சோ – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சோணாட்டவர்தாம் 1
சோத்தானை 1
சோத்திட்டு 1
சோத்து 1
சோதி 8
சோதியராய் 1
சோதியன் 1
சோதியனை 1
சோதியாய் 1
சோதியான் 1
சோதியில் 1
சோதியை 5
சோதீ 2
சோபுரம் 1
சோம்பாதே 1
சோமாசிமாறனுக்கும் 1
சோர்கின்றதும் 1
சோர்வு 1
சோர 1
சோலை 33
சோலை-தொறும் 1
சோலை-தோறும் 1
சோலைகள் 6
சோழநாட்டு 1
சோழற்கு 1
சோழன் 1
சோற்றுத்துறை 2
சோற்றுத்துறையுள் 1
சோற்றுத்துறையே 9
சோறு 2
சோறும் 2


சோணாட்டவர்தாம் (1)

காவிரி புடை சூழ் சோணாட்டவர்தாம் பரவிய கருணை அம் கடல் அ – தேவா-சுந்:887/1
மேல்


சோத்தானை (1)

சோத்தானை சுடர் மூன்றிலும் ஒன்றி துருவி மால் பிரமன் அறியாத – தேவா-சுந்:680/3
மேல்


சோத்திட்டு (1)

சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ நும் அரை கோவணத்தோடு ஒரு தோல் புடை சூழ்ந்து – தேவா-சுந்:11/3
மேல்


சோத்து (1)

சோத்து என்று தேவர் தொழ நின்ற சுந்தர சோதியாய் – தேவா-சுந்:938/2
மேல்


சோதி (8)

சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணா சோதி எம் ஆதியான் – தேவா-சுந்:71/3
தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை – தேவா-சுந்:120/2
துறை கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதி தொல் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/3
சுரும்பு உயர்ந்த கொன்றையொடு தூ மதியம் சூடும் சடையானை விடையானை சோதி எனும் சுடரை – தேவா-சுந்:406/2
நலம் கொள் சோதி நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:696/4
சோதியில் சோதி எம்மானை சுண்ண வெண் நீறு அணிந்திட்ட – தேவா-சுந்:744/3
தொண்டர் அடி தொழலும் சோதி இளம் பிறையும் சூது அன மென்முலையாள் பாகமும் ஆகி வரும் – தேவா-சுந்:852/1
சோதி அது உரு ஆகி சுரி குழல் உமையோடும் – தேவா-சுந்:866/2
மேல்


சோதியராய் (1)

இறைவனார் ஆதியார் சோதியராய் அங்கு ஓர் சோர்வு படா – தேவா-சுந்:183/3
மேல்


சோதியன் (1)

சோதியன் சொற்பொருளாய் சுருங்கா மறை நான்கினையும் – தேவா-சுந்:985/2
மேல்


சோதியனை (1)

வானிடை மா மதியை மாசு அறு சோதியனை மாருதமும் அனலும் மண்தலமும் ஆய – தேவா-சுந்:854/3
மேல்


சோதியாய் (1)

சோத்து என்று தேவர் தொழ நின்ற சுந்தர சோதியாய்
பூ தாழ் சடையாய் புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:938/2,3
மேல்


சோதியான் (1)

தோளும் எட்டும் உடைய மா மணி சோதியான்
காள_கண்டன் உறையும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:824/3,4
மேல்


சோதியில் (1)

சோதியில் சோதி எம்மானை சுண்ண வெண் நீறு அணிந்திட்ட – தேவா-சுந்:744/3
மேல்


சோதியை (5)

துன்று பைம் கழலில் சிலம்பு ஆர்த்த சோதியை சுடர் போல் ஒளியானை – தேவா-சுந்:641/2
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்கு அரிய சோதியை வரி வரால் உகளும் – தேவா-சுந்:655/3
சொல் பத பொருள் இருள் அறுத்து அருளும் தூய சோதியை வெண்ணெய்நல்லூரில் – தேவா-சுந்:693/2
சுடு பொடி மெய்க்கு அணிந்த சோதியை வன் தலை வாய் – தேவா-சுந்:846/2
தொண்டர் தமக்கு எளிய சோதியை வேதியனை தூய மறைப்பொருள் ஆம் நீதியை வார் கடல் நஞ்சு – தேவா-சுந்:859/1
மேல்


சோதீ (2)

தூண்டா விளக்கின் நல் சோதீ தொழுவார்-தங்கள் துயர் தீர்ப்பாய் – தேவா-சுந்:532/1
சூழும் அரவ சுடர் சோதீ உன்னை தொழுவார் துயர் போக – தேவா-சுந்:788/2
மேல்


சோபுரம் (1)

சுற்றும் ஊர் சுழியல் திரு சோபுரம் தொண்டர் – தேவா-சுந்:311/1
மேல்


சோம்பாதே (1)

தோடை உடுத்த காது உடையீர் தோலை உடுத்து சோம்பாதே
ஆடை உடுத்து கண்ட-கால் அழகிது அன்றே அரிது அன்று – தேவா-சுந்:1032/1,2
மேல்


சோமாசிமாறனுக்கும் (1)

அம்பரான் சோமாசிமாறனுக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:397/4
மேல்


சோர்கின்றதும் (1)

கலைகள் சோர்கின்றதும் கன வளை கழன்றதும் – தேவா-சுந்:376/3
மேல்


சோர்வு (1)

இறைவனார் ஆதியார் சோதியராய் அங்கு ஓர் சோர்வு படா – தேவா-சுந்:183/3
மேல்


சோர (1)

குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல் சடையன் – தேவா-சுந்:71/1
மேல்


சோலை (33)

நீடு உயர் சோலை நெல்வாயில் அரத்துறை நின்மலனே நினைவார் மனத்தாய் – தேவா-சுந்:25/2
சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/3
கொய் மாவின் மலர் சோலை குயில் பாட மயில் ஆடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:299/3
கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:304/3
கொங்கு ஆர்ந்த பொழில் சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:307/3
கண்டார்-தம் கண் குளிரும் களி கமுகம் பூம் சோலை கருப்பறியலூர் – தேவா-சுந்:308/2
குலை மலிந்த கோள் தெங்கு மட்டு ஒழுகும் பூம் சோலை கொகுடிக்கோயில் – தேவா-சுந்:309/2
புடை எலாம் மணம் நாறு சோலை புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:356/4
பாடல் வண்டு இசை ஆலும் சோலை பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால் – தேவா-சுந்:367/3
பக்கமே குயில் பாடும் சோலை பைஞ்ஞீலியேன் என நிற்றிரால் – தேவா-சுந்:369/3
இலை கொள் சோலை தலை இருக்கும் வெண் நாரைகாள் – தேவா-சுந்:376/1
காளை வண்டு பாட மயில் ஆலும் வளர் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:407/4
கருக்கு வாய் பெண்ணையொடு தெங்கு மலி சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:408/4
கனிவு இனிய கதலி வனம் தழுவு பொழில் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:412/4
மூடி முகில் தவழ் சோலை சூழ் முதுகுன்றரே – தேவா-சுந்:439/4
கழை கரும்பும் கதலி பல சோலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:596/4
அட்டமூர்த்தியை மட்டு அவிழ் சோலை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:604/4
முருகு அமர் சோலை சூழ் திரு முல்லைவாயிலாய் வாயினால் உன்னை – தேவா-சுந்:698/3
செண்பக சோலை சூழ் திரு முல்லைவாயிலாய் தேவர்-தம் அரசே – தேவா-சுந்:700/2
கனிகள் பல உடை சோலை காய் குலை ஈன்ற கமுகின் – தேவா-சுந்:741/3
தேன் உண் பொழில் சோலை மிகு சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:810/4
கொய் அணி மலர் சோலை கூடலையாற்றூரில் – தேவா-சுந்:863/3
குழை அணி திகழ் சோலை கூடலையாற்றூரில் – தேவா-சுந்:868/3
பொழில் ஆரும் சோலை புக்கொளியூரில் குளத்திடை – தேவா-சுந்:934/3
புரை காடு சோலை புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:936/3
குரங்கு ஆடு சோலை கோயில்கொண்ட குழை காதனே – தேவா-சுந்:937/4
புள் ஏறு சோலை புக்கொளியூரில் குளத்திடை – தேவா-சுந்:941/3
சோலை தரு நீர் சோற்றுத்துறையே – தேவா-சுந்:956/4
துளிக்கும் சோலை சோற்றுத்துறையே – தேவா-சுந்:957/4
அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே – தேவா-சுந்:966/1
செம் தண் பவளம் திகழும் சோலை இதுவோ திரு ஆரூர் – தேவா-சுந்:968/1
ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே – தேவா-சுந்:970/1
செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திரு ஆரூர் – தேவா-சுந்:973/1
மேல்


சோலை-தொறும் (1)

துன்னா மயூரம் சோலை-தொறும் ஆட தூர துணை வண்டு – தேவா-சுந்:1027/3
மேல்


சோலை-தோறும் (1)

பணையிடை சோலை-தோறும் பைம் பொழில் வளாகத்து எங்கள் – தேவா-சுந்:78/3
மேல்


சோலைகள் (6)

மைந்து ஆர் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:245/3
கறை ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:270/3
கந்து ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:273/3
பைம் தண் மா மலர் உந்து சோலைகள் கந்தம் நாறும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:364/3
செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாற்று எம் சிவனை நாவலூர் சிங்கடி தந்தை – தேவா-சுந்:697/1
மயில் ஆர் சோலைகள் சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:877/3
மேல்


சோழநாட்டு (1)

சோழநாட்டு துருத்தி நெய்த்தானம் திருமலை – தேவா-சுந்:118/2
மேல்


சோழற்கு (1)

பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் பொழில் கருவூர் துஞ்சிய புகழ் சோழற்கு அடியேன் – தேவா-சுந்:399/1
மேல்


சோழன் (1)

சுருண்ட செஞ்சடையாய் அது-தன்னை சோழன் ஆக்கிய தொடர்ச்சி கண்டு அடியேன் – தேவா-சுந்:673/2
மேல்


சோற்றுத்துறை (2)

தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை
கழலும் கோவை உடையவன் காதலிக்கும் இடம் – தேவா-சுந்:120/2,3
துருத்தி உறைவீர் பழனம் பதியா சோற்றுத்துறை ஆள்வீர் – தேவா-சுந்:967/1
மேல்


சோற்றுத்துறையுள் (1)

சுற்று ஆர்தரு நீர் சோற்றுத்துறையுள்
முற்றா மதி சேர் முதல்வன் பாதத்து – தேவா-சுந்:963/1,2
மேல்


சோற்றுத்துறையே (9)

சுழல் நீர் பொன்னி சோற்றுத்துறையே – தேவா-சுந்:954/4
தொண்டர் பரவும் சோற்றுத்துறையே – தேவா-சுந்:955/4
சோலை தரு நீர் சோற்றுத்துறையே – தேவா-சுந்:956/4
துளிக்கும் சோலை சோற்றுத்துறையே – தேவா-சுந்:957/4
துதையும் பொன்னி சோற்றுத்துறையே – தேவா-சுந்:958/4
சூத பொழில் சூழ் சோற்றுத்துறையே – தேவா-சுந்:959/4
துறந்தார் சேரும் சோற்றுத்துறையே – தேவா-சுந்:960/4
தூமம் விசும்பு ஆர் சோற்றுத்துறையே – தேவா-சுந்:961/4
தொலையா செல்வ சோற்றுத்துறையே – தேவா-சுந்:962/4
மேல்


சோறு (2)

கறி விரவு நெய் சோறு முப்போதும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:476/4
அறிவானிலும் அறிவான் நல நறு நீரொடு சோறு
கிறி பேசி நின்று இடுவார் தொழு கேதாரம் எனீரே – தேவா-சுந்:793/3,4
மேல்


சோறும் (2)

தோளான் உமை நங்கை ஓர்பங்கு உடையீர் உடு கூறையும் சோறும் தந்து ஆளகில்லீர் – தேவா-சுந்:19/3
இம்மையே தரும் சோறும் கூறையும் எத்தல் ஆம் இடர் கெடலும் ஆம் – தேவா-சுந்:340/3

மேல்