சு – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


சுடர் (11)

சுடர் மணி விளக்கினுள் ஒளி விளங்கும் தூய நல் சோதியுள் சோதீ – 1.திருமாளிகை:1 2/2
சுரவா என்னும் சுடர் நீள் முடி மால் அயன் இந்திரன் முதல் தேவர்க்கு எல்லாம் – 1.திருமாளிகை:3 9/3
வெம் சுடர் சுடர்வ போன்று ஒளி துளும்பும் விரி சடை அடிகள்-தம் கோயில் – 3.கருவூர்:1 6/2
அம் சுடர் புரிசை ஆழி சூழ் வட்டத்து அகம் படி மணி நிரை பரந்த – 3.கருவூர்:1 6/3
செம் சுடர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 6/4
உம்பர் நாடு இம்பர் விளங்கியாங்கு எங்கும் ஒளி வளர் திரு மணி சுடர் கான்று – 3.கருவூர்:1 10/1
குடை கெழு நிருபர் முடியொடு முடி தேய்ந்து உக்க செம் சுடர் படு குவை ஓங்கு – 3.கருவூர்:9 3/3
சூழல் அம் பளிங்கின் பாசலர் ஆதி சுடர் விடு மண்டலம் பொலிய – 3.கருவூர்:9 4/2
சுனை பெரும் கலங்கல் பொய்கை அம் கழுநீர் சூழல் மாளிகை சுடர் வீசும் – 3.கருவூர்:9 7/3
துணி உமிழ் ஆடை அரையில் ஓர் ஆடை சுடர் உமிழ் தர அதன் அருகே – 3.கருவூர்:10 4/3
கரும் கண் நின்று இமைக்கும் செழும் சுடர் விளக்கம் கலந்து என கலந்து உணர் கருவூர் – 3.கருவூர்:10 10/2

மேல்

சுடர்வ (1)

வெம் சுடர் சுடர்வ போன்று ஒளி துளும்பும் விரி சடை அடிகள்-தம் கோயில் – 3.கருவூர்:1 6/2

மேல்

சுடராம் (1)

அங்கு அழல் சுடராம் அவர்க்கு இளவேனல் அலர் கதிர்_அனையர் வாழியரோ – 3.கருவூர்:9 9/2

மேல்

சுடராய் (2)

துணுக்கென அயனும் மாலும் தொடர்வு அரும் சுடராய் இப்பால் – 1.திருமாளிகை:4 4/1
மறைவனை மண்ணும் விண்ணும் மலி வான் சுடராய் மலிந்த – 7.திருவாலி:4 5/2

மேல்

சுடரினை (1)

என்னிடை கமலம் மூன்றினுள் தோன்றி எழும் செழும் சுடரினை அருள் சேர் – 2.சேந்தனார்:1 4/2

மேல்

சுடரே (3)

உன்னை என்-பால் வைத்து எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே
முன்னை என் பாசம் முழுவதும் அகல முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே – 3.கருவூர்:4 8/2,3
உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே
மொய்ம்பராய் நலம் சொல் மூதறிவாளர் முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே – 3.கருவூர்:4 9/2,3
ஒளி வான் சுடரே உன்னை நாயேன் உறுவதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 5/4

மேல்

சுடரோ (1)

பரிந்த செம் சுடரோ பரிதியோ மின்னோ பவளத்தின் குழவியோ பசும்பொன் – 2.சேந்தனார்:3 7/1

மேல்

சுந்தர (1)

சுருதி வானவனாம் திரு நெடு மாலாம் சுந்தர விசும்பின் இந்திரனாம் – 3.கருவூர்:6 5/1

மேல்

சுந்தரத்து (1)

சொரிந்த சிந்துரமோ தூ மணி திரளோ சுந்தரத்து அரசு இது என்ன – 2.சேந்தனார்:3 7/2

மேல்

சுந்தரனே (10)

சீர் ஓங்கும் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 1/4
செய்யாயோ அருள் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 2/4
செய்ஞ்ஞன்றி இலன் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 4/4
தேவா தென் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 5/4
செழு மதில் சூழ் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 6/4
செஞ்சாலி வயல் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 7/4
போது சொரி கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 8/4
தேறாள் தென் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 9/4
திருந்து விழவு அணி கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 10/4
சீர் அணைத்த பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 11/4

மேல்

சுப்பிரமண்ணியன் (1)

தூவி நல் பீலி மா மயில் ஊரும் சுப்பிரமண்ணியன் தானே – 2.சேந்தனார்:3 3/4

மேல்

சுரந்த (1)

ஆரணம் மொழிந்த பவள வாய் சுரந்த அமுதம் ஊறிய தமிழ் மாலை – 3.கருவூர்:2 10/3

மேல்

சுரவா (1)

சுரவா என்னும் சுடர் நீள் முடி மால் அயன் இந்திரன் முதல் தேவர்க்கு எல்லாம் – 1.திருமாளிகை:3 9/3

மேல்

சுரிகை (1)

உடுப்பு ஆய தோல் செருப்பு சுரிகை வராகம் முன் ஓடு விளி உளைப்ப – 1.திருமாளிகை:3 7/2

மேல்

சுருதி (3)

சோதி மதில் அணி சாந்தை மெய் சுருதி விதிவழியோர் தொழும் – 2.சேந்தனார்:2 2/2
சுருதி வானவனாம் திரு நெடு மாலாம் சுந்தர விசும்பின் இந்திரனாம் – 3.கருவூர்:6 5/1
சொல் ஆண்ட சுருதி பொருள் சோதித்த தூய் மன தொண்டர்_உள்ளீர் – 10.சேந்தனார்:1 4/1

மேல்

சுருதியை (1)

சொக்கர் அம்பலவர் என்னும் சுருதியை கருத மாட்டா – 1.திருமாளிகை:4 8/2

மேல்

சுரும்பு (1)

அ மனம் குளிர் நாள் பலிக்கு எழுந்தருள அரிவையர் அவிழ் குழல் சுரும்பு
பொம்மென முரலும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 6/3,4

மேல்

சுவாமியையே (1)

செழும் திரள் சோதி செப்புறை சேந்தன் வாய்ந்த சொல் இவை சுவாமியையே
செழும் தடம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 11/2,3

மேல்

சுழி (1)

உந்தி வான் சுழி என் உள்ளத்துள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 5/4

மேல்

சுழியம் (1)

சரியுமா சுழியம் குழை மிளிர்ந்து இரு பால் தாழ்ந்தவா காதுகள் கண்டம் – 3.கருவூர்:8 1/2

மேல்

சுழியமும் (1)

துண்ட வெண் பிறையும் படர் சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல – 3.கருவூர்:3 2/1

மேல்

சுற்றம் (1)

எந்தை எம் தாய் சுற்றம் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று – 10.சேந்தனார்:1 13/1

மேல்

சுற்று (1)

சுற்று ஆய சோதி மகேந்திரம் சூழ மனத்து இருள் வாங்கி சூழாத நெஞ்சில் – 1.திருமாளிகை:3 11/3

மேல்

சுனை (2)

தர வார் புனம் சுனை தாழ் அருவி தடம் கல் உறையும் மடங்கல் அமர் – 1.திருமாளிகை:3 9/1
சுனை பெரும் கலங்கல் பொய்கை அம் கழுநீர் சூழல் மாளிகை சுடர் வீசும் – 3.கருவூர்:9 7/3

மேல்