்
$2.4.66

#1568
மென் நபிக்கு ஈமான் கொண்டோர் இவர் எனும் வெறுப்பினாலும்
பன்னு மா மறை சொலில் உள் பகர்ந்தது ஓர் ஐயத்தாலும்
மன்னிய சீலம் நீக்கி மைத்துனர் ஸஹீதை கோபித்து
இன் உயிர் தடிவேன் என்ன இரு விழி கனல நின்றார்

மேல்
$2.4.67

#1569
கணவனை சினந்தார் என்ன காரிகை பாத்திமா கண்டு
இணை விழி முத்தம் சிந்த இன் உயிர் பிறப்பை நோக்கி
மண வலி தட கை வேந்தே மருவலர் போல சீறல்
அணவது நுமக்கு என்று ஓதி அடர்த்ததை விலக்காநின்றார்

மேல்
$2.4.68

#1570
மடித்த வாள் எயிறு கவ்வி நின்ற மன் மடந்தை-தன்னை
வெடித்திட உறுக்கி கூறி விழி கனல் சிதற சீறி
எடுத்தது ஓர் கரத்தில் தண்டால் இளம் பிறை நுதற்கு மேல்-பால்
அடித்தனர் உதிர மாரி ஆறுபட்டு ஒழுகிற்று அன்றே

மேல்
$2.4.69

#1571
சிரசு உடைந்து உதிரம் சிந்தி தேங்கிய மயிலை நோக்கி
விரி கதிர் மணி பைம் பூணார் வெகுளி உள் அடங்க ஏங்கி
அரிவை நும் மனைக்குள் நீவிர் அடிக்கடி ஓதியோதி
பரவிய மாற்றம் என்னே தெளிதர பகர்-மின் என்றார்

மேல்
$2.4.70

#1572
படித்த சொல் யாது வேறு பகர்ந்தவர் எவர்-கொல் என்ன
வடி தடம் கதிர் வேல் மை கண் மட_மயில் மறைத்து கூற
கட தட கரத்து வேழ காவலர்க்கு அசனி ஒப்பார்
பிடித்த சொல்-தனை மறாது விருப்புற்று பின்னும் கேட்டார்

மேல்
$2.4.71

#1573
உடன் பிறந்து இகலாநின்ற உமறு எனும் உயிரை நோக்கி
மடந்தையர் திலதம் அன்ன பாத்திமா மணி வாய் விண்டு
திடம் தவழ் உண்மை வேதம் தெளிந்த சொல்-அதனை தீனை
கடந்தவர் புனிதம் இல்லார் கரத்து அளித்திடல் தீது என்றார்

மேல்
$2.4.72

#1574
முன்னவள் கனி வாய் விண்டு மொழிந்த சொல் மனத்துள் கொண்டு
மன்னவன் அபுல் காசீம்-தன் மன தெளிவு-அதனின் மிக்காய்
பன்ன அரும் சிறப்பு வாய்ந்த பங்கய வாவி நண்ணி
தென்னுறு கதிர் வேல் சிங்கம் சீத நீர் ஆடினார் ஆல்

மேல்
$2.4.73

#1575
புனைந்த மென் துகிலை நீத்து வேறு ஒரு புதிய தூசும்
வனைந்து அகம் புனிதம் ஆக்கி வாவி அம் கரையை நீக்கி
சினம் தங்கு கதிர் வேல் கண்ணாள் திருமனை புகுந்து நீவிர்
நினைந்தவை முடித்தேன் யானும் நிகழ்த்தியது அருள்க என்றார்

மேல்
$2.4.74

#1576
சுந்தர புது நீர் ஆடி தூசு அணிந்து இகல் இலாது
வந்த பின்னோனை நோக்கி முகம்மதே உண்மை தூது என்று
அந்தம் இல் ஆதி சொற்ற ஆயத்தும் பொருளும் தீம் சொல்
சிந்து பத்திரத்தை ஈந்தார் சிற்றிடை பெரிய கண்ணார்

மேல்
$2.4.75

#1577
பத்திரம் கரத்தில் வாங்கி பார்த்திவர் உமறு கத்தாப்
சித்திர வரியில் ஒன்றை தெளிவுற தேர்ந்து வாசித்து
இத்தகைக்கு உரியர் யாவர் எவர் மொழி இது-கொல் என்ன
புத்தியுள் களித்து தேறி பொருவு இலா உவகை பூத்தார்

மேல்
$2.4.76

#1578
மறைமொழி பொருளை தேர்ந்து மானுடர் மொழி ஈது அன்று என்று
இறையவன் மொழியே என்ன இதயத்தில் இருத்தி வேத
நிறை நிலை மனத்தர் ஆகி நினைத்த வஞ்சகத்தை போக்கி
குறைபடும் குபிரை சூழ்ந்த குலத்தொடும் வெறுத்து நின்றார்

மேல்
$2.4.77

#1579
வழி பிழைத்து இருளில் முள் சார் வனத்திடை கிடந்து உள் ஆவி
கழிபட இடைந்து எல் தோன்றும் காலை நல் நெறி பெற்றோர் போல்
அழிதரும் குபிரை நீக்கி அகுமது தீனை நோக்கி
பொழி கதிர் வதன செவ்வி புரவலர் உமறு நின்றார்

மேல்
$2.4.78

#1580
ஓது நல் நெறிக்கு நேர்பட்டு இசைந்தனர் உமறு என்று எண்ணி
காதரம் அகற்றி இல்லுள் கரந்தது தவிர்த்து கப்பாப்
தாது அவிழ் அலங்கல் கோதை தையலும் ஸஹீதும் உற்ற
வேதிகையிடத்தில் புக்கு விளைவது காண்ப நின்றார்

மேல்
$2.4.79

#1581
மருங்கினில் நின்ற கப்பாப் மன்னவன் உமறை நோக்கி
தரும் கரதலத்தோய் நும்-பால் சகத்தினும் விண்ணும் ஒவ்வா
அரும் கன வெற்றி நன் மாராயம் ஒன்று அடைவதாக
நெருங்கிய பொருளாய் இன்று ஓர் சோபனம் நிகழ்வன் என்றார்

மேல்
$2.4.80

#1582
இணை அடல் தவிர் வெள் வேலோய் இன்று இரவு உமை தீனுக்கு ஓர்
துணை என அருள்செய்வாய் என்று ஆதியை துதித்து செவ்வி
மண வலி புயத்தார் வள்ளல் முகம்மது ஆண்டு இரந்து கேட்ப
உணர்வுற கேட்டேம் என்றார் ஓங்கு நல் நெறியை நீங்கார்

மேல்
$2.4.81

#1583
எடுத்து இவை உரைத்த கப்பாப்-தனை விளித்து இரப்போர்க்கு என்றும்
கொடுத்ததில் செவந்த செம் கை கோளரி உமறு கத்தாப்
கடு தவழ்ந்து இருண்டு சேந்த கயல் விழி கதீஜா கேள்வர்
அடுத்து உறைந்த அவண் எங்கு என்ன அணி இதழ் வாய் விண்டார் ஆல்

மேல்
$2.4.82

#1584
முதிரும் கரும் சூல் சலதரத்தை முடியில் தாங்கி செழும் தேனை
விதிரும் சினை தண்டலை உடுத்து விளங்கும் குவவு சபாவரைக்கு
சதுரின் அணித்தாய் ஒரு மனை உண்டு அதனில் தரித்தார் அகுமதுவும்
முதிரும் கலிமா நிலை தவறா முதியோர் சிலரும் முரண் அறவே

மேல்
$2.4.83

#1585
மறை மா மொழி நா ஒழியாது வளர்க்கும் முதியோர் இனிது உரைப்ப
கறை ஆர் இலை வேல் கரத்து ஏந்தி கடிதின் விருப்பினுடன் எழுந்து
குறையா மதியம் என தீனை வளர்க்கும் குரிசில் முகம்மதுவும்
உறை வார் பொழில் சூழ் வரையினிடத்து உற்றார் உமறு கத்தாபே

மேல்
$2.4.84

#1586
மலையினிடத்தின் உயர்ந்து இருந்த மனையை நோக்கி எம்மருங்கும்
குலவ நோக்கி மாந்தர் உறை குறிப்புற்று அறிய தோன்றாமல்
விலகும் கதிர் மெய் குரிசில் நபி உறைவது இவணே என விரைவில்
நிலைகொள் கபாடம்-தனை தீண்டி நின்றார் அறிவு குன்றாரே

மேல்
$2.4.85

#1587
இணை தாள் செறித்த மணி கதவம் தீண்டி இவணில் அடைந்தோர் தீன்
அணித்தார் புறத்தார் என நோக்கி உமறு என்று அறிந்து அங்கு அனைவோரும்
பணி தாழ் குழியில் களிற்று இனம் போல் பதறி பயந்து உள்ளம் கலங்கி
தணித்தாரிலை மெய் நடுக்கம் உரை தவிர்ந்தார் முகங்கள் குவிந்தாரே

மேல்
$2.4.86

#1588
வெருவி உரையாதிருந்தவரை விழித்து கரத்தால் அடர் களிற்றை
பொருவும் ஹம்சா மனம் வெகுண்டு புகழ்தற்கு அரிய திரு கலிமா
மருவி வருவாரெனில் உமறு மதிக்கு மதிக்கும்படியாக
பெருகு நலனும் சுவன பதி பேறும் பெறுவர் என உரைத்தார்

மேல்
$2.4.87

#1589
இகலும் தீங்கு மனத்து இருத்தி எழுந்தாரெனில் அங்கு அவர் கரத்தில்
திகழும் கதிர் வாள்-தனை பறித்து சென்னி களைவது அறுதி இதற்கு
அகலும் மனத்தால் வெருவிடல் இ அவையீர் மணி தாள் எறி கதவம்
தகவல் விடு-மின் என மறுத்தும் உரைத்தார் தட தார் புயத்தாரே

மேல்
$2.4.88

#1590
அறம் தாங்கு அகத்தார் ஹம்சா சொல் அறிவுள் இருத்தி மணி கதவம்
திறந்தார் திறந்த மனை நோக்கி செம்மை குடிகொண்டு எழுந்து அடல் வெம்
மறம் தாங்கிய பொன் புயத்து உமறு வந்தார் வரலும் செழும் சோதி
பிறந்து ஆர் எழில் நம் நபி குரிசில் பிந்தாதிருந்தார் எழுந்தாரே

மேல்
$2.4.89

#1591
நரந்தம் குலவி மரவ மலர் நறும் தேன் குளிக்கும் புய வரையோடு
உரம் தங்கிட வாள் அரி உமறை தழுவி ஒளிரும் கரம் தீண்டி
இருந்து இங்கு இவணில் வரும் வரலாறு இயம்பும் எனக்கு என்று எழிலி முற்றும்
கரம் தங்கிய நல் அருள் பெருகும் ஹபீபு முகம்மது உரைத்தனர் ஆல்

மேல்
$2.4.90

#1592
வரிசை நபியே முகம்மதுவே வானோர்க்கு அரசே புவிக்கு அரசே
உரிய தனியோன் முதல் தூதே உமது கலிமா உரைப்படியே
அரிய மறை தேர்ந்து ஈமான் கொண்டு அறத்து ஆறு ஒழுகும்படி கருத்தில்
கருதி இவணில் அடைந்தேன் என்று உரைத்தார் உமறு கத்தாபே

மேல்
$2.4.91

#1593
கூறும் கலிமா உரைத்து ஈமான் கொள்ளும்படிக்கு இங்கு அடைந்தன் என
தேறும் மொழி கேட்டு அகுமது தம் செவ்வி கமல முகம் மலர்ந்து
பேறும் இதுவே கிடைத்தது என பெரியோன் ஆதி-தனை புகழ்ந்து
மீறும் களிப்பு ஆநந்த மன விழைவால் தக்குபீறு உரைத்தார்

மேல்
$2.4.92

#1594
வல்லோன் நபியும் கலிமாவை வகுத்து காட்டி முன் உரைப்ப
செல் ஏர் கரத்தார் உமறு கத்தாப் செப்பி இசுலாம் நெறி தேக்கி
அல் ஆர் குபிரை கடிது அகற்றி அழியா தொழுகை முறை படித்து
நல்லோர் பரவும்படி வணங்கி நறும் தீன் நடுக்கம்-தனை தவிர்த்தார்

மேல்
$2.4.93

#1595
விரியும் கதிர் மெய் சிறை தடம் கண் விண்ணோர்க்கு அரசர் பொருப்பின் இருந்து
அருவி என செய்திடும் கலிமா அடங்கா நதியின் பெருக்கு ஆக்கி
சுருதி மொழி தீன் பயிர் தழைப்ப சுற்றும் குபிர் வெம் களை தீய்க்கும்
குருவின் நெறியால் மனம் களிப்பு கொண்டார் ஈமான் கொண்டாரே

மேல்
$2.4.94

#1596
விதியின் முறை என்று அகுமது தாம் விளக்கும் உரை கேட்டு உமறு கத்தாப்
மதி மெய் மயங்கி வஞ்சனையின் மாயத்து உறைந்தார் என ஊரும்
பதியும் பெருக்க உரை நடத்தி பற்றார் இவர் என்று அபூஜகல் தன்
புதிய மொழியை தொல் கிளைக்கு புகழ்ந்தான் நபியை இகழ்ந்தானே

மேல்
$2.4.95

#1597
சரியும் திரை முத்து எறிந்து இரைக்கும் சலதி குபிரினிடையில் நடு
விரியும் அமுதம் எனும் கலிமா மேலோர் ஒரு முப்பஃதுடன் மூன்று
அரிய மகடூ அறுவர் உமறு அரசர் ஒருவர் அவனியினில்
தெரியும் இலக்கம் இ நான்குபதின்மருடனும் சிறந்து இருந்தார்

மேல்

5 உடும்பு பேசிய படலம்

$2.5.1

#1598
வடிவுறும் உமறு எனும் வள்ளல் நம் நபி
யுடன் உயர் தீன் நிலைக்கு உரியராய பின்
திடமுடைத்தவர்களாய் சிந்தையில் பெறும்
மடம் அகல்தர பெரு மகிழ்ச்சி எய்தினார்

மேல்
$2.5.2

#1599
செயிர் அறும் தீன் நிலைக்கு உரிய செவ்விய
பயிர் என வரும் கலிமாவை பண்பொடு
நயனுற பெருக்கிய நண்பர் யாவரும்
உயிர் என முகம்மதை உவந்து காமுற்றார்

மேல்
$2.5.3

#1600
உடல் உயிர் என உவந்து உறையும் நாளினில்
அடல் அபூபக்கரும் அலியும் தெவ்வரை
கடவிய வேல் கர உமறும் கள் அவிழ்
மடல் திகழ் மாலிகை அறபி மன்னரும்

மேல்
$2.5.4

#1601
தோம் அகல் முகம்மது நபியும் சூழ் வர
மா மதிள் நகர்ப்புறத்து எய்தி மற்றொரு
தேம் மலர் பொழிலிடை தெரிய வைகினார்
காமரு மதியமும் கணமும் என்னவே

மேல்
$2.5.5

#1602
செல் இடும் குடை நபி செவ்வி காண்டலும்
கல்லொடு மரமும் புல் கானும் வாவியும்
மெல்லிய சிறை புளும் விலங்கு இனங்களும்
ஒல்லை ஊர்வன வனத்து உகளும் சாதியும்

மேல்
$2.5.6

#1603
தோற்றியது எவ்வையும் துலங்க கேட்பதாய்
மாற்ற அரும் சுருதியின் வசனம்-தன்னொடும்
போற்ற அரும் புகழ்ச்சியால் புகழ்ந்து பொங்கிய
ஊற்றமுற்று உயர் சலாம் உறைத்து நின்றவே

மேல்
$2.5.7

#1604
கானகத்து உற்ற காரணங்கள் யாவையும்
தீனவர் செவியுற தேக்கி சீர் பெற
வானவர் புகழ்தர மக்க மா நபி
ஈனம் இல் மனையகத்து ஏகினார் அரோ

மேல்
$2.5.8

#1605
அற்றையில் போழ்து அவை அகன்று பின்னை நாள்
வெற்றி வெம் கதிர் அயில் வீரர் யாவரும்
சுற்றிட மெய் எழில் துலங்க மால் நபி
மற்றொரு தலத்திடை வைகினார் அரோ

மேல்
$2.5.9

#1606
நல்லறிவுடையவர் சூழ நம் நபி
இல்லிருந்து எழுந்து இவண் இருப்ப மற்றொரு
வில்லினன் வலையினன் வேடன் கையினில்
கல்லிய தடியொடும் கானில் ஏகினான்

மேல்
$2.5.10

#1607
கானகம் சுற்றியும் கல்லை தள்ளியும்
மான் இனம் தடைபட வலைகள் வீக்கியும்
தான் மலை முழைஞ்சினும் தடவி நோக்கியும்
ஊன் புசித்திடுவதற்கு ஒன்றும் காண்கிலான்

மேல்
$2.5.11

#1608
அடவியில் புகுந்து அரும் பதுக்கை சுற்றி ஓர்
புடையினின் முசலிகை புகுத கண்டனன்
தடைபட வலை-வயின் சாய்த்து மேல் சிலை
உடைபட தாக்கி தன் உரத்தில் பற்றினான்

மேல்
$2.5.12

#1609
வள் உகிர் உடும்பினை வலைக்குள் மாட்டி வை
முள் உறை கானமும் முரம்பும் நீக்கி தன்
உள்ளகம் மகிழ்வொடும் உழையர் சூழ்தர
நள் உறை முகம்மது நபியை நோக்கினான்

மேல்
$2.5.13

#1610
மன்னிய அறிஞரின் நாப்பண் வைகியது
என் இவர்க்கு உறும் செயல் யாது-கொல் என
முன்னிய வேட்டுவன் மொழிய ஆதி-தன்
நல் நிலை தூது இவர் நபி என்று ஓதினார்

மேல்
$2.5.14

#1611
மை முகில் கவிகை நல் நபி முன் வந்து நின்று
எ மறைக்கு உரியவர் நீவிர் எ நெறி
செம்மையில் நடத்துதல் தெளிய செப்பும் என்று
இ மொழி அறபி வேட்டுவன் இசைத்தனன்

மேல்
$2.5.15

#1612
கூறிய அறபியை குறித்து காசினிக்கு
ஈறினில் வரு நபி யான் அலாது இலை
ஊறிய பொருள் புறுக்கான் என்று ஓதிய
தேறு நன் மறை எனக்கு உற்ற செவ்வியோய்

மேல்
$2.5.16

#1613
என் உரை நின்று இசுலாத்தில் ஆயினோர்
மின் ஒளிர் மாளிகை சுவனம் மேவுவர்
பன்னி இ மொழி பழுது என்னும் பாவியோர்
வன்னியின் குழியிடை கிடந்து மாழ்குவார்

மேல்
$2.5.17

#1614
ஈது நன்று என மனம் இசைந்து என் நாவினில்
ஓதிய நன் கலிமாவை ஓதி நின்
பாதகம் துடைத்து நல் பதவி எய்து என
ஆதி-தன் தூதுவர் அறைந்திட்டார் அரோ

மேல்
$2.5.18

#1615
தெரிதர நல் மொழி தெளித்த நம் நபி
மரை மலர் செவ்விய வதன நோக்கி நும்
உரை மறுத்திலன் எனக்கு உண்மையாக இ
தரையினில் நபி என சாட்சி வேண்டுமால்

மேல்
$2.5.19

#1616
கானிடை அறபி இ உரையை காட்டலும்
தேன் நகு மலர் புய செவ்வி நம் நபி
வானிடை மண்ணிடை படைப்பின் மற்றதில்
ஈனம் இல் கரி உனக்கு இயைவது ஏது என்றார்

மேல்
$2.5.20

#1617
கடும் பரல் கான் கவிழ் வலையின் உட்படும்
உடும்பு எனதிடத்தில் ஒன்று உளது முள் எயிறு
இடும் பகு வாய் திறந்து இனிதினாக நும்
மொடும் பகர்ந்திடின் மறுத்து உரைப்பது இல்லையே

மேல்
$2.5.21

#1618
என்று உரை பகர்ந்தவன் இதயம் கூர்தர
நன்று என முறுவல் கொண்டு இனிய நம் நபி
குன்றினில் திரிதரும் உடும்பை கூடிய
மன்றினில் விடுக என்று உரை வழங்கினார்

மேல்
$2.5.22

#1619
கானிடை திரிந்து அற தவித்து கால் தளர்ந்
தேன் இனி விடில் உடும்பு எளிதின் எய்திடாது
ஆனதால் மடி மிசை ஆக்கினேன் நறும்
தேன் அவிழ் அலங்கலோய் என்ன செப்பினான்

மேல்
$2.5.23

#1620
எடுத்து உனது உடும்பை என்னிடத்தின் முன்னிதாய்
விடுத்திடில் அகன்றிடாது என விளம்பலும்
மடுத்த மென் மடி புகும் உடும்பை வாங்கி அங்கு
அடுத்தனன் விடுத்தனன் அறபி வேடனே

மேல்
$2.5.24

#1621
நெடும் தலை எடுத்து வால் நிமிர்த்து முள் எனப்
படும் தரத்து உகிர் நிலம் பதிப்ப ஊன்றி எள்
இடும் தரை அகன்றிடாது இறைவன் தூது என
திடம் தர மனத்தினில் தெளிந்து நோக்கிற்றே

மேல்
$2.5.25

#1622
ஆர் அமுது அனைய சொல் அரிய வாய் திறந்து
ஓர் மொழி நம் நபி உடும்பை கூவலும்
சீர் பெற இரு விழி திறந்து நோக்கி நின்று
ஈர்தரு நா எடுத்து இயம்பிற்று அன்று அரோ

மேல்
$2.5.26

#1623
இகம் பரம் என வரும் இருமைக்கு உண்மையாய்
யுகம் பல உதிக்கும் முன் உதித்து பின் உதித்து
அகம் பயில் ஆரணத்து உறைந்து செப்பும் முச்
சகம் புகழ்ந்திட வரும் தக்க நீதியோய்

மேல்
$2.5.27

#1624
அண்டர்கள் பரவும் நும் அடியை நாள்-தொறும்
தெண்டனிட்டு இரு விழி சிரசின் மீது உற
கொண்ட சிற்றடிமையேன் உய்ய கொண்டு வாய்
விண்டு எனை விளித்தவை விளம்புக என்னவே

மேல்
$2.5.28

#1625
தேறிய மொழி இவை செவியில் சார்தலும்
மாறு இலாது யாரை நீ வணங்குகின்றனை
வேறு அற உரை என விளங்கும் நம் நபி
கூறலும் முசலிகை மறுத்தும் கூறுமால்

மேல்
$2.5.29

#1626
மரு மலி வள்ளல் யான் வணங்கும் நாயகன்
ஒருவன் அன்னோன் எழில் உயர் சிங்காசனம்
பொருவு அரும் வானில் ராசாங்கம் பூமியில்
தெரிதரும் கிருபையோ செம்பொன் நாட்டினில்

மேல்
$2.5.30

#1627
தீது இகல் அற்றவன் சினந்து செய்யும் அ
வேதனை நரகம் என்று எரியும் வீட்டினில்
பேதம் இல் அன்னது ஓர் பெரியவன்-தனை
ஓதி யான் வணங்குவது உண்மை என்றதே

மேல்
$2.5.31

#1628
அறத்தொடும் உரைத்தனை என்னை யார் என
குறித்தனை என நபி கூற கேட்டலும்
சிறுத்த முள் எயிற்ற வெண் நிறத்த செம் முனை
இறுத்து நூல் இரட்டை நா எடுத்து இயம்புமால்

மேல்
$2.5.32

#1629
பரவை விண் நில மலை பருதி மற்றவும்
உரிய நும் ஒளிவினில் உள்ள உண்மையில்
தெரிதர முதலவன் செவ்வி தூதராய்
இரு நில நபிகளின் இலங்கு மேன்மையாய்

மேல்
$2.5.33

#1630
ஈறினில் வரு நபி இவணும் வாக்கினில்
கூறிய மார்க்கமே மார்க்கம் கோது அற
தேறினர் சுவர்க்கமே சேர்வர் தீது என
வேறு உரைத்தவர் அவர் நரகின் வீழ்வரால்

மேல்
$2.5.34

#1631
இனிதினும் பெயர் கலிமாவை என்னொடும்
வனம் உறை அஃறிணை வாழ்த்துகின்றது
நனி புகழ் உண்மை நல் நபியும் நீர் அலால்
பினை இவண் இலை என உடும்பு பேசிற்றே

மேல்
$2.5.35

#1632
உடும்பு இவை உரைத்தலும் உவந்து தன் மனத்து
இடும்பினை தவிர்த்து நின்று அறபி என்பவன்
குடும்பமும் எளியனும் குபிரினால் தினம்
படும் பவம் தவிர்க என பாதம் பற்றினான்

மேல்
$2.5.36

#1633
வண்ண ஒண் புய நபி பாதம் வைத்த கை
கண்ணினில் பதித்து அகம் கனிய முத்தமிட்டு
எண்ணில் உவகையுற்று எவரும் போற்றிட
உள் நெகிழ்ந்து அரும் கலிமாவை ஓதினான்

மேல்
$2.5.37

#1634
புதியவன் நபி கலிமாவின் பொற்பு உற
ஒதுவுடன் வரும் முறை ஒழுகி மா மறை
விதி முறை தொழுகையும் மேவி மேதையின்
முதியவன் இவன் என முசுலிம் ஆயினான்

மேல்
$2.5.38

#1635
உனை பிடித்து அடர்ந்தனன் உனது செய்கையால்
எனை பிடித்து அடர் பவம் இன்று போக்கினேன்
மனை தட வளை செல் என்று உடும்பை வாழ்த்தினான்
பனை தட கர களிறு அனைய பண்பினான்

மேல்
$2.5.39

#1636
உறைதரும் குழுவினர் உவப்ப நோக்கி தன்
அறபி-தன் முக மலர்-அதனை நோக்கி மெய்
மறை நபி பங்கய வதனம் நோக்கி பின்
நிறைதரும் மகிழ்ச்சி பெற்று உடும்பு நின்றதே

மேல்
$2.5.40

#1637
மரு புய நபி திரு மதுர வாய் திறந்து
இருப்பிடத்து ஏகு என உடும்புக்கு இன்புற
உரைப்பது கேட்டு உளம் கனிந்து கானிடை
விருப்பொடும் போயது விலங்கின் சாதியே

மேல்

6 உத்துபா வந்த படலம்

$2.6.1

#1638
அடவியினில் உடும்பு அகல அறபி வேடனும் அறிவு உள்ளகத்தில் தேக்கி
புடை அகலா நிழல் போலும் தோழருடன் அகுமதையும் புகழ்ந்து போற்ற
மடல் அவிழ் பைம் குவளை செறி மடு சூழும் நீள் புரிசை மக்க மீதில்
உடு இனமும் நடு உறையும் நிறைமதியும் நிகர்த்திட வந்து உறைந்தார் அன்றே

மேல்
$2.6.2

#1639
திரை கடலின் நடு எழுந்த மதி கதிர் போல் முகம்மது தம் செழும் தீன் செவ்வி
நிறைத்து எழுந்த பயிர் போல தழைத்து ஓங்க நிலைநிறுத்தி நிகழும் காலம்
உரைக்கு அடங்கா வெகுளி பொங்கு மனத்தினராய் குபிர் தலைவர் ஒருங்கு கூடி
வரை தடத்தை கொதுகு இனங்கள் அரிப்பது என சில வசனம் வளர்க்கின்றாரால்

மேல்
$2.6.3

#1640
தண் தரள கதிர் வடிவின் முகம்மதினை குறைபடுத்தி அவர் தம் வாக்கின்
விண்டு உரைக்கும் மறைமொழியை எளிய மொழி என ஆக்கி வினவி ஈமான்
கொண்டவர்கள்-தமையும் அவர் மனையும் புறம்படுத்தி நமர் குலத்துக்கு ஆகா
தண்டனைகள் படுத்திடவும் பலபல தந்திர வசனம் சாற்றினாரால்

மேல்
$2.6.4

#1641
பிறவி யாது இவன் உரை யாது என விரித்து பகுத்து அறியா பேதமாக
அறபியாகிய குபிரர் பலர் கூறும் மொழி வழி கேட்டு அவரை நோக்கி
இறபியா தரும் புதல்வன் இரங்காத கெடு மனத்தன் என்றும் நீங்கா
உறவு யான் என்பவரை பகையாக்கும் விடன் நாக்கின் உரைக்கின்றானால்

மேல்
$2.6.5

#1642
முகில் கவிகை முகம்மதிடம் சென்று சிறிது உத்தரத்தை மொழிந்து யான் ஓர்
பகல் பொழுதின் அவன் உரையால் அவன் எடுத்த நெறி அனைத்தும் பழுதில் ஆக்கி
நிகர்க்கு அரிய குபல் அலது முதல் பிறிது ஒன்று இல்லை என நிறுத்தி மேலும்
விகற்பம் இலை என படுத்தி வருவன் என மொழிந்து எழுந்தான் வீரர்க்கு அன்றே

மேல்
$2.6.6

#1643
ஒருகாலும் தறுகாது குணக்கு எழுந்து குடக்கு ஓடற்கு உறும் வெய்யோனை
இரு காலும் வழங்காதான் முன் ஓடி மறிப்பன் எனும் இயற்கை போல
குருகு ஆலும் மலர் வாவி புடை சூழும் மக்க நகர் குரிசில்-தன்-பால்
பொரு கால கதிர் இலை வேல் வலன் இலங்க விரைவினொடும் புறப்பட்டானே

மேல்
$2.6.7

#1644
உத்துபா வரவினை கண்டு உருட்டு வார் திரை கரத்தின் ஓடி சோர்ந்து
கத்து வால் வளை தரளம் கதிர்த்து வார்ந்து ஒழுகு மணி கடலின் நாப்பண்
வைத்து வாழ்ந்து எழும் கதிர் போல் கதிர் கான்ற முகம்மது உளம் மகிழ்ந்து நோக்கி
தத்து வாம் பரி வயவருடன் அணித்து அங்கு உறைக என சாற்றினாரால்

மேல்
$2.6.8

#1645
இகல் பொருந்தும் உளத்தோடும் இறபியா தரும் விடலை இருந்து சோதி
முகம்மதினை முகம் நோக்கி சூழ்ந்து இருந்த பெரியோரை மதித்து போற்றி
பகரும் மொழி சிறிது உளது என்னிடத்தில் அ மொழி அனைத்தும் பரிவில் கேட்டு
புகர் அற நும் மனத்து ஆய்ந்து தெளியும் என மறுத்தும் உரை புகல்கின்றானால்

மேல்
$2.6.9

#1646
பெரும் தவத்தால் வரும் புகழோய் தனி இறைவன் ஒருவன் என பெருக்கும் பேச்சும்
இருந்த மறை அனைத்தையும் விட்டு எனது மொழி மறைமொழி என்று இசைக்கும் வாக்கும்
திருந்து நெறி புது நெறி ஒன்று உளது என முன் நெறி வழுவாய் செப்பும் மாறும்
வரும் தமர்க்கும் திசையோர்க்கும் மறையோர்க்கும் மனப்பொருத்தம் அன்று தானே

மேல்
$2.6.10

#1647
ஒருவன் என உரைத்தீர் இ நிறத்தன் இவண் உளன் என கண்ணுற செய்தீரில்
திரு வணக்கம் என தொடுத்தீர் முகம் கை கால்-தனை தோய்த்து ஓர் திசையை நோக்கி
தரையின் நுதல் தைவரலாய் அடிக்கடி தாழ்ந்து எழுந்து இரு கை-தன்னை ஏந்தி
வருவது அலால் ஒரு குறிப்பும் இலை எவர்கள் இ வணக்கம் வணங்கினோரே

மேல்
$2.6.11

#1648
முதல்வன்-தன் திரு தூதர் என பேரிட்டு அரிய மறை மொழி என்று ஏத்தி
புதிய மொழி உரைத்து ஈமான் கொள்வித்தீர் இசுலாத்தில் புக்க பேரில்
இதமுற நம் இறைவன் இவன் என கண்டோம் என உரைத்தோர் இல்லை மேலும்
பதவி உள எனில் அதுவும் எவர் அறிவர் சரதம் என பரிதி வேலோய்

மேல்
$2.6.12

#1649
மந்திரம் ஒன்று உருவேற்றி கண்கட்டாய் உடும்பினொடும் வசனித்தோம் என்று
அந்தரத்தை காரணமாய் விளைவித்தீர் விச்சை அலால் அருளோ நாளும்
புந்தியினில் சிறியோர்கள் அறியாது மயக்குறுவர் பொருவு இலாத
தந்திரமும் மறையோர்கள் இதனை ஒரு பொருளாக சார்ந்திடாரே

மேல்
$2.6.13

#1650
குலத்தினுக்கும் அரசருக்கும் முதியோர்க்கும் மறையோர்க்கும் கோது இலாது இ
தலத்தின் உறை குபல் எனும் அ தம்பிரான்-தனக்கும் எந்த சமயத்தோர்க்கும்
நல தகைமை தலக்கேடும் பிறர் சூடும் பெரும் பகையும் நடவா முன்னம்
இலத்தொடு ஒழுகு இனத்தொடு உறைந்து இவை தவிர் வெள் நிணம் பருகி இலங்கும் வேலோய்

மேல்
$2.6.14

#1651
தந்தை தாய் தமர் வணக்க முறை ஒழுகி பழைய மறை தழுவினீரேல்
வந்த மா வினை நீங்கும் இனத்தோர்கள் எவரும் மன மகிழ்ச்சியாகி
கந்து அடர் வெம் கரி இரதம் பரி நெருங்க படை சூழ கவிகை ஓங்க
இந்த மா நிலத்து அரசாய் இறைஞ்சுவது சரதம் என இயம்பினானால்

மேல்
$2.6.15

#1652
அச்சம் அணு இலது அகத்தின் உத்துபா உரைத்த மொழி அனைத்தும் கேட்டு
முச்சகமும் புகழ் முகம்மது றசூல் தம் இதழினில் புன்முறுவல் தோன்றி
விச்சை என தெளிந்து பலபல சூழ்ச்சி விரித்து அறத்தை விளங்கி என்னோடு
இச்சை பெற உரைத்தனை நன்கு யான் உரைத்தல் கேட்டி என இசைக்கின்றாரால்

மேல்
$2.6.16

#1653
எனக்கு இறையோன் உரைத்த மறை மொழி வசனம் திறத்தது அல என்ன கூறல்
மனக்குறையோ அலது உனது மதி திறனோ அறிகிலன் மும்மறையும் தேர்ந்தோய்
கனக்க மொழி ஒன்று எடுத்து காட்டுக நீ எனது மொழி கவினை பின்னர்
உனக்கு உரைப்ப கேட்டு மொழி திறன் அறி என்று எடுத்துரைத்தார் ஒளிரும் பூணார்

மேல்
$2.6.17

#1654
தரள ஒளி-தனில் உருவாய் உதித்த முகம்மது இதனை சாற்ற கேட்டு
பெருகு முதல் மறை வசன எவ்வுலகும் அறிவது யான் பேசில் என்னே
இருமையினும் கதி தரும் நும் புது மொழியை எனது செவிக்கு இயைவதாக
உரையும் என எடுத்துரைத்தான் இறபியா தரும் புதல்வன் உத்துபாவே

மேல்
$2.6.18

#1655
ஆதி-தனை உளத்து இருத்தி பிசுமில் எனும் உரை திருத்தி அமுதம் ஊறும்
வேதம் எனும் புறுக்கானில் ஒரு சூறத்து எடுத்து ஓதி விரிவதாக
போதமுறும் உபனிடத பொருள் அனைத்தும் தொகுத்து உரைத்தார் பொருவு இலாத
சீதர ஒண் கவிகை நிழல்-தனில் உலகம் புரந்து அளிக்கும் செவ்வியோரே

மேல்
$2.6.19

#1656
இரவி எனும் கலிமாவில் குபிர் திமிரம் அடர்த்து எரியும் இறசூலுல்லா
தெரி மறையின் உரை கேட்டு பொருள் தேர்ந்து பகுப்ப அதிசயித்து நோக்கி
உருகி மதி மயங்கி எதிர் உரையாமல் ஊமன் என ஒடுங்கி வான் தோய்
பெரு வரையின் மடங்கல் எதிர் வரையாடு நிகர்வது என பேதுற்றானே

மேல்
$2.6.20

#1657
அலங்கு உளை வால் அரி ஏறு முகம்மது நாவில் பிறந்தது அன்று இ தீம் சொல்
இலங்கு அமரர் இறை மொழி கேட்டு இவர்க்கு உரைத்தது அறுதி என இதயத்து ஓர்ந்து
கலங்கு மனம் தெளிந்து நபி கமல மலர் முகம் நோக்க கண்கள் நாணி
விலங்கு இனம் ஒத்து எவரோடும் மொழியாது தனி எழுந்து விரைவில் போனான்

மேல்
$2.6.21

#1658
கலை மறை தேர் முகம்மதுடன் உரையாமல் எழுந்து தலை கவிழ்ந்து நாணி
நிலமை அடல் அறிவு அகன்ற நெஞ்சினொடும் புலம்பி நெடுமூச்சில் சோர்ந்து
சிலை வயவர்க்கு எதிர் உரைப்பது என் என சஞ்சலத்தின் நடு தியங்கி வாடி
குலை குலைந்து குலத்தவரும் அபூஜகிலும் இருந்த பெரும் குழுவை சார்ந்தான்

மேல்

7 ஹபீபு மக்கத்துக்கு வந்த படலம்

$2.7.1

#1659
உள் அறிவு குடிபோக்கி இருந்தவன்-தன் முகம் நோக்கி உரவ நீ அ
வள்ளலிடம் சென்றதுவும் இருந்ததுவும் நிகழ்ந்ததுவும் வகுத்து கூறு என்று
அள்ளு இலை வேலவர் கேட்ப முகம்மது சொற்கு எதிராக அமரராலும்
விள்ள அரிது இ நிலத்தில் எவர் எதிர் உரைப்பர் எனும் மொழியை விளம்பினானே

மேல்
$2.7.2

#1660
அரி அலம்பும் புய விடலை மனம் மயக்குற்று உரைத்தவை கேட்டு அறிவு இல் மாந்தர்
பெருகும் அஃறிணை சாதி உளம் அனைத்தும் பேதுறுத்தி பெட்பினோடும்
உரைதர செய்து உவரி வரை நிலைமாற செய்பவன் இ உத்துபா-தன்
திரு மனத்தை பேதுறுத்தல் அவற்கு அரிதோ என நகைத்து செப்பினாரால்

மேல்
$2.7.3

#1661
கனைத்த முரண் கரி நிகர்த்த உத்துபா கலங்கிய கட்டுரையும் நேர்ந்து அங்கு
இனத்தவர்கள் உரைத்ததுவும் சரதம் என சிரம் தூக்கி எண்ணி தேர்ந்து
மனத்து அடக்கி தீன் எனும் ஓர் பெரும் பயத்தை புறத்து ஆக்கி வரி வில் ஏந்தும்
முனை தட கை அபூஜகில் தன் குலத்தோரை எதிர் நோக்கி மொழிவது ஆனான்

மேல்
$2.7.4

#1662
எத்திறத்தும் எப்புதுமை விளைத்திடினும் அ மாயத்திடை படாத
புத்தியினும் வாள் வலியின் திடத்தானும் வஞ்சனையை பொதிந்து தோன்றும்
சத்துருவாம் முகம்மது-தன் உயிர் விசும்பு குடிபுகுத தக்கது ஆக்கும்
பத்தியினன் நினைத்தபடி முடித்திடுவன் பார்-மின் என பகர்ந்து மாதோ

மேல்
$2.7.5

#1663
தேறாத மதியாலும் முற்றாத வலியாலும் செவ்வியோர்க்கு
மாறாத பெரும் பகையாய் முகம்மது என உதித்தோன்-தன் மாயம் தான் ஓர்
பேறாக நினைத்து உமறு கத்தாபை போல மனம் பேதுறேன் யான்
வீறு ஆரும் வேல் வேந்தீர் இவை சரதம் என மறுத்தும் விளம்பினானே

மேல்
$2.7.6

#1664
மதியார்-தம் செவிக்கு இயைய வாக்கினால் இவை உரைத்து மனத்தினூடு
கொதி ஆர் வெவ் விட அரவின் வாய் தேரை என அறிவு குலைந்து மேனாள்
விதி யாது என்று அறியாத கொடும் பாவி அவை நீங்கி விண்ணினூடும்
பதியாக படுத்த கொடி மணி மாட மனை புகுந்தான் பண்பிலானே

மேல்
$2.7.7

#1665
அற்றையினில் இரவு அகற்றி அறிவினால் உயர்ந்தோரை ஆவி போலும்
உற்றவரை மதிக்கு ஏற்ப உரைகொடுக்கும் திறத்தவரை உறவினோரை
வெற்றியொடும் இனிது அழைத்து அங்கு ஓர் மாடத்து இருத்தி வியந்து நோக்கி
குற்றம் அற அபூஜகில் தன் உளத்தின் உறும் வரவு ஆறு கூறலுற்றான்

மேல்
$2.7.8

#1666
பிறந்த குலம்-தனை வழுக்கி நமர்க்கும் ஒரு பெரும் பகையாய் பேதியாத
மறம் தவழும் மனத்தினனாய் இருந்த முகம்மதுவை உயிர் மாய்த்தல் வேண்டும்
நிறம் தவழும் கதிர் வேலீர் இல்லெனில் தீன் நிலை பெருகி நிலத்தின் மீது
புறம் தயங்க படர்ந்து நமர் குலம் சமயம் தேய்த்து அமிழ்த்திப்போடும் தானே

மேல்
$2.7.9

#1667
பகையினை நல் உடல் வருத்தும் நோய்-அதனை கொடு நெருப்பை பாரின் மீதில்
தொகு விடத்தை தோற்றரவில் பரிகரித்தல் யாவருக்கும் சூழ்ச்சித்து ஆகும்
மிகும் எனில் இ நில மாக்கள் மதியாலும் வலியாலும் வெல்வது ஆகா
நிகர் அரும் வெம் சமர் தொலைத்து நிறம் குருதி பிறங்கி ஒளிர் நிணம் கொள் வேலீர்

மேல்
$2.7.10

#1668
குடிமையின் நமர் குலத்தையும் மனத்தினில் குறித்து
மடிமையாய் இருந்தேமெனில் முகம்மது-தனக்கே
அடிமையாய் அவன் தண்டனைக்கு அடல் வலி இழந்தும்
மிடிமை ஆகுதல் சரதம் மின் அவிர் கதிர் வேலீர்

மேல்
$2.7.11

#1669
உறைந்தவர்க்கு இடர் வரும் முனம் ஒரு மன துணிவாய்
மறம் தரித்திடும் திரள் இனத்தொடும் முகம்மதுவை
இறந்திடும்படிக்கு இயற்றுவமெனில் நமர்க்கு எளிதின்
அறம் தரும் பரகதியுடன் புகழும் உண்டாமால்

மேல்
$2.7.12

#1670
இந்த வல் வினை தவிர்த்திடற்கு எனது உளம் பொருந்த
சிந்திடாது உறு மொழி பலர் உளத்தினும் தேர்ந்து
மந்திரத்தொடு வழு அறும் உரை வழங்கிடும் என்று
அந்த மன்னவர்-தமக்கு உரைத்து அபூஜகில் கேட்டான்

மேல்
$2.7.13

#1671
மாறு கொண்டு அகுமது நடத்திடும் வரலாற்றை
வேறு கொண்டு அபூஜகில் விளம்பிய மொழி அனைத்தும்
கூறு கொண்டு அவர் சிந்தையில் பலபல குறித்து
வீறு கொண்டு ஒரு மொழிப்பட எதிர் விளம்புவரால்

மேல்
$2.7.14

#1672
உரைத்த வாசகம் நன்கு உனது உறு மொழிக்கு எதிராய்
திருத்தி வேறு உரை பகர வல்லவர் எவர் திறலோய்
விரித்து மேல் உரை பகரவும் நமர் குலம் விளங்க
பொருத்தவும் நினை அலது வேறு இலை செழும் புவிக்கே

மேல்
$2.7.15

#1673
சிதைவு இலா மன திறல் வலி செயலினுக்கு ஏற்ற
மதி_வலோம் யாம் அலம் இனம் நும் மதிக்கு இயைய
புதிய சூழ்ச்சி ஒன்று உரைத்தியேல் எங்கள் புந்தியிற்கும்
விதி அதாம் அவை நடத்துக என உரை விரித்தார்

மேல்
$2.7.16

#1674
உற்ற செய்திகள் அனைத்தையும் ஓர்ந்து உணர்ந்து உரவோர்
வெற்றி வாள் முகம் நோக்கி வெவ் வினை முகம்மதுவை
பற்று அறா கொலை படுத்திடல் நமரொடு பரிவின்
முற்றும் இ நகர் படை கொடு முடித்திடல் அரிதே

மேல்
$2.7.17

#1675
வஞ்சனை தொழிலினில் முகம்மதினொடும் வாதா
விஞ்சை கற்றவர் ஆயிரர் எதிரினும் விளையாது
அஞ்சல் அலாது உரு ஏற்றிடில் ஏறு உருவு அனைத்தும்
நஞ்சமாம் நமது உயிரினை செகுத்திட நடக்கும்

மேல்
$2.7.18

#1676
வன் மதிள் புறத்து ஆலயத்து உறைந்த தேவதத்தை
என் மன குறை தவிர்த்து இடர் தவிர்த்தி என்று இசைக்கில்
நன்மையாய் உரைத்திடுவதோ நமர் குல பவத்தால்
தின்மையாய் உரைத்திடுவதோ என தெரிகிலமால்

மேல்
$2.7.19

#1677
ஆய்ந்து உணர்ந்து உளத்து எண்ணிய காரியம் அனைத்தும்
தேய்ந்ததல்லது தேறிய தெருட்சி அது அன்றே
வாய்ந்த புந்தி ஒன்று உளது இனம் தெளிந்திடும் மதிப்பாய்
காய்ந்த செம் கதிர் வேல் வலன் ஏந்திய கரத்தீர்

மேல்
$2.7.20

#1678
உரனில் நம் பெரும் குலத்தினில் அரசரின் உயர்ந்தோன்
மரை மலர் தடம் சூழ் திமஸ்கு அதிபதி மாலிக்
அருள் ஹபீபு எனும் அரசனுக்கு அறிந்திட உரைத்து
விரைவில் நம் பெரும் பகையினை துடைத்திடல் வேண்டும்

மேல்
$2.7.21

#1679
ஈது அலால் பிறிது இலை என அபூஜகில் இசைப்ப
ஆதரத்துடன் கேட்டவர் அனைவரும் அகத்தில்
கோது அற தெளிந்து இ மொழி நன்கு என குறித்து
மாதிர புயம் வீங்கிட மகிழ்ந்து சம்மதித்தார்

மேல்
$2.7.22

#1680
மாந்தர் யாவரும் ஒருப்பட எழுந்து ஒரு மருங்கில்
போந்திருந்து நல் அறிவினில் கேள்வியில் புகழில்
சார்ந்த உத்தர பிரத்தியுத்தரத்து இவன்-தனை போல்
ஆய்ந்த பேர் இலை என ஒருவனை குறித்து அழைத்தார்

மேல்
$2.7.23

#1681
பத்திரம் இவன் வரைந்திடில் காரியம் பலிக்கும்
புத்தியில் திறத்தவன் இவன் என பல புகழ்ந்து
முத்திரைப்பட முறையொடும் தேர்ந்து யாம் மொழிந்த
உத்தரம்-தனை வரைக என யாவரும் உரைத்தார்

மேல்
$2.7.24

#1682
காசு இலாது உரை வரைபவன் கேட்டு உளம் களித்து
மாசு இலா பெரும் தலைவரை தாழ்ந்து உற வாழ்த்தி
சூசியும் கடுதாசியும் எடுத்து மை தோய்த்து
பாசுரம்-தனை உரை-மின்கள் எனும் உரை பகர்ந்தான்

மேல்
$2.7.25

#1683
எழுதுகின்றனன் என்றதும் அவன் இருந்ததுவும்
பழுது இலாது இற்றை முகுர்த்தமும் நிமித்தமும் பார்க்கின்
முழுதும் வெற்றியே அலது இடர் இலை என முதலோர்
தொழுது புத்தினை புகழ்ந்து வக்கணை தொகுத்து உரைப்பார்

மேல்
$2.7.26

#1684
ஆதி நூல் உரை தெரிதரு ஹபீபு அரசு அறிக
ஓது நல் நெறி மக்க மா நகரினில் உறைந்த
சாதியோர்களும் தலைவரும் அபூஜகில்-தானும்
கோது இலாத விண்ணப்பம் என்று இரு கரம் குவித்தே

மேல்
$2.7.27

#1685
குபல் உறைந்த நல் தலத்தினில் ஹாஷிமா குலத்தில்
அபுதுல்லா-வயின் அவதரித்து ஆமினா மகவாய்
தவம் இலா முகம்மது எனும் பெயரினை தரித்து
புவி இகழ்ந்திட பிறந்திருந்தனன் ஒரு புதியோன்

மேல்
$2.7.28

#1686
சலதியூடு உறை கொடு விடம் என தலையெடுத்திட்டு
உலைவொடு அன்னையும் தந்தையும் இழந்து ஒரு தனியா
அலகிலாத வஞ்சனை வித தொழில் படித்ததனால்
விலகுதற்கு அரிதாகிய மாயங்கள் விளைத்தான்

மேல்
$2.7.29

#1687
அந்த நாள் குவைலிது மகள் அரசு எனும் மயிலை
பிந்திடா மணம் முடித்தனன் அவர் பெரும் பொருளால்
சிந்தையில் கருவிதத்தொடும் மதத்தொடும் சில நாள்
எந்த மன்னவர்-தம்மையும் ஆசரித்து இணங்கான்

மேல்
$2.7.30

#1688
ஆண்டு நாற்பது சென்ற பின் அவனியில் எவரும்
தூண்டிடா பெரும் கோட்டிகள் தொடுத்து அவன் துணிவாய்
காண் தகா இறை ஒருவன் உண்டு எனும் மொழி கணித்து
மீண்டும் அன்னவன் தூதன் யான் எனும் உரை விரித்தான்

மேல்
$2.7.31

#1689
தூதன் யான் எனக்கு ஆதி-தன் தூய் மொழி புறுக்கான்
வேதம் ஒன்று இறங்கிற்று என பலரொடும் விரித்தான்
பூதலத்தில் எவ்விடத்தினும் சிரம் தரை புரள
ஈது அலால் நெறி இலை என விழுந்து எழுந்திடுவான்

மேல்
$2.7.32

#1690
எனக்கு உறும் கலிமா உரை-தனக்கு இயையாதான்-
தனக்கு எரிந்திடும் நரகம் என்று இசைத்து அவன்-தனக்கு
கனக்க மேம்படுமவர்கள் தாம் கனக நல் நாட்டின்
மனைக்குள் வாழ்குவர் சரதம் என்று உரை வழங்குவனால்

மேல்
$2.7.33

#1691
தேறிலாத கட்டுரையினில் புது நெறி திருத்தி
மாறுபட்டவர் எவரையும் தன்வசப்படுத்தி
வீறு கொண்ட நம் வேதம் அனைத்தையும் விழலாய்
ஏறுமாறு கொண்டு இரும்பு கல் என இகழ்ந்திடுவான்

மேல்
$2.7.34

#1692
ஆலயங்களை காண்-தொறும் கண் புதைத்து அகல்வன்
மேலையோர் செயும் வணக்கங்கள் அனைத்தையும் வெறுப்பன்
பாலை நேர் மறை குருக்களை தினம் பழித்திடுவன்
சாலவும் மன பெருமையில் கிளையொடும் சாரான்

மேல்
$2.7.35

#1693
அகிலம் மீது உறை அரசர்கள் எவரையும் அடி கீழ்
புக விடுத்துவன் என்பது சரதமாய் புகல்வன்
பகு மனத்து அறிவினில் தெளிவினில் பல நெறியில்
இகலி என்னுடன் எதிர்ப்பவர் இலை என இசைப்பன்

மேல்
$2.7.36

#1694
வாதியாய் இது அலால் சில வாய்க்கொளா வசனம்
காதினால் கொளப்படுவதன்று இழிந்த கட்டுரையை
ஓதி ஓலையில் தீட்டவும் முடிவது அன்று உடையோன்
தூதன் யான் என உரைத்தவன் உரைத்திடும் துணிவே

மேல்
$2.7.37

#1695
மறம் தவழ்ந்திடும் முகம்மது விரித்த சொல் மனுவாய்
பிறந்தவர்க்கு இடர் வடு அலால் பெறு பயன் இலையால்
அறம் தழைத்திடும் தலத்து உறை அறபிகள் எவரும்
இறந்திடா உயிராய் தலை கவிழ்ந்து இவண் இருந்தோம்

மேல்
$2.7.38

#1696
இந்த வாசகம் அறிந்து இவணிடத்து எழுந்தருளி
வந்து பார்த்திடின் முகம்மது மாய வஞ்சனையும்
விந்தை ஏற்று உரு மந்திர சூழ்ச்சியும் வீறும்
சிந்தி நம் கிளையவர் மன துன்பமும் சிதையும்

மேல்
$2.7.39

#1697
இனைய பாசுரம் அனைத்தையும் விரித்து எடுத்து இசைத்து
வனையும் வார் கழல் அறபிகள் அனைவரும் வகுத்தார்
தினையின் அவ்வளவென்னினும் சிதைவு இலா வண்ண
நினைவின் நேர் வழி தொடுத்து எழுதினன் வரி நிரைத்தே

மேல்
$2.7.40

#1698
எழுது பத்திரம்-தனை மடித்து இலங்கு பட்டு அதனால்
முழுதினும் பொதிந்து இரு-வயின் முத்திரை பதித்து
குழுவில் ஆய்ந்து ஒரு விரைவினன் கரத்தினில் கொடுப்ப
தொழுது வாங்கினான் காலினும் காலினில் தொடர்வான்

மேல்
$2.7.41

#1699
எடுத்த முத்திரை பத்திரம் சிரம் மிசை ஏற்றி
கொடுத்த மன்னரை பணிந்துகொண்டு அறபிகள் குழுவை
விடுத்து வீதி நல் நிமித்தம் எய்திட விரைவுடனே
தட துகில் கொடி நுடங்கிய மதிள் புறம் சார்ந்தான்

மேல்
$2.7.42

#1700
கரட மும்மத கரி நிகர் துரை அபுல் காசீம்
இரவலர்க்கு அளித்து அவன் இருநிதி பெருகின போல்
மரு மலர் தட வாவியும் கழனியும் வழி தேன்
முருகொடும் கனி தரும் பொழில் அனைத்தும் முன்னினனால்

மேல்
$2.7.43

#1701
குன்றும் கானமும் அடவியும் நதிகளும் குறுகி
கன்று மென் மயிர் கவரியும் திரி வனம் கடந்து
வென்றி வெய்யவன் கதிரினும் மனத்தினும் விரைவாய்
என்றும் பூ_மகள் பொருந்திய திமஸ்கினை எதிர்ந்தான்

மேல்
$2.7.44

#1702
மின் என கதிர் தரு மணி குயிற்றி வெண் கதையால்
தென் உலாவிய மேனிலை மாடமும் செறிந்த
பொன்னின் நன் கதிர் குலவிய கொடிகளும் பொருவா
கன்னி மா மதிள் புரிசையும் திமஸ்கையும் கண்டான்

மேல்
$2.7.45

#1703
திரை எடுத்து எறிந்து இரைதரு கடலினும் செழித்து
விரை கமழ்ந்த மென் குவளையும் வனசமும் மேவி
கரை ததும்பிய சீகரத்து அகழினை கடந்து
புரிசை வாயிலும் கடந்து அரும் பெரும் பதி புகுந்தான்

மேல்
$2.7.46

#1704
நிரை கொள் நித்திலத்து ஆவண வீதியும் நிமிர்ந்த
வரை என திகழ் மண்டப மறுகையும் கடந்து
பர கதி பரி கரியொடு படைக்கலம் பரப்பி
அரசு தங்கிய கோயிலின் வாயிலின் ஆனான்

மேல்
$2.7.47

#1705
மெய்யின் வெண் துகில் கஞ்சுகி அணிந்து அடல் விளைந்த
கையின் வேத்திரம் ஏந்திய வாயில் காவலரை
ஐயுறாது அடுத்து அவரொடும் வரவு எடுத்து அறைந்தான்
துய்ய நல் நினைவு அகற்றிய அபூஜகில் தூதன்

மேல்
$2.7.48

#1706
வந்த தூதுவன் உரைத்தலும் வாயில் காவலவர்
பிந்திடாது எழுந்து எண்ணரும் படைக்கலம் பிறங்க
தந்திராதிபர் மந்திர தலைவர் சொல் தணவா
சிந்தையன் ஹபீபு எனும் அடல் அரசன் முன் சென்றார்

மேல்
$2.7.49

#1707
போற்றி நின்று கும்பிட்டு அணி ஒதுக்கி வாய் புதைத்து
தூற்று தேம் பொழில் மக்க மா நகரவர் தூதன்
மாற்ற அரும் கதிர் வாயிலில் வந்தனன் எனும் சொல்
சாற்றினார் செழும் பொன் மழை கரதலன்-தனக்கே

மேல்
$2.7.50

#1708
கரை கொளா பெரும் சேனை அம் கடல் நடு கடிதின்
வரவிடுத்துக என்றலும் வாயில் காவலவர்
விரைவின் ஏகி அ தூதனை விளித்து மின் அணி பூண்
அரசர் நாயகன் திரு முனம் அழைத்துவந்தனரால்

மேல்
$2.7.51

#1709
எதிர்ந்த தூதுவன் தரையினில் தெண்டனிட்டு எழுந்து
முதிர்ந்த பேரவை அரசனை முறைமுறை பணிந்து
பதிந்த முத்திரை புணர்த்திய விண்ணபத்திரத்தை
பொதிந்த மென் துகிலொடும் திறல் புரவலற்கு ஈய்ந்தான்

மேல்
$2.7.52

#1710
ஈய்ந்த முத்திரை பத்திரம்-அதனை ஓர் இளவல்
வாய்ந்த செம் கரத்து ஏந்தி முத்திரை துகில் வாங்கி
ஆய்ந்த பாசுரம் அனைத்தையும் தெரிதர அணியாய்
சாய்ந்திடாத பொன் மணி முடியவர்க்கு உரைத்தனனே

மேல்
$2.7.53

#1711
வனைந்த பாசுரம் அனைத்தையும் வரன்முறை கேட்டு
சினம் தயங்கு வேலவன் மனம் உற சிரம் தூக்கி
இனம்-தனில் பெரியவர் மறையவர்க்கு எடுத்து இயம்பி
புனைந்த பொன் முடி மண்டப மாளிகை புகுந்தான்

மேல்
$2.7.54

#1712
தனித்து இருந்து ஒரு மண்டபத்து அரசர்கள்-தமையும்
நினைத்த சூழ்ச்சியை உரைதரும் நிருபர்கள்-தமையும்
மனத்தின் இன்புற அழைத்து அருகு இருத்தி மும்மறையின்
தொனித்த செய்தியும் நிகழ்ந்ததும் தொகுத்து எடுத்துரைத்தான்

மேல்
$2.7.55

#1713
அரசன் சொற்றவை கேட்டவர் அனைவரும் தெளிந்து
புரிசை சூழ்தரு மக்க மா நகரியில் புதுமை
விரைவில் காண்குவது உண்டு என சூழ்ச்சியின் விரித்தார்
மரை மலர் தடம் சூழ்தரு திமஸ்கு மன்னனுக்கே

மேல்
$2.7.56

#1714
கேட்டு மன்னவன் நன்கு என கிளர் ஒளி வடி வாள்
பூட்டும் திண் கர வீரரும் அடல் புரவிகளும்
கோட்டு வாரண தொகுதியும் அரசர்கள் குழுவும்
ஈட்டும் இற்றையில் எழும் புறவிடுதியில் என்றான்

மேல்
$2.7.57

#1715
நிருபர்_கோன் எழுக என்ன நிகழ்த்த மந்திரத்தின் மிக்கார்
புரவியும் தறுகண் நால் வாய் புகர் முக களிறும் தேரும்
அரசரும் வருக என்ன அணி மணி கனக மாட
தெருவினும் நகரம் முற்றும் செழும் முரசு அறைவித்திட்டார்

மேல்
$2.7.58

#1716
முரசு அதிர் ஓதை கேட்டு முரண் மறம் முதிர்ந்து வெற்றி
மரு மலி வாகை தாங்கு மன்னவர் திரளில் கூண்டு
திரு நகர் புறத்தும் கோயில் தெருவினும் செறிந்து தூளி
பருதியும் விசும்பும் தூர்ப்ப படைக்கலம் பரப்பி வந்தார்

மேல்
$2.7.59

#1717
சேனையில் திரளில் செம்பொன் செழும் கொடி நுடங்க வெற்றி
வான் அதிர் அசனி ஒப்ப மத கரி முரசம் ஆர்ப்ப
கான் அமர் கூந்தல் செ வாய் கடு அடர் கொடிய வாள் கண்
தேன் இதழ் மடவார் சூழ சீயம் ஒத்து எழுந்தான் அன்றே

மேல்
$2.7.60

#1718
திக்கு அடங்காத வெற்றி திறல் படை ஹபீபு வேந்தன்
ஒக்கல் இன்புற பதாதி உவர் கடல் கடுப்ப பொங்கி
திக்கு இருநான்கும் தூது செல துகள் அமரர் போற்றும்
மக்க மா நகரை நோக்கி நடந்தனன் வயங்க மாதோ

மேல்
$2.7.61

#1719
வண்டுகள் உண்டு பாட மணி சிறை மயில்கள் ஆட
கொண்டல் கண் தூங்கும் செம் தேன் கொழும் கனி குழை பைம் காவும்
முண்டக தடமும் செவ்வி முருகு அவிழ் கழனி காடும்
தெள் திரை பரந்தது என்ன திரள் படை படர்ந்தது அன்றே

மேல்
$2.7.62

#1720
வரி வளை குலத்தின் குப்பை வாசியின் குரத்தில் தாக்கி
விரி கதிர் தரளம் சிந்தும் விளை நிலம் கடந்து செம் தேன்
அருவிகள் வரையில் செம்பொன் அணி வடம் புரள்வ போல
நிரைநிரை செறிந்து தோன்றும் நெடு முடி குறிஞ்சி சார்ந்தார்

மேல்
$2.7.63

#1721
கண் விரித்து அனைய தூவி கலாப மா மயிலும் கீத
பண் விரித்து என்ன பேசும் தத்தையும் பறவை யாவும்
விண் படர்ந்து இரிய செம் தேன் விளை தரு படிந்து தோன்றா
மண் பட நெரிய தாவும் விலங்கினம் மலைய வந்தார்

மேல்
$2.7.64

#1722
வரி புலி குழுவும் மாறா மத கரி திரளும் செம் கண்
திருக்கு அற திசைகள் நோக்கும் சீயமும் வெருவி ஓடி
பொருப்பு உறைந்து ஒதுங்கிற்று என்றால் புரவலன் சேனை வீரர்
விருப்புறும் வீர தன்மை யாவரே விரிக்கற்பாலார்

மேல்
$2.7.65

#1723
நெடு வரை குறிஞ்சி நீந்தி நிரை தொறு புகுத சேர்த்தி
இடு குறு நுனை முள் வேலி இடையர்-தம் பாடி ஏங்க
படர் கொடி நுடங்கும் முல்லை பரப்பையும் நீந்தி ஈந்தின்
அடவிகள் புடையில் தோன்றும் அறபு நாட்டகத்தில் புக்கார்

மேல்
$2.7.66

#1724
மதி தவழ் குடுமி மாட மக்க மா நகரம் என்னும்
பதியினுக்கு அடுப்ப மற்றோர் பாடியின் இழிந்து பாயும்
சதி கதி பரியும் நீண்ட தட கை மா கரியும் பொங்க
கதிர் அயில் மன்னர் ஈண்ட ஹபீபு அரசிருந்தான் இப்பால்

மேல்
$2.7.67

#1725
மை கரும் கவிகை வள்ளல் முகம்மதுக்கு உதவியாக
தக்கவன் அருளால் செம்பொன் தலத்தினும் பாரில் தோன்றும்
திக்கினும் கதிர் குலாவும் செழும் சிறை தடம் கண் செவ்வி
மிக்கு உயர் வடிவதாக ஜிபுறயீல் விசும்பில் வந்தார்

மேல்
$2.7.68

#1726
ஆயிரம் சிறையும் ஒவ்வா ஆயிரம் சிரசுமாய் ஈ
ராயிரம் விழியும் தோன்ற ஆயிரம் முகமும் ஆகி
ஆயிர நாவினாலும் அகுமதே என்ன கூவி
ஆயிரம் பெயரினான்-தன் சலாம் என அருளிச்செய்தார்

மேல்
$2.7.69

#1727
விரைவினில் சலாம் என்று ஓதும் மொழி வழி விசும்பை நோக்கி
கரையிலா வடிவு தோன்றும் காரணம் கண்டு யாரோ
தெரிகிலம் என்ன உள்ளம் தெருமந்து வருத்தமுற்றார்
மரை இதழ் வனப்பும் ஒவ்வா மலர் பத முகம்மது அன்றே

மேல்
$2.7.70

#1728
குரிசில்-தன் உளத்தின் அச்சம் ஜிபுறயீல் குறித்து பின்னும்
வரிசையின் விழித்து சோதி முகம்மதே வருந்தல் மேலோன்
பரிவுடன் நும்-பால் வெற்றி பதவிகள் அளித்தது யாவும்
தெரிதர கேண்-மின் என்ன செய்ய வாய் திறந்து சொல்வார்

மேல்
$2.7.71

#1729
வான்_உலகினில் நீர் ஆடை மண்_உலகினில் வெண் திங்கள்
பானுவின் அரிதாய் உள்ள படைப்பினில் எவைக்கும் மேலாம்
ஈனம் இல் முகம்மதை போல் இலை என வரிசை மேலும்
தானவன் பெருமை மேலும் ஆணையில் சாற்றினானால்

மேல்
$2.7.72

#1730
செந்நெல் அம் கழனி சூழும் திமஸ்கினின் ஹபீபு வேந்தன்
பொன் அணி புரோசை நால் வாய் களிறொடும் புரவியோடும்
இ நகர் புறத்தில் சார்ந்து அங்கு இருந்தனன் அதனால் தீனின்
மன்னவ துன்பம் என்ப வருவது ஒன்று இல்லை அன்றே

மேல்
$2.7.73

#1731
கடல் படு நிலத்தில் இல்லா காரணங்களை ஹபீபு
தொடுத்து உரைத்திடுவன் கேட்டு மகிழ்ச்சியில் துஆ செய்வீரால்
அடுத்து இருந்தவர்க்கும் தூரத்தவர்க்கும் கண்டு அறிய வல்லே
படைப்பு உளது எவைக்கும் தோன்ற பலித்திடும் கடிதின் மாதோ

மேல்
$2.7.74

#1732
உடல் தசை திரண்டது அல்லால் உறுப்பு ஒன்றும் இலதாய் பின் ஓர்
மட_கொடி-தனை கொணர்ந்தான் வடிவுசெய்திடு-மின் என்ன
துடக்குற கேட்பன் கேட்கும் உரைப்படி துஆ செய்வீரால்
கடல் படு புவிக்குள் காணா காரணம் தோன்றும் மாதோ

மேல்
$2.7.75

#1733
வாள் படை திமஸ்கு வேந்தன் மறை உணர் தெளிவால் எண்ணி
கேட்பது எவ்வழிக்கும் நும்-தம் கிளர் ஒளி திரு வாய் விண்டு
கோட்பட உரையும் என்ன ஜிபுறயீல் கூறினார் தேம்
தோள் படு மரவ மாலை துலங்கிய குரிசிற்கு அன்றே

மேல்
$2.7.76

#1734
அமரர்_கோன் இனைய மாற்றம் ஆதி-தன் பருமான் மேற்கொண்டு
இமைநொடி பொழுதில் தோன்றி இயம்பியது இணங்காரான
திமிர வெம் பகைக்கு தோன்றும் தினகரனாக பூத்த
கமல ஒண் வதன செவ்வி முகம்மது களிப்பு கொண்டார்

மேல்
$2.7.77

#1735
என் உயிர் துணைவரான ஜிபுறயீல் இரு கண் ஆர
முன்னுறு கோலம் போல முகத்து எதிர் நிற்ப பேதம்-
தன்னை மாற்றுக என்று ஆதி-தன்னுடன் இரந்து நின்றார்
மன்னிய ஜிபுறயீலும் மறுத்து முன் வடிவம் போன்றார்

மேல்
$2.7.78

#1736
அவிர் ஒளி ஜபுறயீல் முன் வடிவெடுத்து அடுத்து பேசி
புவியினின்று அகல்வான் புக்கார் பொருந்தலர் உயிரை மாந்தி
கவின் உறு நெடு வேல் ஏந்தும் கரதல முகம்மது என்னும்
நபி இனிது இருந்தார் இப்பால் நடந்தவாறு எடுத்துச்சொல்வாம்

மேல்
$2.7.79

#1737
மறுகி வெள் எகினம் சிந்த வரி வரால் தாவும் வாவி
செறி திமஸ்கு இறைவன் செல்வ திரு நகர் அடுத்த சீறூர்
புறனிடத்து உறைந்தான் என்ன பொருவு அரும் தட கை வெள் வேல்
அறபிகட்கு உரைத்தார் தூதர் அபூஜகில் அறிய அன்றே

மேல்
$2.7.80

#1738
கவன வாம் பரியும் நால் வாய் கரியுடன் ஹபீபு வேந்தன்
இவணில் வந்தடைந்தான் என்ன அபூஜகில் இணை தோள் வீங்கி
அவிர் கதிர் கலன்கள் தாங்கி அகுமதை வெல்வேன் மேலும்
புவனியில் எதிரி யார் என்ன புது மதி களிப்பு பூத்தான்

மேல்
$2.7.81

#1739
நிகர் அரும் பதிக்குள் செவ்வி நெடும் தெரு அனைத்தும் தூதை
புகவிடுத்து அறிவில் தேர்ந்த புரவலர்-தம்மை கூவி
முகில் உறை கனக மாட முன்றிலின் இருத்தி சேர்ந்த
தொகுதியில் ஹபீபு வேந்தன் வந்தவை எடுத்து சொன்னான்

மேல்
$2.7.82

#1740
நெறி குலம் சமயம் சாயா நிறுத்திட வந்த வேந்தை
திறை கொடு பணிந்து வேறோர் திரு மனை இடத்தில் சேர்த்தி
மறு அறும்படி குற்றேவல் வகுத்தவை நடத்த போதல்
பொறி என எவர்க்கும் சொன்னான் பொறி அறிந்து உரைக்கிலானே

மேல்
$2.7.83

#1741
மனம் மதி குறியன் கூறும் வசனம் கேட்டு அறபி மன்னர்
அனைவரும் இது நன்கு என்ன அகத்தினில் கொண்டு வேறு ஓர்
புனை கதிர் விடுதி மாடம் புதியது ஒன்று இயற்றி செம்பொன்
கனை கழல் அரசை சேர்த்தி கவல்வது கருமம் என்றார்

மேல்
$2.7.84

#1742
மரவினையவர்க்கும் சிற்ப மறு அறு தொழிலினோர்க்கும்
திரகம்-அது அளித்து செவ்வி செழும் மடி கனக மாட
நிரைநிரை இயற்றி சுற்று நெடு மதில் திருத்தி வாயில்
விரி கதிர் கபாடம் சேர்த்தி வீதிகள் பலவும் செய்தார்

மேல்
$2.7.85

#1743
பந்தரிட்டு அலர்கள் நாற்றி பரு மணி கலன்கள் தூக்கி
சந்தனம் பனிநீர் சிந்தி தரை மெழுக்கெறிந்து சோதி
அந்தரத்து உடுவின் கூட்டம் அனைத்தும் வந்தடைந்தது என்ன
சிந்து வெண் தரள ராசி செறித்து அலங்காரம் செய்தார்

மேல்
$2.7.86

#1744
கண் படைத்தவர்கள் யாரும் கண்டு அதிசயிப்ப காந்தி
விண் படர் மாட வாயில் வெளியினில் படங்கு கோட்டி
பண் படர் இசையின் வாய்ந்த பழ குலை கதலி நாட்டி
மண் படர் உலகின் இல்லா வளம் பல செய்வித்தாரால்

மேல்
$2.7.87

#1745
மேதினி துறக்கம் என்ன விடுதிகள் இயற்றி ஓதும்
வேதியர் குழுவும் வெள் வேல் வீரர்கள் தலைவரோடும்
ஏதம் இல் திமஸ்கில் வாழும் இறைவனை எதிரில் காண
காதலித்து இனத்தினோடும் அபூஜகில் கடிதில் போனான்

மேல்
$2.7.88

#1746
மால் அமர் நகர மாக்கள் அபூஜகில் மரபினோடும்
நால் வகை பதாதி சூழ நனி பல திறைகள் ஈய்ந்து
நீல வாருதியே அன்ன நெடும் படை கடலின் நாப்பண்
காலை வெம் கதிரில் தோன்றும் ஹபீபு எனும் அரசை கண்டார்

மேல்
$2.7.89

#1747
கண்டு கண் குளிர நோக்கி கரம் சிரம் குவித்து கான
வண்டு அமர் அலங்கல் திண் தோள் மன்னவர் மருங்கு நிற்ப
தெள் திரை புவனம் காக்கும் திறல் வலி அரசர் கோமான்
விண்ட நல் உரையினோடும் இரும் என விரைவில் சொன்னான்

மேல்
$2.7.90

#1748
போது அலர் கழனி சூழ்ந்த திமஸ்கினை புரந்த வேந்தும்
கோது அறு மக்கம் என்னும் கொழும் பதி தலைவமாரும்
ஆதரத்துடனும் ஒன்றாய் அளவளா மகிழ்ச்சி பொங்கி
பேதம் இல் மனத்தராகி பிரியமுற்று எழுந்தார் அன்றே

மேல்
$2.7.91

#1749
குரகத திரளினோடும் கொலை மத கரியினோடும்
விரி கதிர் எஃகம் கூர் வாள் வில்லுடை தலைவரோடும்
மரு மலர் சோலை சூழும் மக்க மா நகரம் சேர்ந்து
புரவலர்க்கு அரி ஏறு அன்னான் புதிய மண்டபத்தில் புக்கான்

மேல்
$2.7.92

#1750
செய்ய வாய் ஒளி வெண் மூரல் சிறு நுதல் பெரிய கண்ணால்
கையின் வெண்ணிலவின் காந்தி கவரி கால் அசைப்ப நீண்ட
வையகம் முழுதும் காக்கும் மணி குடை நிழற்ற வெற்றி
வெய்யவன் இருந்தது என்ன இருந்தனன் திமஸ்கு வேந்தன்

மேல்

8 மதியை அழைப்பித்த படலம்

$2.8.1

#1751
தவிசினில் இருந்து வெற்றி தட முடி அரசர்_கோமான்
அபுஜகில்-தன்னை கூவி அணி நகர்க்கு அழைத்த மாற்றம்
கவர் அற மனத்தின் உற்ற கருமங்கள் அனைத்தும் நாளும்
குபலினை மனத்தில் கொண்டோய் கூறு என கூறினானால்

மேல்
$2.8.2

#1752
ஒலீது உத்துபா உமாறா உக்குபா உமையா சைபா
மலிதரும் கொடுமை பூண்ட மனத்து அபூஜகிலும் ஒன்றாய்
நலிதல் இல் எழுந்து போற்றி நமர்க்கு அலர் உற்ற யாவும்
மலர் தலை உலகம் போற்றும் அரசு கேட்டருள்க என்றார்

மேல்
$2.8.3

#1753
முகம்மது என்று ஒருத்தன் தோன்றி வணக்கமும் நெறியும் இந்த
அகலிடம் தோன்ற தோன்றும் ஆலயம் முழுதும் முன்னோர்
புகலும் நல் மறையும் சூழ்ந்த பொருவு அரும் குலமும் மற்றும்
இகலொடும் கெடுத்து நின்றான் இவை இவண் விளைந்தது ஐயா

மேல்
$2.8.4

#1754
அகலிடம் விளக்கும் செங்கோல் அணி மணி தீபமே நேர்
புகலும் மும்மறையும் தேர்ந்த புந்தியில் கடலே நாளும்
இகல் உடை அரசர்க்கு எல்லாம் எதிர் இடியேறே வானும்
சகமும் எண் திசையும் திக்கும் வெண் புகழ் தடவும் வேந்தே

மேல்
$2.8.5

#1755
மறு அற உலகில் நில்லா வயது ஒரு நூற்றின் மேலும்
அறுபதும் இருந்தோய் நும்-தம் அறிவினால் அறியாது இல்லை
சிறியவர் உரைத்ததல்லால் செவியினும் தெரிவது ஆகும்
கறை அற இற்றை போதில் கண்ணினும் காண்பிர் என்றார்

மேல்
$2.8.6

#1756
ஓலை உத்தரமும் யாங்கள் உரைத்ததும் முகம்மது என்போன்-
பாலினில் முரணில் நூறு பங்கினில் ஒன்றும் காணாது
ஓலிடும் கடல் மா சேனை உரவ என்று உரைப்ப மூன்று
காலமும் தெரிந்து நோக்கும் காவலன் செவியில் கொண்டான்

மேல்
$2.8.7

#1757
உரைத்த இ வசனம் எல்லாம் உள்ளுற பொருத்தி நாளை
வரை தட புயத்து வீர முகம்மதை விளித்து மார்க்கம்
பொருத்து அற புகன்ற செய்தி அறிகுவம் இற்றை போதில்
திரு தகு மனையின் கண்ணே யாவரும் செல்க என்றான்

மேல்
$2.8.8

#1758
அரசு உரை கேட்டு வீரர் அவரவர் மனையில் சார்ந்தார்
கரை திரை புரட்டும் மேலை கடலிடை கனலி சார்ந்தான்
இரவினை பகலை செய்யும் எழில் மணி தவிசின் மீதில்
குரவர் கண் விழிப்ப ஓசை குண கடல் வெளுத்தது அன்றே

மேல்
$2.8.9

#1759
விடிந்த பின் அவனி பொன்_நாடு எனும் விறல் பதியின் வீரர்
இடம்தரு திமஸ்கின் வேந்தை காண்பதற்கு எழுந்தார் வெற்றி
படம் தரு கொடியில் தூண்டும் பகை பெரும் கடலை கையால்
கடந்த வேல் அபித்தாலீபு கலன் பல அணிவதானார்

மேல்
$2.8.10

#1760
வையகம் புரந்து தீனை வளர்த்திடும் இபுறாகீம்-தம்
கையொலியலை செம் கையால் அரையினில் கவின சேர்த்தி
துய்யவன் தூதர் முன்னம் தோன்றிய ஆதம் என்போர்
மெய் அணி குப்பாயத்தை வியன் பெற மெய்யில் சேர்த்தார்

மேல்
$2.8.11

#1761
கருவி மென் மிடற்றில் தீண்டா காரணர் இசுமாயீல்-தம்
சருவந்து சிரசில் சேர்த்தி தாரணி-தனில் பொன்_நாட்டு
மரு மலர் புயத்தில் தாங்கி வளர் நபி சீது மெய்யில்
தரு கதிர் உத்தரீயம்-தனை எடுத்து அணிந்தார் அன்றே

மேல்
$2.8.12

#1762
சூலினை தரித்த கொண்டல் சுகைபு நல் நபி-தம் செம்பொன்
கால் இணை கபுசை வீர கழல் அடி பொருந்த சேர்த்தி
சாலவும் குலத்து முன்னோர் தரித்திடும் கலன்கள் தாங்கி
வேலினை கரத்தில் ஏந்தி வீர வாள் மருங்கு சேர்த்தார்

மேல்
$2.8.13

#1763
தனக்கு உறும் குலத்தில் ஆய்ந்த தலைவரின் முதியார் பாரில்
சின கதிர் வேல் கை கொண்ட செல்வர் நாற்பதின்மர்-தம்மை
கனக்கு உற மருங்கு கூட்டி காவலர் அபித்தாலீபு
வன கட கரியை நேராய் மகிழ்வொடும் புறப்பட்டாரால்

மேல்
$2.8.14

#1764
மாதிரம் என கனக மண்டபம் நெருங்கும்
வீதியிடை புக்கு விறல் மன்னர் புடை சூழ
கோது அறு மற கொடுவரி குழுவின் நாப்பண்
ஏதம் அற வந்த அரி ஏறு என நடந்தார்

மேல்
$2.8.15

#1765
நித்திலம் நிரைத்து மலர் நீள் தொடையல் நாற்றி
புத்தரிசு ஒழுக்கும் உயர் பந்தரிடை புக்கு
சித்திர விறல் குரிசில் செவ்வி அழியாத
மத்த கரியை திமஸ்கு மன்னை எதிர்கண்டார்

மேல்
$2.8.16

#1766
கங்கம் உலவும் கதிர் அயில் கடவுள்-தன்னை
மங்குல் அகல் ஒண் கதிர் மணி கடகம் மின்ன
அங்கை இணை தொட்டு இனிது அழைத்து அருகு இருத்தி
இங்கிதமொடும் திமஸ்கினுக்கு இறை இருந்தான்

மேல்
$2.8.17

#1767
மூரி அடல் ஏறு அபுதுல் முத்தலிபு மைந்தர்
மாரி பொருவாத கர மன்னவனை நோக்கி
தேரும் மதியால் பல தெரிந்த புகழோடும்
ஆர் அமுதமான சில நல் மொழி அறைந்தார்

மேல்
$2.8.18

#1768
ஓதும் நெறி நீதி அபித்தாலிபு உரை கேட்டு
சீத மதி போலும் ஒளிர் செம் முகம் இலங்க
ஆதரவினோடும் மகிழ்வின் சிரம் அசைத்து
சோதி மதிள் சூழ் திமஸ்கினுக்கு இறை சொல்வானால்

மேல்
$2.8.19

#1769
இ நகரியில் தலைவர் யாவரினும் மிக்கோய்
மன்னு கிளையில் பகை வர தவிர்தல் செய்யாது
அன்னவர் துணிந்தவை துணிந்தனை அறத்தோர்
உன்னவும் இழுக்கு என உளத்தில் இவை கொள்ளார்

மேல்
$2.8.20

#1770
சீலம் அறியாத சிறியோர்கள் பிழை செய்யின்
மேலவர்கள் கண்டு அவை விலக்கல் கடன் அல்லால்
கோலிய பெரும் பகை குலத்தினில் விளைத்தல்
மாலுற வளர்த்தல் மடமை தகைமையாமால்

மேல்
$2.8.21

#1771
ஆதி ஒருவன் தனியன் உண்டு என அவன்-தன்
தூதன் நபி யான் அளவு இல் சோதி உரையான
வேதம் எனது இன் சொல் என விஞ்சையின் விளைத்த
பேத மொழி வஞ்சமொடு பேசுவதும் அன்றே

மேல்
$2.8.22

#1772
மாறு பகரற்கு அரிய மக்க நகரத்தில்
தேறும் மறை மன்னவர் செழும் குறைஷி மன்னர்
கூறுவதில் ஒன்று படிறு இன்று குலம் முற்றும்
வேறுபடல் வேத விதி அன்று புகழ் மிக்கோய்

மேல்
$2.8.23

#1773
காரணம் நினைத்தவர் கருத்துற முடித்து இ
பாரில் உறை தூதுவர் என பகர்தல் வேண்டும்
வேரும் ஒரு தூரும் இலை என்பது ஒரு விஞ்சை
ஆர்வமொடு கொண்டு நபி என்பது இயல்பு அன்றே

மேல்
$2.8.24

#1774
நன்று இவை அறிந்திடுவது உண்டு நபி-தம்மை
இன்று அவையிடத்தினில் அழைத்திடுக என்ன
வென்றி விறல் சேரும் அபித்தாலிபை விளித்து
மன்றல் கமழும் திமஸ்கு மன்னவன் உரைத்தான்

மேல்
$2.8.25

#1775
மந்தர மதில் திமஸ்கு மன்னவன் உரைப்ப
சிந்தை களிகொண்டு அபுதுல் முத்தலிபு செல்வர்
இந்த மொழி நன்கு என எடுத்து உற வியத்தி
சந்து என ஒருத்தனை அழைத்தனர் தனித்தே

மேல்
$2.8.26

#1776
மங்குல் தவழும் கவிகை வள்ளலை விரிந்த
பங்கய பத குரிசிலை பரிவினோடு
இங்கு இனிது அழைத்துவருக என்றனர் விரைந்தே
பொங்கிய புயங்கள் புளகம் கொள எழுந்தான்

மேல்
$2.8.27

#1777
ஊதையை நிகர்த்த கதி ஒண் புரவி மேற்கொண்டு
ஏதம் அறு மா நகர வீதியிடை புக்கி
ஆதம் முதலான நபி நாயகம் அனாதி
தூதுவரை வந்த நர தூதன் எதிர் கண்டான்

மேல்
$2.8.28

#1778
கண்டு கடிதில் பரி இழிந்து இரு கை ஆர
முண்டக மலர் பதம் இருத்தி முடி மீது
கொண்டு உற வணங்கி நயனங்கள் களிகூர
வண்டு என மலர் கர வனப்பினை நுகர்ந்தான்

மேல்
$2.8.29

#1779
மா தவ முகம்மதின் வனப்பினை நுகர்ந்த
தூதன் ஒரு வில்லினிடு தூரம்-அதில் நின்று
காதலொடு மெய் அணி கலன்களை ஒதுக்கி
சூது அற விரிந்த மணி வாய் புதைத்து சொல்வான்

மேல்
$2.8.30

#1780
பவ கடல் நடு படும் மனு பகுதி எல்லாம்
உவப்பொடு கரைப்படும் மரக்கலம்-அது ஒத்தே
நவப்பட உதித்த நபி நாயக விளக்கே
துவக்கம் முடிவிற்கு ஒரு சுடர் கதிரின் மிக்கோய்

மேல்
$2.8.31

#1781
தேன் அமர் பொழில் திமஸ்கு மன்னொடு செறிந்து இ
மால் நகரின் வீரரும் மதி குடை கவித்த
கோன் அபுதுல் முத்தலிபு புத்திரரும் உற்றே
ஈனம் அற நும்மை வர என்றனர்கள் என்றான்

மேல்
$2.8.32

#1782
வருக என நல் மொழி வகுத்தனர்கள் என்ன
அருகு இனிது உறைந்தவன் அறைந்தது தெளிந்தே
தரும நெறி நம் நபி தருக்கொடு மகிழ்ந்தே
மரு மலர் பொதிந்த மணி மாளிகை புகுந்தார்

மேல்
$2.8.33

#1783
மாசு அகல வந்த குல மாதினை விளித்து
பாசன் அபில் கக்கமொடு பற்பலர் உடன்று
பூசலை நினைத்து எழுதிவிட்டதும் புரிந்தே
ஆசு இல் திமஸ்கிக்கு இறை அடைந்ததுவும் அன்றே

மேல்
$2.8.34

#1784
துன்றும் அடல் வெம் புரவி சேனை புடை சூழ
வன் திறல் அமச்சரொடு இருந்து மதி வல்லோன்
வென்றி கொள் அயில் படை ஒருத்தனை விடுத்தே
ஒன்றிய மறத்தொடும் அழைத்ததும் உரைத்தார்

மேல்
$2.8.35

#1785
மறத்து இகல் மனத்தவர் திரண்டு மா நகர்
புறத்திருந்து அழைத்தனர் என்னும் புன்மொழி
நறை தட புய நபி நவில கேட்டலும்
நிறைத்த கற்புடைமையார் அறிவு நீங்கினார்

மேல்
$2.8.36

#1786
கார் அதிர் இடிக்கு எதிர் கலங்கி தன் உடல்
சோர்தரும் மயில் என சோர்ந்து கண்ணில் நீர்
வார்தரு கலன் கலை நனைப்ப வார் குழல்
பார்தர விரிப்ப மெய் பதைத்து வாடினார்

மேல்
$2.8.37

#1787
மறைத்திடா மதி என வளரும் தீன் நிலை
நிறைத்த நல் பதவியை நிலத்தில் எங்களுக்கு
உற தரும் இறைவ உன் தூதர் உன் திருப்
புறத்தினில் அடைக்கலம் என்ன போற்றினார்

மேல்
$2.8.38

#1788
நவ்வி பின் பெரும் புனல் நடந்த நம் நபி
மௌவல் அம் குழல் கதிஜா-தம் வாட்டம் கண்டு
அ-வயின் இனிதுற அடுத்து நல் மறை
செவ்விய தெருட்சியில் தெளிய செப்புவார்

மேல்
$2.8.39

#1789
குவைலிதுக்கு அரும் பெரும் குலத்தின் தீபமே
புவியில் விண்ணவர் தினம் போற்றும் பூவையே
கவினும் என் உயிர் அன்னீர் கவலல் காவலோன்
அவன் அருள் நம்மிடத்து அகல்வது இல்லையால்

மேல்
$2.8.40

#1790
மன் பெரும் புவியினில் வாழும் மாந்தரில்
துன்புறாதவர் இலை துன்பை துன்புறாது
இன்பமே கொள்பவர் இலங்கும் பொற்பதிக்கு
அன்பராய் இருப்பர் என்று அறிவு சொற்றதே

மேல்
$2.8.41

#1791
இன படை கடல் நடுவு இருந்துளோம் யாம்
தனிப்பவன் அருள் மரக்கலத்தின் சார்பினால்
பனிப்படா மகிழ் கரை படுதலல்லது
துனிப்படல் அறிவு எனும் சூழ்ச்சித்து அன்று அரோ

மேல்
$2.8.42

#1792
கொதிப்பு அடர் குபிர் எனும் குறுகலார் திரள்
அதிர்ப்பு அடர் தீன் படைக்கலத்தின் ஆக்கம் போல்
எதிர்ப்படும் துன்பு எனும் இருளை உள் மகிழ்
மதிப்பு எனும் கதிரினால் மாய்த்தல் வேண்டுமால்

மேல்
$2.8.43

#1793
தன்மமே பொருள் என தவத்தின் மேற்செலும்
நல் மனத்தவர்க்கு ஒருநாளும் தீங்கு எனும்
புன்மை வந்து அடைந்திடாது என்ன பூவினில்
முன் மறை தெளிந்தவர் மொழிந்த வாய்மையே

மேல்
$2.8.44

#1794
இன்னன பல மொழி இயம்பி கற்பு எனும்
நல் நிலை கொடி மன நடுக்கம் தீர்த்து ஒரு
மின் அகத்திருந்து எழும் மேக நீழலில்
பொன் அணி முன்றிலின் புறத்தில் ஆயினார்

மேல்
$2.8.45

#1795
உள்ளக களிப்பொடும் உவந்து நம் நபி
விள்ள அரும் விசும்பினில் நோக்க வெள்ளிடை
தெள்ளிய பெரும் சிறை ஜிபுறயீல்-தமை
கள் அவிழ் தாமரை கண் உற்றார் அரோ

மேல்
$2.8.46

#1796
முரண் உறும் வானர்_கோனொடு மூவாயிரம்
வரம் உறும் மலக்குகள் வந்து தோன்றினர்
சிரம் ஒரு கிரி என திகழ செவ்விய
கரதலம் புய வரை ககனம் துன்னவே

மேல்
$2.8.47

#1797
பெரும் படைப்பு எனும் அவர் பிடித்த வல்லயம்
அரும் பெரும் பொருளவன் முனிவில் ஆயது
தரும் பெரும் கதிரவன்-தனினும் வெய்யதாய்
இரும் பெரும் புவி கடல் ஏழும் உண்ணுமால்

மேல்
$2.8.48

#1798
அற தனி படைப்பு-அவர் கரத்தில் ஆயவை
மறத்தினை திரட்டி ஓர் வடிவு கொண்டு என
உறைத்து எழும் கொழும் தழல் ஓங்கி ஒவ்வொரு
புறத்தினில் எழுபது தலைக்கும் பொங்குமால்

மேல்
$2.8.49

#1799
வரும் எழு_வான் படு_வான் என்று ஓங்கிய
இரு திசைக்கு இரு தலையிடமும் தீண்டும் தீ
பொரு கதிர் அயிற்கு எதிர் பொருவ ஆயிரம்
பருதியும் செழும் கதிர் பரப்ப வெட்குமால்

மேல்
$2.8.50

#1800
அ பெரும் திறல் அயில் அங்கை ஏந்தி நல்
மை படி திரள் என வந்த வானவர்
செப்ப அரும் சலாம் என செய்ய வாய் திறந்து
ஒப்ப அரும் புகழ் நபிக்கு ஓதினார் அரோ

மேல்
$2.8.51

#1801
முருகு அலர் தொடை புய முகம்மதே எமக்கு
அருளினன் பெரும் பொருள் ஆதி_நாயகன்
இருள் அற நும் விரும்பு ஏவல் செய்திட
திரளொடும் வந்தனம் செகதலத்தினே

மேல்
$2.8.52

#1802
கொலை மன கொடியவர் கூட்டத்தால் மனம்
அலையல் நீர் ஏவிடின் மாந்தர் சேனைகள்
அலை கடலாயினும் அணு அன்று ஆதி-தன்
நிலை பெறும் தீன் நெறி நிறுத்தல் வேண்டுமால்

மேல்
$2.8.53

#1803
இரும் கலை குரிசில் எம் ஏவல் காண்பிரால்
கரும் கடல் ஏழையும் கலக்கி நீறு-அதாய்
பெரும் கிரி அனைத்தையும் பிதிர்த்திட்டு ஓர் நொடி
அரும் கதிர் பொழுதினில் அடைகுவோம் என்றார்

மேல்
$2.8.54

#1804
விண்ணவர் உரைத்தவை கேட்டு மெய்சிலிர்த்து
உள் நிறை மகிழ்வொடும் உணர்ந்து தேர்ந்து இயல்
மண்ணகத்து என்னொடும் வந்து செல்-மின் என்று
அண்ணலும் பொறுமையின் அவர்கட்கு ஓதினார்

மேல்
$2.8.55

#1805
அமரருக்கு இனிது உரை அருளி செய்த பின்
தமர் வர திறல் அபூபக்கர்-தம்மொடும்
உமறு உதுமான் அலியும் வந்து உற்றனர்
இமையினில் அடல் அரி ஏறு போலவே

மேல்
$2.8.56

#1806
காரணம் எனும் பல கலன்கள் தாங்கி மேல்
ஆரண வெற்றி வெள் அலங்கல் சூடியோர்
வீர வேல் எனும் கதிர் பிசுமில் ஏந்தி நல்
பூரண மதி என புறப்பட்டார் அரோ

மேல்
$2.8.57

#1807
தீன் எனும் கொடி முதல் நிறுத்தி செவ்வி ஈ
மான் எனும் மத கரி மருங்கு சூழ் வர
பால் நலன் எனும் கலிமா பரந்திட
தானவன் அருள் எனும் தானை முன் செல

மேல்
$2.8.58

#1808
மூதுரை என்னும் தீன்தீன் முகம்மது என்று
ஓதிய பெரு முரசு ஒலிப்ப நால்வரும்
ஆதி-தன் அமரரும் அணியதாய் வர
வீதியில் நடந்தனர் வேத வீரத்தார்

மேல்
$2.8.59

#1809
அடல் நபி வருவது கேட்டு அபூஜகில்
உடல் உயிர் மனம் அறிவு ஒடுங்கி எவ்வணம்
முடிவதோ என திமஸ்கு இறை முன் ஏகி ஓர்
வடிவு உறும் கவிதையின் வாழ்த்தி சொல்லுவான்

மேல்
$2.8.60

#1810
மறை தெரி அறிவன் மாலிக்கு செய் தவம்
முறைதர உருவெடுத்து உதித்த தீபமே
குறைபடா பெரும் குலம் காக்கும் கொற்றவ
நிறைபட உலகினை புரக்கும் நேமியோய்

மேல்
$2.8.61

#1811
மரு பொதி முகம்மது வாக்கினால் தினம்
உரைப்பது படிறு அலால் உண்மை இல்லையால்
நிரைத்து அடர் வஞ்சனை நிறுத்தி யாரையும்
ஒருப்பட மாயத்துள் ஒடுக்கினான் அரோ

மேல்
$2.8.62

#1812
வஞ்சனையாகிய வலையின் உட்படு
நெஞ்சர் அல்லால் நெறி நிலை நின்றார் இலை
வெம் சமர்க்கு அவனொடும் வீரம் போக்கி நின்று
அஞ்சினர் அலது எதிர்ந்தவரும் இல்லையால்

மேல்
$2.8.63

#1813
வருந்திட முகம்மதின் மாய வெள்ளமே
பரந்து அதில் அமிழ்ந்து முன் பரிவில் தாங்குதற்கு
அரும் தவ மரக்கலமாக வந்து இவண்
இருந்தனை மார்க்கமும் இறத்தல் இல்லையால்

மேல்
$2.8.64

#1814
நிரை திரை கடல் படை நிரப்பி நாம் இது
வரையினும் இவணிடை வருவது இல்லையால்
இரு நில மாந்தர்கள் யாரும் சூறையில்
சொரிதரு பூளை ஒத்திடுவர் சொல்லினே

மேல்
$2.8.65

#1815
நனி பல புதுமையின் நபிகள் வேடமாய்
இனமொடு வருகுவன் யாவராயினும்
மனம் அலைத்திட மொழி வளர்ப்பன் மெய் என
கனவினும் மனத்தினில் கருதல் காவலோய்

மேல்
$2.8.66

#1816
அடுத்து உறைந்து அபூஜகில் அளவிலாத சொல்
எடுத்து இசைத்திட திமஸ்கு இறைவன் கேட்டு உளம்
கடுத்திலன் களித்திலன் கவிதையால் சில
தொடுத்து உரை எடுத்து அவை எவர்க்கும் சொல்லுவான்

மேல்
$2.8.67

#1817
தன் துணை தவத்தினர் தீயர் தன்மையில்
குன்றிலர் நாள்-தொறும் குளத்தை பல் உற
தின்றிடில் இரதமே செனிக்கும் யாவரும்
மென்றிடில் இனியவை வேம்புக்கு இல்லையால்

மேல்
$2.8.68

#1818
பொய்மை ஓர் நொடி வரை பொழுதில் தீர்ந்திடும்
மெய்மை சூழ் கடலினும் விளங்கி தோன்றுமால்
கை மத கரியினை கருப்பை மாய்த்திடாது
உய் மதி பெரியவர் உளத்தில் காண்பரால்

மேல்
$2.8.69

#1819
வஞ்சனை கீழ்மையோர் மாய காரணம்
எஞ்சல் இல் உளது இலது என்ன தோன்றிடும்
அஞ்சல் இல் இறைவன் தூதவர்கள் காரணம்
விஞ்சை அன்று உலகு எலாம் விளங்கி நிற்குமால்

மேல்
$2.8.70

#1820
தூயவன் மறை வழி தூதர் செய்கையும்
மாய மந்திரத்தவர் வழக்கின் வண்ணமும்
நேயமும் மும்மறை நிகழ்த்தும் கேள்வியின்
ஆயும் நல் அறிவினும் அறிவதாகுமால்

மேல்
$2.8.71

#1821
வரி அளி மலர் தட திமஸ்கு மன்னவன்
குரு நெறி முகம்மது கொண்ட பெற்றியை
எறி கதிர் படு முனம் இற்றை போதினில்
தெரிவது உண்டு என பல கவியில் செப்பினான்

மேல்
$2.8.72

#1822
செவியினும் உளத்தினும் காய தீய சொல்
அபுஜகில் உரைத்ததும் திமஸ்கின் ஆதிபன்
கவியினில் சொற்றதும் கேட்டு கல்வியின்
மவுலுவர் குரிசில் முத்தலிபு மைந்தரே

மேல்
$2.8.73

#1823
அறிவினில் குணத்தினில் எவர்க்கும் அன்பினில்
பொறுமையில் நல் நெறி புகலில் செய்கையில்
திறல் முகம்மதினொடும் உவமை செப்புதற்கு
உறுபவர் எவரும் இ உலகில் இல்லையால்

மேல்
$2.8.74

#1824
மை தரும் கவிகையின் வள்ளல் வாக்கினில்
பொய் என பிறந்த சொல் புகல்வது இல்லையால்
கைதவ சூனியம் கற்று மந்திரம்
செய்பவரிடத்தினும் சேர்ந்தது இல்லையால்

மேல்
$2.8.75

#1825
பெற்றனன் வளர்த்தனன் பிறந்த நாள் தொடுத்து
இற்றை நாள் வரையினும் எவரொடாயினும்
வெற்றிகொண்டு இணங்குதல் விருப்பம் அல்லது
குற்றம் என்று ஒரு மொழி குறித்தது இல்லையால்

மேல்
$2.8.76

#1826
பிற பல மொழியினை பிதற்றல் என்-கொல் ஓர்
சிறு நொடிப்பொழுது இவண் சேர்வர் கண்களால்
திறனுற கண்டு அவர் செப்பும் செய்தியும்
அறிக என்று எடுத்து அபித்தாலிபு ஓதினார்

மேல்
$2.8.77

#1827
இவ்வண்ணம் பல மொழி நிகழும் எல்வையின்
மை வண்ண கவிகையார் மெய்யின் மான்மதம்
அ அவைக்கு உற்ற தூதாக முன்னமே
செவ்வி நல் நெறி திமஸ்கு இறை முன் சென்றதே

மேல்
$2.8.78

#1828
திசை கதிர் தர நபி நடந்து தீன் என
வசை அறும் புகழ் அபுல் காசிம் மன்னனுக்கு
இசைதரா மருவலர் இதயம் போல நின்று
அசைதரும் கொடி மதிள் வாயில் ஆயினார்

மேல்
$2.8.79

#1829
மெய் ஒளி பரப்பிட விரிந்த வாயிலின்
மையல் அம் கட கரி திரளும் வாசியும்
பெய் கழல் சேனையும் நீக்கி பெட்புற
துய்யவன் திரு மறை தூதர் தோன்றினார்

மேல்
$2.8.80

#1830
மான்மதம் கமழ்ந்து இரு மருங்கும் மெய் எழில்
பால் மதி கதிர் ஒளி பரப்ப வந்த நம்
நான்மறை குரிசிலை கண்டு நண்பொடும்
தேன் அவிழ் தொடையலான் எதிரில் சென்றனன்

மேல்
$2.8.81

#1831
அணி திமஸ்கு இறை எழுந்து எதிரின் அன்பொடு
மணி ஒளி முகம்மதை மருங்கு இருத்தி நல்
பணிவிடையொடும் பல பகர்ந்து அடிக்கடி
தணிவு இலா மகிழ் மொழி சார நோக்கினான்

மேல்
$2.8.82

#1832
மருங்கினில் இருத்தி மாலிக்கு-தன் மகன்
இரும் குழு நாப்பணின் இருப்ப காபிர்கள்
ஒருங்குற நோக்கி உள்ளுடைந்து மா முகம்
பெரும் குகை வங்கம் ஒத்து அழுங்கி பேசுவார்

மேல்
$2.8.83

#1833
கன்னல் அம் கழனி சூழ் திமஸ்கு காவலன்
இன்னணம் எழுந்து எதிர் இறைஞ்சி போந்தனன்
முன்னம் யான் நினைத்தவை முடிவது என்-கொல் என்று
அன்னவர் சஞ்சலித்து அவலமுற்றனர்

மேல்
$2.8.84

#1834
திருந்திலா காபிர்கள் சிந்தை நொந்து அவண்
இருந்ததும் ஹபீபுடன் நபி இருந்ததும்
பொருந்துற கண்டு பொன் புரிசை சூழ்தர
வரும் திமஸ்கவர் சில வசனம் கூறுவார்

மேல்
$2.8.85

#1835
நிலந்தனில் சுவடு இல நிழலும் தோன்றில
கலந்து மெய் ஒளியொடு நறை கமழ்ந்தன
சலம்தரு கவிகை ஒன்று எழுந்து சார்ந்தன
குலம் தரு மனு அலர் என்ன கூறுவார்

மேல்
$2.8.86

#1836
அருளின் நோக்கமும் அமுது உகு வசனமும் அழகாய்
இருள் இலாத மெய் அவயவத்து ஆசு இல் இலக்கணமும்
தெருளும் கல்வியும் பொறுமையும் நிறைந்த இ சேயை
மருவிலாது அளவிடற்கு அரிது என சிலர் மதிப்பார்

மேல்
$2.8.87

#1837
இறைவன் தூதுவர் என்றதும் இறை திருவசனம்
மறை இறங்கியது என்றதும் மார்க்கம் என்றதுவும்
நிறையும் வாக்கினில் தெரிவது நிகர் இல் இ நகரார்
அறையும் வாசகம் படிறு என சிலர் எடுத்து அறைவார்

மேல்
$2.8.88

#1838
மதியிலா மனத்து அபுஜகில் வரைந்த பத்திரத்துக்கு
இதயம் நேர்ந்து இவண் வந்தனம் இவன் மொழி கேட்கில்
அதிக பொன்_உலகு இழந்து பாழ் நரகு அடைவதலால்
பதியில் நல் அறிவு இலை நமக்கு என சிலர் பகர்வார்

மேல்
$2.8.89

#1839
பத்திரத்தினால் கடிதின் இ பதி அடைந்து இவர்-தம்
உத்தரத்தினுக்கு ஒழுகி உற்பவி பவம் துடைத்து
முத்தி எய்துதற்கு எழுதிய முதல் விதி இயற்றும்
சித்திர திறன் இது என சிலர் எடுத்து இசைப்பார்

மேல்
$2.8.90

#1840
கண் படைத்தவர் இவர் எழில் காண்பவர் முகத்தில்
புண் படைத்தவர் இவர்-தமை காண்கிலார் புதியோன்
பண் படைத்த சொல் மறை நபி பதம் பணியாதார்
மண் படைத்ததில் படைப்பு அலர் என சிலர் வகுப்பார்

மேல்
$2.8.91

#1841
அண்டர் நாயகம் முகம்மதின் காரணம் அனைத்தும்
கண்டு நல் வழி ஒழுகி பொன்_உலகு கைவிலையாய்
கொண்டு போவது அங்கு அடைந்தனம் என சிலர் குழுமி
விண்டு மெய் புளகு எழ களிப்பொடும் விரித்துரைப்பார்

மேல்
$2.8.92

#1842
உறுதியா நமது அரசு அபுஜகில் உரை கேட்டு
மறுகும் வெம் பகை விளைத்திடில் அனைவரும் மதியாது
அறுதி ஈது என அரசுடன் அபுஜகில்-தனையும்
தெறுதலே துணிவு என சிலர் தெளிந்து செப்புவரால்

மேல்
$2.8.93

#1843
முகம்மது-தமக்கு இடர் செய திமஸ்கு மன்னவனும்
செகதலத்து உறை மன்னவர் அடங்கலும் சினந்தே
இகல் பொர துணிந்து எதிரினும் இரும் கதிர் பனியாய்
அகல்வதல்லது முடிவது இல் என சிலர் அறைவார்

மேல்
$2.8.94

#1844
ஈது அலால் சில உரை பிறர் தர திமஸ்கு இறைவன்
காதலால் முகம்மது திரு கவின் முகம் நோக்கி
மூதுரை தெளிவினும் மறையினும் முதிர் மொழியாய்
போதரத்தொடும் புகழொடும் இதத்தொடும் புகல்வான்

மேல்
$2.8.95

#1845
வரிசை ஹாஷிம் என் குலத்தினில் உதித்த மா மணியே
தரு மலர் புய அப்துல்லா தரு திரு மகவே
இருநிலத்தவர்க்கு இசைந்திட எனது உளத்து இருந்த
உரையினில் சில கேட்டி என்று இனிது எடுத்துரைப்பான்

மேல்
$2.8.96

#1846
தந்தை தாய் தமர்-தம் வழி ஒழுகிலாததுவும்
எம்-தன் நாயகன் ஒருவன் உண்டு என்றதும் எழிலாய்
அந்த நாளையின் வரும் குபலினை பழித்ததுவும்
வந்தது என்-தனக்கு அரு மறை என வகுத்ததுவும்

மேல்
$2.8.97

#1847
நபியும் நான் அலால் இனி இலை என நவின்றதுவும்
புவியுளோர்க்கு எலாம் ஒரு கலிமா என புகன்று
செவி சுடச்சுட உரைத்ததும் குலத்தொடு தினமும்
தவிர்கிலா பகை கொண்டதும் தகுவதன்று உமக்கே

மேல்
$2.8.98

#1848
இன்ன வாசகம் கூற நம் இறையவன் தூதாய்
மன்னும் நல் நபிமார்க்கு உறும் தொழில் முதன் மறையோர்
சொன்ன சொற்படி பெரியர்க்கும் சிறியர்க்கும் தோன்ற
முன் நிலைப்படி மிகுதி காரணங்களை முடிப்பார்

மேல்
$2.8.99

#1849
பிறந்த பல் உயிர் அனைத்தும் முன் பிரளயம்-அதனில்
இறந்திடா வகை நூகு நல் நபி இனிது அளித்தார்
நிறம் தழீஇ இபுறாகிம் நல் நபி பெரு நெருப்பை
சிறந்த மென் மலர் வாவியின் குளிர்தர செய்தார்

மேல்
$2.8.100

#1850
முரணிடும் பிருவூன் முனம் மறை நபி மூசா
கரதலத்து உறை கோல்-தனை பெரு மலை கடுப்ப
அரவம் ஆக்கினர் அரிய தாவூது வல் இரும்பை
உருகும் மென் மெழுகு ஆக்கினர் செறுநர் நெஞ்சு உருக

மேல்
$2.8.101

#1851
நிறைந்த நீள் நதி இடங்கரின் வாயிடை நெடு நாள்
இறந்தவர்க்கு உயிர் கொடுத்தனர் மறை நபி ஈசா
அறைந்த வெண் திரை கடற்படு தலத்து இவை அறியாது
உறைந்த பேர் எவர் ஆமினா வயிற்றினில் உதித்தோய்

மேல்
$2.8.102

#1852
பண்டு மேலவர் காரணப்படிக்கு அவர் கலிமா
கொண்டிருந்தவர் சிலர் இனம் குவலயத்து உரவோர்
கண்டு தேறிடும்படி தரும் காரணர் உளரேல்
தொண்டு செய்திடார் எவர் என திமஸ்கு இறை சொன்னான்

மேல்
$2.8.103

#1853
வேத நம் நபி கேட்டு எதிர் அரசனை விளித்து இப்
போது உரைத்தனை நடுநிலை நின் உளம் பொறுத்தது
ஏது காரண காரியம் குறித்தெடுத்து எனக்கு
கோது இலாது உரை என உரைத்தனர் நபி குரிசில்

மேல்
$2.8.104

#1854
குரிசிலாகிய முகம்மதின் உரை செவி குளிர
அருளின் நோக்கொடும் மன களிப்பொடும் சிரம் அசைத்து
தெருளின் நாள்-தொறும் தெரிந்து தன் சிந்தையால் திரட்டும்
பொருளதாகிய நல் மொழி திமஸ்கு இறை புகல்வான்

மேல்
$2.8.105

#1855
மதியினும் செழும் கதிர் தரு முக முகம்மதுவே
கதிரின் வெய்யவன் மேல் கடல் புக ககன் முழுதும்
முதிரும் வல் இருள் பரந்திட வேண்டும் பின் முரம்பால்
பொதி அபூக்குபைசு என் கிரி குடுமியில் புகுந்தே

மேல்
$2.8.106

#1856
நின்று நீர் அமவாசையில் கலை நிறை மதியம்
வென்றி வெண் திரை கடல் முகட்டு எழ செயல் வேண்டும்
குன்றிடாது எழுந்து அந்தரம் குலவி பின் இறங்கி
தொன்று தோன்று கஃபா மிசை தோன்றவும் வேண்டும்

மேல்
$2.8.107

#1857
இருந்த பூரண மதியம் நல் நிலத்திடை இறங்கி
வருந்திடாது கஃபாவினை எழுதரம் வலமாய்
திருந்த வந்து பின் உள் புகுந்து இறைவனை சிரம் சாய்த்து
அரும் தவத்தொடும் இதயம் அன்புற தொழ வேண்டும்

மேல்
$2.8.108

#1858
வணங்கி அங்கிருந்து எழுந்து பொன் வாயிலை கடந்து
கணம் கொள் மாந்தரின் நடு நடந்து அழகொடு கடிதின்
நிணம் கொள் மால் வரை ஏறி நின்று உம்முடன் இயல்பாய்
பிணங்கிலாத நல் மொழி பல பேசவும் வேண்டும்

மேல்
$2.8.109

#1859
ஆதி_நாயகன் ஒருவன் உண்டு எனவும் அங்கு அவன்-தன்
தூதர் நீர் நபி என்பதும் அறபு எனும் சொலினால்
பாதலத்தினில் யாவரும் செவியுற பகர்ந்து அப்
போதின் உம் திரு சட்டையுள் புகுதவும் வேண்டும்

மேல்
$2.8.110

#1860
அங்கிருந்து இரு பிளவதாய் அணி செழும் வலது
செம் கரத்து உறை சட்டையில் புறப்பட திறத்து ஓர்
பங்கு இட கர சட்டையில் புறப்பட பரிவாய்
இங்கிதத்தொடும் குறை அற எதிரவும் வேண்டும்

மேல்
$2.8.111

#1861
ஒரு பகுப்பு எழு_வானினில் புகுந்து ஒரு பகுப்பு
விரி திரை படு_வான் புகுந்து அந்தரம் விளங்க
பொருவு இலாது இரு பங்கும் ஓர் மதி என பொருந்தி
பருதி வானகத்திடை கதிர் பரப்பவும் வேண்டும்

மேல்
$2.8.112

#1862
பரப்பும் வெண் மதி பின்னும் இ பார் எலாம் அறிய
உரப்பி நாயகன் ஒருவன் என்று அவன் மறைக்கு உரித்தாய்
வரப்படும் திறன் முகம்மது என்று அரு மொழி வகுத்து
விரிப்பர் தீன் நிலை என்பதும் விளக்கவும் வேண்டும்

மேல்
$2.8.113

#1863
ஈது எலாம் முடித்திடுவிரேல் நும் உரைக்கு இணங்கி
காதலால் இணை அடி மிசை சிரம் முகம் கவிழ்த்தி
ஆதரத்தில் என் திரளொடும் தீன் நிலைக்கு ஆகி
போதுவேன் என உரைத்தனன் திமஸ்கினை புரப்போன்

மேல்
$2.8.114

#1864
உள்ளம் மீதினில் இது-கொலோ இன்னும் மற்று உளவோ
விள்ளுவாய் என நபி திமஸ்கு இறைவனை விளித்து
கிள்ளையின் திரள் அரசரும் சேனையும் கேட்ப
கள்ள நெஞ்சு அபூஜகில் மனம் கருக கட்டுரைத்தார்

மேல்
$2.8.115

#1865
புகலும் சொல் செவி புக திமஸ்கினில் புரவலனும்
அகம் மகிழ்ச்சி கொண்டு இவை அலால் வேறு என் என்று அறைய
இகல் மனத்தவர் முக மரைக்கு இரும் சசி எனலாய்
மகிதலம் புகழ் நபி எழுந்தனர் திரு மனைக்கே

மேல்
$2.8.116

#1866
கரிந்த சிந்தையன் அபூஜகில் கடிதினில் எழுந்து
புரிந்த பொன் மலர் புய திமஸ்கு இறைவனை போற்றி
வருந்திலாது சம்மதித்தனன் முகம்மதும் இனிமேல்
தெரிந்தது அங்கு அவன் படிறு என உரைத்து அயல் சேர்ந்தான்

மேல்
$2.8.117

#1867
வாய்ந்த பேரவை விடுத்து இன மாந்தரை விளித்து
சாய்ந்த புந்தியன் முகம்மதின் சரிதையும் வலியும்
ஆய்ந்த வேதமும் மார்க்கமும் வணக்கமும் அறிவும்
தேய்ந்தது இன்று என அபூஜகில் குலுங்கிட சிரித்தான்

மேல்
$2.8.118

#1868
மருவலார் உரை செவிக்கு இடாது எழில் முகம்மதும் அ
பொருவு இல் ஆவணம் கடந்து தம் திரு மனை புகுந்து
பெருகும் கேள்வியின் குவைலிது தவத்தினில் பிறந்த
விரி மலர் குழல் தெரிவையை அருகினில் விளித்தார்

மேல்
$2.8.119

#1869
அடர்ந்த வேல் விழி மடந்தையை அருகு உற இருத்தி
திடம் தரும் கதிர் வேல் கரதல திமஸ்கு இறை முன்
நடந்த உத்தரம் அனைத்தையும் வரன் முறை நவின்றார்
மடம் தராத நல் மறை மன வலி முகம்மதுவே

மேல்
$2.8.120

#1870
அடிகள் கூறிய மொழி வழி கேட்டு அகம் துணுக்கி
கடி கொள் மென் மலர் பல்லவ செழும் கரம் ஏந்தி
நெடியவா எனது உயிரவர் மனத்தினில் நினைத்த
படி முடித்தருள் என்று இறையொடு பகர்ந்து இரந்தார்

மேல்
$2.8.121

#1871
அன்று நம் நபி தனித்து ஒரு-வயின் உறைந்து அறிவால்
நின்று இரண்டு றக்ஆத்து நல் நெடியனை வணங்கி
வென்றி தா என இருந்தனர் விரைவின் வந்தடைந்தார்
தென் திறல் தமது உயிர் என வரும் ஜிபுரீலே

மேல்
$2.8.122

#1872
எனக்கு உறும் துணையே உயிரே முதல் இறை என்-
தனக்கு உமக்கு சலாம் எடுத்துரை என சாற்றி
சினக்கும் காபிர்களொடும் திமஸ்கு இறைவன் செப்பினதும்
நினைக்கும் முன் வரும் என்றனன் என நிகழ்த்தினரால்

மேல்
$2.8.123

#1873
மன்றல் மெய் முகம்மதின் உரை மறுத்திடாது ஏவல்
என்றும் செய்தவர்க்கு அமைத்தனன் மதியை என்று இறையோன்
வென்றியாய் பினும் உரைத்தனன் எனும் உரை விரித்தார்
குன்றிலா பெரும் சிறை செறி வானவர்_கோமான்

மேல்
$2.8.124

#1874
விண்ணவர்க்கு இறை இவை அலால் பலபல விரித்து
மண்ணகத்திருந்து அரும் விசும்பு அடைந்த பின் மகிழ்வாய்
அண்ணலாகிய முகம்மதும் அகத்தினில் களிப்புற்று
எண்ணம் இன்றி அங்கு இருந்தனர் திருந்தலர் இடியின்

மேல்
$2.8.125

#1875
மருவலர்க்கு அரி நிகர் அபித்தாலிபு மன்னர்
திரு மனை புகுந்து இருந்து தம் உளத்தினில் செனித்த
பருவரல் பெரு நோயினால் தனித்து உடல் பதைத்து
தெரியும் தேற்றமும் நலக்கமும் வர சில புகல்வார்

மேல்
$2.8.126

#1876
கானக சுரத்திடை நதி அழைத்தனர் கடிதின்
ஊன் அருந்திய புலி பணிதர எதிர் உரைத்தார்
பானுவின் கதிர் மணி முடி அரவொடும் பகர்ந்தார்
ஈனர் வன் கொலைக்கு அறும் கரம் பொருந்தி அங்கு இருந்தார்

மேல்
$2.8.127

#1877
நிலவு அழைத்திட திமஸ்கு இறை நிகழ்த்தினன் அவன் முன்
அலைவு இலாது எதிர்ந்து அறுதி சொற்றனர் உலகு அறிய
விலகு காரணம் எவ்வணம் முடியுமோ என தம்
மலைவினால் உடல் மதி அற மயங்கிடும் காலை

மேல்
$2.8.128

#1878
இருந்த இல்லகத்து ஒரு மதிள் இடி என முழங்கி
விரிந்த செம் கதிர் வேல் அபித்தாலிபை விளித்து
திருந்தும் பொன்_நகர் வானவர் மொழி என தெளிய
பொருந்த நன்கு உற தெரிதர இனியன புகலும்

மேல்
$2.8.129

#1879
மெலிவும் எண்ணமும் கவலையும் விரைந்து எடுத்து எறி-மின்
வலியவன் அருள் நின் மகவிடத்தினில் மலிவாய்
தொலைவு இலா பெரும் காரணம் விளைப்பதால் சுடர் வெண்
நிலவும் இற்றையில் வரூஉம் அது மறு அற நிறைந்தே

மேல்
$2.8.130

#1880
மருவலார் பெரும் கிளையொடும் குழுவொடும் வதனம்
கருகி அங்கு அவர் வலி இழந்திடுதல் கண்டறி-மின்
அரிய தீன் எனும் செழும் கதிர் குபிர் இருள் அறுத்து
பெருகும் என்பதும் கேட்டனர் அறிவினில் பெரியோர்

மேல்
$2.8.131

#1881
நிகதி பெற்றிலா அதிசயம் இது என நினைத்து
முகம்மதின் திரு மனை புகுந்து அவர்-வயின் உறைந்து
பகர அரும் சுதை மதிள் முறை பகர்ந்ததை பகர்ந்தார்
செகதலத்தினும் விண்ணினும் பெரும் புகழ் சிறந்தோர்

மேல்
$2.8.132

#1882
தந்தை கூறிட ஆனந்தம் உள தடம் ததும்பி
எந்தையீர் என போற்றி விண்ணவர்க்கு இறை இசைத்த
மந்திரத்தையும் வரன் முறை வகுத்து எடுத்துரைத்தார்
கந்த மென் மலர் புய அபித்தாலிபும் களித்தார்

மேல்
$2.8.133

#1883
அவிரும் மெய் ஒளி முகம்மதே உம்மிடத்து அவனால்
புவியின் மிக்கு உயர் செல்வமும் பெரும் புதுமைகளும்
தவிர்கிலாது வந்தடைவது உண்டு என பல சாற்றி
திவளும் மாலைகள் துயல்வர மனை-வயின் சேர்ந்தார்

மேல்
$2.8.134

#1884
அற்றை நாள் அகன்று அரும் பெரும் புகழ் முகம்மதுவும்
மற்றை நாள் உயிர் தோழர்கள்-தமை வரவழைத்து
குற்றம் அற்ற தம் பெரும் குலத்தவரையும் கூட்டி
ஒற்றர் முன் புக பின் எழுந்தனர் குழுவுடனே

மேல்
$2.8.135

#1885
கொடிய பாதகம் வஞ்சனை குபிர் கொலை அனைத்தும்
மடிய நல் அறம் குருவொடும் வருவன போன்றும்
கடி கொள் மான்மதம் கமழ்தர தெருத்தலை கடந்து
முடியின் மை தவழ் ககுபத்துல்லாவை முன்னினரால்

மேல்
$2.8.136

#1886
உயிர் உறும் துணை தோழமை நால்வர்களுடனே
வயிர ஒண் கதிர் ககுபத்துல்லா வலம் சூழ்ந்து
செயிர் அற தொழுதிருந்து இனத்தவருடன் சிறப்ப
இயல் பெறும் தனி மறை முகம்மது நபி எழுந்தார்

மேல்
$2.8.137

#1887
வடிவு உறும் சலதர குடை நிழற்றிட வானோர்
நெடு விசும்பிடை இடன் அற திசைதிசை நெருங்க
உடலுறும் படைப்பு எவையும் நல் வாழ்த்து எடுத்து ஒலிப்ப
புடை பரந்து இனம் வர நபி பொருப்பினில் ஆனார்

மேல்
$2.8.138

#1888
சிறுவரும் துணை முலை அணை பிரிந்திடா சேயும்
மறுகு மை கயல் அஞ்சன விழி மடந்தையரும்
தெறு கதிர் படைப்பு அ நகர் மாக்களும் சிலையை
குறுகி நின்றனர் நால் வகை குலம் தலைமயங்க

மேல்
$2.8.139

#1889
கனை குரல் சிறு கண் பெரும் செவி மத கரியும்
புனை மயிர் கடு விசை வளை முக புரவிகளும்
இன மணி கடல் சேனையும் புறப்பட எழுந்தான்
வனச மென் மலர் தடம் திகழ் திமஸ்கு மன்னவனே

மேல்
$2.8.140

#1890
திவள் தடம் கடல் சலஞ்சலம் முரல்தர திசை விண்
தவழ்தரும் குடை திரள்களும் கவரியும் தயங்க
துவள்தரும் கொடி மலிதர பல்லியம் தொனிப்ப
குவடு அடங்கலும் செருகின நிறைந்தன குழுமி

மேல்
$2.8.141

#1891
முருகு அலர் தரு பொருப்பிடம் தொடுத்து அணி முதிர்ந்த
தெருவும் வீதியும் கானமும் பார்த்திடும் திசையும்
இரு நிலத்திடை எள் இட இடம் அரிது எனலாய்
பெருகி நின்றது நிறைதரு மனு பிரளயமே

மேல்
$2.8.142

#1892
கலை இழந்தன மான் இனம் மடி சுரை கவிழ் பால்
முலை இழந்தன கன்றுகள் விலங்கு இனம் முழுதும்
நிலை இழந்தன பறவைகள் நெடு விசும்பு எழுந்த
மலை அமிழ்ந்தியது இரைதரு எனும் மனு கடலுள்

மேல்
$2.8.143

#1893
எறிந்த வெண் திரை கடல் முகட்டு எழுந்து விண் ஏகி
செறிந்த பார் மனு கடலினை கண்களால் தெரிசித்து
உறைந்த திண் கதிர் ஆயிரம் கரங்களும் ஒடுக்கி
குறைந்த காந்தி கொண்டு இரவி மேல் கடலிடை குதித்தான்

மேல்
$2.8.144

#1894
அடரும் வான் திரிந்து உடல் இளைப்பாற்றுதற்கு அணி மேல்
கடல் அணை திரை துகிலினில் கதிர் கரம் ஊன்றி
உடல் குழைத்திட செக்கரின் படத்தினுள் உறைந்து
படரும் பேரொளி மறைந்திட படுத்தனன் பருதி

மேல்
$2.8.145

#1895
மதியினை பகிர்தர நபி மலை மிசை வானோர்
துதிசெய தனி நின்றனர் கதிரையும் தொடர்ந்து
பதியினில் தருக என்றிடில் பகர்வது என் என தன்
இதயம் அச்சமுற்று அடைந்த போல் அடைந்தனன் இரவி

மேல்
$2.8.146

#1896
அந்தரத்து அமாவாசையில் நபி மதி அழைப்ப
வந்திருந்தனர் வானவர் எவரும் மண் நிலத்தில்
இந்த வானகத்து இருப்பது பழுது என இரவி
சிந்து வெண் திரை குட கடலிடத்தினில் சேர்ந்தான்

மேல்
$2.8.147

#1897
மாதிர புய நபி மனம் களிப்புற மதியை
கோது இலாது இவண் கொடுவருவேன் என குறித்து
வீதி வானக வழியினை தொடர்ந்து மேல் கடலுள்
தூது போனவர் ஒத்தனன் சொரி கதிர் சுடரோன்

மேல்
$2.8.148

#1898
வெய்ய வன் கடல் புகுந்த பின் செக்கர் மேல் எழுந்தது
உய்யு மென் மறை முகம்மதின் மொழியில் ஒன்று-அதனை
பொய் என்பார் கிளையொடும் உடல் பொரிதர புழுங்கி
ஐயம் அற்று எழு நரகிடை நெருப்பு எனலாமால்

மேல்
$2.8.149

#1899
விரிதரும் பருதி கதிர்களை தேக்கி மேல் கடல் கொப்பிளித்தன போல்
தெரிதர சேந்து செக்கர் விண் இலங்க செழும் மறை புகழ் முகம்மது பூ
சொரி மது விதிர்க்கும் பொரி அரை தருக்கள் சுற்றிய வரை மிசை ஏறி
மரை மலர் பொருவா இரு கரம் ஏந்தி வல்லவன்-தனை இரந்து உரைப்பார்

மேல்
$2.8.150

#1900
ஆதி_நாயகனே அழிவிலாதவனே அளவறுத்திடற்கு அரும் பொருளே
சோதியே எவையின் உவமையில்லவனே தொடர் இன்ப துன்பம் அற்றவனே
நீதியே குபிரர் தெளிதரும்படியால் நினைத்தவை முடித்திடு என்று உருகி
கோது அற மனமும் வாக்கும் ஒன்றாகி குதா-தனை அடிக்கடி புகழ்ந்தார்

மேல்
$2.8.151

#1901
இரந்து நின்றதற்காய் ஆதி வல்லவனும் இருட்டறை மலக்கினை கூவி
பரந்திட இருளில் சிறிது எடுத்து ஊசித்துளையினுள் பட விடுக என்ன
திருந்திட உரைப்ப அ மலக்கு எழுந்து செறி இருள் பிழம்பினில் சிறிது
பொருந்திட விடுத்தார் ககனமும் புவியும் பொது அற விழுங்கியது அன்றே

மேல்
$2.8.152

#1902
மனு நெறி பிழைத்த அபுஜகில் கொதித்த மனத்தினும் இருண்ட மை கடல் ஒன்று
இன மணி கொழிக்கும் பரவையும் கிரியும் எடுத்து அகட்டிடை மடுத்து எரியும்
தினகரன் உலவும் விண்ணினை தடவி திசைதிசை இடன் அற செருகி
தனி நிலை பெருகும் பிரளயம் எனலாய் சகத்தினில் பரந்த வல் இருளே

மேல்
$2.8.153

#1903
கரைபுரள் இருளால் அக்கினி கொழுந்தும் கரிந்து கண்ணினில் ஒளி மறுகி
விரி கதிர் மணியின் குலங்களும் இருண்டு விசும்பிடை கணங்களும் மறைந்து
சொரி மத கரியும் பரியொடு இரதமும் துவண்டு அணி மறுகு இலம் தோன்றாது
ஒருவருக்கொருவர் வதனமும் தெரியாது உலகம் எங்கணும் மயங்கியதே

மேல்
$2.8.154

#1904
முடிவுறும் காலத்து இயற்கையோ அலது முகம்மதை குறைபட நினைத்த
கொடியவர் பொருட்டால் விளைத்திடும் பவமோ குவலயத்து உதித்திடும் மாந்தர்
இடருற எவர்க்கும் கண் ஒளி மழுங்கியிருந்ததோ மதி மயங்கியதோ
படர் விடம் உலகில் பரந்ததோ எவை என்று உரைப்ப அரிது என பதைபதைத்தார்

மேல்
$2.8.155

#1905
கன முகில் கவிகை முகம்மது விளைத்த காரணம் உளது இது அன்று என்பார்
தினகரன் இறந்து பேரிருள் அரசுசெலுத்திடும் காலம் ஈது என்பார்
மனம் மகிழ்தர வந்தடைந்தவர் எவரும் மனையிடம் புகல் அரிது என்பார்
இனம் ஒரு கடிகை பொழுதினில் தெரியாது இறந்திடும் காலம் ஈது என்பார்

மேல்
$2.8.156

#1906
அன்பினர்க்கு இரங்கா தறுகணன் கொடியன் அபூஜகில் ஒழியும் நாளளவும்
துன்பமும் ஒழியாது இனம் பெரும் கேடு சூழ்தர விளைந்திடும் என்பார்
இன்புறு நபி சொற்கு இணங்கிலார் இருக்கும் நகரினும் இருக்கொணாது என்பார்
வன் பெரும் இருள் தீர்ந்து உய்விரேல் நடக்கும் மாற்றமும் இஃது என மதிப்பார்

மேல்
$2.8.157

#1907
மல் விதம் பயின்று திரள்தரும் புயத்தார் முகம்மதை தினம்-தொறும் பகைத்து
செல்வுழி மறுத்த அபுஜகில் அழைத்த திமஸ்கினுக்கு இறைவனை சினந்து
கொல் வித சூழ்ச்சி இது-கொல் என்று உரைப்பார் குதா திருவருளினால் வானில்
வெல் வித புதுமை காரணம் அலது வேறு துன்பு இலை என விரிப்பார்

மேல்
$2.8.158

#1908
உயிரினும் பிரியா துணைவரை காணாது உலைந்திடும் மடந்தையர் சிலரே
செயிர் அறு மகவை தவறவிட்டு அலைந்து திரிந்திடும் மடந்தையர் சிலரே
குயில் புரை அமுத கிளி மொழி மடவார் குழு பிரிந்து அழுங்குவர் சிலரே
மயல் உறழ்ந்து அணியும் பணி இழந்து இரங்கி மறுகுறும் மடந்தையர் சிலரே

மேல்
$2.8.159

#1909
தெரிதரா இருளால் அரசரும் தேர்ச்சி துணைவரும் வரிசை மன்னவரும்
பரியினின்று இழிந்த வீரரும் மற்ற படைக்கலத்தவர்களும் நகரில்
பெருகிய மாந்தர் அனைவரும் நிறைந்த பெண் இனத்துடன் தலைமயங்கி
விரிதரும் தலை மத்து எறிதரும் தயிரின் மிக்கு உடைந்து அற மிடைந்தனரே

மேல்
$2.8.160

#1910
புது நறவு அருந்தி வரி சுரும்பு இரைக்கும் பொழில் உடை பொருப்பிடை திரண்ட
முது மரத்து உறைந்த பறவைகள் அனைத்தும் முயங்கிய பெடையினை காணாது
அதிர்தரும் வாய்விட்டு அந்தரம் முழுதும் அரற்றுவது அகுமது நொடிக்குள்
மதி அழைத்திடுவர் ஐயுறல் எனும் சொல் மானிடர்க்கு உரைப்பன போலும்

மேல்
$2.8.161

#1911
விலங்கு இனம் கலைய பறவைகள் மறுக மேதினி படைப்புள எவையும்
கலங்கிட கலங்கி திமஸ்கினுக்கு அரசன் கண்கொளா புதுமையாய் சிறந்த
நிலம் கொள நிறைந்த மறை முகம்மதுவை நெஞ்சுற புகழ்ந்து முன்னிலையாய்
பலன் கொளும் பதமும் படைத்தனம் என்ன பண்பொடு களித்து எழுந்திருந்தான்

மேல்
$2.8.162

#1912
மீன் அகடு உரிஞ்சும் குவட்டிடை வடிவாய் விளங்கிய முகம்மதை விளித்து
வானம்மட்டு இருண்ட கொடிய வல் இருளை மறைபட நொடியினில் மாற்றி
பால் நலம் கொழிக்கும் நிறைந்த வெண் மதியை பரவையின் முகட்டு எழப்படுத்தி
ஈனம் அற்று இவணில் வரவழைத்திடுக என்றனன் திமஸ்கினுக்கு இறைவன்

மேல்
$2.8.163

#1913
திரை தடத்து அலர் தேன் சேல் இனம் சிதறும் திமஸ்கினுக்கு இறையவன் தெரிய
உரைத்த சொல் உளத்தூடு இருத்தி நம் நபியும் உடையவன் இடத்தினை நோக்கி
நிரைத்த வல் இருளை சடுதியில் அகற்றி நீள் நிலா கதிர்கள் கொப்பிளிப்ப
தரைத்தலம் புகல முழுமதி அழைத்து தருக என்று இனிது உரைத்தனரே

மேல்
$2.8.164

#1914
இறையவன்-தனை நல் நய மனத்து இருத்தி இரந்து நின்றிடும் பொருட்டு-அதனால்
அறைதரும் திரை முத்து இறைத்த பைம் சலதி அகட்டிடையிருந்து வெண் கலைகள்
நிறைபட பரப்பி விசும்பு உற தடவி நெடும் புவி அடங்கலும் நயினார்
மறைபடா புகழின் கொழுந்தினில் பூத்த மலர் என எழுந்தது மதியம்

மேல்
$2.8.165

#1915
திணி சுடர் சுவனத்து அரம்பையர் அமரர் தினம்-தொறும் பரவிய நயினார்
அணி பெற திமஸ்குக்கு இறை மனம் களிப்ப அவனியில் தீன் பயிர் படர
பணி நெடும் படத்தில் கிடந்த பார் உடுத்த பரவை வேந்தனுக்கு வெண் தரள
மணியினில் அமைத்த செழும் முடி நிகர்ப்ப வந்தது நிறைந்த வெண் மதியம்

மேல்
$2.8.166

#1916
இடன் அற கலைகள் பெருகிய மதியம் எங்கணும் கதிர்கள் விட்டு எறிந்து
கடு விடம் அனைய இருள் குலம் அறுத்து ககன் முகட்டு ஒளி சுதை தீற்றி
மடல் அவிழ் குவளை மது மலர் மலர்த்தி முகம்மதை தெளிதர நோக்கி
மிடல் உடை குபிரர் அகம் முகம் கருக்கி விண்ணகத்து இனிது எழுந்ததுவே

மேல்
$2.8.167

#1917
விண்ணகத்து அமுதம் கான்ற வெண் மதியம் மீன் நடு மதியினில் திகழ்ந்து
மண்ணகம் நோக்கி மெலமெல தாழ்ந்து மக்க மா நகரியில் ககுபா
நண்ணி விண் முகட்டின் நடு நிலை நோக்கி நலம் கெழும் கலை நிலா ஒழுக
பண்ணுதற்கு இயைந்த வெள்ளி வெண் குடம் போல் பரிவுற இனிது வந்து உறைந்த

மேல்
$2.8.168

#1918
படியினில் சுவன பதி நிகர்த்து அனைய பழம் மறை பள்ளியில் சிறந்த
கொடுமுடி எனலாய் உறைந்த வெண் மதியம் குவலயத்திடத்தினில் தாழ்ந்து
வடிவுறும் ககுபா வாயிலின் எதிர்ந்து மகிழ்வொடும் எழுதரம் வலம்வந்து
உடல் குழைத்து அரிதின் உள் உற புகுந்து அங்கு உறைந்தது திசைதிசை ஒளிர

மேல்
$2.8.169

#1919
நறை குடிபுகுந்த ககுபத்துல்லாவின் நடு இருந்து ஒளிரும் மா மதியம்
இறைவனை பரிவினொடும் மன பயத்தால் இரும் தரையிடத்தினில் தொழுது
முறைமுறை பணிந்து பல தரம் புகழ்ந்து முகம்மது நபியையும் வாழ்த்தி
நிறை மதி கதிர் தாள் வாயிலை கடந்து நின்றது நிலம் பிறங்கிடவே

மேல்
$2.8.170

#1920
முதிர் கதிர் எறித்த ககுபத்துல்லாவின் முன்றிலில் சிறந்த வெண் மதியம்
மது விரி பொழில் சூழ் வரையிடை நோக்கி வந்து மா மறை முகம்மதுவை
எதிர்தர பணிந்து சலாம் எடுத்து ஓதி இணை மரை மலர் பதம் போற்றி
விதியவன் தூதர் பேரினில் கலிமா விரைந்து எடுத்துரைத்து நின்றதுவே

மேல்
$2.8.171

#1921
திருந்தி நல் கலிமா ஓதி முன் எதிர்ந்த சிறப்பினை நோக்கி நல் நெறியாய்
வருந்திடாது எனது வரவினை எவர்க்கும் மவுல் என முகம்மது மவுல
பொருந்திய மனத்தில் களிப்பொடும் வாக்கில் புகழொடும் பொழி நிலா மதியம்
இருந்தவர் எவர்க்கும் தெரிதர அறபின் இசையினில் தெளிதர இயம்பும்

மேல்
$2.8.172

#1922
நெடியவன் படைப்பு எப்பொருட்கும் முன் ஒளியாய் நின்று பின் அப்துல்லா வயிற்றில்
வடிவுறும் அரசாய் உதித்த நல் நபியே முகம்மதே தனியவன் தூதே
படியினும் கலிமா பகர்ந்தவர் சுவன பதி அடைகுவர் பகராதார்
கெடு நரகு அடைவர் சரதம் என்று எவர்க்கும் கிளத்தி நின்றது செழும் மதியம்

மேல்
$2.8.173

#1923
பாரினில் எவர்க்கும் தோன்றிட மதியம் பழம் மறை முகம்மதின் மெய்யில்
போர்வையில் புகுந்து அங்கு உரன் நடு இருந்து பொருவு அற இரு பகுப்பு ஆகி
சீர் பெற வலது கரத்திடை ஒரு பால் செழும் இட கரத்தினில் ஒரு பால்
ஏர் பெற எழுந்து முகம்மதுக்கு எதிராய் இரு பிறை இலங்க நின்றனவே

மேல்
$2.8.174

#1924
முன் எதிர்ந்து இலங்கும் ஒரு பகுப்பு எழு_வான் முரி திரை கடல் முகட்டு ஏகி
பின் ஒரு பகுப்பு குட கடல் புகுந்து பெரு விசும்பிடையினில் பிறங்கி
தன் இரு பகுப்பும் அந்தரத்து உலவி தவணிலா கதிரொடும் தாழ்ந்து
மன்னிய ககுபா குடுமி மேல் சிறந்து மறு அற பொருந்தியது அன்றே

மேல்
$2.8.175

#1925
உலகு எலாம் விளங்க செழும் கதிர் பரப்பி ஒளிர்தர வயங்கும் மா மதியம்
நிலம் மிசை உதித்த முகம்மதே எவர்க்கும் நெடியவன் தூதர் என்று இசைத்து
குலவும் எப்படைப்பும் இவர்-தமக்கு ஈமான் கொண்டது சரதம் என்று அறைந்து
மலிதர நபிக்கு சலாம் எடுத்து ஏத்தி வளர்ந்தது வானகத்து இடத்தில்

மேல்
$2.8.176

#1926
வானகத்து உலவி அமுத வெண் கதிர் கால் மா நில பரப்பு எலாம் பரப்பி
மீனொடும் செறிந்து தன் அரசு இயற்றி விரைவொடும் மேல் திசை படர்ந்து
தேன் இனம் இருந்து புது நறவு அருந்தி செழித்திடும் பெரும் தடத்து இருந்த
பானல் அம் குவிய குட கடல் திரைக்குள் பாய்ந்தது புது முழு மதியம்

மேல்
$2.8.177

#1927
மதி வரவழைத்து காரணம் விளைத்த முகம்மதின் பொருட்டினால் சுவன
கதி பதம் அடைந்தேம் என சிரம் அசைத்து ஹபீபு தன் அகத்தினில் களித்து
முதிர் கலை நூலோர்-தமக்கு எடுத்து இசைத்து முன் மறை விளக்கமும் விளக்கி
எதிர் இவர்க்கு இலை என்று அதிசயம் பிறப்ப எவரொடும் தனித்தனி இசைத்தான்

மேல்
$2.8.178

#1928
மா தவன் திமஸ்குக்கு இறை உரைத்ததுவும் முகம்மது விளைத்த காரணமும்
பூதலத்தினில் கண்டு அறிகொணா பெரிய புதுமையில் புதுமை-கொல் என்ன
சீத ஒண் கமல முக மலர் மலர்ந்து தேர்ச்சியில் துணைவர் மன்னவரும்
பேதுறல் அகற்றி சிந்தையில் தேறி பெரியவன் தூதினை புகழ்ந்தார்

மேல்
$2.8.179

#1929
மருவலர்க்கு அரி ஏறு எனும் திமஸ்கு இறைவன் மன களிப்புடன் எழுந்திருந்து
குரு முகம்மது-தம் இணை அடி மலரை கொழும் மலர் கரத்தினால் தடவி
இரு விழி குளிர வைத்து முத்தமிட்டு ஈமானினை உளத்தினில் இருத்தி
திருமுகம் மலர்ந்து மணி எயிறு இலங்க செ இதழ் திறந்து செப்புவனால்

மேல்
$2.8.180

#1930
ஆதி-தன் தூதே பேரின்ப விளக்கே அமர்_உலகினுக்கும் நல் அரசே
மா தலத்து எவர்க்கும் பவ கடல் கடப்ப வரும் ஒரு திரு மரக்கலமே
தீது அற எனது கருத்து உறும் அறிவே தீன் நிலை நிறுத்தும் நாயகமே
பூதரத்து உறைந்த முழு மணி சுடரே புண்ணியம் திரண்ட மெய்ப்பொருளே

மேல்
$2.8.181

#1931
உமது உரை திருத்துமவர்கள் பொன்பதியோர் உமது உரை படிறு என உரைத்தோர்
தமரொடு நரகில் புகுவர் நும் அரிய தண்ணளி எவர் அறிகுவர் இ
நிமிர்தரும் குடுமி கிரியின்று இறங்கி நிரை மணி மாளிகை புகும் என்று
அமரரும் புகலும் முகம்மதுக்கு உரைத்தான் அணி மதிள் திமஸ்கினுக்கு அதிபன்

மேல்
$2.8.182

#1932
குருத்து வெண் நிலவு கொப்பிளித்து எரியும் கொடி மதிள் திமஸ்கினுக்கு இறைவன்
உரைத்த சொல் தவறாது அழகு ஒளிர் நயினார் உலகு எலாம் செழும் புகழ் விளங்க
திருத்திய வகுதை பதி அபுல் காசீம் சிந்தையில் பலன் பெற தினமும்
இருத்திய மரை தாள் தரும் கதிர் குலவ இறும்பினின்று இரு நிலத்து இழிந்தார்

மேல்
$2.8.183

#1933
மண்டலத்து அரிய புது மதி விளங்கி வான் எழுந்து அகத்து அடைந்தன போல்
விண்டுநின்று இறங்கி முகம்மது நபியும் விரி கதிர் மாளிகை புகுந்தார்
திண் திறல் பரியும் சேனையும் மிடையும் திமஸ்கு இறை அவன் இடம் சேர்ந்தான்
எண்திசையவரும் நகரவருடனும் இன்புற கலந்து அயல் போனார்

மேல்
$2.8.184

#1934
மக்க மா நகர குறைஷிகள் பலரும் மதியிலி அபூஜகிலுடன் இ
ஒக்கலும் துன்புற்று எழில் முகம் வெளிறி உள் உணர் நினைவு அற கருகி
தக்கவர் ஒருவர்க்கு உரைகொடுப்பதற்கு தங்களில் தனி தடுமாறி
புக்கிடம் புகுதற்கு அரு நெறி அறியா புல்லறிவினில் சில புகல்வார்

மேல்
$2.8.185

#1935
வருடம் ஈரைம்பான் அறுபதின் மேலும் இருந்து மா மறைகளை தெளிந்த
புருடராதிபன் இ முகம்மது இங்கு இயற்றும் புன்மை வஞ்சனையிடத்து அடைந்து
திருடர் போல் விழித்தான் என்னில் இ நிலத்தில் தெளி மறை தெளிந்த சிந்தையினும்
இருள் தராது இருத்தல் அரிது என சினந்த இடரொடும் படிறு எடுத்து இசைப்பார்

மேல்
$2.8.186

#1936
விறல் பெரும் படை கொண்டு அபூஜகில் விளைக்கும் வினைகளும் மிகுந்த தந்திரமும்
அறல் பல கொழிப்ப நதி சுரத்து அழைத்த அகுமதினிடத்தினில் அணுகா
புற பல நகரில் சமயமும் சிதைய புது மறை எனும் புறுக்கானில்
உற படுத்து உலகம் அடங்கலும் இவன்-தன் உள்ளடி படுக்கும் என்று உரைப்பார்

மேல்
$2.8.187

#1937
தெரி மறை மாலிக் அருள் அரசு அறியா சிந்தையன் எனவும் மா மதியை
வரவழைத்து அரிய காட்சியை முடித்த முகம்மதை வஞ்சகன் எனவும்
பெருகிய குபிரர் தனித்தனி உரைப்ப பெரும் சிறை திரண்ட முள் வளை வாய்
குருதி கொப்பிளித்த வேதின சூட்டு குக்குடம் திசை-தொறும் கூய

மேல்
$2.8.188

#1938
இன வளை முரலும் தடத்து அனம் இரைப்ப இசை குரல் கோகிலம் இயம்ப
மன நிலை உணரா குபிரர் தம் உளத்தில் வல் இருள் குலம் புகுந்து ஒளிப்ப
நனி பொருள் மறை தீனவர் மன தெளிவின் நடுநிலம் தெளிதர குணக்கில்
தினகரன் கதிர்கள் வெளிறிட பரப்பி தெள் திரை கடல் முளைத்து எழுந்தான்

மேல்

9 தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம்

$2.9.1

#1939
மரு மலர் சுமந்து தேன் வழிந்து ஒழுகும் அணி புய முகம்மது நபியும்
தெரிதரும் தீனின் நெறி முறையவரும் சிந்தையில் களிப்பொடும் சிறப்ப
அரிய மெய்ப்பொருளை முறைமுறை வணங்கி அற்றையில் கடன்கழித்து அமரர்
திருவடி பரவ தம் உயிர் அனைய செல்வரோடு உறைந்திடும் காலை

மேல்
$2.9.2

#1940
பூரண களப கன தன மடவார் பொரு திரை கவரி கால் அசைப்ப
வார் அணி முரசம் அதிர்தர சீறும் மடங்கலின் கொடி முனம் குலவ
ஆரண தலைவர் மருங்கினில் பிரியாது அரசர்கள் உடன் வர தொலையா
காரண குரிசில் முகம்மதினிடத்தில் வந்தனன் ஹபீபு எனும் அரசன்

மேல்
$2.9.3

#1941
செம் மலர் பதத்தில் வெண் கதிர் குலவும் செழும் மணி முடி சிரம் சேர்த்தி
தம் இனத்தவர்களுடன் சலாம் உரைத்து தக்கது ஓர் இடத்து நின்றவனை
வம் என திருவாய் உரை அருள் கொடுத்து முகம்மது மருங்கினில் இருத்தி
வெம்மையின் அமுத கனி எனும் கலிமா விளம்புக என விரித்து உரைத்தார்

மேல்
$2.9.4

#1942
நன்று என புகழ்ந்து மனம் களித்து எழுந்து நரபதி திமஸ்கினுக்கு அரசன்
வென்றி கொள் அரசே இனம் ஒரு வசனம் வினவுதல் வேண்டும் என்னிடத்தில்
என்று அவன் உரைப்ப முகம்மது நபியும் இன்புறு முறுவல் கொண்டு இனிதாய்
துன்றும் என் மனத்தில் தெரிந்தது உன் மகள்-தன் தொல்வினை தெளிப்பதற்கு என்றார்

மேல்
$2.9.5

#1943
ஆண்டகை உரைத்த புது மொழி நறும் தேன் அகத்தினில் புகுந்து உடல் களித்து
வேண்டும் நல் பதவி படைத்தனன் சிறியேன் விளைத்திடும் பவ கடல் தொலைத்தேன்
காண் தகா புதுமை அனைத்தையும் தெரிந்தேன் கடி கமழ் அணி மலர் பதத்தை
தீண்டவும் பெற்றேன் இனி அரும் பொருள் ஒன்று இலை என உரைத்தனன் திறலோன்

மேல்
$2.9.6

#1944
புதியவன் தூதர் முகம்மதும் திமஸ்கை புரந்திடும் அரும் தவத்தவனும்
மதுர மென் மொழியால் அளவளாய் உளங்கள் மகிழ்ந்து இனிது இருக்கும் அ காலை
ககன் இழிந்து அரிய பெரும் சிறை ஒடுக்கி கடிதினில் கண் இமைத்திடும் முன்
செகதலத்து உறைந்த நபியிடத்து வந்தார் தெரி மறை கொடு ஜிபுரீலே

மேல்
$2.9.7

#1945
மருங்கினில் எவர்க்கும் தோன்றிடாது உறைந்து வல்லவன் சலாம் எடுத்து இயம்பி
பெரும் குலம் விளக்கு முகம்மதை நோக்கி பிறழ்ந்து உரு தோன்றிலா தசையை
நெருங்கு வெண் கொடி கஃபாவிடத்து ஏகி நிரை மயிர் போர்வையால் மூடி
அரும் கதிர் கலசத்து ஆபுசம்சத்தின் அரிய நீர் கரம் கொடு தெளித்தே

மேல்
$2.9.8

#1946
இறைவனை நோக்கி துஆ இரந்தினிரேல் இலங்கு உரு தோன்றும் என்று இசைத்து
சிறை நிறம் தோன்றாது அமர் உலகு-அதனில் ஜிபுறயீல் ஏகிய பின்னர்
கறை நிறம் குலவும் செழும் கதிர் வடி வேல் கரதல முகம்மது நயினார்
அறை முரசு அதிர திமஸ்கு இறையவனும் எழுந்தனர் அரிய கஃபாவில்

மேல்
$2.9.9

#1947
வானவர் இறையோன் அருள்படி அமைத்த மக்க மா நகரியின் நாப்பண்
கான் அலர் பொதுளும் ககுபத்துல்லாவின் கடி மதிள் புறத்து ஒரு-பாலில்
தீனவருடனும் அணி பெற இருந்து செவ்வியன் ஹபீபினை நோக்கி
ஈனம் அற்று உனது மகவு எனும் தசையை இவண் கொடு வருக என்று இசைத்தார்

மேல்
$2.9.10

#1948
அந்த நல் மொழி கேட்டு அடல் படை மாலிக் அருளிய ஹபீபு எனும் அரசன்
சிந்தையில் களித்து மருங்கு நின்றவரை திண்ணிய தசையினை கொணர்க என்று
உந்திட உரைப்ப ஓடினர் சிலவர் உறு பொருள் பொதிந்து என பொதிந்து
தந்த பெட்டகத்தினொடும் எடுத்து வந்தார் தனு விடு சரத்தினும் கடிதின்

மேல்
$2.9.11

#1949
முன் உற பணித்த பெட்டகத்து இருந்த முதிர் தசை கட்டியை எடுத்து
மன்னிய குரிசில் முகம்மது நபி முன் வைத்தனர் சுரி குழல் கரும் கண்
மின் என பிறழும் மடந்தையருடனும் விரி திரை பசும் கடல் அனைய
அ நகர் மாக்கள் அனைவரும் விரைவின் அடுத்து அதிசயித்திட அன்றே

மேல்
$2.9.12

#1950
கடல் கிடந்து உடுத்த பெரும் புவியிடத்தில் கண்டு அறியா பெரும் காட்சி
மடல் அவிழ் கமல வாவி சூழ் திமஸ்கு மன்னவன் மகவு என பிறந்து
மிடல் உறும் கதிர் வாள் முகம்மது பொருட்டால் விளைக்கும் காரணத்தினுக்கு இருந்த
உடல் எனும் தசை தன் உயிர் அலாது இயைந்து ஓர் உறுப்பு எனும் வடிவு பெற்றிலவே

மேல்
$2.9.13

#1951
பொருந்துறும் குறிப்பு ஒன்று அணுவினும் இலதாய் பொருவு அறும் புதுமையின் எதிரின்
இருந்த அ தசையை முகம்மது நோக்கி இறைவன் அருள் என குறித்து
திருந்துற மயிரின் போர்வையில் போர்த்து செம் கரத்து அரிய நீர் ஏந்தி
மருந்தினும் அமரர் அமுதினும் சிறப்ப மகிழ்வொடும் தெளித்து நின்றனரால்

மேல்
$2.9.14

#1952
மணி என சிறந்து மலரின் மென்மையவா மழை செழும் கரங்களை ஏந்தி
அணிதர போற்றி கனிந்து அற நெகிழ்ந்த அகத்தினில் அரிய நாயகனை
தணிவு இலாது உயர்த்தி பலபல புகழால் சாற்றி நல் நெறி முறை தவறா
பணி பணிந்து இரந்தார் தீன் நிலை நிறுத்தும் பதும மென் பத முகம்மதுவே

மேல்
$2.9.15

#1953
பூதலத்து எவர்க்கும் மறை நெறி புதுக்கி பொருவு அரும் சுவன நாடு அளிப்ப
தூது என உதித்த முகம்மதின் துஆவை துய்யவன் உற கபூல் ஆக்க
பாதக குபிரர் மனம் பதைபதைப்ப பலன்படா பெரும் தசை திரட்சி
தீது அற தோன்றும் அவயவம் சிறப்ப தெரிவையின் திரு உரு எடுத்த

மேல்
$2.9.16

#1954
வரி இழை மயிர் போருவை எனும் கரிய வல் இருளிடை எழும் மதி போல்
விரி கடல் பெரு நீர் உண்டு சூல் உளைந்த விசும்பிடை உதித்த மின் குலம் போல்
அரி இனம் நறவு உண்டு அலம்பு குங்கும தார் அணி புய முகம்மதின் கலிமா
தெரிதர பவள இதழ் திறந்து ஓதி செறிதரும் அவையிடத்து எழுந்தாள்

மேல்
$2.9.17

#1955
விண்ணகத்து அரம்பை குலத்தினும் வடிவாய் விரி கடல்_மகளினும் வியப்பாய்
மண்ணகத்து உறையும் எழு வகை பருவ மடந்தையர் அணிந்திடும் அணியாய்
கண்ணினுக்கு அடங்காது அழகினை சுமந்த கனி உருவெடுத்த காட்சியதாய்
பெண் நலம் கனிந்து நலன் எழில் பிறங்க பெரு நிலத்து எழுந்து நின்றனளே

மேல்
$2.9.18

#1956
மங்குலில் பெருகி விடத்தினும் கருகி வரி அறலினும் மினுமினுத்து
தங்கிய இதழி திரளினும் திரண்டு சைவல தொடரினும் தழைத்து
கொங்கு உற குழன்று நெறித்து வார்த்து ஒழுகி குவலயத்து இளைஞர் கண் வழுக்க
எங்கள் நல் நயினார் முன்னை நாள் அழைத்த இருளினும் இருண்ட மை குழலாள்

மேல்
$2.9.19

#1957
கீற்று இளம் பிறையும் கணிச்சியின் வளைவும் கிளர்ந்த செவ்வகத்தி மென் மலரும்
தோற்றிட தோற்றி விளங்கும் நல் நுதலாள் சுடரும் முள் வாரணத்து அலகும்
மாற்ற அரும் தனுசும் கரும் கொடி எதிர்வும் மாற்றி மை கண் கடற்கரையின்
மேல் திகழ் கரிய பவள மென் கொழுந்தாய் விளங்கிய செழும் புருவத்தாள்

மேல்
$2.9.20

#1958
மடல் குழை கிழித்து தட குழல் குழைத்து வரி அளியினை சிறைப்படுத்தி
கடற்கு உளம் தேறாது அலைதரச்செய்து கணை அயில் கடைபட கறுவி
விடத்தினை அரவ படத்திடை படுத்தி மீன் இனம் பயப்பட தாழ்த்தி
திட கதிர் வடி வாள் என கொலை பழகி செவந்து அரி படர்ந்த மை விழியாள்

மேல்
$2.9.21

#1959
வள்ளையை வாட்டி ஊசலை அசைத்து மண் எழில் ஆடவர் உயிரை
கொள்ளைகொண்டு உடலம் குழைப்பதற்கன்றோ குழை எனும் பெயரிடும் குழையாள்
எள்ளையும் சிறந்த குமிழையும் வாசத்து இனிய சண்பகமலர்-தனையும்
விள்ள அரும் கானத்திடை அலர்படுத்தி விலங்கிட விலங்கிய குமிழாள்

மேல்
$2.9.22

#1960
வெள் நிலா தரள நகை நிரை பொதிந்து விரிந்த செம்பவளமோ இலவோ
வண்ண வாய் செழும் சேதாம்பலின் மலரோ வடிவு உறு தொண்டை அம் கனியோ
எண்ணி நோக்கினருக்கு உவமையின் அடங்காது எழில் குடியிருந்து அமுது ஒழுகி
பண் எலாம் சுவற்றி ஆடவர் இரு கண் பார்வையில் செவந்த மெல் இதழாள்

மேல்
$2.9.23

#1961
முல்லையும் முருந்தும் நிரைத்தன போன்று முத்து என திகழ்ந்து அற நெருங்கி
மெல்லென செவந்த மணியினில் பிரித்து விளக்கி ஒப்பித்து வைத்தன போல்
வில்லிட கவின் கொண்டு இரு புறத்து ஒழுங்கும் விரிந்த பூம் காவிகள் படர்ந்து
சொல்ல அரும் மனத்து ஆடவர் மயல் இருளை துணித்திட நகைக்கும் மென் நகையாள்

மேல்
$2.9.24

#1962
பால் என வெளிறா கனி என அழியா பசு மடல் தேன் என சிதறா
ஏல வார் குழலார் செழும் கரத்து ஏந்தும் இளம் கிளி மொழி என குழறா
வேலை வாழ் அமுதம் பிறந்து என உலகம் விளங்கிட பொன் மழை பொழிய
சாலவும் இறந்த தரு இனம் தழைப்ப தர வரும் இனிய மென் மொழியாள்

மேல்
$2.9.25

#1963
வெய்யவன் அலர்த்த விகசிதம் பொருந்தி விரி நறை கமல மென் மலரில்
செய்யவள் இருப்பது என எழில் சிறந்து செழும் களை கதிர்கள் கான்று ஒழுக
வையகம் மதிப்ப திமஸ்கு இறை உரைத்த வழி முறை முகம்மது அங்கு அழைத்த
துய்ய வெண் மதியம் நிகர் என உலகில் சொலும்படி சிறந்த மா முகத்தாள்

மேல்
$2.9.26

#1964
திரளினில் மணியாய் முரல்வினில் வளையாய் செவ்வி நெய்ப்பினில் கமுகு எனலாய்
விரி கதிர் மணி பூண் தாங்கும் மென் கழுத்தாள் வேயினை கரும்பை மெல் அணையை
சருவிட பசந்து திரண்டு மென்மையவாய் தழைத்து எழில் பிறங்கிய தோளாள்
வரி வளை சுமந்து யாழினும் வியந்து மயிர் நிரைந்து ஒளிரும் முன்கையினாள்

மேல்
$2.9.27

#1965
குலிகம் ஆர்ந்தன போல் அரக்கினும் சிவந்த கொழு மடல் காந்தள் அம் கரத்தாள்
மலி சினை கெளிற்றின் வனப்பினும் வனப்பாய் மணி அணி சுமந்த மெல் விரலாள்
பொலிவுற சிவந்து ஈந்து இலை என கிளர்ந்து புன கிளி நாசியின் வடிவாய்
நலிவு இலா திளைத்த வயிர ஒண் கதிராய் நலம் கிடந்து இலங்கிய உகிராள்

மேல்
$2.9.28

#1966
தடித்து அடி பரந்திட்டு எழுந்து பூரித்து தளதளத்து ஒன்றொடொன்று அமையாது
அடர்த்து இமையாத கறுத்த கண்-அதனால் அரும் தவத்தவர் உயிர் குடித்து
வடத்தினுள் அடங்காது இணைத்த கச்சு அறுத்து மத கரி கோட்டினும் கதித்து
படத்தினும் பிறங்கும் சுணங்கு அணி படர்ந்த பருமித துணை கன தனத்தாள்

மேல்
$2.9.29

#1967
பரிமள சிமிழோ குலிக செப்பு இனமோ பசும் மது கலசமோ அமிர்தம்
பெருகிய குடமோ காம நீர் உறைந்த பேரிளம் குரும்பையோ கதிரின்
முருகு கொப்பிளிக்கும் வனச மென் முகையோ முழு மணி பதித்த மென் முடியோ
கரையிலா அழகு ஆறு ஒழுகிய வரையோ கவலுதற்கு அரிது எனும் தனத்தாள்

மேல்
$2.9.30

#1968
தனம் எனும் இரு கோட்டு அத்தி ஓர் ஆலில் தளைபட பிணித்த சங்கிலியோ
மன நிலை கவரும் கடி தட அரவின் வால் அணி கிடந்ததோ அலது
சினவு வில் காமன் மலைக்கும் தன் மனைக்கும் சேர்த்திய மய நடு நூலோ
இனனுடன் அழகு நிறை குடியிருந்த இவள் வயிறு அணி மயிர் ஒழுங்கே

மேல்
$2.9.31

#1969
பெரு வரையிடத்தின் அடி உறைந்து இலங்கும் பேரெழில் சுமந்த பொன் கொடியோ
விரி கதிர் மணிமேகலை நடு கோத்து விளங்கிட நுடங்கு மெல் இழையோ
குரு முகம்மது நல் மொழி வழி அடங்கா குபிர் குலம் தேய்ந்து என தேய்ந்து
தெரிவு அரிது எனலாய் உவமையில் பொருவா சே இழை மடந்தை சிற்றிடையே

மேல்
$2.9.32

#1970
கதிர் ஒளி வழுக்கின் அரம்பையை பழித்து கவின் உறும் திரட்சியில் கதத்த
மத மலை கரத்தின் வனப்பினை அழித்து மாறு அரு மிருது மென்மையினில்
இதம் உற சிவந்த இலவினை கடந்திட்டு இணை அடி அணை என படுத்தி
புதுமையின் விளங்கி தவத்து உறையவரும் புகழ்ந்திட சிறந்த பொன் குறங்காள்

மேல்
$2.9.33

#1971
அணி முகட்டு அலவன்-தனை முகந்து அடுத்த வரி வரி சினை வரால் போன்று
மணியினில் செறித்த தூணியும் பொருவா வடிவு-அதாய் வெற்றி மன்னவர் முன்
தணிவு இலாது இசைக்கும் காளமும் பொருவா தன்மைய ஆகி மென்மையவாய்
பணி பல சுமந்து சிறு மயிர் நெருங்கா பண்புறும் இணை கணை காலாள்

மேல்
$2.9.34

#1972
நிறைதரு தராசின் வடிவு உறும் பரடாள் நிறை மணி பந்து எனும் குதியாள்
பொறையொடும் கமடத்து இனம் வனம் புகுந்து பொருவு அறாது ஐந்தையும் ஒடுக்கி
மறைபட தவம்செய்து இணைபடற்கு அரிதால் மதித்திடற்குறும் புறந்தாளாள்
கறை தரா மணியின் குலம் என விரல்கள் கவின் கொள சிவந்த மென் பதத்தாள்

மேல்
$2.9.35

#1973
வன மயில் சாயல் குலம் என எழுந்து மரை மலர் இதழின் மேல் குலவும்
அனம் என நடந்து நபி முகம்மது-தம் அடி மலர் பதத்தினில் இறைஞ்சி
இனியன புகழ்ந்து பலர் அதிசயிப்ப இன முகில் கரும் குழல் நெகிழ
புனை மணி பிறழ மின் என நுடங்கி புதுமையில் தோன்ற நின்றனளால்

மேல்

10 ஹபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம்

$2.10.1

#1974
பூம் கொடி என முனம் நின்ற பூவையை
தேம் கமழ் அமுத வாய் திறந்து நம் நபி
வாங்கு தெள் திரை தட திமஸ்கு மன்னவன்
பாங்கினில் உறைக என பரிவில் கூறினார்

மேல்
$2.10.2

#1975
வரி விழி சிறு நுதல் மடந்தை நல் நெறி
குரு இடம் விடுத்து எழில் குலவ சென்று அணி
விரி கதிர் இலங்கு இலை வேல் கை மன்னவன்
திரு அடி கரும் குழல் சென்னி சேர்த்தினாள்

மேல்
$2.10.3

#1976
தெண்டனிட்டு எழுந்த பொன் மயிலை சீர் பெற
கண்டனன் உவகை அம் கடற்குள் ஆயினன்
விண் தலத்தினில் இலா பதவி வெற்றியை
கொண்டனன் என மன குறைவு நீக்கினான்

மேல்
$2.10.4

#1977
தெரிவை பின் வர திமஸ்கு இறைவர் செவ்விய
குருசில் நம் நபி கொழும் கமல மெல் அடி
பரவி நல் புகழ் சில பகர்ந்து வாக்கொடும்
வரிசையின் நெறி கலிமாவை ஓதினார்

மேல்
$2.10.5

#1978
அரசரும் அமைச்சரும் திமஸ்கின் ஆதிபர்
பரி கரி வீரரும் படை குழாங்களும்
தெரிவையின் தொகுதியும் சிறந்த நம் நபிக்கு
உரிமையினொடும் கலிமாவை ஓதினார்

மேல்
$2.10.6

#1979
ஈனம் ஒன்று இல்லது ஓர் இறைவனாகிய
தானவன்-தனை உளத்து இருத்தி தக்கது ஓர்
வானவர் புகழ் முகம்மதுவை வாழ்த்தி நல்
தேன் எனும் கடல் பெரும் தீனில் ஆயினார்

மேல்
$2.10.7

#1980
மறை முறையொடும் தின வணக்கம் நீங்கிலாது
இறைவனை தொழுது இசுலாத்தின் நேர் வழி
குறைவு அற படித்து அரும் குபிரை நீக்கியே
முறை தவறா பெரு முசுலிம் ஆயினார்

மேல்
$2.10.8

#1981
மால் நகர் திமஸ்கு மன்னவரும் தம் பெரும்
சேனையும் முகம்மதின் திருமுன் ஆகி செம்
கால் மலர் அடி இணை இறைஞ்சி கைகொடுத்து
ஆன நல் அறிவராய் புறப்பட்டார் அரோ

மேல்
$2.10.9

#1982
நபி எனும் முகம்மதை வாழ்த்தி நல் நெறி
புவி எனும் நகரினோர் புறத்தில் நீங்கி நின்று
அபுஜகில்-தனை அழைத்து அரசர் நாயகர்
கவின் உறும் பல மொழி எடுத்து காட்டினார்

மேல்
$2.10.10

#1983
மந்திர மறை முகம்மதுவை வாக்கினில்
சிந்தையில் இகழ்ந்தவர் நரகம் சேர்குவர்
அந்தம் இல் நாயகன் தூதராம் என
புந்தியில் புகழ்வர் பொன்_உலகம் போதுவார்

மேல்
$2.10.11

#1984
மலை என நிமிர் மதிள் திமஸ்கு மன்னவர்
நிலைகுலை மனத்து அபூஜகில்-தன் நெஞ்சினில்
கலை மறை தெளிவினும் காரணத்தினும்
பல தரம் உரைத்து தம் பதியை நோக்கினார்

மேல்
$2.10.12

#1985
மத கரி இரு புறம் நெருங்க மா படை
கதழ்வொடும் கதியொடும் கனைத்து முன் செல
பதலையும் முரசமும் பம்ப கானக
நதிகளும் கடந்து அயல் நடந்து போயினார்

மேல்
$2.10.13

#1986
கரி திரள் ஒலித்த கம்பலையும் கா வளர்
பரி திரள் ஒலித்த கம்பலையும் பண் முரசு
இரைத்ததும் தீன் கலிமாவை இன்புற
உரைத்திடும் தொனி கடல் உடைத்து காட்டுமால்

மேல்
$2.10.14

#1987
கனியினும் தேனினும் காய்ந்த பாகினும்
இனியன புது மறை இயற்றும் நாவினர்
நனி பல சூழ் வர நகரை நண்ணினார்
பனி வரையினும் புகழ் பரித்த பான்மையார்

மேல்
$2.10.15

#1988
விண் உறை கொடி மதிள் திமஸ்கு மேவிய
அண்ணலும் பதி முதியவருக்கு அன்பொடு
பண் அரும் தீன் மொழி பயிற்றி நல் நெறி
எண் நிலைபெற இசுலாத்தில் ஆக்கினார்

மேல்
$2.10.16

#1989
தீன் முறை நடத்திய திமஸ்கு மன்னவர்
மான்மதம் கமழ்ந்த மெய் நபிக்கு மாசு இலா
பால் மதி கலை கலை பணி பொன் பட்டு இவை
கூன் வெரிந் தொறுவினில் கொடுத்தனுப்பினார்

மேல்
$2.10.17

#1990
நிதி மணி பணி பல நிறைந்த ஒட்டக
பொதி பதிற்றொடு பரல் புடவி நீந்தி வான்
மதி நடந்து உலவிய மக்கமாகிய
பதியினுக்கு அடுத்து ஒரு-பால் உற்றார் அவர்

மேல்
$2.10.18

#1991
அரு மறை நபி முகம்மது உள் அன்பு உற
குரு மணியொடு நிதி திமஸ்கின் கொற்றவர்
வரவிடுத்தனர் என வழங்கும் வாசகம்
தெரிதர அபூஜகில் செவியில் சார்ந்ததே

மேல்
$2.10.19

#1992
மடித்த சிந்தையின் எழுந்து ஏகி மன்னவன்
கொடுத்தனுப்பிய நிதி குவையும் பண்டமும்
விடுத்தது இங்கு எமக்கு என வெகுண்டு வெம் சொலால்
தடுத்து அடுத்தனன் அபூஜகில் என்பான் அரோ

மேல்
$2.10.20

#1993
ஹபீபு அரசு அனுப்பிய கனகம் யாவையும்
அபுஜகில் தடுத்தனன் என்ன ஆதி நூல்
புவியினில் விளக்கி நல் புகழ் நடாத்திய
நபி திருமுனம் சிலர் நவின்றிட்டார் அரோ

மேல்
$2.10.21

#1994
உரை விளக்கிட முகம்மதும் தோழர்களுடனும்
விரைவின் ஏகி பொன் தடுத்தவர் எவர் என வினவ
தரையில் யான் அலது இலை என அபூஜகில் சாற்ற
அருள் கிடந்த கண்கடை சிவப்புண்ட அ போதில்

மேல்
$2.10.22

#1995
உனக்கு வந்ததும் ஓங்கிய தீன் முகம்மது சீர்-
தனக்கு வந்ததும் கொணர்ந்தவர் சொல்குவர் சரதம்
சினக்க வந்து இவண் மறிப்பது தகுவதோ செலு நின்
மனைக்கு என சிலர் கூறலும் மனத்திடை கொதித்தான்

மேல்
$2.10.23

#1996
மட்டு வார் பொழில் திமஸ்கு மன்னவர் வரவிடுத்த
பெட்டகத்தையும் பொன்னையும் பிணக்கு அற கரியாய்
பட்டு அற தெளிந்து உமக்கு எமக்கு என பலர் அறிய
ஒட்டை வாய் திறந்து உரைக்கும் என்று அபூஜகில் உரைத்தான்

மேல்
$2.10.24

#1997
உரைத்த வாய்மை இங்கு எமக்கு இயைவது படிறு உளத்தோய்
விரித்து கேட்டருள் என்றனர் அபூஜகில் விரைவின்
இருத்தி இ பொருள் நாளை இ ஊரவர் அறிய
பரித்த ஒட்டகம் கரி பகர்ந்திடும் என பகர்ந்தான்

மேல்
$2.10.25

#1998
நன்று நன்று என தோழரும் முகம்மது நபியும்
பொன் திகழ்ந்து எழில் குலவிய மனையிடை புகுந்தார்
கன்று புன் மனத்து அபூஜகில் கிளையுடன் கடிதில்
சென்று வெண் மலர் செறிதரும் ஆலயம் சேர்ந்தான்

மேல்
$2.10.26

#1999
ஆலயம் புகுந்து அழி உரு எடுத்து அ புத்து-அதற்கு
சால மென் மலர் தொடையொடும் பல பணி தரித்து
கோலம் ஆர்ந்து எழ தீபமும் தூபமும் கொடுத்து
தாலம் மீதினில் சிரம் பட இரு கரம் தாழ்த்தான்

மேல்
$2.10.27

#2000
விழுந்து தெண்டனிட்டு எழுந்து இரு கரம் விரித்து ஏந்தி
பொழிந்த நீர் விழி தர இரந்து ஏத்திய புகழால்
மொழிந்து வல் வினை தொடுத்திடும் முகம்மதின் வாய்மை
அழிந்து என் சொல் பழுது அற வரம் அருள்க என்று அறைந்தான்

மேல்
$2.10.28

#2001
மரை தடம் திகழ் திமஸ்கு இறை வரவிடு நிதியம்
தரைத்தலம் புகழ்ந்திட அபூஜகில்-தனக்கு எனவே
நுரைத்து தூங்கு இதழ் ஒட்டை வாய் திறந்து எனை நோக்கி
உரைத்து அளித்திட வேண்டும் என்பதும் எடுத்துரைத்தான்

மேல்
$2.10.29

#2002
எதிரில் நின்று தன் தேவதை-தனை புகழ்ந்து ஏத்தி
கதிர் கொள் பொன் முடி கோயிலின் வாயிலை கடந்த
சதியன்-தன் முகம் நோக்குதல் தவறு என சிவந்து
கொதிகொதித்து அழன்று அருக்கன் மேல் கடலிடை குதித்தான்

மேல்
$2.10.30

#2003
அற்றை நாள் அகன்றிட மறுதினத்து அபூஜகில் தன்
சுற்றமோடு அடைந்தான் துணை தோழர்களோடும்
வெற்றி நல் நெறி முகம்மதும் விரைவினில் ஏகி
கொற்ற மன் வரவிடுத்தவரிடத்தினில் கூண்டார்

மேல்
$2.10.31

#2004
ஒட்டை வாய் திறந்து உரைப்பதற்கு எவர் முனம் உரைப்பது
இட்டமாய் உரை என அபூஜகில் உடன் இயம்ப
கட்டுரைப்படி கரியினை எவர்களும் களிப்ப
விட்டு உரைத்திடு என்று உரைப்பது யான் என விரித்தான்

மேல்
$2.10.32

#2005
நன்று கூறும் முன் என்றலும் அபூஜகில் நடந்து
சென்று பூம் பொழில் ஒட்டகை அனைத்தையும் திரட்டி
நின்று நீவிர்கள் சுமந்து இவண் இறக்கிய நிதியம்
வென்றி மன்னவன் எவர்க்கு அனுப்பியது என விரித்தான்

மேல்
$2.10.33

#2006
கேட்டு அபூஜகில் நிற்ப ஒட்டக கிளை பதிற்றும்
நாட்டி வைத்திடும் சிலை என நவின்றில மறுகி
மீட்டும் கேட்டலும் நவின்றில வீரமும் வலியும்
போட்டு கேட்டனன் பிற்றையும் புகன்று இசைத்திலவே

மேல்
$2.10.34

#2007
பரித்த ஒட்டகை பகர்ந்தில கரி என பலரும்
இரைத்து மா மறை முகம்மதின் திருமுகத்து எதிர்ந்து
பிரித்திடா கரியாய் பெரு வாயினை பிளந்து
விரித்து உரைத்திட விளம்பும் என்று எடுத்து உரை விரித்தார்

மேல்
$2.10.35

#2008
நிகர் அரும் பதி முதியவர் நிகழ்த்திடும் வசனம்
முகம்மதின் செவி புகுதலும் மனம் மிக மகிழ்ந்து
மிகுவித புதுமைகள் தர ஒட்டையை விளித்து
புகலும் என்றனர் அபூஜகில் கெடு மனம் புழுங்க

மேல்
$2.10.36

#2009
உரைத்த சொல் உளம் தரித்திட கிடந்த ஒட்டகங்கள்
நிரைத்து எழுந்து அற வளை நெடும் கழுத்தினை நீட்டி
விரித்த வால் அசைத்து உவந்து இரு விழிகளை விழித்து
பெருத்த வாய் திறந்து அறபு எனும் மொழியினில் பேசும்

மேல்
$2.10.37

#2010
வரிசை நாயகன் தூது எனும் முகம்மது நபியே
அரசர் கேசரி ஹபீபு எனும் திமஸ்கினுக்கு அரசர்
இரசிதம் பணி மணி தமனியம் இவை அனைத்தும்
பரிசனத்தொடு நுமக்கு அனுப்பினர் என பகர்ந்த

மேல்
$2.10.38

#2011
உரை தரா விலங்கு இனம் கரி உரைத்தது என்று உரவோர்
தெரிதரா பெரும் புதுமை-கொல் என சிரம் அசைத்து
விரிதரா நிறை பெரும் கடல் மேதினி அனைத்தும்
புரிதராதிபர் இவர் என புகழ்ந்து அயல் போனார்

மேல்
$2.10.39

#2012
மருந்து இலா பெரும் பிணி வளைத்து என மதி மயங்கி
கரிந்து மா முகம் வாய் வெளுத்து அற தலை கவிழ்ந்து
திருந்திலா மனத்தொடும் சினத்தொடும் செயல் அழிந்து
பொருந்திலாது தன் கிளையொடும் அபூஜகில் போனான்

மேல்
$2.10.40

#2013
கன்னல் அம் சுவை தீன் நிலை நிறுத்திய ஹபீபு
மன்னர்_மன்னவர் வரவிடு நிதியமும் மணியும்
நல் நயம் பெறும் தோழர்கள் சூழ்வர நயினார்
தம் அகத்தினில் செறித்தனர் செழும் புகழ் தழைப்ப

மேல்
$2.10.41

#2014
மல்லல் அம் புவியிடத்தினில் தீன் நெறி வழுவாது
இல்லறத்தொடு முதிர் மறையவர் இரவலர்கள்
அல்லல் அற்றிட பெரு நிதி எடுத்து இனிது அருளி
பல்லரும் புகழ்தர நபி இருந்தனர் பரிவின்

மேல்

11 ஈமான் கொண்டவர்கள் ஹபஷா ராச்சியத்துக்குப் போந்த படலம்


#2015
மாசிலான் அருள் பெருகிய மக்க மா நகரில்
ஆசு இலா நபி தீனினை நிறுத்தும் அ நாளில்
பாசமற்றவன் அபூஜகில் கிளை பல பகுப்பாய்
பூசலிட்டனர் பெரும் பழி நடுநிலை புகுந்தே

மேல்
$2.11.2

#2016
சிகையில் நீள் முடி குயிற்றி வெண் சுதை நடு தீற்றி
நகை நிலா தரு மேனிலை மக்க மா நகரில்
மிகை மனத்தொடு காபிர்கள் தினம்-தொறும் விளைக்கும்
பகையினோடு அரும் பஞ்சமும் உடன் பரந்ததுவே

மேல்
$2.11.3

#2017
வெறுத்த காலமும் காபிர்கள் தொடுத்த வல் வினையும்
மறுத்து இலாமையும் பீஸபீலால் களை மாய்த்து
நிறுத்தும் தீன் என ஏவலும் இல்லையால் நிதமும்
பொறுத்திருப்பது எவ்வழி என அகத்திடை பொறுத்த

மேல்
$2.11.4

#2018
சொல தகா பெரும் பகை தொடுத்து இனத்தொடும் சூழ்ந்து
குலத்தினும் பிரித்து அற நெறி தீன் நிலைக்கு உரியோர்
இலத்தினும் வர பொருந்திலா நமரினால் இனி இ
நிலத்து இருப்பது பழுது என மனத்திடை நினைத்தே

மேல்
$2.11.5

#2019
மறு இலாத நல் நெறி மறை தேர் உதுமானை
அறிவின் ஆய்ந்து அகுமது தனித்து அழைத்து அருகு இருத்தி
பிறவும் உற்றதும் வருவது நிகழ்வதும் பேசி
உறையும் இ பதி பெரும் பகைக்கு ஆவன உரைத்தார்

மேல்
$2.11.6

#2020
உற்ற நும் மனது உடன்பட உறைபவருடனும்
வெற்றி மன் நசாசிய்யு உறை திரு நகர் மேவி
குற்றம் இன்றி அங்கு உறைவது கருத்து என குறிப்ப
மற்று வேறு உரை யாது உதுமானும் சம்மதித்தார்

மேல்
$2.11.7

#2021
சரகு இறங்கி நல் நபி எனும் பெரும் பெயர் தரித்த
வருடம் ஐந்து என வர வரும் இறசபு மாதம்
தரும நேர் உதுமானொடு றுக்கையா-தமையும்
இருளும்போது அனுப்பினர் அபசா எனும் தேயம்

மேல்
$2.11.8

#2022
திருந்தும் திண் புய நபி திரு மகளுடன் சிறப்ப
விரிந்த பூம் குழல் மடந்தையர் மூவரும் வியப்ப
பொருந்தும் தீனவர் பதின்மரும் புகழ் உதுமானும்
பிரிந்திடாது சென்று அந்த நாடு அடைந்ததன் பின்னர்

மேல்
$2.11.9

#2023
சந்தனம் திகழ் புய அபித்தாலிபு தவத்தால்
வந்த ஜஃபறும் அவருடன் மைந்தர்கள் சிலரும்
நந்து வெண் தரளம் திகழ் நதி அபசா-பால்
பிந்திடாது ஒரு முறை மறை தனித்து அனுப்பினரே

மேல்
$2.11.10

#2024
அன்னம் அன்ன மெல் நடையினர் சிறுவர்கள் அல்லால்
மன்னும் ஆடவர் எண் ஒரு பஃதிருவருமாய்
பொன் உலா அபசா வள நாடு அணி புரத்தில்
இன்னல் இல் என சேர்ந்து அவண் மகிழ்வொடும் இருந்தார்

மேல்
$2.11.11

#2025
உறைந்த மாந்தருக்கு அபசியர் அரசு எனும் உரவோன்
நிறைந்த நல் கலையொடும் பல வரிசையும் நிதியும்
குறைந்திடாது எடுத்து அருளி நல் மொழி பல கொடுத்து
சிறந்த தன் முதல் இனத்தினும் இனத்தராய் செய்தான்

மேல்
$2.11.12

#2026
விதித்த தீன் நிலைக்கு உரியரை அபசியர் வேந்தன்
மதித்து நன்கொடும் உயர்த்தினன் எனும் வரலாற்றை
கொதித்த சிந்தையன் அபூஜகில் குழுவொடும் கேட்டு
கதித்த சூழ்ச்சியின் வேறு ஒரு வினை கருதினனே

மேல்
$2.11.13

#2027
வில் உமிழ்ந்த செம் மணி தொடை திரண்ட வெண் தரளம்
பல்லவம் பொருவா தமனிய துகில் பலவும்
சொல்ல அரும் இரத சுவை ஒட்டக சுமையா
மல் உறும் புயன் கரத்தின் முத்திரையொடும் வைத்தான்

மேல்
$2.11.14

#2028
ஓதி கேட்டறிந்து ஒழுகி முக்காலமும் உணர்ந்த
மூதறிஞரில் இருவரை அழைத்து முன் இருத்தி
ஆதரத்தொடு சேர்த்த நல் வரிசையும் அளித்து
கோது அற தெளிந்து எழுது பத்திரத்தையும் கொடுத்தான்

மேல்
$2.11.15

#2029
கொடுத்து நல் மொழி கொடுத்து நசாசிய்யாம் கோவுக்கு
அடுத்து நின்று அளித்திடும் வரிசைகள் இவை அவன் சொல்
படுத்திடா மதி மந்திரர்க்கு இவை என பகுத்து
விடுத்தனன் பெரு வஞ்சமும் படிறும் விடாதான்

மேல்
$2.11.16

#2030
அறு மனத்தினன் அபூஜகில் கொடுத்தவை அனைத்தும்
எறுழின் மிக்கு உயர் ஒட்டகம் மீதினில் ஏற்றி
தறுகிலாது எழுந்து இருவரும் அரிதினில் சார்ந்தார்
நறவு உயிர்த்த தண்டலை திகழ் அபசி நல் நாட்டில்

மேல்
$2.11.17

#2031
சென்ற தூதுவர் வரிசைகள் அனைத்தையும் திருந்த
குன்று என திரள் புயன் நசாசியின் முனம் குவித்து
முன்றிலில் தனித்து எழுதிய முடங்கலை எடுத்து
நின்று நீட்டினர் நிருபர்கள் நெருங்கிய சபையில்

மேல்
$2.11.18

#2032
வரைந்த பத்திர பாசுரம் மக்க மா நகரில்
இருந்த ஹாஷிம் மா குலத்து ஒருவன் தலையெடுத்து
விரிந்த மந்திர வஞ்சக மாயங்கள் விளைத்து
தெரிந்த வேதமும் சமயமும் நிலைகெட சிதைத்தும்

மேல்
$2.11.19

#2033
குடி பொருந்திலாது இ நகர் குலம் பழுதாக்கி
படி பகுத்திட கொலையொடு பாதகம் விளைத்து
முடிவிலா பெரும் தேவதம் ஆலயம் முழுதும்
மடி அறுத்திட துணிந்தனன் முகம்மது என்பவனே

மேல்
$2.11.20

#2034
அங்கு அவன் மொழிக்கு ஒழுகினர் அவனினும் கொடியோர்
பொங்கும் அவ்வுழை புகுந்தனர் அபசி மா புரத்தை
பங்கமாக்கும் முன் அவர்களை தண்டனைப்படுத்தி
எங்கு இருக்கினும் இருக்கொணாது அகற்றிடும் எனவே

மேல்
$2.11.21

#2035
இன்ன வாசகம் அனைத்தினும் கேட்டு அவர் எவரும்
துன்னலார்-கொலோ சிட்டரோ என சிரம் தூக்கி
பன்னுவார் அதில் மந்திரர் பகைத்த வாசகத்தால்
சொன்னவாற்றினின் முடிப்பது துணிவு என துணிந்தார்

மேல்
$2.11.22

#2036
அரசர் நாயகர் அபசி நசாசியாம் அரசன்
பரிசனத்தவர் மொழியினும் அறிவினும் பார்த்தே
உரை சமர்ப்பக முகம்மதின் வழியினுக்கு உரிய
வரிசை செய்து இவண் இருத்தலே கடன் என வகுத்தான்

மேல்
$2.11.23

#2037
மலை மனத்து அபூஜகில் அனுப்பிய வெகுமான
தலைவரை தனது இரும் பதியிடையினில் சாரா
குலனுடன் நுமர் பதிக்கு அடைந்திடும் என குறித்து
விலகி அங்கு அவர் கொணர்ந்த பல் பொருளையும் வெறுத்தான்

மேல்
$2.11.24

#2038
சதுமறைப்பொருள் முகம்மதின் வழியவர்-தமை நல்
இத மனத்தொடும் அனுசரித்து அபூஜகிலிடத்தின்
புதியரை புறம் போக்கினன் எனும் மொழி புகழை
மதுகை வேந்து அபித்தாலிபு கேட்டு உளம் மகிழ்ந்தார்

மேல்
$2.11.25

#2039
வணக்க வாசகத்தொடும் அபசு அரசனை வாழ்த்தி
இணக்கி நல் பொருள் பெற பல பயித்து எடுத்து எழுதி
உணக்கும் புன் மனத்து அபூஜகில் எழுதிய ஓலை
பிணக்கு அறுத்து அபித்தாலிபு கொடுத்தனுப்பினரால்

மேல்
$2.11.26

#2040
புதிய நல் பொருள் பெற தெரி கவிதையின் புகழால்
மதுர வாசகம் எழுதியது உணர்ந்து உளம் மகிழ்ந்து
துதிசெயும் கலிமா நெறிபடு மறை தூயோர்க்கு
அதி வித பல வரிசை செய்து அபசு அரசிருந்தார்

மேல்
$2.11.27

#2041
அந்த நாளையில் மக்க மா நகரவர் எவரும்
வந்து நல் கலிமா உரைத்தனர் எனும் வசனம்
புந்தி கூர்தர கேட்டனர் சிலர் அதில் பொருவா
சிந்தையாயினர் நகர்க்கு என திரும்பினர் சிலரே

மேல்
$2.11.28

#2042
படை கை வேந்து உதுமானுடன் மனைவியும் பலரும்
தொடைக்கு இணங்கிய புயத்தவர் சூழ்வர நெறியின்
நடக்க முன் மொழி பழுது என நவில்தர நடுங்கி
அடைக்கலத்தினும் கரவினும் பதியை வந்தடைந்தார்

மேல்
$2.11.29

#2043
புதிதின் மூவொரு பதின்மரும் மூவரும் புறத்தில்
சதி அற தனி அவரவர் சார்பினில் சார்ந்தார்
அதில் அபூசல்மா என்பவர் அறிவினில் உயர்ந்த
மதியின் மிக்க அபித்தாலிபை அடுத்து வந்திருந்தார்

மேல்
$2.11.30

#2044
சினத்து வன் கொலை காபிர்கள் திரண்டு இகல் செகுக்கும்
மனத்தின் மிக்க அபித்தாலிபு மதி முகம் நோக்கி
இனத்தினை தவிர்த்து அபூசல்மா என்பவன்-தனை நும்
மனைத்தலத்தில் வைத்திருப்பது பழுது என வகுத்தார்

மேல்
$2.11.31

#2045
பொய்த்த மா மறை முகம்மதை மனையிடை புகுத்தி
வைத்திருந்தனை அபூசல்மா-தனையும் நும் மனைக்குள்
எய்த்து வைத்திருப்பது பழுது என இகல் இடராய்
மொய்த்து அடர்ந்தனர் அபூஜகிலொடு முரண் மதத்தார்

மேல்
$2.11.32

#2046
எடுக்கும் வாள் அயில் படைக்கலம் பல கரத்து ஏந்தி
தொடுக்கும் பூசலிட்டு அடல் அபித்தாலிபை துரத்தி
விடுக்கும் என்பதும் மனையுடன் நகரையும் வெறுப்ப
கெடுக்கும் என்பதும் அபூலகுபு எனும் அவன் கேட்டான்

மேல்
$2.11.33

#2047
எனக்கு முன்னவன்-தனை இடர் விளைத்திடல் எனது
மன குறை படர் இவை தவிர்த்திடீரெனின் மதியை
நினைக்கும் முன் பகிர் அகுமது நெறி நிலை நிறுவி
கனக்க வைத்தல் யான் அலது இலை என கழறினனால்

மேல்
$2.11.34

#2048
மோதும் வாய்மையின் அபூலகுபு எனும் அவன் முரணி
ஓதும் வாசகம் குபிரவர் உளங்களை உருவி
போதுகின்றது என்று அடர்ந்து நின்றவர் பொறி கலங்கி
தீது அகற்றி அங்கு அவரவர் மனை-வயின் சேர்ந்தார்

மேல்
$2.11.35

#2049
கறை தவிர்ந்திடா மன குறைஷி அம் குல காபிர்
அறவு நொந்து அகத்து அடங்கினர் என அறம் முதிர்ந்து
நிறையும் தீன் நிலைக்கு உரியவர் மகிழ்ந்த நெஞ்சினராய்
மறைபடா முகம்மதின் வழி வளர்த்து இருந்தனரால்

மேல்
$2.11.36

#2050
அரிய நாயகன் தூது வானவர்க்கு இறை அணுகி
கிரியின் மீது நின்று அரும் பெயர் நபி என கிளத்தும்
வருடம் ஆறினின் மாறுகொண்டவர் மனம் கலைய
தெருளும் மேன்மையின் முகம்மதும் சிறந்து இருந்தனரால்

மேல்
$2.11.37

#2051
பொருந்த மால் நிலத்து உலவிய புகழ் உசைன் நயினார்
அரும் தவத்தினுள் பொருள் என அரும் அபுல் காசிம்
விரிந்த மெய் நெறி சிந்தையின் நடுவுற விளங்கி
இருந்த மென் மலர் பத முகம்மதும் இனிது இருந்தார்

மேல்

12 மானுக்குப் பிணை நின்ற படலம்

$2.12.1

#2052
குயில் நிழல் பரப்ப செவ்வி கொழும் தொடை நறவம் சிந்தும்
வயிர ஒண் வரையின் விம்மி வளர்ந்த திண் புயத்து வள்ளல்
செயிர் அறு மறையின் தீம் சொல் செழும் மழை பொழிந்து தீனின்
பயிர் வளர்ந்து ஏற செய்து பரிவுடன் இருக்கும் நாளில்

மேல்
$2.12.2

#2053
அரி இனம் செறிந்த போன்ற அறபிகள் குழுவின் நாப்பண்
ஒரு தனி சீயம் ஒப்ப உடையவன் தூதர் செல்வ
திரு நகர் புறத்து நீங்கி செழு முகில் முடியில் தாங்கி
மரு மலர் செறியும் சோலை சூழ்ந்தது ஓர் வரையை சார்ந்தார்

மேல்
$2.12.3

#2054
கொன்றையும் குருந்தும் கார் கோல் குறிஞ்சியும் வேயும் தெற்றி
துன்றிய நிழலும் நல் நீர் சொரிதரும் இடமும் செம் தேன்
மன்றல் ஒண் மலரும் நீங்கா வனம் திகழ் வரையின்-கண்ணே
சென்றனர் எறிக்கும் காந்தி செவ்வி மெய் முகம்மது அன்றே

மேல்
$2.12.4

#2055
வனம் திரி விலங்கு மாய்த்து வன் தசை வகிர்ந்து வாரி
தினம்-தொறும் கோலில் கோலி தீயிடை அமிழ்த்தி காய்த்தி
தனந்தனி இருந்து நின்று தன் தசை பெருக்கலன்றி
அனந்தலின் பொழுதும் வேறு ஓர் அறிவு என்பது அறிந்திலானே

மேல்
$2.12.5

#2056
காலினில் கழலும் நீண்ட கரிய காழகத்தின் வீக்கும்
பாலினில் வலையும் கையில் பரு வரை தனுவும் கூரும்
கோல் வெறி துணியும் தோளில் கூன் பிறை வாளும் மென்மை
வால் உடை பறவை சேர்த்தும் கண்ணியும் மருங்கில் கொண்டோன்

மேல்
$2.12.6

#2057
குறு வெயர் புதித்த மெய்யும் கொழும் தசை மணத்த வாயும்
பறி தலை விரிப்பும் கூர்ந்த படு கொலை விழியுமாக
அறபினில் அறபி வேடன் அடவியில் தொடர்ந்து ஓர் மானை
கறுவொடும் வலையில் சேர்த்தி கட்டிவைத்திருப்ப கண்டார்

மேல்
$2.12.7

#2058
குழை குழைத்து எரியும் செம் தேன் கொழும் மலர் காவை நோக்கார்
பொழி மலை அருவி நோக்கார் புறத்து நல் நிழலை நோக்கார்
செழும் முகில் கவிகை வள்ளல் செறிதரும் ஈந்தின் செம் காய்
மழை என சொரிவ நோக்கார் மானையே நோக்கி சென்றார்

மேல்
$2.12.8

#2059
அருள் அடைகிடந்த கண்ணும் அழகு ஒளிர் முகமும் சோதி
சொரி நறை கமழ்ந்த மெய்யும் சூல் முகில் கவிகையோடும்
வருவது தூயோன் தூதர் முகம்மது என்ன தேறி
பருவரல் உழக்கும் உள்ளத்தொடும் பிணை பகரும் அன்றே

மேல்
$2.12.9

#2060
நெடியவன் தூதர் வந்தார் வேடனால் நிலத்தில் நம்-தம்
உடல் உயிர்க்கு இறுதி இல்லை உழை இனத்தோடும் சேர்ந்து
கடிதினில் கன்றும் காண்போம் என முகம்மதுவை கண்ணால்
நொடி வரை இமை மூடாமல் நோக்கியே கிடந்தது அன்றே

மேல்
$2.12.10

#2061
பொருப்பிடை துறுகல் சார்பில் பொரி அரை தருவின் நீழல்
மரு புடை படலை திண் தோள் மன்னவருடனும் புக்கி
நெருப்பிடை தசை வாய் ஆர்ந்து நின்ற வேடனையும் செம் மான்
திருப்புதற்கு அரும் கட்டுண்டு கிடப்பதும் சிறப்ப கண்டார்

மேல்
$2.12.11

#2062
இடை நிலத்து உருக்கிவிட்ட இரசிதம் பரந்தது என்ன
மடி சுதை அமுதம் சிந்த வடி கணீர் பனிப்ப தேங்கும்
உடல் அகம் துருத்தி ஒப்ப நெட்டுயிர்ப்பு உயிர்த்து காலில்
துடரொடும் கிடப்ப தூயோன் தூதுவர் அடுத்து நின்றார்

மேல்
$2.12.12

#2063
கொடி அடம்பு இலையை மானும் குளம்பின் மேல் சுருக்கும் புள்ளி
பொடி உடல் பதைப்பும் வீங்கி புதையும் நெட்டுயிர்ப்பும் நோக்கி
நெடியவன் இறசூலுல்லா நெஞ்சு நெக்குருகி கானின்
பிடிபடு மானின்-தன்-பால் பேரருள் சுரப்ப நின்றார்

மேல்
$2.12.13

#2064
கதிர் விரி ஹபீபு நிற்ப கானக தருக்கள் யாவும்
புது மலர் அலர்த்தி செம் தேன் பொழிவ மான் வருத்தம் நோக்கி
விதிர் சினை கரங்கள் சாய்த்து மென் தழை கூந்தல் சோர
மதி அழிந்து இரங்கி கண்ணீர் வடிப்பன போன்றது அன்றே

மேல்
$2.12.14

#2065
குலத்தொடும் பறவை தத்தம் குடம்பையில் புகுதல் மானை
நிலத்திடை கிடத்தி கட்டி நின்ற வேட்டுவனை கண்ணால்
நலத்தொடும் காண்பது ஆகாது என நடுநடுங்கி உள்ளம்
உலைத்து அற பெடையினோடும் ஒளிப்பன போன்றது அன்றே

மேல்
$2.12.15

#2066
ஏட்டு அலர் நறவம் மாந்தி இரும் சுரும்பு இசைக்கும் தோற்றம்
வாட்டம் இல் முகம்மது இங்ஙன் வந்தனர் வருந்தும் மானை
மீட்டனர் வேடன் ஈமான் விரும்பினன் பயங்கள் தீர்த்தார்
கூட்டு உறைந்து ஒளித்தல் மாற்றும் என பல கூய போலும்

மேல்
$2.12.16

#2067
நிறை வளம் சுரந்த கானில் நின்ற நம் நபியை நோக்கி
குறிய வால் அசைத்து நீண்ட கொழும் கழுத்து உயர்த்தி நீட்டி
மறைபடா மதியே வண்மை முகம்மதே என்ன போற்றி
தறுகிடாது எவர்க்கும் கேட்ப சலாம் எடுத்துரைத்து கூறும்

மேல்
$2.12.17

#2068
வல்லவன் உண்மை தூதே மன்னும் மா நிலத்தின் மாந்தர்
அல்லலை அகற்றி வேதத்து அற நெறி பயிற்றி சொர்க்கத்து
இல்லிடை புகுத்த பூவினிடத்தினில் உதித்த கோவே
ஒல்லையின் எனது சொல் கேட்டு வந்து அருள் அளிக்க வேண்டும்

மேல்
$2.12.18

#2069
என் உயிர் என நீங்காத இனமும் என் கலையும் கன்றும்
துன்னிட திரண்டு பைம் புல் துறை-தொறும் மேய்ந்து நாளும்
முன்னிய பசிகள் தீர்த்து ஓர் மிருகங்கட்கு உயிர் கொடாமல்
மன்னிய மலையின் சார்பு மன பயம் அகற்றி வாழ்ந்தேம்

மேல்
$2.12.19

#2070
இரு நிலத்து ஆசைக்காய் ஓர் இளம் கன்று என் வயிற்று உறாதால்
மருவிய கலையும் நானும் வருத்தமுற்று இருக்கும் காலம்
பெருகு தீன் முகம்மதே நும் பெயரினை போற்றல் செய்தேன்
உரு அமைந்து இளம் சூல் முற்றி உதரமும் வளர்ந்தது அன்றே

மேல்
$2.12.20

#2071
தனியன் என் உயிரும் காக்கும் கலை உயிர்-தானும் ஒன்றாய்
இனிதின் ஒன்று ஆயது என்ன இளம் கன்று ஒன்று ஈன்றேன் இன்ப
நனி களி கடலில் ஆழ்ந்து நறு மலையிடத்தில் சேர்ந்து
துனி பல அகற்றினேன் முன் சூழ் வினை அறிகிலேனே

மேல்
$2.12.21

#2072
உள் உயிர் அனைய கன்றும் ஒருத்தலும் யானும் ஓர் நாள்
வெள்ளம் ஒத்து அனைய மான் இனமும் ஓர் வெற்பின் சார்பில்
நள் இலை அள்ளி வாய் கொண்டு அரும் பசி தடிந்து நீர் உண்டு
எள்ளளவெனினும் அச்சம் இன்றி நின்று உலவும் நேரம்

மேல்
$2.12.22

#2073
அ திசைக்கு எதிரில் மேல்-பால் அடுத்து ஒரு குவட்டின்-கண்ணே
மத்தக கரியும் மாய்க்கும் வரி புலி முழக்கம் நீண்ட
குத்திரத்து அசனி தாக்கின் குவலயம் அதிர கேட்டு
தத்தி எ திசையும் திக்கும் தனித்தனி சிதறினேமால்

மேல்
$2.12.23

#2074
கூடிய தூறும் பாரில் குளித்திட குதித்து வல்லே
ஓடிய திசையின் ஒன்றையொன்று காண்கிலாது யானும்
வாடிய மனத்தினோடு மறியையும் நோக்காது ஆக்கை
ஆடியில் துரும்பாய் வேறு ஓர் அடவியின் அடைந்திட்டேனால்

மேல்
$2.12.24

#2075
அடவியின் அடையும் காலை அவ்வுழை கரந்து இ வேடன்
துடரிடும் வலையை சுற்றி சுருக்கிட புலி வாய் தப்பி
மிடல் அரி உழையில் சிக்கி மிடைந்து என மிடைந்து செவ்வி
உடல் உயிர் பதைப்ப தேம்பி உணர்வு அழிந்து ஒடுங்காநின்றேன்

மேல்
$2.12.25

#2076
வலையிடத்து உறைந்தது என்ன மகிழ்ந்து எழுந்து ஓடிவந்து
நிலைபெற அடுத்து சாய்த்து நின்று எனை நோக்கி ஆகத்து
உலைவுறும் பசிக்கு இன்று என்-பால் உற்றனை என்ன கூறி
சிலை கணை நிலத்தில் சேர்த்தி தெரிந்து ஒரு பாசம் தொட்டான்

மேல்
$2.12.26

#2077
திருக்கு அற நாலு தாளும் செவ்விதில் கூட்டி அங்கை
வரி கயிறு-அதனால் சுற்றி மாறுகொண்டு ஈழ்த்துக்கட்டி
கரி கரம் என்ன நீண்ட கரத்தினால் தாங்கி முன்னர்
சுருக்கிய வலையை நீக்கி தோளினில் எடுத்து கொண்டான்

மேல்
$2.12.27

#2078
கவை முனை கோட்டு செவ்வி கலை உடல் உயிரும் ஈன்ற
நவி உடல் உயிரும் ஓர் மானுடன் கொண்டு நடப்பது ஒத்து
சவி புறம் தவழும் கோட்டு சார்பில் இ வனத்தின்-கண்ணே
சுவை அறு மொழியான் என்னை சுமந்து இவண் இறக்கிவைத்தான்

மேல்
$2.12.28

#2079
கட்டுடன் கிடந்து நெஞ்சில் கவலை உள் அழிந்து மாறா
நெட்டுயிர்ப்பு எறிந்து சோர்ந்து நிலத்திடை கிடக்கும் நேரம்
வட்ட வெண் கவிகை வள்ளல் முகம்மது நபியே உம்மை
திட்டியில் தெரிய கண்டேன் திடுக்கமும் தீர்ந்தது அன்றே

மேல்
$2.12.29

#2080
என இவை உரைத்து பின்னும் எழில் நபி முகத்தை நோக்கி
மன நிலை வாக்கினோடு முகம்மதே என்ன போற்றி
புனம் உறை விலங்கின் சாதியாயினும் தமியேன் புன்சொல்-
தனை அருட்படுத்தி கேட்பீர் என்று உரை சாற்றி சாற்றும்

மேல்
$2.12.30

#2081
இ சிலை வேடன் கையின் இறத்தலை உளத்தில் எண்ணி
அச்சமுற்று உரப்பது அன்று இ அவனியில் சீவன் யாவும்
நிச்சயம் இறத்தலல்லால் இருப்பவை நிலத்தில் உண்டோ
முச்சகம் விளங்கும் தீனின் முதன் மறை முறைமை சொல்லோய்

மேல்
$2.12.31

#2082
கலை என பிரிவு இலாது கண் இமை காப்பது என்ன
அலைவு அற காப்ப சின்னாள் அவனியில் கலந்து வாழ்ந்தேன்
குலவிய மறியும் ஈன்றேன் குறித்து இனி இருப்பது என்-கொல்
இலை நுனி பனியின் ஆக்கை இறத்தலே நலத்தன் மன்னோ

மேல்
$2.12.32

#2083
அடவியில் கிரியில் வீணில் அவதியுற்று இறந்திடாமல்
வடிவு உடை குரிசிலே நும் மலர் பத செவ்வி நோக்கி
படு பரல் கானில் வேடன் பசி பிணி தீர்ப்பதாக
உடல் இறத்திடுதல் எவ்வெவ் இறப்பினும் உயர்ச்சி மேலோய்

மேல்
$2.12.33

#2084
வரி புலி முழக்கம் கேட்டு மான் இனம் சிதறி தத்தம்
தரிப்பிடம் அறியாது ஒன்றுக்கொன்று உடன் சாராது எங்கும்
உரைப்ப அரிது என்ன போந்ததால் எனது ஒருத்தல் தேடி
இரைப்பு அறா நெடும் கான் போய்ப்போய் இருந்ததோ இறந்ததேயோ

மேல்
$2.12.34

#2085
ஒல்லையின் ஓடி நீங்காது ஒருத்தல் இன்றளவும் மோந்து
புல்லினை கறியா நீரும் புசித்திடாது இருந்து தேடி
அல்லலுற்று அழுங்கி கண்ணின் அருவி நீர் சொரிய வாடி
பல்லவம் எரியில் புக்கது என உடல் பதைக்கும் அன்றே

மேல்
$2.12.35

#2086
பிடிபடும் இதற்கு முன்னே மூன்று நாள் பிறந்து புல்லின்
கொடி நுனை மேய்ந்து நீரும் குடித்து அறியாது பாவி
மடி முலை இறங்கி பாலும் வழிந்தது குழவி சோர்ந்து
படி மிசை கிடந்து என் பாடுபடுவதோ அறிகிலேனே

மேல்
$2.12.36

#2087
கோட்டு உடை கலையினோடும் கூடிற்றோ அலது ஓர்பாலில்
மீட்டதோ இனத்தை சேர்ந்து விம்மி நின்று ஏங்கிற்றோ கான்
காட்டிடை புலி வாய் பட்டு கழிந்ததோ என்னை தேடி
வாட்டமுற்று அலறி ஓடி மறுகிற்றோ அறிகிலேனே

மேல்
$2.12.37

#2088
தேங்கிய பசியால் வாடி திரிந்ததோ இறந்ததோ என்று
ஏங்கிய வருத்தம் அல்லால் இ இடர்-அதனில் ஆவி
நீங்கும் என்று உள்ளத்து உள்ளேன் நெட்டு உடல் உடும்பின் ஆவி
தாங்கிய தரும வேந்தே தவறு அன்று சரதம் அன்றே

மேல்
$2.12.38

#2089
மன்னிய கலிமா என்னும் வழி நிலை மாந்தர் யாரும்
பொன்_நிலம் புகுதச்செய்யும் புண்ணிய புகழின் மிக்கோய்
கொல் நிலை சிலை கை வேடன் கொடும் பசி தணிப்பேன் என் தாள்
பின்னிய பிணிப்பு நீக்கி பிணை என விடுத்தல் வேண்டும்

மேல்
$2.12.39

#2090
விடுத்திரேல் கலையை சேர்ந்து விழைவுறும் கவலை தீரப்
படுத்தி என் இனத்துக்கு ஓதி பறழினுக்கு இனிய தீம்பால்
கொடுத்து அரும் பசியை மாற்றி குலத்தொடும் சேர்த்து வல்லே
அடுத்து ஒரு கடிகை போதில் அடைவன் என்று அறைந்தது அன்றே

மேல்
$2.12.40

#2091
மான் உரை வழங்க கேட்டு மனத்தினில் கருணை பொங்கி
கான வேட்டுவனை நோக்கி கன்றிடை வருத்தம் தீர்த்து
தான் வருமளவும் யானே பிணை என சாற்றி நின்றார்
தீன் எனும் பயிரை காத்து செழும் புகழ் விளக்கும் செம்மல்

மேல்
$2.12.41

#2092
பிரியமுற்று இரங்கி காட்டின் பிணைக்கு யான் பிணை என்று ஓதும்
உரையினை கேட்டு வேடன் ஒண் புயம் குலுங்க நக்கி
தெரிதரும் அறிவினோடும் சினத்தொடும் கலந்து தேர்ந்து
கரு முகில் கவிகை வள்ளல் கவின் முகம் நோக்கி சொல்வான்

மேல்
$2.12.42

#2093
முள் உடை கானில் ஏகி முகம் அழிந்து உச்சி வேர்வை
உள்ளங்கால் நனைப்ப ஓடி உடல் உலைந்து ஒன்றும் காணா
விள்ள அரும் பசியால் மீளும் வேளை இ பிணையை நோக்கி
ஒள் இழை வலையில் தாக்கி பிடித்து இவண் ஒருங்கு சார்ந்தேன்

மேல்
$2.12.43

#2094
பெருத்த மான் தசையால் இற்றை பெரும் பசி தவிர்ந்தது என்று
இருத்தி இங்கு இருந்தேன் அந்த இரு மன களிப்பை நீக்கி
வருத்தமுற்றிடும் சொல் சொன்னீர் முகம்மதே எவர்க்கும் இ சொல்
பொருத்தம்-அது அன்று விண்ணும் மண்ணிலும் புகழின் மிக்கோய்

மேல்
$2.12.44

#2095
கானிடை பிடித்த மானை கட்டு அவிழ்த்து அவணில் போக்கின்
மானிடர்-பாலின் மீட்டும் வருவது முன்னர் உண்டோ
ஞானமும் மறையும் தேர்ந்தோர் செய்யுளும் நாட்டிற்று உண்டோ
ஊனம் இ பிணை சொல் ஐயா ஓதுவது ஒழிக என்றான்

மேல்
$2.12.45

#2096
என் உறு பிணையாய் போன இரும் பிணை கடிகை போதின்
உன்னிடத்து உறும் வாராதேல் உன் பசி தீர்ப்பதாக
பின் இரண்டு ஒன்றுக்கு அன்பாய் தருகுவன் பேதுறேல் என்று
அன்னவன்-தனக்கு சொன்னார் ஆரணத்து அமிர்த சொல்லார்

மேல்
$2.12.46

#2097
காரண குரிசில் கூறும் கட்டுரை செவியின் ஓர்ந்து
பாரினில் எவர்க்கும் தோன்றா புதுமை பார்த்து அறிவோம் அல்லால்
சார்பினில் சாரால் ஒன்றுக்கு இரண்டுமே தருதும் என்றார்
பேரினில் பிணையாய் கொள்ளல் கருத்து என பெரிது உள் கொண்டோன்

மேல்
$2.12.47

#2098
கள்ளமும் கரப்பும் மாறா கருத்தினன் உயிர்கட்கு என்றும்
எள்ளளவு இரக்கம் இல்லா வேட்டுவர் இனத்தினுள்ளே
உள்ளம்-அது அறிந்தும் கேட்டீர் உரைப்பது என் உயர்ந்த மேன்மை
வள்ளல் நும் மதுர வாய்மை மறுத்திலேன் விடுத்திர் என்றான்

மேல்
$2.12.48

#2099
வேட்டுவன் உரைப்ப கேட்டு முகம்மது விருப்பமுற்று
வாட்டமுற்று இருந்த புள்ளி மான் இடத்து இருந்து பாரில்
நீட்டிய காலில் சேர்த்த துடரினை நெகிழ்த்து கானில்
கூட்டு உறா குழவிக்கு பால் கொடுத்து இவண் வருக என்றார்

மேல்
$2.12.49

#2100
இருந்து கால் மடக்கி நீட்டி எழுந்து உடல் முறுக்கு நீக்கி
மருந்து எனும் அமுத தீம் சொல் முகம்மதின் வதனம் நோக்கி
பொருந்திய கலிமா ஓதி புகழ்ந்து உடல் பூரிப்போடும்
திருந்த வேடனையும் பார்த்து சென்றது கானின் மானே

மேல்
$2.12.50

#2101
வெண்ணிலா கதிர் கான்று என்ன மென் முலை சுரந்த தீம்பால்
மண் எலாம் நனைப்ப சூழ்ந்த வனம் எலாம் திரிந்து தேடி
கண்ணினில் இனம் காணாது கலங்கி ஓர் வனத்தின்-கண்ணே
எண்ணரும் பிணையும் கன்றும் கலையுடன் இனிது கண்ட

மேல்
$2.12.51

#2102
மலைவு அற இனத்துள் ஆகி மனத்தினுள் கவலை நீக்கி
கலையின் உள் வருத்தம் தீர்த்து கன்றினை அணைத்து விம்மும்
முலையினை ஊட்டி மென்மை முதுகு வால் அடி நா நீட்டி
அலைதர வளைத்து மோந்து வேட்கையை அகற்றிற்று அன்றே

மேல்
$2.12.52

#2103
கன்று-அது வயிறு வீங்க கதிர் முலை அமுதம் ஊட்டி
நின்ற தன் இனத்துக்கு எல்லாம் நெறிபடும் கானில் ஓடி
வன் திறல் வேடன் கையில் படும் வரவாறும் தூதர்
வென்றி கொள் பிணையின் மீட்டு விட்டதும் ஓதிற்று அன்றே

மேல்
$2.12.53

#2104
பிணை என உரைத்த மாற்றம் பிணை குலம் அனைத்தும் கேட்டு
பணை படு கானில் உள்ள பதைப்பொடும் துணுக்கி நிற்ப
துணை எனும் கலையின் அங்கம் சோர்ந்து நெட்டுயிர்ப்பு வீங்கி
அணைதர அடுத்து நோக்கி ஆற்றுவான் தொடங்கிற்று அன்றே

மேல்
$2.12.54

#2105
மாறுகொண்டவர் கை தப்பி வந்த மான் இனத்தின் சாதி
கோறலை விரும்பி முன்னும் நரர் கையில் கூடிற்று உண்டோ
வேறு உரை பகரேல் பார்ப்பை வெறுத்தும் உன் இனத்தை நீத்தும்
ஈறு என போதல் வேண்டாம் எனும் உரை இயம்பிற்று அன்றே

மேல்
$2.12.55

#2106
இணைத்து எனை பிணித்த வேடன் இதயத்துக்கு இயைய பேசி
பிணை தனை பொருத்தி நின்றோர் பெரியவன் தூதர் இந்த
திணைத்தலத்து அறிவு இலாத சேதன சாதி அன்றே
அணைத்து உயிர் அனைத்தும் காத்தற்கு அவர் அலது இல்லை அன்றே

மேல்
$2.12.56

#2107
என் உயிர்-அதனை வேடன் இரும் பசிக்கு இயைய ஈந்து
நல் நபி பிணையை மீட்ப நல் மனம் பொருந்திலேனால்
பொன்_உலகு இழந்து தீயும் நரகினில் புகுவதல்லால்
பின் ஒரு கதியும் உண்டோ பிழை அன்றி பெருமை அன்றே

மேல்
$2.12.57

#2108
சிறப்பு உடை குரிசில் முன்னம் செப்பிய மாற்றம் மாறி
மறப்பொடும் இருந்தேனாகில் வரி புலி இனத்தின் வாய் பட்டு
இறப்பதே சரதம் அல்லால் இருப்பதற்கு இடம் மற்று உண்டோ
உற பெரும் விருப்பம் மென்மேல் இருத்தலை ஒழித்தல் வேண்டும்

மேல்
$2.12.58

#2109
நதியிடை பெருக்கின் முன் ஓர் நவ்வி பின் நடக்கும் நாளில்
மதியிலி ஒருத்தன் வள்ளல் முகம்மதின் வசனம் மாறி
புதிய நல் நீருள் ஆழ்ந்து நொடியினில் வீழ்ந்து போய
அதிசயம் உலகில் விண்ணில் யாவரே அறிகிலாதார்

மேல்
$2.12.59

#2110
ஈது எலாம் அறிந்தும் என்னை இவணிடை இருத்தல் வேண்டி
ஓதுதல் பழுது என்று ஓதி உழை இனம் அனைத்தும் தேற்றி
காதலின் கலையை போற்றி கன்றினை அதன்-பால் சேர்த்தி
பேதுறல் என பாலூட்டி எழுந்தது பிணையும் அன்றே

மேல்
$2.12.60

#2111
இனத்தினை விடுத்து நீங்கி இரும் களிப்பு இதயம் பூப்ப
வனத்தினில் ஏகும் காலை மறி முனம் மறிப்ப சீறி
சினத்து அது தடுப்ப ஓடி செவ்வி மான் முகத்தை நோக்கி
இனித்த வாய் புல் தீண்டாத இளம் மறி உரைக்கும் அன்றே

மேல்
$2.12.61

#2112
மா தவம் பெற்று நின் போல் முகம்மது நபி-தம் செய்ய
பாத பங்கயத்தை கண்டு பரிவுடன் ஈமான் கொண்டு
போதலே அன்றி நின்னை புறத்தினில் அகற்றி வாழேன்
ஈது முத்திரை என்று ஓதி எழுந்து முன் குதித்தது அன்றே

மேல்
$2.12.62

#2113
இறையவன் தூதை கண்ட அதிசயம் இது-கொல் என்ன
மறி மனம் மறுகிலாது வதை-தனை பொருந்தி சேறல்
இறுதி அற்று இன்பம் நம்-பால் எய்தும் என்று அகத்தின் எண்ணி
செறி வனம் கடந்து வேடன் திசை-தனை அடுத்தது அன்றே

மேல்
$2.12.63

#2114
குருளையும் பிணையும் கூடி வருவது குறித்து நோக்கி
முருகு அலர் புயத்தார் வள்ளல் முகம்மது மகிழ்ந்து அன்பாக
இருள் உறு மனத்தனான வேடனை இனிது கூவி
ஒரு பிணைக்கு இரண்டு உன்-பாலில் வருவது என்று உரைத்திட்டாரால்

மேல்
$2.12.64

#2115
அன்னது கேட்டு வேடன் நோக்கி அன்புற்ற காலை
முன்னிய கன்றும் மானும் முகம்மதின் அடியில் தாழ்ந்து
பன்னிய சலாமும் கூறி பாவி எற்காக வேட்டு
மன்னிய பிணையை மீட்டும் எனும் உரை வழங்கிற்று அன்றே

மேல்
$2.12.65

#2116
மாடு உறைந்து இவை மான் கூற முகம்மது நபியும் வில் கை
வேடனை விளித்து நம்-தம் பிணையினை விடுத்து நின்றன்
பீடு உடை பசியை மாற்றி பெரும் பதிக்கு அடைக என்றார்
வீடுபெற்று உயர்ந்து வாழ்ந்தேன் என மலர் பதத்தின் வீழ்ந்தான்

மேல்
$2.12.66

#2117
பாத பங்கயத்தை போற்றி பருவரல் அகற்றி ஆதி
தூதுவர் இவரே அல்லால் இலை என மனத்தில் தூக்கி
வேத_நாயகமே என்-பால் விருப்புறும் கலிமா-தன்னை
ஓதும் என்று இரு கை ஏந்தி உவந்து நின்று உரைப்பதானான்

மேல்
$2.12.67

#2118
கரு முகில் கவிகை வேந்தே கானக வேடன் என்னும்
உருவினன் விலங்கோடு ஒப்பேன் உள்ளறிவு உணர்வும் இல்லேன்
தெருளுற பாவி என்னை தீன் நிலைக்கு உரியன் என்ன
பெரிது அளித்திடுதல் நும்-தம் பெருமையில் பெருமை என்றான்

மேல்
$2.12.68

#2119
மதி முகம் மகிழ்ச்சி கூர முகம்மது கலிமா சொல்ல
இதயம் முற்று ஓதி வேடன் இனிதினின் ஈமான் கொண்டு
புதியனை வணங்கி செய்யும் செய்தொழில் பொருந்த கேட்டு
நிதிமனைக்கு உரியன் ஆகி தீன் நிலை நெறி நின்றானே

மேல்
$2.12.69

#2120
பெறு கதி நின்னால் பெற்றேன் பெரும் பவம் களைந்தேன் மாறா
தெறு கொலை விளைத்து முன்னம் செய்தொழில் தவிழ்த்தேன் நீயும்
மறுகலை எறிந்து தேறும் மன கலையொடு கன்றோடும்
உறு கலையிடத்தில் போய் சேர்ந்து ஒழுகலை முயல்தி என்றான்

மேல்
$2.12.70

#2121
வானவர் பரவும் கோமான் முகம்மது மானை நோக்கி
கானகம் செல் நீ என்றார் கமல மென் பதத்தில் தாழ்ந்து
தீன் நிலைக்கு உரிய வேடன்-தன்னையும் திருந்த போற்றி
நானிலம் புகல பாரில் நடந்து இனம் சேர்ந்தது அன்றே

மேல்
$2.12.71

#2122
தேனை குங்குமங்கள் சிந்த செழித்த திண் புயத்து வள்ளல்
கானை குவ்விடத்தில் காட்டும் கமல மென் பதத்தை போற்றி
தானைக்கும் பதிக்கும் யானே தலைவன் என்பவர் போல் வேடன்
மானை கொண்டுவர போய் ஈமானை கொண்டு அகத்தில் புக்கான்

மேல்
$2.12.72

#2123
துடவை நல் மலரை தூற்றும் தூய் நிழலிடத்தை நீந்தி
படர் முகில் கவிகை ஓங்க பார் உளது எவையும் வாழ்த்த
வட_வரை அனைய திண் தோள் வயவர்கள் இனிது சூழ
கடி மனையிடத்தில் புக்கார் ஹபீபு இறசூலூம் அன்றே

மேல்

13 ஈத்தங்குலை வரவழைத்த படலம்

$2.13.1

#2124
சுருதியின் முறை வழி துணைவர் சூழ்தர
கரு முகில் நிழலொடும் கருணை பொங்கிட
மருவும் எண் திசைக்கும் மான்மதம் கமழ்ந்திட
இரு நிலம் புகழ் நபி இருக்கும் போதினில்

மேல்
$2.13.2

#2125
காலினில் கபுசும் ஓர் கையில் குந்தமும்
மேல் இடும் சட்டையும் விசித்த கச்சையும்
தோல் ஒரு தோளினும் தூக்கி வந்தவன்
ஆல நம் நபி-தமை அடுத்து நோக்கினான்

மேல்
$2.13.3

#2126
தரியலர்க்கு அன்பு உறும் சார்பினான் மறை
குரு நெறி முகம்மதை குறித்து எதிர்ந்து நீர்
இரு நிலத்து எவர் என இயம்பினான் பரர்
உரம் நெரித்திட செவி உளுக்கும் சொல்லினால்

மேல்
$2.13.4

#2127
அச்சம் ஒன்று இன்றி நின்று அறபி கூறலும்
வச்சிர புய முகம்மது தம் வாய் திறந்து
இ சகம் புகழ் தனி இறைவன் தூது யான்
நிச்சயம் இது என நிகழ்த்தினார் அரோ

மேல்
$2.13.5

#2128
ஆதி-தன் தூது என அறிவதற்கு அரும்
பூதலத்து என் மனம் பொருந்தி அன்பொடும்
சாதம் உற்றிட பெரும் சாட்சியாம் எனும்
கோது அறு குறிப்பு எவை கூறுவீர் என்றான்

மேல்
$2.13.6

#2129
காரண கரி உனக்கு இயைய காண்கில் என்
ஆரணத்து உறும் கலிமாவை அன்பொடும்
பூரண மனத்தொடும் புகல்வையோ என
சீர் தரும் அமுத வாய் திறந்து செப்பினார்

மேல்
$2.13.7

#2130
அவனியில் எவர்க்கும் நன்கு அறிய என் மன
கவர் அற காரண கரி உண்டாம் எனின்
நபி உமை அலது இலை என்ன நண்பொடும்
பவம் அற நும் வழி படுவன் யான் என்றான்

மேல்
$2.13.8

#2131
நிலத்தினில் விண்ணில் நீள் திசைக்குள் நின் மன
நலத்தது கரி எவை நாட்டுவாய் என
குலத்து உறு முகம்மது கூற கேட்டு நல்
சிலை தழும்பு இருந்த தோள் அறபி செப்புவான்

மேல்
$2.13.9

#2132
இருவருக்கு எதிர்தர நின்ற ஈந்து-அதின்
விரி தலை குலை மலர் வீழ்ந்திடாது இவண்
வரவழைத்திடுவிரேல் மனமும் வாக்கும் ஒத்து
அரு மறை மொழி வழி ஆவன் யான் என்றான்

மேல்
$2.13.10

#2133
ஈந்தினை நோக்கி நின்று இறைவன் தூதுவர்
வாய்ந்த நின் குலை இவண் வருக வேண்டும் என்று
ஆய்ந்த நன் மறை தெரி அமுத நல் கனி
ஏய்ந்த வாக்கினை திறந்து இயம்பினார் அரோ

மேல்
$2.13.11

#2134
ஆதி-தன் தூதுவர் அறைய கேட்டலும்
சோதி வெண் குருத்தொடும் தோன்ற மேல் எழுந்து
ஏதினும் சிதைகிலாது இழிந்து மா நில
மீதினில் விரி தலை விளங்கி நின்றதே

மேல்
$2.13.12

#2135
விரி தலை தரு அடி நின்ற மென் குலை
பரிவொடும் பயப்பய குதித்து பாரிடை
இரு விழி தெரிபவர் எவர்க்கும் இன்புற
திரு முகம்மது முனம் சிறந்து நின்றதே

மேல்
$2.13.13

#2136
அந்தர விரி தலைக்கு அமைந்த பூம் குலை
இந்த மா நிலத்திடை இறங்கி இவ்வுழை
வந்ததின் புதுமையும் மறுத்து உண்டோ என
சிந்தையுற்று அறபி நம் நபியை சிந்தித்தான்

மேல்
$2.13.14

#2137
படித்தலம் புகழ் நபி பாதம் போற்றி நின்று
அடிக்கடி புதுமையுற்று அறபி ஈந்தினது
இடத்தினில் குலை பொருந்திட செய்வீர் என
திடத்தொடும் பயத்தொடும் செப்பினான் அரோ

மேல்
$2.13.15

#2138
மழை முகில் கவிகையின் வள்ளல் நன்கு என
குழை தரும் விரி தலை குலையை பார்த்து நின்
உழையினில் செல்க என உரைப்ப ஓடி முன்
புழை வழி நுழைந்து அது பொருந்தி நின்றதே

மேல்
$2.13.16

#2139
மேதை அச்சமும் உள விலங்கினாயது ஓர்
சாதி அன்று ஈது ஒரு தரு முன் ஆதலும்
போதலும் படைத்தவர் புதிய நாயகன்
தூதுவர் உண்மை என்று அடியை சூடினான்

மேல்
$2.13.17

#2140
பாத பங்கய மலர் சிரசில் பற்றி நின்று
ஆதியில் சொலும் கலிமாவை அன்பொடும்
ஓதினன் தெளிந்தனன் உரிய நாயகன்
தூதுவர்க்கு இவன் ஒரு துணைவன் ஆயினன்

மேல்

14 ஒப்பெழுதித் தீர்ந்த படலம்

$2.14.1

#2141
பரிவு உறு நபி எனும் பட்டம் ஆகிய
வருடம் ஏழினில் தினம் முஹற்றம் மாத்தையில்
தெரிதரும் பிறை முதல் இரவில் சேரலர்க்கு
உரியவர் குறைஷிகள் ஒருங்கு கூடினார்

மேல்
$2.14.2

#2142
கறை கெழு மன கொடும் காபிராகிய
குறைஷி அம் தலைவர்கள் பலரும் கூட்டமிட்டு
அறபிகள்-தம்முடன் ஆய்ந்து வாய்மையால்
முறைதவறிடும் ஒரு கருமம் முன்னினார்

மேல்
$2.14.3

#2143
ஹாஷிம் முத்தலிபு என அடுத்து கூடிய
மாசு அறும் இரு குலத்தவரின் வாணிகம்
பேசுதல் சம்பந்தம் பிறவும் நீக்கிவிட்டு
ஏசறு சாதியின் விலக்கிட்டார் அரோ

மேல்
$2.14.4

#2144
நெருப்பு நீர் இவை முதல் நீக்கி நீள் நிலத்து
இருப்பவர் எவரும் அங்கு அவர்க்கு இடங்கொடாது
உருப்பமோடு இகல்வதே எவர்க்கும் ஊழ் என
வரைப்புற ஒரு முறி வரைந்திட்டார்களால்

மேல்
$2.14.5

#2145
சாதியின் விலக்கு என தவறிலாது எடுத்து
ஓதிய ஒப்பு எனும் முறியை ஊரவர்
மாதிரம் அடர் ககுபாவின் வாயிலில்
தூதரும் அறிய என்று எடுத்து தூக்கினார்

மேல்
$2.14.6

#2146
கொடு மன குறைஷி அம் காபிர் கூடி அப்
படி நடத்திடும் அ நாள் பலன் கொள் மா மறை
பிடிபடும் தீனவர் யாரும் பேதுறாது
உடல் உயிர் என உவந்து ஒருங்கு கூடினார்

மேல்
$2.14.7

#2147
தெரிதரும் தீன் நெறியவரும் சேர்தரும்
இரு வகை கிளைஞரும் இசைந்த பேர்களும்
தரு என தரும் அபுத்தாலிப்-தம் புய
வரை என வளைந்து அவர் வாழும் நாளினில்

மேல்
$2.14.8

#2148
போது அலர் மதீன மா புரத்தில் நாள்-தொறும்
கோதுறாது அவுசு எனும் கூட்டத்தார்கட்கும்
காதிய கசுறசு கிளைக்கும் கட்டு அறாது
ஓதிய பெரும் பகை ஒழிந்ததில்லையால்

மேல்
$2.14.9

#2149
இசையும் நூற்றிருபது வருடமும் கசு
றசு எனும் கூட்டத்தார் அமைத்த வெற்றியே
திசை புகழ்ந்தன அவுசு என்னும் திண்மையோர்
விசயம் ஓர் ஆண்டினும் வேய்ந்ததில்லையால்

மேல்
$2.14.10

#2150
இந்த வல் வினையினால் இடைந்த அ அவுசுளர்
தம் தமரொடும் பலர் தனித்து உசாவியே
சிந்தையில் தெளிவொடும் தெரிந்து பார்த்து நல்
மந்திரம் ஈது என வகுத்து காட்டியே

மேல்
$2.14.11

#2151
மக்க மா நகர் உறை மன்னர்-தம்மை நம்
ஒக்கலில் இன்புற உவந்து சேர்த்து வந்து
இ கணம் கசுறசை எதிர்வதல்லது
புக்கிடம் இலை என பொருந்த கூறினார்

மேல்
$2.14.12

#2152
பெறும் முறை ஈது என பேசி நால்வரை
திறனொடும் சேகரம் செய்து வம் என
குறைவு அற வரிசையும் கொடுத்து அயாசினை
அறம் எனும் மக்க மா நகர்க்கு அனுப்பினார்

மேல்
$2.14.13

#2153
பெருகிய கிளை அவுசு என்னும் பெற்றியோர்
வரவிடுத்தவர் சிலர் மக்க மீதினில்
அரிதின் வந்தனர் என அறிந்து நம் நபி
பரிவுடன் எழுந்து அவர்-பாலின் ஏகினார்

மேல்
$2.14.14

#2154
அங்கு உறைந்து அவர் அகத்து அன்பு கூர்தர
பொங்கிய சில மொழி புகன்று பின்னரும்
எங்கினும் தீன் படர்ந்து ஏற நன் மறை
தங்கிய நாவினால் எடுத்து சாற்றுவார்

மேல்
$2.14.15

#2155
பற்றலர் இடர் அட படர்ந்து இ ஊரினில்
உற்ற நீர் உள்ளி வந்து அதனின் ஓங்கிடும்
பெற்றி உண்டு எனது உரை பெற்றிரேல் பெரும்
வெற்றி உண்டு உமதிடத்து என விளம்பினார்

மேல்
$2.14.16

#2156
வள்ளல் இ உரை தர மதீன மா நகர்
உள்ளவர் உள்ளகத்து உவகை ஊர்தர
விள்ளும் நும் கருத்து என வினவ நல் மொழி
தெள்ளிய மதுர வாய் திறந்து செப்பினார்

மேல்
$2.14.17

#2157
அரியவன் அருளினால் அமரர்_கோன் எனக்கு
இரு நிலத்தினில் நபி என்னும் பேர் கொடுத்து
உரிய வேதமும் இனிது உதவி நல் நெறி
வரிசை நேர் வணக்கமும் வகுத்து போயினார்

மேல்
$2.14.18

#2158
அகம் மகிழ்ந்து இ மொழி அனைத்தும் வேறு இது என்று
இகழ்வு இலாது உண்மை என்று இசைந்து நீவிர் யான்
புகழ் கலிமா நெறி பொருந்தினீரெனில்
பகை அறும் வெற்றியும் படரும் என்று அரோ

மேல்
$2.14.19

#2159
நறை கமழ் முகம்மது ஆண்டு உரைத்த நல் மொழி
திறன் அயாசு அறிந்து உளம் தேறி தன்-வயின்
உறைபவர்க்கு அணிபெற ஓதி வேண்டுவ
பிற நினைவு இலை இனி எனவும் பேசினார்

மேல்
$2.14.20

#2160
நல் பதம் தரும் புகழ் நபியை போற்றி யான்
என் பதி புகுந்து எமர்க்கு இயம்பி ஒல்லையில்
நின் பதம் வர நிலைநிறுத்துவேன் என
அன்புற உரைத்து எழுந்து அயாசு போயினார்

மேல்
$2.14.21

#2161
தடம் திகழ் மதீன மா நகரை சார்ந்து இனத்
துடன் நபி உரைத்தவை உரைப்ப கேட்டு அவர்
திடம் பெற இஃது நன்று என்ன சிந்தையின்
இடம்பெற களிப்பொடும் இருக்கும் காலையில்

மேல்
$2.14.22

#2162
கொடும் சிலை கசுறசு என்னும் கூட்டத்தார்
இடும் பகையுடன் இவர் எதிர்ந்து தாக்கலும்
விடும் பரி படைக்கலம் வீழ்த்தி கால் தளர்ந்து
அடும் படையொடு முறிந்து அவதி ஆயினார்

மேல்
$2.14.23

#2163
பாடினில் கசுறசு படை எலாம் முறிந்து
ஓடினர் அவுசு எனும் கூட்டத்தோர்க்கு என
பீடு உடை பெரும் புகழ் பெருகி சூழ் திசை
நாடு அடங்கலும் தெரிதர நடந்ததே

மேல்
$2.14.24

#2164
நபி-தமை கண்டு உரை நடத்தி வெற்றியும்
புவியினில் பெற்றனம் பொருந்தினோமெனில்
எவர் நமக்கு எதிர் அவர்க்கு இயைவதே என
அவுசு எனும் பெரும் குலத்தவர்கள் கூறினார்

மேல்
$2.14.25

#2165
முகம்மதின் தீன் நிலை வழி செல்வோம் என
அகம் மகிழ்ந்து அவுசு இனத்தவர்கள் கூறலும்
புகழொடும் அறுவர்கள் எழுந்து பொன்_நில
நகர் எனும் மக்க மா நகரை நண்ணினார்

மேல்
$2.14.26

#2166
மறு அறும் அவுசு எனும் குலத்து மன்னவர்
அறுவரும் நபி பதம் அடுத்து செவ்வியின்
உறு கலிமா எடுத்து ஓதி அன்பராய்
எறுழ் வலியொடும் இசுலாத்தில் ஆயினார்

மேல்
$2.14.27

#2167
வாருதி என வரும் மதீனம் என்னும் அ
ஊரவர் நமக்கு உயிர் துணைவராகிய
பேர் என படைத்தனம் பெரியனால் என
ஏர் பெற நபி மனம் மகிழ்ந்து இருந்தனர்

மேல்
$2.14.28

#2168
பின்னு திரை கடல் நிலத்தில் விளங்கு புகழ் உசைன் நயினார் பெரும் பேறான
மன்னவர்_மன் அபுல் காசீம் மனத்தினும் நாவினும் மறவாது இருத்தி வாழ்த்தும்
மின் அவிர் செம் மலர் பத தாள் முகம்மது-தம் பெரும் மறை தீன் வேர்விட்டு ஓடி
எந்நிலமும் இசுலாத்தின் கொழுந்து பல படர்ந்து ஏறி இலங்கிற்று அன்றே

மேல்
$2.14.29

#2169
உலகு அடங்க தனி அரசு செலுத்தும் பெரியவன் அருளால் உயர் வான் நீந்தி
அலகில் கதிர் சிறை ஜபுறயீல் அகுமது உறைந்த குவடு அடுத்து அன்பாக
இலகு கலிமா ஓதி மணி துகில் செம் கரத்து இருத்தி வேதம் ஈந்து
பலர் அறிய நபி எனும் பேர் பரித்து ஆண்டும் இருநான்கும் படரும் நாளில்

மேல்
$2.14.30

#2170
இறூமிகட்கும் பாரிசுநாட்டவர்க்கும் பெரும் பகையாக இருந்து அ ஆண்டு
மறம் முதிர்ந்து பாரிசவர் வெற்றிகொண்டார் எனும் வசனம் மக்க மீதில்
உறையும் பெரும் குபிரவர் கேட்டு உடல் பூரித்து இசுலாத்தில் உற்ற பேரை
திறன் அடுத்தது எமர்க்கு இழிந்த சிதைவு அடுத்தது உமர்க்கு எனவும் செப்பினாரால்

மேல்
$2.14.31

#2171
தருவை நிகர் முகம்மது நல் நபி உரைத்தார் உறூமிகள்-தம் சமர்க்கு ஆற்றாது
வெருவி இரு நிலத்து ஓடி பாரிசு அற முறியும் என விரித்த வாய்மை
ஒருபொழுதும் பழுதாகாது என்ன அபூபக்கர் எடுத்துரைப்ப கேட்டே
இருமையினும் பலன் அறியான் இபுனுகலபு எனும் அவன் வந்து எதிர்ந்து சொல்வான்

மேல்
$2.14.32

#2172
எங்கள் குலத்தவர் உரையே பழுதாகி பாரிசவர் இரிந்தாரென்னில்
உங்கள்-தமக்கு அருள்வேன் நூறு ஒட்டகை ஈது ஒட்டம் என உரைப்ப நோக்கி
எங்கள் நபி முன் உரைத்த உரை தவறி உறூமிகள் போர் இடைந்தாரென்னில்
உங்கள்-தமக்கு அளித்தல் அஃது என்ன அபூபக்கர் எடுத்து ஓதினாரால்

மேல்
$2.14.33

#2173
இருவரும் சம்மதித்து இகலி ஒட்டிய ஒட்டகத்தினொடும் இருக்கும் நாளில்
ஒரு கவிகை நிலவ உறூமிகள் அடர்ந்து பாரிசவர் உடைந்தார் என்ன
பெருகு மொழி அவரவர் கேட்டு இபுனுகலபுடன் உரைப்ப பெரிதின் ஈந்தான்
அரு வரை நேர் ஒட்டகம் நூறு அடல் அரி ஏறு என்னும் அபூபக்கர்க்கு அன்றே

மேல்
$2.14.34

#2174
ஒட்டி ஒட்டம் பலித்த ஒட்டை திரளொடும் வந்து உயரும் அபூபக்கர் ஓங்கி
மட்டு அவிழ் திண் புய குரிசில் முகம்மது-தம் முனம் விடுப்ப மகிழ்ந்து நோக்கி
கட்டிய பொன் மதிள் ககுபா நகரிடை வெம் குபிரர் மனம் கருகி வாட
இட்டமுடன் சதக்கா என்று இரப்போர்க்கும் வறிஞோர்க்கும் ஈந்திட்டாரால்

மேல்
$2.14.35

#2175
அன்பராம் முகம்மதுவுக்கு அரிய நபி பெயர் வானோர்க்கு அரசர் ஈந்த
ஒன்பதாம் வருடம் வரையளவும் உயர் ககுபாவின் ஒருங்கு தூக்கி
அன்பராகிய குறைஷி காபிர் இடும் ஒப்பும் முறி வசனம் யாவும்
இன்புறா நின்று சிதல் அரித்தது என பெரியதந்தைக்கு இயம்பினாரால்

மேல்
$2.14.36

#2176
அரசர் அடல் அரி அகுமது உரைத்த மொழி அபித்தாலிபு அகத்தின் ஓர்ந்து
கரிசமிடும் குல காபிர்க்கு உரைப்ப அதில் ஐவர் மன கறுப்பு நீக்கி
விரைவினொடும் ஒப்பு முறி-தனை கிழிப்ப வரும்போது வெகுண்டு கூறி
எரியிடை நெய் இட்டது என சில காபிர் தடுப்ப மனம் இயைந்திலாரே

மேல்
$2.14.37

#2177
சாதி விலக்கு ஒப்பு முறி பரிகரிக்கும் வார்த்தை செவி தடவ கேட்டு
காதி எழுந்து அபூஜகல் கண் சிவந்து மனம் கறுத்து முகம் கடுத்து நோக்கி
மோதுதலும் கேளாது ககுபாவில் தூக்கி வைத்த முறியை வாங்கி
பேதம் அற பார்ப்பளவில் முன் எழுதும் எழுத்தில் ஒன்றும் பெற்றிராதே

மேல்
$2.14.38

#2178
அல்லல் அற சிறந்த வரி அல்லா என்று ஒரு பெயரினளவே அன்றி
இல்லை எழுத்து இனி இதனால் இருந்து பலன் என் எனவும் எழுதும் நாளில்
பல்லருடன் யான் பொருத்தமிலை எனவும் எடுத்து ஓதி பலரும் காண
ஒல்லையினில் கிழித்து எறிந்தான் சாதி விலக்கு எனும் பெயர் விட்டு ஓடிற்று அன்றே

மேல்
$2.14.39

#2179
இன் இசை நல் மறை முகம்மது இரும் கலிமா-தனை விளக்கி இருந்தோர்க்கு எல்லாம்
அன்னம் அருந்திட நீர் உப்பு அங்கி அளியாது அவரோடு அடுத்திடாமல்
சொன்னபடி சாதி விலக்கு ஒப்பு முறி எழுதின மன்சூறு என்போன்
தன் இரு கை வழங்காமல் மாறாத பிணி பிடித்து தாழ்ந்திட்டானால்

மேல்

15 புத்து பேசிய படலம்

$2.15.1

#2180
நிலத்து அரசு இதத்த நடு சிரத்தின் அணி என சிறப்பு நிறை மக்காவில்
குலத்து அரசர் இனிது உவப்ப கலிமா எண் திசை முழுதும் குலவி ஓங்க
சிலை தட கை வய வேந்தர் இனிது சூழ்ந்து இருக்கும் நபி செவ்வி நோக்கி
மலை தட திண் புய குசைனு எனும் அறபி மகிழ்வினொடும் வந்துற்றானே

மேல்
$2.15.2

#2181
எதிர் அடுத்த குசையினுக்கு அன்பு அருளினொடும் கரம் சாய்த்திட்டு இருக்கை ஈந்து
மதியினும் மும்மறையினும் தேர்ந்து அவரவர்கள் கருத்து அறிய வல்லோய் நாளும்
கதி தரும் என் புறுக்கானின் வழி ஒழுகாது இருந்தது என் உன் கருத்தினூடும்
பதிவு பெற கலிமாவை உரை என நம் நபி இனிது பகர்ந்திட்டாரால்

மேல்
$2.15.3

#2182
மான் உரைத்தது உடும்பு உரைத்தது அமாவாசையிடத்தில் நிறை மதி வந்து ஓடி
தான் உரைத்தது அறியேனோ உமது வழிப்படுமவர்கள்-தமை காணேனோ
யான் உரைப்பதிலை கலிமா இதயம் பொருந்தா புகழ் நா ஏற்றுவேனோ
தீன் உரைத்த ஹபீபு அரசன் தடியினை ஓர் வடிவு ஆக்கும் செவ்வியோயே

மேல்
$2.15.4

#2183
அனைத்தையும் காரணம் அல என்று அகத்து இருத்தி வெறுத்தனை உள் அருளினோடும்
மனைத்தலத்து ஓர் உரு-தனை நீ வணங்கினை அ உரு திருந்த மணி வாய் விண்டு
கனைத்த திரை கடல் நிலத்தில் பலர் புகழ உரைக்கு உரை கட்டுரைக்குமேல் யான்
நினைத்தபடி கலிமாவை உரைப்பையோ என நபியும் நிகழ்த்தினாரால்

மேல்
$2.15.5

#2184
நம் நபி இ நெறி உரைப்ப குசையின் எனும் அறபி சிறு நகையினோடும்
என்னிடத்தில் ஆறுபத்தைந்து ஆண்டு வரை இருந்தும் மனம் இனிது கூர
சொன்னதிலை ஓர் மொழி மந்திரத்து அடங்கி தெய்வம் உரை சொல்லுமோ நீர்
உன்னிய வாசகத்தினொடும் உரைக்கும் என உரைப்பது என்-கொல் உறுதித்து அன்றே

மேல்
$2.15.6

#2185
பொன் அணி நல் மணி தூசு நறு மலர்கள் பல சொரிந்து புகழ்ந்திட்டு ஏத்தும்
என்னொடு உரையாத குல தெய்வம் உமது உரைக்கு உரை நேர்ந்து இயம்புமேயால்
பன்னு மறை வழி ஒழுகி படி தீண்டா மலர் அடியை பரவி வாழ்த்தி
மன்னும் இசுலாம் ஆகி குபிர் அகற்றி தீன் நிலைமை வளர்ப்பன் என்றான்

மேல்
$2.15.7

#2186
திசை முழுதும் ஒரு புடையில் கிடத்தும் கரு முகில் கவிகை செம்மல் நேர்ந்த
குசையினை நின் மனைத்தலத்தில் இருந்த உரு எடுத்து இவணில் கொடுவா என்ன
இசை தரும் வண்டு இமிர் தொடையல் புரண்டு அசைய எழுந்து மனையிடத்தின் ஏகி
வசை அறு நல் மணி கலன்களொடு பல தூசு அணிந்து மலர் வனைந்திட்டானால்

மேல்
$2.15.8

#2187
விரை தழைகள் சுமத்தி நறும் புகை கமழ்த்தி விளங்கு செழும் கரத்தில் ஏந்தி
உரத்தின் அணைத்து ஒரு துகில் கொண்டு உற போற்றி நடந்து மறுகூடு உலாவி
வரை தட திண் புயத்து நறை கமழ்ந்த முகம்மது தண் மதி வதனம் நேராய்
இருத்தி ஒரு பால் இருந்தான் மும்மறையும் தெரிந்து மனத்து இருத்தினோனே

மேல்
$2.15.9

#2188
வைத்த புத்தை முகம் நோக்கி உனை வணங்கி இருந்தோன்-தன் மனது கூர
இ தலத்துள்ளோர் அறிய எனது வரவாறும் எனக்கு இயைந்த பேரும்
மெய்த்த உரை மறை பேரும் விண்ணினும் மண்ணினும் அறிய விளம்புவாய் என்று
உத்தம சற்குண நயினார் அமுத மலர் வாய் திறந்து அங்கு ஓதினாரால்

மேல்
$2.15.10

#2189
வெண்ணிலவு துளித்து ஒழுகும் மதி வதன முகம்மதினை விளித்து நோக்கி
வண்ண மலர் வாய் திறந்து பெரியோன்-தன் திருத்தூதாய் வந்த கோவே
பண் அரு நல் மறை நபியே வானவர் பொன் அடி பரவ படியின் வந்தோய்
எண்ண அரும் பேரொளியும் உமது ஒளியில் வர கதிர் வடிவாய் இருந்த வேந்தே

மேல்
$2.15.11

#2190
அல்லாவின் திருத்தூதர் வேத நபி முகம்மது என அகத்தில் கொள்ளார்
பொல்லாத நரகு அடைவர் உமது அடியில் பணிந்து கலிமாவை போற்றி
சொல்லார மனத்து இருத்த அறிந்தவரே சிறந்த பெரும் சுவனம் ஆள்வார்
எல்லாரும் எனை போல்வார் அறிவ அரிது சரதம் என வியம்பிற்று அன்றே

மேல்
$2.15.12

#2191
புத்து உரைத்த மொழி கேட்டு குசைனு எனும் அ அறபி உடல் புளகத்தோடு
முத்த மணி ஒளி முகம்மது அடி பரவி கலிமாவை முழங்க ஓதி
பத்தி பெற தொழுகை முதல் படித்து தீன் எனும் ஒழுங்கின் பரிவினோடும்
எத்தலமும் புகழ்ந்து ஏத்த ஈமான் கொண்டு இசுலாத்தின் இணங்கினாரே

மேல்

16 பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம்

$2.16.1

#2192
தனுவின் மான்மதம் உலவிய முகம்மது தழைப்ப
புனித மா மறை மதி கலிமா கதிர் பொழிய
இனிதில் தீன் திசை விளங்கிட இருக்கும் அ நாளில்
அனிலம் ஒத்து அபித்தாலிபுக்கு அடைந்தது ஆயாசம்

மேல்
$2.16.2

#2193
வருத்தம் நாட்குநாள் முற்றி மெய் மெலிவொடு மயங்கி
இருத்தல் கண்டு நம் நபி மனம் இடைந்து அருகு இருந்தார்
திருத்திலா அபூஜகுலொடு நகரவர் திரண்டு
குருத்த வெண் கதிர் சுதை மனையிடன் அற குவிந்தார்

மேல்
$2.16.3

#2194
பெருக வந்திருந்தவர்களை விழித்து உரை பிறழாது
ஒருவருக்கு ஒரு பகை இலை எனும்படி ஒழுகி
இரும் என தலத்தவர்க்கு இனத்தவர்க்கு எடுத்து இசைத்தார்
தெருளும் சீர் அபித்தாலிபு என்று உரைத்திடும் செம்மல்

மேல்
$2.16.4

#2195
கடந்த மும்மத கரி தொடு குழியினை கடவாது
அடைந்தவாறு என கிடந்திடும் பெரிய தந்தையரை
படர்ந்த நன் கலிமா சொலும் சொலும் என பகர்ந்தார்
தொடர்ந்து வானவர் பரவிட வரும் இறசூலே

மேல்
$2.16.5

#2196
காதினுள் புகுந்தன இலை என பினும் கருதி
ஓதும் நன் கலிமா என முகம்மதும் உரைக்கும்
போதினில் தனி அழன்று அபூஜகுல் உடல் புழுங்கி
மோதி வந்து அபித்தாலிபுக்கு உரிமையின் மொழிவான்

மேல்
$2.16.6

#2197
தந்தை தாய் தமர் ஒழுகிய மொழி வழி தவிர்ந்திட்டு
இந்த நாளினில் முகம்மதின் உரையினுக்கு இயைந்தீர்
பிந்து நாளையின் முன் உரை மறை நெறி பிசகாது
அந்த வாய்மையை மனத்தினில் மறவல் என்று அறைந்தான்

மேல்
$2.16.7

#2198
உரப்பி ஆங்கரித்து அபூஜகுல் உரைத்திடும் உரையில்
பரப்பு நன் கதிர் முகம்மது பகர்ந்தது தெரியாது
திரை பெரும் கடல் என இனம் சூழ்தர இறந்தார்
மரை பதத்து அபித்தாலிபு என்று அழகுறும் வள்ளல்

மேல்
$2.16.8

#2199
வட்ட வாரிதி புவியிடை முகம்மது-தமக்கு
பட்டம் என்ப வந்து இறங்கிய வருடம் பத்ததின் மேல்
எட்டு மாதமும் பதினொரு நாளும் சென்று இதன் பின்
சட்டகம்-தனை விட்டு உயிர் பிரிந்து அவண் சார்ந்தார்

மேல்
$2.16.9

#2200
மறம் தயங்கு வேல் கர அபித்தாலிபு மன்னர்
இறந்த காலையில் கடல் உடைந்து என நகர் இரங்க
சிறந்த மாதர் மை விழி மழை பொழிதர செருமி
அறம் கிடந்த நெஞ்சவரொடும் அழுது இரங்கினரால்

மேல்
$2.16.10

#2201
வரிசை நம் நபி முகம்மது வயிறு அலைத்து இரங்க
பரிசனத்தவர் அடங்கலும் பதைபதைத்து ஏங்க
அரசர் யாவரும் வந்து அடுத்து எடுத்து நீராட்டி
சரகின் நேர் வழி அடக்கினர் முடித்தனர் சடங்கு

மேல்
$2.16.11

#2202
பெரிய தந்தையர் இறந்திடும் பருவரல் பெருகி
அரிய நாயகன் தூதுவர் அகத்தினில் அழுங்கி
வரி கொள் வண்டு இமிர் செம் மலர் மரை முகம் வாடி
உரை தெரிந்திலர் போல் இடைந்து அகத்து உறைந்திருந்தார்

மேல்
$2.16.12

#2203
அகத்தினில் பெரும் துன்பொடும் இருக்கும் மூன்றாம் நாள்
வகுத்த நாயகன் விதி வழி குவைலிது மகளார்
இகத்தினில் புகழ் நிறுத்தி விண்ணகம் புகழ் இலங்க
தகுத்தொடும் பெரும் புதுமையில் திருவடி சாய்ந்தார்

மேல்
$2.16.13

#2204
முடிவிலாதவன் தூதுவர் முகம்மது நபிக்கு
வடிவு அமைந்த மெய் துணைவியாய் மகிதலத்து இருந்து
கடி கொள் பொன்_நகரத்தினில் கதிர் கொள் மாளிகையில்
குடிபுகுந்தனர் கத்தீஜா எனும் குல கொடியே

மேல்
$2.16.14

#2205
நனை ததும்பிய மலர் புய முகம்மது நபிக்கு
மனைவியாகிய கத்தீஜா எனும் குல மயிலை
புனையும் பூம் துகில் பொதிந்து நல் புகழொடும் ஏந்தி
வனையும் மென் மணம் போல் இனிது அடக்கினர் மகிழ்ந்தே

மேல்
$2.16.15

#2206
பேதையர்க்கு அரசினை அருள் பெரியவன் தூதர்க்கு
ஆதரம் பெரும் மயிலினை எடுத்து இனிது அடக்கி
காதலுற்று உயர் தீன் நிலையவர் கலந்திருந்து
கோது அற செயும் சடங்குகள் குறைவு அற முடித்தார்

மேல்
$2.16.16

#2207
இலக்கம் உற்றிடும் பெரியதந்தையர் இறந்திருந்த
அலக்கண் மேற்கொள வருந்திய காலையில் அணியாய்
நிலைக்கும் பேரெழில் மனைவியும் இறந்திட நிலையா
கலக்கம் உற்றது மறை முகம்மது நபி கருத்தில்

மேல்

17 பருப்பத ராஜனைக் கண்ணுற்ற படலம்

$2.17.1

#2208
ஆரண பொருள் அகுமது அவதியுற்றதனால்
காரண பலன் அறிந்தும் வஞ்சனை எனும் காபிர்
பார் அணைத்து எறிந்து இரு கவுள் மத சலம் பரப்பும்
வாரணத்தினும் மும்மடங்கு எனும்படி வலித்தார்

மேல்
$2.17.2

#2209
மிகைத்த வீறு அரி முழை புகுந்து என விறல் நயினார்
அகத்தில் துன்பினில் அடங்கினர் என அறிகிலராய்
பகைத்த புன் மன கொடியவர் பெரும் பகை தொடுத்தார்
இகத்தினும் மறுபுரத்தினும் இவை இலை எனவே

மேல்
$2.17.3

#2210
குறைஷி அம் குல காபிர்கள் விளைத்திடும் கொடுமை
அறவும் மேல் வளர்ந்தன குறைந்தில அபித்தாலிபு
இறைவன் முன் விதி அமைத்திடும்படி இவண் இறந்து
நிறையும் திங்களும் மூன்று என தினம் நிகழ்ந்தனவே

மேல்
$2.17.4

#2211
காயம் உள் உறை உயிர் எனும் இருவரும் கம் புக்கு
ஆயதும் இனத்தவர் பகையையும் மனத்து அடக்கி
தூய நாயகன் தீன் நிலை பெருக்கிடும் துணிவால்
தாயிபு என்னும் அ தலத்தினுக்கு எழுந்தருளினரே

மேல்
$2.17.5

#2212
சவி கொள் வெண் சுதை மா மதிள் தாயிபில் இபினு
அபுது யாலில் என்றிடும் பெயர் குறைஷி என்பவனை
நபிகள் நாயகம் கண்டனர் அவன் எதிர் நடந்து
குவி கை கொண்டு பின் இவரொடு மனை குறுகினனே

மேல்
$2.17.6

#2213
மனையினில் கொடுபோய் முகம்மது-தமை இருத்தி
இனிய வாசகத்து அன்பொடும் புகழ்ந்து எடுத்து ஏத்தி
வனச மென் மலர் செழும் பதத்து இணை வருந்திடவே
தனியன் என்-வயின் சார்ந்தவை சாற்றுக என்றான்

மேல்
$2.17.7

#2214
கண்ட போதினில் உவகையின் இரு கரம் குவித்து
கொண்டு நின்று நல் மொழி பகர்ந்தனன் என குறித்து
வண்டு வாழ் மலர் புய முகம்மது நபி மணி வாய்
விண்டு தேன் சொரிந்து என சில மொழி விளம்புவரால்

மேல்
$2.17.8

#2215
ஆதி-தன் அருள் வானவர்க்கு அரசு எனை அடுத்து
நீதி நல் நபி எனும் பெயர் அளித்து நீள் நிலத்தில்
வேதமும் எனக்கு அருளி தீன் நிலை விரித்திடும் என்று
ஓதி விண்ணகத்து உறைந்தனர் செழும் கதிர் உலவ

மேல்
$2.17.9

#2216
அந்த நாள் தொடுத்து இற்றை நாள் வரையும் நல் அறிவர்
புந்தி கூர்தர செழும் கலிமா-தனை புகட்டி
வந்து சூழ்தரு பவ களை தவிர்த்து மண் நிலத்தில்
உய்ந்து நற்கதி பெறுவதற்கு உறுதிசெய்தனனால்

மேல்
$2.17.10

#2217
உன்னும் நன் மறை முதல் கலிமா எடுத்துரைத்து உன்-
தன்னை நல்வழியவன் எனும் தகைமையில் படுத்தி
மன்னும் தீன் நிலை விரித்து அறம் வளர்த்திட வேண்டிற்று
என் உளம் அதின் அடைந்தன் என்று உரைத்தனர் இறசூல்

மேல்
$2.17.11

#2218
கதிர் திரண்டு உருவெடுத்தவர் உரைத்த கட்டுரை கேட்டு
அதி விதத்தொடு நன்கு என சிரம் கரம் அசைத்து
புதிய மா மறைக்கு ஐயம் இல் என புகழ்படுத்தி
மதியின் வேறு வைத்து இசைந்திடும் சில மொழி வகுப்பான்

மேல்
$2.17.12

#2219
எடுத்துரைத்தவை என் இனத்தவர்க்கு எடுத்து இயம்பி
அடுத்து இரண்டொரு தினத்தில் நும்மிடத்தினில் அணுகி
வடித்த வாய்மையின் ஒழுகுவன் மறை தெரி மதியோய்
படித்தலம் புகழ் நகரினில் செலும் என பகர்ந்தான்

மேல்
$2.17.13

#2220
இனைய வாசகம் உரைத்து அவன் இருப்ப நம் இறசூல்
வினையம் உற்றது இவ்விடத்து என தாயுபை விடுத்து
நினைவு நேரொடு தொழுது எழுந்திருந்து நல் நெறிக்கே
நனை கொள் மென் மலர் கானக தரு தர நடந்தார்

மேல்
$2.17.14

#2221
ஆலமும் வெளிறிட கெடும் கொடும் மனத்து அப்து
யாலில் என்பவன் சிறியவர்க்கு இனியவை உரைத்து
மேலும் பேதை நெஞ்சவருடன் இவரையும் விரவி
கோலும் வன் கதம் வர சில மொழி கொளுத்தினனால்

மேல்
$2.17.15

#2222
வெறியும் பித்தும் உற்றவன் இவண் பெரு வழி விடுத்து ஓர்
நெறியிடை தனி சென்றனன் அவன்-தனை நேடி
மறியும் கால் தலை தகர்ந்திட வலிய கல் எடுத்திட்டு
எறியும் ஏகும் என்று உரைத்தனன் நரகிடை எரிவான்

மேல்
$2.17.16

#2223
வஞ்சக கொடியவன் உரைத்திடும் மொழி வழியே
பஞ்சபாதகர் நடந்து அரும் பாதையை குறுகி
கஞ்ச மென் பத முகம்மதை கடிதினில் வளைந்திட்டு
அஞ்சலாது கல் குணில் எடுத்து எறிந்து நின்று அடர்ந்தார்

மேல்
$2.17.17

#2224
கல்லினால் உரம் சிரம் கரம் கால் முகம் காணாது
எல்லவன் கதிர் பொழிந்து என பல தொடுத்து எறிந்து
பல்லினால் இதழ் அதுக்கியும் முறுக்கியும் படர்ந்தார்
சொல்லொணா பெரும் பாதகம் விளைத்திடும் சூமர்

மேல்
$2.17.18

#2225
இருமையும் பதம் இழந்தவர் செல சினம் தெறிந்து
கருனுதாலிபு மட்டினும் தொடர்ந்து அவர் கலைந்தார்
தரு கை வள்ளல் நம் நபி முகம்மதின் முழந்தாளில்
ஒரு கல் ஏறுபட்டு ஊறுபட்டு உதிர்ந்தன உதிரம்

மேல்
$2.17.19

#2226
ஊறுபட்டதின் வருத்தமும் பசியின் உள் உலைவும்
மாறுபட்டவர் தொடர்ந்ததின் நடந்த மெய் மலைவும்
பேறு பட்டமும் தந்தவன் அருள் என பெரிதின்
தேறுபட்டு அவண் இருந்தனர் திரு நபி இறசூல்

மேல்
$2.17.20

#2227
இருந்து மெய் வருத்தம் தவிர்த்து அந்தரத்திடத்தில்
திருந்த நோக்கினர் மங்குலின்-வயின் ஜிபுரீலை
பொருந்த கண்டு கண் களித்தனர் புதியவன் தூதர்
விரிந்த வெள்ளிடை கடந்து அணித்து உற விளங்கினரால்

மேல்
$2.17.21

#2228
வந்து அடுத்து இறையவன் சலாம் உரைத்து மெய் வருந்தல்
இந்த மா நிலத்து இற்றை நும் இனத்தவர் இடரால்
அந்த நாயகன் அமரரில் வரைக்கு அரசவரை
உன்-தம் ஏவலுக்கு ஏவினன் என எடுத்துரைத்தார்

மேல்
$2.17.22

#2229
இறும்பினுக்கு அரசாகிய மலக்கு உமதிடத்தின்
உறும் பகை திரள் எத்தனையாகிலும் ஒடுக்கி
குறும்பினை தவிர்த்திட வருகுவர் என கூறி
புறம் பரந்த செம் கண்கடை அருளொடும் போனார்

மேல்
$2.17.23

#2230
உரு பொதிந்த நல் வடிவவர் உரைத்து ஒரு நொடிக்குள்
பருப்பதங்களுக்கு இறை செழும் தடம் சிறை பரப்பி
திருப்பு நீர் அலை கடல் வரை புவி திடுக்கிடவே
விருப்பமுற்று நம் நபியிடத்து அடுத்தனர் விரைவின்

மேல்
$2.17.24

#2231
வெற்பு அடங்கலும் கரங்களில் பிசைந்துவிட்டு எறிந்து
புற்புத கடல் இறைத்து ஒரு கடலினில் புகட்டி
பற்பமாக்கும் வெம் கனலையும் புகை அற படுத்தி
நிற்ப வீரமும் வலிமையும் படைத்த நல் நெறியார்

மேல்
$2.17.25

#2232
உதய மா கிரிக்கு ஒரு கரம் தடவுவர் ஒரு கை
புதைய மேல் கிரி தடவுவர் விண்ணை மண் புரள
சிதறி தீவகம் ஏழையும் கடலிடை சிதைப்பார்
விதியவன் விதித்திடும் அவை எவை எனும் விரதர்

மேல்
$2.17.26

#2233
ஒரு நொடிக்குள் அந்தரம் அடங்கலும் திரிந்து உலவி
ஒரு நொடிக்குள் இ வானகம் கவிந்தமட்டு உலவி
இரு மனத்தொடும் வர வரம் படைத்தவர் எழில் ஆர்
இரு செவி கொடுத்து ஏவலின்படிக்கு இசைந்திருப்பார்

மேல்
$2.17.27

#2234
சித்திர தட புய வரை முகம்மது திருமுன்
உத்தமத்தொடும் ஒடுங்கி நின்று ஒரு சலாம் உரைத்து
முத்த வெண் கதிரவர் இரும் எனும் மொழி கேட்டு
பத்தியாய் அருகு இருந்து ஒரு மொழி பகர்ந்திடுவார்

மேல்
$2.17.28

#2235
எ தலத்து உயிரினுக்கும் நல் உணவு அளித்து இரங்கும்
அத்தன் என்னை நும் ஏவலுக்கு அருளினன் அதனால்
இ தலத்தில் வந்து அடைந்தனன் இனி அருள் கடைக்கண்
வைத்திரேல் பணிவிடை தறுகிலன் மறை மதியோய்

மேல்
$2.17.29

#2236
அருந்தும் ஆர் அமுத கலிமா உரைக்கு அடங்காது
இருந்த ஊர் எவை பகைத்தவர் யாவர் நும் இதயம்
பொருந்திடா திசை எ திசை பொருவரா கதிர் மெய்
வருந்தல் செய்தவர் எவர் தெரிதர வழங்கிடுமே

மேல்
$2.17.30

#2237
செப்பினீரெனில் செறுநர்கள் திரளும் அ திசையும்
உப்பு வாரியுள் அமிழ்த்துவன் அலது ஒரு வரையால்
இ பெரும் புவிக்குள் அரைத்திடுகுவன் எளியேன்
துப்பு அறிந்திட வேண்டும் என்று இரவொடும் சொன்னார்

மேல்
$2.17.31

#2238
விண்டினுக்கு அரசு இவை பகர்ந்திட துளி விதிர்க்கும்
கொண்டல் அம் கவிகைக்கு இறை அகம் களிகூர்ந்து
மண்டலத்து உமது உரை வழி நடத்திடின் மறை நேர்
கண்டு தேறுவர் எவர் பொறை நிலத்தினில் கடனே

மேல்
$2.17.32

#2239
இறையவன் அருள்படிக்கு இடர் அடைந்தது என்னிடத்தில்
குறை இது என்று மா நிலத்தவர்-தமை குறைப்படுத்தல்
மறையின் நேர் அல வெகுளியை மனத்தினில் அடக்கி
நிறையில் நிற்பது பெரியவர்க்கு உரிய நல் நிலையே

மேல்
$2.17.33

#2240
மிக்க வன் குபிர் கொலை தொழில் மனத்தினை விடுத்திட்டு
இக்கணத்தில் நல் வழிப்படாரெனில் இவர் பயந்த
மக்களாயினும் நல் வழிக்கு ஒழுகுவர் மறையும்
திக்கு அடங்கலும் பரந்து தீன் நெறி முறை செயுமே

மேல்
$2.17.34

#2241
வான நாயகன் ஏவலுக்கு உரியவ மகிழ்வின்
யான் நினைத்திடும் பொழுதினில் வருக இற்றையினும்
தானம் மீதினில் செல்க என்று இசைத்தனர் தளரா
தான செய்கை ஈது என எழுந்தனர் மலைக்கு அரசர்

மேல்
$2.17.35

#2242
உள்ளம் மீதில் அன்பொடும் நபிக்கு உயர் சலாம் உரைத்து
வெள்ளிடை படர்ந்து அவண் அடைந்தனர் மலர் விரிந்து
கள் அலம்பிய பொழில் செறி கர்னுத ஆலிப்
வள்ளலார் இருந்தனர் புவியிடை எழு மதி போல்

மேல்

18 அத்தாசு ஈமான் கொண்ட படலம்

$2.18.1

#2243
மறை கலை புகழ்ந்த செவ்வி முகம்மது தனித்து தாக
நிறையொடும் பசியும் துன்னி நீள் நெறி இருப்ப அ ஊர்
இறபீஆ புதல்வர்-தம்மில் இருவர்கள் இனிது நோக்கி
குறைவு இலா மனத்தின் ஓர்ந்து மனையிடம் குறுகினாரால்

மேல்
$2.18.2

#2244
அன்னவர் தொழும்பன் அத்தாசு என்பவன் அவனை கூவி
கன்னல் அம் சுவையின் மிக்காம் திருகையின் கனியை ஏந்தி
இன்னணம் கொடுபோய் ஆண்டின் இருப்பவர் கரத்தின் ஈந்து
பன்ன அரும் பசியை மாற்றி வா என பரிவில் சொன்னார்

மேல்
$2.18.3

#2245
காசு அறும் தட்டத்து இட்ட பழத்தினை கரத்தில் ஏந்தி
தூசினில் பொதிந்து தோளில் சுமந்து அரு நெறியை முன்னி
பாசடை தருக்கள் யாவும் பல மலர் சொரிய வாய்ந்த
வாசம் ஊடு உலவும் செவ்வி முகம்மது திருமுன் வைத்தான்

மேல்
$2.18.4

#2246
கனியினை கொணர்ந்து வைத்தோன் செம் முகம் கவின நோக்கி
இனிதினில் இருக்கை ஈந்திட்டு எழில் செழும் கமல கையால்
பனி மலர் துகிலை நீத்து பழத்தினை தீண்டி இன்பம்
அனைய நல் பிசுமில் ஓதி அமுது என நுகர்தல் செய்தார்

மேல்
$2.18.5

#2247
பண்ணினும் இனிய தேன் சார் பழத்தினில் பசியை போக்கி
உள் நிறை உவகை கூர்ந்து எ ஊரவன் நின் பேர் ஏது என்று
அண்ணலும் உரைப்ப செவ்வி அகம் மகிழ்ந்து அத்தாசு என்போன்
புண்ணிய பொருளே என்ன போற்றி வாய் புதைத்து சொல்வான்

மேல்
$2.18.6

#2248
நள் என உலகின் ஊழின் வரு நசுறானி மார்க்கத்து
உள்ளவன் நீனவா என்று ஓதிய ஊரின் உள்ளேன்
தெள்ளியன் இறபீஆ-தன் திரு மனைக்கு இணகன் சேந்த
வள் இலை வேலோய் அத்தாசு என்பவன் அடியேன் என்றான்

மேல்
$2.18.7

#2249
விரிந்த முன் மறைகள் தேர்ந்து மெய் நெறி முறைமை நாளும்
பிரிந்திடாது உறை யூனூசு நபி எனும் பெயரின் வள்ளல்
இருந்த ஊரவனோ என்றார் இனிதின் முன்னவரை இன்னோர்
தெரிந்தவாறு எவ்வாறு என்ன சிந்தையுள் சிந்தித்தானே

மேல்
$2.18.8

#2250
பொன்_உலகு அமரர் போற்ற பூவிடை இருந்த யூனுசு
என்னும் நல் நபியை நீவிர் எவ்வணம் அறிவீர் என்ன
நல் நிலையொடும் அதாசு நவின்றனன் வணங்கிலாத
மன்னவர்க்கு உருமேறு என்ன வரும் முகம்மது பின் சொல்வார்

மேல்
$2.18.9

#2251
படியிடத்தினில் யூனூசு நபி எனும் பட்டம் பெற்றோர்
நெடியவன் தூதர் யானும் நபி எனும் நிலைமை பெற்றேன்
வடிவுளோய் அதனால் எற்கும் மன் உயிர் துணைவராகும்
அடல் நபிமாரும் என்றார் ஆரணம் கிடந்த வாயார்

மேல்
$2.18.10

#2252
நபிகளுக்கு அரசாய் வந்த நாயகம் உரைத்த மாற்றம்
செவியினில் புகுத உண்மை திரு நபி இவரே என்ன
தவிர்கிலாது உள்ளத்து உன்னி சரண் இணை இறைஞ்சி ஏத்தி
கவினுறும் கலிமா ஓதி கண் இணை களிப்ப நின்றான்

மேல்
$2.18.11

#2253
மக்க நல் நகரில் வாழும் முகம்மதுக்கு அத்தாசு என்போன்
இக்கணத்து ஈமான் கொண்டான் எனும் மொழி இறபீஆ-தன்
மக்கள் கேட்டு அறவும் நக்கி மாய வஞ்சகத்துள் புக்கி
சிக்கினன் தொழும்பன் யாம் என் செய்குவோம் என்ன நைந்தார்

மேல்
$2.18.12

#2254
மதி பகிர் நபிக்கு அன்பாக மந்திர கலிமா ஓதி
இதயம் ஒத்து இனிது ஈமான் கொண்டு இரு மன குபிரை நீத்து
பத மலர் துதித்து தேடா பலன் கதி படைத்தேன் என்ன
புதிய நல் வடிவன் ஆகி பொருவு இல் அத்தாசு போனான்

மேல்

19 ஜின்கள் ஈமான் கொண்ட படலம்

$2.19.1

#2255
படர்ந்து வண்டு இனம் தேன் உண்டு செவ்வழி பாடும் கஞ்ச
தடம் திகழ் கர்னுத ஆலிபு என்னும் அ தலத்தை நீந்தி
கடம்-தனில் குபிர் என்று ஓதும் களிறு அடு அரி ஏறு என்ன
நடந்து நன் நகுலா என்னும் தலத்தினை நண்ணினாரால்

மேல்
$2.19.2

#2256
பொங்கி நின்று அமரர் யாரும் பொன் அடி பரவி ஏத்தும்
அம் குலம் கவிகை வள்ளல் முகம்மது நகுலா-தன்னில்
தங்கினர் பறவை தத்தம் குடம்பையில் சார வாவி
பங்கயம் குவிய செம் கேழ் அரி மேல் பரவை சார்ந்தான்

மேல்
$2.19.3

#2257
அலரி மேல் கடலுள் புக்க அடர் இருள் படலம் சீப்ப
நிலவு கொப்பிளித்தது என்ன நீண்ட மெய் சோதி கால
நலன் உறு நகுலா என்ன நாட்டிய தலத்தின் ஓர் பால்
சலதர கவிகை ஓங்க தனித்து அவண் இருந்தார் இப்பால்

மேல்
$2.19.4

#2258
அலை கடல் திரைக்கு நாப்பண் ஆளியாசனத்தில் வைகி
உலகு எலாம் கொடுங்கோல் ஓச்சி ஒரு குடை நிழலில் தாங்கி
பல கலை மருவலார்க்கு படிறு எனும் படை நடாத்தும்
தலைமையன் சிறுமை கீழ்மை-தனை பெருமை-அதாய் கொண்டோன்

மேல்
$2.19.5

#2259
கொலையினுக்கு உரிய தந்தை கோள் உயிர் துணைவன் மாறா
நிலை கெடும் கரவுக்கு அன்பன் நிந்தனைக்கு உற்ற தம்பி
இலை பிழி மதுவுக்கு ஈன்ற சேயினும் இனியன் நீண்ட
உலகினின் மாயம் எல்லாம் ஓர் உரு எடுத்து நின்றோன்

மேல்
$2.19.6

#2260
எண்ணிறந்து அனைய காலம் இருந்து இறை ஏவல் மாறி
விண்ணுலகு இழந்து மெய்மை விதி மறை-தனக்கு நாணி
மண்ணிலத்து இருந்து வாழும் மானுடர் எவர்க்கும் வெய்ய
தண்ணியன் இபுலீசு என்னும் தனி பெரும் நாமத்தானே

மேல்
$2.19.7

#2261
மக்கள்-தம் குழுவின் வைகி மந்திர தலைவர் சூழ
மிக்க ஜின் சிலதை கூவி விறல் முகம்மதுவை நீவி
இக்கணத்து இற்றை போதில் எவ்விடத்து உறைந்தார் என்று என்
பக்கலில் உரைப்ப நோக்கி வம் என பரிவில் சொன்னான்

மேல்
$2.19.8

#2262
அரும் தவம் தவறி நின்ற அரசன் ஈது உரைப்ப கேட்டு
பெரும் தொகை குழுவினோடும் பெரிது எழுந்து ஆழி சூழ
இருந்த வையக திகாந்தம் எட்டினும் தேடி சென்று
பிரிந்ததில் ஒன்பான் ஜின்கள் பேர் அறபு அடைந்த அன்றே

மேல்
$2.19.9

#2263
அற்றையில் பொழுது இராவில் ரகசிய தொழுகை அன்பாய்
முற்றுற முடித்து வள்ளல் முதலவன்-தன்னை ஏத்தி
குற்றம் அற்று இரந்து நின்ற வசனத்தின் குறிப்பு காதின்
உற்று அடுத்து ஒருங்கு நோக்கி ஓர் இடத்து உறைந்த அன்றே

மேல்
$2.19.10

#2264
தரிப்பொடும் துஆவை ஓதி தனி நகுலாவின் ஓர் பால்
விருப்பொடும் இரப்ப கேட்டு மிக மகிழ்ந்து இதயம் நோக்கி
இருப்பது நபியே வாய் கொண்டு இசைப்பது புறுக்கான் என்ன
திருப்புதற்கு அரிதாய் நின்று ஜின்கள் மெய்சிலிர்த்த அன்றே

மேல்
$2.19.11

#2265
இ தினத்தினில் அன்பாக எழில் நபி கமல பாத
முத்தி பெற்று ஈமான் கொண்டு முதல் பவம் துடைப்போம் என்ன
ஒத்து இதமித்து தம்மில் ஒன்றுக்கொன்று உறுதி கூறி
பத்தி உள் இருத்தி நாட்டத்துடன் வெளிப்பட்ட அன்றே

மேல்
$2.19.12

#2266
பனியொடு திமிரம் மூடப்பட வரும் இரவின்-கண்ணே
தனி இருந்து எழில் மெய் சோதி தயங்கிய நபி முன்பாக
இனியவர் போல சென்று வந்தவாறு எடுத்து கூறி
கனி என நெகிழ்ந்த நெஞ்சில் கருத்தையும் கூறலுற்ற

மேல்
$2.19.13

#2267
பின் அணித்து ஆதி தூதர் பிறப்பர் என்று ஆதி நூல்கள்
பன்னியது உளது இன்று எங்கள் பார்வைகள் குளிர கண்டேம்
முன்னை நாள் பவங்கள் தீர்த்தே முகம்மதே என்ன போற்றி
சொல் நய கலிமா ஓதி சுடர் பதம் தொழுது போன

மேல்
$2.19.14

#2268
நன் கலிமாவை ஓதி நறு மன களிப்பினோடும்
ஜின்கள்-தம் இனத்தை சேர்ந்து சென்றதும் அறபு நாட்டின்
மின் கடந்து இலங்கும் சோதி விரிந்த மெய் முகம்மது என்னும்
கொன் கதிர் வேலார்க்கு ஈமான் கொண்டதும் உரைத்து கூறும்

மேல்
$2.19.15

#2269
பூதலத்து இடத்தின் மக்கா புரத்தினில் முகம்மது என்போர்க்கு
ஆதி-தன் அருளால் தூது என்று அரும் நபி பட்டம் வந்து
வேதமும் இறங்கித்து இன்ப தீன் நெறி விளக்கம் செய்தார்
பேதம்-அது அன்று காணாது இருப்பதும் பிழை-அது அன்றே

மேல்
$2.19.16

#2270
வஞ்சகன் இபுலீசு என்போன் வார்த்தை உள் அடங்கி பேதை
நெஞ்சினர் ஆகி தீயோர் என நிலை நின்றோம் வேறு ஒன்று
அஞ்சலித்து அறியோம் நல்லோர்க்கு அவம் விளைத்தோம் ஈது எல்லாம்
நஞ்சு உறை நரகம் புக்கும் நெறி அலால் நலனும் உண்டோ

மேல்
$2.19.17

#2271
நபி திரு பாதம் நண்ணி நல் நெறி முறை வழாதோர்
புவியிடத்து இனிது வாழ்ந்து பொன்_உலகு ஆள்வர் என்றார்
கவின் உறும் பெரியோர் வேதம் காட்டிய நெறியும் ஈதே
தவிர்கிலாது எழுக என்ன சாற்றின ஜின்கள் அன்றே

மேல்
$2.19.18

#2272
கூறிய மொழியை கேட்டு குழுவுடன் இருந்த ஜின்கள்
தேறிய கருத்து உள் ஒத்து தேர்ந்து எழுந்து அ இடம் நீந்தி
பேறு உடை மக்கம் என்னும் பெரும் பதி அடுத்து ஓர் ஜின்னை
ஈறிலான் தூதர்க்கு அன்பாய் தூதுவிட்டு இருத்த அன்றே

மேல்
$2.19.19

#2273
நறை கொளும் செவ்வி திண் தோள் நபி நகுலாவை நீந்தி
இறைவன் ஏவலினால் வானோர் எண்ணிலர் சூழ செல்வம்
குறைவு அறா மக்கம் என்னும் கொழு நகர்-அதனின் வந்தார்
மறைபட இருந்து ஜின்கள் வரவிடும் தூதும் வந்த

மேல்
$2.19.20

#2274
வந்த தூது இருந்த செவ்வி மதி முகம்மதுவை கண்டு
கந்த மென் மலர் தாள் வீழ்ந்து கை குவித்து எழுந்து போற்றி
சிந்தையில் மகிழ்ந்து அன்பாக ஜின்களால் விடுக்க வந்த
சந்து யான் என்ன சாற்றி பின்னரும் சாற்றும் அன்றே

மேல்
$2.19.21

#2275
எங்கள்-தம் குலத்தின் உள்ளார் எண்ணிலர் நகர்க்கு அணித்தாய்
மங்குலின் கவிகையோய் நும் மலர் பதம் கண்டு தீனின்
இங்கிதத்தொடும் ஈமான் கொண்டு ஏகுதற்கு இசைந்து நின்றார்
அங்கு எழுந்தருள வேண்டும் என்று இனிது அறைந்தது அன்றே

மேல்
$2.19.22

#2276
ஜின் இவை உரைப்ப கஞ்ச செழும் முகம் மலர்ந்து வேதம்
பன்னிய பிசுமில் ஓதி பண்புடன் எழுந்து வள்ளல்
பொன் அணி மாட வீதி நகர் புறத்து அடுத்து கூண்டு
மன்னிய குழுவின் வந்தார் மா நிலம் தழைக்க வந்தார்

மேல்
$2.19.23

#2277
கரு முகில் நிழற்ற கஞ்ச கதம் தரை படாது நானம்
பொருவு அற கமழ வந்த புண்ணிய பொருளை கண்டு
திருமுகத்து எதிர்ந்து ஜின்கள் திரளொடும் இறைஞ்சி வாழ்த்தி
பருவரல் அகற்றி தேற சில மொழி பகரும் அன்றே

மேல்
$2.19.24

#2278
வானகத்து அமரர் செய்ய மலர் அடி பரவி ஏத்த
நானிலத்து அரிய வேத நபி எனும் பட்டம் நும்-பால்
ஆனதற்கு உரித்தாய் எங்கள் அகத்தினில் களங்கம் என்னும்
ஊனம் அற்றிட வேறு உண்மை உறுதி ஒன்று அறிய வேண்டும்

மேல்
$2.19.25

#2279
வன் களங்கு அகற்றி தீனின் வழி நிலை குறித்து வந்த
ஜின்களில் தலைமையான ஜின்கள் இ உரையை தேற்ற
பொன் கடந்து ஒளிரும் திண் தோள் புரவலர் இறசூலுல்லா
இன் களிப்பு ஒழுக நோக்கி எடுத்து உரைகொடுப்பதானார்

மேல்
$2.19.26

#2280
குவடு உறை விலங்கினாலோ கொழும் சிறை பறவையாலோ
தவழ்தரும் உயிரினாலோ தருக்களினாலோ உங்கள்
செவி அறிந்து இதயம் கூர்ந்து தெரிதர என்னை இந்த
அவனியில் உண்மை தூது என்று அறியவேண்டுவதே தென்றார்

மேல்
$2.19.27

#2281
பேதம் அற்று உரைத்தீர் சோதி பெருகு தீன் விளக்கே இந்த
பாதையில் தரு வந்து எங்கள் பார்வையிற்கு அணித்தாய் நின்று
தூதுவர் என்று ஓர் மாற்றம் சொல்லுமேல் கலிமா ஓதி
கோது அற மனத்துள் ஈமான் கொள்வது திண்ணம் என்ற

மேல்
$2.19.28

#2282
கடத்தின் மான் உரைப்ப நின்ற காரண குரிசில் தூரத்து
இடத்தினில் நின்ற வஞ்சி தருவினை எதிர்ந்து நோக்கி
படித்தலத்து உறைந்த வேரின் பற்று அறாது எழுந்து வெற்பின்
அடுத்து இவண் வா என்று இன்ப அமுத வாய் திறந்து சொன்னார்

மேல்
$2.19.29

#2283
பாசடை குழைத்த வஞ்சி தரு படி துளைத்து உள் ஓடி
வீசிய கவட்டு சில்லி வேரில் ஒன்று அறாத வண்ணம்
மாசு அற எழுந்து செவ்வி முகம்மதின் பாத நோக்கி
காசினியிடத்தில் தோய கவின் பெற படிந்தது அன்றே

மேல்
$2.19.30

#2284
பலன் உறும் கலிமா-தன்னை பணர் எனும் பல கை ஆர
நிலைபெறும் அறபினால் நல் நெடு நிலத்து எழுதி ஜின்கள்
குலனொடும் இனிது காண கொழும் தழை குழைய ஊர்ந்து
கலை முகம்மது-தம் முன் கண் களித்திட நின்றது அன்றே

மேல்
$2.19.31

#2285
நின்ற மா மரத்தை நோக்கி நெறிபட எவரும் கேட்ப
இன்று எனை இவர்கட்கு இன்னார் என எடுத்து இயம்புக என்ன
மன்றல் அம் குரிசில் கூற மலர் இலை குலுங்க வாடா
வென்றி கொள் இறையோன் உண்மை தூது என விளம்பிற்று அன்றே

மேல்
$2.19.32

#2286
சாடி இனிது எழுந்து வந்து தவறு இலாது உரைத்த மாற்றம்
கூடிய ஜின்கள் எல்லாம் செவி மனம் குளிர கேட்டு
நீடிய உவகை என்னும் நெடும் கடல் நீந்திநீந்தி
தேடிய பொருள் இது என்ன சேவடி சிரசில் கொண்ட

மேல்
$2.19.33

#2287
சீத மென் கவிகை நீழல் திரு நபி இறசூலுல்லா
பாத பங்கயத்தை முத்தி கண் மலர் பரிவில் சாத்தி
கோது அறும் கலிமா ஓதி குழுவொடும் ஈமான் கொண்டு
வேத நல் நிலைமை நீங்கா மெய் நெறி மேவி நின்ற

மேல்
$2.19.34

#2288
கலை நெறி பகரும் வள்ளல் கானக தருவை நோக்கி
உலைவு இலாது உனது தானத்து உறைக என உரைப்ப தீனில்
நலன் உறும் அபுல் காசீம்-தம் நல் இசை திசைகள்-தோறும்
நிலைபெற நின்றது என்ன நெறி சென்று நின்றது அன்றே

மேல்
$2.19.35

#2289
கணத்தொடும் ஜின்கள் வள்ளல் கமல மென் முகத்தை நோக்கி
இணைத்த நல் நெறியில் நின்றோம் இன்றுதொட்டு இனிமேல் உங்கட்கு
உண தக உணவு ஈது இன்னது என எடுத்துரையும் என்ன
பணித்து வாய் புதைத்து நின்று பண்புற பகர்ந்த அன்றே

மேல்
$2.19.36

#2290
பறவையில் விலங்கில் உள்ள படைப்பினில் தக்குபீரில்
இறையவன் விதித்த வண்ணத்து இறந்தது என்பவையும் நுங்கட்கு
உறை பசிக்கு உணவு என்று அன்பாய் ஓதினர் கேட்டு மீட்டு
மறு அற எங்கட்கு உற்ற வாகனத்து உணவு ஏது என்ற

மேல்
$2.19.37

#2291
தேறிய மறையின் தீம் சொல் தீன் நிலைக்கு உரிய தூயோர்
ஏறு வாகனம் தின்று அற்றது எவை உள அவைகள் எல்லாம்
மாறுபாடு அன்றி நுங்கள் வாகனத்து உணவே என்ன
கூறினர் பிணைக்கு யானே பிணை என கூறும் கொண்டல்

மேல்
$2.19.38

#2292
விரிதரும் அமுத செ வாய் திறந்து இவை விளம்ப கேட்டு
திரு முகத்து எதிர்ந்த பன்னீராயிரம் ஜின்கள் தங்கள்
சிரம் அடி மலரில் சேர்த்தி தீனவர்-தமையும் வாழ்த்தி
பரிவொடும் மகிழ்ந்து தத்தம் திசையினில் படர்ந்த அன்றே

மேல்
$2.19.39

#2293
பரவையும் விசும்பும் பாரும் படர்ந்து இருள் செறிந்து தோன்றும்
இரவினில் திரண்ட ஜின்கள் இனத்தினை ஈமான் கொள்வித்து
அரி அடல் ஏறு-அது என்ன அழகு ஒளி விரித்து காட்ட
மரு மலர் கரிய கூந்தல் மயில் உறை மனையின் வந்தார்

மேல்
$2.19.40

#2294
நெருங்கிய கங்குல் போதில் நிறைந்த வல் இருளை மோதி
இரும் கதிர் கரங்கள் ஆர எடுத்தெடுத்து எறிந்து சிந்தி
அரும் கணம் அனைத்தும் நாணி அகல் விசும்பு ஒளிப்ப நோக்கி
கரும் கடன் முகட்டில் வெய்ய கதிரவன் தோன்றினானே

மேல்
$2.19.41

#2295
காசினியிடத்தின் அற்றை காலையின் கடன்கள் தீர்த்து
நேசமுற்று உவந்து தீனோருடன் இனிது உறைந்து ஜின்கள்
மூசி வந்து ஈமான் கொண்டு போயதும் முறை வழாமல்
பேசி நல் உணவும் ஈந்த செய்தியும் பிறக்க சொல்வார்

மேல்
$2.19.42

#2296
மற சிலை கரத்தீர் தீனின் மானுடர் வாயின் மிச்சில்
இறைச்சி என்ப அனைத்தும் ஜின்கட்கு உணவு என ஈந்தேன் மேலும்
கறித்த என்பு இறைச்சி மிச்சில் என்பதை களங்கம் இல்லா
புறத்தினில் வீசல் யார்க்கும் கடன் என பொருந்த சொன்னார்

மேல்
$2.19.43

#2297
பூ மணம் பொருந்த காட்டும் புதுமை கண்டு அரிய ஜின்கள்
தாமதியாது கூடி தளத்தொடும் திரண்டு வந்து ஈ
மான் மனம் பொருந்திற்று என்ற வார்த்தையில் புளகம் கொண்டு
தே மலர் புயத்தார் போற்ற திரு நபி இருந்தார் இப்பால்

மேல்

20 காம்மாப் படலம்

$2.20.1

#2298
நரை ஒளி பிறங்க உடம்பு எலாம் திரைந்து நரம்புகள் தெரிந்திட வறந்து
தெரிதரும் கண் பாவையின் ஒளி மழுங்கி திரள்பட பீழையும் சாடி
தரிபடா நாசி துளையில் நீர் ததும்ப தைத்து அற கிழிந்தது ஓர் துணியும்
அரையிடை கிடந்து சரிந்து அடிக்கடி வீழ்ந்து அவிழ்ந்திட ஒரு கரம் தாங்க

மேல்
$2.20.2

#2299
உடல் குறை கூனும் செவி துளை அடைப்பும் ஒரு கையில் தடிக்குள் ஆதரவில்
நடக்கையில் நடக்கும் தலை கிடுகிடுப்பும் நனிதர அசைந்து தள்ளாடி
அடிக்கடி இளைப்பில் குலுக்கிய கனைப்பும் அற தவித்து எழுந்த கோலமுமாய்
இடுக்கணுற்று ஒருவன் முகம்மது நயினார் இருந்திடும் அவையகத்து எதிர்ந்தான்

மேல்
$2.20.3

#2300
உள்ளுற கிடந்த பல் அற பெயர்ந்த உதட்டினில் வாயில் நீர் ஒழுக
விள்ளுதற்கு அரிதாய் ஒரு சலாம் குழறி விளம்பி நின்றனன் முகம் நோக்கி
வள்ளலும் பிரத்தி உரைத்து இவன் சூமன் வங்கிசத்து உளன் ஒரு வேடத்து
எள்ளரும் குணத்தால் அடைந்தனன் இவன் கூறு ஈது என மனத்து இருத்தினரே

மேல்
$2.20.4

#2301
ஊன்றிய தடியில் கிடந்து உழன்று ஒதுங்கி நின்றவன் உழையினை நோக்கி
வான் திகழ் புகழார் திரு மொழி கொடுத்து வரவழைத்து ஒரு மருங்கு இருத்தி
ஈன்றவர் யாவர் எ வழிக்கு உளன் நின் இரும் குல பெயர் யாது உனக்கு
தோன்றிய நாமம் ஏது இவை விடுத்து சொல் என மீளவும் உரைத்தார்

மேல்
$2.20.5

#2302
நபி எனும் பெயர் பெற்றவர்க்கு எவர் கருத்தும் நன்குற தெரிந்திடும் விசும்பி
னவரினும் புதியோன் தூதரின் முதலோர் அவனியில் பின்வரும் நயினார்
இவர் கருத்து அறிய தெரிந்திடா பொருள்கள் இலை என கருத்தினில் இருத்தி
தவறு வந்ததும் தன் தலைமுறை பெயரும் தனித்தனி விடுத்து எடுத்துரைப்பான்

மேல்
$2.20.6

#2303
வான்_உலகு அடங்க தன்வசப்படுத்தி மறு அறும் பெயர்க்கு இடர் விளைத்து
பால் நிற வளை வெண் திரை கடல் பரப்பில் பகை அற ஒரு தனி கோலால்
தான் என செலுத்தி அரசு வீற்றிருந்தோன் தணப்பு இலா பெரும் படை உடையோன்
ஈனமுற்று ஒழியா மாயைகள் விளைக்கும் இயல் இபுலீசு எனும் பெயரோன்

மேல்
$2.20.7

#2304
அ பெரும் புகழோன் தரு திரு மதலை அவனினும் மும்மடங்கு ஆகி
மு பெரு நிலத்தும் தன் பெயர் நிறுத்தும் முறைமையன் ஆளியாசனத்தான்
ஒப்ப அரும் திறலான் இலாக்கி சென்று ஓங்கி உறும் பெயரினன் பெறும் புதல்வன்
கைப்படும் கதிர் வாள் பெரும் படைக்கு இறைவன் காயிம் என்று உரைத்த காவலவன்

மேல்
$2.20.8

#2305
காயிம் என்பவன்-தன் கண் இணை மணியாய் கருத்தின் உள் உறைந்த மெய்ப்பொருளாய்
சேய் என பிறந்தேன் இசைபெற காம்மா என்னும் அ பெயரினன் சிறியேன்
ஆயிரம் திருப்பேர்க்கு உரியவன் தூதே அமரருக்கு அரிய நாயகமே
மா இரும் புவி மானிடர் இடர் களையும் முகம்மதே என புகழ்ந்து இசைத்தான்

மேல்
$2.20.9

#2306
மருங்கினில் இருந்து பகர்ந்த காம்மா-தன் வார்த்தை கேட்டு அகத்தினில் களித்து
தரும் கதிர் தரள நகையின் புன்முறுவல் தர வரு விருத்தனை நோக்கி
நெருங்கிட வறந்த கால் தடுமாற நெடிது சஞ்சலத்தொடும் வருந்தி
இரும் கணம் அடுத்து என்னிடத்தினில் உறைந்தது என் நினைவு என எடுத்து இசைத்தார்

மேல்
$2.20.10

#2307
முன் நெடும் காலத்து இ பெரும் புவனம் முழுதினும் ஒரு குடை நீழல்
தன்னிடைப்படுத்தி நால் வகை கதத்த தளத்தொடும் ஒரு தனி கோலால்
மன்னிய திசைகள் பொது அற புரந்து மருவலர் இலை என தடிந்திட்டு
என்னை ஒப்பவர் இ நிலத்தினில் இலை என்று இருந்தனன் ஆளியாசனத்தில்

மேல்
$2.20.11

#2308
ஒரு தனி திகிரி செலுத்தி எ நிலமும் உள் அடிப்படுத்திடு நாளில்
பொருவு அரு மதத்தால் தவம் குணம் இரக்கம் பொறை நிறை புண்ணியம் பிறவும்
தெரிவராது இகழ்ந்து பவம் பழி தொடர செய் வழி முறைமையில் செய்தேன்
பெருகிய வலியும் சீர்த்தியும் உடையோய் பின் வரும் துன்பம் ஒன்று அறியேன்

மேல்
$2.20.12

#2309
தீவினைக்கு உரித்தாய் வரும் தொழில் அனைத்தும் செய்து அரசிருக்கும் அ நாளில்
பாவி என் உடலும் இதயமும் நடுங்க பார்த்து எனை கடிந்து வற்புறுத்தி
கூவி முன் இருத்தி தாள் பெருவிரல்கள் இரண்டையும் கூட்டுற நெருக்கி
நோ வர இறுக கட்டிவைத்து எழுந்து போயினன் ஒரு நொதுமலனே

மேல்
$2.20.13

#2310
காலினில் பிணித்த பிணிப்பினை வலிதில் கழற்றினன் நோக்கினன் கழலாது
ஓலிடும் கடக கரத்தினால் அவிழ்த்தேன் அவிழ்ந்திடாது ஒருங்கு நின்றவர்கள்
மேலுற வகிர்ந்தும் கருவியால் அறுத்தும் விரிந்த செம் நெருப்பிடை கொடுத்தும்
நூலளவெனினும் நெகிழ்ந்தில அதனின் வலியினை நுவலுதற்கு அரிதே

மேல்
$2.20.14

#2311
கட்டினால் மிகுதி வருத்தமுற்று ஒடுங்கி கலங்கினன் மலங்கினன் நெடு நாள்
விட்டிடாது இழைத்த பாவங்கள் திரண்டு வெகுண்டு ஒரு கயிற்று உரு எடுக்கப்
பட்டதோ அலது என் ஊழ் விதி பயனோ படி புரந்திடும் பெரும் பலனோ
கிட்டிய தவத்தோர் முனிந்திடும் முனிவோ என கிடந்தனன் மதியிலியேன்

மேல்
$2.20.15

#2312
அரசு இழந்து எனது கிளையினில் பெரியோரிடத்தினும் அடுத்தனன் அவரால்
ஒரு திருகு எடுத்து நெகிழ்க்கவும் பயமுற்று ஒடுங்கினர் பெரு வரையிடத்தும்
குரை கடலிடத்தும் எண் திசை புரக்கும் கொற்றவரிடத்தினும் அடைந்தேன்
இரும் என இருத்தி நோக்குவர் அலது என் இடர் தவிர்த்திடுபவர் இலையே

மேல்
$2.20.16

#2313
அந்தரம் புவிமட்டு உலவியும் கால் கட்டு அவிழ்க்க வல்லமையினர் இலை என்று
இந்தனம் எரியில் கிடந்து என இதயம் இடைந்திட உடைந்தனன் எளியேன்
புந்தி அற்று ஒடுங்கி அளவறும் காலம் போய பின் அவனியின் மனுவில்
சுந்தரத்தொடும் பேரறத்தொடும் உருவாய் தோன்றினர் ஆதம் என்று ஒருவர்

மேல்
$2.20.17

#2314
அவனியில் ஆதம் நபி எனும் பேர் பெற்று இருந்தனர் அவரிடத்து ஏகி
தவிர்கிலாது இடருற்றனன் என எளியேன் சாற்றினன் வீக்கினை நோக்கி
கவர் அற பிணித்த காவலன் அலது கட்டு அறுப்பவர் எவர் என்ன
குவிதரும் திரு வாய் விரிதர உரைத்தார் கொடியன் என் வலி குறைந்திடவே

மேல்
$2.20.18

#2315
இ உரை பகர்ந்தார் ஆதம் நல் நபி என்று இருந்தனன் வருந்தினன் அதன் பின்
குவ்வினில் நபிமார் என்னும் அ பெயர் பெற்றிருந்தவரிடம்-தொறும் குறுகி
செவ்விதின் உரைத்தேன் அவ்வவர் எவரும் திரு நபி முகம்மது என்பவரால்
வவ்விய தளை விட்டு அகன்றிடுமலது மறுத்து எவர் தவிர்ப்பர் என்று இசைத்தார்

மேல்
$2.20.19

#2316
அன்னவர் உரைத்த மொழி மனத்து அடக்கி இருந்தனன் அறிவு எனும் துணையால்
எ நெடும் காலத்து எ புவியிடத்தின் இனிதொடும் பிறப்பர் என்று எண்ணி
பன்னெடும் காலம் இது நினைவு அலது வேறு உரை பகர்ந்திருந்து அறியேன்
மன்னிய புகழார் முகம்மது பிறந்தார் எனும் உரை மறைகள் சொற்றனவே

மேல்
$2.20.20

#2317
புவியினில் அறத்தின் மக்க மா புரத்தில் பொது அற வேதமும் இறங்கி
நபி எனும் திரு பட்டமும் தரித்து அரிய நல் நிலை தீன் நெறி நடத்தி
குவி குபிர் அகற்றி இருந்தனர் என்ன கோது இலா மன மகிழ்வுடனே
இவணில் வந்து அடைந்தேன் இனி வினை பவங்கள் யாவையும் எளிதின் வென்றனனே

மேல்
$2.20.21

#2318
பதத்தினில் அடைந்த பாவி என் மனத்தில் பருவரல் களங்கு அற துடைத்து
கதத்தொடும் இறுக்கி வைத்த பாதகன்-தன் கட்டு அற கருணையில் படுத்தி
இதத்தொடும் உமது தீன் வழிக்கு உரியன் இவன் என நிறுத்தி மேலையினும்
விதித்த சொல் கடவாப்படி நடத்திடுக வேண்டும் என்று உரைத்து அடி வீழ்ந்தான்

மேல்
$2.20.22

#2319
இரங்கி நின்று இறைஞ்சி உரைத்த வாசகத்தை இரு செவி குளிர்தர கேட்டு
நெருங்கிட இறுக்கி வைத்தவர் பெயரை நினைத்து அருளொடும் முறுவலித்து
மருங்கினில் ஒடுங்கி இருந்த காம்மாவை விளித்து அணி மதுர வாய் திறந்து உன்
உரம் கெட இடுக்கண் விளைத்தவர் யாவர் உரை என முகம்மதும் உரைத்தார்

மேல்
$2.20.23

#2320
கட்டிவைத்து அகன்ற நாள் தொடுத்து அவன்-தன் பெயரினை கருத்தினில் அறியேன்
எட்டி எ தலத்தும் திரிந்தனன் இ ஊர் உளன் என அறிகிலேன் புவியின்
மட்டறும் குலத்தில் இ குலத்து இன்னான் மகவு என்றும் அறிகிலேன் எதிர்ந்து
கிட்டிடில் உரு கண்டு எளிதினில் அறிவேன் என கிளத்தினன் பெரும் கிளையோன்

மேல்
$2.20.24

#2321
கரு முகில் கவிகை நம் நபி காம்மா உரைத்த சொல் கருத்தினில் இருத்தி
குருதியும் தசையும் சிதறு செம் கதிர் வேல் கொழும் தட கரத்து அபித்தாலிபு
உரிய கண்மணியாய் வரும் அலி-தமை என்னுழையினில் கொடுவருக என்ன
பரிவினில் தூதை விடுத்தனர் அவரும் பண்புற விரைவொடும் எழுந்தார்

மேல்
$2.20.25

#2322
சிங்க ஏறு அனைய அலி திரு கரத்தில் செம் கதிர் வாள் கிடந்து இலங்க
தங்கிய மரவ தொடை புரண்டு அசைய தானவன் புலி வரல் நோக்கி
அங்கமும் மனமும் வெருவர திடுக்கிட்டு அலம்வர எழுந்து வாய் குழறி
பங்கமுற்று அயர்ந்திட்டு அடிக்கடி நோக்கி பதம் கரம் நனி நடுநடுங்கி

மேல்
$2.20.26

#2323
மன்னர்_மன்னவரை முகம்மதை நோக்கி வாய் வெளிறிட விழி சுழல
வெந்நிடை ஒளித்திட்டு ஒதுங்குற ஒடுங்கி விறல் புலி அலி-தமை தூண்டி
என்னையும் கெடுத்து என் அரசையும் அழித்திட்டு இத்தனைக்கு இயற்றிய சீமான்
அன்னவனலது வேறு இலை இனம் வந்து அடுக்கின் என் விளையுமோ அறியேன்

மேல்
$2.20.27

#2324
மெய்ப்பொருள் மறைக்கு நாயக பொருளே விண்ணவர் உயிரினுக்கு உயிரே
இ புவியிடத்தில் அடைக்கலம் அடியேன் எனை பிணித்து அடல் வலி எறிந்த
துப்பினன் ஈதோ அடுத்தனன் சற்றே தூர நின்றிட அருள் பணித்து என்
கைப்பட நும்-தம் கரம் கொடுத்து உயிரை காப்பது கடன் என கரைந்தான்

மேல்
$2.20.28

#2325
வெருவுறேல் காம்மா என கரம் அசைத்து விறல் புலி அலி-தமை நோக்கி
எரி கதிர் வேலோய் நம்மிடத்து அடைந்தோன் ஈங்கு இவன் இடர் உறும் இணை தாள்
பெருவிரல் தொடுப்பை விடுப்பை என்று இனிதின் பெரியவன் தூதுவர் உரைப்ப
அரி என மகிழ்ந்து நோக்கலும் கால் கட்டு அற்றிட துன்பமும் அறுந்த

மேல்
$2.20.29

#2326
கால் தளை அகல பயங்கரம் அகற்றி காவலர் முகம்மதை இறைஞ்சி
போற்றி நின்று அமுதம் எனும் கலிமாவை உரைத்து நல் வழியினில் புகுந்து
தேற்று நல் மறையின் முதியரை புகழ்ந்து செவ்வியர் அலி பதம் வழுத்தி
மாற்ற அரும் வேடம்-தனையும் விட்டு ஒழிந்து மதிவலான் என தனி நின்றான்

மேல்
$2.20.30

#2327
சீத ஒண் கதிர் செய் முகம்மதின் அடியில் சென்னி வைத்து அடிக்கடி புகழ்ந்து
கோது அற எழுந்து தீனவர் எவர்க்கும் குறைவு அற சலாம் எடுத்துரைத்து
காதலின் தீன்தீன் விளங்க என்று ஏத்தி கடி மலர் சோலையும் நீந்தி
மா தவம் பெருகும் மனத்தினன் காம்மா மன்னு தன் திசையினில் போனான்

மேல்

21 விருந்தூட்டுப் படலம்

$2.21.1

#2328
புவியில் இன்பம் பொருந்தி புகழ் பெறும்
நபி முகம்மது நண்பொடும் தம் கிளை
யவர்கட்கு அன்புற்று அரிய விருந்து என
கவலும் என்று அலிக்கு ஓதினர் காமுற்றே

மேல்
$2.21.2

#2329
தூய தூதுவர் ஓதிய சொல் மறா
நேயமுற்று எழுந்து அங்கு அவர் நீள் மனை
வாயில்-தோறும் நடந்து நல் வாக்கொடும்
போய் இருந்து விருந்து புகன்றனர்

மேல்
$2.21.3

#2330
மறுவி நாறும் முகம்மதுக்கு அன்புறும்
அறிவ அரும் அவர் ஐயர்க்கு முன்னரும்
சிறியதந்தையரும் அவர் சேய்களும்
உறவின் உற்றவரும் அவர் ஒக்கலும்

மேல்
$2.21.4

#2331
வன் திறல் புலி வாள் அலி முன் வர
மின் தவழ்ந்து அணி ஆரங்கள் வீசிட
தொன்று தோன்றிய தூதுவர் மா மனை
முன்றில் எங்கணும் மொய்த்திருந்தார்களால்

மேல்
$2.21.5

#2332
சிறியர் பேதையர் தீய் பசி தீண்டிய
வறியரல்லது வந்தவர் நாற்பஃது
அறிவர் ஹாஷிம் கிளைக்கு உயிராயினோர்
இறைவன் தூதுவர்க்கு இன்புறும் மாந்தரே

மேல்
$2.21.6

#2333
எடுத்து இறாத்தல் எனும் பதினாறு எடை
கொடுத்த பாலும் குடித்து ஒரு மேழக
தடி தசை சுடுகோலினில் தள்ளும் முன்
எடுத்து தின்பர் இவர் சிறியோர்களே

மேல்
$2.21.7

#2334
வரிசை வள்ளல் முகம்மது வந்து நின்று
உரிய கேளிருடன் உழையோரையும்
விரியும் காந்தி விரித்த விரிப்பின் மேல்
பரிவின் நீள் நவை பந்தி வைத்தார் அரோ

மேல்
$2.21.8

#2335
மாற்றலர்க்கு அரி ஏறு எனும் வள்ளலார்
தீற்று வெண் சுதை மாடத்துள் சென்று அட
ஊற்று பாலையும் ஊற்றிக்கொண்டு இங்ஙனம்
சோற்றையும் கொடுவா என சொல்லினார்

மேல்
$2.21.9

#2336
மருங்கு நின்றவர் மா மனையுள் புகுந்து
ஒருங்கிருந்த ஒரு படி சோற்றையும்
கருங்கல் என்னும் கலசத்தில் பாலையும்
தரும் கை வள்ளலிடம் கொடு சார்ந்தனர்

மேல்
$2.21.10

#2337
அருந்தும் சோற்றையும் பாலையும் அங்கையில்
ஒருத்தர் ஏந்தி உலாவுகின்றார் இவர்
வருத்தம் இன்றி வரவழைத்து ஆள் எலாம்
இருத்துகின்றனர் என் என கூறுவார்

மேல்
$2.21.11

#2338
இற்றை நாள் விருந்து என்ன இ ஊரினில்
சொற்றதில்லை தொன் மா மறை காரணத்து
உற்ற செய்தி அறிய என்று உன்னியோ
பற்றினால் இவர்-பால் அழைத்தார் என்பார்

மேல்
$2.21.12

#2339
இன்று வந்து இவர் முன்றில் இருந்தனம்
வென்றியாக விருந்து வழங்கிடும்
சொன்றியும் இவர் காரண தோற்றமும்
நன்று கண்டு அறிவோம் இனி நாம் என்பார்

மேல்
$2.21.13

#2340
இந்த வண்ணம் இவர்கள் இயம்பிட
வந்த நாயகன் தூதுவர் அன்பொடு
வந்த சோற்றையும் பாலையும் மன்னவர்
சிந்தை கூர சிறந்து அளித்தார் அரோ

மேல்
$2.21.14

#2341
சேரும் சீனியும் தேனும் ஒத்தால் என
மூரலும் அவை மூழ்கிய பாலையும்
வீரர் தங்கள் விலா புறம் வீங்கிட
ஆர உண்டனர் அங்கையில் வாரியே

மேல்
$2.21.15

#2342
மாதரும் சிறு மைந்தரும் மாந்தரும்
பேதம் அற்ற தம் இல் உறைபேர்களும்
கோது இலாது உண்டு பாலும் குடித்து இனி
போதும்போதும் என புகன்றார்களால்

மேல்
$2.21.16

#2343
உருசிக்கும்படி பாகம் செய் ஓர் படி
அரிசி சோறும் அரை படி பாலும் நல்
வரிசையாக வழங்கவழங்கவே
பெருகிற்றல்லது பின் குறைவு இல்லையால்

மேல்
$2.21.17

#2344
ஆகம் கூர்தர உண்டவர் யாவரும்
வாய் கை பூசி மகிழ்ந்து இனிது உற்ற பின்
பாகு வெள்ளிலை பாளிதம் சந்தனம்
ஓகை கூர உவந்து அளித்தார் அரோ

மேல்
$2.21.18

#2345
சோதி நாயகன் தூது எனும் வள்ளலுக்கு
ஈது எலாம் அரிதோ என ஏத்தி நின்று
ஓதி கை எடுத்து உற்ற சலாம் உரைத்து
ஆதரத்தொடும் அங்கு அவர் போயினார்

மேல்