த – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்க 1
தக்கன் 5
தகைத்த 1
தங்கள் 2
தங்களோடு 1
தங்கு 2
தஞ்சம் 1
தஞ்சை 11
தஞ்சையர் 1
தஞ்சையர்_கோன் 1
தட 5
தடம் 13
தடமும் 1
தடவு 1
தடிந்தோன் 1
தடுப்பு 1
தண் 9
தண்டலை 2
தத் 1
தத்து 1
தத்தை 1
தந்த 2
தந்திரி 1
தந்து 4
தந்தையும் 1
தந்தையுமாம் 1
தபனிய 1
தம் 6
தம்-பால் 1
தம்மொடு 1
தமர்க்கு 1
தமருகத்து 1
தமருகம் 2
தமியனேன் 1
தமியேன் 1
தமியேனை 1
தமிழ் 10
தமிழ்கள் 1
தமிழால் 1
தமிழும் 1
தயாவை 1
தர 2
தரங்கமும் 1
தரத்தார் 1
தரவும் 1
தரள 4
தரு 6
தருணேந்து 2
தரும் 3
தலத்து 2
தலத்துள் 1
தலை 2
தலைப்பட்டால் 1
தலைப்பட்டு 1
தலையும் 3
தலையை 1
தலையோடு 1
தலைவவோ 1
தலைவன் 1
தலைவனும் 1
தலைவனே 1
தவ 1
தவத்தாயை 1
தவர்க்கு 1
தவழ் 11
தவள 4
தவள_வண்ணனை 1
தவளமே 3
தழல் 7
தழீஇ 1
தழுவி 1
தழுவிய 1
தழை 3
தளர்ந்த 1
தளர்வித்ததே 1
தளிர் 2
தன் 6
தன்-பால் 1
தன்மை 1
தன்மையர் 1
தன்மையால் 1
தன்மையாளர் 1
தன்மையில் 1
தன்னை 1
தனக்கு 1
தனத்தினை 1
தனதன் 1
தனபதி 1
தனி 7
தனிமை 1
தனிமையை 1
தனியர் 1
தனியனேன் 2

தக்க (1)

தக்க சீர் கங்கை அளவும் அன்று என்னோ தம் ஒருப்பாடு உலகதன் மேல் – 4.பூந்துருத்தி:1 1/3

மேல்

தக்கன் (5)

தக்கன் நல் தலையும் எச்சன் வன் தலையும் தாமரை நான்முகன் தலையும் – 1.திருமாளிகை:1 9/1
காமன் அ காலன் தக்கன் மிக்க எச்சன் பட கடைக்கணித்தவன் அல்லா – 1.திருமாளிகை:2 11/1
பண்டு ஆய மலர் அயன் தக்கன் எச்சன் பகலோன் தலை பல் பசும் கண் – 1.திருமாளிகை:3 6/3
தக்கன் வெம் கதிரோன் சலந்தரன் பிரமன் சந்திரன் இந்திரன் எச்சன் – 2.சேந்தனார்:1 10/1
கிற்போம் என தக்கன் வேள்வி புக்கு எடுத்து ஓடி கெட்ட அ தேவர்கள் – 2.சேந்தனார்:2 7/1

மேல்

தகைத்த (1)

தன் அடி நிழல் கீழ் என்னையும் தகைத்த சசி குலா மவுலியை தானே – 2.சேந்தனார்:1 4/1

மேல்

தங்கள் (2)

தத்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த தயாவை நூறாயிரம் கூறிட்டு – 3.கருவூர்:6 8/1
தங்கள் நான்மறை நூல் சகலமும் கற்றோர் சாட்டியக்குடி இருந்து அருளும் – 3.கருவூர்:8 8/3

மேல்

தங்களோடு (1)

மூவாயிரவர் தங்களோடு முன் அரங்கு ஏறி நின்ற – 5.கண்டராதித்:1 2/3

மேல்

தங்கு (2)

தங்கு சீர் செல்வ தெய்வ தான்தோன்றி நம்பியை தன் பெரும் சோதி – 2.சேந்தனார்:1 7/3
மண் இயல் மரபின் தங்கு இருள் மொழுப்பின் வண்டு இனம் பாட நின்று ஆடும் – 3.கருவூர்:7 4/3

மேல்

தஞ்சம் (1)

நீவியும் நெகிழ்ச்சியும் நிறை அழிவும் நெஞ்சமும் தஞ்சம் இலாமையாலே – 8.புருடோத்தம:1 2/3

மேல்

தஞ்சை (11)

இலை குலாம் பதணத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 1/4
எற்று நீர் கிடங்கின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 2/4
இடை கெழு மாடத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 3/4
யாழ் ஒலி சிலம்பும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 4/4
இவரும் மால் வரை செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 5/4
இருள் எலாம் கிழியும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 6/4
எனைப்பெரு மணம்செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 7/4
இன் நடம் பயிலும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 8/4
எங்களுக்கு இனியர் இஞ்சி சூழ் தஞ்சை இராசாராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 9/4
இனியர் எத்தனையும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 10/4
இருள் விரி மொழுப்பின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவரை – 3.கருவூர்:9 11/2

மேல்

தஞ்சையர் (1)

கார் ஆர் சோலை கோழி வேந்தன் தஞ்சையர்_கோன் கலந்த – 5.கண்டராதித்:1 10/2

மேல்

தஞ்சையர்_கோன் (1)

கார் ஆர் சோலை கோழி வேந்தன் தஞ்சையர்_கோன் கலந்த – 5.கண்டராதித்:1 10/2

மேல்

தட (5)

வேல் உலாம் தட கை வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்_இயல் இவளே – 2.சேந்தனார்:3 1/4
மான் அமர் தட கை வள்ளல்-தன் பிள்ளை மறை நிறை சட்ட அறம் வளர – 2.சேந்தனார்:3 4/2
தடம் கை நான்கும் அ தோள்களும் தட மார்பினில் பூண்கள் மேற்று இசை – 7.திருவாலி:1 7/3
செழும் தட மலர் புரை கண்கள் மூன்றும் செம் கனி வாயும் என் சிந்தை வௌவ – 8.புருடோத்தம:1 4/3
கரும் தட மலர் புரை கண்ட வண் தார் காரிகையார் முன்பு என் பெண்மை தோற்றேன் – 8.புருடோத்தம:1 5/3

மேல்

தடம் (13)

ஏர் கொள் கற்பகம் ஒத்து இரு சிலை புருவம் பெரும் தடம் கண்கள் மூன்று உடை உன் – 1.திருமாளிகை:2 10/1
தர வார் புனம் சுனை தாழ் அருவி தடம் கல் உறையும் மடங்கல் அமர் – 1.திருமாளிகை:3 9/1
மை ஆர் தடம் கண் மடந்தைக்கு ஒன்று அருளாது ஒழிவது மாதிமையே – 2.சேந்தனார்:2 1/4
தருணேந்து சேகரனே எனும் தடம் பொன்னி தென்கரை சாந்தை ஊர் – 2.சேந்தனார்:2 4/1
செழும் தடம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 11/3
இருவரே முக்கண் நால் பெரும் தடம் தோள் இறைவரே மறைகளும் தேட – 3.கருவூர்:2 3/3
முன்னம் மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நால் பெரும் தடம் தோள் – 3.கருவூர்:6 1/3
தரும் கரும்பு அனைய தீம் தமிழ் மாலை தடம் பொழில் மருதயாழ் உதிப்ப – 3.கருவூர்:10 10/3
மையல் மாதொரு_கூறன் மால் விடை ஏறி மான் மறி ஏந்திய தடம்
கையன் கார் புரையும் கறை கண்டன் கனல் மழுவான் – 7.திருவாலி:1 1/1,2
சலம் பொன் தாமரை தாழ்ந்து எழுந்த தடமும் தடம் புனல்-வாய் மலர் தழீஇ – 7.திருவாலி:1 2/1
தாழ்ந்த தண் புனல் சூழ் தடம் மல்கு சிற்றம்பலவன் – 7.திருவாலி:1 4/2
தடம் கையால் தொழவும் தழல் ஆடு சிற்றம்பலவன் – 7.திருவாலி:1 7/2
தடம் கை நான்கும் அ தோள்களும் தட மார்பினில் பூண்கள் மேற்று இசை – 7.திருவாலி:1 7/3

மேல்

தடமும் (1)

சலம் பொன் தாமரை தாழ்ந்து எழுந்த தடமும் தடம் புனல்-வாய் மலர் தழீஇ – 7.திருவாலி:1 2/1

மேல்

தடவு (1)

வானே தடவு நெடும் குடுமி மகேந்திர மா மலை மேல் இருந்த – 1.திருமாளிகை:3 3/2

மேல்

தடிந்தோன் (1)

தான் அமர் பொருது தானவர் சேனை மடிய சூர் மார்பினை தடிந்தோன்
மான் அமர் தட கை வள்ளல்-தன் பிள்ளை மறை நிறை சட்ட அறம் வளர – 2.சேந்தனார்:3 4/1,2

மேல்

தடுப்பு (1)

சா வாயும் நினை காண்டல் இனி உனக்கு தடுப்பு அரிதே – 6.வேணாட்டடிகள்:1 10/4

மேல்

தண் (9)

தனக்கு இன்பன் ஆவடு தண் துறை தருணேந்து சேகரன் என்னுமே – 2.சேந்தனார்:2 3/4
வலது ஒன்று இலள் இதற்கு என் செய்கேன் வயல் அம் தண் சாந்தையர் வேந்தனே – 2.சேந்தனார்:2 5/4
ஆம் தண் திருவாவடுதுறையான் செய்கை யார் அறிகிற்பரே – 2.சேந்தனார்:2 6/4
அலை கடல் முழங்கும் அம் தண் நீர் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 1/4
கெந்தியா உகளும் கெண்டை புண்டரீகம் கிழிக்கும் தண் பணை செய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 10/3
சடை கெழு மகுடம் தண் நிலா விரிய வெண் நிலா விரிதரு தரள – 3.கருவூர்:9 3/1
தரள வான் குன்றில் தண் நிலா ஒளியும் தரு குவால் பெருகு வான் தெருவில் – 3.கருவூர்:9 6/3
தாழ்ந்த தண் புனல் சூழ் தடம் மல்கு சிற்றம்பலவன் – 7.திருவாலி:1 4/2
தெள்ளிய தண் பொழில் சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலத்துள் – 7.திருவாலி:4 3/3

மேல்

தண்டலை (2)

தத்து நீர் படுகர் தண்டலை சூழல் சாட்டியக்குடியுள் ஏழ் இருக்கை – 3.கருவூர்:8 9/3
தாள் தரும் பழன பைம் பொழில் படுகர் தண்டலை சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 10/1

மேல்

தத் (1)

தத் பரம் பொருளே சசி கண்ட சிகண்டா சாம கண்டா அண்டவாணா – 1.திருமாளிகை:1 3/1

மேல்

தத்து (1)

தத்து நீர் படுகர் தண்டலை சூழல் சாட்டியக்குடியுள் ஏழ் இருக்கை – 3.கருவூர்:8 9/3

மேல்

தத்தை (1)

தத்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த தயாவை நூறாயிரம் கூறிட்டு – 3.கருவூர்:6 8/1

மேல்

தந்த (2)

அற்பன் என் உள்ளத்து அளவிலா உன்னை தந்த பொன்னம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 3/3
பின்னை பிறவி அறுக்க நெறி தந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 1/4

மேல்

தந்திரி (1)

தந்திரி வீணை கீதம் முன் பாட சாதி கின்னரம் கலந்து ஒலிப்ப – 3.கருவூர்:10 2/3

மேல்

தந்து (4)

பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தம் தந்து உள்ளே பாலிப்பான் – 2.சேந்தனார்:2 11/1
மால் உலாம் மனம் தந்து என் கையில் சங்கம் வவ்வினான் மலை_மகள் மதலை – 2.சேந்தனார்:3 1/1
முலைகள் தந்து அருளும் தாயினும் நல்ல முக்கணான் உறைவிடம் போலும் – 3.கருவூர்:2 1/2
மாலும் அயனும் அறியா நெறி தந்து வந்து என் மனத்து அகத்தே – 10.சேந்தனார்:1 8/3

மேல்

தந்தையும் (1)

உறவும் பெற்ற நற்றாயொடு தந்தையும் உடன்பிறந்தவரோடும் – 7.திருவாலி:2 8/2

மேல்

தந்தையுமாம் (1)

தாய் இவரே எல்லார்க்கும் தந்தையுமாம் என்பாரால் – 8.புருடோத்தம:2 6/2

மேல்

தபனிய (1)

தன் சோதி எழும் மேனி தபனிய பூச்சாய் காட்டாய் – 3.கருவூர்:5 7/1

மேல்

தம் (6)

போர்த்த தம் பெருமை சிறுமை புக்கு ஒடுங்கும் புணர்ப்பு உடை அடிகள்-தம் கோயில் – 3.கருவூர்:1 8/2
பின்னு செம் சடையும் பிறை தவழ் மொழுப்பும் பெரிய தம் கருணையும் காட்டி – 3.கருவூர்:1 9/1
அருளுமாறு அருளி ஆளுமாறு ஆள அடிகள் தம் அழகிய விழியும் – 3.கருவூர்:9 6/1
தக்க சீர் கங்கை அளவும் அன்று என்னோ தம் ஒருப்பாடு உலகதன் மேல் – 4.பூந்துருத்தி:1 1/3
தம் பானை சாய் பற்றார் என்னும் முதுசொல்லும் – 6.வேணாட்டடிகள்:1 2/1
பேயா இ தொழும்பனை தம் பிரான் இகழும் என்பித்தாய் – 6.வேணாட்டடிகள்:1 4/3

மேல்

தம்-பால் (1)

நினைப்பு அரும் தம்-பால் சேறல் இன்றேனும் நெஞ்சு இடிந்து உருகுவது என்னோ – 3.கருவூர்:9 7/2

மேல்

தம்மொடு (1)

முரிவரே முனிவர் தம்மொடு ஆல் நிழல் கீழ் முறை தெரிந்து ஓர் உடம்பினராம் – 3.கருவூர்:2 3/2

மேல்

தமர்க்கு (1)

மெய் நின்ற தமர்க்கு எல்லாம் மெய் நிற்கும் பண்பின் உறு – 3.கருவூர்:5 4/3

மேல்

தமருகத்து (1)

கரை கடல் ஒலியின் தமருகத்து அரையில் கையினில் கட்டிய கயிற்றால் – 3.கருவூர்:7 3/1

மேல்

தமருகம் (2)

தன் அக மழலை சிலம்பொடு சதங்கை தமருகம் திருவடி திருநீறு – 3.கருவூர்:3 8/1
சதியில் ஆர்கலியில் ஒலிசெயும் கையில் தமருகம் சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 4/3

மேல்

தமியனேன் (1)

தாயின் நேர் இரங்கும் தலைவவோ என்றும் தமியனேன் துணைவவோ என்றும் – 3.கருவூர்:1 3/1

மேல்

தமியேன் (1)

ஞாலமே தமியேன் நல் தவத்தாயை தொண்டனேன் நணுகுமா நணுகே – 1.திருமாளிகை:1 5/4

மேல்

தமியேனை (1)

தாழ்ந்த கச்சது அன்றே தமியேனை தளர்வித்ததே – 7.திருவாலி:1 4/4

மேல்

தமிழ் (10)

திருந்து உயிர் பருவத்து அறிவுறு கருவூர் துறை வளர் தீம் தமிழ் மாலை – 3.கருவூர்:1 11/2
ஆரணம் மொழிந்த பவள வாய் சுரந்த அமுதம் ஊறிய தமிழ் மாலை – 3.கருவூர்:2 10/3
ஆலை அம் பாகின் அனைய சொல் கருவூர் அமுது உறழ் தீம் தமிழ் மாலை – 3.கருவூர்:4 10/3
ஆரண தேன் பருகி அரும் தமிழ் மாலை கமழ வரும் – 3.கருவூர்:5 11/1
காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ் மாலை – 3.கருவூர்:5 11/2
தரும் கரும்பு அனைய தீம் தமிழ் மாலை தடம் பொழில் மருதயாழ் உதிப்ப – 3.கருவூர்:10 10/3
காடன் தமிழ் மாலை பத்தும் கருத்து அறிந்து – 4.பூந்துருத்தி:2 10/3
ஆரா இன் சொல் கண்டராதித்தன் அரும் தமிழ் மாலை வல்லார் – 5.கண்டராதித்:1 10/3
பா ஆர்ந்த தமிழ் மாலை பத்தர் அடி தொண்டன் எடுத்து – 6.வேணாட்டடிகள்:1 10/1
தூ நான்மறையான் அமுத வாலி சொன்ன தமிழ் மாலை – 7.திருவாலி:3 11/3

மேல்

தமிழ்கள் (1)

பா வண தமிழ்கள் பத்தும் வல்லார்கள் பரமனது உருவம் ஆகுவரே – 3.கருவூர்:7 10/4

மேல்

தமிழால் (1)

இறைவனை ஏத்துகின்ற இளையாள் மொழி இன் தமிழால்
மறை வல நாவலர்கள் மகிழ்ந்து ஏத்து சிற்றம்பலத்தை – 7.திருவாலி:4 10/1,2

மேல்

தமிழும் (1)

தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 2/2

மேல்

தயாவை (1)

தத்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த தயாவை நூறாயிரம் கூறிட்டு – 3.கருவூர்:6 8/1

மேல்

தர (2)

தர வார் புனம் சுனை தாழ் அருவி தடம் கல் உறையும் மடங்கல் அமர் – 1.திருமாளிகை:3 9/1
துணி உமிழ் ஆடை அரையில் ஓர் ஆடை சுடர் உமிழ் தர அதன் அருகே – 3.கருவூர்:10 4/3

மேல்

தரங்கமும் (1)

சைவம் விட்டிட்ட சடைகளும் சடை மேல் தரங்கமும் சதங்கையும் சிலம்பும் – 3.கருவூர்:6 4/2

மேல்

தரத்தார் (1)

திரு மருவு தரத்தார் திசை அடைப்ப நடம்செய் சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 7/3

மேல்

தரவும் (1)

மை நின்ற குழலாள் தன் மனம் தரவும் வளை தாராது – 3.கருவூர்:5 4/1

மேல்

தரள (4)

சிறைகொள் நீர் தரள திரள் கொள் நித்திலத்த செம்பொன் சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 5/3
இரும் திரை தரள பரவை சூழ் அகலத்து எண்_இல் அம் கண் இல் புன் மாக்கள் – 3.கருவூர்:1 11/1
சடை கெழு மகுடம் தண் நிலா விரிய வெண் நிலா விரிதரு தரள
குடை நிழல் விடை மேல் கொண்டு உலா போதும் குறிப்பு எனோ கோங்கு இணர் அனைய – 3.கருவூர்:9 3/1,2
தரள வான் குன்றில் தண் நிலா ஒளியும் தரு குவால் பெருகு வான் தெருவில் – 3.கருவூர்:9 6/3

மேல்

தரு (6)

கைவரும் பழனம் குழைத்த செம் சாலி கடைசியர் களை தரு நீலம் – 3.கருவூர்:1 2/3
தரு மனை வளனாம் சிவபுரன் தோழன் தனபதி சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 5/3
தரள வான் குன்றில் தண் நிலா ஒளியும் தரு குவால் பெருகு வான் தெருவில் – 3.கருவூர்:9 6/3
கனியர் அ தரு தீம் கரும்பர் வெண் புரிநூல் கட்டியர் அட்ட ஆரமிர்தர் – 3.கருவூர்:9 10/2
எரி தரு கரிகாட்டு இடு பிண நிணம் உண்டு ஏப்பமிட்டு இலங்கு எயிற்று அழல் வாய் – 3.கருவூர்:10 6/1
பவள மால் வரையை பனி படர்ந்து அனையதோர் படர் ஒளி தரு திருநீறும் – 7.திருவாலி:2 1/1

மேல்

தருணேந்து (2)

தனக்கு இன்பன் ஆவடு தண் துறை தருணேந்து சேகரன் என்னுமே – 2.சேந்தனார்:2 3/4
தருணேந்து சேகரனே எனும் தடம் பொன்னி தென்கரை சாந்தை ஊர் – 2.சேந்தனார்:2 4/1

மேல்

தரும் (3)

பெரிது அருள் புரிந்து ஆனந்தமே தரும் நின் பெருமையில் பெரியது ஒன்று உளதே – 3.கருவூர்:7 1/2
தாள் தரும் பழன பைம் பொழில் படுகர் தண்டலை சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 10/1
தரும் கரும்பு அனைய தீம் தமிழ் மாலை தடம் பொழில் மருதயாழ் உதிப்ப – 3.கருவூர்:10 10/3

மேல்

தலத்து (2)

பொன்னும் மணியும் நிரந்த தலத்து புலித்தோல் பியற்கு இட்டு – 7.திருவாலி:3 2/3
பதித்த தலத்து பவள மேனி பரமன் ஆடுமே – 7.திருவாலி:3 8/4

மேல்

தலத்துள் (1)

முத்தும் மணியும் நிரந்த தலத்துள் முளை வெண் மதி சூடி – 7.திருவாலி:3 7/3

மேல்

தலை (2)

பண்டு ஆய மலர் அயன் தக்கன் எச்சன் பகலோன் தலை பல் பசும் கண் – 1.திருமாளிகை:3 6/3
இரு தலை ஒரு நா இயங்க வந்து ஒருநாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே – 3.கருவூர்:7 3/2

மேல்

தலைப்பட்டால் (1)

நீ தலைப்பட்டால் யானும் அவ் வகையே நிசிசரர் இருவரோடு ஒருவர் – 3.கருவூர்:6 7/3

மேல்

தலைப்பட்டு (1)

தாய் தலைப்பட்டு அங்கு உருகி ஒன்றாய தன்மையில் என்னை முன் ஈன்ற – 3.கருவூர்:6 7/2

மேல்

தலையும் (3)

தக்கன் நல் தலையும் எச்சன் வன் தலையும் தாமரை நான்முகன் தலையும் – 1.திருமாளிகை:1 9/1
தக்கன் நல் தலையும் எச்சன் வன் தலையும் தாமரை நான்முகன் தலையும் – 1.திருமாளிகை:1 9/1
தக்கன் நல் தலையும் எச்சன் வன் தலையும் தாமரை நான்முகன் தலையும்
ஒக்க விண்டு உருள ஒண் திரு புருவம் நெறித்து அருளிய உருத்திரனே – 1.திருமாளிகை:1 9/1,2

மேல்

தலையை (1)

எச்சனை தலையை கொண்டு செண்டடித்து இடபம் ஏறி – 1.திருமாளிகை:4 9/1

மேல்

தலையோடு (1)

பல்லை ஆர் பசும் தலையோடு இடறி பாத மென் மலர் அடி நோவ நீ போய் – 8.புருடோத்தம:1 6/3

மேல்

தலைவவோ (1)

தாயின் நேர் இரங்கும் தலைவவோ என்றும் தமியனேன் துணைவவோ என்றும் – 3.கருவூர்:1 3/1

மேல்

தலைவன் (1)

தேவின் நல் தலைவன் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 3/3

மேல்

தலைவனும் (1)

அருள் பெறின் அகலிடத்து இருக்கலாம் என்று அமரர்கள் தலைவனும் அயனும் மாலும் – 8.புருடோத்தம:1 10/1

மேல்

தலைவனே (1)

அங்கணா போற்றி அமரனே போற்றி அமரர்கள் தலைவனே போற்றி – 3.கருவூர்:8 8/2

மேல்

தவ (1)

பேய் மனம் பிறிந்த தவ பெரும் தொண்டர் தொண்டனேன் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 11/2

மேல்

தவத்தாயை (1)

ஞாலமே தமியேன் நல் தவத்தாயை தொண்டனேன் நணுகுமா நணுகே – 1.திருமாளிகை:1 5/4

மேல்

தவர்க்கு (1)

அறம் பல திறம் கண்டு அரும் தவர்க்கு அரசாய் ஆலின் கீழ் இருந்த அம்பலவா – 1.திருமாளிகை:1 8/3

மேல்

தவழ் (11)

பிறை தவழ் பொழில் சூழ் கிடங்கிடை பதண முது மதில் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 5/2
மணம் விரிதரு தேமாம் பொழில் மொழுப்பின் மழை தவழ் வளர் இளம் கமுகம் – 3.கருவூர்:1 1/3
பின்னு செம் சடையும் பிறை தவழ் மொழுப்பும் பெரிய தம் கருணையும் காட்டி – 3.கருவூர்:1 9/1
கிரி தவழ் முகிலின் கீழ் தவழ் மாடம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 3/3
கிரி தவழ் முகிலின் கீழ் தவழ் மாடம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 3/3
தழை தவழ் மொழுப்பும் தவள நீற்று ஒளியும் சங்கமும் சகடையின் முழக்கும் – 3.கருவூர்:3 7/1
குழை தவழ் செவியும் குளிர் சடை தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும் – 3.கருவூர்:3 7/2
கிழை தவழ் கனகம் பொழியும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 7/3
மழை தவழ் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தர்-தம் வாழ்வு போன்றதுவே – 3.கருவூர்:3 7/4
மின் நவில் கனக மாளிகை வாய்தல் விளங்கு இளம் பிறை தவழ் மாடம் – 3.கருவூர்:7 7/3
பெரியவா கருணை இள நிலா எறிக்கும் பிறை தவழ் சடை மொழுப்பு அவிழ்ந்து – 3.கருவூர்:8 1/1

மேல்

தவள (4)

சந்தன களபம் துதைந்த நல் மேனி தவள வெண் பொடி முழுது ஆடும் – 3.கருவூர்:2 2/1
தழை தவழ் மொழுப்பும் தவள நீற்று ஒளியும் சங்கமும் சகடையின் முழக்கும் – 3.கருவூர்:3 7/1
தவள மா மணி பூம் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமை நீங்குதற்கே – 3.கருவூர்:4 1/4
தவள_வண்ணனை நினை-தொறும் என் மனம் தழல் மெழுகு ஒக்கின்றதே – 7.திருவாலி:2 1/4

மேல்

தவள_வண்ணனை (1)

தவள_வண்ணனை நினை-தொறும் என் மனம் தழல் மெழுகு ஒக்கின்றதே – 7.திருவாலி:2 1/4

மேல்

தவளமே (3)

தவளமே களபம் தவளமே புரிநூல் தவளமே முறுவல் ஆடு அரவம் – 3.கருவூர்:2 5/2
தவளமே களபம் தவளமே புரிநூல் தவளமே முறுவல் ஆடு அரவம் – 3.கருவூர்:2 5/2
தவளமே களபம் தவளமே புரிநூல் தவளமே முறுவல் ஆடு அரவம் – 3.கருவூர்:2 5/2

மேல்

தழல் (7)

செம் தழல் உருவில் பொலிந்து நோக்கு உடைய திருநுதலவர்க்கு இடம் போலும் – 3.கருவூர்:2 2/2
பண்ணிய தழல் காய் பால் அளாம் நீர் போல் பாவம் முன் பறைந்து பால் அனைய – 3.கருவூர்:6 9/1
தழல் உமிழ் அரவம் கோவணம் பளிங்கு சப வடம் சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 3/3
மாலவனும் அறிவு அரும் பெருமை அடல் அழல் உமிழ் தழல் பிழம்பர் – 3.கருவூர்:9 5/2
செம் தழல் புரை மேனியும் திகழும் திருவயிறும் வயிற்றினுள் – 7.திருவாலி:1 5/3
தடம் கையால் தொழவும் தழல் ஆடு சிற்றம்பலவன் – 7.திருவாலி:1 7/2
தவள_வண்ணனை நினை-தொறும் என் மனம் தழல் மெழுகு ஒக்கின்றதே – 7.திருவாலி:2 1/4

மேல்

தழீஇ (1)

சலம் பொன் தாமரை தாழ்ந்து எழுந்த தடமும் தடம் புனல்-வாய் மலர் தழீஇ
அலம்பி வண்டு அறையும் அணி ஆர் தில்லை அம்பலவன் – 7.திருவாலி:1 2/1,2

மேல்

தழுவி (1)

ஆர்வம்கொள தழுவி அணி நீறு என் முலைக்கு அணிய – 7.திருவாலி:4 8/2

மேல்

தழுவிய (1)

கங்கை நீர் அரிசில் கரை இரு மருங்கும் கமழ் பொழில் தழுவிய கழனி – 2.சேந்தனார்:1 7/1

மேல்

தழை (3)

நிறை தழை வாழை நிழல் கொடி நெடும் தெங்கு இளம் கமுகு உளம்கொள் நீள் பல மா – 1.திருமாளிகை:2 5/1
தழை தவழ் மொழுப்பும் தவள நீற்று ஒளியும் சங்கமும் சகடையின் முழக்கும் – 3.கருவூர்:3 7/1
சந்தும் அகிலும் தழை பீலிகளும் சாதி பலவும் கொண்டு – 7.திருவாலி:3 4/1

மேல்

தளர்ந்த (1)

சரிந்த துகில் தளர்ந்த இடை அவிழ்ந்த குழல் இளம் தெரிவை – 3.கருவூர்:5 10/1

மேல்

தளர்வித்ததே (1)

தாழ்ந்த கச்சது அன்றே தமியேனை தளர்வித்ததே – 7.திருவாலி:1 4/4

மேல்

தளிர் (2)

தளிர் ஒளி மணி பூம் பதம் சிலம்பு அலம்ப சடை விரித்து அலை எறி கங்கை – 3.கருவூர்:3 1/1
தனி பெரும் தாமே முழுது உற பிறப்பின் தளிர் இறப்பு இலை உதிர்வு என்றால் – 3.கருவூர்:9 7/1

மேல்

தன் (6)

தன் அடி நிழல் கீழ் என்னையும் தகைத்த சசி குலா மவுலியை தானே – 2.சேந்தனார்:1 4/1
தங்கு சீர் செல்வ தெய்வ தான்தோன்றி நம்பியை தன் பெரும் சோதி – 2.சேந்தனார்:1 7/3
தன் அக மழலை சிலம்பொடு சதங்கை தமருகம் திருவடி திருநீறு – 3.கருவூர்:3 8/1
மை நின்ற குழலாள் தன் மனம் தரவும் வளை தாராது – 3.கருவூர்:5 4/1
தன் சோதி எழும் மேனி தபனிய பூச்சாய் காட்டாய் – 3.கருவூர்:5 7/1
அகலோகம் எல்லாம் அடியவர்கள் தன் சூழ – 4.பூந்துருத்தி:2 6/1

மேல்

தன்-பால் (1)

பட்டனுக்கு என்னை தன்-பால் படுத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 3/4

மேல்

தன்மை (1)

நீர் ஓங்கி வளர் கமலம் நீர் பொருந்தா தன்மை அன்றே – 3.கருவூர்:5 1/1

மேல்

தன்மையர் (1)

தனியர் எத்தனை ஓராயிரவருமாம் தன்மையர் என் வயத்தினராம் – 3.கருவூர்:9 10/1

மேல்

தன்மையால் (1)

நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாம் என்று – 8.புருடோத்தம:2 10/1

மேல்

தன்மையாளர் (1)

ஒத்தே வாழும் தன்மையாளர் ஓதிய நான்மறையை – 5.கண்டராதித்:1 3/2

மேல்

தன்மையில் (1)

தாய் தலைப்பட்டு அங்கு உருகி ஒன்றாய தன்மையில் என்னை முன் ஈன்ற – 3.கருவூர்:6 7/2

மேல்

தன்னை (1)

அற்புத தெய்வம் இதனின் மற்று உண்டே அன்பொடு தன்னை அஞ்செழுத்தின் – 3.கருவூர்:6 3/1

மேல்

தனக்கு (1)

தனக்கு இன்பன் ஆவடு தண் துறை தருணேந்து சேகரன் என்னுமே – 2.சேந்தனார்:2 3/4

மேல்

தனத்தினை (1)

ஆவிக்கு அமுதை என் ஆர்வ தனத்தினை அப்பனை ஒப்பு அமரர் – 10.சேந்தனார்:1 6/3

மேல்

தனதன் (1)

தனதன் நல் தோழா சங்கரா சூலபாணியே தாணுவே சிவனே – 1.திருமாளிகை:1 7/1

மேல்

தனபதி (1)

தரு மனை வளனாம் சிவபுரன் தோழன் தனபதி சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 5/3

மேல்

தனி (7)

உரு மருவு உதர தனி வடம் தொடர்ந்து கிடந்தது என் உணர்வு உணர்ந்து உணர்ந்தே – 1.திருமாளிகை:2 7/4
அழுந்தா மகேந்திரத்து அந்தர புட்கு அரசுக்கு அரசே அமரர் தனி
கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 5/3,4
கரியரே இடம் தான் செய்யரே ஒருபால் கழுத்தில் ஓர் தனி வடம் சேர்த்தி – 3.கருவூர்:2 3/1
கரியும் நீறு ஆடும் கனலும் ஒத்து ஒளிரும் கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி – 3.கருவூர்:4 7/2
தனி பெரும் தாமே முழுது உற பிறப்பின் தளிர் இறப்பு இலை உதிர்வு என்றால் – 3.கருவூர்:9 7/1
கைக்கு வால் முத்தின் சரி வளை பெய்து கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி – 4.பூந்துருத்தி:1 1/1
சத்தியாய் சிவமாய் உலகு எலாம் படைத்த தனி முழுமுதலுமாய் அதற்கு ஓர் – 4.பூந்துருத்தி:1 2/3

மேல்

தனிமை (1)

தவள மா மணி பூம் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமை நீங்குதற்கே – 3.கருவூர்:4 1/4

மேல்

தனிமையை (1)

தாயினும் மிக நல்லை என்று அடைந்தேன் தனிமையை நினைகிலை சங்கரா உன் – 8.புருடோத்தம:1 8/2

மேல்

தனியர் (1)

தனியர் எத்தனை ஓராயிரவருமாம் தன்மையர் என் வயத்தினராம் – 3.கருவூர்:9 10/1

மேல்

தனியனேன் (2)

தவள மா மணி பூம் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமை நீங்குதற்கே – 3.கருவூர்:4 1/4
தனியனேன் உள்ளம் கோயில்கொண்டு அருளும் சைவனே சாட்டியக்குடியார்க்கு – 3.கருவூர்:8 6/3

மேல்