மெ – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மெய் 21
மெய்க்கு 2
மெய்த்தவத்தோர்க்கு 1
மெய்ந்நெறியை 1
மெய்ப்படு 1
மெய்ப்பொருள் 3
மெய்ப்பொருள்-தன்னை 1
மெய்ப்பொருளுக்கு 1
மெய்ப்பொருளும் 2
மெய்ப்பொருளே 3
மெய்ம்மை 1
மெய்ம்மையே 1
மெய்யடியார் 1
மெய்யது 1
மெய்யர் 1
மெய்யர்க்கு 1
மெய்யரே 1
மெய்யவனே 1
மெய்யன் 1
மெய்யனே 1
மெய்யனை 2
மெய்யா 1
மெய்யில் 2
மெய்யே 5
மெய்யை 1
மெய்இலாதவர்-தங்களுக்கு 1
மெல் 2
மெல்கிய 1
மெல்லடியார் 1
மெல்லடியாள்-தனை 1
மெல்லடியாளை 1
மெல்லியலாள் 1
மெல்லியலுடனே 1
மெல்லியலை 1
மெல்விரலால் 1
மெலிந்து 1
மெலிவு 1
மெள்ள 1
மென் 6
மென்குழலார் 1
மென்நோக்கி 1
மென்மடவார் 1
மென்முலையார் 1
மென்முலையாள் 2
மென்மொழியார் 1
மென்மொழியாள் 1


மெய் (21)

முண்டம் தரித்தீர் முதுகாடு உறைவீர் முழு நீறு மெய் பூசுதிர் மூக்க பாம்பை – தேவா-சுந்:12/1
பொடித்தான் கொண்டு மெய் முற்றும் பூசிற்று என்னே புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே – தேவா-சுந்:33/2
பொய் தன்மைத்து ஆய மாய போர்வையை மெய் என்று எண்ணும் – தேவா-சுந்:81/1
முழை கொள் அரவொடு என்பு அணிகலனா முழு நீறு மெய் பூசுதல் என்னை-கொலோ – தேவா-சுந்:91/2
மெய் மால் ஆயின தீர்த்து அருள்செயும் மெய்ப்பொருளே – தேவா-சுந்:213/2
கீள் ஆர் கோவணமும் திருநீறு மெய் பூசி உன்தன் – தேவா-சுந்:240/1
கூறுவார் வினை எவ்விட மெய் குளிர்வாரே – தேவா-சுந்:319/4
மெய் ஆகத்து இருந்தனள் வேறு இடம் இல்லை – தேவா-சுந்:324/2
புந்தியால் உரை கொள்வரோ அன்றி பொய் இல் மெய் உரைத்து ஆள்வரோ – தேவா-சுந்:335/3
மெய் என் சொல்லு-மின் நமரங்காள் உமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:336/1
நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து உடல் நடுங்கி நிற்கும் இ கிழவனை – தேவா-சுந்:343/1
மெய் எலாம் பொடிக்கொண்டு பூசுதிர் வேதம் ஓதுதிர் கீதமும் – தேவா-சுந்:370/2
கண்ட ஆறும் காம தீ கனன்று எரிந்து மெய்
உண்ட ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:377/3,4
சித்தம்வைத்த புகழ் சிங்கடி அப்பன் மெய்
பத்தன் ஊரன் சொன்ன பாடு-மின் பத்தரே – தேவா-சுந்:382/3,4
மெய் அடியான் நரசிங்கமுனைஅரையற்கு அடியேன் விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன் – தேவா-சுந்:399/2
அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன் அதுவும் நான் படப்பாலது ஒன்று ஆனால் – தேவா-சுந்:550/1
வெந்த நீறு மெய் பூச வல்லானை வேத மால் விடை ஏற வல்லானை – தேவா-சுந்:583/1
விரும்பி என் மனத்திடை மெய் குளிர்ப்பு எய்தி வேண்டி நின்றே தொழுதேன் விதியாலே – தேவா-சுந்:598/2
கோடரம் பயில் சடை உடை கரும்பை கோலக்காவுள் எம்மானை மெய் மான – தேவா-சுந்:644/1
தெரித்த நம்பி ஒரு சே உடை நம்பி சில் பலிக்கு என்று அகம்-தோறும் மெய் வேடம் – தேவா-சுந்:650/2
மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல் எளிது அன்றே – தேவா-சுந்:838/4
மேல்


மெய்க்கு (2)

முத்து ஆரம் இலங்கி மிளிர் மணி வயிர கோவை அவை பூண தந்தருளி மெய்க்கு இனிதா நாறும் – தேவா-சுந்:467/3
சுடு பொடி மெய்க்கு அணிந்த சோதியை வன் தலை வாய் – தேவா-சுந்:846/2
மேல்


மெய்த்தவத்தோர்க்கு (1)

தந்தை தாய் உலகுக்கு ஓர் தத்துவன் மெய்த்தவத்தோர்க்கு
பந்தம் ஆயின பெருமான் பரிசு உடையவர் திரு அடிகள் – தேவா-சுந்:764/1,2
மேல்


மெய்ந்நெறியை (1)

மேவிய வெம் நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியை தான் காட்டும் வேதமுதலானை – தேவா-சுந்:413/2
மேல்


மெய்ப்படு (1)

மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:292/4
மேல்


மெய்ப்பொருள் (3)

மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொருள் ஆன விமலனை – தேவா-சுந்:466/2
மிண்டர்க்கு மிண்டு அலால் பேசேன் மெய்ப்பொருள் அன்றி உணரேன் – தேவா-சுந்:747/2
மேய நீர் பலி ஏற்றது என் என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள்
ஆய வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:900/3,4
மேல்


மெய்ப்பொருள்-தன்னை (1)

விழித்து கண்டனன் மெய்ப்பொருள்-தன்னை வேண்டேன் மானுட வாழ்க்கை ஈது ஆகில் – தேவா-சுந்:618/3
மேல்


மெய்ப்பொருளுக்கு (1)

வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன் – தேவா-சுந்:393/3
மேல்


மெய்ப்பொருளும் (2)

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை போகமும் திருவும் புணர்ப்பானை – தேவா-சுந்:603/1
திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன் சீர் உடை கழல்கள் என்று எண்ணி – தேவா-சுந்:698/1
மேல்


மெய்ப்பொருளே (3)

வேறா வந்து என் உள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே
சேறு ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:211/2,3
மெய் மால் ஆயின தீர்த்து அருள்செயும் மெய்ப்பொருளே
கைம்மா ஈர் உரியாய் கனம் மேற்றளி உறையும் – தேவா-சுந்:213/2,3
மெய்யே வந்து இங்கு எனை ஆண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே
பை ஆடு அரவம் அரைக்கு அசைத்த பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:531/2,3
மேல்


மெய்ம்மை (1)

மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர் மேலைநாள் ஒன்று இடவும்கில்லீர் – தேவா-சுந்:48/2
மேல்


மெய்ம்மையே (1)

மெய்ம்மையே திரு மேனி வழிபடாநிற்க வெகுண்டு எழுந்த தாதை தாள் மழுவினால் எறிந்த – தேவா-சுந்:395/3
மேல்


மெய்யடியார் (1)

கூழையர் ஆகி பொய்யே குடி ஓம்பி குழைந்து மெய்யடியார் குழு பெய்யும் – தேவா-சுந்:679/2
மேல்


மெய்யது (1)

மெய்யது புரி நூல் மிளிரும் புன் சடை மேல் வெண் திங்கள் சூடிய விகிர்தர் – தேவா-சுந்:140/2
மேல்


மெய்யர் (1)

மெய்யே வந்து இங்கு எனை ஆண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே – தேவா-சுந்:531/2
மேல்


மெய்யர்க்கு (1)

மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொருள் ஆன விமலனை – தேவா-சுந்:466/2
மேல்


மெய்யரே (1)

மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:140/4
மேல்


மெய்யவனே (1)

மெய்யவனே திருவே விளங்கும் திரு காளத்தி என் – தேவா-சுந்:264/3
மேல்


மெய்யன் (1)

மெய்யன் வெண் பொடி பூசும் விகிர்தன் வேதமுதல்வன் – தேவா-சுந்:878/1
மேல்


மெய்யனே (1)

மெய்யனே அடல் ஆழி அன்று அரிதான் வேண்ட நீ கொடுத்து அருள்புரி விகிர்தா – தேவா-சுந்:715/2
மேல்


மெய்யனை (2)

மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொருள் ஆன விமலனை – தேவா-சுந்:466/2
மெய்யனை மெய்யில் நின்று உணர்வானை மெய்இலாதவர்-தங்களுக்கு எல்லாம் – தேவா-சுந்:591/1
மேல்


மெய்யா (1)

மெய்யே வந்து இங்கு எனை ஆண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே – தேவா-சுந்:531/2
மேல்


மெய்யில் (2)

மெய்யனை மெய்யில் நின்று உணர்வானை மெய்இலாதவர்-தங்களுக்கு எல்லாம் – தேவா-சுந்:591/1
படை மலி கையன் மெய்யில் பகட்டு ஈர் உரி போர்வையினான் – தேவா-சுந்:1001/2
மேல்


மெய்யே (5)

மெய்யே பெறுவார்கள் தவ நெறிதானே – தேவா-சுந்:133/4
மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான் – தேவா-சுந்:237/2
மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவார் அவரை நினைகண்டாய் – தேவா-சுந்:421/2
மெய்யே வந்து இங்கு எனை ஆண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே – தேவா-சுந்:531/2
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை பால் நறு நெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை – தேவா-சுந்:858/3
மேல்


மெய்யை (1)

மெய்யை முற்ற பொடி பூசி ஒர் நம்பி வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி – தேவா-சுந்:645/1
மேல்


மெய்இலாதவர்-தங்களுக்கு (1)

மெய்யனை மெய்யில் நின்று உணர்வானை மெய்இலாதவர்-தங்களுக்கு எல்லாம் – தேவா-சுந்:591/1
மேல்


மெல் (2)

பஞ்சு ஏர் மெல் அடி மா மலைமங்கை_பங்கா எம் பரமேட்டீ – தேவா-சுந்:148/2
பஞ்சின் மெல் அடி பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:492/3
மேல்


மெல்கிய (1)

மெல்கிய வில் தொழிலான் விருப்பன் பெரும் பார்த்தனுக்கு – தேவா-சுந்:990/3
மேல்


மெல்லடியார் (1)

பஞ்சின் மெல்லடியார் பயிலும் திரு பனையூர் – தேவா-சுந்:891/2
மேல்


மெல்லடியாள்-தனை (1)

தளிர் போல் மெல்லடியாள்-தனை ஆகத்து அமர்ந்து அருளி – தேவா-சுந்:267/1
மேல்


மெல்லடியாளை (1)

பஞ்சு ஏரும் மெல்லடியாளை ஒர்பாகமாய் – தேவா-சுந்:979/1
மேல்


மெல்லியலாள் (1)

முல்லை படைத்த நகை மெல்லியலாள் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய் எப்பரிசும் – தேவா-சுந்:856/2
மேல்


மெல்லியலுடனே (1)

குன்ற வில்லியை மெல்லியலுடனே கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:639/4
மேல்


மெல்லியலை (1)

வேகம்கொண்டு ஓடிய வெள் விடை ஏறி ஓர் மெல்லியலை
ஆகம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டார் – தேவா-சுந்:169/1,2
மேல்


மெல்விரலால் (1)

வரும் காலன் உயிரை மடிய திரு மெல்விரலால்
பெரும் பாலன்-தனக்காய் பிரிவித்த பெருந்தகையே – தேவா-சுந்:277/1,2
மேல்


மெலிந்து (1)

தனத்தால் இன்றி தாம்தாம் மெலிந்து தம் கண் காணாது – தேவா-சுந்:969/3
மேல்


மெலிவு (1)

மெலிவு இல் வான் உலகத்தவர் ஏத்த விரும்பி விண்ணுலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:687/4
மேல்


மெள்ள (1)

மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாராமே தவிர்க்கும் விதியானை – தேவா-சுந்:608/2
மேல்


மென் (6)

பஞ்சு உண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர் – தேவா-சுந்:14/2
அல்லி மென் முல்லை அம் தார் அமர்நீதிக்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:393/4
தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடம் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:411/3
சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென் தோள் தட முலை – தேவா-சுந்:459/3
குரும்பை மென் முலை கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:494/3
முத்தா முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை_பங்கா – தேவா-சுந்:530/1
மேல்


மென்குழலார் (1)

தே மென்குழலார் சேக்கை புகைத்த – தேவா-சுந்:961/3
மேல்


மென்நோக்கி (1)

மானை புரையும் மட மென்நோக்கி மடவாள் அஞ்ச மறைத்திட்ட – தேவா-சுந்:422/3
மேல்


மென்மடவார் (1)

வணங்கும் இடை மென்மடவார் இட்ட – தேவா-சுந்:927/3
மேல்


மென்முலையார் (1)

முகிழ் மென்முலையார் முகமே கமலம் – தேவா-சுந்:945/3
மேல்


மென்முலையாள் (2)

தொண்டர் அடி தொழலும் சோதி இளம் பிறையும் சூது அன மென்முலையாள் பாகமும் ஆகி வரும் – தேவா-சுந்:852/1
வார் தரு மென்முலையாள் மங்கையொடும் உடனே – தேவா-சுந்:864/2
மேல்


மென்மொழியார் (1)

பண் இயல் மென்மொழியார் இட கொண்டு உழல் பண்டரங்கன் – தேவா-சுந்:995/2
மேல்


மென்மொழியாள் (1)

பால் அன மென்மொழியாள் பாவையொடும் உடனே – தேவா-சுந்:870/2

மேல்