நீ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


நீ (23)

எழுந்து இன்று என் மேல் பகையாட வாடும் எனை நீ நலிவது என் என்னே என்னும் – 1.திருமாளிகை:3 5/2
குரு நீ என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 10/4
என் செய்கோம் தோழி தோழி நீ துணையா இரவு போம் பகல் வருமாகில் – 3.கருவூர்:3 6/1
யாது நீ நினைவது எவரை யாம் உடையது எவர்களும் யாவையும் தானாய் – 3.கருவூர்:3 9/1
என்ன காரணம் நீ ஏழை நாய் அடியேற்கு எளிமையோ பெருமை ஆவதுவே – 3.கருவூர்:4 3/4
வினைபடும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானம் ஆயினதே – 3.கருவூர்:4 6/4
என்னை உன் பாத பங்கயம் பணிவித்து என்பு எலாம் உருக நீ எளிவந்து – 3.கருவூர்:4 8/1
அம்பரா அனலா அனிலமே புவி நீ அம்புவே இந்துவே இரவி – 3.கருவூர்:4 9/1
எம்பிரான் ஆகி ஆண்ட நீ மீண்டே எந்தையும் தாயும் ஆயினையே – 3.கருவூர்:4 9/4
ஐயா நீ உலா போந்த அன்று முதல் இன்று வரை – 3.கருவூர்:5 2/2
நீ வாராது ஒழிந்தாலும் நின்-பாலே விழுந்து ஏழை – 3.கருவூர்:5 5/1
முழுவதும் நீ ஆயினும் இ மொய் குழலாள் மெய் முழுதும் – 3.கருவூர்:5 6/1
அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேட அங்ஙனே பெரிய நீ சிறிய – 3.கருவூர்:6 1/1
நீ தலைப்பட்டால் யானும் அவ் வகையே நிசிசரர் இருவரோடு ஒருவர் – 3.கருவூர்:6 7/3
நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுன்னிடை ஒடுங்க நீ வந்து என் – 3.கருவூர்:6 9/3
சொல் நவில் முறை நான் காரணம் உணரா சூழல் புக்கு ஒளித்த நீ இன்று – 3.கருவூர்:7 7/1
அடியார் அமர் உலகம் ஆள நீ ஆளாதே – 4.பூந்துருத்தி:2 2/2
குடி வாழ்க்கை கொண்டு நீ குலாவி கூத்தாடினையே – 4.பூந்துருத்தி:2 2/4
புக லோகம் உண்டு என்று புகும் இடம் நீ தேடாதே – 4.பூந்துருத்தி:2 6/2
எச்சார்வும் இல்லாமை நீ அறிந்தும் எனது பணி – 6.வேணாட்டடிகள்:1 1/3
ஆளோ நீ உடையதுவும் அடியேன் உன் தாள் சேரும் – 6.வேணாட்டடிகள்:1 9/3
பல்லை ஆர் பசும் தலையோடு இடறி பாத மென் மலர் அடி நோவ நீ போய் – 8.புருடோத்தம:1 6/3
சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிது திருச்சிற்றம்பலத்து எங்கள் செல்வனே நீ
தாயினும் மிக நல்லை என்று அடைந்தேன் தனிமையை நினைகிலை சங்கரா உன் – 8.புருடோத்தம:1 8/1,2

மேல்

நீக்கிய (1)

பந்தபாசம் எலாம் அற பசு பாசம் நீக்கிய பல் முனிவரோடு – 7.திருவாலி:1 5/1

மேல்

நீங்குதற்கே (1)

தவள மா மணி பூம் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமை நீங்குதற்கே – 3.கருவூர்:4 1/4

மேல்

நீடினாய் (1)

நீடினாய் எனினும் உள் புகுந்து அடியேன் நெஞ்சு எலாம் நிறைந்து நின்றாயே – 3.கருவூர்:4 4/4

மேல்

நீடு (2)

திங்கள் நேர் தீண்ட நீண்ட மாளிகை சூழ் மாட நீடு உயர் திருவீழி – 2.சேந்தனார்:1 7/2
நீடு அலங்காரத்து எம் பெருமக்கள் நெஞ்சினுள் நிறைந்து நின்றானை – 2.சேந்தனார்:1 12/2

மேல்

நீண்ட (1)

திங்கள் நேர் தீண்ட நீண்ட மாளிகை சூழ் மாட நீடு உயர் திருவீழி – 2.சேந்தனார்:1 7/2

மேல்

நீத்து (1)

நிட்டை இலா உடல் நீத்து என்னை ஆண்ட நிகரிலா வண்ணங்களும் – 10.சேந்தனார்:1 3/1

மேல்

நீதி (2)

நெறியே என்னும் நெறிநின்றவர்கள் நினைக்கின்ற நீதி வேதாந்த நிலை – 1.திருமாளிகை:3 4/3
நீதி அறிகிலள் பொன் நெடும் திண் தோள் புணர நினைக்குமே – 2.சேந்தனார்:2 2/4

மேல்

நீந்தும் (1)

இவ் அரும் பிறவி பௌவ நீர் நீந்தும் ஏழையேற்கு என்னுடன் பிறந்த – 3.கருவூர்:1 2/1

மேல்

நீர் (30)

சிறைகொள் நீர் தரள திரள் கொள் நித்திலத்த செம்பொன் சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 5/3
நீர் கொள் செம் சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே – 1.திருமாளிகை:2 10/4
மறவா என்னும் மணி நீர் அருவி மகேந்திர மா மலை மேல் உறையும் – 1.திருமாளிகை:3 1/3
வரு நீர் அருவி மகேந்திர பொன் மலையில் மலை_மகளுக்கு அருளும் – 1.திருமாளிகை:3 10/3
கங்கை நீர் அரிசில் கரை இரு மருங்கும் கமழ் பொழில் தழுவிய கழனி – 2.சேந்தனார்:1 7/1
நினைக்கும் நிரந்தரனே என்னும் நிலா கோல செம் சடை கங்கை நீர்
நனைக்கும் நலம் கிளர் கொன்றை மேல் நயம் பேசும் நல் நுதல் நங்கைமீர் – 2.சேந்தனார்:2 3/1,2
சேலும் கயலும் திளைக்கும் நீர் திருவாவடுதுறை வேந்தனோடு – 2.சேந்தனார்:2 11/3
கண மணி பொரு நீர் கங்கை-தன் சிறுவன் கணபதி பின் இளங்கிளையே – 2.சேந்தனார்:3 5/4
இவ் அரும் பிறவி பௌவ நீர் நீந்தும் ஏழையேற்கு என்னுடன் பிறந்த – 3.கருவூர்:1 2/1
தீர்த்த நீர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 8/4
அலை கடல் முழங்கும் அம் தண் நீர் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 1/4
குழையராய் வந்து என் குடி முழுது ஆளும் குழகரே ஒழுகு நீர் கங்கை – 3.கருவூர்:2 4/3
கமலமே வதனம் கமலமே நயனம் கனகமே திருவடி நிலை நீர்
அமலமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 9/3,4
நீர் அணங்கு அசும்பு கழனி சூழ் களந்தை நிறை புகழ் ஆதித்தேச்சரத்து – 3.கருவூர்:2 10/1
தெளிர் ஒளி மணி நீர் திவலை முத்து அரும்பி திருமுகம் மலர்ந்து சொட்டு அட்ட – 3.கருவூர்:3 1/2
கெண்டையும் கயலும் உகளும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 2/3
கிழை தவழ் கனகம் பொழியும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 7/3
கல் நகா உள்ள கள்வனேன் நின்-கண் கசிவிலேன் கண்ணின் நீர் சொரியேன் – 3.கருவூர்:4 3/1
முன் நகா ஒழியேன் ஆயினும் செழு நீர் முகத்தலை அகத்து அமர்ந்து உறையும் – 3.கருவூர்:4 3/2
கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழு நீர் கிடை_அனாருடைய என் நெஞ்சில் – 3.கருவூர்:4 4/1
விரியும் நீர் ஆல கருமையின் சாந்தின் வெண்மையும் செந்நிறத்து ஒளியும் – 3.கருவூர்:4 7/1
நீர் ஓங்கி வளர் கமலம் நீர் பொருந்தா தன்மை அன்றே – 3.கருவூர்:5 1/1
நீர் ஓங்கி வளர் கமலம் நீர் பொருந்தா தன்மை அன்றே – 3.கருவூர்:5 1/1
மொய் கொள் எண் திக்கும் கண்ட நின் தொண்டர் முகம் மலர்ந்து இரு கண் நீர் அரும்ப – 3.கருவூர்:6 4/3
பண்ணிய தழல் காய் பால் அளாம் நீர் போல் பாவம் முன் பறைந்து பால் அனைய – 3.கருவூர்:6 9/1
தத்து நீர் படுகர் தண்டலை சூழல் சாட்டியக்குடியுள் ஏழ் இருக்கை – 3.கருவூர்:8 9/3
எற்று நீர் கிடங்கின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 2/4
ஐயன் ஆர் அழல் ஆடுவான் அணி நீர் வயல் தில்லை அம்பலத்தான் – 7.திருவாலி:1 1/3
எற்றி மா மணிகள் எறி நீர் தில்லை அம்பலவன் – 7.திருவாலி:1 9/2
முடியும் நீர் செய்த மூச்சறவே – 9.சேதிராயர்:1 7/4

மேல்

நீரொடு (1)

தூவி நீரொடு பூ அவை தொழுது ஏத்து கையினர் ஆகி மிக்கதோர் – 7.திருவாலி:1 11/1

மேல்

நீல (3)

திணி மணி நீல கண்டத்து என் அமுதே சீர் கொள் சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 8/3
துண்ட வெண் பிறையும் படர் சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல
கண்டமும் குழையும் பவள வாய் இதழும் கண் நுதல் திலகமும் காட்டி – 3.கருவூர்:3 2/1,2
கண்டனே நீல கண்டனே கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 6/4

மேல்

நீலகண்டன் (1)

பெரு நீலகண்டன் திறம் கொண்டு இவள் பிதற்றி பெரும் தெருவே திரியும் – 1.திருமாளிகை:3 10/2

மேல்

நீலம் (1)

கைவரும் பழனம் குழைத்த செம் சாலி கடைசியர் களை தரு நீலம்
செய் வரம்பு அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 2/3,4

மேல்

நீலமே (1)

நீலமே கண்டம் பவளமே திருவாய் நித்திலம் நிரைத்து இலங்கினவே – 3.கருவூர்:2 6/1

மேல்

நீவியும் (1)

நீவியும் நெகிழ்ச்சியும் நிறை அழிவும் நெஞ்சமும் தஞ்சம் இலாமையாலே – 8.புருடோத்தம:1 2/3

மேல்

நீழல் (11)

சேல் உலாம் கழனி திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 1/3
திவள் அம் மாளிகை சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 2/3
தேவின் நல் தலைவன் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 3/3
தேன் அமர் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 4/3
திணம் மணி மாட திருவிடைக்கழியில் திரு குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 5/3
திளை இளம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 6/3
தெரிந்தவை திகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 7/3
திகை மிகு கீர்த்தி திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 8/3
திடம் கொள் வைதிகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 9/3
தெருண்டவை திகர் வாழ் திருவிடை கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 10/3
செழும் தடம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 11/3

மேல்

நீள் (3)

நிறை தழை வாழை நிழல் கொடி நெடும் தெங்கு இளம் கமுகு உளம்கொள் நீள் பல மா – 1.திருமாளிகை:2 5/1
சுரவா என்னும் சுடர் நீள் முடி மால் அயன் இந்திரன் முதல் தேவர்க்கு எல்லாம் – 1.திருமாளிகை:3 9/3
திரளும் நீள் மணி கங்கையை திருச்சடை சேர்த்தி அ செய்யாளுக்கு – 7.திருவாலி:2 4/3

மேல்

நீற்று (1)

தழை தவழ் மொழுப்பும் தவள நீற்று ஒளியும் சங்கமும் சகடையின் முழக்கும் – 3.கருவூர்:3 7/1

மேல்

நீறது (1)

நசிக்க வெண் நீறது ஆடும் நமர்களை நணுகா நாய்கள் – 1.திருமாளிகை:4 5/2

மேல்

நீறவன் (1)

தெள்ளு நீறவன் நீறு என் உடல் விரும்பும் செவி அவன் அறிவு நூல் கேட்கும் – 3.கருவூர்:3 4/1

மேல்

நீறு (7)

நீறு அணி பவள குன்றமே நின்ற நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே – 1.திருமாளிகை:1 6/1
ஆய ஐந்தெழுத்தும் பிதற்றி பிணி தீர் வெண் நீறு இடப்பெற்றேன் என்னும் – 1.திருமாளிகை:3 11/2
உறைப்பு உடை அடியார் கீழ்க்கீழ் உறைப்பர் சேவடி நீறு ஆடார் – 1.திருமாளிகை:4 11/2
அலது ஒன்று அறிகின்றிலேம் எனும் அணியும் வெண் நீறு அஞ்செழுத்து அலால் – 2.சேந்தனார்:2 5/3
தெள்ளு நீறவன் நீறு என் உடல் விரும்பும் செவி அவன் அறிவு நூல் கேட்கும் – 3.கருவூர்:3 4/1
கரியும் நீறு ஆடும் கனலும் ஒத்து ஒளிரும் கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி – 3.கருவூர்:4 7/2
ஆர்வம்கொள தழுவி அணி நீறு என் முலைக்கு அணிய – 7.திருவாலி:4 8/2

மேல்

நீறும் (2)

அந்தி போல் உருவும் அந்தியில் பிறை சேர் அழகிய சடையும் வெண் நீறும்
சிந்தையால் நினையில் சிந்தையும் காணேன் செய்வது என் தெளி புனல் அலங்கல் – 3.கருவூர்:3 10/1,2
ஐய பொட்டிட்ட அழகு வாள் நுதலும் அழகிய விழியும் வெண் நீறும்
சைவம் விட்டிட்ட சடைகளும் சடை மேல் தரங்கமும் சதங்கையும் சிலம்பும் – 3.கருவூர்:6 4/1,2

மேல்