ஊ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


ஊட்டினர் (1)

உம்பர்கள் வன் பழியாளர் முன்னே ஊட்டினர் நஞ்சை என்றேயும் உய்யேன் – 8.புருடோத்தம:1 3/2

மேல்

ஊட்டினான் (1)

செற்று வன் புரம் தீ எழ சிலை கோலி ஆர் அழல் ஊட்டினான் அவன் – 7.திருவாலி:1 9/1

மேல்

ஊண் (2)

உண்ட ஊண் உனக்காம் வகை எனது உள்ளம் உள் கலந்து எழு பரஞ்சோதி – 3.கருவூர்:6 6/2
கழுது உறு கரிகாடு உறைவிடம் போர்வை கவந்திகை கரி உரி திரிந்து ஊண்
தழல் உமிழ் அரவம் கோவணம் பளிங்கு சப வடம் சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 3/2,3

மேல்

ஊத்தை (1)

சிணுக்கரை செத்தல் கொத்தை சிதம்பரை சீத்தை ஊத்தை
பிணுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 4/3,4

மேல்

ஊத (1)

புரிதரு மலரின் தாது நின்று ஊத போய்வரும் தும்பிகாள் இங்கே – 3.கருவூர்:3 3/2

மேல்

ஊர் (6)

விண்டு அலர் மலர்-வாய் வேரி வார் பொழில் சூழ் திருவீழிமிழலை ஊர் ஆளும் – 2.சேந்தனார்:1 3/3
வேடு அலங்கார கோலத்தின் அமுதை திருவீழிமிழலை ஊர் ஆளும் – 2.சேந்தனார்:1 12/3
மனக்கு இன்ப வெள்ள மலை_மகள் மணவாள நம்பி வண் சாந்தை ஊர்
தனக்கு இன்பன் ஆவடு தண் துறை தருணேந்து சேகரன் என்னுமே – 2.சேந்தனார்:2 3/3,4
தருணேந்து சேகரனே எனும் தடம் பொன்னி தென்கரை சாந்தை ஊர்
பொருள் நேர்ந்த சிந்தையவர் தொழ புகழ் செல்வம் மல்கு பொன் கோயிலுள் – 2.சேந்தனார்:2 4/1,2
ஊர் ஓங்கும் பழி பாராது உன்-பாலே விழுந்து ஒழிந்தேன் – 3.கருவூர்:5 1/3
காய் சின மால் விடை ஊர் கண்_நுதலை காமரு சீர் – 7.திருவாலி:4 9/2

மேல்

ஊர்க்கே (1)

ஊர்க்கே வந்து என் வளைகள் கொள்வாரோ ஒள்_நுதலீர் – 8.புருடோத்தம:2 10/4

மேல்

ஊர்ந்த (1)

போக நாயகனை புயல்_வணற்கு அருளி பொன் நெடும் சிவிகையா ஊர்ந்த
மேக நாயகனை மிகு திருவீழிமிழலை விண் இழி செழும் கோயில் – 2.சேந்தனார்:1 1/2,3

மேல்

ஊர்வதும் (1)

விடையது ஊர்வதும் மேவு இடம் கொடு வரை ஆகிலும் என் நெஞ்சம் – 7.திருவாலி:2 7/2

மேல்

ஊரும் (2)

தூவி நல் பீலி மா மயில் ஊரும் சுப்பிரமண்ணியன் தானே – 2.சேந்தனார்:3 3/4
ஊரும் உலகும் கழற உழறி உமை மணவாளனுக்கு ஆள் – 10.சேந்தனார்:1 7/3

மேல்

ஊழி-தோறு (1)

உருவத்து எரி உருவாய் ஊழி-தோறு எத்தனையும் – 4.பூந்துருத்தி:2 9/1

மேல்

ஊழிகளுடனாய் (1)

எந்தையும் தாயும் யானும் என்று இங்ஙன் எண்_இல் பல் ஊழிகளுடனாய்
வந்து அணுகாது நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 5/3,4

மேல்

ஊழிதோறூழி (1)

ஊழிதோறூழி உணர்ந்து உளம் கசிந்து நெக்கு நைந்து உளம் கரைந்து உருக்கும் – 3.கருவூர்:3 5/2

மேல்

ஊறல் (1)

உருக்கி என் உள்ளத்துள்ளே ஊறல் அம் தேறல் மாறா – 1.திருமாளிகை:4 7/1

மேல்

ஊறிய (2)

ஆரணம் மொழிந்த பவள வாய் சுரந்த அமுதம் ஊறிய தமிழ் மாலை – 3.கருவூர்:2 10/3
ஆவி உள் நிறுத்தி அமர்ந்து ஊறிய அன்பினராய் – 7.திருவாலி:1 11/2

மேல்

ஊறு (1)

ஒழிவு ஒன்று இலா உண்மை வண்ணமும் உலப்பிலள் ஊறு இன்ப வெள்ளமும் – 2.சேந்தனார்:2 8/1

மேல்

ஊறும் (1)

அட்டமூர்த்திக்கு என் அகம் நெக ஊறும் அமிர்தினுக்கு ஆல நிழல் – 10.சேந்தனார்:1 3/3

மேல்

ஊனம் (1)

ஊனம் இலா என் கை ஒளி வளைகள் கொள்வாரோ – 8.புருடோத்தம:2 1/2

மேல்