கி – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிடங்கில் 2
கிடங்கின் 3
கிடங்கு 1
கிடந்து 1
கிடந்தும் 2
கிடந்தே 1
கிடப்பேனை 1
கிண்ணென்று 1
கிணை 1
கிலாய்ப்பன் 1
கிழக்கே 1
கிழவன் 1
கிழவனை 1
கிழிக்கவே 1
கிழித்து 1
கிழிய 1
கிழையமும் 1
கிள்ளிகுடி 1
கிள்ளைகாள் 1
கிள்ளையும் 1
கிளர் 11
கிளரும் 2
கிளவி 1
கிளி 9
கிளியும் 1
கிளியை 1
கிளை 2
கிளைக்க 2
கிளைக்கு 1
கிளைக்கும் 1
கிறி 6
கின்னரர் 2


கிடங்கில் (2)

சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே – தேவா-சுந்:468/3
கோல மலர் குவளை கழுநீர் வயல் சூழ் கிடங்கில்
சேலொடு வாளைகள் பாய் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1008/3,4
மேல்


கிடங்கின் (3)

தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடம் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:411/3
துனிவு இனிய தூய மொழி தொண்டை வாய் நல்லார் தூ நீலம் கண்வளரும் சூழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:412/3
குருவி ஆய் கிளி சேர்ப்ப குருகு இனம் இரிதரு கிடங்கின்
பரு வரால் குதிகொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:777/2,3
மேல்


கிடங்கு (1)

பாயும் நீர் கிடங்கு ஆர் கமலமும் பைம் தண் மாதவி புன்னையும் – தேவா-சுந்:363/3
மேல்


கிடந்து (1)

செஞ்சேல் அன்ன கண்ணார் திறத்தே கிடந்து உற்று அலறி – தேவா-சுந்:263/1
மேல்


கிடந்தும் (2)

எண்ணி இருந்தும் கிடந்தும் நடந்தும் – தேவா-சுந்:105/1
இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை இகழாது ஏத்துவோம் – தேவா-சுந்:973/3
மேல்


கிடந்தே (1)

கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன் கிளைக்கு எலாம் துணை ஆம் என கருதி – தேவா-சுந்:610/3
மேல்


கிடப்பேனை (1)

மண்ணின் மேல் மயங்கி கிடப்பேனை வலிய வந்து என்னை ஆண்டுகொண்டானே – தேவா-சுந்:710/1
மேல்


கிண்ணென்று (1)

கிண்ணென்று இசை முரலும் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:798/4
மேல்


கிணை (1)

தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச்சம் கிணை சல்லரி – தேவா-சுந்:369/1
மேல்


கிலாய்ப்பன் (1)

நெண்டிக்கொண்டேயும் கிலாய்ப்பன் நிச்சயமே இது திண்ணம் – தேவா-சுந்:747/1
மேல்


கிழக்கே (1)

கிழக்கே சலம் இடுவார் தொழு கேதாரம் எனீரே – தேவா-சுந்:795/4
மேல்


கிழவன் (1)

கிழவன் கீழைவழி பழையாறு கிழையமும் – தேவா-சுந்:116/3
மேல்


கிழவனை (1)

நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து உடல் நடுங்கி நிற்கும் இ கிழவனை
வரைகள் போல் திரள் தோளனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:343/1,2
மேல்


கிழிக்கவே (1)

கொள்ளி வாயின கூர் எயிற்று ஏனம் கிழிக்கவே
தெள்ளி மா மணி தீ விழிக்கும் இடம் செம் தறை – தேவா-சுந்:515/1,2
மேல்


கிழித்து (1)

பறை கிழித்து அனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு – தேவா-சுந்:73/2
மேல்


கிழிய (1)

வன் சயமாய் அடியான் மேல் வரும் கூற்றின் உரம் கிழிய
முன் சயம் ஆர் பாதத்தால் முனிந்து உகந்த மூர்த்தி-தனை – தேவா-சுந்:524/1,2
மேல்


கிழையமும் (1)

கிழவன் கீழைவழி பழையாறு கிழையமும்
மிழலைநாட்டு மிழலை வெண்ணிநாட்டு புரிசையே – தேவா-சுந்:116/3,4
மேல்


கிள்ளிகுடி (1)

கீழையில் அரனார்க்கு இடம் கிள்ளிகுடி அதே – தேவா-சுந்:118/4
மேல்


கிள்ளைகாள் (1)

பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள் – தேவா-சுந்:373/1
மேல்


கிள்ளையும் (1)

பேடைமஞ்ஞையும் பிணைகளின் கன்றும் பிள்ளை கிள்ளையும் என பிறைநுதலார் – தேவா-சுந்:671/3
மேல்


கிளர் (11)

நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில் – தேவா-சுந்:162/2
கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி – தேவா-சுந்:489/2
காவு நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி – தேவா-சுந்:490/2
கெண்டை வாளை கிளர் புனல் நீடூர் கேண்மையால் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:578/4
வளம் கிளர் பொழில் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேன் என்று – தேவா-சுந்:592/1
நலம் கிளர் வயல் நாவலர் வேந்தன் நங்கை சிங்கடி தந்தை பயந்த – தேவா-சுந்:592/3
பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம் செய்த பாவங்கள்தானே – தேவா-சுந்:592/4
வலம் கிளர் மா தவம் செய் மலைமங்கை ஒர்பங்கினனாய் – தேவா-சுந்:996/1
சலம் கிளர் கங்கை தங்க சடை ஒன்றிடையே தரித்தான் – தேவா-சுந்:996/2
பலம் கிளர் பைம் பொழில் தண் பனி வெண் மதியை தடவ – தேவா-சுந்:996/3
நலம் கிளர் நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:996/4
மேல்


கிளரும் (2)

கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓம புகையால் கண முகில் போன்ற அணி கிளரும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:159/4
கெடுதலையே புரிந்தான் கிளரும் சிலை நாணியில் கோல் – தேவா-சுந்:222/2
மேல்


கிளவி (1)

பன்னும் இசை கிளவி பத்து இவை பாட வல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ – தேவா-சுந்:861/3
மேல்


கிளி (9)

சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/3
திணை கொள் செந்தமிழ் பைம் கிளி தெரியும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:666/4
குருவி ஆய் கிளி சேர்ப்ப குருகு இனம் இரிதரு கிடங்கின் – தேவா-சுந்:777/2
குருவி ஓப்பி கிளி கடிவார் குழல் மேல் மாலை கொண்டு ஒட்டம்தர – தேவா-சுந்:783/3
கிளி வாழை ஒண் கனி கீறி உண் கேதாரம் எனீரே – தேவா-சுந்:797/4
கன்னி கிளி வந்து கவை கோலி கதிர் கொய்ய – தேவா-சுந்:804/2
என்னை கிளி மதியாது என எடுத்து கவண் ஒலிப்ப – தேவா-சுந்:804/3
தென் நல் கிளி திரிந்து ஏறிய சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:804/4
செம் வாயன கிளி பாடிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:805/4
மேல்


கிளியும் (1)

பந்தும் கிளியும் பயிலும் பாவை – தேவா-சுந்:924/1
மேல்


கிளியை (1)

இப்போது உமக்கு இதுவே தொழில் என்று ஓடி அ கிளியை
செப்பு ஏந்து இள முலையாள் எறி சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:808/3,4
மேல்


கிளை (2)

இளம் கிளை ஆரூரன் வனப்பகை அவள் அப்பன் – தேவா-சுந்:298/3
காணியேல் பெரிது உடையனே கற்று நல்லனே சுற்றம் நல் கிளை
பேணியே விருந்து ஓம்புமே என்று பேசினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:342/1,2
மேல்


கிளைக்க (2)

கிளைக்க மணி சிந்தும் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:799/4
ஏன திரள் கிளைக்க எரி போல மணி சிதற – தேவா-சுந்:810/1
மேல்


கிளைக்கு (1)

கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன் கிளைக்கு எலாம் துணை ஆம் என கருதி – தேவா-சுந்:610/3
மேல்


கிளைக்கும் (1)

சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும் தமர்க்கும் கிளைக்கும்
எல்லியும் நன்பகலும் இடர் கூருதல் இல்லை அன்றே – தேவா-சுந்:228/3,4
மேல்


கிறி (6)

பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் – தேவா-சுந்:467/1
கிறி பேசி கீழ்வேளூர் புக்கு இருந்தீர் அடிகேள் கிறி உம்மால் படுவேனோ திரு ஆணை உண்டேல் – தேவா-சுந்:476/2
கிறி பேசி கீழ்வேளூர் புக்கு இருந்தீர் அடிகேள் கிறி உம்மால் படுவேனோ திரு ஆணை உண்டேல் – தேவா-சுந்:476/2
கிறி பேசி நின்று இடுவார் தொழு கேதாரம் எனீரே – தேவா-சுந்:793/4
இழியா குளித்த மாணி என்னை கிறி செய்ததே – தேவா-சுந்:934/4
உள் ஆட புக்க மாணி என்னை கிறி செய்ததே – தேவா-சுந்:941/4
மேல்


கின்னரர் (2)

இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள் – தேவா-சுந்:565/1
காதுபொத்தரை கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்ப அரும் சீயம் – தேவா-சுந்:670/1

மேல்