கீ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீண்ட (1)

கிளை இளம் சேய் அ கிரி-தனை கீண்ட ஆண்டகை கேடு_இல் வேல் செல்வன் – 2.சேந்தனார்:3 6/1

மேல்

கீண்டானுக்கு (1)

மடங்கலாய் கனகன் மார்பு கீண்டானுக்கு அருள் புரி வள்ளலே மருள் ஆர் – 1.திருமாளிகை:1 10/1

மேல்

கீதம் (3)

சாந்தமும் திருநீறு அரு மறை கீதம் சடை முடி சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 2/3
தந்திரி வீணை கீதம் முன் பாட சாதி கின்னரம் கலந்து ஒலிப்ப – 3.கருவூர்:10 2/3
மந்திர கீதம் தீம் குழல் எங்கும் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 2/4

மேல்

கீர்த்தி (3)

திசைக்கு மிக்கு உலவு கீர்த்தி தில்லை கூத்து உகந்து தீய – 1.திருமாளிகை:4 5/1
கேடு_இல் அம் கீர்த்தி கனக கற்பகத்தை கெழுமுதற்கு எவ்விடத்தேனே – 2.சேந்தனார்:1 12/4
திகை மிகு கீர்த்தி திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 8/3

மேல்

கீழ் (23)

நிறம் பொன்னும் மின்னும் நிறைந்த சேவடி கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே – 1.திருமாளிகை:1 8/2
அறம் பல திறம் கண்டு அரும் தவர்க்கு அரசாய் ஆலின் கீழ் இருந்த அம்பலவா – 1.திருமாளிகை:1 8/3
அடங்க வல் அரக்கன் அரட்டு இரு வரை கீழ் அடர்த்த பொன்னம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 10/3
பூ மலர் அடி கீழ் புராண பூதங்கள் பொறுப்பர் என் புன்சொலின் பொருளே – 1.திருமாளிகை:2 11/4
தன் அடி நிழல் கீழ் என்னையும் தகைத்த சசி குலா மவுலியை தானே – 2.சேந்தனார்:1 4/1
திக்கு எலாம் குலவும் புகழ் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ்
புக்கு நிற்பவர்-தம் பொன் அடி கமல பொடி அணிந்து அடிமை பூண்டேனே – 2.சேந்தனார்:1 6/3,4
திக்கு எலாம் நிறைந்த புகழ் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ்
புக்கு இருந்தவர்-தம் பொன் அடி கமல பொடி அணிந்து அடிமை பூண்டேனே – 2.சேந்தனார்:1 10/3,4
சேல் உலாம் கழனி திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 1/3
கவள மா கரி மேல் கவரி சூழ் குடை கீழ் கனக குன்று என வரும் கள்வன் – 2.சேந்தனார்:3 2/2
திவள் அம் மாளிகை சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 2/3
தேவின் நல் தலைவன் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 3/3
தேன் அமர் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 4/3
திணம் மணி மாட திருவிடைக்கழியில் திரு குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 5/3
திளை இளம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 6/3
தெரிந்தவை திகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 7/3
திகை மிகு கீர்த்தி திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 8/3
திடம் கொள் வைதிகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 9/3
தெருண்டவை திகர் வாழ் திருவிடை கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 10/3
செழும் தடம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 11/3
முரிவரே முனிவர் தம்மொடு ஆல் நிழல் கீழ் முறை தெரிந்து ஓர் உடம்பினராம் – 3.கருவூர்:2 3/2
கிரி தவழ் முகிலின் கீழ் தவழ் மாடம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 3/3
பொசியாதோ கீழ் கொம்பு நிறை குளம் என்றது போல – 6.வேணாட்டடிகள்:1 3/1
சீரும் திருவும் பொலிய சிவலோக நாயகன் சேவடி கீழ்
ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றது ஆர் பெறுவார் உலகில் – 10.சேந்தனார்:1 7/1,2

மேல்

கீழ்க்கீழ் (1)

உறைப்பு உடை அடியார் கீழ்க்கீழ் உறைப்பர் சேவடி நீறு ஆடார் – 1.திருமாளிகை:4 11/2

மேல்

கீழ்க்கோட்டூர் (11)

கிளர் ஒளி மணி வண்டு அறை பொழில் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
வளர் ஒளி மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே – 3.கருவூர்:3 1/3,4
கெண்டையும் கயலும் உகளும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
வண்டு அறை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே – 3.கருவூர்:3 2/3,4
கிரி தவழ் முகிலின் கீழ் தவழ் மாடம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
வரு திறல் மணி அம்பலவனை கண்டு என் மனத்தையும் கொண்டு போது-மினே – 3.கருவூர்:3 3/3,4
கிள்ளை பூம் பொதும்பில் கொஞ்சி மாம் பொழிற்கே கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
வள்ளலே மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே என்னும் என் மனனே – 3.கருவூர்:3 4/3,4
கேழலும் புள்ளும் ஆகி நின்று இருவர் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
வாழிய மணி அம்பலவனை காண்பான் மயங்கவும் மால் ஒழியோமே – 3.கருவூர்:3 5/3,4
கிஞ்சுக மணி வாய் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
மஞ்சு அணி மணி அம்பலவவோ என்று மயங்குவன் மாலையம் பொழுதே – 3.கருவூர்:3 6/3,4
கிழை தவழ் கனகம் பொழியும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
மழை தவழ் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தர்-தம் வாழ்வு போன்றதுவே – 3.கருவூர்:3 7/3,4
கின்னரம் முழவம் மழலை யாழ் வீணை கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
மன்னவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனத்துள் வைத்தனனே – 3.கருவூர்:3 8/3,4
கேதகை நிழலை குருகு என மருவி கெண்டைகள் வெருவு கீழ்க்கோட்டூர்
மாதவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் புகுந்தானே – 3.கருவூர்:3 9/3,4
கெந்தியா உகளும் கெண்டை புண்டரீகம் கிழிக்கும் தண் பணை செய் கீழ்க்கோட்டூர்
வந்த நாள் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே அறியும் என் மனமே – 3.கருவூர்:3 10/3,4
கித்தி நின்று ஆடும் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
மத்தனை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனை ஆரணம் பிதற்றும் – 3.கருவூர்:3 11/1,2

மேல்

கீழது (1)

உரு வளர் இன்ப சிலம்பு ஒலி அலம்பும் உன் அடி கீழது என் உயிரே – 1.திருமாளிகை:2 2/4

மேல்