கு – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குங்குமம் 1
குஞ்சி 1
குடி 4
குடிகுடி 1
குடிகொண்டு 2
குடுமி 2
குடை 3
குடைந்து 3
குண்டாம் 1
குண்டையும் 1
குண 2
குணக்கடல் 1
குணக்குன்றே 11
குணங்களை 1
குணத்தர் 1
குணம் 1
குணமே 2
குதிகொளும் 1
குதிரை 1
குமர 1
குமரவேள் 1
குமுதமே 1
குயில் 1
குயிலினை 1
குரவம் 1
குரவா 1
குரா 1
குரு 2
குருகு 1
குருண்ட 2
குருளும் 1
குருளை 1
குரை 1
குல 1
குலக 1
குலம் 1
குலவும் 1
குலா 13
குலாம் 3
குலாவி 1
குலாவினரே 2
குவளை 3
குவளையே 1
குவால் 1
குவிந்த 1
குவிந்து 1
குவை 1
குவையும் 1
குழ 1
குழகரே 1
குழகன் 3
குழகனை 1
குழல் 12
குழலாள் 3
குழவியோ 1
குழாங்கள் 2
குழாங்கொடு 1
குழாத்தில் 1
குழாம் 2
குழாம்குழாமாய் 1
குழை 5
குழைத்த 1
குழையதே 1
குழையராய் 1
குழையும் 1
குழைவரே 1
குளம் 1
குளிர் 4
குளிர்ந்தனவே 1
குளிர 1
குற்றாய் 1
குற்றேவல் 1
குறங்கு 2
குறத்தி 1
குறவா 1
குறி 1
குறிக்கொளாது 1
குறிப்பு 1
குறியே 1
குறுக 1
குறுகலர் 1
குறுகாவே 1
குறுகி 1
குறுகுமாறு 1
குறைவு 1
குறைவு_இலாதார் 1
குன்ற 1
குன்றம் 1
குன்றமே 4
குன்றில் 1
குன்று 2
குன்றே 3
குன்றேந்தி 1

குங்குமம் (1)

சேலும் கயலும் திளைக்கும் கண் ஆர் இளம் கொங்கையில் செம் குங்குமம்
போலும் பொடி அணி மார்பு இலங்கும் என்று புண்ணியர் போற்றி இசைப்ப – 10.சேந்தனார்:1 8/1,2

மேல்

குஞ்சி (1)

குருண்ட பூம் குஞ்சி பிறை சடை முடி முக்கண் உடை கோமள கொழுந்தே – 2.சேந்தனார்:3 10/4

மேல்

குடி (4)

குழையராய் வந்து என் குடி முழுது ஆளும் குழகரே ஒழுகு நீர் கங்கை – 3.கருவூர்:2 4/3
பொன் திருவடி என் குடி முழுது ஆள புகுந்தன போந்தன இல்லை – 3.கருவூர்:9 2/2
குடி வாழ்க்கை கொண்டு நீ குலாவி கூத்தாடினையே – 4.பூந்துருத்தி:2 2/4
மழ விடையாற்கு வழிவழி ஆளாய் மணம்செய் குடி பிறந்த – 10.சேந்தனார்:1 11/3

மேல்

குடிகுடி (1)

கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட்செய்-மின் குழாம் புகுந்து – 10.சேந்தனார்:1 2/2

மேல்

குடிகொண்டு (2)

ஆறாத பேரன்பினவர் உள்ளம் குடிகொண்டு
வேறாக பலர் சூழ வீற்றிருத்தி அது கொண்டு – 3.கருவூர்:5 9/1,2
எம் மனம் குடிகொண்டு இருப்பதற்கு யான் ஆர் என் உடை அடிமைதான் யாதே – 3.கருவூர்:7 6/2

மேல்

குடுமி (2)

வானே தடவு நெடும் குடுமி மகேந்திர மா மலை மேல் இருந்த – 1.திருமாளிகை:3 3/2
கணம் விரி குடுமி செம் மணி கவை நா கறை அணல் கண் செவி பகு வாய் – 3.கருவூர்:1 1/1

மேல்

குடை (3)

கவள மா கரி மேல் கவரி சூழ் குடை கீழ் கனக குன்று என வரும் கள்வன் – 2.சேந்தனார்:3 2/2
குடை நிழல் விடை மேல் கொண்டு உலா போதும் குறிப்பு எனோ கோங்கு இணர் அனைய – 3.கருவூர்:9 3/2
குடை கெழு நிருபர் முடியொடு முடி தேய்ந்து உக்க செம் சுடர் படு குவை ஓங்கு – 3.கருவூர்:9 3/3

மேல்

குடைந்து (3)

புன்னை தேன் சொரியும் பொழிலகம் குடைந்து பொறி வரி வண்டு இனம் பாடும் – 3.கருவூர்:1 9/3
பொருந்து அரும் கருணை பரமர்-தம் கோயில் பொழிலகம் குடைந்து வண்டு உறங்க – 3.கருவூர்:1 11/3
மலை குடைந்து அனைய நெடு நிலை மாட மருங்கு எலாம் மறையவர் முறை ஓத்து – 3.கருவூர்:2 1/3

மேல்

குண்டாம் (1)

எக்கரை குண்டாம் மிண்ட எத்தரை புத்தர் ஆதி – 1.திருமாளிகை:4 8/3

மேல்

குண்டையும் (1)

குழை தவழ் செவியும் குளிர் சடை தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும் – 3.கருவூர்:3 7/2

மேல்

குண (2)

குரவா என்னும் குண குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 9/4
குண மணி குருளை கொவ்வை வாய் மடந்தை படும் இடர் குறிக்கொளாது அழகோ – 2.சேந்தனார்:3 5/1

மேல்

குணக்கடல் (1)

குலக அடியவர்க்கு என்னை ஆட்கொடுத்து ஆண்டுகொண்ட குணக்கடல்
அலது ஒன்று அறிகின்றிலேம் எனும் அணியும் வெண் நீறு அஞ்செழுத்து அலால் – 2.சேந்தனார்:2 5/2,3

மேல்

குணக்குன்றே (11)

குறவா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 1/4
கோடா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 2/4
கோனே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 3/4
குறியே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 4/4
கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 5/4
கொண்டாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 6/4
கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 7/4
கோவே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 8/4
குரு நீ என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 10/4
குற்றாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 11/4
கூறாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 12/4

மேல்

குணங்களை (1)

குணங்களை கூறா வீறு_இல் கோறை வாய் பீறல் பிண்ட – 1.திருமாளிகை:4 1/3

மேல்

குணத்தர் (1)

எண்_இல் பல் கோடி குணத்தர் ஏர் வீழி இவர் நம்மை ஆளுடையாரே – 2.சேந்தனார்:1 9/4

மேல்

குணம் (1)

கோலமே மேலை வானவர் கோவே குணம் குறி இறந்ததோர் குணமே – 1.திருமாளிகை:1 5/1

மேல்

குணமே (2)

கோலமே மேலை வானவர் கோவே குணம் குறி இறந்ததோர் குணமே
காலமே கங்கை நாயகா எங்கள் காலகாலா காம நாசா – 1.திருமாளிகை:1 5/1,2
கோன் அமர் கூத்தன் குல இளம் களிறு என் கொடிக்கு இடர் பயப்பதும் குணமே – 2.சேந்தனார்:3 4/4

மேல்

குதிகொளும் (1)

மடை கொள் வாளைகள் குதிகொளும் வயல் தில்லை அம்பலத்து அனல் ஆடும் – 7.திருவாலி:2 7/3

மேல்

குதிரை (1)

குதிரை மாவொடு தேர் பல குவிந்து ஈண்டு தில்லையுள் கொம்பு_அனாரொடு – 7.திருவாலி:1 6/1

மேல்

குமர (1)

அனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமரர் சேகரனே – 1.திருமாளிகை:1 7/3

மேல்

குமரவேள் (1)

மேல் உலாம் தேவர் குலம் முழுது ஆளும் குமரவேள் வள்ளி-தன் மணாளன் – 2.சேந்தனார்:3 1/2

மேல்

குமுதமே (1)

குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே இரு செவி ஒருபால் – 3.கருவூர்:2 9/1

மேல்

குயில் (1)

குருண்ட வார் குழல் கோதைமார் குயில் போல் மிழற்றிய கோல மாளிகை – 7.திருவாலி:1 3/1

மேல்

குயிலினை (1)

குருளும் வார் காதும் காட்டி யான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோ – 3.கருவூர்:9 6/2

மேல்

குரவம் (1)

குரவம் கோங்கம் குளிர் புன்னை கைதை குவிந்த கரைகள் மேல் – 7.திருவாலி:3 6/1

மேல்

குரவா (1)

குரவா என்னும் குண குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 9/4

மேல்

குரா (1)

திணம் மணி மாட திருவிடைக்கழியில் திரு குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 5/3

மேல்

குரு (2)

குரு நீ என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 10/4
கொண்டல் அம் கண்டத்து எம் குரு மணியை குறுக வல்வினை குறுகாவே – 2.சேந்தனார்:1 3/4

மேல்

குருகு (1)

கேதகை நிழலை குருகு என மருவி கெண்டைகள் வெருவு கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 9/3

மேல்

குருண்ட (2)

குருண்ட பூம் குஞ்சி பிறை சடை முடி முக்கண் உடை கோமள கொழுந்தே – 2.சேந்தனார்:3 10/4
குருண்ட வார் குழல் கோதைமார் குயில் போல் மிழற்றிய கோல மாளிகை – 7.திருவாலி:1 3/1

மேல்

குருளும் (1)

குருளும் வார் காதும் காட்டி யான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோ – 3.கருவூர்:9 6/2

மேல்

குருளை (1)

குண மணி குருளை கொவ்வை வாய் மடந்தை படும் இடர் குறிக்கொளாது அழகோ – 2.சேந்தனார்:3 5/1

மேல்

குரை (1)

கூர் நுனை வேல் படை கூற்றம் சாய குரை கழல் பணிகொள மலைந்தது என்றால் – 8.புருடோத்தம:1 7/2

மேல்

குல (1)

கோன் அமர் கூத்தன் குல இளம் களிறு என் கொடிக்கு இடர் பயப்பதும் குணமே – 2.சேந்தனார்:3 4/4

மேல்

குலக (1)

குலக அடியவர்க்கு என்னை ஆட்கொடுத்து ஆண்டுகொண்ட குணக்கடல் – 2.சேந்தனார்:2 5/2

மேல்

குலம் (1)

மேல் உலாம் தேவர் குலம் முழுது ஆளும் குமரவேள் வள்ளி-தன் மணாளன் – 2.சேந்தனார்:3 1/2

மேல்

குலவும் (1)

திக்கு எலாம் குலவும் புகழ் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ் – 2.சேந்தனார்:1 6/3

மேல்

குலா (13)

குறவா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 1/4
கோடா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 2/4
கோனே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 3/4
குறியே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 4/4
கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 5/4
கொண்டாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 6/4
கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 7/4
கோவே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 8/4
குரவா என்னும் குண குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 9/4
குரு நீ என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 10/4
குற்றாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 11/4
கூறாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 12/4
தன் அடி நிழல் கீழ் என்னையும் தகைத்த சசி குலா மவுலியை தானே – 2.சேந்தனார்:1 4/1

மேல்

குலாம் (3)

பல குலாம் படை செய் நெடு நிலை மாடம் பரு வரை ஞாங்கர் வெண் திங்கள் – 3.கருவூர்:9 1/3
இலை குலாம் பதணத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 1/4
பிறை குலாம் நுதல் பெய்_வளையே – 9.சேதிராயர்:1 8/4

மேல்

குலாவி (1)

குடி வாழ்க்கை கொண்டு நீ குலாவி கூத்தாடினையே – 4.பூந்துருத்தி:2 2/4

மேல்

குலாவினரே (2)

மிக்க சீர் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே – 4.பூந்துருத்தி:1 1/4
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே – 4.பூந்துருத்தி:1 2/4

மேல்

குவளை (3)

குவளை மா மலர் கண் நங்கையாள் நயக்கும் குழகன் நல் அழகன் நம் கோவே – 2.சேந்தனார்:3 2/4
கோவாத மணி முத்தும் குவளை மலர் சொரிந்தனவால் – 3.கருவூர்:5 5/2
குவளை மா மலர் கண்ணியும் கொன்றையும் துன்று பொன் குழல் திரு சடையும் – 7.திருவாலி:2 1/2

மேல்

குவளையே (1)

குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே இரு செவி ஒருபால் – 3.கருவூர்:2 9/1

மேல்

குவால் (1)

தரள வான் குன்றில் தண் நிலா ஒளியும் தரு குவால் பெருகு வான் தெருவில் – 3.கருவூர்:9 6/3

மேல்

குவிந்த (1)

குரவம் கோங்கம் குளிர் புன்னை கைதை குவிந்த கரைகள் மேல் – 7.திருவாலி:3 6/1

மேல்

குவிந்து (1)

குதிரை மாவொடு தேர் பல குவிந்து ஈண்டு தில்லையுள் கொம்பு_அனாரொடு – 7.திருவாலி:1 6/1

மேல்

குவை (1)

குடை கெழு நிருபர் முடியொடு முடி தேய்ந்து உக்க செம் சுடர் படு குவை ஓங்கு – 3.கருவூர்:9 3/3

மேல்

குவையும் (1)

பற்பத குவையும் பைம்பொன் மாளிகையும் பவள வாயவர் பணை முலையும் – 3.கருவூர்:6 3/3

மேல்

குழ (1)

கோ வினை பவள குழ மணக்கோல குழாங்கள் சூழ் கோழி வெல் கொடியோன் – 2.சேந்தனார்:3 3/1

மேல்

குழகரே (1)

குழையராய் வந்து என் குடி முழுது ஆளும் குழகரே ஒழுகு நீர் கங்கை – 3.கருவூர்:2 4/3

மேல்

குழகன் (3)

குவளை மா மலர் கண் நங்கையாள் நயக்கும் குழகன் நல் அழகன் நம் கோவே – 2.சேந்தனார்:3 2/4
கொத்து ஆர் சடைகள் தாழ நட்டம் குழகன் ஆடுமே – 7.திருவாலி:3 7/4
கொடியும் விடையும் உடைய கோல குழகன் ஆடுமே – 7.திருவாலி:3 10/4

மேல்

குழகனை (1)

கோவணம் கொண்டு வெண்தலை ஏந்தும் குழகனை அழகு எலாம் நிறைந்த – 3.கருவூர்:7 10/2

மேல்

குழல் (12)

தேர் மலி விழவில் குழல் ஒலி தெருவில் கூத்து ஒலி ஏத்து ஒலி ஓத்தின் – 1.திருமாளிகை:2 4/1
செழும் தென்றல் அன்றில் இ திங்கள் கங்குல் திரை வீரை தீம் குழல் சேவின் மணி – 1.திருமாளிகை:3 5/1
வண்டு ஆர் குழல் உமை நங்கை முன்னே மகேந்திர சாரல் வராகத்தின் பின் – 1.திருமாளிகை:3 6/1
முளை இளம் களிறு என் மொய் குழல் சிறுமிக்கு அருளும்-கொல் முருகவேள் பரிந்தே – 2.சேந்தனார்:3 6/4
துந்துபி குழல் யாழ் மொந்தை வான் இயம்ப தொடர்ந்து இருடியர் கணம் துதிப்ப – 3.கருவூர்:1 4/1
சரிந்த துகில் தளர்ந்த இடை அவிழ்ந்த குழல் இளம் தெரிவை – 3.கருவூர்:5 10/1
அ மனம் குளிர் நாள் பலிக்கு எழுந்தருள அரிவையர் அவிழ் குழல் சுரும்பு – 3.கருவூர்:7 6/3
மந்திர கீதம் தீம் குழல் எங்கும் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 2/4
குருண்ட வார் குழல் கோதைமார் குயில் போல் மிழற்றிய கோல மாளிகை – 7.திருவாலி:1 3/1
குவளை மா மலர் கண்ணியும் கொன்றையும் துன்று பொன் குழல் திரு சடையும் – 7.திருவாலி:2 1/2
வாச நல் மலர் அணி குழல் மடவார் வைகலும் கலந்து எழு மாலை பூசல் – 8.புருடோத்தம:1 11/2
குழல் ஒலி யாழ் ஒலி கூத்து ஒலி ஏத்து ஒலி எங்கும் குழாம் பெருகி – 10.சேந்தனார்:1 11/1

மேல்

குழலாள் (3)

மை நின்ற குழலாள் தன் மனம் தரவும் வளை தாராது – 3.கருவூர்:5 4/1
முழுவதும் நீ ஆயினும் இ மொய் குழலாள் மெய் முழுதும் – 3.கருவூர்:5 6/1
வேரி நல் குழலாள் இவள் விம்முமே – 9.சேதிராயர்:1 3/4

மேல்

குழவியோ (1)

பரிந்த செம் சுடரோ பரிதியோ மின்னோ பவளத்தின் குழவியோ பசும்பொன் – 2.சேந்தனார்:3 7/1

மேல்

குழாங்கள் (2)

கோ வினை பவள குழ மணக்கோல குழாங்கள் சூழ் கோழி வெல் கொடியோன் – 2.சேந்தனார்:3 3/1
தேர் ஆர் வீதியில் தேவர் குழாங்கள் திசை அனைத்தும் நிறைந்து – 10.சேந்தனார்:1 12/3

மேல்

குழாங்கொடு (1)

குழை தவழ் செவியும் குளிர் சடை தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும் – 3.கருவூர்:3 7/2

மேல்

குழாத்தில் (1)

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணி உடை ஆதிரை நாள் – 10.சேந்தனார்:1 12/1

மேல்

குழாம் (2)

கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட்செய்-மின் குழாம் புகுந்து – 10.சேந்தனார்:1 2/2
குழல் ஒலி யாழ் ஒலி கூத்து ஒலி ஏத்து ஒலி எங்கும் குழாம் பெருகி – 10.சேந்தனார்:1 11/1

மேல்

குழாம்குழாமாய் (1)

கூவி கவர்ந்து நெருங்கி குழாம்குழாமாய் நின்று கூத்து ஆடும் – 10.சேந்தனார்:1 6/2

மேல்

குழை (5)

கரு வடி குழை காது அமல செங்கமல மலர் முகம் கலந்தது என் கருத்தே – 1.திருமாளிகை:2 9/4
குழை தவழ் செவியும் குளிர் சடை தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும் – 3.கருவூர்:3 7/2
இன் நகை மழலை கங்கை கொங்கு இதழி இளம் பிறை குழை வளர் இள மான் – 3.கருவூர்:3 8/2
சரியுமா சுழியம் குழை மிளிர்ந்து இரு பால் தாழ்ந்தவா காதுகள் கண்டம் – 3.கருவூர்:8 1/2
கொழுந்தது ஆகிய கூத்தனே நின் குழை அணி காதினின் மாத்திரையும் – 8.புருடோத்தம:1 4/2

மேல்

குழைத்த (1)

கைவரும் பழனம் குழைத்த செம் சாலி கடைசியர் களை தரு நீலம் – 3.கருவூர்:1 2/3

மேல்

குழையதே (1)

குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே இரு செவி ஒருபால் – 3.கருவூர்:2 9/1

மேல்

குழையராய் (1)

குழையராய் வந்து என் குடி முழுது ஆளும் குழகரே ஒழுகு நீர் கங்கை – 3.கருவூர்:2 4/3

மேல்

குழையும் (1)

கண்டமும் குழையும் பவள வாய் இதழும் கண் நுதல் திலகமும் காட்டி – 3.கருவூர்:3 2/2

மேல்

குழைவரே (1)

கோலமே அச்சோ அழகிதே என்று குழைவரே கண்டவர் உண்ட – 3.கருவூர்:2 6/3

மேல்

குளம் (1)

பொசியாதோ கீழ் கொம்பு நிறை குளம் என்றது போல – 6.வேணாட்டடிகள்:1 3/1

மேல்

குளிர் (4)

குழை தவழ் செவியும் குளிர் சடை தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும் – 3.கருவூர்:3 7/2
நரம்பாலும் உயிர் ஈர்ந்தாய் நளிர் புரிசை குளிர் வனம் பாதிரம் – 3.கருவூர்:5 8/3
அ மனம் குளிர் நாள் பலிக்கு எழுந்தருள அரிவையர் அவிழ் குழல் சுரும்பு – 3.கருவூர்:7 6/3
குரவம் கோங்கம் குளிர் புன்னை கைதை குவிந்த கரைகள் மேல் – 7.திருவாலி:3 6/1

மேல்

குளிர்ந்தனவே (1)

கொற்றவன்-தன்னை கண்டுகண்டு உள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே – 2.சேந்தனார்:1 2/4

மேல்

குளிர (1)

கொற்றவன்-தன்னை கண்டுகண்டு உள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே – 2.சேந்தனார்:1 2/4

மேல்

குற்றாய் (1)

குற்றாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 11/4

மேல்

குற்றேவல் (1)

வீடாம் செய் குற்றேவல் எற்றே மற்று இது பொய்யில் – 6.வேணாட்டடிகள்:1 8/2

மேல்

குறங்கு (2)

வார் மலி முலையாள் வருடிய திரள் மா மணி குறங்கு அடைந்தது என் மதியே – 1.திருமாளிகை:2 4/4
திரண்ட வான் குறங்கு என் சிந்தையுள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 3/4

மேல்

குறத்தி (1)

இடம் கொள குறத்தி திறத்திலும் இறைவன் மற தொழில் வார்த்தையும் உடையன் – 2.சேந்தனார்:3 9/2

மேல்

குறவா (1)

குறவா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 1/4

மேல்

குறி (1)

கோலமே மேலை வானவர் கோவே குணம் குறி இறந்ததோர் குணமே – 1.திருமாளிகை:1 5/1

மேல்

குறிக்கொளாது (1)

குண மணி குருளை கொவ்வை வாய் மடந்தை படும் இடர் குறிக்கொளாது அழகோ – 2.சேந்தனார்:3 5/1

மேல்

குறிப்பு (1)

குடை நிழல் விடை மேல் கொண்டு உலா போதும் குறிப்பு எனோ கோங்கு இணர் அனைய – 3.கருவூர்:9 3/2

மேல்

குறியே (1)

குறியே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 4/4

மேல்

குறுக (1)

கொண்டல் அம் கண்டத்து எம் குரு மணியை குறுக வல்வினை குறுகாவே – 2.சேந்தனார்:1 3/4

மேல்

குறுகலர் (1)

கொண்ட நாண் பாம்பா பெரு வரை வில்லில் குறுகலர் புரங்கள் மூன்று எரித்த – 3.கருவூர்:6 6/3

மேல்

குறுகாவே (1)

கொண்டல் அம் கண்டத்து எம் குரு மணியை குறுக வல்வினை குறுகாவே – 2.சேந்தனார்:1 3/4

மேல்

குறுகி (1)

சீலமா பாடும் அடியவர் எல்லாம் சிவபதம் குறுகி நின்றாரே – 3.கருவூர்:4 10/4

மேல்

குறுகுமாறு (1)

கூடாமே கைவந்து குறுகுமாறு யான் உன்னை – 6.வேணாட்டடிகள்:1 8/3

மேல்

குறைவு (1)

ஆர் இனி அமரர்கள் குறைவு_இலாதார் அவரவர் படு துயர் களைய நின்ற – 8.புருடோத்தம:1 7/3

மேல்

குறைவு_இலாதார் (1)

ஆர் இனி அமரர்கள் குறைவு_இலாதார் அவரவர் படு துயர் களைய நின்ற – 8.புருடோத்தம:1 7/3

மேல்

குன்ற (1)

மருண்டு உறை கோயில் மல்கு நல் குன்ற பொழில் வளர் மகிழ் திருப்பிடவூர் – 2.சேந்தனார்:3 10/1

மேல்

குன்றம் (1)

பொன் ஆர் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னா – 5.கண்டராதித்:1 1/2

மேல்

குன்றமே (4)

நீறு அணி பவள குன்றமே நின்ற நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே – 1.திருமாளிகை:1 6/1
கோனே நின் மெய் அடியார் மன கருத்தை முடித்திடும் குன்றமே – 2.சேந்தனார்:2 9/4
கனகமே வெள்ளி குன்றமே என்றன் களைகணே களைகண் மற்று இல்லா – 3.கருவூர்:8 6/2
செம்பொனே பவள குன்றமே நின்ற திசைமுகன் மால் முதல் கூட்டத்து – 3.கருவூர்:8 7/1

மேல்

குன்றில் (1)

தரள வான் குன்றில் தண் நிலா ஒளியும் தரு குவால் பெருகு வான் தெருவில் – 3.கருவூர்:9 6/3

மேல்

குன்று (2)

கவள மா கரி மேல் கவரி சூழ் குடை கீழ் கனக குன்று என வரும் கள்வன் – 2.சேந்தனார்:3 2/2
பொருள் மருந்து உடையோர் சிவபதம் என்னும் பொன் நெடும் குன்று உடையோரே – 3.கருவூர்:9 11/4

மேல்

குன்றே (3)

தெளி வளர் பளிங்கின் திரள் மணி குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனே – 1.திருமாளிகை:1 1/2
குரவா என்னும் குண குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 9/4
வழங்கு தேன் பொழியும் பவள வாய் முக்கண் வளர் ஒளி மணி நெடும் குன்றே
முழங்கு தீம் புனல் பாய்ந்து இள வரால் உகளும் முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் – 3.கருவூர்:4 2/2,3

மேல்

குன்றேந்தி (1)

குன்றேந்தி கோகனகத்து அயன் அறியா நெறி என்னை கூட்டினாய் – 2.சேந்தனார்:2 10/1

மேல்