மு – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

முக்கண் 3
முக்கண்ணரோ 1
முக்கண்ணன் 3
முக்கண்ணினன் 1
முக்கணனே 2
முக்கணா 1
முக்கூற்றில் 1
முகத்தால் 1
முகத்தாள் 1
முகத்தில் 2
முகந்த 1
முகந்து 1
முகப்பே 6
முகம் 5
முகமன் 1
முகமே 1
முகரத்திடை 1
முகில் 6
முகிலாய் 1
முகிலின் 1
முகிழ் 2
முச்சந்தி 1
முசுக்கலைகள் 1
முசுக்கள் 1
முஞ்சியிடை 1
முட்டா 1
முட்டாத 1
முட்டாது 1
முட்டாமே 1
முட்டி 3
முட்டை 1
முடத்தாழை 1
முடப்புன்னை 1
முடவர் 1
முடி 26
முடிகளால் 1
முடிந்த 1
முடிப்பது 1
முடியன் 1
முடியால் 3
முடியான் 1
முடியினன் 1
முடியும் 2
முடியுமா 1
முடியேன் 1
முடுகு 1
முடை 3
முண்டம் 1
முண்டல்கள் 1
முத்தம் 8
முத்தமும் 1
முத்தமொடு 1
முத்தன் 1
முத்தனை 1
முத்தா 2
முத்தாறு 2
முத்தி 7
முத்திக்கு 1
முத்தியும் 1
முத்தின் 1
முத்தினை 3
முத்தினோடு 1
முத்து 4
முத்தும் 3
முத்தே 2
முத்தொடு 2
முதல் 14
முதல்வன் 4
முதல்வனூர் 1
முதலவன்-தன்னை 1
முதலா 2
முதலின் 1
முதலே 2
முதலையை 1
முது 3
முதுகாட்டு 1
முதுகாடு 2
முதுகுன்றம் 5
முதுகுன்றர்-தம்மை 1
முதுகுன்றரே 10
முதுகுன்றரை 1
முதுகுன்று 5
முந்தி 8
முந்தை 1
முந்நூற்றுஅறுபது 1
முப்புரங்கள் 3
முப்புரங்களை 1
முப்புரம் 5
முப்புரமும் 2
முப்புரி 1
முப்போதும் 2
மும்மத 1
மும்மதில் 2
மும்மதிலும் 3
மும்மையால் 1
முயங்கு 1
முயங்கும் 1
முயல் 1
முயல்கின்றேன் 1
முயல்பவர் 1
முயல்வானே 1
முயலகன் 1
முயன்று 2
முரசார் 1
முரல 4
முரலும் 2
முரிக்கும் 1
முரித்த 1
முரித்தார் 1
முரிய 1
முருக்கு 1
முருகவேள் 1
முருகன்பூண்டி 10
முருகனுக்கும் 1
முருகு 2
முரை 1
முல்லை 6
முல்லையால் 1
முல்லையொடு 1
முல்லைவாயில் 5
முல்லைவாயிலாய் 6
முலை 11
முலைகள் 2
முலையார் 1
முலையாள் 7
முலையாளொடு 1
முழக்க 1
முழக்கு 4
முழக்கும் 1
முழங்க 1
முழங்கி 4
முழங்கும் 1
முழவம் 3
முழவு 3
முழவும் 4
முழா 1
முழு 4
முழுது 6
முழுதும் 1
முழுமுதல் 1
முழுமுதலை 1
முழை 2
முள் 2
முளிறு 1
முளை 3
முளைக்கை 1
முளைத்தானை 1
முளைத்து 1
முற்ற 3
முற்றமும் 1
முற்றலார் 1
முற்றவை 1
முற்றனே 1
முற்றா 2
முற்றிலாதானை 1
முற்று 1
முற்றும் 6
முறிக்கும் 1
முறுவல் 3
முறைமுறை 1
முறையால் 2
முறையோ 2
முன் 38
முன்கதி 1
முன்கை 1
முன்கையில் 1
முன்நாள் 2
முன்பு 2
முன்றில் 1
முன்றிலிடை 1
முன்னம் 4
முன்னமே 3
முன்னவன் 1
முன்னா 1
முன்னிலையாய் 1
முன்னும் 1
முன்னே 4
முன்னை 5
முனம் 2
முனிகள் 1
முனிந்திட 1
முனிந்து 2
முனிபவர்-தம்மை 1
முனியாதே 1
முனியே 1
முனிவர் 2
முனிவர்க்கு 2
முனிவர்க்கும் 1
முனிவன் 2
முனையடுவாற்கு 1

முக்கண் (3)

மூவர் என இருவர் என முக்கண் உடை மூர்த்தி – தேவா-சுந்:820/1
எயிலார் பொக்கம் எரித்த எண் தோள் முக்கண் இறைவன் – தேவா-சுந்:877/1
கார் ஊர் கண்டத்து எண் தோள் முக்கண் கலைகள் பல ஆகி – தேவா-சுந்:974/1
மேல்

முக்கண்ணரோ (1)

தேனை ஆடு முக்கண்ணரோ மிக செய்யரோ வெள்ளைநீற்றரோ – தேவா-சுந்:333/1
மேல்

முக்கண்ணன் (3)

மூலனூர் முதல் ஆய முக்கண்ணன் முதல்வனூர் – தேவா-சுந்:114/1
மை கொள் கண்டன் எண் தோளன் முக்கண்ணன் வலஞ்சுழி – தேவா-சுந்:121/1
கறை ஆர்ந்த கண்டத்தன் எண் தோளன் முக்கண்ணன் கருப்பறியலூர் – தேவா-சுந்:306/2
மேல்

முக்கண்ணினன் (1)

எண்தோளினன் முக்கண்ணினன் ஏழ்இசையினன் அறு கால் – தேவா-சுந்:727/3
மேல்

முக்கணனே (2)

முல்லை முறுவல் உமை ஒருபங்கு உடை முக்கணனே
பல் அயர் வெண் தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா – தேவா-சுந்:203/1,2
முத்தா முக்கணனே முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:251/2
மேல்

முக்கணா (1)

முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன் முக்கணா முறையோ மறைஓதீ – தேவா-சுந்:558/3
மேல்

முக்கூற்றில் (1)

தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும் தாரீரேல் ஒருபொழுதும் அடி எடுக்கல் ஒட்டேன் – தேவா-சுந்:474/3
மேல்

முகத்தால் (1)

மூளா தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி – தேவா-சுந்:964/2
மேல்

முகத்தாள் (1)

பங்கய மா முகத்தாள் உமை_பங்கன் உறை கோயில் – தேவா-சுந்:991/3
மேல்

முகத்தில் (2)

சிகரம் முகத்தில் திரள் ஆர் அகிலும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:28/1
முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன் முக்கணா முறையோ மறைஓதீ – தேவா-சுந்:558/3
மேல்

முகந்த (1)

ஆழ முகந்த என்னை அது மாற்றி அமரர் எல்லாம் – தேவா-சுந்:1020/2
மேல்

முகந்து (1)

பரு வன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர் – தேவா-சுந்:1031/3
மேல்

முகப்பே (6)

மின் செய்த நுண்இடையாள் பரவை இவள்-தன் முகப்பே
என் செய்த ஆறு அடிகேள் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:249/3,4
கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டு இருந்தாள் முகப்பே
அங்கணனே அருளாய் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:252/3,4
படி ஆரும் இயலாள் பரவை இவள்-தன் முகப்பே
அடிகேள் தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:254/3,4
பந்து அணவும் விரலாள் பரவை இவள்-தன் முகப்பே
அந்தணனே அருளாய் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:255/3,4
விரை சேரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே
அரசே தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:256/3,4
பூத்து ஆரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே
கூத்தா தந்து அருளாய் கொடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:257/3,4
மேல்

முகம் (5)

கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும் கழனி கமலங்கள் முகம் மலரும் கயலநல்லூர் காணே – தேவா-சுந்:156/4
கூடினாய் மலைமங்கையை நினையாய் கங்கை ஆயிர முகம் உடையாளை – தேவா-சுந்:557/1
முனிபவர்-தம்மை முனிவன் முகம் பல பேசி மொழியேன் – தேவா-சுந்:741/2
மூற்றி தழல் உமிழ்ந்தும் மதம் பொழிந்தும் முகம் சுழிய – தேவா-சுந்:807/2
முல்லை முறுவல் கொடி எடுப்ப கொன்றை முகம் மோதிரம் காட்ட – தேவா-சுந்:1029/3
மேல்

முகமன் (1)

முளைக்கை பிடி முகமன் சொலி முது வேய்களை இறுத்து – தேவா-சுந்:799/1
மேல்

முகமே (1)

முகிழ் மென்முலையார் முகமே கமலம் – தேவா-சுந்:945/3
மேல்

முகரத்திடை (1)

முகரத்திடை முத்தின் ஒளி பவள திரள் ஓதம் – தேவா-சுந்:720/2
மேல்

முகில் (6)

கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓம புகையால் கண முகில் போன்ற அணி கிளரும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:159/4
கமை ஆர் கருணையினாய் கரு மா முகில் போல் மிடற்றாய் – தேவா-சுந்:260/2
ஒரு மேக முகில் ஆகி ஒத்து உலகம்தானாய் ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தானாய் – தேவா-சுந்:405/1
மூடி முகில் தவழ் சோலை சூழ் முதுகுன்றரே – தேவா-சுந்:439/4
ஊனாய் உயிர் புகலாய் அகலிடமாய் முகில் பொழியும் – தேவா-சுந்:832/1
காற்றானே கார் முகில் போல்வது ஒர் கண்டத்து எம் – தேவா-சுந்:982/1
மேல்

முகிலாய் (1)

உய்ய கொள்க மற்று எங்களை என்ன ஒலி கொள் வெண் முகிலாய் பரந்து எங்கும் – தேவா-சுந்:561/2
மேல்

முகிலின் (1)

உலவும் முகிலின் தலை கல் பொழிய உயர் வேயொடு இழி நிலவின் கரை மேல் – தேவா-சுந்:26/1
மேல்

முகிழ் (2)

முத்தா முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை_பங்கா – தேவா-சுந்:530/1
முகிழ் மென்முலையார் முகமே கமலம் – தேவா-சுந்:945/3
மேல்

முச்சந்தி (1)

முட்டாத முச்சந்தி மூஆயிரவர்க்கும் மூர்த்தி என்ன – தேவா-சுந்:919/1
மேல்

முசுக்கலைகள் (1)

முலைகள் உண்டு தழுவி குட்டியொடு முசுக்கலைகள்
பாயும் புறவின் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:826/3,4
மேல்

முசுக்கள் (1)

முசுக்கள் போல் பல வேடர் வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:500/3
மேல்

முஞ்சியிடை (1)

முஞ்சியிடை சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே – தேவா-சுந்:435/4
மேல்

முட்டா (1)

என்றும் முட்டா பாடும் அடியார் தம் கண் காணாது – தேவா-சுந்:966/3
மேல்

முட்டாத (1)

முட்டாத முச்சந்தி மூஆயிரவர்க்கும் மூர்த்தி என்ன – தேவா-சுந்:919/1
மேல்

முட்டாது (1)

அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே – தேவா-சுந்:966/1
மேல்

முட்டாமே (1)

முட்டாமே நாள்-தோறும் நீர் மூழ்கி பூ பறித்து மூன்று போதும் – தேவா-சுந்:301/1
மேல்

முட்டி (3)

முட்டி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே – தேவா-சுந்:443/4
கன்று முட்டி உண்ண சுரந்த காலி அவை போல – தேவா-சுந்:966/2
குன்றில் முட்டி குழியில் விழுந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:966/4
மேல்

முட்டை (1)

முன்பு சொன்ன மோழைமையால் முட்டை மனத்தீரே – தேவா-சுந்:69/2
மேல்

முடத்தாழை (1)

முள் வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து விரை நாறும் முருகு விரி பொழில் சூழ் – தேவா-சுந்:404/3
மேல்

முடப்புன்னை (1)

முறிக்கும் தழை மா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா – தேவா-சுந்:425/3
மேல்

முடவர் (1)

முடவர் அல்லீர் இடர் இலீர் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:505/3
மேல்

முடி (26)

நீள்நீள் முடி வானவர் வந்து இறைஞ்சும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:30/2
கரிய மால் அயனும் தேடி கழல் முடி காணமாட்டா – தேவா-சுந்:80/3
மிக தளர்வு எய்தி குடத்தையும் நும் முடி மேல் விழுத்திட்டு நடுங்குதலும் – தேவா-சுந்:88/2
கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறை_கண்டன் இடம் பிறை துண்டம் முடி
செடி கொள் வினை பகை தீரும் இடம் திரு ஆரும் இடம் திரு மார்பு அகலத்து – தேவா-சுந்:96/2,3
ஏறு உகந்தார் இசை ஏழ் உகந்தார் முடி கங்கை-தன்னை – தேவா-சுந்:191/2
அரக்கன் முடி கரங்கள் அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான் – தேவா-சுந்:206/1
எடுத்தவன் ஈர் ஐந்து வாய் அரக்கன் முடி பத்து அலற – தேவா-சுந்:225/2
கரியவன் நான்முகனும் அடியும் முடி காண்பு அரிய – தேவா-சுந்:226/3
முடி மேல் மா மதியும் அரவும் உடன் துயிலும் – தேவா-சுந்:229/3
அயனோடு அன்று அரியும் அடியும் முடி காண்பு அரிய – தேவா-சுந்:287/1
தருக்கு அரக்கனை சென்று உகந்தான் தன் முடி மேல் – தேவா-சுந்:316/2
அம்மான் தன் அடி கொண்டு என் முடி மேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவு இலா நாயேன் – தேவா-சுந்:383/3
பொன்னானை மயில் ஊர்தி முருகவேள் தாதை பொடி ஆடு திரு மேனி நெடு மால்-தன் முடி மேல் – தேவா-சுந்:390/1
உன்ன முன்னும் மனத்து ஆரூரன் ஆரூரன் பேர் முடி வைத்த – தேவா-சுந்:424/2
முளை பிறை சென்னி சடை முடி முதுகுன்றரே – தேவா-சுந்:438/4
செழு மலர் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடை முடி அடிகளை நினைந்திட்டு – தேவா-சுந்:602/1
மின் தயங்கிய இடை மட மங்கை மேவும் ஈசனை வாசம் மா முடி மேல் – தேவா-சுந்:641/3
திங்கள் நம்பி முடி மேல் அடியார்-பால் சிறந்த நம்பி பிறந்த உயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:646/1
துலங்கு நீள் முடி ஒருபதும் தோள்கள் இருபதும் நெரித்து இன்னிசை கேட்டு – தேவா-சுந்:696/2
பேழை சடை முடி மேல் பிறை வைத்தான் இடம் பேணில் – தேவா-சுந்:719/2
கங்கை சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை – தேவா-சுந்:723/2
படரும் சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை – தேவா-சுந்:724/2
சலம் புரி சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை – தேவா-சுந்:726/3
கொய்த கூவிள மாலை குலவிய சடை முடி குழகர் – தேவா-சுந்:775/2
ஆறு அணி நீள் முடி மேல் ஆடு அரவம் சூடி – தேவா-சுந்:849/1
முத்தம் கவரும் நகை இளையார் மூரி தானை முடி மன்னர் – தேவா-சுந்:1035/3
மேல்

முடிகளால் (1)

முத்தினை தொழுது நாளும் முடிகளால் வணங்குவார்க்கு – தேவா-சுந்:81/3
மேல்

முடிந்த (1)

வெண் தலை பிறை கொன்றையும் அரவும் வேரி மத்தமும் விரவி முன் முடிந்த
இண்டை மா மலர் செஞ்சடையானை ஈசனை திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:718/1,2
மேல்

முடிப்பது (1)

முடிப்பது கங்கையும் திங்களும் செற்றது மூஎயில் – தேவா-சுந்:446/1
மேல்

முடியன் (1)

கார் ஊரும் கமழ் கொன்றை நல் மாலை முடியன் காரிகை காரணம் ஆக – தேவா-சுந்:613/2
மேல்

முடியால் (3)

முடியால் உலகு ஆண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆறும் ஓர் நான்கும் ஓர் ஒற்றினையும் – தேவா-சுந்:21/2
முடியால் வந்து இறைஞ்ச முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:254/2
முடியால் வானவர்கள் முயங்கும் திரு காளத்தியாய் – தேவா-சுந்:265/3
மேல்

முடியான் (1)

சலம் தாங்கிய முடியான் அமர்ந்த இடம் ஆம் திரு சுழியல் – தேவா-சுந்:837/2
மேல்

முடியினன் (1)

நீறு அணி நிமிர் சடை முடியினன் நிலவிய – தேவா-சுந்:736/2
மேல்

முடியும் (2)

பெரும் தோள்கள் நால்_ஐந்தும் ஈர்_ஐந்து முடியும் உடையானை பேய் உருவம் ஊன்றும் உற மலை மேல் – தேவா-சுந்:391/3
அடி இணையும் திரு முடியும் காண அரிது ஆய சங்கரனை தத்துவனை தையல் மடவார்கள் – தேவா-சுந்:409/2
மேல்

முடியுமா (1)

முடியுமா கருதேல் எருது ஏறும் மூர்த்தியை முதல் ஆய பிரானை – தேவா-சுந்:657/2
மேல்

முடியேன் (1)

முடியேன் இனி பிறவேன் பெறின் மூவேன் பெற்றம் ஊர்தீ – தேவா-சுந்:4/1
மேல்

முடுகு (1)

முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:498/3
மேல்

முடை (3)

மூடு ஆய முயலகன் மூக்க பாம்பு முடை நாறிய வெண் தலை மொய்த்த பல் பேய் – தேவா-சுந்:13/1
பாறு அணி முடை தலை கலன் என மருவிய – தேவா-சுந்:736/1
மோடு உடைய சமணர்க்கும் முடை உடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த – தேவா-சுந்:921/3
மேல்

முண்டம் (1)

முண்டம் தரித்தீர் முதுகாடு உறைவீர் முழு நீறு மெய் பூசுதிர் மூக்க பாம்பை – தேவா-சுந்:12/1
மேல்

முண்டல்கள் (1)

கண்டல் முண்டல்கள் சூழ் கழிப்பாலை கடற்கரை – தேவா-சுந்:113/3
மேல்

முத்தம் (8)

மடித்து ஓட்டந்து வன் திரை எற்றியிட வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய – தேவா-சுந்:33/3
உரவத்தொடு சங்கமொடு இப்பி முத்தம் கொணர்ந்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:37/3
முத்தம் கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:124/2
உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்கவேண்டும் ஒளி முத்தம் பூண் ஆரம் ஒண் பட்டும் பூவும் – தேவா-சுந்:477/2
கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:830/4
கவ்வை கடல் கதறி கொணர் முத்தம் கரைக்கு ஏற்ற – தேவா-சுந்:834/1
முரை கை பவள கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம்
திரை கை காட்டும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1028/3,4
முத்தம் கவரும் நகை இளையார் மூரி தானை முடி மன்னர் – தேவா-சுந்:1035/3
மேல்

முத்தமும் (1)

படு மணி முத்தமும் பவளமும் மிக சுமந்து – தேவா-சுந்:733/3
மேல்

முத்தமொடு (1)

எறிக்கும் கதிர் வேய் உதிர் முத்தமொடு ஏலம் இலவங்கம் தக்கோலம் இஞ்சி – தேவா-சுந்:425/1
மேல்

முத்தன் (1)

முத்தன் எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற திமில் ஏறு உடையானை – தேவா-சுந்:606/3
மேல்

முத்தனை (1)

முத்தனை மா மணி-தன்னை வயிரத்தை மூர்க்கனேன் – தேவா-சுந்:518/3
மேல்

முத்தா (2)

முத்தா முக்கணனே முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:251/2
முத்தா முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை_பங்கா – தேவா-சுந்:530/1
மேல்

முத்தாறு (2)

முத்தி முத்தாறு வலம்செயும் முதுகுன்றரே – தேவா-சுந்:444/4
முத்தி முத்தாறு வலம்செயும் முதுகுன்றரை – தேவா-சுந்:445/1
மேல்

முத்தி (7)

முத்தி முத்தாறு வலம்செயும் முதுகுன்றரே – தேவா-சுந்:444/4
முத்தி முத்தாறு வலம்செயும் முதுகுன்றரை – தேவா-சுந்:445/1
முத்தா முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை_பங்கா – தேவா-சுந்:530/1
பார் ஊரும் பரவி தொழ வல்லார் பத்தராய் முத்தி தாம் பெறுவாரே – தேவா-சுந்:580/4
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதி பயனே – தேவா-சுந்:664/4
செல் அடியே நெருக்கி திறம்பாது சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை – தேவா-சுந்:678/2
பண்ணு தலை பயன் ஆர் பாடலும் நீடுதலும் பங்கய மாது அனையார் பத்தியும் முத்தி அளித்து – தேவா-சுந்:857/1
மேல்

முத்திக்கு (1)

நின்று வெண்ணெய்நல்லூர் மிசை ஒளித்த நித்தில திரள் தொத்தினை முத்திக்கு
ஒன்றினான்-தனை உம்பர் பிரானை உயரும் வல் அரணம் கெட சீறும் – தேவா-சுந்:639/2,3
மேல்

முத்தியும் (1)

முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டி – தேவா-சுந்:594/3
மேல்

முத்தின் (1)

முகரத்திடை முத்தின் ஒளி பவள திரள் ஓதம் – தேவா-சுந்:720/2
மேல்

முத்தினை (3)

முத்தினை தொழுது நாளும் முடிகளால் வணங்குவார்க்கு – தேவா-சுந்:81/3
முத்தினை மணி-தன்னை மாணிக்கம் முளைத்து எழுந்த – தேவா-சுந்:289/3
அரு மணியை முத்தினை ஆன் அஞ்சும் ஆடும் அமரர்கள்-தம் பெருமானை அரு மறையின் பொருளை – தேவா-சுந்:410/1
மேல்

முத்தினோடு (1)

இலங்கும் ஆர் முத்தினோடு இன மணி இடறி இரு கரை பெரு மரம் பீழ்ந்து கொண்டு எற்றி – தேவா-சுந்:759/2
மேல்

முத்து (4)

முத்து நீற்று பவள மேனி செஞ்சடையான் உறையும் – தேவா-சுந்:72/1
கரும் புனை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவள கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:164/4
முத்து ஆரம் இலங்கி மிளிர் மணி வயிர கோவை அவை பூண தந்தருளி மெய்க்கு இனிதா நாறும் – தேவா-சுந்:467/3
முத்து அன வெண் முறுவல் மங்கையொடும் உடனே – தேவா-சுந்:867/2
மேல்

முத்தும் (3)

வார் கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு – தேவா-சுந்:786/3
மலை கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு – தேவா-சுந்:787/3
கழை நீர் முத்தும் கனக குவையும் – தேவா-சுந்:954/3
மேல்

முத்தே (2)

பொன்னே நல் மணியே வெண் முத்தே செய் பவள குன்றமே ஈசன் என்று உன்னையே புகழ்வேன் – தேவா-சுந்:384/2
மால் அங்கு ஆடி மறந்து ஒழிந்தேன் மணியே முத்தே மரகதமே – தேவா-சுந்:534/2
மேல்

முத்தொடு (2)

விழிக்கும் தழை பீலியொடு ஏலம் உந்தி விளங்கும் மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சுந்:89/3
சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல வயிரம் முத்தொடு பொன் மணி வரன்றி – தேவா-சுந்:552/3
மேல்

முதல் (14)

மூலனூர் முதல் ஆய முக்கண்ணன் முதல்வனூர் – தேவா-சுந்:114/1
முன்னவன் எங்கள் பிரான் முதல் காண்பு அரிது ஆய பிரான் – தேவா-சுந்:219/1
மங்கை ஒர்கூறு உடையான் வானோர் முதல் ஆய பிரான் – தேவா-சுந்:223/2
தொண்டாடி திரிவேனை தொழும்பு தலைக்கு ஏற்றும் சுந்தரனே கந்தம் முதல் ஆடை ஆபரணம் – தேவா-சுந்:471/2
முற்ற அஞ்சும் துறந்திருப்பானை மூவரின் முதல் ஆயவன்-தன்னை – தேவா-சுந்:574/3
முந்தி ஆகிய மூவரின் மிக்க மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:587/2
மூளை போத ஒரு விரல் வைத்த மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:589/2
கொடுக்ககிற்றிலேன் ஒண் பொருள்-தன்னை குற்றம் செற்றம் இவை முதல் ஆக – தேவா-சுந்:620/1
அம் கண் நம்பி அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி குமரன் முதல் தேவர் – தேவா-சுந்:646/2
சொல்லை நம்பி பொருளாய் நின்ற நம்பி தோற்றம் ஈறு முதல் ஆகிய நம்பி – தேவா-சுந்:652/1
முடியுமா கருதேல் எருது ஏறும் மூர்த்தியை முதல் ஆய பிரானை – தேவா-சுந்:657/2
முன்னை முதல் பிறவி மூதறியாமையினால் – தேவா-சுந்:844/1
மூவர் உரு தனது ஆம் மூல முதல் கருவை மூசிடும் மால் விடையின் பாகனை ஆகம் உற – தேவா-சுந்:858/2
மறை முதல் வானவரும் மால் அயன் இந்திரனும் – தேவா-சுந்:869/1
மேல்

முதல்வன் (4)

மூவராயும் இருவராயும் முதல்வன் அவனே ஆம் – தேவா-சுந்:65/3
மூர்க்கர் புரம் மூன்று எரிசெய்தாய் முன் நீ பின் நீ முதல்வன் நீ – தேவா-சுந்:786/2
அண்ட முதல்வன் அமலன் இடம் ஆம் – தேவா-சுந்:955/2
முற்றா மதி சேர் முதல்வன் பாதத்து – தேவா-சுந்:963/2
மேல்

முதல்வனூர் (1)

மூலனூர் முதல் ஆய முக்கண்ணன் முதல்வனூர்
நாவனூர் நரை ஏறு உகந்து ஏறிய நம்பன் ஊர் – தேவா-சுந்:114/1,2
மேல்

முதலவன்-தன்னை (1)

முன் எலாம் முழுமுதல் என்று வானோர் மூர்த்தி ஆகிய முதலவன்-தன்னை
செந்நெல் ஆர் வயல் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:661/3,4
மேல்

முதலா (2)

பழிக்கும் பெரும் தக்கன் எச்சம் அழிய பகலோன் முதலா பல தேவரையும் – தேவா-சுந்:89/1
நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்தருளி அவர்க்காய் – தேவா-சுந்:160/1
மேல்

முதலின் (1)

அகரம் முதலின் எழுத்து ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:28/4
மேல்

முதலே (2)

வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து வாழும் நாள் கொடுத்தாய் வழி முதலே
வெந்த வெண் பொடி பூச வல்லானே வேடனாய் விசயற்கு அருள்புரிந்த – தேவா-சுந்:713/1,2
வெய்ய மா கரி ஈர் உரியானே வேங்கை ஆடையினாய் விதி முதலே
மெய்யனே அடல் ஆழி அன்று அரிதான் வேண்ட நீ கொடுத்து அருள்புரி விகிர்தா – தேவா-சுந்:715/1,2
மேல்

முதலையை (1)

கரை-கால் முதலையை பிள்ளை தர சொல்லு காலனையே – தேவா-சுந்:936/4
மேல்

முது (3)

முது வாய் ஓரி கதற முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே – தேவா-சுந்:415/1
முளைக்கை பிடி முகமன் சொலி முது வேய்களை இறுத்து – தேவா-சுந்:799/1
முன்றில் இளம் கமுகின் முது பாளை மது அளைந்து – தேவா-சுந்:1009/3
மேல்

முதுகாட்டு (1)

முது வாய் ஓரி கதற முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே – தேவா-சுந்:415/1
மேல்

முதுகாடு (2)

முண்டம் தரித்தீர் முதுகாடு உறைவீர் முழு நீறு மெய் பூசுதிர் மூக்க பாம்பை – தேவா-சுந்:12/1
முழவு ஆர் ஒலி பாடலொடு ஆடல் அறா முதுகாடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-சுந்:430/3
மேல்

முதுகுன்றம் (5)

முத்தா முக்கணனே முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:251/2
முடியால் வந்து இறைஞ்ச முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:254/2
முரசார் வந்து அதிர முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:256/2
மூத்தாய் உலகுக்கு எல்லாம் முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:257/2
முந்தை ஊர் முதுகுன்றம் குரங்கணில்முட்டம் – தேவா-சுந்:310/1
மேல்

முதுகுன்றர்-தம்மை (1)

முறையால் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர்-தம்மை
மறையார்-தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:258/2,3
மேல்

முதுகுன்றரே (10)

முஞ்சியிடை சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே – தேவா-சுந்:435/4
மூரி களிறு முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:436/4
மொண்ட கை வேள்வி முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:437/4
முளை பிறை சென்னி சடை முடி முதுகுன்றரே – தேவா-சுந்:438/4
மூடி முகில் தவழ் சோலை சூழ் முதுகுன்றரே – தேவா-சுந்:439/4
முழை வளர் ஆளி முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:440/4
முன்றிலிடை பிடி கன்று இடும் முதுகுன்றரே – தேவா-சுந்:441/4
முந்தி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே – தேவா-சுந்:442/4
முட்டி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே – தேவா-சுந்:443/4
முத்தி முத்தாறு வலம்செயும் முதுகுன்றரே – தேவா-சுந்:444/4
மேல்

முதுகுன்றரை (1)

முத்தி முத்தாறு வலம்செயும் முதுகுன்றரை
பித்தன் ஒப்பான் அடித்தொண்டன் ஊரன் பிதற்று இவை – தேவா-சுந்:445/1,2
மேல்

முதுகுன்று (5)

முன் செய்த மூஎயிலும் எரித்தீர் முதுகுன்று அமர்ந்தீர் – தேவா-சுந்:249/2
செம்பொனை தந்து அருளி திகழும் முதுகுன்று அமர்ந்தீர் – தேவா-சுந்:250/2
திங்கள் சடைக்கு அணிந்தீர் திகழும் முதுகுன்று அமர்ந்தீர் – தேவா-சுந்:252/2
செய்யார் மேனியனே திகழும் முதுகுன்று அமர்ந்தாய் – தேவா-சுந்:253/2
வந்து அணவும் மதி சேர் சடை மா முதுகுன்று உடையாய் – தேவா-சுந்:255/2
மேல்

முந்தி (8)

முந்தி தொழுவார் இறவார் பிறவார் முனிகள் முனியே அமரர்க்கு அமரா – தேவா-சுந்:34/2
முந்தி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே – தேவா-சுந்:442/4
முந்தி வானவர்தாம் தொழும் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:507/1
முந்தி ஆகிய மூவரின் மிக்க மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:587/2
முந்தி செய்வினை இம்மை-கண் நலிய மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:617/1
முந்தி பொரு விடை ஏறி மூஉலகும் திரிவானே – தேவா-சுந்:746/2
முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவிடம் – தேவா-சுந்:825/2
முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன் – தேவா-சுந்:842/2
மேல்

முந்தை (1)

முந்தை ஊர் முதுகுன்றம் குரங்கணில்முட்டம் – தேவா-சுந்:310/1
மேல்

முந்நூற்றுஅறுபது (1)

மொய்த்த சீர் முந்நூற்றுஅறுபது வேலி மூன்றுநூறு வேதியரொடு நுனக்கு – தேவா-சுந்:667/1
மேல்

முப்புரங்கள் (3)

மலைக்கு மகள் அஞ்ச மத கரியை உரித்தீர் எரித்தீர் வரு முப்புரங்கள்
சிலைக்கும் கொலை சே உகந்து ஏறு ஒழியீர் சில் பலிக்கு இல்கள்-தொறும் செலவு ஒழியீர் – தேவா-சுந்:83/1,2
சிலையால் முப்புரங்கள் பொடி ஆக சிதைத்தவனே – தேவா-சுந்:271/1
அரியன முப்புரங்கள் அவை ஆர் அழல் மூட்டல் என்னே – தேவா-சுந்:1013/2
மேல்

முப்புரங்களை (1)

முப்புரங்களை தீ வளைத்து அங்கே மூவருக்கு அருள்செய்ய வல்லானே – தேவா-சுந்:711/2
மேல்

முப்புரம் (5)

மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர் ஓர் அம்பினால் – தேவா-சுந்:167/2
திரியும் முப்புரம் தீ பிழம்பு ஆக செம் கண் மால் விடை மேல் திகழ்வானை – தேவா-சுந்:626/1
ஒக்க முப்புரம் ஓங்கு எரி தூவ உன்னை உன்னிய மூவர் நின் சரணம் – தேவா-சுந்:676/1
திரியும் முப்புரம் செற்றதும் குற்ற திறல் அரக்கனை செறுத்ததும் மற்றை – தேவா-சுந்:685/1
செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலை தொழில் ஆர் சேவகம் முன் நினைவார் பாவகமும் நெறியும் – தேவா-சுந்:855/1
மேல்

முப்புரமும் (2)

எரித்தாய் முப்புரமும் இமையோர்கள் இடர் கடியும் – தேவா-சுந்:235/3
ஏர் ஆர் முப்புரமும் எரிய சிலை தொட்டவனை – தேவா-சுந்:248/1
மேல்

முப்புரி (1)

புள் வாயை கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை பொன் நிறத்தின் முப்புரி நூல் நான்முகத்தினானை – தேவா-சுந்:404/2
மேல்

முப்போதும் (2)

முப்போதும் திரு மேனி தீண்டுவார்க்கு அடியேன் முழு நீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/3
கறி விரவு நெய் சோறு முப்போதும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:476/4
மேல்

மும்மத (1)

பொழிந்து இழி மும்மத களிற்றின மருப்பும் பொன் மலர் வேங்கையின் நல் மலர் உந்தி – தேவா-சுந்:755/1
மேல்

மும்மதில் (2)

கொடி உடை மும்மதில் வெந்து அழிய குன்றம் வில்லா நாணியின் கோல் ஒன்றினால் – தேவா-சுந்:86/1
துணை செய் மும்மதில் மூன்றும் சுட்டவனே உலகு உய்ய – தேவா-சுந்:765/2
மேல்

மும்மதிலும் (3)

செற்றாய் மும்மதிலும் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:212/3
எய்தாய் மும்மதிலும் எரியுண்ண எம்பெருமான் – தேவா-சுந்:215/2
திரிவன மும்மதிலும் எரித்தான் இமையோர்_பெருமான் – தேவா-சுந்:226/1
மேல்

மும்மையால் (1)

மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன் முருகனுக்கும் உருத்திரபசுபதிக்கும் அடியேன் – தேவா-சுந்:395/1
மேல்

முயங்கு (1)

முயங்கு பூண் முலை மங்கையாளொடு முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:502/3
மேல்

முயங்கும் (1)

முடியால் வானவர்கள் முயங்கும் திரு காளத்தியாய் – தேவா-சுந்:265/3
மேல்

முயல் (1)

முயல்பவர் பின் சென்று முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி – தேவா-சுந்:599/2
மேல்

முயல்கின்றேன் (1)

வழித்தலை படுவான் முயல்கின்றேன் உன்னை போல் என்னை பாவிக்கமாட்டேன் – தேவா-சுந்:554/1
மேல்

முயல்பவர் (1)

முயல்பவர் பின் சென்று முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி – தேவா-சுந்:599/2
மேல்

முயல்வானே (1)

முது வாய் ஓரி கதற முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே
மது வார் கொன்றை புது வீ சூடும் மலையான்மகள்-தன் மணவாளா – தேவா-சுந்:415/1,2
மேல்

முயலகன் (1)

மூடு ஆய முயலகன் மூக்க பாம்பு முடை நாறிய வெண் தலை மொய்த்த பல் பேய் – தேவா-சுந்:13/1
மேல்

முயன்று (2)

யாழ் முயன்று இருக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:79/4
தன்னில் ஆசு அறு சித்தமும் இன்றி தவம் முயன்று அவம் ஆயின பேசி – தேவா-சுந்:661/1
மேல்

முரசார் (1)

முரசார் வந்து அதிர முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:256/2
மேல்

முரல (4)

சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/3
பண் தாழ் இன்னிசை முரல பல் நாளும் பாவித்து பாடி ஆடி – தேவா-சுந்:308/1
சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல வயிரம் முத்தொடு பொன் மணி வரன்றி – தேவா-சுந்:552/3
பங்கய மா மலர் மேல் மது உண்டு வண் தேன் முரல
செங்கயல் பாய் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1012/3,4
மேல்

முரலும் (2)

கிண்ணென்று இசை முரலும் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:798/4
பண் யாழ் முரலும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:889/2
மேல்

முரிக்கும் (1)

முரிக்கும் தளிர் சந்தனத்தொடு வேயும் முழங்கும் திரை கைகளால் வாரி மோதி – தேவா-சுந்:85/3
மேல்

முரித்த (1)

இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி இந்திரனை தோள் முரித்த இறையவன் ஊர் வினவில் – தேவா-சுந்:157/2
மேல்

முரித்தார் (1)

உம்பரார்_கோனை திண் தோள் முரித்தார் உரித்தார் களிற்றை – தேவா-சுந்:171/1
மேல்

முரிய (1)

இற்று முரிய விரலால் அடர்த்தார் – தேவா-சுந்:931/2
மேல்

முருக்கு (1)

முருக்கு வாய் மலர் ஒக்கும் திரு மேனியானை முன்னிலையாய் முழுது உலகம் ஆய பெருமானை – தேவா-சுந்:408/2
மேல்

முருகவேள் (1)

பொன்னானை மயில் ஊர்தி முருகவேள் தாதை பொடி ஆடு திரு மேனி நெடு மால்-தன் முடி மேல் – தேவா-சுந்:390/1
மேல்

முருகன்பூண்டி (10)

முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:498/3
முல்லை தாது மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:499/3
முசுக்கள் போல் பல வேடர் வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:500/3
மோறை வேடுவர் கூடி வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:501/3
முயங்கு பூண் முலை மங்கையாளொடு முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:502/3
மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:503/3
மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:504/3
முடவர் அல்லீர் இடர் இலீர் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:505/3
மோந்தையோடு முழக்கு அறா முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:506/3
முந்தி வானவர்தாம் தொழும் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:507/1
மேல்

முருகனுக்கும் (1)

மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன் முருகனுக்கும் உருத்திரபசுபதிக்கும் அடியேன் – தேவா-சுந்:395/1
மேல்

முருகு (2)

முள் வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து விரை நாறும் முருகு விரி பொழில் சூழ் – தேவா-சுந்:404/3
முருகு அமர் சோலை சூழ் திரு முல்லைவாயிலாய் வாயினால் உன்னை – தேவா-சுந்:698/3
மேல்

முரை (1)

முரை கை பவள கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம் – தேவா-சுந்:1028/3
மேல்

முல்லை (6)

முல்லை முறுவல் உமை ஒருபங்கு உடை முக்கணனே – தேவா-சுந்:203/1
அல்லி மென் முல்லை அம் தார் அமர்நீதிக்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:393/4
முல்லை தாது மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:499/3
முல்லை படைத்த நகை மெல்லியலாள் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய் எப்பரிசும் – தேவா-சுந்:856/2
குறை அணி குல்லை முல்லை அனைந்து குளிர் மாதவி மேல் – தேவா-சுந்:1006/3
முல்லை முறுவல் கொடி எடுப்ப கொன்றை முகம் மோதிரம் காட்ட – தேவா-சுந்:1029/3
மேல்

முல்லையால் (1)

சொல்ல அரும் புகழான் தொண்டைமான் களிற்றை சூழ் கொடி முல்லையால் கட்டிட்டு – தேவா-சுந்:707/1
மேல்

முல்லையொடு (1)

தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:161/3
மேல்

முல்லைவாயில் (5)

திணி பொழில் தழுவு திரு முல்லைவாயில் செல்வனே எல்லியும் பகலும் – தேவா-சுந்:704/3
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லைவாயில் தேடி யான் திரிதர்வேன் கண்ட – தேவா-சுந்:705/3
சிட்டனே செல்வ திரு முல்லைவாயில் செல்வனே செழு மறை பகர்ந்த – தேவா-சுந்:706/3
நல்லவர் பரவும் திரு முல்லைவாயில் நாதனே நரை விடை ஏறீ – தேவா-சுந்:707/3
திரை தரு புனல் சூழ் திரு முல்லைவாயில் செல்வனை நாவல் ஆரூரன் – தேவா-சுந்:708/2
மேல்

முல்லைவாயிலாய் (6)

முருகு அமர் சோலை சூழ் திரு முல்லைவாயிலாய் வாயினால் உன்னை – தேவா-சுந்:698/3
தேடிய வானோர் சேர் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால் – தேவா-சுந்:699/3
செண்பக சோலை சூழ் திரு முல்லைவாயிலாய் தேவர்-தம் அரசே – தேவா-சுந்:700/2
செந்நெல் அம் கழனி சூழ் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால் – தேவா-சுந்:701/3
வந்து இழி பாலி வட கரை முல்லைவாயிலாய் மாசு இலா மணியே – தேவா-சுந்:702/3
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லைவாயிலாய் அடியேன் – தேவா-சுந்:703/3
மேல்

முலை (11)

தம் சொல் ஆர் அருள் பயக்கும் தமியனேன் தட முலை கண் – தேவா-சுந்:82/1
குரும்பை முலை மலர் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள்-தன் குணத்தினை நன்கு அறிந்து – தேவா-சுந்:156/1
பால் நலம் கொண்ட எம் பணை முலை பயந்து பொன் – தேவா-சுந்:378/3
சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென் தோள் தட முலை
ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்தூர் ஐயன் அருள் அதே – தேவா-சுந்:459/3,4
குரும்பை மென் முலை கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:494/3
முயங்கு பூண் முலை மங்கையாளொடு முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:502/3
ஏந்து பூண் முலை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:506/4
வார் தயங்கிய முலை மட மானை வைத்து வான் மிசை கங்கையை கரந்த – தேவா-சுந்:638/2
அடிகள் என்று அடியார் தொழுது ஏத்தும் அப்பன் ஒப்பு இலா முலை உமை கோனை – தேவா-சுந்:657/3
இரவி நீள் சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன் முலை கலசங்கள் ஏந்தி – தேவா-சுந்:668/1
பொருவனார் புரிநூலர் புணர் முலை உமையவளோடு – தேவா-சுந்:771/1
மேல்

முலைகள் (2)

முலைகள் பீர் கொண்டதும் மொழிய வல்லீர்களே – தேவா-சுந்:376/4
முலைகள் உண்டு தழுவி குட்டியொடு முசுக்கலைகள் – தேவா-சுந்:826/3
மேல்

முலையார் (1)

வார் ஊர் முலையார் மருவும் மறுகில் – தேவா-சுந்:949/3
மேல்

முலையாள் (7)

வார் ஆரும் முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே – தேவா-சுந்:282/2
முத்தா முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை_பங்கா – தேவா-சுந்:530/1
ஒப்பு இலா முலையாள் ஒருபாகா உத்தமா மத்தம் ஆர்தரு சடையாய் – தேவா-சுந்:711/1
வார் ஊர் வன முலையாள் உமை_பங்கன் மறைக்காட்டை – தேவா-சுந்:728/2
செப்பு ஏந்து இள முலையாள் எறி சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:808/4
வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:974/4
வார் ஆர் முலையாள் உமை_கணவன் மதிக்க இருப்பார் வானகத்தே – தேவா-சுந்:1037/4
மேல்

முலையாளொடு (1)

பஞ்சு உண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர் – தேவா-சுந்:14/2
மேல்

முழக்க (1)

பறை கண் நெடும் பேய் கணம் பாடல்செய்ய குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க
பிறை கொள் சடை தாழ பெயர்ந்து நட்டம் பெருங்காடு அரங்கு ஆக நின்று ஆடல் என்னே – தேவா-சுந்:90/1,2
மேல்

முழக்கு (4)

மூரி களிறு முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:436/4
மொண்ட கை வேள்வி முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:437/4
முழை வளர் ஆளி முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:440/4
மோந்தையோடு முழக்கு அறா முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:506/3
மேல்

முழக்கும் (1)

வருத்த அன்று மத யானை உரித்த வழக்கு நம்பி முழக்கும் கடல் நஞ்சம் – தேவா-சுந்:647/1
மேல்

முழங்க (1)

மானை நோக்கி ஓர் மா நடம் மகிழ மணி முழா முழங்க அருள்செய்த – தேவா-சுந்:567/3
மேல்

முழங்கி (4)

மலைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:32/3
மழைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:35/3
உரவத்தொடு சங்கமொடு இப்பி முத்தம் கொணர்ந்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:37/3
வடிக்கின்றன போல் சில வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:40/3
மேல்

முழங்கும் (1)

முரிக்கும் தளிர் சந்தனத்தொடு வேயும் முழங்கும் திரை கைகளால் வாரி மோதி – தேவா-சுந்:85/3
மேல்

முழவம் (3)

பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர் – தேவா-சுந்:543/3
மந்த முழவம் இயம்பும் வள வயல் நாவல் ஆரூரன் – தேவா-சுந்:750/3
மண் எலாம் முழவம் அதிர்தர மாட மாளிகை கோபுரத்தின் மேல் – தேவா-சுந்:889/1
மேல்

முழவு (3)

பெரு மேதை மறை ஒலியும் பேரி முழவு ஒலியும் பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும் பெருக – தேவா-சுந்:157/3
முழவு ஆர் ஒலி பாடலொடு ஆடல் அறா முதுகாடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-சுந்:430/3
பண்ணின் தமிழ் இசை பாடலின் பழ வேய் முழவு அதிர – தேவா-சுந்:798/1
மேல்

முழவும் (4)

மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர்_கோன் நம்பி ஊரன் சொன்ன – தேவா-சுந்:41/3
மண் ஆர் முழவும் குழலும் இயம்ப மடவார் நடம் ஆடும் மணி அரங்கில் – தேவா-சுந்:428/3
பாடல் முழவும் குழலும் இயம்ப பணைத்தோளியர் பாடலொடு ஆடல் அறா – தேவா-சுந்:432/3
பாண் ஆர் குழலும் முழவும் விழவில் – தேவா-சுந்:951/3
மேல்

முழா (1)

மானை நோக்கி ஓர் மா நடம் மகிழ மணி முழா முழங்க அருள்செய்த – தேவா-சுந்:567/3
மேல்

முழு (4)

முண்டம் தரித்தீர் முதுகாடு உறைவீர் முழு நீறு மெய் பூசுதிர் மூக்க பாம்பை – தேவா-சுந்:12/1
முழை கொள் அரவொடு என்பு அணிகலனா முழு நீறு மெய் பூசுதல் என்னை-கொலோ – தேவா-சுந்:91/2
முப்போதும் திரு மேனி தீண்டுவார்க்கு அடியேன் முழு நீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/3
முழு நீறு அணி மேனியன் மொய் குழலார் – தேவா-சுந்:947/1
மேல்

முழுது (6)

குடி ஆகி வானோர்க்கும் ஓர் கோவும் ஆகி குல வேந்தராய் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:21/4
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர் அவர் ஆகி ஓர் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:31/4
முருக்கு வாய் மலர் ஒக்கும் திரு மேனியானை முன்னிலையாய் முழுது உலகம் ஆய பெருமானை – தேவா-சுந்:408/2
முயல்பவர் பின் சென்று முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி – தேவா-சுந்:599/2
முன்னை நம்பி பின்னும் வார் சடை நம்பி முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது – தேவா-சுந்:651/3
வையகம் முழுது உண்ட மாலொடு நான்முகனும் – தேவா-சுந்:863/1
மேல்

முழுதும் (1)

புரிந்த நம்பி புரி நூல் உடை நம்பி பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி – தேவா-சுந்:647/3
மேல்

முழுமுதல் (1)

முன் எலாம் முழுமுதல் என்று வானோர் மூர்த்தி ஆகிய முதலவன்-தன்னை – தேவா-சுந்:661/3
மேல்

முழுமுதலை (1)

முன் நெறி வானவர் கூடி தொழுது ஏத்தும் முழுமுதலை
அ நெறியை அமரர் தொழும் நாயகனை அடியார்கள் – தேவா-சுந்:525/1,2
மேல்

முழை (2)

முழை கொள் அரவொடு என்பு அணிகலனா முழு நீறு மெய் பூசுதல் என்னை-கொலோ – தேவா-சுந்:91/2
முழை வளர் ஆளி முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:440/4
மேல்

முள் (2)

குருந்து ஆய முள் எயிற்று கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:302/3
முள் வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து விரை நாறும் முருகு விரி பொழில் சூழ் – தேவா-சுந்:404/3
மேல்

முளிறு (1)

முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவிடம் – தேவா-சுந்:825/2
மேல்

முளை (3)

கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
முளை பிறை சென்னி சடை முடி முதுகுன்றரே – தேவா-சுந்:438/4
முளை வளர் இள மதி உடையவன் முன் செய்த வல்வினைகள் – தேவா-சுந்:725/1
மேல்

முளைக்கை (1)

முளைக்கை பிடி முகமன் சொலி முது வேய்களை இறுத்து – தேவா-சுந்:799/1
மேல்

முளைத்தானை (1)

பெரிய நஞ்சு அமுது உண்டதும் முற்றும் பின்னையாய் முன்னமே முளைத்தானை
அரிய நான்மறை அந்தணர் ஓவாது அடி பணிந்து அறிதற்கு அரியானை – தேவா-சுந்:685/2,3
மேல்

முளைத்து (1)

முத்தினை மணி-தன்னை மாணிக்கம் முளைத்து எழுந்த – தேவா-சுந்:289/3
மேல்

முற்ற (3)

அற்றம் முற்ற பகர்ந்து அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:379/2
முற்ற அஞ்சும் துறந்திருப்பானை மூவரின் முதல் ஆயவன்-தன்னை – தேவா-சுந்:574/3
மெய்யை முற்ற பொடி பூசி ஒர் நம்பி வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி – தேவா-சுந்:645/1
மேல்

முற்றமும் (1)

தெருவும் தெற்றியம் முற்றமும் பற்றி திரட்டும் தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:665/4
மேல்

முற்றலார் (1)

முற்றலார் திரி புரம் ஒரு மூன்றும் போன்ற வென்றி மால் வரை அரி அம்பா – தேவா-சுந்:635/3
மேல்

முற்றவை (1)

முற்றவை தம் அன்னை தந்தைக்கும் தவ்வைக்கும் தம்பிரானார் – தேவா-சுந்:184/2
மேல்

முற்றனே (1)

முற்றிலாதானை முற்றனே என்று மொழியினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:348/2
மேல்

முற்றா (2)

முற்றா மதி சூடிய கோடிக்குழகா – தேவா-சுந்:327/3
முற்றா மதி சேர் முதல்வன் பாதத்து – தேவா-சுந்:963/2
மேல்

முற்றிலாதானை (1)

முற்றிலாதானை முற்றனே என்று மொழியினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:348/2
மேல்

முற்று (1)

கலி வலம் கெட ஆர் அழல் ஓம்பும் கற்ற நான்மறை முற்று அனல் ஓம்பும் – தேவா-சுந்:687/1
மேல்

முற்றும் (6)

பொடித்தான் கொண்டு மெய் முற்றும் பூசிற்று என்னே புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே – தேவா-சுந்:33/2
முற்றும் மற்று இன்மையும் மொழிய வல்லீர்களே – தேவா-சுந்:379/4
முற்றும் நீ எனை முனிந்திட அடியேன் கடவது என் உனை நான் மறவேனேல் – தேவா-சுந்:556/3
வையகம் முற்றும் மா மழை மறந்து வயலில் நீர் இலை மா நிலம் தருகோம் – தேவா-சுந்:561/1
பெரிய நஞ்சு அமுது உண்டதும் முற்றும் பின்னையாய் முன்னமே முளைத்தானை – தேவா-சுந்:685/2
ஊழி-தொறு ஊழி முற்றும் உயர் பொன் நொடித்தான்மலையை – தேவா-சுந்:1026/1
மேல்

முறிக்கும் (1)

முறிக்கும் தழை மா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா – தேவா-சுந்:425/3
மேல்

முறுவல் (3)

முல்லை முறுவல் உமை ஒருபங்கு உடை முக்கணனே – தேவா-சுந்:203/1
முத்து அன வெண் முறுவல் மங்கையொடும் உடனே – தேவா-சுந்:867/2
முல்லை முறுவல் கொடி எடுப்ப கொன்றை முகம் மோதிரம் காட்ட – தேவா-சுந்:1029/3
மேல்

முறைமுறை (1)

முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டி – தேவா-சுந்:594/3
மேல்

முறையால் (2)

முறையால் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர்-தம்மை – தேவா-சுந்:258/2
புண்ணிய நான்மறையோர் முறையால் அடி போற்றி இசைப்ப – தேவா-சுந்:995/3
மேல்

முறையோ (2)

முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன் முக்கணா முறையோ மறைஓதீ – தேவா-சுந்:558/3
வந்து எம்பெருமான் முறையோ என்றால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:968/4
மேல்

முன் (38)

கல்லால் நிழல் கீழ் ஒரு நாள் கண்டதும் கடம்பூர் கரக்கோயிலில் முன் கண்டதும் – தேவா-சுந்:15/3
அலமந்து மயங்கி அயர்வதன் முன் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:26/4
வாண் ஆர் நுதலால் வலைப்பட்டு அடியேன் பலவின் கனி ஈ அது போல்வதன் முன்
ஆணொடு பெண் ஆம் உரு ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:30/3,4
ஒழித்து உகந்தீர் நீர் முன் கொண்ட உயர் தவத்தை அமரர் வேண்ட – தேவா-சுந்:53/2
செடி கொள் ஆக்கை சென்றுசென்று தேய்ந்து ஒல்லை வீழா முன்
வடி கொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே – தேவா-சுந்:64/1,2
சிரித்த பல் வாய் வெண் தலை போய் ஊர்ப்புறம் சேரா முன்
வரி கொள் துத்தி வாள் அரக்கர் வஞ்சம் மதில் மூன்றும் – தேவா-சுந்:66/2,3
முன் நினையார் புரம் மூன்று எரியூட்டிய – தேவா-சுந்:109/3
பொரும் பலம் அது உடை அசுரன் தாரகனை பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்து உகந்த புனிதன் – தேவா-சுந்:164/1
தண் புனலும் வெண் மதியும் தாங்கிய செஞ்சடையன் தாமரையோன் தலை கலனா காமரம் முன் பாடி – தேவா-சுந்:166/1
தன்மையினால் அடியேனை தாம் ஆட்கொண்ட நாள் சபை முன்
வன்மைகள் பேசிட வன் தொண்டன் என்பது ஓர் வாழ்வு தந்தார் – தேவா-சுந்:168/1,2
ஆட்டம் கொண்டார் தில்லை சிற்றம்பலத்தே அருக்கனை முன்
நாட்டம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:172/3,4
பரு தாள் வன் பகட்டை படம் ஆக முன் பற்றி அதள் – தேவா-சுந்:235/1
முன் செய்த மூஎயிலும் எரித்தீர் முதுகுன்று அமர்ந்தீர் – தேவா-சுந்:249/2
முன் தான் கடல் நஞ்சம் உண்டதனாலோ – தேவா-சுந்:321/1
முன் ஆக நினையாத மூர்க்கனேன் ஆக்கை சுமந்து – தேவா-சுந்:523/3
முன் சயம் ஆர் பாதத்தால் முனிந்து உகந்த மூர்த்தி-தனை – தேவா-சுந்:524/2
முன் நெறி வானவர் கூடி தொழுது ஏத்தும் முழுமுதலை – தேவா-சுந்:525/1
உற்று உளன் ஆம் ஒருவனை முன் இருவர் நினைந்து இனிது ஏத்த – தேவா-சுந்:526/2
நினைதரு பாவங்கள் நாசங்கள் ஆக நினைந்து முன் தொழுது எழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:600/1
செத்தபோதினில் முன் நின்று நம்மை சிலர்கள் கூடி சிரிப்பதன் முன்னம் – தேவா-சுந்:606/1
அன்று வந்து எனை அகலிடத்தவர் முன் ஆள் அது ஆக என்று ஆவணம் காட்டி – தேவா-சுந்:639/1
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன்
தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை என் மன கருத்தை – தேவா-சுந்:642/1,2
நாடு இரங்கி முன் அறியும் அ நெறியால் நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர் – தேவா-சுந்:644/3
முன் எலாம் முழுமுதல் என்று வானோர் மூர்த்தி ஆகிய முதலவன்-தன்னை – தேவா-சுந்:661/3
நமை எலாம் பலர் இகழ்ந்து உரைப்பதன் முன் நன்மை ஒன்று இலா தேரர் புன் சமண் ஆம் – தேவா-சுந்:663/1
வெண் தலை பிறை கொன்றையும் அரவும் வேரி மத்தமும் விரவி முன் முடிந்த – தேவா-சுந்:718/1
முளை வளர் இள மதி உடையவன் முன் செய்த வல்வினைகள் – தேவா-சுந்:725/1
மூர்க்கர் புரம் மூன்று எரிசெய்தாய் முன் நீ பின் நீ முதல்வன் நீ – தேவா-சுந்:786/2
அப்போது வந்து உண்டீர்களுக்கு அழையாது முன் இருந்தேன் – தேவா-சுந்:808/1
முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன்
சிந்தை பராமரியா தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:842/2,3
கடு வரி மா கடலுள் காய்ந்தவன் தாதையை முன்
சுடு பொடி மெய்க்கு அணிந்த சோதியை வன் தலை வாய் – தேவா-சுந்:846/1,2
செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலை தொழில் ஆர் சேவகம் முன் நினைவார் பாவகமும் நெறியும் – தேவா-சுந்:855/1
சீர் ஆர்ந்த அன்பராய் சென்று முன் அடி வீழும் திருவினாரை – தேவா-சுந்:914/2
பிரியாத அன்பராய் சென்று முன் அடி வீழும் சிந்தையாரை – தேவா-சுந்:915/2
எண்தானே எழுத்தொடு சொல் பொருள் எல்லாம் முன்
கண்டானே கண்-தனை கொண்டிட்டு காட்டாயே – தேவா-சுந்:981/2,3
சலந்தரன் ஆகம் இரு பிளவு ஆக்கிய சக்கரம் முன்
நிலம் தரு மாமகள்_கோன் நெடு மாற்கு அருள்செய்த பிரான் – தேவா-சுந்:999/2,3
தான் எனை முன் படைத்தான் அது அறிந்து தன் பொன் அடிக்கே – தேவா-சுந்:1017/1
அலை கடல் ஆல் அரையன் அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:1023/3
மேல்

முன்கதி (1)

ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி குரு மா பிறை பாம்பை – தேவா-சுந்:653/2
மேல்

முன்கை (1)

வளை கை முன்கை மலைமங்கை_மணாளன் மாரனார் உடல் நீறு எழ செற்று – தேவா-சுந்:585/1
மேல்

முன்கையில் (1)

செந்தமிழ் திறம் வல்லிரோ செம் கண் அரவம் முன்கையில் ஆடவே – தேவா-சுந்:364/1
மேல்

முன்நாள் (2)

வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில் – தேவா-சுந்:165/2
இட்டு உகந்து ஆர் மலர் பூசை இச்சிக்கும் இறைவர் முன்நாள்
பட்டு உகும் பாரிடை காலனை காய்ந்து பலி இரந்து ஊண் – தேவா-சுந்:195/2,3
மேல்

முன்பு (2)

முன்பு சொன்ன மோழைமையால் முட்டை மனத்தீரே – தேவா-சுந்:69/2
ஆள் ஆவான் பலர் முன்பு அழைக்கின்றேன் ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:610/4
மேல்

முன்றில் (1)

முன்றில் இளம் கமுகின் முது பாளை மது அளைந்து – தேவா-சுந்:1009/3
மேல்

முன்றிலிடை (1)

முன்றிலிடை பிடி கன்று இடும் முதுகுன்றரே – தேவா-சுந்:441/4
மேல்

முன்னம் (4)

செத்தபோதினில் முன் நின்று நம்மை சிலர்கள் கூடி சிரிப்பதன் முன்னம்
வைத்த சிந்தை உண்டே மனம் உண்டே மதி உண்டே விதியின் பயன் உண்டே – தேவா-சுந்:606/1,2
இரவி நீள் சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன் முலை கலசங்கள் ஏந்தி – தேவா-சுந்:668/1
வரம் முன்னம் அருள்செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:876/3
தன்னை முன்னம் நினைக்க தருவான் – தேவா-சுந்:926/3
மேல்

முன்னமே (3)

முன்னை செய்வினை இம்மையில் வந்து மூடுமாதலின் முன்னமே
என்னை நீ தியக்காது எழு மட நெஞ்சமே எந்தை தந்தை ஊர் – தேவா-சுந்:357/1,2
முன்னமே உன சேவடி சேரா மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:616/3
பெரிய நஞ்சு அமுது உண்டதும் முற்றும் பின்னையாய் முன்னமே முளைத்தானை – தேவா-சுந்:685/2
மேல்

முன்னவன் (1)

முன்னவன் எங்கள் பிரான் முதல் காண்பு அரிது ஆய பிரான் – தேவா-சுந்:219/1
மேல்

முன்னா (1)

முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்றே – தேவா-சுந்:1027/2
மேல்

முன்னிலையாய் (1)

முருக்கு வாய் மலர் ஒக்கும் திரு மேனியானை முன்னிலையாய் முழுது உலகம் ஆய பெருமானை – தேவா-சுந்:408/2
மேல்

முன்னும் (1)

உன்ன முன்னும் மனத்து ஆரூரன் ஆரூரன் பேர் முடி வைத்த – தேவா-சுந்:424/2
மேல்

முன்னே (4)

முடியால் உலகு ஆண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆறும் ஓர் நான்கும் ஓர் ஒற்றினையும் – தேவா-சுந்:21/2
மணம் என மகிழ்வர் முன்னே மக்கள் தாய் தந்தை சுற்றம் – தேவா-சுந்:78/1
முன்னே எம்பெருமானை மறந்து என்-கொல் மறவாது ஒழிந்து என்-கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன் – தேவா-சுந்:384/1
வஞ்சனை என் மனமே வைகி வான நல் நாடர் முன்னே
துஞ்சுதல் மாற்றுவித்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு – தேவா-சுந்:1022/2,3
மேல்

முன்னை (5)

இழித்து உகந்தீர் முன்னை வேடம் இமையவர்க்கும் உரைகள் பேணாது – தேவா-சுந்:53/1
முன்னை செய்வினை இம்மையில் வந்து மூடுமாதலின் முன்னமே – தேவா-சுந்:357/1
அரித்த நம்பி அடி கைதொழுவார் நோய் ஆண்ட நம்பி முன்னை ஈண்டு உலகங்கள் – தேவா-சுந்:650/1
முன்னை நம்பி பின்னும் வார் சடை நம்பி முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது – தேவா-சுந்:651/3
முன்னை முதல் பிறவி மூதறியாமையினால் – தேவா-சுந்:844/1
மேல்

முனம் (2)

நாளார் வந்து அணுகி நலியா முனம் நின்-தனக்கே – தேவா-சுந்:244/1
நாள் ஓடிய நமனார் தமர் நணுகா முனம் நணுகி – தேவா-சுந்:796/2
மேல்

முனிகள் (1)

முந்தி தொழுவார் இறவார் பிறவார் முனிகள் முனியே அமரர்க்கு அமரா – தேவா-சுந்:34/2
மேல்

முனிந்திட (1)

முற்றும் நீ எனை முனிந்திட அடியேன் கடவது என் உனை நான் மறவேனேல் – தேவா-சுந்:556/3
மேல்

முனிந்து (2)

ஒழிப்பாய் என் வினையை உகப்பாய் முனிந்து அருளி – தேவா-சுந்:233/1
முன் சயம் ஆர் பாதத்தால் முனிந்து உகந்த மூர்த்தி-தனை – தேவா-சுந்:524/2
மேல்

முனிபவர்-தம்மை (1)

முனிபவர்-தம்மை முனிவன் முகம் பல பேசி மொழியேன் – தேவா-சுந்:741/2
மேல்

முனியாதே (1)

சிந்தை என் தடுமாற்று அறுப்பானை தேவதேவன் என் சொல் முனியாதே
வந்து என் உள்ளம் புகும் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:583/3,4
மேல்

முனியே (1)

முந்தி தொழுவார் இறவார் பிறவார் முனிகள் முனியே அமரர்க்கு அமரா – தேவா-சுந்:34/2
மேல்

முனிவர் (2)

வணங்கி தொழுவார் அவர் மால் பிரமன் மற்றும் வானவர் தானவர் மா முனிவர்
உணங்கல் தலையில் பலி கொண்டல் என்னே உலகங்கள் எல்லாம் உடையீர் உரையீர் – தேவா-சுந்:87/1,2
மந்திர மா முனிவர் இவன் ஆர் என எம்பெருமான் – தேவா-சுந்:1025/3
மேல்

முனிவர்க்கு (2)

கூறும் நம்பி முனிவர்க்கு அரும் கூற்றை குமைத்த நம்பி குமையா புலன் ஐந்தும் – தேவா-சுந்:648/2
அரும் தவம் மா முனிவர்க்கு அருள் ஆகி ஓர் ஆல் அதன் கீழ் – தேவா-சுந்:1007/1
மேல்

முனிவர்க்கும் (1)

முப்போதும் திரு மேனி தீண்டுவார்க்கு அடியேன் முழு நீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/3
மேல்

முனிவன் (2)

முனிபவர்-தம்மை முனிவன் முகம் பல பேசி மொழியேன் – தேவா-சுந்:741/2
பேணா முனிவன் பெரு வேள்வி எலாம் – தேவா-சுந்:951/1
மேல்

முனையடுவாற்கு (1)

அறை கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு அளே – தேவா-சுந்:400/4

மேல்