நெ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெக்கு 3
நெக 3
நெகிழ்ச்சியும் 1
நெகிழ்ந்து 1
நெஞ்சகத்து 1
நெஞ்சம் 5
நெஞ்சமும் 1
நெஞ்சில் 2
நெஞ்சினில் 1
நெஞ்சினுள் 2
நெஞ்சினை 1
நெஞ்சு 7
நெஞ்சுளே 2
நெஞ்சே 1
நெடிய 1
நெடியானோடு 1
நெடு 7
நெடும் 12
நெடுமால் 1
நெய் 2
நெயால் 1
நெரித்த 1
நெரிய 1
நெருக்கி 1
நெருங்கி 2
நெருப்பே 1
நெருப்பொடு 1
நெற்றி 1
நெற்றிக்கண் 1
நெற்றியில் 1
நெறி 8
நெறிக்கே 1
நெறித்து 1
நெறிநின்றவர்கள் 1
நெறியில் 1
நெறியே 1

நெக்கு (3)

ஊழிதோறூழி உணர்ந்து உளம் கசிந்து நெக்கு நைந்து உளம் கரைந்து உருக்கும் – 3.கருவூர்:3 5/2
உள் நெகிழ்ந்து உடலம் நெக்கு முக்கண்ணா ஓலம் என்று ஓலமிட்டு ஒருநாள் – 3.கருவூர்:6 2/1
நெக்கு வீழ்தரு நெஞ்சினை பாய்தலும் நிறை அழிந்திருப்பேனை – 7.திருவாலி:2 2/2

மேல்

நெக (3)

வினைபடு நிறை போல் நிறைந்த வேதகத்து என் மனம் நெக மகிழ்ந்த பேரொளியே – 3.கருவூர்:4 6/2
எங்களை ஆளுடை ஈசனேயோ இள முலை முகம் நெக முயங்கி நின் பொன் – 8.புருடோத்தம:1 9/1
அட்டமூர்த்திக்கு என் அகம் நெக ஊறும் அமிர்தினுக்கு ஆல நிழல் – 10.சேந்தனார்:1 3/3

மேல்

நெகிழ்ச்சியும் (1)

நீவியும் நெகிழ்ச்சியும் நிறை அழிவும் நெஞ்சமும் தஞ்சம் இலாமையாலே – 8.புருடோத்தம:1 2/3

மேல்

நெகிழ்ந்து (1)

உள் நெகிழ்ந்து உடலம் நெக்கு முக்கண்ணா ஓலம் என்று ஓலமிட்டு ஒருநாள் – 3.கருவூர்:6 2/1

மேல்

நெஞ்சகத்து (1)

மங்குல் சூழ் போதின் ஒழிவற நிறைந்து வஞ்சகர் நெஞ்சகத்து ஒளிப்பார் – 3.கருவூர்:9 9/1

மேல்

நெஞ்சம் (5)

தொழிலை ஆழ் நெஞ்சம் இடர்படா வண்ணம் தூங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் – 3.கருவூர்:10 7/3
விடையது ஊர்வதும் மேவு இடம் கொடு வரை ஆகிலும் என் நெஞ்சம்
மடை கொள் வாளைகள் குதிகொளும் வயல் தில்லை அம்பலத்து அனல் ஆடும் – 7.திருவாலி:2 7/2,3
அம்பலத்து அரு நடம் ஆடவேயும் யாது-கொல் விளைவது என்று அஞ்சி நெஞ்சம்
உம்பர்கள் வன் பழியாளர் முன்னே ஊட்டினர் நஞ்சை என்றேயும் உய்யேன் – 8.புருடோத்தம:1 3/1,2
பெரும் புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை பேசவும் நையும் என் பேதை நெஞ்சம்
கரும் தட மலர் புரை கண்ட வண் தார் காரிகையார் முன்பு என் பெண்மை தோற்றேன் – 8.புருடோத்தம:1 5/2,3
அருள் பெற அலமரும் நெஞ்சம் ஆஆ ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே – 8.புருடோத்தம:1 10/4

மேல்

நெஞ்சமும் (1)

நீவியும் நெகிழ்ச்சியும் நிறை அழிவும் நெஞ்சமும் தஞ்சம் இலாமையாலே – 8.புருடோத்தம:1 2/3

மேல்

நெஞ்சில் (2)

சுற்று ஆய சோதி மகேந்திரம் சூழ மனத்து இருள் வாங்கி சூழாத நெஞ்சில்
குற்றாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 11/3,4
கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழு நீர் கிடை_அனாருடைய என் நெஞ்சில்
பாடிலா மணியே மணி உமிழ்ந்து ஒளிரும் பரமனே பன்னகாபரணா – 3.கருவூர்:4 4/1,2

மேல்

நெஞ்சினில் (1)

நெற்றியில் கண் என் கண்ணின்-நின்று அகலா நெஞ்சினில் அம் சிலம்பு அலைக்கும் – 3.கருவூர்:9 2/1

மேல்

நெஞ்சினுள் (2)

நுன கழல் இணை என் நெஞ்சினுள் இனிதா தொண்டனேன் நுகருமா நுகரே – 1.திருமாளிகை:1 7/4
நீடு அலங்காரத்து எம் பெருமக்கள் நெஞ்சினுள் நிறைந்து நின்றானை – 2.சேந்தனார்:1 12/2

மேல்

நெஞ்சினை (1)

நெக்கு வீழ்தரு நெஞ்சினை பாய்தலும் நிறை அழிந்திருப்பேனை – 7.திருவாலி:2 2/2

மேல்

நெஞ்சு (7)

மிக்க நெஞ்சு அரக்கன் புரம் கரி கருடன் மறலி வேள் இவர் மிகை செகுத்தோன் – 2.சேந்தனார்:1 10/2
நெஞ்சு இடர் அகல அகம் புகுந்து ஒடுங்கு நிலைமையோடு இருள் கிழித்து எழுந்த – 3.கருவூர்:1 6/1
திக்கு அடா நினைந்து நெஞ்சு இடிந்து உருகும் திறத்தவர் புறத்து இருந்து அலச – 3.கருவூர்:2 7/1
நீடினாய் எனினும் உள் புகுந்து அடியேன் நெஞ்சு எலாம் நிறைந்து நின்றாயே – 3.கருவூர்:4 4/4
நினைப்பு அரும் தம்-பால் சேறல் இன்றேனும் நெஞ்சு இடிந்து உருகுவது என்னோ – 3.கருவூர்:9 7/2
என் நெடும் கோயில் நெஞ்சு வீற்றிருந்த எளிமையை என்று நான் மறக்கேன் – 3.கருவூர்:9 8/2
வாடா வாய் நா பிதற்றி உனை நினைந்து நெஞ்சு உருகி – 6.வேணாட்டடிகள்:1 8/1

மேல்

நெஞ்சுளே (2)

நெற்றி நாட்டம் அன்றே நெஞ்சுளே திளைக்கின்றனவே – 7.திருவாலி:1 9/4
நேசமுடையவர்கள் நெஞ்சுளே இடம்கொண்டிருந்த – 7.திருவாலி:4 9/1

மேல்

நெஞ்சே (1)

நிரந்தரம் முனிவர் நினை திரு கணை கால் நினைந்து நின்று ஒழிந்தது என் நெஞ்சே – 1.திருமாளிகை:2 3/4

மேல்

நெடிய (1)

நெடிய சமணும் மறை சாக்கியரும் நிரம்பா பல் கோடி – 7.திருவாலி:3 10/1

மேல்

நெடியானோடு (1)

நெடியானோடு நான்முகன்னும் வானவரும் நெருங்கி – 5.கண்டராதித்:1 9/1

மேல்

நெடு (7)

பியர் நெடு மாடத்து அகில் புகை படலம் பெருகிய பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 1/2
செரு நெடு மேரு வில்லின் முப்புரம் தீ விரித்த சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 9/3
மலை குடைந்து அனைய நெடு நிலை மாட மருங்கு எலாம் மறையவர் முறை ஓத்து – 3.கருவூர்:2 1/3
பித்தனேன் மொழிந்த மணி நெடு மாலை பெரியவர்க்கு அகல் இரு விசும்பின் – 3.கருவூர்:3 11/3
சுருதி வானவனாம் திரு நெடு மாலாம் சுந்தர விசும்பின் இந்திரனாம் – 3.கருவூர்:6 5/1
நெடு நிலை மாடத்து இரவு இருள் கிழிக்க நிலை விளக்கு அலகு_இல் சாலேக – 3.கருவூர்:7 5/3
பல குலாம் படை செய் நெடு நிலை மாடம் பரு வரை ஞாங்கர் வெண் திங்கள் – 3.கருவூர்:9 1/3

மேல்

நெடும் (12)

நிறை தழை வாழை நிழல் கொடி நெடும் தெங்கு இளம் கமுகு உளம்கொள் நீள் பல மா – 1.திருமாளிகை:2 5/1
காடு ஆடு பல் கணம் சூழ கேழல் கடும்பின் நெடும் பகல் கான் நடந்த – 1.திருமாளிகை:3 2/1
வானே தடவு நெடும் குடுமி மகேந்திர மா மலை மேல் இருந்த – 1.திருமாளிகை:3 3/2
போக நாயகனை புயல்_வணற்கு அருளி பொன் நெடும் சிவிகையா ஊர்ந்த – 2.சேந்தனார்:1 1/2
மின் நெடும் கடலுள் வெள்ளத்தை வீழிமிழலையுள் விளங்கு வெண் பளிங்கின் – 2.சேந்தனார்:1 4/3
நீதி அறிகிலள் பொன் நெடும் திண் தோள் புணர நினைக்குமே – 2.சேந்தனார்:2 2/4
வழங்கு தேன் பொழியும் பவள வாய் முக்கண் வளர் ஒளி மணி நெடும் குன்றே – 3.கருவூர்:4 2/2
என் நெடும் கோயில் நெஞ்சு வீற்றிருந்த எளிமையை என்று நான் மறக்கேன் – 3.கருவூர்:9 8/2
மின் நெடும் புருவத்து இள மயில்_அனையார் விலங்கல் செய் நாடகசாலை – 3.கருவூர்:9 8/3
பொருள் மருந்து உடையோர் சிவபதம் என்னும் பொன் நெடும் குன்று உடையோரே – 3.கருவூர்:9 11/4
துரு கழல் நெடும் பேய் கணம் எழுந்து ஆடும் தூங்கு இருள் நடு நல் யாமத்தே – 3.கருவூர்:10 6/2
கோல மலர் நெடும் கண் கொவ்வை வாய் கொடி ஏர் இடையீர் – 7.திருவாலி:4 1/1

மேல்

நெடுமால் (1)

திரு நெடுமால் இந்திரன் அயன் வானோர் திருக்கடை காவலில் நெருக்கி – 1.திருமாளிகை:2 9/1

மேல்

நெய் (2)

இழுது நெய் சொரிந்து ஓம்பு அழல் ஒளி விளக்கு ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 3/4
பால் நெய் ஐந்துடன் ஆடிய படர் சடை பால்_வண்ணனே என்பன் – 7.திருவாலி:2 9/2

மேல்

நெயால் (1)

நா திரள் மறை ஓர்ந்து ஓமகுண்டத்து நறு நெயால் மறையவர் வளர்த்த – 3.கருவூர்:1 7/3

மேல்

நெரித்த (1)

மன்னு முடிகள் நெரித்த மணவாளர் – 8.புருடோத்தம:2 8/2

மேல்

நெரிய (1)

அதிர்த்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அருள் என்று – 7.திருவாலி:3 8/1

மேல்

நெருக்கி (1)

திரு நெடுமால் இந்திரன் அயன் வானோர் திருக்கடை காவலில் நெருக்கி
பெரு முடி மோதி உகு மணி முன்றில் பிறங்கிய பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 9/1,2

மேல்

நெருங்கி (2)

நெடியானோடு நான்முகன்னும் வானவரும் நெருங்கி
முடியால் முடிகள் மோதி உக்க முழு மணியின் திரளை – 5.கண்டராதித்:1 9/1,2
கூவி கவர்ந்து நெருங்கி குழாம்குழாமாய் நின்று கூத்து ஆடும் – 10.சேந்தனார்:1 6/2

மேல்

நெருப்பே (1)

நீறு அணி பவள குன்றமே நின்ற நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே
வேறு அணி புவன போகமே யோக வெள்ளமே மேரு வில் வீரா – 1.திருமாளிகை:1 6/1,2

மேல்

நெருப்பொடு (1)

நிரம்பாத பிறை தூவும் நெருப்பொடு நின் கையில் யாழ் – 3.கருவூர்:5 8/2

மேல்

நெற்றி (1)

நெற்றி நாட்டம் அன்றே நெஞ்சுளே திளைக்கின்றனவே – 7.திருவாலி:1 9/4

மேல்

நெற்றிக்கண் (1)

நீறு அணி பவள குன்றமே நின்ற நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே – 1.திருமாளிகை:1 6/1

மேல்

நெற்றியில் (1)

நெற்றியில் கண் என் கண்ணின்-நின்று அகலா நெஞ்சினில் அம் சிலம்பு அலைக்கும் – 3.கருவூர்:9 2/1

மேல்

நெறி (8)

இ தெய்வ நெறி நன்று என்று இருள் மாய பிறப்பு அறா இந்திரசால – 2.சேந்தனார்:1 5/1
பொய் தெய்வ நெறி நான் புகா வகை புரிந்த புராண சிந்தாமணி வைத்த – 2.சேந்தனார்:1 5/2
மெய் தெய்வ நெறி நான்மறையவர் வீழிமிழலை விண் இழி செழும் கோயில் – 2.சேந்தனார்:1 5/3
குன்றேந்தி கோகனகத்து அயன் அறியா நெறி என்னை கூட்டினாய் – 2.சேந்தனார்:2 10/1
செல்ல நெறி வகுத்த சேவகனே தென் தில்லை – 4.பூந்துருத்தி:2 3/2
புவலோக நெறி படைத்த புண்ணியங்கள் நண்ணிய சீர் – 4.பூந்துருத்தி:2 6/3
பின்னை பிறவி அறுக்க நெறி தந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 1/4
மாலும் அயனும் அறியா நெறி தந்து வந்து என் மனத்து அகத்தே – 10.சேந்தனார்:1 8/3

மேல்

நெறிக்கே (1)

திறம்பிய பிறவி சில தெய்வ நெறிக்கே திகைக்கின்றேன்-தனை திகையாமே – 1.திருமாளிகை:1 8/1

மேல்

நெறித்து (1)

ஒக்க விண்டு உருள ஒண் திரு புருவம் நெறித்து அருளிய உருத்திரனே – 1.திருமாளிகை:1 9/2

மேல்

நெறிநின்றவர்கள் (1)

நெறியே என்னும் நெறிநின்றவர்கள் நினைக்கின்ற நீதி வேதாந்த நிலை – 1.திருமாளிகை:3 4/3

மேல்

நெறியில் (1)

அ தெய்வ நெறியில் சிவம் அலாது அவமும் அறிவரோ அறிவுடையோரே – 2.சேந்தனார்:1 5/4

மேல்

நெறியே (1)

நெறியே என்னும் நெறிநின்றவர்கள் நினைக்கின்ற நீதி வேதாந்த நிலை – 1.திருமாளிகை:3 4/3

மேல்