தி – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திக்கு 3
திக்கும் 1
திகர் 2
திகழ் 14
திகழ்ந்த 1
திகழும் 3
திகை 1
திகைக்கின்றேன்-தனை 1
திகையாமே 1
திங்கள் 4
திங்களை 1
திசை 4
திசைக்கு 1
திசைகளோடு 1
திசைதிசையன 1
திசைமுகன் 1
திசைமுகா 1
திட்டைமுட்டை 1
திடம் 1
திண் 4
திணம் 1
திணர் 1
திணி 1
தித்திக்கும் 1
தித்தியா 1
தியை 1
திரட்டும் 1
திரண்ட 3
திரள் 14
திரளும் 1
திரளை 2
திரளோ 1
திரி 2
திரிந்து 2
திரியும் 1
திரு 39
திருக்கடை 1
திருக்குரா 10
திருக்குறிப்பு 1
திருச்சடை 1
திருச்சிற்றம்பலத்து 2
திருச்சிற்றம்பலமுடனே 1
திருச்சிற்றம்பலமே 11
திருந்திய 1
திருந்து 2
திருநடம் 4
திருநீற்று 1
திருநீறு 5
திருநீறும் 1
திருநுதலவர்க்கு 1
திருப்பணி 1
திருப்பிடவூர் 1
திருமகள் 1
திருமகன் 1
திருமாலொடு 1
திருமுகம் 2
திருமுகமும் 1
திருமுண்டம் 1
திருமேனி 1
திருவடி 9
திருவடிக்கு 1
திருவயிறும் 1
திருவருள் 1
திருவாய் 3
திருவாரூரின் 1
திருவாலி 2
திருவாவடுதுறை 4
திருவாவடுதுறையாளி 1
திருவாவடுதுறையான் 1
திருவாளர் 1
திருவான 1
திருவிடை 1
திருவிடைக்கழியில் 10
திருவிடைமருதே 10
திருவீழி 1
திருவீழிமிழலை 4
திருவீழிமிழலையான் 2
திருவுடம்பு 2
திருவும் 1
திருவுரு 2
திருவே 1
திரை 6
திரையும் 1
திரைலோக்கிய 10
தில்லை 94
தில்லை-தன்னுள் 2
தில்லை_வாணன் 1
தில்லை_வாணா 1
தில்லை_உளீர் 6
தில்லைக்கு 1
தில்லையாய் 1
தில்லையுள் 6
திலக 2
திலகமும் 2
திவலை 1
திவள் 1
திவள 1
திளை 1
திளைக்கின்றனவே 1
திளைக்கும் 2
திளைப்பதும் 1
திளையும் 1
திறங்களுமே 1
திறத்தவர் 1
திறத்திலும் 1
திறத்திலே 1
திறத்தும் 1
திறம் 4
திறம்பிய 1
திறல் 2

திக்கு (3)

திக்கு எலாம் குலவும் புகழ் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ் – 2.சேந்தனார்:1 6/3
திக்கு எலாம் நிறைந்த புகழ் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ் – 2.சேந்தனார்:1 10/3
திக்கு அடா நினைந்து நெஞ்சு இடிந்து உருகும் திறத்தவர் புறத்து இருந்து அலச – 3.கருவூர்:2 7/1

மேல்

திக்கும் (1)

மொய் கொள் எண் திக்கும் கண்ட நின் தொண்டர் முகம் மலர்ந்து இரு கண் நீர் அரும்ப – 3.கருவூர்:6 4/3

மேல்

திகர் (2)

தெரிந்தவை திகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 7/3
தெருண்டவை திகர் வாழ் திருவிடை கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 10/3

மேல்

திகழ் (14)

அலை கடல் முழங்கும் அம் தண் நீர் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 1/4
அந்தணர் அழல் ஓம்பு அலை புனல் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 2/4
அரியரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 3/4
அழகரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 4/4
அவளுமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 5/4
தாலமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 6/4
அக்கடா ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 7/4
ஐயரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 8/4
அமலமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 9/4
மேடு எலாம் செந்நெல் பசும் கதிர் விளைந்து மிக திகழ் முகத்தலை மூதூர் – 3.கருவூர்:4 4/3
விரி திகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்த போது அவிழ்ந்த – 3.கருவூர்:7 3/3
தீ_வணன்-தன்னை செழும் மறை தெரியும் திகழ் கருவூரனேன் உரைத்த – 3.கருவூர்:7 10/3
அதிர வார் கழல் வீசி நின்று அழகா நடம் பயில் கூத்தன் மேல் திகழ்
உதரபந்தனம் என் உள்ளத்துள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 6/3,4
சீர் அணி மணி திகழ் மாடம் ஓங்கு தில்லை அம்பலத்து எங்கள் செல்வன் வாரான் – 8.புருடோத்தம:1 1/3

மேல்

திகழ்ந்த (1)

சீர் நிலவு இலய திரு நடத்து இயல்பில் திகழ்ந்த சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 4/3

மேல்

திகழும் (3)

செம் தழல் புரை மேனியும் திகழும் திருவயிறும் வயிற்றினுள் – 7.திருவாலி:1 5/3
செய்ய வாயின் முறுவலும் திகழும் திரு காதும் காதினின் மாத்திரைகளோடு – 7.திருவாலி:1 8/3
சேர்வன்-கொலோ அன்னைமீர் திகழும் மலர் பாதங்களை – 7.திருவாலி:4 8/1

மேல்

திகை (1)

திகை மிகு கீர்த்தி திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 8/3

மேல்

திகைக்கின்றேன்-தனை (1)

திறம்பிய பிறவி சில தெய்வ நெறிக்கே திகைக்கின்றேன்-தனை திகையாமே – 1.திருமாளிகை:1 8/1

மேல்

திகையாமே (1)

திறம்பிய பிறவி சில தெய்வ நெறிக்கே திகைக்கின்றேன்-தனை திகையாமே
நிறம் பொன்னும் மின்னும் நிறைந்த சேவடி கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே – 1.திருமாளிகை:1 8/1,2

மேல்

திங்கள் (4)

செழும் தென்றல் அன்றில் இ திங்கள் கங்குல் திரை வீரை தீம் குழல் சேவின் மணி – 1.திருமாளிகை:3 5/1
திங்கள் நேர் தீண்ட நீண்ட மாளிகை சூழ் மாட நீடு உயர் திருவீழி – 2.சேந்தனார்:1 7/2
பல குலாம் படை செய் நெடு நிலை மாடம் பரு வரை ஞாங்கர் வெண் திங்கள்
இலை குலாம் பதணத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 1/3,4
தீ மெய் சடை மேல் திங்கள் சூடி தேவன் ஆடுமே – 7.திருவாலி:3 5/4

மேல்

திங்களை (1)

மங்கையோடு இருந்தே யோகுசெய்வானை வளர் இளம் திங்களை முடி மேல் – 3.கருவூர்:6 11/1

மேல்

திசை (4)

திரு மருவு தரத்தார் திசை அடைப்ப நடம்செய் சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 7/3
சொல் பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு எண் திசை கனகம் – 3.கருவூர்:6 3/2
திசை நோக்கி பேழ்கணித்து சிவபெருமான் ஓ எனினும் – 6.வேணாட்டடிகள்:1 3/2
தேர் ஆர் வீதியில் தேவர் குழாங்கள் திசை அனைத்தும் நிறைந்து – 10.சேந்தனார்:1 12/3

மேல்

திசைக்கு (1)

திசைக்கு மிக்கு உலவு கீர்த்தி தில்லை கூத்து உகந்து தீய – 1.திருமாளிகை:4 5/1

மேல்

திசைகளோடு (1)

சீர்த்த திண் புவனம் முழுவதும் ஏனை திசைகளோடு அண்டங்கள் அனைத்தும் – 3.கருவூர்:1 8/1

மேல்

திசைதிசையன (1)

சேவிக்க வந்து அயன் இந்திரன் செம் கண் மால் எங்கும் திசைதிசையன
கூவி கவர்ந்து நெருங்கி குழாம்குழாமாய் நின்று கூத்து ஆடும் – 10.சேந்தனார்:1 6/1,2

மேல்

திசைமுகன் (1)

செம்பொனே பவள குன்றமே நின்ற திசைமுகன் மால் முதல் கூட்டத்து – 3.கருவூர்:8 7/1

மேல்

திசைமுகா (1)

செங்கணா போற்றி திசைமுகா போற்றி சிவபுர நகருள் வீற்றிருந்த – 3.கருவூர்:8 8/1

மேல்

திட்டைமுட்டை (1)

தெண்ணரை தெருளா உள்ளத்து இருளரை திட்டைமுட்டை
பெண்ணரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 10/3,4

மேல்

திடம் (1)

திடம் கொள் வைதிகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 9/3

மேல்

திண் (4)

பெரு வரை புரை திண் தோளுடன் காணப்பெற்றவர் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 7/2
எண்_இல் பல் கோடி சேவடி முடிகள் எண்_இல் பல் கோடி திண் தோள்கள் – 2.சேந்தனார்:1 9/1
நீதி அறிகிலள் பொன் நெடும் திண் தோள் புணர நினைக்குமே – 2.சேந்தனார்:2 2/4
சீர்த்த திண் புவனம் முழுவதும் ஏனை திசைகளோடு அண்டங்கள் அனைத்தும் – 3.கருவூர்:1 8/1

மேல்

திணம் (1)

திணம் மணி மாட திருவிடைக்கழியில் திரு குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 5/3

மேல்

திணர் (1)

திணர் நிரை அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 1/4

மேல்

திணி (1)

திணி மணி நீல கண்டத்து என் அமுதே சீர் கொள் சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 8/3

மேல்

தித்திக்கும் (1)

தெளி வளர் பளிங்கின் திரள் மணி குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனே – 1.திருமாளிகை:1 1/2

மேல்

தித்தியா (1)

தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்-தம் திருவுரு இருந்தவா பாரீர் – 4.பூந்துருத்தி:1 2/2

மேல்

தியை (1)

உருவம் பாகமும் ஈந்து நல் அம் தியை ஒண் நுதல் வைத்தோனே – 7.திருவாலி:2 4/4

மேல்

திரட்டும் (1)

அடியார் அலகினால் திரட்டும் அணி தில்லை அம்பலத்து – 5.கண்டராதித்:1 9/3

மேல்

திரண்ட (3)

திரு வளர் தெய்வ பதி விதி நிதியம் திரண்ட சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 2/3
திரண்ட தில்லை-தன்னுள் திரு மல்கு சிற்றம்பலவன் – 7.திருவாலி:1 3/2
திரண்ட வான் குறங்கு என் சிந்தையுள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 3/4

மேல்

திரள் (14)

தெளி வளர் பளிங்கின் திரள் மணி குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனே – 1.திருமாளிகை:1 1/2
வார் மலி முலையாள் வருடிய திரள் மா மணி குறங்கு அடைந்தது என் மதியே – 1.திருமாளிகை:2 4/4
சிறைகொள் நீர் தரள திரள் கொள் நித்திலத்த செம்பொன் சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 5/3
அருள் திரள் செம்பொன் சோதி அம்பலத்து ஆடுகின்ற – 1.திருமாளிகை:4 3/1
இருள் திரள் கண்டத்து எம்மான் இன்பருக்கு அன்புசெய்யா – 1.திருமாளிகை:4 3/2
செக்கர் ஒத்து இரவி நூறாயிர திரள் ஒப்பாம் தில்லை – 1.திருமாளிகை:4 8/1
கொழும் திரள் வாய் ஆர் தாய் மொழியாக தூ மொழி அமரர் கோமகனை – 2.சேந்தனார்:3 11/1
செழும் திரள் சோதி செப்புறை சேந்தன் வாய்ந்த சொல் இவை சுவாமியையே – 2.சேந்தனார்:3 11/2
பூ திரள் உருவம் செம் கதிர் விரியா புந்தியில் வந்த மால் விடையோன் – 3.கருவூர்:1 7/1
தூ திரள் பளிங்கின் தோன்றிய தோற்றம் தோன்ற நின்றவன் வளர் கோயில் – 3.கருவூர்:1 7/2
நா திரள் மறை ஓர்ந்து ஓமகுண்டத்து நறு நெயால் மறையவர் வளர்த்த – 3.கருவூர்:1 7/3
தீ திரள் அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 7/4
மோது அலைப்பட்ட கடல் வயிறு உதித்த முழு மணி திரள் அமுது ஆங்கே – 3.கருவூர்:6 7/1
வில் ஆண்ட கனக திரள் மேரு விடங்கன் விடை பாகன் – 10.சேந்தனார்:1 4/3

மேல்

திரளும் (1)

திரளும் நீள் மணி கங்கையை திருச்சடை சேர்த்தி அ செய்யாளுக்கு – 7.திருவாலி:2 4/3

மேல்

திரளை (2)

முடியால் முடிகள் மோதி உக்க முழு மணியின் திரளை
அடியார் அலகினால் திரட்டும் அணி தில்லை அம்பலத்து – 5.கண்டராதித்:1 9/2,3
நினைத்தேன் இனி போக்குவனோ நிமல திரளை நினைப்பார் – 7.திருவாலி:4 6/1

மேல்

திரளோ (1)

சொரிந்த சிந்துரமோ தூ மணி திரளோ சுந்தரத்து அரசு இது என்ன – 2.சேந்தனார்:3 7/2

மேல்

திரி (2)

அங்கையோடு ஏந்தி பலி திரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழி – 3.கருவூர்:6 11/3
ஐந்தலை நாக மேகலை அரையா அகம்-தொறும் பலி திரி அடிகள் – 3.கருவூர்:10 2/2

மேல்

திரிந்து (2)

மையரே வையம் பலி திரிந்து உறையும் மயானரே உளம் கலந்திருந்தும் – 3.கருவூர்:2 8/2
கழுது உறு கரிகாடு உறைவிடம் போர்வை கவந்திகை கரி உரி திரிந்து ஊண் – 3.கருவூர்:8 3/2

மேல்

திரியும் (1)

பெரு நீலகண்டன் திறம் கொண்டு இவள் பிதற்றி பெரும் தெருவே திரியும்
வரு நீர் அருவி மகேந்திர பொன் மலையில் மலை_மகளுக்கு அருளும் – 1.திருமாளிகை:3 10/2,3

மேல்

திரு (39)

ஒக்க விண்டு உருள ஒண் திரு புருவம் நெறித்து அருளிய உருத்திரனே – 1.திருமாளிகை:1 9/2
திரு வளர் தெய்வ பதி விதி நிதியம் திரண்ட சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 2/3
நிரந்தரம் முனிவர் நினை திரு கணை கால் நினைந்து நின்று ஒழிந்தது என் நெஞ்சே – 1.திருமாளிகை:2 3/4
சீர் நிலவு இலய திரு நடத்து இயல்பில் திகழ்ந்த சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 4/3
மது மதி வெள்ள திரு வயிற்று உந்தி வளைப்புண்டு என் உளம் மகிழ்ந்ததுவே – 1.திருமாளிகை:2 6/4
திரு மருவு தரத்தார் திசை அடைப்ப நடம்செய் சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 7/3
திரு நெடுமால் இந்திரன் அயன் வானோர் திருக்கடை காவலில் நெருக்கி – 1.திருமாளிகை:2 9/1
சேடர் சேவடிகள் சூடா திரு இலா உருவினாரை – 1.திருமாளிகை:4 6/2
திணம் மணி மாட திருவிடைக்கழியில் திரு குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 5/3
வளை இளம் பிறை செம் சடை அரன் மதலை கார் நிற மால் திரு மருகன் – 2.சேந்தனார்:3 6/2
திணர் நிரை அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 1/4
செய் வரம்பு அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 2/4
தீயின் நேர் அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 3/4
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 4/4
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 5/4
செம் சுடர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 6/4
தீ திரள் அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 7/4
தீர்த்த நீர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 8/4
தென்ன தேன் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 9/4
உம்பர் நாடு இம்பர் விளங்கியாங்கு எங்கும் ஒளி வளர் திரு மணி சுடர் கான்று – 3.கருவூர்:1 10/1
செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 10/4
செருந்தி நின்று அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 11/4
திரு நுதல் விழியும் பவள வாய் இதழும் திலகமும் உடையவன் சடை மேல் – 3.கருவூர்:3 3/1
சுருதி வானவனாம் திரு நெடு மாலாம் சுந்தர விசும்பின் இந்திரனாம் – 3.கருவூர்:6 5/1
எவரும் மா மறைகள் எவையும் வானவர்கள் ஈட்டமும் தாள் திரு கமலத்தவரும் – 3.கருவூர்:9 5/1
நச்சாய் காண் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 1/4
நம்பாய் காண் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 2/4
நசையானேன் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 3/4
நாயேனை திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 4/4
நன்று இதுவோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 5/4
நடு இதுவோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 6/4
நண்ணாயால் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 7/4
நாடாயால் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 8/4
நாள் ஏதோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 9/4
தேவே தென் திரு தில்லை கூத்தாடீ நாய் அடியேன் – 6.வேணாட்டடிகள்:1 10/3
திரண்ட தில்லை-தன்னுள் திரு மல்கு சிற்றம்பலவன் – 7.திருவாலி:1 3/2
செய்ய வாயின் முறுவலும் திகழும் திரு காதும் காதினின் மாத்திரைகளோடு – 7.திருவாலி:1 8/3
குவளை மா மலர் கண்ணியும் கொன்றையும் துன்று பொன் குழல் திரு சடையும் – 7.திருவாலி:2 1/2
திளையும் மாட திரு ஆர் தில்லை சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 3/2

மேல்

திருக்கடை (1)

திரு நெடுமால் இந்திரன் அயன் வானோர் திருக்கடை காவலில் நெருக்கி – 1.திருமாளிகை:2 9/1

மேல்

திருக்குரா (10)

சேல் உலாம் கழனி திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 1/3
திவள் அம் மாளிகை சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 2/3
தேவின் நல் தலைவன் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 3/3
தேன் அமர் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 4/3
திளை இளம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 6/3
தெரிந்தவை திகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 7/3
திகை மிகு கீர்த்தி திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 8/3
திடம் கொள் வைதிகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 9/3
தெருண்டவை திகர் வாழ் திருவிடை கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 10/3
செழும் தடம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 11/3

மேல்

திருக்குறிப்பு (1)

திருக்குறிப்பு அருளும் தில்லை செல்வன்-பால் செல்லும் செல்வு_இல் – 1.திருமாளிகை:4 7/2

மேல்

திருச்சடை (1)

திரளும் நீள் மணி கங்கையை திருச்சடை சேர்த்தி அ செய்யாளுக்கு – 7.திருவாலி:2 4/3

மேல்

திருச்சிற்றம்பலத்து (2)

புரிபவர்க்கு இன் அருள்செய் புலியூர் திருச்சிற்றம்பலத்து
எரி மகிழ்ந்து ஆடுகின்ற எம்பிரான் என் இறையவனே – 7.திருவாலி:4 4/3,4
சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிது திருச்சிற்றம்பலத்து எங்கள் செல்வனே நீ – 8.புருடோத்தம:1 8/1

மேல்

திருச்சிற்றம்பலமுடனே (1)

செங்கயல் புரை கண்ணிமார்கள் முன்னே திருச்சிற்றம்பலமுடனே புகுந்து – 8.புருடோத்தம:1 9/3

மேல்

திருச்சிற்றம்பலமே (11)

திணர் நிரை அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 1/4
செய் வரம்பு அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 2/4
தீயின் நேர் அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 3/4
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 4/4
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 5/4
செம் சுடர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 6/4
தீ திரள் அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 7/4
தீர்த்த நீர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 8/4
தென்ன தேன் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 9/4
செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 10/4
செருந்தி நின்று அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 11/4

மேல்

திருந்திய (1)

திருந்திய மலர் அடி நசையினாலே தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவே – 8.புருடோத்தம:1 5/4

மேல்

திருந்து (2)

திருந்து உயிர் பருவத்து அறிவுறு கருவூர் துறை வளர் தீம் தமிழ் மாலை – 3.கருவூர்:1 11/2
திருந்து விழவு அணி கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 10/4

மேல்

திருநடம் (4)

கதி எலாம் அரங்கம் பிணையல் மூவுலகில் கடி இருள் திருநடம் புரியும் – 3.கருவூர்:8 4/2
திவள மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற – 7.திருவாலி:2 1/3
செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் வகையாலே – 7.திருவாலி:2 2/3
தேன் அமர் பொழில் சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற – 7.திருவாலி:2 9/3

மேல்

திருநீற்று (1)

ஐய செம்பொன் தோட்டு அவிர் சடை மொழுப்பின் அழி அழகிய திருநீற்று
மைய செம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 1/3,4

மேல்

திருநீறு (5)

திருநீறு இடா உரு தீண்டேன் என்னும் திருநீறு மெய் திருமுண்டம் தீட்டி – 1.திருமாளிகை:3 10/1
திருநீறு இடா உரு தீண்டேன் என்னும் திருநீறு மெய் திருமுண்டம் தீட்டி – 1.திருமாளிகை:3 10/1
தன் அக மழலை சிலம்பொடு சதங்கை தமருகம் திருவடி திருநீறு
இன் நகை மழலை கங்கை கொங்கு இதழி இளம் பிறை குழை வளர் இள மான் – 3.கருவூர்:3 8/1,2
சாந்தமும் திருநீறு அரு மறை கீதம் சடை முடி சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 2/3
பொங்கு எழில் திருநீறு அழி பொசி வனப்பின் புனல் துளும்பு அவிர் சடை மொழுப்பர் – 3.கருவூர்:9 9/3

மேல்

திருநீறும் (1)

பவள மால் வரையை பனி படர்ந்து அனையதோர் படர் ஒளி தரு திருநீறும்
குவளை மா மலர் கண்ணியும் கொன்றையும் துன்று பொன் குழல் திரு சடையும் – 7.திருவாலி:2 1/1,2

மேல்

திருநுதலவர்க்கு (1)

செம் தழல் உருவில் பொலிந்து நோக்கு உடைய திருநுதலவர்க்கு இடம் போலும் – 3.கருவூர்:2 2/2

மேல்

திருப்பணி (1)

மெய்யே திருப்பணி செய் சீர் மிகு காவிரி கரை மேய – 2.சேந்தனார்:2 1/2

மேல்

திருப்பிடவூர் (1)

மருண்டு உறை கோயில் மல்கு நல் குன்ற பொழில் வளர் மகிழ் திருப்பிடவூர்
வெருண்ட மான் விழியார்க்கு அருள்செயாவிடுமே விடலையே எவர்க்கும் மெய் அன்பர் – 2.சேந்தனார்:3 10/1,2

மேல்

திருமகள் (1)

திருமகன் முருகன் தேவியேல் உமையாள் திருமகள் மருமகன் தாயாம் – 3.கருவூர்:8 5/1

மேல்

திருமகன் (1)

திருமகன் முருகன் தேவியேல் உமையாள் திருமகள் மருமகன் தாயாம் – 3.கருவூர்:8 5/1

மேல்

திருமாலொடு (1)

மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது அயன் திருமாலொடு மயங்கி – 1.திருமாளிகை:1 11/1

மேல்

திருமுகம் (2)

போலுமே முறுவல் நிறைய ஆனந்தம் பொழியுமே திருமுகம் ஒருவர் – 3.கருவூர்:2 6/2
தெளிர் ஒளி மணி நீர் திவலை முத்து அரும்பி திருமுகம் மலர்ந்து சொட்டு அட்ட – 3.கருவூர்:3 1/2

மேல்

திருமுகமும் (1)

மற்றை நாட்டம் இரண்டொடு மலரும் திருமுகமும் முகத்தினுள் – 7.திருவாலி:1 9/3

மேல்

திருமுண்டம் (1)

திருநீறு இடா உரு தீண்டேன் என்னும் திருநீறு மெய் திருமுண்டம் தீட்டி – 1.திருமாளிகை:3 10/1

மேல்

திருமேனி (1)

அருள் புரி முறுவல் முகிழ் நிலா எறிப்ப அந்தி போன்று ஒளிர் திருமேனி
வரி அரவு ஆட ஆடும் எம்பெருமான் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 6/3,4

மேல்

திருவடி (9)

திக்கு எலாம் குலவும் புகழ் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ் – 2.சேந்தனார்:1 6/3
திக்கு எலாம் நிறைந்த புகழ் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ் – 2.சேந்தனார்:1 10/3
கமலமே வதனம் கமலமே நயனம் கனகமே திருவடி நிலை நீர் – 3.கருவூர்:2 9/3
நாரணன் பரவும் திருவடி நிலை மேல் நலம் மலி கலை பயில் கருவூர் – 3.கருவூர்:2 10/2
தன் அக மழலை சிலம்பொடு சதங்கை தமருகம் திருவடி திருநீறு – 3.கருவூர்:3 8/1
பாலுமாய் அமுதா பன்னகாபரணன் பனி மலர் திருவடி இணை மேல் – 3.கருவூர்:4 10/2
ஈட்டிய பொருளாய் இருக்கும் ஏழ் இருக்கை இருந்தவன் திருவடி மலர் மேல் – 3.கருவூர்:8 10/2
பொன் திருவடி என் குடி முழுது ஆள புகுந்தன போந்தன இல்லை – 3.கருவூர்:9 2/2
ஆஆ இவர்-தம் திருவடி கொண்டு அந்தகன்-தன் – 8.புருடோத்தம:2 7/1

மேல்

திருவடிக்கு (1)

தொகை மிகு நாமத்தவன் திருவடிக்கு என் துடி_இடை மடல் தொடங்கினளே – 2.சேந்தனார்:3 8/4

மேல்

திருவயிறும் (1)

செம் தழல் புரை மேனியும் திகழும் திருவயிறும் வயிற்றினுள் – 7.திருவாலி:1 5/3

மேல்

திருவருள் (1)

திருவருள் புரிந்து ஆள் ஆண்டுகொண்டு இங்ஙன் சிறியனுக்கு இனியது காட்டி – 3.கருவூர்:7 1/1

மேல்

திருவாய் (3)

பவளமே மகுடம் பவளமே திருவாய் பவளமே திருவுடம்பு அதனில் – 3.கருவூர்:2 5/1
நீலமே கண்டம் பவளமே திருவாய் நித்திலம் நிரைத்து இலங்கினவே – 3.கருவூர்:2 6/1
குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே இரு செவி ஒருபால் – 3.கருவூர்:2 9/1

மேல்

திருவாரூரின் (1)

விழவு ஒலி விண் அளவும் சென்று விம்மி மிகு திருவாரூரின்
மழ விடையாற்கு வழிவழி ஆளாய் மணம்செய் குடி பிறந்த – 10.சேந்தனார்:1 11/2,3

மேல்

திருவாலி (2)

தேவர் தாம் தொழ ஆடிய தில்லை கூத்தனை திருவாலி சொல் இவை – 7.திருவாலி:1 11/3
வரை செய் மா மதில் மயிலையர் மன்னவன் மறை வல திருவாலி
பரவல் பத்திவை வல்லவர் பரமனது அடி இணை பணிவாரே – 7.திருவாலி:2 10/3,4

மேல்

திருவாவடுதுறை (4)

ஐயா திருவாவடுதுறை அமுதே என்று உன்னை அழைத்தக்கால் – 2.சேந்தனார்:2 1/3
அருள் நேர்ந்து அமர் திருவாவடுதுறை ஆண்ட ஆண்டகை அம்மானே – 2.சேந்தனார்:2 4/3
திலக நுதல் உமை நங்கைக்கும் திருவாவடுதுறை நம்பிக்கும் – 2.சேந்தனார்:2 5/1
சேலும் கயலும் திளைக்கும் நீர் திருவாவடுதுறை வேந்தனோடு – 2.சேந்தனார்:2 11/3

மேல்

திருவாவடுதுறையாளி (1)

பெற்போ பெரும் திருவாவடுதுறையாளி பேசாது ஒழிவதே – 2.சேந்தனார்:2 7/4

மேல்

திருவாவடுதுறையான் (1)

ஆம் தண் திருவாவடுதுறையான் செய்கை யார் அறிகிற்பரே – 2.சேந்தனார்:2 6/4

மேல்

திருவாளர் (1)

தேனே என்னும் தெய்வ வாய்மொழியார் திருவாளர் மூவாயிரவர் தெய்வ – 1.திருமாளிகை:3 3/3

மேல்

திருவான (1)

மெய்யரே மெய்யர்க்கு இடு திருவான விளக்கரே எழுது கோல் வளையாள் – 3.கருவூர்:2 8/1

மேல்

திருவிடை (1)

தெருண்டவை திகர் வாழ் திருவிடை கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 10/3

மேல்

திருவிடைக்கழியில் (10)

சேல் உலாம் கழனி திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 1/3
திவள் அம் மாளிகை சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 2/3
தேவின் நல் தலைவன் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 3/3
தேன் அமர் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 4/3
திணம் மணி மாட திருவிடைக்கழியில் திரு குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 5/3
திளை இளம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 6/3
தெரிந்தவை திகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 7/3
திகை மிகு கீர்த்தி திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 8/3
திடம் கொள் வைதிகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 9/3
செழும் தடம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 11/3

மேல்

திருவிடைமருதே (10)

மைய செம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே
பொழிப்புரை – 3.கருவூர்:10 1/4,5
மந்திர கீதம் தீம் குழல் எங்கும் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 2/4
மனனிடை அணுகி நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 3/4
மணி உமிழ் நாக மணி உமிழ்ந்து இமைப்ப மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 4/4
வந்து அணுகாது நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 5/4
வரி அரவு ஆட ஆடும் எம்பெருமான் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 6/4
மழலை யாழ் சிலம்ப வந்து அகம் புகுந்தோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 7/4
மை அவாம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 8/4
மலங்கல் அம் கண்ணில் கண்மணி_அனையான் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 9/4
வரும் கரும் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே
&4 பூந்துருத்தி நம்பி காடநம்பி – 4.பூந்துருத்தி:10 10/4,5

மேல்

திருவீழி (1)

திங்கள் நேர் தீண்ட நீண்ட மாளிகை சூழ் மாட நீடு உயர் திருவீழி
தங்கு சீர் செல்வ தெய்வ தான்தோன்றி நம்பியை தன் பெரும் சோதி – 2.சேந்தனார்:1 7/2,3

மேல்

திருவீழிமிழலை (4)

மேக நாயகனை மிகு திருவீழிமிழலை விண் இழி செழும் கோயில் – 2.சேந்தனார்:1 1/3
செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனை திருவீழிமிழலை வீற்றிருந்த – 2.சேந்தனார்:1 2/3
விண்டு அலர் மலர்-வாய் வேரி வார் பொழில் சூழ் திருவீழிமிழலை ஊர் ஆளும் – 2.சேந்தனார்:1 3/3
வேடு அலங்கார கோலத்தின் அமுதை திருவீழிமிழலை ஊர் ஆளும் – 2.சேந்தனார்:1 12/3

மேல்

திருவீழிமிழலையான் (2)

திக்கு எலாம் குலவும் புகழ் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ் – 2.சேந்தனார்:1 6/3
திக்கு எலாம் நிறைந்த புகழ் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ் – 2.சேந்தனார்:1 10/3

மேல்

திருவுடம்பு (2)

பவளமே மகுடம் பவளமே திருவாய் பவளமே திருவுடம்பு அதனில் – 3.கருவூர்:2 5/1
அலகு எலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ அங்ஙனே அழகிதோ அரணம் – 3.கருவூர்:9 1/2

மேல்

திருவும் (1)

சீரும் திருவும் பொலிய சிவலோக நாயகன் சேவடி கீழ் – 10.சேந்தனார்:1 7/1

மேல்

திருவுரு (2)

எண்_இல் பல் கோடி திருவுரு நாமம் ஏர்கொள் முக்கண் முகம் இயல்பும் – 2.சேந்தனார்:1 9/2
தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்-தம் திருவுரு இருந்தவா பாரீர் – 4.பூந்துருத்தி:1 2/2

மேல்

திருவே (1)

முத்தியாம் என்றே உலகர் ஏத்துவரேல் முகம் மலர்ந்து எதிர்கொளும் திருவே – 3.கருவூர்:3 11/4

மேல்

திரை (6)

செழும் தென்றல் அன்றில் இ திங்கள் கங்குல் திரை வீரை தீம் குழல் சேவின் மணி – 1.திருமாளிகை:3 5/1
ஆர்த்து வந்து அமரித்து அமரரும் பிறரும் அலை கடல் இடு திரை புனித – 3.கருவூர்:1 8/3
இரும் திரை தரள பரவை சூழ் அகலத்து எண்_இல் அம் கண் இல் புன் மாக்கள் – 3.கருவூர்:1 11/1
பொரு திரை மருங்கு ஓங்கு ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 1/4
மற்று எனக்கு உறவு என் மறி திரை வடவாற்று இடு புனல் மதகில் வாழ் முதலை – 3.கருவூர்:9 2/3
திரை வந்து உலவும் தில்லை மல்கு சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 6/2

மேல்

திரையும் (1)

அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும் அலமருமாறு கண்டு அயர்வன் – 3.கருவூர்:3 6/2

மேல்

திரைலோக்கிய (10)

சீர் ஓங்கும் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 1/4
செய்யாயோ அருள் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 2/4
செய்ஞ்ஞன்றி இலன் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 4/4
தேவா தென் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 5/4
செழு மதில் சூழ் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 6/4
செஞ்சாலி வயல் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 7/4
போது சொரி கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 8/4
தேறாள் தென் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 9/4
திருந்து விழவு அணி கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 10/4
சீர் அணைத்த பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 11/4

மேல்

தில்லை (94)

சேம நல் தில்லை வட்டம் கொண்டு ஆண்ட செல்வ சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 11/3
குறவா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 1/4
கோடா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 2/4
கோனே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 3/4
குறியே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 4/4
கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 5/4
கொண்டாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 6/4
கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 7/4
கோவே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 8/4
குரவா என்னும் குண குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 9/4
குரு நீ என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 10/4
குற்றாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 11/4
கூறாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 12/4
மணம்கொள் சீர் தில்லை_வாணன் மண அடியார்கள் வண்மை – 1.திருமாளிகை:4 1/2
விட்டு இலங்கு அலங்கல் தில்லை வேந்தனை சேர்ந்திலாத – 1.திருமாளிகை:4 2/2
திசைக்கு மிக்கு உலவு கீர்த்தி தில்லை கூத்து உகந்து தீய – 1.திருமாளிகை:4 5/1
திருக்குறிப்பு அருளும் தில்லை செல்வன்-பால் செல்லும் செல்வு_இல் – 1.திருமாளிகை:4 7/2
செக்கர் ஒத்து இரவி நூறாயிர திரள் ஒப்பாம் தில்லை
சொக்கர் அம்பலவர் என்னும் சுருதியை கருத மாட்டா – 1.திருமாளிகை:4 8/1,2
சிறப்பு உடை அடியார் தில்லை செம்பொன் அம்பலவற்கு ஆள் ஆம் – 1.திருமாளிகை:4 11/1
எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில் தில்லை
அத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே – 4.பூந்துருத்தி:2 1/3,4
செல்ல நெறி வகுத்த சேவகனே தென் தில்லை
கொல்லை விடை ஏறி கூத்தாடு அரங்காக – 4.பூந்துருத்தி:2 3/2,3
அம்பு உந்து கண்ணாளும் தானும் அணி தில்லை
செம்பொன் செய் அம்பலமே சேர்ந்து இருக்கை ஆயிற்றே – 4.பூந்துருத்தி:2 4/3,4
சிவலோகம் ஆவதுவும் தில்லை சிற்றம்பலமே – 4.பூந்துருத்தி:2 6/4
தெளிகொண்ட தில்லை சிற்றம்பலமே சேர்ந்தனையே – 4.பூந்துருத்தி:2 7/4
சேடர் உறை தில்லை சிற்றம்பலத்தான்-தன் – 4.பூந்துருத்தி:2 10/1
தென்னா என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள் – 5.கண்டராதித்:1 1/3
தெத்தே என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள் – 5.கண்டராதித்:1 3/3
தேனை பாலை தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்து – 5.கண்டராதித்:1 4/3
தெளிவு ஆர் அமுதே தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள் – 5.கண்டராதித்:1 5/3
சீரால் மல்கு தில்லை செம்பொன் அம்பலத்து ஆடுகின்ற – 5.கண்டராதித்:1 6/3
அம் கோல் வளையார் பாடி ஆடும் அணி தில்லை அம்பலத்துள் – 5.கண்டராதித்:1 8/3
அடியார் அலகினால் திரட்டும் அணி தில்லை அம்பலத்து – 5.கண்டராதித்:1 9/3
சீரால் மல்கு தில்லை செம்பொன் அம்பலத்து_ஆடி-தன்னை – 5.கண்டராதித்:1 10/1
நச்சாய் காண் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 1/4
நம்பாய் காண் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 2/4
நசையானேன் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 3/4
நாயேனை திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 4/4
நன்று இதுவோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 5/4
நடு இதுவோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 6/4
நண்ணாயால் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 7/4
நாடாயால் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 8/4
நாள் ஏதோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 9/4
தேவே தென் திரு தில்லை கூத்தாடீ நாய் அடியேன் – 6.வேணாட்டடிகள்:1 10/3
ஐயன் ஆர் அழல் ஆடுவான் அணி நீர் வயல் தில்லை அம்பலத்தான் – 7.திருவாலி:1 1/3
அலம்பி வண்டு அறையும் அணி ஆர் தில்லை அம்பலவன் – 7.திருவாலி:1 2/2
அந்தணர் வணங்கும் அணி ஆர் தில்லை அம்பலவன் – 7.திருவாலி:1 5/2
செய்ய கோடுடன் கமல மலர் சூழ்தரு தில்லை மா மறையோர்கள் தாம் தொழ – 7.திருவாலி:1 8/1
எற்றி மா மணிகள் எறி நீர் தில்லை அம்பலவன் – 7.திருவாலி:1 9/2
மறுக்கமாய் கயல்கள் மடை பாய் தில்லை அம்பலவன் – 7.திருவாலி:1 10/2
தேவர் தாம் தொழ ஆடிய தில்லை கூத்தனை திருவாலி சொல் இவை – 7.திருவாலி:1 11/3
அலந்து போயினேன் அம்பல கூத்தனே அணி தில்லை நகர் ஆளீ – 7.திருவாலி:2 3/1
அருள்செய்து ஆடும் நல் அம்பல கூத்தனே அணி தில்லை நகர் ஆளீ – 7.திருவாலி:2 4/1
செய்த்-தலை கமலம் மலர்ந்து ஓங்கிய தில்லை அம்பலத்தானை – 7.திருவாலி:2 5/3
மடை கொள் வாளைகள் குதிகொளும் வயல் தில்லை அம்பலத்து அனல் ஆடும் – 7.திருவாலி:2 7/3
அன்ன_நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில் தில்லை
தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 2/1,2
திளையும் மாட திரு ஆர் தில்லை சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 3/2
உந்தி இழியும் நிவவின் கரை மேல் உயர்ந்த மதில் தில்லை
சிந்திப்பு அரிய தெய்வ பதியுள் சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 4/2,3
திரை வந்து உலவும் தில்லை மல்கு சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 6/2
சித்தர் தேவர் இயக்கர் முனிவர் தேன் ஆர் பொழில் தில்லை
அத்தா அருளாய் அணி அம்பலவா என்றென்று அவர் ஏத்த – 7.திருவாலி:3 7/1,2
துதித்து மறையோர் வணங்கும் தில்லை சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 8/2
சேல் ஆடும் வயல் தில்லை மல்கு சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 9/3
செடி உந்து அவத்தோர் அடையா தில்லை சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 10/2
தேன் ஆர் பொழில் சூழ் தில்லை மல்கு சிற்றம்பலத்தானை – 7.திருவாலி:3 11/2
சேல் உகளும் வயல் சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலத்து – 7.திருவாலி:4 1/3
சேண் பணை மாளிகை சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலம் – 7.திருவாலி:4 2/3
தெள்ளிய தண் பொழில் சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலத்துள் – 7.திருவாலி:4 3/3
சிறை அணி வண்டு அறையும் தில்லை மா நகர் சிற்றம்பலம் – 7.திருவாலி:4 5/3
சினத்தொடு வந்து எறியும் தில்லை மா நகர் கூத்தனையே – 7.திருவாலி:4 6/4
ஆத்-தனை தான் படுக்கும் அந்தணர் தில்லை அம்பலத்துள் – 7.திருவாலி:4 7/3
சீர் வங்கம் வந்து அணவும் தில்லை மா நகர் சிற்றம்பலத்து – 7.திருவாலி:4 8/3
தேசம் மிகு புகழோர் தில்லை மா நகர் சிற்றம்பலத்து – 7.திருவாலி:4 9/3
சீர் அணி மணி திகழ் மாடம் ஓங்கு தில்லை அம்பலத்து எங்கள் செல்வன் வாரான் – 8.புருடோத்தம:1 1/3
திருந்திய மலர் அடி நசையினாலே தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவே – 8.புருடோத்தம:1 5/4
தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவை தேறிய அந்தணர் சிந்தைசெய்யும் – 8.புருடோத்தம:1 6/1
சீர் உயிரே எங்கள் தில்லை_வாணா சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிதே – 8.புருடோத்தம:1 7/4
தேன் நல் வரி வண்டு அறையும் தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 1/3
தேடி இமையோர் பரவும் தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 2/3
சிட்டார் மறை ஓவா தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 3/3
தேர் ஆர் விழவு ஓவா தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 4/3
சேண் ஆர் மணி மாட தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 5/2
தேய் மதியம் சூடிய தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 6/3
தே ஆம் மறை பயிலும் தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 7/3
செந்நெல் விளை கழனி தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 8/3
சித்தர் கணம் பயிலும் தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 9/3
சே காதலித்து ஏறும் தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 10/3
சேல் உலாம் வயல் தில்லை_உளீர் உமை – 9.சேதிராயர்:1 1/1
சேண் நுதல் பொலி தில்லை_உளீர் உமை – 9.சேதிராயர்:1 2/3
செம்மலோர் பயில் தில்லை_உளீர் எங்கள் – 9.சேதிராயர்:1 4/3
செயலுற்று ஆர் மதில் தில்லை_உளீர் இவண் – 9.சேதிராயர்:1 5/3
சேதித்தீர் சிரம் நான்முகனை தில்லை
வாதித்தீர் என் மடக்கொடியையே – 9.சேதிராயர்:1 6/3,4
சிறை வண்டு ஆர் பொழில் தில்லை_உளீர் எனும் – 9.சேதிராயர்:1 8/3
தென்றல் ஆர் பொழில் தில்லை_உளீர் இவள் – 9.சேதிராயர்:1 9/3
ஏயுமாறு எழில் சேதிபர்_கோன் தில்லை
நாயனாரை நயந்து உரை செய்தன – 9.சேதிராயர்:1 10/1,2
மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போய் அகல – 10.சேந்தனார்:1 1/1

மேல்

தில்லை-தன்னுள் (2)

திரண்ட தில்லை-தன்னுள் திரு மல்கு சிற்றம்பலவன் – 7.திருவாலி:1 3/2
மாலுக்கு சக்கரம் அன்று அருள்செய்தவன் மன்னிய தில்லை-தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாக – 10.சேந்தனார்:1 9/2,3

மேல்

தில்லை_வாணன் (1)

மணம்கொள் சீர் தில்லை_வாணன் மண அடியார்கள் வண்மை – 1.திருமாளிகை:4 1/2

மேல்

தில்லை_வாணா (1)

சீர் உயிரே எங்கள் தில்லை_வாணா சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிதே – 8.புருடோத்தம:1 7/4

மேல்

தில்லை_உளீர் (6)

சேல் உலாம் வயல் தில்லை_உளீர் உமை – 9.சேதிராயர்:1 1/1
சேண் நுதல் பொலி தில்லை_உளீர் உமை – 9.சேதிராயர்:1 2/3
செம்மலோர் பயில் தில்லை_உளீர் எங்கள் – 9.சேதிராயர்:1 4/3
செயலுற்று ஆர் மதில் தில்லை_உளீர் இவண் – 9.சேதிராயர்:1 5/3
சிறை வண்டு ஆர் பொழில் தில்லை_உளீர் எனும் – 9.சேதிராயர்:1 8/3
தென்றல் ஆர் பொழில் தில்லை_உளீர் இவள் – 9.சேதிராயர்:1 9/3

மேல்

தில்லைக்கு (1)

செல் வாய் மதிலின் தில்லைக்கு அருளி தேவன் ஆடுமே – 7.திருவாலி:3 1/4

மேல்

தில்லையாய் (1)

சீர் இயல் தில்லையாய் சிவனே என்று – 9.சேதிராயர்:1 3/3

மேல்

தில்லையுள் (6)

குதிரை மாவொடு தேர் பல குவிந்து ஈண்டு தில்லையுள் கொம்பு_அனாரொடு – 7.திருவாலி:1 6/1
திவள மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற – 7.திருவாலி:2 1/3
செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் வகையாலே – 7.திருவாலி:2 2/3
ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள் அம்பலத்து அரன் ஆடல் – 7.திருவாலி:2 6/3
தேன் அமர் பொழில் சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற – 7.திருவாலி:2 9/3
புரியும் பொன் மதில் சூழ்தரு தில்லையுள் பூசுரர் பலர் போற்ற – 7.திருவாலி:2 10/1

மேல்

திலக (2)

தெருள் நேர்ந்த சித்தம் வலியவா திலக நுதலி திறத்திலே – 2.சேந்தனார்:2 4/4
திலக நுதல் உமை நங்கைக்கும் திருவாவடுதுறை நம்பிக்கும் – 2.சேந்தனார்:2 5/1

மேல்

திலகமும் (2)

கண்டமும் குழையும் பவள வாய் இதழும் கண் நுதல் திலகமும் காட்டி – 3.கருவூர்:3 2/2
திரு நுதல் விழியும் பவள வாய் இதழும் திலகமும் உடையவன் சடை மேல் – 3.கருவூர்:3 3/1

மேல்

திவலை (1)

தெளிர் ஒளி மணி நீர் திவலை முத்து அரும்பி திருமுகம் மலர்ந்து சொட்டு அட்ட – 3.கருவூர்:3 1/2

மேல்

திவள் (1)

திவள் அம் மாளிகை சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 2/3

மேல்

திவள (1)

திவள மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற – 7.திருவாலி:2 1/3

மேல்

திளை (1)

திளை இளம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 6/3

மேல்

திளைக்கின்றனவே (1)

நெற்றி நாட்டம் அன்றே நெஞ்சுளே திளைக்கின்றனவே – 7.திருவாலி:1 9/4

மேல்

திளைக்கும் (2)

சேலும் கயலும் திளைக்கும் நீர் திருவாவடுதுறை வேந்தனோடு – 2.சேந்தனார்:2 11/3
சேலும் கயலும் திளைக்கும் கண் ஆர் இளம் கொங்கையில் செம் குங்குமம் – 10.சேந்தனார்:1 8/1

மேல்

திளைப்பதும் (1)

செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவன் அருள் கடலே – 3.கருவூர்:6 11/4

மேல்

திளையும் (1)

திளையும் மாட திரு ஆர் தில்லை சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 3/2

மேல்

திறங்களுமே (1)

சிட்டன் சிவன் அடியாரை சீராட்டும் திறங்களுமே சிந்தித்து – 10.சேந்தனார்:1 3/2

மேல்

திறத்தவர் (1)

திக்கு அடா நினைந்து நெஞ்சு இடிந்து உருகும் திறத்தவர் புறத்து இருந்து அலச – 3.கருவூர்:2 7/1

மேல்

திறத்திலும் (1)

இடம் கொள குறத்தி திறத்திலும் இறைவன் மற தொழில் வார்த்தையும் உடையன் – 2.சேந்தனார்:3 9/2

மேல்

திறத்திலே (1)

தெருள் நேர்ந்த சித்தம் வலியவா திலக நுதலி திறத்திலே – 2.சேந்தனார்:2 4/4

மேல்

திறத்தும் (1)

இசையானால் என் திறத்தும் எனை உடையாள் உரையாடாள் – 6.வேணாட்டடிகள்:1 3/3

மேல்

திறம் (4)

அறம் பல திறம் கண்டு அரும் தவர்க்கு அரசாய் ஆலின் கீழ் இருந்த அம்பலவா – 1.திருமாளிகை:1 8/3
பெரு நீலகண்டன் திறம் கொண்டு இவள் பிதற்றி பெரும் தெருவே திரியும் – 1.திருமாளிகை:3 10/2
ஆர ஓங்கி முகம் மலர்ந்தாங்கு அருவினையேன் திறம் மறந்து இன்று – 3.கருவூர்:5 1/2
அழுவதும் நின் திறம் நினைந்தே அது அன்றோ பெறும் பேறு – 3.கருவூர்:5 6/3

மேல்

திறம்பிய (1)

திறம்பிய பிறவி சில தெய்வ நெறிக்கே திகைக்கின்றேன்-தனை திகையாமே – 1.திருமாளிகை:1 8/1

மேல்

திறல் (2)

வரு திறல் மணி அம்பலவனை கண்டு என் மனத்தையும் கொண்டு போது-மினே – 3.கருவூர்:3 3/4
வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்ட திறல்
செங்கோல் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன் அணிந்த – 5.கண்டராதித்:1 8/1,2

மேல்